கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் செந்தமிழ்

Page 1
§සිෆික්‍ෂුද්‍රිෆි.
சிறுவர் ெ
3.22.333333333
சோமசுந்த
துெ தமிழ்
ஒன்ர நீட்சி சன்
+ نListHea
AFT.
அறக்கட்டளே நி
கசெட் இன. T.
 

සීඝ‍්‍රැෆිෆිෆික්‍ෂුද්‍රි.
சந்தமிழ்
3333333333333.
ரப்புலவர்
-
சங்கம்
F.
பயம்,
』專轟■
விலே ரூபா 200
人

Page 2
சிறுவர் ே
4027-A

செந்தமிழ்

Page 3

சிறுவர் செந்தமிழ்
இது யாழ்ப்பாணத்து நவாலியூர், க. சோமசுந்தரப்புலவர்
அவர்களால் இயற்றப்பட்டு,
கொழும்புநகர் அப்போதிக்கரிசு வணிக நிலையத்து அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது
நந்தன - பங்குனி .

Page 4
1955-ஆம் ஆண்டுப்பதிப்பு.

பதிப்புரை
என்னெஞ்சம், அழகு ததும் புஞ் சுனையூற் ருகுக செஞ்சொன் மலருங் கற்பக மாகுக பாமணி பிறக்கு மாமலை யாகுக சான்றேர் மொழிந்த குறிக்கோ னித்திலங் குயிற்றிய சித்திரக் கோயிலு மாகுக நினைவும் புனைவும் நிறைந்தே யழகுக் கலைதரு முணர்வு மிகுதரற் பொருட்டே
ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னே,
நவாலியூரிலே, பனையோலையால் வேய்ந்த ஒர் அழகிய சிறு குடிலின் முற்றத்திலே, தண்ணுர் திங்கள் வெண் ணிலாப் பொழியத் தாழஞ்சோலையிற்றழைத்த தென் றல், மெய்வருடி வியர்ப்புநீக்க, இலக்குமிப்பிள்ளையென் னும் எங்கள் பாட்டியார், எங்களுக்கு நடுவிலிருந்து கொண்டு வியப்புறு கதைகள் நயப்புறச் சொல்லுவார். சிலவேளைகளில் இனிய சிறிய குழவிப்பருவப் பாடல் களும் பாடி மகிழ்விப்பார்.
ஒருநாள், எடுக்குப்பிள்ளை யொன்றைக் கையிலே தாங்கிக்கொண்டு, கொக்கொத்த கூந்தல் குளிர்நிலாப் பழிக்கப் பொக்குவாய் வெற்றிலையாற் பொலிவு கொள்ள மதுரமான குரலிலே,
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு தாமரைப் பூவே சாய்ந்தாடு
மாடப் புருவே சாய்ந்தாடு மானே தேனே சாய்ந்தாடு
கொஞ்சுங் கிளியே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு

Page 5
vi
மாணிக்க மலையே சாய்ந்தாடு மரகத மணியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு கற்பகக் கொம்பே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு சோபன வாழ்வே சாய்ந்தாடு
அன்பே யின்பே சாய்ந்தாடு ஆச்சி மடியிற் சாய்ந்தாடு என்று இன்னிசையுடன் பாடியின்புறுத்தினர்.
இத்தகைய பாடல்கள் தொட்டிற் பாடல்கள் ? எனப்படும் குழவிப்பருவ இலக்கியங்களாம். பள்ளிப் பருவ இலக்கியங்களை நயந்துகற்று, ‘ அழகியலுணர்வு' பெறுதற்கு இப்பாடங்கள் அடியீடு செய்வன. மேற் போந்த செய்யுளை ஆயிரமுறை யிடையீடின்றிப் படிப் பினும் அலுப்புத்தோன்ருத ஒழுகிய வோசை நயம் அமைந்திருப்பது அதன் சிறப்பியல்பாம். குழவிப் பாடல்களில் இத்தகைய வோசை நயமும், சொன் மடங்கி வருதலும் அமைதல் வேண்டும். அமைதிப்பட்ட வெற் ருே சையிலேயே மக்கள் மனம் பெரிதும் இழுப்புண்டு நிற்றலையும், அதனைப்பல்காற் கேட்டின் பங் கொள்ளு தலையும் காண்கின்றேம் அல்லமோ ? குழந்தைகள் தாய்மாரின் தாலாட்டிலே கண்ணயர்ந்து துயில்கின்றன. இவ்வகைப் பண்பட்ட இன்னேசையின் அமைதியைத் தமிழிலக்கணத்தில் வண்ணம் ' என்பர். தமிழிலே நூறு வகை வண்ணமுண்டு. ஒவ்வொன்றும் செவிக் குணவு தருவன.
குழவிப் பருவத்தில் இவ்வோசைத் திறங்கள் கேட்கப் படுமாயின், குழந்தைகளின் செவிப்புலன் சீரடைந்து எஃகுச் செவிவளமுண்டாகும். அதனற் பிற்காலத்தில் அப்பிள்ளைகள் இசைக்கல்வியையும் செய்யுளியற்றலையும் எளிதாய்க் கற்றுக்கொள்வர். " பாட்டுமுரையும் பயிலா

vii
தனவிரண்டு ஒட்டைச் செவியுமுள ”, என்பதும் நோக் குக. தாயிடங் கேட்கப்படும் இவ்வண்ணப் பாடல்கள் அனைத்தும் மூளையிலே அறியாதறிதல் எனப்படும் அசாக்கிரமாய்ப் பதிந்து விடுதலினுற் பிள்ளைகளின் பிற் காலத்தில் அவை வளமுற்றுப் பெரும் பயனளிக்குமென்று அகநூலார் கூறுப. மனமுயற்சியின்றிப் படிக்கும் இத் திறத்தனவற்றை அகநூலார் ‘அசாக்கிரப்படிப்பு என்பர்.
குழவிப்பருவ இலக்கியப்பாடல்கள் எல்லாம் அசாக் கிரமாயுருப்படுவனவாதலின், அவை செவ்விய ஓசை வளமும் சொல் வளமு முடையனவாயிருத்தல் வேண்டும். மூன்று முதல் ஏழாண்டுப் பிள்ளைகளுக்கு, இவை, கருத் துணர்ச்சியை மெல்ல மெல்ல எழச்செய்து நினைவுள் ளத்தைப் பிறப்பிக்கும். ஒச்ையின் தொடர்பாற் சொல்லின் தொடர்பும், சொல்லின் தொடர்பால் அறிந்த பொருளின் தொடர்பும் உண்டாய்ப் பின்னர் அறியாப் பொருளைப்பற்றிய சிந்தனைகளும் உருப்படும். இவர்களுக்கு நகை, வியப்பு, அன்புச்சுவைகள் மலிந்த பாடல்கள், மிக வாய்ப்பானவை யென்ப. எட்டுமுதற் பன்னிரண்டு அகவைப்பிள்ளைகள் விவரணச் செய்யுள் களையும், வண்ணப்பாடல்களையும் வரலாற்றுச் செய்யுள் களையும் , விரும்புவர். பதினன்குமுதற் பதினெட்டு அகவைச் சிறுவர் காதற்சுவை வீரச்சுவை நிரம்பிய பாடல்களைப் பெரிதும் மகிழ்ந்து கற்பர். அன்பு, நேர்மை, வாய்மை, அடக்கம், பொறுமை, ஒப்புர வுடைமை முதலிய பண்புகள் வளரும் பருவம். இதுவாக லின், நீதிச் செய்யுள்களையும், அந்நீதிகளைப் பொதிந்து காட்டும் கதை நிகழ்ச்சிப் பாடல்களையும் அவர்களுக்குக் கற்பித்துவருதல் இன்றியமையாததாம். செய்யுள்களை மனப்பாடஞ் செய்தற்கும், அவற்றை இனிய இசையுடன் பொருளறிந்து படித்து மகிழ்ந்து கொள்ளுதற்கும் இப்பருவம் மிக வாய்ப்பானது.

Page 6
viii
முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னே யாமறியக் கூடியதாக இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் செவிவழக்கிலிருந்தன. வேற்றுநாட்டுக் கல்வியும், நாகரிகமும் நாளுக்குநாள் எம்மிடம் பதிந்து காழ்ப் புறவே, செவியாறலாக வந்த அப்பாடல்கள் அருகத் தொடங்கின. வாழையடி வாழையாக வந்த கற்பனைக் கதைகளும் கேட்பாரின்றி மறைந்தன. குழந்தை பிறந்த வுடன் பாடப்படுங் காப்புத்தாலாட்டும் கால்வழிவாழ்த் தும் வளருங்காலத்திற் றுயில் குறித்துப்பாடும் தாலாட் டும் மெல்லமெல்ல இருந்தவிடமுந் தெரியாமற் பொய் யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.
ஒட்டகம் தலைமறைவு வேண்டிப் புகுந்தவாறு ஆங்கிலக்கதைகளும், குழவிப்பாடல்களும் தமிழர் மனைகள் தோறும் நுழைவனவாயின. பழந்தமிழுணர்ந்த வெற்றிலைப்பாட்டிமாரும் இறந் தொழிவா ராயினர். அவர்களை நீண்டநாளுக்கு வாழச்செய்ய அதிகமானும் இல்லை; நெல்லிக்கனியுமில்லை. புதிய ஆங்கிலப்பாட்டி மாரும் தாய்மாரும் சிங்களச்செவிலித்தாய்மாரும் தமிழ் மனைகளிலே நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக உருவாயினர். உருவானதும், ஆ! வாழையடி வாழை யாகவந்த குழவிப்பருவ விலக்கியச்செல்வம் வெற்றிலைப் பாட்டிமாரோடு உடன்கட்டை யேறிவிட்டது.
எங்களுக்கு வந்த கேடு, அம்மம்ம ! இதுமட்டுமன்று. வினவலர் எனப்படும் தொழின் மாக்கள் தம்மறிவாற் றல்களுக்குப் பெரிதும் இணக்கமாகப் படிக்கும் பல்வேறு தொழிற்பாடல்கள் எங்கள் நாட்டில் நிலவின. அவை தம்முட் பல இப்பொழுது அழிந்துவிட்டன. அருவி வெட்டுதல், சூடுமிதித்தல், நீரிறைத்தல், நாற்று நடுதல், கிணறு வெட்டல், வீடுவேய்தல், கப்பலோட்டு தல் முதலிய தொழிற்பாடல்கள் அருகியுஞ் சிதைந்தும் திரிந்தும் உருக்குலைந்து ஆங்காங்கே சிறுபான்மை வழங்கப்படுகின்றன. இந்நாட் செய்தித்தாள்களிலும் பிறவற்றிலும் வெளிவரும் நாட்டுப் பாடல்கள் அத்

ix
துணைச் சிறப்பினவல்ல ; அவை பெரும்பான்மையும் மரபும் பண்பாடும் வண்ணமும் நிரம்பா நீர் மையவாம்.
இனித்தொழின் மாக்களிடம் முன்னைநாள் நிலவிய கூத்துவகையும், நாடகவகையும் அழிந்து வருகின்றன. அவற்றைப்போற்றுநர் இக்காலத்தில்லாமை வருந்தத் தக்கது. நாடகத்தின் சிறப்பியல்புகளையும் செந்தமி ழின் தூய்மை இனிமைகளையும் உணராது, சேரிமொழி யிலே சிறு நாடகங்களையெழுதிக் கலைவளம் படுத்த முயலும் ஒருசிலர், மேற்கண்டனவற்றை அரிதின் முயன்று தேடிப் பதிப்பிப்பாராயின் அதுவே தலைசிறந்த தொண்டாகும்.
தொழிற்பாட்டும், கூத்தும், நாடகமும், குழவிப் பாடலும் என்றற்றெடக்கத்தன வெல்லாம் அழிதற்குக் காரணம் என்னையெனின், யாம், எங்கள் முதுசொமான செந்தமிழ்க்கலைச் செல்வத்தை அறவே மறந்தும் பழந் தமிழ்நாட்டு அடிமையில்லா அருந்தொழில்களைக் கை நெகிழவிட்டு அடிமைத் தொழில்களை மேற்கொண்டும், அவற்றுக்குமேல், ஆங்கிலேயராக வெம்மைக் கருதி, அவர்தம் பாழும் நாகரிகப் பஞ்சணையில் நெடுந்துயில் கொள்ளுகின்றமையே யா மென்க. அந் நெடுந்துயில் நீக்கத்திற்கு இந்நாட்புலவர் பலர் திருப்பள்ளி யெழுச்சி பாடி வருகின்றனர். ஐயகோ ! அது நீங்கு நாள் எந் நாளோ !
இனிப் பாட்டிமார், சிறுவர் தம்மைச்சூழத் திருமனை முற்றங்களிலே இருந்து, ஏலம் இலவங்கம் முதலாய
வாசப்பொருள்களுடன் இருப்புரலில் அடைக்காய் துவைத்துக்கொண்டு, அன்பூற அறிவூறப் புராணக்கதை கள் சொன்னகாலம் போய்விட்டது! அவர்களிடம்
பாரதக்கதையும் இராமன் கதையும் நளன் கதையும் கேட்டு அறிவு தேடிய அக்காலம் போய்விட்டது! பிற் காலத்திற் சிறுவர்க்குண்டாகும் இலக்கியப் புலமை யொருபுறமிருக்கக் கந்தபுராணம், பெரியபுராணம், திரு

Page 7
Χ
விளையாடற் புராணம் முதலிய புராணக்கதைகளில் வரும் வியத்தகு நிகழ்ச்சிகள் அவர்களிடம் நினைவு’ எனப் படும் கற்பனையை வளம்படுத்துவனவாம். இளந்தைய ராங்காலத்தில் அந்நினைவு வளமானது, புலவர் செய்த காவியங்களிற் படைத்து மொழிதல் என்னும் புனைவு களை அறிந்து நயந்து சுவைத்தற்கும் ஒரு முதலாகு மன்ருே அல்லதூஉம், சமயவுண்மைகளை விளங்கிக் கொள்ளும் அவர்தம் பிற்காலத்திலே, அவைகளிற் பொதிந்த உண்மை நூற் பொருளென்னும் தத்துவப் பொருள்களைத் துருவியாராய்ந்துகொள்ள அக்கதைகள் பெரிதுந் துணைபுரியுமன்றே ! எண்ணிறந்த மன்னுயிர் களின் தன்மைகளையும் ஐம்பூதக்கலப்பான அண்டங் களின் இயல்புகளையும், அவ்விரண்டனையும் இயக்கி, அவற்றினுாடே நீக்கமற நிறைந்துநிற்கும் செம்பொருட் சிவித்தின் பெற்றிகளையும், மற்று, அச்சிவமே அவ்வுயிர் களின் விடுதலை குறித்துக் கருணை முகிழ்த்துச் செய்யும் அருளிப்பாடுகளையும் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறி வினராய மக்களுக்குப் பருப்பொருள் வழியாகத் தெருட் டுங் கல்விமுறையே புராண மென் றுணர்ந்துகொள்க.
இந்நாளிற் புராணக் கதைகளைப் பொய்யென்றும், அவை குப்பைக் கிடங்குக் குரியனவென்றும் , மற்ற வற்றைத் தீப்படுத்துவது தக்கதென்றும், வெற்ருரவாரம் செய்து, மக்களின் தெய்வ வாழ்க்கையைச் சின்ன பின்ன மாக்கிவருந் தென்னிந்தியப் பேதையர் சிலரின் அறியா மைக்கு யாம் இரங்குகின்றேம் ! அப்பேதை மாக்கள், உரூசியநாட்டுப் பொதுவுடைமை நிழலிலே நாத்திகக் குடில் கட்டி மனையறம் நடத்தத் தொடங்கிப் பழந் தமிழ்க் கலைப்பண்புகள் அனைத்தையும் பாழாக்கி வரு கின்றனர் ! அந்தோ ! அவர் அறியாமைக்கு அஞ்சு கின்றே ம் !
இனித் தொல்காப்பியனர் வழிவந்த தமிழ்நாட்டுச் சான்ருேர் கண்டருளிய கொள்கைகளுக்குங் குறிக் கோள்களுக்கும் முற்றும் முரண்பட்ட வறு நினைவுக்

Χ1
கதைகளை யெல்லாம் ஆங்கிலத்திற்கற்று, வாழ்க்கைச் செம்மையுஞ் சமயப்பண்பாடுமிழந்து, இக்காலத்து இளந்தையர் மாள்கின்றனர். தம் ஒழிவு வேளைகளிற்ற னும், பழந்தமிழ் நாட்டுப் புராணக் கதைகளையும், காப் பியக்கதைகளையும் படித்து உணர்வு தேடிக்கொள்ள அவர்க்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. நூற்றுக்கணக் கான செய்தித் தாள்களை வாங்கிக் குவித்துக்கொண்டு அவற்றில் வருங் கொலையே களவே குத்தே வெட்டே முதலாம் நிகழ்ச்சிகளை யெழுத்தெண்ணிப் படித்தும், கல்வியறிவொழுக்கங்களை மாற்றும் சீர்கெட்ட திரைப் படக் காட்சிகளைப் பேயுமுறங்கும் பெருஞ்சாமம் வரை யும் விழித் திருந்து பார்த்து மகிழ்ந்தும் தங்காலத்தை அவமே கழித்துவருகின்றனர். இதனையின்னுஞ் சிறி தூன்றி நோக்குவோமாயின், தமிழ்ன் அழகினிமைகளை யழித்தும், பழைய தமிழிசையை யுருக்குலைத்தும், வேண்டாப் பழக்கத்திற்கும் அருவருப்புக்குமுரிய கதை. நிகழ்ச்சிகளை யூடே யூடேநூழைத்து நாடகத்தின் சிறப் பியல்புகளைப் பாழாக்கியும், கலைக்கேடு செய்யும், இக் காலத் திரைப்படக்காட்சிகள், இளந்தையர்க்குப் பெருந் தீங்குதருவனவாம். ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்' என்னும் உத்திகொண்டு இவற்றையுமுட னுரைத் தாம்.
என்றித்துணையுங் கூறியவாற்ரு ற், குழவிப்பாடல்களும் பிள்ளைகளின் அறிவு விளக்கத்திற்குட்பட்ட நிகழ்ச்சிகளை யும் அறிவுரைகளையும் பொதிந்த இன்சுவைச் சிறுவர் பாடல்களும் புராணக் கதைகளும் காப்பியக் கதைகளும் அவர் நயக்கும் இலக்கியமாமென்பதும், அவற்றைப் பயிலுதலால் நல்வாழ்க்கைப்பண்புகளுருப்படுமென்பதும் அவையல்லாப் பிறவெல் லாம், அவர்க்குத் தீங்குதரு. மென்பதும் போதரும்.

Page 8
xii
II
உலோகாயதம், பொதுவுடைமை, நாத்திகம், மாயா வாதம் முதலிய இக்காலச் சிறுமைகளிற்றப்பி நல்வாழ் விற் றலைப்பட்டுய்தற்கு அடிகோலுவது, பண்பட்ட இலக் கியக் கல்வியேயாம். இலக்கியம் என்பது ஒர் அழகுக்கலை. அது மக்கள் வாழ்விலே முளை கொண்டு, அவ்வாழ்வின் செம்மைக்கு அடிப்படையான அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள்களாகிய கோடுகள் பரப்பி, அவைகளிலே விழுமிய நன்னெறிகளாய பூக்களை மலர்த்துவது; அம்முகத்தால் மக்களை நன்மக்களாக்கி, அவர்தம் சிந்தனை சொற்செயல்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களிடத்திலே தெய்வத்தன்மையைப் பிறப்பிக்க வல்ல அழகியலுணர்வை நல்குவது.
மக்கள் வாழ்விலே இன்பமுந் துன்பமும் மாறி மாறி வருவன; அவ்விரண்டனையும் ஒருபடித்தாய்க்கொள் ளும் மனத்திட்பத்தை நல்குவதும் இலக்கியமாம். இன்பங்கொள்ளத் தகாத வழியிலே யின் பங்கொள் வதை நீக்கியும், நிலையான இன்பங்கொள்ளும் நெறிகளை வரம்பு செய்தும், மக்கட் பண்பினை வளர்ப்பதும் இலக்கியமாம். இன்னும் இதனைக் கருத்தூன்றி நோக் குவோமாயின், மக்களிற் பலர் வறுமையாலும் நோயா லும் நாடோறும் வருந்துகின்றனர் , தமக்கு நேயம் பூண்ட அருமைத் தாய் தந்தையரும் மனைவி மக்களும் துஞ்சியவழித் துயர் கொண்டு அவல முறுகின்றனர். பலர், அறிவோடுகூடிய இன்பம் இதுவென்பதையறிய மாட்டாராய்ப் பகுத்துணர்வில்லா விலங்குகளைப்போல விழுமிய நோக்கமின்றி யருந்தல் பொருந்தல்களிற் காலத்தைக் கழித்து மடிகின்றனர்.
* பாலணுய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை
DIT IT 5 L D மேலணுய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு
வந்து கோலனய்க் கழிந்த நாளுங் குறிக் கோளிலாது
கெட்டேன்.

xiii
என்று அருட்சான்ருேர் கூறுவதுங் காண்க. இவ்வாருக, மக்கள் இவ்வுலக வாழ்விலே அடைந்துவரும் அளவற்ற துன்பங்களையெல்லாம் அமைதியோடு பொறுக்கச் செய்து, உயர்ந்த சால் பினை அவரிடம் வளர்ப்பதும் இலக்கியமென்றறிவேம். இன்னும், இலக்கியம், கலை யழகுக் காட்சிகள் நிறைந்த ஒரு புத்தப் புதிய வுலகம் போல்வது; எத்துணை ஆண்டு கழியினும், புதுமைக்குப் புதுமையாய்ப் பழை மைக்குப் பழைமையாய் நிலவி, உண்மை, நன்மை, அழகு என்பவற்றின் தன்மைகளை மக்களியற்கையிற் பொதிந்து காட்டுவது. தருமர் பொறையும், வீமன் ஆண்மையும், கன்னன் கொடை யும், அரிச்சந்திரன் வாய்மையும், கண்ணப்பர் அன்பும், யூகியின் நட்பும், மங்கையர்க் கரசியின் சைவப்பற்றும், சீதையின் பெண்மையும் என்னும் இவைகளைக் கற்குந் தோறும் யாம் புதியதோர் உலகில் வைகியின்புறுகின் ருேம். அக்குணங்களைப் புனைவுசெய்த மெய்ப்புலவர் கள், சில நாழிகை நேரமாவது இவ்வுலகத்தை மறக்கச் செய்து விடுகின்றர்கள்.
மெய்ப்புலவர்கள் தங்கற்பனை யுலகத்திலே ஆயிர கோடி ஞாயிற்றைத் தோன்றச் செய்வர் ; ஆயிரகோடி திங்களைப் படச்செய்வர் ; இந்திரனுஞ் சமைக்கமுடியா எழுநிலை மாடங்களையும் மணிமண்டபங்களையும் ஒரு நொடிப்பொழுதிற் கட்டியெழுப்புவர் ; நான்முகனும் படைக்கமுடியா அழகுசான்ற நங்கையரையும், நம்பி யரையும் படைத்துத் தெய்வக்காதல் கொள்ளச் செய் வர். பொதியினிற் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புலவர் நாவிற் பயின்ற தென்றலிலும், மேதக்க தென் றலை ஆங்கண் வீசச்செய்வர் ; தம் இனிய உயிரைத் தானும் வெறுக்கும் தறுகண் வீரரை இறுமாந்து செம் மாந்திருக்கச் செய்வர் ; ஒருகாற் போர்க்கறை கூவு விப்பர் ; காற்றினுங் கடுகியும் முடுகியுஞ் செல்லும் கணைகளையும், தேர்களையும், பரிமாக்களையும் வருவிப்பர். அம்மம்ம ! மெய்ப்புலவன் படைக்கும் இலக்கியவுலகம் வியத்தகு மாட்சிமையுடையது 1 அதனலன்ருே, செகப் பிரியர் என்னும் ஆங்கிலப் பெரும்புலவர்,

Page 9
xiv
*மானமர் புலவன் வளஞ்சால் நினைவில் ஏணுற வுருப்பட் டிலங்குபல் லாயிரங் காணுக் கேளாக் கருதாப் பொருட்குத் துஞ்சாச் செஞ்சொற் றுாரியங் கொண்டு வாழ்வோ டுறையுளு முயிர்ப்பும் வழங்கி முடியாப் பெயரு முடித்துப் புனையா வாறு புனையு மன்றே
என்று கூறுவாராயினர்.
III
பொதுவகையில் இலக்கியத்தின் இயல்பும், சிறப்பு
வகையிற் சிறுவர் இன் சுவைப் பாடலின் தன்மையும் ஒரு வாறு கண்டோம். சிறுவர் செந்தமிழ் -என்னும் இந்நூல் சிறுவரிடம் ஒல்லும் வகை அழகிய லுணர்வைப் பிறப்பிப்பதோடு சிறந்த வறிவுக் களஞ்சியமாகவும் விளங்குகின்றது. பழுத்த ஓசை நயமும், மணியனைய செஞ்சொல்வளமும், அழகிய பொருட் சிறப்பும், நிறைந் திருத்தலின் இதனைச் சிறுவர் எளிதிற் கற்றின்பமடை வர்.
* ஆடிப் பிறப்பொடு கத்தரித் தோட்டமும்
ஆக்கி யளித்த புலவர் பிரான்
தேடக் கிடையாத தென்னிலங்கை வளன்
தேன் சொரியுந் தமிழ் மாந்துதுமே
என்று முன்னெருநாளிற் பண்டிதமணி, சி. கணபதிப் பிள்ளையவர்கள் இந்நூற் பாடல்களைப் பெரிதும் பாராட் டினர்கள். " அப்பாடல்கள் அனைத்தும் நூலாக விரைந்து வருதல் வேண்டும் , என்று எம்மைப் பலகா லூக்கியும் வந்தார்கள்.
*''' And as the imagination bodies forth
The forms of things unknown, the poets pen
Turns them to shapes and gives to airy nothing A local habitation and a name.’’

XV
பண்டிதமணியைப் போலவே, புலவர் பாடல்களில் ஈடுபாடுகொண்ட அருள் யோவான் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பண்டிதருங் கலைவாணரும் ஆகிய திரு. க. சுப்பிர மணியம் அவர்களும், உடுவில் மகளிர் கல்லூரிக் கணித விஞ்ஞானப் பேராசிரியராகிய திரு. நா. வீரசிங்கம் அவர் களும் இடையிடையே எம்மைத் துயிலெழுப்பிவந்தார் கள். இவர்தம் ஊக்கத்தால் இந்நூல் இன்று வெளிவரு கின்றது.
முன்னைநாள் இலங்கை வித்தியாதிபதியாயிருந்து இளைப்பாறி, இப்போது, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அகநூல் விரிவுரையாளராய்த் திகழுங் கலைமாச் செல் வர், க. ச. அருணந்தியவர்கள், 1935-ஆம் ஆண்டிலே வட இலங்கைக்கு வித்தியா தரிசகராயிருந்தார்கள்; அந் நாளிலே, அவர்கள், புலவரைத் தூண்டி, ஆடிப் பிறப்பு-கத்தரிவெருளி-எலியுஞ்சேவலும்-என்னும் அருமைப் பாடல்களை எழுதுவித்தார்கள். கலையரசி ஐம்பருவம்-வாழையும் புலவனும்-என்பனவும் அவர் கள் தூண்டுதலால் எழுதப்பட்டன. இலவுகாத்த கிளி யும்-ஏறதமேட்டுக் கிரண்டுதுலையும் முறையே, மறு மலர்ச்சி, ஈழகேசரி என்னும் வெளியீடுகளின் அதிபர்கள்
வேண்டிக்கொண்டபடி யெழுதப்பட்டன.
நவாலியூரிலும் அதன் அயலூர்களிலும் உள்ள சில கோயில்களில் ஆடு கோழிகளைப் பலிசெய்துவரும் மிகக் கொடிய வழக்கத்தை நீக்கவேண்டி, ஆடு கதறி யது-எழுதப்பட்டது. ஏனைய பாடல்கள் புலவர், தம் பேரப்பிள்ளைகள் படித்தற்கு விளையாட்டாக அவ்வப் போது எழுதிக் கொடுக்கப்பட்டன.
தண்ணென்றமு தொழுக்கும் வெண்மதியினைக்கண்டும் கீழ்த் திசை முகட்டிற் கிளர்ந்து தோன்றும், இளவள ஞாயிற்றின் வியத்தகு தோற்றங்கண்டும், அன்றலர்ந்த நறும் பூவின் குன்ருக் கவின் கண்டும், விசும்பனைய பசும் புற்றரையின் அழகுகண்டும், முழங்கு கடலின் விளங்கு

Page 10
xvi
தோற்றங்கண்டும், மன்ற லளைந்த தென்றலின் ஊற்றின் பம் நுகர்ந்தும் இன்பமும் வியப்பு மெய்திய புலவர் அவர்கள், இத்தனை செய்யாக் கோலமும், வரம்பிலின் பமும் வரம்பிலழகும் ஒரு பிழம்பிற்ருய முருகன் அருட்டிரு மேனியின் ஒரு தனிச்சிதரின் விரிவேயா மென்று வியந்து நயந்து, பூ வென்னுங் செழும்பாடலைச் செய்தனர். இலக் கியத்தின் ஒரு தனிப்பயணுய அழகியலுணர்வு அப்பூச் செய்யுளில் வெளிப்படுகின்றது. . . . . .
இனிச் சிறுவர் செந்தமிழிலுள்ள பாடல்களிற் சில வற்றிற்குப் பண்டிதமணியவர்கள் முன்னரே நயப் புரைகள் எழுதி இலங்கைச் செய்தித்தாள்களில் வெளி யிட்டுள்ளார்கள். இப்பொழுதும் ஓர் அணிந்துரை எழுதித் தருதல் வேண்டுமென்று கேட்டோம். அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் ஒர் அழகிய இனிய அணிந்துரை யெழுதி யுதவினர்கள். அது சிறுவர்க்கு வாய்ப்பான நல்ல விருந்து. சிறுவர்க்குப் புலவர் தாடியைப் பற்றிச் சில கூறத் தொடங்கிய பண்டிதமணி, அவர் பாடல் களிலமைந்த அழகுகளையெல்லாம் மணி மணியாயெடுத் துக் கோவைப்படுத்தி, நகைச்சுவை ததும்பி வழிய விளக்கிச் செல்லுந் திறம், இலக்கியங் கற்பிக்கும் ஆசிரி யர்க்கு ஒரு வழிகாட்டியா யிருக்கின்றது. அவர்களுக்கு எங்கள் நன்றியுரியது.
புலவர வர்களிலே பெருமதிப்புடையவரும், அவர்க ளிடம் சில காலஞ் செய்யுளியற்றல் பயின்றவரும், அவர் கள் பாடல்களைத் தமது செய்தித்தாளில் அழகுற வெளி யிட்டு வருபவருமாகிய பண்டிதர், வே. க. ப. நாதன் அவர்கள், புலவருடைய நிழற்படத்தை யழகுற வெடுப் பித்து நூன்முகப்பிற் றிகழ வைத்தார்கள். அவர்களுக் கும் எங்கள் நன்றியுரியது.

xvii
இந்நூலைச் சிறப்பும் அழகும் பொருந்த அச்சிட்டுத் தந்த கொழும்பு நகர் அப்போத்திக்கரிசு வணிக நிலயத்து அச்சகக் கரும காரருக்கும், ஏனைய அலுவலாளர்க்கும் எங்கள் நன்றி யுரியது.
இந்நூல், ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னே புலவர் ஆக்கிய செய்யுள்களைப் பெரும்பான் மையுங் கொண்டதாகலின், அவைகள் ஆங்காங்கே சிதறுண்டுகிடக்க நேர்ந்தது. அவை தம்மை மிக்க பொறுமையுடன் இருந்து தேடியெடுத்துப் படிமுறையிற் கோவை செய்து, கதை நிகழ்ச்சி, தொடர்பு முதலிய குறிப்புக்களுடன் எழுதித்தந்த பண்டிதை, பா. பரமேசு வரிக்கும், செல்வி, சரவணமுத்து காந்திமதிக்கும் எங்கள் நன்றி சொல்லாமலே யமையும்.
சோ. இளமுருகனுர்
4027-B

Page 11

பாயிரம்

Page 12

அணிந்துரை
யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலிச் சைவாசிரிய கல் லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும், விரிவுரையாள ரும் ஆகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதியது)
* செந்தமிழ் மக்களே வாரீர்", என்று ஒரு தமிழ்க் குரல் கேட்கின்றது; பழக்கமான குரல். கூடிப் பனங் கட்டிக் கூழுங்குடிக்கலாம், கொழுக்கட்டை தின்னலாந் தோழர்களே ’, என்று முன்னெருநாட் கூப்பிட்ட குரல் அந்தக் குரல். " தெய்வக் குழந்தைகளே ! எங்கள் தெய் வத்தமிழ்மொழிச் சீரினைத் தேரீர் ’, என்று பின்னையும் இனிக்கின்றது அந்தக் குரல். . . . . . . .
அதோ! தமிழ்த் தாத்தா காட்சியளிக்கின்றர். வங்கத் தாத்தாவை அறிந்திருக்கின்றீர்கள். நமது தாத்தா தங்கத்தாத்தா. தங்கம் என்ருல் ஈழம். ஈழம்இலங்கை. தாத்தாக்கள் எப்போதுந் தாடியிலே வெகு கவனம். மருந்துக்குங் கறுப்பில்லாத வெள்ளித்தாடிக் குக் கண்ணுாறு வந்துவிடுமோவென்றுதான் சதா பயம். எங்கள் தங்கத்தாத்தாவின் புத்தியைப் பாருங்கள் ! தாடியறுந்த கதையுடன் வருகிறர். குழந்தைகளே ! காரியம் விளங்குகின்றதா ? தங்கமான தமது வெள்ளித் தாடியைக் கண்ணுாறுபார்த்து விடுவீர்களாம் ; கையாற் பிடித்து இழுத்து விடுவீர்களாம்; தாடியறுந்த கதை, குழந்தைகளுக்குக் கறுத்தப் பொட்டுப்போலத் தம்மைக் கண்ணுாறுபடாமற் பாதுகாக்குமாம். கத்தரித்தோட்டத் துக்குக் கண்ணுாறு வராமல் ‘ வெருளி கட்டிவைத்த தாத்தாவின் புத்தியென்ன புத்தி ! தங்கப் புத்தி. . . . . . . .
தாத்தாவின் ஹாஸ்யத்தை ஒருக்காற் கேளுங்கள். எங்கே யெங்கே ஒடுகிருய் அம்புலியே" என்று தமது மாசு மறுவில்லாத தாடியைக் காட்டி உங்கள் அம்புலியை

Page 13
xxii
ஒட்டிக் கலைக்கிறர் தாத்தா. மாசு மறுவுள்ள அந்த அம்புலி சற்றே நின்றுகூடக் கதைக்காமல், குளித் திட்டுவரும் பொருட்டு, " நான் கடல்மேல் ஒடுகிறேன்பிள்ளைகளே " என்று சொல்லிக் கொண்டோடுகின்றது. தாத்தாவின் தாடியைப் பார்த்துப்பார்த்து ஒடுகின்றது. பாவம் ! அம்புலியின் கறுப்பு எப்படி வெளுக்கப்போ கின்றது ! காகங் குளித்து முழுகித்தானே வருகின்றது. இன்னுங் கொக்காகவில்லையே! எப்படியிருக்கிறது, தாத்தாவிடத்திலே அம்புலி படுகிறபாடு. தாத்தாவுக் குத் தாடி நரைத்துவிட்டது. ஆனற், கருத்துக்கள், கற்பனைகள் நரைக்கவில்லை. இளமைக் கட்டோடு மிளிர் கின்றன. அவைகளுக்கு நரை திரை மூப்புக்கள் இல்லை.
* முதியோரைக் கனம் பண்ணவேண்டும் ' என்றல்லவா உங்கள் பாட்டியுங்களுக்குப் போதித்திருக்கின் ருள். தமிழ்த் தாத்தாவைச் சூழ்ந்து தாழ்ந்து பணிந்து உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள். தாத்தா உங் களுக்குக் கொடுப்பதற்கு எத்தனையோ இனிக்கிற நல்ல பண்டங்கள் கொண்டுவந்து வைத்திருக்கின்றர். தாத் தாவுக்குக் குழந்தைகளென்ருல் உயிர். அதோ செந்தி நாதனைப் பாருங்கள் ! அவல்முடிச்சுக் கண்ட கண்ணன் போல வருகின்றன்.
* மலர்ந்த முகமும் குளிர்ந்த விழியும்
வாயிற் சிரிப்பும் மனத்திலே கலந்த மகிழ்வுமாக நீவருங் காரண மென்ன தோழனே என்று அவனை நிறுத்தி விசாரியுங்கள்.
மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா வாங்கித் தந்த மாம்பழம் மாம்பழம் இது காணக் காண வாயினிக் கிற மாம்பழம் ”
செந்தி வாயூறுகின்றன். தாத்தா முதலில் உங்களுக்கு மாம்பழம் வழங்குகின்ருர்,

xxiii
* தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
சிரித்துச் சிரித்துத் தின்னுங்கள் * அருமையான மாம்பழம், இன்பமுடனே தருவேன் தெய்வம், இருக்குமிடத்தைக் கூறுவாய் , என்று தனித் தனி யொ வ்வொரு கேள்வி தாத்தா கேட்பார். கவனம்! காசு பணம் குழந்தைகளிடங் கேட்கிற வழக்கம் தாத்தா வுக்கில்லை. . . . . . . .
செல்வக் குழந்தைகளே ! உங்களுக்கு நித்திரை வந்தால், ஆராரோ ஆரிவரோ கூடத் தாத்தா பாடிச்
சீருஞ் சிறப்புந் திருவும் பெருகவந்த ஆரும் விரும்பும் அருமருந்தே கண்வளராய்'
மாமி அடித்தாளோ மாமனர் ஏசினரோ பூவிற் சிறந்த செல்வப் புத்தமுதே கண் வளராய்'
என்று உங்களைக் கண்வளரச் செய்து வைப்பார் தாத்தா. பொழுது புலரமுன்னே உங்களை நித்திரையின்றும் எழுப்பியும் விடுவார் தாத்தா. காலையில்,
* மன்னிய மலர்வகை சிரிப்பன போல வாய் மலர் கின்றன வண்டுகளூதும் ; அன்னங்கள் தாமரை மலர்மிசைத் தாவும் அழகிய குயிலினம் மகிழ்வுறக் கூவும் "
தாத்தாவின் அருமையை யின்னுங் கேளுங்கள். * தயிர்க் கடலிலே வெண்ணெய் போன்ற சந்திரன் * எண்ணிரண்டு கலை யுடனே எழுந்துநிலாப் பொழி வான். அந்த வேளையில் வெள்ளை மணலிலே தாத்தா இருந்துகொண்டு, உங்கள் மிருதுவான காதுகள் ஊற வூறப் பருத்தித்துறை யூராம், பவளக்கொடி பேராம் என்று இனிய நறியபாட்டிலே சுவையான கதைகளுஞ் சொல்லுவார். ஏராயம் புடைசூழ இருந்து தன்னைப் புளுகும் பூராய மாமுதலியார் கதையைக் கேட்டுப் புலாலுண்பதை நீக்கிவிடுங்கள். * பிள்ளையைப்போல் வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர், துள்ளித் துடி

Page 14
XXiv
துடிக்கத் துண்டாக வெட்டின, வாயில்லாச் சீவனின் ’, மாதா பட்டபாட்டைக் கேளுங்கள் ! அப்போது புலா லுண்பதை நீங்கள் முற்ரு ய் நீக்கிக்கொள்வீர்கள்.
கொழுக்கட்டை மறந்தவன் கதையைச் சற்றே வாயிலிட்டுப் பாருங்கள். ஆடிப்பிறப்பல்லாத காலங்க ளிற் கொழுக்கட்டை கிடைத்துவிடுகின்றது. பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே, பார்க்கப்பார்க்கப் பசி தீர்ந்திடுமே இது ஆடிக் கொழுக்கட்டை : அம்மா வின் கொழுக்கட்டை. இல்லம் ஏகும் வழியெல்லாம் இனிக்க இனிக்க மறவாமற் செல்வ மாமி கொழுக்கட்டை தின்னத்தின்ன ஆசை யுடையது மாமியின் கொழுக்
கட்டை.
தாத்தாவுக்கு ஒரு கோழிச் சேவல், ஒரு முகட்டெலி, ஒரு பூனை ; இவ்வளவும் போதும். தாத்தா ஒரு சினிமா ச் செய்துவிடுவார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ', அல்லவா ? இலவுகாத்த கிளிபோல இனியாருங் காத் திருக்கவேண்டாம். நீங்கள் பெரிய அதிட்டசாலிகள். தாத்தா உங்களுக்கென்றே பிறந்தவர் ; எனினும், பெரியவர்களுக்கும் நல்ல உயர்ந்த நீதிகளைச் சொல்லு கிருர். . . . . . .
* தோற்றிய திதியே என்று ஒரு தொடர் சிவஞான போதத்திலே முதற்குத்திரத்தில் வருகின்றது. " திதி " என்ற வார்த்தைக்கு நிலை ’ என்று பொருள். காணப் பட்டு நிலைக்கின்ற பொருள்கள் எல்லாம், தாமே தோன்றி நிலைப்பவைகள் அல்ல ; ஒரு கருத்தாவால் தோற்றுவிக்கப்பட்டவைகள். உலகம் ஆதிபகவன் முதற்று ’.
குயில்கள் கூவுகின்றன; மயில்கள் ஆடுகின்றன ; மனிதன் பாடுகின்றன்.

XXV
குயில்களைக் கூவச்செய்தது எது! மயில்களை ஆடச் செய்தது எது மனிதனுக்கு எப்படிப்பாட வருகின்றது!
நிலையான பொருள்களென்று நாம் கட்டி அணைப் பவைகள் எல்லாம் கணந்தோறும் நிலை பெயர்ந்து விகா ரம் அடைகின்றன. உலகம் தோன்றி நின்று அழியவும், தனக்கு ஒன்றுமின்றி, அந்த உலகமாயும் அதே சமயத் தில் வேரு யும் விகார மின்றி ஒருத்தி இருக்கின்ருள். அவள் இயற்கை அன்னை. அவள் புன்முறுவலில் உலகம் பூத்துக் காய்த்துக் கணிகின்றது. அவளின்றி அணுவும் அசையாது.
புலவன் அவள் திருவிளையாடலைக்கண்டு களிக்கின்றன் ; தித்தித்து அமுதூறுகின்றன்.
ஒரு சமயத்தில் ஒருவனை வள்ளலாக்கி வழங்குவிக் கின்ருள் ; மற்ருெருவனைத் தலைக்குமேலே கை காட்டு விக்கின்ருள். இரண்டு இடத்திலும் ஒரே ஒருத்தியின் கூத்தைக் கண்டு களிக்கின்ருன் புலவன். அவன் வாயிற் கவிதை துள்ளிக்குதிக்கின்றது.
* கல்லாத ஒருவனை நான் கற்ருயென்றேன் ? * இல்லாது சொன்னெனுக் கில்லை யென்முன் * யானும் என்றன் குற்றத்தா லேகின்றேனே ?
என்கின்ற கவிதையில் திருப்தி ' என்கின்ற மதுத்துளி எத்தனை துளிக்கின்றது !
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக்கால்
துாறிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர் மல்லுக் கட்டும் மடையர் "
உலகத்துப்பலர் இருக்கலாம். அதனல், புலவன் புண் அடைவதில்லை. அப்படிச் சந்தர்ப்பத்தில் எழுகின்ற கவிதையே, அருமந்த ஆண்குழந்தையாய் அவனைக்

Page 15
XXvi
களிப்பிக்கின்றது. நயவஞ்சகர்களைப் பாடநேர்ந்து விடுமோ என்றுதான் புலவனுக்கு நெஞ்சிலே புண் உண்டாகின்றது.
தன் கீழ்க் குழந்தைக் குத் தன் உயிரையே அர்ப்பணஞ் செய்கின்ற வாழைக்கு வஞ்சகம் ஏது! வஞ்சகம் என்று ஒன்றை வாழையறியாது. அது முதல் வள்ளல். இயற்கை அன்னை எந்தப்பக்கத்துக்கு அசைக்கின்ருளோ, அந்தப்பக்கத்துக்கு அசைந்து கொடுக்கின்றது வாழை. வஞ்சகமனிதனைப்போல அன்னையின் கருத்துக்குமாரு கத் தனக்கு என்று ஒன்று வைத்திருப்பதில்லை வாழை. அதன் முள்ளந்தண்டே எத்துணைப் பரிசுத்தமானது. அத்தண் டிலே தானே அது பழுத்துக் கணிகின்றது. அந்தத் தண் டைக் குரு" என்றே உலகங் கொண்டாடுகின்றது.
வஞ்சகமற்றதும், அன்னையின் வழியில் நடப்பதும், வள்ளலும், குருவுமான வாழையைக் கண்டால் புலவ னுக்கு எப்படியிருக்கும் ! புலவன் நாவில் கவிதை ஊறுமா ! ஊருதா !
இன்றல நாளை எட்டுநாள் இன்னும் சென்றுவா என்று செல்வர் "
ஒருவர் நமது புலவரை வஞ்சகமற்ற வாழையாகிய முதல் வள்ளலிடம் ஆற்றுப்படுத்துகின்ருர். அந்த மனித மரத் துக்கும் புலவர் நன்றிதெரிவித்துவிட்டு வள்ளலாகிய வாழையை அணுகுகின்ருர்,
* நெட்டுயிர்ப் பெறிந்து நிழல் புகுந்தியங்கும்
வழியிளைப் பொழிய மகிழ்ந்தனன் இருந்துழி 1
புலவர் தம்மை மறந்து வாழை நிழலில் மகிழ்ந்திருக் கின்ருர்,

XXvii
* இலன் என்னு மெல்வம் உரையாமை ஈதல்
o o குலனுடையான் கண்ணே உள
என்ற அருமைத்திருக்குறளிலும், அதன் உரை நுட்பங் களிலும் அந்த வாழை பயின்றிருக்கவேண்டும் என்பதில் சற்றேனுஞ் சந்தேகம் இல்லை. வாழை பரீகூைடிக்குப் படிக்கிற வழக்கமில்லாதது. ஆயினும், எங்கேயாவது ஒரு சங்கம், படித்தவர்களின் தரமறிந்து பட்டம் வழங்க லாம் என்ற நம்பிக்கையினல், குறித்த வாழை திருக்குற ளும் உரையும் படித்திருக்கலாம் போலும் !
என்ன நடக்கின்றது! வாழையையும் புலவரையுஞ் சற்றே எட்டிப் பாருங்கள் !
* மானுர் தொடையென மற்றவணின்ற தேனர் கதலிச் செழும்பழம் தீஊழ்த்து வண்டமிழ்ப் புலவன் மடிமிசைச் சிலவிழக் கண்டென இனிக்குங் கனியெடுத் தருந்தி வெம்பசி தணிதலும் மேன்முகம் நோக்கி அடுக்குச் சுடரைக் கிழக் கிட்டன்ன பழுக்குலை தூக்கி நெறிப்பட நின்ரு ய் !
வாழி வாழி வானவர் மகளென ?
米 ※ 米
G
யாரை கொல் யாதுநின் வரவென வாழ்த்துதற் கேது வென்றலும் யாணுெரு புலவன் வறுமை துரப்ப வந்தனன் இருமையும் பெருமை நிறுத்தும் வள்ளியோர் போலக் குறிப்பினிற் கொடுத்துக் கொடும்பசி களைந்தனை மனமதுகுளிர வாழ்த்தினன் நினைஎன ’
என்றிங்ங்னங் கவிதா சம்பா டணங்களில் நடம் புரிகின்றது. வாழை புலவர் வறுமைக்கிரங்கிக் கண்ணிர் (கள் + நீர்) வடிக்கின்றது.

Page 16
XXviii
வருந்தலை வாழியென் ருேதித் திருந்திய தமிழ்வலோன் சென்றனன் நெறியே
புலவர் உவப்பத்தலைக்கூடி உள்ளப்பிரிகின்ருர்.
s
அப்பால், அப்பொழுது அலர்ந்த Աֆ ஒன்று முருகு கொப்பளிக்கின்றது. புலவரின் கால்கள் புலவ ருக்குத் தடைச் சட்டம் விதிக்கின்றன. புலவர் " திரு முருகு உடன் சம்பா டணந் தொடங்குகின்றர். திரு முருகு புலவர்களென்ரு ல் திருவாய் மலரத் தொடங்கி விடுகின்றது.
புலவர்கள் காணுகின்ற
திருமுருகுப் பூ கோட்டுப் பூ கொடிப் பூ அன்றி இருதய குளப்பூப் போலும் !
* தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிற முகனே
--திருமுருகு.
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்-புலத் துறை போகிய புலவன்மார்.
米 米 ※
இந்தச் செந்தமிழ்ச் சோலை சிறப்பாகச் சிறுவர்க் கென்றே செய்யப்பட்டிருக்கின்றது. இந்தச் சோலையிலே எவருடைய உத்தரவு மின்றி நீங்கள் உட்பிரவேசிக்கலாம். துணிந்து பிரவேசியுங்கள் ! அங்கே, கண்கவர் காட்சிகள் ஒருபுறம் செவிநுகர் கனிகள் ஒரு புறம் வாயூறும் பண்டங்கள் ஒருபுறம் : சுகந்த பரிமளப்பூக்கள் ஒரு புறம் ; செந்தமிழொடு விரவிய மந்த மாருதம் ஒரு புறம் ; இனிய அழகிய கருத்துக்கள் ஒரு புறம் ; நறிய செஞ்சொல் தடையொருபுறம் ; வண்ணமுஞ் சந்தமும் ஒருபுறம் ; எங்கே பார்த்தாலும் அங்கங்கே பழைமையும் இனிமையுங் கலந்த செந்தமிழ் பரிமளிக்கின்றது. இவற்

XXix
றுக்கு மத்தியிலே, செந்தமிழ்ச், சோலையின் நடுநாயக மாகி, ஒரு சலியாக் கற்பகதருப் போல, எங்கள் தங்கத் தாத்தா உங்களை வரவேற்கும் முறையில், அமைதி குடி கொண்ட வுள்ளத்தோ டமர்ந் திருக்கின்றர். . .
அன்ன நடை பிடியினடை யழகுநடை
யல்லவென வகற்றி யந்நாட் பன்னுமுது புலவரிடைச் செய்யுணடை
பயின்றதமிழ்ப் பாவை யாட்கு வன்னநடை வழங்குநடை வசனநடை
எனப்பயிற்றி வைத்த வாசான் மன்னுமருள் நாவலன்றன் னழியாநல்
லொழுக்க நடை வாழி வாழி
என்று நாவலனரைப் பாடிய நவாலியூர்ப் பாவலனுர் அல்லவா உங்கள் தாத்தா. இன்றைய ஈழத்துப் புலவர் சிரோமணி எங்கள் தாத்தா வென்று அவர் புகழைப் புட் பாஞ்சலி செய்து போற்றுங்கள் ! அவரின் தூய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடுங்கள்; பாடியா டுங்கள் ! இனியுங்களுக் கென்ன குறை ? நீங்களெல்லாம் இனிக் கவிஞர்கள்.
இரவு விடிந்தது கேளிர்-தமிழ் இளவள ஞாயி றெழுந்தது பாரீர் பரவுதற் கோடிநீர் வாரீர்-வந்து பணிமின்கள் படிமின்கள் பயமில்லைப் பாரீர்
செந்தமிழின் வாழை திருமுருகு பூவிளங்கப்
பைந்தமிழின் சோலையொன்று பண் செய்தார்
முந்தொருநாள்
* வண்ணுனின், வார்த்தை யென்ருேர் வண்டமிழின்
செய்யுளினல்
மண்ணுடு கொண்ட மகான்.

Page 17

பொருளடக்கம்
தாடியறுந்த வேடன் அம்புலி
கடவுள்
தாலாட்டு வெண்ணிலா பவளக்கொடி ஆடிப்பிறப்பு கத்தரி வெருளி எலியுஞ் சேவலும்
* விறகு வெட்டி
கொழுக்கட்டைப் பொன்னன் . .
ஆடு கதறியது காலைப்பொழுது புழுக்கொடியல் u ஏழுதமேட்டுக் கிரண்டுதுலை இலங்கை நீர்வளம் கதிர்காமம் இலவுகாத்த கிளி செந்தமிழ்த் தாய் மனம் நிறைந்த செல்வன் நூரு?ண்டு வாழ்தல் அறிவுரைகள் நட்பின் பெருமை கந்துகவரிப் பாடல் பூஞ்சோலை
பஞ்சக் கூழ் வாழையும் புலவனும்
கலையரசி ஐம்பருவம் தனிப்பாடல்கள் தாரமாய்த் தாயானள்கை நாவலர் பெருமான்

Page 18

ॐン ଽ *

Page 19

4027-C

Page 20

棒 திருச்சிற்றம்பலம் சிறுவர் செந்தமிழ்
கடவு 6T 6) 6TD விநாயகர் மூத்தண்ணு வென்று முறை கூறிக் கும் பிடுவேன் காத் தென்னை யாள்க கரிமுகவா-கோத்த வினை மாமலங்கள் போக்கு மணிக்கிண் கிணிச்சரனத் தாமரைகள் என்றலையிற் றந்து.
முருகன் அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடும்
ஆறு முகப்பதுமம் 敞 அத்தி முகத்தர் மனத்தி லினித்திடும்
ஆறிரு கண்வேழம் w கொஞ்சு மொழிக்குற வஞ்சி முலைக்கொழு
கொண்டுழு திடுகோடு குஞ்சரி சஞ்சரி கந்தொடர் மஞ்சரி
கொண்டணை யண்டர்தரு செஞ்சர ணஞ்சர ணென்றுல கந்துதி
தேவி மணிக்குழவி # தேவர்கள் மணிமுடி யசுரர்க ளடிபணி
தீரகு மார சிவம் h− நெஞ்சினி லென்று நிறைந்தொளி தந்திடு
நீல மயிற்கதிரோன் நேரலர் தமையடு வேலா யுத மெமை
நின்று புரந்திடுமே.
நாமகள் பொன்னரும் பசுங்கிளியே யேழிசைகள் புகலும் பூங்குயிலே மலயமலை பொலியவரு மயிலே பன்னளுந் தவமிருக்கும் முனிவருக்கு மெட்டாப்
பழங்கலையின் களஞ்சியமே பாவலர்கள் நிதியே யெந்நாளு மென்னுளத்திற் பிரியாம லிருந்தே
யினியகவி மழைபொழியும் ஞானவர முகிலே அன்னயென் ருையிரே யுயிர்க்குயிரா யமரு
மற்புதமே பொற்பதங்க ளடைக் கலந்தந் தருளே

Page 21
2 சிறுவர்
1. தாடி யறுந்த வேடன்
இலங்கையிலுள்ள விந்தனைக் காட்டிலே ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் உறுதியான உடம்பு உடையவன். அவனுக்கு நீண்ட தாடி இருந்தது. அவன் ஒரு நாய் வளர்த்தான். அதன் பெயர் வீமன். மான் மரை, முயல், அணில் முதலிய விலங்குகளை வேட்டை யாடிப் பிடிப்பதற்கு வீமன் உதவி செய்யும். ஒருநாள் அவ்வேடன் அணில் வேட்டையாடினன். அப்போது அவனுடைய தாடி அறுந்து போயிற்று. அஃது எப்படி யறுந்ததென்று படிப்போம்.
ஊட்டுவேன். உண்ணச் செய்வேன். தேமா-இனிப்பான மாம்பழந்தரும் ஒரு சாதி மா. உச்சு சுசூ-நாயை ஒடத்துரண்டிவிடும் குறிப்பு.
வீமா 1 வீமா ! ஓடி வா வா-அணில் வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா தேமா மரத்திற் பதுங்கி-மாங்காய் தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி மரத்தில் இருந்து குதித்தே-அடடா வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார் ! துரத்திப் பிடிபிடி வீமா-உச்சு சுகு அணில் எம்மைத் தப்பியும் போமா பொந்துக்குட் புகுந்தது வீமா-உந்தப் புறத்தில் நில் அந்தப் புறத்தினில் வருவேன் அந்தோ என் தாடியை விடுவாய்-அந்த அணில் தப்பி ஓடிய தையையோ கெடுவாய்
பிறருக்குத் தீமை செய்யாத உயிர்களைக் கொலை செய்யக்கூடாது. அச்செயல் தனக்கே துயரந்தரும்.

செந்தமிழ்
2. அம்புலி
எங்கேயெங்கே ஒடுகிருய் -அம்புலியே நான் கடல் மேல் ஒடுகிறேன் -பிள்ளைகளே
ஆரிடத்தில் அன்புடையாய் -அம்புலியே அன்பர் மேலே அன்புடையேன் --பிள்ளைகளே
ஒடிஓடித் திரிகிருயே -அம்புலியே உறக்கமில்லை யோவுனக்கும் -அம்புலியே
உறக்க மொரு நாளுமில்லைப் -பிள்ளைகளே அழுவதுபோல் முகங்கருகி -அம்புலியே
அன்றைக்கன்று வெளிறுவதேன் -அம்புலியே அன்புமக்கென் மீதிருக்கிற் -பிள்ளைகளே
அதனை மட்டுங் கேட்டிடாதீர் -பிள்ளைகளே என் பிதாவின் சொற்படியே -பிள்ளைகளே
எப்பொழுதும் நடந்திடுவேன் -பிள்ளைகளே

Page 22
4 சிறுவர்
3. கடவுள்
வரதராசன், செந்திநாதன் என்னும் இரண்டு சிறுவரும் கடவுள் இருக்கும் இடமும், அவர் இல்லாத இடமும் பற்றிச் சல்லா பஞ் செய்கின்றனர்.
வரதராசன் :
மலர்ந்த முகமுங் குளிர்ந்த விழியும்
வாயிற் சிரிப்பும் மனத்திலே கலந்த மகிழ்வு மாக நீவரும்
காரண மென்ன தோழனே !
செந்திநாதன். (ஒரு பழத்தை எடுத்துக் காட்டுகிருன்)
மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா
வாங்கித் தந்த மாம்பழம் மாம்பழம் இது காணக் காண
வாயி னிக்கிற மாம்பழம்.
மாம்பழ மிவை கிடைத்த படியால்
மகிழ்வி னேடு வருகிறேன்
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்.
தின்னுவோம் வா தின்னுவோம் வா
சீவிச் சீவித் தின்னுவோம்
பொன்னு ருண்டை போல நல்ல
புதுமை யான மாம்பழம்.
வரதராசன்
தின்ன வருவேன் தின்ன முன்னம்
தெய்வந் தொழுது தின்னுவோம் என்ன செய்யினும் முன்னஞ் செய்வது
இதுவே அன்னை கட்டளை.

செந்தமிழ்
செந்திநாதன்:
அன்பு மிகுந்த அண்ணு இந்த
அருமை யான மாம்பழம் இன்ப முடனே தருவேன் தெய்வம் இருக்கு மிடத்தைக் கூறுவாய்.
வரதராசன் :
துதிக்குங் கடவுள் இருக்கு மிடத்தைச்
சொல்லக் கேட்ட தோழனே !
துதிக்குங் கடவுள் இல்லா இடத்தைச்
சொன்னல் நானே தருகுவேன்
எங்கு மிருப்பர் யாவு மறிவர்
இல்லா விடங்கள் இல்லையே
எங்கும் வருவர் இன்பந் தருவர் எம்மை யாளுங் கடவுளே.

Page 23
6 சிறுவர்
4. தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
சீருஞ் சிறப்புந் திருவும் பெருகவந்த ஆரும் விரும்பும் அரு மருந்தே கண் வளராய் -ஆரா.
முத்தே பவளமே முழுமதியே எம்முடைய சித்தம் மகிழுந் திரவியமே கண் வளராய் -ஆரா.
தெள்ளமுதே தேனே தெவிட்டா நறும்பாகே
உள்ளங் குளிர வரும் ஒவியமே கண் வளராய்
三塾 TT・
மாமி அடித்தாளோ மாமனர் ஏ சினரோ பூவிற் சிறந்த செல்வப் புத்தமுதே கண் வளராய்-ஆரா.
பாலாற் குறையுண்டோ பஞ்சணையாற் பஞ்சமுண்டோ மேலான அன்பே விழிமூடிக் கண் வளராய் -ஆரா.
பொன்னே உறங்காய் புதுமணியே கண்ணுறங்காய்
கண்ணே உறங்காயென் கண்மணியே கண்ணுறங்காய் -ஆரா.

செந்தமிழ்
5. வெண்ணிலா
இருவிளக்கு-சூரியனும் சந்திரனும், விசும்பு-ஆகாயம். துரயவொளி-வெண்மையான வெளிச்சம். எண்ணிரண்டு-பதினறு. கலை-சந்திரனின் பாகம். அமுதவொளி-குளிர்ந்த இனிய வெளிச்சம்.
இருவிளக்கில் ஒரு விளக்காம் வெண்ணிலா வே. இராக்காலத் தொளிகொடுப்பாய் வெண்ணிலாவே
சூரியன் போய் மறைந்த பின்பு வெண்ணிலாவே தூய வொளி பரப்பிடுவாய் வெண்ணிலாவே
தயிர்க்கடலில் வெண்ணெய் போல வெண்ணிலாவே தனிவிசும் பிற் ற வழ்ந்திடுவாய் வெண்ணிலாவே
பெண்கள் முகம் போல் வருவாய் வெண்ணிலாவே
பிறையாகி வளர்ந்திடுவாய் வெண்ணிலாவே
எண்ணிரண்டு கலையுடனே வெண்ணிலாவே எழுந்துநிலாப் பொழிந்திடுவாய் வெண்ணிலாவே
வளர்ந்து பின்பு தேய்ந்திடுவாய் வெண்ணிலாவே
வறுமை செல்வ முனக்கு முண்டோ வெண்ணிலாவே
ஒருநாளில் மறைந்திடுவாய் வெண்ணிலாவே ஒளியின்றி வாடுவமே வெண்ணிலாவே
அமுதவொளி பரப்பிவரும் வெண்ணிலாவே அன்புடனே வாழியென்றும் வெண்ணிலா வே.

Page 24
8 சிறுவர்
6. பவளக்கொடி
யாழ்ப்பாணத்தின் வடபகுதியிலே பருத்தித்துறை என்னும் ஒர் ஊர் உண்டு. அங்கே பவளக்கொடி என்னும் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் பருத்தித் துறைச் சந்தையிலே பால் விற்று வாழ்பவள். பேராசை யுடையவள். அரிய மலர் அம்புசம் பூமணி பொற்கொடி முதலியோரும் அவளைப்போல அந்தச் சந்தையிலே பால் விற்பவர்கள். ஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால் கொண்டுபோனுள். போகும்போது தனது பேராசைக்கு ஏற்றபடி மனக்கோட்டை கட்டினள். அவளது மனக் கோட்டை எப்படி முடிந்ததென்பதை இப்பாட்டில்ே படித்து அறிவோம்.
மனக்கோட்டை-வீண் எண்ணம்.
அடுத்ததுயர்-சேர்ந்த துன்பம்.
மாது-பெண் பிள்ளை.
இரண்டைஞ்சு-பத்து
வன்னச்சேலை-அழகிய சேலை.
மாதுளம்பூத் தொப்பி-மாதுளம்பூ நிறமான சிவப்புத்
தொப்பி.
தொடுத்து-தலையில் அணிந்து.
சுந்தரி-அழ்கிய பெண்,
வடிவழகு-மிகுந்த அழகு.
பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில் அடுத்த துயர் கேளிர்
冰 ,来 米

செந்தமிழ்
பாற் குடஞ் சுமந்து
பைப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான் நினைந்தாள் மாது :-
பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்"
முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து விரைந்துவளர்ந் திடுமே
வெள்ளை முட்டை யிடுமே
முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வன்னச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு
米 米 米

Page 25
I 0
சிறுவர்
வெள்ளைப்பட்டுடுத்து
மினுங்கு தொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள் பல பேசிச்
சுந்தரிபோல் நானே
சந்தைக்குப்போ வேனே
米 § 冰
அரிய மலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள் பூமணியும் பார்ப்பாள்
பொற் கொடியும் பார்ப்பாள் சரிகைச் சேலை பாரீர்
தாவணியைப் பாரீர் வன்னச்சட்டை பாரீர் வடிவழகு பார்ர் என்று யாரும் புகழ் வர்
என்னை யாரோ இகழ்வர் பாரும் பாரும் ' என்று
பவளக்கொடி நின்று சற்றுத்தலை நிமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்
பாலு மெல்லாம் போச்சு பாற் குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்ரு ஸ் மாது
கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.

செந்தமிழ் 11
7. ஆடிப்பிறப்பு
ஆடிமாதத்தின் முதல்நாள் ஆடிப்பிறப்பு எனப்படும். ஆடிப்பிறப்புத் தமிழ்மக்கள் கொண்டாடும் பெருநாள் களுள் ஒன்று. அந்நாளில் இனிப்புக்கூழ் காய்ச்சுவர் ; சுவையுள்ள கொழுக்கட்டை யவிப்பர். மா, வாழை, பலா ஆகிய முக்கனிகளும் தேடிக்கொள்வர். இவைக ளெல்லாவற்றையும் வீட்டிலுள்ள தாய்மார் தங்கள் இல்லுறை தெய்வங்களுக்குப் படைத்து வழிபாடு செய்
οι Γί.
இங்கே ஒரு தமிழ்ச் சிறுவன் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்தைப் பாடிமகிழ்கின்றன். தன் தோழர் களையெல்லாம் அழைத்து, நாளைக்கு ஆடிப்பிறப்பு ; அதற்காகப் பள்ளிகள் விடுதலை ; கூழுங்குடித்துக் கொழுக்கட்டையும் தின்று மகிழ்வோம், வாருங்கள்", என்று சொல்லிப் பாடுகின்றன்.
தோண்டி-ஒருவகைப் பாத்திரம். வில்லை-வட்டவடிவம். வெல்லம்-சருக்கரை,
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே !
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே !
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டுநல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

Page 26
சிறுவர்
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப்பசி தீர்ந்திடுமே.
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுண்டை பயறு மிட்டு
மாவைக் கரைத் தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே.
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை குடியே குத்துவிளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிள நீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே.
வன்னப் பலாவிலை ஒடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத்தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே !
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே !

செந்தமிழ் 3
8. கத்தரி வெருளி
தோட்டங்களிலே உள்ள பயிர்வகைகளுக்குப் பிறராற் கண்ணுாறு, நாவூறு வராமற் காத்தற்கு வெருளி வைப்பது கமக்காரர் வழக்கம். அவ்வெருளியைக் கண்டு ஆடு மாடுகள் வெருண்டு ஒடும். காக்கைகள் கத்தும். சில வேளைகளிற் காய்கனிகளை இரவில் எடுக்க வரும் கள் வரும் பயந்து ஒடுவதுண்டு. நவாலிக் கிராமத்திலுள்ள ஒரு கமக்காரன் தனது தோட்டத்தில் ஒரு பெரிய வெருளி செய்து வைத்திருந்தான். அவ் வழியே சென்ற புலவர் அதைக் கண்டு வியந்து பாடினர்.
உறுமால்-தலைப்பாகை. தேசு-ஒளி.
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா -நன்று காவல் புரிகின்ற சேவகா !
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் !-உன்னைப்போல் வேலை புரிபவன் வேறுயார்?
2
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல் காவல் புரிகின்ற சேவகா !-என்றும் காவல் புரிகின்ற சேவகா !
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார் ?-என்றும் ஏவல் புரிபவன் வேறுயார்?

Page 27
I 4 சிறுவர்
3
வட்டமான பெரும் பூசினிக் காய் போல
மஞ்சள் நிற உறுமாலைப்பார் !-தலையில் மஞ்சள் நிற உறு மாலைப்பார் !
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார் !--இரு கைகளில் அம்பொடு வில்லைப்பார் !
4
தொட்டு முறுக்காத மீசையைப் பார் ! கறைச்
சோ கிபோலே பெரும் பல்லைப்பார் !-கறைச் சோ கிபோலே பெரும் பல்லைப்பார் !
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார் !-ஆகா கட்டை உடைவாளின் தேசுபார் !
5
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? --உன்றன் பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே-வெடி வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
6
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே-கூடிக் கத்திக் கத்திக் கரைந்தோடுமே நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே- ஏங்கி நடுநடுங்கி மனம் வாடுமே

செந்தமிழ் 15
7 ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும்-நல்ல ஏவற்காரன் நீயே யென் னினும் ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே-போலி ஆவதறிந்தன னுண்மையே
8
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்- மிகத் துண்னென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்த துன் வஞ்சகம்--நன்று தெரிய வந்த துன் வஞ்சகம்
9
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண்-இந்தத் தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம் மைக் கண் டேமாந்து போ கா
அறிவு படைத்தனன் இன்று நான்-உன்னில் அறிவு படைத்தனன் இன்று நான்.

Page 28
6 சிறுவர்
9. எலியுஞ் சேவலும்
(சிறுவர் சல்லாபம்)
தோய்த்து-உறையிட்டு. மடைக்குலமாது-சமையற்காரி. நலியாது-வருத்தாது வினவிசைக்குறி-கேள்வி அடையாளம் (?)
மறவன்-வேடன்.
நடிகர் : தாய் எலி, சேய் எலி, பூனை, சேவல்.
முதலாங் காட்சி
சேய் எலி:
வெய்யிற் கொடுமையம்மா! மேனி வேர்க்குதம்மா ! பைய உலா விவரப் பரிந்துவிடை தாரு மம்மா ! பொல்லாத வெப்பமம்மா ! புழுங்கி யவியுதம்மா ! மெல்ல உலா விவர விரும்பிவிடை ஈயுமம்மா !
தாய் எலி:
ஆசை மிகுந்த மைந்தா ! அன்பான கண்மணியே! மோசம் வரும் மகனே! முற்றத்திலும் போக
வேண்டாம் பொல்லாத துட்டர் மைந்தா ! புறத்தே பதுங்கிநிற்பர் அல்லா தனபுரிவார் ஐயா நீ போகவேண்டாம்
சேய் எலி :
ஆண்பிள்ளை நானலனே! அன்னய் பயமுனக்கேன் வீண்பிள்ளை யாக்காதே விடையருளிச் செய்யுமம்மா ! கும் பிட்டேன் அன்னையுனைக் குறுக்கே நீ மறிக்காதே வெம்பிப் புழுங்குமிங்கு வெளியேபோய் வருவெ
னம்மா !

செந்தமிழ் I 7
தாய் எலி : மகனே! பெற்றமனம் பித்து ; பிள்ளை மனங் கல்லு என்பது போலப் பிடி வாதமாய்
நிற்கிருய். சரி, நீ நினைத்தபடி,
போய்வருவாய் என்மகனே ! புத்தியுடன் பத்திரமாய் நீதிரும்பு மவ்வளவும் நின்றுவழி பார்த்திடுவேன்-போய்வருவாய்
இரண்டாங் காட்சி சேய் எலி:
தொங்கிச் சுவரிற் குதிப்பேன்-மிகத் துரிதமாக ஒடித் துள்ளி மிதிப்பேன் அங்கு மிங்குமாக நடிப்டேன்-சுவைத் தருந்து முணவை மணந்து பிடிப்பேன்
ஆனந்த மான வெளிச்சம்-மகிழ் வாக வுலாவுதற் கணுகுமோ வச்சம் தேனுந்து மா மலர் வாசம்-வரும் சில்டென்று தென்றலும் மிகுந்த வுல் லாசம் அடுக்களைப் புறத்திலே ஒடி-அங்கே அப்பமும் வெண்ணெயு மருந்துவென் தேடி எடுத்துக் கடித்துண்டு கொண்டு - மிக இன்புறுவே னேடி யன்னையைக் கண்டு.
மூன்ருங் காட்சி பூன:
மாஅஅயோ-மாஅஅயோ-மாஅஅயோ மாஅஅயோ. S0S S SL S 0L SSL SSS 0L SSSS S SSS S0S S SLS S SL S 0 S L S S S SSLL SLLS SSC S 00 S S LSL

Page 29
18 சிறுவர்
முள்ளெலும்பு நோக முதுகு மிகவலிக்க உள்ளம் நடுநடுங்க ஓங்கியடித்தாளே-மா அஅயோ
மெத்த வலிப்பெடுக்க மேனி நடுநடுங்க
மத்தா லடித்தாளே ! மனமிரங்கா மாபாவி
-மாஅஅயோ
மெய்யொடிய மத்தால் வெடுக்கென் றடித்தவள் தன்
கையொ டிந்து மெத்தக் கலங்காளோ மாபாவி
-மாஅஅயோ
சேவல் :
பூனையரே ! பூனையரே ! புத்தி மிகக் கலங்கிப் பாதிவிழி மூடிப் பாடுகிறீர் காரணமென் ?
காலை நக்கி நக்கியிரு கண்ணுமுக முந்துடைத்து வாலைக் குழைத்தனுங்க வந்த வருத்த மென்ன ?
பூனே:
சட்டியிற் காய்ச்சிய் பாலைத்-தோய்த்துச் சமையற் காரி வைத்தாள் உறியதன் மேலே எட்டிப் பரண் மேலே தாவிக்-குதித் தேறினேன் உறியினில் இனிதாக மேவி
பார்க்கப் பார்க்கப் பசிமீறும்-பசும் பாலின் மணத்தினுல் வாய் மிக வூறும் ஆர்க்குங் காணுமலங் கிருந்தே-வெகு ஆனந்த மா யுண்டேன் அமுதொத்த விருந்தே காண்பார்க ளென்று நினைத்தே-இரு கண்களை மூடியென் நாவை நனைத்தே மாண்பாக யானுண்ணும் போது-அங்கே வந்தாளே அந்த மடைக்குல மாது

செந்தமிழ் 19
சத்தப் படாமலே வந்து-மேலே தங்கி யருந்துங் களவினைக் கண்டு மத்தா லடித்தாளே பாவி-உடல் வலிக்குதே ஐயையோ மறுகுதே யாவி
சேவல் :
ஐயா! களவு பொல்லாது-இதை அறியாது செய்ததால் வந்ததே தீது மெய்யா யடாது செய் தோரே-மிக வெம்பிப் படாது படுவார்கள் நேரே
பூனே :
பொல்லாது சூதொடு வாதும்-என்று புத்தி சொல்ல வந்தீர் போமினிப் போதும் நல்லாய்ப் பசிக்குது காணும்--இனி நானங்குப் போயிரை தேடுதல் வேணும்
நாலாங் காட்சி
பூனே
ஒகோ ! அங்கே ஒர் எலி வருகின்றது. அதை மெல்லப் பதுங்கியிருந்து பிடித்து உண்ணவேண்டும்.
எலியே நீ வருவாய்-எனக் கிரையாகவே வருவாய் நலியா தென்பசி நானுனைத் தின்னுவேன் எலியே நீ வருவாய்

Page 30
20 சிறுவர்
(பூனை எலியைப் பிடிக்கப் பாயும் பொழுது சேவல்
கூவுகின்றது) சேவல் :
கொக்கருெக்கோஒ கொக்க ருெக்கோ கூஉ மிக்கவெயில் இக்கணமே போஒஒ
விண்ணும் மண்ணும் மூடியிருள் வா அஅ கொக்க ருெக்கோஒ கொக்க முெக்கோ கூஉ
(எலி பயந்து தாயைக் கூப்பிட்டுக்கொண்டு ஒடுகிறது) சேய் எலி :
ஓடி வருவாயம்மா உள்ளங் கலங்குதம்மா வாடி நடுங்குகின்றேன் வந்து பயம் தீருமம்மா மேவி ஒருவனம் மா விண்ணதிரச் சத்தமிட்டான் ஆவி அகத்ததோ புறத்ததோ அன்னையே வாரும்
(தாயெலி வந்து சேயைத் தழுவிக்கொண்டு வினவுகின்றது) தாய் எலி:
அன்பு மிகுந்த என் செல்வா-என்ன ஆபத்து நேர்ந்த தறிந்திடச் சொல்வாய் என்பு முரிந்திட வோடி-இங்கே இரங்கியே வந்தனை யேங்கியே வாடி
சேய் எலி:
கொண்டையி லிரத்தந் தோய்ந்த
கூரிய வாளொன் றுண்டு கண்டத்தி லிரண்டு கத்தி
கட்டியே தூங்கு மம்மா ! சண்டைசெய் வீரன் போலச் சடசட வென்ற டித்து விண்டது பெரிய சத்தம்
மெய்ம்மறந் தறிவு சோர்ந்தேன்

செந்தமிழ் 2
விடுவிடு என்றுகை தட்டி-அம்மா வினவிசைக் குறிபோற் கழுத்தை வளைத்துக் கொடுமை செய் கூற்றுவன் போல-வந்து கூவினதே ஒரு பொல்லாப் பிராணி
அல்லாது போனல் என் னம்மா-நான் அருமை யானவோர் தோழனைக் கண்டு நல்லசல் லாபஞ்செய் வேனே-அதை நாசப் படுத்திய தேயப்பி ராணி."
என்ன ஒர் அருமையான பிராணி. பஞ்சுபோல மெதுமையான மயிர். பளிங்குபோல இரண்டு கண் கள். சத்தப்படாமல் என்னை இருந்து பார்த்துச் சிரித்து என்னேடு ஏதோ பேச எழும்பியது. அடா ! அந்த நேரத்திலே செவ்வரத்தம் பூப்போலத் தலையை யுடைய உந்தப் பொல்லாத பிராணி சத்தஞ் செய்து வெருட்டி விட்டதம்மா !
தாய் எலி:
கண்மணி போன்ற மகனே!-நீ கண்டு பயந்ததனை நன்றுரை செய்யின் வண்ண முடையசேவல்-ஒரு வஞ்சகமு மில்லாநல்ல செஞ்சொற் சேவல்
மற்றைப் பிராணி மகனே! எம்மை மறைவி லிருந்து பிடித்துண்டு மகிழும் குற்ற முடைய பூனை-அதன் கோலத்தினுல் மயங்கல் சாலத் தவறே.

Page 31
சிறுவர்
(தாய் எலி சேயெலிக்குப் புத்தி புகட்டுகிறது)
கண்மணி யனைய என்னரு மகனே ! உண் மகிழ் வாக உரைப்பது கேட்பாய் வெளிப்புற வேடப் பொலிவினை நோக்கி உள்ளகத் தெண்ணம் உரைத்திடப் போமோ பொல்லா மறவன் புதரினில் மறைந்தும் மெல்லெனப் பறவையை விட்டுதல் போல நல்ல வேடம் தன்னிலே மறைந்து அல்லன செய்யும் மாந்தரும் உளரே ; கடுஞ்சொற் கூறி இனிமை பயக்கும் நடுநிலை நண்பரும் பலருண் டதனல் அகமும் புறமும் ஆராய்ந்து தகுதி நண்பரைத் தான் கொளல் முறையே.

செந்தமிழ் 23
10. விறகு வெட்டி
நாட்டுப்புறத்திலே நன்னியன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் பக்கத்திலுள்ள காட்டிலே விறகை வெட்டிப் பட்டினத்திலே விற்றுச் சீவிப்பான்.
ஒருநாள் அவன் ஒரு வாவிக்கரையிலே நின்ற பட்டமரத்தை வெட்டினன். வெட்டும்போது பாடிப் பாடி வருத்தந்தெரியாமல் வெட்டினன். இடையிலே கோடரி, காம்பு கழன்று வாவியுள் விழுந்தது.
விறகுவெட்டி தன் வறுமையையும், தன் பிள்ளை களையும் நினைந்து அழுதான். அப்போது ஒரு பெண் தெய்வம் அங்கே தோன்றியது. அஃது அவனிடம் ஒரு பொற்கோடரியை நீட்டி : “ இந்தா, உன்னுடைய கோடரியைப் பெற்றுக்கொள்’ என்றது. நன்னியன்: இதுஎன்னுடையதன்று ' என்ரு ன். அது உடனே வாவி யுள்ளே மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்து காட்டிற்று. நன்னியன், இதுவும் என்னுடைய தன்று என்னுடையது இரும்பினுற் செய்யப்பட்டது என்ருன். அது மீண்டும் மூழ்கி இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தது. நன்னியன் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கினன்.
அது நன்லரியனைப் பார்த்து, " நீ உண்மை உரைத் தமையால் இவற்றையும் பெற்றுக்கொள் ' என்று கூறி மற்றை இரண்டு கோடரிகளையும் அவனுக்குத் கொடுத் திது. நன்னியன் அவற்றையும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு சென்ருன். உண்மை பேசுவோர் நன்னியனைப்போலச் செல்வமும் சிறப்பும் அடைவார்கள்.
அடவி-காடு. மாது-பெண்.

Page 32
24
சிறுவர்
நேய மனமும் முறுகிய தேகமும் நேர்மையும் உள்ளவன் பொய்யுரையான் மேய அடவியில் எப்பொழு துஞ்சென்று விறகுவெட்டி விற்று வாழ்ந்திடுவான்
2 நாட்டுப் புறத்தினி லிருப்பவ ஞம்பெயர் நன்னிய னென்பவன் அங்கொருநாள் தீட்டிய கோடரி தோளினி லே கொண்டு சென்றனன் காட்டில் விறகுவெட்ட
3. பட்டமர மொன்றை வாவிக் கரையிலே பார்த்தனன் கோடரி யைத் துரக்கி வெட்டும் போது வருத்தந் தெரியாமல் மெல்லமெல்லப் பாட்டுப் பாடிடுவான்
4
வெட்டுக வெட்டுக கோடரி யே பயம் மேவாமற் பாடுக என் மனமே இட்டமுட னிந்தக் கோடரி கொண்டென தினிய சிறுவருக் குணவளிப்பேன்
5
என்று மகிழ்வுட னேயவன் பாடி
எறிந்து மரத்தைக் தறிக்கையிலே ஒன்றிய கோடரி காம்பினில் நீங்கியே
உடனே குளத்துக்குள் வீழ்ந்ததுவே

செந்தமிழ் 25
6
என்னசெய் வேன் ஐயோ என்ன செய் வேன் ஐயோ ஏழை வறியவன் என்ன செய்வேன் என்னசெய் வேன் வேறு கோடரி வாங்கவும்
இல்லையே கைப்பொருள் என்ன செய்வேன்
7
உண்ண உணவில்லை ஆக்க விறகில்லை ஒகோ ! என் பிள்ளைகள் வாடுவரே என் செய் வென் ஐயோ தெய்வமே தெய்வமே ஏழைக் கிரங்குவாய் என்றழுதான்
8
ஐயோ ஐயோ என்றழும் போதினில் அழகிய வெண்பட் டுடையணிந்து
தைய லொருத்தி மலர்முடி சூடியத் தாமரை வாவியிற் முேன்றினளே
9
மாங்குயில் போலும் மதுர மொழியினுல் மற்றந்தப் பெண்ணவ னைக் கூவி ஏங்கியழ வேண்டாம் உன்னுடைக் கோடரி இந்தா என்றேயொன்றை நீட்டினளே
IO
நன்னியன் கண்டிது பொன்னினற் செய்தது நம்முடைய தன்றென் றேநவிலக் கன்னி முழுகி யெழுந்திதோ பாரென்று
காட்டினுள் ஒர் வெள்ளிக் கோடரியை

Page 33
26
சிறுவர்
11
இல்லை இதுவெள்ளி என்னுடைக் கோடரி இரும்பினுற் செய்ததென் றேயிசைத்தான் நல்லதென் றே யந்த மங்கை திரும்பவும் நாடிக் குளத்துள் முழுகினளே
12
இரும்பினற் செய்திட்ட கோடரி தானிங்கே இருக்கின்ற திந்தா வெனக் கொடுத்தாள் விரும்பி யிரண்டு கரங்களை யுந்நீட்டி விறகு வெட்டியதை வாங்கினனே
I 3
வாய்மை யுரைத்தனை மற்றிவ்வி ரண்டையும் வைத்துக்கொ ளென்றந்த மாதுதரத் தூய்மை யுடையவன் பெற்று மகிழ்ந்தனன் சொல்லுக மெய்ம்மையெந் நாளினுமே.

செந்தமிழ் 27
11. கொழுக்கட்டைப் பொன்னன்
சுன்னை நகரிலே பொன்னன் என்னும் ஒருவன் இருந் தான். அவன் சமையல் வேலை செய்பவன். அவன் மயிலூரிலே உள்ள நாகம்மை என்னும் பெண்ணை"S திருமணஞ் செய்தான். பொன்னன் ஒருநாள் மாமியார் வீட்டிற்குப் போனன். பொன்னிமா மி கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தாள். பொன்னன் ஆவலோடு நிறைய உண்டான். பொன்னன் இவ்வுணவை முன் னெருபோதும் அறியான். ஆதலினலே இதன் பெய ரென்ன என்று கேட்டான். மாமி இது கொழுக்கட்டை என்ருள். பொன்னன் அப்பெயரை மனப்பாடஞ்செய்து கொண்டான். வீட்டுக் குப் போகும் போதும் அப் பெயரையே சொல்லிக்கொண்டு சென்ரு ன். வழியில் ஓர் ஆறு தோன்றியது.
பொன்னன் துள்ளிப் பாய்ந்து ஆற்றைக் கடந்தான். கொழுக்கட்டையை மறந்தான். ஆற்றுக்கட்டை ஆசை என்று சொல்லிக்கொண்டு சென்ருன், வீட்டிற்குச் சென்றவுடன் மனைவியை அழைத்தான். பெண்ணே ! உனது தாயார் ஆற்றுக்கட்டை ஆசை அவித்துத் தந்தாள், அதை நினைக்க வாயூறும். நீயும் அதைப்போல அவித்துத்தா என்ரு ன். மனைவி அஃதெப்படிச் செய்வ தென்று தெரியாமல் அடுக்களையிலிருந்து சிந்தித்தாள். பொன்னன் சிறிது நேர ஞ் செல்ல அடுக்களைக்குப் போனன். மனைவி ஆற்றுக்கட்டை அவியாது வாளா விருப்பதைக் கண்டு அவளைச் சினந்து அடித்தான். மனைவி வருந்தி அழுது கைகள் வீங்கியிருப்பதைப் பார்த்துக் கொழுக்கட்டைபோல வீங்கிவிட்டதே என்று துயருற்ருள். எல்லாங் கேட்டுக்கொண்டிருந்த பொன் னன் ஓடிவந்து கண்மணியே ! அதுதான் ! அதுதான் ! கொழுக்கட்டைதான் ! மாமிஅவித்துத் தந்த இனிப் பான உணவு அதுதான் ! அதை அவித்துத் தா. வழியிலே

Page 34
28 சிறுவர்
அதன் பெயரை மறந்துவிட்டேன். நான் அடித்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு அவித்துத்தா ’, என்று அவளை இரந்தான். அவளும் கணவனது அறியா மைக்கு இரங்கி நல்ல இனிப்பான கொழுக்கட்டைகளை அவித்துக் கொடுத்தாள். பொன்னன் வயிருர உண்டு மகிழ்ந்தான்.
செவ்வே-செவ்வையாக,
ஒல்லும்-இயலும்.
GIT GIMTIT- 3 Lb LDT.
கோது-குற்றம்.
I
வன்னக் கமுகும் தே மாவும் மருவும் பலாவும் வாழைகளும் செந்நெல் வயலும் மலர்த்தடமும் சேருஞ் சுன்னைத் திருப்பதியில் மன்னுங் கல்வி சிறிது டையான் வறியன் சமையல் வேலை செயும் பொன்னன் என்னும் பெயருடையான் ஒருவன் பொருந்தி வாழ்ந்தனனே
2 செல்வன் ஒருவன் தனையடுத்துச் செவ்வே சமையல் வேலை செய்தே ஒல்லும் வகையாய்ச் சிறிது பொருள் உடையான் ஆகி மயிலூரில் நல்ல குணமும் நற்செயலும் உடையாள் நாகம் மாவென்னச் சொல்லும் பெயராள் ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தான் சுகமாக

செந்தமிழ் 29
3.
அன்னன் ஒருநாள் அன்புடைய மாமி வீடு போயிருந்தான் பொன்னி மாமி எதிர்கொண்டு புகுந்த புதிய மாப்பிளைக்குச் செந்நெல் இடியும் சிறுபயறும் தேங்காய்த் துருவல் சருக்கரையும் மன்னும் இனிய கொழுக்கட்டை மகிழ்வாய் அவித்துக் கொடுத்தாளே
4
முன்னம் ஒரு நா ஞங்காணு மதுரம் மிகுந்த கொழுக்கட்டை தன்னை நிறைய உண்கின்ரு ன் மகிழ்ந்து மாமி தனை நோக்கி ‘ என்ன பெயரோ இவ்வுணவுக் கிசைத்தல் வேண்டும் ' எனவினவப் பொன்னி மாமி கொழுக்கட்டை இதுதா னென்று புகன்ருளே.
நல்ல மாமி பரிந்தளித்த உணவை நயந்து விடைபெற்றே இல்லம் ஏகும் வழியெல்லாம் இனிக்க இனிக்க மறவா மற் செல்வ மாமி கொழுக்கட்டை தின்னத் தின்ன ஆசையெனச் சொல்லிக் கொண்டு நடைகொண்டான் துறைசேர் ஆறு தோன்றியதே

Page 35
30
சிறுவர்
6
தோற்றும் ஆற்றைக் கடப்பதற்குத் துள்ளிப் பாய்ந்தான் அவ்வேளை சாற்றி வந்த கொழுக்கட்டை தன்னை மறந்தான் நினைவினிலே ஆற்றுக் கட்டை ஆசையெனும் பெயருண் டாக அதைச் சொல்லிப் போற்றும் மனைவி நாகம்மை இல்லம் விரைவிற் புகுந்தானே
7
ஆசை மிகுந்த மனைவிதனை அழைத்துப் பெண் னே யுன்னன்னை வாசம் மிகுந்த தோருணவு மகிழ்வாய் அவித்துத் தந்திட்டாள் பேச நினைக்க வாயூறும் ஆற்றுக் கட்டை ஆசைதனை நீசென் றவித்தே எனக்கிந்த நேரம் தருதல் வேண்டுமென் முன்
8
அன்பு மிகுந்த நாகம்மை ஆற்றுக் கட்டை ஆசையெனும் இன்பம் மிகுந்த நல்லுணவை இந்நாள் வரையும் அறிந்திலனே அன்பன் மகிழச் செய்திடுதற் கறியேன் என் செய் வேனென்று துன்பப் பட்டு யாதொன்றும் துணியா திருந்தா ளடுக்களையில்

செந்தமிழ் 31
9
ஆற்றுக் கட்டை ஆசை வரும் வருமென் றெண்ணி ஆசையுடன் வீற்றங் கிருந்த பொன்னனது விரைவில் வாரா விதங்கண்டு சாற்று முணவு செய்யாமல் வாளா விருந்த தன் மனை மேற் சீற்றங் கொண்டு பலமுறையும் அடித்தான் ஒன்றுந் தேரா தான்
IO
தன்னன் புடைய மணவாளன் தண்டித் த ைமக்கு வருந்தாமல் என்னன் புடையார்க் கினியவுன வேதென் றறியேன் என வழுவாள் மன்னும் அடிகள் கொழுக்கட்டை போல மருவும் என்னுடலில் துன்னித் தடித்து வீங்கினவே என்று சொல்லித் துயருற்ருள்
I
கோது புரியா நன் மனைவி கூறும் மொழிகள் பொன்னனிரு காதில் விழுமுன் கண்மணியே அதுதான் அதுதான் கொழுக்கட்டை பாதை தனிலே மறந்திட்டேன் பதைக்க அடித்த பொல்லாத தீது பொறுத்தே அதையவித்துத் தின்னத் தருவாய் எனக்கென்ரு ன்
4027-D

Page 36
32
சிறுவர்
I 2
வாய்த்த கணவன் அறியாமை மனத்திற் கொண்டு வருந்தாமல் நேர்த்தி யான கொழுக்கட்டை நிறைய அவித்துக் கொடுத்திட்டாள் பார்த்து மகிழ்ந்து வயிருரப் பொன்னன் உண்டான் ; பாரினிலே கூர்த்த அறிவி லார் செய்கை குற்ற முடைத் தென் பார்பெரியோர்

செந்தமிழ் 33
12. ஆடு கதறியது
சில சைவக்கோயில்களில் ஆடுகோழிகளைப் பலியிடு கிருர்கள். பிள்ளையைப்போல வளர்த்த ஆடுகளைப் பலியிடும் இக்கொடுஞ்செயல் நரகத் துன்பத்தைத் தரும். அறிவிற்குறைந்த மக்களாலே செய்யப்படும் இக்கொடுஞ் செயலை நீக்கும் பொருட்டு இப்புலம்பல் பாடப்பட்டது. தன் மகன் பலி செய்யப்பட்டதை அறிந்த தாயாடு மன முருகிப் புலம்புகின்றது.
I
ஆசை மகனேயென் அன்பான கண்மணியே நேசத் துரையே நெடும்பயணம் போனயோ
2 ஓராறு மாதம் உடம்பு நொந்து பெற்றெடுத்த சீராளா ! தெற்குத் திசைப்பயணம் போனயோ
፰ நேராத கோவிலெல்லாம் நேர்ந்து தவமிருந்தே ஆராத காதலுடன் ஐயோநான் பெற்றெடுத்தேன்
4 கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகுவித்து நோன்
பிருந்து செல்வக் குமரா சிறப்புடனே பெற்றெடுத்தேன்
5
ஆரக் கழுத்த ழகா அஞ்சனப்பூக் கண்ணழகா வார நடையழகா மாராப்பு மேனியனே !
- பாஅய் டாஅய்

Page 37
34 சிறுவர்
6
துள்ளு நடையழகுஞ் சோதி முகத்தழகுங் கொள்ளுஞ் செவியழகுங் கோமளமே காண்பதெப்போ
7
நீல மயிரழகும் நெற்றிச் செகிலழகுங்
கோல மருப்பழகுங் கோமளமே காண்பதெப்போ
8
பூங்கரும்பே தேனே யென் பொன்னே நவமணியே தாங்கிச் சுமந்த குடல் தழலா யெரியுதடா
9 யாழுங் குழலுமென மின்பக் குதலைமொழி நாளும் பொழுதுமினி நான் கேட்ப தெந்நாளோ
O
அம்மா வெனவழைக்கும் ஆசைத் திருக்குரலை எம்மா தவக் கொழுந்தே நான் கேட்ப தெந்நாளோ
II
புல்லுந் தவிடும் நல்ல பிண்ணுக்குந் தீற்றியுனை அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்தாரோ
I 2
அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்ததெலாங் கல்லுங் கரையக் கழுத்த வெட்டு வெட்டிடவோ
-பாஅய் பாஅய்
13
கிம்புரிப் பூணணிந்து கிண்கிணிப்பொற் ருர் சூட்டி வரிசரவு ? வம்ப ர லங்கரிக்கப் பார்த்து மகிழ்ந்தேனே !!

செந்தமிழ் 35
14 வன்னப்பொற் றேரேறி மாப்பிளைபோற் சென்ருடியே
இன்னும் வரக்காணேன் எங்குற்ரு ய் எங்குற்ருய்
1 5 பெண்ணை மணந்தெனது பிள்ளை வரு வானென்றே , எண்ணி யிருந்து நா னே மாந்து போனெனெ டா
16 காக்கைக் கரைவும் கணுவும் பலித்த தடா ஆக்கை துடிக்கு த டா அடிவயிறு வேகுதடா
- L HT 9 u 1 L HT gjur
7 காரியமொன் றின்றியிந்தக் கன்னெஞ்சப் பேதையர்கள் மாரியம்மன் கோவிலிலே வாட்பலிக்கு வைத்தாரோ
18
பிள்ளையைப் போல் வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர் துள்ளித் துடிதுடிக்கத் துண்டாக வெட்டினரோ
19 காலிலொரு பாவி கழுத்திலொரு மாபாவி கோலி யிழுக்கக் கொடும்பாவி வெட்டினனே
-பா அய் பாஅய்
2O கோலி யிழுக்கக் குளறி மனஞ்சிதறி ஆரை நினைந்தோ வழுதா யென் கண்மணியே
2 I ஓங்கிய கத்தி விழும்போ துடல் நடுங்க ஏங்கி யென நினைந்தென் னம்மாவோ வென்றயோ !

Page 38
36 சிறுவர்
22
தூவாரும் மேனி சுழன்று துடிதுடிக்க ஆவாவென வாய்விட் டையா விறந்தனையோ
23 நெஞ்சந் துடிக்குதடா நினைவு தடு மாறுதடா பஞ்சிலே தீப்போற் பாழ்வயிறு வேகுதடா
-பா அய் பாஅய்
24 உன்றன் றசையரிந்தே யோலைக் குடலை கட்டிச் சென்று சென்று விற்றனரோ தின்றுபசி யாறினரோ
25 ஆசாரி மேலோ அதிகாரி தன் மேலோ
மாமாரி மேலோ விவ் வன்பழிதான் சேரும டா
26 கொன்றவன் மேலோ கொடுத்தவன் தன்மேலோ தின்றவன் மேலோவித் தீய பழி சேரும டா
27 வாயில்லாச் சீவன் வதை யாதீர் என்று சொல்ல
வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ
28 சைவமு மில்லையோ சான்ருேரு மில்லையோ தெய்வமு மில்லையோ வென் மனது தேற்றிடவே
--பா அய் பாஅய்.

செந்தமிழ் 37
13. காலைப்பொழுது
கூரிருள்-மிகுந்த இருள். விமலன்- கடவுள். இனமலர்-கூட்டமான
பூக்கள் உரம்-வலிமை. ஏரி-வா வி. விதிமுறை-நியமம், தாமிரம்-செம்பு. உடனலம்-உடம்பு வளர்ச்சி. சுடரொளி-வெளிச்சம். கிரணம்-கதிர். கீதங்கள்-பாட்டுக்கள். எரித்திரள்-நெருப்பு.
கூரிரு ளகன்றது கூவின கோழி −
குருவிக ளெழுந்தன மறைந்தன விண்மீன் ஏரியிற் ரு மரை யினமலர் மலரும்
இறையவன் கோவிலில் மணியொலி கேட்கும் ஊரினிற் ருெழில்புரி மாந்தர்க ளெழுந்தார்
உயர் மரக் கொம்புவிட் டோடின காக்கை சேர்கிழக் கெனுந்திசை வெளுத்தது மெல்லச்
செங்கதி ரவனுத யஞ்செய்கி ருனே
2
சீர் பெறு முற்றங்கள் கூட்டுகின் ருர்கள்
சிறப்புறச் சாணநீர் தெளித்திடு கின்ருர் நேர் பெறு நறுமணப் புகையிடு கின்ருர்
நித்திரை நீங்கியே சிறுவரு மெழுந்தார் நீரினிற் கான்முகங் கழுவியே கடவுள்
நிறைமலர்ச் சேவடி யிணை தொழு கின்றர் சேர்கிழக் கெனுந்திசை சுடரொளி பரப்பிச்
செங்கதி ரவனுத யஞ்செய்கி ருனே.

Page 39
38
சிறுவர்
3 இன்னிசை வீணைகள் மீட்டுகின் ருர்கள் ஏற்புடைக் கீதங்கள் ஒதுகின் ருர்கள் மன்னிய மலர் வகை சிரிப்பன போல
வாய்மலர் கின்றன வண்டுக ளுதும் அன்னங்கள் தாமரை மலர் மிசைத் தாவும் அழகிய குயிலினம் மகிழ்வுறக் கூவும் செந்நிறக் கதிரெனுங் கரங்களைக் காட்டிச்
செங்கதி ரவனுத யஞ்செய்கி ருனே
4
இரவினி லுலகினை மறைத் துவைத் திருந்த இருளினைத் துரத்தியே பிடிப்பது போலக் கிரணங்க ளெனும் பல கரங்களை நீட்டிக்
கீழ்த்திசை நின்றுமென் மெல்லெனக் கிளம்பித் தருமெரித் திரளெனத் தாமிரத் தாற் செய்
தட்டம தெனப்பணிப் பகையினைச் சாடித் திருவுறு முலகினர் மகிழ்வுற வந்து
செங்கதி ரவனுத யஞ்செய்கி ருனே
5
திருவுறு முலகினர் மகிழ்வுற வந்து
செங்கதி ரவனுத யஞ்செய்து விட்டான் விரைவுட னெழும்புமின் உயிர்த்துணை யான
விமலனை யன்பொடு விதிமுறை தொழுவோம் உரமுற வுடனலப் பயிற்சிகள் புரிவோம்
ஒதிடும் பாடங்கள் மனமுறப் படிப்போம்
வருமிந்த நாளை நற் பயன்பெறக் கழிப்போம்
மற்றிது மீண்டொரு காலும் வ ராதே.

செந்தமிழ் 39
14. புழுக்கொடியல்
மிடா-பெரிய பானை ஒக்க-சமமாக இகமான-விருப்பமான வெல்லம்-சருக்கரை
இத ரு ரு விரவி-கலந்து மருந்து-நோய்க்கு மருந்து
I
பனம்பாத்தி பறித்திடு வோமே-நல்ல பனங்கிழங்கு கிண்டி யெடுத்திடு வோமே இனமின மாகத் தெரிந்து-பின்பு எடுத்துரித் துத்தலை வாலை யரிந்து
2
பக்குவ மாக மிடாவில்-வைத்துப் பாதி மிடாவுக்கு மேற்றண்ணிர் விட்டே ஒக்க நெருப்பிட் டெரித்துப்-பின்னர் ஒன்றென் ரு கவெடுத் தேயாற வைத்து
3
கூரிய கத்தியி னலே-குந்தைக் கோதியே வார்ந்திரண் டாகக் கிழித்து
நாரினிற் கோத்து நன்ரு க-நாளுக்கு நாட்காய வெயிலிலே வைத்தெடுப் போமே
4
பதமாகக் காய்ந்த பின் ஞலே-அவை பக்குவ மாகக் கழற்றி யெடுத்தே இதமான தேங்காயின் சொட்டோ-டதை எடுத்துக் கடித்துச் சுவைத்துண்ணு வோமே

Page 40
சிறுவர்
5
பல்லில் லாத கிழ வருக்கும்-மற்றும் பலருக்கு முணவாகும் ஒருமுறை சொல்வேன் மெல்லிய ஒடியல் முறித்து-உரலில் விட்டே யிடித்துப்பின் தெள்ளி யெடுத்து
6
வெல்ல முந் துருவலு மொன்ரு ய்ச்-சேர்த்து விரவிப் பிசைந்து விரும்பி யெடுத்தே மெல்ல மெல்ல மென்று தின்னச்-சுவை மே விடும் வீரியங் கூடுமென் முரே
7
உண்ண உண்ணப் புழுக்கொடியல்-வாய் ஊறியூறிச் சுவை தேறிடுமே வண்ணப் பனங்கிழங் கதுதான்-வேறு மருந்துமா மென்றுமுன் சொல்லிவைத் தாரே.

செந்தமிழ் 41
15. ஏறத மேட்டுக் கிரண்டுதுலை என்னும்
நீலன் கதை
ஈழமண்டலத்தின் வடகோடியிலுள்ளது யாழ்நகர். அந்நகரின் குடபாலிலுள்ளது மாவலியூர். அவ்வூரிலே வள்ளுவர் குடியிலே நீலன் பிறந்தான். நீலன் தனது குடியிற்பிறந்த சடையனுர் என்னும் பெரியவர் ஒரு வரிடம் கல்விகற்றுச் சைவாசாரங்களை அறிந்துகொண் டான். தனது குலத்தை இழிந்த சாதியாக்கியது கொலையும் புலையுங் குடியும் என்று உணர்ந்தான். அதனுல் நீலன் அம்மூன்றையுந் தவிர்த்தான். திருநீறு தரித்தான். உருத்திராக்கம் அணிந்தான்; சிவசிவ என்று சொல்லப் பழகினன். கடவுளைத் தொழுது கொண்டு இனத்தவரிலும் வேருக நல்லவனுய் வாழ்ந் தான். தனது குடியிலுள்ளாரை இயன்ற அளவு திருத்தி வந்தான். உயர்குடிப் பிறந்த வேளாளர், கோயில்களிற் பலியிடுவதையும் புலாலுண்டும் கள்ளுக் குடித்தும் வரு வதையும் எடுத்துப்பேசி இகழ்ந்தான். ' புலாலுண்பவர் வீட்டிலே சோறுண்பதில்லை’ என்று ஒரு விரதம் பூண் டான். அழுக்குடையிலே நாகமணியை முடிந்தது போல வும், இப்பியிடையே முத்துப் பிறந்ததுபோலவும் வள்ளு வர் குடியிலே நீலன் சைவனக விளங்கினன்.
இவனது வீட்டருகிற் பூராயமாமுதலி என்னும் வேளாளர் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் ள்ளிய குலத்தவரை இகழ்வார். திருநீற்றுக் குறிவைப்பார். மிதியடிமேலே திரிவார். பெரிய சபைகளிலே அழ
காகத் தேவாரம் படிப்பார். உண்ணுவது புலால்.

Page 41
42 சிறுவர்
முழுக்குநாளில் மிகுதியாகக் கள்ளுக் குடிப்பார் ; இறைச்சி உண்பார். நீலனைக் கண்டால் உறுக்கி ஏசுவார். ஒருநாள் அவர் வீட்டில் விருந்து நடந்தது. எல்லோரும் தின்று குடித்து மகிழ்ந்தார்கள். நீலன் உண்ண மறுத்துவிட்டான். எல்லோரும் நீலனை வைதார் கள்.
இன்னெருநாள் முதலியார் வீட்டுச் சமையற்காரன் வீட்டில் நின்ற சேவலைத் தேடிச்சென்ரு ன். அன்று முதலியார் முழுக்காடும் தினம். சேவல் நீலன் வீட்டிலே மலமுண்டுகொண்டு நின்றது. அதனைச் சமையற் காரன் பிடித்துக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுத்தான். முதலியார் நீராடி உண்டு குடித்து மகிழ்ந்தார். நீலன் முதலியார் வீட்டுக்குப்போஞன். * ஐயா ' என்ரு ன். முதலியார் ஆரடா ஈனப்பறை யா’ என்று அடிக்கப் போனர். நீலன், 'ஐயா ! என்னைச் சீறவேண்டாம். புலையருடைய மலமுண்ணும் கோழிகளை உண்ணுகிறீர் கள். எம்மைப் புலையர் என்று பேசுகிறீர்கள். இன்று நீங்கள் அருந்திய கோழி காலையில் எங்கள் வீட்டில் மலமுண்டுகொண்டு நின்றது. நீர் ஏருதமேட்டு நிலத் திற்கு இரண்டுதுலை இடுவதுபோல, நாங்கள் எமது மலத்தைக் கோழிவயிற்றில் ஏற்றிப் பின் உங்கள் வயிற்றில் ஏற்றுகிருேம் ' என்ருன். முதலியாருக்கு அருவருப்பும் குமட்டலும் உண்டாயின. உண்டதும் குடித்ததும் எல்லாம் குமட்டியெடுத்தார். இனி ஒரு போதும் புலாலுண்பதில்லை என்று ஆணையிட்டார். நீலனல் முதலியார் திருந்தினர்.

செந்தமிழ் 43
துலை-துலா
பேருன கதை-பொருத்தமான கதை.
முடி மன்னர்-சேரனும் சோழனும் பாண்டியனும் ஆகிய
மூவரசர்.
மண்டலங்கள் மூன்று-சேர மண்டலம் சோழமண்டலம்
பாண்டி மண்டலம் என்பன.
மணித்தீவு-இலங்கைத்தீவு.
அங்குள்ளார்-மூன்று மண்டலங்களிலு முள்ளவர்.
அரக்கர்-இராவணன் முதலாய இராக்கதர்கள்.
இங்குள்ளார்-ஈழமண்டலத்திலுள்ளார்.
குடபால்-மேற்குப் பக்கம்.
ஏறுவளம்-(வளம் ஏறும் என மாறுக) வளம் மிகுந்த,
இசைத்தல்-சொல்லுதல்.
இசை-புகழ்.
முதலாக-தலைவராக.
குடிமக்கள்-வண்ணுன், அம்பட்டன், தச்சன், கொல்லன்
முதலாய பதினெட்டுக் குடிமக்கள்.
வைத்த முறை-சாதிக்கட்டுப்பாடு.
மணமுரசு-மணநிகழ்ச்சிக்குரிய முரசு.
மறுமுரசு-பிணநிகழ்ச்சிக்குரிய முரசு.
மன்னவர் கட்டளை முரசு-அரச கட்டளைகளை யறிவிக்கும்
முரசு.
நாகமணி-நாகரத்தினம்.
உள்ளத்துக் கறுப்பு-மனக் குற்றம்.
கண்மணி-உருத்திராக்கம்.
ஏர் ஆயம்-க மக்காரர் கூட்டம்.
தப்பு-குற்றம்.
செஞ்சூட்டு வாரணம்-சிவந்த தலைப்பூவையுடைய
சேவல்.
ஆணம்-குழம்பு.
ஏழுத மேட்டுக்கு இரண்டுதுலை இடுதல்-நீர் ஏழுத மேட்டு நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சுவோர் கிணற்றுநீரை இறைத் துஒரு குண்டில் நிரப்புவர். பின்பு அக்குண்டி லிருந்து மேட்டிற்குப் பாய்ச்சுவர். கிணற்றுக்கு ஒரு துலையும் குண்டிற்கு ஒரு துலையுமாக இரண்டுதுலை வேண்டப் படுதலினலே ஏருதமேட்டுக்கு இரண்டு துலை' எனப் பட்டது.
குமட்டல்-சர்த்தியெடுத்தல்.
சூளுறவு- சபதம்.

Page 42
44
சிறுவர்
ஏழுத தனி மேட்டுக் கிரண்டுதுலை யிட்டிறைக்கும் பேருன கதையுரைப்பேன் பிள்ளைகளே கேட்டிடுவீர்
2
மானமுள்ள முடிமன்னர் மண்டலங்கள் மூன்றினுடன் தானுமொரு மண்டலமாய்த் தனிவிளங்கும் மணித்தீவு
3
அங்குள்ளார் வாளரக்கர் ஆண்டதென்று வடுவுரைக்க இங்குள்ளார் சிவபூமி என்றுயர்த்தும் மணித்தீவு
4.
அத்தீவின் வடகோடி அங்கனெரு செல்வநகர் எத்திசையும் புகழ்ந்துரைக்கும் யானுரைக்க விடமில்லை
5
கூறுமந்தச் செல்வநகர்க் குடபாலி லொருபாலில் ஏறுவள மாவலியூர் என்றிசைக்கு மிசைமலியூர்

செந்Uழ்
45
6
வேளாளர் முதலாக
வெவ்வேறு குடிமக்கள்
வாழ்வார்கள் முன்னுளில்
வைத்தமுறை வழுவாமல்
7
மனமுரசும் மறுமுரசும் மன்னவர்கட் டளை முரசுங் குணமுடனே கொட்டுமுது குடியாளர் குடிசைதனில்
8
நாறுமழுக் குத் துணியுள் நாகமணி யடைந்ததுபோற் கூறுபுலா லிப்பியிடைக் குலமுத்துப் பிறந்ததுபோல்
9
வள்ளுவர்தங் குடிவாழ வந்துதித்தா னெருமைந்தன் எள்ளலிலா முற்றவத்தின் இயலோடு மறிவோடும்
O
பெற்றேர்கள் நீலனெனப் பெயரிட்டார் சிற்சிலநூல் கற்ருனே யுள்ளத்துக் கருப்பில்லா வொருவரிடம்

Page 43
46
சிறுவர்
சடையணு ரென்றுரைக்குந் தங்குலத்துப் பெரியவர் பால் அடையவே சைவநெறி ஆசாரங் கேட்டுணர்ந்தான்
12
தங்குலத்தைத் தீண்டாத சாதியாக் கியதெல்லாம் வெங்கொலையுங் கொடும்புலையும் மிகு குடியு மென்றுணர்ந்தான்
13
பொல்லாத குடியோடு புலான் மிசையுந் தொழில் விட்டு நல்லார்கள் தொடர்புடனே நாளுமவ னுயர்கின்ரு ன்
14 வடிவினிலே வெண்ணிறு வாக்கினிலே சிவசிவா கடியகொலை புலையில்லை கழுத்தினிலோர் கண்மணியே
15
காலையிலே எழுந்திடுவான் கடவுளடி கைதொழுவான் வேலையிலே குறைவில்லை வேருக வொழுகிடுவான்

செந்தமிழ்
47
16
கொலை புலையுங் கட்குடியுங் குடிக்கா கா தனவென்றே நிலையான சன்மார்க்க நெறியெல்லா மெடுத்துரைப்பான்
I 7
கோயிலிலே யாடுகளைக் கோழிகளைக் கொண்டுபோய் வாயிலிலே வெட்டுமிந்த
வழக்கமென்ன அநியாயம் !
18
புலையரென வெமைத் தீண்டார் புறம் பழிப்பார் புலையர் விடும் மலமுண்ணும் கோழிகளை வதைத் துண்ணல் வல்வினையோ ! !
19
அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்தும் இம்மா னுடருக்கும் இரக்கமுண்டோ வென்றயர் வான்
20
வேளாள ரென்ருலும் வெடுக்குப் புலான் மிசைவோர் கீழான புலையரினுங் கீழானே ரென்றிகழ்வான்

Page 44
4S
சிறுவர்
2.
ஊனுண்பா ரெவரெனினும் அவர் வீட்டி லொருநாளும் யானுண்ணேண் சிவனுணை என்றெடுத்தா னெருவிரதம்
22
அங்கவன் வாழ் சிறுகுடிசைக் கணித்தாக மாளிகையிற்
சங்கையுறு வேளாளர் தலைவரென வொருவருளர்
23
ஏராயம் புடைசூழ இருந்துதன்னைப் புளுகுதலாற் பூராய மாமுதலி யெனப்புகல் வர் அவர் பெயரே
24
தன் குலமே யுயர்ந்த குலம் தானேமே லென்றிடுவார் புன்குலத்தார் தமைக் கண்டாற் புலிபோலப் பாய்ந்திடுவார்
25
வெண்ணிற்றுக் குறிவைப்பார் மிதியடிமே லே திரிவார்
உண்ணுவது கொடியபுலால் உரைப்பதெலாம் பொல்லாப்பே

செந்தமிழ்
49
26
படித்திடுவார் தேவாரம் பாமரர்கள் பெருஞ்சபையில் இடித்திடுவார் சிவன்கோயில் எண்ணெய்முழுக் காடிடுநாள்
27
நீலனை வீதியிற்கண்டால் நில்ல டா வென்றுறுக்கிச் சாலவுமே வைதிடுவார் சைவமோ தம்பியென்பார்
28
அன்ருெருநா ளவர் வீட்டில் அமளிபெருங் குமளிவரத் தின்றுகுடித் தினசனங்கள் திருந்துவிருந் தருந்தினரே
29
நீலனையும் புலாலுணவு நெருக்கியுணச் சொன்னர்கள் சாலவது கூடாது
தப்பென்ரு னெப்பொழுதும்
30
தீயினிலே விழுந்தவர் போற் றிடுக்கென்று துள்ளினர் ; வாயினிலே வசைபாடி மங்களமும் பாடினர்

Page 45
50
சிறுவர்
31
நான் நயிந் தை நம்முடைய சோறுதான் உண்கின்றேன் ஊன் மிசைந்த உணவையென்றும் உண்ணேனென் ருே டினன்
32
இன்னெருநாள் முதலியார் எண்ணெய் முழுக் காடுநாள் என்ன கறி யென்றுவந்தான்
இரக்கமிலா மடைவேலன்
33
செவ்வரத்தம் பூப்போலுஞ் செஞ்சூட்டு வாரணத்தை அவ்விரத்தஞ் சிந்தாமல் அடிய டா வென்றுரைத்தார்
34
ஆணஞ்செய் கறியுஞ்செய் அரியதொரு பொரியல் செய் வேணுமென்ருற் குடிக்கலாம் மிகு மதுரச்
சூப்பு ‘ச் செய்
35
தேடுகிருன் தேடுகிருன் செஞ்சூட்டுச் சேவல்தனை ஒடுகிருன் நாற்றிசையும் ஓரிடமுங் காணவில்லை

செந்தமிழ்
5 I
36
நீலன் வீட் டயலினிலே நிறைவடலிக் கூடலுக்குட் காலையிலே கழித்த மலம் கால்கிளறி யுண்டதம்மா !
37
வாயினிலே யீர்க்கரிந்து மாட்டியதைக் கொன்றுரித்துத் தீயினிலே வறுத்தவித்துச் செய்துவைத்தான் சொன்னபடி
38 V
மற்றவரும் முழுகிப்போய் வாயார வுண்டுவிட்டுச் சற்றுறக்கம் வரச்சாய்ந்தார் சாய்வுநாற் காலியிலே
39
ஐயா வென் ருெரு சத்தம் ; ஆரடா வென்றெழுந்தார் ; கையிலே கோலெடுத்தார் கண்டவுடன் நீலனையே
40
புலையரென்றே யெமைக் கழிப்பீர் புலையர்தம் மலமுண்டு நிலையுண்ட சேவல் தனை நீருண் டீ ரின் றென்றன்

Page 46
52
சிறுவர்
41
ஏருத மேட்டினுக்கே இரண்டுதுலை யிட்டதுபோல் நாறுகின்ற மலமதனை நாங்கோழி வயிற்றேற்றி
42
நயிந்தை வயிற் றேற்றுகின்ருேம் நாங்களதை யறியாமல் உயர்ந்த குலம் நா மென்ப துண்மையோ வுரைக்கவென்மு ன்
43
அப்பொழுதே முதலியார்க் கருவருப்புங் குமட்டலுமாய்க் குக்கி யெக்கிக் கக்கினர் குடித்த துவு முண்டதுவும்
44 இன்றுவிட்டேன் கொண்டலடி யென்னுணை யுன்னுணை என்றுமினிப் புலாலுண்ணேன் என்றுரைத்தார் சூளுறவே.

செந்தமிழ் 53
16. இலங்கை நீர்வளம்
இலங்கையின் நீர் வளம், கதிர்காமம், கோணமலை வெந்நீர்க்கேணிகள் என்னும் இப்பகுதிகள் புலவர் செய்த இலங்கைவளம் என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டவை. புதிய உவமை நயங்களும் அன்புச் சுவையும் g2d - G50) L - L 65T .
எஃகிய பஞ்சினைப் போலத்-தமிழ் எல்லாள மன்ன னரிருதயம் போல வெஃகிய வெண்முகிற் கூட்டம்-இந்து வெண்டிரை மேயவெ ழுந்திடு மன்றே ( 1)
ஈயாத வற்சரின் வெளவி-நல்ல இரவலர்க் கீகின்ற புரவலர் போல ஒயா வுவர்க்கட ல ள்ளி-மிக வுண்டு திரண்டு புரண்டெழு மேகம் (2)
கல்லா தவர் மனம் போல-அன்றிக் கடுகணைக் குகைவரு கனையிருள் போல அல்லா தழுக்காறு கொண்டோர்-மனம் ஆமென வேயிருண் டங்குசூல் கொண்டே (3)
செங்கதி ரோன்தனை யெள்ளி-நின்று சிரிப்பது போல விடையிடை மின்னி அங்கவ னேடறை கூவி-எதிர்த் தார்ப்பது போல விடித்துமு ழங்கும் (4)
கைம்மலை கன்மலை போலப்-பெருங் காண்டா மிருக நிரைகளைப் போல மைம்மலி ராவண னேவும்-மூல மாபல மென்னவும் வந்து குவிந்து (5)

Page 47
வேறு
பாத பங்கய மலையின் மீதினும் பகரு பேதுரு மலையின் மீதினும் ஒது கதிரைமா மலையின் மீதினும் உயர்ந்த வன்னியா ரணிய மீதினும்
பார்த்தி டாத கட் டோகை யாலிடப் பாம்பொ டுங்கிடக் காந்தள் வாய்விட வேர்த்த வெம்மை போய் வளிகு ளிர்ந்திட வேறு வேறுபோய்க் கால்க ளுன்றியே
கொடை மடம்படுங் குமண மன்னவன் கூறு சித்திரப் புலவ னுக்கருள் மடைதிறந்திடுங் கொடைவி தங்கள் போல் வயிறு ளைந்துமா மழை சொ ரிந்தவே
அரசு நீழலிற் புத்த மாமுனி ஆறு வற்சரம் பெற்ற யோகினைப் பரவு பாரினுக் கருளு மாறுபோற் பாத பங்கயத் தருவி பாயுமே
ஏசு வென்றிடும் ஞான பண்டிதன் ஏறி மாமலைக் கூறு நீதிபோற் பேசு மாமுகில் சொரிய வாங்கியே பேது ருமலை யருவி பாயுமே
உண்ட செந்தமிழ்ச் சைவ நூலமு தோங்க நல்லை வந் தருளு நாவலன் கண்ட னப்பிர சங்க மாமெனக் கதிரை மாமலை யருவி காலுமே
குக்கி புக்கவை யருவ ருப்பினுற் கொட்டி விட்டிடுங் கொள்கை போலவே மைக்கண் மா மழை வழங்கு வாரிநீர் மலைக்க ணன்றிழு மென்னப் பாயுமே
சிறுவர்
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)

செந்தமிழ்
வேறு ஒடுமா தங்கமே உருளுமா தங்கமே வீடுமா நாகமே வீழுமா நாகமே
வேறு சரிந்த வேங்கை முரிந்த கோங்கு தகர்ந்த சாந்து விழுந்தவே யிரிந்த மிருக மெழுந்த பறவை இழிந்த அருவி கழிந்தவே
உருண்ட சிலைகள் ஒழிந்த வவல்கள் உயர்ந்த மேடு பதிந்தவே
வெருண்ட கரடி விளிந்த வரவு
மிகுந்த வருவி பாயவே
வேறு பூங்கு றிஞ்சி முகட்டினி லேறிப் பொழிந்த தெள்ளமு தாகிய வெள்ளம் பாங்கி லாத ப ரத்தையை நாடிப் படரு வோரிற் படர்ந்தது பள்ளம்
முன்னை பூத்திடு முல்லையிற் போன முளரி பூத்திடு மருதத்திற் போன புன்னை பூத்திடு நெய்தலிற் போன போகும் போகுந் துறை தொறும் போன
செப்பு மத்தளங் கொட்டுங் கரம்போற் சிறைய சைத்துச் சிரலினம் மேவும் கொக்கு நாரையும் மீனினங் கொத்திக் கொண்டெ முந்து விழுங்கி விக்கும்மே
மங்க லந்திகழ் மாப்பிள்ளை மார் வர மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போற் பொங்கு வெள்ளப் புதுமண நீர் வரப் புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே
55
(13)
( 14)
(15)
( 16)
(I 7)
( 18)
(19)

Page 48
56 சிறுவர்
வேறு அடுக்கு ஞெண்டு குடைகள் பிடிக்க ஆல வட்டந் திருக்கை யெடுக்க
நடுக்குஞ் சுறவு நாந்தக மேந்த நல்ல கணவாய் கவரி யிரட்ட (20)
முன்னே யாமை பரியஞ் சுமக்க முரல்கள் சின்ன மூதி நிற்க மன்னு திரைகள் முழவ மியம்ப வாரி மணக்கும் நதியையே (21)

செந்தமிழ் 57
17. கதிர்காமம்
அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி
அன்பொடு சிவாயவென வருணிறு பூசி முதிருமன் பால்நெஞ்ச முருகவிழி யருவி
முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப் புதியசெந் தமிழ் மாலை புகழ் மாலை சூடிப்
பொருவில் கந் தாசுகந் தாவென்று பாடிக் கதிரைமலை காணுத கண்ணென்ன கண்ணே
கர்ப்பூர வொளிகாணுக் கண்ணென்ன கண்ணே
வேறு
விதிவரைந் திடுபழைய வினையோடி மாயு
மிடிகொடும் பிணிசோக விதமான தேயு மதியொடங் காரகன் முதலான கோளு
மருவிடும் பகையோடு மாரு ன நாளும் அதிசுகந் தருஞான வழியான கூறும்
அளவிலன் பூறுமல மனு காம லோடுங் கதிரையென் ருேதுமலை கண்டகண் கண்ணே
கர்ப்பூர மெய்ச்சோதி கண்டகண் கண்ணே.
ஆடி வேல்
பூதியணி வேதியர்கள் ஆதியடி யார்கள்
போற்றிவர மங்கல வியம் பல முழங்கச் சோதிவிரி வெள்ளிமணித் தேரின் மிசைத் தோன்றிச்
சூரனுர மோடுகடல் வாரிதொலை வாக மோதியெழு மாயமலை யாறுதுகள் போக
முன்னுமுரு கேசனுயர் முத்துமணி வைவேல் வீதிவழி யாகவரு மாதியுலாக் காணும்
விழிகள் கதிர் விழிகள் மணி விழிகளொளி விழிகள்.

Page 49
58 - சிறுவர்
கோணமலை வெந்நீர்க் கேணிகள்
காதலனைப் பிரிந்தவளின் மனம்போல வொன்று
கவிபாடிப் பரிசு பெருன் மனம்போல வொன்று தீது பழி கேட்டவன்தன் மனம்போல வொன்று
செய்த பிழைக் கழுங்குமவன் மனம்போல வொன்று நீதிபெரு வேழைதுயர் மனம்போல வொன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம்போல வொன்று காது மழுக் காறுடையான் மனம்போல வொன்று
கனலேறு மெழுநீர்களுண்டுகன்னி யாயில்

செந்தமிழ் 59
18. இலவு காத்த இளி
அழகிய பச்சைக் கிளி ஒன்று ஒர் இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அவ்விலவமரம் அரும்புகட்டக் கண்டது. இவ்வரும்பு அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்போது இனிதாக உண்பேன் ' என்று நினைவு கொண்டு மகிழ்ந்தது. காலையும் மாலையும் பார்த்துப் பார்த்து வாய் ஊறியது. ஒருநாள் இலவங்காய் பச்சை நிறம் மாறிப் பழுக்கத் தொடங்கிற்று.
கிளி, தனது இன சனத்துக்கு எல்லாம் விருந்து சொல்லி வைத்தது. காலையில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்தது. அதற்கிடையிற் பழம் வெடிக்கப் பஞ்சு பறந்தது. கிளியும் அதனுடைய விருந்தாளிகளும் ஏமாற்றம் அடைந்தன. கிளி மிகவும் வருந்தியது. விருந் தாளிகள் வெள்கிச் சென்றன. இவ்வாறு பயன் இல்லா *தனவற்றைப் பயன் உடையன என்று விரும்பி ஏமாற் றம் அடைகின்றவரை இலவுகாத்த கிளி ' என்று உல கோர் கூறுவர்.
செந் தீ-சிவந்த நெருப்பு. பொதுளி-நிறைந்து. மஞ்சு-மேகம்.
கதிர்-தினைக் கதிர். மலடு-கன்றினத பசு. துஞ்சாது-நித்திரை செய்யாது. உள்ளீடு-உள்ளே இருக்கும் அரிசி. பதர்-சப் பி.
குவை-குவியல்.
I செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளின்று திருமாலின் நிறம்போலப் பசியதழை பொதுளி நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள் பல வோச்சி நடுக்காட்டி லோரிலவ மரம் வளர்ந்த தன்றே

Page 50
60 சிறுவர்
2 மஞ்சுதொட வளர்ந்த வந்த விலவமர மதனில் மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினிதே குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே
3 அங்கொருநா Rலவமர மரும்புகட்டக் கண்டே அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கணியும் இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய் ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே
4
காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும் ; மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து வாயூறிக் கணியாக வரட்டுமென மகிழும்
5 எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக் காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே
6 வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக பிறிதுநினை வொன்றுமின்றி யாசை மிகு கிள்ளைப் பிள்ளை மகிழ்ந் திருந்தங்கே பேணியதைப் பார்த்தே

செந்தமிழ் 61
7
நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும் நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள் என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்
8
பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம் என் வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி
9
துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப் பைங்கிள்யார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே
10
அந்தோவக் கிளியடைந்த மனவருத்த மெல்லாம் அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந் தாக வந்த கிளை மிகநாணி வெறுவயிற்றி னேடு வந்த வழி மீண்டதுவே சிந்தை பிறி தாகி
உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென் றுர் லிட்டுக் குத்த வெறு முமியான வாபோல் இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை இலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.

Page 51
62 சிறுவர்
19. செந்தமிழ்த் தாய்
எம்மை அன்புடன் பெற்றுவளர்த்த தாய்க்கு எவ் வளவு அன்பும் நன்றியும் உடையோமாயிருக்கின்ருேம். அதுபோலவே, அறிவாகிய பால் தந்து பெரியோராக வளர்த்து வருகின்றவள் அருமைத் தமிழ்த்தாய் ஆவாள். ஆங்கிலம், சிங்களம் முதலிய வேற்றுமொழிகளைக் கற்று எங்கள் பழைய சிறந்த பழக்க வழக்கங்களை நீக்கிவிட் டோம். தமிழ் ஆசாரங்களையும் உயர்ந்த அறிவின் பங் களையும் தமிழ்த் தாய் வைத்திருக்கின்ரு ள். தமிழ்மொழி யைப் படித்தால் அவைகளை யறிந்து இவ்வுலகிற் பெரி யோராக வாழலாம்.
I
செந்தமிழ் மக்களே வாரீர்-எங்கள் தெய்வத் தமிழ்மொழிச் சீரினைத் தேரீர் அந்த மி லெம் மொழி மாதா-படும் அல்லலைத் தீர்க்க அறிவுவ ராதா -செந்.
2
முச்சங்கத் தரியணை யேறி-மன்னர் முடிதொட்ட மூவரும் அடிதொட்டுப் போற்ற விச்சையா லரசாண்ட மாதா-அவள் வேதனை தீர்க்க விரக்கம் வ ராதா -செந்.
3
இன்னமு தோ தெளி தேனே-என எஞ்செவிக் கினிக்கின்ற மொழியெது தானே அன்னை மொழிதனை நாமோ-வெறுத் தருவருத் தவமதித் திடலழ காமோ -செந்.

செந்தமிழ் 63
4. சிந்தையிற் றேனமு தூறி-நாவில் தித்தித்துத் தித்தித்துச் செவிவழி யேறி வந்து கனிந்திருள் கீறி-எம்மை வாழ்விக்கும் மொழியினை மறப்பமோ மீறி --செந்.
5 வேற்று மொழிகளைக் கற்ருேம்-எங்கள் மெய்யான முதுசொத்தை விலைபேசி விற்ருேம் ஆற்றிலே புளிகரைத் திட்டோம்-ஐயோ அருமந்த தமிழினை யறியாது கெட்டோம் --செந்.
6 நற்றமிழ் ஓதுதல் விட்டோம்-பண்டை நடையுடை பாவனை நன்னெறி விட்டோம் மற்று மயன்மொழி தொட்டோம்-முந்தை மறைநெறி சாதி சமயமுங் கெட்டோம் -செந்.
7
ஏதமில் தமிழன்னை வாடச்-சற்றும் இசையா மொழிக்கள்ளி யிறைத்தோமே நீட மாதா பசிபுவி மீதே-மகன் மாதானஞ் செய்கின்ற வாறிது சூதே -செந்.
8 வானத்தைக் குத்தி யிளைத்தோம்-நல்ல வழியிருக் கப்பாழுங் குழியிற்றி ளைத்தோம் காணலை நீரென நம்பிக்-கால்கள் கடுத்திட வோடிக் களைத்தோமே வெம்பி --செந்.
4027-E

Page 52
சிறுவர்
9 உமிக்குத்திக் கைசலித் திட்டோம்-நல்ல உணவிருக்க விடமுண் டன்ருே கெட்டோம் அமைத்திட்ட பாற்பசு விட்டோம்-ஐயோ ஆகா மலடு கறந்திளைத் திட்டோம் -செந்.
IO மெய்ந்நெறிச் சுகவாழ்வு போச்சே-எங்கும் வீணுர வாரமினுக்குக ளாச்சே மையற்பே ராசைக்கை வீச்சே-தீயும் வாய்த்தவி டும்போன வாறிணி யேச்சே -செந்.
II ஐம்புலச் செம்புலம் வேண்டில்-நேரில் அருந்தமிழ் மனை வாழ்க்கை அறநெறி வேண்டில் செம்பொரு வின்பமும் வேண்டில்-தெய்வத் திருவள்ளு வர் மொழி சிந்தை செய் வீரே -செந்.
12 எங்குள நீதியு மீண்டி-ஒதி இருமைக்கும் பெருமை களெய்திட வேண்டில் மங்கல மறைமொழி ஒளவை-அவள்
மந்திர வாய்மொழி மனங்கொள்ளுஞ் செவ்வே
-செந்.
13 அறிவு நிரம்பிட வேண்டில்-உண்மை அன்பு மருளும் அடக்கமும் வேண்டில் உறுதிப் பொருள் பெற வேண்டில்-எங்கள் ஒண்டமிழ் நூல்களை யோதிடு வீரே -செந்.

செந்தமிழ் 65
l4
மானமும் வீரமுஞ் சேரும்-செம்மை மாருத வாழ்க்கையு மாண்மையுஞ் சேரும் ஞானமும் வீடுங்கை கூடும்-எங்கள்
நற்றமிழ் நூல்களை யோதிடு வீரே -செந்.
5
இரவு விடிந்தது கேளிர்-தமிழ் இளவள ஞாயி றெழுந்தது பாரீர் பரவுதற் கோடிநீர் வாரீர்-வந்து பணி மின்கள் படிமின்கள் பயமில்லைப் பாரீர்-செந்.
Af

Page 53
66 சிறுவர் 20. மனம்நிறைந்த செல்வன்
இலங்கையிலே பெரிய ஆறு மகா வலிகங்கை. அதன் கரையில் ஒரு சிறு குடிசை உண்டு. அக்குடிசையில் மா வரைத்து வாழ்க்கை நடத்தும் வீரன் என்னும் பெய ருடைய ஒருவன் இருந்தான். அவன் நற்குணமும் நற் செயலும் உடையவன். ஒருநாள் அவன் வேலை செய்யும் போது நான் ஒருவரோடும் பொருமை கொள்ளேன் ; என் மீதும் ஒருவரும் பொருமை கொள்ளார் ; எனக்குக் கடன் இல்லை ; கவலையில்லை ; நோய் இல்லை ; என் மனைவியோடும் பிள்ளைகளோடும் ஒற்றுமையாக வாழ் வேன்' என்று சொல்லி இன்பமாய்ப் பாடினன். அதை அங்கே வந்து அயலில் நின்ற இலங்கையரசன் கேட்டான். கேட்டவன், வீரனுக்குக் கிட்டச்சென்று இலங்கையரச ணுகிய நான் உன்மேற் பொருமை கொள்ளுகின்றேன். உன்னைப்போல மகிழ்ச்சியும் ஆறுதலும் எனக்கில்லை ; நீ கவலையில்லாமல் இன்பமாயிருக்கும் இரகசியத்தை எனக்குஞ் சொல்லவேண்டும் , என்று கேட்டான். வீரன் அந்த உண்மையை விரித்துரைத்தான். மன்னனும் * சிந்தையின் நிறைவே குறையாத செல்வம் ' என்பதை அறிந்து வீரனைப் பாராட்டி யரண்மனைக்குச் சென்ரு ன்.
பூ-பொலிவு. பொழில்-சோலை. பூதரம்- மலை. தேவிலங்குந் தலம்-கடவுள் இருந்து அருள் செய்யும்
கோயில்கள். திரு-இயற்கை யழகு. உரு-செயற்கை யழகு. வரன்றி-வாரிக்கொண்டு. சுசி-சுத்தம். தூவ மரும்-தூய்மையுடைய. காயம்-உடம்பு.

செந்தமிழ் 67
கடிமனை-கா வலையுடைய வீடு. அழுக்காறு-பொருமை. மயல்- மயக்கம்.
யான் நீயா வேனே-நான் உன்னைப்போலக் கவலையின்றி
இருப்பேனே.
மனப்பூரணம்-மனநிறைவு.
I
பூவிலங்கும் பொழிலிலங்கும் பொன்னிலங்கும் என்றும் புகழிலங்கும் வளமிலங்கும் பூதரமு மிலங்கும் தேவிலங்குந் தலமிலங்குஞ் சீரிலங்குங் குன்றத் திருவிலங்கும் உருவிலங்குந் தென்னிலங்கை நாடு
2
அணிதிகழு மந்நாட்டில் ஆருயிருக் குயிராய் அமுத நிகர் புனல் பெருக்கி யலையிருபாற் சுருட்டி மணிவரன்றிப் பொன் கொழித்து மரமுருட்டிக் குன்மு. மா வலிகங் கைப்பெயர் கொள் வரநதிபாய்ந் திடுமே
3
அந்நதியி னுெரு கரையில் ஆருநனி விரும்ப அழகுடனுஞ் சுசியுடனு மமைவுடனுங் கீற்றுத் தென்னிலையால் வேய்ந்து மலர்த் தெய்வமணங் கமழுஞ் செல்வ மலி சிறுகுடிசை யொன்று திகழ்ந் திடுமே
4
தூவ மருஞ் சிறுகுடிலிற் பல கால மாயோர் தொழிலாளன் வீரனெனச் சொல்லு பெயருடையோன் மா வரைத்துச் சீவனஞ் செய் மனநிறைந்த செல்வன் மறந்துமொரு பொல் லாங்கு மற்றவர்க்குச் செய்யான்

Page 54
68 சிறுவர்
5
குடிகெடுக்கு மதுவருக்க மொருநாளுங் குடியான் கூறுமமுக் காருெருவ ரோடென்றுங் கொள்ளான் கடும்பிணிபோ லுடலழிக்குங் கடன்பட்டு மறியான் காயத்துப் பிணியறியான் கவலைசற்று மறியான்
6
வெறுத்துரையான் ஒரு ஞான்றும் வெடுவெடுப்புக்
கொள்ளான் வேலைசெய்வான் நெற்றிவரு வேர்வை நிலம் விழவே மறுத்துரையாக் கற்புடைய மனைவியொடும் மூன்று மக்களொடும் மகிழ்வினெடும் வாழ்ந்துவர லானுன்
7
காலையிலே யெழுந்திடுவான் கடவுளைக்கை தொழுவான் கடிமனையிற் செயக்கடவ கடமையெலாஞ் செய்வான் வேலையிலே முயன்றிடுவான் வேலைசெய்யும் போது மென்மதுரப் பாடல் பல விருப்பினுடன் படிப்பான்
8
இங்ங்னமோர் நாள்வீரன் மகிழ்வோடும் நாடி ஏற்றதொழில் செய்திடுங்கா லெடுத்துரைப்பான் பாடி அங்கொருவ ரோடுமியான் அழுக்காறு கொள்ளேன் அயலாரு மென்மீதி லழுக்காறு கொள்ளார்
9
கடனில்லை கவலையில்லை கடும்பிணியு மில்லை காதலுறு விருந்தினரை யாதரவு செய்வேன் உடனுக வுதவிபுரி மனைவி மக்க ளோடே ஒற்றுமையாய் வாழ்ந்திடுவே னெக்காலு முண்மை

செந்தமிழ் 69
O
இனிமையுடன் பாடியதை யயல்நின்று கேட்டான் இலங்கைநக ரரசாட்சி செய்திடுமோர் மன்னன்' நனி மகிழ்ச்சி யுடனவன் பால் நடந்தவனை விளித்து நண்பா நீ சொன்ன தொன்று நானெப்ப மாட்டேன்
11
அயலார்கள் அழுக்காறு கொள்ளார்க ளென்ரு ய் அதுமுழுதும் தவறுன்மேல் அழுக்காறு கொள்வேன் மயலாகு முளமுடையேன் மா விலங்கை நகர்க்கு மன்னவன் யான் உன்போல மனமகிழ்ச்சி யில்லேன்
12
அப்பா நீ எப்போதும் மனமகிழ்ச்சி 1 T dS அலுவல் செயு மிரகசிய மறியவுரைத் திடுவாய் இப்பூமி யரசாளும் மன்னவன்யா னெனினும் எள்ளளவும் மகிழ்ச்சியிலேன் யான் நீயா வேனே
13
தலையிருந்த பனையோலைத் தொப்பிதனைக் கழற்றிச் சற்றேயுன் சிரிப்புடனுந் தாழ்மையொடும் மொழிவான் அலையிருந்து பெருகுமிந்த மாவலியா மாறு அன்னைதந்தை யாகுமிந்தக் குடிசையென தாட்சி
14
என்னிடத்தே யன்புடையா ளென் மனைவி தானும் ஏவல் வழி நின்றிடுவா ரெனதுமக்க ளெல்லாம் அன்னவர்க்குச் சோறு தரு மென்னுடைய வேலை அடிமையில்லை அடிமையில்லை சுதந்திரனய் வாழ்வேன்

Page 55
70 சிறுவர்
15
என்றுரைத்த மொழிகேட்டு மன்னவனுஞ் சொல் வான் எனதுமுடி யுனது தலைப் பாகைப்கொப் பாமோ நன்றுனது மனமகிழ்ச்சி நான் நீயா வேனே நானுறையும் மாளிகையுன் குடிசைக்கொப் பாமோ
I 6.
இங்கொருவ னுன்மேலே எரிச்சலுரு னென்றே இனியொருபோ துஞ்சொல்லே லிறையவனி யா மாற் பொங்கு மனப் பூரணமே பொன்ருத செல்வம் போய்வருவே னென்னுரைத்து மன்னவன்போ யினனே.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' போதும் என்ற மனமே பொன்செய்யும் மனம் '

செந்தமிழ் 71
21. நூறண்டு வாழ்தல்
பெரியோர் சொன்ன சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு நடந்தால் நாங்கள் நோயில்லாமல் நூறு ஆண்டுகள் வாழலாம். இந்தப் பாடல்களில் ஒருவர் கைக் கொண்டு நடக்கத்தகுந்த சுகாதார விதிகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
விதி-ஒழுங்கு. நுவலுகின்றேன்-சொல்லுகின்றேன். கவனமாய்-கருத்தாய். இயற்கை மாரு தே வாழ நலம் கூரும்-இயற்கையோடு
பொருந்த நடந்தால் உடம்புச் சுகம் அதிகரிக்கும். பிணி-நோய். - அப்பியாசி-இடைவிடாது பயிற்சிசெய். தூய்மை-சுத்தம். நேசி-விரும்பு, கூடாநீர்-அழுக்குப் பொருள் கொண்ட நீர். கூசி-அருவருத்து. கடுத்துப் பசித்த பின்-நன்ரு கப் பசிகொண்டபின்பு. அற்றது-சீரணமானது. செற்றம்-கோபம், பகைமுைதலியன. தந்த-உணவுகளைத் தந்த, நீரைக் கருக்கி-நீரைச் சுடவைத்து. நறுநெய்-நல்ல பசு நெய். மூவகை நோய்-வாதம், பித்தம், சிலேட்டுமம் என்பன கூடியும் குறைந்தும் இருப்பதனல் வரும் நோய்கள். மது-கள். பொறி-புள்ளி.
நூருண்டு சுகமாக வாழும்-விதி
நுவலுகின் றேனதைக் கவனமாய்க் கேளும் கூறுமி யற்கைமா ருதே-வாழக்
கூரும் நலம் பிணிக் கொடுமையே ருதே.

Page 56
சிறுவர்
2 சுத்தமாங் காற்றைச் சுவாசி-மாலைச்
சுடர் வெயில் ப்டவிளை யாட்டப்பி யாசி நித்தமுந் தூய்மையை நேசி-கூடா நீரை மறந்துங் குடியாதே கூசி,
3.
வீட்டி லழுக்குவை யாதே-பகல்
வேளையில் நித்திரை விரும்பிச் செய் யாதே
வேட்டி யழுக்கா யுடாதே--சோம்பி
வீணே யிருந்து பொழுது விடாதே.
4 கடுத்துப் பசித்த பின் உண்பாய்-வெளி
கால்வயி றிருந்திட வுண்ணுதி பண்பாய் அடுத்தடுத் துண்ணுதல் அஞ்சு-சொன்ன
* அளவுக்கு மிஞ்சினல் அமுதமும் நஞ்சு ’.
5 அற்ற தறிந்துண்ணல் வேண்டும்-என்றும் ஆறு த லாகவி ருந்துண்ணல் வேண்டும் செற்றங்கொள் ளாதுண்ணல் வேண்டும்-தந்த
தெய்வத்தைப் போற்றியே யுண்டிடல் வேண்டும்.
6 நீரைக் கருக்கியுண் மகனே-நறு
நெய்யை யுருக்கியே யுண்ணுதி மகனே மோரைப் பெருக்கியுண் மகனே-பொல்லா மூவகை நோய்களு மணுகா வென் மகனே.
7 எச்சில் மறந்துமுண் ணுதே-உணவுக்
கிடையிலே தண்ணிரை யென்றுமுண் ணுதே. இச்சைப் படியுமுண் ணுதே-கால
இயல்புக்கு மாரு ன வுணவுமுண் ணுதே.

செந்தமிழ் 73
8
வெறியுள்ள மதுவருந் தாதே-பொல்லா
* விறண்டி சாராய மிவை பொருந் தாவே பொறியுள்ள புகையிலை தீதே-வீணே
புத்தி மயங்கி மிக வருந் தாதே.
9
மனச்சுத்த மாயிரு மகனே-என்றும்
வஞ்சம் பொருமை மனத்தில் வை யாதே கனத்த கடுஞ்சொற்கூ ருதே-என்றும்
கனிவான மொழியன்றிச் கட்டுரை யாதே.
IO
அன்னையைத் தந்தையைப் போற்றி-மகிழ்ந்
தன்பான மொழிகளை அனுதினஞ் சாற்றி முன்னவன் பாதங்க ளேத்தி-வந்தால்
முட்டின்றி நூருண்டு வாழலாம் நேர்த்தி.
II
எண்ணெய் முழுக்கு விடாதே-தயிர்
இரவிலே மறந்தேனுங் கையாற் ருெடாதே மண்ணிலே தீமைய டா தே-துன்பம்
வந்த பொழுதும் மகிழ்ச்சி விடாதே.
I 2
கோபஞ்செய் யாதிரு மகனே-அருள்
கூர்ந்தெவ் வுயிர்க்கு மிரங்குதி மகனே பாபஞ்செய் யாதிரு மகனே-பாரிற்
பண்புடன் நூருண்டு வாழுவாய் சுகமே.

Page 57
74. சிறுவர்
22. அறிவுரைகள்
அறிவுரைகள் என்பன நற்செயல்களின் நன்மைகளை யும் தீச்செயல்களின் தீமைகளையும் ஆராய்ந்து தெளிந்து நல்லனவற்றை வாழ்க்கையிற் கைக்கொண்டு மேம்படு தற்கு உரிய உறுதிமொழிகளாம். இந்நூலாசிரியர் ஆகிய சோமசுந்தரப்புலவர் தமது அருமைத் தந்தை யார் கதிர்காமர் தமக்கு இளமைப் பருவத்தில் அறிவு றுத்திய நீதிமொழிகளையெல்லாம் பொன்போற் பேணி, அவர் துஞ்சிய காலத்தில் அவர் நினைப்புக்குத் தந்தை யார் பதிற்றுப்பத்து ' என்னும் நூலாக்கி வெளியிட்டார் கள். அவற்றுட் கற்பித்த பத்து, ஒழுக்க முரைத்தபத்து, விதித்ததுரைத்த பத்து, விலக்கியதுரைத்த பத்து, முது மொழிப்பத்து என்னும் ஐந்து பகுதிகளும் இங்கே கூறப் படும்.
(அ) கற்பித்தபத்து கல்வியே யிருவிழி கல்வியே யிருநிதி கல்வியே துணைவன் கல்வியே தோழன் கல்வியே கற்பகம் நினைத்தது கொடுக்குமென் றையாண் டதனின் மையேடு கைத் தந் தருந்தமிழ் ஆசானைப் பொருந்தக் காட்டி அருள்விழி திறக்கத் திருநாட் கொண்டே ஒல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நங்குல முதல்வா என்றும் மறவா தேத்துகம் யாமே. (1)
கல்வியே முதுசொம் கல்வியே யின் பங் கல்வியே சிறப்புக் கல்வியே காவல் கல்வியே தனிவழிக் கருந்துணை யாமென் றைய மெடுத்துஞ் செய்ம்முறை கடவா தொல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை எம்பெரு மானே என்றும் மறவா தேத்துகம் யாமே. (2)

செந்தமிழ் 75
மன்னிய வாகட மருந்தினிற் றீராப் புன் மனக் கவலையை யெழுமையும் போக்கும் , நன்மருந் தாவது தொன்னூற் கல்வியென் றடுத்தது விற்றுக் கொடுத்து மற்றெமக் கொல்லும் வ ைக்யா லோதுவித் தருளிய நன்றியை யெமையருள் தந்தாய் ۔۔۔۔۔۔۔۔ என்றும் மறவா தேத்துகம் யாமே. . (3)
மலர்தலை யுலகுக்கு மன்னவன் இன்னுயிர் மன்னனுக் கின்னுயிர் மாசறக் கற்றேன் தன்னுர ரல்லது மன்னனுக் கின்றே மாசறக் கற்ற மேனெறி யாளர்க்கு * யாதும் ஊரே யாவருங் கேளிர் விச்சை யன்றி யெச்சமற் றிலையென அருங்கடன் கொண்டும் பெருங்கட னுற்றுதற் கொல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நம்பெறு நாதா என்றும் மறவா தேத்துகம் யாமே. (4)
உருவுந் திருவுங் குலமு மாண்மையும் மருவிய மக்க ளாயினுங் கீழே கல்வியொன் றில்லாக் காலை யன்னவர் எருக்கொடு முருக்கின் மலரே யனையரென் றிருக்கிற குடிநிலம் விற்றுந் திருக்கொள ஒல்லும் வகையால் ஒதுவித் தருளிய நன்றியை நாம்புரி தவமே என்றும் மறவா தேத்துகம் யாமே. (5)
திரிபுர மெரித்த குறுநகைக் கடவுளும் குன்ற மெறிந்த வென்றிவேன் முருகனும் முறை முறை யாய்ந்து பிழைதப நிறுவிய

Page 58
76
சிறுவர்
தகத்தியன் முதலாத் தவத்தியன் முனிவர் தொகுத்த விலக்கணத் தொல்வரம் புடையது பொய் தவிர் நாவிற் புலவர்க ளருளிய மெய்வளர் இலக்கிய விரிகட லுடையது தெய்வம் பராவிய திருமறை யுடையது இளையது பழைய திருமையுந் தருவ தமிழ்தினு மினிய தரியது பெரியது வழிவழி யழியா முதுசொமாய் வருவதென் றிரவினும் பகலினு மெடுத்துரைத் திருந்தமிழ் ஒல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நம்முயிர்க் கினியாய் என்றும் மறவா தேத்துகம் யாமே. (6)
பொன்னும் மணியும் புனை துகில் வகையும் அன்ன வல்ல வணிகல மாவன கள்வனுக் கரியது காவலுக் கெளியது அள்ள நிறைவ தரும் பயன் தருவது கல்வி யன்றிக் கலன்வே றிலையென் றல்லல் பொலிய வரும்பட ருழந்தும் ஒல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நம்முயிர்க் குயிரே என்றும் மறவா தேத்துகம் யாமே. (7)
உலகர சாளுங் கதிர்முடி மன்னவன் அரசிய லறியவு மரும்பொரு ஸ்ரீட்டவும் ஓங்கிய பொதுமொழி யாங்கில மாதலின் அதுதர மிடியிடை யறுத்துநின் ருலும் பஞ்சும் படாத பாடுபட் டொருசிறி தொல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நங்கள் நாயகனே என்றும் மறவா தேத்துகம் யாமே. (8)

செந்தமிழ் 77
கல்லா மாந்தர் முகத்திற் காண்பன புண்ணே யன்றிக் கண்ணே யவையல பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு மவர் தமக் குண்டே கைகளோ விழுகை தொழுகை யாங்கவர் கால்களோ வாடுகா லோடுகால் அவரோ மக்களுள் அந்தோ பதடிக ளா வரென் றெட்டுநா ளாயினும் பட்டினி கிடந்தும் ஒல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நாந்தொழு மிறைவா என்றும் மறவா தேத்துகம் யாமே. (9)
ஒதா நாளே தீதா நாளே கூறுமை யாண்டிற் கொண்டமை யேடு நூருண் டளவுங் கைவிட லொழிக கூடுபோம் வரையு மோதுதல் பொருளென் ருன்ருேர் கூறுவ ரரும்பெறன் மக்காள் கற்ருே மென்று முற்றுரை யாது காலைமாலை நூலையோ துமினென் ருெ ல்லும் வகையா லோதுவித் தருளிய நன்றியை நயனமா மணியே என்றும் மறவா தேத்துகம் யாமே. (10)
(ஆ) ஒழுக்கமுரைத்தபத்து அரியதி னரியது மானுட யாக்கை யாக்கையி னரியது போக்கறு மின்னுயிர் உயிரினு மரியது செயிர்தீ ரொழுக்கம் ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நன்னடை நன்னடை தானே நல்குவ கேண்மின்

Page 59
78
சிறுவர்
திருவினை யளிக்குஞ் செல்வாக் கீயும் உருவினை யுதவும் உயர் குடிப் படுத்தும் நீடிய வாயுளுங் கல்வியு நிறுத்தும் கூடிய பல்பிணி கூடா வாதலால் கண்ணினு மொழுக்கங் காமினென் றுரைத்த மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (l)
தருமனுக் கிளைய மத வலி வீமன் போரினில் விகர்னனைப் போ வெனப் புகன்ருன் வல்லிய மனைய சல்லிய மன்னவன் மருகரை நீங்கிப் பிறர் வய மானுன் உரிய தம்பியர் ஐவரை யொருவிப் பரிதிதன் மைந்தன் துரியனை யடைந்தான் அடல்கெழு வைவேல் உடலுறப் புதையினும் வால் குழைத் தனுங்கி வளர்த்தவர்ச் சீரு தடிப்புறம் நக்கு ஞமலியு மாதலின் புரிந்த நன்றி போற்றுதல் கடனெனும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (2)
விறலுடைத் தம்பியர் உறுதுணை யிருக்க மறமுடை மன்னன் மனதுகில் உரியவும் பிறிதொரு வேந்தன் நுதல்வடுப் புரியவும் அறமுத லருளிய திருமகன் வெகுளான் முகமலர்ந் திருந்தனன் மிகை பொறுத் தாதலின் பொறுமை நன்றே பொறுமை நன்றே சிறுமை வரினும் பொறுமை நன்றே வலியவர் மாட்டுச் சீறினுஞ் சீறுக எளியவர் முன்னே ஆறுதல் கடனெனும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (3)

செந்தமிழ் 79
புரிசடை முனிவன் முடிமிசை யுதைக்க மருமலர்க் கரத்தாற் றிருவடி நீவி ஐயநின் றிருவடி நையுமென் னுரைத்தான் மலிநீ ரயோத்தி மன்னவ னதா அன்று படியுயர் கண்ணனைக் கொடியவை கூறித் தலையிழந் தனனே சிசுபால ஞதலின் இன்னர் தம்மொடு மினியவை கூறுக ஒன்னர் தம்மொடுங் கொடுமொழி யொழிகெனும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (4)
பொன்னிநன் னுட்டு மன்னவர் பெருமான் குறுநடைப் புறவின் தபுதிகண் டஞ்சி உடலறுத் தீந்து முயிரோம் பினனே தண்ணீர் நுண்ணுயிர் சாமென வஞ்சி வடித்துக் குடித்த மன்னனு முளனே தும்பியின் வாலிற் தூண்டில் முட் கொளுவி முன்பொரு முனிவன் துன்படைந் தனனே எத்திறத் தானு மெல்வுயிர்க் கேனுந் தன்னுயிர் கொடுத்தும் நன்னலம் புரிகெனும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (5)
வளநக ரிழந்து புறநகர் புகுந்து நறைமலர்க் குழலியொடு சிறுவன விற்றும் அடுபுலைக் காளாய்ச் சுடலை யோம்பியும் பெரும் படர் பலபல வுழந்துந் திருந்திய வாய்மை நிறுத்தினன் மன்னரிச் சந்திரன் வாய்மை மறுத்து மந்திரி யொருவன் தன்ருெழி லிழந்து கள்வன யினனே கள்வ னெருவன் வாய்மையைப் பேணித்

Page 60
80
சிறுவர்
தன்ருெழில் விட்டு மந்திரி யாயினன் வாய்மை யென்பது தீமை யிலாத தூய்மை வாசகஞ் சொல்லுத லாமெனும் மந்திர மொழிகளை மறவேம்
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (6)
முடங்கிய மயிர்க்காற் சிலம்பிவாய் நூற்ற நூலினும் நுண்ணிய விழையே யாயினும் நூறுபல வடுக்கி வளம்பெற முறுக்கின் வீறுபொலி யானையு மறுக்ககில் லாதே ஓரிழை யறுந்து செறிவுவே ருயின் ஆற்ருச் சிறுவரு மறுத்தெறி குவரே; நாற்பெருந் தூணிற் கோலிய நெடுமனை ஒருதூண் பாறில் வீழ்ந்துபாழ் படுமே; ஆதலின், மக்க ளனைவரும் மனத்தொற் றுமையாய் வாழ்வதே மேலாம் வாழ்வென வுரைக்கும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (7)
கடலிற் பெரிய்து யாதது பொறுமை மலையிற் பெரியது யாதஃ தடக்கம் புவியிற் பெரியது யாதஃ துதவி உயிரிற் பெரியது யாதஃ தொழுக்கம் ஒழுக்கிற் பெரியது யாதது மானம் மானம் போக வருந்தொழில் புரிநரை ஈனந் தொடரும் எழுமையு மென்னும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (8)
நகையை யழிக்கும் உவகையைக் கொல்லும் பகையை வித்தும் பவத்தை விளைக்கும் நட்பினைப் பிரிக்கும் ஒட்ப மகற்றும் தன்னையே கொல்லுஞ் சினத்தினுங் கொடியது

செந்தமிழ் 81
பின்னை யில்லை யுலகினென் றுரைக்கும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (9)
நல்ல தன் நலனுந் தீயதன் நீமையும் இல்லையென் றுரைக்கும் விடருந் தூர்த்தரும் கடவு னில்லையென் றுரை செயு மடவரும் தீமை பயிற்றுதல் உள்ளி டாக ஆமாப் போலக் கேண்மை கொள் ஞநரும் கட்கா முற்ருேர் கடுஞ்சூ தாடுநர் உட்கார் பதைக்க வுயிர்க்கொலை சூழ்நரும் ஆகிய வித்திறத் தறிவிலார் கோட்டியைப் பாம்பென வஞ்சி மேம்படு குணத்துப் பெரியோர் தம்மை யுரிமையிற் பேணிக் குற்றங் களைந்து குணமேம் படுதல் நற்றவ ருலகு நல்குமென் றுரைக்கும் மந்திர மொழிகளை மறவேம் எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (10)
(இ) விதித்ததுரைத்தபத்து செஞ்சுடர் தோன்றுமுன் கண்படை நீங்கித் தந்தையுந் தாயுந் தொழுதுகொண் டெழிஇ இருவகை யியக்கமும் மறவாது கழிஇ ஆலின் விழுதே பூலின் கொம்பே வேலின் கோலே வேம்பின் சிறுகழி நாயுரி வேர்கரி சாலையில் வொன்முல் இருந்துபற் றுலக்கித் திருந்த வாய் பூசிச்

Page 61
82,
சிறுவர்
சிவசிவ வென்று திருநீறணிந்து பவவினை மாற்றும் பழமறை மந்திரச் செந்தமிழ்ப் பாவாற் சிவனடி தொழுது தத்தந் தொழில் வயிற் சாருதல் கடனென வெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (1)
அன்னையுந் தந்தையு மரசனு மாசானும் முன்னவன் ருனும் முனிவனும் புலவனும் தேவரைப் போலச் சிறப்புகள் புரிந்து பூவடி போற்றுதற் குரியவ ராதலின் அன்னவர் தங்களை அன்பொடு வணங்கவென் றெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (2)
ஐம்பெரும் பூதத் தாகிய விவ்வுடல் காய்பசி கடுகச் சாயு மாதலின் உண்டி மற்றதற் குயிர் மருந் தென்ப நீரினி லா டி யோரிரண் டுடுத்து விருந்தினர் மூத்தோர் சிறுவருக் கருத்தித் தந்த தெய்வத்தின் தாண் மலர் தொழுது சிரியா துரையா தொருமையி னிருந்தாங் குப்பின் றமைந்த புற்கை யாயினும் அற்புட னுண்ப தான்ருேர் வழக்கென் றெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (3)
பாகநன் கறிந்து சுவைபெற வட்ட தூயநல் லுணவு மிசைந்திடு காலை குணதிசை நோக்குதல் கொள்கை யென் றுரைத்தார் வாயினே ருண்டலும் வழக்கா றென்ப கைப்பன வெல்லாங் கடைமுறை யாக இனிப்பன முதலாய் இடையிடை யாக

செந்தமிழ் 83
உண்டுவாய் பூசி உறுபுனல் துடைத்து முக்காற் குடித்து முகனமர்ந் திருந்து சிவசிவ வென்று திருநீ றிடுதல் அவநெறி யகன்ற வான்றேர் முறையென் றெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (4)
தாயினு நிறைந்த நேயமொ டுயிர்களை இரவினும் பகலினும் இமையாது காக்கும் ஒரு பெருங் கடவுள் திருவந்த சேவடி சிந்தையி னினைந்து செங்கையிற் ருெழுது வடக்குங் கோணமுந் தலை செயல் நீக்கி மூடித் துயிலுதல் முந்தையோர் முறையென எந்தை நீ அருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (5)
ஒன்ன னயினுந் தன் மனை புகுந்தால் மலர்முகங் காட்டி மகிழ்வொடு நோக்கிச் சிறுநகை புரிந்து தேமொழி கூறித் தவிசி னிருத்தித் தாள்கழு நீர் தந் துண்டி யுதவி யுபசரித் திடுதல் பண்டைநாட் பெரியோர் பாரித்த பண் பென எந்தை நீ அருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (6)
ஆடை யொதுக்கி அடங்கிமுன் னின்று வணங்கி யானும் வாய்புதைத் தானும் பெரியவர் முன்னே பேசுதல் முறையென் றெந்தை நீ அருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (7)

Page 62
84
சிறுவர்
அந்தணர் துறந்தோர் அரும்பிணி யாளர் பைந்தொடி மகளிர் பாலகர் சுமப்போர் பூமலி வேந்தர் நாமலி பாவலர் ஆநிரை இவர்க்குப் போம்வழி விலகி நிறைநீர்க் கும்பமும் நெடுநிலை யரசும் தேவர் குலமும் வலங்கொடு சேறல் தூநெறி யறிந்தோர் தொன்மர பாமென் றெந்தை நீ அருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (8)
மன்னிய வுடம்பும் மருவிய தாரமும் தன்னிடைப் பிறர்தரு மடைக்கலப் பொருளும் இன்னுயிர்க் காப்புக் கெண்ணிய பொருளும் பொன்னைப் போலப் போற்றுதல் கடனென் றெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின் ருேமே. (9)
எங்கும் நிறைந்த விறைவனை யுன்னி அங்கொரு பச்சிலை அன்பினி லிடுக உண்ணுங் காலை ஒரு பிடி அன்னம் மன்னுயிர் மகிழ மறவா தீக
ஆவினுக் கொரு பிடி வாயுறை யீக யாவர் தம்மொடும் இனியவை பேசுக உழப்பும் பொருளு மின்றி வளப்பட ஏவரும் புரியும் நல்லற மிவையென் றெந்தை நீ யருளிய விதிகள் புந்தியிற் கொண்டு போற்றுகின்ருேமே. (10)

செந்தமிழ் 85
(ஈ) விலக்கியதுரைத்தபத்து
பொருந்திய விசும்பிற் புலவருங் காணு மருந்தே யாயினும் கூழே யாயினும் தெய்வந் தொழாது சிறிதுமுண் ணற்க விருந்து புறத்ததாய்த் தானுணல் விடுக நின்றும் நடந்தும் கிடந்துமுண் ணற்க சுடர்விளக் கின்றி இரவிலுண் ணற்க அந்தியில் உணவும் அளவறு முண்டியும் சிந்தையன் பில்லார் தந்திடு மமுதமும் நஞ்சினுங் கொடியவென் றஞ்சுக விடுகவென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (1)
இயக்கம் இரண்டும் மயக் கறக் கழிப்புழி நண்பகற் காலை தெற்குநோக் கற்க பின்புகு மிரவில் வடக்குநோக் கற்க நெல்விளை வயலினும் நிறைபசும் புல்லினும் நல்ல நீர் நிலையினும் நடந்திடு வழியினும் குளிர்தரு நிழலினும் கோயிலா னிலையினும் இருபுல னியக்கஞ் சோர்வது நீக்கவென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (2)
இருவர் நின்றுழி இடைபோ கற்க ஒருவர் எச்சில் தானுண் ணற்க கொலை தலை வந்த புலையற் காயினும் தன்னுடை மிச்சில் மறந்துமீ யற்க உரலில் அம்மியில் மருவுத லொழிக மதியார் வாயில் மிதியா தொழிக உண்டி யின்றி யுடம்புநனி சாயினும்

Page 63
86
சிறுவர்
உண்ணு தவர்பா லுண்ணுத லொழிக ஈயார் தம்முழை யிரத்தல் ஒழிக வாயாற் சுடரினை அவித்தல் ஒழிக கீழோர் தம்மொடும் வெய்துரை ஒழிகவென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (3)
இனியவ ரின்றித் தனிவழி செலற்க மரநிழல் இரவினில் மருவுத லொழிக பலர்நடு வாக வுடையுத றற்க முற்போ குநரைப் பிற்கூ வற்க எங்குறு வீரென் றங்குசா வற்க பெரியோர் முன்னே வெடிபட நகையேல் சும்மா விருந்து துரும்புகிள் ளற்க ஒரு நொடி யேனுந் தொழிலறக் கழியேல் இன்பென நினைந்து நன்பக லுறங்கலென் றைய நீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (4)
பெரியோர் நெஞ்சகம் பேதுற வுரையேல் சிறியோர் கேண்மை கனவினு நினையேல் கள்ளு மூனுங். கொள்ளுதல் குறியேல் எள்ளி யுரையேல் ஈவது விலக்கேல் தன்னுடை நாளுந் தானுணும் மருந்தும் மன்னிய குருவருள் மந்திர மொழியும் செய்திடு தருமமுஞ் சிறுமையும் பெருமையும் பிறர்செவி நுழையக் கூறுதல் பிழையென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே (5)
சீரியர் முன்னே காறியுமி ழற்க வீரியம் முன்னே விளம்புத லொழிக அற்ற பின் னன்றி அருந்துத லொழிக கற்றவர் தம்மொடு கடும்பகை யொழிக

செந்தமிழ் 87
பெற்றவர் குறைபுறம் பேசுத லொழிக நீர்பழி யற்க நிழன் மிதி யற்க ஊர்முனி புன்ருெழில் உஞற்றுதல் ஒழிகவென் றைய நீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (6)
ஒருவர் தந்த உணவினைப் பழியேல் மருவார் இல்லந் தனிமையிற் போகேல் பகைமை வரினும் பழநட் பிகழேல் வறுமை வரினும் மான மிழவேல் கள்ளுஞ் சூதும் காமுகர் கோட்டியும் கறுத்த முனையும் வெறுத்தோ ரில்லமும் பொறுத்த கேள்விப் புலவோர் புகா அரென் றைய நீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (7)
இருதிசைத் தோன்றும் பருதியின் விரிசுடர் மின்னெளி வீழ்மின் தன்னுெளி வேசியர் பொன்னெளிர் மேனி புலன்கழி தொழிலோர் இன்னவர் தம்மை யென்றுநோக் கற்க தன்னுெளி கெடுவது சரதமே யாமென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (8)
சான்ருேர் கூடிய பேரவைக் கண்ணே வேண்டா கூறேல் மிகைபடக் கூறேல் ஒன்றுடுத் தேகேல் உயர்ந்துழிப் பொருந்தேல் நின்றுதலை சொறியேல் நிலம்விரற் கீறேல் வாய்புதைத் தன்றி யாவித்தல் செய்யேல் பந்தி வஞ்சனை புரியேல் தன்ருெழில் ஆக்கமுற் றுபூழியும் நீக்குத லொழிகவென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (9)

Page 64
88:
சிறுவர்
காலினிற் காலைத் தேய்திட லொழிக கண்ணிடும் எச்சில் கண்ணிட லொழிக மேலிருந் துண்ணுதல் சாலவு மொழிக விகிர்தம் புரிதல் பயிலாது விடுக தன்னை வியந்து சாற்றுத லொழிக முன்னேர் உண்ண முன்னுணல் ஒழிக கைவிரல் சுட்டிக் கடுத்துரை யற்க பொய்ம்மொழி மன்றிற் புகலா தொழிகவென் றையநீ சொல்லுமல் லவைகள் உய்வுற வகங்கொண் டோம்புகின் ருேமே. (10)
(உ) முதுமொழிப்பத்து தான் தர வாரா விருவினை யில்லை இடுக்கண் வருங்கால் நடுக்கின்றி நகுக மலையே வரினுந் தலையே சுமக்க ஐய மெடுத் துஞ் செய்வன செய்க பட்டினி யிருந்துங் கடன்பட லொழிக தன்னுயிர் போல மன்னுயி ரோம்புக பெருமை சிறுமை யுரையி னறிக தீமை மறக்க வாய்மை நிறுத்த வென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே. (1) வட்டிப் பெருங்கடன் பட்டவர் வாழ்க்கையும் கற்றது போற்ரு மாணவன் கல்வியும் இடைமகன் கண்ட பொதுநிலை மரமும் கொடைசிறி தில்லார் பெறுநிதிக் குவையும் மடிசிறி திலார்க்கு வந்த வறுமையும் இறையாக் கேணியும் களை யாப் பழனமும் மேனிலை யுருது தானிலை சுருங்கி நாடொறும் நாடொறுங் கேடுற வழியுமென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதித்து போற்றுகின் ருேமே. (2):

செந்தமிழ் 89
ஈசற் கில்லை யாதியு மந்தமும் ஆசைக் கில்லை அளவும் முடிவும் இளமைக் கில்லை வளமுற நிற்றல் முதுமைக் கில்லை பழகிய வின்பம் குடியர்க் கில்லை குலமு மொழுக்கமும் மிடியர்க் கில்லை வேண்டுவ நுகர்தல் கற்றவர்க் கில்லை கவலை யவலம் அற்றவர்க் கில்லை யாக்கமுங் கேடும் கொலைஞர்க் கில்லை யருளு மறனும் புலைஞர்க் கில்லை குலந்தரு மேன்மையென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே. (3)
எடுக்க எடுக்க இருநிதி குறையும் கொடுக்கக் கொடுக்கக் கல்வி நிறையும் கற்கக் கற்கக் கழிமட மஃகும் சுடச்சுடச் செம்பொன் சுடர்விட் டொளிரும் வரவர விடுக்கண் மனத்திடம் வளரும் காய்ச்சக் காய்ச்சப் பசும்பால் சுவைக்கும் பழகப் பழகப் பாலும் புளிக்கும் புளிக்கப் புளிக்கப் பொருட்பற் றழியும் பற்றறப் பற்றறப் பழம் பிறப் பகலும் தேடத் தேடத் தெய்வம் வருமென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே. (4)
தந்தை வாய் மொழியே மந்திர மாகும் தாய்திரு வடியே கோயி லாகும் தேசிகன் மொழியே திருமறை யாகும் மூத்தோர் சொல்லே யமுத மாகும் அறிவுடை யவரே யருந்துணை யாவர்

Page 65
90
சிறுவர்
சுற்றத் தவரே. தோள்வலி யாவர் தரும மொன்றே தலைகாப் பாகும் கரும மொன்றே கட்டளைக் கல்லென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதித்து போற்றுகின் ருேமே. (5)
கண்ணுக் கணிகலங் கருணை நோக்கம் நாவுக் கணிகலம் வாய்மை கூறுதல் நெஞ்சுக் கணிகலம் வஞ்சக மின்மை கரத்துக் கணிகலம் இரப்பவர்க் கீதல் காலுக் கணிகலம் ஆலயஞ் சூழ்தல் காதுக் கணிகலந் தீதில கேட்டல் சொல்லுக் கணிகலஞ் சோர்வடை யாமை இல்லுக் கணிகலம் இயல்புடை மனைவியென் றன்பா லருண்முது மொழிகள்
பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே. (6)
நீரினிற் குமிழி சீரிய விளமை
ஆற்றினிற் பெருக்கே தோற்றிய செல்வம் வானிடை மின்னே ஊனிடைத் தொடர்பு தந்தை தாயாதி சந்தையிற் கூட்டம் ஒதிடு கனவே பூதல வாழ்க்கை - ஆனை துரத்தக் கூவலுள் விழுவோன் கொடியினிற் றுரங்க வடியினி லைந்தலைக் கடுவிட வரவு படமெடுத் தாட நலிபசுங் கொடியை எலியிரண் டறுக்க ஆருயிர்க் கஞ்சி யருந்துய ருழப்போன் மேனிலைத் தருவிற் ருெடுத்துடைந் தொழுகுந் தேனெரு திவலை நாவினிற் சுவைத்தாங் கெய்திய வாழ்க்கையிற் செய்வினை யின்பமென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்ருேமே. (7)

செந்தமிழ் 91
கொடிது கொடிது வறுமை கொடிது மாணு வறுமை நாணலங் கொல்லும் நாணல மின்மை யாணல மழிக்கும் ஆணல மின்மை வீண்பழி சேர்க்கும் சேரும் வீண்பழி நேர்நிலை கெடுக்கும் நேர்நிலை நீங்க வார ஞர் பிறக்கும் ஆரஞர் தானே பேரறி வகற்றும் அறிவுபுறம் போக அழிவு முன் னெய்தும் கொடிது கொடிது வறுமை கொடிதென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே. (8)
நண்பனி னருமை துன்பினி லறிக வீரனி னருமை போரினி லறிக அப்பணி னருமை யிறந்துழி யறிக உப்பின தருமை குறைந்துழி யறிக மனைவியி னருமை வறுமையி லறிக நிழலின தருமை வெயிலினி லறிக குழவியி னருமை முதுமையி லறிக இறையவ னருமை வினை வயி னறிக கிளைஞர தருமை கேட்டினி லறிகவென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்று கின்ருேமே (9)
பெருநீர் நிலையிற் சிறுகருங் காக்கை முக்காற் குளிக்கினுங் கொக்கா காதே படுகூன் நிமிரப் பல காற் கட்டினும் சுடுகுரற் சுணங்கன் வானிமி ராதே நானத்து வித்திப் புழுகுநீர் பாய்ச்சினும் ஆன நறுமணம் உள்ளிகம ழாதே அமுதுண வருத்திப் பானிர் பருக்கினும்

Page 66
92
சிறுவர்
கடுவிட மன்றி யரவுமி ழாதே உப்பொடு பிற சுவை பெய்த ட் டாலும் அப்பேய்ச் சுரைக்காய் கைப்பொழி யாதே மன்னிய நூல்பல கற்பினுங் கயவர் தம்மியல் பாகிய குண மொழி யாரென் றன்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின் ருேமே (10)

செந்தமிழ் 9.3
23. நட்பின் பெருமை
புலவரவர்கள் செய்த உயிரிளங்குமரன் என்னும் அரிய செந்தமிழ்நாடக நூலிலிருந்து (அ) நட்பின் பெருமை (ஆ) பெண்கள் பந்துபயிலும் கந்துகவரிப் பாடல் (இ) பூஞ்சோலை வருணனை என்னும் மூன்று பாடல்களும் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தண்ணென்று குளிர்ந்து செவிக்கின் பந்தரு மோசையழ கும் செஞ்சொல் நடையழகும் பொருளழகும் நிறைந்து மிளிர்கின்றன.
மண்ணுல கத்தின் மாசறு மனமுடை அன்பனின் பெருமை யறைகுதற் கெளிதோ ! அகநக நட்ட வவனியல் கூறிற் குறிப்பினில் வேண்டுவ நெறிப்பட வுதவி ஆதரித் தணைத்தலின் அன்னையே போன்றும் மிகுதிக் கண்ணே மேற்சென் றிடித்துத் தகுதி கூறலிற் றந்தையே போன்றும் உடன யுறைதலின் உடன்பிறப் பொத்தும் இன்பந் தருதலின் ஏந்திழை போன்றும் ஏவிய புரிதலில் இளஞ்சிருர் போன்றும் தீநெறி விலக்கி நன்னெறி யுய்த்தலில் மேவிய விருவிழி மணியே போன்றும் துணையா யிருத்தலிற் ருேளிணை போன்றும் அருந்தொழில் புரிய வருகுநின் முற்றலில் விரும்பிய செங்கைப் பெருவிரல் போன்றும் அறிவு கொளுத்தலி லரு நூல் போன்றும் சென்ற விடமெலாம் சிறப்புத் தருதலிற் கன்றிய பல துறைக் கல்வி போன்றும்

Page 67
94
சிறுவர்
பயன்கோ டாமையின் வியன் முகில் போன்றும் இன்பினுந் துன்பினும் என்னியல் காட்டலிற் பன்னிய பளிங்கின் பான்மை போன்றும் இன்றியமை யாமையி னின்னுயிர் போன்றும் என்னினை வறிதலி னிறையவன் போன்றும் மன்னிய நண்பனை வாய்ப்புறப் பெற்றேர் எய்தா வொண்பொரு விலையெனப் பொய்யா நாவினர் புகன்றி.சி னேரே
உயிரிளங்குமரன் நாடகம்

செந்தமிழ் 95
24. பந்தடித்தல் (கந்துகவரி)
I
வன்ன மயில்கள் நடனமாட வண்டுகீதம் பாடவே மலர்கள் குறிய முறுவல் புரிய வந்து பந் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்து பந் தடித்துமே மதலை மாலை மார்பனுாழி வாழியென் றடித்துமே
2 மன்னுதுடிகொளிடைகடுவள வன சமுகைகள் நெகிழவே வடிகொள் நீல விழிகள் புரள வந்து பந் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்து பந் தடித்துமே
மதலைமாலை மார்பனுரழி வாழியென் றடித்துமே
3
மன்னிவந்து வந்து பந் துயர்ந்திழிந்து கைப்பட வலமுமிடமு மாறியோடி வரிகொள்பந் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்து பந் தடித்துமே மதலைமாலை மார்பனூழி வாழியென் றடித்துமே
4 வன்னவளைகள் குமுறவளக மவிழமணிக ளுதிரவே மதியநுதலில் வியர்வை யொழுக வந்து பந் தடித்து1ே2 மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்து பந் தடித்துமே மதலைமாலை மார்பனுாழி வாழியென் றடித்துமே
உயிரிளங்குமரன் நாடகம்
4027- IF

Page 68
96
சிறுவர்
25. பூஞ்சோலை
உலகந் துதிக்க வலனேர்பு திரிதரும் பரிதியஞ் செல்வன் விரிசுடர்க் கஞ்சி இருள்குடி யிருந்தது திருவளர் பொழிலே ! பசுந்தழை யிடையே பன்மல ரீட்டம் விசும்பிடைத் தோன்று மிந்திர வில்லோ ! மாட்சிசே ரியற்கை வளந்தரு மற்புதக் காட்சியென் கண்ணைக் கவரா நின்றது ; செம்மல ரிடையே தேனின மிசைத்தல் அம்மவோ ! செவிகட் கமுதினை யூற்றும் தேக்கமழ் மலரிற் செறிந்திடு விரையென் மூக்கி னுணர்ச்சி முழுவது உங் கவரும் சந்தனப் பொதியிற் றமிழுடன் பிறந்த மந்தமா ருதமும் வந்துவந் தெனது மெய்யினை வருடி வியர்ப்பினை யொழிக்கும் செம்பொற் றிரள் போற் கொம்பினிற் றுரங்குஞ் செழுங்கனி நாவிற் றித்திப் பொழுக்கும் என்ன பேரழகு 1 என்ன வின்னிசை ! என்ன நறுமணம் ! என்ன குளிர்ச்சி ! கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறி யைந்துங் கொண்டிடு மிப்பொழில் குல மட மகளோ அதோ பார் ; இலகுபல் லவங்கள் அலகினிற் கோதிப் பூங்குயி லீட்டந் தேங்கிசை பாடக் காவிக், கருங்கட் டூவியந் தோகைகள் நாடக மாதரின் ஆடுதல் காணுஉக் கொன்றைபொன் சொரியுங் காட்சி
என்று மிறும் பூ தீந்திடு மன்றே.
உயிரிளங்குமரன் நாடகம்

செந்தமிழ் 97
26. பஞ்சக்கூழ்
கி.பி. 1920-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலே நிகழ்ந்த பஞ்சத்தில் ஒரு குடும்பம் வறுமையால் உண்ட கூழுணவைப்பற்றிக் கூறுவது இது.
இடுமுள் வேலி நெடுமரக் கவர்சினை துளிதரு கொண்மூக் கவியா தொளிதரு நீணிற விசும்பின் மீனினங் கடுப்பப் பாசடை பொதுளி வெண்பூ மலர்ந்து காரொடு கலித்த சீர்கெழு முசுண்டை பலித்தக ரோம்புநர் வலித்தனர் குறைப்ப நீடிய பனிப்பகற் கோடையின் வாடிச் சித்திரைத் திங்கள் தென்றன்முன் றலைஇய சிறுமழை நாளா லரும்பி யிரை தேர் அரிமயி ராக்கைச் சிறுபுழு மேய்தளிர் கண்ணறை போகிய தண்ணடை யுடனே கொய்தொறுா உங் குறைந்து கண்டொறு நகைத்த குப்பைக் கீரைக் குறுமுறி கூட்டி நெறிதலை கொள்ளா வுறிதலைச் சமணர் பறிதலை போல முறிதலைப் பொருந்தி ஊர்ப்பொது நின்ற பரூஉத்தாண் முருங்கை அணிமையிற் சினைத்த மென்றளி ருரீஇக் குறும் பல கொய்து நறும்புனல் பெய்து தெள்ளிய தவிடு மிடித்த நொய்யுமிட் டொப்பி லறுசுவை யுப்பொன் றுடனய் அகல் வாய்க் கரும்புறக் குண்டக் குழிசியி னைந்துவிட் டட்ட களிக்கூழ் முந்துறக் கடும்பசி கடுகலின் நடுங்கு துய ரெய்திக் குழிந்த கண்ண ரெக்கிய வகட்டினர்

Page 69
98
சிறுவர்
அன்புடை யாயைச் சூழுபு கண்பிசைந் தழுஉ மக்கள் சிறுபுறந் தைவந் தரு குவைத் தருத்தி யிருகண் கலுழக் கண்டு தேற்றிய மனை மொழி கொண்டு பழவினைப் பயனை யுன்ன விழுமிய வமு தின் மிசைந்தன னவனே.

செந்தமிழ் 99
27. வாழையும் புலவனும்
வாழையும் புலவனும் என்னும் இப்பாடலில் நெஞ்சு வந்தீதலின் சிறப்பும், ஈ யாதார் இழிவும், அறனல்லா வழிப்படும் பொருள் ஆகா தென்பதும் ஆகிய பழந்தமிழ்
மக்களின் பண்புகள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.
(பொழுதுவிடிதல்)
ஆர்கலி வளைஇய பாரகம் போர்த்த கூரிருள் கழிந்தது ; கோழிகள் கூவின : கடவுளர் நிலைதொறும் படுமணி இரட்டின : பூங்குயில் கூவின ; புட் குல மார்த்தன ; வானக வாவி மீனலர் கூம்பின : மண்ணக வாவி கண்ணலர் விழித்தன ; கண்படை கழன்று மன்பதை யெழுந்தது ;
குடகடற் குளித்துக் குணகட லுதித்த காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி நீல வானிடை ஒரு பனை நிமிர்ந்தனன் ;
(புலவன் துயிலெழுதல்) வேலையங் கதனிலோர் வீட்டினின் மெல்லியற் சேலயில் நெடுங்கட் சேயிழை நல்லாள் பரிவொடு மெழுப்பிய குரலொடு மெழுந்தே
(புலவன் செல்வரை நாடுதல்) கான்முகங் கழுவிக் கடவுளைக் கைதொழு திரவு விடியினும் விடியா திர வெனும் பருவர லுழந்த பாவல ஞெருவன் புன்பத மூறிய மென் புனன் மாந்தி ஊசி துன்னிய துரசொன் றுடுத்துத்

Page 70
OO
சிறுவர்
தந்தையின் பின்னர்த் தம்புடை மரீஇய இந்திரப் பழங்குடை யிடுக்கின னெழுந்து புள்ளும் பொழுதும் பொருந்தக் கொளாது செழுநிதி படைத்த செல்வரைத் தேடிப் பழு மர நாடும் பறவையிற் படர்வோன்
(செல்வன் கூற்று) இன்றல நாளை யெட்டுநா னின்னும் சென்றுவா வென்று செல்வர் செலுத்திடப்
(புலவன் துயர்) பழவினைப் பயனுக் குளமிக நொந்து பச்சைப் புரவிப் பல்கதிர்ச் செல்வன் உச்சித் திரும்பிப் பச்சிமம் நோக்கும் அளவது காறும் வழிவழி யியங்கிக் கானடை தளர வாயினீர் புலர மெய்யினிர் சிந்தப் பையெனப் பையென வாடிய முகத் தொடும் ஊடிய மனத்தொடும் உண்ணிர் வேட்கை உந்தலின் ஆங்கோர் தெண்ணிர்க் கூவற் சேர்ந்தற லுண்டு பட்ட குடியே படுமஃ தாஅன்று கெட்ட குடியே கெடுமெனக் கூறி நெட்டுயிர்ப் பெறிந்து நிழல் புகுந் தியங்கும் வழியிளைப் பொழிய மகிழ்ந்தன னிருந்துழி
(வாழைக்கனி வீழ்தல்) மானுர் தொடையென மற்றவ ணின்ற தேனர் கத லிச் செழும்பழ மூழ்த்து வண்டமிழ்ப் புலவன் மடிமிசைச் சிலவிழ்க் கண்டென வினிக்குங் கனியெடுத் தருந்தி வெம்பசி தணிதலும் மேன்முக நோக்கி

செந்தமிழ் I 0.
யடுக்குச் சுடரைக் கிழக்கிட் டன்ன பழுக்குலை தூக்கி நெறிப்பட நின்ரு ய் ! வாழிநீ வாழி வானவர் மகளென
(புலவன் தன்னை அறிமுகப்படுத்தல்) யாரை கொல் யாதுநின் வரவென வாழ்த்துதற் கேது வென்றலும் யானெரு புலவன் வறுமை துரப்ப வந்தன னிரு மையும் பெருமை நிறுத்தும் வள்ளியோர் போலக் குறிப்பினிற் கொடுத்துக் கொடும்பசி களைந்தனை மனமது குளிர வாழ்த்தின னினையெனக்
(மக்களுக்கிதல் கொடிதுஎனல்) கோளரைக் கத லி கூறிடும் புலவ ! ஈகையை வியந்தனை யீதொன்று கேண் மதி ஒகையி னிலையுங் கனிகளு முதவுமென் முளையுந் தறித்துத் தலையையு மரியும் ஏழை மக்களுக் கீதலோ கொடி தென
(ஈதல் நன்றெனல்) ஈத லிசைபட வாழ்த லிரண்டே ஊதிய முயிர்க்கென வோ தினர் புலவரும் என் பொரு முனிவனும் ஈந்திசை நிறுவினன் ; தன்பெரு முடலைப் புறவினுக் கருளி அன்பினை விளக்கிய அரசனு முளனே : வெட்டுநர்த் தாங்கும் வியன் பெரு நிலமே ; கொல்லுநர்க் கருநிழல் கொடுப்பன மரமே ; தன்னுயிர் விடுத்து மன்னுயிர் ஒம்புதல் மன்னிய சான்ருேர் மரபென மொழிப ;

Page 71
O2
சிறுவர்
(ஈயாரைப் பதரெனல்) முன்னைநல் வினையாற் றுன்னிய பொருளை ஈந்துத வாத மாந்தரு முளரே ; நச்சு மாமரம் நடுவூர்ப் பழுத் தென வச்சை மாக்கள் மக்களுட் பதரே ; சற்று முணுதுடல் நெற்றென வுல ரக் குப்பைக் குறுந்துணி மெய்ப்பட வுடுத்துக் கைப்பொருள் புதைக்குங் கயவரும் பதரே
(இரப்போரைப் பதர்எனல்) அவரினும் ப்தரே அவர் வயி னிரப்போர்
(வாழைக்கு நன்றிகூறுதல்)
ஈதல் நன்றே ஈதல் நன்றே சாதல் வரினும் ஈதல் நன்றே ஆறறி வுடைய வச்சையர் தம் மினும் ஒரறி வுடைய நீசிறந் தனையே ; எய்யா நல்லிசை யிருந்தமிழ்ப் புலவர் பொய்யா நா விற் பொருந்தினை வாழியுன் தாளைத் தறித்துத் தலையை முறிப்பினும்
வழிவழி தழைத்த துன் மரபே ; கொழிதமிழ்ப்
பாவினிற் பரந்த துன் புகழே ; மூவரில் ஒருவ னென் றேத்திய துலகே நல மிகும்
உண்டி கொடுத் தென் னுயிர் கொடுத் தனையால்
நன்றி மறவேன் நானென் றுரைத்தலும்
(வாழை புலவனுக்குப் புதைபொருள் காட்டல்)
மற்றது கேட்ட வாழை முகங் கோட்டி உற்றதொன் றுரைப்ப னுவனுளா னெருவன்

செந்தமிழ் 1 O3
உண்ணு னுடாஅ னெருவருக் கீயான் எண்ணி நல்லற மிம்மியும் புரியான் பெரும் பொரு விருக்கவும் பிச்சைபுக் கீட்டி அரும்பொருள் கலத்தினிற் செம்மி யிரும்புவி யிட்டன Eறந்தன னிடமுமிஃ தீங்குநீ தொட்டனை யெடுத்துத் துயர்களை யென்றலும்
(புலவன் வஞ்சகப்பொருள் தொடேனென்று ஏகல்)
நெஞ்சுவந் தீயு நிறைபொரு ளன்றி வஞ்சகப் பொருள் தொட மாட்டே னெஞ்சகம் வருந்தலை வாழியென் ருேதித் திருந்திய தமிழ்வலோன் சென்றன னெறியே,

Page 72
I 04 சிறுவர்
28. ,
பூ வென்பது, முருகு என்னும் சொற்குத் தேனே யழகே யிளமை நாற்றம் இனிமை கடவுட்டன்மை முதலாய பொருள்கள் இருத்தலினல், அப்பொருண்மை களுக்குப் பெரிதும் இசைவுடைய கடவுளுக்குப் பெயராயமைந்த திறத்தை வியந்து பாராட்டுதல் தலைக்கீடாகப் பூவுக்கும் புலவனுக்கும் உரையாடல் நெறியிற் புனைந்துரைக்கப் பட்டது.
பின் பனிக்காலம் நீங்க இளவேனிற்காலம் வந்தது. முன்னே செய்த தீவினையின் பயணுகக் கைப்பொருள் முழுவதையுந் தொலைத்து, நல்குரவடைந்தவர், பின் பொருகால் நல்வினைப் பயன் கைகொடுத்துதவ அப் பொருள் முழுவதையும் புதுவதாகப் பெற்றுச் சிறந்து பொலிவதுபோலப் பொழிலகத்துள்ள தருக்களெல்லாம் முன்னே இலைகளை முற்றுந் தொலைத்து, வெறுமை யடைநது நின்றவை, பின்னர்ச் செழுந்தளி ரரும்பி மலர்ந்து பொலிந்தன.
தேமாமரங்கள் ஆயிரந் தீக்கடவுளர் ஒருங்குகூடித் தங்கள் நாவை நீட்டினற் போலச் சிவந்த தளிர்களைக் கான்று கடவுளர் முன்னே அந்தணரேந்திய அடுக்குச் சுடரின் கூட்டம்போல அழகு மலியப் பூத்தன. அசோக மரங்கள் ஒண்டொடிமார் மேனிபோலத் தண்டளிரீன் றன. வேம்புகள் ஞெண்டின் கண்போல அரும்பி விரிந் தன. இருப்பை மரங்கள் காடுறை தெய்வங்கள் ஊர் வதற்கு அணிந்து வைத்த தேர்நிரைபோல இளமுறி பொதுளி வால்வளைக் குலம்போல் மலர்ந்தன. பாதிரி மரங்கள் நீல வானிடை உடுத்திர விலங்குவன போலப் பசுந்தழையிடையே வெண்மலரீட்டங் காட்டின.

செந்தமிழ் 105
கோங்கமரங்கள் உலக மன்னவன் முடிசூடுந் திருநாளிலே அவனைப் புடைசூழ்ந்து சேவிக்கும் முடிமன்னர்போலப் பூத்தன. வெள்ளில் ஒள்ளிய குறு முறி அரும்பி நகைத் தன. எங்கும் புதுமணம் கமழ்ந்தது. சந்தனப் பொதி யிற் றமிழுடன் பிறந்த மந்த மாருதமும் வந்துவந் துலா
மாரனுக்கு மணிமுடிசூட்ட வந்தது போன்ற இவ் வசந்த காலத்திலே ஒருநாள் உலகமெல்லாந் தொழு கின்ற ஆயிரஞ் சுடர்க்கை அலரிவானவன் குணதிசைக் குன்றின் உச்சியை யடைய எட்டிப் பார்க்கின்ரு ன். பூம்பொழிலகத்தும் பொய்கையின் கண்ணும் பொன் விளை செறுவினும் பறவையினங்கள் துயிலுணர்ந்தொலி யாநின்றன. தாமரை புரிநெகிழ்ந் தவிழக் குமுதம் வாய் மூடின. கடவுளர் கோட்டத்தும் காவலர் முன்றிலினும் வால் வெண்சங்கமும் காலை முரசமும் கனே குரலியம் பின. அப்பொழுது திருந்திய அறிவுடை அருந்தமிழ்ப் புலவ ணுெருவன் வண்டறைந்து தேனர்ந்து வரிக்குயில்க ளிசைபாடத் தண்டென்ற லிடைவிரவித் தனியவரை முனிவுசெய்யும் ஓர் பொழிலகம் புகுந்தான்.
புகுந்தவன் பசுமையுஞ் செழுமையும் புதுமையும் நிறைந்து இருள்படப் பொதுளிய தண்ணடைகளையும் வானிடு வில்லின் தோற்றம்போலப் பன்னிறம் படைத்து மிளிரும் பல்வகை மலர்களையுங் கண்டான். அவற்றினின் றெழுந்து எங்கும் பரவிய நறுமணத் தை முகந்தான். அம்மலர்களினிடையே புகுந்து இனிய தேனையுந் தாதை யுந் தேர்ந்துண்டு களிகொண்டு பாடுகின்ற வண்டினங் களின் இன்னிசையையும் தேமா மரங்களின் சினைகளி லிருந்து தங்கள் கூரிய அலகினல் இளந்தளிரைக் கோதிக் கொண்டு மாரனைக் கூவுவன போலப் பாடுகின்ற பூங்குயில்

Page 73
1 06 சிறுவர்
களின் தீங்குரலையுங் கேட்டான். அறுகாற் குறும்பெறிந் தோட்டிக் கடிமலிந்த நறுவிரை யொடுவிரவி உலாவும் மலயச் சிறுகாற் செல்வன் இடையிடையே தீண்டி வருட மெய்ம் முழுதும் புளகங்கொண்டு ஊற்றின்பத்தையும் அடைந்தான். அவன் நாவிலே தேனுாறித் தித்திக்க உள்ளமும் உடம்பும் பூரித்தன.
சுவையொளி யூருே சை நாற்றமென்னும் ஐம்பெரும் புலன்களும் ஓரிடத்தே உண்டுங் கண்டும் உற்றும் கேட் டும் உயிர்த்தும் அறியும் ஆராப்புதுவிருந்தை ஆரத்துய்ப் பிக்கும் இயற்கையின் பெருநலத்தில் ஈடுபட்டுத் தன் வயமிழந்து தேறி உள்ளங் குதூகலிக்கப் பெரியதோர் இறும்பூதெய்தி நின்றன்.
அவனுக்கு வழியியங்கிய வருத்தம் நீங்கியது. மனம் மகிழ்ச்சியடைந்தது. புதுக்கிளர்ச்சியும் புத்துணர்வும் உண்டாயின. அம்மம்ம 1 இயற்கை நலனின் ஆற்றல் இருந்த வாறென்னே !
தென்றலஞ் செல்வன் சென்று தாக்கச் சினை மென் கொம்பரசைதலினலே செம்மற்பூவைச் சிதறித் தேன் பிலிற்றிப் பவளவிணர் நாப்பண் வெள்ளரும்பு நிரைத் துப் பொலிவுபெற நின்றதோர் பூந்தரு முகமலர்ந்து முறுவல் காட்டிப் பூவும் நீரும் அடியுறையீந்து வருக வருக வெனக் கையினலழைக்கும் மெய்யன்பர் போல அவனை வரவேற்று வழிபாடு புரியா நிற்ப, அவன் அதன் மென்னிழற் கீழ்ப் பொள்ளெனப் புகுந்தான்.
புகுந்து ஆண்டுக்கிடந்த மாணிக்கப்பாறை மணித் தவிசின் மேலிருந்து எல்லாம் வல்ல இறைவனின் அளப் பருமறிவை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்குருகா நிற்பவன், இயற்கை மணமும் பேரழகுங் கட்டிளமையுந் தன்மொழியும் பெற்றுப் பொலிவொடு நிற்கும் பருவம்

செந்தமிழ் 10 7
மலர்ந்த அணங்கினைப்போல அம்மரத்தின் சினையில் அணிமையிற் பூத்த ஓர் நாண் மலரைக் கண்ணுற்றன். கண்ணுற்று அதனைக் கொய்யும் பொருட்டுத் தன் செங் கரத்தை நீட்டியவன் தண்ணளி மிகுதலாற்போலும், மற்றதனைக் கொய்யாது கையை வாங்கிக்கொண்டு சிந் திப்பானுயினன் :- - -
என்ன நறுவிரை ! என்ன பேரெழில் ! என்ன கட்டிளமை ! என்று எண்ணி எண்ணி விம்மிதமடைந்த வஞய் நறுமணத்துக்கும் முருகு ' ப்ெயர். பேரழகுக் கும் முருகு பெயர். கட்டிளமைக்கும் முருகு பெயர். ஆகவே இயற்கையானமைந்த தெய்வமணமுங் கட்புலன் கதுவாப் பேரழகும் மூவா விளமையும் DG) IG) I) யானன்றே என்னை ஆண்ட பன்னிரு தடந்தோட் புண்ணிய முதல் வற்கும் முருகன்' என்னுந் திருப்பெயர் வருவ தாயிற்று', என்று சிந்தியா நிற்புழி, அத்திருமலர் அவனை வாய்விட்டுக் கூவிப் “ புலவ ! நீ எண்ணியது ஒரு வாருெக்கும் அதுகேள் கியது.
y
, என்று கூறுவான் தொடங்
பொருணுரல் வல்ல புலவ ! கேண்மதி மாயிரு ஞாலத்து மன்னுயிர் விழையும் பூவினிற் ருே?ன்றிப் பொலிந்திடு நாற்றத் தின்னியல் நாடி யிசைத்திடி னதுவே மன்னுயிர்க் குயிராய் மலர்விழி மணியாய்த் துன்னிய வொளியாய்த் துலங்கிய முருகன் தன்னையொப் பாமெனச் சாற்றுவர் புலவர்
யாங்ங்ண மோவெனி ஞங்கது கூறுவல் :

Page 74
108 சிறுவர்
மணமே,
இல்லது வாரா துள்ளது வருமெனச் சொல்லிய மெய்ந்நூற் றுணிவினைக் காட்டி வித்தினுட் கருவாய் மேவிய ஞான்றினும் முளையா யிலையாய்க் கிளையா யரும்பி மொட்டாய்க் கண்ணியாய் முளைத்திடு போழ்தினும் காணு துள்ளே கரந்திருந் ததுவே கதிரவ னெளிபட விரிதரு போழ்திற் கதுமெனப் பூவினில் வெளியாய் வருமே ;
முருகனும்,
உயிரினுட் "கருவாய்ப் புலனினின் முளைத்துக் கல்வி கேள்வியி லரும்பிக் கண்ணியாய்ச் சிந்தை யறிவினிற் றிகழுமொட் டாகி வந்துழி யுள்ளே மறைந்திருந் தொருகால் அருளெனும் ஞாயிற் றவிரொளி தீண்டக் கதுமென அறிவினில் வெளியா குவனே :
அதுவே,
கூறுபன் மலரினும் வேறுவே றியல்புடன் நண்ணும், மற்றவனு மெண்ணில்பல் கோடி உயிரினிற் பல வாய் நிலவுவ னன்றே :
அதுவே,
விரிதரு மலரிடைப் பிரிவற நிற்கும்
அவனும்,
விரிதரு முயிரிடைப் பிரிவற நிற்பன்
அதுவே,
பூவினின் வேறெனப் புகலவும் படுமே
அவனும்,
உயிரினின் வேறென வோதவும் படுவன்
அதுவே,
பூவினி லருவாய்ப் பொருந்திடு மவனும் உயிரினி லருவாய் ஒன்றிநிற் பவனே ;

செந்தமிழ் 109
கட்புலன் கதுவாக் காட்சித் தாயினும் மாசறு முயிர்ப்பின் மருவுவ ததுவே ; ஆசறு முணர்வி னறிபவ னவனே : உயிர்ப்பி னுட்கலந் துள்ள கங் குளிர இன்பினை யீருவ ததுவே, யவனே உணர்வி னுட் கலந் துயிரகங் குளிர அழியாப் பேரின்ப மருளுவ னதனைப்
பூவி ஞற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை யென் ருேதிய வருண்மொழி யுணர்த்திடு மாதலின் நற்கதி யுதவும் மெய்ப்பொருண் முருகனை ஒக்குமா யினு மவன் திப்பிய வடிவிற் றெப்வத் திருமணச் சீரினுக் கதுதான் மேருவு மனுவு மாமென விளம்புவர்.
அதனைக் கேட்ட கவிஞன் சிந்தனை மிக்குச் சிரித்துக் கொண்டிருப்புழி, மீட்டும் அந்நறும் பூ விளம்புவான் ருெடங்கிற்று.
கண்டினு மினிய வொண்டமிழ்க் கவிஞ ! வளைகட லுலகினின் விழுமிய தியாதெனின் அழகென வறிந்தோ ர றைந்திசி னேரே ; மலையிற் கடலினில் வானினில் நெருப்பினில் அலைமறித் தொழுகு மொலிகெழு நதியில் விலைமதிப் பறியா மேதகு மணியிற் றிருவளர் தாமரை வாவியி னுரு வளர் செந்நெல் வயலிற் கன்னலிற் கமுகிற் பொன்னிய லிள நீர் துன்னிய தென்னையில் வன்னப் பாசடை மலிந்திடு கதலியிற் காவினிற் பூவினிற் கனியினிற் றளிரினில் ஒவிய ரெழுது முருவின வணத்தின்

Page 75
1 1 0
சிறுவர்
மாடமா ஸ்கையிற் கூடகோ புரத்தில் நீரினு நிலத்தினுஞ் சேருயிர்த் திறத்திற் பறவையில் விலங்கில் நிறைமணப் பந்தரில் ஆடையி லணியில் ஆணினிற் பெண்ணிற் கோயிலில் விழவிற் குலவுபல் பொருளில் மன்னிவீற் றிருந்தே இன்னுயிர்க் குழுவைத் தன்னிடத் தன்பு தழைக்கச் செய்வதும் அன்பின லவைத மைத் தன்பா லிழுப்பதும் ஐம்பொறி கட்கு மின் பினைத் தருவதும் விஞ்சிய துயரை விலக்கிவைப் பதுவும் அகத்தையும் முகத்தையும் மலர்த்தி யிகத்தினில் வாழ்க்கையின் பயனை யீவதும் பார்க்கில் அழகென யாவரு மறிந்ததை யன்றே ! மாயையிற் ருேன்றிய வரம்பில்பல் பொருள்கள் மேவிய வழகின் விலக்கரு மாற்றல் ஒழியா விறும் பூ துதவுவ தாயின் மாயை மூன்றுங் கடந்தவை வேலோன் அருளினி லெடுக்கு மற்புத வடிவின் யாண்டு நிறைந்த காண்டகு பேரெழில் ஆற்றலை யுரைக்க மாற்றமொன் றுண்டோ ? ஆயிரங் கோடிமன் மதரழ கொருங்கு மேயின தெனினும் மெய்ப்பொருள் கொண்ட மேதகு முருவிற் பாததா மரைக்கும் போதா தென்றும் பொருவுயர் விறந்த அண்ணலார் மேனி.யடிமுதன் முடிவரை நண்ணிய பேரெழில் நலத்தினை நாடி எண்ணிலாக் கால மெத்திற நோக்கினும் கண்ணினற் கருத்தா லடங்கா தென்றும், சீர்க்கும ரேசன் றிருப்பெரு வடிவில் ஆர்க்குள வுலகினில் அற்புதத் தோடும்

செந்தமிழ் - III
பார்க்கினுந் தெவிட்டில பார்வை யென்றும், எண்டரு விழிகள் யாக்கையிற் படைத்தோர் கண்டிட வூழியுங் கடக்கு மென்றும் திருகிய வெகுளி தீர்ந்தன செருத்தொழில் அருகிய புளக மானது விழிநீர் பெருகிய தன்பு பிறந்ததென் னென்பும் உருகிய துலைமெழு காக வென்றும் வெல்வது கருதி வெஞ்சமர் புக்க தொல் வலிச் சூரன் சொல்லியழு தானெனின் அன்ப ராயினே ரவ்வெழில் கண்டுழி என்படு வாரென வியம்புத லரிதே ; அதனல், மன்னிய விருண்மல மயக்கினிற் றிளைக்கும் இன்னுயிர் யாவையுந் தன்னிடத் தென்றும் நீங்காப் பேரன் போங்கிடச் செய்வதும் அன்புமுன் னிடா யாங்க வை தம்மைத் தன்பா லிழுத்துச் சார்ந்திடு பிறவித் துன்பினை வேரொடுந் துடைப்பது மைம் பெரும் பொறியும் புலனும் புந்தியும் மயங்க வறிவுங் காணு வருட்பே ரின்ப வேலையுட் டிளைக்க விடுவதும் மூல முதற்பொருள் கொள்ளும் அருட்பெரு வடிவின் எழிற்பொலி வென்பதை மயக்கற வுணர்ந்தே வளமலி யழகெனும் பொருடரு கின்ற முருகெனு நாமம் முதல்வனுக் கிட்டனர் சிவநெறிச் செந்தமிழ்ச் சீரி யோரே.
அதுகேட்ட நற்றமிழ் நாவலோன் நெஞ்சுருக, நீர் மல்க. அஞ்சலி கூப்பி அமைந்து நிற்புழி, மீட்டும் அப் பொலம்பூ விளம்புதன் மே யது :-
முத்தமிழ் வல்ல வித்தக ! கேட்டீ விரிகட லுலகிற் பொருணிலை யாவுங்

Page 76
112
சிறுவர்
காலையி னென்ரு ய்க் கடும்பகலொன்ரு ய் மாலையி னென்ரு ய் மாய்வது காண்டலின் நீர் மேற் குமிழியி னின்றுN நில்லா தழிதன் மாலைய திளமையென் றுணருதி யாங்ங்ண மோவெனி னங்கது கூறுவல் : கண்ணினைக் கவருங் காம ரிளந்தளிர் வண்ண நாடொறு மாறிவே ரு கிப் பச்சிலை மாறிப் பழுப்பாய்ச் சருகாய் மண்மிசை யுதிர்ந்து மடிதலுங் காண்டும்
அதா அன்று,
நீல மேனி நெடுமால் போலக் கோலங் காட்டிக் குளிர்ந்திடு மிளம்புல் சாரம் வற்றித் தரை மிசைச் சாய்ந்து வைக்கோ லாகி மடிதலுங் காண்டும் ;
அதாஅன்று,
பொன்னிற மேனியும் புதுமதி முகமும் வண்ணத் தாமரை மா மலர் வாயும் தேனும் பாலும் யாழுங் குழலும் ஆணு வின்சுவை மழலையஞ் சொல்லும் காந்தளங் கையும் மாந்தளிர்ப் பாதமும் பொருந்திய குழவி திரிந்துவெவ் வேரு ய்ப் பாலனுங் குமரனுந் தருணனு மாகிக் குயிலெனுங் குஞ்சி கொக்கென மாற முத்தன வெண்ணகை வித்தென வுதிர அரவுரி போலத் திரையுடல் பரவத் தட்டுற வாய்மொழி முட்டினி னிமிர்ந்து கிழவன ப்க் கழிதலு முலகிய னிலையே ;
அதனற்,
கனவும் மின்னுங் கானலும் பொய்யு மெனவே கழியு மிளமை யாயினும் கால வெல்லையைக் கடந்து நின்ற

செந்தமிழ் 113
மூலப் பொருளின் முளைத் திடு மிளமை என்று மழியா வியல்பினை யுடைத்தே இளமையி னிளமை யெய்துவ ததுவே ;
அதுதான்,
ஆதியு நடுவு மந்த மு மென்ன வோதிய மூன்று மொழிந்துநின் றதுவே , அப்பெரும் பொருளி னமைந்திடு மிளமையின் கோடியிற் கோடி கூற்றிலொ ரணுவே இப்புவிப் பொருளி னியைந்துள தறிகுதி : இப்புவிப் பொருளி னியைந்துநின் ருெழியா மெய்ப்பொருண் மேன்மை விளக்குதல் கண்டே என்றும் மூவா விளமையை யுணர்த்தும் முருகென வோது மொரு திரு நாமம் பச்சை மாமயிற் பரமனுக் கிட்டனர் இச்சையி னிருந்த மி பூழியலுணர்ந் தோரே எனக்கூற, அதனைச் செவிமடுத்த தண்டமிழ்ப்புலவன், இஃது அற்புதம் ! அற்புதம் ! எனத் தலையசைத்து அக நெகிழ முக மலர்ந்திருந்தானுக, முருகனை உணரும் மெய் யடியார் கண்களினின்றும் இன்பத்துளி விழுவதுபோல அந்நாண் மலரினின்றும் ஓர் செந்நிறத் தேன்றுளி வீழ்ந்தது.
அதுகண்ட பாவலன் சுட்டுவிரலை மூக்கிலே சேர்த்து எருத்தத்தை ஒர் பாற் கோட்டிக் கண்ணிமையாது சிறிது போழ்து சிந்தித்துப் பின் கூறுவான் :-
தேனே 1 தேனே 1 மானவே ன் முருகன் தன்னையொப் பானெனச் சாற்றுவல் கேண் மதி தூயமா மலரிடைத் தோன்றுவை நீயே ! மேயநல் லுயிரினில் விளங்குவ னவனே : இனிப்பினை யுடையை நீயே யவனும் தனிப்பெரு மினிப்பினைத் தானுடை யானே

Page 77
I 14 சிறுவர்
உண்டவர்க் கின்ப முதவுவை நீயே உணர்ந்தவர்க் கின்ப முதவுவ னவனே ; உறுபிணி நீக்குவை நீயே யவனே பிறவி யென்னும் பெரும்பிணி தன்னை வேரொடும் வீட்டுவ ஞதலி னன்றே அரும்பெறற் றேனெனப் பெரும்பொருள் பயக்கும் முருகென வோது மொரு திரு நாமம் பொருந்துவ தறிந்து புகன்ருர் அருந்தமிழ் வல்ல அறிவுடை யோரே என, அதுகேட்ட நறுமலர் நன்று ! நன்று 1 என்று தலையசைத்து நறுமணமும் பேரெழிலும் கட்டிளமை யும் கழிபேரினிப்பும் ஆகிய இவையெல்லாம் குன்றெறி நெடுவேற் குமரநாயகனில் ஒன்றிய கடவுட்டன்மையை உரைக்கின்றன காணென, அஃதெங்ங்னமோ வென்று ஒண்டமிழ்க்கிழவன் வினவ, மற்றது கூறும் :-
பூமண வுவமையிற் பொருந்திய வருவமும் உடலுயிர் போல ஒன்ரு ய் நிற்றலும் விழியொளி போல வேரு ய் நிற்றலும் உயிரறி வொளியென வுடனய் நிற்றலும் உணர்ச்சியிற் படுதலும் ஒதிய விளமையின் மூலமு நடுவு முடிவு மின்றிக் காலங் கடந்து நிற்குங் காட்சியும் அழகினில் அன்புண் டாக்கலு மாக்கி வளமுறு முயிரை வசித்துக் கோடலும் இளமையு மழகு மியைந்த வாற்றல் அருளுரு வெய்தலு மருவுரு வுடைமையும் தேனினி லறிவிற் றிகழ்ந்து நின்றே இனிப்பின் புதவி மலப்பிணி யறுத்தலும் ஆகிய கடவுட் டன்மை யனைத்தும் பெறப்பட நின்ற குறிப்பினை யுணர்ந்தே

செந்தமிழ் -
தேனே யழகே யிளமை நாற்றம் ஆணு வினிமையென் றரும்பொருள் பயக்கும் முருகென வோது மொரு திருப் பெயரை இறைவனுக் கிட்டன ரென்ப துறைமலி செந்தமி ழுணர்ந்தது யவரே. அதுகேட்ட செந்தமிழ்ச் செல்வன், அறிந்தேன் ! அறிந்தேன் ! கந்தபுராணத்திலே கச்சியப்ப சிவாசாரி யார் சரவணப்பூந்தடத்தில் அறுமுகப்பெருமான் அருட் டிருமேனி கொண்டெழுந்தமை கூறுமிடத்து,
அருவமு முருவமாகி யணுதியாய்ப் பலவா
யொன்ரு ய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன் னிரண்டுங்
கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தன னுலகமுய்ய ' எனக்கூறிய திருப்பாட்டின் பொருள் அறிந்தேன் ! அறிந்தேன் ! என்று தன்னிரு கையும் உயர்த்தித் தலை மீது குவித்து, அத்தெய்வத் திருமலருக்கு மெய் வணக் கஞ் செய்து தன்னில் லஞ் செல்வானுயினன்.

Page 78
II 6 சிறுவர்
29. கலையரசி ஐம்பருவம்
புலவரவர்கள் வட்டுக்கிழக்குச் சைவாங்கில வித்தியா சாலையில் நாற்பது ஆண்டுகளுக்குமேலாக ஆசிரியரா யிருந்தார். ஆண்டுதோறும் பெற்ருர் ஆசிரியர் விழா ? நிகழ்வது வழக்கம். அவ்விழா நிகழ்ச்சிகளுள்ளே தமிழ் நிகழ்ச்சியுமொன்ரு கும். புலவர் தம் பிள்ளைகளுக்குப் புதிய நாடகங்களும் இனிய சல்லா பங்களும் எழுதிப் பழக்கி நடிப்பிப்பார்கள். அதனைப் பார்த்து மகிழ்தற்கு அறிஞர் பலர் வருவார்கள்.
தாங் கலாசாலையினின்றும் விலகி யிளைப்பாறுதற்கு, விரும்பிய கி.பி. 1938-ஆம் ஆண்டிலே, அக்கலாசாலை யைக் கலையரசியாக உருவகஞ்செய்து, ஐம்பருவக் காட்சி’ என்ற இப்பகுதியைப் பிள்ளைகளைக்கொண்டு அழகுற நடிப்பித்தார்கள். கலையரசியாகச் சிறுமி யொருத்தி புனைவுகொள்ள, ஏனைச் சிறுமியர் சிலர் சேர்ந்து அவளுக் குரிய ஐம்பருவ நிகழ்ச்சிகளைப்பாடிப் பாராட்டுவது இது.
காப்புப்பருவம் (1)
விநாயகர் சீரோங்கு வட்டுநகர் சேராங் கிலகழகத் தேரோங்கு கல்வி யிளங்குழவி யின்னமுதைப் பாரோங்கு சித்த புரிப் பாரக் குடவயிற்றுக் காரோங்கு மானைமுகக் கற்பகமே காத்தருள்க
அம்மையப்பர் சைவ மலி வட்டுநகர்ச் சைவாங் கிலகழகச் செய்யகலை வழங்குந் திருமழலைத் தேவிதனைத்
தெய்வமலி சித்த புரித் தேவாதி தேவனுடன் தையல் சிவ காமியம்மை சந்ததமுங் காத்தருள்க.

செந்தமிழ் 17
முருகன் ஏறுபுகழ் வட்டுநகர் இன்பத் திருக்கழகப் பேறு தரு கல்விப் பெருமைப் பிராட்டிதனை நாறுமலர்ப் பூஞ்சோலை நல்ல டைக் கலந்தோட்டத் தாறுமுகப் பெருமா னருள்சுரந்து காத்தருள்க
திருமகள்
இல்லம் நனிசிறக்க ஏற்ற பொருளுதவும் நல்ல திருமடந்தை நாயகியைக் காத்தருள்க
திருநீறு எண்ணி யணிபவருக் கெவ்வினையும் போக்குகின்ற புண்ணியவெண் ணிறெங்கள் பூங்கொடியைக் காத்தருள்க
பஞ்சாயுதம் வெய்யபிணி பேய்பூதம் வேறுமுள தோடமற ஐயவியு நெய்யுமரி யாயுதமுங் காத்தருள்க
வேப்பிலை
காற்றுடனே தோற்றுபிணி காலநெடுங் கோளரிட்டம் வேற்று விடங்கெடுக்கும் வேப்பிலைதான் காத்தருள்க
அறுகரிசிமஞ்சள்விளக்கு நெல்லரிசி போலநிதம் நீண்டபெரு வாழ்வருளிப் புல்லறுகு போல நிதம் புடவியெங்குஞ் சீர்பரப்பி நல்ல திரு மஞ்சளைப்போல் நன்மங் கலம் பயந்தே இல்லம் மகிழ்சிறக்க வெங்கு மொளிவிரித்துப் பல்லாண்டு கல்விப் பசுங்குழவி வாழியரோ

Page 79
I 18 சிறுவர்
தாலாட்டுப்பருவம் (2)
எல்லா வறிவுமுள்ள வெம்பெருமான் நல்லருளாற் பல்லுயிர்க்குந் தாயாய்ப் படைத்த பசுங்கொடியோ
-ஆராரோ ஆரிவரோ
சைவந் தழைக்கத் தமிழாங் கிலம் வளர வையஞ் சிறக்க வந்த வானச் சுடர்மதியோ
-ஆராரோ ஆரிவரோ
ஞானப் பெருங்கடலில் நல்லோர் குளித்தெடுத்த வானப் பெருமை வலம்புரியி னணிமுத்தோ
-ஆராரோ ஆரிவரோ
நல்ல வறம் பொருளு நாடு மின்ப வீடு மருள் மல்லற் புடவிவரு வானகத்துக் கற்பகமோ
-ஆராரோ ஆரிவரோ
ஆயகலை நெய்விட் டறிவுத் திரிகொளுத்தித் தூய வுளத்துவைத்த தூண்டாமணி விளக்கோ
-ஆராரோ ஆரிவரோ
தேனுே கரும்போ தெவிட்டாத தெள்ளமுதோ மானே சுரும்போ மடமயிலோ மாங்குயிலோ
-ஆராரோ ஆரிவரோ
தேனுாற வின் பத் தெளிவூற நெஞ்சுகுளிர்ந் தூனுாற வுள்ளுறு மொண்குதலை நன்மொழியோ
-ஆராரோ ஆரிவரோ
ஆச்சி யழவேண்டாம் அம்மா அழவேண்டாம் வாய்ச்சகலைப் பூம்பொழில் வாழ் மானே யழவேண்டாம் -ஆராரோ ஆரிவரோ

செந்தமிழ் 119
மக்கள் குறைந்தனரோ மாளிகையின் சீரிலையோ தொக்க வளனிலையோ தோ காய் அழவேண்டாம்
-ஆராரோ ஆரிவரோ
பொன்னன மாமி புழுங்கி யடித்தாளோ மன்னு மயலார் வசைக ளுரைத்தனரோ
-ஆராரோ ஆரிவரோ கண்பாதி மூடிமலர்க் கைவிரலை வாய்சுவைத்தே ஒண்பா லமுதொழுக வுன்னி யழவேண்டாம்
-ஆராரோ ஆரிவரோ
எண்ணே யெழுத்தே யிசையே யிளங்குயிலே கண்ணே கருத்தேயெங் கண்மணியே கண் வளராய்
-ஆராரோ ஆரிவரோ புன்மை யுறங்கப் புலைகொலைக டாமுறங்க இன்மை யுறங்கவெங்கள் ஏந்திழையே கண்ணுறங்காய் -ஆராரோ ஆரிவரோ சோம்ப லுறங்கவெமைச் சூழடிமை நாளுறங்க ஏம்ப லுறங்க விருவிழிகள் கண்ணுறங்காய்
-ஆராரோ ஆரிவரோ
சப்பாணிப்பருவம் (3)
சீலத் திருவே செங்கைத் தருவே
தெய்வத் திருவுருவே தேயா வொளியே மாயா வளியே
சிந்தைத் தெளிதேனே கோலக் குயிலே குறையா நிதியே
கொட்டுக சப்பாணி கொஞ்சுங் கிளியே வஞ்சிக் கொடியே
கொட்டுக சப்பாணி

Page 80
120
சிறுவர்
அன்னையர் கொட்டத் தந்தையர் கொட்டிட
அவையோர் கைகொட்ட
ஆர்வலர் கொட்டப் பாவலர் கொட்டிட
அதிபர்கள் கைகொட்டக்
கொன்னுனை வேல்விழி மானே தேனே
கொட்டுக சப்பாணி
குதலைப் பன்மொழி மதலைச் சின்மொழி
கொட்டுக சப்பாணி
அம்பொற் பாதக் கிண்கிணி யா டிட
அரைஞாண் மணியாட
அருளிற் பெருகுஞ் சிறுநகை யாடிட
வணிமணி வடமாடக் கொம்பிற் குயிலிற் குதலைத் தீங்கனி
கொட்டுக சப்பாணி கூழைக் குந்தள கோமள சுந்தரி
கொட்டுக சப்பாணி
செம்பொற் ரு மரை மாமதி சேரிரு
சேலென விழியா டச் சிந்தைக் கூரிருள் போயற வேமுகிழ்
சிறுநகை யழகா டக் கொம்பிற் குலவிய கொடியே பிடியே
கொட்டுக சப்பாணி கூழைக் குந்தள கோமள சுந்தரி
கொட்டுக சப்பாணி

செந்தமிழ் 12-1
வருகைப்பருவம் (4)
அனமு மினமு மறைசெய் பிடியு
மவை கொ ணடைக ளலவுல
கரிய வசன நடையு முரிய
வழகு தொடையி னடைகளும்
இனமு மறிய நெறிக ளருளு
மிறைவி வருக வருகவே
இரச மொழுகு மமுத குமுத
விதழி வருக வருகவே
பண்ணு மிசையு மொழுகு பவள விதழ்கள் குதலை பறையவே
படியி லடிகள் படிய நடைகள் பலவு மிடையி லிடறவே
எண்ணு மியலு மெழில் கொள் விழிக
ளிரவி நிகர வொளிரவே
இருகை தழுவ வருகு மருவி
யிறைவி வருக வருகவே
அரிய பெரிய பொருள்க டருவ
ரமுது தருவ ரமர்வுற அழகு மலியி லிடமு மருள்வ ரம்மை யப்ப ரிங்குளர் இருகை குளிர வரசி வருக
விறைவி வருக வழிவுரு எழிலி வருக வறிவு பெருகி யிளைஞர் மகிழ வருகவே

Page 81
122 சிறுவர்
அம்மை வருக வரசி வருக வறிவி வருக பிறிவிலா அன்பி வருக வின்பி வருக வாதி வருக நீதிசேர் இம்மை வருக மறுமை வருக வெழுமை வருக வருடரும் எங்கை வருக நங்கை வருக விங்கு வருக வருகவே
அம்புலிப்பருவம் (5)
எண்ணிரண்டு கலையுடையாய் வெண்ணிலாவே-இவள் எண்ணெட்டுக் கலையுடையாள் வெண்ணிலாவே நண்ணுமொரு மறுவுடையாய் வெண்ணிலாவே-இவள் நாளுமொரு மறுவடையாள் வெண்ணிலாவே
காந்தண்மலர்க் கைகவிழ்த்து வெண்ணிலாவே-உனக் கண்டழைக் கிருள் வருவாய் வெண்ணிலாவே ஏந்து புகழ் ஞான வல்லி வெண்ணிலாவே-இவள் இன்பமுற நீவருவாய் வெண்ணிலாவே
அன்னை மார்கள் தந்தை மார்கள் வெண்ணிலாவே-இங்கு அன்புடையோர் வந்துவிட்டார் வெண்ணிலாவே கன்னிவிளை யாடுதற்கு வெண்ணிலாவே-இங்குக் கடுகவர வேண்டுமினி வெண்ணிலாவே

செந்தமிழ் 123
30. தனிப்பாடல்கள்
புலவரவர்கள் காலந்தோறும் விளையாட்டாகப் பல தனிப்பாடல்கள் செய்துள்ளார். அவைகள் ஒரு தனி நூலாக வெளியிடப்படும். சிறுவர்க்கு வேண்டப்படும் ஒரு சிலவற்றை யிங்கே தருகின்றேம்.
1. புலவரின் கடைசிப்புதல்வர், சண்முக பாரதி யென வழங்கும் வேலாயுத திள்ளை. கி.பி. 1926-ஆம் ஆண்டில், அவர் குழந்தைப்பருவத்தினர். அவருக்கு விளையாட்டுப்பண்டமாக மரத்திற் செய்த நாயொன்றை அவரின் சிறியதந்தையார் திருவாளர் வேலுப்பிள்ளை யவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்த நாயைப் பற்றிப் பாரதிக்குந் தமக்கும் உரையாடலாக வெழுதிய பாடல் களே இவை :
சீனியப்பு தந்தருளுஞ் சின்னநாய் என்னநாய் நானினைந்து சொல்வேன் நயந்துகேள்-ஈனுகின்ற தாயில்லா நாய் மேலுந் தந்தையில்லா நாயுண்ணி ஈயில்லா நாயிந்த நாய்
மன்னுபே ரன்பினுற் சீனியப்பு தந்தநாய் என்ன பிடிக்கும் இயம்புவாய்-தன்னுடம்பில் ஈப் பிடிக்க மாட்டாத இந்த நாய் வேறென்ன போய்ப்பிடிக்க மாட்டும் புகல்
உண்ணு துறுமா துருள்வால் குழைத்திரண்டு கண்ணுலும் பாராத காரியமென்-கண்ணே நீ வாழி யிதுமரநா யானுல் மரமேறிக் கோழி பிடிக்குமோ கூறு
இல்லுவந்து காத்திட்ட வெச்சின்மிசைந் திட்டவர்மேல் *நல்லன்பு கொண்டு நடந்தாலும்-தொல்லுலகம்
நாயென்று நன்றியின்றிக் கூற மிக நாணியன்ருே
வாயொன்றும் பேசாத வாறு

Page 82
盈24 சிறுவர்
வலித்தோடிக் கஞ்சன் மணித்தலை யைக் கொய்து பலித்தானங் கொண்டகா பாலி-புலித்தோல் அரைவடுக னேறி யடிப்பானென் றஞ்சி உரையாடா துண்ணு துது
2. 1908-ஆம் ஆண்டிலே, சைவன் ஒருவனிடம் உணவுகொண்டபோது, புலவருடைய அன்பகலா நண் பன், மூளாய்ப்பண்டிதர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் புலவருக்கும் அவ்வுணவு சீரணமாகாது வயிற்றிலே பெருங்கோளாறு செய்தது. பண்டிதர், அவ்வுணவைப் பற்றியொரு பாடல் ஆக்கும்படிவேண்டப் பாடப்பட்டது
இது :-
வள்ளிப் பழங்கிழங்கே வாழைக்காய்ப் பச்சடியே கிள்ளித் தெளித்த பச்சைக் கீரையே-வெள்ளப் புளிக்குழம்பே கட்டரிசிப் பொங்கலே மெள்ள வெளிப்படுங்கள் எம்வயிற்றை விட்டு
3. 1915-ஆம் ஆண்டிலே புலவர் புதுவீட்டிற் குடி புகுந்தபோது, புலவருடைய அரும்பெறற்றுணைவரும், மாணுக்கரும், புலவருடைய அருமைப் பாடல்களையெல் லாம் பொன்போற்பேணிப் பதிப்பித்துவருகின்ற தமிழ்ப் புரவலரும் ஆகிய திருவாளர் வேலுப்பிள்ளையவர்கள் சில பொருள்களைக் கையுறையாக அனுப்பினுர்கள். அவற்றை ஏற்றுமகிழ்ந்த புலவர், தந்துணைவர்க்குச் சில சிலேடைவெண்பாக்களை யெழுதி யனுப்பினுர்கள். அவற்றுட் சில இவை :-
குடம்-சடாமகுடம் கங்கை பொருந்துதலாற் காசின் மதிக் கீறுறலால் பொங்கு மலர் கொண்டு பொலிதலால்-மங்கை இடம்போற்றுத் தில்லை யிறைவன் சடாம குடம்போலும் எம்பி குடம்

செந்தமிழ் 125
மதிக்கீறு-இறைவற்கு-கீற்றுச்சந்திரன் ; குடத்துக்கு
எண்ணிக்கீறியவரைகள். எம்பி-என்றம் பி. மங்கை-உமாதேவி.
கடாரம்-அண்டம் அஞ்சி லொருபொருளா லாகி நிலவுதலால் விஞ்சுவெளி மேலாய் விலங்குதலால்-நெஞ்சின் இடமாகும் வேலா யுதவிளவல் வெற்பிற் கடமாகு மண்டமெனக் காண்
தட்டம்-தவமுனி ஒருகாலில் நிற்றலா லோங்கிலை காய்நீறு வருவாருக் கீயும் வழக்கால்-குருநாதன் இட்டமிகு வேலா யுதவிளவ லின் சிலம்பிற் றட்டந் தவமுனிவன் முன்
இலை-வெற்றிலை , உணவுக்காம் இலை.
காய்-பாக்கு ; உணவுக்காங்காய்கள்.
நீறு-சுண்ணும்பு, திருநீறு.
வருவார்-இல்லம்புகுவார் ; ஆச்சிரமம்புகுவார்.
குருநாதன்-சுப்பிரமணியசுவாமிகள்.
என்றது, பெங்களூரிலிருந்து நவாலியூர்ப்போந்து புலவர்க்கும் அவர் துணைவர்க்கும் பிறர்க்கும் அருள் செய்து ஆட்கொண்ட திறங்கூறியவாறு. இட்டம்கருணை.
இருப்புச்சட்டி-குரு எரியிட் டவிதரலா லிட்டத்தைச் சுட்டுப் புரிதீக்கை செய்யும் புணர்ப்பால்-பெரிய நயச் சுட் டுறுகருணை நம்பிதிரு நாட்டில் அயச் சட்டி யாசிரிய ஞம்

Page 83
126 சிறுவர்
அவி-அவிக்கப்பட்டது ; கடவுட்பலி. இட்டத்தை-இட்டபொருளை, அவாவினை. தீக்கை-தீத்தல் ; ஆசிரியன் செய்யும் தீட்சை. அயம்-இரும்பு ; நம்பி-ஆடவர் திலகம்.
கிண்ணம்-வேசை பவளவிதழ் வாய்வைத்துப் பானஞ் செயலால் தவளநிறஞ் சாருந் த கையால்-துவளுமிடை வே சைக்கொப் பாகுமே வேலாயு தன்சிலம்பில் ஆசைக் கரபாத் திரம்
மிளகு-வள்ளிதாயகி குன்றிற் பிறந்து கொடியிடையுண் டாகிமுரு கொன்றி மலச்சிக் கொழித்தலால்-என்றும் அழகுவளர் வேலா யுதச் செம்மல் வெற்பில் மிளகுவள்ளி நாயகியென் போம் கொடியிடை-கொடியில் : கொடிபோலுமிடை, முருகொன்றி-வாசனை கொண்டு , முருகனை மணந்து. மலச்சிக்கு-மலந்த டைப்படுதல் ; ஆணவமுதலிய மலக் கட்டு.
தேயிலை-வாணிகன் கிளைகள் செறிதலாற் கிள்ளிநிறுத் தேற்றி வளை கடல்போ யீட்டி வரலால்-விழைவார்க்கு வாயிலையே மூடாத வேலாயு தன்வரையில் தேயிலையே செட்டியெனத் தேர் கிளை-சுற்றம் ; கொம்புகள். விழைவார்-இரப்போர். வாயில்-வீட்டுவாயில்,
செம்பு-கங்கை
அங்கை தனிலுற லால் ஆரமுத மீதலால் தங்குமுடன் மாசு தவிர்த்தலாற்-சங்கரனை நம்பும்வே லாயுதனர் நன்னுட்டி லொப்பாகும் செம்பும் வரநதியுந் தேர்

செந்தமிழ் 27
அங்கையுறுதல்-உமையம்மை செங்கரத்தினின்றும் உண்
டாதல் ; வேண்டுவார் கரத்திற்சேர்தல்.
அமுதம்-தூயதண்ணிர்.
உடன் மாசு-உடலாகிய குற்றம் : அழுக்கு. வரநதி
if 60} 5 ・
4027- G

Page 84
128 சிறுவர்
31. தாரமாய்த் தாயானுள்கை
புலவருக்கு 1929-ஆம் ஆண்டிலே சன்னி நோய் கண்டது. அஃது இரண்டு திங்கள் வரை நீடித்தது. அக்காலத்திலும், தொய்வு முதலிய நோயுற்ற ஏனைக் காலங்களிலும் தம்மைப் பெரிதும் பேணி நலப்படுத்தி வாராநின்ற நன்றியைப் பாராட்டும் முகமாகத் தமது வாழ்க்கைத் துணைவி திருவாட்டி சின்னம்மையின் கையைக் குறித்து எழுதியது இப்பாட்டு,
பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளையவர்கள் புலவ ருடைய பாடல்களிலே பெரிதும் ஈடுபாடு உடையவர் கள். இக்கலிவெண்பாவைப் படித்த பண்டிதமணிக்கு வாசுகியம்மையாரின் நினைப்பும், வள்ளுவரின் மனை வாழ்க்கை மாண்பும் உள்ளத்தில் விம்பிக்கச் சின்னம் மையின் கை இத்தனையுஞ் செய்யக் கண்ணயரா திருக்க வேண்டுமன்ருே ? அதற்கு மன்ருே கவிவேண்டும் ! பின் றுாங்கி முன்னெழு உம் வாக கிக்கு இத்தனை கடமை யில்லையே ! “ என்ற பொருளமைத்துப் பாடிப் புலவருக் கனுப்பினர்கள். அப்பாடல் இது :-
வெண்பா
பின்றுாங்கி முன்னெழு உம் பெற்றியுரைத் தார்தேவர் உன் ருரத் துக்குறக்க முண்டுகொலோ-குன்ருமே தண்ணென் தமிழ்ப்புலவோய் தாயானள் கையிருக்கக் கண்ணுக்கே வேண் டுங் கவி.
இதனைப் படித்து உவகைபூத்த புலவர், பிள்ளையவர் களுக்கு வாழ்த்தும் விடையுமாகப் பின்வரும் பாட்டுக் களை விடுத்தார்.

செந்தமிழ் 129
அகவல் அண்டர்கள் விழையு மமுதினு மினிக்குந் தண்டமி ழுணர்ந்த பண்டித மணியே ! இலக்கியக் கலைக்கடன் முழுகி நிலைப்படு நால்வகைச் செஞ்சொல் வால்வளை யீன்ற மாமணிக் குவைகள் வாரித் துரநகை இன்புடன் கேட்குந ரன்பொடு மகிழத் தூக்கிவிலை யுரைக்கும் வாக்கினில் வல்லோய் எல்லாம் வல்ல இறையவ னருளாற் பல்லாண்டு வாழ்வும் உடனலப் பாடும் எண்ணிய வெய்தலும் ஞானமுங் கல்வியும் திருவுஞ் சிறப்பு மருவியெஞ் ஞான்றும் ஜம்முக னருளிய கைம்முகன் றெய்வப் பெரும்பெயர் கொண்ட வரும்புகழ்க் குரிசில் !! கைக்கவி யிருக்கக் கட்கவி வேண்டிய அற்புத நுண்மதிப் பொற்புயர் செல்வ !! வாழிய பெரும நீயே ஆழிகு முலகி லடைவன வடைந்தே.
வெண்பா துன்பிற் சுடர் முத்தந் தூக்கலாற் ருெண்டுசெயும் அன்பி லிரவு மலர்தலால்-நண்பகேள்
விண்ணுக்கும் விண்ணவர்க்கு மொக்குமென வேறுரைப் பேன் கண்ணுக்கு வேண்டுங் கவி.
மரியன்று வேலன்று வாளன்று கோலன்று மீனன் றெனவுரைத்தல் விட்டுரைப்பேன்-ஊனென்று நன்மைக் கலர்ந்து நலிவிற்குக் கூம்பியிடர்ப் புன்மைக்கு முத்துதிர்க்கும் பூ.

Page 85
I 30 சிறுவர்
உள்ளத்துணர்வு அழகியதோர் வடிவமுற்றுக் கற்போ ரையும் உணர்ச்சிவயப்படுத்துமாயின், அதுவே பாட் டெனப்படும். புலவரும் பண்டிதரும் ஆக்கிய மேலைப் பாடல்கள் அத்திறத்தனவாம். இவர்தம் வித்தக்த் தொடர்பு சங்ககாலத்துக் கபிலபரணர் தம் முறவினை நினைவூட்டுகின்றது. * பாம்பறியும் பாம்பின் கால் *.
கலிவெண்பா
சீராரு மன்றற் றிருநாளிற் செந்தீயை நேராகச் சூழ்ந்துவரு நேரத்தி-லாராநல் லன்புடனே என்கை விரலோ டனையவந்த பொன்புனையுஞ் செல்வப் புதுமலர்க்கை-யின்புடனே ஆக்கும் புதுக்கலத்தி லானநறுஞ் சோற்றையந்நாட் டூக்கிப் படைத்த சுடர்த்தொடிக்கை-நாக்குளிர உண்டமிச்சி லெச்சிலென வுன்னது தெள்ளமுதாய்க் கொண்டுபிசைந் துண்ணக் குழைக்குங்கை-அண்டிவரும் ஆண்டெழுமூன் றின்றுவரை யன்புநிலை மாருமல் வேண்டுவவெ லாம்புரியு மென்மலர்க்கை-மூண்டுவரும் பண்டைப் பழவினையாற் பாயோ டெனைக்கிடத்திக் கொண்டுவருத்துங்கொடுநோய் கூடுங்கால்-உண்டாகுஞ் சர்த்திக்கு நெஞ்சைத் தடவுங்கை சர்த்தியின்மேற் சுத்திக்கு வெண்மணலைத் துரவுங்கை-சுத்திசெய வெந்நீரைக் கொண்டு கழுவுங்கை விட்டுமிழ்ந்த அந்நீரை யப்பா லகற்றுங்கை-பின்னிர மாற்றுங்கை மாற்றி வருங்களைப்புத் தீரவங்கே ஆற்றுஞ் சிவிறிகொண்டே யாற்றுங்கை யாற்றியபின் தூசு துடைக்குங்கை தூப மெடுக்குங்கை தேசுதிகழ் நீறுநுதற் றீட்டுங்கை-யாசையுடன் பக்கத் திருந்து பழந்துணியி னலொற்றித் தொக்க வியர்வை துடைக்குங்கை-மிக்க

செந்த்மிழ் 131
குடலைச் சுருட்டிக் குமட்டிப் புரட்டி யுடலை வருத்தும் வலி யுற்ருல்-உடலடையும் பொல்லாத துன்பத்தைப் போக்கவெகு புத்தியுடன் மெல்லமெல்ல வேதடவும் வித்தகக்கை-யல்லன் மிகச் சீழுஞ்செந் நீரு மலமுஞ் சிறுநீரும் நாளொன்றுக் குப்பலவாய் நண்ணுங்கா-லாளொன்று வாராமல் வாசல் வழியடைத்து மற்றென்னைச் சோரா மற்றுாக்கியிருத்துங்சை-நேரா யொருவர் துணையின்றி யொழித்தமல நெஞ்சில் அருவருப்பி லாத கற்று மங்கை-அருகுளைந்து நாரி வலிக்குதென்றல் நாடியுரு விப்பிடித்து வேரித் தயிலமிடு மெல்லியகை--சேரிலையான் கூட்டுகின்ற வேம்பின் குழைக்குஞ்சத் தாலகல வோட்டுகின்ற காந்தண்மல ரொண்டொடிக்கை
- ஊட்டுகின்ற காய்ந்த குளிகையெல்லாங் காலந் தொறுமுரைத்துத் தேய்ந்த விரலுட்ைய செம்பொற்கை-யாய்ந்தளவு மேன்மறந்து போகாது மிக்க கருத்துடனே பால் கறந்து காய்ச்சிப் பருக்குங்கை-சீலையழுக் கானவைக ளெல்லா மலம்பியடித் துப் பிழிந்து வான வெயின்முகத்து வைக்குங்கை-யானபின்பு சுத்தப் படுத்தித் துடைத்து தறி நான்படுக்கு மெத்தை தட்டிக் கொட்டி விரிக்குங்கை-யத்தருணம் வந்த வுறவினர்க்கு மற்றவர்க்குந் தாம்பூலந் தந்துதவத் தட்ட மெடுக்குங்கை-வந்தோர் மருவாத சொல்லி மன்ங்கலக்கும் வேளை குருநாத னுண்டென்று கூறி-யுருகிவருங் கண்ணீர் துடைக்குங்கை கந்த் வனத் தான் மருந்தை யுண்ணீர்மை யோடுமெனக் கூட்டுங்கை-யொண்ணுதலை நீவுங்கை நீவி நிறைநீறும் பொட்டுமிட
மேவுங்கை வண்ண விரை மலர்க்கை-தாவிலாப்
4027-G

Page 86
132 சிறுவர்
பத்தியங்கள் வைக்குங்கை பாங்கா யருத்துங்கை எத்திசையும் பான்மருந்துக் கேற்குங்கை-குத்தி யரிசி புடைக்குங்கை யாக்குங்கை மாவை யுரிசியுள கூழா யுதவி-வரிசையுடன் வன்னப் பலாவிலையில் வார்த்துப் பருக்குங்கை அன்னம் பசித்தோர்க் களிக்குங்கை-யின்னுமின்னும் எந்தன் பணியன்றி யெந்தை பணி யும் புரியச் சிந்தை யுவந்து செலுத்துங்கை-வந்து புகு நோயா ளருக்கு நுவலு பணி யெப்போதும் தேயாத வன்பினுடன் செய்யுங்கை-நேயமுடன் வந்த குருநாதன் மண்டபத்தைக் கூட்டுங்கை சந்தம் படமெழுகுந் தாமரைக் கை-கந்த மலர் கொய்யுங்கை தட்டத்திற் கொண்டுபோய்ப் பூசனைகள் செய்யுங்கை செய்யா ஞறையுங்கை-நெய்விளக்கை ஏற்றுங்கை யெந்த னிருங்கவலை யைத் தடவி மாற்றுங்கை மாறிலா மா மழைக்கை-சாற்றுமிலை வாங்கி யிடித்து வடித்தெண் பதுநாழி ஆங்கு மருத் தெண்ணெய்க் கநுப்புங்கை-பாங்காக ஊறுகாய் போடுங்கை யோதுவட கம்புரிகை வேறுகாய் வர்க்கங்கள் வெட்டுங்கை-மாறியபின் எண்ணெய்தலைக் கேற்றுங்கை யேற்றிச்சிகைக் காய்
கொண்டு வெந்நீர் முழுக்காட்டு மேத குகை-பின்னீரம் போக்குங்கை குஞ்சிப் புரிபிரித்துக் கொண்டசிக்கு நீக்குங்கை யெல்லா நிறைசெங்கை-மேக்குயருஞ் சங்கக் குறியுடைய தாமரைக்கை யெந்நாளும் பங்கப் படாதுயரும் பாக்கியக்கை-தங்கக்கை வாரமா யெம்மை வளர்க்கவருஞ் சின்னம்மை
தாரமாய்த் தாயாளுள் கை

செந்தமிழ் 133
32. நாவலர்பெருமான்
ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து நல்லூரிலே, கார் காத்த வேளாளர் குலத்திலே ஞானப்பிரகாசர் மரபிலே கி.பி. 1822-ஆம் ஆண்டிலே பிறந்து, கல்வி கேள்வி களிலே தமக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கி, யாழ்ப்பாணத்திலும் தென்னிந்தியாவிலும் வைதிக சைவத் திருநெறியைப் பண்டுபோல நிலைநாட்டி, விழுமிய உரைநடை யிலக்கியங்களாற் செந்தமிழ் மொழியை வளம்படுத்தி, நைட்டிகப் பிரமசாரியாயிருந்து சிவபத மெய்தியவர். நாவலர் பெருமானுடைய மெய்ப் புலமை யிலும் சைவாசாரத்திலும் புலவருக்கு எல்லை கடந்த பற்றுண்டு. அதனல், அவர்மேலதாகப் பல்வேறு வணக் கச் செய்யுள்கள் எழுதிக் காலந்தோறும் வெளியிட்டார் கள். அவற்றுள் இப்பன்னிரண்டுமே இப்போது கிடைத் தவை.
திருவளர் தெய்வத் தமிழ் வள நாடு
செய்த தவப்பயனே ! செந்தமிழ் மக்கள் புந்தியி னிக்குந்
தெள்ளமு தேதேனே ! வரமருள் சைவத் திருநெறி யுய்ய
வந்தருள் தேசிகனே வாடிய பழைய தமிழ்மொழி தழைய
மழைபொழி கலைமுகிலே பரமத திமிரக் குரைகடல் சுவறப்
பருகிடு தவமுனியே பரனருள் நீறுஞ் சிவமொழி வீறும்
பரவிட வருள்குருவே அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய்
ஐயா அடிபோற்றி ஆறுமுகப் பெரு நாவலனுமத்
தரசே யடிபோற்றி (1)

Page 87
34
சிறுவர் ' ܝ
தருமறை முறையுஞ் சிவமத நெறியுந்
தாய்மொழி யும்வேரு ய்த் தவ வழி மாறிப் பவ வழி மீறித்
தலைதடு மாறுங்கால் இருவரு முணரா வொருவன தருளால்
யாழ்ப்பா ணந்தழைய இகபர முதவுந் திருநலை யூரில்
எழுதரு சூரியனே ! பரவரு பிரமச் சரியநன் னிலையிற்
பயிறரு சீரியனே பலபல தமிழ்நூல் பிழையற வுலகம்
பயனுற வருள்குரவா ! அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய்
ஐயா அடிபோற்றி -
ஆறுமுகப் பெரு நாவல ஞமத்
தரசே அடிபோற்றி (2)
வஞ்ச மனத்தர்க் கஞ்சா வுரனும்
மாரு மனநிலையும்
வைதிக சைவ நன்னெறி தழைய
வைத்திடு பேரன்பும்
செஞ்சொ லரங்கின் மஞ்சின் முழங்கிச்
சேரா ருளங்கூரச்
செப்பிடு மதுர்ச் சற்பிர சங்கத்
திப்பிய நாவலமும் விஞ்சு மதிப்பும் நெஞ்சி னினைக்கின்
வேறெவ ருக்குண்டோ மே வல ருட்குந் தூய்மை யொழுக்கம்
மேவிய பாவலனே அஞ்சு வளர்த்துச் செஞ்சொல் வளர்த்த
ஐயா அடிபோற்றி ஆறு முகப்பெரு நாவல ஞமத்
தரசே அடிப்ோற்றி (3)

செந்தமிழ் *እ 35
மந்திர ஞானப் புண்டர நீறு
மருவிய திருநுதலும் மாசறு கண்ணின் மணியணி வடமும்
மலர்தரு மதிமுகமும் தந்திர மெய்ந்நூல் வந்துறை கரமும்
தற்பர னருள்நாமந் தருமறை யோதுந் திருமணி வாயுந்
தவசிவ வழகொழுகுஞ் சுந்தர வடிவுங் கண்டுள மகிழுந்
தூய வரந்தருவாய் சொற்பயில் கழகம் பற்பல நிறுவுந்
தொண்டர்க ளனுகூலா அந்தமில் பெருமைக் கந்தபுராணத்
தன்பா வடிபோற்றி ! ஆறுமுகப் பெரு நாவல ஞமத்
தரசே யடிபோற்றி (4)
சொற்பெறு கடவுண் மெய்ப்பொருளென்பார்
சுத்தப் பொய்யென்பார் துயருறு முயிரே பரசிவ மென்பார் தொன்மைகள் பிழையென்பார் நற்றமி பூழிகழ்வா ராரிய மிகழ்வார்
நல்லருண் மருளென்பார் நலமிகு தொண்ட ரவரிலு முண்டே
நவையென வசைபுகல் வார் பற்பல விதமாய் மற்பொரு கின்ருர்
பாரிலுள் ளோர்களெலாம் பவமற விருமைப் பயனுற வொருநற்
பாதை தெரித்தருளும் அற்புத மதுரச் சொற்பயில் வுதவும்
ஐயா அடிபோற்றி ஆறு முகப்பெரு நாவல ஞமத்
தரசே அடிபோற்றி (5)

Page 88
፲ 86
சிறுவர்
வேறு தெண்ணிலவு மலர்ந்த சடைச் சிவபெருமா
னருள் சைவச் சேவல் கூவ எண்ணிலவு பரசமய விருள்விடிய நீற்றினெளி யெங்கு மேவப் பண்ணிலவு முத்தமிழ்ப்பங் கயமலர
வைந்தெழுத்துப் பணில மார்ப்ப மண்ணிலவு நல்லைவரு நாவலனஞ்
செழுஞ்சுடரை வணக்கச் செய்வாம் (6)
சீர்செய்த வாகம நூற் சிவநெறிசெய்
தவப்பயனுந் திருவார் நல்லை ஊர் செய்த தவப்பயனு மொண்டமிழ்செய்
தவப்பயனு மோத வேலிப் பார்செய்த தவப்பயனு மொன்முகி
நல்லறிஞர் பரவி யேத்தும் பேர் செய்த நாவலனு யவதரித்த
தெனும் பெருமை பேணி வாழ்வாம் (7) அன்ன நடை பிடியினடை யழகுநடை
யல்லவென வகற்றி யந்நாட் பன்னுமுது புலவரிடஞ் செய்யுணடை
பயின்றதமிழ்ப் பாவை யாட்கு வன்னநடை வழங்குநடை வசனநடை யெனப்பயிற்றி வைத்த வாசான் மன்னுமருள் நாவலன்றன் னழியாநல்
லொழுக்கநடை வாழி வாழி (8) சீர்தட்டும் புறச்சமயஞ் சேர்ந்தார்க ளழுக்காறு செற்ற முள்ளோர் ஆர்தட்டிப் பேசிடினு மொருசிறிது மஞ்சாது முகில்போ லார்த்து நேர்தட்டி விடையிறுத்துச் சபைநடுவே
யரியேறு நிகர்ப்ப நின்று மார்தட்டிப் பிரசங்க மழைபொழியு
நாவலன்ருள் வாழி வாழி (9)

செந்தமிழ் Κα 137
மண்ணினுற் பெண்ணினற் பொன்னினல்
வருகின்ற மாசு மூன்றுட் பெண்ணினல் வருமாசு பெருகவருள் புரிவேனிற் பெம்மான் றன்னை வெண்ணிலா மலர்ந்த கொன்றை வேணியான்
முன்னுளில் வென்ற வாறு கண்ணின லன்றியுள்ளக் கருத்தினல்
வென்றவன்ருட் கமலம் வாழி (10)
பார்மதித்த செந்தமிழ்நூ லேடுகளை
யாராய்ந்து பதிப்பித் தோர்கள் ஆர்பதிப்பித் தாலுமங்கே பிழைநுழைத
லுண்டாகு ம ைவக ளின்றிச் சீர் பதித்த நற்பதிப்பு நாவலர் தம்
பதிப்பென்று செப்பு மேன்மைப் பேர் பதித்த பெருங்கல்விச் செல்வனிரு
சேவடிகள் பெரிதும் வாழி ( 11)
தன்னவரும் பிறருமென்று சாராமே
நடுவுநிலை சார்ந்து நின்றே அன்னவர்கள் வழுவியவை யஞ்சாது வெளிப்படுத்தி யறிவை யூட்டு முன்னவனே தமிழ் மக்கள் முதுநிதியே
கற்பகமே முடியாக் கல்வி மன்னவனே யெனவாழ்த்த வந்துதித்த
நாவலன்ருள் வாழி வாழி (12)
நூன்முற்றும்
திருச்சிற்றம்பலம்