கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தொழிற்சங்க வரலாறு

Page 1

ற்சங்க வரலாறு

Page 2

மலையகத் தொழிந்சங்க 2j96lssog
-அந்தனி ஜீவா
மலையக வெளியீட்டகம் த.பெ.எண்.32 கண்டி.

Page 3
தலைப்பு
ஆசிரியர்
முதற்பதிப்பு
வெளியீடு
அச்சுப்பதிப்பு
TITLE
AUTHOR
FIRSTEDITION :
PUBLICATION
PRINTED BY
PRICE
ISBN
: மலையகத் தொழிற்சங்க வரலாறு
அந்தனி ஜீவாG)
: 07.11.2005
மலையக வெளியீட்டகம்
வர்தா பதிப்பகம்
: HISTORY OF UPCOUNTRY TRADE UNION
: ANTHANY JEEVAC)
07.11.2005
: HILL COUNTRYPUBLISINGHOUSE
P.O.BOX.32 KANDY.
: VARDHAPRINTERS & PUBLICATION
Akurana web: www.vardhapub.8m.com email:vardhapublication@gmail.com T.Phone: 0773240541 /O777 860250
: RS. SO/-
: 955-9084-22-4

இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் போராளியாக திகழ்ந்த சமசமஜாக் கட்சியின் தலைவர்களின் ஒருவரான திருமதி விவியன் குணவர்தனாவிற்கு இச்சிறு நூல் காணிக்கை

Page 4
முன்னுரை
மலையகத் தொழிற்சங்க வரலாற்றில் தேசபக்தன் கோ. நடேசய்யர் முதல் தோழர் எஸ். நடேசன் வரை ஆற்றிய அறம் பெரும் பணிககை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ‘வீரகேசரி’ வார வெளியீட்டில் எழுதிய கட்டுரையை சிறிது விரிவுப்படுத்தியுள்ளேன்.
நான் பாடசலை கல்வியை முடித்து கொண்டு வெளியுலகிற்கு வந்த சமசமாஜக் கட்சியின் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனில் முழு நேர ஊழியனாக தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய பொழுது என்னை பெரிதும் ஊக்கு வித்த போராளி திருமதி விவியண் குணவர் தனா அவர்களுக்கு இச் சிறு நூலை காணிக் கையாக சமர்பிக் கிறேன். மலையகத் தொழிற் சங்க வரலாறை விரிவாக எழுதப் போகும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
த.பெ. எண்: 32 அந்தனிஜீவா கணி டி.
Unge usa æ are ön frymë (0) & ætj (se (Ca a
 
 
 
 

மலையகத் தொழிந்சங்க வரலாறு
லையக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ாழ்வோடு தொழிற்சங்கங்கம் இரண்டறக் கலந்து விட்டது தோட்டத் தொழிலாளர்களை தொழிற்
ங்கத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது.
மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வருகையைப்
as பற்றி பலர் எழுதியுள்ளனர். ஆனாலி மலையக
குமாரி ஜெயவர்தனாமக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட தொழிற்சங்க வரலாறு பற்றி முழுமையாக இதுவரை யாரும் எழுதியதாகத் தகவல்கள் இல்லை.
a56NosT sig (5 DIT If Gguu6Jsi jg560T T The Rise of the labour moment என்ற ஆங்கில நூலில் மலையக பெருந்தோட்ட துறையில் இயங்கி வரும் தொழிற் சங்கங்ளி பற்றிய ஓர் அத்தியாயத்தை எழுதியுள்ளார். அதனையே ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமான தகவகல்களாகக் கொள்கின்றனர்.
1824 இல தானி ᎿᏝ 6Ꮱ0 6ul ᏓᎻ 1 8Ꮟ மக்கள் என்றழைக்கப்படுகின்ற இநீதிய வம்சாவளியினர் இலங்கை வரத் தொடங்கினார்கள். முதலில் 14 குடும் பங்களின் வருகையோடு இவர்களின் வரவு ஆரம்பமாயிற்று.
1832ஆம் ஆணிடு முதல் பெருந் தொகையாக குடியேறிய இந்தியர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்டனர்.
முதலில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் தேயிலை பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
இவ் விரு பயிர்ச்செய்கைக்கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப் பட்டனர். அவர்களை ஆங்கிலேயர் குறைந்த செலவில்
தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர். பல லட்சக் கணக்கான இந்தியத் தமிழர்கள் 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கோப்பி, தேயிலை, ரப்பர்
மலையகத் தொழிற் சங்க 6)ԱՄ 6)Ռ Ս

Page 5
தோட்டங்களில் குடியேறினார்கள். இதனால் இலங்கையில் பொருளாதாரம் மாற்றமடைந்தது.
இவ்வாறு குடியேறிய இந்திய வம்சாவளி தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் ஓர் பிரதிநிதியை நியமித்தது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு தோட்டத்திலும் பெரிய கங்காணிமார்களே தொழிலாளர்களுக்கு சகல பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர்.
பெரிய கங்கானிமார்களின் ஆதிக்கமே தோட்டங்களில் நிலவி வந்தது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சுய நலனுக்காக பயன்படுத்த தொடங்கினார்கள். இதனை நேரில் வந்து கண்ட கோ.நடேசய்யர் இந்த மக்களின் மீட்சிக்காக தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.
கோநடேசய்யர் வருகை
மலையகப் பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களுக்காக அமைப்பு ரீதியாக முதல் தொழிற் சங்கத்தை தொடக்கியவர் தலைவர் கோ. நடேசய்யர். இவரோடு தானி மலையகத் தொழிற் சங்க வரலாறு தொடங்குகின்றது. தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பத்திரிகையாளர் கோ.நடேசய்யர் ஆரம்பத்தில் தொழிற் சங்கத் தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து தலைநகரான கொழும்பில் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். ஏ.ஈ.குணசிங்காவின் இந்தியத்துவவேசம் இனவாத போக்கின் காரணமான கருத்துவே ருபாடுகள் கொணிடு 1928இல் வெளியேறினார்.
இலங்கை தொழிலாளர் கழகத்திலிருந்து வெளியேறிய கோ.நடேசய்யர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்வை நேரில் கண்டறிந்தது அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும் விடிவைத் தேடித் தரவும் 1931ஆம் ஆண்டு அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் 1930ஆம் ஆண்டு வரையில் தோட்டத்துறையில் எந்தவித தொழிற்சங்க நடவடிக்கையும் இருக்கவில்லை.
கோ.நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்களுக்காக முதன் முதலில் அமைப்பு ரீதியாக தொழிற் சங்கத்தை ஆரம்பித்தவர். இதன் பின்னரே ஏனைய தொழிற் சங்க அமைப்புகள் உருவாகியது.
1935க்கு பின்னரே இடதுசாரிகளான இலங்கை சமசமாஜக் கட்சியினர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
(6) ( அந் தனி ஜீவா

இதன் பின்னர் இந்திய தேசியத் தலைவர்களின் செல்வாக்கால் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்காக இலங்கை இந்தியன் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
இலங்கை இந்திய காங்கிரஸில் வர்த்தகத் துறையினர் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். தோட்டத்தில் பணியாற்றிய பெரிய கங்காணிமார்கள் நிர்வாகிகள் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
கோ.நடேசய்யர்
மலையகம் பெருந்தோட்டத்துறை தொழிற் சங்க வரலாற்றிலும் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திலும் கோ.நடேசய்யர் வகித்த பாத்திரம் , மிக முக்கியமானது.
'அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர், நூலாசிரியர், பிரசுரகர்த்தா, துணி டு பிரசுரம் எழுதுபவர், தொழிற் சங்கவாதி, அரசியற் கிளர்ச்சிக்காரர் இவற்றிற்கு எல்லாம் மேலாக அவர் ஒர் அரசியல் அறிஞராக விளங்கினார்” எனத் தொழிற்சங்கவாதியும் கவிஞருமான சி.வி வேலுப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசியலிலும், தொழிற்சங்கத் துறையிலும் பத்திரிகையிலும் ஆக்க இலக்கிய முயற்சிகளிலும் அழியாச் சுவடுகளைப் பதித்த கோ.நடேசய்யர் வரலாறு புகழ் மிக்க தமிழகத்தின் தஞ்சாவூாரில் 1891ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதில் மகாகவி பாரதியாரின் தேசிய உணர்வைத் துணி டும் பாடல்களில் ஈடுபாடு கொண்டார்.
பெரியார் ஈ.வே.ராவின் தீர்க்கதரிசனமான கருத்துக்களால் கவரப்பட்டு தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தொழிற்சங்க பத்திரிகைப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். கம்யூனிச சித்தாந்தங்களில் நம்பிகை கொண்டவரா கோ.நடேசய்யர் திகழ்ந்தார்.
கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து
மலையகத தொழிற் சங்க ճll j 6Ù I II]]

Page 6
கொள்வதற்காக கோ.நடேசய்யர் 1915ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்தார். இலங்கைக்கு வந்த கேர்.நடேசய்யர் தேயிலைத் தோட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்களின் நிலைகளை நேரில் கண்டறிய விரும்பினார்.
அந்த காலகட்டத்தின் தோட்டங்களில் வெள்ளத் துரைமார்களின் ராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தோட்டங்களுக்கு உள்ளே வெளியார் யாரும் செல்ல முடியாத சூழ்நிலை. அப்படி செல்வது கிரிமினல் சட்டப்படி குற்றமாகும். புடவை வியாபாரிகள் மாத்திரம் செல்வது வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக மாறினார். வியாபாரிகளுடன் சேர்நீது தோட்டங்களுக்குச் சென்றார். அவர்களின் துன்ப வாழ்வை நேரில் கணி டறிந்தார் இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் துணிடுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார்.
தஞ்சாவூரில் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். தோட்டத் தொழிலாளர்களின் மீட்சிக்காக செயற்பட வேண்டும் எனத்தீர்மானித்தார்.
மீண்டும் 1920ஆம் ஆண்டு இலங்கை வந்த கோ.நடேசய்யர் இலங்கை தேசிய காங்கிரஸில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த டாக்டர் ஈ.வி. ரட்ணம், எம்.ஏ.அருளானந்தம் இருவரையும் வெளியிட்டாளராகக் கொண்டு “தேச நேசன்" என்ற பத்தரிகையை ஆரம்பித்தார். இது ஒரு தமிழ் தினசரியாகும். 1921ஆம் ஆண்டு வெளிவந்தது. கொழும்பில் கோ.நடேசய்யர் தொழிற் சங்கத் தலைவரான ஏ.ஈ.குணசிங் கவுடன் இணைந்து தொழிற்சங்கப்பணிகளில் ஈடுபட்டார். ஏ.ஈ.குணசிங்க முன்னின்று நடத்திய துறைமுக தொழிலாளர் போராட்டத்தினதும் முன்னணி வீரராகத் திகழ்ந்தார். அத்துடன் இலங்கை தொழிலாளர் யூனியனின் துணைத் தலைவராகவும் விள்ங்கினார்.
டாக்டர் மணிவால் வருகை
1921ஆம் ஆண்டு பிஜித் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட வழக்கறிஞரான டாக்டர் மணிலால் இலங்கை வந்தார். இவர் ஒரு குஜராத்தியார், தேசப்பற்று மிகுந்தவர். கம்யூனிச கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர் மானுட நேயமிக்க ஒரு தீவிரவாதி.
டாக்டர் மணிலால் நடேசய்யரை சந்தித்தார். அவரை கூட்டிச் சென்று இந்தியத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் நிலைமையைக் காட்டினார்.
(8) M அந் தனி ஜீவா

இலங்கையில் வாழும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடேசய்யரை போராடும் படி டாக்டர் மணிலால் உற்சாகமூட்டினார். இருவருமே இணைந்து செயற்படுவது என திட்டமிட்டனர். அதனை செயற்படுத்தவும் முனைந்தனர்.
இலங்கையில் பிரிட்டிஷ் வெள்ளத் துரைமார் டாக்டர் மணிலாலை கண்டு பயப்பட்டனர். அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் தீவிரமாக இருந்தனர். டாக்டர் மீனாட்சி அம்மையர்மணிலால் நாடுகடத்தல் செய்யப்பட்டார்.
தொழிற் சங்கவாதி ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைந்து செயற்பட்ட கோ.நடேசய்யர் குணசிங்கவின் இந்தியத் தொழிலாளர் எதிர்ப்பு காரணமாக அவரை விட்டு விலகினார். தோட்டத் தொழிலாளர்களுக்காக சேவையாற்ற விரும்பினார்.
தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட தீர்மானித்த கோ.நடேசய்யர் அட்டன் நகரை தலைமை அலுவலகமாகக் கொணி டார்.
கோ.நடேசய்யரின் தொழிற் சங்கப் பணிகள் அனைத்திற்கும் அவருடன் இணைந்து செயற்பட்டவர் அவரின் துணைவியாரான திருமதி. மீனாட்சி அம்மையாராகும். தோட்டத் தொழிலாளர்களிடையே மகாகவி பாரதியாரின் பாடல்களை இனிமையான குரலால் பாட நடேசய்யர் தொழிலாளர்கள் விழிப் புணர்ச்சி பெறும் வணிணம் உரையாற்றுவார். தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் காணப்பட்ட தலைமைக்கங்காணி முறைக்கும் தோட்டத் தொழிலாளியை பரம்பரை பரம்பரையாக அடிமையாக்கும் ஆட்சி முறைக்கும் எதிராக நடேசய்யர் போர்க் குரல் எழுப்பினார். தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் அவர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பும் தலைவராக, தோழராக கோ. நடேசய்யர் விளங்கினார். 1931ம் ஆண்டு அட்டன் நகரில் நடேசய்யர் நடத்திய மே தினக் கூட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மலையகத தொழிற் சங்க வரலாறு (9)

Page 7
தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளும், கடமைகளும் என்று பிரசுரத்தை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகித்தார். 1931 ஆம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற அமைப்பை தொழிற்சங்கச் சட்டப்படி பதிவு செய்தார். தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இடது சாரிகளான சமசமாஜக் கட்சியனர் 1940ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி அகில இலங்கை தோட்டம் தொழிலாளர் யூனியன் என்ற அமைப்பை பதிவு செய்தனர்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன், இந்த தொழிற் சங்கம் 1938ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கியுள்ளது. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன் தோட்டத் தொழிலாளர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெறத் தொடங்கியது. இதன் தலைவராக சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம். பெரேராவும், பொது செயலாளராக பி.எம். வேலுசாமியும் நியமிக்கப்பட்டனர். இதன் தலைமைக் காரியாலம் கணிடியில் அமைந்திருந்தது.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
சமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டது. மலையகத் தொழிற்சங்க வரலாற்றில் முல்லோயா போராட்டம் மிக முக்கியமானது. 1940 ஆம் ஆணிடு முல்லோயா போராட்டத்தில் பொலிஸ் சார்ஜண்ட் சுரவீரவால் கோவிந்தன் என்ற தொழிலாளி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இங்கு நடைபெற்ற போராட்டம் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடியதால் வெற்றி பெற்றது. தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 16 *சதமாக உயர்த்தப்பட்டது. 1940 களில் சமசமாஜக் கட்சி தடைசெய்யப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் செயலிழந்தது. சமசமாஜக்கட்சித் தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, எட்மன் சமரகொடி, பிலிப் குணவர்த்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்னர் சிறையிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்கள். இரணடாம் உலகப் போருக்குப் பின்னர் 1945ல் தடை நீக்ப்பட்டது.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் - லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் என்ற பெயரில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(10) அந தனி ஜீவா

இதன் தலைவராக கலாநிதி என்.எம். பெரேராவும், பொதுச் செயலாளராக என். செல்லையாவும் தெரிவு Gas uj uLulü Lu 60 ff.
பின்னர் என்.பி. தர்மலிங்கம், வி.எஸ். ராஜா இணைச்செயலாளராக செயல்பட்டார்கள். அதற்கு பின்னர் என்.சிவசாமி பொதுச் செயலாளராக கடமையாற்றினார். அவர் மரணமடைநததும் மாத்தளையைச் சேர்ந்த எஸ். இராமநாதன் பொதுச் செயலாளராகவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி விஜயகுமார் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்கள்.
LIT as Lif எனி.எம். பெரேரா
அரசாங்க சபை தேர்தல்
1936இல் நடந்த அரசாங்க சபைத் தேர்தலில் கோ. நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றார். கோ. நடேசய்யருக்கு எதிராக ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரசாங்க ஆதரவாளர்களுக்கும் தோட்டத் துரைமார்களுக்கும் அவர்களின் கையாட்களான கங்காணிமார்களும் செயல்பட்டனர். கோ.நடேசய்யர் தொழிலாளர்களின் பலத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர்களின் ஆதரவுடன் அவாகளின் ஆதரவுடன் வெற்றியும் பெற்றார்.
நடேசய்யர் ஆறு ஆணிடுகள் சட்ட நிறுவன சபையினதும், அதன் பின்னர் பதினொறு ஆண்டுகள் சட்ட சபையினதும், இந்திய வம்சாவழி தமிழர் களுக்காகவும் தொழிலாளர் களுக்காகவும் பிரதிநிதித்துவம் செய்தார்.தோட்டத் தொழிலாழர்கள் உழைத்து உழைத்து சாகவேண்டியவராகின்றனர்
களுத்துறைப் பகுதி தோட்டம் ஒன்றில் “உழைத்துமாய் வதே எங்களின் வேலை ஏனென்று கேட்க ஏங்களுக்கு எது உரிமை" என்று எழுதியிருக்கும் வரிகளைச் சுட்டிக் 5 TL. 9.
பாரளுமன்றத்தில் உரையாற்றினார். மலையகத் தொழிற் சங்க வரலாறு (11)

Page 8
சட்டசபையில் அமைச்சராகவிருந்த எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க நடேசய்யரின் விவாதத் திறமைக்கும், அரசியல் விவேகத்துக்கும் , தீர்க்கதரிசனமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்தார். பொதுத் தேர்தலின் பின் சட்டசபையிலும் வெளியிலும் நடேசய்யருடன் கூட்டுச் சேர்ந்த இலங்கை சமசமாஜிக் கட்சியின் தொழிற் சங்கம் அமைக்கும் பணி துரைமார் அரசு என்று பின்னால் வர்ணிக்கப்பட்ட அரசின் கெடுபிடிகளுக்கு இலக்கானது.
‘நடேசய்யரின் தனிநபர் கோரிகைகளுக்கும் தொழிலாளர் - விவசாயி ஆட்சி அமைவுக்கு முதற்படியாக வெள்ளையராட்சி தூக்கி எறியப்ப்ட வேண்டும் என்ற இலங்கை சமசமாஜிக் கட்சியின் கோரிக்கையும் ஒன்று சேர்ந்த நிலையில் தொழிலாளர்கள் இலங்கை சமசமாஜிக் கட்சியின் தலைமையின் வெளிப்படையாக நம்பிக்கை கொண்டனர். அடக்கப்பட முடியாத அளவுக்கு பலம் பெற்ற இ.ச.ச. கட்சியின் விரலைசைவுக்காக தொழிலார்கள் கர்த்திருந்தனர்.
இவ்வாறு வழக்கறிஞரும், சமசமாஜிக் கட்சியின் பொதுச் செயலாளருமான வேர்ணன் குணசேகரா குறிப்பிடுகின்றார். இவரை சமசமாஜிக் கட்சி நடேசய்யரின் தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்களினி வழக்குகளை இலவசமாக நடத்தும் படி கட்சியின் செயற் குழுவில் தீர்மானம் நிறைற்ேறியதாகவும் ஹட்டனில் பல வழக்குகளில் ஆஜரானதாகவும் நூலாசிரியரிடம் வேர்ணன் குணசேகரா கூறியுள்ளார். ܗܝ
pójśćastu ów/g/t ub
1940 ஆம் ஆண்டு ஜனவரியின் முல்லோயா போராட்டம் நடந்தது. இதற்கான முக்கிய காரணம் அந்த தோட்டத்தில் தோட்டப் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய ஜெகநாதன் மாற்றப்பட்டதாகும். அதற்கு முக்கிய காரணம் அந்த ஆசிரியர் இலங்கை சமசமாஜிக் கட்சியுடன் தொடர்புடையவர் மற்றது இவர் தோட்டத்தில் வேலை செய்த ஒரு பெண் தொழில்ாளியை மணம் முடித்திருந்தார். இவரை தோட்டத்துரை இடம் மாற்றம் செய்தார்.
இதேகாலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16சதம் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். அந்தக்காலக்கட்டத்தில் முல்லோயா தோட்டத் தலைவராக இருந்தவர் பி.எஸ். வேலுசாமி. இவர் லங்கா சமசமாஜிக் கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராவார்.
தோட்டப் பாடசாலை ஆசிரியரான ஜெகநாதன் இடமாற்றம் செய்யப்பட்ட
பொழுது அதற்கு எதிராத வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்திய

போது வேலுசாமிக்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாடு காரணமாக பொலிஸ் வேலுசாமியைக் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தது. மூன்று மாத காலம் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். வேலுசாமி விடுதலை செய்யப்பட்ட பின் தோட்டத்தில் இருந்த பல்வேறு பிரச்சனைகளுடன் சம்பள உயர்வு கோரிக்கையையும் முன் வைத்து தொழிலாளர்கள் 1940 ஜனவரி முதலாந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார். இப்போராட்டம் கிட்டத்தட்ட 13 நாட்கள் நடைபெற்றது. அக்காலக் கட்டத்தில் முல்லோயா தோட்டத்தில் தலைவராக இருந்தவர் வேலுசாமி என்பவராவார். அவர் லங்கா சமசமாஜிக் கட்சியின் கீழ் இயங்கிய அகில தோட்டத் தொழிலாளர்கள் யூனியன் தலைவராவார். தோட்டப் பாடசாலை ஆசிரியரான ஜெகநாதன் இடமாற்றம் செய்யப்பட்ட போது அதனை முன்னின்று நடத்திய வேலுச்சாமிக்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த புகாரின் காரணமாக பொலிஸ் அவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அவர் சிறையில் வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.
வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்ட பின் தோட்டத்தில் ஏற்கனவே இருந்த பல பிரச்சனைகளோடு சம்பள உயர்வு கோரிக்கையையும் முனவைத்து
தொழிலாளர்கள் 1940 ஜனவரி மாதம் முதல் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். தோட்டத்துரை ஸ்பாலின் இப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைய தோட்டச் சொத்துக்கும் தமது பாதுகாப்புக்குமாக பொலிசாரை தோட்டத்திற்கு வரவழைத்தான். பொலிஸ்காரர்கள் தோட்டத்திற்கு வருவதற்கு ஏ.இ. அபயகுணசேகர போன்ற நிருவாகத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களும் பக்கபலமாக இருந்தனர். இப்போராட்டம் தொடர்ச்சியாக நடக்கும் போது கணிடிக் கச்சேரியிலும் தோட்டத்துரை ஸ் பாலினுக்கும் தொழிலாளர் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து ஓர் இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பினரும் வந்தனர். ஆனால் தோட்டத்துரை கச்சேரியில் ஒத்துக் கொண்ட விடயங்களை நிறைவேற்றவில்லை. இதனால் போராட்டம் மேலும் முறுகல் நிலையை அடைந்தது. தோட்டத்திற்கு பொலிசார் கூடுதலாக வரவழைக்கப் பட்டனர். ஒரு நாள் தோட்டத்தில் பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்கு மிடையில் மோதல் ஏற்பட்டு பெரியசாமி என்ற தொழிலாளி பொலிஸ் ஜீப் சக்கரத்துக்குள் அகப்பட்டு ஆபத்துக்குள்ளானார். இதனால் தொழிலாளர்களின் ஆத்திரம் கட்டு மீறியது. இச்சந்தர்ப்பத்தில் தொழிற்சாலையிலிருந்து வந்த கோவிந்தன் மீது சுரவீர' என்ற பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி பிரயோகம் செய்தான். துப்பாக்கி சூடுபட்ட கோவிந்தன் ஸ்தலத்திலேயே மரணமடைந்தான். இந்த அடிப்படையிலேயே கோவிந்தன் ஜனவரி மாதம் 12ம் திகதி மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த திகதி ஜனவரி 15ம் திகதி என்றும் சொல்லப்படுகின்றது.
மலையகத் தொழிற் சங்க வரலாறு (3)

Page 9
தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் முதலாவது எழுச்சிப் போராட்டமாக முல்லோயா போராட்டம் அமைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு முதன் முறையாக சம்பள உயர்வும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் இப்போராட்டம் வரலாற்றில் ஓர் முக்கியப் போராட்டமாக அமைந்துவிட்டது.
முல்லோயா போராட்டம் பற்றி 1940ம் ஆண்டு இலங்கை சமசமாஜிக் கட்சியில் பொதுச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் வேர்ணன் குணசேகரா துப்பாக்கி சூட்டு சம்பவத்தை விசாரணை செய்யப்பட்ட ஆணைக்குழுவின் முன்னணியில் கோவிந்தன் மனைவிக்காக சாட்சியமளித்தார். அதற்கு பின்னர் அவர் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
'1940களில் முல்லோயா கோவிந்தன் கண்டி பொலிஸ் சார்ஜன்ட் சுரவீரவால் சுட்டுக் கொல்லப்பட்ட வரை, வாழ்நாள் முழுவதையும் நிர்ப்பந்த அடிமைகளாகக் கழித்த வீரர்களப்ைபற்றி, வீராங்கனைகளைப் பற்றி வரலாறு அறிந்திருக்கவில்லை.”
முலி லோயா கோவிந்தனின் மரணம் நுாறு ஆணிடுகளுக்கு மேலாக அடக்குமுறைகளை கெடுபிடிகளின் காரணமாக சகித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை வீறு கொணி டெழச் செய்ததன் மூலம் தோட்டத் தொழிற்றுரையின் சரித்திரத்தையே மாற்றியமைத்தது.
ஊவா மாகாணத்தில் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்க பொலிசாரின் உதவியை நாடிய நிர்வாகங்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
முல்லோயா தோட்டத்துரை ஸ்பாவின் துப்பாக்கி முனையில் தோட்டத் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடாது தடுத்து தோட்டத்தில் அமைதியை நிலைநாட்ட திட்டமிட்டார். கோவிந் தன் மரணத்தின் உணமையான பின்னணி இதுவேயாகும். கார்களிலும் ஜீப் களிலும் தோட்டத்துக்கு சென்ற பொலிசாரை லயமுற்றங்களில் ծո գա தொழிலாளர்கள் பார்ப்பதும் சிலவேளைகளில் அவர்களை நோக்கிக் கூக் குரல் இடுவதும் வழக்கமாயிருந்தன.
லங்கா சமசமாஜிக் கட்சியின் நிறமான சிவப்பு நிறச் சட்டையணிந்த கோவிந்தன் லயத்திலிருந்து பாதையைக் கடந்தபோது நூற்றக்கணக்கான தொழிலாளர்கள் முன்னிலையில் சுரவீரவால் சுட்டுக்கொல்லப்படார்.
(14) . அந தனி ஜீவா

சம்பவத்துக்கான தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்க விசாரணை ஆணைக் குழுவின் முன் பெருமுயற்சி செய்த பொலிசாரினால், தமது கூற்றுக்களை நிரூபிக்க ஒரு தொழிலாளியின் ஆதரவைத்தானும் பெறமுடியாது போய்விட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் சிவப்புச்சட்டை அணிந்திருந்த கோவிந்தனை இலங்கை சமசமாஜிக் கட்சித் தலைவர் வேலுசாமி என நினைத்தே சார்ஜன்ட் சுரவீர துப்பாக்கியால் அ. அஸிஸ் சுட்டார் என்பது தெளிவாகியது.
'கொலைக்குற்றத்துக்கு தண்டனை மரணம்’ என்பது எமது நாட்டுச் சட்டம் . ஆணைக் குழு தனது அறிக்கையில் "துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமானது' எனக் குறிப்பிட்டது. ஆனால் சார்ஜண்ட் சுரவீரவுக்கு எதிராக 3 Li L- சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்றைய நிலையில் என்றால் கோவிந்தனின் விதவைக்கு போதிய நட்ட ஈடாவது வழங்கப்பட்டிருக்கும். ஆனால் பிரித்தானிய அரசு அவ்வாறு செய்யவில்லை.
இலங்கை இந்தியர் காங்கிரஸ் த்ொழிலாளர் சங்கம்
இலங்கை இந்தியன் காங்கிரஸ் சங்கம் 1940ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைப்பு 1939ம் ஆண்டு ஜீலை 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக W.R.M.W.A. லெட்சுமண செட்டியாரும் , இணைச்செயலாளராக ஏ.அஸிஸ"ம், எச்.எம்.தேசாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் அப்புத்தளை கதிரேசன் மணி டபத்தில் திரு.பெரிசுந்தரம் தலைமையில் ஆரம்ப கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்களான கங்காணிமார் குடும்பத்தைச் சேர்ந்த படித்தவர்களும் கிறிஸ்தவக் கல்லூரியைச்
மலையகத் தொழிற் சங்க 6llᏤ ᎧᏓ ᎥᎢ Ꮖ]

Page 10
சேர்ந்த சிலரும் மலைநாட்டு காந்தி என அழைக்கப்பட்ட கே. இராஜலிங்கம், ஜி.ஆர். மோத்தா, எஸ். சோமசுந்தரம், சி.வி. வேலுப்பிள்ளை, வி.கே. வெள்ளையன் ஆகியோரும் செயல்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலங்கை இந்தியன் காங்கிரசின் தொழிற் சங்க அலுவலகம் இருந்தது. காங்கிரசின் மாவட்டத் தலைவர்களாக வியாபாரிகளே இருந்தார்கள். அதனால் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தலைவராக தொழிற் சங்கத் தலைவர்களே நியமிக்கப்பட்டனர். இலங்கை இந்தியன் காங்கிரஸ், பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாற்றம் பெற்றது. 1955 ஆம் ஆண்டு காங்கிரசுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஏ.அஸரீஸ், தொணிடமான் ஆகியோருக்கிடையில் தலைமை சம்பந்தமான பிரச்சனை அதன் காரணமாக ஏ. அஸிஸ் காங்கிரசை விட்டு வெளியேறினார். அவருடன் சி.வி. வேலுப்பிள்ளை, எஸ்.எம். சுப்பையா,கே.ஜி.எஸ். நாயர், ரொஸாரியோ பெர்னாணி டோ ஆகியோர் வெளியேறினார்கள்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் 1956இல் அஸிஸின் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற புதிய தொழிற் சங்கத்தை ஸ்தாபித்ததர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் இணைந்தார்கள். இந்த தொழிந் சங்கத்தை இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அங்கீகரிக்கவில்லை.
1956ஆம் ஆணிடு மே மாதம் அக்கரப் பத்தனை டயகம தோட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏ. அஸிஸ், சி.வி. வேலுப்பிள்ளை, ரொசாரியோ பெர்னாணி டோ, எஸ் . நடேசன் போன்றவர்கள் பங்குப் பற்றினார்கள். வேலைநிறுத்தத்தின் போது பொலிசாரால் எட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒருவார காலமாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதற்கு ஆதரவாக தலவாக்கொல்லை, அக்கரபத்தனை போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
டயகம தோட்ட நிர்வாகம் பொலிசாரை அழைத்தது. ஆயுதங்களுடன் பொலிசார் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். டயகம தோட்ட கிழக்குப்
(16) அந தனி ஜீவா

பிரிவில் மலையின் மீது தொழிலாளர்கள் கூட்டமாக கூடி இருந்தார்கள்.
எதிர்சங்கத்தைச் சார்ந்த முப்பது தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு சார்பாக இருந்தார்கள். பொலிவார் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் மீது துப்பாக்கி பிரயோகம். செய்தனர். எபிராம் சிங் கோ என்ற | சிங்களத் தொழிலாளி துப் பாக்கி குண்டுக்கு இரையானார். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் எஸ். தொண்டமான் ஒன்றுகூடி அங்கிருந்த பாலத்தை உடைத்தார்கள்.
அதன் பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த அறுபதாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் தொழிற் சங்கப் பேதத்தை மறந்து போராட்டத்தில் இணைந்தனர். அப்பொழுது பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தினார். அநீதப் பேச்சுவார்த்தையில் ஏ. அஸிஸ், சி.வி. வேலுப்பிள்ளை, ரொஸாரியோ பெர்னாண்டோ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எஸ். தொண்டமான், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில வா ஆகியோரும் தோட்ட உரிமையாளர் சம்மேளனத்தின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.
பிரதமர் பண்டாரநாயக்காவின் முயற்சியால் தோட்ட உரிமையாளர்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை அங்கீகரித்தனர். மரணமடைந்த எபிராம் சிங்கோவின் மரணச் சடங்கில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மரண ஊர்வலத்தில் சிவப்பு, வெள்ளைக் கொடிகள் காணப்பட்டன.
அஸிஸ், கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா முக்கிய உரைகளை நிகழ்த்தினார்கள். இன, மத, மொழி பேதமின்றி தொழிலாளர் வர்க்கத்திற்காக தொழிலாளி ஒருவர் உயிர் துறந்தது இதுவே முதற் தடவையாகும். ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் 1959 இல்
மலையகத் தொழிற் சங்க வரலாறு (17)

Page 11
பிளவுபட்டது. இடதுசாரி மனப்பான்மை கொண்ட சி.வி. வேலுப்பிள்ளை, எஸ். எம். சுப்பையா, எஸ். நடேசன் பி.பி. தேவராஜ், ரொசாரியோ பெர்ணான்டோ, ஓ.ஏ ராமையா முதலியார் வெளியேறினார்கள் சி.வி.யும்.எஸ் .எம். சுப் பையாவும் காங்கிரசிலி இணைந்தனர். ஏனையோர் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கிய இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர்.
1944இல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் யூனியன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஸ்தாபங்கர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.ஜி.மென்டிஸ், கே.இராமநாதன், எஸ்.ஏ.விக்கிரசிங்க ஆகியோர். 1958ல் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கம்பளையைச் சேர்ந்த டியுடர் கீர்த்தி மெணி டிஸ் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. தோட்டங்களில் வேலை செய்யும் சிங்களத் தொழிலாளர்களை இந்த சங்கம் இனவாத நோக்குடன் ஒன்று சேர்ந்தது. பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கமாக செயற்பட ஒப்பந்தம் செய்து கொணிடு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை தேசிய தோட்டத் சிதாழிலாளர் சங்கம்
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 1958ம் ஆண்டு டியுடர் கீர்த்தி மெண்டிஸ் என்பவரால் கம்பளையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கம் இன ரீதியாக தோட்டங்களில் வேலை செய்த சிங்களவர்களையே சங்கத்தில் அங்கத்தவராக சேர்த்துக் கொண்டது.
இந்த தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஒர் ஒப்பந்தத்டன் ஜே.ஆர்.ஜயவர்தனா ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கமாக இனைத்துக் கொணி டார். 1958 முதல் 1978 வரை
(8) அந தனி ဣတ္တိံ”an! 1
 
 
 
 
 
 

ஜே.ஆர்.ஜயவர்தனா தொழிற்சங்கத்திற்கு தலைமை வகித்தார். 1971ம் ஆண்டு காமினி திசாநாயக்கா உதவி தலைவராக நியமிக்கப்பட்டார்.
1978ல் ஜனாதிபதியாக இருந்த ஜெ. ஆர். ஜெயவர்தனா தெரிவு செய்யப்பட்டதும் யூனியன் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதன் | பின் காமினி திசாநாயக்கா தலைவராக இருந்தார். X அவருக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைவராக காமினி திசாநாயக்கா இருந்த பொதுச் செயலாளராக இருந்த ராஜாசெனிவிரத்தினவும், நிர்வாக காரியதரிசியாக ஆளு.யு.ர். மொஹிதீனும் செயல்பட்டார்கள்.
இலங்கை தேசியத்தோட்டத் தொழிலாளர் சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சக்தி போன்ற வாய்ந்த தொழிற் சங்கமாக செயற்பட ஆரம்பித்தது. காமினி திசாநாயக்கா தலைமையில் கொழும் பு கோட்டை ஜயவர்த்தனபுரத்தில் பிரதேசத்தில் சொந்தமாக ஒரு தலைமைக் காரியாலயத்தை அமைத்துக் கொணர் டது. நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் சொந்தமாக அலுவகங்களை வாங்கியது. எழுபது லட்ச ரூபாவை வாங்கியில் வைத்துள்ளது.
ஆனால் அதற்கு நேர்மாறாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் உள்ள காரியாலயத்தை வங்கிற்கு ஈடு வைத்துள்ளது. கண்டி காரியாலயத்தை விற்றுவிட்டது.
காமினி திசாநாயக்கா தொழிற்சங்கமாக வளர்ச்சிகாக பெரிதும் செயற்பட்டார். இவரின் முயற்சியால் தான் இரா.சேகரம், விழித்திர சிகாமணி, கே.வேலாயுதம் போன்றவர்கள் தொழிற்சங்கத்திற்கு வந்தார்கள்.
1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனா ஆட்சிக்கு வந்ததும் தொழிற்சங்கத்திலிருந்து ராஜிநாமா செய்தர். காமினி திசாநாயக் கா தலைவரானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட இலங்கை தேசிய
மலையகத் தொழிற் சங்க 6 6 TO (19)

Page 12
தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு, அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்தார். 3&
தொழிலாளர் தேசிய சங்கம்
அறுபதுகளுக்கு பின்னர் தலைமைத்துவப் போட்டி காரணமாக சில தொழிற் சங்கங்கள் தோன்றின இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து அஸிஸ் பிரிந்து போய் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற சங்கத்தை அமைத்தார். சி.வி. வேலுப்பிள்ளை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மிக முக்கிய தலைவராக, காங்கிரஸின் தளபதியாக விளங்கியவர் வி.கே.வெள்ளையன் . கணிடியிலுள்ள திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரியில் ரக்பி கப்டானாக திகழ்தார். ஆங்கில மொழியில் சிறப்பக உரையாற்றவும், எழுதவும் வல்லவர். தொழில் நீதி மன்றங்களில் தொழிலாளர்களுக்காக வாதாடி வெற்றியீட்டியுள்ளார்.
1965ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ட்டலி சேனநாயக்கா பிரதமராக இருந்த அமைச்சரவையில் இடம் பெற விடாமல் தொண்டமானால் திட்டமிட்டு ஓரங் கட்டப் பட்டார். வி.கே.வெள்ளையணுக்கு வழங்கப்பட வேண்டிய பதவியை தொண்டமானுடன் நெருக்கமாக செயல் பட்ட வி.அணிணாமலைக்கு வழங்கப்பட்டது. மேல் சபையான செனட்டிலும் வெள்ளையனுக்கு வழங்காமல் அவரது உறவினரான ஜே.சு.தாசனுக்கு வழங்கப்பட்டது. இதனால் இ.தொ.கா விலிருந்து 15 முக்கியஸ் தர்களுடன் வெள்ளையன் வெளியேறி 1965ம் ஆணிடு மே 15ம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தை ஸ்தாபித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரக ஒரு தொழிலாளியே வரவேணடும் என விரும்பினார். வெள்ளையண் அதனால் எஸ்.பெருமாள் என்ற தொழிலாளியை சங்கத்தின் தலைவராக நியமித்து, அதன் செயலாளராக வெள்ளையண் செயல்பட்டார்.
 
 
 
 

தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு தோட்டத் தொழிலாளி ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்ற கொள்கையை வி.கே.வெள்ளையண் செயற்படுத்தினார். இந்த சங்கத்தில் முதல் தலைவராக எஸ்.பெருமாள் என்ற தொழிலாளி நியமிக்கப்பட்டார். பின்னர் டி. அய்யாத்துரை தலைவரானார்.
1966ல் சி.வி. வேலும் பிள்ளையும் இச்சங்கத்தில் என். சண்முகதாசனி இணைந்தார். இவர் நிதிக் காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். தொழிலாளிகளை விழிப்புணர் வுட்டுவதில் தீவரமாக செயல்பட்ட வி.கே. வெள்ளையன் 1970 டிசம்பர் 2ம் திகதி மாரடைப்பால் காலமானார். lf.6.f. கந்தையா பொதுச் செயலாளரானார். டி. அய்யாத்துரை தலைவரானார். பி, பெருமாள் பொறுப்பாளராகவும், சி.வி. சேவலுப் பிள்ளை நிர்வாகக் காரியதர்சியாகவும் செயல்பட்டார். 1984 நவம்பர் 19ம் திகதி மரணிக்கும் 660) சி.வி. வேலுப் பிள்ளை நிர்வாகக் காரியதரிசியாகப் பணியாற்றினார்.
செங்கொடிச் சங்கம்
19626) நடைபெற்ற இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தலைவராக எஸ். நடேசனும் , பொதுச் செயலாளராக எண் . சண்முகதாசனும் தெரிவு செய்யப்பட்டனர். 1963ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட தத்துவப் போராட்டத்தின் காரணமாக சோவியத் ரஷ்யா, சீனப்பிரிவும் கம்யூனிஸ்ட் சங்காத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய தொழிற்சங்கமும் இரண்டாகப் பிரிந்தது.
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பெரும்பாலான அங்கத்தவர்கள் என சணி முகதாசனுடன் இணைந்தனர்.
இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் தோழர் சண்முகதாசன் தலைமையில் சக்திமிக்க அமைப்பாக
D 60 Glou sg. தொழிற் சங்க வரலாறு (2)

Page 13
செயல்பட்டது. இதனை ‘ செங்கொடிசங்கம்’ என்றே தோட்டத் தொழிலாளர்கள் அழைத்து வந்தனர். தோழர் சணி முகதாசனுடன் ரொசாரியோ பெர்னாணி டோ எம்.சுந்தரம், ஓ.ஏ.இராமையா கோன்றவர்கள் செயற்பட்டார்கள்.
பின்னர் செங்கொடிசங்கத்தில் பிளவு ஏற்பட்டது. தோழர் சண்முகதாசன் தலைமையில் புதி செங்கொடி என்ற பெயரில் புதிய தொழிற்சங்கம் M செயற்பட்டது.இதன் செயலாளராக விஜய சேகர எஸ். நடேசன் தெரிவுசெய்யப்பட்டார்
மலையூதத்தில் சிசயந்பரும் சிதாழிந்க்ங்கங்கள்
மலையகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தின் பதிவு செயலிப்பட்டுள்ளன. ஆனால் இருபதுக் குட்பட்ட தொழிற் சங்கங்களே தொழிலாளர்கள் மத்தியில் செயற்படுவதாக அறிய முடிகின்றது. சில தொழிற்சங்கங்கள் பிரதேச மட்டத்தில் மாத்திரமே செயல்படுகின்றன. பரந்த ரீதியில் பத்துக்குட்பட்ட
தொழிற் சங்கங்களே செயல் படுகின்றன. மலையகத்தில் எத்தனை தொழிற் சங்கங்கள் செயல்படுகின்றன 66 தொழிற் சங்கப்
பிரதிநிதிகளுக்கே தெரியாது. ஒரு தகவலுக்காக இதைத் தருகின்றேன்.
01. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
02. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
(ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுவது)
03. லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன்
(சமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுவது)
04. தொழிலாளர் தேசிய சங்கம்
அந் தனி ஜீவா
 
 
 
 
 
 

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுவது)
. இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்கம் (கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுவது)
ஜனுநாயக தொழிலாளர் காங்கிரஸ்
அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
09. மலையக தொழிலாளர் முன்னணி
10. இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ்
11. பொதுச் சேவையாளர் சங்கம்
12. ஐக்கிய இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
13. லங்கா சுதந்திர சேவையாளர் சங்கம்
(பெருந்தோட்டப்பிரிவு)
14. புதிய செங்கொடி சங்கம்,
15. அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்
16. இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
17. இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர்
காங்கிரஸ்
மலையகப் பெருந்தோட்டதுறையிலி தொழிற் சங்கங்களில் பெணிகள் அங்கத்துவம் ஆணிகளை விடக் கூடியதாகவிருந்தாலும் பெண்கள் பங்கு பற்றுதல் மிகக் குறைவாகவே உள்ளது.
அவர்களுக்கு தலைமைத்துவத்தில் பங்கு தரப்படு வதில்லை. மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் பிரிவுகளை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம், மாகாண சபைகள் போன்றவற்றில் வெற்றி பெற்ற பொழுதிலும் அவற்றில் பெணி அங்கத்தவர்கள் ஒருவர் அங் பத்தவராக வர
மலையகத் தொழிற் சங்க 6) J հմ II 1;

Page 14
வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இது மிகப் பெரிய குறைபாடாகும். இனி வருங்காலத்திலாசது பெண்களுக்கு தலைமை தாங்க வயாம்பளிக்க வேண்டும்.
சாணிநாதாரங்கள்
The RiseoftheLaborMoment-Kumari Jayawardana
The Origins of the Left Moment in Sri Lanka - Kumari Jayawardana
Malayaha (UpCountry)Tamilldentity and Politicsinthe'Twenty FirstCentury-Danil Bass ICES. Publication
தேசபக்தனி கோ.நடேசய்யர் - சாரல்நாடன்
மலையக சிந்தனைகள் - இரா.சிவலிங்கம்
ஜீவா
 


Page 15
Printed by WARDHAPRINTERS emailsvardhapublication.0gmail.com T.
 

3A FUTEBLICATION Aku Tarna LLLLSSGSLS0S00LLL SS 0SG0SS LSLL000LL