கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

Page 1
சாரல்நாடன் மேற்கொண்டி ஆய்வுகள் விதந்து கூறத் தக்கவையாகும் மலையகத்தின் ஆக்க இலக்கியத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் முக்கிய இடம்பெறுபவர் சாரல்நாடன். மலையகம் பற்றி அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளும், நூல்களும் இவ்வகையில் மனங்கொளத்தக்கவை. அவரது ஆய்வு முயற்சிகளுள் சிறப்பித்துக் கூறக்கூடியவை தேசபக்தன் கோ. நடேசய்யர், சி. வி. சில சிந்தனைகள் மலையக வாய்மொழி இலக்கியம் என்பனவாகும்.
மலையக இதழியல் தொடர்பாக இதுவரை ஏனையோரிலும் பார்க்கச் சாரல்நாடனே காத்திரமான சில ஆய்வுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பக்-273
க.அருணாசலம் எம்.ஏ. பி.எச்.டி "இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்
மலைய மாருதம் வீசிடும் சாரல்நாடன் மரகதத் தேயிலை மலைகளில் உதித்திடும் செஞ்சுடர் போன்ற தோழருள் ஒருவன்.
-வ-ஐ- ச.ஜெயபாலன் ஒரு அகதியின் பாடல் நூலில்-1991
ISBN 955-97137-0-1
L L L L L L L L L L L L L LS SSLLLLLLSS LMLSSLLLLLL LLLLLS
 
 


Page 2

லையக இலக்கியம்
-தோற்றமும் வளர்ச்சியும்
சாரல்நாடன்

Page 3
மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகள்
மலையகத் தமிழர் - மலையரசி பதிப்பகம்
சென்னை.
மலையக வாய் மொழி இலக்கியம் -
- சவுத் ஏசியன் புக்ஸ்
சென்னை.
மலைக் கொழுந்தி - குமரன் புத்தக இல்லம்,
- சென்னை.
சி. வி. சில சிந்தனைகள் - மலையக வெளியீட்டகம்
கண்டி.
தேசபக்தன் கோ. நடேசய்யர் - மலையக வெளியீட்டகம்
கண்டி.
பத்திரிகையாளர் நடேசய்யர் - மலையக வெளியீட்டகம்
கண்டி, மலையகம் வளர்த்த தமிழ் - துரைவி வெளியீட்டகம்
சென்னை. இன்னொரு நூற்றாண்டுக்காய் -
பெண்கள்கல்விஆய்வுநிறுவனம்
கொழும்பு.

மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
சாரல் நாடன்
சாரல் வெளியீட்டகம் இல, 7, பல்கூட்டு சந்தை, ரொசிட்டா பசார் No. 7, Shopping Complex, Rosita Bazaar
கொட்டகலை Kotagala.

Page 4
இந்நூலானது தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள போதும், இந் நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.
முதற்பதிப்பு : ஜூலை - 2000
பதிப்புரிமை : சி. நல்லையா
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீடுகளில் உள்ள
பட்டியற் தரவு
சாரல்நாடன் (நல்லையா, சி.)
மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்,
சாரல்நாடன்- கொட்டகலை : சாரல் வெளியீட்டகம்,
2000
L, 106 : 3.Lδ. 22
ISBN 955-97137-0- 1 விலை: ரூபா 120.00
i 894.811 ...if 21 i. தலைப்பு i. தமிழ் இலக்கியம்
ISBN: 955 - 97137 - 0 - 1 அச்சிட்டாளர் : யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,
புளுமெண்டால் றோட், கொழும்பு - 13. வெளியீட்டாளர்: சாரல் வெளியீட்டகம்
கொட்டகலை.
MALAYAGA ILAKKIYAM - THOTRAMUM VALARCHIYUM ORIGN AND GORWTH OF UPCOUNTRY LITERATURE by SARALNADAN

என் ஆசான், இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் M. A; LLB (அவர்களின் நினைவுக்கு) 1932 - 1999

Page 5
10.
பொருளடக்கம்
அறிமுகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி
ஆரம்ப முயற்சிகள்
வாய்மொழிப் பாடல்கள்
பாடலாசிரியர்கள்
புதிய மாற்றங்கள்
கட்டுரைகள்
கவிதைகள்
நாவல்கள்
அடிக்குறிப்புகள்
O
IO
I6
36
99

முன்னுரை
பDலையக இலக்கியம்-தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்த நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. உண்மையில் தமிழ் சாகித்திய விழா 1991 மார்ச் 30ல் கண்டியில் நட்ைபெற்ற வேளை மலையகத் தமிழ் இலக்கியம் தோற்றம் - வளர்ச்சி - பரிமாணங்கள்’ என்ற தலைப்பில்பேசியதன் விரிவாக்கமே இந்நூல். ஈழத்து இலக்கியத்தின் இன்றியமையாத ஒர் அம்சமாக மலையக இலக்கியம் இருக்கிறது.
மலையக இலக்கியம் உருவான வரலாற்றையும் அதன் ஆரம்ப நிலைப்பாடுகளையும் இந்நூல் பேசுகிறது.
இது குறித்து ஏற்கனவே சிலர் எழுதி இருக்கிறார்கள். என்றாலும் இந்த நூலுக்கும் ஒரு தேவை இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
அறுபதுகளுக்குப் பிறகு மலையக மண்மணம் கமழும் இலக்கியங்களை வெகுவாகப் படைத்தளிக்கும் இலக்கிய கர்த்தாக்கள் தோன்றியிருக்கிறார்கள். அது காலத்தின் நியதியாயிருந்தது. அதில் கட்டுண்டு வந்தவர்கள் அதிகம். அப்படி ஓர் இலக்கியப் பிரவாகம் தோன்றுவதற்கு அம்மக்களிடையே ஒர் இலக்கிய பாரம்பரியம் இருந்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த நெருக்கமான உணர்வினை வளர்த்திட உதவியகாலனித்துவ ஆட்சியில் பிரிட்டிஷ் இலங்கையில் மக்கள் இந்திய உணர்வுடனேயே இருந்தனர்.

Page 6
இலங்கை மண்ணில் 19ம் நூற்றாண்டில் தொடங்கிய தோட்டப்புற வாழ்க்கையும், அதற்குமுற்பட்ட கண்டி மன்னன் காலத்தினதும், கறுவாப்பட்டைக் காலத்தினதும்; வாழ்க்கையில் எழுந்த இலக்கிய வடிவங்கள் காணக்கிடைக்கவில்லை.
இந்த உண்மையால்தான், இன்று அவைகளைத் தேடிக் கொள்வதில் சிரமப்படுகிறோம். இலங்கையில் கடைசி மன்னனாகக் கொள்ளப்படும் முத்துசாமியைப் பற்றிய அக்கறையோ, அவர் காலத்துத் காவியமாகிய சின்னமுத்து கதைக் குறித்த அக்கறையோ நமக்கு இல்லாததால் அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப்பறி கொடுத்து விட்டோம். தனியார் நூலகங்களிலும், விகாரைகளிலும், சுவடித் திணைக்களத்திலும் தேடி அலைகிறோம்.
மலையக இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது மறக்க முடியாத ஒருவர், இர. சிவலிங்கம் அவர்கள். என்னை உருவாக்கிய ஆசான் அவர்.
அன்னார்க்கு இந்த நூலைச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய இலக்கிய முயற்சிகளுக்குத் துணையாயிருக்கும்
அந்தனிஜிவா, க. முரளிதரன், அஸோமத் ஆகியோருக்கு என் நன்றி.
யுனிஆர்ட்ஸ் நிர்வாகஅதிபர் திரு.பொ. விமலேந்திரன் அவர்கட்கும், செல்வி வே. மாதவி அவர்கட்கும், இந்நூலாக்கத்துக்கு உதவிய தேசிய, நூலக ஆவணவாக்கலின் தலைவர் ஹென்றி சமரநாயக்கா அவர்களுக்கும் என் நன்றி. 60, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், அன்புடன் கொட்டகல, சாரல் நாடன் 2000

அறிமுகம்
LDலையகம் என்ற பதம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடிவமைக்கப்பட்ட சொல். இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் செறிவாகவும், ஏனைய பகுதிகளில் சிதறியும் காணப்படுகின்ற தென்னிந்திய வம்சாவளியினரைக் குறிக்கும் இன்றைய சொல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைக் குறிக்கவில்லை.
o e * பண்டைய வரலாற்றின் மலைநாட்டை இச் சொல் குறிப்பிடுவதாக மயக்கம் கொள்ளக்கூடாது.
இலங்கை வாழ் இந்தியர்களாக ஒரு நூற்றிருபது ஆண்டுக் காலம் அறியப்பட்ட இத்தென்னிந்தியர்கள், இலங்கை, இந்தியா என்ற இருதேசங்களிலும் சொந்தம் கொண்டாடியவர்கள்.
1947ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் பெரிதும் வதைக்குள்ளானவர்கள். இலட்சக்கணக்கான மக்கள் தமது தேசம் இலங்கையா இந்தியாவா என்று தீர்மானிக்க முடியாது நட்டாற்றில் விடப்பட்டனர், நாடற்றவர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.
y3
1964ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட “சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர், அதுகாலவரை நிலவிய நாடற்றநிலை மாற்றம் பெற்றது. இவ்வொப்பந்தம் மக்களின் விருப்பத்துக்கு இடமளிக்காதவிதத்தில் அமுல்படுத்தப்பட்ட குறைபாட்டைக் கொண்டிருப்பினும், இவர்களை இலங்கை அல்லது இந்தியா என்று இரண்டிலொரு நாட்டைத் தீர்மானிக்க வைத்தது.
அறிமுகம் 1.

Page 7
அதுகாலவரை எல்லாவிதத்திலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகத் துயருற்ற ஒரு சமூகத்தவர்கள், தாம் வாழ வேண்டிய நாட்டில் தமக்கென ஓர் அடையாளத்தைத் தேடினர்.
1947ம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்ட வேளை தங்களைக் கண்டித்தமிழர் என்று குறிப்பிடவேண்டும் என்ற இவர்களது குரல் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்தது. அதில் வெளிப்பட்ட நியாய பூர்வமான உணர்வை மதித்து ‘வீரகேசரி' பத்திரிகை ஆசிரியத்தலையங்கம் தீட்டி ஆதரித்தது. இவர்களின் கோரிக்கை வெற்றி காணவில்லை. இந்தியனாகவும், தோட்டக்காட்டானாகவுமே தாம் இனம் காட்டப்படுவதில் வெறுப்புற்றுத் தாம் மலைநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் தரும் - ஹில் கன்றி பீப்பிள் - என்ற ஆங்கிலச் சொல்லை விரும்பிப் பயன்படுத்தினர். பத்திரிகைகளில் எழுதும்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் இச்சொல்லையே மக்கள் கவிமணி ஸி.வி.வேலுப்பிள்ளை பாவிக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அச்சொற்பிரயோகத்தைப் பலரும் எள்ளி நகையாடினர். மலைநாடு என்றால் அங்கு குறவர்களா வாழுகிறார்கள் என்று தம்மைக் கேலி செய்தனர் என்று ஸி. வி. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். கண்டித்தமிழர் என்று தம்மைக் குறிப்பிடவேண்டும் என்று சௌமியமூர்த்தி தொண்டமான் கேட்டுக் கொண்ட அந்த நாடாளுமன்ற நிகழ்வின்போது ஸி.வி. வேலுப்பிள்ளையும் அதே நாடாளுமன்றத்தில் தலவாக் கொல்லையின் கெளரவ உறுப்பினராக வீற்றிருந்தார். தம்மைக் கெளரவமிக்க ஓர் அடையாளத்தில் தலவாக்கொல்லையின் கெளரவத்துக்குரியவராக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.
2 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

தமது சமூகப் பிரச்சினைகளையும், சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்த முனைந்த பலரும் மலைநாடு என்ற சொல்லால் கவரப்பட்டனர். மலைநாடு' என்ற பெயரில் நாவலப்பிட்டியிலிருந்து கணக்கப்பிள்ளைமார் சங்கத்தினருக்காக எழுத்தாளர் பி. ஆர். பெரிசாமியால் வெளியிடப்பட்டது(1951) ஒர் இதழ்’ மலை நாட்டுக் காந்தி என்று தங்கள் சமூகத்தைச் சார்ந்த தலைவர் கே. இராஜலிங்கத்தைப் பெருமைப்படுத்தினர் (1952) மலைநாட்டு எழுத்தாளர் சங்கம், (1963) மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்' என்ற பெயர்களில் மன்றங்கள் தோன்றின. 1960ன் நடுப்பகுதிவரை இந்த நிலைமை நீடித்தது எனலாம்.
இந்த நிலையில் மலைநாடு' என்ற சொல் அரசியல் சாயம் பூசப்பட்டுத் தொண்டமான் தலைமையில் அமைக்கப்படவிருக்கும் தனித்தமிழ் ராஜ்யத்தைக் குறிக்கும் சொல்லாக அர்த்தப்படும் அபாயமும் தோன்றியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நிலமையை உருவாக்கினர். தவறாக விளங்கிக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகாமலும், தமது தனித்துவத்தைப் பேணவும் விரும்பிய இச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மலையகம் என்ற சொல் பரந்துபட்ட பாவிப்புக்கு வரக்காரணமாக அமைந்தனர். மலையக இளைஞர் முன்னணி, (1970) மலையகத் கலை இலக்கியப் பேரவை, மலையக மக்கள் முன்னணி என்று மன்றங்களும் அரசியல் கட்சியும் தோற்றம் பெற்றன.
இந்தியவம்சாவளி மக்கள் இலங்கையில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தங்களை இப்படி மலையக மக்கள் என்று இனம் காட்டத் தொடங்கியுள்ளனர். பலாங்கொடையிலிருந்து
அறிமுகம் 3

Page 8
எஸ்.எம்.லாசரசை ஆசிரியராகக் கொண்டுமலையகம் என்ற ஏடும் (1971) கொழும்பிலிருந்து வி. எல். பெரைராவை ஆசிரியராகக் கொண்டு மலைமடல்’ என்ற ஏடும் (1976) இந்தியவம்சாவளித் தமிழர்களால் வெளியிடப்பட்டதன் பின்னணி இதுதான்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்குப் புனர் வாழ்வுத் திட்டத்தின் கீழ் குடிபெயர்ந்தவர்கள் கூட இந்தியாவில் தங்களை மலையகமக்கள் மறுவாழ்வு மன்றம்,’ (1980) என்று பெயரிட்ட அமைப்பின் கீழ் இனம் காட்டத் தொடங்கியுள்ளதையும் கவனிக்க முடிகிறது.
அறுபதுகளில் இச்சொல் பெருவாரியாக வழக்கில் வந்தது. இச்சொல்லின் கருத்துச் செறிவைக் குறித்துப் பலரும் விவாதித்தனர்.
வீரகேசரிப் பத்திரிகையில் கேட்டதும் கிடைக்கும் என்ற பகுதியில் தரப்பட்டிருக்கும் விடை இதற்கான ஒரு நல்ல விளக்கமாக அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.
மாவத்தகமையிலிருந்து வி. ஆர். நாராயணசாமி என்பவர் “மலையகம் மலையகம் என்கிறீர்களே, அதற்கு எல்லை எது என்பதை வரையறுத்துக் கூறுவீர்களா?"என்று கேட்ட கேள்விக்குப் பதிலாக,
மலையகம் என்பதோர் உணர்வின் ஆக்கமேயொழிய அது நிலவியலுக்குட்பட்டதல்ல; உட்படவும் கூடாது என்பது தான் எமது கருத்து. நான் ஒரு மலைநாட்டான்' என்ற எண்ணத்தோடு'சாகரா’ பாலைவனத்தில் நீங்கள் வாழ்ந்தாலும் அதுவும் மலையகமே தான்" என்று பதில் தரப்பட்டிருக்கின்றது."
4 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி
தென்னிந்தியர்களைப் பெருமளவில் இலங்கைக்குக் கொண்டு வந்ததற்குப் பிரித்தானியப் பேரரசுதான் காரணம். வாசனைத் திரவியங்களும் இரத்தினக்கற்களும் ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த இலங்கைத் தீவை கோப்பி, றப்பர், தேயிலை ஆகிய காசுப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நாடாகப் பிரித்தானியப் பேரரசு மாற்றி அமைத்தது. அந்தப் பணியில் உள்ளூர் கிராமத்தவர்கள் விருப்பம் காட்டவில்லை.
மலைப்பிரதேசக் காடுகளில் வனவிலங்குகளும் நச்சரவங்களும் நிறைந்து காணப்பட்டன. மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சிறுத்தையும், புலியும் நிறைந்திருந்தன. இந்த ஆபத்துக்களை எதிர் நோக்கி, உயிரையும் மதிக்காது வேலை செய்வதற்கு பிரிட்டிஷ் பேரரசுக்குத் தொழிலாளர்கள் தேவையாயிருந்தனர். தென்னிந்தியர்கள் தனது தேவையைப்பூர்த்தி செய்யக் கூடியவர்கள் என்பதை பிரிட்டிஷ் பேரரசு உணர்ந்திருந்தது. மேலும், இந்தியாவும் அப்போது அதன் ஆட்சியிலிருந்தது. தமது ஆட்சியின் கீழிருக்கும் ஒர் அடிமை நாட்டிலிருந்து இன்னோர் அடிமை நாட்டுக்கு ஆயிரக்கணக்கில் மக்களைக் குடிபெயரச் செய்வது அதற்குச் சிரமமாயிருக்கவில்லை. மேலும், தென்னிந்தியாவில் நிலவிய வரட்சியும் கடும் பஞ்சமும் மக்களைக் குடிபெயரும் நிலைக்குள்ளாக்கியிருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி 5

Page 9
1820ம் ஆண்டு மலாயாவிலும் 1828ம் ஆண்டு இலங்கையிலும் 1879ம் ஆண்டு பீஜியிலும் தோட்டக் கூலிகளாக இச் சமூகத்தினர் தமது உழைப்பைத் தொடங்கினர்.
1828ம் ஆண்டு கவர்னராக இருந்த பார்ன்ஸ் நூற்று ஐம்பது தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததற்கும் ஜோர்ஜ்பேர்ட் என்ற தோட்டத்துரை தன்னுடைய ஆள்கட்டி மூலம் பதினான்கு தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.'
இக்காலப் பகுதியில், பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டியில் குடியேறி வாழ்ந்த தென் இந்தியர்களான இந்துக்களும் முஸ்லிம்களும் அவர்களின் சந்ததியினரும் அப்பிரதேசத்தில் இருந்துள்ளனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில், கண்டி ராஜ்யத்தில் - மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தினரின் மன்னர் ஆட்சியே நிலவியது. பிரித்தானியர்கள் இலங்கையை முழுவதாகக் கைப்பற்றிய 1815ம் ஆண்டுவரை, சுதந்திரப் போராட்டத்தைக் கடைசிவரை மேற்கொண்ட பெருமை கண்டி ராஜ்யத்துக்கே உரியது. கண்டி ராஜ்ய மன்னர்களாகத் தொடர்ந்து ஒரு எழுபத்தாறு ஆண்டுகளுக்குத் தென்னிந்தியர்களே இருந்துள்ளனர்.
சிறி விஜயராஜசிங்கன் (1739-1747) சிறி கீர்த்தி சிறி ராஜசிங்கன் (1747 - 1781), இராஜாதி ராஜசிங்கன் (1781 - 1798) சிறிவிக்கிரம ராஜசிங்கன் (1798-1815) என்ற நான்கு மன்னர்களின் ஆட்சி தொடர்ந்து எழுபத்தாறு ஆண்டுகள் கண்டி ராஜ்யத்தில் நிலவியபோது தான் மேற்குறித்த இந்து - முஸ்லிம் குடியேற்றம் கண்டி ராஜ்யப்பகுதிகளில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
6 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

இலங்கைக்குத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்குத் தந்த தூண்டுதலில் “தமிழும் தெலுங்கும் தெரிந்த தோட்டத்துரையின் கீழ் வேலை செய்யலாம்” என்ற வாசகம் காணப்படுகிறது.
இந்த நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு 33 ஆண்டுகளுக்கு முன்னரேயே - 1706 ல் டச்சுக்கப்பல் ஒன்றில் கண்டியிலிருந்து மதுரைக்குக் சென்ற - மணப்பெண் தேடிச் சென்ற தூதுக்குழுவில் சிதம்பர ரகுநாத், அடையப்பன் என்ற இரண்டு தமிழர்கள் சென்றனர் என்ற குறிப்பு காணப்படுகிறது.
இந்த நீண்ட எழுபத்தாறாண்டுக் காலப் பகுதியில் கண்டி மன்னர்களின் மணப்பெண்கள் தென்னிந்திய நகரமான மதுரையிலிருந்து தெரியப்பட்டதற்கும் அரச அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதானிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கியதற்கும் வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. 1815ம் ஆண்டு பிரித்தானியப் பேரரசுடன் கண்டிப் பிரதானிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இலங்கையர் சார்பில் நிறைந்த எண்ணிக்கையில் தமிழ்க் கையொப்பங்கள் காணப்படுகின்றன.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கண்டி இராஜ்யத்துக்கு உரிமை கொண்டாடிய சிங்கள சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூடத் தங்களைத் தமிழர் வழி வந்தவர்களென்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. எனினும், கைது செய்யப்பட்ட மன்னரும் அவரது உறவினர்களும் இனபந்துக்களும் தம்மை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கோரிய போது அவர்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி 7

Page 10
பிரித்தானியப் பேரரசுடன் ஒர் உறுதிமொழி செய்து கொண்டனர். அதன்படி தங்களைச் சார்ந்த எவரும் இலங்கையில் இருக்கப் போவதில்லையென்றும் இனி மீண்டும் இலங்கைக்கு வருவதில்லையென்றும் பிரித்தானியப் பேரரசுக்கெதிராக ஆயுதம் ஏந்துவதில்லையென்றும் அந்த உறுதிமொழியில் காணப்படுகின்றன எனினும் இலங்கையில் வட்டிக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்த அவர்களில் சிலர் உப்பு விற்பவர்களாகவும் மீன் விற்பவர்களாகவும் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்தியப் பிராமணர்களை இலங்கைச் சிங்களவர்கள் மணம் புரிந்து குடும்பம் நடாத்த ஆரம்பித்துள்ளனர். இவையெல்லாம் தமிழ் பேசப்படும் மொழியாகத் தொடர்ந்து கண்டிச் சூழலில் பேணப்பட்டமைக்குக் காரணங்கள்.
இக்காலப் பகுதியில் எழுத்திலக்கியமாக உருவாகி நமக்குக் கிடைத்திருப்பவை அறிஞர்முகம்மது சித்திலெப்பைவித்துவதீபம் அருள் வாக்கி அப்துல் காதர் ஆகியோரின் சில படைப்புக்கள் மாத்திரமே. முப்பதுக்கு மேற்பட்ட கவிதை நூல்களை யாத்த அருள்வாக்கி தெல்தொட்டதோட்டத்தின் பெரியகங்காணியின் மகனாவார்.
மிகுந்த தமிழ்ப் புலமையுடைய அவர் இராமாயணம், சீறாப்புராணம் ஆகிய நூல்களுக்காற்றிய இரசனைப் பிரசங்கங்களைக் கேட்டு யாழ்ப்பாணத்துமக்கள் அவருக்குவித்துவ தீபம், என்ற விருதினைச் சூட்டினரென்பர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. அவரது நூல்கள் அந்தாதி, கும்மி, கலம்பகம், பதிகம் என்ற பிரிவுகளில் அடங்குவனவாகும்.
8 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

கண்டியில் தமிழ் வழக்கு மொழியாக மிகவும் சிறப்புடன் இருந்ததற்கு இவரது படைப்புக்களை ஆதாரம் காட்டலாம்.
அவரது காலத்துச் சூழலில் மக்கள் சீர்திருத்தம், முன்னேற்றம் குறித்து கவிதைகள் எழுதப் படவில்லை, மலையகப் பிரச்னைகளைப் பற்றி அவரது படைப்புக்களில் குறிப்பிடப்படவில்லை என்று வாதிப்பது அறிவுக்குப் பொருந்தாது.
மிகச் சமீபகாலம் வரை குடியுரிமை பெற முடியாது தத்தளித்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இருந்துள்ளனர். இலங்கை வம்சாவளிப்பிரஜைகளுக்கு - மலையகத்தவர்களுக்கு - குடியுரிமை கொடுக்கும் தீர்மானத்தை இலங்கை அரசு மேற் கொண்டபோது தான் அவர்களும் பயன் அடைந்தனர்.
அருள்வாக்கியோடு தொடர்புபடுத்திக் “கங்காணி, உங்காணி, வெங்காணி’ என்ற சொற்றொடர் பிரஸ்தாபிக்கப்படுகிறது. தோட்டத் தொடர்பு வேண்டாம் என்ற அவரது தீர்மானத்துக்காதாரமாகவே இத் தொடரைக் குறிப்பிட்டுள்ளனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி 9

Page 11
ஆரம்ப முயற்சிகள்
பிரித்தானியப் பேரரசில் இலங்கை 9 (5 காலனியாக்கப்பட்டதோடு அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும், பயிர்ச் செய்கையோடு அழைத்துவரப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களும் இலங்கையில் ஒரு புதிய இலக்கியத் தோற்றத்துக்குக் காரணமாயினர்.
பயிர்ச்செய்கையை அறிமுகம் செய்த ஆங்கிலேயர்களில் வெகுபலருக்கு முறையான படிப்பில்லை. ஒரு சிலர் தங்களது படிப்பறிவினால் இலங்கை மலைப்பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களையும், உள்ளூர் வாசிகளிடம் அதனால் ஏற்பட்டுவரும் மனோபாவத்தையும் எழுத்தில் வடித்துள்ளனர். கட்டுரை வடிவத்திலமைந்த பல நூல்களுள்ளன.
வில்லியம் நைட்டோன் கானகவாழ்வு' என்ற பெயரில் இரண்டு பாகங்களில் ஒரு நாவலையும், வில்லியம் ஸ்கீன் நக்கில்ஸ் மலைத் தொடர்கள்' என்ற கவிதை நூலையும் முறையே 1854, 1868 என்ற கால வரிசையில் வெளியிட்டுள்ளனர். “தமக்கு அறிமுகமற்ற ஒரு புதிய நிலப்பிரப்பில், புதியதொரு சமூகத்தினரோடு, தமது அனுபவங்களைத் தமது மொழியில் பிரித்தானிய நாட்டினருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர்" என்கிறார் யஸ்மின்.
இதே நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கில் குடியேறிய, இதுகாலவரை தாம் பட்டறியாத அநுபவங்களைத் தரிசித்த தமிழ்
10 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மொழி பேசிய கூட்டத்தினரின் சுவடுகள் ஆங்காங்கே இந்த ஆங்கிலப் படைப்புக்களில் காணக் கிடைக்கின்றதே தவிரத் தமிழ் மொழியில் எழுத்திலக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை எதையும் கூறுவதற்கில்லை. வாய்மொழிப் பாடல்களாக மாத்திரமே அவை உயிர் வாழ்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தத் தமிழ்ப்பயிர்ச் செய்கையாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டி - பயிர்ச் செய்கைகளில் தொடர்ந்தும் அவர்களை ஈடுபடுத்த வேண்டிக் கோப்பிக் கிருஷிக் கும்மியென்றும், தேயிலைக் கிருஷிக் கும்மியென்றும் அச்சுப்பிரசுரங்கள் வெளியாகியுள்ளன. சுத்தமான சிலோன் தேயிலையைக் குடியுங்கள் என்று பல்லாயிரக்கணக்கான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இவை பணம்கொடுத்து எழுதப்பட்ட பிரசாரப்பிரசுரங்கள். அடிமட்டத் தமிழ்த் தொழிலாளர்களைக் கவர்வதற்காக நிர்வாகம் செய்யும் தமிழர்களால் (உத்தியோகத்தர்கள்) எழுதப்பட்டவை.
அடிமட்டத் தமிழ்த் தொழிலாளிகளிடமிருந்து இவர்களைப் பிரித்து வைப்பதற்குக் கிறிஸ்தவ மதப் பின்னணி பெரிதும் உதவிற்று. 1869ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்தும் மக்களிடையே இலவசமாக விநியோகிக்கப்பட்டதுமான ஏ. ஜோசப் என்ற கோப்பித் தோட்டக் கண்டக்டர் ஒருவரால் எழுதப்பட்டதுமான“கிருஷிக்கும்மியை” விவசாய நூல் என்றே அட்டவணை செய்து பதிவு பண்ணியுள்ளனர்."
காசு கொடுத்துத் தமிழில் நூலெழுதித் தோட்டத் தொழிலாளர்களைக் கவரும் பிரசுரங்களை விட, துரைமார்களைத் தமிழறிவுடையவர்களாக்கி அவர்கள் மூலமே தோட்டத் தொழில் அபிவிருத்தியை மேற்கொள்ளப்படுவதற்கான பிரசுரங்கள்
ஆரம்ப முயற்சிகள் 11

Page 12
அச்சிடப்பட்டன. அறிவு, இங்கே வா, என்ன வேணும்? அடேயப்பா, கூலித் தமிழ் என்ற பிரசுரங்கள் அத்தகு நோக்கில் வெளியானவை தாம்.
ஏறக்குறைய இதே காலப்குதியில் கல்வி அறிவுடைய சிலரால் எவரிடமும் பணம் பெற்றுக் கொள்ளாமல் சிறு பிரசுரங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பயிர் அபிவிருத்தியில் மக்களை ஈடுபடவைக்கும் நோக்கமில்லை.
தேயிலைத்தோட்ட தெம்மாங்கு என்ற பெயரில் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. 1910ல் இதை பி. பண்டாரம் என்பவர் பாடியுள்ளார். டி. கே. எம். ஜபார் என்பவர் தேயிலை கொய்யும் தெம்மாங்கு என்ற தலைப்பில் என். சுப்பிரமணியம்பிள்ளையின் உதவியோடு 1909ல் ஒரு சிறு புத்தகத்தை இருபத்தெட்டுப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் கவிதை நூல் என்று வகைப்படுத்தப்பட்டுப்பதிவுபண்ணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதேவரிசையில் கும்மியோ கும்மி, கோப்பிக்காட்டுக்கும்மி என்ற தலைப்பில் 1918ல் வில்சன் என்பவர் வெளியிட்டுள்ளார். பஞ்சக் கொடுமைசிந்து’ என்ற தலைப்பிலும் “நொண்டிச் சிந்தும், சிந்துக்கும்மியும்’ என்ற தலைப்பிலும் வெளியாகியுள்ள சிறுபுத்தகங்கள் மக்கள்படும் துன்பங்களையும் பஞ்சக் கொடுமையினால் ஏற்பட்ட பரிதவிப்புக்களையும் இரயில் வண்டிப்பாதை அமைப்பதில் படும் துயரங்களையும் வெளிப் படுத்துகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகின் பல பாகங்களிலும் மாறுதல்கள் தோன்ற ஆரம்பித்தன.
12 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

சிந்தனையாளர்கள் பலர் தோன்றினர். உரக்கச் சிந்திப்பவர்களுக்குப் பத்திரிகைகளும் நூல்களும் ஊடகமாக அமைந்து சமூக மாற்றத்துக்கு உந்து சக்தியாகின்றன. இந்தப் பொது நியதிக்கேற்பவே, இக்காலப்பகுதியில் மலைப்பிரதேசத்திலும் அச்சில் ஆங்காங்கே புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இவ்விதம் வெளியான பிரசுரங்கள் எல்லாமே கும்மி, தெம்மாங்கு, சிந்து என்ற பாடல் வகைகளில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். தமிழ் மக்களிடையே ஆழவேரூன்றியிருக்கும் பண்பாட்டு அம்சங்களையும் நாட்டுப் பாடல்களின் செல்வாக்கையும் அடியொற்றியே மலையகத்து ஆரம்ப எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதுவும் கவனிக்கத்தக்து. இவற்றை விட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியில் கோப்பிச் செய்கையில் ஈடுபடுத்தப்பட்ட இம்மக்கள் தொழில் புரிவதற்கு மாத்திரமே தாம் ‘கண்டிச்சீமைக்கு வந்ததாக நினைத்தனர். அவர்களது சொந்த ஊர் தென்னிந்தியக் கிராமம் தான். கோப்பிப்பழ அறுவடைக்கு வரும் அவர்கள் அதன்பின் தங்கள் ஊருக்குத் திரும்பி மீண்டும் அடுத்த அறுவடைக் காலத்திலேயே வந்தனர். தேயிலைச் செய்கை பண்ணப்பட்ட காலத்தில் அவர்களின் நாளாந்த உழைப்புக்கு இங்குத் தேவையிருந்தது. எனவே, அவர்கள் குடும்பமாக இங்கேயே வாழத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஆயிரக் கணக்கிலிருந்த இவர்களின் எண்ணிக்கை காலக் கிரமத்தில் லட்சக்கணக்கில் பல்கிப் பெருகின.
இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்ட குடிசன மதிப்புக்களில் தெளிவாகக் குறிப்பிடப்படாது போனாலும், 1871ல் 12
ஆரம்ப முயற்சிகள் 13

Page 13
சதவிகிதத்திலும், 1921ல் 21 சத விகிதத்திலும் 1941ல் 80 சதவிகிதத்திலும் இலங்கையில் பிறந்தவர்களை உள்ளடக்கிய சமூகமாக இந்திய வம்சாவளிமக்கள் வளரத் தொடங்கியிருந்தனர்."
எனினும், அவர்களது கல்வி அறிவு மிக மிக மோசமான நிலையிலிருந்தது. அவர்களில் தங்களது பெயரை எழுதத் தெரிந்தவர்கள் என்று கூறுவதற்குக் கூட ஆட்களைத் தேட வேண்டியிருந்தது. இருந்தும் அவர்கள் மத்தியில் கலையும் வாய் மொழி இலக்கியமும் ஜிவியமாக உயிர் வாழ்ந்தன. உண்மையில் இந்தக் காலப் பகுதிதான் ஐம்பதாண்டுக் காலத்துக்குப் பின்னர்
மலையக இலக்கியம்” என்று உயிர்ப்புப் பெற்றது எனலாம்.
“ஒரு சிறு நதியானது, திரண்டு நுங்கும் நுரையுமாகப் பிரவாகம் எடுப்பதற்குச் சுமார் ஐம்பது வருடங்கள் பிடித்தன. இந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்னரும், அதாவது, சாதாரண மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத காலத்திலிருந்தே, உயர்வான மக்கள் இலக்கியம் இந்தப் புது நிலத்தில் ஆழமாகவும் தாக்கமாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது. பரந்த அடிப்படையில் நாம் இவற்றை நோக்கினால் தமிழ், கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங்கின. அது மட்டுமல்ல ஒரு தனித்துவமான பிரசித்தத்தோடு அத்துறைகள் வளர்ந்தும் வந்துள்ளன”, என்று கூறுகிறார், மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான ஸி. வி. வேலுப்பிள்ளை."
இவர் மலையக இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமான ஒருவர். தானே படைப்பாளியாக இருந்தும், தனக்குப் பின்னர்
14 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ்மொழி மூலம் பரவலாக வளரத் தொடங்கிய இலக்கியத்தைப் பற்றிய அவதானியாக இருந்தும் இவர் காத்திரமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
இவரின் கூற்றுக்கள் சில இங்குக் கவனிக்கத்தக்கவை.
1960ம் ஆண்டு 'தினகரன் வெளியிட்ட தமிழ்விழா மலரில் "இலக்கியமும் மலைநாட்டு மக்களும்” என்ற தலைப்பில் தானெழுதிய கட்டுரையில் - குறிப்பிட்டுக் கூற ஒன்றுமில்லை. எதிர் காலம் நம்பிக்கை நிரம்பியிருக்கிறது - என்று குறிப்பிட்ட ஸி. வி. வேலுப்பிள்ளை 1963ம் ஆண்டு 'தினகரன், மலைநாட்டு மக்கள் மன்றம் பகுதியைத் தோற்றுவித்த வேளை - பன்னிரண்டு பெயர்களை, மலைநாட்டில் ஏற்கனவே எழுத்தில் இனம் காட்டப்பட்டுள்ளார்கள் - என்று கூறி மகிழ்கிறார்.
மூன்றாண்டு இடைவெளிக்குள், குறிப்பிட்டுக் கூற ஒன்றுமில்லை, என்ற கணிப்பு, பன்னிரண்டு இலக்கிய கர்த்தாக்களைக் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வளர்ந்திருக்கிறது. மலையகத் தமிழ் இலக்கியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சி வேகத்தையும் இவரது கூற்றில் கவனிக்க் முடிகிறது.
ஆரம்ப முயற்சிகள் 15

Page 14
வாய் மொழிப் பாடல்கள்
தொடர்ந்து ஒரே இடத்தில் குழுமமாக வாழ்ந்து குடும்பம் நடாத்த ஆரம்பித்த இந்த மக்கள் தங்கள் இன, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தைப் பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே.
தென்னிந்தியக் கிராமங்களில் வழக்கிலிருந்த வாய் மொழிப் பாடல்கள்தாம் இவர்கள் எவ்வித சிரமமுமின்றிமலைப்பிரதேசங்களில் தொடக்கி வைத்த இலக்கிய முயற்சிகள் எனலாம்.
மலேசியத் தமிழ் இலக்கியமும் இந்தப் பின்னணியில்தான் தோற்றம் பெற்றதென்பர்."
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இந்தப் பாடல்களில் அவர்களின் துன்பம், துயரம், சோகம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், சிங்காரம் என்ற மனித நேயத்துக்கான எல்லா உணர்வுகளுமே வெளிப்பட்டுக் காணப்படுகின்றன.
தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடி வந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? ஏமாற்றமும் இழப்புக்களும்தாம்.
“ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்ததாய நான் மறந்தேன்”
16 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

என்ற வரிகளில் இதை எத்தனை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்!
வாய் மொழிப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய பாடல்களை மலையகத்திலேயே அதிகம் காண முடிகின்றதென்பதை மக்கள் கவிமணி ஸி. வி. வேலுப்பிள்ளை, ஏ. வி. பி. கோமஸ், சாரல் நாடன் ஆகியோர்களால் எழுதப்பட்டுள்ள முறையே மலைநாட்டு மக்கள் பாடல்கள் (1983), அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான் (1988) மலையக வாய் மொழி இலக்கியம் (1993) என்ற நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்பாடல்களைத் திரட்டிக் கோதைநாயகி, ஸி. எஸ். காந்தி, டி. எஸ். இராஜு, மு. சிவலிங்கம், சி. வே. ராமையா, சி. அழகுப்பிள்ளை, எஸ். வேதாந்தமூர்த்தி, எஸ். பி. தங்கவேல், வி. டி. செல்வராஜ், 5. விஜயேந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் பத்திரிகையுருவிலேயே அமைந்து விட்டன.
மொழி தெரிந்தவர்கள் மத்தியில் சந்ததி சந்ததியாகக் கலை, மொழி, பண்பாடு, மத நம்பிக்கை, வாழ்க்கைப் பண்பு, வரலாற்று நிகழ்வு என்பனவற்றைப் பின்னிப் பிணைத்துச் செல்லும் தொடர்பு சாதனமாக விளங்கும் வாய்மொழிப்பாடல்கள் முழுவதும் சேகரித்துப் பேணப்படாது மலையகத்தமிழ் இலக்கியத்தோற்றத்தின் முழுப் பரிணாமத்தையும் அறிந்து கொள்வதற்குத் தடையாயிருக்கின்றது.
உலகெங்கும் நாட்டாரியல் குறித்து முன்னேற்றகரமான அணுகு முறைகள் பெருக்கெடுத்துள்ள இன்று இத்துறையில்
மலையகத்தவர்களின் கவனம் போதாதென்றே கூற வேண்டும்.
நாட்டாரியல் கருத்தரங்கொன்றை முழுநாள் நிகழ்ச்சியாக மலையகக் கலை இலக்கிய பேரவை கண்டியில் நடாத்தியது. ஒரு
வாய் மொழிப் பாடல்கள் 17

Page 15
முன்னேற்றகரமான செயல் என்ற போதும் அதனால் விளைந்த பயன் என்று எடுத்துரைக்கும் பாங்கில் மேலதிகமாக உறுதியாக ஒன்றும் செய்யப்படவில்லை.
வாய் மொழிப் பாடல்களை வரலாற்றுத் தரவுக்கான ஆதாரங்களாகக் கொள்வதன் மூலம் மலையக இலக்கியம் செழிப்புறும் வாய்ப்புக்கள் உண்டென்பதைக் கண்டியில் நடந்த நாட்டாரியலில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டது செயலுருப் பெறுதல் வேண்டும். இதே விதமாக 1968 ல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கருத்தரங்கில் கலந்து கொண்ட க. நவசோதி - சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், ஸி. வி. வேலுப்பிள்ளையின் சேகரிப்பையே தன்னுடைய ஆய்வின் ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்களின் கிணற்றில், விழுந்த கல்லாகக் கிடந்த வாழ்க்கையில் சலனம் ஏற்படத் தொடங்கியது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுக்குப் பிறகுதான்.
கடல் கடந்த நாடுகளில் தம் நாட்டவர் படுந் துயரங்குறித்து இந்திய தேசபக்தர்கள் உரத்துக் குரலெழுப்பினர். அவர்களின் கவனம் இலங்கைக்கும் ஈர்க்கப்பட்டது.
இலங்கை இந்தியாவுக்கு அண்மையிலிருந்ததாலும், இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியப் பேரரசின் கீழ் இயங்கிய 'அடிமை நாடாக இருந்ததாலும் போக்குவரத்துக் கட்டுப்பாடு எதுவுமின்றி இரு நாடுகளுக்கிடையில் வந்து போக முடிந்ததாலும் தென்னிந்தியக் கலாசாரம் மலைப் பகுதித் தொழிலாளர்க்கிடையே தொடர்ந்து பேணப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து வந்து போவோரில் யாத்திரிகர்களும் புலவர்களும் பாடகர்களும் நாடக நடிகர்களும் இருந்துள்ளனர்.
18 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

1920 க்குப் பிறகு வைத்தியம், சட்டம் படித்துப் பட்டம் பெற்ற இந்தியர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் தொழில் புரியத் தொடங்கினர். கொழும்பில் நிறையவே இந்திய வர்த்தகர்கள் நிலை கொள்ளலாயினர். பத்திரிகைத் தொழிலில் நாட்டம் மிகுந்தவர்கள் பத்திரிகைகளை ஆரம்பித்தனர்.
1924ம் ஆண்டு இலங்கையின் சட்ட நிரூபண சபைக்கு இரண்டு இந்திய அங்கத்தவர்களைத் தெரிந்தனுப்பும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்குக் கொடுக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்களாகும் ஆசையை இது எழுப்பியது. இந்தியாவிலே பிறந்த ஒருவரே, இவ்விதம் இந்திய அங்கத்தவராக முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில், இந்தக் காலப் பகுதிகளில் தோற்றம் பெற்ற பத்திரிகைகள் இருபதுக்கு மேலாகும்.
1918 - ஜனமித்ரன் 1922 - தேசநேசன் 1924 - தேசபக்தன் 1924 - இந்தியன்
1924 - லங்காவிகடன் 1924 - தொழிலாளி 1925 - தேச தொண்டன் 1927 - சத்யமித்திரன் 1927 - தேச ஊழியன் 1927 - சமத்துவ ஊழியன் 1928 - தொழிலாளர் தோழன் 1928 - இலங்கை இந்தியன்
வாய் மொழிப் பாடல்கள் 19

Page 16
1928 - ஜனநேசன்
1928 - தேசபந்து
1928 - ஆதிதிராவிட மித்ரன்
1928 - ஜனநேசன்
1929 - இந்தியகேசரி
1929 - கங்காணி
1929 - திராவிடன்
1929 - காந்தியன் இந்திய மக்களில் அரசியல் ஆசைமிகுந்த வர்த்தகப் பிரமுகர்களையே மேற்குறித்த அட்டவணையில் காணப்படும் பத்திரிகைகளில் பலவும் பிரதிபலித்தன. தோட்டப் புறத்தில் வாழுகின்ற ஏழைத் தொழிலாளர்களைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்த கோதண்டராம நடேசய்யரும் சத்யவாகீஸ்வரய்யரும் முறையே தாம் நடத்திய தேசபக்தன், இலங்கை இந்தியன் பத்திரிகைகளில் தோட்டப்புற மக்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். “எனது வாழ்வின் கனவான கீழைத்தேய மறுமலர்ச்சிக்கு இந்த ஏடு வழி சமைக்கும் என நம்புவதாக” எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வாழ்த்துச் செய்தி (6-11-27) கவனிக்கத்தக்கது. 1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்த இருவரும் தோட்டப்புற மக்களைப் பெருவாரியாகக் கொண்ட மஸ்கெலியா தேர்தல் தொகுதியிலும் பண்டாரவளைத் தேர்தல் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியுற்றனர். இந்த இருவரும் கால் நூற்றாண்டுக் காலம் இந்தியவம்சாவளி மக்களிடையே கொண்டிருந்த ஈடுபாட்டையும், 1947க்குப்பின்னர் இந்த மக்களிடையே ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றத்தையும் இது காட்டுகிறதெனலாம்.
20 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மலையகத் தமிழ் இலக்கியத்தில் 1947 வரையிலான காலப்பகுதியைத் தனியாக நோக்குதல் வேண்டும். பிரித்தானியர் ஆட்சி நிலவியது இக்காலப்பகுதி வரைதான். இக்காலனித்துவ ஆட்சியின் போது இந்தியவம்சாவளி மக்கள் இலங்கையில் ஏனைய மக்களைப் போலவே உரிமைகளை அனுபவித்து வந்தனர். உண்மையில், இக்காலத்தைய வாழ்வுதான் இந்த மக்களைப் பொறுத்தமட்டில் பொன்னான காலமாயிருந்துள்ளது.
தேசபக்தன், இலங்கை இந்தியன், சத்யமித்ரன் என்ற பத்திரிகைகளின் பணி 1930ம் ஆண்டுவரையிலும் கவனிக்கத்தக்கது. அதற்குப்பிறகு வீரகேசரி (1930), தினகரன் (1932) என்ற தமிழ்த் தினசரிகளில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
அடிப்படை நோக்கம், அரசியல் பிரசாரம், சமூகமாற்றம் என்று வரித்துக் கொண்ட தேசபக்தன் கதை, கட்டுரை, கவிதை எனப்பல அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் பத்திரிகையுலகோடு சம்பந்தப்பட்டவர்களாலேயே - அதிலும் குறிப்பாக நடேசய்யர், மீனாட்சியம்மை, எச். நெல்லையா என்போராலேயே அதிகமாக எழுதப்பட்டன. ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியில் தோட்டப்புறத் தமிழர்கள் நிறையவே எழுதியுள்ளனர். நடேசய்யரின் தொடர் நாவல் ஒன்று மூலையில் குந்திய முதியோன்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது."
இலங்கை - இந்தியனில் பெண்களின் வாக்குரிமை குறித்தும் தமிழ்ப் பெண்களின் இல்லறம் குறித்தும் இப்பத்திரிகையின் ஆசிரியர் சத்யவாகீஸ்வரரும் அவரது மனைவி நல்லம்மாவும் நிறைய எழுதியுள்ளதைக் காண முடிகிறது.
சத்ய மித்திரனில் ஒரு தொடர் நாவல் வெளிவந்தது. “சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண்மணி”
வாய் மொழிப் பாடல்கள் 21

Page 17
வாய்மூடி வெறும் ஐந்துவாக உயிர் வாழ்ந்து வந்த இந்த மக்களிடையே நடேசய்யரின் பிரசன்னம் மகத்தான மாறுதலைத் தோற்றுவித்தது. உணர்ச்சி ததும்பும் பேச்சாற்றல் அவருக்கிருந்தது. அவரது மனைவி மீனாட்சியம்மை இனிமையான குரல் வளம் படைத்தவர். இருவரும் தோட்டப்புற மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றனர். அரசியல் வாதிகள் இந்த மக்களை இந்தியத் துவேசத்தோடு பார்ப்பதற்கு, இந்த மக்களின் பிரதிநிதிகளாக இருவர் (நடேசய்யர், திவான் பகதூர் இக்னேஷியஸ் சேவியர் பெரைரா) சட்டநிரூபணசபையில் அங்கத்துவம் பெற்றிருந்ததுவும் காரணமாகும். இந்தியத் துவேஷிகளின் கருத்துக்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்த ஏ. ஈ. குணசிங்காவுக்கெதிராக நடேசய்யரின் கவிதைகள் குறிப்பிடத்தக்கன.
“குணசிங்கம் துரையே - எங்கள்
பணமெங்கே உரையே
ஏழை பிழைப்பதற்கு
ஏற்பாடு செய்வேனென்று
ஆளை விட்டு மிரட்டிச் சொல்லி
அஞ்சுசதம் வாங்கினீரே என்று (9129) கேட்ட அவர் "இந்து மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக் காசுதானே - அடா
இரவுபகல்
உறக்கமின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா” (5.229) என்று முழங்கலானார்
22 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மீனாட்சியம்மை தமது பங்குக்கு இதே விதமானபாடல்களை
வெளியிட்டார்.
"சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்குது வஞ்சத்திலே வெள்ளைப்பவர் உருகுது நெஞ்சத்திலே வேலையிருக்குது நாட்டிலே உங்கள் வினையிருக்குது வீட்டிலே’
என்ற விதத்தில் அமைந்த பாடல்களைச் சிறுபுத்தக வடிவில் "தொழிலாளர் சட்டக்கும்மி"-1931 - என்ற பெயரில் வெளியிட்டார். கும்மி என்பது இச்சமூகப் பெண்களிடையே எத்தகு செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றதென்பதையும் மலையகக் கவிதை இலக்கியத்துக்கு எத்துணை ஆதாரமாக இருந்த தென்பதையும் இவரது பாடலைப் போலவே, இவருக்குப்பின்னர் பாடல் புத்தகங்கங்கள் போட்ட பலரது பாடல்களிலும் காணக்கிடைக்கிறது.
படிப்பறிவில் குறைந்தவர்களிடையே கும்மிப் பாடல் மூலம்தான் அதிரும் உணர்வுகளை உருவாக்க முடியும் என்பதை சுப்பிரமணிய பாரதியார் தொட்டு ஏராளமான கவிஞர்கள் நிரூபித்துள்ளனர்.
நடேசய்யரின் பல புத்தகங்கள் இக்காலப் பகுதியில் வெளியாகின. அவற்றுள் அதிகமானவற்றில் இலக்கிய நயம் இல்லை என்று ஸி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிடுவார். மலையக இலக்கியத்தோடு சம்பந்தமானவைகாளக நீமயங்குவதேன்? (1931), இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1938) என்ற இரண்டையும் குறிப்பில் கொள்ள வேண்டும்.
வாய் மொழிப் பாடல்கள் 23

Page 18
"வசனமும் பாடலும் கலந்து நாடக உருவில் வெளியாகி இருந்த அந்தரப் பிழைப்பு நாடகத்தின் மூலம் மலைநாட்டின் படைப்பிலக்கியத்துக்கு அய்யர் அடி எடுத்துக் கொடுத்தார்" என்று சாரல் நாடனும்,'
'ராமசாமி சேர்வையின் சரிதம்' என்ற தலைப்பில் நீ மயங்குவதேன்? நூலில் எழுதப்பட்டுள்ளதை மலையகத்தின் முதல் சிறுகதையாகக் கொள்ளலாம் என்று மு. நித்தியானந்தனும்" குறிப்பிட்டுள்ளவை இங்கு மனங்கொள்ளத்தக்கது.
"தோட்டக்காடு' என்ற சொல் இன்றைய காலகட்டத்தில் வழக்கிழந்து விட்டது. நீக்ரோ என்ற பதமும் கூலி என்ற பதமும் இழி சொல்லாகக் கருதப்பட்டு, வழக்கொழிக்கப்பட்டதைப் போலவே தோட்டக் காட்டான்' என்ற சொல்லும் வழக்கிலிருந்து அகற்றப்பட மலையக இலக்கியவாதிகள் பெரிதும் பணியாற்றி உள்ளனர்.
தோட்டக்காடு என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியே அந்தச் சிறைப்பட்ட வாழ்க்கையிலிருந்து மேலெழும் மனோபாவத்தை நடேசய்யர் தன் கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
வீரகேசரிப் பத்திரிகை இந்த மக்களுக்கென ஆரம்பித்த தனிப்பக்கம் முதலில் தோட்டவட்டாரம் (1959) என்றும் பின்னர் தோட்டமஞ்சரி (1960) என்றுமே அறியப்பட்டன.
1940 - 1950 களில் வெளி வந்த பத்திரிகைகளில் தோட்டக்காடு, தோட்டக்காட்டுப் பெண்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
24 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

ITLSDTAfluid, Sir
கிலத்துக்குக்காலம் இந்த மக்கள் சோதனைக் குள்ளாக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களிடையில் 1950 களின் இறுதிவரையிலும் சமூக உணர்வையும் பக்தியுணர்வையும் தமிழுணர்வையும் அழிய விடாது காத்து வந்ததில் பாடல்கள் யாத்துச் சிறுசிறு நூல்களாகத் தந்தவர்களின் பணி மகத்தானது. மலைநாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் தோட்டப் புறங்களிலிருந்தும் வெளிவந்த நூல்களில் இடம்பெற்ற பாடல்களை, இப்பாடலாசிரியர்கள் பாடிப்பாடியே விற்றுள்ளனர் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
தெய்வப்பாடல் முதல் தேசியப்பாடல் வரை இவற்றில் அடங்கும்.
மலையக மக்களின் வரலாற்றில் இக்காலப் பகுதி மிகவும் முக்கியமானது. இக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினரின் தொகை கிட்டத்தட்ட எட்டுலட்சம். எண்பது சதவிகிதத்தினர் இலங்கையில் பிறந்தவர்களென்ற அடிப்படையில் ஆறுலட்சத்துக்கு மேற்பட்டோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்றாகிறது. இவர்கள் தமது எதிர்காலத்தைக் கனவுகளோடு கட்டி முடித்திருந்தனர். 1948ம் ஆண்டு காலனித்துவ ஆட்சி முடிவுற்று இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. தேர்தலும் வந்தது. நாமும்
பாடலாசிரியர்கள் 25

Page 19
இந்நாட்டுக் குடி மக்கள் என்ற நினைப்போடு பிரதிநிதிகள் ஆறு பேரை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவர்களின் எதிர்பார்ப்புக்கள் இடிந்து நொறுங்கின. சுதந்திர இலங்கையின் முதற் சட்டமே, இந்தச் சமூகத்தினரின் குடியுரிமையைப் பறிப்பதாக அமைந்தது. இவர்கள் சிறகொடிந்த பறவையானார்கள். இக்காலப் பகுதியில் ஊதி ஊதி இவர்களின் தனித்துவத்தைக் கனலோடு காக்கவேண்டியிருந்தது.
1960 களில் மலையகத் தமிழிலக்கியம் புத்தெழுச்சி காணும் வரையிலும் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அநீதியான சட்டங்கள், தோட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்ட கெடுபிடிகள், வடபுல அரசியல்வாதிகளின் தொலை நோக்கற்ற சுயநல நடவடிக்கைகள் ஆகியவற்றால் மக்கள் தளர்ந்து போகாமல் காத்தது இவ்விதம் சிறுபிரசுரங்களை வெளியிட்டும், அவற்றை அவர்கள் விரும்பும் விதத்தில் பிரசங்கம் பண்ணியும் பாடிக்காட்டியும் மக்களிடையே பணியாற்றிய பாடகர்கள்தாம். எஸ். ஆர். எஸ். பெரியாம்பிள்ளை, பி. ஆர். பெரியசாமி, மா. சொ. ஜம்புலிங்கம், எஸ். எஸ். நாதன், ஜபார், கந்தசாமி கணக்கப்பிள்ளை, எம்டன் ஏ. விஜயரட்ணம் என்பவர்களின் பெயர்களை ஸி. வி. வேலுப்பிள்ளை தனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். வி. எஸ். கோவிந்தசாமித்தேவர் கா. சி. ரெங்கநாதன், நாவல் நகர் பீர்முகம்மது இப்ராகிம், சீனிவாசன், ராமையாதேவர், எம். பி. வேல்சாமிநாதன், கே. கே. எஸ். ஜில், வி.என். பெரியசாமி ஆகியோரும் தொடர்ந்து 1960 க்குப் பின்னரும் இதேவிதத்தில் இவ்விதப் பணிகளாற்றியதையும் நாமிங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.
26 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மக்களிடையே படிப்பறிவு குறைவு என்பதோடு, பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் அரிதாகவே காணப்பட்டது. மக்கள் மத்தியில் செயற்பட்ட இவர்களால் சமூகத்தில் புதிய எழுச்சி உண்டாயிற்று.
மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் செல்வாக்கு மிகுந்த நாட்டுப்பாடலின் தாக்கத்துக்கு இவர்கள் ஆட்பட்டிருந்தனர். பொதுமக்களை இவை பெரிதும் கவருவதாயின.
இதே காலகட்டத்தில் இலங்கை இலக்கிய உலகில் தங்களை நவீன இலக்கியப் பரிச்சயங்களுடன் இனம் காட்டுவதில் ஸி. வி. வேலுப்பிள்ளை, சக்தி. அ. பாலையா, கே. கணேஷ் என்பவர்கள் முனைப்போடு செயற்பட்டனர். இவர்களுக்கு ஆங்கில அறிவிருந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதினர். இவர்களுக்கும், தமிழில் மாத்திரமே எழுதி வந்த பாடலாசிரியர்களுக்கும் அவ்வளவு நெருக்கமிருந்ததில்லை. கவி. சிதம்பரநாதப் புலவர் மாத்திரமே - ஆங்கில அறிவிருந்ததனால் இவர்களோடு ஒட்டி உறவாடினார்.
இறைவன் மீது பக்திக் கீதமும், கதிர்காமத்துக்கும் சிவனொளிபாதமலைக்கும் செல்லும் பக்தர்களுக்குதவும் வழிநடைச் சிந்தும் படைத்தார்கள்.
இலங்கையில் இந்திய எதிர்ப்புணர்வுகள் மேலிட்டு இச்சமூகத்தினருக்கெதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 1930களில் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து, இந்த மக்களை ஒரனியில் திரட்டி இவர்களுக்கென்று இலங்கை இந்திய காங்கிரஸ்' என்ற அமைப்பை உருவாக்கிப்
பாடலாசிரியர்கள் 27

Page 20
போனார். இது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி. இது குறித்து ஏராளமான பாடல் புத்தகங்கள் வந்துள்ளன. சுதந்திரம் பெற்ற இலங்கையில் தமது குடியுரிமை பறிக்கப்பட்ட போது பாடல்களால் தமது குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். 1964ல் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நெஞ்சுருகும் பாடல்களை இவர்கள் பாடினார்கள்.
இலங்கைத் தோட்டப்புறங்களில் நடைபெறும் அதீத சம்பவங்களையும் அநியாய அட்டூழியங்களையும் பாடினார்கள். இலங்கை அரசியலில் அவர்கள் கவனம் சென்ற பின்னர் ஜவகர்லால் நேருவை அட்டையில் படம் போடுவதை விடுத்து அஸிஸ், டட்லி சேனநாயக்கா, எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரை அட்டையில் தாங்கிய பாடல் புத்தங்களை இவர்கள் வெளியிட்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டு வந்த மனமாற்றத்ததைக் காட்டுவதாயுள்ளது. *
இவற்றில் சிலவற்றையேனும் உதாரணங் காட்டுவதவசியம். நூற்றுக்கணக்கான புத்தகங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட இப்பாடகர்கள், பின்னாள் பீறிட்டெழவிருக்கும் கவிதைப் புனலுக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.
"கம்பளியும் படங்கும் கூடையும் கதறியழுகிறது - இதை கட்டித் தூக்கும் ஏழைமக்களும் கண்ணிர் விடுகிது கம்பளியைக் காயப் போட்டா காயமாட்டாதாம் - இரவு காயப் போட்டுப் போர்த்திக் கொள்ள விறகு கிடையாதாம்”
(வி. எஸ். கோவிந்தசாமித் தேவர்)
28 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

என்ற வரிகளில் தொழிலாளியின் உண்மை நிலவரத்தைக் காணலாம். இந்தியாவில் உஷ்ணத்தைத் தாங்கிப் பழகிப் போன ஒரு மக்கள் கூட்டம் இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது நடுங்கும் குளிரையும் கொட்டும்பனியையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆட்டு ரோமத்தாலான கம்பளி என்ற போர்வை இதற்கென்றே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இரவில் படுக்கும்போது போர்த்துக் கொள்ளவும், நாளில் மலைகளில் உழைக்கும் போது தலையிலிட்டுக் கொள்ளவும் இவை உபயோகிக்கப்பட்டன. எனினும், மழைக் காலத்தில் நனைந்து கிடக்கும் கம்பளியால் இவர்களுக்குத் துன்பமே மிகுந்திருந்தது என்பதைக் கோவிந்தசாமித் தேவர் தன் கம்பீரக்குரலேடுத்துப் பாடுகையில் மக்கள் தம்மைத் தாமே நொந்து கொண்டனர்.
"நாட்டுக்குச் சுதந்திரம் கொடுத்திட்ட வெள்ளையர்
கூட்டியும் வந்தாங்க நன்னக ரிந்திய நாட்டுத்தரகர் பலர்
காட்டியுந் தந்தாங்க போட்டி போட்டுச்சில ஏட்டுக்கங்காணிகள்
நோட்டுகள் மடிச்சாங்க கூட்டியும் காட்டியும் மூட்டியுங் கொடுத்திட்டு
ஓட்டமும் புடிச்சாங்க” என்றவரிகளில் இவர்கள் இலங்கைக்குவந்ததையும் வரவழைத்தவர்கள் சென்றதையும் பிறர் பயன்பட்டதையும் குறித்துப்பாடுகிறார்.
“சில்லரைப்புலி சின்ன கங்காணி விரட்டிடுவாரு
ஐயோ சீக்கிரமாப் பத்தாம் நம்பர் ஒடித்தீரனும் சீலை மேல படங்கு ஒன்றை சேர்த்துக்கட்டணும் பெரிய
பாடலாசிரியர்கள் 29

Page 21
சனல் கயிற்றை அதுக்கு மேலே இறுக்கிக் கட்டணும் கைக்குழந்தையொன்றை தூக்கி இடுப்பில் வைக்கனும் மாட்டுப்பாலைக் கொஞ்சம் போத்தலிலே ஊத்திக் கொள்ளணும் கதறியழும் பெரியபிள்ளையைக் கையில் பிடிக்கனும் இன்னும் கவலையோடு பிள்ளைக்காம்பரா ஒடிச்சேரனும் துரிதமாகத் தொட்டி கட்டி தூங்கப் போடணும், ஆயம்மா தோதாப்போடும் உதடுவாய்க்குவெத்திலைக் கொடுக்கோணும்"
(ஏ. எம். இராமையாத்தேவர்)
தோட்டத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் நாளாந்தக் கடமைகளின் வர்ணனை இது. துயரவாழ்க்கையை அழகிய பாடலாக வெளிப்படுத்தும் நேர்த்தியைக் கவனிக்கலாம்.
“ஆறுமணியாகுமுன்னே, அடிச்சிடுவான் தப்பு அரண்டு ருண்டு எழுந்திருப்பார் தொழிலாள மக்கள், வீறுகொண்ட காண்டாக்கு, விரட்டிடுவாரென்று விடியுமுன்னே கூடையுடன், பிரட்டுக்களஞ் சென்று சோறு கறி உண்ணாமல், தோகை மயில் நல்லாள் சுறுசுறுப்பா தானெழுந்து துண்டு வாங்கச் செல்வாள் மாறு கொண்ட கங்காணி, கணக்கப்பிள்ளை அய்யா மணிக்கணக்கைப் பார்த்து விரட்டுவதும் பொய்யா?
தேறுதல் சொல்லிடவோ ஆளொருவரில்லை சீறுகிறார் துர்ப்பேச்சை, நாள் தோறுந் தொல்லை கூறுமொழி கேட்டிடுவீர், தொழிலாளர் தோழா குமரிமுதலிமயம் வரை கொடிப்பிடித்த தமிழா! ஆக்கியிருந்த சோறுகறி அவசரமா உண்டு
30 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

அஞ்சாறு புள்ளகுட்டி பசியாறிய பின்பு சோக்காளி புருஷனுக்குத் தொண்டுபல செய்து தொட்டிலிடும் பாலகனைக் கட்டி முத்த மிடுவாள் கைக்குழந்தை தான்துக்கி கக்கமதி லிடுக்கி கம்பளியைத் தான் மடித்து பம்புதட்டைப் பிடித்து முக்காடு தலையிட்டுக் கூடை தலை மாட்டிப் மூத்தபிள்ளை நச்சரிக்க முதுகில் ரண்டு போட்டு.
(கா. சி. ரெங்கநாதன்)
என்று விரியும் தனது நூறு வரிகளில் அமைந்த “தொழிலாளர்படுந்துயர்” பாடல்களில் துன்பத்தை விவரித்தவர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இந்தியாவுக்குப் போக வேண்டிய நிலைமையைப் பின் வருமாறுபாடுகிறார்:
“இங்கிலிஸ் ஆட்சியில் லங்கைவந்து புலி சிங்கம் வாழ்ந்த பெரும் காடழிச்சு, இதைத் தங்கம் நிகர் லங்கை நாடாக்கி இங்கே தந்தது போதும்மென்றெண்ணுங்கடி இப்போ
இந்தியா திரும்பும் மங்கையர்கள் கூடைக் கம்பளியைத் தூக்கி வீசுங்கடி நம்ம சொந்த நாடுபோயிச் செத்திட்டாலும் அதில் சுகிர்தம் உண்டென்று எண்ணுங்கடி இங்கே
எட்டு மணி வேலைக்கு மேல் செய்து கெட்டலைந்தது போதுமடி நம்ம பட்டுத்தளிர் மேனிக்கட்டும் விட்டு, விரல் பிளந்துரிந்ததும் போதுமடி நம்மை
பாடலாசிரியர்கள் 31

Page 22
கங்காணி ஏச்சதும் போதுமடி நம்ம கொங்காணிப் போட்டதும் போதுமடி சில சங்கங்கள் ஏச்சதும் போதுமடி இங்கு தந்ததை தந்திட்டாப் போதுமடி"
என்று கூறிக்கப்பல் போகுது கப்பல் போகுது
கடலினுதவியிலே அது எப்பப்போகுது எப்பப் போகுது இந்தியாக் கரையினிலே”
என்று முடிக்கிறார். தமது ஆசைகள், நிராசைகள் ஆன பின்னர் இந்தியா போகத்துடிக்கும் நெஞ்சங்களின் ஏக்கங்களை வெளியிடும்
பாடல் வரிகள்.
“இந்தியா போங்களென்று சொல்லுதொரு கூட்டம், ஏன் போகணு மெங்கிறது மறு கூட்டம் - இதில் போ வென்று சொல்லுபவரும் போக வேண்டாமென்பவரும் பாட்டாளி தலைவர் தாங்க”
என்று பாடி, இலங்கையா இந்தியாவா என்று தீர்மானம் செய்வதில் தலைவர்களின் கருத்துக்களுக்கிடமில்லையென்றும், அதைத் தொழிலாளர்களே தீர்மானிக்க வேண்டுமென்றும் கூறி நடைமுறையைக் கூறும்பாடல்.
“நாளைக்கு ஊர் போக நேர்ந்தாலும் போட்டோ நம்கையில் ரெண்டொன்னை வச்சிக்கனும் - இது
32 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

நல்லப்பன் கங்காணி காலமில்லே - ஊர் சொல்லாமல் போய் வந்த தேசமில்ல” என்ற வரிகளில் இந்த நாட்டில் முன் பிருந்த நிலவரத்தையும் குறித்துப் பாடுகிறார்.
வாய் மொழிப் பாடல்களை அதிகமாகப் பெண்களே பாடிவந்த சமூகத்தில், வாய் மொழிப் பாடல் வடிவிலமைந்த பாடல்களைப் புத்தகமாக அச்சிட்டு விநியோகித்தவர் ஆண்களாகவே இருப்பதைக் காணலாம். இவ்வாறான முயற்சிகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்துள்ளது என்று குறைபட்டுக் கொள்வதற்கு இடமில்லை. இந்தியாவிலும் அல்லது உலகெங்கும் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகவே இருந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கவனிப்பில், மலைப்பிரதேசங்களில் இக்காலப் பகுதிகளில் எம். எஸ். கிருஷ்ணம்மா என்பவர் (பதுளை மாவட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவி) சீர்திருத்தக் கீதம் என்ற பெயரிலும், இராகலை மாவட்டத்திலிருந்து எஸ். பெரியக்கா என்பவர் “தொழிலாளியின் துயரம்" என்ற பெயரிலும் பாடல்களை நூல் வடிவில் தந்துள்ளனர். இதில் தமிழ்ப் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கும்மி வடிவில் அமைந்த பாடலொன்று:-
“கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி நம்
பாட்டாளி வாழ்ந்திட கொட்டுங்கடி,
தோட்டஞ் செளித்திடப்பாட்டாளி வாழ்ந்திட
சொல்லிச் சொல்லி கும்மி கொட்டுங்கடி”
(எஸ். பெரியக்கா)
பாடலாசிரியர்கள் 33

Page 23
இப்படி அமைந்த பாடல்களின் மூலம் ஏழைப் பாட்டாளிகளிடம் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்த முக்கியமான பெண்மணி மீனாட்சியம்மை ஆவார்.
"இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய பிரசாரம் பாட்டுக்கள் மூலம் செய்யப்படுவது அதிகப் பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையினைப்பாட்டுக்கள் மூலம் எடுத்துக் கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களைத் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா" என்று கூறும் அவர்,
"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடை வழி தந்தோம் தாய் நா டென்றெண்ணியிருந்தோம் - இவர்கள் தகாத செய்கையைக் கண்டு மனம் மிக நொந்தோம்”
என்று தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி,
"நீதியற்ற மந்திரிசபை நேர்மையைப் பாடு அவர்கள் நியாயமற்ற பிடிவாத செய்கையைக் கூறு' என்றும் முழங்குகிறார்.
இக்காலப் பகுதியில் மலைப்பிரதேசங்களில் மக்களிடையே தமிழறிவையும் தமிழுணர்வையும் வளர்த்து வந்த பணியினைத் தமிழகத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துகளைப் பரப்பிய பத்திரிகைகளும் திரைப்படங்களும் செய்துள்ளன. இந்தக் கருத்துக்களால் கவரப்பட்ட இளைஞர்கள் தோட்டங்களில் மன்றங்களை ஏற்படுத்திச் சமூக மாற்றங்களை முன்னெடுக்க முனைந்தனர்.
34 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

தமிழகத்துத் திராவிடக் கழகங்களோடு தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர்களில் டி. எம். பீர்முகம்மது குறிப்பிடத்தக்கவர். இவரின் துணையோடு, “நவஜீவன்” என்ற பத்திரிகை 1950ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
முழுக்கமுழுக்க இந்தியவம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்துக் கருத்துக்களை வெளிப்படுத்தி, குடியுரிமைப் போராட்டத்துக்குத் துணை புரியும் ஒரு படைக்கலனாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகையில் சிறுகதைகள் நிறையவே வெளிவந்தன.
சிதம்பரநாத பாவலரின் நாவல் இதில் தொடராக வெளிவந்தது.
தமிழில் சுயமாக எழுதாவிட்டாலும் ஸி.வி. வேலுப்பிள்ளையும் கே. கணேஷாம் மலையகத்தைப்பற்றிய உயர்வான அபிப்பிராயத்தை வெளி உலகில் ஏற்படுத்தினர். அவர்களது திறமையான எழுத்தும் நூல்வெளியீட்டு முயற்சிகளும் வெளி உலகினரால் அங்கீகரிக்கப்பட்டன.
மலையகத்தைப் பற்றிய தமதறிவை, இவ்விருவரிடமிருந்தே மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி பெற்றுக் கொண்டார் என்பது மனங்கொள்ளத்தக்கது.
மலையகத்தில் வெடித்துக் கிளம்பிய இலக்கிய உணர்வுக்கு இவர்களிருவரின் அறிமுகமும் பெரும் வாய்ப்பாக அமைந்தன.
பாடலாசிரியர்கள் 35

Page 24
புதிய மாற்றங்கள்
1960களில் மலையகத்தினரிடையே புதியதொரு மாற்றம் ஏற்பட்டது. 1952ல் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் நாடற்றவர்களான இவர்கள், 1956ல் நடைமுறைப்படுத்தப்பட்ட “சிங்களமொன்றே" மொழிச்சட்டத்தால் தமது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இந்நாட்டில் இருளடைந்து வருகின்றதென்பதை உணர்ந்தனர். எழுத்து, பேச்சு, கவிதை என்றதுறைகளில் சீற்றத்தோடு தம்மை வெளிப்படுத்தும் பரம்பரையினராக இவர்கள் தோற்றமளித்தனர். இவர்களை ஆத்திரப்பரம்பரையினர்' என்று அழைப்பர். அதுகாலவரை'அழுகுரலாக வெளிவந்துகொண்டிருந்த இலக்கியப் படைப்புக்கள் ஆர்த்தெழும்பும் குரலாக ஒலிக்க ஆரம்பித்தன.
g55II Go Lugg,60)u - A TIME OF INTELLECTUAL INSURGENCY- என்று குறிப்பிடலாம். மலையத்தில் மாத்திரமின்றி இலங்கை முழுக்க இது விசாலித்தது. எனினும், மலையகத்தில் இது துலாம்பரமாகத் தெரிந்தது.
மலையகத்தில் வெளிப்பட்ட இந்த மாறுதலுக்கு இலங்கைத்தீவின் பல பாகங்களிலும் வரவேற்பிருந்தது. பத்திரிகைகள் தனிப்பகுதி ஒதுக்கி ஊக்குவித்தன. மட்டக்களப்பில் எஸ். பொன்னுத்துரை முன்னின்று நடாத்திய தமிழ் விழாவிலும் மூதூரில் வ. அ. இராசரத்தினம் முன்னின்று நடாத்திய தமிழ் விழாவிலும் யாழ்ப்பாணத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
36 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

நடாத்திய விழாவிலும் மலையக இலக்கிய கர்த்தாக்கள் கலந்து கொண்டனர். மலையகத்தின் கவிஞர்களாக சக்தி அ. பாலம்யாவும், ஏ.பி.வி.கோமஸும் கலந்து கொண்டுகங்காதீரம் என்ற தலைப்பில் கவிதை பாடினர்.
மலைநாடென்றால் மகாவலிகங்கையையும் சிவனொளிபாத மலையையும் பாடுவதில் மாற்றம் வேண்டுமென்பதில் இவர்களின் கவனம் சென்றது. குறிப்பாக மலைநாட்டுக் கல்லூரிகளில் நடந்த தமிழ் விழாக்களில் இந்தக் கருத்துத் தெட்டென வெளிப்பட்டது.
16.03.1963ல் அட்டனில் நடந்த கவியரங்கத் தலைப்பு ஏனிந்த பெருமூச்சு',? என்பதாகும் மலையகக் கவிஞர் தமிழோவியனும் மலையகம் பற்றிப் பாடிய வி. கந்தவனமும், பொன்னுத்தம்பியும் கலந்து கொண்டனர்.
எட்டியாந்தோட்டை“சென் மேரிஸ் கல்லூரி”தமிழ் விழாவில் கலந்து கொண்ட எஸ். பொன்னுத்துரை “1948ம் ஆண்டும் 1956ம் ஆண்டும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டமும் சிங்கள மொழிச்சட்டமும்தாம் மலையக இலக்கியத்தைத் தேசிய இலக்கியமாக உருவாக்க உதவின” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தவர்களும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தவர்களுமான ஒரு சிறு தொகையினர் இந்த மாறுதலை முன்னெடுத்துச் செல்லும் பணியினில் பங்கேற்றனர். இவர்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க
புதிய மாற்றங்கள் 37

Page 25
அளவுக்குப் பிரபல்யம் பெற்றவர்களென இர. சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன் ஆகியோரைக் குறிப்பிடவேண்டும். இவர்கள் அட்டன் நகரில் கல்லூரி ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சொக்கன், நவாலியூரைச் சேர்ந்த நா. செல்லத்துரை என்ற நாடக ஆசிரியர்களும் இம்மாறுதலால் கட்டுண்ட, அட்டன் கல்லூரியில் கடமையாற்றிய ஆசிரியர்கள்தாம்.
இலங்கையில் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பற்றிய ஒரு நூலைத் தனது கால் நூற்றாண்டு இலக்கியத் தொடர்புகளைப் பின்புலமாக்கிக் கணகசெந்திநாதன், 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி” என்ற தலைப்பில் வெளியிட்டார். இது 1964ம் ஆண்டு வெளியானது. இந்நூலில் மலையக இலக்கிய முயற்சிகள் குறித்து ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக்குறிப்புகளினூடாக இலங்கைத் தமிழுலகில் அங்கீகரிக்கப்பட்ட நல்ல மலையக இலக்கிய வாதிகளாகப் பின் வருவோர் குறிக்கப்பட்டுள்ளனர்:-
கவிஞர்களாக மு. சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட பரமஹம்ஸதாசன், கே. கணேஷ், சக்தி. அ. பாலப்யா என்பவர்களின் பெயர்கள்.
கட்டுரையாசிரியர்களாகத் தமிழ்ப்பித்தன் (யார் நாடற்றவன் நூலாசிரியர்), முகம்மது காசீம் (கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு நூலாசிரியர்) என்பவர்களின் பெயர்கள்.
38 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

இவர்களில் தமிழகத்துப் பத்திரிகைகளில் எழுதியதால், குமுதம் மூலம் த.ரஃபேலும், கல்கி மூலம் திருச் செந்தூரனும், ஏனையோர் நூல்கள் வெளியிட்டிருந்ததாலும் இவ்விதம் கணிப்புக்குள்ளாயினர்.
இன்று மலையகத்து இலக்கியத்துக்கு அணிசேர்ப்பவர்கள் அனைவருமே 1960க்குப் பிறகு எழுதியவர்கள் என்பது இதனால் புலப்படும்.
மேலும் நம்பிக்கையூட்டும் கவிஞர்களெனப் பன்னிரண்டு பேரின் பெயர்களும், பத்தாண்டுகளில் தேறக்கூடிய கவிஞர்களெனப் பன்னிரண்டு பேரின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ° இந்த அட்டவணைகள் தினகரன், வீரகேசரி, மலைமுரசு, செய்தி ஆகியவைகளில் எழுதியவர்களைப் பொதுப்படையாகவும், 1962ம் ஆண்டு வீரகேசரி நடாத்திய மலையகச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களின் பெயர்களைச் சிறப்பாகவும் சேர்த்துக் கொண்டு தயாரிக்கப்பட்டவைகளெனலாம்.
தமிழில் சிறுகதைகளின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட்ட ஒரு கால கட்டத்தில், வாழ்க்கைப் பிரத்தியட்சத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பெருமைப்படுத்தப்படலாயின.
1960களில் அப்படி ஓர் ஆரோக்கியமான நிகழ்வு இலங்கை மலையகத்தில் நடந்தது. மலையகம் வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தேயிலை, றப்பர் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்கள். அதுகாறும் இலக்கிய உலகில் வெளிப்படுத்தப்படாத அவர்களது வாழ்க்கையை
புதிய மாற்றங்கள் 39

Page 26
வெளிப்பார்வைக்குத் தரிசனத்துக்கு வைக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இம்முயற்சிக்கு உதவும் நிர்ப்பந்தத்துக்குள்ளாயின. தமிழ்ப்பத்திரிகைகள் நிறைந்த அளவில் தோட்டப்புறங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்த காலமது.
தமிழகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினத்தந்தி, தினமணிப் பத்திரிகைகளையும் திராவிடக் கழக ஏடுகளான முத்தாரம், முரசொலி, தென்றல், மாலைமணி போன்றவைகளையும் கல்கி, கல்கண்டு, குமுதம், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளையும் காசுகொடுத்து வாங்கிக் கொண்டிருந்தவர்களும், தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு போன்ற இலங்கைப் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டி ருந்தவர்களையும் அதுகாறும் கண்டிருந்த மலைநாட்டில் உமா, கங்கை, கலைமகள், எழுத்து ஆகிய இலக்கியப் பத்திரிகைகள் வாசிப்பவர்கள் உருவாகியிருந்தனர்.
வீரகேசரிக்கு மலைநாட்டில் நிறைய விற்பனைத் தளமிருந்தது. உண்மையில், அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட 1930ம் ஆண்டிலிருந்தே அது இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் சேம நலத்தில் கரிசனை காட்டியே வந்துள்ளது. அப்பத்திரிகையைத் தோற்றுவித்தவர் ஒர் இந்தியரே. சுப்பிரமணியச் செட்டியார் என்பது பெயர்.
மலைநாட்டுத் தமிழ் வாசகர்களிடையே தேசபக்தன், தினத்தபால், சத்யமித்திரன் என்ற தமிழ்த் தினசரிகளுக்குப்
40 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

பின்னால் அதிகமாக விற்பனையான தினசரி வீரகேசரிப் பத்திரிகையே ஆகும். தினகரன், தினபதி, தினத்தந்தி, தினக்குரல் என்ற தினப்பத்திரிகைகளின் விற்பனை எந்த ஒரு காலத்திலும் வீரகேசரியை மிஞ்சவில்லை. இந்த விற்பனைப்பின்னணியில்தான், மலையகத்தினருக்கான பத்திரிகைப் பங்களிப்பு மிகுந்தது.
வீரகேசரி தனக்குள்ள கடப்பாட்டுடன் தோட்டவட்டாரம் என்ற தனிப்பகுதியை 1959ம் ஆண்டு ஆரம்பித்தது. தினகரன் மலைநாட்டுத் தபால்’ என்ற ஓர் அம்சத்தை ஆரம்பித்தது. இரண்டுக்கும் ஸி. வியின் பங்களிப்புப் பின்னணியிலிருந்தது. இரண்டு பத்திரிகைகளிலும் அவருக்குத் தொடர்பிருந்தது.
இப்பின்னணியில், எஸ். எம். கார்மேகம் வீரகேசரிப் பத்திரிகையில் சேர்கிறார். மலையகத்து இளைஞரான அவர், இலக்கியப்பிரக்ஞைததும்பிவழிந்து கொண்டிருந்த அட்டன் நகரைச் சார்ந்தவர். தோட்டவட்டாரம், தோட்டமஞ்சரியானது. 1962ம் ஆண்டு மலைநாட்டு எழுத்தாளர்களுக்கென ஒரு சிறு கதைப் போட்டியை இது நடாத்தியது. இந்தப் போட்டியின் மூலந்தான் நிறைந்த எண்ணிக்கையில் சிறுகதை எழுதுபவர்கள் மலைநாட்டில், தோன்ற ஆரம்பித்தனர். அது காலம் வரை சிறுகதைகள் படைத்திருந்த ரஃபேல், ந. அ. தியாகராசன், பொ. கிருஷ்ண்சுவாமி, ஏ. எஸ். வடிவேலு, டி.எம்.பீர்முகம்மது, கே. கணேஷ் போன்றோருடன் இந்தப் போட்டி மூலம் உற்சாகம் பெற்றவர்களும் சேர்ந்து சிறுகதைத் துறையை வளம் படுத்தினர். முதற் போட்டியின் பரிசளிப்பு விழாவினை வீரகேசரி பதுளையில் நடாத்தியது. அப்பரிசளிப்புத் தினத்தன்றுதான் (17.08.1963) மலைநாட்டின் எல்லாப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகினர்.
புதிய மாற்றங்கள் 41

Page 27
தாங்கள் ஒரே அமைப்பாகச் சேர்ந்து பணியாற்ற முடிவெடுத்து மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தனர். அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் தெளிவத்தை ஜோசப்பும் சாரல் நாடனுமே ஆவர். ஏனையவர்களில் பலர் நாட்டை விட்டுப்போய்விட்டனர். சிலர் எழுத்துத் துறையில் விரக்தி அடைந்து விட்டனர்.
மலையகச்சிறுகதைகள் எழுதுபவர்களை உற்சாகப்படுத்த வீரகேசரி, செய்தி, மலைமுரசு, சுதந்திரன், மலையக முன்னணி, இ.தொ.காங்கிரஸ் ஆகிய பத்திரிகைகள் போட்டிகள் நடாத்திப் பரிசுகள் கொடுத்தன. வீரகேசரி மொத்தமாக 6 போட்டிகளை நடாத்தியது. முதல் நான்கு போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘கதைக்கனிகள்’ என்ற பெயரில் நூலாகவும் தந்தது. இந்நூல் வெளிவருவதற்கு முன்பே சிறுகதைகள் ஆறு என்ற தலைப்பில் டி. எம். பீர்முகம்மது தமது சிறுகதைகளை நூலாக்கியிருந்தார். இது காலவரையிலும், முறையே டீ. எம். பீர்முகமதுவின் சிறுகதைகள் ஆறு (1962), தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே’ (1979), என். எம். எஸ். ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து' (1980), மாத்தளை சோமுவின் “நமக்கென்றொரு பூமி” (1984), “அவன் ஒருவனல்ல" (1989) “அவர்களின் தேசம்’ (1995), நயிமா ஏ. சித்திக்கின் “வாழ்க்கைச் சுவடுகள்’ (1987), மொழி வரதனின் “மேகமலைராகங்கள்” (1988), மலரன்பனின் “கோடிச்சேலை” (1989). மு. சிவலிங்கத்தின் “மலைகளின் மக்கள்’ (1991), ஏ. பி. வி. கோமஸ்ஸின் “வாழ்க்கையே ஒரு புதிர்” (1992), சாரல் நாடனின் “மலைக்கொழுந்தி’ (1994), புலோலியூர் க. சதாசிவத்தின் “ஒருநாட்போர்” (1995), ப. ஆப்தீனின் “இரவின் ராகங்கள்”
42 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

R
நளாயினி சுப்பையாவின் அவள் தனிமரமல்ல” கே.கோவிந்தராஜின்பசியாவரம்(1996) என்ற பதினான்கு சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இத்தொகுதிகள் சிறுகதை எழுத்தாளர்களாகப் பரிணமித்துத் தனித்துவமாகப் பிரகாசிக்கும் எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசகர்களுக்கு ஒரே மூச்சில் வாசிக்கும் வாய்ப்பைத் தந்துள்ளன. இவற்றில் தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். இராமையா, மலரன்பன், மு. சிவலிங்கம் ஆகியோரின் தொகுதிகளுக்குச் சாகித்திய மண்டலப் பரிசுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வெவ்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை
உள்ளடக்கிய கதைக்கனிகள் (1971), மலையகப் பரிசுக்கதைகள் (1994), தீர்த்தக் கரை கதைகள் (1995), தோட்டக் காட்டினிலே (1980), மலையகச் சிறுகதைகள் - உழைக்கப் பிறந்தவர்கள் (1997) என்ற தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
தனித்தொகுதி வெளியிடுமளவுக்கு இது காலவரையிலும் சிறந்த சிறுகதைகளை மாத்தளை வடிவேலன், மல்லிகை சி. குமார், நூரளை சண்முகநாதன், அன்னபூரணி, பி. மரியதாசன், அ. சொலமன்ராஜ், அல் அஸமத், க. ப. லிங்கதாசன், ந. அ. தியாகராஜன், தமிழோவியன், தி. ராஜகோபாலன், புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் படைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர ஸ்டெல்லாமேரி, ரோகினி முத்தையா, சாந்தாராஜ், பாலரஞ்சனிசர்மா என்ற பெண் எழுத்தாளர்களும் எம். நாமதேவன், டிக்கோயா எம். எச். எம். ஜவ்பர், சந்தனம் சத்தியநாதன், சி. இராமச்சந்திரன் ஆகியோரும் படைத்து வருகின்றமை செழித்து வளரும் சிறுகதைத் துறைக்கு நல்ல அடையாளமே.
புதிய மாற்றங்கள் 43

Page 28
கட்டுரைகள்
பDலையகத்தில் அரசியல் கட்டுரைகள் 1920 களிலேயே வெளிவர ஆரம்பித்து விட்டன. 1947 வரைக்குமான ஒரு இருபத் தேழாண்டுகளாக மிக ஆழமானதும் வீச்சானதுமான கட்டுரைகளைக் கோ. நடேசய்யர் தன்னுடைய பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கங்களாக எழுதிச் சென்றுள்ளார். மலையகத்தின் சமூக வளர்ச்சியைக் கட்டம் கட்டமாகத் தெரிந்து கொள்ள அவை உபயோகமாயுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தம், சட்டப் புத்தகம், அழகிய இலங்கை என்ற மூன்று நூல்களும் இவரது எழுத்தாற்றலுக்குச் சான்று பகரும்.
எச். நெல்லையா, மீனாட்சியம்மை, நல்லம்மா என்பவர்களும் இக்காலப் பகுதியில் மகளிர் முன்னேற்றம் குறித்து நிறைய எழுதியுள்ளனர். இக்காலப்பகுதியில் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சீர்திருத்தக் கருத்துக்கள் இவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. டி. சாரநாதன், டி இராமனுஜம், சிவலக்காளை சுப்பிரமணியம் ஆகியோரும் நிறைய எழுதினர்.
1948ல் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமைச்சட்டம் ஏழு லட்ச மக்களின் எதிர் காலத்தைக் கேள்விக்குரியதாக்கிற்று. தோட்டக் கூலிகளாக அது காலவரை குறிக்கப்பட்டவர்கள் தற்போது நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
44 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

யார் நாடற்றவன், கட்டுங்கள் மூட்டையை, கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு, சீறும் சிங்களத்துக்கு அபாய அறிவிப்பு, ஈழத்தமிழர் கண்ணிர் என்ற கட்டுரை நூல்கள் வெளிவந்தன. இவற்றை டி. எம். பீர்முகம்மதுவும் தேயிலைச் செழியன் என்பவரும் 6TQg5ussi560Tsi. The Indian Tamils at Cross Roads 6T6örp). P. சக்திவேல் எழுதிய ஆங்கிலக் கட்டுரையே மு. அ. வேலழகனால் தேயிலைச்செழியன் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம் என்ற நூலின் மூலம் மலையகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தோட்டப் போராட்டங்களையும் பி. ஆர். பெரியசாமி (1957) ஆவணப்படுத்தினார். ஸி.வி.யின் நாடற்றவர் கதையும்’ குறிப்பிடத்தக்க ஒன்றே.
1956ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் விளைந்த பயன்கள் மலையக மக்களுக்குக் கிட்டாது போயிற்று. இலங்கையில் வாழும் சிங்கள மொழி பேசுவோரிடத்தும், ஏனைய பிராந்தியங்களில் வாழும் தமிழ் பேசுவோரிடத்தும் ஏற்பட்டுவரும் வளர்ச்சி இந்த மக்களிடையே இலக்கிய அரசியல் கருத்துக்களை வேரூன்றச் செய்தன.
இலக்கியத் தோயலோடு கட்டுரைகள் வர ஆரம்பித்தன. இர. சிவலிங்கம், ந. அ. தியாகராசன், நா. சுப்பிரமணியம், தமிழோவியன், பிரேம சம்பு, எஸ். எம். கார்மேகம், எம். வாமதேவன், மரியதாசன், சாரல்நாடன், வி. மூக்கப்பிள்ளை, எல். சாந்திகுமார், பெ. முத்துலிங்கம், மா. செ. மூக்கையா, வி. தேவராஜ்,
கட்டுரைகள் 45

Page 29
இரா. நாகலிங்கம், கணேஷ், ஸி.வி. வேலுப்பிள்ளை, எஸ். சந்திரசேகரன், மு. நித்தியானந்தன், வீரா. பாலச்சந்திரன், அந்தனி ஜீவா, கே. கோவிந்தராஜ், தெளிவத்தை ஜோசப், மாத்தளைக் கார்த்திக்கேசு, மாத்தளை வடிவேலன் முதலானோர் சிறந்த விதத்தில் இத்துறையில் பணியாற்றியுள்ளனர்.
செய்தி பத்திரிகையில் பிறைசூடி” என்ற பெயரிலெழுதிய அரசியல் கட்டுரைகளும், மலைமுரசு பத்திரிகையில் மலையாண்டி’ என்ற பெயரில் எழுதிய ‘கடித இலக்கியமும் ‘வீரகேசரியில் சிவனொளிபாதமலையைக் குறித்த கட்டுரையும் இர. சிவலிங்கத்தின் சிறப்பான எழுத்துக்களாகும். ந. அ. தியாகராசன் 'தினகரனில் 'கனவுகளும் அதன் பலாபலன்களும் என்று எழுதிய கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது.
இந்த வரிசையில் எழுதப்பட்ட கட்டுரைகள் படிப்படியாகத் தம் சமூக வேர்களைத் தேடவும், தம்மை ஒரு தேசிய இனமாக இலங்கையில் நிலைநாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகளாக வளர்ச்சி காட்டின. தமது வரலாற்றுப் பின்னணியை மேலெடுக்கவும், கலை கலாசார பரிமாணங்களை வெளிப்படுத்தவும் அவை உதவின.
தேசியத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் மலைமுரசு, மலைப்பொறி, தீர்த்தக்கரை, அஞ்சலி, செய்தி, நவஜீவன், கொழுந்து, கொந்தளிப்பு, குன்றின் குரல் போன்ற சஞ்சிகைகளும் இவ்வாறான கட்டுரைகளை விரும்பி வெளியிட்டன. மாத்தளை வடிவேலன், எஸ்.சந்திரசேகரன், மா. செ.மூக்கையா, எஸ்.நடேசன், கலகா தங்கராஜ், சாரல் நாடன் ஆகியோர் கட்டுரை நூல்களை
46 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

வெளியிட்டுள்ளனர். இவைகளுள் தனது வரலாற்று ஆய்வுக் கட்டுரை நூலான “தேசபக்தன் கோ. நடேசய்யர்” மூலம் சாரல் நாடன் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார். * பத்திரிகைத்துறையில் நடேசய்யரின் பங்களிப்பைக் குறித்தெழுதிய இவரது 'பத்திரிகையாளர் நடேசய்யர்” என்ற இன்னொரு நூலும் 1998 சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்று இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.
மலையகத் தமிழ் மக்களுடைய இன மரபுகளையும் பிரச்சினைகளையும் பண்புகளையும் இனங்காட்டும் கட்டுரைகளாக இன்று நிறையவே வெளிவர ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கான அறிகுறியாகக் கொள்ளலாம்.
இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அலுவலகம் வெளியிடும் சாகித்திய மலர்களிலும், ஊவா மாகாணசபையும் மத்திய மாகாண சபையும் வெளியிடும் தமிழ் விழா மலர்களிலும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிடும் புதுமை இலக்கியம்'மலர்களிலும் இவர்களின் கட்டுரைகள் விரும்பி பிரசுரிக்கப்படுவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது ஏற்புடையதே.
மலையகப்பாரம்பரியக்கலைகள் மாரியம்மன் வரலாறு' என்ற கலை, சமயம் சம்பந்தமான இரண்டு நூல்களைப் படைத்தளித்த மாத்தளை வடிவேலன் இத்துறையில் விசேட கவனம் காட்டிவருகிறார்.
கட்டுரைகள் 47

Page 30
கவிதைகள்
LDலையக இலக்கியப் பரப்பில் பலரது படைப்புக்களை உள்ளடக்கிய முதலாவது தொகுதியாக வெளிவந்தது ஒரு கவிதைப் படைப்பே என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாய் மொழிப் பாடல் பாரம்பரியத்திலும், வாய் மொழிப் பாடல் அமைப்பில் உருவான பாடல்களை உருவாக்கிய பாரம்பரியத்திலும் நெடுங்காலம் தோய்ந்திருந்த சமூகத்தில், நவீன இலக்கிய முயற்சிகளை மேற்கொண்ட போது கவிதை பூத்துக் குலுங்கவே செய்யும்.
உலகின் எல்லா மொழிகளிலும் இது ஒரு பொது நியதியாகவே இருந்து வந்துள்ளது. குறிஞ்சிப்பூ என்ற தொகுதியில் நாற்பத்தெட்டுக் கவிஞர்களின் படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. 1965ம் ஆண்டு வெளியான இத்தொகுதியை நூலாக்கியிருப்பவர் ஈழக்குமார் என்ற துடிப்புமிகுந்த கவிஞர் - மலை முரசு சஞ்சிகையில் க. ப. சிவம் என்பவரோடு இணை ஆசிரியராக இருந்து மலையக இலக்கியப் பிரவாகத்துக்குத் துணை நின்றவர்.
வளர்ந்து வருகின்ற சமுதாயத்தின் தேவையையும் மாற்றத்தையும் நுண்ணிய திறமையோடும் ஆழ்ந்த புலமையோடும் வெளிப்படுத்துகிற கவிதைகள், முன்னேறி வரும் சமுதாயத்தின் மூச்சுக் குரலாக அமைந்து மொழிக்குப் புதியதோர் அழகையும் இனத்துக்குப் புதியதொரு வலிமையையும் தருவன. ஒரு சமுதாய அமைப்பு முறையில் பல துறைகளினதும் அடுக்கணிக் காட்சிகளை
48 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

- Panorama - அழகுற வெளிப்படுத்துவன கவிதை இலக்கியமேயாகும்.
1960ம் ஆண்டு வரையிலும் இலங்கை அரசாங்கம் மலையக மக்களை இலங்கைக் குடிகளாக்க எதையும் செய்யத் தவறி விட்டது. இந்நிலையில் இந்தியத் தலைவர்களைப் போற்றவும். இந்தியாவைத் தாயகமாக எண்ணவும் இயல்பாகவே அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
1964ல் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பின்னர் மலையக இலக்கிய முயற்சிகளில் புதிய வேகமும் புதிய நோக்கும் தெரிந்தன. அவை புதிய தொனியில் ஒலிக்க ஆரம்பித்தன. இலங்கையைத் தாயகமாகக் கருதும் மனோபாவமும், ஈழத்து இலக்கிய முயற்சிகளில் பரிச்சயம் கொண்ட நிதானமும் அவற்றில் தென்பட்டன. மலையகக் கவிஞர்களின் குரல் கவி அரங்குகளிலும் பத்திரிகைகளிலும் ஒலிக்க ஆரம்பித்தன.
குறிஞ்சிப்பூ தொகுதி அதன் பிரதிபலிப்புதான் இத்தொகுதியைப்பற்றி “பெருமூச்சில், கண்ணீரில் தங்கள் காவியத்தைப் படைத்து வந்த நம்மலைநாட்டு மக்களிடையே இன்று கண்ணிரை, கலக்கத்தை, கவியாக்கும் காளையர்கள் பலர் தோன்றியுள்ளார்கள். இன் சுவைத் தமிழா எம்மவர் ஏக்கத்தை எடுத்துரைக்கும் ஏந்தல்கள் தமது உள்ளக் குமுறல்களை ஏட்டில் தவழ விட்டதால் இன்று மலர்ந்தது “குறிஞ்சிப்பூ” என்று கூறும் இர. சிவலிங்கம் “உள்ளே காணும் கவிதைகள் அனைத்திலும் சொற்களை மீறி அழகும் இனிமையும் வழிந்தோடுகின்றன என்று கூற முடியாவிட்டாலும், எங்கள் நெஞ்சின் சூட்டினைப் பார்க்கலாம்
கவிதைகள் 49

Page 31
O O 99 ● ஆசை அலைகளின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்கலாம்” என்று
சேர்க்கிறார்.
தமிழ்மொழி, தமிழ்ப்பெருமை, காதல், இயற்கை என்பவற்றைக்
கவிதையாக்கி மகிழும் அக்காலத்தைய கவிஞர் உலகத்தில் - குறிப்பாக மலையகக் கவிஞர்கள் விரும்பிப் படித்த பாரதிதாசன், வாணிதாசன், முடியரசன் கவிதைகளில், உள்ளப் பொதுப் பண்புகளுக்கமைந்த பெரும்பாலான கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன. மலையகத்தை முனைப்புடன் காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.
“வளநாடாய் மலைநாடு ஆகவேண்டும், ஆனால் வாக்குரிமை மொழியுரிமை வரவேண்டும் கலைவீடாய் மலைநாடு ஆகவேண்டும் - இளம் காளையர்கள் தன்மானம் கொள்ள வேண்டும்.
சிலைபோன்றார் சமுதாயத் தொழியவேண்டும், நல்
சேவைமிகு தொண்டர் பணி உயர வேண்டும் வலைபோட்டுத் தரகர்களால் ஆளைச்சேர்க்கும்
வல்லாள, கண்டர்சங்கம், இங்கு வேண்டாம்
(பக்கம் - 8) பேயோடும் புலியோடும் பொருதி நின்று
பொல்லாத அடவியிலே வளத்தைக் கண்டு நாயோடும் நன்றியுடன் இந்நாட்டுக் குழைத்து
நலிவிடையில் வாழ்வதற்கா நாமிங்கு வந்தோம்? கூனோடும் துயரோடும் உழைக்கும் நம்மோரைக்
குறியற்ற இந்நாட்டார் விரட்டிடவும், இன்று
50
மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

ஊனோடும் உடையின்றி உழலும் நம் நிலையும்
எப்போது நமைநீங்கி உயர் வாழ்வு தோன்றும்? தேர்தல் கேளித் தேரினில் நீயும்
(பக்கம் - 54)
தேர்வடமாகத் தொங்கினை ஏனோ தொடர்ந்து இழுக்கத் தவறியதால் நீ துயரில் பட்டுத் துடிதுடித் துழன்றாய் கோரிய வாழ்வு குடியுரிமையினை குழியில் என்றோ புதைத்த கதை சாஸ்திரி ஒப்பந்த சாயலைக் கேட்டு
சரிந்தது வாழ்வெனத் தெரிந்திருப்பாய் திக்கெட்டப் பெற்ற திறமையை வெற்றியை திரிகாலத் தமிழா பலியாக்கி விட்டாய் வேடிக்கைப் பேச்சுக்கும் வேதாந்த கொள்கைக்கும் சாடிக்கு மூடியாய் சாஸ்திரி யானார்
(பக்கம் - 63)
என்னருமை மலைநாட்டின் திசைகள் எல்லாம் எழிற்கண்ணி அரவணைப்பில் சிரிப்புதிர்க்கும் தன்னிலையை ஓராத குறையாலிங்குத் தவிக்கின்றார் என் மக்கள் ஐயோ இந்த துன்பம் நிறை மக்கள் மட்டும் துயிலுணர்ந்தால் தூரத்தில் ஓடாதோ இன்னல் யாவும்
(பக்கம் - 67)
கவிதைகள் S1

Page 32
“உரிமையை இழந்தோம்; எங்கள்
உடலினைக் கெடுத்தோம் நல்ல தெரிவன எடுத்துக்காட்டும்
சீருறு கல்வி அற்றோம்
(பக்கம் 73)
என்று கவிஞர்கள் பாடியுள்ளனர். கவிஞர்கள் சிலரின் மேற்குறித்த கவிதைகள் இலங்கையிலிருந்து தம்மைப் பிரித்தெடுக்கப் போகும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், பிளவுகள் பேணும் தொழிற்சங்கங்கள், துயின்று கொண்டிருக்கும் மலையக மக்களென்று பலவற்றைப் பேசுகின்றன. இத்தொகுதியில் சிறப்புடன் மிளிர்வது முதல் கவிதையும் கடைசிக்கவிதையும்.
தேயிலைத் தோட்டத்திலே என்ற தலைப்பில் ஸி. வி. வேலுப்பிள்ளையின் தமிழ்ப்படுத்திய கவிதை முதலாவதாகக் காணப்படுகிறது.
கருத்தாலும் கவினுறு சொற்களாலும் அமைந்த இக்கவிதையைத் தமிழில் தந்திருப்பவர் சக்தி அ. பாலையா. ஆங்கிலத்தில் தனது கவிதைகளை இயற்றி அவனியெங்கும் ஏழைத் தொழிலாள மக்களின் இன்னல்களை வெளிப்படுத்திய பெருமை ஸி.வி.க்கு உண்டு. ஆனால் அந்த மக்களுக்குப் பயன்படவில்லை. ஆங்கிலத்தில் எழுதி சர்வதேசப்புகழ் பெற்ற இவரையும், இவரது சகாக்களான கணேஷ், சக்தி அ பாலையாவையும் மலையக மக்கள் பெரிதுபடுத்தாது போனார்கள்.
52 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

தமிழில் மாத்திரமே புலமைமிகுந்த மலையகப் படைப்பாளிகள் 1960களின் தோற்றம் வரை அவர்களை வெறுப்புடன் நோக்கியமைக்கு, இலக்கியவுலகில் அவர்களைக் கங்காணியாகப் பார்த்த பார்வையைத்தான் காரணம் சொல்ல வேண்டும்.
மலைநாட்டில் எழுத்தாளர் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்க ஸி. வி. முயன்றார். அப்போது அது குறித்து “கிரீன்லண்டில் கூடிப் பேசி வட்டகொடையை வட்டமிட்டு, நாவல் நகரில் நகர்வலம் வந்து இப்பொழுது மீண்டும் அட்டனை அணுகத்திட்டமிட்டு வரும் இந்த திருக்கூட்டத்தினரில், உண்மையில் எத்தனைப் பேர் தமிழ் எழுத்தாளர்கள்”? (முரசு -5-7-1959) என்று கேள்வி எழுப்பினர் காரணம், நான்கு முறையும் இம் முயற்சிகளில் இதுகாறும் தமிழில் எழுதி, மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் பங்கு பற்ற இடம் கொடுபடவில்லை. இதனால் எழுத்தாளர் மன்றம் அமைப்பது கைகூடவில்லை. ஸி.வி. இதனை உணர்ந்தார். தனக்குப் புகழீட்டிக் கொடுத்த தேயிலைத் தோட்டத்திலே’ என்ற நீள் கவிதையைத் தமிழில் தர வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்தார்.
இன்று மலையகத்திலும் தமிழ் இலக்கிய உலகிலும் போற்றிப் புகழப்படுகிற தேயிலைத் தோட்டத்திலே சக்தி அ. பாலையாவின் கைவண்ணத்தால் உருவானது. அவரும் ஒரு கவிஞர் என்பதால் தமிழில் எழுதப்பட்ட கவிதையாகவே அது சிறப்புப் பெற்றுள்ளது. உண்மையில் இம்மொழி பெயர்ப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் “ஸி.வி.யின் கவிதை ஆத்மாவை நான் தமிழில் தந்துள்ளேன். என் தமிழ்தான் ஸி. வி.யைத் தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்றது.” என்று குறிப்பிடுகிறார் சக்தி அ. பாலையா.
கவிதைகள் 53

Page 33
தமிழில் வெளியான 'தேயிலைத் தோட்டத்திலே’ என்ற நீள்கவிதை முதலில் வீரகேசரியில் தொடராக வந்தது. “குறிஞ்சிப்பூ" 1965ல் வெளிவந்தது “தேயிலைத் தோட்டத்திலே’ 1969ல் நூல்வடிவம் கண்டது. “குறிஞ்சிப்பூ” தொகுதியில் இடம்பெற்ற ஸி.வி.யின் தமிழ்ப்படுத்தப்பட்ட கவிதை வீரகேசரித் தொடரில் இருந்து எடுக்கப்பட்டதே இத்தொடரைத் தந்த சக்தி அ பாலையாவும் மலையக மக்களிடையே உரிய அங்கீகாரம் பெறவில்லையென்பதை 1963ம் ஆண்டு அட்டன் இலக்கிய வட்டம் நடாத்திய கவி அரங்கில் - நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார் என்ற தலைப்பு - தலைமையேற்ற சக்தி பாலையாவைக் குறிப்பிட்டுக் கூறினார்.
“குறிஞ்சிப்பூ” தொகுதியில் நிறைவுக் கவிதையாகக் காணப்படும் “அன்னைபூமி” நிறைவானதோர் கவிதையாகவும் உள்ளது. இதைப்படைத்தவர் இத்தொகுதியை நூலாக்குவதில் வெற்றிகண்ட ஈழக்குமார் அவர்களே.
மலையகத்தினரிடையே ஏற்பட்டு வரும் மனமாற்றத்தையும் மனவளர்ச்சியையும் இலங்கையைத் தாயகமாக வரித்துக் கொண்ட மனோபாவத்தையும் இக்கவிதையில் அழகுற எடுத்துக் காட்டியுள்ளார் கவிஞர். 86 சீர்களில் அமைந்த இக்கவிதையிலுள்ள சிலவரிகள்:-
“செங்குருத்துக் கலசமென பீதுருவின்’
திருமுடியில் எழுந்து வரும் கதிர்ச்சுடரும்
பொங்கிவரும் ரப்பர் மரச் சுரப்பைப்போல்
பூ வழியத் தவழ்ந்தோடும் மாவலியும்
54 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மங்கையளின் செங்காந்தள் விரல் நுனிக்கு
வயப்பட்டு வசமிழந்த தேக் கொழுந்தும்
பொங்கலிட்டுச் செந்தமிழர் உழைப்பதனால்
பூரித்த மலையகத்திற்கிணையுமுண்டோ?
கத்திபட்ட ரப்பர் மரச் சுரப்பைப்போல
கருத்தினிலே புத்துணர்வு கனல்பிறக்க நித்திரைக்கு விடை கொடுத்து இந்தநாடே
நிலையான நாடென்ற உணர்வு கொண்டார் முத்திரையைப் பதித்து விடும் உறுதியோடு
மூண்டிட்ட உரிமைமின் சுடர்த்துடிப்பால் எத்தர்களின் வலையறுத்து ஈழமண்ணை
எம் அன்னை பூமியென வாழ்த்தி நிற்பார்.
(பக்கம் 79)
ஈழக்குமாரின் கவிதைகள் துடிப்பு மிகுந்தவை. வெகுபலரைப்போல, பாரதிதாசனின் அடியொற்றிப் பாடிய இவரது கவிதைகளில் ஆவேசத்தையும் வேகத்தையும் காணமுடிகிறது.
மலையக இலக்கியகர்த்தாக்களில், அறுபத்துக்கு முன்னர் தடம் பதிக்கும் பணிகளைச் செய்தவர்களில் கே. கணேஷ் குறிப்பிடத்தக்கவர். 1946ல் இவர் தோற்றுவித்த பாரதி இலக்கிய சஞ்சிகை இன்னும் நினைவுகூரப்படுகிறது. இந்தியாவின் முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலைத் தமிழ்ப்படுத்திய பெருமை இவருக்குண்டு. தமிழகப் பத்திரிகைகளோடும் தமிழக எழுத்தாளர்களுடனும் நிறைந்த நெருக்கம் கொண்டவர். ஏராளமான
கவிதைகள் 55

Page 34
கம்யூனிஸ்ட் இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்தியவர். மொழிபெயர்ப்புத் துறையில் தான் ஈடுபட்டதற்கு, நமது சமூகத்தவராலும் இதைச் செய்து காட்ட முடியும் என்ற சவாலான நினைப்பே" என்று கூறும் இவரும், 'ஸிவியைப் போல் படிப்பறிவில் குறைந்திருந்த மலையகத்தவரின் கவனிப்பைப் பெறவில்லை.
இங்கு ஒர் உண்மை வெளிப்படுகிறது. மொழி பெயர்ப்பைத் தனது முழுநேரப் பணியாகச் செய்தவர் கணேஷ். ஒரே ஒரு முறை செய்தவர் சக்திபாலய்யா. சக்தி பாலப்யாவின் பணியால் தமிழ் மொழிக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் ஒரு இலங்கைக் கவிஞர் அறிமுகப்படுத்தப்பட்டார்; தமிழில் படைப்புக்களைத் தரத் தூண்டப்பட்டார்.
கணேஷின் மொழிபெயர்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர்களால் அவ்விதப் பயன் நேரக் காணோம். இதை நிவர்த்திக்கும் விதத்தில் முல்க்ராஜ் ஆனந்தின் தேயிலைத் தோட்டமக்கள் சம்பந்தமான இலையும் திரியும் ஆங்கில நாவலைத் தமிழ்ப்படுத்த முனைந்துள்ளார். மலையகம் மாற்றந்தேடிய 1930 களைப்பற்றிய தகவல்களைத் திரட்டி, கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையில், வேறொரு புனை பெயரில் (அகிலம் - சித்தார்த்தன்) எழுதிக் கொண்டிருக்கிறார்.
அறுபதுகளில் பீறிட்டெழும்பிய மலையக இலக்கிய உணர்வின் வெளிப்பாட்டு அத்தாட்சியாகக் கதைக்கனிகள் தொகுதியும் குறிஞ்சிப்பூ தொகுதியும் விளங்குமாப் போல எண்பதுகளில் ஏற்பட்ட மீளெழுச்சியைக் காட்டும் கவிதை, சிறுகதைகள் தொகுதியாக்கப்பட்டுள்ளன.
56 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

குன்றத்து குமுறல் நான்கு சு கவிஞர்களின் கவிதைகளடங்கிய தொகுப்பு 1993ல் அச்சில் வெளியான தொகுதியில் இ. தம்பையாவின் பத்துக் கவிதைகளும் சிவ. இராஜேந்திரனின் பதினாறு கவிதைகளும் எல். பன்னிர் செல்வத்தின் பதினான்கு கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தாயகம் சஞ்சிகையில் வெளிவந்தவைகள். பத்தாண்டுகளுக்கு மேலாகப் படைக்கப் பெற்ற கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. கவிஞர்களின் முழு ஆற்றலையும், தனித்தனியே விளங்கிக் கொள்ள ஏதுவான தொகுதி மலையக இலக்கியப் பரப்பில் சமீபகாலமாகத்தான் கூடுதலாக வரத் தொடங்கியுள்ளன.
1967ம் ஆண்டு தூவானம் என்ற தொகுதி வெளிவந்தது. குமரன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த வெளிமடை மா. சின்னத்தம்பி குமாரவேலின் எழுபது கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி இது."
படைப்புக்கள் நூலுருவம் பெறுவது அவசியம் என்று உணரப்பட்ட ஒரு காலத்தில் - பீறிட்டெழுந்த இலக்கிய உணர்வால் உந்தப்பட்டு, அ. ச. மல்லிகைக் காதலன் என்ற பதுளைப் பிராந்திய எழுத்தாளரால் தோற்றுவிக்கப்பட்ட குறிஞ்சிப்பண்ணையின் முதல் வெளியீடு.
இவரது கவிதைகளில் பாரதிதாசனின் நேரடித்தாக்கத்தைக் காணலாம். அறுபதுகளில் இலக்கியத்தின் கவிதைத்துறையில் இயங்கிய பலரிடமும் இந்தத் தாக்கத்தைக் காணலாம். தமிழகம்,
கவிதைகள் 57

Page 35
மலேஷியா, ஈழம் என்ற தமிழ் வழங்கும் எல்லாப்பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
தூவானம் தொகுதியில் மலையக மக்களைப் பற்றிய கவிதைகள் பல உண்டு. அவர்களின் துயரம் மிகுந்த வாழ்வும் தொல்லை நிறைந்த குடும்பமும் கவிதைகளில் பேசப்பட்டுள்ளன. தனது காலத்தில் அமுல்படுத்தப்பட்ட “சிறிமா-சாஸ்திரி"ஒப்பந்தம் குறித்து முடிவென்ன? பேச்சுவார்த்தை, ஜிவபூமி என்ற தலைப்புக்களில், குமரனின் கவிதைகள் கவனத்துக்குரியன."
1964ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது செய்யப்பட்ட ஒன்று என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. இந்தியாவுக்கு ஐந்து லட்சம், இலங்கைக்கு இரண்டு லட்சம் என்று வணிகப்பொருளாக மலையக மக்களைக் கூறுபோட்ட ஒப்பந்தம்; இலங்கையில் நூற்றைம்பது ஆண்டுக் காலத்துக்கு மேலாக உழைத்துக் கொடுத்த சந்ததியினரின் வரலாற்றை மறந்து விட்ட ஒப்பந்தம்; என்றெல்லாம் கூறி இலங்கையா / இந்தியாவா என்பதைத் தெரிந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று கூறுகின்ற கவிதை - முடிவென்ன?-
“போவதுதான் போகட்டும் என்கின்றாயா
புழுதியுடன் புயற்காற்றாய் புகையட்டுமா
சாவதுதான் முடிவென்று சொல்கின்றாயா
சஞ்சலத்தால் எத்தனை நாள்துடிப்பதம்மா
ஆவதுதான் எதுவென்று சொல்லி விட்டால்
அடுத்தென்ன, தொடர்ந்திடுவர் வழியில் நெஞ்சம்
58 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

நோவதுதான் அன்றாடம் எங்கள் வேலை
நோக்கத்தைச் சொல்லிவிடு கதை முடியட்டும்
(பக்கம் - 1)
ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படுகையில் நாடற்றவர் என்ற நிலைக்கு ஒரு முடிவேற்பட்டாலும் இலங்கையில் இருக்கவிரும்பிய லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, இந்தியாவுக்குப் போவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குச் சிலர், இலங்கையில் சிலர் என்று பிரிக்கப்பட்டனர். இப்படிப்பிரிக்கப்பட்டமையால் குடும்பத்தில் நிம்மதியில்லாததுமாத்திமல்ல, இலங்கையில் மலையக மக்கள் தொகையும் குறைந்தது; பலம் மிகுந்த சமூகமாக வளரத் தொடங்கிய மலையக மக்களிடையே இது பாதிப்பை ஏற்படுத்தியது; இவைகளுக்கெல்லாம் காரணம் இந்த ஒப்பந்தம் அவசரத்தில் செய்யப்பட்ட அநீதியான ஒன்று எனக் கூறும் கவிதை - பேச்சுவார்த்தை -
“பேச்சுவார்த்தைகள்” முடிந்ததடா - பெரும்
பிரச்சனை யொரு விதம் விடிந்ததடா - இனி மூச்சுவிடாதே கிளம்பிடடா - மூட்டை
முடிச்சுக்களுடன் புலம்பிடடா,’ என்று தனது நாற்பத்தெட்டு சீர்வரிசைகள் கொண்ட கவிதையில்,
“உறவும் நட்பும் பிரிந்ததடா - இங்கு
உள்ளவர் தொகையும் சரிந்ததடா - நல்
அறமும் முறையும் கெட்டதடா - முடிவு
அவசரப்பேச்சில் பட்டதடா
கவிதைகள் 59

Page 36
பிறந்தவர் பெற்றவர் பிரிவரடா - கூடிப்
பிணைந்தவர் கண்ணிர் சொரிவரடா - மண்ணில் இறந்தவர்க் கிறையோன் விதித்ததடா - இங்கு
எமக்கென எவரோ விதித்ததடா”
என்று கூறுவது மனதைப் பிழிகிறது. பிரிவு என்பது ஆண்டவன் வகுத்த வழியாகத் தானிருந்து வந்துள்ளது. எங்களது பிரிவோ வேறுவிதத்தில் நேர்கிறது.
“அழைத்தவர் கூட்டம் மறைந்ததடா - நம் அந்திம காலம் நெருங்குதடா"
(பக்கம் 21-22)
என்ற வரிகள் இலங்கைக்குத் தம்மை அழைத்து வந்த பிரிட்டிஷார் சென்று விட்டதையும், தாமும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போக நேர்ந்ததையும், தமது இலங்கைத் தொடர்பின் இறுதிக் காலம் வந்துவிட்டதையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.
இலங்கையில் இருக்க விரும்புபவர்களுக்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அவர்கள் இலங்கையைத்தாய் நாடாகக் கருதும் நிலைமை உருவாக்கப்படுவதன் அவசியத்தை,
"வாழ்வெல்லாம் உன்புகழைப் பாடித்தீர்க்க
வரமொன்று தரவேண்டும் நம்மைச் சூழும் தாழ்வெல்லாம் பொடிப்பொடியாய்த் தகர்ந்தே போகச்
சங்கெடுத்து முழங்கிடுவேன் அன்னைநாடே”
(பக்கம் - 78)
60 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

என்ற வரிகளில் காண்கிறோம்.
இத்தொகுதி வெளியான பின்னர் வந்த “தேயிலைத் தோட்டத்திலே (1969), சக்தி பாலப்யாவின் திறமையினால் ஸி. வி. வேலுப்பிள்ளையின் சிந்தனை வளத்தைத் தமிழ்மக்களிடையே ஆழப்பதித்தது. முப்பதாண்டுக் காலத்துக்குப் பின்னரும், புதிதாய் இலக்கிய உலகில் புகுந்திருக்கும் இளந்தலை முறையினரிடையே அதன் செல்வாக்கைக் காணமுடிகிறது.
'யாரோ சிலரின் மோட்ச வாசமாய் ஆச்சுதே இந்த அழகிய பூமி
urTGSTT ef6urf6T
சுவர்க்க இன்பமாய்
ஆச்சுதே என் மக்கள்
ஆக்கிய பூமி”
என்ற வரிகளில் தெரிவது ஏக்கமா - எரிச்சலா? மலைப்பிரதேசம் அழகியபூமி. இந்த அழகிய பிரதேசத்தை ஆக்கியவர்கள் நாங்கள். இந்தப் பூமியில் காணும் மோட்சமும் சொர்க்கமும் அனுபவிக்க ஒரு சிலர்தான் இருக்கின்றனர். அந்தச் சிலரும் வேறு யாரோ தாம், எங்களவர்களல்ல என்ற வரிகள் அற்புதமானவை. ஆண்டு பல கடந்த பின்னரும் மலையக மக்களின் துயர வரலாற்றைக் கோடி காட்டுவன.
1969ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த ஒரு கவிதைத் தொகுதி
- பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வெளிவந்த வண்ணச் சிறகு கவிதைகள் தொகுதியாகும்.
கவிதைகள் 61

Page 37
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உள்ள கால இடைவெளி முக்கியமானது தமிழகத்திலிருந்து இலங்கை மலையகக் கவிதைத் தொகுதி வந்திருப்பதும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்த உதவும்.
இக்கால இடைவெளியில் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் முழு வேகமாக அமுல் நடத்தப்பட்டது. இலங்கையில் வாழ விரும்பியவர்கள் தமது விருப்பத்துக்கு மாறாக இந்தியாவுக்குப் போக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவ்வாறான நிர்ப்பந்தத் துக்குள்ளான அரு. சிவானந்தனின் கவிதைத் தொகுதிதான் 1985ல் வெளியான வண்ணச்சிறகு கவிதைகள்,1983ல் இலங்கையில் இடம் பெற்ற இனக்கலவரத்தாலும் ஏராளமான மலையக இலக்கியகர்த்தாக்கள் தமிழகத்துக்குப் பெயர்ந்து சென்றிருந்தனர்.
நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை இலங்கை மலையகத்திலிருக்கும் போது எழுதிய இவர் - 1966ம் ஆண்டுகளில் எழுதத் தொடங்குகையில் - சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
“1971ம் ஆண்டு இலங்கையில் ஏப்ரல் கிளர்ச்சி நடந்தது. இக்காலகட்டத்தில் சமூகப்பார்வை மிக்க கவிதைகளைப் பத்திரிகைகள் வெளியிடத் தயங்கின. அதற்கு முன் என் கவிதைகளை வெளியிட்ட பத்திரிகைகள் அப்புறம் வெளியிட மறுத்து விட்டன. வெளியிடக் களமில்லாத போது எழுதிப் பயன் என்ன என்ற உணர்வால் 1976ம் ஆண்டுவரை கவிதை எழுதுவதை விட்டு விட்டேன்” என்று தனது கவிதைத் தொகுதியின்
62 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரையில் குறிப்பிடும் இவர், அவ்விதம் 1976ல் எழுதிய கவிதை ஆங்கிலம், சிங்களம், டச்சு மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.
“சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” என்று,
இத்தொகுதியில் இறுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. நெஞ்சை நெகிழ வைக்கும் கண்ணிர்க் கவிதை வரிகள்.
இருபதாண்டுக்காலம் ஒன்றாக வாழ்ந்து, நாளும் பொழுதும் பார்த்துச் சலிக்காத மலைகளையும் பழகிச் சலிக்காத மக்களையும் இதயத்தில் குளிரோடு எண்ணிப் பார்க்கும் சிவானந்தன்,
"நாட்கள் கழிகின்றன, நாடு கடக்கும் வேளை நெருங்குகின்றது, பிரிவு என் வாசலைத் தட்டுகிறது. பிரிவு வேதனையின் பிரதிநிதி விழி வாசலை முட்டுகிறான். அழுது விடுவேனோ என்ற பயம் என்னை அமுக்குகிறது.” என்றும்
“நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை, என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை” என்றும்
கண்ணிரில் கவிதை பாடி, “சென்று வருகின்றேன் ஜென்ம பூமியே
கவிதைகள் 63

Page 38
திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடி மகிழ்வனோ?”
என்றும் முடித்திருக்கின்றார்.
இதற்குப்பிற்பட்ட காலப் பகுதியில் - 1983 வன்செயலுக்குப் பிறகு, இலங்கையில் தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானதா என்ற பயந்தோன்றிய காலப்பகுதியில் மலை இலக்கியத்தில் மீண்டும் ஒரு மலர்ச்சி தோன்றியது. எஸ். பொ. கூறியது உண்மைதான். 1948, 1956, 1983 என்ற ஆண்டுகள் மலையக இலக்கியத்தைத் தோற்றுவிக்கும் உந்துசக்தியைத் தோற்றுவித்த ஆண்டுகள் தாம். பாதிப்பால் தான் இலக்கியம் படைக்கப்படுகிறது; படுவதால் தான் இலக்கியம் தோற்றம் பெறுகிறது.
தியாக யந்திரங்கள் - 1986, குறிஞ்சித் தென்னவன் கவிதைகள் - 1987, ஒவியம் - 1988, கூடைக்குள் தேசம் - 1988, மலைக்குயில் - 1987, முகவரியைத் தொலைத்தவர்கள் - 1993, பாட்டாளிக்குப் பரிசு - 1994, மாடும் வீடும் 1995, வாழவாதோழா!- 1995, கவிதைகள் - 1998, என்ற கவிதைத் தொகுதிகள் மூலம், எஸ். முரளிதரன், தென்னவன், சி. ஏ. எலியாசன், அல் அஸ்மத், இரா. நித்தியானந்தன், மல்லிகை சி. குமார், பண்டாரவளை அன்புச் செல்வன் என்ற ம. சண்முகநாதன் சக்தி பாலஐயா பலரது பார்வைக்குள் வந்தனர். மலையகத்து மூத்த முன்னோடி, கலாபூஷணம் கே. கணேஷ் சொல்லுமாப் போல “ஏனைய காலங்களில் அந்நியமாக்கப்பட்டுத் தேர்தல் காலங்களில் உறவு கொண்டாடப்படும் மக்களைப்பற்றிய”கவிதைகள்" இத்தொகுதிகள் மூலம் பரவலாக அறிமுகமாயின.
64 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

குறிஞ்சித் தென்னவன் (1934 - 1997), சு. முரளிதரன், அல் அஸுமத் ஆகிய மூவரின் கவிதை நூல்களும் 1980 களில் வெளிவந்த காரணத்தால், ஒரு தசாப்த இடைவெளிக்குள் இன்று பல மட்டங்களிலும் பேசப்படுகின்ற சிறப்புக் குள்ளாகியுள்ளன. அவர்களின் திறமைகளும், அடிக்கடி கவி அரங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற செயற்பாடுகளும் இதற்கு மேலும் வலுவூட்டின.
குறிஞ்சித் தென்னவன் இன்று அமரராகி விட்டார். அவரது ஆயிரக் கணக்கான கவிதைகள் பத்திரிகையில் அச்சாகியுள்ளன. தொகுதியில் இடம்பெற்றது ஒருதுளி அளவே. அதன் மூலமே அவர் இன்னும் பேசப்படுகின்றார். ஐந்தாம் வகுப்பு வரையான கல்வியோடு, தோட்டத் தொழிலாளியாகவே வாழ்க்கை நடாத்திய தென்னவன், தொல்லை மிகுந்த வாழ்க்கையிலும் தொய்வில்லாது எழுதிய கவிஞன். தன்னுடைய கவிதைகளை நூலாக்கிப் பார்க்கும் ஆசை அவருக்கு நெடுநாளிருந்தது. அந்த ஆசைக்கு விதை போட்டு அவரைப் பலர் ஏமாற்றினர். கடைசியில் எழுத்தாள நண்பர்கள் மூவர் அவருடைய கவிதைகளை நூலாக்கித் தந்தபோது, தொகுதி சிறிதெனினும் அவர் ஆனந்தப்பட்டார். 'என்னுடைய நெடுநாளைய கனவு நனவாகிறது’ என்று தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டார்."
புதுக்கவிதையிலும், ஹைக்கூ கவிதையிலும் பரிச்சயம் மிகுந்த சு. முரளிதரன் இன்னும் காத்திரமான தொகுதியைத் தருவதற்கான வாய்ப்புள்ளவர்.
அல். அஸஉமத் தனது கவிதைகளிலும் சிறுகதைகளிலும் இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையரைப்
கவிதைகள் 65

Page 39
பெருமையுடன் குறிப்பதை வழக்கமாகக் கொண்டவர். “மலைக்குயில்” தொகுதியிலும் அவ்வாறே செய்துள்ளார். “பாரதியின் குயிற்பாட்டை அடியொற்றி, அதே அமைப்புமுறையிலும் சாயலிலும் உள்ளத்தைப் பிணிக்கும் வகையில் படைக்கப்பட்டதே கவிஞர் அல் அஸமத்தின் “மலைக்குயில்” என்னும் அற்புதமான படைப்பாகும்” என்று தன் நூலொன்றில் கலாநிதி க. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்."
'அல் அஸ*மத்தின் கவித்துவ ஆற்றலை அறிவதற்கு இப்படைப் பொன்றே போதுமெனலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் (1994 - பக்கம் 207)
புதுக்கவிதை மூலம் தனது “முகவரியைத் தொலைத்தவர்கள்” தொகுதியைத் தந்த இரா. நித்தியானந்தன், 'அரசியல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கவிதைகளை இத்தொகுதியில் படைத்துள்ளார்.
சிறந்த சிறுகதையாசிரியராக உருவாகியுள்ள மல்லிகை சி. குமார் தனது மாடும் வீடும் என்ற கவிதை நூலின் மூலம் - சமகாலத்தைய நடப்புக்களைச் சிறுகதையாகவும் - கவிதையாகவும் ஆற்றிடும் தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதை நூலுக்கு முன்னுரை நல்கிய கவிஞர் வைரமுத்து இத்தொகுதியை மிகவும் பாராட்டிச் சென்றுள்ளார்."
வாழ வா தோழா கவிதைத் தொகுதியை தன் அணிந்துரை மூலம் சிறப்பிக்கும் கே. கணேஷ் அவர்கள், மண்மணக்கும் கவிதைகள் என்று பாராட்டுகிறார்."
66 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

பத்திரிகைகளில் வெளிவந்த சிறப்பை அடிப்படையாக்கித் தொகுதியில் இடம் பெறும் கவிதைகள் இத்தகுப் பெருமையை அடைவது இயல்பான ஒன்றேயாம்.
நூல்வடிவம் பெறாது போனாலும், அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகள் பாடித் தமது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டவர்களாகக் கீழ்காணும் சி. அழகுப்பிள்ளை, அமரர் மலைத்தம்பி, தமிழோவியன், பா.தங்கம், அமரர் லிங்கதாசன் ஆகியோர் விளங்குகின்றனர்.
கவிஞர்கள் பலரும் தமது படைப்புக்கள் மூலம்,தொழிற்சங்கத் தலைமைகளுக்கு விரோதமான கருத்துக்களை வெளிப் படுத்தியுள்ளனர்.
தேயிலைத் தொழில் துறையில் மாத்திரம் பதினாறு தொழிற் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளுள் சில வெறும் கடிதத் தலைப்புக்களில் மாத்திரம் உயிர் வாழுகின்றன. மக்களிடையே தொழிற்படுகின்ற சங்கங்கள் தமக்குள் ஒற்றுமையின்றிப் பிளவும் பட்டுப் பிரிந்து காணப்படுகின்றன.
தொழிற்சங்சங்கள் மூலம் விமோசனம் தேடிய ஏழைத் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்து விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றார்கள். அதிலும் அரசியல் வாதியாகப் பவனிவரும் தொழிற்சங்க வாதிகளைக் கண்டால் கவிஞர்களுக்கு உணர்வலைகள் தெறித்து விழுகின்றன.
தென்னவன், மலைத்தம்பி, மல்லிகை சி. குமார், அன்புச் செல்வன், பூண்டுலோயா தர்மு, தெமோதரைச் செழியன், நல்ல உதாரணங்களாவர்.
கவிதைகள் 67

Page 40
மலையகத் தமிழ் இலக்கியம் கவிதைக் காடாகச் செழித்து வளர்ந்துள்ளது என்பதைப் படைப்புக்கள் பலவும் கவிதையாகவே வடிவம் பெறுகின்றன. இலக்கிய வடிவங்கள் கவிதை தவிர்த்த பிற உருவங்களில் வருவது வரவேற்கக் கூடியதாயிருக்கும் என்ற குறிப்புக்கள் காலத்துக்குக் காலம் தினகரன், வீரகேசரிப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
நெடுநாட்களாகப் பத்திரிகைகளில் அவ்வப்போது எம். எஸ். பெனடிக்ட் என்ற பெயரில் கவிதைகள் தந்து கொண்டிருந்த ஒருவரின் தொகுதி “போர்க்களப் பூபாளங்கள்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 1996ம் ஆண்டு வெளிவந்த இந்த நூலில் காணப்படும் கவிதைகளைக் கண்ணுற்ற கவிக்கோ அப்துர் ரகுமான்,
“தேயிலைக் கொழுந்துகள் போலவே தாயகத்திலிருந்து பறிக்கப்பட்டுத் துயர நெருப்பில் தங்கள் கண்ணிரிலேயே வெந்து, யார் யாரோ பருகத் தங்கள் சாற்றைத் தருபவர்கள் மலையகத் தமிழர்கள். அந்த மலையகத் தமிழர்களின் கண்ணிரில் பூத்திருக்கின்றன" என்கிறார்."
இக்கவிதை நூலைப் படைத்தளித்த பெனி என்கிற எம்.எஸ். பெனடிக்ட் “கொஞ்சம் நட்பு கொஞ்சம் இயற்கை - இவற்றோடு தமிழகத்தில் தமிழர்கள், இலங்கையில் தமிழர்கள், இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் எனத் தமிழினத்தின் சம காலப் பிரச்சினைகளை இனம் கண்டு கவிதை வடிவில் பிரசுரித்திருக்கிறேன். என்கிறார்.
68 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

நாவல்கள்
பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடராக வெளி வருபவையே பின்னர் நூலுருவில் நாவலாக வெளிவருகின்றன.
பத்திரிகைத் தொடராக வந்தவற்றுள் நூலுருவம் பெறாதவை தமிழில் கணிசமாக இருக்கின்றன.
இலங்கையில் முழுநாடு தழுவிய தமிழ்ச் செய்திப் பத்திரிகைகள் 1930க்குப்பிறகே தோற்றம் பெற்றன. வீரகேசரி (1930), தினகரன் (1932) என்பவை இவ்விதம் தோன்றி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்விரு பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதிக்கு முன்னரே இந்திய வம்சாவளியினரை மையமாக்கித் தினப் பத்திரிகைகளும் வார வெளியீடுகளும் இலங்கையில் வெளிவந்திருக்கினறன 1948 வரையிலும்,
தேசநேசன் (1921-1923), தேசபக்தன் (1924-1929), சத்யமித்ரன் (1926), காந்தி (1939) என்பன தினசரிகளாக வந்த பத்திரிகைகள். இவற்றுள் தேசபக்தன்' பத்திரிகையில் “மூலையில் குந்திய முதியோன் அல்லது துப்பறியுந்திறம்” என்ற தொடர் நாவலைக் கோ. நடேசய்யர் எழுதியுள்ளார். இந்நாவல் ஒக்டோபர் 1924ல் ஆரம்பமானது.
நாவல்கள் 69

Page 41
இத்தொடர் துப்பறியும் பாணியில் அமைந்திருந்தது. நடேசய்யர் இலங்கையில் முதலில் பணியாற்றிய தமிழ்ப் பத்திரிகை தேசநேசன். தேசநேசனிலிருந்து அவரைக் கழற்றி விடுவதற்காகச் சிலர் மேற்கொண்ட சதி நடவடிக்கைகளை, தேசநேசனை ஒரு பெண்ணாக உருவகித்து எழுதுவதன் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பதாக நடேசய்யர் குறிப்பிடுகின்றார்.
சத்யமித்ரன்' பத்திரிகையில் “சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி" என்ற தொடர் நாவலை து.தொ.சு. இராசம்மாள் எழுதியுள்ளார். 1926ல் தொடர் நாவலாக வெளிவந்த இது 1929ல் நூல் வடிவம் பெற்றது. இவ்விரண்டு தொடர் நாவல்களைப்பற்றி இங்கு நாம் குறிப்பிடுவது அந்நாவல்களின் யோக்யாம்சத்துக்காக அல்ல. அப்படிக் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு அவை தரமான படைப்புக்களுமல்ல. மலையக நாவல் குறித்த வாசகனின் அறிவுப் பரப்பளவை அறிந்து கொள்ள இத்தகவல்கள் உதவும் என்பதாலேயே இவ்விலக்கிய வரலாற்றுத் தகவல்கள் இங்குத் தரப்படுகின்றன.
இந்திய வம்சாவளி மக்களை முற்றுமுழுதாக மையங் கொண்ட இப்பத்திரிகைகள் இரண்டிலும் வந்திருக்கும் தொடர் நாவல்களுக்கு வாசகர்களாக இவர்கள் மத்தியிலே சிலர் இருந்திருக்கிறார்கள்.
தோட்டப்புறங்களில், இரவில் வீடுகளில் விளக்கேற்றி வைத்த பின்னர் வாசிக்கத் தெரிந்த ஒருவர் உரத்த குரலில் இவற்றை வாசிப்பதும் அவரைச் சுற்றிவர தரையில் அமர்ந்திருப்பதும் பலரும் அவற்றைச் செவிமடுப்பதுமாகப் பத்திரிகைச் செய்திகளும் கதைகளும் தொழிலாளர்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டன.
70 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

1950 - 60கள் வரை இந்த மக்களிடையே மிகவும் செல்வாக்குடன் வாசிக்கப்பட்டவை “பெரிய எழுத்துப் புத்தகம்’ என்றறியப்பட்ட நூல்களாகும். இந் நூல்களின் ஆசிரியர் புகழேந்திப்புலவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகழேந்திப்புலவர் இயற்றிய நூல்கள் வரிசையில் நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, மயிலிராவணன் கதை, தேசிங்குராஜர் கதை, பஞ்சபாண்டவர் கதை, கோவலன் கண்ணகி கதை, அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, புலந்திரன் கனவு மாலை, புலந்திரன் தூது, மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை என்பன போன்றவை உள்ளன. இவர் இயற்றியதாகக் கூறப்படும் கண்டி ராஜன் கதையும் உள்ளது.
இத்தகு நூல்களின் தோற்றத்தை ஆராய்ந்தவர்கள், இவை இருபதாம் நூற்றாண்டில்தான் வெளிவந்துள்ளன என்பதையும் தென் இந்திய மக்கள் கடல் தாண்டிப் பிறதேசங்களில் குடியேறத் தொடங்கியதன் பின்னால்தான் இத்தகு நூல்கள் அச்சுருவம் பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். எழுத்தறிவில் குறைந்த ஒரு வாசக மட்டத்தினருக்கு தமது கவித்துவ ஆற்றலின் மூலம், தமிழில் புகழ் வாய்ந்த ஒரு புலவரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு இப்பணிகளை முன்னெடுத்துச்சென்ற புகழேந்திப்புலவர் என்றறியப்பட்டவர் ஆற்றியுள்ள சமுதாயப்பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
பத்திரிகாசிரியர் என்ற பதவியைப் பயன்படுத்திக் கொண்டு நிறையத் தொடர் நாவல்களை எழுதியவர்களென்று இலங்கைத் தமிழுலகில் எச். நெல்லையா என்பவரையும் கே. வி. எஸ். வாஸ்
நாவல்கள் 71

Page 42
என்பவரையும் பலரும் இனங் காணுகின்றனர். இவ்விருவரும் இந்தியரை மையங்கொண்ட வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியராக வெவ்வேறு காலகட்டத்தில் பதவி வகித்தவர்கள். இவர்களின் பல படைப்புக்கள் நூலுருவில் வெளிவந்துள்ளன.
பிரதாபன் (1931), சந்திரவதனா (1934), இரத்னாவளி அல்லது காதலின் மாட்சி(1938), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1939), காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி (1940) என்ற நாவல் சந்திரவதனா முதல் பாகம் 468 பக்கங்களிலும் இரண்டாம் பாகம் 486 பக்கங்களிலும் வெளியாகி சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்தெழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல"இடம் நிரப்புவதற்காக எழுதப்பட்ட தொடர்கதைகள்’ என்று கூறும் குற்றச்சாட்டுக்குச் சான்று பகர்கின்றன. எனினும் அவரெழுதிய ‘சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு இந்தக் குற்றச் சாட்டிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது.
இலங்கையில் வேர்விட ஆரம்பித்த இந்திய துவேஷத்தையும் பல மட்டங்களில் அது இனக் குரோதமாக வளர்வதையும் சோமாவதி என்ற சிங்களப் பெண்ணையும் சந்திரசேகரன் என்ற இந்தியத் தமிழனையும் கதாபாத்திரங்களாக வைத்து மிக அழகாகவே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தனது சமகால அரசியல் சீர்கேட்டையும் இந்நாவலில் நெல்லையா வெளிப்படுத்தியுள்ளார். இவருக்குப் பின்னர் வீரகேசரி ஆசிரிய பீடத்தை அலங்கரித்த கே. வி. எஸ். வாஸ் - ரஜனி என்ற புனை பெயரில் எழுதிக் குவித்த குந்தளப்பிரேமா, நந்தினி, தாரிணி, பத்மினி, உதயகன்னி, மலைக்
72 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

கன்னி போன்றவற்றோடு ஒப்பிடுகையில் நெல்லையாவின் சமூகப் பிரக்ஞை அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் ஐயமில்லை. இருப்பினும் எழுத்து முயற்சியும் பத்திரிகை வசதியும் கொண்டிருந்த இவர்களின் முக்கிய நோக்கம் வாசகப் பெருக்கமும் பத்திரிகை விற்பனையுமாகவே அமைந்துவிட்டன.
இதே காலப் பகுதியில் நூல் வடிவில் எழுதப்பட்ட நாவல்கள் மலைநாட்டிலிருந்து சில வந்துள்ளன. இவற்றில் காணப்படும் சமூகப் பிரக்ஞை நெல்லையாவினதைவிட அதிகம்.
1937ல் 'சாமளா அல்லது காதல் போதனை' என்ற நாவலைக் கண்டியிலிருந்து எஸ். செல்வநாயகம் 1938ல், சுந்தரமீனா அல்லது காதலின் வெற்றி என்ற நாவலை மஸ்கெலியா, குயீன்ஸ்லேண்ட் தோட்டத்தில் ஆசிரியராகக் கடமைப்புரிந்த ஏ. போல், 1940ல் கண்ணனின் காதலி' என்ற நாவலை இரத்னபுரி, மத்வாகெல தோட்டத்தில் ஆசிரியராகக் கடமை புரிந்த ஜி. எஸ். எம். சாமுவேல், 1942ல் கோவிந்தன் அல்லது தேசிய ஊழியன்' என்ற நாவலை இரத்தினபுரியிலிருந்து பி. எஸ். வரதராஜுலு நாயுடு போன்றோரின் வெளியீடுகளில் இதை அவதானிக்க முடிகிறது.
சுந்தரமீனாள் 138 பக்கங்களில் எழுதப்பட்டு193.1938ல் பதிவு செய்யப்பட்ட நாடகபாணி கற்பனைக் கதை. இதற்கு ஒரு ரூபா விலை குறிக்கப்பட்டுள்ளது.
கண்ணனின் காதலி 104 பக்கங்களில் எழுதப்பட்டு 21.10.1940ல் பதிவு செய்யப்பட்ட நாவல். இதற்கு 95 சதம் விலை
நாவல்கள் 73

Page 43
குறிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடி பெயர்ந்தவர்களைப் பற்றி நிறையவே ஆங்காங்கு விவரிக்கப்பட்டு, மலையகச் சூழ்நிலைக்குத் தமிழ் வாசகனைப் பழக்கப்படுத்த இலங்கையில் எழுதப்பட்ட நாவலாக இதைக் கொள்ளலாம்.
சேலஞ்ஜில்லாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து இரத்தினசாமி என்ற குடியானவனும் அவனது மனைவி முத்தம்மாளும் பசி பட்டினியால் வாடிக்கொண்டிருந்தபோது, சின்னையாகங்காணியின் ஆட்கட்டும் சாதுர்யத்துக்கு இரையாகின்றனர். "தேங்காயும் மாசியும் தேயிலைக்கடியில் கிடைக்கும், உங்கள் மேனி வருந்தாமல் துரைபோல் சுற்றிக்கொண்டிருந்து மாதக் கடைசியில் பணம் வாங்கலாம்” என்ற ஆட்கட்டியின் ஆசை வார்த்தைகளில் மயங்கிப் பிள்ளைகுட்டிகளுடன் கண்டிச்சீமைக்குப் பயணமாகின்றனர். மண்டபம் காம்பில் ஏழுநாள் தங்கித் தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம் வழியாக மருதானை ரயில்வே நிலையத்துக்கு வருகின்றனர் என்பது வரை நல்லதோர் ஆவணமாக - இலங்கை துரைமார் சங்கம், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம் ஆகிய முத்தரத்தாரும் ‘ஆட்கட்டும் பணியினைக் கண்காணிக்கத் தொடங்கிய காலப்பகுதியின் விவரணமாக இந்நாவலின் சில அத்தியாயங்கள் விளங்குகின்றன. தென்னிந்தியர்கள் இலங்கை மலைப்பிரதேசத்துக்கு வரத் தொடங்கிய காலந்தொட்டே இலங்கையைக் கண்டிச்சீமை என்றே குறித்து வந்தனர்.
கண்டியை ஆண்ட மன்னர் வரிசையில், கடைசி நான்கு மன்னர்கள் தொடர்ந்து எழுபத்தாறு ஆண்டுகள் (1739-1815) மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தினராக இருந்தமையாலும், கோப்பிப் பயிர்ச் செய்கை கண்டிக்கருகில் உள்ள நிலப்பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்டதாலும் இது நிகழ்ந்தது.
74 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மலையக நாவல் இலக்கிய வளர்ச்சியில் இந்தக் கண்ணனின் காதலி ஒர் ஆரோக்கியமான ஆரம்பத்துக்கு வித்திட்டதெனலாம்.
இந்த நாவல் இரத்தினபுரி நகரில் அச்சடிக்கப்பட்டதை அவதானிக்கையில், அந்தப்பகுதியில் தமிழர்கள் கணிசமான அளவு தமிழறிவுடனும் தமிழுணர்வுடனும் வாழ்த்திருப்பதைக் கண்டுணர முடிகிறது.
இந்த நாவலின் கதாநாயகன் இந்திய தேசிய விழிப்புணர்வால் உந்தப்பட்டவன், அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஆனந்த விகடன், சுதேசமித்திரன், ஆனந்த போதினி, அமிர்தகுண போதினி, தினமணி ஏடுகளையும் பாரதியாரின் பாடல்களையும் வாசிக்கும் பழக்கமுள்ளவன் என்று சித்தரிக்குமளவுக்கு இரத்தினபுரிப் பகுதியில் கிரியெல்ல நகருக்கருகில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றிய ஒருவருக்கு உணர்விருந்திருக்கிறது.
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியவரும் அதே இரத்தினபுரிப் பகுதியில் தும்பறைத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர்தான். இவற்றையெல்லாம் விட இவ்விதம் முன்னுரை எழுதிய பெ. செ. வரதராஜுலு நாயுடு இரண்டாண்டுக் காலத்தின் பின்னர் (20-8-1942) கோவிந்தன் அல்லது தேசிய ஊழியன்’ என்ற பெயரில் தானே ஒரு நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். முப்பத்தெட்டுப்பக்க நாவலான இதை இலங்கை - இந்தியன் காங்கிரஸின் தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - ரட்னபுரி கமிட்டி அனுசரணையுடன் நூலாக்கியிருந்தார்.
நாவல்கள் 75

Page 44
இத்தகவல்களைத் தேசிய சுவடித் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்ட இந்நூலாசிரியருக்கு இது நாள் வரை இந்நாவலை வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால், முல்லோயா தோட்டத்தில் 1940ம் வருடம் ஜனவரி மாதம் முதலாந்தேதி நடந்த போராட்டத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி பொலிஸாரின் துப்பாக்கிக்குப் பலியானதையும், அப்போராட்டத்தின் மூலமே தோட்டத் தொழிலாளர்களிடையே போர்க்குணம் முளைவிட்டதென்பதையும், அப்போராட்டத்தின் மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பதினாறு சதமாக உயர்த்தப்பட்டதையும் அறிந்துள்ள எவரும் - சமூகப்பிரச்சினையோடு கண்ணனின் காதலிக்கு முன்னுரை எழுதிய வரதராஜுலு கோவிந்தன் அல்லது தேச ஊழியன்’ நாவலில் கூறியிருப்பதைக் குறித்து சில அநுமானங்களைச் செய்து கொள்ளலாம். இந்த நூலைத் தேடிப் பெறுவதில் இன்னும் நான் நம்பிக்கை இழந்துவிடவில்லை.
இரத்தினபுரி பகுதியில்தான் காலனித்துவக் காலத்து இந்தியத் தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்திச் செயல்பட்டார்கள் என்பதை இந்த இரண்டு நாவல்களில் மாத்திரமல்ல இலங்கை - இந்தியன்’ (1928) என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏககாலத்தில் பத்திரிகைகள் நடாத்திய கே. சத்யவாகீஸ்வரய்யரின் அரசியல் பிரசங்கம் ஒன்றின் மூலமும் (4-11-1928ல் நாவலப்பிட்டி கதிரேசன் மண்டபம்) அறியக்கிடக்கிறது.
இலங்கையில் வழக்குரைஞராகப் பணியாற்றிய சத்யவாகீஸ்வரய்யர் இந்தக் கூட்டத்தில் - தோட்டத்துரை ஒருவரைக் கொலை செய்யமுயற்சித்து, ஆயுள் தண்டனை பெற்ற இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற தொழிலாளியின் சார்பாகத் தான் வாதிட்ட வழக்கைப்பற்றிக் குறிப்பிடுகின்றார்.
76 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

காலனித்துவக் காலப்பகுதியில், இந்நாவல்கள் இலங்கையில் எழுதப்பட்ட போது தான் தமிழகத்தில் புதுமைப்பித்தன் துன்பக்கேணி (1934) என்ற தனது குறுநாவலை மணிக்கொடியிலும், எஸ். கிருஷ்ணன் தேயிலைத்தோட்டத்திலே என்ற தனது குறுநாவலை ஜனசக்தியிலும் எழுதியிருந்தனர்.
ஒரே இதழில் வெளிவந்து முடிவுபெற்ற இக்கதைகள் சிறுகதைக்குக் கூறப்பட்ட எல்லைகளை மீறியவை; குறுநாவல் என்ற சொற்றொடர் வழக்குக்கு வராத காலத்தில் வெளியான படைப்புகள்.
1948 - 1960
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெறுதல் அவசியம் என்பதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் இந்திய வம்சாவளியினர் மனப்பூர்வமாக ஈடுபட்டிருந்தனர்.
"நாங்கள் எப்போதும் இந்நாட்டின் அபிவிருத்தியிலும் அரசியல் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருக்கிறோம். இந்நாட்டின் அபிவிருத்தியிலேயே இந்தியத் தொழிலாளர்களினதும் இந்திய வியாபாரிகளினதும் வளர்ச்சி அமைந்துள்ளது என நாங்கள் கருதுவதே அதற்கு காரணம். அதனால்தான் சிங்களவரோடு இணைந்து நின்று இந்நாட்டின் அரசியல் அபிவிருத்திக்காக நாம் போராடினோம்" என்று அரசாங்க சபையில் வாதிட்ட நடேசய்யர் டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சுக்கெதிராக அரசாங்க சபையில் வாக்களித்தார்.
நாவல்கள் 77

Page 45
"இலங்கை மக்கள் இன்னும் ஜனநாயக வாழ்க்கைக்குத் தம்மைத் தயார் செய்து கொள்ளவில்லை. சுதந்திர இலங்கையில் இவர்கள் இனவாரியாகப்பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொள்வார்கள்”, என்று சோல்பரி ஆனைக்குழுவினரின் விசாரணையின் அவதானக் குறிப்பு வெளிவந்தபோது "அந்நியர்களான நீங்கள் வெளியேறுங்கள். (5" வீட்டுச்சகோதரர்களான நாங்கள் எங்கள் உள் வீட்டுப்பிரச்சினையை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ளுகிறோம்", என்று இலங்கை இந்திய காங்கிரஸின் பொதுச்செயலாளராக அன்றிருந்த அப்துல் அஸிஸ் உரத்துக் குரலெழுப்பினார்."
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் மசோதா இந்த மக்களின் குடியுரிமையைப் பறிப்பதாக அமைந்தது. இந்த அநீதியை எதிர்ப்பதற்கு மனுக்குலமேம்பாட்டுக்காக உழைப்பதைத் தன் வாழ்க்கை நெறியாக வைத்திருந்த நடேசய்யர் உயிரோடு இல்லை; இலங்கை இந்திய காங்கிரஸின் தலைமை அரசியல் முதிர்ச்சி பெறாததாக இருந்தது. விளைவு, எட்டரை லட்ச இந்தியவம்சாவளி மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.
முதல் நாடாளுமன்றத்தில் (1947) அங்கம் வகித்த ஆறு இ. இ. கா பிரதிநிதிகளும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் (1952) போட்டியிட வாய்ப்பில்லாது போன போதுதான் 'சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடாத்த முனைந்தனர்.
1950ல் தோற்றுவிக்கப்பட்ட நவஜீவன்’ பத்திரிகையின் நிறுவனர் எஸ். காளிமுத்து, இ. இ. காங்கிரஸ் சார்பாக முதலாவது
78 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த எஸ். இராசலிங்கத்தின் சகோதரர். இ. இ. கா ஸின் ஆறு பிரதிநிதிகளில் இராசலிங்கமும், அஸிஸுமே தீவிரவாதிகள். இந்த சத்தியாக்கிரகத்தில் அவர்களே மிகுந்த ஈடுபாடு காட்டினர். இவ்விதம் 1952ல் நடாத்தப்பெற்ற 101 நாட்கள் நீடித்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்கவும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் சக்தியை ஒன்று திரட்டிப் பலமுள்ள ஓரணியை உருவாக்கவும் நவஜீவன்' தீர்மானித்தது. வாரப்பத்திரிகையான நவஜீவன்’ நாளிதழானது."
இதே விதத்தில் 1964ல் சைச்சாத்திடப்பட்டபூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது எழுந்த எதிர்ப்பலைகள் கூர்மைப்படுத்த வேண்டி வாரப்பத்திரிகையான செய்தி நாளிதழானது."
இந்த இரண்டு பத்திரிகைகளும் O6)65 நாவலிலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளன.
16-11-1952ல் ஆரம்பமாகியது ஜானகியின் துணிவு என்ற தொடர் நாவல். 58 அத்தியாயங்களில் முடிவுறும் இந்நாவலை, நவஜீவன் பத்திரிகையில் எழுதியவர் சிதம்பரநாதபாவலர்.
பெரியகங்காணிப் பதவிக்கு இயற்கை மரணம் சம்பவிக்க வழிசமைப்பதற்கு ஒத்துக்கொண்ட தோட்டத்துரைமார் சங்கம் புதிதாக எவரையும் பெரிய கங்காணிகளாகத் தோட்டங்களில் நியமிப்பதில்லை என்ற உறுதி மொழியை 1941ல் தந்திருந்தது. நடைமுறை நிர்வாகத்தில் தோட்டப்புறங்களில் படிப்படியாக இந்த
நாவல்கள் 79

Page 46
மாறுதல் தெரியவந்திருந்தாலும் 1960களின் நடுப்பகுதிவரை சில தோட்டங்களில் பெரியகங்காணிகள் கடமை புரிந்து வந்துள்ளனர். இந்தியக் கிராமங்களில் உள்ள ஜமீன்தார்கள் போல் தோட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பெரிய கங்காணிமார்களின் கொடூரம் வெளி உலகுக்கு அம்பலப்படுத்தப்பட்ட காலத்தில்தான் சிதம்பர நாதபாவலரின் ஜானகியின் துணிவு தொடர் நாவல் வந்துள்ளது. பெரிய கங்காணியின் ஒடுக்குமுறைக் கெதிராகச் செயற்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் படைத்து நாவல் எழுதியதோடு, அந்தப் பெண்ணின் செயற்பாட்டையே தனது நாவலின் தலைப்பாக்கிய சிதம்பரநாதபாவலர் முற்போக்குச் சிந்தனை மிகுந்தவர்தான். 1933ம் ஆண்டு தொட்டு இலங்கையிலேயே தொடர்ந்து வாழ்ந்து பல பாடல் புத்தகங்களை வெளியிட்டு, பாவலர் என்று அறியப்பட்ட சிதம்பரநாதன் ஜானகியின் துணிவு என்ற ஒரு நாவலை மாத்திரமே அச்சில் தந்துள்ளார். இந்நாவலை எழுதும்போது அவரது வயது நாற்பத்தொன்பதாகும்.
தோட்டப்புற வாழ்க்கையைப் பகைப்புலமாக்கி எழுதப்பட்ட இந்த நாவல் நூல் வடிவில் வராதது ஒரு துர்ப்பாக்கியம் தான்.
நவஜீவன்’ பத்திரிகையில் ஆசிரியராகக் கடமையாற்ற ஒப்புக்கொண்ட டி. எம். பீர்முகமது கங்காணி மகள்' என்ற பெயரில் ஒரு நாவலை நூலாகவே தந்துள்ளார். இது ஒரு குறைப்பிரசவம் என்று சில்லையூர் செல்வராசன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார். தோட்டப்புறப் பேச்சு வழக்கை இந்நூலில் டி. எம். பீர்முகமது லாவகமாகக் கையாண்டுள்ளதாகத் தன்னுடைய நூலில் கணகசெந்திநாதன் குறிப்பிடுகின்றார். இந்தத்
80 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

தூண்டுதலால் உந்தப்பட்டு 'யார் கொலைகாரன்?’ என்ற ஒரு நாவலை சாமி பசறையிலிருந்து வெளியிடுகின்றார்.
நூல் வடிவில் வெளிவந்த இந்த நாவல் முயற்சிகள் காலந்தாழ்த்தி எழ இருக்கின்ற ஓர் ஆத்திரப் பரம்பரையினர் பற்றிய சூசகங்களாக அமைந்திருப்பதை இன்று எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
தோராயமாக, இலங்கையில் இது காலவரையில் அறுநூறுக்கு மேற்பட்ட நாவல்கள் தமிழில் வெளிவந்திருப்பதாகக் கூறமுடியும். 1989ம் ஆண்டு வரையிலும் இலங்கையில் 514 நாவல்கள் தமிழில் வெளிவந்திருப்பதாகத் தன்னுடைய கட்டுரை ஒன்றில் (புதுமை இலக்கியம் 1996) இலங்கையின் பிரபலமான நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
மலையக மக்களைக் குறித்தெழுதப்பட்ட நாவல்களில் இது காலவரையில் இருபத்தைந்து நூல் வடிவில் வெளிவந்துள்ளன.
பத்திரிகைகளிலும், சிறுசஞ்சிகைகளிலும் தொடராக வெளிவந்து இன்னும் நூல் வடிவம் பெறாத பதினேழுக்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன.
மலையக நாவல்களைப்பற்றி ஆராய முனைபவர்கள் இந்தப் பின்னணித் தகவல்களைப்பற்றி அறிந்திருப்பது முக்கியமானது.
பிரசுரவசதிகள் எதுவுமற்ற மலையகத்தில் நூல்களாக வெளிவந்த நாவல்களை மாத்திரம் இலகுவாகக்
நாவல்கள் 81

Page 47
கணக்கிலெடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்வதுவும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதுவும் சில அபத்தமான முடிவுகளைத்தர ஏதுவாக அமையும் அபாயம் இகுக்கின்றது. தொடர் நாவலாக வந்தவைகளையும் நாவல்களாக அங்கீகரித்து ஆராய்வது இன்னும் இரு தசாப்தங்களுக்கேனும் அவசியமாக இருக்கும்.
தனது நாவல்கள் அனைத்தையும் முதலில் பத்திரிகையில் தொடராக வெளியிட்ட மலையகத்தின் பிரபலமான இலக்கியகர்த்தா ஸி. வி. வேலுப்பிள்ள்ை ஆவார். இவரது ஆங்கில நாவல்கள் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தன.
வாழ்வற்றவாழ்வு (1959), எல்லைப்புறம், பார்வதி என்பவை அவ்விதமான நாவல்கள். பொன். கிருஷ்ணசுவாமி என்ற மலையக இலக்கியகர்த்தா - ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய தி டெயிலிமிரர் என்ற ஆங்கில பத்திரிகைக் குழுவிலிருந்து, தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற தென்னிந்திய ஆங்கிலப்பத்திரிகைக் குழுவிலிருக்கும் பெருமைக்குரியவர். இவரது மொழிபெயர்ப்பில் தினகரனில் வெளிவந்த ஸி. வி வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு - LifeleSS Life இவைகளோடு, எல்லைப்புறம், பார்வதி ஆகியனவும் நூல் உருவில் வரவில்லை. சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்துக்குத் தலவாக்கொல்லைப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் அபரிமிதமான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் ஸி. வி. வேலுப்பிள்ளை ஆவார். ஆங்கிலத்தில் தமது கவிதைகளையும் நாவல்களையும் எழுதிப்புகழ் பெற்றவர். இந்தியவம்சாவளி மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை வெளி உலகுக்கு - தமிழ் தெரியாதவர்களும் வாசித்துப் புரிந்து கொள்ளச் செய்தவர்.
82 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

இவரது நாவல்கள் தமிழில் பத்திரிகைத் தொடர்களாக வந்தபோது வாசகர்களின் அமோகமான ஆதரவைப் பெற்றன. இந்நாவல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஸி. வி. வேலுப்பிள்ளைக்கு ஒர் உந்துதலைத் தந்தது. தமிழில் நிறைய வாசிக்கத் தொடங்கினார். மலேசியத் தோட்டத்துத் தமிழ்த் தொழிலாளர்களைப்பற்றி நாவலாசிரியர் அகிலன் எழுதிய “பால்மரக் காட்டினிலே” இவருக்குத் தமிழில் நாவல் எழுதும் உத்வேகத்தை அளித்தது.
வீடற்றவன் (1962), இனிப்படமாட்டேன் (1984), என்ற நாவல்களை வீரகேசரியில் தொடர் நாவல்களாக வெளியிட்டார். இவை இரண்டுமே நூல்வடிவில் இன்று கிடைக்கின்றன. இவையிரண்டும் தமிழகத்தில் அச்சுருவம் பெற்றன. வீடற்றவனுக்கு இன்னொரு சிறப்புமுண்டு வைகறை வெயியீட்டகம் மூலம் மலையக இலக்கிய முயற்சிகளுக்கு சாசுவதம் தர முயன்ற மு. நித்தியானந்தன் இலங்கையில் அதுமுதலில் நூலாக வெளிவந்தது. பத்தனை,பூரீபாதக் கல்வியியல் கல்லூரியில் (1995) பாட நூலாக்கப்பட்டதால், மேலும் இரு பதிப்புக்களை அது தமிழகத்தில் கண்டுள்ளது"இலங்கைத் தீவினில் இன்றும் வஞ்சிக்கப்பட்டவர்களாகத் துயருறும் ஏழை இந்தியத் தமிழர்களின் கதை"என்று, ஸி. வி. இந்நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இனிப்படமாட்டேன் ஸி. வி. எழுதிய கடைசி நாவல். வீரகேசரியில் தொடராக வந்த போது வெட்டியும் குறைத்தும் காணப்பட்ட பகுதிகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு முழு உருவில் நூலாக வந்திருக்கும் இந்நாவல் அமரர் க. கைலாசபதியின் வேண்டுதலால் ஆங்கிலத்திலும் ஸி. வி.வேலுப்பிள்ளையால் மொழி பெயர்க்கப்பட்டு, இன்னும் நூலாக்கப்படாதிருக்கின்றது.
நாவல்கள் 83

Page 48
இலங்கையில் 1983ல் ஏற்பட்ட இன வன்முறைக்குப்பின்னர், சிங்கள தமிழ்க்கலப்புத் திருமணம் செய்துள்ள ஒரு குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறும் நாவலிது. இதை எழுதிய ஸி. வி. வேலுப்பிள்ளை நிஜ வாழ்வில் கலப்புத் திருமணம் செய்திருந்தவர்; தொழிற்சங்கப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்த நாவல் அவரது சுயசரிதை என்று எண்ணுமளவுக்கு நறுக்குத் தெறித்தாற் போன்ற சுருக்கமான வாக்கியங்களில் கதை மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றது.
1960க்குப் பிறகு மலையகத்தில் புதிய வேகத்தோடு சஞ்சிகைகள் தோற்றுவிக்கப்பட்டன, பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் வெளிவந்த நாவல்கள் இன்னும் நூலுருவம் பெறவில்லை. இவ்வாறு தோன்றிய பத்திரிகைகள் இடையில் நின்று போனதால் முடிவுறாத நாவல்களாகப் பல காணப்படுகின்றன. இன்னும் பேசப்படுகிற - இக்கால கட்டத்தின் எழுச்சிக்குப் பெரிதும் உழைத்த மலைமுரசு' சஞ்சிகையில் வெளிவந்த இடிந்தமாளிகை, மலைப்பொறி சஞ்சிகையில் வெளிவந்த கடமையின் வெற்றி, விமோசனம் இவற்றுள் சிலவாகும்.
'சங்கு' என்ற பத்திரிகை இவ்விதம் நின்றுபோன ஒன்று. இதில் வெளியான கே. டி. கே. பிள்ளை எழுதிய “சரிந்த வாழ்வு" (1962) இந்தத் தொழிலாள மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையாக இருந்த பிரஜாவுரிமைபற்றிப் பேசுகிற நாவல் முயற்சி. வெள்ளைச்சாமி, வெள்ளையம்மா, மகன் வேலன் என்ற ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. வெள்ளைச்சாமிக்குப் பிரஜா வுரிமையில்லை. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுகின்றான்.
84 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

மகனையும் மனைவியையும் இலங்கையில் விட்டுச் சென்ற அவன் மன ஓட்டத்தை, “சரி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கள்ளத்தோணியில் வந்து விட்டோமென்று வைத்துக்கொள்வோம். இலங்கை அரசாங்கத்தின் ரகசியப்பொலிஸ் கண்ணைக்கட்டி விட்டு சப்ரகமுவ மாகாணத்தில் குடியேறிவிடலாம்.” என்று கே. டி. கே. பிள்ளை எழுதுகிறார்.
ஐம்பதுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரில் சிலர் கள்ளத்தோணிகள்' என்று முத்திரையிடப்பட்டு "சிலேவ் ஐலண்ட்” தடைமுகாமில் அடைக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டனர். உண்மையில் அவர்கள் திருட்டுத்தனமாகவேனும் இலங்கையிலிருக்கும் தமது குடும்பத்தினரோடு சேர்ந்து கொள்ள மீண்டும் இலங்கைக்கு வந்தனர். இதை ஆவணப்படுத்தியுள்ள சரிந்தவாழ்வுநூல் வடிவில் வரவில்லை.
அறுபதுகளில் மலையகத்திலேற்பட்ட இலக்கிய விழிப்புக்கு உருவம் அமைக்க முனைந்தவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த செய்தி பத்திரிகையில் டி. எஸ். இராஜு நெடுந்தூரம் (1964) என்ற தொடர் நாவலை எழுதியுள்ளார். மலையக மக்களின் வரலாற்றை விளக்கும் முறையில் அமைந்த இந்தத் தொடர் நாவல் நாற்பத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டது. மாத்தளை வடிவேலன் எழுதிய தொடுவானம் தொடர் நாவலும் தெளிவத்தை ஜோசப் 'அஞ்சலி சஞ்சிகையில் எழுதிய மாறுதல்கள் தொடர் நாவலும் இன்னும் நூலுருப்பெறக் காணோம்.
பத்திரிகைத் தொடர் நாவலாக தினகரனில் 1987க்குப் பிறகு வெளிவந்த 'வந்த துன்பம் போதும்; அவளுக்கு அவன் துணை';
நாவல்கள் 85

Page 49
பூங்கோதை புயலானாள்', 'இதயத்தில் இணைந்த இரு மலர்கள் ஆகியவைகளை எழுதியவர் மாத்தளை ரோகிணி. இது தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் தவசித்தேவர் அய்யாத்துரையின் புனைபெயர். இவைகளுள் இதயத்தில் இணைந்த இருமலர்கள் மாத்திரமே நூல் வடிவில் வந்துள்ளது (1997)
இந்த நாவலில் வசந்தி, சிவகாமி என்ற பெண்கள் கதாநாயகன் ராமுவின் வாழ்வில் குறுக்கிடுகின்றார்கள். இருவருமே இறந்து போய் இதயத்தில் இருமலர்களாக இணைகிறார்கள். இது ஒரு தொழிற்சங்கவாதியைக் கதாநாயகனாகக் கொண்டு நாவலா சிரியனின் சுயசரிதையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதில் வரும் சிவகாமி என்ற விதவைப்பெண் தொழிற்சங்கப்பணியில் ஈடுபடுவதாகச் சித்தரிக்கப்படுகிறது.
1963ல் தினகரனில் தொடராக வந்த தனது மலைக்கொழுந்து நாவலை விரைவாகவே நூலாக்கிப் பார்த்தவர் நந்தி என்கிற டாக்டர் செ. சிவஞானசுந்தரம். இவர் மலைநாட்டில், ஐம்பதுகளின் இறுதியில் தொழில் நிமித்தம் தொடர்ந்து வாழ்ந்தவர். மலைநாட்டு மக்களின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறையும் அநுதாபமும் கொண்டவர். அவர்களின் இன்ப துன்பங்களை நன்குணர்ந்தவர். அவர் அன்பை வண்ணக் குழம்பாக்கி ஆர்வம் என்னும் தூரிகையால் தீட்டிய கதைதான் மலைக்கொழுந்து. (மலைக்கொழுந்து-பக்கம் 10-1964) குறுக்குவழி’ என்று தானெழுதிய சிறுகதை ஒன்றே இவ்விதம் வளர்ந்து நாவலாகியது என்று நந்தி குறிப்பிடுகின்றார். வாசித்து ரசிப்பதற்கான காதல் நிரம்பிய நாவல். இதில் வரும் மலையப்பன், வள்ளி, வீராயி,
86 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

காத்தான், ரங்கசாமி, சிதம்பரம், மீனாட்சி போன்ற பாத்திரங்கள் வாசிப்பவரின் மனதில் மனித நாடகத்தை நடாத்தி மனதில் மாறாத முத்திரையைப் பதித்துவிடுகின்றன என்பார் அமரர் கலாநிதி சு. வித்தியானந்தன் (மலைக்கொழுந்து - பக்கம் 6). இத்தொடர் 'தினகரனில் வந்தபோது, இந்நூலாசிரியருக்கும் டாக்டர் நந்திக்கும் கடிதத் தொடர்பும் நேரடி அறிமுகமுமிருந்தன. நூலின் முன்னுரையில் நந்தி இதை மறைமுகமாகக் குறித்துள்ளார்.
கோகிலம் சுப்பையா எழுதி சென்னை 'தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக நூலுருவில் வெளியான நாவல்தூரத்துப்பச்சை(1964).
தமிழகப் பிரசுரலாயங்களுடன் தொடர்புகள் வைத்திருந்த டொமினிக் ஜிவா, க. கைலாசபதி, கே, டானியல், எஸ். கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் ஆகிய இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்த சமயம், பொத்தாம் பொதுக்கென்று வந்த இந்த நாவல் வாசகர்களிடையேயும் மலையக எழுத்தாளர்களிடையேயும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.
தென்னிந்தியாவிலிருந்து கண்டிச்சீமை என்றறியப்பட்ட இலங்கைக்கு, புதுவாழ்வு தேடி எண்ணற்ற வசீகர எதிர்பார்ப்புகளுடன் குடி பெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை. இந்திய வம்சாவளி மக்களின் ஆரம்பகால சோக வரலாற்றைச் சித்திரிக்கும் நாவலாக மிளிரும் இதில் மூன்று தலைமுறையினரின் கதை சொல்லப்படுகிறது.
நாவல்கள் 87

Page 50
“தேயிலைக்காப்பிச் செடிகளின் தூர்களில் பொற்காசுகள் குவிந்து கிடப்பதாகவும், அதை அள்ளி அள்ளி ஊருக்குக் கொண்டு வருவது போலவும் சேந்தூர் கிராமத்தில் எல்லோரும் இவனை அதிசயத்தோடு பார்ப்பதாகவும், வள்ளியை நல்ல இடத்தில் மணம் முடித்து நல்ல நிலையில் கண்டு களிப்பதாகவும் அவன் எத்தனை எத்தனையோ கற்பனைக் கனவுகள் கண்டுவந்தான்.
“அவன் கற்பனையெல்லாம் இலங்கையில் பணத்தைக் குவித்துக் கொண்டு வந்து இங்கே பெரியவீடு வாசல் கட்டிக் கொண்டு நிம்மதியாகப் பசி பட்டினியின்றி வாழவேண்டும் என்பதே என்று கோகிலம் சுப்பையா வேலன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறார். இந்த வேலன், வள்ளி என்ற தன்னுடைய சிறுமிப்பருவத்தில் இருக்கும் மகளோடு இலங்கை வருகிறான். இந்த வள்ளிதான் நாவலின் பிரதான பாத்திரம்.
இந்நாவல் 1948க்கு முற்பட்ட, காலனித்துவ இலங்கையின் தேயிலைத்தோட்ட வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. இலங்கை வாழ்வு தென்னிந்தியத் தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தமட்டில் தூரத்துப்பச்சை தான் என்று கூறும் இந்நாவல், பெருந்தோட்ட ஆசிரியப் பயிற்சிக்கான பாடநூலாக வைக்கப்பட்ட பெருமையுடையது.
1958ல் இலங்கை இனமுறுகலில் இந்தியாவுக்குச் சென்ற கோகிலம் சுப்பையா, செக்கோஸ்லெவோக்கியா தமிழறிஞர் கமல் சுவலபலவுடன் ஏற்பட்ட தொடர்பின் தூண்டுதலால் இந்த நாவலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். வேறெந்தப் படைப்பும் இவரது பெயரில் நூலாக வந்திருப்பதாக அறியக்கிடைக்கவில்லை.
88 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

எழுத்தை ஒர் ஆயுதமாகப் பாவிக்கும் மனோபாவம் கொண்ட யோ. பெனடிக்ற்பாலன் எழுதி நூலாக வெளிவந்த நாவல் சொந்தக்காரன் (1968), மலைநாட்டுக் கல்லூரிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றிய பெனடிக்ற்பாலன் மலையக மக்களின் துன்பதுயரங்களை அவதானித்து, அவர்களின் மிக அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிட வசதி போதாதென்ற நிர்க்கதி நிலைமையையும் அதற்கான மாற்றத்தையும் இந்நாவலில் விபரிக்கின்றார். குடியிருக்கும் காம்பரா’ என்பது வெறுமனே ஓரிடமல்ல, அது ஒர் உரிமை, தொழிலாளிக்கும் தோட்டத்துக்குமுள்ள உறவு என்று கூறும் இந்நாவல், தாம் வாழும் மண்ணைத் தமது தாயகமாக வரிக்கும் எண்ணம் மேலோங்கிய காலத்தில் எழுதப்பட்டது. கருத்துக்களுக்காகவும் கதைகளுக்காகவும் புகழடைந்தது இந்நாவல்.
தாயகம் நூலாகவே எழுதப்பட்ட நாவல் (1969). தொ. சிக்கன்ராஜு (மலைச்செல்வன், டி. எஸ். இராஜு) இலங்கையில் வாழுகின்ற போது "நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்று செயற்பட்டவர். பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தால் இலங்கையில் தொடர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்தவர். இவரது மன உணர்வுகள், இந்தியா போவதா இலங்கையில் இருப்பதா என்ற மன ஊசலாட்டம் இக்குறுநாவலில் தெரிகிறது. இவ்வுணர்வுகளை விவாதங்களாகவும் உரையாடல்களாகவும் கொண்டு சென்றுள்ளார்.
இலங்கைத் தமிழ் நூல் வெளியீடுகளைப் பொறுத்தமட்டில், வீரகேசரிப் பிரசுரம் பிரமிக்கதக்க சாதனை புரிந்தது. ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களின் தரமான படைப்புக்களை மாதா மாதம்
நாவல்கள் 89

Page 51
நூலுருவில் கொண்டு வரும் இதன் திட்டத்தில் கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை மறுபிரசுரம் பெற்றதற்குப் பின்னால், தெளிவத்தை ஜோசப்எழுதியகாலங்கள் சாவதில்லை(1974) என்ற மலையக நாவல் வெளிவந்தது
‘வீரகேசரி எழுத்தாளன் என்று பொதுவாகவும், நல்ல சிறுகதை எழுத்தாளன் என்று இலக்கியக்காரர்களாலும் கருதப்படும் என்னுடைய இந்த நாவலை, வீரகேசரி தனது 21 - வது பிரசுரமாக வெளியிட்டிருக்கிறது"(காலங்கள் சாவதில்லை-(முன்னுரை) என்று கூறும் தெளிவத்தை ஜோசப்பின் நூல்வடிவம் பெற்ற ஒரே நாவல் இதுதான். இவர் எழுதிய குறுநாவல்கள் மூன்றினை உள்ளடக்கிய பாலாயி'தொகுதிதுரைவிபதிப்பக வெளியீடாக (1997) வந்துள்ளது. இவர் எழுதிய 'கருணையினால் அல்ல, நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் போன்றவை பத்திரிகைத் தொடர்களாகவே அமைந்து போயின.
தோட்டத் தொழிலாளர்கள் நாள் சம்பளம் பெறுபவர்கள். அவர்களது வேலை செய்ததற்கான வேதனம் செக்ரோலில் பதியப்படும் வேலை செய்யப்பட்ட நாட்களுக்கான பதிவைப் பொறுத்தே அமையும்.
அரிவாள் கையிலிருந்தால் ஒட்டியும் அறுக்கலாம், விட்டும் அறுக்கலாம் என்பதற்கமைய 'செக்ரோலைப்பயன்படுத்தித் தோட்டத்தில் நடைபெறும் சுரண்டல்களை அப்பட்டமாகக் கூறுகிறது இந்த நாவல். சுரண்டலுக்கெதிராகச் செயற்படும் கண்ணுசாமி
90 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

துப்பாக்கிக்கு இரையாவது தோட்டங்களில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளின் யதார்த்தச் சித்திரிப்பு
“ஆபீஸில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து ஆறுமுகம் உயர்த்திய போர்க் கொடியின் கீழ் ஒரு கண்ணுசாமி என்ன ஓராயிரம் கண்ணுசாமிகள் சாகலாம்; கண்ணம்மாக்கள் சாகலாம். ஆனால் காலம், அது சாவதில்லை” (காலங்கள் சாவதில்லை - பக்கம் 24) என்றெழுதும் தெளிவத்தை ஜோசப்பின் வளமான நடையில், நிகழ்ச்சிக் கோர்வைகள் பின்னப்பட்டு, நாவலுக்கு நாடக சுவாரசியத்தைத் தருகின்றது. மற்ற மலையக நாவல்களில் வழக்கமாகத் தோட்டத்துரையே வில்லனாகச் சித்தரிக்கப்படுவர். இந்நாவலில் தோட்டத்து பெரியகிளாக்கர் அவ்விதம் சித்தரிக்கப்படுகிறார். வரலாறு அவளைத் தோற்று விட்டது (1976) என்ற நாவலை கே. ஆர். டேவிட் எழுதினார்.
குருவம்மா என்ற ஒரு பெண் தொழிலாளி, தனது அக்காவைக் கெடுத்து அவளது பரிதாபமான சாவுக்குக் காரணமான தோட்டத்துரைக்கு, தன்னை இரையாக்கி, கடைசியில் அவன் நித்திரையிலிருக்கும் போது பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்வதாக அமைந்த செயற்கைத் தன்மைகள் நிறைந்த நாவல். இதுவும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த நாவல்தான்
அன்னியர்களின் கீழ் தேயிலைத் தோட்டங்களில் அல்லலுற்ற தமிழ்த் தொழிலாளர்கள், தோட்டங்கள் யாவும் தேசிய மாக்கப்படுவதை வரவேற்றார்கள். தேசிய மயப்படுத்தப்பட்ட தோட்டங்களில் தமது விமோசனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த
நாவல்கள் 91

Page 52
தொழிலாளர்கள், அரசியல் சந்தர்ப்ப வாதிகளின் சுயநல சுரண்டுதலுக்குள்ளாவதையும், தொழிலாளர்கள் தமிழர் சிங்களவர் என்று இனவாரியாகப் பிளவுறுவதையும் சித்தரிக்கின்ற நாவல் தி. ஞானசேகரன் எழுதிய குருதி மலை (1979). இதில் கண்டக்டர் வில்லன் பாத்திரம் ஏற்கிறார். தேசிய மயப்படுத்தப்பட்ட தோட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்ட காணிப்பங்கீடுகள், அவற்றுக்கான அரசியல் பின்னணி, இரு சமூகங்களிடையே தோன்றிய பகை உண்ர்வு, தோட்ட லயன்கள் தீயில் வெந்து சாம்பராவது, அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுவது என்ற சமகால நிகழ்வுகள் இந்நாவலில் ஆவணமாக்கப்பட்டு மலையக நாவல் இலக்கியத்தில் சிறப்பானதோர் இடத்தைக் குருதிமலை பெறுகிறது. இலங்கை சாகித்தியப் பரிசு பெற்ற இந்த நாவல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் எம். ஏ. பாடத்திட்டத்துக்கான துணை நூலாக வைக்கப்பட்ட சிறப்பைப் பெற்றது.
தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களும், செய்யப்பட்ட சமூக நலன்புரித் திட்டங்கள் சூறையாடப்பட்டமையும், தமிழ்த் தொழிலாளர்களுக்குப்பயன்படாமற் போனதையும் தனது லயத்துச் சிறைகள் (1994) நாவலில் தி. ஞானசேகரன் விவரிக்கிறார். இந்நாவலில் மலையகத் தோட்டத்தின் களங்கள் எல்லாமே சித்தரிக்கப்படுகின்றன. பெரியகங்காணி வாழ்க்கை முறை, அம்முறையில் நிலவிய லாபநஷ்டங்கள், காலனித்துவ நிர்வாகம், வெள்ளைத்துரையின் நிர்வாகத்திறமை நிறையவே விபரிக்கப்பட்டுள்ளன. இந்த மக்களின் கஷ்டநிலை, காணிவாங்குவதில் அவர்களுக்குள்ள தடைகள், தொண்டர் ஆசிரியர் அறிமுகம், குடும்பக் கட்டுப்பாடு, தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் என்பவை
92 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

குறிக்கப்படுகின்றன. வாழ்க்கையில் இந்த மக்கள் பின் தங்கிப் போனதற்குக் காரணம் தொழிலுக்குத் தோட்டத்தை மட்டுமே நம்பியிருந்ததால்தான் என்று கூறும் இந்த நாவல் மலையகத் தொழிலாளர்களினால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டது.
s سمصر
தமிழகத்து ‘சுபமங்களாவும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்திய ஈழக் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற ஞானசேகரனின் கவ்வாத்து நூல்வடிவில் வந்துள்ளது (1996).
கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசையில்லை என்ற நாவலை (1989) நூல்வடிவில் தந்த தி. இராஜகோபாலனின் சிரிக்கும் செவ்வந்திப்பூ வீரகேசரியில் (1993) தொடராக வந்தது. மலையக மக்களின் வரலாற்றைக் கூறும் இந்நாவல் நூல்வடிவில் வருவது அவசியம்.
பிரதேச நாவல், வட்டாரநாவல் என்ற சொற்றொடர்கள் இன்று பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. ஹோம்வின் கார்லன்ட் என்பார் பிரதேச நாவலுக்கு வரைவிலக்கணம் கூறுகையில் “குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மண்தோய வாழ்ந்தவரல்லாத ஒருவரால் எழுதப்படமுடியாத விதத்தில் அமையும் நாவல் பிரதேச நாவலாகச் சிறப்பான வெற்றி காண்கிறது” என்கிறார்.
யாழ்ப்பாணப் பிரதேச நாவல் ஒன்றை எழுதி நாணயம் (1981) நாவலுக்கு சாகித்திய மண்டலப்பரிசைப் பெற்ற புலோலியூர் சதாசிவம், மலையகப் பிரதேச நாவல் ஒன்றை மூட்டத்தினுள்ளே
நாவல்கள் 93

Page 53
என்று எழுதி வீரகேசரியின் பரிசினைப் பெற்றார். இந்நாவல் 1983ல் நூல் வடிவில் வெளிவந்தது.
பிரதேச இலக்கியத்தின் ஒரு பரிமாணமாக சமூகவியல், மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் ஆகிய அம்சங்களின் பகைப்புலத்தில் இந்நாவலை எழுதியிருப்பதாக இந்நூலின் முன்னுரையில் புலோலியூர் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார். 1965ம் ஆண்டிலிருந்து தொழில் நிமித்தம் தொடர்ந்து மலை நாட்டிலேயே வாழும் இவரது இந்த நாவல் 34 அத்தியாயங்களைக் கொண்டது. தோட்டம் சார்ந்த - தொடுவானம் வரையும் உள்ள - பச்சையும் பசுமையும் நிறைந்த பிரதேசத்தை நம்பிக்கை ஒளியுடன் அவர்கள் நோக்குகிறார்கள்’ என்று முடிகிறது இந்த நாவல்.
அறுபதுகளின் பின் கூறுகளில் சிறு கதை ஆசிரியராக அறிமுகமான மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், எல்லை தாண்டா அகதிகள், அவள் வாழத்தான் போகிறாள் என்ற நாவல்களும் நான்காவது உலகம் குறு நாவல் தொகுதியும் வெளிவந்துள்ளன.
அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் (1984) நாவலில், தோட்டப்புற இளைஞன் ஒருவன் மாணிக்கக்கல் தோண்டுவதற்கு களுகங்கை வட்டாரத்துக்குச் சென்று அல்லலுறுவதைச் சித்தரிக்கிறார். இந்த நாவல் குறித்து “கனவுப் பயிர்வளர்த்து ஆசையின் பலன்களை அறுவடை செய்வதற்காக அரும்பாடுபடுகிற மனிதர்களைப் பற்றிய கதை’ என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.
94 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

இதில் வரும் மணியன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் “கானகப் பகுதியில் இன, மத, ஒற்றுமையோடு அல்லலுறும் வாழ்க்கை தோட்டப்புற அடிமை வாழ்க்கையை விட மேலானது" என்று அடிக்கடி கூறப்படுகிறது."
எல்லை தாண்டா அகதிகள் (1994) நாவலில் மாத்தனை சோமுவின் எழுத்து நடையில் முதிர்ச்சி தெரிகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை துயரம் மிகுந்த ஒன்று. துன்பக்கேணி என்ற ஒரு சொல்லால் புதுமைப்பித்தன் அந்த மக்களின் நித்திய துயரத்தை அற்புதமாக 1930 களில் உருவகித்தார். சுதந்திர இலங்கையில் அந்த மக்களுக்கு நிரந்தர அகதி வாழ்க்கைதான். சொந்தமென்று கூறிக் கொள்ள ஒன்றுமில்லாத அந்த மக்களின் உலகம் அவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தோட்ட எல்லைக்குள்தான் என்பதைக் குறிக்கும் யதார்த்தமான நாவலிது. வீரகேசரிப் போட்டிக்கு சிறுகதையாக எழுதப்பட்டு முதற் பரிசினைப்பெற்ற 'எல்லை தாண்டா அகதிகள்’ அதே பெயரில் பின்னால் நாவலாக விரித்தெழுதப்பட்டது என்கிறார் மாத்தளைச் சோமு.
அவள் வாழத்தான் போகிறாள் (1996) என்கிற நாவல்தான் தானெழுதிய முதல் நாவல், புத்தகவடிவில் இப்போதுதான் வருகிறது என்று கூறுகிறார் மாத்தளைச் சோமு. 1980ல் எழுதப்பட்டு 1989ல் தினகரனில் சில அத்தியாயங்கள் மாத்திரம் வெளிவந்து, பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் தாயகம் வார இதழில் முழுமையாக வெளிவந்த இந்த நாவல், வாசிக்கும்போதே அவரது முதல் நாவல் இதுவாகத்தானிருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வைக்கிறது.
நாவல்கள் 95

Page 54
இலங்கையை விட்டு வெளியேறிக் கடல் கடந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளான போதும், தமது இலக்கிய உணர்வினையும், சமுதாய உணர்வினையும் அணையவிடாது பேணி வளர்த்துப் புகலிட இலக்கியம் படைத்து வருபவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் மாத்தளைச் சோமு இந்த விதத்தில் கவனத்துக்குரிய ஒருவர். உண்மையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையக நாவலாசிரியர் இவரொருவர்தான்.
நாடகக் கலைஞரான மாத்தளைக் கார்த்திக்கேசு எழுதிய நூல் வடிவில் வந்திருக்கும் நாவல் வழிபிறந்தது (1992). வல்லிக்கண்ணனின் முன்னுரையோடு வெளிவந்திருக்கும் இந்நாவலில், இருபதுக்கு மேற்பட்ட மேடை நாடகங்களை அரங்கேற்றியும் குணசித்திர பாத்திரங்களில் நடித்தும் பெற்ற அநுபவங்களின் செல்வாக்கைக் காணலாம். பெரியசாமி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் கூறப்படும் தீவிர அரசியல், தொழிற்சங்க கருத்துக்கள் நாவலோடு ஒட்டிவராது கருத்துக்களாகவே தனித்து நிற்கின்றன. அரசியலும் தொழிற்சங்கமும் தொழிலாளிகளுக்குப் பயனளிக்காது வீணடிக்கப்பட்டிருப்பதை நாவல் வெளிப் படுத்துகிறது.
மலையக இலக்கியத்தோடு தம்மைப் பின்னிப் பிணைத்துக் கொண்ட ஸி. வி. வேலுப்பிள்ளை, க. கைலாசபதியின் அஞ்சலிக் கூட்டத்தில் (1982) பின் வருமாறு கூறினார்.
நாவல் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு அமரர் கைலாசபதியிடமிருந்து தான் வந்தது. மலை நாட்டிலிருந்து இன்னும்
96 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

ஒரு நல்ல நாவல் வரவில்லை. நீங்கள் அதை எழுதவேண்டும். தோட்டங்களில் உத்தியோகம் செய்கின்ற யாழ்ப்பாணத்தவர் என்ன செய்கின்றார்கள் என்பதை எனக்குச் சொல்லி இருக்கின்றீர்கள். அவைகளைப் பச்சையாக இந்த நாவலில் எழுதுங்கள். நான் பத்திரிகையில் போடுகிறேன். அப்போது தான் இவர்களுக்குச் சுரணை வரும்” என்ற அவரது வார்த்தைகளுக்கிணங்க நான் எழுதிய நாவலை வாசித்த பின்னர் சில நண்பர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்"
மக்களின் வாழ்க்கையை - தமது பட்டனுபவமாகப் பெற்றிருந்தவர்கள் நாவல்கள் படைத்துள்ளனர். அந்த வாழ்க்கையைப் பார்த்த அநுபவத்தைத் தமது பட்டனுபவத்தோடு ஒப்பிட்டு நாவல்கள் படைத்தவர்களும் இருக்கின்றார்கள். இந்த இருசாராரும் மலையக நாவல்களுக்குப் புதிய பரிணாமத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பணியில் தமிழகத்தைச் சார்ந்த கொ. மா. கோதண்டம் எழுதிய ஜன்மபூமிகள் (1984) ராஜம் கிருஷ்ணன் எழுதிய 1986) மாணிக்க கங்கை என்ற நாவல்களும், தீபம் சஞ்சிகையில் நா. பார்த்த சாரதி எழுதிய "மேகம் மூடிய மலைகளுக்குப் பின்னால் குறுநாவலும் சேர்ந்துள்ளன. இதைக் கொ. மா. கோதண்டத்தின் வரிகளில் காணக்கிடைக்கிறது.
பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தால், இந்தியாவிலும் இலங்கையிலும் என்று பிரிந்துபோன தேயிலைத் தோட்டத்து தெய்வானையும் ராமசாமியும் யாழ்ப்பாணத்து ஆசிரியர் ஒருவரின் வழிநடத்தலில் கச்சதீவில் சந்திக்கிறார்கள் என்று நிகழ்ச்சிகளைப் பின்னிக் கதையை நகர்த்தும் ஆசிரியர் தன் முன்னுரையில்"இதனை
நாவல்கள் 97

Page 55
நாவலாக எழுதியதில் நான் பெற்றது வெற்றியா தோல்வியா என்று சிந்திப்பதை விட, பிறந்த நாடே அனாதைகள், அகதிகள் என்று ஒதுக்கும் ஒரு அவல வாழ்க்கையைச் சொல்லி அதனால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே எனக்கு ஒரு திருப்தியைத் தருகிறது” என்கிறார்.
முடிவுரையாக
மலையக மக்களின் வரலாற்றில் நடந்த 1948ல் நிறைவேற்றபட்ட பிரஜாவுரிமைச் சட்டமும் 1964ல் செய்து கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும், இரு பெரும் அநீதிகளாகும்.
பிரஜாவுரிமைச் சட்டத்தால் இந்த மக்கள் தமது அரசியல் பலத்தை இழந்து போனார்கள்.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தால் இந்த மக்கள் தமது எண்ணிக்கைப் பலத்தை இழந்து போனார்கள்.
இந்த வதைகளிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து வரும் இச்சமூகத்தினர் தமது இலக்கிய உருவாக்கத்தில் காட்டி வரும் ஆர்வம் இன்னும் ஆழமாக ஆராயப்படுதல் வேண்டும்.
தமது சொந்த இலக்கியத்தை உருவாக்கியும், தமது வரலாற்றை ஒழுங்கமைத்தும் வருகிற மலையகத்தினர் இலங்கையின் இலக்கியச் செழுமைக்கு வளம் சேர்த்து வருவது கண்கூடு.
98 மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

அடிக்குறிப்புகள்
முதலாம் அத்தியாயம்
எஸ். தொண்டமான், ஹன்சார்ட் 1948, பக்கம் 518. தலையங்கம், வீரகேசரி நாளிதழ், 5 - 3 - 1950 சி. வி. வேலுப்பிள்ளை, செய்தி, 9.5-1965 வீரகேசரி, 27-10-1963 - கேட்டதும் கிடைக்கும் பகுதியில், மாவத்தகம வி. ஆர். நாராயணசாமியின் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில்,
இரண்டாம் அத்தியாயம்
C. R. de. Silva-Ceylon under the British occupation - 1962 கண்டி பிரதானிகள் ஒப்பந்தம். 14-2-1815 கண்டி மன்னன் ஒப்பந்தம் 20-12-1815 ஒப்பங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. Jane Davy - An Account of the Interior of Ceylon and of its inhabitants - 1821 அருள் வாக்கி - அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் - 1973
மூன்றாம் அத்தியாயம் M. Y. Gooneratne - English Literature in Ceylon
( 1815-1878) - 1968 கிருஷிக்கும்மி - விவசாய நூல். ஏ. ஜோசப் - 1869
இங்கே வா - 1924 அறிவு - Marsh Smith - 1922 என்னவேணும் - 1928 அடேயப்பா - D. A. Wickins - 1928 கூலித் தமிழ் - Well, - 1922 பி. பண்டாரம் - தேயிலைத் தோட்டத் தெம்மாங்கு-1910 டி. கே. எம். ஜபார் - தேயிலை கொய்யும் தெம்மாங்கு -1908
99.

Page 56
6. பி. வில்சன் - கும்மியோகும்மி கோப்பிக் காட்டுக்
கும்மி - 1918 7. நடேசய்யர் - Indo Ceylon Crisis - 1941 8. ஸி. வி. வேலுப்பிள்ளை - புதுமை இலக்கியம் - 1960
நான்காம் அத்தியாயம்
1. டாக்டர் மதியழகன் - மலேஷியத் தமிழ் நாவல்கள் 2. - மலையக கலை இலக்கியப் பேரவை, கண்டி சத்யோதய கேட்போர் கூடத்தில் 7.11.93ல் நடாத்திய நாட்டாரியல் கருத்தரங்கு. 3. C.P.S.H.De Silva – A Statical Survey of Elections
- 1979 4. மூலையில் குந்திய முதியோன் கோ. நடேசய்யர் தேசபக்தன் நாளிதழில்
3-10-1924ல் எழுதிய தொடர் நாவல். 5. ந. மீனாட்சியம்மை - தொழிலாளர் சட்டக்கும்மி - 1931
எஸ். ஆர். எம். பெரியாம்பிள்ளை, பி. ஆர். பெரியசாமி, ஜபார், மா. சொ. ஜம்புலிங்கம், எஸ். எஸ். நாதன் முதலியோரின் படைப்புகள். சாரல் நாடன் தேசபக்தன் கோ. நடேசய்யர் - 1986 உழைக்கப் பிறந்தவர்கள், துரைவி பதிப்பகம் - 1997
ஐந்தாம் அத்தியாயம்
1. சி. வி. வேலுப்பிள்ளை - தினகரன் - 1960 செய்தி - 1963 அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு மலர் - 1974
2. இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம் - 25.07.1939
3. டட்லி சேனநாயக்கா - எஸ். ஆர். எம். பெரியாம்பிள்ளை - 1973
100

எஸ். ஜே.வி. செல்வநாயகம் - கா. பெரியசாமிப்பிள்ளை, - 1977
ஜானப் அப்துல் அஸிஸ் - கோவிந்தசாமித் தேவர் - 1964 4. Federation Quarterly Volume V No. I - 1951 5. எம். எஸ். கிருஷ்ணம்மா - சீர்திருத்தக் கீதம் - 1967 6. எஸ். பெரியக்கா - தொழிலாளியின் துயர் -- 967؟ 7. ந. மீனாட்சியம்மை - தொழிலாளர் சட்டக் கும்மி - 1931
ஆறாம் அத்தியாயம்
1. இர. சிவலிங்கம் - நாடற்றவர் கதை, முன்னுரை - 1987 2. ஹட்டன், கைலன்ஸ் கல்லூரி செந்தமிழ்க் கழகம் நடாத்திய தமிழ் விழா
1.03.1963. 3. கனக செந்திநாதன் - ஈழத்தின் இலக்கியவளர்ச்சி-அரசு வெளியீடு-1964 4. கதைக் கணிகள் - சிறுகதைத் தொகுதி வீரகேசரி வெளியீடு - 1971
ஏழாம் அத்தியாயம்
தேசநேசன், தேசபக்தன், தோட்டத் தொழிலாளி, Forward, Citizen ஏடுகளில் கோ. நடேசய்யர் எழுதிய தலையங்கங்கள். தேசபக்தன், இலங்கை இந்தியன் ஏடுகளில் நல்லம்மா சத்யவாகேஸ்வரய்யா, மீனாட்சியம்மை நடேச ஐயர் ஆகியோரின் கட்டுரைகள். பி. ஆர். பெரியசாமி - தோட்டத் தொழிலாளியின் வீரப்போராட்டம். -1957 சாரல் நாடன் - தேசபக்தன் கோ.நடேசய்யர். - 1988 சாரல் நாடன் - பத்திரிகையாளர் நடேசய்யர். - 1998 மாத்தளை வடிவேலன் - மலையக பாரம்பரியக் கலைகள் - 1992 மாத்தளை வடிவேலன் - மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும்
வரலாறும் - 1997
101

Page 57
1
3
7.
எட்டாம் அத்தியாயம்
மு. கு. ஈழக்குமார் - குறிஞ்சிப்பூ - கவிதா நிலையம் - 1965 ஸி. வி. வேலுப்பிள்ளை - தேயிலைத் தோட்டத்திலே தலையங்கம் - முரசு 5.759 நூலாசிரியருக்கு சக்தி பலா ஐயாவின் கடிதம். சாரல்நாடன் - தேசபக்தன் கோ. நசேய்யர் - 1988 நூலாசிரியருக்கு தலாத்தோயா கே. கணேஷன் கடிதம். குமரன் - தூவானம், குறிஞ்சிப் பண்ணை - 1967 அன்பு . செல்வன் - வாழாவா தோழா - 1995 தென்னவன் - குறிஞ்சித் தென்னவன் கவிதைகள் - 1987 . க. அருணாசலம் - இலங்கையில் தமிழ் ஆய்வு முயற்சிகள் - 1997
சி. குமார் - மாடும் விடும் - 1995 ?. அன்புச் செல்வன் - வாழவா தோழா - 1995
. எம். எஸ். பெனடிக்ஸ் - போர்க்களப் பூபாளங்கள் - 1996
ஒன்பதாம் அத்தியாயம்
எஸ். செல்வநாயகம் - சாமளா அல்லது காதல் போதனை - 22.1137 ஏ. போல் - சுந்தரமீளான் அல்லது காதலின்
வெற்றி - 19.3.38 ஜி. எஸ். எம். சாமுவேல் - கண்ணனின் காதலி - 21 10. 40 பி. எஸ். வராதரஜுலு நாயுடு - கோவிந்தன் அல்லது தேசிய
ஊழியன் - 20.842 கோ. நடேசய்யர், டபிள்யூ தகாநாயக்கா இருவரும் இவ்விதம் எதிர்த்து வாக்களித்தவர்கள். ஜனாப்அப்துல் அஸிஸ் அவர்களின் 75வதுபிறந்தநாள் மலர்-அக்டோபர்-1986 நவஜீவன் - 1950 செய்தி - 1964
102

நூல்களின் அட்டவணை
ஆ போல், சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி யூனியன் பிரஸ், கொழும்பு - 1937
G. S. M. சாமுவேல், கண்ணனின் காதலி, வித்தியாலோக அச்சுக்கூடம், இரத்தினபுரி - 1940
கே. கணேஸ், தீண்டத்தகாதவன் புதுமைப் பதிப்பகம், காரைக்குடி - 1947
கனக செந்திநாதன், ஈழத்தின் இலக்கிய வளர்ச்சி அரசு வெளியீடு, கொழும்பு-1964
கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை தமிழ்ப்பண்ணை,
சென்னை - 1964
தொ. சி. ராஜு, தாயகம் குறிஞ்சிப்பண்ணை,
நூரளை - 1969
கதைக்கனிகள், எஸ். எம். கார்மேகம் வீரகேசரி வெளியீடு - 1971
சி. வி. வேலுப்பிள்ளை, வீடற்றவன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட் சென்னை
நாடற்றவர்கதை, சி. வி. வேலுப்பிள்ளை, சூளைமேடு - 1987
103

Page 58
An Account of the Interior of Ceylon and of its Inhabitans Dr. John Davy London - 1821
The Knuckle, and other Poems Skeen William Colombo - 1869
Indo Ceylon Crisis Kodanta Ramaya Nateshiyer Ganesh Press
Hatton - 1941
F1 glish Literature in Ceylon (1815 - 1878) M. Y. Gooneratne,
TiSar PreSS
Dutugemunu Street,
Dehiwela,
Ceylon - 1968
A Statistical Survey of Eletions to the Legislatures of Sri Lanka (1911 - 1917)
C. P. S. H. De Silva
Marga Institute,
Colombo - 5 - 1979
Federation quarterly,
Published by The Ceylon Estates Employers' Federation 113, Steuart Place,
Colombo - 3
104