கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சிறுகதை வரலாறு

Page 1

O)6))IJIJI
க ஆழியாண்)

Page 2


Page 3

ஈழத்துச் சிறுகதை
6) T6VITsg
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)

Page 4
நூல் : ஈழத்துச்சிறுகதை வரலாறு
ஆக்கம் : கலாநிதி க. குணராசா (செங்கைஆழியான்)
முதற் பதிப்பு : டிசம்பர். 2001
ଇରuଶୀui(ତ வரதர் வெளியீடு. யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிவு : ஆனந்தா அச்சகம்
226. sicsseisspierea. uninnamà.
பக்கங்கள் . (300 + 2) s12
விலை : eit 300/=
Eelaththu Sirukathai Varalaru
Author. : Dr. K. Kunarasa, B.A. Hom(Cesy), MA, PhD, SLAS
(Senkai Aaliyan)
Frist Edition : December, 2001
Publisher : Varathar Veliyeedu, Jafna.
Printers : The Ananda Printing Works
26, ... S. Road, affna. TPs. 520
Page : (300 + 12)312
Price : Rs300/=
வடக்கு கிழக்கு அபிவிருத்தி புனரமைப்பு புனர்வாழ்வு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகார அமைச்சு, யாழ் இலக்கிய வட்டத்துக்கு வழங்கிய நிதி உதவி கொண்டு, அவர்கள் இந்நூலின் சில பிரதிகளை கொள்முதல் செய்வதற்காகத் தந்துதவிய ரூபா முப்பதினாயிரம் இந்நூலை அச்சிடுவதற்கு முன்னுதவியாக அமைந்தது.

ஈழத்தமிழகத்தில், சரியான வடிவமைப்பில் சிறுகதைகள் எழுதப்பட்ட 1930களின் பிற்பகுதியைத் தொடர்ந்து 1942ல் சிறுகதை எழுதத் தொடங்கி கடந்த ஆறு தசாப்தங்களாக சிறுகதைகள் எழுதிவரும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மூதறிஞர் தி. ச. வரதராசன் (வரதர்) அவர்களின் 75ஆவது அகவை நிறைவுகுறித்த பவளவிழா, 1999 யூலையில் நடைபெற்றது.
அவ்விழாவின் நினைவுச் சான்றாக, "ஈழத்துச் சிறுகதை வரலாறு என்னும் இந்நூலை,
அவருககுச சமர்ப்பணம் செய்வதில்
மகம்ச்சியடைகிறேன்.
9 D - கலாநிதி, க. குணராசா
(செங்கைஆழியான்)
III

Page 5
"ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச் சிறுகதைகளையும் கூடிய வரை படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக் கொண்டேன். 400 சிறுகதைப் படைப்பாளிகளையும், 274 சிறுகத்ைதொகுதிகளையும், சுமார் எண்ணாயிரம் வரையிலான பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச்சிறுகதை வரலாறு. எனினும், நமது சிறுகதை இருப்பினை அடையாளம் காண்கின்ற முயற்சியும், அதன் மூலம் நாம் தமிழிலக்கியத்தில் - குறிப்பாகச் சிறுகதைத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகளுள்ளன. இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை.
மதிப்பீடு என்பது அவரவர் “சுவை சார்ந்த விடயமாயினும், ஒரு துறைக் குத் தம் பங்கிணைச் செய்தவர்களை அடையாளங்காணாது விடுவதும், அவர்தம் படைப்புக்களைப் பதிவுசெய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகுமென நான் நினைத்தேன். அந்நினைவின் வெளிப்பாடே இந்நூல். என் மதிப்பீட்டினை ஒத்த கருத்தினை ஒரு படைப்பாளி குறித்தோ, ஒரு படைப்புக்குறித்தோ விமர்சக அறிஞர்கள் கொண்டிருந்தபோது, அவர்தம் கருத்துக்களை அவ்வாறே எடுத்தாண்டுள்ளேன், உரியவாறு அவர்களின் உசாத்துணை பதிவு செய்யப்பட்டுள்ளது.
* ஈழத துச் சிறுகதை வரலாறு கூடிய வரை பூரணமானதாகப்பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் கருதுகின்றேன். என் சக்திக்கும் தேடலுக்கும் அப்பாற்பட்டு, சில படைப்புகளும் படைப்பாளிகளும் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக நமது மூத்த கவிஞர் முருகையன், "சரஸ்வதியில் எழுதிய 'யமசாதனை என்ற தரமான சிறுகதை குறித்த தகவல் விடுபட்டுப்போன சங்கதி, இந்த முன்னுரை எழுதும் போது நினைவில் வருகின்றது. இவ்வாறானவற்றைப் பெருமக்கள் சுட்டிக்காட்டி னால் அடுத்தபதிப்பு இன்னும் பூரணமானதாக அமையுமென நம்புகிறேன்.
IV

மூதறிஞர் தி. ச. வரதராசன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவுச் சான்றாக இந்நூலை ஆக்கியுள்ளேன். ஈழுத்துச்சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவரது பேனா மூடி வைக்கப்படவில்லை. எனவே, ஈழத்துச்சிறுகதை வரலாற்றினை , அவருக்காகவே எழுதித்தந்துள்ளேன், அவருக்கே இந்நூலைச் சமர்ப்பித்துமுள்ளேன்.
இந்நூலை ஆக்குவதற்குப்பல அறிஞர் பெருமக்கள் உதவினர். பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி யோகராசா, கலாநிதி எஸ். சிவலிங்கராசா ஆகியோர் அவ்வகையில் முக்கியமானவர்கள், தம் கருத்துக்களைக் கூறி இந்நூலின் ஆக்கத்தை நெறிப்படுத்தியும் செம்மைப்படுத்தியும் ஆலோசனைகளைத் தந்தார்கள்.
நான் வேண்டியபோது தேவையான சிறுகதைகள் வெளிவந்த சஞ்சிகைகளையும், சிறுகதைத் தொகுதிகளையும் தந்துவதவியர்கள் இருவர். ஒருவர் நடமாடும் நூற்களஞ்சியமாக விளங்கும் புத்தொளி நா. சிவபாதம் ஆவார். மற்றவர் என்னினிய நண்பர் சண்முகம் பாலசுந்தரமாவர்.
இவர்கள் இருவரிடமும் அரிய பல நூற்றுக்கணக்கான நூல்களுள்ளன. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளும் உதவியும் கிட்டாதிருக்குமாயின் இந்நூல் வெளிவரச் சந்தர்ப்பம் கிட்டாது போயிருக்கும். இவர்களுக்கு என் நன்றிகள்.
இந்நூலிற்குத் தக்கதொரு அணிந்துரையைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவருடன் ஒரு விடுதி மாணவனாக வாழும் இனிய அனுபவம் எனக்குக் கிடைத்ததை இவ்விடத்தில் நினைவு கூருகிறேன். அவருக்கும் என்நன்றி. எல்லாவற்றிக்கும் மேலாக இந்நூலைப் பெரும் செலவுடன் பதிப்பிடும் வரதர் வெளியீட்டினருக்கு என் கடப்பாடுடைய நன்றிகள்.
ஹம்சம் செங்கைஆழியான் 75/10A, பிறவுண் வீதி, dö. öéMIslöFll நீராவியடி,
யாழ்ப்பாணம். 27102001

Page 6
பேராசிரியர். கலாநிதி அ. சண்முகதாஸ் B.A(Hons), Dip, in Linguistics (Edinburgh), Ph.D. (Edinburgh) முதுநிலைத் தமிழ்ப் பேராசிரியர், பீடாதிபதி, பட்டப்பின் படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்கள் அளித்த
அணிந்துரை. g a ..........
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) எழுதியுள்ள ஈழத்துச் சிறுகதை வரலாறு என்னும் இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவது மிகவும் மகிழ்ச்சியான செயற்பாடாகும். எங்கள் நாட்டுச் சிறுகதை வரலாற்றினை எழுதும் முயற்சி கலாநிதி க. அருணாசலம் எழுதிய முதுகலைமாணிப்பட்ட ஆய்வேட்டுடன் (1978) தொடங்கியது எனலாம். இந்த ஆய்வுக் கட்டுரைக்கு முன்னர் உதிரிகளாக க. கைலாசபதி எழுதிய “ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளாச்சி” (இலங்கை கலாச்சாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழாமலர் - 1972), கா. சிவத்தம்பியின் “தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்" (1967) என்னும் நூலில் இடம்பெறும் குறிப்புகள், எஸ்.பொன்னுத்துரையின் "புனைகதைத் துறையில் மட்டக்களப்பின் பங்களிப்பு' (1976 மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை) என்பன ஈழத்து சிறுகதை வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறின.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு பகுதியாகிய மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றி தெளிவத்தை யோசெப் எழுதிய நூல் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கலாநிதி க. குணராசாவின் இந்நூல் வெளிவருகின்றது.
VI

* |pj, gjë சிறுகதை முன்னோடிகளென இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரைக் குறிப்பிடுவது மரபாயுள்ளது. இவர்களுடைய கால இறுதிப்பகுதியிலே சிறுகதை எழுதத் தொடங்கிய தி. ச. வரதராசன் (வரதர்) அவர்கள் இன்றுவரை வாழ்ந்து சிறுகதைகளை எழுதிக் கொணடிருக்கிறார்கள். எனவே இன்று ஈழத்துச் தமிழ்ச் சிறுகதை வரலாறு எழுதப்படும் போது தி.ச.வரதராசன் அவர்களுடன் தொடங்குவது பொருத்தமாக அமையும். கலாநிதி குணராசாவின் ஈழத்துச்சிறுகதை வரலாறு வரதர்
என்கிற படைப்பாளியுடனேயே தொடங்குகின்றது.
“வரதரை ஒதுக்கி விட்டு ஈழத்துச் சிறுகதை வரலாற்றை எழுதிவிட முடியாது. ஏனெனில் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் காலத்திலிருந்து இன்று வரை வரதர் படைப்பாளியாகவே வாழ்ந்து வருகின்றார். ஆறு தசாய்தச் சிறகதை வரலாற்றில் வரதரின் பங்களிப்பு இருந்து வருகின்றது. 1940 ஆம் ஆண்டு வரதரின் முதல் சிறகதையான “கல்யாணியின் காதல்’ ஈழகேசரி ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது”. (பக் 5)
என்று வரதருடைய வரலாற்றுத் தனித்துவத் தினைக் குனராசா எடுத்துக் கூறுகிறார். ஈழத்துச் சிறுகதை வரலாற்றிலே மறுமலாச்சி இயக்கமும் மறுமலாச்சி இதழும் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இவ்விரண்டுக்கும் பிதாமகர் வரதர் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தி அவருடைய இலக்கியப் பணிகளை மதிப்பிடுவதுடன் சிறுகதைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினையும் விளக்கியுள்ளார்.
இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதை முலவர்களுக்கு அருகாமையிலே தோன்றிய வரதரை முதல்
WII

Page 7
இயலிலே அறிமுகஞ் செய்த ஆசிரியர், அடுத்த இயலிலே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களைத் தேடிச் செல்கிறார். எங்கள் நாட்டுச் சிறுகதைக்கு மட்டுமன்றித் தமிழ்ச் சிறகதைக்கே மூலவர் ஆனொல்ட் சதாசிவம் பிள்ளை என்ற கருத்தினை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். நவீன சிறுகதை எவருடன் தொடங்குகின்றது என்பதுபற்றி நோக்குமிடத்து வ. வெ. சு. ஐயரின் “மங்கையர்க்கரசியின் காதல்" முதலாய கதைகளுடனேயே தொடங்குகின்றது எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், பாரதி ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னரேயே சிறகதைகள் எழுதியுள்ளார். அவருடைய கதைகளுடனேயே தொடங்குகின்றதென வேறு சிலர் கருதுகின்றனர். இக்கருத்துக்களுக்கு முற்றும் வேறுபட்டதாக "தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் நூலில் சோ. சிவபாதசுந்தரமும் சிட்டியும் வ.வெ.சு ஐயர், சுப்பிரமணிய பாரதி ஆகியோருக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத்தவராகிய் ஆனொல்ட் சதாசிவம்பிள்ளை எழுதிய கதைகளுடனேயே தமிழ்ச் சிறுகதையின் கதை தொடங்குகின்றதென்னும் கருத்தினை முன்வைத்தனர். இவ்விவரங்களையெல்லாம் நூலாசிரியர் தகுந்த சான்றுகளுடன் இந்நூலிலே முன்வைக்கின்றார்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றின் காலப்பகுப்பினை,
சமுதாய சீர்திருத்தக்காலம் 1930 - 1949 முற்போக்குக் காலம் 1950 - 1960 புத்தெழுச்சிக் காலம் 1961 - 1983 தமிழ்த்தேசியவுணர்வுக்காலம் 1983க்குப்பின்னர்
என நான்காக வகுத்து அமைக்கிறார். முற்போக்குக் காலம் 1950 - 1960 என அமைக்கும் காலப்பகுப்புப் பொருத்தமோவென ஆராய வேண்டியுள்ளது. ஆய்வாளருடைய பார்வைக்கு இதனை விட்டுவிடுகிறேன்.
VIII

அடுத்து வரும் நான்கு இயல்களும் மேற்படி நான்கு காலப் பகுதிகளிலும் நடைபெற்ற சிறகதை எழுத்து முயற்சிகள் பற்றிக் கூறுகின்றன. முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிய இயலிலே கலாநிதி குணராசா கூறிய இரண்டு விடயங்கள் என்னைக் கவர்ந்தன. அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக இங்கு குறிப்பிடுகின்றேன். தினகரன் பத்திரிகை பற்றிக் கூறுமிடத்து அதன் ஆசிரியராக இருந்த கைலாசபதி பற்றி,
“கைலாசபதி மார்க்சிய முற்போக்காளரை மட்டுமன்றி, ஈழத்தின் தரமான எழுத்தாளர்கள் பலரையும் தினகரனில் எழுத வைத்தார் என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. வரதர், அ.முத்துலிங்கம், வ. அ.இராசரத் தினம், கனக செந்திநாதன், மு. தளையசிங்கம் முதலானோரின் சிறுகதைகள் பலவும் தினகரனில் பிரசுரமாகியுள்ளன.”
என்று கலாநிதி. குணராசா கூறும்போது தன் அணியினரை மாத்திரமே கைலாசபதி போன்றோர் முன்னேற்றினர் என்னும் கருத்து முற்றாக உண்மையானதல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது. கே. டானியல் பற்றி எழுதுமிடத்து ஆசிரியர்,
“ஈழசேகரிப் பன்னையிலேயே டானியல் வளர்த்தார் என்ற உண்மை இலக்கிய வரலாற்றில் ஏனோ மறைக்கப்பட்டு வருகின்றது. ஈழகேசரியில் பதினான்கு சிறுகதைகளை 1955க்கும் 1958க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியுள்ளார்”
என்று குறிப்பிடுகின்றார். டானியல் வரலாறு எழுதுபவர் களுக்கும் ஆய்வு செய்பவர்களுக்கும் ஆசிரியருடைய இக்குறிப்பு பயனுடையதாயமையும்.
ஈழத்துத்தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை எழுதும் கலாநிதி குனராசா ஒரு வரலாற்றாசிரியன் எப்படி
ΙΧ

Page 8
நடுநிலைமை வகித்து எழுதவேண்டுமென்பதை நன்கு உணர்ந்து எழுதுவதைக் காணக்கூடியதாயுள்ளது. அறுபதுகளில், எழுபதுகளில் மார்க்சிய சித்தாந்த எழுத்தாளர்களும் அச்சித்தாந்தத்துக்கு எதிரான எழுத்தாளர்களும் சிறுகதைகள் படைத்தனர். இவற்றின் படைப் பாளிகளும் விமர்சகர்களும் தத் தம் சித்தாந்தங்களை வரித்துக் கொண்டு கருத்துக்களைக் கூறி வந்தனர். "ஆக்கபூர்வமான நலன்களைக் கூறுவதிலும் அவற்றின் அவதூறான குறைகளைத் தேடுவதிலும் இரு அணியினரும் ஓயாது ஈடுபட்டனர். எவ்வாறாயினும் மார்க்சிய எழுத்தளர்கள் சிலர் தமது சிறுகதைகளில் “சுலோகப்பிரயோகங்கள்’ செய்ய வில்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல மறுசாரரில் சிலர் படுபிற்போக்குத்தனமான பத்திரிகைக் கதைகளை எழுதிச் சிறுகதைக்ளெனப் பம்மாத்துச் செய்தனர் என்பதையும் மறுக்கவியலாது. "இவ்விடத்தில் நூலாசிரியா பக்கஞ் சாராது தன் கருத்தினைக் கூறியிருப்பது நோக்கற்பாலது.
ஈழத்திலெழுந்த எல்லாச் சிறுகதைகளையும் தேடிக்கண்டு வரலாற்றினை முழுமையாக எழுதவேண்டு மென்னும் ஆசிரியருடைய முயற்சி பாராட்டத்தக்கது. இம்முயற்சியினை நூலின் இறுதியிலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பின்னிணைப்புகளும் எடுத்துக்காட்டுகின்றன முதற் பின்னிணைப்பில் இந்நாட்டில் சென்ற ஆண்டின் முடிவுரைவரை எழுந்த சிறுகதைத் தொகுதிகளின் பட்டியல் ஆண்டடிப்படையிலே தரப்பட்டுள்ளது. இரண்டாவது பின்னிணைப்பில் இந்த நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களுடைய பெயர்கள் அகரவரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.
முன்னூறு பக்கங்கள் கொண்ட இந்நூல் உயர்கல்வி மாணவர்களுக்கு உதவக் கூடிய ஒரு நல்ல
X

தமிழ்மொழியிலே தகுந்த கட்டுக்கோப்புடன் கலாநிதி குனராசா இந்நூலை எழுதியுள்ளார். ஈழத்துச்சிறுகதை வரலாற்றைத் தெளிவாகவும் விரிவாகவும் முதன்முறை எழுதி வெளியிட்டவர் என்ற பெருமையினைச் செங்கைஆழியான் பெற்றுக்கொள்கிழார். தன்னுடைய ஆக்கங்களுள் ஒரு துறையாகிய சிறுகதையின் வரலாற்றினை முழுமையாக நோக்கியது வியக்கத்தக்க விடயமல்ல. அது தற்செயல் நிகழ்ச்சியுமல்ல. எங்கள் நாட்டிலே ஆக்க இலக்கியகாரர்களிற் பெரும்பாலோர் விமர்சகர்களாகவும் உள்ளனர். இந்தவகையில் ஆக்க இலக்கியகாரராகிய செங்கை ஆழியான் விமர்சகராகவும் நின்று ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை நோக்கியுள்ளார்.
ஒவ்வொரு காலச் சிறகதை வளர்ச்சி வரலாற்றை விரிவாக எடுத்தக் கூறும் ஆசிரியர், அதன் இறுதிப் பகுதியிலே தன்னுடைய மதிப்பீட்டினடிப்படையில் அக்காலகட்டத்தில் எழுந்த ஈழத்துச் சிறுகதை இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை எனச் சில சிறகதைகளை இனங்கண்டு பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். இந்த நான்கு காலப்பட்டியல்களிலும் இரண்டு தடவையாக ஒரு சிலரே இடம் பெறுகின்றனர். அவர்கள் வருமாறு : வரதர், எஸ்.பொ, நந்தி, செங்கைஆழியான், செ.யோகநாதன், தெளிவத்தை யோசெப், கோகிலா மகேந்திரன், செம்பியன் செல்வன். இவர்களுள் வரதருடைய பெயர் மட்டும் மூன்று காலப்பட்டியல்களிலும் இடம்பெறுகின்றது.
மிகச் சிறந்த முறையிலே எழுதப்பட்ட இந்நூலுக்கு இந்த அணிந்துரையை எழுதுவதிலே மகிழ்ச்சி யடைகின்றேன். நூலாசிரியர் கலாநிதி க. குணராசா பாராட்டுக்குரியவர். இந்த ஆய்வுநூல் வரதரின் பவளவிழாவை முன்னிட்டு வெளிவருவது ஏற்புடைய பணியாகும்.
- அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணம், 2.1200
ΧΙ

Page 9
(ειδιαιρον......................
இலக்கிய கலாநிதி, அமரர் பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் எழுத்துக்களுக்கு முதன் முதலில் நூலுருவம் கொடுத்து "இலக்கிய வழி" என்ற நூலை வெளியிட்ட போது, எனக்குள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டது.
அதே போன்ற ஒரு மனநிலை - மன நிறைவு "ஈழத்துச் சிறுகதை வரலாறு" என்னும் இந்த நூலை வெளியிடும் போதும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நூலின் முதலாவது அத்தியாயத்திலேயே என்னை மிகவும் பாராட்டி எழுதியிருந்ததைப் பார்த்தபோது, இதை “நானே வெளியிடலாமா என்ற ஒரு தயக்கம் ஏற்பட்டதுண்டு.
ஆயினும், அந்தமுதல் அத்தியாத்தைத் தாண்டி அப்பால் போனதும் நூலின் சிறப்பு மிகப் பரந்து, நிமிர்ந்து, உயர்ந்து நிற்பதைக் கண்டடேன்.
வரதர் வெளியிட்டுக்கு மிகுந்த பெருமை தரக் கூடிய இந்நூலை
நானே வெளியிடுவது என்று - வெளியிட வேண்டுமென்று உறுதி கொண்டுடேன்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் - முக்கியமாகச் சிறுகதை வரலாற்றில் இது ஒரு அரிய கருவூலம் என்று உண்மையாகவே நம்புகிறேன்.
படைப்பாற்றல் மிக்க செங்கைஆழியான்-கலாநிதி க. குணராசா அவர்களுக்கு இந்நூல் மீண்டும் ஒரு “கலாநிதி" யைத் தரக்கூடிய தகுதி வாய்ந்தது. அவருக்கும்,
இந்நூலைப் படித்து ஒரு விரிவான அணிந்துரையைத் தந்திருக்கும் தமிழ்த்தாதா, பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் உரியன.
வரதர் வெளியீடு
226, காங்கேசன்துறைச் சாலை, - வரதர் uLUTT ÞÜJUTT630 lb.
10.2.2001
XII

அத்தியாயம் ஒன்று
4.1 வாழ்வும் வளமும்
1924ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி பொன்னாலைக் கிராமத்தில், ஈழத்தின் நவீன புனைகதை இலக்கிய வரலாற்றில் விடுபட முடியாத இலக்கியமுக்கியத்துவமுடையவராகக் கணிக்கப்படும் வரதர் என்ற தி. க. வரதராசனின் (தியாகர் சண்முகம் வரதராசன்) தோற்றம் நிகழ்ந்தது. சண்முகம்-சின்னத்தங்கம் தம்பதியினரின் மூன்றாவது குழந்தையாக விளங்கிய வரதராசனுக்கு மூத்த இரு அக்காமாரும் ஒரு தங்கையும் கூடப்பிறந்தவர்கள். குடும்பத்தின் ஒரே ஆண் மகன் என்பதால் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த செல்லப்பிள்ளையாக அவர் வளர்ந்தார். வரதர் ஈடுத்தரக்குடும்பத்தைச்
தனது விட்டிலேயே முன் பக்க விறாந்தையைச் சிறு கடையாக மாற்றி வியாபாரம் செய்து வந்தவர். தாய்ார். சின்னத்தங்கம். ஒழுக்கம், நேர்மை, கடும் முயற்சி, செயற்றிறன் என்பன சிறுவயது முதலே வரதராசனுக்குப் போதிக்கப்பட்டு வந்த நன்னெறிகள்.
பொன்னாலை அமெரிக்கமிஷன் தமிழ் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியை தி.ச.வ, பெற்றார். ஆறாம் வகுப்புை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், ஏழாம்வகுப்பைச் சுழிபுரம் ஐக்கிய சங்கவித்தியாசாலையிலும், எட்டாம் வகுப்புைக் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் பெற்றார். சிரேஷ்ட தராதரப்பத்திர வகுப்பை மீண்டும் மூனாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பெற்றார்.
இரத்தினம்மா, அன்னம்மா, தங்கச்சியம்மா ஆகிய மூவரும் திசவனின் சகோதரிகள். இவர் தனது 27வது வயதில், சுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த ஆறுமுகம்-மனோன்மணியின் மகளான மகாதேவியம்மாவை 1951ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி தனது வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். மகாதேவியம்மா "திச. வரதராசனுக்கு உறவினர். அவர்களுக்குச் செந்தாமரை,

Page 10
H#ặ#ằ ÎlãaĐặ, al/füI]] “செங்கை ஆழிான்” தேன்மொழி, மலர்விழி என மூன்று புதல்விகள். செந்தாமரை ஒரு சித்த மருத்துவத்துறை வைத்யர். சந்தான கோபாலன் என்பவரை மணந்து கபிலன், நங்கை, வாசன் ஆகிய பிள்ளைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். தேன்மொழி ஆசிரியை, பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ளார். மூன்றாவது மகள் மலர்விழி கணக்காளர். சித்தார்த்தன் என்பவரை மணந்து லண்டனில் உள்ளார். தழிழறிஞர் பொன்.முத்துக்குமாரன் வரதரின் ஒன்று விட்ட தமையனார் ஆவார்.
தி.ச.வ. வின் தொழில் அச்சக முகாமையாளர். ஆரம்பத்தில் அவருக்கு நூல் வெளியீடுகளில் ஆர்வமிருந்ததே தவிர, அச்சகமொன்றின் உரிமையாளராக மாற வேண்டும் என்ற எண்ணமிருந்ததில்லை. "மறுமலர்ச்சி” சஞ்சிகையை முதன் முதல் அச்சுப்பதிக்க, யாழ்ப்பாணம் பூரிபார்வதி அச்சகத்திற்குள் நுழைந்த போதுதான் அச்சகப்பரிச்சயமே ஏற்பட்டது. சஞ்சிகை விடயத்திலும், அச்சக விடயத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட பார்வதி அச்சக உரிமையாளர் திரு. சிவஞானபோதம், அவரை மனேச்சராக வருமாறு அழைப்பு விடுத்தார். 1948இல், ஹீபார்வதி அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். குறைந்தது மாதா மாதம் ருபா 50 சம்பளமாகத் தரல் வேண்டும் என்றஷ்ேரீதரின் கோரிக்கையைப் பார்வதி அச்சக உரிமையாளர் ஏற்றுக் கொண்டார். யாழ்ப்பாணன் என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதிய சிவக்கொழுந்து, தனது பாடநூல்களை பார்வதி அச்சகத்தில் அச்சிட முன்வந்தார். எழுத்துப் பிழைகளில்லாது சிறப்பாக அச்சிட்டமையால் தொடர்ந்து பூரீபார்வதி அச்சகத்தில் தனது நூல்களைப் பதிப்பித்தார். அதனால் சராசரியாக LDT5ub 5 T 180 வரை வரதருக்கு சம்பள வருமானம் கிடைத்தது. 1950களில், சிவக்கொழுந்து அவர்கள் வரதராசனுடன் சேர்ந்து ஓர் அச்சுக்கூடத்தை நிறுவ விரும்பினார். தன் பங்காக தனது காணியை ஈடு வைத்து ரூபா 2500 முதலீடு செய்ய வரதள் முன் வந்தார். அதே வேளை வரதரின் அச்சகத் திறமையைக் கண்ட ஆனந்தா அச்சக உரிமையாளர் சரவணமுத்து தனது அச்சகத்தை வரதருக்கு விற்க முன் வந்தார். சரவணமுத்துவையும், சிவக் கொழுந்துவையும் அச்சகத்தின் பங்குதாரராக்கி 1952இல் ஆனந்தா அச்சகத்தைப் பொறுப்பேற்றார். ஏனையோரின் பங்குப் பணம் முறையே பத்தாயிரமாக இருக்க, வரதரின் பங்குப்பணம் இரண்டாயிரத்துஐந்நுாறாக இருந்தது. வரதரின் கடும்

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” உழைப்பினால் ஐந்து வருடங்களுள் சமபங்குதாரராகினார். சிவக்கொழுந்து பிரிந்து தனியே அச்சகம் ஒன்றினை நிறுவிக்கொண்டார். அதனால் சரவணமுத்து மட்டும் அச்சகப்பங்காளரானார். மீண்டும் 1976இல் சன்முகதாசன் என்ற இளைஞருடன் பங்காளராகி இன்றுவரை ஆனந்தா அச்சகத்தை நடாத்திவருகின்றார். 1952 லிருந்து இன்று வரை ஆனந்தா அச்சகத்தின் முகாமையாளராக வரதரே விளங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1.2 கலை இலக்கிய ஆர்வம்
வரதரின் இலக்கியப் பிரவேசம் மிக இளைமையிலேயே தொடங்கியமைக் குக் காரணம், சிறுவனாக இருக்கும் போது அவருக்கிருந்த வாசிப்புப் பழக்கமாகும். அவரைப் பன்னிரண்டு வயதிலேயே வாசிப்பு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அக்காலத்தில் மகாபாரதம், காத் தவராயன் கதை, அல்லியரசாணிமாலை, ஜகதலப்பிரதாபன், விக்கிரமாதித்தன் கதை போன்ற நூல்களை ஆர்வத்தோடு படித்துள்ளார். பதின்மூன்று, பதின்னான்கு வயதுகளில் ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், சந்திரோதயம் காடர்ந்து வீரகேசரி போன்ற செய்தி இதழ்களிலும் வெளிவந்த க தகளை வரிவிடாது படித்துள்ளார். F6i சித்திரக்கதையையும் ஆசிரியர் எச். நல்லையாவின் தொடர் கதைகளையும் விரும்பிப் படித்தார். வடுவூர் துரைச்சாமிஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள் போன்றோரின் நாவல்களை ஆர்வத்தோடு படித்துள்ளார்.
அவரை எழுத்துலகில் பிரவேசிக்க வைத்தது ஈழகேசரி ஆகும். 1930ஆம் ஆண்டுதொட்டு சுன்னாகத்திலிருந்து நா. பொன்னையாவினால் வெளியிடப்பட்ட ஈழகேசரி வரதரைக் கவர்ந்தது. அதில் மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம் என்ற பகுதியில் 1939இல் வரதரின் சிறியதொரு கட்டுரை வெளிவந்தது. அடுத்த ஆண்டு 1940இல் வரதரின் 16வது வயதில் ஈழகேசரி ஆண்டு மலரில் அவரின் முதலாவது சிறுகதையான 'கல்யாணியின் காதல்’ தி.ச.வரதராசன் என்ற முழுப்பெயருடன் வெளிவந்தது. அதேயாண்டு ஆறுமுக நாவலரின் சரித்திரத்தைச் சுருக்கி “நாவலர் கோன்” என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஈழகேசரி இச்சிறு நூலுக்குத் தனது வாசிகசாலை பகுதியில் மதிப்புரை செய்து பாராட்டியிருந்தது. அதன் பினனர் தி.ச.வ.வின் சிறுகதைகள் ஈழகேசரியில் தொடர்ந்து வெளிவந்தன. அவை முதலில்

Page 11
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" வரன் என்ற பெயரிலும், பின்னர் ரைதள் என்ற பெயரிலும் வெளிவந்தன. தி.ச.வரதராசனைத் தம் எழுத்தால் கவர்ந்தவர்களென மணிக்கொடி எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம். முக்கியமாகப் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் அவரை அதிகம் பாதித்தன. கல்கி, கு.ப.ரா, மு.வரதராசன், விச.காண்டேகர் ஆகியோரின் எழுத்துக்கள் அவரால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டன. புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் இருந்த பிரேமையால் தான் முதன் முதலில் ஆரம்பிக்கவிருந்த சங்கத்திற்குப் புதுமைப் பித்தர்கள் சங்கம் எனப்பெயரிட விரும்பியிருந்தார். டாக்டர் மு. வரதராசனின் எழுத்துக்களில் இருந்த பிடிப்பினால்தான் தனது சிறுகதைத் தொகுதிக்கு (கயமை மயக்கம்) மு.வரதராசனின் முன்னுரையைப் பெற்றிருந்தார் என நினைக்கிறேன்.
வரதர் இலக்கியத் துறையில் காலடி வைத்த காலம் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தின் கீழிருந்த காலமாகும். இந்தியாவில் காந்தியம், பாரதியம், பெரியாரியம் முதலான கருத்துக்கள் நிலவிக் கொண்டிருந்தன. பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் வரதரைப் பெரிதும் பாதித்தன. தென்னிந்தியப் பத்திரிகைகளும் அக்கால எழுத்துக்களும் அவரைப் பாதித்தன. தன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவற்றை எழுதி, முட்டுத்தீர்த்து விடும் ஆவேசம் அவரிடமிருந்தது. எனவே நிறையப்படித்தார். நிறையவே சிந்தித்து எழுதினார்.
“ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் வரதரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. இதழியல், படைப்புத்துறை, கருத்தாக்க வெளிப்பாடு என்ற பல்துறைகளிலும் முழுமையானதும் வியப்பூட்டத் தக்கதுமான சாதனைகளை நிகழ்த்திய அற்புதமான மனிதர் இவர். ஒரு தனி மனிதரான இவர் எப்படி ஒரு பெரிய நிறுவனமாய் இயங்க முடிந்தது? வரதரின் இந்தத் திறனை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.”*
1.3 ஈழத்திலக்கியத்தில் வரதர்
*ஈழத்ததிலக் கரிய வரலாற்றில் வரதருக்குரிய முக்கியத்துவத்துக்கான இடம் மூன்று அம்சங்களினடியாக வருவது.

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
(1) இவர், ஈழத்துச் சிறு கதையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர்.
(2) ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய நிறுவனமாக விளங்கும் “மறுமலர்ச்சி” இயக்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் ஒருவர்.
(3) ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய பிரசுர கர்த்தருள் ஒருவர் - இவ்வாறு பேராசியர் சிவத்தம்பி இவரை இனங்காண்பர். இவற்றோடு வரதரை வேறும் சில துறைகளிலும் இனங்காண முடியும்,
(4) ஈழத்து இதழியலுக்குப் பங்களிப்புச் செய்தவர்.
(3) ஈழத்துப் புதுக்கவிதையைத் தொடக்கி வைத்தவர்.
13.1 வரதரின் சிறுகதைகள்
வரதரை ஒதுக்கி விட்டு ஈழத்துச்சிறுகதை வரலாற்றை எழுதி விட முடியாது. ஏனெனில். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் காலத்திலிருந்து இன்று வரை வரதர் படைப்பாளியாகவே வளர்ந்து வருகின்றார். ஆறு தசாப்தச்சிறுகதை வரலாற்றில் வரதரின் பங்களிப்பு இருந்து வருகின்றது. 1940ஆம் ஆண்டு வரதரின் முதல் சிறுகதையான “கல்யாணியின் காதல்’ ஈழகேசரி ஆண்டு மலரில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து விரும்பிய விதமே (1941), கல்யாணமும் கலாதியும் (1941), குதிரைக்கொம்பன் (1941), தந்தையின் உள்": (1941), ஆறாந்தேதி முகூர்த்தம் (1941), கிழட்டு நினைவுகள் (1941}. விபச்சாரி (1943) ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியில் எழுதினார். இன்பத்திற்கு ஓர் எல்லை (1946), ஜோடி (1947), அவள தியாகம் (1948), வேள்விப்பலி (1948) முதலிய சிறுகதைகளை மறுமலர்ச்சியில் எழுதியுள்ளார். மாதுளம்பழம் என்ற சிறுகதை சுதந்திரன் ஆண்டு மலரிலும், கயமை மயக்கம், உள்ளுறவு, வாத்தியார் அழுதாள் என்பன ஆனந்தனிலும், பிள்ளையார் கொடுத்தார், வீரம், ஒரு கணம் ଶ ଦେif u ଘଣ தினகரனிலும் , உள் ளும் புறமும் ,

Page 12
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்" வரதர் ஆண்டு மலரிலும், புதுயுகப்பெண் கலைச்செல்வியிலும், வெறி தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டிலும், கற்பு மத்திய தீபத்திலும் வெளிவந்துள்ளன. புதினம் பத்திரிகையில் வரதரின் இன்று நீ வாழ்ந்திருந்தால், ஓ இந்தக்காதல் ஆகிய இரு சிறு கதைகள் வெளி வந்துள்ளன. இச்சிறுகதைகள் குறித்து இந்த நூலில் ஏனைய ஈழத்துச் சிறுகதைகளுடன் ஒப்பு நோக்கி ஆராயவிருப்பதால் என் கருத்துக்களை இவ்விடத்துக்கூறாமல் விடுகின்றேன்.
“வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து சிக்கல்களுக்கு மருந்தும் தேர்ந்துதெளிந்து அவற்றைத் தம் கதைகளில் படைத்துக் காட்டுவதில் தி.ச.வரதராசன் (வரதர்) ஆர்வம் காட்டுகின்றார்.” "வரதரின் முக்கிய சிறுகதைகள் ஈழத்தின் தமிழர் நிலைப்பட்ட அனுபவங்களை மிகுந்த உணர் திறனுடன் பதிவு செய்துள்ள படைப்புக்களுள் இடம் பெறுவன. மனித அவல வேளைகளில் ஏற்படும் விழுமியச் சிதைவு, மிகுந்த நுண்ணுணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமூகப்பாங்கான எழுத்துக்களால், இவர் சமூகத்தின் பொதுவான முற்போக்குச் செல்நெறிக்கு ஆதரவு நல்கினார், வரதரின். கதைகளின் பாங்கு அவதானிக்கப்பட வேண்டியது. களத்தை அமைத்து அந்தப் பின்புலத்தில் மனித இயக்கங்களை எடுத்துக்காட்டும் முறைமை இவருடையது. கதை கூறுபவரின் ஆளுமையோடு இவர் இணைந்து நிற்பார்*
வரதரின் இலக்கிய நோக்குக்குறித்தும் சிறுகதை இலக்கியம் குறித்தும் தெரிந்து கொள்வது அவரது எழுத்துக்களைப் புரிந்து கொள்ள உதவுமென நம்புகின்றேன். 'கவிதையோ, காவியமோ, கட்டுரையோ, நாடகமோ, நாவலோ உருவத்தில் அது எப்படி இருந்த போதிலும் அதை இலக்கியமென்று சொல்லுவதற்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்' என்கிறார் வரதர். முதலாவது அதில் ஓர் இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கு மனிதனுடைய அகத்தையோ புறத்தையோ உயர்த்துவதாக அமைய வேண்டும் மற்றையது, அதைச்சொல்லும் விதம், நடை, கட்டுக்கோப்பு ஆகியவற்றில் சுவையும் நேர்த்தியும் இருக்கவேண்டும்."
“ஒரு சிறு நிகழ்வை, ஒரு காட்சியை, ஒரு கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதற்குத் தேவையான கதாபாத்திரங்களையும்,
6

Biał faoi a Jag “செங்கை ஆற்கான்” நிகழ்வுகளையும் கற்பனை செய்து, சொற்செட்டுடன் எழுதப்படுவது சிறுகதை. ஐந்து பக்கங்களுள் வந்தாலும் சரி, ஐந்நூறு பக்கங்க ளுக்கு மேல் போனாலும் சரி, இது சிறுகதைதான்."
தரமான நவீன புனை கதை இலக்கியங்கள் கிடைக்காத சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், வரதர் படித்த அல்லியரசாணிமாலை, நல்லதங்காள் கதை, மயில்ராவணன் கதை, மதனகாமராஜன் கதை, தென்னாலிராமன் கதை , ரீமத் கம்பராமயண வசனம், பூரீமத்மகாபாரத வசனம் என்பனவற்றிலிருந்தும், அதன் பின்னர் படித்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், ஆனந்த விகடன், கலை மகள் முதலான தென்னிந்தியச் சஞ்சிகைகளிலிருந்தும் பெற்ற அருட்டுணர்வே வரதராசனை எழுத்தாளன் வரதராக்கியது. அவர் எழுதத் தொடங்கிய காலத்தில், “சிறுகதை இலக்கியத்தைத் தரம் வாய்ந்த பொருளென்று எங்கள் நாட்டு அறிஞர்கள், பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. கதை எழுதுபவர்களை இலக்கிய கர்த்தாக்களாக அப்போது அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. இலக்கியமோ வேறு எந்த விதக்கலையானாலும் அது அனேக மக்களுக்குப் பயன் செய்யவில்லையென்றால், அப்படியான ஒன்று வேண்டியதில்லை” என வரதர் கருதுகிறார்.
வரதர் தனது சிறுகதைகளை காலத்திற்குக் காலம் மறு பரிசீலனை செய்து பார்த்திருக்கிறார் என்பது புலனாகிறது ஆரம்பத்தில், கற்பனை செய்து கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் திறம்படக்கோத்து கதைகளைத் தான் எழுதியதாகவும், ஆனால் அந்தக்கதைகளில் மற்ற எல்லாம் இருந்த போதிலும், நல்ல கருத்துக்களை அவை மையமாகக்கொண்டு அமையவில்லை என்பதால் அவை தொகுதியாக்கம் பெறவில்லை என்கிறார். கருத்து வளம் நல்ல தொரு சிறுகதைக்கு உயிரைப்போன்றதென்பது வரதரின் கருத்து. எனவே “1940 லிருந்தே சிறுகதை எழுதி வந்துள்ள வரதர் ஐம்பதுகளின் பிற்கூற்றில் ஏற்பட்ட இலக்கிய உத்வேக வளர்ச்சியின் பொழுது தனது படைப்பாளுமையை கற்பு, வீரம் போன்ற தமது சிறுகதைகள் மூலம் பதிவு செய்துள்ளார்."
வரதர் சிறுகதைகளை மட்டுமன்றி குறுநாவல், நாவல் புனைகதை வகையிலும் தனது கால்களைப் பதித்துள்ளார். வென்றுவிட்டாயடி இரத்தினா, உணர்ச்சி ஒட்டம், தையலம்மா ஆகிய குறுநாவல்களை மறுமலர்ச்சியில் வரதர் எழுதியுள்ளார்.
7

Page 13
ஈழத்துச் சிறுகதை வரலாறு “Fülaos gali”
ஆனந்தனில் அவர் எழுதிய கயமை மயக்கம் கூட ஒரு வகையில் குறுநாவலாகக் கருதப்படக்கூடியதே. அவர் எழுதிய ஒரேயொரு நாவல் "காவோலையில் பசுமை” என்பதாகும். தினகரனில் 1998களில் தொடராக வெளிவந்தது. காவோலையில் பசுமை, தொடர் கதையாக வெளிவந்தாலும் தொடர்கதைக்குரிய விறுவிறுப்பின்றி, நாவலுக்குரிய இறுக்கத்தைக்கொண்டுள்ளது.
“யாழ்ப்பாண மக்களின் இடப்பெயர்வினடியாகத் தோன்றி, இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முந்திய சமுக, பண்பாட்டு, பொருளாதார நிலைமைகளை ஆவணப்படுத்தும் ஓர் கதை, காவோலையில் பசுமை நாவலாகும். யாழ்ப்பாணக் குடா நாட்டின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள நல்லபுரம் எனும் கற்பனைக் கிராமத்தை மையமாகக் கொண்டு இக்கதை நகர்வதாயினும், அது ஒட்டு மொத்தமாக அக்கால யாழ்ப்பாணச் சமூகத்தையே காட்டுகிறது.”* காவோலையில் பசுமை சாதிய நாவலாகவும் கருதப்படக்கூடியது.
1.32 வரதரின் “மறுமலர்ச்சி”
"ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வளர்ச்சியில் மறுமலர்ச்சிச் சஞ்சிகைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஏறத்தாழ 1930 களிலிருந்து படிப்படியாக முளை விட்டு வளர்ந்து கொண்டிருந்த நவீன ஈழத்தமிழிலக்கியத்தின் வரலாற்றில் இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்து நிலையோடு தொழிற்பட வந்த முதலாவது இயக்கம், மறுமலர்ச்சி இயக்கமாகும்.' 1943ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து “தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்” என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர். இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது எழுத்தாளர் சங்கம் இதுவே. இந்தச் சங்கத்தின் பிதாமகள் தி.ச.வ. ஆவார். அவரோடு அ.செ.முருகானந்தன், க.கா.மதியாபரணம், க.செ.நடராஜன் (நாவற்குழியூர் (நடராஜன்), ச. பஞ்சாட்சரசர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா), து. உருத்திரமூர்த்தி (மகாகவி), அ.ந.கந்தசாமி, கனகசெந்திநாதன், வை. ஏரமபமூர்த்தி (ஈழத்துறைவன்) முதலான பலரும் இணைந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.
8

ஈழத்துச் சிறுகதை வரலாறு *செங்கை ஆழியான்”
எழுத்தாளர்கள், இலக்கிய இரசிகள்கள் ஆகியோரை ஒன்று சேர்த்து ஒரு சங்கம் அமைக்க வேண்டுமென்ற பெரு விருப்பம் தி.ச.வரதராசனுக்கு 1943 களில் ஏற்பட்டது. அவ்வாறு அமையவிருக்கும் சங்கத்திற்குப் ‘புதுமைப்பித்தர்கள் சங்கம்” எனப்பெயர் வைப்பதென வரதர் முடிவு செய்திருந்தார். மேற்குறிப்பிட்டோர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். 16.04.1943 ஆம் திகதி யாழ்ப்பாணம் கஸ்துாரியார் வீதியிலுள்ள ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டு விறாந்தையில் சுமார் பதினைந்து எழுத்தாளர்/இரசிகள்கள் கூடினர். சங்கம் ஒன்று அமைப்பதாக முடிவு எடுக்கப்பட்டு, அதற்குப்பெயர் சூட்டும் தீர்மானம் வந்த போது, வரதர் தான் ஏற்கனவே உருப்போட்டு வைத்திருந்த “புதுமைப்பித்தர்கள் சங்கம்” என்ற பெயரைச் சொன்னார்? இப்பெயருக்குப் பெரும்பான்மையோர் எதிர்க்குரல் தந்தனர். அவர்களில் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் வை. ஏரம்பமுர்த்தி முக்கியமானவர். அவர் இச்சங்கத்திற்குத் தமிழ் இலக்கிய் மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற பெயரைப் பிரேரித்து அனுமதிக்க வைத்தார். பெரும்பானமையோர் முடிவிற்கு வரதர் சிரம் தாழ்த்தினார். அக்கூட்டத்தில் மறுமலர்ச்சி என்றொரு சஞ்சிகை நடாத்த முடிவு செய்து அதற்கு ஆரியராக வரதரைத் தேர்ந்தெடுத்தனர். அப்போது அவருக்கு வயது 19. ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக வெளி வந்தது. சிறுவயதிலிருந்தே எழுத்து கவிதைபோல ஓவியம் வரைவதிலும் வரதருக்கு ஆர்வம் உண்டு. தான் பத்திராதிபராக இருந்த கையேழுத்துப் பத்திரிகைகளில் தன்னுடைய ஓவியத்திறமையையும காட்டினார். மறுமலர்ச்சி மாறிமாறி ஆர்வமுள்ள இளைஞர்களால் படிக்கப்பட்டது. அது கையெழுத்துப் பத்திரிகையாக எத்தனை இதழ்கள் வெளிவந்தது என்பது தெரியவில்லை. வரதரின் பத்திரிகை வெறி கையெழுத்துப் பத்திகையுடன் அடங்கி விடுவதாகவிருக்கவில்லை."
தமிழ் நாட்டிலிருந்து வரும் சஞ்சிகைகளைப் பார்க்கும் போதெல்லாம், யாழ்ப்பாணத்திலிருந்து அப்படி ஒரு சஞ்சிகையை வெளியிட வேண்டுமென்ற கனவு வரதருக்கு இருந்தது. மறுமலர்ச்சியை அச்சுப்பத்திரிகையாக்க வேண்டுமென்பது அவருடைய பெரும் தாகமாயிற்று. அச்சுப்பத்திரிகை என்பது பணத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். எனினும், வரதர், க.காமதியாபரணம், நாவற்குழியூர் நடராஜன், பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா, க.இ.குமாரசாமி (க.இ.சரவணமுத்துவின் தமையனார்) ஆகிய ஐவர் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஐம்பது ருபா தலைக்குரிய முதலீடாக இட்டு, பூரீபார்வதி அச்சகத்தில் மறுமலர்ச்சி இதழ் அச்சிடத் தொடங்கினர்."
9

Page 14
Ag fagaan Jawi “Kaap gara” மறுமலர்ச்சி முதல் இதழ் ஐந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டன. அதற்கான செலவு ரூபா125 ஆகும். மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சாகி முடிந்த சமயத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது." மறுமலர்ச்சிச்சங்க வரலாற்றில், மறுமலர்ச்சிச் சங்க உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அபிப்பிராய முரண்பாடு, நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்க உறுப்பினர்களி லொருவரான வை. ஏரம்பமூர்த்தரி சார்பானவர்களுக்கும் , மறுமலர்ச்சிச்சஞ்சிகை சார்பானவர்களுக்கும் இடையே “யாருக்கு மறுமலர்ச்சி சொந்தம்” என்ற பிரச்சினை தோன்றியது. இந்தப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. மறுமலர்ச்சியை அச்சிட்ட பார்வதி அச்சகத்தில் அச்சிட்ட பிரதிகள் யாவும் நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. எனினும் வழக்கு ஏரம்பமூர்த்தி குழுவினர் பக்கம் தோல்வி கண்டது. அவர்கள் மறுமலர்ச்சிச் சங்கத்திலிருந்து விலகிக் கொண்டனர்." "மறுமலர்ச்சி தொடர்ந்து 1946லிருந்து 1948 வரை இருபத்திநான்கு இதழ்கள் வெளிவந்து, இலக்கிய உலகில் பெரும் சாதனை படைத்தது. தமிழகத்தில் சிறுகதைத்துறைக்கு மணிக்கொடி எப்படிப் புத்துக்கம் அளித்ததோ அதே போல ஈழத்தில் சிறுகதைத்துறைக்கு மறுமலர்ச்சி புதியதொரு உத்வேகத்தை அளித்துள்ளது. மறுமலர்ச்சி ஒட்டில் இலங்கையர்கோன், சோ.நடராஜன், அ.செ.முருகானந்தன், தாற்ைகுழியூர் நடராஜன், ‘சம்பந்தன், பொ. கிருஷ்ணன், வல்லிக் ஆண்ணன், து. உருத்திரமூர்த்தி, சு. வேலுப்பிள்ளை யாழ்ப்பாணன், தேதிக்கன், கி. சுப்பிரமணியம், ச. பஞ்சட்சசர்மா, அ. வ. மயில்வகனன், க.சி குலரத்தினம், சு. ராஜநாயகன், முதலியார் குலசபாநாதன், கு.பெரியதம்பி, பா.கதிராயத்தேவி, பத்மா துரைராஜா, மா.பீதாம்பரன், Blob, கா.பொ.இரத்தினம், கார்த்திகேயன், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை, தயா, புரட்சிதாசன், சு.வித்தியானந்தன் ,பண்டிதர் தள்மரத்தினத்தேரோ, வித்துவான். வேந்தனார், சோதியாகராஜன் முதலிய பலரும் எழுதியுள்ளனர். தனது படைப்பிலக்கியத்துறைக்கு மறுமலர்ச்சியை வரத நன்கு பயன் படுத்திக் கொண்டார்.
இருபத்தி நான்கு இதழ்களுடன் மறுமலர்ச்சி தொடர்ந்து வெளிவராது நின்று போயிற்று. எனினும், சரியாக அரை நூற்றாண்டிற்குப் பிறகு மே மாதம் 1999 லிருந்து மீண்டும் மறுமலர்ச்சி வெளிவரத் தொடங்கியுள்ளது. இதன் ஆசிரியராக வரதரும் இணை ஆசிரியர்களாக சிற்பியும், செங்கைஆழியானும் பொறுப்பேற்றுள்ளனர். "வரதர்-சிற்பிசெங்கை ஆழியான் என்ற இந்த வலுவான இலக்கிய முக்கோணத்தின்
10

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” முயற்சியாக மறுபிறவி எடுத்திருக்கும்’ மறுமலர்ச்சி “அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களின் பேராதரவோடு சாதனை செய்யுமென நம்பலாம்.'
13.3 வரதரின் கவிதைகள்
வரதரை ஒதுக்கி விட்டு ஈழத்து நவீன புதுக்கவிதை வரலாற்றை எழுதி விடமுடியாது. ஈழத்துப் புதுக்கவிதைக்கு வசன கவிதைக்கு வரதரே பிதாமகள் என்பேன். ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன், 1943இல் சித்திரைக்குழப்பத்தை வைத்து வரதர் ஈழகேசரியில் “ஓர்இரவிலே’ என்றொரு புதுக்கவிதையை எழுதியுள்ளர்." அதனைத்தொடர்ந்து மறுமலர்ச்சியில் பல கவிதைகளை வரதர் வெவ்வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். அவற்றில் “அம்மான் மகள்” என்றொரு கவிதை குறிப்பிடத்தக்கது. 1996இல் “யாழ்ப்பாணத்தார் கண்ணிர்’ என அவரெழுதிய நெடுங்கவிதை காலப்பதிவேடாக மாறிவிட்டது.
வர தருடைய கருத் துப் படி " "61 6 * 6די ט * சிறந்த எழுத்தாளருக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்: ண் - நல் 6 எழுத்தாளர்களின் எழுத்து நடையிலும் கருத்திலு. ஒரு கவிதை நயம் இருக்கும். கவிதை என்பது எதுகை, மேர்னை, சீர், தளை எல்லாம் சரியாக அமைந்து ஓசை நயத்தை எழுப்ப வேண்டும். ஒசை நயமில்லாமல் கவிதையில்லை" என்ற கருத்திற்கு வரதர் முரன். “ஒரு கவிதையை எந்த உருவத்தில் படைத்த போதிலும் அதில் “கவிதை நயம்” என்ற பண்டம் இல்லாமல் போகுமானால் அது கவிதை ஆகாது.”*
“வரதர் கதை எழுதத் தொடங்கிய காலத்திலேயே கவிதைகளையும் எழுதினார். அவர் எழுதிய முதற் கவிதையே ஈழகேசரியில் வெளிவந்த “ஓர் இரவிலே’ என்பதாகும்.” சித்கிரை இருபத்தெட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் மூன்று, நான்கு நடகளாக ஒரே அடை மழை. ஊரெல்லாம் பெரு வெள்ளம். அவற்றுடன் புயலும் சேர்ந்து ஊரை ஒரு ஆட்டு ஆட்டியது.
“இருபத்தி எட்டென்று
யாரோ சொன்னார் இருண்டதடா மேகமெல்லாம்
11

Page 15
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிானி"
அந்த வேளை கருக் கொண்ட மேகங்கள் விண்ணில் கூடி.
அந்தக்கவிதை இப்படித் தொடங்குகிறது." என வரதர் நினைவிலிருந்து சொல்கிறார். ஆனால், (அந்தக்கவிதை) பின்வருமாறே தொடங்குகிறது.
"இருள், இருள், இருள்!
இருளின் நடுச்சாமத்திலே என் கால்கள் தொடும் பூமி தொடங்கி கண்பார்வை கெட்டாத மேகம் வரை இருள், இருள்!
பார்த்தேன்
பேச்சு மூச்சற்று
பிணம் போலக்கிடந்தது பூமி
இது பூமி தானா ?
மனித சந்தடியேயற்ற பயங்கரமான பேய்களின் புதிய உலகமோ? ஒவ்! ஒவ்! என்றிரைவது பேயா? காற்றா? பேய்க்கற்றா? பேய்க்காற்று'.என இக்கவிதை விரிகின்றது.
அந்தக்காலத்தில் புதுக்கவிதை முயற்சி ஒன்று நடந்ததுண்டு. ந.பிச்சமூர்த்தி, க.நா.சு நடாத்திய “சூறாவளி’ என்ற புதுமையான சஞ்சிகையில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. அவற்றினை வரதர் படித்துணர்ந்துள்ளார்”. மறுமலர்ச்சியில் வரதர் எழுதிய அம்மான் மகள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் நயம்பட எழுதப்பட்டுள்ளது.
“gibom Biotom 61662J LOSO4
சுத்தித்திரியுது சுருதி கெட்ட பாட்டுப் போல சோர்ந்து போகுது அம்மான்மகளைக் கட்டிக்கொள்ள ஆசைப்படுகுது அதையே நினைச்சு நினைச்சுப்பாத்து நெஞ்சு புளுகுது
12

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
நேத்துச் சின்னக் குருவி போல நிண்ட பெட்டை தான் நேரங் காலம் வந்திட்டுது நிமிந்து நிக்கிறா சேத்துக்குளத்துப் பூவைப் போல பூத்து நிக்கிறா சேலை கட்டிச்சட்டை போட்டுச் சிரிச்சுப்பாக்கிறா.
சோறு, புட்டுத் தின்னயில்லை சோர்ந்து போகிறாய் சோலி என்ன தம்பி எண்டு ஆச்சி கேக்கிறா அத்தான் மெலிஞ்சு சாகப் போறன் ஆதலினாலே - அடி அம்மான் மகளே கம்மாவாடி ஆனாத் தன்னாலே.”*
நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1926இல் வரதள் எழுதி வீரகேசரியில் வெளி வந்த கவிதை யாழ்ப்பாணத்தார் கண்ணிர். அது பின்னர் தனி நூலாகவும் வெளிவந்தது. 1995, ஒக்ரோபர் 30ஆந்திகதி வலிகாமம் மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுகளையும், தேடிய தேட்டங்களையும் கைவிட்டு ஓடில்லாத ஆமைகளாகவும் கூடில்லாத நத்தைகளாகவும் பயத்தோடும் பரதவிப்போடும் ஊர்களை விட்டு ஏதிலிகளாக ஓடிய மனுக்குலச் சோக நாடகம் வரதரின் நீண்ட கவிதையாக வெளி வந்துள்ளது. இந்த இடப் பெயர்வுச் சோக நாடகத்தின் முதற் காட்சியை அந்த நாடகத்தின் பாத்திரங்களில் ஒன்றாகி, மானிட வேதனைகளை முற்றாக அனுபவித்ததன் விளைவாக, கவிதா ஆவேசமாக வரதர் ஆக்கித்தந்துள்ளார்."
“முப்பது பத்து
தொண்ணுாற்று ஐந்தன்று முன்னிரவு வேளை முதேசி வந்தது போல “பயங்கரச்செய்தி ஒன்று: பட்டாளம் வருகிறதாம் ஓடுங்கள் ஊரை விட்டு
13

Page 16
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்”
உடனே புறப்படுங்கள் தாமதித்தால் ஆபத்து தப்பாது உங்கள் உயிர்!” என்றந்தச் செய்தி எமனாக வந்ததம்மா அடுத்த கணமே அயலட்டை எல்லாரும் கையிலே தலையிலே காவும் பொருட்களுடன் ஒழுங்கைக்கு வந்தார்கள் .ஐயையோ,என்ன இது? ஊர் முழுக்க அங்கே ஒரேயடியாய் நடக்கிறது! கட்டிய விடும் கமம்புலமும் அத்தோடு தின்னாமல் குடியாமல் பரம்பரையாய்ப் பரம்பரையாய் பதுக்கி வைத்த சொத்துக்களும் எல்லாமே விட்டு விட்டு எங்கிவர்கள் போகின்றார்! இராப்பொழுது மழைநேரம் ஈ, காக்கை போல் அலைய இவர் செய்த பாவமென்ன? - இவ்வாறு நீண்ட கவிதை விரிகிறது. “ஊர் எழுந்தது. எல்லாமே விட்டு விட்டு எங்கிவன்கள்?*என்ற தலைப்புடன் வீரகேசரியில். இக் கவிதை வெளி வந்தது. காலத்தோடு ஒட்டிய கவிதையாக அது அமைந்தது.
"இந்த நீண்ட கவிதை சத்திய ஆவேசம் கொண்ட ஒரு கவிஞனின் ஆழ்மனதில் உறங்கிக்கிடந்த மானிட நேயத்தைத் துாண்டியிருக்கிறதென்பதற்குச் சான்றாகிறது. இந்த மானிட அவலம் புதுக்கவிதையாக வெளிவராவிடில் வரதர் என்ற கவிஞனால் நிச்சயமாக உறங்கியிருக்க முடியாது. சாதாரண மனிதனுக்கு ஒரு இழப்பின் அல்லது தாங் கொணாத் துயரத் திண் வெளிப்பாடு 6) uĎ u S1 fó கண்ணிருமென்றால், கவிஞனுக்கு இது இலக்கியப் படைப்பாகத் தானிருக்க முடியும். அதனை வரதர் செய்திருக்கிறார்."
14

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” வரதரின் “யாழ்ப்பாணத்தார் கண்ணி” என்ற இந்தக்புதுக்கவிதை நூல், ஒரு கால கட்டத்து ஆவணம் என்ற நிலைப்பாட்டிற்கு அப்பால் தக்கதொரு கவிதை நூலாகவும் கணிக்கப்படத்தக்கதாக விருக்கின்றது. மானிட சோகத்தின் கவிதா புலம்பலாக இந்த நூல் விளங்குகின்றது. ஒவ்வொரு வரியும் நாம் அனுபவித்த அனுபவத்தினையும், இழப்புக் களையும், ஏமாற்றங்களையும் எடுத்து விளம்புவதன் மூலம் நெஞ்சில் குருதி வடிய வைக்கின்றது. இந்தக் கவிதையில் சொன்ன விஷயங்களினதும் சொல்லாத விஷயங்கள் பல தொக்கி நிற்கின்றன. அவை கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கும் போது எஞ்சி நிற்கின்ற உணர்ச்சியினடியாகத் தெரிகின்றன. காலத்திற்குத் தேவையான ஓர் இலக்கியப் பணியை வரதர் இந்த நூல் மூலம் ஆற்றியுள்ளார்.”*
1.3.4 வரதரின் இதழியற் பணி
வரதரை ஒதுக்கி விட்டு ஈழத்து இலக்கிய வரலாறு எழுத முடியாது. ஏனெனில் ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றுக்கு படைப்பாளிகளையும், படைப்புக்களையும், ன் காலத் நிற்குக் காலம் நடாத்திய மறுமலர்ச்சி, வரதர் ஆ.டு மலர், ஆனந்தன், தேன்மொழி, வெள்ளி, புதினம், அறிவுக்களஞ்சியம், மீண்டும் மறுமலர்ச்சி முதலான இலக்கியச் சஞ்சிகைகள் மூலம் தந்துள்ளார்.
1.3.4.1 மறுமலர்ச்சி
1946 ஆம் ஆன்டு பங்குனி மாதம் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஓர் அரிய சஞ்சிகை மறுமலர்ச்சி. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தினரால் இது வெளியிடப்பட்ட தெனக்கூறப்பட்டாலும் தி.ச.வரதராசன், க.கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராஜன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா, க.இ.குமாரசாமி ஆகிய ஐவரே இதன் மூலகள்த்தாக்களாயினும் வரதரே முதல்வர். மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நாவற்குழியூர் நடராஜனும் இணைஆசிரியர்களாக தி.ச.வரதரசனும் அ.செ.முருகானந்தனும் முதலில் இருந்தனர். 1948 ஆம் ஆண்டின் 6வது இதழிலிருந்து இணை ஆசிரியர்களாக தி.ச.வரதராசனும் பண்டிதர் ச. பஞ்சாட்சரசர்மாவும் விளங்கினர். மறுமலர்ச்சி குறித்து ஏற்கனவே தனித்து ஆராயப்பட்டதால், விரிவாக இங்கு விளக்காது 6666. TLD.
. 15

Page 17
342 வர்திரி ஆண்டு மலர் jä
வர்த்ர் 1949 - 1931 வரையான காலகட்டத்தில் பார்வதி அச்சகத்தில் முகாமையாளர்க விளங்கிய வேளையில் ஆண்டுக்கு ஒரு சஞ்சிகையெண் ஒருமலரை வெளியிடமுயன்றுள்ளார். 1930 ஆம் ஆண்டு “வர்தர் புதுவருஷமலர்” என்ற பெயருடன் 80 பக்கங்களில் கலைமகன் சஞ்சிகை அளவில் அந்த மலர் வெளிவந்துள்ளது. அதன்விலை ஒரு உரிமை யாளரான வை. ஏரம்பமூர்த்தியே வரைந்துள்ளார். கலைஞர்களிடையே பகைமை என்பது கருத்தியல் நிலையில் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் கோபதாபம் இருக்க முடியாது. விர்தர் ஆண்டு மலர் சோ. சிவபாதசுந்தரத்திற்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது. உங்களுக்காக இந்த மலரைச்சிருஷ்டித்தேன், உங்களுக்கரிக மிட்டுமா, என்மனத்துள்ளே புதைந்துகிடந்து அடிக்கடி தலைதுாக்கும் ஒரு ஆசைக்காகவும் தைத்தயாரித்தேன்” என வரதர் தன் ஆசிரியத் தலையங்கத்தில்
வரதர் புதுவருஷ மலரில் நவாலியூர். க.சோமசுந்தரப்புலவர், மக்ாகவி, க. பொ இரத்தினம், கலைவாணன், கனக செந்திநாதன், யாழ்ப்பாணன், கு.பெரியதம்பி, பண்டிதர் க. இராசையா, நாவற்குழியூர் நடராஜன், அ. விஸ்வநாதன், பரமகம்ஸதாசன், அ. செ. மு. எஸ்.டி. சிவநாய்கம், வெள்ளவத்தை. மு. இராமலிங்கம், தெ.செ.நடராஜா, அவிம, தாழையடி சபாரத்தினம், எம். எஸ். எம். புகாரி, சர்மா, சரோஜினி, சாரதா, வரதர் ஆகிய படைப்புலப் பிரமுகர்களின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மிகக் கனதியான மலர்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர், "திருவளர் மறுமலர்ச்சி சிறந்து நனியோங்கப் புகழ் சேர் வரதர் புத்தாண்டு நன் மலர் என்றும் வாழியவென்றே நன்று வாழ்த்தும் நலந்தரற் பொருட்டே” என இந்த மலரை வாழ்த்தியுள்ளார். மகாகவி, கலைவாணன் (தென்னிந்தியக்கவிஞர்), யாழ்ப்பாணன், நாவற்குழியூர் நடராஜன் ஆகியோரின் கவிதைகள் இந்த மலரில் இடம் பிடித்துள்ளன. வரதரின் பாஞ்சாலி பதிவிரதையான கதை உள்ளும் புறமும் ஆகிய இருசிறுகதைகளும், கு. பெரியதம்பியின் பொங்கல்வாழ்த்து, :செ.மு. வின் சிங்கக்கொடி சிரித்தது, தாளையடி சாரத்தினத்தின் ஆழிப்பு, சரோஜினியின்
16

ஈழத்துச் சிறுகதை வரலாறு “knă iasă” வெளிவந்துள்ளன. தெ.செ.நடராசாவின் இதுவும் ஒரு வாழ்வா?, சர்மாவின் வனதேவதை ஆகிய இரு ஓரங்க நாடகங்கள் மலரை அலங்கரிக்கின்றன.
பண்டிதர் கா. பொ. இரத்தினத்தின் அழகுக்கு அழகு செய்தார், கனக செந்திநாதனின் சோமசுந்தரப்புலவர் பற்றிய விடிந்த இரவும் விடியாத இரவும், பண்டிதர் இராசையாவின் உலகம் ஒரு கண்ணாடி, எஸ். டி. சிவநாயகத்தின் சிறுகதை இலக்கியம்: அன்றும் இன்றும், வெள்ளவத்தை மு. இராமலிங்கத்தின் நாடோடி இலக்கியத்தில் காதல், அ.வி.ம வின் என்ன வயது? முதலான கட்டுரைகளும் வரதர் ஆண்டு மலரில் வெளிவந்துள்ளன". பலராலும் இது வரை கணிப்பீடு செய்யப்படாத, வரதரின் இதழியற் சாதனை இந்த மலர்.
3.4.3.3 ஆனந்தன்
வரதரின் மனதில் புதிய புதிய பத்திரிகைகள் வெளியிடுவதென்ற ஆசை கனன்று கொண்டேயிருந்தது. ஆனந்தா அச்சகத்தின் உரிமையாளர்களில் ஒருவராக மாறியதும், 1952 களில் “ஆனந்தன்” என்ற சஞ்சிகையை வெளியிட்டார். “ஆனந்தன்” முற்றிலும் இலக்கியச் சஞ்சிகையாகவே வெளி வந்தது. ஆரம்பத்தில் ஆசிரிராக தி.ச.வரதராசனும், இணை ஆசிரியராகக் கவிஞர் யாழ்ப்பாணனும் விளங்கினர். அவ்வேளை யாழ்ப்பாணன் சிவக்கொழுந்து ஆனந்தா அச்சகத்தின் ஒரு பங்குதாரர். அவர் விலகித் தனியாக அச்சகம் ஒன்றைப் பருத்தித்துறையில் அமைத்துக் கொண்டதும், ஆனந்தனின் இணை ஆசிரியராகப் புதுமைலோலன் பணியேற்றார்.
அக்கால கட்டத்தில் ஈழகேசரி, சுதந்திரன் முதலான பத்திரிகை களில் நல்ல பல சிறுகதைகளைப் படைத்து கணிப்பீட்டுக்குரியவராகப் புதுமைலோலன் விளங்கினார். ஆனந்தன் சஞ்சிகையில் பழையவர் களுடன், புதியவர்களும் எழுதினர். இளங்கீரனின் புகழ் பெற்ற நாவலான தென்றலும்புயலும், புதுமைலோலனின் நாவலான “தாலி”ஆகியன ஆனந்தனிலேயே வெளிவந்துள்ளன. ஈழத்தின் தரமான சிறுகதை களிலொன்றாகிய தாழையடி சபாரத்தினத்தின் “குருவின்சதி” ஆனந்தனி லேயே பிரசுரமாகியது. ஆனந்தனும் ஒன்றரை வருடப் பயணத்துடன் நின்று விட்டது.
(2) 17

Page 18
digang JO ' ஆழிான்”
1.3.4.4 தேன்மொழி
கவிதைக்காக வரதர் நடாத்திய ஏடு "தேன்மொழி” ஆகும். புரட்டாதி 1955 இலிருந்து தேன்மொழி மாதமொரு இதழாக வெளிவந்தது. ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ் இதுவாகும். தேன்மொழியின் நிள்வாக ஆசிரியராக வரதரும், இணை ஆசிரியராக மகாகவியும் விளங்கினர். வரதர் தான் நடாத்துகின்ற சஞ்சிகைகளுக்குத் தகுதி வாய்ந்தோரையே இணை ஆசிரியராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார். ஈழத்தின் மிகச்சிறந்த கவிஞரான மகாகவி, கவிதை ஏடு ஒன்றிற்கு இணை ஆசிரியராக வந்தமை அதன் தரத்தைப் பேண உதவியது.
“கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஓர் இதழை வெளிக்கொணர வேண்டுமென்பது ஒரு எண்ணம், நவாலியூர் சோமசுந்தரப்புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டுமென்பது. மற்ற ஒரு எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன” என்கிறார் தேன்மொழி முதலிதழில் அதன் ஆசிரியர் வரதர்" தேன்மொழியில் ஒரு கவிஞர் பட்டாளமே கலந்து எழுதியது; நவாலியூர் சோமசுந்தரப்புலவர், நாவற்குழியூர் நடராஜன், சாரதா, யாழ்ப்பாணன், சோதி, வி. கி. இராசதுரை, மிருசுவில் அரிஅரன், அ. ந. கந்தசாமி, சோ. பத்மநாதன், முருகையன், மகாகவி, வரதர், தான் தோன்றிக்கவிராயர், காப்பியாற்றுக் காட்பியனார், செ. வேலாயுதபிள்ளை, தில்லைச்சிவன், நவாலியூர்.சோ. நடராசன், மகேஸ்வரன், மணிபல்லவன், சோ. சண்முகபாரதி, பரிமளா இராஜதுரை, அம்பிகாபதி, பண்டிதர். சோ. இளமுருகனார், வித்துவான் வேந்தனார், அண்ணல், யுவன், இரா. இளந்திரையன் முதலான கவிஞர்கள் தேன்மொழியில் கவிதாமாரி பொழிந்துள்ளனர். வித்துவான் க.வேந்தனாரின் “காலைத்துாக்கிக்கண்ணில் ஒற்றிக் கட்டிக்கொஞ்சும் அம்மா’ என்ற புகழ் பெற்ற கவிதை தேன்மொழியில்தான் வெளி வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
தேன் மொழி மொத்தம் பதினாறு பக்கங்களைக் கொண்டிருந்தாலும் கவிதைத்துறைக்கு ஆற்றிய சேவை மிகவதிகம். வெண்பாவின் ஈற்றடி கொடுத்துத் தனி வெண் பாக்களை யாத்துப்பங்கேற்குமாறு தேன்மொழி விடுத்த அழைப்பு பெரு வெற்றியைப் பெற்றிருந்தது. "வேசிக்கும் உண்டோ விருப்பு” “வீட்டிலே வைத்த
18

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிாள்” விளக்கு." “இல்லையேகன்கள்இரண்டு.” எங்கெழிலென்ஞாயிநெமக்கு” என்பன வழங்கப்பட்டவெண்பா ஈற்றடிகள்.
இந்த வெண்பாப் போட்டியில் பழைய கவிஞர்களோடு, குறமகள், ச.பஞ்சாட்சரம், பரிமளா, பண்டிதர், ச. அசோகன், செவ்வேள், தமிழ் மகன், கனகசிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஈழத்துக்கவிதை இலக்கியத்திற்குத் தேன்மொழியின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
1.3.4.5 வெள்ளி
வரதர் நடாத்திய இன்னொரு மாத சஞ்சிகை வெள்ளி ஆகும். பல்சுவையான விடயங்களை உள்ளடக்கியதாக வெள்ளி இதழ்கள் வெளிவந்தன. வெள்ளி இதழ்கள் வரதரின் இன்னொரு வகையான இதழியற்பணியாக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தன. இருபது இதழ்கள் வரையில் வெளிவந்தாக அறியப்படுகின்றது.
1.34.6 புதினம்
அரசியல், இலக்கியம், சினிமா, அறிவியல், நகைச்சுவை என்பவற்றிற்காக வரதன் நடாத்திய பன்னிரண்டு ' பக்க வாரஇதழ் புதினமாகும். முதலாவது இதழ் 18.06.1961 இல் வெளிவந்தது. புதினம் இதழின் ஆரம்ப எட்டு இதழ்களில் சிரித்திரன் சுந்தரின் கார்ட்டூன்களும் நகைச்சுவைப்பகுதிகளும் சிவாஜி என்ற புனைப் பெயரில் வெளி வந்தன. பின்னர் வெளிவந்த புதினம் இதழ்களில் ‘மாலா’ என்ற புனைப்பெயரில் வரதரே கார்ட்டூன்களையும் ஓவியங்களையும் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது வரதரின் இன்னொருபரிமாணம். புதினமொரு செய்திஏடாகவே பெரும்பாலும் வெளிவந்தது. எனினும், சீலன் எழுதிய ஏமாற்றுக்காரி, ஈழத்துச்சோமு எழுதிய களனிநதித் தீரத்திலே, அசோகனின் விபசாரியா, கொலைகாரியா ஆகிய தொடர் கதைகளையும் புதினம் வெளியிட்டுள்ளது. முருகையன், நாவற்குழியூரான், மகாகவி, நீலாவணன், காசிஆனந்தன், இராஜபாரதி ஆகியோரது கவிதைகள் புதினத்திலிடம் பிடித்துள்ளன. வெளிப்பூச்சு என்ற
தலைப்பில் கனகசெந்திநாதன், சொக்கன், கே. டானியல், உதயணன், பத்மா காந்தன் ஆகியோர் சிறுகதைகளைப் புதினத்தில் படைத்துள்ளனர். மேலும், சுதர்ஷன் (தவறு), பொன்னாலை
குமாரசாமரி (கடவுளின் கதை) மண் ணவன் (மொட்டுக்குள்),
19

Page 19
ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்தை ஆழியான்”
தாழையடி சபாரத்தி"ய (சிந்திக்கத்தொடங்கினான்), நெல்லியான் செல்வம் (அன்னதானம்). தமிழின்பன் (பாவமும் பழியும்), சி. பரமானந்தம் (மாங்கல்யப்பிச்சை), சக்தி (அவள்தான் பெண்), மாலதி (காதல் ஒழுங்கை), வரதர் (இன்று நீ வாழ்ந்திருந்தால்), மாயாவி (இனியவனுக்கு வலிய தோல்), புதுமைலோலன் (பிள்ளைக்கனியமுது), தாழையடி சபாரத்தினம் (எனக்கும் உனக்கும் தெரிந்தால் போதும்), பூமலர் சின்னத்துரை (இங்கேதான் இன்பம் இருக்கிறது), கண்ணகி (கற்க வந்தவளே கற்றுத்தந்த பாடம்), ஏ. டபிள்யூ. காமில் (பணிவல்ல, வாழ வேண்டி), மணியம் (நீதியாக அம்மா), வண்ணை சிவராஜா (காதலன் செய்த தியாகம்), தாழையடி சபாரத்தினம் (தாய்), கே.எஸ். சிவகுமாரன் (குறிஞ்சிக்காதல்), வரதர் (ஓ இந்தக் காதல்), பொ. சண்முகநாதன் (வலி), செங்கை ஆழியான் (ஆசையும் பாசமும்) முதலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. வரதரின் இருசிறுகதைகளும், தாழையடி சபாரத்தினத்தின் மூன்று சிறுகதைகளும் புதினத்தில் வெளி வந்துள்ளன.
அரசியல், சமூகவியல் என்பவற்றிற்கு புதினமாற்றிய பங்களிப் பரிலும் இலக் கசியத்திற் காற்றிய பங்கு அதிகம் கனகசெந்திநாதன், புதுமைலோலன், இ. நாகராஜன், டொமினிக் ஜீவா, தேவன்-யாழ்ப்பாணம், எஸ். பொன்னுத்துரை, கே டானியல் ஈழத்துச்சோமு முதலானோரின் நேர் காணல்கள் புதினத்தில் புதிய தகவல்களைத் தருகின்றன. பூதத் தேவனார் அரங்கு என்ற பகுதியில் வாரா வாரம் இலக்கிய விடயங்கள் அலசப்பட்டுள்ளன. புதினத்தின் ஆசிரியராக வரதர் விளங்க, இணை ஆசிரியர்களாகத் தாழையடி சபாரத்தினமும் ஜோ. ஏ. எம். தாஸம் பணியாற்றியதாக அறியக்கிடைக்கின்றது.
3.4.7 அறிவுக்களஞ்சியம்
மாணவ உலகின் பொது அறிவுக் காகவும் , பொது விழிப்புணர்ச்சிக்காகவும் வரதரால் நடாத்தப்பட்ட அறிவியற் சஞ்சிகை அறிவுக் களஞ்சியமாகும். யூலை 1992 இல் முதலாவது இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியராக வரதரும், இணை ஆசிரியராக க, குனராசா(செங்கை ஆழியான்)வும், துணை ஆசிரியராகக் கல்வயல்
20

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆதான்” வே குமாரசாமியும் விளங்கினர். 13வது இதழிலிருந்து துணை ஆசிரியராக புத்தொளி பணிபுரிந்துள்ளார். மொத்தம் 37 இதழ்கள் வெளி வந்தன. இனியும் அதன் தொடர்ச்சியை வெளியிடுவதென்ற சிந்தனையுடனேயே வரதர் இருப்பதாக தெரிகிறது. செங்கை ஆழியானின் அறிவியற் சிறுகதைகள் ஐந்து வரை அறிவுக்களஞ்சியத்தில் வெளி வந்தன. அவை அனைத்தும் கலைக்கதிர் பத்திரிகையில் மறுபிரசுரமாயின. எனவே, தி.ச. வரதராசனின் இதழியற் பணிகள் விரிவானவை. அவர் காலத்திற்குக் காலம் ஏதாவது ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார். விநியோகத்திறன் குறைவால் அச்சஞ்சிகைகள் வெளி வந்த சொற்ப காலத்தில் பெரும் சாதனைகளைப் படைத்து விட்டு, அற்ப ஆயுளில் மறைந்து விடுகின்றன என்ற உண்மை மறுப்ப தற்கில்லை.
3.5 வரதரின் நூல்கள்
வரதருடைய படைப்புக்களில் ஏழு நூலாக்கம் பெற்றுள்ளன. நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்ன, கயமை மயக்கம், மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணி, சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் என்பனவே அந்த ஏழு நூல்களாகும். வரதரின் பாடசாலைப் பருவத்திலேயே “நாவலர்கோன்” வெளி வந்தது. அதைச்சற்றுத் திருத்தி 1949 இல் நாவலர் என்ற பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் ரீலறி ஆறுமுக நாவலர் சபையின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாகவே எழுதப்பட்டு, 1979 இல் புதிய பதிப்பாக வெளிவந்தது. 'குழந்தைகள் மத்தியில் குழந்தையாய், அவர்களுக்கு ஏற்றவை செய்து வைத்த, நாவலர் பெருமானின் சரித்திரத்தை, குழந்தைகள் பருகும் முறையிற் பருக, எவ்வாறு பக்குவப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று, வெகு காலத்திற்கு முன்னமே எண்ணிய ஒருவர் வரதர்” என இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். வரதர் அவர்கள் பண்டிதமணி அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, மிகச் சிறந்த முறையில் இந்த நூலை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னனின் வரலாற்றை வரதரின் “வாழ்க நீ சங்கிலி மன்ன” விபரிக்கின்றது. கடைசி வரை நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மன்னனை இந் நூல் மூலம் வரதர் தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வைத்துள்ளார்.
21

Page 20
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" வரதர் 1960 இல் வெளியிட்ட சிறுகதைத் தொகுதி “கயமை மயக்கம்”. ஆரம்பக்கதைகளைத் தவிர்த்து. தான் சிறந்ததாகக் கருதும் பன்னிரண்டு சிறுகதைகளைத் தொகுதியாக்கியுள்ளார். கயமை மயக்கம் தொகுதி, 1996இல் மீண்டும் சென்னையில் குமரன் பதிப்பகத்தினால் "வரதர் கதைகள்” என்ற பெயரில் மீளப் பிரசுரிக்கப்பட்டது. வரதரின் நூலுருப் பெற்ற படைப்புக்களில் மலரும் நினைவுகள் முற்றிலும் வேறுபட்ட ஒரு வகை நூலாகும். 1930 - 1940 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலை இந்த நுால் விபரிக்கின்றது. மல்லிகையில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் துாண்டுதலால் எழுதப்பட்ட இந்த நுால், மல்லிகையில் தி வாத்தியார் என்ற தலைப்பில் பதினைந்து இதழ்களில் தொடராக வெளி வந்தது. பலராலும் சிலாகிக்கப்பட்ட கட்டுரைத்தொடராக இருந்தது இ7: மலரும் நினைவுகள் என்ற பெயரில் குமரன் வெளியீட்டினரின் உரிமையாளரான எழுத்தாளர் செ.கணேசலிங்கம் 1996இல் வெளி. நி வைத்தார்.
"மலரும் நினைவுகள் என்னும் இந் நூல், வரதர் என்னும் ஈழத்து நவீன தமிழிலக்கிய முன்னணி எழுத்தாளர், தமது இளமைக கால யாழ்ப்பாணத்தை மீள் சித்தரிப்புச் செய்யும் ஒரு முயற்சியாகும்.”* "மலரும்நினைவுகளில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தன்னளவில் ஒவ்வொரு சிறுகதைக்குரிய இயல்பினைக் கொண்டிருப்பதாக எனக்குப் படுகின்றது பொன்னாலைக் கிராமத்தின் வாழ்க்கை முறை, நடத்தைகள், நம்பிக்கைகள், கலாசாரம் அனைத்தும் இந்த நூலிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தின் சமூகவியலை ஆராய இந்த நூல் பெரிதும் பயனுடையது. இதில் தரப்பட்டிருக்கும் பண்டைய யாழ்ப்பாணம் பற்றிய தகவல்கள் பழைய அழகிய உலகை எண்ணிப் பெருமூச்செறிய வைக்கின்றன."
நாடறிந்த கதையான மகாபாரதத்தை இளைஞர்களுக்காக வரதர் மீளச்சொல்லிய ஆக்கமே பாரதக்கதை ஆகும். புகழ் பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இக்கதையை எல்லோரும் தெரிந்திருக்க வேண்டுமென விரும்பி வரதர் எழுதியுள்ளார். ஈழத்தைச் சேர்ந்த முத்துத்தம்பிப்பிள்ளை (பாரதச் சுருக்கம்), வை. ஏரம்பமூர்த்தி (பாரதச் செல்வம்) ஆகியோர் இவ்வாறான முயற்சியில் மீள எழுதியுள்ளனர். ஓர் ஆக்க இலக்கியக்காரரின் கைவண்ணமாகப் பாரதக்கதை அமைந்துள்ளமையே அதன் தனிச் சிறப்பெனலாம்".
22

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிாண்” “யாழ்ப்பானத்தார் கண்ணிர்’ 1995, ஒக்ரோபர் 30ஆம் திகதி நிகழ்ந்த வலிகாம இடப்பெயர்வின் கவிதாவேசம் ஆகும். ஒரு காலகட்டத்தின்
ஆவணம். மானிட சோகத்தின் கவிதா புலம்பல். எனக்குப் பொதுவாகப் புதுக் கவிதைகள் பிடிப்பதில்லை. அதற்காக அந்த இலக்கிய வடிவிற்கு நான் எதிரியல்லன். ஆனால், யாழ்ப்பாணத்தார் கண்ணிரிலுள்ள புதுக்கவிதைகள் எனக்குப் பிடித்துள்ளன. ஏனெனில் இதில் இருப்பவை சத்தியம்,* உண்மை.
“சிறுகதைபட்டறிவுக் குறிப்புகள்” வரதரின் இன்னொரு சிறிய நுால் . சிறுகதை எழுத விரும் புவோருக்கான வரதரின் அனுபவக்குறிப்புகள் இந்த நுாலிலுள்ளன. கயமை மயக்கம் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் வரதரால் ஏற்கனவே எடுத்துக்கூறிய விடயங்களும் இந்த நூலில் மீளக் கையாளப்பட்டுள்ளன. வரதருடைய ஆக்கங்களில் இன்னமும் நூலுருப் பெற வேண்டியவை சிலவுள்ளன. அவருடைய நல்ல பல சிறுகதைகள் பல தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறல்வேண்டும். ஈழகேசரியில் வெளி வந்த சில சிறுகதைகள் மல்லிகை, வெளிச்சம், சமூகத்தொண்டன், புதினம் ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்த சிறுகதைகளை ஒரு தொகுதியாக்க முடியும். வென்று விட்டாயடி இரத்தினா, உணர்ச்சி ஓட்டம், தையலம்மா ஆகிய மூன்று குறு நாவல்களையும் தொகுத்து ஒரு குறுநாவல் தொகுதி வெளியிடலாம். 'காவோலையில் பசுமை" நாவல் நூலுருப்பெற வேண்டியதொன்றாகும். அனைத்துக்கும் மேலாக வரதர் எழுதிக்கொண்டிருக்கும் அவரின் சுயசரிதை நூலாக்கம் பெற வேண்டும்.
3.6 வரதர் வெளியீடுகள்
ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய பிரசுர கர்த்தருள் ஒருவர் வரதராவார். வரதரின் இலக்கிய முக்கியத்துவம் அவரது இலக்கிய பிரசுர முயற்சியாலும் அழுத்தம் பெறுகின்றது. தொழின் முறையாக வரதர் அச்சக உரிமையாளராவார். வரதர் வெளியீடு என்னும் அவரது பிரசுராலயம் முக்கியமான நூல்கள் பலவற்றை வெளியிட்டது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் “இலக்கிய வழி” முதலில் வரதர் வெளியீடாகவே வந்தது. மகாகவியின் தொடக்க கால வெளியீடான “வள்ளி” என்பதும் வரதர் வெளியீடே. இவற்றோடு
23

Page 21
Ripjil se JGO “செங்கை ஆழிாண்” வித்துவான் பொன். முத்துக்குமாரனின் தமிழ் மரபு, சிலம்பின் சிறப்பு, பேராசிரியர் க. கைலாசபதியின் ஒரு நுால், முருகையனின் கோபுரவாசல், நீலவண்ணனின் வரலாற்றுச் சமகால ஆவணங்களான *24 மணி நேரம்”, “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது” “12 மணி நேரம்”, செங்கை ஆழியானின் “யானை”, “மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து” ஆகிய இரு நாவல்கள், சோமகாந்தனின் ஆகுதி நாவல், சாந்தனின் “ஒட்டுமா”, நாவற்குழியூர் நடராஜனின் “சிலம்பொலி” முதலான நூல்கள் வரதர் வெளியீடாக வெளி வந்துள்ளன. சாமிஜி யின் அமிர்தலிங்கம் பற்றிய நூல் ஒன்றும், வி.பொன்னம்பலம் பற்றிய நூல் ஒன்றும் வரதர் வெளியீடாக வெளி வந்துள்ளன. இந்த நூல்களை நூலாசிரியரிடமிருந்து பணம் எதுவும் வாங்காமல் வெளியிட்டதுடன் அவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கியுள்ளார். இவை தவிர திருக்குறளுக்கு ஒரு பொழிப்புரை எழுதி திருக்குறளும் பொழிப்புரையும் என்ற நூலை பத்தாயிரம் பிரதிகள் வரை வெளியிட்டுள்ளார். ஆங்கிலத் தமிழகராதி ஒன்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
“வரதரின் பல குறிப்பு” என்பது தமிழில் முதன்முதல் வெளியிடப்பட்ட "டிரெக்டரி" ஆகும். தமிழின் புத்தம் புதிய முயற்சி. 1964ஆம் ஆண்டு முதல் 1968 வரை நான்கு வெளியீடுகள் வெளி வந்தன. வரதரின் மனதில் பல வருடங்களாக தமிழ் மொழியில் ஆங்கில டிரெக்டரிகளுக்கு நிகராக ஒரு பல குறிப்பை வெளியிடும் எண்ணம் கனன்று கொண்டிருந்தது. அதன் விளைவு 1964 இல் பல göğüLT85 வெளிவந்தது. அரசாங்கம், இலங்கையின் பெளதீக, பண்பாட்டு விபரங்கள், தொடர்பாடல் தகவல்கள், இலங்கை வரலாற்றுக் குறிப்புக்கள், கல்வி, தாபனங்கள், சங்கங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், புத்தகங்கள், பிரமுகர்களின் முகவரிகள் எனப்பல்வேறு தகவல்களின் பொக்கிஷமாக வரதரின் பல குறிப்பு விளங்கியது.
3.7 நிறைவுரை
பவள விழாக் கண்ட நாயகன் தி.ச.வரதராசன் (வரதர்) (1.07.1999)இ ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாதளவு பாதிப்பினை புரிந்துள்ளார். “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்ற இந்த நூல் அவர் பவள விழாவோடு இணைந்த ஆய்வு நூலாகும்.
24

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Gaoi ginal” பல்துறை ஆளுமை கொண்ட வரதர், ஈழத்து இலக்கிய வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும், தனது பங்களிப்பினைச் செய்து வருபவர். மூத்த எழுத்தாளர். மூதறிஞர். அதனால் “ஈழத்துச் சிறுகதை வரலாறு- வரதர் காலம் என்பது மிகப் பொருத்தமான கணிப்பீடே.
Masagressi
1.
2.
8.
9.
10.
10
11.
2.
13.
14。
15.
16.
17.
8.
19,
20.
வீரகேசரி 7.7.1996 பக் 16 செ. யோகநாதன், வரதர் கதைகள், குமரன் பதிப்பகம் சென்னை 1996 அணிந்துரையில் பக் 5 பேராசிரியர். கா.சிவத்தம்பி, மலரும் நினைவுகள் வரதர், குமரன் பதிப்பகம் சென்னை 1996 முன்னுரையில் பக். 7 மு.வரதராசன், வரதர் கதைகள் மு.கு.நூல் 1996 சிறப்புரையில் பக்கம், 3 பேராசியரியர் கா. சிவத்தம்பி, மு.கு நூல் 1996 பக் 8 9 வரதர்சிறுகதைகள் மு.கு.நூல் பக் 6, 7 வரதர், சிறுகதை பட்டறிவுக்குறிப்புகள், வரதர் வெளியீடு, யாழ்ப்பணம் 1992
- பக்கம் 5- 6 வரதர் கதைகள் பாரிநிலையம் சென்னை 1996 பக்கம் 8 மேற்படி நூலில் வரதர் பக் 14 கார்த்திகேசு சிவத்தம்பி, மேற்படி நூலில் பக் 7
அ. ந. நாகதளினி கந்தசாமி, வரதரின் படைப்புக்கள், ஓர் ஆராய்வு யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம் 1996 பக் 69
மலரும் நினைவுகள் பக் 8
செங்கைஆழியான், மறுமலர்ச்சிக்கதைகள் வடக் - கிழக்கு கல்விப்பண்பாடு
கலாசார அமைச்சு, திருகோணமலை 1997 முன்னுரையில் பக் -4
வரதர், மறுமலாச்சியும் நானும், மல்லிகை வெள்ளிவிழா ஆண்டு மலர்,ஜனவரி
1990 is 25 - 28
மேற்படி கட்டுரைப் பக்கம் 27
மேற்படி கட்டுரைப் பக்கம் 27
மேற்படி கட்டுரைப் பக்கம் 27 செங்கைஆழியான், மறுமலாச்சிக்கதைகள், தொகுப்பில் வடக்குக் கிழக்கு கலாச்சார அமைச்சு வெளியீடு 1997 பக் - (IV-VI) வரதர், மறுமலாச்சி இதழ் 25 மே 1999 பக். 3
ஈழகேசரி வாரஇதழ், சுன்னாகம், 13.06.1943 பிரசுரம் மறுமலர்ச்சி இதழ் 25 மே
1999 LB 3
வரதர், நானும் கவிதை எழுதுவேன், புதுமை இலக்கியம் கொழும்பு - 1999
U5 - 54 - 56
(2si) 25

Page 22
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
21.
22. 23.
24
25.
26.
27.
28
29
30
31
32,
33.
34.
35.
மேற்படி கட்டுரையில் பக் - 55 மேற்படி கட்டுரை பக் - 55
வரதரின் மறுமலர்ச்சி 1947 செங்கைஆழியான், வரதரின் யாழ்ப்பாணத்தார் கண்ணிா, வரதர் வெளியீடு
யாழ்ப்பாணம்.பக் - 39
வீரகேசரியில் வரஇதழ் 26.05.1996
வீரகேசரி 25.05.1996 செங்கைஆழியான், வரதரின் யாழ்ப்பாணத்தார், கண்ணிர், பக்கம்: 3.9 மேற்படி வரதர் ஆண்டு மலர், பார்வதி அச்சகம், யாழ்ப்பாண் 1950 பக்கம் 6 மேற்படி மலரில் சோசுந்தரப் புலவர் பக்கம் 12. தேன்மொழி, திங்கள் இதழ், வரதர் வெளியிடு, யாழ்ப்பாணம், 1955 சி.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, வரதர், நாவலர், றிலழரீ ஆறுமுகநாவலர்
சபை வெளியீடு. யாழ்ப்பாணம் - 1979 பக்கம் 4இல் கார்த்திகேசு சிவத்தம்பி, வரதரின் மலரும் நினைவுகள், நூலின் முன்னுரையில்
பக்கம் - 6-11 பாரதக் கதை, வரதர் வெளியீடு 1994 முன்னுரையில் சொக்கன் பக் 27 வரதர், யாழ்ப்பாணத்தாவர் கண்ணிர், நூல் முன்னுரையில், செங்கைஅழியான்
பக்கம் 09
26

அத்தியாயம் இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
இரண்டாயிரமாண்டில் உலகு காலடி எடுத்து வைத்துள்ள வேளையில், தமிழ்ச்சிறுகதைத் துறை பத்து தசாப்தங்களைக் கடந்திருக்கும் நிலையில், ஈழத்துச்சிறுகதையின் இருப்பினையும் சிறுகதை வரலாற்றில் விட்டுப்போன சங்கதிகளையும் மீள்பார்வையொன்றில் ஆய்வுக்குட்படுத்துவது அவசியமாகின்றது. நாவல், சிறுகதை ஆகிய புனைகதை வடிவங்கள் மேலைத்தேய இலக்கிய வகைகளாகவிருந்தாலும், அவை கூறும் கதைகளும் நிகழ்வுகளும் உரைநடை வடிவில் நம்மிடமிருக்காது விடினும், தமிழில் செய்யுள் வடிவில் மிகச்சிறப்பாக இருந்துள்ளன என்பதை ஒப்புக் கொண்டேயாகவேண்டும். எனினும், நவீன புனை கதைகளின் சொல்வடிவம் உரைநடையாகவும், அவற்றின் செயல்வடிவம் கதாம்சங்களைக் கொண்ட சமூகச்செய்திகளாகவும் இருக்கின்றன, அவ்வகையில் புனைகதை இலக்கியத்திற்கு, சிறப்பாகச் சிறுகதைத்துறைக்கு, குறிப்பாக ஈழத்து எழுத்தாளர்கள் எவ்வகையில் பங்களித்துள்ளனரெனப்பார்த்தல் அவசியமும் காலத்தின் தேவையுமாக இருக்கின்றன,
2.1 தமிழ்ச் சிறுகதை மூலவர்கள்
தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் வ.வே.சு ஐயர், சுப் பிரமணியபாரதியார், அ.மாதவையா ஆகிய மூவரையும் தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளாகக் கொள்வது மரபாக இருந்து வருகின்றது. நீண்ட காலமாக ஆய்வாளர்கள் வ.வே.சு ஐயரையே தமிழ்சிறுகதையின் மூலவராகவும், அவரது குளத்தங்கரை அரசமரம் என்ற கதையிலிருந்து சிறுகதை வரலாற்றினைத் தொடங்குவதும் வழக்கமாகவிருக்கிறது. அவரது சிறுகதைகள் 1915 க்கும் 1918 க்கும் இடைப்பட்ட காலவேளையில் எழுதப்பட்டவை. அவற்றின் தொகுப்பே “மங்கயற்கரசியின் காதல்" ஆகும், வ.வே.சு ஐயர் பலசிறுகதைகளை
27

Page 23
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிான்” எழுதியிருந்தாலும் உருவ அமைதியும் கற்பனைச் செறிவும் Biggs göså souDu4uß குளத் தங்கரை அரசமரத்திலேயே, காணப்படுகின்றதென்பது பலரது கருத்தாகும். ஆனால் வருடக்கணக்கைப் வைத்துப்பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டாலும் சரி தமிழின் நவீன சிறுகதை சுப்பிரமணிய பாரதியாரிடமிருந்தே துவங்குகிறது. 1905 இல் அவர் “சக்கிரவர்த்தனி”யில் எழுதிய துளசிப்பாய் அல்லது “ரஜபுத்திரகண்ன்னிகையின் சரித்திரம்” தமிழின் முதல் சிறுகதையென நம்ப இடமிருக்கின்றது, சுப்பிரமண்யபாரதியாரின் காக்காய்ப் பார்லிமென்ட், காற்று ஆகியவற்றை சிறந்த சிறுகதைகளாக அடையாளம் காணலாம், அவர் சிறுகதையை வ.வே.சு ஐயர் போல ஒர் இலக் கரிய வடிவமாகவோ, மணிக்கொடிக்காரர்களைப் போலச் சுத்தக் கலைவடிவமாகவோ கொள்ளவில்லை. தனது சிறுகதைகளைச் சமூக விமர்சனத்திற்கான ஊடகமாகவே பயன்படுத்தியுள்ளார், சுப்பிரமணியபாரதியார் (1905), வ.வே.சு ஐயர் (1915) ஆகியோரைத் தொடர்ந்து சிறுகதைத் துறைக்குள் 1925 களில் காலடி எடுத்து வைத்தவர் அ.மாதவையா ஆவார். தமிழ் நாட்டின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இந்த மூவரையும், கொள்வதில் எதுவித தவறுமில்லை. வ.வே.சு ஐயருடைய சிறுகதைகளில் சிறுகதையுருவம் தமிழிற் பூரணமாகத் தெரிவதையும் வேரூன்றுவதையும் நன்கு காணக்கூடியதாகவிருக்கின்றது. அவரது சிறுகதை இலக்கியம் தமிழில் இயல்பான ஓர் இலக்கிய வடிவமே என்று கூறத்தக்கவகையில் அவரது சிறுகதைகள் சில அமைந்துள்ளன, எனவே வ.வே.சு ஐயர் தமிழ்நாட்டுத் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் எனக் கொள்ளப்பட வேண்டும்.
2.2 ஆனால்ட் சதாசிவம்பிள்ளை
ஆனால், தமிழின் முதற் சிறுகதை ஆசிரியர் எவரென ஆராயும் போது அந்தப் பெருமை ஈழத்தவர் ஒருவருக்குரியதாக மாறிவிடுவதைக் காணலாம். 1841 ஆம் ஆண்டு தொடக்கம் “உதயதாரகை” என்ற பத்திரிகை, ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையாக வெளிவருகின்றது. அதன் ஆசிரியர்களாக முதலில் கரோல் விசுவநாதபிள்ளையும், பின்னர் 1860 களில் ஜே.ஆர் ஆனால்ட்
28

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Kao grai” சதாசிவம் பிள்ளையும் விளங்கினர். நாவலரின் சமகாலத்தவரான ஆனால்ட் சதாசிவம்பிள்ளை பல சிறுகதைகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. அவரது கதைகளடங்கிய தொகுதியொன்று “நன்னெறிக்கதாசங்கிரகம்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஈழத்து எழுத்தாளரான சோ.சிவபாதசுந்தரம் தமிழக எழுத்தாளரான சிட்டி ஆகியோர் இணைந்து எழுதி வெளியிட்டிருக்கும் “தமிழ்ச் சிறுகதைகள்” என்ற ஆய்வு நூலில் வ.வே.சு.ஐயர், சுப்பிரமணியபாரதியார், மாதவையா ஆகிய மூவரையும் சிறுகதை மூலவராக கொள்கின்ற மரபினை மாற்றியமைத்து, தமிழ் கூறும் நல்லுலகிலி ஆனால்ட் சதாசிவம்பிள்ளையே சிறுகதையின் முன்னோடியென நிறுவ முயன்றுள்ளனர். எனவே தமிழ்ச் சிறுகதையின் காலவளவை வைத்துப்பார்த்தால் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் என அவரைக் கொள்ளல் சாத்தியமோவென்பது மீள ஆய்வுக்குட்பட வேண்டியது அவசியமாகின்றது.*
ஈழத்து சிறுகதை வரலாறு ஒப்பீட்டளவில் காலத்தால் முந்தியதாகும். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையின் கதைத்தொகுதியைத் தொடர்ந்து இரு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளதாக அறியப்படுகின்றது. பண்டிதர் சந்தியாகோ சநதிரவர்ணம்பிள்ளை "கதாசிந்தாமணி’ என்றொரு கதைத் தொகுதியை 1875 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதில் ஏழு சிறுகதைகள் அடங்கி இருந்தன. தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் “ஊர்க்கதைகள்” தொகுதியினையும், ஐதுருஸ் லெப்பை மரைக்கார் என்பவர் “ஹைதர்சா சரித்திரம்” என்ற கதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளனர். ஊர்க்கதைகள் தொகுதியில் 101 கதைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. எனவே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்கள் பத்தொன்பதாம் நூற்றான்டின் இறுதிப்பகுதியிலேயே மரபு வழியை மீறி, ஆரம்பச்சிறு கதைகளைப் படைத்துள்ளனர் எனத் துணியலாம்.
2.3 சிறுகதை முன்னோடிகள்
1930 தொடக்கம் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று." அதற்குக் காலாக இரண்டு காரணிகள் அமைந்தன. ஒன்று ஆங்கிலக்கல்வியின் பயனாக எழுத்தாளர்களுக்கு அறிமுகமான ஆங்கிலச் சிறுகதை இலக்கியம் பற்றிய பிரக்ஞை. மற்றையது
#Yf

Page 24
spyj AgSag assi "GF as Aral' தென்னிந்தியச் சஞ்சிகைகளான நவசக்தி, சுதந்திரசங்கு, கலைமகள், மணிக்கொடி, ஆனந்தவிகடன், ஹனுமான், பாரதமணி, கிராமஊழியன், முதலியவற்றின் மூலம் அறிமுகமான சிறுகதைகள் ஏற்படுத்திய அருட்டுணர்வு. ஈழத்து முன்னோடி எழுத்தாளர்கள் மேற்குறித்த இருநிலைமைகளுக்கும் ஆட்பட்டிருந்தனர். இவற்றோடு 1930, யூன் 22 ஆம் திகதி யாழ்ப்பானத்திலிரந்து வெளிவரத் தொடங்கிய "ஈழகேசரி” பத்திரிகையின் படைப்புத் தளமும் சிறுகதைகள் கணிசமாக வெளிவரக் காரணமாயின. 1930 இல் நவீன உருவப்பிரக்ஞை கொண்ட “மரியமதலேனா” என்ற சிறுகதை இலங்கையர்கோனால் எழுதப்பட்டு கலைமகளில் வெளிவந்தது. 1931 இல் மலையகப் பத்திரிகையாளரான கோ.நடேசையர் “ஒரு இராமசாமி சேர்வையின் சரித்திரம்” மூலம் சிறுகதைத் துறைக்கு காலடி எடுத்து வைக்கிறார். 1934 இல் நவாலியூர் சோ.நடராஜன் “மாலினி” என்ற சிறுகதையுடன் ஈழகேசரியூடாக சிறுகதைத் துறைக்கு வருகிறார். 1936 இல் சிறுகதை உலகிற்குச் சோ.சிவபாதசுந்தரம் “தோட்டத்து மீனாட்சி” என்ற ஆனந்தவிகடன் சிறுகதையுடன் பிரவேசிக்கிறார். அதேயாண்டு சு.நல்லையா(கயா) "அன்னையின் கட்டளையும் அதுதான்” என்ற ஈழகேசரி சிறுகதையுடன் சிறுகதைத் துறைக்கு பிள்ளையார் சுழியிடுகின்றார். 1938 இல் ஈழத்துச் சிறுகதை உலகிற்குச் சம்பந்தன், ஆனந்தன், பாணன் ஆகிய மூவர் வருகின்றனர். கலைமகளில் சம்பந்தனின் முதலாவது சிறுகதையான "தாராபாய்,” ஈழகேசரியில் ஆனந்தனின் ஹரிஜனங்களின் கண்ணிர், அதே பத்திரிகையில் பாணனின் அவிந்த மலர் ஆகியன வெளிவருகின்றன. 1939 களில் ஈழத்துச் சிறுகதை உலகிற்குச் சி.வைத்தியலிங்கம் ஏன்சிரித்தார் என்ற கலைமகள் கதையுடன் பிரவேசிக்கின்றார். அதேயாண்டு ஈழகேசரி மூலம் பவன் என்பவர் தியாகி என்ற சிறுகதையுடன் சிறுகதை உலகிற்கு வருகை தருகிறார். ஆக இலங்கையர்கோன், கோ.நடேசையர், நவாலியூர் சோ. நடராஜன் சோ.சிவபாதசுந்தரம், சுயா, சம்பந்தன், ஆனந்தன், பாணன், சி.வைத்திலிங்கம், பவன் ஆகிய பத்துப்படைப்பாளிகளும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் முதல் முன்னோடிகளாகின்றனர்.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி குழுவைச் சேர்ந்த படைப்பாளிகளோடு, ஈழத்துப் படைப்பாளிகளும், யாழ்ப்பாணத்து ஈழகேசரி இதழ் மூலம் சிறப்பான கதைகளை எழுதி வெளியிட்டமை. இலக்கிய வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியதொன்று. "ஏற்கனவே
ጓ0

ஈழத்துச் சிறுகதை வரலாறு *செங்கை ஆழியாண்” ஆனந்தவிகடன், கலைமகள் மூலம் புதிய தமிழ் முழக்கத்தில் ஆசை கொண்டிருந்த ஈழத்தவர்களில், உயர்தரத் தமிழ்க் கல்வி கற்றுக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியர்களும் மற்றவர்களும் மணிக்கொடியின் தோற்றத்தைத் தொடர்ந்து அந்த வழியில் புதிய வடிவம் பெற்ற ஈழகேசரியில் புதிய வகைச் சிறுகதைககளை எழுதினார்கள். இவர்களில் இலங்கையர்கோன் என்ற சிவஞானசுந்தரம், சி.வைத்தியலிங்கம், க.திசம்பந்தன் என்று மதிக்கப்பெற்றவர்கள், ஈழகேசரி மூலம் பிறந்த இவர்கள் தமது கீர்த்தியை நிலைநாட்டியது தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் மூலம் - முக்கியமாகக் கலைமகள் மூலந்தான” என்கிறார். சோ.சிவபாதசுந்தரம், 'ஆரம்பகால கட்டத்தின் முக்கிய எழுத்தாளர்களாய் விளங்கியோர் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரோ" என்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினைக் காலfதியாகவும் நவீன சிறுகதை வடிவfதியாகவும் ஆராய்விற்கு எடுக்கும் போது ஈழத்தின் சிறுகதை மூலவர்களாகவும் முன்னோடிகளாகவும் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய திரிமூலர்கள் கொள்ளப்பட்டு வருகின்றனர். சிறுகதை வரலாற்றினை விபரிக்க முயலும் விமர்சகர்கள் அனைவரும் இந்த வரன்முறையை ஒரு வாய்பாடாக ஒப்புவித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமொன்றுள்ளது. தமிழக அல்லயன்ஸ் பதிப்பக உரிமையாளரான விகுப்புசாமி ஐயர் 1940-44 களில் நான்கு பெரும் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவை கதைக்கோவை என்ற பெயரில் வெளிவந்தன. முதலாவது தொகுதியில் இடம் பிடித்த நாற்பது சிறுகதைகளில் ஈழத்தினைச் சேர்ந்த சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் ஆகிய மூவரின் சிறுகதைகள் அடங்கியிருந்தன. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரால் இந்த மூவரே ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்டனர். அல்லயன்ஸ் கதைக்கோவையின் வருகை இந்த வரன்முறை ஒப்புவிப்பினை தொடர வைத்துவிட்டது எனக் கருதுகின்றேன். ஆனால் இந்த மூவருடன் ஈழத்துச் சிறுகதைமரபினை ஒரளவு ஆரோக்கியமாக எடுத்துச் சென்றவர்களான ஏனைய எழுவரும் கணிக்கப்படாது போயினர். முதல் ஈழச்சிறுகதைகளின் முன்னோடிகளான மேற்குறித்த பதின்மரைத் தொடர்ந்து, சிறுகதையுலகில் பிரவேசித்து, இப்புதிய இலக்கிய வகையைத் தெரிந்து சிறுகதை படைத்தவர்கள் சி.வி.வேலுப்பிள்ளை, அ.செ.முருகானந்தன், சோதியாகராஜன், வரதர், அ.ந.கந்தசாமி, கனகசெந்திநாதன், சு. வே, நாவற்குழியூர் நடராஜன்
3.

Page 25
Argisi āgwalloji fagos “செங்கை ஆழியாண்” இராஜ அரியரத்தினம், கே.கனேஸ், கசின், சொக்கன், சு.இராஜநாயகன், தாழையடிசபாரத்தினம், கு.பெரியதம்பி ஆகியோராவர். ஆக ஈழத்து சிறுகதையின் முன்னோடிகளாக இந்த இருபத்தாறு படைப்பாளிகளையும் கொள்ளலாம்.
2.4 காலப்பாகுபாடு
ஈழத்துச் சிறுகதை வரலாற்றினை காலவரன்முறையிலும் கருத்தியல்பு வரன்முறையிலும் வகைப்படுத்தி ஆராய்வது சிறப்பான பகுப்பு முறையாக அமையும். அவ்வகையில் 1930 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரையான காலகட்டத்தையும், சிறுகதைகள் கொண்டிருந்த கருத்து நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகுத்துக் கொள்ளலாம்.
(1) சமுதாயச் சீர்திருத்தக்காலம் 1930 - 1949 (2) முற்போக்குக் காலம் 950 - 1960 (3) புத்தெழுச்சிக் காலம் 1961 - 1983 (4) தமிழ்த் தேசியவுனர்வுக் காலம் 1983க்குப் - பின்னர்
1) ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் 1930 ஆம் ஆண்டிலிருந்து 1949 வரையிலான காலகட்டம் சமுதாயச் சீர்திருத்தக்காலமாகும். சமூகச் சீர்திருத்தத்தை மனதிற் கொண்டு ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை எழுதியுள்ளனர். அவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளும், ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகி ஈழத்துப் பத்திரிகைகளும் கைகொடுத்து உதவியுள்ளன.
2) 1950 களிலிருந்து 1960 ஆம் ஆண்டு வரையான கட்டம் முற்போக்குக் காலமாகும். முற்போக்குச் சிந்தனைகள் சிறுகதைகளிடம் பிடித்த காலகட்டமிது. சமூகம் விமர்சிக்கப்பட்டதோடு, சிறுகதை இலக்கியம் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கானதாக மாறியகாலமிது. இம் முற்போக்குக் காலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருமை சுதந்திரன், தினகரன், கலைச்செல்வி ஆகிய மூன்று பத்திரிகைகளுக்குமுரியதாகும்.
32

gigal hang ayag “arabb fra” 3) 1961 ஆம் ஆண்டிலிருந்து 1982 வரையான காலகட்டத்தை புத்தெழுச்சிக் காலகட்டமெனலாம். சிறுகதைப் பரப்பில் கருத்து வளத்தோடு கலைவளமும் இணைந்த காலமிது. சாதியம், வர்க்கியம், இனத்துவம், பெண்ணியம் போன்ற பல்வேறு கருத்து நிலைகள் சிறுகதைகளின் தொனிப்பொருளாக நிலைத்திருந்தன. சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, கலைச்செல்வி, மலர், வசந்தம், விவேகி, சிரித்திரன், மல்லிகை முதலான பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பன சிறுகதைகளுக்கு வீறுடன் களமமைத்துக் கொடுத்துள்ளன.
4) 1983 க்குப் பிற்பட்ட காலம், தமிழ்த் தேசிய இனத்துவக் காலமாகும். தமிழ்த் தேசிய இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதற்கான போராட்ட காலம். இலங்கையின் பிரதான பிரச்சினையான இனப்போராட்டத்தை இக்காலச் சிறுகதைகள் பிரதிபலிக்கின்றன. தமிழ் மக்களது இடர்களையும் அவலங்களையும் இக் காலகட்டத்துச் சிறுகதைகள் பிரதிபலிப்பதோடு, தமிழ் உரிமைக்கான போராட்டத்தைச் சரியாக நடத்தி எடுத்துச் செல்வதற்கான உளப்பக்குவத்தையும் வளர்க்க உதவுகின்றன."
ஈழத்துச் சிறுகதை வரலாற்றின், மேற் குறித்த நான்கு காலகட்டங்களிலும் தொடர்ந்து சிறுகதை படைத்து வ்ரும் ஒரேயொருவர் இலக்கிய வரலாற்றில் தி.ச.வரதராசன் என்ற வரதர் ஆவார்.
அடிக்குறிப்பு விளக்கம் 1 சிவத்தம்பி .கா பேராசிரியர் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
தமிழ் புத்தகாலயம், சென்னை - 1978, 2 ஆம் பதிப்பு பக்கம் : 25,424
2 கந்தசாமி சா சிறந்த சிறுகதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை - 1988
பக்கம் i-xi
3 மாலன், அன்று தேர்வும் தொகுப்பும், ஒறியன்ட்லாங்மன், சென்னை 1993 - wi-xy
4 மாலன். மேற்குறித்த நூல்
5 சிவத்தம்பி. கா - முற்குறித்த நுால்
6 செங்கை ஆழியான் க. குணராசா. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள், மல்லிகை,
ଜ&୩ (gld!! - 1999
(3)
33

Page 26
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிமணி”
7 கணக செந்திநாதனி, ஈழத்து இலக்கிய வளர்ச்சி, அரச வெளியீடு, கொழும்பு
1994 LJESED : 29 - 30
8 சிவத்தமபி. கா. முற்குறித்த நூல், பக்கம் : 144
9 சிவபாதசுந்தரம், சோ. கங்கா கீதம், அன்னம் வெளியீடு சென்னை, 1990,
முன்னுரையில், பக்கம் : 3
10 சிவத்தம்பி. கா. முற்குறித்த நூல் பக்கம் : 144
21 சுட்பிரமணியம் நா. ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியிட்டுக்கழகம்
யாழ்ப்பாணம். - 1978 பக்கம் : 20
12 சிவபாத சுந்தரம் சோ, சிட்டி, தமிழ்நாவல். கிறிஸ்தவ இலக்கிய சங்கம்,
சென்னை பக்கம் :1977
13 சிவத்தம்பி . கா. புதுமை இலக்கியம், இலங்கை முற்போக்கு, எழுத்தாளர்
சங்கம் கொழும்பு - 1997 பக்கம் :24
14 பிரேம்ஜி - முற்போக்கு இலக்கியம். புதுமை இலக்கியம். கொழும்பு 1997
பக்கம் ; 13
34

அத்தியாயம் மூன்று
ஈழத்துச் சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தக் காலம் (1980 -- 1949)
1900 ஆண்டிலிருந்து முதல் நான்கு தசாப்தகாலத்தைப் பொதுவாக ஈழத்துத் திறனாய்வாளர்கள் சமுதாய சீர்திருத்தக் காலமென்றே வகைப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் நா. சுப்பிரமணியம் தனது ஈழத்து நாவலிலக்கியம் என்ற நூலிலும், தமிழக எழுத்தாளர் சிட்டி, ஈழத்து மூத்த எழுத்தாளர் சிவபாதசுந்தரம் இருவரும் இணைந்து எழுதிய தமிழ் நாவல்" என்ற நூலிலும். இந்த நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களைச் சமுதாயச் சீர்திருத்தக் காலம் எனக் காலப்பாகுபாடு செய்துள்ளனர்.
எனவே, ஈழத்துச் சிறுகதைவரலாற்றில் 1930 - 1949 வரையான பத்தாண்டு காலகட்டத்தை சமுதாயச் சீர்திருத்தக் காலம் என வகுத்தல் சாலச் சிறந்ததெனப்படுகின்றது. இக்காலகட்டத்தில் சிறுகதை படைத்த ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்கள் காந்தியக் கொள்கைகளாலும், பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளாலும் பெரிதும் பாதிப்புற்றிருந்தனர். காந்தியம் சுட்டிய சாதி ஒழிப்பு, மதசமரசம், சாத்வீகனதிர்ப்பு ஆகிய கருத்துக்களாலும், பகுத்தறிவியம் (பெரியாரியம்) சுட்டிய மூடநம்பிக்கைகளுக்கு எதிரானகருத்துக்கள், பெண்ணடிமைத்தனம், விதவா விவாகம், புராண இதிகாசங்கள் பேசும் நம்பகமற்ற மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வு, அடக்குமுறைகள், நாஸ்திகம் சம்பந்தமான கருத்துக்களாலும் பாதிப்புற்ற நிலையில் ஈழத்தின் களத்தில் அவற்றைப் பொருத்திச் சிறுகதைகளைப் படைத்துள்ளனர். அவை பெரும்பாலும் சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையே கருப்பொருளாகக் கொண்டிருந்தன.
ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைத் துறையின் முன்னோடிகளென
1949 ஆம் ஆண்டிற்கு முன் எழுதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக்
குறிப்பிடலாம். ஈழத்தின் சிறுகதைத் துறையில் ஏராளமானவர்கள் 35

Page 27
*g foha), aas “செங்கை ஆழியான்”
இனங்காணப்படுகின்ற வேளைகளில் குறுகிய கால அளவினதான ஆய்வுப் பகுப்பு ஏற்றதாகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐந்து தசாப்தங்களில் சிறுகதைத் துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களில் 25 எழுத்தாளர்கள் இனங் காணப்பட வேண்டியவர்கள். இலங்கையர்கோன்,(1930) கோ. நடேசையர்,(1931) நவாலியூர் சோ. நடராஜன்,(1934) சோ. சிவபாதசுந்தரம்,(1936) சுயா,(1936) ஆனந்தன், (1938) பாணன்,(1938) சம்பந்தன்.(1938) சி. வைத்தியலிங்கம்,(1939) பவன், (1939) அசெ. முருகானந்தன்,(1940) சோ. தியாகராஜா,(1940) வரதர்,(1940) அ.ந. கந்தசாமி,(1941) கனகசெந்திநாதன்.(1943) நாவற்குழியூர் நடராஜன்,(1943) சு.வே. (1943) இராஜஅரியரத்தினம்,(1945) கசின்,(1947) சொக்கன்,(1947) தாழையடிசபாரத்தினம் (1947) கு.பெரியதம்பி.(1947) கே. கணேஸ்,(1949) சி.வி. வேலுப்பிள்ளை, (1949) சு. இராஜநாயகன்(1949) ஆகியோரே சமூகச் சீர்திருத்தக்கால முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களாவர். இவர்களது படைப்புகளுக்கு களமாக ஈழத்தில் ஈழகேசரியும், மறுமலர்ச்சியும் அமைந்தன.
3.1 ஈழகேசரி
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஈழகேசரி என்ற வார ஏடு வெளிவந்தது. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிக்க அக்கறையோடு இருபத்தெட்டாண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ஏடு ஈழகேசரியாகும். நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழ்
இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக்
கொடுத்ததோடு ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங் கண்டறியத்தந்த பெருமையும் ஈழகேசரிக்குள்ளது. ஒரு காலகட்டத்தின் இலக்கியச்சக்தி ஈழகேசரியெனில் அது ஒருபொழுதும் மிகையாகாது.
ஈழத்துப் பிரமுகர்கள் வரிசையில் குரும்பசிட்டி நா.பொன்னையா அவர்களின் முக்கியத்துவத்தினைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஈழகேசரிப் பத்திரிகை மூலம் தனது சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய இப்பெரியார் ஈழகேசரிப்பொன்னையா எனக் குறிப்பிடப்படுகிறார். 1922 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் தலைக்குமி புத்தகசாலையையும், 1928 இல் திருமகள் அச்சகத்தையும் நா.பொன்னையா ஆரம்பித்தார். நல்லதொரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டுமென்ற அவாவின் பயனாக ஈழகேசரியைத் தொடங்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
36

på figlibanji JJENTUJ -- “செங்கை ஆழிபான்” டொனமூர் அரசியற்றிட்டம் நடைமுறைக்கு வந்த காலம், தமிழ் மக்களுக்குப் பாதகமான நடைமுறைகளை விமர்சிப்பதற்கும், மக்கள் முன் அக்கருத்துக்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு பத்திரிகை அவசியமென உணரப்பட்ட வேளை, பொன்னையா அவர்கள் தன் பத்திரிகையை ஆரம்பித்தார். முற்போக்கான எண்ணங்கொண்ட அரசியல் வாதிகள் அவர் முயற்சிக்குக் கைகொடுக்க முன்வந்தனர். சர்வசன வாக்குரிமை கிடைக்கவிருக்கும் தருணத்தில் ஒரு தேசிய வெளியீட்டின் முக்கியம் உணரப்பட்டதாகப் பொன்னையா குறிப்பிடுகின்றார். அரசியல் அடிமைத்தனத்திற்கும் அந்நிய மோகத்திற்குமெதிராக மக்களின் கருத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது.
ஈழகேசரி முதலாவது இதழ் பத்திரிகையின் குறிக்கோளைப் பின்வருமாறு தன் ஆசிரியத் தலையங்கத்தில் கூறுகிறது: "அடிமைக் குழியிலாழ்ந்து அந்நியர் வயப்பட்டு. அறிவிழந்து, மொழிவளங்குன்றி, சமயமிழந்து, சாதிப்பேய்க்கு ஆட்பட்டு, சன்மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டு உறங் கசி வாழ் தலே கண் L காட்சியெனக் கொண்டாடுமிக்காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.”
குரும்பசிட்டியில் நா. பொன்னையா அவர்கள் ஆரம்பித்த இந்தப் பத்திரிகைக்கு ஈழகேசரி என்ற பெயர்வைத்தமைக்கான காரணம் மிகத் தெளிவானது. சேர் பொன் இராமநாதன் அவர்களின் நினைவுக்காக அவர் உயிர்வாழும் காலத்திலேயே இப்பெயர் சூட்டப்பட்டது.
“எமது தேச நன்மை கருதித் தமது தள்ளாத கிழப்பருவத்தில், தம்மாற் செல்லுதற்கியலாத நிலையிலும் மனைவி மக்களைத் துணை கொண்டு சாகரங் கடந்து எங்கள் அன்பானவர்களிடம் எமது குறைகளை நிவர்த்திக்க வேண்டிச் சென்றிருக்கும் எங்கள் தாதாவும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளனுந் தயாள வள்ளலும் அருட் கொடை அண்ணலும் அன்னை பணியினில் சிங்கேறுமாகிய இலங்கைச் சிங்கம் (ஈழகேசரி) கெளரவ சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பாரி சமேதராய் இங்கிலாந்து சென்றதற்கறிகுறியாகவே “ஈழகேசரி’ என்னுந் திருநாமம் புனைந்த இந்த வெளியீட்டை அன்னாருக்கு அர்ப்பணஞ் செய்து வெளியிட்டுள்ளோம்” என ஈழகேசரியின் முதலாவது இதழ் பேசுகிறது. ஈழகேசரி தொடர்ந்து 1958, ஜூன் 06 ஆந் திகதி வரை வெளிவந்துள்ளது. ஈழகேசரியின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் ஆரம்பத்தில் அமரர் நா. பொன்னையா விளங்கினார். நான்காண்டுகளின்
37

Page 28
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" பின்னர் திரு சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் அ. செ. முருகானந்தம் சிலகாலமும் அவரினை அடுத்து இராஜ அரியரத்தினமும் ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றினர். அமரர் நா. பொன்னையாவின் மரணத்துக்குப் பின் வெளியிட்டாளராக சபாரத்தினமும், இறுதிவரை ஆசிரியராக இராஜ அரியரத்தினமும் விளங்கியுள்ளனர்.
நமது பழந் தமிழ் இலக்கியங்களை வாரிவழங்கியதோடு நவீன இலக்கியத்தின் வருகைக்கும் செழுமைக்கும் ஈழகேசரி தன் கதவுகளை அகலமாகத் திறந்து விட்டிருந்தது. ஒருபக்கம் பண்டிதர்களும் வித்துவான்களும் இலக்கியத்தின் பழைமையைப் பேணும் கட்டுரைகளை எழுதிக்குவிக்க, மறுபுறம் நவீன புனைகதையாசிரியர்களும் கவிஞர்களும் தம்பங்களிப்பினை குறைவின்றி வழங்கிவந்துள்ளனர். மகா வித்துவான் சி. கணேசையர், சு. நவநீதகிருஷ்ணபாரதியார், சுவாமி ஞானப்பிரகாசர், வே, மகாலிங்கம், மு. நல்லதமயி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலானேர் இலக்கிய நயங்களைச் சுவைபடத் தந்தனர். நூறறுக்கணக்கான நவீன இலக்கியப் படைப்பாளிகள் தம் ஆக்கங்களை ஈழகேசரியில் தவழவிட்டனர்.
தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் இலக்கியப் பாலமிட்ட சோஃவ ஈழகேசரிக்கு உரியதாகும். ஈழகேசரி ஆசிரியர் பொன்னையா ஐயூர்கள் இந்தியா சென்று அங்கு அரசியற் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பினையும் ஆதரவையும் பெற்றிருந்தார். ராஜாஜி (இராஜகோபாலச்சாரியார்), நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன், தினமணி சொக்கலிங்கம் முதலான தமிழறிஞர்கள் ஈழகேசரிக்கு ஆதரவளித்தனர். ஈழகேசரியின் தலையாய சேவையைப்பராட்டி வந்துள்ளனர். தமிழகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புக்கள் ஈழகேசரியில் வெளிவந்தன.
3.1.2 ஈழகேசரிச் சிறுகதைகள்
1930 - 1958 காலகட்டத்தில் ஈழகேசரியில் 514 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இச் சிறுகதைகள் சுட்டிநிற்கின்ற பொதுப் பண்புகள் அல்லது இச்சிறுகதைகளின் சார்பாகனடுக்கக் கூடிய தகவல்கள் பின்வருவனவாம்:
38

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்’ 1. ஈழகேசரியின் ஆயுட்காலத்தில் மொத்தமாக வெளிவந்த 514 சிறுகதைகளை 158 சிறுகதை எழுத்தாளர்கள் ஆக்கியுள்ளனர். இவர்களில் சுயா(சு. நல்லையா) 38 சிறுகதைகளை எழுதி முதலிடம் பெற்றுகிறார். அடுத்து வ.அ. இராசரெத்தினம் (28), கே. டானியல் (19), அ. செ. முருகானந்தன் (18), புதுமைலோலன்(15), க. சிவகுருநாதன்(கசின்) (14), சொக்கன் (13), வரதர் (13), பவன் (12), சு. வே (11), சி. வைத்தியலிங்கம் (11), இநாகராஜன் (13), இலங்கையர்கோன் (10), ஆனந்தன் (10), எஸ்.பொன்னுத்துரை (8), எழுதியுள்னர். இவர்கள் அனைவரும் ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்தவர்கள் எனக்கொள்வதில் தவறில்லை.
2. ஈழகேசரியின் ஆரம்ப ஆண்டுகளான 1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை தானும் வெளிவரவில்லை. ஈழகேசரியின் முதலாவது சிறுகதை 1933 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிவந்தது. அளவெட்டி த. சிவலிங்கம் என்பவர் பறைச்சேரியில் தி விபத்து அல்லது வேதாந்த ஐயங்கார் என்ற சிறுகதையை எழுதியிருந்தார். ஈழகேசரியின் முதலாவது சிறுகதை எழுத்தாளர் இவரே.
3. ஈழத்துத் தமிழிலக்கியத்துக்குரிய முன்னோடி எழுத்தாளர்களான ஆனந்தன், சுயா, பாணன், அ.செ. முருகானந்தன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன், இராஜ, அரியரத்தினம், சிவபாதசுந்தரம் ஆகியோர் ஈழகேசரியில் சிறுகதை எழுதியுள்ளனர். இவர்களின் காலடியைப் பின்பற்றி சொக்கன், சு.வே, கனகசெந்திநாதன் (யாழ்ப்பாடி), கசின், வரதர், வ. அ. இராசரெத்தினம், புதுமைலோலன், பரணி, இ. அம்பிகைபாகன், சு. இராஜநாயகன் முதலானோர் தம் படைப்புகளை ஈழகேசரியில் பதிவு செய்திருந்தனர். அத்துடன் இன்று கணிப்பிற்குரிய எழுத்தாளர்களாக விளங்குகின்ற எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், சிற்பி, டொமினிக ஜீவா, என்.கே. ரகுநாதன், மகன்(நந்தி) குறமகள், இ.நாகராஜன், அ.ந.க, கலைப்பித்தன் (சோமகாந்தன்) ஆகியோரின் ஆரம்ப எழுத்துருக்களுக்கு ஈழகேசரி தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. எனவே ஈழகேசரியில் மூன்று தலைமுறை எழுத்துக்கள் இடம்பிடித்துள்ளன.
39

Page 29
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” 3.1.3 ஈழகேசரிச் சிறுகதைகளின் இலக்கியப் பங்களிப்பு
தமது பழம்பெரும் இலக்கியப் பாரம்பரியங்களைப் பேணி, புதுமை இலக்கியத்தினை வளர்த்தெடுப்பதில் ஈழகேசரி தனது பண்புகளை நன்கு நிறைவேற்றியள்ளது. ஈழகேசரியின் மகுடவாசகம் முதலில் “எவ்வுயிர்க்கும் அன்பாகவிரு” என்பதாக விளங்கியது. 1940 ஈழகேசரியின் மகுட வாசகம் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்பதாக மாறியது. மகுடவாசகத்தின் மாற்றத்திற்கேற்ப ஈழகேசரியில் வெளிவந்த நவீன இலக்கிய வடிவங்களும் தம்பொருளாக அவற்றைப் பிரதிபலித்தன.
ஈழகேசரிப்பண்ணையில் ஒன்று சேர்ந்த எழுத்தாளர்களுக்குப் புத்திலக்கியம் பற்றிய தெளிவும் நவீன இலக்கிய வகைகளும் தெரிந்திருந்தன. அவர்களது எழுத்துக்களை, துாக்கிப் பார்க்கும் போது அவர்கள் இலக்கியத்தை ஒரு சமுதாயக் சக்தியாக் கருதிச் செயற்பட்டிருந்தனர். சாதியக் கொடுமைக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அவர்கள் தமது எழுத்துக்களில் போர்க்குரல் தந்துள்ளனர். அவர்களது படைப்புக்களில் ஜனரஞ்சகத்தன்மை கூடுதலாகவிருந்தாலும் அவர்களில் அன்று சிலர் எழுதிய எழுத்துகளின் உச்சத்தினை மேவி. பின்வந்த காலத்தில் எத்தனை படைப்புக்கள் தேறின எனப் பார்க்கும் போது கவலையுன்டாகின்றது. இலக்கியமென்பதன் சித்தாந்தங்களையும் வரையறைகளையும் பயிற்சிகளையும் எழுத்துப்பட்டறைகளையும் வழிகாட்டியாக கொண்ட காலத்தில் அதாவது 1953 இன் பின்னர் ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் எத்தனை மலர்ந்துள்ளன எனப் பார்க்கவேண்டும். ஈழத்து தமிழ் இலக்கியம் ஈழத்தின் மண்வாசனையைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் ஈழகேசரிப்பண்னை எழுத்தாளர்களுக்குத் திடமான தெளிவிருந்தது. 1954 களில் மண்வாசனையை ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்துவதற்கு முன்னரே அவர்களின் எழுத்துக்களில் மண்வாசனையும் சோசலிச யதார்த்தப் பண்பும் விரவி வந்திருக்கின்றன என்பதற்கு இச் சிறுகதைகள் சான்றாகின்றன. விமர்சகர்கள் பொதுவாகக் கூறுவது போல் அவர்கள் கற்பனை ரதத்தில் பயணம் செய்து தமக்கு பரீட்சயமில்லாத மெரீனாக் கடற்கரைகளைத் தம்படைப்புக்களில் சித்திரிக்கவில்லை. தம் பிரதேசத் தினைக் களமாகவும் தம்மைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பொருளாகவும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.
40

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆறியாள்"
காலகட்டத்தினை மனதிற் கொண்டு ஈழகேசரிச் சிறுகதைகளைக் கணிக்கும் போது தரமான தமிழகச் சிறுகதைகளுக்கு நிகரான நல்ல சிறுகதைகள், தரமான சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. அந்தத் தரமான சிறுகதைகளை மிஞ்சிய ஒரு பாய்ச்சலைக் கொண்ட சிறுகதைகள் ஈழகேசரி காலத்திற்குப் பின்னர் ஈழத்தில் எதிர்பார்த்தளவு வெளிவந்துள்ளனவென்று கூறுவது முற்றிலும் சரியான கணிப்பீடன்று. புனைகதை பற்றி ஈழகேசரிப் பண்ணையில் எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் விளக்கத்திற்கு அப்பால் இன்று ஈழத்தின் பிரபல்யமான எழுத்தாளர்கள் எவ்வித மாற்றத்தையும் செய்து விடவில்லை. ஈழகேசரிச் சிறுகதைகள் நமது ஒரு காலகட்டத்து இலக்கிய இருப்பினை அறிய உதவுகின்ற அதேவேளை ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுக்கு அது பெரும் களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
3.2 மறுமலர்ச்சி
தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றினை எடுத்துக் கொள்வோர் மணிக்கொடிக்காலம் என்றொரு காலகட்டத்தை வரையறுப்பது போல, ஈழத்துச் தமிழ்ச்சிறுகதை வரலாற்றை எழுதுவோர் மறுமலர்ச்சிச் சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தை முதன்மைப்படுத்துவர். 1933 இல் தமிழகத்தரில் வெளிவந்த மணிக் கொடி சஞசிகை 1936 இடைநிறுத்தப்ட்டுப்பின் 1949 வரை வெளிவந்தது. மணிக்கொடி மூலம் புதுமைப்பித்தன் பி. எஸ். இராமையா, நபிச்சமூர்த்தி, பெகோ.சுந்தர்ராஜன், கு.ப. இராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சிதம்பரசுப்பிரமணியம், மெளனி, பி.எம். கண்ணன் முதலான ஆற்றல் வாய்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் தமிழுக்கு கிடைத்தனர். இலங்கையர்கோன, கே. கணேஸ் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளும் மணிக்கொடியில் பிரசுரமாயின. அச்சஞ்சிகையின் தாக்கம் யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களிடம் பிரதிபலித்தது. அதன் விளைவாக 1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் எழுத்தாளர் சங்கமொன்றை நிறுவிக் கொண்டனர். இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம். இச்சங்கத்தை திசவ. (திச. வரதராசன்), அ.செ.மு (அ.செ. முருகானந்தன்), க.கா.ம. (க.கா. மதியாபரணம்), க.செ.ந. (க.செ. நடராஜன்), ச.ப.ச(பஞ்சாட்சரசர்மா) வை. ஏகாம்பரமூர்த்தி(ஈழத்துறைவன்) கனகசெந்திநாதன்(இரசிகமணி), அ.ந.க. (கந்தசாமி) முதலானோர் இணைந்து உருவாக்கினர்."
41.

Page 30
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
13.06.1943 இல் இச்சங்கத்தின் ஆரம்பக்கூட்டம், யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் உள்ள ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் விட்டு விறாந்தையில் நடைபெற்றது. இச் சங்கத்தை நிறுவ வேண்டுமென்று சிந்தித்து அசெ.மு, அ.த.க, உருத்திரமூர்த்தி, கனகசெந்திநாதன், ச. பஞ்சாட்சரசர்மா, நாவற்குழியூர் நடராஜன் முதலியவர்களுக்குக் கடிதங்கள் எழுதி அவர்கள் மூலமாக இன்னும் சில இலக்கிய நண்பர்களையும் சேர்த்து அந்தச் சங்கத்திற்குச் பிள்ளையார் சுழி போட்டவர் பதினெட்டு வயதான வர்தர் ஆவார். புதுமைப்பித்தர்கள் சங்கம் என்று ஆரம்பத்தில் பிரரேரிக்கப்பட்ட பெயர், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக் சங்கமென பெயர் இடப்பட்டது. மறுமலர்ச்சி என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது."
ஆரம்பத்தில் மறுமலர்ச்சி ஒரு கையெழுத்துப் பத்திரிகையாக நடத்தப்பட்டது. 1946 ஆம் ஆண்டு பங்குனிமாதம் தொடக்கம் பார்வதி அச்சகத்தில் அச்சேற்றப்பட்டு மாதசஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. மறுமலர்ச்சி வெளியிட்டாளராக அமரர் க.செ. நடராஜனும், ஆசிரியர்களாக தி.ச. வரதராசனும், அ.செ. முருகானந்தனும் பொறுப்பேற்றிருந்தனர் 1948 ஆம் ஆண்டுதைமாதத்தில் வெளிவந்த 18வது இதழிருந்து 24வது இதழ் வரை அ.செ. முருகானந்தனுக்குப் பதிலாக ச. பஞ்சாட்சரசர்மா வரதரோடு ஆசிரியராக விளங்கியுள்ளார். சராசரி 32 பக்கங்களைக் கொண்டதாக 1946 பங்குனி மாதத்திலிருந்து 1948 ஐப்பசி மாதம் வரை மொத்தமாக 24 இதழ்கள் வெளிவந்துள்ளன.
மறுமலர்ச்சி ஏடு தனது குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கியப் பரப்பில் சாதித்தவை மிக மிக அதிகமாகும். புதிய பல எழுத்தாளாகள் உருவாகினர். தமிழகத்தில் சிறுகதைத் துறைக்கு மணிக்கொடி எப்படிப் புத்துக்கம் அளித்ததோ அதே போலவே ஈழத்திலும் சிறுகதைத் துறைக்கு மறுமலர்ச்சி புதியதோர் உத்வேகத்தை அளித்தது. உலகளாவிய தரத்திற்கு மறுமலர்ச்சிச் சிறுகதைகள் அமையாவிட்டாலும் அவை வெளிவந்த காலகட்டத்தில் சிறுகதையின் வடிவத்தையும் செழுமையையும் புரிந்து கொண்டு படைக்கப்பட்ட இலக்கிய ஆக்கங்களாக அவையுள்ளன. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு மறுமலர்ச்சிச் சிறுகதைகள் அடித்தளமாக அமைந்தன. வெளிவந்த 24 மறுமலர்ச்சி இதழ்களில் 52 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவற்றினை அ.செ. முருகானந்தன், சம்பந்தன், இலங்கையர்கோன், வரதர், து, உருத்திரமூர்த்தி, சுவே, நாவற்குழியூர் நடராஜன், வல்லிக்கண்ணன், இராஜநாயகன், கு. பெரியதம்பி,
42

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” பொ. கதிராயத்தேவி, சொக்கன், பத்மாதுரைராஜா, நடனம், வே. சுப்பிரமணியம், தாழையடி சபாரத்தினம், கார்த்திகேயன், எஸ். பூரீநிவாசன், இ. பொன்னுத்துரை, எம். எஸ் கமலா, தியாகராஜன் முதலானவர்கள் படைத்துள்ளனர்.
தமிழகத்தில் மணிக்கொடிக் காலம் போல ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலம் அடையாளம் காணப்பட்டது. ஈழகேசரியில் நிறையவே எழுதிய படைப்பாளிகள் மறுமலர்ச்சிப் பத்திரிகையிலும் எழுதியுள்ளனர். இவர்கள் ஈழகேசரிப் பண்ணையில் உருவாகியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. மறுமலர்ச்சி சஞ்சிகையில் அ. செ. முருகானந்தனின் சில சிறுகதைகள் வெளிவந்தன ஆனால் ஈழகேசரியில் அவரின் 18 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வரதரின் சிறுகதைகள் ஈழகேசரியில் 13 வரையில் வெளிவந்துள்ளன. வரன், வரதர், தி. ச. வரதராசன் எனப் பல பொயர்களில் ஈழகேசரியில் எழுதியுள்ளார். மறுமலர்ச்சியில் வெளிவந்த 52 மொத்தச் சிறுகதைகளில் பத்தளவில் அவருடையவை. ஈழகேசரியில், 14 சிறுகதைகள் எழுதிய சொக்கன் மறுலர்ச்சியில் ஒரேயொரு சிறுகதை எழுதியதன் மூலம் எப்படி மறுமலர்ச்சி எழுத்தாளரானார் என்பது வியப்பானது. ஈழகேசரியில் 11 சிறுகதைகள் எழுதியிருக்கும் சு. வே. மறுமலர்ச்சியில் 3 உருவகக் கதைகளை எழுதியிருக்கிறார். சில விமர்சகர்களால் ஈழகேசரிப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளராகவும் சிலரால் மறுமலர்ச்சி எழுத்தாளராகவும் கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி ஈழகேசரியில் 1942 இல் குருட்டு வாழ்க்கை என்ற தனது ஆரம்பக் கதையொன்றினை மட்டுமே எழுதிள்ளார். மறுமலர்ச்சியில் அ.ந.கந்தசாமியின் ஒரு சிறுகதை தானும் வெளிவரவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்துடன் அவர் இருந்தார் எனபதற்காக அவரை மறுமலர்ச்சி எழுத்தாளராக இனங்காண்பது இலக்கிய வரலாற்றுத் தவறாகும். உண்மையில் மறுமலர்ச் சிச் சஞ்சிகை மூலம் உருவாகிய எழுத்தாளர்களென கு. பெரியதம்பியையும் தாழையடி சபாரத்தினத்தையும் மட்டுமே குறிப்பிட முடியும்.
மறுமலர்ச்சியில் வெளிவந்த 52 சிறுகதைகளில் 25 சிறுகதைகள் செங்கை ஆழியானால் தொகுக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் 1997 இல் நூலாக வெளிவந்துள்ளது. இதனை நுாலுருவில் வெளியிட மூலகர்த்தாவாக விருந்தவர் கல்வியமைச்சின் செயலாளராக விளங்கிய சுந்தரம் டிவகலாலா ஆவார். இலக்கிய உலகில் இது ஒரு பெரும் பணியாகும். ஒரு காலகட்டச் சிறுகதைகளை ஆவணப்படுத்தியுள்ளார்.
43

Page 31
ஈழத்துச் சிறுகதை வரலாறு “GEM005 gyptus 16ë”
3.3 சிறுகதை முன்னோடிகள்
ஈழத்துச் சிறுகதைகளின் சமுதாயச் சீர்திருத்தக்கால வரலாற்றின் முன்னோடிகளை சற்று விபரமாக ஆய்வு செய்வோம்.
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இதுவரை காலமும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைக்கு புத்துாக்கமும் புதிய வடிவமும் வழங்கியவர்கள் என்பதில் ஐயமிலி லை சி. வைத்தியலிங்கம், இலங்க்ையர்கோன் ஆகிய இருவரும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்கள். சிறுகதையின் மேலைத்தேயப் பண்புகளையும் வளர்ச்சி நிலைமைகளையும் தெரிந்தவர்கள். ஆதலால் இவர்களின் சிறுகதைகளில் வடிவமும் உள்ளடக்கமும் நன்கு விரவிக் காணப்பட்டன. சம்பந்தன் அவர்கள் தமிழும் வடமொழியும் நன்கு கைவரப் பெற்றவர். அத்தோடு நவீன சிறுகதையின் தார்ப்பரியங்களைத் தெரிந்தவர். இவர்கள் மூவரும் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் சிறுகதைத்துறையில் சாதனைகளைப் புரிந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலானோரின் சிறுகதைகளையும் கலைமகள், கிராமஊழியன், ஆனந்தவிகடன், மணிக்கொடி, சக்தி முதலான சிறுகதைகளுக்கு முதலிடம் கொடுக்கும் தமிழகப் பத்திரிகைகளையும் வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் படைத்த கதைகளில் அவைகளின் தாக்கமும் செல்வாக்கும் இருப்பதைக் காணமுடியும். எனவேதான் இந்த மூவரினதும் சிறுகதைகள் நவீன சிறுகதையின் அழுத்தமான பண்புகளைத் தம்முள் கொண்டிருக்கின்றன.
3.3.1 இலங்கையர்கோன்
இலங்கையர்கோனின் (த. சிவஞானசுந்தரம்) கல்விப் பின்னணியும் காரியாதிகாரியாகக் கடமை செய்த நிர்வாகப் பின்னணியும் அவரது சிறுகதைப் படைப்புக்களின் நவீன பண்புகளையும் களங்களையும் நிர்ணயித் தருகி கரின்றன. ஆங்கில இலக் கியத் தின

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியானி
செல்நெறிகளை இலங்கையர்கோன் நன்கு தெரிந்திருந்தமையால் அவரது சிறுகதைகளில் உணர்வுபூர்வமான சித்திரிப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. பாரததேவி, சக்தி, சூறாவளி, கிராமஊழியன், சரஸ்வதி ஆகிய தமிழக ஏடுகளிலும் ஈழகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி, வீரகேசரி முதலான ஈழத்து ஏடுகளிலும் நிறைய எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு வலுவூட்டிய மணிக்கொடியின் கடைசிக்கால இதழ்களில் இலங்கையர்கோனின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரால் படைக்கப்பட்ட சிறுகதைகளில் வெள்ளிப்பாதசரம் ஈழத்தின் உன்னதமான கதைகளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. இந்த மண்ணின் வாசனை நன்கு செறிந்த சிறுகதை அதுவாகும். வஞ்சம், கடற்கரைக் கிளிஞ்சல் என்பன சிறப்பான ஏனையர் சிறுகதைகளாகும். இவரது பதினைந்து கதைகளின் தொகுப்பாக வெள்ளிப்பாதசரம் உள்ளது. : بس«
இலங்கையர்கோன் மிகச் சிறு வயதினிலே 18, 19 வயது நடக்கும் போதே எழுதத்துணிந்துவிட்டார். ஆரம்ப காலத்தில் பல ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்த்துத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார். இதிகாச சரித்திரக் கதைக் கருக்களைக் வைத்துக் கொண்டு எழுதும் சுலபமான முயற்சியை அடுத்து மேற்கொண்டார். கலைமகள் பத்திரிகையிலே அவரது கதைகள் அதிகம் வெளிவந்தமையால் இலங்கைச் சரித்திரம் சம்பந்தமான கதைகள் தென்னிந்திய தமிழ் மக்களுக்கு புதுமையாக இருக்கும் என்ற எண்ணத்தாலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படலாம் என்ற நினைவினாலும் அவர் அவற்றை எழுதியிருக்கலாம். அனுலா, சிகிரியா, யாழ்பாடி முதலிய சரித்திரக் கதைகளும், மரியமதலேன, மேனகை, தாய் முதலிய இதிகாசக் கதைகளும் அவரால் எழுதப்பட்டுள்ளன,
சரித்திர, இதிகாச, புராணக் கதைகளை வெறுமனே பத்திரிகைக் கதைகள் என ஒதுக்கி விட்டாலும் இலங்கையர்கோனின் சமூகக் கதைகளை அவ்வாறு தள்ளிவிட முடியாது. வெள்ளிப்பாதசரம், மனிதக்குரங்கு, தாழைமரநிழலிலே, சக்கரவாகம், நாடோடி, மச்சாள், கடற்கரைக்கிளிஞ்சல், வஞ்சம் முதலான சமூகக்கதைகளில் யாழ்ப்பானம் வெறும்களமாக மட்டுமமையாது, இந்த மண்ணின் வாழ்க்கை அம்சங் களும் மானிடநடத்தைகளும் சிறுகதையின் பொருளாகியுள்ளன. இலங்கை யர்கோனின் வெள்ளிப்பாதசரம் மண்வாசனைக்குரிய சிறுகதை இலக்கண மாகின்றது. புதுமணத் தம்பதியரிடையே வல்லிபுரக் கோயிலில் ஏற்படும் ஊடலை மிகத் தத்ருபமாக அவர் வெள்ளிப்பாதசரத்தில் சித்திரித்துள்ளார். இச் சிறுகதை மண்வாசனைக்கு தக்க உதாரணம் என்றால் அவரின்
45

Page 32
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” வஞ்சம் என்ற சிறுகதை கல:பூர்வமான சிறுகதை ஒன்றிற்கு உதாரணமாகும். இரண்டு சேவு பகளை வைத்து 1939 களில் பாரத தேவியில் அவர் எழுதிய மஜிக்கல் நிஜலிஷக் கதை வஞசம். மனிதமனத்தின் காம இச்சையைக் கோழிகளில் வைத்து இலங்கையர்கோன் இச் சிறுகதையைப் படைத்துள்ளார்.
சரித்திர புராணக் கதைகளை எழுதும் போது மிகவும் கம்பீரமான தமிழ் நடையையும் சமூகக் கதைகளை எழுதும் போது மிக இயல்பான வழங்கு தமிழையும் இலங்கையர்கோன் தனது சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். நிறைய உதாரணங்களைக் கூறலாம். “பூத்துக்குலுங்கும் ஒரு மகிழின் கீழ் வெண்பட்டணிந்து கருங்கூந்தல் தோளில் புரள தெய்வ மயன் கடைந்து நிறுத்திவிட்ட தந்தப்பதுமை போல் நின்றாள். அவள் இதழ்க்கடையில் ஓர் இளமுறுவல். கண்ணிலே ஒரு தாபம். ஓர் அழைப்பு விசுவாமித்திரருடைய மனம் கல்லாய்ச் சமைந்து போக, உடல் அவள் நின்றிருந்த திக்கை அடி எடுத்து வைத்தது’ - மேனகை புராணக்கதை
தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியையும் தனக்கு ஒரு தையற் பெட்டியையும் வாங்க வேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாகக் குவிந்து கிடந்தன, - வெள்ளிப்பாதசரம், - சமூகக்கதை."
இலங்கையர்கோன் பல் திறன் கொண்ட ஒரு படைப்பாளி சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சங்கிதம், விமர்சனம் ஆகிய பன்முகங் கொண்ட கலைத்திறன் அவரிடமிருந்தது.
3.3.2 சம்பந்தன்
தமிழ்ச் சிறுகதைகளுக்குச் அழுத்தமான காவிய மரபினைத் தந்தவர் சம்பந்தனாவார். கலைமகள், கிராமஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் இருபதிற்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும் உள்ளடக்கமும் அழகாகவும் ஆழமாகவும் அமைவதற்குச் சம்பந்தன் அவர்களின் ஆரம்ப காலச் சிறுகதைகள் உதவின எனலாம். இவர் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதான மனிதனின் அடிப்படைப் பண்புகள் அழியாத உருவில் எழுந்திருப்பதால் இவரின் இலக்கியப் பாங்கு
46

ஈழத்துச் fyāað GUg “Fügos ஆழியாள்" . . .
செம்மையானதாகவும் தனித்துவமானதாகவும் அக்காலத்திலேயே விளங்க்கின. ‘மனித உணர்வுகளையும் மன அசைவுகளையும் மனோதத்துவ முறையில் அவற்றின் சிறப்புக்களைக் கலையாக்கிய பெருமை சம்பந்தனுக்குரியது.* சம்பந்தனின் சிறுகதைகளில் ஆத்ம தத்துவ விசாரணை மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும். 1938 களில் சிறுகதைத் துறைக்குவந்த சம்பந்தனை 'முழுழையாகக் தெரிந்து கொள்வதற்கு அவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றில்லாதிருந்தமை பெருங் குறையாகும். அவரின் சிறுகதைகளில் பதினைந்தை 1998 இல் சம்பந்தன் சிறுகதைகள் என்ற பெயரில் செங்கை ஆழியானும் செம்பியன் செல்வனும் தொகுத்து வெளியிட்டனர். அவரின் ஏனைய சிறுகதைகளும் (இன்னொரு பத்திருக்கும்) தொகுப்பாக வெளிவரல் வேண்டும்.
"ஈழம் நவீன இலக்கியத்தில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்பதற்குச் சிறுகதைத்துறை காரணமாயின் அப்பெருமைக்கு வித்திட்டவர் சம்பந்தனாவார். தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் பிரவேசித்த சம்பந்தனின் முதற் சிறுகதை தாராபாய் 1939 இல் கலைமகளில் வெளிவந்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையிடம் பாடம் கேட்டுப் புடம் போடப்பட்டவர். ஆசிரியப்பணியில் தமிழ் ஆசிரியராக ஈடுபட்டு, இந்தியத் தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் அதன் விளைவான பாதிப்புக்களையும் உள்வாங்கியவர். காந்திய வாதியாக உருவாகியவர்," ,
சம்பந்தனைத் தக்க சிறுகதை ஆசிரியராகத்தான் தமிழுலகம் நன்கறியும். இன்று வரை அவர் எழுதிய இருபது வரையிலான சிறுகதைகள் கலைமகள், கிராமஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மகாலட்சுமி, மதம், சலனம் விதி, துாமகேது, இரண்டு ஊர்வலங்கள், அவள், துறவு, சபலம், பிரயாணி, தாராபாய், புத்தரின் கண்கள், மனித வாழ்க்கை, மனிதன், அவன், கலாசேத்திரம், கூண்டுக்கிளி ஆகியன அவரின் சிறுகதைகளாம்.
*கலைமகளில் வெளிவந்த விதி என்ற சிறுகதை அல்லயன்ஸ் கம்பனியார் வெளியிட்ட கதைக் கோவை என்ற சிறுகதைத் தொகுதியில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைச்செல்வி சிற்பி தொகுத்து வெளியிட்ட ஈழத்துச்சிறுகதைகள் என்ற தொகுப்பில் இவரது சிறுகதை மனிதன் இடம் பெற்றுள்ளது. செம்பியன் செல்வன்செங்கை ஆழியான் ஆகியோர் மிக முனைந்து தேடிப் பெற்ற இவரின் ஐந்து சிறுகதைகள் 1967 ல் விவேகி சஞ்சிகையில் சம்பந்தன் மலராக வெளிவந்தன, செ. யோகநாதன்-யோ. சுந்தரலட்சுமி ஆகியோர் தொகுத்து
47

Page 33
gắgủ điề0%, điêu “Gohainbasi, «gurea” வெளியிட்ட ஒரு கூடைக் கொழுந்து என்ற சிறுகதைத் தொகுதியில் சம்பந்தனின் துறவு, வி. ஆகிய இரு சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.
“தேர்ந்தெடுத்த சொற்களை வைத்துக் கொண்டு ஓரிரண்டு பாத்திரங்களையே நடமாடச் செய்து அற்புதமான சிறுகதைகளைப் படைக்கும் கலை அவரிடம் இலாவகமாக அமைந்துள்ளது. எண்ணிக்கையில் நம்பிக்கை வைக்காமல் தரம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு தான் எழுதும் சிறுகதைகளை அற்புதமாக எழுதுவதென்ற புகழுக்குரியவர்." அவரது கதைகளிலே கால தேச வர்த்தமானங்களைக் கடந்த சர்வதேசச் சூழலில் வாழ்வதற்குச் அத்தியவசியமான பொதுமானிடப் பண்புகள் அழகிய உருவங்களாக வெளிவருவதைக் காணலாம்.
சிறுகதை மூலம் தமிழுக்கு அறிமுகமான சம்பந்தன் பிற்காலத்தில் "சிறுகதைகள் அமர இலக்கியமாகா' எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதனால்தான் நாற்பது வருடங்களுக்கு முன்னரே சிறுகதை எழுதுவதைக் கைவிட்டுக் காவியம் இயற்றுவதில் நாட்டமதிகம் கொண்டார். பாசம் என்ற நவீன உரைநடை நாவலைப் புனைந்த இக் கவிஞர் ஆக்கிய கவிதை நூல் சாகுந்தல காவியமாகும். சிறுகதை எழுத்தாளர் சம்பந்தன் கவிஞராகியதுதான் அவரது உண்மைச் சொரூபம். “இலக்கியம் சத்திய நெறிப்படுவது உன்னதமாகிய பண்புகள் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில் பொழுது போக்காக அமைவதில்லை" என்பது இலக்கியம் பற்றிய
சம்பந்தனின் கருத்துக்கள். 333 சி.-வைத்தியலிங்கம்
'ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு புது நீர் பாய்ச்சிய சி. வைத்தியலிங்கம் ஏறக்குறைய 23 சிறுகதைகள் வரையில் எழுதியுள்ளார். ஆங்கில, சமஸ்கிருத மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவராக விளங்கியமை அவருடைய சிறுகதைகள் சரியான தடத்திலி அமையவும் உரைநடையைக் கவிதா பண்போடு பயன்படுத்தவும் உதவியிருக்கின்றன. இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் எழுத்துருக்களின் செல்வாக்கினைக் காணலாம், கு.பா.ரா. போல மன உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தென்னிந்தியப் பத்திரிகைகளை மனதில் கொண்டு எழுதப்பட்டவை
48

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
ஆதலால் பெரும்பாலான சிறுகதைகளில் தூய தமிழ் நடை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரின் சிறுகதைகள் சரித்திரக் கதைகளாகவும் சமூகக்கதைகளாகவும் உள்ளன. ஈழகேசரி, ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ரவீந்திரன் என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார். இவரது சமூகச் சிறுகதைகளில் கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் மண்வாசனையோடு கலந்திருக்கும். கங்காகிதம், பாற்கஞ்சி, நெடுவழி, மூன்றாம்பிறை என்பன இவரது சிறந்த சிறுகதைகள் என அடையாளங் காணப்பட்டுள்ளன. ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர், 1990 இல் சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் பதினேழு தொகுக்கப்பட்டு கங்காகிதம் என்ற பெயருடன் வெளிவந்தது. இதனை சோ. சிவபாதசுந்தரம் தொகுத்துள்ளார். தமிழக அன்னம் வெளியீட்டினர்
பதிப்பித்துள்ளனர்.
சி. வைத்தியலிங்கம் தனது பதினைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். முப்பத்தைந்தாவது வயதில் சிறுகதை எழுதுவதை நிறுத்திக் கொண்டார். 1939 தொட்டு 1956 வரையிலான காலகட்டத்தில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மின்னி மின்னி மறைந்த வாழ்க்கை, கோட்டை இடிந்தது, விதவையின் இருதயம், இரவு கழிந்தது, நெடு வழி. என் காதலி, இப்படிப்பல நாள், உள்ளப் பெருக்கு , கடல் கடந்து வந்த சிலை, சுபாசினி, புல்லுமலையில், மரணத்தின் நிழல் ஆகிய பன்னிரண்டு சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. ஏன் சிரித்தார், களனி கங்கைக் கரையிலே, பார்வதி, தியாகம், நந்தகுமாரன், ஏமாளிகள், பூதத்தம்பிக் கோட்டை, அழியாப் பொருள், பைத்தியக்காரி, மூன்றாம் பிறை ஆகிய சிறுகதைகள் பத்தும் கலைமகளில் வெளிவந்தன. கங்காகிதம், கிராமஊழியனிலும், பாற்கஞ்சி ஆனந்த விகடனிலும் வெளிவந்தன. அல்லயன்ஸ் கதைக்கோவையில் மூன்றாம் பிறை இடம்பிடித்துக் கொண்டது. கல்கி இலங்கைக்கு வந்தபோது, அவர் பெற்றுச் சென்று ஆனந்த விகடனில் பிரசுரித்த சிறுகதை பாற்கஞ்சி.
சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் இலங்கையர்கோனைப் போலவே வரலாற்று சமூகச் சீர்திருத்தக் கதைகளே. தியாகம், நந்தகுமாரன், பூதத்தம்பிக் கோட்டை என்பன சரித்திரக் கதைகள். ஏனையவை சமூகச் சிறுகதைகள். இலங்கைக் களத்தையும் மக்களது வாழ்க்கை நெறிகளையும் வைத்து இவரால் சிறுகதைகள் எழுதப்பட்ட போதிலும் இந்த மண்ணின் வாழ்வை ஆழமாக அவை சித்திரிக்கவில்லை
49

Page 34
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
எனப்படுகின்றது. இவரது கதைகள் ஓரளவு செந்தமிழ் வழக்கில் எழுதப்பட்டமையால் அவை பிரதேச வாசனையுடைய சிறுகதைகளாக உருவாகாது போயின.
சி. வைத்தியலிங்கத்தின் நெடுவழி, உள்ளப் பெருக்கு, பாற்கஞ்சி ஆகிய மூன்று சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பங்களிப்பு செய்துள்ளன எனக் கொள்ளளாம். ஏன் சிரித்தார், மின்னல், களனிகங்கைக் கரையிலே முதலான சமூகக் கதைகள் பெரும்பாலும் காதலையும் குடும்ப உறவு நிலைகளையும் கருவாகக் கொண் டவை. சமுதாயசீர்திருத்தத்தையோ மூடநம்பிக்கைகளுக்கெதிரான குரல்களையோ அவை கொண்டிருக்கவில்லை. அவரின் சரித்திரம் சார்ந்த சிறுகதைகளும் இலங்கையர்கோனின் சரித்திர புராணக் கதைகளைப் போன்று கம்பீரமான உரைநடையைக் கொண்டனவல்ல. இந்தியப் பத்திரிகைகளை மனதிற் கொண்டு எழுதப்பட்டமையால் கதைப்போக்கு உரையாடல் என்பன வெறும் பத்திரிகைக் கதைகளாகவே வெளிவந்துள்ளன. மேற்குறித்த மூன்று சிறுகதைகளைத் தவிர ஏனைய சிறுகதைகளில் இலங்கையர்க்கோனின் சிறுகதைகள் பலவும் கட்டும் யாழ்ப்பாண மண்ணின் இரசனையையோ, சம்பந்தனின் சிறுகதைகள் கட்டும் கலை அழகையோ எட்டவில்லை என்பேன். அவர் தனது முப்பத்தைந்தாவது வயதில் சிறுகதை எழுதுவதைக் கைவிட்டார். அதனால் அவரது ஆரம்பகாலக் கதைகள் முதிர்ச்சியற்ற இளைஞனின் கனவு நினைவுகளாக உள்ளதில் வியப்பில்லை.
சி. வைத்திலிங்த்தின் நெடுவழி ஈழசேரியில் வெளிவந்தது அக்காலவேளையில் அதன் கருவுக்காக விதந்துரைக்கப்பட்டது. அவரின் சிறந்த சிறுகதையென ஆனந்த விகடனில் வெளிவந்த பாற்கஞ்சியையே குறிப்பிடமுடியும். அவரின் சிறந்த சிறுகதை பாற்கஞ்சியேயாகும். பாற்கஞ்சி யாழ்ப்பாணக் கிராமமொன்றின் ஏழைத்தாயையும் அவரது பிள்ளையையும் தத்துருபமாக சித்தரிக்கும் படைப்பாகும். தன் பிள்ளைக்கு ஒவ்வொரு நாளும் வெறும் கூழை வழங்கிவரும் தாயைப் பார்த்து பாற்கஞ்சி தரும்படி மகன் கேட்கிறான். 'வயல் விளைந்ததும் தருவதாக வாக்குறுதியளிக்கிறாள். "நெற்கதிர்கள் பால்வற்றி பசுமையும் மஞ்சளும் கலந்த செங்காயாக மாறிக்கொண்டிருந்தன. இன்னும் பதினைந்து நாட்களினில்.” எதிர்பார்ப்பு நிறைவேறி வடும். ஆனால், இயற்கையின் வஞ்சனையால் அழிந்து போகும் வயலின் விளைச்சல், குழந்தையின் பாற்கஞ்சிக்கான எதிர்பார்ப்பை தரைமட்டமாக்குகிறது.
50

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிான்”
சி. வைத்தியலிங்கம் இலங்கையர்கோன, சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைக்கு ஆற்றிய பணிகளையும் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. ஈழகேசரிப் பத்திரிகையின் மூலம் சிறுகதைத் துறைக்கு புகுந்த இவர்கள் தமது கீர்த்தியை நிலைநாட்டியது தமிழகப் பத்திரிகைகள் மூலந்தான் என்ற சோ. சிவபாதசுந்தரத்தின் கூற்று ஏற்புடையதன்று. ஏனெனில் இலங்கையர்கோனின் முதற் சிறுகதையானது மரியமதலேனா 1930 களில் கலைமகளில் வெளிவந்தது. மேலும் ஈழகேசரியில் சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் வெளிவருவதந்கு முன்னரேயே கலைமகளில் வெளிவந்துள்ளன. சம்பந்தனின் முதற்படைப்பான தாராபாய் 1938 களில் கலைமகளில் வெளிவந்துள்ளது. எனவே இந்த மூன்று எழுத்தாளர்களும் தங்களது இலக்கியப் பணிக்குத் தமிழகப் பத்திரிகைகளை முழுமையாகப் பயன்படுத்தியதோடு ஈழகேசரியையும் தளமாகக் கொண்டிருக்கின்றனர். என்பது ஏற்ற கூற்றாகும். இவர்கள் மூவரையும் ஈழகேசரிக் குழுவினரைச் சேர்ந்த பன்டப்பாளிகள் என்று கொள்வதில் தவறில்லை. இவர்களது கணிசமான படைப்புக்கள் சி. வைத்தியலிங்கத்தின் பதினொரு சிறுகதை களும் இலங்கையர்கோனின், பத்துச் சிறுகதைகளும், சம்பந்தனின் ஐந்து சிறுகதைகளும், ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. சம்பந்தன் ஈழகேசரியில் அருட்செல்வன் என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார்.
ஈழத்தின் இம் மூன்று எழுத்தாளர்கள் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடும் போது இவர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தையோ, இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ புதிய புதிய பரிசீலனைகளையோ அதிகம் வளர்த்தனர் என்று கூறுவதற்கில்லை. ஆங்கில விமர்சகர்கள் கூறும் ரோமாண்டிசம் என்னும் கனவுலகக் காட்சிகளில் ஈடுபடச் செய்யும் இலட்சிய பூர்வமான சிந்தனைகளிலும் உணர்ச்சிகளிலும் மயங்கி எழுதினர் என்றுதான் சொல்லலாம். என்ற கூற்றில் அவ்வளவு உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் மூவரினதும் சிறுகதைகள் தொகுப்புக்களாக வெளிவந்திருக்கும் இக் காலவேளைகளில் இவர்களின் சிறுகதைகள் பற்றி மதிப்பீடு மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவர்கள் படைத்த அத்தனை படைப்புக்களும் ரோமாண்டிசப் பண்பு கொண்டவை என்று ஒதுக்கிவிட முடியாது. இவர்களால் படைக்கப்பட்ட வெள்ளிப் பாதசரம், மச்சாள், பாற்கஞ்சி, கடற்கரைக் கிளிஞ்சல், நெடுவழி, அவள் முதலான சிறுகதைகள் கனவுலகக் கற்பனைக் கதைகளல்ல. இந்த மண்ணில் ஆழமாகக் காலூன்றி எழுதப்பட்ட மண்வாசனைப் படைப்புக்கள். சம்பந்தனின் சிறுகதைகளிலும் வைத்தியலிங்கத்தின் சிறுகதைகளிலும் பேச்சு வழக்கு அவ்வளவு தூரம் முக்கியம் பெறவில்லை. என்றாலும் இலங்கையர்கோன் அந்த வழக்கினை அளவாகவும் கலைத்துவத்தோடும்

Page 35
ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியான்”
கையாண்டுள்ளார். இவர்கள் ஒரு பத்தாண்டுக் காலத்தில் ஏற்படுத்திய சிறுகதைத்துறையின் தாவலை, ஐம்பது வருடங்களாக எழுதிவரும் இன்ன்றய சிறுகதைகளில் ஒரு பெரும் பாய்ச்சலாகக் காணமுடியவில்லை என்பது ஏற்பதற்குச் சங்கடமானதாயினும் மெய்யானது.
3.3.4 கோ. நடேசைய்யர்
கோதண்டராமர் நடேசையர் தஞ்சாவூரில் பிறந்தவர். 1920 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இவர், தோட்டப் பகுதி மக்களின் துன்பம் கண்டு அவர்களின் முன்னேற்றத்துக்காகப் பெரிதும் பாடுபட்டவர். இந்த மக்களுக்காக தொழிற் சங்கமமைத்துக் குரல் கொடுத்த முன்னோடி ஒர் எழுத்தாளர். பதிப்பாசிரியர். பத்திரிக்கையாளர். அரசியலில் பங்குபற்றாதவரை இம் மக்களுக்கு விடிவில்லை என்று கண்டு அரசியல் வாதியானார். கிளர்ச்சிக்காரன் என்று பெயர் பெற்ற அரசியலறிஞர். 1947 ஆம் ஆண்டு வரை இவர்களுக்காக பல வழிகளில் இறுதிவரை பணியாற்றி மலையக வரலாற்றில் அழியாவிடம் பெற்றவர்."
ஈழத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்த்தவர் கோ. நடேசைய்யர். 1947 இல் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகையின் முதல் ஆசிரியர் கோ. நடேசைய்யராவார். சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தைப் பரப்பவேண்டியது முதற்கடமையாகும் என சுதந்திரனின் முதல் இதலில் குறித்துள்ளார். அவர் எழுதிய ஒரேயொரு சிறுகதை திரு ராமசாமி சேர்வையின் சரிதம் எனபதன் மூலம் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட வேண்டியவராகின்றார். பஞ்சத்தின் காரணமாக ராமசாமி இலங்கைக்குத் தாய்க்குத் தெரியாமல் வேலை தேடி வருகின்றான். கண்டிப் பிரதேசத்தில் தேனும் பாலும் வடிவதான கற்பனையோடு வருகின்றான்? தோட்டத்துக்கு ஆள் சேர்க்கும் கங்காணி ஒருவரின் பசப்பு வார்த்தைக்கு மயங்கி கப்பல் ஏறுகின்றான். கற்பனை சிதறுகிறது. இந்தக் கருவை கோ. நடேசைய்யர் மிக எளிமையாகத் தனது சிறுகதையில் விபரித்துள்ளார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு எவ்வாறு தொழிலாளர்களைக் கொண்டு வந்தார்கள் என்பதை அறிய உதவும் ஆவனமாக இச் சிறுகதை விளங்குகின்றது. அப்படி வந்தவர்கள் பட்ட அவலங்களை உணரவும் உதவுகின்றது.
52

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழிான்” கோ. நடேசையரின் கதை செல்லும் பாங்கு அக்காலகட்டத்து கதைமரபினை ஒட்டியதாக அமைந்துள்ளது. கதையின் தொடக்கமே கதைக்கருவை நெகிழ்த்தும் பாங்கில் "ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்நிலையை அடையலாம் எனபதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தை செல்ல விரும்புகிறேன்." என ஆரம்பமாகின்றது. மேலும் இக்கதை இராமசாமி சேர்வையின் பிறப்பிலிருந்து பெரிய கங்காணியாக உயர்ந்து இருந்ததுவரை விபரிக்கின்றது. ஆனால் இக்கதையில் தான் ஏற்றுக்கொண்ட கருப்பொருளினை நோக்கிய வளர்ச்சியை வேறுவிதமாக அவரால் கூறிவிட முடியாது.
3.3.5 நவாலியூர் சோ. நடராஜன்
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகனாகிய நவாலியூர் சோ. நடராஜன், நவாலியூர் சத்தியநாதன் என்ற புனைப்பெயருடன் சிறுகதை உலகில் பிரவேசித்தார். இந்த முன்னோடியின் சிறு கதைப் பிரவேசகாலம் 1934 ஆகும். மாலினி அல்லது மலைக்கோட்டைஎன்ற சிறு கதையை முதன்முதல் ஈழகேசரியில் இவர் எழுதினார். அதனைத் தொடர்ந்து அபயன் என்றொரு சிறு கதையையும் ஈழகேசரியில் எழுதியுள்ளார். 1941இல் ஈழகேசரியில் இவர் எழுதிய கற்சிலை என்ற சிறுகதை இவர் பக்கம் திறனாய்வாளனர திருப்பியது எனலாம். மேலும் அச்சிறு கதையை' அல்லயன்ஸ் குப்புச்சாமி ஐயர் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தனது கதைக் கோவை இரண்டாம் தொகுதியிலிடம் பெற்ற ஐம்பது சிறு கதைகளுள் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டதால் அச்சிறுகதை மிகுந்த கணிப்பிற்க்குள்ளாகியது."
கற்சிலை கலைத்துவமான சிறுகதையாகும். தான் கல்லிற் கொத்திய அந்த சிலை கண் எதிரே அழகுக் கோலமாக நின்றதைக் கண்ட சிற்பி கணேசாச்சாரி, இதுவரை வெளிவராத ஒன் உணர்ச்சியில் ஈடுபட்டுத் தன்னை மறந்து போகிறான். அகலியைக் கனவிற் கண்ட இந்திரன் போல், தான் சிருஷ்டித்த அந்த அற்புதச்சிலையை வேகமுற்ற தன் கைகளாற் கட்டித்தழுவிக்கொள்கிறான். விழிப்பு ஏற்படுகிறது. பவளம் போன்ற அச் செவ்வதரத்தில் அமைந்த மந்தகாசத்தை இன்னும் சிறிது சோபிக்கச்செய்வெனேன எண்ணி உளியால் அந்த பிரதேசத்தில் ஒரு சிறிய பொறிபோட, அச்சிலை வெடித்துச் சுக்குநூறாக உடைந்து கல்லோடு கல்லாய் அச்சிற்பச்சாலையெங்கும் சிதறுகின்றது." என இச் சிறுகதையை நவாலியூர் சோ. நடராஜன் வரைந்துள்ளார். மிக இயல்பாகவும் கவித்துமான சொற்களுடனும் இச்சிறு கதை வடிக்கப
53

Page 36
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” பட்டுள்ளது. ஆசிரியர் கவிஞராதலால் இக்கதையில் பயன்படுத்திய சொற்களும் தேர்ந்த சொற்களாகவும் சுவை பயப்பவையாகவும் அமைந்துள்ளன.
நவாலியூர் சோ. நடராஜன் தாகூர் ராதா கிருஷ்ணன் போன்ற அறிவுலக மேதைகளின் நாடகங்களையும் கட்டுரைகளையும் 1936 ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்த்துள்ளார். மருதக்கலம்பகம் அவருடைய படைப்புகளில் உயர்ந்தது. காளிதாசரது. மேகதுாதத்தையும் தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழிலே தந்துள்ளார். இதோபதேசம், பூவைவிடு துாது என்பன வேறு மொழிகளிலிருந்து அவரால் தமிழாக்கம் செய்யப்பட்டவை. கவிதையை மூச்சாகக் கொண்டவர்."
3.3.6. சோ. சிவபாதசுந்தரம்
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சோ. சிவபாதசுந்தரம் தான் எழுதியவற்றிலும் பார்க்க ஈழகேசரியில் ஆசிரியராக விளங்கிய காலவேளையில் உருவாக்கிய சிறுகதை எழுத்தாளர்கள் பலராவர். சோ. சிவபாதசுந்தரம் தெளிந்த கட்டுரையாளராவர். தோட்டத்து மீனாட்சி, அழைப்பு முதலிய கதைகளை, ஆனந்த விகடனில் எழுதியிருந்தாலும் அவருடைய பிரயாணக் கட்டுரைகள். முதன்மையனவை. மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், ஒலிபரப்புக்கலை, புத்தர் அடிச்சுவட்டில் என்பன அவரது எழுத்து வன்மைக்குச் சான்றாக இருக்கின்றன."
தோட்டத்து மீனாட்சி என்ற ஆனந்தவிகடன் கதைமூலம் புனைகதைத்துறையில் பிரவேசித்த சிவபாதசுந்தரம், அழைப்பு, எப்போது காண்பேன், பரதேசி, நண்பர்கள், எட்டாந் தரு,சு, சங்கு வளையல், காஞ்சனை, பொன்னர் செத்தகதை, வைரவகோயில் விளக்கு, பரிசுக் கட்டுரை முதலான சிறுகதைகளைக் காலத்திற்குக்காலம் எழுதியுள்ளார். மனதைதொடும்படியான சிறுகதைகளை சிவபாதசுந்தரம் எழுதி விடவில்லை. இத்தனைக்கும் சிறுகதையின் இலக்கணத்தையும் சிறுகதையின் வளர்ச்சியையும் புரிந்து கொண்டவர். சிறுகதைகளைச் சீர்துாக்கிப் பார்க்கும் விமர்சனத்திறன் வாய்ந்தவர். அவ்வாறான சிவபாதசுந்தரத்தால் உன்னதமானசிறுகதைகளை படைக்கமுடியாது போனமைக்கான காரணம் புரியவில்லை. அவருடைய சிறுகதைகளில் காஞ்சனை அக்காலகட்டத்துக்கதைகளில் குறிப்பிடத்தக்கதாகும்,
54

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழிான்” அல்லயன்ஸ் குப்புசாமி முதலியார் 1942 இல் வெளியிட்ட கதைக்கோவை 2 இல் சோ. சிவபாதசுந்தரத்தின் “காஞ்சனை இடம் பிடித்துள்ளது”. கவிகளின் கற்பனை லோகத்தில் இயற்கையின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டும் காவியத்திலும் இலக்கியத்திலும் ” கிடக்கும் சுவையைச் சுவைத்துக்கொண்டும் இருந்த கண்ணன், தான் கற்பனையில் சிருஷ்டித்து வைத்திருக்கும் பெண்ணைத் தேடுகிறானர். அவனுடைய தாயார் அவன் முன் காஞ்சனையை நடமாடவிடுகிறாளர். தான் தேடிய பெண் அவள்தான் எனஅவன் நம்புகிறான். திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இச்சிறு கதையில் இன்றைய இளைஞள்களின் மனநிலையை ஆசிரியர் நன்கு சித்திரித்துள்ளார். நாடகத்தன்மை இச்சிறு கதையில் மிகுந்து அதன் கலைத்தத்துவத்தை இறக்கிவிடுகிறது.
ஈழகேசரி ஆசிரியராக இருந்து நவீன இலக்கிய வளர்ச்சிக்குச் சோ. சிவபாதசுந்தரம் ஆற்றிய ஆக்கபூர்வமான பணிகளை நாம் மறந்து விட முடியாது. ஆனால் சிறுகதை தவிர்ந்த ஏனைய துறைகளில் அவருக்கிருந்த படைப்பாற்றல் 'மிக உச்சமானதென்பதை இவ்விடத்து குறிப்பிட்டேயாகவோண்டும்.
3.3.7. assuuIT
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படவேண்டியவள் சுயா என்ற புனைப்பெயரில் எழுதிய சு. நல்லையா என்பவராவார். ஈழகேசரியில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பல சிறு கதைகளை எழுதித்தள்ளியவர் சுயா 1936 ஆம் ஆண்டு அன்னையின் கட்டளையும் அதுதான் என்ற சிறு கதையுடன் ஈழகேசரியில் எழுத ஆராம்பித்து 1957 வரை முப்பத்தெட்டுச் சிறு கதைகளை ஈழகேசரியில் எழுதியுள்ளார். ஈழகேசரி ஆண்டு மலர்களில் ஒன்றிற்கு மேற்பட்ட சிறு கதைகளையும் எழுதியுள்ளார். மூர்க்கமுள்ள மனைவி, தம்பி எங்கே?, என் உத்தியோகம், வழிவகை, குருடன் மகள், அன்னம்மா, சுப்புக்கவுண்டன், சந்திர வாசா, அழகு மாப்பிள்ளை, சண்முகச் சட்டம்பியார் முதலானவை சுயாவின் சிறு கதைகளாம். மிக எளிமையாக ’தான் கூறவந்த செய்தியை கதையாகக் கூறிவிடுவார். தமிழாசிரியர்; தமிழில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தினகரனில் ரவீந்திரன் என்றொரு தொடர் கதையையும் தந்துள்ளார். சுயா நிறைய சிறுகதைகள் எழுதியும் கவனிப்புக்குள்ளாகாமைக்குக் காரணம்
55

Page 37
அவருடைய சிறு கதைகளில் சமுகப்பிரச்சினைகளோ இயல்பான வாழ்வுநிலையோ ஆழமாகக் கையாளப்படாமையாகும்.
3.3.8 ஆனந்தன்
ஈழத்துச் சிறுகதை முன்னேடிகளில் ஒருவராக கருதப்படவேண்டிய ஆனந்தன் என்ற பண்டிதர் க. சச்சிதானந்தன் விமர்சகர்களின் கவனத்தைப் பெறத்தவறிவிட்டார். 1938களில் எழுத ஆரம்பித்த ஆனந்தன் ஏறக்குறைய பத்துச் சிறுகதைகளை 1944 வரையிலான காலகட்டத்தில் எழுதிய பின்னர், கவிதைத்துறையிலும் காவியத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஹரிஜனங் களின் கண்ணிர், நான் அசுரனா, அவிந்ததீபம், தண்ணீர்த்தாகம், சாந்தியடையுமா? முதலான சிறுகதைகளை ஆனந்தன் எழுதியுள்ள போதிலும், தண்ணீர்த்தாகம்" என்ற சிறுகதைக்காகவே கணிக்கப்பட வேண்டியவராகிறார்.
ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் தண்ணிர்த்தாகம் ஒன்றாகும். அது எழுதப்பட்ட் காலகட்டத்தையும் அது கூறுகின்ற சமூகச் செய்தியையும் கவனத்திற் கெடுக்கும்போது வியப்பும் பெருமிதமும் ஏற்படும். யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமையை முதன் முதல் கருப்பொருளாக்கி மக்கள் முன் துாக்கி வைத்தவள் அவர். சமூகத்தின் எரியும் பிரச்சனையை அவர் கையாண்டிருக்கும் முறைமையும் அதனுடாக அவள் கூறும் செய்தியும் 1956 களின் பின்னரும் ஈழத்தின் நவீன சிறு கதை ஆசிரியர்களால் கையாளப்பட்டு வருகின்றது. ஆனந்தனின் தண்ணிர்த்தாகம் சாதிய அடக்கு முறை அவலத்தையும் மானிட நேயத்தையும் சித்திரிக்கின்றது. "தண்ணிர் தாகத்தினால் வாடிய ஹரிஜனப் பெண்ணொருத்தி ஐயர் வீட்டுக்கிணற்றுக்கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறைய குளிர்ந்த ஜலத்தைகண்டு எடுத்து பருக முயல ஓடிவந்த ஐயர் ‘என்னடி செய்தாய் பாதகி’ எனச் செம்பைப்பறித்து அவள் நெற்றியில் அடித்து விடுகிறார். இரத்தம் நெற்றியில் இருந்து பிறிட அவள் ஓடிவிடுகிறாள். தீண்டாமை அசுரனின் அரசுத் தன்மை அவள் பிறைதுதலில் இரத்தத்தை வாங்கிவிட்டது. ஆண்டுகழிவில் நோய் வாய்ப்பட்ட ஐயன் ஆஸ்ப்பத்திரியில் “அம்மா தண்ணி நாவை வறட்டுகிறது” என அரற்றுகிறார். ஒரு பெண்தாதி அவர் அருகில் வருகிறார்.
“ஐயா பறைச்சி தொட்டத்தண்ணி தந்தால் குடிப்பிள்களா?
தாங்கள் பிராமணர் அல்லவா?”
“அம்மா பிராமணனானாலென்ன பறையனானாலென்ன நீ கொடம்மா. கொடியமரணதாகம் நெஞ்சை அடைக்கிறது.”
56

ஈழத்துச் சிறுகதை வரலாறு "Grions aurai",
அவள் யாரென ஐயருக்கு தெரிகிறது. ‘என் மரணதாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்று இரத்தக்கறை ஏற்பட வேண்டும். - ஐயர் அவள் காலடியில் விழ எழுந்தார்".
1939இளில் இவ்வாறான சமூகப்பிரச்சனை கொண்ட சிறுகதையாகத் தண்ணின்த் தாகம் எழுதப்பட்டுள்ளதென்பது மிக முக்கிய அம்சமாகும். சாதிய ரீதியான அடக்கியொடுக்கல் உச்சமாக விளங்கிய ஒருகாலகட்டத்தில் ஆனந்தன் துணிந்து இவ்வாறான சிறு கதையை படைத்துள்ளமை அவரின் சமூகப்பார்வையின் புரட்சிகரச் சிந்தனையைத் தெளிவாக காட்டுகின்றது.
3.3.9. பாணன், பவன்
ஈழகேசரியரில் தக்க சிறு கதைகள் பலவற்றை ஆராம்பகாலத்திலேயே எழுதிய பாணன், பவன் என்போர் யாரென அறிந்து கொள்ள முடியவில்லை. 1938 இல் பாணன், அலர்ந்த மலர் என்ற சிறுகதையுடன் சிறுகதையுலகில் பிரவேசித்து இழந்ததனம், அந்த இருவரும், ஆறிய மனம், தோழமை, விமோசனம் முதலான சிறு கதைகளைத் தந்துள்ளார். குடும்ப உறவு நிலைகளை மிகவும் எளிமையாகவும் வெகுஜன ரஞ்சகமாகவும் பாணன் சித்திரித்திருப்பதால் அவரது சிறு கதைகள் கலைத்துவப்படைப்புகளாக அமையாதுபோயின. எனினும் மனதைப்பிடித்துக்கொள்ளும் மனிதாபிமான பிரச்சனைகள் நன்கு சித்திரிப்பிற்குள்ளாயின.
பவன் என்பவர் ஈழகேசரியில் 1939இல் தியாகி என்ற கதையுடன் பிரவேசித்து கடிதக்காதல், ஒரு இரவு, கஞ்சன் மனமாற்றம், ஒழிந்தது கவலை, சிக்கலான சிறுபிரச்சனை, கோபுரuதுமை, ஆசைச்சட்டம்பியார் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். பவனின் சிறுகதைகளில் அவதானிப்புத்திறன் மிகத்துல்லியமாக விளங்கும். அவள் எழுதிய ஆசைச்சட்டம்பியார்? என்ற சிறு கதை ஈழத்தின் தரமான சிறுகதைகளில் ஒன்றாகும். ஆசைச்சட்டம்பியார், ஒரு காலகட்டத்தின் யாழ்ப்பான ஆங்கில மேல்மட்டசமூகத்தின் வாழ்வுப் பின்னனியையும் கல்வி முறையையும் நன்கு சித்திரிக்கின்றது. ஆசைச் சட்டம்பியாரின் வரும் மிஸ்டர் நாக்கிலின்கன் (“நாகலிங்கம்) 'விஸ்ஸா’, ‘(விசாலாட்சி)" ஆகிய ஆங்கில யாழ்ப்பாணிகளை ஆசைச்சட்டம்பியாரில் தரிசிக்கும்போது பிற்காலத்தில் சிரித்திரன் சுந்தரின் மிஸஸ் டாமோதரன் நினைவு வருகின்றது. ஆசைச்சட்டம்பியார் சிறுகதையில் பவன் கையாண்டிருக்கும் எள்ளல் நடை மிகத்திறமையாக விழுந்துள்ளது.
57

Page 38
ஈழத்துச் சிறுகதை வரலாறு- - “செங்கை ஆழிாண்” 3.3.10 அ. செ. முருகாந்தன்
அ.செ. முருகானந்தன் ஈழத்து சிறுகதைஇலக்கியத்துக்கு பெருமை கூட்டியபடைப்பாளி ஆவார். ஈழகேசரிப்பண்ணையில் உருவாகியவர். ஈழகேசரியில் இணை ஆசிரியராகவும், எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியாராகவும் விளங்கியவர். பல்வேறு புனைப்பெயர்களில் நிறையவே பல்வேறு துறைகளில் எழுதியுள்ளார். அசெ. முருகாந்தன் ஈழத்துசிறுகதை சிறுகத்ைதுறைக்கு அளித்துள்ள பங்களிப்பினை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.
1940 களில் பூரீ ராமனுஜம் என்ற சிறு கதையுடன் ஈழகேசரி யூடாகப் புனைகதைத்துறைக்கு வந்த அ. செ. முருகானந்தன் அதனைத் தொடர்ந்து வெறுப்பும் வெற்றியும், அம்பிகை சன்னிதியில், சித்தக்குழப்பம், தீபாவளிக்கனவு, எச்சில் இலை, வாழ்க்கை, ஏழை அழுத கண்ணி, அடிமை, விளம்பர வாழ்வு, வியாபாரிகள், வண்டிற் சவாரி, பிரிவுத்துன்பம் சின்னமேளம், மணிமேகலை, அடைக்கலக்குருவிகள், மனிதமாடு, காளிமுத்துவின் பிரஜாவுரிமை முதலான சிறு கதைகள் பலவற்றைப் படைத்தளித்துள்ளார். அவரது சிறு கதைகள் மிகத்துல்லியமான சமூக அவதானிப்பினைக் கொண்டவை. யாழ்ப்பாணச் சமூகக்களத்தில் மட்டுமின்றி மலையகக் களத்திலும் மண்வாசனையோடு நல்ல படைப்புக்களைத் தந்துள்ளார். அவரது சிறுகதைகளில் வண்டிச் சவாரி,
மனிதமாடு, காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்பன குறிப்பிடத்தக்க
படைப்புக்களாம். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் வண்டிச் சவாரி ஒன்றாகும். மனிதமாடு என்ற சிறுகதை அல்லயன்ஸ் குப்புச்சாமி ஐயரின் கதைக்கோவை தொகுதி 3 இல் (1943) இடம்பிடித்துள்ளது. காளிமுத்து வின் பிரஜாவுரிமை என்ற சிறு கதை துரைவி வெளியீடான உழைக்கப்பிறந்தவர்கள் என்ற மாபெரும் சிறுகதைத்தொகுப்பில் வெளிவந்துள்ளது. அவரது பல சிறுகதைகளைத் தொகுத்து யாழ் மாவட்டக்கலாசாரப் பேரவை மனிதமாடு என்ற தொகுதியை வெளியிட்டிருக்கின்றது. அவருடைய சிறுகதைகளில் நுண்ணிய அவதானிப்போடு மண்வாசனை மிகத்துாக்கலாக அமைந்திருப்பதனையும் தரவுக் குகந்த வார்த்தைகளைப் பாசாங்கற்ற முறையில் தேர்ந்தெடுத்திருப்பதையும் காணலாம்.
அ. செ. முருகானந்தத்தின் கலைத்துவப்படைப்பாகவும் வாசிப்பவர் நெஞ்சினை சுர்ரெனத்தாக்கும் மனிதநேயப்படைப்பாகவும் மனிதமாடு விளங்குகின்றது. ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தெருக்களில் மனிதரை ஏற்றி மனிதரே இழுக்கும் ரிக்ஷாக்கள் மலிந்திருந்தன. மனிதமாடுகளாக செயற்பட்ட அந்தச் சபிக்கப்பட்ட ஆத்மாக்களில் ஒன்றின் பரிதா பக்கதையை அ.செ.மு மனிதமாடு சிறுகதையில் மிகச் சிறப்பாகச்
58

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" சித்திரித்துள்ளார். அ. செ.மு. வின் வண்டிச்சவாரி அளவெட்டிக் கிராமத்து மக்களின் வகை மாதிரிப்பாத்திரங்களை வைத்துப் போலிக் கெளரவம் தரும் சமூகச்சீரழிவை வெகுயதார்த்தமாக நேர்த்தியாகச் சித்திரிக்கின்றது. குறிப்பாகச் சொல்லுவதாயின் அ.செ.மு. வின் சிறுகதைகள் சமூகப் பதிவுகளாகவும் அம்மண்ணின் ஆவணப்பதிவுகளாகவும் விளங்குகின்றன
3.3.11. சோ. தியாகராஜன்
ஈழத்து முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக கருதப்பட வேண்டியவர் சோ. தயாகராஜன் ஆவார். சோ. சிவபாதசுந்தரத்தின் சகோதரரான இவர், சூழ்நிலைகளைக் காட்சிப்படுத்தி விபரிப்பதில் வல்லவராக விளங்கியமையை அவரது சிறுகதைகளிலிருந்து அறியமுடிகின்றது. பரிதி, சோதி எனும் புனைப்பெயர்களில் அவள் சிறுகதைகளைப் படைத்துள்ளார். 1934களிலேயே இவரது சிறு கதைகளான இரட்டையர் காதல், பஸ் சம்பாஷனை என்பன பரிதி என்ற புனைப் பெயருடன் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. இவற்றினைத்தொடர்ந்து விதி யாரைவிட்டது, எதிர்பாராதது. ஆசைமுகம் நல்லமாமி* முதலான சிறுகதைகளைனழுதியுள்ளார். சோ. தியாகராஜனின் நிறைவுக்கதைகளான எதிர்பாராதது. ஆசைமுகம்", நல்லமாமி’ என்பன ஈழத்தின் சிறந்த சிறுகதைகள் என்ற வகைக் குளடங்குவன. இவரது சிறுகதைகள் படித்து முடிந்ததும் மனதில் நெகிழ்ச்சியான ஓர் உணர்ச்சியை எஞ்சிநிற்க வைப்பனவாக விளங்ககின்றன.
3.3.12. வரதர்
வரதர் என்ற தி.ச. வரதராசன் ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் எல்லாக் காலகட்டத்திலும் தன் படைப்புகளைத் தந்த ஆக்க இலக்கியகர்த்தாவாக விளங்குகிறார். தி. ச. வரதராசன் ஆரம்பகாலத்தில் வரதர், வரன் என்ற புனைப்பெயர்களில் ஈழகேசசரியில் பதின்மூன்று சிறுகதைகள வரையில் எழுதியுள்ளார். 1940களில் கல்யாணியின் காதல் என்ற ஈழகேசரிச் சிறுகதையுடன் காலடி வைக்கும் வரதர், அதனைத் தொடர்ந்து விரும்பிய விதமே, காதற் பலி, கல்யாணமும் கலாதியும், குதிரைக்கொம்பன், தந்தையின் உள்ளம், ஆறாந்தேதி முகூர்த்தம், கிழட்டு நினைவுகள், பிச்சைக்காரர்கள், பொல்லாப்பிள்ளையார், உஞ்சு, சிரஞ்சீவி, விபச் சாரி முதலான சிறுகதைகளை ஈழகேசரியில் படைத்துள்ளார். 1946 - 1948களில் வெளிவந்த மறுமலர்ச்சியில் இன்பத்திற்கு ஓர் எல்லை, வேளவிப்பலி. ஜோடி முதலான சிறு கதைகள் 6JJb|J TE LIGODL, itsdi:II. JL.setTÖT.
59

Page 39
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்” *வாலிப உந்தல்களுடன் காதலின் பலவகைக் கோலத்தையும் காமத்தையும் வைத்துச்சிறுகதைகளைப் படைத்துத் தமது எழுத்தினால் தி. ச. வரதராசன், வரதர்) வாசகர்களை மயங்கச் செய்தார்’ எனக் கனக செந்திநாதன் குறிப்பிடுகிறார். வரதரின் ஆரம்பகாலச் சிறுகதைகள் பலவும் அவ்வாறுதான் விளங்கின என்பதை மறுப்பதற் கில்லை. ஆனால் அக்காலகட்டத்துச் சிறுகதையின் செல்நெறியையும் அவற்றின் இயல்புகளையும் தக்க சிறுகதைகளைப்படைத்த புதுமைப்பித்தன், கு. பரா. போன்றவர்களின் படைப்புக்களையும் வரதள் நன்கு தெரிந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதனால்தான் அடுத்த புனைகதைக் காலகட்டத்தில் அவரால் தரமான சிறுகதைகள்ை படைக்கமுடிந்தது. வரதரின் 1939 - 1949 காலகட்டத்துச் சிறுகதைகளில் காதலுணர்வு தூக்காலகவேகாணப்படும். வாலிப உந்தல்களுடன் காதலின் பல வகை கோலத்தையும் காமத்தையும் வைத்துச்சிறுகதைகள் படைத்து தமது எழுத்தினால் தி.ச. வரதராசன் (வரதா) வாசகர்களை மயக்கச்செய்தார்? என்ற கனகசெந்திநாதனின் கணிப்பு வரதரின் அக்காலகட்டத்துச் சிறுகதைகளுக்கு பொருத்தமான கூற்று. எனினும், ஈழத்து சிறுகதை வளர்ச்சியின் சமூகசீர்திருத்தக்காலகட்டத்தில் ஈழகேசரியில் வரதர் எழுதிய 'விபசாரி என்ற சிறுகதை சுட்டும் புரட்சிகரமான சிந்தனைப் போக்கை வியக்காதிருக்க முடியாது. சமூகத்தில் சந்தர்ப்பவசத்தால் விபச்சாரியக்கப் பட்ட பெண்ணொருத்திக்கு வாழ்வளிக்க விரும்பும் இளைஞன் ஒருவனின் முற்போக்குச் சிந்தனையையும், அதனை ஏற்க முடியாத அப்பெண்ணின் மனநிலையையும் விபசாரி சிறப்பாக விளக்குகின்றது. அக்காலகட்டத்தின் சிறப்பான சிறுகதைகளில் இது ஒன்று என்பேன். ஆனால் வரதரின் இன்னொரு பரிமாணம் அடுத்த காலகட்டத்தில் மலர்ந்தது.
3.3.13. அ. ந. கந்தசாமி
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் அ. ந. கந்தசாமி பொதுவுடைமை வாதியாக வாழ்ந்தவள். தேசாபிமானி, சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் ஒருவராக இருந்தவர். பின்னர் இலங்கை அரசின் ரீ லங்கா என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அ.ந.க.வின் பல்துறை ஆற்றல் இதழியல், கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு. விமர்சனம், சிறுகதை, விமர்சனம் ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது.
‘கவிதைத்துறையில் எதிர்காலச்சித்தன் பாட்டு, துறவியும் குவர் டரோகியும், சத்திய தரிசனம் ஆகியவை பரலாலும் பாராட்டப்பெற்றவை. சாகித்திய மண்டலத்தார் நடாத்திய பாவோதல்
60

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” விழாவில் அ. ந. கந்தசாமி வாசித்த “கடவுள் என் சோரநாயகன்" என்ற கவிதையை அக்கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தமிழ் அறிஞர் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இப்படிப்பட்ட நலல கவிதைதோன்றும்” என்று குறிப்பிட்டர்." மதமாற்றம் அ.ந. கந்தசாமிக்கு புகழ்தத்த நாடகம். “மனக்கண் அன்னாரின் நாவல். ... •
அ. க. கந்தசாமியின் சிறுகதைப்பிரவேசம் ஈழகேசரிமூலம் நிகழ்ந்தது. குருட்டு வாழ்க்கை என்ற சிறுகதையுடன் (1941) ஈழத்துச் சிறுகதை, வரலாற்றினுள் நுழையும் அ.ந.க. அதன்பின் நாயினும் கடையர், ஐந்தாவது சந்திப்பு, இரத்த உறவு, நள்ளிரவு முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஈழகேசரியில் அவருடைய குருட்டு வாழ்க்கை வெளிவந்தபோது அவருக்கு வயது பதினேழு, “குருட்டு நிலையில் தான் மணந்த பெண், தன்னால் காதலிக்கப்பட்டவள் என நம்பி வாழும் ஒருவனுக்கு கன் திரும்பியதும், தான் மணந்த பெண் வேறொருத்தி எனத்தெரிய வந்தபோது தன் கண்களை மீண்டும் குருடாக்கிக் கொள்கிறான். அவளை நேசிப்பதற்கு அதுதான் தக்க உபாயமென அவன் கருதுகிறான். நல்லதொரு சினிமாப்பானிக் கதை. எனினும் படித்து முடிந்ததும் உள்ளத்தில் வலி ஏற்படுகின்றது.
அ. ந. கந்தசாமியை ஈழகேசரிப்பண்ணைக்குரியவராகவும், மறுமலர்ச்சி சஞ்சிகை எழுத்தாளராகவும் விமர்சகர்கள் சிலர் இனங்கண்கின்றனர். ஈழகேசரியில் ஒரேயொரு சிறுகதையையும், மறுமலர்ச்சியில் ஒரு சிறுகதைதானும் எழுதாத அ. ந. கந்தசாமியை அவ்வாறு கருதுவது தவறு. மறுமலர்ச்சி இயக்கத்துடன் இருந்தார் என்பதற்காக அவரை மறுமலர்ச்சி எழுத்தாளராக இனங்காண்பது. இலக்கிய வரலாற்றுத் தவறாகும்.* அ. ந. கந்தசாமி எழுதிய கதைகளில் இரத்த உறவு, நள்ளிரவு ஆகியன சிறந்த கதைகளவுள்ளன. பரமசிவனும் பார்வதியும் கொழும்பு அரசாங்க ஆளல்பத்திரிக்கு வருகின்றார்கள். அங்கு விபத்தில் சிக்கிய ஒருவனுக்கு இரத்தம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு காட்சி: முஸ்லீம் இளைஞன் ஒருவன் தன் மனைவியிடம் 10ரூபா கொடுத்து அரிசி காய்கறி வாங்கிச் சமைக்கச்சொல்கிறான். “வேலை கிடைத்து விட்டதா?’ என அவள் கேட்கிறாள். ஆஸ்பத்திரியில் தன் இரத்தத்தை விற்றதாக அவன் கூறுகிறான் “ஆஸ்பத்திரியில், அந்த துலுக்குப்பயலின் லொறி என்னைமோதி இப்படியாக்கி விட்டது” என்று ஏசுகிறான் நோயாளி. துலுக்குப் பயல்தானே இவனுக்கு இரத்தம் கொடுத்தான்” என்றாள் பார்வதி. “ஆம் எந்த முஸ்லீம் இளைஞனும் இவனும் இரத்த உறவு பூண்டவர்கள்” என்கிறார் பரமசிவன். இச்சிறுகதையில் நாடகபாங்கு மிக்குள்ளது குறிப்பிடத்தக்கது.
61

Page 40
Kikbii fikibağlı, AMİ ADI “செங்கை ஆரியான நள்ளிரவு சிறுகதை அ. ந. கந்தசாமியின சிறந்த படைப்பு
கொழும்பு நகரத்தின் தெருவோர அவல வாழ்க்கையை மிகச் சிறப்பாக
இச்சிறுகதையில் கந்தசாமி படம் பிடித்துக்காட்டுகிறார்
“நாளைக்கு நான் ஜெயிலுக்குப்போகிறேன்’ என்றான் அவன் சர்வசாதாரணமாக, “ஏன்” “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்துக் கிடக்கிறாளோ, அவளைப் பலாக்காரம் செய்ததாகக் குற்றச் FITÚ(6.
யார் அந்தப் பென்'
“அவளா? யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவள் பக்கத்திள் படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்.”
"அவள் உன்மனைவியா?”
“அவள் எல்லோருக்கும் மனைவிதான்”*
இந்த வாக்கியங்களைப்படிக்கும் போது இதயம் பிளந்து குருதி வடிவது போன்ற உணர்ச்சி எற்படுகிறது. தெருவோரத்து அவலங்கள் இவை.
“எனக்கும் துக்கம் வரும் 'ஆனால் துாங்கத்தான் இடமில்லை. பார்த்திர்களா, நமது மாளிகை எப்படி ஈரமாய் போய்விட்டதென்று: அவளைப் பலாத்காரம் செய்தது போல நாடகமாடி அவன் ஜெயிலுக்குப் போகவிரும்புகிறான். நன்றாகத் துங்குவதற்கும் பசியாற உண்பதற்கும் ஜெயில் அவனுக்கு அவசியமாகிறது.
அ. ந. கந்தசாமியின் சீர்திருத்தக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும் இரத்த உறவு. நள்ளிரவு ஆகிய சிறுகதைகளில் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் தனது சிறுகதை களில் வெறும் பரிரச்சாரம் செய்யவில் லை. சமூகத்தை விமர்ச்சிக்கவுமில்லை. இந்தச் சமுதாயம் இப்படியிருக்கின்றதேயென வாசிப்போரின் நெஞ்சில் கசிவேற்படச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். நல்ல சிறுகதைகள் அவ்வாறுதான் அமையும்.
3.3.14. கனக செந்திநாதன்
ஈழத்தின் இலக்கியவரலாற்றில் ஓர் இலக்கிய இயக்கமாக
வாழ்ந்தவர் இரசிகமணி கனக செந்திநாதன். யாழ் இலக்கிய
வட்டத்தின் பிதாமகர். குரும்பசிட்டிக்கிராமத்திற்குப் புகழ் சேர்த்தவள்.
ஈழகேசரிப் பண்னையிலுருவான கனக. செந்திநாதன், பல்துறைகளிலும் 62

ஈழத்துச் சிறுகதை 4வது “Yasas yai” ஆளுமையுடையவர். தமிழ் ஆசிரியரான கனக செந்திநாதன் ஈழத்து இலக்கியத்திறனாய்வுத்துறையில் கலாநிதிகளுக்கு நிகராக உயர்ந்தது வியப்புக்குரியதன்று, ஏனெனில், அத்தகு வாசினைத்திறனும் எல்லாப்படைப்பாளிகளையும் ஒரே மாதிரி நேசிக்கும் மனப்போக்கும் அவரிடமிருந்தன.
1941இல், ஈழகேசரியில் யாழ்ப்பாடி என்ற புனைப்பெயருடன் சிறுகதைத்துறைக்குக் கனக செந்திநாதன் நுழைந்தார். வண்ணான்குளம், இரும்பு இருதயம். ஒருபிடிசோறு (1945), பிட்டு, சமர்ப்பணம், சொந்தம், தரிசனம், அலைஓய்ந்தது, கூத்து, செம்மண், கண்திறந்தது, வெண்சங்கு முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். அவை ஈழத்தின் பல பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அவர் மரணமாகும் வரை எழுதிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. e6(56) சிறுகதைத் தொகுதி வெண்சங்கு, அவருடைய பத்து சிறுகதைகளைக் கொண்டுள்ளது. ஈழத்து இலக்ககிய வரலாறு என்ற ஆய்வுநூல், இலக்கிய வரலாறு எழுதும், படிக்கும் அனைவருக்கும் மூலநூல். வெறும் பானை, விதியின் கை என்பன அவர் எழுதிய நாவல்களி. கரவைக்கவி கந்தப்பனார் என்ற பெயரில். ஈழத்துப்பேனா மன்னர்களை அறிமுகம் செய்து வைத்தார். நடமாடும் நூல்நிலையம் எனக் கனக. செந்திநாதன் மதிக்கப்பட்டார்.
கனக. செந்திநாதனின் சிறுகதைகள் தனித்துவமானவை. “எந்த இலக்கியக் கோட்பாடுகளுக்குள்ளும் என்னைச் சிக்கவைக்காமல், நான் நல்லவை என்ற எண்ணியவற்றைச் சித்திரித்துக்கதைகளைப் புனைந்திருக்கின்றேன். பழைய யாழ்ப்பாணக் கலாசாரம் எனது புதிய சிறு கதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கிறது. புராணப்படிப்பு, தாளக்காவடி, அன்னதானம்,நாட்டுக்கூத்து, சரமகவி. காணிப்பற்று என்பனவற்றில் துடிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம், இக்காலப் போலித் தன்மைகளோடு யாழ்ப்பாணத்தில் வேரோடியிருக்கின்றது. இக்கலாசாரத்தைப்படம்பிடித்து கதையாக்கிக் காட்டவேண்டும்’ என்கிறார்ஃ
கனக, செந்திநாதன் பழைய எழுத்து அனுபவத்திற்கும் புதிய எழுத்து முயற்சிகளுக்கும் நேர்த்தியான பாலமாக விளங்குகின்றார்.* கனக செந்தில்நாதனின் செம்மண், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'ஒப்சேவர்' பத்திரிகையிலும் ஒருபிடிசோறு ரஷியமொழியிலும் வெளிவந்துள்ளன. கனக. செந்திநாதனின் பல சிறுகதைகள் ஈழத்துச 63

Page 41
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” சிறுகதை இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பன யாழ்ப்பாண மண்ணின்
கதைகளாக அவையுள்ளன. கனக. செந்திநாதனின் சிறுகதைகளில்
சம்பவங்களும் உணர்வு நிலையும் முக்கியம் பெற்றிருக்கும்.
கனக செந்திநாதனின் சிறுகதைகளில் “ஒருபிடிசோறு” ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளுள் ஒன்றாகும், கனக செந்திநாதன் அலட்சியமாகவும், இணையில்லாத்தைரியத்துடனும் ஒருகதையை எடுப்பாகத் தொடங்கும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்’ எனத் தீபம் நா. பார்த்தசாரதி குறிப்பிடுவார். ஒருபிடிசோறு இப்படி தொடங்குகிறது: யாழ்ப்பான மாதா மலடி என்ற பெயர் கேளாமல்; சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக்குழந்தை தொண்டைமானாறு. "சன்னதி முருகன’ வெள்ளிக்கிழமை ஆலயமடத்தில் அன்னதான அவியல் நடக்கிறது. தனது நோயாளியான மகனுடன் சன்னதி மடத்தில் தஞ்சம் புகுந்த கிழவி, மகனின் பசிபோக்க, ஒருபிடிசோற்றுக்காக வெள்ளிக்கிழமை மடத்திற்கு வரப் புறப்படுகிறாளர், “உம், போடுவார்கள் உனக்கா? கோவிலிலே சுற்றிதிரிகிற சோம்பேறிகள், தடியர்கள், சாமிகள், இவர்களுக்கு” - என்கிறான் படுக்கையிலிருந்தபடி மகன், கிழவி ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு, தடியை ஊன்றியபடி மடத்திற்கு வருகிறாள். பூசைமுடிவதற்கு முன்பே வயிற்றுப்பூசைக்காக எல்லாரும் மடத்திற்கு ஓடுகிறார்கள். முண்டியடித்துக் கொண்டு மடத்தினுள் நுழையும் கூட்டம். ஒரு பிடிசோற்றுக்காகக் கிழவி காத்திருக்கிறாள். முதலாவது பந்தி நிரம்பி விட்டது. திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை. மறுபக்கம் போய்ட்பார்த்தால் ஒருவேளை கிடைக்கலாம். அங்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் பல்ல்ைக் காட்டினால் ஒரு பிடிசோறு போடமாட்டார்களா? என்பதுதான் அது. பின் கதவைத் தட்டினாள். திறந்தவள் ஒருசீமாட்டி, பிள்ளைப் பேறிற்காக அவித்துக்கொடுக்கிறாள். பழைய பகை கதவை மூட வைக்கிறது. கிழவி ஏமாற்றத்துடன் மடத்திற்கு திரும்பிவருகிறாள். அங்கு சின்னான் இறந்து கிடக்கிறான், இதுதான் கதை. சமுகத்தின் ஏற்றத்தாழ்வை, அவல நிலையைக் &B6河凸E செந்திநாதன் ‘ஒரு பிடிசோறு மூலம் சித்திரித்துள்ளார்.
கனக செந்திநாதனின் கதாபாத்திரங்கள் யாழ்ப்பாண மண்ணின் மக்கள். கலாசாரத்தைப் பேணவிரும்பும் அவாவினர். கதை நடப்பது நாம் நன்கறிந்த பிரதேசங்களின் களமாகும். சம்பவங்களிடையாக மானிடவுணர்வுகளைத் தன் சிறுகதைகள் மூலம் புலப்படுத்துவதில் கனக செந்திநாதன் நல்லதொரு படைப்பாளி. கரவைக்கவி கந்தப்பனார், யாழ்ப்பாடி, இலக்கிய மாணவன், வேல், பரதன், உபகுப்தன் எனப்பலபுனைப் பெயர்களில் கனக செந்திநாதன் எழுதியுள்ளார்.
64

Hidal figdkamp &ril 13) - “செங்கை ஆழியான்”
3.3.15. Ji. (86).
ஈழகேசரிப்பண்ணையில் முகிழ்ந்த முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர் சு. வேலுப்பிள்ளை எனும் சு. வே ஆவார். உருவக்கதைகளின் பிதாமகர். ஈழகேசரியில் கிடைக்காதபலன் (1943) என்ற சிறுகதையுடன் இலக்கியவுலகில்ட்பிரவேசிக்கும் சு. வே. அதனைத் தொடர்ந்து, மனித மிருகம், புத்தனின்சுவடு, காலத்தின் தண்டனை, பாசம், பிரேமை. மனநிழல், அன்புக்கறை, சிற்றன்னை, தோழன் முதலான சிறுகதைகளை ஈழகேசரியரில் எழுதியுள்ளார். மறுமலர்ச்சியரில் இரண்டு உருவகக்கதைகளைப் படைத்துள்ளார். மண்வாசனை, வெறி, பாரிசவாதம், பூ, பாற்காவடி, அக்கினி, ஸ்ட்ரைக், புகை, தகிப்பு, தெய்வம், பெரியம்மா என்பன ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதிய சிறுகதைகளாகும். இவற்றில் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு சு.வே. யின் மண் வாசனை ஆகும். மணற் கோவில் என்ற உருவக்கதை ராஜாஜியால் பாராட்டப் பெற்றது.
*மனிதனின் சிந்தனைகளைத் துாண்டி உணர்ச்சிகளைத் தொடுவதுடன், அவனுடைய பாவனா சக்தியை மிகுதிப்படுத்துவதாயும் மனதிற்கு இன்பம் அளிப்பதாயும் அமைவது இலக்கியம்” என்பது சு.வே.இன் கருத்து. நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக்கியமாகி விடுவதில்லை. நல்ல கருத்தை நல்ல கலையழகோடு பிரதிபலிப்பதுதான் நல்ல இலக்கியமாகும்.” என்ற சரஸ்வதி சிதம்பரகுநாதனின் கருத்துக்கும் இவர் உடன்பாடு. சு.வே. சிறுகதைகளின் சிறப்பு அவரின் கூர்மையான அவதானிப்பும், சுவையான வர்ணனையும், மானிடநேயத்தைத்துண்டும் கருத்துக்களுமாம். அவரின் சிறுகதைகளில் கிடைக்கதாபலன், பாற்காவடி ஆகிய இரண்டும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு அணிசேர்ப்பன.
க.வே. யின் முதற்சிறுகதை கிடைக்கதாபலன் என்பதாகும். இச் சிறு கதை பின்னர் அவரது தொகுதியில் கிழவனும் வத்தகைக் கொடிகளும் எனப் பெயர் மாற்றம் பெற்று, கருவை நெகிழ்த்தியுள்ளது. ஒருகிழவன் மூன்று வத்தகைக்கொடிகளை ஆசையோடு அவதானமாக வளர்த்து வருகிறான். 'கிழவனின் முகத்திலே காலதேவனின் சாட்டைத்தழும்புகள் நன்றாகப் பதிந்திருந்தன. கன்னங்கள் குழிவிழுந்திந்தன, வத்தகைக் கொடியின் இலையிலுள்ள வெட்டுகள்
65

Page 42
ாறுத்துச் சிறுகதை வரலாறு *Naas Jaff”
போல, தோல் எலும்போடு ஒட்டித் திரைந்து போயிருந்தது" வத்தகக் கொடிகளில் மூன்றுபிஞ்சு, இரண்டுகாய்கள் பிடித்திருத்தன. அவற்றை அன்போடு தடவிக்கொடுக்கிறான். இவை எப்போது பழுக்கும்? ஆவலோடு
‘ஓகோ, யாரோ பசிக்கொடுமையால் கொண்டுபோய் விட்டார்கன், போகட்டும்’ எனக்கிழவன் திருப்திப்படுகிறாள், மற்றைய மூன்று காய்களுக்காக் காத்திருக்கிறான். குடிசை வெளியில் கட்டிலை போட்டுப் படுத்துக் காவல் காக்கிறான். காலம் கழிகிதது. அந்த வத்தகக் காய்கள் பூரணமாகப் பழுத்து விடுகின்றன. ஆனால் அவற்றைப் பிடுங்க கிழவன் எழுந்து வரவில்லை. - இச்சிறு கதையைப் படித்து முடிந்ததும் எழுகின்ற உணர்ச்சிதாள் இச்சிறுகதையின் வெற்றி.
சு. வே. யின் பாற்காவடி, பலராலும் விதந்துரைக்கப்பட்ட நல்லதொரு சிறுகதை. ஒருவகையில் கோயில் வழிபாட்டிலுள்ன. குறைபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் பாற்காவடியில் சு.வே. கட்டிக்காட்டுகிறார். "ஆத்ம சாத்திக்குறைவிடமான அந்தச் சந்நிதானம் கலகலப்பில் மூழ்கிப்போய்க் கிடந்தது. இது தெய்வத்தின் சம்மதமன்று, மனிதவர்க்கத்தின் ஏகோபித்த அபிப்பிராயம்" கோயில்களில் கேளிக்கைகள் அதிகரித்து விட்டன. மயிலிறகுகள் கற்றைகற்றையாகக்
நிக்கிறார்கள். இது வசதியான கப்பிரமணியன் கோயிலில் திருக்கார்த்திகை அன்று காணப்படும் காட்சி. இன்னொரு இடத்தில் சடைத்து வளர்ந்த ஆலமரத்தின் கீழ் சிறு குடிலில் விற்றிருக்கும் அம்மன் கோயில்.
நிறைவேற்ற வந்திருக்கிறார்கள். அங்கு கொட்டுமேனம், ஜனக்கச்சல்,
ட்டு எதுவுமில்லை. இருகோயில்களிலும் ப்படுகின்றன. இதுதான் - பாற்காவடியின் கதை. ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளை மனிதரிலும் அவர்கள் வணங்கும் கோயில்களிலும் ஏற்றிக்கதையை சொல்லி விடுகின் b, *தசிய சொர் பில் க. வே. யின் படைப்பனுபவத்தினையும் உணர வைத்துள்ளது.
3. 3. 16 இராஜ அரியரத்தினம்
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும்
ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி முதலான பத்திரிகைகளின் ஆசிரியாராக
66

ஈழத்துச் சிறுகதை வரலாறு . “செங்கை ஆழியான்”
விளங்கி, படைப்பாளிகளையும் படைப்புக்களையும் உருவாக்கியுள்ளார். ' ஈழகேசரியில் பதினான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1945 ஆம் ஆண்டு வயலுக்குப்போட்டார் என்று தரமான சிறுகதை யுடன் ஈழகேசரி மூலம் சிறுகதைத் துறைக்குள் இராஜ அரியரத்தினம் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, வாழ்வின் சாயை என்ற சிறுகதை ஈழகேசரியில் வெளிவந்தது. அதனை விட தங்கபூச்சி என்னும் நாவலையும், சோணாசலக் கவிராயர் என்ற பெயரில் சில கவிதை களையும் எழுதியுள்ளார். கல்கிபிறந்தார் என்பது இவர் எழுதிய நூல்.
ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் ஒன்றாகும். இச்சிறு கதை சிற்பியால் தொகுக்கப்பட்ட ஈழத்துச்சிறுகதைகள் என்ற நூலில் வெள்ளம் என்ற பெயர்மாற்றத்தோடு இடம்பிடித்தது. கிராமத்தில் வெள்ளம் போடுகிறது. அந்தமழையில் தனது வயலைப் பார்க்கச் செல்லும் கமக்காரார், வெள்ளத்துள் பலியாகும் சம்பவத்தை மனதை உருக்குமாறு இராஜ அரியரத்தினம் விபரித்துள்ளார். பகைப்புல வர்ணனை, உரையாடல் என்பன கலாபூர்வமாக அமைந்த சிறுகதை இதுவாகும். வாழ்வின் சாயையில் ஏழ்மையின் துயரத்தையும், முதலாளி-தொழிலாளி பிரச்சனையின் வடிவங்களையும் இராஜ அரியரத்தினம் அலசுகிறார். வாலிபன், கிழவன், தொழிலாளி, எழுத்தாளன் என்போர் ஒரு தேவைக்காக ஒருத்தியின்விட்டில் சந்திக்கிறார்கள் - இதுதான் வாழ்வின சாயை. கதையில்லாத சிறுகதை. புதுமையாகவுள்ளது.
3.3.17. நாவற்குழியூர் நடராஜன்
ஈழத்துக் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்த நாவற்குழியூர் நடராஜன், சிறு கதை இலக்கியத்திற்கும் பங்களிப்புச் செய்துள்ளார். 1943இல் ஈழகேசரியில் மோகினி என்ற சிறுகதையுடன் ஈழத்துச்சிறுகதைத்துறைக்குள் நாவற்குழியூர் நடராஜன் நுழைகிறார். அதனைத் தொடர்ந்து இரண்டு கைகள், மாயாவி, மாமி ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும், சாயை எனுமொரு சிறுகதையை மறுமலர்ச்சியிலும் படைத்துள்ளார். இவரது சிறுகதைகளில் மாமி, சாயை ஆகிய இருகதைகளும் விதந்துரைக்கதக்கவை. .
மாமி சிறுகதை ஈழகேசரிச் சிறுகதை, மகனுக்கென. மனைவி
ஒருத்தி வாய்த்ததும் தன் தானம் குறைந்துவிட்டதெனக் குமையும் மாமியைப் பற்றியகதை. “இந்தச் சோடனைக்காரிகள் வராவிட்டால்,
67

Page 43
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
பெற்றதாய் என்றிருப்பவள் மகனைப் பார்க்கமாட்டாளாக்கும். கொடிக்குச் சுரைக்காய் பாரமாய் விடுமா?’ என ஆதங்கப்படும் மாமி “புருஷர்களுக்கு இவர்கள் என்னதான் பிரமாதமாய் பண்ணிவிடுகிறார்கள்? இராமுழுவதும் குசுகுசுவென்று கூடிக்கதைத்துத் துாக்கத்தைக் கெடுப்பதும், பகல் முழுவதும் ஒரு நிமிஷ நேரம் ஓயவிடாமல் அதுக்கு வா. இதுக்கு வா என்று அரித்தரித்து வீதிக்குவிதி இழுத்துக்கொண்டு திரிவதும்.* இது மாமியின் பிரலாபம், மாமியின் கூச்சலுக்குப் பதிலடி கொடுப்பது போல மருமகள் கணவன் வரும்போது. படுக்கையில் கிடக்கிறாள். ‘மாமி என்று இருக்கிறவளோடு இருக்கமுடியாது.” என்கிறாள். தாயுடன் கடிந்துகொள்கிறான் மகன். எப்படியென்றாலும் மாமி மாமிதான் என்று முடிக்கிறான். கணவனும் மனைவியும் புறப்பட்டுச் சினிமாவுக்குப் போகிறார்கள். “பிள்ளைகளைப் பெற்று வளவுமன்” என்கிறாள் மாமி. - இதுதான் கதை. ஆனால், நாவற் குழியூர் நடராஜன் இந்த மெல்லியவுணர்வை கலாபூர்வமாகச் சித்திரித்திருக்கிற முறை இச்சிறு கதையை நல்லதொரு படைப்பாக்கியிருக்கின்றது.
மறுமலர்ச்சி இலக்கிய இயக்கத்தின் தாபகர்களில் ஒருவரான நாவற்குழியூர் நடராஜனின் இன்னெரு சிறுகதை சாயை. ஓர் இனிமையான காதல் அனுபவத்தைச் சாயை சித்திரிக்கிறது. தனக்கு இனிமையாக இருப்பதும், தான் செய்த அதேகாரியத்தைத் தன் தம்பி செய்த போது எரிந்துவிழுந்து எச்சரிப்பதும் சுவைபடகூறப்பட்டுள்ளது. “ஒரு பெண்ணைக்கட்டிக்கொண்டு வருஷம் வருஷம் பத்து மாதங்களுக்கு இல்லாத உபத்திரவமெல்லாவற்றையும் அவளுக்கு உண்டுபண்ணச் செய்யும் கிரகஸ்தர்களிலும் பார்க்கப் பிரமச்சாரிகளே உண்மையாகப் பெண்களின் நன்மைக்காக உழைக்கிறார்கள்’ என்கிறார் ஆசிரியர். சாயையில் நல்லதொரு உத்தியைக் கையாண்டுள்ளார். இந்த இரு சிறு கதைகளுக்குமாக நாவற்குழியூர் நடராஜனை முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராக வைத்து எண்ண வைக்கின்றது.
3. 3. 18. கசின்
ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கசின் என்ற புனைபெயரில் முன்னைய இலக்கியத் தலைமுறைக்கு நன்கு அறிந்தவரான க. சிவகுருநாதன் ஆவர். 1946 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தசாப்தங்கள் வரை ஈழத்து அனைத்துப் பத்திரிகைகளிலும் ஓயாது நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், கட்டுரை என்ற முத்துறைகளிலும் கசின் ஆழமாகக் கால்களை ஊன்றியுள்ளார். கட்டுரைகளை சட்டம்பியார்

ஈழத்துச் சிறுகதை வரலாறு - - “செங்கை ஆழிாள்" என்ற புனைப்பெயரில் தந்துள்ளார். 1947ஆம் ஆண்டு கசினின் முதலாவது ஆக்கவிலக்கியமாக அவகளின் தொடர் குறுநாவலான “வண்டியில் வளர்ந்தகதை’, ஈழகேசரியில் வெளிவந்தது.
கசின் அவர்களின் சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு மெருகூட்டினவென்பேன். குஞ்சுமாணிக்கம், வனசஞ்சாரம், இதுகாதலல்ல, கதைவைச்சாத்தினாள், மணிஓசை, யார் பேசுகிறது, ஒருசொட்டுக்கண்ணி, இராசமணி, ஆராம்பசிகிச்சை, பரிமளசுந்தரி, நூலும் நூற்கயிறுமி, செய்ந்நன்றி, பிழையும் சரியும், மிஸ்.அன்னபூரணி முதலான சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. இவற்றை விட, சிலந்திவலை, தமிழன்தான், பச்சைக்கிளி, பஞ்சும் நெருப்பும் ஆகியன ஈழத்தின் ஏனைய சஞ்சிகைகளான தினகரன், வீரகேசரி, கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவரது சிறுகதைகளிற் பெரும் பாலானவை ஈழகேசரியில் வெளிவந்துள்ளமையால் கசின் அவர்களை ஈழகேசரிப்பண்ணையில் உருவானவராகக் கொள்வதில் தவறில்லை?
கசின் சிறுகதைகளில் பொதுவாகக் காதல் துாக்கலாகவே காணப்படும். மானிட உறவுகளின் பல்வேறு பரிசுத்த நிலைகளை அவர் தனது சிறுகதைகளில் கொண்டு வந்தார். மானிடன் உள்ளவரை நிலைத்து நிற்கும் பொதுவுணர்ச்சியான காதலை கருவாகக்கொண்டு பல சிறுகதைகளை ஆக்கியுள்ளார். சிறுகதையில் உலகம்தழுவிய பொதுமை அம்சம் அதுவே. அவருடைய சிறுகதைகளில் தமிழ்ச்சமூகத்தின் பழக்க வழக்கங்கள் பேச்சு முறை என்பன சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்ணோடு ஒட்டிய விடயங்களைத் தனது ஆக்கங்களில் சலியாது எடுத்துக்காட்டியமை கசினுக்குரிய திறன், கசின் எழுதும் சிறுகதைகளில் சிக்கல்கள் அதிகம் இருப்பதில்லை. வசனநடை வாசகர்களைக் கவரக்கூடியது. யதார்த்தவாதத்தில் நம்பிக்கை கொண்டவர். "நேர்மையான போக்கும் விசாலமான உள்ளமும் நடு நிலையான கொள்கையும் உடையவர்களிட மிருந்துதான் சிறந்த இலக்கியம் தோன்றமுடியும்’ என்ற கருத்தில் கசின் பிடிவாதமாகவுள்ளார்.
கசினின் சிறுகதைகளைப் படிக்கும்போது மனதில் தோன்றுகின்ற இலக்கியமதிப்பு, ஆசிரியர் நல்ல வினைத்திறன் வாய்ந்த படைப்பாளியாகவுள்ளார் என்றகணிப்பே. அவர் கையாண்டுள்ள வசன நடையில் பொதிந்து கிடக்கும் எள்ளல், நையாண்டி, நகைச்சுவை படிப்போரைக் கதையோடு ஒன்றிவிட உதவுகின்றன. மிகநுட்பமான அவதானிப்பினை அவரது சிறுகதைகளில் தரிசிக்கலாம்.
69

Page 44
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்”
அவருடைய சிறுகதைகளுள் குஞ்சுமாணிக்கம் ஈழத்தின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டியதாகும். அரசியல் வேறுபாடுகள் எவ்வாறு சாதாரண மக்களைப் பிரிக்கின்ற தென்பதை மிக நளினமாகவும் ஆழமாகவும் குஞ்சுமாணிக்கம் சிறுகதையில் சித்திரித்துள்ளார். வன்னிப் பிரதேசப் பின்னணியில் எழுதப்பட்ட மணியோசை, பரிமளசுந்தரி ஆகியசிறுகதைகளும் குறிப்பிடதக்கன. பகைப்புலச்சித்திரிப்பு இச்சிறு கதைகளில் மிகசிறப்பாகவுள்ளன. இவரது பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாகக் கசின் சிறுகதைகள் நூல் வெளிவந்துள்ளது.
3.3.19. சொக்கன்
ஈழத்துச் சிறுகதை இலக்கியவரலாற்றில் சொக்கன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் க. சொக்கலிங்கம் முன்னோடிகளில் ஒருவராவர். முதுகலைமாணியான சொக்கன், பழைய இலக்கியப் பரிச்சயமும் நவீன இலக்கியத் தெளிவும் கொண்டவர். இலக்கியத் துறையில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், ஆய்வுக்கட்டுரை, பாடநூல் என பல்துறைகளிலும் அகலமாயும் ஆழமாயும் கால்களைப் பதித்துள்ளார்.
ஈழகேசரியில் 1947 இல் கனவுக்கோயில் என்ற வரலாற்றுக்
கதையுடன் அறிமுகமாகும் சொக்கன், அதனைத்தொடர்ந்து கவிஞன்பலி, ஞாபகச்சின்னம், தீர்ப்பு, கூனல், பனித்துளி, குட்டைநாய், மாணிக்கம், கற்பரசி, தாமரையின் ஏக்கம், மறுபிறவி, காதலும் உரிமையும், வினோத நண்பன், பிள்ளைப் பாசம் முதலான சிறு கதைகளைப் படைத்துள்ளார். இவை அனைத்தும் ஈழகேசரியிலேயே வெளிவந்துள்ளன. மறுமலர்ச்சியில் பொன்னுச்சி என்றொரு சிறகதை வெளிவந்துள்ளது. இச்சிறுகதைகளில் கனவுக் கோயில், கவிஞன் பலி, ஞாபகச் சின்னம், திாப்பு, கற்பரசி ஆகியன சரித்திரக்கதைகளாகவும் ஏனையவை சமூகக்கதைகளாகவும் உள்ளன.
“சொக்கன் பழைய எழுத்தாளர் சோ. சிவபாதசுந்தரமி, சம்பந்தன்,
இலங்கையர்கோன், சு.வே, வரதர், கனகசெந்திநாதன் வரிசையில் இடம்
பெற்றவர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக்ஜீவா சந்ததியோடு
ஒன்றானவர். அதைதொடர்ந்து யோகநாதனி, பெனடிக்பாலன், செங்கை
ஆழியான், செம்பியன் செல்வன் காலத்தில் அவர்களுடன் நின்றவர்.
இப்போதும் புதிய இளமையுடன் எழுதிக்கொண்டிருப்பவர்" என நந்தி 70

ஈழத்துச் சீதுகதை வரலாறு “செம்கை ஆழிபான்”
குறிப்பிட்டமை முற்றிலும் ஏற்புடையவை. ஈழத்துச்சிறுகதை இலக்கிய வரலாற்றின் சமூகசீர்திருத்தக்காலகட்டத்தில் (1930. 1949) அவர் ள்முதிய சிறுகதைகளில் கனவுக்கோயில், குட்டைநாய் ஆகிய
சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.
ஈழத்துச்சிறுகதை இலக்கிய வரலாற்றில், சொக்கன் தனது 17 வது வயதில் கனவுக்கோயிலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுகதை கைமுனு மன்னனது இலட்சியக் கோயிலான ரூவான் வெலிசாய பற்றியது. மன்னனின் இறுதிக்காலத்திற்குள் அக்கோயிலைக் கட்டிமுடித்து விடவேண்டுமென்பதற்காக அவனது தம்பி செய்த தந்திரத்தை விபரிப்பது. "நேற்றுவரை அரைகுறையாகக் கிடந்த அது. இன்று வானமுகட்டை எட்டி நின்றது. கைமுனுவின் கனவுக்கோயில் உலகின் சாசுவதமாக இடம்பெற்று விட்டது. அவன் கண்கள் மலர்ந்தன. மலர்ந்தபடியே நின்றுவிட்டன. திரைச் சேலைகளாலும் மூங்கில்களாலுந்தான் முடிவுபெறச்செய்யப்பட்டது என்பதை அவன் அறிந்தானா? சொக்கனின் கம்பீரமான வசனநடையை அவரது வரலாற்று ஆக்கங்களில் காணலாம். சுவைபயக்கும் இனிமையான எளிமையான வாக்கியங்கள் சொக்கனுக்கே கைவந்த கலைத்திறன்.
ஈழகேசரியில் சொக்கன் எழுதிய குட்டைநாய் வித்தியாசமான ஒரு சிறு கதைப்படைப்பு. 'ஆனந்தமும் ஒளியும் போட்டியிட்டு ஆக்கிரமிக்கும் மோட்ச உலகத்தின் ஒரு வெளியிலே இரு நாய்கள் நின்றன’ என இச் சிறுகதையைச் சொக்கன் தொடங்குகிறார். அவற்றின் மூலம் மனிதர்களின் சுயநல நடத்தைகளை விபரிக்கிறார். ‘மனிதர்கள் பொல்லாதவர்களடி" என்கிறது இக்கதையில் வரும் ஆண்நாய். அதனுடைய கருத்துக்குப் பென்நாய் எதிர். ஆன்நாய் கூறுகிறது: “முதுமை என் மேற் படையெடுக்கத் தொடங்கியதை நான் உணரவில்லை. என் எஜமானின் சுயநலமும் அர்த்தமும் நிறைந்த பார்வையில் அருவருப்பும் அலட்சியமும் நிறைந்திருப்பதைக் கூட நான் கவனிக்கவில்லை. இந்தக்குட்டைபிடித்த சனியனை இனியும் வைத்திருக்கக் கூடாது. கொன்றுவிட வேண்டும், என்கிறான் எஜமான்". இதுதான் குட்டைநாயின் கதை. இச்சிறுகதையை சொக்கன் தத்ரூபமாக எழுதியுள்ளார். ஒரு மிகச்சிறு கருவிற்கு தக்க வடிவம் தந்துள்ளார்.
சொக்கனின் சமுதாயச் சீர்திருத்தக் கால கட்டத்துக் கதைகளை விட, பிற்காலக் கதைகள் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு வலுச்சேர்த்துள்ளன.
71

Page 45
ஈழத்துச் சிறுகதை வரலாறு "Júgok gyfusait” 3.3.20. தாழையடி சபாரத்தினம்
கல்கிபத்திரிக்கை நடாத்திய ஒருசிறு கதைப் போட்டியில் மூன்றாவது பரிசினைப் பெற்றதன் மூலம் பிரபலம் அடைந்து, அசுரகதியிற் பல சிறுகதைகளைப் படைத்து, தாழையடிசபாரத்தினம் வாசகரைக் கவர்ந்தார். ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் வெளியான குருவின்சதி, பழைய ஏகலைவன் கதையாக இருந்தாலும் அதன் நடையும் புதுப்பார்வையும் அதனை தரமான கதையாக ஆக்கிவிட்டிருக்கின்றன, மறுமலர்ச்சியில் தெருக்கிதம், ஆலமரம் ஆகிய அவரின் சிறந்த இருகதைகள் வெளிவந்துள்ளன. தாழையடி சபாரத்தினம் புதினம் பத்திரிகையில் சிந்திக்கத் தொடங்கினான், எனக்கும் உனக்கும் தெரிந்தால்போதும், தாய் ஆகிய சிநகதைகளை எழுதியுள்ளார். ஆனந்தனில் வெளியான சிறுகதையே குருவின்சதி ஆகும். இவற்றைவிட ஊமை நாடகம், ஓடமும் வண்டியும், வண்டிக்காரன், நினைவுமுகம், வற்றாத ஊற்று, ஷேட், சைக்கிள் சக்கரம் முதலான சிறுகதைகளையும் படைத்துள்ளார். இவரின் சிறுகதைகளின் தொகுப்பாக புதுவாழ்வு வெளிவந்துள்ளது. ー、
தாழையடி சபாரத்தினத்தின் சிறுகதைகளில் குருவின்சதி, ஆலமரம், தெருக்கிதம் ஆகிய மூன்றும் மிகச் சிறந்தவை. குருவின் சதி கல்கியில் பிரசுரமானதாக அறியப்படுகின்றது. வரதர் நடாத்திய ஆனந்தன் பத்திரிக்கையிலும் டிசம்பர் 1954 இச் சிறுகதை பிரசுரமாகியுள்ளது. குருவின் சதி அற்புதமான ஓர் இலக்கியக் கற்பனை. துரோணாச்சாரியாரைத்தன் மானசீகக்குருவாகக் கொண்ட ஏகலைவன், குருவின்சிலையொன்றினைச் செய்து அதன்முன்னிலையில் வில்வித்தை பயின்று தேறுகிறான். அந்த வேடனான ஏகலைவன் அருச்சுனனுக்குப் போட்டியாக வந்து விடுவாளே என்ற அச்சத்தில் துரோணர் ஏகலைவனிடம் அவன் பெருவிரலைக் குரு தட்சணையாகக் கேட்கிறார். அவன் மகிழ்வோடு பெருவிரலைத் துண்டித்து வழங்குகிறான். ‘வானத்தில் இடிஇடித்தது. புயல் வீசி காட்டு மரங்களை வேரோடு பெயர்த்துப் பிரளய காலமோவென்று ஐயுறும்படி செய்தது. காது செவிடுபடும்படியாக ஏற்பட்ட ஏதோ சத்தத்தைக் கேட்டுச்சிலையைப் பார்த்தான், ஏகலைவன். சிலையின் மார்பு வெடித்துத் துண்டுதுண்டாகக் கீழேசொரிந்தது. வெடித்த மார்புக்குள்ளே இதயத்தைக் கண்டான். இதயத்திலிருந்து பெருகும் இரத்தத்தைக்கண்டான் ஏகலைவன்.” என இச்சிறுகதை நிறைவு பெறுகிறது. இச்சிறுகதையை கவிதா பூர்வமாகத் தாழையடி சபாரத்தினம் படைத்துள்ளார்.
72

ஈழத்துச் சிநகதை வரலாறு "skolai grug"
3.3.4.21. கு. பெரியதம்பி
ஈழத்துச்சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவராக வைத்து என்னப்படவேண்டிய கு. பெரியதம்பியை, மறுமலர்ச்சி சிறுகதைத் தொகுதி வெளிவந்த பின்னரே இலக்கிய உலகு அறிந்து கொண்டது. புலோலியூரைச் சேர்ந்த கு. பெரியதம்பி ஒரு தமிழாசிரியர். மணிமணியான சிறுகதைகள் மிகச் சிலவற்றைப் படைத்துள்ளார். இவருடைய சிறகதைகள் மறுமலர்ச்சியிலேயே பெரிதும் வெளிவந்தன. அவ்வகையில் மறுமலர்ச்சிப் பண்ணையில் முகிழ்ந்தவராக இவரைக்கருதலாம் மறுமலர்ச்சிச் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசினை பெற்றதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான கு. பெரியதம்பி, அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சியில் அம்மான்மகள், குழந்தை எப்படி, பிறக்கிறது. காதலோ காதல், எட்டாப்பழம், மனமாற்றம், விண்வதந்தி ஆகிய ஆறு சிறுகதைகளை எழுதியுள்ளார். மறுமலர்ச்சியில் அதிக சிறகதைகள் எழுதிய பெருமை இவருக்கேயுரியது. விமர்சகள் கணிப்பில் இவர் அகப்படவில்லையென்பது விசனத்திற்குரியது. இந்த ஆறு மறுமலர்ச்சிச் சிறுகதைகளை விட, பொங்கல் வாழ்த்து என்றொரு சிறகதையை, வரதர் புதுவருஷமலர் என்ற ஆண்டுச் சஞ்சிகையில் படைத்துள்ளார். பெரியதம்பி கூர்மையான அவதானிப்புடன் கூடி யதார்த்த பூர்வமாகக் கதைகூறத் தெரிந்துள்ளார். நவீன சிறுகத்ையின் இயல்புகளை நன்கு புரிந்த கொண்டு தன் சிறுகதைகளைப் ப த்துள்ளாரீென எண்ண முடிகிறது. چینی
2ష్టి క్ల
கு பெரியதம்பியின் சிறுகதைகளில் எட்டாப்பழம், அம்மான்மகள் ஆகிய இருகதைகளும் மிகச்சிறப்பானவை எனக்கருதுகின்றேன். கு. பெரியதம்பியின் சிறுகதைக் கருப்பொருள் காதலாக விருந்தாலும், அதனை அவர் வெவ்வேறு நிலைகளில் சித்திரிக்கும்போது சம்பவங்களை ug: உணர்வுநிலை மேலோங்கியிருப்பதைக் காணலாம். நல்ல சிறுகதையின் பண்பு அதுதான். முதலாளியின் கார் றைவர் அவன். முதலாளியின் மகள் கமலாசினி சில நாட்களாக அவனைக் கரிசனையோடு விசாரிக்கிறாள். நோய்வாய்ப்பட்டிருக்கும் அவனின் தாயைக் கவனிக்க, ஒருத்தியைக் கலியாணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றாள். “உன்னை மணப்பவள் தன்னளவில் அதிர்ஷ்டம் உள்ளவளாக இருப்பாள்”- வறுமையோடு அவன் கனவுகாண்கிறான். “சிலசமயம் அவளுக்கு என்மேல்.’ டிரைவர்மாரோடு பெரிய இடத்துப் பெண்கள் ஒடிப்போன சம்பவங்கள் நினைவு வருகின்றன. ஒருநாள் கமலாசினி
73

Page 46
štá falang arah *செங்கை ஆழியான்” அவனிடம், "உன்னுடைய நல்ல குணத்திலே எனக்கு நம்பிக்கையுண்டு. தினமும் காலையில் வரும்போது தபால் வாங்கி வருவாயல்லவா? இனிமேல் என் பெயருக்கு ஏதாவது தபால் வந்தால் அதை ஒருவரிடமும் கொடுத்துவிடாதே. என்னிடம் கொண்டுவந்து இரகசியமாகத் தந்துவிடு' என்கிறாள். அவள் எட்டாப்பழம் என்பது அவனுக்குப் புரிகிறது. இந்தச்சிறுகதையில் எந்தவோரிடத்திலும் கமலாசினிக்கு ஒரு காதலன் இருக்கிறானென ஆசிரியர் கூறவில்லை. சொல்லியவற்றிலும் சொல்லாது விட்டவை இச்சிறுகதையை கலைத்துவ சிருஷ்டியாக்கியுள்ளன.
அம்மான் மகள் கு. பெரியதம்பியின் இன்ன்ொரு நல்ல சிறுகதை, அம்மான் மகளுக்கு வேறிடத்தில் திருமணம் நிகழவிருந்தபோது, மச்சான் காரன் அவளைக் கடத்தி வந்துவிடுகிறான். முதலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவளி, இறுதியில் பொலீசார் அவனைக் கைதுசெய்ய வந்தபோது, தானாகத்தான் அவரோடு வந்தேன் என்கிறாள். ஒரு மிகச் சிறியகரு. ஆனால் அதனைக் கூறியபாங்கு நல்லதொருசிறுகதை எவ்வாறு அமையவேண்டுமென்பதற்கு உதாரணம். ஈழத்துச் சிறுகதை இலக்கியவரலாற்றில் கு.பெரியதம்பியும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டியவர்.
3.3.22. கே. கணேஷ்
1943 களில் சிறுகதைத்துறைக்கு வந்த இன்னொரு முன்னோடி எழுத்தாளர் கே. கணேஷ் ஆவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் கணேஷ் முதன்மையானவர். மொழிபெயப்பாளர். கணேஷ் எழுதிய சிறுகதைகள் மிகச் சொற்பமாகும். கே. ராமநாதனுடன் சேர்ந்து பாரதி என்றொரு இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டார்.
கே. கணேஷின் சிறுகதைகளில் சத்தியபோதிமரம் விதந்துரைக்கத்தக்கது. எனினும் கதையின் கரு மூடநம்பிக்கையொன்றின் அடியொற்றியதாகவுள்ளது. தம்பியின் சொத்துக்களை தனதாக்கிக் கொண்ட ஓர் அண்ணன், தான் அவ்வாறு செய்யவில்லையென சத்தியபோதிமரத்தின் முன் சத்தியம் செய்கிறான். தம்பி ஏழையாகிறான். தமையன் செல்வந்தனாகிறான். பின்னர் ஒருநாள் தமையன் குடும்பத்தாருடன் காரில் சத்திய போதிமரத்தைத் தாண்டும்போது கிளை முறிந்து காரின்மேல் விழுந்து குடும்பமே பலியாகின்றது. சொத்துக்கள் மீண்டும் தம்பிக்கு கிடைக்கின்றன. இதுதான் கதை - எனினும்
74

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்” இந்தக்கதையை விபரித்துள்ள முறையும், விவரண நடையும் தக்கதோர் சிறுகதையை முழுமையாகத் தரிசிக்க வைக்கின்றன.
3.3.23. ஏனைய படைப்பாளிகள்.
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் சமூக சீர்திருத்தக்காலத்தில் (1930. 1949) மேற்குறித்த முன்னோடிகளோடு வேறும் பலர் சிறுகதைத்துறையில் ஆங்காங்கு தமது படைப்புக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றவிதத்தில் சிறுகதைகளை எழுதிப்பார்த்துள்ளனர். 1933 இல் அளவெட்டி த. சிவலிங்கம் என்பவர் பறைச்சேரியில் தீவிபத்து அல்லது வேதாந்த ஐயங்கார் என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். ஈழகேசரியின் முதலாவது சிறுகதை இதுவே. பொன் குமாரவேற்பிள்ளை, ஏ.சி. இராசையா, வண்ணை வ.சி.சின்னத்துரை, சுமதி, செ. நடராசா, ந. பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், சி. குமாரசாமி, மயில்வாகனன், நடனம், எஸ். கே., பரணி, இ. அம்பிகைபாகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உருவத்தில் சிறுகதைக்குரிய அம்சத்துடன் 6aigslist60 சமூகச் செய்தியைக் கருவாகக் கொண்ட நல்ல சிறு கதைகள் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. சமூக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிறுகதைகளாகவும், வாழ்க்கையில் பிடிமானத்தை ஏற்படுத்தும் சிறுகதைகளாகவும் இவை விளங்குகின்றன. செ. நடராசா எழுதிய புஞ்சி மெனிக்கா, எஸ்.கே.யின் விடிவு என்ற சிறுகதைகள் இவ்வாறானவை. சிங்கள - தமிழ் காதலிப்பினைச் சித்திரிக்கின்றன. புஞ்சி மெனிக்காவில் காதல் நிறைவேறாததால் சிங்களப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். விடிவுச்சிறுகதையில், தமிழர் சிங்களவர் பேதம் ஒழிய வேண்டுமென்றால் கலப்பு மனம் சட்டப்படி கட்டாயமாக்கப்படவேண்டும் என்கிறான், 1947 ஆம் ஆண்டுக் கதாநாயகன். இவ்வாறான சிந்தனைப் போக்கு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலரால் பேசப்பட்டது மாத்திரமல்ல, இலக்கியக் கருப்பொருளாகவும் பல புனைகதையாசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது.
சிறந்த உள்ளடக்கத்தோடு சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்தரும் சிறுகதைகள் 1930 - 1949 காலகட்டத்தில் வெளி வந்துள்ளன. வர்க்கியம், சாதியம், பெண்ணியம் சார்ந்த
75

Page 47
ஈழத்துச் சிறுகதை வரலாறு- "செங்கை ஆழியாண்” பிரச்சனைகளை யதார்த்தமாகவும் தெளிவாகவும் இச்சிறுகதைகள் அணுகுகின்றன. ந. பாலசுப்பிரமணியம் எழுதிய செல்லி, யாழ்ப்பாணச் சாதியக் கொடுமைக்கு எதிராகக் குரல் தருகின்றது. இச்சிறுகதை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த படைப்பாகும். ஒரு சமூக மாற்றத்தை எளிதாகச் சித்திரிக்கின்றது. கொழும்பிலிருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த கல்விட்டுப்-பொடியன், இரவு-நித்திரை வராமல் தங்கள் மிளகாய்த் தோட்டத்துக்கு வருகிறான். அங்கு தோட்டத்தில் காவலிருக்கும் செல்லியைக் காண்கிறான். அவர்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பை வெகு இயல்பாக ந. பாலசுப் ’பிரமணியம் சித்திரித்துள்ளார். செல்லியைக் கொழும்புக்கு அழைத்து வந்து கலியாணம் செய்து கொள்கிறான். ஊரில் ஒருநாள் கூகபொழுதில் ஊரிலுள்ள நாட்டாண்மைக்காரர் கதிரனின் கள்ளுக் கொட்டிலில் பனம்பால் பருகுவதற்குக் கூடியிருந்தார்கள். தலை சுழல, நாக்கு ஊற ஆரம்பித்தது. கல்விட்டுப் பொடியன் பள்பொட்டச்சியைக் கூட்டிக்கொண்ட பொருள் பற்றிப் பிரசங்கங்கள் நடந்தன. இந்தப்பிரசங்கங்களின் சாரத்தைத் திரட்டித்தருவது போல புளியடிச்சுப்பர், 'உப்பிடித்தான் அறப்படிச்சவை கூழ்ப்பானேக்கை விழுகிறது" என்று சொல்லி, புளாவைச் சுழற்றி எறிந்து விட்டுநடந்தார்.* - கதை இவ்வாறு நிறைவு பெறுகிறது.
படித்து முடிந்தும் மனதில் நெகிழ்ச்சியான ஓர் உணர்ச்சியை எஞ்சி நிற்க வைக்கும் சிறுகதைகள் பல 1930 - 1949 காலகட்டத்தில் வெளிவந்திருக்கின்றன. பரணியின் அமரஇரவு, ராதா கிருஷ்ணனின் வேலை நிறுத்தம், சில்வரம்புலியின் தெளிவு, மயில்வாகனனின் ஏழையின் கொடை, நடனத்தின் சிதைந்த வாக்கு, பொ. பாலசிங்கத்தின் மன்னிப்பு சானாவின் நாட்டியப் பெண் என்பன இவ்வாறான் சிறுகதைகளாம். இச் சிறுகதைகள் கதாசிரியர்களின் நேரடி ஆவணப்பதிவுகளாக விளங்குகின்றன. பரணியின் (பரமேஸ்வரன்) அமரஇரவு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஓர் அழகியுடன் கனவில் நடாத்தும் வாழ்க்கையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கின்றது. ராதாகிருஷ்ணஐயர் வண்ணார் பண்ணையைச் சேர்ந்தவள். ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1942இல் சில்லறை வியாபாரி என்ற சிறுகதையுடன் ஈழகேசரியில் பிரவேசித்தார். இவர் எழுதிய வேலைநிறுத்தம்’ சிறிய கதையாயினும் எடுத்துக் கொண்ட விடயமும் கதைகூறும் முறையும் சிறப்பாகவுள்ளன. சில்வரம்புலியின் (பண்டிதர் சி. வல்லிபுரம்) தெளிவு" என்ற சிறுகதை, ஒரு வித்தியாசமான எதிர்வு கூறல் கதை. ஆலயப்பிரவேசத்தினை மையக்கருவாகச் கொண்டாலும் அக்காலச் சமூகத்தின் பல்வேறு தகவல்களைக் கலையழகோடு ஆவணப்படுத்துகின்றது. மயில்வாகனனின் ஏழையின்
76

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
கொடையில்" ஊரில் அரிசி தண்டிக் கோயிலில் அன்னதானம் நடக்கிறது. சுப்பு என்ற ஏழைச்சிறுவன் அங்கு சோறுகிடைக்கும் எனச் செல்கிறான். *அன்னதானத்திற்கு அரிசி கொடுத்தாயா’ என்று அவனை ஒருசிறுவன் கேட்டதால், மனம் நொந்து குடிசைக்கு வந்து தண்ணிரைக் குடித்து விட்டு குடிசையிலிருந்த உணவைத் தாய்க்கு வைத்துவிட்டு மரநிழலில் படுத்து விடுகிறான். குடிசைக்கு வந்த தாய், மகன் கோயிலில் வயிறார உண்டிருப்பானென எண்ணி, வீட்டிலிருந்த சாப்பாட்டை உண்டுவிட்டு உறங்குகிறாள். - இதுதான் ஏழையின் கொடை சிறுகதை.
நடனம் என்ற நடனசபாபதிஐயர் எழுதிய ஒரு சிறுகதை சிதைந்த வாக்கு”. ஈழகேசரியில் இச்சிறுகதையோடு நினைவுத்திரை, மறுமலர்ச்சியில் வாழ்வு ஆகிய சிறு கதைகளையும் எழுதியுள்ளார். எழுதிய சிறுகதைகள் ஐந்திற்குள்ளாயினும் சிறுகதைக்குரிய வடிவத்தையும் உத்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது அவரது சிறுகதைகளிலிருந்து புலனாகின்றது. செ. சண்முகநாதன் என்ற சானா ஈழகேசரியில் எழுதிய நாட்டியப்பெண்" குறிப்பிடத்தக்க சிறுகதை. சானாவை ஒரு நாடக ஆசிரியராகவும். நடைச் சித்திரங்களைத் திறனோடு படைக்கும் படைப்பாளியாகவும் தமிழுலகம் அறியும், இந்தியாவிலிருந்து அக்காலகட்டத்தில் நடனமாட அழைத்து வரப்பட்ட மங்கையிடம் மனதைப்பறி கொடுத்துத் தவிக்கும் ஒரு அப்பாவியின் பாத்திரவார்ப்பு. நடனமாதில் நன்குள்ளது.
தமிழகத்தில் டாக்டர். உ. வே. சுவாமிநாதையர் போன்ற பண்டிதர்கள் தாமும் சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் பங்கு கொண்டிருக்கின்றனர். சுவாமிநாதையரின் தருமம் தலைகாக்கும் என்ற சிறுகதை விமர்சகர்கள் சிலரால் விதந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல ஈழத்திலும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்னை, குருகவி ம. க. வே. மாகலிங்கசிவம் ஆகியோர் சிறுகதைகளை எழுதியுள்ளனர் என்பது வியத்தற்குரியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஈழகேசரியில் 1938ஆம் ஆண்டு நவபாரதம் என்ற சிறுகதையை "ஜ்யோதிர் மகிஷம் சாதேவ சாஸ்திரியாா’ என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் வைத்து குறிப்பாக இச் சிறுகதை ஆக்கப்பட்டிருக்கின்றது. அக்கால யாழ்ப்பணத்துப் பிரமுகர்களின் முகமூடிகள் இச்சிறுகதைகயில் கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆடலிறை மயிலங்கூடலூர் நடராஜன் என்பவர், ஈழகேசரி ஆண்டுமலர் 1939 இல் குருகவி ம.க. வே. மாகலிங்கசிவம் என்பவரால் எழுதப்பட்ட
77

Page 48
ஈத்துச் சிறுகதை வரலாறு- “செங்கை ஆழியாண்” அன்னை தயை என்ற படைப்பினை தக்கவொரு சிறுகதையாக அடையாளங் கண்டுள்ளார். சமயச் சார்புக் கதையெனினும் உருவமும் உள்ளடக்கமும் சமூகச்சார்பும் இதனைத் தக்க சிறுகதையாக்கி உள்ளனவென்பது அவரின் கருத்தாகும்.
ஈழத்துச்சிறுகதை வளர்ச்சியில் ஆங்கிலத்தில் தமிழ்மக்களது சமூக வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் சமூகவியற் பண்புகளையும் சிறுகதைகளாக்கிய இருவர் முன்னோடிகளாகவுள்ளனர். ஒருவர் மலையக எழுத்தாளரான சி. வி. வேலுப்பிள்ளை. மற்றவர் அழகு சுப்பிரமணியம். சி. வி. வேலுப்பிள்ளை 1930களில் எழுத்துலகில் பிரவேசித்தவர். மலையாக மக்களின் சமூக வாழ்க்கையின் இடர்களையும் அவற்றின் போராட்ட உணர்வுகளையும் உழைக்கப் பிறந்தவர்கள் என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதியிற் சிறுகதைகளாக Q6tsful Livir, fl. 6). வேலுப்பிள்ளையின் பார்வையும் பரிவும் மலையக மக்களில் நிலைத்திருப்பதுபோல, அழகு சுப்பிரமணியத்தின் பார்வையும் பரிவும் யாழ்ப்பான மண்ணில் நிலை கொண்டிருப்பதைக் காணலாம். அவரின் சிறுகதைகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமூக மாந்தரை உலகச் சிறுகதை அரங்கிற்குக் கொண்டு வந்தன. அவரின் கணிதவியலாளன் உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள் என்ற தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றது.
3.3.24. Աpւք ճյ6ՕՄ
ஈழத்துச்சிறுகதை இலக்கிய வரலாற்றின் சமூகச் சீர்த்திருத்தக் காலச்சிறுகதை 1930 - 1949 கள் சாதியம், வறுமை, ஆலயப்பிரவேசம், பலியிடுதல், காதலனுபவங்கள், குடும்பவாழ்வு, அக்காலப் பண்பாடு முதலான பல்வேறு நிலைக்களன்களில் படைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் இச்சமுகத்தின் அடுத்தகட்ட உயர்விற்கான கருத்தியல்புகள் கொண்டவை. சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்களையும் அனுபவரீதியாக இந்த ஆசிரியர்கள் சித்திரித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக இச் சிறு கதைகளிலிருந்து அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இச்சிறுகதைகளைப் படிக்கும்போது நாம் வெறும் வாசக நிலையிலில்லாமல் அக் கதாமாந்தரோடும் கருத்தோடும் கலந்து, கதாசிரியரின் படைப்பனுபவத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றோம். --
78

1933 - 1949 காலகட்டத்தின் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் அறுவடை என்ன? ஈழத்தின் உன்னதமான தமிழ்ச் சிறுகதைகள் எனத்தெரிவு செய்யப்படக்கூடிய 13 சிறுகதைகள் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. ஆனந்தனின் தண்ணித் தாகம், சம்பந்தனின் துறவி, சிவைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி, இலங்கையர் கோனின் வெள்ளிப் பாதசரம், நாவவிபூர் நடராஜனின் கற்சிலை, அட செ. முருகாத்தனின் வண்டிச் சவாரி, இராஜ அரியரத்தினத்தின் வயலுக்கு போட்டார் (வெள்ளம்), கனகசெந்திநாதனின் ஒரு பிடி சோறு, தாயைடி சபாரத்தினத்தின் குருவின் சதி, பவனின் ஆசைச் சட்டம்பியார், சோ. தியாகராஜனின் நல்ல மாமி, வரதரின் விபச்சாரி. கவேயின் பற்காவடி, கசினின் குஞ்சுமணிக்கம், கு. பெரியதம்பியின் அம்மாள் மகள் ஆகிய 15 சிறுகதைகளும் 1930, 1949, காலகட்டவரலாற்றின் நல்ல விளைவுகள் எனத் துணிந்து கூறுவேன். -
நமக்கு நமது சிறுகதைத்துறையின் வளர்ச்சி நிலையை மதிப்பீடு செய்வதற்கு தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளின் கதைகளைக்
படிகளில் ஏறியே ஆகவேண்டும். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் என என்னால் இனங்கானப்பட்ட இப் படைப்பாளிகளில் ஒரு சிலரது சிறுகதைகள் தொகுப்புக்களக வெளிவந்துள்ளன. இலங்கையர்கோனின்
சிறுகதைகள், வரதரின் கயமை மயக்கம் (வரதன் கதைகள்), அசெ. முருகானந்தனின் மனிதமாடு, இரசிகமணி கனக செந்திநாதனின் வெண்சங்கு, க. விேலுப்பிள்னையின் மண்வாசனை, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு ச்ொக்களின் கடல், கசினின் சிறுகதைகள் என்பன சிறுகதைத் தொகுதிகளாகவுள்ளன. அ. ந. கந்தசாமி, பாணன்,
உதவியாக அமையும்.
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகள் இந்தமன்னில்
ஆழக்காலுசான்றி நின்று சமூகத்தினைப் பள்த்தங்கள் என்பது அவர்களின்
சிறுகதைகளிலிருந்து புலானகின்றது. கற்பனை ரதத்திலேறி சஞ்சரிக்கின்ற
சிறுகதைகள் ஏராளமாக அவர்களிடம் இருக்கின்ற போதினும்
வாழ்கின்ற சமூகத்தின் பிரச்சினைகளையும் திர்வுகளையும் சமூகப்
பொறுப்போடு பல தரமான சிறுகதைகளில் சித்திரித்துள்ளனர் என்பதை 79

Page 49
ஈழத்துச் சிறுகதை வரலாறு "சேங்கை ஆழியான”
மறுத்தற்கில்லை. சமூகத்தின் எரியும் பிரச்சினைகள் அவர்களின் சிறுகதைகளில் வெளிவந்திருக்கின்றன. குடும்ப உறவுகளின் ஊடலும் கூடலும் மிக நளினமாக அவர்களின சிறுகதைகளில் பரவியிருக்கின்றன. வாழ்க்கையில் நம்பிக்கையையும் திருப்தியையும் ஊட்டத்தக்க செய்திகளை அவர்கள் தம் சிறுகதைகளில் பொதிருக்கின்றனர். அவர்களின் சிறுகதைகளில் சொல்லிய விடயங்களிலும் சொல்லாத சங்கதிகள் பல தொக்கி நிற்கின்ற திறனைக் காணலாம். நம்பிக்கை வறட்சியை அவர்களின் கதைகள் ஏற்படுத்தாது வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தினை அவை கட்டி நிற்கின்றன. இலக்கியத் தேடலும் கலையழகும் ஆங்காங்கும் விரவியுள்ளமை மறுப்பதற்கில்லை. அவர்கள் சமூகத்தினை புரிந்து கொண்டு சமூகத்திற்காக எழுதினார்கள்
‘நமது சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களை ஆராயும்போது, அவை நம்மைப் புடமிடுவதற்கான சந்தர்ப்பங்களைத் தருகின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டிவைத்திருக்கும் போலியான கட்டுமானங்களைத் தகர்க்கவும் செய்யலாம். போதாமைகளை உணர்த்தவும் செய்யலாம். போலித்தனங்களை உதறவும் செய்யலாம். எவ்வாறெனினும் எமதுபழையவற்றை ஆவணப்படுத்தி மீளாய்வு செய்வதென்பது எம்மை புடமிடுவதற்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது' என்ற எனது நண்பன் சுந்தரம் டிவகலாலாவின் மறுமலர்ச்சிக்கதைகள் நூலின் பதிப்புரை வாசகங்கள் மீண்டும் நினைவில் வருகின்றன.
அடிக்குறிப்புகள் - V.
1. குனராசா. க. கலாநிதி. ஈழத்தமிழிலக்கியத்தில் ஈழகேசரியின் பங்களிப்பு
மல்லிகை 34 ஆண்டு மலர் - 1999
2. இரசிகமணி கனக செந்திநாதன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, செம்பியன்
செல்வன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
3. செங்கை ஆழியான் க. குணராசா, மறுமலர்ச்சிச் சிறுகதைகள் வடக்குக்கிழக்கு மாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் அமைச்சு, திருகோணமலை - 1977 பக்: W
4. மே.கு. நுலில் வரதர். பக்: WI-x அத்துடன் மறுமலர்ச்சியும் நானும்,
கட்டுரை மல்லிகை ஆண்டு மலர் 1990 பக் 25 - 28.
5. கனக செந்திநாதன், இரகசியமணி இலங்கையர்கோன் சிறுகதைகள் மல்லிகை
யாழ்ப்பாணம் இதழ் 20 நவம்பர் டிசம்பர் 1969 பக்: 31
80

ஈழத்துச் சிறுகதை வரலாறு *ଗୋxes ിജ്
6.
7.
3.
0.
11.
12.
13
4.
17.
18.
19.
20.
21.
22.
23.
இலங்கையர் கோன், மேனகை, மறுமலர்ச்சி இதழ் தை 2948.
இலங்கையர் கோன், வெள்ளிப்பாதசரம்,
செம்பியன்செல்வன், சம்பந்தன் சிறுகதைகள் தொகுதி, தொகுப்பாசிரியர்கள் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் இலங்கை இலக்கியப் புேரவை வெளியிடு யாழ்ப்பாணம் - 1998. பக்: 3 - 14.
செங்கை ஆழியான், சம்பந்தன் மல்லிகை, யாழ்ப்பாணம் - டிசம்பர் 1989
செம்பியன்செல்வன், ஈழத்துச்சிறகதை மணிகள்
கனக செந்திநாதன், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, மு. கு. நூல் - 1964 பக்:34,
தெளிவத்தை யோசெப். மலையகச் சிறுகதைகள், துரைவி வெளியீடு, கொழும்பு . 1994 பக்: 13
சுதந்திரன் 16 1947 us;2
கதைக்கேவை - 2 அல்லயன்ஸ், சென்னை- 1942 - பக்335.
நவாலியூர் சோ. நடராஜன், கற்சிலை, ஈழகேசரி 29 - 6 - 1941
கனக செந்திநாதன். மு.கு நூல் பக்.28 - 29
கனக செந்திநாதன். மு.கு. நூல் பக் 33
சிற்பி முன்னோடிகளில் ஒருவர் சோ. சிவபாதசுந்தரம், மறுமலர்ச்சி இதழ் 25 மே, 1999, பக் 38.
ஆனந்தன். தண்ணித்தாகம். ஈழகேசரி 12 02, 1939
மு. கு. சிறுகதை
பாணன், ஆறியமனம், சிறுகதை, ஈழகேசரி 1, 1, 1939 - 8.1. 1946
பவன். ஆசைச்சட்டம்பியார். சிறுகதை ஈழகேசரி, 25 . 4. 945
வண்டிச் சவாரியைச் சில விமர்சகள்கள் தவறுதலாகவோ அறியாமலோ குறுநாவலெனக் குறித்துள்ளனர்.
81
(6)

Page 50
ஈழத்துச் சிறுவவதன்' து செல்வம் ஆரியர்
24. தியாகராஜன். ஆசைமுகம். சிறுகதை ஈழகேசரி 259 1949
25 தியாகராஜன், நல்லமாமி, சிறுகதை, ஈழகேசரி 16, 10 1949
26. மேற்படி குறிப்பு
27. கனக செந்திநாதன். மு. கு. நூல் பக்: 41
(28 - 30)
31. அந்தனிஜீவா, அந. கந்தசாமி அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகைப்பந்தல்
pursorb - 1986,
32 செங்கை ஆழியான் க. குணராசா ஈழகேசரியின் இலக்கியப் பங்களிப்பு
மல்லிகை ஜனவரி 1999 பக்:33
33. வெள்ளிப்பாதசரம். சிறுகதைத்தொகுதி செ. யோகநாதன் + திருமதி யோ.
சுந்தரலட்சுமி சென்னை - 1993 பக் 145 - 151 ”ܐ
34. அந. கந்தசாமி. நள்ளிரவு, சுதந்திர இலங்கையின் தமிழ்ச்சிறுகதைகத் தொகுதி இலங்கைக்கலைக்கழக வெளியீடு யாழ்ப்பாணம் 1967 பக். 67
35. கனகசெந்திநாதன் வெண்சங்கு, சிறுகதைக் தொகுதி, யாழ் இலக்கியவட்டம்,
unþinnsnb - 1967 uê - 67
36. நூல் எஸ் பொன்னுத்துரை பக். 9
37. பார்த்தசாரதி, நா. தீபம் - 1963,
38. சு. வே, மண்வாசனை, அன்னை வெளியீடு 1972 பக்: 4
39. மேற்படி நூல் பக்.5.
40. மேற்படி நூல் பக் 25.
41. சு. வே. மண்வாசனை, மு. கு. நூல். பக்: 62
42. நாவற்குழியூர் நடராஜன், மாமி, ஈழகேசரி 01 - 10 - 1944
43. செங்கை ஆழியான், கசின் சிறு கதைகள் யாழ் இலக்கிய வட்ட
வெளியீடு யாழ்ப்பாணம் 1999 பக்: i
82

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
44.
45.
46.
47.
48.
49。
50。
5.
52.
53,
54.
55.
56.
57.
நந்தி,
சொக்கன். கனவுக்கோயில், ஈழகேசரி 05 - 01 - 1947
சொக்கன், குட்டைநாய், ஈழகேசரி 14 - 05 - 1950
கனக செந்திநாதன், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, மு. கு நூல் பக் 44
தாளையடி சபாரத்தினம். குருவின் சதி, ஆனந்தன் சஞ்சிகை - டிசம்பர் 1954 USE 42 ፭ --
செங்கை ஆழியான். மறுமலர்ச்சிக் கதைகள். முன்னுரை. மு. கு. நூல் 山ä:Wi
ந. பாலசுப்பிரமணியம், செல்லி, ஈழகேசரி 06 - 05 - 1945
பரணி, அமர இரவு, ஈழகேசரி - 30 - 9 - 51
ராதா கிருஸ்ணன், வேலை நிறுத்தம், ஈழகேசரி - 06 - 01 - 45
சில்வரம்புலி. தெளிவு, ஈழகேசரி - 28 9 1947, 5 1 194T
மயில்வாகனன். ஏழையின் கொடை ஈழகேசரி - 10 - 23 - 1946
நடனம், சிதைந்த வாக்கு, ஈழகேசரி - 13 - 04 - 1947
சானா, நாட்டியப்பெண், ஈழகேசரி - 1602 1941
மறுமலர்ச்சிக்கதைகள், மு. கு. நுால், பக்: i
83

Page 51
அத்தியாயம் 4 ஈழத்துச் சிறுகதை முற்போக்குக் காலம் ( 1950 - 1960)
fழத்துச் சிறுகதை வரலாற்றில், 1950 -1960 வரையிலானான காலகட்டத்தை முற்போக்குக் காலமென வகுத்துக்கொள்ளலாம். ஈழத்து படைப்பாளிகள் அனைவரும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காகத் தமது பேனாக்களை முன்னெடுக்க முன்வந்த காலம் இதுவாகும். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடிவைநோக்கி, அதாவது சமூகப்பிரச்சினைகளான சாதிய fwடக்குமுறை, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு என்பனவற்றிற்கு எதிராகவோ, இனவொடுக்கலுக்கு எதிராகவோ மக்களைச் சமூகப்புரட்சிக்கு ஒன்றிணைக்கின்ற பணியை இக்காலகட்டத்துப் படைப்பாளிகள் முன்னெடுத்தனர். எனவே, இக்காலகட்டத்தை முற்போக்குக் காலமென வரையறுப்பதில் எதுவிதமான தவறுமில்லையென நினைக்கின்றேன்.
“இந்ததுாற்றாண்டில் நின்று கொண்டு பின்னோக்கிப் பார்க்கும்பொழுது ஈழத்தமிழ் நவீன வளர்ச்சியில் முற்போக்கு வாதம் குறிப்பாக 1950களின் பின்னர் முக்கியமான ஓரிடத்தை பெறுகின்றது என்பது பற்றிய கருத்தொருமைப்பாடே உண்டு’
“இலங்கையில் ஐம்பதுகளில் இலவசக்கல்வி காரணமாகக்கல்வி அதற்குமுன்னர் பரவாத அடிநிலைச் சமூகங்களுக்குபரவி இருந்தது. அந்த அளவுக்கு அடி நிலை மக்களின் சமூக, அரசியல் அபிலாசைகள் அதிகரித்திருந்தன. அதே வேளையில் சுயமொழிக்கல்வியும் வளரத்தொடங்கியது. இவ்வேளையில் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் (1956) தமிழ்மொழி பயில்வோரிடையே தமது தனித்துவம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்திற்று. அத்தோடு தமிழ்த்தேசியம் பற்றிய கருத்தினையும் படைப்பாளிகள் பலரிடையே உருவாக்கியது.
முற்போக்குக் காலகட்ட எழுத்துக்கள் சுதந்திர இலங்கையின்
படைப்புக் காளாக மாறின. காந்தியம், பெரியாரியம் என்ற
கருத்தியல் புகளோடு, மார்க் சியம் முதன்மை பெற்று
இலக்கியச்செல்நெறியில் பெரும் தாக்க விளைவுகளை ஏற்படுத்தியது.
இலவசக்கல்வி சகலருக்கும் கிடைத்ததால், அந்த வாய்ப்பினைத் தவற
விட்டிருந்த அடிமட்ட மக்களிடையே விழிப்பும் தாம் சமூகமட்டத்தில்
84
s

#山血加薯 fü分期 ü、再则 "சேங்கை ஆழியன்” அடககிம் பாடுக்கா டிருபபதன் மெய்ம்மையையும் உணர வைத்தது. சாதியக் கொடு ைகளுக்கு எதிரான போர்க்குரலாக இக்காலகட்ட எழுத்துக்கள் விழுந்தன.
முற்போக்குக் காலகட்டத்தில் (1950 - 1960) இலக்கியம் பற்றிய சிந்தனைப் போக்கு வரையறுக்கப்பட்ட இலக்கணத் தெளிவு கொண்டதாக விளங்கியதை மறுக்கமுடியாது. சீர்திருத்தக் காலத்தில் (1930 -1949) புனைகதைகளை எழுதியபடைப்பாளிகள் பலரும் ‘இலக்கியம் இலக்கியத்திற்காக” “இலக்கியம் பொழுது போக்கிற்காக" என்ற எண்ணக்கருத்துக்களை கொண்டிருந்ததாக தெரியவில்லை. ஆனால் அவர்களது எழுத்துக்களில் பொழுது போக்கு அம்சங்கள் மிகுதியாகவும், மனோரம்பகற்பனைகள் கொண்டவையாகவும் விளங்கின. எனினும், அவர்கள் இலக்கியம் மக்களுக்காக என்பதிலும், இலக்கியம் தாம் வாழும் மண் சார்ந்த வாழ்வையும் பிரச்சினைகளையும் பிரதிபலிக்க வேண்டுமென்பதலும் அக் கறையில் லாதிருந்தார்கள் எனக் கூட்டுமொத்தமாக ஒதுக்கிவிடமுடியாது.
முற்போக்குக்காலகட்டத்தில் எழுத்தாளர்களிடையே தெளிவான இலக்கிய நோக்கு இருந்தது. அந்த இலக்கிய நோக்கை விமர்சகர்களான கைலாசபதி, ஏ.ஜே. கனகரட்னா, சிவத்தம்பி, வித்தியானந்தன், கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் முதலானோர் சுட்டிக்காட்டி நெறிப்படுத்தினர். இவர்களைப் பின்பற்றிய எழுத்தாளர்கள் அணிகளாகப் பிரிந்து நின்றாலும், புனைகதை இலக்கியம் பற்றிய பொது நோக்கில் அவ்வளவு துாரம் கருத்தியல் வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை என்பது தெரிகின்றது.
1. “இலக்கியம் மக்களுக்கானது. மக்களின் விடிவிற்கும் விடுதலைக்குமானது
2. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்துயரங்களை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும். சுரண் டலையும் சமூக அடக்குமுறைகளையும் ஒழித்து, ஏற்றத் தாழ்வற்ற உன்னதமான ஒரு சமூகக்கட்டமைப்பை உருவாக்க இலக்கியம் படைக்கப்படவேண்டும். ‘எல்லாருக்கும் எல்லாம் கிட்ட இலக்கியம் வழிகாட்ட வேண்டும்.
3. சாதிக்கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை, இன
வொடுக்குமுறை, வாழ்க்கை உரிமைகளை மறுப்பது. சீதனக் கொடுமை,
பெண்ணடிமைத்தனம் முதலான சமூக அநீதிகளுக்கு எதிராக நவீன
இலக்கிய வடிவங்கள் முற்போக்காக வீறு கொண்டுழைக்கவேண்டும்: 85

Page 52
ஈழத்துச் சிறுகதை வரலறு “செங்கை ஆழியான்”
4. படைப்புக்கள் வெறும் கருத்துவளம் மட்டும் கொண்டனவாக அமையாது, கலைவளம் கொண்டனவாக அமைய வேண்டும். அதாவது உள்ளடக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, கலாபூர்வமான முழுமைக்கும் முதன்மை தரவேண்டும். இலக்கியத்தில் கலையழகும் தேடலுமிருக்க வேண்டும்;
5. நவீன படைப்புக்கள் யதார்த்தப்பண்பு கொண்டனவாயும், மண்வாசனையைப் பிரதிபலிப்பனவாயும், தேசிய இலக்கியமாகவும், ஈழத்து தமிழ் இலக்கியமாகவும் அமைதல் வேண்டும்.
மேற்குறித்த பண்புகள் 1950 - 1960 காலகட்டத்து ஈழத்தின் அனைத்து அணிகளிலுமுள்ள எழுத்தாளர்களினாலும் தம் படைப்புகளில் பலத்தோடோ, பலவீனத்தோடோ முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு அவையே இக்காலகட்டத்து ஈழத்து புனைகதை இலக்கியத்தின் பொதுச்சுட்டிகளாகவும் மாறிவிட்டன.
4.2. இலக்கியப் போக்குகள்
1950-1960 காலகட்டத்து இலக்கியப் போக்கையும், படைப்பாளி களையும் படைப்புக்களையும் எடுத்து நோக்கும் போது, நான்கு இலக்கியக் கருத்தியியல் நிலைகள் நோக்குகள் காணப்பட்டன.
g56:
1. மரபு வாதம்
2. மார்க்சிய முற்போக்கு வாதம்
3. இடது சாரி எதிர்க்கருத்து வாதம்
4. தமிழ்த் தேசிய வாதம்
மரபுவாதம் பேசியோரைத் தவிர, எனைய மூன்று வாத அணியினரும் மக்களுக்கான இலக்கியமே படைத்தனர். அது ஈழத்தமிழிலக்கியமாகவே விளங்கியது. மானிட விடிவுக்காகவும், விடுதலைக்குமானதாகவே இருந்தது. இந்த மண்ணையும் மக்களையும் தம் படைப்புக்களின் குவிமையமாகக் கொண்டனர். ஆனால் அவரவர் தாம் வரித்துக்கொண்ட கருத்து நிலைகளில் சமூக மேம்பாட்டை நோக்கினர்.
1956 இல் ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் நிலைகளில் இலங்கைத்தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்ததுடன், வர்க்க உணர்வுகள் திாக்கமடைந்தனர். தேசியவிழிப்பும் வர்க்கப்போராட்டங்களும்
86

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Go Gä”
சுதந்திரத்திற்குப் பின் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே, இலக்கியமும் அவ்வழியே திசை திரும்பியது. நாட்டின் பிரச்சினைகளை இலக்கியங்கள் முன்னிறுத்த வேண்டுமென்ற துடிப்பில் தேசிய இலக்கியக் கொள்கை தீவிரமடைந்தது. இப்ப்பின்னணியை நன்குணர்தவரான க.கைலாசபதி 1957இல் தினகரன் ஆசிரியராக விளங்கியபோது இவ்வெழுச்சியைத்தூண்டி வளர்த்தார். புதியதொரு எழுத்தாளர் பரம்பரையையும் தோற்றுவித்தார். இக் காலகட்டத்தில் எஸ். பொன்னுத் தரை, கே. டானியல், என்.கே.ரகுநாதன், செ. கணேசலிங்கன், காவலூர் ராசதுரை போன்றவர்கள் தரமான சிறுகதைகளைப் படைத்தனர்.*
4.2.1 மரபு வாதம்
1960களில் ஈழத்து இலக்கியகர்த்தாக்களிடையே “இலக்கியமரபு சம்பந்தமான வாதங்கள் நிகழ்ந்தன. 1950களிலே ஈழத்துப்புனைக்கதைகள் ஈழத்து வாழ்க்கைப்பிரச்சினைகளை யதார்த்தமாயும் மண்வாசனையோடும் இலக்கியப் பொருளாகக் கொள்ளத் தொடங்கின. அவற்றின் “பேச்சுவழக்கு மக்களது பேச்சுமொழியில் மிகத்துல்லியமாகவும் துரக்கலாயும் வரத்தொடங்கின. பேச்சு வழக்கு புனைக்கதைகளில் இலக்கண மரபையும் இலக்கியமரபையும் மீறிவரத்தொடங்கியதும் தமிழ்ப்ய்ண்டிதர்கள், கற்ற மரபுவாதிகள் அதற்கெதிராக்குரல் எழுப்பினர்.
மரபுமீறப்படலாகாது என்ற அணிக்கு கலாநிதி. க. சதாசிவம் தலைமை வகித்தார், அவருடன் சோ. இளமுருகனார், தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, ச. சுப்பிரமணியன், பண்டிதர் வ. நடராஜன் முதலானோர் சேர்ந்து கொண்டனர். மரபுமீறப்படலாம்' என்ற அணிக்குக் கலாநிதி க. கைலாசபதி தலைமை வகித்தார் அவருடன் கலாநிதி கா. சிவத்தம்பி, இளங்கீரன், கே. டானியல், டொமினிக் ஜீவா, அ.ந. கந்தசாமி, செ. கணேசலிங்கன் முதலானோர் அணிசேர்ந்தனர். ‘இலக்கிய மரபு தெரிந்தவனாலேயே மரபுமீறப்படலாம்' என்ற அணியைப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தொடக்கி வைத்தார். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை சொக்கன், எஸ். பொன்னுத்துரை முதலானோர் இந்த அணியில் சேர்ந்து கொண்டனர். பத்திரிகைகளிலும் மேடைகளிலும் பெரும் வாதங்கள் இலக்கிய மரபு குறித்து நிகழ்ந்தன.
87

Page 53
ஆந்த் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” ‘நவீன புனைகதைகளையோ கவிதைகளையோ ஆக்குபவர்கள் தமிழிலக்கிய மரபினை ஒருபோதும் மீறக்கூடாது, சான்றோர் மொழி வழக்கே இலக்கிய மொழியாகும், ஏனையவை இழிசினர் வழக்காகும்’ எனப் பேராசிரியர் ஆ. சதாசிவம் கருத்துத் தெரிவித்தார். அவரின் பின்னால் யாழ்ப்பாணத்துப் பண்டிதர்களின் அணியே திரண்டிருந்தது. பேராசிரியர் சதாசிவத்தின் கருத்து நவீன இலக்கியவுலகின் அடித்தளத்தையே உலுக்கிவிட்டது. தலித் இலக்கிய வாதிகள் அவரின் இழிசினர் என்ற வார்த்தைப் பிரயோகம் தம்மைச் கட்டுவதாகப் போர்க்குரலெழுப்பினர். ‘மரபு மீறப்படலாம். பேச்சு வழக்கே இலக்கிய மொழியாகவிருந்து வந்துள்ளது' என்ற கருத்தினைப் பேராசிரியர் க. கைலாசபதி தெரிவித்தார். அவரின் பின்னால் பெரியதொரு ஆக்கவிலக்கிய அணியே திரண்டிருந்தது. போராசிரியன் சு. வித்தியானந்தன் மேற்குறித்த இருவரினதும் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ‘தமிழிலக்கிய மரபு அதனை தெரிந்தவர்களால்தான் மீறப்படலாம் என்றார். “இலக்கிய வடிவத்திலும், கூறும் பொருளிலும், கூறும் முறையிலும் காலத்திற்குகாலம் மரபு மீறப்பட்டு வந்துள்ளது, மரபினை நன்கு தெரிந்தவர்களே அதனை மீறினர் என்றார். ‘மரபு என்பது பழைமையைப் பேணுவதற்கான ஒன்றாகும், புதுமைக்கான ஊற்று' என்றார் வித்தி*
*இலக்கிய மரபு மீறப்படலாகாது' என்ற வாதத்தினை முன் வைத்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் புனைகதையாசிரியர்களை, குறிப்பாக தலித் எழுத்தாளர்களை மோசமாகத்தாக்கிவிட்டன ‘கல்லா தாருக்கு இலக்கியத்திலிடமில்லை. கற்றார் வழக்கே செந்தமிழ் வழக்கு. புனைகதை வடிவம் இலக்கியமாகாது. புனைகதை ஆசிரியர்கள் கல்வியறிவற்றவர்கள், யாவரும் மார்க்சிய வாதிகள். தமது புனைகதை களில் இழிசினர் வழக்கைப் பயன்படுத்துகின்றனர்’ என்ற கருத்துக்கள் சிருஷ்டி இலக்கிய முயற்சியிலே ஈடுபட்ட தொழிலாள வர்க்கத்தினரையும் அவர்த்தம் சமூகப்பின்னணியையும் (சாதி) யையும் விமர்சிப்பதாயிற்று'.
“இழிசினர் வழக்கு என்னும் வாதமும் தமிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை என்னும் வாதமும் நவீன இலக்கிய ஆக்க எழுத்தாளர்களுள் பலரின் சமூகப் பின்னணியைத் தாக்குவதாகவும் அமைந்தபடியால், இவ்வாதத்திற்கு இலக்கிய வரலாற்றடிப்படையில் இ.மு.எ. சங்கம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தது." அந்த எதிாப்பு ஈழத்து இலக்கியவரலாற்றில் பெரும் இலக்கிய அநாகரிகமாக அமைந்தது. பிற்காலத்தில் அதில் கலந்து கொண்ட பலரும் அதை அயோக்கியத்தனம் என ஏற்றுக்கொண்டார்கள்.
88

Hpå jobsob AHSVIV “செங்கை ஆழியன்” 1963, ஒக்டேயர் 5, 6 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் இலங்கை சாகித்திய மண்டல தமிழ்விழா நடைபெறவிருந்தது. கலாநிதி ஆ. சதாசிவம் இந்த விழாவிற்குத் தலைமைவகித்தார். இலக்கியத்தை பொறுத்த வரையில் வேறுபட்ட கொள்கையுடையோர் பலர் விழாவிற்குப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஈழத்திலுள்ள தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர் மன்றங்களுக்கும், கலை மன்றங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. சாகித்ய மண்டலத்தமிழிலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் பரிசுபெற்றோரைப் பாராட்டும் நிகழ்ச்சி இடம்பெறவிருந்தது. அவ்வாண்டு சாகித்திய மண்டலப் பரிசுகளைப் பெற்ற படைப்பாளிகளும் பல அறிஞர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். “பரிசு பெற்றோர் பாராட்டபடுவர் எனத் தலைவர் அறிவித்ததும் முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் பிரேம்ஜி சபையிலிருந்து ஏதோபேசத் தொடங்கவே, தலைவர் அவரை மேடைக்கு அழைத்தார். வித்துவான் வேலன் ஆட்சேபம் தெரிவித்தார். அவ்வேளை ஜனாப் முகமது சமீம் மேடையில் ஏறி சாகித்திய மண்டலம் முஸ்லீம் மக்களைப் புறக்கணித்து விட்டது என்றார். சபையிலிருந்த மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் கூச்சலிட்டனர். டொமினிக் ஜீவாவும் சுப்பிரமணியமும் கதிரைகளைத் துாக்கிவீசினர். கூழ் முட்டைகள் மேடையை நோக்கிப்பறந்தன. கலாநிதி சதாசிவம், சம்பந்தன், தேவன் - யாழ்ப்பாணம் உட்பட சகலரும் கூழ்முட்டையால் அர்ச்சிக்கப்பட்டனர். இளங்கீரன், நீர்ன்வப் பொன்னையன், ரகுநாதன், பெனடிக்பாலன், பிரேம்ஜி சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், டானியல், யோகநாதன் முதலானோர் கூச்சலிடத் தெடங்கினர். நந்தி, சொக்கன், ஈழத்துச்சோமு முதலியோர் குழப்பம் விளைவித்து கூச்சல்போட்டவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துக்கொண்டிருந் தனர். கலாநிதி கா. சிவத்தம்பி இவற்றை அவதானித்துக்கொண்டு நின்றிருந்தார்’ (சுதந்திரன் - 20.10.1963).
இந்தச்சம்பவத்திற்குப் பிறகு பண்டிதர்களின் வாய் மூடிவிட்டது உண்மைதான். 1950 - 1960 காலகட்டத்தில் புனைகதை எழுத்தாளனின் படைப்புக்கள், இவ்வாறான மரபு வாதத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
4.2.2. மார்க்சிய முற்போக்கு வாதம்
1950 - 1960 காலகட்டத்தில் முதன்மைபெற்ற வலுவான ஒரு சக்தியாக விளங்கியது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாகும். இச்சங்கத்திற்கு ஏலவே கே. கணேஸ், இராமநாதன் முதலியோர் கால்கோளிட்டிருந்தனர். எனினும் வலுவான ஓர் இலக்கியச் சங்கமாக,

Page 54
ಇಟಕಿ சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” இது ஆரம்பிக்கப்பட்டது 1954ஆம் ஆண்டிலாகும். 'கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, அ. ந. கந்தசாமி, எச். எம். பி. முகைதீன், தில்லைநாதனி, அ. ஸ. அப்துல்ஸமது, வரதர், புதுமைபிரியை (பத்மா சோமகாந்தன்) எம். சமீம், பிரேம்ஜி, நீர்வை பொன்னையன், என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, கே. டானியல், சில்லையூர் செல்வராசன், எஸ். அகஸ்தியர், பி. இராமநாதன், காவலுார் இராசதுரை, நந்தி, முருகையன், ஈழத்துச் சோமு (சோமகாந்தன்), செ. கணேசலிங்கன், க.சா. அரியநாயகம் போன்ற ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இ.மு.எ.சங்கத்தைக் கட்டி வளர்த்தார்கள். ‘இவர்களுடன் எஸ்.பொன்னுத்துரை, வ.அ. இராசரத்தினம், கனகசெந்திநாதன், புதுமை லோலன், நாவேந்தன், பண்டிதர் சச்சிதானந்தன் முதலானோரும் இச்சங்கத்தில் இணைந்திருந்தார்கள். 1956இல் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வும், எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் அபரிமிதமான வளர்ச்சியும், இடதுசாரிகளின் குரலாக ஒலித்த மு.எ. சங்க நடவடிக்கைகளிலிருந்தும் சங்கத்திலிருந்தும் கனகசெந்திநாதன், வரதர், அஸ், அப்துல்ஸமது, புதுமைலோலன், நாவேந்தன், வ.அ. இராசரத்தினம் ஆகியோரை ஒதுங்கவைத்தது. அதேபோல 1960களில் எஸ். பொன்னுத்துரை
ற்போக்கு எழுத்தாளர்: சங்கத்திலிருந்து விலக்கிக்கொள்ள நேர்ந்தது. நற்போக்கு என்ற இலக்கியக் கருத்தினை முன்வைக்க நேர்ந்தது. இவர்கள் மு.போ.எ. சங்கத்திலிருந்து விலகினாலும் மார்க்சிகருத்துக்களை மறுதலிக்கவில்லை என்பதை உணரவேண்டும். அக்கால அரசியல் சூழல் ஏற்படுத்திய தமிழ்தேசியம் பற்றிய கருத்தினை முதன்மையாக வரித்துகொண்டனர். எனினும் 1956இன் பின் கலாநிதி க. கைலாசபதியால் முன்னெடுக்கப்பட்ட மு.எ. சங்கம், 1960வரை ஈழத்தின் இலக்கி இயக்கமாக விளங்கியது. இன்று இந்த மு.போ.எழுத்தாளர் சங்கத்தை கட்டிக்காத்துவரும் பணியை, பிரேம்ஜி, சோமகாந்தன் ஆகிய இருவரும் செய்து வருகின்றனர் என்ற வரலாற்று உண்மையை மறைத்து விடக்கூடாது.
மு. எ சங்கம் தேசிய இலக்கியம், ஈழத்தமிழிலக்கியம் மக்களிலக்கியம், யதார்த்தம், மண்வாசனை ஆகிய கருத்தியல்களை இலக்கியத்தில் முன்வைத்தது. ‘தமிழைப் பொறுத்தவரையில் தேசிய இலக்கியம் என்பதற்கு அக்காலகட்டத்தில் முக்கியமான இரண்டு பரிமாணங்கள் இருந்தன. ஒன்று இங்கு எழுதப்படும் இலக்கியங்கள் இந்த நாட்டில் வாழும் மக்களின் பிரச்சனைகளை இனங்காண்பதாகவும் முகங்கொடுப்பதாகவும் அமையவேண்டுமென்பது. இரண்டு இந்த நாட்டு மக்களிடையே (சிங்கள தமிழ் இனவுறவு) சுமுகமான உறவை வளர்ப்பது."
90

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
“இந்த இலக்கிய இயக்கம் இது காலவரை இயங்கி வந்த இலக்கிய நடவடிக்கை ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டதாகும். இது ஒரே கருத்து நிலையுடையோரின் ஒழுங்கமைப்பாக இருந்தது. மேலும் அரசியல் இயக்கம் ஒன்றின் பண்பாட்டு முன்னணியாகத் தொழிற்பட்டது. மிகமுக்கியமாக இதுகாலவரை ஈழத்து தமிழிலக்கியத்தின் பிரதான பயில்வாளர்களின் சமூகமட்டத்தினின்றும் வேறுபட்ட சமூகமட்டத்தினரை இது முக்கிய ஆக்கவிலக்கியப் படைப்பாளிகளாகக் கொண்டிருந்தது*
"இலக்கியம் கீழ்த்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை, வாழ்க்கை அவலங்களை, அவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பிரதிபலிக்கவேண்டும், சாதிக்கொடுமை, சமுதாய ஏற்றத்தாழ்வு, பெண் அடிமைத்தனம், இனஒடுக்குமுறை ஆகிய அனைத்துச் சமுதாய தீமைகளையும் எரித்து எரிசரமாக இலக்கியம் பயன்படவேண்டும் என மு.எ. பிரகடணப்படுத்தியது? “இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த இலக்கியக் கோட்பாட்டையும் ஈழத்து இலக்கியத்தின் செல் நெறியையும் தெளிவுபடுத்துவதற்காகவும், படைப்புக்களுக்கான ஆக்கபூர்வமான விமர்சனமுறையை ஏற்படுத்துவதற்காகவும் புதுமை இலக்கியம் என்ற சஞ்சிகையை இ.மு.எ. சங்கம் இடையிடையே வெளியிட்டுவருகின்றது'
‘நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாசார பாரம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டும் என்பது தேசிய இலக்கியவாதத்தின் அடிப்படையாகும்."
மார்க்சிய முற்போக்கு இலக்கியத்தின் “முக்கிய இலக்கியக் கோஷமாக அமைந்தது ஈழத்துத் தமிழிலக்கியம் எனும் கோட்பாடேயாகும். ஈழத்தின் தமிழிலக்கியம் தென்னிந்தியத் தமிழிலக்கியத்தின் பிரதியாக அமையாது, ஈழத்தின் மண்வாசனையைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது".
மார்க்சிய முற்போக்குவாதச் சிறுகதைப் படைப்பாளிகளாக 1950 1960 காலகட்டத்தில் விளங்கியவர்களென எஸ். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா, காவலுர் இராசதுரை, நீர்வைப் பொன்னையன், ஈழத்துச் சோமு, அ. ந. கந்தசாமி, அகஸ்தியர் முதலானோர் விளங்கினர்.
91

Page 55
ஈழத்துச் சிறுகதை வரலாறு - “செங்கை ஆழியான்' 4.2.3. இடதுசாரி எதிர்க்கருத்து வாதம்
இடதுசாரி எதிர்க் கருத்துவாதம் இலக்கியத்தில் இடம் பெற்றமைக்கு இடது சாரி முற்போக்கு இயக்கத்திலிருந்து விலகியவர்களும், பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் தலைமைத்துவத்தை விரும்பாதவர்களும். தமிழ்த்தேசியவாதத்தால் கவரப்பட்டவர்களும் காரணமாயினர். இடதுசாரி எதிர் கருத்துவாதமென்பது, மார்க்சிய முற்போக்குவாத இலக்கிய நோக்கிற்கு எதிரானதாகவே விளங்கியது. அவ்வகையில் குறித்த 1958 - 1960 வது காலகட்டத்தில் மார்க்சிய முற்போக்கு இலக்கியக் கருத்துக்களுக்கு (முற்போக்கு இலக்கியக்கருத்துக்களுக்கல்ல எதிராகக் கண்டனக்குரல் தந்தவர்களில் கலைச்செல்வி சிற்பி சரவணபவன், மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை, செம்பியன் செல்வன் ஆகியோரும் அவர் அணிசார்ந்தோரும் முக்கியமானவர்கள்.
கலைச்செல்விச் சஞ்சிகை இலக்கிய விமர்சனத்திற்கு முக்கியவிடம் ஒதுக்கியது. அதில் முக்கியமானது முற்போக்கு இலக்கியம் பற்றிய சர்ச்சையாகும். இதில் கலாநிதி கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம், நவாலியூர் சோ. நடராஜன் முதலியோரின் கருத்துக்கள் காரசாரமாக இடம் பெற்றன. அவற்றில் மு. தளையசிங்கத்தின் கட்டுரைகள் பிரதான எதிர்கருத்துக்களாக அமைந்தன. மறைமுகமாகச் சிற்பி சரவணபவன் மார்க்சிய முற்போக்கிற்கு எதிரான கருத்துக்களைத் திரட்டுவதில் முன் நின்றுள்ளார். 1956க்குப்பின் கைலாசபதியால் தூக்கிவிடப்பட்ட முற்போக்குக் கூட்டு 60-61 இல் ஏறக்குறைய ஒரு இலக்கியச் சர்வாதிகாரமாகவே வளர்ந்து, 1963 இன் ஆரம்பம் வரை அப்படியே நின்று பிடித்தது. அந்தவகையில் ஈழத்து இலக்கிய உலகை அவர்கள் ஆக்கிரமித்தனர்."
மார்க்சிய முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்த இன்னொருவர் எஸ். பொன்னுத்துரையாவார். பொன்னுத்துரையின் இலக்கிய ஆற்றலும் ஆளுமையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தொடர்ந்து தொண்டனாக இருக்கவிடவில்லை. அத்தலைமைகளையும் ஏற்றுக்கொள்ளவும் விடவில்லை. நற்போக்கு இலக்கியம் என்றொரு கருத்தியல் நிலையை முன்வைத்தார். இரசிகமணி கனகசெந்திநாதன் மனதளவில் எஸ். பொன்னுத் துரையின் நற்போக்குக்கிற்கு உடன்பாடானாள் என்பதைவிட, எளில், பொ.வின் திறனுக்குக்கட்டுப்பட்டார் என்பதே பொருத்தமானது. எஸ். பொன்னுத்துரை யின் நற்போக்கு, முற்போக்குக் கூட்டின் மறுபிறப்புத்தான் என மு. தளையசிங்கம் கூறுவது ஏற்புடையதே இரு சாராரின் படைப்புக்களில் எதுவிதமான வேறுபாடுகளுமில்லை.
92

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
1956 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றம் இலங்கை முற்போக்குக் காரருக்கு யோகமாக வாய்த்தது. கலை இலக்கிய விவகாரங்கள் மூலம் ஊடுருவல் செய்வது வசதியானது என்கிற தாகம் பிறந்தது. பிரசுரகளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. கைலாசபதி உபயம் மின்னாமல் முழங்காமல், முற்போக்குதள்பார் ஈழத்துத் தமிழ் படைப்பாளி மீது திணிக்கப்பட்டது. இந்த அநியாயத்திற்கு எதிரான போர்க்குரலாக நற்போக்கு இலக்கியம் பற்றிப் பிரஸ்தாபிப்பதும் பேசுவதும் என் தர்மமாக விடிந்தது. நற்போக்கு இலக்கியம் மார்க்ஸிய வேதத்தையோ கம்யூனிச இயக்கத்தையோ சோஷலிஸ் அரசியல் அமைப்பையோ நிராகரிக்கவில்லை ஆனால் இவற்றின் பெயரால் திணிக்கப்பட்ட இலக்கிய நிர்ப்பந்தங்களையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்தது' என நற்போக்குக் குறித்து எஸ். பொன்னுத்துரை பிரகடனம் செய்தார்.*
இடதுசாரி எதிர்கருத்து வாதம் புரிவோர் இலக்கியத்தில் உள்ளடக்கத்தோடு கலையழகும் முதன்மை பெறவேண்டுமென்றனர். இலக்கியத்தில் அழகியல் சம்பந்தமான கருத்தினை இவர்கள் முன்வைத்தனர். அதற்காக இலக்கியம் மக்களுக்கானது என்பதை எவ்வகையிலும் இவர்கள் மறுதலிக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. கலையின் ஒரு கூறு இலக்கியம் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள் எனவே கலைக்குரிய பண்பனைத்தும் இலக்கியத்தின் பொதுப்பண்பாகி விடுகின்றன. உரைநடையிலமைந்த நாவல், நாடகம், சிறுகதை போன்ற இலக்கிய படைப்புக்கள் எல்லாம் தத்தம்மை பொறுத்த வரையில் ஒவ்வொருவகைச் சிறப்புத்தன்மையும் இலக்கியம் என்ற முழுமையில் அவை சங்கமமாகும் போது இலக்கிய பொதுத்தன்மையும் பெற்றுவிடுகின்றன. இதன்னயே பேராசிரியா சு. வித்தியானந்தன், இலக்கியம் என்றால் அதில் ஒரு கலையழகும் தேடலும் இருக்க வேண்டும் என்றார்."
“சாதித்திமிரையும் வறுமையின் கொடுமையையும் அதிகார மமதையையும் மட்டுமே எழுத வேண்டும் என்பது அவள்கள் மார்க்சிய முற்போக்காளர் வகுத்துக் கொண்ட விதி. வரம்பு, இவ்வாறு எழுதுவதால் அழகியல் அந்நியப்படுத்தப்படுகின்றது. மென்மையான உணர்வுகள் புறந்தள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனிலும் ஏதோ ஒருகணமாவது வெளியாகும் மனித நேயத் தெறிப்புக்கள் மறுக்கப்படுகின்றன. கலா பூர்வமான சத்தியங்கள் சுருங்கிப் படைப்புக்கள் பிரச்சாரங்களாக மலினப்படுத்தப்படுகின்றன" என்ற வ. அ. இராசரத்தினத்தின் கூற்று இடதுசாரி எதிர்க்கருத்து வாதத்திற்குத்தக்க உதாரணம்,
93

Page 56
یہ۔ ' - '*'
ஈழத்துச் சிறுகதைதவறு . . " . " - -س---- - - "செங்கை ஆங்ாலி" 4.2.4 தமிழ்த் தேசியவாதம்
1956 ஆம் ஆண்டு சமூக பொருளாதார அரசியலில் மிக
முக்கியமானது. 1948 இல் இலங்கைக்கான சுதந்திரம் போராடிப்பெறப்பட்ட தல்ல. துர்க்கித்தரப்பட்டது. ஆனால் 1956 ஆம் ஆண்டுத் தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களிடையே ஒரு பெரும் ஆவேசத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி இலக்கியத்திலும் எதிரொலித்தது. அதன் தாக்கங்கள் இலக்கியத்தில் தமிழ்த் தேசிய வாதம் சம்பந்தமான கருத்து நிலைகளாக இடம்பெறத் தொடங்கின. மொழியுரிமை பிரதேசவுரிமை பற்றிய சிந்தனைகள் சில எழுத்தாளர்களிடையே தலைதுாக்கத் தொடங்கின. காலிமுகத்திடலில் சாத்வீகமாக நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தைச் சிங்களக் குண்டர்கள் வன்முறை மூலம் கலைத்த நிகழ்ச்சி தமிழ்த் தேசியப் போராட்டச் சிந்தனையின் தொடக்கச் சம்பவமாயிற்று. தமிழரசுக் கட்சியின் அரசியல் திட்டக்கோரிக்கையின் நியாயத்தை அங்கீகரித்த படைப்பாளிகள் பலர் அது சார்ந்த புனைகதைகளைப் படைத்தனர். அவை இலக்கிய விமர்சகர்களால், தேசிய இயக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் இனவாதக் கதைகளென அன்று விமர்சிக்கப்பட்டன.
புதுமைலோலன், நாவேந்தன், கரிகாலன், இளம்பூரணன் (உதயணன்), உதயகுமார், பசுத்தீவு இடையர்கோன், அ. முத்துலிங்கம், ஏ.வி.பி. கோமஸ், புதுமைபபிரியை, ஈழத்துச்சோமு. தளையசிங்கம், சிற்பி, புத்தொளி, தீவான் (மு.பொன்னம்பலம்), வன்னி (வன்னியகுலம்), கே.எஸ். ஆனந்தன், நவம், செங்கைஆழியான், முத்து சிவஞானம் எனப் பெரிய தொரு எழுத்தாளர் கூட்டம் மொழியுரிமை, பிரதேசவுரிமை, இனவொடுக்கல் என்பனவற்றைக் கருவாக்கிச் சிறு கதைகளைப் படைத்தனர். அவை மக்களைச் சென்றடைந்தன. ஆனால் விமள்சகர்களால் மிகப் பிற்போக்குத் தனமான சிறுகதைகள், வெறும் இனவாதம் பேசும் படைப்புக்கள் எனத் தூத்கி இருப்பில் வைக்கப்பட்டன. அதேவேளை சாதியம் பற்றி எழுதப்பட்ட சிறுகதைகளுக்கு முக்கியம் கொடுத்து அவற்றை முன்னெடுத்துவந்தனர்.
புதுமைலோலன், நாவேந்தன் ஆகிய இருவரும் மு.எ. சங்கத்திலிருந்து விலகியவர்கள். புதுமைப்பிரியை, ஈழத்துச்சோமு ஆகியோர் மு.எ.சங்க உறுப்பினர்கள். அ. முத்துலிங்கம் மு.எ. சங்கத்தினால் எழுத்துலகிற்கு அறிமுகமாகியவர். மு. தளையசிங்கம், செங்கைஆழியான், முத்துசிவஞானம், வன்னி ஆகியோர் மார்க்சியத்தில் நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியம் குறித்து முன் கூட்டியே சிந்தித்து சிறுகதைகளை எழுதியவர்கள். 1981 களின் பின்னர். தமிழ்த்தேசியவுணர்வுக்காலம் ஈழத்து இலக்கியத்தின் பிரதான நோக்காக மாறுவதற்கு, மேற்குறித்த 'இனவாத எழுத்துக்களே அடித்தளமாயின.
94

*புத்தும் சிறுவுத ஈபு:1ாறு “ரேங்க ஆழிக்ஸ்”
புதுமைலோலன் 1956 களில் அப்பேலங்கா என்ற சிறுகதையைச் சுதந்திரனில் எழுதியபோது தமிழ்த் தேசியவாதக் கதைகளுக்கான கால்கோள் இடப்பட்டது. தொடர்ந்து நாவேந்தனின் கள்ளத்தோணி, கரிகாலனின் கடமை முடிந்தது, இளம்பூரணனின் வண்டியில் வெறியாட்டம், உதயகுமாரின் காதலும் கடமையும், பசுத்தீவு இடையர் கோனின் அண்ணாவுக்கு அஞ்சலி, சு. முத்துலிங்கத்தின் புதுமணமும் புனர் வாழ்வும், ஏ. வி. பி. கோமஸின் காதலும் உரிமை போரும், புதுமைபிரியையின் மொழியுணர்ச்சி, ஈழத்துச் சோமுவின் யாழ் நாக விகாரை, புத்தொளியின் வீரத்தமிழ்நங்கை, மு. தளையசிங்கத்தின் பெப்ரவரி 4, சிற்பியின் பிறந்தமண், கே.எஸ். ஆனந்தனின் இதுதான் இனவெறி, செங்கை ஆழியானின் நாட்டிற்கு இருவர், முத்துசிவஞானத்தின் உரிமைப்போர், நவத்தின் போர்முனை, அங்கையனின் கலங்காத கண்கள் முதலானவை அக்காலகட்டத்து தமிழ்தேசியத்தைப் பிரதிபலித்தன. தமிழினம் மனுக்குல உரிமைகளோடு பாதுகாப்பாக வாழ்வதற்குரிய கருத்துக்களை இச்சிறுகதைகள் பேசின. இச்சிறுகதைகள் அனைத்தும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவை எனக்கூறமுடியாது. மார்க்சிய முற்போக்கு வாதிகள் செய்த சமூக, அரசியல் பிரசாரத்தையே இவர்களும் செய்தார்கள். முன்னவர்கள் சமூகமாற்றத்திற்கான சமூகப்புரட்சியைச் சுட்டி நிற்கப் பின்னவர்கள் இன ஒடுக்குதலுக்கெதிரான இனப்புரட்சியைச் சுட்டி நின்றனர் எனினும் புதுமைலோலனின் அப்பேலங்கா, மு. தளையசிங்கத்தின் பெப்ரவரி 4, சிற்பியின் பிறந்தமண் ஆகிய மூன்று சிறுகதைகளும் சிறுகதைக்குரிய பண்புகளினடியாக மெச்சத்தகு படைப்புக்களாம்.
1963 களில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகுவதற்கு இவ்வாறான சூழ்நிலையே காரணமாயிற்று. அதன் தலைவராக சீ ரீநிவாசன், தி.ச.வரதராசன் (வரதர்). மு. செல்லையா ஆகியோர் விளங்கினர். செயலாளராக தேவன் - யாழ்ப்பாணமும், பொருளாளராக சுவே. யும் அமைந்தனர். சிற்பி, செங்கை ஆழியானி, செம்பியன் செல்வன், இ. முருகையன், எம் எம். மக்கீன், க.தி. சம்பந்தன், க.பே. முத்தையா, சி. செல்லத்துரை, நீலாவணன், தில்லைச் சிவன் முதலானோர் இச்சங்கத்தின் உறுப்பினராக இருந்தனர். இலங்கை எழுத்தாளன் என்றொரு சஞ்சிகை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்
95

Page 57
ஈழத்துச் சிறுகதை வரலT “wan yai” சங்கத்தின் சார்பாக சு. வேலுப்பிள்ளையை (சு.வே.) ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. அகில இலங்கை ரீதியாகச் சிறுகதைப்போட்டி ஒன்றினை நடாத்தி, போட்டிக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி யொன்றினையும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டு வைத்தது. எம்.ரஹற்மான், செம்பியன் செல்வன், சிதம்பரபத்தினி, மருதமுனை மஜீத், கோபதி, ரா. பாலகிருஷ்ணன், சுசீலன், செ.பரமசாமி, மணி மேகலை ஆகியோரின் ஒன்பது சிறு கதைகள் இதில் இடம் கொண்டிருந்தன.
4.3 முற்போக்குக் காலகட்டத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்
1930 - 1960 காலகட்டத்து ஈழத்துச்சிறுகதை இலக்கிய வரலாற்றின் உந்து சத்தியாக விளங்கிய பத்திரிகைகளெனச் சுதந்திரன், தினகரன், ஈழகேசரி, வீரகேசரி, ஈழநாடு, புதினம், ஆகியவற்றையும் சஞ்சிகைகளெனக் கலைச்செல்வி, மரகதம், இளம்பிறை என்பவற்றையும் குறிப்பிடலாம்.
43.1. சுதந்திரன்
1947, ஜூன் 1 ஆம் திகதி கோ. நடேசையரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கிய சுதந்திரன், முற்று முழுதான அரசியற் பத்திரிகையாயினும் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு தேசியப்பத்திரிகையாகத் தொழிற்பட்டுள்ளது. கோட்பாட்டு ரீதியாகப் பிரிந்திருந்த எல்லா அணி எழுத்தாளர்களும் சுதந்திரனில் தம் படைப்புக்களை அரங்கேற்றியுள்ளனர். மார்க்சிய முற்போக்கு அணியினரின் பயிற்சிக் களமாக சுதந்திரனே விளங்கியது. 1948 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரன் சிறு கதைகளை வெளியிட ஆரம்பித்தது. எனினும் 1950களின் பின்னரே சிறுகதைகளை ஆக்கபூர்வமாக வெளியிட ஆரம்பித்தது. சுதந்திரனில் சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜி, அ.ந. கந்தசாமி ஆகியோர் துணை ஆசிரியர்களாக ஆரம்பத்திலிருந்துள்ளனர் என அறியப்படுகின்றது. 1952களில் சுதந்திரன் ஆசிரியர் பீடத்தை எஸ். டி. சிவநாயகம் அலங்கரித்தார். எல்லா வகையினரின் எல்லாவகை சிறுகதைப் படைப்புகளும் சுதந்திரனில் வெளிவந்தன. பிரேம்ஜி, சில்லையூர் செல்வராஜன், அ. ந. கந்தசாமி ஆகியோரின் ஆரம்பச் சிறுகதைகள் சுதந்திரனில் பிரசுரமாகியுள்ளன். என். கே. ரகுநாதன், டொமினிக்ஜவா, அகஸ்தியர், செ. கணேசலிங்கன், ஈழத்து சோமு, எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம், வ. அ. இராசரத்தினம்
96

Hyigui dipang ajarai “செங்கை ஆழியாள்" தாழையடி சபாரத்தினம், ம.த.லோறன்ஸ், புதுமைலோலன், நாவேந்தன், சிற்பி, வரதர், அஸ.அத்துல்ஸமது, ஏ.வி.பி. கோமாஸ், உதயணன், எஸ். எஸ். செளந்தரநாயகம், தேவன் - யாழ்ப்பாணம், நவம், பொன்னுத்துரை, புதுமைப்பிரியை எனப் படைப்பாளிகள் பட்டியல் நீளும். 1960க்கு பின்னர் சுதந்திரனின் இலக்கியப்பணி தமிழ் தேசியம் சம்பந்தமான இலக்கிய முயற்சிகளுக்கு முதன்மை கொடுக்கத் தொடங்கிவிட்டது.
சில்லையூர் செல்வராசனின் சலங்கை ஒலி, கதவு திறந்தது. அ. ந. கந்தசாமியின் பாதாள மோகினி, எச். எம் பி. மொகைதீனின், முதல் முத்தம், பிரேம்ஜியின் வெளியேற்றப்பட்டவன், எஸ். டி. சிவநாயகத்தின் சோமாவதி, ஆகிய ஆரம்பக்கதைகள் சுதந்திரனில்தான் வெளிவந்தன. அதேபோல ஈழத்தின் தரமான சிறுகதைகளாகக் கணிக்கப்படும் நள்ளிரவு (அ. ந. கந்தசாமி), வெளியே நல்ல நிலவு (எழிலன் - என்.கே. ரகுநாதன்), கொச்சிக்கடையும் கொட்டாஞ்சேனையும், தண்ணிரும், கண்ணிரும் (டொமினிக்ஜீவா) அழகுமயக்கம், அப்பலங்கா (புதுமைலோலன்), மனச்சாட்சியின் தண்டனை (தேவன் - யாழ்ப்பாணம்), பெப்ரவரி 4 (மு. தளையசிங்கம்), பிறந்தமண் (சிற்பி), மாதுளம்பழம் (வரதர்) முதலான சிறுகதைகள் சுதந்திரனில்தான் வெளிவந்துள்ளன. சுதந்திரனை நன்கு தம்படைப்பாற்றலுக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள் என்.கே. ரகுநாதன், டானியல், டொமினிக் ஜீவா, மு, தளையசிங்கம், நாவேந்தன், உதயணன், தீவான், மணியம், புதுமைலோலன், ம. ந. லோறன்ஸ், எஸ். எல் சவுந்தரநாயகம், சிற்பி ஆகியோராவார்.
4.3.2. ஈழகேசரி.
1930களில் ஆரம்பமான ஈழகேசரியின் பணி 1949வுடன் நிறைவுறவில்லை 1950 களிருந்து 1958 வரையிலான முற்போக்குக் காலத்திற்கும் பரவி நின்றது. புதுமைலோலன், இ. அம்பிகைபாகன், கே. டானியல், இ. நாகராஜன், குறமகள், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், சிற்பி ஆகியோரின் ஆரம்பகாலச் சிறுகதைகள் அதில் வெளிவந்தன. அவற்றோடு இலங்கையர்கோன், சம்பந்தன், வ. அ. இராசரத்தினம், சொக்கன் என்போரின் சிறுகதைகளும் இக்காலத்தில் வெளிவந்துள்ளன.
97

Page 58
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” 4.3.3. தினகரன்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றிலேற்பட்ட புரட்சிகரமான மாற்றத்திற்கு 1957 இல் இருந்து 1963 வரையிலான தினகரனின் பங்களிப்புப் பிரதான காரணமாகும். தினகரனின் ஆசிரியப் பொறுப்பை கைலாசபதி ஏற்றதும், சிறுகதை இலக்கியம் விறுநடை போடத்தொடங்கியது. வெளியுலகிற்குத் தெரியாதிருந்த மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் வேகமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரத்னா ஆகியோரின் விமர்சன அரவணைப்பில் இளங்கீரன், டானியல், டொமினிக்ஜிவா, என்.கே. ரகுநாதன், நீர்வைப்பொன்னையன், காவலுர் இராசதுரை, அகஸ்தியர், ஈழத்துச்சோமு முதலானோர் கைலாசபதி காலத் தினகரன் தளத்தை நன்கு பயன்படுத்தித் தம்மை படைப்பாளிகளாக இனங்காட்டிக் கொண்டனர். கைலாசபதி மார்க்சிய முற்போக்காளரை மட்டுமன்றி, ஈழத்தின் தரமான எழுத்தாளர்கள் பலரையும் தினகரனில் எழுதவைத்தார் என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. வரதர்.அ. முத்துலிங்கம், வ. அ. இராசரத்தினம், கனகசெந்திநாதன், மு. தளையசிங்கம் முதலானோரின் சிறுகதைகள் பலவும் தினகரனில் பிரசுரமாகியுள்ளன. கைலாசபதியின் தினகரன் காலம் ஈழத்து முற்போக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகும்.
4.3.4. கலைச்செல்வி
1958 ஆம் ஆண்டு ஆடிமாதம் கலைச்செல்வி இலக்கியச் சஞ்சிகை வெளிவந்தபோது ஈழத்து இலக்கியப் போக்கின் மறுபுறத்திற்கான தளம் திறக்கப்பட்டது. சிற்பி சரவணபவன் இதன் ஆசிரியராகவும், தமிழ்ச்செல்வன், ஈழத்துச் சோமு ஆக்யோர் இதன் துணை ஆசிரியர்களாகவும் விளங்கினர். ஈழத்தின் தனித்துவம் மிளிரும் தமிழ் இலக்கிய மலராகக் கலைச்செல்வியை வெளிவரச் செய்வதில் சிற்பி கண்ணும் கருத்துமாக விருந்தார். தமிழர்களின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றிற்கு அவற்றின் தொன்மை மணம் குன்றாது. புதுமைமெருகேற்ற வேண்டுமென்பதிலும் கலைச்செல்வி நோக்கமாகக் கொண்டிருந்தது."
'தரம் வாய்ந்த, பிரபல்யம் மிக்க அனைத்து எழுத்தாளார் களுடனும் கலைச் செல்வி நெருங்கிய தொடர்பைப் பேணிவந்தது. 98

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம் மிக்க ஆக்கங்களாலி ஈழத்துத் தமிழிலக் கரியத் துறையைச் செழுமைப்படுத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்கை, ச.வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற்பாலன், சாந்தன், வே. குமாரசாமி, மயிலன், பொ. சண்முகநாதன், மு. பென்னம்பலம், தி. ஞானசேகரன், மு. கனகராஜன், பா. சத்தியசீலன், தெணியான், மட்டுவிலான், கவிதா, பாமாராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி. க. ரட்னசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க.பரராஜசிங்கம், மணியம், முகிலன், பெரி சண்முகநாதன் என்பவர்கள் கலைச்செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே'."
"இலக்கிய உலகில் ஏலவே ஆழமாகக் காலைப்பதித்துவிட்ட சோ. சிவபாதசுந்தரம், இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்தியலிங்கம், கனகசெந்திநாதன், இளங்கிரன் முதலியோர் ‘எழுத்துலகில் நான்’ என்ற தலைப்பில் தம்மைப்பற்றிப் பயன்மிக்க பலதகவல்களைச் சுவையாகக் கலைச்செல்வியில் எழுதினர். தேவன் - யாழ்ப்பாணம், சொக்கன், இ. நாகராஜன், புதுமைலோலன், டொமினிக் ஜீவா, அன்புமணி, டானியல், நாவேந்தன், பவானி, உதயணன், மு. தளையசிங்கம் முதலியோர் ‘என்னை உருவாக்கியவர்கள்’ என்ற தலைப்பில் கலைச்செல்வியில் எழுதினார்." சிறுகதைகளுக்கு கலைச்செல்வி சிறப்பிடமளித்து வந்தது. ஈழத்தின் தரமான சிறுகதைகளாகப் பேசப்படும் சு. இராஜநாயகனின் நாகதோஷம், சிற்பியின் ஏன்படைத்தாய், டொமினிக் ஜீவாவின் இந்நாட்டு மன்னர், வரதரின் புதுயுகப் பெண், பவானியின் மன்னிப்பாரா, அன்புமணியின் மாமாங்கத் தீர்த்தம், செம்பியன் செல்வனின் இதயக் குமுறல், சு. வே. யின் மணற்கோயில், செங்கை ஆழியானின் உச்சிப்பொழுது முதலியவை கலைச்செல்வியிலேயே வெளிவந்துள்ளன.
எனவே 1950 - 1960 காலகட்டத்து ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குக் கலைச் செல்வி ஆரோக்கியமான பங்களிப்பினைச் சொய்துள்ளது.
4.3.5 புதினம்
1960 - 1961 காலகட்டத்தில் வரதரால் வெளியிடப்பட்ட புதினம் வார இதழ் சிறு கதைத்துறைக்குப் பங்களிப்பு செய்துள்ளது. கண்க செந்திநாதன், சொக்கன், பத்மநாதன், கே.டானியல், உதயணன், மாலதி, வரதர், புதுமைலோலன், தாழையடி சபாரத்தினம், டானியல், கே.எஸ். சிவகுமாரன், செங்கைஆழியான் முதலானோர் நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளனர்.
99

Page 59
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
4.3.5. ஏனைய ஏடுகள்
வீரகேசரியின் சிறுகதைப் பங்களிட்பு ஆசிரியப் பீடத்தில் லோகநாதன், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் பணிபுரிந்த காலத்தில் ஏற்பட்டது. அக்கால வீரகேசரிச் சிறுகதைகள் ஓரளவு சமூகப்பிரக்ஞை கொண்டனவாகவும், தேசியப் பண்புவாய்ந்தனவாகவும் இருந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும். இளங்கிரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மரகதம், ரகுமானை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இளம்பிறை என்பனவும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்குதவியுள்ளன. ஈழத்துச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு இக்கால கட்டத்திலுதவிய தமிழகப் பத்திரிகைகளான சரஸ்வதி, சாந்தி, தாமரை ஆகிய மூன்று சஞ்சிகைகளையும் மறந்துவிடக்கூடாது. செ. கணேசலிங்கன், டானியல், டொமினிக்ஜீவா, என். கே. ரகுநாதன் முதலானோரின் நல்ல சிறுகதைகளை இச்சஞ்சிகைகள் விரும்பி வெள்யிட்டுள்ளன.
4.4. முற்போக்குக் காலகட்டப் படைப்பாளிகள்
(1950 - 1960)
எனவே, 1950 - 1960 காலகட்டத்தில் சிறுகதைகளில் இருதெளிவான செல்நெறிவேறுபாடுகளை அவதானிக்கலாம்:
1), சாதியவடிப்படையிலும் ர்ைக்க அடிப்படையிலும் அடக்கியொ டுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி, சிறுகதைகளாக்கப் பட்டன. மார்க்சியச் சித்தாத்தங்களின் சுவர்களுள் இவர்களது கருத்துக்கள் அமைந்தன. எஸ். பொன்னுத்துரை, என். கே. ரகுநாதன், செ. கணேசலிங்கன், கே. டானியல், டொமினிக்ஜீவா, நீர்வை பொன்னையன், அகஸ்தியர், காவலுர் இராசதுரை முதலானோர் இப்பிரிவிலடங்குவர்.
2). சித்தாந்தச் சிறைக்குள் தம்மை அடக்கிக் கொள்ளாது மனிதகுல மேன்மைக்காகவும் தமிழ்த் தேசிய நலனுக்காகவும் ஆக்கவிலக்கியத்தைப் பயன்படுத்துகின்ற எழுத்தாளர்களால் சிறுகதைகள் படைக்கப்பட்டன. வரதர், இராசநாயகன், வ. அ. இராசரத்தினம், பித்தன், அ. முத்துலிங்கம், புதுமைலோலன், அன்புமணி, தேவன், யாழ்ப்பாணம், சோமகாந்தன், பவானி, புதுமைப்பிரியை, சிற்பி, அருள்செல்வநாயகம், நாவேந்தன், உதயணன் முதலானோர் இப்பிரிவிலடங்குவர்.
100

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
4.4.1. வரதர்
வரதரின் சிறுகதை இலக்கியப் பங்களிப்பு, முற்போக்குக் காலகட்டத்திலும் தொடர்ந்துள்ளது. வரதருடைய மாதுளம்பழம் (சுதந்திரன்) கற்பு (மத்தியதிபம்), புதுயுகப்பெண் (கலைச்செல்வி), வெறி (தமிழ்எழுத்தாளர் சங்கம்), உள்ளுறவு, வேள்விப்பலி, பிள்ளையார் கொடுத்தார், வீரம், ஒருகணம் (தினகரன்), வாத்தியார் அழுதார் (ஆனந்தன்), உள்ளும் புறமும் (வரதர் புதுவருஷமலர்) என்பன வேறுபட்ட கருக்களைக் கொண்டவை. நல்ல சிறுகதைகளுக:குரிய இயல்புகளைக் கொண்டவை
“இலங்கையில் தோன்றும் எழுத்தாளர்களுள் சமுதாயத்தொண்டர்
களின் தொகை பெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து சிக்கல்களுக்கு மருந்தும் தேர்ந்து தெளிந்து அவற்றைத்தம் கதைகளில் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தி. ச. வரதராசன் இவ்வகையான எழுத்துத் தொண்டு புரிந்து வருகிறார்
இந்த வரிசையில் அமைந்துள்ள மாதுளம்பழம், வீரம், கற்பு, புதுயுகப்பெண் ஆகிய சிறுகதைகளைக் கற்பவருக்கு இது எளிதில் விளங்கும்* வரதரின் சிறுகதைகள் அவை வெளியான காலத்தில் கலகலப்பை உண்டாக்கியவை. வீச்சும் சிந்தனையும் அவர் கதைகளின் அடிநாதம்*
மனிதனுடைய மனதை. அக வாழ்வைப்பண்படுத்துகிற கருத்துக்கள்தான் புறவாழ்க்கைப் பிரச்சினையை விட முக்கியமானவை.* என்று வரதர் கருதுகிறார். சமூகத்தின் மூடப் பழக்கவழக்கங்களைத் தனது சிறுகதைகளில் வரதர் பக்குவமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். கடவுளின் பெயரால் நடைபெறும் முடத்தனங்கள். சமூகத்தில் தெய்வங்களும் பக்தி உணர்ச்சியும் எத்தத்தரத்தில் போய் நிக்கின்றன என்பவற்றைத் தனது மாதுளம்பழம், பிள்ளையார் கொடுத்தார், உள்ளும் புறமும் ஆகியசிறுகதைகளில் அற்புதமாக எடுத்துக்காட்டுகிறார். பொரியாரிசம் போல நாஸ்திகவாதத்தை அழுத்தமாக முன் வைக்காது தெய்வ வழிபாட்டில் ஏற்படவேண்டிய, மாற்றங்களை வரதர் காட்டுவது அவர் தான் வாழ்கின்ற சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு கொடுக்கின்ற மதிப்பாகும். தெய்வம், பக்தி என்பன பற்றிக் கூறும்போது எழுத்தாளர்கள் ஒரு வித ஆவேச உணர்வால் பிடிக்கப்படுகிறார்கள். ஆனால் வரதரின் இச்சிறுகதைகளில் பக்தியின் சீர்கேட்டை விளங்கப்படுத்தும் போதோ புகழுக்காகப் பணம் செலவிடும் சுந்தரமூர்த்தி போன்ற ‘சவடாலாக உலவிவரும் குருவிச்சைகளைப் பற்றிக் கூறும் போதோ ஆசிரியரிடம் ஆவேச உணர்வு தலைதுாக்கவில்லை. அமைதியாக அவற்றைக் கூறி படிப்போர் இதயங்களில் படியவைக்கிறார்?
10

Page 60
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
வரதரின் சிறு கதைகளில் சமூகத்தை விமர்சிப்பதோடு அதனை சுட்டிக்காட்டும் முறை மிகச் சிறப்பாகவுள்ளது. உதாரணமாக முர்த்திமாஸ்டர் என்பவர் வரதரின் பலகதைகளில் வரும் ஒரு பாத்திரம், நேர்மையும், சமூகத்தின் சீர் கேடுகளைக் கண்டு வருந்துவதும் இப்பாத்திரத்தின் பண்புகள். மூர்த்திமாஸ்டரைப்பற்றி வரதர் தனது கயமைமயக்கம் தொகுதியில் சுறும்போது ‘மூர்த்திமாஸ்டர் என்ற பாத்திரம் வேறுயாருமல்ல. என்னுடைய மனதின் உருவமே அவர். மனிதத் தன்மைக்கும் பகுத்தறிவுக்கும் ஒர் உருவமளித்து அதற்கு மூர்த்திமாஸ்டர் என்று பெயர் கொடுத்திருக்கிறேன்' என்கிறார். இம் மூர்த்தி மாஸ்டருக்குக் கணபதி ஐயர் வீட்டில் ஒரு மாதுளம்பழம் கொடுக்கப்படுகிறது. அதிற்பாதி ஐயரின் மகனால் குப்பையில் எறியப்படுகிறது. பாதி மாஸ்டரின் வயிற்றுக்குள் செல்கிறது. திரும்பி வரும் மூர்த்திமாஸ்டர் ஆச்சிகிழவியின் வீட்டில் அழுகுரல் கேட்டு அங்கு செல்கிறார். அழுததன் காரணம் தெரிகிறது. அதை ஏன் கேட்கிறியள் வாத்தியார், உந்த முற்றத்திலே நிற்கிற மாதுளையில் இந்த வருஷந்தான் ஒரேஒருபிஞ்சு பிடித்திருந்தது. அதை அணில்கிணில் கொத்தாமல் கட்டிக்காத்து இன்றைக்குத்தான் பிள்ளையாருக்குக் கொண்டு போய்க் கொடுத்தனான். இந்த மூதேவி மத்தியானம் போய் மரத்தைப் பார்த்து விட்டு அதைக் காணவில்லை யென்று ஒரேயடியாகச் சிணுங்கிக் கொண்டிருக்கிறது. எங்களிடம் அபிஷேகம் செய்யக் காசுபணமில்லை, இந்த ஒருபழத்தையாவது கொடுப்போமென்றுதான் கொடுத்தன்' - கிழவி சொல்லிக் கொண்டேபோனாள். மூர்த்தி மாஸ்டரின் வயிற்றுக்குள்ளே என்னவோ செய்வது போலிருந்தது. ஐயர் வீட்டிலே தின்ற அந்த மாதுளம்பழத்தின் சாறு வயிற்றிலே கொதித்துக் குமுறியது. லிங்கேச்வரசர்மா குப்பை மேட்டில் எறிந்த மாதுளம்பழத்தின் பாதி கண்முன் ஒடி வந்து கேலியாகச் சிரித்தது. - இதுதான் மாதுளம்பழத்தின் கதை. இச் சிறுகதை யாழ்ப்பாணச் சமூக விமர்சனமாகவுள்ளது. இக்கதை யைப் போன்றனவே உள்ளும்புறமும், பிள்ளையார் கொடுத்தார் என்பன.
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கற்பு, வீரம் என்றிரு சிறுகதைகளை வரதர் எழுதியுள்ளார். கற்பு வரதருக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எனலாம். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப்பட்டால் அவல் மானம் அழிந்துவிடுவ தில்லை என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது.
102

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” புரட்சிகரமான சமூகக்கருத்தொன்றினைப் பேசுகின்ற கற்புச் சிறுகதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்த சிறுகதையாகப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சமூகத்தில் தற்கொலை செய்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். இச்சமூகம் அதை விரும்புவது போலப்படு கின்றது. கணபதி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் அவரைக் கட்டிவைத்து விட்டு அவர் மனைவியைப் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். நன்குபழகிய சில்வாவே முன்னின்று இந்த ஈனச் செயலைச் செய்கிறான்.
*செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனையை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால். பகுத்தறிவற்ற சமுதாயத் திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமு மின்றி கணபதி ஐயர் ஏற்றக்கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமுகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். ‘சந்தர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய்?" என்கிறார் கெளதமர். அது அவள் கல்லாகிச் சாபவிமோசனமடைந்ததன் பின்னர். ஆனால், கற்பில் கணபதி ஐயர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவளைக் கடியவில்லை சாபமிட வில்லை. வாழ்க்கையில எதுவுமே நிகழாதது போல சகசமாக்கிக் கொள்கிறார். கெளதமரிலும் பார்க்க வரதரின் கணபதிஐயர் ஒருபடி உயர்வான பாத்திரம்.
வரதரின் இன்னொரு சிறப்பான கதை ‘வீரம்’ ‘இலங்கையில் ஏற்பட்ட வகுப்புக் கலவரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நான் எழுதிய இரண்டாவது கதை வீரம், மற்றானைக் கொன்றழிப்பவனே, அடக்கியாள்பவனே, வீரன் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எங்கள் பழைய இலக்கியமெல்லாம் இந்த வீரத்தைத்தான் ஏத்திஏத்திப் பாடியிருக்கின்றன. முட்டாள்தனமான பேர்க்களங்களிலே நெஞ்சிலே புண்பட்டு மாண்டவர்களையெல்லாம் வீர சுவர்க்கத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். வீர உணர்ச்சி பாராட்டப்படவேண்டுமானால் அது இப்படி முட்டாள் தனமாக இருக்கக் கூடதென்று நினைத்தேன்' எனத் தனது வீரம் சிறுகதை குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்.
வரதரின் சிறுகதைகள் முற்போக்குக் கருத்துக்கள்
கொண்டவையாகும். குறிப்பாகச் சில கதைகளில் அப்போது பெரிதும்
பேசப்பட்டாதிருந்த பெண்ணியம் பற்றிய கருத்துக்களைக் கூட
வெகுநுட்பமாகவும் கலையழகோடும் வரதர் சித்திரித்திருக்கிறார்*
103 '' (. .ါး . . ...’ .

Page 61
ஈழத்துச் சிறுகதை எனறு "செங்கை ஆழியான்" 4.4.2. வ. அ. இராசரத்தினம்
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குக் கனதியான பங்களிப்புச் செய்த பெருமை வ. அ. இராசரத்தினத்திற்குரியதாகும். ஈழகேசரி வெளிவரத்தொடங்கி இரண்டு தசாப்தங்களின் பின்னர் 1950 ஒக்டோபர் 1 ஆந் திகதி ஈழத்தின் மூத்த எழுத்தாளரான வ. அ. இ. இதயதாகம் என்ற சிறுகதையுடன் சிறுகதை உலகில் கால் பதித்தார். ஈழகேசரியில் சிறுகதைகளோடு மட்டும் நின்றுவிடாது. கொழுகொம்பு என்றொரு தொடர்நாவலையும் வ. அ. இராசரத்தினம் எழுதியுள்ளார். ஈழகேசரியில் தொடராக வெளிவந்து ஆய்வாளரின் கவனத்தினைக் கவர்ந்த நாவல்களான சச்சிதானந்தனின் அன்ன பூரணி, சம்பந்தனின் பாசம், தேவன் - யாழ்ப்பாணத்தின் கண்டதும் கேட்டதும் ஆகிய நாவல்கள் வரிசையில் வ. அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு விதந்துரைக்கத் தக்கதாக விளங்குகின்றது. மேலும் வ. அ. இராசரத்தினம் ஈழநாகன் என்ற புனைப்பெயரில் ஈழகேசரியில் பக்தி இலக்கியக்கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றார். அதே புனைப்பெயருடன் இரண்டு கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு ஈழகேசரியுடன் எழுத்துறவு கொண்டிருந்த வ.அ.சி. வின் உன்னதமான பங்களிப்பு சிறுகதைத்துறை சார்ந்ததாகும்.
1950 இலிருந்து 1957 நவம்பள் வரையில் ஈழகேசரியில் வ. அ. இராசரத்தினத்தின் 29 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் அவர் வெறும் கதை சொல்பவராகக் காணப்படுகின்றார். ஆனால் 1953 ஆம் ஆண்டின் இறுதிமாதத்தில் அவரின் உன்னதமான சிறுகதையான தோணி ஈழகேசரியில் வெளிவந்தது. அக்கதையுடன் ஈழத்துச்சிறுகதை இலக்கியம் ஒருகணம் தன்னை சிலிர்த்துக் கொண்டது. அவள் தன்னை படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அவரது ஆரம்பக்கதைகளில் ஒன்றான தோணியிலேயே தன் எழுத்தாற்றலை அவள் நிறுவிக் கொண்டார்
தோணி சிறுகதையின் பின்னர் வெகுவாகப் பேசப்படும் வ. அ. இராசரத்தினம் புனைகதைத்துறைக்கு அளித்திருக்கும் பங்களிப்பு கனதியானதாகும். வ. அ. இராசரத்தினத்தின் புனைக்கதைக்கான கருத்தியல் நிலை மிகத்தெளிவானது. சுதந்திரனில் சிருஷ்டிகர்த்தா, தாலி, குடிமகன் முதலான பல சிறுகதைகளை படைத்துள்ளார். தினகரன், வீரகேசரி, கலைவாணி, தமிழின்பம், இளம்பிறை, விவேகி, தினபதி, சுடர் முதலான ஏடுகளில் அவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன 1950 - 1954 காலகட்டத்தில் வ. அ. இராசரத்தினத்தினால் எழுதப்பட்ட பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்து தோணி என்றொரு சிறுகதைத் தொகுதியை அரசு வெளியீட்டாளரான எம். ஏ. ரஹற்மான் வெளியிட்டார் அதன்பின் அவரின் ஐம்பது ಕೌಣಹಣ್ಣುಹಂಗಿನ தொகுப்பாக ஒரு காவியம்
104.

Glijbasj figboys Galg “செம்கை ஆழிான்” நிறைவுகிறது என்ற பெருந் தொகுதியை மித்ரவெளியீடாக எஸ். பொன்னுத்துரை வெளியிட்டுள்ளார். கொட்டியாரக் கதைகள் என்றொரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. இச் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கில், வர்க்கியம், தலித்தியம், பெண்ணியம், இனத்துவம், சூழலியம் முதலான கருத்தியல் நிலைகளுக்கு அப்பால் தான் வாழும்பிரதேசத்து மக்களது வாழ்க்கை, பிரதேச அழகு, அவர்களின் வாழ்க்கையின் பலமும் பலவீனமும் என்பவற்றினை எழுத்தில் தந்துவிடும் ஆவலும், அவற்றினுடாக தான் வாழ்கின்ற சமூகத்தின் மேம்பாட்டிற்குச் சில கருத்துக்களைச் சொல்லிவிடும் ஆதங்கமும் அவரது படைப்புக்களில் காணப்படுகின்றன. அவருடைய படைப்புக்களுக்கு, அவருக்கு முன்னர் படைப்பிலக்கியத்தில் ஆழக்காலூன்றியவர்கள் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் முதல்வர்களாகக் கருதப்பட்ட சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரின் எழுத்துக்கள் இவரைப் பாதித்துள்ளன. ஈழகேசரியில் இவர்கள் நிறைய எழுதியுள்ளனர். அதன் பின்னர் மறுமலர்ச்சிக் குழுவினரான அ. செ. முருகானந்தன், வரதர் ஆகியோரின் எழுத்துக்கள் இவரை எழுதத் தூண்டியுள்ளன. தமிழக எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் கு. ப. ராஜகோபாலன் முதலியோரின் மணிக்கொடி எழுத்துக்கள் இவரை ஆக்கிரமித்தன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கிலப்படைப்புக் களிலும் ஆங்கிலக்கவிதைகளிலும் அவர் மிக்க பரிச்சயம் கொண்டிருந்தார். இவை அனைத்தும் வ. அ. இராசரத்தினம் என்ற ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்த புனைகதையாசிரியனை உருவாக்கிவிட்டன.
வ. அ. இராசரத்தினத்திற்குப் புத்திலக்கியம் பற்றிய தெளிவும் நவீன இலக்கிய வகைகளும் தெரிந்துள்ளன. அவர் இலக்கியத்தை ஒரு சமூகச்சக்தியாகக் கருதிச் செயற்பட்டிருக்கின்றார். வ. அ. இராசரத்தினத்தின் சிறுகதைகள் அவர் வாழும் மண்ணின் மக்களைத் தான் பேசுகின்றன. அம்மண்ணில் வாழும் மக்களின் மானிடநேயத்தையும் அடக்கியொடுக்கப்பட்ட நிலையையும் இடர்ப்பாடுகளையும்தாம் சித்திரிக்கின்றன. இன மத பேதமின்றி மானிட ஐக்கியத்தினை அவள் கதைகள் வலியுறுத்துகின்றன. பாசாங்கற்ற சகஜமான மொழியில் சமூக முரண்பாடுகளையும், சமூக அவலங்களையும் அனுபவரீதியாக வ. அ. இராசரத்தினம் தன் கதைகளில் தந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிறுகதைகளில் அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடிகின்றது.
105

Page 62
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” “கிழக்கிலங்கைச் சிறுகதை. இலக்கியத்தின் பிதாமகள் இருவர். ஒருவர் மட்டக்களப்பு மைந்தன் பித்தன் என அறியப்பட்ட கே. எம். ஷா, மற்றவர் வ. அ. இராசரத்தினம். தோணி என்கிற தொகுதி மூன்று தாசப்தங்களுக்கு முன்னரே சாகித்தியமண்டலப் பரிசினைப் பெற்றது.
வ. அ. இராசரத்தினம் அவாவுறுவதுபோல, உலகத்துச் சிறுகதைக்கு ஈழத்தின் பங்காகச் செழுமை சேர்க்கும் இருகதைகள் (தோணி, அறுவடை) ஈழகேசரியில் 1953/1954 களில் வெளிவந்துள்ளன எனத் துணிவாகக் கூறுவேன்.
"அவருடைய ஆரம்பக்கதைகளுள் ஒன்றான தோணியிலேயே அவரது எழுத்தாற்றலும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த போக்கும் நம்பிக்கை மனோ பாவமும் புலனாயின. கடலில் சென்று மீன்பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழவேண்டியிருக் கிறது. காரணம் தோணி அவனுக்குச் சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன் சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கலியாணம் செய்து கொள்வது என உறுதி பூணுகிறான். அவன் ஆசைநிறைவேறுவதாயில்லை. “உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை" என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணியுடைய ஒருவனுக்கு அவளை மனம் முடித்து வைக்கிறான். “இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கிறது. அதனாலென்ன? உயர்ந்தகனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான். எப்போதாவது ஒருநாளைக்குக் காலம்மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத்தோணி இருக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்குமல்லவா? இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கின்றது. கலையழகுடன் யதார்த்த வாழ்வைச் சித்தரிக்கும் நல்லகதை தோணி. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கின்றார் இராசரத்தினம்".
“பாடுபட்டு வயிலில் விளைச்சல் காண்கிறான் ஒருவிவசாயி. அறுவடைபற்றியும் எதிர்காலம் குறித்தும் ஆசைக் கனவுகளளோடு பயிரைப் பாதுகாக்க இரவில் காவல் புரிகிறான். தன்னை அறியாழலேயே தூங்கி விடுகிறான். விடிந்ததும் பார்க்கையில் அறுவடைக்குத் தயாராக நின்ற பயிர்களைக் காட்டுப் பண்றிகள் நாசம் செய்துவிட்டுப் போயிருப்பது
106

Hipi fogóbb a Jawa “செங்கை அழியன்” தெரிகிறது. அந்த ஏழை விவசாயியின் வெவ்வேறு மனநிலைகளையும் அருமையாக விபரிக்கிறது அறுவ ைஎன்ற கதை வாழ்க்கைப் பிரச்சனைகள், மனித இயலபுகள், செயலகள பற்றிய இதர கதைகளும் ஆசிரியரது கலையனுபவத்தையும் வாழ்க்கை நோக்கையும் பிரதிபலிக்கக் கூடியவை”, “சிறுகதைகளை இவா சிருஷ்டித்ததைப் போல மறறவர்கள் செய்ய முடியவே முடியாது என்ற இரசிகமணி கனக செந்திநாதனின வார்த்தைகள் ஏற்புடையதே.
4.4.3. எஸ். பொன்னுத்துரை
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் எஸ். பொன்னுத்துரை ஒரு மைல்கல்லாவார். “பல்வேறு இலக்கியத்துறைகளில ஆற்றலும் கற்பனை வளமும் சொல் லாட் சித் தரிறனும் வாய்ந்தவர் எஸ். பொ, இலக்கியவுலகில் தவிர்க்கபட முடியாத ஓர் உருவமாக இன்றுள்ளார்* சண்முகம் பொன்னத்துரை சிறுவயதிலேயே தினகரன், வீரகேசரி ஆகிய இதழ்களில் பாலர் பகுதிகரில் எழுதியுள்ளார். அதன்பின்னர் 1950 களில் இவரது மணம் இழந்தமலர் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளிவந்தது. 1956 இல் துருவ நினைவுகள் என்ற சிறுகதைமூலம் ஈழகேசரியில் எஸ். பொ. நுழைந்தார். எட்டுசிறுகதைகள் வரை ஈழகேசரியில் எழுதியுள்ளார். அண்ணாமலைக் கிறிஸ்தவக்கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது காதல். ரஸிகன், பிரசண்டவிகடன், ஆனந்தபோதினி, ஹனுமான், தாய்நாடு ஆகிய தமிழகப்பத்திரிகைகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது ஆரம்பகாலச் சிறுகதைகளில் பசி, வெளி ஆகியவை விதந்துரைக்கப்பட்டவை.
‘ஈழத்திலே அதிகம் புனைப்பெயர்களுள் மறைந்து நின்று பல இலக்கியப் பரிசோதனைகளை நாடாத்தியுள்ளார். இக்கால எல்லையில் சிறுகதைத்துறையில் உருவ அமைப்பிலும், உத்திமுறைகளிலும் பல பரிசோதனைக் கதைகளை எழுதி புதியவழிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சூடிக்கழிக்காத மலர் முதலிய அவருடைய உருவக்கதைகளைக் கலைமகள் விரும்பிப் பிரசுரித்தள்ளது. “ஆபாசம் என்று சொல்லி மற்றைய எழுத்தாளர் அணுகவுங் கூசும் (பாலியல்) விடயங்களை வருணனைகளின் மேன்மையாலும் கவர்ச்சியான நடையாலும் வாசகருக்குச் சொல்லக்கூடியவர் என்பதற்குச் சான்றாகத் "தி என்னும் அவரது நவீனம் அமைந்துள்ளது. அதேசமயம் அவா. வீடு ஆகிய அவரது குறுநாவல்கள் சிக்கலான இந்து பெளத்த சமயத்தத்துவங்களைக் கொண்டவை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
107

Page 63
Fig3 fupisang & Jerug “Fiamh fai” கிறிஸ்தவப் பின்னணியைக் கொண்ட நியமம், இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட இத்தா குறிப்பிடத்தக்க படைப்புக்கள்”. எஸ். பொன்னுத்துரை ஈழத்தின் சகல சஞ்சிகைகளிளும் எழுதியுள்ளார்.
‘புதுமைப்பித்தன் வாழ்க்கையைப் பார்த்த (Supg560LDuib, லா. சா. ரா. வின் உருவக்கையாள்தலும் என் சிறுகதைகள் சிலவற்றில் பூரணப்படுத்தப்பட்டிருக்கலாம்” எmஸ். பொன்னுத்துரை 1950-1963 கால இடைவெளியில் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்." 1950 - 1963 கால கட்டத்தில் எஸ். பொ. வின் சிறந்த சிறுகதைகளாக அவரால் தொகுக்கப்பட்ட “வீ ாேன்ற தொகுதியிலுள்ள பதின்மூன்று சிறுகதைகளைக் குறிப்பிடலாம். சிறுகதைகளுக்குத் தலைப்பிடுவது எஸ் பொ. வின் தனித்துவம். மிகச்சிறிய அர்த்தமுள்ள தலைப்புகளாக அவை இருக்கும். தேர், கணை, அணி, வேலி, ஈரா, நெறி, விலை, மறு. வி, சுவை, சிதை, வீடு, முள் என அவை அமைந்துள்ளன.
"அவருடைய சிறுகதைகரில் கதைக்கேற்ற விதமாக அவர் நடையைக் கையாள்வார். அவருக்கு முன்னால் தமிழ்ச் சொற்கள் கைகட்டிச் சேவகஞ்செய்யும். எஸ் பொ. வின் சிறுகதைத் தலைப்புக்கள் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளாலாம். இந்த உபாயத்தினால் கதையின் பூடகமான தொனிப் பொருளையும் வெளிப்படையான சம்பவத் தொகுப்பையும் ஒருசேர எஸ். பொ. காட்டுகின்றார். வேலி, ஈரா, விtை), மறு ஆகிய நான்கு கதைகளும் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தட்டிலுள்ள மக்கள் கையாளும் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு பிராந்திய மக்கள் தமிழை உச்சரிக்கும் முறையும் பிரத்தியேகமாக கையாளும் சொற்களும் ஒரு கலாசாரப்பண்பினதும் வாழ்க்கை முறையினதும் நேர்மையான அறுவடை என்பதை எஸ் பொ. இக்கதையில் நயம்படக்காட்டியுள்ளார். எஸ். பொ. வின் கற்பனை வளத்திலும் பார்க்க நடைவளம் அவர் கதைகளில் மேலோங்கி நிற்கிறது”.
*எஸ். பொ. அடிப்படையில் ஒரு மாரலிஸ்ட் (Moralis), அவரை ஒரு
என்ற நாவலிலிருந்து, இன்றுவரை அவர் படைப்புக்கள் எல்லாவற்றிலுமே இந்தப் பண்புதான் அடிக்கோலாக இருந்து கொண்டு வந்திருக்கின்றது’
எஸ். பொன்னுத்துரையின் 1950-1963 காலகட்டத்துச் சிறுகதை களில் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு பெருமை தருவது தேர் என்பேன்.
108

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிாண்” ‘முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயை பக்குவமாக சுருட்டி வைப்பது ஒருகலை' எனத் தேர் சிறுகதை ஆராம்பமாகிறது. முகத்தாருக்கு அறுபது வயது. அன்று வருடப்பிறப்பு. அவருடைய பிள்ளைகள் எல்லாரும் வந்திருக்கிறார்கள். வரவிருக்கிறார்கள். அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் எங்கு எப்படியிருக்கிறார்களென நனவோடையில் சிந்திக்கிறார் முகத்தார். அவருக்காக பிள்ளைகள் புதுத்துணி வாங்கி வந்திருக்கிறார்கள். கைவிசேஷம் கொடுக்க விருக்கிறார். எல்லாரும் வந்துவிட்டனர் ஒருவனைத் தவிர. இரண்டாவது மகன் குமாரசாமியை ஆவலோடு எதிர்பார்க்குப; தந்தை முகத்தார். ஆனால் அவன் கூட்டமொன்றில் கலந்து கெர்ள்ள ஊருக்கு வருகிறான் என்று அறிகிறார். வேதக்காரி ஒருத்தியைக் கட்டியதற்காக குமாரசாமியை ஒதுக்கிவிட, அவன் ஒதுங்கியே நடக்கிறான். அவன் வரவேண்டுமென முகத்தார் எண்ணுகிறார். கடைசியில் அவன் வருகிறான். அவருக்கு விருப்பமான நீலக்கட்டம் போட்ட சாறனைக் கொடுக்கிறான். ஆவலோடு வாங்கி அதை அணிந்து கொள்கிறார். - இதுதான் தேரின் கதை குடும்பமே ஒரு தேர் என நடைபெறும் நிகழ்ச்சித் தொகுப்பிலே இஷடகுமாரனைத் தேர்ந்தெடுப்பதைப் பூடகமாக, தொனிப்பொருளாக ஆசிரியர் காட்டுகிறார். இக்கதையில் நாவலுக்குரிய போதுமான பாத்திரங்கள் நடமாடினாலும், சிறுகதையின் இறுக்கம் சற்றேனும் குறையாமல் எழுதியுள்ளதன் மூலம் ஆசிரியர் நம்மைப் பிரமிக்க வைக்கிறார்"
எஸ். பொ. பல்வகையான சிறுகதைகளை எழுதியுள்ளார். சரித்திரக்கதைகள், சமூகக்கதைகள். புராணக்கதைகள் எனப் பல்வகை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உருவம், உத்தி, நடை என்பனவற்றைக் கையாண்டுள்ளார். சிறுகதைக்குறிய கலாபூர்வமும், படைப்பனுபவமும் அவற்றில் இருக்கும்.
4.4.4. பித்தன்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில், மட்டக்களப்புப் பிரதேசத்தின் சிறுகதைப் பிதாமகர் பித்தன் ஆவார். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுகதைத் துறையில் காலூன்றிய இவருடைய இயற் பெயர் கே. எம். D69T. கிழக்கிலங்கையில் விளங்கப் பெறும் எழுத்தாளர்களின் முன்னோடியாக இருப்பவர். புதுமைப்பித்தனின் சிறு கதைகளால் ஆகள்ஷிக்கப்பட்டு பித்தன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளைப் படைக்கத் தொடங்கினார். இவருடைய முதலாவது சிறுகதையான
109

Page 64
Api fagian Gigang “Gjilan, gasi”
இருள், லங்காமுரசு என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியது. 1960 வரை பித்தன் தொடர்ந்து எழுதியுள்ளார். கலைஞனின் தியாகம், பாதிக்குழந்தை, தாம்பத்தியம், விடுதலை, மனச்சாந்தி, தனிமை, இருட்டு, நத்தார்பண்டிகை, வேதவாக்கு, ஊதுகுழல், முதலிரவு, முள்ளும் மலரும், ஊர்வலம், தாகம், விடிந்ததும், ஒருநாள் ஒருபொழுது, அறுந்த கயிறு, திருவிழா, சாந்தி ஆகிய சிறகதைகள் இவரை சிறுகதை உலகிற்கு அறிமுகப்படுத்தி நிலைக்க வைத்தன. இவருடைய சிறுகதைகள் மானுட சமூகத்தின் மீதான நேசிப்பின் படப்பிடிப்புகளாக வார்க்கப்பட்டுள்ளன*.
பித்தனின் சிறுகதைகள் 16 தொகுக்கப்பட்டு பித்தன் கதைகள் என மல்லிகைப்பந்தல் வெளியீடாக வ்ெளிவந்துள்ளது மேற்குறித்த பெரும்பாலான சிறுகதைகளோடு பித்தனின் பைத்தியக்காரன், தாகம், சோதனை, பயங்கரப்பாதை, ஆன்மகன், மயானத்தின் மர்மம் முதலான சிறுகதைகள் இத்தொகுதியிலடங்கியுள்ளன. பித்தனின் சிறுகதைப் போக்கையும் நோக்கையும் அறிந்து கொள்ள இச்சிறுகதைத் தொகுதி உதவுகின்றது. “பித்தனின் முதற் சிறுகதையான இருள் 1950 இல் பிரசுரமானது. கடைசிக்கதை பிரசுரமானது 1981. முப்பத்தொரு வருட இடைவெளி யிருந்தாலும். பெரும்பாலானகதைகள் 1950 - 1960 களில் வெளியிடப்பட்டவை. தலையங்கங்களைப் பார்த்தால் கூட சோகவெளிப்பாட்டினைக் கானக்கூடியதாக இருக்கின்றது."
பித்தனின் சிறுகதைகள் சமுதாய விமர்சனங்களாக இருக்கின்றன. இந்த சமூகம் இப்படி நடந்து கொள்கிறதே என்ற அங்கலாய்ப்பு பல கதைகளில் காணப்படுகிறது. நனவோடை உத்தியில் சிறுகதைகளைப் பித்தன் எழுதியுள்ளார். பாதிக்குழந்தை அதற்குத்தக்க உதாரணம். ஹாஜியாரின் காமப்பசிக்குப் பலியாகிவிட்ட சுபைதாவின் சோகக்கதை பாதிக்குழந்தை. இந்த உலகத்தில் மனிதனைவிட நாய் எவ்வளவோ மேல் என எண்ணுகிறாள் சுபைதா. உயிரும் உண்மையும் அற்றுப்போன சமூகமென்கிறார் பித்தன். குழந்தை பிறக்கும்போது அவளும் குழந்தையும் மரணிக்கின்றனர். சிறிது நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நாலைந்து கார்கள் அந்த வழியே பறந்தன. அதில் முதலாவது காரில் உமருலெப்பை ஹாஜியார் இரண்டாவது முறை மக்காவுக்குப் போகிறார் எனப்பித்தன் கதையை முடிக்கிறார். இதில் பித்தன் கூறியவற்றிலும் கூறாது விட்டவை மிகவதிகம்.
பித்தனின் பெரும்பாலான சிறுகதைகளில் சுத்தமான தமிழே உரையாடலுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் ‘இருட்டறையில் பேச்சு வழக்கு உரையாடல் கையாளப்படுவதனால் அச்சிறுகதைக்கு
110

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
ஒரு கலையழகு ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கையோடு ஒட்டிய யதார்த்தப் படைப்பென்ற உணர்வு வருகின்றது. இருட்டறையில் பெண்ணடிமைத்தனம் பற்றி உருக்கமாக பித்தன் விபரிக்கிறார். *காலத்தையும் அதன் மாற்றத்தையும் உணராதவர்கள் அறுபது வருடமென்ன ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் அர்த்தமற்ற வாழ்க்கைதான். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் ஏமாந்து விட்டோமி, இல்லை ஏமாற்றப்பட்டு விட்டோம், குடிசையைச் சுற்றியிருந்த இந்தத் தட்டுவேலிக்குள்தான் தனது அறுபது வருட வழ்க்கையையும் கழித்திருக்கிறாள். அவள் மட்டுமன்ன? இஸ்லாமியப் பெண்களே இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்', எனப் பெரும் சமூகத்தாக்குதலை இருட்டறை மூலம் பித்தன் விடுகிறார்.
பித்தன் தமிழ்ச்சிறுகதை உலகிற்குரியவர். அவர் இஸ்லாமியச் சிறுகதைகள் மட்டும்தான் எழுதியவரல்லர். இந்த மண்ணின் இன மத வேறுபாடின்றி அல்லற்படும் சமூகத்தின் ஒவ்வொரு சமூகக்கட்டத்தையும் தன் சிறுகதைகளிற் கொண்டு வந்தவர். திருவிழா அதற்குத்தக்க எடுத்துக்காட்டு. ஈழத்துச்சிறுகதை வரலாற்றின் ஒரு அங்கம் பித்தனின் சிறுகதைகள்.
4-4.5. என். கே. ரகுநாதன்
ஈழத்துச்சிறுகதை வரலாற்றின் 1950 - 1963 காலகட்டத்தில், " பிரச்சார வாடையற்ற முற்போக்குச் சிறுகதைகளுக்குத் தக்க உதாரணமாக அமைபவர் என். கே. ரகுநாதன். சொந்தப் பெயரோடு வெண்ணிலா, எழிலன், துன்பச்சுழல், வரையண்ணல் ஆகியபுனைபெயர்க ளோடும் இவரது சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 1929 இல் பருத்தித்துறை வராத்துப்பளையில் பிறந்த ரகுநாதன், பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர். அதனால் அவரது உரைநடையில் எளிம்ையும், அழகும் நிரவி வருகின்றன.
என். கே. ரகுநாதனின் முதலாவது சிறுகதை நல்லதிர்ப்பு, 1950களில் சுதந்திரனில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நல்லபாடம், ஆறாவளி, ஸ்டெல்லா, ? (கேள்விக்குறி), விந்தைமனிதன், கதைக்காதல், காரியதரிசி, முத்தம்மா, கனவு, துணிச்சல் ஆகிய சிறுகதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. 1951இல் ரகுநாதனின் “வெளியே நல்லநிலவு, என்ற சிறுகதை வெளிவந்தபோது முற்போக்குச் சிறுகதையுலகம் தன்னை ஒருகணம் சிலிர்த்துக் கொண்டது. இச்சிறுகதை பின்னர் தொகுதியில்
111

Page 65
Ripijdj fig43803 &JRTJ "செங்கை ஆழியன்” வெளிவரும்போது நிலவிலே பேசுவோம் எனப்பெயர்மாற்றம் பெற்றது. இதனை எழிலன் என்ற புனைபெயரில் சுதந்திரனில் எழுதியிருந்தார். இச் சிறுகதை ரகுநாதனின் சமுதாயப் பிரக்ஞையையும் அவர் காணவிரும்பும் புதுமைச் சமூகத்தையும் சுட்டிக் காட்டியது. அதனைத் தொடர்ந்து 1956இல் ஈழகேசரியில் அவர் எழுதிய இலட்சிய நெருப்பு மூத்தனமுத்தாளர் சி. வைத்தியலிங்கத்தின் உள்ளப்பெருக்குச் சிறுகதையின் கருத்தை மறுத்து எழுதப்பட்டமையால் ஈழத்து புனைகதையாளர்களையும். ஆய்வாளர்களையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. இந்தச் சூழலில் ரகுநாதன் சொத்து, சாம்ராட், கண்கள், வெள்ளி, நானும் நாங்களும், கrவியத்தின் மதுவருந்தி, கதவுகள் முதலான சிறுகதைகளைத் தினகரன், வீரகேசரி, தேசாபிமானி, சமூகத் தொண்டன், பொன்னி ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.
ரகுநாதனின் பதினொரு சிறுகதைகளின் தொகுப்பாக ‘நிலவிலே பேசுவோம்’ 1962இல் வெளிவந்துள்ளது. நிலவிலே பேசுவோம் ஈழத்தின் தரமான சிறுகதைகளிலொன்று. “யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிக்கொடுமையைப் புத்தம் புதிய கண்ணோட்டத்துடன், கலையழகோடு, சோகம் ததும்பும் ஒரு நையாண்டி நடையில் சிறுகதையாகச் சித்திரிக்கிறார். தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கு, நன்மை செய்வதாகப் பசப்பிக்கொண்டு வரும் பெரிய ஜாதித்தலைவர்கள் சிலரின் உள்ளத்தின் இருண்ட மூலைகளில் சாதியுணர்ச்சி என்ற விரியன் பாம்பு இன்னும் சுருண்டு கிடக்கின்றதென்பதை ஏளனத்தோடு அவர் கட்டிக் காட்டியிருக்கின்றமுறை மனதைக் கவரும். முடிவில் வெள்ளிநிலாவில் பால்மணலில் பேசுவோம் என்று கதையில் வரும் பெரியவர் சொல்லும் போது என் வீட்டிற்குள் நீங்கள் புகமுடியாது என்ற அவரின் சாதித்திமிரின் தடிப்பு அப்படியே பளிச்சிடுகிறது. நல்ல கருத்து. அதை அவர் சிறுகதைக்குறிய அமைதியுடன் கையாண்டிருந்த முறையும் சிறப்பாய் இருந்தது*
அவரது கதைகளில் நாம் காண்பது அவரது சமூகப்பிரக்ஞை ஆகும். அவை சமுதாயப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முற்போக்குக் கதையாகவேயுள்ளன. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பொற்றுமை, வேலையில் லாத் திண் டாட்டம, கூட்டுறவியக்க ஊழல்கள், பிரசாவுரிமைச்சிக்கல்கள் போன்ற சமுதாய விடயங்களைப் பிரச்சாரத் தொனியற்ற, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தந்துள்ளார். அவர்
12

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆரியன்” கதைகளின் இன்னொரு பண்பு, தாம் வாழும் சமுதாயத்தில் அன்றாடம் காணும் பாத்திரங்களை வைத்துத் தமது கதைகளைப் புனைந்திருப்ப தாகும். அவர் சமுகப்பிரக்ஞை கொண்டதேசிய இலக்கியத்தைப படைத்திருக்கிறார். எனினும், அவரது 1950 - 1963 காலகட்டத்துச் சிறுகதைகளின் பேச்சு வழக்கு மண்வாசனை சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. 4. 6. புதுமைலோலன்
ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் 1950 - 1963 காலகட்டத்தில் புதுமைலோலனின் சிறுகதைகளைக் கணிப்பீட்டிற்குள்ளாக்காது விடமுடியாது. புதுமைலோலனின் இயற் பெயர் வேலுப்பிள்ளை கந்தையா கந்தசாமி. (வி. கே. கே.) ஈழகேசரிப்பண்ணையும் சுதந்திரன் பண்ணையும் இவரை உருவாக்கிவிட்டன. தொடர்ந்து தினகரன், ஆனந்தன், புதினம், ஐக்கியதீபம், சமூகத்தொண்டன், காதல். விவேகி முதலான பத்திரிகைகளில் இவரது சிநுகதைகள் வெளிவந்துள்ளன. சிறுவயதிலேயிருந்து நிறையவாசிக்கும் பழக்கம் இவரிடமிருந்தது. பெரியாரின் பகுதி தறிவுக் கொள்கை இவரை அப்படியே ஆக்கிரமித்திருந்தது. கடவுளின் பெயரால் நடத்தப்படும் மூடநம்பிக்கை களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை, கண்டித்தார். புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், அகிலன், அண்ணாத்துரை, காண்டேகர், மு. வரதராசன், ஜெயகாந்தன் ஆகியோரது எழுத்துக்கள் இவருக்குப் பிடிக்கும். இவர்கள் இலக்கியத்தின் பல்வேறு நிலைகளிலிருப்பவர்களாவர். புதுமைலோலன் சிறந்தவொரு மேடைப் பேச்சாளர். ஆற்றொழுக்கான அழகுதமிழில் மணிக்கணக்காகப் பேசவல்லவர்.
புதுமைலோலனின் முதலாவது சிறுகதை ‘பிச்சைக்காரி' 1952 ஆம் ஆண்டு மார்ச்மாதம் சுதந்திரனில் வெளிவந்தது. அப்போது புதுமைலோலனுக்கு வயது 23. தன்னம்பிக்கையும் உயர் கொள்கையும் கொண்ட சமூகமாக எங்கள் சமுதாயம் மாறவேண்டும் என்பது புதுமைலோலனின் எழுத்திலக்கு. மேலும் எழுத்தாளன் ஏதோ ஒருவகையில் அரசியல் சார்ந்தவனாக இருக்கவேண்டும். எழுத்தாளன் ஒருவன் அரசியல் சார்ந்தவனாகத் தானில்லை என்றால், அவன் படைப்பாளியல்ல" என்பது இவரது கருத்து.
13

Page 66
ஈழத்துச்சிறுகதை QJGT Ap “செங்கை ஆழியானி” இவர் சிறுகதைகளோடு கருகியரோஜா எனும் குறுநாவலையும், தாலி, நிலவும் பெண்ணும் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். வரதரின் ஆனந்தன் சஞ்சகையின் இணை ஆசிரியராக விளங்கியுள்ளார். தமிழரசு என்ற அரசியல் பத்திரிகையை ஒன்றரை வருடங்கள் நடாத்தியுள்ளார்.
பதுமைலோலனின் முதற்சிறுகதையைத் தொடர்ந்து சிந்தனை அவதாரம், புகைந்த உள்ளம், அப்பேலங்கா, கழுத்தில் மாங்கல்யம், மிஸ்.செல்வம் 1956, உறவு பலத்தது, அழகுமயக்கம் முதலான சிறுகதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. புத்தன்பரிசு, பத்மா, மாகந்தி, வாழ்க்கைச்சுழல், அவளும் பெண், தியாகத்தின் சின்னம், வாழ்வின் துடிப்பு, காதல்கனிந்தது, அவள் - அவன் - அவர், இந்திரா, கெளதமி முதலான சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்தன. பிள்ளைக் கனியமுத்து என்றொரு சிறுகதை புதினத்தில் வெளி வந்தது. தினகரன், சமூகத் தொண்டன், ஐக்கிய தீபம் ஆகியனவற்றில் வெளிவந்த சிறுகதைகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
புதுமைலோலனின் சிறு கதைகளில் ரொமாண்டிசப்பண்புமிகத் தூக்கலாகவே இருக்குமென்பது மறுப்பதற்கில்லை. அதனைவிடத் தமிழ்த் தேசியம்பற்றிய சிந்தனைகள் கொண்ட சிறுகதைகள் முக்கியமானவை. 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலைமைகள், இனவொடுக்கல்கள் தமிழ்தேசியச் சிந்தனைகளை உருவாக்கி விட்டன. இனவொடுக்கலின் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பங்காளனாக விளங்கிய புதுமைலோலன் தமிழ்த் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை எழுதினார். 1956இல் அவர் எழுதிய "அப்பே லங்கா’ என்ற சிறுகதை சுதந்திரனில் வெளிவந்தபோது அவரை 'இனவாதி' என முத்திரை பதித்தனர்.
புதுமைலோலனின் சிறுகதைகளில் பல கெளதம புத்தரோடு சம்பந்தப்பட்ட ஒழுக்கவிடயமாக இருக்கின்றது. சிந்தனை அவதாரம், அழகுமயக்கம், புத்தன் பரிசு, மாகந்தி, கெளதமி என்பன இவ்வாறானவை. இச்சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள உரைநடை வெகு கம்பீரமும் இனிமையும் வாய்ந்தது. இக்கதைகளில் ‘அழகுமயக்கம்’ சிறுகதை ஒன்றின் சகல பண்புகளையும் கொண்டுள்ளது. அது சிறப்பானது. காதல், விவேகி ஆகிய சஞ்சிகைகளில் விரும்பி மறுபிரசுரமாகியது.
04

ஈழத்துச் சிறுகதை வரலாறு - “JÄGo rai”
புதுமைலோலனின் சிறுகதைகளின் இலக்குவெகு தெளிவானது. சமூகத்தில் தான் கண்ட கேட்ட சுவைத்தவற்றினைத் தான் உணர்ந்தவாறு சமூகத்திற்கு எடுத்துக்கூறிவிடல். சமூகவிமர்சனத்தின் மூலம் சமூகத்தின் இழிநிலைகளைச் சுட்டிக் காட்டுதல். கருத்தினைப் பிரச்சாரம் செய்வது அவர் நோக்கமல்ல. சமூகத்தின் பல்வேறு உணர்வு நிலைகள் அவர் சிறுகதைகளில் உள்ளடக்கமாயின. வறுமையின் கொடுரம், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், காதல் ஏமாற்றங்கள், பணக்காரரின் பண்பற்ற நடத்தைகள். குடும்ப உறவுகள் முதலானவை இவரது கதைகளின் பொருள். சிறுகதைக்குரிய ஊடகம் அவருக்கு நன்கு கைவந்துள்ளது. முரண்படாதயாத்திர வார்ப்பும், யதார்த்தமான சித்திரிப்பும் எளிமையான நடையும் அவரின் சிறுகதைகளிற் காணப்படும் சிறப்பம்சங்களாம்.
4.4.7 கே. டானியல்
ஈழத்தின் உன்னத படைப்பாளி கே. டானியல் ஆவார். ஈழத்தின் புகழ் பூத்த நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர். 1926இல் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல், அடக்கியொடுக்கப்பட்ட மக்களினதும், பஞ்சப்பட்ட மக்களினதும் விடுதலைக்காகப்போராடியவர், எழுத்தை அதற்கான கருவியாகப் பயன்படுத்தியவர். மார்க்சியமுற்போக்கு எழுத்தாளர். கார்க்கி, கான்டேகர், கிருஷ்ணசந்தர், ரகுநாதன் ஆகியோரின் எழுத்துக்களில் டானியலுக்கு மிகுந்த அபிமானம். ஈழகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, வீரகேசரி, தினகரன், ஈழநாடு முதலான ஈழத்துப் பத்திரிகைகளிலும், சரஸ்வதி, தாமரை, சாந்தி முதலான தமிழகச் சஞ்சிகைகளிலும் டானியலின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
சுதந்திரன் நடாத்திய சிறுகதைப்போட்டியில் அமரகாவியம் எனும் கதைக்குப்பரிசில் பெற்றதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன், வெள்ளைச்சீலை, சிகப்பியின் சபதம், அதலபாதளம் முதலான சிறுகதைகளைச் சுதந்திரனில் எழுதியுள்ளார். ஈழகேசரிப்பண்ணையிலேயே டானியல் வளர்ந்தார் என்ற உண்மை இலக்கியவரலாற்றில் ஏனோ மறைக்கப்பட்டு வருகின்றது. ஈழகேசரியில் பதினான்கு சிறுகதைகளை 1955 க்கும் 1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியுள்ளார். மெனிக்கா, ஏமாளி, மனிதனாகிவிட்டேன், அசுரபரம்பரை, இலக்கிய பரபம்பரை, ஒருபிடிமண், ஒரேபரம்பரை, சாம்பிராணிப் புகை, நிலாவின்
115

Page 67
ஈழத்துச் சிறுகதை வர3 1று “செங்கை ஆழியார்”
கதை, மேளத்திருக்கூத்து. செத்தவன் நாட்குறிப்பு. வானம் வெளுத்தது. இயற்கையின் பழிபபு. நியதி. மாடிப்பேச்சு. தத்துவம் சிரித்தது. யாழ்ப்பாணச் சுருட்டு. தீ என்பன ஈழகேசரிக் கதைகளாம். டானியலின் மேற்குறித்த சிறுகதைகளில் மூடநம்பிக்கைகளுக்கெதிரான பகுத்தறிவு வாதமும், சாதிய முரண்பாடுகளால் நிலவும் கொடுமைகளும், மார்க்சியப் பிரச்சாரமும் மேலோங்கி நிற்கின்றன. சிகப்பியின் சபதத்தில் காதலன் பிடித்த செங்கொடியை, அவனின் மரணத்தின் பின் சிகப்பி ஏற்றிப்பிடிப்பதாகச் சபதமிடுகிறாள். வலிந்து புகுத்திய பிரச்சாரக்கரு. டானியலின் ஆரம்பக்காலக் கதைகளில் கலாபூர்வமான சிந்தனை இருக்கவில்லை. w
1957 இன் பின் அவர் எழுதிய சிறுகதைகளில் இயற்பண்பும், யதார்த்தமும் கலாபூர்வமாக அமைந்துள்ளன. உறவும் நிழலும், வள்ளி, ஆசை, மானம், மரணநிழல், உப்பிட்டவரை, ஒன்பதுசதக்காரன், மண் ஆகியன டானியலின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாம். “உப்பிட்டவரை." என்ற சிறுகதை சிற்பியின் தொகுப்பான ஈழத்துச் சிறுகதைகள் நூலில் இடம் பெற்றுள்ளது. மேற்குறித்த கதைகள் பிரச்சாரத்தொனியற்ற யதார்த்தப் படைப்புக்கள். இச்சிறுகதைகளில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களையும், உயர்சாதியினரின் இழிநிலை அவலங்களையும், செருக்கையும் காண்கின்றோம்.
‘உறவும் நிழலும்’ என்ற கதையில், தனது நோக்கத்தைச் செயலாற்றுகையில், விளைவு எதிர்பாராத விதமாக அமைந்த பொழுது கதாநாயகி தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அசை என்பது ஆண்மைகுன்றிய ஒருவனின் சோகக்கதை. மானம் என்ற கதையில் நம்பமுடியாத திகைக்க வைக்கும் சம்பவங்களும் ஒரு தலைப்பட்சமான பாத்திரச்சித்திரிப்புமுள்ளன. மனித இயல்பின் எதிர் மறைகளைக் கோடிட்டுக் காட்டுவதாக "மரணநிழல் அமைந்துள்ளது.* அசையிலும் ஒன்பதுசதக்காரனிலும் வரும் பாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து மனிதராக அமைந்தனர். கற்பனையைச் சேராது. அவ்விரு சிறுகதைகளும் படைக்கப்பட்டுள்ளன. டானியலின் சிறுகதைகளில் ‘யதார்த்தம்' என்பது இவ்வகையில் கண்ட மனிதரின் கதையாகவே அமைந்தது. வள்ளி சற்று வித்தியாசமான சிறுகதை, இது வர்க்க ஒற்றுமையைச் சிறிதும் பிரச்சார நெடியின்றி அற்புதமாக டானியல் சித்திரித்துள்ள சிறுகதை. கல் வீடுகளில் தொண்டு துரவு செய்த வெள்ளாடிச்சி வள்ளியைச் ®ಉಣ್ಣೆ காலத்தில் கல்வீட்டார் ஒதுக்கி

ஆழத்துச் சிறுகதை வல்று “செங்கை ஆழிாண்"
விட அவளை ஏற்ற வறிய கூட்டத்தினர் சாதிவேறுபாடின்றி அவளது மரணவீட்டில் கலந்துகொள்கின்றனர். "கள்ளுக் கந்தனும் தோட்டக்கார ஏழைக் கிட்டிணனும் வள்ளியை எடுத்தக் செல்ல, அந்த ஜனக்கூட்டம் . அநாகரிகக் கூட்டம் - கந்தல்துணிக் கூட்டம் - அழுக்குப்பிடித்த கூட்டம் வள்ளிக்குப் பின்னால் அழுது கொண்டே சென்றது.*
‘டானியலின் சிறுகதைகள்' என்றொரு தொகுதியும், “உலகங்கள் வெல்லப்படுகின்றன என்றொரு தொகுதியும் வெளிவந்துள்ளன. அவற்றில் இருபத்திமூன்று சிறுகதைகளடங்கியுள்ளன. டானியல் எழுதிய ‘தண்ணிர்’ என்ற சிறுகதை அவரால் பெரும் நாவலாக எழுதப்பட்டது. பூமரங்கள், மரணநிழல் ஆகிய சிறுகதைகள் பின்னர் அவரால் குறுநாவல்களாக எழுதி வெளிவந்தன. “எல்லா எழுத்தாளர்களும் ஒரே கதையைத்தான் திரும்பத்திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கூற்று டானியலுக்குப் பொருந்தவே செய்கிறது.* டானியல் நாவலிலக்கியத்தில் பதித்த இலக்கியத்திறனை சிறுகதைகளில் சாதித்துவிடவில்லை என்ற கருத்துநிலைத்துவிட்டதற்குக் காரணம்அவருடைய நாவல்கள் அவருடைய சிறுகதைகளிலும் பார்க்க சமூகவியற்பண்புகளில் மிஞ்சி நிற்பதனாலாகும்
4.4.8 செ. கணேசலிங்கன்
தமிழுலகு நன்கு அறிந்த ஒரு நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் ஆவார். அவர் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியராக விளங்கினார். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் 1950 - 1960 களில் கணேசலிங்கனின் சிறுகதைகள், ஈழத்துக் சிறுகதையுலகின் வளர்ச்சிக்கான ஒருபடிக்கல்லாக விளங்கியுள்ளனவென்ற அளவிலேயே கணிக்கப்பட வேண்டியவையாகின்றன. செ. கணேசலிங்கனின் சிறுகதைகள் சுதந்திரன், தினகரன், புதுமை இலக்கியம், சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
முற்போக்குக் காலகட்டத்தில் (1950 - 1960) பிரசவம், வேதனையும் விளையாட்டும், பூச்சாண்டிகள், வெறியில் நடந்தது. விளம்பரம் காவிகள், சீக்கிரமாய் வந்துவிடு, சாயம், மான், பகற்கனவு. கவிஞனின் காதலி, ஒரே இனம், நல்லவன், வள்ளி புறப்பட்டாள். தியாகம். காவோலை வீழ்ந்தது, நரபலி, அடைக்குஞ்சு, முந்திவிட்டாள், பிழைத்த பிள்ளை, மரக்கட்டை, மாகிரெட்டின் கிறிஸ்மஸ், கார்முகில், அந்த உலகில்
117

Page 68
தத்துச் சிறுகதை வவறு “செங்கை ஆழியான்”
எனப் பலசிறுகதைகளைத் தந்துள்ளார். அவை நல்லவன், ஒரே இனம் ஆகிய சிறுகதை தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முற்போக்குக் காலகட்டத்தில் இவர் படைத்த சில சிறுகதைகள் மிகச்சாதாரணமானவையாக விளங்குகின்றன. தான் வரித்த கருத்தை வெறுமனேகதையாகக் கூறுபவராக செ. கணேசலிங்கன் விளங்குகிறார் என்பது மேற்குறித்த சிறுகதைகளிலிருந்து புலனாகின்றது.
“இக்கதைகள் யாவும் இலங்கை மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவையே. சில கதைகள் வரம்பு மீறவிட்டன எனச்சிலர் கருதலாம். அதற்கு யான் பொறுப்பாளியல்ல. இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கம், நேர்மை ஆகிய அறவழிகளைச் சீர்குலைக்கும் புல்லுருவிகள் இரண்டு ஒன்று வறுமை, மற்றது மிதமிஞ்சிய செல்வம். இப்புல்லுருவிகளை வளர விட்டவர்களும் வளர்ப்பவர்களும் தான் அதற்குப்பொறுப்பாளிகள்" என கணேசலிங்கன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். கணேசலிங்கனின் கதைகளின் கருபொருளும் கதாபாத்திரங்களும் வறுமைப்பட்டமக்களே. அவர்களின் வாழ்க்கையின் பலம், அவர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாக நிற்பதிலும் போராடுவதிலும் தங்கியுள்ளமையை அவரது கதைகளில் காணலாம். தான் வரித்த மார்க்சியக் கோட்பாட்டினடியாகத் தன் கதைகளைக் கூறும் கணேசலிங்கன், வெறும் கருத்துவளம் மட்டும், சிறுகதையாகுமென நம்புகின்றார். இலக்கியம் மக்களுக்கானது என்றாலும், அது இலக்கிய வடிவமாக வரும்போது அதில் கலையழகு இருந்தேயாக வேண்டும். அப்பாங்கு இவரின் சிறுகதைகளிற் காணப்படவில்லை. 'கணேசலிங்கன் தனது சிறுகதைகளில் கருத்தம்சத்திற்கே முதன்மை கொடுப்பவர், என சிதம்பர ரகுநாதன் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்."
கணேசலிங்கனின் கதைகளில் சமூகத்தின் அடிமட்ட தொழிலாள மக்களே வருகின்றனர். ‘மக்கலம் விதிப்பாலத்துக்கு அடியிலுள்ள சேரியிலே வாழும் நகரசுத்தித் தொழிலாளர்கள், கொட்டாஞ்சேனைக் கள்ளுக்கடையில் இரால் வடை விற்கும் சொத்திக் கிழவி, சுன்னாகம் சந்தையிலே தரகுத் தொழில் பார்க்கும் தம்பையா, அந்தச் சந்தையிலேயே அங்காடிக்காரியாக விளங்கும் பொன்னம்மா, புறக்கோட்டை பஸ் நிலையத்தையும் புகையிரத நிலையத்தையும் வாசஸ்தலமாகக் கொண்டு உயிரையும் உடலையும், ஒட்டவைக்கப்பாடுபடும் சிறுவர்களான பண்டா, குண்டன், நெட்யைன் முதலியோர், தேயிலைத் தோட்டக்கூலி தங்கப்பன்,
118

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்’
மண்முனைப்படுவான் துறைப் பாலிப்போடியின் மகள் பார்வதி - இத்தியாதி கதாபாத்திரங்களைத்தான் இவரது சிறு கதைகளில் சந்திக்கின்றோம். இத்தகைய கதாபத்திரங்களின் மீது கதாசிரியர் கொண்டுள்ள மனிதாபிமான உணர்ச்சியையும் இனம்கண்டு கொள்கிறோம்."
செ. கணேசலிங்கனின் தமிழ்த்தேசிய உணர்வுக்காலத்தில் (1983 2000) எழுதிய சிறுகதைகளின் சிறப்பு தனித்து நோக்கத்தக்கது. முதிரா இளமையில் எழுதிய முற்போக்குக் காலக் கதைகளுக்கும். முதிர்ந்த அனுபவப் பார்வையோடு எழுதிய தமிழ்த்தேசிய உணர்வுக்காலச் சிறுகதைகளுக்கும் பெரும் இடைவெளியுண்டு.
4.4.9 டொமினிக் ஜீவா
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவாவிற்கு முக்கியவிடமுள்ளது. 1950 - 1960 காலகட்டத்தில் ஜீவாவின் சிறுகதைப் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. 27.06.1927இல் பிறந்த டொமினிக் ஜீவா என்ற ஜீவானந்தன் ஆரம்பத்தில் புரட்சிமோகன் என்ற புனைப்பெயரில் எழுதினார். கார்க்கி, அப்பாஸ், புதுமைப்பித்தன், விந்தன், காண்டேகர், ரகுநாதன் ஆகியோரின் எழுத்துக்களை விரும்பிப்படித்தார். மார்க்சியச் சிந்தனைகளால் கவரப்பட்ட 'ஒரு முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா. மக்களுடன் மக்களாக மிகநெருங்கி நின்று, தொழிலாளி மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அவருடைய கதைகள் கூடுதலாக எழுதப்பட்டன. ஜீவா தன்னை மார்க்சியச் சிந்தாந்தங்களுள் சிறைப்படுத்திக் கொண்டாலும், அவருடைய படைப்புக்களில் அத்தத்துவ விசாரங்களுக்கு அப்பால், Ts) தேசவர்த்தமானங்களுக்குப் பொருத்தமான கருத்துக்கள் உள்ளன. 1964ஆம் ஆண்டிற்கு முன்னெழுதிய வெண்புறா, தீாக்கதரிசி, முற்றவெளி, கரும்பலகை முதலானபல கதைகளில் சித்தாந்தத்தை மீறய கருத்துக்கள் நமது தேசப் பிரச்சனைகளினதும் சமூக உறவுகளினதும் படைப்புக்களாகவுள்ளன."
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் ‘தண்ணிரும் கண்ணீரும்,
சாலையின் திருப்பம், பாதுகை, வாழ்வின் தரிசனங்கள் என நான்கு
தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பின்னர் அவரது பெரும்பாலான
சிறுகதைகள் அனைத்தும் ஒருங்கே “டொமினிக் ஜீவா சிறுகதைகள்
எனப் பெரும் தொகுதியாக வெளிவந்துள்ளன. இதில் அவரால்
19

Page 69
ஈழத்துச் சிறுகதை லொறு “செங்கை ஆழியாண்”
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. 1956 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் டொமினிக் ஜீவாகவின் சிறுகதை முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டது. அதனைத் தொடாந்து ஜீவா சுமார் 80 சிறுகதைகள் வரை படைத்துள்ளார். டொமினிக் ஜீவாவின் ‘தண்ணிரும் கண்ணிரும்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுதி, ‘சரஸ்வதி வெளியீடாக வ. விஜயபாஸ்கரனால் வெளியிடப்பட்டு, ஈழத்துச் சிறுகதைத் துறையை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. ‘ஈழத்தின் நவீன தமிழிலக்கியம் தென்னிந்தியத் தமிழிலக்கியத்தின் பிரதியாக அமையாது ஈழத்தின் மண்வாசனையைப் ’பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்" என்பதற்கு எடுத்துக் காட்டாக
டொமினிக்ஜீவாவின் சிறுகதைகள் அமைந்துள்ளன.
டொமினிக் ஜீவாவை உருவாக்கிய பெருமை “சுதந்திரனுக்கே யுரியது. வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் அதிக சிறுகதைகளை நிறைவாக எழுதினார். ஜீவாவின் கருத்துக்களையும் எழுத்துக்களையும் செழுமைப்படுத்தித் தரமமைத்துக் கொடுத்தவை தாமரை சரஸ்வதி ஆகியவையாகும். இவற்றின் மூலம் தமிழகத்தின் இலக்கிய வாசகர்களிடம் ஜீவா நன்கு அறிமுகமானார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மன அச்சத்திற்கு அவர் உருக்கொடுக்கும் போது அவருக்குப் பிறப்புரிமையாகக் கிடைத்துள்ள கலையுணாச்சியும் கலந்து அவரது கதைகளில் பிரசாரத்தன்மை குறைந்தும் இலக்கிய அம்சம் மேம்பட்டும் நிற்கும்படி செய்துவிடுகின்றன." “டொமினிக்ஜீவாவின் சிறுகதைகளில் சமூக நோக்கு சமநிலை தளும்பாதது. ஏழையையும் செல் வந்தனையும் , தொழிலாளியையும் முதலாளியையும் , சாதிவெறியரையும், அடிமை குடிமைகளையும் நோக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் தந்து, அத்தாங்கொணாத் துயரிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தை கூறுகின்ற அதேவேளை, அத்துயரத்திற்குக் காரணமான மனிதரும் அதே சமுதாயக்களத்தின் அங்கம் என்ற மனித நேயத்தால் அவர்மீது போர்க்கணை தொடுக்காது மனமாற்றத்திற்கான தடத்தைக் காட்டுவதைக் காணலாம். இரு பகுதியினரினதும் அறியாமைக்காக அவள் உள்ளம் அக்கதைகளில் அழுகிறது. தண்ணிரும் கண்ணிரும், கொச்சிக்கடையும் கறுவாக்காடும், ஞானம் ஆகிய சிறுகதைகள் இவ்வாறானவை.*
12()

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
டொமினிக்ஜீவா மல்லிகை என்ற இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர். 36 வருடங்களாக இந்த மண்ணின் இலக்கியக்குரலாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகை. மல்லிகைப்பந்தல் என்ற புத்தகவெளியீட்டு நிறுவனத்தின் அதிபர். இதுவரை 25 நூல்களை மல்லிகைப்பந்தல் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். ஜீவாவின் முதலாவது சிறுகதைத் தொகுதியான தண்ணிரும் கண்ணிரும் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற ஈழத்தின் முதலாவது படைப்பிலக்கியமாகும்.
4.4.10 நாவேந்தன்
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் ஒருகாலகட்டத்தில் நிறையவே எழுதியவர் நாவேந்தன் என்ற தம்பிராசா திருநாவுக்கரசு. பயிற்சி பெற்ற ஆசிரியர். பதினைந்து வயதில் இந்து சாதனத்தின் மூலம் எழுத்துலகில் புகுந்த நாவேந்தன், தினகரன், வீரகேசரி, ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார். 1950களில் தமிழ்க் குரல் என்றொரு பத்திரிகையை நடாத்தியுள்ளார், பகுத்தறிவாளர். நாஸ்திகரல்லர்” சிறந்ததொரு பேச்சாளராகத் தமிரசுக் கட்சியின் மேடைகளில் முழங்கியவர். தமிழிலக்கியத்தில் சிறுகதை, நாவல், திறனாய்வு, கவிதை, கட்டுரை, இதழியல் எனப் பல துறைகளிலும் கால்பதித்தவர். இவருடைய எழுத்துக்களில் பெரியார், அண்ணத்துரை, ப. ஜீவானந்தம் ஆகியோரது கருத்துக்கள் பதிந்திருக்கும். ‘இவருடைய எழுத்துத்திறனை வளர்த்துவிட்டது சுதந்திரனே. எழுத்து நாவேந்தனுக்கு உயர். எழுதாமலிருக்க அவராலியலாது”*
1952 களில் நாவேந்தன் ஒரேமூச்சாகச் சுதந்தரனில் எழுதியபோது அவரை இலக்கியவுலகம் அவதானிக்கத் தொடங்கியது. இவருடைய சிறுகதைகள் வீரகேசரி, சுதந்திரன், கலைமன்றம், உமா, ஆனந்தன், கலைச்செல்வி, உதயம், விவேகி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. பருவச்சறுக்கல் என்ற சிறு கதை மூலம் சுதந்திரனில் பிரவேசித்த நாவேந்தன், தியாகம், அகலிகை, வாழத்தெரிந்தவள், தண்டனை, பிச்சைக்காரி, சகோதரி, போட்டி ஒழிந்தது, கள்ளத்தோணி, அவள்சாட்சி, எக்ஸ்ட்ரா டீச்சர், வெள்ளிக்கிழமை, அழியாதது, பட்டமரம், கொலைகாரி, நம்பிக்கை, துறவியின் காதல். உழைப்பு, சலனம், விழிப்பு, வாழ்வு, ஒரு சொட்டுக் கண்ணிா, ஆசைமயக்கம், பெண், காதல் வென்றது, தவறு. சுடலையாண்டி முதலான சிறுகதைகளை எழுதித்தள்ளினார். இவரது சிறுகதைகளின் தொகுப்பாக வாழ்வு, தெய்வமகன் ஆகிய இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
12

Page 70
ஈழத்துச் சிறுகதை ஒரலாறு ዙ “செங்கை ஆழியான்"
“நல்லதைச் சொன்னாலும் அல்லதைச் சொன்னாலும் இலக்கியம் மனித வாழ்வையே சொல்கின்றது. எந்தக்கோட்பாட்டுக்கும், விதிகளுக்கும் பணிந்து, குனிந்து இலக்கியம் படைத்தலியலாது. இலக்கியத்தின் பொதுவான அடிப்படை சமுகவாழ்வுதான். வாழ்க்கையில் நாம் காண்கின்ற உண்மையான உலகினைவிட்டு, எதுவோ ஒரு கொள்கையின் கட்டுப்பாட்டிற்குத் தலைபணிந்து. வலிந்து, புதிய மனநிலையும் செயல்களும் உரிய பாத்திரங்களைப் படைத்து விடுவதில் நாவேந்தனுக்கு எள்ளளவும் ஒருப்பாடில்லை. அவர் கதைகளில் உலகின் நிரந்தர உணர்ச்சிகள் அதிகவிடம் பெறுகின்றன."
நாவேந்தனின் சிறுகதைகளில் மொழிமரபும், தூய்மையும் கூடியவரை பேணப்பட்டுள்ளன. பேச்சுவழக்கு அவரது சிறுகதைகளில் பயன்படுத்தப்படவில்லை. நாவேந்தனின் கதாபத்திரங்கள் பல்தரத்தினர். மிக இழிந்த பொருளாதாரத்தினர். நடுத்தர வாழ்க்கை வதிகளுடன் போராடிக்கொண்டு வாழ்பவர்கள், பல்வேறு உணர்ச்சிச் சிக்கல்ஞடன் உலாவுபவர்கள், அதிகமாகக் காதலிபவர்கள், அடிமட்ட பாத்திரங்களான சுடலையாண்டி, நகரசுத்தித் தொழிலாளி, இழுவை வண்டிக்காரனான நாகப்பன் போன்றோர் பல் தரத்துப் பாத்திரங்களாக வருகின்றனர். இந்த மண்ணின் இயல்பான பலத்தோடும் பலவீனத்தோடும் சிறுகதைகளில் வருகின்றனர். நாவேந்தனின் சிறுகதைகளில் சிறுகதைப் பண்புகளுக்குரிய முழுமையை மீறி நிற்கும் மொழித்துய்மை, நவீன சிறுகதையின் யதார்த்தப்பண்பைச் சிதைக்கவே செய்கின்றது. சிறுகதையுருவத்திற்கு நாவேந்தன் தந்த முக்கியத்துவத்தை உள்ளடக்கத்தில் செலுத்தத் தவறிவிட்டாரெனப்படுகின்றது. தன் சிறுகதைகளூடாக அவர் சமூகத்திற்குச் சொல்ல விரும்பும் சங்கதி என்ன? பத்திரிகைக் கதைகளாகவே அவை விளங்குகின்றன.
4.4.11 தேவன் - யாழ்ப்பாணம்
ஈழத்து இலக்கியவுலகிற்கு இளையப்பா மகாதேவா என்ற தேவன் - யாழ்ப்பாணம் செய்த பங்களிப்பு எண்ணிக்கையிற் குறைவாயினும் கனதியானது. ஆங்கில ஆசிரியராகப் பயிற்சிபெற்ற தேவன், 27.9.1924 இல் பிறந்தார். ஆனந்தவிகடன் தேவனின் எழுத்தின் மீது மிகுந்த விருப்பம் இருந்ததால், தனது புனைப்பெயரை தேவன் - யாழ்ப்பாணம்' என வைத்துக் கொண்டார். தனது பதினெட்டாவது வயதிலேயே எழுத ஆரம்பித்தார். நாடகமெழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தென்னவன் பிரமராயன். விதி, இரு சகோதர்கள்,
122

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
பத்தினியா, பாவையா, வீரபத்தினி, நளன் தமயந்தி, கூடப்பிறந்த குற்றம் என்பன அவர்தயாரித்து மேடையேற்றிய நாடகங்கள், நாடகப்பிரதிகள் அவருடையவை. புதுமைப்பித்தன், கு.பா.ரா, ரகுநாதன், டோபின்டிமோர், பேர்ள்பக் ஆகியோரின் எழுத்துக்களில் மிக்க பரிச்சயமுடையவராக விளங்கினார்.
வாடியமலர்கள், மணிபல்லவம், கேட்டதும் நடந்ததும், வானவெளியிலே, தென்னவன் பிரமராயன் ஆகியவை அவரது எழுத்துருப்பெற்ற ஆக்கங்கள். வாடியமலாகள் என்ற நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனிச் சிறுகதைகளாகவே எழுதினார். தமிழுக்கு அது புதியது. மணிப்பல்லவம் ஆங்கில நாவலொன்றின் தமிழாக்கம். இவ்விரு நூல்களையும் சென்னை சுதர்சன் வெளியிட்டினர். 1944 இல் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழகேசரியில் வெளிவந்த நல்ல நாவல்களில் கேட்டதும் நடந்ததும் முக்கியமானது. ‘மனிதனை உருவாக்குவது பிறப்பா? சூழலா? என்ற உளவியல் வினாவுக்கு விடைகாண்பதற்காக எழுதப்பட்டநாவல் கேட்டதும் நடந்ததும். ஒரே குடும்பத்தின் மூன்று பரம்பரைகளையெடுத்து இந்த நாவலை எழுதினார். பிறப்பும் சூழலும் இணைந்துதான் மனிதனைஉருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார்.* அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முன்னர் "வான்வெளியிலே' என்ற அறிவியல் நூலின் மூலம் அக்கனவுகளைக் கண்டவர் தேவன் - யாழ்ப்பானம்* எனவே, தேவன் - யாழ்ப்பாணம் பல்துறை விற்பனர். நாடறிந்த நல்ல எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
தேவன் - யாழ்ப்பாணத்தின் எழுத்தில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவை ஊடுபரவியிருக்கும். 1944 இல் தான் எழுத்துலகிற்கு வந்தது தமிழுக்குப் பிடித்த வினை* என்கிறார். ‘பிறருக்குச் சொல்வதற்கென்றே என்னிடம் விஷயங்கள் நிறையவிருந்தன. (சிறுகதை)க்கரு விஷயத்தில் பஞ்சமோ தட்டுப்பாடோ எனக்கு இருக்கவில்லை, உருவ அமைப்பின் பொருந்தம்பற்றிய பரிசோதனைகள் தாம் என் ஆரம்ப எழுத்துக்கள். பொழுதுபோக்கு எழுத்தாளன் என்று பிறர் என்னை நையாண்டி பண்ணும்போது என்தலை ஒரு சுற்றுப் பெருக்கிறது. வீட்டிலே ஓய்வுவேளைகளில் ஒரு சிறு தோட்டம் செய்பவர். அதைத்தன் பொழுது போக்கு என்கிறார். பேச்சுத்தமிழில் எழுதப்பட்ட என்படைப்புக்களைக் கண்டு தேசியம், மண்வளன் என்ற வலைகளில்
123

Page 71
ஈழத்துச் சிறுகதை எலாறு “செங்கை ஆழின்" விழுந்து விட்டேன் என்று நினைத்து என்னைத் தட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் "ஞானகுனியங்கள். வெறும்படப்பிடிப்பு வேலையல்லவே எழுத்தாளனின் தொழில்? அவன் கைவண்ணத்துக்கு இடமில்லையா? ஆகவே, சொல்வதற்கு நிறையவிருத்து, அவை நல்லவையாயும் அமைந்தமையால் அதற்கு ஏற்ற உருவம் தேடிய முயற்சியே என்படைப்புக்கள்”
தேவன் - யாழ்ப்பாணம் ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும், பிரசண்ட விகடனிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். மனச்சாட்சியின் தண்டனை, நேர்வழி, பேரில் என்ன கிடக்கு, மாமி, இருதாரமணம், கொடுத்து வைக்காதவன் என்பன அவரெழுதிய நல்லதரமான சிறுகதைகளாம். பெரிய பணக்காரர் வீட்டில் மாடாக உழைத்து நேர்மையாக வாழ்ந்த வேலாயுதம் தன்மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டபோது, தற்கொலை செய்து கொள்கிறான் என்பது மனச்சாட்சியின் தண்டனை. இச்சிறுகதையை தேவன் - யாழ்ப்பாணம் கூறியிருக்கும் முறை மிகச் சிறப்பானது. கொழும்புப் பெரிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளை நகைச்சுவையோடு விபரித்துள்ளார். யாழ்ப் பாணச் சமூகத்தில் அடக்கியொடுக்கப்பட்ட ஒருவன், ஆலயப்பிரவேசம் குறித்துக்கொள்ளும் அபிப்பிராயம், பின்னர் புத்தமத்தில் சேர எடுக்கும் முடிவு, அவர்களைப் பயன்படுத்திபனக்காரர் ஆகிய தலைவர்களின் ஏமாற்று என்பனவற்றை, பேரில் என்னகிடக்கு என்ற சிறுகதையில் சித்திரிக்கிறார். ‘மாமி' தேவன் - யாழ்ப்பாணத்தின் மிக எடுப்பான சிறுகதை மட்டுமல்ல, ஈழத்துச்சிறுகதைக்கும் தரம் சேர்க்கிறது. மாமா பிரமச்சாரி. அவருடன் வாழும் மருமகன் ஒரு நடனக்காரி மீது மனதைப் பறிகொடுக்கிறான். "சீச்சி. விட்டுத்தள்ளு, மேணிமினிக்கியவள். தேவடியாச்சாதி. என்கிறா மாமா. பிறகு “அந்தத் தேவடியாள் மாமாவிற்கு மனைவி ஆகிறாள். இதுதான் மாமி சிறுகதை, சிறுகதையின் கலை பண்புகள் உருவம், உத்தி, பாத்திரவார்ப்பு, படைப்பனுபவம் அனைத்தும் இச்சிறுகதையில் நன்கு விழுந்துள்ளன.
4.4.12 அகஸ்தியர்
ஈழத்து இலக்கிய உலகில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமேல் எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளரான எளப் அகஸ் தியர் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார். இருளினுள்ளே, கோபுரங்கள் சரிகின்றன, ஒருகுப்பி விளக்கு எரிகிறது என்பன அவரின் குறுநாவல்கள். திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில்
24

ஈழத்துச் சிறுகதை வரலாறு “frika yai”
தெரியுது ஒரு தோற்றம், எரிமலை என்பன அவரின் நாவல்கள். உணர்வூற்றுருவகச்சித்திரம் என்பது தனக்கென உருவாக்கிக் கொண்ட இலக்கிய வடிவம். அகஸ்தியரின் படைப்புக்கள் மக்களுக்காகவே சிருஷ்டிக்கப்படுகின்றன, மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எடைபோட்டு, உணர்வு பூர்வவெளிப்பாடுகளாக அகஸ்தியரின் சிறுகதைகள் அமைகின்றன. ‘அனுபவத்தில் பெறும் உணர்வே எழுத்தாளனின் நுனாவுக்கருவி' என்கிறார் எஸ். அகஸ்தியர்.
அகஸ்தியரின் சிறுகதை யதார்த்த பூர்வமானது. மனவளம் மிக்கது. பேச்சுவழக்கு அவரது படைப்புக்களில் மிகவும் துக்கலாக, இடம்பெற்றிருக்கும். அரசியலோடு கலந்த சமூகவாழ்வனுபவத்தினூடாக படைப்புக்களைத் தந்துள்ளார். அகஸ்தியரின் படைப்புக்களில் காணப்படும் அரசியற்பிரசார நெடி அவர் வரித்துக்கொண்ட மார்க்சியத்தின் வழிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அகஸ்தியர் ஈழத்தின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றிலும், தமிழகத்தின் தாமரை, கலைமகள் ஆகிய சஞ்சிகையிலும் நிறையவே எழுதியுள்ளார். வீரகேசரி, தினகரன், மரகதம், அமிர்தகங்கை, மல்லிகை முதலானவற்றில் அகஸ்தியரின் சிறு கதைகள் வெளிவந்துள்ளன.
கொக்குதவம், தவிர்ப்பு, வட்டி, தனியொருவனுக்கு, பொறி, மேய்ப்பர்கள், பிறழ்வு, சிந்துவக்கேடு, ஒரேவழி, ஸ்ரைக், சத்தியவேதத் தண்டனை, நேர்த்திக்கடன், இரத்த ஞாயிறு, கடல் சிவந்தது என்பன அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாம்.
இச்சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் யாழ்ப்பாணமண்ணின் பிரதான ஏழைத் தொழிலாளிகள் தாம். கொக்குத் தவத்தில் மீனவத்தொழிலாளரின் பணத்தை ஏப்பமிடும் தரகர் இறுதியில் அனுபவிக்கும் துயர் சித்திரிக்கப்படுகின்றது. கஞ்சியும் கூழுமாய் காலங்கடத்திவந்த ஏழைத்துரையப்பாவின் குடும்பக்கதை தவிப்பு. இக்கதையில் வயிற்றுப்பசியை மீறிபசி செயற்படுகிறது. தவிக்கிறார்கள். அவளுக்குமாதவிடாய் வரும் வரையுள்ள தவிப்பை இக்கதையில் அகஸ்தியர் நன்கு சித்திரித்துள்ளார். திருடியதற்காக மகனைத் தண்டித்த ஏழைத்தாய், பசிக்காக பக்கத்துவிட்டில் பனம்பழம் திருடச் சொல்கிறாள். அதனால் வரும் சோகநாடகத்தை வட்டி சிறுகதை சித்திரிக்கின்றது. பொதுவாக அகஸ்தியரின் பேனா அடக்கியொடுக்ப்பட்ட மக்களின் விடிவிற்காக எழுதியது.
125

Page 72
ஈழத்துச் சிறுகதை வரலாறு “Flo) gue” 4.4.13 பத்மா சோமகாந்தன்
ஈழத்துப் பெண்சிறுகதையாசிரியர்களில் மூத்தவர்களில் ஒருவர் பத்மாசோமகாந்தன். குமாரிபத்மா பஞ்சநாதேஸ்வரன் என்ற பெயரோடு சிறுகதைத்துறையில் பிரவேசித்து, தமிழ்மொழியுணர்வு, இனவிடுதலை ஆகிய கருத்துக்களை வரித்துக் கொண்டபோது புதுமைப்பிரியை என்ற புனைப்பெயரில் எழுதி, பின்னர் சோமகாந்தனை மணந்ததும் முற்போக்கு அணியில் பத்மா சோமகாந்தனாகியவர். 15.3.1934 இல் பிறந்த பதமர்சோமகாந்தன் தனது பதினாறாவது வயதிலே எழுத ஆரம்பித்தவர். 1950 இல் சுதந்திரனில் இவரது முதற்சிறுகதையான சதங்கை நாதம் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து காதலி, அண்ணாவின் காதலி, இதயச்சிலை, வடிவழகியின் மனோரதம், மொழி உணர்ச்சி, பெண்மை வென்றது முதலான சிறுகதைகளை சுதந்திரனில் எழுதினார். அத்தோடு தினகரன், வீரகேசரி, மல்லிகை, கலைச்செல்வி, சமூகத்தொண்டன், கலைவாணி முதலான பத்திரிகைகளில் கடவுளின் பூக்கள்,பெரு நெருப்பு, பேடு, இரத்தபாசம்,பொய், கரும்பலகைக்காயங்கள், நல்லமுத்து, பெண்மை வென்றது, புத்தன்பரம்பரை, சருகும் தளிரும், உறவும்பிரிவும், சாதி யற்ற வசந்தங்கள், சிறப்புக்கள் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
“பெண்ணின் சூழ்நிலையையும் வாழ்நிலையையும் நன்கு அறிந்து, பெண்ணை மேம்படுத்தி எழுதுவதைத் தனது நெறியாகக் கொண்டவர். ஓர் ஆசிரியையின் குணாம்சம் போல நறுக்குத் தெளித்த எழுத்து, அவற்றின் அடிநாதமாக இழையும் மென்மையும் கம்பீரமும், இத்தகைய எழுத்துக்களே இன்றைய தேவை. பத்மாவின் பாத்திரங்களெல்லாம் அன்றாட வாழ்விலே நாம்கண்டு பழகி பேசுகிற மானிடர்களாக விருப்பது தனிச்சிறப்பு. பத்மாவின் சமூகப்பார்வையும் பெண்ணியக்கருத்துக்களும் இன்றைய சமுதாயத் தேவை* ‘ஈழத்தமிழரிடையே இனவுணர்ச்சிக்கரு பொங்கியெழுந்து கொண்டிருந்த வேளையில் அவ்வுணர்ச்சிக்கு வடிகாலாக விளங்கியது சுதந்திரன் பத்திரிகை. அது நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினைத் தட்டிக் கொண்ட இப்பெண் எழுத்தாளர், இதுவரை நாற்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் இனவுரிமை, பெண்விடுதலை என்பன வற்றிலே பெரிதும் ஈடுபாடுகாட்டி வந்த இவர், சமூகம், மொழி, சமயம், பண்பாடு, முற்போக்குச்சிந்தனைகள், குழந்தை இலக்கியம் என்று பிற்காலத் தில் தனது படைப்புத்தளத்தை மிகவும் விரிவு படுத்திக் கொண்டார். நல்முத்து, இரத்தபாசம், பேடு, கடவுளின் பூக்கள் ஆகிய சிறுகதைகள் இவருக்கு புகழ்சேர்த்த, விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சிறந்த கதைகள்”
126

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழிபான்” தனது மகளை ஏமாற்றிவிட்டு வேறொருத்தியைக் கட்டிக் கொண்டு வந்த மாஸ்டரிடம் சூடாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரச் சென்ற நல்லமுத்து ஆச்சி, அப்பெண்ணை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பிவருகிறார். இந்த உணர்வுநிலையை நல்லமுத்து சிறுகதையில் சிறப்பாகப் பத்மா சோமகாந்தன் வடித்துள்ளார். ‘மலைநாட்டு றெயின் பிரயாணத்தின் பொழுது றெயின் பெட்டியிலே கண்ட அழகுப் பெட்டகமான குழந்தைஜன்றும், அவலட்சணமும் மூளைவளர்ச்சிக் குறைவும் கொண்ட சிறுவன் ஒருவனும், சில நிமிடங்களிலே ஒருவரோடடொருவர் நட்புக் கொள்வதும், அவலட்சணப் பித்துக்குளிச் சிறுவனுக்கு அன்போடு குழந்தை விசுக்கோத்தினைத் தீற்றுவதும் கடவுளின் பூக்கள் என்ற சிறுகதையில் அற்புதமாக வளர்க்கப்பட்டுள்ளன."
4.4.14 சு. இராசநாயகன்
ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்த்த ஒருவர் சு. இராசநாயகன். சம்பந்தனைத் தன் குருவாக வரித்தவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் என்பனவற்றையும் தம் படைப்பிற் கொண்டவர். 1946இல் ‘அந்தக்காலம்' என்ற சிறுகதையுடன் ஈழகேசரி மூலம் படைப்புத் துறைக்குள் வந்தார். அதனைத் தொடர்ந்து முதல் இரவு, இதயத்துடிப்பு, வேதனைச் சுடர் ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியில் எழுதினார். மேலும் மறுமலர்சியில் அவன், உலகக்கண்கள் ஆகிய சிறுகதைகளை யும், கலைச்செல்வியில் பொத்தல், நாகதோஷம் எனும் இரு சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தினகரன், வீரகேசரி, ஈழநாடு, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
சமூக அநீதிகளுக்குக் குரல் தந்த ஒரு முற்போக்காளர் சு. இராஜநாயகன் ஆவார். தெரிந்த சொற்களைப் பயன்படுத்தி நனவோடை உத்தியில் சிறுகதைகளை எழுதியவர். இவரது சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவாயினும் குறிப்பிடத்தக்கவை 'அவன்' என்ற சிறுகதை ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பிலும், அவன், உலகக்கன்கள் என்பன மறுமலாச்சிக் கதைகளிலும் வெளிவந்துள்ளன. இதயத் துடிப்பு வேதனைச்சுடர், நாகதோஷம் என்பன சு. இராஜநாயனின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாம். இராஜநாயகன் சிறுகதையைக் கூறுகின்ற தன்மை சற்றுத் தனித்துவமானது. வாசகனின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் வேறுபட்ட நோக்கில் அவரது சிறுகதைகளமையும். காட்டுக் கிராமம் ஒன்றிற்கு முதன்முதல் ஆசியராகப் பொறுப்பேற்கும் ஒருவன், அக் கிராமத்தின்
27

Page 73
ஈழத்துச் சிறுகதை வர7ாறு "செங்ல்ை ஆழியர்ன்"
வறு5:0யைக் கண்டு கலங்குகிற"ண் உதவக்கூடி வாறு அறு, குப் சம்பளமும் கிடைக்க வில்லை. "என் விவாகத்தின்போது நீ தந்தபரிசு. கீதாஞ்சலியும் பத்துருபாவும் கைப் பெட்டியில் இருக்கினறன
கீதாஞ்சலியைத் தினமும் படிக்கிறேன். அந்தப் பத்து ரூபாவை எடுத்துக் செலவு செய்ய என்னால் முடியவில்லை. உயிரை அடகு வைப்பேன். உன் அன்புப்பரிசைச் செலவு செய்ய என்னால் முடியாது' என நண்பச்ை குத்தன் துயரங்களை எழுதுகிறான். நன்பன் வந்து விடுகிறான் நண்பல்ை அழைத்துச் சென்று கிராமத்தின் வறுமையைக் காட்டுகிறான். நண்பனோ தன்னிடமிருந்த பணத்தை வறியகுடும்பம் ஒன்றிற்கு வழங்கிவிடுகிறர்ன். அறைக்குத் திரும்புகின்றனர். அடுத்தநாள் அவன் நண்பன் ஊருக்குக் திரும்ப அவனிடம் பணமில்லை. நண்பன் பரிசாகக் கொடுத்த பத்துருபா விற்கு டிக்கட்வாங்கி றெயிலேற்றி அனுப்பிவிடுகிறான். உணர்வுபூர்வமான சித்தரிப்பாக இதயத்துடிப்பு அமைந்துள்ளது. கருவை நெகிழ்த்தாமல் கலாபூர்வமாக வடித்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு ஆவணி கலைச்செல்வி இதழில் சு. இராஜநாயகனின் ‘நாகதோஷம் வெளியானது. ‘பிடிக்காத கதையிலே குற்றம் இருந்தால், இருந்து தொலைக்கட்டும். நல்ல கதையில் காணும் குறைகள் மனதை என்னவோ செய்கின்றனவே என்று முகவுரையுடன் இக்கதை பற்றி எழுதினார் வரதர் கதையின் கரு, கருத்து, நடை. தாக்கம் ஆகிய அனைத்தம்சங்களையும் பற்றி விரிவாக ஆராய்ந்து குறைகளையும் நிறைகளையும் சுட்டிக் காட்டி ஒரேவரியில் சொலலுமபடி கேட்டால் ‘நல்ல கதை. எனக்குப்பிடித்திருக்கிறது என்று தான் சொல்வேன் என முடித்திருந்தார். நாகதோஷம் வெளியானபோது அதை வாசிக்கத் தவறியவர்கள், இவ்விமர்சனம் வெளியானபின் அதைக் தேடிப் படித்தனர்."
4.4.15 அன்புமணி
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அன்புமணியின் இடம் மறுப்பதற்கில்லை. அவரது இயற்பெயர். இரா. நாகலிங்கம், மட்டக்களப்புக்குப் பெருமை சேர்க்கும் எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை. நாவல், நாடகம், விமர்சனமெனப் பலதுறைகளில் கால்பதித்தவர். "மலர் (1970 - 71) என்ற தரமான இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியா, மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தை (1961 - 1971) உருவாக்கி நடாத்துவதில் முன்னின்றுழைத்தவர். 1953இல் இவரது முதற சிறுகதையான “கிராமபோன் காதல் கல்கியில் வெளிவந்தது. அதனைத
28

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
தொடர்ந்து கங்கை, கண்ணன், புதுமை, வீரகேசரி, சிந்தாமணி, தினகரன்
முதலான பத்திரிகைகளில் தரமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துகளில் பெருவிருப்புடையவர். .
சுதந்திரனில் மதிப்பு, இதயக்குரல் ஆகிய சிறுகதைகளும், வீரகேசரியில் இல்லத்தரசி, போனால் வராது, காதலுக்குக்கன், மூன்றுபெண்கள், பித்தம்தெளி, பாடும்மீன் ஆகிய சிறுகதைகளும் சிந்தாமணியில் தாய்மை, சிலை ஒன்று, பூர்மணிமா ஆகிய சிறுகதைகளும் தினகரனில் பொன்னித்தெய்வம், பெரியமனிதர், காதற்பெண் ஆகிய சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. அன்புமணியின் சிறுகதைகளில் சமூகவிமர்சனம் இருக்கும். அதனைக்கூறுவதற்கு அவர் தூய்மையான வசன நடையையே கையாளுகின்றார். பேச்சுவழக்கு உரையாடல் அவரது சிறுகதைகளில் முழு ஆதிக்கம் கொள்ளவில்லை. எனினும் சமூகத்தை உணர்ந்தவாறு கூறும் போது, அவரது சிறுகதைகளில் யதார்த்தப்பண்பு தொக்கிநிற்கின்றது. கல்கியின் எளிமையான இனிமையான வசனநடையை இவரது சிறுகதைகளினும் காணலாம். கல்கியைத் தனது அபிமான எழுத்தாளனாக இவர் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது" எழுத்தாளர் நவம் இவரது படைப்பாற்றலுக்கு உந்து சக்தியாக உதவியுள்ளார்.
அன்புமணியின் சிறுகதையில் பகைப்புல வர்ணனைகள் மிகவும் தத்ரூபமாக விருக்கும். கண்முன் கதைக்களத்தைப்படம்பிடித்துக் காட்டும். இனியகுடும்பத்தாம்பதியம் எவ்வாறமைய வேண்டுமென்பதை இவரது இல் லத் தரசி படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு பெண்ணுக்குத்தாய்மை இனிமையாகவிருக்க, இன்னொரு பெண்ணுக்குத் தாய்மை பெரும் துன்பமாகும் விடயத்தைச் சுவையாக விபரிக்கும் கதை தாய்மை, சமூகத்திற்கான ஓர் எச்சரிக்கை தாய்மையிலுள்ளது. ‘சிலையொன்றுவடிப்பதென்றால்..' என்ற சிறுகதையில் அன்புமணியின் இலக்கியம்பற்றிய நோக்குப் புலனாகின்றது. “உயர்ந்த உள்ளத்திலிருந்து தான் தரம் உயர்ந்த எழுத்து உருவாகமுடியும். அதற்கு ஆழ்ந்த சிந்தனை, முதிர்ந்த அனுபவம் இரண்டும் தேவை. வாசகர் எதை விரும்பவேண்டுமோ, அதையே இலக்கியகர்த்தா கொடுக்க வேண்டும். என அதில் வரும் பாத்திரம் பேசுகிறது. அன்புமணியின் சிறுகதைகளில் ‘பூர்ணிமாநெசவுக்குப் போகிறாள் நல்லதொரு சமூகப்பிரக்ஞையான கதை.
129 (9)

Page 74
ஈழத்துச் δης)), οιτητιII “செங்கை ஆழியான்”
4.4.16 நா. சோமகாந்தன் (ஈழத்துச்சோமு)
1950 - 1960 காலகட்டத்து ஈழத்துச் சிறுகதைப்படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் ஈழத்துச்சோமு என்ற நா. சோமகாந்தன், கலைமதி, கலைப்பித்தன். கருணையூர்ச் சோமு என்ற புனைப்பெயர்களில் இவரது ஆரம்பச சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 14.01.1934இல் பிறந்த இவர் ஒயவுபெற்ற நிர்வாக அதிகாரி, 'இளமையிலிருந்தே புரட்சிகரமான கருத்துக்களால் கவரப்பட்ட இவர், கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற கருத்துக் கொண்டவர். தேசிய மண் வாசனை கொண்ட ஈழத்து இலக்கியத்துக்கு வளமூட்டியதில் இவருக்கும் பங்குண்டு. எமது இலக்கிய கலா வளர்ச்சிக்காக நடாத்தப்பட்ட இயக்கங்கள், மாநாடுகளின் இயக்கசக்தியாக விளங்கியுள்ளார்."
1957களில் “கொலைக்களம்' என்ற சிறுகதையின் மூலம் சுதந்திரனூடாகச் சிறுகதைத் துறையில் பிரவேசிக்கும் ஈழத்துச்சோமு அதனைத் தொடர்ந்து நாகவிகாரை, நிலவோ நெருப்போ?, காசுக்காக அல்ல, வாத்தியார் பேசவில்லை, அதுவேறு உலகம், மனப்பாம்பு, தெளிவு, குளத்தங்கரை அரசமரம், பவளக்கொடி. ஆகுதி, விடியல் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். சுதந்திரன், தினகரன், அமுதம், மல்லிகை, கலைச்செல்வி முதலான பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. சோமகாந்தனின் சிறுகதைகள் பதினைந்து ‘ஆகுதி என்ற பெயரில் தொகுக்கப்பட்டு, வரதர் வெளியீடாக முதலில் வெளிவந்தது. அதனைப் பின்னர் நிலவோ நெருப்போ என்ற தலைப்பில் சென்னையில் இளவழகன் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
‘சோமகாந்தன் சமூகஉணர்வோடு. மக்களின் பழக்கவழக்கங் ’களையும் வாழ்க்கைத் துடிப்புகளையும் நல்ல சொற்சித்திரங்களாக்கி யிருக்கிறார். அவருடைய தனித்துவ நோக்கும், கற்பனை வீச்சும், அழகான உரைநடையும் அவரது சிறுகலதகளுக்கு வலிவும் வனப்பும் சேர்க்கின்றன* சோமகாந்தனின் சிறுகதைகள் நிலவோ நெருப்போ?, நாகவிகாரை ஆகிய இரண்டு கதைகளும் ஈழத்தின் தரமான சிறுகதை களாகக் கொள்ளத்தக்கன.
நிலவோ நெருப்போ’ யாழ்ப்பாண மண்ணையும் மக்களையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கும் ஒரு சிறுகதை, புகையிலைக் கன்றுகளுக்கு 'அட்ட தாழ்க்கப் பாவட்டங்குழையும் குயிலங் குழையும் குழைச்சந்தைக்கு இளம் பெண்களால் காவிவரப்படுகின்றன. தரகர் முருகேசம்பிள்ளை கமக்காரர்களுக்குக் குழைக் கட்டுகளைத்
130

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
தீாத்துவைப்பதோடு, அவற்றைக் காவிவந்த பெண் களிலும் கண்வைக்கிறார். பொன்னி அவர் விருப்புக்கு மறுத்ததால், அவள் குழை விலை போகாது திருப்பியனுப்புகிறார். எல்லாப் பெண்களும் ஒன்றாக இணைந்து குழைவிற்பதற்கு மறுக்கிறார்கள். தரகரின் மறுப்புக்கு எதிராக "தரகர் கிடக்கிறார். குழைக்காரிகளைக் கூப்பிடுங்களன்' என்கின்றனர் கமக்காரர். இச்சிறுகதையில் இரண்டு சிறப்புகளுள்ளன. ஒன்று இதில் வரும் பேச்சு வழக்கு மரிக யதார்த்தமாக வடமராட்சி மண்வாசனையோடுள்ளது. இரண்டு இச்சிறுகதையிலுள்ள கலையம்சம், உவமை உருவகங்கள், வசனநடை என்பன கலாபூர்வமாகவுள்ளன.
‘நாகவிகாரை இனவொடுக்கலோடு சம்பந்தப்பட்ட ஒரு சிறுகதை, 1958 மே இனக்கலவரத்தின்பின்னணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இனக்கலவரத்தோடு ஊருக்குச் சென்ற பண்டா, யாழ்பாணத்திற்குத் திரும்பி வருகிறான். தென்னிலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிங்களக் காடையர் புரிந்த அட்டுழியங்கள் நினைவுக்கு வருகின்றன. ‘நாகவிகரையை இடித்துவிட்டார்களாம்’ என்ற வதந்தி தெற்கில் பரவுகிறது. இனக்கலவரம் முடியத்திரும்பி வந்த பண்டா, நாகவிகரை எதுவித சேதமுமின்றி அப்படியே இருப்பதைக் காண்கிறான். தனது யாழ்ப்பாணப் பேக்கரியை மீண்டும் ஆரம்பிக்கின்றான். ஆனால், களுத்துறையில் பூமணி ஸ்டோர்ஸ், பியசிரி ஸ்டோர்ஸ் ஆகிறது. இனங்களுக்கிடையிலான முரண்நிலையை நன்கு இச்சிறுகதையில் சோமகாந்தன் சித்திரித்துள்ளார். ‘அரசியல் சட்டம் தான் தமிழர்களுக்கு விரோதி. சிங்களவர்கள் அவர்களது சகோதரர்கள். வகுப்புவாதிகள் இந்நாட்டின் நிம்மதியைக் குலைத்து விட்டார்கள் போன்ற சமூகச்செய்திகளை இச்சிறுகதையில் சோமகாந்தன் ஏற்றவிடங்களில் பரவவிட்டிருக்கிறார்.
4.4.17 சிற்பி
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தில் சிற்பி சரவணபவனின் பங்கினைக் குறைவாக மதிப்பிடுவதற்கில்லை. சிறுகதை வரலாற்றில் அவரது கலைச்செல்விச் சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பும், ஈழத்து எழுத்தாளர் பன்னிருவரின் கதைகளைத் தொகுத்து அவரால் முதன்முதல் வெளியிடப்பட்ட ஈழத்துச்சிறுகதைகள் நூலாற்றிய பங்களிப்பும் பாரியதாகும். சிற்பி சரவணபவன் சிறுகதை ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கவிஞர், நாவலாசிரியர். உனக்காகக் கண்ணே, சிந்தனைக் கண்ணிர் ஆகியவை அன்னாரது நாவல்கள்.
131

Page 75
Mígð ályksos F'J&Tp “செங்கை ஆழியன்’ 1933 இல் பிறந்த சிற்பிக்குப் பாடசாலை நாட்களிலேயே நிறையவாசிக்கின்ற பழக்கம் எற்பட்டிருந்தது. கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் சஞ்சிகைகள் அவரது வாசிப்புக்கு ஆரம்பத்தில் இலக்காகின. கல்கி, தேவன், லகத்மி, அகிலன், த.நா. குமாரசாமி, மு. வரதராசன் ஆகியோர் அவரைத்தம் எழுத்துக்களால் கவர்ந்தனர். காந்தியம், பெரியாரியம் ஆகிய இரு கருத்துக்களும் அவரை ஆக்கிரமித்தன. “அகிலனின் கதைகள் சற்று அதிகமாகவே என் உள்ளத்தைக் கவர்கின்றன. அன்பும், பண்பும், பரிவும், பரோபகாரமும், தியாகமும், தூய்மையும் நிறைந்த இன்பமயமான ஓர் இலட்சிய உலகை அகிலனின் கதைகளில் நான் காண்கிறேன்’ என்கிறார் சிற்பி° இன்பமயமான இலட்சிய உலகம் சிற்பியின் கனவாகிறது. “இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஓர் இலட்சியத்தை முன்வைத்தால், இன்பமயமான ஓர் உலகைக் கற்பனையிலாவது காணச் செய்தால் ஒரு சிலராவது அந்த இலட்சிய உலகை நோக்கி ஏறுநடைபோடமாட்டாாகளா?* எனச் சிற்பி எண்ணினார். சிற்பியின் கதைகளில் காதலுறவுகளும் உணர்வுகளும் தூக்கலாகவே காணப்படும். அவரது முதற்சிறுகதையான ‘மலர்ந்த காதல் 1952இல் சுதந்திரனில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து மரணவாயில், ஏழையின் முடிவு, மனமாற்றம், அவசரமுடிவு. அமுதைப் பொழியும் நிலவு, கோயில் பூனை, பிறந்த மண், குருட்டுப்பணம், மகாவலியின் மடியில், பட்டுச்சட்டை , வெறிமுறிந்தது, சோறும் மானமும், நிலவும் நினைவும் முதலான சிறுகதைகளைச் சுதந்திரனிலும், பழக்கமில்லை, மக்கள் தொண்டு, யார் செய்த தவறு ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும் எழுதினார். ஏன்படைத்தாய், நிறைவு. பிஞ்சின் ஏக்கம், நீலப்பட்டு, மறுமணம், அம்மன் அருள், நிறைவு. காதல்பலி, உயிரோவியம் முதலான சிறுகதைகள் பல்வேறுபத்திரிகை களில் படைத்துள்ளார். பிஞ்சின் ஏக்கம் கலைமகளிலும், அம்மன் அருள் மஞ்சரியிலும் வெளியாகின. மறுமணம் 'உதயம்' சஞ்சிகை (1913) நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதையாகும். காதல்பலி கல்கிவார இதழிலும் உயிரோவியம் வீரகேசரியிலும் வெளியாகின.
‘இனிய எளிய நடையில் கதைசொல்லும் கைவண்ணம் இவரிடம் இருக்கிறது. கற்பனை மனதையும் பாத்திர உருவகத்தையும் நிகழ்ச்சிக்கோவையையும் இவர் கதைகளிற் சுவைத்து இன்புற முடிகிறது”. சிற்பியின் சிறுகதைகளில் கோயில் பூனை, பிறந்தமண் ஆகிய சிறுகதைகள் சிறப்பானவை. தேர்த்திருவிழாவுக்குப் போவதற்காகக் கோயில் முதலாளி வைத்திலிங்கம் பிள்ளையும், மயிலனும் பஸ்ஸிற்குக் காத்திருக்கிறார்கள். கடும் வெயில், நாவறள,
132

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியாள்"
* மயிலனிடமிருந்த தண்ணிர்ப் போத்தலால் தாக்கம் தீர்த்துக் கொள்கிறார் வைத்தியலிங்கம்பிள்ளை. பஸ்ஸில் வாய்க்குப் போடப்புகையிலைத் துண்டு ஒன்றையும் மயிலனிடம் வாங்கிக் கொள்கிறார். தேர்வடக் கயிற்றை மயிலன் பிடித்திருப்பதைக் கண்ட சிலர், வைத்திலிங் கத்தின் காதில் ஏதோ கூற, ‘அவனை ஆர் தேர் வடத்தைத் தொடச் சொன்னது? துரத்துங்கள்’ என்று சத்தமிடுகிறார். தலித்தான மயிலன் நையப்புடைக்கப்படுகிறான். - இதுதான் கோயில்பூனை என்ற சிறுகதை, சிற்பியின் ஏனைய சிறுகதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வை இச் சிறுகதையிலுள்ளது. சமூகத்தின் சாதிக் கொடுமையைக் கலைநயத்துடன் இச்சிறுகதையில் சிததிரித்துள்ளார். அதேபோல பிறந்த மண்ணில், இனப்பற்றையும் பிறந்த மண்பற்றையும் துன்பியல் பாணியில் சிற்பி சித்திரித்துள்ளார். நிலவும் நினைப்பும் சிற்பியின் சிறுகதைத்தொகுதி.
4.4.18 அ. முத்துலிங்கம்
அ. முத்துலிங்கத்தின் சர்வதேசச் சிறுகதைவியாபக்கத்தினைப் புரிந்து கொள்வதற்கு, 1950 - 1963 காலகட்டத்து ஆரம்பச் சிறுகதை நிலையைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இவர் ஒரு விஞ்ஞானப்பட்டதாரி. சிறுகதையுலகிற்குக் கைலாசபதியால் கண்டெடுக்கப்பட்டவர். தினகரன் பண்ணை எழுத்தாளர். இவர் சரஸ்வதி, வீரகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் தன் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது கதைகளில் “கோடைமழை' என்பது சரஸ்வதியிலும், ஒரு சிறுவனின் கதை வீரகேசரியிலும், அனுலா கல்கியிலும் வெளிவந்தள்ளன. அழைப்பு, ஊர்வலம், சங்கல்ப நிவராகரணம், உன்மத்தராயிருந்தோம், இருப்பிடம், கடைசிக் கைங்கரியம், பக்குவம், அக்கா என்பன தினகரனிலும் பிரசுரமாயின.
அ. முத்திலிங்கத்தின் சிறுகதைகளில், ‘சர்வசாதரணமான மனித உணாச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் தோன்றி இயங்குகின்றன. இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவமும் போலியுணர்வுகளும் பெற்றுக்கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு எழுதிவருகின்றார்’** முத்துலிங்கம் தனது சிறுகதைகளில் அவை நிகழ்கின்ற களத்தை தத்ரூபமாகக் காட்டிவிடும் அவாவினராகவிருப்பதால், சிறுகதையின் பாத்திரவுணர்வு நிலைகளைச் சித்தரிப்பதில் தவறிவிடுகின்றார், அவை சம்பவங்களினடியாகவே வெளிவருகின்றன. உதாரணமாகக் கோடைமழையில் கொக்குவில் கிராமத்தின் நான்கு பக்கப்பகைப்புலச்
133

Page 76
ஈழத்துச் சிறுகதை வரலாறு - “செங்கை ஆழியாண்”
சித்திரிப்புக்கும், வெண்கல நகைக்கு அட்ைவு கொடுத்து ஏமாந்து போகும் வழக்குக்கும் சம்பந்தமில்லை. இந்த நடைமுறை ஏமாற்றம் கொக்குவிலின் தனித்தன்மையன்று. ஆனால், முத்துலிங்கத்தின் நுட்பமான சமூக அவதானிப்பினை அவரது சிறுகதைகள் அனைத்திலும் காணலாம். அத்துடன் யாழ்ப்பாணத்தின் மானிட உறவுக்கான பண்பாட்டுக் கோலங்களையும் காணலாம்..முத்தாச்சியின் செத்தவீட்டுக்கு வந்த இடத்திலை என்னோடை கட்டிப்பிடிச்சு அழக்கூடவில்லை, இறப்பிலே சொருகி யிருந்த தடுக்கை இழுத்துத்தட்டி குந்திலே போட்டாள். நாய் ஊழையிட்டால் யமன வருவானாமே? எனப்பல உதாரணங்களைக்கூறலாம்.
முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை ஊர்வலம், 1958இல் தினகரனில் வந்த தெனக்கூறப்படுகின்ற போதிலும், அவரின் முதல்சிறுகதை புதுமணமும் புர்ைவாழ்வும் சுதந்திரனில் 1957இல் வெளிவந்துள்ளது. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் 1958 - 1961 உக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவற்றில் பதினொன்று ‘அக்கா என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைகளில் பக்குவம், அக்கா என்பன தரமான சிறுகதைகளாகப் படுகின்றன.
‘தன்னுடைய தங்கை பெரியபிள்ளையாகியும் தான் "சும்மா’ இருக்கும் நிலையைத் திடீரென உணர்ந்து கொள்ளும் ஒரு சிறு பெண்ணின் மனக்கோலத்தை ‘பக்குவம்' எமக்குக் காட்டுகின்றது. காலந்தாழ்த்தி ஒரு பெண் பருவமடைவது ஒரு பிரச்சினை என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனைப் பிரச்சினை என ஆர்ப்பரிக்காமற் பாத்திரத்தின் உணர்ச்சிவெளிப்பாடு வாயிலாக நுணுக்கமாக உணர்த்திவிடுகின்றார் ஆசிரியர்.* முத்துலிங்கம், தன் கதைகள் சமுதாயத்தைச் சீர்திருத்தவோ, பிரச்சனைகளைப் புட்டுக்காட்டவோ எழுந்தவனவல்ல என்கிறார். தான் கண்ட, கேட்ட அனுபவித்த சம்பவங்களை, உணர்ச்சிகளை தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வ தாகக் கூறுகிறார். தன்னைச் சுற்றித் தான்காணும் மனிதப்பண்பற்ற, மனிதநிறைவற்ற நிகழ்ச்சிகளைச் சொல்லாவிட்டால், தன்னில் தனக்கே திருப்தி ஏற்படுவதில்லை என்கிறார்." இக்கடைசிக் கூற்று எவ்வளவு தூரம் அவர் கதைகளில் சித்திரிருக்கிறதென்பது சந்தேகமே.
4.4.19 அருள்செல்வநாயகம்
ஈழத்தச் சிறுகதை இலக்கியத்திற்கு வரலாற்றுச் சிறுகதைகளை அதிக அளவில் வழங்கியவர் அருள் செல்வநாயகம். தமிழக
வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகைகளான கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி
134

ஈழத்துச் சிறுகதை ljeЈ “செங்கை ஆழியாண்” முதலான சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. *வரலாற்று ஏடுகளிலே புகுந்து நான்கண்ட உண்மைச்சம்பங்களுக்கு மனித இனப்பண்பையொட்டி மனிதத்தன்மையைக் கொண்டு மெருகு கொடுக்கமுனைந்தேன். அதன்பயனே சிறுகதைகள்' என்கிறார். இதுவரை தமிழக ஏடுகளில் 51 சிறுகதைகளையும், ஈழத்துச்சஞ்சிகைளில் 24 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். நாடகங்கள், நாவல்கள் (வாழமுடியாதவன், மாலதியின் மனோரதம், கட்டுரைகள் எனவும் எழுதிக்குவித்துள்ளார்.
அருள் செல்வநாயகத்தின் முதற் சிறுகதையான விதியின் கொடுமை, மின்னொளி என்ற சஞ்சிகைளில் 1946 இல் வெளிவந்தது. அதன்பிறகு தமிழகச் சஞ்சிகைகளிலும் ஈழத்துச் சஞ்சிகைகளிலும் கலையின் பரிசு, ஆடகசெளந்தரி, தலையைத்தந்த வள்ளல், தலதாமாளிகை, பலி, கடல்தந்த விநாயகர், ரூபவதி, வீரத்தின் பரிசு, மேகலா, தவறாத சோதிடம், மாபெரும் தியாகம், தாம்பூலராணி முதலான சிறுகதைகள் பிரசுரமாயின. பெரும்பாலான சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதைகளாம். பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பாக ‘தாம் பூலராணி" வெளிவந்துள்ளது. ‘பெரும்பாலானவை இலங்கைச் சரித்திர சம்பவங்களை ஒட்டியவையாக இருக்களின் றன. மேற் படி கதைகளிலே இதிகாசக்கற்பனைகள் சரித்திர சம்பவங்கள் மறைந்து நிற்கின்றன.”
4.4.20 மு. தளையசிங்கம்
ஈழத்துச் சிறுகதைகளை மரபுமீறிய உத்தி, உருவம், கரு என்பன பயன்படுத்தி எழுதியவர் என்றவகையில் மு. தளையசிங்கம் கணிப்பிற்குள்ளாகிறார். பட்டதாரியான இவர், 1957இல் ‘தியாகம்' எனும் சிறுகதையைச் சுதந்திரனில் எழுதியதன் மூலம் சிறுகதையுலகிற்குள் பிரவேசித்தார். அதனையடுத்துச் சுதந்திரனில் ஐந்துருபா நோட்டு, கொலை படுகொலை, பெப்ரவரி4, அவள் என் தங்கை, காதல், கடலோரம் வாராய், 6ஆம் நம்பர் அறை முதலான சிறகதைகளைத் தொடர்ந்து படைத்துள்ளார். இச்சிறுகதைகளைத் தளையசிங்கத்தின் முதற்கட்டச் சிறுகதைகள் எனலாம். முதிரா இளமையின் மன அவலங்களும், சமூக வாழ்வின் பொதுப்பண்புகளும் பாலியல் அவலங்களும் இச்சிறுகதைகளில் தொக்கி நிற்கின்றன. ஆரம்பச்சிறுகதைகளில் ‘பெப்ரவரி 4 சற்று வித்தியாசமான சிறுகதை, இயல்பாகவே தளையசிங்கத்தின் ஆரம்பக்கதைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடி நிற்கும். “பெப்ரவரி 4 தமிழ்த்தேசியப் பண்பு
135

Page 77
Hypjhjhj ifihloh G ja “செங்கை ஆழியாண்”
பொருந்திய சிறுகதையாகும். பெப்ரவரி 4 ஐதுக்க தினமாக அனுஷ்டிக்க நண்பர்கள் முடிவு செய்கிறார்கள், கதையில் வரும் அவன், ‘அவர்களின் கோட்பாடுகளும் கொள்கைகளும் தனக்கு ஒத்துவராது என்கிறான். ‘உலகத்து மண்ணில் வாழாமல் அந்தரத்தில் வெறும் எண்ணங்களில் வெறுமையில் வாழும் அசடு என்கிறார்கள். தமிழ்த் தேசமெங்கும் துக்கதினம் கொண்டாட அவனும் சில நண்பர்களும் பேராதனைப் பூங்காவில் சந்தித்த சிங்களப் பெண்களுடன் பேசிமகிழ்கிறார்கள் அவனுக்கும் ஒருத்திக்கும் மிக்க நெருக்கமுண்டாகிறது. அவனது முகவரியை அவள் வினவுகிறாள். கனகரத்தினமா? அப்போ நீங்கள் ஒரு தமிழனா? என அவள் கேட்கிறாள். “அவனது நண்பர்களோ அல்லது கதவடைப்போ அல்லது கறுத்தக்கொடியோ எதுவுமே சொல்ல முடியாத கருத்தை அந்த வார்த்தைகள் கூறிவிடுகின்றன. அதனால் கொள்கை ஒன்றைக் கொண்ட புதியமனிதனாக மாறிவிடுகிறான்” “இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்துவிட்டது. இனி அதற்குக் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் கொடுரமான செயல்களாய்த் தெரியாது’ என்கிறார் கதாசிரியர். 1959களில் இக்கருத்து ஒரு தூரநோக்காக அமைந்துவிடுகிறது. பெப்ரவரி 4 ஐ மிக அவதானமாக ஆசிரியர் விபரித்துள்ளார். தளையசிங்கத்தின் ஆரம்பச் சிறுகதைகளில் இவ்வாறான சித்திரிப்புகள் விரவிக் கிடக்கின்றன.
மு. தளயசிங்கத்தின் இரண்டாம்கட்டச் சிறுகதைகள் ‘புதுயுகம் பிறக்கிறது என்ற சிறுகதைத் தொகுதிக்காக எழுதப்பட்டன, வீழ்ச்சி, புதியுகம் பிறக்கிறது, தேடல், கோட்டை, இரத்தம், கோயில்கள், பிறத்தியாள், தொழுகை, சாமியாரும் பணக்காரரும், சபதம், வெறி ஆகிய பதினொரு கதைகளாம். இக்கதைகள் 1961 - 1964 ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டுள்ளன. இடைப்பட்ட தசாண்டுகளின் (1954 - 1964) கால கட்டத்தில் ஈழத்தின் சிறுகதைகள் உருவத்தைப் பொறுத்தும் உள்ளடக்கத்தைப் பொறுத்தும் அடைந்துள்ள மாற்றங்களை ஒருவாறு உயந்துணர”* புதுயுகம் பிறக்கிறது தொகுதியிலுள்ள சிறுகதைகள் உதவுகின்றன.
“இத்தொகுதியில் இடம்பெறும் சபதம்’ என்ற கதை சங்கப்பாடல்களின் அமைப்பை இக்காலச் சிறுகதைகளின் உருவ அமைப்புக்கு ஒரு பின்னணியாக எடுத்து இரண்டையும் இணைக்க முயலும் ஒரு முயற்சி. வீழ்ச்சி’யும் அப்படியே, ‘தேடல்' என்ற கதை யதார்த்தத்துக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் பிடிபடாமல் நிற்கும் ஒரு
136

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” . விதக் “கா."ப்கா ரகக் கதை, “வெளியில் எமிங்வே சில கதைகளில் உருவாக்கிய உத்தியைப் பின்பற்றி இக்காலத்துக்குரிய ஓர் anti short story யை நம் வேதாந்தப் பின்னணிக்கேற்ற வகையில் வெற்றிகரமாக எழுதியுள்ளேன். கதைத்தொகுதி முழுவதும் ஓர் anti மரபு, anti உருவம், anti அமைப் புத் தொனி அடிநாதமாக நிற்கிறது என்றால்
ஆச்சரியப்படத்தேவையில்லை" என மு. தளையசிங்கம் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்க கூற்றுகளாம்.
தளையசிங்கத்தின் சிறுகதைகளில் மிகத்தூக்கலாகத் தொனிக்கும கருப்பொருள் ஆண் - பெண் பாலியல் உறவாகும். 1961 - 1964களில் இவ்வகையான சிறுகதைகளை இரசித்து எழுதியவர்களான எஸ். பொன்னுத்துரை, கே.வி. நடராஜன் வரிசையில் மு. தளையசிங்கமும் வைத்துநோக்கத்தக்கவர். புதுயுகம் பிறக்கிறது, கோட்டை, கோயில்கள், பிறத்தியாள், தொழுகை, சபதம் ஆகிய சிறுகதைகள் இவ்வகையானவை. ஆண் - பெண் உறவைத் தெய்வீகமாகப் பார்க்கும் பார்வையும் பெண் களைக் கோயில்களாக நோக்குதலும் தளையசிங்கத்தின் கதைகளில் காணப்படுகின்ற பண்புகளாகும். ஆனால், அதேவேளை சமூகமேற்காத பாலியலுறவுகளை அங்கீகரிக்கின்றபாங்கும். இலக்கிய நாகரிகமற்ற விபரணைகளும் அவரது கதைகளில் காணப்படுகின்றன. இவற்றிற்கு நிறைய உதாரணங்கள் எடுத்துக் காட்டமுடியும். அவற்றைத் தவிர்த்துவிடுவோம் தொழுகை என்ற சிறுகதை ஏற்கனவே பலவாதப்பிரதி வாதங்களைச் சந்தித்தது. திருவெம்பாவையையும் செல்லம்மா - முத்து பாலியல் தகாஉறவையும் இணைத்து, தானும் இரசித்து, இச்சிறு கதையைத் தளையசிங்கம் எழுதியுள்ளார். இது ஒரு பைத்தியக்கார நோக்காகப்படுகின்றது. மேலும் தமிழில் சொற்பஞ்சம் ஏற்படும் போது, அவ்விடங்களில் ஆங்கிலத்தை (ஒலிபெயர்ப் பாகவல் ல) பயன்படுத்தியுள்ளமை மனதை நெருடுகிறது. எனினும் இலக்கியநயமிக்க உரை நடை தளையசிங்கத்தின் படைப்புக்களில் காணப்படும் சிறப்பாகும்.
தளையசிங்கத்தின் சிறுகதைகளில் வீழ்ச்சி, தேடல், ஆகிய இரு சிறுகதைகளும் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு வலுத்தருவன என்பது குறிப்பிடத்தக்கது. தான் கற்று வெளியேறிய பல்கலைக்கழகத் திற்கு வருகைதரும் ஒருவன், தன்னை அங்கு அடையாளம் காணாமல் ஏமாற்றுத்துடன திரும்பும் உணர்வைத் தேடலில் அற்புதமாகத் தளையசிங்கம் சித்திரித்துள்ளார். தளையசிங்கம். புதுயுகம் பிறக்கிறது. (சிறுகதைத் தொகுதி), ஒரு தனிவீடு(நாவல்) ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி (விமர்சனம்), போர்ப்பறை (புதுமதத்த்துவம்) முதலான நூல்களை எழுதித்தந்தள்ளார்.
137

Page 78
ஈழத்துச் சிறுகதை எரலாறு “செங்கை ஆழியாண்” 4.4.21 பவானி
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதல் பெண்ணியல் வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை ஆவார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகச் சிறப்புப்பட்டதாரி பவானி. தனது சிறுகதைகள் மூலம் முன்வைத்த பெண்ணியம் சார்ந்த புரட்சிக்கருத்துக்கள் அவரை ஈழத்துச்சிறுகதை ஆசிரியர் வரிசையில் இடம் பெறவைத்துள்ளன. 1960களில் மிகத் துணிச்சலாக பெண்விடுதலை சார்ந்த கருத்துக்களை இவர் முன்வைத்தார். மனதில் எழும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் பவானி, பல்வேறு வகையான மனிதர்களின் உணர்வுகளைத் தம் சிறுகதைகளில் மரபு மீறிய கருத்துகளோடு எழுதியுள்ளார்.
வேண்டுமென்றே ஏதோவொரு நோக் கோடு நான் எழுதுவதில்லையெனினும் எனது எழுத்துக்களை சுயநிர்ணயம் (தன்னையறிதல்) என்று கூறலாம்" என்கிறார் பவானி, மன்னிப்பாரா? காப்பு, விடிவைநோக்கி, சரியா தப்பா? அன்பின் விலை, பிரார்த்தனை, ஜீவநதி, உன்னை உணர, வாழ்வது எதற்காக?. புதிர், நிறைவு, சந்திப்பு, மனிதன் முதலான சிறுகதைகளைப் பவானி எழுதியுள்ளார். கடவுளரும் மனிதரும் அவரது சிறுகதைகளடங்கிய தொகுதி.
“மன்னிப்பாரா? என்ற கலைச்செல்விச் சிறுகதைமூலம் எல்லாரது கவனத்தையும் ஈர்த்த கதாசிரியை பவானி. பவானியின் மன்னிப்பாரா? பெண்ணிலைவாதம் பற்றிய பல கருத்துக்கள் பரவியுள்ள இருபதாம் நூற்றாண்டின் இக்கடைக் கூற்றில், பலராலும் வரவேற்கப்படாவிட்டாலும், ஆக்ரோஷமான கண்டனத்துக்கு உள்ள அக்காலத்திற் பெரும் புயலையே கிளப்பிவிட்டது. கதாநாயகியின் முடிவைப் பலர் வரவேற்கமாடார்கள் எனத் தெரிந்திருந்தும், கதை நயமாகச் சொல்லப்பட்ட காரணத்தினால், அது கலைச் செல்வியில் வெளியிடப்பட்டது. கதாநாயகியின் முடிவை எதிர்த்துக் கதையை வேறுவிதமாக மாற்றிக் கவிஞர் எஸ். எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு “செந்தாரகை எழுதிய கதையும் “மன்னிப்பாரா? என்ற அதே தலைப்பிலேயே அடுத்த இதழ்களில் G66f LJJ L6GT.".
பவானியின் சிறுகதைகள் பலவற்றிலும் குடும்ப உறவுநிலை காதல் உறவுகள் என்பன பாரம்பரியச் சிந்தனைகளுக்கு முற்றிலும் புதிதாகச்
138

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
சித்திரிக்கப்படுகின்ற தன்மையைக் காணலாம். கற்பு, ஒழுக்கம் போன்ற நெறிகள் தன்னையறிதலில் மீறப்படத்தக்கவை என்பதைப் பவானி தன் சிறுகதைகளில் காட்டுகிறார். இவரது சிறுகதைகளின் கரு (உள்ளடக்கம்) பாரம்பரிய கலாசாரப்பண்புகளைப் பேணும் சமூகத்திற்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதும், பெண்கள் பக்க நியாயமாகிவிடுமா என்பதும் கேள்விக்குரியவை. எனினும், பவானியின் சிறுகதைகளில் கூறப்படுகின்ற முறையும், சிறுகதை உருவ அமைதியும் முழுமையாகச் சில சிறுகதைகளில் தரிசிக்க முடிகின்றது. கலாபூர்வமான படைப்பனுபவம் பவானியின் அச்சிறுகதைகளிலுள்ளன. அவ்வகையில் மன்னிப்பாரா? விடிவைநோக்கி, காப்பு என்பன பவானியின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
“இச்சிறுகதைகளில் பெண்ணின் மனவியல்பு, நுண்மையான சிந்தைனைகள், சிக்கலான சூழ்நிலை, அவலங்கள் என்பனவற்றைத் துல்லியமாகச் சித்திரிக்கின்றார். பெண்ணின் மீதான ஒடுக்கு முறைகளை யும் பெயரளவிலான பண்பாட்டு நெருக்குதல்களையும் துணிச்சலோடு தன் சில படைப்புகளின் மூலம், சீற்றத்தோடு சாடியவர் பவானி'? “காப்பு என்ற சிறுகதையில் அழகு குறைந்த ஒரு பெண்ணின் மனநிலை நன்கு சித்திரிக்கப்படுகின்றது. ‘என்னையும் ஒருவன் ஆசையின் வேகத்தோடு பார்க்கவேண்டும். அடையத்துடிக்கவேண்டும்' என அவள் எண்ணுகிறாள். இத்தனைக்கும் அவள் மணமானவள். அவளது அழகுக்குறைவுதான் அவளுக்கு ஒழுக்கக் காப்பாக அமைகின்றதென இச்சிறுகதையினூடே பாவணி கூறுகிறார். ‘மன்னிப்பாரா' சிறுகதையில் வரும் மூர்த்தி . சுசீலா காதலை சாதி பிரித்துவிடுகின்றது. பெற்றோரின் கண்ணீர் காரணமாகின்றது. தனது கலியாணத்திற்கு முதல்நாள் அவள் அவனைத் தேடி வருகிறாள். ‘காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில், இந்த என்முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல. உங்கள் உரிமையை இப்பொழுதே ஏற்றுக்கொள்ளுங்கள். நமதுவாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்து விடுவோம்' என்கிறாள் அப்புதுமைப்பெண். நான்கு தசாப்தங்களுக்குமுற்பட்ட சிறுகதை இது இந்த சமூக மனிதர்களுக்கு அவள் கொடுக்கின்ற தண்டனை. பவானியின் சிறுகதைகள் பரிசீலனைக்குட்பட வேண்டியவைதாம்.
4.4.22 ஏனைய படைப்பாளிகள்
1950 - 1963 முற்போக்குக் காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களென நீள்வைப்பொன்னையன், உதயணன், நவம், காவலூர் இராசதுரை, பொ. தம்பிராசா, த. ர.பேல்,
139

Page 79
*yâği fpKö8)ğ asya’Tpı “செங்கை ஆழியன்”
செந்தூரன். க.சா. அரியநாயகம், ஆ. பொன்னுத்துரை. இ. நாகராஜன், குறமகள், ஏ.வி.பி கோமஸ், ம. த. லோறன்ஸ், எஸ். எல். சவுந்தரநாயகம் முதலானோரையும் சுட்டிக்காட்டியே ஆகுதல் வேண்டும். இவர்களில் மார்க்சிய முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாக நீர்வைப் பொன்னையன், காவலூர் இராசதுரை ஆகிய இருவருமுள்ளனர். ஏனையோர் மார்க்சியக் கருத்துக்களைத் தம் சிறுகதைகளில் முழுமையாகத் தழுவாவிடிலும், பிரச்சாரத் தொனியற்ற கலாபூர்வமான சிலசிறுகதைகளைத் தந்தவர்கள்.
நீர்வைப் பொன்னையரின் சிறுகதைகளில் கலாபூர்வ வெளிப்பாட்டைமீறி, அவர் வரித்துக் கொண்ட அரசியற் கருத்து புடைத்து நிற்கும். வர்க்கியம் சார்ந்த கருத்துக்களே இவரது சிறுகதைகளின் கருக்களாகியுள்ளன. இவரது சிறுகதைகளின் தொகுதிகளாக “மேடும்பள்ளமும் "உதயம்' என்பனவுள்ளன. இவரது ஆரம்பகாலக் கதைகள் முதிரா இளமையின் வெளிப்பாடுகளாகி, தொழிலார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டமைந்தன. கருத்துடன் சிறுகதை முழுமை பெறவதில்லை. இவரது சிறுகதைகளில் மேதினம், எழுச்சி, முடிவிலிருந்து ஆரம்பம் ஆகிய மூன்று சிறுகதைகளும் இவரது கலை மீறிய கருத்துடன் நிற்கின்றன என்பதற்குத் தக்க உதாரணமாகவுள்ளன. உதயம், சோறு ஆகிய இரு சிறுகதைகளும் நீர்வைப்பொன்னையனுக்குப் பெருமை சேர்ப்பனவாம். இலங்கையின் குடியேற்றக் கிராமங்களில், குளத்து நீர் விநியோகத்தில் நிகழும் பாரபட்சத்தை மிக அற்புதமான ஒரு கதையாக ‘உதயம்’ சிறுகதையில் நீர்வைப் பொன்னையன் சித்திரித்துள்ளார். சோற்றுக்காக ஏங்கும் கட்டையனின் மனவோட்டத்தின் விளைவான முடிவு தரும் துன்பியல்பை சோறு சிறுகதை கலைத் துவத்துடன் விபரிக்கின்றது இவ் விரு சிறுகதைகளையும் நீர்வைப்பொன்னையன் மிகுந்த நுட்பத்தடன் பின்னியுள்ளார்.
'உதயணனின் கதைகளில் சம்பவங்கள் நிறைய இடம்பிடிக்கின்றன. சில கதைகளில் இலேசான நகைச்சுவையுடன் யாழ்ப்பான மக்களின் விசித்திரமான குணங்களைக் கிண்டல் செய்துள்ளார். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், எழுதுவினைஞர்கள் ஆகிய மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பாத்திரங்களை இவர் கதைகளில் அறிமுகப் படுத்துகிறார்" கல்கி பத்திரிகை நடாத்திய ஈழத்துச் சிறுகதைப் போட்டியில் இவரது “தேடிவந்தகனகள்’ என்ற சிறுகதைக்கு மூன்றாவது
140

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
பரிசில் கிடைத்தது. உதயணனின் முதற்சிறுகதை ‘தியாகி வீரகேசரியில் பிரசுரமானது. அதனையடுத்து சுந்தரிவிபச்சாரி, வேனியே நீவாழ்க, தெருவிளக்கு, கல்யாணம், கீழ்ச்சாதிப் புராணம், ஒரு நாள் இன்பம், கடவுளும் மனிதரும், பூவரசம் பூ, இதுதான் கதை, அவள் ஒரு பெண், வடு ஆகிய சிறு கதைகள் சுதந்திரனில் வெளியாகின. உதயணன் உண்மையில் சுதந்திரன் பண்ணையில் உருவாகியவரே. கலைச்செல்வி, வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் உதயணனின் சிறுகதைகள் வெளியாகின. உதயணனின் சிறுகதையின் உச்சமாக மானிடஉணர்வின் மேன்மை துலக்கமாக நிற்கும். இளம்பூரணன் என்ற புனைப்பெயரிலும் பல சிறுகதைகளை எழுதித்தந்துள்ளர்.
கல்கி நடாத்திய ஈழத்துச் சிறுகதைகப் போட்டியில் ‘நந்தாவதி என்ற சிறுகதைக்காக முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் நவம். கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியரான சீனித்தம்பி ஆறுமுகம் (நவம்), 1945 இல் சிறுகதை உலகிற்கு வந்தார். மாசில் வீணை என்ற சிறுகதை தினகரனில் முதற்பரிசினைப் பெற்றது. குட்மோர்னிங், டாக்ஸி அபேஸ், பலாத்காரம், போர்முனை என்பன சுதந்திரனில் நவம் எழுதிய சிறுகதைகள். ஐம்பது சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள நவம், மூன்று நாவல்களையும் படைத்துள்ளார். நவத்தின் சிறுகதைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனை ஆழமாகப் பதிந்திருக்கும். எளிமையான உரைநடையும், சீராகக் கதை சொல்கின்ற பாங்கும் நவத்தின் சிறுகதைகளில் காணப்படும் பண்புகள். இனக்கலவரத்தை மையமாகக் கொண்ட நந்தாவதிச் சிறுகதையில், இருவினங்களிலுமுள்ள நல்லவர்களையும் கெட்டவர்களையும் நவம் சித்திரித்துள்ளார்.
‘நவம்தின் சிறுகதைகள் பன்னிரண்டினை உள்ளடக்கியதாக ‘நந்தாவதி” என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதில் நந்தவதி, கபந்த மனிதன், மிஸ்சரோஜா, கூத்து, குமேனி, நிலை, மாதொருபாகன், சுழிப்பு முதலான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கூட்டு மொத்தமாக ‘நவத்தின் சிறுகதைகளைப் படிக்கும் போது, அவருடைய படைப்புக்கள் மிகவும் ஜனரஞ்சகமானவையாக விளங்குவதைக் காணலாம். அதனால், அவருடைய சிறுகதைகள் எவருக்காக எழுதப்படுகின்றனவோ அவர்களைச் சென்றடைந்துவிடுகின்றன.
ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர். வரிசையில் காவலூர் இராசதரையின் படைப்புதளத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தினகரன் உருவாகிய படைப்பாளியான காவலூர் இராசதுரை,
141

Page 80
ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியன்’
அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில்
சமூகப்பிரக்ஞையோடு பதித்துச் சென்றுள்ளார். இவரது நல்ல சிறுகதைகளின் தொகுப்பாக ‘குழந்தை ஒரு தெய்வம்' வெளிவந்துள்ளது. அவர் படைத்த 'தொட்டாற் சுருங்கி ஈழத்தின் தரமான படைப்புகளில் ஒன்று எனப் பலராலும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
பொ. தம்பிராசா சிறுகதைத்துறைக்கு வழங்கியவை ஒரு சில சிறுகதைளேயாாயினும் , 1950 - 1963 காலகட்டத்தில் கதையின் முழுப் பொலிவுலும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அமையச் சிறுகதை படைத்தவர். இவருடைய ஒரு சிறுகதை பென்குயின் நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “மீண்டும் காலைவரும்' என்ற சிறுகதை, ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு ஒரு பங்களிப்பு. இவருடைய கதைகளில் உவமை உருவகங்கள் சிறப்பாகக் காணப்படும். நனவோடையில் “மீண்டும் காலைவரும்’ சிறுகதை வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், வாழைக்குலை என்பனவற்றைக் கொழும்புக்கு ஏற்றியிறக்கும் லொறி ஒன்றின் கிளினர் திருப்பதியூடாக நனவோடையில் கதை கூறப்படும் நேர்ததி அற்புதம், -
த. ரஃபேல் மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். தினகரன், குமுதம், கதை ஆகிய சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மனிதர்களின் மனவுணர்வுகளுக்குச் சிறுகதை உருவம் கொடுப்பவர் ர.பேல். அவரது ‘திறமை “கட்டிவோடு கிடந்தவன் என்ற சிறுகதைகள் விதந்துரைக்கத்தக்கவை. 1959இல் கல்கி நடாத்திய ஈழத்துச் சிறுகதைப் போட்டியில் பரிசில் பெற்றதன்மூலம், பலரினதும் கவனத்தைக் கவர்ந்த சிறுகதை ஆசிரியர் செந்தாரன் ‘உரிமை எங்கே? என்ற அச்சிறுகதை ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் என்ற நூலில் வெளிவந்தது. மலையகத்தொழிலாளரின் உரிமைக்குரலாக இச்சிறுகதை அமைந்தது. நுட்பமான அவதானிப்பும், காட்சிப்படுத்தும் விபரணமும் இவருடைய சிறுகதைகளின் சிறப்பம்சங்களாம். செந்தூரனின் சிறுகதைகளில் உரிமை எங்கே?, நடுக்கடலில் என்பன தரமானவை. ஈழத்துச் சிறுகதை ஆசிரியருள் ஆ. பொண்ணுத்துரை (பொன்னு) அதிகம் கவனத்திற்குள்ளாகாதவராக விருக்கிறார். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியரான பொன்னு, 1952இல் ‘பணமும் குணமும் என்ற சிறுகதையைத் தினகரனில் எழுதி இத்துறைக்குள் நுழைத்தார். அதன்பிறகு மறக்குமா இறக்கும் வரை, நீயும் கலியாணம் செய், நம் குழந்தை, நல்லதும் கெட்டதும் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். சுதந்திரன் பண்ணையில் வளர்ந்தவர். பொன்னுவின் சிறுகதைகளில் 'மறக்குமா இறக்கும் வரை நல்லதொரு கதை.
142

ஈழத்துச் சிறுகதை வரலாறு “3ேங்கை ஆழியான்”
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களில் ஒருவர் இ. நாகராஜன் ஆவார். அவர் சிறுகதை, கவிதை, நாவல் முதலான துறைகளிலீடுபாடு கொண்டிருந்தார். ‘தமிழன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கினார். ஈழகேசரிப் பண்ணையிலேயே சிறுகதை எழுத்தாளராக மலர்ந்தார். 1955 இல் மீளாதசிறை என்ற சிறுகதை ஈழகேசரியில் வெளிவந்தது. அதன்பின்னர். இவர்தான் நடிகர், தணியாததாகம், காணிநிலம், நிறைநிலா, வாழ்வளித்த விலங்கு, இதய கன்னிகை, நாடகமே உலகம், கொடிக்கு ஒரு கொம்பு, சுமை, அந்தமரம், மூன்றுகுரல். எரிந்ததிரி, கடன், திரை, அடைக்கலம் முதலான சிறுகதைகளை ஈழத்தின் பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். மர்மம், ஆத்மா, கண்காட்சி, நியதி முதலான சிறுகதைகளை ஈழநாட்டில் எழுதியுள்ளார். இ. நாகராஜனின் சிறுகதைகளின் தொகுப்பாக ‘நிறைநிலா வெளிவந்துள்ளது. அவரின் சிறுகதைகளில் யாழ்ப்பாண மாந்தர்களின் வாழ்க்கையின் உணர்வுநிலைகள் உருக்கமாகச் சித்திரிக்கப் பட்டிருக்கும். கவிதாபூர்வமான எளிய நடை. இ. நாகராஜனின் சிறுகதைகளில் கடன், திரை ஆகிய சிறுகதைகள் தரமானவையெனக் கூறலாம்.
ஈழத்தின் தரமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவா, குறமகள் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் வள்ளிநாயகி இராமலிங்கம் பயிற்றப்பட் ஆசிரியை. கலைமாணி. கோப்பாய் ஆசிரிய காலாசாலை நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றதன் மூலம் இத்துறையில் நுழைந்தார். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்தவிகடன் ஆகிய சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந் துள்ளன. 1955களில் இவரது முதலாவது சிறுகதையான “போலிக் கெளரவம் ஈழகேசரியில் பிரசுரமானது. அதனை அடுத்து பிரிவும் இன்பந்தரும், வாழ்க்கையின் இன்பங்களும் வானத்துக் குழந்தைகளும், பீபத்ஸம், சலனம், ஆளுமைகள் அழிகின்றன. புளியங்கொப்பு, சோடிவேட்டி, ஒரு படம் பூரணத்துவம் பெறுகிறது. அவர்கள் அப்படித்தான், வாழ்வைத்தேடு, அவள் கொடுத்த விலை, கனலும் தாய்மையின் மடியில் முதலான நல்ல பல சிறுகதைகளை ஆக்கித்தந்துள்ளார். ‘இவரது சிறுகதைகள் வீரக்தியின் வெளிப்பாடுகளாக அமையாது, நம்பிக்கையூட்டும் உணர்ச்சிக் சித்திரங்களாகவுள்ளன, வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து முடித்துவிடுவோம் என்ற ஏக்கத்தோடு இவரது கதாபாத்திரங்கள் உலா வருவதில்லை. இப்படித்தான் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போம் எனத் தமக்கென ஒரு கருத்து நெறியினை வகுத்துக்கொண்டு செயற்படும் கதபாத்திரங்களை இவரது சிறுகதைகளில் காணமுடியும்." குறமகளின் சிறுகதைகளில் வாழ்வைத்தேடு, ஆளுமைகள் அழிக்கின்றன. அவள் கொடுத்த விலை ஆகியன தரமான சிறுகதைகளாகவுள்ளன. இவருடைய சிறுகதைகளில் பெண்ணியம் சம்பந்தமான கருத்துக்கள் நிறைந்
143

Page 81
ஈழத்துச் சிறுகதை எரலாறு “செங்கை ஆழியான்”
திருக்கும். பெண்விடுதலை இனவொடுக்கல், சமூக இழிநிலைகள் என்பன இவரின் சிறுகதைகளின் உள்ளடக்கமாம்.
முற்போக்குக் காலகட்டத்தில் (1950 - 1963) ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு பங்களிப்புச் செய்தவரில் ஒருவர் ஏ.பி.வி.கோமஸ். பட்டதாரியான இவர்ஒய்வபெற்ற ஓர் அதிபர். ஏ. பி. வி கோமஸ் எழுதிய முதற்சிறுகதை ‘காதலும் உரிமைப்போரும்’ 1957களில் சுதந்திரனில் வெளியாகியது. மொழியுரிமை குறித்து இச்சிறுகதையை அவர் எழுதியிருந்தார். அதனையடுத்து காணிக்கை, அகத்தின் அழகு, புதுக்குரல், கிறிஸ்மஸ் பரிசு, பாலன்தந்த பரிசு, அன்பின் குரல், அவலம் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளின் தொகுப்பாக ‘வாழ்க்கையே ஒருபுதிர்' எனும் நூல் வெளிவந்துள்ளது. இவருடைய சிறுகதைகளில் இனவொடுக்கல் சம்பந்தமான வெளிப்பாடு கருவாக விளங்கும். இவருடைய சிறுகதைகளில் ‘அவலம்' சிறப்பானவொரு கதை. மலையகத் தொழிலாளக்குடும்பமொன்றின் அவலவாழ்வை இக்கதை நன்கு சித்திரிக்கிறது.
கிழக்கிலங்கை ஈழத்துத்தமிழ்ச் சிறுகதை உலகிற்குத் தந்த எழுத்தாளர், ம.த.லோறன்ஸ். சுதந்திரன் பண்ணையைச் சேர்ந்தவர். 1950 இல் சுதந்திரனில் இவரது முதற்சிறுகதையான ‘முகைநெகிழ்ந்தது வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சதங்கை நாதம், குளக்கரை, விபரீத முடிவு, சலனம் நீங்கியது, அன்னத்தின் ஆவி, நீர்நிலைக்கன்னி, நள்ளிரவு அனுபவம், வெள்ளம் முதலான கதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகளில் காதலுனர்வு மோலோங்கிக் காணப்படும். வெள்ளம் சிறப்பான சிறுகதை.
4.4.23 நந்தி
ஈழத்தின் சிறுகதை இலக்கியத்திற்குப்பங்களிப்புச் செய்தவர்களில் பேராசிரியர். செ. சிவஞானசுந்தரம் என்ற நந்தி குறிப்பிடத்தகவர். “கலை இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் தனது ஆக்கத்திறனைச் செப்பமாகப்பதித்திருக்கும் நந்தி, ஒரு நாவலாசிரியர், சிறுகதைப் படைப்பாளி. நந்தியின் முதலாவது சிறுகதை ‘சஞ்சலமும் சந்தோஷமும் வீரகேசரியில் 1947களில் வெளிவந்தது. ஈழகேசரியில் அவர் எழுதிய புத்தாகே பொத், சுதந்திரனில் எழுதிய விசித்திர மூக்குக்கண்ணாடி ஆகிய சிறுகதைகளைப் படித்தபோது, ஏற்பட்ட அவநம்பிக்கை, 1950 - 1960 காலகட்டந்து. சிறுகதைகளைப்படிக்கும்போது பெருவியப்பாக மாறுகின்றது. கதையும் சாமியாரும். கிழவனும் கிழவியும், பச்சைப்பூக்கள், பார்த்தால் தெரியு), பாவதரிசனம், ஆசையின் ஓசை, காதலுக்கு மருந்து, ஊர்நம்புமா?, கணவன், கண்ணாடி, மாமா(பத்தினி),
1-4

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிாண்”
அதிகாரி, நூலைப்போல, மிஸ்.சுகிர்தம், பூச்சட்டை, கல்லோ கடவுளோ முதலான சிறுகதைகள் அவர் முற்போக்குக் காலகட்டத்தில் எழுதிய படைப்புக்கள். இவை தினகரன், வீரகேசரி, காதல், மரகதம், வசந்தம் முதலான சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ‘நந்தியின் எழுத்தில், நிலைபெற்ற சத்தியமும், ஆன்மாவின் உள்ளுணர்வும், எல்லையற்ற இரக்கமும் கலந்துறவாடுகின்றன. ஆடம்பரமற்ற, ஆனால் அழுத்தமும் வேகமும் நிறைந்த ஒர் உரைநடையிலே நந்திபடைத்த சிறுகதை களுள்ளன" ‘நந்தி ஒரு டாக்டர் - மருத்துவர். அவரது படைப்பியல் தொழிற்பாட்டுக்கு வேண்டிய சக்தியாக தளமாக அது அமைந்துள்ளது. நந்தியின் சிறுகதைகளில் மனித இன்னல், மனித அவலநிலை, அருந்தற்பாடு உள்ளிடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன" ‘நந்தியின் ஆரம்ப காலகட்டத்துப் படைப்புக்களை நோக்கும் போது அவை பொதுவாக தனிமனித - குடும்ப - சமூகஉறவுச் சூழல்களில் நிகழும் உணர்வுச் சூழல்கள், ஆசாபாசங்கள், புறநிலையாகப் புலப்படும் முரண்பாடுகள் போலித்தன்மை முதலியனவற்றைக் கதையம்சங்களாகக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகிறதுர்?
4.4.24 கே. வி. நடராஜன்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கே.வி. நடராஜனுக்குரிய பங்கை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை, ஈழத்தின் தரமான சிறுகதைகள் பலவற்றை அவர்படைத்தளித்துள்ளார். இழவு, கறை, ஊருக்காக, தேர், ஒன்றுக்குள் ஆயிரம், அப்புவைத்தின்னிகள், பிரம்ம ஞானி, கனவான், சாம்பல், நரபலி, அன்றில் அன்றேல், விடிவு, ஆத்திரம் அடங்கியது, ஊரும் உலகமும், கள்ளும் கருப்பநீரும் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பான சமூகத்தின் முகமூடிகளை இவரது கதைகள் கிழிக் கின்றன. கதைகளின் கருப்பொருட்கள் சமூகத்தை உலுப்பிவிடக்கூடியவை. இவருடைய சிறுகதைகள் ஒரு காலகட்ட யாழ்ப்பாணத்தைப்படம் பிடித்துக்காட்டுகின்றன.
‘பிரம்மஞானி !!ருவத்தைத் தவறவிட்டு, சம்பிரதாயத்திற்காக மணந்து கொண்ட தமிழாசிரியருடைய வாழ்க்கையைப் படம் பிடிக்கின்றது. சாதியைத் தாண்டி எழும் காதல் உணர்ச்சியின் அவசங்களைச் சாம்பல் சித்திரிக்கின்றது. கறையில் வரும்பாத்திரங்களை நாம் அடிக்கடி யாழ்ப்பாணக் கோடுகளிற் சந்திக்கலாம். நினைத்தும் பார்க்க முடியாதது போலிருந்தது. எதார்த்தமும் யாழ்ப்பான வேலிமறைப்பில் கொழுக்கின்றது. இழிவு யாழ்ப்பாணதுப் போலி ஆசாரத்தின் பின்னணியில் யாழ்ப்பாணத்தின் அறியாமையையுஞ் சுட்டிக் காட்டுகின்றது. அதே சமயம் மனோவிகாரக் காம எண்ணங்களையுந் தொட்டும் காட்டுகின்றது."
145
(10) .

Page 82
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” கே. வி நடராஜனின் சிறுகதைகள் இந்த மண்ணின் மறைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணரும் முயற்சிகளாகும். மண்வாசனை சார்ந்த எழுத்துக்கள். ஆற்றொழுக்கான கதை. விபரணையும் மக்கள் மொழிப்பிரயோகங்களும் அவரது சிறுகதைகளுக்குப் சுவை பயக்கின்றன. சமூகத்தை நன்கு தரிசித்து தோய்ந்து, சமூகப் பிரக்ஞையுடன் கலாபூாவமாகத்தனது சிறுகதைகளைச் செப்பமாக வடிவமைத்திருக்கிறார். சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் காணப்படும் மரிருக உறவுநிலைகளைப் பகிரங்கமாகக் கதைகளிற் சொல்வதால் கிடைக்கும் சமூகப்பயன், தந்தையையும் சகோரர்களையும் ஐயுறவோடு பார்க்கின்ற நிலைதான் என்பதை ஆசிரியர் உணர்வார். அவ்வாறான ஓரிரு சிறுகதைகள் ஆசிரியரின் ஏனைய சிறுகதைகளின் கலாபூர்வத்தைக் குறைக்க முயல்கின்றன. கே.வி. நடராஜனின் சிறுகதைகளின் தொகுப்பாக “யாழ்ப்பாணக் கதைகள்' வெளிவந்துள்ளது.
4.4.25 சசிபாரதி சபாரத்தினம்
சசிபாரதி சபாரத்தினத்தின் சிறுகதைகளின் சிறப்பு அவற்றின் சுருக்க வடிவத்திலும், கருத்துவளத்திலுமே தங்கியுள்ளது. அசுரபசி, கடன்காரி, முதற்பரிசில் பெற்ற ஓவியம், பார்வை, கடவுளும் மனிதனும், மனிதர்கள், பாவியும் கடவுளும், கோவிலும் சூரியோதயமும், குயிலின் ஓசை, அமிழ்தம் முதலான சிறுகதைகளைப்படைத்துள்ளார். சசிபாரதியின் இக்கதைகளில் “மனித சமூகத்தின் ஆசாபாசங்களும் அவலங்களும். அங்கலாய்ப்புகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன. சிலவற்றில் நினைப்புக்கும் நிகழ்வுக்குமுள்ள முரண்பாடுகள் காட்டப்படுகின்றன. வேறு சிலவற்றில் மனிதர் மாத்திரமன்றித் தெய்வங்கள், அட்றினைப் பொருள்கள் என்பனவும் பாத்திரங்களாக அமைந்து பயன் மிகு உண்மைகளை உணர்த்துகின்றன* சசி பாரதியின் பின்னரே செம்பியன் செல்வனும், சாந்தனும் குறுங்கதைகளை எழுதினார். யோ. பெனடிக்பாலனும் குட்டிக் கதைகள் பலவற்றை யாத்துள்ளார். பொதுவாக இவையனைத்தம் ஒரு கருத்தை அல்லது நீதியைக் கருவாக அழுத்திக் காட்டுவதோடு அமைதி கண்டுவிடுகின்றன. சசிபாரதியின் கதைகள் இவற்றிலும் சற்று வேறு பட்டவை. சிறுகதைக்கான கட்டுக்கோப்போடு, கருத்தை முன்வைக்கின்றன.
4.4.26 இன்னுஞ்சில படைப்பாளிகள்
வன்னியூர்க்கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி புகழ்பெற்ற எஸ். எல். சவுந்தரநாயகம், நல்லதொரு சிறுகதை ஆசிரியர் 146

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
‘ என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியில் சுதேசவைத்தியராகக் கடமையாற்றியவர். 1953களில் எழுத்துலகிற்குள் வந்தார். வன்னியைத் தன் வாழிடமாகக் கொண்டவர். விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவர்களது மனத்துணர்வுகளையும் தன் சிறுகதைகளில் சவுந்தரநாயகம் சித்திரித்துள்ளார். துர்ப்பாக்கியசாலிகள், அப்பாவி, மனித எழுத்தாளர் அமுதன், அந்தக் காரணம், பைத்தியம், விடிவுகாலம், எதுவேண்டும் சொல் மனமே, கண்ணோட்டம் முதலான சிறுகதைகளைச் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஈழநாடு, விவேகி முதலான பத்திரிகைகளில் எழுதியுள்ளார். ‘ஈழத்துக் காவியதீபகம்’ என்பது அவரது 15 சிறுகதைகளடங்கிய தொகுதியாகும். மண்வாசனை கொண்ட நடை அவரது சிறுகதைகளில் சிறப்பாக அமைந்திருக்கும்.
முற்போக்குக் காலகட்டதின் (1950 - 1960) இறுதி ஆண்டுகளில், ஆற்றல் மிக்க இளம் எழுத்தாளர் கூட்டமொன்று ஈழத்துச் சிறுகதைத்துறைக்குள் நுழைந்தது. செங்கைஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், குந்தவை, க. பரராஜசிங்கம் (துருவன்), அங்கையன், கைலாசநாதன், சிதம்பரபத்தினி முதலான சிறுகதைப்படைப்பாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் முகிழ்த்தார்கள். அவர்கள் கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுத் தம் ஆற்றலை வெளிப்படுத்தினர். அதேவேளை பல்கலைக்கழத்திற்கு வெளியே பெனடிக்ற்பாலன், தெணியான், தெளியவத்தையோசெப், பாபாலேஸ்வரி, யாழ்வாணன், வன்னை சிவராஜா முதலானோர் சிறுகதைத்துறைக்குள் புகுநதனர். இக்குறித்த பல்கலைக்கழகச் சிறுகதை எழுத்தாளரிலும், அவையல்லாதோரிலும் பலர் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றனர் என்பது முக்கியமான சங்கதியாகும். அதேவேளை 1950 - 1960 காலகட்டத்தில் இன்றைய பேராசிரியர்கள் சிலரும் சிறுகதைகள் எழுதிப்பார்த்துள்ளனர். பேராசிரியர் கைலாசபதி அம்பலத்தான் என்ற புனைப்பெயரில் இரு சிறுகதைகள் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘கலையும்கிலையும்' என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர். அ. சண்முகதாஸ் "ஐயோ வாசுகி’ என்ற சிறுகதையையும், பேராசிரியர் சி. தில்லைநாதன் வாழ்க்கைச் சுழலிலே என்ற சிறுகதையையும் எழுதிப் பார்த்துள்ளனர்.
147

Page 83
Hipšā ŝoseos aJ&Yggd “செங்கை ஆழியாண்”
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முற்போக்குக் காலத்தில் (1950 - 1960) தேறிய விளைச்சல், எண்ணிக்கையில் அதிகமாயினும், ஈழத்தச் சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் சிறுகதைகள் சிலவே யாகும். ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் சமூகசீர்திருத்தக் காலத்தில் (1930 - 1949) தேறிய உன்னதமான சிறுகதைகளோடு இவற்றையும் சேர்த்துக் கொள்ளமுடியும். அவ்வகையில் இக்காலகட்டத்தின் சிறந்த படைப்புக்களாக வரதரின் கற்பு, வ.அ.இராசரத்தினத்தின் தோணி, எஸ். பொன்னுத்துரையின் தேர், என்.கே.ரகுநாதனின் நிலவேபேசுவோம், புதுமைலோலனின் அப்பேலங்கா, கே. டானியலின் வள்ளி, செ. கணேசலிங்கனின் வெறியில் நடந்தது, டொமினிக்ஜீவாவின் தண்ணீரும் கண்ணிரும், சு. இராசநாயகனின் இதயத்துடிப்பு, சிற்பியின் கோயில்பூனை, அ.முத்துலிங்கத்தின் பக்குவம், மு. தளையசிங்கத்தின் தேடல் ஆகியன அடங்குகின்றன.
அடிக்குறிப்புக்கள்
1. பேராசிரியர். கா. சிவத்தம்பி, ஈழத்துத்தமிழிலக்கிய முற் போக்குவாதத்
தொழிற்பாடுகள், புதுமை இலக்கியம் மலர் 1996 பக். 25.
2. மேற்படி கட்டுரை. பக்: 25
2அ. செ. செம்பியன்செல்வன், ஈழத்தச் சிறுகதைமணிகள் - 1993. பக்: 8
2ஆ செங்கைஆழியான். வித்தகர் வித்திமலர்-1999 பக்:39-40
3. சி. வன்னிய குலம், ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு, முத்தமிழ்
வெளியிட்டுக் கழகம், யாழ்ப்பாணம் - 1986 பக்: 62
4. பேராசிரியர் : கா. சிவத்தம்பி, மு. கு. கட்டுரை. பக் 42
5. சுதந்திரன், 20.10.1963, பக்: 6
6. மருதூர்க்கனி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி, மல்லிகை, டிசம்பர்
1973. பக்: 45 - 47
7. பேராசிரியர் கா. சிவத்தம்பி, மு. கு. கட்டுரை பக் : 25
8 மேற்படி கட்டுரை Lë: 26
148

ஈழத்துச்
9
சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்” பிரேம்ஜி, வரலாறு மெய்ப்பித்துள்ள நிலைபபாடுகளும் எதிர்காலக் கடப் பாடுகளும், புதுமை இலக்கியம் மலர் - 1996 பக் 15
10 என். சோமகாந்தன், ஈழத்து இலக்கிய வரலாற்றில் நான்கு தசாப்தங்கள்,
11.
12,
13,
4.
புதுமை இலக்கியம் - 1996 பக் 23
பேராசிரியர்: க. கைலாசபதி, மரகதம், கொழும்பு - 1961, ஓகஸ்ட் பக்: 21
பேராசிரியர் கா. சிவத்தம்பி, புதுமை இலக்கியமலர். கொழும்பு . 1975
சிற்பி, கலைச்செல்வியின் இலக்கியப்பவனி, மல்லிகை, வெள்ளிவிழா D60 - 1970. Uë: 34
மு. தளையசிங்கம், ஏழாண்டு இலக்கியப்பணி, வளர்ச்சி, க்ரியா, சென்னை
- 1984. L166: 65
14ஆ எஸ் பொன்னுத்துரை, ஒரு காவியம் நிறைவு பெறுகிறது. வஅ இராசரத்தினம்
15.
16.
1.
18.
19.
2.
22.
3.
24.
சிறுகதைத் தொகுதி, மித்ராபதிப்பகம். சென்னை - 1996. முன்னிடு. பக்: XV
துலாம், கற்பனையும் யாதார்த்தமும், இலங்கை எழுத்தாளன், இலங்கைத்
தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு, யாழ்ப்பாணம் - பக் - 11
கலாநிதி க. குனராசா, ஓர் இலக்கிய சகாப்தம், வித்தகர் வித்தி, தமிழ்
மன்றம், கல்ஹின்னை - 1999, பக் : 40
சிற்பி, மு. கு. கட்டுரை, பக்: 30
மேற்ப்படி கட்டுரை, பக்: 31
மேற்ப்படி கட்டுரை, பக் - 31- 35
பத்மா, சோமகாந்தன், ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின்
பங்கு, புதுமை இலக்கியம் மலர் - 1996, பக் 102 - 105
செங்கை ஆழியன், ஈழத்துப் புனைக்கதைகள், புதுமை இலக்கியம் ഥഞ്ഞ് -
1995. Luji: 97
வரதர், வரதர்கதைகள், குமரன் பதிப்பகம் சென்னை - மு. வரதராசன் தன்
முன்னுரையில், பக் : 3 + 4
மேற்படி நூலில், பக் - 5
புதுமை இலக்கியம், மு. எ. ச. வெளியீடு, கொழும்பு - 1996 பக் 8
. வ. அ. இராசரத்தினம், ஒரு காவியம் நிறைவுபெறுகிறது, மித்ரா வெளியீடு,
சென்னை - 1996. முன்னிட்டில் எஸ். பொ, பக்: XII
149 Վ.

Page 84
TMắộổ đJ*&}% 8ặ8)II" “செங்கை ஆழியான்”
26
27.
28.
29,
30,
31.
32.
33,
34.
35.
36,
37.
38.
39.
40.
41。
42.
43,
மேற்படி நூல் அணிந்துரையில் வல்லிச்கண்ணன், பக்.7. 8
மேற்படி நூல். பக்: 8
டொமினிக்ஜிவா, அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.
US: 107.
கனக செந்திநாதன், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியிடு, கொழும்பு
. 1964, பக் 79 - 80
புதினம், எளில், பொன்னுத்துரை பேட்டி, 6.2.1962 பக்: 4
எஸ். பொன்னுத்துரை, வி. சிறுகதைத் தொகுதி, மித்ராவெளியீடு, சென்னை
- 1992. முன்னுரையில் கணகசெந்திநாதன். பக்: X
மேற்படி நூலில் பக் (1) - (XX)
எஸ் பொ, ஆண்மை, மித்ரா வெளியீடு, சென்னை 1994. பாயிரத்தில்
இந்திரா பார்த்தசாரதி, பக் 7
எஸ். பொன்னுத்துரை. வி. மு. கு. நூல். பக் : XI
சாந்திமொகிதீன், மல்லிகை முகங்கள், மல்லிகைப்பந்தல், கொழும்பு .
1996. Luis ; 79 - 82
பித்தன்கதைகள், மல்லிகைப்பந்தல், கொழும்பு - 1995. பின்னட்டையில்
அந்தனி ஜீவா.
மேற்படி நூலின் முன்னுரையில் எம்.எம்.எம்.ஹற்ருப் பக் 7-20
என். கே. ரகுநாதன், நிலவிலே பேசுவோம், பாரதி புத்தகசாலை, கொழும்பு
- 1962, முன்னுரையில் அ.ந.கந்தசாமி, பக் 3
மேற்படி நூல். பக் : 4 - 5
புதுமைலோலன், எப்படி எழுத ஆரம்பித்தேன், சுதந்திரன் பேட்டி. 21.6.1964,
Luis: 2
புதுமைலோலன், புதினம் பேட்டி, 10.4.1962 பக்: 10
கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வு,
கொழும்பு - 1998
சுதந்திர இலங்கையின் தமிழ்ச்சிறு கதைகள், இலங்கைக் கலைக்கழக
வெளியீடு, கொழும்பு - 1998. பக்: 61
150

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்”
43s. டானியல் சிறுகதைகள், விளிம்பு டிரஸ்ட், சென்னை - 1995. முன்னுரையில்
44,
45
46.
4.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
61.
62.
set. DTifašisti) шds: 1
செ. கணேசலிங்கன், நல்லவன், பாரி நிலையம் சென்னை - 1956. பக்: 4
செ. கணேசலிங்கன், ஒரேஇனம், T நிலையம், சென்னை - 1960 முன்னுரையில் சிதம்பர ரகுநாதன். பக்(w)
மேற்படி நூலில் சிதம்பரரகுநாதன், பக் (vi)
செங்கை ஆழியான், ஜீவாவும் ஈழத்து இலக்கிய வரலாறும், மல்லிகை ஜீவா
மணிவிழாமலர் . 1988. பக்:114 - 180
டொமினிக் ஜீவா, தண்ணிரும் கண்ணிரும், சரஸ்வதி வெளியீடு, சென்னை -
1960. முன்னுரையில் வ. விஜயபாஸ்கரன். பக்6
மேற்படி நூல். வ. விஜயபாஸ்கரன். பக் 7
செங்கைஆழியான், மே. கு. நூல் - 1988 பக். 120 - 121
கீரன், நயமிக்க எழுத்தாளர் நாவேந்தன், சுதந்திரன் - 25.9.1955. பக் 6 நாவேந்தன், எப்படி எழுத ஆரம்பித்தேன், சுதந்திரன் - 1907.1967 - 2 - 15
நாவேந்தன், வாழ்வு, சிறுகதைத்தொகுதி, தமிழ்க் குரல் பதிப்பகம், சுன்னாகம்
- 1962, Lids; i-xii ஈ. கே. ஆர், தேவன் மாஸ்டர், ஈழநாடு - 26,982. பக் - 5
சாதனை செய்த தேவன், ஈழநாடு - 10.12.1982. பக் : 4
தேவன் - யாழ்ப்பாணம், எப்படி எழுத ஆரம்பிததேன் சுதந்திரன் - 308.1964.
Luis : 2
மேற்படி கட்டுரை. பக் 15
பத்மா சோமகாந்தன், கடவுளின் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை -
1993, முன்னுரையில் திலகவதி. பக் - 3
மேற்படி நூல் சொக்கன், பக் VI
மேற்படி நூல் சொக்கன் - V
சிற்பி, கலைச்செல்வியின் இலக்கியப்பணி, மல்லிகை, வெள்ளிவிழாமலர் -
1990. LIć6 : 33
அன்பு மணி, எப்படி எழுத ஆரம்பித்தேன், சுதந்திரன் 27.9.1964, பக் : 2
151

Page 85
Apå fahan ayag “செங்கை ஆழியான்” 63. நா. சோமகாந்தன், ஆகுதி, சிறுகத்ைதொகுதி, வரதர் வெளியீடு - 1989,
பதிப்புரையில் வரதர். பக் - 6
64. நா. சோமகாந்தன், நிலவோ, நினைப்போ?, இளவழகன் பதிப்பகம், சென்னை
- 1992. அணிந்துரையில வல்லிக்கண்ணன். பக்4 65. சிற்பி, எப்படி எழுத ஆரம்பித்தேன், சுதந்திரன் 3.5.1964. பக்: 2
66. மேற்படி கட்டுரை. பக்: 2
67. சிற்பி, நிலவும்நினைவும், சிறுகதைத் தொகுதி முன்னுரையில் அகிலன்.
Låk. W
68. அ. முத்துலிங்கம், அக்கா, சிறுகதைத் தொகுதி விஜயலட்சுமி புத்தகசாலை,
கொழும்பு - 1964 பக்: 5 - 6
69. மேற்படி நூல். பக் 7
70. மேற்படி நூல். பக் 12 - 13
71. அருள் செல்வநாயகம், தாம்பூலராணி, சிறுகதைத் தொகுதி, அன்புப் பண்ணை,
சென்னை - 1958. பக் 5
72. கனக செந்திநாதன், ஈழத்து இலக்கியவளர்ச்சி, அரசு வெளியீடு, கொழும்பு
- 1964 - LJአ: 81
73. மு. தளையசிங்கம் பெப்ரவரி 4, சுதந்திரன் சிறுகதை, 1.3.1959.
74. மேற்படி சிறுகதையில்
73. மு. தளையசிங்கம், புதுயுகம் பிறக்கிறது, அரசு வெளியிடு, கொழும்பு -
1965. பதிப்புரையில் எம். ஏ. ரஹ்மான், பக். (ii)
76. மேற்படி நூலின் பின்னுரையில் மு. தளையசிங்கம், பக் : 140
77. பவானி ஆழ்வாப்பிள்ளை, எண்ணத்தில் எழுந்தவற்றை எழுத்தில் வடிக்கிறேன்,
சுதந்திரன் - 1901.1964,
78. சிற்பி, கலைச்செல்வியின் இலக்கியப்பவனி, மல்லிகை வெள்ளிவிழாமலர்
- 99). as : 33
79. ஒரு கூடைக்கொழுந்து, சிறுகதைத் தொகுதி, யொ. சுந்தரலட்சுமி செ.
யோகநாதன், சென்னை - 1994. பக்: 318
79அ. நீர்வைப் பொன்னையன், பாதை, பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு -
1997. முன்னுரையில், பக் 5
80. கனகசெந்திநாதன். மு. கு. நூல். 1964. பக், 84
152

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” 80அ. அ. செங்கைஆழியான். குறமகள் கதைகள் பதிப்புரையில், யாழ்இலக்கிய
வட்டவெளியீடு, 1990 பக் II
81. நந்தி, ஊர்நம்புமா? சிறுகதைத் தொகுதி, நண்பர்கள் வெளியீடு, யாழ்ப்பாணம்
- 1966. Jis : 3
82. நந்தி, கண்களுக்கு அப்பால், சிறுகதைத்தொகுதி சென்னை புக்ஹவுஸ்,
1984, முன்னுரையில் கா. சிவத்தம்பி. பக் vi-xi
83. நந்தி, மணிவிழாமலர், நந்தியின் படைப்பிலக்கியம், நா.சுப்பிரமணியன்.
பக்: 122
84. கே. வி. நடராஜன், யாழ்ப்பாணக்கதைகள், சிறுகதைத் தொகுதி, யாழ்ப்பாணம்
- 1994, முன்னுரையில் எஸ். பொன்னுத்துரை
85. சசிபாரதி கதைகள், கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள், யாழ்ப்பாணம்
- 1986 பக்: X முன்னுரையில் சு. வித்தியானந்தன்
153

Page 86
5. ஈழத்துச் சிறுகதைகள் புத்தெழுச்சிக்காலம் (1961 - 1983)
1961 - 1983 காலகட்டத்தை ஈழத்துச்சிறுகதைகளின் புத்தெழுச்சிக் காலமென வகுப்பது எவ்வாறு பொருத்தமானதென்பதை முதலில் கூறிவிடுவது ஏற்றதென நினைக்கின்றேன். ஈழத்தச் சிறுகதை வரலாற்றில் சிறுகதைகள் அகலமாயும் ஆழமாயும் பரவிய காலம் இதுவாகும். சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஈழத்துச்சிறு கதைகளில் பிரதிபலிக்கத் தொடங்கிய காலம். விமர்சகர்களின் வழிகாட்டலும் கட்டுப்பாடுமின்றிச் சிறுகதைத்துறை பூரண சுதந்திரத்துடன் படர்ந்த காலம். சிறுகதையின் உள்ளடக்கத்தில் சாதியம், வர்க்கியம் ஆகிய பண்புகள் குறைந்து, இனத்துவம் முதன்மைபெறத்தொடங்கிய காலம், கருத்து வளம் மட்டும் நல்தொரு சிறுகதையாகாது, அத்தோடு கலைவளமும் அவசியமென உணரப்பட்ட காலம். முன்பிருந்த கலைத்தன்மை வரட்சி நீங்கிய காலம். மார்க்சிய முற்போக்குச் சிறுகதை எழுத்தாளர்கள் தமது பார்வையை அகல்வித்துக் கொண்டகாலம் இவ்வாறான இலக்கிய நிலைக்குப் பின்வரும் நிகழ்வுகள் காரணிகளாகின:
1) 1960களில் இலங்கையின் கல்வித்துறையில் சுயமொழிமூலமான போதத்தல் முதன்மை பெற்றது. பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்மொழிமூலம் கல்விகற்றவர்கள் நுழைந்தார்கள். தாய்மொழி மூலமான சிந்தனை தரமான சிறுகதை ஆசிரியர்களைப் பல்கலைக்கழகத்தினுள்ளேயும், வெளியேயும் உருவாக்கிவிட்டன. தாய்மூலக்கல்வி தமிழிலக்கியத்துக்கும் சிங்கள மொழியிலக்கியத்துக்குமுரிய புத்தெழுச்சிக் காலமாகியது.
2) 1956 இல் பாராளுமன்றத்தில் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக இனங்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை 1961 களில் உச்சமடைந்தது. இனவேற்றுமை பற்றியும், தேசி வாதம் பற்றியும் பேசி வந்த தமிழ் இடதுசாரிகள், சிங்கள இடதுசரி களின் சிங்கள முதன்மைவாதத்தால் தமது ஆற்றாமையை உணர்ந்து 154

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" கொண்டனர். 1975களில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் மூலம் தேசிய வாதத்தை முன்னெடுக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப்போயின, பேரின வாதத்தின் முன் தமிழ் இடதுசாரிகளின் இனவொற்றுமையும் தேசியவாதமும் தளர்ந்துபோயின, இனவாதம் சமூகத்திலும் இலக்கியதிலும் முதன்மைபெறத் தொடங்கியது. சிறுகதைகள் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் குரலாக (சாதியத் தாலும் இனத்தாலும் அடக்கியொடுக்கப்பட்டவர்கள்) ஒலிக்கத் தொடங்கியது.
3) தமிழர்களது அரசியல் வாழ்க்கையில் முக்கியம் பெற்ற தமிழரகக் கட்சி காங்கிரசோடு இணைந்து அமைததுக் கொண்ட கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் (1974), யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழராய்ச்சி மாநாட்டினைத்திட்டமிட்டவகையில் அரசு குழப்பியமையும் பிரிவினை வாதக்கருத்தக்களைச் சிறுகதைகளில் இடம்பெறவைத்தன.
4) சர்வதேச அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியானது மொஸ்கோ பிரிவு, சீனப்பிரிவு என இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டமையும் இக்காலத்திலேயாகும். அப்பிரிவு தேசியமட்டத்திலும் நிகழ்ந்தது, அது மார்க்சிய முற்போக்காளர்களையும் இருதளங்களுக்குப் பிரித்துவிட்டது, அதனால் சித்தாந்தத் தளங்களும் இலக்கியசிந்தனைத் தடங்களும் மாறுபட்டன. 1964 ஆம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்சங்கம் இயங்காது தூங்கிப் போனமை குறிப்பித்தக்கது.
5) இக்காலகட்டத்தில் இலங்கைமுழுவதும் தமிழ்ச்சிறுகதைப் படைப்பாளர்கள் உருவாகினார்கள். மலையகம் சிறுகதைத்துறைக்குள் ஒரு வீச்சுடன் நுழைந்தது. கிழக்கிலங்கைப் படைப்பாளிகள், தென்னிலங்கைப் படைப்பாளிகள், மேற்கிலங்கைப்படைப்பாளிகள் அனைவரும் தமிழ்ச்சிறுகதைகளைத் தரமாயும் அதேவேளை தம்பிரதேசத் தனித்துவத்துடனும் எழுதினார்கள். யாழ்ப்பாணத்திற்குள் சிறைபிடிக்கப் பட்டிருந்த சிறுகதை. நங்கை, தமிழர்வாழும் பிரதேசமெங்கும் நடனமிடத் தொடங்கினாள். ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் இது ஒரு பெரும் மறுமலச்சியாகும். பிரதேசரீதியாக எழுத்தாளர் மன்றங்களும், இலக்கிய வட்டங்களும் உருவாகின
155

Page 87
s ஈழத்துச் đi je?), a jaji “செங்கை ஆழியான்” 6) 1965 ஆம் ஆண்டு உதயமான யாழ். இலக்கிய வட்டம் ஓர் இலக்கிய இயக்கமாகச் செயற்படத்தொடங்கியது. ஆரோக்கியமான
ஈழத்துப் புத்திலக்கியங்கள் உருவாக்கவேண்டும், அவை இனங்காணப்பட வேண்டும் என்ற நோக்கோடு யாழ் இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. மார்க்சிய முற்போக்கு அணியைச் சார்ந்தவர்களும், சாராதவர்களும் இந்த இலக்கிய இயக்கத்தில் அங்கம் வகித்தனர். புதியதொரு சிறுகதைப் பரம்பரை உருவாக யாழ் இலக்கிவட்டம் காரணமாகியது.
7) மல்லிகை, சிரித்திரன் ஆகிய இரு சஞ்சிகைள் முறையே 194, 1965 காலகட்டத்திலிருந்து வெளிவரத் தொடங்கின. மல்லிகை மாஸ்கோபிரிவு மார்க்சியப் பத்திரிகை ஆயினும், அக்காலட்டத்தின் இலக்கியச் செல்நெறியையும் தேவையையும் மதித்து, பல சித்தாந்த கருத்துக்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைந்து மக்கள் இலக்கியத்தை இக்காலகட்டத்தில் முன்னெடுத்துச் சென்றது.
இவை யாவும் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்தை 1961 - 1983, காலகட்டத்தைப் புத்தெழுச்சிக் காலமாக்கின. சாதியம், வர்க்கியம், காந்தியம், பெரியாரியம் ஆகிய குறிக்கோள்களோடு, இனத்துவம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த்தேசியம் ஆகிய குறிக்கோள்களையும் முன்னெடுத்துச் சிறுகதைகள் ஆக்கப்பட்டன. 1950 - 1960 முற்போக்குக் காலகட்டத்திலிருந்து வந்த சிறுகதை ஆசிரியர்களின் படைப்புமுதிர்ச்சியும், 1961 - 1983 காலகட்டத்து புத் திலக்கியப் படைப்புகளும் சிறுகதைத்துறையில் புத்தெழுச்சிக் காலத்தைத் தோற்றுவித்தன. முன்னைய காலகட்டத்துச் சிறுகதைப்படைப்புக்களின் வளர்ச்சியை மிஞ்சிய ஒருபாய்ச்சல் இக்காலத்தில் காணப்பட்டது.
5.2. இலக்கியத் துண்டுதல்கள்
புத்தொழுச்சிக்காலச் சிறுகதை வளர்ச்சிக்கு (1961 - 1983}த்தூண்டுதலாகச் சில காரணிகள் இருந்தன. அவை : 5.2.1 தாய்மொழிமூலக்கல்வி
5.2.2. விமர்சகர்களின் வழிகாட்டுதல் 523 ஈழத்திலக்கியம் குறித்துத் தமிழக எழுத்தாளர்களின் கூற்றுக்கள். 5.24 பத்திரிகைகளும் சஞ்சகைகளும்
156

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
5.2.1 தாய்மொழிமூலக்கல்வி
1960 ஆம் ஆண்டு பல்கலைக்கழககங்களுக்கு சிங்களமொழி மூலமும் தமிழ்மொழி மூலமும் உயர் கல்விகற்க மாணவர்கள் நுழைந்தார்கள். சுயமொழி மூலமான பல்கலைக்கல்வி அவர்களது இயல்பான சிந்தனைத் தடத்தினை வளர்த்துவிட்டிருந்தது. 1956 இல் பாடசாலை மட்டத்திலேயே தமிழ் மொழி மூலம் கற்கத் தொடங்கிவிட்டதால், அவர்களில் பலர் பல்கலைக் கழகத்திற்கு நுழையும்போதே நவீன இலக்கியப் பயிற்சி கொண்டவர்களாக விளங்கினர். ஆங்கில மொழிமூலம் நவீன புனைகதை இலக்கியங்களைப் படித்து தமிழில் சிறுகதைகளைப் படைத்தவர்களிலும் பார்க்க இவர்களது சிறுகதைகள் சுயமான சிந்தனை வெளிப்பாடுகளாக அமைந்தன. பல்கலைக் கழகத்தினுள் மட்டுமன்றி, பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் அதே வேளை ஆற்றல்மிக்க ஓர் எழுதாளர் கூட்டமுருவாகியது. அவர்கள் 1960 களில் எழுத ஆரம்பித்தாலும். அவர்களது சிறுகதைகள் வலுவும் வனப்பும் கொண்டவையாக முதிர்ச்சி பெற்றமை 1964களில் என்பது குறிப்பிடத்தக்கது.
5.2.2 விமர்சகர்களின் வழிகாட்டுதல்
இக்காலகட்டத்துச் சிறுகதை இலக்கியத்தின் செல்நெறிகளைத் தீர்மானிப்பதில் விமர்சகர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தது. முக்கியமாக க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, மு, தளையசிங்கம் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். 1961களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பதவியேற்ற கைலாசபதி, இலக்கியச் செய்நெறியை அவரை நாடிவந்த எழுத்தளார்களுக்குப் போதித்தார். “பல்கலைக்கழகத்தில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மாணவர் பலர் இலக்கியம்பற்றி உரையாடுவதற்கு என்னிடம் வந்த போயினர். பல கலைக் கழக சூழ் நிலையரில் இலட்சிய வேட் கையும் கனவுக் கற்பனைகளும் நெஞ்சில் நிறையப் பெற்ற மாணவரே பெரும்பாலானோர். ஆயினும், அம்மாணவர் ஒரு வகையில் நாட்டின் இலக்கியப் போக்குகளைப் பிரதிபலிப்பவராகவே இருந்தனர்." என்கிறார் கைலாசபதி, ‘மனிதனின் ஆத்மார்த்த, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை பற்றிய சகல அம்சங்களையும் மனிதமுதன்மை என்ற கட்டுக் கோப்புக்குள் வைத்து விளக்குவதாக இருத்தல் வேண்டும். அத்தகையதொரு நோக்கினைத் தரும் முதன்மைவாதம் மார்க்சிய
157

Page 88
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” வாதமேயாகும். வர்க்கபேதமற்ற ஒப்பிலாச் சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மனிதப் பெருங்குடிமக்கள் நடாத்தும் போராட்டத்தையும் அதில் தோன்றும் புதியசமுதாய அமைப்பையும் பிரதிபலிக்கும் சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியம் படைக்க முயலவேண்டும்’ என்றார் கா. சிவத்தம்பி. எனவே, ஒருசாரார் மார்க்சியத் தத்துவங்களையும் அரசியற் சித்தாத்தங்களையும் பெய்து, சோஷலிஷட் யதார்த்த இலக்கியம் படைக்க விழைந்தனர். மார்க்சிய இலக்கியவாதிகள் தனித்துவமாகப் பிரிந்ததும், ஈழத்தின் நவீன இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கவிலக்கியங்கள் இரு தெளிவான கோட்பாடு களை ஒட்டிப்பிரிந்தன, மார்க்சியவாதிகள் இன்னமும் தேசிய இலக்கியம், தேசிய ஒருமைப்பாடு என்பவற்றில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.”
மறுசாரார் ஒர் பேரறிஞனின் தத்துவங்களுள் தம்மைச் சிறைப்படுத்தாது, புதிய தத்துவங்களைத்தேடியும் ஆக்கியும் தாம் வாழும் சமூகத்தின் மேன்மைக்காக அவற்றைத் தம் எழுத்துகளில் புகுத்தியும் இலக்கியம் படைத்தார்கள். 'கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப்பிழையானது கலை கட்சிக்காக என்றவாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதியிருந்தது. பின்னத்தில் அந்த வழி கொஞ்சமுமில்லை' என்றார். மு. தளையசிங்கம்? “கட்சி என்று வரும்போது பல அறிவுத்துறைகள் அடைபட்டுத்தான் போகின்றன. மரபு, தேசிய, இலக்கியம், மண்வாசனை, இழிசினர் வழக்கு போன்ற சொற்றொடர்களின் பின்னே இலக்கிய குருகேடித்திரங்கள் தோன்ற கட்சிமாயை உதவியது என்றார் செம்பியன் செல்வன்’, ‘மார்க்சியச் சித்தாந்தங்களைத் தமது படைப்புகளில் கொண்டு வருபவர்கள் அதற்குப்பால், காலதேசவர்த்தமானங் களுக்கு ஏற்பச் சிந்திப்பரில்லை. முடிந்த முடிவாக அதையே கொண்டுள்ளனர். ‘மார்க்சியச் சித்தாந்தங்களைக் கெளரவிப்பவர்கள், அதற்கப்பால் மனித குல மேன்மைக்காத் தத்துவங்களைத் தேடல் செய்து ஆக்கவிலக்கியம் படைக்கிறாகள் என்றார் செங்கைஆழியான்" சாதியம், வர்க்கியம் என்பனவற்றோடு இனத்துவம், சமூகத்துவம் சார்ந்த சிந்தனைகள் மறுசாராரின் சிறுகதைகளில் பொருளாக அமைந்தன.
முன்னவர்கள் பற்றிப் பின்னவர்களின் கருத்து. ‘இவர்கள் ஆக்கவிலக்கிய கர்த்தாக்களல்லர். புதிய தத்துவங்களையும் கோட்பாடு களையும் ஒரு படைப்பாளியாக நின்று தாமாக உருவாக்க்த் திறனற்ற வர்கள். மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், மாசேதுங் முதலானோரின் தத்துவங்களுக்கு வடிகால்களாக அவற்றினை மீளமளத் தமது படைப்புகளில் எடுத்தாள்பவர்கள். இவர்களிடையே சுயசிந்தனையாளர் தோன்றவில்லை"
158

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
பின்னவர்கள் பற்றி முன்னவர்களின் கருத்து “இவர்கள் ஆக்கவிலக்கிய கர்த்தாக்களேயல்ல. இவர்களுக்குத் தெளிவான இலக்கியக் கோட்பாடு இல்லை. மரபிலக்கியம் படைப்பவர்கள். இலக்கியத்தை ஒரு நுகர்வுக்கான வியாபார பண்டமாக்குபவர்கள். மக்களது பலவீன உணர்ச்சிகளுக்குத் தீனிபோடுபவர்கள் பிற்போகுவாதிகள்"
இவ்வாறான சூழ்நிலையில் பிறந்த இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு அணியினரால் விமர்சிக்கப்பட்டன, ஆக்கபூர்வமான நலன்களைக் கூறுவதிலும், அவற்றில் அவதூறான குறைகளைத் தேடுவதிலும் இரு அணியினரும் ஓயாது ஈடுபட்டனர். எவ்வாறாயினும் மார்க்சிய எழுத்தாளர்கள் சிலர் தமது சிறு களைதகளில் *சுலோகப்பிரயோகங்கள்’ செய்யவில்லை என்று கூறிவிடமுடியாது. அதேபோல மறுசாராரில் சிலர் படுபிற்போக்குத்தனமான பத்திரிகைக் கதைகளை எழுதிச் சிறுதைகளெனப் பம்மாத்துச் செய்தனர் என்பதையும் மறுக்கவியலாது. முக்கியமென்னவெனில் இரசாராரிடமிருந்தும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்துக்கு அணிசேர்க்கும் பதினைந்து சிறுகதை களாவது, 1961 - 1983 காலகட்டத்தில் கிடைத்துள்ளன என்பதாகும்.
5.2.3 ஈழத்திலக்கியம் குறித்துத் தமிழக
எழுத்தாளரின் கூற்றுகள்
1967களில் தமிழகப்பத்திரிகையான ‘கங்கையின் ஆசிரியர் பகீரதன் இலங்கைக்கு வந்தார். வரதரின் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம், நாவற்குழியூர் நடராஜனின் கவிதைத் தொகுதியான சிலம்பொலி ஆகியநூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஈர். பகீரதன் இங்கு வந்த வேளை சரஸ்வதி வ. விஜயபாஸ்கரனும், தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியும் இலங்கைக்கு வந்திருந்தார்கள். பகீரதன் வெளியீட்டு விழாவில், ‘இலங்கை எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களைவிடப்பத்து வருடம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் வளர்ந்துவரும் மேல்நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும் . சிறுகதை எழுதும் உத்திமுறைகளைத் தெரிந்த கொள்ளவேண்டும்’ என்று எடுத்து உபதேசித்தார். இந்த வார்த்தைகள் ஈழத்து எழுத்தாளர்களை ஆவேசப்படவைத்தன. இக்கருத்துக்கு எதிரான கருத்துகளை தினகரன் பத்திரிகையில் காரசாரமாக எழுதினார்கள்" 1962களில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன்,
159

Page 89
ஈழத்துச் சிறுகதை JJ “செங்கை ஆழியான்"
"ஈழத்துச்சிறுகதைகளுக்கு அடிக்குறிப்புகள் தேவை. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைப் பகிர்ந்து கொண்டு சிறுகதையைப் புரிந்து கொள்ள, அடிக்குறிப்புகளிடப்படவேண்டும்' என்று கூறிக்சென்றார். இதற்கு ஆதாரமாக நமது சீறுகதை முன்னோடி சோ. சிவபாதந்தரம், “பேச்சு வழக்குத் தமிழிலில்லாது எல்லார்க்கும் பொதுவான தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதப்படல் வேண்டும்' என்றார். "ஈழத்திலக்கியங்களுக்கு அகராதி வேண்டும். இலங்கை இலக்கியத்தை இங்கு எல்லோரும் பரவலாகப் புரிந்து கொள்ள இலங்கைப் பேச்சு வழக்கிலுள்ள சில சொற்கள் இடையூறாக இருக்கின்றன. சிறு அகராதி தயாரித்து வெளியிடலாம்’ எனத் தமிழக எழுத்தாளர் வி. ராஜ நாராயணன் கருத்து வெளியிட்டார். இக்கருத்துக்களின் உச்சகமாக, “அது தமிழ் இலக்கியமேயில்லை. மொழி தமிழ் என்பதற்காக இத்தோடு கலக்கத்தேவையில்லை. வெறும் ஈழ இலக்கியம் என்றே கூறிவிடலாம். ஈழஇலக்கியம் அங்கீகாரம் பெற ஒரு இருப்பது வருடம் போக வேண்டும் என விக்கிரமாதித்தன் என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் திருவாய் மலர்ந்தார். நிறைவாக, “தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு ஈழத்தில் இலக்கியமில்லை. ஈழத்து இலக்கியம் கடந்த இருபது வருடங்களாக அரசியல் தன்மை பெற்றுத் திரிந்து விட்டது. இலக்கியம் இலக்கியமாக இருக்கவேண்டும். இலக்கியத்தில் அரசியலைத் தேடுவதும் அரசியலில் இலக்கியத்தைத் தேடுவதும் அபத்துமானது. இலக்கியம் என்ற போர்வையில் அரசியல் கோஷங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் கதை மாதிரியும் கவிதை மாதிரியும் எழுதிப். பண்ணி ஏமாற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.' என வண்ணநிலவன் என்ற தமிழகத்தவர் எடுத்துரைத்தார்?
ஈழத்து இலக்கியத்துத் தென்னிந்திய இலக்கியவாதிகளின் அங்கீகாரம் தேவையென்றும், ஈழத்து ஆக்கவிலக்கியங்களைத் தென்னிந்திய ஆக்கங்களோடு ஒப்பிட்டு மதிப்பிடுவதும் சரியான இலக்கியச் செல்நெறியாகாது. என்றாலும், 1960 - 1983களில் எமது சிறுகதைகள் குறித்து வெளிவந்த கருத்துக்கள், அவ்வேளையில் புத்தரிலக்கியம் படைக்க முன் வந்த ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.
5.2.4 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும்
தினகரன், வீரகேசரி, ஈழநாடு, சுதந்திரன், தேசாபிமானி செய்தி
ஆகிய பத்திரிகைகளோடு, விவேகி, மல்லிகை, தேனருவி, கலைவாணி, 160

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Filich fuai” இளம்பிறை, வசந்தம், சிரித்திரன், மலர், அஞ்சலி, குமரன், பூரணி, தாயகம், அமிர்தகங்கை, சுடர், அலை, சமர் முதலான சஞ்சிகைகள் ஈழத்துச் சிறுகதை இலக்கிய வளர்ச்சியை 1961 - 1983 காலகட்டத்தில் முன்னெடுத்துச் சென்றன.
1961 இல் தினகரன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து க. கைலாசபதி விலகியதும், ஆசிரியப் பொறுப்பினை ஆர். சிவகுருநாதன் ஏற்றுக் கொண்டார். சிறுகதைத் துறைக்கு தினகரன் வாரமலர் தக்க பங்களிப்பினைத் தொடர்ந்து செய்துள்ளது. ஞாயிறு வீரகேசரியின் பொறுப் பாசிரியராக வி. லோகநாதன் வந்ததும், வீரகேசரியில் ஈழத்துப் படைப்புக்கள் கூடுதலாக இடம்பெறத் தொடங்கின. 1964களில் சுதந்திரனின் ஆசிரியராக விளங்கியவர். கே. இராமசாமி ஆவார். இவர் காலத்தில் இ. சங்கர் சுதந்திரனின் உதவி அசிரியராக விருந்தார். இவர்கள் ஈழத்துச்சிறுகதைத் துறைக்குச் சுதந்திரனில் முதன்மை யிடமளித்துள்ளனர். எச்.எம்.பி முஹைதீன் தேசாபிமானியின் ஆசிரியராக விளங்கியபோது பத்திரிகையில் சிறுகதைக்கு முக்கியம் வழங்கினார்.
ஈழநாடு (1959 - 1995) ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஈழகேசரி தனது பத்திரிகைப் பணியை நிறுத்திக் கொண்டதும் அதன் ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் ஈழநாட்டிற்கு ஆசிரியராக வந்தார். வாராவாரம் ஒவ்வொரு சிறுகதை பத்திரிகையிடம் பிடித்தது. மூத்த எழுத்தாளர்களும் புதிய எழுத்தாளர்களும் ஈழநாட்டில் எழுதிக்குவிந்தனர். கண்டியிலிருந்து இரா. நாகலிங்கம் நடாத்திய “செய்தி' பத்திரிகை சிறுகதைத் துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளது. வாசிக்கத் தூண்டும் வகையில் கவர்ச்சிகரமாகச் சிறுகதைகளை இப்பத்திரிகை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
1960களில் மு.வி. ஆசீர்வாதம் அவர்களால் வெளியிடப்பட்ட விவேகி, 1966 களில் செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் இருவரையும் இணை ஆசிரியர்களாக இணைத்துக் கொண்டது. 1966 1970 வரையிலான காலகட்டத்தில் விவேகி தரமான சிறுகதைகள் பலவற்றைப் பிரசுரித்துள்ளது. 1964 இல் டொமினிக்ஜீவாவின் அயராத முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட மல்லிகை 35 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறுகதைத்துறைக்குப் பெரும்பங்களிப்புச் செய்து வருகின்றது. அருண்மொழியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தேனகுவி சிறிது காலமே வெளிவந்தாலும் சிறுகதை இலக்கியத்திற்குப் பங்களிப்புப்புரிந்
I61 (11)

Page 90
Rejši figlioj GljevIgl “செங்கை ஆழியான்"
துள்ளது. சரவணையூர் மணிசேகரனின் தமிழமுது என்ற சஞ்சிகை (1970) சில இதழ்களே வாழ்ந்தாலும், நல்ல சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. அன்புமணியை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த இலக்கிய ஏடான மலர் (1970) சிறுகதை இலக்கியத்திற்குத் தரமான சில சிறுகதைகளை இனங்கண்டு வழங்கியுள்ளது. ஏ.எம். செல்வராசாவின் அஞ்சலி, தமிழக சஞ்சிகைகளுக்கு நிகராக வெளிவந்து தரமான சிறுகதைகளை வெளியிட்டது. சுந்தரின் சிரித்திரன், செ. கணேசலிங்கத்தின் குமரன், கனகபாலசுப்பிரமணியத்தின் கலசம், எம். ஏ. ரஹற்மானின் இளம்பிறை தேசியகலை இலக்கிய பேரவையின் தாயகம், அ. யேசுராசாவின் அலை, டானியல் அன்ரனின் சமர், செம்பியன் செல்வனின் அமிர்தகங்கை ஆகிய சஞ்சிகைகள் ஈழத்துச் சிறுகதை உலகிற்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகள் பலவற்றினை வெளியிட்டுள்ளன.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் சுதந்திரன் தாபனத்திலிருந்து வெளிவந்த சுடர் என்ற சஞ்சிகைக்குத் தனியிடமுள்ளது. 1970 - 1980 களில் தோற்றம் பெற்றது, புது எழுத்தாளர்களை நன்கு இனங்கண்டு அவர்களின் சிறுகதைகளை அது வெளியிட்டது. சரோஜினி கைலாசபிள்ளையை ஆசிரியையாகக் கொண்டு வெளிவந்த மாணிக்கம், கே.வி.எஸ் மோகனை ஆசிரியராகக் கொண்ட கதம்பம் என்பன சிறுகதை வளர்ச்சிக்கு உதவிபுரிந்துள்ளன.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றின் புத்தொழுச்சிக்காலத்தின் சிறுகதைகளை எண்ணிக்கையளவிலும், தர அளவிலும் அகலமாயும் ஆழமாயும் பரிணமிப்பதற்கு மேற்குறித்த காரணிகள் உதவிபுரிந்துள்ளன.
5.3. சிறுகதைப்படைப்பாளிகள்
ஈழத்துச்சிறுகதை இலக்கிய வரலாற்றின் புத்தெழுச்சிக்காலச் சிறுகதை (1961 - 1983) ஆசிரியர்களாகப் பலரை இனங்கான முடியும்.
5.3.1. முன்னோடி சிறுகதையாசிரியர்கள்
5.32. 1960/1970 தசாப்த சிறுகதயாசிரியர்கள்
5.3.3 1970/1981) தசாப்த சிறுகதையாசிரியர்கள்.
162

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” 5.3.1 முன்னோடி சிறுகதையாசிரியர்கள்
1930 - 1949, 1950 - 1960 காலகட்டங்களில் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு முன்னோடிகளாக விளங்கிய வரதர், சொக்கன், நந்தி, டொமினிக்ஜீவா, கே.வி.நடராஜன், அ.செ.மு, எஸ்.அகஸ்தியர், சிற்பி, இ. நாகராஜன், கனகசெந்திநாதன், சு.வே. ஆகியோர். 1964 - 1983 மறுமலர்ச்சிக்காலத்திலும் தொடர்ந்து எழுதியுள்ளனர். வரதர் மல்லிகையில் எழுதிய சீதனம், தென்றலும் புயலும், விவேகியில் எழுதிய காதலென்ன கத்தரிக்காயா?, கடவுள் இருக்கிறாரா? ஆகிய சிறுகதைகள் இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்கவை. புத்தொழுச்சிக்காலகடடத்தில் சொக்கன் எழுதிய குரு, இழப்பு, மாற்றம் ஆகிய மூன்று சிறுகதைகள் விதந்துரைக்கத்தக்கன. இவற்றில் “இழப்பு மகாபாரதத்தின் ஒரு சிறு துணிக்கையை மிகக் கம்பீரமான உரைநடையில் விபரிக்கின்ற நல்லதொரு கதை. கே.வி.நடராஜன் இக்காலகட்டத்தில் எழுதிய கள்ளும் கருப்பநீரும், ஊரும் உலகமும் என்ற இரு சிறுகதைகள் மனிதவுணர்வுச் சித்திரங்களாகவுள்ளன. டொமினிக்ரீவாவின் சிறுகதை இலக்கியப் பங்களிப்பாக சமூக பொம்மைகள், உவர்த்தரையில் கள்ளிச்செடிகள் பூக்கின்றன என்ற இருசிறுகதைகளைக் குறிப்பிடலாம், அ.செ. முருகானந்தனின் சோமவதை, கன்னிநிலா என்பனவும், கணகசெந்திநாதனின் சரமகவி, தரிசனம், பெரியமின் என்பனவும், இ.நாகராஜனின் நான், பலிபீடம் என்பனவும் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. சிற்பரியின் சோறும் மானமும் இக் காலகட்டத்து நல்ல சிறுகதைகளிலொன்று. சு.வே.யின் வெறி, எஸ்.அகஸ்தியரின் ஒரு நெஸ்பிறே, இருசிநேதிகள் ஆகிய இரண்டும் இதே வரிசையில் சேர்த்துக் கொள்ளத்தக்கன என்பேன். பொதுவாக இந்த முன்னோடிகளின் சிறுகதைகளில் வளர்ச்சி முதிர்ச்சியைக்கான முடிகின்றதெனினும், அவர்கள் ஏற்கனவே படைத்தளித்த சிறுகதைகளின் வீச்சுக்கு ஒப்பிடக் கூடியனவாகவில்லை என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
1947இல் எழுத ஆரம்பித்த நந்தி, முற்போக்கு காலகட்டத்திலும் எழுதியதோடுநின்றுவிடாது, புத்தெழுச்சிக் காலகட்டத்திலும் (1961 1983) தொடர்ந்து எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒரு இரவும் பகலும், அசுரனின் தலைகள். அடிவளவு அன்னவின்னா, கண்டறியாதன. கண்களுக்கு அப்பால் முதலான சிறுகதைகளை இக் குறித்த காலகட்டத்தில் படைத்துள்ளார். “குறிப்பாக வர்க்க முரண்பாடு, சாதி
163

Page 91
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
ஏற்றத்தாழ்வு, இனவுணர்வு என்பன இக்காலப்பகுதியில் நந்தியின் சிறுகதைகளில் முக்கியத்துவம் பெற்றன. “ஒருபகலும் ஒரு இரவும் என்ற கதை உயர்பதவி வகித்து ஒய்வுபெற்ற ஒருவர் சமயப்போர்வையில் தம் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை அங்கதச்சுவையுடன் எடுத்துக் காட்டுவது. தினகரனில் வெளிவந்த ‘அசுரனின் தலைகள் என்றகதை யாழ்ப்பாணத்திலே சாதிமுறைபெற்றுள்ள இறுக்கத்தையும் சமகால தேவைகளால் அதனைத் தளர்த்த நேர்ந்தாலும் அசுரனின் தலைகள்போல அது வெட்டவெட்ட புதுவடிவில் தழைப்பதையும் உணர்த்துவது. வீரகேசரியில் வெளிவந்த கண்களுக்கு அப்பால் என்ற கதையும் சாதிமுறையின் படி தளராதிருப்பதைக் காட்டுவதே. மலையக சமூகமாந்தரை மூன்றாந்தர நிலையில் புறக்கணிக்கவும், அவர்களது சிறுமியரை, அடிமை கொள்ளவும் முற்படும் யாழ். சமூகமாந்தர் சிலரின் உளப்பாங்கினை விமர்ச்சிக்கும் வகையில் எழுதப்பட்ட கதைகளே அடிவளவு அன்னமின்னா, ஷ"க்ரன், சரஸ்வதியின் வேண்டுகோள் என்பன"
நந்தியின் கதைகளில் சமூக அவதானிப்பும், சமூகவிமர்சனத்தோடு கூடிய இலக்கியத்தேடலும் இருக்கும்.
நீர்வைப்பொன்னையனின் (1970களில் எழுதிய சிறுகதைகள் ஈழத்துச்சிறுகதை வரலாற்றிற்கு பங்களித்துள்ளன. முற்போக்குக் காலகட்டத்து அவரது சிறுகதைகளைவிட (மேடும் பள்ளமும்). இக்கால கட்டத்துப் படைப்புக்கள் (பாதை) உள்ளடக்கச் சிறப்போடு, செப்பமான வடிவச்சிறப்பையும் கொன்டிருப்பதோடு, பிரச்சாரச் சுலோகம் சிறுகதை இலக்கியத்தின் கலைவடிவை மீறி அதிகம் தொனிக்கவில்லை என்பதும் முக்கியமான விடயங்களாம். சுரண்டப்படுகின்ற மக்களின் விடிவிற்காகவே அவரது எழுத்து என்ற மூலக்கரத்தில் எதுவிதமாறுதலையும் அவரது இக்காலச் சிறுகதைகளில் காணமுடியாது. சுருதிபேதம், வேப்பமரம், மலைசாய்கிறது, யுகபுருஷர்கள், எரிசரம், ரத்தச்சுவட்டில் ஒரு அடி, புதியதலைமுறை, உலைக்களம், நியதி, ஞானஸ்தானம், பாதை முதலானவை இவ்வகைச்சிறுகதைகளாகவுள்ளன. தான் வரித்துக் கொண்ட கொள்கைக்காக காதலைத் தியாகம் செய்யும் இளைஞனை சுருதிபேதம் சிறுகதையில் சந்திக்கின்றோம். சாதியத்தின் படிப்படியான அழிவை மலைசாய்கிறது சிறுகதையிலும், தொழிலாளரின் போராட்டமுனைப்பை ரத்தச் சுவட்டில், ஒரு அடி, புதிய தலைமுறை, உலைக்களம் ஆகிய சிறுகதைகளிலும் காணலாம். நீர்வைப்பொன்னைபதனின் சிறுகதைகளில் இச்சமூகம் எப்படியிருக்க வேண்டுமென்ற கனவுகள் தொக்கிநிற்கின்றன.
164

ஈழத்துச் சிறுகதை வரலாறு - - “GrúD Mai”
காலத்தின் போக்கு அவரது கனவுகளின் நனவு நடப்புகளை நோக்கியதென்பதை மறுப்பதற்கில்லை.
5.3.2. 1960/1970 தசாப்த சிறுகதையாசிரியர்கள்
1960/1970 காலகட்டத்தில் சிறுகதையாசிரியர்களாக நுழைந்து, இன்று தரமான படைப்பாளிகளாகத் தம்மை இனங்காட்டிநிற்பவர்களென செங்கை ஆழியான், செம்பியன்செல்வன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், க. பரராஜசிங்கம், குந்தவை, சிதம்பரபத்தினி, அங்கையன், பெனடிக்ற்பாலன், கே.எஸ்.சிவகுமாரன், துவைத்திலிங்கம், மு. கனகராசன், என். எஸ் .எம். ராமையா, மு. பொன்னம்பலம், முனியப்பதாசன், தையிட்டி அ. இராசதுரை, தெளியவத்தையோசெப், பூரணி, ஆரையம்பதி அ. தங்கராஜா, பா.பாலேஸ்வரி முதலானோரைக் குறிப்பிடலாம்.
5.3.2.1 செங்கை ஆழியான்
ஈழத்தின் சிறுகதை இலக்கியவரலாற்றில் செங்கைஆழியானின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சிறப்புப் பட்டதாரியான செங்கை ஆழியான் கலாநிதிப்பட்டம் பெற்றவர். ஈழத்தின் புகழ்பூத்த நாவலாசிரியர். செங்கைஆழியான் - குணராசாவின் சிறுகதைகள். 1960களிலிருந்து ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, மலர், கதம்பம், மாணிக்கம், வீரகேசரி, தினகரன், மல்லிகை, தாமரை, சுபமங்களா, கணையாழி, கலைமகள், ஆனந்தவிகடன் முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இதயமே அமைதிகொள், யாழ்ப்பாண இராத்திரிகள் என்னும் செங்கைஆழியானது சிறுகதைத்தொகுதிகளில் 1960 - 1983 காலகட்டத்துச் சிறுகதைகளும் இடம் பிடித்துள்ளன. திக்விஜயம், கேவலம் நாய்கள், சிப்பியும் முத்தும், உச்சிப்பொழுது, யாககுண்டம், நினைவின் ஒரம், விளைபூமி, இயற்கையின் கர்ப்பம், ராசாத்தி, வேள்வித்தி என்பன செங்கை ஆழியானின் முதற்கட்டச் சிறுகதைகளாகும். உப்பங்கழி, வல்லூறுகள், ஒரு கிராமத்தின் பன்னிராயிரம் நிர்வான வயிறுகள், அறுவடை, ஒன்றும் இரண்டும், கங்குமட்டை, செருப்பு முதலான சிறுகதைகள் அடுத்த கட்டச் சிறுகதைகளாம்.
*இலக்கியம் வாசிக்கப்படல் வேண்டும் என்பது ஆசிரியரின்
கருத்து. வாசகர்களைக் கவரத்தக்க கதை சொல்லும் பாணி -
தங்குதடையின்றிச் சரளமாக ஓடும்மொழிநடை போன்ற அம்சங்கள் 165

Page 92
#ựjöĩ f#hö)} ìIII **2ᎫᏂlᎸ)Ꮠ ᎯufIllsiᎢ அவருக்குக் கணிசமான வாசகர் வட்டத்தை உருவாக்கிக்கொடுத்திருக் கின்றன. செங்கை ஆழியான் வினைத்திறன் மிக்க கலைஞன்” செங்கை ஆழியான், தன் வாழ்க்கையில் தரிசிக்கின்ற சமூகவாழ்க்கையின் பல்வேறுமட்டங்களில் உணரப்பட்டவர்களை தன் கதைகளின் பாத்திரங்களாக்கியுள்ளார். யாழ்ப்பாணம், வன்னி முதலான கிராமப் புறங்களில் கடமையாற்றிப் பெற்ற ஆனுபவங்கள் சிறுகதைகளாகியுள்ளன.
செங்கைஆழியானின் சிறுகதைகளில் பாத்திரவார்ப்புகள் மிகவும் யதார்த்தமானவை. வாழ்க்கையின் தரிசனத்தையும் படைப்பனுபவத்தையும் அவரது சிறுகதைகளில் காணலாம். ஆசிரியரது நடை கதைப்பொருளுக் கேற்ற வலுவுடையதாக உள்ளது. செங்கை ஆழியானின் சிறுகதைகளில் இருபிரதேசங்களான யாழ்ப்பாணமும் வன்னிக்காட்டுப் பிரதேசமும் பகைப்புலங்களாக வரும். சிறுகதை மாந்தரும் அப்பிரதேசத்திற்குரிய வர்களே. வன்னிப் பிரதேச மாந்தர்களின் வாழ்வின் அவலங்களை செங்கை ஆழியானின் சிறுகதைகள் நன்கு சித்திரிக்கின்றன.
செங்கை ஆழியானின் 1960 - 1983 காலகட்டத்துச் சிறுகதைகளில் யாககுண்டம். உப்பங்கழி, அறுவடை ஆகிய சிறுகதைகள் ஈழத்துத் தரமான சிறுகதைகளாகக் கொள்ளப்படத்தக்கவை. வயோதிபர் மட்டத்தில் சேர்க்கப்படும் சாம்புத்தாத்தாவின் மனவுணர்வுகளையும், சமூகம் அவருக்கு இழைத்துள்ள தனிமையையும் யாககுண்டம் சித்திரிக்கின்றது. “பிள்ளைகள் இருக்கிறவர்கள் அநாதைகளாக வருவதில்லையா? என்கிறார். "தனது சமுதாயத்துள்ளே ஒதுக்கப்பட்ட சிறிய ஒரு சமுதாயமாக வயோதிபர்கள் ஒதுங்கிப்போய்விடட்டும் என்ற தோரணையில், கட்டிக் காப்பாற்றி வளர்க்கின்ற வயோதிபர் இல்லங்கள் உண்மையில் நாகரிகத்தின் சின்னங்களா என்ற வினாவைத் கதையினூடே மருவ விட்டிடுக்கிற செங்கைஆழியான், வெறெந்தச் சிறுகதையாசரியனுமே தொட்டிராத ஒரு பிரதேசத்தை தொட்டு, சமுதாயத்தைப் பற்றியிருக்கிற 'கான்சர் ஒன்றைப் புட்டுக்காட்டுகிற முதல் சிறுகதையாசிரியன் ஆகிறார்" யாககுண்டம் நல்லதொரு சிறுகதை.
‘உப்பங்கழி வறியமக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு ஏமாற்றுக் கும்பலைப்படம் பிடித்துக் காட்டுகின்ற சிறுகதை, தன்படுவான் உப்பு களப் பிலே விளைகிறது. அதனை அள்ளிவிற்றுத்தம் வறுமையை நீக்கக் கிராமத்தவர்கள் கனவு காண்கிறார்கள். விதானையார் லொறியுடன் வந்து சட்டம்பேசி, உப்பை அவர்களைக் கொண்டே அள்ளி ஏற்றுவிக்கின்றார்.
166

ஈழத்துச் சிறுகதை வரலாது “செங்கை ஆழியன்” இவருடைய ஏமாற்றை சுப்புறு என்ற இளைஞன் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறான். உப்பேற்றிய லொறி பறப்படுகிறது. சுப்புறு கல்லொன்றால் அதனைத் தாக்குகிறான். “இறங்காதை, கவனியாதது போல லொறியை எடு" என்கிறார் விதானையார். இக்கதையை செங்கை ஆழியான் மிக்க அவதானிப்புடன் விபரித்திருக்கின்றமை நோக்கத்தக்கது.
*செங்கை ஆழியானின் பிச்சைக்காரன் ஆக்க வேண்டாம் என்ற
சிறுகதை கருத்திலும் கலைநயத்திலும் சிறப்பிடம் பெறுகிறது. உழைப்பவனின் பெருமையையும் கம்பீரத்தையும் வலியுறுத்தும் படைபப்பு" செங்கை ஆழியானின் ‘அறுவடை விவசாயப் பயிர் நீரின்றி அழிவதைக்கண்டு ஏழைவிவசாயி குமுறுவதைச் சித்திரிக்கும் இக்கதை. அதிகார வர்க்க மனோபாவத்தை எதிர்க்க வேண்டுமென்ற ஆவேசத்தை தூண்டுகிறது. ஓர் உழவனின் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அவனது நற்பண்புகளையும் உயர்த்திக் காட்டும் கதை".
*செங்கை ஆழியானின் சிறுகதைகள் சுமந்து வரும் சமூகச்செய்திகள், சாதரான மக்கள்படும் தாங்கொனா இன்னல் களுக்கிடையில் அவர்கள் மனதில் ஏற்படும் எதிர்காலத்தைப் பொறுத்த நம்பிக்கை ஒளிக்கிற்றுக்களாகவுள்ளன. இவற்றை மையமாக வைத்து அவரால் வடிக்கப்பட்ட எழுத்துக்களாக இருப்பதால் இவை உண்மையானவை, சத்தியமானவை."
53.22 செம்பியன் செல்வன்
செம்பியன் செல்வன் இராஜகோபல் பேராதனைப் பல்கலைக்கழகச் சிறப்புப்பட்டதாரி. தனித்துவமான ஓர் இலக்கியச் செல்நெறியைத் தனக்கென அமைத்துக் கொண்டவர். மார்க்சிய முற்போக்குவாதத்தின் “சுலோகப்பிரயோகப் படைப்புகளைக் கடுமையாக விமர்சிப்பவராக விளங்கினார். ‘இலக்கியம் என்பது ஒரு கலைசார்ந்த சமூக சீர்திருத்தமாகும். கலை சமூகமாற்றத்தை உருவாக்கும். சமூக மாற்றம் கலைவடிவங்களை மாற்றியமைக்கும்" என்பது அவரின் கருத்தியல்நிலை, “என் எழுத்துக் காலத்தை உணர்த்தி நிற்கவேண்டும்" என்கிறார். செம்பியன் செல்வனின் சிறுகதையாளர் (அமைதியின் சிறகுகள்), குறுங் கதையாளர் (குறுங் கதைகள் நுாறு), 5 Tsso Tiffuti (நெருப்புமல்லிகை, விடியலைத்தேடும் வெண்புறாக்கள்), நாடகாசிரியர்
167

Page 93
Rj šphob eljev J 'சங்கை ஆழியான்” (மூன்றுமுழுநிலவுகள், இந்திரஜித், சின்னமீன்கள்), விமர்சகர் (ஈழத்துச் சிறுகதை மணிகள்). இதழாசிரியர் (விவேகி, அமிர்தகங்கை), தத்துவார்த்தி (நாணலின்கீதை) எனப்பலபரிமாணங் கொண்டவர்.
ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு 1960 - 1983 காலகட்டத்தில் அவர் அளித்த முதற்கட்டப் பங்களிப்பு அதிகம். யதார்த்த பூர்வமான, மண்ணோடிணைந்த, தமிழ்த்தேசியத்தை நேசித்த மக்களிலக்கிய படைப்புகள் அவை. மக்களிலக்கியம் என்பதற்கு அவர் வரித்துக் கொண்ட அர்த்தமே வேறு. பேச்சு வழக்கையும், சூழலையும், தொழிலையும் சித்திரிப்பது மடடும்தான் மக்கள் இலக்கியம் எனக் கருதுவது ஹமாலயத்தவறாகும். அக்காலத்து வாழ்வின் முக்கிய பிரச்சினைகளுக்கு அழுத்தங்கொடுத்து வரையப்படும் எந்த ஓர் இலக்கியமும் மக்கள் இலக்கியமாகும். மக்களுக்காக, மக்களின் நன்மை கருதி, மக்களில் ஒருவனாக வாழும் கலைஞன் ஒருவனால் பிறப்பிக்கப்படும் எந்த இலக்கியமும் மக்கள் இலக்கியமாகும்' என்கிறார்.
செம்பியன் செல்வன் எழுதிய சிறுகதைகளில் பாரம்பரியம், வர்க்கங்கள், பாதிமலர், இதயக்குமுறல், அமைதியின் சிறகுகள், நீரும் நிலமும், நெல், கிழக்கும் மேற்கும், நீரோட்டம், சர்ப்பவியூகம், பூவும்கனியும், ஒருஞாயிற்றுக்கிழமை, பழங்கட்டில் என்பன குறிப்பிடத்தக்கன. செம்பியன் செல்வனின் சிறுகதைகளின் தொகுப்பாக "அமைதியின் சிறகுகள் வெளிவந்துள்ளது.
“கலைச்செல்வி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினை "இதயக்குமுறல்’ என்ற சிறுகதை பெற்றது. அதன்பின் செம்பியன் செல்வன் ஈழத்தின் சிறுகதையாளர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். ‘ஒருசிறுவன். ஒரு இளம்பெண். அவர்கள் வாழ்க்கை விந்தையானது. அவள் இளவயதில் பருவக்கோளாறால் பாதிக்கப்பட்டு நம்பியவனால் கைவிடப்பட்டு, கர்ப்பிணியான அப்பெண்ணின் அவமானத்தை உலகிற்கு மறைக்க, அவள் தகப்பனாரே தன்பேரனை, தன்மகனாகப் பதிவுசெய்து வளர்த்து வர - மகன் சொந்தத் தாய்க்குத் தம்பியாகிய கொடுமையை* இதயக்குமுறல் விபரிக்கிறது. “பெண்கள் தம் வாழ்வில் வழுக்குவதாலே பல இடர்பாடுகளை அடைகின்றனர். இதயக்குமுறல் எனும் சிறுகதையின் ஆசிரியர் இத்தகைய ஒரு பெண்ணுடைய எண்ணங்களைத் துன்பக்குழம்பில் தோய்த்து முறித்து முறித்து சிறு சொற்றொடர்களாக வெளிப்படும் அருமைப்பாடு போற்றுதற்குரியது? கதைப் பொருளுக்கேற்ற நடையை ஆசிரியர் இச்சிறுகதையில் கையாண்டுள்ளார். 168

ஈழத்துச் சிறுகதை வரலாறு “சேங்கை ஆழியான்”
"இதயக்குமுறல், அமைதியின் சிறகுகள், நீரும் நிலமும், நெல் ஆகியன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறக்கின்றன. ஈழத்தமிழ் வாழ்வு, இன்றைய பல்வேறு நிலைகள். இவை கதைகளுக்குப் புலமாகத் திறம்படக் கையாளப்பட்டிருப்பதே இக்கதைகளின் சிறப்புக்கு முக்கிய காரணம். “நெல்லில் வரும் மாப்பிள்ளைக்கந்தரையும், நீரும் நிலமும் சின்னரையும் படைத்த பாங்கு சிறப்பானதுச் செம்பியன் செல்வனின் சர்ப்பவியூகம் சிறுகதை மல்லிகையில் வெளிவந்தது. அது செம்பியன் செல்வனைச் சிறுகதை வரலாற்றின் இரண்டாம் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது எனக் கருதுகின்றேன். வன்னிப்பிரதேசச் சூழலில் வீறு கொண்டெழும் தொழிலாளிகளை இயற்பண்பு மீறாது சர்ப்பவியூகத்தில் சித்திரித்துள்ளார்.
5.3.2.3 செ. கதிர்காமநாதன்
1961 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முகிழ்த்த படைப்பாளிகளுள் செ. கதிர்காமநாதன் ஒருவர் ‘கலையும் இலக்கியமும் மக்களுக்காக என்ற கோட்பாட்டைத் தழுவியவர். ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்ககையின் பிரதிபலிப்புகளும் விளைவுகளுமே அவர் கதைகளின் உள்ளடக்கம்”. 1959இல் எழுத ஆரம்பித்த செ. கதிர்காமநாதனின் முதலாவது சிறுகதை ‘சவலை ஆகும். அவரின் பெரும்பாலான கதைகளுக்கு யாழ்ப்பாணக் கிராமங்களே பகைப்புலம். கிராமிய மக்களின் சமூக பொருளாதார அமைப்பில் சாதியும் நிலமும் கீழ்மட்ட அரசாங்கத் தொழில்களும் மிக முக்கியமான அம்சங்கள் இவற்றினைக் கதிர்காமநாதனின் சிறுகதைகள் சித்தரிக்கின்றன. 1942இல் பிறந்த கதிர்காமநாதன் தனது பதினெட்டாவது வயதில் “எல்லாம் உனக்காக என்ற சிறுகதை மூலம் கலைச்செல்வியூடாகச் சிறுகதை உலகில் பிரவேசித்தார். அதனை அடுத்து இளங்கதிர், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். கொட்டும்பனி, தாய், யாழ்ப்பாணம் இங்கே வாழ்கிறது. நிந்தனை, அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கட்டும், சில்லொன்று பூத்த, ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்கிறான். வெறும் சோற்றுக்கே வந்தது, அதனாலென்ன பெருமூச்சுத்தானே, அழுவதற்கும் சிரிப்பதற்கும், ஒரே குடிசையைச் சேர்ந்தவர்கள், குளிர்சுவாத்தியம் ஒத்துவராது, சோழகம், எட்டுமாதங்கள் முதலான சிறுகதைகளை செ. கதிர்காமநாதன் தனது 35 வருட வாழ்க்கைக்குள் எழுதியுள்ளார்.
169

Page 94
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" *தாய் மொழிக் கல்வியின் முதல் அறுவடையாக வந்தபட்டதாரிக் கூட்டத்தில் ஒருவரான செ. கதிர்காமநாதன் புதிய சிந்தனைத் திறனுடன் பேச்சு மொழியில் கதைபடைத்து வெற்றி கண்டார். வசனமென்ற கருவியை நிதானமாகக் கையாண்டுள்ளார்.”* கதிர்காமநாதனின் சிறுகதைகள் பல்கலைக்கழக வெளியீடான கதைப் பூங்கா, விண்ணும்மணன்னும் நூல்களிலும், கொட்டும்பனி என்ற சிறுகதைத் தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. 'மூவர் கதைகள்' என்ற தொகுதி யிலும் செ. கதிர்காமநாதனின் மூன்று சிறு கதைகள் வெளிவந்துள்ளன.
செ. கதிர்காமநாதனின் சிறுகதைகளில் ஒரு கிராமத்துப்பையன் கல்லூரிக்குச் செல்கிறான். அதனாலென்ன பெருமூச்சுத்தானே ஆகியவை சிறப்பானவை. ஆசிரியரின் படைப்பனுபவத்தினை ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்கிறான் கதையில் பாவிக்கலாம். சாதியத்தைப் பிராச்சார வாடையின்றி கலாபூர்வமாக 'அதனாலென்ன பெருமூச்சுத் தானே'யில் விபரித்துள்ளார்.
5.3.2.4 செ. யோகநாதன்
ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகளில் செ. யோகநாதன் முக்கியமானவர். பேராதனைப் பல்கலைக்கழகம் 1960 - 1964களில் வெளிக் கொணர்ந்த முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். தமிழகம் நன்கு அறிந்த ஈழத்து எழுத்தாளர்களில் முக்கியமானவர். தமிழகத்தின் இலக்கியப் பரிசில்களைப் பெற்றுக் கெளரவிக்கப்பட்டவர். இவரின் சில சிறுகதைகள் ருஷியன், ஜெர்மன், சிங்களம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1962களில் செ. யோகநாதனின் முதல் சிறுகதையான 'மனக்கோலம்' கலைச் செல்வியில் பிரசுரமாகியது. அதனையடுத்து சோளகம், வடு, கலைஞன், மலரும் கொடியும், நிறங்கள், புதியநட்சத்திரம், ஆகிய சிறுகதைகள் படைக்கப்பட்டன. செ.யோகநாதனின் சிறுகதைகள் வெளிவராத ஈழத்து தமிழகத் தமிழ்பத்திரிகைகள் எதுவுமில்லை. யோகநாதனின் சிறுகதைகளின் தொகுதி 1964 இல், யோகநாதன் கதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
“யோகநாதன் அரசியல் மூலம் இலக்கியத்திற்கும் இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கும் அறிமுகமானவர். சகல ஒடுக்கு
170

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆறுன.
முறைகளுக்கும் எதிராக எழுதிவருவர்.* ஆரம்பத்தில் மொழியுலாவு, இனவுணர்வு மிக்கவராகத்தமிழரசுக் கட்சியால் கவரப்பட்டிருந்தார். பின்ன? தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலீடுபட்டு மார்க்சிய முற்போக்கு வாதி - கி
தேசியம் , மணி வாசனை. யதார்த் தம் ஆகிய க நத, து நிலைகளுக்குட்பட்டிருந்தார். 1983 களின் பின்னர் மீண ந், !
தமிழ்த்தேசியவாதம் அவரது சிறுகதைகளில் ஆழவேரூன்றியுள்ளதைக் 36 si6006)|TLD.
செ. யோகநாதனின் சிறுகதைகள் சமூக வாழ்க் ை4, விமர்சனங்களாக விளங்குகின்றன. முரண்பாடுகளை அவ: குத்திக்காட்டுகின்றார். அல்லது எள்ளி நகையாடுகின்றார். பாத்திரங்களின் மனவோட்டத்தில் தாமும் சேர்ந்து அவற்றின் அகவுலகங்களில துழாவுகிறார். சொற்களை ஆளும் சக்தி பெற்றமையைப் பலவிடங்களில காட்டுகின்றார். பொருத்தமான படிமங்களையும், உவமை உருவகங்களையும் அழகாகப் பயன்படுத்துகின்றார். வாசகர் கற்பனைக்குட போதிய இடம் கொடுக்கின்றார். கவிதைலயமான மொழிநடையில் லாகிரி மயக்கத்தையிடையிடையே தருகிறார்:* செ. யோகநாதனின் 1964 1983 கால கட்டத்துச் சிறுகதைகளில் சோளகம், வடு ஆகிய இரண்டு சிறுகதைகள் ஈழத்துத் தரமான சிறுகதைகள் வரிசையில் சேர்க்கத்தக்கன. மீனவக் குடும்பம் ஒன்றின் ஏழ்மையையும், குடிகாரக் கணவனின் பொறுப்பற்ற போக்குகளையும் யோகநாதன் சோளகத்தில் சித்திரிக்கிறார். சோளகத்தின் வறட்சியை அக் குடும்பத்திலேற்றி, சமூகப்பிரக்ஞையோடு விபரித்துள்ள பாங்கும், சூழலுக்கேற்ற உவமைகளும் இச் சிறுகதையைச் சிறப்புற வைத்துள்ளன. ஒரு தலைமுறையின் புதியமாற்றத்தையும் சமூகப்புரிதலையும் "வடு சிறுகதை விபரிக்கின்றது. பொலிசாரால் கைதாகின்ற அயற்பையன்’ கடிதம் எழுதுவதைக்கைவிட்டு காணாமற் போகின்ற மைத்துனன், கொழும்புக்குப் போனால் அகதியாக வேண்டு மெனக்கூறும் மகள் ஆகியோரினுடாக இன்றைய சமூகத்திக் காயங்களை செ. யோகநாதன் வடுவில் அற்புதமாகச் சித்திரித்துள்ளார். தவிர்க்க முடியாத தலைமுறை மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
5.3.2.5 க. பரராஜசிங்கம் (துருவன்)
பேராதனைப் பல்கலைக்கழகச் சிறப்புப்பட்டதாரியான க. பரராஜசிங்கம், துருவன் என்ற பெயரில் கலைச் செல்வியில் நகைச் சுவைக்கட்டுரைகளை எழுதி எழுதுலகிற்கு அறிமுகமானவர். சொற்ப
171

Page 95
ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியான்” எண் ணிக் கையில் சிறுகதைகளை எழுதியிருந்தாலும் , மனதைக்கவரக்கூடிய விதத்தில், இந்த மண்ணின் வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்தரித்துள்ளார். குருடு, விளம்பழம், வாய்க்கால், வியாபாரம், பூ, நானும் ஒருவன் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். திருமணமாகி ஏழு மாதத்தில் குழந்தையைப் பெற்ற மனைவியைப் பற்றி, ஊரார் வசைமொழியை, ‘நான் கலியாணத்துக்கு முந்தியே அவ்விட்டை போய்வந்தனான்’ எனப்பொய் கூறி, ஊரார் வாயை அடைக்கும் கந்தையா பூ சிறுகதையில் சித்தரிக்கப்படுகிறார். சுருட்டுக் கொட்டில் ஒன்றின் சூழலில் கலைநயத்தோடு பூ வடிக்கப்பட்டுள்ளது. சின்னக்கடை வியாபாரப் பெண்களை தத்ருபமாகப்படம் பிடித்தக் காட்டும் கதை விளாம்பழம். கடினமான ஒட்டுக்குள்ளே இளகியகணி இருப்பதுபோன்றவர்கள், இக்கதையில் சூழலுக்கு ஏற்ற உவமை உருவகங்களை ஆசிரியர் கையாண்டுள்ளார். கடற்கரையில் மல்லாக்காகக் கிடத்திய ஆமை அடிக்கடி மூச்சு விடுவதைப்போல. சுறாத்தண்டுபோல பதமான இரண்டு துண்டு மரவள்ளிக் கிழங்குகளை. இவைபோல இலக்கியநயமான நடை பரராஜசிங்கத்திற்குக் கைவந்த கலை. இக்கதையில்வரும் உரையாடல்கள் மிக அம்மணமாக சுவையாக விழுந்துள்ளன. க. பரராஜசிங்கத்தின் சிறுகதைகளில் மிகவும் தரமானதும், ஈழத்துச் சிறுகதைகளின் வரிசையில் நிச்சயம் சேர்க்கப்படவேண்டிய ஒரு சிறுகதை வியாபாரம் ஆகும். இது ஈழநாட்டில் வெளிவந்தது.
பேப்பர் விற்கின்ற பையன் ஆறுமுகம் யாழ்ப்பாணத்துச் சுவையான செய்திகள் வரும்போது அதனை குரலெழுப்பிச் சொல்லி விற்பனையைக் கூட்டுவதில் ஆறுமுகம் வல்லவன் சிலவேளைகளில் சுவையான செய்தி கிடையாது விட்டால் வியாபாரம் நன்கு நடைபெறாது. “சீ.. அந்தப் பெட்டையை மாதிரி நேற்றும் ஆரும் இஞ்சினேக்கை மருந்து குடிச்சுச் செத்திருந்தால் இண்டைக்கு என்ன கலாதரியாயப் யாபாரம் செய்திருக்கலாம்? தாய்கேட்ட பச்சைலங்காச்சேலையை வாங்கிக்கொண்டு வருபனுக்கு, சந்தியிலே யாரையோ ‘கார் அடிச்சுப்போட்டுது என்ற செய்தி மகிழ்வைத் தருகிறது. “நாளை வியாபாரத்துக்கு நல்லதொரு செய்தி’ ஆனால் சாவைச் சொல்லி வியாபாரம் செய்ய மறுநாள் அவன்வரவில்லை, என இச்சிறுகதைமுடிகிறது. கார் அடித்துப்பலியாகியது அவன் தாய். இச்சிறுகதையைப் பரராஜசிங்கம் மிக நயமாக விபரித்துள்ளார். இந்த ஆற்றல் வாய்ந்த சிறுகதை ஆசிரியர் இளவயதில் மரணமானமை சிறுகதை உலகிற்குப் பெரும் இழப்பு.
172

ஈழத்துச் சிறுகதை வரலாறு “ao gia” 5.3.2.6 குந்தவை
ஈழம் பெருமைப்படக் கூடிய சிறுகதை எழுத்தாளர்களில் குந்தவை - சடாச்சரதேவி ஒருவர். பவானி போலப் பேராதனைப் பல்கலைக்கழகம் தந்த பெண் எழுத்தாளர். சிறுமைகளைக் கண்டுபொங்கி எழுத்தில் பதிவு செய்பவர். பல்கலைக்கழக மாணவநிலையிலேயே இவர் எழுதிய சிறுமைகண்டு பொங்குவாய் என்ற சிறுகதை ஆனந்தவிகடன் முத்திரைக் கதையாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இணக்கம், மனித தத்துவம், மீட்சி, தன்மானம் ஆகிய சிறுகதைகள் குந்தவையின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. நுட்பமான பகைப்புல அவதானிப்போடு எழுதப்பட்ட சிறுகதை இணக்கம். பெண்ணியக்கருத்துக்களை உரியவிடங்களில் விதைத்துள்ளது. யாழ்ப்பாணத்தவர் என்பதனால் சிங்களப்பிரிவுகளில் எழும் பிரச்சினைகளையும் இக்கதை சுட்டுகிறது. ‘தமிழர்" என்பதால் பின்தங்க நேரிடுவதையும் சுவையாக இணக்கம் சித்திரிக்கிறது. ஒரு சாளரத்தினூடாக ஒரு கடைத்தெருவைத் தரிசிக்கின்ற உணர்வை இணக்கம் தருகின்றது. மீட்சி ஒருவித்தியாசமான விபரணச்சிறுகதை. பல்கலைக்கழக கம்யூனிஸ்ட் மாணவர்களுடன் ஒருவனாகவிருந்து, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகும் போது ஒரு மாணவன் எதிர்நோக்கும் சிக்கல்களை இச்சிறுகதையில் குந்தவை சித்திரிக்கிறார். வழக்காடிச் சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்ட சித்தப்பன் மனம்மாறி தரவிரும்பும் பங்கை ஏற்கமறுக்கும் இளைஞன் ஒருவனின் கதை தன்மானம். குந்தவை 1980 பின் எழுதிய நல்லபல சிறுகதைகளைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் தமிழகச் சஞ்சிகையான கணையாழியில் இவர் எழுதிய யோகம் இருக்கிறது, இணக்கம், பெயர்வு என்பனவும், சுப்ரபாரதிமணியனின் கனவு சஞ்சிகையில் வெளிவந்த வல்லைவெளி என்ற சிறுகதையும் குந்தவைக்கும் ஈழத்துச் சிறுகதையுலகிற்கும் பெருமை சேர்ப்பவை ஆகும்.
5.3.2.7 சிதம்பரபத்தினி
சிதம்பரபத்தினி என்ற புனைப்பெயரில் 1963 களிலிருந்து சிறுகதைகளை எழுதிவரும் திருமதி பத்தினியம்மா திலகநாயகம் பேராதனைப் பல்கலைக்கழகச் சிறப்புப்பட்டதாரி. 1980களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெரும் இலக்கியப்புயலாக எழுந்த எழுத்தாளர் கூட்டத்தில் சிதம்பரபத்தினி ஒருவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
173

Page 96
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” இலக்கிய இயக்கங்களுள் சிக்காது, பேராசிரியர் வித்தியானந்தன், பேராாசியிர் கைலாசபதி ஆகியோரின் இலக்கியக் கருத்துக்களை உள்வாங்கித் தனக்கென ஓர் இலக்கியப் பாதையில் சிறுகதைகளை எழுதி வருபவர்.
"சிதம்பர பத்தினி சுதந்திரன், ஈழநாடு, தினகரன், நங்கை முதலான பத்திரிகைகளில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தெளிவு, மன்னிப்பு, அண்ணை, கல்லறை, எரியகம், அனர்த்தம். நிஜத்தின் நிழல், தெய்வம் யாவும், சுழல்பந்தம், உலகத்தின் கண்கள், காதலின் இரகசியம், உருமாறும் கருவறைகள், அக்கினிக் குண்டம், என்ன தவறு செய்தேன், பகுத்தறிவு, இளந்துறவி, மெய்ஞ்ஞானி முதலானவை அவர்னழுதிய சிறுகதைகள். சிதம்பரபத்தினியின் கதைகளில் தூக்கலாக நிற்கின்ற கருப்பொருள் காதல், குடும்பம், பெண்ணியம் என்பனவாம். உருமாறும் கருவறைகள், அக்கினிக்குண்டம் என்ன தவறு செய்தேன் என்பன பெண்ணியக்கதைகளாம். இளந்துறவி, பகுத்தறிவு, மெய்ஞ்ஞானி என்பன உருவகப்பண்பு வாய்ந்த சிறுகதைகளாம். ஏனையவை ரொமான்டிக் கதைகளாம். சிதம்பரபத்தினி தனது சிறுகதைகளில் பல்வேறு குணவியல்புகளையுடைய பெண்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நூலாசிரியர் ஒரு பெண்ணாகவிருந்தும் தான் தரிசித்த சமூகப்பெண்களின் குறைபாடுகளைத் துணிச்சலாக தன் சிறுகதைகளில் சுட்டிக் காட்டுகிறார். பகுத்தறிவில் வருகின்ற பல்கலைக்கழகப் பெண், தன் காதலன் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் பிரியப்போகிறானென வருந்தியழுகிறாள். சில நாட்களில் இன்னொரு காதலனுடன் வருகிறாள். மன்னிப்பில் வருகின்ற பிரேமா, விட்டில்களாக ஆண்களை விழச்செய்து இன்பம் துய்க்கிறாள். கலியாணமானதன் ‘பின்னரும் அவள் நடத்தை தொடர்கின்றது. உருமாறும் கருவறையில் கட்டிய கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்தும் பெண். இப்படிப் பெண்கள் சிலரின் ஒழுக்கக்கேடுகளை தத்ருபமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள சிதம்பரபத்தினி, தனது பல கதைகளில் பெண்மையின் சிறப்பினை எடுத்துக்காட்டியுள்ளார். அண்ணா என்ற சிறுகதையில் வருகின்ற குமுதினி தான் மனதில் வரித்தவன் தன்னைத் தமையனாக ஏற்கக் கூறியதால் அந்த நினைவுடன் வாழ்ந்து முடித்து விடுகின்றாள். சிதம்பரபத்தினியின் சிறுகதைகளில் ‘எரியகம், அக்கினிக்குண்டம், என்ன தவறு செய்தேன் ஆகிய சிறுகதைகள் உருவம். உள்ளடக்கம் என்பவனவற்றில் நல்ல சிறுகதைகளுக்குரிய பண்புகளைக்கொண்டவை. எரியகம் ஓர் உளவியற்
174

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” சிறுகதையாகும். சமகாலப் பிரச்சினையின் பெண் சார்ந்த உளவியற்றாக்கத்தை வெகு அற்புதமாகச் சித்தரிக்கின்றது. நன்றாகப் படித்து துறுதுறுப்பாகத் திரிந்த இளம் சிறுமி சந்தித்த, கேள்விப்பட்ட பாலியல் பாதிப்பு எவ்வாறு அப்பெண்ணின் வாழ்க்கையைப் பாதிக்கின்றதென்பதை எரியகம் விபரிக்கின்றது. நல்ல பாத்திர வார்ப்பு. பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த பெண்ணொருத்தி நிஜவாழ்வில் படும் அவலத்தை, எதிர் மறையான வாழ்க்கையை, அக்கினிக்குண்டம் சித்திரிக்கின்றது. அழகும் பணமும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டியவை. வேலைக்குப்போனவிடத்தில் வீட்டுப்பையனால் கள்ப்பவதியாக்கப்படும் பெண்ணொருத்தி இச்சமூகத்தில் போடும் எதிர் நீச்சல் என்ன தவறு செய்தேன் சிறுகதையாகும். இம்மூன்று சிறுகதைகளிலும் சிதம்பரபத்தினியின் படைப்பனுபவத்தினை உணர முடிகின்றது.'
சிதம்பரபத்தினி தனது கதைகளில் வைக்கின்ற சமூகச் செய்தி தெளிவானது. பெண்களின் ஒழுக்கம், ஆண்களின் ஏமாற்றங்கள், பெற்றோரின் சீதன ஆசை, பெண்விடுதலை, ஆண்களின் அடக்குமுறைகள் என்பன அவரின் சிறுகதைகள் ஊடாக முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
5.3.2.8 அங்கையன்
அங்கையன் - கைலாசநாதன் நல்ல சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலைக் கழகச் சிறப்புப்பட்டதாரியான அங்கையன் ஒரு நாவலாசிரியருமாவார். சுவடு, நெஞ்சுக்கு ஒரு நிறைவு, கவிப், நிலவு இருந்த வானம், நாதங்கள் பல கோடி, கலங்காதகண்கள் முதலியவை அங்கையனின் சிறுகதைகளாம். வைகறைநிலவு என்ற ஒரு கவிதைத் தொகுதியையும் கடற்காற்று என்ற ஒரு குறுநாவல் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். அங்கையனின் சிறுகதைகள் தனிமனித உணர்வுகளினூடாகச் சமூகத்தினை விமர்சிப்பனவாகவுள்ளன.
5.3.2.9 பெனடிக்ற்பாலன்
1964களில் பல்கலைக் கழகத்திற்கு வெளியே ஒரு சிறுகதையாளராக அடையாளம் காட்டிக் கொண்டவர் பெனடிக்ற்பாலன் என்ற மார்க்சிய முற்போக்குவாதி, அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவும், சுரண்டும்வர்க்கங்களுக்கெதிராகவும் தன் சிறுகதை
175

Page 97
Hypjbbi fghaj (Mšenou “செங்கை ஆழியாண்”
களில் பெனடிக்ற்பாலன் போர்க்குரல் தருகிறார். ‘பிற்போக்குக்கருத்துக் களை அம்பலப்படுத்துவதும் தொழிலாளிவர்க்க தத்துவார்த்தச் சிந்தனைகளைப் பிரபல்யப்படுத்துவதும் தனது சிருஷ்டியின் உந்தலாகும்* என்கிறார். உதிரிப்பாட்டாளி. இங்கெவர் வாழ்வோ, சுமைதாங்கி, மீண்டும் அழைக்கிறது, போரும் முடிவும், விபசாரம் செய்யாதிருப்பாயாக, மெழுகுவர்த்தி, தேயிலைப்பூ, மரியாயி ஒருமாடுதானே? உனக்கு இதுபோதும், கவரிமான்கள், பட்டத்துக்குரிய இளவரசன், ஒருபாவத்தின் பலி, கீழைக்காற்று முதலான சிறுகதைகளை 1963- 1983 காலகட்டத்தில் எழுதியுள்ளார். மலையக மக்களது வாழ்வை நிலைக்களனாகக் கொண்ட படைப்பு இங்கெவர் வாழ்வோ' என்பதாகும். ஏழைத்தொழிலாளி சம்பளம் வாங்குகிறான். எல்லாம் கழித்துப் பன்னிரண்டு ரூபா, பிள்ளைப் பேற்றிற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் மனைவி; பாடசாலைப்புத்தகம் வாங்குவதற்காகக் காத்திருக்கும் மகன். வழியில் கடன்காரர் அவனிடமிருந்து தம்பங்கைப்பிடுங்கிக் கொள்கிறார்கள். “டேய், பார்த்தியாடா, இதுதாண்டா நம்ம உழைப்பு, கூலி. முதலாளி வர்க்கம் எம்மைச் சாகவும்விடாது வாழவும் விடாதடா. முதாலாளி வர்க்கத்தைப் பூண்டோட ஒழிக்கணும், என்ற சுலோகத்தோடு இக்கதை முடிகிறது. கைவிரல்கள் தாமாகப் பொத்தி இறுகிக் கொள்கின்றன. அந்தப் பொத்தி இறுகிய கைமுடிச்சுக்களுக்கு எதிரிகள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமென்ற ஆசிரியர் கூற்றுடன் கதைமுடிகிறது.
பெனடிக்ற்பாலனின் சிறுகதைகள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி, தாமரை, தாயகம், குமரன் முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் சமூக விமர்சனங்களாகவில்லாது, சமூக நடத்தைகளுக்கு நியாயம் கற்பிப்பனவாகவுள்ளன. ‘விபசாரம் செய்யாதிருப்பாயாக’ என்பது அவ்வகையான ஒரு சிறுகதை, இயற்பண்பு வாதக் கதை.
‘பெனடிக்ற் பாலனது கதைகளில் கணிசமானவற்றிறுள்ள ஒரு குறைபாடு கதையின் தெளிவின் மீது அவருக்குள்ள நம்பிக்கையினம் காரணமாகவோ என்னவோ ‘கலோகப் பிரயோகம்' குறிப்பாகக்கதை முடிவில் காணப்படுகிறது. இது அவர் முன்பு பூரணியில் எழுதிய உதிரிப்பாட்டாளிவர்க்கம் பற்றிய ஓர் அருமையான கதையின் முடிவிலும் காணப்பட்ட ஒருகுறைபாடு?
176

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” 5.3.2.10 கே.எஸ். சிவகுமாரன்
இலக்கிய விமர்சகள் ஒருவர் ஆக்கவிலக்கியகர்த்தாவாகவும் விளங்குவதற்கு கே.எஸ். சிவகுமாரனே தக்கஉதாரணம். 1960 களில் அவர் தன்னை சிறுகதைத்துறையுள் அடையாளம் காட்டிக்கொண்டார். அவர் ஓர் இதழியலாளர், புதுக்கவிதைக்காரர், அத்தோடு ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் ஆங்கில மூலம் பிறரறிய ஆங்கிலப்பத்திரிகைகளில் விமர்சனக் குறிப்புக்கள் எழுதிவரும் பணி குறிப்பிடத்தக்கது. உறைவிடம் மேலிடம், தாழ்வு மனப்பான்மை, இனம் இனத்துடன், இறை, அவர்கள் உலகம், குறிஞ்சிக்காதல், பகட்டுமல்காந்தி, வாழ்க நீ தமிழணங்கே, கண்ணெடுத்தும் பார்ப்பேனோ கன்னியரை, ஆள்மாறாட்டம், டயறிக் காதலி, எழுத்தாளன் காதல், இருமை, கருணையின் விலை என்ன?, முதலான சிறுகதைகளைப் படைத்துள்ார். ஏழு சிறுகதைகளின் தொகுப்பாகச் சிவகுமாரன் கதைகளும், பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக "இருமை தொகுதியும் வெளிவந்துள்ளன. இவர் கதைக்கருவை வைத்துக் கொண்டு களம் தேடுபவர்போலப் படுகின்றது. இருமைத்தொகுதியில் சிவகுமாரன் கதைகளிலுள்ள கதைகளுமுள்ளன. சமூகயதார்த்தப்பண்பு இவருடைய சிறுகதைகளில் காணப்படுகின்றது. தான் கூறவிரும்பும் கருத்து நிலையை விரைந்து கூறிவிடவிழையும் பண்பு. கலாபூர்வச் சித்தரிப்புக்குத் தடையாகின்றது.
"இக்கதைகளிற் பெரும்பாலானவை உத்திப்பிரயோகத்திற்காக பத்திரிகை ரகக்கதைகள் வார்ப்பில் எழுதப்பட்டவை. சில கதைகள் உளவியல் சார்ந்தவை. பெரும்பாலான கதைகள் கொழும்புவாழ் மேல்தட்டுப் பாத்திரங்களைத் தீட்டுபவை. இக்கதைகள் சிலவற்றில் சிங்களக் கதாநாயகர்கள் வருகிறார்கள். ‘இக்கதைகளை எழுதும்போது வாழ்க்கையை ஆழமாக நோக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கிருக்கவில்லை" என்கிறார் கே.எஸ். சிவகுமாரன். அவையடக்கமாக ஆசிரியர் இவ்வாறு கூறினும், கே.எஸ்.சிவகுமாரனின் சிறுகதைகள் சமூகப்பிரக்ஞையோடு எழுதப்பட்ட யாகர்த்தப்பண்பினவாகவே எனக்குத் தெரிகின்றன. அவர் தனது கதைகளுக்கு எடுக்கின்ற களம், அவருக்கு நன்கு பரிச்சயமானதாக விருப்பதால், இயன்றபண்பினைக் கொண்டிருக் கின்றன. அதனால், அச்சிறுகதைகளில் ஆசிரியரின் நுட்பமான அவதானியபும், கலைநுட்ப வடிவமைப்பு விபரணப்பாங்கு குறைகின்றதையும் காணலாம்.
177 (12)

Page 98
ஈழத்து சிறுகதை வரலாறு “AsiaDs ansesi” 5.3.2.11 து. வைத்திலிங்கம்
கடந்த மூன்று தசாப்த்தங்களுக்கு மேலாக ஆக்கவிலக்கியத் துறையில் ஈடுபட்டிருப்பவர் து. வைத்திலிங்கம். அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் மனதில் எஞ்சி நிற்கின்ற உணர்வுகள் -ஏக்கம், தவிப்பு, துயரம் எல்லாவற்றிற்கும் . மேலாக இந்த மண்ணின் கீழ்மட்ட மக்களை அழுத்தி நிமிரவிடாது அமுக்குன்ற அயோக்கியத் தனங்களின் பல்வேறு வடிவங்கள் புலனாகின்றன. இவர் ஒரு நாவலாசிரியருமாவார். (பூம்பனிமலர், ஒரு திட்டம் மூடப்படுகின்றது).
சுட்டிப்பிள்ளையார், முறைப்பென், கனவுகள் கலைகின்றன, சலனம், மெளனம், கிணறு, இன்றொருநாள் போதுமா, முற்பகலும் பிற்பகலும், தீர்வு, ஒரு காகிதப்பூ கருக்கட்டுகிறது, நியாயங்கள், நிதர் சனங்கள், எங்கே போகிறோம், முரண்பாடுகள், பிரபல்யம், ஆலடிவயிரவர் முதலான பல சிறுகதைகளை 1964 - 1983 காலகட்டத்தில் எழுதியுள்ளார்.
து. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகளில் நுணுக்கமான சமூக அவதானிப்புக் காணப்படும். கிணறு, எங்கே போகிறோம்? தீர்ப்பு என்பன ஆசிரியரின் தரமான சிறுகதைகளாக உள்ளன. ஆசிரியரின் புரட்சிகரச் சிந்தனையைக் கிணறு சுட்டுகின்றது. பொதுக்கிணற்றில் ஒரு பகுதி மக்களைத் தண்ணிர் அள்ளக் கூடாது என ஒரு பகுதியினர் மறிக்கின்றனர். அப்பிரச்சினையை உயர் அதிகாரி தீர்த்து வைக்கிறார். அதற்காக எம்.பி யும் அவர் பின்னால் இயங்குகின்ற தம்பிமாரும் சேர்ந்து அந்த உயர் அதிகாரியை இடம்மாற்றி விடுகின்றனர். இச் சிறுகதையில் இரண்டு பிரச்சினைகள் ஆசிரியரால் அணுகப்பட்டிருக்கின்றன. ஒன்று சமூகப்பிரச்சினை, மற்றையது அதிகாரப்பிரச்சினை. தீர்ப்பு கட்டுக் கோப்பான நல்லதொரு கதை. பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள் சட்டத்தினைக் கூடத் தமக்குச் சாதகமாக மாற்றிவிடக்கூடியவர்கள் என்பதை அச்சிறுகதை காட்டுகின்றது. எங்கே போகின்றோம் என்ற சிறுகதையில் ஆசிரியர் ஒரு படி மேலே சென்று இச்சமூகம் இப்படியா இயங்கவேண்டுமென ஆதங்கப்படுகின்றார். குண்டடிபட்டு விழுந்து கிடக்கின்ற ஒரு அப்பாவிப் பெண்ணின் மணிக்கூட்டைக் களவாடிச் செல்கின்ற கயவர்களை அவர் இச்சிறுகதையில் சாடுகிறார். தான் சொல்ல வந்த சங்கதியை ஆற்றொழுக்காகச் சொல்லிவிட ஆசிரியரால் முடிகின்றது. ஆசிரியரின் சிறுகதையின் தொகுப்பாக மண்ணின் கனவுகள் வெளிவந்துள்ளது.
178

ஈழத்துச் சிறுகதை alJg “செங்கை ஆழியாண்” 5.3.2.12 மு. கனகராசன்
ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் வரிசையில் மு. கனகராசன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர். பகவானின் பாதங்களில், நிவேதனம். தீபத்தை நோக்கி, உயிர்ப்பு, புடம், சாளரங்கள், சுண்டுவிரல் மெட்டி, தீ, அமராவதிச்சிலை, கல்யாணிகள், செய்யாதகடமை, நாய்கள், முழுவியளம் முதலான சிறுகதைகளை விவேகி, கலைச்செல்வி. வீரகேசரி, ஈழநாடு, சுதந்திரன், அஞ்சலி, மல்லிகை, தேசபக்தன் முதலான பத்திரிகைகளில் மு. கனகராசன் எழுதியுள்ளார். கொழும்பின் தெருவோரத்து மக்களின் அவல வாழ்வை பகவானின் பாதங்களில் என்ற சிறுகதைசித்திரிக்கின்றது. ‘திபத்தை நோக்கி’ என்ற சிறுகதையில் மனிதர்களின் செய்கைகளையும் யேசுவின் போதனைகளையும் கதை நெடுகக் கலந்து தந்திருப்பது ஒரு சிறந்த உத்தி. மனிதபலவீனங்கள் காட்டப்படும் விதம் கதையின் சிகரம்’ ‘முரண்பாடுகளைத் தெளிவாக்குவதும், அநீதிகளுக்கு எதிராகப் பொங்கியெழுவதும், வெறுஞ் சுலோகங்களைக் கொண்ட சுவரொடடி களாக்கப்படாது, நிதானமாகவும், கலைபொதிந்த கவின் காட்சிகளாகவும் *உயிர்ப்பு சிறுகதையில் செப்பனிடப்பட்டுள்ளன? கனகராசனின் சிறுகதைகளில் ‘தி தரமான படைப்பு சிங்கள - தமிழ் இனத்துவத்தை மீறிய வர்க்க நலன் இச்சிறு கதையில் கலாபூர்வமாக விழுந்துள்ளது. “கதையின் நாயகன் தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் பெரும் பணிகள் செய்தவர். ஆனால் சந்தியில் காணும் ஒரு சாதாரண சிங்கள மனிதனுடன் அவர் ஒரு நாளும் பேசியது கிடையாது. அவரின் உறவுகள் தொடர்புகள் எல்லாம் உயர் மட்டத்தில், இனக்கலவரம் கொலைவெறியாகத் தாண்டவமாடியபோது அவருக்கு உதவ அவரால் உதாசீனம் செய்யப்பட்ட மனிதன்தான் வருகிறான்.* மு. கனகராசன் ‘தீ மூலம் இனவெறியை மீறிய மனிதநேயத்தைச் சுட்டிகாட்டியுள்ளார்.
5.3.2.13 6T6.6T6IÓ.6Ltd. JT60)LDuUIT
ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்குக் காத்திரமான பங்களித்தவர் என்.எஸ்.எம். ராமையா ஆவார். 1960 களில் நாடக ஆசிரியராக அறிமுகமான ராமையாவின் முதல் சிறுகதையாக ‘ஒரு கூடைக் கெழுந்து 1961இல் தினகரனில் பிரசுரமாகியது. முதற் சிறுகதையே மிக்க இலக்கியத்தரமாக அமைந்ததால், சிறுகதையுலகின் கவனத்தை உடனடியாகக் கவர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து வேட்கை, எங்கோ ஒரு தவறு. முற்றுகை, தீக்குளிப்பு முதலான சிறுகதைகளை 179

Page 99
ஈழத்துச் சிறுகதை வரலாறு * 2.fhillsinis } i8
எழுதினார். மேற்குறித்த சிறுகதைகள் ராமையாவின் தர:ான படைப்புகளாகும். இவரது சிறுகதைகளின் தொகுப்பாக ஒரு கூட்டக் கொழுந்து வெளிவந்துள்ளது.
இவரது சிறுகதைகள் மலையகத்தின் பன்முகப்பட்ட வாழ்வை உயிரோட்டமாகச் சித்திரித்தன. பாத்திரங்கள் தோட்டவாழ்க்கைடோடு பின்னிப் பிணைந்தவர்கள். வயது சென்றோரின் ஆசைகள். இளம்வயதினரின் காதல். பாசம், ஆக்ரோஷங்கள். சபதங்கள். மக்களின் மதநம்பிக்கைகள் என்பவையே கதைப் பண்புகளாகத் திகழ்கின்றன’ என்.எஸ் எம். ராமையாவின் சிறுகதைகளில் வேட்கை என்ற சிறுகதை ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாக வைத்ததெண்ணப்படத்தக்கது. “குப்பி லாம்பின் மின்மினி வெளிச்சத்துடன் லயத்தில் வாழ்றது கொண்டிருக்கும் சாதாரண மலையகத் தொழிலாளி ஒருவன் “பெற்றோமக்ஸ் விளக்கொன்றினை வாங்குவதற்காகப் பலகாலமாகப் பகரேதப் பிரயத்தனம் எடுப்பதையும். முதன் முதலாக அவனது “லயக்காம்பராவில் அந்த விளக்கு எரிந்தபோது அயலவர்கள் கூடி நின்று வியந்து இரசித்ததையும் வேட்கை என்ற தலைப்புடன் சிருஷ்டித்துள்ளார்.” இவரது இச்சிறுகதை சென்னை வாசகர்வட்டம் வெளியிட்ட அக்கரை இலக்கியம் என்ற சிறுகதைத் தொகுதியிலிடம் பிடித்தது. அத்துடன் ஏசியன் ஜர்னல்லில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்று வெளிவந்தது. ‘தீக்குளிப்பு என்ற சிறுகதை உருவம், உள்ளடக்கம், கலாபூர்வம் என்பனவற்றினைப் பொறுத்தளவில் தக்க படிமங்களைக் கொண்டுள்ளது. சுயநலத்தை மீறிய பாசப்பிணைப்பை நன்கு தீக்குளிப்பில் சித்திரித்துள்ளார். ‘ஒரு கூடைக்கொழுந்து சிறுகதைக் கட்டமைப்பிலிருந்து விலகியிருந்தாலும், அதைக்கூறியுள்ள விதமும், கூறியவற்றிலும் கூறாதுவிட்ட விடயங்கள் வாசகஊகிப்புக்குரியதாக அமைந்துள்ள தன்மையும் நல்லதொரு சிறுகதையாக்கியுள்ளன.
5.3.2.14. முனியப்பதாசன்
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் உன்னதமான ஓரிடம் பெற வேண்டியவர் முனியப்பதாசன் என்ற தா. சண்முகநாதனாவார். இளயவதிலேயே மரணமடைந்த அவர். இருபது சிறுகதைகள் வரையில் தான் எழுதியிருந்தாலும், அவ்வளவும் மணியான சிறுகதைகள். தனது மூன்று தசாப்தங்கள் நிறைவுறாத வாழ்க்கையில் ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு இவர்அளித்திருக்கின்ற செழுமை மிகமிக அதிகமாகும்.
18O

Hi fihan Ayacug ------- , θεως κfπ4" .
1964 - 1967 என்ற குறுகிய மூன்றாண்டுகளுள் இந்த அற்புதத்தைச் சாதித்த முனியப்பதாசன் என்ற இப்படைப்பாளி இதுவரை ஈழத்துத்தமிழிலக்கிய ஆய்வாளர்களின் கண்களில் தட்டுபடாது போனமை பெரும் துரதிர்ஷ்டமாகும்.
முனியப்பதாசன், தான் காலமாவதற்கு முன் தன்னிடமிருந்த அனைத்துப் பிரதிகளையும் எடுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தி அதனைப் பார்த்துச் சிரிசிரியென்று சிரித்துள்ளார். அவர் வார்த்தைகளிற் சொல்வோமாயின் ‘உலகம் பொல்லாதது மகாத்மாவே, உலகம் பொல்லாதது. நீங்கள் விடுதோறும் பிறந்தாலும் எங்கோ ஒரு மூலையில் வெறியும் பித்தலாட்டமும் கயமைகளும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். புனிதமான ஆத்மாவின் வலிமைமிக்க சக்தியோடு வளர்ந்து கோடிகோடியாகப் பல்கிப் பெருகித்தழைத்து நிற்கிற கயமைந்தனைங்கள் செத்துமடியப் போவதில்லை" ‘எழுத்துக்கள் மூலம் சமூகத்திற்கு விடப்படுகின்ற கருத்துக்கள் சமூகத்தினைத் திருத்திவிடாதெனக் கருதினாரோ? மனிதர்கள் மாறவே மாட்டார்கள். மாறுவதாயிருந்தால் புத்தன் யேசுவிற்குப்பிறகு காந்திமகாத்மா தோன்ற வேண்டிய அவசியம் இருந்திராதே" என்று முனியப்பதாசன் ஆதங்கப்படுகிறார்.
1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கலைச்செல்வியில் “வெறியும் பலியும்' என்ற தனது முதற் சிறுகதை மூலம் எழுத்துலகிற்குள் துழைந்தார். அந்த முதற் கதையே முதிர்ந்த எழுத்தாக விளங்கியமை பலரை வியப்பிலாழ்த்தியது. கனதியான புதியதொரு படைப்பாணியை இனங்கண்டு அறிமுகப் படுத்தியபெருமை சிற்பி சரவணபவறுக்குத் தாகிறது. அதனைத் தொடர்ந்து சந்திரிகை, ஆத்மீகத் தேர்தல், பிரவாகம், வெறுமையில் திருப்தி, சத்தியத்தின்குரல், அம்மா, மாவிலங்கக மரம், LTMLCLTL LTTTLLLLSSSLTTTTLLLLSLLLLLLLS LLLL LL LLLLLLLLSS TTT SSTMMLLLLLLLL TTTTL TTTTS STLLLTSS TTLTLLLS LLTLLLLLLL LTLTLS TLL TLLLLL TTTLL TTTTTTL TLTMTTTTLLLLS LLLLLLTTMTS TTTTTLS LLTLLLLLLLS சுதந்திரன், ஈழநாடு, ஆனந்தவிகடன் முதலான பத்திரிகைகளில்
S SS LLLLLLML tTlTLL STTLL S TYTTTYTS STTLTYTTLLLLL வெளிப்பாடாக அவருடைய சிறுகதைகள் எழுந்தன. முனியப்பதாசன் ஓரிடத்தில், "பொதுவான நூலகங்களில் எடுக்கின்ற கனமான புத்தகங்கள் LLLLLL S LLLLLLLLS LLLLLLTMLT S STTLTTTTLS TLTTLLS

Page 100
ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியான்" முனிப்பதாசனால் இந்த லெளகிக வாழ்வின் துயரங்களிலிருந்து முற்றாக விடுபடமுடியவில்லை. இந்த மண்ணின் அவலங்கள் அவரை மிகமிக வருத்தியுள்ளன. வறுமை, சமூக அறியாமை, அருவருப்பூட்டுகின்ற பலவீனங்கள், பெண்ணடிமைத்தனம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் அவர்முன் பூதாகாரமாக எழுந்து நின்றன. “எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கைத் துன்பங்களை மறந்து நான் நிம்மதியாக இருக்க முடியுமா? என்கிறார்.
முனியப்பதாசனுக்கு இரண்டு வாழ்க்கை நிலைகளிருந்தன. ஒன்று வெளிப்புற வாழ்வு மற்றையது ஆத்மீகத்தைத் தேடி அலையும் அகவாழ்வு நிலை. இல்லறத்திலிருந்து அழுந்திக் கொண்டே ஆத்மாவின உன்னத நிலையை அனுபவிக்க முடியுமென இந்தப் பிரமச்சாரி நம்பினார். சமூகத்தின் ஒருபகுதியினர் அவரை ‘விசரன்' என்று கொச்சைப்படுத்தினர், அவரது எழுத்தைப் படித்தவர்களும் அவரின் படைப்பனுபவத்தைத் தரிசித்தவர்களும் அவரை சித்தன் ! துறவி என்றனர். ‘சந்தி முகப்புகள் பஸ்நிலையங்கள், வீதி முகப்புகள் என்று இன்றைக்கு ஒன்றுமே தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் பெருகி நிற்கின்ற இளைஞர்களின் நெஞ்சங்களில் கனலைமுட்டி விடுவதாய் அப்பொழுதே நான் சத்தியம் செய்தேன். இது வாழ்க்கைப் போராட்டம். எழுதுகிறவன் அழிகின்ற போராட்டம். வேறு நினைப்பின்றி இந்த இலட்சியத்தையே நினைத்து நினைத்து வாழ்ந்தால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். அந்தச் சாதனையில் அவன் ஆழ்கிறான்" என்கிறார்.
முனியப்பதாசனின் வெறியும் பலியும், சந்திரிகை, வெறுமையில் திருப்தி, வரையறை ஆகிய நான்கு சிறுகதைகளும் சமூகச் சித்திரங்களாம். முனியப்பதாசன் சாதாரண மனநிலையில் இவற்றினை எழுதியிருக்க வேண்டும். நல்லதொரு சிறுகதைக்கு உதாரணமாயமையக் கூடியது சந்திரிகை, வெறுமையில் திருப்தி, வரையறை ஆகியவிரு சிறுகதைகளிலும் முனியப்பதாசனின் பெண்ணியல் பற்றிய கருத்துக்களை அறியலாம். பெண்களின் அடிமை விலங்குகளை அறிந்தெறிந்துவிடும் ஆவேசத்தை அக்கதைகளிற் காணலாம். முனியப்பதாசனின் ஏனைய சிறுகதைகள் பிரபஞ்சம் தழுவியதாய், சமய - ஆத்மிக விசாரம் கொண்டதாய் அமைந்துள்ளன.
முனியப்பதாசனின் சிறுகதைகள தனித்துவமானவை. அவரின் சிறுகதைகளை எவருடனும் ஒப்பிட முடியாது. புரிந்து கொள்வதற்கு
182

Jgħġbli filgħabib SLIDT Jp “செங்கை ஆழிாண்”
ஒப்பிடவேண்டுமாயின் மெளனி. லா.ச.ரா. பிச்சமூர்த்தி என்பவரோடு ஒப்பிடலாம். முனியப்பதசானின் சிறுகதைகள் தமிழுக்குப் புதிய பரிமாணம், அவர் கையாளும் மொழி நடைக்கும் சொல்லாட்சிக்கும் நிகரில்லை. பேச்சு வழக்கு அழுத்தம் பெறாத சுத்தமான மொழிநடை அவர் கதைகளில் வருகின்ற பகைப்புல வர்ணனைகள் கையாளும் உவமைகள், சம்பவததிற்கு உரையாடலுக்கும் அவர் தேர்ந்தெடுக்கும் சொல்லாட்சி அனைத்தும் முனியப்பதாசனின் படைப்பணுவத்தினை எமக்குக் காட்டிநிற்கின்றன அவரது ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதோ ஒரு தேடலும் சோகமும் தொக்கி நிற்கின்றன. மெளனி போலக்குறைவாக எழுதி மலையாகச் சிறுகதைத்துறையில் உயர்ந்து நிற்பவர். தமிழிலக்கியத்திற்கு முனியப்பதாசனின் சிறுகதைகள் புதியவை, செழுமை சேர்பபவை."
5.3.16 தெளிவத்தை யோசெப்
ஈழத்துச் சிறுகதை இலக்கியமனைக்கு அழகு சேர்க்கும் மலையக முன்னணி எழுத்தாளர் தெளிவத்தையோசெப் ஆவார். மலையகச் சிறுகதை வரலாறு அவரது இலக்கியப்பற்றினைப் பறைசாற்றும். காலங்கள் சாவதில்லை அவருக:குப் புகழ்சேர்த்த நாவல். ஈழத்துப் பத்திரிகைகள் தமிழகப்பத்திரிகைகள்(கலைமகள்) அனைத்திலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மலைநாட்டு எழுத்தாளர்களுக்காக வீரகேசரி நடாத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டு தடவைகளும் முதற்பரிசிலைச் சுவிகரித்து தனது எழுத்தாற்றலை நிருபித்தவர்.
பழம்விழுந்தது, பாட்டி சொன்ன காட்டுப்பூ, பொட்டு, நாமிருக்கும் நாடே, அது, திட்டுரொட்டி, சோதனை, மண்ணைத் தின்று, ஒருதோட்டத்தில், பையன்படம் பார்க்கிறான், பாவசங்கீர்த்தனம், கூனல், நா, மீன்கள், கத்தியன்றி ரத்தமின்றி, சிலுவை, பொம்மை முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவரது முதற் சிறுகதை தமிழக சஞ்சிகையான “உமா’வில் வெளிவந்தது.
மலையக மக்களின் வாழ்வை இரக்கத்தோடு தரிசித்து, அவர்களின் மட்டத்திலான விழிப்புக்கும், அவர்களை அடக்கி அட்டகாசம் புரிகின்ற அதிகார சமூகத்தின் உண்மை நிலையைப் புரியவைப்பிற்கும் தெளிவத்தையோசெப் தனது படைப்புகளை ஆக்கியுள்ளார். மலையக மக்களின் வாழ்வும் அவலமும் அவரது சிறுகதைகளில் தூக்கலாக
183

Page 101
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
நிற்கும். சமூகப்பிரக்ஞையோடு அவர் தனது கதைகளைத் தந்துள்ளார். ‘நாமிருக்கும் நாடே நமது என்பதை வெகு காலத்திற்கு முன்பே தெளிவத்தை தன்கதையில் சுட்டிக்காட்டியுள்ளார். “இந்தியத்தாயகம்" நமதென்ற மலையகமக்களது கருத்தினை மறுதலித்த இலக்கியப்படைப்பு அதுவாகும். தெளிவத்தையோசெப்பின் சிறுகதைகளில் யதார்த்தப்பண்பு உணர்ந்தவாறிருக்கும். மலையக சாதியக் கொடுமையை அவரின் திட்டுரொட்டி விபரிக்கின்றது. மலையகச் சிறார்களின் கல்விச் சுரண்டலை ‘போதனை' என்ற கதை விபரிக்கின்றது. கத்தியின்றி இரத்தமின்றி, கூனல் ஆகிய சிறுகதைகள் மிகு கற்பனாவாதக் கதைகள், சமூகம் இப்படியிருக்கக் கூடாதெனக் கூறுவன. தெளிவத்தையோசெப்பின் சிறுகதைகளில் பாட்டிசொன்னகதை, மொட்டு, பழம் விழுந்தது ஆகியவை தரமானவை, ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு அணி சேர்ப்பன.
‘பேத்தி காவேரியைக் காணாமல் கவலைப்படும் பாட்டி, காவேரி தன் இளமை முறுக்கை எவனிடமும் அவிழ்த்துக்காட்டி அவஸ்தையில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயம் பாட்டிக்கு, பேத்தியின் காதல் தவறிழைத்து விடக்கூடாதென்பதற்காக, தனது கதையைக் கூறுகிறாள். பாட்டியின் உரையாகக் கதை வளர்த்தப்பட்டிருப்பது சுவையாகவிருக்கிறது. பேத்தியின் மனம் மாறுகிறது. சில கணங்களில் தன்னை இழக்க இருந்தவள், சரியான தடத்தைத் தெரிந்து கொள்கிறாள்.” உருவம், உள்ளடக்கம் என்பனவற்றோடு, கலைநயமுமிக்க சிறுகதை பாட்டி சொன்ன கதை. வயது வந்த பிள்ளைகளுக்கு இச்சிறுகதையைவிட வேறு எச்சரிக்கை இருக்கமுடியாது. “பழம் விழுந்தது' மனதை அழுத்தும் சோகரசக்கதை. நமது விழுமிய அழிவைச் சுட்டுகின்றது. நமது கலாசாரத் தனித்துவ அழிவைப் பொட்டு விபரிக்கிறது.
5.3.2.17. தையிட்டி அ. இராசதுரை
முனியப்பதாசன் போல விமர்சகர்களின் கவனத்தை அதிகம் கவராத, கனதியான சிறுகதை எழுத்தாளன் தையிட்டி அ. இராசதுரை. இவருடைய சிறுகதைத் தொகுதியொன்று வெளிவரில், ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் நிரல் படுத்தக்கூடிய பத்துத்தரமான சிறுகதை ஆசியர்களுள் ஒருவராக வந்துவிடுவார். கண்ணாடி, கொந்தல், சமநிதி, மான்பாய்ந்தவெளி, ஒளிமயமான தீபம், கோச்சிவரும் கவனம், அம்மாவின் பெயர்அம்மா, குழாயடிச்சண்டை, தவிலும்தாளமும், கிழிந்தநோட்டுச செல்லும், எழுத்தறிவித்தவன் இறைவன், அவன் பெயர் மிருதங்கம், இரவல்,
184

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” அகதி அரசி, பாராட்டு, மின்சாரமும் சம்சாரமும், கொழும்புக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன், இதுக்கெல்லாம் ஐயா, வெள்ளைப்பூனை, வெள்ளிக்கிழமை, கண்ணுாறு, கழிவிரக்கம், மானம், பொற்கோயில், அடித்த கை என்பன தையிட்டி அ. இராசதுரையின் படைப்புகளாம். யாழ்ப்பாணச் சமூகத்தின் துணுக்கமான குடும்ப உறிவன் கலாசார விழுமியங்களைத் தையிட்டி அ. இராசதுரை மிக அற்புதமாகத் தனது சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். குடும்ப்பூசல்கள், உறவுகளின் இறுக்கங்கள், தாய்ப்பாசம், வேலிச்சண்டை சச்சரவுகள், மூடநம்பிக்கைகள், நம்பிக்கை மோசடி, தாய்மையின் பெருமை முதலான சமூகவியல்புகளை வைத்து இச் சமூகம் எப்படியிருக்க வேண்டுமென்ற சமூகச் செய்தியைக் கதைகளினூடாகப் பெய்து எழுதியுள்ளார். அவரது கதைகளில் பேச்சு வழக்கு மிக நுட்பமாகக்கொள்ளப்பட்டிருக்கும். மெல்லிய நகைச்சுவை கதையினூடே விரவிக்கிடக்கும். சிறுகதைகளைப்படித்து முடிந்ததும் மனதில் எஞ்சிநிற்கின்ற உணர்ச்சிநிலை குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளுக்கேயுரியது. அடித்தகை, எழுத்தறிவித்தவன் இறைவன் - நல்ல தரமான சிறுகதைகள்.
5.3.18. படைப்பாளிகள்
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் மலையகம் தந்த பெண்படைப்பாளி பூரணிக்குமிடமுள்ளது. பூரணியின் முதலாவது சிறுகதையான “பிள்ளை பருவத்திலே தினபதியில் வெளிவந்து அவரை கவனிப்பிற்குள்ள்ாக்கியது. அதனைத் தொடர்ந்து முடியாத கதைகள் பல, செல்லக்கிளி, உண்மை சுடும், கோடிமலர்கள் பூக்கட்டும், பொல்லாத விஷம் என்பன பூரணியின் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கவை. சமூகத்தை இரக்கத்தோடு பார்த்து, அவலத்தையும் இழிவுநிலையையும் சித்திரிப்பனவாக அவரது கதைகளுள்ளன. அவருடைய சிறுகதைகளில் ‘முடியாத கதைகள் பல மிகத் தரமானது. மலையகத்தின் துன்பியல் நாடகம் ஒன்றினை அது விபரிக்கின்றது. பூரணி இன்று தெல்லிப்பைழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தில் துறவறவாழ்வை மேற்கொண்டுள்ளார்.
ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு கிழங்கிலங்கையின் பங்களிப்பில் ஆரையம்பதி தங்கராசா ஒருவர். ரிஷிமூலம், சருகு தளிர்த்தது,
அவளுக்கு வயது வந்தபோது, இரவு விடிந்தது, கள்ளத்தோணி, சொர்க்கம், மெழுகுவர்த்தி முதலான நல்ல சிறுகதைகள ைஅவர் எழுதியுள்ளார்.
185

Page 102
g
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிான்
கிழக்கிலங்கைதந்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி, ஈழத்துச்சிறுகதைத் துறைக்குக் கணிசமான பங்களிப்புச் செய்துள்ளார். 1957 இலிருந்து எழுதிவரும் இவர் இதுவரை பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அந்த நினைவு, இரட்டைக் குழந்தைகள், கடிதம் சிரித்தது, தியாகம், கருணைப்பரிசு, மனைவி, எல்லைக்கோடு, பெண்மை இழந்தது ராதிகாவின் தலைத்தீபாவளி, எல்லைக்கோடு, நியூவ்வேவ், கற்புநிலை என்பன பாலேஸ்வரியின் நல்ல சிறுகதைகள் கற்புநிலை குறிப்பிடத்தக்க தரமானது.
1960/1970 களில் பல்கலைக்கழகச் சிறுகதை ஆசிரியர்களாக விளங்கிய வேறு பலருள்ளனர். எம்.ஏ.எம். சுக்ரி (வாரிசு, கழுவாய்), க.நவசோதி (அன்பின் அணைப்பில், வாழ்க்கைத்துணை) யோகேஸ்வரி கணேசலிங்கம் (பேதம், கரையும் ஏக்கங்கள், காலம் தப்பிப் போச்சு), சி.மெளனகுரு (ஓட்டம்), இ. சிவானந்தண் (பகற்பொழுது). முத்தசிவஞானம் (இறுதிமூச்சு, ஓடிவு, சாம்பல்மேடு, உரிமைக்கு உயிர், மானம்), கலாபரமேளம் வரன் (உதிரி). சபா ஜெயராசா (அணைப்பு) செல்வபத்மநாதன் (அசைவு) மு. பொன்னம்பலம் (தவம்), சராநாதன் (கதவடைப்பு, எங்கிரந்தோவந்தான்), பீ.மரியதாளில் (முரண்பாடு, காய்ப்பு) இராச. சிவச்சந்திரன் (புதுமைவிளம்பரம்) இமையவன் (கெளரவப்பிரசை) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். “குறித்த இச்சிறுகதைகளில் ஏதோவொரு மனோநிலை யாவற்றிற்றிற்கு மூடாக இழையோடுகிறது. வாழ்க்கையின் ஏற்றஇறக்கங்களை முற்றாக உணர்ந்து கொள்ளாத ஒருவிதமான இலட்சிய மனோபாவம் கதைகளுக்கு உணர்வு ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.”*
மு.பொன்னம்பலத்தின் ஒர புனைப்பெயர் தீவான்’ ஆகும். இந்தப் புனைப்பெயரில் 1957/1964 காலகட்டத்தில், வலதுகை, ரயில்சிரித்தது, அவர்கண்டமுடிவு, பானை, வறியவன் சிரிப்பு, அவனுக்குப் புதியவள், பார்வை, அந்த ஆலமரம், நிலுவை என நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
5.3.19. பல்கலைக்கழகத்திற்கு வெளியே
1960/1970களில் பல்கலைக் கழகத்திற்கு வெளியே சிறுகதையாளர்களாகப் பலர் விளங்கியுள்ளனர். நெல்லை க. பேரன்
186

ஈழத்துச் சிறுகதை வரலாறு “சேர்கை ஆழியான்”
இரா.பாலச்சந்திரண், அப்பச்சி மகாலிங்கம், யாழ்வாணன், யாழ்ங்கை, பொ. சண்முநாதன், எஸ். சண்முகநாதன் நீ ரங்கன், கே.எஸ். ஆனந்தன், மா.பாலசிங்கம், மருதார்க் கொத்தண், கச்சாயில் இரத்தினம், தரை. சுப்பிமணியம், மணியம், பாண்டியூர் ராகி, மட்டுவிலான், மாலதி நடமாடி, நகுலன், அராலியுரான், வண்ணை செ. சிவராஜா. குமார் தனபால், க. பாலசுந்தரம், மருதார் வாணன், அநந்ததேவன். அதவை நாகராஜன் என ஒரு நீண்ட எழுத்தாளர்பட்டியல் உள்ளது.
ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் வரிசையில் நெல்லை க. பேரனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளவயதிலே குடும்பத்தோடு ‘ஷெல்லிற்குப் பலியாகிய இப்படைப்பாளி எழுதிய சிறுகதைகளின் தொகுதிகளாக ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள், சத்தியங்கள் ஆகியன வெளிவந்துள்ளன. “கற்பனைகளைக் கதைகளாக எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. தினசரி வாழ்க்கை அனுபவங்கள் என்னை எழுதத்தூண்டுகின்றன. எனது நித்திய தரிசனங்களின் சத்தியங்கள்தாம எனது சிறுகதைகள்" எனக் கூறும் நெல்லை க. பேரன், ஒரு பென்சன் காரர் பயணம் போகிறார், மனப்போக்கு, ஒருவிதமான கதை, சத்தியங்கள் திரளும் போது, சினிமாவுக்குப் போகிறார்கள், ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாகிறது, ஒரு தொழிலாளி சைக்கிள் வாங்குகிறான், ஞாயிற்றுக் கிழமை நாற்பது நிமிடம், பெருமூச்சு, பண்ணைகள், ஏணிப்படிகள், பிறந்த மண், ஒருபட்டதாரி நெசவுக்குப் போகிறாள். முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். வீரகேசரி, ஈழமுரசு, சிந்தாமணி, உள்ளம், சுதந்திரன், தாமரை, மல்லிகை, அஞ்சலி முதலான பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 1966இல் எழுத்துத்துறையில் காலடிவைத்த நெல்லை. க. பேரனின் ‘ஒரு பட்டதாரி நெசவுககுப் போகிறாள் என்ற சிறுகதை தரமான கதையாகப்பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தான் காண்கின்ற மானிட சோகங்களைத் தன் எழுத்துக் களில் சிறைப்பிடிப்பதில் நெல்லை. க. பேரன் வல்லவர். முற்போக்குச் சிந்தனைகள் பேரனின் கதைகளில் விரவிக் காணப்படுகின்றன.
இரா. பாலச்சந்திரனின் சிறுகதைகள் கருப்பொருளைப் பொறுத்தவரையில் எஸ். பொன்னுத்துரை, கே.வி. நடராஜன் ஆகியோரின் சில சிறுகதைகள் பாலுணர்வினைத் தூக்கலாகக் கொண்டவற்றுடன் ஒப்பிடக்கூடியவை. கடுவன்கள் திரிகின்றன. தியாகியின் மனைவி, பேய்கள் எரிகின்றன, தேன்நிலவுப் பயணம், சமூகம் தேய்கிறது, இறைவனாக நினைத்தேன், வள்ளியின் வழியிலே, டைகரின் கண்ணிர், அவள்
187

Page 103
Aid ayag "செங்கை ஆழியானி"
எங்கு சென்றாளோ முதலான சிறுகதைகள் பாலுணர்ச்சிக் கதைகளாகவே யுள்ளன. சுவையான குமுதக் கதைகள் இவை. திடுக்கிட வைக்கும் கருப்பொருட்களைக் கதைகளாக்கியுள்ளார்.
!" அப்பச்சி மகாலிங்கம் தெய்வப்பணி. ஆறுதற்பரிசு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார் யாழ்ப்பான கலாசார விழுமியங்கள் அவர் சிறுகதைகளில் நுட்பமாகப் பதிவாகியிருக்கும். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் யாழ்வாணன் (நா. சண்முகநாதன்) குறிப்பிடத்தக்கவர். யாழ் இலக்கியவட்டத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். அமரத்துவம், சங்கமம், மொட்டை, கோட்டை, முள், ஆதாரம், கன்னிமை, கொழுகொம்பு, மலர்ந்த வாழ்வு, அறுவடை, பிரவாகம், செல்வம் நீ தியாகி, சுயநலம் முதலியன யாழ்வாணனின் சிறு கதைகளாம். தன் சிறுகதைகளில் சமூகத்திலுள்ள சிறுமையையும், சீர்கோட்டையுங் கண்டு ஆசிரியர் பொங்கியெழுகின்றார். கொள்கை எதுவுமற்ற போலிகளின் அட்டகாசத்தைக் கண்டு கொதித்தெழுகின்றார். வெறும் வரட்டுக் கெளரவத்திற்காக அன்பையும் பாசத்தையும் அடக்கி அழிப்போரைக் கண்டு ஆவேசப்படுகிறார். விதியின் கொடுமையால் வாழ முடியாமையில் தவிப்போரைக் கண்டு குமுறி அழுகின்றார்" அவரது சிறுகதைகளின் தொகுப்பாக அமரதத்துவமுள்ளது “எனது கதைகளில் மானிட மேன்மையைப் பேசி, அவர்களை மேம்படுத்தவேண்டும்' என்பது யாழ் வாணனின் கொள்கை, யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்ப உறுப்பினர் களில் ஒருவர். அவரது சிறுகதைகளில் அமரத்துவம் தரமான கதை,
LLLLLL LLLLLL TMTTTLLST SLLTTTTLL TT TT 000L இல் தினகரனில்பிரசுரமானது வீரகேசரி நிறுவன மித்திரன் பத்திரிகையின் ஆவாகவுள்ள இவர் நல்லபல சிறுகதைகளை எழுதியுள்ளார். சமுதாய LLLLLS SLLLLYzS SS LLtttLLtS TLLTLTTTTLZ SqLLLZLLMTLLTTS LLLLLLLLYLLLTTLYS LLL TLLL STTLLTLTLTTL LLLLLLLLS LLL MLSYMLMLMT TMTL LLLLTLLLLLTLLLLLLL LLLLLL SLLLLLL M LLLTTTLTLSLLLLLLLZLLLLLLzSSS S LMS LLTLzLLT sanèsidha vàssors ஆறிமுகமாகிதமான சிறுகதைகளை
அவரது நகைச்சுவை கட்டுரை கதை நூல்களும் வெளி ை அவரது நல்ல சிறுகதைகளின் தொகுதி, வேட்டைப்புலி கண்வி, háůub svůub, srgů sens, záštituce, letiš DTLTLTLSLLTTTTTS TTTLLLLSSSLeMgSLTTLLLLSSSLTLLLLMLLLLL YLLLL LLLLLL LTLL TT LTTTTLTLM LLM LTTLTSLTTeLLLLLLLS
鞘状

+yib,3li jiyibs}}jb ?)ITalT }r “Flink fişi” கலைவாணி, சுதந்திரன். புதினம். விவேகி. வீரகேசரி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகைச்சுவையும் கிண்டலும் ஆசிரியரின் கதைகளிற் காணப்படும். இந்த மண்ணின் பல்வேறு முகங்களைத் துல்லியமாகக் காட்டுவதில் வல்லவர். “வெள்ளரிவண்டி’ தரமான ஒரு சிறுகதை யாகவுள்ளது. வெள்ளரிப்பழங்கள் விற்ற பணத்தில் மனைவிக்குச் சேலையும் வாங்கி மனைவியோடும் மகளோடும் சினிமாப்படமும் பார்க்க வேண்டுமென்று எண்ணும் கமக்காரனின் எண்ணத்தில் விழும் தடங்கலை பொ. சண்முகநாதன் கலாபூர்வமாக வெள்ளரிவண்டியில் சித்தரித்துள்ளார். எனினும், அவனின் நம்பிக்கை சிறிதும் ஆட்டம் காணவில்லை. ‘இருக்கும் வாழ்வைக் சுட்டிக் காட்டி இருக்க வேண்டிய வாழ்வைத் தொட்டுக் காட்டுவதாக இச்சிறுகதையுள்ளது.*
இன்னும் இரு சண்முகநாதன்கள் சிறுகதைத்துறையிலஸ்ளனர். அவர்களின் ஒருவரான எஸ். சண்முகநாதன் வாடாமலர். முடிந்தவாழ்வு. பாவத்தின் நிழல். நிலா அழுதது. இது கனவுலகம் முதலான சிறுகதைகளைப் படைத்தளித்தவர். இன்னொருவரான பெரி. சண்முகநாதன் உண்மையில் தரமான சிறுகதைகளை சிருஷ்டித்தவர்களில் ஒருவர். முரளிகானம். இருபுதல்வர்கள், நெஞ்சில் ஒரு முள். அழிவும் ஆக்கமும். ஓ பூக்கள் விழுகின்றன முதலான சிறுகதைகளின் ஆக்கவிலக்கியகர்த்தா.
ஈழத்து இலக்கியவுலகில் சிறுகதைகள் பல படைத்தும் விமர்சகர்களின் பார்வைக்குள் விழாதவர்களில் பூரீரங்கன் ஒருவர். ஈழத்தின் மூத்த பத்திரிகையாளராகிய கோபலரத்தினம் (கோபு) என்பவரே பூரீரங்கன் என்ற புனைப்பெயரில் மறைந்து எழுதியுள்ளார். இல்லால் இல்லாமை, பெருமை, அப்பா. கணநாதம், நெஞ்சம் மறப்பதில்லை, இதயங்கள் இரண்டு. நாடற்றவீரன் முதலியன பூரீரங்கனின் நல்ல சில சிறுகதைகளாம், நுட்பமான பார்வை கொண்ட சமூகச் சித்திரங்களாக இச்சிறுகதைகளுள்ளன. ஈழத்தின் நாவலாசிரியர்களிலொருவராக விளங்கும் கே.எஸ்.ஆனந்தன் தக்கதோர் சிறுகதை ஆசிரியருமாவார். குடும்ப உறவுகள். இனத்துவம் சார்ந்தவை அவரது சிறுகதைகள். இதுதான் இனவெறி, கோழைகள். தனித்துவம், கலங்கரை விளக்கம், வாழ்க்கைச்சுழல், கோழைகள், நிறைவு என்பன கே.எஸ். ஆனந்தனின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாம். முற்போக்கு எழுத்தாளர் குழுவினை சேர்ந்த பா. பாலசிங்கம் கவனத்திற்குரிய சிறுகதையாசிரியர். மழை, புயலில் ஒரு கொடியும் கொம்பும், தரிசுகள், முற்றுகை ஆகியன பாலசிங்கத்தின் குறிப்பிடித்தக்க படைப்புகள்.
է ՋC)

Page 104
Ayj3j fpsőbb alja:Tg “செங்கை ஆழியாண்”
கிழக்கிலங்கைதந்த ஈழத்துச்சிறுகதையாளர் மகுதார்க் கொத்தன் ஆவார். அதர் குழி, உரிமை, இருள். சங்கிலித் தொடர்கள் அறுகின்றன என்பன மருதூர்க் கொத்தனின் சிறப்பான சிறுகதைகள். இஸ்லாமிய சமூக வாழ்வின் அவலங்களையும் இனிமைகளையும் பிரதேசமணத்தோடு வரைவதில் மருதூர்க் கொத்தனின் எழுத்துக்கள் முன்நிற்கின்றன. இஸ்லாமியப் பேச்சுவழக்குத் தமிழ் நடை சிறுகதைகளுக்கு உயிருட்டுகின்றன. மருதூர்க் கொத்தன் கதைகள் தொகுதியாக வெளிவந்துள்ளது. கச்சாயில் இரத்தினம், கடமை கடமை, சித்திரை நிலவு விலங்குச்சுழி, மனமாற்றம், நாகசஞ்சீவி முதலான சிறுகதைகளை எழுதியுள்ளாா. வித்தியாசமானதும் சுவையானதுமான சிறுகதைகள், விலங்குச் சுழி தக்க சிறுகதை எனலாம்.
தரைசுப்பிரமணியம் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். முழுமையாக நல்லதொரு சிறுகதைத் தொகுதி வெளியிடுமளவிற்குத் தரமான கதைகளைப் படைத்துள்ளார். தெய்வத்தின் குழந்தைகள், வள்ளம், மூலதனம், பாக்கியம், ஒருவிவசாயி நிமிர்ந்து பார்க்கிறான், ஓர் இயக்கமும் ஒரு காரிதரிசியும் என்பன அவரது சில சிறுகதைகளாம். ஒவ்வொரு சிறுகதையும் எழுதப்பட்ட காலக் கருத்தோட்டத்திற்கமைய விபரிக்கப்பட்டுள்ளது. 1940 இல் பிறந்த துரைசுப்பிரமணியம், 1961களில் எழுத்துலகிற்குள் புகுந்தார். அவரின் அநேக சிறுகதைகள் தினகரனில் வெளிவந்துள்ளன. அத்தோடு தேசாபிமானி, ஈழநாடு, சுதந்திரன, வீரகேசரி, தேனருவி, ஈழமுரசு, மல்லிகை முதலான ஊடகங்கள் அவரின் சிறுகதைகளை விரும்பி வெளியிட்டன ஒரு துறவியின் போக்கு. வள்ளம், இரண்டு ஏக்கர் நிலம் என்பன இவரது தரமான சிறுகதைகள். துரைசுப்பிரமணியம், ஆங்கிலத்தில் ஒரு சில கவிதைகளும் படைத்துள்ளார். “எனது சிறுகதைத் தொகுதி இதுவரை வெளிவராதது பெரியதோர் மனத்தாக்கல்தான். எப்படியும் எனது "இறுதிப் பயணத்திற்கு முன்பு வெளியிட வேண்டுமென்ற மனநெருடல் உண்டு' என செங்கைஆழியானுக்கு எழுதிய கடிதத்தில் குறித்துள்ள அவரின் ஆசை நிறைவேறாது போய்விட்டது.
ஈழத்துச்சிறுகதை அரங்கில் குறிப்பிடத்தக்க சிறுகதைச:ளை அரங்கேற்றிய ஒருவர் மணியம். பொன்னி, நானுமா?, புதிய பன், சர்வாதிகாரம், அவர், நிறைகாப்பு, வாழத்தெரிந்தவன், பொங்கியது பு:ார்?, சுழி, கணவன் தெய்வமா? அவதூறு, நீ முதலான சிறுகதைசHரின் ஆசிரியர், இனத்துவம், பெண்ணியம், சமூகத்துவம் சார்ந்தவை அtரது
190

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" கதைகள். மணியம் போலவே மாலதி (திமிலைத்துமிலன்) என்பவரும் நல்ல கதைகளை ஈழத்துச் சிறுகதைத்துறைக்குத் தந்துள்ளார். அத்தானின் கண்ணிர், கந்தப்புமாஸ்ரர், காதல் அரங்கு, ஓடாதேமாப்பிள்ளை, நல்லார் உறவு, பாழடைந்த கோயில், கைக்கிளையின் கண்ணிர், நேர்க்கடன், மஞ்சட்கோலம், கானல் முதலானவை மாலதியின் சிறுகதைகளாம். குடும்பனுடறவுகளின் பல்வேறு நிலைகளை யதார்த்தமாய் இவரது சிறுகதைகள் சித்தரிப்பன. கைக்கிளையின் கண்ணீர் என்ற புராணம்சார் சிறுகதையில், அவரது கம்பீராமான மொழிநடையைச் Si606)lis856)ffib.
கிழக்கிலங்கையைச் சேர்ந்த பாணர்டியூர் ராகி, சரியா தப்பா? உள்ளத்தூய்மை, நினைத்ததும் நடந்ததும், அறுவடை முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். மெல்லிய கிண்டல் நடையோடு கதை எழுதும் குமார்தனபால், காவோலை, சிலநேரங்களில் சில குடும்பங்கள், மறுபக்கம் பார்த்தால், உள்ளே இருப்பது நெருப்பு ஆகிய தரமான சிறுகதைகளைப் படைத்தளித்துள்ளார்.
மட்டுவிலானின் சிறுகதைகள் சற்று வித்தியாசமான களத்தையும். கருவையும் கொண்டவை. குடும்ப உறவுகளின் ஒற்றுமையையும் பாசப்பிணிப்பையும் அவரது கதைகளில் காணலாம். பாத்திரவார்ப்பு தத்ருபமாக அவரது கதைகளில் அமைந்திருக்கும். அம்மாவுக்கு என்ன வாக்கும், அம்மா என்னை மன்னித்துவிடு, மேற்றட்டு, அவர் பதில் சொல்வார், அந்தஇரவு என்பன மட்டுவிலானின் தரமான கதைகள் எனலாம்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நடமாடி - கே.வி இராசரத்தினத்திற்குரிய இடத்தினைக் குறிப்பிடே ஆகவேண்டும். சிறுகதை, நாடகம் ஆகிய இருதுறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அவரது கதைகளில் மொழிப்பற்றும் இனப்பற்றும் தூக்கலாக நிற்கும். 1951இல் நடமாடியின் முதற் சிறுகதை வெற்றிமணி சஞ்சிகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏழைக்கு ஏதுவாழ்வு, ஒரேஒருவழி, நிறைவு, காதலி, கைகாட்டி முதலான சிறுகதைகளைப்படைத்துள்ளார். “கலைச்செல்வி' என்ற சஞ்சிகையைப் பன்னிரண்டு இதழ்கள் நடாத்தியுள்ளார். (சிற்பியின் கலைச்செல்விக்கு முன்பு வெளிவந்தது).
தகுலன் (நா.க.தங்கரத்தினம்) ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தக்க இன்னொருவர். மூன்று தசாப்தங்களுக்கு மேலாகச்
191

Page 105
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
சிறுகதைகளை எழுதிக்குவித்தவர். நகுலன், அராலியூரான், கலைநகரான் முதலான புனைப்பெயர்களில் தன்படைப்புக்களை இலங்கையின் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பனவற்றில் அரங்கேற்றியவர். சுதந்திரனில் 1964களில் தமிழ்ச்சட்டம்பிமானம் கெட்டுப் போச்சு ஆகிய சிறுகதைகளை எழுதியபோது பலராலும் சிறுகதைப்படைப்பாளியாக இனங்காணப்பட்டவர். அவரது ‘வாழ்வுமலருமா' என்ற சிறுகதை, சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அக்கரை இலக்கியம் என்னும் தொகுதியிலிடம் பெற்றது. யாழ்ப்பாணத்து மக்களது வாழ்க் கைமுறைமைகளையும் , பேச் சுத் தமிழையும் தனது சிறுகதைகளில் இயலி பாகப் பயன்படுத்தியுள்ளார். உண்மையொலி, கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள், குடியிருந்த கோயில், தோட்டியின் இரத்தம், தமிழ்ச்சட்டம்பி முதலானவை ஏனைய சிறுகதைகளாம். சமூகமாந்தரின் பிரச்சினைகளான, சீதனம், திருமணமுறிவு, சாதிப்பாகுபாடு, பெண்ணின் உணர்வுகள் முதலானவை அவர் படைப்புகளின் உள்ளடக்கங்களாகவுள்ளன. சில சிறுகதைகளில் ஆசிரியர் ஒழுக்கநெறிகளைப் பாத்திரங்களை மீறி உரைப்பவராக விளங்குகிறார். வாழ்வு மலருமா? தோட்டியின் இரத்தம் ஆகியவை நகுலனின் தரமான சிறுகதைகளாக அடையாளம் கானப்படக்கூடியவை. இவருடைய சிறுகதைகள் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் எனுமிரு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1960களில் சிறுகதைத்துறைக்குள் காலடியெடுத்து வைத்த வண்ணை. கே. சிவராசா நாற்பது சிறுகதைகள் வரையில் எழுதியுள்ளார். எல்லாக் காலகட்டங்களிலும் எழுதியுள்ளார். சிவாவின் சிறுகதைகளின் கருத்தியல் நிலை மிகத்தெளிவானது. வர்க்கியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் இன்னோரன்ன பிரச்சினைகளுக்குள் தலை நுழைக்காது மிக அவதானமாக சமூகத்துவம், இனத்துவம் பற்றிய கருத்தியல் நிலையில் தன் சிறுகதைகளைப் படைத்துள்ளார். சமூகம் சார்ந்த சிந்தனைகளில் சமூகவாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில் எற்படும் சிக்கல்கள், மானிட அக-புற முரண்பாடுகள், மெல்லிய உணர்வுகள் என்பன சார்ந்து எழும் மனஉளைச்சல்கள் இவரது சிறுகதைகளில் மேலோங்கி நிற்கின்றன. என்றும் எங்கும் பொதுமையான மனித உணர்வுகளுக்கு வண்ணை. கே. சிவராஜா இலக்கிய வடிவந்தந்துள்ளார்.*, இறுதி ஆசை, நீர்க்குமிழி, போட்டி, காதலன் செய்த தியாகம், நெறி எங்கே, என்பன 1963/1983 காலகட்டத்துச் சிறுகதைகளாம்.
192

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Fring206 gyfuan” க.பாலசுந்தரம், ஈழத்தின் சிறுகதையாளர்கள் வரிசையில் வைத்து நோக்கத் தக்கவர். யூனியன் கல்லூரி அதிபராக விளங்கியவர். அந்நியவிருந்தாளி, உயரஉயரும் அன்ரனாக்கள், மனிததெய்வம், முட்டைப்பொரியலும் முழங்கையும், கண்டறியாத கலியாணக்கதை, யார் பெற்ற பிள்ளையோ?. மூன்றுபரப்பும் முக்கால் குழியும், விழிப்பு, ஏழிற்செவ்வாய், ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம்ரேபிள் முதலான தரமான சிறுகதைகளை எழுதியுள்ளார். சீரானதும் ஆற்றொழுக்கானதுமான நடையில், சமூகத்தின் சின்னத்தனங்களையும் பிரச்சினைகளையும் தனது சிறுகதையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது சிறுகதைகளின் தொகுதி, “அந்நிய விருந்தாளி-யாழ்இலக்கியவட்டம் வெளியிட்டுள்ளது. அவருடைய கதைகள் சிரித்திரன், அமிர்தகங்கை, றோசாப்பூ ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ‘அவரின் சிறுகதைகளில் மனித தெய்வம், அநநிய விருந்தாளி ஆகிய இரண்டும் மனித சமுதாயம், முழுமைக்கும பொதுவான மனிதநேயம் என்னும் பண்பினை வெளிப்படுத்துவன. ஏனைய கதைகள் ஈழத்தமிழர் சமூகத்திற்குச் சிறப்பாகவுள்ள சமூக பொருளாதாரப் பிரச்சனைகளினடிப்படையில் உருவானவை. அவரின் கதைகளில் சமகால யாழ்ப்பான மண்ணின் மணம் நன்கு புலனாகும். நாம் அம்மண்ணில் அன்றாடஞ் சந்திக்கும் மாந்தாரைக் கதாபாத்திரங்களாக்கி ஆசிரியர் நடமாடவிட்டுள்ளார். பிரதேசப் பேச்சு வழக்கு ஆசிரியருக்கு இவ்வகையில் நன்கு கைகொடுத்துதவியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. கதைகளை அமைக்கும் முறையில் வெவ்வேறு உத்திகளைக் க. பாலசுந்தரம் கையாண்டுள்ளார். பெரும்பாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உத்தியிலமைந்துள்ளன. ஈழத்துச்சிறுகதைத் துறையில் புதிய வளர்ச்சி நிலைகளை இவரது கதைகள் புலப்படுத்துகின்றன*.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் இளம்பிறை எம். ஏ. ரஹம்மான் விடுபடமுடியாதவர். அவர் இளம்பிறை' என்ற காத்திரமான இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியராகவும், அரசு வெளியீடு மூலம் கனதியாக நூல்களை வெளியிட்ட பதிப்பாளராகவும் விளங்குகிறார். பூ, யானை, தானம், உண்மையில் உறுதி, ஈமான், சிறுகதை நீட்டி என்பன எம்.ஏ.ரஹற்மானின் சிறுகதைகளாகவுள்ளன. ‘சிறுகதை நீட்டி’ என்ற தொகுதியில் இச்சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன. ‘கதைக்கு கருக்களை நெய்து சிறுகதைகளாக்கியிருக்கும் உத்திதான் கதைகளுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடிக் கொடுக்கின்றன." ரஹற்மானின் சிறுகதைகளில் “பூ ஒரு அற்புதமானபடைப்பு. வியப்பானதும் அதிர்ச்சியானதுமான முடிவினைக் கொண்டது. சத்தியாக்கிரகத் தத்துவங்களுக்கு விளக்கம் தரும் சிறுகதையாக உண்மையில் உறுதி அமைகிறது. நல்லதொரு
193
(13) --

Page 106
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” சிறுகதையாளனாக ரஹம் மான் விளங்குகிறார், குறைவாகப் படைத்திருந்தாலும் கூட.
இவ்வரிசையில் 1960/1970 காலகட்டத்தில் சிறுகதைகள் படைத்தோர் பலருள்ளனர். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களே. வி. சிங்காரவேலண் (பெரியக்கா), செந்தாரகை (முருக்கம்பூ), இரா. சிவலிங்கம் (முன்னவன் சொத்து), த.இந்திரலிங்கம் (அவன் மனிதன்), எஸ். இராகம் புஸ்பவனம் (பகை), மணிவாணன் (பசி), மருதார்ப்பாரி (பலி), கோபதி (கொள்ளிக்கடன்), யூ.எஸ்.தாவூத் (தெளிவு), பாண்டியூரண் (புட்டிப்பால்), எஸ்.எச்.ஜேஹரஸைன் (தேர்தல்), நாரளைசண்முகநாதன் (சவ்வாத்து) தா. பி. சுப்பிரமணியம் (நினைப்பும் நடப்பும்), மருதார்க்கனி (தனித்துவம்), த. பரமலிங்கம் (மொட்டு, வடு), பரிபூரணன் (பிரசவக் காசு) பாமா இராஜகோபால் (சரண்), மாதகல் செல்வா (பசி), அன்ரனி இராசையா (கெடுக உலகியற்றியான்), ஜோவலன் வாஸ் (எரிமலை, வெறி, ஆணிவேர்), ஈழத்து இரத்தினம் (முடத்தெங்கு) எம். வாமதேவன் (கங்காணியார்), அந்தனிஜீவா (புருட்செலட்) ரா.பாலகிருஷ்ணன் (சூழ்நிலை), ஜோஜ் சந்திரசேகரன் (முழுமை, மோகம்), மயில் வாகனன் (புதுவாழ்வு), பரம் (சுயநலம்), மலையமான் (மின்னல், தாக்கம், ஒளி), இ. செ. கந்தசாமி (நினைவும் நிழலும்), வே. தனபாலசிங்கம் (நாய்கள், வர்க்கம்), மருதார்வாணன் (ஒரே இரத்தம், நீாக்குமிழி), இ. இராசரத்தினம் (நிறைகுடம்), நல்லை அமிழ்தண் (நிலவும் இருட்டும், தேர்த்திருவிழா), பிலிப் யேக்கப் (தானம்), அருள் சுப்பிரமணியம் (கிழவன்), ஆ. பற்றிமாகரன் (உங்கள் கதைகள்), எம். எச். எம். சம்ஸ் (வயிறுகள்), ஒரு பூகோளக் கிராமத்தில் பூகம்பம்), அல்ஹஸ்மத் (நாம்ஸே) அன்னலட்சுமி ராஜதுரை (மாலைப்பொழுது), மாத்தளை சோமு (வாமனம்), எம்.எல்.எம்.மண்சூர் (சிறு தீப்பொறி மூண்டு.), யோகா பாலச்சந்திரன் (சூடேறும் செய்திகள்), கே. விஜயன் (தார்க்கொப்பளங்கள்) சி. சுதந்திரராஜா (மேற்காவுகை), சிவர சுப்பிரமணியம் (வெளிச்சத்துக்கு வருவோம்), அ. பாலமனோகரன் (புதிய பொலிக்கொடி), பா.ரத்னசபாபதிஐயர் (ஊறிய உணர்வுகள்..), க.நவம் (ஒரு பூ உதிர்கிறது), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (வித்யாவின் குழந்தை), த.கலாமணி (உரமான கால்கள்), வடகோவை வரதராஜன் (மழைபஞ்ச(ம்)ாங்கம்), அல். அலசமத் (சைவப்பிள்ளை) செனமினி (எண்ணங்கள்), எஸ்.ஏச். நீஃமத் (யுகபுருஷர்கள்), எம்.எம். நெள வடித் (விடியநேரமிருக்கு), மு.பஷீர் (முகத் தரைகள்), கணமகேஸ்வரன் (தலையெழுத்து), தமிழ் பிரியா (ஒருதவறு), மு.புஸ்பராஜன் (இதோமனிதன்), செந்தாரகை (உண்மைபொய்), ஆனந்தமயில் (ஒற்றைக்கால்கோழி), முதலானோர் அவ்வரிசையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
194

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்”
1960களில் எழுத்துத் துறைக்கு வந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம், குறைவான சிறுகதைகளைப் படைத்திருந்தாலும், தான் வாழும்பிரதேசத்தின் சமூகத்துவாழ்வின் விழுமியங்களை உள்வாங்கி விபரிக்கின்றார். ஒரு மகன் தன் தாயைத்தேடுகிறான், அரணை, இலந்தைப்பழத்துப்புழு, உருவெளி மனிதர்கள், சில நிஜங்கள். அக்கினி, விசாரம் என்பன நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தை இனங்காட்டும் சிறந்த சிறுகதைகளாகவுள்ளன. ‘இவரது ஆக்கங்கள் ஆரவாரமில்லாதவை. ஆனால், அப்படைப்புகள் மெளனமாகவே வாழ்க்கையையும் மனிதரையும் கூர்மையாக நோக்குகின்றன. நிகழ்வுகளுக்கேற்ப உண்டாகும் உணர்ச்சிகளை, உணர்ச்சி பேதங்களைக் கலை நயத்துடன் சித்தரிக்கின்றன." அரணை, ஒரு மகன் தன்தாயைத் தேடுகிறான் ஆகியன தரமான சிறுகதைகள்.
முல்லைமணி வி. சுப்பிரமணியம் இலக்கியத்தின் பல்துறை களிலும் எழுத்துப் பயிற்சியுடையவர். அவர்எழுதிய சிறுகதைகள் ஈழத்துச்சிறுகதைகளின் வரிசையில் வைத்து எண்ணப்படத்தக்கன. அரசிகள் அழுவதில்லை, உறவுகள், பிணைப்பு, துணை, வீட்டில் நடந்தது. ஐராங்கனி, கிராமங்கள்கற்பழிக்கப்படுகின்றன. அவளும் தோற்றுவிட்டாள், காத்திருக்க வேண்டும், முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது சிறுகதைகளின் தொகுப்பு ‘அரசிகள் அழுவதில்லை' என்பதாகும். தான் கண்டுணர்ந்தவற்றைக் கதாசிரியர் எழுத்தில் வடித்துள்ளமையால் முல்லைமணியின் கதைகள் யதார்த்த பூர்வமானவையாகவுள்ளன. வன்னிப்பிரதேசத்தைச் சித்திரிக்கும் கதைகள் (பிணைப்பு. கிராமங்கள், கற்பழிக்கப்படுகின்றன, அவளும் தோற்றுவிட்டாள்), இனத்துவ சிந்தனைக் கதைகள் (ஐராங்கனி), காதற்கதைகள் (வீட்டில் நடந்தது, உறவுகள்), சூழலியக்கதைகள் (கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன) என்பன. அவ்வகையில். “அவருடைய கதைகள் அவதானிப்புகளாக மனித சமூக பிரக்ஞை கொண்ட ஓர் எழுத்தாளரின் அக்கறைகளாக அமைகின்றன என்று நாம் கணித்துவிடலாம்*
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இரு தம் பையாக்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் எஸ். வி. தம்பையா, மற்றவர் புலோலியூர் க. தம்பையா. எஸ்.வி.தம்பையாவின் முதற்சிறுகதை 1956களில் தமிழ்முரசில் (சிங்கப்பூர்) வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து கடலில் கலந்தது கண்ணீர், பட்டமரம், அணையாவிளக்கு, முதலான சிறுகதை களை எழுதியுள்ளார். இவருடைய சிறுகதைகள் சமூகத்துவம், சாதியம்,
195

Page 107
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" பகுத்தறிவியம் சார்ந்தவை. "அவர் வாழந்த சூழலில் தன்னைப் பாதித்த, மனதை உலுக்கிய சம்பவங்களை அந்த அந்தக் காலச் சூழலுக்கேற்ப ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் பரீட்சார்த்தமாகவே எழுதியுள்ளார்°
புலோலியூர் க. தம்மையாவின் சிறுகதைகள் இயல்பான மக்கள் மொழியில் சமூகப்பிரக்ஞையோடு, சமூக விபரணமாக அமைந்தவையாகும். ஊருக்குப் போனவர், அழியுங் கோலங்கள், ஓர் ஆசிரியர் அநாதையாகிறார், பாசம் வண்டியேறுகிறது முதலான அவரின் சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவை. "தம்பையாவின் கதைகள் அனைத்திலும் மனித மனங்களின் சலனங்கள், அவலங்கள், உள்ளத்தின் உணர்வுகள், ஏக்கச் சுழிப்புகள் என்பன வட்டமிடுகின்றன. இவரின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இயல்பானவையாக உயிர்த்துடிப்புடன் உலாவருவதும் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம்.* எனினும், க.தம்பையா சில விடங்களில் போதனை செய்பவராகக் கதைகளில் தெரிவது நோக்கத்தக்கது.
நயிமாசித்திக் (நயிமா ஏ. பழீைர்) கணிப்புக்குரிய சிறுகதை ஆசிரியராகக் கொள்வதில் தவறில்லை. சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, இஸ்லாமிய குடும்ப விமர்சனமாக இவரது சிறுகதைகள் அமைந்துள்ளன. வாழ்க்கையின் சுவடுகள், உழைக்கப்பிறந்தவன், அவள் எடுத்த முடிவு, தன்னையே சுட்டபோது. அவனுக்கென்று ஓர் ஆசை, நேர்மை உள்ளம், ஊமைகள் பேசுகின்றனர். காலம் பல கடந்தாலும், சின்ன விழிகள் சிரித்தன முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். வாழ்க்கையின் கடுைகள் என்ற பெயரில் இவரது சிறுகதைகளைத் தமிழ்மன்ற எஸ். எம். ஹனிபா தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வகையில் நாகூர் எம் கனி என்பவரின் சிறுகதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். மைமூனா ஒரு. நான் ஒரு தத்துவமானேன், அரங்கேற்றமா? நாடகமா? கடன் இல்லா ஹஜ், கீழ்வானில் ஒரு சூறைக்காற்று. தூரத்துப்பூபாளம், ஜிலேகா சுலைகா, அவள் ஒரு ஓவியம் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். இவரின் சிறுகதைகள் தூரத்துப் பூபாளம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. நகரப்புற இஸ்லாமிய மக்களின் வாழ்வை இவரது சிறுகதைகளிற் காணலாம், தனது சிறுகதைகள் மூலம் இஸ்லாமிய நெறிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். எனினும், பாரம் பரியங்களை மீறுகின்ற புதுமை நோக்கினை இவரது சிறுகதைகளில் தரிசிக்கலாம். அத்தோடு ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுமையான பிரச்சினைகளையும் இவர் தன்சிறுகதைகளிற் சுட்டிக் ಹTLಳ್ವ விடவில்லை.
19

ஈழத்துச் சிறுகதை வரலாறு - *30 grugi” ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்த மலையக எழத் தாளர்களில் சாரநாடன், மலரண்யன், மு. சிவலிங்கம்,
சி.பன்னிச்செல்வம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சாரல்நாடன் திப்த்தி,
காலஓட்டம், அழுதுகழித்த இரவுகள் முதலிய தரமான சிறுகதைகளைத் தந்துள்ளார். மலைக் கொழுந்தி என்றொரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். மலரண்பனின் சிறுகதைகளில் கோடிச்சேலை, தார்மிகம் என்பன தரமானவை. கோடிச்சோலை என்ற சிறுகதைத்தொகுப்பு மலரன்பனுக்குரியதாகும். மு. சிவலிங்கத்தின் சிறுகதைகளில் இருள், என்னைப் பெத்தஅத்தா என்பன தரமான கதைகளாக விளங்குகின்றன. இவற்றைவிட பேப்பர் பிரஜைகள், மதுரகீதம், நிரந்தரம், காகமும் நரியும். அலவன்ஸ் லேபரர், ஞானப்பிரவேசம், வல்லமை தாராயோ, எனக்கு ஒரு மயக்கம், அந்தரங்கம் கேவலமானது, ஒருபிடி தேயிலை, மலைகளின் மக்கள் முதலான சிறுகதைத் தந்துள்ளார். மலைகளின் மக்கள் என்ற பெயரில் ஒரு தொகுதியாகவும் வெளிவந்துள்ளது. ‘மலையகமக்களின் தேசிய அந்தஸ்து, அரசியல் உரிமைகள், பொருளாதார சமூககலாசார வளர்ச்சி என்பனவற்றியே இவரது கதைகள் பேசுகின்றன.”
சி. பன்னீர்ச்செல்வத்தின் சிறுகதைகளில் இலவுகாத்தகிளி, இவர்கள் பிரசவிக்கிறார்கள், ஜென்மபூமி சிறந்த கதைகளாகும். தமிழக இதழ்கள் பலவற்றிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. திறந்தவெளிச் சிறைச்சாலைகள், பன்னீர்ச் செல்வத்தின் சிறுகதைகளின் தொகுப்பாகும். மேற்குறித்த இவர்களது படைப்புகள் மலையக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலான தாங்கொணாத வேதனை நிறைந்த வாழ்வைக் கலாரீதியாகச் சித்தரிப்பன.
நாவலாசிரியராக மலர்ந்த தி. ஞானசேகரன் 1960 / 1970களில் ஆக்கபூர்வமான பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். இவரது முதற்கதையான பிழைப்பு, 1964இல் கலைச்செல்வியில் பிரசுரமானது, அதனையடுத்து சுமங்கலி, கடமை. குமிழி, எங்கோ ஒரு பரிசு, கோணல்கள், உள்ளும் புறமும், காலதரிசனம் முதலியன இக்காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளாம். இவை யாழ்ப்பான மண்சார்ந்தவை. இவருடைய சிறுகதைகளின் தொகுப்பாக காலதரிசனமுள்ளது. இவரது இரண்டாம் கட்டத்து எழுத்துக்களே (19842000) இவரைத் தக்கதொரு சிறுகதையாளனாக அடையாளம் காணவைத்துள்ளன.
197

Page 108
ஈழத்துச் சிறுகதை வரலர் “செங்கை ஆழியான்” 5.3.3 1970-1980 தசாப்த சிறுகதை ஆசிரியர்கள்
1960 - 1983 புத்தெழுச்சிக் சிறுகதைக் காலகட்டத்தில்,1970 80 தசாப்தகாலத்தில் நல்ல பல சிறுகதை எழுத்தாளர்கள் உருவாகினர். சுயமொழிக்கல்வியின் உச்சவீறும், ஈழத்தமிழ் தேசியவுணர்வின் வளர்ச்சி நிலையும் கொண்டவர்களாக இவர்கள் உதயமாயினர். சிறுகதை இலக்கியத்தின் சரியான செல்நெறியைப் புரிந்தவர்கள் இத்தொகுதியிற் பலர் இருந்தனர். ஒரு புறத்தில் சாதியம், வர்க்கியம் ஆகிய கருத்து நிலைகளில் சிலர் தொடர்ந்து எழுத முன்வர, மறுபுறத்தில் சமூகவியல், இனத்துவ கருத்து நிலைகளையுடையவர்கள் பலர் உருவாகினர்.
1970/1980 தசாப்த காலத்தின் உச்சச் சிறுகதையாளர்களாக தெணியான், காவலூர் எஸ். ஜெகநாதன், சாந்தன், கே.ஆர். டேவிட், லெ. முருகபூபதி, மு. சட்டநாதன், கோகில மகேந்திரன், திக்குவல்லை கமால், சுதாராஜ், ராஜ்றிகாந்தன், முத்து இராசரத்தினம், மண்டுர் அசோகா, பூங்கோதை, அ. யேசுராசா குப்பிளான், ஐ. சண்முகம், ப. ஆப்டின், கே.கோவிந்தராஜ், க.சதாசிவம், ச.முருகானந்தன், இணுவையூர் சிதம்பரதிருச் செந்திநாதன், பூங்கோதை, உடுவை எஸ். தில்லைநடராஜா, 8. தணிகாசலம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1970/80 களில்முகிழ்ந்த முன்னணிச் சிறுகதையாசிரியராகத் தெணியானைக் கொள்ளலாம். மார்க்சியச்சிந்தனை வழி இலக்கியம் படைக்கும் முற்போக்காளனாகத் தெணியான் உள்ளார். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தைப்பிடிவாதமாக வலியுறுத்தும் பண்பினை அவரது சிறுகதைகளில் காணலாம். தமது சமூகத்தின் ஒடுக்கு முறைகளை விபரிப்பதன் மூலமே இலக்கியக் கணிப்புப்பெற்று, மனித இன்னல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று அவற்றை இலக்கியமாகக் காட்டும் பொழுது ஏற்படும் மனிதாயத ஆவேசம், என்னும் கொள்கையை வழிப்படுத்திய முற்போக்குப் பரப்புரையின் வாரிசான இவர், அந்தமனித, இன்னலை குறிப்பதாக ஒரு குழுவினரிடத்தே மாத்திரமன்றிப்பாரம்பரியச் சமுதாயம் முழுவதிலுமே காணும் முதிர்ச்சியைப் பெற்றவர்.* தெணியான் கலைச்செல்வி, மல்லிகை, வீரகேசரி, தினகரன், தாமரை, நான்காவது பரிமாணம் முதலான பத் தரிகைகளில் எழுதயுள்ளார். அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குரலாக அவரது சிறுகதைகள் பலவும் பேசினாலும், குடும்ப உறவுகளை மென்மையான இறுக்கத்துடன் பிணைத்து எழுதுவதில் வல்லவர். சாதியம், வர்க்கியம்
198

Hg3 ghabh ag MOTIF “செங்கை ஆழியான்” ஆகிய கருத்துநிலை இவரது சிறுகதைகளில் மிக்குநிற்கின்றன. எல்லாம் மண்தான், கூரை ஒன்றுதான், தன்னிறைவு தேடுகிறார்கள். இவளின் கதை, இனியொரு விதிசெய்வோம், மனிதன், மானங்கெட்டவர்கள், வடுக்கள் அழிய, மாத்துவேட்டி, உவப்பு, உள்அழுகல், பூதம் முதலான சிறுகதைகளைப்படைத்துள்ளார். இந்நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் தனித்து நோக்கத்தக்கன. தெணியானின் சிறுகதைகள் சமூகத்தின் அடி வேரைச்சுட்டிநிற்கும் சமூக விமர்சனங்கள். அவரது படைப்புக்களுடாக இந்தச் சமூகத்தின் பல்வேறு கோணத்து வெட்டுமுகத் தோற்றங்களைக் கண்டுகொள்ளலாம். பழைமை, பொய்ம்மை, அறியாமை இருளில் மூழ்கியும், அகம்பாவம் புரையோடியும் கிடக்கும் இந்தச் சமுதாயம் மாற்றமுற வேண்டியது தவிர்க்க இயலாத இயங்கியல் நியதியாகும். மாற்றத்துக்கான இலக்கு எது என்பதையும் அவரது கதைகள் திசைகாட்டி நிற்பதற்குத் தவறவில்லை.* எனினும், அவர் தான் கூறவிரும்புகின்ற கருத்தை வலிந்து கதைகளில் முன்வைப்பதில் இயற்பண்பிற்கு மாறாக அவை கலைத்துவத்தை இழந்து விடுகின்றன.
1970களில் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்துள் வீறுடன் புகுந்தவர் காவலாச் எஸ். ஜெகநாதன். குறுகியகாலத்துள் ஈழத்தினதும் தமிழகத்தினதும் சஞ்சிகைகள் யாவற்றிலும் தனது குறுகிய ஆயுட்காலத்தில் நிறையவே எழுத்தித்தள்ளியவர். காலநதி, சோலையில் வீசிய புயல், பயணங்கள், தகுதிகள் பிறப்பினால் வருவதில்லை, காலங்கள் திரும்புவதில்லை, சொந்தமண், ஒருசமூகத்தின் கூனல் நிமிர்கிறது. சீதேவிகள், குருவிச்சைகள், மானுடம் என்றொரு, காலதரிசனம், ஆண்டாண்டு தோறும், உடைவுகள், குருட்டுப்பார்வைகள், உழைப்பவர்க்கே, மச்சாள் முதலான நூற்றிற்கு மேற்பட்ட சிறுகதைகளைக் காவலூர் எஸ். ஜெகநாதன் படைத்துள்ளார். வீரகேசரி, மல்லிகை, தாமரை. கணையாழி, கல்கி, சிந்தாமணி, கிருதயுகம், சிகரம், தீபம், சிரித்திரன், சுடர் முதலான சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
“காவலுர் ஜெகநாதனின் சிறுகதைகளில் பாத்திரவார்ப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்துள்ளது.--விகற்பமும் வேறுபாடும் நிறைந்த பல்வகைப் பாத்திரங்களை இவர் கதைகளிற் சந்திக்கிறோம். பாத்திரத்தேர்விலும் வார்ப்பிலும் தனது தலைமுறை எழுத்தாளரிடையே தனித்தன்மையுடன் விளங்குகிறார் ஜெகநாதன். யாழ்ப்பாணத்துக் கிராம வாழ்க்கையிலிருந்து உயிர்த்துடிப்புள்ள பலபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து இக்கதைகளில் உலவவிட்டிருக்கிறார்.*
199

Page 109
*ipidus sp13323 alJRIJ) "செங்கை ஆழியான்”
காவலூர் எஸ். ஜெகநாதனின் சிறுகதைகளில் கடலும் கழனியும் முதன்மை பெறும் கதைக்களங்களாகும். அவரது சிறுகதைகளில் சாதியம், வர்க்கியம், வாழ்க்கையின் வசீகரங்களும் குணங்களும், தாங்கொணாத்துயர்கள் என்பன உள்ளடக்கமாகின்றன. அவரது சிறுகதைகளில் காலதரிசனம், சொந்தமண் ஆகியவிரு சிறுகதைகளும் தரமானவை. தோட்டத்தில் கூலியாக வாழ்ந்தவருக்கு விசுவமடுவில் சொந்தக்காணிகிடைக்கிறது. அதைப்பண்படுத்தி அவரை இருத்தி பராமரிப்பதாக வாக்களித்த மகன், ஒருநாள் அந்தச் சொந்தமண்ணைக் கைவிட்டு வெளிநாடு போகிறான். “இந்தப் பிச்சைக் காசுக்கு மண்ணைவறுகிறது விசர்வேலை. இனி என்ர கணக்கெல்லாம் ஆயிரக்கணக்கில்தான்' என்கிறான். அவர் மகனனுப்பிய பணத்தைத்தூக்கி வீசிவிட்டு, விசுவமடு சென்று மண்வெட்டியை எடுக்கிறார். இதுதான் சொந்தமண் சிறுகதை கூறும் செய்தி. கடற்கரைக்கிராமத்தின் நவீன நாகரிக வருகை கிழவரைக் கவலைப்பட வைக்கிறது. புதியவுலகின் வருகையை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. இறுதியில் கால தரிசனத்தை அவரால் உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஏற்றுக் கொள்கிறார். இச் சிறுகதையை ஜெகநாதன் கலையுணர்வோடு படைத்துள்ளார்
சாந்தனின் சிறுகதைகளில் கலைவளத்தை மேவிக்கருத்துவளமே காணப்படும். கருத்துவளம் மட்டும் இலக்கியமாகிவிடுவதில்லை, சாந்தன். குமிழிகள், இராக்குருவி, அந்நியமான உண்மைகள், அப்பா பாவம், மீறல், தே, என்நண்பன் பெயர் நாணயக்கார, ஒரேயொருளுைரிலே. முளைகள் முதலான நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். தேர்ந்தெடுத்த சொற்கள், உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் உள்ளடக்கம், குறைவான அரிதான விபரணம் என்பன சாந்தனின் சிறுகதைகளிற் காணலாம். தான் கூற விரும்பும் கருத்தை அப்படியே கூறி விடுவதால், அவரது சிறுகதைகளில் கருத்துவளம் மிக்குநிற்கும். அவரது கடுகு போன்ற குட்டிக் கதைகளின் பிறப்பிற்கும் சாந்தனின் இந்த மனோபாவமே காரணமாகிறது. அவர் எழதிய ‘தமிழன்’ என்ற சிறுகதை சற்றுப் புறநடையானது.
கே. ஆர். டேவிட்டின் ஆரம்பகாலச்சிறுகதைகள் 1970/80 களில் வெளிவந்துள்ளன. அவரின் உண்மையான வீச்சினை அடுத்த தசாப்த காலத்திலேயே தரிசிக்க முடிகின்றது. புகழிடம், கடவுள் ஒருவனல்ல, கெளரவமான அடிமைகள் குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
200

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியான்”
நீர்கொழும்பு தந்த இன்னொரு தரமான சிறுகதையாசிரியர் லெ.முருகபூபதி ஆவார். சமாந்தரங்கள், கனவுகள் ஆயிரம், தலைமுறைகள், சுமையின் பங்காளிகள் என்பன தரமான சிறுகதைகளாகவுள்ளன. இவருடைய சிறுகதைகளின் தொகுப்பு சுமையின் பங்காளிகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தான் தரிசித்த சமூகத்தின் வாழ்வை நிதானமாகவும் பொறுப்புடனும் சிறுகதையாக்கியுள்ளார். இவருடைய சிறுகதைகளில் பிரதேசப்பேச்சுவழக்கும், விவரணமும் நன்றாக அமைந்திருக்கும். சிறுகதைகளில் கூறியவற்றிலும் கூறாது விட்டவை அதிகமாகவுணரப்படும்.
ஈழத்துச்சிறுகதைத்துறைக்கு வலுச்சேர்த்த சிறுகதையாசிரியர் க. சட்டநாதன். ஈழத்து விமர்சகர்களின் கவன ஈர்ப்புக்குள்ளான படைப்பாளி. "இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகார முனை மழுங்க, பெண் தன்னைச் சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்துவிட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகின்றது. ஆண் - பெண் உறவு - உணர்வு விவகாரங்களைக் கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான். அனுபவங்களையெல்லாம் சிதறடிக்கும் எத்தனங்கள் தான் எனது கதைகள்’ என்கிறார் சட்டநாதன். அவரது சிறுகதைஞக்கு இந்த அளவுகோல் பொருந்துமென்பது ஆய்விற்குரியது. ஆனால், கருத்துவளமும் கலைவளமும் ஒருங்கே இணைந்து முழுமையான. இலக்கிய வடிவத்தினை சிறுகதைகளில் காணமுடிகின்றது. உறவுகள், இப்படியும் காதல் வரும், மாற்றம், பிச்சைப் பெட்டிகள், தாம்பத்தியம், தரிசனம், தளம்பல், ஒதுக்கம், இவரது வித்தியாசமானவர்கள் முதலானவை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளாம். இவற்றில் உலா, வித்தியாச மாணவர்கள் இரண்டும் தரமானசிறுகதைகளாக விளங்குகின்றன.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றைக் கோகிலா மகேந்திரனைத் தவிர்த்து எழுதமுடியாதெனுமளவிற்கு சிறந்த படைப்பாளியாக விளங்கும் EYffssolL. பன்முகப்பட்ட துறைகளில் ஆற்றல் வாய்ந்தவர். ஒரு சோகம் இறுகும் போது, சடப்பொருள் என்று நினைத்தாயோ? ஒலிக்காத ஒலம், ஒருஏக்கம் மடிகிறது. பலியாடுகள், ஒரு நெருடலும் ஒரு அசைவும், பொறுமை, ஓர் உள்ளம் பேசுகிறது. புதுயுகம் விடிகிறது, அன்பிற்கு முன்னால், தலைமுறைகள் முரண்படும் போது, அர்த்தமுள்ள ஒரு வாழ்வு, வதை, அர்ச்சிக்கப்பட்ட விக்கிரகங்கள், உள்ளத்தால் அடிமைகள், நிமிரும் ஊனங்கள், முதலான பல நல்ல சிறுகதைகளைக் கோகிலா மகேந்திரன் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைத் தாங்கிய மனிதசொருபங்கள்,
201

Page 110
hljóð fylaðb al-AIEi “செங்கை ஆழியாண்” முரண்பாடுகளின் அறுவடை, 1983 காலகட்டத்திற்குள் அவரால் எழுதப்பட்ட சிறுகதைத் தாங்கரி வெளிவந்த தொகுதிகளாம் . “எனது ஆத்மதிருப்திக்காகவும், என் அனுபவமுத்திரைகளை உங்களுக்குச் சொல்வதற்காகவும், ஒரு பிரச்சினை பற்றிய என்பார்வையைக் காட்டுவதற்காகவும், மாணவர்களை நெறிப்படுத்துவதற்காகவும் மட்டுமன்றி சில சந்தர்ப்பங்களில் எதற்கென்றே தெரியாத ஒரு மன உந்துதலினாலும் எழுதுகிறேன்" என்கிறார் கோகிலா மகேந்திரன்.
கோகிலா மகேந்திரனின் சிறுகதைகளில் பென்விடுதலை, தலைமுறை இடைவெளி, சாதியம், மூடநம்பிக்கைகள், கல்வியுலகு முதலான சமூகத்துவம் கருப்பொருளாகக் கலைவடிவம் பெற்றிருக்கும். பெண்ணியம் சம்பந்தமான சிறுகதைகளில் ஆணாதிக்கத்திற் கெதிரான அழுத்தம் பெருங்கொதிப்போடு பரிணமித்திருக்கும். உளவியலணுகு முறை அவரது சிறுகதைகளின் ஒரு பலமும் பண்பும் ஆகவுள்ளது. சடப்பொருள் என்றுதான் நினைப்போ?, உள்ளத்தால் அடிமைகள் என்பன மிகத்தரமான சிறுகதைகள்.
தென்னிலங்கை தந்த தரமான சிறுகதையாளர் திக்குவல்லை கமால், தென்னிலங்கையின் சமூக வாழ்வை மண்வாசனையோடு, சமூகப் பிரக்ஞையோடு தன் சிறுகதைகளில் கமால் தந்துள்ளார். அப்பிரதேச பேச்சு மொழியைத் தத்ருமாக அவர் சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். ஒருபடைப்பாளிக்கு இருக்க வேண்டிய தேடல் முயற்சியில் அடிக்கடி தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்." வெறி தீர்ந்தது, மாறுசாதி, முரண்பாடுகளின் பின்னணியில், ஆற்றல்கள் அனாதைகளாக, பாரப்பட்ட பதனா, உலகம் எங்கள் கைகளுக்குள், பெயர்ப்பலகைகள், வீராங்கனைகள் வரிசையில், பயணம், விடைபிழைத்த கணக்கு, அந்நியம், கண்ணிரும் கதைசொல்லும், மகிழ்ச்சிப் பேரிகை, தோளர்கள், போதம், குருட்டு வெளிச்சம் முதலியன 1983க்கு முற்பட்ட சிறுகதைகள், திக்குவல்லை கமாலின் கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம், விடைபிழைத்த கணக்கு ஆகிய தொகுதிகளில் இச்சிறுகதைகளுள்ளன. “ஏழை உழைப்பாளிகளின் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களும் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அவர்களது மனிதாபிமான உணர்வும் புரிந்துணர்வும் அவர்கள் சுரண்டப்படுவதும் ஏமாற்றப்படுவதுமே அவரது சிறுகதைகளினூடாக வெளிக் கொணரப்படுகின்றன”*
202

g dua ayur “செங்கை ஆழியான்” "ஈழத்து எழுத்தாளர்களுள்ளே விசேஷ கவனத்துக்குரியவர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகின்றவர் கதாராஜ் (சி.இராஜசிங்கம்). இவரது சிறுகதைகளில் கலைத்துவம் மிகுந்த அழகியல் அம்சங்கள் மோலோங்கி நிற்பதைக் காணலாம். பாத்திரங்களின் புறவியமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனைத் தவிர்த்து அகவயமான சித்திரிப்பகளை நேர்த்தியாகச் செய்யும் ஒரு படைப்பாளி இவர்.”* சுதாராஜின் சிறுகதைகளை ஆராயும் போது, ஒரு படிமுறை வளர்ச்சியை அவதானிக்கலாம். அவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் தேவைகள், பலாத்காரம், அந்த நிலவை நான் பார்த்தால், புதுச்சட்டை முதலானவை. இவை பலாத்காரம் என்ற அவரது சிறுகதைத்தொகுதியிலுள்ளன. “சுற்றி வளைக்காமல், நேரடியாக, ஆனால் கவர்ச்சியாகக் கதைகளைச் சொல்லும் திறன் இவருக்கு கைவந்திருக்கிறது. இக்கதைகளில் எதுவித போலித் தன்மையையும் காணமுடியாது. எதிர்காலத்தில் பிரகாசிக்கப்போகிற ஒரு எழுத்தாளருக்கு ஒரு கட்டியம்” எனத் தேவன் - யாழ்பாணம் இச்சிறுகதைத்தொகுதியின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தை பொய்க்கவில்லை. சுதாராஜின் கொடுத்தல், சுகங்களும் கமைகளும், ஏகபத்தினி விரதம், பாலைவனத்திலும் புல் முளைக்கும், ஒரு தேவதையின் குரல், பாதைகள் மாறினோம், உதிரிகள் அல்ல, நன்றியுள்ள மிருகங்கள், கணிகின்ற பருவத்தில், சைக்கிள், பொழுதுபட்டால் கிட்டாது, ஒரு நாளில் மறைந்த இருமரணப்பொழுதுகள். படுக்கை முதலான சிறுகதை குறிப்பிடத்தக்க சமூகயதார்த்தச் சிறுகதைகள்.
“சுதாராஜின் சிறுகதைகள் சொல்லும் சமூகச் செய்திகள் மனித குலத்துக்குப் பொதுவான உணர்வுகளைக் கொண்டிருக்கின்றன. இப்பண்புகளையொட்டி ஆக்கப்பட்ட சிறுகதைகள், படிப்போரின் மனச்சாட்சியை உலுப்பி விடுவது அவற்றின் பயனாகும். சுதாராஜின் சமூகப் பார்வையில் தெளிவும் மனுக்குல நேசிப்பும் இருப்பதால் அவருடைய சிறுகதைகளில் சமூகஅவதானிப்பும் முன்வைக்கும் கருத்தும் சிறப்பாக அமைந்து, சிறுகதை அவருக்குக் கைவந்த கலை என்பதை நிருபிக்கின்றன. அவருடைய கதைகளில் கதையின் கருவுக்கோ உணர்வுக்கோ வேண்டாத ஒன்றும் வருணனையில் இருக்காமை மனதை இதமாகவருடுகின்றது. கலையழகும் கவிஞனுக்குரிய தேடலும் அவருடைய கதைகளில் உள்ளன. சுதாராஜின் ஒரு நாளில் மறைந்த இரு மரணப் பொழுதுகள், பாலைவனத்திலும் புல்முளைக்கும் ஆகிய இரு சிறுகதைகள் தாங்கி நிற்கும் சங்கதிகளின் முன்னேயும் பின்னேயும் உள்ள எழுதாதகதைகள எழுப்பும் உணர்ச்சிவெளிப்பாடுகள் உலகப் பொதுமை யானவை.
203

Page 111
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
1970களில் ஈழததுச்சிறுகதை வரலாற்றினுள் புகுந்த கனதிமிக்க சிறுகதை ஆசிரியர் ராஜநீகாந்தண் நினைவுத்தடத்திலொரு கொடியவடு, ஜேன் ஆச்சி, உயர்குலத்து உத்தமர்கள், நண்பனை இனம்புரிந்து கொண்டான், காலத்தின் கனவுகள், உயரச்செல்பர்களெல்லாம் உயர்ந்தவர்களல்லர், யதார்த்தம், வல்லுணர்வுகளிடையே ஒரு மெல்லுணர்வு, ஹரிக்கேன் லாம்பு வெளிச்சத்தில் முதலான சிறுகதைகளை ராஜரீகாந்தன் படைத்துள்ளார். இவருடைய சிறுகதைகள் பல ரஷிய, உக்கிரேனிய, ஆங்கில, சிங்கள மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன. ராபூரீகாந்தனின் சிறுகதைகள் மானிடநேயத்தோடு எழுதப்பட்டவை. “யதார்த்திற்கும் கற்பனைக்குமிடையிலான தொடர்புகளைச் சரியான விதத்தில் அழகியல் அம்சங்களுடன் சேர்த்துப் படைத்துள்ளார்.* ‘இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய கனதியையும் வலிமை மிக்க காத்திரத்தையும் அளிப்பவை. இவை வாழ்க்கையை, வாழ்க்கையின் தோற்றப்பாடுகளை, அவற்றின் சிக்கல்களை, முரண்பாடு களைப் புதியதொரு நோக்கில், புதிய பரிமாணத்தில் தரிசித்து நிற்பதுடன் வாசகள்களையும் தரிசிக்க வைப்பவை. மாந்தரின் புற உலக மட்டடுமல்ல அகவுலக இயக்கத்தையும் ஆழமாக ஊடுவிப் பார்த்து தர்மவேட்கையுடனும் நேர்மைத்திறனுடனும் வெளிக்கொணர்பவை? உண்மை படைப்பனுபவத்தை ராகபூரீகாந்தனின் கதைகளில் அனுபவிக்கலாம்.
முத்து இராசரெத்தினம் நல்ல சில சிறுகதைகளை எழுதியுள்ளார். ஒரு சாதாரண அச்சகத்தொழிலாளியின் கைவண்ணத்தில், மக்கள் இலக்கியம் மலர்ந்துள்ளது. சிலந்திவயல், ஒரு குருவி, வியாழன் மாற்றம், கருமுகிலினுள் சிறு மின்னல், நீதியே நீ இருக்கின்றாயா? பொறி, சந்தனக்கட்டை முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘சந்தனக் கட்டை என்ற சிறுகதையில் நசுக்கும் சக்திகளைச் சாடத்துடிக்கும் தெளிவுணர்ச்சியும், தனக்கேற்பட்ட பாதிப்பினால். என்ற சிறுகதையில் மொழியுரிமையும் இனப் பெருமையும் பேசிக்கொண்டு தாழ்த்தப்பட்டோரை அடக்கியொடுக்கும் உயர்குலப் பெருமக்களைத் தோலுரித்துக் காட்டும் துணிவும் கூர்மையும் அழுத்தம் பெற்றிருப்பினும் பெரும்பாலான கதைகளிற் சோகச் சுவையே இழையோடுகிறது. பொருளைப் பொறுத்த வரையில் நமது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு இயைய இக்கதைகள் அமைதிருப்பினும் கதை கூறும் நுட்பம், பாத்திர வார்ப்பு உத்தி முதலாய கலையம்சங்களில் ஆங்காங்கு சிற்சில குறைபாடுகள் இருப்பதாகவே படுகின்றது”. சிலருடைய சிறுகதைளின் தொகுப்பு சிலந்திவயல் ஆகும்.
204

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” மண்டூர் அசோகா ஈழத்துச் சிறுகதைவரலாற்றில் குறிப்பிடப்படவேண்டி பெண்எழுத்தாளர். கொன்றைப்பூக்கள், கனவுகளும் கண்ணிர்ப்பூக்களும், சாயும் கோபுரங்கள், பாரம் கீழிறங்கியது முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். தான்வாழும் பிரதேச அனுபவப் பார்வை, குறிப்பாக பெண்களின் சமூகநிலை, அவரது கதைகளில் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரிசையில் சொல்லப்பட வேண்டிய இன்னொரு பெண் எழுத்தாளர் பூங்கோதை, பிழைப்பு, குடிசையில் ஒரு பிறந்தநாள், ராதாவுக்குப் பைத்தியம், கருணையின் மறுபக்கம், விண்ணப்பம், சங்கரித்தா, நியாயம், வேணிபுரத்து வெள்ளம், இப்படியும் சில மனிதர்கள் முதலான சிறுகதைகளைப் பூங்கோதை படைத்துள்ளார். பெண்ணியக் கருத்துக்கள், வர்க்கபேதங்கள், சமூகத்தின் வக்கிரங்கள், வறுமை முதலானவை பூங்கோதையின் கதைக்கருக்கள். பாரம்பரிய சிந்தனை முறையிலிருந்து முரண்படுகின்ற பார்வை பூங்கோதையின் சிறுகதைகளிலுள்ளன. வெகு துணிச்சலாகச் சமூகத்தைச் சாடுகிறார். மண்டூர் அசோகாவின் சிறுகதைகள் “கொன்றைபூக்கள்’ என்ற தொகுதியாகவும்; பூங்கோதையின் சிறுகதைகள் “வேணிபுரத்து வெள்ளம்' என்ற தொகுதியாகவும் வெளிவந்துள்ளன.
அ. யேசுராசாவின் சிறுகதைகள் சொற்பமாயினும், ஈழத்துச்சிறுகதைத்துறையில் தனித்துவமானவை, வெட்கங்கெட்டவர்கள், பிரிவு, வரவேற்பு, படம் பார்த்தபிறகு, மகத்தான துயரங்கள், ஒ! கடவுள் உறங்குகிறார் போல, கந்தசாமி வெட்கப்படுகிறான், ஒர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது. தொலைவு, இருப்பு, கோடை இடிகள் என்பன அ. யேசுராசாவின் படைப்புகள். மெளனியின் தாக்கம் அ. யேசுராசாவின் சிறுகதைகளில் தெளிவாகத் தெரிகின்றது. அகவயமான மானிடத்தேடலே யேசுராசாவின் சிறுகதைகள் அனைத்தினதும் தொனிப் பொருளாக இருக்கிறது. “சிறுகதை என்பது குறித்த ஒரு உணர்வு நிலையை மையப்படுத்திப் புனையப்படும் சொற்கோலம்* என்பதற்கு அவரின் சிறுகதைகள் தக்க உதாரணம். இவை தயாரிக்கப்பட்ட கதைகளன்று, தன்னுணர்வு பூர்வமான அனுபவ வெளிப்பாடாக யேசுராசாவின் சிறுகதை களுள்ளன. சமூகமெய்ம்மையை ஏற்றுக்கொண்டு சமூகத்தோடு அனுசரி த்துப் போகின்ற பாத்திரமாக இச்சிறுகதைகளில் வரும் ‘கவின் அமைய வில்லை. அதேவேளை வாழ்க்கையை நம்பிக்கையோடும் எதிர்கொள்ளு கின்ற திடமும் அக்கதாபாத்திரத்திடமில்லை. எனினும், அயேசுராசா ஈழத்தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்குப புதியதொரு சிறுகதை முறைமையை வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.
205

Page 112
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” 1970 களில் ஈழத்துத்தமிழ்ச்சிறுகதைத் துறைக்குள் நுழைந்தவர் களில் ஒருவர் டானியல் அன்ரனி "கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தும் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி" என்பதில் நம்பிக்கை வைத்து சிறுகதைகளை எழுதியவர். பருந்துகள் பறந்து கொண்டிருக்கின்றன, மண்குடிசைகளும் சில மயக்கங் களும், கட்டுகள், ஒரு வெறும் மனிதனின் மரணம், நிலைப்பாடு, வானம் எப்போதும் இருண்டு கிடப்பதில்லை, இழப்பு, வலை, வெற்றுக்காகிதங்கள் முதலான நல்ல சிறுகதைகளை அவர் தந்தள்ளார். மீனவ மக்களின் துயரங்கலந்த வாழ்க்கை யனுபவங்களையும், அவர்களது துயரங் களுக்குக் காரணமான சுரண்டல் சக்திகளையும் மீனவ சமூக ஏழ்மை யையும் தனது சிறுகதைகளில் அவர் சித்திரித்துள்ளார். சம்மாட்டிமாரிடம் அகப்பட்டு அவதிப்படும் தொழிலாளி கட்டைமீறிக் கொண்டு வெளியேறும் போது "கள்ளத்தோணி’ என்று பொலிசில் பிடித்துக் கொடுக்கும் கயமைத் தனத்தை பருந்துகள் பறந்து கொண்டிருக்கின்றன என்ற சிறுகதையில் காணலாம். டானியல் அன்ரனியின் தரமான சிறுகதை அதுவாகும்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றிற்கு குப்பினான் ஐ சண்முகம், பைத்தியங்கள், நீ ஏன் அழுதாய், திவ்யதிவலை, ஒரு றெயில் பயணம், இருளிலிருந்து ஒளிபிறக்கிறது, தடங்கள், ஒரு பாதையின் கதை முதலிய சிறுகதைகளை தந்துள்ளார். ‘ஓர் அழகியல்வாதியின் அகவயரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலான வற்றில் வளரிளம் பருவத்தினரின் உடல் வேட்கையையே சித்திரிக்கின்றார். மனேரதியப் பாங்கில் கதைகள் அமைந்தாலும் நிதர்சனத்தில் அடியூன்றிய அழகியல் வாதியின் பார்வையை கதைகளுடே காணமுடிகிறது.*
ஈழத்துச்சிறுதை வரலாற்றில் ப. ஆப்டிண் குறிப்பிடப்பட வேண்டியவர். 1962இல் உரிமையா உனக்கா என்ற சிறுகதையைத் தமிழின்பம் சஞ்சிகையில் எழுதியதன் மூலம் தமிழிற்கு அறிமுகமாகியவர், 1970 களில் தரமான சிறுகதைகள் சிலவற்றை படைத்துள்ளார். ஊன்றுகோல், சுரங்கப்பாதை, அந்த வண்டியின் ஓட்டம், அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், பந்தல் கட்டும் செக்குமாடுகள், ஒரு கிராமத்தின் புதுக்கதிர்கள், இரவின் ராகங்கள். புதுப்பட்டிக் கிராமத்திற்குக் கடைசி டிக்கட், முரண்பாடுகள் என்பன ஆப்டினின் நல்ல சிறுகதைகளாம். மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆப்டின் நல்ல தமிழில் சிறுகதைகள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம். ஆப்டீனின் கதைகளில், “ஏழை விவசாயிகள், தேயிலைத் தோட்டத்துத் தொழிலா ளர்கள், மீனவர் ஆகிய குடும்பங்கிளின் பிரச்சினைகள், சுகதுக்கங்கள்,
206

ஈழத்துச் சிறுகதை வரலாறு “சேங்கை ஆழிபான்”
சம் பிரதாயச் சிக் கல்கள் கதைகளுக்குக் கருவும் உருவுமாகின்றன. இக்கதைகளின் சமூகசேவை கணிசமானது. அதே வேளையில் அழகியல் அமைதியும் காக்கப்படுகிறது.’ இவரது சிறுகதைகள் “இரவின் ராகங்கள்' என்றதொகுதியாக வெளிவந்துள்ளது.
ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு அழகு சேர்க்கும் மலையகச் சிறுகதைப்படைப்பாளி கே. கோவிந்தராஜ் ஆவார். மலையகமக்களின் வாழ்வுத்துயரங்களையும், அவர்களின் தவறான வாழ்வு முறைகளையும் கோவிந்தராஜ் தனது படைப்புகளில் சுட்டியுள்ளார். தான் எழுதியவை அவர்களைச் சென்றடைய வேண்டுமென்ற ஆவலுமுள்ளவர். மொய்க்காசு, குத்தகை, சீதனம், என்னதான் கொடுத்தாலும், அவகாசம்,* மணித்தியாலம், பசியாவரம், திருந்திய உள்ளம், சாதிகள், முதலான சிறுகதைகளைப் படைத்துத் தந்துள்ளார். “கோவிந்தராஜைப் பொறுத்தவரை முதலிடம் மலைப்பிரதேசம் பற்றிய சிறுகதையல்ல. மலைப் பிரதேசமக்களின் வாழ்வும் விழிப்பும். சமூக அநீதிகளுக்கு எதிரான, மனிதநேயமிக்க ஒரு படைப்பாளியின் ஆவேசத்தை அவரது கதைகளில் காணலாம்." அவரின் சிறுகதைகளின் தொகுதி ‘பசியாவரம்' ஆகும்.
புலோலியூர் க. சதாசிவம் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு நல்ல பல சிறுகதைகளை ஆக்கித்தந்துள்ளார். யுகப்பிரவேசம், புதுவாழ்வு, அக்கா ஏன் அழுகிறாள்?, மண், அலை, அஞ்சல், நெடுஞ்சாலை, மூட்டத்தினுள்ளே, இது இவர்களுக்கு, இனி ஒருத்தி, ஒருநாட்போர், மானம் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். சமூக முரண்பாடுகள், ! வர்க்கபேதங்கள், அறியாமை, மூடநம்பிக்கைகள், தொழிலாளர்கள் பிர் சினைகள் முதலியன சதாசிவத்தரின் சிறுகதைகளின் கருப்பொருள்களாகவுள்ளன. தான் வாழ்கின்ற பிரதேச மக்களது வாழ்க்கையைக் கூர்மையான அவதானிப்புடன் கதைகளாக்கியுள்ளார். எளிமையான நடையும், சிறுகதைக்கான வடிவமைப்பும் அவரது கதைகளில் சிறப்பாக விழுந்துள்ளன. மூட்டத்தினுள்ளே, மண் ஆகிய சிறுகதைகள் சதாசிவத்தின் சிறப்பான படைப்புகளாகவுள்ளன. சதாசிவத்தின் சிறுகதைகளின் தொகுப்பாக யுகப்பிரவேசம் வெளிவந்துள்ளது.
ச. முருகானந்தண் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்தவராவார். ஈழத்து, தமிழகத்துச் சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் விரும்பிப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவரது சிறந்த சிறுகதையான ‘புலி தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு
207

Page 113
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” வெளிவந்துள்ளது. ‘கலைஒளி' என்ற சிறுகதையைத் தினகரன் பிரசுரித்து, இலக்கியவுலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தாயும் சேயும், யாருக்குச் சொந்தம், சுரத்தின் குரல், மீன் குஞ்சுகள், அந்த நிழலில் இந்த நிஜங்கள், பாதை மாறிய பந்தங்கள், தந்திரம், ஒருகிராமத்தின் கதை, தீர்வு, புதுயுகப்பிரவேசம், எங்கேதான் வாழ்ந்தாலும், புதிய பரிமாணங்கள், தினகரன் உறங்குகின்றான், மனிதர்கள், இன்னும் எத்தனை யுகமோ? முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். ‘அவரது படைப்புகளில் ஜனரஞ்சகமாக சமூகசீர்திருத்த முயற்சிகளை முன்வைத்துள்ளார். வர்க்க முரண்பாடுகள், நிலமானிய அமைப்புகளின் சீர்கேடுகள், சாதிபேதங்கள், பெண்ணடிமைத்தனம் என்பன கருக்களாக அலசப்படுகின்றன." முருகானந்தனின் சிறுகதைகள் யதார்த்த பூர்வமானவையாகவும், சமூகச் சீரழிவுகளைச் காட்டுவனவாகவும் இருக்கின்றன. சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் இயல்பாகவே கதைகளுடன் சேர்ந்துள்ளன. இவரது படைப்புகளில் சமூகப்பிரக்ஞையும் மானிடநேயமும் மிக்கிருக்கும். இவரது சிறுகதைகள் 'மீன்குஞ்சுகள் என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.
இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் 1970களில் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு வந்தவர். மனதின் மாயங்கன், பெண் என்றால் பேதைகளா? விழிப்பு, எங்கள் வீட்டுத்திண்ணை, பதவிகள், திருத்த முடியாதவர்கள், கோஷமும் வேஷமும், ஆரோகணம் அவரோகணம், முகமூடி மனிதர்கள், குட்டையும் மட்டைகளும் முதலான சிறுகதைகளை 1983 காலகட்டத்திற்குள் எழுதியுள்ளார். இவற்றில் பலவும், பத்திரிகை கதைகளாகும். முதிரா இளஞைனின் கனவுகளாகவுள்ன. 1983 இன் பிற்பட்ட காலத்துச் சிறுகதைகள் இணுவையூர் சிதம்பர திருச் செந்திநாதனை ஈழத்துச் சிறுகதை எழத்தாளர் வரிசையில் சேர்த்துள்ளன. “பொய்ம்மை, பொறாமை, பொருளாசை, சீதன வழக்கம், இனப்பிரச்சனை முதலியன சமூகத்தில் நிகழ்த்தி வந்துள்ள பாதிப்புகளைச் சிதம்பர திருச்செந்திநாதனின் கதைகள் சித்தரிக்கின்றன.*
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டிய இன்னொருவர். உடுவை தில்லை நடராஜா ஆவார். அவரின் பல் பிரதேச அனுபவமும், வெவ்வேறு தர மக்களுடனான உறவுகளும் அவரது சிறுகதைகளில் பிரதிபலிக்கின்றன. வாசக்கட்டி, சந்நிதியான் கோயில் சாப்பாடு, தவறு, வசதிப்பணம் காலம் காத்திருக்குமா?, விருந்து, பிரபலம், நிர்வாணம், இதுவும் ஒரு காதல் கதை, க்ஷணப் பித்தம், அப்பக்கடை நடக்கிறது முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
208

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” எளிமையாகத் தான்கூற விரும்பும் செய்தியைக் கதையில் வடித்து விட அவருக்குத் தெரிந்துள்ளது. சிறுகதையுலகம் அதன் அடுத்த கட்டப்பரிமாணத்தைப் பெற்றுள்ள நிலையில், இவரது 1967/1980 காலகட்டத்துக் கதைகள் அக் காலகட்ட வாழ்க் கையைச் சித்தரிப்பனவாகவுள்ளன. இவரது சில சிறுகதைகள் (விருந்து, சந்நிதிகோயில் சாப்பாடு) வர்க்கபேதங்களை அவரறியாமலேயே சித்திரித்துள்ளன. மனோரதியப்பாங்கான சிறுகதைகள் உடுவை தில்லை நடராஜாவின் எழுத்துக்களாகவுள்ளன.
ஈழத்துச் சிறுகதையுலகு பெருமைப்படக் கூடிய ஒருபடைப்பாளி க. தணிகாசலம் ஆவார். “தாயகம்' சஞ்சிகையின் ஆசிரியர். தெளிவான மார்க்சியப் பார்வை கொண்டவர். ‘எழுத்து என்பது இன்றைய சுரண்டலும் அடக்குமுறையும் கொண்ட தன்உடைமை சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்குரிய சாதனங்களில் ஒன்று என்பதை மிக அடக்கமாகவே ஏற்றுக் கொண்டு அதற்காகவே தன் எழுதிதாற்றலைப் பயன்படுத்திவருபவர்.” உறவுகள் தெரிகின்றன, மண்ணின் மைந்தர்கள், கூலிக் குழப்பம், சிவந்த பாதையில், கல், தெற்கு நோக்கி முதலான சிறுகதைகளைத் தணிகாசலம் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகள் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்குமெதிரான குரலாக ஒலிப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அச் சிறுகதைகளில் ஆசிரியரின் கூற்றாக அழுத்தப்படும் சுலோக முடிவுகள் சிறுகதையின் கலைத்துவத்தினைக் குறைத்துவிடுகின்றன. உதாரணமாக கல் என்ற சிறுகதையில், "அவன் கற்றிந்த உண்மைகள் அவனது வாழ்க்கையின் அவயவங்களாகப் படைக்கப்பட்டு அவனது வாயிலிந்து சமுதாய அமைப்பினை மாற்றும் போர்க்குரல்ாக வெளிவருகிறது என எழுதப்பட்டுள்ளது. மக்கள் இலக்கியம் என்பது மானிட மாற்றத்திற்கான கலையே, அக்கலையே கருவியாகிறது. எவ்வாறாயினும் தணிகாசலத்தின் அடுத்த கட்டக் கதைகள் தமிழ்த்தேசிய வாதத்தின் எதிரொலியாக அமைகின்றன. அவை அவரை ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் அடுத்த கட்டத்திற்குரிய வராக்குகின்றன.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் 1970களின் தோற்றம் பெற்ற பெண் எழுத்தாளர் அருணன் விஜயராணி (விஜயராணி செல்லத்துரை), ஒருநிரந்தர நிழலைத் தேடி, சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கங்கள், ஆசையின் ராகங்கள் அபஸ்வர கீதங்கள், பொதுவான நியாயங்கள், ஏணி, மனிதாபிமானங்கள், மானம் போகின்றது, கற்பு நிலையென்று சொல்ல வந்தால், திறமைகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன முதலான 209
(14)

Page 114
sig digawé JAM "செங்கை ஆழியான்”
சிறுகதைகளைத்தந்துள்ளார். துணிச்சலாக, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்பைத் தளர்த்தும் கருப்பொருள்களை தன் சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். பெண்ணின் பல்வேறு சமூகப்பரிமாணங்களை அவர்கள்பக்க நியாயங்களை விபரிக்கின்றார். உள்ளடக்கச்சிறப்பினை, வடிவத்தின் முழுமையின்மை பாதிக்கின்றது. ஏணி, அருண் விஜயராணியின் தரமான சிறுகதை. அவரின் சிறுகதைகளின் தொகுப்பாக “பெண்மை வெளிவந்துள்ளது.
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் 1970 களில் முகிழ்த்த ஈழத்துச் சிறுகதையாளர். விடிவு இப்படியும் பிறக்கும், வழிபிறந்தது, எழுச்சி, தானம், மீறல்கள், புத்துணர்ச்சி, பாரதி, புதியபயனம், பிறந்தநாள், அறிமுகவிழா, தப்புக்கணக்கு முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். தான் கண்டனுபவித்தவற்றையும், உணர்ந்தவற்றையும் தன் கதைகளில் நடமாடவிட்டிருக்கிறார். நுண்ணிய சமூக அவதானிப்பும், சமூக அவலங்களைச் சுட்டும்போது புரிந்துணர்வும், அவரது சிறுகதைகளில் கவிதாபூர்வநடையுடன் வெளிப்படுகின்றன. உள்ளடக்கம், செப்பனிட்ட வடிவம் என்பனவற்றினடியாக நோக்கில் புத்துணர்ச்சி, புதிய பயணம் ஆகிய இரு சிறுகதைகளும் தரமானவை என்பேன். இந்த முதிரா இளைஞனின் சிறுகதைகளில் வயதுக்குமீறிய இலக்கிய முதிர்ச்சி காணப்படுகின்றது.
புலோலியூர் செ. கந்தசாமியையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளல்வேண்டும். 1966 ஆம் ஆண்டு ‘நானும் பெண்' என்ற அவரது சிறுகதையை ஜோதி வெளியிட்டு அவரைச் சிறுகதையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கெடுகுடி, அலைகள், தளிர்கள், அம்மா மாறிவிட்டாள், அவள் நடுத்தெருவில் நிற்கிறாள். நித்திய கல்யாணிகள், இப்படி எத்தனை நாட்கள் முதலான சிறுகதைகளை தந்துள்ளார். “பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள் பற்றிய சீற்றம் இவரது பெரும்பாலான கதைகளிற் பிரதிபலிக்கின்றன. இனிமையும் எளிமையும் கனிந்த மொழிநடையும் உணர்ச்சி பூர்வமாகக்கதைகளை நகர்த்திச் செல்லும் லாவகமும் இவரது கதைகளுக்கு ஒருகனதயை வழங்கியுள்ளன." சமூகத்தில் அனுபவரீதியாகக் காணும் அவலங்களையும் அநியாயங்களையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆத்மதிருப்திக்காகச் சிறுகதைகளை எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார். அம்மா மாறிவிட்டாள். இப்படி
எத்தனை நாட்கள் என்பன தரமான சிறுகதைகள் என்பேன்.
210

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” தாமரைச் செல்வி இன்று முக்கியம் பெறும் பெண் எழுத்தாளர். இழப்புக்கள், சுமை, எதிர்பார்ப்புகள், கடலின் நடுவே சில காலடிச்சுவடுகள், தரிசுநிலத்து அரும்பு முதலான ஆரம்பகாலக்கதைகள் கூட சிறுகதையின் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் அவருக்குள்ள தெளிவைக்காட்டி நிற்கின்றன. 1983 இன் பின் எழுதப்பட்ட சிறுகதைகள் தனித்து நோக்கத்தக்க சிறப்பான படைப்புக்களாக அமைந்துள்ளன.
மறுமலர்ச்சிக்காலகட்டத்துச் சிறுகதை வரலாற்றில் (1964-1983) குறிப்பிடத்தக்க மலையகப் படைப்பாளி மொழிவரதன் (சி. மகாலிங்கம்) ஆவார். தவறுகள் மன்னிக்கக் கூடியவை, அவர்களை இனித்தடுக்க முடியாது, புதிய சுவடுகள், பிரிந்து செல்லும் ஒரு தோழன், கறுப்பு ஆச்சி, மேகமலையின் ராகங்கள், கோளயா, தன்மானம் முதலான சிறகதைகளை எழுதியுள்ளார். மலையக மக்களின் வாழ்க்கை உணர்வுகள், வறுமைத்துயர், ஏமாறும் மக்களின் அப்பாவித்தனம் என்பன இவரது சிறுகதைகளின் கருவாகியுள்ளன. வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் சித்திரிப்புகளாக இவரது கதைகள் விளங்குவதைக் காணலாம். "அவர்களை இனித்தடுக்க முடியாது. நல்ல தொரு சிறுகதையாகவுள்ளது. மொழிவரதனின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு மேகமலைகளின் ராகங்கள் என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.
நாவண்ணன் (ம. சூசைநாயகம்) ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் இணையக்கூடிய சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவரும் ஏழைதானே, வளர்மதி, சூறாவளி ஓய்ந்தது. கொள்ளிவைக்க ஒரு பிள்ளை, நான் ஒரு முற்றுப்புள்ளி என்பன அவரது நல்ல சில சிறுகதைகள். வாழ்க்கையனுபவங்களைச் சமய நம்பிக்கையோடு நுணுகிப் பார்க்கின்ற பண்பு அவருடைய சிறுகதைகளிலுள்ளது. நான் ஒரு முற்றுப்புள்ளி. இனவொடுக்குமுறைக்கெதிரான கருத்துக்களைக் கொண்ட சிறுகதையாகும். தாயன்பையும் சகோதரவாஞ்சையையும் இச் சிறுகதை சித்திரிக்கின்றது. 1958 இனக்கலவரத்தில் ஒருகாலையும் கற்பையும் இழந்த ஒரு பெண்ணிற்கு வாழ்வளிக்கும் புரட்சிகர இளைஞன் ஒருவனை இச்சிறுகதையில் நாவண்ணன் அறிமுகப்படுத்துகிறார். நமக்குத தேவையான சமூகச்செய்தி கொண்ட சிறுகதை.
தினபதிச் சிறுகதைமூலம் 1970களில் சிறுகதைப்பரப்பிற்குள் நுழைந்த மாத்தளை வடிவேலண் வெட்டுமரங்கள், பூபாளராகங்கள், பிஞ்சு உலகம், தலைக்கொருகூரை முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார்.
21

Page 115
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியானி” கலைத்தன்மையுடன் வாழ்க்கையின் துயரப் பக்கங்களை வடிவேலன் தனது கதைகளில் சுட்டிக் காட்டுகிறார். இக் காலகட்டத்தின் சிறுகதையாளர்களாக பாலரஞ்சினி சர்மா (மாற்றம்), கே.விஜயன் (விபத்து, தார்க்கொப்பிளங்கள்) பன்னிரண் (அன்னபூரணிக்குப் பைத்தியம்), இரா.சடகோபண் (நேர்கோடுகள் வளைவதில்லை), இப்னு அலசமத் (வேட்டைப் பூக்கள்), மா. ரத்நஸாபதிஐயர் (மூவரும் ஒருவரும்), யோகா பாலச்சந்திரண் (விழுமியங்கள்), அகளங்கண் (திக் குளிப்பு), ஏ.எல்.உபைத்துல்லா (ஜலசமாதி), மல்லிகை. சி. குமார் (குமரிக்காடு), கணபதிகணேசன் (மண்ணின் மாண்பு), பாண்டியூரான் (புட்டிப்பால்), திமிலை மகாலிங்கம் (தீர்த்தக்கரை), இணுவை மாறண் (எதற்கும் முதலில் தாய்). இ. செ. கந்தசாமி (அசுரர்கள் வாழ்கிறார்கள்), எம். எம். நெளஷத் (விடிய நேரமிருக்கு), கன. மகேஸ்வரன் (அதிர்வுகள்) மு. சடாச்சரண் (சுமை), செனமினி (மாறுகின்ற தலைமுறை), நந்தினி சேவியர் (வேட்டை, மேய்ப்பன்), எஸ். வண்ணியகுலம் (இதுவும் ஒரு பிரசவம்), வீ. சீத்தாராமன் (உழைப்பைத்தேடி), ச.மா.அச்சுதன் (காதல் சின்னம்), திமிலைக்கண்ணன் (சுழி), நா. மகாலிங்கம் (கதவு திறந்தது), த. அரியரத்தினம் (இருள்), எஸ். பி. கிருஷ்ணன் (பெற்றமணம்), ந. அனந்தராஜ் (பிரிவும் துயரும்), எஸ். கே. கப்பையா, (கனவுகள் கலைகின்றன). அ. சொலமண்ராஜ் (துணைக்கு ஒருத்தி), செங்கதிர் (வாயும் வயிறும்). தரை எங்கரசு (நெருடல்), ஆதிலட்சுமி இராசையா (கடமைக்கு, இரையான கற்பனைகள்). மு. நித்தியானந்தன் (ரத்தங்கள் மண்ணில் கலப்பதில்லை), சிவயோகமலர் ஜெயக்குமார் (மலர்தாவும் வண்டுகள்), கேகாலை கைலைநாதன் (தண்ணீர்வற்றிடும் குளங்கள்), மருதனார்மடம் கதிர்காமநாதன் (நோட்டம், தாய்), கே. வி. மகாலிங்கம் (குடிசை). எம்.எல்.எம்.மண்சூர் (ஒருதீப்பொறி), ஆனந்தராகவன் (நண்பனே. என்றும் உன் நினைவாக), எனப்.எம். நிசுமத் (பூக்கத் துடிக்கும் புஸ்பங்கள்), செந்தாரகை (நீ போனால் இன்னொன்று), மாத்தளைச் சோமு (நமக் கெண் றொரு பூமரி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தாம் வாழும் பிரதேசப்பகைப்புலத்தில் சமுகநேயத்தோடும் பிரக்ஞையோடும் சிறுகதை எழுதியவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களோடு சதாதனம் (கூலி), தவம்யோசெப் (தோணிக்காரன்), அமுதகுமரன் (கடல்தோணி), கிண்ணியா சீலோதரன் (சாகவில்லை), ஆ. தங்கத்துரை (என்தங்கை), தங்கண் (படைப்பு), வளவைவளளன் (பன்னிர்த்துளிகள்), முத்துமீரான் (புதியஉலகம் ஜனிக் கிறது), முத்தருணரத்தினம் (நியாயப்படுத்துகின்ற.), மாத்தறை ஹலீனா வஹாப் (விடிவை நோக்கி) மு.புஸ்பராஜண் (மீன் பொறுக்கி), யூ.எல். ஆதம்பாவா(வீடு), முதலானோரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். 212

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
செ. குணரெத்தினம், கோப்பாய் சிவம், வடகோவை வரதராஜன், நாகேசு தர்மலிங்கம், முருகு, மு.வே.யோகேஸ்வரன், புன்னியாமீன், சி. சுதந்திரராஜா குரும்பசிட்டி மு. திருநாவுக்கரசு, கலைவாதிகலீல், கீழ்கரவை பொன்னையன், தமிழ்ப்பிரியா, சிங்கைத் திவாகரன், சிவமலர் செல்லத்துரை, கந் தர்மலிங்கம், ஆனந்தி முதலானோர் ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் சிறப்பாக நோக்கத்தக்க சிறகதை ஆசியர்களாவர்.
மு. வே. யோகேஸ்வரன் நல்ல சில சிறுகதைகளை எழுதியுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த இவர் பயணம், இருண்ட இதயம், தாலி, காதுக் குச்சு, சங்கரன் வருகிறான் முதலான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளைக் காட்டுவனவாக இவரது சிறுகதைகள் உள்ளன.
அ. குணரத்தினம் பலதுறைகளிலீடுபாடுள்ளவர், ஏழைகளும் ஆசைகளும், அளவுகோல் முதலான தரமான சிறுகதைத் தந்துள்ளார். 1970 களின் சிறந்த ஓர் விளைவு வடகோவை வரதராஜன் ஆவார். பாசத்தின் விலை, கோட்டைநகர்ந்தது, உயிரின் ஆராதனை, பழியும்பாவமும், பிச்சைக்காரர்கள், நீலமணி, மண்ணின் மாண்பு, ஆத்மாவின் உயிர்ப்புக்கள், நாளைவரும் திருநாள் முதலான சிறுகதைகளை சமூகயதார்த்தத்துடன் கலாபூர்வமாகச் சிருஷ்டித்துள்ளார்.
சிறுகதை, கவிதை, நாடகம், குறுநாவல், கட்டுரை ஆகிய பல்துறைகளில் கோப்பாய் ப. சிவம் ஈடுபட்டுள்ளபோதிலும், அவரது ஆக்கங்களிலிருந்து அவரைச் சிறந்தவொரு சிறுகதை ஆசிரியராக இனம் காணலாம். கணிப்பு, ஒரு மரண ஊர்வலம் புறப்படப் போகிறது. அவனும் இவரும், ஏக்கங்கள், சிதைந்த கூடு, நிழல்களும் நிஜங்களும், நியாயமான போராட்டங்கள் முதலான சிறுகதைப் படைத்துள்ளார். ஒரு ஊர்வலம் புறப்படப்போகிறது, நியாயமான போராட்டங்கள் ஆகிய இரண்டு கதைகளும் யாழ்ப்பாணச் சாதியமைப்பின் ஒரு கோணத்தைச் சித்திரிப்பன. ஏக்கங்கள், கணிப்பு, நிழல்களும் நிஜங்களும், அவனும் இவரும், சிதைந்தகூடு ஆகியன மனித அகவுணர்வுகளின் அறிவுபூர்வமான சிந்தனை வெளிப்பாடுகளாகவுள்ளன.”
வடத்தலவின்ன புன்னியாமீன் ஈழத்துச் சிறுகதைத் துறை வரலாற்றில் உள்வாங்கப்படவேண்டியவர்களில் ஒருவர். சின்னச்சின்னக் கோபங்கள், சலனங்கள், குருடர்கள், அர்த்தமற்றவாதங்கள், நிழலின்
213

Page 116
pjší fotbalob alJovi Ji “செங்கை ஆழியான்" அருமை, புதிய நம்பிக்கைகள், ஓர் உதயம் அஸ்தமிக்கிறது முதலியன அன்னாரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள். சிந்தாமணி, தீபம், தினகரன், அஷ்ஷ"ரா, அறிவுஒளி முதலான சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘புன்னியாமீனின் சிறுகதைகளில் இழையோடும் எளிய நடையும், நிதானமான போக்குமே இவரது இலக்கியத்தின் ஸ்திரங்கள். தன் சமுதாயத்தை அலைக்கழிக்கும் அவலங்களை நிழற்படம் போல நெஞ்சங்களில் பதியவைப்பது இவரது திறமைக்குச் சான்று.”
தனது குறுகிய வாழ்நாளில் நாகேசு தர்மலிங்கம் நல்ல சிலசிறுகதைகளைத்தந்து, மறைந்துவிட்டார். குங்குமப்பொட்டு, வரண்ட உள்ளங்கள், மன்னிப்பு, அந்நியம், பிரயத்தனம், ஊன்றுகோல், ஞாயிற்றுக்கிழமை, உண்டியல், பென்சன், விதவை, உள்ளும் புறமும், ஆடிஅமாவாசை என்பன அவரது சிறுகதைகளாம். தெளிவான பகைப்புல விபரணம், தீவகப் பேச்சு வழக்கு, சமூகத்தின் Hல பக்கங்களையும் நுணுகிய பார்வை அவரது சிறுகதைகளின் தொகுப்பான “அந்நியம்' அவரின் மறைவுக்குப்பின்னர் டொமினிக் ஜீவாவால் வெளியிடப்பட்டுள்ளது. முருகு சிறுகதைத் துறைக்கு கனகர் அம்மன், காலம் மாறிப்போச்சு, வாழ்வைத் தேடி, புத்தபிரான் ஏன் ஓடுகின்றார், கனகத்தின் கண்ணிர், சுடலை ஆச்சியின் சாபம், ஊருக்கல்ல. ஆகிய சிறுகதைகளை வழங்கியுள்ளார். இச்சிறுகதைகள் அவர் வாழ்ந்த சமூகத்திலிருந்து பெற்றுக்கொண்ட கருவின் வடிவங்களாம். யாழ்ப்பான சமூகத்தின் பல்துறைப் பாத்திரங்கள் அவற்றின் இயல்போடு இவரின் சிறுகதைகளில் காணப்படுகின்றன. இவரது சிறுகதைகளைத் தொகுத்து “ஊருக்கல்ல' என்ற தொகுதியாக மீரா டேவிட் லிகோரி வெளியிட்டுள்ளார்.
மழைக்குறி'என்ற நாவல் மூலம் தன்னைத் தரமான ஒரு நாவலாசிரியராக நிறுவிக் கொண்ட சி. சுதந்திராஜா திரைகடலோடி, பாதாரபிம்பங்கள், தீர்வைப்பட்டவை, நிர்வாணபூமியின் கோவணதாரிகளி, கடலுக்குள்ளான பறவை முதலிய நல்ல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கலைவாதிகலில் எழுதிய சிறுகதைகளில் சபலம், நான் ஒரு குடைவாங்கினேன், அவள் கூறியபதில், நல்லார் ஒருவருளரேல் என்பன குறிப்பிடத்தக்கவை. தனிமரம், தொல்லை இனி இல்லை, சிந்திப்பதற்கு வயதில்லை ஆகிய சிறுகதைகள் மூலம் கீழ்கரவை பொன்னையன் தன்னை சிறுகதை ஆசிரியாராக நிரூபித்துள்ளார். சிங்கைத்திவாகரனின் கடலலை ஏன் உறங்கவில்லை, நிழல்தரும் காலம்
214

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிமள்” வரை, ஒ இந்த மனிதர்கள் ஆகிய சிறுகதைகள் தரமானவை. தமிழ்ப்பிரியா நல்ல பல சிறுகதைகளைப்படைத்துள்ளபோதிலும், பார்வைகள் கோணலாகும்போது, பலவீனங்கள், தற்பாதுகாப்பு, அவன் ஒரு மாதிரி, மாற்றங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கந் தர்மலிங்கத்தினையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அவன் செய்த காரியம், அவனுக்கும் இதயம் இருக்கிறது, காலம் காத்திருப்பதில்லை, சொர்க்கமும் நரகமும், நம்பிக்கை இல்லாவிட்டால், மனமும் வாழ்வும், அவரது கதைகளில் சிறப்பானவை. ஆனந்தி எழுதிய சிறுகதைகளில் வழிதப்பிப்போனவர்கள், அழகின் குரூரங்கள், மலட்டுப் பசுக்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
மணர்டைதீவு கலைச்செல்வி ஈழத்தச் சிறுகதைத்துறையில் சேர்த்து எண்ணப்பட வேண்டியவர். அவள் துயில் கொள்கிறாள், அவளுக்கு ஒரு வாழ்வு, கரைகாணாதகப்பல், ஒரு கண்ணிர்ப்பூ, யாருக்காக அழுதான், கற்பனைகள் கண்ணிர்சிந்துகின்றன முதலான நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார். குரும்பசிட்டியூர் மு. திருநாவுக்கரசு புனித சங்கம் நீறுபூத்த நெருப்பு, சொந்தம், ஞானப்பால், அவளுக்குப் புதுயுகம் பிறக்கிறது, வெளிப் பேணி முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். மேலே விபரித்த அனைத்து ஈழத்து எழுத்துக்களும் கற்பனை ரதத்திலோஹி விண்ணில் பயணப்படாது, இந்த மண்ணில் உழலும் மக்களின் வாழ்க்கையைச் சிறுகதைகளாக்கியுள்ளன. உன்னத சமூகம் ஒன்றினை உருவாக்கும் கனவு அனைத்துச் சிறுகதைகளிலுமுள்ளது. யோகா பாலச்சந்திரனின் விழுமியங்கள் என்ற சிறுகதையும் இவ்வகையில் நோக்கத்தக்கது.
ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றின் புத்தெழுச்சிக் காலகட்டத்தில் (1961 - 1983) நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், ஆயிரக்கணக்கான சிறுகதைகளைப் படைத்துத்தந்துள்ளனர். இந்த இரு தசாப்தத்தின் விளைவுகளைத் தெரிவு செய்யக்கூடிய சிறந்த சிறுகதைகள் எவையெனப்பார்ப்பது அவசியம். புத்தெழுச்சிக் காலகட்டத்தின் மிகச் சிறந்த சிறுகதைகளாக அசுரனின் தலைகள் நேந்தி), யாககுண்டம் (செங்கை ஆறியான்), சர்ப்பவியூகம் (செம்பியன் செல்வன்), சோளகம் (செ. யோகதாதன்), வியாபாரம் கே.பரராஜசிங்கம்). கிணறு (துவைத்திலிங்கம்), ஒரு கூடைக்கொழுந்து (என்.எஸ்.எம் ராமையா), சந்திரிகா, ஆத்மிக தேர்தல், நிமிடப்பூக்கள் (முனியப்பதாசன்),
215

Page 117
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” பொட்டு (தெளிவத்தை யோசெப்), அடித்தகை(தையிட்டி. அ. இராசதுரை), முடியாத கதைகள் (பூரணி), உயரேஉயரும் அன்ரனாக்கள் (க.பாலசுந்தரம்), பூஎேம்.ர.ரஹம்மான) அரணை, (நீர்கொழுபூர் முத்துலிங்கம்), உலா கேசட்டதாதன்), குமிழிகள் கே.சாந்தண்), சடப் பொருள் என்று நினைப்போ? (கோகிலா மகேந்திரன), மீன்பொறுக்கி
(மு. புஷ்பராஜன்), முதலானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடிக்குறிப்புக்கள்
1. செ. கதிர்காமநாதன், கொட்டும்பனி, சிறுகதைத் தொகுதி, கொழும்பு -
1968, முன்னுரையில் க. கைலாசபதி - பக் - 3
2. செங்கைஆழியான், ஈழத்து இலக்கியத்தில் இருபது வருடக் கணக்குகள்,
தேசிய தமிழ் சாகித்ய விழா மலர் - 1991, பக் ; 143 - 146
3. மேற்படி கட்டுரையில் பக் : 444 4. மேற்படி கட்டுரையில் பக் ; 144
5. மேற்படி கட்டுரையில் பக் ; 143 - 144
6. மேற்படி கட்டுரையில் பக் 145
7. மேற்படி 85 (669pJumbia uit : 145
8.
புதினம், இலக்கயவுலகில் பரபரப்பான சம்பவங்கள், 10.09.1961. பக் 7
9. செங்கைஆழியான், மு.கு.கட்டுரை - 1991. பக் 143 - 144
10. நந்தி, மணிவிழாமலர், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் - 1988 பக் ; 129
10அ. எம். ஏ. ரஹற்மான், சிறுகதைநீட்டி, மித்ரா முன்னுரையில் வ. அ.
இராசரத்தினம் பக் 10
11. செங்கை ஆழியான், யாழ்ப்பாண இராத்திரிகள், யாழ் இலக்கிய வட்டம்,
upcjLTarb – 1993. Ud : XIV
12. மேற்படி நூலின் முன்னுரையில் எ. ஜே. கனகரத்ன பக் : XI
13. செங்கை ஆழியான், இதயமே அமைதி கொள், சிரித்திரன் வெளியீடு.
யாழ்ப்பானம் - 1972, முன்னுரையில் சு. இராசநாயகன். பக் - 3
14. தி. க. சி. தாமரை, யூன் - 1992. 216

på fysiologi Jawo "flogu”
5.
16.
17.
19.
2.
22.
23.
24.
26.
27.
28.
29.
அற்றது பற்றெனில், சிறுகதைதீதொகுதி வானதிபதிப்பகம் - சென்னை 19
செங்கை ஆழியான், யாழ்ப்பாணம் இராத்திரிகள், மு.கு.நூல் - 1993
பதிப்புரையில் து. வைத்திலிங்கம் பக் VIII
தமிழிலக்கியத்துறையின் திருப்புமுனை, செம்பியன் செல்வன் பேட்டி,
ஈழநாடு . 24.05.1981 பக் 9
செம்பியன் செல்வன், எப்படி எழுத ஆரம்பித்தேன், சுதந்திரன். 14.06.1964
- Uë - 2
செம்பியன் செல்வன், மக்கள் இலக்கியம், விவேகி - செப்டம்பர் 1966. டக்
18 - 24.
செம்பியன் செல்வன், எப்படிஎழுத ஆரம்பித்தேன் மு. கு. கட்டுரை. பக்.2
ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள், தமிழ் எழுத்தாளர் மன்றம், கொழும்பு - 1963
முன்னுரையில் க. பொ. இரத்தினம். பக் 3
சாலை இளந்திரையன், அமைதியின் சிறகுகள் கருத்து விவேகி - 1.6.1967
Lö : 8
செ. கதிர்காமநாதன், கொட்டும்பனி, சிறுகதைத் தொகுதி, விஜயலட்சுமி
புத்தகசாலை, கொழும்பு 1968 பக். V
ச. முருகானந்தன், கதிர்காமநாதனின் பங்களிப்பு, மல்லிகை - யூன் 1984.
is: 20
செ. யோகநாதன், மேலோர் வட்டம், சத்யபாரதி பதிப்பகம், சென்னை -
1993. L88 : 2 - 13
கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள் : திறனாய்வு,
கொழும்ப 1998. பக் 28
சிதம்பரபத்தினி, நிஜத்தின் நிழல், சிறுகதைத் தொகுதி, யாழ் இலக்கிய
வட்ட வெளியீடு-2000 முன்னுரையில் செங்கை ஆழியான்.
பெனடிக்ற்பாலன், தனிச்சொத்து, குட்டிக்கதைகள். நதிப்பிரசுரம், கண்டி -
1975 புத் 10
மேற்படி நூலில் சி. சிவசேகரம் பக் 6
. சிவகுமாரன் கதைகள், ஜீவா பதிபயகம் கவாஞ்சிக்குடி - 1984 பக்: VII
27

Page 118
Wg,ằ Î,ă0% 6/RW đ “செங்கை ஆழிாள்”
31. து. வைத்தலிங்கம், மண்ணின் கனவுகள், சிறுகதைத் தொகுதி, uUITub. இலக்கிய வட்ட வெளியீடு - 1994 முன்னுரையில் செங்கை ஆழியான் Luis: 3 - 6 .
32, மு கனகராசன், பகவானின் பாதங்களில், சிறுகதைத் தொகுதி, அருளகம்,
மானிப்பாய் - 1980 பக் 30 (தெளிவத்தையோசெப்)
33. மேற்படி நூலில், பக் : 40 (சபா. ஜெயராசா)
34. மேற்படி நூலில் பக் 86 (சிவா. சுப்பிரமணியம்)
33. யோ. சுந்தரலட்சுமி + செ. யோகநாதன், ஒரு கூடைக்கொழுந்து, இந்த நூற்றாண்டின் ஈழத்துச்சிறுகதைகள், சென்னை - 1994. பக் 174 - 175 (எம். வாமதேவன்)
36. அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம் -
1986 பக்.110. (என்.எஸ்.எம். ராமையா பற்றி மேகமூர்த்தி)
37. முனியப்பதாசன், ஆன்மிகத்தேர்தல் (சிறுகதை) சுதந்திரன் 15.03.1964
38. மேற்படி சிறுகதை.
39. முனியப்பதாசன், துறவி (சிறுகதை)
40. முனியப்பதாசன், அம்மா (சிறுகதை), கலைவாணி - 1965
41。 முனியப்பதாசன், நிமிடப்பூக்கள் (சிறுகதை), ஈழநாடு 1204.1966
42. முனியப்பதாசன் சிறுகதைகள், யாழ்ப்பாணம்-2000 செங்கைஆழியான்
முன்னுரையில்
43. கதைப்பூங்கா, சிறுகதைத்தொகுதி, தொகுப்பாசிரியர் க. குனராஜா - க.
நவசோதி, பல்கலை வெளியீடு - 1961. முன்னுரையில் க. கைலாசபதி, LÈ : III
44. க. பேரன், சத்தியங்கள் சிறுகதைத் தொகுதி, ஷர்மிள பதிப்பகம், கரவெட்டி
- 1987, பின்பக்கக்குறிப்பு
44அ. யாழ்வானன், அமரத்துவம் யாழ்இலக்கியவட்டம் - 1969. முன்னுரையில்
đìjuậ. Lắk (VII)
45. பொ. சண்முகநாதன், வெள்ளரி வண்டி, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி -
1968. முன்னுரையில் சிற்பி. பக்: 3
28

ஈழத்துச் சிறுகதை வரலாறு "Gia oual" 46. வண்ணை. கே. சிவராஜா, சிவாவின் சிறுகதைகள், யாழ் இலக்கியவட்டம்,
1999 முன்னுரையில் செங்கைஆழியான் - பக் : VI
46(அ). க. பாலசுந்தரம், அந்நியவிருந்தாளி, யாழ் இலக்கிய வட்டம் - 1980
முன்னுரையில் பேராசியர். சு. வித்தியானந்தன். பக் (VxWI)
47. நீர்கொழும்புத் முத்துலிங்கம், ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் (நானும் 3
சிறுகதைகளும்) சவுத்ஏசியன் புக்ஸ் சென்னை - 1994. முன்னுரையில் சுபைர் இளங்கீரன். பக் ! ?
48. கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள். திறனாய்வு.
மு.கு. நூல் : 1998. பக் 97
49. எஸ்.வி. தம்பையா, கடலில் கலந்த கண்ணீர், சிறுகதைத்தொகுதி.
50. புலோலியூர். ஆ.இரத்தினவேலோன், புதிய சகத்திரப் புலர்வின் முன்
ஈழச்சிறுகதைகள், மீராபதிப்பகம், கொழும்பு - 1999, பக். 67
51. மு. சிவலிங்கம், மலைகளின் மக்கள் (சிறுகதைத்தொகுதி) இளவழகள்
பதிப்பகம், சென்னை - 1991 பக் W
52. மல்லிகை முகங்கள் மு.கு.நூல தெணியான் பற்றி கா.சிவத்தம்பி. பக்: 188.
53. தெணியான், மாத்துவேட்டி சிறுகதைத்தொகுதி, மல்லிகைப் பந்தல் -
கொழும்பு - 1996 பக்.5
54. காவலூர் எஸ்.ஜெகநாதன், யுகப்பிரவேசம், சிறுகதைத் தொகுதி, நர்மதா வெளியிடு, சென்னை-1981. முன்னுரையில் க. கைலாசபதி. பக் 1-X
55. க. சட்டநாதன், மாற்றம் (சிறுகதைத்தொகுதி) 56. ஒரு கூடைக்கொழுந்து, மு.கு.நூல் பக்கம் : 553
57. திக்குவல்லைகமால், விடைபிழைத்தகணக்கு (சிறுகதைத்தொகுதி, மல்லிகைப்பந்தல் வெளியீடு, கொழும்பு - 1996 பக்: 6, பதிப்புரையில் டொமினிக் ஜீவா.
58. திக்குவல்லைகமால், குருட்டு வெளிச்சம், சிறுகதைத் தொகுதி, பேசும்பேனப் பேரணி வெளியீடு, பேருவளை - 1993. பக். W. முன்னுரையில் செ. யோகராசா.
59. கதாராஜ் ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள், மல்லிகைப்பந்தல்
வெளியீடு, யாழ்ப்பாணம். 1989. பின்பக்க அறிமுகத்தில் தெணியான்.
219

Page 119
ஈழத்துச்சிறுகதை வரலாறு -- “செங்கை ஆழியாண்” 60. சுதாராஜ், டிலாத்காரம், தமிழ்ப்பணிமனை வெளியீடு, யாழ்ப்பாணம் 1977,
ués : IV-VI - . . .
-61. கதாராஜ், ஒருநாளில் மறைந்த இருமாலைப்பொழுதுகள், மல்லகைப்பந்தல் வெளியீடு:யாழ்ப்பாணம். 1989,முன்னுரையில் செங்கைஆழியான். பக்:6-8
62. ராஜரீகாந்தன்'காலச்சாளரம், எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், கொழும்பு . . . . .994#:ختي. dià IX: :::::::::. . .
63. மேற்படி நூலில் பதிப்புரையில் பிரேம்ஜி. பக் W
64 முத்து இராசரத்தினம், சிலந்தி வயல், சிறுகதைத் தொகுதி, பீஷ்மன்
பதிப்பகம், யாழ்ப்பாணம் - 1976 பக் 3 - 4 -
4 நந்தியின் கதைகள், பாரிநிலையம் சென்னை - 1994. பக் ہوتی64
நா. சுப்பிரமணியன்
65. கே. எஸ். சிவகுமாரன், மு.கு. நூல். 1998. பக் 70 - 71
66. ப. ஆப்டீன், இரவின் ராகங்கள், மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழப்பாணம்
عبے شمسنی محستی - - - بی: به فه:؟ن " ممسحة ܫܝܚܝ ܫܫ ܝ - ܫܚܫܼ ܚ ܝ
67. கே. கோவிந்தராஜ், பசியாவரம், சிறுகதைத்தொகுதி, மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், கொழும்பு-15 பக் (I-X) முன்னுரையில் தெளிவத்தை யோசெப்.
68. ச. முருகானந்தன், மீன்குஞ்சுகள், சிறுகதைத் தொகுதி, மல்லிகைப்பந்தல்
வெளியீடு, கொழும்பு - 1994. பக் 10
69. இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன், வெட்டுமுகம், சிறுகதைத் தொகுதி, சவுத் ஏசியன் புகளில், சென்னை -1993. பக் 2. முன்னுரையில் நா. சுப்பிரமணியன்.
70. க. தணிகாசலம், பிரம்படி, சிறுகத்ைதொகுதி. .
71. புலோலியூர் செ. கந்தசாமி, மெல்லத் தமிழினி. மீரா வெளியீட்டகம், கொழும்பு - 1999, பக்: Vபதிப்புரையில் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்.
72 கோப்பாய் ப. சிவம், நியாயமான போராட்டங்கள், பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச்சங்கம், கிளிநொச்சி 1985. பக் 1 - IV முன்னுரையில் செங்கைஆழியான்
73. புன்னியாமீன், நிழலின் அருமை, சிறுகதைத்தொகுதி தமிழ்மன்றம் - கண்டி
1986. பதிப்புரையில் ஜனாப் எம். அஸ்ரப் ஹசிம். பக் 7
220

.ே ஈழத்துச் சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்வுககாலம் (1988 - 2000)
1983 க்குப் பிற்பட்ட காலகட்ட சிறுகதைஇலக்கியச் செல்நெறிக்கால வேளையைத் தமிழ்த்தேசியவுணர்வுக்காலம் என்று கூறுவதற்குரிய காரணிகள் இரண்டாகும். ஒன்று தமிழர் சமூகத்தின் அடித்தளப்பிரச்சினையாகச் சமூகத்தில் புரையோடிக் கிடந்த சாதியம், வர்க்கியம் என்பனவற்றையெல்லாம் மேவி, பூதாகாரமாகக்கிளர்ந்து எழுந்து நிற்கும் தமிழ்ழிப்போராட்டம். இரண்டு : அது சமூகத்தில ஏற்படுத்திய அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் அவலங்களையும் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் விரும்பியோ விரும்பாமலோ “தேசியம்’ என்ற உணர்வு தேய்ந்து, தமிழ்த்தேசியம் என்ற உணர்வு மேலோங்கிவிட்டது. "தேசியம்’ பேசத்தமிழரிடையே இன்னம் இடது சாரிகளிருந்தாலும், சிங்களவரிடையே எவருமில்லை, பேரினவாத்ம் அவர்களில் பெரும்பாலானோரின் கோஷமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தம்ழ்த்தேசியவுணர்க்கால ஈழத்துச் சிறுகதை வரலாற்றையும், வளர்ச்சியையும் பின்வருவன நிர்ணயித்துள்ளன.
5.1 போராட்ட f போர்க்காலச் சூழல்
5.2 நவீன இலக்கியப் போக்குகள்
5.1 போரட்ட / போர்க்காலச்சூழல்
1970 களின் பிற்கூற்றிலிருந்து மெதுவாக எமது பூமியில் புகத்தொடங்கிய ஆயுதக்கலாசாரம், 1983களின் பெரும் இனக்கலவரத்தின் பின்னர் தவிர்க்கமுடியாத போராட்டமாகமாறிவிட்டது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழருக்கான பாரம்பரிய ஆள்புலத்தையும், உரிமைகளையும் கோரி ஆயுதமேந்திய இளைஞர்களின் போராட்டம் ‘இன்று, பெரும் யுத்தமாக வெடித்துவிட்டது. மரணங்கள் மலிந்த பூமியாக
22

Page 120
Ripji fihan aga “செங்கை ஆழியான வடக்கு கிழக்குப்பிரதேசம் மாறிவிட்டது. உயிரழிவுகள், சொத்தழிவுகள், இடப்பெயர்வு தரும் அகதிவாழ்க்கை அவலங்கள், புலம்பெயர்ந்த மக்களின் துயரங்கள், பாலியல் வன்முறைகள், கைதுகளால் காணாமற்போனோர் இழப்புகள், உளப்பாதிப்புகள், அங்கவீனமுற்றோர் துயர் அவமானங்கள் என தாங்கொணாத துன்பங்களால் தமிழ்மக்கள் முழ்கடிக்கப்பட்டுளனர். பூரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், இந்திய அமைதிப்படையின் வருகையும் அது இந்த மண்ணில் விளைவித்த நாசங்களும், ஆயுதக்குழுக்களின் போராட்ட நோக்கும் நடவடிக்கைகளும் மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்கள் எல்லாம் தமிழ்த் தேசியவுணர்வுக்காலத்துப்படைப்புகளில் பூரணமாக உள்வாங்கப்படவில்லை என்றாலும், அவை சிறுகதைகளில் சித்திரிக்கப்பட்டு வருகின்ற உண்மையை மறுப்பதற்கில்லை. தமிழீழவிடுதலைப் போராட்டம் இன்று தமிழ்மக்களது வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளையும் ஏதோ ஒரு விதத்தில பாதிக்கவே செய்கின்றது. அப்பாதிப்புகள் 1981 - 2000 கால கட்டத்து சிறுகதைகளில் பதியப்பட்டிருக்கினறன. ஆனால், அவை தமிழ்த்தேசியப் போராட்த்தின் நலன்களையும் பாதிப்புகளையும் , அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் விமர்சிக்காது, மக்களின் துயரங்களை ஆவணப்படுத்துவனவாகவே பெரிதும் காணப்படுகின்றன. இக்காலகட்ட எழுத்துக்களில், முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒரு வித தயக்கமும், அவநம்பிக்கைப்போக்கினைச் சுட்டும் தன்மையும் காணப்பட, போராட்டத்தின் பங்காளிகளாக விளங்கும் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகளில் துணிச்சலும், முதிரா இளமையின் வெறும் வீறாப்பும் தெளிவின் மையும் காணப் படுகின்றன. அவை சமூகவிமர்சனங்களாக இல்லை, உணர்வுகளை மிஞ்சிச்சம்பவங்கள் மிக்கு நிற்கின்றன.
1983 - 2000 காலகட்டத்துச் சிறுகதைகளின் கருப்பொருள்களாக அமைந்திருக்கும் விடயங்கள், சவால்களுக்கிடையே வாழ்கின்ற ஒரு சமூகத்தில் ஒன்றிரண்டல்ல யுத்தம் தந்திருக்கும் அகப்பாதிப்புகளும் புற அழிவுகளும், விடுதலைப் புலிகளின் போராட்ட வெற்றிகளும் நினைக்கவே ஈரற்குலை நடுங்கும் தியாகங்களும், முதிரா இளைஞர்களின் அழிவுகளும், ஆயுதக் குழுக்களின் சம்காரமும், முஸ்லீம் மக்கள் வடபகுதியிலிருந்து இரவோடிரவாக வெளியேற்றப்பட்டமையும், போர் அனர்த்தங்களால் போக்குவரத்துப் பாதைகள் அடைக்கப்பட்டுப் போன துயரங்களும் யுத்தவிளைவாக அகதிகளாக உள்ளுரிலும்
222

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழினன்” பூமிப்பந்தெங்கும் அலையும் எம்பிறப்புகளும், இரு தசாப்தங்களுக்கு மேலாக இரவுகளை இழந்து போன தமிழ்மக்களும் உறவுகளையிழந்து ஆறாது நீர்சொரியும் தாய்மாரும் முகவரிகளைத் தொலைத்துவிட்ட பரிதாபத்திற்குரியவர்களும் சிறுகதைஇலக்கியத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். உள்ளதை உள்ளவாறும், உணர்ந்தவாறும் இக்காலகட்டத்துச் சிறகதைகள் சித்திரித்துள்ளன. ஆனால், அவை உரியவாறு சித்தரிக்கப்படவில்லை என்பது புலனாகிறது. இப்படி சமூகம் இருக்கிறதென்பதை இச்சிறுகதைகள் தருகின்றன. எப்படிச் சமூகம் இருக்கவேண்டுமென்பதை இச்சிறுகதை பலவும் தரத்தவறிவிட்டன.
இலங்கையில் இப்போது இனப்பேராட்டம் கூர்மையடைந்துள்ளது. பேரினவாதம் மேலோங்கி சிறுபான்மையினம் அடக்கியொடுக்கப்பட்டு வருவதால் வர்க்கப் போராட்டக் கருத்துக்கள் பின்தீள்ளப்பட்டு, இனப் போராட்டம் சார்ந்த தமிழ்த்தேசியவுணர்வு மேலோங்கியுள்ளமையைக் காணலாம். பேரினவாதச்சதியில் சிங்கள அரயல் வாதிகளிலிருந்து முதலாளிவர்க்கத்திலிருந்து உள்மட்ட சாதாரன தொழிலாளர் வர்க்கம் வரையில் வீழ்ந்துவிட்டனர் என்பது முக்கியமான அவதானிப்பு. இனவாதத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள (தமிழ் மார்க்சிஸ்டுகள்) பிந்திவிட்டனர். நாங்கள் (மார்க்கிஸ்டுகள்) செய்த பிழை என்ன வென்றால் இந்த மொழி நிலைப்பட்ட வாதம் ஏற்பட்டபோது அதனூடாகக் கிடந்த இந்தப் பேரினவாதத்தின் தன்மையைச் சரியாக விளங்கிக் கொள்ளாததே. அனுபவங்களுக்குப்பின் அது வளர்ந்து வரும்போது சரியாக இனம் கண்டு கொண்டிருப்போமேயானால் இந்தப் பிரச்சின வந்திருக்காது எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒப்புதல் வாக்கு மூலமளித்திருப்பது கவனிக்கத்தக்கது. பேரினவாதத்தின் தன்மையைச் சரியாக விளங்கிக் கொண்ட சிறுகதைப்படைப்பாளிகள் இக்காலகட்டத்தின் சமூகச்சத்தி யத்தைத ‘தம் படைப்புகளில் தந்துள்ளனர், ஏனையோர் பின் தங்கிப்போயினர்.
"ஈழத்தில் இனவொடுக்குமுறைகளும் அவற்றிற்கெதிரான ஆயுதம் தாங்கிய போராட்டமும் தொடர்கின்றன. இந்த யுத்தச் சூழலை உள்வாங்கிய படைப்புகள் வருவது கால நியதியாகும். எனினும், இந்தப் போராட்டத்தினுடைய முடிவைப் பற்றி ஏற்படுகிற குழப்பம், அல்லது இந்தப் போராட்டத்திலுள்ள நிச்சயமற்றதன்மை, கருத்துத்தளங்களைக் கணிப்பதற்குள்ள முரண்பாடுகள் என்பன இக்கால கட்டப் படைப்புகளுக்குத் தடையாகவுள்ளன. 1980 களிலிருந்த இங்கே
223

Page 121
ஈழத்துச் சிறுகதை வரலாஜி “செங்கை ஆழிபான்”
நடந்துள்ள யுகமாற்றத்தை முற்றாக உள்வாங்கி இவற்றிற்கான காரணகாரியமான தொடர்புகளைக் கண்டுபிடித்து எழுதுவது என்பது எளிமையான விஷயமல்ல. ஆனால், அப்படியான எழுத்துக்கள் இக்கால கட்டத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
*ஆக்கவிலக் கரியம் தமிழ் மக்களின் இடர்களையும் துயரங்களையும் பிரதிபலிக்க வேண்டும். தமிழ் இன உரிமைக்கான போராட்டத்தைச் சரியான மார்க்கத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான உளப்பக்குவத்தை வளர்க்க ணேடும்.* 'இலங்கையின் பிரதான பிரச்சினையான இனப்போராட்டத்தை இலக்கியம் பிரதிபலிக்காமல் இருக்கமுடியாது. 1983இலிருந்து இனப்பிரச்சினைகளையும் அதன் வழிவரும் தாக்கங்கள் ஒவ்வொன்றையும் தவிர வேறொன்றையும் இலக்கியம் எடுத்துக்கூறவில்லை.”*
5.2 நவீன இலக்கியப்போக்குகள்
இலக்கியப்பரப்பில் இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புதிய திறனாய்வுக்கோட்பாடுகள், படைப்பாளிகளைப் பெரியளவில் பாதித்திருப்பதாகக் கூறிவிடமுடியாதெனினும், அதன் தாக்கம் அவர்களில் ஒருசிலரின் படைப்புக்களில் காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. ஈழத்துச்சிறுகதை வரலாற்றின் ஆரம்ப கட்டமான சீர்திருத்தக் காலகட்டத்தில் (1900 - 1949), மனோரதியக் கற்பனைகள் (Romanticam) சிறுகதைகளில் முதன்மை பெற்றிருந்தன. அவை தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவும், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட சரித்திரக்கதைகளும், புராணக் கதைகளும் நமது பண்டைய உணர்வியலைப் (Primitivism) பிரதிபலிக்கும் பாங்கினவாயும் அமைந்தன. முற்றாக அவை மனோரதியக் கற்பனைகளாக விளங்கினவெனக் கூறமுடியாது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் முற்போக்குக் காலகட்டத்தில் (1950 - 1960) முதன்மை பெற்ற யதர்த்தவாதத்தை (Realism) அவர்களின் சில சிறுகதைகள் நன்கு பிரதிபலித்தன. 1950 1965களில் சிறுகதைகளில் யதார்த்தவாதம் முதன்மை பெற்ற கருத்தியலானது. ஆரம்பச் சிறுகதைகளில் விமர்சனயதர்த்தவாதம் முக்கியம் பெற்றிருந்தது. பின்னர் சோஷலிச யதார்த்த வாதம் முதன்மை பெற்றது.
224

ஈழத்துச் சிறுகதை வரலாறு “JHS)b gja"
“சோசலிச நெறிமுறையின் உள்நின்று விளக்கப்படுவது சோசலிச யதார்த்த வாதம் என்றும், வெளிநின்று புனைவது விமர்சனயதார்த்தவாதம் என்றும் திறனாய்வாளர் வரையறுப்பர். விளக்கமாகக் கூறுவதாயின் தனிமனித நிலைகளையும் தனிமனித முரண்பாடுகளையும் சித்திரிப்பவை விமர்சன யதார்த்தமாகவும், சமூகமுரண்பாடுகளை நிலைக்களனாகக் கொண்டு, பாத்திரங்களினூடே அவற்றைப் பகுப்பாய்வு செய்வதை வலியுறுத்துவது சோசலிசயதார்த்தமாகவும் வரையறுக்ககப்படுகின்றன.” இவ்வகையிலேயே முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் அமைந்திருந்தன. இந்த நிலை, சிறுகதை வரலாற்றின் பத்தெழுச்சிக் காலகட்டத்திலும் (1961 - 1983) தொடர்ந்து. ஆனால் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் (1983 - 2000) நவீனத்துவம் (Modernism), si boat gig56)lip (PostModernism) sigli SB6 Tissi, கோட்பாடுகள் வலிமைபெற்றுள்ளன. அவற்றோடு இருப்பியல்வாதம், அமைப்பியல் வாதம், மெஜிக்கல் ரியலிசம், பெண்ணியல்வாதம் எனும் கோட்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
“புறச் சூழல் இயக் கமின்றி நற் பதுபோலவும் , தனிமனிதப்பாத்திரங்கள் இயங்கிச் சலனங்களை ஏற்படுத்தல் போலவும் புனைதல், நவீனத்தவத்தின் சிறப்பார்ந்த பரிமாணமாகவுள்ளது. இவ்வகைப் படைப்புகளில் கலை இலக்கியப் பாத்திரங்கள் தமது அனுபவங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி நிற்கின்றன. பாத்திரங்கள் பொருண்மையற்றமுறையில் உலகநடப்பியலில் வீசி எறியப்பட்டுள்ளன. ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் ஆரம்பகாலத்திலேயே(1930) பின் நவீனத்துவம் என்ற கருத்து மேலைத்தேயத்தில் அறிமுகமாகிவிட்டது. ஐந்து தசாப்தங்களின் பின்னர் தமிழுக்கு அறிமுகமாகின்றது. ஒரு சமூகத்தின் எதிர்க்கலாசாரத்தின் (Counter Culture) விளைவாக பின்நவீனத்துவம் விளங்குகின்றது. பழைய முறைமைகளில் எற்பட்ட மாற்றங்கள் பின்நவீனத்துவமாயின. பின்நவீனத்துவ இலக்கியவாதிகளின் முக்கிய பங்கு ஜனரஞ்சக இலக்கிய வடிவங்களுக்கும், உயர் இலக்கிய வடிவங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கடந்து அதனைக் குறைப்பதாகும். பின்நவீனத்துவம் எந்தவித அழகியல் அளவு கோல்களுக்கும் ஆட்படுவதில்லை, அதற்கு விதிகளோ, சூத்திரங்களோ, நியமங்களோ இல்லை. பின் நவீனத் துவப் படைப் பகள் பார்வையாளனையும் விமர்சகனையும் போல, தானே அந்த அளவுகோல் களைத் தேடுவதில், நரிர்ணயப் பதல ஈடுபடு கறது' இவ் வாறு தானி புனைகதைகளும் புனை கதையலி லாத படைப் புகளும்
225
(15)

Page 122
Hjblj flyplibogh JATU “செங்கை ஆழியான் அமையவேண்டுமென்ற வரையறையைப்பின்நவீனத்துவக் கருத்துக்கள்
தூக்கி எறிந்துள்ளன. பின்நவீனத்துவத்தில் இலக்கியத்தின் அர்த்தத்தை கண்டுபிடிக்கும் பொறுப்புவாசகனைச் சார்ந்ததாகும்.‘அமைப்பியல் வாதத் தில் (Structuralism) எழுத்தாளனே ஒரு பொருட்டல்லன். அதே வேளை யில் ஆக்கத்திலிடம் பெறக்கூடிய இலக்கியத் தன்மையில்லாத எழுத் திலும் ஒருவித இலக்கியத்தன்மையை இனங்காணமுடியும் எனக் கூறப்படு கிறது. மொழியே இலக்கியத்தைப் படைத்து இலக்கியத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது அமைப்பியல் வாதிகளின் விளக்கம்."
எனவே, ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நவீனப் போக்கு உருவாகிவிட்டமைக்கு மேற்சொன்னதிறனாய்வுக் கோட்பாடுகள் ஒருவகையில் காரணமாயின. இவற்றினைப் புரிந்து கொண்டு ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் சிறுகதை படைத்தரென முற்றாகக் கூறாவிட்டாலும், அக்கோட்பாடுகளின் அருட்டுணர்வுக்குட்பட்டிருக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. அவர்களுடைய படைப்புகளில் புதுமை, மறுசிந்தனை, மீளவுரைத்தல் முதலான சிறப்பான பண்புகள் இருப்பதை காணும்போது மேற்குறித்த கருத்துப் புலனாகும்.
5.2 தமிழ்த்தேசியவுணர்வுக்காலச் சிறுகதையாளர்கள்
தமிழ்த்தேசியவுணர்வுகாலச் சிறுகதையாளர்களைப் பின்வருமாறு வகுத்து நோக்குதல் ஏற்றதாகும்.
5.2.1 முன்னோடி எழுத்தாளர்கள் 5.2.2 1981 - 2000 காலகட்டத்து எழுத்தாளர்கள்
5.2.1 முன்னோடி எழுத்தாளர்கள்
தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்திலும் தொடர்ந்து தம்படைப்புகளைத் தந்துவரும் முன்னோடி எழுத்தாளர் வரிசையில், கால ஒழுங்கில், வரதர், எஸ். பொன்னுத்துரை, பத்மாசோமகாந்தன், அ. முத்துலிங்கம், நந்தி, செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், மு. பொன்னம்பலம், கோகிலா மகேந்திரன், யோ. பெனடிற் பாலன், புலோலியூர். க. சதாசிவம். அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, தி. ஞானசேகரன், சதாராஜ், தெணியான், கோ.ஆர்.டேவிட், இணுவையூர் சிதம் பரதிருச்செந்திநாதன், யோசெப்பாலா, மண்டூர் அசோகா, தாமரைச்செல்வி,
226

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியாண்” க. தணிகாசலம், லெ. முருகபூபதி, மு. பஷீர். திக்குவல்லைக்கமால் ஆகியோரை இனங்கான முடியும். இவர்கள் 1970 களிலும் அதற்கு முன்னரும் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தடம்பதித்தவர்களாவர்.
தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்திலும் வரதர் சில சிறுகதைகளைத் தந்தள்ளார். சீதனம், கடவுள் இருக்கிறாரா. ஜ. டம்போடு உயிரிடை நட்பு, தென்றலும் புயலும், இலக்கணத்தை மீறும் இலக்கியம் என்பன அவ்வகைச் சிறுகதைகளாம். வரதரின் முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகளான கற்பு, வீரம் என்பன உண்மையில் தமிழ்த்தேசியவுணர்வுக் காலகட்டத்துக் கதைகளாகவும் வைத்து எண்ணத்தக்கவை. வரதரின் முன்னோக்கிய ஒரு பார்வை அவ்வாறான சிறுகதைகளை ஏலவே படைக்கவைத்துள்ளன. வரதரின் சீதனம், தென்றலும் புயலும், கடவுள் இருக்கிறாரா என்ற சிறுகதைகள், அவரின் முன்னைய சிறுகதைகளின் தரத்திறகுரியனவாகவில்லையென்றாலும், இந்த மூத்தபடைப்பாளி எல்லாக் காலகட்டங்களிலும் தன் பங்களிப்பினைச் செய்துள்ளார் என்பது மறுப்பதற்கில்லை, வியப்பதற்குரியது. சமூக நெருக்கடிகளை எதிர் கொள்ளத் தயங்கி அல்லது பயந்து அவர் தனது போனாவை மூடிவைத்துவிட வில்லை.
புலம்பெயர்ந்தும் இலக்கிய முயற்சிகளைக் கைவிடாது செயற்படும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகப் படைப்பாளி எஸ். பொண்ணுத்துரை ஆவார். அவருடைய அண்மைக்காலப் படைப்புகள் ஆண்மை என்ற பொதுப் பெயரில் பதினைந்து சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. அனைத்துச் சிறுகதைகளுக்கும் பெயர் ஆண்மைதான். “எஸ். பொ. ஒரு தனித்துவமான படைப்பாளி. கரு, நடை, உத்தி என்கிற அம்சங்களின் தனித்துவத்தைத் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். புனைகதை வரலாற்றில் அவர் பங்கு முக்கியமானது” “ஆண்மை 15வது கதை' தமிழீழப் போராட்டத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு தந்தையின் இதயப்புலம்பலாகவுள்ளது. அநியாயத்தை எதிர்த்துப் போராடுகின்ற அர்ஜ்ஜுனாவை இக்கதையில் தரிசிக்கலாம். தமிழீழப்போராட்டத்தை நியாயப்படுத்துகின்ற கதையாக இதுவுள்ளது. அத்தோடு ஆண்மை கதை -2, ஆன்tைஃப்தை - 7 என்பன எஸ். பொ.வின் அண்மைக்காலக் கதைகளில் மிகத்தரபானவை. காட்சிகளைக் கண்முன்நிறுத்தும் விபரணம், உவமை உருஷ்கங்கள், இக்கியவளம், மொழியாளுமை, உத்தி முதலான சிறப்புகளில் எஸ். பொ. வின் இச்சிறுகதைகள் கலைப்படைப்புகளாக விளங்குகின்றன. சமகாலவாழ்வியலின் நெருக்கடிகளை எஸ். பொ. வின் இக்கதைகளில் காணலாம். 227

Page 123
ஈழத்துச் சிறுகதை வரலாறு 'Adhani juHäo டொமினிக்ஜீவாவின் சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்வுக் காலத்தில் அரிதாகவே வெளிவந்திருந்தாலும், இக்காலகட்டத்துச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிபபுச் செய்துள்ளன. கடுவன். ஆண்டபரம்பரை பேப்பர் பிரசவம், பணச்சடங்கு என்பன இக்காலகட்டத்தின் முன், பின்னாக வெளி வரிலும் அவை சமகால்பிரச்சினையை ஆங்காங்கு பேசிக்செல்கின்றன.
தமிழ்த்தேசியவுணர்க் காலகட்டத்திலும் தொடர்ந்து சிறுகதை களை எழுதிவரும் முத்தபெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் ஆவார். சக்தி, ஒரு தளிரும் இரு இலைகளும், வேல்முருகன் பொங்கல், பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட, உயரப்பறந்தாலும், மனிதச் சருகுகள், நைவேத்தியம், பனங்காணி முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். கல்விச் சமூகப்பிரச்சினைகள் (சக்தி, புலம்பெயர்ந்தோர் அவலங்கள் (உயரப் பறந்தாலும்), சமகாலப்போர்ச்சூழலின் விளைவான இடர்பாடுகள் (மனிதச் சருகுகள், பனங்காணி), பெண்ணியக்கருத்துக்கள் (ஒருதிக்கோழி தலையை உயர்த்திப்பார்க்கிறது, பாலுக்குப்பாலகன் வேண்டியழுதிட்) ஆகியவை பத்மாசோமகாந்தனின் சிறுகதைகள் விபரிக்கும் உள்ளடக் கங்களாகவுள்ளன. இவற்றினைச் சமூகப் பிரக்ஞையோடு தன் சிறுகதை களில் விபரித்துள்ளார். நைவேத்தியம், பனங்காணி ஆகிய இரண்டும் தரமான சிறுகதைகளாக விளங்குகின்றன.
கனேடியப்பிரசையான அ. முத்துலிங்கத்தை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் என்ற வகுப்பிற்குள் அடக்குவதிலுள்ள வாதப்பிரதி வாதங்களைவிடுத்து, அவரது எழுத்துக்கள் ஈழத்தமிழ்மக்களது வாழ்க்கை யனுபவங் களையும் உணர்வுகளையும் எவ்வாறு சித்திரிக்கின்றன என்று நோக்கில் அவை சர்வதேச சமூகத்தினதும் மானிடநேயத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த ஈழத்தவரின் இலக்கியப்படைப்புகள் உலகப்பரப் பெங்கும் இன்று வியாபித்துள்ளன. அவ்வகைப் படைப்புகளில் அ. முத்துலிங்கம் முக்கியமானவர். துரி, ஒருசாதம், கிரகணம், விழுக்காடு, பி.ணிக்ஸ் பறவை, முழுவிலக்கு, முடிச்சு, ஞானம், சிலம்ப செல்லப்பா, வம்சவிருத்தி, பருத்திப்பூ, வடக்குவீதி, எலுமிச்சை, குந்தியின் தந்திரம், வசியம், பூமாதேவி, யதேச்சை, கம்பியூட்டர், ரி, உடும்பு, மனுதர்மம், விசா, ஒட்டகம் முதலான சிறுகதைகளை அண்மைகாலத்திற் படைத்துள்ளார். இந்தியா, இலங்கை, சூடான், பாகிஸ்தான், சியாராலி யோன், சுவிடன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் எல்லாம். கதைக் களங்களாக இச்சிறுகதைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கதைமாந்தர்களும் அப்படியே, அவரது சிறுகதைகளில் Souffru Hib, பிரபஞ்சநேயம் ஆகியவை தூக்கலா இருக்கின்றன" "அவருடைய
228

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” புனைக்கதை வெளிப்பாடு மனிதவியல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பானவடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைக் கதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. முத்துலிங் கத்தின் உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிறைய இடமளிக்கிறது. புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடக்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக் கின்றன."அனைத்துக் கதைகளிலும் கதைநிகழ்விடங்களின் வாழ்க்கை அழகுகளிலே பிரசாரத்தொனி இல்லாமல் படைப்பாளியின் சுயவிருப்பு வெறுப்புகளைத் திணிக்காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய அனுபவங்களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். அதே சமயம் தமது மனசுக்கு உவப்பான வாழ்க்கையையும் விழுமியங் களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர்தயங்கவில்லை."* முத்துலிங் கத்தின் சிறுகதைகளில் உலகசமூகத்தைத் தரிசிக்கமுடியும், சமூகப்பிர க்ஞையோடு எழுதுவதால் படைப்பாளியின் படைப்பனுபவத்தையும் தரிசிக்க முடிகின்றது, முத்துலிங்கத்தின் சிறுகதைகள் செப்பமாகச் செதுக்கிய வடிவமைதியைக் கொண்ட கலைப்படைப்புகளாகவுள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் படைப்பாளி.
1983 இன் பின்னா நந்தி எழுதிய சிறுகதைகளான சம்பந்தப்பட்டவர்களுக்கு, சரஸ்வதியின் வேண்டுகோள், பார்வைகள். விதியின் அர்த்தங்கள், கேள்விகள் உருவாகின்றன, பதுங்குகுழி, கதையோடு கதையாக, பல்லுக்கொழுக்கட்டை என்பன ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்கு அணிசேர்த்துள்ளன. ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நந்தியின் இச்சிறுகதைகளில் படைப்பு முதிாச்சியைக்காண முடிகின்றது. சிந்தனைத் தெளிவோடு சமூகப்பிரச்சினைகளின் மூலவேரை இனங்கண்டு. தன் அனுபவ விளக்கத்தோடு அவரது சிறுகதைகளமைந்துள்ளன. வர்க்கம் சார்ந்தபிரச்சினைகளை (சரஸ்வதியின் வேண்டுகோள் ஒருபாவாடை கொடியாகிறது விதியின அர்த்தங்கள்) சிறுகதைகளில் சித்திரிக்கும் போது, அவர் மிகத் தெளிவாக அவர்வரித்த புறவயக் கருத்தின் பிரச்சாரத் தன்மைக்குள் போய்விடாது சித்திரித்துள்ளா. சமூகத்தின் பிரச்சினைகளைச் (பார்வைகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு) சித்திரிக்கும்போது, சமூகயதார்த்தத்தோடு மானிட உணர்வுநிலைகளைத்
திறம்பட வடித்துள்ளாா.
229

Page 124
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
நந்தியின் அண்மைக் காலச் சிறுகதைகளில் கேள்விகள் உருவாகின்றன, பதுங்கு குழி ஆகிய இரண்டும் தனித்துவமானவை. தமிழ்மக்களின் யுத்தகாலச் சூழலையும், இனவுணர்வு நிலைகளையும், போராட்டத்தின் நியாயபூர்வத்தையும் இச்சிறுகதைளில் சித்திரித்துள்ளார். “பெளத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தமிழர் மத்தியில் உருவாகி வந்த போராட்ட உணர்வோட்டத்தையும் அதன் செயல் வடிவங்களையும் உரியவாறு புரிந்து கொள்ள மறுத்து வந்த முதிய தலைமுறையினரில் ஒரு சாராரின் மனப்பாங்கில் நிகழத் தொடங்கிய மாற்றத்தை உணர்த்தி நிற்பது "கேள்விகள் உருவாகின்றன" கதை. மேற் சுட்டிய பேரினவாதச் சூழலில் நிகழ்ந்த இனப்படுகொலைகள். சமாதானப் பேச்சுக்கள், கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் என்பனவற்றின் தர்க்கரீதியான விளைவாகவே தமிழரின் தாயகமீட்புணர்வு முகிழ்த்து முனைப்புற்றது என்பதை வரலாற்று முறைப்படி உணர்த்தும் கதை ‘பதுங்குகுழி' கதையம்சம், கட்டமைப்பு என்பனவற்றில் கேள்விகள் உருவாகின்றன கதை எய்தியுள்ளதரத்தைப் பதுங்குகுழிக்கதை எய்தவில்லை." ஆற்றொழுக்கான நடை, தேர்ந்தெடுத்த சொற்கள், கருவளம், கட்டமைப்பு, பாத்திரவார்ப்பு, இவ்வளவும் நந்தியின் கதைகளிலிருந்தாலும் உவமை உருவகங்கள், நேரடியாகக் கூறாது இலக்கியப்பாங்கோடு கூறுகின்ற நேர்த்தி என்பன இவரது பிற்காலக்கதைகளில் அரிதாகியிருப்பதால், கலைவடிவங்களெனும் மாண்பைப் பெறத் தவறிவிட்டன வெனப்படுகின்றது.
தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தக்கு (1983 - 2000) முன்னரேயே இவ் வகையான சிறுகதைகளையெழுதரியவர் செங்கைஆழியாண் (க. குணாராசா) ஆவார். வன்னிப்பிரதேசக்காட்டுக் கிராமங்களின் சமூக வாழ்வனுபவங்களை அறுகுவெளி, முதலிப்பழம், காட்டுத்தேன், பாலைப்பழம், விடியவில்லை, விளாமரம், யானைக்காடு, விரால்மீன் முதலான சிறுகதைகளாகவும் தமிழ் போராட்டகாலத்தின் மக்களின் வாழ்க்கை நிலைகளை மண்ணில் சரியும் விழுமியங்கள் பிச்சைக்காரார் ஆக்கவேண்டாம், நிம்மிதியாகச் சாகவாவது விடுங்கள். விடியாத இரவும் ஒரு மனிதனும் முதலான சிறுகதைகளாகவும், யுத்தகாலச் சூழலின் விளைவாகவும், இராணுவ அடக்குமுறைகளின் விளைவாகவும் சாதாரணமக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை யாழ்ப்பாணத்து இராத்திரிகள், தெருவிளக்கு, ஊரியான் பாதை, விறகு, தாயும்குஞ்சுகளும், கஞ்சிப்பொழுது, எங்கடகிராமம், இரவுப்பூச்சிகள், சிறுபிள்ளை வேளாண்மை, புடையன்குட்டி, மோதிரவிரல், மேற்கும் கிழக்கும், ஒடில்லாத ஆமைகளும் கூடில்லாத நத்தைகளும், ஷெல்லும் ஏழு இஞ்சிசன்னங்களும், நாணயத்தின் இருபக்கங்கள் முதலான
230

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
சிறுகதைகளாகப் படைத்துத்தந்துள்ளார். போர்க்கால அவலங்களைச்
செங்கை ஆழியான் போன்ற வேறெவரும் இலக்கியப்பதிவு செய்யவில்லை எனலாம். ‘நமது நிகழ்காலத்தில் கருமையான கடுமையான வாழ்க்கையின் உக்கிரமான இரவுகளை இவரது சிறுகதைகளில் தரிசிக்கின்றோம். சோகச்சூழ் நிலையிலும் வாழ்வின் நேசிப்புத்தான் இச் சிறுகதைகள் அனைத்தினதும் மையக்கருவாகும். இவரது பேனாவுக்குள் ஒரு துயரம் கலந்தவிரம் வெளிப்படுகின்றது"
'இதே வேளையில் இங்குள்ளவர்கள் தங்கள் வாழ்வியலின் நெருக்கடிகளைச் சிறுகதை நாவல்களில் பதிவு செய்துள்ளனர். இத்தகைய எழுத்தாளர்களுள் செங்கை ஆழியான், தாமரைச்செல்வி முக்கியமாக எடுத்துப் பேசப்பட்ட வேண்டியவர்கள்’ என பேராசிரியர் கா. சிவத்தம்பி ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டின் பெரும் இடப்பெயர்வைப் பிரதிபலிக்கும் பின்நவீனத்துவவியல்பினைக் கொண்ட சிறுகதை ‘கூடில்லாத நத்தைகளும், ஒடில்லாத ஆமைகளும்' ஆகும் ஷெல்லும் ஏழுஇஞ்சி சன்னங்களும் முற்றிலும் வறுபாடான ஒரு சிறுகதை, அதில் கூறியவற்றிலும் கூறாதுவிட்ட சங்கதிகள் அதிகம். இதனை ஆகஸ்ட் 1993இல் தமிழில் வெளிவந்த சிறுகதைகளுள் மிகச்சிறந்ததாக சுஜாதா தெரிவுசெய்துள்ளார்." “செங்கை ஆழியான் தந்த “இரவு நேரப் பயணிகள்' சிறுகதைத் தொகுப்பு மூலம் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமும் அண்மைக்கால ஈழத்தச் சிறுகதை உலகில் நிகழ்ந்துள்ளது. வழமையான சிறுகதைக்குரிய போக்கிலே எழுதிவந்த செங்கை ஆழியான், போர்க்காலச் சூழலில் மக்கள் பட்ட அவலங்களை வெளிகொணரவும் ஆவணப்படுத்தவும் மிகவும் நேர்த்தியான உத்திகளையும் கையாண்டுள்ளார். மனிதரோடு விலங்குகள், ஊர்வன, பறப்பனவற்றையும் கதாமாந்தராக்கிப் பலவித பரிமாற்றங்களைக் கதை சொல்லும் முறையில் ஏற்படுத்திக் காட்டியுள்ளார். நவீன போக்குகளின் தேவையையும் கெளரவப்படுத்தும் சிறுகதைகள். இந்த மாற்றம் அவரின் கனகால எழுத்து அனுபவத்தாலும் பல பக்கவாசிப்புகளாலும் ஏற்பட்டிருக் கலாம்." செங்கை ஆழியானின் சிறுகதைகளில் சம்பவங்களினடியாகத் தோன்றும் மனநிலைகள் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.
மறுமலாச்சிக் காலகட்டத்தின் (1961 - 1988) முக்கிய சிறுகதை ஆசிரியராக இனங் காணப்பட்ட செம்பரியணி செல் வண் , தமிழ்த்தேசியவுணர்வுக் காலகட்டத்திலும் (1983 - 2000) தக்கதொரு சிறுகதைப்படைப்பாளியாக விளங்குகிறார். இக்காலகட்டத்தில் பல
231

Page 125
ஈழத்துச் சிறுகதை வரலாறு "Toxh fufe"
சிறுகதைகளைச் செம்பியன் செல்வன் படைத்தளித்துள்ள போதிலும் காண்டீபம், வீடுதிரும்புதல், வலை. ஓவர்லாண்ட் ஆகிய சிறுகதைகள் அவற்றின் உருவ அமைதியிலும், பொருள் அமைதியிலும் சிறந்து விளங்குகின்றன. அகவயப்பட்ட மானிடப் பொருமல்களை மிகத் தத்ரூபமாகப் புறச்சூழலோடு பின்னிச் சிறுகதைகளைத் தருவதில் செம்பியன் செல்வன் வல்லவர். அண்மைக் காலச் சிறுகதைகள் போராட்டச் சூழலின் வாழ்வியல் நெருக்கடிகளையும், இந்திய அமைதிப்படை, இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அடக்குமுறை அட்டூழியங்களையும், போராளிகளின் தியாகங்களையும் கருப் பொருளாகக் கொண்டுருவாகியுள்ளன. துணிச்சலாகத் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய இராணுவமும் , தமிழ்த் தேசிய இராணுவமும் யாழ்ப்பாணத்தில் இருந்த காலவேளையைக் காண்டீபம்' தத்ரூபமாகச் சித்திரிக்கின்றது. அக்கதையை விபரிக்க ஆசிரியர் பிரக்ஞைபூர்வமான மொழிநடையைக் கையாண்டுள்ளார். இந்திய இராணுவம், கல்லூரி ஒன்றினுள் புகுந்து ஆசிரியர்களைச் சுட்டுக்கொன்ற அவலத்தைக் “காண்டீபம்' கலாபூர்வமாக விபரிக்கின்றது. போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்ட இளைஞர்களின் முடிவை நியாயப்படுத்தும் சிறுகதையாகக் காண்டியம் விளங்குகிறது.
செம்பியன் செல்வனின் அண்மைக்காலப் படைப்புகளில் ‘சுலோகப்பிரயோகம்’ போன்ற வார்த்தையாடல்கள் இருந்தாலும், அவற்றைமேவி மனதைக் கவ்விப்பிடிக்கும் பாங்கானவையாக அவரது சிறுகதைகள் விளங்குகின்றன. சமுதாயத்தின் தற்போதைய வளர்ச்சிக்கட்டமென்பதைப் புரிந்து கொண்டு பலர் சிறுகதைகள் எழுதுவதில்லை, ஆனால், செம்பியன் செல்வனின் சிறுகதைகளில் அவ்வாறான சமுகப்புரிந்துணர்வும் அதன் சமகால வளர்ச்சிக்கட்டமும் தெளிவாகப்புலனாகும்.
தமிழ்த்தேசியவுணர்வுக்காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குக் காத்திரமான பங்களிப்பாக 96D66
செ. யோகநாதனின் கதைகளாம். ஈழத்து வாழ்க்கையின் பிரச்சினை மையங்களை இனங்கண்டு, வார்த்தைகளில் உணர்வோடு பதியவைத்திருக்
232

qSSSS SCL S SSS SSS LLLL S S SSS SSS SSqqSSq LqSqS S qqSq SSqqSqS Lq SSSLTTLLLLSSSS SSS qqSS qqqLL LLLL SS LLTLTqSS q SS SS SS SS SSLSLSS
+gjöjj fojbojh Jal: “iii.TA fil-li” கும் பட்ைப்பாளி. ஈழத்துப்பத்திரிகைகள் சஞ்சின்-ககள் **னத்திலும் மட்டுமன்றி தமிழகப்பத்திரிகைகள் சஞ்சிகைகள் அனைத்திலும் இலக்கிய அரசோச்சுபவர் என்றுதணியும். அகதி. வீழ்வேன் என்று நினைத்தாயோ? அன்னையின் குரல். மைலாய், தேடுதல், சரணபாலாவின் பூனைக்குட்டி, இன்னொரு மனிதன். அவர்களின் மகன். அடிமைகள் இல்லாத இடத்தில், தாயாகிவந்தவன். இந்த நெருப்பு, பூமுதிரை, தோழமையினால் முதலான நூற்றுக் கணக்கான சிறுகதைகளின் சிருஷ்டிகர்த்தா. தமிழீழப்போராட்டச் சூழலில் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நடத்தைகளையும், இலங்கை இராணுவத்தினரின் அட்டூழியங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ்மக்களது அகதி வாழ்வின் அவலங்களையும், போராளிகளின் தியாகங்களையும் பேரினவாத அடக்கு முறைகளைப் புரிந்து கொண்ட இளைஞர்களின் மண்பற்றினையும், இனவொடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சினைகளையும் செ. யோகநாதன் தன் சிறுகதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வகையில் எவரும் இவ்வளவு தரமான, நிறைவான, தொகையான போராட்டகாலச் சிறுகதைகளைப் படைக்கவில்லை. மார்க்சிய முற்போக்குவாதி ஒருவர், தமிழ்த்தேசியத்தினையும், தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் அங்கீகரித்துச் சிறுகதைகள் எழுதியுள்ளாரென்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அவர் ஒரிடத்தில் சொல்கிறார்: “ஒரு புறத்திலே தமிழருக்கு உரிமைகள் கொடுக்க வேண்டுமென்று மாய்மாலம் செய்கின்ற மார்க்சிஸ்டுகள். தமிழ் இனவாத அரசியற் கட்சிகள். மறுபுறத்தில் சிங்களவரை மிரட்டி அச்சுறுத்துகின்ற இந்திய அரசியல் வாதிகள்.ஓ, எங்கள் கலை கலாசாரமும், மக்கள் முன்னேற்றமும் எத்தகைய சவால்களுக்கெல்லாம் உள்ளாகியுள்ளன.". "இவரின் சிறுகதைகளிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளவேண்டிய சில தத்துவார்த்தப் பிரச்சினைகளும் உள்ளன. ஈழமண்ணில் இன்று நடைபெறும் யுத்தத்தை வர்க்கப் போர் என்று நாம் வருணிக்க முடியாது. ஒரு தேசிய இனவிடுதலைப் போரே அங்கு நடந்து கொண்டிருக்கிறது.” இன்று பூமிப்பந்தெங்கும் நிகழ்கின்ற போராட்டமும் அதுவே, இனம் ஒவ்வொன்றும் தன் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணுகின்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
“பெண் அடிமைத்தனமும் சாதியக் கொடுமைகளும் தகர்ந்துபோக வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தேசிய விடுதலைப் போரே ஏற்படுத்தியுள்ளது என்பதும் யோகநாதனின் சிறுகதைகளிலிருந்து சாரமாக நமக்குக்கிடைக்கும் சிந்தாந்தத் தெளிவாகவுள்ளது.”
233

Page 126
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்”
செ. யோகநாத6ன் இச் சிறுகதைகள் சுட்டி நிற்கின்ற சமூகச் செய்தி தமிழத்தேசியவிடுதலைக்கான உந்து சக்தியாகவுள்ளது. எளிமையான ஆற்றொழுக்கான நடையில் அவரது இச்சிறுகதை களமைந்துள்ளன. ஆனால், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு இச்சிறுகதைகளில் இயல்பாகப்பயன்படுத்தப்படவில்லை. தமிழகவாழ்க்கையும், அங்குள்ள சஞ்சிகைகளின் தேவைக்கான சிறுகதைகளாக அமைந்தமையும், அனைத்துத்தமிழரும் புரிந்து கொள்ள வாய்ப்பாக இவ்வாறு விளங்கு தமிழில் பேச்சுமொழி அமைக்கப்பட்டுள்ளதென நினைக்கின்றேன். மேலும் யோகநாதனின் சில சிறுகதைகள் நீண்டு, குறுநாவல் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. எனினும் யோகநாதனின் பெரும்பாலான சிறுகதைகள் தக்கசிறுகதையின் பண்புகளையுள்ளடக்கிய கலைப்படைப்புகளாக விளங்குகின்றன. சமூகயதார்த்தமும் சமூகமெய்மையும் அச்சிறுகதை களுக்குத் தனிக்கம்பீரத்தையளிக்கின்றன. அவருடைய சிறுகதைகளில் தேடுதல், சரணபாலாவின் பூனைக்குட்டி, இந்தநெருப்பு ஆகிய சிறுகதைகள் ஈழத்தின் மிகத்தரமான சிறுகதைகளின் வரிசையிலிடம் பெறத்தக்கவை.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்துச் சிறுகதைகளை ஆராயும் போது மு. பொன்னம்பலம் வகிக்குமிடம் குறிப்பிடத்தக்கது. 1950 களில் எழுதத்தொடங்கியவரின் சிந்தனை வளர்ச்சியை 1990களில் மிகச் சிறப்பாக அவதானிக்க முடிகின்றது. ஏனைய சிறுகதை ஆசிரியர்களிலிருந்து மு. பொன்னம்பலம் விலகி ஒரு தனிப்போக்கைக் கொண்டுள்ளார். ஆத்மீகத்தையும் மானிடத்தின் மனமொட்பாநடத்தைகளையும் பிணைத்து, புதியதொரு சமூகமார்க்கம் காணத்துடிக்கும் தன்மையை அவரது அண்மைக்காலச் சிறுகதைகளில் உள்ளிடாகக் காணமுடிகின்றது. மூடுபனி, தவம், கடலும் கரையும், மாயை, யுகங்களை விழுங்கிய கணங்கள், இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது என்பன. பொன்னம்பலத்தின் அண்மைய சிறுகதைகளாம். ‘தீவான்’ என்ற புனைப்பெயரோடு எழுதிய ஆரம்பகாலக் கதைகளுக்கும் இக்கதை களுக்குமிடையில் படைப்புமுதிர்ச்சி நிறையவுள்ளது. அவரது மொழிநடையும் உத்திகளும் அவர் கூறவிரும்புகின்ற கருத்துக்களும் வாசகள்மட்டத்தை அடையுமா என்பது ஐயம். அரசியல், சமூகம், ஆத்மீகம் மூன்றும் அவரது கதைகளில் அவரின் அனுபவங்களாக நிற்கின்றன. படைப்பனுபவத்தினை அவரது சிறுகதைகளிலிருந்து புரிந்துகொள்ள வேண்டுமாயின், அவர்சுட்டும் குறியீடுகளைப் புரிந்திருக்க வேண்டும். சில கதைகளினூடாக அவர் தெரிவிக்கும் நேரடிக்கருத்துக்கள் 'சுலோக வாக்கியங்களாக அமைந்து கதையின் கலாபூர்வத்தினைப் பாதிக்கின்றன.
234

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” கோகரிலா மகேநீதரனினர் தமிழ் த தேசிய வுணர்வுக் காலப்படைப்புகளாக மரணிப்பிலும் உயிர்க்கும், ஒலி, சமுதாயம் ஒரு சறுக்குப்பாறை, வாழ்வு ஒருவலைப்பந்தாட்டம், மனிதம், மதலைகளிடம் மட்டும் ஆழ்ந்த அனுதாபங்களி, எரியும், விலை, மனதையே கழுவி, சர்ப்பமரணம் முதலான சிறுகதைகள் விளங்குகின்றன. கோகிலா மகேந்திரனின் இச்சிறுகதைகளில் உளவியல்பார்வை, பெண்ணியப்பார்வை. சமகால யுத்தச் சூழ்நிலைப் பார்வை ஆகியன கலாபூர்வமாகியுள்ளன. நுண்ணிய அவதானிப்பும், அவதானிப்புக்குள்ளானவர்களின் நடத்தைக்குரிய உளவியற் காரணம், வெளிப்பாடுகளுக்குரிய புறக்காரணிகள் என்பன அவரின் சிறுகதைகளில் ஊடுருவிச் சித்திரிக்கப்படுகின்றன. வெளிநாட்டுப் பணவருகையால் உறவுகளை மதிக்காது நடக்கும் செல்லம், ‘சமுதாயம் ஒரு சறுக்குப்பாறையில்' என்ற கதையில் வருகின்றாள். தன்வீட்டுக் குறோட்டன் செடியை ஆடு கடித்துவிட்ட தென்பதற்காக அதனை நஞ்சூட்டிக் கொல்லும் செல்லம், தான்வளர்க்கும் அல்சேஷன் நாய் எதிர்வீட்டுக் கோழிக்குஞ்சுகளைப் பிடித்தமைக்காகத் தட்டிக் கொடுக்கும் முரண்சுவை சிறுகதைக்குரிய உச்சமாக அமைகின்றது. இராணுவம் வந்ததால் மாவிட்டபுரத்திலிருந்து இடம்பெயரும் இளங் குடும்பம். கணவன் வவுனியாவுக்குப் போய்க்காணாமற்போகிறான். மனைவி தன் பிள்ளையை எப்படியாவது படிப்பித்துவிடவேண்டுமென விரும்புகிறாள். இது மட்டும் அவளுடைய தலையிடியல்ல. கவுன்சிலிங் வழங்கியவர், ஒரு கல்லூரி அதிபருக்கு அவளுடைய சோகக் கதையை எடுத்துக் கூறி, கல்லூரியிலனுமதி கேட்கிறார். அதிபர் ஐயாயிரம்ருபா கேட்கிறார். க்தையின் உச்சம் இதுதான். ‘சிதறுவான்' என மனதிற்குள் திட்டியபடி எழுகிறார். எதிர்பாராத திருப்பத்துடன் "மனதையே கழுவி. என்ற சிறுகதை முடிகிறது. இந்த இரு சிறுகதைகளிலும் சமகாலத்துப் பிரச்சினைகள் பின்னணியாக விளங்குகின்றன. அவற்றினைச் சிறுகதையின் வடிவமைப்போ, உள்ளடக்கமோ பாதிக் காதவாறு, ஆசிரியை சித்திரித்துள்ளார். கோகிலா மகேந்திரனின் எரியும். தரமான இன்னொரு சிறுகதை. குண்டுவீச்சுக்களுக்குள்ளாகும் யாழ்ப்பாணத்தின் துய்ர்நிலையில், மண்ணில் விழுந்த உயிர்கள் மட்டுமல்ல, கருவறையிலுள்ள உயிர் களும் பலரியாகின்ற அவலத்தை சமூகயதார்த்தத்தோடு இச்சிறுகதை சித்திரிக்கினறது.
கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குக் கனதியைச்சேர்ப்பன. சமகாலத்துப் பிரச்சினைகளை உளவியற்பாங்காக எழுதுபவர் அவர். புதுயைான உவமை உருவகங்
235

Page 127
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்’ களும், சிறுகதையின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற உரைநடையும், வகைமாதிரிப் பாத்திரத்தேர்வும் கோகிலா மகேந்திரனின் சிறுகதைகளுக்கு மெருகூட்டுகின்றன. அவருடைய தமிழ்தேசியவுணர்வுக் காலகட்டத்துச் சிறுகதைகள் ‘வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்' எனும் தொகுதியாக வெளிவந்துள்ளன.
யோ. பெனடிக்ற்மாலனின் சமகாலக்கதைகளாக இப்படி எத்தனைகாலம், ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள், பட்டம்விடுவோம், கரையேறும் மீன்கள் ஆகிய சிறுகதைகளமைகின்றன. ஏதோ ஒருவகையில் தமிழீழப்போராட்டத்தை மறுதலிக்கின்ற சிறுகதைகளாக இவையுள்ளன. ஒவ்வொரு இன மக்களும் தத்தமது தனித்துவத்தைப் பேணுவதற்காக உலகெங்கும் போராட்டங்கள் நடாத்துகிறார்கள் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வர்க்கவேறுபாடே அப்போராட்டத்திற்குக் காரணமென முழுமையாக நம்புகிறார். “இப்படி எத்தனைகாலம்' என்ற சிறுகதையில் தமிழ்மக்கள்படும் அவலங்களைப்படம்பிடித்துக்காட்டுகிறார். வன்செயல்கள் வன்செயல்களைத்தான் ஏற்படுத்தும் என்கிறார். வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்தும் சிறுகதை “ஒரு வண்டியில் பூட்டியமாடுகள். இன ஒருமைப்பாட்டை இச்சிறுகதையில் வலியுறுத்துகிறார். கரையேறும் மீன்களில் தமிழ் இளைஞர்களின் தவறான செயல்முறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். மார்க்சியத்திற்கு அப்பாலான சிந்தனையொன்நிருப்பதை பெனடிற்பாலன் ஒதுக்கிவிட்டார்.
புலோலியூர் க. சதாசிவத்தின் அண்மைக்காலச் சிறுகதைகளான திருமா?, ஆடிப்பூசை, எட்டாதகனி, ஐயோ அம்மே, இடறும்கால் ஆகிய சிறுகதைகள் அவரை ஈழத்தின் சிறுகதை எழுத்தாளர் வரிசையில் திடமாகச் சேர்க்கின்றன. போரினால் பங்கப்பட்டுச் சீரழிந்துவரும் நாட்டில் வாழும் இரு இனமக்களும் இந்த யுத்தத்தினால் பாதிப்படைகின்றார்கள். யுத்த அசுரனின் இருட்போர்வை விலகி, இந்தநாட்டிற்குச் சமாதான ஒளிபரவாதா என்ற ஏக்கத்தைத் ‘திருமா' சிறுகதை சுட்டிநிற்கின்றது. கொழும்பு வாழ்வில், குண்டு ஒன்று வெடித்தால், அதன்பயனாகத் தமிழர்கள் படுகின்ற கைதுகளையும். தடுப்புவைப்புகளையும், பெற்றார் படுகின்ற அவலத்துடிப்புகளையும் திருமா சிறுகதை சித்திரிக்கிறது. “இந்தநாட்டிலை தமிழனாகப் பிறந்தவர்கள் இதற்கெல்லாம் பழக்கப்படவேண்டும்' என்கிறான் இக்கதையில் வரும் இளைஞன், பின்னர் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட, வெளிநாட்டிற்கு ஓடிவிடவிரும்புகின்ற இயற்பண்பினுாடாகச் சிந்திக்கிறான். "இந்த நாடு
236

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்” இனி ஒருநாளும் சரிவராது என்ற முடிவுக்குப் பெற்றார் வருகின்றனர். யுத்தத்தில் தன்பிள்ளையைப் பலி கொடுத்த சிங்களக் குடும்பம் ஒன்றும் இக்கதையில் வருகின்றது. உயிர் இழப்பு என்பது எந்த இனத்திற்கு வந்தாலும் ‘துயரம் ஒன்றுதான் என்பதைத் தீருமா அழகாகப்பட்டம் பிடித்துக் காட்டுகின்றது. சதாசிவத்தின் எட்டாதகனி என்ற சிறுகதையிலும் இருவினப்பாத்திரங்களும் வருகின்றன. இருபக்க நியாயங்களும் ஊடுபரவி நிற்கின்றன. தமிழ்இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணத்தை இச்சிறுகதை நியாயப்படுத்துகின்றது. திருமா, எட்டாக்கனி ஆகிய இரு சிறுகதைகளும் தரமான சிறுகதைகளாகவுள்ளன. -
‘ஆடிப்பூசையில் ஒருபுறம் இனக்குரோதக் கில்லாடித்தனங்களும், இன்னொருபுறம் வேற்றுமைகளைப் புறங்கண்ட மனிதாபிமானத்தின் இங்கிதமும் காணப்படுவதை ஆசிரியர் சித்திரித்துள்ளார். ஆடிப்பூசை விழாவை மையமாகக் கொண்டு தோட்டத்து மக்களை வருத்தும் கல்வி, வைத்தியம், இருப்பிடவசதிகளும், கள் கசிப்பு சாராயம், சாதிப்பிரிவினைகள் போன்றவற்றால் எற்படும் கெடுதல்களும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன.* பல்வேறு பிரச்சினைகளின் கூட்டுமொத்த அலசலாகச் சிறுகதை அமையக்கூடாதென்பதைச் சதாசிவம் புரிந்து கொண்டால், அவரது சிறுகதைகள் உன்னதமானவையாக அமையும் எனினும் ‘மக்கள் யாவரும் மண்ணில் நல்லவண்ணம் வாழ வேண்டும் என்ற உணர்வினால் உந்தப்பட்ட எழுத்தாற்றல் கொண்ட புலோலியூர் க. சதாசிவம் புரிந்துணர்வை வளர்க்க இலக்கியத்தை ஊடகமாகக் கொள்கிறார். மனித நேயநடத்தைகளை ஊன்றி அவதானிக்கும் ஆற்றல் இவரது எழுத்துக்களில் நிறையவுண்டு*
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை ஈழத்துச்சிறுகதை வரலாற்றில், சமகாலச்சூழலைப் பிரதிபலித்து இலக்கியம் படைத்தவர்களில் முக்கியமானவர். நிஜங்கள், காடு சிரித்தது, அதிபர், திருவிழா, சங்கமம், மொட்டுக்கள் மலர்கின்றன, தமிழ்த்தினப்போட்டி, யாழ்ப்பாணம், வீடு, ஒரு பெண்ணைத்தேடி முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். கல்கியைப்போல வாசகர்களோடு நேரடியாக உறவைக்கொள்ளும் எழுத்துநடையில் மெல்லிய கிண்டல் ஊடுபரவ, சமகால வாழ்க்கையனுபவங்களையும், அவலங்களையும் தக்க விபரணப்பாங்கில் படைத்துள்ளார். நிஜங்கள், செப்பனிடப்பட்ட வடிவத்தைக் கொண்ட சிறுகதை. இளவயதுக் கனவுகளும் கற்பனைகளும் யதார்த்த வாழ்வில் முரண்நிலையாக அமைவதைச் சுந்தரம்பிள்ளை சமூகயதார்த்தத்தோடு
237

Page 128
gigi fa). Qa "செங்கை ஆழியான்" இச்சிறுகதையில் (டித்துத்தந்துள்ளார். பாடசாலை வாழ்க்கையைப்பற்றி, ஆசிரியர் எழுதிய காடு சிரித்தது. அதிபர், தமிழ்த்தினப்போட்டி ஆகிய சிறுகதைகளில் விபரித்துள்ளார். ஓர் இளம் ஆசிரியையின் வருகை ஒரு காட்டுக்கிராமப்பாடசாலையை எவ்வாறு விருத்தியடையச் செய்கிறது என்பதை காடு சிரித்தது சிறுகதையில் ஆசிரியர் சித்திரிக்கிறார். இச்சிறுகதைகளில் பாடசாலைச் சமூகப்பிரச்சினைகள் அலசபபட்டாலும், அவற்றினுாடே சமகாலப்போர்ச்சூழலின் பாதிப்புக்களை ஏற்றவாறு புகுத்தியுள்ளமை சிறப்பாகவுள்ளது. சங்கமம், மொட்டுகள் மலர்கின்றன ஆகிய இரண்டுசிறுகதைகளும் ஏதோ ஒரு வகையில் ஒத்துள்ளன. சங்கமத்தில் விசுவமடு மிளகாய்த்தோட்ட இளைஞன் இந்தியத்தமிழ் பெண்ணொருத்தியைக் காதலித்துக் கலியாணம் செய்கிறான். மொட்டுகள் மலர்கின்றனவில் யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவர் மலைநாட்டுப் பெண்ணெருத்தியைக் காதலித்துக் கரம் பிடிகிறார். இதில் அவர்களுக்கிடையே நிகழும் சம்பாஷனை இரண்டிலும் ஒரே மாதிரியாக இருப்பது ஏற்றதாகவில்லை. போராட்டச்சூழலை நன்கு சித்திரிக்கின்ற சிறுகதைகளாகத் தரிருவிழா, யாழ்ப் பணம் , வீடு ஆகிய சிறுகதைகளுள் ளன. வாணவேடிக் கைகளோடு நிகழ்ந்த இரவுத்திருவிழாக்கள் இன்று பகல் திருவிழாக்களாக மாறிவிட்ட நிலையையும் , இரவுவேளைகளில் குண்டுவெடிப்புகளும் ஷெல்ச்சத்தங்களும் வாணவேடிக்கை செய்வதையும் திருவிழாவில் சுந்தரம்பிள்ளை சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “யாழ்ப்பாணம்’ சுந்தரம்பிள்ளை எழுதிய சிறுகதைகளில் சிறப்பிடம் பெறுவது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையை அப்படியே Lub பிடிக்கிறது. வீடு சமகாலயுத்தத்தால் அழிந்துபோகும் வீடுகளை அவலச்சுவையோடு சித்திரிக்கின்றது. பொதுவாக அராலியூர் ந. சுந்தரம்பிளளையின் சிறுகதைகள் காலத்தின் ஆவணங்களாகவுள்ளன. உரையாடல்களில் நாடகத்தன்மைமிக்குள்ளது. மிக எளிதாகவும் சுவைபடவும் தான் எடுத்துக்கொண்ட கதையைக் கூறிவிட அவரால் முடிகிறது. சுந்தரம்பிள்ளையின் சிறுகதைகள் அவர் கூறுவது போல் ‘ஏதாவது ஒன்றைச் சுற்றியே எழுதப்படுகிறது.ஒருபாத்திரம்,ஒரு குணாதிசயம், ஒரு சம்பவம், ஒரு உணர்ச்சி ஒன்று எதுவும் இருக்கலாம். அந்த ஒன்றைவிட்டு விலகக்கூடாது.”* உண்மைதான். ஆனால், சிறுகதையில் விபரணப்பாங்கைமேவி, கதையம்சம் ஒன்றிருக்க வேண்டும், எவ்வாறாயினும் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின் சிறுகதைகள் அவர் கூறுவதுபோல, அலங்காரங்கள் எதுவுமே இல்லாத (உவமை, உருவகம், படிமங்கள், குறியீடுகள்) பேச்சு வழக்கை அண்மிய சாதாரண
மொழிநடையில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளாகவுள்ளன."
238

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Júsis Sufusá" சிறுகதையின் பண்புகளைத்தெரிந்திருக்கும் ஆசிரியர் இவற்றினையும் புகுத்தித் தன் சிறுகதைகளைப் படைத்திருப்பின் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பெருமைதரும் கலைப்படைப்புக்களைத் தந்திருப்பார்.
தி. ஞானசேகரண் தமிழ்த்தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், 'சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு. சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ் கண் ற மலையகப் பெணி களின் உணர்வுகளின் சோகச்சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு. சோதனை ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சினைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துமாகவும் L160)Lö85JUL"G6ï 6TT601. 6 LU85g எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயேயுள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்திரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகின்றது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டத்துச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.
ஈழத்துத்தமிழ்ச்சிறுகதைத்துறையின் பங்காளிகளில் ஒருவராகச் கதாராஜ் (சி.இராஜசிங்கம்) உள்ளார். தமிழ்த்தேசியவுணர்வுக் காலத்தில் முயல்குட்டி, அடைக்கலம், போவது நிதியில்லை, மெய்ப்பொருள், எங்கட அப்பா எப்பவருவார், விளக்கு, அகதியும் சிலநாய்களும், தெரியாத பக்கங்கள் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவருடைய சிறுகதைகள் யதார்த்தபபடைப்புக்கள், தனது சிறுகதைகளுடாக மானிடநேயம் ஒன்றினை மையப்பொருளாகக் கொண்டு, சிக்கலற்ற சமூகவாழ்க்கையுணர்வுகளைத் தன் பெரும்பாலான சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். சமகாலப் போர்ச் சூழலின் விளைவான அகதிநிலை,
239

Page 129
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
விதேசியப் புலம்பெயர்தல் என்பனவற்றைச் சித்திரிக்கும் போதும், சார்புநிலையற்ற எழுத்தாளராக இயல்புநிலையில் கதையை வரைந்துள்ளார். ஒரு உணர்வு நிலைக்கு மேல் தன் சிறுகதையில் எச்சம்பவத்தையும் அவர் கொண்டு வரவில்லை. "கதாராஜ் தமது கதைகளுடாக எதனையும் எம்முடன் நேரடியாகப் பேசவில்லை. எதனையும் பிரசாரப்படுத்தவுமில்லை. ஆனால் நிறையவே நமக்கு உணர்த்திவிடுகிறார்.”. அடைக்கலம், தெரியாத பக்கங்கள் ஆகிய சிறுகதைகள் தரமானவை.
ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த எஸ். பி. கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் 1970களிலிருந்து ஏராளமான சிறுகதைகளை எழுதி வருகின்றபோதிலும், 1983 இன் பின்னர் எழுதிய சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்விணைப்பிரதிபலிக்கும் படைப்புக்களாக விளங்குகின்றன. இவருடைய முன்னைய சிறுகதைகளின் தொகுதிகளாக ஒன்றே தெய்வம், பொழுதுபோக்கு ஆகியனவுள்ளன. எனினும், "இந்துசமுத்திரத்தில் ஓர் இரவுப்பயணம்' என்ற அவரது அண்மைக் காலச் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி கவன ஈர்ப்புக்குரியதாகும். இந்த மண்ணில் வாழஇயலாது, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும் கதாசிரியர், பிறந்த மண்ணின் போர்த்துயரங்களைத் தன் படைப்புகளில் கொண்டுவந்துள்ளார். கலைஞன், அதிர்ச்சி, அரிதான அனுபவங்கள், ஓ தென்மராட்சி, நன்றியுணர்வு, எரிகிற விடுட்டில், நெஞ்சில் ஆழப்பதிந்த வடு, குற்றம் புரிந்தவன், வானமே கூரை, இந்து சமுத்திரத்தில் ஒர் இரவுப்பயணம் ஆகிய அவரது சிறுகதைகள் இந்த மண் ணின் அவலங்களைப் பேசுகரின் றன. அவலங்களை ஆவணமாக்கியுள்ளன.
கே. ஆர். டேவிட்டின் அண்மைக் காலச் சிறுகதைகள் தமிழீழப்போராட்டச்சூழலையும். போராளிகளின் தியாகங்களையும், பேசுவனவாக அமைந்துள்ளன. ‘ஒரு இனமோ, வர்க்கமோ மிக மோசமாக அடக்கப்படும்போது, அடக்கப்படுகின்ற இனமோ, வர்க்கமோ அந்த அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுவது தவிர்க்கமுடியாதது.* என்கிறார் ஆசிரியர். எண்ணக்கரு சிதைகிறது. எரிமலைகள், ஜென்மபாவம், தட்டுங்கள் திறக்கப்படும், சரித்திரம் திரும்பும், ஒருபிடிமண், சிணுங்கி, US LETET சிந்தனைகள், குருத்துக்கள் என்பன இராணுவ அடக்குமுறையால் மக்கள் படும் அவதிகளையும், அவற்றினூடாக இளம் பிள்ளைகளின் மனதில் எழும் வைராக்கியத்தையும்
240

Hålå singidhan ATP “செங்கை ஆழி:ள்”
சித்திரிக்கின்றன. ஈழப்போராட்டத்தில் ஆசிரியர் கருதுகின்ற நியாயங்களை மனதல் பதரிய வைத்து, சுதந்திர வுணர்வை ஊட்டுகின்ற சிறுகதைகளாகவுள்ளன. தட்டுங்கள் திறக்கப்படும், குருத்துக்கள் இரண்டிலும் ஒரேகரு வெவ்வேறு களங்களில் விபரிக்கப்படுகின்றது. ஒருபிடிமண் தரமான நல்லதொரு சிறுகதை, வடிவஅமைதி கொண்ட சிறுகதை. ஆனால், இதில் வரும் மையக்கருவை சிற்பி 1959களில் பிறந்தமண் என்றொரு சிறுகதையாகச் சுதந்திரனில் எழுதி, இனவாத எழுத்தாளர் என்று திறனாய்வாளர்களால் புறங்காணப்பட்டவர். இருசிறுகதைகளிலும் தாம் பிறந்த மணி னை அள்ளிச் சரையாகப்பொதிசெய்து பேணுகின்ற மனவுணர்வு சித்திரிக்கப்படுகின்றது. மார்க்சிய முற்போக்காளரான டேவிட்டிற்கு பிறந்தமண்ணின் பெருமை 1992களில் புரிகிறதென்றால், 1959களில் தமிழ்த்தேசியம் பேசிய, எழுதிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் மீள் பரிசீலனைக் குள்ளாக வேண்டியதவசியமாகும்.
கே. ஆர். டேவிட்டின் சிறுகதைகளில் மெழுகுவர்த்தி, தாகம் ஆகிய சிறுகதைகள் இரண்டும் தமிழீழப்போராளிகளின் தியாகங்களைச் சித்திரிக்கின்றன. “இன்று நடக்கின்ற போராட்டத்தில் நமது வாலிபர்களின் இமாலயத்தியாகங்கள், போராட்ட வரலாற்றில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தியாகங்கள் யாவும் பதிவுகள் ஆகி நமது எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்" என்ற விருப்பு டேவிட்டின் கதைகள் மூலம் பூரணப்படுகின்றது என்பதில் ஐயமில்லை. உள்ளடக்கச்சிறப்போடு மட்டும் சிறுகதை இலக்கியம் பூரணப்படுத்துவதில்லை. உத்தி, நிறைவான பேச்சுவழக்கு, செப்பமான வடிவம் என்பன சேரும்போதுதான் கலைப்படைப்பாகிறது.
யாழ்ப்பாணமண்ணின் போராட்டச்சூழலையும், யுத்தகால அனர்த்தங்களையும் சமூகமெயம்ழையோடு நல்லசில சிறுகதைகளில் தந்திருப்பவர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் ஆவார். சமூகப்பிரச்சினைகளின் மையங்களை இனங்கண்டு தனது சிறுகதைகளில் கலைத்துவமாக ஆவணப்படுத்தியுள்ளார். நல்ல மேய்ப்போனும், இன்று நாளை, அகதிகள் முகாம், குறைவிருத்திநாட்டுப். காலங்கழிப்பமடி, சமகாலம், தீர்வுகள், என்னுடையதும் அம்மாவினுடையதும் முதலான சிறுகதைகள் யாழ்ப்பாணத்தின் சமகால அவலங்களைச் சித்திரிக்கின்றன. போராட்டத்தின் பங்காளனாக நின்று படைப்பதால், அவற்றில் சத்தியம் இருக்கின்றது. பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்காக விடுவளவை
241
(16)

Page 130
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” இழக்கும் பாத்திரத்தை இன்று நாளை சிறுகதையில் தரிசிக்கலாம். வெளிநாட்டு அகதிமுகாமிலிருந்து கொண்டு, சொந்த நாட்டிலேயே அகதிமுகாமிலிருக்கும் பெற்றோருக்குக் கடிதம் எழுதும் கணநாதனை அகதிகள் முகாம் சிறுகதையில் காணமுடியும். முதிர்குமரர்களின் உணர்வுகளை "காலம் கழிப்பமடி'யில் திருச் செந்திநாதன் கூட்டிக்காட்டுகிறார். இவ்வாறு பல்வேறு முரண்பாட்டுப்பாத்திரங்களை அவரின் சிறுகதைகளில் காணலாம். நேரடியாகவே கதையைக் கூறிவிடுகின்ற பாங்கு, அவரின் சிறுகதைகளின் கருவை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவுகின்றது.
யோசெப்பாலா நல்லபல சிறுகதைகளை ஈழத்துச்சிறுகதைத் துறைக்குத் தந்துள்ளார். ஒதுக்கப்பட்டவரல்ல, வாழத்துடிக்கிறாள், பாதைமாறும் பயணங்கள், அது ஒரு இது, பேரம், சிறை, சுமைகள், உறவில் மலர்ந்த உண்மைகள், திருப்பம், அவனும் ஒரு அகதி. 2 631ாாத உண்மைகள் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். வாழ்க் கையனுபவ்ங்களை மானிடப்பிரக்ஞையோடு கூறுவதற்கு யோசேப்பாலாவிற்குத் தெரிந்திருக்கிறது. இந்த மண்ணின் வாழ்வுக்குப் :ாதுகாப்பின்மையினால் வெளிநாடுகளுக்குத்தப்பி ஓடும் பிள்ளைகளையும், :ர்களை அனுப்பிவிட்டுத் தனிமையில் துயருறும் பெற்றோர்களையும் பாதைமாறிய பயணங்கள், அவனும் ஒரு அகதி, சுமைகள் ஆகிய g:தகளில் பாலா நன்கு சித்திரித்துள்ளார். பெண்களின் அகவய tர்வுகளை வாழத்துடிக்கிறாள், அது ஒரு இது, சிறை முதலான :தக்ளில் படம்பிடித்துக் காட்டுகிறார். "யோசெப்பாலாவின் நடைமிக கச் சிதமானது. சொற்சிக்கனமும் கதைக்கருத்தைவிட்டு அகலாத டார்:யும் தந்திநடையும் கதைகளை நகர்த்தி அவற்றுக்கு இறுக்கமான பூழ்" கட்டமைப்பைத தருகின்றன. கலைத்துவமும் கவித்துவமும் செறிந்து பெருகேற்றினால் அவை இன்னும் சிறப்பாக அமையும்" அவருடைய சிறுகதைகளின் தொகுப்பு உணராத உன்மைகள், திருப்பம் என்பன
சிவந்துள்ளன.
!}}}
தெணியானின் சமகாலப்பிரச்சினைகளுக்கு வடிவம் தந்த ட:டபடென “இன்னுமா? என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். போராட்டச் பு:ன்ே விளைவான யுத்த அனர்த்தங்கள் அவரது இச்சிறுகதையில் ஸ்ளடக்கமாக அமைந்தாலும் சாதியத்தின் பின்னணியிலேயே :ஃபான் அவற்றை எழுதியுள்ளார். வெடிச்சத்தத்தில் ஊரே அல்லோல 8லலோலப்படுகின்றது, ஒரு குடும்பம் மாமாவிட்டில் அடைக்கலம்
242
 
 
 
 
 
 

ஈழத்துச் சிறுகதை வரலாறு “சேங்கை ஆழியாண்”
புகுகின்றது. சுற்றிவளைப்பில் இளைஞர்கள் பிடிபடுகின்றனர். செய்தி வருகின்றது. “ஒரு ஐம்பது அறுபது பேர் வரையிலை இருக்குமாம். எங்கட வாசியசாலைக்குள்ளை அடைச்சுப்போட்டு குண்டு வைச்சுக் கொண்டு போட்டாங்களாம
"அதுசரி தம்பி, உங்கை ஆரார் செத்ததாம் 'நீங்கள் கவலைப்படாதையுங்கோ அண்ணே. எங்கடை ஆக்கள் ஒருத்தருமில்லை. அது. எல்லாம் சமரவாகுப்பள்ளரும் இலந்தைக்காட்டு நளவருந்தானாம் என்று தெணியானின் ‘இன்னுமா? சிறுகதை முடிகின்றது. மானிட நேயத்தைச்சந்தேகிக்கின்ற சிறுகதையாக எனக்குப்படுகின்றது. தெணியானின் இக்காலகட்டத்துச் சிறுகதைகளில் இவரின் கதை, உவப்பு. இருளில் நடக்கின்றோம் என்பனவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாம்.
பெண்ணியல் வாதக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி, இயற்பண்பியலடியாக அண்மைக்காலத்தில மணர் டூர் அசோகா (அசோகாபிம்பகை யோகராஜா) மீறப்பட்ட வேண்டிய எல்லைகள், சிறகொடிந்த பறவைகள், நாணல்கள் நிமிர்ந்தால், எங்களால் முடியும் ஆகிய சிறுகதைகளைத்தந்துள்ளார். ஆனாதிக்கக் கட்டுப்பாடுகளை மீறுகின்ற துணிச்சல்மிக்க பாத்திரங்கள் அவரது கதைகளில் வருகின்றன. பாரம்பரியக்கட்டுப்பாடுகளைத் துணிந்து மீறும் பெண் பாத்திரங்களில் அவரது சிறுகதைகள் புத்துலகம் படைக்கின்றன. உள்ளடக்கமும், உருவகமும், கலையழகோடு செறிந்திருக்கில் மண்டூர் அசோகாவின் இச் சிறுகதைகள் இன்னும் சிறப்படைந்திருக்கும். பெண்ணியல் வாதக்கருத்துக்களைப் பெய்து சிறுகதைபடைக்கும் மரீனா இல்யாவில் என்ற பெண்மணியும் இவ்வரிசையில் சேர்க்கத் தக்கவர். பெண்களின் உணர்ச்சிகளுக்கும், அவர்கள் சமூகத்தில் படும் அழுத்தங்களுக்கும் மரீனா இல்யாஸ் தரும் விடிவைத்தேடி என்ற சிறுகதை வடிவம் தருகின்றது. கருத்துவளம் மட்டும் சிறுகதையாகாது.
தாமரைச்செல்வி (ரதி கந்தசாமி)யின் அண்மைக் காலச் சிறுகதைகள், தமிழ்மக்களது சமகால அவலவாழ்க்கையின் பக்கங்களைச் சுட்டுவனவாகவுள்ளன. போர்ச்சூழலில் வாழ்ந்து, தான் கண்டுகேட்டு அனுபவித்து உணர்ந்தவற்றைத‘தன் சிறுகதைகளில் அவர் கொண்டு வந்துள்ளார். “இச்சமூகம் இப்படி அவலப்படுகின்றதே" என்ற ஆதங்கம் அவரது சிறுகதைகளில் மேலோங்கி நிற்பதால், தன்
243

Page 131
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
சிறுகதைகளில் அத் துயர விடிவிற்கான ஒளிப்புள்ளியைச் கட்டத்தவறிவிட்டபோதிலும், அவரது அண்மைக்காலச் சிறுகதைகளான இங்கேயும் சில இழப்புக்கள், ஒரு மழைக்கால இரவு, அவன் அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி, ஒரு யுத்தத்தின் ஆரம்பம், இடைவெளி முதலான சிறுகதைகளில் சமுகப்பிரக்ஞையைத் தரிசிக்கமுடிகின்றது. ஒருமழைக்கால இரவு, அவன் அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல் மேடு ஆகிய சிறுகதைகள் சமகாலவாழ்க்கையின் படிமங்களாகவுள்ளன. அடக்கியொடுக்கப்பட்ட ஓரினத்தின் தாங்கொணாத் துயரத்தின் வெளிப்பாடுகளாகவுள்ளன. கதைநிகழும் சூழற்பின்னணியின் விபரணமும், சம்பவங்களினடியான மானிடநட்த்தைகளும் இச்சிறுகதைகளில் சிறப்பாக அமைந்துள்ளன. நேர்த்தியாகவும் மனதை அழுத்தும் வகையிலும் கதையைக் கூற ஆசிரியையால் முடிகின்றது. ‘ஒரு யுத்தத்தின் ஆரம்பம் ஒரு சிற்பியின் கலைத்திறனுடன் செதுக்கப்பட்ட சிறுகதை வடிவமாகவுள்ளது. வெளியேயிருந்து ஒரு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காது, உள்ளேபுகுந்து குரல்தர விழையும் ஓர் இளைஞனின் மனநிலையை இச்சிறுகதை சித்திரிக்கின்றது. தாமரைச் செல்வியின் சிறுகதைகளில் காணப்படும் தூக்கலான விடயம் கதையம்சமாகும். அகவயப்பட்ட உணர்வுகளிலும் பார்க்க அவரது சிறுகதைகளில் புறவயப்பட்ட அழுத்தங்கள் சிறப்பாக அமைந்திருக்கும். அவருடைய அண்மைக்காலச் சிறுகதைகளின் தொகுப்பாக ‘ஒரு மழைக்கால இரவு வெளிவந்துள்ளது.
‘போர்க்காலச் சூழலுக்கு முகம் கொடுத்து வாழும் மக்களின் பல்வேறு உணர்வுகளையும் அவலங்களையும் இச் சிறுகதைகள் சித்திரிக்கின்றன. எமது மண்ணில் நடந்த உண்மைநிகழ்வுகளின் தொகுப்பாகக் கூட இச்சிறுகதைகளை எடுத்தக் கொள்ளலாம். ஒரு இனத்தையே பிடுங்கிப்போட்டது போன்ற இடப்பெயர்வின் துக்கங்களினால் மக்கள் பசி, பஞ்சத்தோடும் உயிப்பயத்தோடும் வாழ்கின்ற நேரம் இது? இந்த மக்களின் உணர்வுகளை உள்வாங்கி இலக்கியமாகத் தாமரைச்செல்வி தந்துள்ளார். ஆவணப்படுத்தப்பட்ட இலக்கியம் இவரின் சிறுகதைள் என்பேன்.
க. தணிகாசலம் தமிழ்த்தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதியுள்ள சிறுகதைகளென வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி, நல்லநாள் ஆகியவை உள்ளன. இவை சமகாலத்தில் நிகழ்ந்துபோன துயரவடுகளாகவுள்ளன. யுத்தச்சூழலில் வடபுலத்து மக்கள் எவ்வளவு
244

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான” தூரம் பாதிப்புற்றுள்ளனரென்பதை சமூகயதார்த்தப்பண்புடன் தணிகாசலம் விபரித்துளளார். வேலிகள் என்ற சிறுகதையில் விடுதலைப்போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சிலர் தான்தோன்றித் தனமாகச் செயற்படுவதைத் துணிச்சலுடன் எடுத்துரைத்துள்ளார். இந்திய அமைதிப்படையின் பிரம்படி அட்டூழியத்தைப் பிரம்படி சித்திரிக்கின்றது. *கட்சி இலக்கியம், அரசியல் இலக்கியம் சார்ந்த சிறுகதைகளுக்கு க. தணிகாசலத்தின் படைப்புகள் சிறந்த எடுத்துக்காட்டுகள் சமூகவாழ்வின் பலபடித்தான பரிமாணங்கள் குறித்தும் அவரது படைப்புகள் காட்ட முனைந்துள்ளனவாயினுமி, அரசியல் கட்சி இலக்கிய வடிவங்கள் அவரிடம் மேலோங்கியிருப்பதை அவதானிக்க (Լplգ կմ , “” தணிகாசலத்தின் சிறுகதைப்படைப்பிலுள்ள பிரதான குறை, கதைகளின் இறுதியில் கருவை நெகிழ்த்துவிடுவதும், பிரசாரகராக மாறிவிடுவதும் வாசகனின் ஊகிப்பிற்கும் சிறுகதைகளில் சொல்லாமல் விட ரேண்டிய சங்கதிகள் நிறையவுள்ளன.
“பிரம்படி தொகுதிக்கான தலைப்புச் சிறுகதை இந்திய அமைதிப்படை பிரம்படி எனும் கிராமத்தில் நடாத்திய படுகொலையின் வாயிலாகத் தனது காந்திய சமாதான முகத்தைக் களைந்து ஆக்கிரமிப்பாளராய் வெளிக்காட்டியதைச் சித்திரிப்பது. இராணுவ வாகனங்களால் சிதைந்த வீடொன்றின் சுவரிலிருந்த காந்திப்படம் உடையாதிருந்ததைக் கூறும் பழைமை வாதியிடம், காந்தியின் பிரம்புதான் எம்மீது விழுந்து விட்டது என்ற விமர்சனம் வீசப்படும் தமிழ்த்தேசிய விழிப்புணர்வுப் பிரச்சினைகள் மீது கதையாக்கப்படும்போது இந்த விமர்சனங்கள் புரட்சிகரச்சிந்தனையுடைய ஒரு பாத்திரம் வாயிலாக எப்போதும் வெளிப்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் செயலூக்கமுள்ள பாத்திரங்களை வடித்துத்தந்த தணிகாசலத்திடம் இனப்பிரச்சினை வரும் போது இவ்வாறு வெறும் விமர்சன நிலைப்பாடு வெளிப்படுவது ஒருவகையில் கருத்தியல் ரீதியான பிரச்சினையே காரணம் எனலாம்.”
லெ. முருகபூபதி அவுஸ்திரேலிய வாசியாயினும், அவரது ஆரம்ப, இடைக்காலச் சிறுகதைகளைப்படைத்தபோது ஈழத்தமிழ்ச்சிறுகதை எழுத்தாளராக விளங்கியவர். அவருடைய அண்மைக் காலச் சிறுகதைகளாக வெளிச்சம், காலங்களும் கணங்களும், மழை, சிகிச்சை, ரோகம் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக அடைக்கலம் புகுந்த நம்மவர்களின், வாழ்க்கை
245

Page 132
ஈழத்துச் சிறுகதை வரலாறு "fax guai" நிலைகளையும், உணர்வுகளையும், பிறந்த மண்ணின் மீதான ஏக்கங்களையும், இடர்களையும், அந்நியமாதலையும் லெ. முருகபூபதி தனது இச்சிறுகதைகளின் உள்ளடக்கமாக்கியுள்ளார். அந்நிய மண்ணில் வேரூன்றமுடியாத தவிப்பினையும், புதிய தலைமுறை அந்தமண்ணின் கலாசாரமொழிகல்விக்கூறுகளில் அமிழ்ந்து தம்மின அடையாளத்தை இழந்து வருவதையும் இவரது சிறுகதைகள் பேசுகின்றன. வெளிச்சம், காலங்களும் கணங்களும், அவ்வகையில் மிகத்தரமான சிறுகதைகள், இவை பூரண கலைத்துவப் படைப்புகளாகவும் விளங்கின்றன.
நீர்கொழும்புப்பிரதேசம் தந்த இன்னொரு சிறுகதையாளர். மு. பஷீர் ஆவார். பெண் எப்படி இருப்பாள், அந்நியம், சிதைவு, தெளிவு, மீறல்கள். முகத்திரை, பிரார்த்தனை, தனிமை, மானுஷ்யம், கழுகுகள், சலனம், தீர்ப்பு, இரக்கம் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். தான் வாழும் பிரதேச மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும், சமூகச்சீர்கேடுகளையும், மாறவேண்டிய சமூகக் கட்டமைப்பையும் தனது சிறுகதைகளில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்நியம், சிதைவு இரண்டும் தரமான சிறுகதைகள். முஸ்லீம் மக்களின் சமூக வாழ்க்கையையும், பேச்சுவழக்குகளையும் பவரின் சிறுகதைகள் அறிய வைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக மானிடநேயததை அவருடைய சிறுகதைகளினுடாக தரிசிக்கமுடிகின்றது.
திக்குவலி லை கமானினர் சமீபகாலப் படைப்புகள் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளன. நம்பிக்கை, அஸ்தமத்தில் ஓர் உதயம், சுவடுகள், தேடிவந்தநிம்மதி, வைராக்கியம், நிழற்போர், மகனுக்கு ஒரு வண்டி, மையத்துவிட்டுச் சோறு, விடைபிழைத்த கணக்கு, சம்பளச்காரன், எதிர்வீடு, புதிய பாதை, கனவுகள், நாற்பது நாள் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார்.தென்னிலங்கை முஸ்ளலீம் மக்களின் வாழ்க்கையணு பவங்களையும் பிரச்சினைகளையும் சமுக மெய்மையோடும், மண்வாசனையோடும் திக்குவலை கமாலால் தன் சிறுகதைகளிற் சித்திரிக்க முடிகிறது. கிராமத்துமக்களின் போச்சு மொழியை மிக இயல்பாக அவர் தன் படைப்புகளில் கையாண்டுள்ளார். அஸ்தமனத்தில் ஓர் உதயம், மையத்து வீட்டுச் சோறு ஆகியவை தரமான சிறுகதைகள்.
246

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” 5.2.2. 1981-2000 காலகட்டத்துச் சிறுகதையாளர்கள்
தமிழ்த் தேசியவுனர்க் காலகட்டத்துக்கு முற்றுமுழுதாக உரிமையான சிறுகதையாசிரியர்களாக ரஞ்சகுமார், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சோ. ராமேஸ்வரன், திருக்கோவில்கவிடியுவன், ஆ. மு. சி. வேலழகன், ஓட்டமாவடி அறபாத், க. சிவனடியான், எம். ஐ. எம். முஸம்மில், யூ. எல். ஆதம்பாவா, சித்ரா நாகநாதன், திருமலை சுந்தா, எஸ். ஏச்.நி.மத், நா.கிருஸ்ணசிங்கம், இளையவன்,கனகசபை, தேவகடாட்சம், வாகரைவாணன்,ஒலுவில் அமுதன், வெற்றிவேல் விநாயகமூர்த்தி, தி. உதயசூரியன்,உதயன், வத்தைரம்ஜான், சந்திரா தனபாலசிங்கம், சந்திரா தியாகராஜா, கெக்கிராவை ஸஹானா, உமாவரதராஜன், நந்தினிசேவியர், த. சித்தி அமரசிங்கம், ராணிசீதரன். ரூபராணியோசெப், கனகசபை தேவகடாட்டசம், முல்லைக் கோணேஸ், பார்த்திபன்,இயல்வாணன், சி. கதிர்காமநாதன், தாட்சாயினி, சி. சிவாணி, உடுவில் அரவிந்தன் முதலனோரை உள்ளடக்கியதாக விரியும். இவர்களோடு சித்தர்அனவரதன்,அபிநவன்,குமுதினி சதாசிவமூர்த்தி சத்தியபாலன்,ச.சாரங்கா, த. பிரபாகரன், ஆ. இராவீந்திரன், ராஜேஸ்கண்ணா, இராகவனி, தியாகு கணேஸ்வராஜ், வ. வசந்தகுமார், பிரியாகுணராசா, நர்த்தனா,அருந்தவசீலன் ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிறுகதை எழுத்தாளர்களையும் குறிப்பிடலாம்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ரஞ்சகுமார் முக்கியமான ஒரு படைப்பாளி எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பியால் இனங்காணப்பட்டவர். சுருக்கும் ஊஞ்சலுமி, கபரக்கொயாக்கள், காலம் உனக்கொருபாட் டெழுதும், கோசலை, அரசி, கோளறுபதிகம், மோகவாசல் ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார். ரஞ்சகுமாரின் சிறுகதைகள் அவர் கையாளும் உரைநடை தனித்துவமானது. கதைக்கருவிற்கேற்ற நடை. தேடிய சொற்கள் இயல்பாகவே அவர் சிறுகதைகளில் விழுத்திருக்கும். உவமை உருவகங்கள் மிகச்சிறப்பாக அவர் கதைகளிற் காணப்படும். ‘பற்றைகளுடாக எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவடிட்டுப்பாதைகள் வகிடெடுத்துத் தெரியும் (கபரக்கொயாக்கள்)". அத்தோடு இலக்கிய நயமாகச் சொற்களைக் கையாள அவரால் முடிகிறது. "அவர் கும்பிட்ட தெய்வங்களெல்லாம் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்திவன்மத்துடன் வேடிக்கைபார்த்தன” (காலம் உனக்கொரு பாட்டெழுதும்)"சுருக்கும் ஊஞ்சலும் சிறுகதையில் கதைநிகழும் பகைப்புல விபரணம் கலைத்துவமாகவுள்ளது. அதேவேளை கபரக்கொயர்க்களில் எடுத்தக்கொண்ட உள்ளடக்கத்திற்குப் பகைட்புலவர்ணனை (முதல்முன்று
247

Page 133
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” பக்கங்கள்) பொருத்தமற்றதாக விளங்குகிறது. ரஞ்சகுாரின் சமகால யுத்தச் சூழ்நிலையின் அவலங்களைச் சித்திரிக்கின்ற காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, கோளறு பதிகம் ஆகிய மூன்று கதைகளுக்காகக் கவனிப்புக்குள்ளாகிறார். இவற்றில் “கோசலை மிகவும் அற்புதமான வடிவமைப்பும் கருவும் கொண்ட சிறுகதை. காட்டுக்கு இராமனையும் இலட்சுமணனையுமனுப்பிவிட்டு ஏங்கும் கோசலைகள் தமிழ்மண்ணில் ஓராயிமுளர். அத்தகைய ஒரு தாயைக் கோசலையில் ரஞ்சகுமார் அறிமுகப்படுத்துகினறார். இருப்பிள்ளைகளும் போராட்டத்தில் இணைந்து கொள்கிறார்கள். எந்தத்தாயும் புறநானூறு கூறுவது போல மனம் விரும்பி யுத்தகளத்திற்குப்பிள்ளைகளை அனுப்புவதில்லை. சீலன் போராட்டத்தில் சேர்ந்து கொண்டான் என்பதை அறிந்ததும், அழுது அரற்றும் அம்மாவின் குரல் அதனை உணர்த்துகின்றது. ‘அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூடப்போய்விட்டதாui-*. அதேவேளை குடும்பஉறவுகளைத் துறந்து போராடப்போன பிள்ளைகளை அம்மா ஓரிடத்தில் வியக்கிறார். “சிறுவயதில் இருளைக்கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல் வெளிகளிலே. பிசாசுகளும் உலவத்தயங்கும் நடுநிசிவேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர்" என்கிறார். போராட்டத்தில் ஒருமகன் கரத்தை இழக்கிறான். மற்றவன் கானமற்போகிறான். கோசலை மூலம் ரஞ்சகுமார் யாது கூறவிரும்புகிறார்? பிள்ளைகளைப் போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு வருந்தும் தாய்களின் அவலச்சோகத்தைக் கூறவிரும்புகிறார். ஆனால், பேராட்டத்தத்தின் விளைவாக நாட்டில் நடந்தேறுகினற கைதுகளைப் போராட்டத்தின் விலையாகக் காட்டவிரும்புகிறாரா? அக்கடிக்கடி இந்தவிட்டிக்கு மாட்டுத்தரகர்கள் வருகின்றனர் கதறக் கதற ஒரு பசுவையோ கன்றையோ இழுத்துப் போகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடிகுண்டுச் சத்தங்கள் கேட்கும். மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழறக் தொண்டையரில் திருதயபடி இழுத்துப் போகும் ‘* குறியீடாகப்புலப்படுத்தும் நிதர்சனப்பார்வை இது. எவ்வாறாயினும் ரஞ்சகுமாரின் சிறுகதைகளில் சகல பண்புகளிலும் சிறுகதைக்குரிய சிறப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தரமான சிறுகதை கோசலை. அது தெரிவிக்கின்ற போராட்ட எதிர்மறைக் கருத்தினைத் தெரிந்துகொள்ளில் , ரஞ்சகுமார் என்ற படைப் பாளியின் படைப்பனுபவத்தினையும் துணிச்சலையும் கோசலையில் தரிசிக்கலாம்
248

Ayġġi figh lagu "Jáabá 38AJak” ‘சமூக இயக்கப் போக்குகளுக்கு முக்கியத்துவத்தை வழங்காமல், தூய கலைவாத்தின் பெயரால் உள்மனக் குடைசல்களுக்கே முதன்மை கொடுக்கும் பலவீனம் ரஞ்சகுமாரின் சிறுகதைகளில் உண்டு. இதனால் குண்டுவீச்சில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு இரத்தஞ் சொட்ட எடுத்தவரபபடும் இளம் பெண்ணிடம் “கைபடாத முலைகள் வெளிப்பட்டுத்தெரிவதையே கண்டு எழுதும் மனப்பக்குவத்தை ரஞ்சகுமார் கொண்டிருந்தார்.” எவ்வாறாயினும் இக்கால கட்டத்தின் கனதியான படைப்பாளி ரஞ்சகுமார் எனக் கொள்வதில் தவறிலலை.
யோகேஸ்வரி சிவப்பரகாசம் ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் தரமான ஒருவராகத் தனது சமீபகாலசசிறுகதைகள் மூலம் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர். பேய்த்தேள், கரைதாண்டாத அலைகள், இரண்டு பெளர்ணமிகள், நேசக்கரங்கள், சோகங்களும் சுமைகளாகி, ஆனால் முடியவில்லை, தொலைந்துவிட்ட, அண்மை முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். உணர்வின் நிழல்கள், ஈன்ற பொழுதில் என்பன யோகேஸ்வரியின் சிறுகதைத் தொகுதிகள். ‘சமுதாயம் என்ற பரந்த தளத்தில் நின்று, மானிடத்தைப்பல கோணங்களில் நோக்கிப் புனையப்பட்ட கதைகள் இவை. படைப்பாளியின் பார்வையின் விரிவை இவை தெளிவாகக்காட்டுகினறன. குழந்தைகளின் உளப்பாங்கு, குடும்பத்தலைவியின் சுதந்திர எல்லை, இளமையின் ஏக்கம், மானிடத்தின் வெறியாட்டம், வறுமையின் நெருடல், போலிகளின் மாய்மாலம், சமுதாயச் சீரழிவு என்பனவற்றையும், இன்றைய வாழ்வின் அவலங்கள் சிலவற்றையும் இவைபோன்ற மற்றும் சில உரிய பிரச்சினைகளையும் இந்தக்கதைகள் எடுத்துச் சித்திரிக்கின்றன. கதைகள் சித்திரிக்கும் கதைக் கருக்கள் பெரும்பாலும் அவருடய நேரடி அனுபவங்களாகவுள்ளன.” பேய்த்தேர், சேகங்களும் சுமைகளாகி ஆகிய இருசிறுகதைகளும் தரமானவை. சோகங்களும் சுமைகளாகி சிறுகதை கலாபூர்வமாகப்பதிவாகியுள்ளது.
ஈழத்துச்சிறுகதை வரலாற்றின் தமிழ்த்தேசிய உணர்வுக்காலத்தில் சோ. ராமேஸ்வரனின் பங்கு அவரெழுதிய இரு சிறுகதைகளான சொந்த மண், மண்ணை நம்பி என்பனவற்றிலுள்ளது. தமிழ் மக்களுக்குச் சுதந்திரமென்பது கிட்டமுடியாத கானல்நீர் என்பதைச் சொந்தமண் எடுத்தக் கூறுகிறது. 'மண்ணைநம்பி’ என்ற சிறுகதை, சமகாலத்துப்பிரயாணப் பிரச்சினை ஒன்றினை ஆவணப்படுத்துகினறது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையிலான பயணத்தின் இடர்பாடுகளை தத்ரூபமாக இச்சிறுகதை விபரிக்கினறது. எவ்வளவு துயரங்களிருந்தும் பிறந்த
249

Page 134
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” மண்ணின் பெருமமையையும் இனிமையும் இழக்கமுடியாதநிலையை இச்சிறுகதை சுட்டுகின்றது. இவற்றை விட ராமேஸ்வரனின் ‘பண்டாரவும் அந்த நெடிந்துயர்ந்த மரமும் சமகாலக் கொழும்பு யுத்தச்சூழலை நன்கு சித்திரிக்கினறது. கொழும்பில் குண்டு வெடிக்கும் போது, தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவமானங்களை இச்சிறுகதையில் ராமேஸ்வரன் நன்கு சித்திரித்துள்ளார். ராமேஸ்வரன் நிறைய எழுதவதால், கலை நயத்தோடு படைப்பதில்லை என்ற குறைபாடுள்ளது. எனினும், அவரின கற்பனை, கருத்து வளத்தோடு வடிவமும் கலைநயமும் சேரில் அற்புதமான படைப்பாளியாக மிளிர்வார்.
சமகாலப்போர்ச் சூழல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சிறுகதைகளை எழுதியவர்களில் திருகோவில் கவரியுவன் குறிப்பிடப்படவேண்டியவர். கிழக்கிலங்கை தந்திருக்கும் கனதியான படைப்பாளி. நனைதலும் காய்தலும், மரணத்தின்தூது, தொடுவானங்கள், உடைத்துப்போட்டதெரு விளக்கு, மதிப்பீடு, காற்றுகணக்கும் தீவு, இனியும் ஒருசாவு, வாழ்த்தல் என்பது, திரைகளுக்கு அப்பால் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகள் அனைத்தும் ‘சரிநிகரில் வெளிவந்துள்ளன. சரிநிகள் சிறுகதையில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவரும் பத்திரிகையாதலால், திருக்கோவில் கவியுவனின் சிறுகதைகளும் அவ்வகையாகவுள்ளன. படிமங்களையும் குறியீடுகளையும் கவியுவன் தக்கவாறு தனது சிறுகதைகளிற் பயன்படுத்தியுள்ளாள் கிழக்கிலங்கை இன்றைய போராட்டச் ஆழலின் விளைவான யுத்தநிலமையில் அனுபவித்துவரும் தாங்கொணாத மக்கட்துயரங்களை மரணத்தின் துாது, உடைத்துப்போட்ட தெருவிளக்கு, செவ்வந்தி, வாழ்தல் என்பது, என்பன சித்திரிக்கின்றன. விபரணப்பாங்கில்லாத நேர்த்தியான சிறுகதைகளாக இவையுள்ளன. நனையாதலும் காய்தலும் திருக்கோயில் கவியுவனின் தரமான சிறுகதையாகவுள்ளது.
ஆ. மு. சி. வேலழகன் சிறுகதைகளான அறிமுகமரணம், ஒருமுகமனசு, நெகிழ்ச்சி ஆகிய மூன்று சிறுகதைகளும் அவரை ஈழத்துச் சிறுகதையாசிரியர் வரிசையில் சேர்க்கக்கூடியவை. கிழக்கிழங்கையின் வாழ்க்கையனுபவங்களையும், பேச்சுமொழியையும் ததுருபமாக வேலழகன் தன் சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். யுத்தச் சூழ்நிலையில் கிழக்கிலங்கை மக்களனுபவிக்கின்ற அவல வாழ்க்கையை அறிமுக மரணம் விபரிக்கின்றது. தழிழர்-முஸ்லீம்களின்
250

ஈழத்துச் சிறுகதை வரலாறு “6јйамъ ஆழியான்"
9-6. நிலைகளின் நெருக்கத்தை ஒருமுகமனசு சித்திரிக்கின்றது. அந்த அழகிய பழைய நாட்களை எண்ணி ஏங்க வைக்கின்றது. தமிழ் - சிங்கள மக்களின் புரிந்துணர்வை நெகிழ்ச்சி படம்பிடித்துக் காட்டுகின்றது. “மனிதரின் இன்பங்களையும் துன்பங்களையும், இன்னும் பல்வேறு அனுபவங்களையும் வேலழகனின் சிறுகதைகள் எடுத்துக் காட்டுகின்றன. அவருடைய கதைமாந்தர்கள் பெரும்பாலும் மனித நேயத்துடன் செயல்புரிகிறார்கள்." வேலழகனின் சிறுகதைகள் “கமகநிலா" என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது. அவருடைய சிறுகதைகளின் கருத்துவளத்தோடு. உருவச் செம்மை, உத்திச் சிறப்பு, உவமை உருவகங்கள் என்பனவும் இணையில் அவை கலைப்படைப்பாக மிளிரும்.
சமகாலச்சூழலின் அவலங்களையும், அவற்றின் விளைவான மானிட நடத்தைகளையும் இலக்கிய வடிவமாக்கிய வகையில், கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஓட்டமாவடி அறபாத் குறிப்பிடத்தக்கவர். சோமாவின் தனிமை, விருட்ஷம், இளவரசி, நிகழ்வுகள், கழுதைகளின் விஜயம், கூத்தாடிகள், முகங்கள், வெண்தாமரை, ஆண்மரம், வெள்ளைக்கொடி, மறுபடியும், வன்மம், தனிமை, திசைகளின் நடுவே முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஓட்டமாவடி அறபாத்தின் சிறுகதைகளில் ‘விருட்ஷம் சிறப்பானது. ஒரு போராளியையும் அவனது சமூக உறவுகளையும் யதார்த்தமாகச் சித்திரிக்கும் சிறுகதை. அவன் மரணமடைந்தபோது அவனது வெறுமையை உணரும் மக்கள், அவனுக்காகக் கசிந்துருகுவதை விருட்ஷத்தில் தத்ரூபமாகச் சித்திரித்துள்ளார். மேலும், அறபாத்தின் சிறுகதைகள் சிலவற்றல் முஸ்லீம்களுக்கு எதிரான பேரினவாதத்தின் வித்தியாசமான முகங்களையும் தரிசிக்கமுடிகின்றது. நினைந்த முதல், ஆண்மரம் என்பன ஒட்டமாவடி அறபாத்தின் சிறுகதைத் தொகுதிகளாம்.
எம்.ஐ.எம் முஸம்மில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது சிறுகதைகளில் உழைப்புத்தேடி மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பயனப்படும் இஸ்லாமிய இளைஞர்களையும், ஹவுஸ்மெயிட்டாகச் செல்லும் பெண்களையும் முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளார். அதனால் குடும்ப உறவுகளில் ஏற்படும் அவலங்களைச்சித்திரிக்கிறார். திசைமாறும் பறவைகள், வெளியேற்றம், அழியாத பதிவுகள் என்பன அவ்வாறான சிறுகதைகள். இவ்வகையில் யூ.எஸ். ஆதம்பாவா எழுதிய மீண்டும் அவன் சவூதிக்குப் போகிறான் என்ற சிறுகதைவிதந்துரைக்கத் தக்கது. சவூதிவேலையின் நல்லதொரு பக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
251

Page 135
Hgjgå faros GEJ eNOj “செங்கை ஆழியாண்” க. சிவனடியானின் சிறுகதைகளில் ஒரு போராளியின் கதை, அறுவைசிகிச்சை ஆகியன குறிப்பிடத்தக்கவை. சமகால யுத்தநிலமையை ஒரு போராளியின் கதை விபரிக்கிறது. சாதிய அழிவுக்குக் கல்வியுயர்வு மூலம் தீர்வுகாணலாமென அறுவைசிகிச்சை சுட்டுகிறது. சில கதைகளில் சிவனடியான் ஒரு நிருபர் மாதிரி, பச்சை யதார்த்தம் பேசுகிறார். கதைகளின் இறுதியில் உபதேசமும் செய்கிறார். கதையை மீறி இடையிடையே ஆசிரியர் குறுக்கீடு புரிகிறார். சிவனடியானின் சிறுகதைகளைத் தொகுத்து “என் கையெல்லாம் இரத்தம்' என்ற நூல்வெளிவந்துள்ளது.
சித்ரா நாகநாதன் எழுதிய சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் மறைக்கபடக்கூடாத ஆவணங்களாகவுள்ளன. கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப்படையின் காலகட்டத்தில் நடந்தேறிய, சோகநாடகங்களை அப்படியே தமது சிறுகதைகளில் சித்ரா நாகநாதன் தத்துள்ளார். இலக்கியம் ஒரு காலகட்டத்தின் கண்ணாடியெனின், சித்ராவின் சிறுகதைகள் அவ்வாறான பணியினைச் செய்கின்றன. கலாபூர்வமெனும் போது இச்சிறுகதைகள் அடிபட்டுப் போனாலும், சமூகவியலாவணமாக இவை மிளிர்கின்றன. ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள். பெற்றமனம், அடம்பன் கொடியும், புத்தாண்டு வெடியும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை, வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலிய சிறுகதைகள் இந்திய அமைதிப்படைக்காலத்துக் கிழக்கிலங்கையையும் ஆயுதக்கலாசாரத்தின் அட்டுழியங்களையும் சித்திரிக்கின்றன. போராளி ஒருவனின் வருகைக்காகக் காத்திருக்கும் அவன் காதலியின் உணர்வுகளை முதற்சிறுகதை சுட்டுகிறது. பெற்றமனம் அற்புதமான கருக்கொண்ட சிறுகதை, ஒரு மகன் விடுதலைப்புலியமைப்பிலும் மற்ற மகன் ஈ.பி.ஆர்.எல்.எ.ப் அமைப்பிலும் உள்ளனர். ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தூக்கிய நிலையையும், இடையில் பெற்ற மனம்படும் அவஸ்தையையும் பெற்றமணம் சித்திரிக்கின்றது. அத்தாய் கூறுகிறாள். *வேண்டாம் இந்தப்பகை நீயும் அவனும் என்வயிற்றில் பிறந்தவர்கள். இரண்டுபேரும் ஒரு நோக்கத்திற்காகப் போனிங்கள். இப்ப நீங்க இரண்டு பேரும் எதிரிகள். உண்மையான எதிரி நின்று புதினம் பார்க்கிறான். உங்கள் பலவீனத்தைப்பயன்படுத்துகிறான்* இதே மாதிரி ஓராயிரம் தாய்மார்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். வெகு துணிச்சலாக சித்ரா பெற்றமனதை எழுதியுள்ளார். ‘கிராமத்து மண்கள் சிவக்கின்றன’ என்ற சிறுகதையில் காதலன் விட்டுச்சென்ற போராட்டத்தைக் காதலி முன்னெடுக்கிறாள்.
252

gigi fighojó algo “செங்கை ஆழியன்’
முற்போக்கு இலக்கிய கால (1950 - 19600)ச் சுலோகக் கதையாகே இச் சிறுகதையுள்ளது அங்கு வர்க்கமும் சாதியமும், இங் ஈ இனவொடுக்கலும் போரும். ‘மனிதம் இன்னும் மரணிக்கவில்லை' யில் ஜேவிபி எனக்காமினியை இலங்கை இராணுவம் தேடுகிறது. தனது மகனைக் காப்பாற்றியுதவுமாறு தமிழ்க்குடும்பம் ஒன்றிடம் சிங்களத் தந்தையாசிக்கிறார். இது கிழக்கிலங்கையில் நிகழ்ந்த கதை1ே. அதில் ஒரு பாத்திரம் கூறுகிறது. “சில்வா, இலங்கை என்ற ஒரு நாடு உலகப்படத்திலிருந்து அழியும் வரை இந்தப்பூசல்களும் :ொடரும். ஏனென்றால் இதுவரை ஆண்ட இனம் விதைத்ததெல்லாம் ஆவேஷ விதைதான வளரும் சமுதாயத்தை ஆண்டவன்தான் ❖k III! ]'1î} Ó வேண்டும்" ஒரு கலைஞனின் சாபமொழியாக இது அமைந்துவிட் து சித்ரா நாகநாதனின் சிறுகதைகள் சிறுமையை, வறுபை யை வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமல்லாமல் அந்நியர்களின் (IPKF), சுரண்டலை நாட்டின் பொருளாதாரச் சீரழிவை, கலப்புமணத்தின் முகி கரியத் துவத்தை, மத சுதந்திரத் தரின் அவசிய த தை, தமிழீழப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை, அரசின் மனித உரிமை மீறல்களை, இயக்க மோதல்களின் அழிவினை ஒற்றுமையின் அவசியத்தை அலசி ஆராயகின்றன.* சித்ரா நாகநாதன் பெண்ணியக் கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார். தமிழீழப் போராட்டத்தின் பலத்தையும் பலவீனத்தையும் துணிச்சலாகச் சுட்டிக்காட்டி எழுதிய முதற்படைப்பாளி சித்ராநாகநாதனே என்பேனி, சமூகத்துக்குரிய செய்தி அவரின் சிறுகதைகளில் குவிமையமாக விருபபதால் கலைப்படைப்பு என்ற நோக்கு வலுவிழந்தவிடுகிறது.
திருமலை சுந்தா நிறையவே சிறுகதைகள் டி பூதியுளள போதிலும் நீங்களும் நாங்களும், ஆமிக்காரனும் அடை பல அட்டையும் குறிப்பிடத்தக்க சிறுகதைகள். யுத்தகால அவலத்தினூடே போராளிகள் இராணுவம் பற்றிய உணர்வுநிலைகளின் வேறொருகோணத்தை இச்சிறுகதைகளில் அவர் சித்திரித்துள்ளார். மனிதநேயம் என்பது என்றும் அழிந்து விடுவதில்லை என்பதை இச்சிறுகதைகள் எடுத்துக்காட்டுகின்றன. கருவளம் சுந்தாவின் சிறுகதைகளில் நன்கு இருப்பதுபோல, கலையழகோடு சீர்செய்து செதுக்கும் சிறுகதையின் முழுமை அரிதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது, சொற்கள் புதுமைபேசவேண்டும். திருமலை சுந்தாவின் சிறுகதைகள் வேள்வி, விழியோரத்துக் கனவுகள் நாளையைத் தேடும் மனிதர்கள் என்ற மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
253

Page 136
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
மன்னாரைச் சேர்ந்த எஸ்.எச்.நிக்மத் ஈழத்துச்சிறுகதைப் போட்டிகள் பலவற்றிைலும் பரிசில்கள் பெற்றதன் மூலம் சிறுகதை உலகிற்கு அறிமுகமானவர். பச்சோந்தி, குண்டு, வேள்விகளும் விளைவுகளும், என் பெற்றோரை மன்னித்துவிடுங்கள், கோடைக்குளிரும் மாரிவெயிலும், பிரிந்ததேசத்தை ஒன்றிணைப்போம், ஆளடையாள அட்டையும் ஐந்து ரூபாயும் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். காலத்தின் முக்கிய பதிவுகளாகத்தன் சிறுகதைகள் விளங்குவதாக ஆசிரியர் கூறுகிறார். குண்டு, பிரிந்த தேசத்தை ஒன்றிணைப்போம், ஆளடையாள அட்டையும் ஐந்து ரூபாவும் ஆகிய சிறுகதைகளை போராட்ட யுத்தகாலச் சூழலைச் சித்திரிக்கின்றன. பிரிந்த தேசத்தை ஒன்றிணைப்போம்' ஆசிரியரின் பெரும் எதிர்பார்ப்பைச் சுட்டிக் காட்டுகின்றது, முடிவு யதார்த்த முரணாக அமைந்துள்ளது. “ஆளடையாள அட்டையும் ஐந்துருபாவும் நீ.மத்தின் சிறுகதைகளுள் மிகவும் தரமானது. குறுக்குவழியால் தாயை ஆஸ்பத்திரியில் பார்க்கப்போன சிறுவனை வழியில் மறித்த இராணுவ வீரன் ஒருவன், தமிழில் பேசி, பஸ்சில்போ' என ஐந்து ரூபா கொடுக்கிறான். ஆஸ்பத்திரி வாசலில் நின்ற காவல்காரன் சிங்களத்தில பேசி, அந்த ஐந்து ரூபாவை வாங்கிக் கொண்டு உள்ளே விடுகிறான். ‘என்ன மச்சான் சிவகுரு சிங்களத்தில் பேசி ஒரு மாதிரியாக அஞ்சுருபா சம்பாதிச்சிட்டியே.* என கதைமுடிகிறது. கதையைப்படித்தும் மனதில் சுமைகூடிவிடுகிறது. எஸ். ஏச். நி.மத்தின் இன்னொரு நல்ல சிறுகதை ‘என்பெற்றோரை மன்னித்துவிடுங்கள் என்பதாகும். ஒரு குடும்பத்தில் பிள்ளைகளின் தொகை கூடும்போது, சூழும் வறுமையும், பிள்ளைகளைத்தக்கவாறு வழிநடத்தமுடியாத வாய்பின்மையும் எவ்வாறு அவலத்தில் உழல விடுகின்றது என்பதை யதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.
திருமலையின் போர்க்கால நிலைகளைச் சித்ரா நாகநாதன் தன் சிறுகதைகளில் சித்திரிப்பது போல, யாழ்ப்பான யுத்தச்சூழலையும், தமிழிழப்போராட்டத்தையும் தன் சிறுகதைகளில் அரியாலை
ந. கிருஷத்ணசிங்கம் யதார்த்தப் பண்போடு, எளிமையான நேர்நடையில் தந்துள்ளார். செவ்வரத்தம்பூ, தியாகங்கள் வளர்கின்றன, புதைகுழிப்பூக்கள், சிதையில் ஒருசத்தியம், முனைமூடிய தூசிகள், இது விளையும், இரட்டைநாக்கு, நிமிர்வு, வேட்கை முதலான சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். தாயக விடுதலைக்கான உந்துணர்வுகளைச் சமகாலப் பிரச்சினைகளுடாக மையப்படுத்தி, ஒவ்வொரு கதையும் உயிரோட்டத்தோடு சிருஷ்டிக்கப்பட்டுள்ன. வெறும் புனைகதைகள் என்று கொள்ளமுடியாது.
254

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிாண்” சமூகத்தின் மெய்மை சார்ந்த அனுபவங்களை இவர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.* நேரடியாகவே தனது சிறுகதைகளில் போராளிகளையும் அவர்களது இலட்சியங்களையும் படம்பிடித்துக் காட்டும் சிறுகதைகளாக கிருஷ்ணசிங்கத்தின் சிறுகதைகளுள்ளன. போராளி ஒருவனுக்கு அஞ்சலி செய்யப்பூமாலை வாங்கிச் சென்ற சிறுவனுக்கு, அஞ்சலிககாகப் பூமாலை கட்டநேர்ந்த அவலத்தை செவ்வரத்தம்பூ சித்திரிக்கின்றது. போராளி ஒருவனைக் காப்பாற்ற மூதாட்டி ஒருத்தி மேற்கொண்ட தியாக நடவடிக்கை தியாகங்கள் வளர்கின்றன என்ற சிறுகதையில் விபரிக்கப்படுகின்றது. கிருஷ்ணசிங்கத்தின் சிறுகதைகள் போராட்டத்தை நியாயப்படுத்தும் சிறுகதைகளாகவுள்ளன.
ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும்,மக்கள் வாழ்வின் அவலங்களையும் பங்காளியாக வாழ்ந்த இளையவன் கே.பாலநடராஜன்) தனது நேரடி அனுபவங்களுடன் பல சிறுகதைகளைத் தந்துள்ளார். “பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இராணுவ கெடுபிடிகளுக்கும் மத்தியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்தத் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரலைப் பதிவு செய்யவேண்டுமென்ற ஆவலின் உந்துதலே எனது எழுதுகோலுக்குப் பலம் சேர்த்தது" என்கிறார். இளையவன். பாசம், வீட்டபோவம், ஒரு இமைப்பொழுது, காணி உறுதி, புதியதொரு திசையிலே, ஒரு நாள் குறிப்பு, ஊனம் உடலில்தான், தொலைந்து போனநாட்கள் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். “இளையவனினி'கதைகள்அனைத்தும்தமிழரின் சமகாலபிரச்சினைகளோடு தொடர்புடையவை. இத்தாயகத்தில் இந்திய அமைதிப்படையின் அதிகாரச் சூழலிலும் அதன் பின்னர் இலங்கை அரசின் இன அழிவு முயற்சிச் சூழலிலும் நிகழ்ந்துள்ள அனர்த்தங்கள், மண்மீட்புவேள்வியில் தம்மை ஆகுதியாக்கும் மாவீரப்பரப்பரையின் மனவளம்,. பொதுவான சமூகப் பொய்மைகள் முதலியபல்வேறு உணர்வுநிலைகளை மையப்படுத்தி யனவாக இக்கதைகள் அமைகின்றன." போராளிகளின் மனத்திண்மையும், அகதிவாழ்வின் அவலங்களையும் இளையவனின் சிறுகதைகள் பேசுகின்றன. சிறுகதையின் இயற்பண்பை மீறிய பிச்சாரத்தொனி இருப்பினும், காலத்தின் தேவையாக இச்சிறுகதைகள அமைகின்றன. பதிவி லிடப்பட்ட வேண்டிய ஆவணங்களாகவுமுள்ளன. இளையவனின் ‘கதை களை வாசித்துமுடித்த போது கதை வாசித்தோம் என்ற உணர்வு எற்பட வில்லை. மாறாக நமக்கு மிகவும் பழக்கமான சூழலின் நிகழ்ச்சிகளையும் மாந்தர்களையும் தரிசித்துவந்த உணர்வே ஏற்பட்டது” இளையவனின் சிறுகதைகளில் மிகத்தரமானது ‘காணிஉறுதி ஆகும். வடமராட்சியைக்
255

Page 137
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாண்” கைப்பறிய இராணுவம் யாழ்ப்பாணத்தையும் பிடிக்கபபோகின்றதென்ற பயத்தில், ரோலர்படகிலேறி ராமேஸ்வரத்துக்குப்புறப்பட்ட கந்தப்பு வாத்தியார், தான்காவிவந்த காணி உறுதிகள் கடல் நீரில நனைந்துவிட்டமைக்காகக் கவலைப்படுகிறார். சமூகயதார்த்தமும் நுண்ணிய அவதானிப்பும் கொண்ட சிறுகதை. உருவம், உள்ளடக்கம், உத்தி, மொழிநடை அனைத்தும் இச்சிறுகதையில் தத்ருபமாக விழுந்துள்ளன.
இந்த மண்ணின் போராட்ட வாழ்வையும், யுத்தஅனர்த்தங்களையும், மக்களின் அவலங்களையும் தம் சிறுகதைகளில் கொண்டுவந்துள்ள படைப்பாளிகள் சிலருள்ளனர். கனகசமைதேவகடாட்சம் தனது சின்னஞ்சிறுகதைகளில, குறிப்பாக பேராளி என்ற கதையில் இந்த உணர்வுநிலைகளை நன்கு கொண்டு வந்துள்ளார். மூதூர் மக்களின் வாழ்க்கைத்துயரங்களை அவருடைய சிறுகதைகள் சித்திரிக்கின்றன. வாகரைவாணன் (எஸ்.அரியரத்தினம்) இவ்வரிசையில் குறிப்படத்த்க ஒருவர். போரின் கொடுமைகளை அவரது சிறுகதைகளான யாழ்ப்பாணத்தில் ஒரு பெத்தலகேம், இது ஒரு இருண்டகாலம் என்பன சித்திரிக்கின்றன. கலைத்துவப்பண்பு குறைந்தனவென்றாலும், காலப் பதிவுகளாக இச்சிறுகதைகளுள்ளன. ஒலுவில்அமுதண்(ஆ அலாவுதீன்) போர்க்காலச்சூழலை வைத்து கலையாத மேகங்கள் என்ற சிறுகதையைப் படைத்துள்ளார். இதுவாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தாது, நம்பிக்கைவறட்சியை ஏற்படுத்துவதாகவிருப்பதால் இச்சமூகச் செய்தி சிறுகதைக்குரியதன்று. வெற்றிவேல் விநாயகமூர்த்தி (வெற்றிமகன்) எழுதிய “பொன்னாச்சி பிற்நதமன் சமகாலச் சூழலின் அவலமொன்றினைச் சித்திரிக்கும் சிறுகதை. கடைசிவரை பிறந்தமண்ணைவிட்டு எழும்பி, அமைதியாக ஓடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த மூதாட்டி, சூட்டுக்குப்பலியாக பிறந்த மண்ணில் சரிகின்ற சோகம் கிழக்கிலங்கைக்கு மட்டும் உரியதன்று, தமிழ்ப்பிரதேசம் முழுமைக்குரியதாகும்.
தி உதயசூரியன் தனது சிறுகதைகளில் போராட்டச்சூழலில் மக்கள் வாழ்க்கையனுபவங்களையும்.புலம்பெயர்ந்த மக்களது உணர்ச்சிகளையும் கருவாகக் கொண்டு அக்கணரக்கு அப்பால, இன்ரவியூ அவலங்கள் உணர்வுகள் ஊசலாடுகின்றன. தப்புத்தாளங்கள், இரவில் கொள்ளி, எயார்போர்ட் திருமணங்கள் முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் இன்றைய போக்குவரத்துப் பிரச்சினை களையும், கொழும்பில் தமிழர்படும் அவதிகளையும் அக்கரைக்கு
256

ஈழத்துச் சிறுகதை வரலாறு “ůkao yai” அப்பால் இன்ரவியூ சித்திரிக்கின்றது. இடம்பெயர்ந்த மீனவன் கடலுக்குப்போய் ஷெல்பட்டு இறக்கும் அவலத்தை அவலங்கள் விபரிக்கின்றது. இந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து சென்று, அப்பிரதேச வாழ்வோடு ஒன்றமுடியாத கலா திரும்பவும் நாடு திரும்புவதை உணர்வுகள் ஊசலாடுகின்றன சிறுகதையும், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதே வாழ்வின் முக்கிய அம்சம் என்பதைப்புரிந்து கனடாவிலிருந்து நாடுதிரும்பும் ராஜனும், படுக்கையில் விழுந்து விட்ட தந்தைக்குக் கொள்ளிக்கடன் தீர்க்க நாடுதிரும்பும் சுந்தரமும் முறையே தப்புத்தாளங்கள், இரவல் கொள்ளி ஆகிய சிறுகதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். நல்ல சமூகச் செய்திகள் எனினும் த. உதயசூரியனின் சிறுகதைகளில் விபரணப்பாங்கே மிகுந்திருக்கிறது. வடிவநேர்த்தியும் மொழிச் செழுமையும், கலாபூர்வச் சித்திரிப்பும் வறியதாகவுள்ளன. . .
நற்பிட்டிமுனை பளில் அண்மைக்காலத்தில் நல்லசில சிறுகதைகளைத் தந்துள்ளார். மறக்கத்தெரியாத மனசு, மறுபடியும் மறுபடியும், அவர்களுக்கு இதயம் ஒன்றுதான், ஜெயவேவா முதலிய கதைகளை எழுதியுள்ளார். தான் கண்டனுபவித்த வாழ்க்கை யனுபவங்களைத் தன் சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். 'ஜெயவேவா, அவர்களுக்கும் இதயம் ஒன்றுதான் குறியீட்டுப் பாங்கிலமைந்த நல்ல சிறுகதைகள். உயன்வத்தை சம்ஜான் சீதனப்பிரச்சினை, வெளிநாட்டு வேலைமோகத்தால் ஏற்படும் குடும்பப்பாதிப்புகள், சமூகத்திலே இலக் கியவாதிகள் படும் அலி லலி கள் என்பனவற்றையே பொதுவான கருக்களாகக் கொண்டு தனது ஆக்கங்களை உருவாக்கியுள்ளார். சரித்திரம் தொடர்கிறது, மலடி, மஜிதா விதவையானாள் என்பன அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
ஓஹவல் அமுதனின் சிறுகதைகள் பல இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. இதுதான் சேவையா? நெருஞ்சிமுள், தெருவோர தேவதை, துடுப்பில்லாத தோணிகள், வைராக்கியம், எலியும் பொறிகளும், இப்படியும் வாழ்கிறார்கள், ஒன்றாகப்பிறந்த பொறாமை, இதயத்தில் ஒரு நிறம் என்பன ஒலுவில் அமுதனின் சிறுகதைகளில் சிலவாம். ஜன்ரஞ்சகப்பாங்கான சிறுகதைகளாக இவை விளங்குகின்றன. சமூகத்தைப் பிரக்ஞையோடு பார்க்கத் தவறிவிட்டன போலப்படுகின்றது.
சந்திரா தனபாலசிங்கம் (சந்திரலட்சுமிநாகநாதன்) ஈழத்துச்சிறுகதை ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்.
257
(17)

Page 138
ஈழத்துச் சிறுகதை வரலாறு - “செங்கை ஆழியர்” அவர் காலங்கள் மாறும்போது, மனங்கொத்தி மனிதர்கள், தண்டனை,
எதற்காக, சிலமனிதர்கள் முதலான சிறுகதைகளைத்தந்துள்ளார். அவருடைய சிறுகதைகளில், சமூகத்தின் கொடுமைகள், இனவுணர்வு,
மண்பற்று, போராட்டத்தின் தன்மைகள். அதனுடே மிளிர்கின்ற
சுதந்திரவேட்கை எல்லாவற்றையும் இனங்காணலாம். தீர்வை வாசகனின்
ஊகத்துக்கு விட்டுவிடுகிற:* ‘ஆரம்பநிலையைத் தாண்டிய அவரது
வளர்ச்சி நிலையை மனங்கொத்தி மனிதர்கள், சிலமனிதர்கள். இயன்றால்
நகுக ஆகிய சிறுகதைகள் வெளிக்காட்டிநிற்கின்றன.'
இவ்வரிசையில் சந்திரா தியாகராஜா என்ற சிறுகதையாசிரியையும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவர். சிலநேரங்களில் சில நியதிகளி, சிவப்புப்பொறிகள், மடமையைக் கொளுத்துவோம். எரியும் தளிர்கள். தரிசுநிலத்து அரும்பு முதலான சிறுகதைகளின் படைப்பாளி. சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞனை சில நேரங்களில் சில நியதிகள் சிறுகதையில் சந்திக்கலாம். எரியும் தளிர்களும் அவ்வாறான ஒரு சிறுகதையே. மடமையைக் கொழுத்துவோம் என்ற சிறுகதையில சந்திராவின பெண்ணியற் கருத்துக்கள் வருகின்றன.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறைக் குக் கசிடைத் தள்ள பெண்எழுத்தாளர் கெக்கிராவ ஸஹானா, நாதன் உள்ளிருக்கையில், கண்ணில் தெரிகின்ற வானம், சந்தேகக்கோடு. தந்தைமார்களும் மகன்மார்களும், ஒரு பொற்கனவின் முடிவில், புதியதோர் சாந்திபிறந்ததடி, செக்குமாடுகள், கோடுகள் தாண்டப்படலாம் முதலான சிறுகதைகளைத் தந்துள்ளார். தனது பிரதேச வாழ்க்கையனுபவங்களை உணர்ந்தவாறு தன் சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். இவருடைய சிறுகதைகள் மிக நுட்பமான அவதானிப்புடன் கூடிய சமூகமெய்ம்மைகளாகவுள்ளன. சமூகத் தின் சிறுமைகண்டு சீறுகின்ற தன்மை இவரது சிறுகதைகளிலுள்ளது. பெண்களின் உணர்வு நிலைகளைத் தன் சிறுகதைகளில் காட்சிப்படுத் தியுள்ளார். புதியதோர் சாந்திபிறந்ததடி, சந்தேகக்கோடு ஆகிய இருசிறு கதைகளும் ஸஹானாவின் தரமான நல்லசிறுகதைகள். 'சாந்திபிறந்ததடி என்ற சிறுகதை, பாரம்பரிய மரபுகளை உடைத்தெறியும் ஒரு கதை. சந்தேகக்கோடு பாரம்பரிய ஆண் அடக்குமுறைக்கு அடங்கிப்போகின்ற ஒருபெண்ணின் கதை. முதலாவது சிறுகதையில் புதுமைப்பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், இரண்டவாது கதையில் ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் ஸஹானா தத்ருபமாகச் சித்திரித் துள்ளார். கதை ஆரம்பமாகுமிடம், முடிக்குமிடம் என்பன இவ்விருகதை களிலும் சிறுகதைக்குரிய கலாபூர்வ வடிவமைதியைத்தந்துள்ளார்.
258

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் அண்ம்ைக் காலப் பங்களிப்பில் பலரையும் தன்பால் ஈர்த்த படைப்பாளி உமா வரதராஜன் (உ.மா.வரதராஜன்) ஆவார். இவர் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா ருடே முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகையிலும் தனது சிறுகதைகளை எழுதியுள்ளார். அதிகம் எழுதாதுவிடினும் எழுதிய சிறுகதைகள் பதின்மூன்றின் தொகுதியாக ‘உள்மன யாத்திரை' என்பது நூலாக வெளிவந்துள்ளது. ‘உள்மன யாத்திரை எனும் தலைப்பில் சிறுகதை எதுவும் இல்லாத போதிலும் குறிப்பாக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் உள்மன யாத்திரை எனப்பெயரிடப்பட்டுள்ளது. உமா வரதராசனின் சிறுகதைகள் கலைத்துவ தீட்சை பெறாத சாதாரண வாசகர்களுக்கு விளங்க வாய்ப்பில்லை? “போலித்தன்மையில்லாத நிஜத்தைத் தரிசிக்க முற்படும் ஒரு தூய கலைஞராகவே உமா வரதாராஜன் தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். அந்தவிதத்திலே அவரது எழுத்தில் உண்மை தெரிகிறது. அது காரணமாக சமூகப்பணி, உள்ளடக்கக் கதைப்பின்னல், கனதிக்குறைவு போன்ற குறைபாடுகளும் பாரதுாரமானவை என்று சொல்லுமளவிற்கில்லை. அவருடைய சிறுகதைகள் எல்லாமே படிப்பதற்கு வித்தியாசமான அனுபவத்தைத தருவன. உமா வரதராஜனின் கதைகள் அத்தனை ஆழமானவை என்று கூறமுடியாவிட்டாலும், அதாவது புத்தம் புதுவிதமான அனுபவமாக இல்லாது விட்டாலும் இவர் கையாளும் சொற்கள் நிச்சயமாகப் புதுப்புனைவானவை எனக் கூறுவவேன்’* உமா வரதராஜனின் சிறுகதைகளில் “அரசனின் வருகை நல்லதொரு கலைப்படைப்பாகும். குறியீடாகச் சமகாலச் சமூக வாழ்வியலின் ஒருமுக்கிய அம்சத்ை அரசனின் வருகை சித்திரிக்கின்றது.
திருமலை தந்த எழுத்தாளர் த. சித்திஅமரசிங்கம் தனது பலபரிமான இலக்கியப்பணிகளோடு, நல்ல சில சிறுகதைகளையும் படைத்துள்ளார். ஒற்றைப் பனை அவருடைய சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ராணி சீதரன் அண்மையில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறார். மீண்டும் நளாயினி அவருடைய படைப்புகளில் தரமான சிறுகதையாகும். நான்கு தசாப்தங்களாகச் சிறுகதைகளை எழுதிவரும் குயராணியோசெப் தன்னைத் தக்கதொரு சிறுகதை எழுத்தாளராக இனங்காட்டிக்கொண்டமை இடப்பெயர்வு, ஏணியும் தோணியும் ஆகிய சிறுகதைகள் மூலமாகும். எனினும், ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற இவரது சிறுகதைத் தொகுதியில், சமூகமனிதரின் மெல்லிய உணர்வுகளைச் சித்திரிக்கும்
259

Page 139
ஈழத்துச் சிறுகதை வரலாறு “Fabi Tată”
நல்ல சிறுகதைகள் உள்ளன. கனகசபை தேவகடாட்சம் இரண்டு சிறுகதைத்தொகுதிகளின் ஆசிரியர். குருதிமன், காதல் ஊனமாவதில்லை என்பன அவரினது குறிப்பிடத்தக்க சிறுகதைகளாக விளங்குகின்றன.
தமிழ்த்தேசியவுனர்வுக்காலச் சிறுகதைப்படைப்பாளிகளில் முல்லைக்கோணேஸின் சிறுகதைகளகை கவனத்திற்கு எடுக்காது ஒதுக்கிவிடமுடியாது. ‘தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கிய கோணேஸ் வெகுவேகமாக வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டாவது காலம் எனும் அவரது தொகுதியிலுள்ள சிறுகதைகள் பெரிதும் மனிதப்பிரச்சினைகளையே சார்ந்திருக்கின்றன. தொலைந்துபோன காலத்தைப்பற்றிய ஏக்கங்களை வெளிப்படுத்தும் அதே வேளையில் விரிந்து கொண்டிருக்கும் காலத்தைப் பற்றிய ஓர் உறுதியான பார்வையை வாசகனுக்குக் கலா நேர்த்தியுடன் காட்டுகிறார்.* 'இடம்பெயர் வாழ்க்கை, இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேச வாழ்வு, மீட்கப்பட்ட நகரின் இடிபாடுகளுள் வாழ்தல், போராட்டத்துடன் இணைந்து கொள்ளுதல் என்பவற்றுடன் சிங்களப் பேரினவாதப் பொறியில் சிக்கும் சிங்கள தேசதிலையும் இக்கதைகளில் மேல்படுகிறது.* முல்லைக்கோணேஸின் "அவர்கள் வருவார்கள் தரமான படைப்பு என்பேன்
இவ்வரிசையில் த. பார்த்திபன் என்ற சிறுகதைப்படைப் பாளியையும் குறிப்பிட்டேயாகவேண்டும். ‘சமுதாயப்பிரக்ஞை கொண்ட ஓர் எழுத்தாளனாகப் பார்த்திபனைக் காணலாம். தன் மனதை ஆழமாகப பாதித்த பல்வேறு சமுதாய விடயங்களை ஆர்ப்பாட்டமின்றித் தனது படைப்புகள் மூலம் வெளிக்கொணருகிறார்.* ந.பார்த்திபனின் தரமான சிறுகதைகளாக மனிதம், ஊனம், அம்மம்மா என்பன விளங்குகின்றன.
தமிழ்த்தேசியவுணர்வுக்காலச் சிறுகதைப்படைப்பாளிகளாக வேறும் பலரை அடையாளம் காணலாம். அவர்களுள் மு. புஸ்பராஜன் (மீன்பொறுக்கி) நந்தினி சேவியர் (வேட்டை), சண்முகம் சிவலிங்கம் (நீக்கம்), கமலாவிசயரத்தினம் (நான்குகோணங்கள்) வசந்தன் (வானம் வெளுக்கும்), மலரன்னை (கேள்விகருறி) தாட்சாயணி (ஒருமரணமும் சிலமனிதர்களும்), உடுவில் அரவிநதன் (இரை, அடைக்கலம்), சி. சிவாணி (என்னவன் இராமனல்ல.), அபிதவன் (விளையாட்டு) ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுள் மு. புஸ்பராஜன், நந்தினிசேவியர், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் மூத்தபடைப்பாளிகள். பின்னவர்கள் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்.
260

Frisis fig1305 Qgag “செங்கை ஆழிாண்”
தமிழ்த்தேசியவுணர்வுக் காலத்தில் சமுதாயத்தின வளர்ச்சிக் கட்டத்தையும், சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்தையும் பூரணமான படைப்புக்களாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் எத்தனை தேறியுள்ளன என்று மதிப்பீடு செய்வது அவசியமானதாகும். அவ்வகையில் தமிழ்த்தேசியவுணர்வுக்காலத்தில் ஈழத்துக்குப் பெருமை தரும் சிறுகதைகளென ஆண்மை 1 (எஸ். பொ), கேள்விகள் உருவாகின்றன (நந்தி), ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும், கஞ்சிப் பொழுது (செங்கைஆழியான்), காண்டீபம் (செம்பியன் செல்வன்) சரணபாலாவின் பூனைக்குட்டி (செ. யோகநாதன்), பந்து (தெளிவத்தை யோசெப்), மனதையேகழுவி.’ (கோகிலா மகேந்திரன்), திருமா? (புலோலியூர் க. சதாசிவம்), யாழ்ப்பாணம் (அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை), பிரம்படி (க. தணிகாசலம்), கோசலை (ரஞ்சகுமார்), நனைதலும் காய்தலும் (திருக்கோவில் கலியுவன்), அரசனின் வருகை (உமா வரதராசன்), விருட்ஷம் (ஒட்டமாவடி அறபாத்), காணி உறுதி (இளையவன்), ஆளடையாள அட்டையும் ஐந்து ருபாவும் (எஸ். ஏச். நி.மத்), இரண்டாவது காலம் (முல்லைக்கோணேஸ்) என்பவற்றைக் குறிப்பிடலாம்.
அடிக்குறிப்புக்கள்
1. சுபமங்களா நேர்காணல்கள். கலைஞர் முதல் கலாப்ரியா வரை, சென்னை
1998. பேராசிரியர் கா. சிவத்தம்பி நேர்காணல். பக்:438
2. மேற்படி நூலில். பக் 439 - 440
3. சபா. ஜெயராசா, கலையும் திறனாய்வும், அம்மா வெளியீடு, இணுவில் -
1998. L. : 46 - 47
4. பிரேம்ஜி, புதுமை இலக்கியம், இலங்கைமுற்போக்கு எழுத்தாளர்சங்கம் -
997. LJB : 4 - 15
3. கா. சிவத்தம்பி, புதுமை இலக்கியம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் - 1996 பக்: 25 - 28
6. சபா. ஜெயராசா, மே, கு. நூலில் பக் - 33 - 54
7. கொ. றொ, கொன்ஸ்ரன்ரைன், பின்நவீனத்துவம் : ஒருபார்வை உயிர்நிழல் -
சென்னை - 1999, பக் 5 - 6
261

Page 140
ஈழத்துச் சிறுகதை வரலாறு --- “செங்கை ஆழியன்”
8. கே. எஸ்.சிவகுமாரன், அண்மைக்காலத் திறனாய்வின் முக்கியத்துவம்,
புதுழைஇலக்கியம் - 1996 பக் 3.63
9. எஸ். பொ. ஆண்மை, மித்ரா வெளியீடு சென்னை - 1994. பின்பக்க
அட்டையில் சுபமங்களா.
10. அ முத்துலிங்கம், வம்சவிருத்தி, மித்ரா வெளியீடு, சென்னை 1996.
uá, X-XI,
11. அ. முத்துலிங்கம், வடக்குவீதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 1998.
பக் - 8 - 9 முன்னுரையில் அசோகமித்திரன்
12. : மேற்படி நூல். பக் 10 - 13 முன்னுரையில் எஸ்.பொ.
13. நந்தி, நந்தியின் கதைகள், குமரன்பதிப்பகம். சென்னை - 1994. பக் - 13
- 15. முன்னுரையில நா. சுப்பிரமணியன்
14. செங்கை ஆழியான், இரவுநேரப்பயணிகள், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்
- 1995 பக் WI- 2 முன்னுரையில் டொமினிக் ஜீவா.
15. கா. சிவத்தம்பி, ஈழத்துத்தமிழிலக்கியத்தில் அண்மைக்காலப் போக்கு,
புதுமை இலக்கியம், கொழும்பு - 1997 யக் 26
16. சுஜாதா 21ம் விளிம்பு, குமுதம் 02.09.1993
18. மு. பொன்னம்பலம், தினக்குரல், ஜூலை 1997
21. செ. யோகநாதன், வீழ்வேனென்று நினைத்தாயோ? தமிழோசைப்பதிப்பகம்,
சென்னை - 1990 பக் 97
22. மேற்படி நூலில் பக் : 2 முன்னுரையில் சு. ப. வீரபாண்டியன்
23. மேற்படி நூலின் முன்னுரையில் சு. ப. வீரபாண்டியன். பக் : 4
24. புலோலியூர் க. சதாசிவம், புதியபரிமாணம், சிறுகதைத் தொகுதி, பண்டாரவளை
- 1998. ti ; 5 முன்னுரையில் பேராசிரியர் சி. தில்லைநாதன்
262.

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியன்”
25. மேற்படி நூலின் பின் அட்டை
26. அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் (சிறுகதைத்தொகுதி) யாழ்ப்பாணம்
-1999. Usis : 109
27. மேற்படி நூலில். பக் 109
28. சுதாராஜ், தெரியாத பக்கங்கள். மல்லிகைப் பந்தல், யாழ்ப்பாணம் - 1997.
பக் XII முன்னுரையில் நா. சுப்பிரமணியம்.
29. கே.ஆர். டேவிட், ஒருபிடிமண், மீரா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1994. பக்:V
30. மேற்படி நூலில் பக் W
31. யோசெப்பாலா, திருப்யம், நான் வெளியீடு - யாழ்ப்பாணம் - 1990.
பக் IV. முன்னுரையில் அன்புமணி.
32. தாமரைச்செல்வி, ஒரு மழைக்கால இரவு, தேசிய கலைஇலக்கியப்பேரவை,
GF6ö7606 – 1998. Luis : VI
33. ந. இரவீந்திரன். சமகால ஈழத்துச்சிறுகதைகள்: ஒரு பார்வை, சுதந்திரத் திற்குப்பின் இலங்கை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு - 1998. பக் - 47
34. ரஞ்சகுமார், மோகவாசல், யதாத்த வெளியீடு, பருத்தித்துறை-1989 பக்: 11
35. மேற்படி நூல் : பக் : 20
36. மேற்படி நூல் : பக் : 40
37. மேற்படி நூல்: பக் 44
38. மேற்படி நூல்: பக் : 49
39. ந. இரவீந்திரன், சமகால ஈழத்துச்சிறுகதைகள் : ஒருபார்வை. இந்து
கலாசாரத்திணைக்களம், கொழும்பு - 1998. பக் : 46
40. யோகேஸ்வரி சிவப்பிரகாசம், உணர்வின் நிழல்கள், மல்லிகைப்பந்தல் வெளியீடு
கொழும்பு 1997, பக் 11 முன்னுரையில் வ. இராசையா.
263

Page 141
gan Jag *áisiúgná gur fiail'''
41. ஆ. மு. சி. வேலழகன், கமகநிலா. இளவழகன்பதிப்பகம், சென்னை - 1997
பக் - 6. முன்னுரையில் வல்லிக்கண்ணன்
42. சித்ரா நாகநாதன், கிராமத்துமண்கள் சிவக்கின்றன. தாகம் வெளியீடு,
திருகோணமலை - 1990 பக் 22
43. மேற்படி நூல் : பக்: 44
44. மேற்படி நூலின் முன்னுரையில் வி. மைககல் கொலின், பக் X
45. எஸ். ஏச். நி.'மத், ஆளடையாள அட்டையும் ஐந்துருபாவும், நம்நாடு
நற்பணிப்பேரவை, மன்னார். 1997, பக் 124.
46. ந. கிருஷ்ணசிங்கம், செவ்வரத்தம்பூ, மாறன் பதிப்பகம். யாழ்ப்பாணம் -
1995. முன்னுரையில் கலாநிதி சு. மோகனதாஸ். பக் W
47. இளையவன், காணி உறுதி. பொன்னி வெளியீடு. சென்னை - 1989.பக்:6
48. இளையவன், வீடு, தமிழ்த்தாய் பதிப்பகம், யாழ்ப்பாணம் - 1994. பக் iV
முன்னுரையில் கலாநிதி நா. சுப்பிரமணியன்
49. உயன்வத்தை ரம்ஜான், ஓர் இதயம் அழுகிறது பிரியநிலா வெளியீடு,
தெவனகல - 1996. முன்னுரையில் நயிமாசிகுதிக். பக் (II)
50. சந்திரா தனபாலசிங்கம், சிலமனிதர்கள், சாயி வெளியீடு, சண்டிலிப்பாய் .
1994. மதிப்புரையில் து. வைத்தியலிங்கம், பக் (II)
51. மேற்படி நூலின் பின்பக்க அறிமுகத்தில அயேசுராசா,
52. ந. இரவீந்திரன், சமகால ஈழத்துச்சிறுகதைகள் ஒருபார்வை, இந்துகலாசாரத்
திணைக்களம் கொழும்பு பக் : 48
53. கே. எஸ். சிவகுமாரன், ஈழத்துச்சிறுகதைத்தொகுதிகள், திறனாய்வு. கொழும்பு
- 1998. L. : 35 - 38
54. தி. ஞானசேகரன், ஞானம் சஞ்சிகை இதழ். 7 டிசம்பர் 200 பக் : 26
53. முல்லைக்கோணேஸ், இரண்டாவது காலம், (சிறுகதைத்தொகுதி), முல்லைத்தீவு
- 2000, முன்னுரையில் கருணாகரன், பக் 4
36. ந. பார்த்திபன், மனத்தூறல் (சிறுகதைத்தொகுதி) மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், கண்டி - 1999 முன்னுரையில் கலாநிதி. துரைமனோகரன்.
264

பின்னிணைப்பு - 1
ஈழத்துத்தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள்
1875
1. கதாசிந்தாமணி, சந்தியாகோ சந்திரவர்ணம் பிள்ளை,
2. ஊர்க்கதைகள். தம்பிமுத்துப்பிள்ளை,
3. ஹைதர்ஷா சரித்திரம், ஐதுருஸ் லெப்பை மரைக்கார்,
. ........... , ஆர்ணால்ட் சதாசிவம்பிள்ளை
1938
1, நற்பவளத்திரட்டு, செ. சந்திரபாகணேசன்,
is 5
குழந்தை ஒரு தெய்வம், காவலூர் இராசதுரை, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை - 1951
1954
ஊதிய விளக்கு. லோகநாதன், கொழும்பு
1956
1. ஈழநாட்டுவரலாற்றுக்கதைகள் : அருள்செல்வநாயகம், இ. மா. கோபாலகிருஷ்ண
கோன், மதுரை - 1962
2. நல்லவன், செ. கணேசலிங்கன், பாரிநிலையம், சென்னை. (பக் 108 விலை.
grO-8-0)
1958
1. ஈழத்துச்சிறுகதைகள், சிற்பி, தமிழருவிப்பதிப்பகம், கந்தரோடை - 1958
2. தாம்பூலராணி, அருள் செல்வநாயகம், கலைமகள்,வெளியீடு, சென்னை
265

Page 142
ஈழத்துச் சிறுகதை வரலாறு “Flak ஆழியான்”
1960
1. ஒரேஇனம், செ. கணேசலிங்கன், பாரிநிலையம், சென்னை - 1960. (பக். 135.
விலை 10-)
2. கயமைமயக்கம், வரதர், வரதர்வெளியீடு, யாழ்ப்பாணம் (விலை ரூபா 2. 25)
96.
1. ஊர்நம்புமா?, நந்தி, நண்பர்கள் வெளியீடு, யாழ்ப்பாணம்
2. சங்கமம், செ. கணேசலிங்கன், பாரிநிலையம், சென்னை 3. தன்னிரும் கண்ணிரும், டொமினிக்ஜீவா, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
4. மேடும்பள்ளமும், நீர்வைபொன்னையன், மக்கள் பிரசுராலயம், மருதானை
5. நாங்கள் மனித இனம், (உருவக்கதைகள்) யூ. எஸ். ஆதம்பாவா, சாகிநாக்
கல்லூரி பழையமானவர்சங்க வெளியீடு, கல்முனை
962
1. ஈழத்துப்பரிகச்சிறுகதைகள். (தொகுப்பு), தமிழ் எழுத்தாளர் மன்றம், கொழும்பு
- 1962
2. கடவுளரும் மனிதரும், பவானி, சாரல்வீதி, கொழும்பு - 1962
3. கதைப்பூங்கா (தொகுப்பு) க. குணராசா - க. நவசோதி, பல்கலை வெளியீடு,
பேராதனை.
4. தோணி, வ. அ. இராசரத்தினம், அரசுவெளியீடு, கொழும்பு
5. நிலவிலே பேசுவோம், என். கே. ரகுநாதன், பாரிநிலையம், சென்னை
6. நிலவும் நினைப்பும், சிற்பி, பாரிநிலையம், சென்னை
7. பசி, மாதகல்செல்வா, பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்
266

ஈழத்துச் சிறுகதை வரலாறு : “செங்கை ஆழிான்”
8. பாதுகை, டொமினிக்ஜிவா, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை -
9. வெள்ளிப்பாதசரம். இலங்கையர்கோண், ஏழாலைமேற்கு சுன்னாகம்.
1963
1. டானியல் கதைகள், கேடானியல், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், யாழ்ப்பாணம் 2 போட்டிக்கதைகள் தொகுப்பு, இலங்கைத்தமிழ்எழுத்தாளர்சங்கம் யாழ்ப்பாணம்
3. விண்ணும்மண்ணும் (தொகுப்பு) செம்பியன் செல்வன், பல்கலை வெளியீடு,
பேராதனை.
196ሷ
1. அக்கா, அ. முத்துலிங்கம், பாரிநிலையம், சென்னை - 1994
2. காலத்தின்குரல்கள், (தொகுப்பு கலா பரமேஸ்வரன், பல்கலை வெளியீடு
பேராதனை.
3. It (உருவகக்கதைகள்) எம்.ஏ.ரஹ்மான, அரசு வெளியிடு, கொழும்பு.
4. முஸ்லீம்கதைமலர் (தொகுப்பு யூ.எல்.தாவூத், ஸ்பினாபதிப்பகம், கொழும்பு
5. யோகநாதன்கதைகள், செ. யோகநாதன், புதுமைப்பிரசுரம், பேராதனை.
1965
1. கன்னிப்பெண் - நகுலன், நகுலன் வெளியீடு சித்தன்கேணி - 1963
2. சாலையின் திருப்பம், டொமினிக்ஜீவா, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்,
3. தாலிசிரித்தது, மலையமான், தேனருவி பிரசுரலாயம், வெள்ளவத்தை.
267

Page 143
த்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
4. தெய்வமகன், நாவேந்தன். தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை - 1965
5. நிறைநிலா, இ. நாகராஜன், தனலட்சுமி புத்தகசாலை, கன்னாகம்.
6. மாலா என்னை மறந்துவிடு, சி. சிவஞானசுந்தரம், ரீ காந்தகமலபவனம்,
7. யாழ்ப்பானக்கதைகள், கே. வி. நடராஜன், யாழ்இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம்.
8. வாழ்வு, நாவேந்தன், தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை,
9. புதுயுகம்பிறக்கிறது. மு. தளையசிங்கம். அரசுவெளியீடு, கொழும்பு (பக். 140.
விலை 2.75)
1966
1. அமைதியின் இறகுகள், செம்பியன் செல்வன், யாழ், இலக்கிய வட்டம்,
யாழ்ப்பாணம் - 1966.
2. ரசிகர் குழு போட்டிக்கதைகள், (தொகுப்பு) எம். ஏ. ரஹ்மான், அரசுவெளியீடு,
கொழும்பு
3. வி. எஸ். பொன்னுத்துரை, அரசு வெளியீடு, கொழும்பு
1967
1. மோதல், திமிலை மகாலிங்கம், தேனமுது இலக்கிய மன்றம், மட்டக்களப்பு
2. வெண்சங்கு, கனகசெந்திநாதன், யாழ்இலக்கியவட்டம், யாழ்ப்பாணம்.
(பக்.138. விலை 2.50)
1968
1. இப்படி எத்தனைநாட்கள், நகுலன் (நா. க. தங்கரத்தினம்) சிவச்செல்வி
வெளியீடு. சித்தன்கேணி - 1968
2. கொட்டும்பனி, செ. கதிர்காமநாதன், விஜலட்சுமி புத்தகசாலை, கொழும்பு.
3 цей, (தொகுப்பு) இமையவன், பல்கலைவெளியீடு, பேராதனை.
4. வெள்ளரிவண்டி, பொ. சண்முகநாதன், தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி
268

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
1969
1. அமரத்துவம், யாழ்வாணன், யாழ்இலக்கியவட்டம் யாழ்ப்பாணம் - 1969.
பக்:I, விலை, 2.50
2. சின்னஞ்சிறுகதைகள், ச.வே. பஞ்சாட்சரம், தமிழருவிப் பதிப்பகம், சுன்னாகம்
- 1969
3. புதுவாழ்வு. தாழையடி சபாரத்தினம், உடுப்பிட்டி
97)
1. உதயம், நீர்வைப்பொன்னையன், நவயுகப்பதிப்பகம், யாழ்ப்பாணம் - 1970
2. காந்தியக்கதைகள், (தொகுப்பு) எஸ். பொன்னுத்துரை, அரசுவெளியீடு,
கொழும்பு - 1970
3. பார்வை, சாந்தன், யாழ் இலக்கிய நண்பர்கழகம், தெல்லிப்பழை
1971
1. கங்குமட்டை (தொகுப்பு) ஈழநாடு வெளியீடு, யாழ்ப்பாணம்.
2. கதைக்கனிகள், (தொகுப்பு) எஸ். எம். கார்கேம், கொழம்பு, (மலையகப்பரிசில்
கதைகள்)
1972
1. கடல், சொக்கன், நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்,
2. மன்வாசனை, சு.வே. அன்னை வெளியீடு, நாவற்குழி, (பக்.153. விலை 3.50)
3. இதயமே அமைதிகொள், செங்கைஆழியான், சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம்
(பக். 93. விலை 180)
1973
1. யுகப்பிரவேசம், புலோலியூர் க. சதாசிவம், பண்டாரவளை
2. காலதரிசனம், தி. ஞானசேகரன், பண்டாரவளை.
269

Page 144
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிபான்” 1974
1. வேணிபுரத்துவெள்ளம், பூங்கோதை, கொழும்பு.
2. கொன்றைப்புக்கள், மண்டூர்அசோகா, மட்டக்களப்பு
3. தொலைவும் இரும்பும் ஏனைய கதைகளும், அ. யேசுராசா குருநகர்,
யாழ்ப்பாணம் (பக் - 56. விலை 3ரூபா)
4. ஒற்றைப்பனை, த. சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச்சோலை,
திருகோணமலை.
1975
1. ஒருபட்டதாரி நெசவுக்குப் போகிறாள். நெல்லை. க. பேரன், பருத்தித்துறை.
2. கடுகு, (குட்டிக்கதைகள்) சாந்தன், சுதுமலை,
3. இவர்களும் மனிதர்கள், குரும்பசிட்டி மு. திருநாவுககரசு, தெல்லிப்பளை,
1976
1. தனிச்சொத்து (குட்டிக்கதைகள்) யோ. பெனடிக்ற் பாலன், கொழும்பு 2. ஒரே ஒரு ஊரிலே, சாந்தன், யாழ்ப்பாணம்,
3. அமைகளின் பங்காளிகள் லெ. முருகபூபதி, கொழும்பு
4. கோடுகளும் கோலங்களும், குப்பிளான் ஐ. சண்முகம், அலைவெளியீடு,
யாழ்ப்பாணம், (பக். 104. விலை 4.30)
1977
. உழைக்கப்பிறந்தவர்கள் (தொகுப்பு) தெளிவத்தையோசெப், துரைவி
வெளியீடு. கொழும்பு.
2. பலாத்காரம், சுதாராஜ், யாழ்ப்பாணம்.
3. அரசிகள் அழுவதில்லை, முல்லைமணி வே. சுப்பிரமணியம், முல்லைத்தீவு
978
1. நான் ஒரு முற்றுப்புள்ளி, நாவண்ணன், புதிய உலகம் வெளியீடு, யாழ்ப்பாணம்
(பக். 98. விலை 4ளுபா)
270

*Eibyli fg030% GIJSDJg "செங்கை ஆழியான்” 2. காலநதி, (தொகுப்பு) காவலூர் எஸ். ஜெகநாதன், யாழ்ப்பாணம் (பக் 48.
விலை 2 ரூபா)
1979
1. நாமிருக்கும் நாடே, தெளிவத்தையோசெப், வைகறை வெளியீடு, யாழ்ப்பாணம்.
1980
1. பகவானின் பாதங்களில், மு. கனகராசன், அருளகம் மானிப்பாய் (பக்.122 )
2. மாற்றம். க. சட்டநாதன். நல்லூர்
3. ஒரு கூடைக்கொழுந்து, என். எஸ். எம். ராமையா, வைகறை வெளியீடு.
யாழ்ப்பாணம்.
4. தோட்டக்காட்டினிலே (தொகுப்பு) மு. நித்தியானந்தன். வைகறைவெளியீடு.
UAT JUF60Mb.
5. யுகப்பிரவேசம், காவலூர் எஸ். ஜெகநாதன், நர்மதா, சென்னை.
1981
1. கன்னிர் விட்டோ வளர்த்தோம். செ. யோகநாதன், சென்னை.
982
1. காலத்தின் யுத்தங்கள், (தொகுப்பு) காவலூர் எஸ். ஜெகநாதன், தாரணி
shëb, LLITypt falib
2, ടൂf ( விலங்கு அறுகிறது. புலோலியூர் க. சதாசிவம், பண்டாரவளை,
3. இவர்கள் (தொகுப்பு) தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி
4. அரசிகள் அழுவதில்லை, முல்லைமணி, முள்ளியவளை
1983
1. கொடுத்தல், சுதாராஜ், சிரித்திரன் பிரசுரம், யாழ்பபாணம் (பக் 150,
விலை 14ளுபா)
271

Page 145
Aggi fialoš - Je - . “செங்கை ஆழிபான்” 2. வாழ்வின் தரிசனங்கள் டொமினிக் ஜீவா, சென்னை
3. தூரத்துப் பூபாளம், நாகூர் எம். கணி. கொழும்பு
4. சிலந்திவயல், முத்து இராசரத்தினம், யாழ்ப்பாணம்.
1984
1. கண்களுக்கு அப்பால், நந்தி, சென்னை புக்ஹவுஸ் லிமிட், சென்னை.
(பக். 106, விலை 7ரூபா)
2. நமக்கென்றொருபூமி, மாத்தளைச்சோமு, மீனாட்சிப் பதிப்பகம், சென்னை 3. முரண்பாடுகளின் அறுவடை, கோகிலா மகேந்திரன. தெல்லிப்பழை
4. கடலில் கலந்த கண்ணீர், sIsrib. 6si ğ5tib66)Luuum, uUTip"ILIMT688RTtib
1985.
1. குறுங்கதை நூறு, செம்பியன் செல்வன். நான் வெளியீடு, யாழ்ப்பானம் (பக் 0ே.
விலை 10ருபா)
2. நியாயமான போராட்டங்கள், கோப்பாய் சிவம், பத்திரிகையாளர் வாசகர்
நலன்புரிச்சங்கம், கிளிநொச்சி (பக் 65, விலை 10ருபா)
1986
1. சசிபாரதிகதைகள், சசிபாரதி சபாரத்தினம், இலக்கியப் பத்திரிகைகள் நண்பர்கள்
கழகம், யாழ்ப்பாணம்.
2. உணராத உண்மைகள், யோசெப்பாலா, நான் வெளியீடு. யாழ்ப்பாணம். (பக்
72. விலை. 10ருபா)
3. அந்நியவிருந்தாளி, க. பாலசுந்தரம், யாழ் இலககிய வட்டவெளியீடு.
33, யாழ்ப்பாணம். (விலை 26 ரூபா)
4. யுகங்கள் கணக்கல்ல, கவிதா.
272

f aJa. “Wami ஆழிான்” 987
1. வலை, டானியல் அன்ரனி, சமர் இலக்கியவட்ட வெளியீடு, யாழ்ப்பாணம்,
(பக்.108. விலை 15ரூபா)
2. இரவின் ராகங்கள், ப. ஆப்டின், மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம். (பக்.20,
விலை 20ரூபா)
3. வாழ்க்கைச்சுவடுகள், நயிமா. ஏ. சித்திக் கல்ஹினை தமிழ்மன்றம், கண்டி
4. கிருஷ்ணன்தூது, சாந்தன், சென்னை
5. ඡIන්, என், சோமகாந்தன், வரதர் வெளியீடு. யாழ்ப்பாணம்,
1988
1. அவளுக்கு நிலவென்றுபேர் - செ. யோகநாதன், நர்மதா பதிப்பகம். சென்னை
(பக் 200. விலை 16ரூபா)
2. நிழல்கள், சந்திரா தியாகராஜா. யதார்த்தா, பருத்தித்துறை. (பக்.163. விலை
25ருபா)
3. மேகமலையின்ராகங்கள், மொழிவரதன். மலையக வெளியீட்டகம், கொழும்பு
(பக். 69. விலை 1950)
4. உள்மன யாத்திரை உமாவரதராஜன், சென்னை
5. பிரார்த்தனை, எம். ஐ. எஸ். முஸம்மில்
1989.
1. மோகவாசல், ரஞ்சகுமார், யதார்த்தா வெளியீடு, கரவெட்டி (பக் 78 விலை40ரூபா) 2. reariణి, எஸ். எச். நி."மத், எருக்கலம்பிட்டி, மன்னர்
3. காணிஉறுதி, இளையவன், பொன்னி வெளியிடு, சென்னை (பக். 93. விலை
12ளுபா)
4. ஒருநாளில் மறைந்த இருமாலைப்பொழுதுகள், சுதாராஜ், மல்லிகைப்பந்தல்
வெளியீடு, யாழ்ப்பாணம். (பக். 140, விலை 30ருபா)
273
8

Page 146
Ryösä fasij ajap “செங்கை ஆழிான்” 5. கோடிச்சேலை, மலரன்பன். சுஜாதா பிரசுரம், மாத்தளை.
6. அவன் ஒருவனல்ல, மாத்தளைச்சோமு, மீனாட்சி புத்தகநிலையம், சென்னை
1990
1. வீழ்வேன் என்று நினைத்தாயோ? செ. யோகநாதன். தமிழ்ழோசைப் பதிப்பகம்,
சென்னை (பக் 439 விலை $3ரூபா)
2. திருப்பம், யோசெப்பாலா, நான் வெளியீடு, யாழ்ப்பாணம். (பக். 68 விலை
25දී 5LIII)
3. கங்காகீதம், சி. வைத்தியலிங்கம், அன்னம்வெளியிடு, சிவகங்கை (பக் 116,
விலை 20ரூபா)
4. மலைகளின் மக்கள், மு. சிவலிங்கம், இளவழகன் பதிப்பகம். சென்னை (பக்
740. விலை: 20ரூபா)
5. தகவம் பரிசுக்கதைகள், (தொகுப்பு) வ. இரரசையா. தமிழ்க்கதைஞர் 6.b.
கொழும்பு (பக். 176. விலை 45ரூபா)
6. பிரம்படி. க. தணிகாசலம். சவுத்ஏசியன் புக்ஹவுஸ், சென்னை,
7. கிராமத்து மண்கள் சிவக்கின்றன - சித்ரா நாகநாதன் தாகவெளியீடு.
திருகோணமலை
99
1. முத்துமீரான் கதைகள். எஸ். முத்துமீரான், மீரTஉம்மா நூல் வெளியீட்டகம்,
நிந்தாவூர் (பக் 82. விலை.)
2. நிர்வாணம், உடுவை தில்லை நடராஜா. கொழும்பு.
1992
1. உலா. க. சட்டநாதன், நல்லூர். யாழ்ப்பாணம், (பக். 134. விலை 60ரூபா)
2. ஊருக்கலல், முருகு, மீராவெளியீடு, யாழ்ப்பாணம். (பக்.70, விலை 40ருபா)
274

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்”
1993 -
1. யாழ்ப்பாண இராத்திரிகள், செங்கைஆழியான், யாழ் இலக்கிய வட்டம்,
யாழ்ப்பாணம். (பக். 200, விலை : 80ரூபா)
2. என் கையொல்லம் இரத்தம், க. சிவனடியான், சங்கரத்தை, வட்டுக்கோட்டை
(பக். 120, விலை 45ரூபா)
3. வெள்ளிப்பாதசரம் (தொகுப்பு) செ. யோகநாதன், யோ. சுந்தரலட்சுமி, காந்தளகம்,
சென்னை. (பக். 488, விலை : 80 ரூபா)
4. வேள்வி, திருமலைசுந்தா, சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம்.
5. குருட்டு வெளிச்சம், திக்குவல்லைகமால், பேகம்பேணாப் பேரணி, திக்குவல்லை,
(பக். 117, விலை: 50ருபா)
6. உண்மைகள், (உருவகக்கதைகள்) வளவைவளவன், தமிழ்த்தாய் பதிப்பகம்,
யாழ்ப்பாணம். (பக் 92, விலை: 45ரூபா)
7. வெட்டுமுகம், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சவுத்ஏசியன் புக்ஸ்.
சென்னை. (பக் 160. விலை 20ரூபா)
8. வாழ்க்கை என்னும் புதிர், ஏ.வி.பி.கோமஸ், கல்ஹின்ன தமிழ்மன்றம், கல்ஹின்ன.
9. பெண்மை, அருண் விஜயராணி,
0. சுமைகள் தொகுப்பு முஸ்லீம் மாதர் ஆராய்ச்சிச் ംuഗ്രഞ്ഞ
1994
1. ஆண்மை, எஸ். பொன்னுத்துரை, மித்ரா வெளியீடு, சென்னை. . (பக் - 400) 2. காலங்கள், சாந்தன் வென்புறாவெளியீடு, வாசகர். சுதுமலை
3. மாறாத மனங்கள், தி. உதயசூரியன், வாசகர் வட்டவெளியீடு, தொல்புரம்
(பக்72 விலை 50ரூபா)
4. ஒருபிடிமண், கே.ஆர்.டேவிட், மீராவெளியீடு, யாழ்ப்பாணம். பக்:106. விலை88:-)
5. சிலமனிதர்கள், சந்திரா தனபாலசிங்கம், சாயி வெளியீடு சண்டிலிப்பாய்,
(பக்.87. விலை 73)
275

Page 147
... Hắ# đgā,ỷ &I&Mg - “செங்கை ஆழிான்” 6. நந்தியின் கதைகள், நந்தி, பாரிநிலையம், சென்னை (பக் 140, விலை
22ளுபா)
7. சுதந்திரக்காற்று, . ராமேஸ்வரன், கொழும்பு.
8. மீன்குஞ்சுகள், ச. முருகானந்தன், மல்லிகைப்பந்தல் வெளியீடு, கொழும்பு
(பக். 124. விலை 20ரூபா)
9. விடு, இளையவன், தமிழ்த்தாய் பதிப்பகம், யாழ்ப்பாணம், (பக்.130, விலை 70)
10. ஒமண்ணின் கனவுகள், து. வைத்தியலிங்கம், யாழ் இலைக்கியவட்ட வெளியீடு,
யாழ்ப்பாணம் (பக். 180. விலை 55ருபா)
11. ஒரு ஜனனத்தின் அஸ்தமனம், நீர்கொழும்பு முத்துலிங்கம், சவுத்ஏசியன்
புக்ஸ், சென்னை. (பக் 160, விலை 20ரூபா)
12. காலச்சாளரம், ராஜரீகாந்தன், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், கொழும்பு
(பக் 85, விலை 60ரூபா)
13. ஒரு கூடைக்கொழுந்து,(தொகுப்பு) செ. யோகநாதன், யோ, சுந்தரலட்சுமி,
காந்தளகம், சென்னை. (பக். 645 விலை 100ரூபா)
14. மலைக்கொழுந்தி, சாரல்நாடன், குமரன் பதிப்பகம், சென்னை.
13. மலையகப்பரிசுக்கதைகள் (தொகுப்பு) விக்கிரமசிங்க, கொழும்பு,
16. வதங்காத மலரொன்று, மாத்தறை ஹஸனா வஹாப், மாத்தறை,
17. நந்தாவதி, நவம், இளம்பிறை பதிப்பகம், சென்னை - பக்.152.
விலை 30 ரூபா)
18. ஒரு நாட்பேர், புலோலியூர் க. சதாசிவம் பண்டாரவளை- பக்: 126,
விலை 90 ரூபா)
1995
苓
1. இரவுநேரப்பயணிகள், செங்கைஆழியான், கமலம்பதிப்பகம், யாழ்ப்பாணம்
(பக். 100, விலை 45ரூபா)
276

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" 2. பஞ்சம், சோ. ராமேஸ்வரன், கொழும்பு
3. செவ்வரத்தம்பூ ந. கிருஸ்ணசிங்கம், மாறன் பதிப்பகம், யாழ்ப்பாணம்
(பக் 104. விலை 100ரூபா)
4. என்னுடையதும் அம்மாவினுடையதும், இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன், தேசியகலைஇலக்கியப்பேரவை, கொழும்பு (பக் 144, விலை 25ருபா)
5. திகடசக்கரம், அ. முத்துலிங்கம், காந்தளகம், சென்னை. (பக்.130 விலை7ரூபா)
6. அவர்களின் தேசம், மாத்தளைச்சோமு, மீனாட்சி பதிப்பகம், சென்னை
7. தீர்த்தக்கரைக்கதைகள்,(தொகுப்ப) அன்னம் வெளியீடு, சென்னை.
8. டானியல் கதைகள், டானியல், விளம்புடிரஸ்ட், சென்னை. (பக் 239.
விலை 45ரூபா)
9. விபசாராம் செய்யாதிருப்பாயாக, பெனடிக்ற்பாலன். விவேகா பிரசுரம், கொழும்பு
10. அன்னைவிடு, செ. யோகநாதன், படைப்பாளிகள் பதிப்பகம், சென்னை.
1996
1. வம்சவிருத்தி, அ. முத்துலிங்கம், மித்ரா வெளியீடு, சென்னை.
2. புதியவார்ப்புகள், பத்மாசோமகாந்தன், பாரிநிலையம், சென்னை (பக் 112,
விலை 22ளுபா)
3. மீறல்கள், மு. பஷீர், மல்லிகைப்பந்தல் வெளியீடு, கொழும்பு (பக் 98,
விலை 30ருபா)
4. விடைபீழைத்தகணக்கு, திக்குவல்லை கமால், மல்லிகைப் பந்தல் வெளியீடு.
கொழும்பு. (பக் 135. விலை 267பா)
5. விடுதலை, திககுவல்லை கமால், திக்குவல்லை
6. ஓர் இதயம் அழுகிறது, உயன்வத்தை ரம்ஜான், ஒருபிரியநிலா வெளியீடு,
உயன்வத்தை (பக: 57, விலை 40kbust)
277

Page 148
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்" 7. மாத்துவேட்டி தெணியான், மல்லிகைப்பந்தல் வெளியீடு, கொழும்பு
பக்: 104, விலை 75ரூபா)
8. வரதர் கதைகள், வரதர், காந்தளகம், சென்னை. (பக். 168, விலை 30ருபா)
9. பசியாவரம், கே. கோவிந்தராஜ், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், கொழும்பு.
(பக் 112, விலை 100ரூபா)
10. அந்நியம், நாகேசு தர்மலிங்கம், மல்லிகைப் பநதல், கொழும்பு - பக் 120.
விலை 20ரூபா)
11. கடலும் கரையும், மு. பொன்னம்பலம் நண்பர்கள் வட்டம், கொழும்பு
12. புதியபயணம், புலோலியூர் அ. இரத்தினவேலோன், மீராவெளியிட்டகம், கொழும்பு.
13. தசமங்கலம், என். கே ரகுநாதன். கொழும்பு.
14. ప్రయాణాfళు தெரிகின்ற வானம், செ. யோகநாதன். படைப்பாளிகள் பதிப்பகம்,
சென்னை.
1997
1. மலையகச்சிறுகதைகள் (தொகுப்பு) தெளிவத்தையோசெப் துரைவி வெளியீடு
- கொழும்பு (பக் 325, விலை 95 ரூபா)
2. வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், கோகிலாமகேந்திரன், கலைஇலக்கியக்களம்,
தெல்லிப்பளை (பக் 136, விலை 150 ரூபா)
3. காணிக்கை, யூ. எஸ், ஆதம்பாவா, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணி
யகம், கல்முனை. (பக். 112 விலை 80ரூபா)
4. ஆளடையாள அட்டையும் ஐந்து ருபாவும், எஸ், ஏச், நிஃமத். நம்நாடு
நற்பணிப்பேரவை, கொழும்பு (பக். 124, விலை 70ரூபா)
5. உணர்வின்நிழல்கள், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மல்லிகைப் பந்தல், கொழும்பு
(பக்: 144, விலை 36ரூபா)
6. தெரியாத பக்கங்கள், சுதாராஜ், மல்லிகைப்பந்தல் வெளியீடு, கொழும்பு,
பக்:160, விலை 40ரூபா)
278

Hjst stylboOh ansvTPl “செங்கை ஆழியான்" 7. மெல்லச் சாகும் வாலிபம், நற்பிட்டிமுனை ப்ளில், கல்முனை (விலை55ரூபா)
8. ஒரு தேவதைக்கனவு. கெக்கிறாவ ஸ்ஹானா, மல்லிகைப்பந்தல் வெளியீடு
கொழும்பு (பக் : 208. விலை : 50ரூபா)
9. புதியபாதை, திக்குவல்லை கமால், பேசும்பேனா வெளியீடு, திக்குவல்லை.
பக்: 88. விலை 60ரூபா)
10. கமகநிலா, ஆ. மு. சி. வேலழகன். இளவழகன் பதிப்பகம், சென்னை
(பக் 96. விலை 718ருபா)
11. புண்ணியபூமி, சே. ராமேஸ்வரன், கொழும்பு (பக் 96, விலை 80ரூபா)
12. உழைக்கப்பிறந்தவர்கள் (தொகுப்பு) தெளிவத்தை யோசெப், துரைவி வெளியீடு
கொழும்பு. (பக். 49ல், விலை 225ரூபா)
13. ஒரு நெக்லசும் ஆண்குழந்தையும், எம். ஐ. எம் முஸம்மில், இஸ்லாமிய நூல்
வெளியீட்டுப் பணியகம், சென்னை - (பக். 118, விலை 100ரூபா)
14. பாட்டி சொன்ன கதைகள் (உருவகம்) லெமுருகபூபதி, மல்லிகைப்பந்தல்,
கொழும்பு (பக் 96, விலை 257ரூபா)
15. மறுமலர்ச்சிச் சிறுகதைகள், (தொகுப்பு) செங்கைஆழியான். கல்விபண்பாட்டு
வளையாட்டுக்கலாசார அமைச்சு, திருகோணமலை, (பக். 103, விலை.)
16. பாதை, நீர்வைப்பொன்னையன், பூLாலசிங்கம்புத்தகசாலை, கொழும்பு (பக்.
212, slab): 405LIH)
1998
1. வடக்குவீதி, அ. முத்துலிங்கம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
2. புதியபரிமானம், புலோலியூர், க. சதாசிவம், பண்டாவளை (பக். 120,
விலை 120 ரூபா)
3. விழியோரத்துக்கனவுகள், திருமலைசுந்தா, வடக்கு கிழக்கு மாகாணக்கல்விக்
கலாச்சார அமைச்சு, திருகோணமலை,
279

Page 149
ஈழத்துச் சிறுகதை வரலாறு- “செங்கை ஆழியாண்” 4. அல்ஷேனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன், மல்லிகைப்பந்தல்
வெளியீடு, கொழும்பு (பக் 152. விலை : 100ருபா)
5. சிறை, (உருவகம்) விட்டத்தல்தீவு மைக்கல், வாழ்வுதய வெளியீடு, மன்னார்.
(பக். 64. விலை 30ரூபா) r
6. சம்பந்தன் சிறுகதைகள், சம்பந்தன், (தொகுப்பாசிரியர்கள், செங்கைஆழியான், செம்பியன் செல்வன்) இலங்கை இலக்கியப்பேரவை வெளியீடு. யாழ்ப்பாணம்
பக்: 145, விலை: 100ருபா)
7. சுதந்திர இலங்கையின் தமிழ்ச்சிறுகதைகள், (தொகுப்பு) இலங்கைக்கலக்கழக
வெளியீடு, கொழும்பு (பக்.380, விலை.)
8. வாழ்தல் என்பது, திருகோவில் கவியுவன், மட்டக்களப்பு.
9. வெளிச்சம், லெ. முருகபூபதி, கொழும்பு
10. அசோகவனம். செ.யோகநாதன், கண்ணகி பதிப்பகம், சென்னை.
i! இருமை, கே.எஸ். சிவகுமாரன், தேசியகலைஇலக்கியப்பேரவை வெளியீடு,
சென்னை.
l
2.
நினைந்தமுதல். ஒட்டமாவடி அறயாத், ஓட்டமாவடி
ஒருமழைக்காலஇரவு, தாமரைச்செல்வி, தேசியகலைஇலக்கியப்பேரவை, சென்னை (பக்: 136, விலை 40ரூபா)
3.
14. ஒரு காவியம் நிறைவுபெறுகிறது, வ. அ. இராசரத்தினம், மித்ரவெளியீடு.
சென்னை. (பக் : 248. விலை.)
15. சிறுகைநீட்டி, எம். ஏ. ரஹ்மான், மித்ரவெளியீடு, சென்னை. (பக்.128. விலை
40ரூபா)
1999
1. உணர்வுகள், உடுவில் அரவிந்தன், உடுவில்
2. நாளையைத்தேடும் மனிதர்கள், திருமலைசுந்தா, ೨ubIDT பதிப்பகம்,
திருக்கோணமலை, (பக் 98, விலை 100ரூபா)
280

#pigi ng sang ayag െ ஆழியாண்”
3.
4.
O
..
12.
3.
4.
5.
16.
யாழ்ப்பாணம், அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, நீராவியடி, யாழ்ப்பாணம். (பக்.
110, signs 505ur)
கலையாதமேகங்கள், ஒலுவில் அமுதன், முஸ்லீம்லீக் வாலிபமுன்னணி, அம்பாறை (பக். 105, விலை 70ருபா)
ஈன்றபொழுதில், யோகேஸ்வரிசிவப்பிரகாசம், பாரதிபதிப்பகம், யாழ்ப்பாணம்.
(பக்: 84, விலை 100ரூபா)
கசின் சிறுகதைகள், கசின், யாழ்இலக்கியவட்ட வெளியீடு:யாழ்ப்பாணம். (பக்.
150, விலை 125,List)
சிவாவின்சிறுகதைகள், வண்ணை சே, சிவராஜா, யாழ்இலக்கிய வட்டவெளியீடு,
யாழ்ப்பாணம். (பக். 121, விலை 125ரூபா)
மெல்லத்தமிழ்இனி. புலோலியூர் செ. கந்தசாமி, மீராவெளியிட்டகம், கொழும்பு
(பக் 96, விலை 125ருபா)
பன்னிர்வாசம்பரவுகின்றது, மருதூர்மஜித், மருதமுனை.
அழியும்கோலங்கள், புலோலியூர். க. தம்பையா, பருத்தித்துறை.
மணற்கோயில், சு.வே. மித்ராவெளியீடு, சென்னை (பக்.112, விலை 100ருபா)
நீதிபதியின் மகன், அழகுசுப்பிரமணியம், தமிழில் ராஜரீகாந்தன், கொழும்பு
(பக: 129. விலை 100ரூபா)
டொமினிக்ஜிவா சிறுகதைகள், டொமினிக் ஜீவா, மல்லிகைப்பந்தல், கொழும்பு
மனத்துறல், ந. பார்த்திபன், மக்கள் கலை இலக்கியஒன்றியம், கண்டி.
(விலை 100ருபா)
ஒரு வித்தியாசமான விளம்பரம், ரூபராணியோசெப், கண்டி.
நினைந்தமுதல், ஓட்டமாவடி அரபாத், ஓட்டமாவடி
28

Page 150
gig as Tg. “yúan gwaii”
2000
1. குறிஞ்சிப்புக்கள், (தொகுப்ப) அந்தனிஜிவா, மலையக வெளியீடு, கண்டி (பக:
108. விலை 100ரூபா)
2. நிஜத்தின் நிழல், சிதம்பரபத்தினி, யாழ் இலக்கிய வட்டம் (68), யாழ்ப்பாணம்.
(பக்.153, விலை : 200ருபா) −
3. மண்ணின் மலர்கள், தொகுப்பு: சி. சிவாணி, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகச்
சிறுகதைகள், மல்லிகைப் பந்தல், கொழும்பு (பக். 100, விலை 60ருபா)
4. கரைதேடும் அலைகள், ஆரபிசிவஞானராஜா. தமிழ்மன்றம் யாஸ்கந்த வரோதயாக்
கல்லூரி, சுன்னாகம். (பக். 72) விலை 100ரூபா.
5. மாங்கல்யம் தந்துநீயே. ராணி சீறிதரன், மத்திய வீதி திருகோணமலை,
{LÈ: 77) 6f60p6o 90L JT)
6. வேட்கை, நீர்வைப்பொன்னையன். பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு
(பக். 184. விலை 137. 50)
7. தினைக்கதைகள், வ. அ. இராசரெத்தினம், குணசேனா அன்கோ, கொழும்பு.
8. நாட்கள், கணங்கள், நமது வாழ்க்கைகள், த.கலாமணி, குணசேனா அன்கோ,
கொழும்பு
9. அங்கையன் சிறுகதைகள், அங்கையன் பதிப்பகம், கொழும்பு விலை 140ரூபா
10. நெருப்பு, தேவகாந்தன், பாரிநிலையம், சென்னை விலை 82.50
11. விடுதலை, திக்குவலை கமால், பேசும்பேனா வெளியீடு, கொழும்பு-13 12. இன்னுமொருசுவாசம், ஏ. சி. ராஹில மணிமேகலை பிரசுரம், சென்னை, 13. பிறந்தமன், புர்கான்பீ இட்ப்திகார், தமிழ்மன்றம், கலஹின்ன
14. நெஞ்சில் ஒரு நிறைவு, பாரதிபுரம் என். சித்திரவேல், ஈழத்து இலக்கிச்சோலை
வெளியீடு. ஒளவையார் வீதி, திருகோணமலை. (பக். 102, விலை 80.00)
15. வேலி, கே. வி. நடராஜன், மித்ரா வெளியீடு, சென்னை. (பக் 312, விலை100ருபா)
282

*த்துச் சிறுகதை வரலாறு “Jáñans for
16.
7.
18,
அந்த ஆவணி ஆறு. ச. அருவானந்தம். அருள் வெளியீடு, திருகோணமலை
இரண்டாவது காலம் முல்லைக்கோணேஸ், பதுக்குடியிருப்பு 86,
விலை 100ரூபா
ஈழகேசரிச்சிறுகதைகள், தொகுப்பாசிரியர், செங்கைஆழியான், நாற்பத்திரண்டு படைப்பாளிகளின் சிறுகதைகள், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைத் திருகோணமலை. (பக: 235, விலை.)
பாவனைபேசலன்றி. ஆசி கந்தராஜா, மித்ரா வெளியீடு, சென்னை (பக். 92.
ஒன்றே தெய்வம். எஸ். பி. கிருஷ்ணன். கண்ணன் வெளியீடு. திருச்சி.
பொழுதுபோக்கு. எஸ்.பி. கிருஷ்ணன் கண்ணன் வெளியீடு, திருச்சி.
மனிதர்கள். சசிபாரதி சபாரத்தினம், மித்ரா வெளியீடு. சென்னை. (15:f 2,
விலை ; )
200
எழுசிறுகதைகள். பதின்மூன்று படைப்பாளிகளின் சிறுகதைகள். எழு வெளியீட்டகம். முல்லைத்தீவு (பக். விலை 100ருபr)
கனநேரநினை வலைகள், யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பிரணவன் வெளி
யிட்டகம், கோப்பாய்,
குருதிபன், கனகசடை தேவகடாட்சம். ஆசிரியசதுக்கம். திருமலை, (பக். 112
a)}s Of) built
இந்துசமுத்திரத்தில் ஓர் இரவுப்பயணம், எஸ். பி. கிருஷ்ணன். கண்ணன் வெளியீடு. திருச்சி . 2{விலை 35ருபார்
நெஞ்சின் நெருப்பு. எஸ்.எம்.ஹனிபா. இஸ்லாமிக் புக்ஹவுஸ், கொழும்பு-9
மனங்களிலே நிறங்கள், ஒலுவில்அமுதன், ரக்ஷானா வெளியிட்டகம், அக்கரைப்பற்று - 05 (விலை 100ரூபா)
ஆண்மரம், ஓட்டமாவடி அரபாத், சுஹாவெளியீட்டாகம், வாழைச்சேனை (விலை 110ரூபா)
புதுமைலோலன்சிறுகதைகள், புதுமைலோலன், கமலம்பதிப்பகம், யாழ்ப்பாணம்
(பக். 98. விலை 100ரூபா)
283

Page 151
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியாள்"
9.
1.
12.
13.
அம்ரிதாவின் கதைகள், உக்குவளை அக்ரம், ப்ரவாகம் வெளியீடு, சுதந்திர கலை இலக்கியப்பேரவை, உக்குவளை (பக்.88, விலை 120ரூபா)
இங்கிருந்து. (தாட்சாயினி, இயல்வாணன், கோகுலராகவன், சிவாணி, சத்தியபாலன், இராகவன், குமுதினி, சாரங்கா, பிரபாகரன், ரவீந்திரன், கதிர்காமநாதன், உடுவில் அரவிந்தன் ஆகியோரின் சிறுகதைகள்) நண்பர்கள் வெளியிடு, நல்லூர் (பக் , 92 விலை 100ரூபா)
எழுதப்பட்ட அத்தியாயங்கள், சாந்தன், மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு (விலை 140ரூபா)
ஈழத்துமுன்னோடிச்சிறுகதைகள், தொகுப்பாசிரியர் செங்கைஆழியான், பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு (பக: 198. விலை 250ரூபா)
சுதந்திரன் சிறுகதைகள், தொகுப்பாசிரியர் செங்கைஆழியான். யாழ், இலக்கியவட்ட வெளியீடு, யாழ்ப்பாணம். (பக்.500, விலை 500ரூபா)
(2001 ஒக்கேடாபர் வரையிலான மொத்த சிறுகதைத்தொகுதிகள் =274)
284

பின்னிணைப்பு II
இந்நூலிலிடம்பெறும் எழுத்தாளர்கள்
(அகரவரிசையில் தலைப்பெழுத்து மட்டும்;
ق
1. அங்கையன் (கைலாசநாதன்) (அமரர்) - 95,147, 165, 175 2. அருண் விஜயராணி (அவுஸ்திரேலியா) , 209 3. அகளங்கன் (வவுனியா - 212
4. அச்சுதன். ச. மா - 212
5. அரியரத்தினம் ந - 212
5. அனந்தராஜ் ந. (கல்விப்பணிமனை, மகாணக்கல்வித்திணைக்களம்,
17.
18.
19.
திருகோணமலை) - 212
. அருள் சுப்பிரமணியம் (மின்சாரநிலையம், திருகோணமலை) -194 . அஸ"மத். அல் (71, சென்மேரிவிதி, மகாபகே, றாகம) -194 . அன்ரனி இராசையா (கொழும்பு) 194
அனுவைநாகராஜன் (443C, காலிவீதி, பம்பலப்பிட்டி கொழும்பு)- 187 அம்பிகைபாகன். இ. (அவுஸ்திரேலியா) - 75 அழகு. சுப்பிரமணியம் (அமரர்) - 78 அகஸ்தியர் (அமரராகிவிட்டார்) - 8990919698,100,124.125.163 அப்துல் ஸமது அ. ஸ - (அமரர்) - 9097 அருண்மொழி, கொழும்பு - 161
அன்புமணி (இரா. நாகலிங்கம், 18, நல்லையாவிதி, மட்டக்களப்பு) 99.100,
128, 29.130, 162
அருள் செல்வநாயகம் (அமரர்) 100
அருந்தவச் செல்வன் - 247
அராலியூர் ந. சுந்தரம்பிளளை (கடையிற்சுவாமி கோவில் வீதி, நீராவியடி,
LUTup IJsT60OILö) - 226,237,238.239,261
அரியநாயகம் க. ச. - 90, 140
21.
22.
23.
24.
25.
அப்பச்சி மகாலிங்கம் . 187, 188 அநந்ததேவன் (தேவாதிதேவன் : கனடா) - 187 அந்தனிஜீவா (த.பெ. இல . 32, கண்டி) " 194 அபிநவன் (யாழ். பல்கலைக்கழகம்) - 247, 260 அளவெட்டி த. சிவலிங்கம் (அமரர்) - 39, 75
285
(19)

Page 152
нJiži jian alla II “செங்கை ஆழியான்”
گے
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
@
37.
38.
39.
伞ü。
4 .
42.
43.
-14.
45,
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54
55.
5ó,
57.
ஆனால்ட் சதாசிவம்பிள்ளை (அமரர்) - 28 ஆனந்தன். கே.எஸ். (சிவகாமியம்மன் கோவிலடி, இணுவில்) - 9495.187.189 ஆனந்தன் (பண்டிதர். க. சச்சிதானந்தன், மாம்பரபத்தை ஒழுங்கை தும்பளை
மேற்கு. பருத்தித்துறை) 30.36,39,56,57,79 ஆனந்தி - 213 ஆதம்பாவா யூ. எல் (546B சாய்ந்தமருது, கி. மா) - 247 ஆதிலட்சுமி இராசதுரை - 212 ஆனந்தராகவன் (யாழ்.பல்கலைக்கழகம்) - 212 ஆப்டின், u (131/9, தெமட்டகொடை வீதி, கொழும்பு - 9)- 198,206.207 ஆனந்தமயில் (பருத்தித்துறை) - 194 ஆசீர்வாதம் . மு. வி. (அமரர்) - 161 ஆரையம்பதி ஆ தங்கராசா (வேளாளர் வீதி, ஆரையம்பதி) - 165.185
இளங்கிரன் - (அமரர்) - 17,8798,99,100 இலங்கையர்கோன் (அமரர்) - 30,31.36,39414244,46,31.79,99 இராஜ அரியரத்தினம் - (அமரர்) - 32,3666.67.79.161 இராஜநாயகன். சு (அமரர்) - 36,38,39.42.99,100,127,128,148
இராசரெத்தினம். வ. அ (அமரர்) திரிகூடம், மூதூர்) - 39.909396,97,
98.100,04. O7, 48 இராசையா. ஏ. இ. (அமராகிவிட்டார்) 75 இளையவன் (யாழ்ப்பாணம்) - 99.247.255.256.261 இணுவைமாறன் (இணுவில் அல்லது லண்டன்). 212 இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் (கிளிநொச்சி) - 98.208.226.241 இராசரெத்தினம் . - 194 இரா. சிவலிங்கம் - 194 இந்திரலிங்கம். த. (கொழும்புத்துறை) - 194 இராஜம்புஸ்பவனம். எஸ் - 194 363LDU66 - 186 இரா. சிவச்சந்திரன் (யாழ். பல்கலைக்கழகம்) - 186 இரா. பாலச்சந்திரன் - 187 இராமசாமி. கோ (கொழும்பு) . 161 இராமையா , என். எஸ்.எம் (அமரர்) 165,179,180,215 இரவீந்திரன், ஆ (கனகரத்தினம் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்) - 247
இராஜேஸ்கண்ணா. இ. (யாழ். பல்கலைக்கழகம்) - 247 இராகவன் (யாழ். பல்கலைக்கழகம்) - 247
286

ஈழத்துச் சிறுகதை வரலாறு “Gigabi afurai'
F呼
58.
59.
O.
.
62.
63.
64.
65.
66.
6.
58.
59.
TO.
71.
த்
72.
73.
T.
75。
T6.
77.
T8.
ஈழத்துறைவன் (வை. ஏரம்பமூர்த்தி) (அமரர்) - 8.16.41
ஈழத்துச்சோமு (சோமகாந்தன்) (H12, நாரகன்பிட்டி பிளாற்ஸ். நாரகன்பிட்டி)
- 19,90,994,9596.97.98,100
ஈழத்து இரத்தினம் - 194
உதயணன் (இளம்பூரணன்) (அமரர்) - 1994959799,100, 139.140
உதயகுமார் - 94 உதயசூரியன், தி - 247, 256, 257 உமா வரதாராஜன் (மெயின் வீதி, கல்முனை) - 247, 259, 26) உயன்வத்தை ரம்யான் (193. உயன்வத்தை, தெவனகல) - 247.257 உடுவில் அரவிந்தன், - 247, 260 ஐடடுவை. எஸ். தில்லைநடராஜா, (பிரதிச்செயலாளர். உயர்கல்வியமைச்சு,
பத்திரமுல்ல) - 198, 208
உபைத்துல்லா ஏ. ஏல், ஏ, (மூதூர்} - 212
ஐதுநூஸ்லெப்பை மரைக்கார் (அமரர்) - 29 ஐயர். வ. வே. சு. (அமரர்) - 27, 28, 29
, ஒலுவில் அமுதன் (ஒலுவில்) - 247, 256, 257
கந்தசாமி. அ. ந. (அமரர்) - 8,31,41,43,60,61,62,79,87,90,9196,97
கனகசெந்திநாதன். இரசிகமணி (அமரர்) 8.16,19.31,41.42.62.63.64. 79,85,90,92.98.99,157,163, கணேசலிங்கன். செ. (தமிழ்நாடு) - 22.90.96,100,117,118,119, 148.162 கனெஸ். கே. (கொழும்பு) 3236,41,74,75,89 கசின் (க. சிவகுருநாதன், H6, பம்பலப்பிட்டி அரசதொடர்மாடி, கொழும் - 5)
-32,39,68,69,70,74 கனகசபைதேவகடாட்சம் - 247.239 கலைவாதிகலில் 213
287

Page 153
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
79. கனமகேஸ்வரன் - 212 80. கலாமணி த. (அவுஸ்திரேலியா) - 194 81. கந்தசாமி. இ. செ. - 194.212 82. கலாபரமேஸ்வரன் (அமரர்) - 186 83. கதிர்காமநாதன். சி. (மருதனாமடம், இணுவில்) 212 84. கச்சாயில் இரத்தினம் 187, 190 85. கரிகாலன் - 94,95 86. கனகபாலசுப்பிரமணியம் 162 87. கனகராசன். மு (அமரர்) 99.165,179 88. கவிதா - 99 89. கதிர்காமநாதன். செ. (அமரர்) 99.147.165,170 90. கந் தர்மலிங்கம் 213,215 91. கனகரட்ண.ஏ.ஜெ (23.மாரியம்மன்வீதி, திருநெல்வேலி.யாழ்ப்பாணம்) 85.97 92. கதிராயிதேவி. பொ 43 93. கமலாவிசயரத்தினம் (நீராவியடி, யாழ்ப்பாணம்) 260
doT
94. காவலூர். எஸ். ஜெகநாதன் (அமரர்) 198, 199.200
95. காவலூர், இராசதுரை (98.கோவில்வீதி, நாவல வீதி, ராஜகிரியா) - 87,909198,
100.39.45
96. கானமயில்நாதன் (பிரதம ஆசிரியர், உதயன்.கஸ்தூரியார்விதி. யாழ்}-99
கி
97. கிருஸ்ணசிங்கம் ந. அரியாலை, யாழ்ப்பாணம்} - 247.254.255 98. கிருஷ்ணன். எஸ். பி (தமிழ்நாடு) . 212,240
d
99. கீழ்க்கரவை பொன்னையன் - 213
ශ්‍රී
100. குமாரசாமி. சி. (எஸ்.கே) (அமரர்) - 75,76 101 குமார்தனபால் - 137 102. குணரத்தினம் . செ. (அமிர்தகழி, மட்டக்களப்பு) - 23
103. குந்தவை. (இராசடாச்சரதேவி, தொண்டைமானாறு, வல்வெட்டி) - 147.168.173 104. குப்பிளான் ஐ. சண்முகம் - 198, 206 105. குமுதினி சதாசிவமூர்த்தி (யாழ். பல்கலைக்கழகம்) - 247
288

Apis fans au ** Gallon, uffalri."
106. குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம், கனடா) -39.97.140.143
107. குரும்பசிட்டி, மு. திருநாவுக்கரசு (அமரராகிவிட்டார்) - 23. 1s
கெ
ஐ. கெக்கிராவை ஸஹானா (132, டேவிட்மாவத்தை, கெக்கிராவை) "
247,258
09. கே காலைகைலைநாதன் - 212
கேர
10. கோபதி (71பேக்கரிலேன், ஆஸ்பத்திரிவீதியாழ்ப்பாணம்) 96.194
11. கோப்பாய்சிவம் (ஆவரங்கால் சிவன்கோவலடி, ஆவரங்கால்) - 213
112 கோகிலாமகேந்திரன் (காங்கேசன்துறைவிதி, இணுவில்) 198201202.216,222.
235,236,261
13. கோவிந்தராஜ் கோ. (22,கல்யாணிலேன், வத்தளை) 94.97.40, 44.
14. கோமஸ். ஏ.வி.பி (J36, எம்.சி.வீதி, மாத்தளை)198.207
15. கைலாசபதி, க. (பேராசிரியர்)(அமரர்) - 8587,90.93 97,147.57
fs
16. சண்முகநாதன். பொ (கந்தரோடை, சுன்னாகம்) 20.99, 187,188 117. சந்தியாகோ சந்திரவர்ணம் பிள்ளை (அமரர்) - 29 18. சம்பந்தன் (அமரர்) 30,31,42,4647,4851,79899599 119. சந்திராதனபாலசிங்கம் (அளவெட்டி) 247,257,258
20. சந்திராதியாகராஜா 247.28
121. சத்தியபாலன் 247
122. சதாதனம் 212
13. சடகோபன். இரா 212
124. Lmésogs. GP. 212
25. சட்டநாதன். மு. (சட்டநாதர் வீதி, நல்லூர்) 198:21; 126 சந்திரசேகரன்.ஜோர்ஜ் (Q&TԱքլbվ), 194
27. சபா, ஜெயராசா (பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணம்) 18f 128. சண்முகநாதன். எஸ் 187, 189
ஜ. சதாசிவம். ஆ (பேராசிரியர்) (அமரசி) 878 30. சண்முகதாஸ். அ. (யாழ். பல்கலைக்கழகம்) 147
289

Page 154
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்"
3.
32.
133.
134.
135.
136.
37.
138.
139.
140,
4.
42.
33,
144。
5.
36.
1...
1-48.
49.
5).
5.
52.
53,
54.
155.
156.
5.
58.
59.
6C.
6.
சங்கர். இ. (பாரதிபதிப்பகம். கே.கே.எஸ்.வீதி. யாழ்) 161 சரவணையூர் மணிசேகரன் (65.ஹொல்புறூக்பசார், அக்கரைப்பத்தனை) 162 சரோஜினி கைலாசபிள்ளை (கொழும்பு) 162 சத்தியசீலன். பா (அமரர்) 99
சண்முகநாதன். பெரி. 99.189 சசிபாரதிசபாரத்தினம் (திருச்சி. தமிழ்நாடு) 145 சண்முகம் சிவலிங்கம் 260
சாரங்கா. ச. (ஆசிரியர்பயிற்சிக்கலாசாலை கோப்பாய்) 247 சாரல்நாடான் (30, றொக்கிற்ற ஹவுசிங்ஸ்கீம், கொட்டகலை) 197 சாந்தன் (அண்ணாமலைவீதி, சுதுமலை, மானிப்பாய்) 99.198.199.216 சாரநாதன். 186
சிவபாதசுந்தரம், சோ (அமரர்) 16.30.35.36.38.51.54.55,99,160 சிவநாயகம்.எஸ்.டி (அமரர்) 16,17.96.97
சிவத்தம்பி. கா. (பேராசிரியர். கா. சிவத்தம்பி. 37வதுலேன்கொழும்பு) 85,8789.90,9297,157 சிதம்பரபத்தினி (பத்தினியம்மாதிலகநாயகம். ஆனைக்கோட்டை) 96.147.165.
73.74-75 சித்தி அமரசிங்கம். த. (21. தோமையர்வீதி, லிங்கநகர், திருமலை} 247.253 சிவாணி.சி (69, அம்மன்வீதி. கந்தர்மடம், jiTiii r IIT 600rab) 7.250 சித்தர் அனவரதன். யாழ்.பல்கலைக்கழகம்) 247 சிவசிங்கைத்திவாகரன் 213.214
சிவமலர் செல்லத்துரை 213
சிவனடியான். க. (சித்தன்கேணி} 247.251 சித்ராநாகநாதன் (திருகோணமலை) 247.252.253.254 சிவயோகமலர். ஜெயக்குமார் (கொழும்பு) 212
சிவலிங்கம். மு. 197
சிங்காரவேலன்.வி (அமரர்) 194 சில்வரம்புலி, (சி, வல்லிபுரம்) (அமரர்) 76 சிற்பி. (சிவ. சரவணபவன். கந்தரோடை, கன்னாகம்) 929495979899,100,
131,132.133,148,163
சிவகுருநாதன். ஆர் (கொழும்பு) 161 - சிவகுமாரன். கே.எஸ் (921.முருகன் பிளேஸ்,கொழும்பு - 6) 99.165 சில்லையூர் செல்வராசன். (அமரர்) 89909694 சிரித்திரன் சுந்தரர்(அமரர்) 119,162
290

Foggi figlio Guge "தேங்கை ஆழியார்”
162.
63.
64.
f
165.
166,
6,
68. 169.
170.
11.
172.
173.
174.
175.
176.
77.
செ
178.
179. 180, செந்தாரகை 194212 18.
சிவானந்தன. இ (மாகாணககல்விப்பணிமனை,திருமலை) 186, சிவாசுப்பிரமணியம். 194 சிந்திரவேல். என் (21, ஒள்வையார்வீதி, திருமலை) 212
சீலோதரன் கிண்ணியா 212 சீத்தாராமன். வீ (148, வைக்சோல்வீதி, கொழும்பு - 2) 212
சுசீலன் 96
சுப்பிரமணியம். வே. 43
சுமதி 75 சுதந்திரராஜா. சி (தபால்பெட்டி இல; 1029,கொழும்பு) 194.213,214 சுப்பையா. எஸ். கே. 212
சுதரராஜ் (அவுஸ்திரேலியா) 239,240 சுப்பிரமணியம். தா. பி. (தபால்கந்தோர் வீதி, திருகோணமலை) 194 கந்தரம் டிவகலால. (வவுனியா) 80 சுக்ரி. எம்.ஏ.எம் (பேருவளை) 186 சுப்பிரமணியபாரதி (அமரர் 27,28,29 சுவே. (சுவேலுப்பிள்ளை, 119,காளிகோவில்விதி, கன்னாதிட்டி, யாழ்ப்பாணம்)
3.39.42.65,66,79,9596,163
செங்கைஆழியான் (கலாநிதி, க, குணராசா 75/10A, பிறவுண்வீதி, யாழ்ப்பாணம்) 20:24,439495,147,165,166,167.215.230,231,261 செங்கதிர் 212
செம்பியன்செல்வன் (ஆ. இராஜகோபால்,10.புதியவீதி, அத்தியடி யாழ்ப்பாணம்)
92.95.96,99,147,158,161,162,165,167,168,169,215,226,231,232,261.
182. செல்வராசா. ஏ. எம் (கண்டி) 162 183. செந்தூரன் (கண்டி) 140,142
சொ
184. சொக்கன் (க. சொக்கலிங்கம், நாயன்மார்க்கட்டு) 19,32,36.39,4243.70,71,87,
185
97.99,163 . சொலமன்ராஜ்.அ 212
291

Page 155
ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழிான்”
செவா
186. செளமினி 194,212 " . 187. செளந்தரநாயகம். எஸ்.எஸ். (வன்னியூர்க்கவிராயார்) (அமரர்) 97.140.146
88. ஞானசேகரன். தி (197, பேராதனை வீதி, கண்டி) 99.197.226.239
189. டானியல். கே (அமரர்) 1939,878990919899100.115.116,117,148 190. டானியல் அன்ரனி (அமரர்) 162,206
Gl
194. டேவிட். கே. ஆர் (பிடாரிகோவிலடி, ஆனைக்கோட்டை, யாழ்) 198.200.
20,240,241
92. டொமினிக்ஜிவா முறிகதிரேசன் வீதி, கொழும்பு 22.39.87.89909196979899,
100, 19,120, 2,148,161,163,229
As
193. தமிழ்ச்செல்வன். 98
194. தமிழ்ப்பிரியா (இலண்டன்) 194.213.215
195. தவம் யோசெப் 212
196. தங்கத்துரை. ஆ (தங்கன் 226,கல்முனைவிதி, நாவற்குடா, மட்ட) 212
197 தணிகாசலம், க (பொற்பதிவீதி, கொக்குவில்தெற்கு, கொக்குவில்) 198,209,
226,244,245,261
198. தனபாலசிங்கம். வே 194
19. தளையசிங்கம். மு (அமரர்) 85,92,949596979899,135.137.148,157.158
200. தம்பிராசா. பொ 139,142
201. தம்பையா. எஸ். வி (பருத்தித்துறை) 195
20. தாழையடி சபாரத்தினம் (அமார்) 16:17,20,32,42,4372,79969 203. தாட்சாயினி (யாழ்.பல்கலைக்கழகம்) 247.280 204. தாவூத். யூ. எல். (ஏறாவூர்) 194
292

ஈழத்துச் சிறுகதை வரலாறு ്ത ஆாஸ்"
2O5.
தி
2O6.
2O7.
2O3.
209.
2O. 21. 22.
23.
24.
215.
26.
217,
之18,
29.
22O.
22.
230.
23.
232.
233.
தாமரைச்செல்வி (105.ஸ்கந்தபுரம், கிளிநொச்சி) 21, 226, 243, 24
திருக்கோவில் கவியுகன்.(திருக்கோவில், மட்டக்களப்பு) 247, 230,26 திமிலைசுந்தா (172.பிரதானவீதி, திருகோணமலை) 247,333 திருமலைமகாலிங்கம், (திமிலைதீவு, மட்டக்களப்பு) 212 திமிலைக்கண்ணன் (திமிலைதீவு, மட்டக்களப்பு) 212 தில்லைநாதன் (பேராசிரியர்) (31C,பிளோக், பல்கலைக்கழகம்,பேராதனை90 தில்லைநாதன். க. 147 திக்குவல்லைகமால் (திக்குவல்லை, டர்காடவுன்) 198,202:26,246 தியாகுகனேஸ்வராஜ் 247 தியாகராஜன்சோ (அமரரர்) 343,59,79
தில்லைச்சிவன் (கொழும்பு) 95
தீவான் (மு. பொன்னம்பல், 20A, மல்வத்தைலேன் தெகிவளை) 9497. 99, 65,86,226,234
துரை. சுப்பிரமணியம் (அமரf) 187,190 துரை ஏங்கரசு 212
தெளிவத்தையோசெப் (35, NH5, கெக்கித்த வத்தளை) 47.163183.84
216,26 தெணியான் (பொலிகண்டி, வல்வெட்டித்துறை) 99.47,19826, 242,243. தேவன்.யாழ்ப்பாணம் (அமரர்) 3995,97,9,10,122.123,124,203
தையிட்டி அ. இராசதுறை (தையிட்டி) 165,184,18526
நகுலன் (அராலியூரான்) (அமரர்) 187.19
நவசோதி.க (அமரர்) 186.
நர்த்தன ( யாழ்பல்கலைக்கழகம்) 247
293

Page 156
ஈழத்துச் சிறுகதை வரலாறு *செங்கை ஆழிான்”
234. நடமாடி 187,191 235, நந்தி (செ. சிவஞானசுந்தரம், 681/2, பருத்தித்துறைவிதி) 3990,163.215.226.229,
230,261
236. நடேசையர். கோ (அமரர்) 30,36,52,53 237 நயிமாசித்திக் (கம்பளை) 196
238. B6 b, E. (56CELIT) - 194 239 நல்லையா. க(சுயா) (அமரர்) 30,36,3855,56 294, நடனம் (நடனசபாபதிஐயர், ஒட்டுமடம், யாழ்) 43,75,54 240. நடராசா. செ (காங்கேசன்துறைவிதி, கொக்குவில்) 75 241, நற்பிட்டிமுனைபளில் (நற்பிட்டிமுனை, புத்தளம்) 257 242. நந்தினி சேவியர் (பதிப்பகத்தணைக்களம், திருகோணமலை) 212247.280,261 243. நவம் (தமிழ்நாடு} 94,95,97,139,140 244. நடராஜன் கே.வி (அளவெட்டி) 145,146,163 245. நல்லைஅமிழ்தன் (54,புதுச்செம்மணிவீதி, கல்லியங்காடு)( 194
246. நாவன்னன் 211 247. நாவற்குழியூர் நடராஜன் (அமரர்) 8,31,36,42,67,68,159 248. நாவலியூர் சோ. நடராஜன் (அமரர்) 30,36,53,54,7992 34. நாகராஜன். இ (அமரர்) 39,9799,140,143,163, 23. நாகலிங்கம். இரா (தமிழ்நாடு) 161
நாவேந்தன (அமரர்) 90,9495979899100.131,182,133,148,163 3. நாகூர்.எம். கனி 196
3. நாகேசுதர்மலிங்கம் 213,214
254. நி.மத். எஸ். ஏச் (எருக்கலம்பிட்டி, மன்னார்) 194,212,247,254,261
255. நீலாவணன் (அமரர்) 95
236. நீர்கொழும்பூர் அ. முத்துலிங்கம் (அமரர்) 195
237. நீாவைப்பொன்னையன் (40, பாகொடவீதி, நீர்கொழும்பு) 89909198,100,
139, 40,164.
258, நூரளை சண்முகநாதன் 194
294
 

ஈழத்துச் சிறுகதை வரலாறு ; “Jin, gurra”
தெ ч •
260. நெல்லை க. பேரன் (:ரர்} 186.187
நெள
261 நெளஷத். எம். எம் 194212
262 பரணி (செ.சி.பரமேஸ்வரன்) {அமரர்) 75.76 263. பத்மாசோமகாந்தன் (புதுமைப்பிரியை) 19949597,100,128.127.226.228 264. பசுத்தீவு இடையன்கோடின் 94,95 265. பரராசசிங்கம். க(துரு:ன் 9ே, 147,55,171.72.245 26ó. L. JLFIT Ć. saF 96
267. பவானி (கொழும்பு) 09.10.138,139 268. பவன் (அமரர்) 30,36.3357.*)
269 பத்மாதுரைராஜா 43
270. பன்னீர்ச்செல்வம். சி 11"
371 பற்றிமாகரன். சூ (லண் இன் 194 372. பஷீர், மு (233.D.கலே :) மினுவான்கொடை) 194.226.246 373. பரமலிங்கம். த. பட்டஃைந்து, நாவலடிலேன்.வண்வடமேற்கு,யாழ்) 194 374. JJ Lit 19-4
375. பன்னீரன் 212
376, பஞ்சாட்சரம். ச. sே) :
377. பாலேஸ்வரி. பா (15' 3: க்வீதி,திருமலை) 147.165.185 378. பாலசுந்தரம்.க (லண்டன் 187.193,216 379. பாலகிருஷனன்.ரா tே.194 380. பாணன். (அமரர்) 3.3','} 381. பாலசுப்பிரமணியம்.ந 75.' 382, பார்த்திபன். அ. 247.2t} 383. பாலரஞ்சினிசர்மா ?!? 384. பாலமனோகரன், அ (க: ; 194 385. பாண்டியூரான் (அமரர் 34,212 386. பாமாராஜகோபால். (65:ன்; 99,194 387. LIIHadfElastb. LøT (søs 》 187,190 38. பாண்டியூர்ராகி (Lான்: :ட்டக்களப்பு) 187,391
295

Page 157
ஈழத்துச்
389,
390.
39.
392,
393.
394.
295,
296.
2.97.
298.
299.
30.
30.
3O2,
3O3.
3O4.
3.05.
gJr
306.
3OT.
3O8.
சிறுகதை வரலாறு “eas fia"
figurasgGös. ğ5 247
பிலிப்பேக்கப் 194
$heyyubg (a56öILIT) 8996,97
பித்தன் (அமரர்) 100,109,110,111 பிரியா குணராசா (யாழ்பல்கலைக்கழகம்). 247
புலோலியூர்ஆ இரத்தினவேலோன் (19123ஹைலெவல்வீதி,கிருலப்பனை)
2O புலோலியூர், செ. கந்தசாமி (பருத்தித்துறை) 210 புன்னியாமீன். (14, உடத்தலவின்னமடிகே, கட்டுகாஸ்தோட்டை) 213 புதுமைலோலன் (வி.கே.கந்தசாமி, அச்சகஜழுங்கை, தலையாழி, கொக்குவில்)
17,20.39,90,94,95.97.99,100,113,114, 1 15,148 புத்தொளி (ந.சிவபாதம் ஆனைக்கோட்டை, uJÚLITSE Lb) 94.95 புலோலியூர். தம்பையா 195,196
புலோலியூர் க. சதாசிவம் (டைராபாடி ஸ்பென்சரி, பண்டாரவளை) 198,226,236,237.26
grougrasi, p. 194.212,216,260
பூங்கோதை - 198205 jaয়ন্ত্রী - 165.185.216
பெரியதம்பி, கு. (அமரர்) 6,3242.43.73.74.75,79 பெனடிக்ற்பாலன் (அமரர்) 99,147,165,175,176,226.236
பொன்னுத்துரை. ஆ (பொன்னு) 97,140,142 பொன். கதிரவேற்பிள்ளை 75 பொன்னுத்துரை. எஸ் (எஸ்.பொ) (தமிழநாடுஅல்லது அவுஸ்திரேலியா) 39,85.87.90,992.96.97, 100,107,108,109,148,157,226,227,261
296

ஈழத்துச் சிறுகதை வரலாறு “செங்கை ஆழியான்’
333.
334.
335.
336.
337.
338,
339.
34),
3.41.
மகாலிங்கசிவம். ம.க.வே 77 மகாலிங்கம். கே. வி. 212 மன்சூர், எம். எஸ். எம் 212 மல்லிகை. சி. குமார் 212 மகாலிங்கம். நா. 212
, மத்தீன். எம். எம். 95
மலரன்பன் (621,மண்தனடவெல,மாத்தல்ை 197 மண்டூர் அசோகா 198,226,243 upu B515NOTTGÖT 99. 187363.
p65up 1097.99, 187, 190 மருதூர்ப்பாரி 194
மருதூக்கனி 194
மருதூர்ப்பாரி 194
culoosõT 75,76, 194 மருதமுனை மஜீத் - 96
... [[&ũÎ{&{{:3Bũ3)öữ 96
மலையான் 394
LCL as: 99
மருதவாணன் 194
மரியதாஸ். பீ 186 மருதூர்க்கொத்தன். (மன்னார் {Gizlicə-TəsuccT6L3:Taig. ; .: : 2; மருதூர்வாணன் (201A, அல்ஹாஹற்விதி 103 மயிலங்கூடலூர் நடராஜன் (நாயன்மார்ககட்டு '
ஒரிஷானன் 194
முனைகல்முனை) 187,190 முனை) 187.
மாத்தளைச்சோமு 194212
மாத்தறை ஹளபீனாவஹாப் 212
மாத்தளை வடிவேலன் 211
மாதகல் செல்வா 194 மாலதி (திமிலைத்துமிலன், திமிலதீவு, மட்டக்காப்பு) 20, 187 LDagb6)soluT. 9, 27.28.29
முருகானந்தன. அ. செ. (அமரர்) 8, 16.31,35,38,39.42.42,58,59,79,163 முத்துலிங்கம். அ. 949598.10013.134.135,14226.228229 முத்துசிவஞானம் 94,95,186
297

Page 158
ஈழத்துச் சிறுகதை வரலாறு- “Gyüçık yarai”
342 முத்துமீரான் (பேர்ள். நிந்தவூர்) 212 343 முத்துகுணரத்தினம் 212 344 முருகு 213.214 345. முஸல்மில். எம். ஐ. எம். 247, 25 346 முருகபூபதி. லெ (அவுஸ்திரேலியா) 198.245.246 347 முத்துஇராசரெத்தினம் (ஒட்டுமடம், யாழ்ப்பாணம்) 198,204 348. முருகானந்தன. ச (கரணவாய் கிழக்கு, கரவட்டி) 198,207, 208 349 முல்லைமணி (வீ. சுப்பிரமணியம்) 195 350. முருகையன் (நீர்வேலிதெற்கு, நீர்வேலி) 90 351. முனியப்பதாசன் (அமரர்) 99,165,180,181,182,183.213 352. முகிலன் 99 353. முல்லைக்கோனெஸ் 247.280.26
6Epar
354. மொகைதீன், ஏச். எம். பி. 90.97.161 355. மொழிவரதன் (இஸ்டன் றோல்தோட்டம் லிந்துலை) 21
Geogr
356. மோகன். கே. வி. எஸ் 162
மெள
357. மெளனகரு சி (கிழக்குப்பல்கலைக்கழகம், செங்கலடி) 36
358. யாழ்வாணன் (எஸ். சண்முகநாதன்) (அமரர்) 147.187,188 339. யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை, 32.ஹெக்கித்தவிதி,வத்தளை)
99,187,188,194
யே
360. யேசுராசா. அ. 162.198205
(Ear
361. யோகாபாலச்சந்திரன் (கொழும்பு) 194212, 215 362. யோகநாதன். செ (குணசேன அன் கோ, கொழும்பு) 99.147.165.170,171215,
226,232,233,234,261 363. யோகேஸ்வரி கணேசலிங்கம் 108
298

ஈழத்துச் சிறுகதை வரலாறு "செங்கை ஆழியான்”
36
365.
யோகேஸ்வரன். மு. வ. 213 யோசெப்பாலா (சென்.பற்றிக்ஸ் வீதி, யாழ்) 226,242,
366. யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (மக்கள்வங்கி. கன்னாதிட்டி, u rip) 247.249
g
357. ர.பேல். த 139,142
368, ரஹற்மான். எம். ஏ. (தமிழ்நாடு) 96,100,193,216
39. ரகுநாதன். என். கே (5A, பியரட்னராமவீதி, தெகிவளை) 39.879091959697,
98.00, 1.1 2,113,148
370. ரஞ்சகுமார் 247.248.261
371 ரத்நசபாபதி ஐயர். பா. (88921, மருதானை விதி, கொழும்பு - 10 194212
372, ரட்னசபாபதி. வி.க 99
JAJ
373. ராதாகிருஸ்ணன் (அமரர்) 75,76
374, ராணிசீதரன் (136. மத்தியவிதி. திருமலை) 247
375. ராமேஸ்வரன். சோ. (412, சித்ாலேன், கொழும்பு - 5) 247, 249,250
376, ராஜரீகாந்தன் (தினகரன். லேக்ஹவுஸ், கொழும்பு) 198,204
377. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (லண்டன்) 194
378, ரூபாராணியோசெப். 247
(sor
379 லோகநாதன். வி. 161
380. லோறன்ஸ் ம. த. 97, 140, 144
381. வரதர் (தி.ச.வரதராசன்) 843, மானிப்பாய்வீதி, யாழ்ப்பாணம் 1-26,31,3339.
41 42.43,59.60,79,90,95.97.98.99,100,101,102,103,148, 59,163,226,227
382, வன்னி (சி.வன்னியகுலம், 70, 37வதுலேன், வெள்ளவத்தை) 94212
383. வன்னை வ. சி. சின்னத்துரை 75
384, வடகோவை வரதராஜன் 194213
385. வண்ணை கே. சிவராஜா (டபிள்யூ ஏடி சில்வாமாவத்தை, வெள்ளவத்தை)
147,187,192 •
386.
வசந்தகுமார். வ 247
299

Page 159
gi figlia). QT “செங்கை ஆழியான்”
TT
387. 6.Ng560616876 247.256 38. வாமதேவன். எம் (BQ, மனிங்டவுன் வீடமைப்புத்திட்டம், மங்களாவீதி.
கொழும்பு - 8) 194
வி.
389. விஜயன், கே. (211 (23:49, மயூராவீதி, கெழும்பு - 6) 194 390. வித்தியானந்தன். சு (பேராசிரியர்) (அமரர்) 85,93
வெ
391. வெற்றிவேல் விநாயகமூர்த்தி 247.257
வே
392. வேலழகன். ஆ. மு. சி 247, 250.251 393. வேலுப்பிள்ளை. சி. வி 31.36,78
394. வைத்திலிங்கம். து. (செம்பியன்லேன், கொக்குவில்) 99.165,178,215 395. வைத்திலிங்கம். சி (அமரர்) 30,3136.39.44,4850,51,7999
舒
396, ஐயோதிர்மகிஷம் சாதேவசாஸ்திரியார் (பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை)
(அமரர்) 77
GegAJ
397. ஜோவலன்வாஸ் 194
s
398. ஷம்ஸ். எம். ஏச். எம் (லேக்கவுஸ், கொழும்பு - 1) 194
தி
399, பூறிரங்கன் (கோபாலரெத்தினம், கோபு) 187.189
300


Page 160
ETTSJITAflfluar பவளவிழா நாயகர் கலாநிதி க. குவிணராசா மூதறிஞர் தி. ச. வரதராசவி
(செங்கை ஆழிபான்) u!
ஈழத்துச் சிறுகதை வரலாறு
* ஈழத்துச் சிறுகதைத்துறைக்குக் கிடைத்துள்ள ஒரு வரலாற்றுக்
கருவூலம் இந்நூல்
* ஈழத்தில் முதபோது சிறுகதை எழுதப்பட்ட அந்த நாளிலிருந்து இந்த நாள்வரை சிறுகதைகளை எழுதியுள்ள எல்லா எழுத்தாளர் களைப்பற்றிய பெயர் விபரங்களையும், அவர்களின் ஆக்கங்கள் பற்றிய குணநலன்களையும் முழுமையாகத்தருகிறது இந்நூல்
臺 ஈழத்தில் இதுவரை வெளிவந்துள்ள 27 சிறுகதைத் ਕੁE
பற்றிய விபரங்களும், 400 எழுத்தாளர்களின் பெயர விபரங்களும் இந்நூலின் பிற்சேர்க்கைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.
* பேராசிரியர அ. சார்முகதாஸ் இந்நூலுக்குச் சிறப்பானதொரு
அரிேந்துரை வழங்கியுள்ளார்
செங்கை ஆழியாகரின் இந்த முயற்சி என்னை பிரமிக்க வைக்கிறது:
என்கிறார ஒரு இலக்கிய இரசிகர் நூலுள் நுழைந்ததும் உங்களுக்கும் இந்தப் பரபிப்பு ஏற்படும்
 

கலாநிதி க.குணராசா
(செங்கை ஆழியான்)