கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நானும் ஒரு பூனை

Page 1

நானும்
Ol
Griff

Page 2
Nanunn i Oru Poona
(Collection of Poems)
By
Solaikili
Copy Right: Poet
Price: 15/-
Address; 374, Sailan Road,
Kalmunai - 4. Sri Lanka Publication: “lruppu” Literature organisation, July-1985 Kalmanai.
நானும் ஒரு பூனை - சோலைக்கிளி
இருப்பு” இலக்கிய அமைப்பு, வெளியீடு, கல்முனை.
1985 0ܘܗ-g
հճl&v։ 15|-
நன்றிகள்:
அன்பிதயன் சிருஜ் நற்பிட்டிமுனை பளில் எஸ். எம் கபிரியேல் பாத்திமாபுரம்
அச்சுக் கோர்ப்பாளர்:-
பைன் ஆர்ட் பிறிண்டர்ஸ் கல்முனை.

கோர்வை
முன்னுரையாக இல்லாவிட்டாலும்
ஒரு
முறுவலிற்காக. முற்றத்து அலரியின் கதை 1 குறுக்குக் கோழியும் குஞ்சுகளும் 3 கூடு கலைந்த குருவி 5 சினந்து எறிக்கும் சூரியன் 7 சவங்கிப் போன தெரு 9 விடை தெரியாத வினு 11 அவசரக் குடுக்கைகள் 13 ஓர் அமாவாசை இரவு 15
17
சுப்பர் வாடிகள் 19 31 - 12 - 1983ம் தேதியக் குறிப்புகள் 21 சாவட்டைக் G5 dirizar 23 மழைநாளில் ஓர் மழைநாள் 25 குடுக்கை வைச்சான் காக்கை 27 சமுக்கத்துப் போன மாடு 29

Page 3
காணத்துப் போன பத்தை 31
மனங்களில் பூத்த மரம் 33
கழுவிழுங்கி மனம் 35
சமூகமும் சனமும் 37
புருக் கால்கள் 39 இன்னுமொரு பாப்பா பாட்டு 41 வெறுங்கூவல் அல்ல அறைகூவல் 43 ஒரு மூச்சுப்பிடித்த சாபம் 45 மாசா லே இரவுகள் 47 தப்பிப் போன தாலாட்டு 49 5, 6, திட்டுக்கள் 51 ஒரு சாதியான எரிச்சல்கள் 53 மழைப் பழங்கள் 56
பாம்புக் கோடுகள் 59 நானும் ஒரு பூனே 61

முன்னுரையாக இல்லாவிட்டாலும்
(5 முறுவலிற்காக.
இது ஒரு சிறிய கவிஞனின் பெரிய தொகுதி. புதுக்கவிதை மரபுக்கவிதை என்று மார்பிளக்கும் இக்கால கட்டத்தில் இவன் எதையோ * கவிதை ’’ என்று நினைத்துக் கிறுக்கியிருக்கிருன். அந்தக் கிறுக்கல்களில் சில இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் பல (இரண்டொன்றைத் தவிர) பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் இவன் நன்றி கூறுகிருன்.
ஒரு எட்டுவைத்து தொகுக்கவும், வெளியிடவும், ஊக்கமளித்த உள்ளங்களையும் திரும்பிப் பார்க்கிருன்.
இவன் சோலைக்கிளி 勒4, வீதி,
கல்முனை - 4. (இலங்கை} g"•8a) 1985.

Page 4

(l)
முற்றத்து அலரியின் கதை
O - O
asar èkou5)Gäè6ao; கதவைத் திறந்தால் கண்ணெதிரே சிவப்பாக நிற்கின்ற அலரியுடன் நெருக்கம் எனக்குண்டு.
பரட்டை விரித்து பார்ப்பதற்குத் தேவதைபோல் வளர்ந்து எத்தனையோ வயதுகளை விழுங்கிவிட்ட இதற்கும்
எனக்கும் உள்ள இரகசியம் ஒருவருக்கும் தெரியாது.
சொல்கின்றேன்; நமக்குள் இருக்கட்டும் நாய்நரியும் அறியாமல்.
சின்ன வயதில் சட்டையின்றித் தெருவெல்லாம்
அலைந்து புழுதி அழைந்து திரிகையிலே
ஒருநாள்
அாரத்து வீடொன்றில் மாங்கன்ருய் வளர்ந்து துளிர்விட்ட இதனைப் பார்த்தவுடன் இதயத்தைப் பறிகொடுத்து அன்றேதான்
செக்கலுக்குள் களவாகப் பிடுங்கிக் கொண்டுவந்து நட்டேன்.

Page 5
(2)
கேளுங்கள்:
நீரூற்றி
எருவிட்டு நண்பர்கள் குருத்தை நோண்டுங்கால் தலையிட்டு கண்ணைப்போல் இதனைக் காத்த சுவையான கெட்டித் தனமுள்ள கதைகள் ஏராளம்.
எனவேதான்; கதவைத் திறந்தால் கண்ணெதிரே புன்னகைத்து நிற்கின்ற அலரியுடன் நெருக்கம் உண்டென்றேன்.
ஆணுலும்; இப்போது அன்று இதிலிருந்த ஆசை எனக்கில்லை.
மாடு கடித்து மரத்தினேயே தின்ருலும், வேரோடு யாரும் வெட்டி எறிந்தாலும், விருப்பந்தான். ஏனென் ருல் ...
பூமரத்தை; நெஞ்சினிக்க ரசிக்க நிம்மதியே இன்றில்லை!
11 - 04 - 1983

(3)
குறுக்கக் கோழியும் குஞ்சுகளும்
- O - எங்களது; கொல்லைப் புறத்தில் "கீச் கீச்கீச்" என்றபடி தாயைப் புடைசூழ்ந்து திரிகின்ற குஞ்சுக்ளை நேற்றுத்தான் உம்மா வெட்டையிலே உலவ விட்டாங்க.
நினைவுண்டு: கொண்டைப் பேடு குறுக்கான தருணத்தில் ஒருநாள்
பின்னேரம்போல அதனைப் பிடித்து அடைப்புக்குள் நுளைத்தவங்க கோழி முட்டைகளைக் கீழாலே வைத்தாங்க. அப்புறமாய் அதைப்பற்றி நானும் அடியோடு மறந்துவிட்டேன்.
ஆணுலும்
பேடு குறுக்குத் தெளியாமல் "கொக்கொக்கொக்” என்பதையும் வழமைக்கு மாறன வெடுக்கு நிறைந்ததுவாய் திண்ணைக்குள் பிட்டுச் சுடுகையிலும் பேசியும்மா விரட்டாமல் குறுநெல் போட்டுக் கொள்வதையும் பார்க்கையிலே மனதுக்குள் ஏதேதோ கேள்வி எழுந்தாலும் கேட்காமல் இருந்துவிட்டேன். ஆண்பிள்ளைக்கு கோழியின்மேல் அக்கறை எதற்கு?
அடிசக்க; நேற்றுத்தான் உம்மா நடந்ததையே சொன்னங்க!

Page 6
(4)
பதினெட்டு உருப்படிக்கும் பனிரெண்டு பொரித்தனவாம். குறுக்கு இரண்டைக் குடித்து விட்ட ஆவாம்.
நான்கு
கூடாத ஓடுகளால் கூழாகிப் போயினவாம். கூழான முட்டைகளைக் காகங்கள் குடித்தனவாம்.
உம்மா சொன்னவைகள் உண்மையிலும் உண்மைதான். கழுத்தறுத்தான்;
ஐந்து.
as ru 55;
ஆறு.
ஒன்று;
கொட்டைவால் முளைத்த குஞ்சாக மேய்கிறது. தாய்க்குறுக்கு அவைகளுக்கு திசைகாட்டிப் போகிறது.
தாய்க்குறுக்குக் காட்டும் திசையெல்லாம் அவைகள் இழுபட்டுப் போனலும் இன்னும்சில மாதங்களால் புத்தி தெளிந்து புதுப்பாதை தேடுகையில் எங்களது
முட்டைப் பஞ்சம் முற்ருகத் தீர்ந்துவிடும்.
பாவம்; கொண்டைச்சி அப்போது கிழடாகிப் போயிடலாம்!
- O -
14. 04 - 1983

(5)
கூடு கலைந்த குருவி
- Ο --
வீட்டின்
ஒட்டைக் கல்லுக்குள் ஒப்பாரி வைத்தபடி எதையோ தேடுகின்ற என்னுசைக் குருவி.
f an
தேடும் பொருளெனக்குத் தெரியும், குடியிருந்த கூட்டைத் தேடுகிருய்; கொட்டைப் பாக்கானே. இனியுனக்கு; கூடு கிடையாது கொல்லையிலே போய்ப்பாரும் குப்பை மேட்டினிலே கல்லாந்து கிடக்கிறது.
கேளுமடி, * இதுநாள் வரைக்கும் இக்கூட்டைக் கட்டுகையில் பக்கத்துக் குடிசையிலே பார்த்தேதான் நானிருந்தேன். ஆணுலும்; என்னை நீபெரிதாய் எண்ணிடவே இல்லை. கல்வீடு உந்தன் கண்ணைக் கெடுத்திருக்கும். அதனுல்தான்; முட்டை இட்டவுடன் முடைவந்து அழுகின்ருய்.
ஒட்டைக் கல்லுக்குள் ஒப்பாரி வைத்தபடி தலையைப்; போட்டுத் துளைக்கின்ற பைத்தியமே எங்களது குடிசைக்குள் நீவந்து கூடுகட்டி முட்டையிட்டால் ДБтағth; வருமோடி கண்ணே! வளர்க்கின்ற பூனைக்கும் உள்ளம் இருப்பதஞல் உன்னிடத்தில் பதுங்காது.

Page 7
(6)
நீ கெட்டாய். நானென்ன செய்ய. கத்திக் குரல்வளையைக் கிழிக்காமல் போபோ.
புறப்படுமுன் அடுத்த "வைப்பினிலே” ஆறுதலாய் முட்டையிட இந்தக் குடிசை இருக்குமென்று வாராதே. ஒருவேளை, பஞ்சத்தால் நாங்கள் பாதியினை விற்றுவிட்டு காடு சரம்பென்று குடியகன்று போயிடலாம். ஆனலுமென்ன; அங்கே நீவந்து ஆறுதலாய் முட்டையிடு.
ஏனென்றல்; நொத்தவர்க்கே தெரியும் நொந்தவரின் நோவினைகள்.
- O -
15 - 04 - 1983

(7) சினந்து எறிக்கும் சூரியன்
- O -
நண்டு கடற்கரையில் நடக்கின்ற பாங்காக வானத்தில் - ஊரும் பரிதிக்கு ஊராரின் மேற்கோபம்.
நெருப்பு ஈட்டிகளை நிலத்தினிலே எய்கின்ற அந்தப் பரிதியொரு அப்பாவிப் பூனைதான். என்ருலும் - சாது மிரண்டுவிட்ட சங்கதியாய் போனதஞல் ஓடு கொதிக்கிறது ஓமண்ணே நம்பு.
அந்தப் பரிதியொரு அப்பாவிப் பூனைதான்
முன்பெல்லாம் அந்த முடவண்டி வானத்தில் பிச்சை னடுத்துப் போய்மறைய வில்லையா? அப்போது - என்ன குளிர்மை இராக்குருவி தனை மறந்து வந்து பகல்நேரம் வெட்கிக்க வில்லை. ஓமண்ணே
இன்று அந்தப் பரிதியேதான் அனலாகப் பெய்கிறது.
கோப உணர்ச்சியொரு கூடாத வெறியேதான்.

Page 8
(8)
காலம் மாறுபட்டுக் கல்விடும் மதில்களுமாய் ஊரில் முளைப்பதனுல் உயர்ந்துநின்ற மரமெல்லாம் ஒமண்ணே
கல்லாத்து இங்கே கரிக்கட்டை யாகுவதால் மழையில்லை.
அதனுலே; மன்னனது வேலைபல மடங்காகிப் போனதஞல் எண்ணையின்றி எமைப்பொரிக்க எண்ணிவிட்டார் சினந்து
அண்ணே இப்பொழுது அடிவயிறும் தீய்கிறது. நாளை - மெழுகாக உருகி மனிதன் அழிந்திடலாம்.
- O -
17 - 04 - 1983

(9)
சவங்கிப் போன தெரு
தெரு - அடித்துப் போட்டதாய் அசைவு இன்றி சும்மா கிடக்கும்.
சீவன் போன சாரைப் பாம்பாய் வீதி கிடப்பதால்;
காகம்
கோழி
எல்லாம் அதிலே
எச்சம் போடும்.
سه کرJے அடித்துப் போட்டதாய் அசைவு இன்றி சும்மா கிடக்கும்.
வெள்ளம் தெருவின் வயிற்றுள் இருக்கும். முகத்தில் பருக்கள்
கனிந்து வெடித்து
வழி - குன்றும் குழியுமாய் காட்சி அளிக்கும்.
அருகே மரங்கள்
ஒன்றும் ரெண்டுமாய் காவல் செய்து கால்கள் கடுத்தும்
கை - வரிசையைக் காட்டி வெய்யில் ஜெயிக்கும்.
என்ன நடந்தாலும் என்மயிர் போச்சு
என்று சொல்வதாய்

Page 9
(10)
அடித்துப் போட்டதாய் அசைவு இன்றி சும்மா கிடக்கும். வாய்தான் இல்லை விருப்பம் விடுமா? ஒர விளக்குகள் - எரியும் மாலையில் இளமை திரும்பி வீதி மினுங்கும்.
அந்த - சொட்டு இன்பமும் சுகமாய் இராது.
அவனும் அவனும்
அவளும் அவளும்
பெண்ணும் ஆணும் ஆணும் பெண்ணுமாய்
நாயும்
பேயும் அந்தி வேளையில் அணிகள் கோர்த்து வீதி முழுக்க விரையும் ஊர்வலம். . அந்த நெரிச்சலில் அலறும் வாகனம் உறுமிச் சீறியும்
வீதி அழாது.
அது - அடித்துப் போட்டதாய் அசைவு இன்றி &rt i LDT 631 -é35 tb.
சீவன் போன சாரைப் பாம்பாய் வீதி கிடப்பதால்
காகம்
கோழி
கடல் லாம் அத் லே எச்சம் போடும்.
01-05-198牙

(11)
விடை தெரியாத வினு
-س (O س
பந்தயக் குதிரைகள் பறப்பதனைப் போன்று . நீாளெல்லாம் - பறந்து மடிகின்ற பொருளென்ன தானே..?
அப்பு !
பாருங்கள் இந்தப் பாழான காலத்தை பொழுது விடிந்து புளக்கடிக்குள் வருவதற்குள் இருட்டு வந்து இழிக்கிறது பல்லை. ஏனப்பு. காலம் சுருங்கிக் கலண்டர் முடிகிறதா..?
கக்கூசு குந்திக் கழுவி முடிப்பதற்குள் சூரியன் மூலைக்குள் சறுக்கி வீழுகின்ற ஆச்சரியம் என்ன அப்பு சொல்லுங்கள் காலம் சுருங்கிக் கலண்டர் முடிகிறதா.
முன்பெல்லாம்; - , ズ விடிந்தால் பொழுது விடிந்த மாதிரித்தான். அடுப்பிலே துணியை அவித்து அப்புறமாய் கல்லில் அடித்துக் கழுவிக் காயவைத்து ஆறுதலாய்: ஸ்திரிகை செய்து இஸ்டம்போல் கொண்டுவரும் வயதான

Page 10
(12)
சலவைத் தொழிலாளி சுணங்குகின்ற பாங்காக
சூரியனும் ஆற அமர ஆகாயம் தனைக் கடக்கும்.
ஏனப்பு ! சொல்லுங்கள் பழங்கதையை சோட்டைக்கா
-புளுகுகிறேன்? இல்லவே இல்லை இனிய இரைமீட்பு. அந்த இனிமைகள் அழிந்தின்று போனதுவோ. வானத்து அக்கினிப் பிளம்பிற்கு அவசரம் கூடுதற்கு என்ன நடந்து எரிச்சல் பொங்கியது?
ஏனப்பு மெளனமாய் இருக்கின்றீர் கல்லாய் காலம் சுருங்கிக் கலண்டர் முடிகிறதா? ஐயோ பேசி அறிந்ததனைச் சொல்லுங்கள். நீங்கள் பழுத்த ஒலை போய்விடலாம் இலகாய் நானுே குருத்து ஒலை குந்தவுமே நேரமில்லை. அதனுல்தான்
பேசுங்கள் காலம் சுருங்கிக் கலண்டர் முடிகிறதா?
ஏனப்பு: அவலா வாய்க்குள் அடைத்து இருக்கிறது?
- O -
19 - 05 a 1983

(13)
அவசரக் குடுக்கைகள்
- O -
மணிக்கூட்டுள், வினடியினைக் காட்டி விரைகின்ற ஊசியென பரிதாபம்! அவசரக் குடுக்கையாய் அனைவரும் போனிரே.
ஊர்ச்சனமே! இப்போது யாருக்கு இருக்கிறது லீவு? எல்லோர் தலைக்குள்ளும் எறும்பேறி அரிப்பதனுல் SpursõT வண்டு கிணுகினுத்து விழலாக அலைவதுவாய் இரைதேடி ஒடித் திரிகின்றீர் உருப்படியைக் காணவில்லை.
காலம் மிகவும் கஷ்டமாய் போச்சப்பா!
ஆமாம்; வாழ்க்கை பூதம்போல் வில்லங்க மாகிநிதம் கல்லில் நாருரிக்க கணப்பொழுதும் ஏவிடுதே! ஐயையோ
என்ன செய்வீர் இயந்திரமா நீங்கள் ஒடி ஒடி உள்ளங்கால் தேய்ந்துவிட்டீர்.
அநீதி கனத்தால் அத்தனையும் தொல்லைதான்!

Page 11
(14)
கவனியுங்கள்; பச்சைக் குழந்தைக்குப் பருக்குகின்ற பாலிலுமே எதையோ
கலந்து விற்கின்ற காலத்தில் வாழுவது சுகமான சிரைப்பா சொல்லுங்கள் ஊர்ச்சனமே. முடவன்
நெருப்புக்குள் நொண்டி நடப்பதனைப் போலல்லோ?
என்ன பேசாமல் இருக்கின்றீர் ஊமையர்போல்?
g-- - - - - or . . . . . . காலம் பழுதாகி கட்டையிலே ஏறுகையில்
பேசிச் சிரிப்பதற்கு பத்தியமா உண்டு . . GF; it : என்ன வாழ்க்கை எவ்வளவு உழைத்தாலும் இருந்து தின்ன இல்லையப்பா சோறு
மூச்சு நின்ருல் மனத்துயரம் நீங்கிவிடும்.
அதுவரைக்கும் ஒடுங்கள் தலையெழுத்தை எண்ணியெண்ணி ஒடுங்கள் பேதி மாத்திரையை விழுங்கிவிட்ட மந்தியினைப் போல.
- O -
06 - 06 - 1983

(15)
ஓர் அமாவாசை இரவு
- O - கடந்த காலத்துக் கரிக்கோச்சைப் போல
அமாவாசை - இரவு நீண்டு எம்மூரை மேய்கிறது.
நேரம் - W சரியாக எட்டுமணி!
நல்ல கறுப்பு நெற்றிக்கு நேரே வெள்ளையன் நின்றலும் விளங்காது பாருங்கள். அப்படியாய் சரியான இருட்டு சனப்பேத்தி எங்குமில்லை. அலைகின்ற நாய்களுக்கும் அச்சம் வந்திருக்கும். இல்லையெனில் - செத்த வீட்டைப்போல் சோர்ந்திடுமா கிராமம்
நேரம் - எட்டுப் பதினைந்து
தண்ணிலவு மங்கைக்கு தொடக்குதினம் இன்று. அதனுல் - வட்டில் அப்பம் வான் சுடவே இல்லை. கடைவெள்ளி - பிடித்த சுண்டெலியைப் பறிசொடுத்த பூனை போல்

Page 12
(16)
கண்ணைச் சிமிட்டிக் கவலையிலே உழலுவதால் ஊரென்னும் - சேனைக்குள் புகுந்து சுதந்திரமாய் வெறியாட்டம் இரவுக் குரங்கு இரக்கமின்றி ஆடிடுது.
இன்று - மணிகூட ஒடுதில்லை
வெளிச்சம் குறைந்தால் வாழுவதே கஷ்டம்தான். மாதத்தில் ஒருநாள் மகிழ்ச்சியினைக் கொலைசெய்து அமாவாசை வந்து அகிலத்தை ஆளுகையில் அம்மாடி - ஊரே வரண்டு ஒடுங்கிப்போய் விடுதென்றல். பரிதாபம் வாழ்க்கை முழுவதுமே வாலாட்ட அமாவாசை விடியாமல் நிலைமை வடிக்கின்ற மானிடர்க்கு நிச்சயமாய் - தூண்டில் மீனின் தண்டனையாய் தானிருக்கும்.
இன்னும் - எட்டரையைத் தாண்டவில்லை!
நரகம்தான்! கோடி யுகங்கள் கடல் கிழியக் கிடந்தும்
கிழட்டு - ஆமையினைப் போல அமாவாசை ஊர்கிறது.
- O - S.
17 - 06 - 1983

(17)
2
- O -
கொய்யா மரம்காய்த்து கொஞ்சநாள் அல்ல!
அணில்கள் - மேயும் சுகத்தினையும் மறந்து போயிருக்கும்.
சில்லாங் குருவிகளின் சட்டத்தைப் பகிஷ்கரித்து தாவிக் கிளைகளிலே தம்முடைய நடனத்தை ஆடி மரத்திற்கு ஆனந்தம் ஊட்டிவந்த மீசைக் காரரெல்லாம் மூட்டைகட்டிச் சென்றனரோ.
6T 3r;
தாலி அறுத்து தன்பாட்டில் நிற்பதஞல் சட்டம் இயற்றிவந்த சலங்கையெல்லாம் சாவுறக்கம்!
முன்பெல்லாம்; குண்டுப் பழங்கள் குலைகட்டிச் சிரித்த இந்தச் சிறுகொய்யா இப்போது அழுமூஞ்சி .
கரடி பிறையைக் காணுவதைப் போல கன்னி கட்டுவதும் கண்பட்ட குமர்ப்பெண்ணுய் குமட்டி அவற்றையெல்லாம் கக்குவதும் வரமாகி பாவம் சுவாதம் பிடித்தவளாய் சருகாக கிணற்றடியில் நிற்கின்ற "நொகஞ்சானை” நினைத்தாலே உள்ளம் வெப்பத்தால் நிரம்பி வழிகிறது பெருமூச்சாய் . .
*Glas rufu uur;
கோடை கழிந்தவுடன் கற்பம் தரித்துவிடும்”

Page 13
(18)
உம்மா பூக்காட்டி ஓராண்டும்பூர்த்தி.
மாரி - சிணுங்கி முடித்து சிறையுடைக்க புதுக்கோடை இதயத்தை அவதான் இரும்பொன்ருல் அடிக்கின்ரு.
*சனியன்
உள்ளிடு பட்டு"உழுத்துங் போகிறது" கொய்யாவை வெட்டிக் குப்பையிலே எறிதம்பி' தலைசுற்ற அதிர்ச்சியுடன் தோல் சுரண்டிப் பார்க்கின்றேன் மலர்ந்த முகத்துடனே மெள்ளமெள்ளச் சாகிறது! "
என்ன
இந்த மரத்திற்கு இறப்பதிலா இனிமை? நல்ல பிறவிகட்கு நரகமிந்த உலகா?
"நெஞ்சத்தால் கொய்யாவை நிழற்படமாய் பிடிக்கின்-நிேன்"
- O -
O2 - 12 - 1983

(19)
5ňf GTIGI *
- O -
கோழிகள் கூவின. சில்லறைக் காசுகள் செலவாய் போக வானம் வறுமையால் வடித்துச் சிவக்கும் நிலைக்காய் இரங்கி; இரும்பெனச் சிறகை *எண்ணி அடித்துள்.
கொம்பின குயில்கள். ஈரலில் கொப்பளம் எழும்பி வெடித்தாலும் சரியெனத் துணிவாய்; சூரியன் நிலவைச் சப்புதல் கொடிய கொலையிலும் பெரிய கொலையெனக் கிளைகளில்.
இப்படிப் பலதும் இயங்கிடும் அதிர் விஞல் உயிர்த்து உயிர்த்து ஒவ்வ்ொரு பூதமாய்" பிரிந்த நினைவுகள் பிணைந்தன என்னுள் " பூனை பிராண்ட . . .
மீண்டும் சுமைகள் மண்டையை அமுக்கின.
புத்தம் புதிய புலர்விலும் கூட உரிமட்டை காந்தி உள்ளே புகையிது . . .
கூதற் காற்று குடிசையின் இடவால் பதுங்கிப் . . . பதுங்கி கரைத்த சோறெனக் கட்டையைப் பினைகையில் அவலா கொறிக்கும்?
ஆத்மா முனகுது.

Page 14
சாளைவாய் துடைக்கும் சமயமே புளுக்கம்! எழும்பி
நடந்து
ஓடி
|-
மாலை கருகி மஞ்சள் கட்டும். . .
அதற்குள்
குவியலில் இரண்டொரு கவலைகள் தீரலாம். பத்தோடு நூறெனப் பெருகியும் சேரலாம் .
மொத்தமாய்;
கூட்டிப்
பெருக்கி
கழித்துப்
பிரித்தால் ஒவ்வொரு தினத்தின் இலாபமும் நட்டமும் சுற்றிச் சுற்றி சுப்பர் வாடிதான்.
--۔ O ہے۔
(20)
se e o s e
13. 12 - 1983

(21)
31. 12. 1983ம் தேதியக் குறிப்புகள்
- O -
இன்னும் எந்தன் இதயத்துள் அந்தக் குப்பை காந்திக் காந்தி எரிகிறது.
கச்சான் வீசக் காய்ந்து உலர்ந்து செத்துப் போன சருகுகளாய் தெரிந்தாலும் உள்ளே பச்சை ஒழித்து இருப்பதளுல் சீறி எரிந்தும் சமிபாடு காணுதில்லை.
ஆமாம்: அந்தக் குப்பையினை அகம்விட்டும் உதறுதற்கு தெருவால் போனதையா சீலைக்குள் எடுத்துவைத்தேன்?
கூடிக் குலவி களிப்போடு ஐக்கியமாய் வாழ்ந்த எத்தனையோ வகையான மனிதர்கள் இயற்கைக்கு முரணுக இடர்பட்டுச் சிதைந்த குலைநடுக்கும் நினைவுக் குப்பை சொந்தமல்லோ.
அந்தக் குப்பை ஆலமரச் சருகல்ல விரைவில் எரிந்து வெண்சாம்பல் கொட்டுதற்கு.
காகத்தின் “பட்டோலை” கொண்டுவந்த குப்பையவை நரைத்து கிழடாகி நான்செத்து மடிந்தாலும் ஆதிமாவைப் புளுங்கவைக்கும் அக்குப்பை அழியாது துளிர்விட்டு;
எரியும் புகையும் இறவாது எதிர்மாருய் சுருக்கட்டி உயிர்ப்பித்து கனங்கூடி சுமையேற்றும்.

Page 15
(22)
ஜுலைமாத, அந்தக் குப்பைக்கு அவ்வளவு மகாசக்தி.
வேக் காடு; தண்ணிரை ஊற்றத் தணிந்து விடுமென்று கண்ணிரை விழிகள் கெடுமளவும் வார்த்தேனே! முடிந்ததுவா?
- ل955 மண்ணெண்ணை போலாகி மூண்டெழுந்து அப்பத்தை சுட்டுப் பொசுக்கி சீவனையே எடுக்கிறது. .
என்ருலும் "டயரி" இத்தோடு முடிகிறது. 1984 லும் பழைய பழக்கத்தில் பாம்புவரக் கூடாது. . 48 4 4 KM)
பயத்தால்: *பிராத்தித்துப் பிராத்தித்தே புத்தாண்டை வரவேற்றேன்"
- O -
30 - 12 - 1983

(23)
சாவட்டைத் தென்னை
- O -
வெள்ளைக் காகம்போல் விரண்டு தனித்ததாய் அந்த " ஒற்றைத் தென்னை.
ரெண்டு குரும்பை.
அஞ்சாறு பூக்கான் பன்னுடை பாளை பழுத்தோலை கொஞ்சம். ஒரு கிளிப்பொந்து.
ésigoleol-: சீவிய காலமாய் சேர்ந்த சொத்துக்கள்!
சொன்னுல் வெட்கம்
அந்த - தென்னம் பிள்ளையை தச்சன் குருவிகள் கொத்திப் பார்த்த குறியே இல்லை!
குரும்பட்டி பிடியென்று கிருணத்தில் வறவாஞய் உலக்கையைால் குத்திய ஒட்டைகள் எம்பட்டு . பசுமாடு கட்டிப் புகைவைத்த தடயமாய் அடிக்குற்றி எங்கிலும் ஆயிரம் புரிகள்.

Page 16
(24)
என்ருலும் சாவட்டை இரக்கம் உள்ளது! காகம் மட்டுக்குள் கூடு கட்டவும் உழுவான் வேருக்குள் உறங்கி மகிழவும் புண்ணியம் செய்த புனிதஸ் தலமாய் தேய்ந்த நெடுவல் தொண்டு புரியுது.
என்ன செய்யலாம் இயலா வாளி
கொத்தி எரித்தாலும் காந்திப் பிடிக்காது . செய்ய முடிந்த சேவையைச் செய்யுது
"அந்த மட்டில் ஆறுது மனசு”
سب O -
14 - 01 - 1984

(25)
மழைநாளில் ஒர் மழைநாள்
س- O --
நேற்றிரவு நல்லமழை
கீரைப் பாம்புக் கூட்டம் போல
நிலத்தில் வீழ்ந்த நீரின் கோர்வை
எக்கச்சக்கம். .
எங்கோ தவளை இருந்து கொண்டு இழுத்த இழுவை.
கிழக்கு; மூலைக் குள்ளே முட்டி உடைக்கும் போட்டி நடத்திப் போட்டி நடத்தி இடிமுழக்கம்.
நேற்றிரவு நல்லமழை
வளர்த்த நாயை வந்து பார்த்தேன். ஐயோபாவம் படுத்த வாக்கில் பச்சைக் குட்டி செத்துக் கிடக்க மின்னல் ஒன்று மின்னிச் சென்றது . . .
நல்ல குட்டி ஆறு மாதம் அன்பைக் கொட்டி வளர்த்த பெட்டை

Page 17
(26)
கண்டாற் போதும்; கேவிக் கேவிக் குதியை நக்கும். வாலை ஆட்டும்
வலிப்புக் காட்டும் கப்பை அகட்டிக் கறணம் போடும். செத்துப் போச்சு
நேற்றிரவு நல்லமழை
எங்கோ தவளை இருந்து கொண்டு இழுத்த இழுவை . . .
- O -
16 - 02 - 1984

(27)
குடுக்கை வைச்சான் காக்கை
- O -
குடுக்கை வைச்சான் காக்கையைத் தெரியுமோ?
அதோ - பட்ட வேப்பையில்.
மிலாறு தெரித்து முறியும் கட்டை அந்த வேப்பை. துளிர்க்க அதற்குத் துணிச்சல் இல்லை. இந்த மழைக்கு எழும்பா உசிரு.
பட்ட வேப்பை பழைய சரக்கு. அப்பச்சி ஒருநாள் அவலைக் கொறிக்கையில் ரிஷயம் தெரிந்தது.
அப்பச்சி செத்து பேரன் நானும் அப்பச்சியாகி பொல்லும் தடியுமாய்.
வேப்பையின் வயது வேண்டாம் விடுங்கள். அதோடு கிடந்து அழியும் காக்கையின் தப்பித் தனம்தான் நமக்குத் தேவை. .
வேப்பை செத்து வீழும் நிலையிலும் குடியைக் கிழப்புதா? இருந்த சுற்றம் எல்லாம் கலைந்து வாழ்ந்த போதும் வேசா மகன்ட.

Page 18
(28)
பிணத்தைக் கொத்துது. சிறகை அகட்டிச் சினைப்புச் சுரண்டுது. கீதம் பாடுது. நித்திரை வந்ததும் நின்று அாங்குது. எல்லாம் பிறந்த இத்த வேப்பையில்.
குடுக்கை வைச்சான் காக்கை இதுதான்!
"பிறந்த இடத்தை பெரிதாய் மதிக்கும் இந்தக் குடுக்கை எங்களை விடவும் Gyrubu elefës”
அடிக்கடி மனசு அப்படி உழறும். .
-- O ہے۔
O9 - 03 - 1984

(29)
தழுக்கத்துப் போன மாடு
- O -
ஆட்டு முட்டையை அடைக்கு வைத்ததாய் ராவும். .
கனவு. 856.9Fs......... தினமும் என்னைத் தின்னும் விவாதி ராவும் வந்து . .
கையை எடுத்து கவட்டுக்குள் வைத்து: குப்பறப் படுத்தேன் போடா போடா பனங்கொட்டைத் தலையா என்பதைப் போல . .
வெள்ளை ரோசா வாசலில் பூத்தது. குடிசை அழிந்து கோபுரம் முளைத்தது. உருண்டு படுத்தேன்; அடுத்த கட்டமும் ஆரம்பமாகி.
நானும் தலையை நிமிர்த்தி நடந்தேன். எனது சத்தம் எங்கும் ஒலித்தது. விழுந்த பீத்தல்
நசல்கள் எல்லாம் மாறிப் புதிய மனிசன் போல . . .

Page 19
(30)
நுளம்பு கடித்தது. வானில் இருந்து விழுந்த பதட்டமாய் கண்ணைத் திறந்தேன்.
விடிந்தும் பூமி விடியாப் பருவம். அண்டங் காக்கைகள் அலறி. S9 avió......... கோழிக் கூட்டுள் குஞ்சுகள் முடங்கி கீச்கீச் என்று கூக்குரல் எழுப்பி.
வாலைச் சுருட்டினேன்; இடுப்புக் கழர என்மனம் சொன்னது *தழுக்கத்துப் போன மாடு நீயென”
ہے O سے
O9 - 03 a 1984

(31)
காணத்துப் போன பத்தை
- O -
ஒரு பீப்பத்தை!
இவடம் எல்லாம் எருக்கிலை 42ན༧... பூமுத்தை .
தகரை . . . ஆமணக் கென்று.
எலியும் உடும்புமாய் எத்தனை பொந்துகள்!
உறுமினல் போதும், களிசனை உரிஞ்சி கையிலே தூக்கி குப்பியில் முள்ளுக் குத்திடக் குத்திட பேண்டு அரைச்சி .
ஒரு பீப்பத்தை!
இந்த வளவுள் இருந்த குப்பை
செத்த sts fissir,
படிக்கத் தண்ணி, போத்தல், ஓடு, பீச்சும்பு, கல்லு ஆயிரம் வண்டில் அள்ளிடக் காணும்.

Page 20
(32)
எம்பட்டு மாறுதல்
கழுக்கு முழுக்கெனக் காய்க்கிற தென்னைகள். வளைச்சி சிக்காருய் வேலியும் கடப்பும். நடுவே கொட்டு. வழுதிலை, கொச்சி, வண்டை, இப்படி
5 gruyub LC5Dr?
6T600Tsi) Garr2sol
காலம் போளூலும்; சொந்தக் காரன் சோம்பறை முறிச்சிட்டான்!
- O -
25 - 03 - 1984

(33)
மனங்களில் பூத்த மரம்
- O سب
திரேசா அம்மையா.1
வாசலில் நிற்கும் வெள்ளை மல்லிகை பூத்து உதிர்த்தி ...
இந்த மரத்தின் இனிய சேவையைப் புகழ்ந்து . . புகழ்ந்து . . துளிரும் பூவும் தேவைப் படுவோர்!
பிறர்க்கு என்றே பிறந்த மரத்தை இந்தப் பகுதியில் எழும்பி நடக்கும் குழந்தைப் பிள்ளையும்
சரித்திரம் ஆகிடச் சேவை செய்யாமல் சேவை செய்தே சரித்திரம் ஆனது இந்த மல்லிகை
இந்த மல்லிகை எனது வாசலில் நின்ற போதிலும், எனது கிணற்றிலே இதற்கு நீரை வார்த்து வந்தாலும்,
உயர்ந்து கொப்புகள் ஓங்கி வளர்கின்ற இந்த மல்லிகை ஊரின் மல்லிகை

Page 21
(34)
விடுங்கள் மனிதனை,
நோபல் பரிசை நேர்மையாய் வழங்கினுல் இதற்கும்.
08 - 04 - 1984

(35)
கழுவிழுங்கி மனம்
- O -
அள்ளிக் கொஞ்சலாம். ஊத்தை கழுவி உலர்ந்த கடற்கரை மனதைச் சுழுக்க தாவும் அலைகளில் தலையைக் கோதும்.
மாலைப் பொழுதின் மஞ்சள் வெளிச்சம்.
என் . வரவு இன்றும் விழவே இடாப்பில் மகிழும் நண்டு
ஒரம் முழுக்க சின்னச் சின்னச் சுலோகம் எழுதி விரலில் நடக்கும்.
அந்தி - 6nur6oT ubi sresốr2rar வரைந்து காட்டும்.
கண்ணைத் தோண்டும் கடுவன் பூனையாய் பெட்டை அலையாம் சமயம் தேடிச் சமயம் தேடிச் சேட்டை விட்டு
உம்மா பெயரால் காலைச் சுரண்டிக் கத்தம் ஒதும்.
தாழ்வுச் சிக்கலால் தேயும் பரிதி கண்ணைப் பொத்தும்.

Page 22
(36)
தொலைவில் மிதந்தே துரங்கும் படிகின் முத்தல் விளக்கு மானம் ரோசம் மழுங்கிப் போனதாய் ஊரார் சோற்றுள் முழிசி முழிசி மாங்காய் போடும்.
உயிலை - இரவு எனக்கே எழுதி வழங்கும்.
சிற்பியும்
வலு -
சின்ன ஊசியும் என்னில் நுணுக்கமாய் இருந்து நேசிக்கும்.
நான் - காற்றை நினைத்து:
28 - 04 - 1984

(37)
சமூகமும் சனமும்
- O -
காய்ந்து கிடந்தாலும் அது - களனி.
நெல்லு விளையும் நெல்லுப் போல நிமிர்ந்து அங்கே கொக்குநாரையும்
கோழியாகூந்தலும் எத்தாளம் காட்டி இடும்பாய் சிரிக்கும்.
அது - களனி.
கொக்கு மேயும். கண்ணறுத்தானும்
கருமியும்
குருவியும் சன்னம் போல சிதறித் திரியும்.
அங்கே . . . அங்கே .
அழுக்குத் தின்னும் ஆமை கூட முளையைக் குடிக்கும்.
அது - களனி.

Page 23
(38)
எருமை மாடு இருக்குமா சும்மா? முள்ளுக் கம்பியால் முடைந்த வேலியை மல்லாக்க வீழ்த்தி
பயிரைச் சப்பும்,
நேரமிருந்தால்: தின்ற “ஹருத்தை” தாராப் புட்டியில் கரைத்து ஊற்றிக் கிருணி அடிக்கும்.
-- لی }2محب> களனி.
கீச்சான் மட்டுமா
உள்ளான் தொட்டு அடச மானும் அங்கே பறக்கும். அட்டை நுளம்பு நாயுண்ணி எச்சுண்ணி நக்குண்ணி என்று என்ன கோதாரி இருக்கோ எல்லாம் அங்கே இருக்கும்.
அது -
களனி,
நெல்லும் துணிந்த நெஞ்சம் உள்ளது. அம்மியில் வைத்து
கிண்ணியில் வடிக்கும் களனியில் முளைத்து எத்தனை வாய்க்குள்ளால் இரணம் தப்புது ..!
அதுவும் அதுகேட்ட வரமும்.
- O -
O7 - 06 - 1984

(39)
புறக் கால்கள்
- O -
காற்றில்லை கடற்கரையில் பேயறைந்த தென்னையெல்லாம் ஊருவாய்
கழுத்தை வெட்டி வாங்கிய வாதக் காரன்போல் நிற்கிறது மூஞ்சை நீட்டி
சொத்தையைப் பார். இந்தக் கடற்கரைக்கும் என்மீது கோபம்
வாலாந் தவக்கையையும் செப்பலிக் குஞ்சினையும் வளர்த்த குட்டைபோல் வாடிப்போய் கிடக்கிறதே!
என் முகத்தில் முழிக்க இதற்கும் முடையாக்கும்
எனது செடிகளும் பூப்பதில்லை. ஜன்னலால் காற்று வருவதும் கிடையாது.
எனக்கென்ன. நான் உஷ்ணத்தைச் சுவாசித்து உயிர்வாழும் பிராணி.

Page 24
(40)
கடற்கரையே வாயையும் பொத்து. கொட்டாவி விடும்போது காற்றுவந்து படும்.
epdór ... . . . . . . . . . அதுவும் விடாதே.
2-6ör வயிறுாதி வெடிக்கட்டும்.
சொத்தையைப் பார்.
நான்; உஷ்ணத்தைச் சுவாசித்து உயிர்வாழும் ஜீவன் காற்றுக்காய் உனது காலடியில் விழமாட்டேன்.
என்முகத்தில் முழிக்க எல்லோர்க்கும் முடையாக்கும் போ. புருக்கால்கள் கீறிப் புடவை கிழியாது.
- O
12 - 06 - 1984

(41)
இன்னுமொரு பாப்பா பாட்டு
- O -
ஆதலினுல்; பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டுத் தேவையில்லை,
பொக்கணியைப் பார் பொக்கணியை வொப்புத்தீ.
அலமடியைச் சொட்டுப்போல் அங்கால நழுக்கு வெக்கம் தெரியுது. பொக்கணியைப் பார் பொக்கணியை
வொப்புத்தீ
விளையாடி விளையாடி வாசலெல்லாம் கந்தல். செங்கல்லும். . . . Luruh
போ... . விளையாட நேரமில்லை.
புண்ணுக்கு வாங்கவேண்டும் பால்கறக்க மாட்டில், குறுக்குக் கோழிக்கும் கூந்தலினைக் கட்டு. வளவைத் தூர்.
கோடி அடிக்காமல்; - நாலு மூலைக்கும் நாய்க்கள்ளி புதை.

Page 25
(42)
வொப்புத்தீ.வொப்புத்தீ. நீபிறந்த காலம்தான் வரையறையைத் தகர்க்கும் விஷப்பரீட்சை நடக்கிறது நானென்ன செய்ய. சூத்தாம் புட்டியில் சாம்பலுண்டு தட்டு.
Gur............ போய்; தலைமுறையை மாற்று.
அறுநாக் கொடியைப்பார் ஆளைவிடப் பெரிசு
- O -
13 - 07 - 1984

நாகுவென்ன நாம்பனென்ன மனிதர்கள் எல்லோரும் மூக்கணத்தைக் குத்துங்கள்.
இலுப்பையிலே ஏறியதாம் முடப்பேய்.
மாட்டுக்கும் மூக்கணம் மனிதனுக்கும் மூக்கணமா., !
போங்கள். மூக்கணத்தை; பேசாமல் குத்துங்கள்.
மனிதனென்ருல் என்ன கையிரண்டு . as respotlir........ ...
வாயை மடித்து புறங்காலில் தட்டுங்கள்.
"poofsah" «» வடிவத்தைப் பார்த்து வைத்ததஞல் பெயரு நிலைகெட்டு
f5s குவலயமே இன்று குட்டிச் சுவராகி.

Page 26
(44)
ஏன் குத்துவதால் உங்கள் குடிமுழுகிப் போயிடுமோ.
அந்த உணர்விருந்தால் அழிவின்று தோன்ருது. வண்டி சறுக்காது. வாழ்க்கை பிசகாது,
குப்பறத்தான் விழுந்தாலும் மீசையிலே மண்படாது.
விடு மீசையென்ன மீசை மயிராலே வளர்ந்த ஒன்று
மாட்டின்மேல் நேரத்தை மினக்கெடுத்திக் கொள்ளாமல் மனிதர்கள் எல்லோரும் மூக்கணத்தை.
- Ο --
23 - 08 - 1984

(45)
ஒரு மூச்சுப்பிடித்த சாபம்
س- O) --
பிடி: மணிகட்டாத மண் நிறத்துப் பூனையை. சிரைத்துநான் பார்க்க...
குடலிழுத்து செத்த பூமிக்கு சவரம் செய்தும், QpiqGautiquyts,
மீசைவைத்தும், நான்கண்ட நயமென்ன...?
மண்பூனையின்
மயிரைப் பிதுக்கிளுல்
தெள்ளுக் குறையும். ஈரும் சிலவேளை இல்லத்துப் போகலாம்.
ஏன்
சரசம் முற்றி ரவிக்கையிலே கைபோட்டால் பூனை மடிக்குள்ளே படுத்தும் தூங்கும்
தூங்கிஞல் என்ன....
தூங்கட்டும்.
மடிக்குள்ளும் வேண்டுமென்ருல் மூத்திரத்தை
-விடட்டும்
கவையில்லை...கவையில்லை.

Page 27
(46)
இந்த நிலத்தின் இழிநிலையைப் போக்க கத்திவைத்து சிரைத்த சனத்துக்குச் சிலை வைத்துப் பார்த்தாலும் கூடுகட்டத் தேவையில்லை; காகங்கள் குடியிருக்க '
ஆனதென்ன. ஆனதென்ன. பூமி திருந்தியதா?
பசுமாட்டைப் போலஅது புண்ணுக்கை இன்றைக்கும் பிரியமுடன் புசிக்கிறதே!
நெய்வாசம் இந்த நிலத்திற்குப் பிடித்தாலும் ஆமணக்கை வாசம்தான் அடிமூக்கில் உறைக்கிறது உறைக்கட்டும் தலையின் உச்சியிலே அடிக்கட்டும், சிரசு கலங்கட்டும், தன்பாட்டில் கிடந்து தவியென்று தவிக்கட்டும்,
வந்தால் மஸ்த்தான்.
வராவிட்டால் சுல்த்தான். அதற்காகக் கிடந்து அம்மியினேப் பொழிவதுவா? துருவிலையை இராவுவதா?
- O -
29 09 - 1984

(47)
மாசாலை இரவுகள்
س۔ O س۔
இன்றைய இரவு ரம்மியமானது. இல்லையென்று யார் சொன்ஞ.
62O5 மண்டெலியைப் போல gોકી ટo; வாழைப் பழம்திருடும் வெளவாலைப் போல எப்படியோ. . உ ஷாராகு,
நிலவு பெய்யும் மூத்திரம் கூட குளிர்.
பப்பாசி மரத்தில் பூந்தென்றல் ஏற்ற கந்துகள் மருண்டு பூக்கள் மசியுது.
அத்தைக் கொருக்கால்
இலையான் போல
ઈીઠo
கிழட்டு இலைகள் கசமுசக்க... . வெள்ளனை விரியும் கன்னியின் பாடெதோ கவனிக்கவில்லை.

Page 28
(48)
ஆம் நித்திரை முழித்து உசித்து விட்டது
gT.
நமக்கென்ன தெரியும்:
ஒவ்வொரு தாக்கலும் உசிக்க . .உசிக்க . . வான வாத்தியார் எழுதிய வரவோ இழித்த வெள்ளிகள்.
நகத்தைச் சுரண்டு
g இன்றைய இரவு ரம்மியமானது.
ஒரு மண்டெலியை போல
દ્વ0602p; வாழைப் பழம் திருடும் வெளவாலைப் போல 6Til Ji-Gur-...-
இரவின் மாசாலை எமக்கென்ன புதிசா நாளைய இரவிலே நரகமாய் போகலாம் யார்தான் கண்டது? இன்றைய இரவு ரம்மியமானது
ரசி,
ہے O ہے
26 - 10 - 1984

(49)
தப்பிப் போன தாலாட்டு - O -
நீ ஆணு
அல்லது பெண்ணு அதற்காச்சும் உனக்கு அறிவிருக்கத் தேவையில்லை.
என் கண்ணே நீ தூங்கு
சும்மா
புளுகக் கூடாது பொழுது பட்டாலும் கவியவில்லை இருள்.
ஊர்சுற்றி. ஊர்சுற்றி. பீபொறுக்கும் όξου
துள்ளுமாக் குருவிகள் இறகு சோராமல் இன்னும் பறக்கலாம்.
ஏன்
முருங்கைத் துளிரும் மலர்ந்து 蠶」。
என் கண்ணே நீ அாங்கு.
மசண்டைக்குள் தூங்க மனமில்லை. அப்படியா?

Page 29
(50)
சலிப்பென்ருல்; கொப்பினிலே ஏறு. குரங்காய் இருந்தாலும் கொஞ்சம் பயனுண்டு.
பொய்யாநான் சொல்லுகிறேன். முன்பெல்லாம்
குரங்கில் இருந்துதான் மனிதன் பிறந்தாளும்.
என் கண்ணே
இனி
மனிதனில் இருந்து குரங்கே பிறக்கட்டும்.
என்ன
தொட்டிலுக்குள் மூத்திரமா? சரி பெய்யும். மனிதன் தலையெடுத்து மண்டலமே பாழ்.
அறிவிருந்து என்னபயன்?
பூமி தளைத்து பொல்லாப்பு நீங்குதற்கு மனிதனில் இருந்து மந்திகளாய் புழுக்கட்டும்.
ട9,ബ്ര அல்லது பெண்ணு அதற்காச்சும் உனக்கு அறிவிருக்கத் தேவையில்லை என் கண்ணே! நீ அாங்கு.
11 - 11 - 1984

(51)
5, 6, திட்டுக்கள்
سے O جب
Ff: வாழ்க்கையை விடுவோம். வழுக்கைத் தலைபற்றி வேண்டுமென்ருல் சிந்திப்போம்
வாழ்க்கையும். வெங்காயக் கூடையும்.
மொட்டைத் தலையில் மயிரு முளைக்குமா முளைக்கும்.
இந்த வாழ்க்கை ஒருக்காலும் வாலை அணுக்காது.
நீதான் பாரு
நானும் இதற்கு;
எத்தனை முட்டுகள்
அடைகள் அண்டைகள் வைத்துப் பார்க்கிறேன் விழுக்கே இறங்க...
கிழித்தது என்ன? இப்படி வாரும்: வாழ்க்கையை நாய்க்கு வீசி எறியும்.
ஆம் நரகலை அளையும் அது தின்ருவது ஆட்டும் வாலை,

Page 30
(52)
நமக்கென்று இருந்தென்ன? நக்கலை வீசு தின்று ஏவறை தட்ட அதற்கு.
வாழ்க்கை. வாழ்க்கை. வழுதலங் காயும் இதுவும்
ஒன்று.
கள்ளிப் பாலைக் காய்ச்சிக் குடிப்பதால் ஒவ்வொரு நாளும் ஒப்புக்குச் சப்பாணி கொட்டிக் கொட்டி சிறகுள் முடிந்து சிரைத்தது காணும்.
தூக்கி எறியும் நாய் கழித்தாலும் நடையன் முகரும்
உழுத்த: வாழ்க்கையைப்பற்றி வாயைக் கிட்டினுல் நாற்றம் ஒழுகும்.
சரி:
வாழ்க்கையை விடுவோம். வழுக்கைத் தலைபற்றி வேண்டுமென்ருல் சிந்திப்போம் வழுக்கையில் அவ்வளவாய் வெடுக்கு இருக்காது.
سے O ست۔
02 - 01 - 1985

(53)
ஒரு சாதியான எரிச்சல்கள்
- O -
uPS------? நீயா.
நிறை மதியம். உனக்கு சோறுதீத்தும் சாந்தமாமாவின் நினைப்பு.
வீதிச் சருகுகளும் விலகி இருமருங்கும் ஆங்காங்கே வழிப்போக்கர் அடித்த மூத்திரத்துப் பாத்திகளின் ஈரத்தில் பதறும் உடல்தேற்ற ŠtotoGlb.
பொடியனையும் பொட்டையையும் கூட்டிக் கொடுப்பவன்தான்.
25(96) thesis. ... ...
ஆளைப்பார்; கசங்கிப் போளுய். காக்கிச் சட்டைக்குள் கசிந்தும் போனுய்.
கட்டுக்குள் எத்தனை காதல் கடதாசி?

Page 31
(54)
அண்ணே
e år
வியர்வையின் மணத்திலா
விஷர்நாய்க் கூட்டமும் கொட்டையிலே நாக்குக் குலைதட்ட இருல்போல சுருண்டு
அங்கும்
இங்குமாய் "இச் இச்” என்றபடி ரசித்துப் படுக்கிறது.!
எங்கள் நடையன்தான். a 6OT சொல்லாமல் வெளிக்குமே! வாலாட்டி ஆட்டி. A.
வரவேற்று வரவேற்று.
நம்பமாட்டாய் எங்கள் ܐ கடப்படியில் உசிக்கின்ற கடதாசி மரமில்லை சவண்ட
குண்டு மல்லிகை;
நீவந்து
தந்துவிட்டு
போகும் வரைக்கும்
கைகளையும்
கால்களையும்
நீட்டி நீட்டி நிழலை முகர்கிறது.
உனக்கும்
அதற்கும்

(55)
என்னைத்தான் விடேன். வீட்டை விட்டும் வெளியிறங்க மாச்சல்.
தணும்
தூக்கி எறிவதில்லை. தம்பியிடம் கொடுத்தாலும் திரும்பித் திரும்பி நின்று
கிறுகி
sskropsåTsol – tilslås.--------
sLurfðstrar!
என்ன நினைத்தாலும்
நினை. மனிசன் தலைகாட்ட மாட்டாத வெயில்,
இந்த வேக்காட்டுள்
இல்லை;
S-nrétsirt".66ir
sear கரகரத்த சைக்கிளின் "கினுங்கினுங்” மட்டும்தான் இனிமையென்று நான்சொல்வேன்.
அவள்தான் நாசமத்துப் போகுளே.
6Theor எனக்கு ஏதாச்சும் கிடக்கா?
06 - d 1 - 1985

Page 32
(56)
மழைப் பழங்கள்
- O -
அவை எல்லாவற்றையும் விட நான் அடிக்கடி தடவும் உனது தழுதழுத்த உதடுகளைப் போட்டுவிட்டு தெருவில் படிகின்ற இரத்தம் சிவப்பாக இருக்கிறது.
;5 02ک {9 முள்ளுத் தின்று ஒராவாய்ப் போன நாய்கூட முகராமல் வாயைக் கொசுவி விலகுகையில் என் செய்வேன்.
pë
@(5 குருவியைப் போல
2
3
4.
5
இலக்கங்களின் கூனலைப் போல மூக்கைச் சீறித் தலையணையில் தேய்த்துவிட்டு கும்பகருணியாய் கிடப்பாய் என்பது,

(57)
உன் விழிகளின் இமைகளுக்கு எத்தனை உரோமங்கள் எனக் கணக்கெடுத்து என் பெயரை
உன் மூச்சுத் தொங்கலில் முடிந்து கட்டிவிட்ட எனக்குத் தெரியாமலா போகும்?
தவிர்க்க முடியாத
திரையிழுப்பும்,
திணிக்கப் பட்ட
ஒத்திவைப்பும், அறிவிக்கப் படாத கோளாறும் தான்.
கண் செருகலையும்
69C፱j . கலா பூர்வமாகச் செருகக் கூடி: செருகல் காரியே
இந்தக் குறிகளினே எடுத்து விடு.
எதற்கும்; நாம் கடற்கரைக்குப் போனது போலும், நீ வீட்டாருக்குத் தெரியாமல் எழுத்தின் அத்தனை இனங்களையும் சிற்பமாகச் செதுக்கி காதற் கடிதங்கள் படைப்பது போலும், சமயங்கள் சுமூகமாய் இருந்தால் தான் காற்றுக் கட்டியாய் இருக்கும்.

Page 33
(58)
இங்கே,
அண்ணுர்ந்து பார்த்தாலும். எங்கோ எவனே கொழுத்திய நெருப்பின் நுனி நாக்கு உரசிய கொதிப்புத் தணியாமல் நட்சத்திரக் குஞ்சு பொரிக்கும்
நிலவு
மேக மலைகளைப் பிராண்டிக் கொண்டு குளிர்காற்றை எதிர்பார்த்து அழுகிறது.
இந்தப் பாலைவனத்து வெக்கைக்குள் ஈச்சை மரநிழலும் இல்லாத ஒட்டகைக்கு மனக் குரங்கைப் பிடித்துச் சரிப்படுத்தி மழைப் பழங்களை மடல் செய்தல், சுள்ளியான உனது இடுப்புக்குச் சாரி வழுகுவது
போலாச்சே.
ժԳյի. சின்னதென்றலும் ஒரு கடுகு கருக்கட்டிக் கண் விடுத்து வானம் தரைக்கு வருவதுபோல் இறகடித்து
எழும்பி
வந்ததென்று.
13 - 03 - 1985

(59)
பாம்புக் கோடுகள்
- O -
அப்போதே நீ சொல்லியிருக்கிருய் நான் போடுவதெல்லாம் பாம்புக் கோடுகளென்று.
ஞாபகமிருக்கிறதா? மல்லிகைப் பூவையும் நோண்டிச் செருகி என் பெயருக்கு முன்னுல் “கவிஞர்” எனக் கடைசியும் முதலுமாய் கிண்டல் செய்து அனுப்பிய
கடிதத்தில்.
அதைப்போல் ஒரு
மடலெழுது. அந்தப் பூவைப்போல் இன்னுமொரு பூச் செருகு.
அந்தக் கடிதம் கிடைத்தது தபாற்காரளுல் அல்ல ஒரு ஆாதுப் பொடியனுல். அப்போது நமக்கொரு காதல் இருந்தது.
அதற்கு முடக்கு வாதம் பிடித்து குணப்படுத்த முடியாமல் கைவிட்டுப் போனதெல்லாம்; இந்தப் பாம்புக் கோடுகளால்தான் என்று
நீ சொல்லவில்லை நானே இப்பொழுது உணர்கிறேன்.

Page 34
பரவாயில்லை; நிலவுகளைக் கற்பனை பண்ணுவதில் எனக்கு
எப்போதும்
திருப்தியில்லை.
நான் சூரியன்கள் வரும்போதும் வெள்ளிகளை வானத்தில் வரவழைக்க விரும்புகிறேன். அவைகளுக்கே பூச்சூட்டி நீ ஊஞ்சல்கட்டி ஆடுகின்ற இராக்காலம் போல பகற் காலத்தையும் புரட்டிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
விடு;
எனது கோடுகளால் நானே சல்லிவேருடன் சிதறிடினும், ஒரு பல்லி
எட்டு வைத்தால்
போதும்.
(60)
- 16 - 03 - 1985

(61)
நானும் ஒரு பூனை
ge Ο
தானுமொரு பூனைதான்.
கட்டையான வாலுமில்லை. பொத்திப் பிடித்ததுபோல் அடிவிறைத்த காலுமில்லை.
மீசையுண்டு; ஆளுலுைம் கிளைபோன்ற கொம்புமீசை அமையவில்லை.
கம்பளியைப் போர்த்தியதாய் மேனியில்லை. கண்ணிரண்டும் பளபளக்கும் குண்டுமில்லை.
மூக்கடியில்
சின்னச்
சிவப்புமில்லை. மோப்பம் பிடிக்கையிலே செவியெழும்பி குத்திட்டும் நிற்கவில்லை.
στού - என் பெட்டிக்குள் கூடுவைத்து குட்டியினும்,

Page 35
(62)
நாய் -
அது என்னைத் துரத்திகுலும் தனக்கு அடிமையென்று நினைக்காது ஒருபோதும்.
தெள்ளும் ஈரும் என் தேகத்தில் இருக்காத சில.
Syrrhuid திட்டியும் அடுப்பங் கரையும்
சுருட்டி அல்ல; நான்
நீட்டிப் படுக்கவும் லாயக்கு அற்றவை.
ஆளுலுைம். நானுமொரு பூனைதான்.
அது - புதைத்த பீயை கெல்லி முகரும்.
நான் - இழந்த இனிமையை நினைத்து மகிழுவேன்.
22 - 03 - 1985


Page 36