கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீரர மகளிர்

Page 1


Page 2

л ர மகளிர்
திமிலைத்துமிலன்"
*இராஜம் பிரசுரம்”
திமிலதீவு மட்டுநகர்

Page 3
இராஜம் பிரசுரம் : 1. முதலாம் பதிப்பு : 1963 g-oટo (1000 பிரதிகள்)
ഖ&: -/50
(உரிமை ஆசிரியருக்கே)
கலைவாணி அச்சகம் யாழ்ப்பாணம் 981 - 1963

*ஈழத் தமிழன்னை
ஈன்றெடுத்த வித்தகனும் யாழ்நூல் படைத்தோன் நல்லதின ஞாபகமாய்.

Page 4
.ஈன்று வளர்த்தென்னை இனிதாகப் பேணிவரும் ஆன்றமுதல் தெய்வங்கட் (கு) அர்ப்பணமாம் இந்நூலே".
ay ana a· raa bm
 

நீரரமகளிர்
அணிந்துரை
பண்டித வீ. சீ. கந்தையா. பி. ஒ. எல். அவர்கள்
நீரரமகளிர் கவிஞர் “திமிலைத்துமிலனின் கையிற்பட்டுப் புதுவடிவு கொள்கின்றனர். யாழ்நூற் பாயிரவியலில் விபுலாநந்த அடிகளார் “தண்ணளி செங்கோலாய் . * என்று தொடங் கித் தமிழிசைப் பிறப்பு முறையினைவரிசைப் படுத்திக்காட்டும் முகமாக மட்டக்களப்பு வாவியுளிருந்து 'எழும் ஊரி (பாடும்மீன்) இசைக்கு விளக்கம் செய்துள்ளார்கள் "புவியிலெனைத்தாரமென் பார் புதல்வி இவள் பேர் உழையுே” என்பது முதலாக அவர் கூறும் இசையின் கிளைமுறை இக்கவிஞரது அழகிய விருத்தயாப் பில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
திமிலைத்துமிலன் மேலும் ஒருபடி சென்று இராவணே சனுக்கு இருந்த இசைப் புலமை, அவன்து பேரழிவிற்கு முறை பிறழ்ந்த காதல் காரணமாதற்கு ஏற்பட்ட சாபம் முதலிய வற் றையும் இக்கவிதையுட் சேர்த்துச் சுவையூட்டுகின்றர். கவிஞர் கள் கற்பனைக்கனவு காண்பது இயல்பு. தாம் தோணிமிசை “முல்லைப்” பெண்ணுடன் சென்றமை முதல்யாவும் திமிலைக்கவி ஞர் கண்ட கனவுதான் என்ப்தை, “தம்பி, விபுலாந்தப் பெம் மானின் விழவென்ருய் எழும்பு என்று பிடித்துலுப்பி விட்டவள் என் பிரிய அன்னை” என்ற இறுதிப் பாடற் பகுதியினுல் அறி யும்போது தொடர்ந்து பாடல்களைப் படித்து வந்த நம் உள் ளமும் வியப்பிலாழ்வதோடு, கற்பனைச் சிறகுகட்டி நீரரமகளி ரைத் தேடிப் பறக்கவும் முனைகின்றது.
நல்ல வளம் படைத்த ஐம்பத்தொரு விருத்தப் பாக்களால்
அந்தாதித்தொடையானமைந்திருக்கின்றது இந்நூல். வெறும் உரை நடைக் கோப்பினையும், இலக்கண இலக்கிய வழக்குகளை

Page 5
iv
நோக்காத சொற்குவியல்களையும், கவிதை என்று காட்டி நிற் போர் நிறைந்த இக்காலத்தில் இத்தகைய நல்ல கவிதைகளைப் படைத்துத் தமிழ் அன்னையை இன்புறுத்தும் இளம் கவிஞர்க ளும் நம்மிடைவாழுகின்ருர்களென்பதை அறியும்போது பெரு மகிழ்வுண்டாகின்றது. இனிய சொல்லமைப்பு, இலகுவான உரு வகப்புணர்ப்பு என்பவை நிறைந்த கவிதைகளால் ஆன இந் நூல் அளவால் சிறியதெனினும் கற்போர் இதன் பெருமையினை நன்கு மதித்துப் போற்றத் தவருர் என்றே நம்புகின்றேன்.
இதன் ஆசிரியர் சென்னை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப் பாணம் முதலிய பல இடங்களில் நடந்த கவிதைப் போட்டி களில் எல்லாம் கலந்து வெற்றிப்பரிசு கெ ஈ ன் ட வர் பல கவிதை அரங்குகளில் பங்கு கொண்டு சிறப்பித்தவர்." இவற்ருல் பண்பட்டு வளரும் இளம் கவிஞரான திமிலைத்துமி லனது இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டுகின்றேன். இவ்வாண் டின் விபுலாநந்த விழாநாளிலே நல்ல தமிழ்ப்படைப்பாக இதனை வெளியிட நினைத்த இவரது நன்முயற்சி வளர்ந்து வரத் தமி ழன்னையின் திருவருள் என்றும் இ ன் ஞ ரு டன் நிற்ப
5Tes.
*கூடல்” வீ. சீ. கந்தையா மட்டக்களப்பு. 12. 6. 63.
 

பண்டிதமணி, திரு. சி. கணபதிப்பிள்ளை
அவர்கள் வழங்கிய
வாழ்த்துப்பா
مسسھم۔۔۔ تقسے
அன்ருெருநாள் நனவிடைக் கனவொன்று தோன்ற
அதில்முழுகி அறிதுயில்செய் தயர்ந்திட்டே ஞகக் குன்றென்றில் ஒருசிலம்போ டோரணங்கு நின்ருள்
கும்பிட்ட படியிளங்கோ குறுகிஅவண் நின்ருர் சென்ருர்கள் காரேறு மூதூரை நோக்கிச்
சென்றவர்கள் tதாயும் அவள் *சேயுமெனலானுர் நின்ருகுங் குறைமுடிக்க வந்ததனை ஒர்நாள்
நீர்மகளிர் எழுகுரலால் நினைவுசெய்த போது
இன்னிசைசெய் யாழ்நூல்தான் இருநிலத்தோர் வியக்க
இளங்கோவின் விளக்கமென எழுந்திட்ட தன்றே துன்னிய இக் கனவகல விழித்தெழலுந் திமிலைத்
துமிலன்தரு கன்னியர்கள் எழுவரர மகளிர் என்னருகில் நின்றர்கள் இவர்கள்புகழ் பேசி
எடுத்தகவி யத்தனையும் "இனித்தினித்துப் பாடி நன்னர்விபு லானந்த அடிகளஞ ளாசி
நண்ணிடுக ஆசிரியர்க் கென்றுதுதி செய்தேன்
சி. க.
f தாய் கண்ணம்மையார் * சேய் - விபுலானந்த அடிகள்

Page 6

நீர ர மகளிர்
1.
. முல்லைக் கள்ளி
நீலவான் திரைவிலக்கி முறுவல் பூத்து
நிலவென்ற ஒளிமுகத்தை நீட்டி நீந்தும் கோலமுறும் இளவேனிற் குமரி தென்றற்
குமரணுெடு விளையாடும் “குளுந்த” யாமம் பாலளித்த வட்டில்களைச் சிதறி நன்னீர்ப்
பரப்பெல்லாம் வீசியதால் பளபளத்த சீலமுறும் வாவியிடைத் தோணி யொன்றைச்
செலுத்திவந்தாள் எனைத்தாளு தேடி வந்தாள்? 1
வந்தவளை நான்நிமிர்ந்து பார்க்கு முன்னே
மடைதிறந்த புனல்போல மகிழ்ந்து துள்ளி எந்தனெதிர் எழுந்தோடி ஆவல் உந்த
இருகரமும் விரித்தபடி இனிமை பொங்க பந்தமுடன் ‘அண்ணு!’வென் ருவி என்னிற்
படர்ந்தவளைப் பாசமுடன் பாய்ந்து அள்ளிச் சொந்தமொடு முத்தமிடத் துடித்தேன், ஆனல்
துடிப்பெல்லாம் மனத்தடக்கத் துணிந்து கொண்டேன். 2
கொண்டுவந்த புத்தகத்தை மேசை மீது
கொட்டிவிடு முன்பெனது காலைக் கட்டி, சண்டையிட்டுத் ‘தூக்கண்ணு” என்று ‘குஞ்சுத் தமிழ்பேசும் போதவளைத் தாவி யள்ளிக் கன்றிவிட முத்தமழை பொழிந்து கன்னக்
கதுப்பெல்லாம் குங்குமத்தைக் கரைத்து வார்த்தால் குண்டுவிழி குனியன்னைக் கோபித் தேசும்
குழந்தையிவ ளா? மழலைக் குரிய நாளா? 3.

Page 7
2 நீரரமகளிர்
நாட்களென்ற மலர்கருக மாதம் காய்த்து
நழுவவிட்ட பதினறு வருடத் துள்ளே
தோட்டமலர் ஆகிவிட்ட இவளா எந்தன்
சொந்தமுள தங்கை? அடா அடடா நெஞ்சிற்
பாட்டமழை பெய்ததுபோல் பாச ஊற்றுப்
படிகிறதே! முல்லைஉனைப் பாவி கண்ணிற்
காட்டாமல் மறைத்தவனும் கடவு ளென்ருல்
காலமெலாம் நன்றியடி கடவு ஞக்கே. 4
கடவுளுக்கு நன்றியென உள்ளம் தோயக்
கண்ணீரில் ஆனந்தக் கனிவு தோய தடவிவிட்டேன் அவள் சிகையை மார்புமீதே
தன் வதனம் புதைத்தவளாய்த் தவித்துவிட்டாள் சுடுகிறதே! “விழிநீரா? முல்லை !” என்று
தோள்பிடித்து முகநிமிர்த்தச் சொன்னுள் “அண்ணு நடவண்ணு அழுவேனு; ஆனந்தம் தான்
நானேதான் செலுத்திடுவேன் தோணி ஏறேன். 5 ஏறண்ணு' என்று அவள் சொன்ன போது
ஏன்? என்று கேட்கவில்லை, ஏறிவிட்டேன். கீறென்னத் தெரிந்தநிலா பால் நி றைத்த
கிண்ணம்போலி தவழ்கிறது. மழலை யால்என் பேறென்னக் கிடைத்தவளா இன்று பூத்த
பெண்ணழகாய்த் திகழ்கிறவள்? என்ற எண்ணத் தேறலினுள் மூழ்குகிறேன் எழுவான் என்ற
திசைநோக்கி அவள் தோணி செலுத்துகின்ருள். 6
செலுத்துகிருள் வெள்ளிரசத் திரை கிழித்துச் செல்கிறது புதுத்தோணி "சவளைப் பற்றி வலித்திடற்கு நான்முயன்றேன்; அவள் தடுத்தாள்
*வசைநமக்குள் ஏதண்ணு மறக்கு லப்பெண் கலத்தெழுந்து கடற்புயலை யடக்கி வெற்றி
கண்டவளாம். பாரதியும், காதற் பண்ணில், "நிலத்தினிலே ஆணுெடுபெண் சமதை கண்டால்
நீள்புவனம் தழைக்காதோ நிலைக்கு மன்பால்; 7

மேகத்தில் மறைந்த நிலா -3
அன்பென்று கொட்டு’என முரச றைந்தான்
அவன் சொன்ன சமதையிது; அதிலேன் வெட்கம்? என்செய்கை பொறுக்காதோ! இதோ இன் ஞென்று இழுத்துவிடேன் நான்குசவள்’என்றுதந் தாள் பின்பென்ன பேசுவது அவள் பி டிக்கும்
பிடிஅட்டைப் பிடிதானே! அதுவும் இப்போ முன்போல சின்னவளா செவிமு றுக்க?
முயற்காலும் மூன்றென்பாள் முல்லைக் கள்ளி. 8
2. மேகத்தில் மறைந்த நீலா ...
கள் நிறைந்த மலர்ச்சிறையில் களிவண்டேறிக் கண்டுயில, நந்தினங்கள் கடலில் துஞ்சப் :புள்ளினமும் குருகுகளும் தென்னை வட்டிற்
புதுக்கூண்டிற் துயில்படரப் புளியந்தீவுக் குள்ளுறைந்த மாடிமுதற் புழுதித் திண்ணைக்
குக்கல்களும் துயின்றமைதி கொள்ளும் வேளை, துள்ளுநிலா பளிங்கிதெனத் துளும்பு நீரிற்
தோணிமிசை ஏன்ஊர்ந்தோம்? சொல்ல மாட்டேன் 9
மாட்டேனென் றவள்?சவளை வைத்து விட்டாள்.
மலர்ப்பொழிலில் மணஞ்சுமந்து வந்துகொஞ்சும் காற்றழகி யும் கவரி ஆட்ட வில்லைக்
கைவலித்த தோ, துயிலிற் கலந்துவிட்டாள் பாற்கடலாய், மட்டுநகர் வாவி மாறிப்
பயந்ததுவோ அமுதமெனப் பகரு மாறு கேட்டதொரு புதுமைப்பண் நீருள் நின்று
கிளர்ந்ததடா கற்கண்டிற் கினிய நாதம் 1 O.
நாதுமுடித்த தெதோபேச, அவள் தடுத்தாள்;
நளினமுற விரல் இதழில் வைத்து ‘அண்ணு
போதுமினிச் சத்த”மெனச் சைகை செய்து
புதுமொழியில் எனையடக்கிப் புன்ன கைத்தாள்

Page 8
4ar- நீரரமகளிர்
ஏதுஇது புதுமையென அங்க லாய்க்க
இடமெங்கே? அவள் காட்டும் திசையில் கண்னை
மோதவிட்டேன் அடடாவோ அடடா அந்த
மோகனத்தை என்னென்பேன்! மொழிவே றில்லை! 11.
இல்லையதை என் சொல்வேன்! விபுலா நந்தன்
இங்கிலையே அப்புதுமை எடுத்துச் சொல்ல
புல்லறிவேன் சொல்லுதற்குப் புலமை யில்லேன்
புன்மொழியிற் புகலுகிறேன் பொறுப்பீர் அன்பால்
மெல்லிடையர்; அரையின் கீழ் மீனின் தோற்றம்! விடிநிலவின் ஒளிவதனம்; விரிந்த பட்டு
மல்லிகையின் பல்வரிசை, அரவிந்தச் செம்
மலர்க்கரங்கள், மழைக்கூந்தல்; வண்டுக் கண்கள் 12
கண்ணெடுத்துப் பார்த்ததனுற் கருத்திழந்தேன்
கற்பனைக்கும் எட்டாத காட்சி இந்த
மண்ணகத்தே காண்பதணுல் வசமிழந்து
வைத்தவிழி வாங்குதற்கும் மறந்திருந்தேன்
தண்ணிருளிருந்தெழுந்து பாறை மீது
தவழ்ந்தமர்ந்தார் எழுவர்மட நல்லார் ஆகா! பண்மொழியும் அரமகளிர் இவரா? யாழ்நூற்
பாவலன்கண் டிசைபகர்ந்த திவரா? “முல்லை”. 13
முல்லையெனைப் பார்த்தாளோர் பார்வை அங்கு
மூண்டஎரி எனையுண்ண முனையு முன்னே; மெல்லியலார்-அரமகளிர் நீருள் மூழ்கி
விட்டார்கள் பாறைவெறும் மேடையாச்சு. சொல்லவொணுத் துயர். அவளைப் பார்ப்ப தற்கும்
துணிவில்லை. பேசியதால் செத்த புத்தி இல்லாத ஆமையென இன்ன லுற்ற
இதேவேளை அவள் சிரித்தாள். என்ன விந்தை 熊4、

*விழி பேசத் துடிக்கையிலே -5
கவிந்தையொன்று மிலையண்ணு பயப்படாதே?
விழிமூடித் திறப்பதற்குள் முல்லை நீரில் சிந்தையெலாம் சருகாகக் குதித்து விட்டாள்.
செத்தபிணம் போலானேன் செயலிழந் தேன் *கந்தனருள் இதுதானு? கால மெல்லாம்
காத்திருந்து கண்டேனே! ஐயோ! முல்லை! இந்தநிலைக் கெனையாக்கி ஏகு தற்கா
ஏமாற்றிப் போதற்கா என்முன் வந்தாய்?.” 置5
*வந்ததுவும் போவதுவும் மயக்கம் தானு?
வாழ்க்கைவெறும் மழைக்குமிழா? வான வில்லா? உந்தனையுன் பிஞ்சுவய தொருநான் குள்ளே
உளம்சாக-உயிர்சாகப் பிரிந்த போது இந்தநிலை எனக்கில்லை. ஈரெட்டின் பின்
இப்போது ஏன் வந்தாய் என்னைக் கண்டாய் அந்தோ! நீ என்செய்தாய்? அடியே முல்லை!
அன்புக்கும் சோதனையா? அமைதி போச்சா?” 16
*போகவில்லை; ஏனண்ணு குழந்தை போல
புலம்புவதா ஆண்மைக்கு அழகு?” என்ற வேகமிலாக் குளுந்தகுயிற் குரலைக் கேட்டு
மிகுகளிப்பில் திரும்பியனன் கையைப் பற்றி தேகமெலாம் நீர் சொட்டத் தோணி மீது
சிரித்தபடி அமர்ந்துகொண்டாள். செல்வி முல்லை மேகத்தில் மறைந்தநிலா விலகக் கண்டேன்
மேடைமிசை அரமகளிர் வீற்றி ருந்தார்! 7
3. விழி பேசத் துடிக்கையிலே .
வீற்றிருந்த அரிவையர்பால் விழி திருப்பி
விருப்போடு காந்தாரம்” எனஅ ழைத்தாள்.
காற்றசைவில் தோணியதும் நகர்ந்து அந்தக்
கற்பாறை யண்மியது கனிவு கொஞ்சச்

Page 9
6. . . . . . . நீரரமகளிர்
சாற்றுகிருள், “எனதருமை அண்ணு, உங்கள்
தமிழிசையில் மூழ்குதற்குத் தனித்து வந்தார்
வேற்றவரென் றெண்ணி விட்டீர், நல்ல வேளை
விடுவேன? அடேயப்பா, என்ன வெட்கம்!” 8.
*வெட்கமிலை, நாணமம்மா, அந்தப் பண்பு
வேண்டியதே பெண்மைக்கு” எனது பேச்சுப் பட்டவுடன் தலைநிமிர்ந்தாள் தாரம் மிக்க
பரிவோடு, “வணக்க”மெனக் கரமெடுத்தாள். கட்டழகுப் பாவையர்க்குக் கரங்கள் கூப்பி
கலைக்கண்ணுற் பார்த்திருந்தேன் கனத்த நேரம். வெட்டிவெட்டி இமைகொட்டி அவர்கள் கூட
விழுங்குவது போலெனையே வியந்து பார்த்தார். 19
பார்வையிலே என்னையவர் பக்கம் சேர்த்துப்
பழகுவது போலெனக்குப் பட்டதாலே யோர் இவர்கள்?’ நான்கேட்டேன் தாரம் சொன்னுள்:- *யாம்?கிளையே, ‘காந்தார'மென்றும் சொல்வார். பேரழகி என்புதல்வி, இவளின் இன்பப்
பேர்,"உழையே இவள் மகளைக் குரல்’ என்போம் யாம், சீருற்ற குரலாளின் பெண்யா ரென்று
தெரிகிறதோ, இவளை ‘இனியென்று செப்பும். 2O
செப்பமுற இளியிடத்துப் பிறந்தாள் துத்தம்'.
செழுமையுறும் விளரிப்பெண் துத்தத் தின் சேய் ஒப்பரிய விளரிக்குப் பிறந்தாள் தான் இவ்
ஒளிமுகத்துக் கைக்கிளை’யென் ருேதும் கன்னி இப்படியாய்ச் சொல்லிவந்த தாரம் என்னை
ஏறெடுத்து மீண்டுமொருநோக்கு வைத்தாள் அப்படியே நான் அவரை அளந்த போதும்
அவர்களுளே மூப்பிளமை அறிந்தேனில்லை. 21

விழி பேசத் துடிக்கையிலே – ገr
அறிவினிலே மூத்தவள்தான் தாரமென்ருல்
அவள் கூடக் கைக்கிளைபோற் கன்னித் தன்மை சிறிதளவும் குன்றது இருக்கின் ருளே!
சிந்தித்தேன் முல்லை.இடை மறித்துச் சொன்னுள் பொறுஅண்ணு; இவர்களுளே மூப்பே யில்லை; போவதிலை பதினறின் பருவம் என்றும் தெரிகிறதா? கைக்கிளையைக் கேட்டுப் பாரேன்
தேன்போல பேசிடுவாள். சின்னப் பெண்தான்!” 22
சின்னவளாம் கைக்கிளையை முல்லைபற்றிச்
சிரிப்புடனே தோணிமிசை ஏற்றிவிட்டாள் அன்னவளும் என்னருகே அமர்ந்த தாலே
அழகுமுகம் அடிநோக்க நாணம் பூக்கப் புன்முறுவல் சிந்துகிருள் மற்றப் பெண்கள் பொங்குமிள நகையோடு பூரிக் கின்ருர் என்னருமைத் தங்கை துடுப் பெடுத்து விட்டாள்
எமைக்கேலி பண்ணுகிருர் இருந்த நல்லார். 23
நல்லியலார் வீற்றிருந்த பாறை விட்டு
நகர்கிறது நம்தோணி நானு மந்த மெல்லியலாள் முகம் நோக்க அவளும் நோக்க
விழிபேசத் துடிக்கையிலே 'என்ன அண்ணு சொல்லாமல் கொள்ளாமல் உங்களுக்குள்?”
துடுக்காக முல்லை நமைக் கேலி செய்தாள்! *இல்லை,இவள் உன்தோழி ஒன்றும் பேசா
திருக்கின்ருள், அதனுலே.” என்றி ழுத்தேன். 24
இழுத்தெடுத்தாள் என்கரத்தைக் கைக்கிளைப் பெண்
இருகண்ணும் ஒற்றுகிருள்; இதயம் தோய்ந்த
தழுதழுத்த குரலினிலே, “முல்லை உங்கள்
தங்கையெனில் யானவட்கு அண்ணி!” - என்று

Page 10
8ー நீரரமகளிர்
முழுக்கஅவள் கூறுமுதல், முல்லை; “என்ன
மொழிகின்ருய் கைக்கிளை நீ?” என்று பாய்ந்தாள்.
செழுக்கமலக் கரம் கொண்டு அமர்த்தி, முல்லை!
செப்புகிறேன், கேள்” என்ருள் சின்னக் கன்னி. 25
4 கோள் கொண்ட தமிழ் நிலம்.
*கன்னிமொழி தமிழ் என்பீர்; கடல்கோள் ஐந்தைக் கண்டபின்பும் கட்டிளமை குன்ற வில்லை. இன்னும்தான் வாழுகிருள். ஆனல் இன்று
இவள்செங்கோல் எங்குளது? இயற்கை கூட மன்னிக்க முடியாத குற்றம் செய்தால்
மற்றவரை ஏன் பேச ஆணுல் உண்மை இன்னதென ஊகிக்கும் அறிஞ ருக்கும்
எட்டாத புகழ் இவளுக் கிருக்கக் கண்டோம். 26
*கண்ணற்ற கடல்கொண்ட கண்டம் தென்கீழ்க்
கடல்முழுதும் பரந்திருந்த லெமூரியா வென்(று) அண்மையிலே ஆரரய்ச்சி வல்லார் சொன்னுல்
அதை நம்பி விடுவீர்கள். ஆனல் அந்தப் பண்பட்ட நிலப்பாகம் தமிழர் பண்டைப்
பதியென்ருல் கேலிசெய்யும் பாங்கினர்க்கு என்சாட்சி உளதென்ற உண்மை கண்டீர்
இனியேனும் சொல்மின்கள்” என்ருள் செல்வி. 27
*செல்லரித்த ஏடாகத் தமிழர் நாட்டைத்
தின்றுவந்த கோள்களிலே கடைக்கோள்; கி. மு சொல்வதெனி லொன்பதின யிரத்தைஞ்ஞாற்றில்
தோன்றியதே. அதனுலே குமரிக் கோடும் எல்லையெலாம் வளம்செய்பஃ றுளியாற் ருேடே எழிலார்ந்த கபாடபுரம் எல்லாம் சேர்த்து பொல்லாத கடல்கொண்ட போதும் நாங்கள்
புவிமீசைத்தான் வாழ்ந்திருந்தோம் பொறுமையோடே. 28

கற்பகத்தேன் தருக்களிடை - 9
*பெறுமையளி செங்கோன்மை கண்ட அந்தப்
பொன்செய்த கபாடபுரம் தென்கடற்கீழ் நிறுவியபோன் றின்றுமிலங் குதலால் ஆங்கே
நீண்டபுக ழோடுறைவோம் நிலவு நாளின் மறைபொழுதில் மாவலிநீர் தனிற்படிந்து
வண்மையுறு சமனுெளியை வணங்கி மீள்வோம் நிறைமதியில் மட்டுநக ரடைவோம்; இந்த
நீர்நிலையின் நிறைககமே நிலைப்ப தொன்ரும். 29
*ஒன்றிவளர் காதலினுல் ஓடி யாடி
உளம்பொங்கப் பாடிடுவோம் நகையுதிர்ப்போம் என்றேனும் அச்சமுற இழித் துரைக்கும்
இயல்புடையோம் கோபிப்போம் என்றும் உண்மை ஒன்றே நாம் உரைத்திடுவோம் உயர்ந்த வீரம்
உள்ளதனல் வியப்புறுவோம் உதித்த திங்கள் சென்றுகடல் வீழுமுதல் ஆழி சேர்ந்து
திருவளரும் கபாடபுரத் திணைத்து வாழ்வோம். 30
“வாழ்வதுதான் கபாடபுரம்; ஆன லிந்த
மாநிலத்தின் கடல்முழுதும் நமதே. மேற்கின் ஆழ்முகமாம் கலிபோர்ணி யாவிற் கூட
ஆண்டுக்குப் பலமுறை நாம் ஆடச்செல் வோம் கோள் கொண்ட தமிழ்நிலமே மனிதப் பூண்டைக் கொண்டமுதல் நிலமென்ருல் அதிலே ஏதும் தாழ்வுண்டோ?” எனக்கேட்டாள் கைக்கி ளைப்பெண்,
"தமிழ்க்குமரி, அவட்கெதைநாம் சாற்றல் கூடும்? 31
S. கற்பகத்தேன் தருக்களிடை .
*கூடவரும் இசையிடத்தே கொண்ட வேட்கைக்
குணமதஞல் குறுமுனிவன் துணையும் கொண்டு
ஆடவரும் ஈசனிடம் பனிக்குன் றத்தே
அருள் வேண்டித் தவம்கிடந்த அணிகொள் ஈழ

Page 11
O நீரரமகளிர்
நாடதற் குஇறைவனெனும் ராவ ணேசன்
நல்வரத்தால் பெற்றவர்நாம் எழுவ ராணுேம்.
பாடவரும் தமிழிசையைப் பருகுதற்காய்
பவளமணிப் பொய்கையிலோர் பந்த ரிட்டான். 32
விட்டகலாக் காதலினுல் எமக்காய் ஆங்கு
வெள்ளியிலே ஒடங்கள் மிதக்க விட்டான்
கட்டிளமைக் கெழிலுTட்டக் காவி லுள்ள
கடிமலரைக் கவர்ந்துவரத் தென்றல் தன்னை
விட்டிருந்தான். பொன்னமளி மீது துஞ்சி
Va விளையாடிக் களித்திருப்போம்; அந்திப் போதில்
வட்டநிலாப் போலொளிரும் மெளலி பூண்டு
வந்தமர்வான் மறத்தமிழர் வயத்தோள் வேந்தன். 33
வேந்தணுெடு வரும் கவிஞன் இளைஞன் எங்கள்
விழிகளுக்கு அமுதாவான். அவன் இயற்றும் காந்தருவப் பாமழைக்கு இசையமைக்கக்
காத்திருப்போம் வேந்தனதிற் கலந்து கொள்வான். சாந்தமுறும் முகவடிவும் தமிழ்த்தேன் பாய்ச்சும்
தனித்திறனும் எனைக்கொள்ளை கொண்டு சாடும் ஏந்திழையர் அறுவருக்கும் எனது கோலம்
ஏளனத்தைத் தூவிவிடும்; இந்த வேளை . 34、
வேளைநிகர் அழகுடையோன் எனது நெஞ்சை
விட்டகலா இளமருதன் விரிந்த மார்புக் காளைஒரு நாட்கவிதை தந்த போது
கண்வழியால் என்துடிப்பைக் கண்டுகொண்டான் வேளைவரு மென்றிருக்க வில்லை நாங்கள்
விடிநிலவின் கள் உண்டோம் வெறிபடைத்தோம் தாழைமலர்ச் சோலையெலாம் கற்ப கத்தேன்
தருக்களிடைவிளையாடித் தவழ்ந்து வந்தோம். 35

1.
6. நில் அங்கே !
வந்தவளை மற்றவர்கள் நோக்கவில்லை
மறுபுறமாய்த் திரும்பிஎனை வாட்டி வைத்தார் நிந்தனையா என்மீது?-விளரியன்னை;
நெஞ்சறிய வீழ்ந்தழுதேன் நீண்ட நேரம் வந்தவளென் தோள் பற்றித் தூக்கி விம்மும்
மார்போடு அணைத்தவளாய் வார்த்தை சொன்னுள். அந்தியிலே மன்னனிங்கு வந்தான்; நம்முள்
அறுவரைத்தான் கண்டதனுல் அதிர்ச்சி கொண்டான்!” 36,
*கொண்டுவந்த பேர்யாழைக் குளத்தில் வீசிக்
கோபித்துப் போய்விட்டான். இனிமேல் என்ன கண்டுகொளப் போகிறதோ இந்தக் கண்கள்!
கவிஞனுக்கும் தீராத களங்க மம்மா” என்றவளை நான்பார்த்தேன். *போது மம்மா
எனக்குமொரு நீதியுள தெடுத்துச் சொல்வேன் இன்றுவரைக் காதலித்தல் குற்ற மில்லை
இனிமேலே குற்றமெனில் எதிர்த்தே தீர்வோம்.” 37
“எதிர்ப்பதுவா? கைக்கிளைநீ என்ன சொன்னுய்?
இராவணனை எதிர்ப்பவர்கள் இகத்தி லுண்டா?” கொதிப்படைந்தாள் அன்னை, இதற் குள்ளே ஆங்கே குதிரைகளின் குளம்பினுெலி! அதைத்தொடர்ந்து எதிர்ப்பட்ட காட்சி! அதால் நான் தவித்தேன்
இதயத்தே வேல்பாய்ந்த தெனத்து டித்தேன் சதிர்ப்புறத்தும் நீள்வடத்தால் பிணைத்தகோலம்!
சான்ற கவி இளமருதன் சமைந்து நின்றன்! 38鸾
“நில்லங்கே’ மருதனிடம் தாவிச் செல்ல
நினைந்தவள் நான்; குரல்கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்
எல்லேயிலாப் புகழுடைய இராவ ணேசன்
எனப்பார்த்து நகைத்திட்டான், “ஏண்டி கள்ளி

Page 12
12 நீரரமகளிர்
சொல்லாமல் காதலித்தாய்; அதற்கு இங்கு
துடிப்பவர்யார்?-இளமருதன். ஏன் நிற் கின்றீர்;
எல்லோரும் வாளெடுங்கள்! நடக்கட்டும்; உம்!”
என்றவுடன் வீரரெலாம் எழுந்து பாய்ந்தார்! 39
7. இடையின் கீழ் மீன் வடிவம்
பாய்ந்தெழுந்த புலியானேன்;- மரணத்தீயில்
படமெடுத்த பாம்பா னேன். உளம்வெ டித்துத் தீய்ந்ததனுல் செயலொன்றும் தெரிய வில்லை;
*தீயவனே இராவணனே! உனது செங்கோல் சாய்ந்திடுக; காதலினல் உனது யாக்கை
சரிந்திடுக புவியில்’ எனச் சத்தமிட்டேன் ஓய்ந்துவிடா தோலமிட்டார் எனது தாயர்.
ஓடிவந்தார்; திகைத்தபடி உருகி நின்றர்! 40
நின்றவரைப் பார்த்தபடி இராவணேசன்
நெஞ்சுவிம்ம நின்றிருந்தான். வாள் எடுத்துச் சென்றவர்கள் எதிர்பார்த்த படி செய் யாமல்
சேர்த்திருந்த வடங்களைத்தான் சிதைத்துவிட்டார். குன்றிவிட்டேன்; ஆத்திரத்தால் நேர்ந்து விட்ட
கொடும்பழிக்காய் இதயத்தைக் கூர் வேல் தின்ன. நன்றிகெட்ட பாவிஎனை அழைத்தான், மெல்ல
நகைசெய்தான், கவிஞனிடம் நடந்துவந்தான். 41
வந்தவுடன் இளமருதன் கரம்பி டித்து
வைத்தான் என் கைத்தலத்து. வழிந்தகண்ணிர் சிந்துவதால் நான்நனைந்தேன். அவர்ந னைந்தார்
சேர்த்துவைத்த நிம்மதிபோல் சிரித்தான் வேந்தன் பந்தமுடன் எனைப்பார்த்தான்; 'மகளே! உன்னைப்
படைத்ததவன், வளர்த்தவன் நான்; அதனுல் உன்றன் தந்தையடீ விளையாட்டே வினையதாச்சு
தவறிழைத்தேன்; சாவுக்கு அஞ்ச வில்லை. 42

பவனததல முதaதருதது
இல்லையுனை நினைக்கத்தான் இதயம் நொந்து
எனக்குள்ளே கருகுகிறேன். இல்ல றத்தின் எல்லை உனக் கொரேதிங்கள். நிறைநி லாவின்
இரவன்றே இடையின்கீழ் மீனின் தோற்றம் சொல்லாமல் படிந்துவிடும் எழுவ ருக்கும்.
தொல்வினையிற்- குறுமுனிவ னிட்ட ஆணை எல்லாம் நான் விட்டபிழை; நீச பிக்க
இடம்வைத்தேன்; என்மகளே! இடறி ழைத்தேன் 43.
இழைத்தவன் நான்!” எனநொந்த இராவணேசன்'
எந்தையடி மிசைவீழ்ந்தேன். எழுந்தே னில்லை அழைத்தபடி எனைத்தூக்கி நிறுத்தி அன்பால்
அரவணைத்தான் இருவரையும். அதன்பின் னேஓர் முழுத்திங்கள் கொழுநருடன் வாழ்ந்தேன். பின்னர்
முடிந்ததந்தப் பெருவாழ்வு. முழுநி லாவில் எழுத்துப்போல் நீர்நிலையி லிறங்கிவிட்டோம்
என்ருலும் இசையீந்தோம் இராவ ணற்கு. 44.
8. பவளத்தில் முத்தெடுத்து.
இராவணனின் தமிழ்ச்சங்கத் திருந்த செஞ்சொல்
இளமருதன் எனும் கவிஞர் நீங்க ளத்தான்! பராமுகமேன்? பாருங்கள் என்மு கத்தை!
பதைபதைத்தாள் கைக்கிளைப்பெண் படியில் வீழ்ந்து ஒரேதிசையாய் கடல்நோக்கி ஓடி வீழும்
உயிர்நதிபோல் என்மேலே ஒடிந்து வீழ்ந்தாள் நிராதரவுற் றவள் போல விம்முகின்ருள்,
நெஞ்சின்மேல் முகம்புதைத்து நீண்ட நேரம் 45.
நேர்ந்துவிட்ட அதிர்ச்சியிலே நினைவி ழந்து
நின்றுவிட்டேன். மார்பிலவள் நீந்து கின்ருள்.
சோர்ந்துபட்ட நிலையோடே அவள்மு கத்தைத்
தூக்குகிறேன் அவள்நாணித்துவளு கின்ருள்.

Page 13
4 நீரரமகளிர்
காந்தவிழி கொண்டெம்மை நோக்கி முல்லை
கடைக்கண்ணுல் சிரிக்கின்ருள். தோணி இன்னும்
ஊர்ந்தபடி செல்கிறது; நிலாப்பெண் கூட
ஒளிமுகத்தை முகிற்றிரைப்பின் ஓடவிட்டாள். 46
விட்டுவிட்டு நிலாப்பெண்ணின் விழிம றைத்து
விளையாடி முகில்காட்டும் வெளிச்சத் தூடே பட்டணிந்த இடைதொட்டுப் பருவ மார்பிற்
படம்வரைந்தேன். விம்மியதாற் பதிந்த கொங்கைக் கட்டணியிற் கலைகண்டேன். “ஆகா நீரிற்
கலந்திருந்தும் நனையாத கலிங்க முங்கள் பட்டணத்தில் விலைக்குண்டோ?”எனவி யந்தேன்.
பவளத்தில் முத்தெடுத்துப் பதித்துச் சொன்னுள் 47
9. முல்லை எங்கே?
*சொல்வதெது உங்களது தங்கை கட்டும்
துகில்கூட இதே துகில்தான்!” என்ருள். முல்லை மெல்லுடலைக் கவனித்தேன். அதுவும் கூட
விந்தையிலே அதேதுகில்தான்! வியக்கு முன்பே முல்லையவள் எனை நோக்கி நீரை வீசி
முறுவலொடு சொல்கின்ருள் 8கேளேன் அண்ணு! கல்லெடுத்துக் கவிஞக்கிக் கலைபடைத்த
கபாடபுரத் திவரோடே கலந்து வாழ்வேன். 48
வாழ்க்கையிலே காணுத கேட்டி ராத
மகாபுதுமை தானண்ணு” என்ற வாறே கீழ்ப்புனலில் ‘சவள’தனை வீசி விட்டு
கிடுகிடென்று கைகொட்டி நீரை யள்ளி தூள் பறக்க விசிறுகிருள் மூச்சு முட்டத்
துடிதுடித்துக் கத்துகிறேன். “முல்லை! சொல்லைக் கேள்முல்லை சரிகிறது.தோணி ஆ கைக்
கிளை கூடக் கத்துகிருள்! முல்லை! முல்லை!" 49

முல்லை எங்கே ?
*முல்லையிலைப் பேய்க்காற்று” என்று சொல்லி
முன்னைவிடக் கைக்கிளையென் முதுகைக் கட்டிக் கொள்ளுகிருள். *அண்ணு”என் ருேல மிட்டுக்
குலைநடுங்கும் முல்லையது குரலைக் கேட்டுத் துள்ளுகிறேன். கைக்கிளை, ஆ என்னை விட்டுத்
தூரப்போய் வீழ்ந்துவிட்டாள் ஐயோ! நீரை அள்ளியடித் திடும்காற்றில் தோணி யோடு
ஆழ்ந்துவிட்டேன் ஆ! அம்மா! ஐயோ, அம்மா! 50
அம்மா என்முல்லையெங்கே? அவள்தான் எங்கே? அலறியடித் துதைக்கின்றேன். ஆழ்ந்த நீரில்.
விம்மிவிம்மி யழுகின்றேன். மூச்சு முட்டி
விழிசாக, உயிர்சாகும் வேளை. ஆ! என்
அம்மா! என் றனுங்குகிறேன். கைகொடுத்து
அரட்டுவது யார்? 'தம்பி விபுலா நந்தப்
பெம்மானின் விழவென்ருய்? எழும்பு’ என்று
பிடித்துலுப்பி விட்டவள்என் பிரிய அன்னை 51

Page 14
அச்சுப்பதிவு
கலைவாணி அச்சகம், 10, பிரதான வீதி, யாழ்ப்பாணம். 981-63


Page 15
அற்புதம் இந்த அகிலம், யாய் உதிக்கலாம். லட்சத்தில்
ஒருங்கமைந்தோர். சென்னைக்
மளித்த கவிதைப் பரிசும், 'நம டியில் 'ஆனந்த விகடன் புகழ் ரிகை தேனருவி நாடகப்போ கப் பதக்கமதும், தனியாகவே காய் ஆன பரிசில தும் இதனே ருமை கொள்ளா இளேஞர்
"கல்கி'; 'ஆனந்த விகடன் ஈழத் தவநிலத்தும் இக்கவிஞர் பத்திரிகையே இல்லே.
திமிலே - இலக்கியப் - பரப் தமிழ் எழுத்தாள சங்கத் இந்த எழுத்தாளர் இயற்று வாய்ப்பைப் பெற்ருேம் மகி இராஜ ப் திமிலதீவு
“Giud
(கா
 

இதில் ஆயிரத்தில் ஒருவர் கவி ஒருவர் தான் எல்லாத் திறனும் குழந்தை எழுத்தாளர் மன்ற க்குத் தொழில் கவிதைப் போட் பூந்தளித்த பரிசிலும், ஈழப் பத்தி ட்டி நடத்தியதிலே கிடைத்த தங் 'கதம்பம்" அளித்த சிறுகதைக் வலியுறுத்தும் என்ருலும் தற்பெ குளுந்த குணமுடையர்.
* முதற் கொண்டு தமிழகத்துமீ
படைப்பினேத் தாங்கி வரணப்
பேரைக்கு முன்னுேடி, து உபதலைவர்.
தும் படைப்புகளே பிரசுரிக்கும் ழ்கின்ருேம்,
:ir J ம் -மட்டுநகர்
த்த வெளியீடு க் கணிகள்'
வியம்)