கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

Page 1
மக்கள் இலக்கியம் பற்றி.
மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம் மக்களின் சார்பான இலக்கியம் மக்களைச் சென்றடையும் இலக்கியம் மக்களை விழிப்யூட்டும் இலக்கியம் மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடத் தூண்டும் இலக்கியம் மக்களால் உருவாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக்கியம் என்று பலவாறாக நாம் நோக்கலாம். இவற்றுள் அதி முக்கியமானது கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பணிபுடையதாகும் அதை நாம் வந்தடைவதாயின் மக்களின் ஆளுமை முதனிமைப் படுத்தப்பட வேண்டும் இரண்டு சூழ்நிலைகளில் அதற்கான வாய்ப்பை நாம் பெற இடம் உணர்டு ஒன்று உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழல் மற்றது வெகுசனப் போராட்டம் ஒன்று உருவாகி வலுப்பெறும் சூழல் அவற்றுக்கு அத்திவாரம் இடும்வகையில் இன்றைய இலக்கியப் பணிகள் செயற்பட முடியும்.
எனவே மக்கள் இலக்கியம் என்பது இன்ன வகையினது மட்டுமே என்று மட்டுப்படுத்துவது நியாயமாகாது மக்கள் இலக்கியத்தின் அவசியமான தேவையாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமாயின் அது அத்தகைய இலக்கியம் மக்களிட மிருந்து அந்நியப்பட்டு நில்லாமை எனலாம் மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகிற படைப்பாளி மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில் அவருடைய கருத்தில் மக்கள் அவரை ஒத்த படைப்புத்திறன் அற்றவர்கள் மட்டுமில்லாமல் அவருடைய படைப்பைச் சரியாக உணருந் திறன் அற்றவர் களாகவும் இருப்பர்
மக்கள் மனதில் உள்ள அழகுணர்வை அவர்களே அடையாளம் காணுகிறபோது அவர்கள் அருமையான படைப் பாளிகளாகின்றனர். அவர்களது வாழ்வின் அனுபவங்கள் கலை வடிவு பெறுகின்றன மெய்யான மக்கள் இலக்கியம் அங்கு
உருவாகிறது

如 亚 |- 初 |- €
■ K이

Page 2

எதிர்ப்பு இலக்கியமும்
எசமானர்களும்
சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Title Author
First Edition Printed by
Published by
Distributers
Price
தலைப்பு
ஆசிரியர்
முதல்பதிப்பு
அச்சு
வெளியீடு
விநியோகம்
விலை
Literature of Protest and the Masters S. Sivasegaram
May, 2000
Techno Print, Dehiwala. Dhesiya Kalai Ilakikiyap Peravai
South Asian Books, Vasantham (Pvt) Ltd, S 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - 11 Tel: 335844 Fax: 075-524358
Rs... 50.00
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்
சி. சிவசேகரம்
2000 வைகாசி
டெக்னோ பிரின்ட், தெஹிவளை தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிட்டட் 6166 44, 365 црпц. கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி, கொழும்பு - 11. தொலைபேசி : 335844 தொலைநகல் : 075-524358
ரூபா. 50.00

அறிமுகக் குறிப்புக்கள்
g ந்நூலுக்கு விரிவான முன்னுரைக்கான தேவை இல்லை என்று நினைக்கின்றேன். மாக்ஸிய இலக்கிய நோக்குப் பற்றிய விவாதம் வேறுபட்ட நோக்கங்கட்காக நடைபெற்று வந்துள்ளது.
உலகு பற்றிய மாக்ஸியப் பார்வையைப் போன்று, மாக்ஸிய இலக்கியப் பார்வையும் காலத்துடன் விரிவு பெற்று வந்துள்ள ஒன்று. அதன் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. அனுபவத்தின் அடிப்படையில் அவை திருத்தப்பட்டே வந்துள்ளன, எனினும் சில தவறுகளையே ஆதாரமாகக் கொண்டு மாக்ஸியத்துக்கும் மாக்ஸிய இலக்கிய நோக்குக்கும் மாசு கற்பிக்கும் முனைப்புடன் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. இன்னொருபுறம், மாக்ஸியம் பற்றிய விறைப்பான பார்வையை இலக்கியத் தளத்திலும் பிரயோகிக்கும் போக்கு உள்ளது. இதைவிட, "முன்னாள் மாக்ஸியவாதிகள்" எனவும், "இன்னமும் கொஞ்சம் மாக்ஸியவாதி தான்" எனவும் பின்னோக்கிய பர்ர்வையின் பேரிலும் தம் கடந்தகாலத் தவறுகளை மூடி மறைத்து மற்றவ்ர் மீதும் மாக்ஸிய அணுகுமுறை மீதும் பழி போடும் பிழைப்பு முயற்சிகளும் தொடர்கின்றன. இவர்களால் தூண்டப்படுகின்ற குழப்பமான சிந்தனைகளும் பின் நவீனத்துவம் உட்பட்ட மாக்ஸிய விரோத அணுகுமுறைகளும் இன்றைய சிரமமான சூழலில்நல்ல சக்திகளை மனந்தளரச் செய்வதில் மும்முரமாக நிற்கின்றன. இதற்கு முகம் கொடுப்பதற்கான தேவையைச் சமூக மாற்றத்துக்கான படைப்பாளிகள் உணர்கின்றனர். அவர்களுடைய இலக்கியப் பணி, இலக்கியம் பற்றிய கொள்கைத் தெளிவின்றி தன் இலக்கு நோக்கி நகர முடியாது.
மேற்கூறிய பின்னணியில் படைப்பிலக்கியம் பற்றியும் திறனாய்வின் தேவைகள் பற்றியும் அண்மைக் காலத்தில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. முதலாவது தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தில் 1999ல் வந்தது.
p

Page 4
இரண்டாவது, தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ்ப்பாணத்தில் 1999 முற்பகுதியில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் 150ம் ஆண்டு நிறைவைக் குறித்து நடத்திய கருத்தரங்கிற்காக எழுதி அங்கு அளிக்கப்பட்டது. மூன்றாவது, "தாயகம்" சஞ்சிகையின் வெள்ளிவிழாச் சிறப்பிதழுக்காக எழுதி இன்றைய நெருக்கடியால் தாமதமாகியுள்ளது. இறுதியானது, தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெள்ளிவிழாச் சிறப்பிதழான "புது வசந்தம்" மலரில் 1999ல் வெளியானது.
கட்டுரைகளின் குறைநிறைகள் போக, அவை எழுப்பும் வினாக்கள் விரிவாக விவாதிக்கப்படுவது மாக்ஸிய, வெகுஜன இலக்கியப் பணி. கட்குப் பயனுள்ளதாயிருக்கும் எனும் நோக்கில் அவை இங்கு நூல்வடிவு பெறுகின்றன. நூலில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் எதுவும் முடிந்த முடிவானதல்ல. எல்லாமே கேள்விக்கு உட்பட்டதாக வேண்டும் என்ற மாக்ஸிய அணுகுமுறைக்கு அவையும் ஆளாக வேண்டும். மக்கள் இலக்கியக் கோட்பாடு பற்றிய கருத்தாடல்கள் மேலும் விரிவு பெற்று வலியதொரு மக்கள் இலக்கிய இயக்கம் எழுவதற்கான தேவை இன்று பெரியது. அந்த நோக்கில் இந்த நூலின் வரவு ஒரு சிறுபங்கை ஆற்றும் என்ற எதிர்பார்ப்புடன் இந்நூலை வாசகர்கட்கு முன் வைக்கின்றேன்.
இந்நூலில் உள்ள கட்டுரைகளை எழுத ஊக்குவித்த நண்பர்கள் செந்திவேல்,தணிகாசலம், இரவீந்திரன், தேவராஜா ஆகியோருக்கு என் நன்றிகள். இந்நூலின் அச்சாக்கத்தில் உதவிய கேசவன் தியாகராஜா அவர்கட்கும் Tெக்னோ பிறின்றர்ஸினருக்கும் வெளியிட முன்வந்த தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள்.
சி.சிவசேகரம் பேராதனை
1605-2000,

பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை மக்கள் பங்குபெறும் வெகுஜனப் பண்பாட்டுத் தளத்தை அமைக்கும் இலக்கியப்பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது.
இலக்கியம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நில்லாமல், மக்களின் ஆளுமையை முதன்மைப்படுத்த வேண்டுமெனில் இலக்கிய இயக்கங்கள் தமது உலக நோக்கையும் சமுதாய இலக்கையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதற்கான முன் நிபந்தனையாக கலை-இலக்கியக் கோட்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் கோட்பாட்டின் உரைகல் மக்களின் இலக்கியப் பண்பாடும் பங்குபற்றலுமே ஆகும்.
சமகால தமிழ் இலக்கிய இயக்கத்துடன் இணைந்து செயற்படும் ஒருவராகப் பேராசியர் சி. சிவசேகரம் விளங்குவதனால் மக்கள் கலைஇலக்கியக் கோட்பாட்டினைக் கண்டறிவதற்கான தேடுதல் முயற்சியின் தொடர்ச்சியை இந்நூலில் நாம் தரிசிக்கலாம். . . . . ;
இந்நூலில், மாக்ஸிய இலக்கியப் பார்வை மீது பழிபோடும் பின் நவீனத்துவ முயற்சிகள், சமூக மாற்றத்துக்கான படைப்பாளிகளின் இலக்கியப் பணிக்கான இலக்கு, மாக்ஸிய வெகுஜன இலக்கியப் பணி, இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் - காலத்துக்கும் இடையிலான உறவு, புதிய மாயாவாதமும் பொதுமக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும், எதிர்ப்பு இலக்கியத்தின் மீது எசமான வர்க்கம் கையாளும் தந்திரோபாயங்கள், தூய இலக்கியம் - அமர இலக்கியம்-உன்னத இலக்கியங்கள் போன்ற சொல்லாடல்கள், தகவல் திரிப்பு யுகம், புத்தி ஜீவி. களின் சபல புத்தியை மூலதனமாக்கும் என். ஜி. ஒக்களும் அவற்றின் அரசியலற்ற இலக்கிய செயற்பாடுகளும், வணிக இலக்கியமும் நுகர்வுப் பண்பாடும், நச்சு இலக்கியம் நசிவுச் சிந்தனை என்பனவும், தனி மனித வாதமும் உன்னதங்களும், கும்பல் கலாச்சாரம் என்ற அழகியல் பார்வையின் மேதகைமை, புத்திஜீவிகளின் போலி மனப்பாங்கு ஆகியவை பற்றிய பயனுள்ள வினாக்கள் எழுப்பப்படுகின்றன.

Page 5
மேலும், இந்நூலில் மக்கள் நலனுக்கான இலக்கியம், மக்களின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் இலக்கியம், மக்களிடம் படைப்பாளி. யின் தன்னடக்கம், படைப்புக்களின் ஊற்று மூலம் மனித வாழ்வே என்பதும், வெகுஜன அரசியல் விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பு வதில் மக்கள் இலக்கியப்பணி பற்றியும் ஆராயப்பட்டுள்ளதுடன் மக்கள் இலக்கியக் கோட்பாட்டின் அழகியல் நெறிகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பேராசிரியர் சிவசேகரத்தின் 'மரபும் மாக்ஸிய வாதிகளும்', என்ற நூல் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இவர் 'தமிழில் தரிப்புக் குறிப்புக்களின் பயன்பாடு' என்ற நூலையும் எழுதியுள்ளார். தமிழும் அயலும், விமர்சனங்கள் ஆகிய இவரது இலக்கிய நூல்களை நாம் வெளியிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இந்நூலையும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
மக்கள் மத்தியில் பணிபுரியும் இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கான கைநூலாக இந்நூல் விளங்குமென்பதுடன் வெகுஜன இலக்கியப் பண்பாட்டை நோக்கிய பயணத்தில் புத்தகப் பண்பாட்டுப் பிரியர்களின் சிந்தனைக்கும் ஆய்வு முயற்சிகளுக்கும் உந்து விசையை வழங்கும் நூலாக இது அமையும் என்ற எதிர்பார்ப்புடன் வழிவிடுகின்றோம்.
வாசகர்களின் மேலான விமர்சனங்களை வரவேற்கின்றோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 44. ம்ே மர்டி, w கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 11.
05-05-2000

எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்
அறிமுகம்
இலக்கியம் என்றுமே சமுதாயஞ் சார்ந்துதான் உருவாகி விரி. வடைந்துள்ளது. அதன் சமுதாய உள்ளடக்கமும் வர்க்கச் சார்பும் எப்போதும் வெளிவெளியாகத் தெரிய அவசியமில்லை. இலக்கியம் உருவாகிய காலமும் உடனடியான சமூகத் தேவையும் அதன் சமூகஅரசியற் தன்மையின் வெளிப்பாட்டை நிர்ணயிக்கின்றன. ஒரு படைப்பாளியின் படைப்புக்களில் அதிக கால வேறுபாடில்லாமலுங் கூட, நாம் வேறுபட்ட கருத்து வெளிப்பாட்டுத் தன்மைகளைக் காணலாம். படைப்பினூடு வெளியாகும் கருத்து வலிந்து முன்வைக்கப்படுகிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ஒருவரது சமூக-அரசியற் சித்தாந்தம் அவரை அறியாமலே அவரது எழுத்தினுட் புகுகிறது. தமது நிசமான எண்ணங்களை மூடிமறைத்து எழுதுகிறப்டைப்பாளிகள் கூட அவர்களது அகமனதால் இடறி விடப்படுகின்றனர். இங்கே ஒரு படைப்பின் வாசிப்பின் குறைபாடுகளையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். சில சமயங்களில் குறிப்பிட்ட விதமான அகச்சார்பான வாசிப்புக்கள் எழுத்துக்கள் மீது திணிக்கப்படுவதும் உண்டு. பாரதி மீது சுமத்தப்படும் பார்ப்பனிய ஆணாதிக்க அடையாளங்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குவன. இவ்வாறே, எதிர்ப்பு இலக்கியங்கள் பலவற்றை அவற்றின் காலத்துக்குரிய முக்கியத்துவத்தை மறுக்கும் விதமாகத் திரித்து வாசிக்கும் முயற்சிகளும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன.
பல பழம் இலக்கியங்களின் கிளர்ச்சிக் குரல்கள் நீண்ட காலமாகத் தவறான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன. இவற்றில் எதிர்ப்பு இலக்கியத்தன்மையை அறியவும் அடையாளங்காட்டவும் மாக்ஸியத் திறனாய்வுமுறை ஒரு பயனுள்ள கருவியாக இருந்தது. இன்று எல்லாவற்றையும் அர்த்தமற்றவையாகக் காணுகிற ஒரு புதிய மாயாவாதமும்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 7

Page 6
ஐக்கியப்பட வேண்டியவர்களை எல்லாம் பிளவுபடுத்தும் முயற்சிகளும் பின் நவீனத்துவம் என்ற கோட்பாட்டைத் தமக்கான ஒரு கருவியாக்கியுள்ளன. எசமான வர்க்கம் எதைச் செய்ய முயன்று தோல்வி கண்டதோ அதையே புதுமை, நவீனத்துவவம், கிளர்ச்சி என்ற பேர்களிற் சிலர் இன்று செய்ய முயல்கின்றனர். இச் சூழலில் நாம் இலக்கியத்தின் எதிர்ப்புக் குரல்கள் எவ்வாறு செயற்ப்ட்டு வந்துள்ளன என்பதையும் அவற்றை எச. மான வர்க்கம் எவ்வாறு கையாண்டுள்ள்து என்பதையும் பற்றிக் கவனிப்பதற்கான ஒரு தேவை இருக்கிறது.
எந்த ஒரு படைப்பையும் எடுத்த எடுப்பிலேயே ஏதாவது ஒரு
முத்திரை குத்தி ஒதுக்குகிற ஒரு மரபும், இல்லாத கருத்துக்களையெல்லாம் வலிந்து திணித்து வாசிக்கிற ஒரு மரபும் நம்மிடையே வளர்ந்து
வருகின்றன. இது திறனாய்வுக் குறைபாடு. இது நமக்கு ஏற்றதில்லை.
மரபின் இலக்கியங்களின் ஆய்வில் ஒரு வரலாற்றுப் பார்வை நமக்குத் தேவை. அன்றைய கிளர்ச்சிக் குரல்கள் எவ்வாறு ஒலித்தன என்று அறிய, இன்றைய கிளர்ச்சிக் குரல்களுடனான மேலோட்டமான ஒப்பீடு உதவாது. அன்றைய எதிர்ப்பிலக்கியம் எப்படிச் செயற்பட்டது என்ற அறிவு, அதை அப்படியே இன்றைய எதிர்ப்பிலக்கியமாக்கும் காரியத்திற்கானதாக இருக்க முடியாது. எதிர்ப்பிலக்கியங்கள், ஏன் எவ்வாறு தமக்குரிய வடிவங்களுள் அமைந்தன என்ற அறிவு சமுதாய மாற்றத்திற்காகச் செயற்படுகிற திறனாய்வாளர்கட்கும் படைப்பாளிகட்கும் தேவையானவை. அதைவிட முக்கியமாக, எந்த எசமானவர்க்கத்திற்கு எதிராக எதிர்ப்பிலக்கியம் குரல் கொடுத்ததோ, அதே எசமான வர்க்கம் அந்த எதிர்ப்புக் குரலை எவ்வாறு தனக்கு வசதியான விதமாக மழுங்கடித்தும் தனக்கு வாய்ப்பான விதமாக மறுவார்ப்புக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தியும் தனதாக்கி இருக்கிறது எனவும் நாம் கவனிக்க வேண்டும். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன என்றும் சிந்திக்க வேண்டும். 3. " , «
வரலாறு புரட்சிகர சக்திகளின் தரப்பில் தான் உள்ளது. அதனால், புரட்சிகர சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் எதிரியிடமிருந்து கற்க மறுக்கலாம். ஆயினும் எதிரி நம்மிடமிருந்து கற்கிறான். எப்படியும் தன்னுடைய ஆதிக்கத்தின் ஆயுளை நீடிக்கும் நிர்ப்பந்தம் எதிரிக்கு, வரலாற்றினின்று நாம் கற்க மறுக்கும் போது எதிரியையே நாம் வலிமைப்படுத்துகிறோம். வர்க்கப்போராட்டத்தின் இருதரப்புப் பாசறைகளிலும் கலை இலக்கியங்கள் முக்கியமான
8 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

ஆயுதங்களாகவே உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான ஆயுதங்கள் எவ்வாறு பறிக்கப்படுகின்றன, சிதைக்கப்படுகின்றன, எதிரியால் தனதாக்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு ஆய்வுக்கான அறிமுகமாக இக்கட்டுரையை எழுத விரும்புகிறேன். இவ் விடயம் மேலும் விரிவாக்க வேண்டிய ஒன்று. கட்டுரையில் உள்ள குறைபாடுகள் யாவும் அடையாளங் காணப்பட்டு, அதன் மூலமும் செம்மையான ஆய்வுகள் விருத்தி பெற வேண்டும் என்பது என் ஆவல்.
1. எதிர்ப்பின் குரலாக மதம்
மனித சமுதாயத்தின் அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் பெரும் பகுதி மதங்கள் தொடர்பானது. ஆதி மனித வாழ்வுக்கும் இயற்கைக்குமிடையிலான நட்பும் பகையும் கலந்த உறவும் இயற்கை பற்றிய புரிதலும் கடவுள் நம்பிக்கையின் தோற்றுவாய்கள். சமுதாயங்களின் ஒருங். கிணைவில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் வகித்த பங்கை மதம் படிப்படியாகத் தனதாக்கிக் கொண்டது. சமுதாயங்களின் ஒருங்கிணைவு ஏற்றத்தாழ்வான சமுதாய அமைப்பினுாடாகச் செயற்படும் போது, அந்த ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதிலும் நிறுவனமாக்கப்பட்ட மதம் ஒரு பங்கை வகித்துள்ளது. மதம் ஒடுக்குமுறையின் சார்பான சித்தாந்தமாகிய சூழலில் அதற்கெதிரான எழுச்சி மத சீர்திருத்தமாகவும் புதிய ஒரு மதமாகவும் தன்னை அடையாளங் காட்டிள்ளது. இதற்கான உதாரணங்களில் கிறிஸ்துவத்தின் தோற்றத்தையும் அதன் தொடக்கப் பரம்பலையும் இஸ்லாத்தின் தோற்றத்தையும் பரம்பலையும் சமணம், பெளத்தம் போன்ற மதங்களின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் கூறலாம். பின்னர் இதே மதங்கள் அரச அதிகாரத்துடனும் ஆளும் வர்க்கத்துடனும் உறவுபூண்டு கோலோச்சிய காலத்தில், அவற்றுக்கெதிராக அவற்றின் உள்ளும் வெளியிலும் மதத் தொடர்பான வடிவிலேயே எதிர்ப்பு இயக்கங்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்பு குறிப்பான ஒரு வடிவிற் தான் எழுமென்றில்லை. கத்தோலிக்கத் திருச்சபைக்கெதிரான சீர்திருத்தக் கோரிக்கைகளே முடிவிற் பல வேறு புரட்டஸ்தாந்து மதங்களாக வளர்ந்தன. அண்மைக்காலங்களில் விடுதலைக்கான இறையியல் என்பது கத்தோலிக்கத் திருச்சபைக்குள் இருந்து கிறிஸ்துவின் பேரால் மக்களது போராட்டங்களை ஆதரிக்கும் ஒரு போக்காக லத்தின் அமெரிக்காவில் வளர்ச்சி கண்டது. பிராமணிய மதத்தின் வருணாசிரம தருமத்திற்கும் ஒடுக்குமுறைகட்கும் எதிராக
豪
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 9

Page 7
வளர்ந்த சமணமும் பெளத்தமும், பின்பு தாமும் அதிகாரம்-சார்ந்து நிலைத்துநிற்க முற்பட்டபோது, அதற்கெதிரான எழுச்சி தமிழ்நாட்டில், பிராமண மதம் என்று கூறத்தக்க சைவத்தினூடு, சாதியத்தை ஓரளவுக்கேனும் நிராகரித்து, பக்தி இயக்கமாக வடிவுபெற்றது. இந்த எழுச்சியின் பின்பு மீண்டும் பிராமணிய வர்ணாசிரம மதங்கள் அதிகாரம் பெற்ற சூழலில் சித்தர் மரபு ஒரு எதிர்ப்புக் குரலாகியது.
இவ்வாறான போக்குக்களை வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சமூக வரலாற்றுச் சூழல்கள் இயலுமாக்குகின்றன. ஆபிரிக்க மக்களை அடிமையாக்கிஆளும் முயற்சியோடு இணைந்து செயற்பட்ட கிறிஸ்துவம் அவர்களது விடுதலைப் போராட்டங்களில் ஓரளவுக்கும் அவர்களது எதிர்ப்புக்குரல்களை வெளியிடுவதற்கான ஒரு வடிகாலாக விரிவான அளவிலும் பயன்பட்டுள்ளது.அமெரிக்க நீக்ரோ மக்களின் வழிபாட்டுப் பாடல்கள் சில, பின்னைக் காலத்தில் அவர்களது உரிமைப் போராட்ட இயக்கங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் போராட்ட கீதங்களாகவும் பயன்பட்டன. எதிர்ப்பின் குரல் இறை வழிபாட்டுக்குள்ளாகவும் அதைக் கூறும் மொழியூடாகவும் இசை வடிவினூடாகவும் இன்னும் பிற முறைகளிலும் தன்னை அடையாளம் காட்டியுள்ளது.
மதமாற்றம் என்பது இந்தியத் துணைக்கண்டத்திற் பல வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்துள்ள போதும் பல இடங்களில் இந்து மதத்தின் சாதியத்திற்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாக அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. மத மாற்றம் சமூக விமோசனத்திற்கு வழிவகுத்ததா என்பது வேறு விடயம். அம்பேத்கர் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரை புத்த மதத்திற்கு மாறும்படி சொல்லி அதை நடைமுறைப்படுத்தியதும் 1950களில் வட இலங்கையில் இதையொத்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சமூக அளவிலான நடவடிக்கைகள். தனிப்பட்ட முறையில் அல்லது குடும்பமாக மதம் மாற்றப்பட்டோரின் மனதில் சாதியக் கொடுமை ஒரு முக்கியமான காரணியாகவே இயங்கியது என்பதை நாம் மறுக்க முடியாது. இம் மத மாற்றங்கள் தனிப்பட்ட நலன்கட்காக வசதிபடைத்த மேற்தட்டு மாந்தர் நடுவே நடந்த மத மாற்றங்களிலிருந்து வேறுபட்டவை.
எதிர்ப்பின் குரலாக மதம் என்ற விடயத்தை எல்லையின்றி விரித்துக் கொண்டு போக முடியும். ஏனெனில் உலகின் ஒரு நீண்ட வரலாற்க் காலப்பகுதியில் மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாக இருந்தன. முதலாளியத்தின் எழுச்சியே மதத்தினின்று
O எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

ஐரோப்பிய அரசியல் விடுபடுவதை இயலுமாக்கியது. ஆயினும் முதலாளியம், மதத்தை எப்போதுமே தனது தேவைகட்கேற்ப இயக்கியும் பயன்படுத்தியும் வந்துள்ளது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது எதையென்றால் மதம் எதிர்ப்பின. தும் கிளர்ச்சியினதும் குரலாக மட்டுமன்றிச் சமுதாய எழுச்சியினதும் புரட்சியினதும் வாகனமாகவும் செயற்பட்டுள்ளது என்பதையே. அதே வேளை இந்த எழுச்சிகளதும் புரட்சிகளதும் வெற்றிகள் கொண்டு வந்த சமுதாய மாற்றங்களின் தன்மை பற்றி நமக்கு அதிகம் மயக்கம் இருக்க இடமில்லை. W
அடிமைகளின் கிளர்ச்சிகளின் மூலம் நிலவுடைமை அமைப்பு உருவானதே ஒழிய, சமத்துவமான சமுதாயமல்ல. விவசாயிகளின் கிளர்ச்சிகள் உலகின் பலநாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றால் உழைப்பவனுக்கே நிலம் என்ற நீதியை வென்றெடுக்க முடியவில்லை. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான எழுச்சிகளே உழைப்பவர்க்கு உலகம் சொந்தம் என்ற நிலைப்பாட்டிலிருந்து போராடி மனித சமத்துவத்துக்கான செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கியுள்ளன.
ஒவ்வொரு கிளர்ச்சியும் அதனதன் காலத்தின் குழந்தை மட்டுமல்ல, அதனதன் காலத்தின் கைதியுங் கூட. எனவே கடந்த காலக் கிளர்ச்சிகளை நோக்கும் போது அவற்றின் வெற்றிகளினின்றும் தோல்விகளினின்றும் நாம் கற்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகும். அவற்றால் நாம் ஊக்குவிக்கப்படும் அதே வேளை அவற்றை அப்படியே பிரதி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் நாம் கவனமாயிருக்க வேண்டும். அவற்றின் தோல்விகளாலும் அவற்றின் வெற்றிகள் திசை திருப்பப்பட்ட சூழ்நிலைகளாலும் மனம் தளராமல் இருப்பது முக்கியமானது என்பது ஒருபுறமிருக்க, அதிகார வர்க்கம் எவ்வாறு எதிர்ப்பின் சிந்தனையையும் மொழியையும் செயற்பாட்டையும் எதிர்கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எதிரி மக்களிடமிருந்து கற்பது போல m மக்களும் எதிரியிடமிருந்து கற்க வேண்டி இருக்கிறது. இக் கல்வியின் நோக்கம் எதிரியைப் பின்பற்றுவது அல்ல, மாறாக, மக்கள் தமது போராட்ட வலிமையையும் தந்திரோபாயங்களையும், யுத்ததந்திரத்தையுங் கூட, மேலும் கூர்மைப்படுத்துவதாகும்.
மேற்கொண்டு இக்கட்டுரையின் கலை இலக்கியங்களில் மக்களது எதிர்ப்பின் எசமானர்களால் எவ்வாறு கையாளப்பட்டு வந்துள்ளன என்பது
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

Page 8
பற்றியும் அதிலிருந்து நாம் கற்கக் கூடியன பற்றியும் கவனிக்குமுன், எதிர்ப்பின் குரல்களை வரலாற்றில் வைத்து மதிப்பிடும் தேவைபற்றி நாம் வலியுறுத்தியாக வேண்டும்.
2. சமுதாய வரம்புகளிடையே எதிர்ப்பின் குரல்கள்
எதிர்ப்பின் குரல்கள் எல்லாமே சமுதாய மாற்றத்திற்கான குரல்கள் அல்ல. பெருவாரியான சூழல்களில் எதிர்ப்பின் அடிப்படையான சமுதாய மாற்றத்தை வேண்டுவன அல்ல. சீர்திருத்தத்திற்கான குரல்கள் வரலாற்றில் பெரும்பான்மையானவையாக இருப்பதில் வியப்புக்கு இடமில்லை. ஏனெனில், அடிப்படையான ச்முதாய மாற்றத்திற்கான குரல்கள் பெரும்பான்மையானவையாகத் தோன்றும் சூழல்கள் அப்படிப்பட்ட சமுதாய மாற்றத்தை உண்டாக்கும் சூழல்களாக அமைய வேண்டும். இன்னொரு புறம் அத்தகைய மாற்றத்தைக் கொண்டு
வரக்கூடிய வரலாற்றுச் சக்திகள் எழுச்சி பெறுங் காலங்கள் குறுகியவை.
அவற்றின் எழுச்சி மிகவும் வலிய ஒரு சமுதாயத் தாக்கத்தை உடையது.
ஆயினும், அதற்கு முன்னோடியாகச், சமுதாயத்தின் அடிப்படையான அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்தாமல், குறிப்பான பிரச்சினைகளை. யிட்டு எழும் ஆட்சேபனைக் குரல்கள் விரிவான தளமற்றவையும் சிறு மாற்றங்களுடன் நிறைவு காண்பவையுமாக இருப்பது இயல்பு. இதனிலும் முக்கியமாக, அடிப்படையான மாற்றத்தை வேண்டி நிற்கக் கூடிய சக்திகள் ஆளும் வர்க்கத்தால் மிகவும் கொடுமையான முறையில் எதிர்கொள்ளப்படுகின்றன. மறுபுறம் ஆளும் வர்க்கம் தன்னுடைய பழைய சமுதாய அமைப்பு நெருக்கடிக்கு உட்படும் போது அதைத் தவிர்ப்பதற்குச் சில விட்டுக் கொடுப்புக்களையும் சமரசங்களையும் சீர்திருத்தங்களையும் ஏற்றுக் கொள்கிறது.
வரலாற்றில், முதலாளியத்தின் வருகை வரை, எல்லாப் பெரிய மாற்றங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சி வேறுபட்ட அளவுகளில் பயன்பட்டுள்ளது. அடிமைகளின் கிளர்ச்சியோ விவசாயிகளது எழுச். சியோ நேரடியாக மனித சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்கட்கு வழி வகுக்கவில்லை. ஆயினும் அவை வரலாற்றை முற்போக்கான திசையில் உந்துவதில் ஒரு பங்கை அளித்துள்ளன. அம்மட்டில் அவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுச் சூழலில் வைத்து மதிக்க வேண்டிய தேவை வரலாற்றின் மாணவர்கட்கு உண்டு.
12 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

ஒடுக்கப்பட்ட மக்களாலும் அவர்கள் சார்பாகவும் எழுப்பப்படும் எதிர்ப்பின் குரல் குறிப்பிட்ட சமுதாயச் சூழல்களின் வரையறைகட்கு உட்பட்டது. எந்தவொரு சமூகத்திலும் ஒடுக்குவோரும் ஒடுக்கப்பட்டோரும் பேரளவிலேனும் சில சமுதாய விதிமுறைகளை ஏற்றே நடக்கின்றனர். அவற்றின் அடிப்படையிலான சிந்தனை முறை முழுச் சமுதாயத்தையும் ஆழமாக ஊடுருவி நிற்கிறது. அது எவ்வளவுதூரம் கேள்விக்கு உட்படுத்தப்படக்கூடும் என்பது தான் எதிர்ப்பின் தன்மையையும் , பரிமாணத்தையும் தீர்மானிக்கிறது. இந்த இடத்திற்தான் மாக்ஸியம், அதற்கு முந்திய காலங்களின் சமுதாயச் சிந்தனைகளை எல்லாம் மீறி, மெய்யியலின் நோக்கம் சமுதாயத்தை விளக்குவது மட்டுமல்ல, அதை மாற்றியமைப்பதுமாகும் என்று கூறியது. இந்த நோக்கு மாக்ஸியக் கலை இலக்கியங்கட்கும் பொருந்தும். இத்தகைய சிந்தனை ஒன்றுக்குப் பழக்கப்பட்டவருக்கு, இதுபோன்ற அடிப்படையான சமுதாய மாற்றத்தை வெளிவெளியாக வேண்டுகிற கலை இலக்கியங்களை முந்திய வர. லாற்றுக் காலங்களிலும் தேடுகிற ஆவல் ஏற்படுவது இயல்பு. இந்த இடத்தில் நமது கடந்த காலங்கள் எத்தகைய சமூக அடக்குமுறைகளைக் கொண்டிருந்தன என்பதும் முக்கியமாகிறது. சமுதாய விதிகள், சடங்கு சம்பிரதாயங்களிலும் மதங்கள் மற்றும் மனித உறவு சார்ந்த சகல வழமைகளிலும் ஆழமாகப் பொதிந்து செயற்படுகின்றன. எனவே தான் எதிர்ப்பு இலக்கியமும் அவற்றை ஒட்டிச் செயற்படுவதன் தேவையும் பயனும் காணப்படுகின்றன. அதே வேளை, சமுதாய மரபுகட்குச் சவாலாகவும் சமுதாய நடைமுறையை மறுதலித்தும் மாற்றுச் சிந்தனைகள் வந்தே உள்ளன. இவ் இரண்டு வகையான எதிர்ப்புக் குரல்களும் சமுதாயத்தில் எவ்வாறு எழுகின்றன எனவும் அவற்றை எசமானவர்க்கம் எவ்வாறு எதிர் கொள்கிறது எனவும் இனிக் கவனிப்போம்.
3. எதிர்ப்பின் குரல் வகைகள்
சமகாலச் சூழலிற் கூட, எதிர்ப்பு இலக்கியம் எல்லாவிடத்திலும் ஒரே விதமான முறையில் வெளிப்படாது. ஒரு குறிப்பிட்ட போராட்டத்தின் போக்கிலும் எதிர்ப்பிலக்கியத்தின் குரல் பல வேறு தளங்களில் வெவ்வேறு விதமாக ஒலிக்கக்கூடும். எதிர்ப்பு இலக்கியம் என்பது தன்னளவிலேயே முற்போக்கான ஒன்றாக அமைவதில்லை என்பது பற்றி விவரிக்க அவசியமில்லை. ஆயினும், எதிர்ப்பு என்பதற்குத் தன்னளவிலேயே ஒரு பெறுமானத்தையும் கிளர்ச்சிகள் யாவுமே தம்மளவில்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 3

Page 9
நியாயமானவை என்ற நியாயப்பாட்டையும் புகுத்தும் முயற்சிகள் சில காலமாகவே இருந்து வந்துள்ளன.
சமுதாய வளர்ச்சியின் திசை பற்றி நம் ஒவ்வொருவரதும் பார்வை எவ்வாறு வேறுபடுகின்றதோ அதற்கேற்ப கிளர்ச்சி ஒவ்வொன்றும் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொன்றும் பற்றிய நமது பார்வை வேறுபடும். எனினும் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பிலக்கியச் செயற்பாடுகள் ஒவ்வொன்றினின்றும் நாம் கற்க நிறைய உண்டு. இந்துத்துவமும் பிற மதவாத அரசியல் முனைப்புக்களும் வரலாற்றைப் பின்னோக்கித் திருப்பும் நோக்கில் மதத்தைப் பயன்படுத்தும் எதிர்ப்பு இயக்கங்களும் ஊக்குவிக்கும் கலை இலக்கிய வடிவங்க்ளும் ஒரு முற்போக்குச் சக்தியால் பிரதி பண்ணக்கூடியனவல்ல. ஆயினும் அந்தப் போராட்ட முறைகளிலுள்ள பயனுள்ள கூ றுகளைக் கற்கவும் சமுதாயப் புரட்சிக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தவும் முடியும். இதற்குப் பின்னர் வருவோம்.
போராட்ட இலக்கியம் வெளிவெளியாகத் தனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரகடனம் செய்து கொண்டு வருவதைத் தூய இலக்கியவாதிகள் விரும்புவதில்லை. வெளிவெளியான அரசியல் நிலைப்பாடு அவர்கட்கு உடன்பாடற்றது. புரட்சிகர இலக்கியவாதிக்கு இலக்கியத்தைத் தனது அரசியலுடன் இணைப்பது இயல்பாகவே வருவது. வலிந்து அரசியற் கருத்துக்களைத் திணிப்பதோ வெறும் கோஷங்களோ புரட்சிகர இலக்கிய முயற்சி ஆகி விடாது என்பதில் நமக்கு ஐயமில்லை. அதேவேளை, எவரையும் மகிழ்விக்கும் நோக்கில், அரசியற்பார்வையை Cpt9 மறைக்கவும் எதுவித அரசியலுமே இல்லாது இலக்கியம் படைக்கவும் ஒரு புரட்சிகர இலக்கியவாதி செயற்படுவது அரசியலை வலிந்து திணிப்பதை விடப் போலியானது. ஒரு படைப்பாளி தனது அரசியற் பார்வையை எவ்வளவு தூரம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற வேண்டியும் கூற இயலுமாயும் உள்ளது என்ற நிலவரமே பல இடங்களில் ஒரு படைப்பின் அரசியலின் வெளிவெளியான பண்பைத் தீர்மானித்துள்ளது. சில கலைவடிவங்களின் தன்மையை அனுசரித்து கருத்துக்களைக் கூறும் விதம் வேறுபட்டு அமைய நேரலாம். அமர இலக்கியங்கள் எனப்படுவன, அமரத்துவம் வேண்டிப் படைக்கப்பட்டனவா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. சில இலக்கியங்களது நீண்டகால நிலைப்புக்குப் பல் வேறு சமூக, வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. இலக்கிய வளர்ச்சியின் பாரிய திருப்பு முனைகளாக அமைந்த எத்தனை இலக்கியங்கள் இன்று
4 − எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

நிலைத்தோ அறியப்பட்டோ உள்ளன? இலக்கியங்களின் வெற்றி தோல்விகட்கு எளிமையான அளவு கோல்கள் இல்லை. எனினும் ஒரு எதிர்ப்பிலக்கியம் எந்த மக்களைச் சென்றடையவும் எந்தச் சமூக நடைமுறைகட்கு எதிராகவும் உருவானதோ அந்த இலக்குக்களை எட்டிய அளவில் அதன் வரலாற்றுப்பணி நிறைவு பெறுகின்றது. அதனிலும் உன்னதமான வெற்றி என எதுவும் அதற்குத் தேவையில்லை.
உலகில் எல்லாவிடத்தும் சமுதாய மாற்றம் வேண்டி வெளிவெளியாகவே குரல் கொடுக்கும் சாத்தியப்பாடு இன்றும் இல்லை. சுதந்திர சமுதாயங்கள் எனப்படுவனவற்றுள் சந்தை மீதும் தொடர்புச் சாதனங்கள் மீதும் பத்திரிகை விநியோகம் உட்படப் பல்வேறு கருத்துப் பரிமாறல் வசதிகள் மீதும் பெரு முதலாளியத்தின் ஆதிக்கம் பெரிது. சமுதாய மாற்றத்திற்கான குரல்களை விளிம்புநிலைக்கு ஒதுக்கி வைக்கும் வசதி எசமானர்களிடம் உள்ள வரையில், கருத்துச் சுதந்திரம் பற்றி அவர்கள்
வாய் கிழியப் பேசுவார்கள் என்பது வரலாறு.
வரலாற்றில் எத்தனையோ நூற்றாண்டுக்காலமாக வெளிப்பட்டு வந்த எதிர்ப்பிலக்கியக் குரல்களில், சமுதாய மாற்றத்தை வேண்டியோ சமுதாய ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தியோ வெளிவெளியாகப் போர்ப்பிரகடனம் செய்தவை எத்தனை? எதிர்ப்பின் குரல்களாக வெளியானவை அடிப்படையான சமுதாய அமைப்பை வேறுபடும் அளவுகளில் ஏற்றுக்கொண்டவையாகத் தெரிவதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம்.
முதலாளித்துவம் தன் தேவைகட்கும் தன் வலிமை மீதான திடமான நம்பிக்கைக்கும் உட்பட்ட சூழல்களில் அனுமதிக்கும் கருத்துச் சுதந்திரத்தின் அளவு எப்போதும் ஒரே விதமானதல்ல. கருத்துச் சுதந்திரம் பலவேறு முறைகளில் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும் எசமான வர்க்கத்தின் நலன்கட்கு எதிரான வலிமை பெறும் போதுநசுக்கப்படுவது பற்றியும் நாம் அறிவோம். முதலாளிய அரச ஒடுக்குமுறை தீவிரமாக உள்ள சூழல்களில் எதிர்ப்பு இலக்கியங்களிற் கருத்து வெளிப்படும் முறை அப்படிப்பட்ட ஒடுக்குமுறை இல்லாத சூழ்நிலைகளில் உள்ள வெளிப்பாட்டு முறையினின்றும் வேறுபட்டது எனவும் நாம் அறிவோம். எனவே வரலாற்றில் எதிர்ப்பின் குரல்களை மதிப்பிடும் போது சமகாலச் சூழலுடன் நேரடியாக ஒப்பிடுவது பொருந்தாது என்பது திரும்பவும் வலியுறுத்தப்பட வேண்டும்.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 5

Page 10
பக்தி இலக்கியம் எதிர்ப்பு இலக்கியப் பண்புடையது எனவும் சித்தர் பாடல்கள் எதிர்ப்பு இலக்கிய வகையின எனவும் அறிவோம். இவை எதை எந்தளவுக்கு எதிர்த்தன என்று கவனித்தால் அவை பூரணமான சமுதாய மாற்றத்திற்கான இலக்கியங்கள் அல்ல என்பதை எளிதாகவே உணரலாம். ஆயினும் சமுதாயத்தில் இருந்த மத அடிப்படையிலான சில அதிகார அடுக்குகளை வரையறைக்கு உட்பட்டாயினும் அவை கேள்விப்படுத்தின. சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் இறை வழிபாட்டில் சாதியத்தை மறுக்கும் குரல்கள் ஒலிக்கின்றன. அரச
அதிகாரத்திற்கு எதிரான தைரியமும் தென்படுகிறது. வெகுஜனப்
பார்வையும் தென்படுகிறது. ஆயினும் சமுதாய அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்குவது அந்த இலக்கியங்களின் நோக்கமல்ல. பிராமணிய இந்து மதங்களான சைவமும் வைணமும் மாற்றுச் சமயங்கட்கெதிராக ஈடுகொடுத்து நிற்பதற்கு இயலாது போன சூழ்நிலையிலேயே முற்குறிப்பிட்ட பக்தி இலக்கியப் போக்குக்கான தேவை ஏற்றபட்டது.
சித்தர்களுடைய பாடல்களில் இறைநம்பிக்கை முற்றாக மறுக்கப்படாவிடினும் பிராமணிய இறைக் கொள்கையும் வழிபாடு பற்றிய அணுகுமுறையும் கடுமையாகக் கேள்விக்கு உள்ளாகின்றன. சித்தர்கள் எவ்வளவு தூரத்திற்குச் சமுதாயத்தினுள் ஒரு வலிய சக்தியாகச் செயற்பட்டார்கள் என்பது தெளிவில்லை. ஆயினும் அவர்கள் செயற்பட்ட சூழலை வெகுசன ஈடுபாட்டை நாடிய பக்தி இலக்கியச் சூழலுடன் சமன்படுத்த இயலாது. சித்தர்கள் சமுதாய நீரோட்டத்தினின்று ஒதுங்கி வாழ்ந்தோர் என்ற கருத்து அப்படியே உண்மையாக இருக்க நியாயமில்லை. ஆயினும், அவர்களது கலகக் குரல்கள் தமிழரது ஆன்மிகச் சிந்தனையின் ஒரு முக்கியமான பகுதியாக வெகுகாலமாக அடையாளங் காணப்படவில்லை.
எதிர்ப்பு இலக்கியம் அங்கீகாரம் பெற்ற இலக்கியமாக நிலைப்பது எளிதல்ல. அவற்றின் எதிர்ப்புப் பண்புகள் ஆளும் வர்க்க நலன்கட்கு எதிரானவையாகஅடையாளங் காணப்படும் வரை, அவற்றைப் பேணுவ தற்கு அரச, மத நிறுவன ஆதரவு கிட்டுவது இயலாது. இத்தகைய இலக்கியங்கள் புறக்கணிப்பிற்கோ அழிவிற்கோ ஆளாவது தவிர்க்க இயலாததே.
நாட்டார் கலை இலக்கியங்கள் நேரடியான அரச ஆதரவையோ சீமான்களதும் மடாதிபதிகளதும் தயவிலோ தழைத்தவை அல்ல. அந்த
16 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

வகையில் அவை மற்ற இலக்கிய வடிவங்களை விட நேரடியாகவே மக்களது இன்ப துன்பங்கள் பற்றிப் பேசவல்லன. இதற்கான ஆதாரங் களை இன்று வழக்கிலிருந்து வரும் இலக்கியங்களிலும் காணமுடியும். எனினும், சமுதாய மாற்றத்திற்கான எழுச்சி இல்லாத சூழல்களில் நாட்டார் இலக்கியத்தின் எதிர்ப்புக் குரல் மக்கள் படும் இன்னல்கள் பற்றிக் கூறுவதுடன் எசமானர்கள் மீதான பகைமை உணர்வைப் பெரும்பாலும் குறிப்பால் உணர்த்தும் தன்மையுடையனவாகவே இருக்குமென எதிர்பார்க்கலாம். விலக்கான சூழ்நிலைகள் உள்ளன. மலையகத்து வாய்மொழி இலக்கியத்தில் அதற்கான சில சான்றுகள் இருந்தாலும் இவை வெளிப்படையாகவே குறைகளைக் கூறுகிற அளவுக்கு அப்பால் போவதற்கு இடமில்லை.
ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்நிலை எதிர்ப்புக் குரல்கள் புத்த மதச் சார்பான இலக்கியத்தினுள் பெண் கவிஞர்களால் ஆக்கப்பட்ட "தேரிகாதா"வில் ஒலிக்கின்றன. இவ்வாறான இலக்கியங்கள் பெருமள. வும் அழிவதற்கு ஏதுவாக உள்ள காரணங்களை விளங்கிக் கொள்வதில் நமக்கு சிரமம் இராது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பை வெளிவெளியாகக் கூற இயலாதபோது தமக்கெட்டக்கூடிய கலைவடிவங்களுடு அவற்றைக் கூற முற்படுவது இயல்பானது. நாட்டார் கூத்துக்கள் இத்தகைய எதிர்ப்பின் வாகனங்களாகச் செயற்பட்டு வந்ததற்குச் சமகாலத்திலும் சான்றுகள் உள்ளன. உதாரணமாகக், காத்தான் கூத்தில் காத்தவராயன் என்ற தெய்வத்தின் வழியாக சமூகக் கொடுமைகள் பற்றிய கூற்றுக்கள் வருவதோடு இந்து மதத்தில் உயர் நிலையில் உள்ள தெய்வங்களைக் கேலி செய்யும் கூற்றுக்களும் வருகின்றன. தெய்வங்களின் வடிவில் இகழப்படுவோர் அவற்றை வழிபடும் உயர் சாதியினரே. ஒடுக்குகிற உயர்சாதியினர் மீதான பகைமை அவர்களது கடவுளர் மீது ஏற்றப்படுகிறது. தமிழகத்தில் அபிமன்யு வதம் கூத்தில் அபிமன்யு துரோணருடன் வாதிடுவதைப் பயன்படுத்திப் பார்ப்பன விரோதமான பல கடுஞ்சொற்கள் கூறப்படுகின்றன. (நான் நகர மேடையில் கண்டதை விடக் கடுமையான சொற்களைக் கிராமங்களில் நடக்கும் கூத்துக்களில் கேட்கலாம் என்று தெருக்கூத்துடன் பரிச்சயமிக்க ஒரு நண்பர் மூலம் அறிந்தேன்.)
எதிர்ப்பின் இன்னொரு வடிவம் ஒதுங்கிப் போதல், இது ஒரு முழுச் சமுதாயத்தாலும் செய்ய இயலாதது. ஆயினும் சமூகத்தின் விளிம்பிற்குத்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 7

Page 11
தம்மை விலக்கிக் கொள்ளும் போக்கை நாம் அண்மைக் காலங்களில் ஹிப்பிகள், பன்க் போன்ற மேல்நாட்டு விளிம்புக் கலாசாரக் குழுக்களிடம் கண்டுள்ளோம். இவ்வ்கையான எதிர்ப்பு ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரும் தன்னம்பிக்கை அற்ற பண்பையுடையது என்பது முக்கியமானது. சமுதாய அமைப்பை நிராகரிக்கிற அளவிற்கு இதில் உள்ள எதிர்ப்பபுக் குரல் அதை எப்படி மாற்றுவது என்று வழிகாட்ட இயலாத ஒன்றாகவே உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குச் சார்பாகச் சமுதாயத்தை மாற்றப் போராடுகிற சூழல்களில், வெளிவெளியாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்ப்பின் குரல் எழுகிறது. இது வரலாற்றின் அதிபுரட்சிகரமான வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் வருகையுடன் உருவான ஒரு சூழ்நிலை. இதை விளங்கிக் கொண்டால், வெளிவெளியான அரசியற் கருத்துடைய இலக்கியம் பற்றிய பல மறுப்புக்கள் எழும் காரணத்தை உணரலாம். இந்த இலக்கியங்களை சமுதாய மாற்றத்திற்காகக் குரல் கொடுப்பது இயலாத சூழல்களிலும் அத்தகைய மாற்றங்களைப் பற்றிக் கருதாத சூழல்களிலும் எழுந்த இலக்கியங்களின் அடிப்படையில் மதிப்பிடுவது வரலாற்றுப் பார்வையில்லாமையால் நிகழ்வது.
இன்றைய எதிர்ப்பு இலக்கியம், என்றோ இருந்த எதிர்ப்பு இலக்கியம் போலவே தன்னை அமைத்துக் கொள்ள அவசியம் இல்லை, அது தனது சமுதாயச் சூழலில் எந்தளவு வலிவுடனும் எந்தளவு ஆற்றலுடனும் மக்களை அடைய முடியுமோ, அந்தளவுக்கு அதன் செயற்பாடு விரிவடைகிறது. அது தனக்கு எட்டக்கூடிய எந்த இலக்கிய வடிவையும் பயன்படுத்தத் தடை இல்லை. ஆயினும் அது தனது தெரிவுகளைத் தனது உலகநோக்குக்கும் தனது சமுதாய இலக்குக்கும் ஏற்றபடி செய்து கொள்கிறது.
எனவே இன்றைய எதிர்ப்பு இலக்கியம், நேரடியாகவோ மறைமுகமாகவோ, முழுமையாகவோ பகுதியாகவோ தனது எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்தத் தெளிவு பற்றித் தூய அழகியல்வாதிகளது விமர்சனங்கள் இலக்கியத்தின் நோக்கம் பற்றி அடிப்படையாகவே தவறான ஒரு பார்வையினின்று எழுகின்றன.
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாக வெளியான எதிர்ப்பு இலக்கியங்களை எசமான வர்க்கம் எவ்வாறு கையாண்டு வந்துள்ளது என்று இனிக் கவனிப்போம்.
18 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

4. எதிர்ப்புக்கு எசமானர் முகங் கொடுத்தல்
அதிகாரவர்க்கம் எதிர்ப்பைப் பல வழிகளிற் கையாளலாம். வரலாற்றுச் சூழல்களே பெருமளவுக்கும் இவ் விடயத்தைத் தீர்மானித்துள்ளன. மிகவும் தீவிரமான ஒடுக்குமுறையைத் தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிப்பது சிரமமானது. கடுமையான முறையில் சகல எதிர்ப்பு இலக்கியங்களையும் தடை செய்வதற்கான தேவை ஆட்சி அதிகார மாற்றத்திற்கான உக்கிரமான போராட்டத்தை ஒட்டிய காலங்களில் ஏற்படலாம். சமுதாயக் கிளர்ச்சியை எதிர்ப்பிலக்கியங்கள் தூண்டிவிடுமாறான அடையாளம் தெரிகின்ற போதும் கடுமையான தடைகள் இருக்கலாம். ܥ ܀
பக்தி இலக்கியக் காலத்தின் தேவாரத் திருப்பதிகங்களைக் கொண்ட சுவடிகள் எவருக்கும் எட்டாத விதமாக மறைத்து வைக்கப்பட்டது. பிராமணிய மதத்தினதும் வடமொழியினதும் ஆதிக்கத்தின் அரசியல் தொடர்பான நிகழ்வு. உலகின் பல்வேறு இடங்களிலும் அதிகாரவர்க்கத்தினரால் தமக்கு உடன்பாடற்ற சிந்தனைகளைக் கொண்ட படைப்புக்கள் அழிக்கப்பட் டுள்ளன. ஒலைச்சுவடிகளிலும் துணி. யிலும் எழுதப்பட்ட இலக்கியங்களை அழிப்பது இன்றைய அச்சு மற்றும் நவீன தொடர்புச் சாதன யுகத்தில் உள்ளதை விட இலேசானது தான்.
சில சமயங்களில் அழிப்பதை விடப் புறக்கணிப்பது ćinigu 16116)! 660 அளிக்கிறது. செவ்வியற் கலை இலக்கிய வடிவங்கள் நிறுவன ஆதரவு சார்ந்தே பெருமளவும் தழைத்து வந்துள்ளன. அந்த ஆதரவு நீக்கப்படும் போது அவற்றின் வளர்ச்சி தடைப்படுகிறது. அது மட்டுமல்லாது சில ஆக்கங்கள் வழக்கொழியவும் நேருகிறது. அரசும் மத நிறுவனங்களும், சில சூழ்நிலைகளில், செல்வந்தர்களுமே செவ்வியற் கலை இலக்கியங்களைப் பேணும் முறையில் செயற்பட்டுள்ளனர். எனவே வெளிவெளியாகவே மக்களுக்குச் சார்பான இலக்கியங்கள் உருவாக இடமில்லை. ஆயினும் அறம் சார்ந்த பார்வைகளிடையே கருத்து மோதல்க்ள் இருந்தே வந்துள்ளன. நீண்டகாலப் புறக்கணிப்புக்கு உள்ளாகிய நூல்களுள் திருக்குறள் முக்கியமானது. வைதிக சமயச் சிந்தனைகட்கு மாறான முக்கிய அறநூல் திருக்குறள். சமணச் செல்வாக்கு அதில் அதிகம் எனலாம். பெளத்தத்தினதும் பழந்தமிழ்ச் சமுதாய அற விழுமியங்களினதும் செல்வாக்கையும் அதில் அடையாளம் காணலாம். வைதிக மதங்களைச் சாராத பிற அறநூல்களும் நீண்ட காலமாகவே விளிம்பு நிைைலயில் வைக்கப்பட்டிருந்துள்ளன.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 9

Page 12
மேற்குறிப்பிட்டவாறு தடைகளாலும் அலட்சியத்தாலும் ஒரு இலக்கியப் போக்கை முறியடிக்க இயலாது போகும் போது அதைத் தனக்கேற்றபடி மாற்று வாசிப்புக்கு உட்படுத்துவது அதிகார வர்க்கத்தின் இன்னொரு நடைமுறையாகும். அது ஒருபுறம் தனக்குப் பகைமையாக இருந்த நூல்களின் வாசிப்பைப் புதிய உரை நூல்கள் மூலம் மாற்றுகிறது. திருக்குறளுக்கும் சைவச் சார்பான வாசிப்புக்கள் முதல் அண்மைக்கால நாத்திக வாசிப்புக்கள் வரை பலதை நாம் காணலாம். இவ்வாறான "தமY தாக்கிக் கொள்ளல்" சமூக-அரசியல் தேவைகளை ஒட்டி நிகழ்வது. முதலாளியம்தான் முன்பு எதிர்த்த மதச்சார்பான நிலமான்ய சமுதாயச் சிந்தனைகளைத் தன் அதிகாரத்தைத் தொடரும் தேவைகட்காகப் பயன்படுத்துவதை நாம் காணலாம். கிறிஸ்துவமும் பைபிளும் மிகவும் தீவிரமான மறுவாசிப்புக்கட்கு இன்றும் ஆளாகி வருவதை நாம் காணலாம்.
இன்னொருபுறம், எதிர்ப்பு இலக்கியம் என்று உருவான சமுதாயச் சூழலை மறைத்துவிடுவதன் மூலம் ஒரு படைப்பை எளிதாகவே தமதாக்கும் வசதி உள்ளது. இங்கு, சில சமயம் ஒரு இலக்கியப் போக்கின் சில பகுதிகள் மீதான அழுத்தத்தை நீக்குவதன் மூலம் அந்த இலக்கியப் போக்கை நிறுவனச் சார்பான ஒன்றாக அங்கீகரித்து விடலாம்.
தேவார திருவாசகங்களின் பக்தி இலக்கிய அரசியற் பரிமாணம் நெடுங்காலமாக மறைக்கப்பட்டு வந்தது போலவே, வைணவ uá5g5) இலக்கியத்தின் அரசியற் பரிமாணமும் அலட்சியம் செய்யப்பட்டு இந்த இலக்கியங்கள் வைதிக மத விருத்தியுடன் ஒட்டப்பட்டு வாசிக்கப் பட்டுள்ளன. சைவ குரவர் எனப்படும் பக்தி இலக்கிய மரபினர் காலத்திற்குப் பின்பு சைவ சித்தாந்தம் தன் இறுக்கமான வடிவைப் பெற்றது. சந்தான குரவர் எனப்படுவோர் சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய காலத்தை ஒட்டி, பக்தி இயக்கத்தின் கிளர்ச்சிப் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டுச் சடங்கு சம்பிரதாய முறையிலான ஒரு மதத்தின் பகுதியாக பக்தி இலக்கியம் உருமாறியது. அதன் வரலாற்றுப் பரிமாணமும் சமுதாயப்பண்பும் புராணமாக்கலால் மழுங்கடிக்கப்பட்டன. மாக்ஸிய ஆய்வு முறையின் வருகையின் பின்னரே, புராணமாக்கப்பட்ட வரலாறு ‘கள் பல அவற்றின் சமுதாய யதார்த்தத் தோற்றத்தை அறியும் தேடலு
க்கு உட்பட்டன.
மேற்கூறிய விதமான அங்கீகாரத்தின் மூலம் எதிர்ப்பு இலக்கியமான பக்தி இலக்கியம் அதன் எதிர்ப்புப் பண்பின் முனைகள் மழுக்கப்பட்டு சனாதன மதத்தின் புதிய நிலைநிறுத்தலுக்கு ஆதாரமாகவும் மாற்றப்படு
20 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

கிறது. சமய இலக்கிய்ற்களின் மீது திணிக்கப்படும் தூய ஆன்மிக வாசிப்புக்கள் அவற்றின் சமூகச் சார்பான உள்ளடக்கத்தை மறுதலிக்கும் நோக்கை உடையன என்பதில் அதிக ஐயத்திற்குப் புதிய சனாதனிகள் இடம் வைக்கவில்லை.
விவேகானந்தர் போன்றோரது சிந்தனைகளின் முற்போக்கான பண்புகள் புறக்கணிக்கப்பட்டு இந்துத்துவத்தின் புதிய விக்கிரகங்களாக அவர்கள் மறுவார்ப்புச் செய்யப்படுவதும் பாரதியின் ஆன்மிகத்தைப் பிராமணியக் கண்ணோட்டத்தில் வளைக்கும் முயற்சிகளும் வியப்புக்குரியன அல்ல.
எதிர்ப்பு இலக்கியங்களதும் கலை வடிவங்களதும் பல்வேறு பண்புகளை உள்வாங்கியும் இப்போது வணிகமயப்படுத்தியும் அவற்றின் கிளர்ச்சிக் கூறுகளை அடையாளந் தெரியாமற் செய்வது வரலாற்றில் நெடுகிலும் கடந்து வந்த ஒன்றே. ஜாஸ், ளுேஸ், போன்ற கறுப்பு அமெரிக்க இசை வடிவங்கள் அடிமை வியாபாரத்திற்குப்பலியான அமெரிக்க நீக்ரோ சமுதாயத்தின் மனதின் துன்பத்தின் குரல்கள். மேனாட்டு றொக், பொய், இசை மரபுகள் அவற்றினின்று ஊட்டம் பெற்றவை தாம். நீண்ட காலமாகவே அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஜாஸ், ளுேஸ் போன்ற இசை வடிவங்கள் இன்று அங்கீகாரம் பெற்ற இசை வடிவங்களாகி விட்டன. அவை இன்று எதிர்ப்பின் குரல்களை ஒலிப்பன அல்ல என்றே கூறலாம். இவ்வாறே றெGே என்ற மேற்கிந்திய (ஜமேய்க்கா) இசை வடிவமும் வெளிவெளியாகவே எதிர்ப்பின் குரல்ாக ஒலித்து வந்த காலம் ஒரு தசாப்த்தத்தில் மாறி விட்டது. அது இன்று வணிகக் கலை வடிவங்களுடன் சங்கமிக்கத் தொடங்கி விட்டது.
கிளர்ச்சியினதும் எதிர்ப்பினதும் குரல்களைத் தாங்கி வரும் கலை இலக்கிய வடிவங்கள் தமது போராட்டக் காலச் சூழலிற் செயற்பட்ட விதமாக வரலாற்றில் எப்போதுமே செயற்பட முடியாது. அவற்றை எசமான வர்க்கம் அழிக்க முடியாத போது அங்கீகாரத்தின் மூலம் அடையாளம் மாற்ற முயல்கிறது என்பதும் அதில் வெற்றி கண்டு உள்ளது என்பதும் நாம் கவனிக்க வேண்டியது.
கலை இலக்கியங்களில் புரட்சிகரத்தன்மையையும் எதிர்ப்பின் குரல்களையும் நாம் அடையாளங் கண்டு முக்கியப்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதுபற்றி அடுத்த பகுதியிற் கவனிப்போம். அதே வேளை, பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் என்ற பேர்களில் நடக்கும்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 2

Page 13
சில காரியங்கள் பற்றியும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது.
இன்று கட்டவிழ்த்தல், மீள்கட்டமைத்தல் என்ற பேர்களில் மிகவும் போலியான ஆராய்வுப் பாவனைகளுடன் ஒரு புதிய மாயாவாதம் கட்டியெழுப்பப்படுகிறது. பெரும்போக்கான வரலாற்றுப் பார்வைக்கு மாறாகத் நுண்காண் பார்வைகளை முன்வைப்பதன் மூலம் வரலாறு பற்றிய உலகு தழுவிய பார்வை ஒன்று விருத்திபெறாது மறிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் ஒன்றுபட்டுப் போரிட வேண்டிய ஒடுக்கப்பட்ட மக்கள் தமது வரலாற்றையும் மரபையும் பண்பாட்டுச் சூழலையும் தம்மைச் சூழ உள்ளவற்றினின்று பிரித்தும் தனிமைப்படுத்தியும் நோக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர்.
நவீன ஆய்வுப் பார்வைகள் என்ற பாசாங்குகள் ஒரு புறம் இருக்க என். ஜி. ஒ. எனப்படும் தன்னார்வக் குழுக்களின் மூலமாக மக்களைத் திசைதிருப்பியும் ஆய்வறிவாளர்களை விலைக்கு வாங்கியும் சுயமுயற்சி மீதான நம்பிக்கையைச் சிதறடித்தும் பல காரியங்கள் நடக்கின்றன. மக்கள் கலை இலக்கிய வடிவங்களின் புரவலர்களாக இந்த என். ஜி. ஒ. நிறுவனங்கள் பல உலா வருகின்றன. இவர்களது நிதி உதவி இல்லாமல் மக்கள் சார்பாக எதையுமே செய்ய இயலாத ஒரு நிலையை அவர்கள் வேண்டுகிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கிற உலகமயமாக்கலின் தந்திரோபாயங்களில் ஒரு பகுதியாகும்.
பின் நவீனத்துவம் என்பது, ஏகபோக முதலாளியம் தனது நவகொலனிய உலக ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரளாது தடுப்பதற்கான ஒரு புதிய சித்தாந்தமாகவும் ஆய்வு முறையாகவும் இன்று செயற்பட்டு வருகிறது.
எசமானர்கள் தமது வர்க்க சுபாவத்திற்கேற்ப செயற்படுகிறது பற்றி அவர்களிடம் நாம் முறைப்பட இடமில்லை. அவர்களது நடத்தையை மாற்றும் படி நாம் கேட்பது ஒரு வர்க்கம் என்ற முறையில் தற்கொலை செய்யுமாறு அவர்களைக் கேட்பது போன்றது. நம்முன்னுள்ள தேவை ஏதெனில் அவர்கள் எதிர்ப்பின் குரல்களை மறிக்கவும் மங்கவைக்கவும் திரிக்கவும் களவாடித் தமதாக்கவும் செய்கிற முயற்சிகளுக்கு எதிராக நாம் என்ன செய்யலாம் என்பதை அறிவதும் அதனை நடைமுறைப் படுத்துவதுமாகும்.
22 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

5. எதிர்காலம் நோக்கி
முற்போக்குச் சக்திகளிடையே அரசியலில் மட்டுமல்லாது கலை இலக்கியங்கள் பற்றியும் பாரிய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. முற்றிலுஞ் சரியானதென்று நாம் முன் கூட்டியே அறியக் கூடிய முடிபுகளைத் தருவதற்கு வரலாறு துய கணிதமோ சடப்பொருள் விஞ்ஞானமோ அல்ல. விஞ்ஞானங் கூட, நிச்சயமின்மைக்கு அப்பாற்பட்டதல்ல. நடைமுறை மட்டுமே மனிதச் செயற்பாடுகள் அனைத்திலும் காலத்தால் அழியாத நடுவராகச் செயற்பட்டுத் தீர்ப்புக்கூறிவந்துள்ளது.
புரட்சிகர இலக்கியவாதியின் பணி பற்றிச் சில பொதுவான உடன்பாடுகளை நாம் காணலாம். ஆயினும் ஒரு படைப்பாளி எவ்வாறு செயற்பட வேண்டுமென்று இறுக்கமாக வரையறுப்பது இயலாத காரியம். புரட்சிகர அரசியல் இயக்கம் விறைப்பான சமூகப் பார்வையை உடையதாயிருக்க அவசியமில்லை. கலை இலக்கியங்களை அழகியல், சமூகக் கண்ணோட்ட அடிப்படைகளில் மதிப்பிடும் தேவை எப்போதும் புரட்சிகர இயக்கங்கட்கு உண்டு. சமுதாயத்தைச் சீரழிக்கவும் மக்கள் மத்தியில் உள்ள சினேக முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகக் காட்டவும் முனைகிற நச்சு இலக்கியங்கள் பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்தும் தேவை புரட் சிகர கலை-இலக்கியத் திறனாய்வாளர்கட்கு உண்டு. இன்று தொடர்புசாதனங்கள் மக்கள் மீது ஏற்படுத்துகிற தாக்கம் பெரிது. செய்திகள் முதல் வரலாறு வரை தொடர்பு சாதன உரிமையாளர்களது ஆதிக்கத்தின் கீழேயே வியாக்கியானம் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. தகவல் யுகம் என்பது தகவற் திரிப்பிற்கான யுக. மாகவே விருத்தியடைகிறது. எனவே, புரட்சிகரக் கலை-இலக்கியப் படைப்பாளிகளது செயற்பாடு, மிகுந்த இடைஞ்சல்கட்கு மத்தியிலேயே நடக்கிறது.
மக்களுக்கான கலை-இலக்கிய வடிவங்கள் கூட இன்று என். ஜி. ஒ.க்கள் மூலம் எசமானத்துவத்தின் தேவைகட்காக வளைக் கப் படுகின்றன. "தூய கலை இலக்கியம்" பேசுவோர் வணிக நோக்கில் வரும் கலை இலக்கியச் சீரழிவுக்கு எதிராகப் பேசுவது ஒரு சடங்காக நடக்கிறது. சமுதாயத்தினின்று ஒதுங்கிப் போகிற கலை இலக்கிய தூய்மைக்காரர், அமர இலக்கியக் கனவுகளில் வாழ்கிற அளவுக்கு, வாழுகிற மக்களுக்கான இலக்கிய நடைமுறைபற்றிக் கவனிப்பதில்லை. எனவே, கலை இலக்கியங்களை வெறும் பொழுதுபோக்காக்கி மக்களது ரசனையைத் தரங்குறைத்துக் கீழ்மையான சமுதாய விழுமியங்களைக்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 23

Page 14
கொண்ட ஒரு நுகர்வுக் கலாசாரம் உருவாக்கப் படுவதை மறிக்கும் பணி, புரட்சிகர, முற்போக்குச் சக்திகளின் தோள்களிலேயே தங்கியுள்ளது. சமூக அக்கறையற்ற தனிமனிதர்களை உருவாக்குவதில் எசமானர்கள் மிகவும் முனைப்புடன் செயற்படுகிற காலம் இது. தனிமனிதவாதம் ஒரு உயர்ந்த பண்பாய்ப் போற்றப்படுகிறது. இங்கும் கலை இலக்கியத் தூய்மைவாதிகளிள் தனிமனித வாதத்தைப் போற்றி மக்களுக்கான கலை இலக்கியங்களைக் கும்பல் கலாசாரம் என்று இழிவு செய்கிறார். கள். தனிமனித சுதந்திரம் என்பது தனிமனிதவாதமல்ல. அது சமூகம் என்ற ஒரு கூட்டமைப்பில் சமூக நலனை அனுசரித்துத் தனிமனிதர் தம்மையும் தமது சமூகத்தையும் உயர்விக்கும் நோக்குக்கு நெருக்கமானது. தனிமனித சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும், முழுச் சமுதாயத்திற்கும் உள்ள சுதந்திரத்தினின்றும் பிற தனிமனிதர்களது உரிமைகளினின்றும் சுதந்திரத்தினின்றும் பிரித்துப்பார்க்க இயலாதவை. இவற்றைக் கருத்திற் கொண்டே எசமான வர்க்கத்திற்கெதிரான கலைஇலக்கியப் போராட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புரட்சிகர ஐக்கிய முன்னணிக் கோட்பாடு போல, புரட்சிகரக் கலை இலக்கியப் பணிகளிலும் ஐக்கியமும் போராட்டமும் என்ற அடிப்படை யிலான ஒரு பரந்துபட்ட ஐக்கியத்திற்கான தேவை உள்ளது குறைந்தபட்சக் கலை இலக்கியக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறான ஐக்கியம் கட்டியெழுப்பப்பட முடியும்.
உருவமும் உள்ளடக்கமும் பற்றிய குழப்பமான சிந்தனைகள் இடையிடையே குழப்பமான விவாதங்கட்கு காரணமாகியுள்ளன. புரட்சிகரக் கலை இலக்கியங்கள் வெறுமனே சரியான அரசியல் உள்ளடக்கத்தால் மட்டுமே மக்களைச் சென்றடைவதில்லை என்பது பற்றிப் பலமுறை மாக்ஸியத் திறனாய்வாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அழகியல் என்பது சமூகச்சார்பின்றிக் கால, இடச் சமுதாயச் சூழற் பரிமாணங்கட்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒரு பொருளல்ல. எந்தக் கலைவடிவத்தைச் சார்ந்து செயற்படும் போதும் அதற்கு உரிய அடிப்படையிலான அழகியல் விழுமியங்கள் பற்றிய உணர்வுடனேயே புரட்சிகரப்படைப்பாளி செயற்பட வேண்டியுள்ளது. மக்களுடைய அழகியல் உணர்வையும் அரசியல் உணர்வையும் ஒருசேர உயர்த்துகிற நோக்கிலேயே புரட்சிகரப் படைப்புலகம் செயற்பட முடியும்.
மக்களுக்கான கலை இலக்கியங்கள் எனும் போது மக்களைச் சென்றடையக் கூடிய பண்பு முக்கியம் பெறுகிறது. மக்களிடையே பரவ
24 - எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

லான் வரவேற்பைப் பெறுகிற கல்ை இலக்கிய வடிவங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான ஆக்கங்களை வழங்குவதும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தக்கூடிய E60)6) இலக்கிய வடிவங்களை ஊக்குவிப்தும் முக்கியமான புரட் சிகர இலக்கியப்பணிகள். எவருக்கும் விளங்கக் கடினமான கலை இலக்கிய வடிவங்களை உயர்வானவையாகவும் தெளிவும் எளிமையுங் கொண்டவற்றைத் தாழ்வானவையாகவும் எண்ணி மயங்குகிற போக்கு சில புத்திஜீவிகளது தலைகளை அடைத்துக் கிடக்கிறது. புரட்சிகரப் படைப்பாளியோ திறனாய்வாளனோ இத்தகைய மயக்கங்கட்கு ஆளாக அவசியமில்லை. யாருக்காகப் படைக்கிறோம் என்ற தெளிவும் எதற்காகப் படைக்கிறோம் என்பது பற்றிய நிச்சயமும் எதையும் புத்தித் தெளிவுடன் நோக்கி உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு காணும் நல்ல மதியும் புரட்சிகரப் படைப்பாளிக்கு அவசியமானவை. பொய்மை சார்ந்தோ மக்கள் நலனுக்குப் பகையாகவோ தெளிவீனத்தையும் குழப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டோ புரட்சிகர அழகியல் அமையக் கூடாது.
மாறுபட்ட வாசிப்புக்களை இயலுமாக்குவதே நல்ல இலக்கியம் என்ற விதமான ஒரு மயக்கம் இன்று ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எந்த இலக்கியத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்கள் சாத்தியமானவை. ஆக்க இலக்கியஞ் சாராத எழுத்திற் கூட மாறுபட்ட வாசிப்புக்கள் இயலுமானபோது, ஆக்க இலக்கியத்தில் இவை மேலும் இயலுமாகின்றன. ஆயினும் படைப்பாளி எத்தகைய வேறுபட்ட வாசிப்புக்களை மனதிற் கொண்டு படைப்பை உருவாக்கிறார் என்ற கேள்வி நம்முன் உள்ளது. தனது பார்வையை வாசகருடன் பகிர முனைகிற படைப்பாளி அதை வாசகர் மீது திணிப்பது இலக்கியமாகாது. ஆயினும் தனது பார்வை எது என்ற தெளிவு படைப்பாளியின் மனதில் உள்ள அளவுக்குப் படைப்பிலும் புலனாக வேண்டும் என்பது நியாயமானது. வலிந்து மாற்று வாசிப்புக்களைத் திணிக்கிற ஒருபோக்கு இன்று அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் என்ற பேர்களில் திட்டமிட்ட முறையில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் முறையிலேயே, முரண்பாடான வாசிப்புக்கள் இயலுமாக உள்ளமையை ஒரு இலக்கியத் தகுதியாக்கும் வாதமும் அமைகிறது. எல்லாமே அர்த்தம்ற்றது என்கிற புதிய மாயாவாதம், புரட்சிகரமான சமூகச்சார்புடைய இலக்கியத்தை அர்த்தமற்றதாக்குவதைத் த்ன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண். டுள்ளது. இதன் மூலம் நிலவுடைமையாளரும் முதலாளிய எசமானர்களும் எதிர்ப்பு இலக்கியத்தின் மீது பிரயோகித்து வந்த தாக்குதலை
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 25

Page 15
நவகொலனியத்தின் சார்பாக இந்தப் பின் நவீனத்துவ 'புத்திஜீவிகள் செய்கிறார்கள்.
வரலாற்றில் எதிர்ப்பிலக்கியங்கள் பற்றிய இரண்டு எதிரெதிரான பார்வைகள் புரட்சிகர இலக்கிய நோக்கின் பேரில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு பார்வை சமகாலச் சமூக நிலைமைகளையும் அரசியலையும் போராட்டத் தேவைகளையும் மனத்திற் கொண்டு தனது குறைந்தபட்சத் தகுதிகளை நிறைவு செய்யாத அனைத்தையும் பிற்போக்கானவை என்று நிராகரிப்பது. மற்றது ஒரு காலத்திற் புரட்சிகரமாகத் தோன்றியவற்றை இன்றைய சூழலிலும் செல்லுபடியான புரட்சிகரத் தன்மையுடையனவாகக் கருதி அவற்றை அப்படியே எடுத்தாளுமாறு பரிந்துரைக்கிறது. இந்த இரண்டுமே வரலாற்றைத் தவறவிட்ட சமூகப்பார்வைகளாகும். காலத்தை ஒட்டி ஏற்படும் மாற்றங்
6 இவ்வாறு இரு வேறு நிலைகளிற் புறக்கணிக்கப்படுகின்றன.
அப்பரையோ ராமனுஜரையோ சித்தர்களையோ புரந்தரதாச. ரையோ எதிர்ப்பின் குரல்களாக அடையாளம் காணுகிற வேளை, அவர்களது சொற்களை அவர்களது காலத்திற்கும் அப்பால் நீட்டி அவற்றின் வரலாற்று பண்பையும் மீறிய ஒரு கால வரையறையற்ற புரட்சிகரமான உள்ளடக்கத்தை அவற்றுக்கு வழங்கும்போது நாம் செய்வதென்ன? பக்தி மார்க்கமே இன்றைய சமுதாய மாற்றத்திற்கான போராட்ட மார்க்கமென்று நம்மாற் பரிந்துரைக்க முடியுமா?எந்த ஒரு மதமும் அதன் தோற்றக்காலக் கிளர்ச்சிப் பண்பு காரணமாக நிரந்தரமான ஒரு விடுதலைக் குரலாக அமைய முடியுமா? -
மதங்களின் பேரால் எழும் பிற்போக்குச் சிந்தனைகளை எதிர்க்க மதங்களின் வரையறைகட்கு உட்பட்டுச் செயற்படுவோர் வரலாற்றில் அதி. காரத்திற்கு எதிரான மத நிலைப்பாடுகளை எடுத்துக் கூறிவந்துள்ளனர். இது முற்போக்கான ஒரு பணி, ஆயினும் இதன் செயற்பாடு வரையறைக்கு உட்பட்டது. புரட்சிகரமான சமுதாய மாற்றத்திற்கான செயற்பாடு அவ்வாறு தன்னை வரையறுத்துக் கொள்ள முடியாது. எனவே, இவ்விதமான செயற்பாடுகட்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவு வழங்கும் அதே வேளை, அது அவற்றுடைய வரையறைகளையும் மீறியும் செயற்பட வேண்டியுள்ளது.
அதிதீவிரவாத நிலைப்பாடுகளை மேற்கொள்வோர், காலம் என்ற பரிமாணத்தை அறவே புறக்கணித்து பக்தி இலக்கியம் முதல் பாரதி
26 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

வரை சகல எதிர்ப்புக் குரல்கட்கும் பிற்போக்கு சுரண்டும் வர்க்க அடையாளம் காட்டி அவற்றை அறவே நிராகரிக்கும் போது நடப்பது என்ன? எந்த கிளர்ச்சிக் குரல்களை எல்லாம் தமக்கேற்ற விதமாக மறுவாசிப்புக்கு உட்படுத்தித் தமக்கு உடன்பாடானவையாக மாற்ற எசமானர்கள் கடுமையாக முயல்கிறார்களோ, அந்தக் குரல்களை எல்லாம் தாக்கி எதிர்த்து நிராகரிப்பதன் மூலம் எசமானர்களின் பணியைத் தீவிரவாதம் இலகுவாக்கி விடுகிறது.
புரட்சிகர இலக்கியவாதிகட்கு நிதானமான தெளிவான பார்வை அவசியம், எசமானவர்க்கம் எங்கெங்கெல்லாம் எதிர்ப்பின் குரல்களைத் தனது அங்கீகாரத்தின் மூலம் கூர்மை கெடச் செய்கிறதோ அங்கெல்லாம் அந்தப் பொய்மையை அம்பலப்படுத்த வேண்டிய தேவை அவர்கட்கு உள்ளது. அந்த எதிர்ப்புக் குரல்களின் காலத்தினதும் சூழலினதும் வரை. யறைகட்கும் அப்பால் அவற்றை எவ்வளவுதூரம் வளர்த்தெடுக்க முடியும் என்ற அறிவும் செய்யும் ஆற்றலும் அவர்கட்குத் தேவை. அதன்மூலம் எந்தக் கிளர்ச்சிக் குரல்களை எசமான வர்க்கம் தனதாகக் காட்டி மக்களை ஏய்க்கிறதோ அதே குரல்களை அவர்கட்கு எதிராக உரக்க ஒலிக்கச் செய்ய முடியும். s
எசமானர்களால் எந்தளவு தூரத்திற்கு எதிர்ப்பின் குரல்களைத் தமக்கு ஏற்றவிதமாகத் திரிக்க முடியும் என்பதற்கு மே தினம் என்கிற உன்னதமான போராட்ட நினைவுநாளை, அதுகுறிக்கும் போராட்ட எழுச்சி உணர்வினின்று திசை திருப்பும் விதமாக, ஒரு வெறும் கேளிக்கை நாளாக்க அது செய்துள்ள காரியங்களினின்று நாம் அறியலாம். யார் யார் எல்லாரும் தொழிலாளர்கள் தமக்கான சங்கம் அமைப்பதைக் கூட எதிர்த்தார்களோ அவர்களெல்லாரும் தொழிற் சங்க அதிபர்களாகியுள்ளதை நாம் காண்கிறோம். மே தின விடுமுறை நாளை எதிர்த்த சக்திகள் மே தின ஊர்வலம் போவதையும் ஒரு போராட்ட நாளை வெறும் கேலிக் கூத்தாக்கி வருவதையும் நாம் காண்கிறோம். இங்கு நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டியுள்ளது. அவர்கள் உழைக்கும் மக்களிடமிருந்து களவாடியதை நாம் மீண்டும் பறித்தெடுத்து அதன் அடையாளத்தை மீட்க வேண்டிள்ளது. மக்களது உழைப்பாலும் சமுதாயச் செயற்பாட்டாலும் உருவான கலை இலக்கியங்களை அவர்கள் மேற்தட்டு வர்க்கத்தின் நுகர்வுக்கு மட்டுமே ஏற்றதாக்கியுள்ளனர். அவற்றை மீண்டும் மக்களுடையதாக மாற்றும் தேவை நமீக்கு உள்ளது.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 27

Page 16
சமுதாய உணர்வுக்கோ மனித-இன மேம்பாட்டுக்கோ மனித சமத்துவத்துக்கோ போராடும் குரல்கள் செவ்வியற் கலைகளிலிருந்து மட்டுமல்லாமல், உன்னதமானவை என்று கொண்டாடப்படும் அண்மைக் காலப் படைப்புக்களினின்றும் கூடக் கவனமாகக் களையப்படுகின்றன. அவை புதிய ஆக்கங்களுட் புகாத விதமாக அழகியற் தூய்மைக் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. அழகு அழகுக்காகவே, கலை கலைக்காகவே என்பது போல, புதுமை புதுமைக்காகவே என்றவாறு உருவாகிவருகிற கலை இலக்கியக் கோட்பாடுகளும் மக்களிடமிருந்து தனித்துநின்று தமக்குள்ளேயே உன்னதங்களைத் தேடுகிற தனிமனிதவாதச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றன. இதற்கு மாறான கோட்பாடான மக்கள் கலை இலக்கியக் கோட்பாடு, அனைத்தும் மக்களுக்காகவே என்று நிற்க வேண்டும்.
மக்களை எட்டக் கூடிய எந்த ஒரு கலை இலக்கிய வடிவத்தையும் மக்களுக்கான படைப்பாளிகள் ஒதுக்கிவைக்க வேண்டியதில்லை. மக்களது ரசனையை மழுங்கடிக்க எசமான வர்க்கம் பலதையும் செய்கிறது. அதற்கான மாற்றுக்களைச் சில வேளைகளில், அதே தளங்களில் நின்று செயற்படுவதன் மூலமே வழங்க நேரிடலாம். அதே வேளை, மக்களின் பங்குபற்றுதல் மூலம் அவர்களது ரசனையையும் சமுதாயப் பார்வைW யையும் முதலாளியம் விரும்புகிற சமுதாயச் சீரழிவினின்று தடுக்கும்
முறையில் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த இடத்திற்தான். புரட்சிகரக் கலை இலக்கியவாதி தூய அழகியல்வாதிகளின் நிந்தனைகட்கும் ஏளனத்துக்கும் மத்தியில் தைரியமாகச் செயற்பட வேண்டியுள்ளது. எளிமையாகவும் தெளிவாகவும் மக்களை இலகுவாகச் சென்றடையும் முறையிலும் அமைகிற படைப்புக்களை அவர்கள் தமது காலத்தை வென்ற அமர இலக்கியங்களுடன் வைத்துக் கருத மாட்டார்கள். உண்மையில் மக்களது தேவைகளையும் அவற்றை நிறைவுசெய்யத் தக்க ஒரு சமுதாயமாற்றத்தையும் அதற்கான போராட்டத்தையும் கூறுகிற எந்தப் படைப்பும் நலமடிக்கப்படாதவரை அவர்களது பார்வையில் அமர இலக்கியமாகாது. எனவே புரட்சிகரப் படைப்பாளி முன் உள்ள தெரிவு மிகத் தெளிவானது. அவர்களை மகிழ்விக்கத் தனது சமூக அரசியற் சிந்தனைகளை, நெஞ்சுக்கு நியாயமாகப்படுவதை, மனித குலத்தின் நலனுக்கானது என்று தான் கருதுவதைத் தான் விரும்பும் சமுத்ாய மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவர்களான மக்களை எட்டும் விதமாக எழுதுவதா என்பது அதிகம் சிக்கலான ஒரு தெரிவு அல்ல.
28 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

எந்த விதமான கலை இலக்கிய வடிவங்கள் மக்களை அதிகளவில் எட்டுமோ அவற்றுக்கு முதன்மை கொடுக்கின்ற அதே வேளை, புதிய கலை வடிவங்கள் மூலமும் மக்களுக்குக் குறைந்தளவில் பரிச்சயமான வடிவங்கள் மூலமும் புரட்சிகர உள்ளடக்கத்தை வழங்க முடியுமாயின், அவை பயன்படுத்தப்படுவதும் நல்லதே. மக்களைச் சென்றடைவது எனும்போது, எல்லாமும் உடனடியாகவும் நேரடியாகவும் சென்றடைய வேண்டுமென்று விளங்கிக்கொள்ள அவசியமில்லை. பல வேறு தளங்களிலும் நிகழ்கிற கலை இலக்கியச் செயற்பாடுகளின் இலக்கு மக்களுக்கான, மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருப்பது மட்டுமே அடிப்படையானது.
எந்தக் கலை இலக்கியவடிவம் மக்களைச் சென்றடையக் கூடியது என்பது பற்றிய விவாதங்கள், சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவம் தவிர்ந்த மற்ற எல்லாவற்றையும் நிராகரிக்கும் சில நிலைப்பாடுகளாக ତୂ(B- ங்கி விடுவதைக் காண்கிறோம். இவ்விதமான நிலைப்பாடுகள் பல இடங்களில் தனி மனித வாதத்தின் விளைவானவை. எவரும் தாம் அறிந்ததையோ விரும்புவதையோ மட்டுமே எல்லாருக்கும் ஏற்றதாகப் பரிந்துரைப்பதில் பல ஆபத்துக்கள் உள்ளன. புரட்சிகரக் கலை இலக்கிய வடிவங்களிடையிலான போட்டியை விட ஒத்துழைப்பும் உடன்பாடும் முக்கிய
D66D6, W
எந்தக் கலை இலக்கியவாதியும் மற்றவர்கள் மீது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனேயே படைப்பில் இற்ங்குகிறார். அந்தளவில் எல்லாரது கலை இலக்கிய முயற்சிகளும் தம்மைச் சூழவுள்ள சமூகத்தை ஏதோ வகையில் மாற்றும் முயற்சிகளே. தனி ஒரு கலை இலக்கியவாதியோ தனி ஒரு படைப்போ உலகைத் தலைகீழாக மாற்றிவிடாது. ஆயினும், சிலரது பங்களிப்புக்கள், அவை வழங்கப்படுகிற சூழலை ஒட்டிப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவன. ஒவ்வொரு பங்களிப்பும் அதனையொட்டி நிகழும் சமுதாய மாற்றத்தின் உந்து விசையாகச் செயற்படுகையில் அதன் ஆற்றல் பெரிதாகிறது. எந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியும் தன்னை முதன்மைப்படுத்தி மற்றவர்களது பங்கைக் குறைவாக எண்ணுவதற்கு நியாயமில்லை. எந்த ஒரு படைப்பினதும் வெற்றி அதனை ஒட்டிய சமூகச் சூழலில் மிகவும் தங்கியுள்ளது. அச் சூழலை உருவாக்குவதில் பெருவாரியானவர்களது பங்களிப்புக்கள் அவர்களது பேர், முகவரி இல்லாமலே வழங்கப் படுகின்றன. எனவே, மக்கள் முன் புரட்சிகரக் கலை இலக்கியவாதிகள் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வது மிக முக்கியமானது. மக்களை விட மேலானவர்களா.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 29

Page 17
கத் தம்மைக் கருதும் படைப்பாளிகள் மக்களுக்காக எழுதுவது இயலாத காரியம். புரட்சிகரப் படைப்பாளி தன்னைத் திரும்பத் திரும்பக் கேள்வி. க்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்தக் கலை இலக்கிய வடிவங்கள் எளிதாக மக்களைச் சென்ற டையக் கூடியன என்பது ஒரு முக்கியமான விடயம் என்றால், எசமானர்கள் களவாடவும் திசைதிருப்பவும் சிரமமான கலை இலக்கிய வடிவங்கள் எவை என்பதும் அதனுடன் எழும் இன்னொரு முக்கியமான விடயம். மக்களது பங்குபற்றுதலை முதன்மைப்படுத்தும் கலை இலக்கிய வடிவங்களில் சனநாயகப் பண்பு அதிகம். அத்தகைய கலை இலக்கிய வடிவங்கள் கூட்டு முயற்சிகளாக வளர்த்தெடுக்கப்படும் போது, அவ்ற்றால் ஒரு வலிய சமுதாயச் சக்தியாக உருவெடுக்க முடியும். உதாரணமாக வீதி நாடகம் இன்று நாம் அறிந்துள்ள ஒரு வலிய கலை வடிவம், இதிற் பிற கலைத் துறைகட்கும் விரிவாக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன. எனினும் இன்றுஎதையும் வியாபாரமாக்கி மலினப்படுத்தும் ஒரு போக்கின் நடுவே எசமான வர்க்கத்தின் தாக்குதலுக்கும் களவாட லுக்கும் எதிரான பூரண உத்தரவாதம் என எதுவுமில்லை. மறுவாசிப்புக்கள் என்ற பேரிலும் மாற்று வாசிப்புக்கள் என்ற பேரிலும் அந்தப் பணிகட்கு உதவச் சில புத்திஜீவிகளைக் கொண்ட கூலிப்படைகள் காவல் நிற்கின்றன. எனவே எதிர்ப்பு இலக்கியமும் தனது போராட்ட உத்திகளை அதற்கேற்றபடி வளர்த்துக் கொண்டே போக வேண்டும்.
முதவாளியத்தின் சார்பாகவும் குறிப்பாக நவகொலனியமாக்கலின் கீழும் நிகழும் வரலாற்று மோசடிகளினின்று எதிர்ப்பு இலக்கியங்களின் வரலாற்றுத் தன்மை காக்கப்பட வேண்டும். இது முற்போக்குத் திறனாய்வாளர்களது அவசியமான பணிகளில் ஒன்று. அதேவேளை, பழைய எதிர்ப்பு இலக்கிய்ங்களில் உள்ளவற்றை அப்படியே பின்பற்றும் போக்கு கவனமாக விமர்சிக்கப்பட வேண்டும். மறுபுறம், மரபிலும் சமூக வழக்கிலும் உள்ள கலை இலக்கியங்கள் மூலம் புதிய புரட்சிகரச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் படைப்பாளிகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்திலும், முக்கியமாகப் புரட்சிகரப் படைப்பாளிகளும் திறனாய்வளர்களும் முதலாளிய நிறுவனங்களது அங்கீகாரத்தாலோ அது கிடையாமல் போவதையிட்டோ மன மயக்கங்கட்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டும். தமது படைப்புக்கள் போராடும் மக்களுக்கு எவ்வளவு தூரம் வலிமை சேர்க்கின்றள என்பதையே அவர்கள் தமது பிரதான அளவு கோல்களாகக் கொள்ள வேண்டும்.
30 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

6. இறுதியாக
அடக்குமுறையும் சுரண்டலும் உள்ள வரை, எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும். எதிர்ப்பும் போராட்டமும் கலை இலக்கிய வடிவங்களுடாகவும் தம்மை வரலாற்றில் எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளன. போராட்ட இலக்கியம் என்பது எதிர்ப்பு இலக்கியத்தின் வெளிவெளியானதும் வளர்ச்சி பெற்றதுமான வடிவம். அது தெளிவான போராட்ட இலக்குகளை உடையது. போராட்டத்திற்கான வழியைக் காட்டுவது. ' F.
இன்றைய யுகம் உலகில் ஒடுக்குமுறைகட்கு முற்றாகவே (լքէջ6ռ!- கட்டும் சிந்தனைகளையும் அதைச் செயற்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சமுதாயச் சக்தியையும் அதன் செல்நெறியைத் தீர்மானிக்கும் ஒரு சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது. எனவே இன்றைய யுகத்தின் எதிர்ப்பிலக்கியம் சமுதாய மாற்றத்தை நாடி நிற்கிற ஒரு போராட்ட வடிவமாக, புரட்சிகர இலக்கியமாக மிளிர்வது தவிர்க்க இயலாதது.
புரட்சிகர இலக்கியம் வரலாற்றினின்றும் பாடங்களை பெற்றே வளர்கிறது. அதன் இலக்குப் பற்றிய தெளிவு ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பாளியிடமும் இருக்க வேண்டிய அதே வேளை, சமுதாய யதார்த்தத்தையும் இடத்துடனும் சூழலுடனும் காலத்துடனும் ஏற்படும் மாற்றங்களையும் தணிப்பிலெடுத்துச் செயற்படுமளவுக்கு நெகிழ்வும் அவர்களிடம் இருக்க வேண்டும். விறைப்பான பார்வை மாக்ஸியத்திற்கு ஏற்காதது "மக்களே வரலாற்றின் உந்து சக்தி" என்ற மகத்தான வாக்கியம் புரட்சிகரப் படைப்பாளிகளின் மனதில் உள்ள வரை, மக்களிடமிருந்து கற்றுமக்களுக்கான கலை இலக்கியங்களை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு புதிய உலகை ஆக்குவதற்கு அவர்களாற் பெரும் பங்களிக்க இயலும். ޙި
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 31

Page 18
மாக்ஸியர் எதிர்நோக்கும் சில படைப்பிலக்கியச் சவால்கள்
1. முன்னுரையாக
இலக்கியம் என்பது மனித வாழ்வு சார்ந்தது'எனவும் படைப்பிலக்கியவாதி மனித வாழ்விலிருந்தே தனது படைப்பாற்றலைப் பெறுகிறார் எனவும் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலக்கியம் பற்றிய பார்வை எப்போதும் இவ்வாறாக இருக்கவில்லை. தெய்வாம்சம் பொருந்திய படைப்பாளிகள், அன்றாட வாழ்வின் அல்லற்பாடுகட்கும் அப்பாற்பட்ட உன்னதமான இலக்கியம் என்பன போன்ற கற்பனைகள் முதவாளியத்தின் வருகையுடனே தகர்ந்துபோகத் தொடங்கி. விட்டன. ஆயினும் இலக்கியத்திற்கும் மனிதரது சமூக இருப்புக்கும் இடையிலான உறவு மட்டுமன்றிச் சமுதாய மாற்றத்தில் இலக்கியத்தின் பங்கு புற்றிய தெளிவான கணிப்பு மாக்ஸியத்தின் வருகையின் பின்னரே இயலுமாயிற்று. 150 ஆண்டுகள் முன்னம் வெளியான "கம்யூனிஸ்ட் அறிக்கை" பாட்டாளிவர்க்கப் புரட்சி பற்றிய பிரகடனம் மட்டுமல்ல. அது முதலாளிய சமுதாயத்தின் விழுமியங்கள் ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தியது. அதற்கு இலக்கியமும் விலக்கல்ல. உலகை மாற்றுவதற்கான மாக்ஸிய மெய்யியலோடு இணைகிற மாக்ஸிய நடைமுறை ஒவ்வொன்றும் போல, மாக்ஸிய இலக்கியமும் இலக்கியப் பார்வைம் சமுதாயத்தை அறியவும் விளக்கவும் முனைவது அதை மாற்றுவதற்கே.
மாக்ஸியத்தின் இலக்கியப் பார்வை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவை மாக்ஸியம் பற்றிய புரிதல் தொட ர்பானவையாகவும் குறிப்பிட்ட சமுதாயச் சூழலில் மாக்ஸிய நடைமுறையின் பிரச்சினைகள் சார்ந்தும் எழுவன எனலாம்.
- மாக்ஸிய அரசியலில் வலது சந்தர்ப்பவாதமும் இடது தீவிரவாதமும் போல மாக்ஸிய இலக்கியப் பார்வையிலும் அவ்வாறான
32. எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

போக்குக்கள் இருந்துள்ளன. உறுதியற்ற அரசியல் போல் உறுதியற்ற இலக்கியப் பார்வைகள் இருந்துள்ளன. விறைப்பான வரட்டு மாக்ஸிய அரசியல் போல விறைப்பான இலக்கியப் பார்வைகள் இருந்துள்ளன. இவற்றினூடே, இவற்றுக்கு ஈடுகொடுத்தே மாக்ஸிய இலக்கியப் பார்வை வளர்ந்து வந்துள்ளது. மாக்ஸிய அரசியல் போராட் ட விடுதலை இயக்கங்களிற் பரந்துபட்ட அணி, ஐக்கிய முன்னணி, மக்கள் யுத்தம் போன்ற கோட்பாடுகள் பற்றி நாம் அறிவோம். இலக்கியத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலமே மாக்ஸிய இலக்கியப் போராளிகள் இயங்கிவந்துள்ளனர். முற்போக்கு இலக்கியம் என்ற கோட்பாடு முற்கூறிய அடிப்படைகளில் எழுந்த ஒன்றுதான்.
இதுவரை இலக்கியத்துறையில் மாக்ஸியச் சிந்தனை ஏற்படுத்திய தாக்கம் பெரிது.நமது மண்ணில் மரபுவாதத்திற்கு எதிராக மண்வாசனை. யையும் மக்களது பேச்சு வழக்கின் இலக்கியத் தகுதியையும் நிலை. நிறுத்தியதில் மாக்ஸியவாதிகளின் பங்கு பெரிது. இழிசினர் வழக்கு இலக்கிய வழக்காக நிமிர்ந்தது அப்போராட்டத்தின் பெரிய வெற்றி. இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றிய பிரச்சினை அடுத்த பெரிய மோதலாக வலுத்தது. இவ் விவாதத்தின் முக்கியமான அடிப்படை கலை இலக்கியங்கட்கு ஒரு சமுதாயப்பார்வை தேவையா என்ற கேள்வியே. தூய அழகியல்வாதிகள் எனப்படுவோர், கலை இலக்கியங்கட்கு அது தேவை இல்லை என்பதற்கும் அப்பாற் சென்று. அது இருப்பதே தீயது என்ற விதமாகக் கருதினர். கலை இலக்கியங்கள் பிரசாரம் செய்வ. தில்லை, அவ்வாறு செய்யும் போது அவை கலைப்பண்பையும் இலக்கியத் தன்மையையும் இழந்து விடுகின்றன என்பது அவர்களது வாதம். இது வரலாற்றாற் பொய்ப்பிக்கப்பட்ட ஒன்று என நாம் அறிவோம். ஆயினும், இந்த வாதம் வெவ்வேறு பேர்களிலும் வடிவங்களிலும் தலைதூக்கி வந்துள்ளது. வந்தும், இன்று வரை மாக்ஸியத் திறனாய்வின் காத்திரமான விமர்சனத்தின் முன்னால் அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தனிமனித சுதந்திரத்தையும் தனிமனிதவாதத்தையும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு போக்கு, தனிமனிதர்களது சாதனைகளாகவே கலை இலக்கியப் படைப்புக்களைக் காட்டி வருவது இயல்பானது. இங்கே மேதைகள் மட்டுமே பொருட்படுவர். மற்றோர் அறிவில்லாத அஞ்ஞான வெகுசனங்கள். இந்த மந்தைகளை யார் மேய்ப்பது என்பது தான் அவர்களது கரிசனை. அவர்கட்காக அவர்கள் எழுத அவசியமில்லை. கலை இலக்கியத்திற்கான மூலப்பொருள் எங்கே ஆகாயத்திலிருந்து
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் - 33

Page 19
இந்த ஞானிகள் மனதிற்குள் கொட்டப்படுகிறது என்பதுதான் அவர்களது இலக்கியக் கொள்கையின் அடித்தளம். இவர்கள் எத்தனை தான் பாசாங்கு செய்தாலும் வெகுஜனங்கள் மீதான காழ்ப்பையும் வெகுஜனப் பார்வையும் விடுதலை இலக்கும் கொண்ட இலக்கியங்கள் மீது அவர்களது வெறுப்பையும் அவர்களால் மறைக்க முடியாது.
மரபு வாதத்தில் பல வகைகளை நாம் காணலாம். இறுகிப் போன சமுதாயப் பார்வையைத் தங்களது உடனடியான வர்க்க நலன்கட்கு வாய்ப்பான முறையில் முன்வைக்கும் மரபுப் பார்வைகள் நமது இலக்கியப் பரப்பிற் பெருமளவும் ஓரங்கட்டப்பட்டு விட்டன.
தொகுத்துக் கூறுவதனால், கடந்த காலத்தில் சிந்தனைத்தளத்தில் மாக்ஸியத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட பல்வேறு பிற்போக்குப் பார்வைகள் முறியடிக்கப்பட்டுவிட்டன. ஆயினும்பிற்போக்குச் சக்திகளது செயற்பாடு ஒய்ந்துவிடவில்லை.நடைமுறையில் சில முக்கியமான பழைய எதிரிகளுடனும் புதிய வேடங்களில் வருகிற சில பிற்போக்குச் சக்தி. களுட னும் நமது போராட்டம் தொடர வேண்டியே உள்ளது. இச்சவால்களை நாம் அடையாளம் கண்டு முறியடிப்பதுடன் பொருத்தமான மாற்றுக் கலை இலக்கிய வடிவங்களை வளர்த்தெடுப்பதும் நமது தட்டிக் கழிக்கக் கூடாத பொறுப்பு.
2. நச்சு இலக்கியமும் நலிவுச் சிந்தனைகளும்
மக்களுடைய ரசனையைக் கீழ்மைப்படுத்திச் சமுதாய விழுமியங்களைச் சீர்குலைத்துமக்களிடையே சமுகப்பார்வையைக் குலைப்பதற்கு முதலாளித்துவத்துக்குப்பல தேவைகள் உள்ளன. முதலாவதாக வருவது லாபநோக்கு. பொருளாதார உற்பத்தி தொடர்பான விடயங்களில் இருந்து வந்த வியாபார நோக்கு ஒவ்வொன்றையும் பீடித்து மனித உறவுகளையும் வியாபார உறவுகளாக்குவதில் மும்முரமாக நிற்கிறது. கலை இலக்கியங்கள் என்பன வியாபாரப் பண்டங்களாவதையொட்டிக் கலைஞர்களும் உழைப்பை விற்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வாழ்வின் தேவைகள் பல நல்ல கலைஞர்களையும் இலக்கிய ஆற்யலுடையோரையும் வாணிப நிறுவனங்களுக்குச் சேவையாற்றியும் விற்பனைக்காகவே உற்பத்திசெய்தும் வாழும்நிலைக்குத்தள்ளிவிட்டது. இங்கே கலைஞன் சுதந்திரமானவன்', 'கலைகள் சுதந்திரமானவை' என்பன போன்ற கோஷங்களின் வறுமை அப்பட்டமாகவே தெரிகிறது.
34 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

கலை இலக்கியங்களதும் படைப்பாளிகளதும் விடுதலை மனித விடுதலையினின்று பிரிக்க இயலாத ஒன்று. தூய அழகியல்வாதம் பேசுவோரும் தனிநபர்வாதிகளும் நச்சு இலக்கியங்கள் பற்றியும் வியாபார இலக்கியங்கள் பற்றியும் கண்டிக்கிற போதும் அவர்களால் அவற்றுக்கு மாற்றான நடைமுறை மார்க்கம் எதையும் காட்ட முடிவதில்லை.
நவீனத்துவம் என்ற பேரில் இன்று குழப்பமான சிந்தனைகளைப் பரப்புவதையே காரியமாகக் கொண்டோர் உள்ளனர். அவர்களது கைக்கு எட்டியுள்ள புதிய ஆயுதங்களில் ஒன்று பின் நவீனத்துவம். ஒரு புறம் இது ஒரு புதிய மாயாவாதச் சிந்தனை போலத் தெரிந்தாலும் இதன் பயன்பாடு முதலாளியத்தைப் பொறுத்தவரை பெரிது.
நவகொலனியம் இன்று உலகளாவிய முறையில் பன்னாட்டுக் கம்பனிகள் மூலமும் சர்வதேச நணய நிதி போன்ற அமைப்புக்கள் மூலமும் உலகமயமாதல், தாராளவாதம் போன்ற அழகான பேர்களில் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த மும்முரமாக நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு பரந்துபட்ட அடிப்படையில் ஒற்றுமைப்படுத்தவல்ல எந்தச் சிந்தனையையும் அது சகித்துக் கொள்ள ஆயத்தமாக இல்லை. எனவே மாக்ஸிய-லெனினியம் அதன் பிரதான இலக்காவதில் அதிசயமில்லை.
பாட்டாளி வர்க்கத் தலைமையில் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டம் என்ற கருத்தாக்கத்தை முறியடிக்க அதன் ஆயுதமாக இருப்பது பின் நவீனத்துவம். இது பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையை நிராகரித்து உண்மை என்பதை வெறுமனே அவரவர் வசதிக்கேற்ப வியாக்கியானம் செய்யக்கூடிய ஒன்றாக, முழுமையான பொருளற்ற ஒன்றாகச் சிதைப்பதில் மிகவும் பயன்பட்டு வந்துள்ளது. எங்கெங்கே மக்கள் ஒன்றுபட்டுப் போராட் வேண்டுமோ அங்கெல்லாம்’அவர்களைப் பிளவுபடுத்த அது பயன்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் மாக்ஸிய விரோத முனைப்பில் வளர்க்கப்படும் ஒரு வகையான தலித்தியக் கோட்பாட்டாளர்கள் தமது மாக்ஸிய எதிர்ப்பு நிலையை நியாயப்படுத்தப் பின் நவீனத்துவத்தை நாடுவது நாம் காணக்கூடியது. இதே பின்நவீனத்துவம் முற்போக்கான, சமூகச் சார்பான இலக்கியப் பார்வையை நிராகரிப்பதற்காக இன்னொரு சாராரால் பயன்படுத்தப்பட்டு வருவதையும் நாம் காணலாம்.
தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில், குறிப்பாகச் சில புத்திஜீவி வட்டாரங்களில், புதுமை பற்றியும் மேல்நாடுகளில் மோஸ்தரில்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 35

Page 20
உள்ளவை பற்றியும் நிறைய மயக்கங்கள் உண்டு. எப்போதோ விவாதிக்கப்பட்டு எப்போதோ கழித்து ஒதுக்கப்பட்டதெல்லாம் நம்மிடையே இரண்டாங் கையாக இறக்குமதியாகிற மலிவு மோட்டார் வாகனம் மாதிரி ராஜ மரியாதையுடன் வந்து இறங்கும். அது கறள் கட்டி உக்கி விழும் வரை அதிலே சவாரி விடுவார்கள். பிறகு வேறேதாவது தத்துவம். கடந்த இருபது வருடங்களாக, முக்கியமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தங்களின் வெற்றி 1970களில் எட்டிய உச்சத்தை அடுத்து தீவிரமுனைப்புடன் ஏகாதிபத்தியம் தனது கைவரிசையை மீண்டும் காட்டத்தொடங்கிய பிறகு பல முன்னாள் தீவிர இடதுசாரிகளும் பலரகப்பட்ட அரைவேக்காட்டு ஆய்வறிவாளர்களும் புதுமை, நவீனத்துவம் என்ற பேர்களில் செய்து வருகிறதில்லுமுல்லுகள் நாம் கண்டவை
gibsTLD.
இதற்குள், இவையெல்லாம் தமக்குத் தெரியாத புதிய சமாசாரங்கள் என்று யாராவது நின்ைத்துவிடக் கூடாதே என்ற மருட்சியில் தாமும் ஏதோ அறிந்த மாதிரிப் பாவனை பண்ணுகிற ஒரு கூட்டமும் உருவாகி வருகிறது. s 奢
இன்னொரு புறம், சோவியத் யூனியனின் சரிவுக்குரிய அத்திவாரம் க்ருஷ்சொவ் தலைமை ஏற்ற காலத்திலேயே இடப்பட்டு விட்டது என்பது பற்றிய கவனமே இல்லாது, சோவியத் யூனியனின் சரிவை மாக்ஸியத்தினதும் சோஷலிஸத்தினதும் ச்ரிவு என்று எண்ணிச் சோர்ந்தவர்கள் உள்ளனர். இந்தப் பின்னடைவு இன்னும் ஊக்கத்துடன் உழைப்பதற்கான தேவையைக் கூறுகிறதே ஒழிய மயங்கித் தளர்வதற்கான நியாயத்தைத் தரவில்லை என்பதை உணரத் தவறிய சில முன்னாள் இடதுசாரிகள் தமது வாழ்நாளின் முயற்சிகள் எல்லாம் பாழாகி விட்டனவே என்று வாடி விட்டனர். வேறு சிலரோ இனிமேற்கொண்டு அயலார் தயவில் மட்டுமே நமது மண்ணும் மக்களும் வாழ முடியும் என்று தம்மீதும் தம் சமுதாயத்தின் மக்கள் மீதும் பூரண அவநம்பிக்கையுடையோராகிப் பல்வேறு அயல் நிறுவனங்களின் பின்னால் அலையத் தொடங்கி விட்டனர்.
ஏகாதிபத்தியம் பல்வேறு விதங்களில் மக்கள் போராட்டத்தை வேரனுக்க முயல்கிறது. நேரடியான அடக்குமுறை நாம் எளிதாக அடையாளங் காணக்கூடியது. மக்களது சுயசார்பை, சுயவலிமையின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பது அதன் முக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்நிய உதவி என்ற பேரில் நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைப்பது போல பல்வேறு அரசு சாரா நிறுவனங்
36 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

கள் மூலம் மக்களது சுதந்திரமான செயற்பாடு பலவீனப்படுத்தப்படுகிறது. இன்று என். ஜி. ஒ. பண உதவியுடன் மட்டுமே கலை இலக்கியங்கட்குச் சேவையாற்ற முடியும் என்கிற ஒரு கையாலாகாத மனோபாவம் சில புத்திஜீவிகளிடம் உருவாகியுள்ளது. இவர்களது சபல புத்தியையும் மூலதனமாக வைத்தே பல அயல்நாட்டு நிறுவனங்கள் நமது நாட்டின் உள் விவகாரங்கள் மீது தமது தொடர்ச்சியான ஆளுமையை நிலைநிறுத்தும் காரியங்களை நடத்த முடிகிறது.
மேற்குறிப்பிட்டவை இன்று தொடர்புச் சாதனங்களின் அதிவேகமான வளர்ச்சியாலும் அவற்றின் மீது ஏகாதிபத்தியம் செலுத்தும் அதிகாரத்தாலும், நாளேடுகள், சஞ்சிகைகள் முதல் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் உட்பட்ட பல்வேறு தொடர்பு ஊடகங்களில் வணிக நோக்கின் ஆதிக்கத்தாலும் மிக வலிய சக்திகளாகத் தோற்றம் பெறுகின்றன. ஆயினும் உண்மையான நிலை அதுவல்ல.
எந்த நவீனத் தொழில்நுட்ப யுகத்திலும் மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி மனித இன இருப்பை நிர்ணயிக்கும் உலகப் பெரும் சக்தி மக்கள் மட்டுமே. எனவே மாக்ஸியவாதி தனக்கு எட்டக் கூடிய இந்தப் பெரும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தோல்விகளினின்றும் தவறுகளினின்றும் கற்பதன் மூலமே புரட்சிகர இயக்கமும் புரட்சிகரத் தலைமையும் வளர்ந்து வரலாற்றை முன்னோக்கி உந்துகின்றன.
முன்குறிப்பிட்ட சில சவால்களை எதிர்கொள்வது பற்றி இனிச் சிறிது கவனிப்போம்.
3. முன்னோக்கிய பாதையும் முன்னோக்கிய LJULJI6OOT(yph
நச்சு இலக்கியம் எனவோ நலிவுச் சிந்தனை எனவோ எதுவும் இல்லை என்பது போன்ற வாதங்களும் ஒரு புறம் பாட்டாளி வர்க்க இலக்கியக் கோட்பாட்டைப் பாமரத்தனமானது என்று நிராகரித்துக் கொண்டு மறுபுறம் கீழ்த்தரமான ரசனையைத் தூண்டும் வியாபாரிகளுடன் சமரசம் செய்கிற போலித்தனங்களும் இன்று என். ஜி. ஒ. பணத்தில் பத்திரிகைகளாகவும், விழாக்களாவும் அமர்க்களப்படுகின்றன. மறுபுறம் நேரடியாகவே அரசாங்கத்தின் தயவிலும் அயல்நாட்டு அதிகாரச் சக்திகளது தயவிலும் வியாபார நோக்குடனும் மிகவும் மும்முரமான செயற்பாடுகளும் நடக்கின்றன. இத்தகைய பின்னணியிலேயே மாக்ஸிய
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 37

Page 21
வாதி கலை இலக்கியத்துறைகளில் தனது செயற்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டி உள்ளது.
முதலாவதாக, நமது படைப்புக்கள் யாவும் மக்களுக்கானவை என்பது பற்றி நாம் வெட்கப்பட அவசியமில்லை. மக்களை நேரடியாகச் சென்றடையக்கூடிய கலை இலக்கியங்களே மாக்ஸியக் கலை இலக்கியப் பாசறையின் அதி உன்னதமான ஆயுதங்கள். இவை மக்களது சிந்தனையைக் கிளறி அவர்களது கலை உணர்வை உச்சப்படுத்தி அவர். களையும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் உற்சாகமாகப் பங்குபற்றச் செய்ய வலியனவாக இருந்தால், மக்களை மயக்கிப் போதையூட்டும் நலிவுக் கலை இலக்கியங்களின் தளத்தையே அவற்றாற் பெயர்க்க முடியும். --
மக்களது பங்குபற்றல் என்ற பெயரில் பல விதமான வியாபார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உண்மையான வெகுசனப் பங்குபற்றல் மக்களது வாழ்வும் உணர்வுகளும் தொடர்பான பிரச்சினைகளை மையப்படுத்திமக்களுடைய பிரச்சினைகட்கு மக்களிடமிருந்தே தீர்வுகளை நாடுகிற ஒன்றாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பழக்கப்பட்ட, மக்களுக்கு விருப்பமான கலை வடிவங்கட்கு முதன்மை கொடுத்து, அவற்றினூடாக மக்களை அணுகுவது மிகவும் சரியான ஒரு காரியமாகும்.
முற்போக்குச் சிந்தனை என்பது வரலாற்றோடு விருத்தியடைவது. இதில் மனித அனுபவத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. நமது முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்போக்கு இலக்கியம் என்பது ஒரு சாராரால் தமது சந்தர்ப்பவாதத்தை மூடிக்கட்டும் திரையாகப் பயன்பட்ட அளவுக்கு வேறெதையும் உருப்படியாகச் செய்யாத ஒரு சூழ்நிலை உருவாகியது. இதனால் முற்போக்கு இலக்கியம் என்றாலே பலர் முகம் சுழிக்கும் ஒரு அவல நிலை உருவானது. மறுபுறம், புரட்சிகர இலக்கியம் என்பதை மிகவும் தீவிரமான 'மனோரதிய நிலையில் வைத்துக் கருதிய சிலர் இருந்தனர். இது ஒருவகையான கருத்துமுதல்வாதம் என்னுமளவுக்குச் சமுதாய நடைமுறையையும் சமுதாய மாற்றத்தின் இயங்கியலையும் புறக்கணித்தது.
மாக்ஸியவாதி சமூகத்தை மாற்றுவதில் தனது பணி பற்றிய தெளி. வுடனும் உறுதியுடனும் இருப்பது அவசியமானது. அதே சமயம் அந்த மாற்ற்த்தைக் கொண்டு வருவோர் மக்களே என்பதை எப்போதும் நினைவிற் கொள்ளவும் வேண்டும். சில சமயங்களில் புரட்சிகர இலக்கியம் காட்
38 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

டுத் தீயை மூட்டவல்ல ஒரு பொறியாகவும் அமையலாம். ஆயினும் அதுவே தீயாகிவிடாது. எனவே மக்கள் என்ற பெரும் வரலாற்றுச் சக்தியின் முன்பு ஒரு மாக்ஸியப் படைப்பாளிக்கு மிகுந்த தன்னடக்கம் அவசியமாகிறது.
ஒரு சித்தாந்தத்தைக் கொண்டிருப்பது படைப்பாளியின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி சுதந்திரமில்லாததாக்குகிறது என்ற ஒரு பொய் இன்னமும் பரப்பப்பட்டுவருகிறது. சிந்திக்கும் மனிதர் யாவருமே தமக்கென ஏதோ ஒரு வகையான சித்தாந்தத்தை வரித்துக் க்ாண்டவர்கள் தாம். அடையாளங் காணக்கூடிய சித்தாந்தம், அதுவும் சமூக டைமுறையோடு தன்னை இணைத்துச் சமுதாய மாற்றம் வேண்டிச் செயற்பட வழிகூறும் சித்தாந்தமே, சிலருக்குப் பிரச்சினையாகத் தெரிகிறது. இவ் விடயத்தில் மாக்ஸிய இலக்கியவாதிகள் மிகவும் உறுதியாக நிற்ப்து மட்டுமன்றித் தமது நடைமுறை மூலம் தங்களது சிந்தனைச் சுதந்திரம் எவ்வாறு தனிநபர்வாதிகள் கூறுகிற சுதந்திரத்தை விட மேலானது என்று விளக்கவும் முயல வேண்டும். சமூகப் பொறுப்புணர்வற்ற சிந்தனையும் செயலும் சுதந்திரமல்ல என்பதையும் முதலாளியம் கூறுகிற சுதந்திரம் பொய்யானது என்பதையும் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் தேவை அவர்கட்கு உண்டு. * ,
தன்னுணர்வு சார்ந்த எழுத்துக்கள் மீதான பகைமை சில மாக்ஸிய இலக்கியவாதிகளிடம் ஒரு காலத்திற் காணப்பட்டது. இன்றும் அத்தகைய சிந்தனையுடையோர் உள்ளனர். மனிதரது தனிப்பட்ட உணர்வுகள் புறக்கணிக்கத்தக்கன அல்ல. தனிமனித அனுபவம் அற்ப விடயமும் அல்ல. ஆயினும் அவற்றை மனிதரது சமுதாய இருப்பை விட முக்கியமானதாக்கிச் சமுதாய இருப்பினின்று விலக்கி உருவாக்கபடுகிற கன. வுலக இலக்கியங்களும் கற்பனாவாதமும் சில சமுதாய உறவுகட்கும் சாதாரணமான உணர்வுகட்கும் தெய்வீகத் தன்மையையும் அதி உன்னதமான பண்புகளையும் வழங்குவதை எதிர்க்க வேண்டிய தேவை மர்க்ஸியவாதிக்கு உண்டு. இது கவனமாகச் செய்யப்பட வேண்டும். அல்லாது போனால் மாக்ஸியம் தனிமனித இருப்பை மறுக்கிறது என்ற விதமான திரிப்புக்கு வசதி ஏற்படும்.
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிரச்சினைகளைச் சமுதாயத்தின் அடிப்படையான பிரச்சினைகட்குச் சமமானவையாக்குகிற ஒரு போக்கை நாம் இன்று காண்கிறோம். இதை நியாயப்படுத்தவும் பின் நவீனத்துவச் சொல்லாடல் பயன்பட்டு வருகிறது.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 39

Page 22
விபசாரமோ சமபாற்காமமோ (தன்னினச் சேர்க்கை) ஒருவரைத் தீயவர் என்று நிராகரிக்கப் போதிய ஆதாரமில்லை. போதை மருந்து நுகர்வோ குடிப்பழக்கமோ மனிதர்களைச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்குரிய நியாயமும் இல்லை. சமுதாயத்தில் இவ்வாறான நடத்தைகள் இருப்பதற்கான காரணங்களை நாம் அனுதாபத்துடன் ஆராயலாம். இயற்கையின் பிறழ்வுகள் பற்றியும் நாம் கணிப்பிலெடுக்க வேண்டும். விளிம்பு நிலை மாந்தர் பற்றிய் அக்கறையும் மனித நேயமும் காட்டும் அதேவேளை சமுதாய வழமைக்கு புறம்பான நடத்தை ஒவ்வொன்றையும் சமுதாய வழமையான நடத்தையுடன் சமமான அளவு நியாயமும் அங்கீகாரமும் உடையனவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போர் பற்றியும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணமாக, பெண்ணியம் என்பதைச் சமபாற் கலவிக்கான நியா. யமாகவே மக்கள் காணும் விதமாக வாதிடுவோர் உண்மையில் எந்த விதமான பெண்ணுரிமை பற்றிய அக்கறையுடையோர் என்பது பற்றி விழிப்போடு இருப்பதுடன் ஆண்-பெண் சமத்துவம் பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டை ஆக்க இலக்கியத்தினுடும் விமர்சனத்தினூடும் தெளிவாக முன்வைக்கிற கிடமையும் மாக்ஸியப் படைப்பாளிக்கு உண்டு.
தூய அழகியல்வாதிகள் போல சிறு சஞ்சிகைகள் நடத்துவதுடன் மாக்ஸிய இலக்கியவாதி நிறைவு காண முடியாது. மறுபுறம் குப்பை இலக்கிய வியாபாரிகளுடன் சமரசம் செய்யவும் முடியாது. எனவே மக்களிடம் மனித விடுதலைக்கான சிந்தனையைக் கொண்டு செல்வதற்கான மாற்று நடவடிக்கைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். -
வெகுசன இலக்கியம் என்பது வெகுசனங்கட்கான இலக்கியமாக வளர வேண்டும். கலை இலக்கியங்கள் இன்றுவரை தனிமனித சாதனைகளாகவே காணவும் காட்டவும் பட்டுவந்துள்ளன. கூட்டு முயற்சிகளும் வெகுசனப் பங்குபற்றுதலை உள்ளடக்கிய படைப்பாக்கங்களும் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வலிய படைப்பிலக்கிய வடிவங்களாக வளர்க்கப்பட முடியும்.
அவ்வாறே விமர்சனம் என்பது கற்றறிந்த திறனாய்வாளர் சிலரது பிரத்தியேக உரிமை என்ற நிலைமாறி மக்கள் மத்தியில் உலாவுகிற ᏑᏑᏴ6ᏓᎧ கலை இலக்கியங்களையும் மக்களே திறனாய்ந்து மதிப்பிடும் ஆற்றலும் உரிமையும் பேணி வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் அரசியலினின்று பிரிக்கமுடியாதவை. வெகுஜன அரசியல் சார்ந்த (P(b விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போக்கிலேயே மக்கள் இலக்கியம் என்ற கோட்பாடும் முழுமை பெற முடியும்.
40 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

மக்களைச் சென்றடையக் கூடிய விதமான மாற்றுக் கலை இலக்கிய வடிவங்களை மட்டுமல்லாமல் மக்களிடையே செல்வாக்குடைய கல்ை இலக்கிய வடிவங்களில் கைக்கெட்டக்கூடிய எந்த ஒரு கலை இலக்கிய வடிவையும் பயன்படுத்துவதற்கு ஒரு மாக்ஸியப் படைப்பிலக்கியவாதி தயங்க வேண்டியதில்லை. அதே வேளை, மனித இன விடுதலைக்கும் மனித சமத்துவத்துக்கும் நீதிக்கும் குரல் கொடுக்கிற சகல படைப்புக்களும் அடையாளங் காணப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். விடு. தலைக்காகக் குரல் கொடுப்பதற்கு ஒருவர் மாக்ஸியவாதியாக இருந்தே ஆக வேண்டுமென்று ஒரு முன்நிபந்தனை இல்லை. மனித குலத்தின் நலனைக் கருத்திற் கொண்டு மனித இன மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்கும் சகல படைப்பிலக்கியவாதிகளுடனும் ஐக்கியத்துக்கான தேவையுள்ளது. அதேவேளை, தவறான சிந்தனைகளைத் திருத்தும் விவாதத்திற்கான தேவையும் உள்ளது. இவ்விதமான ஐக்கியமும் போராட்டமும் என்ற அணுகுமுறையை மக்கள் விரோத பிற்போக்குச் சக்திகளிடமும் நச்சு இலக்கியகாரரிடமும் சீரழிவுக் கலாச்சாரச் சக்தி. களிடமும் கடைப்பிடிக்க முடியாதது. அங்கு ஐக்கியம் என்ற கேள்விக்கே இடமில்லாது போராட்டமே முதன்மை பெற முடியும்.
புதுமை,நவீனத்துவம் என்ற பேரில் படித்த வாலிபர்களையும் அரசியல் தெளிவு இல்லாதவர்களையும் மயக்குகிற முயற்சிகள் மக்கள் விடுதலைக்கான சக்திகளில் முக்கியமான ஒரு பகுதியினரைச் சீரழிக்கும் நோக்கை உடையன. கலை, இலக்கியம், திறனாய்வு போன்ற துறைகளிலும் அழகியலிலும்புதிய போக்குகள்பற்றிய பரிச்சயம்மாக்ஸியவாதிகட்கு அவசியம். மரபு பற்றிய புரிதல் போன்று நவீனத்துவம் பற்றிய புரிதலும் பயனுள்ளதே. ஆயினும் எந்த ஒரு விடயத்திலும் அதன் சாராம்சம் என்ன என்பது பற்றிய தெளிவு முக்கியமானது. அதன் பின்னரே அதன் குறை நிறைகள் பற்றிய மதிப்பீடும் பயனுள்ளவற்றை எவ்வாறு உள்வாங்கிப் பயன்படுத்துவது என்பதும்போன்ற காரியங்களில் இறங்க முடியும்.
தமிழகத்தில் இன்று நவீனசிந்தனை என்ற பேரில் நிகழும் தில்லுமுல்லுகட்கு முகங்கொடுப்பதிற் சிரமம் அதிகம் இல்லை. பெரும்பாலான பின் அமைப்பியல், பின் நவீனத்துவக் கோட்பாட்டுக்காரர்கள் வெகு சாதாரணமான அறிவின் துணையுடன் பெறக்கூடிய (ptqவைக் கூடத் தவறவிடுகிறவர்களாகவே காணப்படுகின்றனர். மிகச் சிக்கலானதைக் கூடத் தெளிவாக விளக்கக் கூடிய சிந்தனையாளர்களது மொழி எளிமையானது. எளிமையானதை எல்லாம் சிக்கலாகக் காட்டு
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 41

Page 23
கிற குழம்பிய சிந்தனைக்காரரது மொழியும் குழப்பமானது. இப்படிப்பட்ட
புத்திஜீவிப் புரட்சிக்காரர்கள் வரலாற்றில் எப்போதுமே இருந்து வந்துள்ளனர். எனவே அவர்கட்கு முன்னால் மிரள வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.
நவீன சிந்தனையின் பேரால் நடத்தப்படுகிற குழப்ப வேலைகள் எவ்வாறு இருந்தாலும் அதற்காக நாம் பல வேறு நவீன சிந்தனைகள் பற்றி அறிய முயலாமல் இருப்பது தவறானது. எதிரியின் சிந்தனை. களைக் கூட நாம் அறிந்திருக்க வேண்டும். இவ்விடயத்தில் மாக்ஸிய ஆய்வறிவாளர்கள் செய்ய வேண்டியன நிறைய உண்டு. சமகால உலகின் கலை இலக்கியத் திறனாய்வுச் சிந்தனைப் போக்குகள் பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் மக்களுக்குப் பயன்படும் முறையில் அவர்கள் எழுதி வழங்க வேண்டும்.
அனைத்திலும் முக்கியமாக அயலார் தயவில் மக்களது வாழ்வும் வளமும் அடிப்படைத் தேவைகளும் நிறைவுசெய்யப்படும் நிலைமைக்கு எதிராகப் போராடுகிற மாக்ஸியவாதிகள், அதே நிலைமை கலை இலக்கியங்கள் தொட்ர்பாகவும் சமூகப் பணிகள் தொடர்பாகவும் உருவாக்கி வளர்க்கப்படுவது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சுயசார்பு என்பது வெறுமனே ஒரு அரசியற் பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல. மக்களது சுதந்திரமான சிந்தனையும் விடுதலை உணர்வும் தன்மானமும் சார்ந்த ஒரு சுய அடையாள வலியுறுத்தலுமாகும். மாக்ஸியக் கலை இலக்கியக் கொள்கையில அது மக்களுக்கான இலக்கியமாக மட்டுமன்றி மக்களுடையதுமாக அமையும் போதே முழுமை பெறுகிறது. படைப்பாளி வேறு, நுகர்வோரான மக்கள் வேறு என்ற முரண் மனித இனத்தின் விடுதலை முழுமை பெறும் போது இல்லாதொழிகிறது. மாக்ஸிய கலை இலக்கிய நடைமுறை மனித விடுதலைக் கோட்பாட்டையும் சுதந்திரமான செயற்பாட்டையும் வலியுறுத்தி சகல அதிகாரங்களும் மக்களுக்கே என்று கூறி நிற்கும் வரை ஏகாதிபத்தியச் சுரண்டற்காரர்களது தயவில் தனது கலை இலக்கியப் பணியைத் தொடர முடியாது. அயலார் தயவிலான ஒரு பணி போராட்டப் பணியாக அமையவும் முடியாது. எனவே மக்கள் கலை இலக்கிய முயற்சிகள் மக்களைச் சார்ந்தே கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த மண்ணினதும் மக்களதும் விடுதலையை நேசிக்கிற சக்திகள் தவிர்ந்த எவரது தயவும் விடுதலைக்கான இலக்கியத்திற்கு ஊட்டமளிக்காது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
42 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

4. முடிவாக
தொடரான ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிகளின் பின்பு கடந்த தசாப்தம் தொட்டு ஏகாதிபத்தியம் தற்காலிகமாகப் பெற்றுள்ள சில வெற்றிகள் நிரந்தரமானவையல்ல என்பதைத் தென்-கிழக்கு, கிழக்கு ஆசிய நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. மாக்ஸிய இயக்கங்கள் அண்மைக் காலங்களில் சந்தித்த பின்னிடைவுகள் மிகவும் தற்காலிகமானவையே.
மாக்ஸியத்திற்கு மரண சாசனம் எழுதியவர்கள் தாங்கள் எழுதியதை நெருப்பில் எறிய வேண்டிய நாள் நெருங்கி வருகிறது. உலகெங்கும் மறுபடியும் மக்கள் விடுதலைக்கான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. ஏகாதிபத்தியம் உலக மக்களின் பிரச்சினைகட்குத் தீர்வுகளை வழங்க முடியாது. ஏனெனில் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணமே ஏகாதிபத்தியம் தான்.
திறந்த பொருளாதாரம், உலகமயமாதல், அரசியல் தாராளவாதம், பொருளாதாரத்தாராளவாதம் என்கிற விதமான மயக்கும் வார்த்தைகள் வேகமாகவே தமது உண்மையான வடிவை உலக மக்களுக்குக் காட்டி வருகின்றன. எனவே ஏகாதிபத்தியத்தின் இன்றைய புதிய ஏற்பாடு நிலைக்கப்போவதில்லை. அதனால் தானாகவே எல்லாம் நடந்தேறும் என்று நாம் கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது.
மனித சமத்துவத்துக்கும் விடுதலைக்ககுமான சக்திகள் மனிதரது சமுதாயச் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் தமது பங்கைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் மக்கள் முன் உள்ள சவால்கள் பெரியன. அவற்றைக் கடக்கும் ஆற்றலை இன்று மாக்ஸிய-லெனினியத்தை விட வேறெந்தச் சிந்தனை முறையாலும் தர முடியாது.
எதிர்ப்பு இலக்கிய்மும் எசமானர்களும் 43

Page 24
மக்கள் இலக்கியக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வது பற்றி
மக்கள் இலக்கியம் என்பதற்குப் பல் வேறு பக்கங்கள் உள்ளன. மக்களை மந்தைகள் என்று கருதும் 'சான்றோர் சிலரது நோக்கை விலக்கி மக்கள் இலக்கியம் என்பதைப் பல்வேறு நிலைகளினின்றும் நிலைப்பாடுகளினின்றும் நோக்க இடமுண்டு. நம் ஒவ்வொருவரது சமூகப் பார்வையும் வர்க்க நிலைப்பாடும் மக்கள் இலக்கியக் கோட்பாட்டைப் பற்றி ஒவ்வொருவரதும் பார்வையை வேறுபடுத்தும். முற்றிலும் ஒருங்கிணைவான, காலத்தாலும் சூழலாலும் மாறுபடாத ஒரு மக்கள் இலக்கியப் பார்வையை வழங்கும் நோக்கம் மாக்ஸியச் சிந்தனை. யாளர்களிடம் இருந்ததாக நான் எண்ணவில்லை. எந்த ஒரு விறைப்பான பார்வையும் மாக்ஸியத்துக்கு உடன்பாடானது அல்ல. மறுபறம், சமூக நீதிக்காகவும் சமுதாய மாற்றத்திற்காகவும் மனித சமத்துவத்துக்காகவும் போராடுகிற சக்திகளிடையே மக்கள் இலக்கியம் பற்றி அடிப்படையான ஒரு இணக்கத்திற்கு இடம் உண்டு. அதை எவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்ற ஒரு வலுவான கருவியாக்குவது என்ற கேள்வியின் அடிப்படையில் அதை அணுகும் போது, நமக்குச் சில தீர்வுகள் கிட்டுகின்றன. இத் தீர்வுகள் வெளிவெளியாகவே இவ்வாறான உணர்வு பூர்வமான நோக்கின்றிப் படைக்கப்படும் சமூகச் சார்பானதும் மக்களது நலன் சார்ந்ததுமான ஆக்கங்களுடன் முரண்பட்டு நிற்க அவசியமில்லை. ஏனெனில், ஒவ்வொரு படைப்பாளியினதும் சமூகப்பார்வை அவரது ஆக்கங்களிற் தன் முத்திரையைப் பதித்தே இருக்கும். அப்படியானால் விடுதலைப் போராட்ட இலக்குடைய ஒரு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு என்று சிறப்பான ஒரு அணுகுமுறை தேவையா என்ற கேள்வி எழுகிறது.
படைப்பாளிகள் எவ்வளவு தான் முற்போக்கானதும் புரட்சிகரமானதுமான சமுகப்பார்வையைக் கொண்டிருந்தாலும், அவர்களு
44 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

டைய ஆக்கங்கள் புரட்சிகர மாற்றத்திற்குப்பங்களிக்க வேண்டுமானால், அவை சமூக நடைமுறையின் அடிப்படையில் விமர்சனத்துக்கும் மீள் பரிசோதனைக்கும் ஆளாக்கப்பட வேண்டும். முற்றிலும் சரியான ஒரு பார்வையையுடைய எவரும் இம் மண்ணிற் பிறந்ததில்லை. எங்கும் எப்போதும் தவறுகள் நிகழ்கின்றன. அவை திருத்தவும் இயன்றளவுக்குத் தவிர்க்கப்படவும் வேண்டும் என்ற உணர்வுடனும் பணிவுடனும் செயற்படுவோரே குறைவான தவறுகளைச் செய்கின்றனர். திEDது நிலைப்பாடு களில் வரட்டுத் தனமாகவும் மூர்க்கத்தனமான பிடிவாதத்துடனும் நிற்போர் அதிகளவிலான தவறுகளைச் செய்ய இடம் உண்டு. எனவே மக்கள் இலக்கியம் என்று வரும்போது, மற்ற எந்த இலக்கிய நடைமுறையையும் விட முக்கியமான அளவில், தன்னடக்கமானதும் சுயவிமர்சனப் பண்புடையதுமான ஒரு அணுகுமுறைக்கான தேவை உள்ளது. இந்த வகையில், மாஒசேதுங் சீனச் செஞ்சேனையின் போராளிகட்கு வழங்கிய ஆலோசனைகட்கும் புரட்சிகரப் படைப்பாளிகட்கு வழங்கியதற்கும் அடிப்படையான ஒற்றுமை பெரிது. இரண்டு விடயங்களிலும் வெகுசன மார்க்கம் என்பது அழுத்தம் பெறுகிறது.
மக்கள் இலக்கியக் கோட்பாடு அதன் எதிரிகளால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. சில இடது தீவிரவாதிகள் சுலோகத் தன்மையான எழுத்தை மட்டுமே புரட்சிகர இலக்கியமாகக் கருதியது அவ்வாறான பிரசாரத்துக்கு வசதி செய்தது. அழகியலைப்புறக்கணித்து வெறும் அரசியற் சுலோகங்களை இலக்கியமாக்கிவிட முடியாது. இது கலை இலக்கியம் பற்றி மாக்ஸியச் சிந்தனையாளர்கள் அனைவருமே வலியுறுத்தி வந்துள்ள கருத்து. அழகியலைப் புறக்கணித்து வெறும் அரசியலைப் புரட்சிகர இலக்கியமாக மக்கள் முன்வைப்பது, மக்களுடைய அழகுணர்வை அவமதிப்பதாகும். எனவே மக்களுக்கான இலக்கியம் என்பதை நாம் அணுகும் போதும் சில விடயங்களை மனதில் வைத்திருப்து பயனுள்ளது.
9 நாம் வாழுகிற சமூகம் ஒரு சுரண்டற் சமுதாய அடிப்படையிலானது.
9 அதில் ஆதிக்கம் செலுத்துகிற சிந்தனைகள் ஆளும் வர்க்க நலன்
சார்ந்தன.
0 வெகுசனங்களின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் முனைப்பையுடைய நலிவு இலக்கியங்கள் மட்டுமன்றி சமூக நலன்கட்குப் பகையான நச்சு இலக்கியங்களும் நம் மத்தியில் நிலைபெற்றுள்ளன.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 45

Page 25
9 வெகுசனங்களின் ரசனையையும் அழகுணர்வையும் கீழ்மைப்படுத்தும் நோக்கில், திட்டமிட்டே வணிகக் கலை இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன.
0 சமுதாயத்தில் எவருமே எழுந்தமான முறையிற் சரியான நடை
முறையை வந்தடைவதில்லை.
9 அரசியலிற் போன்று கலை-இலக்கியத் துறையிலும் ஸ்தாபன ரீதியான வேலைக்கான தேவை உள்ளது. (ஒரு போராட்ட அரசியல் இயக்கத்தினது போன்ற இறுக்கமான கட்டுக் கோப்பு இல்லாவிடினும், ஒரு வெகுசன அமைப்பினது போன்று பார்வைத் தெளிவு, இலக்கு, வேலைத்திட்டம் ஆகியவற்றுக்கான தேவையை நாம் மறுக்க முடியாது.
0 முதலாளிய சமூகத்தின் தனிநபர்வாத மயக்கங்கள் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் வேறுபடும் அளவுகட்குப் பாதிக்கின்றன. (இது புகழ் மீதான ஆசை, சுயநலம், விளம்பர மோகம், தம்மையே உயர்ந்தோராகக் கருதும் போக்கு, விமர்சனங்கட்கு முகங் கெர்டுக்க இயலாமை போன்று பல்வேறு வழிகளில் தன்னை அடையாளங்காட்டிக் கொள்ளக்கூடும்).
மேற்தரப்பட்டுள்ள பட்டியல் எவ்வகையிலும் முழுமையானதல்ல. எனினும் நமது சமுதாயத்தில் உள்ள படைப்பாளிகள் தாம் வாழும் சமுதாயத்தின் தன்மையாற் பாதிக்கப்பட்டிருப்பர் என்பதை அதிலிருந்து அடையாளங் காண்பது சிரமமானதல்ல. சமூக விடுதலைக்காகவும் சமுதாய மாற்றத்திற்காகவும் செயற்படும் போது ஒரு படைப்பாளி தன்னுடைய இருப்பையும் சிந்தனையையும் விடுதலைக்கும் அதை ஒட்டிய மாற்றத்திற்கும் ஏற்றதாக்கிக் கொள்கிறார். இம்மாதிரியான மாற்றம் ஒரு பொழுதில் ஏற்படும் ஞானோதயமாக இருக்க முடியாது. மாற்றம் என்பது படிப்படியாக ஏற்பட்டு முடிவின்றித் தொடர்கிறது.
எனவே மக்களுக்கான கலை இலக்கியம் பற்றிச் சிறிது நெகிழ்வான ஒரு பார்வை அவசியமாகிறது. நெகிழ்வு என்பதை நலிவு இலக்கியங்களுடனும் நச்சு இலக்கியங்களுடனும் போட்டியிடுகிற நோக்கில் அந்த இலக்கிய வகைகளிடையே உள்ள தீங்கான போக்குக்களை உள்வாங்கிக் கொள்வதாக நாம் கருத முடிமா?அது தோல்விக்கான வழியாகவே இருக்கும். மறுபுறம் வெகுசனங்களைக் கவருவதற்கான தேவையை நாம் புறக்கணிக்க இயலுமா? "நாமே புனிதர்கள்" என்றவாறான நிலைப்பாட்
46 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

டைச் சிலர் எடுக்கும் போது யாருமே நெருங்க இயலாத தொலைவிற்கு அவர்கள் போய்விடுகிறார்கள். எனவே நடைமுறையில் இருக்கிற கலை இலக்கிய வடிவங்களில் மக்களைச் சென்றடைய உதவும் எந்த வடிவத்தையும், அதன் குறைநிறைகள் பற்றிய கணிப்புடன், பயன்படுத்த நாம் தயங்க அவசியமில்லை. எந்த ஒரு சரியான கருத்தும் நல்ல சிந்தனையும் மக்களைச் சென்றடையாவிட்டாற் பயனற்றதாகும். உதரணமாக, முப்பத்திரண்டு ஆண்டுகட்கு முன்பு என்.கே. ரகுநாதனால் எழுதப்பட்ட "கந்தன் கருணை" நாடகப் பிரதியை எடுத்துக் கொள்வோம். அது எழுதப்பட்ட வடிவில் நாடகமாக்கப்பட்டிருந்தால் எத்தனை பேரை எட்டியிருக்கும்? அது நூலாக வெளியிடப்பட்டுப், பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்தாற் கூட, எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? அதுநாடகமாக்கப்பட்ட காலச் சூழலும் "அம்பலத்தாடிகள்"நாடகக் குழுவினர் அதற்குத் தெரிந்தெடுத்த நாடக வடிவமும் அதற்கேற்ற விதமாகப் பிரதியிற் செய்த மாற்றங்களுமே அதைப் பயனுள்ள ஒரு மக்கள் கலை இலக்கியம் என்ற மட்டத்திற்கு உயர்த்தின. மூலப் பிரதியின் சிறப்பை மறுக்காமலே, ஒரு கூட்டு முயற்சி அதை எவ்வளவு தூரத்துக்கு ஒரு போராட்ட இலக்கியக் கருவியாக விருத்தி செய்தது என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதே நாடகத்தினின்று, குறிப்பாக அதன் வெற்றியினின்று நாம் கற்க வேண்டிய வேறு பாடங்களும் உள்ளன. கந்தன் கருணையின் வெற்றியும் சி. மெளனகுருவின் "சங்காரம்" நாடகத்தின் வெற்றியும் "நமது நாட்டார் கூத்து முறையின் அடிப்படையில் மட்டுமே புரட்சிகர நாடகங்கள் அமைய முடியும்" என்ற விதமான கருத்துக்கும் "நாட்டார் கூத்தை அடிப்படையாகக் கொண்டே ஒரு தேசிய நாடக மரபை உருவாக்க முடியும்" என்ற விதமான கருத்துக்கும் வழி சமைத்தன. இவை மிகவும் குறுகலான பார்வைகள். இவ்வாறான அணுகுமுறையின் அபாயத்தைப் பிற்காலத்திலும் நாம் கண்டோம். வடக்கின் போர்ச் சூழலில் மேடை வசதிகள் குறைந்த நிலைமைகளில் உருவான திறந்தவெளி அரங்க முறை ஒன்றன் வெற்றிக்குப் பின்பு, "இதை விட்டால் நாடகம் இல்லை" என்னுமாறான ஒரு பிரகடனத்தை நாம் கேட்டுள்ளோம். ஒவ்வொருவரும் தான் அறிந்ததற்கு அப்பால் மக்கள் வேறு எதையும் அறிய வேண்டியதில்லை என்ற நிலப்பாட்டை மேற்கொள்வதன் அபத்தத்தையும் அபாயத்தையும் இங்கு விவரிக்க அவசியமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிடுவது தகும். எதிரியை வெல்லும் போர் முறைகள் எத்தனையோ உள்ளமை போல, மக்கள் கலை இலக்கியத்தில்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 47

Page 26
மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் எத்தனையோ வழிமுறைகள்
உள்ளன. ஒவ்வொரு சூழலிலும் சில கலை இலக்கிய வடிவங்கள் கூடிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை எவை என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பதை விடச் சமூக நடைமுறை மூலம் அறிய முயல்வது கூடப்
பொருந்தும்.
சில சமயங்களில் வெகுசனங்களின் ரசனையின் தரம் சீரழிவுக்குள். ளாகியுள்ள சூழ்நிலைகளை நாம் சந்திக்கிறோம். அதற்கு முகங்கொடுப்பது பற்றி இரண்டு எதிரெதிரான தீவிர நிலைப்பாடுகளை நாம் காணலாம். ஒன்று தரமானது என்று தாம் கருதும் இலக்கிய வடிவங்களை விட எதையும் மக்களுக்கு மறுப்பது மற்றது மக்களுக்கு அழகுணர்வு போதாது என்று வாதிட்டுக் கீழ்த்தரமான படைப்புக்களின் பாணியில் மட்டுமே படைப்புக்களை ஊக்குவிப்பது. ஒருவருக்கும் எட்டாத ஒளியும் எல்லாருக்கும் எட்டுகிற இருளும் பயனின் அடிப்படையில் அதிக வேறுபாடற்றவை. இங்கே தான் மக்களுக்காக எழுதுகிறவர்கள் தமது எழுத்தின் சீரையும் செம்மையையும் மட்டுமே கணிப்பிற் கொள்ளாது யாருக்காக எழுதுகிறார்களோ அவர்களை எவ்வாறு எட்ட முடியும் என்பதிலும் கூடிய கவனம் காட்டுவது பயனுள்ளது.
மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களின் சார்பான இலக்கியம், மக்களைச் சென்றடையும் இலக்கியம், மக்களை விழிப்பூட்டும் இலக்கியம், மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடத் துண்டும் இலக்கியம், மக்களால் உருவாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக்கியம் என்று பலவாறாக நாம் நோக்கலாம். இவற்றுள் அதிமுக்கியமானது கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பண்பையுடையதாகும். அதை நாம் வந்தடைவதாயின் மக்களின் ஆளுமை முதன்மைப் படுத்தப்பட வேண்டும். இரண்டு சூழ்நிலைகளில் அதற்கான வாய்ப்பை நாம் பெற இடம் உண்டு. ஒன்று உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழல். மற்றது வெகுசனப் போராட்டம் ஒன்று உருவாகி வலுப்பெறும் சூழல். இவற்றுக்கு அத்திவாரம் இடும் வகையில் இன்றைய இலக்கியப் பணிகள் செயற்பட முடியும்.
எனவே, மக்கள் இலக்கியம் என்பது இன்னவகையினது மட்டுமே என்று மட்டுப்படுத்துவது நியாயமாகாது. மக்கள் இலக்கியத்தின் அவசியமான தேவையாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமாயின், அது அத்தகைய இலக்கியம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நில்லாமை எனலாம். மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகிற படைப்பாளி
48 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில் அவருடைய கருத்தில் மக்கள் அவரை ஒத்த படைப்புத்திறன் அற்றவர்கள் மட்டுமல்லாமல் அவருடைய படைப்பைச் சரியாக உணரும் திறன் அற்றவர்களாகவும் இருப்பர். இதற்கு நேர்மாறான ஒரு உதாரணம் நிக்கராஹPவாக் கவிஞர் ஏர்னெஸற்றோ கார்டினால்.நிக்கராஹசவாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட எழுத்தறிவற்ற மக்களிடையே செயற்பட்டுப் போராளிக் கவிஞர்களாக அவர்கள் வளர்வதற்கு மிகவும் உதவிய ஒரு உன்னதமான மனிதர் அவர். அவருடைய கவிதை உன்னதமானது. அதைவிட உன்னதமானது போராளிக் கவிஞர்கள் உருவாக உதவியதன் மூலம் கவிதையுலகுக்கு அவர் ஆற்றிய சேவை. மக்கள் மனதில் உள்ள அழகுணர்வை அவர்களே அடையாளம் காணுகிற போது அவர்கள் அருமையான படைப்பாளிகளாகின்றனர். அவர்களது வாழ்வின் அனுபவங்கள் கலை வடிவு பெறுகின்றன. மெய்யான மக்கள் இலக்கியம் அங்கு உருவாகிறது.
முற்போக்கான, புரட்சிகரமான சிந்தனை உடைய படைப்பாளிகள் பல்லோராலும் நேரடியாக மக்களைச் சென்றடையக் கூடிய இலக்கியங்களைப் படைக்க முடிவதில்லை. அவர்களுடைய செயற்பாடு வெகுசனங்களுடைய தளத்தில் நிகழாத போது, அவர்கள் தம்முடையதல்லாத அனுபவங்களைத் தம்முடையதாகப் பாவனை செய்ய இயலாது. சமுக உணர்வால் உந்தப்பட்டு, மக்கள் நலன் சார்ந்து மக்களிடையே விழிப்பையும் போராட்ட உணர்வையும் தூண்டும் முறையில் அவர்கள் எழுத முடியும். அத்தகைய எழுத்து ஒரு நடைமுறை இயக்கம் சார்ந்து உள்ள போது, யதார்த்தப் பண்புடையதாகவும் மக்களது உணர்வுகட்கு நெருக்கமாகவும் அமையும். இல்லாத போது அது கற்பனாவாதப் பாங்கில் அமைய நேரிடும். பாரதியின் தேசிய எழுச்சிப் பாடல்கள் ஏன் உயிரோட்டத்துடனும் நமது ஆண்ட பரம்பரைக் கவிஞர்களது தேசியவாதப் பாடல்கள் ஏன் பொற்காலக் கனவுகளில் புதைந்தும் கிடக்கின்றன என்பதைக் கவனித்தால் மேற்கூறியதன் உண்மை சிறிது தெரியும்.
மக்கள் இலக்கியக் கோட்பாட்டை நாம் முதலாளிய சமூகத்தின் விழுமியங்களின் அடிப்படையில் மட்டுமே நோக்குவதில் அபாயங்கள் பல உள்ளன. கலை வடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் இலக்கணங்களும் அழகியல் நெறிகளும் உள்ளன. இந்த வழிகாட்டல்கட்கு வர்க்கப் பண்பு உண்டு. அதற்காக, அவற்றை அப்படியே தூக்கி எறிய முடியுமா? நம்மிடையே உள்ள கலை வடிவங்களில் அப்படியே பயன்படுத்தக் கூடியன இருப்பின் அவற்றின் இலக்கணங்களிலும் அழகியற் கொள்கைகளிலும்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 49

Page 27
பாரிய மாற்றங்கள் தேவைப்படாது. மாறுதல் தேவையானவற்றில் எத்தகைய மாறுதல்கள் என்பது பற்றிய தெளிவு அவசியம். நம்முடைய தனிப்பட்ட இயலாமைகளையும் பலவீனங்களையும் மூடிக்கட்டும் ஒரு கருவியாக இத்தகைய மாற்றங்களை நாம் கையாள முடியுமா? இங்கு நாம் தெளிவான அழகியல் நெறிகளை வகுக்க வேண்டிய தேவைக்குள்ளாகிறோம்.
மக்கள் கலை இலக்கியக் கோட்பாடு என்பதைப் பழமை-புதுமை தேசிய-விதேசிய, எளியநுட்பமான என்றவாறான தனித்தனி விவாதங்கட்குள் முடக்கி விடுவது பொருந்தாது. ஒரு தேசிய விடுதலைப் போராளி சுதேசிய ஆயுதங்களை விட வேறெதையும் பாவிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை. எந்தப் போர்க்கருவி, எவரால், எதற்கெதிராக, எவருடைய நலனுக்காக, எவ்வாறு பயன்படுகிறது என்பதே அங்கு முக்கியமாகிறது. எனவே மக்களுக்கு உகந்தது எது என்பதை மக்களுக்காகத் தீர்மானிக்கும் பூரண அதிகாரத்தை ஒரு படைப்பாளி தன் கையில் எடுத்துக் கொள்வது பொருந்தாது. மக்களுடைய நலனையும் உணர்வுகளையும் மதிப்பதற்கு நாம் முதலிற் கற்றுக் கொள்ள வேண்டும். . . .
மக்கள் இலக்கியம் என்பது இறுதி ஆய்வில் மக்களின் அங்கீ. காரத்தை விட மேலாக ஒன்றையும் வேண்டி நிற்பதில்லை. அந்த அங்கீகாரம் எப்போது எந்த வடிவிற் கிடைக்கிறது என்பது படைப்பாளி. யின் கையிலேயே உள்ள ஒன்றல்ல. எனினும் விமர்சனம்-சுயவிமர்சனம் என்ற அணுகுமுறை மூலம் ஒரு படைப்பாளியால் மாநிலம் பயனுற வாழும் ஒரு மக்கள் படைப்பாளியாக உயர முடியும். நம் ஒவ்வொருவரது இலக்கும் அவ்வாறே அமைய வேண்டுகிறேன்.
50 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

மாக்ஸிய விமர்சகர்களை எதிர்நோக்கும் பணிகள்
1. மாக்ஸிய கலை இலக்கிய நோக்கு
மாக்ஸிய மெய்யியல் அதற்கு முந்திய காலத்து மெய்யியலி. லிருந்தும் அதன் காலத்து மெய்யியலிலிருந்தும் ஒரு முக்கியமான வ்கையில் வேறுபட்டது. அதன் நோக்கம் உலகை அறிவதோடு நில்லாமல் உலகை மாற்றுவதையும் உள்ளடக்கியது. உலகை மாற்றுவது என்பது மாக்ஸியச் சிந்தனையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஊடுருவி நிற்கும் இலக்காகும். அதுவே மாக்ஸியத்தின் அடிநாதம், மாக்ஸியத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அதன் அதிர்வை நாம் உணரலாம்.
மனித இனத்தின் உய்வு மனித விடுதலையினின்னு பிரிக்க முடியாதது. மனித விடுதலை என்பது கூறுபோட இயலாதது. மனிதரை ஒடுக்கும் சிந்தனைகளை முறியடிப்பது மனிதரை அடிமை செய்யும் விலங்குகளை நொறுக்குவதற்கு அவசியமான ஒரு முன் நிபந்தனை எனலாம்.
மாக்ஸியத்தின் பார்வையில் சமுதாயத்தை அறிய முயலும் போதும் சடப்பொருட்களை ஆராயும் போதும், மனித இனத்தின் விடுதலையும் மேம்பாடுமே முதன்மை பெறுகின்றன. இது விஞ்ஞானத்துக்குப் பொருந்தும் அளவுக்கு கலை இலக்கியங்கட்கும் பொருந்தும். மாக்ஸியத் திறனாய்வின் வருகை கலை இலக்கியங்கள் பற்றிய பல மாயைகளைச் சிதறடித்தது. மனித இருப்பும் மனித வாழ்வும் மனிதச் செயற்பாட்டுகளும் சமுதாய நோக்கிற் காணப்படும் போதுகலை இலக்கியங்கள் அவற்றுடன் கொண்டுள்ள உறவு தெளிவாகிறது. கலை இலக்கியங்கள் பற்றிய மரபு சார்ந்த பார்வைகள் தகர்ந்ததும் கலை இலக்கியங்களின் சமுதாயத் தன்மை உறுதிப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகச் சமுதாயத்தை மாற்றுவதில் கலை இலக்கியங்களது பங்கும் முக்கியமடைகிறது.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 5

Page 28
கலை இலக்கியங்கள் தம்மளவிலேயே சமுதாயத்தை மாற்ற வல்லன அல்ல. எந்தக் கலை இலக்கியவாதிகளும் சமுதாயத்தைத் தனியாக நின்று மாற்றவும் முடியாது. இவ் விடயங்களில் மாக்ஸியக் கலை இலக்கியவாதிகளது மனதில் பிரமைகட்கு இடம் இல்லை. அதே வேளை, மாற்றத்துக்காகத் துடித்துக் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்குரிய ஆற்றலை உடைய ஒரு சமுதாயச் சக்தியின் கையில் கலை இலக்கியங்கள் வலிய ஆயுதங்களாகின்றன. மக்களைப் போதையூட்டி மயக்கத்தில் ஆழ்த்தும் முதலாளியக் கலை இலக்கியங்கட்கு எதிரான வலிய கவசமாகவும் அவை செயற்படுகின்றன. மாக்ஸியச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் பற்றி மிகவும் ஆராய்ந்துள்ளனர். மாஒ சேதுங், ஹோ சி மின் ஆகியோர் உட்படப் பல மாக்ஸியத் தலைவர்கள் சிறந்த படைப்பாளிகளாகவும் இருந்துள்ளனர்.
மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வையை மிகவும் விறைப்பான முறையில் அணுகுவதன் குறைபாடுகள் மாக்ஸியத்தை விறைப்பான முறையில் சமுதாயப் புரட்சி தொடர்பாகப் பயன்படுத்துவதன் குறைபாடுகளை ஒத்தவை. மாக்ஸியத்தை ஆக்கமான முறையில் வளர்த்தெடுத்தவர்கள் மாக்ஸியத்தை வரட்டுச் சூத்திரங்களாகக் காண மறுத்தவர்கள் தாம். மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வைக்கும் இது பொருந்தும்.
மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வையும் இலக்கும் அவற்றின் கால இடச் சூழல்களில் வைத்து நோக்கப்பட வேண்டும். அதன் வளர்ச்சி சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கருதப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரது சமுதாய இருப்பும் சமுதாயச் செயற்பாடும் அவரது சமுதாயப் பார்வையை நிர்ணயிக்கின்ற காரணத்தால், ஒரு கலை இலக்கிய-வாதியின் சமுதாயப் பார்வை அவரது படைப்பின் முனைப்பை நிர்ணயிக்கிறது. மக்களைச் சார்ந்து நிற்கும் படைப்பாளிகளை மக்களிடமிருந்து அந்நியப்பட்ட படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்துவது படைப்பாளியின் சமுதாயப் பார்வையே.
மாக்ஸிய விரோதிகள் கலை இலக்கியங்களில் சமுதாயப் பார்வை இருப்பதை விரும்புவதில்லை. குறிப்பாக, பாட்டாளிவர்க்கப்பார்ைையயும் ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சிக்கான குரலையும் அவர்கள் வெறுக்கிறார்கள். அதற்கு வசதியாகவே இலக்கிய அளவுகோல்கள் அவர்களால் வகுக்கப்படுகின்றன. துய கலை இலக்கியம் சார்ந்த துய அழகியற் கோட்பாடுகளும் காலம் இடம் என்ற வரையறைகள் கடந்த அமர
52 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

இலக்கியங்கள் பற்றிய புனைவுகளும் அவர்களுக்கு அவசியமாகின்றன. இந்த விதமான கலை இலக்கியப் பார்வை மாக்ஸியச் சார்பான கலை இலக்கியப் படைப்பாளிகளையும் திறனாய்வாளர்களையும் பாதிக்காமல் இல்லை. m
சோவியத் யூனியனின் சரிவு மாக்ஸியத்தின் முடிவு என்று சிலரால் உறுதியுடன் கூறப்பட்டது. இதன் விளைவாக மருண்ட சில முற்போக்குவாதிகள் தங்களது சமுதாயப் பார்வையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டதையும் நாம் கண்டுள்ளோம். இந்தவிதமான குழப்பமான சூழலில் மாக்ஸியத்தின் சமுதாயத் தாக்கத்தைப் புலவீனப்படுத்தவும் நவகொலனியத்தின் உலக ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கத்தைத் தமிழகத்தின் இரவற் சிந்தனையாளர்களிடமும் அவர்களிடமிருந்து முன்றாங் கையாக வாங்கி வழங்குகிற ஈழத்துத் திறனாய்வாளர்கள் சில. ரிடமும் நாம் காணலாம்.
மேற்குறிப்பிட்டவாறான சூழ்நிலைகளில் மாக்ஸியத் திறனாய்வு எதிர்நோக்குகிற சவால்களையும் அவை சார்ந்த மாக்ஸியக் கலை இலக்கியப் பணிகளையும் நாம் சரிவர அடையாளங் காண்பது அவசியம். மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வையை மீள வலியுறுத்தவும் மேலும் வலுவூட்டவும் மாக்ஸியக் கலை இலக்கியப் பணிகளை ஊக்குவிக்கவும் நெறிப்படுத்தவும் மாக்ஸிய விமர்சகர்கட்கு ஒரு முக்கியமான கடமை உள்ளது.
2. திறனாய்வுப் பணிகள்
அடுத்து, மாக்ஸியத் திறனாய்வாளர்களது அடிப்படையான பணிகளென அடையாளங் காணக்கூடியவற்றை முதலிற் கவனிப்போம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளைப் பற்றி பின்னர் கவனிப்போம். இவற்றை விளக்கும் போக்கில் மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வைக்கு எதிரான சில விமர்சனங்கள் பற்றியுஞ் சிறிது
கவனிப்போம். S.
மாக்ஸியத் திறனாய்வு எனும் போதே அங்கு மாக்ஸிய அணுகுமுறைக்கான தேவை ஏற்கப்படுகிறது. மாக்ஸியம் என்பது உலகை மாற்றுவதற்கான ஒரு தத்துவம் என்ற அளவில் மாக்ஸிய உலகநோக்குக்கும் சமுதாய இலக்குக்கும் சார்பாக ஒரு படைப்பின் நிலைப்
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 53

Page 29
பாட்டை மதிப்பிட வேண்டிய தேவையும் ஏற்கப்படுகிறது. இங்கே, யாந்திரிகமான பார்வைக்கு மாறாக ஒரு படைப்பை அதன் கால, இடச் சூழலில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கும் முனைப்பும் கலை இலக்கியங்கட்கும் மனித வாழ்வுக்கும் உள்ள உறவை இயங்கியற் கண்ணோட்டத்தில் மதிப்பிடும் தன்மையும் மாக்ஸியத் திறனாய்வை அடையாளம் காட்டுகின்றன. ஒரு படைப்பு எவ்விதமான சமூக அமைப்பைச் சார்ந்து எவ்விதமான சமூகப் பார்வையுடன் எழுகிறது என்பது மாக்ஸியத் திறனாய்வாளருக்கு முக்கியமானது.
எவ்வாறாயினும் மாக்ஸியர்களான பல திறனாய்வாளர்கள் சில சமயங்களில் யாந்திரிகமான முறையில் கலை இலக்கியங்களை அணுகியுள்ளனர். மிகவும் மேலோட்டமான ஒரு பார்வையால் வழிநடத்தப்பட்டுச் சில படைப்புக்கள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் தவறான முடிவுகட்கும் வந்துள்ளனர். இவ்வாறான தவறுகள் தவிர்க்க வேண்டியன. எனினும், தவறுகள் தவிர்ந்த நடைமுறை எதுவும் இல்லை என்பதால், தவறுகள் அடையாளங்காணப்பட்டுத் திருத்தப்படுவது முக்கியமாகிறது. கடந்தகாலம் என்பது எப்போதும் மீளாய்வு செய்யப்பட்டே வருகிறது. இவ்வாறே, மேலுஞ் சரியான முறையில் வரலாற்றை நாம் விளங்கிக்கொள்ள இயலுமாகிறது. இதை வேளைக்கு ஒரு கருத்தைக் கூறுகிற தடுமாற்றப் போக்குடன் நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது.
வர்க்க சமுதாயத்தின் மனிதச் செயற்பாடுகள் அனைத்திலும் ஒரு வர்க்க முத்திரை இடப்பட்டே இருக்கும். இந்த வர்க்க அடையாளம் எல்லாவிடத்தும் ஒரே விதமான வெளிவெளியான பண்புடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்ல்ை. ஒரு படைப்பாளியின் வர்க்க நிலைப்பாடு அவர் எந்த வர்க்கத்திற் பிறந்தவவர் என்பதால் மட்டுமே தீர்மானமாவதில்லை. பெண்ணுரிமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்கள், தேசிய இன ஒடுக்கலுக்கு நியாயங் கற்பிக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் படைப்பாளிகள், சாதியத்துடன் சமரசம் செய்ய முனையும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து எழுத்தாளர்கள் ஆகியோர் போலவே, ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற் பிறந்து அதற்குத் துரோகமாக எழுதுவோர் உள்ளனர். ஒரு சமுதாயத்தில் எந்த வர்க்கச் சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அச்சமுதாயத்தின் ஒடுக்கும் வர்க்கச் சிந்தனையை ஆளுகிறது. அம்மட்டுமன்றி, ஒடுக்கப்படும் மக்களது சிந்தனையையும் வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு அளவுகட்கு அது ஊடறுத்துச் செல்கிறது. பாட்டாளி வர்க்க உணர்வு
54 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

என்பது சமூகத்தின் வர்க்கப் பண்பு பற்றிய அடையாளங் காணலின் மூலமும் ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சிக்கான தேவையை அறிவதன் மூலமுமே உருவாகி வளர்வது. இது இயல்பாகவே பிறப்பால் அமையும் ஒரு பண்பல்ல. மாறாகச் சமூக நடைமுறை மூலமும் முக்கியமாகப் போராட்ட நடைமுறை மூலமும் வர்க்கப் போராட்டத்தில் பங்குபற்றுதல் மூலமுமே வளர்வது. முழுமையான பாட்டாளிவர்க்கப் பார்வை என்பது படிப்படியாகவே விருத்தி பெறுகிறது.
3. திறனாய்வு அணுகுமுறை
மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர் என்ற ஒரே காரணத்தால் ஒருவரது சிந்தனை ஒடுக்கும் வர்க்கச் சித்தாந்தத்தால் தீண்டப்படாதது என்று நாம் கருத முடியுமா? சுரண்டும் வர்க்க மாசு படிந்த சமுதாயச் சூழலில் நம் அனைவரது சிந்தனைகளிலும் சுரண்டும் வர்க்கச் சித்தாந்தத்தின் பாதிப்பு இருக்கவே செய்யும். ஆழமான மாக்ஸிய ஈடுபாடு இல்லாத பல ஆய்வாளர்கள் எளிதாகவே தடுமாறுவதை நாம் காணுகிறோம்.
மரம் பழுத்தால் வருகிற வெளவால்கள் போலவும் பருவகாலத்தில் வந்து தங்கிப் போகும் பறவைகள் போலவும் இவர்களிற் பலர் நடந்து கொள்வது அவர்கள் சார்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் ஊசலாட்டத் தன்மையை மட்டும் பிரதிபலிப்பதல்ல. சமுதாயத்தில் தம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கு மாக்ஸியத்தை ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்தி வந்த புல்லுருவிகளின் நடத்தையை வெறும் ஊசலாட்டத்தன்மையால் மட்டும் விளக்கிவிட முடியாது. தலித்தியம், தேசியவாதம், பெண்ணியம், பிரதேசவாதம், பேரினவாதம், மதம் போன்ற எதையுமே தமது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த இவர்கள் கூச. மாட்டார்கள். எனவேதான் மாக்ஸிய விமர்சகர்கள் இத்தகைய சந்தர்ப்பவாதிகள் பற்றியும் சந்தர்ப்பவாதப் போக்குகள் பற்றியும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
மிகவும் தீவிரமான வரட்டு மாக்ஸியம் பேசியவர்களுள்ளும் மற்ற எல்லாரையும் விடத் தூய மாக்ஸியரும் புரட்சியாளரும் தாமே என்ற விதமாகப் பேசியவர்களுள்ளுமே அதிக வீதமானோர் எதிரணிக்குத் தாவியுள்ளனர் என்பதையும் நாம் கவனிக்க வண்டும். வெளிவெளியான பிற்போக்கு எழுத்தை அடையாளங்காண்பது எளிது. இலைமறை காயாகப் பிற்போக்குச் சிந்தனையை ஊட்ட முயலுகிற முயற்சிகளும் தூய
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 55

Page 30
இலக்கியம் என்ற பேரில் மக்களது போராட்டங்களையும் போராட்ட அமைப்புக்களையும் இழிவு செய்கிற முயற்சிகளுங்கூட நம்மிற் பலரால் அடையாளங் காண முடியுமானவை. இவற்றைவிட ஆபத்தானவை, முற்போக்கு முகத்திரையுடன் விஷத்தன்மையுடைய சிந்தனைகளை ஊட்டுகிற படைப்புக்கள். சில சமயங்களில் படைப்பாளியின் சிந்தனையிலும் சமூகப் பார்வையிலும் உள்ள குறைபாடுகள் இவ்வாறு வெளிவரலாம். சில சமயங்களில் இவை தந்திரமாக உட்புகுத்தப்படலாம். எவ்வாறாயினும், இவை பற்றிய வெளிவெளியான விவாதங்களும் கலந்துரையாடல்களும் பயனுள்ளவை.
தீவிர இடதுசாரிப் பாங்கில் எழுதப்படும் பல படைப்புக்கள் சமூக வாழ்வின் உண்மையான தன்மைகளை அப்படியே புறக்கணித்து விடுகின்றன. ஒரு வகையர்ன கற்பனாவாதத்தை எதிர்க்கும் போக்கில் இன்னொரு வகையான கற்பனாவாதத்தை வளர்க்கும் முயற்சிககள் பற்றி மாக்ஸிய விமர்சகர்கள் கவனமாயிருக்க வேண்டும்.
மேற்கூறியவாறு, சமூக மாற்றத்திற்குத் தடையாக எழுகிற படைப்புக்களையும் அவை முன்வைக்கப்படும் பார்வைக் கோணங்களையும் அடையாளங் கர்ண்பதும் விமர்சிப்பதும் மாக்ஸிய விமர்சகர்களது கடமையாகிறது. அதே வேளை சகல விமர்சனங்களும் பகைமையான கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுவது தவறானது. அதிலும் முக்கியமாக எந்த விமர்சனமும் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதில் காய்தல் உவத்தல்ற்ற சமநிலை பேண வேண்டும்.
ஒரு படைப்பின் உள்ளடக்கத்தை மாக்ஸிய விமர்சனம் முதன்மைப்படுத்துவது பற்றிய ஆட்சேபனைகள் தூய அழகியற்காரர்களிடமிருந்து எழுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, இலக்கியம் என்பதற்கு அதன் உள்ளடக்கத்தினின்று வேறுபட்டு நிற்கும் ஆற்றல் உண்டு என்று ஒரு நம்பிக்கை, மாக்ஸிய விமர்சனம் உள்ளடக்கத்தைப் புறக்கணிக்கின்ற பொழுதே தனது விமர்சனக் கடமையினின்று தவறுகிறது. எனவே, அழகியற்காரர்கள் எடுத்த எடுப்பிலேயே மாக்ஸிய விமர்சனத்தை மறுக்க வேண்டி வருகிறது. இந்த அழகியல்வாதம் படுபிற்போக்கானதும் மாக்ஸியவிரோதமானதுமான இலக்கியங்களைக் கூடச் சமூகப் பார்வை கொண்ட ஒரு விமர்சனத் தாக்குதலினின்று காக்கும் நோக்கை உடையது. இப்போது சில அழகியற்காரர்கள் ஒரு படி கீழே இறங்கியோ கொஞ்சம் மனது வைத்தோ "அரசியலோ வரலாறோ சமூகச் சிந்தனையோ இலக்கியவடிவம் பெறலாம், ஆனால் இலக்கியத்தை அரசிய
56 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

லாக்குவதோ சித்தாந்தச் சார்புடையதாக்குவதோ வரலாற்று மெய்மை கொண்டதாகவோ செய்ய முயல்வது தவறு" என்று சொல்கிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்வது என்ன? ஒரு இலக்கியத்தின் மூலம் படைப்பாளி உணர்த்த முயல்கிற சில விஷயங்களைக் கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஆட்டுத் தோலின் அழகை ரசியுங்கள். உள்ளே ஒழிந்திருக்கும் ஓநாயைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது பற்றிய முடிவை எடுக்க வேண்டிய மாக்ஸிய விமர்சகர், இந்தத் தூய அழகியற்காரர்களது சாம, பேத, தான, தண்ட உத்திகளின் முன் மிரளும்போது பின்னோக்கிய பயணம் ஒன்றையே மேற்கொள்கிறார்.
மாக்ஸிய விமர்சகர்கள் மற்றவர்கள் எதை எப்படி எழுத வேண்டும் என்று கட்டளை இடுகிற இலக்கியக் கொமிசார்கள் என்ற கண்டனம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. கொமிசார்கள் எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறார்கள். கட்டளைகள் எவரால் இடப்படுகின்றன என்பதை யொட்டியே மறுப்புக்கள் எழுகின்றன. சில கொமிசார்கள் தங்களுடைய கடந்த காலத்தை மறந்து இப்போது புதிய எசமானர்களுடைய கொமி. சார்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஆயினும் மாக்ஸியத் திறனாய்வாளர்கள் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பிக்கிற மனோபாவத்துடன் இருப்பது நல்லதல்ல. மாஒ சேதுங் மக்களிடமிருந்து கற்பது பற்றியும் மக்களுக்கான கலை இலக்கியம் பற்றியும் சொன்னதோடு "நூறுமலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்" என்றும் கூறி மாறுபட்ட சிந்தனைகள் வெளிவெளியாக மோதுவதை ஊக்குவித்ததை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
ஒரு பிற்போக்குவாதி எப்படி எழுத வேண்டும் என்று ஆணையிடுவது மாக்ஸிய விமர்சகர் எவருக்கும் இயலாதது. ஆயினும், குறிப்பிட்ட எழுத்தின் நிலைப்பாட்டை அடையாளங் காட்ட முயல்கிற ஒருவரை எவரும் இலக்கியக் கொமிசார் என்று இகழ முடியுமா? அது மட்டுமன்றித் திறனாய்வின் நோக்கம் என்ன? ஒரு படைப்பை அதன் பல்வேறு கோணங்களினின்றும் நோக்கி அதன் உள்ளடக்கம் பற்றிய ஒரு மதிப்பீட்டை வழங்குவது அதன் அடிப்படையான நோக்கமல்லவா. இது வெறுமனே ஒரு படைப்பை மதிக்கிற அளவுட்ன் நிற்க முடியுமா? இலக்கியத்தின் செல்நெறியை நிருணயிப்பதில் படைப்பாளியினளவுக்கு விமர்சகர்கட்கும் பங்கு உண்டல்லவா?படைப்புக்களது சிறப்பான அம்சங்களையும் குறைபாடுகளையும் திறனாய்ந்து கூறுவதற்கும் மேலாக ஒரு படைப்பு
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 57

Page 31
ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் பற்றியும் எதிர்காலப் படைப்புகளைச் சிறப்பிக்கக்கூடிய விடயங்கள் பற்றியும் வெறும் நிபுணத்துவ நிலைப்பாட்டிலில்லாமல் நுகர்வோரது பார்வையில் நின்றும் கருத்துரைப்பது ஆக்கமான விமர்சகப் பணியாகும்.
முற்குறிப்பிட்ட விதமான ஆலோசனைகள் சினேகபூர்வமான முறையில் முன்வைக்கப்பட வேண்டியன. ஒரு படைப்பு மக்கள் நலன்சார்ந்து எழுத முற்படுகிற ஒருவரால் முன்வைக்கப்படும் போது அது பற்றி மாக்ஸிய விமர்சகர்கள் தருகிற ஆலோசனைகள் ஆணைகளாக இருக்கக் கூடாது. அவை படைப்பாளியை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அமைய வேண்டும். மாக்ஸியத்தைப் பகைமையோடு நோக்குவோருக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகள் அவசியமானவை என்று எண்ணுவோருக்கும் ஒரு மாக்ஸ்ய விமர்சகர் ஆக்க பூர்வமாகச் சொல்ல என்னதான் இருக்க முடியும்! அவ்விடத்துப் படைப்பின் முனைப்பை அடையாளங் காட்டும் இடத்தோடேயே கடமை நின்றுவிடுகிறது.
4. அழகியல்
அழகியல் பற்றி மாக்ஸியத் திறனாய்வுக்கு அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் விதமாகச் சில திறனாய்வாளர்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளனர். இது ஒரு குறிப்பிட்ட சமுதாய வரலாற்றுச் சூழலில் இலக்கியம் பற்றிய விவாதம் சென்ற தவறான திசையுடன் தொடர்புடையது. உள்ளடக்கமே அனைத்தும் என்ற நிலைப்பாடு மாக்ஸிய இலக்கியப் பார்வையைக் கொச்சைப்படுத்துவது. உள்ளடக்கமே அடிப்படையானது என்பதன் பொருள் சரியான நிலைப். பாடு இருந்தால் வேறெதுவுமே தேவையில்லை என்றாகி விடுமா? இந்த நோய்ப்பட்ட மனநிலையினின்று ஈழத் தமிழ் இலக்கியச்சூழல் பெரும்பாலும் விடுபட்டு விட்டது என்றே நம்புகிறேன்.
கலை இலக்கிய வடிவங்களுள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகச்சூழலில் ஒரு குறிப்பிட்ட தேவை சார்ந்தே உருவாகி விரிவு கண்டன. சில கலை வடிவங்கள் தமது அழகியற் சிறப்புக்காரணமாகவும் நீண்டகாலச் சமுதாயப் பயன்பாட்டின் விளைவாகப் பண்பாட்டின் ஒரு கூறாகவும் இன்னமும் நிலைக்கின்றன. இக் கலைவடிவங்களுடு சமகாலச் சமூகச் சூழலுக்கு ஏற்ற படைப்புக்களை உருவாக்குவதிற் சிரமங்கள் பல. சில வடிவங்கள் சமகாலத் தேவைகட்கு ஏற்ப எடுத்தாள இயலாதன. உதாரணமாக, மரபு சார்ந்த பெருங்காவிய வடிவம். மறுபுறம் மரபு சார்ந்த
58 -డి எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

சில செய்யுள் வடிவங்கள் இன்றும் பயன்படுத்த ஏற்றவை. பரதமும் கருநாடக இசையும் இன்னமும் பரந்துபட்ட மக்களை மனதிற் கொண்டும் அவர்களது வாழ்வும் தேவைகளும் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டும் அமையத் தவறிவிட்டன. இடையே ஒரு சில நல்ல முயற்சிகள் இருந்தும், மரபு சார்ந்த இக் கலை வடிவங்கள் ஒரு புறம் பழமைவாதி. களது நுகர்வுக்கான விறைப்பான முறையில் பேணப்படுகின்றன். மறுபுறம், வணிகக் கலாசாரம், வசதிபடைத்த நடுத்தர வர்க்க நுகர்வை நோக்கி மரபுக் கலை வடிவங்களை நகர்த்த முயல்கிறது. இரண்டுமே இக் கலை வடிவங்கள் மூலம் உழைக்கும் மக்களது உணர்வுகளையும் வாழ்வையும் தேவ்ைகளையும் எவ்வாறு கூறுவது என்பது பற்றிய அக்கறை இல்லாgᏏ6006ᎠᎫ. மாக்ஸியக் கலை இலக்கியவாதிகளும் திறனாய்வாளர்களும் குறுக்கிட வேண்டிய பயனுள்ள இடைவெளிகள் இங்கு உள்ளன. "
வெகுசனங்களை எட்டக்கூடிய நிலையில் நாட்டார் நலன்களும் சனரஞ்சகமான வியாபாரக் கலை இலக்கியங்களும் உள்ளன. இவற்றின் உள்ளடக்கம் எவ்வாறிருப்பினும், அவற்றின் நலிவான கூறுகளை நீக்கி மக்களிடம் எளிதாகச் செல்லக்கூடிய நல்ல ஆக்கங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய பயனுள்ள வழிகாட்டல்கட்கான் தேவை உள்ளது. S S
மக்களைச் சென்றடைகிற கலை இலக்கிய வடிவங்கள் பலவற்றிலும் மக்களது மேம்பாட்டுக்கானவற்றையும் நல்ல அம்சங்கள் உடையனவற்றையும் அடையாளங் காட்டி ஊக்குவிக்கிற அதே வேளை, அவை கலை இலக்கியங்கள் என்ற வகையில் கொண்டிருக்கிற குறை நிறைகளையும், மாக்ஸிய விமர்சகர்கள் கூறத் தயங்கக் கூடாது. ஒவ்வொரு கலை வடிவத்துக்கும் உரிய அழகியற் கொள்க்ைகள் கவனிக்கப்படாத போது, படைப்பிற் குறைபாடு நேரலாம். இது பற்றிய எச்சரிக்கை உணர்வு படைப்பாளிக்கு அவசியம். அதைச் சுட்டிக் காட்டுவது விமர்சகரது பொறுப்பு. மறுபுறம் மரபு சார்ந்த,சில அழகியற்பார்வைகளைப் படைப்பாளி வேண்டுமென்றேநிராகரிக்கும் தேவை உள்ளது.அழகியலோடு சேர்த்துக் கூறப்படும் சில படைப்பு நெறிகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கலாம் அல்லது சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தை ஆணாதிக்கம், சாதியம் போன்ற பல வடிவங்களுள் ஒன்றாகவோ அதிகமாகவோ தம்முட் கொண்டிருக்கலாம். இத்தகைய பண்புகள் அடையாளங் காட்டப்பட்டு w நீக்கவும் மாற்றவும் வேண்டியவை. இங்கே படைப்பாளிக்கும் விமர்சகருக்கும் இடையில் மிகுந்த ஒத்துழைப்புக்கான தேவை உள்ளது.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 59

Page 32
புதிய கலை வடிவங்கள் தொடர்பாகவும் விமர்சகர்கட்கு நிதானமான பார்வை தேவை. பல இடங்களிற் புதிய கலை வடிவங்கள் வெறுமனே புதுமை புதுமைக்காக என்ற விதமாக அயலிலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளன. சில வேளைகளில் புதுமை நாட்டத்தால் ஏதாவது வித்தியாசமாகச் செய்யப்பட்டுமுள்ளன. புதுக்கவிதை தொட்டு "மஜிகல் றியலிஸம்" எனப்படும் (லத்தின் அமெரிக்கக்) கதைகூறும் பாணி வரை பல உதாரணங்கள் உள்ளன. இவற்றை அறிமுகப்படுத்துவோரின் சமூக உணர்வின் குறைபாடும் கலை கலைக்காகவே என்கிற மயக்கமும், உள்வாங்கப்பட்ட கலைவடிவங்களின் ஆற்றலை மறைத்து, வெறும் மினுமினுப்பையே வலியுறுத்துகின்றன. மாக்ஸியத் திறனாய்வு இந்த மினுமினுப்பை ஊடறுத்துக் கலை இலக்கிய வடிவத்தின் தோற்றுவாயையும் பகைப்புலத்தையும் அடையாளம் காட்டுவதோடு எவ்விதமாக அதுவோ அதன் பயனுள்ள கூறுகளோ நமது தேவைகட்கு ஏற்ற விதமாக உள்வாங்கப்படலாம் என்பதை விசாரிக்க வேண்டும். புதுக்கவிதை தொடர். பான விவாதம் அன்றைய புதுக்கவிதையின் உள்ளடக்கத்தின் நிராகரிப்பாக மட்டும் இல்லாது வடிவத்தினது நிராகரிப்பாகியது தவறானது. LDOlபுறம், தாங்கள் எவ்வகையிலும் பின்தங்கியோராகவோ எதையும் தவற
விட்டவர்களாயேர் தோன்றக் கூடாது என்ற காரணத்துக்காக எல்லா
வற்றையும் கண்மூடித்தனமாக ஏற்கும் ஆபத்தான அணுகுமுறையையும் அண்மைக் காலங்களிற் கண்டுள்ளோம். ܥ m
பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், மஜிகல் றியலிஸம் போன்றவை இல்லாமல் தமிழிலக்கியம் ஒருபடி கூட முன்னால் முடியாது என்று நம்புகிற அளவுக்கு முடத்தனம் சிலரிடம் உள்ளது. இன்றுங் கூட உன்னதமான உலக இலக்கியங்கள் எளிமையும் தெளிவும் சார்ந்தே அமைந்துள்ளன என்ற உண்மையை இவர்கள் ஏனோ அறிவதில்லை. ஆழமானது தெளிவாக இருக்கலர்ம் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை என்றால், மனித அறிவு எங்கிருந்து வருகிறது என்பது பற்றி இவர்கள் மீளாய்வு செய்வது பயனுள்ளது. மாக்ஸிய விமர்சகர்கள் இவ்வாறான விடயங்களில் கவனமாக வாசிப்பதும் உறுதியுடன் தமது கருத்துக்களைத் தடுமாற்றமின்றிச் சொல்வதும் அவசியம்.
5. நிறைவுரை
மாக்ஸிய விமர்சகரின் வரலாற்றுப் பணி அடிப்படையில் மாறவில்லை. மனிதர் அன்றாடம் முகங்கொடுக்கும் சூழல் மாறுகிற அளவுக்கு
60 எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

விமர்சனத்தில் குறிப்பான பணிகள் மாறுபடுகின்றன. மற்றப்படி, எந்த ஒரு கலை இலக்கியப் படைப்பினதும் நோக்கத்தை அடையாளங்கண்டு அது தனது நோக்கத்தை எந்தளவு சிறப்புடன் நிறைவுசெய்கிறது என்பதைக் கூறுவதில் மாக்ஸிய விமர்சகரது பொறுப்பு அப்படியே தான் உள்ளது.
விமர்சனம் என்பது பெரும்பாலும் பகைமையற்ற நோக்கில் நிகழ்த்தப்படுகின்ற ஒரு ஆய்வு. எனவே ஒரு விமர்சகர் முதலில் தனது அழகியல் அளவுகோல்கள் பற்றியும் சமூகப் பார்வை பற்றியும் ஒளிவு மறைவு இல்லாது இருப்பது நல்லது. போராடும் உலகில் நடுநிலை என்று ஒன்று இல்லை. நேர்மை என்று ஒன்று இயலுமானது. மாக்ஸிய விமர்ச. கர்கள் இவ்விடத்தில் உறுதி தளரக் கூடாது.
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் 6