கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வன்னி நாய்ச்சிமார் மான்மியம்

Page 1
சந்திரா அத்
காங்கேசன்துதை

மறுமலர்ச்சிப் பாதையில்
beim estast - W
வன்னிநாய்ச்சிமரர்
த. சண்முகசுந்தரம்
ாருள் வெளியிட்டகம்

Page 2

மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலேகள் - IV
வன்னிநாய்ச்சிமார் மான்மியம்
த. சண்முகசுந்தரம்
அருள் வெளியீட்டகம் மாவைக் கந்தசுவாமி கோவிலடி தெல்லிப்பழை
இலங்கை
1-9 - 1981
விலை: ரூபா 3.00
உரிமை ஆக்கியோனுக்கே

Page 3
Marumalarchi Pathaiyil Makka Kalaikal - dW
VANNINACHIMAR MANMIYAM
Folk Literature in the path of Revival
The Glory of Vanni Chieftans” Wives
ხყ
T. SANMUGASUNTHRAM E. A. (Gey.) Dip - in - Ed., Gay.)
Printers l Publishers :
Chandra Printerg Arul Welliettu Akan Kankesanturai Mavai Kanthasamy
Kovilady Tellippalai Sri Lanka : ls 9 - 198l.
Price : Rs. 3-00
All Rights Reserved

Ab வன்னிநாய்ச்சிமார் மான்மியம்
*" வன்னி நாய்ச்சிமார் மான்மியம்" என்னும் இந்த நூல், மக்கள் இலக்கியப் பெரும்பரப்பைச் சேர்ந்தது. மான்மியம் பாடுவதற்கும், அப் பாடல்களைக் கோயில்களிற் படிப்பதற்கும் பல நோக்கங்கள் இருந்தன். இவற்றை ஆராய்தல் நன்று. அத்துடன் நாய்ச்சிமார் வழிபாட்டு வரலாற்றையும் ஆராய்தல் பொருத்தம்.
"மான்மியம்" என்னும் சொல்லை விளக்குமிடத்து, 'தல மகிமையைக் கூறும் நூல் " எனச் சென்னைப் பேரகராதி கூறுகிறது. கோயிலில் எழுந்தருளும் கடவுளரின் புகழ் பாடுவது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனுலேதான் காலத்திற்குக்காலம் ஈழத்தில் கோயில் மான்மியம் கூறும் நூல்கள் எழுந்தன. இதுவே மான்மியம் பாடுவதற் குரிய முதற் காரணம். இரண்டாவதாக, ஒரு இடத்தின் பெருமையை உணர்த்த மான்மிய நூல்கள் எழுந்தன. இதற்கு எடுத்துக்காட்டு, *மட்டக்களப்பு மான்மியம் ". மூன்றுவதாக, பெரியாரின் புகழைப் பாடவும் மான்மிய இலக்கிய வடிவம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டாக, திரு. பொன்னம்பலபிள்ளை பாடிய “அருணுசல மான்மியத் 'தைத் தரலாம். நான்காவதாக, மான்மியம் ஒரு பொருளின் பெருமையை எடுத்துக் கூறவும் கையாளப் பட்டது. இதற்கு எடுத்துக்காட்டு, “வெற்றிலை மான் மியம் *. இதனைப் பாடியவர் யாரெனத் தெரியவில்லை. மான்மிய நூல்கள் பெரும்பாலும் மக்கள் இலக்கியமாகத் திகழும். இவற்றைப் பொதுமக்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். பாட்டின் சந்தமும் மக்களைக் கவரும் தன்மை உடையன. ஆனல், "பொன்னம்பல மான்மியம்" மிகவும் உயர்ந்த தமிழில் எழுதப்பெற்றுள்ளது
இனி, புலவர் ஒருவர் மான்மியம் பாடுகின்ற நோக் கத்தைக் கவனிக்கலாம். கோயில் இல்லாத ஊரிலே குடி யிருக்கக் கூடாது" என்பது தமிழனின் கோட்பாடு. இத ஞலேதான் ஈழத்தின் பல பகுதிகளிலும் பெரிதும் சிறிது

Page 4
ー 2 ー
மாகப் பல கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில் களை மையமாக வைத்துக் கலைகள் வளர்ந்தன: இலக்கிய நூல்கள் பலவும் தோன்றின. இந்தக் கோயில்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். அவையாவன : வேதா கம முறைப்படி நடக்கின்ற கோயில்; கிராமிய அடிப்படை யில் நடைபெறுகின்ற கிராமியக் கோயில். இக் கோயில் பற்றிய நூல்கள் யாவும் காலத்துக்குக்காலம் எழுந்தன. இப்படி ஈழத்தில் எழுந்த மான்மிய நூல்கள் சிலமட்டும் அச்சுவாகனம் ஏறின.3 ஏனைய ஏட்டு வடிவில் இருக்கின் றன; பல அழிந்துபோயின. புலவர் ஒருவர் மான்மிய நூல் எழுதும்போது, அது பொதுமக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காகவே எழுதினர். கோயில் என்ருல் அது சிதம் பரத்தையே சிறப்பாகக் குறிப்பிடும். " சிதம்பர மான்மி யம் " என்னும் நூலை எழுதியவர், யாழ்ப்பாணத்து நல் லூர் ஆறுமுகநாவலர். இந்த நூலின் பத்துப் பதிப்புக்கள் வரை வெளிவந்துள்ளன. இதனுல் இந்த நூலுக்கு இருந்த வரவேற்புப் புலணுகின்றது. "சிதம்பர மான்மியம் ' என் னும் தலைப்பில் ஐந்து நூல்கள் வடமொழியில் இருக்கின் றன எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் உள்ள நூல்கள் பொதுமக்களுக்கு விளங்கமாட்டா, ஆகவே, பொதுமக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காகவே தமிழில் உரைநடை நூலாகச் "சிதம்பர மான்மியம்' என்னும் நூலைப் படைத்தார், நாவலர். இதுவே மான் மிய நூல்கள் எழுதற்குரிய முதலாவது காரணம்.
இரண்டாவதாக, சில புலவர் தம் குலதெய்வத்தின் மீது மான்மிய நூலை யாத்துத் தம் ஆத்ம திருப்தியை நிறைவேற்றுவர். மூன்றுவதாக, புலவர் ஒருவர் தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மான்மிய நூலை எழுதி முடிப்பார். நான்காவதாக, ஒரு கோயில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். எடுத்துக்காட்டு, குடமுழுக்கு. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மான்மிய நூல் வெளியிடப்படும். ஐந்தாவதாக, ஒர் ஊர்மக்கள் அல்லது செல்வந்தர் ஒருவர் தங்கள் திருப்திக்காக மான்மிய நூல் ஒன்றைப் பாடுவித்து அச்சேற்றுவர். இப்படியான பல

-- 3 --سم
காரணங்களினுல் மான்மிய நூல்கள் காலத்திற்குக்காலம் எழுந்தன; எழுந்து ஈழத்து இலக்கியப் பரப்பை வளம் படுத்தின.
இனி மான்மிய நூல்களைப் பக்திசிரத்தையுடன் அக் கால மக்கள் படித்துவந்தனர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டவேண்டும். மான்மிய நூல்களை, குறிப்பாகக் கிரா மியக் கோயில்களில் படிப்பதும் அதனைக் கேட்பதும் உத் தமமான செயல் என அக்கால மக்கள் நம்பினர். படிப் பைக் கேட்பதால் தங்களுக்கு அருள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. வீடுகளிலும் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களிலும் மான்மியப் பாடல் படிக்கப்பட்டன. கோயில் படிப்பைப் பெரும்பாலும் பூசாரியாரே நடத்து வார். இந்த இசைப்பாடல்களுக்கு உடுக்கு, மத்தளம் கெஞ்சிரா, தாளம், சல்லாரி போன்ற பக்கவாத்தியங்களும் இசைக்கப்படும். ஆகவே, படிப்பு மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இடையிடையே உரைநடை விளக்கங்களும் கொடுக்கப்படும். இப்படியான படிப்பு அன்புநெறியை வளர்ப்பதுடன் மக்களுக்குப் பொழுதுபோக்காகவும் அமை யும், மான்மிய நூல்களைக் கோயில்களிற் படிப்பதாற் பல விதமான நன்மைகள் ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர். முதலாவதாக, ஊருக்கு நன்மை ஏற்படும் என்பது நம் பிக்கை. ஊரிலே நோய், பஞ்சம், வரட்சி போன்றவை ஏற் படுவது வழக்கம். இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற் காகவும் மான்மியப் படிப்பு நடைபெறும். செல்வந்தர் சிலர் தமது குறைபாடுகளை நீக்கச் சிறப்பான படிப்பை நடத்துவர். ஒருவருக்கு மகப்பேறு இல்லை என வைத்துக் கொள்ளலாம். தன் குலதெய்வத்தின் முன்பாக ஏழு வெள்ளி, செவ்வாய் தினங்களில் படிப்பை இச் செல்வந்தர் ஒழுங்கு செய்வார். படிப்பிற்குரிய செலவு, மடைச்செலவு, அன்னதானச் செலவு எல்லாவற்றையும் இச் செல்வந்தரே ஏற்றுக்கொள்வர். இப்படியான காரணங்களினுல் அக் காலத்தில் கோயில்களிற் சிறப்பாக நடைபெற்றது மான் மியப் படிப்பு,

Page 5
- 4 -
மான்மிய நூல்களை யாத்தலும் அதனைப் பக்திசிரத் தையுடன் படிக்கின்ற வழக்கமும் இப்பொழுது அற்றுப் போகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இன்று மக்களின் வாழ்க்கைமுறை மாறுகின்றது. முன்னர் போல ஆறுதலாக அமைதியாக இருந்து படிப்பைக் கேட் பதற்கு மக்களுக்கு அவகாசம் இல்லை. இதஞலே கோயில் மரபுகளும் வழம்ைகளும் மாறுகின்றன. இது தவிர்க்கமுடி யாத மாற்றம், நீண்டகாலம் தொடர்ச்சியாக நடை பெறுகின்ற படிப்பிற்குப் பதிலாக ஒருசில மணிநேரம் நடைபெறுகின்ற இசைச் சொற்பொழிவு, வில்லுப்பாட்டு போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய யுகம் வானெலி, தொலைக்காட்சி யுகம். இந்த இரண்டு ஊடகங் கள்மூலம் சமயம் நன்கு பரப்பப்படுகின்றது. மத நிகழ்ச் சிகள் இவ்வூடகங்களில் பெரிதும் இடம்பெறுகின்றன. ஆகவே, மக்கள் வீட்டிலே இருந்துகொண்டு மத நிகழ்ச்சி களைக் கேட்டு மகிழ்கின்றனர்; பார்த்து இன்புறுகின்றனர். இன்றைய திரைப்படங்கள் பல தொன்ம வரலாறுகளை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. ஆகவே, இப்படி யான சமயச் சித்திரங்களை இலகுவாகக் கேட்கவும் , பார்த்து மகிழவும் பொதுமக்களுக்கு வாய்ப்புக் கிடைக் கின்றது. மேலும் புராணச் சார்புடைய மான்மிய நூலுக் குப் பதிலாக வரலாற்று உணர்வுடன் கூடிய நூல்களை இக்காலத்து எழுத்தாளர் படைக்கின்றனர். இப்படியான் பல காரணங்களினுல் மான்மிய நூல் எழுதும், படிக்கும் வழக்கம் இப்போது மறைகின்றது.
வன்னிதாய்ச்சியரும் ஏழு மாதாக்களும்
நாய்ச்சிமார் வழிபாடு ஈழத்தின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்றது. இவ் வழிபாட்டின் தோற்றம் யாது? இதுபற்றி மேலும் ஆராய்ச்சி தேவை. இந்த நாய்ச்சிமார் வழிபாடுபற்றி இரண்டு விதமான கருத்துக்கள் நிலவு கின்றன. அவையாவன: (அ) நாய்ச்சிமார் வழிபாடு சப்த கன்னியர் வழிபாடு, (ஆ) வன்னிநாட்டை ஆண்டு பறங்கி

- 5 -
பருடன் போர் புரிந்து, தோல்விகண்டு தம் கற்பைக் காப்பாற்ற உயிர்நீத்த பத்தினிப் பெண்டிர் எழுவரின் வரலாறு. இந்த இரண்டையும் ஆராய்தல் பொருத்தம்.
ஏழு மாதாக்கள் என்பவரின் விவரம்: பிரமாணி, நாராயணி, மகேதவரி, கெளமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி
இதனைச் சூடாமணி நிகண்டு தருகின்றது. இவ் வழி பாடு மக்கள் வழிபாடாக இருந்து வருகின்றது என்பதை வைற் கெட்டு என்னும் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்." இவ் வழிபாடு தமிழ்நாட்டிலே பெருவழக்காக இருந்து வந்துள்ளது. நாய்ச்சியார் கோயிலும் அங்கு இருக்கின் றது. இந்த இடத்திற்குப் பெரும்புகழ் தேடித் தந்தவர் தவில்மேதை நாய்ச்சியார்கோயில் இராகவபிள்ளை. இந்த வழிபாடே தமிழ்நாட்டிலிருந்து பெரும்பாலும் சோழர் காலத்தில் ஈழத்து வன்னிவள நாட்டிற்கு வந்தது என் பர், வன்னிஇயல் ஆய்வாளர் பலர். இக் கருத்தை வலி யுறுத்தும் வகையில் வட்டவாகல் நாய்ச்சியார் கோயில் ஏடு அமைந்துள்ளது. இதன் பிரதியைப் புதுக்குடியிருப்பு அண்ணுவியார்கள் திரு. சுப்பிரமணியம், திரு. தம்பிப்பிள்ளை ஆகியோரின் துணையுடன் நான் பார்வையிட்டுள்ளேன். அவர்களைக்கொண்டு இப் பாடலைப் படிக்கவைத்து விளக் கமும் கேட்டேன். 1975இல் இந்த வாய்ப்பு, நான் புதுக் குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் கற்பிக்கின்றபோது ஏற்பட்டது. இந்தப் பாடல் இப்போது வற்ருப்பளை ‘கண் ணகியார் மலரி'ல் இடம்பெற்றுள்ளது. இந்த ஏழு மாதாக்கள் வழிபாடுபற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. ஆராய்ச்சியாளர் திரு. நவரத்தினம்" போன்றேர் எழுதியுள்ளனர். வண. காட் மனும் ஆராய்ந்துள்ளார்." ஆகவே, இதுபற்றி இங்கு மேலும் ஆராயவேண்டியதில்லை.
(ஆ) வன்னிநாட்டை ஆண்டு பறங்கியருடன் போர் புரிந்து தோல்வி கண்டனர். ஆறு வன்னிச்சியரும், அவரின்

Page 6
- 6 -
தோழிப்பெண்ணும். இந்தப் பத்திணிப் பெண்கள் ஏழு பேரும் தம் கற்பைக் காப்பாற்ற உயிர் நீத்தனர். இவ ரின் வழிபாடே “ வன்னிநாய்ச்சி வழிபாடு" என்ற கருத் தும் நிலவுகின்றது. இதுபற்றிப் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை எழுதியவை:
** போரிலே இறந்த வீரரை வழிபடும் வழக்கம், பண் டைக்காலந் தொடக்கம் தமிழ் மக்களிடையே நிலவி வரு கின்றது. இப் பண்டைய முறையைப் பின்பற்றியே எழுந் தது நாய்ச்சிமார் வழிபாடு. "19 19 தினகரன்" பத் திரிகையில் அவர் எழுதிய கட்டுரையிலே "பறங்கியர் கைப்பட்டு மானமிழந்து வாழ விரும்பாத இந்த ஏழு பெண்களும் உயிர் நீத்தனர் " எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையை வலியுறுத்தும் வகையிலே இங்கு இடம் பெறும் "வன்னிநாய்ச்சி மான்மியம் " பாடல் அமைந் துள்ளது. வன்னிவள நாட்டிலே சப்த கன்னியர் வழிபாடு நிலவியது. பறங்கிக்காரர் காலத்தில் உயிர்நீத்த இந்த ஏழு வன்னிச்சியர் வழிபாடு பின்னர் எழுந்தது எனலாம். பறங்கியர், போர்த்துக்கேயரோ அல்லது ஒல்லாந்தரோ என்பது சரியாகத் தெரியவில்லை. இருவரையும் பறங்கியர் என்பது நாட்டு வழக்கம். ஆகவே, இக்கதை உண்மையா யின் அது எக்காலத்திற்கு உரியது என்பதும் ஆராயப்பட வேண்டிய அலுவல்.
புராணம் பாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இடையிலே வந்தது. இதனுலே தமிழ்நாட்டில் தோன்றிய கதைகளுக்கு வடநாட்டு மூலம் காணும் முயற்சி தோன்றியது. 'மாக் கதை'யைப் பாடிய சேக்கிழார் பெருமான், கண்ணப்பரைப் பற்றிப் பாடினர். பழைய புண் ணியம் எல்லாம் திரண்டு கண்ணப்பர் தோன்றினர்; ஆனல் பின்னர் வந்த தல புரா ணக்காரர் 'சீகாளத்திப் புராணம்" பாடினர்.11 சிவ பிரான வில்லாலடித்து அவரை வேடன் என இகழ்ந்த அருச்சுனனே கண்ணப்பர் என இப் புராணகாரர் பாடிப் போந்தார். மறுபிறவி உரைத்தலில், முற்பிறவி செப்புதலில் வல்லவர் புராணகாரர். ஆகவே, பார்த்தன்தான் கண்

- 7 -
ணைப்பர் என்ருர். இந்தப் பரம்பரை தமிழுக்குப் புதிதன்று. ஆகவே, முதல் தோன்றிய ஏழு பெண்கள் வழிபாட்டை պւb, பின்னர் வந்த வன்னிநாய்ச்சி ஏழுபேர் வழிபாட் டையும் ஒன்ருக இணைத்துப் பிணைத்துப் போயினர் நம் நாட்டவர் எனலாம். இந்த ஏழு பெண்களும் குன்றிமணி யையும் செங்கட்டியையும் இடித்துத் தின்று உயிர் விட்ட னர் என்பார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை.1? இதனைக் குறிக்கவே காங்கேசன்துறை நாய்ச்சிமார் கோயிலில் மடை யின்போது குன்றிமணி, செங்கட்டித் துவையல் படைக்கப் பட்டது. இவ்வழக்கம் இப்போது மறைந்துவிட்டது. இந்த வழிபாட்டையும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தனது ** தினகரன்" கட்டுரையில் நன்கு விவரித்துக் கூறியுள் ளார். இவை யாவும் மேலும் ஆராயப்படவேண்டியவை.
'வன்னிநாய்ச்சி மான்மியம்’ கதைச் சுருக்கம்
இங்கு இடம்பெறும் பாடலைப் பிரதி செய்து எனக் குத் தந்தவர், மலேசியாவில் தபாலதிபராக இருந்து இளைப் பாறிய திரு. அருணுசலம் வினசித்தம்பி. இவரின் தந்தை யார் திரு. வினுசித்தம்பி அருணுசலம். இந்த அருணுசலமே இறங்கணியவளை குருநாதர்சுவாமி கோயில் கடைசிப் பூசா ரியாராக இருந்தவர். இவரிடம் ஏடுகள் பலவும் இருந்தன. பழைய முறை பற்றிய விளக்கம் பலவற்றையும் எனக்குத் தந்தவர், என் பெரியதாயார் திருமதி நாய்ச்சிப்பிள்ளை தம்பி முத்து. இவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் குலதெய்வத் தின் பெயர். இவரே பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குச் செவிவழி வந்த கதைகள், வழிபாட்டு முறை என்பன பற்றியும் எடுத்துரைத்தவர்.
வன்னிவளநாட்டிலே வன்னியனுர் ஆறுபேர் தனி யாட்சி நடத்தி வந்தனர். இந்த ஆறுபேரும் தமிழ்நாட் டிற்குத் தலயாத்திரை செய்ய விரும்பினர். ஆகவே, ஆட் சிப் பொறுப்பைத் தமது மாமன் நாகப்பரிடம் ஒப்

Page 7
- 8 -
படைக்க விரும்பினர். ஆறுபேரும் ஒருமித்துப் போவது சரியல்ல எனவும், நாட்டிலே ஆபத்து ஏற்படலாம் என வும் நாகப்பர் எச்சரிக்கை செய்தார். "நாகப்பர் இருக் கும்போது ஆபத்து எதுவும் நிகழாது " எனக் கூறிய வன்னியனுர் ஆறுபேரும் யாத்திரையைத் தொடங்கினர். நாட்டை நாகப்பர் நன்கு ஆண்டுவந்தார். பெருமலையை ஆண்ட நம்பி என்பான், வன்னியனர் நாகப்பருக்குத் தொல்லை கொடுத்து ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினன். உள்நாட்டுக் குழப்பத்தைத் தூண்டிவிட்டான். அதனை நாகப்பர் அடக்கிவிட்டார். பெருமலை நம்பி பறங்கியரின் துணையை நாடினன். பறங்கிப்படை வன்னியைத் தாக்கி யது. நாகப்பர் அதனை முறியடித்தார். போர் முடியும் போது நாகப்பர் குதிரையிலிருந்து வீழ்ந்து இறந்தார். மீண்டும் பறங்கியரை ஏவிவிட்டான் நம்பி. நாய்ச்சிமார் ஆறுபேரும் ஆண்வேடம் பூண்டு போரை நடத்தினர். கைக்கூவியாளன் ஒருவனைப் பறங்கியர் ஏவிவிட்டனர். அவன் பதுங்கி இருந்து வன்னித் தளபதியைத் தாக்கிக் கொன்ருன். வன்னிச்சியர் ஆறுபேரும் அவரின் பணிப் பெண் பொன்னச்சியும் தொடர்ந்து போரை நடத்தினர். பறங்கியரின் துப்பாக்கிப் படைக்கு வன்னியரின் படை ஈடுகொடுக்க முடியவில்லை. வன்னிப்படை நிலைகுலைந்தது. தோல்வியை ஏற்றுப் பறங்கியர் கைப்பட்டு மாசடைய இந்த ஏழு வீரப் பெண்களும் விரும்பவில்லை. ஆகவே, குன்றி மணியையும் செங்கல்லையும் சேர்த்து இடித்துத் தின்று ஏழுபேரும் மடிந்தனர். இவர்களின் செயலைக் கண்ணுற்ற வன்னிப் பெருங்குடி மக்கள், இந்த ஏழுபேரையும் தெய்வ நிலைக்கு உயர்த்தினர். தலயாத்திரையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஆறு வன்னியரும் பறங்கியருடன் போர் புரிந்து மடிந்தனர். அன்று தொடங்கியது வன்னிநாய்ச்சி வழிபாடு. வன்னிச்சிமார் ஏழுபேரும் குலதெய்வம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இதுவே கதையின் சுருக்கம். இதுபற்றி மேலும் ஆராய்ச்சி தேவை.
இந்தக் கதைக்கு வரலாற்று அடிப்படை உண்டோ ? இந்தக் கதை எக்காலத்திற்கு உரியது? போர்த்துக்கேயர்

۔ 9 -۔
காலத்திற்கு உரியதோ? அல்லது ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதோ? இவற்றைத் தக்க சான்றுகளுடன் நிறுவ வேண்டும்.
வன்னியர் யார் ?
வன்னியர்பற்றிப் பலரும் பலவிதமான கருத்தை வெளியிட்டுள்ளனர். சத்திரியர் என்பர்; வனத்துறைபவர் என்பர். சங்ககாலத்துக்கு உரியவர் வன்னியர். கிராமங்கள் அல்லது குடியிருப்புக்கள் அகத்தைச் சேர்ந்தவை. அகத்தின் புறத்தே அகத்திற்குப் படியாதவர் இருந்தனர். குடியிருப்பு எல்வேயில் சுடுகாடு, இடுகாடு இருக்கும். இங்கு வன்னி மரம் நிறைந்து இருக்கும். இந்த வன்னி மரங்களின்கீழ் பாசறைகளை அமைத்துக் குடிமனையைக் காத்தவர் வன்னி யர். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் வீரர். நிலப் பெயர் மரப் பெயராயிற்ருே அல்லது மரப் பெயர் நிலப் பெயர் ஆயிற்ருே தெரியவில்லை. முல்லை, பாலை, நெய்தல் என்பவற்றை நோக்குக. வன்னிமரத்தின் கீழ் வாழ்ந்து வீரம் புரிந்தவர் வன்னியர். வன்னிமரம் பற்றிய குறிப்பு " பதிற்றுப்பத்து ' என்னும் நூலிலே வருகின்றது. *
* வன்னிமன்றத்து விளங்கிய காடே “14 என்பது இவ் விடம் கவனிக்கவேண்டியது. மன்றம் என்பதைக் காவல் புரியும் கூட்டம் எனக் கொள்வதே பொருத்தம், இன்றைய நவீன காவல் நிலையத்தின் முன்னேடி இது எனலாம். * எல்லைக் கறுப்பன் " என்பது கிராமத்து எல்லையைக் காக் கும் கிராமியக் கடவுள் என்பது இங்கே கவனிக்கவேண்
-l-
காங்கேசன்துறை இறங்கணியவளை வன்னியஞர் வள வில் உள்ள வன்னிநாய்ச்சி கோயிலின் பூசாரியாரஈக இன்று இருக்கின்றவர் சைவத்திரு. அ. நாகமுத்து. இவர் வேளாண் குலத்தைச் சேர்ந்தவர்.

Page 8
میے۔ 10 ۔
இப்பகுதியில் உள்ள திராவிட வழிபாட்டிற்கு அமைந்த கோயில் யாவும் வேதாகம முறைக்கு மாறுகின்றன. கண் ணகியார் கோயில் யாவும் கண்ணகை அம்மன் கோயி லாக மாறிப் பின்னர் அம்மன் கோயில்களாக மாறுகின் றன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
"கண்ணகிக்கு இன்று அன்புடன் வண்ணச்சிலை எடுத்தார் ஒருவர். '
**கான வேங்கையின்கீழ்க் கனகமுலை இடந்து வானுல கடைந்தவர் ” பத்தினி கண்ணகி, கற்பினிற் சிறந்த வள் கண்ணகி ?? என்பது முதுமொழி. கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டிற்கே சிறப்பானது. தமிழ்நாட்டிலிருந்து ஈழ நாட்டிற்கு வந்து குடியேறிய தமிழர் தமது பண்பாட்டை யும் அப்படியே கொண்டுவந்தனர். இதன் பயனுக. ஈழத் தின் பல பகுதிகளிலும் கண்ணகி கோயில்கள் இருக்கின் றன. கடல்சூழ் இலங்கைக் கயவாகு கொண்டுவந்த கண்ணகி வழிபாடு புறம்பாக ஆராயப்படவேண்டியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கண்ணகி கோயில்கள் பல வும் கண்ணகை அம்மன் கோயில்களாயின. ஈற்றில் அவை வேதகாலத்து அம்மன் வழிபாட்டுக் கோயில்களாக மாறின. பத்தினித் தெய்வத்தின் இடத்தில் அம்மன் இடம்பெற் ருர், கண்ணகி கோயில் பூசாரிகளுக்குப் பதிலாக வேதி யர்கள் அம்மன் கோயிலில் பூசை செய்தனர். கண்ணகி கதைக்குப் பதிலாகப் புராணபடனங்கள் அம்மன் கோயிலில் இடம்பெற்றன. பழந் தமிழ் வழிபாட்டு முறைகள் இப்படி யாகக் கழிந்தன. ஒருசில கோயில்கள் மாத்திரம் பத்தி னியின் பெயரால் இன்றும் யாழ்ப்பாணத்தில் நன்கு நடை பெறுகின்றன. மற்றவையெல்லாம் அம்மன் கோயில்களாகி விட்டன. சிலவேளைகளில் புறனடைகளே பொதுவிதிகளாகி இருந்ததை நிறுவ உதவியாக இருக்கின்றன. அப்படியான் புறனடைப் புரட்சியொன்று நடந்ததைத் தீட்டி வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்

- I -
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் புண்ணியதலம். இதற்குக் கிழக்குப்பகுதியில் ஒரு கல் தூரத்தில் மயி லப்பை என்று ஒரு சிறு கிராமம் இருக்கின்றது. மிகவும் அமைதியான கிராமம். இங்கு வாழும் மக்களும் அமைதி யானவர்கள். இவர்களில் பெரும்பாலானேர் இன்றும் சைவ உணவு உட்கொள்பவர்கள். கோயில்களில் சிவ நாமம் சொல்வதில் இங்கிருந்த பலர் தேர்ச்சி பெற்றிருந் தனர். இந்த மக்கள் மாவை முருகனைத் 'தமிழோடு இசை பாடி’ வணங்கி வந்தனர். மயிலப்பை என்பது தமிழ்நாட்டிலுள்வ மைலாப்பூரின் திரிபு என்பர் ஆராய்ச்சி currentif
இங்கு மிகப் பழங்காலந் தொட்டுக் கண்ணகையார் கோயில் ஒன்று இருந்துவந்தது. இந்தக் கோயிலுக்குக் * கண்ணகி கதை ஏடு ஒன்றும் இருந்து வந்தது என்பது செவிவழி வந்த கதை, வைகாசி விசாகத் தினத்தன்று இக் கோயிலில் பொங்கல்-புழுக்கல்-படையல் எல்லாம் சிறப்பாக நடைபெறும். பறை முழங்குவதும் வழக்கம். வேதாகம வழிமுறைகளைப் பின்பற்ருமல் இக் கோயில் வழிபாடு செவ்வனே நடந்துவந்தது. கிராமத்தில் உள்ள முதியவர் ஒருவரே " பூசாரி"யாகவும் கடமை புரிந்து வந் தார். தினமும் விளக்கு வைத்து வழிபாடு செய்வது இக் கிராம மக்களின் வழக்கம். சிலவேளைகளில் நோயாளி யையே கோயிலுக்குக் கூட்டிச் சென்று மடையின் அரு கில் இருக்க வைப்பார்கள். பூசாரியார் அவருக்குத் திரு நீறு போடுவதும் உண்டு.
1877ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் வாந்தி பேதி நோய் பெருமளவில் ஏற்பட்டது. இந்தக் கிராமத் தைச் சுற்றியுள்ளவர்களுள் பல பெண்கள். கணவரை இழந்தனர்; குழந்தைகளை இழந்தனர்; தாய், தந்தையரை இழந்தனர்; கண்ணகையாரை அன்புடன் வழிபட்ட ஒரு குடும்பத்தில் இளைஞர் ஒருவரைத் தவிர எல்லோரும் உயி ரிழந்தனர். ஆத்திரம் மிக்க இந்த இளைஞர் கண்ணகை

Page 9
-سس. ?il --
யார் முன்னின்று புலம்பி அழுதார். "அம்மா. தாயே! நீ இதனைப் பார்த்துக்கொண்டிருக்கிருயே! உனக்குக் கண்ணில்லையோ? நீ இந்தக் கிராமத்தில் இல்லாமலிருப் பதுதான் நல்லது” என்று கூறிவிட்டுக் கோயிலுக்கு நெருப்பு வைத்துவிட்டார். கோயில் எரிந்து சாம்பராகி யது. நோயும் நீங்கியது. எரிந்த கோயிலில் இருந்த கண் ணகி சிலை உடைந்து சேதமடைந்தது. இருந்தும் அந்த ஊர் மக்கள் அந்தச் சிலையை வைத்து வணங்கிவந்தனர்.
தமிழ்க் கடவுளரை வேதாகமக் கடவுளராக மாற்றும் சமய அலை ஒன்று எழுந்தது. இதன்படி மயிலப்பைக் கண்ணகி கோயில் குருந்த மரத்து இராசராசேசுவரி கோயி லாக மாறியது. அந்தணர் இக் கோயிலைப் பொறுப் பேற்றுப் பூசை நடத்தினர். கையுடைந்த கண்ணகியார் ஒரு முலையில் வைக்கப்பட்டார். ஏதோ சிறு அளவில் பூசையும் நடந்தது. இருந்தபோதும் வைகாசி விசாகப் பொங்கலை இப்பகுதி மக்கள் கைவிடவில்லை. சேரன், செங் குட்டுவன் அன்று கண்ணகிக்குச் சிலை எடுத்தான். ஆனல் இது மக்கள்யுகம். மன்னர் இல்லாத காலம். எனவே. இந்தப் பகுதி மக்களின் சார்பில் திரு. நாகலிங்கம் இராமலிங் கம் என்னும் நல்லாசிரியர் வள்ளல், சிலை எடுத்தார் கண் ணகிக்கு. இந்தச் சிலையைச் சமைத்தவர் தமிழ்நாட்டுச் சிற்பாசாரியார் பெரியசாமி. கண்ணகியை எங்கு எழுந் தருளச் செய்வது என்பது பெரும் சிக்கலாகிவிட்டது. இராசராசேசுவரி எழுந்தருளும் கோயிலின் உள்ளே கண் ணகியை வைக்கக்கூடாது என்பது வைதீகர் சிலரின் கருத்து. தமிழ் அன்பர் இராமலிங்கமும் அவரின் சகோதரர்களும் இலகுவில் விட்டுக் கொடுக்கவில்லை. ' எங்கு கண்ணகி யார் இருப்பதுபற்றி விவாதம் வேண்டாம்; இந்த இடத் தில் எங்காவது பத்தினிக் கடவுள் இருந்தாற் போதும்" என்பதை அவர்கள் அடக்கமாகச் சாதித்தனர். இராச ராசேசுவரி கோயிலின் வடகிழக்கு மூலையில் கண்ணகி யாருக்குச் சிறிய கோயிலொன்று உருவாகியது. இதற்குரிய மடைகளை நடத்துவதற்குக் கிணறு ஒன்றும் வெட்டப்பட்

-- : i است.
டது. இங்கிருந்து பத்தினிக் கடவுள் அருள்பாலிக்கின்ருர். அன்றைய பொதுவிதியை உண்மைப்படுத்துகின்றது இன் றைய புறனடை, மக்கள் யுகத்தில் கண்ணகியாருக்குச் சிறந்த தமிழ் அன்பர் நா. இராமலிங்கம் இன்று சிலை எடுத் தார். இது நிகழ்ந்தது 1970ஆம் ஆண்டு யூன் (ஆணி) மாதமளவில். இது நிகழாவிட்டால் கண்ணகி கோயிலிருந்த கதை கனவாகிப் பழங்கதை ஆகியிருக்கும்.
' ay aspb " " 9-1 o 1974

Page 10
11.
2.
13.
14,
- 14 -
சென்னைப் பேரகராதி - தொகுதி 5 [ lä፧ , 8186
"ஈழத்துச் சைவக் கிராமிய வழிபாடு - த. சண்முகசுந் தரம் - நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நிகழ்ச்சிகள் - பக். 57
"குருநாதர் மான்மியம்" - த. சண்முகசுந்த ரம்
சென்னைப் பேரகராதி - தொகுதி 3 பக், 1248 * சத்தமாதர் " - சூடாமணி நிகண்டு
*" வட்டுவாகல் சப்தகன்னியர் கோயில் வரலாறு"
- முருகுப்பிள்ளை முத்தையா
*வற்ருப்பளை கண்ணகை அம்மன்" - பக். 71 (1978)
“Toumil Culture ”” Vol. VIII No. I - Page 29
- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
“The Wanni and The Wanniyas ”” — C. S. Navaratnom – Page 36
'" Hinduism in Ceylon '' - Rev. Cartman - Page 78
* வன்னிநாட்டை அரசு புரிந்த வணிதைகள், பறங்கிய
ருடன் போரிட்டு உயிர் நீத்த வீரப் பெண்கள் -
நாய்ச்சிமார் ' - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
* தினகரன் " 12.11-50
"சீகாளத்திப் புராணம் ' செய்யுள் 32 - 68 * தினகரன் "" அதே பிரதி
*பதிற்றுப்பத்து" - ஒளவை துரைசாமி பதிப்பு
செய்யுள் 44 பக். 241
“மன்றம் ' - சபை; சபை கூடுமிடம் ; வெளி இரு பொருளிலும் வரும் சொல்.

நன்றியுரை
இந்த நூல் உருவாதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர் அறிஞர் நா. இராமலிங்கம். இவரின் தமிழ் ஆர்வம்மிக்க தொண்டுதான் கண்ணகிக்குச் சிலை வைக்கச் செய்தது. நான் சோர்வுறும்போதெல்லாம் இவர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவார். இப் பெரியாருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
": மக்கள்கலை பற்றிய என் ஆய்விற்குப் பெரிதும் உத வியவர் இளைஞர் பலர். ஒருவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளராகக் கடமை புரிகின்ற திரு. கனகசபாபதி நாகேசுவரன். இவர் தமிழைச் சிறப் பாகப் படித்துக் கலைமாணிப் பட்டம் பெற்றவர். மற்ற வர் தொல்பொருளியலைச் சிறப்புப் பாடமாகக் கற்று முதுமாணிப் பட்டம் பெற்ற திரு. பொ. இரகுபதி. இவர் இப்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாளராகக் கடமை புரிகின்றர். இவர்களுடன் திரு. க" சரவ்ணபவன், பி. ஏ. (இலங்.), திரு. வீ. கதிர்காமநாதன் பி.ஏ., திரு. சி. செ. சண்முகநாதன், பி. ஏ. (இலங்.), யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத் துணை நூலகர் திரு. ஆ. சிவநேசச் செல்வ்ன், எம். ஏ. ஆகியோரும் சேர்ந்து ' சங்கமம் ' என்னும் இலக்கிய ஏட்டை நடத்தினர். அந்த ஏடு தர மானது. இருந்தும் அது பேராசிரியர் க. கைலாசபதி கூறு வதுபோல எதிர்நீச்சலடித்து அகால மரணம் அடைந் தது. இருந்தும் சங்கமக் குழுவிலே சேர்ந்த அனைவரும் எனக்குப் பெரிய துணையாக அமைந்தனர். இவர்களுக்கு என் நன்றி.
இந்த நூலைச் சிறப்புற அச்சிட்டுத் தந்த காங்கேசன் துறை சந்திரா அச்சக உரிமையாளருக்கும் என் நன்றி உரித்தாகுக.
555 arru6) கோவிலடி த. சண்முகசுந்தரம் தெல்லிப்பழை, 1. 9. 81

Page 11
ଖୁଁ -
வன்னி நாய்ச்சி மார் மான்மியம்
காப்பு
வன்னி நாய்ச்சிமார் வளம்நிறை புகழ்பாட தன்னிக ரில்லாத் தனிக்கொம்பர் காப்பாமே.
உத்தமியை இடப்பாகம் வைத்தபெரும் பிரானுகும் பித்தனே உன்கருணை என்றென்றும் வேண்டினனே.
முத்துக் குமாராவென் முதுதமிழ்க் காவலனே தித்திக்கு முன்னருளை நித்தமும் வேண்டினனே.
முருகப் பெருமானுக் கேவல்கள் செய்யும் பெருவிழி நாய்ச்சி அம்மன் புகழ்வாழி.
காங்கேயன் பதிவாழும் காதலரின் மாதாக்கள் பாங்கான வரலாறு நான்பாட விழைவுற்றேன்.
வன்னியனுர் வளம்நிறைந்த வளவிலுறை
மாதாககள பொன்னனையார் பொற்சிலம்புத் தாழ்தொழுது ஏத்துவனே.
தரல்
பழம்புகழ் வாய்ந்தவில் விலங்கா புரியில் பழமை சான்றதெம் வன்னிவள நாடாம்.
இப்பகுதி வளநாட்டை வன்னியன ரறுவர் தப்பாமல் தனியாட்சி நல்லாகப் புரிந்தார்.

- 17 -
ஆறுதலை யாரிமாரும் ஆவலுடன் நன்மைதிகழ் வீறுடனே யாத்திரை புறப்படவே நினைத்தார்கள்.
எல்லோரு மொருங்காக எழிலுடனே
புறப்பட்டால் பொல்லாங்கு யாதேனும் நாட்டிற்கு நேரிடலாம்.
இப்படிநா கப்பநயி னரெச்ச ரிக்கை மெத்தவே யோசித்து மேலாக் விடுத்தார்.
அம்மானே நீரிருக்க இம்மாநி லம்வாழும் எமக்காபத் தேதும் அடுத்துவர நியாயமில்லை.
இம்மாதம் யாத்திரையை யாம்செய்ய
நினைத்தனமே இம்மென்னு முன்னே மீண்டிங்கு வருவோமே.
நிலைகுலைத லில்லாத வன்னியன ரறுவருமே
தலைகுனிந்து மாமன்றன் அடிதொழுது
சொன்னர்கள்.
ஆறுதலை யாரிமாரும் ஆவலுடன் நன்மைதிகழ் வீறுடனே யாத்திரையைப் புறப்பட்டுச்
சென்ருர்கள்.
தலையாரி மார்களின் மாமனுர் நாகப்பர் நலமிகுந்த நாடதனை யப்போது ஆண்டிருந்தார்.
நாகப்ப நயினரும் நல்லவன்னிப் பாகமதைத் தளம்பாமல் திட்பமுடன் திறனேங்கத்
தானுண்டார்.

Page 12
தரிக்குள்ளன் மாரீசன் தீங்குவினை புன்மதியன் பெருமலையில் நம்பியாரும் மனந்திரிந்து
சூழ்வுற்ருன்.
சுந்தரஞ்சேர் வன்னிநாட்டு ஆட்சிதனை அபகரிக்க குந்தகங்கள் பலவிளைத்துக் குறுநரியாய் ஒளித்து
நின்றன்.
மறவரையும் குறவரையும் மதிகெட்ட வேறுபல
குறுநிலத்து மக்களையும் நம்பியிவன்
தூண்டிவிட்டான்.
வேறு
வீரம் மிகுந்த நாகப்ப நயினரி தீரம் பெருகப் பொருதவரை அடக்கினர்.
குள்ளம் மிகுந்த நரியென்னும் நம்பி கள்ளப் பறங்கித் துணைநாடி யழைத்தான்.
சுத்த வீரன் நாகப்ப நயிஞர் பறந்து பறங்கியை வெட்டிப்பந் தாடினர்.
வெற்றி கிட்டிய பின்னர் நாகப்பர் கொற்றப் பரியிருந்து நிலத்திலே வீழ்ந்தார்.
அறிவு தெளியாமல் மூன்ரும்நாட் போது அரனடிக் கமலத்தை அணைந்தின்ப முற்ருர்,
நல்ல நயிஞர் நாகப்பர் மறைவால் வலிமை மிகுவன்னி நாடும் தளம்பியது.
குள்ள நரிநம்பி குறிபார்த்து மீண்டும் கள்ளப் பறங்கியை ஏவிவிட் டானே.

حسن۔ 19 حس۔
நாய்ச்சிய ராறுபேரும் யோசித்துப் பின்னர் ஆச்சரிய சாகசங்கள் ஆற்றிப் புகழ்கொண்டார் . பெண்மை மறைய ஆண்வேடம் பூண்டு கண்கள் கணல்தெறிக்க அமர்க்களத்துக் குதித்தார். துப்பாக்கிச் சூத்திரம் தாங்கும் பறங்கி இப்பால் வராமல் அவர்நின்று பொருதார். சூழ்ச்சி மிகுந்த நம்பியார் வன்னி வீழ்ச்சி தனக்காண வேட்கைமிக வுற்ருன்
உற்ற பெருங்காதல் உந்திவரு நம்பி பற்றுகைக் கூலி ஒருவனை ஏவினன்.
கைக்கூலி வீரனும் கபடமாய்ச் சென்றந்த அக்கரைச் சீமையில் மறைவாக இருந்தான்.
மதிதளரா வன்னித் தளபதி தன்னையே பதுங்கித் தாக்கினன் கைக்கூலிக் கயவன். தன்னிக ரற்ற தீரமிகு வீர வன்னிப் படைமீண்டும் வாடிக் கலங்கியது. ஆறுவன் னி நாயகியும் பொன்னிச்சிப் பெண்ணும்
மாறுவேடம் பூண்டுகாடு மறம்விளைக்கப் புக்கார்,
பறங்கியரை நேரெதிர்த்துப் போர்நின்ற வீரர் கறங்குபோல் விற்பிடித்துக் கடுஞ்சமரை
; விளைத்தார்.
துப்பாக்கிச் சூத்திரம் தாங்கிவரு பறங்கியர் தப்பாமற் தாக்கினர் வன்னிமற வீரரை.

Page 13
--سے 20 ۔۔۔
மலைத்துநின்ருர் வன்னிமறப் போராளர் அம்மா நிலைகுலைந்து நெறிகெட்டுத் தத்தளித்து நின்ருர்,
சோர்வினல் நிலையழிந்த வன்னிமற வீரர் போரற்றுக் காட்டகத்து ஒதுங்கினரே அம்மா.
உத்தமியர் மூவிரண்டு மாதாக்கள் ஆங்கே மெத்தவே சிந்தித்து முடிவிதனைச் செய்தார்.
மாற்ருனின் கரம்பட்டு மாசுபடும் மானமதை ஏற்காது மாதாக்கள் உயிரிழக்கச் சித்தமானர்.
பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை செங்கல் லுடனிடித்துத் துவைத்துக் காந்தாங்கி
குலதெய்வம் அத்தனையும் மனங்கரைந்து
மாதாக்கள்
பலமுறையும் கைதொழுது நீர்வாரப் புகழ்பாடி
பேராறு மாதாக்கள் பணிப்பெண் ணுடன் சேர்ந்து வீரா வேசமுடன் நஞ்சுண்டு மடிந்தனரே.
கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது அற்புருக நின்றர்கள் வன்னிவள நாட்டினர்கள்.
பாங்கான துறைமுகமாம் வடபகுதிப் பெரியதுறை காங்கேயன் துறைசேர்ந்தார் நாடுசென்ற
. வன்னியர்கள்.
வீரப்போர் புரிந்துயிரை விட்டிழந்த ஏழு நாரியரின் கதைகேட்டு மனமழிந்தார்
வன்னியர்கள்.
ஆறுவன்னி நயினரும் ஆவேசத் தோடெழுந்து மாறுபட்ட பறங்கியரோ டமராடி மடிந்தார்கள்.

سیمہ . 22 --
கற்புநிறை மாதாக்கள் எழுவரையும் அவர்தங்கள் பொற்பாதம் மலர்தூவிப் போற்றிப்
புகழிசைப்போம்.
மங்காப் புகழுற்ற மாதாக்கள் எழுவரையும் இங்கேயே சிலைவடித்து இடர்நீங்கத்
தொழுவோமே.
சீரான வன்னிவள நாட்டில்வந்த நாய்ச்சிமாரே பேரான எமதுபெண்கள் குலம்வளரக் gnrt' i 'f GBer.
கன்னியரின் துயர்நீக்கும் வன்னிவள மாதாவே பொன்னன அவர்தாலி பொலிவடையக்
gnrt i 19'GBur .
மங்களம்
ஒற்றைக் கொம்பன் ஏரம்பன்
திருத்தாள் என்றும் வாழியவே நெற்றிக் கண்ணன் நிமலனருள்
நித்தம் நித்தம் வாழியவே பற்றிப் பாவ வினைதீர்க்கும்
குமரன் நெடுவேல் வாழியவே வெற்றிக் குமரன் பணிசெய்யும்
மாதா எழுவரும் வாழியவே கொற்றக் குடிகள் காங்கேயன்
பதிவாழ் நித்தம் வாழியவே.
சுபம்