கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைமுறை தந்த தலைமகன்

Page 1
* Normų,511 frog) - syoso 현역T역적 ©TŲngsnes,siwooɓes.stītsisse,
17|-* : :
 
 
 


Page 2

தலைமுறை தந்த தலைமகன்
(பேராசிரியர் பே. கனகசபாபதி)
க. கிருஷ்ணுனந்தசிவம்
வெளியீடு:
ஊற்று நிறுவனம் 215, கொழும்பு வீதி, கண்டி.

Page 3
“இந்நூல் விற்பனையால் திரட்டப்படும் லாபம் அனைத்தும் ஊற்று விவசாயப் பண்ணை நிதிக்கு வழங்கப்படும்"
THALAIMURAI THANTHA THALAIMAHAN 1st EDITION: SEPT. 1977 -
K. KRISHNANANTHASIVAM, M. v. sc. Mari - Amman Road, ------ *Sivan Malikai''
Thirunelvely, Jaffna.
PUBLISHERS: .
OOTRU PUBLICATION,
215, Colombo Street, Kandy.
DISTRIBUTORS: SIVAN STORES, 80 (166), K. K. S. Road,
Jaffna.
PRINTERs : CHETTIAR PRESS, 432, K. K. S. Road, Jaffna.
PRICE: Rs. 10/-.
 

6.
பதிப்புரை
பல்கலைக் கழகம் பட்டப்படிப்புக்கு மட்டும் அல்ல. படிக்க வருவோருக்கு உயர்கல்வியை அளிப்பதோடு அவர் களைச் சிறந்த பண்பாளராக்கும் நிலையமாகவும் அது இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சியோடு அனுபவ முதிர்ச்சியை யும் அது கொடுக்கவேண்டும். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மாணவராகவோ விரிவுரையாளராகவோ இருந்தாலும், தாம் கற்றவற்றின் பயனைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாயும் இருக்க வேண்டும்.
இது அமரர் கனகசபாபதியின் சிந்தனை.
உயர்கல்விப் பணியைச் செவ்வனே செய்வதற்குச் சிறந்த பல்கலைக் கழகப் பீடங்கள் உருவாகவேண்டும்.

Page 4
- 2 -
அவ்வகையில் தோன்றியதே யாழ்வளாக விஞ்ஞான பீடம்.
நாளைய இந்நாட்டு மன்னரின் ஆளுமையைச் செப்ப னிட வழிவழிவந்த கலாசாரப் பாரம்பரியங்கள் பேணப் பட்டு அவற்றின் விசேட பண்புகளை இளைய தலைமுறை பினர் அகத்துறுஞ்சக் கூடியதாய் பல்கலைக் கழகச் சூழல் அமையவேண்டும்.
அதற்கெனவே குறிஞ்சிக் குமரனுக்குக் கோயில் எழுந்தது.
அறிவு வளர்ச்சியின் பயனை அனைவருக்கும் அளிக்க சிறந்த நிறுவனங்கள், மன்றங்கள், சஞ்சிகைகள் தோன்ற வேண்டும்.
"ஊற்று" அவர் உள்ளத்தில்தான் முதன்முதல் எழுந்தது.
இம் மூன்றும் கனகசபாபதி அவர்களின் செயல் திற னுக்குச் சிறந்த சான்றுகள்.
'சிவம்’ அமரர் அளித்த அருஞ்செல்வம்.
அவர் உருவாக்கிய இளம் செயல் வீரர்சளுக்குச்சிறந்த ஒர் உதாரணம். கனகசபாபதியின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் ஆளாகிப் பல்லாண்டுகளாக ஆக்கப் பணிகளில் அவருக்குத் துணைநின்று உழைத்தவர். விலங்கு வேளாண்மையில் விசேடபுலமை பெற்றவர். பொதுத்தொண்டு என்பது பொருளற்ற பதமாகிவரும் இந்நாளிலும் சமுதாய நலத் "திற்காகச் சீரிய திட்டங்கள் தீட்டிச் சிறப்புறச் செய்து வருபவர். "ஊற்று நிறுவனத்தின் பிதாமகர்களில் ஒருவ ரான அவர் இன்று 'ஊற்று அறிவியல் ஏட்டின் நிர்வாக ஆசிரியராகவும் கடமையாற்றுகின்ருர்,

---- 3 --س-
இந்நூல், கனகசபாபதி அவர்களுக்கு ஊற்று நிறு வனத்தின் சார்பில் சிவம் சாற்றும் புகழாரம். தன் கடனை யும் தீர்க்க அவர் முயல்கிருர், அக்கடன் இவ்வளவு எளி தில் தீர்க்கக் கூடிய ஒன்றல்ல.
இளைய தலைமுறையினரின் நலன் கருதித் தன் வாழ்க் கையை அர்ப்பணித்த பெரியவரின் குறிக்கோளைத் தொடர்ந்து செயல்படுத்துவது இன்றைய இளைஞர்களின் தலையாய கடன். "ஊற்று" நிறுவனத்தின் நோக்கமும் இதுவே.
அமரருக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் முன்னரும் பல மலர்கள் மலர்ந்துள்ளன.
இறைவனை அர்ச்சிக்க இத்தனை மலர்கள்தான் என்ற வரையறை ஏதும் உண்டா?
பிரதம ஆசிரியர், "ஊற்று", க. சிவகுமாரன்
215, கொழும்பு வீதி,
கண்டி.
7-6-1977

Page 5
• {2که
ه یی
இ.
(i)
(ii)
(i)
(ii)
(i)
(ii)
அணிந்துரை
நாவலர் 1822-ம் ஆண்டு பிறந்தவர்.
"பெரியவர் பேராசிரியர் திரு. பே. கனகசபாபதி 1922-ல் பிறந்தவர்.
நாவலர் ஏழாண்டு ஆங்கிலம் படித்தவர்.
பேராசிரியர் ஏழாண்டு உயர்தர கணிதம் படித் தவர்.
நாவலர் 1847 ல் சைவகலாசாரத்தை விருத்தி செய்ய வீறிட்டெழுந்தார்.
பேராசிரியர் 1947-ல் பேராதனையில் கணிதத்துறை ஆசானுயினர்.

所°。
இருவரும்:
(i) தமிழ் சைவ கலாசாரங்கள், நீதியை அடிப்படை யாகக் கொண்டவைகள்; மதபேத இனபேதங்களை நிந்தியாதவைகள்; யாரையும் வழிப்படுத்தக் கூடியவைகள் - என்ற கருத்துக்கள் வாய்க்கப் பெற்றவர்கள்.
(i) ஏறக்குறைய 30 ஆண்டுகள் சேவை செய்தவர்கள்.
(iii) 56 வயசு முற்றியதும் நாவலருக்கு அழைப்பு. 55 வயசு முற்றுதற்குமுன் பேராசிரியருக்கு அழைப்பு.
இத்துணையும் ஒப்புமை .
எச்சம்:
(i) நாவலருக்கு வாரிசான உத்தம மாணவர் ஒரே ஒருவர். நாவலருக்கு முன் அவருக்கு அழைப்பு வந்து விட்டது. நாவலர் தமது கண்ணிரால் அந்த மாண வருக்குச் சரித்திரம் எழுதி இரங்கற் கவிகளும் இயற்றினர்.
(i) நம் பேராசிரியருக்கு அன்புக்குரிய மாணவர் மிகப் பலர். மாணவர் முன்னிலையில் பேராசிரியருக்கு அழைப்பு வந்துவிட்டது. மாணவர் தம் கண்ணி ரால், பேராசிரியரின் அருமை பெருமையை எழு திக் குவித்துக் கொண்டிருக்கின்ருர்கள்.
இது எதிர்முக ஒப்புமை.
() О o o go o

Page 6
ஊ. (1)
(ii)
a- 6 -
பேராசிரியரின் மாணவர் கணித விஞ்ஞானத் துறையினர். பேராசிரியரோ ஞானபரம்பரை ஒன்றில் துறவுப் போக்குள்ள தவச்செல்வர்களின் மத்தியில் பிறந்து வளர்ந்தவர். அவர் வாழும் உலகு "உயர்ந்தோர் மேற்று'. வடக்கும் தெற்கும். ஆயினும், உடலும் உயிருமாயிருந்தார்கள். இந்த அதிசயம் மனித அறிவுக்கெட்டாதது!
இருபது வருடகாலம் பேராசிரியரின் தவ ஆற்றல், அவர்பால் அடங்கி முதிர்ந்து கனிந்துகொண்டிருந் தது. 1967-ம் ஆண்டுக் கண்மையில், இந்து மாண வர் சங்கத் தலைமை, பேராசிரியரை நாடியது. ஆற்றல் வெளிவரும் தருணம் அமைந்தது. அந்தக் கணமே மின் வேகத்தில் தவ ஆற்றல் மாணவர் இதயங்களிற் பாய்ந்தது.
(ii) கண்மூடி விழிக்குமுன் செயற்கருஞ் செயல்கள்
நிறைவுபெற்றுக் கொண்டிருந்தன. "பெரியவர்" என்ற பெயர் மாணவர் மத்தியில் நிலைத்தது. பேராசிரியர் பெயரை உச்சரிக்கக் கூசினர்.
எத்தனையோ மாணவர் அணுகுவதற்கு அவ காசமின்றிக் குருபக்தி செய்து, நவீன ஏகலைவர்கள் ஆஞர்கள்.
மாணவர் ஒருவர் உயர்தர விஞ்ஞான பரீட் சைக்குப் படிப்பதைப் பொருள் செய்யாது, கோயிற்றிருப்பணியில் ஈடுபட்டு உழைத்து உயர்ந் தது தெரியவந்தது.
பழம்பெரும் பேராசிரியர்கள் பேராச்சரிய முற்று, கைகளை எடுத்து ஆசி வழங்கி ஆனந்த பரவசர் ஆயினுர்கள்.

6T.
(ίν)
ஒரு
(i)
- 7 - எட்டு வருடம் கணம்போற் கழிந்தது. யாழ்ப் பாணம் பேராசிரியரை அழைத்தது. இப்பொழு தைய நிலையையும் தேவைகளையும் பேராசிரியர் சிந்தித்தார்.
புத்தம்புதிய வைரித்த திட்டங்கள் வகுக்கப் பட்டன. யாழ்ப்பாணத்தின் தவம் போதியதா. யிருக்கவில்லை.
வெண்ணெய் திரண்டு வரும் சமயம்..! அழைப்பு வந்துவிட்டது.
விசேஷம்: பேராசிரியரின் அதிதீவிர சேவை ஆரம்பித்த அக்
கணமே, யாழ். இந்துக் கல்லூரிக்கு ஈன்ற பொழு திற் பெரிதுவப்பதொரு ஆராமை உதித்தது.
1968-ம் ஆண்டு, கல்லூரிப் பரிசளிப்பு விழா வில், பேராசிரியர் குடும்ப சமேதராய்ப் பிரதம விருந்தினர் ஆயினர்.
பேராசிரியரின் விருந்துப் பேச்சுப் பெருவிருந் தாயமைந்தது.
அப்பேச்சில் தம்மிடம் பயிலும் இந்துக் கல் லூரிப் பழைய மாணவர் ஒருவர் பெயர் விதத் துரைக்கப்பட்டது. V

Page 7
- 8 -
அம்மாணவரே,
"தலைமுறை தந்த தலைமகன்' ஆசிரியர்; கிருஷ்ணுனந்தசிவம்.
ძზ იზ ძზ
அநுமான் ஒருசமயம் சீதாபிராட்டியை பூரீராமமயமாகக் கண்ணுற்றன். அண்மையில், 'சிவம்’ பேராசிரியர் மயமாய்க் காட்சி அளித்தார்.
იზ ძზ d
(ii) பேராசிரியரின் ஞானபரம்பரையைச் சேர்ந்த தொரு தவச்சூழல் திருநெல்வேலி வேதாந்தமடம். அந்த மடத்தில் முழுகித் திளைத்து வளர்ந்தவர் - வளர்ந்துகொண்டிருப்பவர் கிருஷ்ணுனந்தசிவம்.
பேராசிரியரின் சரித்திரம் எழுதுவதற்கு எவ் வாற்ருனும் தகுதி படைத்தவர் "சிவம்".
(iii) பேராசிரியரின் மாணவர்கள் "சிவம் தந்த நூலை விமர்சனம் செய்யக் கடவர்கள். அவர்கள் மத்தி யில் "சிவம் சகோதரத்துவத் தலைமகளுய்த் திகழ் வாராக.
(iv) சென்ற நூற்றண்டுத் தலைமகன் நாவலர் பெரு
.r6%TחמL
(w) தலைமுறை தந்த தலைமகன்'. இனிவருந் தலை முறைகளுக்கு, வழிகாட்டியாய்த் தவத்தைப் பெருக்குவதற்கு வழிசெய்வதாக என்று வாழ்த்து Gaum LDIT6.
சிவம்.
கலாசாலை வீதி, சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி.
3-4-77

நுழைவாயில்
பேராசிரியர் ஒரு பல் கலை க் கழகம். சிக்கல் எதுவாகினும், அதன் அடிப்படையை ஆராய்ந்து, அதனையும் திருத்தும் ஆற்றல் அவ ரிடம் நிறைய இருந்தது, அஃதொன்றே அவர் செய்த சாதனைக்கெல்லாம் ஊற்றுக்கண்.
அப் பண்புக்கும், தகைமைக்கும், என்னிடம் அவர் காட்டிய அன்புக்கும் ஒரு சிறு காணிக் கையாக இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.
பெரியவர் உள்ளப்பாங்கினை அவர்தம் சிந் தனை நோக்கினையும், தமிழினம் அறிய இச் சிறு நூல் ஒரு பலகணியாக அமையும் என்று நம்பு கின்றேன். М

Page 8
عس 10 -
என் இச் சிறு முயற்சிக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து உதவிய நண்பர்கள் அனைவருக் கும் குறிப்பாக திரு. கலா. பரமேஸ்வரன், திரு. இ. மகாதேவா ஆகியோர் என் நன்றி க்கு உரியர்.
மூப்பையும் பொருட்படுத்தாது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி உதவிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியரின் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியர். அவ் வன்பின் வெளிபாட்டின் ஒரு துளியே அவர் களின் இவ்வணிந்துரை. பண்டிதமணி அவர் கட்கு என் நன்றிகள். '
“சிவன் மாளிகை?? க. கிருஷ்ணுனந்தசிவம் மாரியம்மன் கோவில் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

பேராசிரியரைப்பற்றி அறிஞர்கள்
இவருடன் எல்லோரும் அன்பு கொண்டார்கள், மாண வர்களை வழிநடாத்தத்தக்க பண்புடையவர், இவர் ஒரு வரேயென நாம் எண்ணினுேம். ஒரு நாட்டின் அரசைத் தாங்கி இனிதாக நடத்தக்கூடிய சக்தி அவரிற் பொதித் திருந்தது.
- பேராசிரியர். அ. சின்னத்தம்பி
. ".பேராசிரியர். ஒரு கற்பகதரு ஊர்மத்தியில்
பயன் பெறத்தக்கதோரிடத்தில் அமைந்ததொரு அபூர்வ
கற்பகதரு'
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்?

Page 9
سس- T2 --
*".தன்மானத்துடன் தனக்கேயுரிய பாணியிலே தமிழினத்தின் தனித்தன்மையையும் தமிழ்ப் பண்பாட்டை யும் பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு பேராசிரியரை வளாகம் இழந்துவிட்டது.'
என அவர் மறைவின்பின் அவர் மாணவன் ஒருவன்
கூறியது பேருண்மையெனத் தமிழினம் உணரும்.
- பேராசிரியர் சு. வித்தியானந்தன்
".சமூக இயக்கங்களில் நிரம்பிய ஈடுபாடு கொண் டிருந்த அவர் கல்வியைப் பொறுத்தமட்டில் மரபு வழி வரும் சிறந்த இலட்சியங்களைப் பேணிப் பாதுகாத்தல் வேண்டுமென்னுங் குறிக்கேர்ளைக் கொண்டவராயிருந்தார்.
- பேராசிரியர் க. கைலாசபதி
He was the embodiment of Hindu culture and his very presence reminded me of my own cultural identity.
- Dr. Valentine Joseph
“... His wants were limited and his aspirations were never petty. Modesty remained his prime virtue'.
- Dr. W. Ramakrishnan

- 13 -
"படாடோபம் என்பதை ஒருபோதும் நாம் அவரிடம் கண்டதில்லை . வார்த்தைகளை வீணுக்காது அளந்து பேசும் பண்பு அவருக்கே உரியதொன்று . . எவரையும் தாக்கிப் புண்படுத்திப் பேசியதை ஒருவரும் கண்டிருக்கமுடியாது.”*
- பேராசிரியர் க. கைலாசநாதக் குருக்கள்
W
......He was the chief moving spirit behind the setting up of the Hindu Temple in the Campus....... By his example he inspired the younger generation to take care of the cultural and spiritual aspects of their lives -
Prof. v. Appapilai
... Generations of students will remember and cherish the influence of a modest, patient and brilliant mathematical teacher...... 99.
Prof. Eliezer
'...... He had infinite courage, was prepared to face heavy odds and he never faltered......'
- Prof. A. W. Mailvaganam
பதவி வகிப்பதை மக்களுக்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பாகக் கருதினரேயன்றி அதிற் பெருமை அடையலாம் என எண்ணவில்லை. பொறுப்புணர்ச்சியும் சான்ருண்மைக் குரிய அருங்குணங்களும் ஒருங்கமைந்த சான்ருேணுகவே வாழ்ந்தார்...'
- சு இராஜநாயகன்

Page 10
கலைவாயில்
பரந்த நெற்றி.
சிறிய உருவம்.
சாதாரண வேட்டியும் சட்டையும், அருகில் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிருர் . இறுதியில் இரு சொற்கள். அவருடைய ஆழமான அர்த்தமுள்ள கருத்து. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல துறையிலும் ஈடுபட்டிருக்கின்றனர். மேல் குறிப்பிட்ட உருவத்திற்குரிய மனிதரும் அவர்களில் ஒருவராக உழைக்கின்றர். இப்படித் தரிசனம் தருகிருர் பெரியவர் கனகசபாபதி. எண்பது வய தில் ஒருவரைப் பெரியவர் என்று உலகம் அழைப்பதைக் கேட்டுள்ளோம். மற்றப் பேராசிரியர்களைவிட இளைஞரான கனகசபாபதி அவர்களைப் பெரியவர் என்றே அழைத்தனர். ஏன் ?

- 15 -
பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும் நூற்றுக்கணக் கான ஆசிரியர்களையும் கொண்ட, நாட்டின் உயர் கல்விப் பீடமாகப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. இன்று உல கெங்கும் இந்நிறுவனங்கள் பல பிரச்சனைகளை எரிமலையாகக் கக்கும் நிலைக்களன்களாக உள்ளன. இத்தகையவோர் இடத்திலே தன் கல்விப் பணியைச் செவ்வனே செய்து, மாணவர்களையும் நல்லாற்றுப்படுத்துவதுடன் நிற்காது. நாட்டின் உயர் கல்விப் பீடத்தவன் என்ற வகையிலே, தாம் சார்ந்த இனத்தினதும், பிறந்த நாட்டினதும், பல் வகைப்பட்ட பிரச்சனைகளையும் புரிந்து, அவற்றுக்குத் தீர்வு காண நெறி முறையினையும் வகுத்து, செயலுருவம் கொடுப் பது மிகவும் கடினமான காரியம். அதிலும் யார் மனமும் நோகாது, மற்றவர்கள் பழிப்பையும் ஏற்று, கருமமே கண்ணுய் இருந்து, மாற்றரும் வியக்கும் வண்ணம் எடுத்த கருமத்தை நிறைவேற்றுதல் மிகவும் போற்றற்குரிய செயல். இவற்றை நடைமுறையிற் செயல்படுத்தி வெற்றியும் கண்ட வர் பேராசிரியர். இதனல் இளைஞர் சமூகம், "பெரியவர்" என்று உள்ளன்போடு அவரை அழைத்தது. அதுமட்டுமல்ல, உதட்டளவேயான வாய் வீரர்களின் வட் டங்க ளி னை உடைத்து, போராட்டம், புரட்சி, எவற்றுக்கும் எவ்வேளை யிலும் தம்மைத் தயார்ப்படுத்தவல்ல, நெஞ்சுரமும் துணி வும் துடிப்பும் மிக்க இளைய பரம்பரையினரின் சக்தியையும், ஆற்றலையும், சீரான செயல்முறைக்கு நெறிப்படுத்த புதிய வொரு மாற்றத்தினைச் சமைக்கக் கூடிய வல்லமை மிக்க ஒரு தலைமகனை, இளையவர் "பெரியவர்" என அழைத் தமை எவ்வகையிலும் பொருத்தமானதாகும்.
பல்கலைக்கழகத்தின் பல வளாகங்களூடாகவும் கடந்த பல ஆண்டுகளாக வெளியேறி நாட்டிலும், புறத்திலும், பலதுறையிலும் பணியாற்றும் இன்றைய இளைய சமுதா யத்தினருக்கும், இன்றைய மாணவ உலகிற்கும், பொது வாக நாட்டின் பல்துறை மக்களுக்கும், தாங்கொணு ஒரு செய்தி அண்மையில் எட்டியது. பல்வேறு மட்டங்களிலும் வாழுகின்ற நாட்டு மக்களை, பிரதேச ரீதி கடந்து, சாதி

Page 11
- 6 -
சமயம், மொழி ஆகிய சமுதாய வரம்புகளைக் கடந்து சேவை செய்து, அன்பால் இணைத்த ஒரு உருவம், தன் கடமை முடிந்ததெனக் கருதி, தன் நீங்கா அன்பின் தலைவன் தாள் பற்றியது. தைத்திங்கள் 23-ம் திகதி ஞாயிறு மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்த இச் செய்தியால் கலங்காத உள்ளம் இல்லை.
உள்ளங்கள் கலங்கின! உயிர்கள் அழுதன! இச்சிறிய உருவ மனிதர் அப்படிச் செய்த சாதனைதான் என்ன?
பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் இலங்கைப் பல் கலைக்சழக பேராதனை வளாக கணிதத்துறைத் தலைவராக வும், யாழ் வளாகத்து விஞ்ஞான பீடாதிபதியாகவும் பணி யாற்றியவர். அவர் விஞ்ஞான உலகுக்கும் சிறப்பாக கணி தத்துறைக்கும் ஆற்றிய தொண்டு பற்றிய மதிப்பீட்டை அத்துறையினரே செய்தல் பொருத்தமாகும்.
ஈழத்து வரலாற்றிலே 1956-ல் ஏற்பட்ட மாற்றத்தின் வழியாக அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டதுடன், நாட்டிலே "தேசியம்’ என்ற பேரலை பொங்கிப் பிரவகித்தது. சிங்கள மக்கள் மத்தியிலே சிறப்பாக இருந்த இந்த உணர்வு, தமிழரிடை யிலும் தமது நாட்டைப் பற்றி சிந்திக்க வைத்ததுடன் தமக்கே சிறப்பாக வாய்த்த மொழி, சமய பாரம்பரிய கலாச்சாரப் பண்புகளைப் பேணவேண்டும் என்ற முனைப் பினைக் கொடுத்தது. எனினும் இந்த உணர்வும் முனைப்பும் தமிழ்ச் சமுதாயத்தின் பல மட்டத்தினரிடையும் சென்று செறியப் பல ஆண்டுகளாயின. சுய மொழிக் கல்வியடியான மாற்றங்கள் இதற்கு பக்கபலமாகியது. அறுபதுகளின் ஆரம் பத்தில் தமிழரின் இலக்கியம், நாடகம் போன்ற துறை களில் மட்டும் பிரதிபலித்த இந்த உணர்வு தமிழரின் சமயம் கல்வி உள்ளிட்ட முழுமையான கலாச்சார நோக்கிலே தென்படத் தொடங்கியதும் இந்நோக்கிலே தமிழதைச்செயற் பட வைத்ததும் 1965-ம் ஆண்டைஅடுத்த காலப்பகுதி யிலேயாகும். இவ்வகையிலான மாற்றங்களைப் பல்கலைக்கழ

- 17 -
கத்தில் ஏற்படுத்துவதில் திருப்புமுனையாகத் திகழ்ந்தவர்க ளுள் தலையாயவர் பேராசிரியர் அவர்கள். 1965-ம் ஆண்டி லிருந்து 1975-ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியினை இந்நோக்கில் பேராசிரியர் தசாப்தம் என்று கூறின் மிகை turromg)I (Professor P. Kanagasabapathy's Decade). g}} காலத்தில், பேராசிரியரின் சீரிய சிந்தனைகள் இளைய பரம்பரை யினரின் பக்கபலத்துடன் செயலுருவம் பெறத் தொடங் கின. இவை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் அளப் பரியது.
எமது நாடு 1948ம் ஆண்டு விடுதலைபெற்ற போதிலும் அண்மைக்காலம் வரை நம்மவர் எண்ணத்தால், செயலால், உண்ணும் உணவால், பழக்கவழக்கத்தால், பேசும் மொழி யால், மனப்பாங்கு, சிந்தனை வாழ்க்கை நெறிமுறை ஆகிய அனைத்தினும் அன்னியமான முறையிலிருந்து நீங்கமுடியாத வராகவும் வழிவழிவந்த தமது சீரிய கலாச்சாரப் பண்புகளை மறந்து, தம்மை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளின் காத் திரத்தை உணரமுடியாதவராகவும் வாழ்ந்துவந்தனர். சுதந் திரத்தின் உள்ளார்ந்த பயனை எள்ளளவும் உணரக்கூடிய நிலை உருவாகவில்லை. தமிழரைப் பொறுத்தவரை பல்கலைக் கழக மட்டத்தில் செயலாற்றிய சிலர்கூட இந்நிலைக்கு விதி விலக்காக இருக்கவில்லை.
இந்நிலையை மாற்ற வழியாது? வழிவழிவந்த நமது கலாச் சாரப் பண்புகளின் உயிரான அம்சங்களை உணரவும் அவற் றைப் பேணவும் கூடிய நிலையை உருவாக்குவது எவ்வாறு? நம் மக்களை நன்னெறியில் இட்டுச்செல்லும் வழியைச் சம யத்தை அடியாகக் கொண்ட பாரம்பரிய முறையிலேயே அணுகி, நல்லதொரு மாற்று மருந்து செய்யத் தலைப்பட்
TTT ... ^
ஆசிய மக்களின் உயிரோட்டமாக அமைந்தவை கோவி லும் சமயமும், அதன் அடியாக அமைந்த கலைகளும்.
3

Page 12
- 18 -
இவற்றை எம் மக்கள் உணர்ந்தால் சுயமாகச் சிந்திக்க முற்படுவார்கள். இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்கள் மத் தியில் இந்நிலையினை ஏற்படுத்த மாணவர் உலகு மூலமாக செயற்பட விழைந்த பேராசிரியர் இளைய தலைமுறையினை நெறிப்படுத்தத் தலைப்பட்டார். பேராதனை வளாகத்திலே இந்துக்களுக்கான கோவிற் பிரச்சினை எழுந்தபோது பல்கலைக் கழக அறிஞர்குழாமிற் சிலர்கூட, கோவிலின் அவசியத் தையே கேள்விக்குறியாக்கி மாணவரின் ஆக்க சக்தியினை மழுங்கடிக்க முயன்றனர். இவர்களுள் சிலர் கோவிலை தமது நன்கொடையிலான உபய முயற்சியாகக் கருதி செயற்பட விழைந்தனர். . பல்வேறு கோண எண்ணங்கள் கொண்ட பலரின் தெளிவற்ற உளப்பாங்கினை மாணவர்கள் உணரத் தலைப்பட்டனர்.
பேராதனை மண்ணிலே கோவில் அவசியம்தான ' என்ற வினவினை ஒர் ஆழ்ந்த நோக்கிலே மாணவர்கள் மத்தியிலே எழுப்பி அதற்கு மாணவரையே விடைகாணச் செய்து, அவர்களிடமே அதற்கு திட்டம் வகுக்கும் பணியினையும் ஒப்புக்கொடுத்தார் பேராசிரியர். சீரிய இலட்சியங்களை இளைஞர் மத்தியிலே உருவாக்கி, அவர்கள் சிந்தனையைத் தூண்டிச் செயலுருவம் கொடுக்கும் வகையிற் பின்னிருந்து இயக்கும் சக்தியாகப் பணிபுரியத் தொடங்கினர்.
கோவில் எழுந்தது. கோபுரமும் உயர்ந்தது. பேரா தனையின் உயரிய கந்தானக் குன்றிலே, தமிழரின் சென்ற காலத்துச் சமயச் சீரினை என்றென்றும் அவ்வினத்தவரிடையே நிலைநிறுத்தும் வகையிலே மலைவாழ் தெய்வமான குறிஞ் சிக் குமரன் குடிகொண்டான். கோவில் முயற்சியைப் பரிக சித்தவர், ஒதுங்கிநின்றவர் தமிழர்களுக்கேயான முறையில் இறுதியில் இணைய முயன்றனர். திராவிடக் கலையின் சீரிய கலைத்துவத்தின் நிலையமாகவும் அன்னியமாக மாறிக்கொண் டிருந்த பேராதனைச் சூழ்நிலையில் கலாச்சாரப் பேணலை சுட்டும் தளமாகவும், அயராத இளைய பரம்பரையின் ஓயாத

سسسسسه 19 س----سم
உழைப்பின் சின்னமாகவும் எழுந்த கோவில் பேராசிரியரைப் பொறுத்தவரையில் அவர் உள்ளத்தில் எழுந்த ஒரு மா பெரும் திட்டத்தின் முதலானதும் அடிப்படையானதுமான அம்சமாகும். தமிழரின் பெருமைக்கும் சமய வாழ்வுக்கும் கலைமரபிற்கும் அடிக்களஞன கோவில் பேராசிரியரின் பெருந் திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது ஆச்சரியமல்ல.
கோவிலின் தோற்றத்துடன் மகத்தான உண்மை யொன்று தமிழ்ச் சமூகத்தினரின் சகல மட்டத்தினருக்கும் நிதர்சனமாகியது. செயலாற்றலும் தலைமைதாங்கும் வல்ல மையும் பெற்ற மாணவரின் ஆற்றல் முழுமையாக இயக்கம் பெற்ருல் அவர்களால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை. இளைஞர்களுக்கு தலைமை அளிப்பதால் எவ்வேலைத் திட்டமும் செவ்வனே துரிதமாக நிறைவேறும் - சிறுமைகண்டு பொங்கியெழும் இளமை, தூயகொள்கைத் திறமும், செயற் றிறமும் கொண்ட மூத்த தலைமுறைக்குத் தலைவணங்கி, அவர்களின் நெறியுறுத்தலுக்கியையைச் சீராக செய்ற்படும் என்பதும் நிரூபணமாகியது. இதனை நிரூபணமாக்கியதன் மூலம் இளைய பரம்பரையினர் தமது உள்ளுணர்வுகளைச் செப்பனிடவும், தமது ஆக்கத்திறமைகளை வெளிக்கொணர வும், தலைமைதாங்கும் பொறுப்பினைக் கையேற்கவும் கூடிய ஒரு புதிய கால கட்டத்தினை உருவாக்கியமை, தமிழ் இளைஞர் வரலாற்றிலே ஒரு திருப்பு முனையென விதந் துரைக்கத்தக்கதாகும்.
கோவிலை நிலைக்களனகக் கொண்டு பேராசிரியர் செய்த சமய கலாச்சாரப் பணிகள் பாரியன.
கோவ்ல் எழுந்து குடமுழுக்கு நிகழ்த்தப்பெறும் வேளை யிலே பல்கலைக்கழக கோவில் விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ஆகிய மூர்த்திகளை மாவிட்டபுரம் முருகன் கோவிலிலிருந்து திருஉலா எடுப்பித்து இந்து மக்கள் மத்தி யிலே ஒரு சமய விழிப்புணர்வினை எழுப்பி, நாட்டின் உயர்

Page 13
ー 20ー
கல்விப்பீடத்திலே குமரன் குடிகொள்ளும் நிகழ்ச்சியிலே சகல மட்டத்தினரையும் பங்குபெறச் செய்தமை ஈழத்து இந்து கலாச்சார வரலாற்றிலே முக்கியமானது. பக்திச் சூழ்நிலை யில் பேராதனை வளாகத்தில் நிகழ்ந்தேறிய சமய கலாச் சார ஊர்வலமும், குடமுழுக்கு விழாவும் மாணவர், ஆசிரி யர், பொதுமக்கள் ஆகியோரிடையே ஒரு பெருந் தாக்கத் தினை ஏற்படுத்தியது,
கோவிலடியாக, இலக்கிய, இசை, சிற்ப ஒவியக் கலைஞர்தம் திறமையைப் போற்றி மேலும் வளர்க்கச் செய்யும் வகையில் அவர்தம் கலைப்படைப்புக்களை மக்களிடையே அரங்கேற்றி, பாராட்டுக்களும் பரிசுகளும் அளித்து, அவர்கள் சமூகத்தில் நிலைபேருன இடம்பெற உழைத்தார் பேராசிரியர். தாம் வழிவந்த கலாச்சாரப் பின்னணியிலே பண்பாடு மேலோங் கலுக்குப் பணிபுரிந்த பழம்பெருங் கலைஞர்களை மதிக்கத் தயங்கும் நிலை கலாச்சார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற உண்மையை பேராசிரியர் சீராக உணர்ந்தமையே இதற்குக் காரணமாகும்.
இவ்வகையிலே ஈழத்து முதுபெருந் தமிழறிஞரும் சமயக் கல்வி, இலக்கிய மரபு, நயப்பு இன்னுேரன்ன துறைகளிலும் இம்மண்ணின் பண்பு மேலோங்க உழைத்தவருமான பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கந்தபுராண தக்ஷ காண்ட உரை அரங்கேற்றத்தினை பாரம்பரியமுறை யில் ஒரு பெரும் விழாவாக நடாத்தி முடித்தார். சென்ற காலத்தின் பழுதிலாச் சிறப்பினை நினைவுகூரச் செய்த இந் நிகழ்ச்சி நம்மவரிடை பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்கலைப் பட்டம் பெற்ருேரும் தமிழ் நாட்டோருமே வியத் தகு தமிழறிஞர் என்ற மாயக்கருத்துப் பிடியினின்றும் விடு பட்டு இந்நாட்டுக்கே உரித்தான கலை இலக்கிய மரபுகளை ஆயவும், பேணவும், திறமையான புலழை மிக்க வாழும் மூத்த தமிழறிஞரைக் கெளரவிக்கவும் கூடிய நிலை உருவா கியது. இத்தகைய ஒரு தொடக்கம், பேராசிரியரின் வாழ்

நாளிலே பண்டிதமணிக்கு இலங்கைப் பல்கலைக் கழகம், ஆளுநர் சபைமூலம் கெளரவ கலாநிதிப் பட்டம் அளிப்பது வரைக்கும் சென்றமை ஒவ்வொரு தமிழ் மகனும் நின்ைந்து பெருமைகொள்ளக்கூடிய விடயமாகும்.
* இந்து நாகரிகம் ' என்ற பாடத்தை வெறுமனே உயர் கலை மாணவருக்கு அறிமுகப்படுத்தியதுடன் நிற்காது பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப்பகுதியாக்கியமை பேராசிரி யரின் ஒப்பற்ற சாதனையாகும். ஆரம்பத்தில் இந்து கலாச் சார பாடத்தில் திறமைச் சித்திபெற்ருேர், பல்கலைக்கழ கத்தில் தொடர்ந்து பயில முடியா நிலை பேராதனைப் பல் கலைக்கழகத்தில் ஏற்பட்டபொழுது எதிர்ப்பு இயக் கம் ஒன்றினை மாணவர் அடியாக உருவாக்கி பராளுமன்றம் வரை அதனை எதிரொலிக்கச் செய்து அதன் விளைவாக, இன்று இந்து கலாச்சாரத்தினை பல்கலைக்கழக மட்டத்தில் மேலோங் கச்செய்தார். w

Page 14
கல்வியும் அதனுேடு தொடர்புடைய பணியும்
1956ம் ஆண்டின் பின் மாணவர்கள் கல்வி எம்மொழி யில் அமையவேண்டும் என்ற கேள்வி உதயமாகி சிங்கள மக்கள் சிங்களம் என்று தீர்மானித்ததுபோல தமிழ் மக்கள் தம் கல்வியை தமிழ்ப் மொழியில்தான் கற்கவேண்டும்ென்று கூறியபொழுது பல தமிழ்ப் பேராசிரியர்கள் நையாண்டி செய்து இடர்களை உண்டுபண்ணினர். இந்நிலையை மாற்றித் தமிழ் மக்கள் கல்வி தமிழில் நடைபெறும் என்று உறுதி கூறி அதற்கான வழிவகைகளை செய்யத் தலைப்பட்டார்.
விஞ்ஞானம் தாய்மொழியில் வளர்ந்தாற்ருன் மக்கள் வாழ்வு மேம்படும், தாய்மொழியில் கல்வி கற்கும் மாண னுக்கு விடயங்கள் புரியும் தன்மையும் கிரகித்துக்கொள்ளும் தன்மையும் அதிகப்படுவதோடு அதனுரடாகப் பொதுப்பட

- 23 -
மக்கள் அறிவு வளம்பெற அதிகமான வாய்ப்பு ஏற்படும் என்பதை நன்குணர்ந்து, விஞ்ஞான மாணவர்கள் பயன் கொள்ளுமாறு ஒரு ஆரோக்கியமான அறிவுச் சூழலை உரு வாக்க விழைந்தார்.
இவ்வேளையில் பேர்ாசிரியர் பல்கலைக்கழக மாணவர் களையும் இளைஞர்களையும் நோக்கி எறிந்த கேள்விக்கணைகள் காத்திரமானவை.
1. நீங்கள் உங்கள் சக மாணவர்களுக்கு செய்யக் கூடிய உதவி என்ன ?
2. விஞ்ஞானம், கலை கற்கும் நீங்கள் மக்களுக்காற் றக்கூடிய தொண்டு என்ன?
3. உங்களால் தமிழ்ச் சமூகமும், இளைஞர்களும், அறி வியலும் ஏற்றம் பெறுமா ?
இக்கேள்விகள் மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய விழிப் புணர்வையும் சமுதாயத்தை அளாவிய இயக்கத்திற்கான தேவையையும் உருவாக்கியது. அதன் விளைவாக மாணவர் கள் தம் சகபாடிகளின் நன்மையையும், குறிப்பாக இனத் தின் நன்மையையும் கருதி ஒரு இயக்கத்தை உருவாக்கினர். இவ்வியக்கம், “ தமிழ் இளைஞன் ' என்ற கலை விஞ்ஞான ஏடு ஒன்றினை வெளியிடத்தொடங்கியது. இவ்வேட்டின் தாக்கம் தமிழ் மாணவர்களின் திறமையினை வெகுவாக வெளிக்கொணர வழி சமைத்தது. பலகாத்திரமான அறி வியல் விடயங்கள் எளிய தூய தமிழில் எழுதி வெளியிட் டமை மாணவருக்குப் பெரிதும் பயன்படுவதாயிற்று. இதன் விளைவு இவ்வசையில் மிகவும் பாரதூரமான கல்விக் கொள் கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ் மாணவர்கள் தமது இயற்கையான நுண்ணுணர்வு, விவேகம் இவற்றின லும் தம் ஆசிரியர்களின் வழிகாட்டலினுலும் அதிதிறமை யாக தேர்வுகளை எதிர்நோக்கி சித்தியெய்தத் தொடங்கினர்.

Page 15
--س 24 سے
தமிழ் மாணவர்களின் சிறந்த பரீட்சை முடிவுகள் பல் கலைக்கழக நுழைவில் ஒரு விகிதாசார அமைப்பு வேண்டு மென்ற கோரிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக் கியது. இதற்கு அநுசரணையாக, ஒரு சிலர், பேராசிரியர் தமிழ் மாணவருக்கு உதவும் வகையில் “ தமிழ் இளைஞன் " மூலம் உதவுகிருர் என்று பொய்யான புனைந்துரையை கட் டவிழ்த்துவிட்டனர். இக்கூற்று எக்காலத்தும் நிரூபிக்கப் படவில்லை. இந்நிலையில் தாம் வகித்த கணித பரீட்சகர் பதவி கேள்விக்குரியதாகி விட்டமையை உணர்ந்த பேரா சிரியர் அப்பதவியை எவ்வித தயக்கமும் இன்றி மலர்ந்த முகத்துடன் உதறித்தள்ளினர்.
ஆயினும் தாம் மேற்கொண்ட தாய்மொழி மூலம் விஞ் ஞானக் கல்வி வளர்ச்சி, திக்கற்ற தமிழ் மாணவர்கட்கு வழிகாட்டல் ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் அயராது தம்பணியினைச் செய்தார். இலங்கைக் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தினல் தமிழ் மாணவர்கள் பாதிக்கப் பெற்றமையையும் திறமைக்கு இடமளிக்கப்படாமையினல் நாடு எதிர்நோக்கவுள்ள தீமைகளையும் பேராசிரியர் சந்தர்ப் பம் ஏற்பட்டபொழுதெல்லாம் வெளிப்படையாகக் கண்டிக் கவும் கூடத் தயங்கவில்லை. "தீமையைக் கண்டு பொங்கு வாய்' என்ற பாரதியின் வாசகத்திற்கு இலக்கணமாய் பேராசிரியர் திகழ்ந்தார். மாணவர் பிரச்சினை வேறு திசை யிற் திரும்பவே மாணவர்களால் உருவாகிய ‘தமிழ்இளைஞன்” ஏடும் திசை திரும்பி அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக * தமிழ் இளைஞன்” அறி வியல் ஏடு ஒரு குறுகிய ஆயுளில் முடிவடைந்தது.
இடர்களையும் தேக்கங்களையும் பலமுறை சந்தித்து வெற்றி கண்ட பேராசிரியரின் சிந்தனை ஒரு சிலகால இடை வெளியின் பின் மறுபடியும் செயலாற்றத் தொடங்கியது. முன்பு வளாக மாணவர்களாக இருந்த பலர் பல துறை யிலும் பங்குகொள்ளத் தொடங்கினர். இந்நிலையில் தமிழ்

- 25,--
இளஞனுக்கு பிறகு 'ஊற்று' என்ற விஞ்ஞான ஏடு பல்கலைக்கழக இவகம்.விரிவுரையாளர்கள்ேயும்."கனகசபாபதி, சகாப்தம் உருவாக்கிய இளம்செயல்வீரர்களையும் கொண்டு: மலரத் தொடங்கியது. இவ்ஊற்று அரசியல் எல்லைகளைக் கடந்து மக்கள்: அறிவியல். சேவையையே முக்கியமாகக் களுதவேண்டுமென்று. பேராசிரியர் பெரிதும். விளைந்தார்.
ஊற்று ஒரு வருடகாலப் பிரசுரப்பணி செய்து தன்ன்ே நிலைப்படுத்திய பின் பொருளாதார சமூக, கலை, கலாச்சார துறைகளில் வழிகாட்டும் நிறுவனமாக விரிவுபடவேண் டுமென்றும் நாட்டிலுள்ள மாணவர்கள் அறிஞர்கள் கல்வி மான்கள் தொழில்' விற்பூன்னர்கள் மற்றும், பொதுமக்கள் எல்லோரையும் கொண்டு நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு, சமூக கலை கல்வி பிற துறை மறுமலர்ச்சிக்கு வழி சமைக்க இயங்கவேண்டுமென்று நாளும் விழைந்தம் பெரிய்வர் ஊற் றுக்கும், மக்களுக்கும். புதிய சிந்தன்ைக் கோணம் ஒன்றினைச் சமர்ப்பித்தார் இச்சிந்தனேக்கு உருவம் கொடுக்கும் பணியில் பலதுறை அறிஞர்களையும் பேராசிரியர்களேயும்.மற்றும்செயல் திறன்கொண்ட இளைஞர்கள்ையும், செயல்படி ஊக்குவித்து, ஊற்றில் களம் அமைத்தார் யாழ்ப்பாணத்தின் பல அடிப் படைப் பிரச்சனைகள் பற்றி? "ஊற்று" ஆராய்ந்து திட்டம் வகுத்தபொழுது நன்னீர்ப்பிர்ச்சனைக்கு பேராசிரியர் குளங் களே ஆழமாக்கும் திட்டத்திற்கு “ஊற்று நிறுவனத்தை யும் யாழ், ப்ேராதன்ை" வளாக" மாணவர்கள்ேயும் மற்றும் நிறுவனங்களேயும் பாடிசாலை. மாணவர்களேயும் ஈடுபடுத்தி இம்முயற்சியில் வெற்றி காண்பதில் பெரிதும் ஆர்வம் காட் டினர். இவ்வகையில் "ஊற்று’ நிறுவனத்தினையும் அதற்கு அடிப்படையான சீரிய, சமூதாய சிந்தனைகளையும், உருவாக் கிச் செயற்திட்டம் வகுப்பதில் பேராசிரியர் பெரும்பங்கு கொண்டு. தலைமைதாங்கி முதுகெலும்பென. உழைத்தார் எனலாம்,
"ஊற்று' நிறுவனம் குறுதியகால வளர்ச்சியில், ஊற்று விஞ்ஞான ஏட்டினை வெளிக்கொணர்ந்ததோடு பல.அறிவியல்

Page 16
-- 26 -
நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரச் செய்தது. விவசாய தொழில் நிலையங்களையும் பிற உற்பத்தி தாபனங் களையும் உருவாக்குவதற்கு அறிவு நல்கி பணிபுரிந்துள்ளது. வாழ்வில் பொருளாதார நிலையில் தாழ்ந்த மட்டத்தில் வாழ்ந்த சில மக்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்தம் வாழ்வில் மலர்ச்சிகாண உழைக்கிறது. இத்தகைய பணி களுக்கெல்லாம் பேராசிரியரின் எண்ணங்கள் அடிநாதமாக வுள்ளன. 4.
யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் பேராசிரியரும்
பேராசிரியர், பல்கலைக்கழகமொன்று தமிழ் மக்கள் மத்தி யில் உருவாவது அவசியம் என்பதைத் தெளிவாக உணர்ந்து அதனைத் தெளிவாக மற்றவர்கட்கு உணர்த்தியும் வந்துள் ளார். யாழ்ப்பாணத்திற் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பொழுது, கல்விமான்களின் மற்றும் மாணவர்கள், பொது மக்கள் ஆகியோரின் அன்புக் கட்டளைக்கமைய யாழ் வளாக விஞ்ஞான பீடத்தினை உருவாக்கத் தன் உயிரினுமினிய குறிஞ்சிக் குமரன் கோவிற் சூழலையும் விட்டு பேராதனை பினின்றும் யாழ்ப்பாணம் வந்தார். விஞ்ஞானபீடம் எவ் வாறு இயங்கவேண்டும்?, அதனல் யாழ்ப்பாணப் பகுதியும் மாணவர்களும் பொதுமக்களும் எவ்வாறு பயன்பெறலாம் என்பதனையும் சிந்தித்துச் செயலாற்றினர்.
உலகின் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், ஒவ்வொரு துறையைச் சிறந்த துறையாகக் கட்டி வளர்த்து அதன் மூலம் பெருமை பெறுகின்றது. இது போலவே யாழ் வளா கம், மிக முக்கியமான துறைகளை உருவாக்கவேண்டுமென அயராது உழைத்தார். தமது துறையாகிய கணிதத்துறையை தனித்துறையாக இயங்காது புள்ளிவிபரத்துறைக்கு முதன்மை கொடுத்து இத்துறை உலகிலுள்ள பல்கலைக்கழகங்களோடு

- 27 -
ஒப்ப அமையவேண்டும் என்பதற்காகப் பல பணிகள் செய் தார்.
யாழ் விஞ்ஞானபீடத்தின் பிற துறைகளும், அப்பிரதேச முன்னேற்றத்திற்கு வழிசமைக்கக்கூடிய அடிப்படைப்பிரச் சினைகளோடு அணைந்து, கல்வியையும் ஆராய்ச்சியினையும் மேற்கொள்ளல் அவசியமென்பதனையும் உணர்த்திவந்தார். விலங்கியல், கடல் வாழ் விலங்குகளோடு தொடர்புடைய தாக அமைந்து, அவற்றின் பயன், விருத்தி, அறுவடை ஆகிய துறைகளையும், தாவரவியல், விவசாயத் தொடர்பு பற்றி சிறப்பு நோக்குடையதாயும், பொருளியல் சிறிய கைத் தொழில் கமத்தொழிற் தொடர்புடனும், நுணுகியும் அணு கியும் வளர்ந்து மக்கள் வாழ்வினை வளப்படுத்தும் பங்கினை ஏற்கவேண்டுமென்றும் கருதினர்.
பொருளாதார அபிவிருத்தித் துறையின் அவசியம்
நாட்டின் பொருளாதாரத் துறை எவ்வாறு அமைய வேண்டும் ? நாட்டிலுள்ள மூல வளங்கள் என்ன ? எவ்வாறு பலன் பெறலாம் ? இதற்குத் தொழில் வாய்ப்புக்கள் எவ்வாறு அமையும் ? நாட்டிற்கு எவ்வித பயன்கள் உண்டாகும் ? இவைபற்றிய அறிவை உருவாக்கவும் பரப்பவும் திட்டங்களை உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்த நிறுவனங்களையும் பொதுமக்களையும் வழிப்படுத்த ஒரு அமைப்பினை யாழ் வளா கத்தில் உருவாக்கவேண்டிய அவசியத்தினைப் பேராசிரியர் உணர்ந்து திட்டங்களையும் தீட்டத் தொடங்கியிருந்தார். இப்பகுதி, பல விஞ்ஞானப் பகுதிகளின் தொடர்புடைய தாயும் பொருளியல், புவியியல் மற்றும் கணித புள்ளி விபர வியல் துறைகளைத் தொடர்புகொண்டு இயங்கும் தன்மை படைத்து உருவாக வெண்டுமென்று பலநாளும் சருத்துத் தெரிவித்துள்ளார். இச்சிந்தனை செயற்பட்டால், பொருளா தார மேம்பாட்டுக்கு ஒரு நிலையான வழி சமைக்கப்படும்.

Page 17
سكس- 28 سسس
பல்கலைக் கழகங்களின் பணிகளில் ஒன்ருய பிரதேச அபிவிருத்திக்கு வழிவகுத்திருக்கக்கூடியதோடு தொழில் மற் றும் பிற அபிவிருத்திகளுக்கு திட்டமிட்டமுறையில் ஒரு நெறி முறையினை உருவாக்கும். இப்பாரிய திட்டம் இரு கோணங்களில் அணுகப்படவேண்டும் என்பதனை உணர்ந்து பேராசிரியர் 'ஊற்றினையும்" இத்துறையில் உழைக்க ஊக் கம் தந்தார். பெரியவர் இன்று இல்லாதிருப்பினும் இச் சிந்தனைகள் செயலுருவம்பெற்று, மக்கள் மேம்பாட்டுக்கு அரணுகவேண்டும். யாழ் வளாகத்தில் “அபிவிருத்திப்பீடம்’ (Department of Development Studies) dojourt diasiuGli Brait வெகு தூரத்தில் இல்லை என்று நம்பும் நாம், இத்துறை யாழ் வளாகத்திற்கும், கல்வித்துறைக்கும் ஒரு புதிய நோக் கைக் கொடுத்து கல்விமான்களையும், உற்பத்தியாளர்களையும் மற்றும் பொதுமக்களையும், வணிகமக்களையும் இணைத்து நாட்டு வளர்ச்சிக்கு உதவும் என நம்பலாம்.
இன்றைய கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை ஆரா ய்ந்த பேராசிரியர் தமிழ் மக்கள் கல்விக்குத் தீர்வு காணு வதற்கு இரு வழிகளைப் பற்றித் திடமாக நம்பிக்கை கொண் டிருந்தார்.
1. கல்விக் கொள்கை பிரதேச ரீதியாக்கப்பட்டு, பிர தேச பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவேண்டும்.
2. பல்கலைக்கழக அனுமதி அவ்வப்பிரதேச பல்கலைக் கழகச் சபையிடமே கையளிக்கப்பட்டு மாணவர் அனுமதி யிற் திறமைக்கு இடமளிக்சப்படவேண்டும்.
இக்கொள்கை கட்ைப்பிடிக்கப்பட்டால், தமிழ் மாண வர்களிடையேயுள்ள உயர் கல்விப் பிரச்சினை தீர்க்கப்பட
லாம்.
உயர்ந்த இலட்சியங்களையும், சிந்தனைத் தெளிவையும், செயலாற்றும் திறனையும் பெற்றிருந்த பேராசிரியர் இளம்

一29一
தலைமுறையினரின் நலன் கருதி மாணவர்கட்கும், தான் பிறந்த மண்ணுக்கும் புதிய சிந்தனையையும், நெறி முறை யினையும் தரும்பொருட்டு உழைக்கத்தொடங்கி, அத்திவார மிட்டு மற்ற வேலைகளை ஆயத்தம்செய்த காலையில், நீ "மாத் திரம் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால் கட்டி வளர்த்த இளந் தலைமுறைக்கு வேலையில்லாது போய்விடும்” என்று கருதிப்போலும் குறிஞ்சிக் குமரவேள் அவரைத் தன்னிடம் அழைத்துக்கொண்டான்.
தலைவர்கள் பலவிதம். முன்னின்று நடத்தும் தலைவர்கள் பலர்; தொண்டர்களுக்கு தொண்டு செய்து அவர் தம் தலை வணுய் இருப்போர் சிலர். பேராசிரியர் தொண்டர்கட்குத் தொண்டனுய் தலைமைதாங்கியவர். அவர் செய்த தொண்டு கள் ஊனையும் உயிரையும் உருக்கும். காந்தியடிகளின் எளிய வாழ்க்கை முறையைப் பேராசிரியர் வாழ்ந்து காட்டினர். "பிரார்த்தனையாலும் இறைவன் திருவருள் கடாட்சத்தாலும் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை. எவ்வித இடரும் பிரார்த் தனையின் முன் துகளாகிவிடும்’ என்று காந்தியடிகள் கூறு வார்கள். பேராசிரியரின் வாழ்வில் பல எதிர்ச்சக்திகள், ஆலகால விடம் போன்ற பல பிரச்சினைகள்! இவற்றை யெல்லாம் புன்னகையுடன் எதிர் வெற்றி கண்டாரெனில் அதன் இரகசியம் அவர் தம் வாழ்விற் கைகொண்ட அமைதி நிறைந்த தூய்மையான இறை பக்தியேயாகும். “கருமம் செய்; பலனைப் பகவானுக்கே விட்டுவிடு' என்ற கர்மயோகத் தத்துவமே அவர் வாழ்வு. இத் தத்துவக் கடைப்பிடிப்பே பேராசிரியர் களங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடியதன் இரகசியம்.
பேராசிரியர், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்த தொண்டு காவியம் காணுவரலாறு. சிறிய மனிதரான லும் இமயம் ஒப்பவர். குணம் எனும் குன்றேறி நின் ருேன். தன்னை எதிர்ப்பவர்களையும் சிரிப்பால், அன்பால், தொண்டாற் கட்டி அடிமை கொண்ட சான்றேன். என் றும் பின்னலிருந்து இயக்கும் தலைவன். சாவிலும் கூட

Page 18
- 30 -
ஒழிந்து நின்றே, யாருக்கும் எதுவும் கூருமல், மின்னமல் முழங்காமல் இரகசியமாகத் தன் இலட்சிய நாயகனும் குறிஞ்சிக் குமரனுடன் கூடப்போயினன்.
மாணவரின் சக்தி நல்வழியிற் பயன்பட்டதற்கு பல்கலைக் கழக முருகன் கோவிலே சிறந்ததோர் எடுத் துக்காட்டு. இன்று பல்கலைக் கழகத்தில் மணவர்கள் செய்யும் பகிஷ்கரிப்பு மாணவர்களின் சக்தி துஷ்பிர யோகம் செய்யப்படுவதற்கு நல்ல தோர் உதாரணம். சில சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு அவர்கள் இரை யாகித் தங்கள் சக்தியை துஷ்பிரயோகம் செய்து பல இன்னல் விளைவிக்கிருர்கள். இது மிக்க வருத்தத்திற் கிடமானது. மாணவர்கள் தமது வாழ்க்கையில் வெற்றி காண வேண்டுமானல் தம்மிடமுள்ள அபாரசக்திகளை நல்வழிகளிற் செலுத்த வேண்டும்.
- பேராசிரியர் கனகசபாபதி