கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

Page 1

----
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
சித்திரலேகா மெளனகுரு

Page 2

ഭ്രിബ്ബ് தமிழரின் պնuւննlՍաlյ இலக்கியம்
சித்திரலேகா மெளனகுரு தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி
அனுசரணை - ப்ரவாத

Page 3
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
முதற் பதிப்பு :
வெளியீடு :
அட்டைப்படம்
அச்சிட்டோர் :
சித்திரலேகா மெளனகுரு,
தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
சுதந்திர இலக்கிய விழா 92 இல் ஆற்றிய உரையின் திருத்திய பிரதி
GLn 1995.
சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு, இல 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, நுகேகொட
:மனுபந்து வித்யாபதி.
டெக்னோ பிரின்ட், 06, ஜெயவர்த்தன அவெனியூ , தெகிவளை.
30/s

முன்னுரை
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கியமான இடத்தை இன்று பெற்றுவிட்டது. இது பற்றிய தகவல் பதிவுகளும், ஆய்வுகளும் ஆங்காங்கே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப் புலம்பெயர் இலக்கியத்தின் முழுப் பரிமாணங்களையும் உணர்ந்து கொள்வதற்கு இத்தகைய ஆய்வு முயற்சிகள் அத்தியாவசியமானவையாகும்.
தமிழ் இலக்கியத்தின் இப் புதிய முனைப்பை உணர்ந்து கொண்டதன் பயனாகவே விபவி -மாற்றுக் கலாசார மையத்தின் தமிழ்ப் பிரிவு இச் சிறுநூலை வெளியிட முன்வந்துள்ளது. 1992ம் ஆண்டு விபவி நடாத்திய சுதந்திர இலக்கிய விழாவில் புலம்பெயர் இலக்கியம் தொடர்பாக ஆற்றிய உரையே இந்நூலின் கருவாக அமைந்துள்ளது.
இந்நூல் தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தை விளங்கிக் கொள்வதன் ஆரம்ப முயற்சியாகவே அமைகிறது. தமிழ்ப் புலம்பெயர் சமூகம் பற்றியும், அதன் கலாசாரச் செயற்பாடுகள் பற்றியும் நான் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளேன். இந்த ஆய்வின் ஆரம்பத்தின் ஒரு பகுதியாக வெளிவரும் இச் சிறுபிரசுரம் இன்னும் ஓரிரு வருடங்களில் முழுமை பெற்ற நூலாகப் பரிணமிக்கும் என நம்புகிறேன்.
இந் நூலாக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய விபவியின் தமிழ் இணைப்பாளர் திரு.சுரேஷ் சர்மா அவர்களுக்கு எனது மனமுவர்ந்த நன்றிகள். அவரது தூண்டல் இல்லாதிருந்திருந்தால் இக் கட்டத்தில் இந்நூல் வெளிவந்திருக்காது.
விபவி, தமிழ் இலக்கியம் பண்பாடு பற்றி மேலும் பல பிரசுரங்களை வெளியிட வேண்டும் எனவும் அவற்றை சிங்களத்தில் மொழிபெயர்க்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
சித்திரலேகா மெளனகுரு மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், சித்திரை 1995 வந்தாறுமூைைல, செங்கலடி.

Page 4
25

அறிமுகம்
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் கலாசார முனைப்புகளில் ஒன்றாக இலங்கையிலிருந்து வேற்று நாடுகளிற் புலம்பெயர்ந்து வாழ்வோர் மத்தி யிலிருந்து தோன்றுகின்ற இலக்கியங்களின் தொகுதியைக் குறிப்பிடலாம். மேற்கைரோப்பிய நாடுகள், ஸ்கன்டிநேவிய நாடுகள், கனடா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களிலிருந்து இவ்விலக்கியங்கள் வெளிவருகின்றன. சஞ்சிகைகள், கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுப்புக்கள், நாவல்கள் என்பன இப்புலம் பெயர் இலக்கியத் தொகுதியுள் அடங்குவனவாகும். சமகாலத் தமிழ் இலக்கி யத்தின் ஒரு பகுதி என இனங்காணக்கூடிய அளவில் இவை கணிசமான தொகை யினவாகவும் காத்திரமானவையாகவும் வெளியாகின்றன. சுமார் இருபத்தைந்து சஞ்சிகைகள்' புலம் பெயர் தமிழர் மத்தியிலிருந்து பிரசுரமாகின்றன. இவை தனிநபர்களின் முயற்சிகளாக மாத்திரமல்லாது கலை, இலக்கிய குழுக்களின் வெளியீடுகளாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது. கனடாவில் காலம் இலக ’கியக்குழு, தேடல் பதிப்பகம், நோர்வேயில் சுவடுகள் பதிப்பகம், ஜேர்மனியில் தூண்டில் குழுவினர், பிரான்சில் ஆசியா அமைப்பு (இதன் உயிர்நாடியாகவிருந்த சபாலிங்கம் 1994இல் 'இனம் தெரியாதோரால் பரிசில் சுட்டுக் கொல்லப் பட்டார்.) நெதர்லாந்தில் இலங்கை கலாசாரக்குழு எனச் சிலவற்றை உதார ணங்காட்டலாம். இவை சில சமயங்களில் வெவ்வேறு நாடுகளில் உள்ளவர் களின் கூட்டு முயற்சிகளாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக காலம் இலக்கி யக் குழு காலம் என்ற சஞ்சிகையை வெளியிடும் போது கனடா, பிரான்ஸ், இந்தியா, இலங்கை என்று ஒரு சிறிய அளவிலான தொடர்பமைப்பைக் கொண்டிருந்தது.
இலக்கியம் தவிர நாடகம், இசைநிகழ்ச்சிகள் போன்றவையும் இப் புலம்பெயர் தமிழர் மத்தியில் இடம் பெறுகின்றன. இவ்வகையில் லண்டனில் இயங்கி வரும் அவைக்காற்று கலைக்கழகம் குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு முறையாயினும் நாடகங்களை அது நிகழ்த்துகிறது.
புலம் பெயர் தமிழர்களின் இன்னோர் கலாசார நடவடிக்கையாகக் கவனத்தை ஈர்ப்பது அவர்களது இலக்கியச் சந்திப்புக்களாகும். ஐரோப்பிய நகர்களில் நடைபெறும் இச் 'சந்திப்புக்கள் சுமார்ஐம்பது அறுபது பேரின் பங்கு பற்றலுடன் பெரிய மகாநாடுகள் போலவே நடைபெறுகின்றன. ஐரோப்பாவின் பல பாகங்களிலுமிருந்து எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், சமூகவியல் அரசியல் அறிஞர்கள், பெண்நிலைவாதிகள் பங்கு கொள்ளும் இம்மகாநாடுகள் கலை இலக்கிய விடயங்கள் மாத்திரமன்றி சமூக அரசியல் விடயங்களும் அலசப்படும் களமாய் அமைகின்றன. இலக்கியச் சந்திப்புத்

Page 5
தொடரில் பத்தொன்பதாவது சந்திப்பு லண்டனில் 1994 செப்டம்பரில் நடை பெற்றது. இச் சந்திப்புக்களையொட்டி வெளியிடப்படும் இலக்கியச் சந்திப்பு மலர்களும் குறிப்பிடத்தக்கவையாகும்.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழரின் இத்தகைய முயற்சிகள், புலம் பெயர் இலக்கியம் என நோக்கத்தக்க ஒரு அடையாளத்தையும் தனித்துவத் தையும் அளித்துள்ளன. இந்த தனித்துவத்தின் அங்கீகரிப்பை புகலிடத் தமிழர் பற்றியும் அவர்களது கலை இலக்கிய ஆக்கங்கள் பற்றியும் அவ்வப்போது வெளியாகியுள்ள கட்டுரைகளிற் காணலாம். இத்தகைய அங்கீகரிப்பின் ஒரு உறுதியான வடிவமாய் 1994 டிசம்பரில் தமிழ்நாட்டில் திருச்சியில் நிகழ்ந்த புலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு காணப்படுகிறது. இம் மகாநாட்டையொட்டி ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
'உலகத் தமிழ் மாநாடு தஞ்சை நகரில் 1995 ஜனவரி முதல் கிழமையில் நடக்கவிருக்கும் சூழலில் உலகெங்கிலுமுள்ள ஈழத் தமிழ் அகதிகள் படுந் துன்பங்கள் மீது கவனத்தை ஈர்ப்பது தமிழர் நலனிலும் மனித உரிமையிலும் அக்கறையுள்ள நம் மனைவரினதும் கடமையாகின்றது. தமிழ்ப் பண்பாடு, தமிழிலக்கியம், கலை என்பவற்றில் அக்கறைகாட்டுவோர் அனைவரும் புலம் பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் தம் இன்னல்களுக்கிடையிலும் தன்னடையாளத்தைப் பாதுகாக்கச் செய்யும் முயற்சிகளையும் படைப்பிலக்கியங் களைப் புனைவதையும் கலை இலக்கிய பண்பாட்டுத் துறைத்திறனாய்வுகளை மேற்கொள்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை உலகத் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத கூறுகள்' (ராஜதுரை எஸ்.வி. மற்றும் ஏனையோர் 1994:3)
பெரும் எண்ணிக்கையில் மேற்கு நாடுகளில் பரந்திருக்கும் தமிழரது இலக்கியங்கள் புகலிட இலக்கியம் எனவும் புலம் பெயர் இலக்கியம் எனவும் இரு தொடர்களால் அழைக்கப்படுகின்றன. இத்தொடர்கள் வெவ்வேறான கருத்து அழுத்தங்கள் கொண்டவை. புலம் பெயர்ந்து சென்றோரின் இலக்கியம் என்ற கருத்தைத் தரும் புலம் பெயர் இலக்கியம் என்பதை விடவும் புகலிட இலக்கியம் என்ற தொடர் அரசியல் அழுத்தம் கொண்டதாகும். இவற்றில் எத்தொடர் பொருத்தமானது என்பது வேறு விவாதமாகும். இது இவ்விலக்கி யத்தை எவ்வாறு கருத்தாக்கம் ( conceptualization) செய்கிறோம் என்பதில் தங்கியுள்ளது. இக்கட்டுரையில் புலம்பெயர் இலக்கியம் என்ற தொடரையே நான் கையாள்கிறேன். புலம் பெயர் இலக்கியத்தின் பண்புகளைப் புரிந்து கொள்வதற்கு இன்று உலகின் பலபாகங்களிலும் பரந்து குடியேறியுள்ள இலங்கைத் தமிழரின் அரசியல், சமூகப் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சமூக அரசியல் பின்னணி
இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்துள்ள இலங்கைத் தமிழர் சமூகம் (Srilankan Tamil Diasphora) ஒரு வரலாற்று யதார்த்தமாக உள்ளது. வடக்கே கனடாவிலிருந்து தெற்கே அவுஸ்ரேலியா, நியுசிலாந்து வரை இச் சமூகம் அகன்று விரிந்துள்ளது. ஒரு குடும்பமே வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு கிடக்கிறது. இன்று பத்திரிகைகளில் வெளியாகும் மரண அறிவித்தல்கள், திருமண, பிறந்த நாள் வாழ்த்துக்களில் இவை புலனாகின்றன. (ஜேர்மன் மாமா, சுவிஸ் ஆன்டி, நோர்வே சித்தப்பா போன்ற தொடர்கள் இதனை உணர்த்துகின்றன.) இத்தகைய சிதறலின் துன்பியல் தன்மை கவிதை களிலும் வெளிப்பட்டுள்ளது.
“யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என்தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிறாங்பேட்டில் ஒரு சகோதரியோபிரான்ஸ்நாட்டில் நானோ வழிதவறிஅலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்னநம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்குகிழித்தெறியும் பஞ்சுத்தலையணையா?
(ஜெயபாலன்.வ.ஐ.ச:1989)
புலம்பெயர் தமிழரைப் பெரும்படியாக 1983 ஆம் ஆண்டுக்கு முன் குடியேறியோர்அதன்பின் குடியேறியோர் என இருபகுதியினராகப் பகுக்கலாம்."
83இற்கு முன்னர் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தோர், காலனித்துவ காலத்திற்குப் பின்னர் நிகழ்ந்த தமிழருக்கு எதிரான முதலாவது இன வன் செயலின் பின்னர் வெளியேறியோராவர். இலங்கையில் 50ஆம், 60ஆம் ஆண்டு களில் தமிழ் தொழில் வல்லுனர்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவின. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டமை ஆங்கிலங் கற்ற உயர் தகுதிகள் பெற்ற தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இத்தகைய பின்னணியிலேயே இவர்கள் குடிபெயர்ந்தனர். 1960, 70களில்

Page 6
இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்றனர். ஆங்கிலக் கொலனிகளாகவிருந்த ஆபிரிக்க நாடுகள் சிலவற்றிற்கும் இம்மக்கள் தொழில் நிமித்தம் சென்றிருந்தனர். அந்த நாடுகளில் பலவருடங்கள் உழைத்ததன் பின்னர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தமது
வாழிடங்களை அமைத்துக் கொண்டனர்.
எண்பதாம் ஆண்டுகட்கு முன் குடிபெயர்ந்தோர் முக்கியமாகக் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகர்களிலிருந்து குடிபெயர்ந்தனர். இவர்கள் மத்தியதர, உயர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்; ஆங்கிலம் கற்றவர்கள், தொழில் வல்லுனர்கள்; சுருங்கக் கூறின் நகர்சார் உயர் குழாத்தினர். இக்காலத்தில் இவர்கள் குடியேறிய நாடுகளின் குடிவரவுச் சட்டங்களும் தற்காலத்தைப் போல் இறுக்கமானவையாக இருக்கவில்லை. தொழில் வாய்ப்புகளும் காணப்பட்டன. இத்தகைய பின்னணியிலேயே இவர்கள் புலம் பெயர்ந்தனர். குடியேறிய நாடுகளிலும் வைத்தியர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, சட்டத்தரணி களாகத் தொழில் புரிந்தனர். நிர்வாகம், முகாமைத்துவம் தொழில்துறைகளிலும் இடம் பிடித்தனர்.
இத்தகைய முதலாம் கட்டத்தைச் சார்ந்த குடியேறியோர் மத்தியிலும் சில கலாசார செயற்பாடுகள் நடைபெற்றன. இவை சமூகத்தின் மேல்தளத்துத் தொடர்பு கொண்டவையாகவும், பாரம்பரிய உணர்ச்சி உடையனவாகவும் அமைந்திருந்தன.
83 ஜூலை இன வன்செயலின் பின்னர் குடிபெயர்ந்தவர்கள் மேற் கூறியோரிலிருந்து மிகவும் வேறுபட்ட சமூகப் பிரிவினராவர். 70களின் பிற்கூற்றி லிருந்து கூர்மையடைந்த இனப்பகைமை நிலை, 1979ஆம் ஆண்டுப் பயங்கர வாதத் தடைச்சட்டம், தமிழருக்கு எதிரான இராணுவ வன்முறைகள் 77, 83களில் நிகழ்ந்த வன்செயல்கள் ஆகியவை ஒதுக்கப்படும் சிறுபான்மை என்ற உணர்வு நிலையைத் தமிழரிடையே ஏற்படுத்தியது. இத்தகைய பின்னணியிலேயே முன்னெப்போதும் இல்லாதவாறு, பெருமளவில், குறிப்பாக யாழ் குடா நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் புலம் பெயரத் தொடங்கினர். நகர், நகர்சார் பகுதிகள் என்பவற்றிலிருந்து நிகழ்ந்த குடிப்பெயர்ச்சியின் புவியியல் களம் திடீரென விரிந்தது. யாழ்குடாநாட்டின் குக்கிராமங்களிலிருந்து பலர் கைத் தொழில் மயமான மேற்கு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர். மின்சார விளக்கும் இல்லாத வசதியற்ற சிறு வீட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் மின்சார ரயில்கள் விரையும் ஒரு மேற்கைரோப்பிய நகரில் எத்த னையோ தொழினுட்பங்கள்தரும் பிரமிப்பின் மத்தியில் தான் திடீரெனத் தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்தான். குடிபெயர்வோரின் புவியியல் களம் மாத்திர மல்ல, குடியேறும் நாடுகளின் களமும் திடீரென அகன்றது. பிரித்தானியா
4.

விலேயே அதிகம் குடியேறிய நிலை மாறி வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு மாத்திரமல்லாது கனடா, அவுஸ்ரேலியா என வேறு கண்டங்களிலும் இவர்கள் குடியேறினர்.
புவியியல் களம் மாத்திரமல்ல; குடிபெயர்ந்தோரின் சமூகப் பின்னணி யும் அகன்றது. இவர்கள் 80ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்தோர் போல ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் அல்லர். தமிழைத் தவிர வேற்றுமொழி அறியாதவர்கள். உயர்கல்வி அற்றவர்கள். பெரும்பாலோர் க.பொ.த.சாதாரண அல்லது உயர் வகுப்பு வரையுமே படித்தவர்கள். சமூகத்தின் பல மட்டங்களைச் சார்ந்தவர்கள். மத்தியதர, கீழ் மத்தியதர வர்க்கத்தவர்கள், கிராமப்புற சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், எழுதுவினைஞர்கள், ஆசிரியர்கள் குடும்பங் களைச் சார்ந்தவர்கள்.
சமீபகாலமாகப் பெண்கள் குடிபெயரும் நிலையும் கணிசமாக அதிகரித் துள்ளது. குடும்ப இணைவு என்ற கோதாவில் மனைவியர், அன்னையர் எனப்பல பெண்கள் சென்றுள்ளனர். அத்துடன் அந்நாடுகளில் வதியும் இளைஞர்களுக்கு மணமகள்களாகவும் இப்பெண்கள் செல்கின்றனர். >
ஐரோப்பாவிலும், வட அமெரிக்கா, அவுஸ்ரேலியா நாடுகளிலும் இன்று வாழுகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 400,000 என லண்டனிலுள்ள தமிழர் தகவல் நிலையம் என்ற அமைப்பு கணக்கிட்டுள்ளது. முன்பு இங்கிலா ந்தே தமிழர்அதிகமாக வாழுகின்ற நாடாயிருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் எண்பதுகளுக்குப் பின் தமிழர் அதிக அளவில் வாழுகின்ற இடங்களாக மாறின. கனடாவின் ரொறன்ரோ நகரில் மாத்திரம் தற்போது சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
பெரிய தொகையினராக இந்த வேற்று நாடுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் தோட்டங்கள், உணவுச் சாலைகள் பெற்றோல் நிரப்பும் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலேயே வேலை செய்கின்றனர். துப்பரவாளர்களாகவும், விளம்பரப்பத்திரிகைகளை வீடு வீடாக விநியோகிப்ப வர்களாகவும் பலர் தொழில் புரிகின்றனர். இவ்வகையில் இவர்கள் உடலுழைப் பாளர்கள். அவ்வவ் நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினர். எண்பதுகளுக்கு முன்னர் குடியேறியோரில் பெரும்பாலோர் பல்வேறு சேவைத் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இவ்வகையில் இவ்விரு பிரிவினரிடையேயும் ஒரு சமூக பொருளாதார வேறுபாட்டை அவதானிக்கலாம்.
எண்பதுகளுக்கு முன் குடியேறியோர் இந்நாடுகளில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர்களாக, புறநகர்ப் பகுதிகளில் வசதியான சொந்த தனி
5

Page 7
வீடுகளில் வாழ்பவர்கள். எண்பதுகளிலும் பின்னரும் குடியேறியோர் நகர்களில் தொடர்மாடி வீடுகளில், நெருக்கடி மிக்க அறைகளில், நகரின் வறிய பகுதிகளில் வாழ்பவர்கள். இங்கிலாந்தில் இந்த வேறுபாட்டினை மிகத் தெளிவாக அவதானிக்கலாம்.
சட்டபூர்வமாகவும், சட்டபூர்வமின்றியும் இந்நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் தம்மை அந்நாட்டு மக்களிலிருந்து வேற்றாராகவே இனங்காணு கின்றனர். சமீப காலங்களில் தம்மைக் கறுப்பின மக்களின் ஒரு பகுதியினராகவும் சிறிய அளவிலாவது இனங்காணுகின்றனர். சமீபத்தில் மேற்கைரோப்பிய நாடுகளில் குடியேறி வாழ்வோருக்கு எதிராக அந்நாடுகளில் வளர்ந்து வரும் எதிர்ப்புணர்வுகள், புதிய நாஜி இயக்கங்கள் (Neo Nazi Movements) என்பவை காரணமாகத் தமிழரும் தாம் கறுப்பின மக்களின் ஒரு பகுதியினர் என்பதை உணர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். *
ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்ச் சஞ்சிகைகள், சிறுகதை, கவிதைத் தொகுதிகள் ஆகியவை நாம் மேலே பார்த்த இரண்டாவது பிரிவினர் மத்தியிலிருந்தே வெளி வருகின்றன.
லக்கிய (மயற்சிகள் இ (ւՔu fo
மொழி, கலாசாரம், பொது அபிவிருத்தி போன்றவற்றில் பாரிய வேறுபாடுள்ள அந்நிய நாடுகளில் வாழுகின்ற நிலை இப் புலம் பெயர்ந் தோரிடையே சில குறிப்பிட்ட தேவைகளைத் தோற்றுவித்துள்ளது. இவற்றில் ஒன்று வாசிப்புத் தேவையாகும். தமிழில் வாசிப்பதற்கும், தகவல்கள் பெறுவ தற்கும், பொழுதுபோக்கிற்கும் கூட நூல்களும், சஞ்சிகைகளும் தேவைப்படு கின்றன. அத்துடன் தமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளியிட, ஆக்கத் திறமைகளை வெளிக்காட்ட பொருத்தமான களங்கள் வேண்டியுள்ளன. அத்துடன் இலங்கையில் இருந்த போது தமக்கிருந்த ஆர்வங்களையும் ஆற்றல் களையும் மேலும் தொடரவும் விரும்புகின்றனர். சில முக்கியமான இளம் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரும் புலம் பெயர்ந்து சென்றோரில் அடங்குவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். செழியன், தமயந்தி, வ.ஐ.ச.ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், மைத்ரேயி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சிவசேகரம், சபேசன், மு.நித்தியானந்தன், க. ஆதவன் போன்ற சிலர் இலங்கையில் இருக்கும் போதே எழுதுவதில் ஈடுபட்டிருந்தவர்கள். இவர்கள் தமது இலக்கிய முயற்சிகளை தாம் வாழும் நாடுகளிலும் தொடர்கின்றனர். அத்துடன் புதிய சூழலில் தமது நாடு பற்றிய நினைவை நிலைநிறுத்திக் கொள்ளவும் இவர்களுக்கு இலக்கியம் ஒரு தளமாக உதவுகிறது. தாம் விட்டு நீங்கிய தமது நாடு, சுற்றம், சூழல் பற்றி நினைக்கின்ற
6

ஒரு செயல்முறையாக எழுதுதலென்பது செயல்படுகின்றது. இவ்வாறு பல்வேறு காரணிகள் ஒருங்கு சேர்வதன் விளைவாகவே புலம் பெயர்தமிழரின் இலக்கியப்
படைப்புகள் அமைகின்றன.
இதற்கு நவீன தொழிநுட்பவிருத்தியும் உதவுகிறது. எண்பதுகளின் பிற்பகுதிகளில் கூடதமிழ் சஞ்சிகைகள் கையெழுத்தில் எழுதப்பட்டு, போட்டோ பிரதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. சில தட்டச்சு செய்யப்பட்டு வெளியி டப்பட்டன. ஆனால் இன்றோ தமிழ்க் கணணி முறையின் விரைவான வளர்ச்சி இலக்கிய ஆக்கங்களின் அமைப்பில் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இன்று கிட்டத்தட்ட எல்லா சஞ்சிகைகளுமே கணனியில் உருவாக்கப்பட்டே வெளிவருகின்றன. ஆரம்பத்தில் தொழிநுட்ப வசதிக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலும் ஒரே வடிவில் 20 செ.மீ X 15 செ.மீ சராசரி அளவில் தயாரிக்க ப்பட்டவை. ஆனால் சமீப ஆண்டுகளில் கணனியைப் பயன்படுத்தலின் விளை வாக இந்தக் கட்டுப்பாடு அகன்று வெவ்வேறு அளவிலும் வடிவிலும் இவை வெளியாகின்றன.
தனிநூல்களை விட சஞ்சிகைகளே அதிகளவாகப் புலம் பெயர் தமிழர் மத்தியிலிருந்து வெளியாகின்றன. 84, 85 ஆம் ஆண்டுகளிலேயே சஞ்சிகைகள் வெளியாக ஆரம்பித்தன. ஜேர்மனியின் ஸ்கோட் நகரிலிருந்து 85ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிய 'சிந்தனை” எனும் சஞ்சிகை 'தமிழ் மக்களின் இருள் சூழ்ந்த நிச்சயமற்ற நிகழ்காலத்தில் தெளிவான சிந்தனை முறை ஊடாக முறையான அரசியல் கோட்பாடுகளை ஆராய்ந்து ஸ்திரமான பாதையில் செல்வதே நமது குறிக்கோளாகும் என்று கூறி ஆரம்பமாகியது. இவ்வாறு பல சஞ்சிகைகளுக்கு இலக்கிய நோக்கங்களுடன் கூட சமூக அரசியல் அக்கறையும் அமைந்திருந்தமை குறிப்பிடக் கூடியதாகும்.
இச் சஞ்சிகைகள் புலம் பெயர்ந்தோரின் கவிதைகளையும், 'சிறுகதை களையும் வெளியிடும் களங்களாகத் திகழ்கின்றன. சுவடுகள், தூண்டில் போன்ற சஞ்சிகைகள் நாவல்களைத் தொடராகவும் வெளியிட்டன. ஆரம்பத்தில் சஞ்சிகைகள் இலங்கையில் வெளியான கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்களவு மறுபிரசுரம் செய்தன.
இந்நிலை தற்போது மாறிவிட்டது. கணிசமான எழுத்தாளர்கள் புலம் பெயர் நாடுகளில் உருவாகிவிட்டதை இது காட்டுகிறது எனலாம்.
சஞ்சிகைகளில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதை, சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றை ஒருங்கு சேர்த்து நோக்கும் போது புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் சில சிறப்புப் பண்புகளையும் தனித் தன்மைகளையும் திரண்ட வடிவில் இனங்காணமுடியும்.
7

Page 8
இலக்கியம் வெளிப்படுத்தும் உணர்வுகள்:
1) கலாசார ஆன்மிக தளங்களின் பிரிவும் நினைவும்
சொந்த நாட்டு நினைவு, அது தோற்றுவிக்கும் ஏக்கம் இவ்விலக்கி யங்களில் விருசி நிற்கின்றன. புதிதாகக் குடியேறிய இடத்தில் முற்றாகக் காலூன்றாத இம் முதலாவது தலைமுறை (First Generation)தாம் இழந்து விட்ட தாய்நாட்டைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நினைக்க வேண்டி ஏற்படுகிறது. யன்னலுக்குள்ளால் பச்சைஇலை காணாது, கட்டிடங்களையே காணும் போதும், சூரிய ஒளி காணாத பேஸ்மன்ற் (Basement) வீடுகளிலும், அலுவலகங்களிலும் பொழுது கழியும் போதும், பனிக்காலக் குளிர் எலும்பை ஊடுருவும் போதும் தாய் நாட்டின் நினைவு பல கோணங்களிலும் விரிகிறது. சொந்த நாட்டின் காலநிலை, இயற்கைஅழகுகள், அங்குள்ள மரங்கள், மலர்கள், சிறுகுட்டைகள், குச்சொழுங்கைகள், வெண்மணற் கடற்கரைகள், கோவில் முற்றம், வீடு, கிணறு, கிணற்றடி வாழை மரம், கிடுகுவேலிகள் என இயற்கை பெளதீகச் சூழலை நினைவு கூருகின்றனர். இவற்றை தம் எழுத்துக்களில் விபரிக்கும் போது அச்சூழலை தம்மளவில் மறு உருவாக்கம் செய்து, எழுதுகின்ற அந்தப் பொழு தில் அதற்குள் வாழ்வதாய், அதனை உணர்வதாய் ஒரு மனோநிலையும்
உருவாகின்றது. அத்துடன் அதனைப் பிரிந்த ஏக்கமும் வெளிப்படுகின்றது.
சிறுகுருவிவீடு கட்டும்
தென்னோலை பாட்டிசைக்கும் சூரியப் பெடியன் செவ்வரத்தம் பூவை புணரும் என் ஊரின் இருப்பிழந்தேன். அலை எழுப்பும் கடலோரம் ஓர் வீடும் செம்மண்பாதையோரம் ஓர் தோட்டமும்
கனவுப் பணம் தேட
கடல் கடந்தோம்
நானும்நாங்களும்
அகதித்தரையில்
முகமிழந்தோம். ’’ (Graijani: 1992-29) இன்னோர் கவிஞர் எத்தனை நாள் தனது தாய்நாட்டைப் பிரித்திருக்க
வேண்டும் என்று ஏக்கத்துடன் கேட்கிறார்.

"இன்னும் எத்தனைநாள் இந்துக் கடல் மடியில் மரகத வீணையென வடகிழக்காய்நீண்ட என்தாய்நாட்டை நெஞ்சில் சுமந்து சுமந்துநான் ஏங்குவது? நாட்டேக்கம் என்னுயிரை நஞ்சாய் சபிக்கிறதே."
(ஜெயபாலன்: 1989)
தமயந்தி தனது கவிதையொன்றில் தனது நாடு, தனது சுற்றம் மீண்டும் தனக்கு வேண்டும் என்று கூறுகிறார். தலைப்பிடப்படாத இக்கவிதை இயற்கைக் கூறுகளின் விவரணத்துடன் சமூகப் பாரம்பரியங்களின் இனிய நினைவையும் உள்ளடக்கியது. நாட்டின் இழப்பு, நினைவு, ஏக்கம் என்பவை அடிமனதில் படிந்துள்ள நாடு பற்றிய படிமங்களை மேலெழுப்பும் பலம் வாய்ந்தவை என்பதற்கு இக்கவிதை ஒரு உதாரணமாகும்.
இரையுங்கடலின் அலையுங்கரையும் கரையிலிரக் கரும்பாறைகளும் பாறைகாக்கும் ஒற்றைக் கொக்கும் கொக்கின் பிடியிற்தப்பும் மீனும் மீன்கள் நிரப்பி அசையும் படகும் படகிற்கேட்கும் அம்பாக்குரலும் குரலும் வானை உரசும் கூத்தும் கூத்துமுடிந்த கொட்டகைத்தரையும் கொட்டகைத்தரையில் உதிர்ந்த மணியும் மணிகள் தேடும் சிறுவர்படையும் படையாய்த்திரளும் முள்ளிக்கொடியும் கொடியிலுலருஞ் சிறகு வலையும் வலையிற்சரியுஞ் சுங்கன் கிளையும் கிளைமுள் சிலிர்த்த கிழாச்சிமரமும் கிழாச்சிமரமும் கண்ணாத்தீவும் தீவுகள் குழ்ந்த எந்தன் கரையும் கரையிலோலைக்குடிசைநிரையும் நிரையாய்ச்சடைத்த ஈச்சை மரமும் ஈச்சை மரத்தில் பழுத்த குலையும்
9

Page 9
குலைகள் தொங்கும் தென்னங்காடும் காட்டில் மணக்கும் நொச்சிப்பூவும் பூக்கள் சிரிக்கும் முசுட்டைக்கொடியும் கொடிகள் படர்ந்த கள்ளிமரமும் மரங்கள் நட்ட பாட்டன்நினைவும் பாட்டன்நினைவாய்ப்பருத்த புளியும் பருத்தபுளியின் பரம்பரைக்கதையும் கதைகள் சொன்ன ஆச்சிமுகமும் முகத்திலுப்பு படிந்த சனமும் சனங்கள் வளர்த்த நெய்தற் கலையும் கலைகள்திரிந்தநரையான்தீவும் நரையான்தீவின் வீழி ஒதுக்கும் வீழி ஒதுக்கின் வெள்ளைமணலும் மணலை அரிக்குங்கிழக்குக் கடலும் கிழக்குக்கடலில் உதிக்கும் பொழுதும் பொழுது புதையும் மேற்குப்பனையும் பனையின்தலையில் நுங்குக்குலையும் குலைகளிறக்கும் இருட்டுக்கதையும் இன்னும் இன்னும். என்னைப்பிரிந்த எனதுதேச வனப்பும், வனப்பின் எழிலுஞ்சிறப்பும் காதல் கொண்ட கடலுங்கரையும் எல்லாம் எனக்கு மீளவேண்டும். பார்க்க ரசிக்க, பேச, எழுத சுதந்திரமனுவாய் இவற்றைச் செய்ய மீண்டும் எனக்கு வேண்டும் இவைகள் யாரிடம் சென்று விண்ணப்பம் செய்வேன்! பனிமலைச்சுவரில் பட்டியல் எழுதி பனிமுகிலிடமாமுறையிட்டழுவேன்?
(தமயந்தி:1992) நாடு என்பது புவியியல் காட்சி மாத்திரம் அல்ல; சுற்றமும் குடும்பமும் சேர்ந்தது. குடும்பம், சொந்த பந்தம், நண்பர்கள் பற்றிய ஏக்கமும் கவிதைகளில்
விரிவதைக் காணலாம்.
1 Ο

"கண்டறியாத தேசத்தில்
இயந்திரப் பற்களுக்குள்
கனவுருகிவாழ்வுருகி
உன்னப்பன்நானிருக்க
உன்காதுள் பஞ்சடைத்து
தன்னுக்குள் உனைப்போர்த்து
உன் அன்னை காத்திருப்பாள்
மெல்லநீகண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்மணியே e
(அரவிந்தன் கி.பி.1993:64)
மொத்தத்தில் சொந்த நாட்டின் பெளதீக, கலாசார, ஆன்மீக தளங்களின் பிரிவு புலம் பெயர்ந்தோரை மிகவும் தாக்குகிறது. இத்தாக்கத்தின் தீவிரம் தமிழர் புலம் பெயர் இலக்கியத்தின் முக்கிய உணர்வோட்டங்களில் ஒன்றாகும்.
இது மாத்திரமல்லாது பிரிந்து வந்த இடம் பற்றிய இன்னோர் உணர்வும் இன்னோர் பார்வையும் காணப்படுகின்றன. இலங்கையில் தமிழர்கள் அனுபவி க்கின்ற போர்ச்சூழல், வாழ்க்கை நெருக்கடிகள் என்பவற்றிலிருந்து தாம் அகன்றிருப்பது குறித்ததான ஒரு குற்ற உணர்வும் புலம் பெயர் இலக்கியங்களில் புலப்படும் இன்னோர் அம்சமாகும். உயிரைக் காக்கவும், உணவைப் பெறவும் பகீரதப் பிரயத்தனம் செய்யும் மக்களை விட்டுப் பிரிந்து, குடியேறி வாழும் நாடுகளின் வசதிகளை அனுபவிக்கும் போது இக் குற்ற உணர்வு வடிவம் கொள்கிறது. இந்த உணர்வின் சமூக அரசியல் பிரக்ஞையுள்ள ஆக்கபூர்வமான வடிவம் தான் இலங்கைத் தமிழருக்கு பயன்தரும் வழிகளில் செயல்பட வேண்டும் என்ற விருப்பமாகவும், இலங்கையில் நிகழும் இன முரண்பாடு தீரவும், தமிழரிடையே ஆக்கபூர்வமான அரசியல் சிந்தனையையும் செயற்பாட் டையும் தூண்டக் கூடிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்பையும் புலம் பெயர் சமூகத்தினரின் ஒரு சிறு பகுதியினர் மத்தியிலாவது தோற்று விக்கிறது.
2) அரசியல் விமர்சனம்
இலங்கை அரசியல் பற்றிய விமர்சன உணர்வும் இப்புலம்பெயர் இலக்கியங்களில் இடம் பெறும் இன்னோர் அம்சமாகும். குறிப்பாக இலங்கைத் தமிழரது போராட்டம் குறுகிய தேசியவாதமாக, பலத்துக்கான போட்டியாக இராணுவவாதமாகச் சிதைந்து போனமை பற்றிய ஏமாற்றம் கவிதைகள், சிறுகதைகளூடு புலப்படுவதாகும்.

Page 10
“சற்றுநிதானமாய்க் கனவு காணப் பழகிக் கொள் கனவுகளிலாதல் வீதிக்குப் போனவர்கள் உயிருடனேயே வீடுதிரும்பட்டும். பெற்ற புதல்வர்கள் ஒருவரோடொருவர் துப்பாக்கிகளால் மட்டும் பேசாதிருக்கலாம்
அல்லது "பிணக்குத் தீர்க்க வந்தவர்கள் பிணங்களை வீழ்த்தாதிருக்கலாம் இனிமேலாதல் தயவு செய்து கனவு காணப் பழகிக் கொள்'
(இளவாலை விஜயேந்திரன்: 1989:70)
'பதினோராவது கட்டளை" என்ற தலைப்பிடப்பட்ட மேற்கூறிய கவிதையில் காணப்படுவது போன்ற அவலம் பொதிந்த எள்ளல் இத்தகைய விமர்சனங்களில் இடம் பெறுகிறது. அதேசமயம் 'என்றோ இவை மாறும், உண்மையான மனித நேயத்துடன் உரிமைப் போராட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையும் இடையிடைதலை காட்டுகிறது.
A
2-CւՔ
மறுத்துழு
மீளவும் மீளவும்
பண்படும் நிலம்."
(அரவிந்தன் மேலது:37)
என்று மீண்டும் மீண்டும் அயராத முயற்சியால் இலங்கைத் தமிழர் களின் போராட்டம் சரியான திசையின் திரும்ப அமைக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் தென்படுகிறது. அதேசமயம் போராட்டம் சிதைந்ததே, போராளி விலகியவராய் வெளியேற நேர்ந்ததே என்ற ஆதங்கம் - போராளியின் அகதி நிலையிலிருந்து தோன்றுகிறது.
2

“அகதிமுகம் பெறவா உயிர்க்களையை நான் இழந்தேன்? தேசமெங்கும் தீவிதைத்தேன்?"
(அரவிந்தன்மேலது)
இவ்வாறு சொந்த நாட்டு அரசியல் பற்றிய ஆதங்கம், நம்பிக்கை, நம்பிக்கையீனம் யாவற்றினது கலப்புணர்வு புலம் பெயர் இலக்கியங்களுக்கு ஒரு விசேட தன்மையை அளிக்கிறது. அத்துடன் தற்போது இலங்கையில் தோன்று கின்ற படைப்புகளில் குறிப்பாக வட கிழக்கில் வசிக்கும் தமிழ் இலக்கிய கர்த்தாக்களது ஆக்கங்களில் முகங்காட்டாத இந்த விமர்சனம் புலம் பெயர் இலக்கியத்தின் ஒரு முக்கிய பண்பாய் அமைவது குறிப்பிடத்தக்கதாகும்.
3) அகதிநிலை
புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் பொதுவான உணர்வோட்டம் புலம் பெயர்ந்தோரின் 'அகதிநிலையுடன் தொடர்புடையது. இவர்கள் தாம் போய்க் குடியேறிய நாடுகளில் சட்டரீதியாகவும், கலாசார ரீதியாகவும், நிற ரீதியாகவும், அந்நாட்டு மக்களிலிருந்து வேறுபட்ட வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றனர். குடிவரவுச் சட்டங்கள் தற்காலத்தில் கடினமாக மாறுவதும் அகதிகளின் வருகை யைக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகளும், குடியேறியோரு க்கும் கறுப்பின மக்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்புணர்வும் இலங் கைத் தமிழரை ஒவ்வொரு கணமும் அகதிகளாக உணர வைக்கின்றன. இவற்று க்கு முகங் கொடுக்க வேண்டி நேரிடுதல் ஐரோப்பிய, கனேடிய, அவுஸ்ரேலிய நாடுகளில் தமது அரசியல் யதார்த்தத்தை அவர்களுக்கு உணர்த்துகிறது. இந்த உணர்தல் ஒரு துன்பச் சித்தரிப்பாக இலக்கியத்தில் இடம் பெறுவது மாத்திர மல்லாது ஒரோர்சமயங்களில் அரசியல் விளக்கத்துடனும், தம்மையும் கறுப்பின மக்களின் ஒரு பகுதியினராக இனங்காணுதலுடன் வெளிப்படுகிறது.
'நிழலும் குறுகிக் கரையும் பார்வைதாழ நெஞ்சுக்குள்கூசும் கறுப்பிலும் மாற்றுக் குறைந்த
என்னை
13

Page 11
பூனைக் கண்கள்
உரிக்கும்
எலும்புமச்சைக்குள்ளும்
துழாவும்
இரத்தம் கறுப்பாய் இல்லையோ.
இகழ்ச்சி கொப்பளிக்கும்
(அரவிந்தன் கி.பி.மேலது:55)
நிறவேற்றுமையும் நிறவாதமும் தோற்றுவிக்கும் வெட்கம், அவலம் யாவும் கவிதையில் இடம்பெறுகின்றன. அந்நியர் மீதான வெறுப்பு, அவர்களை ஒதுக்குதல் என்பன புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் வேதனைகளாகும்.
"மலர்கள்துவிய பீடங்கள் ஒவ்வொன்றிலும் கூர்வாள் உயர்த்திய வீரரைத்தாங்கும் பாயும் புரவிகள் தேசங்கள் வென்றவர் சிலையிலும் முறைப்புடன் தீப்பற்றும் குரல்களால் செவிகளில் அறைவர் “வெளியேறு." சிலைகள் உயிர்க்கும் வாள்முனை மினுங்கும் தாயகம்துறந்தவனே உனக்கு ஏதுஇருப்பிடம்?"
(அரவிந்தன்மேலது:62)
நாடிழந்தவர்தன்னையே இழந்துவிடுகின்ற அவலம் அடிக்கடி கவிதை களில் தலைகாட்டுகிறது. வீடற்ற வாழ்வும், அன்றாட நிச்சயமின்மையும் ஒரு துன்பியல் தன்மையை இம்மனிதர்களுக்கு அளிக்கின்றன. இதுவும் கவிதைகளின் முக்கிய அம்சமாகிறது.
கவிதைகளில் மாத்திரமல்லாது சிறுகதைகளும் இத்தகைய விடயங் களைக் கையாள்கின்றன. 'அலையும் தொலைவு (கார்த்தி நல்லையா:1994) போன்ற சமீபகாலக் கதைகள் நிறவாதத்தாலும், முதலாளித்துவத்தாலும் தாக்கப்படுவது பற்றிக் கூறுவனவாகும்.
4

மேலே கூறிய நிலைமை தம்மை 'அந்நியராக உணரும் ஒரு தன்மையை அளிக்கிறது. இப்புலம்பெயர் சமூகம் ஒரு அரசியற் சமூகமாக பரிணமிக்காத இக்காலத்தில் இந்த 'அந்நியமாதல் தன்மை மேலும் அதிகரிப்பது மாத்திரமல்ல; பிரச்சினைகளும் தனிமனித பிரச்சினைகளாகவே வெளித்தெரிகின்றன. சமீபத் தில் குடிபெயர்ந்தவரும், அகதியும் (immigrant Refugee) பிறத்தியாராக, வேற்றாராக (The other) இந்நாடுகளில் நோக்கப்படுகிறார்கள்.இதற்கு அடிப்படை யாக அமைவது இம்மக்களின் நிறமுந்தான். வெள்ளையர் அல்லாதார் யாவரும் பிறத்தியார் - அந்நியர் இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நாடுகளில் இந்த நிலைமையை இலக்கியங்கள் சிறைப்பிடிக்கின்றன. அகதி வாழ்வின் பல்வேறு ஊமைத் துயரங்களையும் மனவிசாரங்களையும் இவை எடுத்து விளம்புகின்றன. தனிமைத்துயர், அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், நிச்சயமற்ற வாழ்க்கை, ஊர் உறவினர் பற்றிய நினைப்பு, எதிர்காலம் பற்றிய எண்ணம் போன்ற பல்வேறு உளைச்சல்களின் திரள் இலக்கியங்களின் அடிப்படை யதார்த்தம் ஆகின்றது. இத்தகைய உளைச்சல்கள் இலக்கிய வடிவம் பெறும் போது குடிபெயர்ந்த நாட்டின் சூழலினதும் சுற்றுப்புறத்தினதும் பின்னணியில் குறியீடுகளும், உருவகங்களும் அமைகின்றன. இது பற்றி கட்டுரையின் பிறிதோர் இடத்தில் குறிப்பிடுவேன்.
இவ்வாறு சொந்த நாட்டு நினைவு நிகழ்கால அகதிநிலையின் யதார்த்த நெருக்கடிகள், எதிர்காலம் பற்றிய வினாக்கள் ஆகிய யாவும் ஒரு கூட்டாகப் புலம் பெயர்ந்தோர் மத்தியிலிருந்து வெளிவரும் இலக்கியங்களில் இடம்பெறக் தொடங்கியுள்ளன. இவ்வகையில் இந்த இலக்கியங்கள் இலங்கைத் தமிழ்ப் புலம் பெயர் மக்களது கூட்டு நினைவையும், கூட்டு அனுபவத்தையும் (Colective memories and collective experience) GL15,6565tp607.
இது தமிழ்ப் புலம் பெயர் இலக்கியத்துக்கு மாத்திரம் உரிய ஒரு பொதுப்பண்பு அன்று. உலகில் எங்கெல்லாம் தமது சொந்த வாழிடங்களிலிருந்து அரசியல் சமூக நிர்ப்பந்தங்களின் நிமித்தம் வேற்று நாடுகளுக்கு மக்கள் புலம் பெயர்ந்தார்களோ அங்கெல்லாம் உருவாகிய இலக்கியங்களின் பொதுப் பண்பாகவும் இவை உள்ளன. நிகழ்கால யதார்த்தம், நினைவு, அது தேக்கி வைத்துள்ள கடந்தகாலம் ஆகிய வெவ்வேறு முனைகளுள் அகப்பட்டுச் சஞ்சல ப்படும் நிலை சமகாலப் புலம் பெயர் சமூகத்தினதும், அகதிச் சமூகத்தினதும் அங்கத்தவர்களுக்குரிய பொது அனுபவமாகும்.
4) பெண்களது விழிப்புணர்வு
இப்புலம்பெயர் இலக்கியங்களிற் காணப்படும் இன்னோர் முக்கிய
பண்பு பெண்களது விழிப்புணர்வாகும்.
15

Page 12
புலம்பெயர் சமூகத்திடை பெண்களின் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் மிகக் குறைந்தளவு பெண்களே புலம் பெயர்ந்தனர். பின்னர் புலம் பெயர்ந்த ஆண்களின் சகோதரியர், அவர்களுக்கான மணப் பெண்கள் எனப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது . தனியாகச் சென்ற பெண்களும் உளர்.
இலங்கையில் இருப்பதைவிடப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பெண்கள் தொடர்பான சில பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறு க்கமாக வைத்துக் கொள்ளவிரும்புகிறது. பெண்களது நடைமுறைகள், விவாகம் ஆகியவை தொடர்பாக எதேச்சாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ள முனை கிறது. ஆண், பெண் உறவுகளைப் பொறுத்தவரை இரட்டை விழுமியங்களும், மனோபாவமும் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் இந்தப் போக்கு புலம் பெயர் நாடுகளில் இன்னும் இறுக்கமடைகிறது.
இந்நாடுகளின் கலாசாரங்கள் அவற்றில் காணப்படும் சில ஜனநாயக அம்சங்கள் பெண்களுக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள உரிமைகள், வசதிகள், வலிமை வாய்ந்த பெண்கள் இயக்கங்கள், தமிழ்ப் பெண்களுக்குள்ள வாய்ப்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் காணுகிறது. மேலும், பெண்கள் கணவரிலோ, ஆண் உறவினரிலோ தங்காமல் தமது உழைப்பு அல்லது அரசு தரும் சமூக நல உரிமைப்பணம் முதலியவற்றால் பொருளாதாரரீதியில் தனி அலகாக இயங்கக்கூடிய நிலைமை, அவர்கள் தமது கையை மீறிப் போய் விடுவாரோ என்ற பயத்தையும் ஆண்களுக்கு ஏற்படுத்துகின்றது. இத்தகைய தமிழ்ச் சமூகச் சூழலிலேயே புலம்பெயர்ந்த பெண்கள் வாழுகின்றனர். புலம்பெயர்ந்தவளாக, கறுப்பராக, தொழிலாளியாக வாழும் பெண் தனக்கு மேல் திணிக்கப்படும் 'தமிழ் பெண் அவளது கலாசாரம் என்ற ஒரு கருத்து நிலையையும் சேர்த்து எதிர்நோக்க வேண்டியுள்ளது. இத்தகைய நிலையிலிருந்து சற்றாவது பெண்கள் விலகுகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படும் போது அது பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக வடிவம் கொள்கின்றது. மனைவியரை, புதல்வியரை, சகோதரிகளை அடிக்கின்ற, ஏசுகின்ற நிலைமை தொட்டு, பொது இடங்களில் கூட்டாகப் பெண்களைக் கேலி பண்ணுகிற, துன்புறுத்துகிற நடவடிக்கைகளாக இவை விரிவடைகின்றன. கனடா ரொறன்ரோ நகரில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்செயல்கள் பற்றி அங்குள்ள விழிப்பு என்னும் பெண்கள் அமைப்பு கண்டனம் செய்தது. அது தொடர்பாக சமூகத்தின் உணர்வைத் தூண்ட முனைந்தது. இவ்வமைப்பு வெளியிட்ட பிரசுரம் ஆண்களது வன்முறைக்குச் சாட்சியாகச் சில சம்பவங்களையும் விபரித்திருந்தது."
ஆணாதிக்க அடக்குமுறையைப் புலம் பெயர் பெண்கள் திரண்ட வடிவில் அனுபவிக்கின்றனர் என்பதுடன் அகதி வாழ்வின் பொதுப் பிரச்சினை
6

களையும் எதிர்கொள்கின்றனர். தனிமைத்துயர், மொழி, கலாசாரத்தளங்களில் அந்நியத்தன்மை, நிறவாதம் ஆகியவற்றின் பல பிரச்சினைகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்.
புலம்பெயர்ந்த சமூகத்தில் பெண்களது பிரச்சினைகள் குறித்து பெண் களே சிந்திக்கவும் செயலாற்றவும் துணிந்ததைக் காணலாம்.இத்துணிவு வெவ் வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்களாகவும், பெண்கள் சந்திப்புக் களாகவும், நூல், சஞ்சிகை வெளியீடுகளாகவும் தன்னை இனங்காட்டுகிறது. பிரான்ஸில் இலங்கை மகளிர் சங்கம், ஜேர்மனியில் பெண்கள் வட்டம், நோர்வேயில் சக்தி குழு, கனடாவில் விழிப்பு என அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. கண், நமது குரல், சக்தி, ஊதா என சஞ்சிகைகள் பெண்களால் வெளியிடப்பட்டன. தற்போது கண், நமது குரல் ஆகியவை நின்று போயினும் அவை பதித்த சுவடுகள் மறைந்து விடவில்லை. இவை தவிர ஜேர்மனியில் சில வருடங்களாக நடைபெறும் பெண்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சியை ஒட்டி பெண்கள் சந்திப்பு மலர் என்ற பிரசுரம் வெளியிடப்படுகிறது. இவை யாவும் பெண்கள் தமது பிரச்சினைகளை அடையாளங் காணவும், அவை குறித்து செயற்படவும் ஆரம்பித்தமைக்கு சாட்சியங்களாகும். சக்தி சஞ்சிகையின் முதலாவது இதழ் தனது வருகையின் நோக்கம் பற்றிப்பின்வருமாறு கூறுகிறது.
“வெளிநாட்டில் தமிழரிடையே பலவிதமானசங்கங்கள், ஸ்தாபனங்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப் படுகின்ற அமைப்புக்களாகவே இயங்கி வருகின்றன. புகுந்த நாட்டில் புதிய மொழி, கலாசார வாழ்க்கைச் சூழலில் வாழ வந்திருக்கும் பெண்கள் இங்கு முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகளோபல.
இத்தகு கலாசார முரணில் சிக்குப்பட்டுப் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதும் அவற்றுக்கு ஏதாவது தீர்வு காண்பதும், பெண்கள் மீதான பாகுபாடு பற்றி விழிப்புணர்த்துவதும் ஒருங்கிணைப்பை, நட்பை, ஒற்றுமையை உருவாக்க ஒரு களம் அமைத்துக் கொடுப்பதும் 'சக்தி'யின் பிரதான நோக்கமாகும்” (சக்தி: 1990)
ஜேர்மனியிலிருந்து வெளிவரும் "ஊதா" எனும் பெண்கள் சஞ்சிகையும், பெண்விடுதலைக் கருத்துக்களைக் கலந்துரையாடும் மேடையாக இருப்பது தனது நோக்கங்களில் ஒன்றெனக் குறிப்பிடுகின்றது.
ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போன்று புலம் பெயர்ந்து வெளிநாடு களில் வாழும் பெண்கள் பல்வேறு வகையாகத் தம்மை அடையாளம் காண் கின்றனர். புதிதாகக் குடியேறியவர்; கறுப்பினத்தவரின் ஒரு அங்கத்தவர்; ஒரு தொழிலாளி என்கிற பல்வேறு அடையாளங்களும் அவர்களுக்கு உள்ளன.
7

Page 13
அத்துடன் அவர்களது 'பெண்’ என்கிற பால் நிலையும் (gender) உள்ளது. இத்தகைய பன்முகப்பட்ட அடையாளம்(multiple identity) ஒரு செழுமையை அளித்தாலும் சிக்கலையும் குழப்பத்தையும் தருவதுமாகும். இத்துடன் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் தமிழ்க்கலாசாரத்தையும் மரபுகளையும் காப்பாற்ற வேண்டியவள் பெண் என்பதும் அடிக்கடி வற்புறுத்தப்படுவதாகும். இத்தகைய பன்முகப்பட்டதும் முரண்பாடுகளை உள்ளடக்கியதுமானநிலைமை பெண்களு க்குப் பல சவால்களையும் சமூக உளவியல் பிரச்சினைகளையும் தோற்றுவி க்கின்றன. இத்தகைய பிரச்சினைகளை அழகியல் மட்டத்தில் கையாள முனை யும்போதே 'பெண்களது இலக்கியப் படைப்புகள்' வடிவம் பெறுகின்றன.
இப்படைப்புகள் பெண்களது வாழ்நிலைகளைப் பிரதிபலிப்பது மாத்திர மன்றி அவை பற்றிய கருத்து நிலைப் பிரச்சினைகளையும் எழுப்புகின்றன. கலாசாரம், பாரம்பரியம் என்பவை யாவை? மனித வாழ்வில் அவற்றின் பங்கு யாது? ஒரு இனத்தின் கலாசார மரபுகளைக் கட்டிக் காக்கும்படி ஏன் பெண்கள் மாத்திரம் அறிவுறுத்தப்படுகின்றனர்? போன்ற வினாக்களைச் சிறிய அளவிலா யினும் பெண்களது படைப்புகள் எழுப்புவதை உதாசீனம் செய்ய முடியாது.
இத்தகைய பார்வையுடன் சில சிறுகதைகள் ஆக்கப்பட்டுள்ளன. "சக்தி' சஞ்சிகை இவற்றுக்கு ஒரு தளமாகச் செயற்பட்டுள்ளது. சென்ற வருடம் பிரான்சிலிருந்து வெளிவந்த ‘மறையாத மறுபாதி’ எனும் பெண்களின் கவிதைத் தொகுதியும் மேற்கூறியவற்றுக்குச் சிறந்த உதாரணமாகும். இத்தொகுதியில் காணப்படும் சமூக அரசியல் விமர்சனமும், பெண்களின் அனுபவங்களுடா கவும் பார்வையூடாகவும் இதனை வெளிப்படுத்தலும் மிக முக்கியமானதாகும். நிறவாதம், பால்வாதம் ஆகியவை பற்றிய விமர்சனம் இக்கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும் அடிக் கருத்தாகும்.
5) புதிய அனுபவங்கள், புதிய வெளிப்பாடுகள்
புதிய சூழலில் புதிய அனுபவங்கள் பேசப்படும் போது மொழிக்
கையாளுகையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வித்தியாசமான காலநிலைகள், பருவகாலங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்படும் இயற்கைப் படிமங்கள் புதிய கருத்துக்களையும், குறியீட்டு அர்த்தங்களையும் அளிக்கின்றன. இவை தமிழ் இலக்கிய மரபில் பயன்பட்டு வந்த படிமங்களுக்குப் புதிய அர்த்தங்களை அளிக்கின்றன. இலக்கியத்தினது புவியியல் களத்தின் விரிவு இதற்குக் காரணமாகும்.
இந்த மாற்றத்துக்கான பொருத்தமான உதாரணங்கள் குளிர், வெப்பம், கோடை, வெயில் ஆகிய சொற்பொருள் மாற்றமாகும். குளிர், குளிர்மை என்ற சொற்கள் தமிழ் இலக்கிய மரபில் இதம் என்ற கருத்தில் பயன்பட்டுள்ளன.
18

இதற்கு மாறாக கோடை, வெப்பம் என்பவை தாகம், வரட்சி, கோபம் போன்ற அர்த்தங்களுடன் தொடர்புடையவை. ஆனால் கடுமையான குளிர் பருவங் களையுடைய ஐரோப்பிய, கனேடிய, அவுஸ்ரேலிய நாடுகளில் இச்சொற்களின் அர்த்தங்கள் தலைகீழாய் மாறுகின்றன. கோடை, வெம்மை போன்ற சொற்கள் இனிமை, மலர்ச்சி, குதூகலம், உயிர்ப்பு போன்ற அர்த்தங்களைத் தருகின்றன.
கவிஞர் மகாகவியின் ஒரு நாடகத்தின் பெயரே 'கோடை அவர் கோடை என்பதை ஒரு குறியீடாகக் கையாள்கிறார். அந்நியர் ஆட்சியில் ஆதரவற்று கலைகளும் பாரம்பரியங்களும் குன்றிப் போவது பற்றிக் கூறுவதும் நாடகத்தில் அவரது நோக்காகும். 'அந்நியர் ஆட்சி விளைக்கும் கடுங்கோடை என்ற தொடரில் கோடை என்ற சொல் அளிக்கும் அர்த்தம் ஆழம் கொண்டது.
'கோடை" என்ற சொல்லின் அர்த்தம் ஒஸ்லோவில் இருந்து எழுதும் ஜெயபாலனின் இலையுதிர்கால நினைவுகள்-1989என்ற கவிதையில் தலைகீழாக மாறுகிறது.
'இன்பக் கனவுபோல் தோன்றிமறைந்தது கோடை"
வெயிற் சுகம் தேடி.."
கோடை இனிய கனவாகவும், வெயில் சுகம் தருவதாகவும் மாறுவது தமிழ்ச் சொற் பயன்பாட்டின் அர்த்தத் தளத்தை விரிவுபடுத்துவதாகும். அச் சொற்களுக்கு எதிர்மாறான கருத்தை அளிப்பதாகும். இதேபோல குளிர், பனி ஆகிய சொற்களின் பயன்பாடும் மாறுகிறது. குளிரும் பணியும் கொடுமை, விரும்பத்தகாதது, உயிர்ப்பின்மை, வெறுமை போன்ற அர்த்தங்களில் எல்லாம் பயன்படுகின்றன.
“காற்றுக்குதிரைகளில்
குளிர்
சாட்டை சொடுக்கிவரும்" எனவும் "குளிர் என்னை அறைந்து எழுப்பிற்று" எனவும் கூறும்போது 'குளிர் என்ற பதத்தின் மரபுரீதியான பயன்பாடு மாறுகிறது. இவ்வாறு பல உதாரணங்களைக் கூறலாம். உண்மையில் இச் சொற்பொருள் மாற்றங்கள், படிமங்களின் அர்த்த மாறுபாடுகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்ய இடமுண்டு.
மொழிக் கையாள்கையில் இன்னோர் புதிய அம்சமாகக் குறிப்பிடக் கூடியது. புதிய அர்த்தம் தரும் சொற்களும், சொற் தொடர்களுமாகும்.
19

Page 14
உதாரணமாக 'இறங்குதல்" என்ற தொழிற் பெயர்ச் சொல் வீட்டிலிருந்து வெளியே போதல் என்ற கருத்தில் பயன்படுகிறது. கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் இதனை அவதானிக்கலாம். உயர்ந்த மாடிக் கட்டிடங்களில் வாழ்தலுக்கும் இச்சொல்லை அவர்கள் அர்த்தப் படுவதற்கும் இடையே தொடர்புண்டு. இத்தகைய பேச்சு வழக்குகள் சிறுகதை யிலும், நாவலிலும் இடம் பெறும் போது 'ஐரோப்பிய, கனேடிய தமிழ் என அடையாளங் காணக்கூடிய பிரயோகங்களை அவதானிக்கலாம். பிரஞ்சு, ஜேர்மன்,நோர்வேஜிய மொழிச் சொற்களும் தமிழ் மயப்பட்டுப் பயன்படு கின்றன. சமீபத்தில் வெளிவந்த அலையும் தொலைவு என்ற சிறுகதையில் பதினொரு பிரஞ்சுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன."
புலம் பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வில் இவை யாவும் முக்கிய அதானிப்புப் பெற வேண்டியவையாகும்.
பொதுவாகத் தொகுத்து நோக்கும்போது தமிழரது புலம்பெயர் இலக்கி யப் படைப்புகளில் ஒரு துன்பியல் தன்மை இழையோடுவதைக் காணலாம். தமது சொந்தநாடு பற்றிய நினைவு, ஏக்கம், புதிய நாட்டில் நிச்சயமற்ற நிலை, எதிர்கொள்ளும் நிறவாதம், வேலைப்பளு ஆகியவை துன்ப உணர்வோட்டங் களையே இலக்கியத்தில் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் புலம் பெயர்ந்த முதலாவது தலைமுறையின் அகநிலை பிரதிபலிப்பாக இலக்கியம் அமைகிறது.
எதிர்காலம்
இறுதியாக புலம் பெயர் இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து ஒரு வினாவை எழுப்ப விரும்புகின்றேன். புலம் பெயர்ந்தோரின் வாழ்நிலையையும் அக உணர்வுகளையும் தற்காலத்தில் தமிழில் இலக்கியமாக்குவதுபோல எதிர் காலத்திலும் சாத்தியமாகுமா? இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர்தமிழ் மொழி மூலம் தமது உணர்வுகளுக்கு இலக்கியவடிவம் கொடுக்க வல்லவர்களா யிருப்பார்களா? தமது 'நினைவுகளையும், வரலாற்றையும் தங்க வைக்கும் அளவு புதிய நாட்டின் சூழலில் வளரும் தலைமுறையினர் மொழியை பேணுவது சாத்தியமாகுமா? அல்லது அவர்கள் தமிழரது இலக்கியத்தை தமக்கு நன்கு பரிச்சயமான பிரஞ்சு, டொச் (ஜேர்மன்), ஆங்கில, நோர்வேஜிய மொழிகளில் படைப்பார்களா? இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தோர் சிலர் இன்று தாம் வாழும் நாட்டு மொழிகளில் (ஆங்கிலம் தவிர்ந்த) எழுதக்கூடிய வல்லமை பெற்றுள்ளனர். கலாமோகன், சுசீந்திரன் போன்ற சிலரை உதாரணங் கூறலாம். ஆனால் இவர்கள் தமிழ் மொழியிலும் எழுதக்கூடிய இருமொழி அறிவு படைத்த வர்கள் (Bi-lingua). ஆனால் தமிழிலோ, சிங்களத்திலோ அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதும் இலங்கையர் தலைமுறையொன்று முளைவிடுகின்றது.
2O

இதற்குச் சமீபகாலச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் கனடாவில் வாழும் இலங்கையரான சியாம் செல்வதுரை. சிங்கள தமிழ்ப் பெற்றோரை யுடைய செல்வதுரை தனது பத்தொன்பதாவது வயதில் 1984ம் ஆண்டில் கனடா விற்குச் சென்றவர். சென்ற வருட இறுதியில் வெளியாகிய அவரதுFunny Boy என்ற நாவல் மில்லர் இலக்கியப் பரிசுக்காகப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இலக்கியங்கள் எந்த வகைப்பாட்டுள்அடங்குவன?
இவர் போன்ற புதிய தலைமுறையினர்தமது சொந்த நாடும், குடியேறிய நாடும் தமது தாயகங்கள் எனவே கொள்கின்றனர். இலங்கையர் எனத் தம்மை அடையாளம் காணும் அதேவேளை வாழ்கின்ற நாட்டிலும் உணர்வு பூர்வமான பிணைப்பை இயல்பாகவே வளர்த்துக் கொள்கின்றனர்.
'நீங்கள் எப்போதாவது இலங்கை திரும்பி இங்கேயே உங்கள் வாழ்க் கையை அமைத்துக் கொள்வீர்களா?" என்று ஒரு பேட்டியின் போது கேட்ட போது, சியாம் செல்வதுரை பின்வருமாறு கூறினார். " இலங்கை எப்போதும் எனது தாயகமாகவே இருக்கும். எனினும் கனடாவும் தாய்நாட்டிலிருந்து தூரேயுள்ள இன்னோர் தாய் நாடாகவே இருக்கும். ஓரிரு வருடங்களுக்கு நான் திரும்பி வரலாம். ஆனால் எப்போதும் என்னில் ஒரு பகுதிகனடாவில் இருக்கும்." (Sunday Times 02-29-1995)
சியாம் செல்வதுரை போன்ற கலப்புக் குடும்பப் பின்னணி கொண்டவர் கள் மாத்திரமல்லாது ஏனைய முதலாவது தலைமுறையினரும் கூட புகலிடம் சொந்த இடமாக மாறுகின்ற நிலையை உணர்ந்துள்ளார்கள். கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் சமீபத்தைய இதழின் காலமும் கருத்தும் என்ற தலையங்கம் சிந்திக்கத் தூண்டுவது. அது பின்வருமாறு கூறுகிறது.
“எலி பிடிக்க பூனை வேண்டி பூனைக்கு பால் கொடுக்க பசு வேண்டி. இப்படி கதையாய் போயிற்று-வெளியில் எங்கள் வாழ்வு
பிறந்த பொன்னாட்டின் நினைவுகளைச் சுமந்து கொண்டே இன்னொரு நாட்டின் குடிமக்களாய் வாழ்கின்றோம்- நாம் என்னத்தைச் சொன்னாலும் நினைத்தாலும் எங்கள்புதிய பரம்பரைக்குஇந்நாடேதாய் நாடாய் மாறிவருகின்றது.
நாள் ஒன்று போவதற்குபடும்பாடுதாளம்பாடுமோதறிபடுமோஎன்னும் வீட்டுக்கு வெளியே வந்தால் இட்ட அடி சறுக்குது எடுத்த அடி புதையுது- என்று எங்கள் முதியவர்கள் புலம்புகின்றார்கள்.
வேலையில் இருக்கும் நடுத்தர வயதினர் கட்டிமுடியாத கடன்களோடு ஆறியிருக்க நேரமின்றிய வாழ்வு
21

Page 15
ஆனால் எங்கள் குழந்தைகள் மொழியாலும் வாழ்வாலும் இந்த நாட்டுக் குரிய வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள்.
புலம் பெயர்ந்தோம், புலம் பெயர்ந்தோம் என்று சொல்லி நிலை கொள்ளத் தொடங்கிவிட்டோம்.
இங்குவரும் போது எங்களில் பலர்கையில் ஒரு பயணப் பெட்டியுடனும் தலைமாற்றிய கடவுச் சீட்டுடனும் வெறுகையாய் வந்தவர்கள்
இன்று விடென்றும் கார் என்றும் நிலையான வேலையென்றும் எல்லாவ ற்றுக்கும் மேலாக வாழ்க்கைக்குரிய பாதுகாப்பு-நம்பிக்கையுடன்இருக்கின்றோம்.
உயிர்தப்ப வந்திருந்தாலும் - அல்லது காசுதேடி கனடா வந்திருந்தாலும் கனடா தேசம் எங்களைக் கைவிடவில்லை.
யாரோ தேடி எவரோ உழைத்து கட்டியெழுப்பிய நாட்டில் எங்கள் வாழ்வு தற்காலிகமாகத்தானும் நல்லவிதமாய் தொடருகின்றது.
காலநிலை மோசமென்றாலும் எங்கள் வாழ்வுநிலை எங்களவர்கள் குடியேறிய மற்ற நாடுகளைவிடதரமாக இருக்கின்றது இங்கும் சில பல பிரச்சினை கள் இருந்தாலும் அது மனிதர்கள் எங்கிருந்தாலும் இருக்கின்ற பிரச்சினைதான்.
நாம் வாழ்கின்ற இந்த நாட்டிற்கு விசுவாசமாய் இருப்பதன் மூலமு நன்றியாய் இருப்பதன் மூலமும் எங்கள் தாய்நாட்டின் மகிமையை உணரச்
செய்வோம்." (காலம்:9)
புலம் பெயர்ந்து குடியேறிய நாடுகளில் தமிழர் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் விருத்திகளை மேற்காணும் குறிப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய நிலையில் தமிழ் மொழி மூலம் இலக்கியத்தை உருவாக்குதல் எந்தளவு சாத்திய மானது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். தமிழ் மொழி மூலம் ஆக்கப்படாவிடினும் புலம்பெயர்தமிழரது தன்னடையாளத்தையும் அவர்களது விசேட பிரச்சினைகளையும் உள்ளடக்கும் எனவே நம்புகிறேன்.
இக்கட்டுரையில் புலம் பெயர் தமிழர் இலக்கியத்தின் முக்கிய பண்பு களை கோடிட்டுக் காட்டவும் அது தொடர்பான சிந்தனைகளைக் கிளறவுமே முயன்றுள்ளேன். புலம் பெயர் இலக்கியத்தின் கருத்தியல் அழகியல் அம்சங்கள் பற்றி ஆழமான ஆராய்வு நிகழ்த்தப்படல் வேண்டும்.
22

குறிப்புக்கள்
1. புலம் பெயர்ந்த தமிழரது இலக்கிய சஞ்சிகைகளால் எனக்குப் பார்க்கக் கிடைத்தவற்றைக் கீழே தருகிறேன். ஒசை, மெளனம், கண், சமர் (பிரான்ஸ்), சுவடுகள், சக்தி (நோர்வே) மனிதம் (சுவிற்சலாந்து), தாகம், நாழிகை, பனிமலர் (இங்கிலாந்து), அஆஇ(நெதர்லாந்து), காலம், தேடல், பொதிகை, நான்காவது பரிமாணம் (கனடா), மரபு, அக்கினிக்குஞ்சு (அவுஸ் லிேயா), சஞ்சீவி (டென்மார்க்), தூண்டில், நமதுகுரல், புதுமை, தேன், சிந்தனை, ஊதா (ஜேர்மனி) இவற்றில் சில இப்போது வெளிவருவதில்லை. சில ஒழுங்கான கால இடைவெளியிலும் வெளிவருவதில்லை.
2. புலம்பெயர் இலக்கியம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், குறிப்பிடக் கூடிய வகையில் இவ்விலக்கியத் தொகுதி தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளை வாகவே எழுதப்பட்டன எனலாம். உதாரணத்திற்கு இலங்கையில் வெளியான சில கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.
1.செ. யோகராசா (1992) சாகித்தியமலர் கொழும்பு
2. சித்திரலேகா, மெள(1989) "மேற்கு நாடுகளில் தமிழ்ச்சஞ்சிகைகள்; சில பொதுக்குறிப்புகள்" திசை, (14-7-89) யாழ்ப்பாணம்
3. Chitralega Maunaguru (1993)"Immigral Literature of Srilankan Tamils - Some Reflections "Pravata, Colombo3. Vol : 2 No: 5
3. புலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு திருச்சியில் 18-12-1994 அன்று நடை பெற்றது. தமிழ்நாட்டின் முக்கிய இலக்கிய கர்த்தாக்கள், இலக்கிய விமர்சகர்கள் சேர்ந்து இதனை ஒழுங்கு செய்திருந்தனர். குறிஞ்சி, நிறப்பிரிகை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரிய குழுக்களும் இதில் பங்கெடுத்தன. இம் மகாநாட்டுச் சிறப்பு மலரை நிறப்பிரிகை வெளியிட்டது.
4. இத் தொடர்பில் பிரித்தானியாவில் குடியேறிய இலங்கைத் தமிழரை வலன் ரைன் டானியல் எனும் ஆய்வாளர் முதலாம், இரண்டாம், மூன்றாம் கால கட்டத்தினர் எனப் பிரிக்கிறார். பார்க்கவும்:(Danil Valeine E(1993) "The Nation in Sri Lankan Tamil Gatherings in Britain" Pravada, Colombo, 2:6
5.தமிழர், தாமும் கறுப்பின மக்களாகவே இந்நாடுகளில் நோக்கப்படுவதை இலகுவில் உணர்வதில்லை. கறுப்பு மக்களை ஏளனத்துடன் தமிழர் நோக்கு கின்றனர். அம்மக்களைவிடத்தாம் உயர்ந்தவர்கள்எனநினைக்கின்றனர். 'கறுப்பு 'காப்பிலி போன்ற இகழ்ச்சிச்சொற்களைக் கையாள்கின்றனர். ஆனால் மிகச்சமீப காலமாக வளர்ந்து வரும் நிறவாதம் காரணமாக, வெள்ளையர் பார்வையில் தாமும் கறுப்பின மக்களும் ஒன்றே என உணரத் தலைப்பட்டுள்ளனர்.
23

Page 16
6. வன்முறையை நிறுத்துக என்றதுண்புப் பிரசுரத்தை விழிப்பு - தமிழ் பெண்கள் அமைப்பு 1993 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிட்டது. இத்தகைய வன்முறையைக் கண்டிக்குமுகமாகக் கூட்டங்களையும் அது நட்த்தியது.
7. கதையின் இறுதியில் இச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்க்கவும். கார்த்தி நல்லையா (1994) 'அலையும் தொலைவு”புலம்பெயர்ந்த தமிழர் நல மாநாடு சிறப்பு மலர், பாண்டிச்சேரி.
உசாத்துணை நூல்கள்
1.அரவிந்தன் கி.பி(1993) முகங்கொள், சென்னை இளவாலை விஜயேந்திரன் (1992) "பதினோராவது கட்டளை'துருவச் சுவடுகள், ஒஸ்லோ
2. ஊதா (1992) ஜேர்மனி
3. சக்தி (1990) நோர்வே
செல்வம் (1992) கட்டிடக்காட்டுக்குள்
4. தமயந்தி (1992) தலைப்பிடப்படாத கவிதை ஓசை, பிரான்ஸ், ஓசை3:ஒலி:2 5.ஜெயபாலன்(1989) "இலையுதிர் கால நினைவுகள்"89', துருவச் சுவடுகள் நோர்வே. . . . .
6. (1993) மறையாத மறுபாதி, பிரான்ஸ்
7. Selvadurai Shyam (1994) Funny Boy . . . .
8, (1995) Sunday Times Colombo, 292-1995, p:17.