கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருது சங்கார காவியம்

Page 1
இருது சங்க
 ܼ ܼ ܼ ܼ ܸ ܼ
55 to
யாழ்ப்ப முகாந்திரம் தி.
செய்தி
சுன்னு
திருமகள்

rJ J, TGo?u. Ib
ти/ц біт ]
ம்ை, சதாசிவ ஐயர்
தி
அழுத்தகம்

Page 2

.ெ
இருது சங்கார காவியம்
I குறிப்புரையுடன் ]
யாழ்ப்பாணம், முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் செய்தது
Copyright m 9SO Feserved

Page 3
Printed at THE THRUMAKAL PRESS, C- UN NAKAMA,
and published by Sri S. Muttucumaraswamy Iyer, Alavetty, Chunmakam
பிரதி விலை: ரூ 1-50
கிடைக்கும் இடம்: முகாந்திரம் தி. சதாசிவ ஐயர்,
சுன்னுகம்.

10.
பொருளடக்கம்
areas
Introduction
முகவுரை
இருது சங்கார காவியம்:-
பாயிரம்
முதுவேனிற் பருவ வருணனை
செய்யுள் 28
. கார்ப் பருவ வருணனை
செய்யுள் 28 கூதிர்ப் பருவ வருணனை செய்யுள் 26 முன்பணிப் பருவ வருணனை
செய்யுள் 18 பின்பணிப் பருவ வருணனை
செய்யுள் 16 இளவேனிற் பருவ வருணனை
செய்யுள் 38 செய்யுண் முதற்குறிப்பு அகராதி
பக்கம்
νiii
13
26
3?
43
49

Page 4

முகாந்திரம், தி. சதாசிவ ஐயர்
( Retired District Inspector of Schools - Ceylon Govt.)

Page 5
T திர
Retired District Inspector
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。
41 ܬܐ ܠ .  ܼܲܬ ܐ ܵ ܠ ܸ ܐ .
. 5:10
。
JLI I שהם תיTת.T ."
5. Cen

Page 6

Introduction.
sesses
Rüးဖူး is a minor poem among the works of the Immortal Poet Kalidasa. This poem, like Thomson's Seasons', is solely devoted to the delineation of the seasons. Ritusamhara means literally "the Collection of Seasons; Ritu = season & samhara = a collection It is probably one of the poet's earlier productions as it appears to fall short of his other later) works in depth of poetic vision and artistic finish. But we find in it his most intimate and essential characteristics - his keen appreciation of Nature's beauties, his pervasive sensuousness, his power of illuminative similes and his power of imaginative description.
Comparing Kalidasa’s Ritus amhara with Thomson's Seasons', we find how widely the genius of the one poet differs from that of the other. Kalidasa's poem (produced in the first or the second century B. C. - that being the period now assigned to the Immortal Poet) is the first poem in the world's literature written with the express object of describing Nature. While the 18th century (A. D. ) poem of the English poet is more artificial and rhetorical and has less human interest, Kalidasa's treatment of Nature is more emotional and closely related to man's life; it is charming and attractive. Kalidasa's Nature - poetry reveals that he realised always the supreme importance of life as the only abiding basis of a poem's immortality; and in this respect, he is to be classed with the world poets Valmiki, Shakespeare and Kampan.
This poem abounds in many of the characteristic touches of the Kalidasian stamp, though not so subtle and perfected in form as in his other master-pieces, There is his power of felicitous and vivid simile; there is the individual effect of his poetical conceits and forceful presentation and there is his power of

Page 7
vi
keen observation and lifelike description. That charac
teristic of the poet, which most impressed the ancient
critics, “ Upama Kalidasasya ' ( Kalidasa for similes )
is everywhere present in this poem: e. g., The deep blue summer sky is like a rich purple mass of powdered collyrium (St. 11); girls with their smiling
faces and lovelit eyes are like evenings beautifully decked with the moon (St. 12); the forest-fires look far off like red blossoms and drops of vermillion (St. 24); the new blades of grass are like pieces of split emerald (St. 33); rivers rushing along turbul
lently and tearing down the trees on either bank are like evil women distracted with passion and dragging down their family on both sides into disgrace (St. 35;)
the cloudless autumnal sky, star-spangled and moonlit, is like a lake blooming with white water lilies and a male royal swan reposing therein (St. 77); young damsels fresh from their morning ablutions are like Grha-Lakshmis (St. 113); the mullai flower opening
its buds is like the charming smile of young ladies
(St. 139).
Again there are the poetical conceits, like - the Moon towards dawn growing pale with shame at the lovelier brightness of a woman's face (St. 9), the rains coming with the pomp of some great king (St. 29); the clouds like archers shooting their rainarrows at the lovers from the rainbow stringed with lightning (St. 32). There is the comparison of things in Nature, like - rivers (St. 59), lotus and water-lily St. 79), autumn (St. 57, 82), the night (St. 63), the earth (St. 33, 135), the pale priyangu creeper ( St. 92), - to women in ornamental attire.
This poem is written in six cantos answering to the six Indian Seasons - Summer, Rain, Autumn, Winter, Dew and Spring. Nothing can excel the splendour and power of the opening canto or Summer. The description is bold and energetic. The second and third cantos on Rain and Autumn give us a number of vivid pictures with dignity aud restraint, nobler harmony and imagery. The next two cantos the
a- : . . م. --م.

γ11
fourth and the fifth are shorter ones, mostly dealing with feminine beauty and sensuous passion, although there are some descriptions of cold nights, fields, paddy plants animals and birds. But the sixth and last canto on Spring is very lively and colourful. The Spring is the royal season of the Indian year and has lent itself easily to Kalidasa's inborn passion for colour, sweetness and harmony. This closing canto is the crown of the poem.
The description of the six seasons deals with the feelings awakened by each season in the minds of young lovers. Indeed, Kalidasa is a masterly describer of the influence which Nature exercises upon the minds of lovers. This poem is addressed by a lover ( or by the poet himself) to his lady love; and at the end of each canto there is an invocation of the blessings of the season described on his lady-love. There are altogether 144 stanzas in this poem.
In this translation in Tamil verse, I have aimed at preserving the spirit of the Sanscrit original and at conveying the poet's idea intact and in full, keeping down to the minimum the use of extra words necessitated by the exigencies of the Tamil metre. I cannot think of a better ending to this brief account of the poem and the poet thau this quotation : Professor Macdonnell says, “With glowing descriptious of the beauties of Nature, in which erotic scenes are interspersed, the poet adroitly interweaves the expression of human emotions. Perhaps no other work of Kalidasa's manifests so strikingly the poet's deep symp thy with Nature, his keel powers of observation and his skill in depicting an Indian landscape in vivid and glowing colours'.
J. T. Sadasiva Iyer
Сһиттаkат, I - 5 - 49. -

Page 8
மு க வர  ைர
ഷംun
இருது சங்கார காவியம் என்பது வடமொழியிற் காளிதாச மகாகவி யியற்றிய இருது ஸம்ஹார : ' என்னும் சிறு காப்பியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அகர்ப்பட யாத்த நூலாகும். இருது ஸம்ஹார மென்பது இருதுக்களின் கூட்டம் எனப் பொருள்படும் ; இருது - பருவகாலம் (Season), ஸம்ஹார - கூட்டம், சமுஹம். ஸம்ஹார மென்னும் வடமொழி தமிழிற் சங்கா ச மென வழங்கும். சங்கார மென்னுஞ் சொல் அழித்தல் என்னும் பொருளிற் பெருவாவிற்முக வழங்குவதாயினும், இங்கு அது சமூகம், கூட்டம் என்னும் பொருள் பயந்து நிற்பதென்பது. எனவே இருது சங்கார மென்பது ஆஅது பருவ வருணனைகளும் ஒருங்கு அமைக்த நூல் எனப் பொருள்படு மென்றறிக. ஆறு இருதுக்களும் : இளவேனில் (வசந்த இருது, சித்கிரை - வைகாசி), முதுவேனில் (கிரீஷ்ம இருது, ஆனி - ஆடி), கார் (வர்ஷ இருது, ஆவணி - புரட்டாதி), கூதிர் (சரத் இருது, ஐப்பசி - கார்த்திகை), முன்பனி (ஹேமந்த இருது, மார்க — Gಶಾಖ), பின்பனி (சிசிர இருது, மாசி - பங்குனி) என்பனவாம். இந் நூலில் முதுவேனில் (கிரீஷ்ம இருது) முதலாக இளவேனில் (வசந்த இருது) ஈருக முறையே ஆறு இருதுக்களையும் வருணித்திருக்கின் முர் கவி. இருதுக்கள் வசந்த முதலாக எண்ணப்படுவது உலக வழக்காயிருப்பவும், கவி கிரீஷ்ம இருதுவை முதலாகக் கொண்டு அவற்றை வருணனை செய்ததும், சமூகம் முதலிய ஏனைய சொற்களிருப்பவும் சங்காரம் என்பதை நூற்பெயராகக் கொண்டதும் பிறிதொடு படான் தன் மதங் கொளல் ' என்னும் மதம்பற்றி யென்க.
இருது சங்காரம் காளிதாச கவி இளமையி லியற்றிய
காப்பிய மென்பது ஆராய்ச்சியாளர் பலரது கொள்கையாகும்.
இக் கவிச்சுர ரியற்றிய ஏனைய தலைசிறந்த காப்பியங்களாகிய

இரகுவம்சம், குமாரசம்பவம், சாகுந்தலம், மேகதூதம் என்பவற்றிற் காணப்படும் கற்பனைத் திறமும் சொல்லாட்சியும் பொ ருட்செறிவும் என்னும் கவிதைப் பண்புகள் இங் நூலில் அத்துணைத் திட்ப நுட்பம் பெற்று விளங்காமையே இக் கொள்கைக்கு ஆதார மென்ப, அஃ தெவ்வாறயினுமாக : காளிதாச மகாகவிக்கே சிறப்பியல்பாக அமைந்த கவிதா சாமர்த்திய சித்திரங்கள் இந் நூலிற் காணப்படாம லில்லை யென்பது எல்லார்க்கு மொப்பமுடிந்த கருத்து. கவி இக் நூலில் இயற்கை வருணனையோ டு மக்களிதயத்து இயல்பா னெழும் உணர்ச்சித் திறங்களையும் இயைபு பெற வருணனை செய்கின்றர். இயற்கை யன்னையின் மடியிற் றவழ்ந்து இயற்கை யழகைப் பருகித் கிளைத்த வின்பம் இதயத்திற் கவிதையாகச் சுரந்து பெருகி உலகினரை யின்புறுத்தும் ஒப்பற்ற கலைப்பண்பு வாய்ந்தவர் காளிதாச மகாகவி; இயற்கை யிரகசியங்களை நுனித்து நோக்கும் ஆற்றலிலும் அதனை வளம்பெறப் பாடும் புலமையிலும் தலைசிறந்தவர். இயற்கைத் தோற்றங்களை யப்படியே தத்ரூபமான சொல் லோவியங்களாகச் சித்திரித்துக் காட்டுதலும், இயற்கை நிகழ்ச்சிகளால் மக்களுள்ளத்தில் விளையும் உணர்ச்சிவேகங் களை யவற்றேடு தொடர்புபடுத்தி அகப்பொருட் குறிப்புத் தோன்றக் கவிதை புனைதலுமே காளிதாசர்போன்ற பெரும் புலவர்களின் தனிப் பண்பாகும். ஆகவே, மக்கள் வாழ்க்கை யோடு மிக நெருங்கிய தொடர்புபெற ஆக்கிய கவிதைகளே அமரத்துவம் பெறுவன என்பது வான்மீகி, காளிதாசர், திருவள்ளுவர், கம்பர் முதலிய அமரகவிகள் வாயிலாக நாமறியக்கிடப்ப தென்பது.
ஒவ்வொரு பருவ காலத்திலும் இயற்கையன்னை யளிக்குங் காட்சிகளை வருணனை செய்வதற்கென்றே இலக்கிய உலகில் முதன்முதல் (இற்றைக்கு முன் 2000 ஆண்டுகள் வரையில்) எழுதப்பட்ட காவியம் இவ் விருது சங்காரமே யென்பது நன்கு அறியத்தக்கது. வடமொழிப் புலவர்கள் இயற்கை வருணனை பாடுங்கால் இருதுக்களை யாதாரமாகக்கொண்டு ஆமுக வகுத்துச் செய்யுள் செய்வர். தமிழ்ப் புலவர்கள்

Page 9
Χ
திணையை யாதாரமாகக்கொண்டு ஐந்தாக வகுத்துச் செய்யுள் செய்வர். இதுவே இருவர் செய்புள் நெறிக்குமுள்ள வேறுபா டென்பது. இருவர் செய்யுளுக்கும் பொருளாவது அகமே யென்றறிக. அகம் என்பது சிருங்கார மென்னும் காமச் சுவையாம். ஒத்த காமமுடையா tருவரிடை நிகழும் இவ் வகத்திணைப் பொருளைத் தமிழ் நூலார் புணர்தல், பிரிதல், இருத்தல், இாங்கல், ஊடல் என ஐந்தாக வகுப்பர் ; வட நூலார் கூடுதல் (= புணர்தல்), கூட்டம்பெருமை யென இரண்டாக வகுத்து, கூட்டம்பெருமையுள் பிரிதல் முதலிய என நான்கையு மடக்குவர். கூட்டம்பெருமை யென்பது பூர்வ ராகம், மானம், பிரவாசம், கருணம் என நான்கு வகைப்படு மென்பர். பூர்வ ராகமென்பது தமிழிற் கைக்கிளைத் கிணைபோல்வது. மானம் என்பது ஊடலையும், பிரவாசம் என்பது பிரிதலையும் இருத்தலையும், கருணம் என்பது இரங்கலையும் குறிப்பனவாம். ஆகவே இந் நூலிலும் கவி ஐக்கிணைப் பொருளையும் அகத்திணையியல் வழாது வருணித் துச் செய்யுள் செய்திருத்தல் இந்நூலை நன்கு நாடிப் படிப்போர்க்குச் செவ்விதிற் புலனுமென்றறிக. உதாரணமாக :
இந் நூலின் முதற் சருக்கமாகிய முதுவேனிற் பருவ வருணனையை நோக்கின் :- குரியன் மிக உக்கிரமாக எறித் தலும், இரவு நிலாப்பொருங்கிக் குளிர்ங்கினிதாதலும், ஆடவரும் பெண்களும் வெம்மை தீரப் பல்காற் பூஞ்சுனை யாடலும், காமவின்பம் கைம்மிகாது கட்டுப்படுதலும் (செய். 1) ; செயற்கை நீரருவிகளும் பனிநீரும் சக்தனமும் நிலாமுற்றமும் முத்து மாலையும் யாமத்து வீணை யின்னிசையும் சங்கீதமும் என்பன இளங் காதலர்க்குத் தாபத்தைக் குறைத்து இன்பஞ் செய்தலும் ; மகளிர் இக் காலத்துக் கேற்ற மென் பட்டாடை யணிதலும் ; விலங்கும் பறவையும் வெய்யில் வெப்பத்தினல் கியங்கி வலியிழந்து தம்முள் இயற்கையாயுள்ள பகையையும் மறக் து ஒன்றி ஒழுகுதலும் ; சூரிய விெப்பத் காற் குளங் குட்டைகளெல்லாம் நீர் வற்றிப் போக விலங்கின்ம் விடாயால் மெலிந்து நீர்தேடி யலைதலும்;

x
காடெங்கும் காட்டுத்தீ சுவாலைவிட்டுப் பரவி மரம் செடி கொடிகளை யெரித்தலும் ; வெஞ்சு ரத்துச் சென்றவன் பிரிவுத் துயராலும் வெப்பத்தாலும் தாபமுறுதலும் (செய் 10) ; இல்லிற் பிரிந்து வழிச்சென்ருே?ர் மாலைக் காலத்தையும் இள மங்கையரையுங்கண்டு விரக முறுதலும் (செய். 12) ; இள கங்கையர் பூங் தண்சுனை யாடியும் வேனிலிற் பூக்கும் பாதிரி மலர் மாலையணிந்து இரவில் நிலாமுற்றத்திருந்து கீதவாத்திய கானஞ்செய்தும் வேனில் வெம்மையைப்போக்கி யின்புறுத லும் (செய், 28) ; என்னும் இன்னோன்ன செய்திகளைக் காணலாம். இனி, இவற்ருேடு,
* நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு,’
என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையில் வேனிலைப்பற்றிக் கூறும் பகுதியாகிய :- ** காலையும் மாலையுங் நண்பகலன்ன . கடுமை கூர, சோலை தேம்பி, கூவல் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம்பயன் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று, இன்பமின்றித் துன்பம் பெருகுவ தொருகாலமாதலின், இன் பத்திற்கு இடையூருகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று ’, என்னும் இதனை ஒப்பவைத்து கோக்கின் இரண்டிற்குமுள்ள ஒற்றுமை எத்துணைத்தென்பது தெள்ளிகிற் புலப்படுவதாம். ஏனைய சருக்கங்களையும் இப்படியே யாராய்ந்து ஒப்புகோ க்கிக் கண்டு கொள்க. விரிவஞ்சி விடுத்தனம்.
இருது சங்கார காவியத்தில் ஆறு பருவகாலத் தோற் றங்களும் அவற்ருற் காதலருளத்து நிகழும் உணர்ச்சிகளும் மிக அழகாக வருணிக்கப்பட்டுள்ளன. இக்காவியம் சிருங் கார ரசப்பிரதானமானது. இது ஆறு சருக்கங்கள் கொண் டது. ஒவ்வொரு சருக்கத்திலும் ஒவ்வோர் இருஅ வரு ணனை வரும். இந்த வருணனை ஒரு காதலனே, கவி தானே, தன் காதலியை விளித்துச் சொல்வதாக அமைக் தது. ஒவ்வொரு சருக்கமும் அதன் கண் வருணனை செய் யப்பட்ட இருது காதலிக்கு எல்லா நலன்களையும் நல்குக வென வாழ்த்தும் ஒரு வாழ்த்துச் செய்யுளைக்கொண்டு

Page 10
!של
முடியும். இக் காவியத்தில், காளிதாச கவிதையின் தனிச் சிறப்பாகிய உவமை கலங்களும், அரிய கற்பனைகளும், உருவகங்களும், தன்மை நவிற்சியு மென்னும் அழகுகள் பொலிந்து விளங்கிப் படிப்போர்க்கு இன்பம் பயப்பனவாக வமைக் துள்ளன. முதற் சருக்கத்தில் வரும் காட்டுத் தீ வருணனை (செய். 22-26) படித்தின்புறத் தக்கது.
இக் காவியத்துள்ள சில இன் கவிகள் வருமாறு :-
சரு. (1) செய். 1, 22, 28, சரு, (i) செய். 29, 32, 34, 35, 40, 42, 51, 52, 56 ; சரு (it) செய், 57, 60, 63, 66, 13, 77, 18, 19, S2; சரு, (ty) செய், 83, 91, 92, 93, 100; சரு. (*) செய். 101, 102, 116; சரு. (v) செய். 117, 118, 130, 131, 132, 135, 138, 144...
தி. சதாசிவ ஐயர்
சுன்னகம் 1-5-49

al அம்மை யப்பர் துணை.
இருது சங்கார காவியம்
பாயிரம் 1. திருந்து சங்கதக் கிருது சங் காரசிங் கார
விருந்து தந்தனன் காளிதா சக்கவி வேந்து பொருந்து மன்னதைப் புனைகுவன் தமிழ்க்கவி யாக முருக்து வாணகை பங்கமர் முன்னவ னருளால். வேறு 2. ஆரி யத்தின மைந்தவிக் காவியஞ்
சீரி யற்றமிழ்ச் செல்வருங் தேர்கென கேரி யன்ற தமிழ்க்கவி நேர்ந்தனன் காரி யன்ற சதாசிவ நாமனே.
பாயிரம் முற்றிற்று.
1. திருந்து - சுத்தமான, இலக்கண வரம்பமைந்த : சங்கதத்து - வடமொழியில், சங்கதம் சம்ஸ்கிருதம் என்பதன் சிதைவு ; இருது சங்காரம் - நூற்பெயர் ; இருது - பருவகாலம், சங்காரம் - கூட் டம் 3 ஆறு பருவ வருணனையும் ஒருங்கு அடங்கிய நூலென்பது கருத்து, சிங்காரம் - இன்பச்சுவை (சிருங்கார ரசம்) பொருந்திய ; விருந்து - புதுமை ; இங்கு புதுமை வாய்ந்த நூல் : புனை குவன் - செய்குவன், அமைப்பேன். முருந்து - இறகின் அடிக்குருத்து : முருக்தூ வாணகை என்றது உமாதேவியாரை.
2. தேர்கென - தேர்க என, தெரியும்படி ; நேரியன்ற தமிழ்க்கவி யென்பது முதனூற் செய்யுட் பொருளைக் கூட்டுதலும் குறைத்தலுமின்றி அப்படியே கூறுங் தமிழ்க் கவி யென்பதாம். ஆகவே முதனூலில் எத்தனை சுலோக முண்டோ அத்தனை செய் யுளே இந்நூலிலும் உண்டு என்பதாயிற் று. நார் இயன்ற - (தமி ழறிஞர்க்கு இதனைத் தெரிவிக்க வேண்டுமென்னும்) அன்பு பொருந் திய நார் - அன்பு ; இனி, நாரின் தன்மை பொருந்திய எனப் பொருள்கொண்டு : “ பூவுடனே கூடிய நார் புனிதர் முடிக்கணி யாமால் ? என்றதுபோல், காளிதாச மகாக வியின் கல்ப்பணுசித்திர மலர்கள் தொடுக்கப்பெற்ற (மொழிபெயர்த்தலாகிய) (BT thaծr தன்மை யமைக்ததே இந்நூலாக்கியோனது செயலுமாதலின், இங் நூலையும் தமிழறிஞர்கள் உவந்து ஏற்றுக்கொள்வரென அவை யடக்கங் கூறியதாகக் கோடலு மொன்று.

Page 11
இருது சங்கார காவியம்
முதற் சருக்கம் முதுவேனிற் பருவ வருணனை
1. செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்
தெண்ணிலா மனமகிழ் விளைப்பப்
பொங்க கி தாபம் போக்கிய பல்காற்
பூம்புன லாடலும் பொலியத்
தங்குதி வாவின் கடையினி தாகத்
தணிவுறக் காதலின் வேகஞ்
சங்கதிர் முன் கைத் தையனல் லாய்காண்
தழல்முது வேனில் சார்ந்ததுவே.
2. மண்டிய நீல படலம ககற்றி
மதிதிகழ் நிசிகளுந் தாரை
கொண்டியல் நீரா விமண்டப வகையுங்
குளிர்மணி விதங்களுஞ் சாந்தின்
அண்டிய தேய்வை செறிபனிக் குழம்பும்
அடுத்தவில் வேனிலங் காலை
வண்டிவர் கோ தாய் மாங் தருக் கிதமாய் மனமகிழ் பூப்பவாய்க் தனவே.
1. செங்கதிர்ச்செல்வன் - சூரியன் ; தெறுகரம் - சுடுகின்ற கிரணம் ; போக்கிய - போக்கும்படி, போக்க; தங்கு - நிலைத்த நீண்ட ; திவா - பகல் ; வேனிற் காலத்துப் பகலாதலின் நீண்ட தெனப்பட்டது. கடை - இறுதி, மாலைக் காலம் என்றபடி ; கழல் - தழலுகின்ற, சுடுகின்ற ; சங்கு அதிர் - சங்கு வளையல் ஒலிக்கின்ற ; தையல் நல்லாய்- மகடூஉ முன்னிலை ; ஒவ்வொரு பருவ காலத்து நிகழ்ச்சிகளையுங் காட்சிகளையும் ஒரு காதலன் தன் காதலிக்கு வருணித்துக் கூறுவதாகக் கவி இந்நூலே யமைத்திருக்கிருர், அத னல் ஒவ்வொரு பருவ வருணனைத் தொடக்கத்திலும் சிறுபான்மை இடையிலும் மகடூஉ முன்னிலை வருதல் காண்க.
2. நீலபடலம் - கரிய முகி ற் கூட்டம் ; நிசி - இரவு ; தாரை கொண்டு இயல் - நீர்த்தாரை யைச் சொரியும் பக்திரம் அமைக்கப்
பட்ட ; நீரா விமண்டபம் - நீர் நடு விற் கட்டிய ஸ்நாடு மண்டபம் (Bath rooms fitted with artificial fountains). Gail goal -
அாைத்த சக்தனம் ; வண்டிவர் கோதாய் - மகடூஉ முன்னிலே ; கோதாய் - கூந்தலையுடைய பெண்ணே !

முதுவேனிற் பருவ வருணனை
3. விரைதவழ் வுற்று விழைதகு மாடத்
தும்பரு மின்னனர் முகத்து விரைதரு சுவாசத் தசைவுறு மதுவும் மேவுமிவ் வேனிலம் போது நில்ாதரு யாமத் தின் பினே மூட்ட நேர்வரு வீணை யின் னிசையும் புரை தவிர் காதற் காளையர்க் கெல்லாம்
போகமு நுகர்ச்சியுந் தருமால்.
4. காமரு பட்டுங் காஞ்சியு மணிந்து
கவினு று கடிதடம் முத்துத் தாமமுஞ் சாந்தும் அணிகளுஞ் சுமந்த
தனபாங் தண் விரை நாகத் தாமதி சுகந்த அளகமென் றின்ன
வாகிய தாங்கணி யிழையார் ஏமரு வேனிற் ருபம தகற்றி
யிளைஞருக் கின்பமூட் டுவரால்.
வேறு
3. பஞ்சி தோய்ந்ததி செம்மைய பைம்பொனின் மிளிரும் அஞ்சி லம்பின அவனியிற் படும்படும் தோறும் - அஞ்ச மென்னவே யபற்றுவ வாயசிற் றடியால் வஞ்சி யன்னவர் காளையர் மனத்துமால் வளர்ப்பார்.
மேல் நிலம், மாடத் தம்பர்-நிலாமுற்றம் (terrace) ; நேர்வரு ---- ஏற்ற தாகிய,
4. காஞ்சி - மேகலை ; கடிதடம் - அரை ; தாமம் - மா?ல; அணி - ஆபரணம் ; விரை - வாசனைப்பொடி ; நாடும் - ஸ்நாடும், நீராடல்; ஏமரு - கலக்கத்தைச் செய்கின்ற ; தாபம் - வெப்பம்.
5. பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு : செம்மைய - சிவந்தன ; அவனி - பூமி, நிலம்; அஞ்சம் அன்னப்பறவை; வஞ்சி - பூங்கொடி : மால் - ஆசை, மையல்,

Page 12
4. இருது சங்கார காவியம்
6. சந்த மார்ந்த கி தட்பமாய்த் தண்பணி வெண்மை தந்த முத்தணி தாங்கிய தனங்களும் பொன்னின் வந்த மேகலை வயங்குநுண் ணிடைகளும் வலிங்தே எந்த ஆடவ ரிதயங்கா முறும்வகை செயாவால். 7. வியர்வு தோன்றுபு விரியுடன் மூட்டினர் விம்மி
உயர்வு சேர்கன தனத்திள முவதிய ரின்னே யயர்வு தீர்தர ஆடைகள் கனத்தவை யகற்றித் துயர்த ராதமென் துகில்கொடு 15கிலிணை தூர்ப்பார். 8. சாங்க நீருறை தந்தசை சிவிறிமென் காலும்
ஏய்ந்த முத்தணி யேந்திய விளமுலை யிசைவும் வாய்ந்த வீணேயொ டெழுதரு மதுரகல் விசையும் ஒய்ந்த காதலை யுணர்த்துவ போலுமா லின்னே. 9. வெள்ளை மாடத்து நிசிதனில் மின்னனுர் துயில்போ (து)
அள்ளு வாண்முக மாசையி னிடுற நோக்கித் தெள்ளு தண்கதிர்த் திங்களஞ் செல்வன் பின் னிரவி லுள்ளு நாணினுற் போலுடல் விளர்க்குமா லுறுகி.
6. சந்தம் ஆர்ந்து - சந்தனத்தில் தோய்ந்து ; காமுறும்வகை - ஆசைகொள்ளும்படி,
7. தோன்றுபு - தோன்றி ; விரி - விரிந்த, பரந்த மூட்டு - சந்து ; உவதியர் - இளம்பெண்கள் ; ருகில் இணை - இரண்டு தனங் களேயும் ; தூர்ப்பார் - மறைப்பார் ; வியர்வு உடற்சக்துகளில் தோன்றி யுடலெங்கும் பரவப்பெற்ற உவதியரென்க.
8. சாந்த நீர் - சந்தனங் கலந்த நீர் ; உறை - திவ?ல, துளி ; நீர் உறை தந்து - நீர்த்திவலைகளைச் சிங்கி ; சிவிறி - விசிறி, வெட்டி வேர் முதலியவற்ருரல் செய்தவை ; மென்கால் - மெல்லிய காற்று ; இசைவு - பொருந்துதல், அணைத்தல்; ஒய்ந்த - உறங்கின, தணி வுற்ற ; உணர்த்துதல் - எழுப்புதல்; இன்னே - இவ்வேனிலில்.
9. அள்ளு - (மனத்தைக்) கவருகின்ற, கவர்ச்சி பொருந்திய ; உள்ளும் - மனத்திற்கொண்ட ; உறுதி - நிச்சயம், இரவு விடிகிற சமயத்தில் சந்திரன் ஒளியிழந்து மங்குதல் இயற்கை ; நிலா முற்றத் தில் துயிலும் நங்கையர் முகத்தை நீடுநோக்கிய சந்திரன், (1) அவர் கள் முகத்துக்குத் தான் தோற்றசனுல், இன்றேல், (2) பிறர் மனைவி யர் முகத்தைக் களவாகத் தான் பார்த்த குற்றத்தினுல், வெட்க முற்று அதனல் மேனி மழுங்கினன் எனக் கவி வேறு காரணம் புனைந்து கூறுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம்,

முதுவேனிற் பருவ வருணனை 5
வேறு
10. தாங்கரு வேனிற் காற்றுக்
தருந்துகட் படலை காங்கி
வீங்குருப் பஞ்சேர் வெய்யோன்
வெதுப்பவேங் தரணி தன்னைப்
பூங்குழ லார்ப்பி ரிங்து
வழிச்சென்றேர் புலம்பு வாட்ட
ஏங்குநெஞ் சகத்த ரீண்ட
நோக்கலு மியல்கி லாரால்.
11. பொங்குவெங் கதிரோன் வெப்பம்
பொலிந்துடல் புலர்த்த கீடு
தங்கதி தாகங் தன்னல்
தாலுமிக் குலர்ந்த மான்கள்
சிங்குறப் பொடித்த மையிற்
றிகழ்தரு நீல வானே
யங்குறக் கண்டு நீரென்
முேடுவ அடுத்த கானம்.
10. வேனிலால் நேரும் இன்ப அனுபவங்களைக் கூறி, இனி, துன்ப அனுபவங்களே வருணிக்கின்ருர் கவி. துகள் - புழுதி : படலை - கூட்டம் , வீங்கு - மிகுந்த 3 உருப்பம் - வெப்பம் ; வேம் - வெம்பும், சுடும் ; த ராணி - பூமி, நிலம்; புலம்பு - பிரிவு, தனிமை ; ஈண்ட நோக்கல் - உற்றுப்பார்த்தல், ஏலவே பிரிவாற் கலங்கியவர்கள் வெஞ்சு ரத்துச் செல்லும்போது அடியைச் சுடும் வெப்பத்தால் நிலத்தை யுற்று நோக்கவும் இயலாதவரானரென்ப தாம்,
11. புலர்த்த - காய்ச்ச, வாட்ட , தாலு - நீர் ; சிங்குற குறைய, சிறிதாகும்படி; பொடித்த - பொடிசெய்த ; மையில் - மைக் கட்டிபோல. காட்டுமரச் செறிவுக்கிடையே நீலவானந் தோற்றக் கண்டு அதனை நீரென்றெண்ணி அத்திசையாக அடுத்த காட்டுக்குள் ஒடுகின்றன வென்பதாம். இது மயக்க வணி.

Page 13
6 இருது சங்கார காவியம்
12. திங்களா மணிப்பூண் சேர்ந்து
திகழ்வுறு மணங்க ர்ைகம் அங்க5ே ரிங்கி தக்கா
லமர்நகைக் கடைக்க னேக்கால் அங்குநேர் மாலை யென்ன
ாகலச் @తాar(gpf للاه-g}}Lے தங்களி ரிதயங் தன்னில்
தணிப்பருங் காகல் சேர்ப்பார்.
13. ஆதவன் கிரணஞ் சால
அழற்றவா றதனில் வெந்து
பாய் துகள் கனற்ற மெய்யைப்
பதைப்புறு படவ ராப்பார்
மீததோ முகமாய்ச் சுற்றி
யூர்ந்துவெய் துயிர்த்தே தற்குப்
பேதகம் விளை ப்ப தாய
பிணிமுகத் தடியில் வைகும்.
12. பிரிந்து சென்முேருள்ளத்தில் காதலுணர்ச்சி பெருகுவ தற்குப் பெண்களும் மா?லக்காலமும் காரணமாதலே இச்செய்யுள் கூறுகின்றது. திங்களா மணிப்பூண் சேர்ந்து திகழ்வுறும் என்ப தற்கு, (1) சந்திரனைப்போலப் பிரகாசிக்கின்ற இரத்தினபரணங் களே யணிந்து விளங்குகின்ற எனப் பெண்களுக்கும், (2) சந்திரனு கிய அழகிய ஆபரணத்தைத் தாங்கி விளங்குகின்ற என மாலைக் காலத்துக்கும் பொருந்தப் பொருள் கொள்க. இது செம்மொழிச் சிலேடை. இங்கிதம் - குறிப்பு ; அமர் - வருத்துகின்ற நகை - புன்முறுவல், கண்டாரை வருத்துகின்ற புன்முறுவலோடுகூடிய கடைக்கண் பார்வை யென்க. அங்கு நேர் மாலை - அவ்விடத்துத் தோற்றும் மாலைக்காலம் போல ; ஈர் இதயம் - இனிமை பொருந் திய உள்ளம்,
13. ஆறு - வழி பாய் - பரந்த ; அதோமுகமாய் - தலை கவிழ்ந்து ; பேதகம் - பகை, வஞ்சம் , பிணிமுகம் - மயில், வேனில் வெப்பம் மிகவும் வாட்ட அதனினின்றும் தப்புவதற்குச் செய்யும் முயற்சியில் பிராணிகள் தங்கள் இயற்கையான பகையையும் மறந்து ஒழுகுகின்றன என்பது தாக்பரியம்.

முதுவேனிற் பருவ வருணனை 7
4. மிகுதரு தாகம் விஞ்சி
விசைத்தெழு விறலை வீட்டப் பகுதிரு வாய்செய் பஞ்சா
னனம்பட ருளைசி லிர்த்துத் தொகுதரு நாமுன் தொங்கத்
தொடர்ந்துவெய் துயிர்த்து நாளும் பகைதரு மதமா பாங்காப
படரினும் பாய்க் த டா தால், Lö புலர் தரு மிடற்றுப் போந்த
புன்னுரை நீர வாகி யலரிதன் கிரனத் தீயா
லங்கம்வே வுற்று மேன்மேல் மலா தரு தாகம வாடட
வாரிதேர் மதமால் யானை கொலைகரு மடங்க லேற்றைக்
குறுகினுங் குறிக்கொள் ளாதால். 16. இழுது அறு மோமத் தீயி
னெரியினன் கிரண மங்கம் முழு அற வாட்ட வெம்பி
மொய் ம்பழி மனத்த வாகி யிழிதக விற்று மஞ்ஞை
யெழிற்கலா பத்து ளுச்சி தழைதசக் கிடக்க பாந்தள்
நூறல்செய் நோக்கி லா வே.
14. விஞ்சி - அதிகப்பட்டு ; விசைத்தெழு - விசைகொண்டு பாய்கின்ற ; விறல் - வலிமை ; வீட்ட - கெடுப்ப; தாகம் விற?ல வீட்ட என்க. பகுதரு வாய்செய் - வாயை யகல விரித்த ; பஞ் சானனம் - சிங்கம் ; உளை - பிடர்மயிர் ; தொகுதரு - (தாகத்தா ற்) சுருங்கிய, மதமா - யா?ன.
15, f്. - நீரையுடையன; அலரி - சூரியன்; மலர் தரு - பாக்கின்ற, விரிகின்ற; வாரி - நீர் : மடங்கலேறு - ஆண் சிங்கம் ; குறுகினும் எதிர்ப்படினும் ; குறிக்கொள்ளாது - மனத்துக்கொள் ளாஅ, அஞ்சாது என்றபடி,
16. இழுது - நெய் ; ஒமத் தீயின் - ஒமாக்கினிபோல ; எரி - எறிக்கின்ற, சுடுகின்ற ; இனன் - குரியன் ; மொய்ம்பு - வலிமை, உறுதி * இழிதகவு - எளிமை, இழிவு; பாந்தள் - பாம்பு 3 நூறல் அழித்தலைச் செய்யும் ; மஞ்ஞை பாந்தளை ஆாறல் செய் سننا مح@ நோக்கிலா எனக் கடட்டுக.

Page 14
8 இருது சங்கார காவியம் ير
7, கந்த மார் கோரை சார்ந்த
காய்கமர் வாவிச் சேற்றைக் குந்தநேர் தடநீள் கோட்டாற்
குறித்தகழ் கேழல் வெய்யோன் தந்தவா தபத்தால் மேனி சாம்புசங் தாபங் தீரச் சந்தமா ரவணி தன்கீழ்ச்
சார்வது போலு மன்றே,
8. காய் தரு கதிரின் செல்வன்
கனற்றலின் வெதும்பி மேனி
ஒய்தரு தவளை சேற்று
நீருறை யோடை கின்று
பாய் தரு வுழிநீர் வேட்கை
பற்றிய பன்ன கத்தின்
பாயிரும் படமா மாத
பத்திரத் தடியில் வைகும்.
9. தடம்புகுக் தங்க அணுற்ற
தாமரை முழு துஞ் சாடி யொடுங்கிடச் சிதைத்து மீனை
யுணங்குசா ர சப்புள் ளோட்டி யு டம்புட னுடம்பு தாக்க
ஒன்றுசேர்ந் துடற்றி யானை கிடம்படச் செய்வ காலாற்
f சேற்றினை புழக்கி யம்மா.
17. கந்தம் - கிழங்கு , கமர் - வெடிப்பு ; குந்தம் - ஈட்டி, வேல்; தடம் - வளைவு ; கேழல் - ஆண்பன்றி; ஆதபம் - வெப்பம் : சாம்புதல் - வாடுதல், ஒடுங்குதல்; சந்தாபம் - துன்பம் ; சந்தம் ஆர் - (தான் அகழ்ந்த) துவாரம் பொருந்திய, தற்குறிப்பேற்ற அணி,
18. ஒய்தரு - தளர்ந்த ; நீர் உறை - நீர் வற்றிய, ; பாய்தரு வுழி - பாய்ந்து செல்லுமிடத்து; பாய் இரும் - பரந்த பெரிய ; ஆதபத்திரம் - குடை, i
19. தடம் - தடாகம், குளம் ; உணங்குதல் - வாடுதல், மெலி தல்; சா ரசம் - வெள்ளை நாரை, கொக்கு ; உடற் றுதல் - வருத்து தல், பொருதல்; திடம்பட - வயிரமுற, உறுதிபெற யா?ன புகுந்து, சாடி, சிதைத்து, ஒட்டி, உழக்கிச் செய்வ என வி%ன முடிக்க.

முதுவேனிற் பருவ வருணனை 9
20, குரிய கிரணங் தோயச்
சுடர்மணி யுச்சி தாங்கி
யிரிய முை னீட்டி
யியல் வளி யுணுச்சு வைக்கும்
பாரிய படமா நாகம்
படுவிடம் தீவெய் யோனுஞ்
சேரியல் வெதுப்ப நீர்வேட்
டடுகில தேரை யிட்டம்.
21. பொருங்கிய நுரைசூழ் வாயும்
புறத்துநீள் தருசெந் நா வும் விரிந்து நீள் தலையு மாய்ப்பெண்
மேதியி னீட்டஞ் சால வருந்திவெவ் விடாயால் மன்னு மலைமுழைஞ் சதனி னிங்கி யருக்கிய நீரைத் தேடி
யலமந்து கிரியு மாலோ,
வேறு
22, வீறு கொண்டெ முந்த தாவம்
விட்ட வேமி ளம்புலும் மாறு கொண்டு டற்று வாயு
வாற்ப ரம்பு சருகரும்
20. சுடர் மணி - சுடருகின்ற (ஒளி வீசுகின்ற) நாக ரத்தி னம் ஈர் இயல் நா - இரண்டாகப் பிரிந்த நா இயல் வளிஉணு - காற்ருகிய இயற்கை உணவு ; படுவிடம் - (தன்னிடத்தில்) உற் பத்தியாகும் நஞ்சு ; தீ - காட்டுத் தீ ; வெய்யோன் - சூரியன் ; சேர்இயல் - ஒன்முகச் சேர்ந்த தன்மை ; நாகமானது படுவிடமும் தீயும் வெய்யோனும் ஒன்ரு கச் சேர்ந்து வெப்பம் செய்தலால் மிகத் துன்புற்றது என்பது கருத்து.
21. மேதி - எருமை ; மன்னு - உறைவிடமாயிருந்த அருந் திய - அருந்த, குடித்தற்கு , அலமந்து - துன்பமுற் று, மனங்கலங்கி, 22. இது முதல் ஐந்து செய்யுளும் காட்டுத் தீயின் வருணனை. தாவம் - காட்டுத்தீ ; வேம் - வேகின்ற, பற்றி யெரிகின்ற ; மாறு கொண்டு உடற் று - எதிராக வீசி யடிக்கின்ற சருகர் - சருகு,

Page 15
10 இருது சங்கார காவியம்
வாறு கொண்ட வெயில் வெதுப்ப
வற்று நீர்க்கி டங்குமாய்த் தூறு கொண்ட கான கங்கள்
துண்னென் காட்சி கருவவால்.
23. பச்சி லைக ளற்ற பாத
பக்தி ளை க்கும் புள்ளினம் D-5-9 tdt ud லைக்கு கைக்கு
ளோடு மர்க்க டக்குலம் நச்சி நீர்கு டிக்க வெங்கு
நாடி யோடுங் கவய மா குச்சி தம்மில் சரப நீடு
கூப நீர்கு டிக்குமால்,
24. கட்ட விழ்கு சும்ப மேய்ந்து
காந்து சிந்து ரம்நிகர்த் கெட்டு கின்ற திசைக ளெங்கு
f
- மிம்மெ னப்ப ரத்ததி
(போலி) வாறு - வலிமை ; அது லு - பற்றை, புதர் ; கான் அகங்கள் - காட்டில் அங்கங்குள்ள இடங்கள் , துண் என் - அஞ் சத் தகும், திடுக்கிடச் செய்யும்.
23. பாதபத்து - மரத்தில் : பாதபம் - மரம் ; இலைகள் பழுத்துச் சொரிந்துபோன வெற்று மரக் கொம்பரில் பறவையினம் சேர்ந்து பெருமூச்சு விட்டு இருக்கும் என்க. மர்க்கடக்குலம் - குரங்குக் கூட்டம் , நச்சி - விரும்பி ; கவயமா - காட்டுப்பசு ; கவயமாகீர்குடிக்க நச்சியெங்கும் நாடியோடும் எனக்கூட்டிப் பொருள் கொள்க. குச்சிதம் இல் - இழிவு இல்லாத, இகழத்தகாத ; சாபம் என்பது (1) எண்காற் பறவைக்கும், (2) விட்டிலுக்கும், (3) ஒட்ட கத்துக்கும் பெயராகும். இங்கு இவற்றுள் எதனைக் குறித்து இச் சொல் வழங்கப்பட்டதெனத் திட்டமாகச் சொல்ல GA19 turf g7. எனினும், ஆழமான கூபத்திலுள்ள நீரை யெடுத்துக் குடிக்கும் என்ற தனல், இதற்கு ஒட்டகம் எனப் பொருள் கொள்ளல் பொருந்துவதாகும்.
24. கட்டு அவிழ் - முறுக்கு அவிழ்ந்த, விரிந்த குசும்பம் - குசும்பப்பூ, செந்துருக்கம்பூ ; எய்ந்து - ஒத்து ; காந்து - ஒளி செய்கின்ற சிந்து ரம் - சிவந்த வர்ணமான லோகப்பொருளின்

முதுவேனிற் பருவ வருணனை 1
மட்டில் கொம்பர் கொடிம சங்கள்
வாஞ்சை யின்ன ணேத்தெனச்
சுட்டெ ரித்த தாலி டங்கள்
தாண்டு காற்று வேகத்தால்,
2
5
காட்ட னல்கி ரிக்கு கைக்குட் காலொ டேகி யோலிடும் வாட்ட முற்ற டர்ந்த மூங்கில்
மண்டி யேவெ டித்திடும் காட்டை யிற்க னன்றெ முந்து கணமு றும்பு விடையுறும் வீட்டு மால்வ னத்தி னெல்லை
மேவி மாவி னத்தையே,
2 (6 நீடு சால்ம லித்த ருக்கள்
நீற்றும் பஃறீ புற்றென மாடு சால்கி றத்தொ டங்கு
மாமு ழைஞ்சி லெழுதரும் , பாடு சேரி லைகள் கொம்பர்
பற்றி யே மரத் தெழும் காடு மேடு மெங்கு மாய்க்
கனன் ஆறு தீக லாவுமால்.
பொடி (Red Lead), ஏய்ந்து நிகர்த்துப் பரந்த தீ யென்க. மட்டு இல் - அளவில்லாத.
25. காட்டு அனல் - காட்டுத் தீ ; கிரி - மலை; காலொடு - காற்ருேடு சேர்ந்து 3 வாட்டமுற் ற - காய்ந்த, உலர்ந்த ; வெடித் திடும் படார்’ எனப் பெரிய சத்தத்தை யுண்டாக்கும். காட்டை யில் - கணநேரத்தில் கணமுறும் புல் - புல்லுக்காடு , வனத்தின் எல்?லமேவி மாஇனத்தை வீட்டும் என்க. மா இனம் - மிருகக் கடட்டம்,
26. சால்மலி - இலவு நீற்றும் - நீருக்கும், எரிக்கும் ; பஃறீ - பலதீ தீ இலவமரத்திற் பற்றி யெரியும்போது, அதன் காய்கள் தனித் தனியே எரிவது அவ்வொரு தீ பல தீயை யுண்டாக் கியதுபோலத் தோற்றுமென்பதாம். மாடு - பொன் ; மரப்பொங்கிற் பற்றி யெரியும்போது தீ பொன்னிறமாகத் தோற்றுகின்றது. பாடு - கேடு, அழிவு; பாடுசேர் - உலர்ந்த ; சலாவும் - சுற்றும், சுழலும்.

Page 16
12 இருது சங்கார காவியம்
வேறு 27. வெந்த மேனி வேழமொ டாமா விறற்சியம்
முந்தும் வைர முற்றும றந்தே நட்டார்போல் செந்தீ வாட்டச் சேர்வன நீத்தே விரைந்தோடி வங்தே யாற்று வார் மணல் சேர்ந்து வைகுற்ற w வேறு 28. பதுமவனத்தடம் புனலும் பாதிரிமென்
போதுமகிழ் பரப்ப மேனிக் கிதமளிக்கும் புனலாட்டு மிளமதியும்
பூங்தொடையு மின்ப மூட்ட அதிமதுர கீதமுமன் பார்ந்தசகி மார்களுமா யணங்கே மாட விதுமலிமீ தலத்திரவு மிகுசுகரீ மேவுகவில் வேனிற் காலை,
முதற் சருக்கம் முதுவேனிற் பருவ வருண?ன முற்றிற்று.
27. வேழம் - யானை , ஆமா - காட்டுப் பசு ; விறல் - வலிமை ; சீயம் - சிங்கம் ; முந்தும் வைரம் - தமக்குள் இயற்கை யாக முன்னிருந்த பகையை நட்டார் - நண்பினர் ; வார் மணல் - வார்ந்த மணல், ஒழுங்குபட்ட மணலிடம் ; சேர்ந்து - (1) அடைந்து, (2) ஒன்முகக் கூடி,
28. இச் செய்யுள் காதலிக்குக் கூறும் வாழ்த்து; வேனிற் காலத்துப் பெறத்தகும் சுகபோகானுபவங்களைத் தொகுத்துக் கூறுங் தன்மையது. ஏனைய ஐந்து சருக்க முடிவிலும் இவ்வாறு வருதல் காண்க.
பதும வனம் - தாமரைக் காடு, தாமரையை மிகுதியாக வுடைய என்பது கருத்து; தடம் - தடாகம் : பாதிரி - பாதிரி மரம் ; போது - மலர், பூ ; பா கிரிம 1ம் வேனிற்காலத்துப் பூப்ப தென்பது.
* வேனிற் பாதிரிக் கூடன்மல ரென்ன ? எனக் குறுந்தொகையிலும் (147), வேனிற்கட்பாதிரி யென நன்னூல் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் உரைகளிலும் வருத லால் அறியலாம். பூங்தொடை - மலர் மாலை அணங்கே - நங் காய்; மகடூஉ முன்னிலை , மாடமீதலம் - மாடத்துச்சி, நிலா முற்றம் ; விதுமலி - நிலாப்பொருங்கிய ; விது - சந்திரன் ; மேவுக - பொருந்துக, அடைக,

இரண்டாம் சருக்கம்
கார்ப் பருவ வருணனை
-ബത്തബ്
29, துளிதரு மேக மத்தவா ரணமுஞ் சுடர்தரு மின்னலங் கொடியுங் தெழிதரு மசனி முரசுமென் றின்ன
சேர்தரு வரிசையிற் பொலிய ஒளிதரு சிறப்பி னுயர்ந்து மன் னவரை
யாத்துமெய்க் காதலர்க் கென்றுங் களிதரு நண்ப தாகிய காரீண்
டடுத்தது காண்டிபெண் ணமுதே.
30. நீலமார் குவளை நீண்மலர்க் காங்கி
நிகர்த்தொரு பால்மிக நெகிழ்ந்த
சாலமார் நீலாஞ் சனவொளி யொருபாற்
சார்ந்து சூல் தாங்கிள மடவார்
கோலமார் முலைச்கு சுககிற மொருபாற் கொண்டுயர் பயோ தரக் குழாங்கள்
ஏலவார் குழலாய் எங்கணும் விசும்பி
விடையரு தீண்டுவ மாதோ,
29. இச் செய்யுளிற் கார்ப்பருவம் ஒரு பெரிய அரசனுக்குஒப்பா கச் சொல்லப்படுகிறது. அரசருக்குரிய பட்டத்து யானை கொடி முரசுமுதலிய ராசவரிசைகளோடு காரானதுதோற்றம ளிக்கின்றதாம். மத்தவாரணம் - மதம் பொருந்திய ஆண் யானை, அரசுவா ; தெழிதரும் - முழங்குகின்ற அசனி - இடி ; என்றின்ன - என்ற இன்ன, என்னும் இவைகள் ; சேர்தரு - (அரசர்க்குரி யனவாகப்) பொருந்திய ; வரிசையில் - இராச சின்னங்களாக ; பொலிய - விளங்க ; கார் உயர்ந்து ஒத்து அடுத்தது, என்க. பெண்ணமுதே மகடூஉ முன்னிலை, காண்டி - காண்பாயாக ; முன்னிலை யசை யெனினுமாம். உவமை.
30. நெகிழ்ந்த - பொடிசெய்த, தூளான ; சாலம் ஆர் - கூட்டமாகிய, மிகுதியான ; நீல அஞ்சனம் - கரிய மைக்கட்டி, கல்லீயம் ; குல் கருப்பம் s கோலம் - அழகு ; குசுகம் hawn முலைக் காம்பு ; கர்ப்ப ஸ்திரீகளின் முலைக் காம்பு நீலநிறம் அடைந் திருப்பதால் உவமானமாயிற் று. பயோதரம் - முகில் , எ லவார் குழ லாய் - மயிர்ச் சாந்து பூசிய நீண்ட கூந்தலையுடைய பெண்ணே ; மகடூஉ முன்னிலை. பயோ தரக் குழாங்கள் ஒருபால் குவளைமலர்க் காந்தி நிகர்த்து, ஒருபால் லோஞ்சன ஒளி சார்ந்து, ஒருபால் குசுக நிறங்கொண்டு விசும்பில் எங்கணும் இடையமுது ஈண்டுவ எனக்கூட்டி முடிக்க, முகில்களின் நிறபேதம் கூறியவாறு,

Page 17
14 இருது சங்கார காவியம்
31, சாதக வினங்கள் தாகமுற் றலந்து
தண்டுளி யிரந்திடத் தாங்கொ ணதக மஞ்சூன் மலிதரு பரத்தா
லம்பரத் தடிபுறக் கவிந்தே மேதக விதங்கொள் தாரைகள் காலு மிடலுடை முகி வினஞ் செவிக்குச் சாதக மாமென் னிழுமொலி கெழுமத்
தாரை கொண் டேகுமெல் லெனவே,
32. பொருந்துரு மேற்றுப் போர்முர சதிரப்
புகுதரு மின்னு5ாண் பூட்டிப்
புரந்தரன் சாபம் பொலிதரத் தாங்கிப்
பொருக்கென வீழ்தரு தாரைத்
கிருந்துருப் பகழி சேர்தரத் துரந்து
சேனகல் காதலர் சிங்தை
வருந்து அறும் வண்ணம் வாட்டுவ கொண்மூ
வரிசிலை மறவரே மான.
31. சாதகம் - வானத்தினின்று விழும் மழைத் துளியைப் பருகி வாழும் ஒருவகைப் பறவை; இது நிலத்திலுள்ள நீரைக் குடியாது, ஆகாயத்திலேயே பெரும்பாலும் சஞ்சரிக்கு மென்பது கவிகளின் கொள்கை. தாங்கொணுத - தாங்க ஒண்ணுத, தாங்க முடியாத கமம் குல் மலிதரு பாத்தால் - நிறைந்த மழைக்கரு * வினது மிகுந்த பாரத்தால் : அம்பரத்து - ஆகாயத்தில் , அம் பரம் - ஆகாயம் : அடியுற - கீழ் நோக்கி : கவிந்து - வளைந்து, படிந்து ; கால்கொண்டிறங்கி யென்றபடி, மேதக - மேன்மை
பொருந்த ; மிடல் - வலிமை , சாதகம் ஆம் - இனிமையான ; இழும் ஒலி - இழுமென்னும் ஒசை கெழும - பொருந்த, நெருங்க : தாரை கொண்டு - மழையைச் சொரிந்து ; முகிலினம் தாரை
கொண்டு மெல்லென எகும் என்க. இவை யிரண்டு செய்யுளும் தன்மை நவிற்சி.
32. உரும் எறு - பேரிடி ; புகுதரு - உண்டாகின்ற ; புரந் தரன் சாபம். இந்திர வில், வானவில்; புரந்த ரன் - இந்திரன் ; தாரை - மழைத்தாரை பகழி - அம்பு ; துரந்து - செலுத்தி : சேண் அகல் - துர் ரதேசத்துக்குச் சென்ற ; கொண்மூ - மேகம் ; சி?ல மறவர் - வில் வீரர் ; மான - போல ; இது உவமை யுருவ கம். பொருள் முதலியன காரணமாப் பிரிந்து சென்ற காதலன் கார்காலம் வந்தது கண்டு தன் காதலியை நினைந்து வருந்துவன் என்பது தாற்பரியம். -

கார்ப் பருவ வருணனை - 15
38. வகிருறு வயிடு ரியமெனப் பசுமை
வயங்கிளம் புல்லினம் வாழைப் பகிருறு குருத்து விரிக்கபச் சிலையும்
பாங்குறு கோபமு மென்னப் பகருறு மிவைபோர்க் கொளிர்கரு மவனி
1 J 3FGØ) 3 LDM 1 D ir 355 (Lf35 ad TLD விகிர்தமு றசிக வில்லுமிழ் மணிகள்
வேய்ந்த சுங் தரியென மிளிரும்.
84. மஞ்சினம் வழங்கு மனத்தகு மொலிக்கு
வாஞ்சையி னே க்குறு மயிலின்
எஞ்சலி லினங்க ளெழுப்புதங் கலாப
மிலங்குநீ டெழில்செயத் தம்முட்
கொஞ்சலு மன்பி னணே தலுங் கூடிக்
குலவலு மலிதாக் குழுமி
நெஞ்சினம் புடனே நீடுற கிருத்தம்
நிகழ்த்துவ களிப்பினி னிவ்ந்தே.
33. வகிர் உறு - துண்டு செய்த, பிளவு செய்த , வயிடூரி யம் - வைடூரியம் (போலி), அது நவ ரத்தினங்களுள் ஒன்று. வாழைப் பகிர் உறு - வாழையினின்றும் வெளிப்பட்ட ; பகிர் - வெளி ; பாங்கு உறு - அயலில் விளங்கும், அழகிய எனினுமாம். கோபம் - இந்திரகோபம், தம்பலப் பூச்சி; செந்நிறமுடைய இது மழைக்காலத்திற் காணப்படுவது ; இந்திரனற் பாதுகாக்கப்படுத லின் இது இந்திர கோபம் எனப்பட்டது. அவனி - பூமி , விகிர் தம் உறு - வெவ்வேரு ன, 6Si6)UIT FuDT 607 (Diverse). அசித - வெண்ணிறமல்லாத ஏனைய சிதம் - வெண்மை ; வில் உமிழ் - ஒளியைக்காலுகின்ற ; வேய்ந்த - அணிந்த ; சுந்தரி - அழகி. மஞ்சள் கலந்த பச்சையும் நீலமுமான இளம் புல்லும் இலைகளும் செந்நிறப் பூச்சியும் என்னுமிவற்றின் நிறங்கள் செறிந்து விளங்கும் பூமியானது வெண்ணிற மல்லாத ஏனைய பல நிற மணிகள் அணிந்து விளங்கும் ஒரழகிய பெண்ணை நிகர்க்கும் என்பதாம். உவமையணி. 34. மஞ்சு இனம் - மேகக் கூட்டம் , மனத்தகும் - மனதுக் கினிய எஞ்சல் இல் - குறைவில்லாத , நெஞ்சில் நம்பு உடன் - மனத்தி லாசையோடு ; நிவந்து - உயர்ந்து, மேம்பட்டு.
மயிலினங்கள் கலாபம் எழில்செய, மலிதா, குழுமி, நிவந்து, கிருத்தம் நிகழ்த்துவ என்க.

Page 18
16 இருது சங்கார காவியம்
35. மாசுறு நீரால் வளர்ந்தெழு வேகம்
மலிகர வளங்கெழு மிரண்டு தேசுறு பாலுந் திகழ்கருக் குலங்கள் சேர்தர வீழ்வகை செய்து வீசுறு சுழலு மிகையுறப் பொருங்கி
விரிகடல் நோக்கியே விரைந்து பேசுறு நெறியிற் பிறழ்ந்தமங் கையரிற்
பெயர்குவ நதிக்குல மம்மா. 36. படர்ந்தபுல் லிடங்கள் பலபடப் பொலிந்து
பா சடை நீணிறம் பரப்ப --- அடர்ந்தபச் சிளம்பு லங்குர நீட்ட
ஆயிடை யணையுமான் பிணைகள்
35. புதிய மழைநீர் பெருகியோடும் நதிகளுக்கு ஒழுக்கமற்ற பெண்கள் உவமானமாகக் காட்டப்படுகின்றனர். இச் செய்யுள் செம்மொழிச் சிலேடை யுவமை, (1) மாசுறு நீரால் - கலங்கற் சலத்தினல், புதுவெள்ளத்தால் என்றபடி ; வேகம் மலிதா - ஒடும் வேகம் அதிகப்பட ; தேசு உறுஇரண்டு பாலும் - செழித்து விளங்கு மிரண்டு கரைகளிலும் , திகழ் தருக் குலங்கள் - வளர்ந் திருக்கும் மரக் கூடட்டங்கள் ; சேர்தர வீழ்வகை செய்து - ஒருங்கு பாறி விழும்படி செய்து ; வீசுறு சுழலும் மிகையுறப் பொருந்தி - பரம்புகின்ற நீர்ச்சுழியும் அதிகமாக உண்டாகப்பெற்று விரி கடல் நோக்கியே விரைந்து பெயர்குவ - (செல்லுகின்றன) என 16திகளுக்குப் பொருந்தவும் :
(2) மாசறு நீரால் - குற்றம் பொருந்திய குணத்தால், நிறை யற்ற மனப்போக்கால் ; வேகம் மலிதா - காமவேட்கை யதிகப் பட ; தேசு று இரண்டுபாலும் - புகழ் பொருந்திய (பிறந்ததும் புகுந்ததுமாகிய) இரண்டு பக்கத்திலும் திகழ் தரு குலங்கள் - விளங்குகின்ற தந்தை தாயர் குலத்தையும் கணவனது குலத்தை யும் (இங்கு தருக்குலம் என்பதைச் செய்யுள் விகாரமாக் கொள்க) ; சேர்தர வீழ்வகை செய்து - ஒருங்கே வசைபெறச் செய்து வீசுறு சுழலும் மிகையுறப் பொருந்தி - கண்ணைச் சுழற்றிப் பார்வையை வீசுகின்ற குற்றமான செயலுமுடையராகி விரி கடல் நோக்கி - பல சோர நாயகர்களைத் தேடி விரைந்து பெயர்குவர் என நெறியிற் பிறழ்ந்த மங்கையர்க்குப் பொருந்த வும் பொருள் கொள்க, கடல் - மிகுதி ; பேசு று - விதிக்கப்பட்ட, புகழ்ந்து பேசப்படும் 3 நெறி - நல்லொழுக்கம்.

கார்ப் பருவ வருணனை 17
தொடர்ந்தமென் புல்லின் துயல்வரு நுனிகள்
துணித்திடச் சூழ் தரு மரங்கள்
மின்டைந்தபைங் தளிர்மீக் கான்றிட விங் தம் விளங்குகா னுளத்தையிர்க் குவவால்.
37... மருண் டசை விழியாம் குவளை பூத் தொளிரு
முகமுடை மான் பிணை யினங்கள் வெருண்டன வாகி மிடையவெப் பாலும் விரிமணல் பரந்திடை விளங்கத் திரண்டதொர் காட்சித் தாகிய கானச்
செழுந்தலஞ் சிங்தையிற் காதல் புரண் டிடச் செயுமா ற் பொற்புற நோக்கும்
புணர்ப்பினர் தங்களுக் கம்மா.
வேறு 38, கனையொலி மலியப் பல்கான்
முழங்குகார் ககனம் போர்ப்பக் கனவிருள் கவிந்து வைகுங்
காரிர வினிலுங் காதல் மனமதை வலிப்பச் செல்லு
மங்கையர் சில்லோர் மின்னற் அறுனையொளி தெரிப்ப ஆறு
தொடர்வராற் குறியி டத்தே.
36. பாசடை - பசிய இலை 3 அங்கு ரம் - முளை துயல்வரு - அசைகின்ற துணித்திட - கறிக்க ; விந்தம் - விந்த மலை; கான் - காடு ; கவி விங் தம?லச் சாரலிலுள்ள காட்டை வருணித்தல் இயற்கையே. அது அவரைப் பரிபாலித்த விக்கிரமாதித்ய மன்ன னது அவந்தி தேசத்துள்ளதாகலின் காளிதாச கவியின் அபி மானத்திற் குரியதாயிற்றென்றறிக. மேல்வரும் 55 - ம் செய்யுளி லும் விந்த மலைக் குறிப்பு வருதல் காண்க.
37. புணர்ப்பு - செயல், தன்மை,
38. கனை ஒலி - மிகுந்த (செறிந்த) ஒலி; ககனம் - ஆகாயம் ; போர்ப்ப - மூட, மறைக்க கன இருள் கவிந்து - நெருங்கிய இருள் படிந்து ; வலிப்ப - பெலமாய்த் தூண்ட ; துனை ஒளி - விரைவில் தோன்றி மறையும் வெளிச்சம் ; ஆறு தெரிப்ப - வழிகாட்ட தொடர்வர் - தொடர்ந்து செல்வர் ; குறி இடத்து - காதலனும் காதலியுங் கூடுதற்குக் குறித்த இடத் துக்கு ; இது இரவுக்குறி.
3

Page 19
18 இருது சங்கார காவியம்
39. அஞ்சுற முழங்கு காரி
னகிர்குர லாலும் மின்னின் விஞ்சுறு வீச்சி னலும்
விதிர்ப்புறு மனக்த ராகி நெஞ்சுறு துனிம றந்து
நிகழ்த்தவர் பிழையு முன்னர் மஞ்சுறு மணை யி னிட aw
g மணளரை யண பபர் மாதர்.
40. காவிநேர் நயன மல்கிக்
காலுரீர்க் கன ம டுத்துக்
கோவைநேர் அகர மாட்டக்
கொழுநரை வழியிற் போக்கு
பாவைநேர் இள மின் னுர்கம்
பணிமலர் விரைகள் நீத்தே
யாவிநேர் வாரை யுன் னி
யலந்திருந் தேங்கு வாரால்.
41. தொகையுறு சீடம் புல்லுத்
தாழிசேர் வண்ட லா கி மிகையுறு பாங் த ளென்ன
விலங்குபாய்க் ததிவி ரைந்தே
39. விதிர்ப்பு - நடுக்கம் ; துனி - துன்பம், காதலனேடு ஊடலால் வந்த துன்பம் ; நிகழ்த்து அவர் பிழையும் - அவர் செய்த பிழையையும், அவர் என்றது மணுளரை, மஞ்சு உறும் அணையில் - கட்டிலிற் பரப்பிய மெத்தையில் 5 நீட - இறுக ; மாதர் மனத்தராகி மறந்து உன்னர் டே அணைப்பர் என வினை முடிக்க. இது தலைவி தன் அச்சம்வாயிலாக ஊடல் தணிதல்.
40. காவி - நீலோற்பலம் ; காலும் . வழிந்தோடும் ; நீர்க் கணம் - கண்ணீர்த்துளி அடுத்து - அணுகி ; கோவை - கொவ் வைக்கனி ; அதரம் ஆட்ட - இதழை நனைப்ப ; இளமின்னர் நயன நீர் அதரம் ஆட்ட, தாம் அணிந்த பணிகளையும் மலர்க ளையும் வாசனைப் பொடியையும் நீக்கிவிட்டு, உன்னி யலந்து எங்கியிருப்பர் என்க. குலமகளிர் தமது நாயகரில்லாத காலங் களில் தம்மை யலங்கரித்துக்கொள்ளார் என்பதறிக. இது இருத் தல் என்னும் முல்லைத்திணை.
41. இது புது மழை வெள்ளம் பெருகும் ஆற்று வருணனை. தன்மை நவிற்சி. கீடம் - புழு, பூச்சி முதலியன; வண்டல் - கலங்கல் நீர் : மிகை - நஞ்சு ; பாந்தள் - பாம்பு விலங்கு

கார்ப் பருவ வருணனை 19
வகையுறு தவளை யீட்டம்
மருட்சியி னேக்கி
அகை புதுப் பெயலா முகி
யவலுற வோடு மாலோ,
42. சிக்கிய கமல நீத்துச்
செவியினுக் கினிய கீதங்
தங்கியல் மதுக ரங்கள்
தணிப்பரு மாவ லாலே
பங்கிய வாகி கட்டம்
பயில்மயில் தோகைக் கண்ணுட்
புங்கிய தின்றிப் போவ
புதிய ரீன் மலரென் றுன்னி.
43。 கதமுறு புதுமே கஞ்செய்
கனைப்பினுற் கிளர்ந்து பொங்கு
மதமுறு தலினுற் பல்கான்
மலிபிளிற் முேசை காட்டுக்
ததமுறு வனக்க ளிற்றின்
தாவிலும் பலநேர் கன்னம்
விதமுறு வண்ட ரீண்ட
மேவுமாற் கடத்திற் முேய்க்தே.
பாய்ந்து - குறுக்காக (வளைந்து) சென்று ; மருட்சி . Լ0 եւ15 5ւծ, கலக்கம் ; அகை - எழுந்த, உண்டாகிய, புதுப் பெயல் - முதன் முதலாகப் பெய்யும் மழை ; அவல் உற - பள்ளத்தை நோக்கி; அவல் - பள்ளம் 3 ஆற்று வெள்ளம் குறிஞ்சி நிலத்திற் சென்ற மையை வருணிப்பது இச் செய்யுளென்றறிக.
42, சிந்திய - இதழ் சிந்திய, புது வெள்ளத்தால் அழியப் பெற்ற எனினுமாம். கீதம் தந்து இயல் - கீதம்பாடிக்கொண்டு சஞ்சரிக்கின்ற ; இயலுதல் - அசைதல், சஞ்சரித்தல்; மதுகரம் . வண்டு ; பந்தி - நிரை 3 நட்டம் பயில் - கிருத்தஞ் செய்கின்ற புந்தி . புத்தி, விவேகம் ; நீல் - நீலம், கருங்குவளைப்பூ , தடாகத்து மலர்கள் அழிவுற்றமையைக் கவி வெகு சமத்காரமாகக் கூறுங் கற்பனை நயம் வியந் தின்புறத்தக்கது. இது மயக்க வணி (பிராந்திம தலங்காரம்). 43. கதம் உறு - தோன்றிய, அடைந்த ததம் - அகலம், பருமை ; தா இல் - குற்றமில்லாத ; உற்பலம் - குவளை மலர் ; மேவும் - இருக்கும், விளங்கும் ; கடம் - மதம் ; தோய்ந்து - நனைந்து. ஒசைகாட்டும் களிற்றின் கன்னம் கடத்திற் ருேய்ந்து வண்டரீண்ட மேவும் எனக் கூட்டுக.

Page 20
2O இருது சங்கார காவியம்
44。 வெள்ளிதழ்க் கமல மன்ன
வியன்முகில் கல்ல கத்து
வெள்ளிடை புல்லித் துஞ்ச
விரிமலைச் சார லெங்குங்
துள்ளிய லருவி துரங்கத்
தோகைமா மயினின் முட
அள்ளியன் மலையின் காட்சி
யாசைநோய் விளை ப்ப தம்மா.
45, கிரையுறு கடம்பு நீபம்
நீளுறு மருதஞ் சாலம் விரையுறு தாழை தம்மை
மெல்லென வசைத்து மேவும் வரையறு வாசம் வாரி
மழைமுகி லாற்கு எளிர்ந்து விரைவுறு மென்கால் யார்க்கு
விழைதலை விளைக்கு முதால்,
46. கடிகமழ் தருமென் செய்ய
காமர்பூங் தொடையல் வேய்ந்து கடிதடங் காறு நீண்ட
கவினுறு கூக் த லானும்
44. கல்லகம் - மலை; அள்ளு இயல் - மனத்தைக் கவருந் தன்மை பொருந்திய, மழை நீரை முழுதும் சிந்தி வெளுத்த மேகத்துக்கு வெண் தாமரை யுவமானமாயிற் று. புல்லித் துஞ்சல் - தழுவிக் கிடத்தல், காதலன் போல என்பது குறிப்பு. ம?ல யையும் மேகத்தையும் காதலி காதலனுக வருணித்தல் வட மொழிப் புலவர் மரபு.
45. நீபம் - கடப்பமரத்தி லொருவகை, நீர்க்கடம்பு ; சாலம் , ஆச்சாம ரம்; இம் மரங்கள் கார் காலத்துப் பூப்பன என்பதாம்மேவும் - அவற்றிலுள்ள 5 வரை - அளவு 3 வாரி - வாரிக்கொண்டு, தாங்கி ; விரைவு உறு - விரைந்து வீசுகின்ற மென் கால் - மந்த மாருதம் 3 விழைதல் - ஆசை கொள்ளுதல் , (மரங்களை) அசைத்து, வாசம் வாரி, குளிர்ந்து, விரைவு று கால் என்க. தென்றற் காற்றை வருணிக்கும்போதெல்லாம் அதனிடத்து மந்தம், வாசனை, குளிர்ச்சியாகிய மூன்று குணங்களும் பொருந்தியதாக வருணித்தல் இக் கவியின் மரபென்பதறிக.
46. காமர் - அழகிய ; தொடையல் - மா?ல ; கடிதடம்அரை 3 கவின் - அழகு 3 வடி - மது, வடிக்கப்பட்டது :

கார்ப் பருவ வருணனை 21
வடிகமழ் வதனத் தானு
மாலை தாழ் தனத்தி னனுக்
அடியிடை மடவார் காதற்
அறுணேவருக் கின்பு சூழ்வார்.
47. மின்னலின் கொடியும் வான
வில்லுமேர் செய்ய மேவு கன்னலின் கனம நாலே
கவிதரு முகிலுங் காகில் மின்னல்செய் குழைகள் காஞ்சி
மணியணி மின்ன னரும் மன்னிலிற் பிரிந்து சென்ருர்
மனங்கவர் பொருட்கள் மாதோ.
48. கார்வளர் கூந்த னல் லார்
கடம்புபுன் கைக் காழை யேர்வளர் பூவி யன்ற .
விண்டைகள் முடிக்கி சைப்பார் சாருளை மருதம் பூவாற்
றம் மனப் படிச மைத்த சீர்வளர் தொங்க லாகுந்
திகழணி காதிற் சேர்ப்பார்.
துடி - உடுக்கு துடியிடை - மெல்லிய இடை : குழ்வார் - உண் டாக்குவார்.
47. மின்னலின் கொடி - மின்னல் வரிசை, தொடர் ; ஏர் செய்ய - அழகு செய்ய 3 கன்னல் - நீர், மழை நீர் : கவிதரு - படிந்த காதிற் குழைகளும், காஞ்சியும், மணியும் என உம்மை விரிக்க. இவற்றையணிந்த மின்னஞர் என்க. மன்னு இல்லிற் பிரிந்து சென்ருர் - (அன்பு) பொருந்திய தம் மனைவியை விட்டுப் பிரிந்து பிறவூர்ச் சென்றவர்கள் ; இல் - மனைவி ; பிரிந்த காதலர் முகிலையும் மின்னனரையுங்கண்டு மனத்தில் விாகவேதனை யுற்றனர் என்பது தாற்பரியம்,
48. புன்னகம் - புன்னை ; பூ இயன்ற - பூவினல் தொடுத்த ; இண்டை - மாலை : உளே - துய், பூவிதழின் மேலுள்ள மெல்லிய பகுதி. உளை சார் மருதம்பூ என்க. சமைத்த - அமைத்த, உண் டாக்கிய தொங்கல் - தாங்குகின்ற மா?ல, காதணி.

Page 21
23 இருது சங்கார காவியம்
வேறு
49. காரகிலார் தருசாந்தின்
கலவைகிமி ரங்கமுடன் நீரகலா மல பணிகள்
5ேர்ந்த நறுங் கூந்தனல் லார் ᎦᏜᎥᎢ tᎢ ᏜᏋ ᎧᎧ ᎥᎢ துறைகாரின்
கனயொலிமா லையிற்கேளா காரகலாக் குரவரிடத்
தகன்று பள்ளி 15ணுகுவரால்.
50. கருங்குவளை மலர்நிகர்த்துக்
ககனமிசை புறக்கவிந்து
பொருங்குலிசத் தவன் சாபம்
பொருங்கிமென்கால் புகவசைந்தே
வருங்குலக்கொண் மூபிரிந்து
வழிச்சென்றேர் தமக்குருகும்
நெருங்குவளைக் கைமடவார்
நெஞ்சமழி தரச்செயுமால்.
49. காரகில் - கரிய அகில் வாசனைத்திரவியம் ; ஆர்தரு - கலந்த ; சாந்தின் கலவுை - பரிமளகந்தம் , சாந்து - சந்தனம் ; திமிர்தல் - பூசுதல் ; நீர் அகலா மலர் - குளிர்ச்சி நீங்காத புதிய மலர் ; அணி - மாலை ; மலரணி நேர்ந்த நறுங் கூந்தல் - மலர்
மா?லயால் உண்டாகிய வாசனை பொருந்திய கூந்தல் ; காரகலா துறைகார் - கார்காலத்து நீங்காதிருக்கும் மேகம் ; மாலை - மா?லக் காலம் ; கேளா - கேட்டு , நார் அகலா - அன்பு பொருந்திய ;
குரவர் - பெரியோர், தந்தை தாய் அண்ணன் முதலியோர் : இடத்து அகன்று - இடத்தினின்று, அறையினின்று, நீங்கி ; பள்ளி - பள்ளியறை,
50. ககனம் மிசை - ஆகாயத்தில் உயரமாக , கவிந்து . நீர்க் கனத்தால் வளைந்து ; குலிசத்தவன்சாபம் - இந்திரவில் : குலிசத் தவன் . இந்திரன் ; மென்கால்புக - மெல்லிய காற்று வந்துபட ;
குலம்கொண்மூ - கூட்டமாகிய முகில் ; இது தலைமகன் தான் மீண்டு வருதற்குக் குறித்துப் போகிய கார்ப் பருவம் வந்தும்
தலைமகன் வராமை கண்டு தலைமகள் மனங் கலங்குதல்,
W ܫ

கார்ப் பருவ வருணனை 33
51. தலைப்பெயரு) பந்தணிப்பத்
கழைத்துமிளிர் வனப்பாங்கர்
கலைப்படுமா மகிழ்பொடித்க
தெனக்கடம்பு தார்விரிக்கும்
கிலைப்படுபு நடித்தென்ன
நீண் மரங்கா லுறவசையும்
புலப்படுபுன் னகையென்னப்
பொதியவிழ்க்கு மடற்றழை.
ਹੋ விரிவகுள நாண் மலர்த்தார்
விரை கமழ்மல் விகையோ டு சுரிகுழன் மங் கையர்முடியிற்
சூட்டிமுல்லை யரும்பட்டிப் பிரியமுறு காதலனிற்
பெய்வளையார் செவிக்கணியா அரியபுதுப் பூங்கடம்பு
மளிக்குமிக்கார் பொலி காலம்.
51. கவி இச் செய்யுளில், வனப் பகுதி பெரு மகிழ்வெய்தி யுடல் புள கங் கொண்டதாகவும் நடித்ததாகவும் புன்னகை பூத்த தாகவும் அவற்றை யுருவகம் செய்கின்ருரர். தலைப்பெயல் - முதன் முதற் பெய்த மழை ; தாபம் - வெப்பம் : பாங்கர் - பகுதி தலைப்படும் - அடைந்த, கொண்ட ; பொடித்தது என - புளகம் அரும்பியது போல ; தார் விரிக்கும் - பூக்களைக்கொண்டு விளங்கும் ; கடப்பம் பூவிலுள்ள மெல்லிய கேசரங்கள் சிலிர்த்த மயிர்போல விளங்குதலின் இவ் வுருவகத்தின் பொருத்தம் அறிந் தின்புறத் தக்கது. நிலைப்படுபு - நிலையாக நின்று ; கால் உற - காற்று வந்து பட (அசைப்ப) ; புலப்படு - தோன்றுகின்ற, வெளிப்படுகின்ற ; பொதியவிழ்க்கும் - மடல் விரியும் தற்குறிப்பேற்றம்,
52. வகுளம் - மகிழமரம் ; நாள் மலர் - புதிய மலர்; அட்டி . இட்டு, அணிந்து ; பெய்வளையார் - பெண்கள் ; அணியா - அணியாக } இந் செய்யுளில் கார் காலம் தன் காதலி அணிவதற்குப் பல மலர்களும் தேடிக் கொடுக்கும் ஒரு காதலனக உவமிக்கப் பட்டது. இக் காலத்துப் பூப்பனவாகிய மகிழ், மல்லிகை, முல்லை, கடம்பு என்னும் மலர்களைப் பெண்கள் அணிந்து மகிழ்ந்தார்க ளென்பது தாற்பரியம்.

Page 22
24 இருது சங்கார காவியம்
53. கிளர்ந்துநிமிர் தனக்குவட்டிற்
கேழுறுமுத் தின் வடமும்
வளர்ந்துபொலி கடிதடத்தில்
மாசகல்மென் பூங்துகிலும்
குளிர்ந்துபுது நீர்படலிற்
கூச்செறிரோ மத்தொழுங்கு
மிளிர்ந்து வரி யுறுமிடையில்
தாங்குவரான் மின்னனையார்.
54. புதுப்பெயற்றண் டுளி படிக் து
பொருந்துதண்மை வாய்ந்து புது
மதுப்பெய் மல ரின் கனத்தால்
வணங்குமர னிடைப் பயின்றே
விதுப்பொடுநெட் டிலைத்தாழை
வெண்பொடியா டியமென் கால்
வெதுப்புபிரி வுற்ருேர்த
மேவுளங்கொள் ளை கொளுமால்.
கனத்துவளை தருகார் நீர்க்
த தரு
கனமுறுங்கால் யா6ேய
5
5
மனத்தொடுசென் றிங்கன்ருே?
வைகுவதென் ஆறுன் னியபோல்
53. கேழ் - ஒளி, நிறம் ; கூடச்செறி புள கித்த, சிலிர்த்த ; ஒழுங்கு - வரிசை வரி - வலி, மடிப்பு ; நல்லிலக்கணம் அமைந்த மகளிர் வயிற்றில் மூன்று வரிகள் (மடிப்பு) மிளிருமென்பது வட நூன் மரபு, புது நீர் படலிற் குளிர்ந்து கூடச்செறி ரோமம் என்க. மின்னனை யார் தனக் குவட்டில் வடமும், கடிதடத்தில் துகிலும், இடையில் ரோமத்தொழுங்கும் தாங்குவர் எனக் கூட்டி முடிக்க
54. வணங்கும் - வளைகின்ற ; மரன் - மரம் ; பயின்று - மெல்லென வீசி, உலா வி; விதுப்பு - ஆசை : வெதுப்பு - இத யத்தை வேகச் செய்கின்ற ; மேல் உளம் - விரும்புகின்ற, நேசம் பொருந்திய உள்ளத்தை.
55. விந்த மலையில் மேகங்கள் மழை சொரிதலை விந்தம?ல செய்த நன்றியை மனத்திலுன்னி மேகங்கள் அதற்குக் கைம்மாறு செய்வதாகக் கவி வருணிக்கின்ரு ர்.
கனத்து வளைதரு கார் - நீர்க்கனத்தாற் கவிந்த மேகங்கள் ; இங்கு அன்றே - உயர்ந்த இம்மலையில் அல்லவோ ; சிகை -

கார்ப் பருவ வருனனை 35
சினத்துடனுற் றெழுவேனிற்
மீயின்கொடுஞ் சிகையா லிங்
தனத்துவெங் த விக்தமதைத்
தண்புனலாட் டுபுகுளிர்க்கும்.
வேறு
56. விழைதகுபல் குணம்வாய்ந்து மெல்லியலார்
மனக்குவகை விளைப்ப தாகித்
தழைதருதா வர மவைக்குத் தவருPத
பெருங்கிழமை தாங்கி ஞாலத்
திழை தருபல் லுயிர்க்குமுற வியைந்ததொரு
சீவனமா பிலங்கி மரு
மழை தருமிக் காலமுன்றன் மனத்துவிழை நன்கெவையும் வழங்க மாதோ.
இரண்டாம் சருக்கம் கார்ப் பருவ வருணனை முற்றிற்று.
கொழுந்து, சுவாலை ; இந்தனத்து வெந்த - இந்தனத்தைப்போல வெந்த ; இந்தனம் - விறகு 3 ஆட்டுபு - ஆட்டி, முழுக்காட்டி : குளிர்க்கும் - குளிரச்செய்யும், மகிழ் விக்கு மென்பதாம். கார் (ஆனவை) என்று உன்னியபோல் விந்தமதை புனலாட்டுபு குளிர்க்கும் என முடிக்க, தற்குறிப்பேற்ற வணி.
56. சருக்க முடிவிற் காதலிக்கு வாழ்த்துக் கூட அறுவது இச் செய்யுள். தாவரம் - மரம் செடி கொடிகள் ; கிழமை - உரிமை, உறவு : ஞா லத்து - பூமியில் இழைதரு - இழைந்த, செறிந் திருக்கின்ற ; சீவனம் - சீவாதாரம் ; மாரு - மாருத, பொய்யாத : பருவம் பொய்யாத என்றபடி,
4.

Page 23
மூன்ரும் சருக்கம்
கூதிர்ப் பருவ வருணன
vara sansan
5
காசைப்பூக் கலிங்கஞ் சாத்திக்
கமலமென் வதனங் தாங்கி யாசைமிக் காற்று மன்னத்
தரவமென் சிலம்ப ணஇய மீசையின் முதிர்செஞ் சாலி
யாங்கவின் மேனி மின்னக் தேசு கொள் மணப்பெண் னென்ன ச் சேர்ந்தது கூதிர்க் காலம்.
58. நீணிலங் காசை யாலு
நிசிகுளிர் மதியி னுலும் மாண தி யன்னத் தாலும்
வாவிகள் குமுதத் தாலும் ஏணுறு கானின் பாங்க
ரேழிலைம் பாலை யாலும் பூணுமல் விகையாற் காலும்
பொலிந்துவெண் ணிறமே பூக்கும்.
57. இச்செய்யுளில் கூதிர்ப் பருவம் ஒரு மணப்பெண்ணுக உவமிக்கப்படுகின்றது. இது செம்மொழிச் சிலேடை யுவமை. (1) காசைப்பூவாகிய ஆடையணிந்து, தாமரை மலரை முகமாகக் கொண்டு, அன்னத்தின் ஒலியாகிய சிலம்பு அழகுசெய்ய, செங் நெல்லாகிய மேனி மின்னக் கூதிர் சேர்ந்தது எனக் கூதிருக்கும் ; (2) காசைப்பூப்போன்ற வெண்பட்டுடை யணிந்து கமலம்போன்ற முகமுடையளாய், அன்னத்தின் ஒலிபோன்ற ஒலியையுடைய சிலம்பு அழகுசெய்ய, செஞ்சா லிபோன்ற பைம் பொன்னிற மேனி விளங்க என மணப்பெண்ணுக்கும் பொருந்த உரைத்துப் பொருள்கொள்க.
காசை - நாணல் ; கலிங்கம் - ஆடை அரவம் - ஒலி; அணிஇய - அழகுசெய்ய, அணிசெய்ய 3 மீசை - மேற்பாகம், சதிரின் நுனிப்பாகம் ; தேசு - அழகு,
58. மாண் நதி அன்னத்தாலும் எனப் பிரிக்க. குமுதம் - ஆம்பல் , எழிலைம்பாலே இப்பருவத்துப் பூக்கும் ஒரு மாம். கா -

கூதிர்ப் பருவ வருணனை 2?
59. கயலினம் பிறழ்வ மின்னு
காஞ்சிய தாகத் தீரத் தயலின மடைய வைகும் அனநிரை யார மாக விய விரு தடமு மேன்மை
விரிகடி யாம தர்ப்பின் மயலிள மடங்தை மான
மந்தமுற் றியங்கும் யாறே.
60. தாமரை வளையம் வெள்ளி
சங்கென வெளுத்து முற்றத் தேமரு வுதகஞ் சிந்திச்
சிதறிநூ ரு கிக் காற்ரு?ற் காமரு செலவிற் முகிக்
காரின மசைய வானஞ் சாமரை யிாட்ட வைகுங்
தாணிபற் பொருவு மோர்பால்.
சோ?ல. ஏழி?லம்பா?லப்பூ யானை மத நாற்றமுடையது; அதனல் அது யானைக்குப் பகை மரமாகும் என்பது,
* பூத்த வேழி?லம் பாலையைப் பொடிப்பொடி யாகக்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு.?
-(கம்பராமா. பா. வரை. 6) 59. புது வெள்ளத்தின் வேகம் தணிய யாறு சமநிலத்தில் மெதுவாக ஒடுங் காட்சியைக் கவி சுவைபட வருணிக்கிருர், தன் னழகும் இளமையுங் குறித்துத் தருக்குற்று, தளர்நடைபோட்டுக் கொஞ்சிக் குழைந்துவரும் இள நங்கை யொருத்தியைப்போல, புது வெள்ளம் குமிழியிட்டுப் பெருகிச் சுழித்து நெளிந்து மெது வாக அசைந்து செல்லும் எனச் செய்யுளில்வரும் உவமைநயங் கண்டின்புறத் தக்கது.
காஞ்சி - மேகலை தீரம் - கரை ஆரம் - மாலை, முத்துமா?ல : வியல் - அகன்ற, விசாலமான தடம் - கரையையடுத்த உயர்ந்த மிலம் ; கடியா - கடிஆக ; கடி - அ ை0 : மதர்ப்பு - மனக் களிப்பு, இளமையு மழகும்பற்றி வரும் தருக்கு. இது உவமையுருவக அணி. 60. ஒர்பால் வானம் சாமரையிாட்ட வைகுந் தாணிபற் பொருவும், எனக் கூட்டுக. சிதைந்த சிறு வெள்ளை மேகங்கள் காற்றினல் அசைந்து செல்லுதல் வெண்சாமரை வீசுவதுபோல இருக்கிறது.
தேம் - இனிமை ; இரட்ட - வீசி தரணிடன் - அரசன் ; பொருவும் - ஒக்கும்.

Page 24
28 இருது சங்கார காவியம்
61. பொடியுறு மையின் வண்ணம்
பொருந்துமம் பரமுஞ் செய்ய கடியுறு திலகம் பூத்துக்
கதித்தசெம் புவியும் முற்றி யடியுற வளை செஞ் சாலி
யகன்பணேப் புறமு மிங் தப் படியுறு காளை யர்க்கு
ளெவர்க்குமால் பயவா மன்னே,
62. வீசுமங் தாங் லத்தா
லசைவியன் கொம்பர் தாங்கி
வாசமென் மலர்க்கொத் தாற்கோ
மளந்திகழ் கிளை கண் மல்கி
யாசையிற் களிவண் டீட்ட
மருந்துசெங் தேனி றைக்குங்
தேசுறு குரவம் யார் தஞ்
சிந்தையை யீரா தன்றே.
61. வண்ணம் - நிறம் , அம்பரம் - ஆகாயம் ; செய்ய - சிவந்த ; கடி - வாசனை ; திலகம் - உச்சித்திலகம் (என்னும் மாம் ; இச்சொல் தலைக்குறை), கதித்த - மிகுந்த ; செம்மை மிகுந்த புவியும் என்க. பணை - வயல்; படி - பூமி.
இச் செய்யுளில் இப் பருவம் செய்யும் சில விசித்திர வர்ண ஜாலங்கள் காணலாம். மேலே கருநீல வானமும், கீழே உச்சித் திலகச் செம்மலர் பூத்துப் பொலிதலாற் செந்நிறங் தோய்ந்து விளங் கும் நிலப்புறமும், அயலில் பொன்னிறம் பூத்துப் பொலியும் நெல் வயற்புறமுமாகிய இக் காட்சியில் ஒரு தனிக் கவர்ச்சியிருந்து காண் பவரை மயக்கும் என்பது கருத்து. மேலும், இளங்காதலனுக்குத் தன் காதலியின் கூந்தலையும் செவ்விதழையும் பைம் பொன்மேனிப் பொலிவையும் ஞாபகப்படுத்திக் காதலுணர்ச்சியைத் தூண்டு மென்பதுமாம்.
62. மந்தா நிலம் (மந்த அநிலம்) - இளங்காற்று ; கோமளம் . மிருதுத்தன்மை : குரவம் - குராம ரம் ; ஈராது - பிளவாது, வருத்தாதென்றபடி, புதுப்புனலில் த்வழ்ந்துவருங் காற்றிலே ஒரு குளுமை ; புது வெள்ளம் கண்டதுமே சுற்றுப்புறம் நகைபூத்து மகிழ்கின்றது ; காய்ந்து வரண்டுகின்ற மரம் தளிர்த்துப் பூத்துச் சிலிர்க்கின்றது. இக்காட்சியை யனுபவிப்பதில் உளதாகும் தனியான ஒரு இன்ப வெறி மனத்திற் புகுந்து உணர்ச்சியை யெழுப்பி விடும் என்பதாம்.

கூதிர்ப் பருவ வருணன 29
63. தாாகைக் கணமென் சந்த
வணிகலன் தாங்கி மேகப் பாரக மறைப்பு நீக்கிப்
பனிமதி வதனங் காட்டி யோகை தரவே தூய
வெழினிலாப் பட்டு டுத்துச் சீரகை யிள மின் னுளிற்
றினக்கினம் வளருங் கங்குல்.
64. மன்னுFர்க் காக்கை மூக்கால்
வருகிரை கிசைவி லக்கத்
துன்னுசா ரசகி ரன்னத்
தொழுதியீர் பாலுஞ் 35tՔ
மின்னுபங் கேரு கப்பூக்
தாதினுற் செம்மை மேவி
யன்னமெங் கணுஞ்சி லம்ப
அகலும்யா றினிமை பூக்கும்.
63. தாரகை - நட்சத்திரம் ; சந்தம் - அழகு; பாரகம் . திரை அகைதல் - தோற்றுதல், உயர்தல்; கங்குல் - இரவு. ஐப்பசி-கார்த்திகை மாதங்களாதலின் இராமானம் வரவாக்கடடும். நாளுக்குநாள் இரவு வளர்ச்சியடைதல், அழகிய இளம்பெண் ஒருத்தி நாளொரு மேனியாக வளர்ச்சியடைவதை யொக்கும் என்பது இச் செய்யுளில் வரும் வருணனை, செம்மொழிச் சிலேடை உவமையணி. (1) நட்சத்திரக் கூட்டமாகிய அழகிய ஆபரணங்க 2ளத் தாங்கி மேகமாகிய திரையின் மறைப்பை நீக்கிச் சர்திர கிைய முகத்தைக் காட்டி அழகு தோன்றும்படி நிலாவாகிய பட்டாடை யுடுத்து வளரும் எனக் கங்குலுக்குப் பொருந்தவும், (2) நட்சத்திரக் கூட்டம்போல மின்னுகின்ற அழகிய ஆபரணங் களை யணிந்து மேகத்தை நிகர்த்த திரையின் (முக்காட்டின்) மறைப்பை நீக்கி மதிபோன்ற வதனத்தைக்காட்டி நிலாவைப் போன்ற வெண்பட்டாடை யுடுத்து வளரும் என இளமின்னளுக்குப் பொருந்தவும் உரைத்துப் பொருள் கொள்க.
64. வருகின்ற திரையின் நேர்வரி, கீர்க்காகம் மீனைப் பிடிப்பதற்கு மூக்கை நீருட் புகுத்துவதால், நடுவில் இரண்டாகப்
பிரிகிறது என்பதாம். ஈர்பாலும் - இரண்டு கரையிலும் ; பங் சேருகம் - தாமரை ; சிலம்ப - ஒலிக்க,

Page 25
30 இருது சங்கார காவியம்
65. கண்ணிறை யணியாய்த் தண்ணென்
கதிரினன் மனங் கவர்ந்தே
புண்ணிறை மகிழ்ச்சி யோங்க
ஒண்டுளிப் பனிநீர் சிந்தும்
விண்ணிறை மதியங் காந்தர்ப்
பிரிந்தவெவ் விடந்தோ பம்பாற்
புண்ணிறை தருமின் னுர்தம்
புரங்களைப் பொடிக்கு மூங்கு.
66. முதிர்தரு கதிர்க்க னத்தால் முன்வளை சாவி யிட்டம் விகிர் தரச் செய்து பூவின்
மிகுபரத் திறைஞ்சு தாரு குதிதா வாட்டிக் கொங்கு
குலவுதா மரைத்த டங்க ளகிர்தர வசைக்கு மென்கா
லசைக்குமா விளையோ ருள்ளம்,
6. காமுறு , மிதுன வன்னக்
கண மவை கவின்வி ளைப்பத் தேமுறு கமலங் காவி
திகழ்ந்தணி செயத்தெ ஸிங்தே ஆமுறு புலரி மென்கா
லசைத் தலை கிரையெ முப்ப எமுறுத் துவவால் வாவி
யிதயத்தை யெவர்க்கு மாதோ.
65. காந்தர் - கணவர், பிரிவாகிய விடந்தோய்ந்த அம்பு என்க. புரம் - உடல் : பொடிக்கும் " சுடும், எரியச்செய்யும் ; ஊங்கு - மிகவும்.
66. இறைஞ்சு தாரு - வளைகின்ற மரம் , குதிதா - குதி கொள்ள ; கொங்கு - பூந்தாது, வாசனை ; மென்கால் - தென்றல், இங்கும் காற்றின் மூன்று தன்மைகளும் (மென்மை, வாசனை. குளிர்ச்சி) குறிப்பிடப்படுதல் காண்க. (45-ம் செய்யுளுரை பார்க்க),
67. புலரிக்காலையில் வாவிகள் அளிக்குங் காட்சியை வரு னிப்பது இச் செய்யுள். காமுறு - ஆசைபொருங்கிய மிதுன அன்னம் - ஆண்பெண் அன்னங்கள், அன்னத் தம்பதிகள் : தேம் - தேன், வாசனையுமாம்; ஆம் உறு - குளிர்ச்சி பொருங்கிய புலரி - விடியற்காலம் ; ஏம் உறுத்துவ - களிப்புறச் செய்வன, மயக்குவன.

கூதிர்ப் பருவ வருணனை 31
68. வானவில் மேகங் தன்னுள்
மறையுமால் வான்ப காகை
f 1ா நவில் மின்னுக் தோன்ற
லருகுமான் மற்றிக் காளில்; பான வில் சிறையாற் கொக்கம்
பரத்தினை பசைத்த வின்ரு ல் ஆனவில் மஞ்ஞை யண்ணக்
مس
தகல்விசும் பினைநோ க் காவால்,
69. ஆடல்விட் டொழிக்க மஞ்ஞை
r பணியை விட் டநங்க ணின் டl
ரீடல்செய் மதுர கான
நிகழ்த் கன நிரையைச் சாரும் வாடல்செய் கடம்பு நீபம்
மருதுமல் லிகைசால் நீங்கி யேடவிழ் மலர்ப்பூஞ் செவ்வி
யேழிலைம் பாலை மேவும்.
வேறு
O
கரிய நொச்சி மலரின் கந்தம் பரவிப் பொலியப் புரியு மகிழ்வின் வைகு புள்ளின் னெலிமிக் கதிரத் திரியு நவ்வி விழியா நீல மெங்குக் திகழ விரியுங் கானப் பொங்கர் மிகுமால் மைந்தர்க் கூட்டும்.
68. கார்ப் பருவக் காட்சிகள் மறைந்தமையைக் கூறுவது இச் செய்யுள். பானவில் - (பால் நவில்) - பாலென்று சொல்லப்படும், பால்போன்ற என்பதாம். ஆன வில் - (ஆல் நவில்) . ஆ இதலைச் செய்கின்ற ஆலுதல் - மயிலின் ஒசை.
69. கார்ப் பருவத்தில் இன்பக் காட்சிக்கு இடமாயிருந்தவை மறைய அவ்விடத்துக்கு இப்போது வந்து காட்சியளிப்பன இவை யென வருணிப்பது இச் செய்யுள். சிால் - சாலமரம் ; அருங்கன் மஞ்ஞை யணியைவிட்டு அன்னங்களின் நிரையைச் சாரும் (அடை வான்) என்க. ஏடு - இதழ் 3 மலர்ப்பூஞ் செவ்வி - மலர்களின் பொலிந்த அழகு, மலர்ப்பூஞ் செவ்வி கடம்பு பேம். சால் நீங்கி ஏழி?லம் பாலையை மேவும் என்க. கடம்பு முதலியன இப் பருவத்திற் பூப்பதில்லை யென்பது குறிப்பு.
70. நவ்வி - பெண்மான் ; திரியும் விழி . மருண்டசையும் கண் ; விழியாம் நீலம் நவ்வி விழியாகிய கருங்குவளைப் பூ ;
இரண்டும் மகளிர் கண்ணுக்குவமையாவன, பொங்கர்-குழல், சோ?ல,

Page 26
32 இருது சங்கார காவியம்
71. கானுர் நெய்த லல்லி கமல நி3) ரக ளாட்டித்
தேனுர் மலரின் தண்மை சிவணித் தருமல் கிலையின் வானுர் நுனியிற் றாங்கி வயங்கு பணிநீர் மாற்றும் நோனுர் புலரி மென்கால் நுகரா சையினை மூட்டும்.
12. விளை நெற் குவைகள் மேவி மிளிரச் செறுவின் பாங்கர் வளைவுற் முனின் கிரைகள் மறுக்க மின்றி மன்னக் கிளைகொள் நாரை யன்னங் கிளத்து மொலியேற் றெதிரக் களை கொள் பண்ணையிட்டங் காண்போர்க்கின் பங்காட்டும்.
13. மின்னுர் தம்மென் நடையை விஞ்சி யன்னம் வெல்லும்
அன்னர் மகிமு கத்தை யலர்கா மரைவி வெல்லும் உன்னுர் கண்ணி னேக்கை புற். லங்கள் வெல்லும் பொன்னர் புருவ லீலை புன்னி லையே வெல்லும்.
14. மிளிரும் பூண்கள் தாங்கு மின்னர் கோளின் பொலிவைத்
துளிரும் மலருக் தாங்கித் துயலும் வஞ்சி கவரும் ஒளிரும் முறுவ லொளியா லுயர்மென் மூரற் காந்தி குளிரும் வெண் பூக் குலவு மிருவாட் சியினுற் குன்றும்,
71. கான் - வாசனை ; சிவணி- பொருந்தி; நோனுர் - வலிமை பொருந்திய நுக ராசை - அனுபவிக்கும் அவா. ஆட்டிச்சிவணி நோஞர் மென்கால் ஆசையினை மூட்டும் என்க.
72. செறு - வயல் ; வளைவுற்று - சூழ்ந்து 3 மறுக்கம் - இடர், மனக்குழப்பம் ; கிளத்தும் - கத்தும் ; ஏற்றெதிர - எதிரொலி செய்ய ; களை - அழகு ; பண்ணை - வயல். இது மருதநிலக் காட்சி வருணணை.
73. இச் செய்யுளில் இயற்கைப் பொருட்கள் அழகிலும் பொலிவிலும் பெண்களை விஞ்சியிருப்பதாக வருணிக்கப்படுகின்றன. அடுத்த செய்யிளிலு மப்படியே. வீ - மலர் ; உன்னர் - உன்னம் ஆர்; உன்னம் - உள்ளக் குறிப்பு, மனக்குறிப்பு: பொன் - அழகு; லீ?ல - ஆட்டம், காமக்குறிப்பான அசைவுகள் ; புன் - சிறிய,
74. வஞ்சி - (படர்) கொடி, மாதர் தோளுக்குக் கொழியை யுவமானங் கூறுவது வடநான் மரபு. முறுவல் - பல்; மென் மூரல் - புன்னகை, வெள்ளிய பல்லின் ஒளி சேருவதாற் சோபை யுறும், புன்னகையின் காந்தி என்க. இருவாட்சி - முல்லையினத் தைச் சேர்ந்த ஒருவகைக் கொடி ; குன்றும் - குறைவடையும்.

கூதிர்ப் பருவ வருணனை 33
15. கொண்ட லன்ன கெளிபைங் கூந்த னிறைய மாதர் வண்டு செறிமல் விகையின் மலர்கண் மாண வட்டி மண்டு பொன்னி னணிகள் வயங்கு காகில் வாசங் ஸ்
கொண்ட விவித மலருங் கூசா தணிவ ரன்றே.
16. தருக்கு சிங்தை மாதர் தனமேற் சாந்தச் சேறும் நெருக்கு முத்தின் வடமு நேர்வர் பரிய வரையில் விரிக்குங் காஞ்சிக் கோவை மிளிர விரிமென் கமல அரக்கு மலர்டுே ரடியி லஞ்சி லம்பு மணிவார்.
வேறு
77. மஞ்சி லாதுமிளிர் மாமகி யோடு
வரிசை சேருடு மலிந்தகல் வானம் விஞ்சி யெங்குமலர் வெண்குமு தத்தண்
விரிம லர்க்குவியல் மேவுற காப்பண் மஞ்சி லங்குமர சக்குல வன்னம்
மன்ன மா மரக தத்தொளி வாய்ந்த எஞ்ச லில் சலில மெய்தியி லங்கும்
ஏரி யென்னவெழி லேய்ந்து விளங்கும்.
75. கொண்டல் - மேகம் , நெளி - நெளிந்த, சரிபொருந்திய மாண நிறைய ; அட்டி - அணிந்து ; விவித - பலவினமான,
76. தருக்கு - களிப்படைந்த ; சாந்தச் சேறு - கலவைச் சர் தனம் ; நேர்வர் - அணிவர் ; கமல அரக்கு மலர் - செந்தாமரைப்பூ ; அரக்கு - சிவப்பு. இவை இக் கூதிர்ப் பருவக்கிற்கேற்பப் பெண் கள் செய்யும் அலங்கா ரங்களென் றறிக.
77. மஞ்சு இலாது அகல் வானம் எனக் கூட்டுக. மஞ்சு ட மேகம்; உடு - நட்சத்திரம், அகல் வானம் ஏரி யென்ன விளங் கும் என வாக்கியம் முடிக்க, மஞ்சு இலங்கும் - அழகு விளங்கும் ; எஞ்சல் - குறைதல்; சலிலம் - நீர் ; எய்ந்து - பொருந்தி. இது சாற்காலத்து இரவில் வானம் அளிக்குங் காட்சியை வருணிப்பது. நட்சத்திரக் கூட்டங்களும் நடுவில் சந்திரனும் விளங்கும் நீல வானம் ஆம்பல் மலர்களும் நடுவில் அரச அன்னமும் பொருந்தி விளங்கும் ஒரு தெளிந்த நீரோடையை ஒக்கும் என உவமை கூறப்பட்டது.
5

Page 27
34 இருது சங்கார காவியம்
S. கொங்கு லாமல ரளைந்து குலா விக்
குளிர டைந்து வளி வீசு மிடைக்க
மங்கு லோடிமறை வுற்றிட வெட்டு
மாகி ரங்க ளு மலர்ந்தொளி மன்னும்
தங்கு வண்டலற நீர்தெளி வெய்துக்
தாணி பங்கமுலர் தந்து வலிக்கும்
பொங்கு வெண்மதி பொலிந்த விசும்பு பூக்குமால் விவித மீனிரை கூகிர்.
79。 செங்க திர்க்கர மெழுப்ப மலர்ந்து
தேசுறுங் கமல மா மலர் யாணர் அங்க மின்னுமிள நங்கையர் தங்க
ளான னம்மென மிளிர்ந்தழ கெய்துங் துங்க வெண் மதி முகம் மறை வாகத்
அயர்வ ருங்குமுத மென்மலர் சோர்ந்து தங்க ளன்பர்பிரி யத்தனி வைகுக்
தைய லார் துணி தரும் நகை மானும். 78. கூதிர்ப் பருவத்து நிகழ்ச்சிகள் சில வருணிக்கப்படுகின்றன. அவையாவன:- (1) வளி மலர ளைந்து குலா விக் குளிர டைந்து வீசும் ; (2) மங்குல் மறைவுற்றிட மாதிரங்கள் ஒளி மலர்ந்து மன்னும் ; (3) வண்டல் அற நீர் தெளிவெய்தும் , (4) தர விை பங்கம் உலர்ந்து வலிக்கும் ; (5) மதி பொலிந்த விசும்பு விவித மீன் நிரையைப் பூக்கும் என்பனவாம்.
மாதிரம் - திக்கு வண்டல் - கலங்கல் ; பங்கம் - சேறு ; மீன் - விண்மீன் , கூதிர் - கூதிர்க்காலத்தில்.
79. இச் செய்யுள் அருணுேதய கால வருணனை. விடியற் காலையிற் செந்தாமரை மலர் நாயகரோடு உறையு மிள நங்கையர் முகம்போல மலர்ந்து விளக்கமுறும் 3 ஆம்பல் மலர் நாயகரை ப் பிரிந்த மங்கையர் செய்த சோகச் சிரிப்பை நிகர்த்துப் பொலிவிழந்து தோன்றும் என உவமை நயந் தோன்ற வருணித்திருப்பது நோக்கி யின்புறத்தக்கது. செங்கதிர் - சூரியன் ; காம் - கிரணம் ; * செங்கதிர்க் காமெழுப்ப மலர்ந்து தேசுறு ’ என்னும் அடையை இள நங்கையர்க்குங் கூட்டுக. இங்கு கரம் என்பது நாயக ரது கை. மலர்ந்து - கண்விழித்து ; தேசுறும் ஆனன மென்க.

கூதிர்ப் பருவ வருணனை 35
80. காக லுற்றவிள கங்கையை நீத்துக்
கடுகி யேவழிசெல் காளை மற் றன்னுள்
பாத ருங்கரு விழிக்கவி னிலோ ற்
பலம லர்க்கிடை பயின்றிடல் கண்டும்
பீத கத்தியலு மேகலை யோசை
பீடு சால்களி யனத்கிடை கேட்டும்
சேத கத்ததர சோபையை யுச்சித்
கிலக மேவல்கண் டும்மழு மேங்கி.
S. மாதர் தங்கண்முக மேவுற வானம்
மல்கு மாமகிகொள் செவ்வியை வைத்தும் மாகர் அன்னமிசை யின்னெலி யன்னர்
மணிகொள் நூபுர மவற்றிடை வைத்தும் மாதர் செய்யுமத ரத்திடை மன்ன
மானு றுங்கிலக விநிறம் வைத்தும் கூகிர் தந்துகுல விப்பொலி மாட்சி
கொள்கை யா லயல்பெ யர்ந்திடு மாதோ.
80. தன் காதலியைப் பிரிந்து வழிச்சென்முேன் செல்லு மிடத்துக் கண்ட சில காட்சிகள் தன் காதலியின் நினைவை மனத்தி லெழுப்ப அதனல் மனங்கலங்கி யழுகின்ருன் என்பது கருத்து. பாதரும் - பரந்த, பா - பாத்தல் ; பீதகம் - பொன் ; மேகலை யோசை - மேகலையாபரணத்துள்ள சிறுமணிகளினேசை ; பீடு - பெருமை : சேதகம் - சிவப்பு : சோபை - அழகு ; மேவல் - பொருந்துதல். காளை கண்டும் கேட்டும் கண்டும் எங்கி அழும் எனவினை முடிக்க.
81. சாற்காலமானது அடுத்துவரும் முன் பனிக்காலத்துக்கு இடங்கொடுத்துத் தான் மறைந்த பின்னும் தன் காலத்து அழகு கள் முற்றும் மறைந்துபோகா வண்ணம் அவற்றைச் சேமமான இடங்களில் மன்னும்படி வைத்துவிட்டுப் போகின்றது எனக் கவி வெகு சமத்காரமாக வருணிக்கின்ருர் இச் செய்யுளில்,
செவ்வி - அழகு 3 மாதர் அன்னம் - அழகிய அன்னம், அன் னம் இசைக்கின்ற இன்னெலியை யென்க. நூபுரம் - காற்சிலம்பு ; மாதர் செய்யும் - மயக்கத்தைச்செய்யும், கண்டோரை மயக்கும் ; கிலக வீ - உச்சித்திலகப்பூ ; கொள்கை - முறை, நியதி.
கூதிர் மாட்சி (யானது) மதிச் செவ்வியை முகம் மேவுற வைத்தும், இன்னெலியை நூபுரத்திடை வைத்தும், வீ நிறத்தை அதாத்திடை வைத்தும் பெயர்ந்திடு மென் கி.

Page 28
36 இருது சங்கார காவியம்
வேறு 82. தேமுற விரிசெங் தாமரை முகமுக்
திகழுநீ லோ ற்பல விழியும் காமுற விரிவெண் காசைப்பூம் பட்டுங்
கவினுறத் தாங்குபு கண்டோர் ஏமுறு குமுத காந்தியு மேவி
யிளமையி னலம்பொலி மாதர் தாமுறு மதர்வை காட்டுமிக் கூகிர் தருக நும் மனத்ததி மகிழ்வே.
ழன்றும் சருக்கம் கூதிர்ப் பருவ வருணனை முற்றிற்று.
82. இச் சருக்கத்து முதற் செய்யுளிற்போல இங்கும் கூதிர்ப் பருவத்தைக் காமஞ்சாலிள நங்கையாக உவமிக்கின்ருர் கவி. செம் மொழிச்சிலேடை யுவமையாகப் பொருள் கொள்க. சருக்கமுடிவிற்
காதலிக்குக் கூறும் வாழ்த்து இச் செய்யுளென்றறிக.
கின்ற :
தருக எனக்கூட்டுக.
தாங்குபு - தாங்கி ; கண்டோர் ஏமுறு - கண்டவர் மயங்கு மதர்வை - மதர்ப்பு. கூதிர் நும் மனத்து அதி ம்கிழ்வு

நாலாம் சருக்கம்
முன்பணிப் பருவ வருணனை
--ത്ത്ബ്-
83. புதிய இலையும் பைங்கூழும்
பொலிய வெள்ளி லோத்திரம்பூத்
துதைய முதிர்ந்து செஞ்சாலி
தோன்றக் கமலம் பொலிவழிய
தகிய தாமென் பனிப்ெங்குக்
தயங்கி வெண்மை த ரவீழும்
விதிய தாமுன் பணிக்கால
மேவிற் றுகு மெல்லியலே.
84. குவிந்து கோல நீடு தனக்
கொம்ப னரிக் குளிர்காலை
யவிர்ந்து சேந்த குங்குமத்தி
னள வ லாற்செங் கேழடுத்துக்
கவிந்து முல்லை மதிதுகினங்
காட்டு நிறத்த கவின் மாலை
தவிர்ந்து தங்கள் கனபரக்கிற்
கணிசெய் தாமங் தரிக்கில ல்,
S5. காமஞ் சாலு மிளமின்னுச்
ゆ " , ہندسہ کہ یہ ہی .......... ? }(?-۔ ۔ہم - கரத்து வளேயுங் கவிதோளின் எமஞ் சாலு மங்கதமு
மியைய வணித வின்ருகும்
83. பைங்கூழ் - பயிர் ; வெள்ளிலோத்கிாம் - இக் காலத் தில் பூக்கும் ஒரு மரம் ; துதைய - நெருங்க ; த கி - பருவம் ; ததிய - பருவத்துக்குரிய விதி - முறை, தன்மை ; மெல்லியலே - பெண்ணே ! மகடூ2. முன்னிலை.
84. குவிந்து - குவிவுற்று, கிரண்டு ; குவிந்து நீடு தனம் என்க. அவிர்தல் - விளங்குதல் ; சேந்த - சிவந்த : துகினம் - பனி தவிர்ந்து - நீக்கி ; தாமம் - மாலை.

Page 29
38 இருது சங்கார காவியம்
வா மஞ் சாலு மரைய கனில்
வயங்கு பட்டும் மலிதலிலை
தா மஞ் சாலுங் தன தடமேல்
தயங்கு மென் பூக் துகிலுமின்முல்.
86. காசும் மணியுங் கலக்தொளிருங்
காஞ்சிக் காமங் கடிதடத்திற்
தேசுங் கவினுக் கிகழ்மடவார்
சேர வணிதல் செய்கில ரால்
பேசும் எகின மிழலைமொழி
பேணு மணிநூ புரமுமொளி
வீசுங் கமல மலாடியின்
மேவப் புனையும் விருப்பிலரால்.
St. அங்க மலியக் கருஞ்சாங்தை
யணங்க ஞர்மிக் கணிவரெழில்
தங்கு கமல முகங் தனின் மான்
மதத்தி னிலைக்கோ லஞ்சமைப்பார்
பொங்கு கருமென் கூந்தனறை
பொலிய வகிலம் புகையார்ந்து
துங்க முற15ன் கூட்டுவராற்
சுரத போக சுகம்பெறவே.
85. எமம் - பொன்; அங்கதம் - தோளணி; வாமம் - அழகு 3 மலிதல் இலை - விளங்கித் தோன்றுதலில்?ல ; தாயம் சாலும் - ஒளிபொருந்திய, மலையை ஒத்த எனினுமாம். வேனிற் காலத்திற் கேற்க மெல்லிய ஆடைகளை முன்பு அணிந்தார்கள் (செய், 7). இப்போது அவற்றை நீக்கிப் பனிக்காலத்துக்கேற்ற வேறு உடைகளைப் பெண்கள் அணிந்தார்களென்பது தாற்பரியம்.
86. காசு - பொன் ; காஞ்சித் தாமம் - மேக?ல வடம் ; எகினம் - அன்னம் ; முன்பு அணிந்த இவ் வணிக்ள் இப் பருவத்துக் கேற்றனவாகாமையின் அவற்றை யணியாது விட்டனரென்பதாம்.
87. மான்மதம் - கஸ்தூரி ; இலேக்கோலம் - தொய்யில்; இலை பூ முதலிய உருவமாகக் கோலம் எழுதுதல். இவ்விதம் அலங்கரித்தல் இக்காலத்திலின் று. சமைத்தல் - செய்தல் : சுரதம் - காதல், புணர்ச்சி.

முன்பணிப் பருவ வருணனை 39
SS. துன்னு சுகபோ கானுபவ
நோவாற் சோர்ந்து புலர்ந்தமுக மின்ன ஞர்தம் செவ்விதழின்
மேவு தந்த விாணத்தாம் கின் ன முறுவா ருவகை கணி
கிளரு நிமித் தங் கிடைத்தாலும் சின்ன தா மென் வெறு நகையே
செய்வா சோசை செறியாமல்,
89. கதித்து விம்மு கன தனஞ்சால்
கவின் மார் பகம்வே துறுத்துமென மதிக் து விருப்பி ன வண்புக்கு
வகியுங் காலை மார்பிறுகப் பதித்து நகிலொ டழுத்துண்டு
படரெய் கியமுன் பனிக்காலம் உதிர்த்து நீரைப் புன்னுனியா
லழுத போலு முதயத்தே.
9 (). முதிருஞ் சாலி நிரையெங்கு
மொய்த்து மிளிர வோவாது
விகிரும் நோக்க விழி நவ்வி
மேவிப் பொலிந்து கவின் விளைப்ப
மதுரம் மனத்து மலிய வவண்
வாழு மன்றி லெழுப்பொலியால்
அதிரும் பண்ணைப் புறம்யார்க்கு
மளவி லாசை பகத்துட்டும்.
88. புலர்ந்த - வாண்ட தந்தம். பல்; விரணம் - புண் ; பல்லால் நேர்ந்த புண். கின்னம் - துன்பம் ; நிமித்தம் - காரணம்.
89. வேதுறுத்தும் என - வெப்பஞ்செய்யும் என்று ; அவண் - அங்கு, பெண்கள் மார்பில்; பதித்து - புதையச் செய்து ; படர் - துன்பம், தற்குறிப்டேற்றம். இதிலுள்ள கற்பனை நயம் நோக்கி யின்புறத்தக்கது.
90. ஒவாது விதிரும் . ஒயாம லசைகின்ற ; நோக்க - பார் வையை யுடைய. சாலி நிரை மிளிர நவ்வி கவின் விளைப்ப அதிரும் பண்ணைப்புறம் ஆசையூட்டுமென்க. இது நெல்வயற்காட்சி வருணனை.

Page 30
40 இருது சங்கார காவியம்
91. நீல மலரே டவிழ்ந்தழகு
நேர்ந்து பொலிய நீள்களியா லாலு மெகினத் தொழுதியவை
யங்கங் கணிசேர்ந் தழகுசெயச் சா லத் தெளிந்து சவியுற்றுத்
தண்ணென் தகைமை சார்புனலாற் கோல மருவிக் குலவு தடங்
குமர ருளத்தைக் கொள்ளைகொளும்.
92, பணியின் குளிரால் முதிர்வடைந்து பழுத்துக் காற்றிற் பயிறந்து கணியி லசையு ஞாழலின்னே
தலைவர்ப் பிரிந்து கணிவைகிக் துணிய தெய்து தோகையர் தஞ்
சுவன மேனி பசங் தென்னக் கணியு மினிய மொழிமடவாய் !
கவினு மழிந்து விளர்ப்புறுமால்.
வேறு
༡༽ 93. பூவி னிடிய புது மது மணம்பொலி வாயர்
பாவை மார்முக வுயிர்ப்புடல் பரிமளம் பரப்ப
ஆவி யன்னவர் தம்மொ டே யங் கமா சணைப்பில்
மேவு காதலொ டா டவர் விழிதுயில் கொள்வார்.
91. இது தடாகக் காட்சி வருணனை ஏடு அவிழ்ந்து - இதழ் விரிந்து ; சவி - ஒளி. நீல மலராலும் அன்ன நிாையாலும் தெளிந்து விளங்கும் நீரினுலும் தடாகம் காளையர் மனத்தைக் கவர்ந்து காதலுணர்ச்சியை மூட்டுமென்பதாம்.
92. பயிறந்து - பயின் று, காற்றில் நெடுகக் கிடந்து என்ற படி : ஞாழல் - ஒருவகைச் செடி, இது வடமொழியில் பிரியங்கு எனப்படும், சவணம் - பொன் ; பசத்தல் - நிறம் மங்குதல், வெளிறுதல், மடவாய் மகடூஉ முன்னிலை. கவினும் என்பதில் உம்மை அசை, விளர்த்தல் - வெளிறுதல். தற்குறிப்பேற்ற உவமை. 93. மது மணம் பொலி வாயராகிய பாவை மார் முக உயிர்ப்புத் தம் முடலில் பரிமளம் பரப்ப ஆடவர் துயில்கொள்வாரென்க.

முன்பனிப் பருவ வருணனை 4t
94. புதிய யெளவனம் பொலியிள கங்கையர் போக
ாகிய தாலிரக் கம்மிலா தின்பமார்க் திடலை நுதிய பற்படிங் கிதழுறு நுண்குறி 5கிலிற்
பதிய வைடுகக் குறியவை பகர்தரு மாலோ,
95. ஆடி கைக்கொடு காலையி லங்கனை யொருத்தி
6ாடி நன்குற மலர்முகக் கிருத்துவாள் 16யப்பிற் கூடு மன்பனுண் டொழிர சங் கொண்டமெல் லிதழை கேடி நோக்குவள் பன்னுனி நிகழ்த்திய வடுவை.
96. மிக்க காம வி லர் சத்து மெலிந்தவே ருெருத்தி
ஒக்க முன்னிர முழுதுங்கண் ணுறங்கிலள் சிவந்த அக்க மோடுசோர் குழல்கவி தோண்மிசை யலையப் புக்க மென்வெயில் மேனியைப் புலர்த்திடத் துயிலும்.
97. மடங்தை மார்சிலர் நிமிர் தட வனமுலை சுமந்து
நுடங்கு மேனியர் கனங்குழற் பரத்தினர் நுகைந்து கிடந்த மன்றலில் பழக்தொடை கே சகின் றகற்றி
யடர்ந்த கூந்தலைப் புனை குவ ரணிபெற மாதோ.
94. போக ரதியால் - போகத்தில் மிக்க ஆசையால் ; ரதி - இாதி, ஆசைப் பெருக்கம். ரதியது என்பதில் அது அசை, நுதிய - கூரான ; பதிய வை - பதியும்படி வைத்த, இதழு று நுண்குறியும் நகிலிற் பதிந்த நகக்குறியும் நங்கையர் இரக்கமிலாது இன்பமார்ந்திடலைப் பகர்தரும் எனக்கூடட்டி முடிக்க.
95. ஆடி - கண்ணுடி , அங்கனை - பெண் ; நயப்பில் - ஆசையோடு; உண்டு ஒழிரசங் கொண்ட - சுவைத்து ஒழிந்த ரசத்தையுடைய, வாண்ட என்றபடி ; ரசம் - இதழமுது ; ருேடி - ஆராய்ந்து வடு - அடையாளம்.
96. முன்னிர - முந்தின இரவு; இர - இரவு ; அக்கம் - கண் புக்க - புகுந்த, சூரியனுதித்ததால் வந்த 3 புலர்த்திட - சுட.
97. வன முலை - அழகிய முலை; வனம் - அழகு நுகைந்து - தளர்ந்து, அவிழ்ந்து, குலைந்து ; மன்றல் இல் - வாசனை யில்லாத ;
தொடை - மாலை புனைதல் - திருத்துதல்.
6

Page 31
42 இருது சங்கார காவியம்
98. கொண்கன் மேவுகன் மேனியைக் குறித்தக மகிழ்ந்து பண்கொள் செவ்விதழ்ப் பைக் தொடி யொருத்திசுடர் நகத்தாற் புண்கொ ளங்கத் தள் புரள்தரு சுரித்தமுன் னளகம் உண்கண் மூடிட வட்டுடை யுயர்முலைக் கணிவாள்.
99. போக நீடிய புணர்ப்பினு னெந்துடல் புலச
ஆக நீடிய வெழில்குலை யணங்கனுர் சில்லோர் மாக நீடிய நகில்கவான் வருத்திய வலிதான் போக நீடிய வாச நெய் பூசிமண் அணுவரால்,
வேறு
100. நயப்புறுபல் நலமருவி கங்கையர்த
மனக்கினிமை நல்கி மேவும் வயற்புறமெல் லாம்விளைந்து வளை சா லி மலிதாவே வாய்ந்து நாளும் வியப்புற நல் லெழில்பரப்பி மிகுமார்வத் தன்றிலினம் விளங்க வெங்கும் பயப்புறுமுன் பனிக் காலம் பைக்தொடிகிற்
கெங்கலமும் பயக்க மாதோ,
நாலாம் சருக்கம்
முன்பணிப் பருவ வருணனை முற்றிற்று.
98. கொண்கன் - கணவன் ; மேவு - மேவி ன, தழுவின; பண்கொள் - சிறப்புப் பொருந்திய, செப்பமான ; சுரித்த முன் அளகம் - சுருண்ட முன் (நெற்றி) மயிர் ; உண்கண் - மை யுண்ட
கண் ; வட்டுடை - உள்ளுடை, கச்சு (bodice),
99. புணர்ப்பு - செயல், நிலைமை ; ஆகம் - உடல், மேனி , மாகம் - மேலிடம், மேல்; மாக நீடிய - மேல்நோக்கிய, சாயாத ; நகில் கவா ன் - நகிலேயும் கவானையும் : கவான் - தொடை : மண்
இணுவர் - நீராடுவர், முழுகுவர்.
100. சருக்க முடிவிற் காதலிக்கு வாழ்த்துக் கூறுவது இச் செய்யுள். நயப்பு - விருப்பம், ஆசை பயப்பு - பயன் பயப்புறு பயன்பொருந்திய ; பயப்பு - நிறம் மங்குதல்; பயப்புறு - பனியி னல் பசுமை நிறம் மங்கி வெளுப்படைந்த எனக்கொள்ளினு மமை யும். பைக் தொடி மகடூஉ முன்னிலை, பயத்தல் - வழங்குதல்.

ஐந்தாம் சருக்கம்
பின்பணிப் பருவ வருணனை
- Habimar
() . அங்கங்கே யன்றி லார்ப்ப
வணிகெழு பழன மெங்குஞ்
சங்கஞ்சேர் முதிர்செஞ் சாலி
தண்கரும் போ டி லங்கத்
துங்கஞ்சேர் காத லோங்கித்
தோகையர் களிப்பி னிடச்
சங்கங்கேய் கரத்தாய் கேட்டி
சார்ந்த பின் பணியாங் காலம்,
102. சார்தரு சாள ரங்கள்
தாழுறு மனையி னுள்ளுஞ்
சேர்தரு செந்தீ யோடு
செங்கதி ரொளியும் பார
மார்தரு படாமும் யெளவ
னந்திக ழணங்க னரும்.
ஏர்தரு மைந்தர்க் கிங்கா
ளேற்றவாங் தகைமை யேயும்.
03, சந்திர கிரண சீத
சக்தன மாடத் தும்பர் இந்திர நிலாப் பரப்பு
மெழிற்றல மிமம்ப ரித்து
101. பழனம் - வயல்; சங்கம் சேர் - கூட்டமாகிய, துங் கம் - உயர்ச்சி ; சங்கு எய் காத்தாய் - சங்கு வளையல் பொருந்திய கையை யுடையவளே , மகடூஉ முன்னிலை, அங்கு அசை. பின் பனிக்கால வருணனையைக் கேட்பாயாக என்க. காலம் ஆகுபெயர்.
102. தாழுறு - தாழிடப்பட்ட, மூடப்பட்ட என்றபடி, உள் ளும் - உள்ளிடமும் ; படாம் - ஆடை.
103. சந்திய கிாணம் படுதலாற் குளிர்ந்த சக்னமும் என்க. மாடத்து உம்பராகிய எழில்தலம் எனக் கூட்டுக. இந்திர இந்து

Page 32
44 இருது சங்கார காவியம்
வந்திர மியமில் லாது
வழங்குகா லிவையிக் காலை
யிங்கிர ணிகரு மைந்தர்க்
கின்ப6ேர் விலவா மன்னே.
104. அடர்தரு பனிவீழ்க் துற்ற
சீதமொ டாலோன் காந்தி
படர்தலி னின்னுஞ் சேரப்
படர்செயும் பனிய காகிச்
சுடர்தலின் முகு தாரா
கணமென்மா சுறுக லன்கள்
தொடர்தலிற் கங்குல் மாந்தர்
துய்ப்பதற் கேம்பி லாவால்,
105. பரிமள கந்தம் பூந்தார்
பாகடை பரித்த கையர் விரிமலர் வதனம் பூவின்
மிகுமது வாசம் வீசக் கருமகி லார்ந்த தூரமங்
கமழ்தரு பள்ளி தன்னை யரிமதர் நோக்க மாத
ரணுகின ரார்வ மிக்கார்.
இர எனப் பிரிக்க. இர - இரவில் ; சந்திரன் இரவில் நிலாவைப் பரப்புகின்ற தலம் என்க. இமம் பரித்து - பனியைத் தாங்கிக் கொண்டு : இர மியம் இல்லாது - மனத்துக்கு இன்பந்தராது ; வழங்கு கால் - வீசுகின்ற காற்று ; நேர் விலவாம் - தராதனவாம், செய்யாதனவாம்.
104. ஆலோன் - சந்திரன் ; படர் செயும் - துன்பஞ் செய் யும் பனியது - குளிர்ந்தது ; சுடர்தல் இன்ருகு - பன்ரியினல் ஒளி மங்கிப் பிரகாசியாத ; மாசுறு கலன்கள் - அழகற்ற ஆபரணங்கள் தொடர்தலின் - சேர்ந்திருத்தலினல், துய்த்தல் - அனுபவித்தல், 105. பாகு - பாக்கு ; அடை - வெற்றிலை , அரி மதர் நோக்கம் - அரியும் மதரும் பொருந்திய நோக்கம் அரி - வரி;
நோக்கம் - கண்,

பின்பணிப் பருவ வருணனை 45
106. பண்ணிய பிழையர் பல்காற்
பரிபவப் பட்டோ ரச்சிம்
கண்ணிய தாக டுெஞ்ச
மழிதா கலியு மைந்தர்
கண்ணிய காமங் கன்றி
கடுங்குதல் கண்டு மாதர்
எண்ணிய பிழைகள் யாவு
மினைவற மறந்தார் மன்னே.
107. கட்டிள மாதர் சில்லோர்
கடுகசைக் காந்த ரோடும்
மட்டில தாங்க ளிப்பின்
மன்னியே கங்குல் முற்றும்
ஒட்டிய விரவு நீங்கி
யுதயமார் போது நெஞ்சி
லட்டிய மெலிவா னுெந்து
மென்மெல வசைகு வாரால்.
108, காமரு கச்சு வீக்கிக்
கன தனக் தனக்கு மார்பிற் பூமரு செம்பட் டாடை
பொருங் துற வணிந்து கூந்தல் தேமரு வாச மென்பூச்
செறித்திள மடவார் கோலக் தாமரு வுற்றர் சார்ந்த
பருவத்தை யணிசெய் தென்ன. 106. பரிபவம் - தாழ்ச்சி, அவமதிப்பு ; பல முறையும் ஊடல் காரணமாக விலக்கப்பட்டவ ரென்பதாம். கண்ணிய - க்ருதிய, பொருந்திய ; கன்றி - விஞ்சி, முதிர்ந்து இனைவு Inm துன்பம்.
101. sa நசை - மிகுந்த ஆசை மட்டு - அளவு, எல்லை : கங்குல் முற்றும் மட்டிலதாங் களிப்பில் மன்னி யென்க. அட்டிய - பொருந்திய அசைகுவார் - உலாவுவார்.
108. மடவார் தனத்துக்குக் கச்சு வீக்கி, மார்பிற் செம்பட் டாடை யணிந்து, கூந்தலிற் பூச்செறித்துக் கோலம் மருவுற்முர் என்க: தம்மை யலங்கரித்தார் என்பது கருத்து. கோலங் தாழ் என்பதில் தாம் அசை, தற்குறிப்பேற்றம்,

Page 33
46 இருது சங்கார காவியம்
வேறு 109. குங்குமe தணிந்துசெய்ய கோலமுற் றேயினிதாகிப்
பொங்குமிள மைகனலப் பொலிவுறுவெம் முலை மடவார் தங்குலவு தனமுரத்துச் சார்த்துதலி னடர்குளிரைப்
பங்கமுறச் செயுமைந்தர் பரிபவமற் றுறங்குவரால்.
110 மணங்குலவு முயிர்ப்பணில மருவுமல ரிதழசைப்பக்
குணந்திகழ்ந்து மதனவின் பங் கூட்டுகளி தருமதுவை யிணங்கியத மன்பருட னிருந்துபனி மலியிரவி லணங்கனையா ரொருசிலவ ரருந்துவரா லகமகிழ்ந்தே.
111. தேறல்தர வருசெம்மை தீர்வுறுமின் னுளொருத்தி
தேறல்புரி தவனணேப்பால் திண்ணென்ற தனத்தளவற் சேறல்பொருங் தியதன்மெய்த் திறகோ க்கி நகைபூத்து மாறலிலா தவன்சார மனே புகுவாள் பள்ளியொரீஇ.
112. பரவுகடி தடஞ்சிறுமை பரித்தவிடை பெருகுமெழில்
விரவுகடி யரணுக மேவுமிள மாதொருத்தி
109. இளமை கனல - இளமைக்குரிய கொம்மை வெம்மைக் குணம் மிக்கு விளங்க : பரிபவம் - எளிமை, துன்பம்.
110. அகிலம் - காற்று ; உயிர்ப்பு நிலம் - மூச்சுக் காற்று, மது வில் இடப்பட்ட மலரின் இதழை மாதாது மூச்சுக் காற்று அசைக்க என்க. மதன இன்பங்சுடட்டு மது, களிதரும் மது, எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க.
111. தேறல் - மது, தெளிந்த கள் ; செம்மை - சிவப்பு நிறம் ; தேறல் புரி - தேறுதலைச் செய்கின்ற, நம்பிக்கைக்குரிய தவன் - கணவன் ; திண்ணென்ற - கடினமாகிய, அவற் சேறல் - அவனை யணைதல் ; மாறலில் ஆதவன் - மாறுபடுதல் இல்லாத சூரியன் ; ஒரீஇ - ஒருவி, நீங்கி. கருத்தொத்த காதற் கணவனுடன் இன்பங் துய்த்தா ளொரு நங்கை இன்ப சிகரத்தை யடைந்தவள்போல மனத்துக்கொண்ட பூரிப்பைச் சித்திரித்துக்காட்டுவது இச் செய்யுள்.
112. பாவு - பரந்த, பருத்த: பெருகும் எழில் - ஒருகாலுக் கொருகால் ஏற்றமடைந்து வளரும் அழகு 3 விரவு கடி அரண் -

பின்பணிப் பருவ வருணனை 47
நிாவுகடி பகில்கமழ்ந்து நீங்குமலர்க் குழல் தாங்கி :பிாவுகடி யினனெழும்ப வெழும்புமல ரணே துறந்தே.
13. நீர்துலங்கிப் பொலன் கமல நிகர்கா ந்தி தருமுகத்தொ டேர்துலங்கு காதளவு மேறு விழிக் கடைசிவப்பக் கார்துலங்கு குழலவிழ்ந்து கவிதோளிற் படியமின்னு சீர்துலங்கு புலரிமனே யிடை துலங்கு திருவொத்தார்.
114 தடங்கொண்ட இடுப்பயர்வு தரவிடையு மிகநுடங்க
இடங்கொண்டு பரந்தமுலை யேந்தியிளைத் தோர்சிலவர் மடங்கொண்ட மாதரிள நடைகொண்டு பகற்கேற்ற படங்கொண்டு நிசிமதனப் பாயலுடை யகற்றுவரால்.
115. தகந்தந்த குறிதாங்கு நகிற்குவடு தனைப்பார்த்துஞ் சுகந்தந்த பற்குறிகள் அது லங்கிதழைத் தைவக் அம் அகம்வங் த மதனவின் பத் தறிகுறியா மவைமகிழ்ந்து முகமந்த முறுத்து வர்மின் னரிரவி முளைகாலை.
காவல்பொருந்திய கோட்டை, பருத்த அரையும் சிறுத்த இடையும் வளரும் அழகும் என்னுமிவை தமக்குச் சேமமாகிய உறைவிட மாகப் பொருந்தியிருக்கும் இள மாது என்பது கருத்து. நிரவு கடி - வாசனை நிரம்பிய 5 இரவு கடி - இரவைக் கோபித்து நீக்கு கின்ற ; இனன் - சூரியன்.
113. நீர் துலங்கி - நீரால் துலக்கமுற்று ; நீரால் துலங்கிக் காந்திதரும் முகம் எனக் கூட்டுக. ஈர் துலங்கு கா?ல - குளிர்ச்சி பொருந்திய விடியற் காலத்தில்; காலையில் மனைகள் தோறும் இளம் பெண்கள் இலக்குமிபோலத் தோற்றம் அளித்தனர் என்பது கருத்து. இங்குக் கூறிய வருணனை இலக்குமி பாற்கடலினின்றும் வெளித்தோன்றிய கோலத்தை வருணித்ததாகலின் உவமை பொருத்தமுடைத்தாதல் கண்டின்புறத்தக்கது.
114. இளேத்தோர் சிலவர் மாதர் எனக் கூட்டுக. பகற் கேற்ற படம் - பகலில் அணிதற்கேற்ற ஆடை , நிசி - இரவில் (அணிந்திருந்த) ; பாயலுடை - சயன உ.ை
115. தைவரல் - தடவுதல் ; அகம் வந்த - மனத்திலடைந்த ; மதனவின்பம் - காம இன்பம் ; முகம் - முகத்தை ; அந்தம் உறுத் துவர் - அழகுபொருந்தச் செய்வர் ; இரவி முளை காலை - சூரியன் உதிக்கும் விடியற் காலத்தில்.

Page 34
48 இருது சங்கார காவியம்
வேறு 116: பரம்புசுவை தருமுண்டி பலவுநிறை
கட்டியினும் படைத்து மல்கக் கரும்புசுவை தருசாலி கவின் விளங்கி யெங்குநிறை காட்சித் தாக விரும்புசுர தக்கலவி மிகவூட்டிக்
காதலரை மேவா தோர்க்கு வரம்பில்துய ராக்குபனிக் காலமிது மாண்புனக்கு வழங்க மாதோ.
ஐந்தாம் சருக்கம்
பின்பனிட் பருவ வருன?ன முற்றிற்று.
116. உண்டி பலவும் - பலவகையான உணவுகளும் ; கட்டி - சர்க்கரை ; படைத்து - உண்டாக்கப்பட்டு ; சுவைதரு என்பதைச் கரும்புக்குங் கூட்டுக. சுரதக்கலவி - காமவின்பம் ; மேவா தோர்க்கு - பிரிந்தவர்க்கு வரம்பில் - அளவில்லாத , மாண்பு - சிறப்பு. இது காதலிக்கு வாழ்த்துக் கூறியது.
* மேவாதோர்க்கு வரம்பில் துயராக்கு பனிக்காலமிது? எனப் பாலை கூறினர்; அதற்கு வேனிலேயன்றி பின்பனிக் காலமும் உரித்தாகலின் என்க. இங்கு,
* பின்பணி தானு முரித்தென மொழிப?
என்னுந் தொல்காப்பியச் சூத்திரமும் அதனுரையில் வரும் தனித் தோர்க்குப் பின்பணி ஆற்றலரிது, இஃதெவர்க்கும் எதமாம் ? என்னும் பகுதியும் நோக்கற்பாலனவாம்.

ஆரும் சருக்கம்
இளவேனிற் பருவ வருணனை
-ത്തബത്ത
117. கிரந்துவிரி குதநனை நீள்பகழி யாகப்
பரந்துவிரி வண்டுவில் பரித்தகயி ருகச் சுரந்துவிரி காதலிளை யோர்மனக் துளைக் கத் துரந்துவிரி மீளியிள வேனில்வருங் தோ காய்.
118. பாதப மலர்ந்தன நீர் பங்கயம் விரிக்கும்
ஆதர மலிந்தனர்மின் னுர்வளி மணக்கும் ஆதப நிறைந்த பகல் மாலையினி தாகும் யாதுமித மாகுமிள வேனிலுறு மேல்வை.
119. மின்னுமணிக் காஞ்சியும் விளங்குதட நீரும்
மின்னனைய மா தரும்வில் வீசிள நிலாவுக் துன்னுமலர் மல்குதுணர் தூங்குசினை மாவும் மன்னுமெழில் கொள்ளவிள வேனிலே வழங்கும்.
120. மங்கையர்தம் பாரமலி வான் கடி தடந்தான்
சங்கையில் குசும்பவுடை காங்கியணி தாங்கும் குங்கும நிறம்பொருவு கோ தறுமென் பட்டுப் பொங்குயர் முலைக்குவடு போர்த்தழகு செய்யும்.
117. நிரந்து - நிறைந்து ; குதம் - மாமரம் ; நனை - பூங் கொத்து ; பகழி - அம்பு ; கயிறு - நாண் , துரந்து - தொடர்ந்து ; இளவேனிலாகிய மீளியென மாற்றிக்கொள்க. மீளி . வீரன் ; தோ காய் - பெண்ணே ; மகடூஉ முன்னிலை, வசந்தகா லத்தை ஒரு போர் வீரனுக உருவகஞ்செய்கின்ருர் கவி.
118. வசந்தகாலக் காட்சிகள் கூறப்படுகின்றன. பாதிபம் . மரங்கள் ; நீர் - நீர்நிலைகள் ; வளி மணக்கும் - காற்று நறுமணம் கமழும் , ஆதடம் - வெய்யில் ; ஏல்வை - காலம் (Season).
119. தட நீர் - தடாகத்து நீரும் ; வில் - ஒளி ; துனர் . பூங்கொத்து ; சினை - கொம்பர் ; இளவேனிலே இவற்றிற்கு எழிலை வழங்கும் என்க. காஞ்சி முதலாகச் சொல்லப்பட்ட இவை சோபையுற்று விளங்குவதற்கு வசந்தமே காரணமென்பதாம்.
120. சங்கை இல் - சந்தேகமற்ற, சிறந்த என்றபடி ; குசும்ப வுடை - குசும்ப நிறமான ஆடை ; கோது அறு - குற்ற மில்லாத ; குவடு - மேற்புறம், உச்சி.
7

Page 35
50 இருது சங்கார காவியம்
121. கோங்கினணி தக்க கறை கொண்டமலர் காதி
லோங்குருவ மல்லிகை யசோ குமவி பூக்கள் பாங்கினசை கா ரள க பார மதன் கண் அணுங்
தேங்கின கிடந்தன திகழ்ந்தணி விளைத்தே.
122. வெண்மைதரு சந்தினளை யாரமுலை மீதும்
வண்மைதரு கைபுயத் தகல் வளைகே யூரம் உண்மைதரு காதல்செ யுவதியர் மருங்கில்
ஒண்மைதரு காஞ்சியு முடன் கிடங் திலங்கும்.
123. கன்னமிசை தொய்யிலெழு திக்கவின் விளங்கச் சொன்னகம லத்தெழில் துலங்குமுக மீது மன்னுவியர் செய்துளி மலர்ந்தொளிர்வ வேறு மின்னுமணி யோடுசெறி முத்துமிளிர்ந் தென்ன.
124. தங்குமத னித்தளர்வு தாங்குதம கங்கம்
பங்கமடை யா நபரி சாற்றியினி துற்ற கிங்கண்முக மாதரிது போதருகு சேருக் தங்கண்மண வாளரிலா த ரம்மிகவும் வைத்தார்.
121. பாங்கின் அசை - பக்கத்துக்குப் பக்கம் அசைகின்ற ; பாங்கு - பக்கம்.
122. சந்தின் அளே - சந்தனத்திற் ருே ய்ந்த, கையிலும் புயத் திலும் முறையே வளையலும் கேயூரமும் என நிரனிறையாகப் பொருள் கொள்க. கேயூரம் - தோளணி ; மருங்கு - இடை ; ஒண்மை - அழகு, ஒளி.
123. சொன்ன கமலம் - பொற்ருமரை, சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலியவற்ருல் கோலங் தீட்டிய பொன்னிறமான முகத் தில் வியர் வைத் துளிகள் விளங்குவது முத்துக்கள் ஏனைய இரத் தினங்களிடையே கலந்து தோன்றுவதுபோலும் என உவமை வந்த வாறு காண்க.
124. மதனத் தளர்வு - மதனத்தால் வந்த தளர்வு : மதனம் சிற்றின்ப போகம். தமது அங்கமானது அழகு பங்கமுரு தபடி ஆற்றியிருந்த மாதர் என்க. ஆதாம் - அன்பு, காதல்.

இளவேனிற் பருவ வருணனை 5
125, ஏர்வரு மடங்தையிள மேனிமத னேவாற்
சோர்வர மெலிந்தசைவு தோன்றுகிற மாறிப் பீர்வரும் பினும்பினுங்கொட் டாவியே பெருக்குஞ் சீர்வரு கலக்கமுற லாற்கவின் சிறக்கும்.
128. மதுப்பருக லான் மதர்கொள் வாள் விழி சுலாவும்
கதுப்புவிளர்க் குங்கன த னங்கடின மேவும் விதப்புறு மருங்குன்மெலி யுங்கடி பெருக்கும் விதுப்புமிள மெல்லியர் தங் காமம்வெகு வாழும்.
127. பாவகமி லா துதுயி லாற்பதியு மங்கம்
காவகமி யைந்தசொல் நயந்துகளி கூரும் கோவகமுன் னுேக்குபுரு வத்திற்கடை கூடும்
சேவகமி வைசெயும்வேள் சேயிழையார் மாட்டு.
125. காதலுணர்ச்சியின் வேகத்தால் இளம் பெண்களின் மேனியில் தோன்றும் சில மெய்ப்பாடுகளைக் கூறுவது இச் செய்யுள். மதன் ஏவலால் - மன்மத பாணத்தால் ; ஏ - பாணம், அம்பு ; பீர் - வெண்மை, விளர்ப்பு ; பெருக்கும் - அதிகமாக்கும் ; கலக்கம் - பரபரப்பு; மடந்தையது மேனி, காமவிகாரத்தால், (1) மெலிந்து தோன்றும்; (2) பீர் வரும், (3) கொட்டாவியைப் பெருக்கும், (4) கலக்கத்தால் இன்னும் கவினுற்று விளங்கும் என்பது கருத்து. கலக்கம் (Excitement) என்பது உணர்ச்சிப் பெருக்கால் விபரீத மாக நடத்தல் ; உதாரணமாக, காலிலனிவதைக் கழுத்தில் அணிதல் நெற்றிக் கிடுவதைக் கண்ணுக்கிடுதல் முதலியன.
126. மதர்கொள் - களிப்புற்ற ; வாள் விழி - கூரியகண் ; சுலாவும் - சுழலும், சுழன்ற பார்வையை யுடையதாகும் ; கதுப்பு - கன்னம் ; விதப்பு - வியந்து கூறல் ; விதிப்புறு - வியந்து சொல்லத் தக்க ; மருங்குல் - இடை : கடி - அரை ; பெருக்கும் - விசாலிக் கும், பொலிவன்)டயும் ; விதுப்பு உறு - ஆசை கொண்ட ; காமம் - காமத்தின் நிலைமை ; வெகு வாரும் - பலவிதமாகும் ; வாறு - விதம்
127. பாவகம் - குறிப்பு : பாவகமிலாது - காதற் குறிப்பை வெளிப்படுத்தாது ; துயிலால் - சோம்பினல், அங்கம் பதியும் என்க. பதிதல் - பொலிவழிதல் ; நயந்து - ஆசையை (காத?ல) யுணர்த்தி , களிகூரும் - களிப்பைக் காட்டும் ; கோ - கண் ; கோஅக - கண்ணிடத்துள்ள முன்நோக்கு - நேர்பார்வை ; புரு வத்தின் - புருவத்து அசைவினல், நெளிவினல் கடை கூடும் . கண்ணின் கடையைச் சேரும் : கண்ணினது நேர்பார்வை புருவங்

Page 36
53 இருது சங்கார காவியம்
128. காதலின் வி லாசமுறு காரிகையார் காம
மீதலின்ம யர்ப்பினர் தம் வெம்மிள முலைக்குச் சீதலகங் தம்மதஞ்சீர் ஞாழன் மர மஞ்சள் ஒதல்வரு குங்குமமு மார்கலவை யுய்ப்பார்.
129. முன்னணி கனத்தவுடை முற்றுற விலக்கி
மன்னணி விளை க்குமரக் கின் வணம தா கித் துன்ணகில் மணக்குருவ மென்துகி லுடுப்பார் மன்னணிகொண் மாதர் விர கத்தினயர் மெய்யார்.
வேறு
130. தேமா மலர்த்தே னருந்திக்களி கொண்டு சிந்தை காமா துர மார் குயில்பேடு கலந்து கொஞ்சுக் தூமா மலரிற் சுழல் வங்கிசை கோலும் வண்டர் தாமா தரஞ்செய் தளிகாட்டும் பெடை தனக்கே.
131 செந்தீ விரிந்த தெனச்சேந்த தளிர்க்க னஞ்சு மங்தே வளையுஞ் சினைபூத்தணி மாண்ட தேமா
களின் நெளிவால் கடைக்கண்பார்வையாகும் என்பதாம். சேவகம் . ஊழியம், வீரம், சேயிழையார் மாட்டு வேள்செயும் சேவகம் இவை (யாம்) என முடிக்க.
128. காதலின் விலாசம் உறு - காதலால் மனங்களிப் படைந்த ; காமம் ஆசை : மீதலின் - மிகுதலால் ; மயர்ப் பினர் - மயங்கினவராகி ; கந்தம் - சந்தனம் ; மதம் - மான்மதம்.
கஸ்தூரி : ஞாழல் - ஒருவகை வாசனைத்திரவியம் ; குங்குமம் . குங்குமப்பூ 3 ஆர் - ஆர்ந்த, நிறைந்த, காரிகையார் முலைக்குக் கர்தம் முதலியவை கலந்த கலவையை யப்புவர் என்பதாம்.
129. அரக்கின் வணம் - சிவந்த நிறம் 3 நவ - புதிய மின்னு அணிகொள் - பிரகாசிக்கின்ற ஆபரண மணிந்த ; விரகம் - காமம்.
130, சிந்தை காம ஆதுரம் ஆர் - மனம் காமத்தினற் பரபரப் படைந்த ; ஆதுரம் - பரபரப்பு, கிளர்ச்சி ; அா - புதிய ; மா மலர் - தாமரை மலர்; இசைகோலும் - இசைபாடும் வண்டர் - வண்டு, போலி ; தாம் - அசை அளிகாட்டும் . (அன்பை வெளிப்படுத்தும்) இனிய உபகாரச் செயலைச் செய்யும்.
131. செந்தீ விரிந்தது என - சிவந்த நெருப்புத் தோன்றியது போல ; சேந்த தளிர் - சிவந்த தளிர்கள்; சினை பூத்து அணி மாண்ட - கொம்பர்கள் பூக்களையலர்த்தி யழகு மாட்சிமைப்பட்ட 3

இளவேனிற் பருவ வருணனை 53
மக்தா நிலத்தா லசைதந்து வயங்கிக் காணு மிந்தீ வரநோக் கியர்நெஞ்சி விழைக்கு மின்னல்.
132. துப்பார்க் ததென்னத் தொடுமூல முதற் சிவந்து
கப்பார்க் திலகு தளிர்மென்மலர் காட்ட சோகம் செப்பார்க் துயர்ந்து செறிவெம்முலை சேர்ந்து யாணர் ஒப்பார்க் தமின்ன ருளத்தே 5ணி கூட்டுஞ் சோகம்.
133. களியார் சுரும்பர் விழுந்தூது கவின்கொள் பூவும்
தளியா ரிளங்கா லசைமென் றளிருஞ் சுமந்தே ஒளியா ரகிற்கு மகிமுத்த முவந்து நோக்கும்
அளியார் மனக்கா தலர்க்காசை விளைக்கு மாலோ,
இக் தீவரம் - கருநெய்தல், கருங்குவளை ; இழைக்கும் - உண்டாக் கும் இன்னல் - துன்பம் ; காம விகாரத்தை யுண்டாக்கும் என்ற படி. தேமா அசைதந்து வயங்கி நெஞ்சில் இன்னல் இளைக்கும் எனக் கூட்டி முடிக்க. தென்றற் காற்று வீசுங்காலத்து மாமரம் சிவந்த தளிரைக் காலும் என்பதும் மாந்தளிருக்குத் தி உவமை யாகும் என்பதும் இங்கு அறியத்தக்கன. இதனேடு,
* தென்னங் தமிழி னுடன்பிறந்த சிறுகா லரும்பத் தீயரும்பும் தேமா நிழற்கண் . . . לל (மீ. பி. தமிழ் 24) * அவரோ வாரார் தான்வக் தன்றே
பொரிகான் மாஞ்சினை புதைய எரிகா லிளந்தளி ரீனும் பொழுதே.?? (ஐங், 349) என்பவற்றையும் ஒப்புநோக்குக.
132. துப்பு ஆர்ந்தது என்ன - பவளத்தாற் செய்ததுபோல ; தொடுமூலம் - மரத்தில் தொடுகின்ற காம்பு ; கப்பு - கொம்பர் :
மலரைக்காட்டு அசோகம் என்க. செப்பு ஆர்ந்து - செப்பை நிகர்த்து யாணர் - இளமையும் புதுமையுமான ; ஒப்பார்ந்த . அழகையுடைய ஒப்பு - அழகு ; அசோகம் மின்னருளத்துச்
சோகம் கூட்டும் எனக் கூட்டுக. சோகத்தைப் போக்குவது என்ப தால் அசோகம் எனப்பெயர் பெற்றது (இப்போது) சோகத்தை உண்டாக்குவது ஆயிற்றென முரண் தொனி தோன்றக் கூறிய நயம் படித்தின்புறத்தக்கது.
133. தளி ஆர் இளங்கால் - குளிர்ச்சி பொருங்கிய மெல்லிய தென்றற் காற்று ; அதி முத்தம் - குருக்கத்திமரம் அளி - அன்பு,
உருக்கம்.

Page 37
54 இருது சங்கார காவியம்
வேறு
134. மனத்தி னுக்குகந் தாள்வத னத்தெழில் காட்டித்
தினத்த லர்ந்தசெக் தே மலர் செறிதரு குரவின் கனத்த பூங் துனர் காண் மனத் தாரெவர் காங் தாய் சினத்த மாரனம் பாலகஞ் சிதைவுரு தவரே.
135. எரியுஞ் செக்தழ னிறம்புரை யினமல fன்று
சரியுங் காலினுற் சலிபலா சந்தரு வெங்கும் விரியும் மேதினி விளங்கிள வேனிலா மிக்காட் புரியும் செவ்வுடை புனைபுது மணப்பெணிற் பொலியும்.
136. கிளியி னசியிற் கேழ்கிளர் பலாசமென் மலரால்
விளிய வேநொறுக் குற்றில தோவியன் கோங்கின் தளிய பூவினுல் வெங்கில தோ தலை யாய அளிசெ யாட்வ சிதயங் தா னழிப்பதென் குயிலும்,
134. தினத்து அலர்ந்த - அன்றலர்ந்த : குரவு - குராம ரம் ;
காண் - பார்க்கின்ற ; மனத்தார் - உணர்ச்சி பொருந்தியவர் ; காந்தாய் - பிரியையே ! ; மகடூஉ முன்னிலை. சினத்த - சினம் பொருந்திய ; மாரன் - மன்மதன் ; அகம் - மனம் , சிதைவுறல் -
நி?லக லங்கி விகாரமுறுதல்.
135. நிறம் புரை நிறத்தை யொத்த இன மலர் - கூட்டி மாகிய மலர் ; சரியுங் கால் . வீசுகின்ற காற்று சலி - அசைகின்ற ; விரியும் - பரம்பியிருக்கின்ற, நிறைந்திருக்கும்; புரியும் - விரும்பு கின்ற, சிவந்த பூக்களைத் தாங்கிப் பலாசமரம் நெருங்கி வளர்ந் திருக்கும் பூமியைச் செவ்வுடையணிந்திருக்கும் புது மணப்பெண்ணுக உவமிக்கின்முர் கவி. உவமையணி.
136. கிளியிஞசியின் - கிளியின் மூக்குப்போல ; கேழ் கிளர் . செங் நிறம் பொருந்திய விளிய - இறக்கத்தக்கதாக த?லயாய அளி - மேலாகிய அன்பு, உண்மைக் காதல். உண்மைக் காதல ருள்ளம் ஏலவே பலாசமலரால் நொறுங்குற்றும், கோங்க மலரால் வெந்தும் இருப்பதைக் குயிலும் தன் இனிய ஓசை யால் இன்னும் அழிக்க முயல்வது எற்றிற்கு என்பது கருத்து. விலக்கணி,

இளவேனிற் பருவ வருண்னே 55 137. விரும்பு மெல்லிசை மேவிய குயிலொலி கேட்டும்
சுரும்பு மால்கொடு முரலுமின் தொனியது கேட்டும் பெரும்பு கழ்க்குடிப் பிறந்தவ ரென்னினு காணம்
அரும்பு சிங்தையிற் கொள் வர்மா லணங்கனர் கணத்தில்,
138. பூத்தி கழ்ந்தணி பொங்குதே மாச்சினை யசைத்துப்
பாத்தி யெத்திசை யுங்குயிற் பாடலை யவனி சாத்தி வீழ்பனி தணத்தலி னிதமதா யெவரு மேத்தி யின்புற வசந்தமா ருதமினி தியங்கும்.
வேறு 39. ஆடியல் நோக்க மாத ரரும்புமென் னகைய தென்ன
纥 په پy - そ f
ஏடியல் முல்லை பூக்க வெழிலுப வனத்தைக் காணும்
வீடிய பற்றி னேர்தம் மனமுமால் மேவு மென்னிற்
கூடிய மைக்தர் கொள்கை கூறவும் வேண்டு மோதான்.
137. நற்குடிப் பிறந்து நாணம் முதலிய குணங்கள் வாய்ந்த மகளிரும் குயில் கூவுதலையும் வண்டு பாடுதலையுங் கேட்ட அளவில் மனக்கிளர்ச்சியுற்றுக் காதல்வயப்படுவர் என்பது கருத்து. வசந்த காலத்தின் இயல்பு கூறியவாறு.
138. குயிற் பாடலை யெத்திசையும் பாத்தி எனக் கூட்டிப் பொருள் கொள்க. பாத்தி - பரப்பி, பரவச்செய்து ; அவனி சாத்தி - பூமியை மூடி (மறைத்து); தணத்தல் நீங்குதல். முந்தின பருவகாலத்தில் பூமியை மூடிப்பெய்த பனி இப்போது நீங்கி விட்டமையால் காற் று உடலுக்கு இதமாயிருக்கிறது (103-ம் செய். பார்க்க); அதனல் இப்போது அதனை எல்லாரும் வர வேற்று மகிழ்கிருரர்கள். வசந்த மாருதம் - தென்றற் காற்று ; மாருதம் அசைத்து, பாத்தி, இதமாய் இனிது இயங்கு மென்க. தன்மை நவிற்சி.
139. ஆடு இயல் நோக்கம் " அசையுந் தன்மை பொருந்திய கண்கள்; அரும்பு வெளிப்படும் ; மென்னகை - புன்மூரல் ; உபவனம் - பூஞ்சோலை ; வீடிய பற்றிஞேர் - பற்று நீங்கினவர், துறவியர் ; கூடிய (பற்றினேர்) மைந்தர் - பொருந்திய பற் றுடையவராகிய மைக்தர் (காளேயர்) கொள்கை - கோட்பாடு,
கருத்து.

Page 38
56 இருது சங்கார காவியம்
140. துலங்குபொற் காஞ்சித் தாமக் துயல்வரு மிடையர் ஆரம்
இலங்குபொற் புறுத னத்த ரிகலிமா ரன்வ ருத்தக் கலங்குமங் கத்து மின்னர் கானமார் குயில்வண் டென்ன நலங்குலவுறுமின் சொல்லால் நயப்புறுத் துவர் 5 ரர்க்கே.
வேறு 14. பலவினமாம் விழைதகுமென் மலர் பரித்துப்
பாங்கரெலாம் பாதபங்கள் பாக்க வெங்கும் நிலவின மாங் குயிலினங்கள் நீடு கானம்
நிகழ்த்தொலியா ற் சாரலெலா நிறைய நீண்டு குலவினமா தருமேக வணக் குறிஞ்சி
கூடிய கன் மலையகத்தைக் கோலஞ் செய்யக் கலவினமாண் புறுகாட்சி காட்டுங் குன்றங்
காண்பவர்க்கெல் லா மகிழ்ச்சி காட்டு மாலோ,
வேறு 142. கண்ணை மூடுவன் கதறுவன் கலங்குவன் முகர
நண்ணு நாசியைப் பொத்துவன் நவிலுவ னுரத்துப் பெண்ணை நீங்கிய பெருந்துய ருறு மனப் பதிகன் விண்ணே மூடுயூ மிடைந்ததே மாவைமுன் கண்டு.
வேறு 143. மயலார் சுரும்ப ரிசையாலும்
வனக்கோ கிலக்கூக் குரலாலும் வியலார் சினை மாம் பூவாலும்
விளங்கு கோங்க மலராலும்
140. காஞ்சித் தாமம் - மேகலை நூல்; துயல்வரு அசைந்து தாங்குகின்ற ; ஆரம் - மாலை 5 இகலி - பகைத்து ; கானம் ஆர் . இனிய ஒசைபொருந்திய ; நயப்புறுத்துவர் - ஆசையூட்டுவர்.
141. இது குறிஞ்சிநில வருணனை, குறிஞ்சி - குறிஞ்சிமரம் ; மேகவர்ணமான பூக்களை யலர்த்துவதால் இது மேகவணக்குறிஞ்சி யெனப்பட்டது. கோலஞ் செய்ய - அழகு செய்ய ; கலவின - பல வினமான ; தன்மை நவிற்சி.
142. காதலியைப் பிரிந்து வழிச்சென்முேன் ஒரு காதலன் வழியில் தழைத்துப் பூத்துக் குலுங்கி நிற்கும் தேமாவைப் பார்த்து விா கதாபமுறுகின்ருன். அவனது நிலைமைகளை வருணிப்பது இச் செய்யுள்.
143. மயல் - மையல், ஆசை : வனக் கோகிலம் - அழகிய
குயில் 3 வியலார் - பரந்த, விசாலமான : செயலார்தரு - காரி

இளவேனிற் பருவ வருணனை 5?
செயலார் தருகூர்ங் கணையினெனத்
தேனர் மலர்கள் சேர்மா சம்
புயலார் குழன்மங் கைருயள்ளம்
புண்ணே செய்யு மதன்பொருட்டால்,
வேறு 44. குத மல்கு மலர்த்துணர் தூர்கணை
தோமில் கிஞ்சுக மாமலர் துன்னுவில் எத மில்லளி யின்குல மேற்று5ாண்
இந்து மண்டல மேய்கொற்ற வெண்குடை சீத மென் மல யாநிலஞ் சிந்துரம்
சேருங் கோகிலம் வந்திக ளாக்கிகழ் நாத னும5ங் கன்வசங் தந்தழிஇ
நல்க நிற்கு வளங்களி யாவுமே.
ஆறும் சருக்கம் இளவேனிற் பருவ வருணனை முற்றிற்று, இருது சங்கார காவியம் முற்றிற்று.
யத்தைச் சாதிக்கவல்ல, திறமை பொருந்திய , வசந்த காலத்து மலர்நிறைந்த மாசமானது மங்கை யருள்ளத்தைக் கூரிய அம்பினுற் புண் செய்தாற்போல இசையாலும் குரலாலும் மலர்களாலும் புண் செய்யும் என்பதாம். புண் செய்தலாவது மனத்தினமைதியைக் கு?லத்து இன்பவெறிகொண்டு கலங்கச் ச்ெய்வதாம். வசந்தம் மன்மதனது தோழனதலின் பக்க பலமாகநின்று இவ்வாறு செய்யு மென்பது தோன்ற 'மதன் பொருட்டுப் புண்செய்யு மென்ரு ரென்சு.
144. இச் செய்யுளில் மன்மதன் ஒரு பெரிய அரசனுக வருணிக்கப்படுகிருரன். ‘* மாரனை மகுடஞ் சூட்ட வந்தது வசந்த காலம்’ என்றதுபோல , வசந்தத்தைத் துணைவனுகக்கொண்டு அரசர்களுக்குரிய வரிசைகளோடு மன்மதன் மூவுலகையும் வெல்லும் பெரும் வீரனுகத் தோன்றுகிமு ன். நூன்முடிவில் காதலிக்குக் கூறும் வாழ்த்து இது.
கிஞ்சுக மாமலர் - பலாசம்பூ ; இந்து மண்டலம் - சந்திர வட் டம் ; ஏய் - பொருந்திய ; சிதம் - குளிர்ச்சி ; மலயா நிலம் - (மலய அநிலம்) மலயமலையினின்று வருங்காற்று, தென்றல் ;
ந்ெது ரம் - யானை, பட்டத்து யானை ; வந்திகள் - துதிபாடகர்; அருங்கன் - உருவிலி, மன்மதன்; அருங்கன் நிற்கு நலங்கள் யாவும் நல்க எனக் கூட்டிமுடிக்க.
8.

Page 39
செய்யுண் முதற் குறிப்பகராதி
செய்யுள் செய். இலக் செய்யுள் செய், இலக்.
42 கன்னமிசை 133 அங்கங்கே 101 கனத்துவளை 55 அங்கமலிய 87 கனையொலி 38 அஞ்சுற 39 அடர்தரு 104 காசும்மணியும் 86 d காசைப் 5? ஆடல்விட் 69 鷲 25 ஆடிகைக்கொடு 95 காதலின்விலாச 128 ஆடியல்நோக்க 139 காதலுற்ற 80 ஆதவன்கிரணஞ் * காமஞ்சாலு 85 ஆரியத்தின் பாயிரம் * காமருகச் 108 இ காமருபட்டும் 4 இழுதுறுமோம 16 காமுறுமிதுன 6? காய்தருகதிர் 18 எரியுஞ்செக்தழல் 135 கார்வளர் 48 காரகிலார் 49 6 காவி5ேர் 40 ஏாவருமட5தை 185 காணுர்நெய்தல் 71
éis g கட்டவிழ் * கிளர்ந்துகிமிர் 53 கடடிள மாதா 10? கிளியினுசி 136 கடிகமழ் 46 கு கண்ணிறை 65 குங்குமமீ 109 கண்ணைமூடுவன் * குவிந்துகோல 84 கிதமுறு புது 43 கதித்துவிம்மு 89 d கொ கந்தமார் 12 கொங்குலாமலர் 78 கயலினம் தg கொண்கன்மேவு 98 கரியகொச்சி O கொண்டலன்ன 25 கருங்குவளை 50 கோ களியார்சுரும்பர் 133 கோங்கினணி 121

i量
செய்யுள் செய். இலக். செய்யுள்
& 6 துளிதரு சந்தமாக துனனுசுக சந்திரகிரண 103 C
த 乐町 தேமா மலர் சாதகவினங்கள் 31 தேமுறவிரி சாந்தருேறை 8 தேறல்தர சார்தரு 103
剑 தொ சிந்தியகமலம் 2 தொகையுறு
கு w ந குதமல்கு டி நகருதாத குரியகிரணங் 20 | 5யபபுறுபல
செ நி செங்கதிர்க்கரம் %9 நிரந்துவிரி செங்கதிர்ச்செல்வன் 1 சி"ைம செந்தீவிரிந்த 131
g நீடுசால்மலி தங்குமதனத் 124 ணிேலங்காசை தடங்கொண்ட 1 4 ர்ேதுலங்கு தடம்புகுந்து 19 நீலமலரேட தருக்குசிக்தை 28 நீலமார்குவளே தலைப்பெயல் 51
娜 ಸ್ತ್ರೀ. பச்சிலைகளற்ற தாங்கருவேனிற் 10 பஞ்சிதோய்ந்த தாமரை வளையம் 60 படர்ந்தபுல் தாரகைககண 63 பண்ணியபிழை
தி பதுமவனத் திங்களாமணிப் 12 | பரம்புசுவை திருந்து பாயிரம் 1 பரவு கடிதடஞ்
g பரிமளகந்தம் துப்பார்ந்த 182 | பலவினமாம் துலங்குபொற் 140 | பனியின்குளிர்
செய்.
இலக்.
29 88
130 82 1 11
41
115
100
11? 45
26 58 113 91
30
23
36 106
28 116 112 105
14t
受2
čV

Page 40
Q R 11
செய்யுள்
இலக்.
参领令
செய். இலக். செய்யுள் செய்.
U. LÒT பாதபமலர்ந்தன 118 மாசுறுநீரால் 35 பாவகமிலாது ஐ? மாதர்தங்கள் 81
t - மிக்ககாம 96 புதியயெளவனம் 94 மிகுதருதாகம் 14 புதியவிலையும் 88 மிளிரும்பூண் ?4 புதுப்பெயற் 54 மின்னலின்கொடி 4? புலர்தரு 15 | மின்னர்தம் 73 119 மின்னுமணி و!! பூத்திகழ்ந்தணி 138 (p பூவினிடிய gg முதிர்தரு 66 முதிருஞ்சாலி 90 பொ முன்னணிகனத்த 139 பொங்குவெங் 1 பொடியுறு 61 வகிருறுவயிடூ 33 பொருந்திய 21 பொருக்துரு 33 வானவில்மேகக் 68
t வி (3LT வியர்வுதோன்றுபு 7 போகநீடிய 99 விரிவகுள 52 t விரும்புமெல் 13?' மங்கையர்தம் 120 விரை தவழ் 3 மஞ்சிலாது ?? விழைதகுபல் 56 மஞ்சினம் 34 விழை5ெற்குவை 72 மடந்தைமார் 9? மண்டியநீல 2 வீசுமந்தாங்ல 62 மணங்குலவு 110 | வீறுகொண் 22 மதுப்பருகலான் 126 வெ மயலார்சுரும்பர் 143 வெண்மைதரு 122 மருண்டசை 37 வெந்தமேனி 27 மன்னுநீர்க்காக்கை 64 வெள்ளிதழ்க் 44 மனத்தினுக்கு 134 வெள்ளைமாடத் 9


Page 41