கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி

Page 1

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
-பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை
நினைவுப் பேருரை - 8 W
ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி
சிரேஷ்ட விரிவுரையாளர் நுண்கலைத்துறை, : . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கலாநிதி சி. மெளனகுரு
1989 - O - 29

Page 2
Dr. S. Mounaguru
Department of Fine Arts University of Jaffna.
The role of Mahajana College in the Tamil Dramatic Traditions of Sri Lanka
Pavailar Thuraiappaihpillai Memorial Lecture - 8
Publisher: Mahajana College, Tellippalai.
Printers. New Era Publications, Jaffna.

65. நாகராசா B.Com., M. A. Dip. Ed.
அதிபர், மகாஜனக் கல்லூரி
கல்லூரிச் சாதனைகள் தொடர்பாக மேலும் ஒரு நுண்ணுய்வு.
பாவலர் துரையப்பாபிள்ளை முதல் இன்றைய இளம் எழுத் தாளர், இளங்கலைஞர் வரை எமது கல்லூரிக்கு நீண்ட கலை, இலக்கியப் பாரம்பரியம் ஒன்றுண்டு. இப்பார்ம்பரி யம் பற்றிய நுண்ஞய்வு ஈழத்தமிழகீம் முழுமைக்குமிர்ன கல்ை, இலக்கிய ஆய்வுக்கு அடிப்படையான செய்திகளைத் தரவல்லது. பாவலரும் பார்தியும் (1982) பாவலர் துரை யப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் அன்றும் இன்றும் -மீள் பார்வை (1986). மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம் பரியம் (1988) ஆகிய பாவலர் நின்வுப்பேருரைகள் இத்த கைய நுண்ணுய்வுகளாக இடிம்பெற்றன. இத்தெரடரில் கல்லூரியின் கலைத்துறைச் சாதனைகளின் நுண்ணுய்வாக இன்று கலாநிதி சி. மெளனகுரு அவர்களின் ஈழத் துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி என்ற நினை வுப் பேருரை இடம் பெறுகிறது. யூன் மாதம் 24 ஆம் நாள் நடைபெறவேண்டிய இப்பேருரை பாவலர் பிறந்த நாளும் கல்லூரியின் சிற்பியர்கிய - தெ. து. ஜயரத்தினம் அவர்கள் மறைந்த நாளும் சங்கமிக்கும் இவ்வாரத்தில் இடம் பெறுவது மிகவும் பொருத்தமான செயலாகும்.

Page 3
மட்டக்களப்புக் கூத்து மரபின் பிரதிநிதியாகப் பேராத னைப் பல்கலைக்கழகம் சென்ற கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் பேராசிரியர் சு. வித்தியானந்தனுல் செம்மையாக் கப்பட்ட கூத்து மரபின் பிரதிநிதியானுர். சங்காரம் என்ற சமூக உள்ளடக்கம் கொண்ட கூத்தின் மூலம் கலாநிதி அவர் கள் இத்துறையிற் புதுமை செய்தார். நாடகம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டம் பெற்ற அவரி, நாடகவியல் க்ார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி புள்ளார். சிறந்த நாடக நெறியாளராகவும் நாடக இலக் கியப் படைப்பாளராகவும் மிளிரும் அவர் சிறுவர் நாடகத் இலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈழத்தமிழகத்திற்கே புரிய நாட்க மரபு-பாங்கு-ஒன்றினை உருவாக்கும் தேட வில் கலாநிதி மெளனகுரு ஈடுபட்டுள்ளார் என்பதை அவ ரது அண்மைக்கால நாடகங்கள் பலப்படுத்துகின்றன.
பேராதனைப் பல்கலைக் கழக நாடகங்களில் பாகமேற்று நடித்த காலகட்டத்தில் கலாநிதி அவர்கள் எமது கல்லூரி மேடையில் தோன்றினர்கள். 1960களில் ஏற்பட்ட இத் தொடர்பு இன்றுவரை தொடர்கிறது. கல்லூரியின் வளர்ச் சியுைம் சாதனைகளையும் நன்கு அறிந்துள்ள அவர்கள் கல் லூரியின் நாடக மரபைப் பற்றி ஆராய்ந்து ஆய்வுரை நிகழ்த்த இசைந்து வந்தமை எமக்குப் பெருமகிழ்ச்சி தரு கின்றது.
யாழ்ப்பாண்ப்பல்கலைக்கழக நுண்க்லைத்துறைச் சிரேஷ்ட விரிவுரைய்ாளரர்கிய அவர்கள் இந்நுண்ணுய்வை மேற் கோள்வது குறித்துக் கல்லூரிச் சமூகம் அவர்க்ளுக்கு ஸ்ன் றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
மிக இளமையிலேயே சிறந்த கவிஞன், என்ற புகழை ஈட்டிக் கொண்ட கவிஞராகிய எமது புகழ்பூத்த மாணவர் ஒருவர் இப்பேருரை நூலுருப் பெறத் துணை செய்தார். அவருக்கும் எமது நன்றி உரியது. தெல்லிப்பழை. 1989. 10, 29

ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி

Page 4

ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி
முன்னுரை
. மஹாஜனக் கல்லூரி நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் எழு பத்தொன்பது ஆண்டுகளாகின்றன. இதனை நிறுவிய பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை மறைந்து அறுபது ஆண் டுகள் ஆகின்றன. 1910 ஆம் ஆண்டு தொடக்கம் 1929ஆம் ஆண்டுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்குத் தம்மை உர மாக இட்டவர் பாவலர் துரையபாப்பிள்ளையவர்கள்.
அந்நியர் வருகையும் ஆங்கிலக் கல்வியும் ஈழத்துத் தமி ழரிகளிடையே இரண்டு விதமான உயர் குழாத்தினரை (Elite) உருவாக்கின. ஒரு வகையினர் மேலைநாட்டு நாகரி கத்தை ஏற்று, தாய் மொழியிலும் பார்க்க ஆங்கிலத்தில் புலமை பெற்ற் தேசிய உயர் குழாத்தினர் (National elite group). இன்னெரு வகையினர் ஆங்கிலப் புலமை பெற்ரு லும் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்று, தம் இன. மொழி, மத வளர்ச்சியில் அக்கறை கொண்ட பிரதேச உயர் (sprágart (Regional elite group), பாவலர் அவர்கள்
இரண்டாவது வகையினர்.
பாவலர் அவர்கள் அக்காலச் சமூக விழுமியங்களுக்கு ஏற்ற உயர் குழாம் கருத்தினையே கொண்டிருந்தாராயினும் அவரிடம் காணப்பட்ட சமூக நலஞட்டம் ஏனைய உயர் குழாத்தினரிடமிருந்து அவரை வேறுபடுத்திற்று.
மதுவிலக்குப் பிரசாரத்தில் அவர் asuruosts ஈடுபட் டம்ை, உபாத்தியாயர் சங்கம் நிறுவியமை, யாழ்ப்பான ஜனசங்க்ம் போன்ற பல நிறுவனங்களில் அக்கறைகொண் டிஞ்ந்தம்ை என்பன அவரது சமூக நலஞட்டத்திற்குச் சில உதாரணங்களாகும். .

Page 5
கல்வி, கல்விக்காக என்றில்லாமல், கசடறக் கற்றபின் தந்தக் கோபுரங்களில் ஒதுங்கிக் கொண்டு மக்களை விட்டுத் தூரச் சென்று விடாமல் தாம் கற்ற கல்வியையும் தம் வாழ்நாளையும் யாழ்ப்பான மக்களுக்கு அர்ப்பணித்து, மஹா 8ጭ።Æ கல்லூரி மூலம் பண்பாட்டுப் பணிகளே மக்சளுக் கிர்ந்தியவர்”அவ்ர். த்ம்க்ஞ்த்துகின் வெளியிட, கட்டுரை புடின் இதய்யுஜீபும் தாடகத்தையும் ஊடகங்களாகப் பயன் படுத்தியவர் அவர்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், குறிப்பாக-தமிழ் ஆரளுக் கர் சமூகம்-இந்த மண்ணுக்கேயுரிய பண்பாட்டுப் பின்னணி போடு வளரவேண்டும் என்பதே அவரது றேர்க்கு சின்பது அவர் எழுத்துக்கள் மூலம் தெரியவருகிறது. இந்நோக்கோடு அவர் நிறுவிய கல்லூரி தன் விழுப்த்தேர்ன்பது ஆண்டு கால வரலாற்றில் பில் சாதனைகrைச் சாதித்துள்ள்து. இலட் சியமும் பொறுப்புண்ர்வும் மிக்க நற்குடிமக்களைக் காலத் துக்குக்காவம் வழங்கியுள்ளது. உள்ள்தமான ஒரு நோக் கோடு அவர் நிறுவிய கல்லூரி இன்று யாழ்ப்பானத்து முதன்ம்ைக் கல்லுர்ரிக்ளில் தத் திகழ்கிறது. குறிப்பாகத் த்மிழ் மக்களின் சிறப்பாச்'யாழ்ப்பானத் தமிழ்மக்களின் க்ல்வி வரலாற்றிலும் கலை வரலாற்றிலும் இடம் பெறும் முக்கிய பாடசாகீல்களுள் ஒன்முகவும் திகழ்கிறது. ”
இக்கல்லூரியை நிறுவிய அப்பெருமகனின் நினவாத இக்கல்லூரி'ஈழத்துத் தமிழ் நாடகத் துறைக்கு ஆற்றிய பங்கிகண்ப் பற்றி உர்ைபாற்றுமாறு ப்னிக்கப்பட்டுள்ள்ேன்.
**"":: பின்க் அவர்கள் நாடக ஆசிரியராக இருப்பது முக்கிய ஒரு விடயம் ஆகும். இது தவிர இப்பாட்சாலையிலே தொடர்ச்சியாக நடைப்ெற்ற நாடகப் போட்டிகளிலும் பாடசாலையில் நடைபெறும் பல்வேறு விழாக்களிலும் தவ
gது ஒன்ருே அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ நாடகங்கள் i. பெறுவதும் ப்ரட்சாலைக்கு ஜெரியே அகில் இலங்தை
கீட்டத்தில் ந்டைபெறும் ”நீர்டப் போட்டியில் பத்
 

3
கொண்டு தொடர்ச்சியாக முதற்பரிசு பெற்றதும் நிதி சேகரிப்பிற் கூட நாடகத்தையே ஒரு காரணியாகப் பயன் படுத்துவதும் வெளியிலே மேடையேறுகின்ற சிறந்த நெறியா ளர்களால் உருவாக்கப்பட்ட தரம் மி க் க நாடகங்களைப் பாடசாலைக்குள் மேடையிட்டு அவற்றைப் பார்க்கும் சந் தர்ப்பத்தை மாணுக்கருக்கு அளிப்பதும் ஈழத்து நாட்க உலகிற்குப் பங்களிபபுச் செய்த சில முக்கியமான மாணுக் கரை உருவாக்கியமையும் என மஹாஜனுக் கல்லூரியின் பங்களிப்பு ஈழத்துத் தமிழ் நாடகப் பின்புலத்திற் குறிப் பிடத்தக்கது.
மஹாஜனவின் நாடகப் பங்களிப்பின் ஆழ நீள அக லங்களை அறிய நாம் செய்த முயற்சியில் அதிகமான தக வல்களைப் பெறமுடிந்தது.
இந்நாடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டு, இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருப்போரின் பேட்டிகள், அச்சில் வெளியான நாடகங்கள், நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் என்பன எனக்கு உதவின. மஹாஜ னக் கல்லூரியில் தொடர்ச்சியாகத் தமிழ் நாடகங்களுடன் ஆங்கில நாடகங்களும் மேடையேறியுள்ளன. நாடக நூல் கள் வெளிவந்துள்ளன. இந்நாடகங்களும் நாடக நூல்களும் பட்டியலிடப்படுவது அவசியம். அதனை நான் ஒரளவு செய்ய முன்வந்துள்ளேன், ஆனல் என் பிரதான நோக்கம் அது வன்று. இந்த நாடக முயற்சிகளுக்கூடாக முகிழ்த்தெழுந்த முக்கிய நெறிகளையும் ஈழத்துத் தமிழ் நாடக மரபுடன் அது சம்பந்தப்பட்டிருக்கும் விதத்தினையும் காண்பதும் ஈழத்துத் தமிழ் நாடகப் பாரம்பரியத்தில் மஹாஜனுவின் இடத்தை நிர்ணயிப்பதுவுமே என் பிரதான நோக்கமாகும்.
ஈழத்துத் தமிழ் நாடகப் பாரம்பரியத்தில் மகாஜனுவின் இடத்தை நிர்ணயிக்குமுன் மிகக் சுருக்கமாக ஈழத்துத் தமிழ் நாடகப் பாரம்பரியத்தினைக் குறிப்பிடுதல் அவசிய மாகும்.
s-O-

Page 6
,4
ஈழத்தமிழ் நாடகப் பாரம்பரியம்
சமயச்சடங்குகளிலே ஈழத்துத் தமிழ்நாடகத்தின் ஊற் றுக் கண்களைக் காணமுடியுமாயினும் அவற்றை நாம் நாட கம் என்றழைப்பதில்லை. அவற்றினின்றும் விடுபட்டு, தமி ழர் மத்தியில் உள்ள ஒவ்வொரு பிரிவினர்க்கும் பொழுது போக்குக் கலைகளாக வளர்ந்துவிட்ட வசந்தன் கூத்து, மகு டிக் கூத்து, பறைமேளக்கூத்து என்பவற்றிலேதான் ஈழத் துத் தமிழ் நாடகப் பாரம்பரியத்தின் ஆரம்ப வடிவினைக் காணுகின்ருேம்.
பின்னர் தோன்றியதும் ஈழத்தில் தமிழர் வாழ் அனைத் துப் பிரதேசங்களாண் வடக்கு, கிழக்கை இணைத்த, ஆட லும் பாடலும் நிறைந்ததும் வட்டமேடையில் திறந்த வெளியில் ஆடப்படுவதுமான கூத்து மரபு ஈழத் தமிழர் நாடகத்தின் அடுத்த போக்கினைக் காட்டி நிற்கிறது.
இந்து புராண, இதிகாசக் கதைகளே இதன் உள்ளடக் கமாயின. அரசன், கடவுள் என்பவர்களின் கதைகள்ே கூத் துக்களில் அபிநயிக்கப்பட்டன. விடிய விடிய நடைபெற்ற இக்கூத்துக்களில் பாடியோர் உரத்துப்பாடினர். கதை கூறும் பாணியில் இவற்றின் அளிக்கை முறை அமைந்திருந்தது. காத்தான்கூத்து, வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து என இது பலவகைப்படும்.
கத்தோலிக்கரின் வருகையுடன் இக்கூத்து புதிய உள்ள டக்கங்களைப் பெற்றது. பைபிளில் இருந்து கதைக்கருக் கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆடல் நீக்கப்பட்டது. வட்டமேடை ஒரு பக்கம் அடைக்கப்பட்டு, பார்வையாளர் மூன்று பக்கமிருந்தும் நாடகத்தைப் பார்த்தனர். இவ்வண் ணம் அரங்கு சில மாற்றங்களைப் பெற்றது. அத்தோடு கத்தோலிக்க வருகையினுல் பாசுக்க நாடக மரபும் தமிழரி-ை ሣ©Æቃëዞ.
இதனையடுத்து, பள்ளு, குறவஞ்சி, வாசாப்பு, சா போனற நாடக வடிவங்கள் ஈழததுத தமிழரிடை தோன் றுகின்றன.

5
இதனையடுத்து, டிருமா மோடி நாடகமரபு பிரபல்யமா கின்றது. சீன் கட்டி நடிக்கும் வழக்கம் இதனுடன்தான் ஆரம்பமாகின்றது. இதனைப் " பார்ஸி" நாடகமரபு என அழைப்பர். கர்நாடக, இந்துஸ்தானி மெட்டுக்களிலை அந்த பாடல்களைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இம்மரபு தொழில் முறை நடிகர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனரஞ்சக நாடக மரபாகவும் இது இருந்தது. இதன் நடிப்புமுறை மேடைக்கு முன்வந்து உரத்த தொனியில் பேசுவதாக, டாடுவதாக அமைந்திருந்தது. இதன் ஒப்பனை முறைகள் காலத்துக்கொவ்வாதனவாக இருந்தன.
பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக வருகையுடன் தமிழ் நாட்டில் ஒரு புது நாடக மரபு ஆரம்பமாகின்றது. இவர் வருகையுடன் உயர் பதவி வகித்தோரும் கற்ருேரும் நாடகத்தில் புகும் தன்மை தோன்றுகிறது. ஆங்கில, சமஸ் கிருத நாடக மரபுகளிலமைந்த நாடகங்கள் தோன்றுகின்றன. ஷேக்ஸ்பியரையும் காளிதாசரையும் உள்வாங்கி இவர்கள் நாடகம் செய்தனர். பம்மல் சம்பந்த முதலியாரே, தமிழ் நாட்டில் நாடகத்தைக் கட்டுக் கோப்புக்குள்ளும் ஒழுங்கிற் குள்ளும் கொணர்ந்தவர். படிப்டோரும் நாடகத்தைப் பார்க்க வைத்தவர். இவர் நாடகங்கள் முன்னைய ஸ்பெஷல் நாட கங்களுக்கு மறுதலையானவையாகும்; வசனத்தையே தமது பிரதான ஊடகமாகக் கொண்டனவாகும். இவரது வழியில் நாடகம் எழுதியவரே பாவலர் துரையப்பாபிள்ளையாவார். இம்மரபை ஈழத்தில் வளர்த்தவரும் பிரபல்யம்ாக்கியவரும் கலையரசு சொர்ணலிங்கம் பிள்ளையவர்கள்.
ஈழத்தமிழ் நாடகமரபில் புதிய மரபான வசனம் பேசி நடிக்கும் இந்நாடக மரபு தோன்றுகிறது.
கலையரசு சொர்ணலிங்கத்தின் பின் மத்தியதர வர்க்கத் தின் இன்னெரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வருமான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்து. மாந்தரின் வாழ்க்கை முறைகளையும் பேச்சு மொழியையும் கையாண்டு இயற்பண்பு நாடகங்களை எழுதினர். மேடை

Page 7
6
பிலே இயற்கையாக முப்பரிமானம் உள்ள பொருட்களை உள்ளவாறு வைத்து நாடகத்தை வாழ்க்கையின் ஒரு வெட்டு முகமாகக் காட்டும் மரபு தோன்றிற்று. பார்வையாளன் நான்காவது சுவராக, அமைதியான பார்வையாளனுக (Silent Observer ) இருந்து நாடகத்தைப் பார்த்தான். இயற் பண்பு நாடகமரபும் ஈழத்துத் தமிழ் நாடக உலகில் தோன்றிற்று,
திதானத்துடனும் உணர்வுடனும் கையாண்ட பேச்சு வழக்கினை வெறும் பகிடிக்காகவே; கையாண்ட பகிடி நாட மரபும் இவ்வியற் பண்பின் இன் ஞெரு வளர்ச்சியாகும்
புற்றீசல் எனப் புறப்பட்ட தமிழ்நாட்டுச் சினிமா வின் தாக்கம் தமிழ்நாடகத்தைத் தாக்கிற்று. சினி மாவைப்போல் நாடகத்தையும் செய்பும் சினிமா நாடக மரபு இதனுலே தோன்றிற்று. தத்ரூபமாகக் காட்சியைக் காட்டல், சினிமாவைப் போல மேடையிற் செய்தல் இசைத்தட்டுக்களுக்கு வாயசைத்தல், ஆடுதல் என்பன இதன் பண்புகளிற் சில.
1960களில் தமிழர் தேசிய நாடக மரபைத் தோற்று விக்கும் முயற்சியில் பல்கலைக்கழகத்தின் மூலம் கூத்து மர பினைச் செம்மைப்படுத்தும் மரபொன்றினைப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தொடக்கிவைத்தார், இதனை நாம் செம்மைப்படுத்தப்பட்ட கூத்து மரபு எனலாம்.
1970களின் பின்னர் நவீன நாடக நெறியிலமைந்த நாடகங்கள் மேடையிடப்பட்டன. இது மோடியுற்ற நாளக dy Gua (Stylised Theatre Tradition) 965 updi5th ill-g. குறியீட்டுப்பாங்கில் காட்சிகளையும் உணர்வுகளையும் உணர்த் தல், உடம்பையும் குரலையும் மேடையில் அதிகம் பயன்படுத் தல், பார்வையாளனை உணர்ச்சிவசப்படுத்தாமல் அறிவுபூர் வமாகச் கிந்திக்கவைத்தல் என்பன நவீன நாடக நெறியின் சில அமிசங்களாகும்.

7
இடையில் மொழிபெயர்ப்பு நாடக மரபு ஒன்றும் “ሠፊ தமிழர் மத்தியில் வளர்ந்தது. இதற்கு ஒரு நீண்ட வரலாறும் உண்டு. உலகத்துச் சிறந்த நாடக எழுத்தாளர்களின் சில நாடகங்களைத் தமிழர்கட்கு அறிமுகம் செய்தல் இம்மரபின் பிரதான போக்காயிற்று. தமிழ் தேசிய உணர்வு அரும்பியதை அடுத்து, தமிழருக்கென ஒரு தேசிய நாடகமரபைத் தோற்று விக்கும் முயற்சியில் பல பரிசோதனை முயற்சிகள் பின்னர் மேற்கொள்ளப்பட்டன. பாரம்பரிய கூத்துக்களின் சாரத்தை உள்வாங்கி உலக நாடக வளர்ச்சி மரபுகளையும் இணைத்து இப்பரிசோதனைகள் நடைபெற்றன. இதனை நாம் பரிசோதனை அரங்க மரபெனலாம்.
இவற்றை அடுத்து வீதிநாடகமரபு ஒன்றும் சிறிதளவிலே தோன்றியுள்ளது. இவ்வண்ணம் சமயச்சடங்கிற் காணப் படும் நாடக அமிசங்கள் தொடக்கம் இன்றைய பரிசோதனை அரங்குவரை ஒரு நீண்ட நாடகமரபு அவ்வக் காலகட்டத் திலே தோன்றியோரால் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தமையை ஈழத்து தாடகப் போக்கை நுணுக்கமாக அவதானிப்போர் அறிவர். Y
இந்நீண்ட ஈழத்தமிழ் நாடகப் பாரம்பரியத்தில் மகா ஜனு எங்கு அமைகின்றது? தமிழ் நாடக வளர்ச்சிக்கு என் னென்ன பணிகளை அது செய்தது ? விதந்து கூறக்கூடிய அதன் பணிகள் எவை? எந்தெந்த மரபுகளை அது முக்கிய மாகப் பிரதிபலித்தது? எந்தெந்த மரபுகளை அது வளர்த் தெடுத்தது? என்பன போன்ற வினுக்களுக்குத் தேடும் விடை மஹாஜனவின் நாடகப் பங்களிப்பைத் தெளிந்துகொள்ள உதவும்.
பாவலர் நாடக மரபு.
மஹாஜனவின் முதல் நாடகமாக நாம் பாவலர் துரையப் பாபிள்ளை எழுதிய சகலகுணசம்பன்னனையே கொள்ள வேண் டும். இந்நாடகம் எப்போது எழுதப்பட்டது என்று தெரியாவி டினும் இது 1905இலும் அவர் மறைந்த பின்னர் 1932இலும்

Page 8
8
நடிக்கப்பெற்றதென அறிகிருேம், இந்நாடகம் எழுதப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் பார்ஸி நாடக மரபு செல்வாக்குப் பெற்றிருந்தது. பாவலர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பார்ஸி
நாடகங்களைப் பார்த்திருப்பார் என்பதற்குச் சான்றுகளுண்டு. தேரசமஞ்சரி என்ற தமது பாடல் தொகுதிக்கு எழுதிய ஆங்கில முன்னுரையில் அந்நாடகக் கம்பனிக்காரர் பாடிய பார்ஸி, இந்துஸ்தானி மெட்டுப் பாடல்களைக் கண்டித் துள்ளார். i. . . . . . ; -r
தாம் எழுதிய சகல குணசம்பன்னன் நாடகத்தைப் பாவலர் தம் காலத்திருந்த பார்ஸி நாடக மரபுக்கின்யய அமைக்கவில்லை. பாவலரின் ஆங்கில இலக்கியப் பயிற்சியும் ஷேக்ஸ்பியர் ஆக்கங்கள் பற்றிய அவரது பரிச்சியமும் ஆங் கில நாடக மரபுக்கியைய இந்நாடகத்தை அவரை எழுத வைத்தன. இந்நாட்கத்தில் வரும் பாத்திரங்கள் உட்சொல் (Solloquy) ஆங்கில நாடகச் சாயலைக் காட்டுகிறது. இந் நாடகம் இலக்கியத் தமிழிற் பெரும்பாலும் எழுதப்பட்ட கெனினும் யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கு மொழி கலந் துள்ளது. இப்பேச்சுமொழி குறிப்பிட்ட சில பாத்திரங்க ளால் மாத்திரமல்லாது எல்லாப் பாத்திரங்களாலும் பேசப் படுகிறது. ySS
இலங்கைத் தமிழ்நாடக மொழி வளர்ச்சி பற்றி ஆராய இந்நூல் பெரிதும் உதவுகிறது. சகலகுணசம்பன்னன் இராஜா -இராணிக் கதையாக இருப்பினும் சமூக முக்கியத்துவமுள்ள கதை. நாடகம் பொது சனத்தோடு மிக நெருக்கமாக உற வாடும் ஒரு கலையாகும். அதற்குப் பேச்சுவழக்கும் துணை புரிகின்றது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலியுடன் இந்நாடகம் ஒப்பிடற்குரியது.
இவ்வகையில் கலையரசு சொர்ணலிங்கத்திற்கு முன்னரே நவீன நாடகமரபின் மூலவராக ஆங்கில நா ட க ம ர பு நெறியை ஈழத்தமிழர் மத்தியில் தமிழ் மரபுக்கியையத் தொடக்கி வைத்த நாடக ஆசிரியராகப் பாலவர் திகழ்கி ருர், நவீன நாடக நெறிக்கு அடி எடுத்துக் கொடுத்தது

9
என்ற வகையில் மஹாஜனுவின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்க ஒன்ருகின்றது. ·
தம் காலத்தில் கிராமப் புறங்களில் பாமர மக்களின் மத்தியில் பயில்நிலையிலிருந்த கூத்து மரபையோ, பிரபல் யம் பெற்று, தொழில் முறை நடிகர்களால் ஆடப்பட்டு, பெருவ்ழக்கிலிருந்த பார்ஸி நாடக மரபையோ பின்பற்ரு மல் ஆங்கில மர்புக்கியைந்த ஒரு நாடக மரபைப் பாவலர் தோற்றுவித்தமைக்கு அவிர்து சமூக்ப் பின்னணியும் கல்விப் பின்னணியுமே காரணங்களாகும். மரபுவழி நெறிமுறைக ளினின்று மாறி நவீன் நெறிமுறைகளுக்கியையக் கல்வி போதிக்கப் புறப்பட்ட பாவலர் நாடகத்திலும் நவீன நெறி முறையைத் தோற்றுவித்தம்ை வியப்பன்று. ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
இந்நாடக மரபுதான் பின்னுளில் கலையரசு சொர்ண லிங்கத்தினல் பரவலாக்கி வளர்க்கப்படுகிறது. படித்த மத்தி ய்தர வர்க்கத்தினர் இந்நாடக மரபு வளர்ச்சியில் பெரும் பங்கு பெறுகின்றனர். இந்நாடகத்தின் பார்வையாளர்கள் படித்தோரும் உயர்ந்த உத்தியோகங்கள் வகித்தோருமே.
இம்மரபே மிக்க வலிமையுடன் மஹாஜனுவில் தொடர்ச் சியாக வளர்ச்சிபெற்றது. பாடசாலை நாடகங்களாக இம் மரபு வெளிப்பட்டமையினுல் அது பூரணத்துவமாக வெளிப் படமுடியவில்லை. பாடசாலைக்குரிய விதி முறைகள் அதனைக் கட்டுப்படுத்தின. எனினும், குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி யினை மகாஜனவில் இம்மரபு அடைந்தது என்பது ஐயத்திற் கிடமற்ற உண்மையாகும். மஹாஜனக்கல்லூரியில் ஆசிரியர், மாணவர்களினல் மேடையிடப்பட்ட நாடகங்களில், 1980 வரை பிரதானமாகத் தெரிகின்ற மரபும் இம்மரபேயாகும். வித்துவான் நா. சிவபாதசுந்தரத்தினுல் எழுதி நெறிப்படுத் தப்பட்ட் எது உறுதி? (1948) சி. நாகலிங்கத்தினுல் எழுதி நெறிப்படுத்தப்பட்ட அணையாத சுடர் (1951), சண்முகசுந்த ரத்தின் வாழ்வு பெற்ற வல்லி (1962), இறுதி மூச்சு (1960), கதிரேசர்பிள்ளையின் காங்கேயன் சபதம் (1965), ஜிவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குரு

Page 9
O
மகளும் (1968), குருதட்சணை (1969) என்பன இம்மரபில் வந்தனவே.
பாவலர் துரையப்பாபிள்ளையுடன் தோன்றிய இம்மரபு புலவர் சிவபாதசுந்தரஞருக்கு ஊடாகச் சண்முகசுந்தரம், கதிரேசர்பிள்ளை ஆகியோரில் உச்சம் பெறுகின்றதெனலாம்.
சிவபாதசுந்தரஞர் தமிழ் இலக்கியக் கருக்களை நாடக பாக்கியவர். சண்முகசுந்தரத்தின் நாடகங்கள் பெரும்பா லும் படிப்பதற்கே உகந்தவ்ை. ஈழத்துத் தமிழரின் வரலாறு அவர் நாடகத்தின் கருப்பொருள். இவ்வகையில் அவர் பேரா சிரியரி கணபதிப்பிள்ளை மரபினர். கதிரேசர்பிள்ளையவர்கள் பாரதக் கதைகளையே தம் நாடகங்களின் கருப்பொருளாக் கிஞர். இம்மரபில் விதந்து குறிப்பிடற்குரியவர் கதிரேசர் பிள்ளையவர்களாவர். அவர் நாடக எழுத்தாளர் மட்டுமன்று; நடிகரும் நெறியாளரும் கூட. அவரது நாடகங்கள் இலங் கைக் கலைக் கழகம் நாடகத்திற்காக நடத்திய பாடசாலைக ளுக்கிடையிலான போட்டிகளில் 1965 தொடக்கம் 1969 வரை தொடர்ச்சியாக ஐந்து முறை முதற் பரிசு பெற்று மஹாஜஞவிற்குப் பெருமை தேடித்தந்தன. அதன்மூலம் பல மாணவ நடிகர்களும் உருவாக்கப்பட்டனர். இன்று கலை, இலக்கிய உலகில் பேசப்படுகின்ற நா. சண்முகலிங்கன், கோகிலா மகேந்திரன் போன்ருேர் இதற்கு உதாரணங்க ளாவர். பாடசாலை மட்டத்தில் நாடக முயற்சிகளில் ஈடு பட்டவர்களுள் செனகரத்தினம் விஞயகரத்தினம் ஆகியோ ரும் குறிப்பிடற்குரியர்.
கலையரசு சொர்ணலிங்கம் போல நாடகத் தயாரிப்பில் மிக்க கவனம் செலுத்தியவர் கதிரேசர்பிள்ளையவர்கள். சொல்லுக்கு அழுத்தம் தந்து பேச்சிற் கவனம் செலுத்து வது அவரது நாடகங்களிற் பிரதானமான அம்சம். நாட கக்கலை பேச்சுப் பயிற்சிக்கு ஆதாரமானது என்ற கோட் பாட்டிற்கிணங்க அவர் தமது நாடகங்களைத் தயாரிததார்: இவருக்கு உதவியாக கலாகேசரி ஆ. தம்பித்துரை, வெ. சுந் தரமூர்த்தி (ஒப்பனை, காட்சி அமைப்பு) ஆகியோர் இருந்த னர். அன்றிருந்த நாடக மரபுக்கியைய வெட்டுக்காட்சிக eib5tib ʼ ( Cutouts ) பின்திரைகளும் பக்கத்திரைகளும்

l
மேடைப்பொருட்களும் அமைத்தார் இவர். இயற்றன்மை பொருந்தியனவாகக் காட்சியமைப்பு, உடையமைப்பு என்ப னவற்றை இவர் கையாண்டார். நிறைந்த பயிற்சி கொடுத்து, பூரணத்துவம் பெற்ற பின்னரே நாடகத்தை மேடையிடல் இவர் வழமை. முறையானதும் தொடர்ச்சியானதுமான நாடக ஒத்திகைகள் இவர் நாடகத்தைக் கனமானதாகவும் சிறப்பானதாகவும் ஆக்கின. இவரது நாடகங்கள் பாரதம் தந்த பரிசு என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியாகியுள்
T
சண்முகசுந்தரத்தின் நாடகங்களும் இம்மரபினவே. கதி ரேசர்பிள்ளைக்கு முன்னர் நாடகப் பணியில் ஈடுபட்ட இவ ரது நாடகங்களான வாழ்வு பெற்ற வல்லியும் இறுதிமூச் சும் பூதத்தம்பியும் நூல்வடிவில் வெளிவந்துள்ளன. பேரா சிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலி வரலாற்று நாடகத் தைப் பின்பற்றி எழுந்த இவரது நாடகங்கள் ஈழத்துத் தமிழர் சரித்திர நாடகங்களில் இடம் பெறற்குரியன. எனி னும் மகாஜன நாடக உலகில் சண்முகசுந்தரத்தின் பங்க ளிப்பு வேறுவிதமானது. கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய நாடகக் குழுவில் நீண்ட காலம் தொடர்ந்து அங்கத்தவ ராயிருந்து கிராமிய நாடகங்களையும் கூத்துக்களையும் வளர்ப் பதில் ஈடுபட்டவர் அவர். வன்னி-புதுக்குடியிருப்புக் கூத்து மரபினை இனங்கண்டு வெளியுலகிற்குக் கொணர்ந்தவர் அவர். மகாஜனவுக்குள் கூத்து மரபை வளர்க்காவிடினும் கூத்து மரபை அக்கட்டிடத்துள் அறிமுகம் செய்து வைத் தவர். மேடையினை ஒழுங்கு செய்தவர். இவ்வண்ணம் மகா ஜஞ சண்முகசுந்தரத்தின் மூலம் கூத்து மரபையும் தன் னுள் இணைத்தது எனலாம்.
இயற்பண்பு நாடக மரபு
பேராசிரியர் கணபதிப்பிள்ளை இயற்பண்புநெறி நாடகங் கள் எழுதப் பல்கலைகழக மாணுக்கரைக் கொண்டு அவற் றைத் தயாரித்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார். யாழ்ப்பாணத் தமிழில், யாழ்ப்பாண மக்களின்

Page 10
வாழ்க்கையை எழுத்தில் கணபதிப்பிள்ளை பொறிக்க, இயற் பண்பு நெறியிலமைந்த மேடையில் அதனை அளித்தார் பின்னவர். இம்மரபு மகாஜனவில் வளர்ந்ததைக் கர்ண முடிகிறது. கல்லூரியில் நீடைபெற்ற நாடகப் போட்டிக்ளில் இத்தகைய நாடகங்களே பெருவாரியாக இடம் பெற்றன. கல்லூரி விழர்க்களிலும் பாடசாலை நிதி சேகரிப்புக்களிலும் இம்மரபு நாடகங்கள் இடம் பிடித்தன. வி. செல்ல்த்துரை நெறிப்படுத்திய துரோகி யார் (1950), சபாஷ் முதலி யார் (1951), சண்முகசுந்தரத்தின் குலமகன் (1951), வி. செல்லத்துரை நெறிப்படுத்திய தியாகியார் (1959), சி. நாக லிங்கம் நெறிப்படுத்திய வாழ்க்கைப்படகு (1950), உத்த மன் யார்? (1963) பாவலர் துரையப்பாபிள்ளையின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அறிவு கொளுத்திய அமரர் (1972) என்பன இம்மரபுக்குரிய உதாரணங்களும் சில.
இம்மரபு சில வேளைகளிற் பகிடி நாடக மரபாகவும், சினிமாப்பாணி நாடகச் சாயல் கொண்ட மரபாகவும் வளர்ந்து சென்றுள்ளது. அந்தமான்கைதி என்ற சினிமர்ப் பட நாடக்ப்பிரதியே சபாஷ் முதலியாராக யாழ்ப்பாணத் தமிழில் தழுவலாக்கம் செய்யப்பட்டம்ை இதை இன்னும் வலியுறுத்துகிறது. நடிப்பு முறைகளும் பகிடிகளும் கூடச் சினிமாவைப் பின்பற்றின. திரை மூடித்திறக்கும் போது கால தாமதமாகும் நேரத்தை அலுப்பாக்காமல் இருக்க மூடிய திரைக்கு முன்னல் இரு பகிடிப் பாத்திரங்கள் இடை நிகழ்வுகளாக (Interlute ) பகிடி வார்த்தைகளை உரையாட வைக்கும் உத்தியைப் பயன்படுத்தினர். பிர தான கதை ஒரு வகையில் வளர இப்பகிடிக் கதையும் இன்னெரு வகையில் வளர்ந்து, இறுதிக்காட்சியில் இரண் டும் ஒன்று சேர்வதாக நாடகம் அமைக்கப்பட்டது. இது அன்றைய தமிழ்ச் சினிமாவின் தாக்கம்ேயாகும். இத்த கைய பகிடி உரையாடல்கள் இந்தியத் தமிழிலேயே நிகழ்த் தப்பட்டமை குறிப்பிடற்குரிய அம்சமாகும்.
பாவலர் துரை:ப்பாபிள்ளையினுல் அறிமுகப்படுத்தப்பட்டு கலையரசு சொர்ணலிங்கத்தினல் பிரபல்யப்படுத்தப்பட்ட

3
ஆங்கில நாடக மரபுக்கியைந்த நவீன நாடக மரபும் இயற் பண்பு நெறி நாட்கமர்பும் சினிமாப்" பாணியிலமைந்த் நாடக மரபுமே மகாஜனுவின் பிரதான நாடக மரபுகள்ாக அமைந்திருந்தன என்பதை 1948ஆம் ஆண்டில் மேடையேற் றப்பட்ட எது உறுதி? தொடக்கம் 1975 இல் மேடை யிட்ட குறும்பு புரிந்த கோமகள் வரையிலான நாடகங்கள் காட்டி நிற்கின்றன.
இம்மூன்று வகை நாடகமரபுகளே மாத்திரமன்றி, வெளியே வளர்ச்சி பெற்ற ஏனைய நாடக மரபுகளையும் புரிந்து கொண்டு அனைத்தையும் வளர்க்க மகாஜன உதவி யது என்பதனைத் தன் நிதி சேகரிப்புக்காக மகாஜன மேடை யிட்ட நாடகங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்." ". . . .
மஹாஜனவிற்குள் மேடையேறிய வெளிநாடகங்கள்
மகாஜன வெளியிலிருந்து வரவேற்று மேடையிட்ட நாடகங்கள் நான்கு வகையின. முதல்வகை, பேராதனைப் பல்கலைக்கழகத்திற் செம்மைப்படுத்தப்பட்ட கூத்து நாடகங் கள்.
1961 தொடக்தம் 1965 வரை தொடர்ச்சியாக மேடை யிடப்பட்ட பேராசிரியர் சு. வித்தியானந்தனின் கர்ணன் போர் (1962), நொண்டிநாடகம் (1663), இராவணேசன் (1964), வாலிவதை (1965) ஆகிய செம்மைப்படுத்தப்பட்ட கூத்துக்கள் அதே ஆண்டுகளில் மகாஜனவிலும் பல்கலைக்க ழக மாணவரால் மேடையிடப்பட்டன. அக்கூத்துக்களிற் பங்கு கொண்ட மாணுக்கரையும் அதனைப் பழக்கிய அண் ணுவியரான வந்தாறுமூலை சு. செல்லையாவையும் அதனைத் தயாரித்த பேராசிரியர் சு. வித்தியானந்தனையும் விருந்த ளித்தும் பொன்னுடை போர்த்தியும் கெளரவித்தது மகா ஜன. இந்நான்கு கூத்துக்களும் மட்டக்களப்பு வடமோடி, தென்மோடி முறையிலமைந்தவை. இதனை வரவேற்றதன் மூலம் தமிழர் பாரம்பரிய நாடகத்தை ஊக்குவிக்கும் முயற் சியிலும் மகாஜன ஈடுபட்டமை குறிப்பிடற்குரிய முயற்சி யாகும். யாழ்ப்பாணத்தில் இச்செயலை வேறெந்தப் பாட

Page 11
så
சாலேயும் மேற்கொள்ளவில்லை. இவ்வூக்குவிப்பில் முன்னின்ற வர்களுள் அன்று அதிபராகக் கடமையாற்றிய தெ. து. ஜெய ரத்தினமும் ஆசிரியராக இருந்த த. சண்முகசுந்தரமும் முக்கியமானவர்கள்.
அத்தோடு 1960இல் மகாஜனுவின் பொன்விழாக் கொண் டாட்டத்தின் போது வைரமுத்துவின் மயானகாண்டம் கொட்டகைக்கூத்தையும் மகாஜன தன் மேடையில் நிகழ்த் திக் கூத்து மரபு வளர்ச்சியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டது. w
மகாஜன வெளியிலிருந்து வரவேற்று மேடையிட்ட இரண்டாவது வகை நாடகங்கள் நகைச்சுவை நாடகங்களாகும். நாடகங்கள். அன்று பகிடி நாடகங்களா கப் பிரபல்யம் பெற்றிருந்தன. ஒரு பகிடிக் கதாபாத்திரத் தைச் சுற்றியே இந்நாடகம் செல்லும். இரு பாத்திரங்க ளின் உரையாடலுக்கூடாகப் பிறக்கும் நகையுணர்வும், சமத் காரப் பேச்சுக்களும் மக்களைச் சிரிக்கவைத்தன. எழுத்துப் பிரதி இந்நாடகங்களிற் கவனிக்கப்படவில்லை. நாடகத்தின் வெற்றி நடிகரின் வாய்ச் சாதுரியத்தையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. 1960 இல் மகாஜனுவின் பொன்விழாவை யொட்டி இடம்பெற்ற சானுவின் லண்டன் கந்தையா, ராஜ் நகைச்சுவை நாடகமன்றத்தின் வா கோட்டடிக்கு, கல்லூரி நிதிக்கு 1963 இல் நடைபெற்ற ராஜ் நகைச்சுவை மன்றத் தின் அவமானம், சாளுவின் எழுத்தாளன் ஆறுமுகம், 1968 இல் கட்டிட நிதிக்காக மேடையேறிய ராஜ் நகைச்சுவை மன்றத்தின்ரின் ஊர்சிரிக்கிறது என்பன இவ்வகை நாட கங்களே. இக்காலகட்டத்தின் இந்நாடகத்தின் பிரதிநிதிக ளாக ராஜ், சாணு ஆகியோர் திகழ்ந்தனர். அவர்களின் தனி நடிப்பே நாடகத்தில் பிரதான இடத்தைப் பிடித் தன. நிதி சேகரிப்புக்காக நகைச்சுவை மிகுந்த இத்தகைய జైల్లలకోత ந7 டகங்களை மகாஜன தெரிவு செய்திருக்கக் éfia{blts).
மகாஜன வெளியிலிருந்து வரவேற்று மேடையிட்ட மூன்றுவது வகை நாடகங்கள் மொழிபெயர்ப்பு நாடகங்க

ளாகும். பிரபல ரஷ்ய நாடகாசிரியரான அலெக்ஸ் அபு சேர்வின் நாடகமொன்றின் மொழிப்ெயர்ப்பே பிச்சை வேண்டாம். இதனை நெறிப்படுத்தியவர் அ. தாசீசியஸ். கட்டுப்பெத்தை வளாக மாணவரால் இது நடிக்கப்பட்டது. பேட்டல் பிரச்டின் நாடக மொன்றன் மொழி பெயர்ப்பே யுகதர்மம். இதை நெறிப்படுத்தியவர் க. பாலேந்திரா இலங்கை அவைக்காற்றுக் கழகம் இதனைத் தயாரித்திருந் தது. இவ்விரு நாடகங்களும் ஈழத் தமிழ் நாடக மரபில் மொழிபெயர்ப்பு நாடகங்களுட் குறிப்பிடத்தக்கன. இவற்றை மேடையிட்டதன் மூலம் இந்த மரபு வளர்ச்சிக்கும் தன் ஆதரவினை மகாஜன தெரிவித்துக்கொண்டது.
மகாஜன வெளியிலிருந்து வரவேற்ற நான்காவது நாடக வகை மோடியுற்ற நாடகங்களாகும். இவ்வகையில் பொறுத் தது போதும் இடம் பெறுகிறது. இதன் நெறியாளர் அ. தாசீசியஸ் இதனைத் தயாரித்தது நாடக அரங்கக் கல் லூரியாகும்"
இந்நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மரபினைப் பிரதிபலித்தது மாத்திரமன்றி ஈழத்து நாடக வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் பெறும் நாடகங்களுமாகும். முதலாவது மூன்ருவது, நான்காவது நாடகமரபுகளை ஏனைய மரபை வளர்த்த அளவு, தான் வளர்க்காவிடினும் இவற்றை மேடையேற்றியதன் மூலம் அந்நாடக மரபு சார்ந்தோருக்கு ஊக்கமளித்து அந்நாடக மரபினை மானுக்கருக்கு அறிமுகம் செய்து அந்நாடகமரபு வளர்ச்சியில் தன்னையும் இணைத் துக் கொண்டது மகாஜஞ.
மகாஜன தந்த நாடக முக்கியஸ்தர் மூவர்
மகாஜனுவின் மாணுக்கர்களாக இருந்து, பின்னுளில் ஈழத்துத் தமிழ் நாடக உலகிற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள் மூவர். அ. ந. கந்தசாமி, மகாகவி து. ருத்திரமூர்த்தி, சாஞ ஆகியோரே அவர்கள். ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியில் அ ந, கந்தசாமியின் மதமாற்றம் முக்கிய நாடகமாகக் கரு தப்படுகிறது. பேராசிரியர் சிவத்தம்பி இந்நாடகத்தை

Page 12
16
இயக்கினர், இயற்பண்பு நெறியிலமைந்த சமூகப் பிரச்சினை களை மனித நிலைப்படுத்தி அலசுவது இது.
ஈழத்து நாடக உலகில் பா நாடக மரபு வளரப் பெரும் பங்கு புரிந்தவர் மகாகவி. கோலம், முற்றிற்று, புதியதொரு வீடு, கோடை என்பன. அவரது மேடை BTLகங்களாகும். இவற்றில் புதியதொரு வீடும், (1979) கோடை யும் (1970) விதந்து குறிப்பிடற்குரியவை. மேடை பல கண்டவை புதியதொரு வீடு மோடியுற்ற முறையிலமைந்த நாடகம், கோடை இயற்பண்பு முறையிலமைந்ததோர் நாடகம். இரண்டுமே கதைப் புணர்ப்பு, முரண், பாத்திர வாக்கம் என்பனவற்றில் சிறப்பு மிக்கவை, நாடக இலக்கி யமாகவும் நோக்கும் பெற்றியன.
சானு, கலையரசு சொர்ணலிங்கம் மரபில் முழுமையான நாடகங்களைத் தயாரித்தளித்தார். சாணக்கியன். வலை என் பன அவரது சிறந்த படைப்புக்கள். எனினும் வானுெலி நாடகத் தயாரிப்பே அவருக்குப் பெயரைத் தேடித் தந்தது. மகாஜனவில் கல்வி பயின்றபோது, இவர்களுக்கமைந்த நாடகப் பின்னணியும் இவர்கள் நாடகத்திலீடுபடக் காலா யிற்று என்ற வகையில் ஈழத்து நாடக உலகுக்கு இவர்கள் மூலம் மகாஜனு பங்காற்றியது எனக் குறிப்பிடுவதில் தவ் றில்லை எனலாம்.
ஆங்கில நாடகங்கள்
இவ்வண்ணம் வெளிமரபுகளுடன் தன்னை இணைத்துக் கொண்ட மகாஜன ஆங்கில நாடக்த் தயாரிப்புக்களிலும் ஈடுபட்டது. பெரும்பாலும் இந்நாடகங்கள் இல்ல்ங்களுக் கிடையே நடை பெற்ற ஆங்கில நாடகப் போட்டிகளிலும் விழாக்களிலும் மேடையேற்றப்பட்டவையாகும். பின்வரும் நாடகங்கள் மேடையிடப்பட்டமைக்கான தகவல்கள் கிடைக் Seir psor. The End of the Begining (1950) Queer Street (1951, 1969), A. Husband for Breakfast (1966, 6). Bishop's Candle Stick (1958), The Path Finder (1958),

7
The lady with the lamb (1962), . The Master of the House (1963), Shattered (1964).
சி. சின்னத்தம்பி, 67dr. தேவபாலசிங்கம் என்போர் இந்நா டகங்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் முன்னின்ருர் கள்.
தெ. து. ஜெயரத்தினத்தின் பணி.
1974 வரை தொடர்ச்சியாக நாடகங்கள் மேடையேற வும் உற்சாகத்துடன் மாணுக்கரும் ஆசிரியரும் நாடகத்தில் பங்கு பெறவும் சகல ஒத்துழைப்புக்களையும் தந்து ஊக்குவித் தவர் அக்காலகட்ட்த்தில் அதிபராக இருந்த தெ. து. ஜெய ரத்தினம் ஆவர். மகாஜன நாடக உலகில் இவர் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அவர் கொடுத்த உற்சாகமும் உதவியுமே தாம் நாடகங்களை மேடையிட அத்திவாரங்களா யின என நாடகத்திலீடுபட்ட அக்காலகட்ட மகாஜனர்கள் அனைவரும் ஒரு முகமாகக் கூறுவர். தம் நூலை அவருக்கே சமர்ப்பித்தார். கதிரேசர்பிள்ளையவர்கள். தம் தந்தையின் நாடகப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுத் தவர் இவர். ராஜராஜசோழனின் ஆர்வமே தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அத்திவாரம். அதைக் கடடியவர்கள் சிற்பிகளும் தொழிலாளர்களுமே. அம்மன்னனின் ஆர்வம் அவர்களை இயக்கியது. இவ்வகையில் மகாஜனு நாடக உலகின் மன்ன இறகின்ருர் தெ. து. ஜெயரத்தினம் அவர்கள். அவர் பதவி யிலிருந்து 1970 இல் ஓய்வு பெற்றபின் நாடகத்தின் வேக மும் மகாஜனவில் குறைந்து வருவதைக் காணுகின்ருேம்' இக்காலகட்டத்தில் பாடசா8ல பல நாடகங்களைத் தயாரிக் காவிடினும் நாடகத்தின் ஆர்வமூச்சு அங்கு ஒபவில்லே என்பதற்கு வெளியிலிருந்து வரவேற்று, பாடசாலை மேடை யில் மகாஜன மேடையிடட நாடகங்கள் சாட்சியகருகின் * காத்திரமான வெளி நாடகங்கள் பல இக்காலகட்டத் திலேதான் முன்னர் குறிப்பிட்டபடி மகாஜனவில் மேடை யேறின.

Page 13
Ꭵ Ᏸ s
இவ்விடைக் காலத்தில் ஈழத்துத் தமிழ் நாடக உல
கில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. நவீன நாடகத்தின் தோற்றம், தேசிய நாடகமரபுக்கான தேடல், மொழிபெயர்ப்பு நாடகங்கள் பற்றிய சர்ச்சை என்பன பரந்த அளவில் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி, அவைக்காற்று கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம் என்பன புதிய நாடக அரங்கிற்கு தம் பங்களிப்பினை வழங்கின. நாடகப் பயிற்சிப் பட்டறை களை அரங்கக் கல்லூரி பல இடங்களில் நடத்தியது. இப் பயிற்சிப்பட்டறை ஒன்று மகாஜனுவிலும் நடைபெற்றமை குறிப்பிடற்குரியது.
மகாஜனவின் புதிய தலைமுறையினர்.
இந்தப் பொதுப் பண்புகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு மகாஜனவில் கல்விகற்ற புதிய தலைமுறையினர் புது நாடக மரபிற்கு தம்பங்களிப்பிக்னச் செய்கின்றனர். இப்புது நாடகமரபு தந்த உற்சாகத்தில் ஆசிரியர்களின் துணையின்றி அங்கு ஏற்கனவே கல்விபயின்றுகொண்டிருந்த மாளுக்கர் நாடகத் துறையில் இயங்கத் தொடங்கிய போது மகாஜன புதிய நாடக அரங்கிற்கும் தம் மாணுக்கர் மூலம் பங்களிப்பதனைக் காணுகிருேம். இப்புதிய தலைமுறை யினர் நாடகத்தினர் மூலம் பங்களிப்பதனைக் காணுகிருேம். இப்புதிய தலைமுறையினரி நாடகத்தை மக்களின் பிரச்சினை களை மக்களுக்குக் கூறும் பிரசார சாதனமாக்கினர். பொழுது போக்கிற்குரிய தாயிருந்த நாடகத்தைச் சிந்தனை யைத் தூண்டும். உறைக்கவைக்கும் கருத்துக்களைக் கூறும் சாதனமாக்கினர். இவ்வகையில் மகாஜனவின் மாணவன் மாவை, நித்தியானந்தன் இப்புதிய தலைமுறையின் முன்னே. டியாகின்ருர், அவரது ஐயா எலெக்சன் கேட்கிருர் (1973), இனிச்சரிவராது, திருவிழா என்பன குறிப் பிடத்தக்க நாடகங்களாகும். இவை யாவும் சமூக அரசியல் அங்கத நாடகங்களாகும். மகாஜனுவின் இன்னொரு மாளுக்கரான இளவாலை விஜயேந்திரனின் இனிக் கதவு திறக்கும், வேலை இல்லாப் பிரச்சினையையும் அதனல்

9
ஓர் இக்ளஞர் வீட்டில் படும் துன்பத்தையும் அடிப்படை யாக கெர்ண்டது. அவருடையச் உதாரணம் கல்கத்தாவும்" சமூகப்பிரச்சினை பற்றியதே. இந்நாடகங்கள் மகாஜனவில் கல்வி பயின்ற நாளுக்க்ரால் 80களில் மேடையிடப்பட்டன. இவற்றுள் திருவிழா ஒருவீதி, நாடகம் என்பதும் குறிப்பி பத்தக்கது. 1983 க்குப் பிறகு அரசியல் பிரசாரங்களுக்கு வீதி நாட்கங்களைப் பயன்படுத்தும் முறை யாழ்ப்பாணத் நிலே தோன்றுகிறது. அத்நாடகங்களுக்கு முன்னேடி திரு விழா ஆகும். இத்தாடகங்கள் நவீன நாடக நெறிகளே உள்வாங்கித் தயாரிக்கப்பட்டனவாகும். இதைத் தயாரித்த வர்கள் நாடக அரங்குக்கல்லூரிப் பயிற்சி வகுப்புக்களில் ஓரளவு-பயிற்சி பெற்றவர்கள். இந்நாடகத் தயாரிப்பில் இசைவாலே விஜயேந்திரன், பாலசூரியன், அ. ரவி, உ. சேரன், நா.சபேசன், கே. ஆதவன் ஆகிய மகாஜன மாணவர்கள் பங்கு கொண்டனர், . .
மகாஜனவில் பயின்ற முன்னுள் மானுக்கர் சிரத்தை காட்டிய இம்மரபு மகாஜனவுக்குள் வேர்விட்டு இர வாய்ப்பு ஏற்படவில்லை. பொதுவாகப் பாடசாலைக்குரிய சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தமையி ஞலும், இந்நாடக மரபிலே தேர்ச்சி மிக்க, ஆர்வம் மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டல் இன்மையாலும் இம்மரபு மகா ஐலுவுக்குள் வளரமுடியவில்லை.
ப்ாடசாலைக்குள் இத்தகைய நாடகங்களைப் பழக்க ஆட்கள் கிடையாத வேளையில் மகாஜஞ மாணுக்கர் இத்த கைய நாடகங்களில் ஈடுபாடு கொண்டுழைத்த வெளியாரின் உதவியை நாடினர்கள். இவ்வகையில் பிரம்படிபட்டவர்கள் என்ற 1987 இல் மேடையிடப்பட்ட குறியீட்டு நாடகம் குறிப்பிடத்தக்கது. இதை நடித்தவ்ர்கள் மகாஜனக்கல்லூரி உயர் வகுப்பு மாணவர்கள். இந்நாடகத் தயாரிப்பிற்கு உதவியவர்கள் வெளியிலே நம்பின தர்டக மரபு வ்ளர்ப் பணியாற்றிக் கொண்டிருந்த வி. எம். குகராஜாவும், ஜெங்க் *ழாகும்,ஆவர். , :ب. م . ز

Page 14
20
1987 இல் இல்லங்களுக்கிடையேயான தனி நடிப்பும், இல்லப் போட்டிகளும் மீண்டும் மகாஜனவில் ஆரம்பமா யின. தனி நடிப்பில் திறமைகாட்டும் மாளுக்கர் தெரிந் தெடுக்கப்பட்டு பெரிய நாடகங்களிற் சேர்க்கப்பட்டனர். தனிதடிப்பு முறையிஞல் நடிப்புத்திறன் மாணவர் மத்தி யில் வளர்ச்சி பெற்றது. தெல்லிப்பள்ை கலை இலக்கிங்க் கணம் மூலம் மகாஜன மாளுக்கரை நடிப்புப் பயிற்சிக்குட்படுத்தி நவீன பாணி நாடகங்களைத் தயாரிக்கும் பணியிலும் நவீன நடிப்பு முறைகளை மாளுக்கருக்கு அறிமுகம் செய்யும் பணியிலும் இன்று மகாஜனுவில் ஈடுபடுபவர், கோவிலா மகேந்திரன் அவர்களாவர். 1975 இல் நிறுத்தப்பட்ட பாடசாலை நாடகப் போட்டிகள் கடந்த இரண்டு. வருட மரகத்தான் நடைபெற்று வருவதாக அறிந்தேன். இவ்வகை யில் மகாஜன மீண்டும் கண் விழித்துள்ளமை நாடக ஆர்
வலருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
தொகுப்பு.
இதுவரை கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடியும்.
ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றுப்போக்கில் மகாஜகு பாடசாலை நிலையில் தன் பங்களிப்பினைப் பல வழிகளில், வழங்கியுள்ளது. • ー . . . .
மகாஜனுவின் பிரதான நாடக மரபுகளாக இடம் பெறுவன பாவலர் துரையப்பாப்பிள்ளை ஆரம்பித்து வைத் துக் கலையரசால் வளர்க்கப்பட்டி கைேயரசு" நாகமரபும், இயற்பண்பு நாடகமரபுமாகும். ஏனைய மரபுகளை மாளுக்க ரைக் கொண்டு மேடையேற்றும் முய்ற்சியில் " மகாஜன ஈடுபடவில்லை. எனினும், ஏனைய மரபுகளைக் கணம் பண்ணி, தனது பாடசாலை வளவுக்குள் மேடையிட்டதன் மூலமும், அவர்களுக்கு உற்சாகமளித்ததன் மூலமும் “ அம்மரபுகள் வளரத் தன் பங்களிப்பினையும் மகாஜன செய்துள்ளது.

ஒரு நாடகப் பாரம்பரியச் சூழலைத் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாத்தமை மகாஜனுவின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் நல்ல நாடகாசிரியர்கள் உருவாக, விளைநில மாக மகாஜன இருந்துள்ளது. அந்நாடக ஆசிரியர்கள் புதுமரபின் தோற்றத்திற்கு உரமூட்டுபவர்களாகவும் இருந் துள்ளனர்.
இவ்வண்ணம் ஈழத்துத் தமிழ் நாடகப் பாரம்பரியத் தின் பொதுவான ஓட்டத்துடன் ஒப்ப ஓடிச் சில மரபுகள் வளர ந்ேரடியாகவும், சில மரபுகள் வளர மறைமுகமாக வும் பணியாற்றியுள்ளது மகாஜஞ. நேரடியாகவும் மறை முகமாகவும் ஏன் மகாஜன இயங்கிற்று? என்பது தனியாக ஆராயப்ப்டவேண்டியது.
cpgay600.
இன்று நாடகமும் அரங்கியலும் என்ற பாடநெறி பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்கு ஒரு பாடமாகப் பயிற் Pப்படுகிறது. கண்டிக்குளி மகளிர் கல்லூரி, உடுவில் மக ளிர் கல்லுர்ரி, கட்டுவன்புலம் மகாவித்தியாலயம் என்பன இப்பாடநெறிகளுக்கு மாளுக்கரைத் தயார் செய்கின்றன. பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமா கப் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஒரு நீண்ட நாடகப் பாரம்பரியமும் ஈழத்துத் தமிழ் நாடக உலகிற்குக் கணிச்மான பங்களிப்பும் செய்த மகாஜனவில் பல்கலைக்கழகப் புகுமுக வ்குப்பில் தாடகமும் அரங்கியலும் ஒரு பாடநெறியாகப் பயிற்றப் படாமை ஆச்சரியத்திற்குரியதொன்றே. இத்துறைக்கான ஆசிரியர் கிடைக்காமை அதற்கான முக்கிய காரணமாயி னும், இன்று பல்கலைக்கழகத்திலும் நாடகப்பயிற்சி வகுப்பு அளிலும் பயின்று வெளியேறும் வளர்ந்தோர் நம்மத்தியில் உள்ளனர். இத்தகையவர்களைக் கல்லூரி உபயோகிக்கலாம். ஏனைய கல்லூரிகள் போல உயர்வகுப்பில் அப்பாட நெறி

Page 15
罗逻
யைப் பரப்பும் தார்மீகக்கடமையும் மகாஜனவுக்குண்டு. அதை 'ம்காஜனர்கள் அனைவரும் கவனத்திற்கெடுக்க வேண்
gth என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள் நூல்கள்.
Ol.
02.
03.
04。
o5.
0.
துரையப்பாபிள்ளை.
கதிரேசர்பிள்கள. செ.
- சண்முகசுந்தரம் . த .
சண்முகசுந்தரம். த.
மஹானனன். தெல்லிப்பழை.
1960, 1961,
மறுமலர்ச்சிக் கர்லம்
இலத்திமூச்சிறப்பிதழ். ο7.
வித்தியானந்தன். 听。
Srps gynhwysabeg Arbin), தெல் லிப்பழை, 1960.
பார்கம் கங்க
தெலலப்பழை 1980.
வாழ்வு பெற்றவல்லி, தெல்லிப்பழை, 1962.
இறுதி மூச்சு. மாவிட் டபுரம். 1965.
948, 1950. 1951. 1968,
1965, 1968, 1969.
1970, 1971 - 76 ஆம்
ஆண்டு களுக்குரிய
இதழ்கள்.
தெல்லிப்பழை, 1973,
துரை யப்பாபிள்ளையின் சமூக்நோக்கு.
urasă துரையப்பா
பிள்ளை நூற்றண்டு
விழா மலர், தெல்லிப் பண்ழ. 1972. w

08.
O9.
கைலாசபதி. க.
சிவத்தம்பி, கா,
2 3
துரையப்பாபிள்ளையும் தேசியப் பின்னவிை
யும். பாவலர் துரையப் பாபிள்ளை நூற்றண்டு விழா மலர், தெல்லிப் பழை, 1972,
பாவலர் துரையப்பா
பிள்ளையின் சகல குண
சம்பன்னன் பற்றிய ஓர்
ஆய்வு. பாவலர் துரை யப்பாவின்னே நூற்
றண்டு விழா மலர், தெல்லிப்பழை, 1972

Page 16
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நிறுவகர் பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரைகள் *
நமது கல்வி, மரபு . . .
-பேராசிரியர் கா. இந்திரபாலா 1975
நமது மொழியின் இயல்புகள்
--கலாநிதி அ. சண்முகதாஸ். 1976
ஈழ வரலாற்று மரபில் யாழ்ப்பாண வைபவமாலை
--கலாநிதி சி. பத்மநாதன். 1977 பாவலரும் பாரதியும்
-நா. சுப்பிரமணியம் எம். ஏ. 1982
பெருங்கற்கால யாழ்ப்பாணம்
-பொ. இரகுபதி எம். ஏ. 1983
பாவலர் துரையப்பாபிள்ளையின்
"யாழ்ப்பாணம் அன்றும் இன்றும் - மீள்பாாவை
-பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, 1986
மகாஜனக் கல்லூரியின்
இலக்கியப் பாரம்பரியம்
-நா. சண்முகலிங்கன். 1988
சிற்றேடுகளாக வெளியிடப்பட்டவை மட்டும்.