கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோயில்

Page 1
/>2っ
 

751 Ko/25%/ހި
earnegies சைவந்தி விளங்கு உலகமெல்லாம்
கோயில்
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை
கொழும்பு *L* エリ李 cm cm cmற வெளியீடு

Page 2

சிவமயம்
கோயில்
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்

Page 3
வெளியீடு :
கொழும்பு அண்டர்சன் மாடிநிரைச் சைவ கலாசார மன்றம் As 1 - 979
முதலாம் பதிப்பு
அச்சுப்பதிவு : செங்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், தொலைபேசி 7853
பதிப்புரிமை ஆக்கியோனுக்குரியது

வெளியீட்டுரை
"கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பரவியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி?
- பெரியபுராணம் இப்பூவுலகின்கண்னே முதன் முதல் அமைக்கப்பட்டி. தலம் சிதம்பரமேயாம்.
கோயில் என்ற பதம் சிறப்பாகச் சிதம்பரத்தையே குறிக் கின்றது. ஏனேய தலங்கள் யாவும் சிதம்பரத்தின் பாவனை யாக அமைக்கப்பட்டவையாகும். இவை கள் திருக் கோயில்கள்" என்று அழைக்கப்படுகின் றன.
திருக்கோயில் வழிபாடு சைவர்களாகிய ாமக்கு இன்றி யமையாததொன்ருகும். எனவே இத்திருக்கோயில்களுக் கெல்லாந் தலையாயதாய் விளங்குஞ் சிதம்பரம் என்கின்ற கோயிலைப்பற்றிச் சைவசமயிகள் அனைவரும் அறிந்திருந்தல் மிக அவசியமாகும்.
சைவப்பெரியாரி கலாநிதி பண்டிதமணி ஐயா அவர்கள் கோயில்பற்றி எழுதிய கட்டுரைகள் நூல் வடிவெடுத் தாலோ என்முெரு எண்ணம் எமது கவனத்தை ஈர்த்தது. அந்நூல் தாமே வெளியிட்டாலோ என்ற ஓர் அவா எமது அங்கத்தவர்களிடையே தோன்றிற்று. அஃதே இவ்வெளி யீடாய் மலரிந்துள்ளது.
ம்ேலத்தேச நாகரிக மோகம் மிகவுள்ள கொழும்பு மர நகரில் அமைந்துள்ள அண்டர்சன் மாடி நிரையில் வதியும் சைவர்களிடையேயும், ஏனைய சைவர்களிடையேயும் சைவம் தழைக்கவும், சைவசமயாசாரங்களைப் பேணவும் மலர்ந்ததே எமது அண்டர்சன் மாடிநிரைச் சைவ கலாசார மன்றம்.
இத்தகைய நோக்குடன் கிமிைக்கப்பெற்ற எமது மன் றம் இந்நூலின் வெளியிட ஒர் அரிய சந்தர்ப்பத்தை

Page 4
ii
அளித்த பண்டிதமணி ஐயா அவர்களுக்கு முதற்கண் நன்றி நவிலக் கடப்பாடுடையோம்.
இந்நூலிளைச் சிறப்பாக அழகுற அச்சிட்டுதவ முன்வந்த செட்டியார் அச்சக்த்தினருக்கு எமது மனப்பூர்வமான நன்றி. இவை யாவற்றுக்கும் ஆதி முதல் அந்தம் வரை உறுதுணையா யும், வழிகாட்டியாயும் இருந்துதவிய பண்டிதம்ணி நூல் வெளியீட்டுச் சபையின் காரியதரிசி திரு. அ. பஞ்சாட்சரம் அவர்களுக்கு எமது நன்றி உரித்தாகுக. கட்டுரைகளை அழகுறப் பிரதி செய்துதவிய பண்டிதர் ச. சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கு எமது விசேட நன்றி.
ஆறு கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இந் நூல் சைவ சாதகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் ான்பதில் சிறிதும் ஐயமில்லை. பண்டிதமணி ஐயா அவர்கள் இன்னுேரன்ன பல நூல்களை எழுதிச் சைவ அன்பர்கள் பய னுறும் வண்ணம் அம்பலக் கூத்தனைப் பிரார்த்திப்போமாக,
“ஞானநூல் தனையோதல் ஒதுவித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்ற ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம் ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம் ஆனமையான் மேலான ஞானத்தால் அரனே
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்"
- சிவஞானசித்தியார்
G6). 7. F. LDrtug- சிவசத்திவேல்
களரவ காரியதரிசி அண்டர்சன் மாடிநிரை அண்டர்சன் மாடிநிரைச் கொழும்பு-5 சைவ கலாசார மன்றம்,
00-79

முன்னுரை வரலாறு=
சிதம்பர மகிாத்மீயப் பிரபாவம் பெரியபுரான சூச னத்தில் விஸ்தாரமாகப் பிரசரிக்கப்பட்டது. அதன் சாரம் பெரியபுராண வசனத்திற் சொல்லப்பட்டது. இவற்றை இரண்டிடத்தும் தில்லைவாழந்தனர் சருக்க மூகப்பிற் காண லாம். காட்டியவர்கள் பூரீலபூரி ஆறுமுகநாவலர் பெருமான், சிதம்பரத்துக்கு வடமொழியில் அநேக மான்மியங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று சிதம்பர மான்மியம்.
சிதம்பரத்துக்கு மற்ருெரு பெயர் கோயில் கோயிற் புராணம் அருளியவர் உமாபதிசிவாசாரியர். இப் புராணத் தின் உயர் தனிப் பெருமை மகத்துக்களாற் பாராட்டப் படுவது
சிதம்பர மான்மியத்தைத் தமிழ் செய்தும் கோயிற் புராணத்துக்கு உரை செய்தும் வெளிப்படுத்தியவர்கள் நாவலர் அவர்கள். s
சிதம்பர மான்மியத்தையும், கோயிற் புராணத்தையும் அடியொற்றி நாவலர் வசனங்களை அப்படியே பிரயோகித்து எழுதப்பட்டது கோயில். ר
இதில் வரும் முனிவர் வரலாறுகள், இரணியவன்மர் வரலாறு, நடராஜ நடனம், தில்லைமூவாயிரவர் பெருமை என்றிவை, ஆத்மீக வாழ்க்கைக்கு வழி செய்பவை,
1955 ஆம் ஆண்டு தினகரனில் ஆறுபாகமாய் வெளி வந்தது இக் கோயில் வெளியீடுக
அன்பரும் ஆத்மீகச் செல்வருமான அமரர் திரு அ. துரை ரத்தினம் அவர்களின் நினைவுமலராய், கோயில் வெளிவர எண்ணியதுண்டு. திரு. துரைரத்தினம் அவர்களின் குமா ரர்கள் கொழும்பு அண்டர்சன் மாடிநீரைச் சைவ கலா சார மன்றம் வெளியீடு செய்வதைப் பெரிதும் விரும்பி ஞர்கள். அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட்டதோடமை பாது மேற்படி மன்றத்துக்கு நன்றி தெரிவித்தலையுங் கட கைக் கொள்ளுகின்றேன்;

Page 5
V
கொழும்பு அண்டர்சன் Los:74 pappriề சைவ கலாசார மன்றம் நீடு Gnurrbas. வழிபாடு:- & W
கோயில் வழிபாட்டில் சிந்திக்க வேண்டிய இரு சிந்தனை கன் பின்வருமாறு. 1. "தீதும் நன்றும் பிறர்தர வாரா" (புறம் 192)
என்பது ஒன்று பிறர், பிற வெறும் வாயில்கள். தம் துன்பத்துக்கு வாயில்க3 நோவது எய்தவனிருக்க அம்பை நோவதாம். நம் துன்பங்கள் நாம் தேடியவைகள்: தவத்தாற் போக்க வேண்டியவைகள், .ே "தன்னைத்தான் காதலஞயின் எஇரத் தோன்றும்
துன்னதிக தீவினைப் பல்? (திருக்குறள் 209)
காதல் - அன்பு துன்புறுத்துவோன் தன்மேலன்பில்லாதவன். துன் புறுத்தல் உய்தியில் குற்றம்; அதற்குச் சாந்தியில்லை. பிற உயிரைத் துன்புறுத்த எவனுக்கும் அதிகாரமில்லை. துன் புறுத்துவோன் இருக்கிற வினே போதாமல் மேலும் விஜண யைப் பெருக்கிக் கொள்ளுகின்றன்.
துன்புறுவோன் நில்யிலும் துன்புறுத்துவோன் நிலையே
பரிதாபகரமானது. யாவரும் தம்ம்ேல் தசம் அன்பு செய்வாராக,
YA ★
இந்த இரு சிந்தண்களும் கோயில் வழிபாட்டில் இரு விரதங்கள் குேகி.
ஆலயந் தொழுவது சாலவும் நன்று asaurarrão GS, சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
0 - 10 - 79

கோயில்:
விசேட விஷய விஞ்ஞாபன சூசிகை
1. சிதம்பர தலமகிமை:
2.
வியாக்கிரபாதர்:
o
ii.
iii.
ίν.
o
ii.
iii.
மத்தியந்தின முனிவரின் புதல்வர் வியாக்கிரபாதர் ஆனது முனிவர் உலகில் பெருவியப்பையும் மதிப் பையும் நல்கியது. வகிட்ட மகாமுனிவர் ஓடோடி வந்து, மத்தியந்தின் ரோடு கலந்து, வியாக்கிரபாதருக்குத் தம் சகோ தரியைத் திருமணம் செய்து வைத்தார். உபமந்யு உதயமாயினர். இவரே பாலுக்கழுது பாற்கடல் பெற்றவர். பூரீகிருஷ்ணனுக்குத் திருவடி தீகூைடி செய்த பரமாசாரியர். ஒரு நாள் வியாக்கிரபாதர் சுனாமி சந்நிதியில் சிவ யோகம் தலைக்கூடியபோது தேவதாருவன நிருத்த தரிசனம் கிடைத்தது.
பதஞ்சலி முனிவர்:
இவர் அதிசேஷரின் அவதாரம். ஒரு சமயம் தம்மீது சயனத்திலிருந்த திருமால் திடீரென்றெழுத்து, தேவதாருவனத்தில் அங்குள்ளார்க்கு அநுக்கிரகிக் கும் முகிம்ாகச் சிவபெருமான் நிகழ்த்திய திருநிருத்த தரிசனத்தை நினைவு கூர்ந்து ஆனந்த பரவசரா விருத்தார். இதனைக்கண்ணுற்ற ஆதிசேஷருக்கும் அந்த திருத்தத்தைத் தரிசிக்கும் ஆசை பெருகிற்று. அக்கணம்ே திரும்ால் விடை கொடுத்து, முன்ஞெரு சமயம் ஆதிசேஷரெடுத்த பதஞ்சலி வடிவத்தை எடுக்கச் செய்து வழிப்படுத்தினர். பதஞ்சலியாரி தவம் செய்து சிவனருளால் தில்லை சென்று வியாக்கிரபாதரை அணைந்தார்.

Page 6
iv.
vi
புலியும் பாம்புமாகிய இருவரும் நிருத்த தரிசனத் தின் பொருட்டு, குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தரிசனத்தின்பொருட்டு வேறும் பரிaக்குவர் பலர் வந்து சேர்ந்தார்கள்.
மிக முன்னமே நிருத்த தரிசனத்தின் பொருட்டு அங்கே காத்திருந்தவர்கள் திருவுடையந்தணரி மூவாயிரவர். அவர்களும் குறிப்பிட்ட முனிவர்க ளோடு வந்து சேர்ந்தார்கள்.
4. நடராஜ நிருத்தம்:
o
ii.
தைப்பூசம், வியாழக்கிழமை, சித்தயோகம், மத்தி யான நேரம் சிதம்பரத்தில் நிருத்ததரிசனம் கிடைத் 历多f• இந்த ஆனந்த நிருத்தம் என்றும் இங்கே நடக்க வேண்டுமென்று பதஞ்சலி முனிவர் வேண்டிக் கொண்டார்.
சிங்கவன்மர் இரணியவன்மரானது:
i. ii.
சிங்கவன்ம்ர் வருகை. சிவகங்கையில் முழுகி, இரணியவன்மராய் உபமந்யு
வுக்குத் தம்பியுமாயினுரி,
இரணியவன்மர் சோழரானது:
i.
ii.
தில்லை மூவாயிரவரி அந்தர் வேதிக்குச் செல்ல நேரிற்தது. வசிட்கூர் வருகை
i. இரவியவன்மர் இகளsதேசம் போய் மீண்டது.
ίν.
V
νi.
மீளும்போது தில்ல்மூவாயிரவரையும் கொணர்ந்
தது. ஒருவரைக் காணுது திகைத்தது.
பதஞ்சலி முனிவர் சிதம்பராலய பூசைகள் பற்றிப்
பத்ததி செய்தது.
இரணியவன்மரி சோழராய்ப் பதஞ்சலி பத்ததிப்
s நிற்திய நைமித்தியங்கள் நடாத்தி வருவாரா
ஞசி.

3.
4.
Baյսօամ,
கோயில்
பொருளடக்கம்
வெளியீட்டுரை
முன்னுரை
விசேட விஷய விஞ்ஞாபன சூசிகை
சிதம்பர தல மகிமை
வியாக்கிரபாதர்
பதஞ்சலி முனிவர்
நடராஜ திருத்தம்
சிங்கவன்மர் இரணியவன்மரானது
இரணியவன்மர் சோழரானது
iii
s
多罗
30
36

Page 7
6. திருக்கைலாசச் சிறப்பு
அநாதிமலமுத்தராய், நித்தியராய், வியாபகராய், எல்லா வறிவும் எல்லாமுதன்மையும் எல்லாவநுக்கிரகமு முடையராய், ஆன்மாக்களிடத்தே பதிந்தகைம்மாறந்ற பெருங்கருணையிஞலே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந் தொழில்களையும் இயற்றதியற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமான், ஒரு திருமுகமும், சந்திரன் சூரியன் அக்கினி என்னும் முச்சுடர்களாகிய மூன்று திருக்கன்களும் கங்கையையும் பிறையை யும் கொன்றைமாலையையுஞ்சூடிய சடாமுடியும், சங்கக்குண்டலத் தையும் தோட்டையும் அணிந்த திருச்செவிகளும், காளகண்டமுஉே மான் மழு அபயம் வரதம் என்பவைகளோடுகூடிய நான்கு திருக் கரங்களும், விபூதியினுலே உத்துரளிக்கப்பட்ட செம்பவளத் திரு மேனியும், வெள்ளைப்பூணுரலையும் எண்ணிறந்த பிரம விட்டுணுக் களுடைய என்புமாலைகளையும் பிரமகபாலங்களையும் அணிந்த திரு மார்பும், புலித்தோலையுடுத்து உடைவசளுடனே கச்சையுடைத் தாய் விளங்குந் திருவரையும், வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்கும் செநீ தாமரை மலர்போலுந் திருவடிகளும் உடைய பூரீகண்டசரீர சரீரி யாய், பலவிரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட விெள்ளிமயமாகிய நானுவித சிகரங்களோடுகூடிய திருக்கைலாசமலையிலே, செம்பொற் நிருக்கோயிலிலே, பூதர்களுட் பலர் நானவித வாத்தியங்களை முழக்க, பலர் இருபுறத்தும் வெண்சாமரம் வீச வேறுபலர் ஆலவ்ட் பகம் அசைப்ப, தும்புரு நாரதர்களும் விஞ்சையர்களும் இசைபாட கனநாதர்கள் என்புகளெல்லாம் அழலிடைப்பட்ட வென்ணெய் போலக் கரைந்து நெக்குநெக்குருகவும், சரீரநடுங்கவும், உரோமஞ் சிலிர்ப்பவும், மதகினிற் புறப்படுஞ் சலம்போல ஆனந்தவருவி சொரி யவும். பேரானந்தப்பெருங்கடலுட்டிளைந்து ஆடிப்பாட, முனிவர் கிள் தங்கள் கைகளைச் சிரசின்மீது குவித்து வேதசிரசுகளாகிய உப நிடதங்களை எடுத்தோத, பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்கள் திருநந்திதேவருடைய வேத்திரப்படையிஞலே பலமுறை விலக்கப்பட்டும் அடிக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் ஆடையை ஒதுக்கிவாய்புதைத்து நின்று தத்தங் குறைகளைக்கூற, அதற்தகோடி சூரியர்களது ஒளியைப்போலும் பேரொளியையுடைய திவ்வித சிங் காசனத்தின்மேலே, தமது அருட்சத்தியும் உலகமாதாவுமாகிய பார்ப்பதிதேவியார் தமது இடப்பாகத்தின் மேவ, வீற்றிருந்தருளு atif. - நாவலர்

1. சிதம்பர தல மகிமை
திருச்சிற்றம்பலம் என வழங்குகின்ற சிதம்பரத் துக்குக் கோயில் என்றும் பெயர்.
இந்தப் பூமியிலே முதன் முதல் உண்டான கோயில் சிதம்பரம் ஆகலாம்.
சந்தான குரவருள் ஒரு வர f ன உமாபதி சிவாசாரியர் சிதம்பர தலத்துக்கு ஒரு புராண ஞ் செய்திருக்கின்றர். அந்தப் புராணத்துக்குக் கோயிற் புராணம் என்று பெயர், கோயில் - சிதம்பரம்,
கோயிற் புராணத்தில் வருங் கதைகளினுலே, கோயில் எப்படி உண்டாவது ? அங்கே பூசனை வழிபாடுகள் எப்படி நடப்பது ? என்கின்ற விசா ரத்துக்குரிய விஷயங்கள் ஊகித்து உணரக்கூடிய வைகள்.
புராணத் தொடக்கத்திலே மத்தியந்தினர் என் கின்ற முனிவர் கதை வருகிறது.
மத்தியந்தின முனிவர் ஒரு காட்டில் ஒரு சிறு குடிசையில் வசித்து வருகின்றர். அவருக்கு ஒரு மகன்; இளங்குழந்தை. குழந்தை முனிவருக்குத் தந்தை முனிவர், பாடஞ் சொல்லி வைக்கிருர், ஒரு நாள் கடவுள் வழிபாடுபற்றி உபதேசம் நடந்தது. அப்பொழுது குழந்தை முனிவர் தந்தை முனிவரை ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி இது:

Page 8
2 - கோயில்
"கடவுளை எங்கே தரிசிக்கலாம்??
கேள்வி கேட்டபோது தந்தை முனிவர் ஈன்ற பொழுதினும் பெரிது உவந்திருப்பார். ஆனல், அத%ன அவர் வெளிக்காட்டவில்லை. அவர் சொல்லு கின் ருர்:
மகனே, உன் கேள்வி உள் தவக்குறை'வ்ைக் காட்டுன்றது. இதோ பார்,
ஆகாயத்துள் நின்று கொண்டு, “ஆகாயத்தை எங்கே காணலாம்" என்று கேட்கலாமா ?
கடவுள் சர்வ வியாபகர் ஆகாயமே கடவுள் வியாபகத்துள் அடங்கிய ஒரு சிறு தூசி. நாமெல் லாம் வியாபகத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கிற அற்ப அணுக்கள். கடவுள் நமது உடம்பையும் இ.யிரையும் உலகையும் உள்ளும் புறமும் ஊதிருவியிருக்கின் ருர்,
* அவனே அகன்று எங்கு இன்றம் "
‘கடவுள் எங்கே யிருக்கிருர்?' என்ற கேள்வியும், கேள்வி கேட்போரும், அந்தக் கடவுளை விலகி நிற்ப தில்லை. கடவுளுக்குள்ளே நின்றுதான், "கடவுள் எங்கே" என்று கேட்கின்ருேம். இதற்குத்தான் ஆட்டைத் தோளிலே வைத்துக்கொண்டு, ஆடு தேடினவன் கதை சொல்லுகிறது. உலகம் முழுவ தும், ஆடு தேடுகிறவன் நிலையிலே கூட இல்லை. "அப்படி ஒரு ஆடு இருப்பது என்ன நிச்சயம்" என்று உலகஞ் சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்கின்றது.

விதம்பர தலமகிமை
് --
"பார் முழுதும் பரப்பிரம சந்நிதி பூமி முழுவதும் கடவுள் வியாபகத்துள் அடங் கிய கடவுட் சந்நிதியேயாம்.
கடவுள், "பார்க்கு மிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
பரிபூர னைந்தம்.'
உயிர்கள் தம்யையே தாம் அறியாமல் தமது தூல உடம்பையே தாம் என்று கருதி, அதில் ஒரு திருப்தியும் அடைந்துகொண்டிருக்கின்றன. அப்படி யிருக்கும்போது, உயிரினும் நுண்ணிய உயிர்க்குயி ராகிய கடவுளை உயிர்கள் உணருவது எப்படி உணர வில்லையே என்று குறை பேசுவதாற் பயனில்லை. எங்குமாயிருக்கின்ற கடவுளைப் பார்க்குமிடம் எங் கும் நீக்கமறக் காணுதவர்கள், அந்தக் குறை நீங்கி ஒரு நாளைக்குக் கடவுளை எங்குங் காணுதற்கு, இப்பொழுது அநுட்டிக்க வேண்டிய ஒரு உபாயம் இருக்கின்றது. அந்த உபாய நெறியைச் சொல்லுகி றேன் கேள்: அந்த நெறியை நீ இன்றைக்கே ஆரம் விக்கலாம், என்று மேலும் மத்தியந்தின முனிவர் சொல்லுகின்ருர்,
"எல்லா வறிவும் எல்லா முதன்மையும் எல்லா அநுக்கிரகமும் உடைய முழுமுதற் கடவுள் தாம் ஒருவரேயாய், பசுக்களாகிய ஆன்மாக்களெல்லாந் தமக்கு என்றும் உடைமைப் பொருள்களேயாகத் தாம் என்றும் உடையவராயே நின்று, பசுபதி எனப்படும் சிவபெருமானுய் பிரபஞ்சம் எங்குமாகி, தீக்கமற வியாபித்து நிற்பர்; ஆயினும், அவ்வுண்மை

Page 9
Gabruໃດ)
........ --war-masa-Yr-w 3-x-o
யாவருக்கும் விளங்காது; ஆதலினலே, முத்தியடை
கொண்டு, தம்மை ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு, எண்ணில்லாத முக்கிய ஸ்தலங்களைப் பூமியில் வைத்தருளினர். அவைகளுள்ளே, அறுபத் தெட்டுத் தலங்கள் சிறந்தன; அவ்வறுபத்தெட்டுத் தலங்களுள்ளே, ஆறு தலங்கள் சிறந்தன; அவ்வாறு தலங்களுள்ளே, திருவாரூர் காசி சிதம்பரம் எள் னும் மூன்று தலங்கள் சிறந்தன. திருவாரூரிலே பிறந்தவர்களும், காசியிலே இறந்தவர்களும், சிதம்பரத்திலே சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தவர்களும் முத்தியை அடைவர்கள்.
திருவாரூரிலே பிறத்தல், முன் செய்த புண்ணிய மிகுதியினலே, தானே நேர்படினல்லது, செயற்கை யால் அடையத் தக்கதன்று. காசியில் இறக்கலா மெனின், பிறர்பொருள் கொள்ளாது, பாவத்துக்குப் பயந்து தருமநெறியினலே சம்பாதித்த பொருள் கொண்டு, சென்மதேசத்தை விடுத்து, வழியிலே இறவாது உயிர் தாங்கிச் சென்று, காசியை அடைந்து, இதுக்கும் வரையும் நல்லொழுக்கத் தோடும் அத்திருப்பதியில் இருந்து, இறப்பது எளிதின் முடிவதன்று, சிதம்பரத்திலோவெனிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்த மாத் திரத்தே முத்தி சித்திக்கும். இன்னும், தக்கிண தேசத்தார் சிதம்பரத்தை நீங்கி முத்தியைத் தேடிக் காசியிலே சென் ருல், அது முத்தியைக் கொடுப்ப தில்லை; உத்தரதேசத்தார் சிதம்பரம் முத்திதரும் என்று வந்து சேர்ந்தால், இது முத்தியைக் கொடுக்

ஒதம்பா தலமகிமை 5
கும். ஆதலினலே, சிதம்பரமே எல்லாத் தலங் கனினுஞ் சிறந்தது.
"பிண்டமும் பிரமாண்டமுஞ் சமம். பிண்டீ. மாகிய சரீரத்தில் இடப்பக்க நாடியாகிய இடைகலைக் கும் வலப்பக்க நாடியாகிய பிங்கலைக்கும் நடுவி லுள்ள சுழுமுன நாடியும், பிரமாண்டத்திலுள்ள இப் பரதகண்டத்தில், இலங்கைக்கும் இம்யமலைக் கும் நடுவிலுள்ள தில்லையும், திவபெருமான் ஆனந்த நிருத்தஞ் செய்யுந் தானமாம்.'
*சரீரம் பிரமபுரம் சரீரத்தினுள்ளே இருக்கும் இருதயத் தானந்தகரமாகிய புண், ரீக வீடு; இரு தயத் தானத்தினுள்ளே இருக்கும் ஆகாசம் பராசக்தி; ஆகாசத்தினுள்ளே உள்ளது சிவம், புறத்தும், இப்படியே பிரமாண்டம் பிரமபுரம்; பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு; அதனுள்ளே உள்ளது ஆகாசம்; இவ்வாகாசத்தில் நிருத்தஞ் செய்வது சிவம். இவ் வ்ாகாசம் பூதாகாசம் போற் சடமாகாது சித்தே யாம்; ஆதலாற் சிதம்பரம் எனப் பெயர்பெறும்.”
என்றிங்ங்னம் தில்லைவனமாகிய சிதம்பர தலத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி, அத் தலத்திலே சிவபுண்ணியங்சள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்ததாகிய சிவலிங்கபூசை செய்துகொண்டிருந் தால்,

Page 10
6
"எங்குமாய கடவுளை நேரில் தரிசிக்கலாம்?
என்று தம்முடைய குமாரருக்கு மத்தியந்தின முனிவர் போதித்தார். அப்பொழுது அதிதீவிர பக்குவராகிய அந்தப் பாலமுனிவர், அந்த கூடிணமே தில்லைவனத்தை அடைவதற்கு அநுகமதி வேண்டி நின்றர். பெற்றேர்கள் அகமகிழ்ந்து ஆசீர்வ்திக் கின் முர்கள். 'திருநீறு நுதல்சேர்த்தித் திகழுச்சி தனைமோந்தெங் கருநீறு படவுதித்த காளையென அணைத்துவிழி தருநீர்மத் தியந்திஜனுந் தந்தையைஇந் தனைசெய்து வெருநீர்மை அன்னையையும் அடிபணிந்து
விடைகொண்டான்"
*கரு நீறுபட வந்த காளே”
என்று பேற்றேர்கள் தம்புதல்வரை உவக்கின் ருர்கள். கரு பிறப்பு.
"மூவேழி சுற்றமும் முரணுறு நரகிடை ஆழா மேயருள் அரசே போற்றி"
என்கின்ற திருவாசகத்தேன் இங்கு சொட்டு கின்றது.
ஒரு தவப்புதல்வன், தந்தைவழியில் ஏழு தலைமுறைகளையும், தாய்வழியில் ஏழு தலைமுறை களையும் தன்வழியில் ஏழு தலைமுறைகளையும் கூய் யக்கொள்கின்றன்.

திேல்வரதலமகிமை
அன்னை தந்தைகர்களின் ஆனந்தகி கண்ணீரில் முழுகிப் பரிசுத்தர் ஆகிய அந்தப் பாலமுனிவர் தென்றிசை நோக்கித் தில்லைவனத்தை நாடி நடக்கின்ருர்,
இந்தச் சரீரமும் புண்ணிய பூமியாகிய பரத கண்டமும் புண்ணியங்களாகிய நற்கர்மங்களே ஈட்டுதற்கு உபகார0ானவைகள்.
"மாநுடப்பிறவி தஈனும் வகுத்தது மனவாக் காயத் தானிடத் தைந்து மாடும் அரன் பணிக்காக வன்றே வானிடத் தவகும் மண்மேல் வந்தரன் றனையர்ச்
GLLrf ஊனெடுத் துழலு மூமர் ஒன்றையும் உணரார்
அந்தோ’.
கோயில்
இனித்த புருவமுங் கொவ்லைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போக்மேனி பிற்பால் வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே பிந்த மாநிலத்தே.
- திருநாவுக்கரசு சுவாமிகள்

Page 11
8 sulát)
2. வியாக்கிரபாதர்
தாய் தந்தையர்களிடம் அநுமதியும் ஆசீர் வாதமும் பெற்றுக்கொண்டு அந்தப் பச்சைக் குழந்தை முனிவர், தெற்கு நோக்கி நடந்து, தந்தையார் குறிப்பிட்ட தில்லை வனத்தை அடைந் தார்.
அங்கே, ‘சிவகங்கை’ என்னுந் தீர்த்தத்தையும், அதற்குத் தெற்கே ஓராலமர நீழலிலே திருமூலட்டா னேகரர் என்னுஞ் சிவலிங்கப்பெருமானையும் தரி சித்து வணங்கி, நாடோறும் அத்தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, அச்சிவலிங்கப்பெருமானைப் பூசை செய்துகொண்டு வந்தார். சில நாளாய பின்பு, திருமூலட்டானேசுரருக்கு மேற்கே ஒரு திருக் குளத்தைக் கண்டு, அதற்கு மேற்கே ஒரு சிவலிங்கந் தாபித்து, அதற்குச் சமீபத்திலே ஒரு பர்ணசாலை செய்து, இரு சிவலிங்கத்தையும் பூசை செய்து கொண்டு, அப்பர்ணசாலையில் இருந்தார்.
இப்படியிருக்கும் நாளிலே, ஒருநாள் அப்பால முனிவர்: பூக்களை விடிந்தபின் எடுக்கலாம் எனின் வண்டுதும்; விடியுமுன் எடுக்கலாமெனின் வழி தெரி யாது, பழுது தெரியாது; மரங்களிலேறிற் கைகால் கள் பணியினல் வழுக்கும் பழுதில்லாத பூக்கொண்டு சிவபூசை செய்தற்கு யாது செய்வேன்!" என்று தளர்ந்தார்.
உடனே சிவபெருமான் இடபவாகன மேற் கொண்டெழுந்தருளி வந்து, 'நீ விரும்பிய வரம் யாது?’ என்று விளுவியருள,

வியாக்கிரபாதர் N___ _ __^_ 9
SSSqqqqqSSSS SSqSS qqSSSSAASS SASqSqqSAASMAASAS ۔ ۔۔۔۔۔۔۔ ܚܸ - - ܝ - ... ۔بم ۔ ---حسسسسسسسسسس
அப்பால முனிவர், ‘எம்பெருமானே! அடியேன் மரங்களிலே வழுக்காமற் பற்றியேறுதற்கு அடியே னுடைய கால்களுங் கைகளும் புலிக்கால்களையும் புலிக்கைகளையும் போல வலிய நகப்பற்றுடையவை களாய் இருக்கும்பொருட்டும், வழி பார்த்து நடத் தற்கும் பூக்களைப் பழுதுபார்த்தெடுத்தற்கும் அக் கால்களிலுங் கைகளிலுங் கண்கள் பொருந்தும் பொருட்டும் அருள் செய்யும்’ என்று பிரார்த்தித் தாா.
சிவபெருமான் அவர் வேண்டுகோளுக்கு அருள் செய்து, மறைந்தருளினர். பாலமுனிவர், அன்று முதல் வியாக்கிரபாதர் என்னும் பெயரை உடைய வர் ஆயினுர். வியாக்கிரம் - புலி,
வியாக்கிரபாதர் நாடோறும் விடியுமுன் நியதி முடித்துக்
கோட்டுப்பூ, கொடிப்பூ நிலப்பூ நீர்ப்பூ என்னும் நால்வகைப்
பூக்களையும் எடுத்துச் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து கொண்டு, எண்ணில் காலம் இருந்தார்.
வியாக்கிரபாதரின் பெயர் முனிவர் உலகிற் பிரசித்தியடைந்தது - ம னி த ப் பிற வி யின் நோக்கத்தை உணர்ந்து, சிவார்ச்சனையில் வைத்த ஆராமை மேலீட்டினல், புலிக்கால் புலிக்கைகளை யும் அவற்றிற் கண்களையும் சிவபெருமானிடத்திற் பெற்றமையை முனிவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து வாழ்த்தினுர்கள். தந்தையாராகிய மத்தியந்தின முனிவர் அங்கே வந்து, தமது தவப்புதல்வரைக் கண்டு மகிழ்ந்து, அவர் பெற்ற வரப்பிரசாதங்களை ஆசீர்வதித்து, அவருடைய பர்ணசாஃலயில் தாமும்
蚤 ...

Page 12
i0 கோயில்
இருந்துகொண்டு, நாடோறும் சிவகங்கையிலே ஸ்நானஞ் செய்து, திருமூலட்டானமுடையானர யும், புதல்வர் தாபித்த திருப்புலிச்சர முடையா ரையும் பூசை செய்து வழிபட்டு வந்தார்.
தந்தையார் அங்கே பூசை செய்துகொண்டிருக் கின்ற காலத்திலே, மகா தவசிரேட்டராகிய வசிஷ்டி முனிவர், வியாக்கிரபாதருடைய தவச்சிறப்பை அறிந்து, அவருடைய தந்தையாரின் விருப்பப்படி, தமது சகோதரியாரை வியாக்கிரபாதருக்கு மணஞ் செய்து வைத்தார். வியாக்கிரபாதர் மணஞ் செய்து ஒரு சற்புத்திரரைப் பெற்ருர்,
அப்புத்திரரை, வசிட்டருடைய அனைவியாராகிய அருந்ததியார் தம்முடைய ஆச்சிரமத்துக்குக் கொண்டுபோய்க் காமதேனுவின் பாலை ஊட்டி வளர்த்து வந்தார். ஒரு நாள் வியாக்கிரபாதரின் மனைவியார் அப்புத்திரரைத் தமது பர்னசாலைக்குக் கொண்டு வந்து, கிழங்கு, பழம் முதலியவற்றையும் சலத்திற் கரைத்த மாவையும் அப்புத்திரருக்கு ஊட்ட, புத்திரர் அவைகளை கூட்கொள்ளாது உமிழ்ந்து விட்டுக் காமதேனுவின் பாலை வேண்டி அழுதார். அதுகண்ட வியாக்கிரபாதமுனிவர் அப்புத்திரரைத் திருமூலட்டானர் சந்நிதியிலே கொண்டுபோய் வளர்த்தி விட்டார். புத்திரர் பசி அடங்காமல் மிக அழுதார். அவர் அழுகைக்கு இரங்கிக் கிருபாசமுத்திரமாகிய சிவபெருமான் பாற்சமுத்திரத்தை அங்கே வருவித்தார். புத்திரர் நன்கு பருகி வளர்ந்தார். கத்திரர் தாம்,

வியாக்கிரபாதர் 11
"பாலுக்குப் பாலகன் வேண்டி அழகிடப்
பாற்கடல் ஈந்த பிரான்" என்கின்ற திருவருட் பாடலிலே வருகின்ற பாலகர், இந்தப் பாலகருக்குத்தான், 'உறமந்யு’ என்று பெயர். உபமந்யு முனிவரின் பெருமை இவ்வளவு அவ்வளவு என்று சுட்டி உரைக்கக் கூடியதன்று.
"ஒரு நாள் உபமந்யு மகாமுனிலர் சிவபூசைக்குப் பத்திர புஷ்பங்கள் இல்லையென்று தமக்கு விண்ணப் பஞ் செய்த தமது சீடனை நோக்கி, கிருஷ்ணர் சிவபூசை செய்து கழித்த பத்திர புஷ்பங்களைக் கொண்டுவரும்பொருட்டு ஆஞ்ஞாபித்து அவைக ளாலே சிவபூசை செய்து முடித்தார். அதையறிந்த கிருஷ்ணர் வந்து, சங்கை பேச; உபமந்யு முனிவர் சைவாகமத்தில் விதித்தபடி சிவதீகூைடி பெற்று மந்திரக்கிரியா பாவனைகளாலே சிவனைப் பூசித்தா லன்றி இவை திருமாலியமாகா சிவ னு ம் வெளிப்படார் என்ருர்,
புத்திர பாக்கியத்தின் பொருட்டு நெடுங்காலம் சிவபூசைபண்ணியும், சிவன் வெளிப்படாமையினுல் வருந்தியிருந்த கிருஷ்ணர், அது கேட்டவுடன் அம் முனிவருக்கு ஆளாகி, அவரிடித்தே சிவ தீகூைடி பெற்று, சிவபூசை செய்து, தாம் விரும்பிய பயனைப் பெற்ருர்."
‘யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்’. என்று உபமந்யு மகாமுனிவரின் பெருமை பெரிய புராணத்திற் பேசப்படுகின்றது. அதுநிற்க,

Page 13
12 கோயில்
SS SS S AAASiSiSAA qiqAAAAAAAAqiA qSzSSLS AS A AAALLAAAAALLAqS AAASAASSASSASSAA AAAAALL SqqAAAAAAAA S S SqqqS qSiqAMSASTMTMS MAA qqMMMSBLSAA A SA SA A A AAAA Aqq AAAAS
உபமந்யு ஆகிய பாலகர் பாற்கடலைப் பருகிக் கொண்டு தந்தையாராகிய வியாக்கிரபாதரின் பர்ணசாலையில் வளருகின்றர். வியாக்கிரபாதரின் தந்தையாராகிய மத்தியந்தின முனிவரும் அங்கே தானே வசிக்கின்றர்.
இப்பெழுது சிதம்பர தல வாசஞ் செய்து, திருமூலட்டானம் உடையாரையும், திருப்புலிச்சரம் உடையாரையும் பூசித்து வழிபடுவோர் ஒருவரtய் இருவராய் மூவர் ஆயினர்.
மத்தியந்தினர் - அவர் புதல்வர் வியாக்கிர பாதர் - அவர் புதல் லர் உபமந்யு - மூவரும் சிதம்பர தல வாசஞ் செய்துகொண்டிருந்த காலத்திலே,
ஒரு நாள் வியாக்கிரபாத முனிவர், திருமூலட் டானேசுரர் சந்நிதியிலே சிவயோகங் கூடினர். சிவயோகங் கூடியபொழுது முன்னுெரு காலத்திலே தேவதாருவனத்திலே நாற்பத்தெண்ணுயிரம் முனி வர்கள் உய்யும்பொருட்டுச் சிவபெருமான் திருநிருத் தஞ் செய்தருளினமை தெரிந்தது.
பச்சைநிறத் திருமேனியும், திருக்கழுத்திலே பொருந்திய திருமங்கல சூத்திரமும், செங்கழுநீர் மலர் பிடித்த வலத்திருக்சையும், கடிக்கீழ்த்தொங்க விட்ட இடத்திருக்கையும், மிக ஒடுங்கிய நிலையும் உடையராய்ச் சிவகாமி அம்மையசர் பஞ்ச கிருத்திய மாகிய திருநிருத்த தரிசனஞ் செய்ய,
கோடி சூரியருடைய ஒளிபோலும் ஒளியும், திருப்புன் முறுவலையுடைய ஒரு திருமுகமும் மூன்று

வியாக்கிரபாதர் 13
திருக்கண்ணும், கங்கையையும் பிறையையுங் கொன்றை மாலையையுந் தாங்கிப் பின்றுாங்கா நின்ற திருச்சடையும், சங்கக் குண்டலம் பொருந் திய வலத்திருச்செவியும், திருத்தோடு பொருந்திய இடத்திருச்செவியும், திருநீலகண்டமும், டமருகம் பொருந்திய திருக்கரம் அபயகரம் என்னும் வலத் திருக்கரம் இரண்டும், அக்கினியகல் பொருந்திய திருக்கரம் டோளகரம் என்னும் இடத்திருக்கரம் இரண்டும், புலித்தோலை ஆடையாகக்கொண்டு கச்சையுடைத்தாய் நெறிப்புப் பொருந்தி விளங்கும் திருவரையும், முயலகன்மேல் ஊன்றிய வலத்திருப் பாதமும், தூக்கி வளைத்த இடத்திருப்பாதமும் உடையராய்ச்,
சிருட்டி கிருத்தியம் டமிருகத்தினும், திதி கிருத்தியம் அபய கரத்தினும், சங்கார கிருத்தியம் அக்கினியினும், திரோபவ கிருத்தியம் ஊன்றிய பாதத்தினும், அநுக்கிரசு கிருத்தியம் குஞ்சி :ாதத்தினுந் தோன்ற, •
ழரீ பஞ்சாகடிர சொரூபியாய்ச் சிவபெருமான் திருநிருத்தஞ் செய்தருளுவார் ஆயிஞர்.
இந்த அத்தியற்புத நிருத்த தசனத்தைச் சிவ யோகத்தில் அமர்ந்து கண்ட வியாக்கிரபாத முனி வர், கண்ணிர்வார, உரோமஞ் சிலிர்க்கக், கரங்கள் சிரமேற் குவிய, நாத் தழுதழுத்து, மேலும் மேலும் அநவரதமும் அந்நிருத்த தரிசனத்தைத் தரிசிக்க ஆசை மீக்கூர்ந்து,
அந்தோ! இந்நிருத்த தரிசனத்துக்கு இடமாகிய தேவதாரு வனத்தை உறைவிடமாகக் கொள்ளு

Page 14
14
தற்குத் தவங் கைகூடவில்லையே என்று சற்றே தளர்ந்தார். சிறிது நேரத்தின் பின்பு தெளிவு பிறந்து,
இச்சிதம்பரதலம் திருநிருத்தத்தைத் தரும் என்று துணிந்து, அந்நிருத்தத்தைத் தரிசிப்பித் தருளும் படி வேண்டி,
வழக்கம்போலச் சிவபெருமானைப் பூசை செய்து கொண்டு, நிருத்த தரிசனத்துக்குக் காத்திருந்தார்.
திரு அங்கமா?ல
ஆக்கைகாற் பயனென்
அரன் கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றி என்னதஇவ்
sgie autrib uuasara .
- திருநாவுக்கரசு நாயனூர் தேவாரம்
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந்
திருந்து சாத்துவிகமே யாக இந்துவாழ் சடையா டுைம் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளேத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
- பெரியபுராணம்

பதஞ்சலி முனிவர் S
3. பதஞ்சலி முனிவர்
வியாக்கிர பாதமுனிவர் திருநிருத்தத்தைத் தரிசிப்பித்தருளும்படி வேண்டித் தந்தையார் ஆகிய மத்தியந்தின முனிவரோடும், மைந்தர் ஆகிய உப மந்யு முனிவரோடும் தில்லைவனமாகிய சிதம்பரத் திலே சிவபூசை செய்து கொண்டிருக்கின்றர்.
அவர் அவ்வாறு பூசைசெய்துகொண்டு அங்கே யிருக்க,
ஒருநாள் விட்டுணு, ஆதிசேஷராகிய சயனத் தின் மீது செய்யும் நித்திரையை விட்டெழுந்து, கைகள் சிரசின் மேலே குவிய, ஆனந்த வருவி பொழிந்து, சிவானந்த பரவசராய் இருந்து, பின் சயனத்தினின்று நீங்கி நித்திய கரும முடித்துக் கொண்டு, சிங்காசனத்தின்மேலே வீற்றிருந்தருளி னர். அப்பொழுது ஆதிசேஷர் அவரை வணங்கி, "எம்பெருமானே! நீர் அடியேன் மீது முன்புபோலச் சயனித்துப் பின் விழியாது இப்படி எழுந்தருளி யிருந்தமை என்ன?’ என்று வினவ, விட்டுணு சொல்வாராயினுர்:
'ஆதிசேஷா! நேற்றுச் சிவபெருமான் தாம் பிக்ஷாடன வடிவங்கொண்டு, என்னை மோகினி வடிவங் கொள்வித்து, என்னேடு தேவதாருவனத் துக்கெழுந்தருளிப் பிகூைடியேற்பாராயினூர். அங் குள்ள நாற்பத்தெண்ணுயிர முனிவர்கள் என்னைக் கண்டு மோகிக்க, அவர்களுடைய பன்னியர்கள் சிவபெருமானைக் சண்டு மோகித்தார்கள். a

Page 15
16 கோயில்
தறிந்த முனிவர்கள் சிவ்பெருமான்மீது பல சாபங்க விட, அவை பயன்படாதொழிந்தன. அதன்பின் முனிவர்கள் அபிசார ஹோமஞ் செய்தார்கள். சிவ பெருமான் அம்முனிவருடைய குண்டத் தக்கினியி னின்றும் முதற் கண்ணே தோன்றி வந்த புலியைப் பிடித்துரித்துத் தோலை யுடுத்துக் கொண்டார்; பின்பு தோன்றி வந்த பூதங்களைத் தமக்கு அடிமை களாக்கிக் கொண்டார்; பின்பு தோன்றி வந்த ஒரு சகுப்பத்தைத் தமது திருக்கரத்திலே கடகமாக அணிந்து கொண்டார்; பின்பு தோன்றி வந்த குறள் வடிவினதாகிய முயலகனெதிரே பாய்ந்து, அதன் முதுகு நெரியும்படி அதன் மேலே வலப்பாதத்தி ஞலே மிதித்துக்கொண்டார்; பின்பு விடுக்கப்பட்டு வந்த சீக்கினியைத் திருக்கரத்தில் ஏந்திக் கொண் டார்; பின்பு விடுக்கப்பட்டு வந்த மந்திரங்களைத் திருவடியிலே திருச்சிலம்புகளுக்குத் தரிசாகச் சாத் திக்கொண்டார். இவ்வாறு செய்தபின், சிவபெரு மான் அந்நாற்பத்தெ&ண்ணுயிர முனிவர்களுக்கு அநுக்கிரகிக்கத் திருவுளங்கொண்டு, ஆகாயமார்க்க மாக இடபவாகனத்தோடு வந்த உமாதேவியார் தமதிடப்பாகத்திலே பொருந்தி நிற்க, நான் மோகினி வடிவம் நீங்கி முன்னை வடிவங்கொண்டு வணங்கி யொடுங்கப் பிரமன் இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களுஞ் சேவிக்கத், திருநிருத்தஞ் செய்தருளினர். நாற்பத்தெண்ணுயிர முனிவர்கள், தங்கள் ஆணவ மல சத்திகளெல்லாங் கூடி வந்து ஆணவ மூலமாகிய முயலகனைப் பொருந்தத் தாங் கள் நிருத்த தரிசனஞ் ச்ே tது சிவ F% த்சி பர் 3: சர்க

பதஞ்சலி முனிவர் 17
ளயிஞர்கள். சிவபெருமான் எல்லார்மீதுந் திருக் கண் சாத்தி, "நீங்கள் நமது நிருத்தத்தைச் சிவ லிங்கத்திலே தியானித்து வழிபடுங்கள்" என்று பணித்துவிட்டு, உமாதேவியாரோடும் இடிபவாகன மேற்கொண்டு மறைந்தருளினர். மறைந்தருளிய திக்கு முன்னுக வணங்கி எல்லாரும் அகன்றபின், "நான் நேற்று உன்மீது சயனித்தும் நிருத்தானந்தத் திரூலே நித்திரையை யொழிந்தேன்’ என்ருர்,
"அண்டன துயர்நட மென்றலும்
அஞ்சலி சிரமுற அன்பொடு கண்டவ ரெனமிக நுண்டுளி
கண்தர உருகுதல் கண்டரி தொண்டின ரிவர்பணி யென்பணி
சுந்தரன் அடிபணி யென்பணி பண்டென தனையிவர் என்றுகொள்
பண்பொழி(வு) இனியென நொந்தனன்." அண்டனது உயர் நடம் என்றலும் சிவபெரு மானுடைய உயர்ந்த திருநிருத்தம் இவ்வாறிருந்த தென்று மகா விஷ்ணுமூர்த்தியானவர் பரவசராய் ஆதிசேஷருக்குச் சொன்னமாத்திரத்திலே, அஞ்சலி சிரம் உற ஆதிசேஷரானவர் அஞ்சலியானது சிர சிலே பொருந்த, அன்பொடு கண்டவர் என உஅன் போடு அந்த நிருத்தத்தைத் தரிசித்தவர்போல, கண் நுண் துளி மிகத்தர உருகுதல் அரி கண்டு-கண் களானவை நுண்ணிய நீர்த்துளிகளை மிகப் பொழி யும்படி மன முருகுதலை விஷ்ணுமூர்த்தியானவர் கண்டு, இவர் தொண்டினர் - இந்த ஆதிசேஷர் சிவபெருமானுக்கு அடியவர், பணி - இனி இவரு டைய தொழில், என்பு அணி சுந்தரன் அடி 11ணி
3

Page 16
18 ܗܝ - கோயில் -
எலும்பை அணிந்த சிவபெருமானுடைய திருவடிக் குத் தொண்டு செய்தலாம், என் பணி - என்னுடைய தொழில், பண்டு இவர் எனது அணை என்று கொள் பண்பு இனி ஒழிவு - முன்னே இந்த ஆதிசேஷர் எனக்குச் சயனம் என்று கொண்டதன்கையை இனி நான் விட்டு நீங்குதலேயாம், என - என்றிவ்வாறு மகாவிஷ்ணுமூர்த்தியானவர் சிந்திக்க, நொந்தனன் - அதை அறிந்த ஆதிசேஷர் வருத்தமுற்ருர்,
விஷ்ணுமூர்த்தி மேலுஞ் சொல்லுகின்ருர்:
இனியணை யெனநனி துஞ்சுதல்
இசைவில தெனதுளம் நின்பணி தனயனே முயலமொ ழிந்துயர்
தவமுயல் வதுதகு மென்றலும் மனமிக வுருகிய னந்தனும்
வரதனத தீனிய நடந்தொழு துணைவினி தெனினும் அகன்றிடு
தொழில்நினை வரிதென நொந்தனன்.”
இனி அணை என நனி துஞ்சுதல் எனது உளம் இசைவு இலது - சிவபத்தராகிய கூம்மைச் சயனமா கக்கொண்டு உம்மீது மிகவும் நித்திரை செய்தற்கு இனி என் மனசு இசைதலைச் செய்யாது, நின் பணி முயலத் தனயனை மொழிந்து - உம்முடைய தொழி லைச் செய்தற்கு உம் பிள்ளையைக் கற்பித்து, உகர் தவம் முயல்வது தகும் - நீர் மேலாகிய தவத்தைச் செய்வதே தகும், என்றலும் - என்று (விஷ்ணு மூர்த்தியானவர்) சொல்லியருள, அனந்தனும் மனம் மிக உருகி - ஆதிசேஷரும் நெஞ்சம் மிகக் கரைந்து, வரதனது இனிய நடம் தொழு துனைவு இனிது எனினும் - சிவபெருமானுடைய இன்ப நிருத்

பதஞ்சலி முனிவர் 19
தத்தை வணங்குதற்கண் விரைதல் இனியது என்ரு லும், அகன்றிடு தொழில் நினைவு அரிது என நொந் தனன் - மகாவிஷ்ணுமூர்த்தியைப் பிரியுஞ் செய்கை நினைத்தற்கும் அரியது என்று சிந்தித்துச் சற்றே கவலையுற்றர்.
பிறகு தேறித் திருநிருத்த தரிசனத்தின்மீது பேராசையுடையராய், விஷ்ணுமூர்த்தியிடம் அநு மதி பெற்றுக்கொண்டு, திருக்கைலாச மலைப் பக் கத்தை அடைந்து, நிருத்ததரிசனத்தை வேண்டி, எண்ணில் காலம் சிவபெருமானை நினைந்து தவஞ் செய்வாராயினர். சிவபெருமான் இடபவாகன மேற் கொண்டு வெளிப்பட்டு, அவ்வாதிசேஷரைத் தழுவி, அவர் தலைமீது தமது திருக்கரத்தை வைத்துத் திரு வாய் மலர்நீதருளுகின்ருர்,
'அன்பனே, பஞ்ச கிருத்தியமே நமக்கு நிருத்த மாகும். நாம் தேவதாரு வனத்திலே வெளிப்பட நின்று நிருத்தஞ் செய்தபொழுது, அவ்வனம் அதனைப் பொறுக்கமாட்டா தனசந்தது, அதனுலே நிருத்தத்தை விரைவில் ஒழித்துவிட்டோம். உனக்கு இங்கே நிருத்தங் காட்டுவேமெனின், இவ்வனமும் அதனைப் பொறுக்கவல்லதன்று. நமது நிருத் தத்தைப் பொறுக்கவல்லது தில்லைவனம். அந்தத் தலத்திலே மூலலிங்கம் இருக்கின்றது. அதற்குத் தெற்கே ஒரு சபையுண்டு. அங்கே நாம் எக்காலமும் நிருத்தஞ் செய்தருள்வோம். நீ அங்கே இவ்வடிவத் தோடு போவாயாயின், உன் ஆயிரம் படங்களையுங் கண்டு உலகம் பயங்கீடும். நெடுங்காலத்துக்குமுன்

Page 17
20
அத்திரி முனிவனும் அவன் மனைவியாகிய அனசூயை பும் உன்னைப் பிள்ளையாகப் பெற விரும்பி விட்டு ணுவை நோக்கித் தவஞ் செய்தார்கள். அவ்வன சூயை இருதுமதியாய் ஸ்நானஞ் செய்து கரே யேறிய பொழுது, நீ அவளுடைய அஞ்சலியிலே ஐந்து தலை பொருந்திய ஒரு சிறு பாம்பாய்ப் பொருந்த, அவள் பயத்தினலே கைவிட, நீ விழுத்து பதஞ்சலி என்னும் பெயர் பெற்ருய். இப்பொழுதும் நீ அவ்வடிவமும் அப்பெயருங் கொண்டு நாகலோ கத்துக்குப்போ, அங்கே ஒரு பருவதமும் அதற்குத் தெற்கே ஒரு பிலத்துவாரமும் உள்ளன. அப்பிலத் துவாரத்தின் முடிவு தில்லைவனம். அப்பிலத்துவாரம் நீங்க, அதற்கு வடபக்கத்திலே, ஒராலமர நிழலிலே, அப்பருவ தத்தின் கொழுந்து மூல லிங்கமாய் இருக் கும் வியாக்கிரபாத முனிவன் நமது நிருத்தத்தைத் தரிசிக்க விரும்பி, அவ்விலிங்கத்தைப் பூசை செய்து கொண்டிருக்கின்றன். நீயும் போய், அவனேடிரு. தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடும் சித்தயோக தினத்து மத்தியானத்திலே, நாம் உங்களுக்கு ஆனந்த நிருத்தங் காட்டியருள்வோம்’ என்று திரு வாய் மலர்ந்து மறைந்தருவினர்.
சிவபெருமான் மறைந்தருளிய திக்குக்கு நேராக ஆதிசேஷர் வணங்கியெழுந்து, பதஞ்சலி வடிவங் கொண்டு, நாகலோகத்துக்குப் போய், அங்கே பாதாள மேழையும் உருவிநின்ற ஞானகயமாகிய பருவதத்தை வணங்கி, அதற்குத் தென்பக்கத் துள்ள பிலத்துவாரம் வாயிலாகப் பூலோகத்தில் ஏறித் தில்லைவனத்தை அடைந்து, அங்கே வியாக்

பதஞ்சலி முனிவர் 2.
கிரபாதமுனிவரைக் கண்டு, அவருக்குத் தம்முடைய வரலாறெல்லாஞ் சொல்லிச், சிவகங்கையிலே ஸ்நா னஞ் செய்து, திருமூலட்டான முடையாரையுத் திருப்புவீச்சரமுடையசரையும் பூசை செய்து கொண் டிருந்தார். சிலநாளாய பின்பு, தில்லைவனத்தின் மேல்புறத்தில் ஒரு வாவியைக் கண்டு, அதன் கீழ் கரையிலே ஒரு சிவலிங்கந் தாபித்து, அவ்வாவியின் வடபக்கத்தில்ே ஒரு பர்ணசாலை செய்து, மூன்று சிவலிங்கத்தையும் பூசை செய்துகொண்டு, அதிலி ருந்தார். இருக்கு நாளிலே திருநிருத்த தரிசனத்தின் பொருட்டு எண்ணில்லாதவர்கள் புதுமை புதுமையாக வந்து கூடிஞர்கள். நிருத்த தரிசனத்தின் பொருட்டு முன் னமே அங்கே வந்து இருந்தவர்கள் திருவுடையந்
தணர் மூவாயிரவர். அவர்களும் வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் மூதலியவர்களோடு வந்து சேர்ந்தஈர்கள்.
இந்தச் சரீர்ம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுன் வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.
நைாவலர் பெருமான்

Page 18
22 கோயில்
4. நடராஜ நிகுத்தம்
புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, பூமிக்கு இருதய ஸ்தானமாகிய சிதம்பரத்திலே, தைப்பூசம் வியாழக்ழேமையோடு கூடுஞ் சித்தயோக தினம் வர, அன்று மத்தியானத்திலே, ! ஆயிர முகத்தையுடைய பானுகம்பர் ஆயிரஞ் சம்கூத, ஆயிரந் தோளுடைய வாணுசுரன் குடமுழா ஒலிப்பிக்க, வஞ்சதுந்துபி ஒலியும் வேதவொலியுங் கந்தருவருடைய கீதவொலியும் மிக் கெழ, ஞானசபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று, ஆனந்த நிருத்தஞ் செய்தருளிஞர்.
வியாக்கிரபாத முனிவ்ர் பதஞ்சலி முனிவர் என்னும் இருவ்ரும், பிரமா விட்டுணு முதலிய தேவர்களும், திருவுடையந்தணர் முவாயிரவரும் பிறரும் சிவபெருமானுடைய திருவருளினலே, ஞானக்கண்ணைப் பெற்று, அவருடைய ஆனந்த தாண்டிவத்தைத் தரிசித்து. உரோமஞ் சிவிர்ப்ப2 நெஞ்ச நெக்குருக, கண்ணிர் பொழியச் சிவானந்த மாக்கடலின் மூழ்கினர்கள். பதஞ்சலி முனிவர், ‘எம்பெருமானே! இந்த ஞானசபையிலே உமா தேவியாரோடு இன்று முதல் எக்காலமும் ஆன்மாக் களுக்கு ஆனந்த நிருத்தத்தைப் புலப்படுத்தியரு ளும்" என்று வ்ேண்டிக்கொண்டார், அதற்குச் சிவ பெருமான் உடன்பட்டிருளினர்.
சிவபெருமான் பணித்தருளியபடிருே தேவ்ர்கள் அந்த நிருத்த ஸ்தானத்தை வளைந்து உயர்ந்த பொன்னினலே ஒரு மகாசபை செய்தார்கள். சிவபெருமான், அன்று தொடங்கித் தேவர்களும் வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் முதலா

நடர்சகர்குற்றம் 23 ۔۔۔ ۔ ۔ــــــــــــــــــــــ
யிளுேரும் வணங்கச், சிவகாமியம்மையாரோடும் கனகசபையிலே எக்காலமுந் திருநிருந்தத்தைத் தரிசிப்பித்தருள்கிாராயிஞர்.
YA ★ r
"தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் கனவி றேரிபு எழுதரும் வாள்நிற முகன்" என்பது திருமுருகாற்றுப்படை, மாசு நீங்கித் தூய்மை எய் திய கூள்ளக் கமலத்திலே சுப்பிரமணிய சுவாமியின் ஆறு திருமுகங்களும் உதயமாகும்.
வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் முதலாயிறேர் தமது தூய உள்ளக்க மலத்திற் போகனே இருதய ஸ்தானமாகிய சிதம்பரத்திலும் நடராஜமூர்த்தியைத் தரிசித்தார்கள். திருவள்ளுவ நாபளூர் தமது சிறிய குடிசையிலிருந்து நூல்நூற் றுக்கொண்டிே நடராஜ தரிசனஞ் செய்தாரென்பது,
"பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி மளந்தோனுந் தாமிருக்க - நாவில் இழைநக்கி இழைநெருடும் ஏழை அறியுமோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து"
என்ற பாடலால் அறியக்கிடிக்கின்றது.
குணித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் வவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே".
. என்பது, திருநாவுக்கரசு நாயஞர் நடிராஜ நரிசாம்.

Page 19
24
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்று விம்மிதம் உறுகின்ருர் மணிவாசகப்பெருமான்.
t 女
ஆத்மாவை நாம் காணுவதில்லை; ஆயினும் உடம்பில் வைத்து அறிகின்ருேம். ஆத்மான்வக் காண முடியாத நாம், ஆத்மாவுக்கு ஆத்மாவான பரமாத்மாவைக் காண்பது எப்படி! காண முடி யாது. ஆயினும், மகான்கள் நடராஜர் முதலிய வடிவில் காணுகின்ருர்கள். உருவம் இல்லாத கட வுள், உயிர்களுக்கு இரங்கி உருவங்களுக்கூடாகக் காட்சியளிக்கின்ருர்,
சந்திரசேகரர், உமாமகேசர், இடிபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர். காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீர பத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிாகர், நீலகண்டர், சக் கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர். ஏகபாதர், சுகாசீனர், தகFணுமூர்த்தி, லிங்கோற் பவர் என்ற மகேசுர வடிவங்கள் ஆன்மாக்களுக்கு அநுக்கிரகிக்க எடுத்த வடிவங்கள்; மனமாசு நீங் கிய மகான்கள் கண்ட வடிவங்கள். இன்னும் எத் தனையோ வடிவங்கள் புரானேதிகாசங்களிற் பேசப் படுகின்றன.
'கண்ட கறைமிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனே விண்டு முதலோர் வியப்பவே வெண்ணெயிலாட் கொண்ட தொருபனவக் கோலத் தனத்தரித்துத் தண்டு மொருகை தனிலு:ன்றி வந்தனனே"

நடராஜ நிருத்தம் 25
சூரபத்மாவுக்கு வரங்கொடுக்க வந்த வடிவம், சுந்தரரை ஆட்கொள்ள எடுத்த வடிவம் என்று கச்சியப்பசிவாசாரியர் கூ றியிருக்கின்றர்.
சுந்தரர் கண்ட வடிவத்தைக் காணும் பாக்கி
யம் குரபத்மாவுக்கு இருந்ததென்பது தெரிகிறது. ★ 女 女
நாயன்மார் இருவ்ருந் திருமடத்தை அடைந்த ւնiaնr, திருநாவுக்கரசு நாயனர், தாம் திருப்பதிகம் முழுவதும் பாடிய பின்னே திருக்கதவந் திறந்த அருமையையும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனூர் முதற்பாட்டைப் பாடின உடனே கதவு சிடைத்த எளிமையையும் நினைந்து, ‘சுவாமியுடைய திருவுள் ளம் இது என்று அறியமாட்டாமல் சியர்கின்றேன்? என்று கவன்று, மிக அஞ்சி, திருமடத்தில் 625 Lu& கத்திலே போய், வேதாரணியேசுரருடைய திருவடி களைச் சிந்தித்துக்கொண்டு சீருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற் சென்று, "நாம் வாய்மூரில் இருப்போம். அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா" என்று அருளிச் செய்தார். setts மூர்த்தி, "எங்கே யென்னை யிருந்திடந் தேடிக் கொண்-உங்கே வந்தடையாள மருளினர் -தெங்கே தோன்றுத் திருவாய் மூர்ச் செல்வனர்-அங்கே வா வென்று போனரதென்கோலோ என்னுந் திருப்பதி கம் பாடிக்கொண்டு எழுந்து, வேதாரணியத்தினின் றும் புறப்பட்டு விரைந்து போக; சுவாமி அவருக்கு முன்னகத் தாம் அவருக்கு முன்காட்டியருளிய திருக் கோலத்தோடும் நடந்தருளினர். நெடும்பொழுது பரமசிவனுக்குப் பின்னகச் செல்கின்ற அப்பமூர்த்தி
4.

Page 20
26 6srugi
அவரைச் சமீபிக்கப் பெற்றிலர். சுவாமி சமீபத் திலே காட்சி கொடுப்பவர்போன்று ஒரு திருக் கோயிலை சாதிரே காண்பித்து அதனுள்ளே புகுந் தருள; அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயன ரும் அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்ருர் என்று கேள்வியுற்று வந்து சேர்ந்தார். அப்பமூர்த்தி சுவாமி மறைந்தமையைக் குறித்துத் துக்கித்து, "அடியார்களிற் சிறந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனரே திறக்கவேண்டும் என்பதை நினைய? மல் திறந்து குற்றஞ் செய்த சிறியேனுக்கு ஒளிக்கலாம். ஒரு திருப்பதிகத்தின் முதற்பாட்டாலேயே திருக் கதவை அடைப்பித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் இங்கே வந்திருக்கின்ருர். அவருக்கு எப் படி ஒளிக்கலாம்" என்ருர்,
உடனே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருக்குக் காட்சி கொடுத்தருளினர். திருஞான சம்பநதமூாத்தி நாயனர் தரிசித்துத் தோத்திரம் பண்ணி, அப்பமூர்த்தியுங் காணும் படி காட்ட அப்பமூர்த்த யுத் தரிசித்து, "பாட அடியார் பரவக் கண்டேன்" என்னுந் திருப்பதிகம் பாடினுர்,
இந்தச் சரித்திரத்திலிருந்து தெய்வ மூர்த்தங்கள் அவரவர் பக்குவத்துக்கு இசைய எளிதினும் அரிதினும் காட்சி யளிக்கின்றன என்பது புலனுகின்றது. ስ *ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை,
女 ★ நடராஜர் முதலிய மூர்த்தங்கள் பக்குவர்களாற் காணப் பட்டவைகள். கற்பனைச் சித்திரங்கள் கலை ஓவியங்கள் அல்ல.

நடராஜ நிருத்தம் 27
ஆத்மாக்கள் சரீரங்களைச் சார்ந்து காட்சியளிக் கின்றன. சரீரம் ஆன்மாக்களின் சொந்த வடிவம் அல்ல. அவ்வாறே தெய்வ வடிவங்கள் பரம்பொரு ளின் சுவரூபம் அல்ல, அவை தடஸ்த வடில்ங்கள்.
தடஸ்தமாவது பிறிதோர் பொருளின் சார்பு பற்றி ஒரு பொருள் பிரகாசிப்பது. தடத்தம் - அயலிடத்திருப்பது.
தடத்தம் பரம்பொருளின் சுவரூபம் அன்ருயி னும், அப்பரம்பொருள் ஆத்மாக்கள் தம்மை அணு கும்படி எடுத்த வடிவமே, தெய்வ வடிவங்களைக் காணத் தக்கவர்கள், காணக்கூடிய சமயங்களில், காணுமல் இருந்து கொள்ள மாட்டார்கள். திருவாரூரில் திருவிழா ஆரம் பித்தால் சுந்தரரை எந்தச் சங்கிலியாலுங் கட்டி ஆள முடியாது. கண்ணே போனலும் சுந்தரர் அங்கே போயே தீருவார்.
ஒரு விஞ்ஞானி பெளதிக சம்பந்தமான ஒரு நுண்மையைக் கண்டவழிக் களிக்கூத்தாடுகின்முன்; உலகம் அவனை உச்சிமேற் கொள்கின்றது. அவன் விஞ்ஞானக் கூடத்தில் தவங்கிடக்கிருன்.அவ்னுக்கு உலகமே யில்லை. அந்த விஞ்ஞானியின் சங்கதி அப் படியானல்,
சீளங்கிருந்தும் இவ்வுலகந் தோன்றுகின்றது? என்ற வியாசபகவானின் கேள்விக்கு, வி.ை நடராஜ மூர்த்தியின் திருக்கரத்தில் அமரு கின்ற உடுக்கை வடிவில் இருக்குமாயின்,
ஒரு அருண் ஞானி,

Page 21
28 கோயில்
”عصمعمحســـــــــــــــــــــــــــــــ
அந்த உடுக்கையைக் கண்டு, உலக இரகசி யத்தை அறிந்து, ஆனந்தக் கூத்தாடாமல் இருப்ப தெப்படி!
தெய்வ வடிவங்களில் கண்டு களிக்க வேண்டிய வைகளைக் காண முடியாத நாம்,
அத்தெய்வ வடிவங்களை மனித ஒவியங்களோடு ஒப்பிட்டு வியந்து பரவசப்படுவது,
கேத்திர கணிதக் கீறுகளைக் கணித மணமும் இல்லாதவன் கண்டு ஆனந்தப்படுவதற்குச் சமமா யிருக்கும்.
கேத்திர கணிதக் கீறுகளின் உண்மைகளை அறி தற்குப் படிப்படியே ஒருவனுக்கு எத்தனையோ உப காரங்கள் செய்து வைப்பதுபோல,
நடராஜர் முதலிய வடிவங்களின் உண்மைகளை நுகர்த நீ கு எத்தனையோ உபகாரங்கள் - கலைகள் - கீழ்க் கீழ்ப் படிகளாய் அமைய வேண்டும், அப் படி களில் எத்தனையோ பிறவிகளில் முயல வேண்டும்.
பல பிறவிகளில் எண்ணிறந்த நுண்கலைகளின் வழியில் முயன்றும் ஒரு நடராஜ வடிவததின் உண் மையைக் காண முடியாதிருநதால் அதில் நூத னம் இல்லை. அந்த உண்மையைக் காணுதற்குச் சட மான இந்தக் கலைகள் எம்மாத்திரம்!
தெய்வ வடிவங்களின் இயல்பு எட்டாததாயிருக்க, அவற்றைச் சாதாரண சடப்பொருள்களோடு ஒப்பிட்டும், நூதனசாலைகளில் வேடிக்கைப் பொருள்களுள் நுழைத்தும் ஆராய்ந்து கணிப்பது வெறும் பைத்தியம்.

நடராஜ நிருத்தம் 29
தெய்வ வடிவங்களில் இக்கால முறையில் கலை காண்பதும், அவ்வடிவங்களைக் கண்டு கலைமுறையிற களிக்க வேண்டுமென்று களிப்பதும், மூக்கறுப்புண் டவனும், மூக்கறுத்துக்கொண்டவர்களுங் கடவுளைக் கண்டு களித்த கதையேயாம். இது நிற்க.
கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்
கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள் பெண்ணுெருபா கனைப் பணியுந் தலைக்னே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள் பண்ணவன்றன் சீரிபாடு நன்குவே நன்னுப்
பரன் சரிதை யேகேட்கப் படுஞ் செவியேசெவிகள் அண்ணல்பொலங் கழனினைக்கு நெஞ்சமேநெஞ்ச
மவனடிமைக்கீ முடிமைபுகு மடிமையே யடிமை,
- பிரமோத்தரகாண்டம்

Page 22
30 கோயில்
5. சிங்கவன்மர் இரணியவன்மர் ஆனது
வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் முதலியவர்களும் திருவுடையந்தணர் மூவாயிரவ ரும் தில்லைவனத்திலே நிருத்த தரிசனஞ் செய்து கொண்டிருக்கின்ற காலத்திலே,
பிரமதேவர், கங்கைக் கரையிலுள்ள அந்தர் வேதியிலே ஒரு யாகஞ் செய்யத் தொடங்கிக் கொண்டு, தில்லைவாழந்தணர்களையும் தேவர்களை யும் அழைத்துக்கொண்டு வரும் பொருட்டு, நாரத முனிவரைத் தில்லைவனத்துக்கு அனுப்பினுர், அந் நாரத முனிவருடைய சொல்லைக் கேட்ட தேவர் களும் அந்தணர்களும், "இங்கே ஆனந்த நிருத்த மாகிய அமிர்தத்தை உண்ணும் நாங்கள் இனி உங்கள் அவியை உண்ணேம்’ என்ருர்கள். அதனை, நாரத முனிவர் சென்று, பிரமதேவருக்கு விண்ணப் பஞ் செய்ய, அப்பிரமதேவர் தாமே சென்று, தில்லை வனத்தை அடைந்து, சிவகங்கையிலே ஸ்நானஞ் செய்து, திருநிருத்தத்தைத் தரிசித்துச், சிவலிங் கத்தை வணங்கி, வியாக்கிரபாத முனிவ்ரிடத்தே வோம். அவர் வாயிலாகத் தில்லைவாழந்தணர்களை யுந் தேவர்களையும் கூடின்படுத்தி, அந்தர்வேதிக்கு அழைத்துக்கொண்டு போய்த், தமதியாகத்தை முற்றுவித்தார். வியாக்கிரபாதமுனிவரும், பதஞ்சலி முனிவரும், நிருத்த தரிசனஞ் செய்துகொண்டு, தில்க்லவனத்தில் இருந்தார்கள்.

இங்கவன்மர் இரணியவன்மர் ஆனது 3.
இவர்கள் இப்படியிருக்கும்போது மற்ருெருவர் நினையாப்பிரகாரம் தில்லைவனத்தை நோக்கி வரு கின் ருர், அவர் சரித்திரம் வருமாறு:
பிரமாண்டம் படைக்கப்பட்டபொழுது, சூரி யனுக்கு, மனு, இயநன் என இரண்டு குமாரர்கள் தோன்றினர்கள். பூமியிலே வெளிப்படப் பாவம் செய்த8ரை இம்மையிற்ருனே தண்டித்தற்கு மனு வும், வெளிப்படாமற் பாவஞ் செய்தவரை மறுமை யிலே நரகத்திலே தண்டித்தற்கு இயமனும், சிவ பேருமானுலே நியோகிக்கப்பட்டார்கள்.
மனு, இமயமலைக்குத் தெற்கேயுள்ள கெளட தேசத்தில் இருந்துகொண்டு, பூமியை ஆண்டார். ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியே எழுபத்தொரு சதுர்யுகம் அரசியற்றி நான்கு மனுக்கள் இறந்தார்கள். ஐந்தாம் மனுவுக்கு மனைவியர் இரு வர். அவர்களுள்ளே, மூத்தாளிடத்தில் உடம்பு முழுவதுஞ் திங்கம்போல வெண்ணிறமுடைய சிங்கவன்மன் என்னும் ஒரு குமாரனும் இளையாளிடத்தில் அழகினையுடைய வேதவன்மன், சுமதிவன்மன் என்னும் இரண்டு குமாரர்களும் பிறந்தார்கள்.
சிங்கவன்மஞர், தாம் உடற்குற்றமுடைமை யால் இராச்சியத்துக்கு யோக்கியர் அல்லர் என் றும், பூமியெங்குந் திரிந்து சிவதீர்த்த ஸ்நானமுஞ் சிவஸ்தல தரிசனமுஞ் செய்வதே தமக்கு உறுதி என்றுந் தெளிந்து, தந்தையாருக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு, கெளடதேசத்தை நீங்கிச் சென்று, காசியை அடைந்து கங்கையின் மூழ்கி, விசுவேசரைத் தரிசித்தார். பின்பு வங்க தேசத்தையுஞ் சாவக தேசத்தையுங் கடந்து, ஒட்டிய தேசத்திற் சென்று விமேசரை வ்ணங்கினர். பின்பு தெலுகீக தேசத்திற்

Page 23
32 கோயில்
சென்று, பூரீசைலத்தை வணங்கித், திருக்காளத் தியை அடைந்து நமஸ்கரித்துக்கொண்டு போயி ஞர். போகுநாளில், வழியிலே ஒரு வேடனைக் கண் டழைத்து, ஒரு மரநிழலில் இருத்திக்கொண்டு, "இக்காட்டில் யாது புதுமை உள்ளது?" என்று வினவ, வேடன் கும்பிட்டு, ‘இக்காட்டிலே ஓராற்றங் கரையிலே ஒரு மாமரத்தினடியிலே ஒரு தேவர் இருக்கின்ருர். அவர் அருகே, ஒரு பச்சைப்பெண் ஒரு பிலத்தின்வழியே வந்து, இரண்டு பொழுதும் அவர் மேலே பூக்களைச் சொரிகின்ருள்" என்ருன். அதுகேட்ட சிங்கவன்மஞர். அவ்வேடன் வழி காட்டச் சென்று, மாவடித் தேவராகிய திருவேகம் பரை அடைந்து, நாடோறும் வணங்கித், தினமாத் தேன் பழமுதலிய உணவுகளை அவ்வேடன் கொண்டு வந்து தர, வாங்கிப் புசித்துக்கொண்டு இருந்தார். இருக்குநாளிலே, தான் தென்பூமியெங்கும் யாத் திரை செய்ய விரும்பி, முன் வழிபார்த்தறிந்து கொண்டுவரும் பொருட்டு அவ்வேடனை அனுப்பி ஞர். அவன்ப்ோய்ப் பார்த்துக்கொண்டு வந்து, "தில்லைவனத்திலே ஒரு பொற்ருமரை வாவிக் கரை யிலே ஒரு புலியன் நித்திரை செய்துகொண்டிருக் கின்றன்" என்று விண்ணப்பஞ் செய்தான்.
அது கேட்ட சிங்கவன்மஞர், அவ்வேடன் வழி காட்டச் சென்று, தில்லை வனத்தை அடைந்து, சிவகங்கைக் கரையிலே சமாதி பொருந்தி யிருந்த வியாக்கிரபாத முனிவர் திருமுன் சென்று, நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டுக்கொண்டு நின்றா.
வியாக்கிரபாத முனிவர், தமது சந்நிதியிலே நின்ற சிங்கவ்ன்மனருடைய வரலாறனைத்தையும் யோகத்தினுல் அறிந்து, மகிழ்ந்து, "சிங்கவன்மனே"

சிங்கவன்மர் இரணியவன்மர் ஆனது 33
என்ருர். உடனே சிங்கவன்மனுர் விழுந்து நமஸ் கரித்து, எழுந்து, கண்ணிர் ததும்ப நின்ருர், அவரை, வியாக்கிரபாத முனிவர். தமது திருமுன் அழைத்து இருத்திக்கொண்டு, ‘கூன்வரலாறென்னை? என்று வினவியருளினர். சிங்கவன்மஞர் கை தொழுது, "முனிவர் பெருமானே! அடியேன் கென. தேச மனுவின் குமாரன். அடியேனுக்குத் தம்பிமார் இருவர். அடியேன் உமது திருவருளினலே சிவபெரு மானைக் குறித்துத தவஞ் செய்ய வந்தேன்" என் ருச். அது கேட்ட வியாக்கிரபாத முனிவர், "உன் பிதா மிக முதிர்ந்தவன். இனி அரசாளும் பேறு உன்னுற் பெறற்பாலதாகவும், நீ தவஞ் செய்ய எண்ணும் எண்ணந் தகாது" என்று அருளிச் செய் தார். அதற்குச் சிங்கவன்மனசி, "அடியேனுடைய வடிவம் அரசாளுதற்குரிய வடிவமன்று; ஆதலினுல், அடியேனுக்கு அதில் ஆசை இல்லை; அடியேனுடைய தந்தையாருக்குப்பின் அடியேனுடைய தம்பிமார் அரசியற்றத் தக்கவர்; அடியேன் முத்தியின்பம் அடையும்பொருட்டு அருள் செய்யும் என்று விண் ணப்பஞ் செய்தார்.
அப்பொழுது வியாக்கிரபாத முனிவர், "இவன் தன் உடற்குற்றம் நீங்கினல், அரசாளுங் கருத் துடையன், நடேசப்பெருமான் கருணை செய்வாரா யின், ‘அன்பாரும் பணிக்கு நமக்கு ஆளாவான்" என்று திருவுளங் கொண்டு, நாம் வரும் வரையும் இங்கே நில்" என்று சிங்கவன்மனரைக் கரையிலே நிறுத்திவிட்டுப், பதஞ்சலி முனிவரிடத்தே போய், அவருக்கு அச்சிங்கவன்மனருடைய வரவைச் சொல்

Page 24
34 கோயில்
லினர். முனிவர் இருவருங் கூடி வந்து, கனகசபையின் வாயி லிலே நின்று, நிருத்த தரிசன காலம் வர, உள்ளே புகுந்து, நமஸ்கரித்து, ‘எம்பெருமானே கெளடேச குமாரன் இங்கே வந்து நிற்கின்றன். அவனுக்கு உடற்குற்றத்தை நீக்கித், திரு நிருத்தத்தைப் புலப்படுத்தி, அவனே அடிமைகொண்டருளுக" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். ஆனந்த நடே சர் திருவுள மகிழ்ந்து, "முனிவ்ர்காள்! நீங்கள் சிங்க வன்மனைப் பொற்ருமரை வாவியிலே ஸ்நானஞ் செய்வித்து, இங்கே அழைத்துக்கொண்டு வாருங் கள்" என்று பணித்தருளினர். உடனே முனிவர் இருவரும் விரைந்து சென்று, சிங்கவன் மனரைச் சிவகங்கையிலே ஸ்நானஞ் செய்வித்தார்கள். சிங்க வன்மஞர் ஸ்தானஞ் செய்து முன்வடிவம் நீங்கிப், பொன்வடிவந் தாங்கி, எழுந்து, இரணியவன்ம ஞர் எனப் பெங்ார் பெற்ருர்,
வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மஞருக்குத் திருவைந்தெழுத்தை உபதேசித்து, அவரை அழைத்துக்கொண்டுபோய்ச், சபைக்கு முன்னே நமஸ்கரிப்பிக்க, ஆனந்த நடேசர் அவ்விரணியவன் மருக்குத் திருநிருத்தத்தைக் காட்டியருளினர். திரு நிருத்தந் தரிசித்தவுடனே, இரணியவன் மஞர் நெஞ்சநெக்குருக, இரண்டு கண்களினின்றும் அருவி சொரிய, ஆனந்த பரவசராகி, நடுநடுங்கிப், பூமியின் மேல் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து, துதி செய்து கொண்டு நின்ருர், சிற்சபேசர் திருவுளமகிழ்ந்து இரணியவன் மனே! நீ நமக்கும் வியாக்கிரபாதருக் கும், பதஞ்சலிக்கும், மூவாயிரம் முனிவருக்குந் தொண்டு செய்வாயாக" என்று திருவாய்மலர்ந்த ருவினர். வியாக்கிரபாதமுனிவர் இரணியவன்ம

சிங்கவன்மர் இரணியவன்மர் ஆனது 35
ஞரை அழைத்துக்கொண்டுபோய்த் திருமூலட்டான முடையாரையும், திருப்புலிச்சரமுடையாரையும், திருவனந்தேச்சுரமுடையாரையும் வணங்குவித்துக் கொண்டு, தமது பர்ணசாலையை அடைந்து, தம் பத்தினியாரை நோக்கி, “நீ உபமன்னியுவுக்குப் பின்பு பெருது பெற்ற பிள்ளை இப்பிள்ளை' என்ருர், உடனே இரணியவன்மஞர் தாயாருடைய திருவடி களை வணங்கத், தாயார், அவ்விரணியவன்மனுரைச் சபாநாதர் தனக்குத் தந்தருளிய இரத்தினம் எனக் கைக்கொண்டார். இரணியவன்மஞர் நாடோறுஞ் சிவகங்கையிலே ஸ்நானஞ்செய்து சிவபெருமானைத் தரிசித்து, வியாக்கிரபாத முனிவருக்கும் பதஞ்சவி முனிவருக்குந் தோண்டு செய்துகொண்டு இருந் gönı Tə
நில்லைவா ழந்தணர் தம் ம்டியார்க்கு மடியேன் றிருநீல கண்டத்துக்கு யவளுர்க் கடியேன் இல்லையே வென்ஞத வியற்பகைக்கு மடியே
னிளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தா சமர்நீதிக் கடியே
ஞரூர ரூைரி லம்மானுக் காளே.
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்

Page 25
36 கோயில்
6. இரணியவன்மர் சோழரானது
தில்லையிருந்த மூவாயிரவர் மு னி வர் க ள் கங்கைக் கரையில் உள்ள அந்தர்வேதிக்குச் சென் றவர்கள் அங்கே இருக்கின்ருர்கள்.
இரணியவன்மர், கூபதன்னியுவுக்குப் பின்பு அவர்தம்பியாராய், வியாக்கிரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்குந் தொண்டுசெய்துகொண்டு இங்கே தில்லையிலிருக்கின்ருர்,
இப்படியிருக்கு நாளிலே, கெளடேசராகியமனு, தமதிராச்சியத்தைத் தம்முடைய மூத்த குமார ஞகிய சிங்கவன்மனைக்கொண்டு நடத்துவிக்கும் பொருட்டு வசிட்டமுனிவருக்கு விண்ணப்பஞ் செய்துவிட்டுச் சுவர்க்கத்தை அடைந்தனர். வசிட்டமுனிவர், அம்மனுவின்பொருட்டுச் செயற் பாலனவாகிய கிரியைகளனைத்தையும் இளைய குமாரர்களைக்கொண்டு முற்றுவித்தபின், அவர்கள் வேண்டுகோளின்படி, தென்றிசை நோக்கிச் சென்று, தில்லைவனத்துக்கு வடமேற்றிசையிலுள்ள திருக் களாமர நிழலில் எழுந்தருளியிருக்கும் பிரமபுரீசரை வணங்கினுர், அஃதறிந்த வியாக்கிரபாத முனிவர், "நாம் இப்பூசையை முடித்துக்கொண்டு வருவோம்; நீ முன்னே போ" என்று பணித்தருளது இரணியவன்மஞர், தாம் முன்போய் வசிட்ட முனிவரை வணங்கித், தந்தையார் சுவர்க்கமடைந் தமையை அறிந்து, துக்கமுற்ருர். அஃதுணர்ந்த வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் இரு

இரணியவன்மர் சோழரானது 37
வரும் அங்கு வர, வசிட்ட முனிவர் அவர்களெதிர் சென்ருர். இப்படிக் கலந்த மூவ்ருந் தங்களுள்ளே சற்காரஞ் செய்துகொண்டார்கள்.
வியாக்கிரபாத முனிவர், தம்மை வணங்கிய இரணியவன்மஞரை மனந்தெளிவித்து, வசிட்ட முனிவரை அழைத்துக்கொண்டு சென்று, சிவகங்கை யிலே ஸ்நானஞ் செய்வித்து, நடேசப்பெருமானை யும் திருமூலட்டான முடையாரையும், திருப்புலிச் சுர முடையாரையும் வணங்குவித்துத், தமதாச்சிர மத்தில் அவருக்கு விருந்து செய்தார். மற்றநாள், வசிட்ட முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவருங் கூடியிருந்த பொழுது, இரணியலின்மனர் வந்து நமஸ்காரஞ் செய்து கொண்டு, அவர்கள் சந்நிதியில் இருந்தார். வசிட்டமுனிவர் வியாக்கிரபாத முனிவரை நோக் கிக், "கெளடராசா தன்னிராச்சியத்தை இவ் விரணியவன்மனைக் கொண்டே நடத்துவிக்கும் பொருட்டு என்னை வேண்டிக்கொண்டனன். இவனை அழைத்துக்கொண்டு போதற்கே இங்கு வந்தேன்" என்ருர், உடனே வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனரைநோக்கி, "உன் கருத்து என்ன?” என்றர். இரணியவன்மஞர் வியாக்கிரபாத முனிவரை வணங்கி, ‘எம்பெருமானே! அடியேன் சிற்சபேசருக்கும் உமக் குஞ் செய்யும் வழிபாட்டையே யன்றிப் பிறிதொன்றையும் விரும்பேன்" என்று விண்ணப்பஞ் செய்தார். வியாக்கிரபாத முனிவர், "உன் கருத்து இதுவாயின், நீ வசிட்ட முனிவருடனே அங்கேபோய், இராச கிரீடத்தையும், இரத்தினம் பொன் முதலிய திரவியங்களையும்,

Page 26
38 கோயில்
யானை குதிரை தேர் காலாட்களையும், மந்திரிமார் களையுங் கொண்டு சீக்கிரம் வருவாயாக. இங்கே எம்மோடு நிருத்த தரிசனஞ் செய்துகொண்டிருந்த திருவுடையந்தணர் மூவாயிரவர் அந்தர்வேதியில் இருக்கின்ருர்கள். நீ வரும்பொழுது அவர்களை அழைத்துக்கொண்டு வருவாயாக’ என்று பணித் தருளினர்.
இரணியவன்மனர் நடேசப்பெருமானை வ்ணங் கித் திருவருள் பெற்று, வியாக்கிரபாத முனிவரை யும் அவர் பத்தினியாரையும் பதஞ்சலி முனிவரை யும் வணங்கி விடைகொண்டு, வசிட்ட முனிவ ரோடு நடந்து. கெளடதேசத்தை யடைந்து, தம்மை வந்தெதிர்கொண்ட தம்பிமார் முதலாயின ரோடு நகரத்திற் சென்று, சிலநாள் அங்கிருந்தார். பின்பு தம்பிமார் மந்திரிமார் முதலாயினர்க ளோடும் புறப்பட்டு, அந்தர்வேதியை அடைந்து திருவுடையந்தணர்களை வணங்கித், தேர்களின் மேலேற்றிக்கொண்டு, சென்று, தில்லைவனத்தினது திருவெல்லையை அடைந்தார். அடைந்தவுடனே தாம் விரைந்து சென்று, வியாக்கிரபாத முனிவரை யும் பதஞ்சலி முனிவரையும், வணங்கி, நிகழ்ந்தன வெல்லாம் விண்ணப்பஞ்செய்தார். அம்முனிவ ரீருவரும் விரைந்து, திருவுடையந்தணர்களை எதிர் கொண்டார்கள்.
திருவுடையந்தணர்கள், தங்கள் தேர்களைக் கனகசபையின் வடமேற்குப் பக்கத்திலே நிறுத்திக் கொண்டு, இறங்கி வந்து, வியாக்கிரபாத முனிவ

இரணியவன்மர் சோழரானது 39
ருக்குத் தங்களை எண்ணிக்காட்ட மூவாயிரர் என் னுந் தொகையிலே ஒருவ்ரை அங்கு காணுது இரணியவன்மஞர் திகைத்து நின்ருர், அப்பொழுது எல்லாருங் கேட்கும்படி, சிவபெருமான் "இவ்வந்தணர்கள் எல்லாரும் நம்மை ஒப்பர்கள்; நாம் இவர்களை ஒப்பேம், நாம் இவர்களில் ஒருவர்? என்றருளிச் செய்தார். அதுகேட்ட திருவுடையந் தணர்கள், அஞ்சி நடுநடுங்கித், தங்களுள்ளே தாங் கள் நமஸ்கரித்து எழுந்து, கனகசபையை அடைந்து, நடேசப்பெருமானை வணங்கிக்கொண்டு, அச்சபை யைச் சூழ இருந்தார்கள். இரணியவன்மஞர், கனகசபைக்குக் கிழக்குத் திக்கிலே கொற்றவன்குடி என ஒரு நகரம் செய்வித்துக்கொண்டு, அங்கே இருந்தார்.
சிதம்பரத்திலே, எல்லாரும் நிருத்த தரிசன்ஞ் செய்துகொண்டு வாழுநாளில் ஒரு நாள், நடேசப்பெருமான் பக்கத்திலே திருக்கூட்டமாகி இருந்தார்கள். அப்பொழுது வியாக்கிரபாத முனி வர், "இரணியவன்மன் இப்பூமியை ஆளக்கடவன்; இவன் தம்பிமார்கள் கெளடதேசத்தை ஆளக் கடவர்கள்’ என்ருர், அதற்குப் பதஞ்சலி முனி வரும் வசிட்ட மூனிவரும் உபமன்னியு முனிவருந் இல்லைவாழந்தணர்களும் மகிழ்ந்து, "அப்படியே ஆகுக" என்ருர்கள். வியாக்கிரபாத முனிவர் இரணியவன்னைரை விவாகஞ் செய்வித்து, முடி குட்டிப், புலிக்கொடி கொடுத்துச் சோழராசா வாக்கினுர்,

Page 27
40 கோயில்
இரணியவன்னுைருடையதம்பிமார்கள், விடை பெற்றுக்கொண்டு, நால்வ்கைச் சேனைகள் சூழச் சென்று, கெளடதேசத்தை அடைந்தார்கள்.
பின்பு, வியாக்கிரபாத முனிவருடைய அநுஞ்ஞைப்படி, இரணியவன்மனர் நடேசப் பெருமானுக்குத் திருவம்பலமும், திருமூலட்டானே சுரருக்குத் திருக்கோயிலும், திருமாளிகைகளும், திருமதில்களும், திருக்கோபுரங்களும், பிறவுஞ் செய்வித்தார். திருவீதியிலே தில்லைவாழந்தணர் களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, அவர்களைக் குடி புகுவித்தார், சிதம்பராலயத்திலே செயற் பாலனவாகிய பூசை திருவிழா முதலியன செய்தற் பொருட்டு, வேத சிவாகமப்படியே பதஞ்சலி முனி வரைக்கொண்டு ஒரு பத்ததி செய்வித்து, அதனை யானைமே லேற்றித் திருக்கோயிலை வலஞ்செய்வித் துக் கனகசபையினுள்ளே பிரவேசிப்பித்தார். பூசை திருவிழா முதலியவற்றிற்கு வேண்டும் நிபந்தங்கள் அமைத்தார்.
நித்திய பூசை, பன்னிரண்டுமாச பூசை, தமன கஞ் சாத்துதல், பவித்திரஞ் சாத்துதல், ஆணி யுற்சவம், ஆடிநீர் விளையாட்டுற்சவம், ஐப்பசி யுற்சவம், கார்த்திகைத் திருவிளக்கீடு, மார்சழி உற்சவம், தைப்பூசத் திருப்பாவாடை, மாசியுற்சவம் முதலியவைகளெல்லாம் விதிப்படி செய்விப்பா ராயினர்.
சபாநடேசருக்கு வருஷந்தோறும் அபிஷேகஞ் செய்யப்படுந்திகை ம் ஆறு. அவையாவன:

இரணியவன்மர் சோழரானது 4.
சித்திரைத் திருவோணம், ஆணித் திருவுத்தரம், மார்கழித் திருவாதிரை, ஆவணிச் சுக்கிலபக்ஷ சதுர்த்தசி, புரட்டாதிச் சுக்கிலங்கூy சதுர்த்தசி மாசிச் சுக்கிலபக்ஷ சதுர்த்தசி என்பனவாம்.
女 女 ★
மூவ்ாயிரம் முனிதர்களாகிய திருவுடையந் தணர்கள், வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர்களுக்கு முன்னகே, தரிசனத்தை நாடித் தில்லைவனத்தில் தவஞ்செய்துகொண்டி ருந்தவர்கள் இடையில் அந்தா வேதிக்குச் சென்று மீண்டவர்கள். சிங்கவன்மராயிருந்த இரணியவன்மர், உடந்குற்றங் காரணமாக இராச்சியத்தில் வெறுப்புற்று, இடை யில் வந்து சேர்ந்தவர். அவருடைய இராச்சிய வெறுப்புத் துறவு அன்று. அது, வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் வசிட்ட முனிவர் உபமன்னியு முனிவர் முதலிய மகான்களால் பரிசீலனஞ் செய்யப்பட்டது.
முதன்முதல் சிங்கவன்மர் இரணியவன்மர் ஆனபோது நடராஜ தரிசனத்துக்கு உரியூரோ என்று அவர் தகுதி, வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் ஆகிய இருவர் களாலும் திருவருளை மூன்னிட்டுச் சிந்திக்கப்பட்டது.
அதன்மேல் அங்குள்ள முனிவர்கள் யாவராலும் யோசிக்கப்பட்டுச் சிதம்பராலயத் திருப்பணி இரணியவன்மருக்கு அநுக்கிரகிக்கப்பட்டது. பூமி யில் முதன் முதற் ருேன்றிய கோயில் சிதம்பரமே என்று முன்னமே பேசப்பட்ட gle

Page 28
42 கோயில்
சிதம்பரமாகிய கோயிலில் நடேசரைப் பூசிக் குங் கூட்டம் வந்து கூடிய வரலாறு, கோயிற் புராணத்திற் கூறியவாறு இங்கே எடுத்துக்காட் டப்பட்டது
விசேட தானங்களில் கோயில்கள் உண்டாகின்றன. விசேடம் அறிந்தவர்கள், அறிய விரும்புகிறவர்கள் அங்கே வந்து கூடுகின்றர்கள். அவர்களாற் பூசை நடைபெறுகின்றது; திருப்பணி சித்திக்கின்றது. ஆத்மார்த்தத்தின் கூட்டமே பரார்த்தம்,
வித்தியாலயங்களாகிய கோயில்க ளுக்கும் கோயிற்புராணக் கதை பொருந்தும்.
கோயிற் பூசை, கோயிற்றிருப்பணி, கல்விகற்பித்தல் தம்மை விற்றயினும் பெறவேண்டியவைகள். கடவுள் தந்த அறிவு வளத்துக்கு விலைபேசுதல் உய்தியில் குற்றல். சுவாமியின் திருவடிகளுக்கு ஒரு மலரிடுதற்கு எத்தனை பிறப்பில் புண்ணி யஞ் செய்திருத்தல் வேண்டும்! அதற்கும் விலைபேசுவதா!
புண்ணியந் தெரிந்தவர்கள், அதனைச் செய்யக் கடவர்கள் அதனை விரும்புகிறவர்கள் வலிந்து வந்து சேருவார்கள். புண்ணியஞ் செய்யுங் கூட்டஞ் சேர்க்கப்படுவதில்லை; விண்ணப்பஞ் செய்து சேருவது. சேர்க்கத் தொடங்கினல், ஒருகுடம் பால்ை ஒரு துளி மதுக்கெடுத்தேவிடும்.
*ஆகிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்"
 ைதிருக்குறள்.