கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழியினால் அமைந்த வீடு

Page 1
மொழியினால்
 
 


Page 2

மொழியினால் அமைந்த வீடு
மணி வேலுப்பிள்ளை
SR, Pathmanaba Iuer 27-1B High Street 1Plaistouv fondon E13 0210 flet: 020 8472 8323
அன்னம் மனை எண்: 1, நிர்மலா நகர் தஞ்சாவூர் - 613007

Page 3
மொழியினால் அமைந்த வீடு/ C) மணி வேலுப்பிள்ளை / முதற்பதிப்பு: டிசம்பர் 2004/ வெளியீடு: அன்னம், மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7/ அச்சாக்கம்: ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி/விலை: ரூ.60/-
BIBLIOGRAPHICALDATA
Title of the Book : Mozhiyinal Amainda Veedu
Subject : Essays
Author : Mani VeluPillai
Language : Tamil
Edition : First Editio December 2004
Size of the Book : Demy 1x8
Printing Point 10 Pt.
Paper : CreamWove
Number of Pages 112
Number of Copies 1000
Printers : Hemamala Syndicate, Sivakasi
Publishers : ANNAM
Plot No: 1, Nirmala Nagar Thanjavur - 613 007
Price : Rs.60/-

பொருளடக்கம்
ஆங்கில நடையில் தமிழ் * 5
தமிழும் பெண்மைக்கு நெகிழும் * 19
ஆளுமை * 26 மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன்* 29
மொழியினால் அமைந்த வீடு * 39
தமிழோசை x 52 சோக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு * 64
மாயக்கோவஸ்கி * 80
அலந்தே * 89
டெங் சியாவோடபிங் * 102

Page 4

ஆங்கில நடையில் தமிழ்
8.
“...தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர் களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீஎழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபர ஷேமங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது.” (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை. 1997, ப. 207).
என்று தமிழர் ஆங்கிலம் கற்கத் தொடங்கினார்களோ அன்றே “தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம்” தோன்றிவிட்டது எனலாம். அன்று முதல் இன்றுவரை நிலைத்துள்ள அந்த “விநோதமான பழக்கம்” என்றென் றும் தொடரும் என்றே தோன்றுகிறது. புத்தம் புதிய ஆங்கில நடை அன்றாடம் புகுத்தப்பட்டு வருகிறது. இயல்பானதமிழ் நடை அதற்கு இரையாகி வருகிறது. பச்சைத் தமிழ் பேசும் பாமர மக்களே செயற்கைத் தமிழுக்குப் பலியாகி வருகிறார்கள்.
2. ஆங்கில நடையில் அமையும் தமிழின் தோற்றுவாய், நேரடியான அல்லது மறைமுகமான ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பே என்பது

Page 5
6 * மொழியினால் அமைந்த வீடு
வெளிப்படை. எனினும் ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு இடம் பெறுவதற்கு முன்னரே தமிழுக்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. "Ziegenbag என்னும் பெருமகனார் உலக நீதி என்னும் புத்தகத்தை தமிழிலிருந்து ஜேர்மனுக்கு மொழிபெயர்க்கிறார். முதல் ஜேர்மன் - தமிழ் அகர முதலியை உருவாக்குகிறார். விவிலியம் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். ஐரோப்பாவிலேயே முதன்முறையாக தமிழ் அச்சகத்தை Hale என்னும் ஜேர்மன் நகரில் 1713ல் அமைக்கிறார்” (நா. கண்ணன், தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், அக்கரைச்சீமையிலே, இணைய வெளியீடு). 1713 வாக்கில் விவிலியத்தின் முதலாவது தமிழாக்கம் வெளிவந்த விபரங்கள் முழுவதும் சொல் பொருள் என்ற அரியதோர் ஆவணத் gul" 14.6ö g) LöGupgj6iraraði (Colporul : A History of Tamil Dictionaries, Gregory James, Cre-A, Chennai, 2000, p. 147-57).
எமது கைவசமுள்ள வேதாகமத்தில் “இது எபிரேயு, கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது” என்று பொறிக்கப்பட்டுள்ளது (பரிசுத்த வேதாகமம், இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூர்). இது ஒரு தலைசிறந்த மொழி பெயர்ப்பு என்பதில் ஐயமில்லை. எனினும் செயற்கைத் தமிழ் நடையில் அமைந்த வசனங்கள் இதில் விரவிக் கிடக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டு:
“என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்” (நீதிமொழிகள் 1:23). இதன் தோற்றுவாய் எபிரேய மொழியா, கிரேக்க மொழியா என்பது தெரியவில்லை. அதன் ஆங்கில உருவம்:Tum to my reproof (The New Testament, The Gideons International, Canada). g.gait இயல்பான தமிழாக்கங்கள்:
நான் கடிந்துரைப்பதைக் கேளுங்கள் எனது கடிசொல்லுக்குக் காது கொடுங்கள் எனது கடிசொல்லுக்குச் செவிசாயுங்கள் நான் இடித்துரைப்பதைச் செவிமடுங்கள்

மணி வேலுப்பிள்ளை * 7 மேற்படி நீதிமொழிகள் இன்னோர் ஆங்கில உருவம்: Respond to my rebuke (The Holy Bible, New International Version, International Bible Society, New Jersey, 1984). gigs Gör guu GöuntGOTg5L6lypsTš556ir.
நான் கடிந்துரைப்பதற்கு மறுமொழி கூறுங்கள் எனது கடிசொல்லுக்குப் பதில் தாருங்கள் எனது கடிசொல்லுக்கு விடை அளியுங்கள் நான் இடித்துரைப்பதற்கு விடை கூறுங்கள்
இன்னொரு நீதிமொழி:
“என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்’ (1:25).
இதன் ஆங்கில உருவம்:
And you neglected all my counsel, And did not want my reproof.
(The New Testament, The Gideons International, Canada). gait இயல்பான தமிழாக்கம்:
என் ஆலோசனையை எல்லாம் நீங்கள் உதறித்தள்ளினிர்கள். நான் கடிந்துரைத்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை.
இந்நீதிமொழியின் இன்னோர் ஆங்கில உருவம்:
You ignored all my advice, You would not accept my rebuke
(The Holy Bible, New International Version).
இதன் இயல்பான தமிழாக்கங்கள்:

Page 6
8 * மொழியினால் அமைந்த வீடு
என் புத்திமதி முழுவதையும் நீங்கள் புறக்கணித்தீர்கள், நான் கடிந்துரைத்ததை நீங்கள் ஏற்க மறுத்தீர்கள்.
அண்மையில் பரிசுத்த வேதாகமத்துக்கு ஒரு புதிய மொழி பெயர்ப்பு வெளிவந்தது. “இம்மொழிபெயர்ப்பில் இயல்பான, தரமான, எளிய தமிழ்மொழி நடை இடம்பெற்றுள்ளது. தெளி பொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு (Dynamic Equivalence) முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது. பொருள் துல்லியம், தெளிவு, எளிமை, மக்கள் மொழி நடை, மனிதநேயம், இருபால் சமத்துவ நோக்கு ஆகியவற்றைக் கண்முன் கொண்டு செய்யப் பட்டது. ” (திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, தமிழ்நாடு விவிலிய நிலையம், திண்டிவனம், 1999, முன்னுரை). மேற்படி நீதிமொழிகள் இதில் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன:
“என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்கள்.” (1:23).
“என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை,
என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்” (1:25).
3. இன்று (அதாவது முதலாவது தமிழ் வேதாகமம் வெளிவந்து ஏறத் தாழ 300ஆண்டுகள் கழித்து) செயற்கைத் தமிழ் நடையில் எழுதுவதே எம்முள் பெரும்பாலானவர்களின் இயல்பாகிவிட்டது. ஓர் எடுத்துக்காட்டு: “இவ்வாறான புரிதல் முயற்சியில், வாசிப்புச் செயற்பாட்டில், புலமை வேட்கையில், தேடலில் ஈடுபடும்பொழுது தான் பேராசிரியர் சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகம் குறித்து பல்வேறு தளங்களில் எழுதிய எழுத்துக்கள் கவனிப்புக்கு வருகின்றன’ (தெ. மதுசூதனன், யாழ்ப்பாணம், கார்த்திகேசு சிவத்தம்பி, குமரன் Liggs& 560aulb, Gasnoplbl., 2000, p. vii). In an effort to understand என்பது இங்கே புரிதல் முயற்சியில் என்று உருமாறியுள்ளது. “புரிந்து கொள்ளும் முயற்சியில்” என்பதே இயல்பான தமிழ் நடை. இன்னோர் எடுத்துக்காட்டு: “அரசனுடைய புகுதலால் காடு ரண களமாயிற்று” (பாலகுமாரன், பட்டாபிஷேகம்). இதன் தோற்றுவாய்: The king's entry turned the forest into a battlefield.ggeir guailurrett தமிழ் நடை: “அரசன் புகுந்ததால் காடு ரணகளமாயிற்று”.

மணி வேலுப்பிள்ளை * 9
மேற்படி மூன்று கூற்றுக்களிலும் அல்-விகுதி கொண்ட தொழிற் பெயர் வலிந்து புகுத்தப்பட்டுள்ளது:
என் கடிந்துகொள்ளுதலுக்கு. (வேதாகமம்) இவ்வாறான புரிதல். (தெ. மதுசூதனன்) அரசனுடைய புகுதலால். (பாலகுமாரன்)
4. தமது ஆசிரியரின் அறிவுரை ஒன்றை தாம் இறுதிவரை கடைப் பிடித்து வந்ததாக பெயர்போன கனடிய எழுத்தாளர்களுள் ஒருவராகிய Ron Lawrenve (1921-2004) gig5ul St Geirgini: A writer's goal, indeed, his duty, is to communicate ideas and meanings clearly and in a manner understandable to all reasonably educated people (616.7603Tril களையும் அர்த்தங்களையும் தெளிவாக, போதியளவு கற்றவர்களுக்கு விளங்கும் விதமாக எடுத்துரைப்பதே ஓர் எழுத்தாளரின் குறிக்கோள் ஆகும். உண்மையில் அதுவே அவரது கடமையும் ஆகும்). இதனைக் கருத்தில் கொண்டு நமது எழுத்தாளர்களின் தமிழாக்கங்களை நாம் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது புதுமைப்பித்தன் இங்கும் சிறந்து விளங்குவது தெரிகிறது:
(1) சரித்திரம் மீண்டும் ஒருமுறை பழையபடி நடித்தது (பிரம்ம
unsou) History repeats history.
(2) நம்பிக்கை வறட்சி (சாபவிமோசனம்)Scepticism/Pessimism)
(3) எதிர்ப்புமருந்துவகை ஊசி குத்துமுறை (தமிழர் நாகரிகத்தில்
Spirid Qingpiapas) Immunization
(4) காடு கெடுத்துக் கழனிகண்டது (ஸ்டாலினுக்குத் தெரியும்)
Virgin Soil Upturned
(5) பேதங்கள் தோல் ஆழமுள்ளவை (வாழ்க்கை)Differences are
skin-deep.
(6) குப்பன். பொதுவுடைமைக்காரனல்ல (குப்பனின் கனவு)
Kuppan... is not a communist

Page 7
10 * மொழியினால் அமைந்த வீடு
(7) ஏழடுக்குமாடி (இந்தக் கோபம் இலக்கிய சேவையா?)Ivory
tOWer
1945/01/17ல் புதுமைப்பித்தன்இப்படி எழுதுகின்றார்: “சமீபத்தில் பூரீ க.நா.சு.ஏழடுக்கு மாடியில் உட்கார்ந்துகொண்டு உலகத்தை உய்விக்கும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ள சில அபூர்வ கருத்துக் களைக் கண்டு திடுக்கிட நேர்ந்தது” (இந்தக் கோபம் இலக்கிய சேவையா, புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2002, ப.212).
அரை நூற்றாண்டு கழித்து, 2000 யூலையில், சிவத்தம்பி இவ்வாறு எழுதுகின்றார்: “ஆகாயத்தில் நின்றுகொண்டோ, தந்தக் கோபுரங் களில் இருந்துகொண்டோ இதெல்லாம் கூடாது, நாங்கள் ஒரு உலகப் பன்முகப்பாட்டை ஏற்றுக்கொள்வோம், எங்களுக்கு அரசியல், தேசியம் தேவையில்லை என்று சொல்லலாம்” (கா. சிவத்தம்பி, ஈழத்துத் தமிழிலக்கியத் தடம், மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு, 2000, ப. 116). இந்திரா பார்த்தசாரதியும் தந்தக் கோபுரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், அருந்ததி நிலையம் சென்னை, 2000, ப.111).
griisa) dojouslb: Ivory tower புதுமைப்பித்தன் ஏழடுக்கு மாடி சிவத்தம்பி/இ.பா தந்தக் கோபுரம்
Ivory tower 6Tairugs. A state of seclusion from the ordinary world and the harsh realities of life (The Concise Oxford Dictionary). gigs. “மனித வாழ்க்கையின் கடுமைகளிலிருந்து தொலைவாய் ஒதுங்கிய இடம்” (சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம்). அதனையே புதுமைப்பித்தன் ஏழடுக்கு மாடி என்று குறிப்பிட்டார். அந்த ஏழடுக்கு மாடி கண்ணில் பட்டால், தமிழ் தெரிந்த எவரும் ஒருகணம் நின்று அதனைக் கண்டு களிப்பர். தந்தக் கோபுரம் கண்ணில் பட்டால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அதனை Ivory tower என்று மீள மொழிபெயர்த்து அதன் பொருளைப் புரிந்து கொள்வர். "இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழன்” தந்தக் கோபுரத்தைக் கண்டும் காணாதவனாய்க் கடந்து செல்லக் கூடும்.

மணி வேலுப்பிள்ளை * 11
தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் பேஸிஸ்ட் ஜடாமுனி (முஸொலினி) கப்சிப் தர்பார் (ஹிட்லர்), ஸ்டாலினுக்குத் தெரியும் உட்பட புதுமைப்பித்தனின் கட்டுரைகள் அனைத்தையும் எளிதில் படித்துச் சுவைக்க முடியும். அவற்றில் அவர் எடுத்துரைத்த விவரங் களை வேறெந்த வரலாற்று நூலிலும் காண முடியாது. துறைபோன வரலாற்றறிஞர்கள் எடுத்தியம்பத் தவறிய அடிப்படை நிகழ்வுகளை யும் அவற்றின் தோற்றுவாய்களையும் போக்குகளையும் அவர் கண்கண்ட சாட்சியைப் போல் எடுத்துரைத்துள்ளார்.
அது ஒன்றும் வழமைக்கு மாறான சங்கதியல்ல. பாரதியார் அத்தகைய வல்லமை படைத்தவர் என்பதற்கு அவருடைய கட்டுரை கள் ஒவ்வொன்றும் கட்டியம் கூறும் (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1986). Tolstoy தமது மாபெரும் War and Peaceநாவலின் முகப்பில், கிட்டத்தட்ட25 பக்கங்களில், போரின் அடிப்படைப் போக்கினை, குறிப்பாக நெப்போலியனுக்கும் ரஷ்யருக்கும் இடையே நிகழ்ந்த போரின் அடிப்படைப் போக்கினை, உணர்த்திய விதம் எந்த வரலாற்றறிஞரையும் வியக்க வைக்கும் வெற்றி வாய்ந்தது. டால்ஸ்டாய் தமது காலத்து வரலாற்றறிஞர்களை அதில் எள்ளிநகையாடியுள்ளார்!
டால்ஸ்டாய் ஒருசில பிரெஞ்சுப் பதங்களை எடுத்தாண்டுள்ளார். பாரதியாரும் புதுமைப்பித்தனும் தமது கட்டுரையில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியது அரிது. எனினும் ஒருவருக்கு வழங்கு தமிழ் விளங்குமாயின் பாரதியார், புதுமைப்பித்தன் போன்றவர்கள் எந்தத் துறையில் எழுதிய கட்டுரைகளையும் அவரால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும். மாறாக, ஒருவருக்கு எவ்வளவு தூரம் ஆங்கிலம் தெரியுமோ, அவ்வளவு தூரம் அவரால் தற்பொழுது தமிழில் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் கட்டுரைகளையும் விளங்கிக் கொள்ள முடியும்.
5. “எனது மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் உணர்ச்சிகளைக் காயப் படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தராது” (ஜெயகாந்தன், சபை நடுவே, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1997, ப.126). காயப்படுத்து, புண்படுத்து இரண்டும் ஒத்த சொற்கள் என்பதில் ஐயமில்லை. எனினும் ஒருவருடைய உடலுக்கு ஊறு விளைவிப்பதைக் காயப்

Page 8
12 * மொழியினால் அமைந்த வீடு
படுத்துவது என்றும், உள்ளத்துக்கு ஊறு விளைவிப்பதைப் புண் படுத்துவது என்றும் கொள்வதே இற்றைவரை பெருவழக்கு, இன்றைய பொது வழக்கு. ஒருவர் இன்னொருவரைப் புண்படுத்தி விட்டார் என்றால், முன்னவரைப் பின்னவர் மனம்வருந்தச் செய்து விட்டார், அடித்து உதைக்கவில்லை என்று துணிந்து கூறலாம். ஆனால் இன்று ஒருவரை இன்னொருவர் காயப்படுத்திவிட்டார் என்றால், முன்னவரைப்பின்னவர் மனம்வருந்தச் செய்தாரா, அடித்து உதைத்தாரா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. அறுதி யிட்டுரைக்க முடியாத் நிலையை ஏற்படுத்தியோர்அப்படிக் குறிப்பிடு வோரே. ஆதலால்தான் உள்ளத்தைக் காயப்படுத்து அல்லது உணர்ச்சி களைக் காயப்படுத்து என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர் களுக்கு ஏற்படுகிறது. இங்கு ஜெயகாந்தனுடைய உள்ளக் கிடக்கை ஆங்கில மொழி வாயிலாகவே மேலெழுகின்றது. I won't enjoy hurting others' feelings அல்லது அத்தகைய ஒர் ஆங்கில வசனமே முழுமுதல் வசனம் போலும். அத்தகைய ஆங்கில வசனத்தை அவர் ஆங்கில நடையிலேயே தமிழ்ப்படுத்தியுள்ளார் அவருடைய உள்ளக் கிடக்கை வழக்கம்போலத் தமிழ்மொழி வாயிலாக மேலெழுந் திருந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தராது அல்லது நான் மற்றவர்களை புண்படுத்தி மகிழ்வதில்லை என்றே குறிப்பிட்டிருப்பார்.
6. செவ்விலக்கியத் தமிழ்ச் சொற்களையும் வசனங்களையும் விளங்கிக்கொள்வதற்கு உதவி தேவைப்படும் எவரும் ஒரு தமிழ் அறிவாளியை அல்லது ஒரு தமிழ் அகராதியை அல்லது அந்த அறிவாளியையும் அகராதியையும் நாடலாம். ஆனால் தற்காலத் தமிழ்ச் சொற்களையும் வசனங்களையும் விளங்கிக்கொள்வதற்கு உதவி தேவைப்படும் எவரும் மேலதிகமாக ஓர் ஆங்கில அறிவாளி யையோ ஒர் ஆங்கில அகராதியையோ நாட நேரும். அதற்கு ஒரு குறுக்கு வழியை நாம் பயன்படுத்துவதுண்டு: சம்பந்தப்பட்ட தொடரை அல்லது வசனத்தைச் சொல்லுக்குச் சொல்லாக ஆங்கிலத்தில் (மீள) மொழிபெயர்த்துப் பார்த்தால், அதன் பொருள் தெற்றெனத்துவங்கும். சில எடுத்துக்காட்டுகள்:
இஸ்ரேலியர் மீது நரகம் போன்ற துப்பாக்கித் தாக்குதல் நடத்தப் படும் என்று இரு பலஸ்தீனிய இயக்கம் அறிவித்துள்ளது (தமிழோசை).

மணி வேலுப்பிள்ளை * 13
நரகம் போன்ற துப்பாக்கித் தாக்குதல் என்றால் என்ன என்று ஏங்குகிறீர்களா? அப்படி என்றால் ஆங்கிலத்தில் Like hell என்ற தொடர் வழங்கி வருவதை நீங்கள் அறியவில்லை அல்லது LDpigrate issoir 676ing) & Coggi. A Palestinian militant group has announced that the Israelis would be shot at like hell Gunairp sco, வசனமே மேற்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Like hel என்ற தொடர்ாecklessly (கண்டபடி, கண்மூடித்தனமாக, தறிகெட்டு) அல்லது extremely (மோசமாக) என்று பொருள்படுவது. அதனைப் போய் நரகம் போன்ற' என்று குறிப்பிட்டதால் (அதாவது மொழி பெயர்க்காது சொல்பெயர்த்ததால்) விளைந்த விபரீதத்தையே மேலே காண்கிறோம். இஸ்ரேலியரைக் கண்டபடி சுட்டுத் தள்ளுவோம்’ அல்லது இஸ்ரேலியர் கண்டபடி சுட்டுத் தள்ளப்படுவார்கள்’ என்பதே இயல்பான, இலகுவான, சரியான தமிழாக்கம்.
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (ஒரு தமிழ்நாட்டுக் கடிதம், sL6Gypiraps, 2003/10/30). g.g. An eye for an eye, a tooth for a tooth என்ற ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்! எப்படி மொழி பெயர்க்கக்கூடாது என்பதற்கு இது ஒருதலைசிறந்த எடுத்துக்காட்டு. பழிக்குப் பழி என்பதே இந்த ஆங்கிலப் பழமொழியின் பொருள். தமிழோ ஆங்கிலமோ புரியாதவர்களே “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்று குறிப்பிடுவார்கள். இத்தகைய மடமையில் புதுமை காணும் வழமையை நாம் அடியோடுகளைய வேண்டும்.
அண்மைய எதிர்காலத்தில் போர் மூளாது (தமிழோசை). இது இறந்த காலமும் எதிர்காலமும் சேர்ந்த ஒரு விசித்திரமான கலவை. இங்கு தமிழும் ஆங்கிலமும் மாத்திரமன்றி இறந்த காலமும் எதிர் &Iraqplb (5p) Sugdishul Gairarat. There will be no war in the near future என்ற வசனமே அவ்வாறு தமிழாக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. Inthenearfuture என்பதுஆங்கில நடை. அது தமிழ் நடை அல்ல. வெகு விரைவில் போர் மூளாது. இப்போ தைக்குப் போர் மூளாது. கொஞ்சக் காலத்துக்குப் போர் மூளாது போன்றவையே தமிழ் நடையில் அமைந்த வசனங்கள்.
7. பின்வரும் தொடர்கள் இயல்பானதமிழ் நடையில் அமைந்தவை:
நீங்கள் விரும்பும் பாடல் உங்களுக்கு விருப்பமான பாடல்

Page 9
14 * மொழியினால் அமைந்த வீடு
இதற்கிடையில் எங்களுக்கு ஆங்கிலம் அறிமுகமாகிறது: Your favourite Song! எங்கள் உள்ளத்துள் அந்த ஆங்கில நடை குடிகொள் கிறது. இயல்பான தமிழ் நடை அதற்கு இரையாகிறது. ஆங்கில நடைக்குக் கட்டுண்ட செயற்கைத் தமிழ் பிறக்கிறது:
உங்கள் விருப்பப் பாடல் உங்கள் அபிமான பாடல்
Yourfavourite Song என்று உள்ளத்துள் தலையெடுக்கும் ஆங்கில நடையே 'உங்கள் விருப்பப் பாடல். அல்லது “உங்கள் அபிமான பாடல்..' என்ற செயற்கைத் தமிழின் தோற்றுவாய். Your என்பதை உங்கள் என்று இட்டதை அடுத்து விரும்பும் அல்லது விருப்பமான என்று இட்டால் (அதாவது உங்கள் விரும்பும் பாடல் அல்லது உங்கள் விருப்பமான பாடல் என்று இட்டால்), இலக்கணம் பொருந்தாது அல்லவா? ஆதலால்தான்விருப்பப்பாடல் அல்லது அபிமானபாடல் என்ற செயற்கையான ஆங்கில நடையை நாட நேர்கிறது. அப்துல் ஹமீட் கூட இத்தகைய செயற்கைத் தமிழுக்குப் பலியாகுவதுண்டு. இதே விதமாக அமைந்த ஒரு வட அமெரிக்க வானொலி விளம்பரம்: “உங்கள் விருப்ப உணர்வுகள், அவை சம்பந்தப்பட்ட விளம்பரதாரர் கள் விரும்பும் தொடர்கள் அல்லது அவர்களுக்கு விருப்பமான தொடர்கள் அவர்களைத் தட்டிக்கேட்க நாம் யார்? வேறு உதாரணங்கள்:
இயல்பான தமிழ்: ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள்
ஆங்கிலம்: Opponents of the ruling party
செயற்கைத் தமிழ்: ஆளும் கட்சியின் எதிர்ப்பாளர்கள்
இயல்பான தமிழ்: ஒருவர் காயமடைந்தார்
ஆங்கிலம்: A person was injured.
செயற்கைத் தமிழ்: ஒரு நபர்காயமடைந்தார்
இயல்பான தமிழ்: அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
ஆங்கிலம்: He is being treated.
செயற்கைத் தமிழ்: அவர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றார்
(தமிழோசை2003/10/208)

இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத்தமிழ்:
இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத் தமிழ்:
இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத் தமிழ்:
இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத் தமிழ்:
இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத்தமிழ்:
இயல்பான தமிழ்:
ஆங்கிலம்:
செயற்கைத்தமிழ்:
மணி வேலுப்பிள்ளை * 15
..எங்களுக்குஅறிவுறுத்தப்பட்டிருந்ததால். ...because we had been instructed... . நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததால். (அ.முத்துலிங்கம், முதல் விருந்து பூகம்பம், முதல் மனைவி, திண்ணை, 2004/01/08)
நீங்கள் என்னுடன் என்னருகே இருப்பது என்னை மாற்றும். Your presence, your proximity will change IՈ6 உங்கள் இருப்பு, உங்கள் அண்மை என்னை மாற்றும். (பாலகுமாரன், பட்டாபிஷேகம்).
அவர்கள் வகிக்கும் பங்கு யாது? What is their role? அவர்களின் வகிபாகம் யாது? (கா.சிவத்தம்பி, இலங்கைத் தமிழர் யார், எவர்? கொழும்புத் தமிழ்ச்சங்கம், இலங்கை. 2000).
சிறுவர்களின் உடலும் உள்ளமும் பாதிக்கப் பட்டுள்ளன. The children have been hurt physically and mentally
சிறுவர்கள் உடல்ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் (தமிழோசை)
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கரின் நடமாட்டம் American presence in Afghanistan ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பிரசன்னம் (தமிழோசை)
(அவள்) மிகவும் சந்தோஷப்பட்டாள் (She) felt very happy (அவள்) மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்

Page 10
16 * மொழியினால் அமைந்த வீடு
(கவிநயா, தனிமை, திண்ணை, 2004/01/15). “உணர்” ஒரு செயப்படுபொருள் குன்றாவினை ஆதலால் அவள் சந்தோஷமாக எதனை உணர்ந்தாள் என்ற கேள்வி எழுகிறது. “அவள் மிகுந்த சந்தோஷத்தை உணர்ந்தாள்’ என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!
8. அண்மையில் ஆங்கில நடையில் மேலோங்கிய தமிழுக்குச் சில எடுத்துக்காட்டுகள்
(1) அமெரிக்கப்படையினர்சாத்தியமான விரைவாக ஈராக்கைவிட்டு
வெளியேற வேண்டும். The US forces must leave Iraq as soon as possible (அமெரிக்கப் படையினர் .கூடிய சீக்கிரம் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும்)
(2) ஹான்ஸ் பிளிக்ஸ் உதவியற்ற முறையில் பங்காற்றினார்.
Hans Blix played an unhelpful role. (ஹான்ஸ் பிளிக்ஸ் வகித்த பங்கினால் பயன் கிட்டவில்லை).
(3) சதாம் உசேனின் அதிருப்தியாளர்கள்
Saddham Hussein's dissidents (சதாம் உசேன் மீது அதிருப்தி கொண்டவர்கள்)
(4) சீனப் பொதுவுடைமைக் கட்சியின் விமர்சகர்கள்
Critics of the Chinese Communist party (சீனப் பொதுவுடைமைக் கட்சியை விமர்சிப்பவர்கள்)
(5) எல்லா ரொறன்ரோவதிவாளர்கள்
All Toronto residents (ரொறன்ரோவாசிகள் எல்லோரும்)
(6) உத்தேச இடைக்கால நிர்வாகம் முன்முதிர்வானது ஆகும்.
The proposed interim administration would be premature (இடைக்கால நிருவாகம் ஏற்படுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை).

மணி வேலுப்பிள்ளை * 17
9. விதிவிலக்காக ஒரு சில சொல்தொடர்கள் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சொல்லுக்குச் சொல்லாய்ப் பொருந்துவதுண்டு:
(1) வட- கீழ் இடைக்கால நிர்வாகம்
North-East Interim Administration
(2) ஐக்கியநாடுகள் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு அமைப்பு
United Nations Educational, Scientific and Cultural Organization
(3) கடுமுனைப்பு சுவாச நோய்
Severe Acute Respiratory Syndrome
செயப்படுபொருள்குன்றிய (எழுவாய், பயனிலை இரண்டையும் மாத்திரம் கொண்ட) வசனங்களைப் பொறுத்தவரையும் அதே பொருத்தம் காணப்படுகிறது:
(4) Syonu Gir Cypgpyonu Gólišgsmor. She smiled (5) கடவுள் இருக்கிறார். God exists (6) உண்மை ஓங்கும். Truth will prevail.
தமிழ் நடைக்கும் ஆங்கில நடைக்கும் இடையே காணப்படும் அடிப்படை ஒற்றுமை அவ்வளவுதான் என்றே சொல்லத் தோன்று கிறது. அவற்றிடையே மேற்கொண்டு உருப்படியான ஒற்றுமை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
10. நாம் மேற்கோள் காட்டிய வேதாகமத்தின் முன்னுரையில் அரியதோர் உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: Thought patens and syntax differ from language to language, faithful communication of the meaning of the writers of the Bible demands frequent modifications in sentence structure and constant regard for the contextual meanings of words (The Holy Bible, New International Version, Preface, p.vi). அதாவது: சிந்திக்கும் விதமும் சொல்தொடரி யலும் மொழிக்கு மொழி வேறுபடும். ஆதலால் வேதாகமத்தை எழுதியவர்களின் உளக்கருத்தை நேரியமுறையில் எடுத்துரைப்பதற்கு வசன அமைப்பை அடிக்கடி சீரிட வேண்டியுள்ளது. இடத்துக்கிடம் சொற்கள் பொருள்படும் விதத்தை இடைவிடாது உற்றுநோக்க வேண்டியுள்ளது.

Page 11
18 * மொழியினால் அமைந்த வீடு
இன்று தமிழில் வெளிவரும் கலை, இலக்கிய, சமூக, அரசியல், படைப்புகள் பலவற்றிலும் செயற்கைத் தமிழ் கோலோச்சுவதற்குத் தலையாய காரணம், அவை அடிப்படையில் தமிழாக்கங்கள் என்பதே. (உள்ளத்துள் தலைதூக்கும்) ஆங்கில நடையும் சொல் லாட்சியும் அவற்றில் செயற்கையானமுறையில் தமிழாக்கப்பட்டிருப் பதைத் தேர்ந்த வாசகர்களால் எளிதில் இனங்காண முடியும்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்பது என்பது ஒன்று. தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பது என்பது இன்னொன்று. தமிழில் எழுது வோரும் உரைப்போரும் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றால் மட்டும் போதாது. கூடவே தமிழையும் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானதமிழ்ச்சொற்களை இனம்காண்பதில் மாத்திரம் நிறைவுறுவதை விடுத்து, தமது எழுத்தையும் உரையையும் இயல்பான தமிழ் நடையில் அமைப்பதிலும் அவர்கள் சிரத்தை எடுக்க வேண்டும். இதனையே பாரதியார் எமக்கு இடித்துரைத்துள்ளார்:
“நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனி டம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போது தான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். இல் லாதுபோனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது.”

தமிழும் பெண்மைக்கு நெகிழும்
8X
மொழியில் ஆணாதிக்கம் பொதிந்துள்ளது என்றும், மொழியிலிருந்து சமூகத்துள் புகுந்ததே ஆணாதிக்கம் என்றும் பெண்ணியவாதிகள் கருதுகின்றார்கள். மொழிவரலாற்றில் ஓர் இடைப்பட்ட கால கட்டத்தைப் பொறுத்தவரை அத்தகைய கருத்து (அதாவது மொழியி லிருந்து சமூகத்துள் புகுந்ததே ஆணாதிக்கம் என்ற கருத்து) ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே தென்படுகிறது. அதேவேளை மொழியின் தோற்றத்தைப் பொறுத்தவரை அத்தகைய கருத்து எவ்வளவு தூரம் பொருந்தும் என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.
2. வேட்டையாடுதல் ஆண்களின்தலையாய தொழிலாய் விளங்கியது. பெண்கள் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யு முகமாக வேலைநிறுத்தம் செய்தார்கள். இறைச்சி இல்லையேல் புணர்ச்சி இல்லை என்பது அவர்களுடைய நிலைப் பாடாய் இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஆண்களும் பெண் களும் கடந்தகாலம், எதிர்காலம் பற்றி அதிகம் பேசநேர்ந்தது. பேச நேர்ந்த தறுவாயிலேயே மொழி மலர்ந்தது என்று Dr. Chris Knight 6Taip Gudnyf5usuayroti discog Scipiti (The Globe and Mail). அதாவது சமூகத்துக்குப்பிற்பட்டதே மொழி, மொழிக்கு முற்பட்டதே éFelpésLD.
3. ஆணும் பெண்ணும் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பவர் என்பதை விளக்கத் தேவையில்லை. தங்கியிருக்கும் அளவு வேறுபடுமிடத்து, ஆண்-பெண் சமநிலை பிறழ்வது இயற்கை. ஆண்கள் பெண்களில்

Page 12
20 * மொழியினால் அமைந்த வீடு
தங்கியிருப்பதைக் காட்டிலும், பெண்கள் ஆண்களில் தங்கியிருக்கும் சூழ்நிலை வலுக்குமிடத்து, ஆண்களின் ஆதிக்கம் ஓங்கவே செய்யும். அதாவது வீட்டிலும் நாட்டிலும் பெண்கள் ஆண்களின் ஆட்சிக்கும் சொல்லாட்சிக்கும் கட்டுண்டிருக்க நேர்ந்தது.
4. தற்பொழுது பெண்கள் ஆண்களில் தங்கியிருக்கும் சூழ்நிலை குன்றிவருகிறது. பெண்கள் வெம்போர் புரியும் ஊழியில் நாம் வாழ்கிறோம். இன்று ஆண்களும் பெண்களும் சரிநிகரானவர்கள் என்ற உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் கூடிக் குலவும் வாழ்வுக்கு ஈடாக ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கூடிக் குலவும் வாழ்வு ஓங்கி வருகிறது.
5. இத்தகைய மாற்றத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் வகை அறியாது ஆங்கில மொழி அல்லல்பட்டு வருகிறது. பழைய ஆங்கிலத்தில் MAN என்ற சொல் ஆள் என்று பொருள்பட்டு ஆண், பெண் இரு வரையும் குறித்தது. WIF பெண்ணைக் குறித்தது. காலப்போக்கில் WIF மனைவி ஆகவே, WIFMAN பெண் ஆகிற்று. WIF என்பதும் WIFMAN என்பதும் புதிய ஆங்கிலத்தில் முறையே WIFE என்றும் WOMAN என்றும் ஆகிவிட்டன. அப்புறம் MAN ஆண்பால் ஆகிவிட்டது!
6.WOMAN ஒட்டுச் சொல்லாய் நின்று பாலுணர்த்துவது பெண்களைப் பெரிதும் தாழ்த்துவதாகக் கருதப்படுகின்றது. CHARMAN என்பதன் ப்ெண்பாலாக CHAIRWOMAN பாவிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இரு பாலார்க்கும் பொதுவாக CHAIRPERSON பாவிக்கப்பட்டது. அதுவும் பெண்களுக்கு நிறைவு தராதபடியால், அது CHAIR என்று குறுக்கப்பட்டுவிட்டது! ஆங்கிலத்தில் ஏற்பட்ட சிக்கல் தமிழில் ஏற்படவில்லை. தைைலவர் இரு பாலார்க்கும் போதுவானவர். தேவை என்றால் தலைவி என்று குறிப்பிடலாம்.
7. SPOKESMAN 6T6irugn, SPOKESWOMAN 6Teitug5m, SPOKESPERSON என்பதா என்று அறியாது ஆங்கில உலகு திண்டாடிக் கொண்டிருக் கிறது. 1958ல் வெளிவந்த இலங்கை அரசாங்க சொல்தொகுதி ஒன்றில் இது இலகுவாகவும் தெளிவாகவும் மொழிவாளர் என்று தமிழாக்கப்

ΚΧ
மணி வேலுப்பிள்ளை * 21
பட்டுள்ளது. CHAIRPERSON என்பதை CHAIR என்று குறுக்கியது போன்று, SPOKESPERSON என்பதை SPOKES என்று குறுக்க முடியவில்லைப் போலும்
8. மீனவரை FISHERMAN/FISHERWOMAN என்று பால்பிரிக்காது, இரு பாலார்க்கும் பொதுவாக FISHER என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அண்மையில் நியூபவுண்லாந்தில் 250 மீனவர்கள் கூடினார்கள். அவர்களுள் அரைவாசிப்பேர் பெண்கள். அப்பெண் களைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக, அமைப்பாளர்கள் மீனவர்கள் அனைவரையும் FISHERS என்று குறிப்பிட்டார்கள். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு பெண்மணி, AMA FISHERMAN, AND PROUD OF THAT என்று கர்ச்சித்தார் தமிழில் மீனவள், வலைஞை போன்ற சொல்லாக்கங்கள் பெண்ணினத்தை உணர்த்துபவையே ஒழியத் தாழ்த்துபவை ஆகா.
9. அண்மையில் அமெரிக்காவில் நடிகர்களுக்கு விருது வழங்கும் வைபவம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஒரு நடிகை அமைப்பாளர்களைக்காரசாரமாகச்சாடிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை ACTOR என்று குறிப்பிடாது, ACTRESS என்று குறிப்பிட்டதே அதற்கான காரணம் சிறந்த நடிகர் விருது ஆண்களுக்கும் பெண் களுக்கும் புறம்பாக வழங்கப்படுவது வழக்கம். அங்கே பால்பாகு பாட்டை உணர்த்தியே ஆகவேண்டும். அத்தகைய சூழ்நிலையில் சிறந்த நடிகனுக்கான விருது என்றும், சிறந்த நடிகைக்கான விருது என்றும் பால்பிரிக்க நேரும். நல்ல வேளை, அந்த நடிகைக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை எவ்வாறாயினும் ACTRESS என்ற ஆங்கிலச் சொல் பெண்களைத் தாழ்த்துவதாகவே கருதப்படுகிறது. நடிகை, பாடகி, ஆசிரியை, பண்டிதை போன்ற தமிழ்ச் சொற்கள் அவ்வாறு கருதப்படுவதாகத் தெரியவில்லை.
10. MANNEDSPACECRAFT என்ற தொடரை மாதர் குறைவிளங்கா வாறு ஆள்கொண்ட விண்கலம் என்று தமிழ்ப்படுத்தலாம். அதனை எவ்வாறு மாதர் மெச்சும் வண்ணம் மாற்றியமைக்கலாம் என்று ஆங்கிலேயர் குழம்புகிறார்கள். POPULATED SPACECRAFT மக்கள்

Page 13
22 * மொழியினால் அமைந்த வீடு
வாழும் விண்கலம் ஆகிவிடும்!HUMAN-DIRECTEDSPACECRAFTஆட்கள் இயக்கும் விண்கலம் என்று பொருள்பட்டு, பறவை அல்லது மிருகம் இயக்கும் விண்கலம் உண்டோ என்று ஏங்க வைக்கும்!
11.ஆங்கிலத்தில் இடம்பெறும் மணவினையில் மணமகனும் மணமகளும் MAN AND WIFE என்று பிரகடனப்படுத்தப்படுவது. வழக்கம். இதனை HUSBANDAND WIFE என்று வழங்க வேண்டும் என்பது மாதர் கோரிக்கை. தமிழர்மணவினையில் கணவன்/மனைவி என்று கொண்டாடும் மரபு ஏற்கெனவே நிலைத்துள்ளது!
12. அவன், அவள், அவர், அவர்கள் ஆகியவை உணர்த்தும் பொருள் களை விளக்கத் தேவையில்லை. முறைசார் வழக்கில் (எழுத்தில் அல்லது சபையில்) அர், ஆர், கள் விகுதிகள் இரு பாலாரையும் ஒருங்கே உணர்த்துவது கண்கூடு. பெற்றார் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் ஒருமையாகவும் பன்மையாகவும் அமையவல்லது. அவர் எனது தாயார் என்பது தாயை உயர்த்தும் கூற்று. கம்பர் மட்டு மல்ல, அவ்வையாரும் ஒரு புலவரே. அன்னைபூபதி உண்ணாநோன் பிருந்து மாண்டார்கள் அல்லவா!
13. அவர் ஒர் எழுத்தாளர் என்ற வசனத்தை மேலோட்டமாக நோக்கி னால், அது ஆண்பாலார்க்கு மாத்திரம் பொருந்துவதாகவே தென் படும். கூர்ந்து நோக்கினால், அது பெண்பாலார்க்கும் பொருந்த வல்லது என்பது புலப்படும். அதாவது அந்த எழுத்தாளர் ஓர் ஆணா, பெண்ணா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. அர், ஆர், கள் விகுதிகள் இரு பாலாரையும் ஒருங்கே உணர்த்துகின்றன, உயர்த்து கின்றன என்பதை மட்டும் திட்டவட்டமாகக் கூறமுடியும். ஆகவே பெண்கள் அர், ஆர், கள் விகுதிகளை ஆண்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தலாகாது.
14. கடவுள் உண்டா, இல்லையாஎன்ற வினாவுக்கு விடை காணப்படு வதற்கு முன்னரே, கடவுள் ஆணாக்கப்பட்டுவிட்டார்! ஆனால் கடவுள், பரம்பொருள், தெய்வம் ஆகிய சொற்களில் அன் விகுதி இல்லை என்பதுகவனிக்கத்தக்கது. இறை ஒன்றே அன் விகுதிக்கு

மணி வேலுப்பிள்ளை * 23
இரையாகி, இறைவன் ஆகிவிட்டது! கடவுள் என்ற சொல்லுக்கு உள்ளத்தைக் கடந்தவர் என்று பொருள் கொள்ளப்படுவதுண்டு. அத் துடன் கடவுள் பால் கடந்தவர் அல்லது கலந்தவர் என்பதும் பெறப் படுகின்றது. சிவன் தாயுமானவர், மாதொருபாகனுமானவர் அல்லவா!
15. தன்னகத்தே இல்லாத.(பெண்பாற்) சொற்களை உருவாக்குவதற் கும் தமிழ் மொழி உறுதுணை புரிகின்றது. நண்பன் - நண்பி என்றும், இளைஞன்-இளைஞஎன்றும் பால்பகுப்பதற்குத்தாய்மொழி இடம் கொடுத்துள்ளது! கிழவன் என்பதன் பெண்பால் கிழவி அல்லது கிழத்தி. அதே போன்று புலவன் என்பதன் பெண்பால் புலவி அல்லது புலத்தி என்று அமையலாம். துரதிஷ்டவசமாகப் புலவி ஏற்கெனவே ஊடல் என்றும், புலத்தி ஏற்கெனவே சலவைக்காரி என்றும் பொருள்பட்டுவிட்டன. ஆதலால் அவற்றைப் புலவன் என்பதன் பெண்பாலாகக் கொள்ள முடியவில்லைப் போலும். அவ்வையார் ஒரு புலவர் என்பது நிறைவு தராதவர்களுக்கு, அவ்வை ஒரு புலவை என்பது நிறைவு தரக்கூடும்!
16. மயில்வாகனப் புலவர் தொகுத்த (முதலியார் குல.சபநாதன் பதித்த) யாழ்ப்பாண வைபவ மாலையிலும், வின்சுலோ அகராதி யிலும், சென்னைப்பல்கலைக்கழக சொல்களஞ்சியத்திலும், பழைய இலங்கை அரச சொல் தொகுதிகளிலும் கற்பழிப்பு என்ற சொல் காணப்படுகிறது. எனினும் வின்சுலோ பாதிரியார் கற்பழிப்பு என்ற தமிழ்ச்சொல்லையும் RAPE என்ற ஆங்கிலச் சொல்லையும் நேரொத்த சொற்களாய் எடுத்தாளவில்லை. அதேவேளை பழைய இலங்கை அரச சொல்தொகுதிகளும் சென்னைச்சொல்களஞ்சியமும் அவற்றை நேரொத்த சொற்களாய் எடுத்தாண்டுள்ளன.
17. THE CONCISE OXFORD DICTIONARY (pairgogligib (Sandisgigaitulg. RAPE என்பது THE ACT OF FORCING A WOMAN TO HAVE SEXUAL INTERCOURSE AGAINST HER WILL (SPQ5 (ou GăTGOMGOOIT egy onu (560) Luu விருப்பத்துக்கு மாறாக வன்மைகொண்டு புணர்தல்) இந்த விளக்கத்தில் கற்பு(CHASTITY) பற்றிப் பேசப்படவுமில்லை. எத்தகைய

Page 14
24 * மொழியினால் அமைந்த வீடு
பண்பும் அழிக்கப்படுவதாகக் கூறப்படவுமில்லை. ஆகவே RAPE என்ற ஆங்கிலச்சொல்லைகற்பழிப்பு என்று கொள்வது தவறு. அவ்ை நேரொத்த சொற்கள் ஆகா. புதிய இலங்கை அரச சொல்தொகுதிகள் கற்பழிப்பு என்ற சொல்லுக்குப் பதிலாக வன்புணர்ச்சி என்ற சொல்லைப் புகுத்தியுள்ளன. வன்புணர்ச்சி என்ற சொல்லாட்சி OXFORD அகராதி முன்வைக்கும் விளக்கத்துக்குப் பொருத்தமாய் அமைவது கவனிக்கத்தக்கது. எனினும் ஈழத்து இதழ்களில் பாலியல் வல்லுறவு என்ற சொல் தொடரே.மேலோங்கியுள்ளது.
18. விலைமகள், பிள்ளை இல்லாதவள், தாரமிழந்தவள் மாத்திர மல்ல, பிறர் மனை நயப்பவனும், பிள்ளை இல்லாதவனும், தாரமிழந்தவனும் தாழ்த்தப்பட்டே வந்துள்ளார்கள். விலைமகனும் தாழ்த்தப்படுதல் திண்ணம். இவை எழுத்துத்தமிழில் பாவிக்கப்படும் சொற்கள். பேச்சுத் தமிழில் (அதாவது அவர்கள் தூற்றப்படும் பொழுது) பாவிக்கப்படும் வடுச்சொற்கள் வேறு. அவற்றின் உச்சரிப்பே வசை கற்பிக்கும்!
19. பெண்களைத் தாழ்த்தும் பணியில் பெண்களே தலையாய பங்கு வகித்திருக்கிறார்கள் அதற்கு மாமியார் - மருமகள் சண்டை ஒரு தலைசிறந்த உதாரணம். இன்னோர் உதாரணமாகிய சக்களத்திப் போராட்டம் வின்சுலோ அகராதியிலேயே இடம்பெற்றுள்ளது. Homer படைத்தTheliadகாவியத்தில் Aeneas என்றதுபாய்நகரவீரன் Achiles என்ற கிரேக்க வீரனை (காவிய நாயகனை) எதிர்கொள்ளும் தறுவாயில் இப்படிக் கூறுகின்றான்: ஒருவருடன் ஒருவர் பிணக்குறும் பெண்கள் வெகுண்டெழுந்து தெருவுக்கு வந்து வன்சொல் அளந்து வசைமாரி பொழிந்து அரை உண்மையும் முழுப் பொய்யும் கலந்து வாய்ச்சமர் புரிவதைப் போல், நானும் நீயும் நடந்து கொள்வதால் ஆவதென்ன?
20. யோர்க்குப் பல்கலைக்கழகத்து (York University) உளவியலாளர் Debra Pepler மேற்கொண்ட ஒர்ஆய்வின்படி, வன்மத்தைப் பொறுத்த வரை ஆண்களும் பெண்களும் சரிநிகரானவர்கள். அதேவேளை ஆண்கள் வன்செயலிலும் பெண்கள் வன்சொல்லிலும் முன்னிற்

மணி வேலுப்பிள்ளை * 25
6pm isoit (The Globe and Mail, 99/10/23/). Tgöguib (ou Giorgii regió றெனத் தகும் என்று எச்சரிக்கவில்லையா, அவ்வையார்? (கொன்றை வேந்தன் 42).
21. இறை என்ற சொல்லே அன் விகுதி பெற்று இறைவன் ஆகியது என்ற கூற்று, சமூகத்திலிருந்து புகுந்ததே ஆணாதிக்கம் என்ற கூற்றுக்கு நிகரானது. மாறாக, மொழியிலிருந்து சமூகத்துள் புகுந்ததே ஆணா திக்கம் என்ற கூற்று, இறைவன் என்ற சொல்லே இறை என்று குறுகியது என்று கூற்றுக்கு நிகரானது. இவ்விரு கூற்றுகளையும் இயைபுபடுத்தும்பொழுது உண்மை புலனாகிறது: சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்து, அப்புறம் மொழியிலிருந்து சமூகத்துக்கு மீள்வதே ஆணாதிக்கம். மொழியிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவதற்கு மொழியே துணைநிற்கும். ஆதலால்தான் பெண்ணிய வாதிகள் ஆணாதிக்கம் பற்றி மொழியக்கூடியதாய் இருக்கிறது! பெயரளவில் தாய்மொழி, செயலளவில் பிதாமொழி என்று சாடக் கூடியதாய் இருக்கிறது எனினும் தமிழின் நெகிழ்ச்சி குறித்து பெண்ணியவாதிகள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது.

Page 15
eg,62 960) / D
KXX
ΟΣ
ஒருவருடைய ஆளுமையை அவருடைய பிறப்பியல்பும் சூழலும் தீர்மானிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒர் ஆளுமை உண்டு என்பது இங்கு பெறப்படுகிறது. ஆகவே ஒருவரைக் குறித்து அவர் ஆளுமை மிகுந்தவர் என்றோ, குறைந்தவர் என்றோ கூறுவது முற்றிலும் செவ்வையான ஒரு கூற்றாகாது. எனினும் எம்மிடையே அத்தகைய கூற்றுகள் வழங்கி வருவது உண்மையே. அதற்கு ஒரு மட்டுப்பட்ட பொருள் உண்டு என்பதை மறுப்பதற் Saiban av. giggós, Oxford Advanced Learner’s Dictionary (p6ăr வைக்கும் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
His wife has a strong personality (96) ico,60Lu LD60607e5 Quglgigs ஆளுமை படைத்தவர்).
The children all have different personalities (Sairanarsair எல்லோரும் வெவ்வேறுஆளுமை படைத்தவர்கள்).
He maintained order by sheer force of personality (GaupuldGat தமது ஆளுமை வலுவைக் கொண்டே அவர் ஒழுங்கு பேணினார்).
There are likely to be tensions and personality clashes in any social group (எந்தச் சமூகக் குழுமத்திலும் நெருக்கடிகளும் ஆளுமை மோதல்களும் நிலவும் வாய்ப்புண்டு).
We need someone with lots of personality to head the project (இத்திட்டத்தை இட்டுச்செல்வதற்கு ஆளுமை மிகுந்த ஒருவர் எமக்குத் தேவை).

Κ)
மணி வேலுப்பிள்ளை * 27
Their son is a real personality (SyouffassEgGMLU LDsGär Sg6MLD மிகுந்தவன்).
உயர்திணைக்கு (ஆட்களுக்கு) மட்டுமல்ல, அஃறிணைக்கும் (பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கட்டடங்களுக்கும்) கூட personality gC5 Lusitasé G&Iraival illuG&pgil The problem with many modern buildings is that they lack personality (Oxford Advanced Learner’s Dictionary). Sy pigs&š 5 Lius6ir Goufflguib தனித்துவம் அற்றவை அல்லது அவற்றில் குறிப்பிடத்தகுந்த சிறப்போ கவர்ச்சியோ இல்லை என்பதே அதன் பொருள். அவற்றை ஆளுமை யற்ற கட்டங்கள் என்று தமிழ்ப்படுத்தி, அந்த விசித்திரத்தை எமது சொந்தக் கலைத்துவமாகவோ கவித்துவமாகவோ முன்வைத்த லாகாது.
ஆளுமை ஒரு பண்புப்பெயர். எனினும் இந்தப் பண்புப் பெயர் இன்று ஒர் உயர்திணைப் பெயராகவும் எடுத்தாளப்பட்டு வருகிறது. அப்படி எடுத்தாளாத புத்திமான் இனித்தான் பிறக்க வேண்டும்! அப்படி எடுத்தாளாவிட்டால், எங்கே தாம் எழுத்துவன்மை அற்றவர் என்று மற்றவர்கள் தப்புக்கணக்குப் போட்டுவிடுவார்களே என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது! இது தென்னிந்தியத் தமிழிலிருந்து உலகத் தமிழினுள்நுழைந்த பல்வேறு குருட்டு மொழி பெயர்ப்புகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை. MGRWasanattractive person. மக்கள் திலகம் ஒரு கவர்ச்சியான ஆள்தான் அந்த வகையில் MGR had an attractive personality. 96) ICD560Lugely 63LD LDésabond கவர்ந்தது என்பது அதன் பொருள். ஆனால் எங்களுள் பலரைப் போல் அவர் ஒரு சாதாரணமான ஆள் அல்லர். எங்களுள் சிலரைப்போல் அவர் ஒர் அசாதாரணமான ஆள். ஆங்கிலேயர் அத்தகையோரை personality, personage, celebrity... 6TairGpaiyamb (55 G56gi6òTG3). இவற்றிற்கிடையே நுண்ணிய வேறுபாடு உண்டு. சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் personality என்பதை முக்கியமான ஆள் என்றும், personage என்பதை உயர்நிலையினர் என்றும், celebrity என்பதை நாடறிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. அந்த வகையில் MGRWasan attractive personality ஆகின்றார். அவர் மக்களைக் கவர்ந்த பிரமுகர் அல்லது மாமனிதர் அல்லது பேராசான் அல்லது மேதாவி என்பது அதன் பொருள். இங்கே personality ஒரு பண்புப்பெயராக

Page 16
28 * மொழியினால் அமைந்த வீடு
அமையவில்லை என்பது தெளிவு. ஆளுமை ஒரு பண்புப்பெயர். ஆகவே மக்கள் திலகம் ஒரு கவர்ச்சியான ஆளுமை என்பது அறவே பொருந்தாது.
Personality முதலில் பண்புப் பெயராகவே எங்களுக்கு அறிமுக மாகிற்று. அந்த வகையில் நாங்கள் அதனை ஆளுமை என்று GasnierLig gunruGLD. syllplb Radio personality, TV personality, Theatre personality, Sportspersonality Gunairpositilisabet pitrisair கேள்விப் பட்டோம். எங்களுள் யாரோ ஒரு மேதாவி Radio persona 1ity என்பதை வானொலி ஆளுமை என்று குறிப்பிட்டுவிட்டார். அதைவிட மோசமான பாமரத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும் அவர் பெயர் போனவர் அல்லவா? ஆகவே பெயரெடுக்கத் துடிக்கும் பேர்வழிகள் அந்த மேதாவியை அடியொற்றி அத்தகைய பாமரத்தனத்தை முன்னெடுத்துச் செல்ல முண்டியடித்ததன் விளைவாக, இன்று ஜெயமோகன் அவர்களே, “கேரளத்தின் முக்கியமான ஆளுமைகளான இ.எம்.எஸ்., நாராயண குரு முதலிய வர்களைப் பற்றி” குறிப்பிட நேர்ந்துள்ளது (ஜெயமோகன், இரு sassoir, 367a)6037, 2004/02/14). E.M.S. was a great personality என்பது இ.எம்.எஸ்., ஒரு மேதாவி என்றே பொருள்படும். இதனை இ.எம்.எஸ். ஒரு பேராளுமை என்பது பொருந்தாது. அவ்வாறேRadio personality என்பது வானொலிப் பிரமுகர் என்றே பொருள்படும். அதனை வானொலி ஆளுமை என்பது அறவே பொருந்தாது. போகட்டும், வானொலியாளர் என்றாவது குறிப்பிடலாமே!
“ரஷ்ய ஆளுமைக்கு உட்பட்டிருந்த போலந்து” பற்றிய கட்டுரை ஒன்றைக் கண்ணுற நேர்ந்தது (இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், அருந்ததி நிலையம், தமிழ் நாடு, 2000, ப. 31), ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்டிருந்த போலந்து என்பதே பொருத்தம். ஆளுமை, ஆளுகை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு பேணப்பட வேண்டும் அல்லவா!

மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன்
ஆளை ஆளைப் பார்க்கிறார், ஆட்டத்தைக் பார்த்திடாமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்,
என்பது ஒரு திரைப்படப் பாடலின் தொடக்கம். ஒரு பெண் தனது ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருக்கும் ஆடவரின் மனநிலையை உணர்த்திப்பாடும் பாடல் அது.
அந்தப் பாடலின் பொருள் எவ்வாறாயினும், ஆட்டத்தைப் பாராது ஆளைப் பார்க்க வேண்டிய தேவை சில சமயங்களில் சில தரப்பி னருக்கு ஏற்படுவது நியாயமே. நாட்டிலுள்ள மக்களுள்எத்தனைபேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்பதை புள்ளி விபரத் திணைக்களம் அறிந்து வைத்திருக்கிறது. மக்களை ஆண்கள், பெண்கள் என்றோ வைத்தியர்களை ஆண் வைத்தியர்கள், பெண் வைத்தியர்கள் என்றோ பகுத்துக் காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. திட்டம் தீட்டும் துறையினருக்குத் திட்ட வட்டமான பால்வேறுபாட்டுத் தரவுகள் தேவைப்படும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.
வேற்று மொழியினரின் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு நாங்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் மொழிகளில்

Page 17
30 * மொழியினால் அமைந்த வீடு
அமைந்த பேர்வழிகளைப் பற்றித் தமிழில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு. எங்கள் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு அவர்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் தமிழ்ப் பேர்வழிகளைப் பற்றி வேற்று மொழிகளில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு. ஏன்? தாய்மொழியிலும் இது நேர்வதுண்டு. ஆண், பெண் இருபாலாரும் தயா,சுபா, மணி, இராசு, இரத்தினம். என்று பெயர் சூடுவதால் விளையும் விபரீதம் அது. அத்தகைய பெயர்களை மட்டும் வைத்து அவர்கள்ஆண்களா பெண்களாஎன்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. எனினும் அவர்களுடன் உறவாடுவோருக்கு அவர்கள் ஆண்களா, பெண்களாஎன்பது தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்கள் ஒரு வசனத்தில் இடம்பெறுமாயின், அந்த வசனத்தின் பால்படு விகுதிகளையோ, அதில் பேசப்படும் உடலுறுப்புகளையோ, அணிமணிகளையோ கொண்டு எவருமே அவர்களை இனம் காணலாம். பின்வரும் வசனங்கள் அத்தகையவை:
இராசு பாடினாள். மணியின் தாலி தாவணிக்குள் மறைந்தது. இரத்தினம் இன்னும் சவரம் செய்யவில்லை.
அவற்றை விதிவிலக்குகளாகக் கொள்ளலாம். மற்றும்படி பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம்.
இளங்கீரன் ஓர் எழுத்தாளர் பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்
பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம் என்ற உண்மை சொல்லளவில் ஏற்கப்படுவது அதிகம். செயலளவில் பின்பற்றப்படுவது குறைவு. பின்வரும் வசனங்களைக் கவனிக்கவும்:

மணி வேலுப்பிள்ளை * 31
1. இளங்கீரன் ஓர் எழுத்தாளன். 2. இளங்கீரன் ஓர் எழுத்தாளர். 3. பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர். 4.இளங்கீரன் ஓர் ஆண் எழுத்தாளர். 5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்.
1ஆவது வசனத்தில்-அன்விகுதி பால்காட்டியுள்ளது. அது நியாயமே. ஏனையவசனங்களில் பால்படுசமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் 2ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளர் 1ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளனையும் 3ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளரையும், 4ஆவது வசனத்தில் உள்ள ஆண் எழுத்தாளரையும் செயலிழக்கச் செய்வதுண்டு. 4ஆவது வசனம் கண்ணில் படுவதோ காதில் விழுவதோ அரிது. 5ஆவது வசனம் அடிக்கடி இடம்பெறுகிறது. அதாவது:
2. இளங்கீரன் ஓர் எழுத்தாளர். ஆனால்: 5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்!
-அர்விகுதியின் இடத்துக்கு "அன் விகுதி உயர்த்தப்பட்டமை (-அன் விகுதியின் இடத்துக்கு -அர் விகுதி தாழ்த்தப்பட்டமை) 2ஆவது வசனத்தில் தெரிகிறது. பெண்-ஒட்டுச்சொல்-அர்விகுதிக்கு முண்டு கொடுப்பது 3ஆவது வசனத்தில் தெரிகிறது.
பெண்-ஒட்டுச்சொற்கள் பெரிதும் இறக்குமதிச்சரக்காகவே எங்களை வந்தடைகின்றன. இன்று தமிழில் வழங்கும் பெண்-ஒட்டுச்சொற் களுள் பெரும்பாலானவை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் புகுந்த வுை. ஆங்கிலத்தில் பெண்குலத்தைச் சமாளிக்கும் சொல்லாட்சிக்கு Woman ஒட்டுச்சொல்லாய் நின்று முண்டு கொடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் Woman ஒட்டுச் சொல்லாய் நின்று பெண்மைக்கு முண்டுகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அது ஒரு பால்படு சமாளிப்பாகும். ஆங்கிலத்தில் இடம்பெறும் பால்படு சமாளிப்பை இறக்குமதி செய்யவேண்டிய (மொழிபெயர்க்க வேண்டிய) தேவை தமிழுக்கு இல்லை. பெண்மைக்கு முற்றிலும் நெகிழ்ந்து கொடுக்கும்

Page 18
32 * மொழியினால் அமைந்த வீடு
தமிழுக்குஅத்தகைய நிர்ப்பந்தம் அறவே கிடையாது. தேவைப்படாத இறக்குமதியாக (குருட்டு மொழி பெயர்ப்பாக) புகுத்தப்படும் பால்படு சமாளிப்பு தமிழைப் பாழ்படுத்தி வருகிறது. ஆணாதிக் கத்தை நிலைநிறுத்தி வருகிறது.
எடுத்துக்காட்டாக spokeswoman என்பது பெண்குலத்தைச் சமாளிப்பதற்காக ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சொல் லாட்சி. ஆங்கிலத்தில் இடம்பெறும் அந்தப் பால்படு சமாளிப்பை ஈ அடித்த பிரதிக்காரரைப் போன்று (பெண் பேச்சாளர் என்ற உருவத்தில்) தமிழுக்குள் புகுத்துவதைவிட மோசமான முட்டாள் தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. எனினும்spokeSWOmanபேசும் பெண் ஆகாமல், பெண் பேச்சாளர் ஆகியமை மாபெரும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை!
பேச்சாளர் என்றால் ஒரு கூட்டத்தில் உரையாற்றுபவர் (Speaker) syaiyagi pirauai (orator) 6Tairapt Gun Ojoir. Spokesperson sects பேச்சாளரோ நாவலரோ அல்லர். ஒருதரப்பின்சார்பாக மொழிபவர். ஆதலால்தான்1958ல் வெளிவந்த இலங்கை அரச சொல்தொகுதி ஒன்று அவரை மொழிவாளர் என்று குறிப்பிட்டுள்ளது. மொழிபவர் ஆணா யினும்(spokesman),பெண்ணாயினும் (spokeSWOman) மொழிவாளர் (spokesperson) பொருந்தும். அதுதமிழ் இலக்கணத்துக்கும் மரபுக்கும் அமைந்த செப்பமான, நுட்பமான சொல்லாட்சி. மொழியும் பொரு ளும் அறிந்தவர்களுக்கு அது எத்துணை நேர்த்தியான சொல்லாட்சி என்பது புரியும். அத்தகைய அரிய தமிழ்ச் சொற்கள் மங்குவதும், ஈ அடிப்புச் சொற்கள் ஓங்குவதும் தமிழ்மொழி வரலாற்றில் இடம் பெறும் விந்தை ஆகும்.
கீழ்வரும் சோடியைக் கருத்தில் கொள்ளவும்:
1. அப்பா வந்தார், அண்ணா போனார். ஆனால்: 2. அம்மா வந்தாள், அக்கா போனாள்!
புனைகதையில் (சிறுகதையில், நாவலில்) ஆண்கள் உயர்த்தப்படு வதையும், பெண்கள் தாழ்த்தப்படுவதையும் மேற்படி கூற்றுகள்

மணி வேலுப்பிள்ளை * 33
இரண்டும் ஒட்டுமொத்தமாகப் புலப்படுத்துகின்றன. அப்பாவந்தார், அண்ணா போனார் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று நமது கதாசிரி யர்கள் எழுதுவது மெத்தச் சரியே. அப்புறம், அம்மா வந்தா, அக்கா போனா என்றுதானே எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா அவர்கள் எழுத வேண்டும்? அம்மாவந்தாள், அக்கா போனாள் என்ற பேச்சுக்கே இடமில்லையே! எப்படி எழுத்துக்கு இடம் வந்தது? ஆண்களின் கையெழுத்து பெண்களின் தலையெழுத்தாகுமா? ஆகாது.
ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார் என்று எழுதும் அதே கையினால், அம்மா வந்தார், அக்கா போனார் என்றும் எழுத வேண்டும். அல்லது அம்மா வந்தாள், அக்கா போனாள் என்று எழுதும் அதே கையினால், அப்பா வந்தான், அண்ணா போனான் என்றும் எழுத வேண்டும். அப்பா வந்தான், அண்ணா போனான் என்று எழுதக்கூடாது என்றால், அம்மா வந்தாள், அக்கா போனாள் என்றும் எழுதக்கூடாது.
முறைசார் வழக்கில் (சபையில் அல்லது புனைகதை அல்லாத ஆக்கங்களில) அம்மா வந்தார், அக்கா போனார் என்று குறிப்பிடுகி. றோம். பேச்சு வழக்கில் அம்மா வந்தா, அக்கா போனா என்று குறிப்பிடுகிறோம். பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகத் தம்பட்டம் அடிப்பவர்கள் அம்மா வந்தா, அக்கா போனா என்றல்லவா எழுத வேண்டும்? பேச்சு வழக்கை ஒட்டி எழுதுவதாகக் கூறுவது வெறும் பேச்சுக்காகவா? ஒன்றில் பேச்சு வழக்கு ஓங்க வேண்டும். அல்லது தம்பட்டம் ஒயவேண்டும்.
அம்மா வந்தாள், அக்கா போனாள் என்று எழுதுவதே மரபு, அந்த மரபை மாற்றுவது தப்பு என்று நமது கதாசிரியர்கள் கதையளக்கக் கூடும். அது பொதுமக்கள் மரபல்ல, ஆணாதிக்க மரபு என்பதை அவர்களுக்கு இடித்துரைப்போம். மரபின் பெயரால் அநியாயம் தொடர்வது முறையா, நியாயத்தை ஏற்று மரபு மாறுவது முறையா? மரபில் நியாயம் உள்ளவரை அதனை நாம் நிலைநிறுத்தவே

Page 19
34 * மொழியினால் அமைந்த வீடு
வேண்டும். மரபில் அநியாயம் பொதிந்திருந்தால் அதனை நாம் ஒழித்துக்கட்டியே தீரவேண்டும்.
-அர், -ஆர், -கள் விகுதிகள் சமூகத்தின் பொது உடைமையாய் எழுந்தவை. அவை ஆண்களின் தனி உடைமை ஆக்கப்பட்டு விட்டன. அவை மீண்டும் சமூகத்தின் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும்- அவை ஆண், பெண்இருபாலாருக்கும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும். அதாவது பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வழக்குரைஞர். போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும். அல்லது ஆண் போராளி, ஆண் எழுத்தாளர், ஆண் வைத்தியர், ஆண் வழக்குரைஞர். போன்ற ஒட்டுச் சொற்கள் இயன்றவரை புகுத்தப்பட வேண்டும்.
ஆண்கள் மொழிக்குள் தமது ஆதிக்கத்தை அநியாயமாகவும் அப்பட்ட மாகவும் இறுமாப்புடனும் புகுத்தியுள்ளார்கள். மொழிக்குள் தாம் புகுத்திய ஆணாதிக்கத்தை ஆண்களே மனமுவந்துகளைய வேண்டும். களையத் தவறினால், பெண்கள் கிளர்ந்தெழுந்து களையெடுப்பில் குதிக்க வேண்டும். அதனை விடுத்து மொழியை நோவது, எய்தவன் இருக்க அம்பை நோவது போலாகும் என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பை நோவதை விடுத்து எய்தவனை எதிர் கொள்வோம்.
1. -அர், ஆர், -கள்விகுதிகள் ஆண்களை மாத்திரமன்றிப் பெண்களை யும் குறிப்பவை. ஆகவே ஆண்களைப் போலவே பெண்களும் தங்களைக் குறித்து -அர், "ஆர், -கள் விகுதிகளைத் தாராளமாகக் கையாள வேண்டும். அந்த வகையில் கவிஞர் உமா மஹேஸ்வரி, கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி, ஆண் கவிஞர் பிரம்மராஜன் என்றெல் லாம் லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிவருவது வரவேற்கத் தக்கது (படைப்பாளி-வாசகர்-விமர்சகர், கணையாழி, ஜனவரி 2002, Lu.59-61).
2. -அன், -ஆன் ஆகிய ஆண்பால் விகுதிகளுக்கு எதிராக மாத்திரமே -அள், ”ஆள், "ஆட்டி, ஆத்தி, இ, ஐ. முதலிய பெண்பால் விகுதி
களைக் கையாள வேண்டும்.

மணி வேலுப்பிள்ளை * 35
ஆசிரியன் ஆசிரியை நண்பன் நண்பி இளைஞன் இளைஞ
3. -அர், -ஆர், -கள் விகுதிகளுக்கு எதிராக (அதாவது அவற்றைக் கலப்பற்ற ஆண்பால் விகுதிகளாகக் கொண்டு, அவற்றுக்கு எதிராக) பெண்பால விகுதிகளைக் கையாளக் கூடாது. (ஆசிரியர், நண்பர், இளைஞர் போன்ற சொற்களைக் கலப்பற்ற ஆண்பாற் சொற்களாக வோ ஆசிரியை, நண்பி, இளைஞ போன்ற சொற்களை முறையே அவற்றின் பெண்பாற் சொற்களாகவோ எடுத்தாளக்கூடாது).
4. -அர், ஆர், -கள் விகுதிகளின் இடத்தை "அன், "ஆன் விகுதிகள் அபகரிக்க அனுமதிக்கக் கூடாது. பொதுவாக ஆண்கள் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் பெண்களும் வகிக்கிறார்கள். ஆகவே என்னுடைய அக்காஒர்ஆசிரியை என்று குறிப்பிடத் தேவையில்லை. என்னுடைய அக்கா ஒர் ஆசிரியர் என்றே குறிப்பிடலாம். குறிப்பிட வேண்டும்.
5. எழுத்தாளர் பாலேஸ்வரி. அவ்வளவுதான். பெண் எழுத்தாளர் பாலேஸ்வரி என்பது அநாவசியம், முட்டாள்தனம், கூறியது கூறல். தவிர்க்கமுடியாத காரணம் இருந்தால் ஒழியப் பெண்போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர். போன்ற பெண்-ஒட்டுச்சொற்களைப் பெண்கள் கையாளக்கூடாது. அத்தகைய சொல்லாட்சியை அவர்கள் அனுமதிக்கக்கூடாது. எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. அந்த வகையில் இந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. எங்கேயாவது பெண் ஒட்டுச் சொல்லாய் அமைந்தே தீரவேண்டிய கட்டம் எழக்கூடும். எடுத்துக்காட்டாக ஈழ வரலாற்றில் உண்ணா நோன்பிருந்து மாண்ட முதற் பெண்தியாகி அன்னைபூபதி அவர்களே எனலாம். எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு என்பது ஒப்புக்கொள்ளப் படும் அதேவேளை, அந்த விதிவிலக்கையே விதியாக விதிக்கலாகாது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
6. பழமொழிகளைப் பொறுத்தவரை எவருக்கும் ஆக்கவுரிமை கிடையாது. ஆதலால் ஆணாதிக்கம் தொனிக்கும் பழமொழிகளை இருபாலார்க்கும் பொதுவானவையாக மீட்டியுரைக்கலாம். எடுத்துக் காட்டாக தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத் தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை தினை விதைத்தவர்

Page 20
36 & மொழியினால் அமைந்த வீடு
தினை அறுப்ப(ா)ர், வினை விதைத்தவர் வினை அறுப்ப(ா)ர் என்று மீட்டியுரைக்கலாம்.
7. பிற இலக்கியங்களைப் போலவே தமிழ் இலக்கியத்தையும் ஆணாதிக்கம் பீடித்துள்ளது. எனினும் இலக்கியத்தில் நாம் இலகுவில் கைவைக்க முடியாது. இயற்றியவர் அதற்கு உடன்படப் போவ தில்லை. இயற்றியவர்உயிருடன் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆக்கவுரிமை பெற்றவர்களையெடுக்கத் துணிபவர் மீது வழக்கு வைத்தல் திண்ணம். வள்ளுவரே மறுபடி தோன்றி,
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (386)
என்ற தமது குறளை அதன் பொருளில் எதுவித மாற்றமுமின்றி,
காட்சிக்கு எளியர் கடுஞ்சொல்லர் அல்லரேல் மீக்கூறும் மன்னர் நிலம்
என்று மீட்டியுரைத்தால், யாரோ ஒரு கிழட்டு நெசவாளன் தன்னை வள்ளுவர் என்று முரசுகொட்டி ஆள்மாறாட்டம் செய்வதாகக் குற்றம் சாட்டி வழக்கு வைப்பதற்குத் தயாராய் இருக்கிறது பூம்புகார் பதிப்பகம்
8. கண்ணில் படும், காதில் விழும் எந்த வசனத்திலும் ஆணாதிக்கம் தென்பட்டால், அதனை இருபாலார்க்கும் பொதுவானதாக மீட்டி யுரைத்து, அதனைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக் காட்ட லாம். எடுத்துக்காட்டாகத்தமிழர்தகவல், தமிழர்மத்தியில் என்பவை போலத் தமிழன் வழிகர்ட்டி என்பதைத் தமிழர் வழிகாட்டி என்று மீட்டியுரைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக் காட்டலாம். எங்களைத் தமிழா தமிழா என்று விழித்து எழுதுவதை விடுத்து, தமிழரே! தமிழரே! என்று விழித்து எழுதும்படி நமது புத்திமான்களுக்கும் புத்தி புகட்டலாம்.
தமிழில்தான் ஆணாதிக்கம் நிலைத்துள்ளது. ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் அது களையப்பட்டுவிட்டது ஏனையவை ஆணாதிக்கத்தைக்களையவல்லவை, தமிழ்களையவல்லதல்ல என்று

மணிவேலுப்பிள்ளை * 37 கருதிச்சிலர் தெம்புகுன்றக்கூடும். இவை வெறும்தப்புக்கணக்குகள். தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தைக் காட்டிலும் கிரேக்க, ஆங்கில, அரபு. மொழிகளில் காணப்படும் ஆணாதிக்கம் பன்மடங்கு அதிகம். அந்த மொழிகளிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தை -அர், -ஆர், -கள் விகுதிகளைக் கொண்டே பெருமளவு களையலாம். தமிழின் நெகிழ்வைப் பெண்கள் முற்றுமுழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆணாதிக்கம் சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்து, மொழியி லிருந்து சமூகத்துக்கு மீள்வது. அந்த வகையில் ஆணாதிக்கம் ஒரு சமூகக் கொடுமை மட்டுமல்ல, அது ஒரு மொழிக் கொடுமையும்கூட. சட்டத்தின் முன் மட்டுமல்ல, மொழியின் முன்னும் யாவரும் சமன் என்பதைப் பெண்கள் நிலைநாட்ட வேண்டும். அதனைச் சொல்லி லும் செயலிலும் அவர்கள் காட்ட வேண்டும். தமது ஆக்கங்களில் அதனை ஊட்ட வேண்டும். நமக்கேன் வம்பு என்று பெண்கள் வாளா விருக்கக்கூடாது.
ஒரேயொரு கேள்வி இக்கட்டுரையைச்சரிவரப்பூர்த்தி செய்ய விடாது எமது அடிமனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது: தொழிலாளன், எழுத்தாளன், பேச்சாளன் போன்று -ஆளன் விகுதி கொண்ட ஆண்பாற் சொற்களின் பெண்பாற் சொற்கள் யாவை? தொழிலாளி, தொழிலாளர் இரண்டும் இரு பாலாரையும் கருதும். தனியே பெண்பாலாரை மட்டும் குறிக்கும் சொல் என்ன? தொழிலாளஸ் அல்லது தொழிலாட்டி அல்லது தொழிலாளினி எனலாமா? அவை பெண்பாலாரைக்குறிக்கும் என்றால், அவை ஏன் வழக்கில் இல்லை? தொழிலாளினி, எழுத்தாளினி, பேச்சாளினி. என்று ஏற்கெனவே தாம் பாவித்ததுண்டு என்று தெரிவிக்கும் எழுத்தாளர் திரு.அ.முத்து லிங்கம் அவர்கள், அப்படி பாவித்தால் என்ன என்றும் வினவுகிறார். தொழிலாளஸ் அல்லது தொழிலாட்டி என்பதைவிடத் தொழிலாளினி ஒசைநயம் மிகுந்தது. ஆனால் அதனை உச்சரிப்பது சற்றுச் சிரமம். எனினும் திரு.முத்துலிங்கம் அவர்களின் பாவனையும் வினாவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.
பி.கு: இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்திசெய்ய முடியாத எரிச்சலி லிருந்து விடுபடும் நப்பாசையுடன், இன்றைய இளைஞர்களின்

Page 21
38 * மொழியினால் அமைந்த வீடு
வாழ்க்கை சுகமா? சுமையா? என்ற தலைப்பினைக் கொண்ட பட்டி மன்றப் பதிவு நாடாவை ஒடவிட்டுப் பார்த்தோம். தலைவரே ஒரு பெயர்போன தமிழ் ஆசிரியர். ஆசிரியர்களும் கவிஞர்களுமே பட்டிமன்றத்தில் பங்குபற்றுகிறார்கள். அவர்களுள் ஒரு கவிஞரை பெரும் புலவர் என்று தலைவர் வேறு அறிமுகப்படுத்தியும் வைக் கிறார். அப்புறம் பெரும் புலவர்எழுந்துதமிழர்களே தமிழச்சிகளே! என்று அவையோரை விழித்து உரையாற்றத் தொடங்குகிறார். அது கேட்டுப் புளகாங்கிதமடையும் தலைவர், கவிஞரை இடைநிறுத்திப் பாராட்டி, அவரைப் பின்பற்றும்படி அனைவரையும் வேண்டிக் கொள்ளுகிறார்!
எமக்கென்னவோ சாணேற முழம் சறுக்கிய உணர்வே ஏற்பட்டது. தமிழருள்தாய்க்குலம் அடங்கவில்லையாம்! ஆதலால் பெரிய மனது பண்ணி எங்கள்தாய்க் குலத்தைத் தமிழச்சிகள் என்று குறிப்பிடுகிறார் களாம்! அடுத்த பட்டிமன்றத்தில் ஆசிரியர்களும் கவிஞர்களும் அவ்வையார் ஒரு புலவச்சி, ஜெயலலிதா தமிழக முதலமைச்சி என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் போலும் தமிழன் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டத்தை எட்டிவிட்டான் என்பதற்குத் தமிழச்சியே சான்று. தாய்மொழியை மேம்படுத்துவதாக நினைத்து அதனைக் கேவலப் படுத்தும் தமழர்கள் யார் பெற்ற பிள்ளைகள்? பிறந்தவன் ஓரினம், பெற்றவள் வேறினமா? வெட்கம் இல்லையா உங்களைத் தமிழர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் பறைசாற்றுவதற்கு?

மொழியினால் அமைந்த வீடு
0.
O
கங்கை ஆற்றங்கரையில் ஒரு கோவணாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக மெளனவிரதம் அனுட்டித்துவருவதாகச்சொல்லப்படுகிறது. மொழி ஒரு பொய் என்ற காரணத்தால் அவர் மொழிவதையே நிறுத்தி விட்டார் என்று கூறப்படுகிறது. தாம் சாதிப்பதைத் தாமே போதிக்க முடியாத இக்கட்டினுள் அவர் மாட்டுப்பட்டுள்ளார். போதித்தால் (மொழிந்தால்), தமது நிலைப்பாட்டைத் தாமே மறுப்பதாய் அமைந்துவிடும். அது ஒரு தருக்க முரண்பாடாய் மாறிவிடும். ஆத லால் அவருடைய அடியார்கள் அவருக்காக மொழிந்து வருகிறார்கள்.
“மொழியினால் அமைந்த வீட்டிலேயே மனிதர்கள் வாழ்ந்து வரு கிறார்கள்” (Russell R.W. Smith) மொழியின் மூலப் பொருட்களாய் அமையும் “சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் ஒட்டு றவில் அவை குறுக்கிடுகின்றன. சொற்களில் புதையுண்டிருக்கும் பொருளை விடுத்து சொற்களிலும், எம்மை ஈர்த்து, தீண்டி, உறுத்தும் அவற்றின்ஆற்றலிலும் நாம் அதிகம் புலனைச் செலுத்துகிறோம்” (Pico yer). “நாம் பாஷையை விடுத்து பரிபாஷையை மொழிகி றோம். நெறிகளை விடுத்து அறைகூவல்களை மதிக்கிறோம். நேரிய சிந்தனைகளை விடுத்து கூரிய சிந்தனைகளை ஏற்கிறோம்” (Eric Bentley).
“வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டு வது ரொம்ப லேசு’ (புதுமைப்பித்தன்). “மனிதர் புலியைக் கொன்

Page 22
40 * மொழியினால் அமைந்த வீடு
றால், அது வேட்டை. புலி மனிதரைக் கொன்றால் அது பயங்கரம்” (Bernard Shaw). “நீங்கள் கடவுளிடம் ஏதாவது வேண்டிக்கொண்ட தாகச் சொன்னால், நீங்கள் கடவுளை வழிபட்டிருக்கிறீர்கள் என்று கருத்து. கடவுள் உங்களிடம் ஏதாவது வேண்டிக்கொண்டதாகச் சொன்னால், உங்களுக்குச் சித்தப்பிரமை பிடித்திருக்கிறது என்று கருத்து" (Thomas SzaSz). “நீர் ஒரு புனிதர் என்றால், மற்றவர்கள் உம்மைப் பொருட்படுத்துவதில்லை என்று கருத்து (Dorothy Day).
"நாங்கள் பேசுவது ஒரே மொழி அல்ல. சுதந்திரம், மனிதாபிமானம், மக்களாட்சி, விடுதலை போன்ற பதங்களுக்கு நாங்கள் கொள்ளும் கருத்துகளுக்கு நேரெதிர்மாறான கருத்துகளையே அவர்கள் கொள்ளுகிறார்கள். இந்த மொழித் திருட்டையும் துஷ்பிர யோகத்தையும் கண்டு நான் கொதிப்படைகிறேன்” (Paul William Roberts).
(2) George Orwell 6TQpSuu Nineteen Eighty-Four 6Taip sy isgs நாவலில் Newspeak என்று ஒரு மொழி பேசப்படுகிறது. அதுingsoc என்ற சிந்தனைக்கு உகந்த மொழி என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனைய சிந்தனைகளுக்கு அது இடம் கொடாது. அதில் அந்தச் சிந்தனைக்குச் சாதகமான புதிய சொற்களே உள்ளன. பாதகமான பழைய சொற்கள் இல்லை. மாண்பு, நீதி, அறம், சர்வதேசியம், மக்களாட்சி, விஞ்ஞானம், போன்ற சொற்கள் அதில் இல்லை. அந்த மொழி சிந்தனையை வளர்ப்பதற்கல்ல, ஒடுக்குவதற்கே பயன் படுத்தப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:
joycamp (அடிமை முகாம்) prolfeed (பிரசாரம்) Minipax (Guit freeOLD&si) (Ministry of Peace) goodthink (நெறிநிற்றல்) crimethink (நெறிபிறழ்தல்)
1949ல் வெளிவந்த மேற்படிநூலில் ஆட்சியாளர்களின் அறைகூவல் கள் சில காணப்படுகின்றன.

ΚΣ
மணி வேலுப்பிள்ளை * 41
போரே சமாதானம் அடிமைத்தனமே சுதந்திரம் அறியாமையே பலம்
George Orwell sing Animal Farm, Nineteen Eighty-Four-gsu இரு அங்கத நாவல்களிலும் (ஸ்டாலின் புரிந்த) சர்வாதிகாரத்தையே எள்ளிநகையாடியதாகச் சொல்லப்படுகிறது. சர்வாதிகாரத்தின் கீழ் இடக்கரடக்கல் மேலோங்குவதை அவர் சிந்தை கவரும் வண்ணம் எடுத்துக்காட்டியுள்ளார். மக்களாட்சியிலும் இடக்கரடக்கல் மேலோங்கும், ஏன் உச்சக் கட்டத்தையே எட்டும் என்பதை அவர் கற்பனை பண்ணியே பார்த்திருக்கமாட்டார். இன்று எல்லா"ஆட்சி யாளரும் படையினரும் இலக்கணத்தை நகைப்புக்கிடமாக்கி நய வஞ்சகமான இடக்கரடக்கல்களைக் கையாண்டு வருகிறார்கள்’ (Russell Smith). சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
இடக்கரடக்கல் இடக்கர் அடக்கல்
தாக்குதல் நடவடிக்கை Attack Operation
படையெடுப்பு முன்கூட்டியே தாக்குதல் Invasion Pre-emptive attack
ஆக்கிரமிப்பு விடுதலை Aggression Liberation
முன்னேறுவதற்கு முன்னர் தரையை இடம்பெறும் குண்டுவீச்சு மென்மைப்படுத்தல் Softening the ground

Page 23
42 * மொழியினால் அமைந்த வீடு
குடிமக்களின் உயிர், பக்கவாட்டுச் உடைமை இழப்புகள் சேதங்கள்
Collateral damage
இலக்குவைத்துக் கொல்லுதல் தேர்ந்தெடுத்துத் தாக்குதல்
Targeted killings Surgical strike
படுகொலை உருக்குலைத்தல் Massacre Degradation
கொஞ்சம் கொஞ்சமாகக் அராவிக் கொட்டுதல் கொன்று தீர்த்தல் Attrition
(3) “போருக்கு முதலில் பலியாவது உண்மையே” (Truth is the first casualty of war) 6Tairug. 605 Guuit Gunroot oppy (Hiram Johnson). இதனை வேறொரு விதமாகவும் குறிப்பிடலாம்: பிரசாரத்துக்கு (upgases LaSurroug GudnisGu (Language is the first casualty of pro paganda). “ஊடகங்கள் எதனை விரும்புகின்றனவோ அதுவே உண்மையாகிவிடும். மூன்று கிழமைகளில் உலகம் அதனை ஒப்புக் கொண்டுவிடும்” (Oswald Spenger). “மக்கள் ஒரு சிறிய உண்மை யைவிட ஒரு பெரிய பொய்யையே அதிகம் விரும்புகிறார்கள்” (ஹிட்லர்).
மக்களின் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களின் கருத்தை உருவாக்கும்துறை ஆகிறது. மக்களின் கருத்தை உருவாக்குவதற்கு ஒர் ஊடகம் தேவைப்படுகிறது. ஊடகம் நடத்துவதற்குப்பணம் தேவைப் படுகிறது. அந்த வகையில் ஊடக சுதந்திரம் என்பது ஊடக உடைமை யாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஊடகம் என்பது உடைமையின் ஊதுகுழல் (ஒதுகுழல்) ஆகிறது. ஊதுவோருக்கு பணத்தை எண்ணிக் கொடுப்பவரே பண்ணையும் குறித்துக் கொடுக்கிறார் (He who pays the piper call the tune - Oswald Spengler). Dallas/isoir sepages ஆட்டிப் படைக்கின்றன. அவற்றின் நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவை எண்ணங்களை உற்பத்தி செய்து பிழைக் 6G6ölgp6TT. (Industrialization of thought - Harun Farocki).

மணி வேலுப்பிள்ளை * 43
ஜனாதிபதி புஷ் (2003 மார்ச் 6ம் திகதி) இட்ட போர்முழக்கத்துக்கு sy'G6égis p/Tair Golau6îenu gigs The Globe and Mail (Toronto) Lugågørfleoes 9g56mar Bush readies World for war (Ley o lavasgogú Gutobáé5 ஆயத்தப்படுத்துகிறார்) என்று சொல்லித் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. அமெரிக்க ஆட்சியாளருக்கு ஆதரவாக வாசகர் களை அணிதிரட்டும் நோக்குடனேயே அது அப்படிக் குறிப்பிட்டது. அடுத்த நாள் அதே பத்திரிகையில் வெளிவந்த ஒரு கடிதத்தில் Bush readies War for World (புஷ் உலகத்தைக் கைப்பற்றும் போருக்கு ஆயத்தமாகிறார்) என்று Patrick Venditi என்ற வாசகர் அதற்கு மறுத்தான் கொடுத்திருந்தார்!
“படுகேவலமான காரியத்தை மிகவும் இதமான முறையில் செய்வதும் சொல்வதுமே சாணாக்கியம்” (Isaac Goldberg). அந்த வகையில் ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்னர் அமெரிக்க ஆட்சியாளரும் செய்திமான்களும் தமது அகராதியில் இரண்டு சொல்தொடர்களை வலிந்து புகுத்தினர்:
(1) Regime change (g, & LDITöplb)
(2) Weapons of mass destruction (Gulsa 66061T65digib
ஆயுதங்கள்)
ஆட்சிப்புரட்டு, ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற வாடிக்கையான சொல் தொடர்களைக் கையாண்டால் அப்படிச் செய்வது தப்பு என்பதை அந்தச் சொல்தொடர்களே மக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா! ஆட்சி மாற்றம் என்றால் அது இடமாற்றம், நேர மாற்றம் போன்ற ஒரு வழமையான, நியாயமான மாற்றம் போலவே தென்படும்.
அணு ஆயுதங்கள், நச்சுவாயு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள் என்று பச்சையாகக் குறிப்பிட்டால் எவருக்கும்விளங்கும். மாபெரும் அமெரிக்க வல்லரசு, இஸ்ரவேல் உட்பட அனைத்து வல்லரசு களிடமும் அவை மண்டிக் கிடக்கின்றன என்பது எல்லோருக்கும்

Page 24
44 * மொழியினால் அமைந்த வீடு
தெரியும். ஆனால் அப்படிப் பச்சையாகக் குறிப்பிடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனியே ஈராக்கிற்கு எதிராக மட்டுமல்ல, அத்தகைய வல்லரசுகள் அனைத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி விவரம் தெரியாதவர்கள் அசட்டுத்தனமாக முழக்கமிட்டால் எங்கே போய் முட்டுவது? ஆதலால்தான் அமெரிக்க ஆட்சியாளரும் ஊடகங்களும் ஈராக் வைத்திருக்கும் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்கள் பற்றி மொட்டையாகச் சொல்லி மழுப்பி வந்தன. அதாவது பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்கள் என்றால் இப்போ தைக்கு ஈராக்கிலும், அடுத்து ஈரானிலும், அப்புறம் வடகொறி யாவிலும். உள்ள ஆயுதங்கள் என்று பொருள் யப்பானில் இலட்சக் கணக்கான மக்களைப் பலிகொண்ட அமெரிக்க அணுக்குண்டுகள் போன்றவை வெறும் சிற்றழிவு விளைவிக்கும் ஆயுதங்கள் என்க!
அமெரிக்க, பிரித்தானியப் படைகள் ஈராக் மீது மேற்கொண்ட படையெடுப்புக்கு இட்ட குறியீட்டுப் பெயர் ஈராக்கிய சுதந்திர நடவடிக்கை (Operation Iraqi Freedom) ஜனாதிபதி புஷ், பிரதமர் பிளயர் இருவரும் இதனை ஈராக்கின் விடுதலை என்றும் குறிப்பிட் டார்கள். இது இலங்கை உட்பட வேறு பல நாடுகளில் இசைக்கப் பட்ட பழைய பல்லவியே. 1987ல் இலங்கைப் படையினர் வட மராட்சியைக் கைப்பற்றுவதற்குத் தொடுத்த போருக்கு இட்ட குறி யீட்டுப் பெயர்: விடுதலை நடவடிக்கை (Operation Liberation). 1949ம் ஆண்டு George Orwell சுட்டிக்காட்டிய போரே சமாதானம் என்ற அறைகூவல் 46ஆண்டுகள் கழித்து (1995ம் ஆண்டு) இலங் கையில் சமாதானத்துக்கான போர் என்ற அறைகூவலாய் ஓங்கியது! அடிமைத்தனமே சுதந்திரம் என்ற அறைகூவல் தற்பொழுது ஈராக்கிய சுதந்திரநடவடிக்கை(OperationIraqiFreedom) என்ற அறைகூவலாய் ஒலித்திருக்கிறது!
“நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்கள்நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் எமக்குக் கிடையாது. உங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காகவே நாங்கள் உங்கள் நாட்டுக்கு வருகிறோம்.” இது ஜனாதிபதி புஷ் அல்லது பிரதமர் பிளயர் அல்லது சேனாதிபதி தொமி பிறாங்ஸ் (Tommy Franks) விடுத்த அறிவித்தல் போலவே தென் படும். உண்மையில் இது 86 ஆண்டுகளுக்கு முன்னர் (1917ல்) இதே

மணி வேலுப்பிள்ளை * 45
ஈராக் மீது படையெடுத்த பிரித்தானிய சேனாதிபதிP.S.Maude விடுத்த அறிவித்தல்
இந்தப் படையெடுப்பை நாள் முழுவதும் ஒளிபரப்பிய ஊடகங் களின் முகப்பில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் அவற்றின்நிலைப்பாடு களைத்துல்லியமாகப் புலப்படுத்தின (சாய்வெழுத்திலுள்ள ஆங்கில வேற்றுமை உருபுகளைக் கவனிக்கவும்):
ABC (USA) War with Iraq (Fundielair fiscplib Gurti) BBC (UK) Iraq War (ஈராக் போர்) CBC (Canada) Attack on Iraq (RFpindi Lissroof snaissa) CNN (USA) War in Iraq (ஈராக்கில் நிகழும் போர்) NBC (USA) America at war (GunfairfGul 'Goirot syGLDidism)
BBC உட்பட எந்த ஊடகமும் இதை ஒரு படையெடுப்பு என்று பச்சையாகப் பொறிக்கத் துணியவில்லை. வியற்நாம் போர், கொறியப் போர், மத்திய கிழக்குப் போர் போன்று இந்தப் போரை BBCஈராக் போர்என்றே பொறித்தது. ஈராக்குடன்நிகழும் போர்என்ற ABC-யின் வாசகத்தில், அது ஈராக்குடன் புரியப்படும் போர்என்பதும், அதனை ஈராக் தொடுக்கவில்லை என்பதும் தெரிகிறது. CNN ஈராக்கில் நிகழும் போர் என்று பொறித்து (அதன் ஸ்பானிஷ் மொழிச் சேவையிலும் அவ்வாறே, அதாவது Guerrade Iraq என்று பொறித்து) அது ஒரு படையெடுப்பு அல்ல என்றும், இயல்பாகவே மூண்ட ஒரு போருக்கு ஈராக்களமாகியது என்றும் காட்டமுனைந்தது. அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொள்ளும் NBC ஏனைய ஊடகங்கள் செய்தது போன்று படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈராக்கை அதன்முகப்புவாசகத்தில் சேர்க்கவில்லை. CBCமாத்திரமே ஈராக் மீதான தாக்குதல் என்று உள்ளதை உள்ளபடி உரைத்துள்ளது. செய்தி அறம் பேணுவதைப் பொறுத்தவரை மேற்படி ஊடகங்களைப் Seiraucludings offensil Gisartb: CBC, BBC, ABC, NBC, CNN, satigu Gisgu isn'Cot(356mmer The Globe and Mail, National Post, Toronto Star epeiro/lib CNN- Saitupg5, War in Iraq 676irGp குறிப்பிட்டன.

Page 25
46 * மொழியினால் அமைந்த வீடு
(4) போர் கொடியவர்களின் கைகளிலும் வெகுளிகளின் கண்களிலும் வேடிக்கையாவதை George Orwell மேற்படி நூலில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்: ஓர் அகதிக்ள் கப்பல் மீது குண்டு வீசப்படுகிறது. நீந்திக் கரைசேர முயலும் ஒருவனை ஒர் உலங்கு வானூர்தி யிலிருந்து சுட்டுத் தள்ளுகிறார்கள். அவனுடைய உடலைக் குண்டுகள் துளைக்கின்றன. துளைகளுள் தண்ணிர் நுழைகின்றது. அவனைச் சூழ்ந்த கடல் சிவக்கின்றது. துளையுண்ட உடலில் தண்ணீர் புகுந்த பாரத்தில் அது கொதிக்கின்ற கடலில் அமிழ்கின்றது. அதனைத் திரையில் காணும் பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள். மேலே உலங்கு வானூர்தி வலம் வருகிறது. கீழே ஓர் உயிர் காப்புப் படகு மிதக்கின்றது. படகு முழுவதும் குழந்தைகள். ஒரு தாயின் கையில் மூன்று வயதுக் குழந்தை. அஞ்சி நடுங்கும் குழந்தை தாயின் மார்பை அகழ்ந்து, அதனுள் தலையைப் புதைத்து வீலிடுகின்றது. பயந்து வெடவெடக்கும் தாய் தனது கைகளால் குண்டுகளைத் தடுக்கும் நப்பாசையுடன் கூனிக் குறுகிக் குழந்தையை அரவணைக்கின்றாள். உலங்கு வானூர்தியிலிருந்து ஒர் 20 கிலோ குண்டு வீசப்படுகின்றது. உயிர் காப்புப் படகு ஒரு விறகுக் கட்டை போல் வெடித்துச் சிதறி எரிகின்றது. ஒரு குழந்தையின் கை மேலே பறக்கின்றது. அதே உலங்கு வானூர்தியிலிருந்து படம்பிடித்துக் காட்டப்பட்ட அந்தக் கையைக் கண்டு வியந்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் பார்வையாளர்கள்
Good Moning America என்ற திரைப்படத்தைத்தயாரிப்பதற்கான அரங்கை வடிவமைத்தவரேகட்டார்நாட்டின்தலைநகர்டோஹாவில் அமெரிக்கப் படையினரின் தகவல் அரங்கை ($250,000 செலவில்) வடிவமைத்தவர் ஆகவே அமெரிக்க ஒளியூடகங்கள் இந்தப் படையெடுப்பை ஒரு திரைப்படத் தொடர்போல் ஒளிபரப்பியமை சாலவும் பொருந்தும். பட்டம் பதவி பெற்றவர்களின் உறுதுணை யுடன் காய்தல் உவத்தலோடு கருத்துரைகள் வேறு ஒரு கட்டத்தில் 2000 இறாத்தல் எடை கொண்ட குண்டுகள் வீசப்படும் என்று சேனாதி பதி தொமி பிறாங்ஸ் உடனுறையும் செய்தியாளர்களுக்கு (embedded journalists) வாக்குறுதியளித்தார். சதாம் உசேன் தங்கியிருக்கும் மையம் தெரியாதபடியால், அவற்றை வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் உடனுறைந்த செய்தியாளர்கள் பொறுமையிழந்தார்களாம்!

மணி வ்ேலுப்பிள்ளை * 47
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் Donald Rumsfeld பக்தாத் மீது தாம் ம்ேற்கொண்ட வான்வழித் தாக்குதலை கருணைமிகுந்த குண்டுபொழிவு(Humanebombardment) என்று வர்ணித்தார்:Marcus Gee என்ற (The Globe and Mail நாளேட்டின்) அரசியல் ஆய்வாளர் அதனை கருணைமிகுந்த போர் (Humane War) என்று சொல்லி உருகினார். அதே நாளேட்டில் William Houston என்ற வேறோர் ஆய்வாளர் அதனை ஒரு கண்கவர் போர் (A lovely War) என்று aSantib Shatni. The National Post prCat 'G) audissiDavid Warren அதனை வியத்தகு போர்(Afabulous war) என்று மெச்சினார். தாக்கு தல் ஆரம்பித்த சேதியை CNN நிலைய ஒலிபரப்பாளர் Aaron Brown ஆயுதக் களைவு(Disamament) ஆரம்பித்துவிட்டது என்று அறிவித் தார். உடனுறைந்த 600 செய்தியாளர்களுள் ஒருவராகிய Walter Rodgers முன்வைத்த செய்தி அறிக்கைகளை Aaron Brown மிகவும் நேர்த்தியானவை (Terrific) என்று வாழ்த்தினார். அதற்கு Rodgers இங்கு நான் பெரிய வேடிக்கையைக் கண்டுகளித்து வருகிறேன் (I'm having great fun) என்று சொல்லிப் பூரித்தார். அப்புறம்.அத்தகைய செய்தியாளர்கள் ஆற்றிய தொண்டுக்குக் கைமாறாக ஜனாதிபதி புஷ் அவர்களை விருந்தோம்பி மகிழ்ந்தார்
மாபெரும் வல்லரசு ஈராக்கில் புரிந்த கொடுமையைCNNபோன்ற அமெரிக்க ஊடகங்கள் வியக்கத்தக்க வேடிக்கைகளாகவே சித்தரித்தன. அந்த வகையில் ஒரு வட அமெரிக்கத் தமிழ் வானொலி நிலைய யுத்தம் என்றும் அதனை அவர் வேடிக்கை பார்த்தார் என்றும் தெரிவித்தார். ஒலிபரப்பாளர் மேற்படி படையெடுப்பை அமெரிக்க -ஈராக் உடனடியாக அவருடைய உள்ளத்துள்ஏதோஒன்று உறுத்தவே, ஒரு சொல்லை இடையில் செருகி, அதனைக் கவலையோடு பார்த்ததாக நீட்டினார். அவர் கவலையோடு வேடிக்கை பார்த்தார் போலும் அப்புறம் உரையாடல் தொடங்கியது. இரண்டு, மூன்று பேர் கலந்து கொண்டார்கள். ஒலிபரப்பாளர் அவர்களை ஆய்வாளர் கள் என்று அறிமுகப்படுத்தினார். அந்த ஆய்வாளர்களுள் எவரும் ஒலிபரப்பாளரின் கூற்றை அறிமுகப்படுத்தினார். அந்த ஆய்வாளர் களுள் எவரும் ஒலிபரப்பாளரின் கூற்றை ஆட்சேபிக்கவில்லை! அது அமெரிக்க - ஈராக் யுத்தம் அல்ல, அமெரிக்க - பிரித்தானிய

Page 26
48 * மொழியினால் அமைந்த வீடு
ஆட்சியாளர் ஈராக் மீது மேற்கொண்ட படையெடுப்பு என்பது அவர்களுக்கு உறுத்தவே இல்லை. அந்தக் கொடுமையை அவர்களும் பிறரும் வேடிக்கை பார்த்தார்கள் என்பதே உண்மை. அதனை வேடிக்கை பார்த்த ஒவ்வொருவரும் மேற்படி அமெரிக்க ஒளியூடகங் களுக்கு இரையாகிய ஒரு வெகுளியே. அதனைக் கவலையோடு பார்த்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் புரளியே.
அந்த வேடிக்கைகளுள் ஒன்று என்னவென்றால், அமெரிக்கப் படையினரின் கருணைமிகுந்த குண்டுபொழிவில் அலி இஸ்மாயில் அப்பாஸ் என்ற 12 வயதுச் சிறுவன் தனது பெற்றோரையும் சகோதர னையும் தனது கைகள் இரண்டையும் இழந்தான். Mark Hylen என்ற அமெரிக்கப் படையினன் இன்னொரு வேடிக்கையை, அதாவது அவன் ஓர் ஈராக்கிய சிப்பாயைக் கொன்ற விதத்தை (ஈராக்கில் தான் எடுத்த முதலாவது பலியை) இப்படி விபரித்தான்; எனக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாய்த்தான் இருந்தது. பிறகு போனால் போகட்டும் என்று சொல்லிப் போட்டு அவனுக்கு வள்ளிசாக ஒரு துளை போட்டேன். அவன் செத்துப் போனான். ஆக்கினை தீர்ந்தது (The Globe and Mail, Toronto). Fi syarah Graupsi (unit commander) விபரித்த பிறிதொரு வேடிக்கை; சதாம் உசேனுக்காகப் போராடத் துணிந்தவர்களின் கண்களை ஈக்கள் மொய்க்கத் தொடங்கியதும் நாங்கள் முகாமுக்குத் திரும்பிவிட்டோம். நல்ல நாள். நல்ல Gauta) ... (The New York Times).
அமெரிக்க ஆட்சியாளர் தமது படையெடுப்பை ஒரு வேடிக்கை யாக மட்டுமன்றி ஒரு (சீட்டு) விளையாட்டாகவும் கருதினார்கள். ஈராக்கைக் கைப்பற்றிய கையோடு அவர்கள் ஒரு சீட்டாட்டத்தை ஆரம்பித்தார்கள். அதற்கு 55 சீட்டுகள் பாவிக்கப்பட்டன. அவற்றில் சதாம் உசேன், தாறிக் அசீஸ் உட்பட 55 பேரின் முகங்கள் பொறிக்கப் பட்டன. அப்படி 5 இலட்சம் சீட்டுக் கட்டுகள் விநியோகிக்கப் பட்டன. அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது காட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஈராக்கிய ஆட்சியாளர் சரணடைவது அல்லது காட்டிக் கொடுக்கப் படுவது அமெரிக்க ஆட்சியாளருக்கு ஒரு (சீட்டு) விளையாட்டு!

மணி வேலுப்பிள்ளை * 49
அத்தகைய வேடிக்கைகளின் விளைவாகப் பாக்தாத் மாநகரம் பற்றி எரிந்தது. அது கண்டு அமெரிக்காவில் ஒருசிலர் விம்மி அழுதார்கள். அவர்களைத் தடுத்தாட்கொண்ட Rumsfeld பாக்தாத் பற்றி எரிய oSaiyana). FundisuyuGs upg5 6Tifspg (Beghdad is notablaze, the Iraqi regime is ablaze) என்று இடித்துரைத்தார் அவர் மொழியைக் (5.5Gsnairgi'. Ly60s Luas LITC5 issoir: Reports that say that some thing hasn't happened are always interesting to me, because as we know, there are known knowns; there are things we know we know. We also know there are known unknowns; that is to say we know there are some things we don't know. But there are also unknown un knowns-the ones we don't know we don't know (Guardian). 61snags,
புரிகிறதா?
பாக்தாத் பற்றி எரிந்தாலும், இற்று விழவில்லை. ஆதலால் அமெரிக்க ஆட்சியாளர் தமது போர் விரகை மாற்றினார்கள். Peter Arnet அந்தப் பகிரங்க ரகசியத்தை ஈராக்கிய தொலைக்காட்சியில் தோன்றி அம்பலப்படுத்தினார். அந்தக் குற்றத்துக்காகNBC, National Geographic இரண்டும் அவருடைய கணக்கைத் தீர்த்து விரட்டி யடித்தனர் உடனடியாக அவரைப் பணிக்கமர்த்தியDailyMirror(UK) உண்மையை எடுத்துரைத்ததற்காக அமெரிக்கரால் வெளியேற்றப் பட்டவர், அதனைத் தொடர்ந்து எடுத்துரைப்பதற்காக எம்மால் வர Qualpaisul Loli (Fired by America for telling the truth, hired by us to carry on telling it) 6Tairgu gigsafjiggi.
நான் அமெரிக்காவுக்கு எதிரான ஆளுமல்ல, ஈராக்கிற்கு ஆதரவான ஆளுமல்ல. நான் சமாதானத்துக்கு ஆதரவான ஆள் என்று தனது நிலைப்பாட்டை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார் மடோனா (Madonna). அவருடைய மெச்சத்தக்க நிலைப்பாட்டை கூறியது கூறும் கோழைத்தனம் (craven tautology) என்று தூற்றினார் Lynn Crosbie Taipal dissil (The Globe and Mail Toronto, 2003/04/05). Geraldo Rivera பாலைவனத்து மணலில் ஒரு கோட்டைக் கிழித்து விளக்கமளித்த கையோடு FOX அவருடைய சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பியது. இது இலங்கை என்றால், அற்புதனுக்கும் நிமலராஜனுக்கும் நிகழ்ந்த கதியே இவர்களுக்கும் நிகழ்ந்திருக்கும். Glsmeðaumangá Glsmaívolfi (Kill the messenger)!

Page 27
50 * மொழியினால் அமைந்த வீடு
அமெரிக்கப் படையினர் பாக்தாத்தைக் கைப்பற்றிய பொழுது செய்தி ஊடகங்கள் எல்லாம்"பாக்தாத்தின் வீழ்ச்சி" பற்றி விலாவாரி யாகச் செய்திகள் வெளியிட்டன. அது பாக்தாத்தின் வீழ்ச்சி அல்ல என்று எவரும் வாதாடவில்லை. 1995ல் இலங்கை அரச படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியபொழுது உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் “யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி” பற்றி விரிவாக எடுத்துரைத்தன. அதனைக் கண்டு வெகுண்டெழுந்த “உடுப்பிட்டிச் சிங்கம்” மு.சிவசிதம்பரம் அது “யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி அல்ல” என்று கர்ச்சித்தார். விடுதலைப் புலிகளின் தோல்வி யை “யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியாகக்” கொள்ள முடியாது என்று முழங்கினார். அதேவேளை மறு தரப்பினரோ அரச படையினரின் வெற்றியை யாழ்ப்பாணத்தின் எழுச்சியாகக் கொண்டாடினார்கள். அது கண்டு அவர் வெகுண்டெழவுமில்லை, கர்ச்சிக்கவுமில்லை. இதிலிருந்து தெரிவதென்ன? “கருத்துக்கள் முரண்பாட்டைத் தோற்றுவிக்கா, முரண்பாடே கருத்துக்களைத் தோற்றுவிக்கும்” (மார்க்ஸ்).
“மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவோர்சர்வாதிகாரிகளே” என்றார் Robert H. Jackson. சர்வாதிகாரிகள் மாத்திரமல்ல, ஆட்சி யாளர் அனைவருமே மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். சுயநலமிகளால் நடத்தப்படும் ஊடகங்கள் அத்தகைய ஆட்சியாளருக்கு முண்டு கொடுத்து வருகின்றன. சுயநலம் கருதிச் செயற்படும் செய்திமான்கள், புத்திமான்கள், விமர்சகர்கள் யாவரும் மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உடந்தையாய் விளங்கி வருகிறார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டே தன்நெஞ்சு அறிவது பொய்யற்க என்றார் வள்ளுவர்(293). அவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய வேறொரு விடயம் எமது தலைப்புக்கு மிகவும் பொருத்தமானது:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து (645)
இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைவிடFlaubert எழுதிய உரை சாலச் சிறந்தது. அவர் எழுதிய ஒரு கடிதத்தில் அது காணப்படுகிறது. அதனைப் பெற்றுக்கொண்டவர் Maupassant “நீ

மணி வேலுப்பிள்ளை * 51
சொல்ல விரும்புவதை எடுத்துரைப்பதற்கு ஒரேயொரு சொல்லே இருக்கிறது. அதற்கு உயிர் கொடுப்பதற்கு ஒரேயொரு வினையே இருக்கிறது. அதனை விசேடிப்பதற்கு ஒரேயொரு பெயரடையே இருக்கிறது. அந்தச் சொல்லை, அந்த வினையை, அந்தப் பெயர டையை நீதேடிப்பிடிக்க வேண்டும். அதற்கு ஒத்தசொல்லை இட்டுக் கட்டக் கூடாது. உனது கெட்டித்தனத்தையும் கைவண்ணத்தையும் காட்டிச்சமாளிக்கக்கூடாது.”
உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒருபொழுதும் தடை யாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற் படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால் தான் ஆட்சியாளரும் அரசியல்வாதிகளும் விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகிறார்கள். மொழித்திரிபுவாதிகள்கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமரமக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வரு கிறார்கள்.

Page 28
இலண்டனிலிருந்து முழங்கும் தமிழோசை கனடாவிலிருந்து கிளம்பும்எதிரொலி
பி.பி.சி. தமிழோசை 1941/05/03 முதல் 62 ஆண்டுகளுக்கு மேலாக இலண்டனிலிருந்து முழங்கி வருகிறது. இலங்கை, இந்திய, உலகச் செய்திகளை அது வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வானொலி நிலையங்கள் அதன் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்து வருகின்றன. தமிழோசையின் சொல்லாட்சி தமிழ் ஊடகங்களிடையேயும் நேயர் களிடையேயும் பரவி வருகிறது. அதன் சொல்லாட்சி பெரிதும் பொருத்தமானதே. எனினும் அதன் தமிழாக்கங்கள் சில அறவே பொருந்தாதவை. அவற்றை மாத்திரம் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம். தமிழோசை அவற்றைக் கருத்தில் கொள்ளுமாக:
1. சிசிலுவின் விதவை மனைவி (2003/05/06). கெலியின் விதவை மனைவி (2003/09/01). ஆங்கிலத்தில் Widow என்பதை deceased's Wife (இறந்தவரின் மனைவி) என்று குறிப்பிடும் முறை மேலோங்கி வருகிறது. தமிழிலும் காலம் சென்ற சிசிலுவின் மனைவி அல்லது காலம் சென்ற கெலியின் மனைவி என்று குறிப்பிடலாமே!அப்புறம், விதவை என்ற சொல்லில் மனைவி என்ற பொருள் தொக்கி நிற்கிறது. எனவே விதவை மனைவி என்பது ஒருவகையில் கூறியது கூறல் அல்லவா?
2. யதார்த்தரீதியான ஆபத்து (2003/08/13). Realistic danger அல்லது Potential danger என்ற தொடர் அப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்

மணி வேலுப்பிள்ளை * 53
கலாம். ஆபத்து ஏற்படும் வாய்ப்பு என்பதே பொருத்தமான தமிழாக்கம்.
3. பிரபாவின்சுயசரிதையை ஆர்.நாராயணசாமி எழுதியுள்ளார்(2003/ 08/13). ஆர். நாராயணசாமி எழுதியது பிரபாவின்சரிதை (biography). அதைப் பிரபா எழுதினால்தான், அது சுயசரிதை (autobiography).
4. சக்தி விநியோகம் (2003/08/09). Energy Supply என்பதை எரிபொருள் விநியோகம் என்பதே பொருத்தம்.
5. அனுசரணையாளரான நோர்வே (2003/07/31-2003/09/07). அனு சரணையாளர் உயர்திணை, நோர்வே அஃறிணை. ஆகவே அனு சரணையாளரான நோர்வே என்பது பொருந்தாது. நோர்வேஜியர், நோர்வேஜிய அனுசரணையாளர், அனுசரணை புரியும் நோர்வே, அனுசரணை புரியும் நோர்வேஜியர் என்றெல்லாம் குறிப்பிடலாமே! Facilitator Norway என்பது ஆங்கிலத்துக்குப் பொருந்தும். அதை அனுசரணையாளரான நோர்வே என்பது தமிழுக்கு அறவே பொருந்தாது. {
6. சிறுபான்மை இனத்தவர்அரசால் தீங்கிழைக்கப்பட்டனர்(2003/07/ 31). இதையே ஆங்கில நடையில் தமிழ் என்பது Theminorities Were abused by the government போன்ற ஒர் ஆங்கில வசனம் அப்படியே தமிழாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் நடை அல்ல. அரசு சிறுபான்மை இனத்தவருக்குத் தீங்கிழைத்தது (செய்வினை) அல்லது சிறுபான்மை இனத்தவருக்கு அரசால் தீங்கிழைக்கப்பட்டது (செயப்பாட்டு வினை) போன்றவையே தமிழ் நடையில் அமைந்த வசனங்கள்.
7. ஜெயலலிதா குறிப்புணர்த்தினார். ஆட்சியாளர் எயிட்ஸ் பிரச் சனையில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை இது குறிப்புணர்த்து கிறது (2003/07/26). உணர்த்துகிறது என்பதே அதே பொருளை உணர்த்துகிறது அல்லவா? அதை ஏன் குறிப்புணர்த்துகிறது என்று குழப்பியடிக்க வேண்டும்?

Page 29
54 * மொழியினால் அமைந்த வீடு
8. இலண்டனில் நிலைகொண்டிருக்கும் செய்தித்தாள் (2003/05/21). Anewspaperbased in London நிலைகொள்வதோநிலைகொள்ளாது அலைந்து திரிவதோ பெரிதும் உயர்திணைக்கே பொருந்தும். அது அஃறிணைக்கு பொருந்துவது அரிது. அதை இலண்டனிலிருந்து வெளிவரும் செய்தித்தாள் என்று குறிப்பிடலாமே!
9. சக்கர நாற்காலி (2003/09/06). நான்கு கால்கள் கொண்டதே நாற் காலி. ஆகவே சக்கர நாற்காலிஅறவே பொருந்தாது. கட்டில், மேசை போன்றவற்றுக்கும் நான்கு கால்கள் உள்ளன. Wheel-chair என்ற ஒட்டுச் சொல்லுக்கு சில்லுக் கதிரை ஒரு பொருத்தமான தமிழாக்கம். கதிரை என்ற போர்ச்சுக்கீசியச் சொல் இலங்கை முழுவதும் வழங்கி வருகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில்கூட அது இடம்பெற்றுள்ளது.
10. அணு ஆற்றல் (2003/09/09). ஆட்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இருப்பது ஆற்றல். ஏனையவற்றுக்கு இருப்பது சக்தி. Atomic Energy - ஐ அணு சக்தி என்பதே பெருவழக்கு. பொருத்தமும் கூட. உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தும்.
11. ஜனநாயக மதிப்பீடுகள் (2003/09/10). இது democratic values என்பதன் தமிழாக்கம்! வேறு சிலர்இதனைஜனநாயகப் பெறுமதிகள், ஜனநாயகப் பெறுமானங்கள் என்றெல்லாம் குறிப்பிடுவதுண்டு. மதிப்பீடுகள், பெறுமதிகள், பெறுமானங்கள் எல்லாம் பணம், பண்டங்களுடன் தொடர்புடையவை. ஜனநாயகம் பணமும் அல்ல, பண்டமும் அல்ல. ஆகவே democratic values 6Taituagsgaarpitus மதிப்பீடுகள் அல்லது பெறுமதிகள் அல்லது பெறுமானங்கள் என்பது பொருந்தாது. ஜனநாயகம் ஒரு நெறி. நெறிகளுடன் தொடர்புறும் பொழுது Value என்ற சொல் பண்பு அல்லதுவிழுமியம் என்றே பொருள்படும். Democratic values என்பதை ஜனநாயக (அல்லது மக்களாட்சிப்) பண்புகள் அல்லது விழுமியங்கள் என்பதே பொருத்தம்.
12 “அண்மைக்கால முன்னேற்றங்கள்”
“கடைசியாக நிகழ்ந்த சம்பவங்கள்”

மணி வேலுப்பிள்ளை * 55
Developments என்ற சொல்லை 4 விதங்களில் எடுத்தாளலாம்:
1. Economic development பொருளாதார விருத்தி (முன்னேற்றம்) 2. Photograph development புகைப்படம் - உருவாக்கம் 3. Development area கட்டுமானப் பகுதி 4. Recent developments அண்மைக்கால நிகழ்வுகள் (சம்பவங்கள்)
முன்னேற்றம் மாத்திரமல்ல, பின்னடைவும் ஒரு நிகழ்வே. தற்பொழுது பாலஸ்தீனத்தில் இடம்பெறும் நிகழ்வுகளையும் (இஸ்ரேலியருக்கும் பலஸ்தீனியப் பொலிசாருக்கும் ஹமாஸ் இயக்கத்தவர்க்கும் இடையே இடம்பெறும் முத்தரப்பு மோதல்களை ub) Current developments in Palestine 6Tašrgp ggólů. Slavntub. அவற்றை “முன்னேற்றங்கள்” என்று கொள்ள முடியாது. “சம்பவங் கள்” பொருந்தும். “நிகழ்வுகள்” இன்னும் செவ்வையானது.
13. “இஸ்ரேலியர் மீது நரகம் போன்ற துப்பாக்கித்தாக்குதல் நடத்தப் படும் என்று ஒரு பலஸ்தீனிய இயக்கம் அறிவித்துள்ளது”. இத்தகைய விசித்திரமான தமிழ் வசனம் எதனையும் ஆங்கிலத்தில் கச்சிதமாக (LßaT) GILDm7G) u Luišs av stub: A Palestinian militant group has announced that the Israelis will be shot at like hell, pygia.g... Subjected to gunfire like hell.
14. Like hell 6TairpositLi recklessly (56iTLLuuq)-9aijagi extremely (மோசமாக) என்று பொருள்படுவது. அதனைப் போய் நரகம் போன்ற என்று குறிப்பிட்டதால் (அதாவது மொழிபெயர்க்காது சொல்பெயர்த் ததால்) விளைந்த விபரீதத்தையே மேலே காண்கிறோம். இஸ்ரேலி யரைக் கண்டபடி சுட்டுத் தள்ளுவோம் அல்லது இஸ்ரேலியர் கண்டபடி சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்பதே இயல்பான, இலகு வான, சரியான தமிழாக்கம். இணையத்தின் ஊடாக மேற்படி நரகத்தை அகழ்ந்து பார்த்தபொழுது, முழுமுதல் ஆங்கில வசனத்தின் ஆவணச் சான்று தட்டுப்பட்டது. அதில் உள்ள ஆங்கில வசனம்

Page 30
56 * மொழியினால் அமைந்த வீடு
ggGau: Israel has opened the fire of hell upon itself (FITiGaucupigs, கள் எம்முடையவை). இது ஒரளவு சொல்லுக்குச் சொல்லாகத் தமிழ்ப்படுத்தவல்ல ஒர் உருவகம் (metaphor):
இஸ்ரேல் தன்னைத் தானே நரகத் தீயினுள் தள்ளியுள்ளது அல்லது: இஸ்ரேல் தனக்குத் தானே நரகத் தீயை மூட்டியுள்ளது. இந்த உருவகத்தை மாற்றியும் அமைக்கலாம்: இஸ்ரேல் தன்னைத் தானே படுகுழியினுள் தள்ளியுள்ளது. இதனை வெறும் வசனமாவும் அமைக்கலாம்:
இஸ்ரேல் தனக்குத் தானே அழிவைத் தேடியுள்ளது. அல்லது: இஸ்ரேல் தன்னைத் தானே அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
15. அமெரிக்கப் படையினர் அல் கைடா வலைப் பின்னலை அழித்து வருகிறார்கள். Network என்ற ஆங்கிலச் சொல்லே இங்கு வலைப் பின்னல் என்று இடப்பட்டுள்ளது. முழுமுதல் வசனம் இப்படி அல்லது இந்த விதமாக அமைந்திருக்கும் என்றே நம்புகிறோம்: The US forces are destroying the Al Qaida network. g.g. Gay மேற்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போலும். Network 6Tairp G&mdigydig The Concise Oxford Dictionary, sigscir வழித்தோன்றிய சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் இரண்டும் ஆறேழு கருத்துகளை முன்வைத் துள்ளன: வலை, பின்னல், இணைவு, கோவை, குறுக்கு மறுக்காகச் செல்லும் (புகையிரத) வீதிகள், கால்வாய்கள், அப்புறம் இலங்கை அரசசொல்தொகுதிகளில் தொகுதி, கூட்டுத்தொகுதி, வலையமைப்பு முதலிய சொற்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் Net-ஐ Network - ஐ கண்டதும் நெற்றி அடியாக வலை என்றோ பின்னல் என்றோ வலைப் பின்னல் என்றோ இட்டுத்தொலைப்பது தவறு. முதலில் ஆங்கில மூல வசனத்தைப் பார்த்து அதன் பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்குச் சிரமப்பட்டால் முன்னும் பின்னும் வாசித்துப் பார்க்க வேண்டும். அல்லது ஆங்கிலம் அறியாத பாமர மக்கள் அதனை எப்படிச் சொல்லுவார்கள் என்பதைக் கேட்டறிய வேண்டும். பாமர மக்களிடம் போய்ப் பாடம் படியுங்கள் என்று அறிவுறுத்தவில்லையா தலைவர் மாஒ? பாமர மக்கள் கூடும்

மணி வேலுப்பிள்ளை * 57
சந்து பொந்துகளே மொழியின் ஊற்றிடமும் உறைவிடமும் ஆகும். இதோ எமக்கு வேண்டிய சொல் தொடர் கிடைத்துவிட்டது; சந்து பொந்து அமெரிக்கப் படையினர் அல் கைடாவின் சந்து பொந்து களை அழித்து வருகிறார்கள்.
16. அண்மையில் போர்ஒய்ந்தது (இறந்த காலம்).
எதிர்காலத்தில் போர் மூளாது (எதிர்காலம்).
அண்மைய எதிர்காலத்தில் போர் மூளாது (இறந்த காலமும் எதிர் காலமும் சேர்ந்த ஒரு கலவை). In the near future என்ற தொடரே அண்மைய எதிர்காலத்தில் என்று மொழிபெயர்க்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இங்கு தமிழும் ஆங்கிலமும் மாத்திரமன்றி இறந்த காலமும் எதிர்காலமும் குழப்பியடிக்கப்பட்டுள்ளன. In the near future என்பது ஆங்கில நடை. அது தமிழ் நடை அல்ல. There will be no war in the near future 676ip augaatgag, Gouai Gough 6551st களில் தமிழ்ப்படுத்தலாம்:
வெகு விரைவில் போர் மூளாது.
இப்போதைக்குப் போர் மூளாது. கொஞ்சக் காலத்துக்குப் போர் மூளாது.
17. போர் மூளாது, போர் ஏற்படாது, போர் நிகழாது. என்று நாங்கள் எல்லோரும் நம்பியிருக்கும் தறுவாயில் போர் வெடிக்கும் சேதிகள் அடிக்கடி கண்ணில்படுகின்றன. காதில் விழுகின்றன. போர் மூண்டது என்பதை ஆங்கிலத்தில் War broke out என்று குறிப்பிடு வார்கள். அதன் குருட்டு மொழிபெயர்ப்பாகவே போர் வெடித்த சேதிகள் எங்களை வந்தடைகின்றன.
18. இலங்கையின் நிலத்துவ ஒற்றுமை Territorial integrity என்ற தொடர் நிலத்துவ ஒற்றுமை ஆகியிருக்கிறது. அதன் நேர்த்தியான மொழிபெயர்ப்பு ஆள்புல ஒருமைப்பாடு ஆகும். ஒரு நாடு அல்லது அதற்குட்பட்ட ஆள்புலம் (territory) பிளவுபடாமையை இது குறிக்கும்.

Page 31
58 * மொழியினால் அமைந்த வீடு
19."ஈராக்கில் சில அமெரிக்கப் படையினர் தொலைந்து போயுள்ள னர்”. ஈராக்கில் சில அமெரிக்கப் படையினரைக் காணவில்லை. plgigs/rair Fisiisg. yags Some American soldiers are missing in Iraq என்று ஓர் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டிருக்கும். மொழியும் பொருளும் புரிந்தவர்கள் அவர்களைக் காணவில்லை என்றே குறிப் பிடுவார்கள். தொலைந்துபோவதற்கு அவர்கள் பால்குடி மறவாத பச்சிளம் குழந்தைகள் அல்ல. அவர்கள் சுடச்சுட இரத்தம் குடிக்கப் புறப்பட்ட காடேறிகள் w
20. பிணைந்த நிருபர்கள் சேதி தெரிவித்தார்கள். ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கப் படையினர் தமது சொந்த விளம்பரத்துக் காக 600 செய்தியாளர்களைக் கையோடு அழைத்துப் போனார்கள். அவர்கள் படையினருடன் உறையும் செய்தியாளர்கள். ஆதலால் அவர்களை embedded journalists என்று குறிப்பிடுகிறார்கள். அவர்களை உடனுறையும் செய்தியாளர்கள் என்று குறிப்பிடலாம். பிணைந்த நிருபர்கள் என்ற தொடரில் சம்பந்தப்பட்ட பொருள் முழு விளக்கம் பெறவில்லை.
21. “உலங்கு வானூர்தி வசதி சோனியா காந்திக்கும் விரிவு செய்யப் படலாம்”. உலங்கு வானூர்தி வசதி பிரதமர் வாஜ்பாயிக்கும் உதவிப் பிரதமர் அத்வானிக்கும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. அதே வசதி சோனியாவுக்கும் அளிக்கப்படக்கூடும். இதுதான் சங்கதி. இதை Si Jiu6av psTTL&sub The benefit of a helicopeter may be extended to Sonia என்று குறிப்பிட்டிருக்கலாம். Extend என்ற சொல்லைப் பல்வேறு பொருள்களில் எடுத்தாளலாம். விரிவுபடுத்து என்பது அவற்றுள் ஒன்று. விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் மூலம் தமது ஆள்புலத்தை விரிவுபடுத்தினார்கள் என்பது ஒரு பொருள்பொதிந்த வசனம். மேற்படி ஆங்கில வசனத்தில் extended என்ற சொல் இதே பொருளில் எடுத்தாளப்படவில்லை. பிரதமருக்கும் துணைப் பிரத மருக்கும் அளிக்கப்பட்ட அதே வசதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படக்கூடும் என்ற பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளது.
22. “சதாம் உசேன் ஒரு கொடுங்கோன்மைக்காரர்' சதாம் உசேன் ஒரு கொடுங்கோலர் என்பதை ஒர் ஆங்கில ஊடகம் Saddam Hussain is a

மணி வேலுப்பிள்ளை * 59
tyrant என்று குறிப்பிட்டிருக்கக்கூடும். அதை ஏன் கொடுங்கோன் மைக்காரர் என்று நீட்ட வேண்டும் என்பது புரியவில்லை. அடுத்து அக்பர்ஒரு செங்கோலர்ஆகாமல், செங்கோன்மைக்காரர்ஆகக்கூடும் மடையர்கள் மடைமைக்காரர்கள் ஆகக்கூடும்!
23. காரணம் (reason) என்ற சொல்லும் காரணி (factor) என்ற சொல்லும் குழப்பியடிக்கப்படுகின்றன. இவ்விரு சொற்களின் தோற்றுவாயும் ஒன்றே. அவற்றிடையே ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவற்றை ஒத்த சொற்களாக எடுத்தாளும் போக்கு மேலோங்கி வருகிறது.
24. Affect என்ற சொல் தாக்கம் விளைவி, பாதிப்பு உண்டாக்கு என்றெல்லாம் பொருள்படும். எம்மில் எமது ஆசிரியரின் தாக்கம் தெரிவது ஒரு நல்ல விடயம். அதனை ஆசிரியரின் பாதிப்பு என்று குறிப்பிடுவது வாடிக்கை ஆகிவிட்டது. அதாவது பாதிப்பு ஒரு நல்ல விடயமாகிவிட்டது!
25. Hurt என்பது காயப்படுத்து என்றும் புண்படுத்து என்றும் பொருள்படும். அந்த நுண்ணிய வேறுபாடு எமக்குத் தேவையில்லை! ஏனென்றால் நாங்கள் மிகவும் பண்பட்டுவிட்டோம் . நாங்கள் இப் பொழுது ஒருவரை ஒருவர் புண்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் காயப்படுத்துவதில்தான் நாங்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளோம். ஆனால் இரத்தம் வராது. ஏனென்றால் நாங்கள் உள்ளத்தைத்தான் ஊறுபடுத்துகிறோம். அப்படி என்றால் காயம் படத் தாக்குவதை எப்படிக் குறிப்பிடுவது?
26. Criticism என்ற சொல் கண்டனம் (சாடுதல்) என்றும், விமர்சனம் (திறனாய்வு) என்றும் பொருள்படும். அதேவேளை கண்டனம், விமர் சனம் இரண்டும் ஒத்த சொற்கள் ஆகா. விமர்சனம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கண்டனம் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வேறுபாடு சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை.
27. Month:2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி திங்கட்கிழமை என்பது தமிழோசையில் 2003ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6ம் திகதி

Page 32
60 * மொழியினால் அமைந்த வீடு
திங்கட்கிழமை என்றே குறிப்பிடப்படும். ஒரே சொல்தொடரில், ஒரே திகதியில் திங்கள் மாதமாகவும் கிழமையாகவும் இடம்பெறுகிறது. இது நேயர்களுக்கு அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அக்டோபர் மாதம் 6ம் திகதி திங்கட்கிழமை என்பதே மிகவும் விளக்கமானது.
28. President; இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி புஷ். என்று குறிப்பிடும் முறையே மேலோங்கியுள்ளது. இந்தியாவில் இராஷ்டிரபதி இராதாக் கிருஷ்ணன், குடியரசுத்தலைவர்அப்துல்கலாம், அதிபர் புஷ். என்று கொண்டாடும் வழக்குநிலையூன்றியுள்ளது. ஆனால் தமிழோசையில் பிறெசிடென்ற் சந்திரிகா, பிறெசிடென்ற் புஷ். என்று குறிப்பிடப் படுவது ஏனோ தெரியவில்லை.
29. Intellectual: இலங்கையிலும் இந்தியாவிலும் புத்திஜீவி, அறிவுஜீவி என்று குறிப்பிடும் வழக்கு நிலைபெற்றுள்ளது. இவை அஃறிணைச் சொற்களைப் போல் ஒலிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் ஆய்வறி வாளர் என்ற சொல் காணப்படுகிறது. எனினும் சொற்பிறப்பியலின் படி புத்திமான் மிகவும் பொருத்தமான சொல்.
30. Ministry: அமைச்சு என்ற அருந்தமிழ்ச் சொல் இலங்கையில் வழங்கி வருகிறது. இந்தியாவிலும் தமிழோசையிலும் இது ஏன் அமைச்சகம் என்று நீட்டப்படுகிறதோ தெரியவில்லை.
31. ஆட்சியாளரும் கிளர்ச்சியாளரும் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள். “தயார்” என்பது ஒர்இந்தி, உருது மொழிச்சொல். தயாரி, தயாரிப்பு,தயாராகு, தயார்ப்படுத்து முதலியவை அதிலிருந்து பெறப்பட்டவை. “தயாரி” என்ற (செயப்படுபொருள் குன்றா) வினையின் பெயர் உருவமே “தயாரிப்பு” ஆகும். “தயாராகு” என்ற (செயப்படுபொருள் குன்றிய) வினையின் பெயர்உருவம் “தயாரிப்பு” ஆகாது. அதாவது போருக்குத் தயாராவது தயாரிப்பாகாது.
32. Preparation GTsip Gaitágydig The Concise Oxford Dictionary ஐந்து கருத்துகளை முன்வைத்துள்ளது. அவற்றுள்தயாரிப்பு, ஆயத்தம்

மணி வேலுப்பிள்ளை * 61
இரண்டையும் நாம் கருத்தில் கொண்டால் போதும். அதாவது Preparation என்ற சொல் (1) தயாரிப்பு என்றும், (2) ஆயத்தம் என்றும் பொருள்பட வல்லது. அவை இரண்டும் ஒத்த சொற்கள் ஆகா. போருக்குத் தயாராவதும் ஆயத்தம் செய்வதும் ஒன்றே. "ஆயத்தம்” ஒரு வடமொழிச் சொல். தமிழர் எவர்க்கும் புரியும் சொல். கம்பரே கையாண்ட சொல். (1) தேவகி தேநீர்தயாரித்தாள். அது தேவகியின் தேநீர்தயாரிப்பு. சில பால்-மாப் பேணிகளில் Prepared in Australia என்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த பால்-மா ஒர் ஆஸ்திரேலியத் தயாரிப்பு.
(2)\ஆயுத உற்பத்தியைப் போருக்கான தயாரிப்பு என்றும், போருக் கான ஆயத்தம் என்றும் கொள்ளலாம். எனினும் போருக்கு ஆயுதம் செய்வது மாத்திரம் போருக்கு ஆயத்தம் செய்வதாகாது. ஆயத்தம் செய்வதுள்ஆயுதம் செய்வது அடங்கும். ஆனால் ஆயுதம் செய்வதுள் ஆயத்தங்கள் அனைத்தும் அடங்கா. எடுத்துக்காட்டாக ஆயுதம் செய்வதுள் படைதிரட்டலோ, படை பயிற்றலோ, படை எடுத்தலோ அடங்காது. ஆகவே Preparations for War என்ற தொடரைப் போருக்கான ஆயத்தங்கள் என்று கொள்வதே பொருத்தம். ஆனால் அப்படித்தான் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சம்பந்தப்பட்ட வசனம் இயல்பான தமிழ் நடையில் அமையும் வண்ணம் சொற்களைச் சற்று நெகிழ்த்தியும் தொகுக்கலாம்:
The rulers and rebels are making preparations for: war:g'Surror(5ub கிளர்ச்சியாளரும் போருக்கு ஆயத்தம் செய்து வருகிறார்கள். இன்னும் செவ்விய தமிழ் நடை ஆட்சியாளரும் கிளர்ச்சியாளரும் போருக்குத் தயாராகி வருகிறார்கள்.
மேற்கண்ட உதாரணத்தில் preparations ஒரு பன்மைப் பெயர். அது முதலாவது தமிழாக்கத்தில் "ஆயத்தம்” என்று ஒருமையில் இடப் பட்டுள்ளது. "ஆயத்தங்கள்” என்று பன்மையில் இடவேண்டிய தேவை அங்கே ஏற்படவில்லை. தமிழில் ஒருமையே பன்மையை உணர்த்தவல்லது.
(They) are making preparations 6 TGörLigi (ypgsGavmonugs 35L6pmešsë Sav “ஆயத்தம் செய்து வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 33
62 * மொழியினால் அமைந்த வீடு
இரண்டாவது தமிழாக்கத்தில் “தயாராகி வருகிறார்கள்” என்று உரு மாற்றப்பட்டுள்ளது. இயல்பானதமிழ் நடை கைகூடுவதற்குச்சொற் களையோ தொடர்களையோ வசனங்களையோ உருமாற்றலாம்.
33. “அவர் பெரும்பான்மையாக உறுதிப்படுத்தியுள்ளார்”. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சங்கதியைப் பெரும்பான்மையாக உறுதிப்படுத்தி யுள்ளாராம்! அதே சங்கதியை வேறொருவர் சிறுபான்மையாக உறுதிப்படுத்த முடியும் போலும்Hehasalmostconfirmed. என்பதே அவர் பெரும்பான்மையாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஆகியிருக் கிறது! அரைநூற்றாண்டுக்கு முன்னர் கேள்விப்பட்ட ஒரு கதை இங்கு நினைவுக்கு வருகிறது: அண்ணா ஒரு மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொழுது குறுக்கிட்ட ஒருவர், அண்ணாவை ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி நியாயம் கேட்டார் (அந்த நடிகை யார் என்பது முக்கியமில்லை). அதற்கு அண்ணா, அந்த நடிகை கற்பிற் சிறந்த கண்ணகியுமல்ல, அண்ணாத்துரைமுற்றத்துறந்த முனியுமல்ல என்று முழங்கிநியாயம் கூறினார் TheHinduஅந்தச்செய்தியை Anna almost confirmed his relationship. 67airp (5g5 ill-girls aboujigadi கொள்வோம். அதை எப்படித் தமிழ்ப்படுத்துவது?
அண்ணாதனது தொடர்பைப் பெரிதும் உறுதிப்படுத்தினார் எனலாம் அல்லது: அண்ணா தனது தொடர்பைப் பெரிதும் உறுதிப்படுத்தியதாகவே கொள்ளலாம்
அல்லது: அண்ணா தனது தொடர்பைப் பெரிதும் உறுதிப்படுத்தினார் என்றே கொள்ளலாம்.
தமிழாக்கத்தைப் பொறுத்தவரை இழைக்கப்படும் தவறுகள் மூன்று விதமானவை. மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந் தவை.
(1) தவறான சொல்லாட்சி (எ-கா: விமர்சனம் என்ற சொல்லை கண்டனம் என்ற பொருளில் எடுத்தாள்வது).

மணி வேலுப்பிள்ளை * 63
(2) தவறான தமிழாக்கம் (எ-கா: அமைதிப் படிமுறைத் திட்டம் அல்லது படிமுறை அமைதித்திட்டம் என்று பொருள்படும்ாoadmap to peace என்ற தொடரை சொல்லுக்குச் சொல்லாக அமைதி வரை படம் என்று மொழிபெயர்த்தல்).
(3) ஆங்கில நடையைத் தமிழ் நடைஆக்குதல் (எ-கா:Yourfavourite Song என்ற தொடரை உங்களுக்குப் பிடித்த(மான) பாடல் என்று தமிழ்ப்படுத்துவதை விடுத்து, உங்கள் அபிமான பாடல் என்று ஆங்கில நடைப்படுத்தல்)
தமிழும் ஆங்கிலமும் புரிந்தவர்களால் மேற்கண்டவாறு சொற்கள் குழப்பியடிக்கப்படுவது விசித்திரமாக இருக்கிறது. இரண்டு தமிழ்ச் சொற்கள் அவ்வாறு குழப்பியடிக்கப்படுவதற்கு ஒர் ஆங்கிலச் சொல் காரணமாய் அமைவது மேலும் விசித்திரமாக இருக்கிறது. கலப்படங் களுக்கு ஆட்சியாளரிடமிருந்து உரிமம் கிடைப்பதைப் போல, குழறு படிகளுக்கு விமர்சகர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் மேற்படி தவறுகள் வேரூன்றி வருகின்றன.
மேவியின் விதி(Murphy's Law) இங்கு நினைவுக்கு வருகிறது: ஒரு காரியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் செய்யலாம் என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள்ஒன்று கெடுதியானவிதம் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் யாரோஒருவர்கெடுதியான விதமாகவே அந்தக் காரியத்தைச் செய்வார். அவர் பெயர் போனவராய் இருந்துவிட்டால், வந்தது ஆபத்து: பெயர் எடுக்கத் துடிக்கும் பேர்வழிகள் அவரைப் பின்பற்றி அந்தக் காரியத்தை முன்னெடுத்துச்செல்வார்கள்!
தமிழோசையின் சொல்லாட்சி பெரிதும் பொருத்தமானதே. எனினும் அதன் தமிழாக்கங்கள் சில அறவே பொருந்தாதவை. அவற்றை மாத்திரமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம். தமிழோசை அவற்றைக் கருத்தில் கொள்ளுமாக.

Page 34
சோக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு
0x
சோக்கிரட்டீஸ் (கி.மு. 469-399) கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானி. ஏறத்தாழ 2,500ஆண்டுகளாக உலகம் அவரை ஒருதலை சிறந்த மெய்ஞானியாகவே கொண்டாடி வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. கொண்டாடப் படுவோர் அனைவரும் மீள்நோக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையிலேயே சோக்கிரட்டீசைப் பற்றிய இந்த மீள்நோக்கு முன் வைக்கப்படுகிறது:
2 சோக்கிரட்டீசின் அடிப்படைக் கொள்கை கட்டளை இடுவது ஆள்வோர்கடன். கட்டளைக்கு அடிபணிவது ஆளப்படுவோர்கடன். கப்பல் முதலாளி கப்பல் செலுத்தத் தெரிந்தவர்களையும், நிலபுலம் படைத்தோர் பயிர்செய்யத் தெரிந்தவர்களையும், நோயாளிகள் நோய்தீர்க்கத் தெரிந்தவர்களையும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி அளிக்கத் தெரிந்தவர்களையும், தையல் வேலைக்குத் தைக்கத் தெரிந்தவர்களையும் நாடுவது போலவே, மக்கள் தம்மை ஆள்வதற்கு ஆளத் தெரிந்தவர்களை நாடவேண்டும். அத்தகைய ஆட்சியாள ரையே சோக்கிரட்டீசின்தலை மாணாக்கராகிய பிளேட்டோ (கி.மு. 427-347) தத்துவஞான ஆட்சியாளர் (Philosopher-Ruler) என்றார்.
மாலுமி குடித்து வெறித்தால் கப்பல் முதலாளி அவரை மாற்றலாம். மருத்துவர் துரோகம் செய்தால் நோயாளி அவரை மாற்றலாம். ஆட்சியாளர் கொடுங்கோலராய் மாறினால் பொதுமக்கள் என்ன செய்வது என்ற வினாவுக்கு சோக்கிரட்டீஸ் பதிலளிக்கவில்லை. அதற்குப்பதிலாக கொடுங்கோலர்அழிதல் திண்ணம் என்று சொல்லி மழுப்புகிறார். கப்பல் முதலாளிக்கும் நோயாளிக்கும் ஒரு நியாயம், பொது மக்களுக்கு வேறு நியாயம்

மணி வேலுப்பிள்ளை * 65
கொடுங்கோலரைப் போலவேதுரோகம் புரியும் மருத்துவரும் குடித்து வெறிக்கும் மாலுமியும் அழிதல் திண்ணம் என்று சோக்கிரட்டீஸ் உரைக்காதது ஏனோ தெரியவில்லை! தன்னை அகற்ற எத்தனிக்கும் பொதுமக்களைக் கொடுங்கோலர்கள் அடக்கி ஒடுக்கியே வந்துள்ளார் கள். அத்தகைய கொடுங்கோலர்களை அகற்றுவது எப்படி என்ற கேள்விக்குச் சோக்கிரட்டீஸ் பதிலளிக்கவே இல்லை.
3. சோக்கிரட்டீஸ் - ஆசான்கள் மோதல்: சோக்கிரட்டீசின் இன்னொரு வாதம்: அறமே அறிவு (அறமும் அறிவும் ஒன்றே). அறிவு என்றால் என்ன? எதை முற்றுமுழுதாக வரையறுக்க முடியுமோ அதுவே அறிவு. ஒருவர் ஒரு பொருளை வரையறுக்க வல்லவராயின், அதனை அவர் அறிந்தவர் ஆவார். அதனை அவர் வரையறுக்க முடியாதவராயின், அதனை அவர் அறியாதவர் ஆவார். எவருமே எதனையும் முற்றுமுழுதாக வரையறுக்க முடியாது. ஆகவே எவருமே எதனையும் முற்றுமுழுதாக அறிய முடியாது.
அதாவது பரந்துபட்ட பாமர மக்கள் அறிவிலிகள் (அறிவையோ அறத்தையோ வரையறுக்க முடியாதவர்கள்). ஆகவே அவர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள். மக்கள் கூட்டம் ஒரு மந்தைக் கூட்டம். மந்தைகள்தாமாகவே மேயவல்லவை அல்ல. இடையரே மந்தையை மேய்க்க வல்லவர். வேந்தரே மாந்தரை ஆளவல்லவர்
மக்கள் அனைவரும் முற்றிலும் அறிவாளிகள் அல்லர் என்பது உண்மையே. எனினும் தம்மைத் தாமே ஆள்வதற்கு வேண்டிய அடிப்படை அறிவு மக்களுக்கு உண்டு. அல்லாவிட்டால் காட்டு மிராண்டிகளாக விளங்கிய மக்கள் தம்மைத்தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. தம்மைத் தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்த மக்கள் சோக்கிரட்டீசின் சிந்தையில் வெறும் மந்தையாய் தெரிவது பெரும் விந்தையாய் இருக்கிறது.
சோக்கிரட்டீஸ் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாகவே அதென்சில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி பயிலும் வசதி அளிக்கப்பட்டுவிட்டது. அனைவரும் எழுத்தறிவு பெற்றுக் கொண்டார்கள். அடிப்படைக்கல்வியையும், அதன்வழித்தோன்றிய எழுத்தறிவையும் பொறுத்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் நிகரான

Page 35
66 * மொழியினால் அமைந்த வீடு
வர்களாகவே விளங்கினார்கள். மக்களாட்சி உரம் பெற்று மேலோங்கு வதற்கு அத்தகைய சூழ்நிலை ஏதுவாய் அமைந்தது.
அதேவேளை மேற்படிப்பு வசதி மேற்குடியினருக்கே கிடைத்தது. மேற்படிப்பைப் பொறுத்தவரை மேற்குடியினருக்கும் கீழ்க்குடியி னருக்கும் இடையே காணப்பட்ட வெளியை நிரப்புவதில் ஒரு சாரார் தலையாய பங்கு வகித்தார்கள். அவர்கள் அறிவையும் அறத்தையும் போதித்தார்கள். ஆதலால் அவர்கள் ஆசான்கள் (Sophists) எனப் பட்டார்கள். அவர்களுள்கோஜியாஸ்(Gorgias), அல்சிடிமாஸ்(Alcidi mas), egyigGunaiv (Antiphon), LG)pirl GLG)snpeiv (Protagoras), ஹிப்பியாஸ்(Hippias) முதலியோர் முக்கியமானவர்கள்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதே மேற்படி ஆசான்களின் அடிப்படைப் போதனை. சோக்கிரட்டீஸ் அதனை வன்மையாக எதிர்க்கிறார். அவருக்கு ஒரு புராணக்கதை மூலம் பதிலிறுக்கிறார் புறொட்டேகொறஸ் (என்ற ஆசான்): கிரேக்கரின் முழுமுதல் கடவுள் (கிரேக்கரின் சிவன்) Zeus தனது தூதரை (Hermes) அழைத்து மக்களுக்கு அரசியல் கலையை வழங்கும்படி பணிக்கிறார். ஏற் கெனவே ஏனைய கலைகளை ஆங்காங்கே வழங்கிய இறைதூதர் அரசியல் கலையையும் ஆங்காங்கே வழங்கிவிடட்டுமா என்று கடவுளைக் கேட்கிறார். அதற்குக் கடவுள் கொடுக்கும் விடையில் மக்களாட்சிப் பண்பு பொதிந்திருக்கிறது: அரசியல் கலையை எல்லோருக்கும் வழங்கிவிடு. அதில் எல்லோருக்கும் பங்குகொடு. அதனை ஒருசிலருக்கு மட்டும் வழங்கினால், மக்கள் எல்லோரையும் மேம்படுத்த முடியாது போய்விடும். அத்துடன் அரசியல் கலையில் ஈடுபடாதோர் மக்களைப் பீடித்த பீடைகளாய் மாள்வர் என்பதையும் அவர்களுக்கு உணர்த்திவிடு.
மக்களின் சமத்துவத்தை முதன்முதல் வலியுறுத்தியோர் மேற்படி ஆசான்களே. மக்கள்ஒருவருக்கொருவர்சரிநிகரானவர்கள். சுதந்திரம் மக்களின் பிறப்புரிமை. இயற்கை எவரையும் அடிமை கொள்வ தில்லை. மக்கள் கருத்தொருமித்து தங்களைத் தாங்களே ஆள வேண்டும். வேறுதுறைகளில் மக்கள் அனைவரும்பங்குபற்ற முடியா விட்டாலும், அரசியலைப் பொறுத்தவரை மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியும், பங்குபற்ற வேண்டும். என்று மேற்படி ஆசான்கள் வாதாடினார்கள்.

மணி வேலுப்பிள்ளை * 67
இன்னோர் ஆசானாகிய ஹிப்பியாசை சோக்கிரட்டீஸ் வாதுக்கழைக் கிறார். வாதம் சூடுபிடித்து, மெய்யரையும் பொய்யரையும் பற்றிய ஆராய்ச்சியில் உச்சக் கட்டத்தை அடைகிறது. மெய்யைச் செவ்வனே அறிந்தவரே பொய்யைச் செவ்வனே சொல்ல வல்லவர். ஆகவே மெய்யரே தலைசிறந்த பொய்யர் என்று அடித்துச் சொல்கிறார் சோக்கிரட்டீஸ் ஒரு மெய்யர் மெய்மையைக் கைவிடாது பொய்ய ராவது எங்கனம்? ஆகவே சோக்கிரட்டீஸ் சொல்வதைத் தன்னால் ஏற்க முடியாது என்கிறான் ஹிப்பியாஸ். நான் சொல்வதை என் னாலும் ஏற்க முடியாதுதான். நான் வாதாடும்பொழுது திசைமாறிப் போய்விடுகிறேன். இங்கேயும் போகாது, அங்கேயும் போகாது, எங்கேயோ போய்விடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் சோக்கிரட்டீஸ்
மேற்படி ஆசான்கள் கட்டணம் வாங்கிப் போதிப்பதையும், தாம் கட்டணம் வாங்காது போதிப்பதையும் சோக்கிரட்டீஸ் குத்திக் காட்டுகிறார். சோக்கிரட்டீசின் தகப்பன் ஒரு கல்லுப் பொழியும் தொழிலாளி. தாய் ஒரு மகப்பேற்றுத் தாதி. சோக்கிரட்டீசுக்கு 3 பிள்ளைகள். அவர் இரண்டொரு தடவைகள் காலாட் படையில் சேர்ந்து போரிட்டவர். 70 வயதுவரை வாழ்ந்தவர். உழைத்துப் பிழைக்காதவர். அப்படி என்றால் ஐவரைக் கொண்ட அந்தக் குடும்பத்தின் சீவியம் எப்படி நடந்தது? பாவம், அவருடைய மனைவி சாந்திப்பே (Xanthippe), 3பிள்ளைகளின் தாய்,அடுப்பைப் புகைய வைப்பதற்கு என்ன பாடுபட்டிருப்பார்! அப்படி இருந்தும் சோக்கிரட்டீசின் மாணவர்கள் தமது குருபத்தினியை ஓர் அடங்காப் பிடாரி என்று கதை கட்டிவிட்டார்கள். அந்த அபலையை அடங்காப் பிடாரி என்பது எத்துணை அபத்தம்!
உண்மையில் தகப்பன் தேடிவைத்த சொத்துகளே சோக்கிரட்டீசுக்குக் கைகொடுத்தன. அவற்றுள் வீடு வளவும் தளபாடங்களும் பணமும் அடங்கும். தகப்பன் விட்டுச் சென்ற பணம் 5 மினா என்கிறார் சோக்கிரட்டீஸ், 70 மினா என்கிறார் கிரேக்க வாழ்க்கை வரலாற்றா சிரியர் புளூட்டாக் (Plutarch), 80 மினா என்கிறார் கிரேக்க நாவலர் லிபேனியஸ் (Libanius) (1 மினா = 4 பொன்). சோக்கிரட்டீஸ் குறைத்துச் சொல்லுகிறோரோ, மற்றவர்கள் கூட்டிச் சொல்லுகிறார் களோ தெரியவில்லை. எவ்வாறாயினும் தமது மாணவரும் நண்பரு மாகிய கிறிட்டோவிடம் வட்டிக்குக் கொடுப்பதற்குப் போதியளவு பணத்தைத்தகப்பன்விட்டுச்சென்றுள்ளார்என்பதுமட்டும் உண்மை!

Page 36
68 * மொழியினால் அமைந்த வீடு
4 அரிஸ்டாடில் முன்வைக்கும் விளக்கம்: மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று (பிளேட்டோவின் சீடராகிய) அரிஸ்டோட்டில் (கி.மு. 384-322) கூறியதாகச் சொல்வது வாடிக்கை. அவர்கிரேக்க மொழியில் அதனை Zoon politikon என்று குறிப்பிட்டுள்ளார். Logos என்ற கிரேக்கச் சொல் வாக்கு, நீதி, நியாயம் மூன்றையும் ஒருங்கே உணர்த்தும் சொல். அந்த மூன்று தன்மைகளும் மனிதரில் இயற்கை யாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் மனிதர்கள் ஏனைய சமூகப் பிராணிகளி லிருந்து இயற்கையாகவே வேறுபடுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டே அரிஸ்டோட்டில் மனிதரை Zoon politikon என்று வரையறுத்தார். அதாவது மனிதர்கள் நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் என்பதே அரிஸ்டோட்டில் கொண்ட கருத்து.
தமது வாழ்வியல் குறித்து வாதாடும் உரிமையும் வாக்களிக்கும் உரிமை யும் அவர்களுக்கு உண்டு என்றும், அவர்களால் ஆளப்படும் அரசு sigspišgSU LD&š56ir gyGMau (free association of men) 6 TGörgpylib, gypius மக்களே மாறிமாறி ஆள்வோர் எனறும் ஆளப்படுவோர் என்றும் (the citizen takes turns to govern and be governed), syeniisoir secoyoclai கொருவர் நிகரானவர் என்றும் ஒப்பானவர் என்றும் (equal and like) அரிஸ்டோட்டில் குறிப்பிட்டுள்ளார். இது சோக்கிரட்டீஸ் கொண்ட கருத்துக்கு நேரெதிர்மாறான கருத்தாகும்.
அவ்வாறு அரிஸ்டோட்டிலால் (கி.மு. 384-322) ஏற்றுப் போற்றப்படும் ஆட்சியே அவர் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, அவருடைய குருவாகிய பிளேட்டோவும் (கி.மு. 427-347), பிளேட் டோவின் குருவாகிய சோக்கிரட்டீசும் (கி.மு. 469-399) பிறப்பதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக அதென்சில் நிலைத்திருந்தது.
5 சோக்கிரட்டீசின் இலட்சிய மன்னன் அகமெம்னன்: மேன்மக்கள் புலவராகிய ஹோமர் (Homer) தமது இலியட் (liad) காவியத்தில் கீழ்மக்களை மந்தைகள் என்றும், மாமன்னன் அகமெம்னனை (Agamemnon) இடையன் என்றும் வர்ணிக்கிறார். அந்த அகமெம்ன னையே சோக்கிரட்டீஸ் தமது இலட்சிய ஆட்சியாளனாக வரிக்கின் றார். அகமெம்னன் மந்தையை மேய்த்த விந்தையை ஹோமரே எடுத்துரைக்கிறார்:
மாமன்னன் அகமெம்னன் மேற்கொள்ளும் ஒரு வெற்றிகரமான படையெடுப்பை அடுத்துக் கைப்பற்றப்படும்-இளம் பெண்களை

மணி வேலுப்பிள்ளை * 69
அவனுடைய தளபதிகள் பங்கு போடுகிறார்கள். அப்பெண்களுள் ஒரு புரோகிதரின் மகளும் அடங்குவாள். அகமெம்னனுக்குப் புரோகித ரின் மகள், காவிய நாயகனாகிய மன்னன் அகிலீசுக்கு (Achiles) வேறொரு பெண். என்றெல்லாம் பங்கு போடப்படுகிறது.
பாவம் அந்தப் புரோகிதர் தனது உயிரையும் கப்பத்தையும் கையில் ஏந்தியபடி அந்தப்படுபாவியிடமிருந்து தனது அருமை மகளை மீட்க வருகிறார். தனது அரசியை (Clytemnestra) விடப் புரோகிதரின் மகள்மீதே தனக்கு மோகம் அதிகம் என்று பகிரங்கமாகத் தெரிவிக்கும் அகமெம்னன், கப்பத்தை ஏற்க மறுத்ததுடன் நில்லாது, புரோகிதரை யும் அவமதித்து விரட்டுகிறான்.
புரோகிதர் பூசிக்கும் கடவுளாகிய சூரியமூர்த்தி (Apollo) வெகுண் டெழுந்து பாசறை எங்கும் கொள்ளைநோயைப் பரப்புகிறார். மாமன்னனின் போர்வீரர்கள் சாரிசாரியாகச் செத்து மடிகிறார்கள். விழித்தெழும் மன்னன் (காவிய நாயகன்) அகிலீஸ் மாமன்னனின் ஆணையின்றியே அவையைக் கூட்டி, அந்தப் புரோகிதரின் மகளை விடுதலைசெய்ய நிர்பந்திக்கிறான். அகமெம்னன் புரோகிதரின் மகளை விடுதலை செய்துவிட்டு, ஏற்கெனவே அகிலீசுக்கு ஒதுக்கிய பெண்ணைக் கவர்ந்து செல்கிறான். அகிலீஸ் ஆவேசமடைந்து அகமெம்னனைச் சாடுகிறான்: பேராசை பிடித்தவனே, வெட்கம் கெட்டவனே, குடிகாரப் பயலே, குட்டைநாய் முழியா, பெட்டை மான் நெஞ்சா.
மாமன்னனைச் சாடுபவன் அரச குடியினன். அத்துடன் காவிய நாயகன். ஆதலால் ஹோமர் அதனைப் பொறுத்துக்கொள்கிறார். ஆனால் சோக்கிரட்டீசினால் அதனைப் பொறுக்க முடியவில்லை. அகிலீசின் கூற்று தணிக்கை செய்யப்படவேண்டும் (காவியத்தி லிருந்தே நீக்கப்பட வேண்டும்) என்று வாதாடுகிறார். அகமெம்னன் அவருடைய இலட்சிய ஆட்சியாளன் அல்லவா?
தேர்சைற்ஸ் (Thersites) ஒரு கீழ்மட்டப் படைவீரன். அவனும் மாமன்னனைச் சாடுகிறான். மேற்குடிப் புலவராகிய ஹோமரால் அதனைப் பொறுக்க முடியவில்லை. தேர்சைற்சை இழிந்தவன் என்றும், அருவருப்பானவன் என்றும் அலங்கோலமானவன் என்றும் திட்டுகிறார். அவன் மாமன்னனை என்னவோ தட்டிக் கேட்டு

Page 37
70 * மொழியினால் அமைந்த வீடு
விட்டான் என்ற கோபம் புலவருக்கு அப்படி அவன்தட்டிக் கேட்ட சங்கதி என்ன தெரியுமா? (மக்களை மேய்க்கும் இடையனே என்று வஞ்சப் புகழ்ச்சியுடன் அகமெம்னனை அவன் விழிப்பது கவனிக்கத் தக்கது): மக்களை மேய்க்கும் இடையனே, உனது பேராசை தீராதா? உனது கூடாரத்தில் பெண்குலமும் வெண்கலமும் நிறைந்திருப்பது போதாதா? துரோய் (Troy) தேசத்துப் பொன்கலமும் உனக்கு வேண்டுமா? அல்லது கூடிப்படுப்பதற்கு மேலும் ஒரு குட்டிப்பெண் வேண்டுமா? உனது பேராசையால் போரை இழுத்தடித்து எமது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது போதாதா?.
முடிசார்ந்த மன்னனையே சாடும்தேர்சைற்ஸ் அடிமட்டப் படைவீரர் களைச் சும்மா விடுவானா? படுமுட்டாள்களே, மானம் கெட்ட வர்களே, கிரேக்கப் பேடிகளே, பெட்டையர்களே, இந்த ஆள் இந்தக் கிழட்டு வயதில் இந்த இடத்தில் தன்னந் தனியனாய் நின்று தான் கவர்ந்த சொத்துகளைத் தானே அனுபவிக்கட்டும். தன்னிலும் சிறந்த அகிலீசுக்கு ஒதுக்கிய மங்கையைக் கவர்ந்து அவனை மானங்கெடுத் திய இந்தப் பயல் தன்னந் தனியனாய் நின்று தனது சொத்துகளைத் தானே அனுபவிக்கட்டும். புறப்படுங்கள் நாங்கள் நாடு திரும்பு வோம், புறப்படுங்கள் நாங்கள் வீடு திரும்புவோம்.
மாமன்னனைச் சாடிய படைவீரனாகிய தேர்சைற்சைத் தளபதி ஒடிசியஸ் (Odysseus) பாய்ந்து பிடித்து, அவையின் நடுவில் நிறுத்தி, இரத்தம் பீறிட நையப் புடைத்து, மானங்கெடுத்தி, அற்பப் பிறவியே, இனிமேல் மாமன்னனை ஏசுவதற்கு உன் வாய் உன்னினால், நீஆடை இல்லாது அழுது புலம்பியபடிகப்பலை நோக்கி ஒட நேரும். என்று எச்சரிக்கிறான். அதேவேளை ஒடிசியஸ் அகமெம்னனைப் பார்த்து: அழியப் போறவனே, நீஆள்வதற்கு அருகதை அற்றவன். என்று சீறத் தவறவில்லை.
ஈற்றில் நாடு திரும்பும் அகமெம்னனையும் கசந்திரா(Cassandra) என்ற அவனுடைய பிறிதோர் ஆசை நாயகியையும் அரசி கிளிட்ட மென்ஸ்றா (Clytemnestra) குத்திக் கொலை செய்கிறாள். கொலை செய்துவிட்டு அரசி கூறுகிறாள்: இதோ கிடக்கிறான் எனக்குத் துரோகம் செய்தவன். அதோகிடக்கிறாள்.அவனுடைய ஆசைநாயகி, ஏற்கெனவே மாலுமிகளுடன் படுத்தெழும்பிய மாதரசி.

மணி வேலுப்பிள்ளை * 71
அத்தகைய மாமன்னன் அகமெம்னனையே சோக்கிரட்டீஸ் தமது இலட்சிய ஆட்சியாளனாக வரிக்கின்றார் எல்லோரும் இந்நாட்டு மன்னராய் விளங்க முடியாது. வேந்தரே மாந்தரை ஆளவல்லவர் என்று ஒடிசியஸ் இட்ட முழக்கமும், ஆளத் தெரிந்தவரே ஆள வேண்டும், ஆளப்படுவோர் அடிபணிய வேண்டும் என்று சோக்கிரட்டீஸ் இட்ட முழக்கமும் ஒன்றே.
6 மக்களாட்சியின் படைபலம்: ஹொறோடோட்டஸ் (Herodotus கி.மு. 484-425) கிரேக்கரின் தலையாய வரலாற்றாசிரியர். அதென்சில் சர்வாதிகாரம் தலைதூக்கிய காலப் பகுதியில் அதன் படைபலம் மங்கியதையும், மக்களாட்சி தலையெடுத்த காலப்பகுதியில் அதன் படைபலம் ஓங்கியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பாரசீகப் பேரரசர் தமது படையினருக்குச் சாட்டையடி கொடுத்துப் போர்க் களத்துக்கு இட்டுச்சென்றதாகவும், கிரேக்கப் படையினர் அவர்களை எதிர்கொள்வதற்கு மனமுவந்து போர்க்களம் புகுந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். மக்கள் தமது எசமானருக்காகப் போராடுவதற்கும், தமக்காகப் போராடுவதற்கும் இடையே காணப்படும் வேறுபாட் டையே அவர் இங்கு உணர்த்துகிறார்.
கி.மு.490ல் கிரேக்கம்மீது படையெடுத்த பாரசீகப் பேரரசன் டேறியசின் (Darius)படையை மரதன் (Marathon) என்ற இடத்தில் வைத்து முறியடித்த கிரேக்கப் படையினருள் ஒருவர் ஈஸ்சைலஸ் (Aeschylus) 6TGöıp yavonurill gyauri 6TQpSuu Lumprégasi (The Persians) என்ற நாடகம் கி.மு. 472ல் (சோக்கிரட்டீஸ் பிறப்பதற்கு 3 ஆண்டு களுக்கு முன்னர்) மேடையேற்றப்பட்டது. அதன் முதல் காட்சி:
கிரேக்கரைப் பழிவாங்குவதற்காக டேறியசின் மகன் சேசெஸ் (Xerxes) மீண்டும் கிரேக்கம்மீது போர் தொடுக்கிறான். போர்க் களத்திலிருந்து எதிர்பார்த்த வெற்றிச் செய்தி கிடையாத கலவரத்தில் ஆழ்ந்திருக்கிறார் தாயரசி. அப்பொழுது போர்க்களத்திலிருந்து பாரசீகத் தலைநகருக்கு (Susa) மீள்கிறான் ஒரு தூதுவன். அதனை வரவழைத்த தாயரசி கிரேக்கப் படைபலம் பற்றி வினவுகிறார்:
தாயரசி : அந்தப் படைக்கு யார் இடையன் அல்லது தலைவன்
அல்லது எசமான்?

Page 38
72 * மொழியினால் அமைந்த வீடு
தூதுவன்: அவர்கள் எவர்க்கும் அடிமைகள் அல்லர். அவர்கள்
எவர்க்கும் குடிமைகள் அல்லர்.
தாயரசி : அப்படி என்றால், தம்மீது போர் தொடுக்கும் ஒரு படைக்கு எப்படி அவர்களால் ஈடுகொடுக்க முடிகிறது?
அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்க்கும் தூதுவன் மறைமுகமாக ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறான்:
தூதுவன் : தம்மிலும் பெரிய பாரசீகப் படையை, தம்மிலும் சிறந்த
பாரசீகப் படையை முன்னரும் அவர்கள் வென்றனர் அன்றோ!
அப்பொழுது இன்னொரு தூதுவன் வந்து சலாமிஸ் (Salamis) என்ற இடத்தில் வைத்துப் பாரசீகப் படை முறியடிக்கப்பட்ட சேதியைத் தெரிவிக்கிறான்!
சோக்கிரட்டீஸ் இரண்டொரு தடவைகள் காலாட் படையினராய் விளங்கியதுண்டு. எனினும் அதென்சின் படைபலத்துக்கு அடிப் படையாய் அமைந்த மக்களாட்சியை அவர் என்றுமே மெச்சிய தில்லை. அதென்சில் ஓங்கிய சுதந்திர சமூகத்தை அவர் என்றுமே நயந்ததில்லை. ஆட்சியிலும் போரிலும் பங்குபற்றிய அரசியலாளர் கள், கவிஞர்கள், கைவினைஞர்கள், பாமர மக்கள் அனைவரையும் அவர் நோஞ்சான்கள் என்றும் மடையர்கள் என்றும் பழிக்கிறார். காலணி, கட்டடம், உலோகம், உழவு, தோல், கடைத் தொழிலாளிகள் யாவரையும் அவர் மூடர்கள் என்றும் ஈனர்கள் என்றும் தூற்றுகிறார்.
7 சோக்கிரட்டீசின் இலட்சிய அரசு ஸ்பாட்டா: ஸ்பாட்டா (Sparta)வே அவருடைய இலட்சிய அரசு. ஸ்பாட்டாவில் ஓங்கிய சில்லோராட்சியே (Oligarchy) அவரைப் பெரிதும் ஈர்த்தது. அங்கு ஒருசில படைத்தலைவர்கள் புரிந்த சர்வாதிகாரமே சில்லோராட்சி எனப்பட்டது. அங்கு மேற்குடியினருக்கு மாத்திரமே வாக்குரிமை இருந்தது. கீழ்க்குடியினருக்கோ தொழிலாளிகளுக்கோ வாக்குரிமை கிடையாது. உள்ளூர் மக்கள் வெளியூருக்கோ வெளியூர் மக்கள் உள்ளூருக்கோ செல்ல முடியாது. கலை, இலக்கியப் படைப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. கல்விப் போதனை மட்டுப்படுத்தப் பட்டது. உளவுப்படையினர் புத்திமான்களைக் கைதுசெய்து கொன்று குவித்து வந்தார்கள். அத்தகைய ஆட்சியே சோக்கிரட்டீசை ஆட் கொண்டது!

மணி வேலுப்பிள்ளை * 73
அதென்சில் சொலோன் (Solon கி.மு. 638-558) என்ற அரசியலாளரே ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க வழிவகுத்தவர் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ 1,250 ஆண்டுகள் கழித்து, அதாவது 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளிலேயே அத்தகைய வாக்குரி மையை எஞ்சிய உலகம் பின்பற்றத் தொடங்கியது! அத்தகைய புரட்சி கரமான வாக்குரிமையை, ஏற்கெனவே அதென்ஸ் மாநகரத்தில் நிலவிய மக்களாட்சியை விடுத்து, சர்வாதிகாரம் நிலவிய ஸ்பாட்டா வையே சோக்கிரட்டீஸ் தமது இலட்சிய அரசாகக் கொள்ளுகிறார்!
8 கொடுங்கோலருள் சிலர் சோக்கிரட்டீசின் சீடர்கள்: அதென்சில் நிலவிய மக்களாட்சி மூன்று தடவைகள் கவிழ்ந்தது (கி.மு. 411, 404, 401). மக்கள் அதனைக் கவிழ்க்கவில்லை. உள்நாட்டுச் சதிகாரர்கள் ஸ்பாட்டாவின் உடந்தையுடன் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். கி.மு.411ல் ஆட்சியைக் கவிழ்த்த 400 பேர் 4 மாதங்கள் கொடுங்கோல் ஒச்சினார்கள். 404ல் 30 கொடுங்கோலர்கள் 8 மாதங்கள் கொடுங் கோன்மை புரிந்தார்கள். அவர்களுள் சிலர் சோக்கிரட்டீசின் சீடர்கள்! ஒருவர் கிறிட்டியாஸ் (Critias). அவர் பிளேட்டோவின் ஒன்றுவிட்ட சகோதரர் அவரே 30 கொடுங்கோலர்களுள் தலையாயவர். இன் னொருவர் அல்சிபையேட்ஸ் (Alcibiades). அவர்மீது சோக் கிரட்டீசுக்கு மிகுந்த வாஞ்சை இருந்தது. இன்னொருவர் சாமைட்ஸ் (Chamides). அவர் பிளேட்டோவின் மாமனார் அவர் தலைமைக் கொடுங்கோலரின் வலக்கை போன்றவர். அவர்களுக்கு ஒரு ஸ்பாட்டா - பட்டாளம் பாதுகாப்பு வழங்கியது. சாட்டையும் கையு மாக நடமாடிய 300 குண்டர்கள் மக்களை வேட்டையாடி வந்தார்கள்.
அவர்கள் நடத்திய பயங்கர ஆட்சியைப் பழம்பெரும் கிரேக்க வரலாற்றிஞராகிய தூசிடைட்ஸ் (Thucydides கி.மு. 460- 400) விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார். மக்களாட்சிவாதிகள் உட்பட 1,500 பேர் கொலையுண்டார்கள். எலூசிஸ் (Eleusis) என்ற நகரத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டார்கள். ஸ்பாட்டாவில் கொலை யுண்டவர்களை விட அதென்சில் கொலையுண்டவர்களின் தொகை அதிகம் அதென்சில் சுதந்திர மக்களின் தொகை நெடுங்காலமாகப் பெருகிவிட்டது. அதனால்தான் இங்கே பலரைக் கொல்ல நேர்ந்தது என்கிறான் தலைமைக் கொடுங்கோலன் கிறிட்டியாஸ்!
மக்கள் அடங்கி ஒடுங்குகிறார்கள். எத்தனையோ புத்திமான்கள் அதென்சை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள். ஆனால் சோக்கிரட்டீசோ

Page 39
74 * மொழியினால் அமைந்த வீடு
பிளோட்டோவோ எங்குமே தப்பி ஓடாது பத்திரமாக இருக்கிறார்கள் போகட்டும், பலியான மக்களுக்காக அவர்கள் ஒரு சொட்டுக் கண்ணிர் சிந்தினார்களா என்றால், அதுவுமில்லை புதிய பாடம் எழுத வேண்டுமா? முதலில் கரும்பலகையை அழியுங்கள் என்று சும்மாவா சொன்னவர் சோக்கிரட்டீஸ்? ஆட்சியாளரைக் கட்டிக் காப்பதும், பொது மக்களை அடக்கி ஒடுக்குவதுமே படையினர் கடன் என்று சும்மாவா சொன்னவர் பிளேட்டோ?
அப்புறம் கொடுங்கோலர்களுக்கு உள்ளேயே குத்துவெட்டுத் தொடங்கிவிட்டது. ஒருவேளை அல்சிபையேட்ஸ் மக்களாட்சி வாதிகளின்பக்கத்துக்குத்தாவி, தன்னைக்கவிழ்த்துவிடக்கூடும் என்று அஞ்சினான் கிறிட்டியாஸ். ஆதலால் அல்சிபையேட்ஸ் வழக்கம் போலக் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தருணத்தில் அவனைக் கொல்லுகிறான் கிறிட்டியாஸ். சோக்கிரட்டீசின் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைக் கொல்லுகிறான். சோக்கிரட்டீஸ் புகட்டிய பாடங்களை அம்மாணவர்கள் கசடறக் கற்றவர்கள் அன்றோ!
9 குற்றச்சாட்டு: அதென்சில் நிலவிய மக்களாட்சியில் கீழ்க்குடியின ரின் கை ஓங்கியிருந்தது. சோக்கிரட்டீஸ் ஒரு நடுக்குடியினர். அவருடைய மாணவர்கள் பெரிதும் மேற்குடியினர். சோக்கிரட்டீசின் போதனைகள் கீழ்க்குடியினரை மட்டம் தட்டுவதாகவும் மேற்குடி யினரை மேம்படுத்துவதாகவும் அமைந்தது - மக்களாட்சியை மட்டம் தட்டுவதாகவும் சர்வாதிகாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.
அவர் மக்களாட்சியைப் பேணுவதற்கோ மேம்படுத்துவதற்கோ பாடு படவில்லை. அதிலுள்ள குறைகளைக் குறைப்பதிலோ களைவ திலோ ஈடுபடவில்லை. மாறாக, மக்களாட்சியின் அனுகூலங்களை முற்றுமுழுதாகப் பயன்படுத்தி மக்களாட்சியையே எதிர்த்து வாதாடினார். இது பூவரசில் தங்கியிருக்கும் குருவிச்சை பூவரசையே அமுக்க முற்படுவதற்கு நிகராகும். அந்த வகையில் அவர் மக்களின் அடிமடியில் கைவைத்துவிட்டார் மக்களாட்சிவாதிகள் அவருக் கெதிராகக் கிளர்ந்தெழுந்ததற்கு அதுவே தலையாய காரணம்.
கி.மு. 401ல் அதென்ஸ் கொடுங்கோன்மையிலிருந்து கடைத்தேறிய தறுவாயிலும் சோக்கிரட்டீஸ் வாக்குரிமையையும் மக்களாட்சி யையும் எதிர்த்து வாதாடுகிறார். அதாவது கொடுங்கோன்மையின் சூடு தணிவதற்குள் மீண்டும் அதற்குத் தூபமிடும் குரல் ஒலிக்கிறது.

மணி வேலுப்பிள்ளை * 75
அது கேட்டு மக்களாட்சிவாதிகள் கொதித்தெழுகிறார்கள். மூவர் சோக்கிரட்டீஸ் மீது வழக்குத்தொடுத்தார்கள். முதல்வர்.அனைட்டஸ் (Anytus). அவர் தோல் பதனிடும் தொழில் புரிபவர். அடுத்தவர் லைக்கன் (Lycon). அவர் நாவலர்கள் சார்பாகப் பங்குபற்றுகிறார். இன்னொருவர் மெலிட்டஸ் (Meletus). அவர் கவிஞர்கள் சார்பாகப் பங்குபற்றுகிறார். சோக்கிரட்டீஸ்மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப் படுகின்றன.
1. இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்த குற்றம். 2. அரசு நம்பும் கடவுளரை நம்பாத குற்றம்.
1ஆவது குற்றம் சோக்கிரட்டீசின் போதனைகள் சார்ந்தது. 2ஆவது குற்றம் அவருடைய நம்பிக்கைகள் சார்ந்தது. இவை பொதுப்படை யான குற்றச்சாட்டுகள். திட்டவட்டமான குற்றச்சாட்டுகள் அல்ல. அதாவது சோக்கிரட்டீஸ் என்ன சட்டத்தை மீறி என்ன குற்றம் இழைத்தார்என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. அவர் என்ன செய்தார் என்பதை வைத்து அவர்மீது குற்றம் சுமத்துவது கடினமாக இருந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. ஆதலால்தான்.அவர் என்ன சொன்னார் என்பதை வைத்து அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது போலும்.
500 நடுவர்களுள் 280பேர் சோக்கிரட்டீசைக் குற்றவாளியாகக் காண்கிறார்கள். 20பேர் அவரை விடுதலைசெய்ய வாக்களிக்கிறார் கள். இது ஒர் அறுதிப் பெரும்பான்மை அல்ல என்பது கவனிக்கத் தக்கது. ஆனால் தன்னை விசாரித்த நீதிமன்றத்தை சோக்கிரட்டீஸ் வழக்கம்போல எள்ளி நகையாடுகிறார். தான் எள்ளி நகையாடும் வாக்குரிமையோ வாக்களிப்போ தனக்கு நீதி வழங்கினால் தனது போதனையே பொய்த்துவிடும் அல்லவா? ஆதலால் தனக்கு நீதி கிடையாது போவதையே அவர் உள்ளூர விரும்புகிறார். எனவே வேண்டுமென்றே அவையோரைச் சீண்டுகிறார். ஆதலால் அவருக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 360 வாக்குகளும் எதிராக 140 வாக்குகளும் கிடைக்கின்றன! இது ஒர் அறுதிப் பெரும்பான்மை ஆகும். எத்தகைய வாக்குகளை அவர் எள்ளி நகையாடினாரோ,அத்தகைய வாக்குகளேஅவருடைய தலைவிதியை நிர்ணயித்தன.
10 இறுதிக்கட்டம்: சோக்கிரட்டீசுக்கு மரணதண்டனைதீர்க்கப்பட்ட பொழுது அதென்சில் திருவிழா விடுமுறைக் காலம் என்பதால் அது

Page 40
76 * மொழியினால் அமைந்த வீடு
உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. அந்தத் தருணத்தில் அவரு டன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த மாணவரும் நண்பருமாகிய கிறிட்டோ (Crito) அவரைச் சிறையில் சந்தித்து, காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, தெசாலி (TheSSaly) என்ற பிறிதொரு கிரேக்க ஆள்புலத்துக்குத் தப்பியோடுவதற்கு ஒழுங்குசெய்தவதாகத் தெரிவிக்கிறார். சோக்கிரட்டீஸ் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். சட்டத்தின் பிடியிலிருந்துதப்புவது நீதியாகாது என்று கூறுகிறார். அது மெச்சத்தக்க பண்பு என்பதில் ஐயமில்லை.
எவ்வாறாயினும் அவர் தமது இலட்சிய ஆள்புலமாகிய ஸ்பாட்டா வுக்குத் தப்பியோடுவதற்கு ஏன் ஒழுங்குசெய்யப்படவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஸ்பாட்டாவின்சர்வாதிகாரிகள் போர்வலர் களையே வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதும், புத்திமான்களைத் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்பதும் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, கிறிட்டோ போன்றவர்களுக்குத் தெரியாதா என்ன? அல்சிபை யேட்ஸ் ஒரு தலைசிறந்த போர்வலர் என்றபடியால் ஸ்பாட்டாவின் படையில் சேர்க்கப்பட்டார். சோக்கிரட்டீசின் இன்னொரு போர்ப் பயிற்சி பெற்ற மாணவராகிய செனொபொன்(Xenophon) ஸ்பாட்டா வின் கூலிப்படையில் சேர்க்கப்பட்டார். இருவரும் தமது தாயகத்தின் எதிரிகளுடன் இணைந்து தாயகத்துக்கு எதிராகப் போரிட்ட துரோகிகள்
சோக்கிரட்டீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய தலை மாணாக்கராகிய பிளேட்டோ எவரும் துரத்தாம லேயே எகிப்துக்கு ஒட்டம் எடுக்கிறார். எகிப்தில் நிலவிய சாதிப் பாகுபாட்டைக் கண்டு மெய்சிலிர்க்கிறார் 12 ஆண்டுகள் கழித்து அதென்சுக்கு மீண்டும், ஒரு கல்விக் கழகத்தை அமைத்து, தமது குருவின் மக்களாட்சிக்கு மாறான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுகிறார். குருவின் போதனையை அவர் என்றுமே மீறிய தில்லை. ஆனால் அதற்கெல்லாம் இடம்கொடுத்த அதென்ஸ் மாநகர சுதந்திர சமூகத்தை அவர் என்றுமே மெச்சியதில்லை.
சோக்கிரட்டீஸ் தன் வாழ்நாள் பூராவும் அதென்சில் வாழ்ந்து கொண்டே அதன் ஆட்சியாளரை எதிர்த்த மாமேதை. பிரித்தானி யாவைப் பொறுத்தவரை பேட்றாண் றசலும் (Bertrand Russel) அமெரிக்காவைப் பொறுத்தவரை நோம் சொம்ஸ்கியும் (Noam

மணி வேலுப்பிள்ளை * 77
Chomsky) அத்தகைய மாமேதைகளே எனலாம். இங்கே ஒர் அடிப் படை வேறுபாடு கவனிக்கத்தக்கது. சோக்கிரட்டீஸ் அதென்சில் வாழ்ந்துகொண்டு, அங்கு நிலவிய மக்களாட்சியில் திளைத்துக் கொண்டு (ஸ்பாட்டாவில் நிலவிய) சர்வாதிகாரத்தை நாடி வாதாடிய வர், மக்களாட்சியை எதிர்த்தவர், சர்வாதிகாரத்தை ஆதரித்தவர். ஆனால் றசலும் சொம்ஸ்கியும் தத்தம் நாடுகளில் வாழ்ந்துகொண்டு, அந்த நாடுகளில் நிலவும் மக்களாட்சியைத் துய்த்துக்கொண்டு, அத்தகைய மக்களாட்சியை மேம்படுத்துவதற்காகவே பாடுபட்டு வந்துள்ளார்கள். அவர்கள் சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் அல்லர். அந்த வகையில் சோக்கிரட்டீசைக் காட்டிலும் றசலும் சொம்ஸ்கியும் தலைசிறந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
சோக்கிரட்டீசைச் சிறையில் சந்திக்கச் செல்லும் மாணவன் பேடோ (Phaedo)திரும்பிவந்து சொல்லுகிறான்; நாங்கள் உள்ளேபோனோம். அங்கே (சோக்கிரட்டீசின் மனைவி) சாந்திப்பே கையில் கடைக் குட்டியுடன் நின்றாள். அவள் எங்களைக் கண்டதும் குளறி அழுதாள். பெண்கள் வாடிக்கையாகச் சொல்லுவதைச் சொல்லி அழுதாள்: "ஐயோ, ஐயா, நீரும் உம் சிநேகிதரும் கதைப்பது இதுதான் கடைசித் தடவை”.
சோக்கிரட்டீசையும் பிளேட்டோவையும் போலவே பேடோசாந்திப் பேயையும் பிற பெண்களையும் இளக்காரமாகப் பேசுகிறான். அவள் இங்கே தன்னைப் பற்றியோ தனது பிள்ளைகளைப் பற்றியோ சொல்லிப்புலம்பவில்லை. தனது கணவரும் அவருடைய சீடர்களும் இதுவரை புரிந்த வாதப் பிரதிவாதங்களில் அக்கறை எடுக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. அப்படி இருந்தும் அந்த வாதங் களுக்கு ஏற்பட்ட முடிவை எண்ணிஅவள் மனம் இரங்குவது வெளிப் படையாகவே தெரிகிறது. அது சோக்கிரட்டீசின் சீடனுக்குப் புரியவில்லை!
சோக்கிரட்டீஸ் மனைவியை அரவணைத்து ஆறுதல் கூறவுமில்லை. தனது கடைக்குட்டியைக் கையில் ஏந்திக் கொஞ்சவுமில்லை. சடாரென்று கிறிட்டோவைப் பார்த்துச் சொல்லுகிறார்: கிறிட்டோ, அவளை யாருடனாவது வீட்டுக்கு அனுப்பிவிடு. அவள் மார்பில் குத்திக் கதறக் கதறக் கிறிட்டோவின் வேலைக்காரர்கள் கொறகொற வென்று இழுத்துச் செல்கிறார்கள். அப்புறம் சோக்கிரட்டீஸ் குளித்து

Page 41
78 * மொழியினால் அமைந்த வீடு
விட்டு மரண தண்டனைக்கு (நஞ்சூட்டப்படுவதற்கு) தயாராகும் பொழுது திரும்பவும் சாந்திப்பே வந்துவிடுகிறாள். ஆங்கிலத்தில் இற்றைவரைXanthippe என்ற பெயர்அடங்காப்பிடாரி(Shrew) என்ற பொருளில் எடுத்தாளப்படுவது எத்துணை அநியாயம்?
சிலர் பலரைக் கொடுமைப்படுத்துவது வரலாறு. நாம் கொடுமை களுக்கு உள்ளாவது புதுமை அல்ல. கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. எமக்கு நேரும் கொடுமைகள் இரண்டு விதமானவை. பத்தொடு பதினொன்றாக அமையும் கொடுமைகள் ஒருவிதம். கலிலியோவுக்கு நேர்ந்த கொடுமையைப் போன்றவை மறுவிதம். பூமி சூரியனைச்சுற்றிவருகிறது என்று சொன் னதற்காகக் கலிலியோ கொடுமைப்படுத்தப்பட்டார். அவர் அன்று கொடுமைப்படுத்தப்பட்டார் என்பதற்காக மாத்திரம் இன்று மெச்சப் படவில்லை. அவர் சொன்னது சரி என்பது தெரியவந்த பின்னரே அவருக்கு ஏற்கெனவே இழைக்கப்பட்ட கொடுமை பெரிதுபடுத்தப் படுகிறது. அதாவது கொடுமைக்கு ஆளானவரின்நிலைப்பாடு சரியே என்பது தெரியவரும்பொழுது அவருடைய தியாகம் எம்மைப் பெரிதும் ஆட்கொள்ளுகிறது (பூமி தொடர்ந்து சூரியனைச் சுற்றும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று ஐன்ஸ்டைன் கூறியதை ஒரு கணம் மறந்துவிடுவோம்).
சோக்கிரட்டீஸ் கொடுமைக்கு ஆளாகவில்லை. அதென்சின் அன்றைய சட்டதிட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது (மரணதண்டனை ஒரு கொடுமையே என்பது வேறு கதை). ஒரு வாதத்துக்காக அவர் கொடுமைக்கு ஆளானார் என்பதை ஒப்புக் கொள்வோம். அவருடைய நிலைப்பாடு (மக்களாட்சி தகாது, சர்வாதிகாரமேதகும் என்ற நிலைப்பாடு) சரியா, தவறாஎன்ற கேள்வி இங்கே எழுகிறது. அதற்கான விடை ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் வேறுபடக்கூடும். எவ்வாறாயினும் கொடு மைக்கு உள்ளாகும் அனைவரும் கலிலியோ ஆகமுடியாது. கொடு மைக்கு உள்ளாவோரின் நிலைப்பாடும் சரியாக அமைய வேண்டும் என்றுStephen Jay Gould கூறியமை கருத்தில் கொள்ளத்தக்கது.
இதோ கா(வ)லன் நஞ்சுடன் வருகிறான். ஒரு மாபெரும் தத்துவ ஞானிக்கு நஞ்சு பருக்கும் கடமை தன்மீது சுமத்தப்பட்டது குறித்து அவன் நெஞ்சு குமுறுகிறது. நஞ்சு பருக்கப்படுவதை விட் நஞ்சு

மணி வேலுப்பிள்ளை * 79
பருகுவதே சிறப்பு என்று சோக்கிரட்டீஸ் முடிவெடுக்கிறார். தானே குடுவையை வாங்கி ஒரேமிடறில் நஞ்சைக்குடித்துவிடுகிறார். அன்று சோக்கிரட்டீஸ் காவலரிடமிருந்து நஞ்சை வாங்கித் தானே பருகிய மாண்பையும், இன்று எங்கள் அரசியல் தலைவர்களுள் ஒருவர் தன்னைக் காவலர் கைதுசெய்யும் தறுவாயில் ஐயோ, என்னைக் கொல்லுறாங்கப்பா. என்று குளறி ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்த பரிதாபத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்
உயிர் பிரியும் தறுவாயில் சோக்கிரட்டீஸ் கூறிய கடைசி வார்த்தை: கிறிட்டோ, நாங்கள் வைத்திய நாதருக்கு ஒரு சேவல் தானம் செய்ய வேண்டும் அல்லவா? அதனை மறந்துவிடாதே நோய்வாய்ப்பட்ட வர்கள் இரவோடிரவாக வைத்திய நாதருக்கு (Asclepius) ஒரு சேவலைத் தானமாகக் கொடுத்துவிட்டு, அவர் சந்நிதியில் படுத்து விடுவார்கள். அவர்கள் விழித்தெழும்பொழுது குணமடைவார்கள் என்பது கிரேக்கரின் ஐதீகம். வைத்திய நாதர் சோக்கிரட்டீசின் உயிரைக் கவர்ந்து அவருடைய பிறவிப் பிணியைக் குணப்படுத்தப் போகிறார்! அதற்குக் கைமாறாகத்தான் அந்தச் சேவல் தானம்! நகைச்சுவை, நம்பிக்கை, முரண்பாடு என்பவற்றின் திருவுரும்: சோக்கிரட்டீஸ்

Page 42
அம்மாவின் காதலன் மாயக்கோவஸ்கி (1893-1930) பிரான்சின்து பிளெசி கிறே
w
எனது தாயார் தாத்தியானாவின் (Tatiana Yakovleva) காதலர்களுள் LdmruuğG3a9smT@u@ñv6) (Vladimir Vladimirovich Mayakovsky 1893-1930) தலையாயவர். அவ்வாறே மாயக்கோவஸ்கியின் காதலர்களுள் எனது தாயார் தலையாயவர். நான் மாயக்கோவஸ்கியின் மகள் அல்ல. அம்மாவும் அவரும் பிரிந்து 16 மாதங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன்.
ஜோர்ஜியாவில் பிறந்த மாயக்கோவஸ்கி தனது 14ம் வயதிலேயே
போல்சிவிக்கட்சியில் சேர்ந்துவிட்டார். 1912ல் தனது தோழர்களுடன்
சேர்ந்து ‘பொதுமக்களின் ரசனைக் கன்னத்தில் ஒர் அறை' என்ற
தலைப்பில் அவர் கலைஞர்களுக்கு விடுத்த ஓர் அறிக்கையில்
புஷ்கின், டாஸ்டாவஸ்கி, டால்ஸ்டாய் முதலியோரின் படைப்பு களைத் தூக்கி வீசும்படி அறைகூவினார்.
நான் யானைத்தோல் படைத்தவன் என்று மாயக்கோவஸ்கி பெருமைப்பட்டதுண்டு. ஆறு அடி உயரமான மாயக்கோவஸ்கி ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், ஒரு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பது போலவே தென்படும் என்று போறிஸ் பஸ்டனாக் (Boris Pasternak) குறிப்பிட்டுள்ளார். எரியும் விடுதி யிலிருந்து உடுக்கை எதுவுமின்றி வெளியே பாயும் தாசியைப் போலவே அவருடைய இதயத்திலிருந்து சொற்கள் வெளியே பாய்ந்தன என்று விமர்சகர்கள் விளம்பியதுண்டு. 1915ல் அவர் எழுதிய

மணி வேலுப்பிள்ளை * 81
The Cloud in Trousers என்ற ஆக்கத்தை வாசித்து மனம் உருகிய மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) அவரை ஆரத்தழுவி புலம்பியதாகச் சொல்லப்படுகிறது.
“வரிவசூலிப்பவனுடன் கவிதையைப் பற்றிய ஓர்உரையாடல்" என்ற அவருடைய கவிதையில் சில வரிகள்:
இந்த வரி
தீ பற்றும் வரி. இறுதி வரை எரிந்து
வெடிதீரும் வரி. நகரத்தை வானுயரத்
தகர்க்கும் வரி. பாட்டாளியர் படைக்கும் வரி
எழுத்தாண்மை தெறிக்கும் வரி. உழைக்கும் வர்க்கம்
இறுக்கும் வரி என் கவிதை வரி.
மாயக்கோவஸ்கியும் ஏற்கெனவே மணமான லிலியா என்ற பெண் மணியும் ஒருவருடன் ஒருவர் உறவாடி வந்தார்கள். ஒரு தடவை கவிஞர் ஏசி எழுதிய வரிகள்:
நான் ஒரு கந்தை என்றால் உனது படிக்கட்டின் தூசு துடைக்க என்னைப் பாவியடி பாவி.
இன்னொருவரியில் அவளுடைய சாயம்பூசிய உதடுகளைபாறையில் குடைந்ததுறவிமடம் என்று விபரிக்கிறார்.
1917ல் சோவியத் புரட்சி ஏற்பட்டபொழுது எழுதுகிறார்: புரட்சியை ஏற்பதா, ஏற்காது விடுவதா? அப்படி ஒரு கேள்வி என்னுள் எழவே இல்லை. அது எனது புரட்சி அல்லவா 1924ல் லெனின் மறைந்த பொழுது 3,000 வரிகளில் அவர் எழுதிய கவிதையில் ஒரு கூறு:
என் மூச்சு மாண்டு உன் மூச்சாய் மீண்டால்

Page 43
82 * மொழியினால் அமைந்த வீடு
மெய்மறந்து மாள்வேன் உயிர்துறந்து வீழ்வேன்.
ஒரு முதலாளித்துவதனிமனிதவாதி என்று கண்டிக்கப்பட்ட பொழுது, இனிமேல் ஓர் உண்மையான, மகத்தான காதலே எனக்கு வாழ் வளிக்கும் என்று அவர் தெரிவித்தார். அத்தகைய சூழ்நிலையில்தான் (1928ல்) அவர் பாரிஸ் மாநகர் சென்றார். அங்கேதான் எனது தாயார் தாத்தியானா வாழ்ந்து வந்தார். 1906ம் ஆண்டு செ.பீற்றேஸ்பேர்க் நகரத்தில் எனது தாயார் பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த ரஷ்யர்களுள் ஒருவர். அம்மாவுக்கு மாயக்கோவஸ்கியை விட 13 வயது குறைவு. அவரைச் சந்திப்பதற்கு முன்னரே அவருடைய கவிதைகள் அம்மாவுக்கு மனப்பாடம். அவர்அம்மாவைக் கண்டதும் காதல் கொண்டதாகவும், முழந்தாள் பணிந்துகாதலை வெளிப்படுத்தி யதாகவும் அம்மா பிற்பாடு என்னிடம் தெரிவித்தார். அம்மாவின் ரஷ்யக் கவிதையறிவு கவிஞரை வியக்க வைத்தது. அவர் அம்மாவில் கொண்ட காதலை அது மேலும் வீறுகொள்ளச் செய்தது. அம்மா மணித்தியாலக் கவிதைகளை மீட்டுவார். மாயக்கோவஸ்கி எழுதிய 700 Guifssoir Gasnier L (The Cloud in Trousers) sofangsapu gybi DIT மீட்டும்பொழுது, அவர் அம்மாவையே அள்ளிப் பருகியிருப்பார். அந்தக் காலத்தில் அவர் அம்மாவுக்கு எழுதிய சில வரிகள்:
காதல் என்றால்: காணியின் அந்தலைக்கு விரைந்து பளிச்சிடும் கோடரியைக் கைகளில் ஏந்தி மரங்களைக் கொத்திப் பிளந்து கும்மிருட்டு சூழும் வரை வருந்தி உழைத்து.
காதல் எமது காதில் பாட
குற்றுயிராய்க் கிடந்த இதயம் புத்துயிருடன் வீறுகொள்ள.
அம்மா அம்மம்மாவுக்கு எழுதிய ஒரு கடிதம்: அவர் ஓர் அதிசய மனிதர். நான் நினைத்ததற்கு முற்றிலும் மாறுபட்டவர். அவர் பேர்லினிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். தனது பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்தினார். அவரிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தந்தி வருகிறது. ஒவ்வொரு கிழமையும் ஒரு பூச்செண்டு

மணி வேலுப்பிள்ளை * 83
வருகிறது. எங்கள் வீடு முழுவதும் பூக்கள் சொரிகின்றன. நான் அவரைப் பிரிந்து வாடுகிறேன். நான் சந்தித்த ஆட்களுள் அவரே ஆற்றல்மிகுந்தவர். அவர்என்னருகில் இருக்கையில் நான் ரஷ்யாவில் இருப்பது போல் உணர்கிறேன். அவர் புறப்பட்ட பிற்பாடு நான் ரஷ்யாவை மேன்மேலும் நினைத்து உருகுகிறேன்.
அம்மா அம்மம்மாவுக்கு இன்னொரு கடிதம்: அவர் எனக்குப் புத்து யிரூட்டியுள்ளார். என் உள்ளத்தை விரிவுபடுத்தியுள்ளார். முதன் முதல் என் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவரே. பாரிசில் வாழும் பாமர மக்களை அவர் தனது சந்தம் மிகுந்த கவிதை களாலும், அவற்றை வாசிக்கும் திறனாலும் கொள்ளை கொண்டுள் ளார். அவர் உருவத்தாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த மேதை. அவர் இல்லாத வெறுமையுள் நான் மூழ்கியிருக்கிறேன்.
கவிஞர் மாஸ்கோவிலிருந்து அம்மாவுக்கு அனுப்பிய முதல் கடிதம்:
என் அன்பின்தாத்தியானா,
நீ எழுதிய கடிதம் சற்று முன்னர் கிடைத்தது. எனக்குத் தெவிட்டும் வரை அதனைத்திரும்பத்திரும்ப வாசித்தேன். மூட்டைப்பூச்சி (The Bedbug) என்ற புதிய நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். உண் ணாமல் குடிக்காமல் அன்றாடம் 20 மணித்தியாலங்கள் எழுதித்தள்ளி னேன். அதனால் எனது தலை பெருத்து, தொப்பி சிறுத்துவிட்டது. கண்சிவந்து, மூஞ்சி கவிழ்ந்து மாடு மாதிரி உழுது தள்ளினேன். எனது கண்களே என்னைக் கைவிட்டன. அவற்றுக்கு குளிரொத்தடம் கொடுத்து பணியைத் தொடர்ந்தேன். போகட்டும். என்கண்என்னடி கண்ணே? நான் உன்னை மீண்டும் காணும்வரை அது எனக்குத் தேவையில்லை. பார்ப்பதற்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
1928ல் கவிஞர் அம்மாவைக் குறித்து எழுதிய (தோழர் கொஸ் றோவுக்கு ஒரு கடிதம்) என்ற கவிதை இளங்காவலர்(Young Guard) என்ற ரஷ்ய இதழில் வெளிவந்து, பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. புலம்பெயர்ந்த அழகியைக் கொண்டாடும் நிலைக்கு கவிஞர்தாழ்ந்து விட்டதாக விமர்சகர்கள் அவரைச்சாடினார்கள்.
அம்மம்மாவுக்கு அனுப்பிய பிறிதொரு கடிதத்தில் அம்மாவின் வரிகள்: பல்வேறுதரப்பினர்என்னைநாடி வருகிறார்கள். அவர்களுள்

Page 44
84 * மொழியினால் அமைந்த வீடு
எவருமே மாயக்க்ோவஸ்கிக்கு ஈடாக மாட்டார்கள். அவர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு அவரையே நான் தேர்ந்தெடுப்பேன் என்பது அநேகமாக நிச்சயம்தான். அவருடைய பேராற்றல் வியக்கத்தக்கது.
கவிஞர் பாரிஸ் திரும்பியபொழுது அவரில் ஒரு மாற்றத்தை அம்மா கண்டுகொண்டார். அதனை 50 ஆண்டுகளுக்குப் பிற்பாடு அம்மா நினைவுகூர்ந்தார். அவர்ரஷ்யாவைக்குறித்து ஏமாற்றம் அடைந்திருந் தார். ஆனால் அவர் ரஷ்யாவை நேரடியாகக் கண்டிக்கவில்லை. கவிஞரேதனது ரஷ்ய நண்பர்ஒருவரிடம், நான் இப்பொழுது வெறும் பணியாளன், கவிஞன் அல்லன். என்று சொல்லி விம்மியிருக்கிறார்.
1929 யூலை 12ம் திகதி எழுதிய கடிதத்தில் கவிஞர் அம்மாவைத் தனது குடும்பத்தவர் என்றும், தாம் இருவரும் ஒருவருக்கொருவர் இன்றி யமையாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு கடிதத்தில் அம்மாவை ரஷ்யாவுக்குத் திரும்பி, ஓர் எந்திரவியலராய் மாறி, சமூக வுடைமையை (Socialism) கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறார். (எனது கைக்கு எட்டிய கடிதங்களைப் பொறுத்த வரை) கவிஞர் கடைசியாக அம்மாவுக்கு எழுதிய கடிதம் என்னைக் கண்ணிர் சிந்த வைக்கிறது:
நான் ஏற்கெனவே துயரத்தில் மூழ்கி மெளனத்தில் ஆழ்ந்திருக்கிறேன். உனது கடிதம் வராதபடியால் எனது துயரமும் மெளனமும் மேலும் கூடுகின்றன. நான் ஒரு சொற்கஞ்சன் அல்ல. எனது துயரத்தையும் மெளனத்தையும் என்னால் எடுத்துரைக்க முடியாது. ஒருவேளை ஒரு பிரஞ்சுக்கவிஞர்அல்லது உத்தியோகத்தர் உன்னை ஈர்த்துவிட்டாரோ என்றும் ஏங்குகிறேன். ஆனால் நீ என்னைவிட்டு விலகிவிட்டாய் என்று எவர் சொன்னாலும் நான் நம்பமாட்டேன். நான் உனக்கு அனுப்பிய தந்தி, நீ அந்த விலாசத்தில் இல்லை என்ற காரணத்துடன், திரும்பி வந்திருக்கிறது. நீ என்னைப் புறக்கணிக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எழுது, எழுது, எழுது, கண்ணே, எழுது இன்றைக்கே எழுது.
1929ல் ஸ்டாலின் ஆட்சியதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார். துரொஸ்கி (Trotsky) நாடுகடத்தப்பட்டார். ரஷ்ய பாட்டாளிவர்க்க எழுத்தாளர் சங்கம் பட்ைப்பாளிகளுக்குக் கடிவாளம் பூட்டியது. முதலாளித்துவதனிமனிதவாதப் படைப்புகளை ஒழித்துக்கட்டும்படி

மணி வேலுப்பிள்ளை * 85
பிராவ்டா அறைகூவியது. அத்தகைய சூழ்நிலையில் மாயக்கோவஸ்கி பாரிஸ் திரும்புவதற்கு வீசா மறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது வீசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கலாம். ஒருபுறம் புதிய ரஷ்யாவில் உழைத்துக்கொண்டு அம்மாவை நினைந் துருகும் கவிஞர். மறுபுறம் பாரிசில் திளைத்துக்கொண்டு பழைய ரஷ்யாவை நினைந்துருகும் அம்மா. கவிஞரும் காதலியும் ரஷ்யாவி லோபிரான்சிலோ ஒருங்கிணைய முடியவில்லை.
1929 அக்டோபர் மாதம் கவிஞரின் கடைசிக் கடிதம் அம்மாவுக்குக் கிடைத்தது. நான் ஏற்கெனவே துயரத்தில் மூழ்கி மெளனத்தில் ஆழ்ந்திருக்கிறேன் என்ற கவிஞரின் வரி அரசியல் கெடுபிடிகளைக் கருத்தில் கொண்டே எழுதப்பட்டது என்று அம்மா விளங்கிக் கொண்டார். அந்தக் கட்டத்திலேயே கவிஞரும் தானும் ஒருங் கிணையமுடியாது என்று அம்மா மிகுந்த வேதனையுடன்முடிவுகட்டி னார். அப்புறம் 1929 அக்டோபர் மாதமே அம்மா பிளெசி (Viconte Bertrand du Plessix) என்ற பிரஞ்சு இராசதந்திரியை மணந்து கொண்டார்.
அம்மா மணம் முடித்த சேதிகாதில் விழுந்தபோதுதான்அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்துநின்ற கவிஞர் போவதற்கு நேரமாகி விட்டது என்று முணுமுணுத்ததாகத் தெரிகிறது.
சிமாக்கோவ் (Genady Smakov) என்ற ரஷ்ய அறிஞரிடம் அம்மா தெரி வித்தார்; நான்மாயக்கோவஸ்கியைக் காதலித்தேன். அது அவருக்குத் தெரியும். அவருடன் ரஷ்யா திரும்பும் அளவுக்கு நான் அவரைக் காதலிக்கவில்லைப் போலும். அவர் மூன்றாவது தடவை திரும்பி வந்திருந்தால், நான் அவருடன் புறப்பட்டிருக்கக்கூடும். நான் அவரை நினைந்துருகினேன். அவர் திரும்பி வராதபடியால், அவர் ஓர் இளம் பெண்ணாகிய என்னை மணந்து வாழ்க்கைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை அல்லது துணியவில்லை என்று நினைத்தேன். அப்பொழுதுதான் பிளெசி எங்கள் வீடு தேடி வந்து என்னைத் திருமணம் புரிய விருப்பம் தெரிவித்தார். பிளெசி ஒரு பிரஞ்சுக்காரர், திருமணமாகாதவர். நான் அவரைக்காதலிக்கவில்லை. ஆனால் வேறு பெண்களைப் போல் நானும் திருமணம் புரிந்து, பிள்ளை குட்டி களுடன் வாழ விரும்பினேன். நானும் பிளெசியும் திருமணம் புரிந்து (1929/12/23) 9 மாதங்களில் பிரான்சின் பிறந்தாள் (நான் பிறந்தேன்).

Page 45
86 * மொழியினால் அமைந்த வீடு
திருமணம் புரிந்து 3 ஆண்டுகளுள் அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள் இதற்கிடையே மாயக்கோவஸ்கி எழுதிய குளியலகம் (The Bathhouse) என்ற நாடகம் வெளிவந்தது. சோவியத் அதிகாரிகள் சோவியத் புரட்சிக்குத் துரோகம் இழைத்து விட்டதாக அந்த நாடகத் தில் கவிஞர் சாடியிருக்கிறார்.
1930ஏப்பிறில் 14ம் திகதி மாயக்கோவஸ்கி தன்னைத்தானேதுப்பாக்கி யால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் திடீரெனத் தற் கொலை செய்யவில்லை. தனது தற்கொலையை ஏற்கெனவே அவர் ஒத்திகை பார்த்துவிட்டார்: ஒரு சன்னத்தின் மூலமே எனது முடிவுக்குத் துளையிடுவது நல்லது என்று 1915ம் ஆண்டிலேயே அவர் எழுதி யிருக்கிறார் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று கடதாசித் துண்டுகளில் ஒரு பென்சில் குறிப்பை எழுதி வைத்திருக் கிறார்: எல்லோரும் அறிவது, எனது இறப்புக்கு எவர்மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். தயவசெய்து வாய்க்கு வந்தவாறு பேச வேண் டாம். இறந்தவர்களுக்கு அது பிடிக்காது. அம்மா, அக்காதங்கையர், நண்பர்கள், என்னை மன்னித்துவிடுங்கள். இது வழி அல்ல. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை.
கவிஞரின் தற்கொலையைக் குறித்து கருத்துத் தெரிவித்த போறிஸ் பஸ்டனாக், மாயக்கோவஸ்கி தன்மானம் கொண்டே தற்கொலை செய்துள்ளார். அதன் மூலம் தன்னில் உள்ள ஏதோ ஒன்றையே அவர் தண்டித்துள்ளார். அவருடைய தன்மானம் காரணமாகவே அவரால் அந்த ஒன்றுடன் ஒத்துப்போக முடியவில்லை என்று குறிப் பிட்டுள்ளார்.
அவருடைய குறிப்பேட்டில் அம்மாவைக் குறித்து எழுதிய சில வரிகள் தற்கொலைக் குறிப்பில் இடம்பிடித்துள்ளன. அந்த வரிகளின் அடியில் நான் கோடிட்டுள்ளேன்:
விண்மீன்கள் இருள் கிழிய ஒளிகாலும் வேளை. நீ உறங்க
நான் வதங்க. மின்னலெனும் தந்தி மூலம் உன்னுறக்கம் கெடுக்கேன்,

மணி வேலுப்பிள்ளை * 87
தொந்தரவு தரமாட்டேன். கதை முடிந்துவிட்டது. எமது காதல் படகு
ன்றாட உளமியக்கடன் மோகி நெருங்கிவிட்டது. நீயும் நானும் பேரம் பேசிக் கணக்கத் தீர்ந்தது. துக்கம், துயரம், துன்பம் இனிமேல். பகிரத் தேவை இல்லை. இனி. வானில் இருள் கவிய உலகை அமைதி சூழ 5|TQ)(1plô, QuJoffADILb, u6DLULLb
சீண்டும் என் சிந்தையை.
நீயும் நானும் பேரம் பேசிக் கணக்குத் தீர்ந்தது என்ற வரியில் (நீயும் என்ற) ஒரேயொரு சொல்லை மட்டும் (வாழ்வும் என்று) மாற்றி (வாழ்வும் நானும் பேரம் பேசிக் கணக்குத் தீர்ந்தது என்று) தனது தற்கொலைக் குறிப்பை எழுதியிருக் கிறார் கவிஞர்.
கவிஞர் மாண்ட செய்தி அம்மாவுக்கு எட்டியபொழுது அவர் நான்கு மாதக் கர்ப்பிணி. அம்மாவின் வயிற்றில் இருந்தவள் நான்தான். அப்பொழுது அம்மா அப்பாவுடன் தேனிலவு முடித்து வாசோவில் தங்கியிருந்தார்.
கவிஞரின் தற்கொலை சமூகவுடைமைவாத இயல்புக்கு மாறான(unSocialist) செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆதலால் அவருடைய படைப்புகள் அரிதாகவே வெளிவந்தன. 1935ல் லிலியா தன்னுடன் உறவாடிய ஒரு தளபதி மூலமாக ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். மாயக்கோவஸ்கியின் கவிதைகள் வன்மையான புரட்சிகர ஆயுதங்கள். அவற்றை மீண்டும் வெளியிட வேண்டு கிறோம் என்று அவள் எழுதி அனுப்பினாள். ஸ்டாலின் கையோடு பதில் அனுப்பினார். லிலியாஅனுப்பிய கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் சிவப்புப் பென்சில் கொண்டு பெரிய சரிந்த கொட்டை

Page 46
88 * மொழியினால் அமைந்த வீடு
எழுத்துகளில் ஸ்டாலின் தன் கைப்பட மறுமொழி எழுதியிருந்தார்: தோழர்லிலியா பிறிக் சொல்வது சரி. எங்கள் சோவியத் சகாப்தத்தைப் பொறுத்தவரை மாயக்கோவஸ்கியே பேராற்றல் வாய்ந்த கவிஞர். அவரையும் அவருடைய எழுத்துக்களையும் புறக்கணிப்பது ஒரு மாபெரும் குற்றம்.
அதனைத் தொடர்ந்து கவிஞரின் படைப்புகள் மீண்டும் பெருவாரி யாக வெளிவரலாயின. மாயக்கோவஸ்கி அரும்பொருளகம் அமைக்கப்பட்டது. கவிஞர் திரும்பவும் போற்றிப் புகழப்பட்டார். 1979ல் நான் ரஷ்யாவுக்குப் போயிருந்தபொழுது என்னைச் சந்தித்த சோவியத் தோழர்கள், நான் மாயக்கோவஸ்கியின் மகள்தான் என்று அடித்துச் சொன்னார்கள். நான் மாயக்கோவஸ்கியின் மகள் அல்ல, அம்மாவும் அவரும் பிரிந்து 16 மாதங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன் என்று சொல்லி எனது கடவுச் சீட்டில் பொறிக்கப்பட்ட எனது பிறந்த திகதியை அவர்களுக்குக் காட்டினேன். அது கள்ளக் கடவுச்சீட்டு என்று அவர்கள் அடித்துச் சொன்னார்கள்
கவிஞர் இறந்து 50 ஆண்டுகள் கழிந்த பின்னர் அம்மா தெரிவித்த விபரம்: அவர் இறந்த பின்னர் அவருடைய கடிதங்களை என்னால் திரும்பவும் வாசித்துப் பார்க்க முடியவில்லை. இன்றும் வாசித்துப் பார்க்க முடியவில்லை.
அம்மா எனக்கு ஈந்த கொடை, அவர் கவிஞரை இழந்த துயரமே. கவிஞரை என் உறவினராகவே நான் ஏற்றுப் போற்றுகிறேன். அம்மாவின்துயரத்துள் நான் கவிஞரைக் கண்டு களிக்கிறேன்.
Francine DuPlessix Gray, Mayakovsky's Last Loves, The New Yorker, January 7, 2002, p. 38-55.

சிலிய ஜனாதிபதி
அலந்தே (1970-1973)
KO 0XP
“. நான்மக்களின் ஆணையையும் தொழிலாளிகளின் ஆணையையும் பெற்றவன். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காக நான் இறுதி வரை போராடுவேன். அதுவே எனது தீர்மானம். நான் சரணடைய மாட்டேன். ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன். நாட்டைவிட்டுத்தப்பியோடமாட்டேன். நீங்கள்காட்டும் விசுவாசத் துக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஆனால் உங்களுள் எவரும் அநாவசியமாகப் பலியாகக் கூடாது. உங்களுள் அநேகர் இளவயதினர். உங்களுக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள். அவர் களையும் சிலியநாட்டு மக்களையும் காப்பதே உங்கள் கடன். இது இறுதிச் சமர் அல்ல. எதிர்காலத்தில் எத்தனையோ கட்டங்களில் உங்கள் சேவை நாட்டுக்குத் தேவைப்படும். இங்கிருக்கும் பெண்கள் உடனடியாக மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். இது வெறும் வேண்டுகோள் அல்ல, இது எனது கட்டளை. குறித்த அலுவல்களில் ஈடுபடாதவர்கள், ஆயுதம் ஏந்தாதவர்கள், ஏந்தத் தெரியாதவர்கள் அனைவரும் உடனடியாக மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். உங்களுள் சிலர்இங்கு நடந்ததை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.”
1973 செப்டெம்பர் 11 காலை 9.30 மணியளவில் லா மொனிடா எனப் படும் சிலிய ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி சல்வடோர் அலந்தே (Salvador Allende 1908-1973) தனது பணியாளர்களையும் மருத்துவர்களையும் மெய்காவலர்களையும் பாதுகாப்புப் பிரிவின

Page 47
90 * மொழியினால் அமைந்த வீடு
ரையும் விழித்துக்கூறிய வார்த்தைகளே அவை. அப்பொழுது திருமதி அலந்தே மாளிகையில் இருக்கவில்லை (வீட்டில் இருந்தார்). நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த மகள் பீட்றிஸ், அவருடைய சகோதரி, பெறாமகள் (எழுத்தாளர்) இசபெல் உட்பட அங்கிருந்த மாதர்கள் ஒருமனதாக மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்.
"அப்பா, நாங்கள் போகமாட்டோம், அப்பா” என்கிறாள் மகள் பீட்றிஸ்.
“உங்கள் அம்மாவை நீங்கள் பத்திரமாகப் பார்க்க வேண்டும் அல்லவா?’ என்கிறார்தகப்பன்.
"அப்பா, நாங்கள் வெளியே போனால், அவர்கள் எங்களைப்
பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து உங்களுக்கு நெருக்குதல் கொடுப்பார்கள், அப்பா.”
“அப்படி என்றால் அந்தத் துரோகிகள் உங்களைச் சுட்டுத்தள்ளட் டும். சுட்டுத்தள்ளி, கோழைகள் என்ற பட்டத்தையும் தட்டிக்கொள் ளட்டும்” என்று முழங்குகிறார் அலந்தே. பெண்கள் ஒவ்வொரு வராக வெளியேறுகிறார்கள். அலந்தே வாயில்வரை சென்று வழி யனுப்பி வைக்கிறார்.
நண்பகல் வான்படை மாளிகைமீது குண்டு வீசுகிறது. மாலையில் எதிரிகள் மாளிகைக்குள் புகுந்து தாக்குகிறார்கள். தன்னைப் புடை சூழ்ந்தவர்கள் பலியாவதை விரும்பாத அலந்தே அவர்களைச் சரணடையும்படி பணிக்கிறார். மாலை 4.30 மணியளவில் அலந்தே யின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக அம்பந்தே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். துப்பாக்கிக் குழலை வாய்க்குள் வைத்துச் சுட்டிருக்கிறார். உச்சந்தலை பிளந்திருக்கிறது. துப்பாக்கி இரு கால்களுக்கும் இடையில் கிடக்கிறது. அது ஒர் இயந்திரக் கைத்துப்பாக்கி. அதில் எனது உற்ற நண்பர் சல்வடோர் அலந்தே அவர்களுக்கு எனது அன்பளிப்பு - பிடல் காஸ்ட்றோ என்று பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது!
“... உங்களுள் சிலர் இங்கு நடந்ததை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.” என்று அலந்தே பணித்தார் அல்லவா. அப்பொழுது உடனிருந்து குறிப்பெடுத்த அவருடைய மருத்துவர் ஒஸ்கார் சொட்டோ உலகத்துக்குத் தெரிவித்த விபரங்களே இவை (Dr. GScar

மணிவேலுப்பிள்ளை * 91
Soto, The Last Day of Salvador Allende: A Chronicle of the Assault on La Moneda Palace, Santiago de Chile, Madrid, El Pais/Aguilar, 1998).
என்றோஒருநாள் அலந்தே ஆட்சி ஏற்பார்என்பதை மோப்பம் பிடித்து வைத்திருந்த சி.ஐ.ஏ. அதனைத்தடுப்பதற்காக 1963ம்ஆண்டிலிருந்தே அரும்பாடுபட்டு வந்துள்ளது. அந்த நல்ல நோக்கத்துக்காக 1964ல் 30 இலட்சம் அமெரிக்க டாலரையும், 1970 முதல் 1973வரை 80 இலட்சம் டாலரையும், 1972ல் மாத்திரம் 30 இலட்சம் டாலரையும் அது செல விட்டுள்ளது. அலந்தேயை எதிர்ப்பதையே பிழைப்பாகக் கொண்ட படையணிகள், கட்சிகள், கம்பனிகள், ஊடகங்கள், கும்பல்கள். அனைத்துக்கும் அந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1964ல் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு 26இலட்சம் டாலர் வழங்கப்பட்டது. EMercurio என்ற பத்திரிகைக்கு1971ல் 7இலட்சம் டாலரும், 1972ல் 9 இலட்சத்து 65,000 டாலரும் வழங்கப்பட்டது. 1971 முதல் 1973 வரை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மொத்தமாக 40இலட்சம் டாலர் கொடுக்கப்பட்டது. 1972 செப்டெம் பரில் ஒரு முதலாளிமார் சங்கத்துக்கு 24,000 டாலரும் அக்டோபரில் வேறோரு சங்கத்துக்கு 1 இலட்சம் டாலரும் வழங்கப்பட்டது. 1970ல் அமெரிக்க பல்தேசியக் கம்பனியாகிய ITT முன்னாள் ஜனாதிபதி அலெசாந்திரியின் (Alessandri) தேர்தல் பிரச்சாரத்துக்கு 3% இலட்சம் டாலர் கொடுத்துதவியது. ஏனைய கம்பனி ஒவ்வொன்றும் அந்தக் கட்சிக்கு அதேயளவு பணம் கொடுத்துதவியது.
“ஒரு நாட்டு மக்களின் பொறுப்பற்ற போக்கினால் அந்த நாடு பொது வுடைமை நாடாக மாறுவதை நாங்கள் ஏன் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டும்?" என்று ஹென்றிகிசிஞ்சர்(Henry Kissinger) வேறுவினா எழுப்பினார். கிசிஞ்சர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மதியுரைஞர், அரசியல் கலாநிதி, மேற்குலகின் தலையாய சாணக்கியர், இந்தோ சீனாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் அமெரிக்க ஆட்சியாளர் புரிந்த போர்க்குற்றங்களுக்குத்தூபமிட்டவர். எனினும் சமாதானத்துக் கான நோபல் பரிசில் சரிபாதி பெற்றவர் அத்தகைய கீர்த்திவாய்ந்த கிசிஞ்சர் சிலிய மக்களின் பொறுப்பற்ற போக்கினால் வெறுப்புற்றார் என்றால், அது நல்லதுக்கல்ல என்று அடித்துச் சொல்லலாம்!
எத்தனையோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டும்கூட 1970 செப் டெம்பர் 4ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் சிலிய சமூகவுடைமைக் கட்சியின்(The Socialist Party ofChile) நிறுவனரும் தலைவருமாகிய

Page 48
92 * மொழியினால் அமைந்த வீடு
அலந்தேயின் கை ஓங்குவதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சமூக வுடைமைவாதிகள், புரட்சிகர இடதுசாரி இயக்கம் உள்ளடங்கிய அவருடைய கூட்டணிக்கு ஏறத்தாழ 37% வாக்குகளே கிடைத்தன. அவருக்கு 10,76,616 வாக்குகளும், தேசியக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட அலெசாந்திரி (Alessandri) என்ப வருக்கு 10,36,278 வாக்குகளும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தோமிக் (Tomic) என்பவருக்கு 8,24,849 வாக்குகளும் கிடைத்தன.
அப்பொழுது சிலியில் அமெரிக்க தூதராக இருந்த எட்வேட் கொறி (Edward Kory) வாசிங்டனுக்கு அனுப்பிய சேதி: சிலிய மக்கள் மிகவும் நாகரிகமானவர்கள் ஆகிவிட்டார்கள். அலந்தே என்ற அநாகரி கமான ஆளை ஏற்றுப் போற்றும் அளவுக்கு அவர்கள் நாகரிகமானவர் கள் ஆகிவிட்டார்கள். என்று அவர் தெரிவித்திருக்கிறார்(1970/09/08). அவர் அனுப்பிய அடுத்த சேதியில் கவிதை சொட்டுகிறது: சிலி மீது புதைகுழி நெடி கவிகிறது. இங்கு மக்களாட்சி அழுகி மணக்கிறது. (1970/09/11). தூதர் மூக்கைப் பொத்திக் கொண்டு தீட்டி அனுப்பிய கவிதையைக் கிசிஞ்சர் எட்டி நின்றுதான் வாசித்திருப்பார் போலும்
அப்புறம் வெள்ளை மாளிகையில் நான்கு நீதிமான்கள் சந்திக்கிறார் கள்: ஜனாதிபதி நிக்சன், கிசிஞ்சர், சட்டமா அதிபர் ஜோன் மிற்செல் (John Mitchell), S.g.67. Luciflunoltigligi Ganpaolbolu (Richard Helms). அந்தச் சந்திப்பில் சி.ஐ.ஏ. பணிப்பாளர் தன் கைப்பட எழுதிய குறிப்பில் இருக்கும் வார்த்தைகள் இவை: பத்திலொரு வாய்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை. சிலியைக் காப்பாற்ற வேண்டும். செலவுக்கேற்ற வரவு கிடைக்கும். கையோடு 1 கோடி டாலர்தரப்படும். தேவைப்பட்டால் மேலும் தரப்படும். சிலியின் பொருளாதாரத்தைச் சீரழிக்க வேண்டும். 48 மணித்தியாலங் களுக்குள் செயலில் குதிக்க வேண்டும். (1970/09/15).
அடுத்த நாள் சி.ஐ.ஏ. பணிப்பாளர் தென் அமெரிக்காவுக்குரிய தனது ஒற்றர் சிட்டர்களை வரவழைத்து வெள்ளை மாளிகையில் எடுக்கப் பட்ட முடிபுகளைத் தெரிவிக்கிறார்: அலந்தே ஆட்சி ஏற்பதை ஜனாதிபதி ஏற்கப்போவதில்லை. அலந்தேயைத் தடுக்கும்படி அல்லது அகற்றும்படி அவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். அதற்காக 1 கோடி டாலரை அவர் ஒதுக்கியிருக்கிறார். தேவைப் பட்டால் மேலும் பணம் கிடைக்கும் என்று அவர்அறிவித்திருக்கிறார்.

மணிவேலுப்பிள்ளை * 93
நாங்கள் இந்தக் காரியத்தை எப்படி ஒப்பேற்றப் போகிறோம் என்பதைத் தனக்கு முன்கூட்டியே அறிவிக்கும்படி கிசிஞ்சர் என்னிடம் கேட்டிருக்கிறார். நான் அவரை நாளை மறுதினம் சந்தித்து எங்கள் திட்டத்தை முன்வைக்கப் போகிறேன். (1970/09/16).
சி.ஐ.ஏ. தலைம்ை அலுவலகத்திலிருந்து சிலிய தலைநகர் சந்தியா கோவில் இருக்கும் அதன் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட சேதி: அலந்தே ஆட்சி ஏற்றால், அது சதி மூலம் கவிழ்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஈடுபட வேண்டும். ஆனவரைமுயன்று இயன்றவரை நெருக்குதல் கொடுக்க வேண்டும். இரகசியமாகவும் பத்திரமாகவும் செயற்பட வேண்டும். அமெரிக்காதான் பின்னணியில் நின்று செயற்படுகிறது என்பது வெளியே தெரியக்கூடாது. உங்கள் பிரசார வேலைகள், நாசவேலை கள், கயிறு திரிப்புகள், ஆள் - தொடர்புகள் அனைத்தையும் மீள் நோக்கி காரியத்தை ஒப்பேற்ற வேண்டும். (1970/10/16).
சி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்திலிருந்து அந்தக் கிளை அலு வலகத்துக்கு அனுப்பப்பட்ட இன்னொரு சேதி: துவக்குகளும் குண்டுகளும் வழமையான வழியில் வந்துசேரும். சரக்கு அக்டோபர் 19ம் திகதி காலை வாசிங்டனைவிட்டு வெளியேறும். 20ம் திகதி மாலை அல்லது 21ம் திகதி காலை சந்தியாகோவை வந்தடையும். (1970/10/11).
சிலியப் பொருளாதாரத்தை தமது பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க பல்தேசியக்கம்பனிகளாகியITT, Anaconda,Kennecott போன்றவை அனைத்தும் அலந்தேக்கு எதிராக அணிதிரண்டன. அவர் ஆட்சி ஏற்பதை விரும்பாததரப்புகளுக்குஅவை பணத்தை வாரி இறைத்தன. அமெரிக்க ஆட்சியாளர் தமக்குக் கைகொடுப்பர் என்ற துணிச்சல் அவற்றுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அமெரிக்காசிலிமீது படை யெடுக்க வேண்டும் என்று TIME (என்ற அமெரிக்க) வார இதழ் அப்பட்டமாகக் கோரிக்கை விடுத்தது அலந்தே ஆட்சி ஏற்பதைச் சட்டப்படி தடுக்க முடியாது என்று அவருடைய உள்ளூர் அரசியல் எதிரிகளுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு ஒரேயொரு மாற்றுவழி தான் தென்பட்டது. அதுதான்படையாட்சி
அப்பொழுது சேனாதிபதியாக விளங்கிய றெனே சினைடர் (Rene Shneider) சிலிய மக்களாட்சி மரபை ஏற்றுப் போற்றியவர். படை
யாட்சியை வேண்டியோரின் செவிப்பறை தகரும் வண்ணம் அவர்ஒர் அறிக்கையை விடுத்தார்: ஆயுதப் படையினரால் மாற்றங்களைத்

Page 49
-94 * மொழியினால் அமைந்த வீடு
தடுக்க முடியாது. சிலிய மக்களுள் ஒரு முக்கியமான பிரிவினர்தாம் ஈட்டிய வெற்றியைப் பிறர் கவர்ந்துசெல்ல அனுமதிக்கப் போவ தில்லை. தாம் ஈட்டிய வெற்றிதமது வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கட்டிக்காப்பதாக அலந்தே எமக்கு உறுதியளித்துள்ளார். அதை அவர் என்னிடம் நேரில் தெரிவித்துள்ளார். நான் அதனை ஏற்றுக்கொண்டுள் ளேன். இன்றைய சூழ்நிலையில் அலந்தே அமைக்கும் ஒர் அரசினா லேயே ஒரு வன்முறைக் கிளர்ச்சி மூள்வதைத் தடுக்க முடியும்.
சிலிய ஆட்சிப் பேரவை கூடி அலந்தேயை முறைப்படி ஜனாதிபதி யாக உறுதிப்படுத்துவதற்குச் சற்று முன்னதாக சேனாதிபதி சினைடர் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவருடைய வாகனம் பல வாகனங்களால் முட்டிமோதப்பட்டது. அவரைக் கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடையவே அந்த வாகனங்களி லிருந்து இருவர் இறங்கினார்கள். ஒருவன் ஒரு சம்மட்டியினால் சேனாதிபதியின் கார்க் கண்ணாடிகளைத் தகர்த்தான். மற்றவன் சேனாதிபதியை மூன்று தடவைகள் சுட்டான். சேனாதிபதியின் உயிர் வைத்தியசாலையில் பிரிந்தது (1970/10/26). தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட துவக்குகளுள் மூன்று சி.ஐ.ஏ.யினால் கொடுத்து தவப்பட்டவை R சிலிய ஆட்சிப் பேரவை கூடியபொழுது ஜனநாயகக் கட்சி அலந்தேயை ஆதரித்துவாக்களித்தது - அலெசாந்திரி35வாக்குகளைப் பெற, அலந்தே 153 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆனார் (1970/ 10/24). உலக வரலாற்றில் மக்களாட்சி முறைப்படி ஒரு நாட்டின் ஆட்சித் தலைவராக வந்த முதலாவது மார்க்சியவாதி அலந்தே அவர்களே (கேரள முதல்வர்நம்பூதிரிபாத் மாநில ஆட்சித்தலைவர்). முன்னர் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும், இன்று கிழக்கு ஐரோப்பா விலும் பொதுவுடைமைக் கட்சிகள் பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி ஏற்பதையும் இழப்பதையும் காண்கிறோம். 1970ல் அலந்தே ஆட்சி ஏற்றதும் அவ்வாறே. ஜனாதிபதி காஸ்ட்றோ நேரில் சென்று அலந்தேயைச் சந்தித்து, “பொதுவுடைமைவாதிகள் மக்களாட்சி முறைப்படி ஆட்சிக்கு வரமுடியும்” என்பதை ஒப்புக்கொண்டார். (பெரிய பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஒல்லாந்து தேசங்களில் சமூகவுடைமைப் புரட்சி அமைதியான முறையில் இடம்பெறக்கூடும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டமையும், எங்கெல்ஸ் அந்தப் பட்டியலில் ஜேர்மனியைச் சேர்த்தமையும் கவனிக்கத்தக்கது).

மணி வேலுப்பிள்ளை * 95
அலந்தே பாமரமக்களின் பரந்துபட்ட ஆதரவுடன் தனது சீர்திருத்தங் களை மேற்கொண்டார். வறிய மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப் பட்டது. புெரிய ஆதனங்கள் துண்டாடப்பட்டு பாமர மக்களுக்கு வழங்கப்பட்டன. செப்பு, நிலக்கரி, உருக்குத் தொழில்துறைகள், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. கூலிகள உயர்த்தப்பட்டன. விலைகள் நிலைநிறுத்தப்பட்டன. சலுகை விலையில் பால் விநியோ கிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. கியூபா, சீனா,வட கொறிய்ா, அல்பேனியா, வியற் நாம் முதலிய நாடுகளுடன் உறவு பூணப்பட்டது. இவைதான் அலந்தே புரிந்த குற்றங்கள் அமெரிக்க ஆட்சியாளரைப் பொறுத்த வரை அவை மாபெரும் குற்றங்கள்!
ஒரு நாட்டின் ஜனாதிபதியைச் சாகடிப்பதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றை நிரந்தரமாகத்திசைதிருப்பிவிடமுடியாது என்று அலந்தே குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி ஆவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி பதவி யால் தனக்கு உயிராபத்து நேரும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார், உணர்த்தியிருக்கிறார். காஸ்ட்றோகூட அதனை உணர்ந்திருக்கிறார். இயந்திரத்துப்பாக்கியை அன்பளிப்புச்செய்துஅதனைஉணர்த்தியிருக் கிறார். சோவியத் யூனியனும் அதனை உணர்ந்திருக்கிறது. அமெரிக்க ஆட்சியாளருடன் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கும்படி அது அலந்தே யிடம் கேட்டுக்கொண்டது. அலந்தேயின் தேசியமயமாக்கல் கொள் கையினால் அமெரிக்க பல்தேசியக் கம்பனிகள் மேற்கொண்டு கொள்ளையிலாபம் ஈட்ட முடியவில்லை. அதனால் அவையும் அமெரிக்க அரசும் சிலிமீது சீற்றம் கொண்டன. ஏதோ பேச்சுவார்த்தை நடந்தது உண்மை. சிலியும் அமெரிக்காவும் தமது பிரச்சனையைப் பேசித்தீர்க்க முடியவில்லை. ஆடும் ஓநாயும் தமது பிரச்சனையைப் பேசித்தீர்க்க முடியுமா?
அப்புறம் சிலிக்கு வெளிநாட்டு உதவி கிடைப்பதை அமெரிக்க அரசு தடுத்தது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை சிலிக்கு கடன் வழங்குவதை அது தடுத்து நிறுத்தியது. ஓர் ஆணி தன்னிலும் சிலிக்குள் செல்லக்கூடாது என்றும் சிலியை ஏழ்மையில் உழலச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் நெஞ்சுருகிக் கேட்டுக் கொண்டார். இயந்திர உபகரணங்களும் உதிரிப்பாகங்களும் கிடைக் காதபடியால் சிலியின் சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் கட்டு மானங்களும் முடங்கிப் போய்விட்டன. பொருட்களுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. நாட்டில் நெருக்கடி ஏற்

Page 50
96 * மொழியினால் அமைந்த வீடு
பட்டது. மேற்குடியினரின் உடைமைகளாய் விளங்கிய ஊடகங்கள் நெருக்கடியைப் பெரிதுபடுத்தி மேலும் மோசமாக்கின. நிலை மையைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை ஆராய்வதற்காக அலந்தே தமது கூட்டணியைக் கூட்டினார். அவருடைய சமூகவுடைமைக் கட்சியும் சிலிய பொதுவுடைமைக் கட்சியும் புரட்சிகர இடதுசாரி இயக்கமும் பங்குபற்றிய அந்தக் கூட்டத்தில் முதலிரு கட்சிகளும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆதரவை வென்றெடுக்கு முகமாக மிதவாதப் போக்கை ஆதரித்தன. மூன்றாவது கட்சி வன்முறைப் புரட்சிக்குத் தாவும் நோக்குடன் தீவிரவாதப் போக்கை வேண்டி நின்றது. ஈற்றில் அவ்விரு போக்குகளையும் ஒருசேரக் கடைப்பிடிக்க லாம் என்று அலந்தே முன்வைத்த யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டது. (1972 யூன்).
அரசு கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆதரவை வென்றெடுக்கப் பாடுபட்ட அதேவேளை அதன் அடிமட்டஆதரவாளர்கள் காணிகளை யும் தொழிற்சாலைகளையும் கைப்பற்றினார்கள். நாடு இரு துருவங் களாகப் பிளவுண்டது. சரக்கு லொறிச் சாரதிகளும் சில்லறை வியா பாரிகளும் தொழில்துறையாளர்களும் (Professionals) வேலைநிறுத் தத்தில் குதித்தார்கள். அது அரசுக்கு எதிரான முதலாளிகளின் வேலை நிறுத்தம் என்று வர்ணிக்கப்பட்டது. அரசு அதன் தொழிற் சங்கங்கள், Sy uudio 5(ypudius6ir (Neighbourhood Groups) eyp Gaviib p 600Tony விநியோகத்தை மேற்கொண்டது. எனினும் உணவுத்தட்டுப்பாடு ஏற் படுவதைத்தவிர்க்க முடியவில்லை. அதனால் அரசு நடுக்குடியினரின் ஆதரவை இழக்க நேர்ந்தது.
எனினும் 1973ல் ஆட்சிப் பேரவைக்கான தேர்தலில் அலந்தேயின் கூட்டணிக்கு 44% வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு கீழ்க்குடியினரின் ஆதரவு பெருகியதையே இது உணர்த்துகிறது. தேர்தல் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது என்பது அதன்எதிரிகளுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டார் கள். உணவுத்தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தாலும் பாதிக்கப் பட்ட காரணத்தினாலோஎன்னவோ ஆங்காங்கே தொழிலாளிகள்கூட அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தார்கள். அவர்களுள் செப்புச் சுரங்கத் தொழிலாளிகள் முக்கியமானவர்கள். வலதுசாரிகள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார்கள். ஆனால் அரசுக்கு விசுவாசமான சேனாதிபதி பிறாற்ஸ் (Prats) அந்தச் சதியை முறியடித்தார் (1973/06/19).

மணி வேலுப்பிள்ளை * 97
எனினும் வலதுசாரிகள் தமது சதிமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களுடைய ஆதரவுடன்யூலை 29ம் திகதி சரக்கு லொறிச்சாரதிகள் இரண்டாவது தடவையாக வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். அவர்கள் லொறிகளையும் பேருந்துகளையும் புகையிரதங்களையும் எரிபொருள் நிலையங்களையும் எண்ணெய்க் குழாய்களையும் நாசம் செய்தார்கள். இதற்கிடையே ஜனாதிபதி படைத்தலைமையில் செய்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த சேனாதிபதி பிறாற்ஸ் பதவி துறந்தார். அலந்தே துணைச் சேனாதிபதி பினோசேயை (Pinochet) சேனாதிபதியாக நியமித்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் படையினரில் ஒரு பிரிவினர் அரசைக் கவிழ்க்கச் செய்த சதியை முறியடிப்பதற்கு உதவிய தருணத்தில் அரசின் பலவீனத்தையும் படையின் பலத்தையும் நன்கு புரிந்துகொண்டவர் பினாசே, அலந்தேயும் பினாசேயும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அதன் பெயர் வால்பறைசோ (Valpariso) பினாசே அரசுக்கு விசுவாசமாகச் செயற் படுவார் என்று அலந்தே திடமாக நம்பினார். ஆனால் வால்பறை சோவில்தான் சதி மூண்டது. பினோசேதான் சதிபதி
சதிக்கு உடந்தையாய் இருந்த தரப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது: அமெரிக்கா, கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சி, பாசிசவாதிகள், நிலக்கிழார், தொழிலதிபர்கள், ஊடக உடைமையாளர்கள்,லொறிச் சாரதிகள், தொழில்துறையாளர்கள், சில்லறை வியாபாரிகள். இத்தனை தரப்புகளும் அலந்தேயின் ஆட்சியில் முற்றுமுழுதான சுதந்திரத்தை அனுபவித்தவர்கள். உணவுத் தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தினாலும் பெரிதும் தாக்குண்ட நடுக்குடியினரும் அரசுக்கு எதிராக அணிதிரளவே செய்தார்கள். உண்மையில் இவர் களின் மொத்த எண்ணிக்கையைவிட அரசை ஆதரித்த கீழ்க்குடியின ரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அலந்தேயின் மக்களாட்சிக்கு ஆட்பலம் கிடைத்த அளவுக்குப் படைபலமோ பொருள்வளமோ கிடைக்கவில்லை. படைபலமும் பொருள்வளமும் ஒன்றுசேர்ந்தே ஆட்பலத்தை (மக்களாட்சியை) முறியடித்தன. ஒப்பமிட்டு விடுத்த அறிக்கையில் அலந்தே பதவிதுறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அலந்தே தனது குடும்பத்துடன் நாட்டைவிட்டுப் புறப்படுவதற்குத்தணிவிமானம் ஒன்றைத் தயாராக வைத்திருப்பதாக அந்தச் சதிகாரர்கள் திரும்பத் திரும்ப அவருக்கு சேதி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

Page 51
98 * மொழியினால் அமைந்த வீடு
சதிகாரர்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டு ஒரே சமயத்தில் தங்களிடையே வானொலி மூலம் தொடர்பு கொண் டார்கள். அவர்களுடைய உரையாடல் ஒற்றுக்கேட்கப்பட்டது. சதிபதி பினோசேயுக்கும்துணைக் கடற்படை அதிபதி கர்வஜாலுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:
பினோசே : அதி உத்தமர் கவச வாகனத்தில் புறப்பட்டிருக்க
வேண்டும் என்று நினைக்கிறேன் (அதி உத்தமர் - பினோசேவின் வஞ்சப் புகழ்ச்சி!)
கர்வஜால் : இல்லை. அவன் கவச வாகனத்தில் தப்பி
ஓடவில்லை. நான் அவனுடன் தொலைபேசியில் கதைத்தேன். கவச வாகனங்கள் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டன.
பினோசே : சரி, சரி. அப்படி என்றால் நாங்கள் அவனை
வெளியே போக விடக்கூடாது. வெளியே போனால் கைதுசெய்ய வேண்டும்.
கர்வஜால் : நான் (ஜனாதிபதியின்) கடற்படைத் துணைவ
னுடனும் தொடர்புகொண்டேன். அலந்தே லா மொனிடாவில் (ஜனாதிபதி மாளிகையில்) இருப்பதை அவன் உறுதிப்படுத்தி இருக்கிறான்.
GaoTIrGay : அப்படி என்றால் நாங்கள் இவனை ஒரு கைபார்க்கத்
தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஒருத்தன் தயாராக இருக்க வேண்டும். அந்த நாயைக் கொல்வதுதான் புத்தி (நாய் எசமானைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறது!).
கர்வஜால் : சரி. கடற்படைத்துணைவனும் படைத்துறைக்
காவலர்களும் (லா மொனிடாவை விட்டு) வெளியேறுவதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
LGGeoTпGg : நாங்கள் 11 மணிக்கு லா மொனிடாவைத்தாக்க
வேண்டும். இந்தக் கிறுக்கன்கிறுங்கமாட்டான்(This cock won't surrender).

கர்வஜால்
ц5)C86лтC3gr :
கர்வஜால் :
GarrGg :
கர்வஜால் :
பினோசே :
கர்வஜால் :
பினோசே :
கர்வஜால் :
பினோசே :
f கர்வஜால் :
பினோசே :
கர்வஜால் :
மணிவேலுப்பிள்ளை * 99
தாக்குதல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நம்மவர்கள் சுற்றிவர நிலைகொண்டு தீவிரமாகத் தாக்குகிறார்கள். சீக்கிரம் பிடித்து விடுவார்கள்.
சரி. விமானம் உடனடியாகப் புறப்படும்.
அவன் விமானத்தில் ஏறிப் புறப்பட மறுத்து விட்டான்.
மறுத்துவிட்டானா? பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம் என்கிறான். நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.
சரி. அதுதான் நல்லது. நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். அவனைக் கைதுசெய்ய வேண்டும். அவனுடைய உயிரைத் தவிர வேறு எதையும் திருப்பிக் கொடுக்கக்கூடாது. அப்படித் தானே? உயிர். உடம்பு. அவனை உடனடியாக வேறொரு நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்.
சரி. புரிகிறது. அவனை நாடுகடத்துவது. அப்படித் தானே?
நாடு கடத்துவது என்றுதான் சொல்லுவது. ஆனால் அவனைக் கொண்டு பறக்கும் விமானம் விழுந்து நொருங்கப் போகிறது.
சரி. அப்போஅவன்., அவன். அவன். (சிரிப்பு).
கஸ்தாவோ (லெய்), ஒகஸ்தோ (பினோசே), நான் கதைப்பது உங்களுக்கு சரிவரக் கேட்கிறதா? பற்றிசியோ (கர்வஜால்)ஆகிய நான் இத்தால் அறியத்
தருவது என்னவென்றால், லா மொனிடாவுக்குள்
புகுந்த எங்கள் காலாட்படைக் கல்லூரிசிப்பாய்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து சேதி

Page 52
100 * மொழியினால் அமைந்த வீடு
தெரிவித்திருக்கிறார்கள். அலந்தே தற்கொலை செய்துவிட்டான். அவன் செத்துப்போனான். எங்கள் செய்தித் தொடர்பில் குறுக்கீடுகள் ஏற்படலாம். நான் நேரில் போய்ப் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் சேதி தெரிவிக்கிறேன். உங்களுக்கு
விளங்குகிறதா?
பினோசே : விளங்கிக்கொண்டேன். லெய் : சரிவர விளங்கிக்கொண்டேன். கர்வஜால் : குடும்பத்தவர்களின் விமானப் பயணம். அதற்கு
அவசரமில்லை. குடும்பத்தை அவசரப்பட்டு வெளியேற்றத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பினோசே : இப்போதைக்கு அவனை (அலந்தேயின் உடலை)
எங்கேயாவது ஒரு கொட்டிலில் கொண்டுபோய் வீசிவிட்டு, அப்புறமாக அவனையும் குடும்பத் தையும் விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டியது தான். அவர்கள் அவனை வேறொரு நாட்டில். கியூபாவில் கொண்டுபோய் அடக்கம் செய்யட்டும். நாங்கள் அவனை அடக்கம் செய்வதில் பிரச்சனை வரும். இந்தக் கிறுக்கன் சாகும்வரை எங்களுக்குப் பிரச்சனைதந்திருக்கிறான்.
மேற்படி சதியாடலின் இறுதியில் பினோசே எரிச்சலடைவதும் சினப்பதும் தெரிகிறது. அலந்தே சரணடைய மறுத்ததுதான் அதற்கான காரணம். மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி சரணடைந்தால் (பதவியிதுறந்தால்) வரலாறு சதியை ஏற்கக்கூடும், பினோசேயை மன்னிக்கக்கூடும். அலந்தே சரணடைய மறுத்தபடியால் (உயிர்துறந்த படியால்) வரலாறு சதியை ஏற்காது போகக்கூடும், பினோசேமீது குற்றம் சுமத்தக்கூடும். அந்த வகையில் பினோசே எரிந்து விழுந்ததில் அர்த்தம் இருக்கிறது. அண்மையில் பிரித்தானியாவிலும் சிலியிலும் பினோசே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமை, வரலாறு அவரையோ சதியையோ மன்னிக்கவில்லை என்பதையே புலப் படுத்துகிறது. பினோசே சொன்னது போல அலந்தே சாகும்வரை

மணி வேலுப்பிள்ளை * 101
பிரச்சனை கொடுத்திருக்கிறார். அதாவது பினோசே சாகும்வரை அலந்தே பிரசச்னை கொடுத்திருக்கிறார். நான் சாகப் போகிறேன் என்று சொல்லித்தான்பினோசே விடுதலை பெற்றிருக்கிறார்!
அலந்தே இறப்பதற்கு ஒருசில மாதங்கள் முன்னதாகசுவீடன்போக்கு வரத்து அமைச்சருடன் உரையாடியபொழுது குறிப்பிட்டிருக்கிறார்: “சிலிய மக்களாட்சியின் எதிரிகள், அவர்கள் அமெரிக்கரோ அல்லது வேறு தரப்பினரோ யாராயினும், என்னைக் கவிழ்த்தால் இந்த நாட்டின் விருத்தி தற்காலிகமாகவே தடைப்படும். சிலிய இளைஞர் கள் நாடு சீரழிக்கப்படுவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவ தில்லை. நீங்கள் ஒரு ஜனாதிபதியைத் தீர்த்துக்கட்டலாம். ஆனால் அவர் ஒரு தனி ஆள். நீங்கள் சுதந்திரசிலியைத் தீர்த்துக்கட்ட வேண்டு மாயின், இளைஞர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட நேரும்” (1972). பினோசேயின் ஆட்சியில் 3,000 பேர்கொல்லப்பட்டார்கள்.
சிலிய தேசியக் கவிஞர் பப்லோ நெருடாவுக்கு (Pablo Neruda) இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தபொழுது அலந்தே அவரைப் பாராட்டி எழுதிய கடிதத்தில் திரும்பத் திரும்ப மனித நேயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (1970). மனித நேயம் மிகுந்த அமரர் அலந்தே மக்கள் அளித்த ஆணையைக் கடைசிவரை உதறித் தள்ளவில்லை. அதனை அவர்தனது உயிருடன் பிணைத்துக் கொண்டு போயிருக்கிறார். உலக அரசியல் வரலாற்றில் அலந்தே வகிக்கும் பங்கு எத்துணை முக்கியம் என்ற வினாவுக்கு விடையளிக்கத் தலைப்படுவோர் எவரும் அவர் மக்களின் ஆணையைப் பெற்றவர் என்ற உண்மையை உணர்த்தக் கடமைப்பட்டவர்கள்.
பி.கு: இந்தக் கட்டுரையை எழுதி முடித்த பின்னர் எம்முடன் பணியாற்றும் ஓர் இஸ்பானிய மொழிபெயர்ப்பாளருடன் இதன் உள்ளடக்கம் குறித்து உரையாடிய பொழுது, தமது மொழியில் அயந்தே என்பதே சரியான உச்சரிப்பு என்று அவர் தெரிவித்தார்.

Page 53
மாஒ வழித்தோன்றிய டெங் சியாவோட்பிங்
1904-1997
0x8
பூனை
பூனை எலியைப் பிடிக்கும். அந்த வாக்கியத்தில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா வெள்ளையா என்பது முக்கியமல்ல என்ற அந்தத் தத்துவத்தை உதிர்த்தவர்: சீனப் பெருந்தலைவர் டெங் சியா வோபிங். இது ஆர்குத்தியாயினும் அரிசி ஆகட்டும் என்ற பழமொழி மூலம் ஏற்கெனவே தமிழுலகம் அறிந்த தத்துவமே!
புட்டி
டெங் சியாவோபிங் 1904 ஆகஸ்ட் 22ஆம் திகதி சீன தேசத்தில், சிச்சுவான் மாகாணத்தில், பைவன்சுன் கிராமத்தில் பிறந்தார். டெங் சியாவோபிங் என்பது சீன மொழியில் சின்னப்புட்டி என்று பொருள் படும். 1976ல் தலைவர் மாஒ மறைந்த பிற்பாடு டெங் தலைமை ஏற்பதை விரும்பியவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளை மரங்களில் கட்டித்தொங்கவிட்டுத் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதுண்டு. அதே வேளை 1989ல் தியனன்மன் சதுக்கத்தில் (சொர்க்க வாயிலில்) மாணவர்கள் கொல்லப்பட்டபொழுது கொதிப்படைந்தவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளைச் சிதறடித்துத் தமது கொதிப்பைப் புலப் படுத்தியதுமுண்டு.
குள்ளம் மாஒ சராசரிச் சீனரைவிட உயரங்கூடியவர். டெங் உயரங்குறைந்தவர் (4 - 10'). 1957ல் மாஸ்கோவில் வைத்துப் பிரதமர் குருசேவ் இந்தக்

மணி வேலுப்பிள்ளை * 103
குள்ளரை எள்ளி நகையாடியபொழுது மாஒ குறுக்கிட்டு, இந்தக் குள்ளப் பயலைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. சியாங்கை சேக்கின் 10இலட்சம் படையினரைமுறியடித்த பயல். முன்னுக்கு வரக்கூடிய பயல். என்று எச்சரித்தார். டெங்கின் மண்டையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுள் மாஒவின் கடைசி மனைவி சியாங் சிங் அம்மை யார் முக்கியமானவர். 'தொப்பிக்கே பொருந்தாத சொத்தித் தலையர் என்று டெங்கைப் பழித்தவர் அம்மையார் கல்வி
மாஒவைப் போலவே டெங்கும் வசதி படைத்த பெளத்தக் குடும்பத் தில் உதித்தவர். ஆதலால் கல்வி பயிலும் வசதி படைத்தவர். 1920ல் படித்துக்கொண்டு வேலைசெய்யும் திட்டத்துடன்அவர் பிரான்சுக்குப் புறப்பட்டார். பாரிசு மாநகரத்து கிறெப்சோ (Creusot) எஃகு - உருக்குத் தொழிற்சாலையிலும், றெனோல் (Renault) வாகனத் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். அவரை விட அவருடைய கரி கோலியின் உயரம் அதிகம் என்று அவருடன் வேலை செய்தவர்கள் கேலி செய்ததுண்டு. 1925ல் பாரிசில் வைத்தேகு என்லாயும் டெங்கும் முதன்முதல் சந்தித்துக் கொண்டார்கள். சூவும் பாரிசில் படித்துக் கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தார். சூவின் மாடிக் கூடத்தில் டெங் சிறிது காலம் தங்கியிருந்தார். பொதுவுடைமையாள ராகிய சூவின் உறவினால் டெங்கும் பொதுவுடைமையாளரானார். 1926ல் டெங் பாரிசை விட்டு மாஸ்கோ சென்று, அங்கு சிறிது காலம் பயின்று, 1927ல் சீனா திரும்பினார். பழக்கம் மாஒவைப் போலவே டெங்கும் ஒரு நீச்சல் மன்னர், ஒரு புகைத்தல் பிரியர். மாஒ இடைவிட்டுப் புகைப்பவர், டெங் இடைவிடாது புகைப்பவர் - முதல் வெண்சுருட்டில் அடுத்த வெண்சுருட்டை மூட்டிப் புகைப்பவர். அத்துடன் (Bridge) சீட்டாட்டம் என்றால் சீமானுக்கு ஒரே கொண்டாட்டம். ஒரு தடவை. டெங் தலைநகர் பீஜிங்கிலிருந்து 1,200 மைல் தூரத்தில் இருந்த வேளை, அங்கு தகுந்த சீட்டாடிகள் இல்லாதபடியால், தலைநகரிலிருந்து தனி விமானத்தில் தனது வாடிக்கையான கூட்டாளிகளை வரவழைத்துச் சீட்டாடிய துண்டு.
பதவி
1934ஆம், 35ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணம் உட்பட மாஒவின் தலைமையில் நடந்தேறிய போராட்டங்கள்

Page 54
104 * மொழியினால் அமைந்த வீடு
அனைத்திலும் மாஒவே மெச்சும் வண்ணம் டெங் அரும்பெருஞ் சாதனைகளை நிகழ்த்தினார். 1950ல் மாஒஇந்தக்குள்ள மாமறவனைத் தென்மேற்குச் சீனாவில் தமது பதிலாட்சியாளராய் அமர்த்தினார். 1952ல் மாஒ மறுபடியும் டெங்கைத் தலைநகருக்கு வரவழைத்து, துணைப் பிரதமராக்கி, பொருளாதார - நிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தினார். அதன் பெறுபேறாக ஏற்கெனவே பொருளாதாரப் பணிகளைக் கவனித்து வந்த ஜனாதிபதி லியு சாசியுடனும், நிருவாக அலுவல்களைக் கவனித்து வந்த பிரதமர் சூ என்லாயுடனும் இணைந்து செயற்படும் வாய்ப்பு டெங்கிற்குக் கிட்டியது. 1954ல் மாஒ தம் உள்ளங்கவர்ந்த குள்ளரைச் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.
கொள்கை
1965ல் ஜனாதிபதி லியு பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங் களை முன்வைத்தார். அவை முதலாளித்துவத்துக்கு இட்டுச்செல்லும் என்று நினைத்து வெகுண்டெழுந்த மாஓ, லியுவை ஒரு முதலாளித்துவ வாதி என்று சாடினார். முதலாளித்துவப் போக்கு புலப்படுவது அப்படி ஒன்றும் பயங்கரமான சங்கதி அல்ல என்று லியு பதிலடி கொடுத்தார். போதாக்குறைக்கு லியுவை ஆதரித்த டெங், பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா வெள்ளையா என்பது முக்கியமல்ல (கொள்கையால் பயன் விளை கிறதா அல்லவா என்பதே முக்கியம், அது தனியுடைமைக் கொள் கையா பொதுவுடைமைக் கொள்கையாஎன்பது முக்கியமல்ல) என்று தர்க்கித்தார். அதாவது மாஒ வளர்த்த பூனை அவருக்குக் குறுக்கே ஒடித் துர்க்குறிகாட்டிவிட்டது!
புறவாழ்வு தகர்த்தெறியுங்கள் தலைமையகத்தை என்று ஆணை இட்டுவிட்டார் மாஓ, 1966ல் மாஓ அப்படி ஆணைஇட்டது முதல் 1976ல் அவர்மாளும் வரை நிகழ்ந்த கலாசாரப் புரட்சி காலப்பகுதியில் மாஒவின் உடந்தை யுடன், சியாங் சிங் அம்மையார் உள்ளடங்கிய நால்வர் குழுவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செங் காவலர்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்களுள் லியுவும் டெங்கும் முக்கியமானவர்கள். மாஓவுடன் நேரடியாக மோதியபடியால் லியு சிறைசெல்ல நேர்ந்தது. ஜனாதிபதி லியு சிறைக் கைதியாகவே மடிந்தார். உருத்திராட்சப் பூனையாகிய டெங் பதவி குறைக்கப்பட்டு, ஜியாங்சி மாகாணத்தில் ஓர் உழவு யந்திரத் தொழிற்சாலையில் உடல் வேலைக்கு அமர்த்தப் பட்டார். பதவி குறைப்பு அவர் மனதில் வெப்பியாரத்தை ஏற்படுத்தி

மணி வேலுப்பிள்ளை * 105
யிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் கலாசாரப் புரட்சிக்காலப் பகுதியில் நால்வர் குழு என்னைக் கொல்லப் பார்த்தது, தலைவர் மாஒவே என்னைக் காத்தது என்று டெங் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
மறுவாழ்வு
1972ல் பிரதமர்சூவைப் புற்றுநோய் சூழ்ந்து கொண்டது. அவருடைய அலுவலகக் கோப்புகளை நீட்டுக்கு அடுக்கினால் அவை மாபெருஞ் சீன மதிலையே விஞ்சிவிடும். ஆதலால் சூவின் பளுவைக் குறைப் பதற்கு டெங்கை மீண்டும் பீஜிங்கிற்கு வரவழைத்து,துணைப்பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆணை பிறப்பித்தார் மாஓ, டெங்கை மீண்டும் பதவியில் அமர்த்தும் தறுவாயில் மாஒ கூறிய வார்த்தைகள் திட்டவட்டமானவை: டெங் ஒரு திறமைசாலி. அவர் பஞ்சினுள் பொதிந்த ஊசி போன்றவர்.கருத்துக்கள் மிகுந்தவர். அவர் முட்டாள்தனமாக மோதுவதில்லை. பொறுப்புணர்ச்சி மிகுந்தவர். அவருடைய கணிப்புகள் முற்றுமுழுதானவை. நடவடிக்கைகள் திட்பமானவை. என்று மாஓ டெங்கைப் போற்றினார். குற்றச்சாட்டு மூப்பும் பிணியும் பையப்பைய மாஒவையும் பீடிக்கவே செய்தன. மாஓவுக்கும் வெளியுலகுக்கும் இடையே அவருடைய பெறாமகன் மாஒ யுவான்சின், தாதி சாங் யுவெங், மெய்காவலர் காங் செங், மொழிபெயர்ப்பாளர்கள் வாங் கைறொங், நான்சி ராங் ஆகியோர் இடம்பிடித்துக் கொண்டார்கள். கலாசாரப் புரட்சி காலப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மூட்டிய தீயை எல்லாம் பிரதமர் சூ அணைத்து விட்டார். நீங்கள் ஆக்கியவற்றை எல்லாம் அழிப்பதற்குச் சூவும் டெங்கும் திட்டம் தீட்டியுள்ளார்கள். டெங் உங்களிடம் வந்து உத்தரவு பெறுவதில்லை. பிரச்சனைக்கு மூல காரணம் டெங். அவர் உங்களைப் பற்றியோ கலாசாரப் புரட்சியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. அவர் லியுவையும் சூவையும் போற்றுகிறார். உற்பத்தி, உற்பத்தி என்று கத்தித் திரிகிறார். என்று அவர்கள் ஆள் மாறி மாஒவிடம் ஒதினார்கள்.
பழி 1976 ஜனவரி 8ஆம்தேதி பிரதமர் சூ மறைந்தார். டெங் இரங்கலுரை
நிகழ்த்தினார். சூவின் இறுதிச் சடங்கில் மாஒ கலந்து கொள்ளவு மில்லை, இரங்கல் செய்தி வெளியிடவுமில்லை. எனினும் ஏறத்தாழ

Page 55
106 * மொழியினால் அமைந்த வீடு
50ஆண்டுகள் தமது பிரதமராகவும் சாணக்கியராகவும் திகழ்ந்த அமரர் சூவை மாஒ அடிக்கடி நினைந்துருகியதுண்டு. கிங் மிங் (சித்திரைப்) பருவத்தில், தியனன்மன் சதுக்கத்தில் அமரர் சூவை நினைவு கூர்வதற்குத் திரண்ட இலட்சக்கணக்கான பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக் கணக்கா னோர் மாண்டார்கள். மாண்ட பழி டெங் மீது சுமத்தப்பட்டது. அப்பொழுது மாஒவைத் தடுத்தாட்கொள்வதற்குப் பிரதமர் சூ உயிரோடு இருக்கவில்லை. மாஒவைத் தடுத்தாட்கொள்ளும் ஆற்றல் வேறெவருக்கும் இருந்ததில்லை. மாஒ மீண்டும் பூனைக்குச் சூடு போட்டுவிட்டு, குவா குவோபெங்கைப் பதவியில் அமர்த்தினார்.
வழித்தோன்றல் பிரதமர் சூதம்மை வருத்தம் பார்க்க வந்த சேனாதிபதி யி ஜியான்யிங் கிடம் டெங்கே எனது வழித்தோன்றல் என்று வழியுறுத்தியிருந்தார். 1976 செத்தம்பர் 9ஆம் திகதி மாஒமறைந்த பிற்பாடு சூவின் ஆசையை யீ நிறைவேற்றி வைத்தார். 1977ல் டெங் சீனாவின் பெருந்தலைவரா னார். ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்!
கருத்தியல் டெங்கின் கருத்துக்கள் சில பின்வருமாறு:
மாஒவின் சாதனைகள் அசாதாரணமானவை, தவறுகள் சாதாரண
DfToo) G.
மாஒ சொன்னது சரி, செய்தது பிழை. மாஒ ஒரு மனிதர், மாஒ ஒரு கடவுள் அல்லர். மார்க்சியம் ஒரு தத்துவம், மார்க்சியம் ஒரு மதம் அல்ல. பொதுவுடைமை என்பது பொதுவறுமை ஆகாது. அரசியல் ஒழிக, பொருளியல் எழுக. சொல் மங்குக, செயல் ஓங்குக. ஆற்றலுக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற கூலி. உண்மையின் உரைகல் நடைமுறை. நிகழ்விலிருந்து உண்மையை அறிக. செல்வம் சிறப்புத் தரும்.
புதுமொழி
டெங்கின் கூற்றுக்களுள் மார்க்சின் கூற்றுக்களும் மாஒவின் கூற்றுக் களும் பொதிந்துள்ளன. எனினும் டெங் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கத்

மணி வேலுப்பிள்ளை * 107
தவறவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் டெங்கின் பெயர் போன கூற்று: பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனைகறுப்பா வெள்ளையாஎன்பது முக்கியமல்ல. இதே கருத்தை வலியுறுத்துவதற்கு டெங் கையாண்ட இன்னொரு கூற்று: உண்மையின் உரைகல் நடைமுறை. உண்மையில் இது டெங் மா ஒவிடமும், மாஒமார்க்சிடமும், மார்க்ஸ் பழமொழியிடமும் இரவல் Gupp goldness. John Simpson Gginggig, The Concise Oxford Dictionary of Proverbs distaSaitulg. The proof of the pudding is in the eating (தின்பதால் தெரியும் பணியாரத்தின் திறம்) என்ற பழ மொழி 1300ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. மார்க்ஸ் இலண்டனில் வைத்து இந்தப் பழமொழியை அறிந்திருப்பார் என்பதில் ஐய மில்லை. பழமொழியில் புதுமொழி கண்டவர் மார்க்ஸ்!
சந்தை
சீனா உட்பட முதலாளித்துவம் ஓங்கிய இன்றைய உலகில் அடிக்கடி அடிபடும் சொல்தொடர்கள்: சந்தைப் பொருளாதாரம், கட்டுப் பாடற்ற போட்டி, சுதந்திர வர்த்தகம். இவை யாவும் ஒத்த சொல் தொடர்கள். தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இத்தகைய சொல்தொடர்களில் எதுவிதப் புதுமையும் இல்லை. கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!
விமர்சனம்
குருசேவ் ஸ்டாலினைச்சாடியதிலிருந்து பாடம் கற்ற மாஒ நூறு பூக்கள் மலரட்டும், நூறு நெறிகள் பிறக்கட்டும் என்று ஆணையிட்டுக் கருத்துச் சுதந்திரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களி னால் தமது தலைமை ஆட்டங் காண்பது போல் தென்படவே, மாஒ பூக்களையும் கொய்து, நெறிகளையும் நெரித்துவிட்டார். அது போலவே டெங்கும் சுவரின்றிச் சித்திரம் வரைய இயலாது எனக் கண்டு, குடியாட்சி மதிலுக்கு (கருத்துச் சுதந்திரத்துக்கு) அடிகோலி னார். அப்புறம் சிறிது காலம் மதில் மேல் பூனை போல் அமர்ந்திருந் தார். ஈற்றில் மதில் மேல் விளம்பரம் ஒட்டாதீர்என்று கட்டளை இட்டு விட்டார்.

Page 56
108 * மொழியினால் அமைந்த வீடு
அதிபதி
மாஒஒன்றே சூரியன் என்றே சொன்னவர். மாஒ அன்றே சொன்னதை டெங் நன்றே கேட்டவர். எனவே மாஒ ஜனாதிபதி லியுவையும் பாதுகாப்பு அமைச்சர் பெங் தீகுவாவையும் வெறும் வால் வெள்ளி களாய் உதிரச் செய்தது போலவே, டெங்கும் கட்சிச் செயலாளர் கூ யாவோபாங்கையும் பிரதமர் சாவோ சியாங்கையும் வால் வெள்ளி களாய் உதிர்ச் செய்துவிட்டார்.
பலி
1989ல் தியனன்மன் சதுக்கத்தில் மாணவர்கள் குடியாட்சி உரிமைகள் நாடிக் கிளர்ந்தெழுந்தார்கள். அப்பொழுது சீனாவுக்குச் சென்றிருந்த சோவியத் ஜனாதிபதி கோபச்சேவ் அந்த மாணவர்களுடன் தொடர்பு கொண்டதற்காக டெங் அவரைக் கோபித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. கோபச்சேவ் சோவியத் பேரரசைக் குலைத்த பிற்பாடு கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை அரசுகள் நிலைகுலைந்தது கண்டு டெங் விழித்துக்கொண்டார். அப்புறம் செஞ் சீன வரலாற்றில் முதல்தடவையாக மாணவர்கள்மீது செஞ்சேனைஏவிவிடப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையின்படி ஏறக்குறைய 1,000 மாணவர்கள் பலியானார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு இரத்தம் குடித்தது!
துரோகம்
துரோகிகளின் சேவை புரட்சிக்குத்தேவை என்றார் லெனின். துரோகி கள் இல்லை என்றால் ஒரு சில விசுவாசிகளைத் துரோகிகளாக்க வேண்டியதுதான் லெனின் இறக்கும் வரை பாதுகாப்பு அமைச்சராக வும் செம்படைச் சிற்பியாகவும் திகழ்ந்ததுரொஸ்கியை ஒருதுரோகி என்றார் ஸ்டாலின். சிறந்த பொதுவுடைமையாளராய் விளங்குவது எப்படி? என்ற நூலை எழுதிய லியுவை ஒரு பொதுவுடைமைக் குரவர் என்று போற்றியவர் டெங். லியுவைத் தமது வழித்தோன்றலாகவும் ஜனாதிபதியாகவும் அமர்த்தியவர் மாஓ, அப்புறம் லியுவை ஒரு துரோகி என்று தூற்றி, சிறையில் அடைத்து, உணவோ மருந்தோ இன்றி மடிய விட்டவர் மாஒ. கூ யாபோவாங்கைக் கட்சிச் செயலாள ராகவும், சாவோ சியாங்கைப் பிரதமராகவும் நியமித்தவர் டெங்.

மணி வேலுப்பிள்ளை * 109
அப்புறம் இருவரையும் துரோகிகள் என்று பறைசாற்றிப் பதவி நீக்கியவர் டெங். இருவரும் பூனைக்கு மணி கட்டப்போய் பூனை யிடம் அகப்பட்ட எலிகள்
மிளகாய்
கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவி யிருந்தது.
ஒரு தடவை தலைவர் மாஒ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம்விரும்பி மிளகாயைத்தின்ன வைக்க முடியும்? என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்றுவிடும் என்றார் சூ. பூனையின் வாயை ஒரு குறட்டியால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் சூ தே. பூனை மனம்விரும்பி மிளகாயைத் தின்னவேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன? என்று அவர்கள் மாஒவிடம் திருப்பிக் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உரஞ்சி விட வேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின்புறத்தை நக்கு நக்கென்று நக்கும் - உறைப்பை நக்கிப் பழகி விடும். அப்புறம் அது மிளகாயை மனம்விரும்பித்தின்னத் தொடங்கிவிடும் என்றார் மாஓ!
எலி
கருத்தியலே பொருளியலைத்தீர்மானிக்க வேண்டும் என்ற மாஒவின் சிந்தனையையே இந்த விடுகதை உணர்த்துகின்றது. லியு, டெங் உட்படச் சீனர்கள் அனைவரும் தமது சிந்தனையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்தவற்காகவே மாஒ கலாசாரப் புரட்சியை மேற்கொண்டார். எனினும் 1976ல் மாஒ மாண்ட பிற்பாடு பூனை மீண்டும் எலியைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது - பொருளியலே கருத்தியலைத் தீர்மானிக்கலாயிற்று. ஏற்கெனவே உறைப்புக்குப் பழக்கப்பட்ட பூனை இப்பொழுது இடைக்கிடை மிளகாயில் ஒரு கடி கடிக்கத் தவறுவதில்லை - அதில் பூனை புதிய சுவை கண்டுவிட்டது (தியனன்மன் படுகொலை)

Page 57
110 * மொழியினால் அமைந்த வீடு புலி
இப்பொழுது பூனை புலியாகிவிட்டது - சீனா இன்றைய உலகின் மாபெரும் பொருளாதாரப் புலியாகிவிட்டது. மாஓ நாடிய மாபெரும் பாய்ச்சலை சீனப் புலி பாய்ந்துவிட்டது. மாஒவின் கனவை டெங் நனவாக்கிச்சென்றுள்ளார். பூனையைக் கொண்டு மிளகாயைப் புசிக்க வைப்பதற்குப் பதிலாக, எலியைப் புசிக்க விட்டதன் மூலமே டெங் அதனைச்சாதித்தார். எனினும் தமது கனவு நனவாகிய விதத்தை மாஒ ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதில் ஐயமில்லை. சீனாவில் மீண்டும் முதலாளித்துவம் தலைதூக்கக்கூடும் என்று மாஒ தமது வாரிசாகிய குவாகுவோபெங்கிடம் தெரிவித்த ஆரூடத்தையே டெங் மெய்ப் பித்திருக்கிறார்!
சிலை
லியு சாசி போன்றவர்கள் என்னை ஒரு புத்த விக்கரகமாக்கிப் பூசை அறையில் பூட்டி வைக்க முற்பட்டார்கள் என்று மாஒகர்ச்சித்ததுண்டு. எனினும் சர்வாதிகாரத்தின் தலையாய அம்சங்களுள் ஒன்று: ஆள் வழிபாடு. குருசேவ், டெங் இருவரும் ஆள் வழிபாட்டை அறவே வெறுத்தார்கள். குருசேவ் ஸ்டாலினைக் காரசாரமாகச் சாடினார். டெங் மாஓவை நாசூக்காக விமர்சித்தார். டெங் மாஒவின் படங் களைச் சிறுப்பித்தார் அல்லது அகற்றுவித்தார். தியனன்மன் சதுக்கத்தில் இன்று காணப்படும் மாஒவின் படம் அன்று பன்மடங்கு பெரியதாய் இருந்தது. மறுபுறம், தமது படங்கள் பாவிக்கப்படுவதை டெங் அனுமதிக்கவில்லை. மாஒவின் சின்னங்களுக்குத் தம்மால் நேர்ந்த கதி, தமது சின்னங்களுக்குத் தமது வழித்தோன்றல்களால் நேர்ந்துவிடலாம் என்று டெங் அஞ்சியிருக்கக்கூடும். மக்கள் என்னை மாபெரும் ஆசான், மாபெரும் தலைவர், மாபெரும் சேனாதிபதி, மாபெரும் மீகாமன் என்று வர்ணிக்கிறார்கள். இவற்றுள் வெறும் ஆசான் என்ற அடைமொழிமாத்திரமே நிலைக்கும் என்று 1970ல் மாஒ (எட்கார் சினோவிடம்) தெரிவித்தார். எனினும் இன்றைய சீனாவில் தோழர் மாஒ சேதுங் என்ற பிரயோகம் மாத்திரமே நிலைத்துள்ள்து.
குடும்பம்
சீனா என்ற மாபெரும் குடும்பத்தைக் கட்டியாள்வதில் ஈடுபட்ட மாஓவுக்குத் தமது சொந்தக் குடும்பத்தைக் கட்டியாள்வதற்கு

மணி வேலுப்பிள்ளை * 111
வாய்ப்புக்கிட்டவில்லை. மாஒவின்புதல்வர்களுள் ஒருவராகிய மாஒ அன்யிங் கொறியாவில் அமெரிக்கரின் குண்டுத் தாக்குதலுக்குப் பலியான பொழுது அன்யிங்கின் உடலை என்ன செய்வது? என்று கேட்டு வட கொறியர்கள் சேதி அனுப்பினார்கள். அதற்கு மற்றச் சீன வீரர்களின் உடல்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதையே அன்யிங்கின்உடலுக்கும் செய்யுங்கள்என்றுமாஓ பதில் அனுப்பினார் - அன்யிங் வட கொறிய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார்
டெங் குடும்பத்தவர்களின் கதை வேறு. ‘என் தந்தை; டெங் சியா வோபிங்' என்ற நூலை எழுதிய டெங் றொங் தோழர் டெங்கின் புதல்வி. பொது அரசியல் திணைக்களத்தில் பணிபுரியும் றொங்தனது பிதாவின்தலையாய மொழிவாளராக விளங்கினார். பொது அரசியல் திணைக்களமே செஞ் சேனையின் ஆணைப்பீடம். அதற்கும் பல் தொழினுட்பவியல் தாபனத்துக்கும் (Polytechnologies Inc.) இடையே தொடர்புண்டு. இத்தாபனத்தின் அதிபர் கீ பிங். இவரே றொங்கின் கணவர். டெங்கின் மருமகன். றொங்கும் பிங்கும் கலா சாரப் புரட்சிக் காலகட்டத்தில் நாட்டுப் புறத்துக்கு அனுப்பப்பட்ட வேளையில் ஒருவரை ஒருவர் சந்தித்து, காதலித்து, மணம் புரிந்த வர்கள். டெங் ஆட்சி ஏற்றதும் மகளும் மருமகனும் அமெரிக்கா சென்று, சீனத்தூதரகத்தில் பணியாற்றுகையில், வாசிங்டனில் வாழும் ஆயுத வியாபாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்புறம் சீனா திரும்பி ஆயுத வியாபாரத்தில் இறங்கி விட்டார்கள். டெங்கின் இன்னொரு மகள் ஒர் ஒவியர். இன்னொருவர் ஒரு பிரதி அமைச்சர். மூத்த மகன் பூ பெங் கலாசாரப் புரட்சிக் காலத்தில் செங் காவலர்களின் கொடுமை தாங்காது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யத்தலைப்பட்டபொழுதுகால் முறிந்தவர். சில்லுக் கதிரையில் நடமாடும் பூ பெங் சீன அங்கவீனர் சமாசத்தின் அதிபராக விளங்குகின்றார். அமெரிக்காவில் பயின்ற டெங்கின் கடைக் குட்டி சங்காயிலும் கொங்கொங்கிலும் ஆதனம் கொண்ட ஒர் அரச நிறுவனத்தின் அதிபர். கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் முதலாளித்துவப் பாதையில் செல்லும் இரண்டாம் இடத்தவர் என்று டெங் சாடப்பட்டமை நினைவு கூரத்தக்கது (முதலாம் இடத்தவர்: ஜனாதிபதி லியுசாசி). n

Page 58
112 * மொழியினால் அமைந்த வீடு
கணிப்பு
1973ல் டெங்கை மக்கள் விடுதலைச்சேனையின்அதிபதியாக நியமித்த வேளை, அவரிடம் (ஒரு சீனப் பேரரசருக்கு நிகழ்ந்ததை மனத்தில் வைத்து) உனக்கு நல்ல முடிவு கிட்டாது. நீ இறந்த பிறகு உனது உடம்புக்குப் போட்டு வெளுப்பார்கள் என்று மாஓ தெரிவித்தார். எனக்கு ஏன் வெளுக்க வேண்டும்? என்று ஏக்கத்துடன் கேட்டார் டெங். ஏனென்றால் நீசில தவறுகள் இழைத்திருக்கிறாய். நீ செய்தது 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்றார் மாஒ.
நிம்மதியுடன் டெங் (மாஒவின் கணிப்பின்படி) சிறந்த மார்க்சிச - லெனினிச வாதியாகிய ஸ்டாலின் செய்ததும் 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை அல்லவா? என்று கேட்டார். மாஓவும் டெங்கும் வாய்விட்டுச் சிரித்தார்கள். தாம் புரிந்தது 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்பது மாஒவின் சொந்தக் கணிப்பு. ஸ்டாலின் புரிந்ததும் 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்பதும் மாஒவின் கணிப்பு. மாஒவின் இவ்விரு கணிப்புகளும் சரியே என்பது டெங்கின் தீர்ப்பு. தனது சாதனை 50க்கு 50 என்பது டெங்கின் தாழ்மையான கருத்து.


Page 59
அன்னம்