கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்

Page 1
திரு ஜெயபாலன் (40)
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்; வன்னிப் பகுதி விவசாயி களி டையே வாழ்ந்தவர் யாழ்பல்கலைக் கழகத் தில் கற்று பொருளா தாரத்தில் பட்டம் பெற்றவர். அங்கு கற் கும் காலே கைலாச பதி,சிவத்தம்பி, நித்தி
ருடன் நெருங்கிப் பழகி அரசியல், சமூக, கலே, இலக்கிய விவாதங்களில் ஈடு முஸ்லிம் ਸੰ பொருளா தார FL ஆய்வு செய்தவர்
S S S S இவற்றுக்கு மேலாக இவர இன்றைய ஈழத்துட துக்கவிதை உலகில் தலேசிறந்து விளங்கும் கவிஞராவார். ஆரியனேடு பேசுதல் என்ற முதலாவது கவிதைத்தொகுதி
܂- . . . ---. ஈழத்து மின்னும் எங்கள் முகங்களும்' என்ற இச்சிறு
Fil-:
· 堅" * * சூரியனுக ஒரிேவிசக் செய்வதைப் படிப்பவர் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம் தமிழ்நாட்டில்கூட இத்தகைய
s கோர் கதைக் கவிதை அண்மையில் வெளிவந்ததில்க்ல,
இதன் உயர்வுக்கும் சிறப்புக்கும் முதற் காரணம்
ஈழத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறப்
■ 氹。r、.量。置、 垩"卤"。翌、 TI STAT **「「Jリー 。Tリ 四
யும் மட்டுமல்ல, திரத்தையும் தியாகத்தையும் இச்சிறு
காவியம் பாடுகிறது.
மானந்தன் ஆகியோ
இவரைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தபோதும்,
போரும் அத்துடன் கவிஞர் தன்னே ஈடுபடுத்திக் கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

See NS
చైA ܓܬ

Page 2

ஈழத்து மண்ணும்
எங்கள் முகங்களும்
வ. ஐ. ச. ஜெயபாலன்
காந்தளகம்
4, முதல்மாடி, ரகிசா கட்டிடம் 834, அண்ணா சாலை Gagradar - 600 002
213, காங்கேயன்துறை வீதி, யாழ்ப்பாணம்

Page 3
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
காவியம் : வ. ஐ. ச ஜெயபாலன் முதற் பதிப்பு : மார்கழி, 1986 C) ஆசிரியருக்கு
முகப்போவியம்
வடிவ அமைப்பு : சோ. ஆனந்த முருகன்
விலை : உரூபா. 11-50
வெளியீடு : காந்தளகம், சென்னை-2
காந்தளக வெளியீடுகள்
1.
எனது யாழ்ப்பாணமே 2. ஈழத் தமிழர் இறைமை
3. தமிழீழம் காட்டெல்லைகள் 4. பறவைகளே 5. கந்தபுராணம்-உற்பத்திக்காண்டம் 6. aus Droit
"அச்சிட்டோர்: சாலை அச்சகம், சென்னை-600 086 தொலைபேசி : 4778 20 (39)

abroofds6).5
அவ்வப்போது
கூட்டுக்குள் வைத்திருந்தும் கொத்தி வெளியே விரட்டிவிட்டும் இளம் வயதிலேயே உலகின் பல பக்கங்களையும், பரிமாணங்களையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பளித்த எனது அப்பா வ. ஐ. சண்முகம் பிள்ளைக்கும் கருவில் இருந்த நாட்களைப் போலவே கூட்டினுள்ளும் விழுந்தும், எழுந்தும், பறந்தும் வெளியிலும் தொடரும் என் நாட்களில் தனது தொப்பூள்க்கொடியை வெட்டிவிடாது கண்ணிராலும் செந்நீராலும் என்னைக் காத்துவருகிற அம்மா
இராமநாதர் இராசம்மாவுக்கும்

Page 4
எனது வாழ்வும் கவிதையும்
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொழுது சில பொருளாதாரப் புள்ளி விபரங்க ளைச் சேகரிப்பதற்காக எனக்குத் தெரிந்த ஒரு அரசு அதிகாரியைச் சந்திக்கச் சென்றேன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நான் பயின்றபோது இளநிலை மாணவியாக இருந் தவர் அவர். மொழி இலக்கிய அறிவு மிகுந்தவர். புள்ளி விபரங்களை விட ஈழத்துக் கவிதைகள் பற்றி நிறையப் பேசினார். புதிய கவிஞர்களைப் பற்றியும், பெண் கவிஞர்கள் பற்றியும், கவிஞர் சேரனது கவிதா நிகழ்வினைப் பற்றியும் வியந்து பேசிக் கொண்டிருந்தபொழுது அவர் பின் வரு மாறு குறிப்பிட்டார்.

வ.ஐ.ச.ஜெயபாலன்
"ஜெயபாலன், விரக்தியும் துன்பமும் ஏற்படு கிற பொழுது உங்களது கவிதைகள், சிறவற்றை வாசிக்கிறனான். அவை எனக்குத் தற்துணிவை யும், நம்பிக்கையையும் தருகின்றது."
ஏடன் பூங்கா நடுவில் அமர்ந்து விலக்கப்பட்ட கணிகளைச் சுவைப்போம், கமது வைகறை ஒளியைத் தடுத்தால் கைலங்கிரியின் மருப்பையும் தகர்ப்போம்.
என்று முடிவடையும் எனது கவிதையை அவர் மனப்பாட மாகச் சொன்னார். அவரது பேச்சு போலிப்புகழ்ச்சியல்ல என்பதை உணர்ந்தபோது மகிழ்ச்சியடைந்தேன். மன நிறைவும், பெரு மிதமும் ஏற்பட்டது. அண்மையில் சந்தித்த தமிழக எழுத்தாளரான திரு. பாலகுமாரன் "கவிதை செத்துவிட்டது; உரைநடை போர் வாளாக அரசோச்சுகின்றது" என்று முகத்தி லடிப்பதுபோலக் கூறியபோது அந்த அரச அதிகாரியின் கபடமற்ற பேச்சு எனக்கு உறு துணையாயிற்று.
"தமிழ் மொழியிலிருந்து தமிழ்க் கவிதையின் ஆளுமை குறைந்துவிட்டதைக்கண்கூடாகட் பார்க் கிறேன். உரைநடை முதன்மையாவதை உணர் கிறேன்" என்று விவாதித்த பாலகுமாரன் “என் தலைமுறையில் சரியான கவிஞன் இல்லாததும் காரணம்" என்று குறிப்பிட்டார்.

Page 5
ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்
ஈழத்தில் முகிழ்த்துவரும் தேசியக் கலை இலக்கிய வடிவங்களுள் ஈழத்துக் கவிதைகளின் முன்னோடிப் பாத்திரம் பற்றி அவருக்கு எடுத்துச் சொன்னேன். நமது வாழ்வோடு கவிதைகள் ஒட்டி உறவாடுகின்றன. சொல், உருவம், உள்ள டக்கம் என்பவை தொடர்பாக ஒரு ஆரோக்கிய மான குழந்தையைப் போலவே நமது மடிகளில் கவிதை வளர்கிறது. இருந்தபோதும் கவிதை யின் நெருக்கடி பற்றிப் பலர் அடிக்கடி குறிப்பிடு கிறபொழுது, காட்டுக் கொடிகளைப் போலக் கவலை என்னைப் பற்றிப்படர்கிறது.
கவிதையின் நெருக்கடி பற்றிப் பேசுகின்ற பலரும் தமிழகக் கவிதைகள், ஈழத்துக் கவிதைகள் எனப் பகுத்தே ப்ார்க்கிறார்கள். குறைந்தபட்சம் இந்த நெருக்கடிக்கு ஈழத்துக் கவிதைகள் தாக்குப் பிடிக்கிறதாகவே அவர்களுள் பலர் கருதுகின் றார்கள். இதைவிட ஈழத்துக் கவிதைகளின் வாழ்வு அம்சத்தையும், அந்நியப்படாத தன்மை யையும், நேர்மையையும், தெளிவையும் பற்றி இளம் விமர்சகர் நாகார்ஜுனனிலிருந்து கவிஞர்-இன்குலாப் வரை பலர் பேசக் கேட்டிருக் கிறேன். குங்குமம் இதழில் எழுத்தாளர் சுஜாத் தாவும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதன் அர்த்தம் ஈழத்துக் கவிதைகள் யாவையுமே தரமானவையோ கவித்துவமுள்ள வையோ என்பது அல்ல. கோவையில் கவிஞர்

வ. ஐ. ச. ஜெயபாலன்
புவியரசுவைச் சந்தித்துப் பேசியபொழுது மேற் கண்ட விடயங்களை ஒப்புக்கொண்ட அவர் பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் நீர்த்துப் போயிருக்கிறதாகக் குறிப்பிட்டார். கவிதையை யாவருக்கும் புரிகிற கலையாக்குகிற அவசியமான முயற்சியில் ஈடுபடுகிறபோது, சிலசமயம் கவித் துவத்தைக் கோட்டைவிட்டு விடுவது அல்லது நீர்த்துப்போவது நேர்ந்து விடுகிறது. கவிதை தனக்கு இயல்பான "பண்"ணை இழந்திருக்கிற போது இத்துன்பம் அதிகரித்து விடுகிறது.
தமிழ்க் கவிதையின் சமகால நெருக்கடி, தமிழ்க்கலை இலக்கியங்களின் சமகால நெருக்கடி யின் ஓர் அம்சம் மட்டுமே. உரைநடை இயல் பாகவே சமகால வாழ்வின் தொனியைப் பெற் றிருக்கிறதில், மண் மணக்கிறதில், மரபுகளின் ஆளுமையில் வேரூன்றி நிற்கிறதில் நல்ல உரை நடை இலக்கியங்களைப் பொறுத்து இந்த நெருக்கடி தெரியாமல் போய்விடுகிறது. கலைஞனின் அந்நியப்பட்ட தன்மை, சமூகப் பொறுப்பின்மை, உலகையும் வாழ்வையும் பற்றிய அவனது பார்வை பற்றிய கோளாறுகள், உள்ளடக்கம் பற்றிய பிணி அவனது படைப் புகளைத் தொற்றி நிற்கிறது. மரபுகளை ஒட்டவே அறுத்தெறிந்து விட்டு நாதமில்லாத வசனங்களைப் பற்றிக்கொண்டு உயிர் பெறுகிற ஆகாயத்தாமரைக் கவிதைகள் பல மக்களிட மிருந்து அந்நியப்படுவதற்கு-நான் அந்நியப்

Page 6
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
படுகிறேன். நீ பந்தயம் பிடி என அடம்பிடித்து நிற்பதற்கு நாம் என்ன செய்வது? மண்ணி லிருந்தும் மரபுகளிலிருந்தும் அவற்றை மீறி எழுந்து, செழித்துப் பரந்து படுகிற கவிதை களோடு மக்களுக்கு என்றுமே சம்மதமுண்டு.
எனது அதிகம் படிக்காத பாட்டன்மாரதும் பாட்டிமார்களதும் கலை இலக்கிய ரசனை களைப் பற்றிய கதையை நான் உங்களுக்குச் சொல்லுவேன். அவர் க  ைள ப் போன்று நெஞ்சார்ந்த ரசிகர்களை இந்த நாட்களில் நான் பார்த்ததில்லை. நான் நெடுந்தீவில் வசித்தபோது அங்குள்ள சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்கள் தோறும் வருடா வருடம் சித்திரைப் பெளர்ணமியன்று சித்திர புத்திரனார் கதை படிக்கப்படுவதை என் பாட்டி பாட்டனுடன்
சென்று பார்த்தும் அநுபவித்தும் இருக்கிறேன்.
'சித்திர புத்திரனார் சிவனார் பெருங் கதையை" என்று பண்ணோடும், கவிதை யோடும் கதை படிக்க ஆரம்பித்ததுமே ஊர் மக்கள் ஒன்றிப் போய் விடுவார்கள். தலையை ஆட்டி ஆட்டிக் கதையை ரசிப்பார்கள். பக்கத் தில் திரும்பி அடுத்தவரிடம் தாம் கண்டெடுத்த கவிதையை நயந்தும் வியந்தும் பேசுவார்கள்.
கத்தோலிக்கப் பாடல்களைப் பாடியும் பழைய ஏற்பாட்டின் கவிதைகளை வாய்விட்டுக்

வ. ஐ. ச. ஜெயபாவன்
கூறி ரசித்தும், திருமணம்வரை கத்தோலிக்கராக இருந்த என் அம்மா கவிதைகளை அனுபவிக்கக் கற்றுத்தந்தாள். இத்தகைய பலரை நான் தேவாலயங்களில் பார்த்திருக்கிறேன். மட்டக் களப்பின் முஸ்லிம் மக்களை நினைக்கிறபோதும் முதலில் ஞாபகம் வருவது அவர்களது இனிமை யும் செழுமையும் மிக்க நாட்டார் பாடல்களே.
தேவாரம், திருவாசகங்களை வெறுமனே அவர்கள் பாராயணஞ் செய்வதில்லை. மார்கழி மாத முன்பணி விடியல்களில் எனது பாட்டன் பாட்டிமார்களும், கிராமத்து மக்களும் திரு வெம்பாவைப் பாடல்களை உணர்ந்தும், வியந்தும், நெகிழ்ந்தும், உருகியும் பாடு வார்கள்.
கவிதை செத்துப் போய் விடவில்லை. கவிதை செத்துப் போகப் போவதுமில்லை. சமகாலக் கவிதைக்குக் கிடைத்திருக்கிற நோய் கவிஞர்களுக்கு இருக்கிற நோயே யாகும். உரை நடை போல மக்களின் பேச்சு வழக்கிலிருந்து, குறிப்பாக, பேச்சு வழக்கில் விரவியிருக்கிற கவிதை அம்சங்களிலிருந்து, நமது நீண்ட கிராமிய இலக்கியங்களின் பாரம்பரியத்தி லிருந்து, தொன்மையும் காத்திரமும் மிக்க நமது கலைகளின் வழியிலிருந்து எழுந்து நின்று தொடுவானங்களைப் பிடித்து உலுப்புகிற

Page 7
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
ஆளுமையை,அநுபவத்தை வளர்த்துக் கொள்ளப் பல கவிஞர்கள் தவறி விட்டார்கள். பேச்சு வழக்கில் தொற்றி நிற்கிற உரைநடைக்காரர் களுக்கோ ஆளுமையில்லாத போது கூட மக்க ளோடு உறவாட முடிகிறது. V
இருந்த போதும் பொதுவாகப் பார்க்கிற பொழுது தமிழ்க் கவிதை இலக்கியங்கள் மட்டு மல்ல, தமிழ் உரைநடை இலக்கியங்களும் கூட ஆயிரங்காலத்துத் துரவுகளுக்குள் தவளை களாகக் கிடந்தே குரல் கொடுக்கின்றன. இவற் றின் நீச்சலும், வேகமும், வீச்சும் பல சமயங் களில் துரவுகளை மீறி வெளி வருவது இல்லை.
துரவுகள் என்கிறபொழுது, வெறுமனவே இயற்கையினதும் வாழ்வினதும் வெளித் தோற் றத்தை மட்டுமே கண்டுகொள்கிற ஊனக்கண் பார்வையையும், தேய்ந்து போன ஒரே தடத் தில் வேஷங்களை மாற்றி மாற்றி வித்தைகள் காட்டுகிற பண்பையுமே நான் இங்கு குறிப்பிடு கின்றேன்.
உலகம் இந்த நூற்றாண்டுக்குள் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. பல துறைகளில் விஞ் ஞானமும் தொழில் நுட்பமும் ஊடுருவிப் பாய்ந்து, பலதிசைகளிலும் நமது வாழ்வைப்
: 0

வ. ஐ. ச. ஜெயபாலன்
பாதித்திருக்கிறது. மண்ணும் இயற்கையும் போலவே இரும்பும், பிளாஸ்டிக்கும், மின்சார மும் நமது வாழ்வுடன் ஒருமித்து விட்டன. காதல் இழப்பையும் தோல்விகளையும் போலவே இயந்திரங்களின் சப்தமும் புகையும், எண்ணெய் களின் அழுக்கும் நமது துயரங்களாகி விட்டன. மேலே இருந்து நசுக்குகிற கூட்டங்களையும் நசுங்குதலை எதிர்த்துப் போராடும் மக்களை யும் இந் நூற்றாண்டு வெகுவாகப் பாதித்திருக் கிறது.
யதார்த்த உலகத்திற்கும் காட்சி உலகத் திற்கும் இருக்கிற இடைவெளிகள் எல்லையற்று அகன்றுவிட்டன. வேத காலங்களிலேயே இருளில் கயிற்றைப் பாம்பாக எண்ணி மயங்கியிருக் கிறார்கள். இது பகலிலேயே நிறைய மயக்கங்கள் வருகிற காலம்.
தேய்ந்து போன தடங்களை விட்டு, கலை இலக்கியங்களை அது உரைநடையானாலும் சரி கவிதையானாலும் சரி, எப்பொழுது மீட்டுக் கொண்டு வரப்போகிறோம்? சர்வதேசத்தைப் பார்க்கிறபோது நமது கவிஞர்கள் மட்டு மல்ல நமது நாவலாசிரியர்களும், மேடைக் கலைஞர் களும் கூட நூற்றாண்டுகள் பின்தங்கி நிற்பதைக் காண்கிறோம். பலர் ஏற்கெனவே தயாரிக்கப் பட்டிருக்கிற வாய்பாடுகளைப் பற்றிக்கொண்டு பூச்சூடியும், சரிகை வேலைப்பாடுகள் செய்தும், வண்ணந்தீட்டியும் கவிதைகளையும் நாவல்களை
... 1

Page 8
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
யும் உற்பத்தி செய்து விடுகிறார்கள். சன்னல்கள் இல்லாத வீடுகளுக்குள் காமாலைக் கண் களோடும், பார்வைக் கோளாறுகளோடும் வாழ் கிற எமது மக்கள் அவற்றை ஆஹோ, ஓகோ எனக் கொண்டாடுகிறார்கள். பல கவிஞர் களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அகில உலக ரசிகர் மன்றங்கள் இல்லாததுதான் குறை.
வெறும் தோற்றங்களை உ  ைட த்துக் கொண்டு தன்னைச் சுற்றி நிலவுகின்ற இயற்கை யையும், உயிரினங்களையும், மனிதர்களையும் இவற்றுக்கிடையிலான பல்வேறு உறவுகளையும் அவற்றின் உண்மைகளையும் கலைஞர்கள் - அவர்கள் ஓவியம் தீட்டினாலும் சரி, காவியம் படைத்தாலும் சரி-தமது ஞானக்கண்களால் எப் போது கண்டுகொள்ளப் போகின்றார்கள்? எப்பொழுது அவர்கள் சூரியனையும், பள்ளத் தாக்குகளில் வாழுகிற மனிதரையும், ஒளியைத் தடுக்கிற மலைகளின் இரகசியங்களையும் பற்றி மக்களுக்குக் கூறப் போகின்றார்கள்?
நமது மூதாதைக் கலைஞர்கள் பலர் தங்களது சம காலங்களில் நம்மைவிடவும் அதிகம் சாதித்திருக்கிறார்கள். பல சர்வதேசக் கலைஞர் கள் நமது சமகாலங்களில் நம்மை விடவும் அதிகம் சாதித்திருக்கிறார்கள். இதுபற்றிய கவலைகள் எனைப் பற்றிக் கொண்டபிறகு நான் எழுதிய முதல்படைப்பு இந்தச் சிறுகாவியமாகும்.
2
 

வ். ஐ. ச. ஜெயபாலன்
மனித வாழ்வு சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒலிக்குறிப்புகளாலாகிய ஒரு சர்வதேச மொழியாகும். மனித வாழ்வு ஒரு அகில உலக இலக்கியமாகும். எனது காவியத்தின் நிகழ்புல மாகிய வன்னிக்கு மட்டுமே சொந்தமானதல்ல அது. எனினும் எனது வன்னி மண்ணும் வளங் களும் தனித்துவம் கொண்டவை. அவை என்னிடம் வாழ்வு எனும் சர்வதேச மொழியை வன்னிக்கே உரிய வட்டார வழக்கில் வளமாகப் பேசியிருக்கிறது.
உலகம்முழுவதும் கடல் உப்புக் கரிக்கிறது. நீல அலைகளை விதைத்து வெண்நுரைகளை அறுவடை செய்கிறது. மீன்களுக்குப் பிரபஞ்சமா கிறது. எனினும் என்னுடைய மன்னார்க்கடல் மன்னார்க்கடல்தான். திருகோண மலை யின் கொட்டியாரக் குடா கொட்டியாரக் குடா தான். மட்டக்களப்பின் மீன்பாடும் வாவி மீன் பாடும் வாவிதான்.
வன்னியில் வாழ்வும், இயற்கையும், காலங் களும் வாய்வழிச் சொல்லி வந்த விாழ்வின் கதை களை நான் காவியமாக்கி இருக்கிறேன்.
"தமிழ்க்கவிதை செத்துவிட்டதா?’ என்ற கேள்விக்கு 'ஈழத்து மண் ணும் எங்கள்
is

Page 9
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
முகங்களும்’ என்கிற இச்சிறு காவியத்தைப் பதிலாக்குகிறேன்.
இது ஈழத்துத் தேசியக் கலை இலக்கிய மரபிற்கு நான் செய்திருக்கிற முக்கியமான பங்களிப்பாகும். மரபின் செழுமையை நுகர்ந்து, தேய்ந்துபோன தடங்களை மீறி அகன்றும் ஆழ்ந்தும், உயர்ந்தும் செல்வதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேனென்பதே இக் காவியத்தின் வெற்றிக்கு அளவுகோலாகும்.
பாதாள நதிகள் கால்களை முத்தமிட விசுவ ரூபம் பெற்றுத் தொடுவானங்களை அசைக்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டாமற் போகலாம். ஆனால் நாளையமாகவிஞன் ஏறி நிற்பதற்கான உயர்ந்த மலைச்சிகரமாகிற வாய்ப்பு எனக் குள்ளது.
அவ்வப்போது கண்ட கேட்ட உணர்ந்த உண்மை வாழ்வுதான் இக்காவியத்தின் அடிப் படை. இந்த வகையில் பலர் எனக்கு உதவி யுள்ளனர். இசைக் கல்லூரியில் பயிலும் ஈழத்து மாணவி தமிழ்ச்செல்வி கனகசுந்தரம் அண்மை யில் தனது சினேகிதி ஒருத்தியின் கதையை எனக்குச் சொன்னார். அக்கதை என்னை வெகுவாகப் பாதித்தது. இந்த வகையில் என்னைப் பாதித்தவர்கள் பலர். அனைவருக்கும்
14

ஜெயபாலன் * عن هي " الذي
قسمتشتتفقتلقتثمانية
எனது நன்றிகள். நான் கண்ட கேட்ட மனிதர் களின் வாழ்விலிருந்துதான் ஒவ்வொரு பாத் திரத்தையும் நான் வனைந்தேன். மண்ணி லிருந்து கலைத்துவமுள்ள ஒரு குயவன் பாத்திரங் களை வனைவது போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பின்னர் அறவழிப் போராட்டக் குழு உறுப் பினராகவும் அறிமுகமாகி, அன்பு செலுத்திய திரு. க. சச்சிதானந்தன் தமது 'காந்தளகம்" வெளியீட்டகத்தில் இந்நூலை வெளியிட முன் வந்தமை மகிழ்ச்சி தருகிறது.
இக்கவிதை நூலுக்கு எனது நண்பரும் ஒவியருமான ஆனந்தமுருகன் வடிவமைப்புச் செய்திருப்பது என்னை மேலும் மகிழ்ச்சிப் படுத்துகிறது.
சுவடியைப் பிரதியெடுப்பதில், எழுத்துப் பிழைகள் திருத்துவதில் எனக்கு உதவிய கவிஞர் அக்கினி புத்திரன், திரு. சு. வேலாயுதம் பிள்ளை, திருமதி இராசம்மா கோபால கிருஷ்ணன், ஈழத்து இளம் கவிஞர் அருட்குமாரன் யாவரும் எனது அன்புக்குரியவர்கள்.
S

Page 10
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எனது நண்பன் தில்லைநாதனைப் போல ஈழத்தில் தொடர்ந்திருந்து இருள் கப்பிய பாதைகளில் நின்று போராடுகிற எமது மக்களது கைகளில் ஒரு சிறு தீப்பொறியாக இந்நூல் சுடருமானால் காலமெல்லாம் நான் மகிழ்வேன்.
6al. 2 F. ஜெயபாலன்
30ஏ, நாட்டு சுப்பராய முதலி தெரு ~ , : . மைலாப்பூர் 20-10-1986 சென்னை-600 004
鲁奇

ஒன்று
பாலி ஆற்றின் கரையில் இருந்தேன் மணல் மேடுகளில் உயிர் வற்றும் நாணல்கள் காற்றில் பெருமூச்சைக் கலக்கும். இரு மருங்கிலும் பருத்து முறுகித் தொந்தி வைத்த கிழட்டு மருத மரங்கள் கீழே புதியவை.
கூனிக் குறுகிக் கூசிக் கூசி ஏழ்மைப் பட்டதோர் நிலக்கிழான் தனது குலத்தெரு வீதியில் நடை மெலிதல்போல் கோடை தின்ற ஆறு நடந்தது. நாணற்புதர்களை நக்கி நனைத்தது. அல்லிக் கொடிகளின் கிழங்குகளுக்கு
AF. T.-2 w Y

Page 11
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
நம்பிக்கை தந்தது. துாற்றி அகலும் பறவையைப் பார்த்து மீண்டும் மாரியில் வருக என்றது. மண்ணுள் பதுங்கி இரு என புல் பூண்டுகளின் விதைகளுக் குரைத்தது. ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி முட்டைகள் தம்மை மணலுள் புதைத்துசேற்றுள் தலைமறை வாகி வாழ்வுக்காகப் போரிடச் சொன்னது.
நீட்டி நிமிர்ந்து முதிய மருத மரத்தின் வேர்களில் சாய்ந்து கிடந்து வானை நோக்கினேன் மருத மரத்தின் இலைகள் வேய்ந்த முகட்டின் ஊடே வெண் நெருப்பாக எரிந்தது வானம். பெருமூச் செறிந்தேன். தொடர்ந்தன பற்பல பெருமூச் சொலிகள் துணுக்குற்றுப் போனேன். எதிரொலிப்புகளா?
இல்லை.இல்லை பிரபஞ்சத்தின் குரலா?
proour? மீண்டும் ஒருபெருமூச் சோடு விம்மித் தணியும் காடு. அச்சமடைந்தேன். , பாட்டி கதைகளில் வருவது போல நிஜமாய் மரங்கள் பேசுதல் கூடுமோ?
ASSSiSSSiSSSSSSSSJSSSSAS SSSSLLL SLSS LLLSH HqE SSSASqSASASMASSSSSASASAS ASSSqqq SqqSqSqSqSqSqS SSAASS S AAASAASAASS SSSSS S SqiSiq S SqSqqqqSSASAAA AiAiAiAiSSS

au 勢 *。 ஜெயபாலன்
ஊழியின் முன்னே சாபம் பெற்று மரங்களாய்ச் சமைந்த *மானிடம் போல்நின்றன மரங்கள். "வேர் ஊன்றாத கீழ்ப் பிறப்புள்ளே
பறவையை நம்பினும் மனிதனை நம்பாதே" என்னுமோர் முதிரை மரம். சிறிது நிசப்தம் மீண்டும் பெருமூச்சு. என்மீது குற்றம் சுமத்துதல் போல மருத மரங்கள் கொம்பரை சிலுப்பும்.
மருத மரங்களே மருத மரங்களே தீதெது செய்தேன் செப்புக என்றேன். மீண்டும் மீண்டும் பெருமூச் செறிந்தன மருத மரங்கள். நூறு நூறாண்டுகள் இதே இதே கரைகளில் வேரும் விழுதுமாய் வாழ்பவர் நாங்கள் நூறு நூறாண்டாய் உன் வரலாறு நமக்குத் தெரியும்.
'மீன் கொத்திப் பேச்சு மாரியோடு போச்சு
மனிதனின் பேச்சு விறகொடித்ததும் போச்சு என்பது முதுமொழி’ என்றது ஒரு மரம்.
"உஸ்"என அவற்றை அதட்டி அடக்கி "மகனே" என்றது
கோடையில் நலிந்த பாலி ஆறு. அம்மா என்றேன்.

Page 12
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எழுந்திடு மகனே! உனக்குக் கீழோர் பெண் துயில்கின்றாள். மருத மரங்களின் சினேகிதியாகவும் நாணல் புதர்களின் தோழியாகவும் சிறு பிராயத்தே பரிச்சயமாகி எமது கண்முன்னே இளமை அடைந்தவள். கோடை நதியையும் மிஞ்சும் துயரினள். வாலைக் கவியையும் மிஞ்சும் கனவினள் எழுந்திடு மகனே!
பதறிப் போனேன். எனக்குக் கீழோர்பெண் துயில்கிறதா? மயிர்க் கூச்செறியத் துள்ளி எழுந்தேன். தாகம்.தாகம் என்றொரு இளம்பெண் முனகிடக் கேட்டேன். 'தவித்த விடாய்க்குத் தண்ணிர் தராத
வேரிலா முண்டம்’ என்றெனை விழித்து வசவுகள் பாடிய மருத மரங்களை மீண்டும் அதட்டும் பாலி ஆறு.
'தாகம்.தாகம்."
நான் படுத்திருத்த மணல் மேட்டுள்ளே இளம் பெண் முனகல்
மீண்டும் காடுகள் என்னைத் திட்டி சுலோகம் பாடும். ஆற்றில் இறங்கினேன் − அல்லி இலையில் தண்ணிர் மொண்டு

வ. ஐ. ச ஜெயபாலன்
மணல் மேட்டின்மேல் அள்ளி இறைத்தேன். 'நன்றி' என்றது,மீண்டுமப் பெண்குரல்.
மண்ணைப் பிழிந்தொரு தேவதை போல ஈரலித்த மணலை உதறி எழுந்தனள் கிராமத்து அழகி ஒருத்தி . அவளது உடலில் ஐந்து காயங்கள்.
"அடிமை விலங்கைச் சுமந்திடும் எனது
மக்களுக்கு மருந்தும் விருந்துமாய் குருதியும் தசையும் தந்தேன்' என முறுவலித்தாள். மெல்ல நடந்து ஆற்றில் இறங்கி நாணல் புதர்களின் பின் புறமாக வழமையாக அயல் கிராமத்து பெண்கள் குளிக்கும் பகுதியில் மறைந்தாள். மயிர்க் கூச்செறிந்து மரமென நின்றேன்.
**வேரும் விழுதும் அற்றவன் எனினும்
நல்லதோர் காரியம் செய்தனன்' என்று ஆலமரம் ஒன்று முனிவர் போல் உரைக்கும்.
தி w
சூரிய ஒளியில் கண் சிமிட்டியது பாலி ஆறு. மீண்டும் சிறு நிசப்தம் நிசப்தத்தின் எல்லையாய் ஓங்கும் ஒரு கீதம்.
21

Page 13
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
அகால மரணமாம் பேரரக்கன் ஆயுதபாணியாய் வருகின்றான் மானிட மகனே விழித்தெழு வாழ்வெனும் மந்திர வாளை எடு மண்ணாய் விண்ணாய் சமுத்திரமாய் மாண்புறும் அன்னை மண் அறைகூவும் ஆயிரம் மைந்தரின் இருதயங்கள் அன்னை மண்ணுள் துடிதுடிக்கும் ஆயிரம் ஆயிரம் இதயங்களும் விடுதலைப் போருக்கு எமை அழைக்கும்.
கீதம் கேட்டு, பாலியாற்றின் இரு கரைகளிலும் மேடிட்டிருந்த பூமியுள் இருந்து **விடுதலைப் போருக்கு எழுந்திடுவீர்
வெற்றியால் எமக்கு உயிர் தருவீர்”* என்கிற முழக்கம் VN சுப்பிரபாத சுலோகம் போன்ற விடுதலை முழக்கம். திடீரென வெடிப்பொலி திடுக்குறும் மனவெளி. மிக மிக அண்மையில் துப்பாக்கி சன்னதம். ஆற்றினைத் தாண்டி காட்டினுள் பாய்ந்து ஒரடிப் பாதையில் ஓடி மறைந்தேன்.

இரண்டு
ஒரு சில நாட்களின் பின்னர் மீண்டுமோர் நடுப்பகல் வேளை ஆற்றுக்கு வந்தேன். திகிலும் அதிர்ச்சியும் வடிந்து போயிருந்தும் ரகசியம் சுமந்த
இளைப்பும் களைப்பும் நெஞ்சில் நிறைந்தது.
முன்னர் இங்கு நான் இருந்த நடுப்பகல் அயல் கிராமத்தில் சிங்கள இராணுவப் படைகள் பாய்ந்தன. கோலியாத்தினை சிறு கவண் தாங்கி தாவீதாக எதிர் கொண்டெழுந்தனர் எனது தோழர்கள்.
நெடுநேரத்து எதிர்ப்போர் முறிந்து பின்வாங்கிய என் தோழர்கள் தம்மை ஏதோ ஒரு சக்தி நில் என நிறுத்தும். பாலியாற்றைக் கடந்த போது
23.

Page 14
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
**விடுதலை விடுதலை
மீண்டும் உயிர்ப்'பென மண்ணுள் இருந்து குரல்கள் எழுந்ததாம். மீண்டும் எதிர்த்துத் தாக்கும் முடிவு என் தோழர்களிடத்தே தொற்றிக் கொண்டதாம்.
ஐந்து காயங்கள் கொண்ட ஒரு பெண் மருத மரங்களைப் பணித்ததும் மருத மரங்களின் கொம்பர்கள் வளைந்தெம் தோழரைத் தூக்கி ஒளித்து வைத்ததும் ஆற்றில் இறங்கிய இராணுவ வண்டிகள் மணலிலும் சேற்றிலும் மாட்டிக் கொண்டதும் எனது தோழரின் எறி குண்டுகளுக்கும் துப்பாக்கி வேட்டுக் கணைகளுக்கும் தப்பி ஓடிய எதிர்ப் படைகளை வெள்ளைக் குதிரை மீதமர்ந் தொருவன் துரத்திச் சென்றதும் இப்படி இப்படி எத்தனை புதுமைகள் என்னரும் தோழர் எடுத்துரைத்திருந்தனர். **விடுதலைப் போரில்
நாம் தனித்திடல் என்ற பேச்சே இல்லை. வீழ்ந்த எம் தோழர் உயிர்த்தெழுவார்கள். எம்தாய் மண்ணும் எமது கடலும் எம் வரலாறும் துணை வரும்" என்கிற தீர்க்க தரிசனம் அன்றைய பொழுதில் இப்படியாக நிறைவு பெற்றது.
24

வ. ஐ. ச. ஜெயபாலன்
யார் அத் தோழி? யாரோ அந்த வெண் குதிரையின் வீரத் தோழன்? ஊர் தெரு வீடெலாம்
இது ஒரே கேள்வி.
காட்டுள் விழுந்த
சிறு தீ போன்ற இரகசியத்தை என் நெஞ்சில் பொதிந்து சுமையாய்ச் சுமந்ததில்
இளைத்திருந்தேன் நான்.
அச்சத்தோடும்
பய பக்தியோடும் தாமரை இலையில் தண்ணீர் மொண்டு கிழட்டு மருத மரத்தடி யிருந்த மண் மேட்டுக்குத் தண்ணீர் ஊட்டினேன். மீண்டும் அவ்வதிசயம் நிகழ்ந்தது.
மீண்டு மென் கண்கள் அகல உடல் புல்லரிக்க ஐந்து காய அழகி எழுத்தாள். உடலில் படிந்த மணல் துடைத்தபடி ஆற்றுள் இறங்கி நாணல் புதர்களின் பின்னே மறைந்தாள். காலம் நகர்ந்தது. மூச்சடைத்திருந்தன மரங்களும் செடிகளும்.

Page 15
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வானில் இருந்து தேனின் மழையெனப் பாடல் பெய்தது. கோடை முகிலிலோர் கந்தர்வன் அமர்ந்து கின்னரம் மீட்டும் காட்சி தெரிந்தது.
நெட்டை நெடு மரங்கள் - தமது " நீண்ட இலைக் கரத்தால் கட்டிய கூரைதனைப் பிரித்து-ஆற்றில் கனகம் மணி வைரம் கொட்டிடும் சூரியனின் மகளோ-இந்த சுதந்திரப் பூங்குயிலாள். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பென ஆதியில் பூட்டி வைத்த ஜன்ம விலங்கொடித்தாள்-பெண்ணும் மானிடம் என்றுரைத்தாள். பெண்கள் விடுதலையும் எங்கள் தாய் மண்ணின் விடுதலையும் - இரு கண்கள் என வாழ்ந்தாள் நம்து காலத்தை வென்று விட்டாள்.
சற்றைக் கெல்லாம் நாணலை விலக்கி ஆற்றை அகன்று வெண் மணல்மீது கால்களைப் பதித்த அத் தேவதை முன்னே திகைப்புடன் நின்றேன். துணிவை வருவித்து யார்என வினவினேன். *ரதியெனப் புன்னகை பூத்தனள் தேவி.
யார்.யார்.அந்தப் புராணத்து ரதியா? நீங்கள் திருமதி மன்மதனா என ஒரு கணம் திகைத்தேன்.
26

வ.ஐ. ச ஜெயபாலன்
கல கல சிரிப்புடன் தரையில் அமர்ந்தாள். பக்கத் தமர்ந்து செவிகளைத் தந்தேன் சென்ற வருடம் மல்லாவி என்கிற அயல் கிராமத்தை சிங்கள அரசின் படைகள் தாக்கிய சேதி தெரியுமா கவிஞனே உனக்கு. அன்று அந்தக் கிராமத் தெருக்களில் தொலைந்த தமிழ்ப் பெண் நான்தான் என்றாள்.
யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழகத் தேநீர்ச்சாலையில் தோழன் ஒருவன் மல்லாவிக் குளத்திலே ராணுவம் புகுந்ததும் ரதி யெனும் தாமரை சிதைந்ததும் உரைத்த ' ஞாபகம் மின்னும் .
*ரதி"என நெஞ்சத்து ஆழத்திருந்து
வாஞ்சை தொனிக்க வோர் வார்த்தை உரைத்தேன். எம்மவள் ஒருததி இவள் எனும் நெருக்கம் மகிழ்ச்சி தருவது
உயிர்த் துடிப்புள்ளது. ரதி உனக்கென்ன நடந்தது தோழி? அனுதாபத்தைக் கண்களில் தேக்கி அவளது பதிலை எதிர்பார்ந்திருந்தேன்.
எதனைச் சொல்வேன் எனைச் சிறைப் பிடித்த ராணுவ மிருகத்தை மருத மரங்கள் வேர்களால் இடறி
27

Page 16
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வீழ்த்திய கதையையா? ஆற்றில் பாய்ந்த என்னை நோக்கி அரக்கரின் றைபிள்கள் கனலும் ஈயமும் எய்த கதையையா? பாலிஆறு என்னும் பெருந்தாய் புதுப் புனலால் எனைஏந்திய கதையையா? வெண் குதிரையிலோர் வீரன் வந்தெனை வெண் மணல் மேட்டுள் மறைத்த கதையையா? எதனைச் சொல்வேன்? மீண்டும் என் ரதி மெளனத் தமுங்கினாள்.
**ரதி.
அக் கொடியவர் உன்னைக் கற்பழித்தனரா?" உறுத்தலோடும் மனப் பதைப்போடும் கேட்டேன். * (διμπι Πr
சராசரித் தமிழ்ப் பயலே' காறி உமிழ்ந்தாள். உருத்திர தாண்டவமாடின மரங்கள் தூஎனக் காற்றில் நீர்சிந்தியது பாலி ஆறு.
ஒன்றும் புரிந்திலேன். எங்கோ எங்கோ தவறொன்றுள்ளது என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது. 'நிலையில்லாத மனித விலங்கினுள்
ஆண்பால் இழிந்தது" என்றது காடு.
28

வ். ஐ. ச. ஜெயபாலன்
iai S AAASeS SSLS SSLSSSSSSALASS L
"பார் பார் போராட்டத்தில்
ஆண் வதை பட்டால் தியாகம் என்பதும் பெண் வதை பட்டால் கற்பிழப் பென்பதும் ஆண் தலைப்பட்ட சமூக நியாயம்" தூஎனத் துப்பும் தாய்மை பொய்யாப் பாலிஆறு. முகத்தில் சிதறிய ஆற்று நீர் துடைத்து திகைப்புடன் நின்றேன்.
தவறொன்றுள்ளது. காட்டுக் கறுப்பு சங்கிலி வைரவன் போன்ற தவறு.
காலம் காலமாய் ஆண்கள் எம்விடம் உள்ளது என்கிற உண்மை உறைத்தது.
மன்னித்திடுக ரதிஎனப் பணிந்தேன். கண்ணிர் மல்கிடக் கால்களில் விழுந்தேன். **கைதியான மானிடம் மீது ஆணெனில் உடல்வதை பெண்ணெனில் பால் வதை இரண்டுமே ஒடுக்கப் படுகிற மானுடம் மீது ஒடுக்கும் காக்கி ஓநாய் புரியும் வதையென அறிக...”* கோபம் தணிந்து ஞானம் உரைத்தனள் ரதி எனும் தேவதை.
25

Page 17
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மன்னித்துடுக.
காலம் காலமாய்
பாட்டன் தந்தை நான் எனது நண்பர்கள். பெண்களுக்கு ஆண்கள் இழைத்த பொல்லாப்புகளின் புராணம் அறிந்தேன். எலும்பு கூச்செறியும்.
சரியடா விடு எனத் தோளில் தட்டிச் சிரித்தனள் ரதியாள்.
பல்கலைக்கழகத் தேநீர்ச் சாலையில் பெண்களோடு சிகரட் புகைத்து மாதர் விடுதலை மகத்துவம் பேசிய நாட்களை நினைந்தேன்.
தவறொன்றுள்ளது.
சிகரட் பிடித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி கரண்டியாலே சோற்றினைப் பிசைந்து தத்துவம் பேசிடும் பெண்களோடமர்ந்து பெண்கள் விடுதலைக் கோட்பாடமைத்த மேதமை எல்லாம் மண்ணில் சரிந்தது. தவறொன்றுள்ளது.
சரி சரி விடு என தோளில் தட்டிச் சிரித்தனள் தேவி.
எச்சிலை மென்று விழுங்கிய படிக்கு இராணுவப் பிசாசுகள் வதைத்தனரா உனை? உறுத்தலோடும் மனப் பதைப்ப்ோடும் மீண்டும் கேட்டேன்.
30

வ.ஐ. ச ஜெயபாலன்
அசடே என்று ஏளனச் சிரிப்பைக் காறி உமிழ்ந்தாள். காலம் காலமாய் இப்படி யாயிற்று எங்களின் பார்வை தவறொன்றுள்ளது நிச்சயமாயிற்று.
தேவி உன் வாழ்வைக் கற்றுக் கொள்ளவும் கவிதை செய்யவும் மனப் பட்டேன் என மெளனம் கலைந்தேன். பாலெனச் சுரந்தது மானிட நேசம்.
தாயெனக் கனிந்தாள் காயம் பட்ட மார்பகத் திருந்து மானிட நேயம் பாலெனச் சுரந்தது.
கதை எனச் சொல்லி வாயை மூடுமுன் மனம் நெகிழ்ந்தன மருத மரங்கள். பாலி ஆறும்
நாணல் புதர்களும்
மீன் இனங்களும்
யாதும் ஆர்வமாய் செவியைத் துலக்கிட துள்ளி எட்டிப் பார்த்த ஓர் வரால் மீன் சொல்க உன் கதையைத் தோழி என்றது. மரங்களுக்கு ஏது கதை வேரினால் கட்டிப் போட்ட சாபம் நிறைந்த அசடுகள். சுதந்திரமான நமக்கு அல்லவா

Page 18
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
கதையும் வாழ்வும். வரால் மீன் மீண்டும் துள்ளும். வரால் மீனுக் குள்ளோர் வன்மம் இருந்தது.
"வேரில்லாத கீழ் சாதிக்கு
வாய்க் கொழுப்பு" என்று தொடங்கிய முதிரையை *உஸ்" என விழித்து
ரதியையும் என்னையும் சைகையால் காட்டி மெளனிக்க வைக்கும் ஆலமரங்கள். "யாரின் கிளைகளிலாவது ஒரே ஒரு
மீன் கொத்திப் பறவை மிஞ்சி உள்ளதா? உள்ளதாயின் நம் பலம் தெரியும்" என்றதோர் மருதம். "பார்க்கலாம் உன் பலம்"
நாணல் புதர்கள் வரால் மீனுக்குப் புகலிடம் தந்தன. மீண்டும் சகலதும் அமைதியுள் ஆழ்ந்தன. கதையைக் கேட்கும் ஆவலில் மிதந்தன.
s
காற்றில் அசைந்த
'கதையைக் கேட்கும் கவிஞனே வாழி.
எனது கதையை ஒரு கவிஞனுக் குரைக்கவே வீர சுவர்க்க போகம் துறந்து அன்னை மண்ணுள் அமுங்கிக் கிடந்தேன். வாழிய கவிஞ. எனினும் ஒரு சிக்கல்..' கேள்விக் குறியுடன் மரங்கள் வளைந்தன.
"ஏது" என வினவினேன்.

வ். ஐ. ச ஜெயபாலன்
'பெண் எழுத்தாளரே
ஆடை குறைத்து விரகமும் பால் வெறி தாபமும் நிறைத்து பெண்களின் வாழ்வைக் கொச்சைப் படுத்துகையில் ஆண் மகனல்லவா நீ' என மொழிந்தாள். அதிர்ந்து போனேன்.
உங்கள் பார்வையில் நாங்கள் அனைவரும் நடமாடுகின்ற யோனிகள் தானே கை கால் முளைத்த முலைகள் தானே எம்முடை மனிதம் - எம்முடை ஆளுமை சுடரும் எம்அறிவு சுந்தரக் கனவுகள் ஒளிரு மெம் கற்பனை உரக்கு மெம் வல்லமை செழிக்கும் எம் வளங்கள் சிறப்புகள் எதுவுமும் கண்களில் படாதே. உங்களுக்குத் தோன்றும்போது அவிழ்த்துப் போடச் சேலை கட்டிய முக்கோணமொன்றும் கூம்புகளிரண்டும் அல்லவோ நாங்கள். என்னடா கவிஞா..?
ரதி தேவிக்கு மூச்சு வாங்கியது. வரலாறு தொட்டே வணிதையர் சுமந்த "பாழ்'தனை இறக்கி வைத்தவள் போல
என்னைப் பார்த்தாள்.
as 8 مسPF T

Page 19
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
**இல்லைத் தோழி
நாங்கள் மானிடவர் ஆண் பெண் என்பது தற்செயலானது பிறப்பின் விபத்து.' என்றென் நெஞ்சு கிளர்ந்து பேசியது.
காற்று தகைத்தது. காற்றே காற்றே இக் கவிஞன் சொல்வது உண்மையா என்று மரங்கள் கேட்டன. யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழகத் தேநீர்ச் சாலையில் பெண்களோடமர்ந்தவன் பேசிய யாவும் கபட மற்றவை. வாழ்வில் இவனால் கண்ணிர் வடித்த பெண்களின் தொகையும் துயரமும் குறைவு.
காலமும் ஆளுமை உள்ள பெண்களின் நட்பும் இவனையோர் மானிடனாகச் செதுக்கும் பண்பினை அறிவேன். காற்றின் தீர்ப்பைத் தொடர்ந்த தேவி புன்னகை பூத்தாள். பாராட்டுக்கும் கிண்டலுக்கும் நடுவில் எங்கோ நெளிந்த புன்னகை.
கவிஞனே உனக்கென் கதையை உரைப்பேன் மானிடத்துக் கென்வாழ்வைச் சொல்வேன். சுற்றும் முற்றும் நோக்கினாள் ரதியாள். மருத மரங்களும் காற்றில் சுழன்றன.

வ். ஜ. ச. ஜெயபாலன்
நாணல் புதர்களை விலக்கி வெள்ளைக் குதிரையில் வாள் தரித்தவோர் மன்னவன் தோன்றினான். ஆற்றங் கரையில் குதிரையை நிறுத்தி மணலில் குதித்தான். ஆதரவாகக் குதிரையைத் தட்டிச் சேணம் அவிழ்த்தான். தாங்யூ பண்டார வன்னியன்' என்றது வெள்ளைக் குதிரை. மணலில் குதித்த பண்டார வன்னியன் வாள் கைப்பற்றி சுற்று முற்றும் நோட்டம் விட்டு 4 எச்சரிக்கையோடு எம்மிடம் வந்தான்.
வருக வன்னியனே யாழ்ப்பாண அரசு வீழ்ந்த பின்னரும் சிங்களக் கோட்டை தோற்ற பின்னரும் இரு நூறாண்டுகள் V காடுகள் சூழ்ந்த எம்மரும் வன்னியின் சுதந்திர வாழ்வின் சிற்பிகளான வன்னித் தலைவருள் முதல்வனே வருக! ஆயிரத்து எண்ணுற்றி மூன்றில் கற்சிலைமடுப் போர்க் களத்தில் உறுதியாய் வெள்ளையர் தம்மை வேரறுத்தவனே
வீரத்தால் நிமிர்ந்தும் இங்கிலாந்தின் தொழிற் புரட்சிச் சக்கரத்துள்ளே நசிந்து வீழ்ந்தவனே கற்சிலை மடுவில் கற்சிலை யாகிய
36

Page 20
*ழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மன்னனே வருக. பண்டார வன்னியன் மெளனமாய் அமர்ந்தான். "அதர் சைட் ஒப் த நிவர் இஸ் சோ கிறீன்
மே ஐக்கோ தெயர்" . வெள்ளையன் குதிரை மெல்லக் கனைத்தது. **இக் கரைக் குதிரைக்கு அக்கரை பச்சை'
போ என மொழிந்து வன்னியன் சிரித்தான். பின்னர் எனது தோள்களில் தட்டி பொன் முடிச் சொன்றைப் பரிசாய்த் தந்தான். "வறுமையால் வாடினும் இந்தக் கவிஞன்
விடுதலைக்காக விண்ணையும் பிளப்பான்." என்றபடிக்கு என்னை அணைத்தான்.
இவனது பெண்கள் விடுதலைப் பார்வையில் வளர்ச்சிக் கின்னமும் வாய்ப்புகள் உளது. அன்னை மண்ணின் விடுதலைக்காக அன்னியன் கால்களை ஒடிக்கத் துடிப்பதில் என்னை ஒத்தவன் இவனிடம் உனது கதையைத் தருக. உனது அனுபவ வாழ்வை போரிடும் எமது மானிடருக்குத் தருக தேவி என்றவன் உரைத்தான். "தேவி எனக்குக் காவல் உள்ளது"
என்றபடிக்கு எழுந்தான் மன்னவன். அவனது கையில் சுடர்ந்த மணி வாளில் வெள்ளையன் சின்னம்.
ass

.ெ ஐ.ச. ஜெயபாலன்
சிரித்தபடிக்கு விடுதலைக்காகப் போரிட எழுந்தால் விடுதலைப் பாதையின் தத்துவார்த்தமும் திசையும் அறிந்தால் எதிரிகள் போர்வளம் நம்வசமாகும். என்கிற படிக்கு மன்னவன் நடந்தான். எங்கோ குதிரையின் குளம்பொலி தேய்ந்தது ரதிதேவி தன் திருவாய் மலர்த்தாள்.
இன்று போலுள்ளது காற்றில் முல்லையின் நறுமணம் கமழ் வழி மருங்கெலாம் காடுகள் அடர்ந்து ஈரலித்திருந்த அந்த நாட்கள்.
கோடையில் கூடப் பாலி ஆற்றில் முழங்காலளவு புதுப் புனல் பாய்ந்த அந்த நாட்கள் இன்றுபோலுள்ளது. காடும் ஆறும் குளமும் வயலும் புல் வெளிப் பரப்பும் எங்கள் வாழ்வின் களனாய் இருந்தது, வன்னியர் நாம் எம் சிறு கிராமங்களில் அமைதியாய் வாழ்ந்தோம். இயற்கையோடு இயற்கையாய் இருந்தோம். காடுகள் கழன்ரிகள் எங்கும் கிராமியப் பாடல்கள் இசைத்து
3.

Page 21
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
இயற்கையில் மகிழ்ந்து எருமை மேய்த்தும் தேன் சேகரித்தும் பாலை பழுக்கும் வசந்த காலத்தில் நெய்ப் பிடிப்பாகிக் கொழுத்த பன்றிகளை வேட்டை யாடியும் வரட்சியும் நோயும் பூச்சியும் நாண பொற் கதிர் சூடும் பண்டைய நெற்களை எம் வயல்களில் விதைத்தும் கோவில் பண்டிகை கூத்துகள் நடாத்தியும் ஆணாய்-பெண்ணாய் தனித்தும் சுற்றம் கிளைகளாகவும் விடுதலையாகி நாங்கள் வாழ்ந்தோம். காடுகள் நடுவே ۔۔۔۔ மானிடக் காடாய்ச் செழித்திருந்தோம் நாம்.
யாழ்ப்பாண அரசின் மேலாதிக்கப் போக்கினை வாளால் நிராகரித்தும் பின்னை நமது பிணிஎன வந்த வெள்ளை அரக்கரின் வேர்களை அறுத்தும் சுதந்திரத்தை நாம் கண்களாய்ப் பேணினோம். இன்று மென்ன அதே வெள்ளையரின் ஒடுக்குதலரசின் தொடர்ச்சியாய் நாட்டில் சிங்கள அரசின் சீர்கேடுள்ளதே! எனது பாட்டியின் நாட்களில் கூட ஒருவாறெங்கள் சுதந்திரம் இருந்தது.

வ.ஐ.ச. ஜெயபாலன்
அந்த நாட்களில் மூன்று முறிப்பு என்கிற கிராமத்தில் கண்ணகை அம்மன் திருவிளா நடந்தது. எனது பாட்டனார் குஞ்சுத்தம்பி கிராமத் தலைவர்அவரே கோவில் பூசகர் ஆவார். முதல் மனையாளைப் பறி கொடுத்து இரண்டாம் மனைவிக்குக் குழந்தைகள் இல்லா நிலை நொந்திருந்தவர். அந்த நாட்களின் பொருளியல் வாழ்வில் மாடு செல்வம்
பிள்ளைகள் செல்வம் பிள்ளைகள் பல பெறும் பெண்ணும் செல்வம்.
*வேட்டை யாடவும்
உழவு நடத்தவும் ஆடு மாடுகள் பராமரித்திடவும் ஊருக்குள்ளே பலமாய் இருக்கவும் எத்தனை நாட்கள் அண்ணன் தம்பியை நம்பியிருப்பேன் கண்ணகைத் தாயே" என மனம் நோவார் குஞ்சுத் தம்பியார்.
கோவில் சென்றால் கண்ணகைத் தாயே கண்களைத் திறவாய் பத்துப் பிள்ளைகளேனும் அருளாய் என்கிற இரத்தலே இவரது பூசை
39

Page 22
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
கண்ண்கி அம்மன் பொங்கல் வந்தது. குஞ்சுத் தம்பி பூசாரியாருக்கு ஆழ்ந்த யோசனை பற்றிக் கொண்டது. அயலூர்ப் பிரமுகர் வன்னிய சிங்கனின் பரம்பரை பால் மரம். குறைவில்லாத பிள்ளைச் செல்வக் கொடைகள் நிறைந்தவர் அவனூர்ப் பெண்கள் குஞ்சுத் தம்பி பூசாரியாருக்கு ஆழ்ந்த சிந்தனை. கண்ணகை அம்மன் வாலாயத்தால் குஞ்சுத் தம்பியின் குணத்தில் மாற்றம் பொங்கலில் இம்முறை இவன் வெறியாடி சொல்லும் குறிகள் சித்திக்கு மென்று எட்டுத் திக்கும் எழுந்தது வதந்தி. எட்டுத் திக்கும் எழுந்த வதந்தியால் கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் களை கட்டியது. அயலூர்ப் பிரமுகர் வன்னிய சிங்கனும் தன் கிளையோடு கோயில் வந்திருந்தார் குஞ்சுத்தம்பி பூசாரி வீட்டில் கள்ளும் மான்கறி விருந்துமாடி வன்னிய சிங்கம் மகிழ்ச்சியோடிருந்தார்.
பொங்கல் ஒரு புறம் ஆடுகள் வெட்டும் வேள்வி ஒரு புறம் உடுக்கடித்துக் கிராமியக் கலைஞர்கள்

வ.ஐ. ச ஜெயபாலன்
கூத்தாட்டரங்கில் சிறப்பது ஒரு புறம் குழந்தைகள் பலபேர் கும்மாளம்'அடிப்பதும் வாலிபர்கள் கொடி எடுத்தும், கிட்டிப்புள் அடித்தும், தாச்சி மறித்தும் புதினம் பார்க்கும் சிறு பெண்களுக்கு ஆண்மை காட்டுதலும் வருடா வருடத்து வழமை போல பெண்டிர் மாநாடு இப்படியாக குதூகலச் சுறுசுறுப்பு எங்கும் நிறைந்தது.
வழமை போல றால்போட்டு சுறாக்கள் பிடிக்கும் யாழ்ப்பாணத்து வணிகர்கள் சிலபேர்
கட்ை விரித்திருந்தார். தேன், நெய், நெல்லு, மந்தைகள் என்றும் இறைச்சி, வத்தல், காய்கனி என்றும் ஒரு சேலைக்கு, துப்பாக்கி ரவைக்கு கண்ணாடிக்கு, உப்புக்கு, செம்புக் காசுக்கு வன்னி மனிதனின் தேட்டம் யாவும் அள்ளிக் கொண்டனர் அந்த யாழ்ப்பாணிகள். இப்படியாகக் கண்ணகி கோவிலில் வழமை போல வேள்வி நடந்தது.
எனது பாட்டனார் வெறி கொண்டாட பக்திப் பரவசம் கண்ணகைத் தாயே கண்ணகைத் தாயே என்கிற கோசம் வானைப் பிளக்கும்.
4鲁

Page 23
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வெறி கொண்டாடிய பூசாரியாரிடம் யாவரும் பணிந்தனர்ர். மழை பெய்திடுமா? மாநிலம் செழிக்குமா? நெல் விளையுமா? எனது நோய் தீருமா? காட்டில் மறைந்த என் புதல்வன் திரும்புமா? இப்படியாகப் பலரும் தொழுதனர். அயலூர்ப் பிரமுகர் வன்னிய சிங்கம் கூப்பிய கையுடன் "என் இளம் பெண்ணாள் செல்லமுத்துக்கு
பண்டார வன்னியன் போலொரு மணாளன் கண்ணகை அருளால் கிட்டுமா?’ என்று தலை பணிகின்றார்.
எனது பாட்டனின் "கலை" முற்றியது நல் மழை பெய்யும் நாநிலம் செழிக்கும் பால்வளம் சுரக்கும் காட்டில் மறைந்த புதல்வன் மீளுவான் களனிகள் தோறும் பொன்னாய்க் குவியும் என்கிறவாறு நற்குறி உரைத்தார். வன்னிய சிங்கம் வன்னிய சிங்கம்! இதோ உன்அழகிய செல்லமுத்துக்கு கண்ணகைத் தாயின் கருணை" என்றவர் மின்னலாய்த் தனது வேட்டியுள் இருந்தோர் தாலியை எடுத்தவள் கழுத்தில் சூடினார். உலகம் ஒருகணம் துணுக்குற் றுறைந்தது. இடிந்து போயினள்
42

வ. ஐ. ச ஜெயபாலன்
கனவுகள் மலிந்த சின்னம் சிறுபெண் செல்லமுத்து. முந்தானைத் தலைப்பால் முகத்தை மூடி கண்களில் பொங்கிய வெந்நீர் துடைத்தாள். தாலியைப் பிய்த்து எறிய முனைகையில் பொறு பொறு என்று தடுத்தனர் முதியோர். செயலிழந்தார் வன்னிய சிங்கம். தேகம் பதறினர் அவரது மனிதர்.
**ஊரழிவுக்கு இடம் கொடுக்காதீர்
கண்ணகி சித்தம் இதுவா யிருக்கையில் மனிதர் மோதிக் கொள்வதோ நியாய்ம்?? என்றனர் எனது பாட்டனாரின் ஊர்ப் பெரு மனிதர். செல்லமுத்துவை யாரும் நினைந்திலர். இப்படியாக இருவரின் வாழ்வைக் கண்ணகை அம்மன் சித்தப்படிக்கு ஊர் முடிவெடுத்தது.
ஆண்டுகள் ஐந்து நடந்த போதும் பிள்ளைகள் இல்லை. வன்னிய சிங்கன் பரம்பரைப் பெண்கள் பால் மரங்கள் என்றதும் பொய்யோ? கண்ணகை அம்மன் சந்நிதானத்தில் குஞ்சுத் தம்பியார் கும்பிட்டழுதார்.
43

Page 24
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
ஒவ்வோர் கண்ணகைப் பொங்கலின் போதும் ஊர் குதூகலிக்க செல்லமுத்து தேம்பி யழுவாள். இப்படி ஐந்து வருடம் நடந்தது.
பொற் கடலாகக் காற்றில் புரளும் நெல்வயல் மேட்டில் ஆயலோட்டும் வள்ளியைப் போல செல்லமுத்து நின்றதோர் மாலையில் தனியனாய் ஓர் இளைஞன் வந்தான். கட்டுடல் மலிந்த காளை வயதினன் கள் இறக்கும் தொழில் தெரிந்திட்ட யாழ்ப்பாணத்துப் பள்ளர் வகுப்பினன் வேலன் என்பவன். குடுமி வெட்டி தோள் வரைக்கும் கேசம் சுருள வெற்றிலை சிவந்த சொண்டுகள் அகட்டி சிண்டை அவிழ்த்துச் செங்கால் மறைய புன்னகை புரிந்தான். காட்டில் நிலவாய்க் காய்ந்த என் பாட்டியின் இளமை விழிக்க
நாச்சியாரே பூசாரி குஞ்சுத்தம்பியின் வீடெது' என்று பணிந்தான். நளினம் குன்றாமிடுக்குடன் ஒயிலாய் காவல் பரணால் இறங்கி முன் நடந்தாள் வீடு வந்தனர்.

வ. ஐ. ச ஜெயபாலன்
இப்படியாகக் குஞ்சுத்தம்பியாரை ஐந்து வருடமாய்ச் சோதித்த பின்னர் கண்ணகை அம்மன் கண்களைத் திறந்தாள். வருடா வருடம் குழந்தைகள் பிறந்தது. செல்லமுத்து தோப்பாய் நிறைந்தாள் வன்னியசிங்கன் வம்சத்துப் பெண்கள் பால்மரமென்ற தனது கணக்கு பிழைத்திட வில்லை என இறுமாந்தார் குஞ்சுத் தம்பியர். w
இப்படிப் பிறந்த ஏழு பிள்ளைகளில் இளையவளான எழிலி தங்கம்மா என்னுடை. அம்மா. யாழ்ப்பாணத்து வேலனின் முயற்சியால் அணிஞ்சியன் குளத்துப் பாடசாலையில் ஆதியில் படித்த பெண் எனும் பேரை அம்மா அடைந்தாள். தினம் தினம் காலையில் காட்டுப் பாதையில் என் அம்மாவைப் பாடசாலைக்குத் தூக்கிச் செல்வதே வேலனின் பணிகளுள் முதன்மையாய்ப் போனது: வெள்ளையன் ஆட்சியில் அந்த நாட்களில் சுயாட்சி வந்தது. அடுத்து இலங்கைக்கு சுதந்திரம் என்றனர். வெள்ளைக்காரனின் அரியணைப் பக்கமாய் மந்திரிமாராய்ப் பெரிய இடத்துச் சிங்களர் அமரவும்


Page 25
*ழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வெள்ளைக்காரரின் கதிரைகள் பலதில் அதிகாரிகளாய் கல்வியிற் சிறந்த யாழ்ப்பாணத்துத் தமிழர் அமரவும் அந்த நாட்களில் சுயாட்சி வந்ததாம்.
அந்த நாட்களில் அம்மை மூன்றோ நாலோ படிக்கையில் காற்சட்டை போட்ட தமிழர்களோடு ஜிப்பா வேட்டி அணிந்த ஒரு தமிழர் குதிரை வண்டியில் வந்திறங்கினார். பண்டைத் தமிழரின் பெருமைகள் பேசி பாலி ஆற்றை மீண்டும் முடக்கி வவுனிக் குளத்தை எழுப்புவோம் என்றார். மீண்டும் ஒரு பத்து ஆண்டுகள் நடந்தது. மாறுதலின்றி.
எனது அம்மைக்கு திருமணமான அந்த நாட்களில் எமது நாட்டுக்கும் வந்ததாம் சுதந்திரம். இரண்டும் யாரோ எடுத்த முடிவுகள் அவசரத் திருமணம் அம்மாவுக்கு குடும்ப முடிவு. இலங்கை மக்களை விடவும் என் அம்மா துணிச்சல் மிக்கவள். கண் காணாதவன் தேவன் எனினும் கழுத்தை நீட்டேன் என்று நிமிர்ந்தவள். "படிக்க வைத்ததால்
குட்டிச் சுவராய்ப் போனாள்' என்று
46

வ். ஐ. ச ஜெயபாலன்
இடிந்து போனது குடும்பம். தனது திருமணத் தாற்பரியத்தை மறந்த செல்லமுத்துவும் திட்டினாள். வேலன் மட்டுமே என்தாய் சொல்வதில் உண்மை யிருப்பதாய் உரத்துச் சொன்னவன்.
905 நாள் மதியம் நோய்வாய்ப் பட்ட பாட்டனைத் தவிர வீட்டிலெல்லோரும் வயலில் இருந்தரர் அறுவடை நாளில் அதுதான் வழக்கம்.` பெரிய எழுத்து பாண்டவர் கதையை அம்மா படிக்க அயர்ந்தனர் பாட்டன். சந்தடி இன்றியோர் இளைஞன் வந்தான் யாரது என்ற என்னரும் தாயாள் "கூப்பிடத் தெரியாதா” என்று கொதித்தாள்.
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அன்னையைப் பார்த்தவன் தேன் வாங்க வந்தேன் கிடைக்குமா' என்றவன் *"ஐயனும் அம்மையும் அறுவடை வயலில்
மாலையில் வா' என எழுந்த என் அன்னையின் கைகளைப் பற்றினான். *பளார்' என ஓர் அறை
அந்த நேரத்தில், * எப்படி மாப்பிளை எப்ப வந்தது
தங்கம்.தேநீர் போடடி பிள்ளை'

Page 26
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
என்றபடிக்கு வந்தது வேலன். இப்படியாக எனது தாயாரின்
திருமணம் ஓர் அறுவடை நாளில் நிச்சயமானது.
அந்த நாளில் எம் தாய் நாட்டுக்கு சுதந்திரம் வந்ததாய்ச் சொல்லப் பட்டது. எமது மக்களை விடவும் எனது தாய் துணிந்தவள்.
நாங்கள் சிறுவராய் இருந்த ஒரு நாளில் பேரிரைச்சல்களும்
சங்கின் ஊதலும் காற்றில் நிறைந்தது ஒரு நடுப்பகலில். வேடிக்கை பார்க்கக் கடைத் தெருவுக்கு மாப்பாணனோடு நானும் சென்றேன். இராட்சத இரும்பு வண்டிகள் நகர்ந்தன திகில் வேடிக்கை நாங்கள் பார்த்தோம். மஞ்சள் புல்டோசர்கள் கறுப்பு லாரி வண்டிகள் சிவப்பு உழவு யந்திரம் என்று சாரியாய் வந்தன. மீண்டும் வவுனிக் குளத்தைக் கட்ட முடிவெடுத்தனராம் சுதந்திர அரசார் சிங்களம் பேசும் அதிகாரிகளும் கூலியாட்களும் நிறைந்தனர் எமது
e

வ். ஐ. ச. ஜெயபாலன்
காட்டுப் பகுதியில் யானை புகுந்த நெல் வயல்போல ஆன தெம் பூமி. கண்களை மூடிக் காட்டை அழித்தனர் தரிசுகள் அகன்றது. எங்கும் எதிலும் செம்மண் புழுதி தெளிந்த பாலி ஆற்று நீரிலும்
செம்மண் கலங்கல்.
அணைக் கட்டெழுந்தது பாலி யாற்றின் படுக்கை வறளவும் பாலியாறு ஊட்டிய இயற்கை சாகவும் மாரி பொய்க்கவும் - வளமிகும் எமது அன்னையர் பூமி காற்றிலும் நீரிலும் எடுப்புண்டு போகவும் ஒரு விதி நேர்ந்தது. V புறநாநூற்றுப் புலவர்கள் காலம் தொட்டே யானைக்கு நெல்லை அறுத்து வைப்பதா யானையை வயலுள் திறந்து விடுவதா என்பதே கேள்வி.
அபிவிருத்தி முகமூடிகளுடன் பணபலம் படைத்தோர் எம் பூமியில் நுழைந்தனர் காடுகள் சிதைந்த மேட்டு நிலத்தில் வீடுகள் எழுந்தன.
.49 ܝ ܀ - ܀ • • • ܫܝ ܀ - -- 4 سے.RF T

Page 27
மூன்று
காட்டைச் சோகம் பற்றிக் கொண்டது. மரங்கள் பெருமூச்செறிய பாலி ஆறு விம்மித் தணிய தென்றல் நடுங்க ஒருகணம் மெளனம். வீடு என்பது என்ன? மெதுவாய்க் கேட்டதோர் மருதங் கன்று.
மனிதன் வளர்க்கும் பசுமையில்லாத கல்மரம் மகனே சற்று நீ வளர்ந்து தலை எடுத்ததும் அயல் கிராமத்து வீடுகள் காண்பாய் என்றதோர் மருது. எவ்வளவுக்கு உயரத் துள்ளினும் வரால் மீனுக்கும் எவ்வளவுக்குக் கிழடாய்ப் போனபோதும் நாணலுக்கும்
உலகம் தெரியாது,

வ். ஐ. ச ஜெயபாலன்
அறியாமை தானே அவர்களின் வாழ்வு என்றது முதிரை. எரிக்கும் விறகாய் மரமும் இழைக்கும் பாய்க்கு நாணலும் சமைக்கும் கறிக்கு வராலும் வீடு பேறடைவோம். மனிதன் என்கிற இயமன் கையில் நம் விதி ஒன்றேஎதற்கு எம்முள் கருத்து மோதல்? சடாமுடி தரித்த ஆல மரங்கள் தத்துவம் சொன்னது. மீண்டும் யாவும் மெளனித்திருந்தன கதையினைக் கேட்க.
கறுப்புக் காரில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த சிலபேர் ஒருநாள் வீட்டுக்கு வந்தனர். சுறுசுறுப்பாக அம்மா அன்று விருந்து சமைத்தாள். ஊரார் எல்லாம் வீட்டில் கூடிக் காரைப் பார்த்தனர் இரவிரவாக ரகசியம் பேசினர். சிங்களவருக்கும் தமிழருக்கும் மோதல் நடக்குதாம் தமிழரை அழிக்க பண்டாரநாயக்கா பற்பல திட்டம் வைத்துள்ளானாம் வவுனிக் குளத்து வேலை முடிந்ததும் தமிழரைத் துரத்தி கூலியாய் வந்த சிங்களர் தம்மை குடியமர்த்தச் சதி ஒன்றுள்ளதாம்
到

Page 28
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
இப்படிப் பலபல வார்த்தைகள் பேசினர். புரியா வயது எங்களுக்கும் சிங்களர்க்கும் சண்டை என்பதாய் புரிந்தது சிலது. அது வரைக்கும் எமது வீட்டுக்கு வந்த
ision Ir' Lorrorso)6 வெறுக்கத் தொடங்கினோம், காரணமின்றி. அந்த இரவே வேட்டிக்காரப் பெரிய மனிதரால் ஊரவர் சிலர்க்கு துப்பாக்கி ரவைகள் வழங்கப்பட்டன. வவுனியாவில் இருந்து ஜிப்பாவோடு வந்த மனிதர் தமிழர் தலைவராம்.
1958s)
நான்கு வயதில் கலவரம் எனது காட்டிலும் வெடித்தது. அணைக்கட்டிருந்த புல்டோசர்களும் லாரி வண்டிகளும் ஊருள் வந்தன. வெறி ஏற்றப்பட்ட சிங்களக் கூலிகள் வீட்டைக் கொளுத்த எங்கள் தந்தையர் துப்பாக்கி வெடிக்க அமைதி நிலவிய நமது காடுகள் ஒன்றரை நூற்றாண்டுகள் கழிந்து மீண்டுமோர் போர்க்களமாகச் சிதைந்தது.

வ. ஐ. ச. ஜெயபாலின்
வெள்ளைக் குதிரையில் வீரவாள் தாங்கிய இளைஞன் தோன்றி போர் தொடுத்த சிங்களவர்களை துரத்தி விட்டதாய்ச் சேதி வந்தது. இதே கலவரம் தான் என்னுடை வீட்டைச் சாம்பர் மேடாக்கி என்னருந் தான்யக் காவு கொண்டது. இப்படியாக என் இளமை வாழ்வு
சோகம்
சாவுகள் நிறைந்த சோகம் மலிந்தது.
நெடுநாளாக அம்மாவை நினைந்து என்னுடை அப்பன் இடிந்து போயிருந்தார். கைம்மை நோற்றார், ۔۔۔۔ ஊர் வற்புறுத்தியும் உறவுகள் சொல்லியும் மீண்டுமோர் திருமணம் ஒப்பிடவில்லை. அதன்பின் எனது மாமியின் வீடே எமக்குத் தாய் வீடாகிப் போனது. udmudr Luirsulb
வாய் பேசாது வயலும் வீடும் மாமியும் மட்டுமே அவரது உலகம், மாப்பாணனுக்கும் எனக்கும் மட்டும் உலகம் விரிந்தது. ஆண் பெண் வேறுபாட்டின் குறிகளை கோடிப் புறத்தில் பார்த்து வியந்ததும் குளத்தங் கரையில் மீன் குஞ்சு வடிக்க எனது சித்தாடையை மாப்பாணன் அவிழ்த்ததும்

Page 29
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
ஒரு நாள் தாமரை மொட்டைப் பறித்து பரிசெனத் தந்த மாப்பாணனிடம் உன்னைத்தான் நான் கல்யாணம் செய்வேன் என்று சொன்னதும் இப்படியாக என் சிறுமிப் பருவம் இனிதாய் நடந்தது. சேற்றைக் கிளறி வயலென உழுது கற்பனை எருமைக் கடாக்களை ஒட்டி களைப்புடன் மாப்பாணன் வீடு வருவதும் மண்சோறு சமைத்து காட்டு இலைகளில் கறிகள் சமைத்து காத்து நான் இருப்பதும்
ஏன் சுணக்கம் ஊரார் சோலிகள் கூடிப் போச்சுதோ?* என்று நான் அவனிடம் சண்டையிட்டதும்,
என்னடி தெரியும் எங்கள் சிரமம் நாளைக்கு நீயே வயலை உழுது பார்' என்று மாப்பாணன் எரிந்து விழுவதும்
'ஏலுமென்றால்
விட்டு வேலையை ஒருக்கால் செய்து பார் நீ சமைத்தால் நாயும் தின்னாதே" என்று நான் சபிப்பதும் பின்னர் எமக்குள் சமாதானமாகி இராச் சாப்பாட்டைப் பகிர்ந்து கொள்வதும் சுற்று முற்றும் பார்த்து விட்டு எனக்கு அவனே ஊட்டி விடுவதும் கால் வலி என்று மாப்பாணன் முனக

வ.ஐ. ச ஜெயபாலன்
பிடித்து விடுவதும் விளக்கை அணைத்துப் படுத்துக் கொள்வதும் சற்றைக் கெல்லாம் w பிள்ளைகள் தூங்கியாயிற்றா என மாப்பானன் காதுள் முணுமுணுப்பதும் "தூங்கியாயிற்று" என்றதும் அவனே
என்னை அணைத்துக் குறட்டை விடுவதும் இப்படிக் கழிந்ததென் சிறுமிப் பருவம்.
மாப்பாணனுக்கும் எனக்கும் ஒரு நாள் புத்தாடை புனைந்தனர் கல்யாணம் என்று ஊரார் சிரிக்க கட்டை வண்டியில் தந்தையாரோடு காட்டுப் பாதையில் ஒரு காலையில் வந்தோம். தோரணங்களும் குதூகலங்களுமாய் அணிஞ்சியன் குளம் பாடசாலைக்கு அதிர்ஷ்டம் வந்த ஒரு காலைப் பொழுது அது. இப்படியாக ஒரு சரஸ்வதி பூசையில் எங்களுக்கு ஏடு தொடக்கினர்.
தினம் தினம் காட்டுப் பாதையில் வண்ணத்துப் பூச்சிகள் துரத்தி காட்டு முல்லைப் பூக்கள் பறித்து விளாம்பழம் தின்று தேனிக்களுக்குப் புறமுதுகு காட்டி பாடசாலைக்கும் விட்டுக்கு மிடையே நாள் தவறாமல் நாங்கள பறந்தோம்.
55

Page 30
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
SG
வாத்தியார் சொல்லும் கதைகளில் வருகிற சிறகு முளைத்த தேவதைக் குஞ்சை காட்டுப் பாதை மருங்குகள் தோறும் எத்தனை நாள் நாம் எதிர்பார்த்திருப்போம்! கையில் பட்ட குச்சியை யெல்லாம் எடுத்துச் சுழற்றி மந்திரக் கோல் என்பது அறிய பொன்னாக வேண்டிக் கல்லைத் தொடுவோம். ஒரு சில மாரி மழை நாட்களிலே
முகிலொடு முகிலாய்
பறக்கும் கம்பளம் அகல்வதைக் கண்டோம். கோடையில் ஒரு சில நடுப்பகல்களிலே கானல் ஆற்றில் நீச்சலடித்து தேவதைகள் நீர் ஆடுதல் கண்டோம் அயராது முயன்றும் ‘ மந்திரக் கோல் எம் கைப்படவில்லை. இப்படியாக நாங்கள் இருவரும் பாடசாலையில் படிக்கத் தொடங்கினோம்.
எங்கள் கந்தசாமி வாத்தியார் விக்கிரமாதித்தன்.
காடாறுமாதம் எங்களோடு.
நாடாறு மாதம் யாழ்ப்பாணத்தில் குடும்பத்தோடு.
இப்படியான தொல்லைகள் மத்தியில் வன்னிப் பிள்ளைகள் நாங்களும் படித்தோம். மாட்டை எண்ணவும்

வ. ஐ. ச.ஜெயபாலன்
நெல் வயல் கணக்கை எழுதி வைக்கவும் கடிதம் படிக்கவும் கடன் பத்திரங்களில் கையொப்பமிடவும் கற்றுத் தந்த கந்நசாமி வாத்தியார் அதிகாரியாகவும் டாக்டராகவும் யாழ்ப்பாணத்தில் தனது மக்களைப் பயில வைத்தார்.
கந்தசாமி. யாழ்ப்பாணத்துச் சராசரி மனிதர், பெண்கள் தொடர்பாய் சராசரி ஆண் மகன் பார்வை போன்றதே; வன்னிப் புறத்து மக்கள் தொடர்பாய் கந்தசாமிகள் கருத்தும் அறிக. ஈழத் தமிழர் ஒற்றுமை முழங்குவர் மாடு மேய்க்கும் வன்னிப் பயலுக்கு கல்வி எதற்கெனக் கிண்டலும் பண்ணுவர்.
பொழுது சாய்ந்து மேல் வானத்தில் இளம் பிறை முளைத்தது. சிறிது நேரம் மெளனமாய் இருந்தபின் ரதிதேவி என் தோள்களில் தட்டி போய்வா கவிஞ என விடை புகன்றாள்.
sylum-IT... உடல் நெளிவெடுத்து மூச்சு விட்டன முதிரை மரங்கள். சூரியனல்ல

Page 31
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
தானே பிரபஞ்சத்தின் மையமென் றெண்ணும் யாழ்ப்பாணத்து மேல்குடி பற்றி நாணல் புதர்கள் கிசுகிசுத்தன. மெல்ல எழுந்தேன்
ரதியைக் கண்டிலேன் இப்போ மருத மரத்தின் வேர்களுக்கருகில் மண் மேடிட்டிருந்தது.

நான்கு
பாலி ஆற்றையும்
காட்டையும் மண்ணின் மங்கை ரதியையும் விடுத்து வீடு நோக்கி மெல்ல நடந்தேன். வானில் எழுந்த நிலா ஒளியோடு மெளனம் என்மீது கொட்டிக் கிடந்தது. வழிமருங் கெல்லாம் பற்றைகள் மீது விண்மீன் முட்டைவில் nش குவிந்த மின்மினிகள் குரங்குகள் எங்கோ சந்தடி செய்யும் நரிகள் எதற்கோ ஒப்பாரி வைக்கும் முதல் மழைத் துளிகள் மண்ணைத் தொட்டதும் காலபோக உழவு நடத்த தயாரிப்பின்றி

Page 32
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
50
தரிசாய்க் கிடந்தன பலநெல் வயல்கள். வழியில் ஒருசில வயல்களில் மட்டுமே வெட்டப்பட்ட செடி கொடி உலரும் நறுமணம் காற்றுடன் மிதந்து வந்தது. செதுக்கப் பட்ட வரம்பிலிருந்து மண்ணின் வாசணை காற்றில் கலந்தது.
**எனது மக்களே எனது மக்களே
இன்றோ நாளையோ முதல் மழை பெய்ததும் ஏது செய்வீர்கள்? எமது வயல்வெளி அன்னை இப்படி
* வாழா வெட்டியாய்க் கிடப்பதோ சொல்க?
கொடிய போரின் கால்களில் விழுந்து சரண் புகுந்தீரோ? தோல்வியின் முள் முடிகளை நீங்களே சூடிக் கொண்டீரோ..? வயல்களை நீங்கள் கைவிட்டு விட்டால் வரலாறெம்மைக் கைவிட்டு விடுமே.”* ஏர் நடக்காமல் எங்கள் விடுதலைப் போர் நடக்காதே எனமணம் நொந்தேன். மண்ணுக்கு முதல் மழை முத்தம் கொடுத்ததும் உழவுக்காக கோவிலில் சுண்டல் வாங்க முந்திய சின்ன வயதின் ஆர்வத்தோடு கலப்பைகளோடு வயலில் குதிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு என்ன நிகழ்ந்தது? இரவும் பகலும் புதர்களைச் சரித்தும் கோடை வறுத்த புல் பூண்டுகளைத் தீக்குண வாக்கியும்
游

வ். ஐ. ச. ஜெயபாலன்
வரம்புகள் திருத்தியும் களைப்பறியாத உழைக்கும் மானிடம் எங்கே மறைந்தது? எங்கே மறைந்தன வாழ்வின் சுவடுகள்?
சிறிது தூரம் நடந்த பின்னர் வரண்டு கிடந்த வாய்க்கால் மதகில் நீட்டி நிமிர்ந்தோர் விவசாயி இருந்தார் வெற்றிலை சப்பித் துப்பிய படிக்கு. "ஐயா" என்றேன். ۔ "யாரது தம்பியா' என்கிற குரலில் முகத்தைக் கண்டேன். சோமசுந்தரத்தார். "எப்படி அப்பையா' என்று அன்புடன் அண்மை அடைந்தேன்" போராட்டங்களில் வீட்டைத் துறந்து வீதிக்கு வந்த அந்த நாட்களில் ஆதரவானவர். தனது கூரையைத் தனது சோற்றை என்னுடன் பகிர்ந்த ஒரு விவசாயி "கறுப்பி அக்கா சுகமா" என்றேன்! 'ஊரெலாம் சாவீடும் ஒப்பாரிப் பாட்டும்
கறுப்பிக்குக் கலியாண விடும் தெம்மாங்குப் பாட்டுமா? அடுக்களைக்குள்ளே உறியைப்போல அவளும்
இருக்கிறாள். * வழமை போல சோமசுந்தரத்தார் கிராமியக் கவிதை வழக்கில் பேசினார்.

Page 33
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
அத்திப் பூப்போல் எப்ப வந்தது பட்டினத்தாலே.? யாழ்ப்பாணத்து அரசனைக் கண்டதும் வன்னிப் புருசனை மறந்து போச்சுதா? வீட்டுப் பக்கம் ஏன் வரவில்லை? வழமையான வாய்விட்டுச் சிரிப்பு. எங்கே மறைந்தது மானிடம்? என்றேன் தம்பி நீஎந்த விடுதலைக் குழுவோ தெரியாதெனக்கு. விவசாயிக்கு ஒரு விரல் சுட்டினால் உன்னை நாலு விரல்கள் சுட்டும் என்பது தெரியும் என்றார். சோமர்.
விளைந்த பண்டத்துக்குச் சந்தை இல்ல்ை விளைவிப்பதற்கு இடுபொருளில்லை டீசல் இல்லை மருந்துகளில்லை பாலி ஆறுபோல் பணமும் வரண்டது உழவு மாடுகள் பலரது வாழ்வில் பாட்டி கதைகளில் மட்டுமே வாழும். ஒரு வழியாக இவற்றைத் தாண்டினால் துப்பாக்கியோடு வானிலும் தரையிலும் சிங்களம்பேசும் பிசாசுகள்திற்கும்
நெல் விளைந்தால் யானையும் பன்றியும் போர்க்களந் தன்னில் வெறுங்கையுடன் நாங்கள் யாரிதைக் கண்டார்.? வான் பொய்த்தாலும் சாக்குகளோடு வந்து நிற்பீர்கள்

வ். ஜி. ச. ஜெயபாலன்
..................****
வரி வசூலிக்க. துப்பாக்கிகளை ரவைகளை மட்டுமே அறிவீர் நீங்கள். உங்கள் உலகம் உமது முகங்களாய் சுருங்கிப் போனது. எதிரியை விடவும் உமது கண்களுக்கு சக இயக்கத்தவர் சத்துருவானார்.
சோமசுந்தரத்தார் பெருமூச்செறிந்தார். என் மனச்சாட்சிக்கு சங்கடமானது: மீண்டும் சோமரின் வாய்மடை திறந்தது.
த்தான் எதுவுமில்லையே இளைஞர்கள் நீங்கள் ஆயுதம் தரித்தீர். வலது காலால் எங்கள் எதிரியை உதைத்தீர் என்பதனாலே இடது காலால் எங்களை மிதிக்க உரிமை தந்தது யார்?
இத்தனைக்குப் பின்னரும் நாமே உங்களுக்கும் உலகத்துக்கும் சோறு போடுகிறோம். மீண்டும் எனக்குத் தரும சங்கடம். அப்பையா சுகமாய் இருக்கிறீர்களா என்றென்றேதோ உளறத் தொடங்கினேன். சிரித்தார் மனிதர். y

Page 34
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மனிதர் சிரிப்புக்கு மாறுபாடாக இந்தச் சிரிப்பில் ஏதோ ஒன்றொலித்தது. உடல் வியர்க்கச் சோமரைப் பார்த்தேன் "வரம்பு செதுக்கி வயல் திருத்துகையில்
கெலிக்காப்ரர் சுட்டு . . . சென்ற மாதம்தான் இறந்துபோனேன் நான்' மனிதரைக் காணோம். உடல் ஒரு கணம் சில்லிட்டுறைந்தது. மதகின்மீது சிகரட் புகைபோல் அசைந்தது காற்று.
வீட்டுப் படலையைத் திறக்கிற பொழுது மனதைச் சோகம் அழுத்திப் பிடித்தது. எங்கள் பழைய வீட்டை நான் பார்த்தேன். பத்து வருடமாய் எழுபது மைல்கள் எட்டியிருக்கும் யாழ்ப்பாணத்திலெம் வாழ்வு தொக்கியது. எப்போதோ நாம் இருந்த வீடிது எங்கும் எங்குமென் இளமையின் சுவடுகள் எங்கும் எங்குமென் நினைவின் பதிவுகள் நந்தவினமாய் இருந்த முற்றத்தில் கணுக் காலளவு சருகு புரண்டது.
மீனாட்சி அம்மை முற்றம் வந்தாள் தம்பி உன்னை யாழ்ப்பாணம் வரட்டாம் மிக அவசரமாம். என்னவோ ஏதோ என்மனம் பதைத்தது. யார் சொன்னார்கள் என்று நான் வியர்த்தேன்.

வ.ஐ. ச ஜெயபாலன்
isindobudilisiäisiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikaGa
ஒன்றுமில்லை. தமிழகத்திலிருந்து உனது தம்பி வருகிற சேதிதான்.தில்லை வந்தவன். அமைதிப்பட்டது ஏழை மனசு,
அம்மா என்று மீனாட்சி அம்மையை அணைத்துக் கொண்டேன். பத்து வருடமாய் x எமது வீட்டைப் பார்த்துக் கொள்பவள் எங்களுள் ஒருத்தியாய்ப் பக்குவப் பட்டவள் இவளை நான் மதித்தேன். இவள் : மலையகத் தேயிலைத் தோட்ட வெளிகளில் இளமை மிடுக்குடன் உலவிய தென்றல் கலைத்துவ முள்ளவள். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் புரட்சிகள் தோறும் போர் முரசானவள் காவலர் கெடுபிடி க்ண்டு நகைத்தவள் சிறைகளில் வீழ்ந்தும் சினம் அணையாதவள். புயல் ஒரு தென்னையைப் பெயர்த்து வீசுதல் போல் இன வெறியர்களால் மலையகத் திருந்து வீசப் பட்டவள். இது என் தேசம் எனது இரத்தத்தால் எனது வியர்வையால் நானே கட்டி எழுப்பிய தேசம் என்கிற தன திறுமாப்போடு இந்தியா செல்லாமல் எம்மிடம் வந்தவள்.
AF. 6T.-5 歌邸。

Page 35
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
"சாப்பிடு மகனே' என்ற மீனாட்சியின் முகத்தை நிமிர்த்தி "சாப்பிட வேண்டின் எனக்கொரு உதவி நீ செய்திட வேண்டும் அம்மா" என்றேன். பாட்டுத்தானே வா.வா-என்று வாஞ்சையுடன் எனது கைகளைப் பற்றினாள் என் வாய்க்கு உணவு படைத்தமையாது செவிக்கும் படைத்தாள் சுந்தரத் தமிழால்.
வெண்மேகம் முத்தமிட
பூப்படைந்த தேயிலையாம்
தேயிலையின் கொழுந்தெடுக்கும்
பூவிரலின் தேவதையாம்
தேவதைகள் அழுத குரல்
தேசமெங்கும் எதிரொலிக்கும்
செந்தமிழர் எழுந்த ஒலி
செகமெங்கும் முரசறையும்.
மங்கையிவள் கண்ணிரோ
மாவலியில் பெருகி வரும் மாதிவளின் வியர்வையிலே
மாநிலங்கள் பசியாறும் பசியாறும் மாநிலமே
பதில் சொல்ல நாம் பணித்தோம் பாவை இவள் கண் விழித்தாள்
படையாக எழுந்துவிட்டாள்.
யாழ்ப்பாணச் செம்மண்ணில்
புல்லெடுக்கும் மேனகையே

வ். ஐ. ச. ஜெயபாலன்
வன்னியிலே காடழித்து
வயல் விதைக்கும். அருந்ததியே மீன்பாடும் தேன் நாட்டின்
தெம்மாங்கு ஊர்வசியே வயற் சேற்றில் கவிதை நடும்
பாத்திமா பேகங்களே மலையகத்து தேவதையின் பேரணியில் வாரீரோ மானிடத்தின் வெற்றிக்கு
வழி ஒன்று காணிரோ.
காடுகள்
காடாகிக் கிடந்த கிராமப் புறங்கள் இவற்றைக் கடந்தென் v வடதிசைப் பயணம் ஆரம்பமானது வழியில் என்போல் ஒருசிலர் கூடினர் மறுநாள் இரவே கால் நடையாக யாழ்ப்பாணத்து ஏரியைக் கடந்தோம் துப்பாக்கியோடு இளைஞர்கள் சிலர் எமை எதிர்கொண்டனர். அண்ணா என்று அன்பாய் அழைத்தனர். அவர்களுடன் நாம் தேநீர் பருகினோம்.
இராணுவத்தினரின் நடமாட்டத்தின் இறுதி நிலையை எமக்கெடுத் துரைத்தனர். வழமையான பாதையைத் தடுத்து பாதுகாப்பான மார்க்கம் காட்டினர். சிறிது தூரம் போர்க்களச் சுமைகள்

Page 36
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
அவர்களுக்காக நாமே வலிந்து காவிச் சென்றோம். பின்னர் நாம் பிரிகையில் எம் கண்கள் பனித்தன.
- இந்தச் செக்கலில் தமது அன்னையை அணைத்தபடிக்கு தூங்கியிருக்கக் கூடிய சிறுவர்கள் இந்தச் செக்கலில் தமதிளம் மன்ைவியர் மார்பில் முகம் புதைத்து கனவு கண்டிருக்கக் கூடிய இளைஞர்கள் துப்பாக்கி காவி எமது இருப்பை உறுதி செய்திட மரணப் புதைமணல் வெளியில் நடக்கிறார். கண்கள் பனித்தது. மழையில்லாது வரண்டு கிடந்த மணல் பாதைகளில் பனியில் மலர்ந்து சிரித்தன பூண்டுகள். வாழ்க்கையை எதிர்கொள் என்ற சேதியை பறவைகள் பாட துயில் எழுந்தான் எம் சூரியதேவன். கிழக்குத் திசையால் அவனது மணித்தேர் நுகம் தலைகொடுத்து ஏழு வர்ணக் குதிரைகள் பாய்ந்தன.
செக்கல் சிறகை விரித்தான் செம்பொன் கதிரவன் பூமியின் மீது

வ.ஐ. ச ஜெயபாலன்
அவன் எழுதிய கவிதைகள் பறவைகள் பாட அவன் சிந்திய புன்னகை பூஞ்செடி சூட தென்னங் கீற்றிலும் சிறிய புல் இதழிலும் இருளெனும் பீடையை ஒட்டி எதிர்ப்படும் மானிடர் விழித்திரி மீது கம்பிக்கைச் சுடரினை ஏற்றி நடந்திடும் சூரிய தேவனை வாழ்த்து.
காடுகள் பாடும் கடலும் பாடும் கழனிகள் பாடும் நதிகளும் பாடும் மண்ணும் மலர்களும் காற்றும் பாடும் வருக நம் வீதியில் என்று.
பொல பொலவென்று விடிகிற போது பளைக்கு வந்தேன். W கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் கண்டி வீதி செத்துக் கிடந்தது. கார் பஸ் என்ன காகமே இல்லாத மரண அமைதி. ہی۔ சாவின் திகில் என்னில் தொற்றிக் கொண்டது. விடுதலைப் படைகள் பின்வாங்கியதோ? எதிரிப் படைகள் முன்னேறியதோ? வீதி ஏன் இப்படி வெறித்துக் கிடக்குது? சனசந்தடி ஏன் செத்துப் போனது?
தூர ஒரு வான். விடுதலை இயக்கப் படையினர் போலும், ஒரொரு சமயம் எதிரிகள் கூட விடுதலை இயக்க மாயத்தில் வந்திடும்
(9

Page 37
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
enue
சேதிகள் அறிவேன். - - - ஒடவா நிற்கவா என முடிவெடுக்குமுன் என்முன் "கிறீச்சென நின்றது வண்டி, "தோழர் கவிஞர் ஏறும் ஏறும் −
எங்கே போகிறீர்? யாழ்ப்பாணத்துக்கா? எங்கோ கேட்ட பழகிய குரல்இது. வண்டியை அண்மினால் எனது நண்பன் இப்போது ஒரு விடுதலை இயக்கத்தின் படைக்குத் தளபதி. "ஆம்" எனத் தலையை அசைத்துச் சொன்னேன் **கோப்பாய் போகிறோம்
எனினும் உம்மை வீட்டில் இறக்கலாம்
ஏறுக" என்றான் என்னரும் நண்பன்.
நெடுநேரத்து மெளனம் உடைத்து மீண்டும் வாயைத் திறந்தான் நண்பன். இன்று ஏன் ஹர்த்தால் தெரியுமா தோழரே என்று கேட்டான் என் பக்கமாய்த் திரும்பி. ஹர்த்தாலா இன்று.காரணம் என்ன? அதுதான் வீதி வெறிச்சோடிக் கிடக்குதா? பின்னர் சற்றுக் கொதிப்புடன் கேட்டேன் மாற்றரசாக இயங்குவதற்கு கடமைப் பட்டவர்கள் அல்லவோ நீங்கள் அரசறு நிலைக்கேன் இட்டுச் செல்கிறீர்? ஏட்டிக்குப் போட்டியாய் ஒவ்வோர் இயக்கமும் வாரா வாரம் ஹர்த்தால் வைக்கிறீர்! இருந்தால் ஹர்த்தால் எழும்பினால் ஹர்த்தால்
V
70

"வ.ஐ. ச ஜெயபாலுன்
நடந்தால் ஹர்த்தால் ஓடினால் ஹர்த்தால் எடுத்ததற் கெல்லாம் ஹர்த்தால் வைத்து என் செயப் போகிறீர்? என் செயப் போகிறீர்? எதிரிகள் சிதைக்கும் பொருளாதாரத்தின் மிச்சம் மீதியை நீங்கள் ஏன் சிதைக்கிறீர்? அரசியல் என்பது துப்பாக்கி மட்டுமா? எதிரிக்கு எதிராய்த் துப்பாக்கி என்றும் மக்களுக்கும் சக இயக்கத்துக்கும் பலத்தைக் காட்ட ஹர்த்தால் என்றும் ஏன் முடிவெடுத்தீர்? رg எரிச்சல் மிகுந்து வெறுப்பாய்ச் சிரித்தேன். ஹர்த்தால் என்பது மக்கள் செய்வது. ஈழ மண்ணில் ஹர்த்தால் என்பது ஏதோ ஓர் இயக்கம் பிரகடனம் செய்யும் ஊரடங்கு உத்தரவன்றோ? வெடிகுண்டெறிந்தும் துவக்கைக் காட்டியும் வீதியை விட்டு மக்களை விரட்டுவீர் வயல்களை விட்டு மக்களை விரட்டுவீர் கடைத்தெரு விருந்து மக்களை விரட்டுவீர் கடலில் இருந்தும் மக்களை விரட்டுவீர். எதிரியாலே சுருங்கிப் போன உற்பத்தி நேரத்தை உறுதிப் படுத்திடும் உமது கடண்மயை எப்ப்டி மறந்தீர்? பண்டமும் சேவையும் உமது துப்பாக்கிக் குழலால் வருமோ?
Tt

Page 38
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
சிறிது நேரமெளனத்தின் பின் தளபதி கேட்டான். இன்றைய ஹர்த்தால் ஏன் நடக்கிறது என்பது தெரியுமா தோழரே உமக்கு? தெரியாதென்றேன். எமது படகை எதிரிகள் கடற்படை இரவு மூழ்கடித்தது என்றனன் தளபதி. துயரம்தான் என்தோழனே எனினும் நொடித்துப் போன நம் பொருளாதாரத்தின் கால்களை ஒடிக்கும் ஹர்த்தால் வேண்டாம் மீண்டும் உறுதியாய் என் குரல் தொனித்தது. மீண்டும் அமைதி.
இரகசியம் காப்பீர் என்றால் மட்டும் இரவு இறந்தவர் பட்டியல் பற்றி ஒன்று சொல்வேன் என்னருந் தோழரே! மீண்டும் மெளனம். சொல்லும் என்றேன். கையிலிருந்த ஏ. கே. றையினை மடியில் வைத்து
பின்புறம் திரும்பி கண்ணாடியினை சரி செய்தபடிக்கு உனது தம்பியும் ஒருவன் என்றான். "கடவுளே’ என்றேன். அதிர்ச்சி என்நெஞ்சை அடைத்துக் கொண்டது. கண்மடை திறந்தது விசயம் தெரிந்தால் வீட்டில் என் அம்மா

வ.ஐ. ச ஜெயபாலன்
உயிர் விடுவாளே, என் செய்வேன் நான் என்று அரற்றினேன்.
கவலைப் படாதே இறந்தவர் பட்டியல் ரகசியம் என்றான். போராடுகின்ற எங்கள் வாழ்வில் மரணம் மட்டுமே நிச்சயமானது வடக்கிலிருந்து கிழக்கு வரைக்கும் நீண்ட எம் ஈழ தேசத்து மண்ணில் தினம் தினம் எம்முள் ஒருவனை யேனும் விடுதலைக்காகக் களப்பலி தருகிறோம். உனது தம்பி ஒருவனுமல்ல
ஒருவன் உனது தம்பியுமல்ல நீயே அழுதால் நம்பிக்கைக்கு யாரை நாம் கொள்வது கவிஞனே என்றான். அன்புடன் அவனது தோளைப் பற்றி முதுகிலென் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.
வீட்டில் என் குரல் கேட்டதும் காற்றில் நீச்சலடித்து வருவது போல முதுமை முறித்துப் போட்ட என் அன்னை வெளியில் வந்தாள். - . . துயரச் சுமையால் அழுந்திடும் ஈழ அன்னையர் எவரையும் போல என் அன்னையும் முதுமைச் சரிவில் இடறி விழுந்தவள். துயரை நெஞ்சுள் அமுக்கிய படிக்கு அவளை மார்புடன் அள்ளி அணைத்தேன். "அம்மா தினசரி விரதமும் கோவிலும் பட்டினி கிடந்தே சாகப் போகிறா"
} ፰፻፵

Page 39
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
என்றாள் அக்கா.
துயர் என் நெஞ்சை துரு சப்பித் தின்ற வாளால் அறுத்தது. 'தம்பி வருவதாய்க் கடிதம் போட்டான்
அவங்க இயக்கப் படகு ஒன்று கடலில் மூழ்கியதாம் ஹர்த்தால் நடக்குது' கண்கள் நீர் மல்கிய அன்னையை விழித்தேன் அழாதே என்று அதட்டி அடக்கினேன். அவர்கள் இயக்கத் தளபதியுடன்தான் காரில் வந்தேன் இந்தப் படகில் தம்பி இல்லை பாலஸ்தீன விடுதலை இயக்கப் பயிற்சிக்காக லெபனான் சென்றான். துணிந்து பொய் சொன்னேன். சாப்பிட வா எனச் சண்டைக்கு நின்றேன்.
"என்ர விரதப் பலன்தான் ராசா தம்பியும் நீயும் தப்பிக் கிடப்பது இன்று விரதம்.இரவு தான் உணவு" எங்களுக்காகத் தன்னை ஒறுப்பதைத் தவிர்த்து வேறொரு மார்க்கமும் அறியாள் பதில் ஏது சொல்வேன்.
மறுநாள் பல்கலைக் கழகம் சென்றேன் தோழரைக் காண. கலைஞரை இளைய கவிஞரைக் காண காதலாய் உணரும் தோழமைக் குரிய சுகந்தியைக் காண.
74

வ.ஐ. ச ஜெயபாலன்
Haasimimus ബത്തിലilm
எனது பழைய சிற்றரசான பல்கலைக் கழகச் சூழலில் கிட்டும் சமூக இருப்பின் சுகத்தினைச் சுகிக்க.
வழியிலோர் திருமண வீட்டைக் கடந்தேன்
கோட்டை ராணுவ முகாமின் பக்கமாய் குறும் பீரங்கிகள் வெடிப்பதைக் கேட்டேன் இன்னுமோரிடத்தில் விமானப் பருந்தின் வட்டத்தின் கீழ் மரண ஊர்வலத்துக்கு அஞ்சலி செய்தேன்.
மைதானத்தில் மாரி விதித்த பசும்புல் விரிப்பை சூரியக் கிடா ஒட்ட மேய்ந்த இடங்களில் காற்று செம்மண்ணைத் திருடிச் சென்றது மலை வேம்புகளின் நீழலில் அமர்ந்து ஆண்களும் பெண்களும் என்றும் போலவே முடிவிலாக் கதைகளில் மூழ்கி இருந்தனர். பூமாதேவிக்குப் பிணையாய்ச் சென்று வெயிலை விலக்கிக் குளிர் நிழல் வீழ்த்திடும் மலை வேம்புகளும் நிழல்வாடிகளும் வருக என்னும். தூரத்தே மாணவர் அறையின் பக்கமாய் உடுக்கு அடிக்கும் ஒசை எழுந்தது. ஓசை மிஞ்சியோர் பாடல் வளர்ந்தது. தெரு நாடகத்துக்கு ஒத்திகை என்று வழியில் சிலபேர் பேசிச் சென்றனர். மாணவரறையில் கலைக் குழுத் தோழர்கள் வேசம் போடாத ஆண்களும் பெண்களும் ஈடுபாடுள்ள ஆவேசத்துடன்
ஆடிப் பாடினர்.
、7弱。

Page 40
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
செம்பாட்டு மண் தோய்ந்த யுகபுருஷன் எழுக செந்நெல் வயல்தோறும் வளைக்கரங்கள் உயர்க அன்னை மண்ணை மீட்க முஸ்லீம் சோதரர்கள் வருக ஆகாயம் பிளக்க மலை மானிடர்கள் நிமிர்க.
எங்களது அன்னையர்கள் வாழ்ந்ததிந்தப் பூமி ஏழுகடல் ஓடிப் பொன் சேர்த்ததிந்தப் பூமி மீன்பாடச் செந்நெல் வளர்வதிந்தப் பூமி விறல் மிக்க வன்னியர்கள் ஆண்டதிந்தப் பூமி முன்னோர்கள் நல்லூரில் பறங்கியரை வென்றார் நாற்றிசையும் புகழ்பேசப் போர்க்களங்கள் கண்டார் ஒற்றுமை பிரிந்ததினால் எம் மண்ணைத் தோற்றார் ஒன்றாகி எம் மண்ணைப் போராடி வெல்வோம்.
போர்களுள்ளும் மரணத்துள்ளும் கொடிய உட்பகைச் சூழலினுள்ளும் தனித்துவத்தோடு மக்கள் மத்தியில் வாழ்வினைக் காக்கும் வரலாறான கலைஞரை வாழ்த்தி சிற்றுண்டிச் சாலைப் பக்கமாய் வந்தேன். தோழியர் சிலபேர் என்னை அழைத்தனர் நிமிர்ந்த நன் நடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்குமாக சுகந்தியுமிருந்தாள்.
போர்ப் பலியான பெண்கள் தினவிழா துண்டுப் பிரசுரம் எழுதிய படிக்கு சுறுசுறுப்புக் குலையாதிருந்தாள் செல்வி என்கிற என்னருந் தோழி.

Ni. a. JP. GagaÁŽiriwistir
களப் பலியான் தோழியர் படங்களை கலைத்தபடிக்குக் கலா என்னைப் பார்த்தாள். தனிமையில் என்னை அழைத்தாள் சுகந்தி புளகாங்கிதம் அடைந்ததென் தேகம் வெற்றி பெற்ற ஒரு வீரனுக்குரிய தன்னடக்கத்துடன் δ. அவள் பின் சென்றேன். முன்னமே நானிதைச் சொல்லாதமைக்கு மன்னித்திடுக கவிஞனே என்றாள். ஏதென வின்வினேன். : மனசை வீணாய் அலைப்புண்ண விடாதே நாங்கள் நல்ல தோழர்கள் மட்டுமே என்றவள் குரல் ஒரு தீர்ப்பாய் ஒலித்தது. சுகந்தி.என்றேன் அப்போது சூரிய கிரகணம் நேர்ந்தது. செல்வி ஏதும் குறை சொன்னாளா என்று நான் கேட்டேன். செல்வி குறைகள் சொல்பவளல்ல உன்னை மதிப்பவள். கதிரவனோடு வாழ்வினைப் பகிர்ந்திட நான் விரும்புகின்றேன். எச்சிலை மிண்டி விழுங்கிய படிக்கு அவளது முகத்தில் கண்களை வீசினேன். பேராட்டத்தில் கால்களை இழந்த கதிரவன் என்கிற எழுத்தாளத் தோழனை ஒரு கணம் நினைத்தேன் மறுமுறை விழுங்கிய எச்சிலோடு எனது சோகத்தையும் மிண்டி விழுங்கினேன்.

Page 41
ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்
*ஒரு முக்கிய செய்தி ரகசியம்" என்றாள் “எது கதிரவனோடு நீ வாழ இருப்பதா? "ஆம் அதுவுமோர் இரகசியம்.
இன்னொரு ரகசியம் இறக்கிற" தென்றாள். ரகசியம் காவி நலிந்த நெஞ்சினன் எது வெனக் கேட்டேன். தலை மறைவாகிய சிங்களத் தோழர்கள் யாழ்ப்பாணத்தில் நம்முடன் உள்ளனர் உன்னை அவர்கள் பொன் என மதிக்கிறார் உன்னால் எமக்கு எத்துணைப் பெருமை என்றாள் சுகந்தி. 'நிவாரணப் புகழ்ச்சியா' என்று நான் கேட்டேன்
இல்லை என்றாள் புன்னகை நடுவே. காட்டுப் பாதையால் நாளை காலை சிங்களப் புரட்சிக்காரன் டி. ஜே. இங்கு வருகிறான் என்பதும் சொன்னாள். சுகந்தி என அவள் கைகளைப் பற்றினேன் உண்மையா சுகந்தி நல்லது நல்லது அவனுடன் நிறையப் பேசவேண்டும் என்று நான் மகிழ்ந்தேன், கார்த்திகா கையில் ரதியின் புகைப்படம் மின்சாரத் தாக்குதல் ஒரு கணம் நிகழ்ந்தது. ரதி சிரித்துக் கண்ணைச் சிமிட்டினாள் பின்னர் உதட்டில் விரலை அழுத்தி "உஸ்" என என்னை எச்சரித்திட்டாள்.
எத்தனை கோடி இரகசியங்களை நாங்கள் காப்பது
t

Nu. M. F. GagauurtRidir
போரின் பின் எம் நெஞ்சக் கூட்டுக்கு தாங்கொணா ரகசியச் சுமைகள் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டேன். என்ன ஏதெனத் தோழியர் கேட்டனர் தேநீருக்குக் கோரிக்கை விடுத்த பின் *ரதியைத் தெரியுமா?"
மழுப்பிச் சிரித்தேன். காப்பு இழுபட்ட கைக்குண்டு போல கனன்ற நெஞ்சம் 4. வெடித்துச் சிதறுமோ என நான் அஞ்சினேன். மீண்டும் ரதியின் புகைப்படச் சலனம் அமைதியாகு என்றவள் பணித்தாள். "இவரும் எங்கள் வன்னி தானே t ரதியை இவருக்குத் தெரிந்திருக்கலாம்" என்றாள் செல்வி. "கேள்விப்பட்டேன்’ என நான் மழுப்பினேன்.
அப்படியானால் நீங்களோர் அஞ்சலி எழுதித் தருக எனக் கலா பணித்தாள்.
மீண்டும் நாங்கள் மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தினோம். சுடர்விழி உயர்த்தி இளநகை உதிர்த்து தோழரே என்றாள் சிறுமி வாசுகி. கெடுக சிந்தை கடிதிவள் துணிவே" குடும்பமே பலியாய்ப் போன பின்னரும் குன்றென நின்ற குழந்தையை வாழ்த்தினேன்.
A ASqMAA MA AAAASS ELLS ASSAA SiSASASASA AAAAAAAAqiqi iA AAAA S

Page 42
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
LcLLGLLLALAMkSLLLGTLTLSLASLGrLLLLSrrEEALALSL0L SSS SLSSSSSSESEErkSLLL0LES S qLqqrrLALASSS S LLqS qALS
"தோழரே ரதிக்கு அஞ்சலிக் கவிதை
நாளை வேண்டும்" என அவள் பணித்தாள் போர்ப் பொருளாதாரமும் பெண்களும் பற்றி ஓர் கருத்தரங்கு. என்றாள் தோழி ரஞ்சனி. இப்படியாகப் பெண்கள் என்னை ஈடுபடுத்தி போராட்டத்தில் சுறுசுறுப் பாக்கினர்.
ஆண்கள் தலைமைகள் இரண்டாம் தரத்துப் போராளிகளாய் பெண்களை ஒதுக்கினும் இன்றும் எங்கள் போராட்டத்தில் மானிடம் வாழ்வது மகளிர் பங்கால். இன்று அவர்களே மண்ணையும் விண்ணையும் தலையில் சுமக்கிறார். தெருவில் மணப்பது பெண்கள் ரத்தம் வயலில் மணப்பது பெண்கள் வியர்வை நீதி மன்றுகளில் பெண்களின் கண்ணிர் படை முகாம்களிலே பெண்களின் நிணநீர். அகதி முகாம்களின் சேவைப் பொறுப்பிலும் ஊர்வலங்களது முன் அணிகளிலும் போர்க் குணத்தோடெம் பெண்களே நின்றார் இன்று நாம் உண்ணும் சோற்றுப் பருக்கையில் பெண்களின் வியர்வை. இன்று நாம் மகிழும் வெற்றிச் செய்தியில் மறக்கப்பட்ட பெண்களின் உழைப்பு.
89
 
 

ல். ஐ. ச. ஜெயபாலன்
மக்கள் மத்தியில் நம்பிக்கைச் சுடரை அணையாமலின்றும் அவர்களே காத்தார். இருந்தும் அவர்கள் இரண்டாந் தரப் பேராளிகளாய் இகழப் படுகிற விதியை இகழ்ந்தேன்.
இரவு ரதிதேவி கனவினில் வந்தாள் உனது நடிப்பு அற்புதம் என்றாள் புறப்பட்டு வன்னிக்கு வா எனப் பணித்தாள்' புன்னகையோடு புகையென மறைந்தாள்.
மறுநாள் எழுந்ததும் வன்னிக்குச் செல்ல மனம் அவாவியது. காலை என்னை வந்து சந்தித்து அனுதாபம் சொன்ன போராளி ஒருவர் இரவு தாங்கள் வன்னி செல்கையில் என்னையும் அழைத்துச் செல்லலாம் என்றார் நன்றி என்றேன்.
இரவே வன்னிக்குச் செல்ல விருந்ததால் வயல் வெளியாலும் கடற்கரையாலும் அன்று முழுவதும் பயணம் செய்தேன் என் பணிகள் முடிக்க. கடலில் எதிரிப் பீரங்கிப் படகுகள் குண்டுகள் வீச கரையில் அமர்ந்து யாழ்ப்பாணத்துக் கிழவன் ஒருவன் தனது வலையைத் தைத்தபடிக்கு அமைதியாகச் சுருட்டுப் புகைத்தான்.
AF. T.-6 参籍

Page 43
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
శః
வானில் இரும்புக் கழுகு எழுந்து கண் படுபவற்றைச் சுட்ட வேளையில் தோட்ட நிலத்தில் ஒரு மரத்தின்கீழே உழவு யந்திரத்தை மாயம் செய்துயின் மீண்டும் இயக்கிய ஓரிளம் பெண்ணைக் கண்களால் பார்த்தேன்.
இடிந்த கட்டிடம் எரிந்த குடிசை மரணத்தின் சுவடுகள் பதிந்த வீதிகள் என்றும் பணியாது உழைப்புடன் மனிதர்கள். வாழ்க உழைக்கும் யாழ்ப்பாணம் என மனதால் வாழ்த்தினேன்.
இரவு எம் வீட்டின் முன்புறமாக ஓர் இளைஞன் தோன்றினான். கச்சேரியடியில் வன்னிக்குப் போக நம்வண்டி காத்திருக்கு என்று மறைந்தான். எனது முடிச்சைத் தூக்கியபடிக்கு அம்மாவை அழைத்து முத்தம் கொடுத்தேன். தெருத் தெருவாகப் புதைக்கப்பட்ட இளைஞர்களாலும் யுவதிகளாலும் சூல் கொண்டிருந்த எம் யாழ்ப்பாணத்துக்கு கண்ணிர் மல்கக் கைகளை அசைத்தேன்.

ஐந்து
கிளிநொச்சி தாண்டி போராளிகளுக்கு நன்றி கூறினேன். வண்டியை நீத்தால் வழியெலாம் இருட்டு. வானில் விண்மீன்களை வேட்டையாட மின்னல் பாம்புகள் நெளியும் குளிர்ந்த காற்றோ வெறி பிடித்தாடும். மழை வரக்கூடும் என முணுமுணுக்கையில் தொப்புத் தொப்பெனத் தண்ணீர்க் குண்டுகள் கைகளில் தைக்கும். . x மழையின் அச்சுறுத்தலை நிராகரித்து கால் நடையாக என்காரியம் தொடர்ந்தேன். கைவிடப்பட்ட ஒரு சிறு கிராமத்தினை தாண்டியபோது வானம் கிழிந்தது.
இருளில் கதவினைத் தள்ளி ஒருவிட்டுள் துழைந்து கொண்டேன். ஏதோ ஒருவிலங்கு பிசாசாய் முனகும். நெஞ்சம் பதறப்பையைத் துழாவி
3.

Page 44
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
தீப்பெட்டியினைத் தேடி எடுத்தேன். என்முன் பசியில் மெலிந்த ஒரு வேட்டைநாய் வாலை அசைக்கும். குவிந்து கிடந்த குப்பையின் மீது நெருப்பை விதைத்தேன். முகத்திலடித்து வெளியில் பறந்ததோர் குருட்டு வெளவால்.
சுவரிடுக்குகளில் குறுகுறுத்தன மாடப் புறாக்கள்.
சுட்ட மாடப் புறாவின் இறைச்சியை பகிர்ந்த கணமே தனது நாவால் எனது கால்களில் விசுவாசத்தை எழுதியது வேட்டை நாய். கவலை வேண்டாம் படுத்துத் தூங்குக என்று மொழிந்து வாலைக் குழைத்தது. இடியை மின்னலைப் பெருமழையைக் காற்றை வெளியே விட்டுக் கதவைச் சாத்தினேன் வாசலில் வீரன் காவல் கிடந்தது.
கனவில் எனது முதிய தாயார் கர்ப்பம் தரித்து அவஸ்தைப் பட்டார். ஊரெலாம் கிழவிகள் கர்ப்பம் தரித்தார் ஊரெலாம் குண்டுக் காயங்களோடு பிள்ளைகள் பிறந்தன. மீசையோடும் குறுந்தாடியோடும் நெஞ்சில் குண்டுக் காயத்தோடுமென் தம்பியும் பிறந்தான்.

வ. ஐ. ச ஜெயபாலன்
குண்டுக் காயம் நெஞ்சில் இருந்ததால் அம்மாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தம்பி வழமையாய்ப் பாடுகின்ற கடல் பாட்டின் ரீங்காரம் கேட்டேன்.
அலைகள் பாயும் கடலிலே அன்னை மண்ணை மீட்கவே புயலைப்போல வருகிறோம் புரட்சி கீதம் பாடியே. பனைக் கரங்கள் அசைக்கிறாள் பாசமிக்க அன்னை மண்-நம் துணைக் கரத்தில் அசையுதே துப்பாக்கியும் வீணையும். அன்னை மண்ணை வந்தொரு அன்னியன் மிதிக்கவோ ஜெர்மனி பிரான்சென நாய்களாய் நாம் ஓடவோ?
கண்களை விழித்தால் திறந்து கிடந்தது குடிசையின் கதவு. நீராடியபின் கூந்தலுக்குச் சாம்பிராணிப் புகையூட்டும் அழகிபோல் முகில்களிடையே முளைத்தது செஞ்சுடர். வெளியே எனது வேட்டைநாய் குரைத்தது வெள்ளக் காடாய்க் கிடந்தது உலகம். ஒருசிறு திட்டில் முயலை அடித்து விழுத்தி தனது வல்லமையை நிரூபித்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தது வேட்டைநாய்.

Page 45
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வீரன் என்று பாசமாய் அழைத்தேன் மீண்டுமென் நீண்ட பயணம் தொடர்ந்தது. இம்முறை எனக்கு மெய்க் காப்பாளனாய் வீரன் நடந்தான் வெள்ளம் தாண்டி. ( :
நீண்ட பயணத்தின் பின்னர் ஒரு சிறிய வன்னிக் கிராமம். "இது கடற்படைப் படகு - Y -
இது விடுதலைப் படையின் வீரப் படகு'என கும்மாள மிட்டபடி தெரு வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டனர் குழந்தைகள்
என்னைப் பார்த்து நில்என்றான் ஒருவன்னிச் சிறுவன் கையிலோர் மரக்கிளை துப்பாக்கியாக. கைகளை உயர்த்தினேன்.
யார் நீ? என்றான். "சிங்கள அரசின் இராணுவமா நீ" என்றெனைக் கேட்டான் இல்லை. நான் ஒரு தமிழன் என்றேன். சிங்களப் படைகள் லாரிகளிலும் கவச வண்டிகளிலும்
இவ்வழி வருகின்றார். வழியெல்லாம் கண்ணி வெடிகள் வைத்துள்ளோம் இப்போதுன்னை விட முடியாது என்றான் என்னை மறித்த சிறுவன். காதை நிமிர்த்திய எனது வீரன் ஒருமுறை உறுமும் சரி சரி விடு எனும் பிறிதொரு பிள்ளை.
88

, வ.ஐ. ச ஜெயபாலன்
சிரித்தபடி நம் பயணம் தொடர்ந்தோம். பிரசவ விடுதியில் பள்ளிக் கூடத்தில் குண்டுகள் போட்டும் எமது பிள்ளைகளின் குதூகலத்தை சாகடிக்க இயலாது போனது எதிரிப் படைக்கு. ஈழ நாட்டின் வழி தெருவெங்கும் போர் விளையாடும் வீரக் குழந்தைகள் ஒரு போதும் அவர்களைக் கோபிக்காதே என்று வீரனை அதட்டிய படிக்கு மீண்டுமோர் சிறிய கிராமத்துள் நுழைந்தோம்.
வழியெலாம் கடந்த கிராமங்கள் யாவும் காற்று மழையிடம் உதைபட்டிருந்தன. "நாங்கள இங்கே இல்லாத நாட்களில்
பூமியைப் பிளந்து நீரைக் கொணர்ந்து கிராமத்துச் செழிப்பையேன் பேணிடவில்லை?" என்று கேட்டே உதைத்ததாம் கன மழை. காகங்கள் இரண்டு பேசிக் கொணடன.
தெருவோரத்துப் பட்டி வேலிகள் சிதைந்து கிடந்தன மண் மேடுகளில் கூனிக் குறுகி மந்தைகள் நின்றன. சில வீடுகளின் கூரைக் கிடுகுகளை இழுத் தெறிந்திருந்தது காற்று. சகாரா போலத் தரிசாய்க் கிடந்த

Page 46
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வயல் வெளிகளிலே போர் நெருக்கடியிலும் தம் சிருஷ்டி ஆற்றலை. இழந்துபடாத இறுமாப் போடு விவசாயிகள் சிலர். இப்படியாக அமைந்த எம் பயணம் ஒருவாறு முடிந்தது.
வீரனும் நானும் வீட்டில் கிடைத்ததை விழுங்கி விட்டு பாலி ஆற்றங் கரைக்கு விரைந்தோம். தூரத்திலேயே ஓ என இரைந்து ஒப்பாரி வைத்தது
பாலி ஆறு. இனந் தெரியாத அச்சத் தோடு கரைக்கு ஓடினேன். என்னரும் ரதியாள் புதைந்த மண் ம்ேட்டில் சுழித்தோடியது புத்தம் புதுப் புனல் நெஞ்சம் வெடித்து மண்ணில் புரண்டேன். ரதி.ரதி.என்று நான் எழுப்பிய ஒலம் ஆற்றின் இரைச்சலை அடக்கிய படிக்கு காடுகளெல்லாம் எதிரொலி செய்தது. மருத மரங்களே! மருத மரங்களே! எங்கே சென்றாள் என்னரும் ரதியாள் பாலி ஆறே பாலி ஆறே போனது எங்கென் புனித தேவதை? என் கால்களை நக்கி வீரனும் அழுதான்.
88

வ. ஐ. ச ஜெயபாலன்
பயங்கரமாகச் சுழித்து ஓடிய காட்டு ஆற்றின் பேய்ப் புதுப் புனலில் என்னை வீசி எறிந்தேன் திடீரென. அதிசயம் நிகழ்ந்தது. என்னை முடக்கித் தரையில் போட்டு கால்களால் வெள்ளம் மிதித்த பொழுதில் தரை பிளந்து என்னைத் தாங்கி வெளியில் வந்தாள் என் கவிதைத் தேவதை. மூச்சிழந்த எனது வாயில் தன் இதழ் பொருத்தி ஈருடலும் ஒரு சுவாசமும் ஆனாள். சஞ்சீவிக் காற்றாய் அவளது மூச்சு என்னைத் தொட்டது. எரிமலை போன்று கனன்ற மார்புகள் குளிர்ந்த என் உடலைச் சூடாக்கியது.
இருண்ட ஒரு மல்ைப் பள்ளத்தாக்கில் இருப்பதை உணர்ந்தேன். என்னைக் கட்டி இழுத்தபடிக்கு எருமைக் கடாவில் இயமன் வந்தான் எருமையோடு இயமன் சரிய திடீரென அறுந்தது பாசக் கயிறு. கண்களை விழித்துப் பார்த்த போது என்னை மடியில் கிடத்தியபடிக்கு ரதி புன்னைகத்தாள். எனது கால்களை வீரன் நக்கும். ரதி-என மீண்டும் மூர்ச்சித்துப் போனேன்.

Page 47
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மீண்டும் கண்விழித்தபோது பாலியாறு காட்டுப் பழங்களை ரதியிடம் அள்ளிக் கொடுப்பதைக் கண்டேன். பசிக்கும் அயர்ச்சிக்கும் விருந்தும் மருந்துமாயின பழங்கள். கவிஞனே எனது நேரம் வந்தது மீதிக் கதையை விரைவில் உரைப்பேன்
என்ற ரதியின் கைகளைப் பற்றி ஏதுரைத்தனை என்று வினவினேன். 'கவிஞனே எனது நேரம் வந்தது
வீர சுவர்க்கம் புகுவதற்கு'என்றாள். நான் திகைத்துப் போனேன் ரதி நான் உன்னைக் காதலிக்கின்றேன் நீயிலா உலகில் எனக்கேது வாழ்வென மீண்டு மரற்றினேன். என்மீதுனக்குக் காதல் நிசமெனில் சொல்வதைக் கேளென சுந்தரி உரைத்தாள் என்ன என்றேன். வீர மரணம் வரைக்கும் பணியாது போராடி வாழ்வதே நான் உன்னிடத்தில் வேண்டும் வரமென காதலி உரைத்தாள்கைகளைப் பற்றி. செய்வதறியாது திகைத்த என்னிடம் வீர சுவர்க்க புரியின் வாசலில் நீ வரும் வரைக்கும் காத்திருப்பேன் நான் கவலையை விடுக என்றவள் சிரித்தாள்.

வ. ஐ. ச ஜெயபாலன்
கால்களில் இதழ்களைப் பதித்த என்னைத் தூக்கி நிறுத்தி இதழ்களிலேயே முத்தம் பதிக்கலாம் என வரமீந்தாள்.
அமைதியாய் அமர்க காலம் கடக்குமுன் என் கதை கேட்கும் ஆர்வம் இழந்தனையோ அண்ணலே என்றாள். வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது மண்ணிலிருந்தேன். கதை எனத் தேவி காற்றில் விதைத்த குரல் கேட்டதும் "கிசு கிசு' பேசிய காடுகள் யாவும்
அமைதியாகின கதை கேட்பதற்கு,
**விடலை நாள்வரை மாப்பாணனுடன்
காடுகள் கரம்பைகள் வயல்கள் வாய்க்கால்கள் அணிஞ்சியன் குளத்துப் பாடசாலை பாலி ஆறு என்று திரிந்தேன். இப்போ ஆயிரம் ஆயிரமாய் யாழ்ப்பாணத்து சிறு விவசாயிகள் குடி வந்திருந்தனர். பெரிய வகுப்புகள் புகுத்தப்பட்டு பள்ளிக்கூடமும் மிகப் பெருத்திருந்தது கடைத் தெருவென்று தெருவெலாம் சந்தடி

Page 48
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எனது மண்ணின் இயற்கை அழிந்தது காடுகள் பூத்துக் கனிந்த பூமியில் கொங்கிறீட்டுகளும் செங்கட்டிகளும் குவிந்து கிடந்தன.
ஒருநாள் வீட்டில் தனிமையில் இருந்தோம் என்னுடன் தாயம் ஆடிய மாப்பாணனின் குரல் கட்டிக் கொண்டது. நடுங்கும் கரத்துடன் என்னைத் தீண்டினான் அவனது விரல்கள் தீ நாக்காய்க் கனன்றன "என்னடா உனக்கு" என்று நான் கேட்டேன். முதன் முதலாக ஒரு பயமெனைப் பிடித்தது அருகே நகர்ந்த அவனைத் தள்ளினேன். கரங்களைக் கூப்பி ஒரு முறை முத்தம் தர அனுமதித்திடுக என அவன் இரந்தான். பற்பல தடவை முத்தம் தந்த பயலேன் இப்படி ஒரே ஒரு முத்தம் யாசிக்கின்றான்? பையன் பெருத்தனன் என்பதை உணர்ந்தேன். சுகமாயிருந்தது அவனது முத்தம் சுகமாயிருப்பினும் முதன் முதலாக அச்சுறுத்தியது. செவ்விள நீரின் சிறு சிறு பிஞ்சாய் திரண்ட என் மார்பில் ஊர்ந்த விரல்களை பிடுங்கி எறிந்தேன்.
2

வ். ஐ. ச. ஜெயபாலன்
நீ கெட்டுப் போனாயடா என்று இகழ்ந்தேன், அம்மாவிடத்தே சொல்லி விடாதே என்றவன் என்னை மீண்டும் இரந்தான் இப்படி அதன் பின் எத்தனை தடவை என்முன் கைகளைக் கூப்பி இரந்தான் இதன்பின் எத்தனை தடவை துயிலில் எனது கால்களில் முத்தம் பதித்தான் இப்படி, நாங்கள் பெரியவரானோம்.
ஏழாம் வகுப்பிலே கந்தசாமி வாத்தியாருக்கும் மாப்பாணனுக்கும் சண்டை வந்தது. 'மாடு மேய்க்கும் வன்னிப் பயலுக்கு படிப்பென்ன’’என்று பேசியபோது மூஞ்சியில் தனது புத்தகக் கட்டை வீசியடித்தான் எனது மைத்துனன் யாப்பாணன் செய்தது சரிதான் என்ற வன்னியருக்கு யாழ்ப்பாணத்துச் சிறு விவசாயிகள் துணைக்கு நின்றனர் யாழ்ப்பாணப் பெரிய மனிதர்களுக்கோ மாப்பாணன்மீது கோபவக்கிரம். மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார்கள் அந்த மனுநீதி கண்டசோழ மன்னர்கள். மன்னிப்பாவது மண்ணாங் கட்டியாவது வயலில் இறங்கிய மாப்பாணனை யாவரும் மகிழ்வாய் வரவேற்றார்கள்.

Page 49
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மாமா தனது சிறந்த காளைகளை ஏரில் பூட்டி அவனிடம் தந்தார் வண்டிச் சாரதி ஆசனமீது அவனை இருத்தினார். வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் பொருட்கள் வாங்கத் தனியே அனுப்பினார்.
சினிமாப் படங்களைப் பார்த்து வந்தவன் கதைகள் சொல்வான். தொடர்ந்தும் தொடர்ந்தும் காதல் காட்சியை நீட்டி முழக்குவான் இதனால் மீண்டும் அச்சமடைந்தேன். தனித்திருக்கையிலே சினிமாக் கதைகளை, சொல்ல வந்தால் செம்மையாய்க் கொடுத்தேன்
இப்படியாக ஒருநாள் அந்தஅதியம் நிகழ்ந்தது. நான் பக்குவமடைந்தேன். எனது பாவாடையில் ரத்தத்தைக் கண்டு டும்.டும்.என்றனர் பள்ளித் தோழியர் என்ன ஏதென அவரிடம் கேட்டேன் சொல்லிவிட்டுச் சிரியுங்கள் என சீறி விழுந்தேன் நீ "டும் போட்டுவிட்டாய் என்று மீண்டும் சிரித்தனர். விசயம் புரிந்ததும் நாணிப் போனேன் வெட்கத்தாலே கண்கள் கலங்க தோழியர் சூழ வீடு வந்தேன் நான். மாமி மிகவும் மகிழ்ந்து போனாள்.

வ.ஐ. ச ஜெயபாலன்
மாப்பாணனைக் கூவி அழைத்து அப்பாவை உடனே அழைக்கச் சொன்னாள். தோழியருக்கும் எனக்குமாகத் தேநீர் வழங்கினாள். நாணமும் கனவும் பற்றிக்கொள்ள மூலையில் இருந்தேன். பக்கத்து வீட்டுப் பாட்டியை அழைத்தனர் கொத்திப் பிசாசு தொட்டு விடுமென என்னைச் சுற்றிச் கரிக்கோடு போட்டனர் காவலுக்கோர் இரும்பை வைத்தனர். உளுத்தம்மா இடித்த மாமி கன்னிக்கோழி முட்டை வாங்க மாப்பாணனை விரட்டியடித்தாள். சுத்தமான நல்லெண்ணையோடு அப்பா வந்தார்.
இதன்பின் எனது படிப்புப் பற்றிய வாக்குவாதத்தில் வீடு கிழிந்தது எனினும் எனது கண்ணிர் வென்றது. யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்லூரியில் மேலே படிக்க வைக்கப் போவதாய் எனது தந்தை இறுமாப்புரைத்தார். காசுக் கென்ன செய்யப் போகிறாய் என்றவர்களுக்கு. கைகால் இருக்கு என்ற என்அப்பனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க நெஞ்சு துடிக்கும்.
86

Page 50
சீழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மாப்பாணன் மட்டும் இடிந்து போனான் நடுச் சாமத்தில் அவன் விம்மி விம்மி அழுவதை நானும் கேட்டேன்
பொறாமைப் பட்டானா? யாழ்ப்பாணத்தில் நான் படித்துயர்ந்தால் தனக் கெட்டாத திராட்சையாய்ப் போவேன் என்று நொந்தானா, யார் எனக் குரைப்பார்? அதன்பின் மாப்பாணன் கவிதைகள் எழுதினான்.
s

e9l
பெருகி வருகிற ஆற்றினைப் பார்த்து செவிகளை உயர்த்தி வீரன் குரைத்தான். கோபமாய் மரங்கள் கிளைகளை உசுப்பி வீரனை விரட்டும். அதட்டலாக, வீரா என்றேன். குற்ற உணர்வுடன் என்னைப் பார்த்தவன் எனது கால்களை ஆறு மூழ்கடிப்பதை சுட்டிக் காட்டினான். ரதி கண் சிமிட்டிப் புன்னகை பூத்தாள். இறுதியாகக் கவிஞன் உன் மீது *"எதிர் பார்ப்பிலாது அக்கறை காட்டும் ஒருயிர்'என்றாள். உன் வாழ்விப்போ அர்த்தப்பட்டது என்று மீண்டும் புன்னகை தொடர்ந்தாள்.
ዖቐ• መr•-7 9.

Page 51
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வீரா.வீரா. ஆறும் காடுமெம் நண்பர்கள் என்றேன். புரிந்து கொண்டு மரங்களுக்கு வாலைக் குழைத்தான். பாலி ஆற்று நீர்ப் பரப்பை நக்கினான். எருமைக் கடா ஒன்று வெள்ளத்தி லடிபட்டுச் சொல்வதைக் கண்டு அச்சப்பட்டு வாலைக் கால்களின் கீழே ஒடுக்கினான். காற்று அவனை நீருள் இடறும். மூச்சுத் திணறி பெரு வெள்ளத்தின் உதைப்பைத் தப்பி "குறும்பு தானே வேண்டாமென்பது என்றபடிக்கு கரைகளில் ஏறினான். சரி சரி எனது கதையைக் கேளென மீண்டும் ரதி எனை நிலைப்படுத்தினாள். உயிர்ப் பயத் தோடு அஞ்சியிருந்த மரங்கள் கூட ரதியின் கதைக்குக் காது கொடுத்தன.
காட்டுத் தெருவில் மாட்டு வண்டியில் மாங்குளம் வந்தோம். அப்பாவும் மாமியும் பேசிக் கொண்டனர். மாப்பாணன் மட்டும் ஒரு பேச்சின்றி . ஏன் அவன் இப்படி மாட்டை அடிக்கின்றான். என்று மனதுள் எரிந்து விழுந்தேன். பொறாமை பிடித்தவன்.

வி. ஐ. ச. oguurada
யாழ்ப்பாணந்துக் காங்கிரீட் புதர்களுள் மதில் சூழ் தீவாம் கத்தோலிக்கக் கன்னியர் மடத்தில் தொடர்ந்தது கல்வி. ஈழ நாட்டின் எண் திசை முகங்களும் வாழும் கூடது.
அங்குமோர் வாழ்வு எங்களுக்கிருந்தது.
எங்கள் விடுதியோர் சிறு பிரபஞ்சம். ஒவ்வொர் அறையும் ஒரு சிறு கிரகம் ஆண்கள் இல்லாத அதிசயக் கிரகம்,
பல கிரகங்களில் புத்தகம் தின்னும் கறையான் மனிதர்கள். சில கிரகங்களில் c ஓயாது செபமாலை உருட்டுகின்ற கும்பிடு பூச்சி மனிதர்கள் வாழ்ந்தனர். ஆங்கிலப் பேச்சும் அந்நிய உடையும் கர்வமும் மிகுந்த பெண்கள் சிலபேர் உள்ளதோர் கிரகம். அங்குகெட்ட புத்தகம் படித்து ஒருவரை ஒருவர் முத்தமிடுவராம் இப்படியாகக் கிசு கிசு" இருந்தது. வறுமைக் கோட்டைத் தாண்டுவதற்கு கல்வியைக் கோலாய்த் தேடிவந்த ஒரு சிலர் வாழும் கிரகமும் இருந்தது.

Page 52
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எங்கள் அறையோ விசித்திரமானது பூமியிலிருந்து தவறி விழுந்த இரண்டு பெண்கள் என்னுடன் இருந்தார் அவர்களில் மட்டுமே மதிலுக்கு அப்பால் வாழும் மனிதரின் மூச்சுக் காற்று கமகமத்தது.
வெளியே தேசம் பற்றி எரிந்தது. தரப்படுத்துதல் என்னும் போர்வையில் இனப் பாரபட்சம் கல்வித் துறையுள்ளும் காலடி வைத்தது. 19716)
பரம்பரைத் தலைவரின் செக்கு மாட்டுத் தடங்களை விலக்கி போர்க் குரல் எழுப்பினர் தமிழ் மாண்வர்கள். நமது கோட்டைத் தீவு மட்டும் புத்தகம் தின்று அமைதியாய் இருந்தது.
சாந்தி உரும்பிராய்
ஐாலி வல்வை மாணவர் எழுச்சிப் புயல் மையம் கொண்ட ஊர்களின் புதல்விகள். இவர்களின் பின்னே பதுங்கிப் பதுங்கி யாழ்ப்பாணத்துக் காற்றெங்களது. மதில் தாண்டி வந்தது.
00

வ. ஐ. ச.ஜெயபாலன்
மழை தூறிய ஒரு மாலைப் பொழுதில் சாந்தி வந்தாள். மன்னாருக்குக் கைத் துப்பாக்கிகள் கடத்திச் செல்ல வேண்டுமென்றாள் இளைஞர் வேண்டினராம் விடுமுறைக்கு வீடு செல்பவர்போல நாம் புறப்பட்டோம். வெள்ளமாய்க் கிடந்தது யாழ் குடா நாடு. தலை நிலம் தாண்டி கடலைக் கடந்து சங்குப்பிட்டித் துறையிலிறங்கி எம்முடன் வந்த பயணிகளோடு மன்னார் பஸ்சை எதிர்பார்த்து நின்றோம். திடீரென சிங்கள ராணுவ மெம்மை முற்றுகை யிட்டது.
ஏங்கிப் போனோம். சாவை விடவும் பால்வதைக் கஞ்சினோம்.
1971 ன் ஏப்ரல் கிளர்ச்சியில் கதிர்காமத்தில் "பிரமாவதி மானம்பெரி’ எனும் , சிங்களப் பெண்ணையே குதறிய நாய்கள், எங்களின் முன்னே, நாதியற்ற தமிழ்ப் பெண்கள் நாம். தகவல் யார் கொடுத்தார்? பதட்டம் வேண்டாம் என்றாள் சாந்தி, சோதனை நடுவே நம்மை அணுகிய இராணுவத்தாரை நட்புடன் விழித்து
19t

Page 53
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
ஆங்கிலத்தில் கேலிகள் பேசினோம். ஜாலி பேசிய சிங்களம் கேட்டு கொல்லெனச் சிரித்த படையினருள்ளே ஒருவன் எம்மை சகோதரி என்றான். ஆயுதம் கடத்தப் படுகிறதாக இரகசியமாகத் தகவல் கிடைத்தது. சிரமத்துக்கு வருந்துகின்றோம் நாம் என்றபடிக்கு எம்மைத் தாண்டினான். ஏனையோர் பொதிகளைக் கிண்டிக் கிளறினான். அவர்கள் திரும்பிச் சென்ற பின்னரே மூச்சு வந்தது. அந்த மழைக் குளிரிலும் எமக்கு முத்து முத்தாய் வேர்வை கொட்டியது. இராணுவத்தோடு பல் இளித்தோமென பயணிகள் சிலபேர் ஆத்திரப்பட்டனர். செத்துத் பிழைத்த நாங்கள் மட்டுமே சேதிகள் அறிவோம். நாங்கள் மகிழ்வாய்த் திரும்பியபோது கன்னியர் மடத்திலென் அப்பா. திருட்டு முழியுடன் ஏதென வினவினேன். தந்தி வந்ததாம் உடன் வரும்படிக்கு "நீ படிக்காமல் அரசியலென்று
ஊர் சுற்றுவதாய் முறையிட்டார்கள்' என்று கூறி கோபமாய் முகத்தை வைத்தபடி "படித்தது போதும் போதும்" என்றார்.
ஜாலி வீடு சென்றிருந்ததாக பொய்கள் உரைத்தேன்.
102

வ.ஐ. ச ஜெயபாலன்
விடுதியில் யாவரும் யாழ்ப்பாணத்தார் வீணே என்மீது கோள் சொல்கிறார்கள் வெளியில் இருந்தே படிப்பேன் என்று கண்களைக் கசக்கினேன். நெகிழ்ந்து போனார். அரசியல் இயக்கத் தொடர்புகள் எல்லாம் படித்த பின்னாடி. என்ற படிக்கென் கைகளை எடுத்துக் கொஞ்சியபோது அப்பா பழைய அப்பாவாய் இருந்தார். ஒரு சிறு நிசப்தம்
ஒரு சிறு விசும்பல் அப்பா எத்தனை நல்லவர் என்று ரதி கண் கலங்கினாள்.
பெருகும் நீரில் மூழ்கும் நிலையில் வீரன் நடுங்கினான். என்னை விட்டுக் கரைக்குப் போக ஏனோ மறுத்தான். அவனைத் தூக்கி நாங்களிருந்த மரக்குத்தியிலே இருத்தி வைத்தேன். வெள்ளமிப்போ முழங்கால் தொட்டது. மெல்ல மெல்லப் பறவைகள் வந்தன பாலி ஆறு வாழ்க என்றபடி, மரங்களின்மீது சண்டை போட்டன. "போன வருடம் இருந்த மரக்கிளை" 'பரம்பரையாக நாங்களிருக்கும்
மரமிது, கிளையிது’’
$103

Page 54
சீழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
**இந்த வருடம் நான்தானிங்கு
முதன்முதல் வந்தது.”* வெள்ளம் பெருகும் வேகத்தில் திகைத்து மரம்போல் நின்ற மரங்களெல்லாம்
'இறகு முளைத்த பொறுக்கிகள்' என்று
எரிந்து விழுந்தன. சரி கதை கேள்என ரதி வாய் மலர்ந்தாள்.
மீண்டும் வந்தது பெருமழைக் காலம்? அந்த நாட்களின் வரலாறான மாணவர் காவல் படையினர் மோதலில் மாணவர் இயக்கத் தலைவன் ஒருவன் குண்டடிபட்டான். காவலர் அவனைக் கைது செய்வதற்காய் சல்லடையோடு தெருவெலாம் திரிந்தார் அப்போது நான் விடுதியில் இல்லை வெளியில் இருந்தேன். எனது அறைக்கு ஒருநாளிரவு காரில் அவனை எடுத்து வந்தனர். அவன் பராமரிப்பு என் பணியானது. ரகசியமாக டாக்டர் வருவார். சாந்தி அல்லது ஜூலி வருவாள். ரகசியமாக நாட்கள் நடந்தன.
சாவின் வாசலில் தடுமாறியவனை அன்புடன் பேணி வாழ்வின் நம்பிக்கை ஊட்டிய போதும் அவன் உயிர் பிழைப்பது
... O

வ. ஐ. ச.ஜெயபாலன்
எனக்கும் கூட சந்தேகந்தான்.
ஒரு மழை நாளில் நிலமை சற்று மோசமடைந்த ஒரு ரா வேளையில் கண்ணிர் வடித்தான். பெற்ற தாயைப் பார்க்க விரும்பினான். ஒரு பெண்ணுக்கும் முத்தமிடாமல் மண்ணுள் புதைய நேர்ந்ததே என்றான். பதறிப் போனேன் மரணம் பற்றிப் பேசத் தொடங்கினான் எனது கைகளைப் பற்றி எடுத்து முத்தம் கொடுத்தான். வாழ்வின் கனவை அவன்மேல் விதைக்க நானும் அவனுக்கு முத்தம் கொடுத்தேன். மீண்டு மழுதான் தற்கொலை செய்யும் தனது முடிவை முத்தங்களாலே அழித்து விட்டாய் அன்பே என்றான். மீண்டும் அவனுக்கு முத்தம் கொடுத்தேன், எனது மார்பில் தனது விரல்களை பதிப்பதற்குப் பாடாய்ப்பட்டான். வேண்டாமென்றேன். இரக்கம் காட்டுக என்று மன்றாடினான்
ரதி சில நிமிடம் மெளனமானாள் ஆழ்ந்த பெருமூச்சு நெஞ்சை விரிக்க ஆற்றைப் பார்த்தாள். ஆயுள் நாட்களில் இப்படி வெள்ளத்தைப்
405

Page 55
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
பார்த்ததில்லை பார்த்ததில்லை யென ஆலமரம் ஒன்று அடித்துச் சொன்னது. ரதி தன் கதையை மீண்டும் தொடர்ந்தாள்.
அதிசயிக்கத் தக்க வகையில் *கிருபா'வுக்கு உடல் தேறியது O அச்சுறுத்தப்பட்ட அவனது இருப்பும் சாவு நிழலாய்த் தொடர்கிற வாழ்வும் எனது நெஞ்சினை இரக்கப்படுத்தும். கருணையினால் எனை அவனிடம் இழந்தேன்.
வெளியில் மாணவர் எழுச்சி வெள்ளம் கரைகளை உடைத்தது. பாராளுமன்றப் படகுக்காரர் வலைகளை வீசினர். தமது எதிரிகளைத் தமிழின் எதிரிகள் என்று கூறினர். *களைகளைக் கொன்றால் விடுதலை" என்றனர் பிரச்சினைகள்,எதுவென்றாலும் ஊர்வலம் பாடசாலைப் பகிஸ்கரிப்பு "பஸ்'சை மறித்தல் ஹர்த்தால் என்று கண்மூடித்தனமாய்க் காரியம் நடந்தது . மாணவர் பாணியில்.
மாணவர் ஊர்வலம் ஒன்றில் நாங்கள் கிருபாவின் தந்தையை முதன் முதல் பார்த்தோம் வீட்டுக்கு வருக என்றெமை அழைத்தார். முன்னர் கொழும்பில் வேலை பார்த்து
戏06

வ. ஐ. ச ஜெயபாலன்
தொழிற் சங்கப் போரில் விழுப்புண் பட்டவர். நரைத்த மயிரும் நரைக்காத உள்ளமும் நகைச் சுவையும் துணிச்சலும் மிக்கவர்
பானுதேவன். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றோம். தலைவாசலிலே ४ கார்ல் மாக்ஸ், பாரதி, இக்பால் படங்கள். அன்புடன் அழைத்தார். மனைவியாருக்கு அறிமுகம் செய்தார். "யார் ரதி என்று அம்மையார் கேட்க கிண்டலாய்ப் போனது ஜாலிப் பிசாசுக்கு.
ஊர்வலத்தில் மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்ற கோசமே ஓங்கி ஒலித்ததை நினைவு கூர்ந்தார். தப்பு என்ன? சாந்தி கேட்டாள் மக்கள் சக்தியே மாபெரும் சக்தி மாணவர் அவர்களுள் ஒரு சிறு பகுதி என்பதாய் அமைந்தது அவரது வாதம். ஜாலி துள்ளினாள்.
மாணவர் எழுச்சி தோன்றும் வரைக்கும் மக்கள் நீங்கள் என் செய்தீர்கள்? என்று சீறினாள். தத்துவம் வேண்டாம் ஆயுதம் வேண்டும் என்பதாக
O7

Page 56
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
கூச்சல் மிகுந்த என் தோழியர் விவாதம் புன்னகைத்தார் பானுதேவன். இன்று மென் கண்களுள் அவரது புன்னகை சாகாதிருக்கும்.
தமிழகம் சென்று திரும்பிய கிருபா நெடுநாள் என்னைச் சந்திக்கவில்லை கவலையாய் இருந்தது. ஒருநாள் என்னை யாழ் நூலகத்தில் சந்திக்கச் சொன்னான். நாலு மணிக்கே புத்தகக் காட்டுள் மூலிகை தேடும் பாவனையோடு காவலிருந்தேன். **ரதி என் இயக்கம் பெண்கள் தொடர்பை நிராகரிக்கிறது. மீறினால் மரண் தண்டனை' என்றான். பயங்கரவாதத்தின் பற்கள் எனது இதயத்தில் இறங்க இரத்தம் உறைந்தது. **மறந்து விடுக' என்றெனை இரந்தான் "சரி சரி கடைசி வார்த்தை கேள் பெண்ணை மாயப் பிசாசம் என்ற மத வெறியர்களைப் போல நீங்களும் வெறி கொண்டீரோ" என்று இகழ்ந்தேன். கோபம் தணிந்தது 'போடா' என்றேன்.
108

1977 ஏப்ரல் மாதம் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பின் தேர்தவு எழுதினேன். யாழ்ப்பாணத்தில் நெடுநாளிருப்பது . சாத்தியமில்லை
மனதிலும் விரக்தி. மக்களுக்கு வெளியே மாணவர் சிலபேர் ஆயுதம் தாங்கினர். மக்களுக்கு வெளியே மேட்டுக் குடியினர் பாராளுமன்றச் செங்கோல் தாங்கினர். இருவரும் சேர்ந்து வேடிக்கை பார்க்கும் கூட்டமாய் மக்களை வரலாற்றுப் பாதையின் வெளியே இருத்தினர். நான் மனமுடைந்தேன். பானுதேவன் புன்னகை செய்தார். இலக்கை மறந்து அடுத்த கவடு பற்றி மட்டுமே கவலைப் பட்டனர் எனது தோழர்கள்.
வன்னிக்கு வந்தேன் மீண்டும் எனது மண் மிதித்தேன் மீண்டுமென் பழைய சிறகுகள் விரித்தேன். மீண்டும் எனக்குப் பழகிய காற்று. மீண்டும் எனக்குப் பழகிய காடுகள். மீண்டும் எனக்குப் பழகிய ஆறு. மீண்டும் எனது இழந்த நிம்மதி.
109

Page 57
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
காடுகள் திர விலகியிருந்தது.
எங்கும் மக்கள் வீழ்ப்பாணத்து விவசாயிகளது சிறிய வீடுகள் அகதியாய் வந்த மலையகத் தமிழரின் ஒலைக் கூடுகள் எனக்குப் பழகிய மரங்களிருந்த தெரு மருங்கெல்லாம். தெரியா முகங்களும் கடைகளும்.
அன்று மாலையே
பாலியாற்றம் கரைக்கு வந்தேன்.
மீண்டும் ரதியை மெளனம் பீடித்தது.
110
 

ՓՄ(Աք
பாலியாறு சற்றுத் தரித்தது. ரதி நீ என்னைப் பார்க்க வந்த அந்தநாள் இன்றுபோல் எனக்கு ஞாபகம். உன்னை எங்கே காணோம் என்று நாணல்களோடு பேசி முடிக்குமுன் விடலையாய்ப் போனவள் மங்கையாய் வந்தாய். ஞாபகம் உள்ளதா ரதி, அப்போது நாணல்கள் உன்னைக் கிண்டல் செய்தன. இடுப்பில் இப்பவும் மச்சம் உள்ளதா என்று கேட்டது. ஆமாம் பாலி ஆத்தை என்று ரதி சிரித்திட்டான்.
வசந்தம் போல நீயும் மீண்டும் வருவாய் என்பது எனக்குத் தெரியும். எங்க போனாலும் எனது பிள்ளைகள் என்னை மறப்பரோ.
t

Page 58
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
உனது வம்சக் கொடிகள் முதன் முதல் முளைத்தது மிங்கே தழைத்தது மிங்கே இந்த மண்ணின் ஒவ்வோர் அடுக்கிலும் உங்கள் சுவடுகள்.
செல்லமுத்து இக் கரையின் கொடியல்ல பதின்மூன்றிலிருந்து இறப்பு வரைக்கும் என்னோடிருந்தவள். எத்தனை அழகி எத்தனை துணிந்தவள் எத்தனை மனவலி நிறைந்த பெண் அடடா பறங்கி யாற்றங் கரையில் பிறந்தவள் என்கிற போதும் எனது பிள்ளைதான். மாலை தோறும் குளிக்க வருவாள் தன்னம் தனியாய். காடுகள் துளிர்க்கக் கிராமியப் பாடல்கள் ஓயாமலிசைப்பாள்.
பின்னர் வேலன் இங்கு வந்தான் யாழ்ப்பாணத்துப் பாடல்களோடு. செழித்தது காடு. காடுகளுக்கு இன்னிசை என்பது ஒளடதம் தெரியுமா ? அவர்கள் மகிழ்ச்சி காடுகளுக்கு புத்துணர்வானது.
உனது அம்மாவும் தலை பணியாதவள். இங்கே அவளுக்கும் உலகம் இருந்தது இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம். தங்கம்மாவின் திருமண வாழ்வு மகிழ்வrயிருந்தது
112

வ. ஐ. ச ஜெயபாலன்
latinähiililikulásáhilisandhi Kiadásainiuiliniai
அதுதான் முக்கியம். மனிதன் உன் அப்பன் தொலைதூரத்து மனிதன் என்றாலும் எங்களிடத்தில் இனிமையாய் வாழ்பவன். மாப்பாணனுடன் நீஎனது மண்ணில் ஆடிய விடலைப் பருவ நாடகங்கள் எத்தனை அற்புதம்.
காலம் காலமாய்ப் பெண்கள் சுமக்கும் விலங்கை ஒடிப்பவள் நான். எனது கரைகள் எனது காடுகள் மீட்கப்பட்ட பிரதேசம் போல். என்ற பாலி பரிவுடன் ரதியின் தொடைகளைக் கிள்ளி கரக ஆட்டமாய்ச் சுழன்று நடந்தாள். வீரன் மட்டும் நடு நடுங்கியபடி கரையேறவும் மறுத்தபடிக்கு. பாவமாயிருந்தது. மீண்டும் ரதி தன் கதையைத் தொடர்ந்தாள் புன்னகையோடு,
எனது வரவால் வீட்டில் குதூகலம் அப்பாவும் மாமியும் மகிழ்ந்து போனார்கள் மாப்பாணன் மட்டும் மவுணய் சாமியாச். எரிச்சலாய் இருந்தது.
fr. Gr. --8 it is

Page 59
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
நான் கற்றது தொடர்பாய் . தாழ்வுச் சிக்கலா கிருபா விடயம் தெரிந்த பொறாமையோ? புரியவே இல்லை.
வன்னியில் எமது மாமி விட்டுக்கு பக்கமாய் எமக்கோர் புதிய வீடு வன்னிப் பெண்கள் யாழ்ப்பாணப் பெண்கள் வயல் கூலியான மலையகப் பெண்கள் இப்படியாக ஒடுக்கப்பட்ட நம் தேசிய இனத்துள் காலில் மிதிபடும் பெண்களுக்கெல்லாம் எனது விடே மையமானது. அரசியல் பேசவும்
சஞ்சிகை படிக்கவும்
வானொலி கேட்கவும்
வம்பளக்கவும்: மாலைகள் தோறும் நாங்கள் கூடுவோம். மாலை தோறும் காலைத் தினசரி மாதா மாதம் சஞ்சிகை என்று மெளனமாய் மாப்பாணன் ஏற்பாடு செய்தான்." வாழ்வு மீண்டும் இலகுவாயிருந்தது. முன்போலில்லை. திரண்டு முறுகித் திண்ணனாய் நிமிர்ந்து அழகனாக என் அசட்டுப் பையன். வங்கிக் கடனில் புதிதாய் அவனோர். உழவு வண்டி வாங்கியிருந்தான்.
114

வ்: ஐ.ச. ஜெயபால di,
تستصنتيفنسنستضخيمنخفتة
ஊரிலும் பிரமுகன். விடுதலை இயக்கத் தொடர்பிருப்பதாக ஒருத்தி சொன்னாள். றைக்ரர் எல்லாம் விடுதலைப் படையின் ஏற்பாடென்றாள்.
யாரே அறிவார் ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் இளைஞரின் திசைகளும் நதிகளின் மூலமும்.
ஒரு நாள் எனது வீட்டுத் திண்ணையில் "தேன்கூடு" என்ற சஞ்சிகை இருந்தது.
பிரித்ததும் கவிதை. ۔ மாப்பாணன் எழுதிய "காதலின் நோதல்".
அந்த இரவு பெள்ர்ணமி. பெளர்ணமி நிலவில் பணி கொட்டுவதை கண்டு களிக்காத கண்ணுமோர் கண்ணா! கொட்டும் பணியில் காட்டின் ஓசைகள் நீந்தி வந்தது. பிடியைத் தேடிக் கலைமான் ஒன்று கூவி அழைக்கும் குரல் நெஞ்சை அறுத்தது. முன்னர் சிறுமியாய் இருந்த நாட்களில் அடிக்கடி கேட்டது. ஏனிது கவிதைபோல் தொனித்தது இப்போ மாப்பாணனை நான் நினைத்துக் கொண்டேன்.
|-
15

Page 60
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
அந்தப் பெளர்ணமி நிலவில் நாம் விடலைகள் எங்கள் காடும் அருகில் இருந்தது. மானின் கூவலில் அஞ்சிய எனது கைகளை மாப்பாணன் பற்றிக் கொண்டான். அச்சத்தில் அவனை அணைத்துக் கொண்டேன். பின்னர் மாப்பாணன் சிரிப்பாய்ச் சிரித்தான் என்னடா என்றேன்.
ஒன்றுமில்லை மான் கூவுதென்றான். மான் கூவுகிறதா? ஏன் கூவுகிறது? மீண்டும் சிரித்தான். கல்யாணம் செய்ய வாவெனப் பெண்ணை ஆண்மான் கூவி அழைக்குது என்றான். முத்தம் கொடுக்கச் சாய்ந்த பயலைத் தள்ளி விட்டேன். பயல் முத்திப்போனான் என்பதை உணர்ந்தேன்.
எத்தனை வருடங்கள் உருண்டு விட்டது. அப்போ தெல்லாம் எத்தனை மகிழ்வாய் நாங்களிருந்தோம். முன்னரெல்லாம் நிலவைக் கண்டால் மாப்பாணன் பாடுவான். மீண்டும் சிறுமி வாழ்வுக் கேங்கின்ேன். ஏனோ நாங்கள் பெரியவரானோம் முகமூடிக்ளோடு.
s

வ.ஐ. ச ஜெயபாலன்
மானின் கூவல் ஒன்றைத் தொடர்ந்து மாப்பாணனது இசை ஓங்கியது. தேன் கூட்டுக் கவிதையை சிந்தாய்ப் பாடினான்.
தந்தனத் தானே தந்தனத் தானே தந்தனத் தானே தந்தனத் தானே
மாரி மழைக்கரத்தால்
பாய் விரித்த பச்சைப் புல்லு பச்சைப் புல்லு சூடிக் கொண்டு
பவுசு காட்டும் வண்ணப்பூவு சிட்டாகப் பறந்து வந்து
சிந்து பாடத் துடிக்குதடி நீ எட்டர்து போன பின்பும்
உன்னை நெஞ்சு நினைக்குதடி
கூதலாம் குழவிக் கூடு
குலைந்து போன வாடைக் காலம் காதலாம் தங்கத் தோணி
கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம் வண்டாகப் பறந்து வந்து
மலர்ச் சோலை நடுவினிலே உன்னை எண்ணி உபவாசம்
இருக்கிறதே-இன்பம் கண்ணே.
117

Page 61
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
நாளை ஒரு நாளையிலே "
நடை வரம்பில் கோல மயில் ஏழை என்னைக் காணக் கூடும்
இதயம் கொஞ்சம் நோகக் கூடும் யார் மீதும் குற்றமில்லை
கோபம் கொள்ள ஞாயமில்லை ஆலாய் விழுது விட்டு
அறுகாக வேர் பரப்பி மூங்கிலாய்த் தோப்பாகி
வாழவேண்டும் எந்தன் கண்ணே.
பாடலின் நடுவே வெளியில் வந்தேன். பனிமுத்துச் சூடிய பசிய புற்களும் இரவின் பூக்களும் , பனிக் காற்றுமாய். r ? ۔ ۹۔ * வசந்தக் குழந்தைமுதல் அடிவைத்த அந்த நாட்களில் تم۔" ,... ...، : ء بر و ' இரவும் மிகவும் எழிலாய் இருந்தது. நெஞ்சக் காட்டுள் ஒரு மான் கூவும். வேலி கடந்தேன். உழவு வண்டியின் இருக்கையிலமர்ந்து மாப்பாணன் பாடினான். அவன் தோள்களில் நடுங்குமெனது விரல்களைப் பதித்தேன்.
திடுக்குற்றுப் போனான் மோகினியல்ல என்று சிரித்தேன்.

வ். ஐ. ச ஜெயர்லன்
முன்ன மெம் வாழ்வில் எத்தனை நிலவு முன்ன மெம் வாழ்வில் எத்தன்ை இரவு, ஏன் அவனின்று அதிர்ந்து போனது? . ஏன் அவன் சிரிப்பை இழந்து நிற்பது? மாப்பாணன் விம்மினான். கண்களைத் தொட்ட எனது கைகளை பற்றிக் கொண்டு இதழ்களைப் பதித்தான் பின்னர் அஞ்சினான். மீண்டும் துணிந்தெனைமுத்தமிட்டான் , அவனது கண்ணிரென் கன்னத்தை நனைத்தது. அவனது கேசத்தைப் பற்றி முகத்தைப் பின் தள்ளி நிலவில் அவனது கண்களைப் பார்த்தேன். மிரண்டு போனான் ༥༣་
'உணர்ச்சி வசப்பட்டேன்! மன்னித்திடுக'
திரும்ப முனைந்தான்.
* நில் மாப்பாணன்'
அவன் முகத்தை இழுத்து முத்தம் கொடுத்தேன்.
காதல் வசப்படும் ஆண்களேன். இப்படி பெலவீனர்களாய், கோமாளிகளாய் தடுமாறுவது?
சிரிப்பு வெடித்தது இருவர் நெஞ்சிருந்தும். பன்னிரு வருட வெறுமைச் சுவர்கள் தகர்ந்து விழுந்தது. மீண்டும் உயிர்த்தது
19

Page 62
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
குதூகலமான உடன் இருப்பு வேசங்களற்ற சிரிப்பு. நிலவும் இருளும் சாட்சிகளாக எமதாயிற்று இரவுகள்
தேவர்கள் வானில் சோளம் வறுத்த ஓர் இரவு விண்மீன் சுடரில் முகங்களைப் பார்த்து கிணற்றுக் கட்டில் நாங்களிருந்தோம். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அமைதியாகினோம்.
சிறுநீர் கழிக்க வெளியே வந்து போனாள் மாமி. கண்டிருக்க வாய்ப்பில்லை என்று மாப்பாணன் தேற்றினான்.
காலை விடிந்ததும் வீடு வந்த மாமியைக் கண்டு மனசில் நெருடல் வழமைபோலப் பால் கொண்டு வந்தாள். வழமைக்கு மாறாய் என்னை அனைத்தாள்' உச்சி முகர்ந்தாள் ஆனந்தமாய்க் கண்கள் கலங்கினாள். பின்னர் வழமைபோல் வீடு திரும்பினாள். மனதில் நெருடல். அன்றைக் கெனது அப்பாவோடு ரகசியம் பேசினாள்.
120

வ. ஐ. ச. ஜெயபாலன்
மறுநாளெமது பரம்பரை நகைகளை என்னிடம் தந்தாள். காட்டு ஆற்றம் கரையில் தழைத்த வம்சக் கொடியின் வேரும் விழுதும் என்னுள் இறங்கும் பிரமை நிறைந்தது. முதல் முறையாக நான் முழுமை உணர்ந்தேன் முன்னறியாத செழுமை அறிந்தேன்.
அன்று மீண்டும் மாப்பாணன் பாடினான். ஈழ மென் படுக்கை யறை இலங்கை என் சிறு குடிசை தென் ஆசியா எனது தெரு இந்த உலகம் எனது சிறு கிராமம். என்பதாக வோர் பாடல் பாடினான்.
இரவு என் கனவில் பசிய உருண்டைப் பழத் தோப்பாக இருந்ததெம் உலகம்.
வானில் கழுகு அம்புகள் தாங்கிய போர் எனும் கழுகை நீண்ட போரில் நாங்கள் விழுத்தினோம். வானை நிறைத்தன வெண் புறாக்கள். இருவருமாக எம் மரகதக் கோளை தூய்மைப் படுத்தினோம்

Page 63
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
தூசியும் புகையும் எண்ணையும் இரும்பும் கொங்கிரீட் குப்பையும் கூட்டித் துடைத்து வைரமாய்த் துலக்கினோம். சூரியனைச் சுற்றிச் சுற்றி ஆதாமும் ஏவாளுமாக நாம் ஆடினோம். எமது பூமியில் , ஆண் ஆதிக்கக் கனியின் மரத்தை வெட்டி வீழ்த்தினோம் மேலாதிக்கப் பாம்பினைக் கொன்றோம். ஏடன் தோட்டத்தை விடவு மெம் பூமி இனிமையாய் இருந்தது.
பின்னர்
எனது உந்திக் கொடியிலிருந்து புதிதாய்ப் பிறந்தோம்.
பழைய நம் உடல்களை பழத் தோட்டித்தில் உரமாய்ப் புதைத்தோம். இப்படி முதுமை எம்மை மடக்கிய பொழுதெலாம் மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறந்தோம். மறு நாள் இந்தக் கனவை அவனிடம் கூறியபோது
தியானத்தில் ஆழ்ந்தான்.
அறுவடைக் காலம். செக்கலோடு பொற்கடலாகக் கதிர்கள் தேங்கிய
12

வ. ஐ. ச ஜெயபாலன்
வயல்களில் நின்றோம் முழங்கால் மறைய.. மாப்பாணன் அறுவடை செய்யும் அழகில் லயித்துப் போனேன். *" என்ன மாப்பாணன்
மச்சாளுக்குன் வேலைத் திறமையை கர்ட்டுகிறாயா?" 'நிதானமாய் வேலை செய்தால் தானே பெண்களுக்குப் பிடித்தமாயிருக்கும்!" கிராமத்து அறுவடைக்காரர் கேலி பேசினர். நாணிப் போனேன். பெரும் கதிர்க் கட்டுகள் சுமந்து நடந்தால் *மச்சானுக்குத் தன் சுமக்கும் வல்லமை
காட்டுகிறாள்" எனப் பெண்கள் சிரித்தனர். சேலியோடும் கிண்டலோடும் நாளெலாம் உழைத்தோம். அப்பா மட்டும் கவலையாய் இருந்தார். கவலை ஏன் மாமா? "டீசல்" இல்லாத நாளில் எம் முன்னோர்
புல்லையா தின்றனர். மாப்பாணன் கேட்டான்.
காட்டில் திரிந்த எம் காளைகள் யாவும் கட்டி வந்தான் அயலவர் இடத்தும் இரவல் பெற்றான்.
123

Page 64
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
கதிரடிப்புத் தொடங்கியபோது புதுமையாய் இருந்தது. உழவு வண்டிக்குப் பதிலாய் மாடுகள் வளைய வளைய வளைய வந்தன. வியர்வையில் நெல்லுக் குப்பைபடிய மாட்டை விரட்டி நடந்த மாப்பாணன் "பொலியோ பொலியெனப் பாடல் இசைத்தான்,
கதிரடிப்பு இரவிலும் தொடர்ந்ததால் நாம் வீடு சென்றோம்.
அன்று மாலை குளிப்பதற்காக மாமி எனக்கு நீர்மொண்டு ஊற்றினாள் கூந்தலைப் பின்னிப் பொட்டும் வைத்தாள். உப்பும் மிளகாயும் பொத்திய கையால் என் உடலைத் துடைத்து அடுப்பில் ப்ோட்டாள். வெடித்த போது என்மீது பட்ட கண்ணுறு தீர்ந்த தென்று மகிழ்ந்தாள். குடும்பக் கதைகள் பல பல சொன்னாள் உலகறியாத ஒருவனை மணந்து வாழ்வின் மேடு பள்ளங்க ளெல்லாம் அவனையும் நடத்திச் சென்ற தன் வல்லமை உரைத்தாள். ஏன் இதையெலாம் என்னிடம் சொன்னாள்? இறுதியாக தாழ்வாரத்தில் தூங்கிய சங்கினுள்
24

வ். ஐ. ச ஜெயபாலன்
விரலை விட்டு விபூதி எடுத்தென் நெற்றியிலிட்டாள். கண்ணகைத் தாயே எனது வம்சம் செழிக்க வரம் தா என்று இரந்தாள் பின்னர் என்னிடம்
*"எத்தனை நாளாய் மாதவிலக்கு
தள்ளிப் போனது?" கேள்வியோடு முகத்தில் புன்னகை. சுருக்கென எனது நெஞ்சில் நெருடல். என்னை அறியாது விரல்களை மடித்து எண்ணத் தொடங்கினேன். நாவைக் கடித்தேன். மாத விலக்கைக் கோட்டை விட்டது அப்போதுதான் என் பிரக்ஞையில் உறைத்தது. தனி வழிப் பாதையில் கடைசி "பஸ்"சையும் கோட்டை விட்டதுபோல் ஒரு திகில் பரவும். எனது கண்ணின் கலங்கலைத் துடைத்து உச்சி முகர்ந்தாள்.
அன்றைக் கிரவென் தந்தை அழைத்தார் தயக்கமாயிருந்தது. நெடு நேரமாக வார்த்தை வராமல் உச்சி முகர்ந்து ஒன்றுமில்லை என்று மழுப்பினார். சற்றைக் கெல்லாம் குங்குமப் பூ மிதக்கும் பாலுடன்

Page 65
i i ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மாமி வந்தாள் வெட்கம் என்னைப் பிய்த்துத் தின்றது.
உடல் களைத்திருந்தும் தூக்கம் வராமல் பாயில் புரண்டேன். மாப்பாணனைச் சபித்தபடிக்கு. முல்லை மலர்கள் தொப்புத் தொப்பெனச் சொரிகிற நேரம். சன்னல் மீதும் தொப்புத் தொப்பென சத்தம் கேட்டது. பிரமையோ என்று எழுந்து போனேன் திறந்த சன்னலால் கைகளைப் பற்றி சற்று முன்தான் கதிரடி ஓய்ந்தது மன்னித்துக்கொள் என்று இரந்தான். தூக்கம் வந்தது. குரல் தளதளக்க உளறத் தொடங்கினான்.
எமது உடலில் சுகம் இருந்தால் போதும் கண்ணே எமது மண் எமது கைகளில் இருந்தால் போதும் கண்ணே போரில்லா தெம் வாழ்வு நடந்தால் போதும் கண்ணே வானைப் பிளந்து சுவர்க்க பதியை மண்ணில் இருத்தலாம் மண்ணை எமது வம்சக் கொடிக்காய் செம்மைப் படுத்தலாம்.

வ். ஐ. ச ஜெயபாலன்
என்றவாறு ஏதேதோ பேசினான் மகிழ்ச்சியோடு தூக்கம் வந்தது கொட்டாவி விட்டேன் பொழுது புலர்கையில் சன்னலை அடைத்து படுக்கப் போனேன்.
மறுநாள் ஊரின் பெரிய மனிதர்கள் வீட்டுக்கு வந்தார். வாய் பேசாத என் மாமா கூட சிரித்தபடிக்கு சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் தரித்து எமது திருமணத்தை நிச்சயம் செய்தார். வருகிற திங்கள் முகூர்த்த மென்று நமது பூசாரியார் விடை கொடுத்தார். எல்லாம் முடிவாகிய இரவு குறும்புக்கார சிறுமியைப் போல மீண்டும் வந்தது மாதவிலக்கு. உருண்டு உருண்டு யாவரும் சிரித்தோம்
போரின் உள்ளும் மரணத் துள்ளும் ஆயிரம் துன்பச் சுமைகளினுள்ளும் வாழ்வுதான் எத்தனை இனிமையானது. அகதி வாழ்வில் அன்னிய மண்ணில் வறுமையில் வாடும் கவிஞன் ஒருவனே "இனியது வாழ்வு" என்று பாடினால்
இந்த வாழ்வு எத்தனை புதுமை,
187

Page 66
& ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
மாதவிலக்கின் குறும்பை நினைத்து முதலிரவு முழுவதும் நாங்கள் சிரித்தோம்.
முதல் வசந்தத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் நண்பன் ஒருவனின் வீட்டில் விருந்தினராக நாங்கள் இருந்தோம். இனிய தமிழில் அவர்கள் பாடும் கிராமியப் பாடல்களில் மகிழ்ந்தோம். அயலிலுள்ள தமிழ்க் கிராமத்தில் வயல் வெளிகளிலே வட்டக்களரி அரங்கு போட்டு வடமோடிக் கூத்து ஆடுதல் பார்த்தோம் ஆடியுமென்ன பாடியுமென்ன? பாரம்பரிய மண் பறிக்கப்பட்ட பின்
கண் விழிக்காமல் ஆடல் பெரிது பாடல் பெரிதென அடித்துக் கிடக்கிறார்.
விடைபெற விரு ந்த நாளில் ஒரிளைஞன் முற்றத்தில் நின்று எமது முஸ்லீம் நண்பரோடு வாதம் வளர்த்தான். இருபத்தைந்து ஆயிரம் ரூபா வரியாய்க் கேட்டு தர்க்கிக்கிறதாய் மாப்பாணன் சொன்னான்.
28

வ். ஐ. ச ஜெயபாலன்
*sikhaiiiiiiiihindikimbali
முஸ்லிம்களுக்கு இரண்டு பக்கமும் அடியென எமது நண்பர் வெகுண்டார். முஸ்லிம் என்னாதே நீயும் தமிழன் என்றான் இளைஞன். தமிழன் என்கையில் இலங்கையன் நீஎனும் ஜெயவர்த்தனாவின் குரலைப் போலவே அந்த இளைஞனின் குரலும் ஒலித்தது. குறுக்கிடத் துடித்த மாப்பாணனை நான் அமைதிப் படுத்தினேன். நீயார் நான் யார் என்பதை இங்கே யார் நிர்ணயிப்பது, ஜெயவர்த்தனாவா? ஆயுதம் தரித்த இளைஞர் சிலரா? அல்லது நாமா? நண்பன் குரல் மீண்டும் ஓங்கியது. தமிழருக் கெதிராய் இஸ்ரவேல் வந்ததை எதிர்த்து நாங்கள் இரத்தமும் சிந்தினோம். தாய்மண் காக்கப் பேரணி திரண்டோம் நாங்கள் முஸ்லிம் நீங்கள் தமிழர் நாங்கள் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்கிற வகையில் இயல்பாய் மலர்கிற ஒருமைப்பாட்டை ஏன் சிதைக்கின்றீர்? நண்பர் கொதித்தார். நமக்கு யாவும் சங்கடமானது.
விடை பெறுகையிலே இளைஞன் செயலுக்கு வருத்தம் சொன்னோம். தமிழ் பேசும் மக்கள் நாங்களன்ைவரும்
)1a 9سته . F۴ 6T

Page 67
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
நமது மண்ணை நமக்காய் மீட்டிட ஒருமைப்படுவோம் உருக்கென நிமிர்வோம் என்று நாங்கள் s ஒருவர்க் கொருவர் உறுதி கூறினோம்.
இப்படியாக ஆபத்தான அந்த நாட்களில் இலங்கைத் தீவை நாங்கள் அளந்தோம். அந்த நாட்களில் எனது வயிற்றுச் சிப்பியுள் முத்துத் திரண்டது.
மீண்டும் அமைதி. ஆறு இப்போ நாங்களிருந்த மரக் கட்டைக்கும் மேலே பாய்ந்தது. வீரனை எடுத்து உயரமானதோர் கிளையில் இருத்தினேன். காடுகள் அஞ்சின பாலி ஆற்றை யாசித்து அழுதன. வேரை அறுக்காதே கிளையை முறிக்காதே கன்றுகளை மூழ்கடிக்காதே இரக்கம் காட்டு இரக்கம் காட்டு என்று அழுதது காடு. பறவைகள் தொடர்ந்தும் சண்டையிட்டன. எழுந்து சற்றுப் பின் செல்வோமா என்று நான் கேட்டேன்.
130

வ.ஐ.ச.ஜெயபாலன்.
iiá ܒ݁ܦܢܝܝܿܢܐ
சும்மா இருவென்றாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் வெள்ளக் காடு
திரும்பி நான் செல்வதே சிரமமாகலாம் என்பதை உணர்ந்தேன். எனினும் வாயை மூடியிருந்தேன். மீண்டும் ரதிதேவி பேசத் தொடங்கினாள்.
ஒரு நாள்க் காலையில் − முறுகண்டி"யிலே ராணுவ ரயில் ஒன்று தகர்க்கப்பட்டதாய்ச் சேதி வந்தது. நேரம் செல்ல நேரம் செல்ல மகிழ்ந்தவரெல்லாம் கலவரப்பட்டனர். முறுகண்டி இருபது கல் தொலைவென்கிற பிரக்ஞை வயிற்றில் புளியைக் கரைத்தது. மாப்பாணன் மட்டும் மறிக்க மறிக்க வயலுக்குச் சென்றான். போராட்டத்தால் உரமும் மருந்தும் அருகிப் போக புதுரக நெற்கள் பொய்க்கத் தொடங்கின. எங்கெங்கோ அலைந்து சேகரித்த பழைய நாட்களின் நெல் மணியோடு பரிசோதனைக்காய் வயலுக்கு ஓடினான். மதியமானது மாப்பாணன் வேறு வயலில் இருந்தான் நகர்ப் புறமாக துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது.
18

Page 68
சீழ த்து மண்ணும் எங்கள் முகங்களும்
அழுதபடிக்கு வயல்ப் பக்கம் ஓடினேன் அத்தி மரத்து நிழலில் குருவி பறந்த முட்டைக் கோதாய் வெறுமையாக உழவு வண்டி. சுவரில் மோதிய பந்தெனத் திரும்பினேன் வீட்டிலிருந்து மரண ஒலம் நினைவு தவறித் தெருவில் விழுந்தேன்.
இரவு கண்களை விழித்தபொழுது தாதிமார்கள். lfrdslf... . . .
அழுதபடிக்கு அப்பா.
மாப்பாணன் மட்டும் அங்கே இல்லை.
தொடையில் ஏதோ பிசுபிசுத்தது. காற்றில் இரத்த வாடை இருந்தது. மாப்பாணன் எங்கே என்றபடிக்கு நினைவை இழந்தேன். மாப்பாணனைச் செருவில் இழந்தேன் எமது மதலையைக் கருவில் இழந்தேன் தனித்த மரமாய் நெடுநாட் கிடந்தேன்.
விம்மி விம்மி அழுத என்னை
அழாதே என்று தேற்றிய படிக்கு அருகே வந்து தோள்களை உசுப்பினான். பின் நடந்தது என்ன ரதி என வினவினேன்.

வ.ஐ. ச ஜெயபாலன்
ஊர் வியக்க மீண்டும் பெண்ணாய் எழுந்தேன் கவிஞர் கொதிப்பினோடும் மாணவப் பருவத்துத் துடிப்பினோடும் துர்க்கை போல் எழுந்தேன். இதன் பின் எல்லா விடுதலை இயக்கத்தவர்க்கும் எனது"வீடு ஆதரவானது. நடுச் சாமத்தில் யார் யாரோ வருவர் அடுப்பை மூட்டுவேன் ஆயுதங்களைப் பதுக்கி வைப்பேன் கிழிந்து போன உடைகள் தைப்பேன் தகவல் மையமாய். ܗܝ வைத்திய சாலையாய். R-T6 sfGurù... எத்தனை புதிய பரிமாணங்கள் எனது விட்டுக்கு. அப்பா ஒன்றும் பேசவில்லை. மாடாய் உழைத்தார். மாமியும் அப்படி,
*3

Page 69
எட்டு
ஒரு நாள் இரவு பி. பி. சி.யில் தமிழோசை கேட்டு வானொலி அணைத்து படுக்கை விரிக்கையில் படலை திறக்கும் சத்தம் கேட்டது. மூன்று விடலைக் கொரிலா வீரர்கள் வாசலில் நின்றனர். றைபிளைக் கழற்றிச் சுவரில் சாத்தி தேனொழுக அக்கா என்றனர். காட்டிலிருந்து பரிசு என்று காளான் பொதியை ஒருவன் நீட்டினான். அக்காவுக்கு..என்று மற்றொருவன் தேன் நிரம்பிய புட்டியை நீட்டினான். பால் வடியுமவர் முகங்களைப் பார்த்து ' விசயம் என்ன? என்று கேட்டேன். எமது இயக்க அதிரடிப் படையின் தளபதி காஸ் ரோ" நாளை வருகிறார்

வ. ஐ. ச. ஜெயபாலன்
--
எமது கிராமத்தில் இரு நாள்த் தங்க நம்பிக்கையான விடுதி இல்லையே என அங்கலாய்த்தார். இது உங்கள் வீடென்றேன் நான் மகிழ்ந்து போனார். யோசித்துப் பார்த்துப் பதில் சொல் அக்கா! ஆபத்தான பணி இது என்றான்ஒரு போராளி.
இருப்பது என்ன யோசிப்பதற்கு அடிமை விலங்கைத் தவிர நம்மிடம் இருப்பது என்ன யோசிப்பதற்கு. மகிழ்ந்து போனார். தம்பி நீங்கள் ஒற்றுமைப் பட்டால் உயிரும் தருவார் எமது மக்கள். ஏன் உட் கொலைகள்? ஏன் சக இயக்கங்களோடு மோதல்? சிறுவரின் முகங்கள் சாம்பிப் போயின. **ஒற்றுமைதான் எம் உயிர் மூச்சக்கா
தமிழகத்திருக்கும் தலைவர்கள் அதனை உணர்கிறாரில்லை, நாம் என் செய்வோம்!" இயலா ஏக்கம் அவர்களின் குரல்களில் இருள் சூழ்ந்தது அவர்களின் கண்களில்,
எல்லோர் தலைக்கும் எண்ணெய் தடவி காளான் கறியும் சோறும் படைத்து விடை தருகையிலே கண்களில் வெள்ளம்.
135

Page 70
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எமது வீட்டுக்கு "காஸ்ரோ" வந்ததும் அதிர்ந்து போனேன். *கிருபா"நின்றான் என் முன்னாலே.
யார் அது ரதியா எனப் புன்னகைத்தான். எங்களை விடவும் கொரிலா வீரர் உன்னை மதிக்கிறார் என்றும் சொன்னான். "புகழ்ச்சி எதற்கு போர்க்கள வாழ்வில்
போதும்'என்றேன். சமையலறையில். சீரகம் எங்கே தேவி என்று மாமி அழைத்தாள்.
மறு நாள் நாங்கள் தனித்திருக்கையிலே "காதலுக்கிப்போ தடை இல்லை" என்றான் *ஏணிதைச் சொல்கிறாய்"என்று நான் கேட்டேன்
முறுவலித்தான். "காதல் செய்யேன்
வேண்டா மென்று யார் சொன்னார்கள் ஏனிதை என்னிடம் சொல்கிறாய்" என்று சலித்துக் கொண்டேன். கோபம் வேண்டாம் கிணற்றில் வாளி இருக்கிறதா என வினவியபடிக்கு சட்டையைக் கழற்றினான் துவாயை எடுத்தான். பத்து வருடங்கள் ஒரு நொடியானது. எனது கைகளால் வைத்தியம் செய்த வீரத் தழும்பினை மீண்டும் பார்த்தேன். மேலும் புதியதழும்புகள் இருந்தன.
136

வ.ஐ. ச ஜெயபாலன்
*கிருபா? என்றேன் "இதுவா தமிழர் விதி"என நொந்தேன்.
பிரிவினை சாத்தியப்படுமா என்று அவனிடம் கேட்டேன். மெளனச் சிரிப்பின் முடிவில் சொன்னான் "சுதந்திரமான நம் இருப்புக்காகவே
போராடுகின்றோம். இது பற்றி ஒரு கவிதை படித்தேன் சொல்லவா தேவி..?? *சொல்" எனக் கோரினேன்.
“எமது இருப்பை
உயர்ந்த பட்சம் உறுதி செய்யும் சமூகப் புவியியல் தொகுதியே தேசம் எங்கள் இருப்பை உறுதி செய்திடும் அடிப்படை அவாவே தேசப் பற்று நாடுகள் என்று இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக மானிட இருப்பை உறுதி செய்திடவே" நீண்ட நேரம் மெளனமாய் இருந்தோம். ரதி என்றபடி மெல்ல எழுந்தான் எமது நட்பைக் கெடுத்து விடாதே என்றதும் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான் மன்னித்திடுக என்றபடிக்கு. பாவமாய் இருந்தது. தீர்மானமின்றி உணர்ச்சிகளாலே வழி நடத்தப்படாதே என்று என்னை அதட்டினேன். ጳ எனினும் மனதில் இரக்கம் சுரந்தது.
87

Page 71
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வெள்ளம் இப்போது வயிற்றைத் தொட்டது வா எழுந்து போகலாமென்றேன். **வர இயலாது
விரும்பினால் போ" என்ற ரதியின் கைகளை பற்றிக் கொண்டேன். மரங்களிப்போ ஆற்றைத் திட்டின பறவைகள் தொடர்ந்தும் அடித்துக் கொண்டன வானம் இருண்டது. வீரன் கல்லாய் திகைப்பில் உறைந்தான் ரதி தனது கதையைத் தொடர்ந்தாள்.
*கிருபா சென்று சில நாட்களுள்ளே எனது வீட்டில் தங்கும் முடிவுடன் ஜாலி வந்தாள் மகிழ்ந்து போனேன். உயிர்த் தோழியிடத்தும் வாய் திறக்க்ாத ஒரு பெண் ஜாலி. விடுதலை அமைப்பில் பெண்கள் சமத்துவம் பேணப்படாததால் மனமுடைந்திருந்தாள்.
விடுதலை அமைப்புகள் ஒற்றுமைப்படவும் மக்களுக்குள்ளே இயக்க முதன்மையை நிறுவுதல் விடுத்து இயக்கத்துக்குள்ளே மக்கள் முதன்மையை நிறுவுவதற்கும் இரண்டாம் தரப் போராளிகளாய் பெண்களைத் தாழ்த்தும் போக்கைத் தகர்க்கவும் மாதர் எழுச்சியே மார்க்க மென்றுரைத்தாள்,
13

வ. ஐ. ச ஜெயபாலன்
முன்னைப் போலவே பெண் உருவெடுத்த ஆயிரம் கனவாய் அயராத உழைப்பாய் துணிச்சலாய், தியாகமாய் ஜாலி இருந்தாள். நானும் அவளும் இதே கரைகளில் அமர்ந்து கனவுகள் கண்டோம். எங்கள் தாய் நாட்டில் நீதி சமத்துவமுள்ள அமைதியை கனவு கண்டோம். காதலும் கலைகளும் உழைப்பும் செழிக்கும் சுபீட்ச வாழ்வைக் கனவு கண்டோம். மீண்டும் காடுகள் படர்ந்துபடவும் அரிப்பெடுக்காது மண் செழித்திடவும் பாலி ஆற்றில் படிகம் போல நீர் தெளிந்தோடவும் எத்தனை கனவுகள். எத்தனை கனவுகள்.
*கிருபா உன்னை நேசிக்கின்றான்.
நீ ஏன் அவனை விலகிச் செல்கிறாய் என்று கேட்டாள் இக்கரைகளில் ஒருநாள். கல்லும் கரையக் கரைப்பவள் ஜூலி. மெளனமாய்க் கரைந்தேன்.
அடிக்கடி ஜூலி மறைந்து போவாள் எங்கே போனாய் எப்போது வந்தாய் என்று கேட்பதெம் வழக்கமில்லை. அவளும் பேசாள்.
89

Page 72
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
எதோ ஒரு முக்கிய பணி செய்கின்றாள் என்பது அறிந்தேன். அவளது பாதுகாப்புப் பற்றியே கவலை கொண்டிருந்தேன்.
எங்கள் வயலில் விதைப்பு நடந்தது. காலை உணவுடன் நானும் ஜூலியும் வயலுக்குச் சென்றோம். தூங்கப் போவதாய் அடம் பிடித்தவளை வலிந்து நான்தான் அழைத்துச் சென்றேன். அத்திமரத்து நீழலில் வெறுமையாய் உழவு வண்டியைக் கண்டதும் நெஞ்சில் நெருடல். வயலில் உழவு எருதுகளின் பின்
அப்பா மாமா இப்படிச் சிலபேர்
கண்கள் பனித்தன. மாமியை அங்கே காணவில்லை கோவில் சென்றிருப்பாள். மாப்பாணன் அந்த உழவு வண்டியை இயக்குதல் போல மனதில் பிரமை. சென்றதோர் உழவு நாட்களில் தானே அவனையும் அவனது மகவையும் இழந்தேன். கிசுகிசுவென்று நெற்பயிர் வளர்ந்து வயல்களில் பொற்கதிர் சரிவதுபோல மீண்டும் பிரமை, அறுவடை வயலில் நடப்பது போலவும் மாப்பாணனையும் என்னையும் பற்றியே கிண்டல்கள் பேசி
140

வ். ஐ. ச ஜெயபாலன்
அறுவடைக்காரர் சிரிப்பது போலவும் மாயத் தோற்றம். வாழாவெட்டியாய்ப் போனேனே என மனது சிதைந்து வாய் விட்டழுதேன். என்னடி என்னடி என்றாள் ஜாலி தலைவலி என்றேன்.
உணவை நான் பார்க்கிறேன் ! வீடு செல் என்றாள். திரும்பி நடந்தேன் மாப்பாணன் என்னை அழைப்பதுபோல மீண்டும் மாயை.
விடுவந்தவள் பாயில் வீழ்ந்தேன் ஓவென்றழுதேன். தலையணையாக மாப்பாணன் கிடப்பதாய் மீண்டும் மாயை. மாப்பாணனை ஆரத் தழுவி கண்ணிர் உகுத்தேன். அவனது பாடல் ரீங்காரம் கேட்டது.
யாருக்கு வந்ததிந்த வெள்ளி நிலவு என் ரதிதேவி இல்லாத மாலைப் பொழுது போருக்கு நின்றதென்ன தென்றல் காற்று புண்ணாக நோகவைக்கும் குயில் பாட்டு பச்சை வயல் பக்கத்திலே நீரோடை அங்கு பால் நிலவு போர்த்து வைக்கும் நிழலாடை எத்தனையோ வேளையிலே இனித்ததடி நிலா ஏனிந்த வேளையிலே முறைக்குதடி.
14

Page 73
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
பாடலோடு தூங்கிப் போனேன். தூக்கத்திடையோர் கனவு உதித்தது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் மாப்பாணன் வந்தான் அன்பே என்றான். சுவர்க்கம் முதலாய்ப் பதிநான்குலகும் சென்று வந்த சேதிகள் சொன்னான். "எமது வயலில் உழைப்பது போலவும்
உன்னுடன் கூடி இருப்பது போலவும் இனிமை எங்கும் கண்டிலேன்" என்றான்.
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வயலுக்குச் சென்றோம். டாங்கிகளோடு சிங்கள ராணுவம் வயலில் நின்றது. நாய்கள் என்று கத்தியபடிக்கு கண் விழிக்கையிலே உயிர் துணுக்குற்றது. என்னைச் சூழ காக்கிச் சட்டை ஒநாய்க் கூட்டம். போலி வீரப் பதக்கங்களோடு ஒருவன் குனிந்தான். ஜூலி எங்கே என்ற படிக்கென் சட்டையைக் கிழித்து மார்பைத் திருகினான். சிறிலங்கா ராணுவ முகாம்களைத் தாக்க திட்டம் போட்டதா என்றபடிக்கு வேறு ஒருவன் யோனியில் கடித்தான். "கஸ்ரோ"வுடைய வைப்பாட்டிக்கு
சேலை எதற்கென நிர்வாணப் படுத்தினர்
142

வ.ஐ. ச ஜெயபாலன்
عظمتنخبخت سنگھ
இராணுவத் தளபதி தன் சட்டையைக் கழற்றினான். மூச்சுத் திணறினேன். நினைவை இழந்தேன். கண் விழிக்கையிலே பாலி ஆற்றுத் தாயின் மடியில் தலை சாய்ந்திருந்தேன். எனது ஆருயிர்க் காடுகள் யாவும் கோபத்தோடு காற்றிலே தலைகளை மோதிக் கொண்டன. கதையை நிறுத்தி ரதி புன்னகைத்தாள் *கெடுக சிந்தை"
ஒலி அடங்கியது. வானில் என்றுமே தோன்றா அழகுடன் பெளர்ணமி நிலவு. பெளர்ணமிக்கு வெண் பட்டாடையாய் பணி கொட்டியது. ۷ , , , ,
காட்டின் ஆழத்திருந் தொரு கலைமான் மனம் கசிந்து கூவுதல் கேட்டது.
'மாப்பாணா" என்ற ரதியின் கூச்சல்.
எல்லாம் ஒரு நொடியின் துகளில். பாலியாற்றில் மண் சிலையாக கரைந்தனள் தேவி.
பாலி ஆற்றில் வெள்ளம் தணிந்தது. மரங்கள் நிமிர்ந்தன வரால் மீன் ஒன்று துள்ளிப் பாய்ந்தது.
143

Page 74
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
தான் அதிர்ந்து போயிருந்தேன். ஆற்றில் பாய முனைந்த என்னை வீரன் தடுத்தான்.
காடும் தொலைதூரத்துத் தேயிலை மலைகளும் ஆம் ஆம் என்று எதிரொலி செய்ய வானில் எழுந்தது வார்த்தைகள். "ஒரு பொழுதில் பேனா ஒரு பொழுதில் யாழ்
ஒரு பொழுதில் பதாகை மற்றொரு பொழுதில்
போர்வாள் என்று ஈழநாட்டிலும் இலங்கைத் தீவிலும் உலகப் பந்தின் ஒவ்வோர் புறத்திலும் மானிடம் முன் செல்லும் மனம் தளராதீர்.” வானில் வெண் புரவி மேல் ஒருவன் மறைந்தான்.
கைகளில் வீரனைத் தூக்கியபடிக்கு எழுந்தபோது தொலைதூரத்துக் கிராமங்களிலே சேவல் கூவும்.