கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலை மகிழ்நன்

Page 1


Page 2

கலைமகிழ்நன்
பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்க்கைப்பணி
த. சண்முகசுந்தரம்
வெளியீடு: மணிவிழாக் கழகம் தெல்லிப்பழை

Page 3
முதற் பதிப்பு : மே 1984
விற்பனை : " மிகவம் " - மதிக்கலைஞர் வட்டம்
குரும்பசிட்டி, தெல்லிப்பழை .
விலை 3 ரூபா பத்து
எல்லா உரிமையும் ஆசிரியருக்கு
Prof. S. Withian anthan
A Life of Service
by
T. SAN MUGASUNTHARAM, B. A. (CEY.) DIP-IN-ED. (CEY.)
Printers i Kugan Press, Tellippalai, Sri Lanka.
All rights reserved

6AauւD Այւb
* 52, IDfbs வாழ்த்துரை
யாழ்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் திரு. சு வித்தியானந்தன் அவர்களுக்கு எடுக்கும் மணி விழாவும்,
* கலைமகிழ்நன் ' என்ற நூலின் வெளியீட்டு விழாவும் ஒருங்கு நடைபெறுவது மகிழ்ச்சிமேல் மகிழ்ச்சி தருவதாகும்.
உபவேந்தர் அவர்களின் பிறந்த கமான வீமன்கா மத்தில், அவரின் முன்னேர்களால் நிறுவப்பெற்ற மகாவித்தியாலயத்தில், அன்னருக்கு மணிவிழா எடுப் பது வெகுவெகு பொருத்தம்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் " என்ற அரு மைத் திருக்குறள்தான், ஞாபகத்திற்கு வருகிறது
இவ்விழாவில் வெளியிடப்படும் " கலைமகிழ்நன் என்னும் நூலை இயற்றியவர், உபவேந்தர் அவர்க ளின் மாணவரும், பிரபல எழுத்தாளரும், பிரசித்தி பெற்ற மகாஜனக் கல்லூரியின் அதிபருமான திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் என்றறியும்போது பேரு வகை பிறக்கின்றது.
பேராசிரியர், உபவேந்தர், கலாநிதி சுப்பிரமணி யம் வித்தியானந்தன் அவர்களின் வாழ்க்கை வர லாற்றைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணுடியே

Page 4
- ii —
* கலைமகிழ்நன் ". ஆசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் பயன்தரும் நூல் கலைமகிழ்நன்.
கலைமகிழ்நனில் உள்ள அருமையும் பெருமையும் வாய்ந்த கருத்துக்கள், கல்விமான்களுக்கு நல் விருந்து.
கிடைத் தற்கரியதொரு பொக்கிஷசாலை கலை மகிழ்நன்.
அருமந்த
கலைமகிழ்நனை
வெளியிடும்
தாபனத்துக்கு
நன்றிமேல் நன்றி
உபவேந்தர் அவர்களையும், நூலையும், நூலாசிரி யரையும் பெரிதும் பாராட்டுவோமாக.
கலாசாலே வீதி, திருநெல்வேலி, இலக்கிய கல்ாநிதி யாழ்ப்பாணம் . பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே
01-05-84

வெளியீட்டுரை
யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா சி ரியர் சுப் பிரமணியம் வித்தியானந்தனின் வாழ்க்கைப்பணி தமிழ்கூறும் நல்லுலகின் வரலாற் றில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. ஈழ வியல், தமி ழியல் என்பனவற்றின் ஆராய்ச்சி வழிகாட்டியாக இவர் அமைந்துள்ளார். இன்று இவரின் வாழ்க்கைப் பணி ஆராய்ச்சிப் பெரும்பொருளாகிவிட்டது; ஆகவே அன்னரின் அறுபதாவது ஆண்டுவிழாவின்போது இப் பணியைச் சற்று நோக்கதல் சாலவும் பொருந்தும். பேராசிரியரின் பிறந்த ஊரான தெல்லிப் பழையில் அவர் முகாமையாளராக இருந்த வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் மணிவிழாவை நன்கு நடத்தவும் இந்த நூலை அவ்வேளையில் வெளியிடவும் தீர்மானித் தோம். நூலை எழுதும் பொறுப்புப் பேராசிரியரின் முதன் மாணுக்கரில் ஒருவரான தெல்லிப்பழை மகா ஜக்ை கல்லூரி அதிபர் த. சண்முகசுந்தரம் அவர்க ளிடம் கொடுபட்டது. இதனைச் செவ்வனே சுருக்கி எழுதித்தந்த அவருக்கு எமது நன்றி. இதற்குப் பாராட்டுரை வழங்கிய சித்தாந்த சாகரம், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். மணிவிழாச் செவ் வனே நடைபெற உதவிய வீமன்காமம் மகாவித்தி யாலய அதிபர், ஆசிரியர், மாணவருக்கும், பதிப்பு வேலையை மேற்பார்வை செய்த எம் உபதலைவர் திரு நா. சுப்பிரமணியத்திற்கும் எம் உளப்பூர்வ மான நன்றி. இந்த நூலை அச்சிட்ட குகன் அச்சகத்

Page 5
- iv -
தினருக்கும் எம் நன்றி உரித்தாகும். எமது பணி சிறப் புற அமைந்த ஏனேய அன்பர்களுக்கும் நன்றி கூறு கின்ருேம்.
மணிவிழாச் செயற்குழு :
தலைவர் : திரு. த. சண்முகசுந்தரம்
அதிபர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை
துணைத் தலைவர்கள் :
திரு. ஆ. சிவநேசச்செல்வன் பிரதம ஆசிரியர் ' வீரகேசரி', கொழும்பு திரு. நா. சுப்பிரமணியம் விரிவுரையாளர், தமிழ்த்துறை,
- யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகம்
Lawas to. Umm al 357 95%aal b உதவி ஆசிரியர் “ ஈழநாடு *, யாழ்ப்பாணம் திரு. மு. சிவராசா அதிபர், வீமன்காமம் மகாவித்தியாலயம் தெல்லிப்பழை
செயலாளர் :
திரு. வேல் அமுதலிங்கர் தலைவர், " மகவம் ', குரும்பசிட்டி,
தெல்லிப்பழை
பொருளாளர் :
திருமதி கோகிலா மகேந்திரன் ஆசிரியர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை
இவர்களுக்கும் எம் நன்றி.
தெல்லிப்பழை பேராசிரியர் வித்தியானந்தனின்
இலங்கை மணிவிழாக் கழகத்தினர்
8-05-84

யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் கலைமாமணி பேராசிரியர் சு. வித்தியானந்தன்

Page 6
ப்பாணத்துப்
யாழி
வேந்தர்
னே
து பேராசிரிய
击
 
 

யானந்தன்
லேக்கழகத்
அணி
பல்க
கலைமாம
* கி
E

Page 7

கலைமகிழ்நன் பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்க்கைப் பணி
த, சண்முகசுந்தரம்
* மலையை முழுமையாகக் காணத் தூரம் வேண் டும். அதேபோன்று வரலாற்று நிகழ்ச்சியை மதிப் பிடக் காலம் வேண்டும் " என்பர் அறிஞர். இக் கருத்துப் பெரியார் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மதிப்பிடவும் பொருந்தும். இரு ந் தும் வரலாற்று நிகழ்ச்சி சிலவற்றையும் பெரியோர் சிலர் வாழ்க்கை வரலாற்றையும் இலகுவாக மதிப்பிடலாம்; ஏனெ னில் இவை மலையின் பெருமுடிபோல உய ர் ந் து நிமிர்ந்து நிற்கும்; நிற்பதுமல்லாமல் வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடித்துவிடும். யாழ்ப்பாணத் துப் பல்கலைக்கழகத்து மு த லாவது துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் தமிழி யலில் நிலையான இடம் பெற்றுவிட்டார். இதில் ஐய மில்லை. இவரின் வாழ்க்கை வரலாறும் தமிழியற் புலமையும் இன்று தலைதூக்கி நிற்கின்றன இக் காலத் துத் தமிழியல் வளர்ச்சியில், மறுமலர்ச்சியில் ஏற் பட்ட திருப்பம் பலவும் இவரால் தோற்றுவிக்கப் Ull-60.
வித்தியானந்தனின் பலதரப்பட்ட தமிழ்ப் பணி யையும் மதிப்பிடுவது பெரும் பொறுப்பான அலு வல். பெரும் பொறுப்பான அலு வ லா க இருந்த போதும் அவரின் மணி விழாவின் போது இதனைத் தொடக்கி வைப்பது நன்று. இந்த முயற்சி இனிவரப்

Page 8
- 2 -
போகின்ற ஆய்விற்கு வழிகாட்டியாக அமையும் . அது மட்டன்று. இக்காலத்தவருக்கும் இந்த ஆய்வு நல்ல பயன்தரும் . இப்படியான பணி பெரும் இன்பத்தை யும் தரும். வித்தியானந்தனின் வாழ்க்கை வரலாறு சமகாலத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான கிளை. அத்துணைத் தனித்தன்மை நிரம்பியது அது. சமகாலத் தமிழ் வளர்ச்சி, கல்வி, திராவிட இயல் ஆராய்ச்சி, உயர் கல்வி அமைபபு, உயர்கல்வி நிருவா கம், கலை மறுமலர்ச்சி போன்றவை பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்க்கையோடு அரசும் வேம்பும் போலப் பின்னிப் பிணைந்து வளர்ந்துள்ளன. அதுமட் டன்று. இப்பேராசானின் நற்பணி தமிழ்கூறும் நல் லுலகத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது தமிழ் கூறும் நல்லுலகம் பேராசிரியரை நன்கு அறியும் ! அறிந்து போற்றுகின்றது. இவரின் தனிப் பெருமைக் குக் காரணமாக அமைந்துள்ளமை ஆழ்ந்த புலமை, நற்பண்பு ஆற்றல் எவருக்கும் உதவும் தனித்தன்மை எனலாம். இவர் சிறந்த விரிவுரையாளர்; தலைசிறந்த ஆராய்ச்சியாளர்; ஆராய்ச்சியாளருக்கு வழிகாட்டி: ஆராய்ச்சி அரங்கில் எப்பொழுதும் திகழும் பெரும் புலவர். மக்கள் கலைச் செல்வத்தின் ஒப்பற்ற பாது காவலர். அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி முயற்சிக ளின் வழிகாட்டி, ஆக்க இலக்கியம் படைப்போரை எப்போதும் ஊக்குவிப்பவர்; நிகரற்ற ஆய்வாளர்; பல்கலைக்கழகச் சமூகவாழ்வை நெறிப்படுத்தும் வழி காட்டி. பொது ம க் க ளின் வாழ்க்கையிலே நன்கு கலந்து அவர்களின் வாழ்வை வளம்படுத்தும் பெரி யார். வானெலியிலும் பொது மேடையிலும் நன்கு பேசும் ஆற்றல் படைத்தவர். தெளிந்த சிந்தனையா ளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு அரங்கிலே இவரின் எழுத்தும் கருத்தும் பெரும் தாக்கத்தையும் துலக்கத் தையும் ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டன்று. இவர் சிறந்த நண்பர் , நல்ல பண்பாளர், சுருங்கச் சொன் ஞல் இவர் முழுமையான மனிதர் எனலாம்:

حے 3 سے
நல்ல குடும்பம் :
பேரறிவு, ஆற்றல், நற்பண்பு எல்லாம் இவருக்கு எப்படி வந்தன என்பதை நோக்கலாம்: மனிதனைப் பரம்பரை உருவாக்குகின்றது என்பர் ஒரு சாரார். இல்லை. மனிதனைச் சூழல் உருவாக்குகின்றது என்பர் மற்ருெரு சாரார். கடவுளை நம்புவோரோ நல்ல மனிதனைத் தனக்கு வேண்டிய வேண்டிய இடத்துக் கடவுளே உருவாக்குகின்ருர் என்பர். இந்த மூன்று கருத்து ம் வித்தியானந்தனைப் பொறுத்தவரையில் பொருந்தும். இவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர். தமிழியல் வளர்ச்சிக் காகக் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பர். வித்தி யானந்தன் மாவிட்டபுரம் முருகனின் அடிமை ஆண்டு தோறும் இவரைத் தேர்த் திருவிழாத் தினத்தன்று காணவேண்டுமானுல் வீமன்காமம் மகா வித்தியால யம் என்னும் கலைக்கோயிலுக்குத் தான் செல்ல வேண் டும். பல்கலைக்கழகத்து மாணவருக்கு அறிவை வழங் பவர் இவர். தேர்த் திருவிழா நாளன்று முருகனடி யாருக்குச் சோறு வழங்கும் பணியில் ஈடுபட்டிருப் பார். மாவை முருகன் கோயிலில் பேராசிரியரின் குடும்பத்தின் நினைவாக அமைபவை இரண்டு திருச் சின்னங்கள். இன்று எழும்புகின்ற கிழக்குவாயில் புதிய கோபுரம் . இரண்டு அதற்குப் பக்கத்தில் அமைந்துள்ள உடையார் மடம். இந்த மடத்திலிருந்து பார்த்தால் வீமன்காமம் மகா வித்தியாலயம்  ெத ரி யும். இது கலைக்கோயில். இந்த மூன்றையும் கட்டி எழுப்பிய பெருமை பேராசிரியரின் முன்னே ரைச் சே ரு ம். மாவிட்டபுரம் முருகன் கோயிலில் இருந்து வடக்கே நெடுஞ்சாலையில் ஒரு கல் தூரத்திலிருக்கின்றது மற் றைய கலைக்கோயில் காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரி. இக்கல்லூரியை அமைக்க முன்னர், உள்ளே காளிகோயிலை நிறுவினர் இக்கல்லூரியை நிறுவிய குருநாத உடையார் . இன்று இந்தச் சின்னங்கள் -

Page 9
- 4 -
கோபுரம், மடம், கல்லூரி இரண்டு-பேராசிரியரின் குடும்பத்தின் நினைவாக அமைந்துள்ளன. வீமன்காமம் மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக இருந்த Sif Gl ig m &Afluf.
பேராசிரியரின் தந்தையார் வழக்குரைஞர் சின் னத்தம்பி சுப்பிரமணியம். இந்தச் சின்னத் தம்பிதான் வீமன் காமம் தமிழ்ப் பாடசாலையை மிகவும் சிறிய அளவில் அயராது உழைத்து நிறுவினர். பேராசிரிய ரின் பேரனுன சி ன் ன த் த ம் பி, ஆறுமுகநாவலர் தொடக்கி வைத்த மறுமலர்ச்சி இயக்கத்தினல் கவ ரப்பட்டவர். ஆகவே தமிழ்க் கல்வி வளர்ச்சியில் ஈடு பட்டார். இந்தச் சின்னத் தம்பியின் உறவினரே காங் கேசன்துறை நடேசுவராக் கல்லூரியையும் நிறுவினர் என்பது இக்கே குறிப்பிடவேண்டியது. தந்தையார் தொடக்கி வைத்த சிறிய பாடசாலையாம் நன் மரத்தை ஓங்கி வளரச் செய்யும் பெரும் பணியில் சட்டத்தரணி சுப்பிரமணியம் முழுமூச்சாக ஈடுபட்டார். இதுவே இன்று வீமன்காமம் மகா வித்தியாலயமாகத் திகழ் கின்றது. இந்த இளம் சட்டத்தரணி நல்ல விவேகி. எல்லோரிடமும் நன்ருகப் பழகுபவர். ஊரிலே நல்ல செல்வாக்கு உடையவர். ஆகவே " வழக்குக் கட்டு கள் " இவர் வீட்டிலே வந்து குவிந்தன. அத்துடன் தொழில் முறையில் " கருராக நில்லாமல் ” வழக்கா ளிகள் கொடுத்ததை வாங்குவார்.
சட்டத்தரணி சுப்பிரமணியத்திற்கு வழக்குர்ைக் கும் தொழில் இரண்டாவது தொழிலாகவே இருந் தது. முதலாவது தொழில் பாடசாலை வளர்ச்சிக்கு உழைத் த ல், இதனல் சுப்பிரமணியம் குடும்பக் கடமைகளையும் கூடச் சிலவேளை மறந்து உழைப்பார். ஒதுக்கமான இடத்தில் இருந்த சிறிய பாடசாலைக்கு நல்ல வாய்ப்பான இடம் ஒன்றை இவர் தேடினர். மாவிட்டபுரம் முருகன் கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்

- 5 -
தில் பெருஞ்சாலைக்கு அண்மையில் உள்ள நல்ல காணியை வாங்கினர். புதிய கட்டடங்களை அமைத் தார். வீமன்காமம், தமிழ்ப் பாடசாலையைப் புதிய இடத்திற்கு மாற்றினர். சிறந்த முருகனடியா ரான இவர் முருகன் கோயிலுக்கு அண்மையில் கலைக்கோ யிலை அமைத்தார். அமைத்ததுடன் மட்டும் நிற்க வில்லை. மாவை முருகன் கோயில் திருவிழாக் காலங் களில் இக்கல்லூரியில் பெருமளவில் அவியல் நடை பெறும். முருகனடியாருக்குச் சோறு வழங்கப்படும். திரு. சுப்பிரமணியத்தின் உறவினரே பல ஆண்டுக ளாக மாவை முருகன் கோயில் பதினரும் திருவிழா வையும் சிறப்புடன் செய்து வருகின்றனர். புதிய இடத்தில் வீமன்காமம் பாடசாலை நன்கு நடைபெறத் தொடங்கியது. வசதி குறைந்த பிள்ளைகளுக்கு இக் கல்லூரி புகலிடம் ஆயிற்று; ஆனல் சட்டத்தரணி சுப்பிரமணியத்தின் குடும்பவசதி குன்றத் தொடங்கி யது. கல்விக்காக உழைப்பவர் பெரும்பாலும் அகால் மறை வைப் பெறுவர். அத்துடன் " குடும்பப் பொரு ளாதார நெருக்கடி என்னும் சொத்தையே "" தழ் மனைவி மக்களுக்கு விட்டுச் செல்வர். இந்தப் பொது விதிக்குச் சட்டத்தரணி சுப்பிரமணியம் விதிவிலக்கா னவர் அல்லர். இவரின் மறைவு 1944இல் நிகழ்ந்தது;
சட்டத்தரணி சுப்பிரமணியம் தமிழ் மொழியில் பெரும் ஈடுபாடுடையவர். (நொத்தாரிசுக் கடமையை ஏற்பதற்காகத் தமிழைக் கற்றுப் பின்னர் காணி உறுதி எழுதுவதுடன் பலரும் தமிழ்க் கல்வியை நிறுத் திவிடுவதுண்டு; ஆனல் திரு. சுப்பிரமணியம் தமிழை விடாது கற்று வந்தார். இவரின் வாழ்க்கைத் துணை வியாக அமைந்தவர் செல்வி முத்தம்மா சுப்பிரமணி யம். இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்; வளம் படைத்த குடும்பத்திலே தோன்றியவர். இ த ன ல் வசதியான வாழ்க்கையைத் தன் பிறந்த வீட்டிலே நடத்தியவர். இருந்தும் தம் கணவனின் கல்விப்பணி

Page 10
سے 6 سس۔
யாவற்றிற்கும் உறுதுணையாக அமைந்தார். கணவன் பட்ட இன்னல் யாவற்றிலும் தானும் பங்கு கொண் டார். கணவனின் திடீர் மறைவு இந்த அம்மையா ருக்குப் பெ ரும் சோதனையாகியது. தூய வெள்ளை உடையணிந்து சோகமே உருவாகிய இவர் தன் வாழ் வின் இரண்டாவது க ட் டத்  ைத த் தொடங்கினர் இந்த அம்மை யாருக்கு உண்மையில் குடும்பம் இரண்டு. வீட்டிலே பெற்றெடுத்த குழந்தைகள் பதினெருபேர். மற்றக் குடும்பத்தில் - அதாவது வீமன்காமம் பாட சாலையில் - நூற்றுக்கணக்கான குழந்தைகள். இந்த இரண்டு குடும்பத்தையும் நிருவகிப்பது கடினமான அலுவல். பாடசாலை முகாமையாளர் பதவி அந்தக் காலத்திலே நெருப்பைத் தலையிலே சுமப்பது போன்ற செயல். உதவி-நன்கொடைபெறும் யுகம் அது. இந்த இரண்டு குடும்பத்தையும் இவர் எப்படித் தாங்கி நடத்தப்போகிருர் என உற்ருர், உறவினர். ஊரவர், அயலவர் கவலையடைந்ததும் உண்டு. இந்த அறை கூவல் இந்த அம்மையாருக்கு எங்கிருந்தோ அளப்ப சிய வலுவைக் கொண்டு வந்து கொடுத்தது. ஆழ்ந்த மதப்பற்றும் நற்பண்பும் தான் இவருக்கு இந்த வலி மை யை உதவின.
குடும்பத்தில் மூ த் த வர் அம்பிகாபதி. பின்னை நாளில் பொறியியலாளராகக் கடமை புரிந்தவர். தந்தையாரின் அகால மறைவு குடும்பத்திற்கு நிகழ்ந்த பேரிடி எ ன் ப  ைத த் அம்பிகாபதி உணர்ந்தார். இந்த இழப்பை ஈடுசெய்ய அம்பிகாபதி தன்படிப்பை இடையில் நிறித்தினர்; அரசாங்க வேலையில் சேர்ந் தார்; குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்; பாடசா லையைப் பேணி வளர்க்க வேண்டும். எல்லாவற்றிற் கும் மேலாக இயல்பான விவேகம் உடைய தம்பி வித்தியின் பல்கலைக்கழகப் படிப்புத் தடைப்படப்ப டாது. இந்த எண்ணமே தியாக வடிவம் கொண்டது. அம்பிகாபதியில் இளம் வித்தியானந்தனின் கல்விக்கு

- 7 -
உறுதுணையாக அன்னையும் தமையனும் இருந்தனர். பின்னர் வித்தியானந்தன் குடும் பைப் பொறுப்பைத் தமையனுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார். இளமையிலே பெரும் பொறுப்பை ஏற்ற வித்தி யானந்தனின் பண்பு மேலும் வளர்ந்தது. எந்தத் துன்பம் வந்தாலும் பொறுப்பை விட்டுப் புறமுதுகு காட்டி ஒடப்படாது, செய்பவற்றைச் செம்மையா கச் செய்ய வேண்டும், துன்பப்படுபவருக்கு உதவி வேண்டும். ஆறுதல் தேறுதல் சொல்ல வேண்டும் என்பவற்றை இளம் வித்தியானந்தன் தன் வாழ்க்கை என்னும் பல்கலைக்கழகத்திலே கற்ருர் . நற்பண்பு பல வற்றையும் தாய் தந்தையரிடமிருந்து பெற்ருர் வித் தியானந்தன்
தந்தை சுப் பிரமணியத்தின் பண்பை அவர் பிள் ளைகளுக்குச் சூட்டிய பெயரில் இருந்து அறியலாம். அவை அம்பிகாபதி, வித்தியானந்தன், கலாவல்லி, திருநாவுக்கரசு, தயாநிதி, பானுமதி. இந்துமதி, இரதிதேவி, தேவகுஞ்சரபதி, அருணமின் பதி, குண நிதி. இப் பெயர் யாவும் பிறப்பு முறைப்படி இங்கு தரப்படுகின்றன. அம்பிகாபதி தந்தையைப் போல தடுத்தர வயதில் மரணமடைந்தார். மற்றவர் எல்லா ரும் நல்லநிலையில் இருக்கின்றனர். தந்தைதாய் செய்த புண்ணியம் இது என்பர்:
தந்தையார் இட்ட பெயருக்கு ஏற்பவே வித்தி யானந்தனின் வாழ்க்கை அமைந்தது. இவர் தமிழ் வித்தையைக் கற்ருர் அதிலே தனி இன்பம் கண் டார். இந்த இன் பத்  ைத மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுகிருர், தனித்தமிழ் ஆர்வத்தால் உந்தப் பெற்ற வித்தியானந்தன் " கலை மகிழ்நன் " என்ற புனைபெயரில் மறைந்து நின்று கட்டுரை பலவும் எழு தினுர் உண்மையில் இவர் கலையில் ஈடுபட்டு மகிழ்ப வர் மற்றவரையும் மகிழ வைப்பவர் ”

Page 11
கல்விப்பேறு :
1924ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் வித்தியானந்தன் பிறந்தார். இளமை இனிது கழித் தது. உரிய முறைப்படி ஆரம்ப கல்வியைப் பெற்ருர், ஆரம்பக் கல்வி சைவச் சூழலில் நடைபெறவேண்டும் என்பது தந்தையாரின் கண்டிப்பான கருத்து. ஆகவே வீமன்காமம் பாடசாலையிலே சிறுவன் வித்தியானந் தனின் ஏடு தொடக்கும் வைபவம் நடந்தது. இதே பாடசாலைக்குப் பேராசிரியர் வித்தியானந்தன் பின் னர் முகாமையாளராக இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. பின்னர் தெல்லிப்பழை இருமொழிப் பாடசாலையிலும் (இப்போதுள்ள யூனியன் கல்லூரி) 1935 ஆம் ஆண்டு தொடக்கம் 1940 ஆம் ஆண்டு வரையும், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கற்று முன்னேறினர். பல்கலைக்கழகத்திற் புகுமுன்னர் சில மாதங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ருர். 1941 இல் கொழும்பு இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியிலே சேர்ந்தார். இதுவே பின்னர் இலங்கையின் ஒரே ஒரு பல்கலைக்கழகமாக மாறியது. இடைநிலைத் தேர்விற்காக ஆங்கிலம், இலத்தின், வர லாறு, தமிழ் என்னும் பாடங்களைக் கற்றுத் தேறி ரூர் இவர்,
இளம் வித்தியானந்தனின் நெஞ்சிலே தமிழ் என் னும் தாமரையை வளர்த்துவிட்டவர் இவரின் தந் தையார். இந்தத் தாமரைக்குப் பேர் ஊற்றக இருந் தவர் கலையருவி கணபதிப்பிள்ளை. இவர் தான் பிள்ளை நாளில் பேராசிரியராக இருந்த வர். பேராசிரியர் வித்தியானந்தனின் நெஞ்சில் வேறு ஒரு தாமரையும் இடம் பிடித்துக்கொண்டது. அது தான் வாழ்க்கைத் துணைவி கமலாதேவி. மறைந்த தன் தந்தைக்கு நன் நீக்கடன் செய்யும் வகையிலும், கலையருவி கணபதிப் பிள்ளைக்கு உளநிறைவு ஏற்படும் வகையிலும் இளை ஞர் வித்தியானந்தன் தன் கலைமாணிப்பட்டப் படிப்

- 9
பிற்காகச் சிறப்புப் பாடமாகத் தமிழையும் துணைப் பாடமாக இலங்கை இந்திய வரலாற்றையும் தெரிவு செய்தார். வடமொழி ஆரம்பக் கல்வியும் இக்காலத் திலேதான் நிகழ்ந்தது. இளைஞர் வித்தியானந்தனின் செயலைக்கண்டு ஏனைய பட்டதாரி மாணவர் சற்றுத் திகைத்தனர், குடியேற்ற ஆட்சி நிலவிய அக்காலத் தில் தமிழுக்கும் சிங்களத்திற்கும் உரிய இடம் கொடுக் கப்படவில்லை. வீட்டு மொழியாக அங்காடி மொழி யாகவே இவை இருந்தன. பிரித்தானியப் பேரரசு அப்படி எம்மை நடக்கவைத்தது. ஆங்கிலமே செம் மையான மொழி என்ற கருத்து அக்காலம் நிலவி யது. அத்துடன் தமிழ்க்கல்வி சோறு போடாது என நம்மவர் ஏங்கினர். மேல்நாட்டு மொழிகளைக் கற்க லாம் எனக் கிரேக்க இலத்தின் மொழிப் பேராசிரி யர் யே. எல். சி. உறட்டிறிக்கோதன் மாணவனும் வித்தியானந்தனுக்கு யோசனை வழங்கினர். தமிழ் என்னும் தாமரையைத் தான் விரும்புவதாக மாண வன் வித்தியானந்தன் மறு மொ ழி கொடுத்தான் பேராசிரியர் உறட்டிறிக்கோ தலைசிறந்த பத்திரிகை யாளர். இதனுல் இலங்கைத் தேசிய மொழிகளின் மறு மலர்ச்சிப் பின்னணி இவருக்கு நன்கு விளங்கும்; ஆகவே தன் மாணவனுக்கு இப்பெரியார் ஆசி வழங் கிஞர்.
சிறப்புப்பட்டப் படிப்பை மேற்கொண்ட வித்தி யானந்தன் அதில் தேர்ச்சி பெற்ருர், அக்கால் வழக் கப்படி கலைமாணி வித்தியானந்தன் அரசாங்க உத்தி யோகம் தேடிப் போகவில்லை. அரசாங்க உத்தியோக மோகத்திற்கு வித்தியானந்தன் இரையாக மற் பார்த் துக்கொண்டார் கலாநிதி கணபதிப்பிள்ளை. இவரின் ஆசியுடனும் தாய் தமையனின் அன்புக் கட்டளையுட னும் கலைமாணி வித்தியானந்தன் முது மாணி ப் ப டி ப் பை மேற்கொண்டார். 1944 ஆம் ஆண்டு தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரையும் படித்துப்

Page 12
سے 10 سے
பட்டம் பெற்ருர், பட்டம் பெற்றவருக்குப் பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளர் பதவி கிட்டியது. அதனுடன் இவரின் த னி ப் பட் ட வாழ்க்கையிலும் இலங்கையில் நிகழும் தமிழ்க்கல்வி வரலாற்றிலும் புதியதொரு யுகம் தொடங்கியது;
பொதுமக்களின் தொடர்பு :
பேராசிரியர் வித்தியானந்தனின் புலமை , நற் பண்பு ஆகியவற்றை எடுத்து விரித்துக்கூற முன்னர் அவரின் தனிப்பண்பு ஒன்றை இங்கே முதலில் தெரிந் தெடுக்கவேண்டும். அதற்கு அழுத்தமும் தரவேண் டும். பேராசிரியர் வித்தியானந்தன் எந்த ஆராய்ச்சி மாநாட்டிலும், எந்தத் தமிழ்ச் சங்கத்திலும் முதல் வரிசையில் இடம்பெறும் தகைமை உடையவர். பட் டம், பதவி எல்லாம் இவருக்கு மிகவும் இலகுவாகக் கிடைத்தன. பேர் புகழுக்கோ குறைவில்லை; இருந் தும் பேராசிரியர் உள்ளத்திலே விலைமதிக்க முடியாத கோட்பாடு ஒன்று மிளிர்கின்றது. " மக்கள் இல்லா மல் மொழி இல்லை, சால்பு இல்லை, கலை இல்லை, ஆராய்ச்சி இல்லை " என்பதே அந்தக் கோட்பாடு. இதனுல் இவர் எப்போதும் பொதுமக்கள் தொடர்பை வளர்த்து வருகின்ருர், மொழியை, கலையை, சால்பை வெறும் ஆராய்ச்சிப் பொருளாக்கி அவற்றை ஆய் கூடச் சுவர்களுக்குள் மட்டும் வைத்திருக்க இவர் விரும்புவதில்லை. ஆராய்ச்சியாளர் சிலர் மேல்மட்டத் திலிருந்து ஆராய்ச்சி நடத்துவர். இப்படியானவர் பொதுமக்களிடம் இருந்து பிரிந்து திரைந்து வாழத் தலைப்படுவர். அதுமட்டன்று. இந்த மூடக்கொள் கையையிட்டுப் பெருமையுங் கொள்வர். பேராசிரியர் வித்தியானந்தன் என்றுமே மக்களை நன்கு புரிந்து வாழ்பவர். இதிலே பெருமையும் இன்பமும் காண் பவர் பேராசிரியர் வித்தியானந்தனின் இந்த உளப் பாங்கிற்கு ஓரளவு காலாக அமைந்தவர் இலங்கைப்

- l l -
பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார்; பெரும் அளவில் காலாக இருந்தவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை. இதனைத் தயங்காமல் கூறலாம். பேராசிரி யர் கணபதிப்பிள்ளை மறைந்த போது ' என்னை ஆளாக்கிய பெருமகன் " என உள்ளத்தைத் திறந்து தன் நன்றியைச் செலுத்தினர் பேராசிரியர் வித்தி யானந்தன், கற்பிக்கும் ஆற்றல், ஆராய்ச்சித் திறமை, கலைஈடுபாடு என்பவற்றைப் பேராசிரியர் கணபதிப் பிள்ளையிடம் இருந்தே பேராசிரியர் வித்தியானந்தன் பெற்ருர்,
விரிவுரை அரங்கில் :
இளம் வித்தியானந்தனை உதவி விரிவுரையாள ராக நியமிக்கப் பெரும் முயற்சி செய்தவர் பேராசி ரியர் கணபதிப்பிள்ளை. அப்பொழுது பேராசிரியராக வீற்றிருந்தவர் விபுலானந்த அடிகளார். வீற்றிருந் தார் என்ருல் உண்மையில் வீறுடன் இருந்தார் என் பது பொருள். தமிழ் வீறு குறையவில்லை; ஆனல் அவரின் உடல்நல வீறு குறைந்துகொண்டு வந்தது. வித்தியானந்தனின் நியமனத்தை அடிகளாரும் ஆத சித்தார். இதற்குப் பெரும் ஆதரவு வழங்கியவர் பேராசிரியர் உறட்டிறிக்கோ அப்பொழுது தமிழ்த் துறையில் கடமையாற்றியவர் மூவர். பேராசிரியர் விபுலானந்த அடிகளார் இராமகிருட்டிண மடத்துறவி தூய்மையான காவித்தேசிய உடையிலே காட்சி தரு வார். கலாநிதி கணபதிப்பிள்ளை எப்போதும் எளி மையான தேசிய உடையணிந்து வருவார். விரிவுரை யாளர் வி. செல்வநாயகத்தின் தூய வெள்ளை உடை எப்போதும் மடிப்புக் குலையாமலிருக்கும். இந்த மூவ ரும் இளம் வித்தியானந்தனின் நல்லாசிரியர். இந்தத் தமிழ் அரிமாக்கள் இடையே இளம் வித்தியானந்தன் காற்சட்டை, மேற்சட்டை, பட்டதாரிக்குரிய கறுப்பு

Page 13
- 12 -
அங்கி அணிந்து காட்சி தந்தார். " மேல் நாட்டுப் பாணியில் வந்த இந்தப் " பொடியனிடம் " 'கற்க என்ன இருக்கிறது ? இவருக்கு நல்ல தமிழ் தெரி யுமோ? " எனப் பட்டதாரி மாணவர் சிலர் வெளி வெளியாக வினவினர். சிலர் அப்படி வினவாவிட்டா லும் அந்த வினவை உள்ளத்தில் மறைத் து வைத்தி ருந்தனர். " இவரின் விரிவுரை எப்படி அமையும்? ' என ஊகிப்பதில் தமிழொடு தொடர்பில்லாத Glds மட்டத்தினர் பலர் ஈடுபட்டனர். இளம் விரிவுரை யாளர் வித்தியானந்தன் சற்றுப் ப த ட் டத் துடன் வகுப்பிற்கு வந்து இலக்கிய வரலாற்று விரிவுரையை நடத்தினர். முதலாம் நாள் இரண்டாம் நாள் என்று விரிவுரை தொடர்ந்தது. எ ல் லோ ரின் ஐயமும் தெளிந்தது. மிகச் சிறந்த விரிவுரையாளர் என்ற பெயரை வித்தியானந்தன் பெற்றர். பட்டதாரிமா ணவர் மேலும் ஓர் உண்மையைக் கண்டுகொண்ட னர் வித்தியானந்தனின் விரிவுரையிலும் பார்க்க அவர் நடத்துகின்ற கட்டுரை வகுப்பும் கலந்துரை யாடலும் மிகச் சிறந்தவை என்பதே அந்த உண்மை"
மூவரின் தாக்கம் :
பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் வித்தியானந்த னைக் கற்பித்தவர் மூவர். பேராசிரியர் விபுலானந்த அடிகளார், கலாநிதி கணபதிப்பிள்ளை, விரிவுரையா ளர் வி. செல்வநாயகம். இந்த மூவரிடம் இளம் வித் தியானந்தன் கற்றவை பல. பேராசிரியர் விபுலா னந்த அடிகளார் தலைசிறந்த கல்விமான் இசை ஆராய்ச்சியில் " யாழ் நூல் ' மூலம் பெரும்புகழ் ஈட்டிய பெருமுனி பண்பின் உறைவிடம், வேத காலத்துக் குரு போலக் காட்சி கொடுப்பார். மேல் நாட்டுப் புலமையும், கீழ்நாட்டுப் புலமையும் நிரம் பியவர் எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவார். கலாநிதிக் கணபதிப்பிள்ளை அரிமாப் போன்றவர்

காட்டிலே அரிமா சோம்பிக் கிடப்பதுபோலக் கிடக் கும்; ஆனல் அதனை எழச் செய்ய ஏதாவது தூண்டு தல், சுரண்டுதல் வேண்டும். எழும்பிய அரிமா அரி மாவாகவே இயங்கும், சற்றுச் சோம்பல் உள்ள கலா நிதி கணபதிப்பிள்ளைக்குத் தூண்டுதல் கிடைத்துவிட் டால் போதும். இம்மென்னுமுன்னே, கதை, கட் டுரை, கவிதை நாடகம் எல்லாம் பிறக்கும். இவர் வற்ருத கலையருவி போன்றவர். அதனுடன் மொழி ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி எல்லாம் இவருக் குத் தண்ணிர் பட்டபாடு. எல்லாருடனும் அன்பாகப் பழகுவார். இன்ன செய்தாருக்கும் இனியவை செய் யும் பண்பாளன். தமிழைக் கற்கின்ற மாணவருக்குப் புள்ளி வழங்குவதில் " கறுமித்தனமாக நடக்கமாட் டார்; சற்றுத் தாராளமாகவே நடப்பார். தமிழைக் கற்கும் மாணவரைக் கலக்கி அடிக்கப்படாது " என் பதில் விபுலானந்த அடிகளாருக்கும் கலாநிதி கணப திப் பிள்ளைக்கும் ஒருமைப்பாடு நிலவியது. " பல்கலைக் கழகத்திலிருந்து கற்று வெளியேறும் மாணவன் எத னையும் கற்கவில்லை. எப்படிக் கற்கவேண்டும் என்ப தைக் கற்றே வெளியேறுகிருன் " எனக் கலாநிதி கணபதிப்பிள்ளை அடிக்கடி கூறுவார். கீழைத்தேயக் கல்வி மரபையும் மேலைத்தேயக் கல்வி மரபையும் இணைக்க அடிகளாரும் கலாநிதியும் பெரிதும் முயன் றனர். இதனல் எதிர்ப்புத் தோன்றியது. இவ்விரு பெரியாரும் இதனைப் பொருட்படுத்தவில்லை. விரிவுரை யாளர் வி. செல்வநாயகம் மிகவும் கண்டிப்பானவர்; நறுக்கானவர்: எ த னை யு ம் " உரைத்து நிறுத்துப் " பார்ப்பவர்? தலைசிறந்த இலக்கிய ஆய்வாளர்; விரி வுரையை நன்கு நிரை செய்து வருவார். இந்த மூவ ரிடமும் இருந்த நல்ல இயல்புகளை இளம் வித்தியா னந்தன் தமக்காக்கிக் கொண்டார். இந்த இடத்தில் ஈழத்துத் தவில் வல்லார் வித் துவான் வி தட்சணு மூர்த்தியின் நினைவுதான் வருகின்றது எந்த வித்து

Page 14
- 4 -
வான் தவில் வாசித்தாலும் இளம் வித்துவான் தட் சணுமூர்த்தி, அந்த வித்துவானின் தனித்திறமையைக் கிரகித்துத் தனக்காக்கிக் கொள்வார். அதேபோன்று முன்னர் குறிப் பி ட்ட தமிழ்ப் பெரியார் மூவரின் திறமை எல்லாவற்றையும் விரிவுரையாளர் வித்தியா னந்தன் பிடித்து வைத்துக்கொண்டார். இதுவே இவ ருக்குப் பிற்காலத்தில் பெரிதும் உதவியது.
" ஆளாக்கிய பெருமகன் ” :
மேற்குறிப்பிட்ட பெரியார் மூவரும் பேராசிரியர் வித்தியானந்தனின் ஆசிரியர்; மூவருக்கும் பேராசிரி யர் வித்தியானந்தன் கடமைப்பட்டவர். ஆளுல் பேரா சிரியர் கணபதிப்பிள்ளை மீதுதான் பேராசிரியர் வித்தி யானந்தனுக்குக் கூடிய ஈடுபாடு இருந்தது. பேராசி ரியர் கணபதிப்பிள்ளையின் உற்ற நண்பனுய், அந்த ரங்கச் செயலாளராய், அபிமான மகஞய் பேராசிரி யர் வித்தியானந்தன் இருந்தார். ஒருமுறை பேராசி ரியர் கணபதிப்பிள்ளையின் அன்பர் ஒருவர் அவரைப் பார்த்து " கீழைத்தேயக் கல்விப் பீடத்தின் அதிபதி பாக நீங்கள் ஏன் வரக்கூடாது? அந்தப் பதவியை ஏற்றல் என்ன? " என்று கேட்டார்.
" அந்தப்பதவி எனக்கு வேண்டாம். அதனை நான் விரும்பவில்லை. விரும்பி ஏற்ருல் வித்திக்குத் தான் வேலை கூடும் பாவம் வித்தி " என்று நகைச்சுவை புடன் கணபதிப்பிள்ளை மறுமொழி சொன்னர் உண் மையை விளங்க இதுவே போதும் பல்கலைக்கழக நிருவாக வேலை, ஆராய்ச்சி வேலை, தமிழ்ச் சங்கப் பணி, ஆக்க இலக்கிய முயற்சி எல்லாவற்றிற்கும் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கு அ வரி ன் நல்ல மாணுக்கர் வித்தியானந்தன் உறுதுணையாக இருந் தார். நட்பிற்கும், அன்பிற்கும் இருவர் இவரே;

- 15 -
இரண்டு ஆண்டு காலம் திரு. வித்தியானந்தன் உதவி விரிவுரையாளராகத் திறமையுடன் 85.60) புரிந்தார். பட்டதாரி மாணவர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆகியோரின் நன்மதிப்பையும் பாராட் டையும் பெற்றர் இவர். பல்கலைக்கழகத் துணைவேந் தர் சேர். ஐவொர் யெனிஞ்சும் இவரின் திறமையை மட்டிட்டு அறிந்து வைத்திருந்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை வெற்றிலை போடுவதில் தனி இன்பம் காண்பார். அதனுலோ என்னவோ தெரியாது இளம் வித்தியானந்தனை, வெற்றிலைத் தோட்டக்காரன் வெற் றிலைக் கொடியை நன்கு வளர்த்துவிடுவது போல வளர்த்துவிட்டார். இரண்டு ஆண்டு முடிந்ததும் விரி வுரையாளர் வித்தியானந்தன், இலண்டன் பல்கலைக் கழகத்தின் கீழைத்தேய மொழிக் கல்விப் பீடத்தில் சேர்ந்து கலாநிதிப் பட்டம் பெறவேண்டும் எனக் குரு கணபதிப்பிள்ளை விரும்பினர். விபுலானந்த அடி களார் மறைவின் பின் கலாநிதி கணபதிப்பிள்ளையே 1946ல் பேராசிரியரானுர் என்பது இங்கு கவனிக்க வேண்டியது " இந்த ஆராய்ச்சிப் படிப்பை வித்தி இங்கு செய்தால் என்ன? அல்லது அண்டை நாடா கிய இந்தியாவிலே செய்தாலென்ன? " என வித்தி யானந்தனின் உறவினர் சிலர் கேட்டனர்; கிட்ட இருப்பதையே வித்தியானந்தனின் தாயும் உறவின ரும் விரும்பினர், குடும்பத்திற்கு ஆறுதலாக இது அ  ைம யு ம் எனவும் கருதினர். வித்தியானந்தனின் எதிர்கால உயர்ச்சிக்கும், பல்கலைக்கழக எதிர்கால வளர்ச்சிக்கும் இலண்டன் ஆராய்ச்சிப்பயிற்சி இன்றி யமையாதது எனப் பேராசிரியர் கருதினர் கண்டிப் பாக இருந்தார்; தான் நினைத்ததையே கணபதிப் பிள்ளை சாதித்தார்,

Page 15
-- 16 -س-
ஆராய்ச்சிக் கல்வி :
இந்த முடிவுப்படி 1948ல் விரிவுரையாளர் வித்தி யானந்தன் கடல் வழியாக இலண்டன் மாநகருக்குப் புறப்பட்டார். அப்போதைய பல்கலைக்கழக விதிக ளுக்கு ஏற்ப, பல்கலைக்கழகத் தமிழ்மொழி மாணவர் சார்பிலே விரிவுரையாளர் வித்தியானந்தனுக்குப் பல் கலைக்கழக வளவில் பிரியாவிடை ஒன்றை அளிக்க முடியாமலிருந்தது. ஆகவே இவரிடம் கற்ற மாணவ ரும், விரிவுரையாளரும் , பேராசிரியர் பல ரு ம் சேர்ந்து கொழும்பில் உள்ள பிரபல உண்டிச் சாலை ஒன்றிலே பிரியாவிடை நடத்தினர்; விரிவுரையாளர் வித்தியானந்தனுக்கு மாணவர் மத்தியில் இருந்த பெரும் செல்வாக்கை இந்தப் பிரியாவிடை எடுத்துக் காட்டியது. இந்தத் தனிச் செல்வாக்கு என்றுமே இவருக்கு இருந்து வருகின்றது;
இலண்டன் பல்கலைக் கழகத்திலே திரு வித்தியா னந்தனுக்கு உள்துறை வழிகாட்டியாக அறிஞர் அல் பிரட் மாஸ்ரர் (Master) அமைந்தார். ஆராய்ச்சிக் கட்டுரை மதிப்பீட்டாளராக இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தி. செ. பிலிப்சும், ஒக்சுபோர்ட்டுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் ரி. பருேவும் இருந்தனர். " பத்துப் பாட்டுவரலாறு, சமூக இயல், மொழியியல் நோக்கு ' என் னும் பொருளையே ஆராய்ச்சிக்காக வித்தியானந்தன் தெரிந்தெடுத்தார். இந்த ஆராய்ச்சி எவ்வித தங்கு தடையும் இன்றி நடந்தது. விரிவுரையாளர் வித்தி யானந்தன் 1950இல் கலாநிதிப் பட்டத்தைப் பெற் முர் பெற்று ஈழம் திரும்பினர். இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் பெறுமதியை உணர்ந்த இலண்டன் பல் கலைக்கழகம் அதனை வெளியிட முன்வந்தது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஆங்கி லத் தி ல் இருந்தது. " இதில் உள்ளவை நல்லவை. ஆகவே தமிழ் பேசும்

- 7 -
மக்களுக்கு இவை பயன்பட வேண்டும் இதனைத் தழுவி விரிவாகத் தமிழில் நூல் ஒன்று எழுத வேண் டும் " எனக் கலாநிதி வித்தியானந்தனின் நண்பர் சிலர் கேட்டனர்; வற்புறுத்தினர். இதன் ப யனுகவே * தமிழர் சால்பு " என்னும் தரமான நூல் வெளிவந் தது. இது நத்தை வேகத்திலே விலைபோயிற்று. இதன் பிரதிக் குவியல் வீட்டிலே முடங்கிக் கிடந்தது. இந் தப் பெரும் பாரத்தையும், பணச்செலவுப் பாரத் தையும் இல்லத்தரசி கமலாதேவி வித்தியானந்தன் உளம் உவந்து தாங்கிக் கொண்டார். பொருட் செல வைத் "தமிழர்சால்பு" கொண்டுவந்தது. அதே நேரத் தில் அறிஞரின் பாராட்டையும் இந்தநூல் தேடிக் கொடுத்தது. இங்கு மூவரை மட்டும் குறிப்பிடலாம். மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்து புகழ் ஈட்டிய கே. ஏ. நீல கண்ட சாத்திரி, சென்னைப் பல்கலைக்கழகத்து வர லாற்றுப் பேராசிரியர் ரி. வி. மகாலிங்கம், அண்ணு மலைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஆர். சத்திய நாதையர்; இந்தப் புகழ்மாலையைக் கண்டு பேராசி ரியர் கணபதிப்பிள்ளை பெரும் பூரிப்படைந்தார்.
பதவி உயர்வு :
ஈழம் திரும்பிய கலாநிதி வித்தியானந்தன் 1950 இல் இர ண் டாம் த ர விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்ருர் 1956இல் இவருக்கு முதலாம் தர விரிவுரையாளர் பதவி உயர்வு கிடைத்தது. 1967இல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் பதவி உயர்வும், 1970 இல் பேராசிரியர் பதவியும் கிடைத்தன. கலாநிதிப் பட்டம், பதவி உயர்வு, எல்லாம் பெற்ற இவர் கல் வித்துறையிலிருந்து ஒதுங்கி வாழவில்லை. இப்படி ஒதுங்கி வாழ்வதும், பணம் ஈட்டுவதும், பிள்ளை குட் டிகளுக்குப் பொருள் தேடுவதும் எம் நாட்டுப் பல் கலைக்கழகக் கல்விமான்கள் பலரின் வழக்கம் ஆனல்

Page 16
- 18
பேராசிரியர் வித்தியானந்தன் கல்வியிலிருந்து கிடைப் பதே தலையாய இன்பம் எ ன் ப  ைத உணர்ந்தார்; இதில் இருந்து இவர் ஒருபோதும் வழுவவில்லை. 1977 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்து யாழ்ப்பான வளா கத் தலைவரானர். 1978ஆம் ஆண்டிலே புதிய பல் கலைக்கழக அமைப்பு வந்தது. இதன்படி 1979 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராகப் பதவி ஏற்றர். இற்றை வரையும் பொது மக்களின், க ழ க ங் க ளின், மாணவ மன்றங்களின் தொடர்பை இவர் துண்டிக்கவில்லை. பதவி, பட்டம், பெயர் புகழ் எல்லாம் இவரைத் தேடிவந்துள்ளன. இருந்தும் தமிழ் கூறும் நல்லுலகத்துடன் சேர்ந்து பிணைந்து வாழ்வதையே இவர் விரும்புகின்றர். தமி ழியல் தொடர்பு சார்ந்த கூட்டங்களை இவர் பெரிது சிறிது எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவை எங்கு நடந்தாலும் போவார் போனுல் கூட்டம் முடியும் வரை இருப்பார், இடையிலே மேடையை விட்டுப் போகின்ற பழக்கம் இவருக்கு இல்லை.
தமிழ்ச்சங்க வளர்ச்சி :
ஆராய்ச்சிக்காக இலண்டன் பல்கலைக் கழகம் செல்ல முன்னரே இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டார். மாணவனக இருந்த பொழுதே இந்தச் சங்க முயற்சி யாவற்றிலும் பெரும் ஆர்வத்துடன் பங்குகொண்டுள் ளார். தமிழ்ச்சங்க நாடக அரங்கேற்றங்களில் திரைக் குப்பின்னல் நின்று உழைத்த பெருமை " வித்தி " யைச் சாரும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக முயற்சிகளுக்கு வலதுகையாக இருந்தவரும் இவரே. சங்கத்தின் பேரும் தலைவராக இருந்தவர் கணபதிப்பிள்ளை பேராசிரியர் . கணபதிப்பிள்ளைக்கும் மாணவருக்கும் இணைப்புப் பாலமாக அமைந்தவர் இளம் வித்தியானந்தன் இந்தச் சங்கத்திற்குத் தனி

سس- 19 --
யான தமிழ் ஏடு ஒன்று இருக்கவேண்டும் எனப் பல ரும் கனவு கண்டனர். அதில் கணபதிப்பிள்ளையும் வித்தியானந்தனும் இருவர். பட்டதாரி மாணவர் மத் தியில், இந்த ஏடு உருவாக வேண்டும் என்ற கருத்தை வளர்த்தவர் இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம். இவர் நல்ல நடி கர்: இளைஞன் அமிர்தலிங்கத்தின் காலத்தில் ஏட்டுக் கனவு நிறைவேறவில்லை. ஒராண்டு காலத்தின் பின் னர்தான் இக்கனவு நிறைவேறியது. பல்கலைச் சங்கத் தமிழ் ஏடாகிய " இளங்கதிர் " பிறந்தது ஒரு தனிக் கதை. அதனைத் தோற்றுவித்து முதல் ஆசிரியராக இருந்து உழைத்தபடியால், ' இளங்கதிர் பிறந்த கதை " பற்றி எனக்குத் தெரியும். இந்த ஏடு வெளி வரும்போது விரிவுரையாளர் வித்தியானந்தன் இலண் டனில் இருந்தார். ஏட்டிற்குப் பெயரிடுதல் பதிப் பித்தல் போன்ற வேலைக்கு இவர் நல்ல ஆலோசனை களை வழங்கினர். இதற்குத் தமிழ்ச் சங்கப் பெருந் தலைவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆற்றிய பணி இம்மட்டன்று. சங்கத்தின் பொறியை வரைந்து தந் தவர் தொல்பொருளியல் திணைக்களத்தில் உயர் பதவி வகித்த கலைவல்லார் எஸ். சண்முகநாதன். இவரே இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பொறியையும் வரைந் தவர். பொறி அமைப்பு வேலை முடியாதபடியால் பொறி ' இளங்கதிர் " முதல் இதழில் வெளிவர வில்லை. இளம் வித்தி கலாநிதிப் பட்டம் பெற்று இலங்கை வந்தார். அதன் பின்னர் தமிழ்ச் சங்கப் பெரும் பொருளாளராக, தலைவராக இருந்து இவர் நற்பணி புரிந்தார்.
பல்கலைக்கழக நாடகக்கலை வளர்ச்சி :
இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வர
லாற்றை இரண்டு கூருகப் பிரித்துப் பார்க்கலாம்.
1946ஆம் ஆண்டிற்கு முந்திய காலகட்டம் ஒன்று.

Page 17
سے 20 --
1946ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டில் சங்கம் பொன்விழா நடத்திய காலகட்டம் வரை மற் ருென்று. சங்கத்தின் தொடக்க காலத்தில் கணிதப் பேராசிரியர் செ. சுந்தரலிங்கம் தமிழ்த்துறைத் தலை வராக இருந்த பிரான்சிசு கிஞ்சுபரித்தேசிகர் ஆகி யோர் தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கு நன்கு உழைத்து வந் தனர். இவர்களுடன் பின்னர் கலாநிதி கணபதிப் பிள்ளையும் சேர்ந்து கொண்டார். சங்கத்துடன் இரண் டறக் கலந்த இளம் கணபதிப்பிள்ளை தமிழ்ச் சங்க வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். இச் சங்கத்திற் காக இவர் எழுதிய "நானுடகம்" "இரு நாடகம்" "சங்கிலி' என்பன பின்னர் அச்சில் வந்தன அச் சில் வராதவை இரண்டு. முன்னவை ஆறும் யாழ்ப் பாணத்துப் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டவை: "சங்கிலி' இலகுவான செந்தமிழில் தீட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரையும் பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரி யர் கணிபதிப்பிள்ளைக்கு உதவியும், தான் தனித்து நின்றும் தமிழ்ச்சங்க வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத் தார். இச்சங்கம் அரங்கேற்றிய பதினறு நாடகங்களி லும் வித்தியானந்தனின் கை வண்ணம் இடம்பெற்றது. நிருவாகவேலை காரணமாகப் பேராசிரியர் கணபதிப் பிள்ளை நாடக எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்க வேண் டியதாயிற்று
சிங்கள நாடகத்துறையில் தமிழிலிருந்து கிளை விட்ட சிங்களக்கூத்து வடிவத்தை மரபு முறைகெடா மல் மெருகு கொடுத்தார் பேராசிரியர் சரச் சந்திரா; இதனுல் அவருக்குப் பெரும் வெற்றி கிடைத்தது5 சிங்களக் கூத்து வடிவம் தமிழிலிருந்து கிளைவிட்டது என்பதைப் பேராசிரியர் சரச்சந்திரா மிகவும் பெருந் தன்மையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். வடமோடி, தென்மோடிக் கூத்து வடிவங்கள் மட்டக்களப்பில்

- 21 ܗܚ
வாழும் கலையாக, வளரும் கலையாக இருந்து வருகின் றன. வன்னிவள நாடாம் மன்னரிலும் அப்படியான நிலையில் கூத்து இருந்து வருகின்றது; ஆனல் யாழ்ப் பாணத்தில் இது குற்றுயிராக இருந்தது. யாழ்ப்பா ணத்துக் கொட்டகைக் கூத்தும் ஆதரவின்றி இருந் தது. இந்தக் கலைவடிவங்களின் பெருமையை உயர் மட்டத்தில் இருந்த வர் உணரவில்லை. இந்த வடிவங் களுக்குப் புத்துயிர் கொடுக்கவும் இந்த உயர்ந்தோர் குழாத்தினர் முன்வரவில்லை. கூத்துக் கலைக்கு, கலைஞ ருக்கு மதிப்புக்கொடுக்க இந்தக் குழாத்தினர் முன் வரவில்லை, பழைய அண்ணுவிமார் பழைய பாணி யிலே சென்றனர்; மாற்றத்தை விரும்பவில்லை. வயது போன இந்த அண்ணுவிமாரைப் புதிய வழிக்குக் கொண்டுவருவது கடினம் இவர் பெரும்பாலும் பழ மைவாதிகள். விடியவிடிய நடக்கும் கூத்தைச் சுருக் கிக் காலத்திற்கு ஏற்றபடி மரபு கெடாமல் களரி ஏற்ற வந்தார் வித்தியானந்தன், பேராதனைப் பல்க லைக்கழகத்தில் கூத்துக்கலை கைதேர்ந்த மாணவர் பல ரும் இருந்தனர். இந்த மாணவரைக் கொண்டு " கர் ணன் போர் " " நொண்டி நாடகம் " " இராவனே சன் " " வாலிவதை " ஆகிய நாடகங்களைப் பேரா தனையில் முதலில் அரங்கேற்றியவர் பேராசிரியர் வித் தியானந்தன். பின்னர் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், தெல்லிப்பழை ஆகிய இடங்களிலும் அரங் கேற்றினர். தமிழ் நாடக வளர்ச்சியில் வித்தியானந் தனின் முயற்சி புதியதொரு யுகத்தை உண்டாக்கி யது. இது விரிவாக ஆராயப்பட வேண்டிய அலுவல்:
வடமோடி, தென்மோடிக் கூத்துடன் வித்தியா னந்தன் நிற்கவில்லை. இக்கலைபற்றிய தரம் வாய்ந்த ஆராய்ச்சி அரங்குகளை இவர் ஈழத்தின் பல பகுதிக ளிலும் நடத்தினர். கட்டுரைகளை எழுதினர்; இக் கட்டுரை பலவும் அச்சில் வந்தன. அதுமட்டன்று:

Page 18
- 22
கூத்துக்கலைபற்றிய ஆய்வு பலவற்றிற்கும் பேராசிரி யர் வழிகாட்டியாக நின்ருர் கொட்டகைக் கூத்து வடிவங்களுக்கும் இவர் புத்துயிர் கொடுக்க உதவி னர் "மயான காண்டம்" "நந்தனர்" "சாவித் திரி சத்தியவான் " போன்ற கூத்துக்களும் வித்தியா னந்தனின் உதவியுடன் பொலிவுற்று வளர்ந்தன;
நாடகம் அரங்கேற்றுவதுடன் வித்தியானந்தன் நிற்கவில்லை. நாடகம் மூலம் கிடைத்த சுத்த இலா பத்தைக் கொண்டு பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆலோசனையுடன் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் படிப்பு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கவும் வித் தியானந்தன் ஆவன செய்தார். இதன் விளைவாக அறக் கட்டளைகள் ஐந்து உருவாகின. ஐந்து பரிசில் கள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய அலுவல் சிறுதுளி பெருவெள்ளம்.
மணவினை :
திருமணங்கள் சுவர்க்கத்திலேயே நிச்சயிக்கப்படு கின்றன என்பர் இக்கூற்றைப் பட்டதாரி மாணவர் மாற்றி, "" திருமணங்கள் பல்கலைக்கழகங்களில் நிர்ண யிக்கப்படுகின்றன " என்பர் வித்தியானந்தனின் திரு மணம் சுவர்க்கத்திலே நிச்சயிக்கப்பட்டுப் பல்கலைக் கழகம் மூலம் நிறைவேறியது எனலாம். பல்கலைக்கழ கத்தில் தான் கண்டு காதலித்த மங்கை நல்லாள் செல்வி கமலாதேவி நாகலிங்கத்தைக் கலாநிதி வித் தியானந்தன் 1957இல் திருமணம் புரிந்தார். இவ ரின் திருமணம் ஒருவகையில் சீர்திருத்தத் திருமணம்: தனித் தமிழில் ஈடுபாடுடைய " வித்தி " தன் திரு மணத்தினை இப்படி அமைத்துக்கொண்டார். பிள்ளை யார், மஞ்சல், குங்குமம், அறுகு பால், தாலி எல் லாம் இடம்பெற்றன; ஆனல் பார்ப்பனர், வட மொழி மந்திரம், ஒமாக்கினி என்பன இடம்பெற

-سے 23 -سے
வில்லை. பூசாரிகள் இரண்டுபேர் முக்கிய இடம் பெற் றனர். ஒருவர் வடமொழியிலும் தமிழிலும் கடல், மொழியியல் நிபுணர். மற்றவர் இலக்கிய வரலாற் றுக் கடல். முன்னவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. பின்னவர் பேராசிரியர் வி. செல்வநாயகம். இவ்விரு பெரியாரும் வாழ்த்துரை வழங்கத் திருமணம் இனிது நடந்தது, இருவரும் பிராமணர் அல்லாதோர். அந் தணர் குலத்தைச் சேராதவர்; ஆனல் அறவோர், நல்லாசிரியர். இவ்விரு பெரியோரும் வாழ்த்துரை வழங்கச், சாவகச்சேரியைச் சேர்ந்த நல்லாசிரியர் ஏ வி. நாகலிங்கம் தன் நல்லமகள் கமலாதேவியை கலைமகிழ்நன் கலாநிதி வித்தியானந்தனுக்குக் கைய ளித்தார். நல்ல திருமணம் என ஆன்ருேர் வாழ்த்தி னர். அண்ணல் காந்தியை மகாத்மாவாக்கிய பெருமை அன்னை கசுத்தூரியைச் சேரும் என்பர் கலாநிதி வித் தியானந்தன், பேராசிரியராக, கலைமகிழ்நனக, அனைத் துலக தமிழ் அறிஞராக உயர உதவியவர் வாழ்க் கைத் துணைவியார் கமலம், கூத்து உடுப்பைத் தயா ரித்தல், கலைஞரை உபசரித்தல், கையெழுத்துப் பிர தியை ஆக்குதல், அச்சுப்பிழை பார்த்தல் போன்ற வேலை யாவும் கமலா அக்காவிற்குக் கரைந்த பாடம் • அதுமட்டன்று. கூத்து ஒத்திகை யாவும் பேராசிரியர் வீட்டிலேதான் நடைபெறும் மத்தளம், பாட்டு ஆட்டம், சலங்கை ஒசை, இடையிடையே மாணவ மாணவியரின் கூச்சல் இத்தனையையும் பொறுத்து நடந்து கொள்வது இலகுவான அலுவலன்று, கமலம் நல்லாசிரியர் ஆசிரியத் தொழிலுக்கு அணிகலமாகத் திகழ்ந்தவர் இவரின் அகால மறைவு பேராசிரியர் வித்தியானந்தனைப் பெரிதும் பாதித்தது. கமலா உண் மையில் வித்தியின் வாழ்க்கைத் துணைவிமட்டுமன்று; உற்ற நண்பர்.

Page 19
- 24 -
நிருவாகப் பொறுப்பு :
கொழும்பிலிருந்த பல்கலைக்கழகம் பேராதனைக்கு 1952இல் மாற்றப்பட்டது; இதனுல் பல்கலைக்கழக ஆசிரியர் மாணவர் மத்தியில் அதிருப்தி நிலவியது: உணவு வசதிக்குறைவு, இடவசதிக் குறைவு, நூல் நிலைய அமைப்புக் குறைவு, தளபாட வசதிக் குறைவு இப்படியாகக் குறை பலவும் நிலவின. இவை உண் மையான குறைபாடு, மாணவர் மத்தியில் அகச் சார்புடைய குறைபாடு இருந்தது. சுறுசுறுப்பான கொழும்புநகர் எல்லா வசதியையும் கொண்டது. அதனை விட்டுத் தேயிலைத் தோட்டத்தின் நடுவில் அமைந்த பேராதனை வளாகத்தில் வந்து குடியேற மாணவர் விரும்பவில்லை. உளவியல் அடிப்படையில் மாணவர் புதிய மாற்றத்தை ஏற்க மறுத்தனர். இப் படியான தொல்லைபலவும் நிலவும் போது செயத் திலக மண்டபத்தின் பாதுகாவலர் பதவியை பேரா சிரியர் உறட்டிறிக்கோ ஏற்ருர் தன் நல்மாணுக்க ராம் கலாநிதி வித்தியானந்தனைத் துணைப் பாதுகா வலர் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். விடுதிக்குரிய தட்டுமுட்டுச் சாமான்களை வாங்குதல் தகுதியான பணியாளரை நியமித்தல், பொது மேற் பார்வை செய்தல், மாணவரின் பொழுதுபோக்கு சேமலாபம் என்பவை கடினமான அலுவல். இந்த வேலை கம்பத்தில் நடப்பது போன்றது. இந்தப் பத வியை ஏற்று இதனை 1957ஆம் ஆண்டுவரை கலா நிதி வித்தியானந்தன் திறம்பட நடத்தினர். விடுதி மாணவர் ஒருவர் ஆழ்ந்த நித்திரையில் நடப்பவர். இது ஒரு வகை நோய். இந்த நோயாளியை மேற் பார்வை செய்வது பொறுப்பான அலுவல். இந்த நோயாளியைக்கூட வித்தி தன் நண்பனைப் போல நடத்தினர்; அவரின் படிப்பை வழிநடத்தினர். இத ணுல் இவருக்கு மேலும் பதவி உயர்வு கிடைத்தது.

سے 25 سے۔
ஈழத்தின் மிகப்பெரிய விடுதிச்சாலை என்று வர்ணிக் கப்பட்ட விசயவர்த்தன மண்டபத்தின் முதலாவது பாதுகாவலர் பதவி வித்தியைத் தேடிவந்தது. இப் பதவியை 1961ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரையும் ஏற்று நடத்தினர்.
தேசியக் கலைப்பணி :
பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஈழத்தில் பேரா சிரியர் வித்தியானந்தன் ஆற்றிய கலைப்பணி மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியது, அப்பணியை மேல் வருமாறு பிரித்துப் பார்க்கலாம். (1) இலங் கைக் கலைக்கழகத்தின் நாடகக் குழுமூலம் ஆற்றிய பணி (2) இலங்கைச் சாகித்திய மண்டலம் மூலம் செய்த இலக்கியத் தொண்டு (3) இலங்கைத் தேசீய நாடக நூற்கட்டளை நிறுவனத்தின் மூலம் செய்த ஆக்கவேலை (4) ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான கலை நிறுவனத்தின் இலங்கைக் கிளை மூலம் புரிந்த தொண்டு (5) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தா பனம் போன்ற நிறுவனங்கள் மூலம் செய்த முன் னேடி வேலை. பேராசிரியரின் திறமைக்கு நிலையான சான்ருக இவை அமைந்துள்ளன:
வித்தியானந்தனின் நாடகப் புலமையையும் கலை ஆர்வத்தையும் திறமையையும் கண்ட கலைக்கழகத் தினர் இவரைத் தமது அவையின் உறுப்பினராக்கி னர். அத்துடன் இக்கழகத்தின் நாடகக்குழுவின் தலை வராகவும் இருக்கும்படி அழைத்தனர். 1955ஆம் ஆண்டு தொடக்கம் 1969ஆம் ஆண்டு வரை தொடர்ச் சியாக இவர் இக்குழுவின் தலைவராக இருந்தார். இதன் மூலம் இவர் ஆற்றிய பணி இலங்கைத் தமிழ்க் கலைவரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமைந் தது. இக்காலத்தில் நாடகப் பிரதி எழுதும் போட்டி ஒழுங்காக நடைபெற்றது. தரமான நாடகங்களுக்

Page 20
- 26 --
குப் பரிசு வழங்கப்பட்டது. அரிய பிரதிகள் அச்சு வாகனம் ஏறின. புதிய பரிசோதனைகள் கலைத்துறை யில் இடம்பெற்றன. புதிய உத்திகளை இவர் துணிந்து புகுத்தினர். இவர் வழிநடத்த சம்பூரண அரிச் சந் திரா மயானகாண்டமாகச் சுருக்கப்பட்டுப் பெரும் புகழ் ஈட்டியது. பக்த நந்தனர், சிதம்பர தரிசனப் பகுதியை மட்டும் காட்டும் பகுதியாகச் சுருக்கப் பட்டுப் புகழ்பெற்றது. கர்ணன் போர் போன்ற கூத் துகள் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. இந்தக் கூத்துகள் தேசீய மட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தேசீய எழுச்சியையும் இந்தக் கலை அலை உருவாக்கியது. மட்டக்களப்பு, மன்னர், யாழ்ப் பாணம், கொழும்பு, மலையகம் போன்ற இடங்களுக்கு இந்தக் கலை அலை விரைந்து பரந்து சென்றது. ஈழத் தின் தனித்துவத்தையும் பெருமையையும் நிலைநாட் டும் வகையில் புதிய நாடகங்கள் தோன்றின. பாட சாலை நாடகப் போட்டி ஒழுங்காக நடைபெற்றது. கரகம், காவடி, புரவி ஆட்டம், வசந்தன், கப்பற் பாட்டுப் போன்ற மக்கள் கலை விழாக்கள் ஒழுங்காக நடைபெற்றன.
இப்படியான விழாக்கள் நடத்துவதுமூலம் வித்தி யானந்தன் ஒர் உண்மையைக் கண்டுபிடித்தார் கலை மன்றங்களுக்கு நிதி உதவி வழங்கினல் மட்டும் போதாது. கலைஞரைக் கெளரவித்தல் வேண்டும் என் பதே அந்த உண்மை. ஏற்கனவே நிதி உதவியை அர சாங்கம் வழங்கியது. மக்கள் கலைஞர் யாவரும் ஒரு வகையில் யானையைப் போன்றவர். தனது உடல் வலிமையை யானை ஒரு போதும் உணர்வதில்லை. அதனை ஊக்கப்படுத்தப் பாகன் ஒருவன் தேவை. அண் ணுவியார் போன்ற மக்கள் கலைஞர் தம் அருமை பெருமையை அறியாது வாழ்ந்தனர். இக் கலைஞரைப் பேராசிரியர் நன்கு மதித்தார். அதுமட்டன்று. மற் றவர்களும் இக் கலைஞரை மதிக்கச் செய்தார். இதற்

-27 -.
காகவே மன்னர், மட்டக்களப்பு போன்ற இடங்கி ளில் அண்ணுவிமார் மாநாடுகள் நடந்தன; அண்ணுவி மார்களுக்குப் பொன்குடை போர்த்தல் விழாக்களும் நடந்தன கூத்தாடிகள் முதன்மை விருந்தினர் என்ற உயர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அண்ணுவி யாரின் விவரங்களைத் திரட்டிய பெருமை வித்தியா னந்தனைச் சாரும்.
அரிய கூத்து ஏட்டுப் பிரதிகள் யாவும் செல்லரிக் கும் நிலையில் இருந்தன. நாட்டார் பாடலைப் பொது மக்கள் மறக்கும் நிலையில் இரு ந் த ன ர். எனவே இவற்றை அச்சேற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வந் தார் பேராசிரியர். இந்த முடிவின் பயனக ஏழு ஏடு கள் அச்சேறின. இவற்றில் நாடகம் நான்கு நாட் டார் பாடல் தொகுப்பு இரண்டு; அம்மானை ஒன்று; இவை யாவும் எதிர்காலத்தவருக்கு வித்தியானந்தன் அளித்த " கலைச் சீதனம் ". இதனல் ஈழத்துக் கலை மடந்தை வலிவும் வனப்பும் பொலிவும் பெற்ருர் .
தேசீயக் கலைவாழ்வில் ஈடுபட்டிருக்கின்ற கலைஞர் பலரும் தொழிலாளர்; அல்லது உழவர். இவர்கள் பல்வேறு மதத்தையும் சேர்ந்தவர் 5 கத்தோலிக்கர், புரட்டசுத்தாந்துக்கள், சைவர், இசிலாமியர் எனவும் இவரைப் பிரித்துப் பார்க்கலாம். பெருமையான போக்கு, அகம் பாவம் போன்ற  ெகட்ட குண ம் " வித்தி " யிடம் ஒருபோதும் குடிகொண்டதில்லை. சைவச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும், கலைஞ ரைப் பொறுத்தவரையில் இவர் பெரும் தாராள போக்கையே கடைபிடித்து வருகின்ருர், சாதிமதம் இனம் என்பவற்றைக் கடந்து இவர் நிற்கின்ருர், இவற்றைக் கடந்து நிற்பதுமல்லாமல் தேசீயக்கலைக் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளார். இதனுல் கத்தோ லிக்கப் புலவர், புரட்டசுத் தாந்துப் புலவர், யாழ்ப் பாணத்து வீர சைவக் கலைஞர், மட்டக்களப்புக் கலை

Page 21
- 28 -
ஞர், மலையகக் கலைஞர் எல்லோரும் மறுமலர்ச்சி காண ஒன்று திரண்டுள்ளனர், உழவர். கடல் தொழி லாளர் பூசாரி என்ற பாகுபாடுகளை மறந்தனர். வித்தியானந்தக் கலைக் கூடாரத்தில் ஒன்று சேர்ந்த னர். இவர் நடத்துகின்ற கலேவிழாக்கள், கருத்தரங் குகள் யாவற்றிற்கும் சிங்களக் கலைஞர், சிங்கள ஆராய்ச்சியாளர், ஐரோப்பியப் பார்வையாளர், ஆகி யோர் அழைக்கப்பட்டனர்; இவ்விதம் அழைப்பைப் பெற்றுவந்து பயன் பெற்றனர். கலைஞர் எல்லோரும் உயர்ந்த நிலையில் உள்ளவர்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்து மேலும் வலுப்பெறப் பேராசிரியர் ஆற்றிய தொண்டு பெருமை வாய்ந்தது. இவரின் பரிந்துரைப்படி இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத் தாபனத்தினர் கூத்துப் பலவற்றையும் ஒலிபரப் பிற்கு ஏற்றவாறு அமைத்து ஒலிபரப்பினர். மக்கள் கலைஞருக்கு வானெலியில் பாட, தடிக்க, ஆட வாய்ப் புக் கிடைத்தது பெருமளவில். பேராசிரியரின் பரிந் துரைகளை விளங்கி ஆவன செய்யக்கூடிய தயாரிப் பாளர், பணிப்பாளர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பேராசிரியரின் மாணவர்கள், வித்திப்பாணியை நன்கு அறிந்தவர்.
அரசு ஆதரவு இன்னும் கூடுதலாகக் கிடைத் தால் பேராசிரியர் இன்னும் பெரிய சாதனைகளை நிலைநாட் டியிருப்பர் என்ற கருத்து அப்போது நிலவியது. பார்க்கப்போனல் இதில் உண்மையும் இருக்கின்றது. அரச ஆதரவு கிடையாத இடத்து சனசமூகநிலையம், கூட்டுறவு நிலையம், உள்ளூராட்சி மன்றங்கள் என்ப வற்றையும் வித்தியானந்தர் நாடினர். தேசீய நாடக அறக்கட்டளை நிறுவனத்தில் 1965ஆம் ஆண்டு தொடக் கம் 1969ஆம் ஆண்டுவரை இவர் பணியாற்றினர். இவரின் ஆலோசனையை இந்த நிறுவனம் நன்கு பயன்

-- 29 صس
படுத்தியது. இவரின் கலைத்தொண்டை இந்த நிறுவ னம் நன்கு உணர்ந்தது. வித்தியின் திட்டங்களை நிறை வேற்ற இந்த நிறுவனம் உதவியது; ஆனல் இங்கும் மானிய உதவி வழங்குவது பற்றிய சில தொல்லைகள் ஏற்பட்டன. இருந்தும் இவர் சோர்ந்து போவதில்லை.
இலங்கைச் சாகித்திய மண்டல உறுப்பினராக இருந்து தரமான இலக்கிய வளர்ச்சிக்கு வித்தியா னந்தன் உதவியுள்ளார். சமகால இலக்கிய வளர்ச்சி யில் ஈடுபாடு இருக்க வேண்டும். இப்படி ஈடுபாடு இல்லாத சமுதாயம் தன்னைத்தானே தாழ்த்திக்கொள் ளும் என்ற கோட்பாடு பேராசிரியரிடம் என்றும் இருந்து வருகின்றது. இந்தக் கோட்பாடு இல்லாத பலரும் எமது மத்தியில் வாழ்ந்து வருவது வருத்தத் திற்குரிய அலுவல் எனப் பேராசிரியர் கலையருவி கண பதிப்பிள்ளை கூறுவார். இந்தத் தவறு தன்னில் ஏற் படக்கூடாது என வித்தி பலமுறையும் கூறுவாா . சமகால இலக்கியம் பற்றி உணர்ந்தும் உணராத வர்போலப் பலர் இருந்தனர். பலர் உரைத்ததையும் விளங்கியும் விளங்காதவர் போலவும் இருந்தனர். ஈழத்து எழுத்தாளரின் படைப்பு யாவும் நூல் வடிவில் வரவேண்டும், ஈழத்திற்குத் தனித்துவம் ஒ , று இருக்க வேண்டும் என்பதனை வித்தியின் பேச்சிலே, எழுத் திலே பரக்கக் காணலாம். ஈழத்துத் தரமான படைப் புகளுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு ஆண்டுதோ றும் வழங்கப்பட வேண்டும் என்ற கண்டிப்பான கருத்துடையவர் பேராசிரியர். பேச்சுத் தமிழில் எழு கின்ற நாடகம், சிறுகதை, ஒருகள நாடகம், கவிதை நெடுங்கதை எல்லாம் தமிழ் இலக்கியப் பரப்பில் அடங்கும் என்ற கருத்தைக் கடந்த நாற்பதாண்டுக ளாக வலியுறுத்தி வந்துள்ளார் இவர். இன்று இவ ரின் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய அலுவல்,

Page 22
)uyah 30- سے
ஈழத்துக் கலை இலக்கிய வாழ்வில் புத்தம் புதிய யுகம் ஒன்றை ஏற்படுத்த முயன்றவர் அவர். அந்தச் சிலரில் அதிமுக்கியமான இடம் பெறுபவர் பேராசிரி யர் கணபதிப்பிள்ளை. அந்த யுகத்திற்குப் புதியவேகம் கொடுத்ததில் முக்கியமானவர் பேராசிரியர் வித்தி யானந்தன்,
1946ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரைக் குச் ஈழத்தின் இலக்கியத் தனித்தன்மை துலக்கம் பெற வித்தியானந்தன் அயராது உழைத்து வருகின்றர். இப்போது துணைவேந்தராகப் பணிபுரியும் இவர் முன் னர்போல கலை இலக்கிய வாழ்வில் ஈடுபட நேரம் இல்லை என இவரின் நண்பர் பலரும் கவலுவர், நிரு வாகப் பொறுப்புடன் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் பொறுப்பையும் பெருமளவில் இவர் ஏற்று நடத்தி வருகின்ருர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
சாகித்திய மண்டலப் பரிசு :
" தோல்வியுற்ற எழுத்தாளர் பின்னர் இலக்கிய ஆய்வாளராக மாறுவது வழக்கம் '. இப்படியான கூற்று ஒன்று இலக்கியப் படைப்பாளர் மத்தியில் நிலவுகின்றது. ஆனல் பேராசிரியர் வித்தியானந்தன் வெற்றியுடன் திகழும் எழுத்தாளர். கைதேர்ந்த எழுத்தாளர் ஆராய்ச்சியாளர்; கலைஞர்; இவருக்கு இரண்டு முறை இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. பிறை அன்பன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய " கலையும் பண்பும் " நூலுக்கு சாகித் திய மண்டலப் பரிசு கிடைத்தது. 1984 இல் இவ ரின் ' தமிழியற் சிந்தனை "" என்ற நூலுக் கும் அதே பரிசு கிடைத்தது. இது பாராட்டப்பட வேண்டிய அலுவல்:

ー31 ー
வெளிநாட்டுக் கலைத் தூது :
பேராசிரியர் வித்தியானந்தனின் கலைத் துறைச் சாதனே அவருக்கு அனைத்துலகப் புகழை ஈட்டியது. இதனல் வெளிநாடுகளும் இவரின் பெருமையை உண ரத் தொடங்கின. இதன் பயணுக இவர் 1960 - 61 ஆம் ஆண்டுகளில் ஈழத்தின் தனிப்பெரும் கலைத்தூது வராகச் சென்ருர், தெற்கு இங்கிலாந்து, வேல்சு ஆகிய பகுதிகளில் நிலவும் மக்கள் கலைபற்றிய ஆய்வு ஒன்றை நடத்தும் படி பெரிய பிரித்தானியக் கலைக் கழகம் அழைப்பு ஒன்றை அனுப்பியது. ஆராய்ச்சி செய்வதுடன் இங்கிலாந்தின் பல நிறுவனங்களில் இவர் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். இவரின் புலமை நிபுணர் கள் பலரையும் கவர்ந்தது. யூகோசிலாவியா அர சாங்க அழைப்பை ஏற்று அந்த நாட்டிலும் ஆய்வை யும் விரிவுரையையும் நடத்தினர். இதன் பின்னர் ஐக்கிய அமெரிக்கா, யப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று கலைத் தூதுவராகப் பணிபுரிந் தார். எதனையும் திட்டமிட்டு மிகவும் நுணுக்கமாகச் செய்கின்ற இயல்பு பேராசிரியரிடம் உண்டு. ஆகவே கலைத்தூதுவராகச் செல்லும்போது ஒலிப்பதிவு நாடா பலவற்றையும் தம்முடன் எடுத்துச் சென்ருர், அள வெட்டி, வட்டுக்கோட்டை, காங்கே கன்துறை, மன் ஞர், மட்டக்களப்பு, மலையகம் ஆகிய எல்லாப் பகுதி களுக்கும் சென்று மக்கள் கலைச் செல்வத்தை ஒலிப் பதிவு செய்தார். இந்த ஒலிப்பதிவுகளுக்குரிய விளக்க வுரையை மிகவும் தெளிவாகத் தயாரி செய்தார்; இந்த முன்னேடி முயற்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற நிலையங்களில் இந்த ஒலிப்பதிவு நாடாக்கள் பேணி வைக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பி டப்பட வேண்டியது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட் டுத்தாபனமும் இவரின் ஒலிப்பதிவுகளைக் காலத்துக் குக்காலம் ஒலிபரப்பியது

Page 23
- 32 -
ஆராய்ச்சி வழிகாட்டி :
கலைமகிழ்நன் வித்தியானந்தன்; அதுமட்டன்று: ஆராய்ச்சித் துறையில் " யான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறவேண்டும் " என்ற உயர்ந்த நோக்கு டன் இவர் வாழ்ந்து வருகின் ருர்; இதனல் இவர் ஈழத்து ஆராய்ச்சி மாணவருக்கு உதவ எந்த நேர மும் தயாராக இருக்கின்ருர், ஆராய்ச்சி மாணவருக்கு இவரின் சொந்தப் படிப்பகம் எப்போதும் திறந்த படியே இருக்கும். தன்னிடம் உள்ள அறிவை எல் லோருக்கும் அன்புடன் வழங்குவார். ஆராய்ச்சி நூல் அருஞ்சுவடி, பழைய சஞ்சிகை, நறுக்குகள் பலவும் இவரிடம் இருக்கின்றன. இவற்றை வைத்துக்கொண்டு இரவல் கொடுக்காமல் 'இல்லை" என்கின்ற வழக்கம் இவரிடம் இல்லை. இதனல் இவர் பலவற்றையும் இழந்துமிருக்கின்ருர். இரவல் வாங்கியவர் பலரும் வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதில்லை எனக் கவ லேப்படுவார். இருந்தும் இரவல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டார். இவர் வழிகாட்டிய மாண வர் பலரும் இன்று பல்கலைக்கழகங்களில் பேராசிரி யர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் இருக்கின்ற னர். பெரும் புகழையும் ஈட்டியுள்ளனர்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை ஆராய்ச்சியாளர் யாவரும் எமது நாட்டின் கலை வளர்ச்சி பற்றி நன்கு ஆராயவேண்டும் என்ற கொள் கை பேராசிரியரின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளது அதே நேரத்தில் சமகால இலக்கியம் பற்றி ஆராய வேண்டும் என்ற பெரும் எழுச்சியும் இவரிடமுண்டு: 1950இல் தன் ஆராய்ச்சியை இலண்டனில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இவர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கின்ற பெரும் பழுவையும் பெருமளவில் மேற் கொண்டார்; அத் துட ன் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் மாணவரையும் ஊக்கப்படுத்தி நெறிப்

سے 33 --
படுத்தினர். பேராசிரியரின் புலமை பன்முகமானது. சாதி சமயம் இனம் என்ற குறுகிய வட்டங்களில் இது இயங்குவதில்லை. கலாநிதிப் பட்டம் பெற்று நாடு திரும்பிய இவரின் ஆராய்ச்சி வழிகாட்டல் வேலை " முசிலிம் தமிழ் இலக்கியம் ' என்னும் பொருளு டன் தொடங்கியது. இதனை மேற்கொண்டவரை ப் பேராசிரியர் பெரிதும் ஊக்கப்படுத்திஞர். தமிழ் நாட்டில் கூட இந்த ஆராய்ச்சி அப்போது சரியாக மேற்கொள்ளப்படவில்லை. சிலரின் மேடைப் பேச்சு, கட்டுரை போன்றவற்றில் மட்டும் இசிலாமியரின் தமிழ்த் தொண்டு தொட்டுக் காட்டப்பட்டது. தமிழ் வளர்ச்சிக்குச் சமணர், பெளத்தர், கிறித்தவர் ஆற் றிய தொண்டு போன்றது இசிலாமியரின் தொண்டு என்பதை ஆராயப் பேராசிரியர் பெரிதும் உதவிஞர். இசிலாமியரின் தமிழ்த்தொண்டு என்ருல் அது ' சீருப் புராணம் மட்டும் " என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. இதனை அகற்றிய பெருமை இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கே உரியது. இதற்கு முன்னேடி யாக இருந்து உதவியவர் வித்தியானந்தன். இது பாராட்டப்பட வேண்டிய அலுவல். அதுமட்டன்று "ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி', 'ஈழத்துப் பத் திரிகை வளர்ச்சி" "ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி" போன்றவை ஆராய்ச்சியாளருக்குரிய அரும் பெரும் பொருள். இவற்றைத் தெரிந்து எடுத்து முதுமாணி, கலாநிதி போன்ற பட்டப் பின்படிப்பிற்கு ஆய்வு செய்யும் படி தன் மாணவரைப் பேராசிரியர் தூண்டி யுள்ளார்; வழிகாட்டியுள்ளார். தமிழைப் பொதுப் பாடமாகவும், சிறப்புப் பாடமாகவும் கற்றுத் தேறு கின்ற பட்டதாரிகள் தமிழைத் தொடர்ந்து கற்ப தில்லை; ஆராய்ச்சி செய்வதில்லை. அரசாங்க உத்தி யோகத்தில் ஈடுபட்டுச் சொகுசான வாழ்வைத் தேடிப் போய்விடுவர் எனப் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அந்தக் காலத்தில் கவலைப்படுவார். இந்தக் கவலை

Page 24
-34 -
யைப் போக்கும் வகையில் பேராசிரியர் வித்தியானத் தனின் ஆராய்ச்சி வழிகாட்டல் அமைந்துள்ளது. இப் படி வழிகாட்டியவர் சிலர். அந்தச் சிலரில் தலையாய நிலையில் இருப்பவர் "வித்தி" என்ருல் அது ஒருபோதும் மிகைபடு கூற்ருக அமையாது. இப்படியாக ஆராய்ச் சியை வளர்த்துவிடுவது இந்த நாட்டின் எதிர்காலத் திற்கு நல்ல அறிகுறி.
மேல்நாட்டுப் புலமையிலும் ஆராய்ச்சியிலும் ஈடு பட்டுள்ள பேராசிரியர் வித்தியானந்தன் எமது நாட் டில் நிலவுகின்ற பாரம்பரியக் கல்விமுறையை ஒரு போதும் மறந்திலர். இந்தப் பாரம்பரியக் கல்வி முறைப் பிரதிநிதிகளான பண்டிதர் வித்துவான் பல ரும் சில வேளைகளில் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை, இந்துப் பண்பாட் டுத்துறையைக் காரசாரமாக விமர்சனம் செய்வதும் உண்டு, இ த னை ப் பேராசிரியர் வித்தியானந்தன் பொருட் படுத்துவதில்லை. பேராசிரியர் கணபதிப் பிள்ளை எடுத்த பெரும் முயற்சியினுல் பண்டிதர்கள், சித்தாந்த அறிஞர்கள் சிலர் பகுதிநேர விரிவுரையா ளர்களாக அந்தக் காலத்தில் விரிவுரை நிகழ்த்தினர். இவர்களுடன் பேராசிரியர் வித்தியானந்தன் நன்கு பழகுவார். அத்துடன் அவர்களின் புலமை யையும் நன்கு மதித்தார். இவர்களின் பேச்சை, கட்டுரைகளை நன்கு ஆராய்வார். இதனலேதான் தமிழை மரபுவழி நின்று கற்றுத் தேறியவர்களுக்கு " இலக்கிய கலா நிதி ", " இலக்கண வித்தகர் " போன்ற பட்டங் களை வழங்கவேண்டும் எனப் பேராசிரியர் வித்தியா னந்தன் வலியுறுத்தினர்; அதில் வெற்றியும் கண்டார்
இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ் சிங்களத் துறை இரண்டும் இணந்து " வித்துவான் " சான்றி தழுக்கு நிகரான படிப்பைத் தொடங்கின. இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது: இந்தப் படிப்பு

- 35 -
நெறிக்கு மாணவரைத் தெரிவு செய்தல், பாடநெறி. பாடநூல் தெரிவு என்பவற்றிற்குப் பேராசிரியர் கண பதிப்பிள்ளைக்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரி யர் வித்தியானந்தன் உதவினர்; ஆனல் இந்தப் படிப்பு நெறி சிக்கல் பலவற்றையும் ஏற்படுத்தியது. பல்கலைக் கழகப் பாட நெறியைப் பின்பற்றிப் படித்தவர்களுக்கு உயர்ந்த சம்பளமும், தமிழ் சிங்களப் பண்டிதர்க ளுக்குக் குறைந்த சம்பளமும் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சிக்கல் ஒன்று. இன்னும் சிக்கல் பல எழுந்தன. இதனுலோ என்னவோ தெரியாது இந்தக் கற்கை நெறியைப் பல்கலைக்கழகம் கைவிட்டது. நல்லதொரு முயற்சி கைவிடப்பட்டது என அப்போது பலரும் கவலைப்பட்டனர்.
இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராதனை வளா கத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் பணிபுரிந்து வந்தார். அந்தக்காலம் தொடக்கம், வித்தியாலங்கார வித்தியோதய வளாகங்களில் நடந்த ஆராய்ச்சித் துறை முயற்சிகளுக்கும் இவர் உதவி வந்தார். இவ ரின் புலமையை நன்கு உணர்த்தன சென்னைப் பல்க லைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம், மலேசியப் பல் கலேக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்: எனவே வித்தியானந்தனைத் தமது ஆராய்ச்சிப் பிரி வில் மாணவரின் வெளிநாட்டு வழிகாட்டியாக நிய மித்தன; அதுமட்டன்று. இங்கிலாந்து பல்கலைக்கழ கத்திற்குரிய தேர்வுகளுக்குப் பாடநூல்களைத் தெரிவு செய்வதற்கு இவரின் துணையை அந்தரங்கமாக நாடி னர். வித்தியானந்தனின் அறிவுறுத்தலின் பெயரி லேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் " மாணிக்க மாலை " என்னும் நூல் 1951இல் அப் பல்கலைக்கழ கத்திற்குரிய தேர்வுப்பாட நூலாயிற்று.

Page 25
- 36 -
மேடைப் பேச்சாளர் :
முன்னர் சுட்டிக்காட்டியதுபோலப் பேராசிரியர் வித்தியானந்தன் தமிழ் பேசும் பொது மக்களின் தொடர்பை ஒருபோதும் மறந்தாரில்லை. இதனுலே தான் இவர் ஈழத்தின் பல பாகங்களிலும் இருந்து வருகின்ற அழைப்பை ஏற்று மேடைகளில் உரை யாற்ற அவ்வப்போது செல்வார். கல்லூரிப் பரிச ளிப்பு விழா, இலக்கிய விழா, நாடக விழா போன் றவற்றிற்கு எல்லாம் விழா அமைப்பாளர் பலரும் இவரைப் பெரிதும் விரும்பி அழைப்பர். இப்படியான பேச்சுக்களில் அறிவு, ஆற்றல், புலமை, அழகு எல் லாம் நிரம்பி இருக்கும். இந்தப் பேச்சுக்கள் யாவும் ஈழத்துச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. மிக வும் சிக்கலான ஆராய்ச்சி அலுவல் பலவற்றையும் பொதுமக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் பேராசி ரியர் விளக்குவார்; மாணவருக்கு அறிவுரை பலவற் றையும் வழங்குவார். பேச்சிலே நகைச்சுவை நிரம்பி யிருக்கும். கூட்டத்தை அமைப்பவர் பெரியவரா சிறி யவரா என்பது பற்றிய கவலை இவருக்கு இல்லை. நல்ல முயற்சிக்காகவே கூட்டம் நடக்கிறது எனக் கண்டால் அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொள்வர்.
தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இவர் சிறந்த பேச்சாளர். தமிழ் நாடகக் குழுவின் தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில் உரை யாற்றுவார். தமிழ் தெரியாத அமைச்சர், கலாச்சார அமைச்சின் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுப் பிரதி நிதிகள், பார்வையாளர்கள் போன்றேர் விழாவிற்கு வருகை தருவர். இவர்களுக்கு விளங்கும் வகையில் மிகவும் சுருக்கமாகத் தெளிவாக ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார் இவர், இப்படி இவர் நிகழ்த்திய கலை விளக்கவுரை பலவும் வெளிநாட்டவரின் பாராட்டைப் பெற்றுள்ளன. இப்படி இவரைப் பாராட்டியவரில்

- 37 -
ஒருவர் இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி லெவி. அரிச்சந்திர மயானகாண்டத்திற்குப் பேராசிரியர் வித்தியானந்தன் நிகழ்த்திய விளக்கவுரை பு க |ழ் வா ய் ந் த து. பேராசிரியர் வித்தியானந்தன் நிகழ்த்திய முக்கியமான மேடைப் பேச்சுக்களைத் தொகுத்து ஆராய்வது பயனுள்ள முயற்சியாகும்.
வானுெலியில் வித்தி :
பேராசிரியர் வித்தியானந்தன் வானெலியில் நிறை யப் பேசியுள்ளர். இவர் நிகழ்த்துகின்ற வானெலிப் பேச்சு யாவும் இவரின் தனி முத்திரையைப் பெற்றி ருக்கும், வானெலிப் பேச்சு யாவும் பெரும்பாலும் பொதுமக்களுக்கே உரியவை. சாதாரண நேயர் ஒரு வரை உள்ளத்தில் வைத்துப் பேராசிரியர் தன் பேச் சுக்களை எழுதுவார். அதே நேரத்தில் இவரின் பேச்சு யாவும் கற்றவர்களுக்கும் பெருவிருந்தாக அமையும் . குறிப்பாக இவர் வானெலியில் கூத்துக்கலை பற்றி நிகழ்த்திய பேச்சுப் பொது மக்களுக்கும் பெரும் பயன் தருபவை; கூத்துக் கலைஞரைத் தூண்டிவிடுபவை; அறிஞருக்கு இவை பெரு விருந்து, கூத்துக்கலைபற்றிய விழிப்புணர்ச்சியை இப் பேச்சு யாவும் ஏற்படுத்தியுள் ளன. ஈழநாட்டில் வாழ்ந்த கலைப்பெரியார் பற்றிய இவரின் பேச்சு யாவும் மதிப்பீடாக அமைந்துள்ளன. இவை தவிர இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய "" தமிழ் ஓசை " போன்ற நிகழ்ச்சி பல வற்றிலும் வித்தியானந்தன் பேசி எல்லோரின் பாராட் டையும் பெற்றுள்ளார்.
இன்று இலங்கை வானெலியில் கூத்து, மக்கள் கலை பற்றிய உரைகளும் கலந்துரையாடல்களும் ஒழுங் காக நடைபெறுகின்றன. இது பெருமைக்குரிய அலு வல். இப்படியான முயற்சிக்குப் பெரும் அளவில் முன் னேடியாக அமைந்திவருள் முக்கியமாக அமைந்தவர்

Page 26
است 38 حس
வித்தியானந்தன். இவரால் மெருகு ஊட்டப்பட்ட கூத்துக்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அந்தக் காலத்தில் ஒலிபரப்பியது. கூத்துக் கலைஞர் பலரும் வானுெலிக்கு இவரால் அறிமுகஞ் செய்யப் பட்டவர். இப்பொழுது இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தினர் வெளிக்கள ஒலிப்பதிவுப் பொறுப் பாளர், கலைஞர் வாழும் பகுதிகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புகின்றனர். இப்படியான நல்ல முயற்சியாவும் பேராசிரியர் வித்தி யானந்தனின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் என்ப தில் ஐயமில்லை. தான் தொடக்கி வைத்த முன்னுேடி முயற்சி இன்று பரந்து விரிந்து நிற்கின்றது என்பது பற்றி இவர் பூரிப்படைவார்.
கட்டுரை ஆக்கம் :
இவரின் முதலாவது கட்டுரை முதலாவது "இளங் கதிர்" ஏட்டிலே வெளிவந்தது. இந்த ஏட்டை இலங் கைப் பல்கலைக்கழகத்துச் தமிழ்ச் சங்கச் சார்பிலே தோற்றுவித்து முதற் பதிப்பை வெளிக்கொணரும் பெரு வாய்ப்பு எனக்கு 1949இல் கிடைத்தது. பேரா சிரியரின் இந்தக் கட்டுரை தரமாக இருந்தது. ஈழ தாட்டவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டை இக் கட்டுரையில் ஆராய்ந்தார். இக் கட்டுரையைத் தொடர்ந்து இன்று எத்தனையோ கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இக் கட்டுரை யாவும் இவரின் அறிவு, பேராற்றல், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றிற்கு எடுத் துக்காட்டாக அமைந்துள்ளன. அத்துடன் இலகுவான செந்தமிழ் உரை நடைக்கும் இக் கட்டுரை யாவும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ஈழத்தின் தனித் தன்மை போற்றப்பட வேண்டும் என்ற கோட்பாடு இளம் வித்தியானந்தனின் உள்ளத்தில் குடிகொண் டது. இந்தக் கோட்பாட்டை உருவாக்கி அதனை வித் திக்குக் கையளித்தவர் பேராசிரியர் கலையருவி கணப

-- 39 -س-
திப்பிள்ளை. இந்தக் கோட்பாட்டை விரித்து வளர்த்து விட்டார் பேராசிரியர் வித்தியானந்தன். தன் முத லாவது கட்டுரையிலேயே வட எழுத்தை வித்தியானத் தன் தவிர்த்துவிட்டார். இங்ஙனம் கட்டுரை ஆக்சு இலக்கிய உலகிற் புகுந்த பேராசிரியர் வித்தி, இதன் மூலம் பெரும் சா த னை ஒன்றை நிலைநாட்டினர். கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக எத்தனையோ கட்டுரைகளை எழுதினர். இவற்றைத் தொகுத்து ஆராய்தல் பயனுள்ள முயற்சி. இலண்டன் மாநகரிலி ருந்து ஆராய்ச்சிக் கல்வியை முடித்துக்கொண்டு வந்த கலாநிதி வித்தி தன் இலண்டன் மாநகர நினைவுகளை யும் பிரயாண அனுபவங்களையும் விரித்து எழுதினர். இவை " தினகரன் " ஞாயிறு ஏட்டிலே வெளிவந் தன. அப்போது நான் இந்த ஏட்டிலே சிலகாலம் பணிபுரிந்தேன். கட்டுரையைக் கலாநிதியிடமிருந்து பெறுதல், அச்சேற்றுதல் எல்லாம் என் பொறுப்பு இத்துறையில் கட்டுரை ஆக்க முயற்சிக்கு வழிகாட்டி யாக வித்தியானந்தன் இருந்தார். வித்தியின் கட்டு ரைகளுடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசி ரியர் உவைசு, சோமசுந்தரப்புலவர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோரின் கட்டுரைகளையும், பாட் டுக்களையும் பெற்று வெளியிடுகின்ற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை என் பேறு;
பேராசிரியர் வித்தியானந்தனின் கட்டுரைகள் பல வற்றிலும் தனித்தன்மை மிளிரும் பொது மக்களுக் கும் ஆராய்ச்சி மாணவருக்கும் இவரின் கட்டுரை பெரிதும் பயன்படுகின்றன. இங்கிலாந்திலிருந்து திரும் பிய இளம் வித்தி இங்கிலாந்து மக்களுடைய நற்பண் புகளைப் படம்பிடித்துக் காட்டினர். எமது வாழ்க்கை யையும் அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட் டார். இப்படியான ஒப்புநோக்கில் ஆழ்ந்த சமுதா யப் பார்வையும், மெல்லிய நகைச்சுவையும் இழை

Page 27
-- 40 س
ஒடி இருக்கும். இவரின் உரைநடை மிகவும் எளிமை யானது, இனிமையானது. இதனுலேதான் இவருக்கு இரண்டு வெவ்வேறு முறைகளில் இலங்கைச் சாகித் திய மண்டலப் பரிசு கிடைத்தது. அதுமட்டன்று: பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போ ன் ருே f ன் பாராட்டையும் இவரின் கட்டுரைகள் பெற்றன.
வடமொழியில் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு வெறுப்புக் கிடையாது. தூய தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது வடமொழிற் சொற்களைக் கடன் எடுப்பது இவருக்குப் பிடிக்காத அலுவல். வலிந்து வலிந்து மணிப்பிரவாள நடையைக் கையாள்வதை யும் இவர் விரும்ப மாட்டார். யாழ்ப்பாணத்தை " வீணுகானபுரம் " என்பது நகைப்புக்குரிய அலுவல் என்பர். தமிழ் நாட்டிலே ஆங்கிலச் சொற்களைப் பிழையாக உச்சரித்துப் பிழையாக அவற்றைத் தமி ழில் எழுதுவதை இவர் ஒருபோதும் விரும்ப மாட் டார். அதற்கு எடுத்துக்காட்டாக " காபி, டீ, பாட் டில் " என்ற சொற்களைத் தருவார். இவற்றின் சரி யான ஆங்கில உச்சரிப்பு "கொபி' "ரீ" "பொட் டில்". இந்த ஆங்கிலச் சொற்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் கோப்பி, தேநீர், போத்தல் என இருப்பதை இவர் சுட்டிக் காட்டுவார். யாழ்ப்பாணத் தில் இந்த ஆங்கிலச் சொற்கள் சரியாக உச்சரிக்கப் பட்டு, பின்னர் பேச்சு வழக்கில், எழுத்து வடிவில் செந்தமிழ் குன்ற த வடிவம் பெற்றுள்ளன.
ஒரு காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நெடுங் கணக்குக்கூடச் சற்றுத் தெரியாதவர் தமிழைக் கற்றனர். இதனுல் பாடநூல்களை எழுத்துக் கூட்டி வாசித்துப் படிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனலேதான் வித்தியானந்தன் இலகு தமிழில் எழு துவதைப் பெரிதும் விரும்புவார். இங்கிலாந்துப் பிர தமராக இருந்த சேர்வின் சிற்றன் சேர்ச்சில் என்பார்

-س- {4 ---
தனது யுத்த காலச் சொற் பொழிவிலே இலகுவான ஆங்கில நடையையே கையாள்வார்; ஆனல் இவரின் உரைநடை மிகவும் வன்மை வாய்ந்தது. கேட்போ ரைத் தட்டி எழுப்ப வல்லது இரண்டாவது உலகப் பெரும்போரில் பெரிய பிரித்தானியாவிற்கு வெற்றி ஈட்டித்தரச் சேர்ச்சிலின் சொற்பொழிவு பெரிதும் உதவியது. இந்த எடுத்துக் காட்டைப் பேராசிரியர் வித்தியானந்தன் பலமுறையும் சொல்வார்.
ஈழத்தின் தனித்தன்மை :
எல்லாத் துறைகளிலும் ஈழத்துத் தனித்தன்மை கட்டிக் காக்கப்படவேண்டும் என்பது பேராசிரியரின் பெரும் நம்பிக்கை; ஆனல் இது தமிழ் நாட்டை வெறுப்பதாக அ  ைம வ தி ல் லை. தமிழ் நாட்டிலே மறைந்துபோன சொல்வழக்கு, சமுதாயப் பழக்க வழக்கம், கலை வடிவம் பலவும், ஈழத்தில் இன்றும் நிலவுகின்றன என்பதை வித்தியானந்தன் அழுத்திக் காட்டுவார். ஈழநாட்டினர் எழுதிய நூல்களைக் காப் பது எமது கடமை என்பார் இவர். ஈழத்துப் புல வர் எழுதிய கூத்து நூல்களை ஏட்டு வடிவில் இருந்து அச்சு வடிவிற்குக் கொண்டுவந்த பெருமை வித்தியா னந்தனைச் சாரும். மன்னர் மாதோட்டப் புலவர் கத்தோலிக்க நாடகங்களில் இவருக்குப் பெரும் ஈடு பாடு உண்டு
இக்காலத்தில் ஈழத்து எழுத்தாளர் பலரும் தமது படைப்புகளை அச்சிட்டு வெளியிடுகின்றனர். இந்த முயற்சிக்குப் பேராசிரியர் வழங்கும் ஆதரவு இம் மட்டன்று. இதனுலேதான் பல நூல்களுக்கும் இவர் உள்ளம் உவந்து முன்னுரை வழங்குவார். எழுத்தா ளரைக் கெளரவிக்கின்ற, பாராட்டுகின்ற கூட்டங்க ளில் இவர் கலந்து கொள்வார். " புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி " நூலுக்கும் இவர் முன்

Page 28
-۔ 42 سے
னுரை வழங்குவார். அதே நேரத்தில் கல்லூரி மாண வரின் சிறுகதை ஆக்கத் தொகுப்பு நூலுக்கும் உள் ளம் உவந்து முன்னுரை வழங்குவார். பழம்பெரும் எழுத்தாளர் பெரும் மரம் போன்றவர். இளம் எழுத் தாளர் வளரும் மரம் போன்றவர். மாணவ எழுத் தாளர் இரண்டு இலைகொண்ட முளை போன்றவர். இந்த மூன்று சாரருக்கம் வித்தியானந்தனின் உதவி தாராளமாகக் கிடைக்கும்; உதவி வழங்க இவர் தயங்குவதில்லை. இது இவரின் தனிப் பண்பு. ஈழத் தின் எதிர்காலத்துத் தமிழ் வளர்ச்சிக்கு இது சிறந்த அறிகுறி.
அனைத்துலகக் கருத்தரங்கில் :
பேராசிரியர் வித் தியானந்தனின் எழுத்தும் பேச் சும் கருத்தும் தமிழ் கூறும் நல்லுலகின் புகழைப் பெற்றுள்ளன; இ த ஞ ல் ஈழத்துத் தமிழ் உலகம் பெரும் பெருமையடைந்துள்ளது. அனைத் து ல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இவர் சாதித்தவை புறம்பாக ஆராயப்படவேண்டியவை. இந்த மாநாடு கள் கோலாலம்பூர், சென்னை பரிஸ், யாழ்ப்பாணம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றன. இந்த மாநாடுகள் தமிழுக்கு அனைத்துலகக் களிப்பை ஏற்ப டுத்தின. இந்த நிறுவனம் வெற்றியுடன் இயங்கப் பேராசிரியர் வித்தியானந்தன் அன்று தொடக்கம் இன்று வரையும் அயராது உழைத்து வருகின்றர். வரலாற்றுப் பெருமைமிக்க இந்த நிறுவனம் கால் கொள்ள உழைத்தவர் தனிநாயக அடிகளார். அடிக ளாருக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அந்தச் சில ரில் முக்கியமான ஒருவர் பேராசிரியர் வித்தியானந் தன.
நான்காது அனைத் து ல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என இந்த நிறுவனம் முடிவு செய்தது. இந்த முடி

ح- 43 س
வுக்கு வடிவம் கொடுத்து மாநாட்டை வெற்றிபெறச் செய்தவர் பேராசிரியர் வித்தியானந்தன். யாழ்ப்பா ணத்தில் 1974இல் நடந்தேறிய மாநாடு பெரும் வெற்றியை ஈட்டியது. தொடக்கத்திலிருந்து இந்த மாநாட்டிற்குத் தொல்லைகள், எதிர்ப்புகள் முட்டுக் கட்டைகள் இருந்தன. இறுதியில் நடக்கக் கூடாதவை நடந்தேறின. உயிர் இழப்பு நடந்தது. இந்தச் சோக நிகழ்ச்சியின் தாக்கம் இன்னும் மாறவில்லை. இதனை இங்கு ஆராய வேண்டியதும் இல்லை. இத்தனை தடை யையும் தாண்டி மாநாட்டை வெற்றிபெறச் செய்த பெருமையில் பெரும்பங்கு வித்தியானந்தனைச் சாரும். மாநாட்டிற்குப் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பார்வையாளர் வந்தனர். இவரில் பலர் வித்தி யானந்தனின் நண்பர். இவர்களை உள்ளம் கோணுது வரவேற்று உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெரும் பொறுப்பான அலுவல், அத்துடன் மாநாட் டுப் பொது ஒழுங்கு, ஏற்பாடு என்பவற்றையும் வித் தியானந்தன் ஒடி ஒடிச் செய்தார். இலங்கையில் ஏற் பட்ட அரசியல் கெடுபிடிகளின் காரணமாக அறிஞ ரின் வருகையில் தடங்கல்களும் ஏற்பட்டன. இன் னும் சில அறிஞர்கள் மாநாடு நடக்காது என்ற ஐயப் பாட்டினல் தம் கட்டுரைக்கு இறுதி வடிவம் கொடுக் கவில்லை. இங்கு வந்துதான் இறுதிவடிவம் கொடுத் தனர். ஈழத்து ஆராய்ச்சியாளரின் கட்டுரைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தல், வழி காட்டுதல், கல் லச்சில் இடுதல் போன்ற பொறுப்புகள் இருந்தன. இதற்கு உதவக் கூடிய ஈழத்து அறிஞர் சிலர், மாநாட்டைவிட்டு விலத்தி நடந்தனர் அரசியல் கார ணங்களுக்காக. இத் த னை தொல்லைகளுக்கும் ஈடு கொடுத்துச் சமன் செய்து நடப்பது வித்தியானந்த னின் கடமை இதனல் உடல் நலம் குன்றியது: உளச்சோர்வு ஒரு பக்கம், மருந்தும் கையுமாக இருந்து பணிபுரிய வேண்டிய நிலை வித்தியானந்தனுக்கு

Page 29
- 44 -
ஏற்பட்டது. யாழ்ப்பாணத்து மாநாடு ஏற்படுத்திய தாக்கம், விளேவு, அதன் பின்னணி அரசியல் அலை மோதல் பற்றி யாரும் ஆராயலாம் எப்படி ஆராய்ந் தாலும் வித்தியானந்தன் இந்த மாநாட்டின் கலங் கரை விளக்கமாக அமைந்தார் என்ற உன்மையை யாரும் மறுக்கமுடியாது.
ஈழத்தில் தமிழியல் :
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்கு வழிகாட்டி யாக, பங்கு கொள்பவராக, அமைப்பாளராக அமைந்த பேராசிரியர் வித்தியானந்தன் வழிநடத்தி வந்துள்ளார். அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவ னத்தின் கிளேகள் பல நாட்டிலும் இருக்கின்றன. இதன் ஈழத்துக் கிளையின் தலைவர் பேராசிரியர் வித் தியானந்தல் . ஏனைய நாட்டுக் கிளைகளிலும் பார்க்க ஈழத்துக்கிளையே இன்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இவரை வழிகாட்டியாக அமைப்பாள ராகக் கொண்டு இந்தக்கிளை மட்டக்களப்பு, முல் லைத்தீவு போன்ற இடப்களில் ஆராய்ச்சி மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளது. இது பேருமைக் குரிய அலுவல் மலையகத்திலும் இப்படியான சிறப் பாண மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்பது பேராசிரியரின் திட்டம். இந்தத் திட்டம் நிறை வேறும் நல்ல நாளை எதிர்பார்த்து நிற்போமாக.
சமநோக்கு :
பேராசிரியர் பிறப்பால் சைவர்; நல்ல சைவர். சைவக் குடும்பத்தில் பிறந்து சைவப் பின்னணியில் வளர்ந்தவர். இருந்தும் சாதி, சமயம் போன்ற குறு கிய வட்டத்தில் நின்று செயற்படுகின்ற தன்மை இவருக்கில்லை. இசிலாமியர், கிறித்தவர், பெளத்தர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுபற்றி நடுநிலை மையுடன் நின்று இவர் ஆராய்ந்துள்ளார். பிறரை

一45一
யும் ஆராய வைத்துள்ளார். இசிலாமியர் பற்றி " பிறையன்பன் ' என்ற புனைபெயரில் ' கலையும் பண்பும் " என்ற நூலை எழுதினர். இதற்கு 1961இல் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. கத்தோலிக்கக் கூத்துகள் பற்றி இவர் செய்த ஆய்வு கள் புகழ் பெற்றவை. கத்தோலிக்கக் கூத்துகளை ஆய்ந்து இவர் பதிப்பித்துள்ளார். கிறித்தவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு பற்றிச் சிறப்பாக இவர் ஆய்வுகளை நடத்தினர். அதிலும் ஈழத்துக் கிறித்தவர்கள் பற்றி இவர் நடத்திய ஆய்வுகள் மிக வும் முக்கியமானவை. இவை யாவும் முன்னேடி முயற்சியாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணத் துப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்த பீடம் ஒன்றினை அமைப்பதற்காக இவர் எடுத்த பெருமுயற்சி விரை வில் பயன் தரும். இப்படியான சமநோக்கு இவர் உள்ளத்தில் குடிகொண்டுள்ளது. போற்ற வேண்டிய தைப் போற்றுவதே இவரின் பண்பு, இவரின் கட்டு ரைகள் யாவும் 'இளங்கதிர்' "மசிலிசு' 'இந்து தர்மம்' "இந்து இளைஞன்' போன்ற ஏ டு களி ல் வெளிவந்துள்ளன; இவை இவரின் சமநோக்கிற்குத் தக்க சான்று பகரும் .
சாதனையும் வேதனையும் :
பேராசிரியர் வித்தியானந்தனின் சாதனை பல . ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் சிறப்பாக வும், தமிழ் வரலாற்றுடன் பொதுவாகவும் இவரின் வாழ்க்கை அமைந்துள்ளது; இணைந்துள்ளது, சாதனை களை இன்னும் பலர் மதிப்பிட வேண்டும். வேதனை நிறைந்த நிகழ்ச்சிகளையும் இங்கு கவனிக்க வேண் டும். எடுத்துக் காட்டாக வேதனை மூன்றை மட்டும் தரலாம். யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சாதனையை நிலைநாட்டியது. வேதனையையும் தந்தது ஆட்சியாள

Page 30
- 46 -
ரின் கெடுபிடி, இரகசியக் காவலர் தரும் தொல்லை. உள்ளூர் அரசியல் வாதிகள் சிலர் கொடுத்த துன்பம் உயர்தர அரச நிர்வாகிகள் ஏற்படுத்திய சிக்கல், இறுதியில் நடந்த உயிர் இழப்பு எல்லாம் சேர்ந்து இவரின் உடல்நலத்தைப் பெரிதும் பாதித்தன. இவ ரின் அன்பர்கள் பலரும் " வித்தி ஒரு போதும் தமி ழைக் காட்டிக் கொடார். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்பாற்றுவார் " எனப் புகழ்ந்தனர்; ஆனல் இவரைப் பார்வையிட்ட மருத்துவ நிபுணர் ' மாநாடு பற்றிக் கவனஞ் செலுத்திய போதும்! இனி உங்கள் குடும்பத்தினருக்காக உங்கள் உடல் நலத் தைக் கவனியுங்க்ள் ' என்றனர். இதன் விளைவாக இவர் இரண்டு திங்கள் காலம் ஓய்வும் மருந்துமாக இருந்தர். இருந்தும் இரகசியக் காவலர் இவரின் வீட்டைப் பல முறை பரிசோதனை செய்தனர்; மருத் துவப் பரிசோதனை ஒருபுறம். இறுதியில் அரசுச் சார்புடைய அரசியல் தலைவர் ஒருவரின் நல்ல தலை யீட்டினல் இரகசியக் காவலர் அழையா விருந்தாளி யாகச் சென்று இவரைக் குறுக்கு விசாரனை செய்து சல்ல டை போடுவதை நிறுத்தினர். ' அப்பாடி! " என ஆறுதலாக மூச்சுவிட்டார் திருமதி கமலாதேவி வித்தியானந்தன்,
இரண்டாவதாக நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை இனி நோக்கலாம். கொழும்பிலே இவர் ஒழுங்கு செய்த " நந்தனர் " கொட்டகைக் கூத்து இடம்பெற்றது: எல்லோருடைய பாராட்டையும் பெற்றது; சேரிக் காட்சியில் ஆடு கோழியை வைத்து உருவாடும் காட்சி இடம்பெற்றது. உருவாட்டம் மிகவும் நன்கு நடந்தது; அங்கு பார்வையாளராக வந்த கலைவல் லார் ஒருவர் நாடகத்தின் வெற்றியை விரும்பவில்லை; அடுத்த நாளே இலங்கைக் கலாச்சார அமைச் சிற்கு * ஓலை " ஒன்றை வரைந்தார்; அதன் சாரம் வரு

- 47
மாறு :- 19 பெளத்த நாடு ஒன்றிலே, பெளத்த அறம் நிலைபெற்ற ஒரு நாட்டிலே மேடையில் ஆடு கோழி திருகிக் கொல்லப்பட்டன; அதுவும் கலையின் பெய ரால். ' உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த ஒலை பேராசிரியரின் பார்வைக்கு அனுப்பட் டது. இதனுல் இவர் நெகிழ்ந்து போனர். இலங்கைக் கலைக் கழகத்து நாடகக் குழுவினராகிய நாமும், பேராசிரியரின் சிங்கள அன்பர்கள் பலரும் " இது பிழையான ஒலை, நச்சுத்தன்மை வாய்ந்த போலி ஒலை " என வாதிட்டோம். "விசாரணைக்கும் தயார்" என்ருேம். கலை வல்லார் பின்னர் ஆடல் வல்லாராக மாறி ** நல்ல நாடகம் ஆடிஞர் ""
மூன்ருவதாக " இலக்கியத் தென்றல் " நூல் வெளிவந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தர லாம். இதுவே பேராசிரியர் எழுதி அச்சிட்ட முதலா வது நூல். இதற்குப் பெரும் வரவேற்புக் கிடைத் தது. இந்த நூல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளேயின் பாராட்டைப் பெற்றது; ஆனல் ஈழத்து ஏடு ஒன்றின் ஆசிரியரத்தினம் ஒருவருக்கு இந்த முயற்சி பிடிக்க வில்லை. "பல்கலைக்கழகத்து மாணவருக்கு ஏற்ற குறிப் புகள் அடங்கியது இந்த நூல் ' என்னும் கருத் துப்பட எழுதினர் இந்த ஆசிரியரத்தினம். இளம் வித்தியானந்தனின் இளம் நெஞ்சத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; சற்றுக் கலங்கி விட் டார். கடலும் கலங்கித் தெளியும் என்பது ஆன்ருேர் வாக்கு. திருமதி கமலாதேவி வித்தியானந்தனின் மறைவு பேராசிரியரைப் பெரிதும் பாதித்தது; இத் துயர் சொல்லில் அடங்காது
ஒரு யுகம் :
இந்தச் சிறு நூலை நிறைவு செய்ய முன்னர் ஒன்
றைக் கவனிக்க வேண்டும். பேராசிரியர் வித்தியா
னந்தனின் வாழ்க்கையும் சாதனையும் எமது நாட்டின்

Page 31
- 48 -
வரலாற்றின் மூன்று கட்டத்துடன் இணைந்துள்ளன: முதலாவது கட்டம் இலங்கை விடுதலைபெற முந்தி யது. இரண்டாவது கட்டம் இலங்கை விடுதலைபெற்ற 1948ஆம் ஆண்டுடன் தொடங்கி 1956ஆம் ஆண்டு டன் முடிகின்றது. மூன்ருவது கட்டம் 1956இல் தொடங்கி இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கைக்கு 1948இல் விடுதலை கிடைத்தது என்பர் ஒரு சாரார். இல்லை. உண்மையான விடுதலே 1956இல் நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் சமதர்ம கோட் பாடுடைய அரசாங்கத் தேர்தல் வெற்றி யு ட ன் கிடைத்தது என்பர் மற்மூெரு சாரார் அதுபற்றி அரசியல் அறிஞர் ஆராயட்டும். மூன்ருவது கட்டத் தில் மொழியுரிமைப் போராட்டம், கொந்தளிப்பு, இனக்கலவரம் போன்றன இடம்பெற்றன. வரலாற் றுக்கட்டம் தோன்றலாம்; மாறலாம் மறையலாம் , எது நடந்தாலும் பேராசிரியர் வித்தியானந்தனின் தமிழியல் ஈடுபாடும் பற்றும் ஒருபோதும் மாற வில்லை,
இந்த மூன்று காலகட்டத்திலும் பல சாராரும் பல போக்கையும் கொண்டிருந்தனர். இலங்கை விடு தலை அடைய முன்னர் எமது நாட்டின் ஒரு சாரார் ஆங்கில நாகரிகத்தில் மூழ்கி மேலைநாட்டுப் பாணி யைப் பின்பற்றி வந்தனர். இந்தச் சா ரா ரின் போக்கை விளங்க வேண்டுமானல் பேராசிரியர் கண பதிப்பிள்ளையின் " தாளித்த தமிழ்க் கூற்றை ' இங்கு தரல் வேண்டும். ' பலாப்பழம் தின்ன இவர் கரண்டி முள்ளுத் தேடித் திரிந்தனர் ', ' இலங்கையானது இங்கிலாந்தின் ஒரு சிறு பகுதி " என்றனர் இந்தப் போலிக் கூட்டத்தினர்; இப்படியான மாயை ஒன் றைத் தோற்றுவித்து அதனுள் ஆமை போல இவர் வாழ்ந்தனர். இவர் தம்மை மறந்தனர்; தம்நாட்டை, மொழியை, மதத்தை பண்பாட்டை மறந்தனர்;

- 49
இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் சிங்களம் வீட்டு மொழி, அங்காடியில் பொருள்களை வாங்க உதவும் மொழி, நாட்டு மொழி ஆங்கிலம். இந்தச் சாராரின் எதிர்புத் தமிழுக்கு இருந்தது:
இரண்டாவது சாரார் ஈழத்தின் தனித்தன்மைக்கு இடராக இருந்து வந்தனர். "ஈழம் என்ருல் இலக் கியத்தைப் பொறுத்தவரையில் தமிழ் நாட்டில் ஒரு பகுதி' என்றனர்; என்று கூறி வாளாவிருந்தனர். ஈழத்துத் தமிழியல் வளர்ச்சியில் இவர்களுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. பாக்குநீரிணைக்கு அப்பா லிருந்து வருபவை எல்லாம் நல்லவை. ஈழத்தில் தோன்றுபவை எல்லாம் மட்டமானவை; இதன் பய ஞக ஈழத்தின் தமிழியல் முயற்சிகளுக்கு இச் சாரார் உரிய இடத்தைத் தர மறுத்தனர்.
மூன்ருவது சாரார் பழமைவாதிகள் இவர்களுக் குச் சமகால நிகழ்ச்சியில் ஈடுபாடு கிடையாது. "உச் சிமேல் புலவர் கொள் நச்சினர்க்கினியர்', 'பால் எல்லாம் ஆவின் பாலாமோ ? உரையெல்லாம் பரி மேலழகர் உரையாமோ ?" எனக்கூறி வாழ்ந்தனர். நூலாசிரியர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரிலும் பார்க்க உரையாசிரியர்களே மேலான வர் எனவும் கருதினர். திருக்குறள், தொல்காப்பியம் பற்றி ஆராய இவர் முன்வருவதில்லை. இந்தப் பழமை வாதிகளின் தமிழ்ப் பற்று, புலமை என்பன பாராட் டப்படவேண்டியவை ஆனல் இவரின் போக்குத் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவும் ஒருவகையில் இருந்தது;
இவர்களுக்கெல்லாம் நேருக்கு நேராகப் பேராசிரி யர் வித்தியானந்தன் போன்ருேர் மறுமொழி கொடுத் திலர்: இப்படிக் கொடுப்பது பயன் இல்லாத முயற்சி

Page 32
-س- 50 ---
என்பதைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேரா சிரியர் வித்தியானந்தன் போன்ருேர் உணர்ந்தனர். ஆகவே திட்டம் ஒன்றைப் பேராசிரியர் கணபதிப் பிள்ளை தன் உள்ளத்தில் வளர்த்தார். இத்திட்டம் வெள்ளையறிக்கையாகவோ, புள்ளி விபரத் திரட்டா கவோ அமையவில்லை. பல்கலைக் கழக மட்டத்தில் தமிழ் கற்கும் மாணவரின் தொகை கூடவேண்டும்; தமிழின் கல்வித்தரம் உயர வேண்டும் . ஈழம் பற்றிய ஆய்வு வளர வேண்டும். தமிழ் கற்கும் மாணவர் களைக் கலக்கியடிக்காது ஊக்க வேண்டும். இதுவே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் திட்டம் . இதற்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர் வித்தியானந் தன். இதன் விளைவு போற்றத்தக்கது சர்க்கர வர்த்தி இராசகோபாலாச்சாரியார் எழுதிய " சர்க்கரவர்த் திருமகன் ", பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கண பதிப்பிள்ளை எழுதிய " " இலக்கிய வழி ' போன்ற நூல்கள் இலங்கையில் பாடநூல்களாகின. பழம் தமிழ் நூல்களும் பாடநூல்களாகின. பேராசிரியர் கணப திப்பிள்ளையின் அமைதியான திட்டத்தின் விளைவாக உருவான அறிஞர் பலரும் இன்று தமிழியலில் உல கப்புகழ் பெற்றுள்ளனர். இதற்கு விழு து போ ல இருந்து உழைத்த தனிப்பெருமை பேராசிரியர் வித் தியானந்தனைச் சாரும். சுருங்கச் சொன்னல் பேரா சிரியர் வித்தியானந்தன் ஒரு யுகத்தை எதிர்த்தார்; ஒரு யுகத்தைத் தோற்றுவித்தார். இந்தப் புதிய யுகம் தமிழ் வரலாற்றில் உரிய இடத்தைப் பெறும்