கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2

Page 1
இந்நூலில் உள்ள விமர்சனங்கள் யாவும் வேறுபடும் அளவுகளில் சமூக-அரசியற் பார்வைகளை முன்நிறுத்தியே எழுதப்பட்டுள்ள அதே வேளை எனது பார்வைதான் சரி என்ற நிலைப்பாட்ரஸ் அல்லாமல், தகவல்களினதும் ஆய்வுகள்,தும் விளக்கங்களதும் செம்மையையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளேன். விடயங்களை விளங்கிக் கொள்வதிலும் நூலின் சமூகப் பயன்பாடு தொடர்பான கருத்துரைப்பதிலும் எனது விழுமியங்கள் நூலாசிரியர்களினின்று வேறுபட்டிருப்பதால் மட்டுமே அக் கேள்விகள் எழவில்லை.
எனது முன்னைய விமர்சன நூலில் வந்த
கட்டுரைகளால் ஏற்பட்டுள்ள கோபங்கள் முற்றத் தணியுமுன்பே இந்த நூல் வருகிறது. நாம் எல்லாரையும் மகிழ்விக்க முடியாது. எவரையும் மகிழ்விக்கும் நோக்கில் எழுதப்படுவது விமர்சனமும் ஆகாது. என்னளவில் இவர் விமர்சனங்களும் விமர்சனத்துக்குரியனவே என்பதை வாசகர்கள் விளங்கிக்கொண்டாற் போதுமானது
--
 


Page 2

சிவசேகரத்தின் விமர்சனங்கள்-2
சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 85
நாற்பெயர்
ஆசிரியர்
பதிப்பு
வெளியீடு
விநியோகம்
ISBN
விலை
Title
Author
Publishers
Edition
Printers
Distributors
ISBN
Price
சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2. சிவானந்தம் சிவசேகரம்
தை 2002 தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிட்டட், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
955-8637-00-9
ரூபா. 150/-
Reviews by Sivasegaram - 02 Sivanandam Sivasegaram Dhesiya Kalai Ilakkiyap Peravai January 2002
Techno Printers
South Asian Books, Vasantham (Pvt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -11.
Tel: 335844
955-8637-00-9
RS. 150/-

பதிப்புரை
தமிழில் கடந்த காலங்களில் ஆக்க இலக்கியங்களின் நூல் வெளியிட்டு முயற்சிகள் மிக அருந்தலாக பகிரதப் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அந்நூல்கள் தொடர்பான விமர்சனங்கள் என்பன அவற்றுக்கு அனுசரணையானவையாகவோ அல்லது ஆதரவு தெரிவிப்பனவாகவோ அமைவதையே படைப்பாளரும் விரும்பினர். ஆக, புத்தக வியாபாரமும் விமர்சனங்களும் கைகோர்த்து நடைபயில்வதையே இலக்கிய நெஞ்சங்கள் விரும்பின.
நிலைமை இன்று மாறிவிட்டது. தமிழ் நாட்டில் மட்டுமன்றி ஈழத்திலும் கணனியின் வரவால் நூல்களின் வெளியீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இச்சூழலில் புத்தகப் பண்பாட்டை விருத்தி செய்ய வேண்டுமெனில் திறந்த விவாதங்களும் விமர்சனங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
விமர்சனங்களில் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள் குழுநிலை குறுங்குணங்கள் தவிர்க்கப்பட்டு மாற்று அணியினராயினும் ஆக்கபூர்வமாக கருத்துச் சொல்லும் துணிவும் தனிப்பட்ட நண்பரெனினும் தயங்காது தவறுகளைச் சுட்டிக்காட்டும் பண்பும் வளர்வதுவே நல்ல படைப்பிலக்கியச் சூழலை விருத்தி செய்வதற்கு அவசியமானதாகும்.
தமிழில் ஆய்வுப்பணி விருத்தியடைந்த அளவுக்கு விமர்சனப் பணியின் வேகம் போதுமானதாக அமையவில்லை. விமர்சனத் துறையில் முன்னணியில் நிற்கும் வெகு சிலரில் சிவசேகரமும் ஒருவர். அவரது விமர்சனங்களில் நாம் பல படைப்பாளர்களின் படைப்புகளைத் தரிசிக்கலாம். விவாதிக்கலாம். முதலாவது ‘விமர்சனங்கள்’ என்ற நூலை 1995ல் வெளியிட்டோம். இந்நூல் அவரது இரண்டாவது படைப்பாகும்.
கவிதை, நாடகம், மொழி பெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்துறை ஆற்றல் பெற்ற ஒரு சில எழுத்தாளருள் சிவசேகரமும் முக்கியமானவர்.
நூலில் காணப்படும் இவரது விமர்சனங்களே முடிந்த முடிவுகளல்ல. இவரது விருப்பின்படியும் கூட இவ் விமர்சனங்களையே விமர்சிக்கும் தெளிந்த ஞானச் செருக்குடன் நாம் எல்லோரும் மனந்திறந்து பேசுவோம். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
இல, 44, 3ம் மாடி, தேசிய கலை இலக்கியப் பேரவை. கொழும்பு மத்திய சந்தைத்தொகுதி
கொழும்பு - 11.
தொலைபேசி - 335844
1901-2002.

Page 4
மீண்டும் தயக்கங்களின்றி
இந்த நுாலில் இருபது விமர்சனங்கள் உள்ளன. பிரமிளின் படைப்புலகம் பற்றிய விமர்சனம் அவரது எல்லாக் கவிதைகளும் கொண்ட தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்டாலும், அது அவரது பொதுவான ஆளுமை பற்றியது. அது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கிற்காக எழுதி வாசிக்கப்பட்ட கட்டுரையொன்றன் சிறிது விரிவாக்கப்பட்ட வடிவம். மற்ற அனைத்தும் நேரடியாகவே நுால்கள் தொடர்பானவை. இவை யாவும் ‘விமர்சனங்கள்’ என்ற என் கட்டுரைத் தொகுதிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. அறிமுகக் குறிப்புக்கள் அல்லது சுருக்கமான விமர்சனக் குறிப்புக்கள் எனக் கருதக்கூடிய கட்டுரைகளைத் தவிர்த்துச் சற்று விரிவான விமர்சனங்களே இதில் உள்ளன.
ஜெயமோகனுடைய நாவல் தொடர்பான விமர்சனத்திலும் டானியலின் நாவல் தொடர்பானதிலும் அவர்களது அரசியற் பார்வையையும் கணிசமான அளவுக்கு விமர்சிக்க நேர்ந்துள்ளது. ஜி. நாகராஜனின் படைப்புக்கள் பற்றியதும் அவரது சமூக அரசியற் பார்வை சார்பாகவே விமர்சிக்கப்பட்டுள்ளது. மூன்று தமிழாக்கங்களின் விமர்சனங்களும் உள்ளடங்குகின்றன. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாவல்கள், ஒன்று தமிழாக்கப்பட்ட பெண்ணியக் கவிதைகள். இவ்வகையில், இத் தொகுதியில் உள்ள விமர்சனங்கள் யாவுமே சமூக அரசியற் பார்வைகளை முன்நிறுத்தி எழுதப்பட்டவையே.
டானியல், அ. மார்க்ஸ், ரவிக்குமார், எஸ். வி. ராஜதுரை - வ. கீதா, ஞானி ஆகியோரின் நுால்களும் யமுனா ராஜேந்திரனின் தமிழாக்கத்திலான கவிதைகளும் என். கே. மகாலிங்கம் தமிழாக்கிய சினுவா ஆச்சியின் நாவலும் பற்றி எழுதியன தமிழகத்தில் 'காலச்சுவடு சஞ்சிகையில் வெளியானவை. ஜெயமோகனின் நாவலும் அமரந்த்தா - சிங்கராயர் தமிழாக்கிய கூகி வா தியாங்கோவின் நாவலும் பற்றியவை, தமிழாக்கத்திற் காலக்குறி’ சஞ்சிகையிலும் வந்தன.
ஜி. நாகராஜனின் படைப்புக்கள் மீதான விமர்சனக் கட்டுரை தமிழகத்தில் ஜி. நாகராஜன் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நுாலுக்காக 1998ல் எழுதப்பட்டது. அந் நூல் வெளிவரவில்லை. சென்ற ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் தடம் சஞ்சிகையில் அதைப் பிரசுரித்தார்கள். டானியலின் நூல் மீதான விமர்சனம் இலங்கையில்

தினகரனில் மறுபிரசுரமானது. சோவியத் யூனியனின் உடைவு பற்றி றெஜி ஸிரிவர்த்தனவின் நுாலின் தமிழாக்கம் (நு.மான் - சேரன்) தினகரனில் மட்டுமே வெளியானது.
தங்கவேலு - ராஜமுருகுபாண்டியன் தமிழாக்கத்தில் காஞ்சா அய்லய்யாவின் நூல், சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு பற்றியன மூன்றாவது மனிதனிலும் தமிழ்மாறன், அருணாசலம், துரை மனோகரன் ஆகியோரின் நுால்கள் பற்றியன சரிநிகரிலும் வந்தன. செல்வி. திருச்சந்திரன், ஹள், விக்ரர் எழுதிய நூல்கள் பற்றியன புதிய் பூமியில் பிரசுரமானவை.
சில விமர்சனங்கள் மிகவும் கடுமையாகவே உள்ளன. அதற்கான காரணம் நுால்களின் உள்ளடக்கம் பற்றிய கருத்து வேறுபாடு அல்ல. அவை கூறும் விடயங்களில் சமூக விடுதலைக்கான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தவும் திசை திருப்பவும் திரிபுபடுத்தி விளக்கவும் காணப்பட்டதால் அவை பற்றி இங்கிதமான சொற்களைப் பயன்படுத்த என்னால் இயலவில்லை. சிலரால் விமர்சனங்களை இன்னொரு கருத்து என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது. சிலரால் விடயச் சார்பாக எதிர்வினையாக எழுத முடிகிறது. வேறு சிலர் தனிப்பட்ட முறையில் ஆட்சேபனைகளை யாரிடமாவது சொல்வதுடன் நிறுத்தி விடுகிறார்கள். w
விமர்சனம் எதுவுமே அறுதியான தீர்ப்பல்ல. எனவே மறுப்புக்களும் மாற்றுக் கருத்துக்களும் விமர்சகர்களால் பண்புடன் ஏற்கப்பட வேண்டியன. எவ்வாறாயினும், தங்களது இயலாமையை மூடிக் கட்டுவதற்காக உண்மைகளைத் திரித்தும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தும் எதிர்வினைகள் வந்துள்ளன. டானியலின் நூல் தொடர்பாக வந்ததில் என் நோக்கங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன. மொழி சற்றுக் கடுமையாக இருந்தது. எனினும் அது ஒரு பாரிய பிரச்சனையாகத் தெரியவில்லை.
எஸ். வி. ராஜதுரை என் விமர்சனத்தைப் போல இரண்டு மடங்கிற்கும் அதிக நீளத்தில் காலச்சுவட்டுக்கு எழுதிய எதிர்வினையில் என் மீதான தனிப்பட்ட குரோதமே மிகுதியாகத் தென்பட்டது. இது பற்றிக் காலச்சுவட்டுக்கு இன்னொரு வாசகர் வன்மையாகக் கண்டித்து எழுதினார். நான் சற்று ஏளனமாகவும் சுருக்கமாகவும் பதில் எழுதினேன். சென்ற தடவை, ‘விமர்சனங்கள்’ நூலில் ராஜதுரையின் எதிர்வினையை உள்ளடக்கினேன். இம்முறை அவ்வாறு செய்வதன் மூலம் அவருடைய ஆற்றாமையின் வெளிப்பாட்டுக்கு மேலும் ஒரு தடவை விளம்பரம் வழங்கவும் பக்கங்களைப் பாழாக்கவும் விரும்பவில்லை. அவருடையதை விடவும் கீழ்த்தரமான எதிர்வினை யமுனா ராஜேந்திரனிடமிருந்து வந்தது. அவர் தொடர்பாக நான் செய்த பெரிய தவறு, அவருடைய தமிழாக்கக் குழறுபடிகள் பற்றி எப்போதோ எழுதாமல் விட்டதுதான். மேற்குறிப்பிட்ட இரண்டு பேருக்கும் விமர்சகரை வலிந்து தாக்குகிற தேவை ஏற்பட்டது ஒரே காரணத்தாற் தான் என நினைக்கிறேன். இவ்வாறான தாக்குதல்கள் பெ. முத்துலிங்கத்தின் இலங்கையில் திராவிட இயக்க வரலாறு பற்றிய நூல் தொடர்பாகவும்

Page 5
சரிநிகரில் வெளிவந்தன. என் விமர்சனத்தில் எழுதிய ஒரு கருத்தை முன்வைத்து எஸ். வி. ராஜதுரை எவரெவரையோ எல்லாம் தாக்குவதற்கு சரிநிகரைப் பயன்படுத்தினார். அங்கும் என் மிகச் சுருக்கமான ஒரு பதிலும் தமிழகத்திலிருந்து சூரியச்சந்திரன் என்பவரது சுருக்கமான இரு கடிதங்களும் போதியனவாக இருந்தன. என் விமர்சனத்தை இத் தொகுதியில் உள்ளடக்கும் அளவுக்கு, இளஞ்செழியன் பற்றிய விளம்பரமாகவே அமைந்த அந்த நுால், முக்கியமானது என நான் கருதவில்லை. என். கே. மகாலிங்கத்தின் தமிழாக்கத்தின் குறைபாடுகள் இலங்கையில் நுட்மானால் சுட்டிக்காட்டப்பட்ட போது வெகுண்டு எழுதியவர்களுள் மொழிபெயர்ப்பாளரும் ஒருவர். ஏனோ என் விமர்சனம் பற்றி அவ்வாறான எதிர்வினைகள் எதுவும் வரவில்லை.
இந்நூலில் உள்ள பிற விமர்சனங்கள் பற்றிய பிற நுாலாசிரியர்கள் உவகை கொண்டாடினர் என நான் எண்ணவில்லை. ஓரிருவர் தாங்களே மறுப்பு எழுதத் தயங்கி வேறு பேர்களை நாடியதும் முடிவில் யாருமே எழுதாமல் விட்டதும் பற்றி அறிவேன். எனினும் முற்குறிப்பிட்ட ஒரு சிலரது ஆற்றாமையை விட்டால், ஆரோக்கியமான விமர்சன மரபுக்கு இன்னமும் இடம் உண்டு என்றே சொல்ல முடிகிறது.
முன் கூறியவாறு இந்நூலில் உள்ள விமர்சனங்கள் யாவும் வேறுபடும் அளவுகளில் சமூக-அரசியற் பார்வைகளை முன்நிறுத்தியே எழுதப்பட்டுள்ள அதே வேளை, எனது பார்வைதான் சரி என்ற நிலைப்பாட்டில் அல்லாமல், தகவல்களினதும் ஆய்வுகளதும் விளக்கங்களதும் செம்மையையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளேன். விடயங்களை விளங்கிக் கொள்வதிலும் நுாலின் சமூகப் பயன்பாடு தொடர்பான கருத்துரைப்பதிலும் எனது விழுமியங்கள் நுாலாசிரியர். களினின்று வேறுபட்டிருப்பதால் மட்டுமே அக் கேள்விகள் எழவில்லை.
எனது முன்னைய விமர்சன நூலில் வந்த கட்டுரைகளால் ஏற்பட்டுள்ள கோபங்கள் முற்றாகத் தணியுமுன்பே இந்த நுால் வருகிறது. நாம் எல்லாரையும் மகிழ்விக்க முடியாது. எவரையும் மகிழ்விக்கும் நோக்கில் எழுதப்படுவது விமர்சனமும் ஆகாது. என்னளவில் இவ் விமர்சனங்களும் விமர்சனத்துக்குரியனவே என்பதை வாசகர்கள் விளங்கிக்கொண்டாற் போதுமானது.
இந்நூலை, என் நுால்களிற் பெருவாரியானவற்றைப் போன்று, வெளியிட முன்வந்த தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கு என் நன்றிகள். வெளியீட்டில் ஆர்வம் காட்டிய நண்பர் தேவராஜா, கணணி அச்சுப் பதவில் உதவிய சோபனா சோமசுந்தரம், சிந்தியா சுபாஷினி இராசையா, அச்சிட்டு உதவிய கேசவனுக்கும், அட்டைப்படம் வரைந்த இரர. சடகோபனுக்கும் மிக்க நன்றிகள் உரியன.
சி. சிவசேகரம் பேராதனை 10.10.2001

சோவியத் யூனியனின் உடைவுக்கான
விளக்கமும் குழப்பமும்
(சோவியத் யூனியனின் உடைவு றெஜி ஸிரிவர்தன பதிப்பாசிரியர்கள் : எம்.ஏ. நுஃமான். உ.சேரன், இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையம், கொழும்பு, 1992 u. 210+10)
GBġ 6múSf6Jg560T (Reggie Sriwardena) 1987,35bio 1992äbból6ODLusiaid எழுதிய பத்துக் கட்டுரைகளையும் புக்காரின் நினைவான நாடகமொன்றையும் திருமதி புக்காரினுடைய கடிதமொன்றையும் கொண்ட இத்தொகுப்பின் பதிப்பாசிரியர்களது முன்னுரையிலிருந்து எடுத்தாளப்பட்ட பின்வரும் வரிகள் நுாலின் பின் உறையில் அச்சாகியுள்ளன:
“ஆயினும் தமிழில் முதல்முறையாக, மார்க்சியம், சோசலிச வரலாறு, ஆயுதப் புரட்சி, அரசியல் அறம் என்பன பற்றிக் கட்சி அரசியலுக்கு அப்பாலான, ஆதார பூர்வமான தரவுகளின் அடிப்படையில் ஒரு திறந்த விவாதத்தை இந்த நூல் தொடக்கி வைக்கிறது.
இக்கூற்று மெய்யானதல்ல. தமிழ்நாட்டில் 1980களிலிருந்தே இவ்விடயங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அவை றெஜியின் கண்ணோட்டத்திலான வாதங்களை உள்ளடக்காது இருந்திருக்கலாம். அந்தளவிற் தவிர, இது நிச்சயமாக 'முதற் குரங்கு அல்ல.
முன்னுரையில் மேற்கூறிய வாக்கியத்தின் முன்னராக வரும் ஒரு வசனம் பதிப்பாசிரியர்களது நிலைப்பாடு பற்றிச் சில கேள்விகளை எழுப்புகிறது.
"அவரது முடிவுகள் சில துாய மாக்சியவாதிகளை அசெளகரியப்படுத்தக் கூடியவை எனினும் அம் முடிவுகளே முடிந்த முடிவுகள் என நாம் கொள்ள வேண்டியதில்லை'. இந்த வாக்கியத்தின்படி துாய மாக்சியவாதிகளை அசெளகரியப் படுத்துகின்ற முடிவுகளுக்கு ஏதோ சிறப்பான தகுதிகள் இருந்தும், பதிப்பாசிரியர்கள், றெஜியின் முடிவுகளைத் தீர்க்கமானவையாகக் கருத அவசியமில்லை என்கிறார்கள். இது ஒரு கவனப் பிசகான வாக்கியமாக இல்லாதவிடத்து இந்த துாய மாக்சியவாதிகள் யார், அவர்களது அசெளகரியம் எவ்வாறு ஒரு நல்ல விஷயமாகிறது என்பன பற்றிய விளக்கங்களுக்கான தேவை எழுகிறது.

Page 6
இன்றைய நிலவரம் புதிய கேள்விகளையும் புதிய விவாதங்களையும் எழுப்பியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆயினும் அக்கேள்விகட்குப் பதில் தேடும் முனைப்பும் விவாதங்களின் அடிப்படையும் றெஜி காட்டும் திசையிற் தான் இருக்க அவசியமில்லை. றெஜி தரும் தகவல்களின் உண்மையும் முக்கியத்துவமும் பற்றி அவர் புறக்கணிக்கும் விடயங்களையும் கணிப்பிலெடுத்தே நம்மால் மதிப்பிடப்பட முடியும்.
1940களில் உலகில் இரண்டு நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க ட்ரொட்ஸ்கிய இயக்கங்கள் இருந்தன. ஒன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றது இலங்கை. றெஜியின் அரசியல் சார்பு இன்று எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கியத்துடன் அவருக்கு இருந்த நெருக்கம் கட்டுரைகளிலும் தென்படத்தவறவில்லை. ட்ரொட்ஸ்கியக் கருத்துக்கள் உள்ள காரணத்தால் மட்டுமே றெஜியை யாரும் ஆதரிக்கவோ நிராகரிக்கவோ அவசியமில்லை. ஆயினும் உலக அரசியலை அவர் அணுகும் முறையிலுள்ள சில அடிப்படையிலான கோளாறுகட்கான தோற்றுவாய் அங்கே தான் உள்ளது. ட்ரொட்ஸ்கியத்தை நிராகரிப்பதாக றெஜி பல இடங்களிலும் எழுதினாலும் அவரது அணுகுமுறையில் அதன் பாதிப்பு மிகுதியாக உள்ளது.
அவரது கண்ணோட்டத்தில் 1917ம் ஆண்டின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின்னர் இரண்டு முக்கியமான திருப்புமுனைகள் இருந்தன. ஒன்று லெனினுடைய மரணத்தையொட்டி 1926-29 காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றம். (இது ஸ்டாலின் பதவியேற்ற காலம்). மற்றது கொர்பச்சொவ் அதிகாரத்திற்கு வந்த காலத்தை ஒட்டியது. எனவே 1929 முதல் 1986 வரை சோவியத் யூனியனுள் ஏற்பட்ட எந்த மாற்றமும் அடிப்படையில் முக்கியமானதல்ல. சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு கூட இதனால் முக்கியத்துவமற்றுப் போய்விடுகிறது. றெஜியின் கட்டுரைகளில் சோவியத் யூனியனின் சர்வதேச அரசியல் நடத்தை கூட தன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது.
ஸ்டாலினிஸம் என்கிற சொற்றொடர் இன்று பலரும் தமது வசதிகட்கு ஏற்ற விதமாகப் பயன்படுத்தும் ஒன்று. றெஜி பயன்படுத்தும் விதம் ட்ரொட்ஸ்கியர்களை ஒத்திருப்பது அதிசயமில்லை. ட்ரொட்ஸ்கியையும் நிராகரித்து ஈற்றில் சோவியத் யூனியனுக்கு உகந்த மார்க்கம் புக்காரினால் முன்வைக்கப்பட்டதே என்று தனது ‘விருப்பு வெறுப்பற்ற சரித்திர ஆய்வின் முடிவை வந்தடைகிற றெஜிக்கு சோவியத் யூனியனின் பிரச்சனை லெனினிஸ அடிப்படையிலான மத்தியத்துவப்படுத்தப்பட்ட இறுக்கமான கட்சியமைப்பாகி விடுகிறது. சோவியத் யூனியனின் உடைவை அடுத்து லெனினும் நிராகரிக்கப்படுவதையிட்டு அவர் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறார்.
மாக்ஸிய ஆட்சிகளின் கீழான அரசியல் ஒடுக்குதல், ஜனநாயகமின்மை என்பன பற்றி குற்றச்சாட்டுகள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. இவற்றில்

ஒரு பகுதி அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்பன பற்றிய முதலாளித்துவப் பிரமைகளையும் பிரசாரத்தையும் சார்ந்தன. மறுபுறம், இந்த ஆட்சிகளின் குறைபாடுகளின் விளைவான குற்றங்களும் உள்ளன. ஸ்டாலின் காலத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றிய விமர்சனங்கள் சோவியத் யூனியனின் உள்ளும் வெளியிலும் இருந்து சோவியத் யூனியன் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சனைகளைக் கணிப்பிலெடுக்கத் தவறிவிடுகின்றன. மாஒ சேதுங் தலைமையின் கீழ் சீனா தன்னை உலகின் பிற பகுதிகளினின்றும் தனிமைப்படுத்திக்கொண்டது என்ற விதமான வாதங்கள் சீனாவுக்கும் உலக வல்லரசுகளுக்குமிடையில் இருந்த உறவை எவ்வாறு திரித்தனவோ அவ்வாறே சோவியத் யூனியனில் க்ருஷ்ச்சொவுக்கு முந்திய காலத்தில் நடந்த விடயங்களில் சோவியத் யூனியனை நசுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சோவியத் நடத்தையை எவ்வாறு பாதித்தன என்பதை ஒரு வகையான வரலாற்று மறதிக்கு இரையாக்கிவிட்டு விமரிசிப்பது வழமையாகிவிட்டது.
ஸ்டாலினின் தவறுகளைச் சீனாவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிந்தளவுக்கு உலகின் வேறெந்த நாடும் விடுதலை இயக்கமும் அறிந்திருக்க நியாயமில்லை. ஆயினும் ஸ்டாலினின் வரலாற்றுப் பங்கின் சர்வதேச முக்கியத்துவத்தை மாஒ சரியாகவே மதிப்பிட்டு 70 பங்கு சரி 30 பங்கு தவறு என்று ஸ்டாலினிற்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தார். சோவியத் யூனியனில் ஸ்டாலினின் நிராகரிப்பு எத்திசையிற் போகும் என்பது பற்றி அன்று மாக்ஸிஸலெனினிஸ புரட்சிவாதிகள் தெரிவித்த அச்சங்கள் இன்று மெய்யாகிவிட்டன. கொர்பச்சொவின் எழுச்சியால் மிகுந்த நம்பிக்கை பெற்றவர்களுள் றெஜி ஒருவர். இது அவர் 1987ல் எழுதியது: “குருஷ்சேவை விட தான் திறமை மிக்க அரசியல்வாதி என்பதை கொர்பச்சேவ் இன்று நிரூபித்துள்ளார். குருஷ்சேவை தனது சீர்திருத்தங்களை மேலிருந்து கீழ் நோக்கிச் செயற்படுத்தினார். ஆனால் கொர்பச்சேவ் தனது சீர்திருத்தங்களுக்குப் பொதுமக்களின் ஆதரவை, கீழ்மட்டப் பலத்தைக் கட்டி எழுப்பி வருகின்றார். கொர்பச்சேவ் உட்கட்சிச் சதியொன்றின் மூலம் துாக்கியெறியப்பட்டாலும் கூட . அவரது மாற்றங்களின் பொதுப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் “கிளாஸ்நொஸ்தும்” பெரஸ்ரொய்க்காவும் முற்றிலும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டவையல்ல" (ப. 21).
இந்த அரசியல் ஆருடம் பற்றி நான் அதிகம் சொல்ல அவசியமில்லை.
கொர்பச்சொவின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆரரயும் போது தான் றெஜியின் தடுமாற்றம் அதிகமாகிறது. 1987ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் இருந்த எதிர்பர்ர்ப்புக்கள் 1992ம் ஆண்டு எழுதியதில் நிராசையாகிவிட்டன. “கொர்பச்சொவ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக இருந்ததினாலேயே (கொர்பச்சொவின் ) இச் சரிவு நிகழ்ந்தது எனக் கூறும் வைதிக மாக்சியவாதிகள் பலர் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. (ப.128). இங்கு கொர்பச்சொவ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்வதில் க்ருஷ்சொவை விடவும் வெகுதுாரம்

Page 7
சென்றார் என்ற விடயம் பற்றி றெஜியின் மதிப்பீட்டை நம்மால் எங்கும் காண முடியாது. அது அவரது சரிவுக்கு ஒரு பங்களிப்பைச் செய்தது. சோவியத் ராணுவ சக்திகளிடையே அவருக்கு அது பகைமையை ஏற்படுத்தியது. இப்பகைமை முற்போக்கான, மூன்றாமுலகச் சார்பான ஏகாதிபத்திய எதிர்ப்பு நலன் சார்ந்து எழவில்லை. அதற்கான வாய்ப்பு க்ருஷ்ச்சொவ் யுகத்திலேயே கரையத் தொடங்கிவிட்டது.
d “மலென்கொவும் குருஷேவும் அவமரியாதைக்குரிய முறையில் அனாமதேயங்களானார்கள். கொர்பச்சோவுக்கு இந்த விதியின் அவலங்கள் ஏதும் நிகழவில்லை" (ப.129). கொர்பச்சொவ் 1991ல் பதவி இறக்கப்பட்டபின் அடுத்தடுத்து எத்தனை முறை யெல்ற்ஸனால் அவமதிக்கப்பட்டார் என்பதையும் எவ்வாறு 1993ல் பூரண அனாமதேயரானாரென்பதையும், அதேவேளை, தவறான காரணங்கட் களாகவேனும், யெல்ற்ஸின் ஆட்சிக்கு எதிரான அணியில் ஸ்டாலின் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு எதிரான ஒரு சின்னமாகவேனும் எழுச்சி பெறுவாரெனவும் றெஜியாற் கற்பனை செய்யவும் இயலவில்லை. ஏகாதிபத்தியத்தைத் திருப்தி செய்து சோவியத் யூனியனையும் தமது அதிகாரத்தையும் காப்பாற்ற முற்பட்டவர் கொர்பச்சொவ். மேற்கு நாடுகளின் தேவை, கொர்பச்சொவ் பதவியிற் தொடர்வதல்ல. நாளை யெல்ற்ஸனை உதறித் தள்ளவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
கொர்பச்சொவ் மக்களால் நேரடியாகத் தெரியப்படும் வாய்ப்பைப் புறக்கணித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தையும் அதற்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களையுங் கொண்ட ஆட்சி மன்றத்தாற் தெரிவு செய்யப்படுவதை விரும்பியதற்கு றெஜியின் விளக்கம், "அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரன் என்பதே இதற்குக் காரணமாகும்”. (ப. 132) கொர்பச்சொவ் தனது வெற்றி வாய்ப்புக்கள் பற்றிய அச்சம் காரணமாக அல்லது தான் விரும்பும் அளவிலான பெரும்பான்மை பலம் கிடைக்குமோ என்ற நிச்சயமின்மை காரணமாகத் தயங்கியிருக்கக் கூடுமென்ற சாத்தியப்பாடு கூட றெஜிக்குத் தோன்றவில்லை. கொர்பச்சொவின் செல்வாக்குச் சரிவுற்றதைக் கண்டே சதிப்புரட்சியில் இறங்கியவர்கட்குத் தைரியம் வந்தது என்ற விடயமும் அவரது கவனத்திற் படவில்லை.
“மாக்ஸியத்துடன் சேர்ந்து வளர்ந்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான அம்சங்கள் நீக்கப்பட்ட புனித மாக்ஸியம் நிச்சயம் மேற்குலக நாடுகளில் ஒரு வித்தியாசமான வரவேற்பைப் பெறும். மனிதரின் தலைவிதி பற்றிய தன் சொந்தப் படைப்பையும் பார்வையையும் அந்த மாக்ஸியத்தில் அது ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அத்தோடு வரலாறு ஒரு முழுச்சுற்றுவட்டத்தில் வந்து விடும்” என்ற ஐஸக் டொய்ட்ஷரின் கற்பனாவாதத்துடன் (ப. 109) றெஜி நேரடியாக உடன்படாவிட்டாலும் அவரது பார்வையில் மாக்ஸியத்திற்குச் செழுமையூட்டிய மாஓவின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமையும்
10

க்ருஷ்ச்சொவுக்குப் பிந்திய ரஸ்யாவில் கொர்பச்சொவ் வழியாக ஒரு சிறப்பான மாக்ஸிய சோஸலிச அமைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனதைச் சீரணிக்க முடியாமையும் அவரது மேற்கு நோக்கிய கற்பனாவாதத்தின் இரு கூறுகளே.
ஸ்டாலின், ஹிட்லர், பொல்பொட், விஜேவீர எல்லேரையும் அருகருகாக அடுக்க ட்ரொஸ்கிவாதிகளே கூசுவார்கள். றெஜிக்கு இது சாத்தியமாகிறது. தவறுகளின் தோற்றுவாய்களை அவர் அடையாளங் காணும் விதம், வன்முறையும் மத்தியப் படுத்தப்பட்ட கட்சித் தலைமையும் அற்ற ஒரு சமுதாய மாற்றத்திற்கான அவரது விருப்புடன் தொடர்புடையது. சிலே, நிக்கராகுவா போன்ற நாடுகளின் பாடங்கள் றெஜிக்கு நினைவில்லாவிட்டாலும் ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் நமக்கு நினைவூட்டத் தவறாது.
தேசியவாதம் பற்றிய மாக்ஸியக் கண்ணோட்டத்திற்கு ஒரு வரலாற்று விருத்தி உண்டு. ரஷ்ய அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே அதை மதிப்பிடும் போதும் ஏதோ வகையான "துாய மாக்ஸியத்தின் பேரில் விளக்கங்களை முன்வைக்கும் போதும் மாக்ஸியத்தின் நடைமுறை சார்ந்த தன்மையை எவரும் எளிதாகவே மறந்துவிடலாம். மாக்ஸியம் என்பது மாக்ஸ் என்ன சொன்னார் என்பதையும் மாக்ஸ் என்ன நினைத்தார் என்பதையும் பற்றியதல்ல. அது ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறை மட்டுமன்றி, அதற்குச் சமுதாயச் சார்பான ஒரு நடைமுறை உண்டு என்பதையும் அது தொடர்ந்தும் வளர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் மாக்ஸியவாதிகள் மறந்துவிட முடியாது.
பாரிய, உலகு தழுவிய ஒரு போராட்டத்தில் சமுதாயத்திற்கான சக்திகளது முன்னேற்றம் ஒருசீரானது அல்ல. எழுச்சிகளைத் தொடர்ந்து வீழ்ச்சிகள் நேரும். வெற்றிகளில் தோல்விகளின் இடையீடிருக்கும். வரலாற்றின் பொதுவான போக்கே முக்கியமானது. இன்றைய உலகின் பிரதானமான போராட்டக்களம் எது, மற்ற முரண்பாடுகளை கையாள்வது எவ்வாறு என்பன போன்ற கேள்விகள் அன்று போல் இன்றும் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டுப் பதில் தேடப்படவேண்டும்.
சோவியத் யூனியனைப் பார்த்துப் பிரதி செய்யக் கூடியதல்ல பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பதை றெஜி சுட்டிக்காட்டு முன்னமே, சீனா அதை நடைமுறையிற் காட்டிவிட்டது. சீனாவைப் பார்த்துப் பிரதி செய்ய முயன்றோரும் தோல்விகளைச் சந்தித்தனர். வரலாற்றின் பாடங்கள் கடினமானவை. முடிந்து போனவற்றை விரிவாக விளக்க ஆயிரம் பாடநூல்கள் உண்டு. முன்னோக்கிய பாதையைக் காட்ட அவ்வாறு எதுவுமில்லை.
பதிப்பாசிரியர்கள் கூற முனைகிற திறந்த விவாதம் தமிழில் நடக்கிறதன்
மூலம் புக்காரின் பற்றியும் சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பது பற்றியும் புதிய தகவல்கள் கிடைக்குமாயின் அது நல்லதே. ஆயினும் அதைவிட
11

Page 8
முக்கியமான விவாதங்கள் சில நடக்கின்றன. இன்னும் நடக்கவேண்டியனவும் பல உள்ளன.
மொழிபெயர்ப்புத் தொடர்பாகச் சில சொற்கள் கூறவேண்டும். மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்டுள்ள போதும் தமிழிற் கலைச் சொற்களின் தட்டுப்பாடு காரணமாகவும் அவை தொடர்பான குழப்பங் காரணமாகவும் சொற்தெரிவில் இடையிடையே குறைபாடுகள் உள்ளன. அயற் பேர்களைத் தமிழ்ப்படுத்தும் போது, பரிச்சயமான சொற்களில் உள்ள வேறுபாடுகள் அதிகம் சிரமமளிக்காவிடினும் தமிழருக்குப் பரிச்சயமற்ற சொற்கள் பிரச்சனை தருவன. இவற்றுக்கான தமிழ்-ஆங்கில அருஞ்சொல் அகராதியொன்று பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கலாம். அல்லது அச் சொற்கள் முதல்முதலாகப் பயன்படும் இடத்தில் அயல்மொழி மூலச்சொல் அடைப்புகட்குட் தரப்பட்டிருக்கலாம். ஆங்கில வாக்கியங்களை அப்படியே தமிழ்ப்படுத்தும் போதும் நேரடியாக மொழிபெயர்க்கத் தகாத சொற்றொடர்களைத் தமிழ்ப்படுத்தும் போதும் கருத்துத் தெளிவீனம் ஏற்படுகிறது. இவற்றை வரிசைப்படுத்த இங்கு இடம் போதாது. பொதுவாக, இத்தகைய தமிழாக்கங்களை, ஆங்கிலத்திற் புலமை குறைந்தவர்களை மனதிற் கொண்டு செய்வது நல்லது. எவ்வாறாயினும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பல வேறு இஸங்கள் பற்றிய நூல்களுடன் ஒப்பிடுகையில் இத் தமிழாக்கக் கட்டுரைகள் எவ்வளவோ கவனமாக அமைந்துள்ளன.
12

கா. மாக்ஸியர் பற்றி அ. மார்க்ஸ்
(மாக்ஸியத்தின் பேரால், அமார்க்ஸ், விடியல் பதிப்பகம், கோவை, 1994, ப. 208, ரூ. 2500)
அ. மாக்ஸ் எழுதிய சில அண்மைக்கால கட்டுரைகளது தொகுப்பான ‘மாக்ஸியத்தின் பேரால்' என்ற நூல், சர்வதேச மாக்ஸிய நடைமுறை பற்றிய விவாதங்கள் தொடர்பானது. குறிப்பிடுமளவுக்கு நிதானமாக எழுதப்பட்டுள்ள இந்நூலின் கட்டுரைகள் மாக்ஸியத்தின் எதிர்காலம் பற்றிய சமகால ஐயங்களைக் கருத்திற்கொண்டுள்ளன. ரஷ்யப் புரட்சியை அடுத்து எழுச்சி பெற்ற சர்வதேச சோசலிசப் புரட்சிகர இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் அனைத்திலும் அதிமுக்கியமானது, ஸ்தாலின் இறந்த பின்பு சோவியத் யூனியனின் தலைமையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மோதல் எனலாம். 1963ல் உலகின் சகல கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இது பிரதிபலித்தது. இந்தியாவினுள் இது தொடர்பான விவாதம் முறையாக விரிவடைய இயலாதவாறு, "சீன-இந்திய எல்லைப் போரும் அதனையொட்டிய இந்திய தேசியவாத உணர்வும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சீன விரோத உணர்வும் குறுக்கிட்டன. ஆயுதமேந்திய சமூக விடுதலைப் போராட்டங்கள் பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட விவாதமே பல ஆசிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் பிளவுகளின் தன்மையைத் தீர்மானித்தது. மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இவ் விவாதம் ஆழமாகவும் உக்கிரமாகவும் நடந்தது. இந்தியாவில் ஏற்பட்ட பிளவின் தன்மை வித்தியாசமானதாக இருந்தது மட்டுமன்றி, 1960களின் பின்கூற்றில், நக்ஸல்பாரிப் போராட்டத்தின் சூழலிலேயே, கட்சிக்குள்ளான விவாதம் புரட்சியின் பாதை பற்றிய முரண்பாடாக உருப்பெற்றது. கலாச்சாரப் புரட்சியின் பின்னணியில் சீனாவுள் நேர்ந்த தவறுகள் போல, சர்வதேச மட்டத்தில் தவறான அதிதீவிர நிலைப்பாடுகள் விருத்திபெற்றன. இதன் விளைவாக, மக்கள் யுத்தம் என்ற கோட்பாடு தனிநபர் பயங்கரவாதமாகக் கூட விகாரம் அடைந்தது. இந்திய மாக்ஸிய-லெனினிய இயக்கங்கள் எனப்படுவன சில, இன்னமும் அன்றைய குழப்பத்தின் பின்விளைவுகளில் இருந்து மீளமுடியாமல் உள்ளன. விறைப்பான அரசியல் நிலைப்பாடுகள் சில இன்னமும் பல மாக்ஸியக் கட்சிகளையும் இயக்கங்களையும் பீடித்துள்ளன. இவற்றினின்று மீள்வதற்கான தேவை உள்ளது. இவ்வாறான குறைபாடுகள் எந்தவொரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கிலும் இயல்பானவை. இவற்றைக் களைவதற்குக் கட்சிகட்கு உள்ளும் வெளியிலும் ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். இவ்
13

Page 9
விவாதங்களின் தொனி, பொறுப்பானதாயும் நிதானமானதாயும் நண்பனுக்கும் எதிரிக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுவதாயும் இருப்பது அவசியமானது. இந்த வகையில் அ. மார்க்ஸின் நூல் மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆசிரியரின் முன்னுரை போல அமைந்துள்ள இதற்கு முன்.’ என்ற கட்டுரையில் திறந்த விவாதத்திற்கான தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாக்ஸியவாதிகள் பரவலான அறிவைப் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தும் போக்கில், கிராம்சி, அல்துாஸர் மற்றும் றோஸா லக்ஸம்புர்க், கெளட்ஸ்கி ஆகியோரையும் கற்கும் தேவையை வலியுறுத்தும் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாக்ஸ்-எங்கெல்ஸ்-லெனின்ஸ்தாலின்-மாஒ ஆகியோரின் குறிப்பிட்ட சில படைப்புகட்கு வெளியே எவற்றையும் கட்சிக்குள் பயில்வது இல்லை என்றும் அவ்வாறு பயிலப்படுவது சந்தேகத்துடன் நோக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். இது பகுதி உண்மை. மாக்ஸியக் கட்சிக்குள் மாக்ஸிய விரோதிகளது படைப்புகளுங் கூடக் கவனமாகக் கற்கப்பட வேண்டுமென்பது பற்றியும் எனக்கு மறுப்பில்லை. ஆயினும் ஒரு கட்சியின் செயற்பாடு நடைமுறை சார்ந்தது. தமிழ் நாட்டில் இன்று நடக்கின்ற பட்டிமன்றங்களிற் போன்று"உனக்கு அமைப்பியல் வாதம் தெரியாதா? அப்போது உன் வாழ்வில் காற்பங்கு பாழ். உனக்குப் பின்னமைப்பியல் வாதம் தெரியாதா? அப்போது உன் வாழ்வில் இன்னொரு காற்பங்கு பாழ்.” என்ற விதமாக ஒரு கட்சிக்குள் ஆய்வுகள் நடக்க முடியாது. மாக்ஸியக் கட்சிகள் சில படைப்புகளை வலியுறுத்துவது மாக்ஸிய அடிப்படைகள் தொடர்பான தெளிவுக்காகவே மாக்ஸிய கட்சிகளுக்கு நெருக்கமான அமைப்புகளின் நூல் வெளியீடுகளிற் பல வேறு படைப்புகளும் உள்ளடங்குவன. என்னுடைய மதிப்பீட்டில், நமது உடனடியான சூழலைப் பற்றிய விரிவான அறிவும் உலக நிலையுடன் அதனைப் பொருத்திப் பார்க்கும் ஆற்றலும் முக்கியமானவை. விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் தெளிவான சிந்தனையும் ஆழமான ஆராய்வும் எளிமையான கருத்து வெளிப்பாடும் மிக அவசியமானவை. எந்தளவான விரிவான வாசிப்பையும் விட, நடைமுறையோடு இணைந்த சிந்தனை உயர்வானது. மார்க்ஸ் மாக்ஸியப் புத்திஜீவிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்பகுதியை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ட்ரொஸ்கியவாதிகள் மத்தியில் இன்னமும் பிரெஞ்சுப் புரட்சியை மையமாகக் கொண்ட வாதப் பிரதிவாதங்களைக் கேட்கலாம். நாம் அயலிலிருந்து கற்பது என்ன நோக்கத்திற்காக என்பது பற்றி மார்க்ஸ் விரிவுபடுத்தியிருக்கலாம். பேருதிர்ப்பையும் மேற்கோள் பட்டியலையும் விட முக்கியமான காரியங்கள் உள்ளன என்பதைப் பற்றி அவர் நிச்சயம் உடன்படுவார்.
“சோசலிசக் கட்டுமானம் - தத்துவமும் நடைமுறையும்’ என்ற கட்டுரை, அரிந்தாம் ஸேன் அதே தலைப்பில் எழுதிய நூலின் விமர்சனம். ஸேன் எழுதிய நூலின் நிலைப்பாட்டுடன் தன் உடன்பாடின்மையும் நுாலின் முழுமையின்மையும் பற்றி விரிவாக எழுதியுள்ள மார்க்ஸ், ஸ்தாலினின் காலத்தில்
14

நேர்ந்த தவறுகளை அந்த வரலாற்றுச் சூழலில் சோவியத் அரச அமைப்புடனும் பொருத்திப்பார்ப்பதன் தேவையை வலியுறுத்துகிறார். “கட்சியின்றிப் புரட்சியில்லை என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடில்லை. ஆனால் மேலிருந்து கீழான முதலாளியக் கம்பெனி நிர்வாக அமைப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட இன்றைய கட்சி வடிவம் எந்தளவுக்குச் சரியானது என்பதே நமது கேள்வி தலைமையகத்தைத் தகர்த்து எறியச் சொன்ன மாவோவால் கூட இதனை மாற்றியமைக்க முடியவில்லை. இதன் விளைவாகவே அதிகாரத்துவமும் தனிநபர் வழிபாடும் கட்சிகள் சிதறுண்டு போவதும் என்று சொன்னால் மிகையாகாது” என்கிற மார்க்ஸ், மேலிருந்து கீழாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் இருந்துதான் கட்சியும் உருவாகிறது என்பதையும் அறிவார். பரந்துபட்ட அளவில் மக்கள் அரசியல் உணர்வுள்ளார்கள் ஆகும் வரை, அவர் தேடுகிற மாற்றம் ஏற்படாது. மாஒவாற் கூட முடியாமற் போனது என்று கூறும்போது, ஒரு தனி மனிதரால் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்ற எதிர்பார்ப்பை மார்க்ஸ் வெளிப்படுத்துகிறாரோ என்று புரியவில்லை. மாஓ செய்தது, ஒரு புதிய திசையைக் காட்டியது தான். அதில் நடந்த அவசரமான பயணம் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது என் மதிப்பீடு. கட்சியில் ஜனநாயகம் என்பதும் மக்கள் ஜனநாயகம் என்பதும் பற்றிய கோட்பாடுகள் ஈற்றில் நடைமுறை சார்ந்தன. ரஷ்யாவின் தவறுகளினின்று மாஒவின் காலத்துச் சீனம் கற்றது. சீனத்தின் தவறுகளிலிருந்தும் நாம் கற்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் பற்றிய கோட்பாடும் நடைமுறையும் ஒவ்வொரு நாட்டினது சூழலுக்கும் வரலாற்றுக் காலகட்டத்துக்கும் ஏற்பவே அமைய முடியும் அதீத ஜனநாயகம் அராஜகமாகவே முடியும் என்பது பற்றியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஸமிர் அமின் எழுதிய ‘மாஓவியத்தின் எதிர்கால்ம்' என்ற ஆங்கில நூலின் விமர்சனம் ‘மாஒவியத்தின் எதிர்காலம்' என்ற கட்டுரை. மாஓவியம், மாஒவாதம் போன்ற சொற்றொடர்களை, மாஓவின் பங்களிப்புகளை அடையாளங் காட்டும் பாங்கில் மட்டுமன்றி, மாக்ஸியத்தின் ஒரு கிளையாக காட்டப்படுவதையும் மாஒ என்றுமே விரும்பவில்லை. கலாச்சாரப் புரட்சிக்காலத்தில் மாஒ எதிர்ப்பாளர். களாற் பயன்படுத்தப்பட்ட இச்சொற்றொடரை விட, மாஓ சேதுங் சிந்தனை என்ற சொற்றொடரே மாக்ஸிய-லெனினிஸவாதிகளால் அதிகம் விரும்பப்பட்டது. சில நடுத்தர வர்க்கப் புத்திஜீவிகளுக்குத் தம்மை மாஓவாதிகள் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி இருந்தது உண்மை. ஆயினும் மாஒவின் பங்களிப்பின் முக்கித்துவம், மாக்ஸியத்தை இன்றைய நவகொலனித்துவ உலகிற்கு ஏற்ற ஒரு போராட்ட நடைமுறையாக விருத்தி செய்வதிலேயே தங்கியுள்ளது. லெனின் செய்ததையே மாஒ மேலும் விரிவாக்கினார் என்பது அடிப்படையான உண்மை.
அமின் 1981ல் எழுதியபோது அவர் எதிர்பார்த்ததைவிட வித்தியாசமான முறையில் சீனாவின் பொருளாதாரக் கொள்கை திசை மாறிவிட்டது. அமினுடைய எதிர்பார்ப்புகள் பல நிறைவுபெறவில்லை என்பது உண்மை. ஆயினும் அமின் கூறிய சில விடயங்கள் பற்றி மேனாட்டுச்செய்திகளின் அடிப்படையில் மார்க்ஸ்
15

Page 10
எழுப்பும் வினாக்களில் குறைபாடுகள் உள்ளன. ““சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் ஒற்றைப் பரிமாணமுடையதாய் இருந்ததில்லை. கருத்து வேறுபாடுகட்காக ஆட்கள் கொல்லப்பட்டதில்லை’ என்கிறார் அமின். கலாச்சாரப் புரட்சியின் போது ஏராளமானோர் கொல்லப்பட்டதாக இன்று நமக்கு செய்திகள் கிடைக்கின்றன. அமின் தனது கணிப்பில் தவறு செய்து விட்டாரா?” (ப. 94). கலாச்சாரப் புரட்சியின்போது வன்முறை நிகழ்ந்தது. ஆயினும் இவை கருத்து வேறுபாட்டுக்குக் கட்சியின் பேரில் மரண தண்டனை விதிக்கும் பாங்கில் நிகழவில்லை. கலாச்சாரப் புரட்சி ஏறத்தாழ ஒரு உள்நாட்டு யுத்தத்தின் அளவுக்கு வளர்ந்துவிட்ட பின்பு, அதை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானம் 1968-69இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
“சீனத்தின் பாதை திரிபுவாதப் பாதை என்றால், அமின் போலந்து எழுச்சி பற்றிக் குறிப்பிடுவதுபோல, ஜனநாயக உரிமைக்கான மாணவர் போராட்டத்தை எதிர்ப்புரட்சி என ஒதுக்காமல் புரட்சிகரமாய்த்தானே பார்க்க வேண்டும்”. (ப. 96).
இங்கு போலந்தில் அந்நிய (சோவியத்) மேலாதிக்கத்துக்கும் அதன் சார்பாகச் செயற்பட்ட அரசுக்கும் எதிரான பண்புடைய ஒரு கிளர்ச்சியை, சீனாவை முதலாளித்துவ நாடாக்கும் விருப்பத்துடனும் ஏகாதிபத்திய சக்திகளது குறுக்கீட்டை நம்பியும் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையுடன் மார்க்ஸ் சமன்படுத்த முற்படுகிறார். சீனாவில் நடந்த கிளர்ச்சியில் பங்கு பற்றிய அனைவருமே பிற்போக்காளர்களல்ல. ஆயினும் அப்போராட்டத்தின் முனைப்புப் பற்றிய பிரமைகள் நமக்கு இல்லை.
முற்குறிப்பிட்ட கட்டுரையின் தொடர்ச்சி போன்று, “சீனமும் .' என்ற கட்டுரை அமைந்துள்ளது. இன்றைய சீனா பற்றி இடதுசாரிக் கட்சிகளிடையே ஏறத்தாழ பூரண ஆதரவு அல்லது பூரண எதிர்ப்பு என்ற நிலைப்பாடுகளே உள்ளதாக மார்க்ஸ் சுட்டிக் காட்டுவது இந்தியாவைப் பொறுத்தளவில் உண்மையாக இருக்கலாம். சர்வதேச ரீதியாகவும் உள்ள இரண்டு பொதுவான போக்குகளாக இவற்றை அடையாளங் காண்பதிற் சிறிது அபாயம் உள்ளது. சீனாவின் இன்றைய பொருளாதரக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கிற அதே வேளை, சீனாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையையும் அவ்வகையில் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவோர் உள்ளனர் என்பது நம் கவனத்துக்குரியது.
மாஓ, அரசு, கட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பன பற்றிய பொல்ஷெவிக் நிலைப்பாட்டில் நிற்பதையே கலாச்சாரப் புரட்சியில் மக்களின் பங்கேற்பு இல்லாமைக்கான காரணமாக மார்க்ஸ் கருதுகிறார். (ப. 109) “அதிகாரக் குவியலுக்கும் சலுகைக்கடை சொகுசுகட்கும் ஆசைப்படாதவர்களாகவே கட்சி அணிகள் புரட்சிக்குப் பின்னும் நீடிக்க வேண்டும்.’ (ப. 109).
16

மேற்குறிப்பிட்ட சில விடயங்களை மார்க்ஸ் மிகுதியாகவே எளிமைப்படுத்துகிறார். சீனாவின் பின்தங்கிய சமுதாய அமைப்பில் சீனப் புரட்சியைச் சாத்தியமாக்கியது என்ன என்ற கேள்வியிலிருந்து தொடங்கினால், சீனாவில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதன் சிக்கல்களை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். சமுதாய மாற்றங்களைச் சாத்தியமாக்கும் சக்திகள், தலைவர்கள், போராளிகள் உட்பட, அனைத்துமே சாதாரண மனிதர்கள் தாம். எனவே, தனியுடைமைச் சமுதாயத்தின் நோய்கட்கு அப்பாற்பட்ட மனிதர்கள் அபூர்வம், புரட்சி ஏராளமான அபூர்வப் பிறவிகளுக்காகக் காத்திருப்பதில்லை. எனவே கட்சி அணிகள் நெறி பிறழாமல் இருக்குமாறு வெகுஜன இயக்கங்கள் கட்டி எழுப்பப்படுவது அவசியம். தொடரான போராட்டங்கள் மூலமே கட்சிகள் உண்மையான மக்கள் இயக்கங்களாகத் தொடர முடியும் என்பதே மாஓவின் கருத்து. இவ்விடயத்தில், சமுதாய நடைமுறை மூலமே தவறுகள் களையப்பட முடியும். வேறுவிதமாக எதிர்பார்ப்பது மிகவும் கற்பனைப் பாங்கானது.
உலகெங்கிலும் உள்ள புரட்சிகரச் சக்திகள் (சீனக்) கிளர்ச்சியாளர்களை எதிர்த்தால் அவர்கள் ஏகாதிபத்தியத்தைத் தழுவிக் கொள்வார்கள் என்ற வாதம் (ப. 114) முறையான ஒன்றாகத் தெரியவில்லை. சீனக் கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் பலரதுஞ் சுயரூபம், கிளர்ச்சி அடக்கப்பட்ட சில நாட்களிலேயே தெளிவாகிவிட்டது. லெஹற் வலெஸாவின் தலைமையைப் புரட்சி வாதிகள் ஆதரித்திருந்தால் போலந்துக் கிளர்ச்சி போப்பாண்டவரின் ஆசியை நாடி இருக்காது என்றும் எவரும் வாதிக்கலாம். சீனக் கிளர்ச்சியை எதிர்ப்பது, சீன ஆட்சியாளர்களை விமர்சனமின்றி ஆதரிப்பதாகிவிடாது.
சீனாவில் 1989ல் நடந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கட்கு மார்க்ஸ் முற்றிலும் மேனாட்டுச் செய்தியாளர்களையே சார்ந்திருக்கிறார். இவற்றில் மிகைப்படுத்தல் பற்றிய ஒரு குறிப்பும் மார்க்ஸால் எங்கும் தரப்படாதளவில், அவர் அவற்றை அப்படியே நம்புகிறார் என்று நான் ஊகிக்கிறேன்.
‘மாக்ஸியம் தோற்கவில்லை’ என்ற கட்டுரையும் "மார்க்ஸியம் - அறிவியல் - வன்முறை’ என்ற கட்டுரையும் சமகால மார்க்ஸியத்தின் பிரச்சினைகள் தொடர்பானவை. இக்கட்டுரைகளில், உலகெங்கிலும் உள்ள மார்க்ஸியவாதிகளை இரண்டு பெரும் பிரிவுகளாக வகுக்கும் மார்க்ஸ், இவற்றின் குணாம்சங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளதும் மா-லெ குழுக்களதும் அடிப்படையில் தான் வந்தடைந்துள்ளார் என ஊகிக்கிறேன். மாக்ஸியம் செல்லாக்காசாகி விட்டது என்ற வாதத்திற்கெதிரான அவரது பதில்கள் மாக்ஸிய விரோதிகளது நேர்மையற்ற நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துகின்றன. புரட்சிக்குப் பிந்திய அரசுகளின் சீரழிவின் தோற்றுவாய்களை மார்க்ஸ் மாக்ஸிய-லெனினிஸப் புரட்சிக் கோட்பாடுகளுக்குள்ளேயே அடையாளங் காண்கிறார். இவையெல்லாம் பின்னோக்கிய பார்வையிற் சரியாகவே தென்பட்டாலும் சமுதாயப் புரட்சியின் சிக்கலான
17

Page 11
தன்மையே அவர் குறை காணும் அணுகுமுறைகளை அவசியமாக்கியது. ரஷ்யாவிலும் சீனாவிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சி எதிர்கொள்ள வேண்டியிருந்த சூழல் பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியையுடைய சமுதாயங்களினது. லெனினும் மாஓவும் சார்ந்த கட்சிகள் செய்தவற்றையும் செய்யத்தவறியவற்றையும் நாட்டினதும் உலகினதும் நிலவரங்களின் அடிப்படையில் வைத்து மதிப்பிடும் தேவை உள்ளது. மார்க்ஸிடம் அந்த ஞானம் உண்டென்பதில் எனக்கு ஐயமில்லை. ஆயினும் கட்டுரைகளில் அது வெளிவரத் தவறிவிடுகிறது. இதன் விளைவாகவோ என்னவோ, ஸ்தாலின் காலத்துத் தவறுகள்பற்றிய மதிப்பீடுகள் லெனினினின்று ஏற்பட்ட பிறழ்வாகவும் ஸ்தாலினுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் ஸ்தாலினியத்தின் தொடர்ச்சி போலவும் காணப்படுகின்றன.
மாக்ஸியத்தில் இட்டு நிரப்பபப்படாத இடைவெளிகளாக மார்க்ஸ் கருதும், சுற்றுச்சூழல், சாதியம் என்பனவும் பெண்ணியம், சனநாயகம், தேசிய இன உணர்வு போன்ற கருத்தாக்கங்களும் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவரது கூற்றுச் சரியானதே. இவ் விடயங்களில் எந்தவொரு மாக்ஸியவாதியின் அணுகுமுறையும் நிலைப்பாடும் கால இடச் சூழல்கட்கமைய வேறுபடும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். சாதியம் தொடர்பாக இலங்கையில் மாக்ஸிய-லெனினிய சக்திகள் 1965ல் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து தமிழகமும் இந்தியாவும் நிறையவே கற்க வேண்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சனையிலும் ஈழத்து மாக்ஸிய-லெனினியவாதிகளது தெளிவான நிலைப்பாடு தமிழகத்தின் பூரணமான பிரிவினை எதிர்ப்பினின்றும் கண்மூடித்தனமான பிரிவினை ஆதரவினின்றும் வேறுபடுகிறது.
“உலகெங்கிலும் உள்ள பொதுவுடைமை கட்சிகளும் மாவோயிஸ்டுகளும் கூட பன்மைக் கருத்துக்களுக்கும் கருத்து மாறுபாடுகளுக்கு மதிப்பளித்தல் சிவில் மற்றும் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவன வடிவம் ஆகிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை" (ப. 168) என்ற கூற்று, முற்றும் சரியானதல்ல. பிரச்சனைக்குரிய விடயம், எத்தகைய பன்மை, எத்தகைய மாறுபாடு, எத்தகைய குடிசார் பண்புகளும் சனநாயகமும் என்பதே.
"(செவ்வியல் மாக்ஸிய) வாசிப்புக்குள் அடங்காத அனைத்தையும் நவ மாக்ஸியம் எனவும் திரிபுவாதம் எனவும் டிராட்ஸ்கியம் எனவும் புதிய இடதுக் கருத்துக்கள் எனவும் ஒதுக்குவது வழக்கமாயிற்று’ (ப. 169) என்ற குற்றச் சாட்டில் உண்மை உண்டு. ஆயினும் இது பொதுவான உண்மையல்ல. சில மாக்ஸிய எதிரிகள் தம்மைத்தாமே முற்குறிப்பிட்ட பதங்களால் வர்ணிப்பதும் நம் கவனத்துக்குரியது. இந்த பட்டியலில் அமைப்பில்வாதமும் பின் அமைப்பியல் வாதமும் இப்போது இணைந்துள்ளன.
பதினெண்கீழ்க்கணக்கு நுால்களின் காலத்தில் பார்ப்பனியம் இறுக்கமாக்கப்பட்டிருந்தது என்று (ப. 175) மார்க்ஸ் கூறுவது பற்றிச் சிறிது
18

ஐயம் உண்டு. ஆரியப் பாதிப்பு ஏற்பட்ட காலம் பார்ப்பனியமயமாதலின் காலம் என்று என்னாற் கருத இயலவில்லை.
அறிவியலும் வன்முறையும் தொடர்பான தெளிவான, நியாயமான கருத்துக்களை முன்வைக்கும் மார்க்ஸ், பாட்டாளி வர்த்த அரசுகளின் வன்முறை, இதர அரச வன்முறைகட்குச் சற்றும் குாைனிலலாது இருந்ததற்கான விளக்கங்களில், போராட்டம், அரசு, நீதி, தண்டனை என்பன தொடர்பான பொது விதிகளை உருவாக்கியமை முக்கிய பங்கு வகிக்கிறது. என்கிறார். இங்கு, பாட்டாளி வர்க்க அரசுகள் எத்தகைய புற உலகச் சூழலில் இயங்கின என்பதையும் அவர் மனதில் வைத்திருக்கலாம்.
இறுதி அத்தியாயம் பிற கட்டுரைகளிற் கூறப்பட்ட கருத்துக்களது மீள் வலியுறுத்தலாக உள்ளது. சோசாலிசக் காலகட்டத்தில் வர்க்கப் போராட்டம் இல்லை என்று ஸ்தாலின் கூறியதைச் சுட்டி காட்டும் மார்க்ஸ், அந்த விடயத்தில் தனது தவற்றை ஸ்தாலின் தன் இறுதிக் காலத்தில் ஏற்றுக்கொண்டார் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். இக்கட்டுரையில் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி அவர் கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவையும் புரட்சிகர மாக்ஸியவாதிகளுக்கு ஏற்புடையவையும் என்றே நம்புகின்றேன்.
இந்நூலில் உள்ள கட்டுரைகளின் நிதானமும் எளிமையான நடையும் பாராட்டுக்குரியன. மிகுந்த கருத்து வேறுபாடுகளின் மத்தியிலும் முற்போக்குச் சக்திகளாற் பகைமையுணர்வின்றி விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டும் இந்த எழுத்துக்கு நூலின் இறுதி அத்தியாயத்தில் வரும் சில கடுஞ்சொற்கள் சிறிது கேடு செய்கின்றன. மற்றவர்கட்குப் புரியாதவாறு எழுதுவதே தம் மேன்மை என நினைப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
19

Page 12
கண்காணிப்பின் அரசியல்
(கண்காணிப்பின் அரசியல். ரவிக்குமார் விளிம்பு டிரஸ்ட் கோயமுத்துார். 1995. ப. 132 ரூ. 45.00)
ஏற்றத்தாழ்வான சமுதாய அமைப்பில் ஜனநாயகம் என்பது உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களது ஜனநாயகமே. கருத்துச் சுதந்திரம் என்பதும் அவர்களது நலன் சார்ந்த கருத்துக்களின் பரவலான சுதந்திரமே. அந்த நலன்கள் மிரட்டப்படும்போது, ஜனநாயக உரிமைகள் மட்டுமன்றிப் பல்வேறு தனி மனித சுதந்திரங்களும் அடிப்படையான மனித உரிமைகளும் மறுப்புக்கு ஆளாகின்றன. ஆயினும் நாம் ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறோம். இது, சில சமயம் அவை பற்றிய பிரமையாலும் சில சமயம் அவற்றின் தேவையை வலியுறுத்துவதன் மூலமே சமுதாயத்தின் உண்மை நிலையை வெளிக்காட்ட இயலும் என்பதாலும் நிகழ்கிறது. நாம் பரவலாக ஏற்றுக்கொள்கின்ற மரபுகளும் சட்டமும் நீதியும் சமுதாய ஒழுங்கும் யாருக்காகப் பேணப்படுகின்றன என்ற கேள்வி ஜனநாயகம் பற்றிய கேள்வியுடன் சேர்ந்தே எழுகிறது. ஒவ்வொரு வகையான அடக்குமுறைக்கு உட்படுவோரும் தமது அனுபவங்கட்கமைய இக்கேள்வியை எழுப்புகின்றனர். பெண்ணியம், தேசிய இன விடுதலை, மொழியுரிமை, தலித்தியம் போன்றன அடக்கு முறைக்கு எதிரான குரல்களே. இக் குரல்கள் தனித்து ஒலிக்கும்போது அடிப்படையான சமுதாயப் பிரச்சனைய்ை அவை தவறவிட நேருகிறது. இவற்றுக்கிடையிலான பொதுப்பண்பு, அதாவது மனித சமத்துவத்துக்கான வேட்கை, அடையாளங் காணப்படும்போது, பல்வேறு கிளர்ச்சிக் குரல்களும் ஒருங்கிணையும் வாய்ப்பு ஏற்படுகிறது. ரவிக்குமாரின் சிந்தனைகளில் இந்த முனைப்பை எம்மால் அடையாளம் காண முடியும்.
அவரது நுால் சமுதாய அடக்குமுறை செயற்படும் முக்கியமான சில தளங்கள் பற்றியது. அவர் கூறுகிற செய்தி, அடிப்படையிற் சரியானதும் முக்கியமானதுமாகும். ஆயினும் அவரது வாதங்களிற் பலவீனங்கள் உள்ளன. இவை களையப்பட வேண்டும். அல்லாது போயின், இந்தப் பலவீனங்களையே வலியுறுத்தி அவரது அடிப்படையான நியாயத்தை நிராகரிப்பதற்கு இயலுமாகிவிடும். இந்த நோக்கிலேயே கீழ்வரும் விமர்சனக் குறிப்புகளை எழுதுகிறேன்.
நுாலின் கட்டுரைகள் அனைத்துமே நுாற் தலைப் புடன் தொடர்புடையனவல்ல. ஒரு கட்டுரைத் தொகுப்பிறகே உரியதான சில குறை
20

பாடுகள் கட்டுரைகளின் கவனமான தெரிவின் மூலம் நீக்கப்படலாம். சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் என்ற பேர்களில் நாம் ஏற்கப் பழகிவிட்ட நடைமுறைகைளுட் பொதிந்துள்ள அடக்குமுறை பற்றிய பயனுள்ள கட்டுரைகள் உள்ளன. ஆயினும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் ஒரு வாதத்தைக் கட்டியெழுப்புமாறு அவை அமையவில்லை. கட்டுரைகளின தன்மையும் கனதியும் மிகவும் வேறுபடுவதும் இதற்கு ஒரு காரணம் அவருடைய வழக்கு நீதிக்கானது. அவரது சாட்சியங்கள் பலவீனமாகத் தோன்றும் போது, வழக்கும் பலவீனமாகிறது. அரசு இயந்திரத்தின் திறமான செயற்பாட்டிற்கும் பெரு முதலாளித்துவத்தின் நலன்களைப் பேணுவதற்கும் மக்களது சிந்தனையை நெறிப்படுத்தி ஆளுவது அவசியம். இது நம்மமையறியாமலே எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அவரது கட்டுரைகளில் நிறையவே உள்ளன. பொழுதுபோக்கு என்ற வடிவில் சிந்தனையாற்றலை மழுங்கடித்து மனிதச் சிந்தனை மீது ஆதிக்கஞ் செலுத்தும் முயற்சிகள் என்றுமில்லாதவாறு வேகத்துடன் வளர்கின்றன. அதே வேளை, அதற்கெதிரான கலகக்குரல்களும் எழுகின்றன. இக் கலகக்குரல்களின் நியாயத்தை விளக்கும் போதுதான் ரவிக்குமாரின் எழுத்திற் பலவீனம் மிகுதியாக உள்ளது. இதற்கான சில உதாரணங்களை கீழே தருகிறேன்.
எந்தவொரு கலகக்குரலையும் நாம் ஆதரிப்பதும் நியாயப்படுத்துவதும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அமைவது அவசியம். ஈ.வெ.ரா, அம்பேத்கர் சார்பாக ரவிக்குமார் எழுதும்போது, அவர்களது தவறுகளைச் சரியாக விளங்கிக் கொள்ள அவர் முயலவில்லை என்றே தோன்றுகிறது. ஈ.வெ.ராவும் அம்பேத்கரும் வேறுபடும் அளவுகட்கு, மாக்ஸியத்தினின்று ஒதுங்கினார்கள். இதனால் அவர்கள் பிற்போக்குவாதிகளாகி விடமாட்டார்கள். அதே வேளை, இது அவர்களது அரசியற் பார்வையின் குறைபாடுகளுடன் தொடர்புடையதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. குணா போன்றவர்கள் ஈ.வெ.ராவைத் தமிழ்த் தேசியவாத நோக்கிலும் வேறு சிலர் தலித்தியத்தின் பேரிலும் தீவிரமாக விமர்சிக்கிறார்கள். இவர்களை ரவிக்குமார் நியாயமாகவே மறுத்து எழுதுகிறார். ஆயினும் ஆங்கிலத்தை ஈ.வெ.ரா. வலியுறுத்தியதிலும் இந்திய விடுதலை பற்றிய அவரது தயக்கத்திலும் இருந்த குறைபாடுகளை நாம் தட்டிக்கழிக்க முடியாது. மக்களைக் கிளறிவிடும் நோக்கில் அவர் கூறியவற்றையெல்லாம் பெரியாரியம் என்ற பேரில் பெரிய தத்துவங்களாக்கும் ஒரு போக்கு உள்ளதை நாம் மறுக்கலாகாது. எனவேதான் ஈ.வெ.ரா. பற்றிய ஆய்வுகள் கூரிய விமர்சனப் பார்வையுடன் அமைவது அவசியமாகிறது. அவர் பற்றிய எந்தக் கடுமையான விமர்சனமும், பெண்ணுரிமை, சாதிய எதிர்ப்பு, தமிழுணர்வு போன்ற பல்வேறு திசைகளில் அவரது பங்களிப்பினை மழுங்க வைக்கமாட்டாது.
'பாஸிஸம் பற்றிய விளக்கங்களும் ஃபாஸிஸ மனோபாவம் பற்றிய கூறுகளும் கூடுதலான செம்மையுடன் அமைந்திருக்கலாம். இதைவிடவுங் கவனயீனமான கூற்றுக்கள், பொலிசாரின் கையிலுள்ள தடிக்கும் லிங்கத்துக்கும் உள்ள ஒற்றுமையையும் பெண் பொலிசாரின் நடத்தை பற்றிய பாலியல்
21

Page 13
விளக்கத்தையும் தரும் இடத்தில் உள்ளன. பிறப்பு இழிவானது என்ற கருத்தாக்கம் "இந்து மதம்' எனப்படும் பல்வேறு இந்திய மதங்களுக்கும் பொதுவானதல்ல. இக் கோட்பாடு காலத்துடனும் இடத்துடனும் வேறுபட்டு வந்துள்ளது. (புத்த மதமும் வாழ்க்கையைத் துன்பத்துடன் இணைத்துக் கருதியதுதான்) தானாகவே நந்தனார் தீயில் இறங்கினாரா என்பதே கேள்வியாக உள்ளபோது அவர் இறங்கியதற்கான காரணத்தைப் பிறப்பின் இழிவுடன் தொடர்புபடுத்துவது போன்ற ஊகங்கள் நூலிற் பல இடங்களிலும் வருகின்றன. ‘நாக் அவுட் திரைப்பட விமர்சனத்திலும், 'மஞ்சள் ரத்தம்' பற்றிய கட்டுரையில் வருகிற மாற்று வாசிப்புகளிலும் அகச்சார்பு மிகுதியாகவே உள்ளது. இதன் அபாயங்கள் பற்றி நான் மிகையாக எச்சரிக்க இடமில்லை. ஏனெனில், ரவிக்குமாரின் கவனயீனமான ஒவ்வொரு சொற்பிரயோகமும், மாற்றுக் கருத்துடையோர் அவரது வாதங்களின் முனைப்பைத் திசை திருப்பப் பயன்படக் கூடும்.
பொலிஸ், சட்டம், ஒழுங்கு, நீதி, தொடர்பு சாதனங்கள் என்பவற்றின் நடுநிலைமையும் நியாயமும் பற்றிய கேள்விகள் மேலைநாடுகளின் “ஜனநாயகப் பாசறைகட்குள்ளிருந்தே' எழுகின்றன. இவை பற்றிய பிரமைகளைக் கலைக்காமல் சமுதாய மாற்றத்துக்கான எழுச்சியை முன்னெடுப்பது கடினம். நமது சமுதாயங்களிலும் இவ்வாறான பிரமைகள் உள்ளன. அவற்றைக் கலைப்பதற்கான எழுத்துக்கள் தமிழிற் போதியளவில் வரவில்லை. இந்த வகையில் ரவிக்குமாரின் பங்களிப்பு முக்கியமாகிறது. இதே காரணத்தினால் அவரது வாதங்களின் குறைபாடுகளும் முக்கியமாகின்றன.
பத்திரிகை விவாதங்களின் போதும் மேடைப் பேச்சின் போதும் தவறான கருத்துக்களும் சொற்பிரயோகங்களும் இடம்பெறலாம். நூல்கள் சிறிது கூடிய கவனத்துடன் தொகுக்கப்பட் வேண்டும். தவறான கருத்துக்களும் வாதங்களும், அவை எவ்வளவு அற்பமானவையேனும், திருத்தப்படுவது, நூலுக்கு வலிமை சேர்க்கும். விவாதங்களின் போக்கில் எழும் விமர்சனங்களும் மாற்றுக் கருத்துக்களும் இவ்வாறான வாய்ப்பைப் படைப்பாளிக்கு வழங்குகின்றன. புதுமைப்பித்தன் பற்றிய மதிப்பீட்டில் ரவிக்குமாரின் எழுத்தின் நிதானமும் பிற கட்டுரைகளில் அவரது நகைச்சுவையுணர்வும் அவரது பலதுறைசார்ந்த அக்கறையும் அவரிடமிருந்து சிறப்பான நுால் ஒன்றை எதிர்பார்க்கத் துாண்டுகின்றன.
நூலின் இன்னொரு முக்கியமான குறைபாடு, இந்திய மரபின் ஒடுக்குமுறைக்கான ஆதாரங்களைத் தருவதற்கு ஆசிரியர் மேனாட்டு எழுத்தாளர்களை உசாத் துணையாகத் தருவதாகும், பொதுவாகவே நமது சொற்பிரயோகத்தில் ஆங்கிலச் சொற்களின் ஆதிக்கம் பல வகைகளில் நிலவுகிறது. இது பற்றியும் ரவிக்குமார் போன்றோர் கூடிய கவனமெடுப்பது நல்லது. நான் தமிழின் துாய்மையையோ அதன் மரபின் இறுக்கமான பேணலையோ வலியுறுத்தவில்லை. ஆயினும், தமிழ்ச் சொல்லாக்கத்திலும்
22

சொற்பிரயோகத்திலும் தமிழ் ஆய்வறிவாளர்கள் பலர் ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளமை கவலைக்குரியது. ரவிக்குமாரிடம் இக்குறைபாடு அதிகமாக இல்லாவிடினும், சொற்களின் தெரிவில் எளிமை, தெளிவு, மொழிவழக்குடன் இசைவு ஆகியன பற்றி அவர் கூடிய அக்கறை காட்ட இடமுண்டு.
மொத்தத்தில், வரவேற்க வேண்டிய புதிய சிந்தனைகளை உடைய இந்த நுால், கட்டுக்கோப்பான முறையிற் தொகுக்கப்பட்ட வாதங்களும் கட்டுரைகளை ஒரு இலக்குடன் இணைக்கும் அமைப்பும் இல்லாமையாற் பலவீனமடைந்துள்ளது. இதனால் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான வாதங்கள் அற்ப விடயங்கள் பற்றிய சர்ச்சைகளாற் திசைதிரும்ப இடம் ஏற்பட்டுள்ளது. நுாற் தலைப்புடன் நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புடைய கட்டுரைகளை ஒரு விரிவான முன்னுரையுடன் வெளியிட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
23

Page 14
பெரியார்: வரலாறும் வழிபாடும்
(பெரியார் சுயமரியாதை சமதர்மம். எஸ். வி ராஜதுரை, வ. கீதா விடியல் பதிப்பகம். Ĝ3,16MS. 1998. L. 816 + xvi. e. 250.00)
அண்மைக்காலத் தமிழகத்தின் அரசியல் போக்குக்களை நிர்ணயித்த சிந்தனைகளில் ஈ.வெ.ராவுடையவை முக்கியமானவை. அதன் குறைகளில் மடடுமே ஈ.வெ.ராவின் பங்களிப்பைக் காண்போர் உள்ளனர். மாறாக அதன் நிறைகளாகக் கருதுவனவற்றை மட்டுமே ஈ.வெ.ராவின் பங்களிப்பாகக் கருதுவோரும் உள்ளனர். ஈ.வெ.ரா. தமிழகத்தின் மறுமலர்ச்சிச் சிந்தனை. பகுத்தறிவுச் சிந்தனை, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு போன்ற, அடிப்படையில் முற்போக்கான, அரசியல் முனைப்புகளின் துாண்டுகோலாகவும் முக்கியமான சிந்தனையாளராகவும் இருந்துள்ளார். மாக்ஸியத்துடன் அவரது உறவு குறுகிய காலமே நிலைத்தது. ஆயினும், அவரது சிந்தனையில் அதன் தாக்கம் சிறிது தொடர்ந்தும் இருந்தது.
எவ்வாறாயினும் பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கையே அவரது நண்பர்கட்கும் எதிரிகட்கும் அவரது பிரதான அடையாளம் என்றால் மிகையாகாது. இதுவே அவரது பலம் என்று கருதுவோரளவுக்கு, இதனாலேயே அவர் நிராகரிக்கப்பட வேண்டியவர் என்போரும், தீவிரமான நிலைப்பாடுகளை எடுப்பதைக் காணலாம். ஈ.வெ.ரா. தவறுகட்கு அப்பாற்பட்ட மனிதர் அல்ல. அவரது தவறுகட்காக அவரது பங்களிப்புக்கள் மறுக்கப்பட வேண்டும் என்பதும் தவறே. ஆயினும் அவரது தவறுகள் அவர் விரும்பிய சமுதாய மாற்றங்களை மறிக்குமளவுக்குப் பெரியனவாக இருந்துள்ளனவா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
“பெரியாரிடமிருந்து தான் தமிழகத்து இடதுசாரி இயக்கம் தொடங்க வேண்டும்' என்றவாறான கருத்து (கோவை) ஞானியால் சில ஆண்டுகள் முன்னர் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பார்ப்பனார் பார்ப்பனாரல்லார் என்ற பிரச்சனை மையமாக உள்ளது. இது தமிழ்ச் சமுதாயத்தின் பிற அரசியற் பிரச்சனைகளை எல்லாம் சரியாக ஆராய முடியாதளவுக்குத் தடையாக நிற்கும்போது, அதுவும் விமர்சிக்க வேண்டிய ஒன்றே. சாதி அடையாளத்தை வைத்தே ஒவ்வொருவரது கருத்தின்மீதும் வாசிப்புகளைத் திணிப்பதும் கொள்கைகளைக் கட்டுடைப்பதும் தமிழகத்து ஆய்வறிவாளர்கள் சிலரது பிரதான உபாயமாகிவிட்டது. பாரதிமீது கை வைக்க முற்பட்ட இந்த நவீன பஸ்மாசுரன்,
24

ஈ.வொராவிலும் கைவைக்காமற் போகவில்லை.
இந்த விதமான போக்குகளினின்றும் விலகி நின்று, ஈ.வெ.ராவை ஆராய்வது தமிழகத்தைப் பீடித்துள்ள அரசியற் சோகையினின்று மீளும் முயற்சிகட்கு உதவும். இந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனுமே “பெரியார்: சுயமரியாதை சமதர்மம்' என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். முன்னுரையில் நுாலின் நோக்கம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. நூலில் ஈ.வெ.ராவின் பங்களிப்புக்கள் பற்றிய ஒரு விமர்சன நோக்கை எதிர்பார்க்குமாறு அம் முன்னுரை என்னைத் துாண்டியது. ஆயினும் வெகு விரைவிலேயே நூலின் தன்மை வேறு என்று உணர்ந்தேன்.
இந்த விரிவான நுாலின் குறிப்பான தேவை, ஈ.வெ.ரா. பற்றிய சில பாரிய விமர்சனங்களுக்கு மறுமொழி கூறி ஈ.வெ.ராவை சுயமரியாதை இயக்கத்தின் இலக்குகட்கு ஏற்ப செயற்பட்ட ஒரு சமதர்மவாதி என்று நிறுவுவதுதான். இங்கே எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் வழக்குரைக்கும் தொனியில் எழுதுமளவுக்கு ஆய்ந்து மதிப்பிடும் பாங்கில் எழுதவில்லை என்பதை, முன்னுரை தவிர்த்து, நுாலில் எல்லாவிடத்தும் காணக்கிடைப்பது. என்னளவில். வருத்தத்துக்குரியது. எந்த அலுவலிலும், ஆய்வாளர்கள் எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடத் தொடங்கும்போது, நிதானமான ஆய்வும் கவனமான வாதங்களும் வழி தவறிவிடுகின்றன.
ஆசிரியர்கள் முன்னுரையில் சரியாகவே அடையாளங் கண்டுள்ளதாக நான் கருதுவது போல, ஈ.வெ.ராவின் சிந்தனைகளை அப்படியே இன்றைய தமிழகச் சூழலிற் பிரயோகிக்க முடியாது. அவரது சிந்தனைகள் அன்றைய சூழலில் அவர் விரும்பிய முற்போக்கான மாற்றங்களைக் கொண்டுவர இயலாமற் போனதற்குப் புறக் காரணிகளினளவுக்கு அவரது அணுகுமுறை சார்ந்த அகக் காரணிகளும் முக்கியமானவை என்பது நூலிற் தவறவிடப்பட்டுள்ளதாகவே தெரிவது ஏன்? ஒன்றை நிரூபிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், ஆய்வாளரது நம்பிக்கைக்கு முரணானவற்றைப் புறக்கணிக்கத் தக்கனவாகவும் அகச் சார்புடன் திரிபுபடுத்தியும் கருதுவது விஞ்ஞானத்தில் நிகழும் போது, அவ்வாறே சமூகவியலிலும் அரசியலிலும் நிகழ்வதில் வியப்பில்லை. ஆயினும், நல்ல ஆய்வுகள், தெரிந்துகொண்டே தவறு செய்வதில்லை.
தமிழகத்தில் ஈ.வெ.ரா மீதான விமர்சனங்கள் எவ்வளவு தவறானவையாயும் விஷமத்தனமானவையாயும் இருந்தாலும், அதற்கான பதில் வேறுவகையான தவறாக அமைவது ஈ.வெ.ரா. பற்றிய புரிதலுக்கு உதவப் போவதில்லை. ஈ.வெ.ரா. தவறே செய்யாதவராக இருந்தால் அவர் செயற்படாத ஒருவராகவே இருந்திருக்க வேண்டும். அவரது சரியான செயல்களினின்றும் தவறானவற்றினின்றும் நாம் கற்க வேண்டும். அவரது தவறுகள் காரணமாக அவரது சரியான கருத்துக்களை யாரும் நிராகரிக்க அவசியமில்லை. எவரதும் கருத்துக்கள் அவருடையன என்பதற்காகவே ஏற்கப்பட வேண்டும் (அல்லது
25

Page 15
எதிர்க்கப்பட வேண்டும்) என்று யாரும் நம்பினால் அதைவிட மோசமான மூடநம்பிக்கை ஏது? ஆயினும் இத்தகைய மூர்க்கத்தனம் தமிழக ஆய்வறிவாளர்கள் எனப்படுவோரிடம் தெரிகிறது, இந்த நுாலின் ஆசிரியர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்தப் பொறிக்குள் கொஞ்சம் அகப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
இந்த நூலிலிருந்து முன்பு நாம் அறிந்திராத பல தகவல்களைப் பெற முடிகிறது. ஈ.வெ.ராவுடைய சமூக-அரசியல் வாழ்வின் முக்கியமான ஒரு பகுதி பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதன் மூலம் பிரச்சனைக்குரியதான ஒரு காலகட்டத்தை அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. ஆசிரியர்கள் தமது வியாக்கியானங்களைப் பல இடங்களில் வலிந்து புகுத்தியுள்ள போதும், தமிழகத்தில் ஈ.வெ.ரா. பற்றிய ஒரு நிதானமான ஆய்விற்கு வசதியான ஒரு உசாத்துணையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஈ.வெ.ராவை எதிர்த்த காரணத்திற்காகவோ, இன்றும் எதிர்ப்பவர்கள் சிலரது அபிமானத்துக்கு உரியவராக இருக்கிற காரணத்தனாலோ, ப. ஜீவானந்தமும், கூடவே மா. சிங்காரவேலரும், கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். எந்த மாக்ஸியவாதியுமே பூரணமான அறிவுடன் மாக்ஸிய அரசியலில் இறங்குவதில்லை. மாக்ஸிய அறிவு என்பது நடைமுறை சார்ந்தது. எவரிலும் அது வளர முடியுமே தவிர முற்றுமுழுதான தன்மை பெற முடியாது. சிங்காரவேலரும் ஜீவானந்தமும் அரசியலில் இறங்கிச் செயற்பட்டதன் மூலம் தங்களது அனுபவத்திற்கும் பார்வையின் தன்மைக்கும் விரிவுக்குமேற்பத் தமது மாக்ஸிய ஆய்வையும் அணுகுமுறையையும் விரிவு செய்தனர் என்!!தில் எவருக்கும் ஐயத்துக்கு இடமில்லை. குறிப்பான பிரச்சனைகளில் ஒருவது நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றத்தையும் தவறுகளையும் சமூக-அரசியல் சூழலை வைத்தே மதிப்பிட வேண்டியுள்ளது. ஈ.வெ.ரா. தொடர்பாகவும் இவ்விதமான மதிப்பீட்டுக்கான தேவை உண்டு. அது இந்நுாலிற் செம்மையாகச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், எல்லா இடத்தும் ஈ.வெ.ரா. தவறுகட்கு அப்பாற்பட்ட ஒருவராகவே ஆசிரியர்களாற் காணப்படுகிறார்.
மேற்கூறிய பார்வை காரணமாகவும் சமகால அரசியலின் சில தேவைகள் காரணமாகவும் நூல் நெடுகலும் சில வாசிப்புக்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஈ.வெ.ரா. பார்ப்பன ஆதிக்கம் பற்றி எழுதியது பார்ப்பன-பனியா ஆதிக்கம் என்று மீண்டும் மீண்டும் விளக்கப்படுகிறது. காந்தி ஒரு பனியா வகுப்பினர் என்பது இதற்கான காரணமோ தெரியவில்லை.
இன்னொரு வகையான பிரச்சனை, ஈ.வெ.ராவின் மாக்ஸிய அனுதாபத்தின் தோற்றமும் தேய்வும் தொடர்பான பகுதிகளில் ஏற்படுகிறது. ஈ.வெ.ரா. ஐரோப்பாவுக்குப் பயணம் சென்று வந்த பின்பே அவரிடம் முறையான சோசலிச் சிந்தனைகள் தோன்றின என்ற கருத்தை மறுதலிக்க, ஆசிரியர்கள்
26

சிறிது கடினமாகவே முயன்றுள்ள போதிலும், அதற்கு முன்பு அவரது சமதர்மக் கருத்தையும் (அரசாங்கத்தின் நெருக்குவாரங்களின் காரணமான) அவரது பின்வாங்கலுக்கு சிறிது முந்திய காலப் பகுதியில் அவரது கருத்துக்களையும் ஒப்பிடும்போது, அவரது சமூகப் பார்வையில் ஏற்பட்டிருந்த ஒரு பாரிய வளர்ச்சியை எவரும் தவறவிட முடியாது.
ஈ.வெ.ராவை விளங்கிக் கொள்வது என்பது, ஏற்கெனவே அவர் பற்றி நாம் எவரும் மனதிற்கொண்டுள்ள படிமங்களின் வெறும் வலியுறுத்தலாகவே இருக்கலாகாது. அவரது அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட ஏறுமாறான தன்மைகட்கு அவருடைய நியாயங்களைக் காணும் முயற்சியோடு நாம் நின்றுவிட முடியுமா? அதேவிதமான பார்வையுடன் அவருடைய சம காலத்தவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரும் இந்நூலில் அணுகப்படாதது ஏன்? காங்கிரஸ் பார்ப்பனியப் பணக்காரக் கட்சி, நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதவர் பணக்காரக் கட்சி என்ற விதமான எளிமைப்படுத்தல் தமிழ்நாட்டின் அன்றைய அரசியலை விளங்கிக் கொள்ளப்போதுமா? நூலாசிரியர்களைப் பொறுத்தவரை, ஈ.வெ.ரா, உலகை எவ்வாறு நோக்கினாரோ, அந்த நோக்கிற்கு இணங்க அவரது அரசியல்-சமூக வாழ்வைப் பார்ப்பதே இலக்காக இருந்துள்ளது. அவரது அணுகுமுறை முற்றிலும் சரியானதா, இருந்த தவறுகள் அவரது நடைமுறையையும் அதன் விளைவுகளயுைம் எவ்வாறு பாதித்திருக்கக்கூடும் என்பன பற்றி அவர்களது கவனம் போகவில்லை. எனவே அவரது நோக்கங்களின் மேன்மை ஆசிரியர்கள் அவரது நடைமுறையின் குறைகளைப் புறக்கணிக்கப் போதுமானவையாயுள்ளன. நாம் வரலாற்றிலிருந்து கற்க வேண்டியது தனி மனிதர்களது நோக்கங்களும் குறிப்பான முக்கியம் வாய்ந்த சில செயல்களும் பற்றி மட்டுமல்ல. அவை எவ்வாறு அவற்றிற்குரிய சமுதாய நடைமுறையைப் பாதிக்கின்றன என்பதும் அவற்றின் துணை விளைவுகளாக எத்தகைய சமுதாயப் போக்குக்கள் விருத்தியடைகின்றன என்பதும் மிக முக்கியமானவை. சில சமயங்களில், தோற்றத்தில் அற்பமான தவறுகட்காக வலிய அரசியற் சக்திகள் கூடப் பெரும் விலைகளைக் கொடுக்கின்றன என்பதை நான் நினைவூட்ட அவசியமில்லை.
பார்ப்பனியம்-பார்ப்பனர் என்ற இரண்டுக்குமிடையிலான வேறுபாடு பல சமயம் ஈ.வெ.ராவின் கருத்துக்களில் மங்கிவிடுகிறது. அவர் ஏறத்தாழ எப்போதுமே வலியுறுத்திய பார்ப்பனர்பார்ப்பனரல்லாதவர் பற்றிய முரண்பாட்டை அடிப்படையான முரண்பாடாக கொண்டதன் விளைவாகவே அவர் நீதிக் கட்சியுடன் கொண்ட உறவு, அக்கட்சி மிகவும் சீரழிந்த நிலையிலும், தொடர்ந்து ஆதரவு தருமாறு அவரை நிர்ப்பந்தித்தது. பார்ப்பனியம் ஒழியும்வரை இந்திய விடுதலையே தேவையில்லை என்பது போன்ற நிலைப்பாடும் இதே அணுகுமுறையினின்றும் எழுவதுதான்.
ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாகவே தன்னைக் கருதிய ஈ.வெ.ரா, வேண்டியோ வேண்டாமலோ, நீதிக்கட்சியின் நோக்கங்கட்குப் பயன்பட்டார்.
27

Page 16
பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாண அரசியலின் மிகவும் பாரிய விளைவுகளில் இது ஒன்று. இந்த விதமான அகச்சார்பு, நுால் கைவைக்காத பின்னைக் கால அரசியல் நிலைப்பாடுகளிலும் தென்படத் தவறவில்லை.
மேல்நாட்டானும் வடநாட்டானும் தமிழகர்கட்கு ஒரே வகையானவர்கள் தான் என்ற எண்ணம் ஈற்றில் சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லத் துாண்டியது போலவே, அவரது இந்தி எதிர்ப்பு, ஆங்கிலத்தையே தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றதுடன் முரண்படா. மல் நின்றது. இஸ்லாமிய மத மாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களது விடுதலைக்கு வழிகாட்டும் என்று அவர் சொன்னது குறிப்பிட்ட காலச் சூழலிலாயிருக்கலாம். இந்துக்களது முகத்தில் கரி பூசுதற்காக எவரும் மதம் மாறுவதில் கிளர்ச்சிப் பரிமாணம் ஒன்று உண்டு. ஆயினும் அது விடுதலையின் பரிமாணமல்ல. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் புத்த மதத்திற்கு மாற்றியது ஒரு கிளர்ச்சியின் கூற்று. அது நியாயமான செயல். ஆயினும், “பகுத்தறிவு பேசிய ஈ.வெ.ரா. அத்தகைய ஒரு கூற்றை முன்வைக்கும்போது, ‘கடவுளை நம்புகிற ஒரு வகை முட்டாள் தனத்திலிருந்து இன்னொரு வகை முட்டாள்தனம்’ விடுதலை தருமா என்ற தர்க்கம் எழுவது நியாயமானதே.
ஜின்னாவும் அம்பேத்கரும் ஈ.வெ.ராவின் திராவிட நாடு பிரிவினை பற்றி அக்கறை காட்ட மறுத்தது ஏன் என்பதற்கு, அவர்களது அரசியலின் சந்தர்ப்பவாதங்களையும் பார்வைக் கோளாற்றையும் குற்றங் கூறும் தொனியில் எழுதும் ஆசிரியர்கள், ஈ.வெ.ராவின் கோரிக்கையின் குறைபாடுகள் பற்றியும் கவனமெடுத்திருக்கலாம். இன்றுங்கூடத் தலித்தியமும் தமிழ்த் தேசியவாதமும் இவ்வியத்தில் முரண்படுவதில் வியப்பில்லை.
(சீனாவின்) மாஒ ஸேதுங், (கினி பிஸ்ஸோவின்) அமில்கர் கப்ரால் போன்ற சிந்தனையாளர்கள் அரசியற் களத்தில் இறங்கியதன் மூலம் தமது பார்வையை மேலும் விரிவுபடுத்தி ஆழப்படுத்தினர். அவர்கள் தவறுகள் செய்தவர்கள் தான். ஆயினும் தங்களது நேரடி அனுபவத்தின் பாதிப்புக்கட்குள் தம்மைக் குறுக்கிக் கொள்ளாததால், அவர்களாற் தமது தேசிய விடுதலை, சமூக விடுதலைப் பார்வைகளை உலகு தழுவிய முறையில் விரிவுபடுத்த முடிந்தது. தமிழகத்தில் இன்று இதற்கு நேரெதிரான போக்கை நாம் காணலாம்.
மாஒவின் நாத்திகமும், ஈ.வொராவின் நாத்திகமும் வேறுபடும் விதம், இருவரது பார்வைகளும் வேறுபடும் ஒரு முக்கியமான இடத்தை நமக்கு அடையாளங் காட்டுகின்றது. முன்னையவர் மூட நம்பிக்கைகட்கு ஆதாரமாகவுள்ள சமூக நிலைமைகளைத் தாக்கினார். மாஓ, சீன மரபினின்றும் மாக்ஸிய நிலைப்பாட்டுக்கான ஆதாரங்களை உருவாக்கினார். பின்னையவர் பிள்ளையார் சிலை உடைப்பில் தொண்டர்களை இறக்கினார். ஈ.வெ.ரா. ஐரோப்பிய அறிவொளி மரபுச் சிந்தனையாளர்களுடன் ஒப்பிடத்தக்கவர் என்பதால் அவரையும் மாக்ஸிய
28

வாதிகள் ஐரோப்பிய அறிவொளி மரபினைப் போன்று போற்ற வேண்டுமென அவாவுகிற ஆசிரியர்கள், ஈ.வெ.ரா, மாக்ஸியச் சிந்தனை பரவத் தொடங்கிய பின்பும், அந்த அறிவொளிச் சிந்தனை மரபினரது பூஷ"வா ஜனநாயகத் தளத்திலேயே நின்றதையும் கவனித்திருக்கலாம்.
ஈ.வெ.ராவின் அரசியல் வாரிசுகள் இன்று தமிழகதில் செய்வதென்ன? இதில் ஈ.வெ.ராவின் பங்கென்ன? ஈ.வெ.ரா.-மணியம்மை திருமணம் மட்டுமே தி.கவிலிருந்து அண்ணாதுரை ஆகியோர் பிரியக் காரணம் என்றால், தி.மு.க. அரசியல், தி.க. அரசியலினதும் பகுத்தறிவு இயக்கத்தினதும் தொடர்ச்சி ஆகிவிடாதா? இவ்வாறான பல கேள்விகள் எத்தனையோ மனதில் எழுகின்றன. அவற்றுக்கான விடைகளை இந்த நுால் தரும் ஏராளமான தகவல்களினின்று பெறுவது சிரமம். நூலின் வாதங்கள் வழங்கப்பட்டுள்ள முறைகள் ஏற்கெனவே முடிவான சில கருத்துக்களை நியாயப்படுத்தும் நோக்கிலானவை என்பதால் ஈ.வெ.ராவினதும் அவரது ஆதரவாளர்களதும் கருத்துக்களை ஆதரிக்கும் நோக்குடனேயே வசதிக்கேற்ப மாற்றுக் கருத்துக்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாக்ஸியத்திற்கெதிரான மாற்றுக்களாக தலித்திய, பெண்ணிய, தமிழத்தேசியக் கோட்பாடுகளை வளர்த்தெடுக்க முன்னிற்கிறவர்கட்கு ஈ.வெ.ராவைத் தவறற்ற, தன்னிகரற்ற ஒரு பிதாவின் படிமத்தில் வார்க்கும் தேவை இருக்கலாம். அது வழிபாட்டுத் தன்மையுடையது. வரலாற்றாசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமாக வரலாற்றை அணுகுவது நல்லது. -
ஈ.வெ.ராவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் தேவை மாக்ஸியவாதிகட்கு இல்லை. ஈ.வெ.ரா., அவரது தவறுகள் அத்தனையுடனும் கூடத், தமிழகத்திற்கு வழங்கிய முற்போக்குச் சிந்தனைகள் போற்றுதற்குரியன. அவற்றை ஏற்பதால் அவர் சொன்ன எல்லாவற்றையும் வேதவாக்காக எடுக்க அவசியமில்லை. அது பகுத்தறிவுமாகாது. இந்த இடத்தில் நுாலாசிரியர்கள் முன்னுரையில் வழங்கியுள்ள எச்சரிக்கைகள் பயனுள்ளவை.
ஏராளமான தகவல்களை வெகு சிரமப்பட்டுத் திரட்டிய ஆசிரியர்கள்
அவற்றை வழங்கும்போது சிறிது சமநிலையையும் பேணியிருந்தால், நூலின் கனதி மிகவும் உயர்ந்திருக்கும்.
29

Page 17
நான் ஏன் இந்து அல்ல
நான் ஏன் இந்து அல்ல. தமிழில்: மு. தங்கவேலு, ராஜமுருகு பாண்டியன்) காஞ்சா அய்லய்யா அடையாளம் வெளியீடு. தமிழ்நாடு)
இந்த நுாலில் முன்வைக்கப்படுகிற முக்கியமான வாதங்கள் சில:
தலித்துக்களின் கடவுளரும் இந்துக்கடவுளரும் மிகவும் வேறுபட்டோர். தலித்துக்களின் வழிபாட்டு முறைகள், சமய ஆசாரங்கள், நம்பிக்கைகள், சமூகப் பழக்க வழக்கங்கள் என்பன இந்துக்கள் எனப்படுவோருக்கு உரியனவற்றினின்று வேறுபட்டவை. வாழ்வும் மரணமும் பற்றிய பார்வைகளும் வேறுபட்டவையே.
இவ்வேறுபாடுகளின் அடிப்படையில், தலித்துக்களின் சமய முறையின் அடிப்படையில் மனித விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் உள்ள வாய்ப்புக்கள் பெரிது எனவும் இந்துமயமாதல் மேலும் அடிமைத்தனத்தையே ஊக்குவிப்பதற்கு மாறாக தலித்மயமாதல் அடிமை விலங்கை ஒடித்து மனித விடுதலையை இயலுமாக்கும் எனவும் வாதிடப்படுகிறது.
இந்து மதம் பற்றிய அடையாளப் பிரச்சனையில் நான் நூலாசிரியருடன் பெரிதும் உடன்படுகிறேன். இந்துக்களுக்கான பொது அடையாளத்தை உருவாக்குகிற சமகால முயற்சிகள் சமஸ்கிருதமயமாதலுக்கும் பிராமணிய மயமாதலுக்குமே வழிகோலுவன என்பதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. இதன் வர்க்கத் தன்மை, மேலாதிக்க நோக்கங்கள் என்பன பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. சமூக யதார்த்தம் எவ்வாறானது என்பதில் நாம் தெளிவாக இல்லாவிட்டால், வெறுமே இந்துமயமாதலை எதிர்ப்பது எதிர்மறையான விளைவுகளைத் தர இடம் உண்டு என்னும் என் கருத்தை முன்வைத்தே நூலாசிரியருடன் வேறுபடுகிறேன்.
இந்த நூலின் மிகப் பெரிய பலவீனம் அதன் மிகுதியான அகச்சார்பான அணுகுமுறையாகும். திராவிட இயக்கத்தில் இருந்து வந்துள்ள மூர்க்கத்தனமான ஒரு வரலாற்று ஆய்வுமுறையின் சாடைகள் இந்த நுாலில் மிகுதியாக உள்ளன. ஏலவே எடுக்கப்பட்ட முடிவுகளை நிறுவும் நோக்கில் தகவல்களை விளக்குவதும் ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைப்பதும், குறிப்பாக, அவை சரியான கருத்துக்களை ஆதரிக்க முன்வைக்கப்படும் போது, வாதங்களையும் நூலின் நோக்கையும் பலவீனப்படுத்துகின்றன.
30

உதாரணமாக, தென் இந்தியச் சாதியமைப்பு வர்ணாசிரம அடிப்படையில் பார்ப்பனச் சதியாலே உருவானது என்ற கருத்தின் மீது வாதங்களைக் கட்டியெழுப்பும் போது, பல வரலாற்றுத் தகவல்களை அப்படியே நிராகரித்து விட நேருகிறது. அதுவும் போக, இவ்வாறான வாதங்கட்கு மாறான கருத்துக்களுக்கு பிராமணிய அல்லது பிராமணச் சார்பான ஒரு முத்திரை குத்தி ஒதுக்குவது எளிது. எனினும் அது அறிவு சார்ந்ததல்ல, விடுதலைக்கு உகந்ததுமல்ல.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் சாதி அமைப்பு எவ்வாறு உள்ளது என்று கவனித்தால், பல வேறுபாடுகள் தெரியும். நால்வருண முறையில் தமிழரது சாதியமைப்பு உருவாகி வளர்ந்ததற்கான ஆதாரங்கள் குறைவு. ஆயினும் இன்றைய சாதி அமைப்பின் உருவாக்கத்திலும் அதன் கொடுமையான பல அம்சங்களிலும் பிராமணிய மதங்களின் தாக்கம் பெரிது. நமது சமூகத்தில் உள்ள சாதியக் கொடுமைகளின் முழுக் காரணமாகப் பிராமணர்களைக் காட்டுவது குறுகிய கால நோக்கில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவியிருக்கலாம். ஆயினும் சாதி முறையின் ஒழிப்பிற்கு இந்த அணுகுமுறை போதாது.
எக் காரணத்தாலோ, தென்னிந்தியாவில் சிறிது அதிகார வலிமை அல்லது பொருள் வலிமை உடைய, பிராமணரல்லாத “உயர் சாதியினரை புதிய சத்திரியர் என்று நூலாசிரியர் கூறுகிறார். சத்திரியர் என்ற வருணக் கோட்பாடுகளுக்கு இவர்களில் ஏகப் பெரும்பான்மையோர் பொருந்தாதவர்கள். இன்னும், ராவணன் ஒரு தலித் என்பது போன்ற விளக்கங்களும் எம்.ஆர்.ராதாவின் கீமாயானப் பாணியில் ராமாயணத்தை மறுவாசிப்புச் செய்வதும் கனதியான ஆய்வாகாது. ராம்லீலாவுக்கு எதிராக ராவணலிலா நடத்துவது ஒரு விடயம், ராமாயணத்தைப் புறநிலை யதார்த்தமாக ஆராய்வது இன்னொன்று.
இந்த நூல் நெடுகலும் வருகின்ற இத்தகைய ஊகஞ்சார்ந்த விளக்கங்கள் வரட்டுஎதிர்ப்பு இலக்கியத் தளத்திற்கு மேலே உயரத் தவறிவிடுகின்றன. நூலாசிரியர் "பார்ப்பனர்களது ஆய்வுகளை எல்லாம் சந்தேகத்துடனே நோக்கு’ என்ற பிரகடனத்தை ஒரு வலுவான கேடயமாக்க முயல்கிறார். ஆனால், மனிதர் உலகில் எல்லாமே கேள்விக்குரியன தாம். யார் சொன்னார் என்பதை ஆராய்வதை விடச் சொல்லப்பட்டவை மனித அறிவுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டுப் பரிசோதிப்பது அவசியம். இதில் எதற்கும் விலக்கு அளிக்கத் தேவையில்லை.
நுாலின் ஆய்வுமுறைக் குறைபாடுகளை ஒதுக்கி, நுாலாசிரியர் முன்வைக்கும் தீர்வை நோக்கினால், இந்துமயமாவதற்கு மாற்று தலித்மயமாதல் எனப்படுகிறது. இது தலித் யதார்த்தத்துக்கு எவ்வளவு பொருத்தமானது? இலங்கையில் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே அவர்களது தெய்வங்கள் (சிறு தெய்வங்கள் எனப்படுவன) கைவிடப்பட்டுச் சைவ வழிபாட்டு முறையை நோக்கிப் பெயரும் பண்பை நாம் காணலாம். அவர்களது வழிபாட்டு முறையில் இடம்பெறும் சமஸ்கிருதமயமாதல் வடமொழியில் பூசைகள் நடத்துகிற அளவுக்குப் போயுள்ளது. இது தமிழகத்திற் சமூக மேம்பாடு எய்திய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்
31

Page 18
நடுவிலும் காணப்படுவதாகும். தலித்மயமாதல் என்பது, வெறும் சுலோகமாக உள்ள அளவில், சாதியத்திற்கு எதிரான போராட்ட முறையாகாது.
பொருளாதாரக் கீழ்நிலையில் தலித்துக்களின் நிலையிலிருந்து மனித சமத்துவ நிலையை நோக்கி நகர்வது இந்துமயப்பட்டர்களது நிலைகளிலிருந்து நகர்வதை விட எளிதானது என்று அய்லய்யா வாதிக்கிறார். இந்த வாதம், மாஒ சேதுங், சீனாவின் மிகவும் வறுமைப்பட்ட கூலி விவசாயிகளைக் கம்யூன்கள் மூலம் சோசலிசத்துக்குக் கொண்டு செல்வது பற்றிக் கூறிய கருத்தை ஒத்ததாகத தோன்றலாம். எனினும், மாஓ, இத்தகைய மாற்றத்தில் வறுமையும் பின்தங்கிய நிலையும் ஒரு வசதியாக உள்ளதாகக் கொள்கிறாரே ஒழிய, மாற்றத்திற்கான கருவிகள் என அவற்றைக் கொள்ளவில்லை. விவசாயிகளைப் பிரதான போராட்ட அணியாகக் கொண்ட ஏகாதிபத்திய விரோத, சமூக விடுதலைப் போராட்டங்களில், பாட்டாளி வர்க்கத் தலைமையோ பாட்டாளி வர்க்கச் சிந்தனையின் வழிகாட்டலோ இல்லாமல் வெற்றி கிட்டியது இல்லை.
இந்துமயமாதல் என்பதற்கு மாற்றான ஒரு சமூகச் செயற்பாடு யதார்த்தம் சார்ந்தும் மாறி வரும் உற்பத்தி உறவுகள், தேசிய - பிரதேசிய சர்வதேசியத் தளங்களில் நிகழும் ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் பற்றிய விழிப்புணர்வுடனும் அமைய வேண்டி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களது ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத் தலைமை என்பவற்றைப் பற்றிப் பேசுகையில் சாதியம், ஆணாதிக்கம், குறுகிய தேசியவாதம் போன்ற ஆதிக்கப் போக்குகளைப் பற்றி அசட்டையாக இருக்க முடியாது. இது ஐக்கியமும் போராட்டமும் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது.
மறுபுறம் பிரச்சனைகளை மிகையாக எளிமைப்படுத்துவதும் ஒவ்வொரு போராட்டத்தையும் பிறவற்றிலிருந்து தனிமைப்படுத்துவதும் யாரைப் பலப்படுத்துகிறது என்பது பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியுமா? சாதியத்திற்கு எதிரான ஈழத்துப் போராட்ட அனுபவங்கள் சொல்வது என்ன? உண்மையான மாக்ஸியவாதிகளால் சாதியத்திற்கு எதிராக முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டித் தலைமைதாங்கி வழிநடத்த இயலும் என்ற வரலாற்று உண்மையைத் தமிழக தலித்திய குழுக்கள் பிடிவாதமாகவே காண மறுக்கின்றன.
சிலரது குறுகியகால நலன்கட்காக வெகுசனங்களது போராட்டக் கூர்மை மழுங்கடிக்கப்படுகிறது. இக் குற்றம் வலது சந்தர்ப்பவாத "மாக்ஸியத் தலைமைகட்கு மட்டும் உரியதல்ல. குறுகிய தேசியவாதிகள், சில தீவிர பெண்ணியவாதிகள், ‘துாய’ தலித்தியவாதிகள் போன்றோருக்கும் அதே அளவில் உரியது.
நூலாசிரியர் ஒரு வக்கீலாக வழக்காடும் நோக்கிற் செயற்படும் போக்கில்
செல்லுபடியான வாதங்கள் பலவற்றை வீணே பலவீனப்படுத்தியிருக்கிறார் என்பது மிகவும் வருந்தத்தக்கது.
32

தேசிய விடுதலைப் போராட்டம்: தீர்வுகளும் குழப்பங்களும்
(தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் மோதல்களும் தீர்வுகளும். வி. ரி. தமிழ்மாறன். கார்த்திகேயன் வெளியீட்டகம், கொழும்பு, ப. 113 +10, ரூ. 100, 00)
“வெறுமனே வரலாறாக அன்றி எமது வாழ்கால நிகழ்வுகள் மீது சவாலாகப் படியக் கூடியவை’ என்ற நோக்கில் காஷ்மீர், வட அயர்லாந்து, தென்னாபிரிக்கா, பியாட்ப்ரா (நைஜீரியா), பாஸ்க் (ஸ்பானியா), சூடான், கிழக்குத் திமோர் (இந்தோனீசியா), மேற்கு இரியன் (இந்தோனீசியா), திபெத் (சீனா) என்பன தொடர்பான பத்துக் கட்டுரைகளும் இனத்துவ அரசியல் பற்றியும் தேசியவாதம் பற்றியுமான கட்டுரைகளுஞ் சேரச், ‘சரிநிகர்’ இருவார ஏட்டுக்குத் தமிழ்மாறன் எழுதிய பன்னிரு கட்டுரைகளது தொகுப்பு இது. சிவத்தம்பி ஒரு மதிப்புரை எழுதியுள்ளார்.
வெறுமனே வரலாறென வரலாற்றில் எதுமில்லை. தகவல்களின் வியாக்கியானங்கள் மட்டுமன்றித் தகவல்களும் அகச்சார்பிற்கு ஆளாவனவே. வரலாறு எழுதப்படும் நோக்கம் எழுதப்பட்ட வரலாற்றின் வடிவையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிக்கிறது. பொதுவாக வரலாற்றைச் சமூக எசமானர்களே எழுதுவிக்கின்றனர். சமூகத்தை மாற்ற விரும்புவோர் கூட, அவற்றினின்றே தமக்கு அவசியமான தகவல்களைப் பிரித்தெடுப்பது அவசியமாகிறது.
சமகால உலக நிகழ்வுகளின் பதிவுகளை அறிவதற்கு நம்மிற் பெரும்பாலோர் சர்வதேசச் செய்தி நிறுவனங்களையும் நியூஸ்வீக், இகொணமிஸ்ற், 'யார் ஈஸ்ற்றேன் இகொணNக் றிவ்யூ போன்ற ஏடுகளையும் நாட. வேண்டியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் மாற்றுப் பார்வைகட்கான வாய்ப்பு மேலுஞ் சுருங்கிவிட்டது. இடதுசாரி மாக்ஸியச் சஞ்சிகைகளைத் தேடி வாசிப்போர் அனேகரல்லர். அணிசேரா இயக்கம் தளர்வுற்ற பின், மாற்றுப் பார். வைகளை அறிவதற்கு, ஒருவர் மிகுந்த சிரமம் எடுக்க வேண்டியே இருந்துள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் பிரதான செய்தி ஏடுகள் அனைத்துமே பல்வேறு காரணங்கட்காக அதிகாரபூர்வமான நிலைப்பாட்டினின்றே செய்திகளை வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கும் அதன் போராட்டடத்திற்கும் எதிரான செய்தித் திரிப்புக்கள் வரலாற்றுத் திரிப்புக்குக் களமைக்கின்றன. எனவே, அரசியல் விமர்சகருடைய பொறுப்புப் பெரியது. ஒரு
33

Page 19
அரசியல் விமர்சகருடைய அரசியல் நிலைப்பாட்டை அவரது எழுத்து எவ்வாறேனும் அடையாளங் காட்டிவிடும். பக்கச் சார்பற்ற விமர்சனம் என்று கருதப்படுவன சரியானவையாகவோ முழுமையானவையாகவோ இருக்க அவசியமில்லை.
தமிழ்மாறன் இருபதுக்குட்பட்ட நூல்களையுஞ் சில அறிக்கைகளையுஞ் சஞ்சிகைகளையும் உசாத்துணை எனக் குறிப்பிட்டுள்ளார். சிக்கலான பல பிரச்சனைகளைப் பரிசீலிக்க அவர் சார்ந்துள்ள ஆதாரங்கள் போதியனவா என்பது ஐயத்துக்குரியது. அவரது தகவல்களைத் தருவோரது அரசியல் என்ன என்பது பற்றிய அறிவுறுத்தலை அவர் தரவில்லை. அவற்றை அவர் கேள்விக்குட் படுத்தியதற்கு அவரது கட்டுரைகள் சான்று கூறவும் இல்லை.
காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் அடக்குமுறை பற்றிய அவரது விமர்சனத்தில் நியாயமுண்டு. அதேவேளை, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயத்திற்குப் பாதகமான முறையிலேயே பாகிஸ்தானும் நடந்து கொள்கிறது என்பது குறிப்பிடப்படவில்லை. காஷ்மீர் மக்கள் பற்றிய அக்கறையினாலன்றிப் பிராந்திய அரசியலிற் தமது லாப நட்டக்கணக்குகள் கருதியே, மேலை நாடுகள் தமது நிலைப்பாட்டை வகுத்துள்ளன. இங்கு கவனத்துக்குரிய விடயம், அயற்தலையீடு தேசிய விடுதலைப் போராட்டங்களை மேலும் சிக்கலாக்குகிறது என்பதே. இந்திய அதிகார வர்க்கத்தின் பிராந்திய விஸ்தரிப்பு நோக்கங்கள், ஆதிக்க இலட்சியங்கள் என்பவற்றையுங் கருத்திற்கொண்டே, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும் இந்திய ஒன்றியத்தின் தேசிய இன எழுச்சிகளிலும் இந்திய அரசின் நடத்தை மதிப்பிடப்பட வேண்டும். இதற்குப் பதிலாக, மேலோட்டமான ஒற்றுமைகளை வைத்து (உதாரணமாக, 5ம் பக்கத்தில் சர்வசன வாக்கெடுப்புப் பற்றிய வசனங்கள்) மிகவும் பலவீனமான விளக்கங்களைக் கட்டுரையாளர் முன்வைத்துள்ளார். இப் பலவீனம் அனேகமாக எல்லாக் கட்டுரைகளிலும் உள்ளது.
வட அயர்லாந்து பற்றிப் புலம்பெயர்ந்த தமிழ் ஏடுகளில் நான் வாசித்த சில கட்டுரைகள் தமிழ் மாறனின் கட்டுரையை விடத் தெளிவுடன் அப்பிரச்சனையைக் கையாண்டுள்ளன. பிரித்தானிய ஏகாதிபத்தியம், மொழி உட்படத், தேசிய இனங்களின் சுய அடையாளங்களைச் சிதைப்பதில் முக்கியமான கவனங்காட்டி வந்துள்ளது. இன்றைய வட அயர்லாந்தின் பிரச்சனை, பிரித்தானிய ஆட்சியாளர்கள் வேறும் பல பிரதேசங்களிற் போல, வேண்டுமென்றே உருவாக்கிய ஒரு சிக்கலின் விளைவு. வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்து மதத்தினரின் (உண்மையில் மதவாதத் தலைவர்களின்) கவலைகள் பற்றி நிறையவே எழுதியுள்ள தமிழமாறன், பிரித்தானிய ஆட்சியாளர்கள் சார்பில் முன்வைக்கப்படும் கத்தோலிக்க விரோதப் பிரசாரத்தை அதிகக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கிறார். ஐரிஷ் விடுதலைப்படை (ஐ.ஆர்.ஏ.) நடத்தும் இன்றைய போராட்டம் பழைய விடுதலைப்புரட்சியின் தொடர்ச்சியாகவன்றி வடஅயர்லாந்துக் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடும் நடவடிக்கைகளின் விளைவானது என்பது பற்றி அவர் கவனங்காட்டாததோடு, வழின் 'பெயின்
34

(Sinn Fein), ஐரிஷ் விடுதலைப்படையின் அரசியற்பிரிவு என்ற வாதத்தையும் அப்படியே எதிரொலிக்கிறார் வழின் 'பெயின் ஐ.ஆர்.ஏயினின்று கிளைத்தது மெய். ஆனால் அதன் தலைமையும் ஐ.ஆர்.ஏயின் தலைமையும் வேறு அவற்றிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அண்மைக்காலத்தின் அரசியல் நிகழ்வுகள் தமிழ்மாறனின் பாராட்டுக்குரிய ஜோன் மேஜரின் சந்தர்ப்பவாதத்தையும் அவரது பழமைபேணற் கட்சிக்கும் வட அயர்லாந்தின் இரண்டு பிரதான புரட்டஸ்தாந்து மதவாதக் கட்சிகட்கும் உள்ள உறவின் நெருக்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. வட அயர்லாந்தில் நீதியான சமாதானத்தின் எதிரிகள் இவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது. அண்மையில் நடந்த கலந்தாலோசனைக் குழுவுக்கான தேர்தல் முடிவுகள், வழின் 'பெயினைத் தனிமைப்படுத்த மேஜர் எடுத்த முயற்சியை முறியடித்து விட்டன. அநீதி உண்டேல் அமைதி இல்லை என்பதே வடஅயர்லாந்து தரும் பாடம்.
தென்னாபிரிக்கா பற்றிய கட்டுரையிலும் எப். டபிள்யூ டெக்ளோர்க்குக் கட்டுரையாளர் தெரிவிக்கும் பாராட்டுக்கள், இதே க்ளோர்க்கின் பழைய இனவெறி அரசியலை மூடிமறைகAன்றன. இந்த மனமாற்றங்களை இயலுமாக்குவதிலும் தெற்கு ஆபிரிக்கா முழுவதிலும் தமது மறைமுக/நேர்முக ஆதரவுடன் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளது அக்கறையை இயலுமாக்கியது என்ன என்ற கேள்வியைக் கட்டுரையாளர் தவறவிட்டுவிட்டார். இன்றைய தென்னாபிரிக்காவின் பிரதான கேள்வி, வெள்ளை இனத்து வசதிபடைத்த வர்க்கத்தினரை மகிழ்விப்பது தொடர்பானதல்ல. மாறாக, முந்நூறு வருட காலம் அடக்கி வைக்கப்பட்ட மக்களை நிமிர்ந்து நடக்க வைபபது தொடர்பானது. இதற்கான முயற்சிகளை உலக சமாதானத்தின் புதிய காவலர்களும், மனித உரிமையாளர்களும் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதே நம் கவனத்திற்குரியது. அவர்களது சுயநிர்ணயக் கோட்பாடு அப்போது எவ்வாறு பயன்படும் என்று பார்க்கலாம்.
نظ
பியா."ப்ரா பற்றிய குறிப்புக்களில் ஆபிரிக்க ஒற்றுமை நிறுவனம் (ஒ. ஏ. யூ.) பியாட்ப்ரா பிரிவினைக்கு எதிராக நின்றமைக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் தனது எல்லைகளைக் காக்கும் தேவையே காரணம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இந்த நிலைப்பாட்டுள் ஆபிரிக்காவில் மேலும் பிளவுகளை ஊக்குவிக்கும் அயல் முயற்சிகளை எதிர்க்கும் தேவையும் உள்ளடங்கும். 1960களின் பிற்பகுதியில் பியா."ப்ரா போராட்டம் எழ ஆறேழு ஆண்டுகள் முன்பு கொங்கோ (இன்று ஸய்யிர்) நாட்டினின்று கணிப்பொருள் வளம் மிகுந்த கட்டங்கா மாகாணத்தைப் பிரிக்கும் மேனாட்டு முயற்சியின் விளைவுகளை ஆபிரிக்கா மறக்க நியாயமில்லை. பியாஃப்ரா விடுதலையை நான்கு ஆபிரிக்க நாடுகள் அங்கீகரித்தன. ஆபிரிக்காவுக்கு வெளியே எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. பியாட்ப்ரா பிரிவினையைச் சீனா ஆதரித்ததாகக் கூறும் கட்டுரையாளர், தன் கூற்றுக்கான ஆதாரங்களைத் தருவாராயின் பயனிருக்கும். ஏனெனில், இன்று வரை, சீன அரசு ஆபிரிக்காவின் வேறெந்த
35

Page 20
உள்நாட்டுக் கிளர்ச்சியையும் ஆதரித்ததாகத் தெரியாது. இதுபோக, சோவியத் ஒன்றியத்துடன் முரண்பட்டமையே பியா."ப்ரா பிரிவினைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் எனவும் அக் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தினுடைய ஆதரவு பெற்ற சகல விடுதலைப் போராட்டங்களும் வெற்றிபெற்றன எனவும் ஆசிரியர் கூறுகிறார் அவ்வாறாயின் ஸிம்பாப்வே விடுதலைப் புரட்சி எவ்வாறு வெற்றிபெற்றது என்பதும் தென் ஆபிரிக்காவும் நமீபியாவும் (தெமே. ஆபிரிக்கா) ஏன் சோவியத் யூனியனின் சரிவு வரை காத்திருக்க நேர்ந்தது எனவும் கட்டுரையாளர் தான் விளக்க வேண்டும்.
எரித்திரியா, தென் சூடான், கிழக்குத் திமோர் பற்றிய கட்டுரைகளில் மற்றையவற்றை விட விரிவான முறையிற் தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆயினும் சோவியத் யூனியன் எரித்திரியாவைக் கைவிட்டு மெங்கிற்ஸ?வின் ‘சிவப்பு' ஆட்சிக்கு ஆதரவாகத் திரும்பி எரித்திரிய எழுச்சியை நசுக்க உதவியதற்கு ஆசிரியர் தரும் விளக்கங்கள் ஆழமற்றவை. சூடானில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய வாசகங்கள் (சூடான் பற்றிய கட்டுரை) இஸ்லாமிய அடிப்படை வாதம் எழுவதற்கு காரணமானவர் களது செயல் களைப் புறக்கணிக்கின்றன. அல்ஜீரியாவில் ஜனநாயக முறையில் தெரியப்பட்ட இஸ்லாமியக் கட்சிக்கு அரசாங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்ட பின்னர், அங்கு வன்முறை மிகவும் வளர்ந்துள்ளது. ஈரானில் இறுதிவரை சர்வாதிகாரியான ஷா றேஸா பஹலெவியை அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஆதரித்ததாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதிகளது கை ஓங்கியது. இதையெல்லாம் மறந்து எகிப்திய அடக்குமுறை அரசு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அடக்க எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிற தொனியில் அவர் எழுதுகிறார். வெள்ளிக்கிழமையே மத்தியகிழக்கிற் பரவலாக விடுமுறை நாளாக உள்ளது. இஸ்ரேலில் சனி விடுமுறை. கட்டுரையாளர் சூடானில் வெள்ளி விடுமுறையானதைக் கண்டித்து அதைப் போயா விடுமுறையுடன் ஒப்பிடும்போது போயா விடுமுறையுடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களே (7 நாள் வாரங்களும் 8 நாள் வாரங்களும்) போயா விடுமுறையின் பிரதான பிரச்சனை என்பதை அவர் மறந்துவிடுகிறார். இங்கெல்லாம் இஸ்லாமிய விரோத ஏகாதிபத்தியப் பிரசாரத்தை ஆசிரியர் கேள்வியின்றி ஏற்பதாகவே தோன்றுகிறது.
ஸ்பானிய நாட்டில் பாஸ்க் மக்களது சுய அடையாளச் சிதைப்பு, ஐரிஷ் மக்களது சுய அடையாளத்தைச் சிதைக்க ஆங்கிலேயர் எடுத்த முயற்சிகளை ஒத்தது. முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகித் தேசிய எல்லைகளைத் தாண்டுவதன் விளைவாகத் தேசிய சுய அடையாளச் சிதைவு நிகழ்கிறது. பாஸ்க் மக்கள் முப்பது வருடகால ஸ்பானிய 'பாஸிஸ ஆட்சியின் கீழ் அனுபவித்த இன்னல்கள் அவர்களது தேசிய உணர்வைச் சிதைக்கவில்லை. ஆயினும், இன்று அத் தேசியவாத இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தேசிய சுய அடையாளச் சிதைவுடன் தொடர்புடையது. அதையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நிலையையும் ஒப்பிடுவதில் மிகுந்த எச்சரிக்கைக்கு அவசியமுண்டு.
36

திபெத் பற்றிய கட்டுரையில், அந்தத் தேசிய இனத்தின் அடிமைச் சமுதாயம் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் இன்று பிரிவினை கோரும் எந்தத் தேசிய இனத்தையும் விட மிக நீண்ட காலமாக ஒரு பெரிய நாட்டின் பகுதியாக அது இருந்தது என்பதையும் கட்டுரையாளர் கவனிக்கவில்லை. தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் 1959ல் கிளர்ச்சியொன்றைத் துாண்டியது நிலவுடைமையாளர்களது நலன்களைப் பேணுவதற்காக என்பதையோ தலாய் லாமா பல அடிமைகளைத் தன்கீழ் வைத்திருந்த ஒரு நிலவுடைமையாளர் என்பதையோ மனித உரிமையின் பேரில் தலாய் லாமாவை ஆதரிப்போர் கூறுவதில்லை. திபெத் 1959 முதல் சீனாவின் சுயாட்சிப் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. கலாசாரப் புரட்சிக்காலத்தின் போது சகல மதத்தினரும் அனுபவித்த மத உரிமை மறுப்பை விட்டால், சீனாவில் வழிபாட்டு உரிமை பிறநாடுகளை விட நன்றாகவே பேணப்பட்டுள்ளது. மேலைநாடுகள் திபெத் பற்றி அண்மைக் காலமாகக் காட்டும் அக்கறை பற்றிய காரணங்களையும் கட்டுரையாளர்கள் தொட்டிருக்கலாம். திபெத் பற்றி சீன அரசாங்க விளக்கங்களையெல்லாம் அவர் ஏற்கவேண்டியதில்லை. ஆயினும் படித்தாவது பார்த்திருக்கலாம்.
சர்வதேச விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் போதியளவிற் தமிழில் வருவது இல்லை என்பதைக் கருத்திற்கொள்ளும் போது, இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கனவே தகவல்களை ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதும் தேவை புறக்கணிக்கப்படும் போது, யார் கைகளிற் செய்தி நிறுவனங்கள் உள்ளனவோ அவர்கள் தீட்டுஞ் சித்திரத்தையே தமிழ் மட்டுமே வாசிக்கிறவர்கட்கு முன் வைக்கிறோம்.
ஆங்கிலத்தில் மாற்றுக் கருத்துக் கான ஏடுகள் பல, சிற்றேடுகளாகவேனும் வருகின்றன. தமிழ் வாசகர்கள் மாற்றுக் கருத்துக்களைப் பெறுவதற்கு, ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்ற ஆய்வாளர்கள் உதவ வேண்டும். விமர்சன நோக்கற்ற தகவற் தமிழாக்கங்கள், ஏகாதிபத்திய விரோத நோக்கை மழுங்கடித்து, விடுதலைப் போராட்டத்தினையும் பலவீனப்படுத்துவன.
கட்டுரைகளில் ஒன்றிலேனும் வர்க்கம் பற்றிய பார்வையே காணப்படவில்லை. அங்கு தேசியத்திற்கு தன்னளவிலேயே ஒரு இருப்பு உள்ளது. ஆயினும் பியா.ப்ரா, கிழக்கு திமோர், எரித்தியா, திபெத், காஷ்மீர் போன்ற இடங்களில் பிரிவினைக்குச் சாதகமாக எழும் வாதங்களை நூலின் ஆசிரியராற் தென்னாபிரிக்காவின் ஸுலு, ஆபிரிக்கானார்கள் சார்பாக வைக்க இயலவில்லை. பாஸ்க்குகளின் போராட்டம் சோர்வடைவதிலும் ஆசிரியருக்கு ஆட்சேபனையில்லை. இங்கே தான், தேசம் என்றால் என்ன, தேசியம் என்றால் என்ன, எப்போது தேசிய இனவிடுதலை பிரிவினையாக அமைய வேண்டியுள்ளது என்றவாறான கேள்விகள் எழுகின்றன.
37

Page 21
“இனத்துவக் கட்சிகளும் சிறுபான்மையினர் வாக்குகளும்” என்ற கட்டுரையிற் தவறான தகவல்கள் நிறையவே உள்ளன. இந்தியாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றும் இனவாரி அணுகுமுறையை உடையன எனும் போது (ப.177) எத்தகைய கருத்துக் குழப்பம் ஏற்படுகிறது என நான் விவரிக்க அவசியமில்லை. மலேசியாவில் சீனர்களே இடதுசாரி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர் எனவும் இது மலேசியரை வலதுசாரிகள் என்று காட்டும் முயற்சி எனவும் கட்டுரையாளரால் கூறப்பட்டுள்ளது (ப.121). இதைவிட அபத்தமான அரசியற் கூற்று இந்த நூலில் வேறெதுவும் இல்லை. மலாயாவில் 1940களில் யப்பான் எதிர்ப்புப் போரில் முன்னின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுக்களே. இதனாலேயே, சீன-மலாய இனப்பகை நஞ்சைப் பரப்பிக் கம்யூனிஸ ஒழிப்புக் கொடுமையை பிர்த்தானிய ஆலோசகர்கள் முன்னின்று நடத்தினர். மலேசியாவில், இன்றும், ஆசிரியர் கூறும் ஒரு கட்சி ஆட்சிமுறை இல்லை. அங்கு உள்ளது பல கட்சி, வலதுசாரி அரசியல் தான். சிங்கப்பூரில் உள்ளதை வேண்டுமாயின் ஒரு கட்சி அரசியல் எனலாம். இலங்கையின் இடதுசாரிகள் பற்றிய கூற்றிலும் வலிந்து இடதுசாரிகள் மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்பு மிகுதியாகத் தெரிகிறது. தமிழ் நாட்டுத் திராவிட முன்னேற்றக்கழகம் கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் தனது வேட்பாளர்களை'நிறுத்தியது முற்றிலும் தமிழ் வாக்காளரது ஆதரவை நம்பியே அல்லாது திராவிட இயக்கத்திற்குத் தமிழரல்லாதோரின் ஆதரவை நம்பியல்ல. திராவிட இயக்கத் தந்தையாக கருதப்பட்ட ஈ.வெ.ரா. “திராவிட நாடாவது வெங்காயமாவது” என்று எப்போதோ வெகு தெளிவாகச் சொல்லிவிட்டார்.
இறுதிக் கட்டுரை, நு.மானுக்கு மறுமொழியாக எழுதப்பட்டது. நுட்மானின் கட்டுரையையும் சேர்த்தே பிரசுரித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். தமிழ்த்தேசியவாதம் முஸ்லிம்கள் மீது தொடுத்த தாக்குதலில் முஸ்லிம் விரோத இனவாத அரசியலே இல்லை என்பது தான் தமிழ் மாறனின் நிலைப்பாடாயிருக்கையில் முஸ்லிம்களின் தேசிய சுயஅடையாளப் பிரச்சினையை அவர் தட்டிக்கழிப்பதில் வியப்பில்லை. தேசியவாதம், இனவிடுதலை என்ற நோக்கிற்கு அப்பால் அடியெடுக்கும் போது, தனது பிற்போக்கு முகத்தைத் தெளிவாகவே காட்டத் தொடங்கி விடுவதைக் கட்டுரையாளர் காண மறுக்கிறார்.
கட்டுரைகளைக் கவனமாக வாசித்து விட்டுத்தான் சிவத்தம்பி மதிப்புரையை எழுதியிருப்பார் என நம்புகிறேன். ஆயினும் இந்த நுால் கூறும் 'உண்மைகள் யாருடைய உண்மைகள் என்பதைக் கூட அவர் சுட்டிக்காட்டவில்லை. சிவத்தம்பியின் எழுத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய கண்ணோட்டத்தையே காண முடியாமை ஏமாற்றமளிக்கிறது.
இறுதியாக, ஆங்கிலத் தகவல்களைப் பெற்று தமிழில் மீள வழங்கும்
பலரது பலவீனங்கள் நுால் முழுவதிலும் உள்ளன. தமிழில் வழங்கும் ஊர்ப் பேர்களும் தமிழ்மொழி வழக்குக்குரிய அயற்பேர் கூறும் முறைகளும் தமிழ்க்
38

கலைச்சொற்களும் கணிசமான அளவிற் புறமொதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அச்சாரமாகச் சிவத்தம்பியே 'கொலோனியலிச என்று ஒன்றைப் போட்டுள்ளார். தமிழின் கலைச்சொற் புனைவில் அவரது அக்கறை காரணமாக இது எனக்கு வியப்பளிக்கிறது. இதைவிட முக்கியமாக ஆங்கிலமல்லாத அயற்சொற்களை ஆங்கில மொழி பேசுவோர் உச்சரிக்கும் விதமாகவே தமிழிற் தருவது அடிக்கடி இந்நூலிற் காணப்படுகிறது. (உதாரணமாக, அசாட் காஷ்மிர். அஸாத் என்றால் சுதந்திர என்று பொருள் “கெளசா’, ‘இபோஸ்' என்ற சொல்லாக்கங்களில் 'ஹ' மீது ஈழத் தமிழரது 'பகைமையும்’ ‘இபோ’ என்பதை அறிவதில் அக்கறையின்மையையும் தெரிகின்றன. இவ்வாறே, சுகாட்டோ பற்றியும் 'அரபிக் மொழி பற்றியும் பேசப்படுகிறது. தமிழ் மொழி பற்றிய அக்கறையும் பிறமொழிச் சொற்களைச் சரிவர அறிந்து எழுதும் அக்கறையும் தமிழர்கட்கு நன்மை தருவன என்பது என் தாழ்மையான எண்ணம்.
39

Page 22
பார்வை மீதான விமர்சனங்களும் விமர்சனங்கள் மீதான பார்வையும்
(ஈழத்து தமிழ் இலக்கியத் தடம் 1980-2000 பார்வையும் விமர்சனங்களும் கார்த்திகேசு சிவத்தம்பி மூன்றாவது மனிதன் பதிப்பகம் கொழும்பு 2000, ரூ. 21000)
பதினைந்து கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசி நாலு உண்மையில் இலக்கியம் பற்றியன அல்ல. வேறு இரண்டு கட்டுரைகள் விமர்சனங்கள். மற்றவை இலக்கியமும் மாக்ஸிய, முற்போக்கு இலக்கியக் கொள்கைகளும் பற்றியவை. நுாலின் தலைப்பின் பொருந்தாமை பற்றி முதலிற் சொல்லியவன் நானல்ல. பெங்கர் காவ்யா வெளியிடுகிற நூல்களின் தலைப்பின் பாணியில் இடப்பட்ட இப்பேர், ஒரு நூற்தொடருக்குரிய தலைப்பாகவும் இடப்பட்ட துணைத் தலைப்பு நுாலின் தலைப் பாகவும் இருந் திருப் பின் பொருத்தமாயிருந்திருக்கும்.
நுாலின் முன்னுரையில் சிவத்தம்பி தன்னை மாக்ஸியரும் அல்லாரும் தாக்குவது பற்றியும் தனிப்பட்ட காரணங்கட்காகத் தன்சொற்கள் வெறுக்கப்படுவது பற்றியும் நியாயம் வரண்ட நிலையில் இயலாமை குரோதமாவது பற்றியும் மனம் வருந்தியுள்ளார். இது அவருக்கு மட்டுமே உள்ள ஒரு நிலையல்ல என்று என்னால் உறுதி கூற முடியும். இது போதுமான ஆறுதல் மொழியில்லையெனினும் குரோதத்தின்பாற்பட்ட விமர்சனங்கள் ஏற்கவொண்ணாதன.
பொதுவாழ்வு என்று வந்துவிட்டால் எல்லாவற்றிற்கும் முகங்கொடுத்தாக வேண்டும். நம் சொற்களும் செயல்களும் அவற்றினிடையிலான உறவும் கூரிய கண்காணிப்புக்கு ஆளாகின்றன. பொது நன்மை என்ற பேரில் செயலாகவும் செயலின்மையாகவும் சொற்களாயும் மெளனமாயும் வன்மம் தீர்க்கப்படுகிறது அறமும் ஆன்மிகமும் போதிக்கும் புனிதர்களும் சமூக நீதியின் பேரில் நடாத்தப்படும் ஏடுகளும் வன்மத்தின் கருவிகளாகின்றன. இதற்கு முகங்கொடுப்பது எவ்வாறு என்பதற்கு எளிய மறுமொழிகள் இல்லை. எனினும் விடைதர வேண்டிய விமர்சனங்களைச் சரியாக அடையாளங் காண்பது பொருத்தமானது என்பேன் எவரும் விமர்சகராக இருந்து கொண்டு விமர்சனங்கள் பற்றி கவலைப்பட முடியுமா? அது போக, எதிரும் புதிருமான திசைகளிலிருந்து விமர்சிக்கப்படுவதை வைத்து நாம் சொல்வது சரி என்று ஆத்மதிருப்தி கொள்ளவும் முடியாது.
சிவத்தம்பியின் விமர்சனப் பார்வையின் சில முக்கியமான பண்புகளை இங்கு அடையாளங் காட்டுவதன் மூலம் நூலின் முனைப்பை அடையாளங் காட்ட
40

முயல்கிறேன். சிவத்தம்பி தனது அரசியலின் கடந்த காலத்தை மீளாய்வு செய்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், அந்த அரசியலின் சில அம்சங்கள் அவரது எழுத்தின் மீது தமது அழுங்குப் பிடியை விடவில்லை. இவற்றினின்று அவர் விடுபடாதவரை அவரது மீளாய்வு செம்மையானதாக அமையாது என்பது எனது எண்ணம்,
இலங்கையின் இடதுசாரி இயக்கமாக இன்றும் அவர் அடையாளங் காண்பது பாராளுமன்ற அரசியற் சேற்றில் அழுந்திச் சீரழிந்த இரண்டு அரசியற் கட்சிகளையே. அவை இன்று பொதுசன முன்னணிக்குள் அடையாளம் இழந்து விட்டன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவோ அதையொட்டி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவோ அவரது கணிப்பிற்கு உட்படவில்லை. பாராளுமன்ற அரசியற் பாதை எனும் திரிபுவாதப் பாதைக்கும் மாக்ஸிய லெனினியப் பாதைக்கும் இடையிலான விவாதமும் அவரது கணிப்புக்கு உட்படவில்லை. என்னுடைய கடிதமொன்றின் பின்விளைவாக அடைப்புக் குறிக்குள் தரப்பட்ட ஒரு குறிப்பு (ப. 111) இந்த அக்கறையின்மையையே மேலும் வலியுறுத்துகின்றது.
இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினையைச் சரியாக கையாளவில்லை என்பதை அவர் கூறினாலும், அவர்களது தவறான நிலைப்பாட்டுக்கான காரணம் எங்குமே தேடப்படவில்லை. அண்மையில் தினக்குரலில் நடந்த ஒரு விவாதத்தின் போக்கில், தான் குறிப்பிடும் இரண்டு இடதுசாரி கட்சிகளும் மாக்ஸியத்துக்குத் துரோகமிழைத்து விட்டன என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது மெச்சத்தக்கது. ஆனால் இந்த நூலில் அவர் அந்தளவு துாரத்துக்கு வரவில்லை.
ஈழத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் முற்போக்கு இலக்கியம் பற்றியும் எழுதுகையில் தன் இருபத்தேழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றியும் தொடர்ந்து வெளிவரும் அதன் சஞ்சிகையான 'தாயகம் பற்றியும் அது வெளியிட்ட நூல்கள் பற்றியும் அதன் மூலம் உருவான ஒரு எழுத்தாளர் குழாம் பற்றியும் எழுதுவதை அவர் கவனமாகவே தவிர்த்துள்ளார். 1965க்குப் பின் வெறும் பேர்ப்பலைகையாகி 1975ல் ‘தேசிய ஒற்றுமை மாநாடு ஒன்றை நடாத்திய அபகீர்த்திக்குரிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை மட்டுமே ஒரு முற்போக்கு இலக்கிய அமைப்பாக கருதுகிறார். இதை அவருடைய அரசியற் சார்பினின்று பிரித்து நோக்க முடியாது.
அவருடைய மதிப்பீடுகளில் ஒரு சில பேர்களே மீண்டும் மீண்டும் வருவது அவரது வாசிப்பின் போதாமையாயிருக்கலாம். முக்கிய பங்களிப்புகளை அவர் புறக்கணிப்பதை நாம் அவ்வாறு கொள்ள முடியுமா? நூலுக்கும் கட்டுரைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் தொக்கி நிற்கும் விரிவான நோக்கத்துக்கு இவை உதவவில்லை. இன்னாரைச் சொல்லவில்லை என்பது என் முறைப்பாடல்ல. சில கலை இலக்கியத் தடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே என் குற்றச்சாட்டு.
சிவத்தம்பியின் கட்டுரைகளிற் பொதுவாகவே இலக்கியத்தின் வளர்ச்சியில் வரைவிலக்கணப்பட்ட இலக்கியக் கொள்கை கோட் பாடுகளது பங்கு
き、.
41

Page 23
மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஈழத்து இலக்கிய பரப்பில் சோசலிச யதார்த்தமின்றி விமர்சன யதார்த்தமே வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறும் போது (ப. 41) ஈழத்து யதார்த்த இலக்கிய வளர்ச்சியின் இயங்கியலை முற்றாகவே தவறவிட்டுவிட்டார். இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம் என்ற கருத்தாக்கம் வந்த பாதை அதன் தொடக்க நிலையில் சோசலிச யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் தந்தது. ஆயினும் முற்போக்கு இலக்கிய இயக்கம் சார்ந்த படைப்பிலக்கியத்தின் வளர்ச்சி விமர்சன யதார்த்தப் பாங்கிலேயே அமைந்ததை நாம் காணலாம். சில படைப்புக்களில் புரட்சிகர மனோதிரயப் பண்பு காணப்படினும், அவற்றிற் கூடச் சோசலிச யதார்த்தத்தை விட விமர்சன யதார்த்தப் பண்பையே நாம் காண முடியும்.
இறுதிக் கட்டுரைக்கு முந்திய மூன்றும் சென்ற ஆண்டு ‘மூன்றாவது மனிதனில் வெளியானவை. அவரது கட்டுரைகளில் நான் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் அவருடைய அரசியற் பார்வை தொடர்பானவையாதலால் அவற்றிற் பாரிய திருத்தங்களை நான் எதிர்பார்க்கவுமில்லை. புலம்பெயர்ந்தோர் பற்றிய கட்டுரையில், எஸ்.பொன்னுத்துரை போன்றோர், புலம்பெயர் இலக்கியம் பற்றி மிகைப்படக் கூறுவனவற்றிற்கு மாறான விளக்கங்கள் உள்ளன. புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் புலம்பெயர்ந்தோரின் எதிர்கால மொழி அடையாளமும் பற்றிய அவரது மதிப்பீகள் யதார்த்தமானவையே. ஆயினும் இனப்பண்பாட்டு அடையாளப் பேணலை இயலுமாக்குவது இனத்துவ உரிமைகள்' (Ethnic Rights) மேற்கில் பேணப்படுகின்றமையே என்பது, வரலாற்றைத் தலைகீழாக்குகிறது.
இன ஒடுக்கலின் விளைவாகவே பல சமூகத்தவர் தமது பண்பாட்டு அடையாளங்கள் மூலம் தம் தனித்துவத்தை வலியுறுத்த நேர்ந்தது. நிறவாதம் இன்று ஓங்குகிறது. இனத்துவ உரிமைகளை மறுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் இவ்வாறான ஒடுக்குமுறைச் சூழலே இன அடையாளத்தை மேலும் மேலும் அவசியமாக்குவதாகும். யூதரோ சீனரோ அராபியரோ ஐரோப்பிய சமூகத்தில் ஒரு பகுதியாவதற்கு ஐரோப்பிய நிறவாதம் அனுமதித்ததில்லை. அதுமட்டுமன்றி, இனப்பாகுபாடும் பகைமையும், குடியேறிய சமூகத்தவரிடையே தமது பாதுகாப்புக்கான ஒரு தேவையையும் அத் தேவை சார்ந்த அடையாளத்தையும் வற்புறுத்தின. இவை தொடர்பான போராட்டங்களின் விளைவாகவே இனத்துவ உரிமையும் அங்கீகாரமும் இயலுமாயின.
இந்து மதம் என்ற சொற்றொடரின் பிரயோகம் பற்றியும் சிவத்தம்பி எதிர்காலத்தில் கவனம் செலுத்துவாரென நினைக்கிறேன். இந்துத்துவம் எனும் மேலாதிக்கப் போக்கின் வாகனமாக இச்சொற்றொடர் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பிராமணமயமாதல் பல விதங்களில் புத்துயிர்ப்புப் பெற்றுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற விஷமிகளின் நிறுவன்ம் இலங்கையிலும் வேர்கொண்டுள்ளது. இந்து என்ற அடையாளம் விவேகானந்தர் போன்றோர் விரும்பிய விரிந்த நோக்கை இழந்து விட்டது. இதற்கெதிரான தமிழ் அடையாளம் இன்று இந்திய மேலாதிக்கத்துடைய ஒரு பகுதியாகிவிட்டது. இதற்கெதிரான தழிழ் அடையாளம் ஒன்றை வளர்த்தெடுப்பது பற்றி நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
42

“மொழிவழித் தமிழ் இன அடையாளத்தை ஏற்படுத்தியது தமிழரசுக் கட்சியே’ எனும் போதும், சிவத்தம்பி மாக்ஸிய மறுப்புக்காக முன்வைக்கப்படும் கருத்துக்களை விமர்சனமின்றி ஏற்றவராகிறார். தமிழரசுக் கட்சி உருவாக்கிய அடையாளம் வரலாற்றுக் கண்ணோட்டத்திற் போலியானது அதற்கான சமூக அடித்தளமோ அரசியற் பார்வையோ தமிழரசுக் கட்சியிடம் இருந்ததில்லை. அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களிடையே வலிய சக்திகளாக இல்லாதபோதும், இடதுசாரிகளால் ஈழத்தின் தமிழ்மொழி அடையாளத்தை (அதன் பன்முகப்பட்ட தன்மையை ஏற்று) விருத்தி செய்ய முடிந்தது. தமிழத் தேசியவாதிகள் எவருக்கும் இது இயலாமற் போனது ஏன் என்ற கேள்வியைச் சிவத்தம்பி ஏனோ எழுப்பவில்லை
நவீன பெண்ணியச் சிந்தனையின் தோற்றுவாய் மாக்ஸியமே. இந்த யுத்தத்தின் முதன்மையான பெண்ணியப் போராளிகள் மாக்ஸிய சிந்தனை வழிவந்தோரே. 1960களில் மாக்ஸிய லெனினிய அமைப்புகளிலும் வியற்நாமில் அமெரிக்காவின் போரை எதிர்த்து உலகெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் பெண்ணியவாதிகளது பங்களிப்பு பெரியது. பெண்ணியத்தை மாக்ஸியத்துக்குப் பகைமையானதாக மாற்றும் பணியில் பின் நவீனத்துவம் பயன்பட்டுள்ளது என்பது உண்மை. பெண்ணியத்தை ஒரு போராட்டச் சக்தியாக மாற்றுவதற்கு அது வழங்கிய ஆக்க பூர்வமான பங்கு என்ன என்பதே நம் முன்னுள்ள கேள்வி. பெண்ணுரிமை, பிற சமுதாய உரிமைப் போராட்டங்களினின்று ஒதுங்கி நிற்பதன் மூலம் சாதிக்கப்படுவது என்ன? இதை விசாரித்த பின்பே, பின் நவீனத்துவத்தின் பங்களிப்பை நாம் சரிவர எடைபோட முடியும்.
நுாலிற் பல்வேறு இடங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்கள் என்னை வியக்கச் செய்தன. மு. திருச்செல்வம் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சாயல்களை உள்ளடக்கியே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குப் பேர்வைத்தார் என்ற கூற்று (ப. 33): 1966-68 கால யூ.என்.பி அரசாங்க அமைச்சர், 1971 ஜே.வி.பி கலவரத்தின் போது யூ.என்.பியை விட உரத்துச் சீனாவைக் கண்டித்தார். அவர் எப்போது ஏகாதிபத்திய விரோதியானார் என்று சிவத்தம்பி மேலும் விளக்க வேண்டும்.
விஞ்ஞானம் பற்றிச் சிந்தனை நிலைப்பட்ட ஆக்கங்களின் குறைபாட்டை ‘ஓரளவு போக்குவதற்கு முயன்றவர்’ சபா. ஜெயராசா தான் என்ற தீர்ப்பு (ப. 54): சபா. ஜெயராசா ஆற்றிய பணியை யாரும் மறுக்கவேண்டியதில்லை. நானறிய 1970களில் இரண்டு முக்கிய தமிழ் விஞ்ஞான சஞ்சிகைகள் பிரசுரமாயின. இவை பற்றிச் சிவத்தம்பியின் மதிப்பீடென்ன? இனப் பிரச்சினையதை தேசிய இனப் பிரச்சினையாக பார்த்தோராக குமாரி ஜயவர்த்தன, சாள்ஸ் அபேசேகர, நியூட்டன் குணசிங்ஹ குறிப்பிடப்படுகின்றனர். (ப. 115). குமாரி ஜயவர்த்தனவின் அரசியலையும் சாள்ஸ் அபேசேகரவின் அரசியலையும் அண்மைய வரலாற்றில் வைத்துப் பார்த்துத்தான் இவர்களுக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ளதா?
இலக்கியக் கொள்கை பற்றிய கட்டுரைகளில் செய்யப்படவும் கவனிக்கப்படவும் வேண்டும் எனவும் இடதுசாரிகள் செய்யத் தவறியன எவையெனவும் எழுதப்பட்டுள்ளது. சிவத்தம்பியின் பரிந்துரைகளில் எவையேனும்
43

Page 24
அவராலோ அவரது வழிகாட்டலிலோ ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மாக்ஸியவாதிகள் அதையும் இதையும் செய்யவில்லை என்றோ பிழையாகச் செய்தனர் என்றோ பட்டியலில் போடும் ஒரு புதிய விமர்சனமரபு கடந்த தசாப்தத்துள் சில தேசியவாத வட்டாரங்களுக்குள்ளிருந்து உருவாகியுள்ளது. இவர்கள் எதைச் செய்தார்கள் என்ற கேள்வி மட்டும் எழுவதில்லை. சிவத்தம்பியின் மேற்கூறியவாறான எதிர்மறையான கணிப்புக்கள் இவர்களால் மகிழ்வுடன் வரவேற்கப்படுகின்றதில் வியப்பில்லை. சிவத்தம்பி விமர்சிப்பது அவர் சம்பந்தப்பட்ட அரசியலையும் அதனோடு ஒட்டிய ஒரு இலக்கிய அமைப்பையும் தான். அதை முழு இடதுசாரி இயக்கத்திற்கும், குறிப்பாக மாக்ஸிய-லெனினியச் சிந்தனைக்குப் பொருத்துவது சரியாகாது. மாக்ஸிய-லெனினியச் சிந்தனை வழிப்பட்டோரின் தவறுகள் பல உள்ளன. ஆனால் அவை சிவத்தம்பி அடையாளங்காண்பன அல்ல. இதை அவர் தெளிவுபடுத்தியிருந்தால் அவருடன் முரண்பட்டு விவாதிக்க அதிகம் தேவை இராது.
நூலின் முன்னுரை சிவத்தம்பியின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளின் சாராம்சம் எனக் கொள்ளப்படலாம். ஆனாற் கட்டுரைகளில் இல்லாத ஒரு பிசிறு அங்குள்ளது. வரலாற்றுக் கால இடைவெளிகளை ஐம்பதுகள் அறுபதுகள் என்று சொல்லிப் போகிற சிவத்தம்பி, விலக்காக ஒரு ஆண்டைக் குறிப்பிட்டால், அது ஏதோ அரசியல் முக்கியத்துவமான ஒன்றாக இருக்கும். எனினும், முன்னுரையில் ‘1982களுக்கு (?) முன்னர் நிலவிய விமர்சன எடுத்துரைப்புகளைப் புனித சின்னங்களாகப் போற்றும் ஒரு மனோபாவம் வளர்ந்தமை பற்றி எழுதுகிறார். 1982ன் முக்கியத்துவம் என்ன? புனித சின்னங்களான விமர்சன எடுத்துரைப்புக்கள் எவை? எவருடையவை? இந்த நூல் கைலாசபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், 1982க்கும் கைலாசபதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என நம்பலாமா?
சிவத்தம்பியுடன் கருத்தில் முரண்பட்டாலும் அவருடைய ஆய்வு நூல்கள் பல ஆக்கபூர்வமானவை என்பதை ஏற்கிறேன். இந்த நுாலை என்னால் அப்படிக் கருதமுடியவில்லை. தேசியவாதத்துடன் சமரசம் செய்யாமலே ஒரு மாக்ஸிய வாதியால் தேசிய இன ஒடுக்கலை எதிர்த்தும் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் செயற்பட முடியுமாக இருக்க வேண்டும். இது பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகட்குக் கைவரவில்லை. அந்த வரலாற்றைச் சர்வதேச இடதுசாரி இயக்க வரலாற்றுடன் சேர்ந்து விமர்சிக்கத் தயங்குவதே இந்த நூலின் பெரிய பலவீனம், மாக்ஸியத்தை விட்டுக் கொடுத்துத் தேசியவாதத்தை ஏற்கும் நிலை ஏற்பட இது வசதிசெய்து கொடுக்கிறது.
நூலின் நேர்த்தியான தோற்றமும், வடிவமைப்பும் மெச்சத்தக்கன.
44

நவீனத்துவம் பற்றிய தவறான புரிதல்கள்
(தமிழில் நவீனத்துவம், பின்நவீனத்துவம் பெங்களுர், 1997, ப. 172+20, ரூ. 50)
தமிழ் இலக்கியத் துறையில் மட்டுமன்றி, மொழி, சமூகவியல், கலை, பண்பாட்டுத் துறைகளிலும் அயலினின்று வருவனவற்றை உள்வாங்குவது தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு. சில சமயங்களில், உள்வாங்கல்கள் தேவை கருதியும் ச்முதாய விருத்தியின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாயும் நிகழ்கின்றன வேறு சமயங்களில் அயலினின்று, குறிப்பாக மேலை நாடுகளினின்று, புதிதாக எதையாவது இறக்குமதி செய்து அது பற்றி அகமகிழ்ந்து பெருமைப்படும் ஒரு போக்கிற்குரியதாகவும் அமைந்துவிடுகிறது. இதற்கான சில வலிய உதாரணங்களை அண்மைக் கால இலக்கிய விவாதங்களில் நாம் கண்டிருக்கிறோம். அயலினின்று வரும் காரணத்தால் மட்டுமே ஒன்று நமக்கு உகந்ததாகவோ அல்லாததாகவோ ஆகிவிட அவசியமில்லை. தெளிவான சிந்தனைக்கு ஒரு மாற்றுப்பொருளாக இவை அமைவது பற்றி நாம் கவனமாயிருப்பது நல்லது. ஞானியிடம் இக்குறைபாடு குறைவு, ஆயினும் பிை நவீனத்துவ, பின் அமைப்பியல் பண்டிதர்கள் முன் அவரும் மிரள்கிறார்.
தமிழில் நவீனத்துவம் எனும்போது, நாம் நவீனத்துவமென்று கருதுவது எதை என்பதில் ஒரு சிக்கல் எழுகிறது. ஏனெனில் மேற்கின் நவீனத்துவக் கொள்கை, அதுபற்றி எவ்வளவுதான் கருத்துக் குழப்பங்களும் முரண்பாடுகளும் இருப்பினுங் கூட, ஒரு வரலாற்று வளர்ச்சிக்குரியது. இது, உண்மையில், குறிப்பான ஒரு சிந்தனைப் போக்கின் விளைவாக அன்றிப், பின்னோக்கிய பார்வையில், இந்த நுாற்றாண்டின் முற்கூற்றில் எழுந்த பலவகையான புதிய கலை இலக்கியப் போக்குக்களை அடையாளங்காணப் பயன்படுகிற ஒரு கருத்தாக்கமே.
பின்நவீனத்துவம் என்பது பற்றி தெளிவும் உடன்பாடுங் குறைவு, ஆயினும், அதற்கு நவீனத்துவ இலக்கியப் பார்வையுடனான சில முரண்களும் முறிவுகளும் எளிதில் அடையாளங் காணக்கூடியன. இது பலரால் ஒரு சமகால மாயாவாதமாகவே விளங்கிக்கொள்ளப்படுகிறதும் அவ்வாறே பிரயோகிக்கப் படுகிறதும் நமது கவனிப்பிற்குரியது.
45

Page 25
ஞானி நுாற்தலைப்பிலான முதற் கட்டுரையில், நவீனத்துவத்தை ஒரு கோட்பாடாகவே காண முனைகிறார். யதார்த்தவாதம் என்பதை அதற்கு வழங்கப்படக்கூடிய மிக விறைப்பான பொருள் கொண்ட ஒரு கோட்பாடாக்குகிறார். தமிழகத்தில் பின் நவீனத்துவத்தின் ஒரு குரல் பார்ப்பனியத்தினதாயும் மறுகுரல் தலித்தியத்தினதாயும் இருக்கிறதாக அடையாளம் காணுகிறார். பின் நவீனத்துவம் பேசுகிற தலித்தியம் எந்தளவு துாரத்திற்கு தலித்துக்களது விடுதலையை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரதும் விடுதலையுடன் இணைத்துக் காணவும் செயற்படவும் உதவுகிறது என்பது பற்றி அவர் அதிகம் கூறவில்லை. ஆயினும் யதார்த்தவாதமும் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் சேர்ந்த ஒரு சூழலை அவர் நமக்குப் பரிந்துரைக்கிறார். இந்த விதமான சகல சிந்தனா சமரசப் போக்கு, ஞானியின் நுாலில் உள்ள பிற கட்டுரைகளிலும் உள்ளது. ஆயினும், நமது பின் நவீனத்துவப் பண்டிதர்கள் பண்ணுகிற குழறுபடிகள் பற்றியும் அவற்றுக்கு அவர்களால் வியாக்கியானஞ் செய்யப்படுகிற பின் நவீனத்துவக் கோட்பாடுகளின் பங்களிப்புப் பற்றியும் அவர் கூடக் கவனஞ் செலுத்தி இருக்கலாம்.
நுால் முழுவதிலும் காணக்கூடிய இன்னொரு பொதுவான போக்கு, மாக்ஸியர்கள் மீது அவர் தொடுக்கும் பல வகையான தாக்குதல்கள் எனலாம். இடையிடையே ‘முதலாளித்துவத்தை உள்வாங்கிக் கொண்ட மாக்ஸியர்கள் என்று கவனமாக வேறுபடுத்துவது போல முயன்றாலும், அவர், எஸ்.என். நாகராஜன் பாணியில், தனக்கு ஏற்புடையதாய் தெரியும் மாஒ சேதுங் சிந்தனையை "மேலைத்தேய - கீழைத்தேய' என்ற பாகுபாட்டின் மூலம் கணிசமான அளவுக்குக் கொச்சைப் படுத்திவிடுகிறார். மாக்ஸியவாதிகளது இலக்கியப் பார்வை குறித்து அவர் வைக்கும் அபாண்டமான குற்றச்சாட்டுகளில் சிலதை, நூலுக்கு முன்னுரை எழுதிய பொன்னீலன் (அவர் இன்னமும் முதலாளியத்தை உள்வாங்கிய மாக்ஸியரா என்று தெரியாது) மறுக்க வேண்டியும் நேர்ந்துள்ளது. நுாலிற் தரப்பட்டுள்ள பல வேறு குற்றச்சாட்டுகளையும் நான் விமர்சிக்க முற்படின் இது மதிப்புரையாக அல்லாது நீண்ட விவாதமாகி விடும்.
நுாலின் பலவீனங்கள் ஆசிரியரது மிகுதியான அகச்சார்பின் பாற்பட்டவையென்றே தெரிகிறது. சில ஆக்க இலக்கியங்கள் பற்றிய ஆசிரியரது குறிப்புகளில் அவரது அகவுணர்வுகளின் ஆதிக்கம் மிகுதி, அதைவிடத், தமிழ் மரபு சார்பாக அவரது பார்வையில் நான் காண்கின்ற அகச்சார்பு அபத்தமான பல நிலைப்பாடுகட்கு இட்டுச்செல்வது தவிர்க்க இயலாதது. அவரது குறுகிய தமிழ்த் தேசிய (?) உணர்வு, அவருக்கும் மாக்ஸியவாதிகளுக்குமிடையிலான முரண்பாடுகட்கு ஆதாரமாக உள்ளது. மாக்ஸிய சிந்தனையாளர் தொடர்பான அவரது புரிதலும், மரபின்மீதான ஒரு தீவிரமான பற்றுதலின் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கத் தெரிகின்றது. இவைபற்றி நிறையவே கூறலாம். எனினும் ஓரிரு விடயங்களை மட்டும் குறிப்பிடுவது போதுமானது.
46

“(மாக்ஸியர்களுக்கு) பொருளியல் அடிப்படையிலான சமூகப்பார்வை அழுத்தமாக இருக்கிறது. ஆனால் வாழ்வியல் பார்வை அறவே இல்லை.” (Lj. 74)
“(மாக்ஸியர்களின்) கருத்துப்படி, கலைஞர்கள் சமூக மாற்றம் குறித்துச் சிந்திப்பதில்லை. ஆனால் இவர்களுக்காகச் சமூகம் உழைக்க வேண்டியிருக்கிறது. கலைஞர்கள் சுகமாக வாழ மக்கள் துயரப்பட வேண்டியிருக்கிறது.’ (ப. 69)
"ஆக மாக்ஸியக் கட்சிகள் ஒட்டுமொத்தமான வர்க்கப் போராட்டத்திற்குத் திட்டமிட வேண்டுமே தவிர, பாட்டாளி வர்க்கத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமே திட்டமிடுவது மாக்ஸியர் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்டதைத்தான் காட்டுகிறது.’ (ப. 83)
மேற்கூறியவாறான பல்வேறு கூற்றுக்களும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் நூலில் மலிந்துள்ளன. இது மாக்ஸிய நடைமுறை பற்றிய தெளிவீனங் காரணமானதா அன்றி மாக்ஸியர் பற்றி ஞானி கட்டியெழுப்புவதற்கு முனையும் ஒரு குறிப்பான படிமத்தை இலக்காகக் கொண்டதா என்று என்னாற் கூறமுடியவில்லை. ஆயினும், அத்வைதம், மதம் போன்ற பல விடயங்களையும் அவர் இழுத்தடித்துக் குழப்புகிற இடங்களில் எஸ்.என். நாகராஜனுடைய சில குழப்பங்களின் தொடர்ச்சியே எனக்குத் தென்படுகிறது.
ஞானியின் பல குழப்பங்களது அடிப்படை, அனேகமாக, அவரது தமிழ் (திராவிட) மரபுகள் மீதான தீவிரமான பற்றுதலுடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கக்கூடிய அளவிற்கு அவரது ‘தமிழ் மரபின் தடங்கள்’ என்ற கட்டுரை அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாகச் சில பகுதிகள்:
“இந்திய மரபு என்பதில் ஆரிய மரபு என்பதைக் காட்டிலும் கூடுதலான அழுத்தம் உடைய திராவிட மரபு என நாம் புரிந்துகொள்ள இயலுமானால் இந்தியாவைத் திராவிட இந்தியா என்றே நாம் சொல்ல முடியும்.’ (ப. 105)
“மக்கள் நலம் சார்ந்தது திராவிட மரபு என்ற முறையில் முதலாளியம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை மறுப்பது திராவிட மரபு என்று சொல்லலாம். சமத்துவம் சமூக நீதி என்பவை திராவிட மரபு. இவற்றை மறுப்பது ஆரிய மரபு பெண்ணைப் போற்றுவது திராவிட மரபு ஆண் ஆதிக்கத்தைத் துாண்டுவது ஆரிய LDJL) .” (LJ. 105)
இவற்றுக்கும் மேலாக இக்கட்டுரை பற்றிக் கூறி அதன் உள்ளடக்கத்தை விமர்சிக்க எனக்கு அவசியமில்லை.
47

Page 26
மாஓ சேதுங் பற்றிய ஒரு மனோரதியப் படிமத்தைக் கொண்டுள்ள. வர்களுள் ஞானியும் ஒருவராகத் தெரிகிறார். அவருடைய 'கிழக்கு-மேற்கு', முதலாளியத்தை உள்வாங்கிய-வெளியேற்றிய என்றவாறான ஆய்வுக்கு அது அணுசரணையாக உள்ளது. கொரியா, வியற்னாம் ஆகிய நாடுகளிலும் புரட்சிகள் நடந்துள்ளன. மிகுந்த இடையூறுகட்கெதிரான வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன. கியூபாவும் நிக்கராகுவாவுங்கூடப் புரட்சியில் நமக்கு நல்ல முன்னுதாரணங்கள் தாம். இந்தியச் சமுதாயம் நான் மேற்குறிப்பிட்ட எந்தச் சமுதாயத்தையும் விடச் சிக்கலான ஒன்று. எனவே மாக்ஸின் ஆசிய உற்பத்திமுறை பற்றிய ஆய்வின் தொடர்ச்சியாகவோ சீனப்புரட்சியில் மாஒவின் பாதையை அப்படியே அடியொற்றியோ இந்தியாவின் சமுதாய மாற்றம் பற்றிய ஆய்வும் நடைமுறையும் அமைய முடியுமா என்பது மிகவும் கவனமாகச் சிந்திக்க வேண்டிய விடயம்.
மாஓ பற்றிய கவனிப்பு இந்தியாவின் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் போதியளவில் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நியாயமானது. ஆயினும் மாஓ பற்றிய ஞானியின் கவனிப்பு அக் குறைபாட்டிற்குரிய பரிகாரமாகத் தெரியவில்லை. மறுபுறம், பல இடங்களிலும் எல்லாருக்கும் எல்லாமுமாகத் தெரியக்கூடிய ஒரு பொதுப்பாதையை ஞானி காட்ட முயல்கிறார். அது எவருக்குமே எதுவுமில்லாததாகி விடலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
போக, ஞானிக்குக் கா.சிவத்தம்பி எழுதிய மடல்களினின்று சில பகுதிகளைப் பெருமிதத்துடன் நுாலின் தொடக்கத்தில் பிரசுரித்திருப்பது ஏனென்று தெரியவில்லை. சிவத்தம்பி இப்போது முதலாளியத்தை அகற்றிவிட்ட மாக்ஸியரா என்று அறிய ஆவலாயுள்ளேன். -
நுாலில் அச்சுப்பிழைகள் குறைவாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
எனினும், தரிப்புக்குறிகள் எழுத்துடன் ஒட்டிவிடுவது, அச்சு முறையின் குறை. அயற்சொற்களின் தமிழ்ப்படுத்தலிலும் உள்ள சில பிசகுகள் தவிர்க்கத் தக்கன.
48

டானியலில் மார்க்ஸியமும் தலித்தியமும்
(பஞ்ச கோணங்கள். கே. டானியல், விடியல் பதிப்பகம், கோவை 1993 ப 356 + xvi eb45.00)
சாதியம் உள்ளளவும் அதற்கெதிரான போராட்டம் ஓயாது. அப் போராட்டத்தின் களங்களில இலக்கியமும் ஒன்று. ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமைக் குரலாகவும் போர்ட் பிரகடனமாகவும் அமைவது தலித் இலக்கியம் எனப்படும் தாழ்த்தப்பட்டோர் இலக்கியம். தலித்துக்களால் தலித்துக்களுக்காக எழுதப்படுவதே தலித் இலக்கியம் என்போர் உளர். இவர்கள் கூறுவது சரியாயின். மக்ஸிய இலக்கியம் எல்லாமே பாட்டாளிகளாலும் பெண்ணிய இலக்கியம் எல்லாமே பெண்களாலும், ஒருவேளை, ஆங்கில இலக்கியம் யாவுமே ஆங்கிலேயர்களாலும் எழுதப்பட்டாக வேண்டும். முக்கியமான விடயம் நிலைப்பாடு சார்ந்தது. தலித் படைப்பாளிகள் எல்லாருமே தலித் இலக்கியம் படைப்போரல்லர். சாதியத்தின் கொடுமையை நேரில் உணர்ந்த ஒருவர் போல, இன்னொருவரால் அதை விளக்குதல் கடினம். அதே வேளை, சாதியத்திற்கெதிரான போராட்டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்குபற்றினோர் தலித்துக்கள் இல்லாவிடினும் அவர்களது அனுபவங்களை உள்வ்ாங்கிக் கொள்ளும் உணர்திறன் உள்ளவர்களாயின் அவரகளது படைப்புக்கள் தலித் இலக்கியப் பண்புடையவை. ஓரிரு ஆண்டுகள் முன்னம் பாரதி ஒரு தலித் என்று பிரபஞ்சன்
நக்கீரன்’ வார ஏட்டில் எழுதியது நினைவுகூரத் தக்கது.
தலித் இலக்கியம் வெறுமனே தீண்டாமை ஒழிப்புக்கும் ஆலயப் பிரவேசத்திற்கும் ஆதரவான சாத்வீக சீர்திருத்தவாதிகளின் கனிவான மனிதாபிமானத்தின் குரலல்ல. அது தேசிய இன விடுதலை, பெண்ணியம், வர்க்கப் போராட்டம் என்பவற்றின் போர்க்குணத்தையுடையது. இங்கு போர்க்குணம் என்பது வெட்டு, குத்து என்பன போன்ற சுலோகங்களைக் குறிக்கவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உணர்வையும் போராட்டங்களையும் வலியுறுத்தி ஊக்குவிக்கும் பண்பையே குறிக்கிறது. அதில் அரசியலும் பிரசாரமும் வெளிவெளியாகவே இருக்கும். (அவை அழகியலுக்கு ஊறு செய்ய அவசியமில்லை) அதன் யதார்த்தப் பண்பு படைப்பாளியின் சமுதாய நோக்கிற்கு உட்பட்டு இருக்கும். இதனால் அந்த உண்மை எந்தச் சத்தியத்தேடற்காரர்களது உண்மைகளையும் விடத் தாழ்ந்து விட அவசியமில்லை. அனைத்திலும் மேலாக, அது கலை கலைக்காக என்ற பார்வைக்கு முற்றிலும் எதிரான கோணத்தில்
49

Page 27
நிற்கிறது. அதன் அழகியற் பண்புகளையும் அளவுகோல்களையும் ஒடுக்கும் வர்க்கத்திடமிருந்தே அது பெற அவசியமில்லை. அதன் செய்நேர்த்தியை, அதன் யதார்த்தப் பண்பின் அடிப்படையிலும் நோக்கின் அடிப்படையிலும் அதன் அழகியற் கொள்கையின் அடிப்படையிலும் மதிப்பிட முடியுமேயொழியக் காலமும் சூழலும் சமுதாயச் சார்பும் கடந்த ஒரு அளவுகோல் அங்கு எடுபடாது. தலித் இலக்கியத்துக்கு ஒரு வரலாற்றுப் பணி உண்டு. அப் பணியை நிறைவேற்றும் போக்கில், அது தன் உடனடியான சூழலுக்கு அப்பாற்பட்ட அங்கீகாரத்தைப் பெறுமாயின் பெறுக. ஆயினும், அதன் அடிப்படையான இலக்கு அது யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ அவரகளது அங்கீகாரமும் அவர்களை விடுதலைப் போராட்டப் பாதையில் உந்தி விடுவதுமே. இதை மறந்து, தலித் இலக்கியத்தை வெறுமனே அழகியற் கோட்பாடுகளை மட்டும் வைத்து மதிப்பிடுவது சரியாகாது.
டானியல் இன்று தமிழகத்தில் அறியப்பட்டிருப்பது தலித் இலக்கியவாதி என்ற வகையிலேயே. தலித் இலக்கியம் பற்றிய அறிவு தமிழகத்தை எட்டியது அதன் வடமேற்கிலுள்ள மாநிலங்களிலிருந்துதான். அதற்கு வெகுகாலம் முன்னரே ஈழத்தில் தலித் இலக்கியம் தோன்றிவிட்டது. 1960க்குச் சற்றுமுன்பென எண்ணுகிறேன். என்.கே. ரகுநாதன் எழுதிய நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை சாதியத்தின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியது. தமிழ்த் தேசியவாதிகளும், மரபுவாதிகளும் சாதியத்தைச் சாந்தப்படுத்துவதில் தமது அக்கறையைச் செலுத்திய போது இடதுசாரிகள், குறிப்பாக பாராளுமன்ற அரசியலை மறுத்த மாக்ஸிய லெனினியவாதிகள், உணவு விடுதிகள். ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் நின்றார்கள். அவர்களைத் தமிழ்த் துரோகிகள் என்று பழி சுமத்திய தமிழ்த் தேசியம் சாதியத்தின் முன் பணிந்து நின்றது. சாதியம் தனது பிடிவாதமான நிலைப்பாட்டாலும் தனது கொடுஞ்செயல்களாலும் இந்த நியாயமான போராட்டத்தை வன்முறையை நோக்கி உந்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள் 1960களில் ஆயுதமேந்திய போராட்டத்தில் இறங்கினர். இச் சூழலிலே, ஆக்க இலக்கியமும் நாடக மேடையுங் கூடத் தாழ்த்தப்பட்டோரின் போராட்டத்துக்குக் களமமைத்துக் கொடுத்தன. இப்பின்னணியிற் பிறந்ததுதான் டானியலின் பஞ்சமர்’ நாவல் வரிசையில் முதலாவது நுாலான பஞ்சமர்.
"பஞ்சமர்’ 1973-74 வாக்கில் வந்ததாக நினைவு. அதைப் பேராதனை வளாகத்தில் நடந்த விமர்சனக் கூட்டமொன்றில், டானியலின் முன்னிலையில் ஒரளவு கடுமையாகவே விமர்சித்தேன். அவரது இரண்டாவது நாவலான ‘கோவிந்தன் 1981-82 அளவில் தமிழ்நாட்டிற் பிரசுரமானது. அதைச் "செம்பதாகை என்ற இடதுசாரி அரசியல் ஏட்டில் என் புனைபேர்களில் ஒன்றில் விமர்சித்தேன். அது கடுமையான ஒரு விமர்சனமேயெனினும், என் எழுத்தில் இருந்த அங்கதப் பண்பே டானியலின் சீற்றத்துக்குக் காரணமாயிற்று.
50

டானியல் தனது எழுத்து மாக் ஸரிய லெனினிஸக் கண்ணோட்டத்தினாலானது என்று பிரகடனஞ் செய்த போதும் அவரது நிலைப்பாடு சாதி முரண்பாட்டையே மிகுதியாக வலியுறுத்தியுள்ளது. சாதி முரண்பாட்டைப் பிரதான சமுதாய முரண்பாடான வர்க்க முரண்பாட்டுடன் எவ்வாறு உறவுபடுத்துவது என்ற தெளிவோ, சினேக முரண்பாடு எது பகை முரண்பாடு எது என்ற விளக்கமோ, பொது எதிரி யார் பொது எதிரிக்கு மாறான ஐக்கிய முன்னணி எது என்ற ஆழமான பார்வையோ அவரது எழுத்தில் வெளிவரவில்லை. இது சாதிமுறை தவிர்ந்த முரண்பாடுகள் பற்றி டானியலுக்கு அக்கறை போதாமையின் விளைவு என்பதே எனது மதிப்பீடு. தவிரவும் பொதுவாக அவரது பாத்திரப்படைப்பும் சில சம்பவங்களின் புனைவும் சித்தரிப்பும் வலிந்து உருவாக்கப்பட்ட தன்மையினவாய் இருந்தன. டானியல் என்றேனும் மேற்கூறிய குறைபாடுகளினின்று மீண்டாரென்று கூறுவது சிரமம். டானியல் பங்குகொண்ட தீண்டாமை ஒழிப்பு இயக்கம், கட்சி சார்பற்ற ஒரு வெகுசன இயக்கம். சாதிப் பிரச் சனையில பகைமையான முரண் பாடுகளை அது சரியாக இனங்கண்டதாலேயே அதனால் முக்கியமான பல வெற்றிகளை ஈட்ட முடிந்தது. அது தனது தாக்குதலின் இலக்காக் கொண்டது சாதியடிப்படையிலான ஒடுக்கு முறையேயன்றி ஒடுக்கும் வர்க்கத்தின் சாதியினர் அனைவரையுமல்ல. இவ் வகையில், இந்த இயக்கம், டானியலை விடப் பெருமளவு மாக்ஸிய லெனினியச் சிந்தனைக்கு நெருக்கமாக நின்றது.
டானியலின் எழுத்தில் வேகம் உண்டு. பேச்சுத் தமிழை உள்வாங்கிச் செழுமையுடன் பிரயோகிக்கும் ஆற்றல் உண்டு. ஆயினும் கதையமைப்பும் பாத்திரங்களின் வார்ப்பும் செயற்கையான தன்மையைப் பெற்றுவிடுகின்றன. அப்பழுக்கற்ற கதை மாந்தர் ஒருபுறமும் இழிவே உருவான கதை மாந்தர் மறுபுறமுமாக, நிசமான மனிதர்களை முழுகடித்து விடுகின்றனர். சாதியத்தின் கொடுமையை உணர்த்த வன்முறை மிகுந்த சம்பவங்களே அதிகமாகக் கூறப்படுவது, சாதியத்தின் அன்றாடக் கொடுமைகளின் முக்கியத்துவத்தை மழுங்கடித்துவிடுகிறது. பலரும் அன்றாடங் கண்டுங் கண்டிக்கத் தவறுங் கொடுமைகள் எத்தனை? பொதுக்கிணற்றில் நீர் அள்ள முடியாத பெண்ணுக்கும் பாடசாலையில் இடம் மறுக்கப்படும் குழந்தைக்கும் தேநீர்க் கடையில் கிண்ணத்திற் தேநீர் அருந்த முடியாத மனிதனுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் ஒவ்வொன்றுமே ஒரு அன்றாடத் தீ வைப்புத்தான். இக் கொடுமைகளை மனத்தால் உணர முடியாதவர்கள், கீழ்வெண்மணியையும் உணர முடியாதவர்கள் தான். எனவேதான், சமுதாய வழமையாகிவிட்ட கொடுமைகளை வலியுறுத்துவது திகிலுாட்டும் சாதிய வன்செயல்களை வலியுறுத்துவதனளவு முக்கியமானது. இலக்கியவாதியால் இவற்றுள் முன்னைய கொடுமைகளை வலிவுடன் சித்தரிக்க இயல வேண்டும்.
எசமான வர்க்கத்தின் பெருவாரியான கொடுமைகள் இலைமறை காயாகவே உள்ளன. அக்கொடுமைகளின் நிகழ்வை விட அவை பற்றிய
51

Page 28
அச்சம் கொடியது. அந்த அச்சத்தையும் அதன் மூலம் தனது அதிகாரத்தையும் பேணும் வாய்ப்புக் கை நழுவும் போது மட்டுமே எசமான வர்க்கம் மூர்க்கத்தனமான வன்முறையில் இறங்குகிறது. இந்த இடத்திற் தான் டானியலின் எழுத்தின் பலவீனம் மிகுதியாகவுள்ளது. சாதிவெறியின் பிரதிநிதியோ சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதியோ காமுகனாகவும் கொலைஞனாகவும் இருப்பதனால் மட்டுமே கொடுமையின் குறியீடாவதில்லை. எவ்வளவு பண்பட்டவரும் ஆசாரசீலரும் தான் சார்ந்த அதிகார வர்க்கத்தின் நலன்களைப் பேணச் செயற்படும்போது கொடுமை செய்வோரின் தரப்பிலேயே நிற்கின்றார். எட்ட இருந்து கர்ணனதும் பீஷ்மரதும் துரோணரதும் உயர் பண்புகளை நாம் நயக்கலாம். போர்க்களத்தில் அவர்கள் தியோரின் சார்பாக ஆயுதந் தரித்துள்ள சூழலில் அவர்களைத் தவிர்த்துத் தீயோரை அழிக்க முடியாது போகின்றது. நம் முன்னுள்ள கேள்வி நல்லோர்-தியோர் வேறுபாடு பற்றியதல்ல, கொடுமையான ஒரு சமுதாய அமைப்புப் பற்றியது. சமூக அநீதி அதற்கெதிராகக் கிளர்ந்தெழுவோர் மீதும் தன் சுவடுகளைப் பதிக்கிறது. குறைபாடுடைய மனிதராகவே ஒவ்வொருவரும் போராட்டக் களத்துட் புகுகின்றனர். போராட்டம் சிலரைப் புடமிடுகிறது. சிலரை சீரழிக்கிறது. டானியலின் நாவலின் பாத்திரங்கள் இவ்வாறு உருவாவதில்லை. புராண இதிகாசப் பாத்திரங்கள் போன்று அவை முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட பண்புகளுடன் வந்து போகின்றன. சூழ்நிலைகள் மனிதரை எவ்வாறு உருவாக்குகின்றன. நிலவரங்கள் அவர்களை எவ்வாறு மாற்றுகின்றன என்பது பற்றிய கவனம் டானியலின் எழுத்தில் இல்லாமை அவரது இலக்கிய கொள்கையின் அடிப்படைக் குறைபாடுகளில் ஒன்றோ தெரியவில்லை.
"பஞ்ச கோணங்கள் டானியலின் இறுதி நாவலாயிருக்கலாம் என்பது என் ஊகம். அவர் மரித்து ஏழாண்டுகளின் பின் பிரசுரமான இந்த நுால் பஞ்சமர் என்ற தொடரில் அவரது ஐந்தாவது நாவல். (ஐந்து என்ற எண் மீது டானியலுக்கு ஏதோ மோகம். பஞ்ச கோணங்களாகத் தமிழ் தேசிய விடுதலை பற்றிய பார்வைகள் பற்றிய ஆழமற்ற அவரது மதிப்பீட்டில் வரும் எண்ணிக்கையின் காரணமும் அதுவாக இருக்கலாம்). தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான தமிழ் மக்களது போராட்டம் தமிழீழ விடுதலை கோரும் பிரிவினைப் போராட்டமாகிய சூழலிற் பின்னப்பட்ட இந் நாவல், அவரது முன்னைய நாவல்களில் நான் வாசித்த இரண்டினின்றும் முக்கியமான சில வகைகளில் வேறுபடுகிறது. அவை பற்றிக் குறிப்பிடுமுன், பஞ்ச கோணங்களின் கதையமைப்பைச் சுருக்கமாகத் தருகிறேன்.
கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட பண்பு பொருந்திய பல யாழ்ப்பாணத்து ஊர்களுள் ஒன்றில் ஒரு கல் ஆலை முதலாளி. அவர் உயர்சாதியினரில்லாவிடினும், பணம் படைத்த காரணத்தால் உயர்சாதியினருடன் கூடிப் புழங்கும் நிலையில் உள்ளவர். தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சுரண்டி ஒடுக்குவோருள் முதன்மையானவர். அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வைப்பாட்டி ஒருவர். வைப்பாட்டியானாலும் சாதி ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும்
52

எதிரான உணர்வு மிகுந்தவர். ஊரில் ஒரு ஆசிரியர். உயர் சாதியினர், ஆனாலும் முற்போக்குவாதி, திருமணமாகாதவர், அநீதிகட்கெதிராக குரல் கொடுக்கத் தயங்காதவர். முதலாளி மலையகத்தைச் சேர்ந்த வேலைக்காரப் பையனைக் கொலை செய்வித்துப் புதைப்பித்து விடுகிறார். இது பற்றிய தகவல்களுடன் ஆசிரியர் பொலிஸில் முறையிடச் சென்றும் எதுவும் ஆகவில்லை. அவர் அடித்து நொறுக்கப்படுகிறார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அவருக்கும் நேசம் உருவாகுகிறது. அவர் அப் பெண்ணை மணம் செய்வது பற்றித் திட்டமிடும்போது, அவரது வீட்டில் அவருடைய பையில் இருந்து ஆயுதங்கள் இராணுவத்தினராற் கண்டெடுக்கப்படுகின்றன. குற்றமறியாத ஆசிரியர் பயங்கரவாதி எனப் பிடித்துச் செல்லப்படுகிறார். கதையின் களமாக உள்ள தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டச் சூழலில், தாழ்த்தப்பட்ட சாதியினர் தேசிய விடுதலை இயக்கமொன்றில் இணைவதும் அங்குள்ள சாதியம் உருவாக்கும் பிரச்சனைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. கதையின் அழுத்தம், முன்னைய நாவலகளிற் போலவே, பல்வேறு சாதியக் கொடுமைகட்கு எதிராகத் தாழ்த்தப்படடோர் ஒன்றிணைந்து போராடுவதைச் சித்தரிக்கிறதில் உள்ளது.
டானியலின் முதலாவது நாவலான பஞ்சமரில், வேளாளரது சாதி ஆதிக்கத்திற்கெதிராக யாழ்ப்பாணத்தின் ஐந்து பஞ்சம சாதியினரும் ஐக்கியப்பட்டுப் போராடுகின்றனர். அங்கு, வேளாளருக்கு ஊழியஞ் செய்வோராய் இருந்த ஒரு சாதியினர் அவர்களது நேச சக்தியாகின்றனர். நான்கு நாவல்களின் பின்பு, அச்சாதியைச் சேர்ந்த ஒருவர் கல் ஆலை முதலாளியாகவும் சினிமா வில்லன்களது சகல துர்ப்பண்புகளும் ஒருங்கிசைந்த பாத்திரமாகவும் வருகிறார். வேளாள மேட்டுக்குடிகட்கும் இவருக்குமிடையிலான உறவில் ஒரு புறம் செல்வத்தின் காரணமாகச் சமத்துவமும் சாதியின் காரணமாக ஏற்றத்தாழ்வும் உள்ளமையை டானியல் சித்தரிக்கும் விதம் யதார்த்தமானதே. பஞ்சமர் ஒருவர் முதலாளியானால் டானியல் அவரை எவ்வாறு கருதக்கூடும் என்பது அவரது நாவல்களிலிருந்து ஊகிக்கக் கடினமானது. தேசியவாதமும் பெண்ணியமும் வர்க்க முரண்பாடுகளை எவ்வாறு கையாளுகின்றன என்பதைக் கவனித்தால், டானியலின் தலித்தியத்தின் நெருக்கடி ஒருவேளை புலனாகலாம். இவை யாவுமே, வர்க்க முரண்பாடுகளை இரண்டாம் பட்சமானவை என ஒதுக்கும் போது தமக்குள்ளேயே புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன.
வேறுபட்ட சாதியினரிடையே கள்ளமான பாலுறவு, முக்கியமாக உயர்சாதிப் பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட சாதி ஆணுக்குமிடையிலானது, டானியலின் முன்னைய நாவல்களில் ஒரு விதமான பழி வாங்கலாகவே காட்டப்பட்டது. சாதியமும் ஆணாதிக்கமும் மிகுந்த சமதாய அமைப்பொன்றில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களது பார்வையில் இவ்வாறான உணர்வு நியாயமாகவே எழுகிறது. உயர்சாதியினர் தமக்குரியதெனக் காட்டும் கற்புப் பற்றிய விழுமியங்களின் இத்தகைய உடைவுகள் பற்றித் தாழ்த்தப்பட்டோர் மகிழ்வுடனும் ஏளனத்துடனும் பேசிக் கொள்வது எவ்வளவுதான் இயல்பானதாயினும்,
53

Page 29
மேட்டுக்குடி மாந்தரின் ஒழுக்கத்தின் போலித்தனத்தை ஒரு மாக்ஸிய எழுத்தாளர் அதேவிதமாக அணுக முடியுமா?
மேட்டுக்குடியினரின் ஒழுக்க முரண்களை அம்பலப்படுத்தும் காரியம், பாலுறவு என்பதைப் பெண்களை இழிவு செய்யும் ஒரு கருவியாகக் காணும் முனைப்பினின்று விலகி நிற்பது அவசியம். ஆணாதிக்கச் சிந்தனைகட்கு எதிரான தெளிவான ஒரு நிலைப்பாடு அவசியம். பஞ்சமர், கோவிந்தன் ஆகிய நாவல்களில் டானியல் இவ் விடயங்களில் மிகவும் தவறியிருந்தார். இந்நாவலில் அக் குறைபாடு குறைவாக உள்ளமை வரவேற்புக்குரியது. டானியலின் எழுத்து ஆணாதிக்கத்தை முறியடிப்பதை இலக்காயுடையதல்ல என்பது இக்குறைபாடு இருந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பாட்டாளி வர்க்கம் என்ற கருத்தாக்கம் தொடர்பாகவும் Tணியலிடம் குழப்பம் உண்டு. நடுத்தர வர்க்கப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது புரட்சிகரச் சிந்தனை மூலம் புரட்சிகரப் புத்திஜீவி ஆகலாம். அவரிடம் சொத்து எதுவும் இல்லாததால் அவர் பாட்டாளியாகிவிடமாட்டார். ‘நானும் செல்லியும் ஒரு வர்க்கத்து ஆட்கள் எண்டு . என்று அவ்வாசிரியர் மூலம் கூறுவது (ப. 352) டானியலின் குழப்பம், "இழப்பதற்கு எதுவுமில்லாதவர் பாட்டாளி' என்ற கருத்தை ஒரு வரைவிலக்கணமாக மாற்றியதன் விளைவோ தெரியவில்லை.
மாக்ஸிய லெனினியவாதிகள் வலியுறுத்தும் ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டைட் பஞ்சமர் நாவலில் டானியல் புரிந்து கொண்ட விதம் ஒரு புறமிருக்கத் தேசிய இன ஒடுக்கலுக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய அவரது நிலைப்பாடு வடக்கின் மார்க்ஸிய லெனினியவாதிகளது நிலைப்பாட்டுடன் முரண்படுகிறது. பிரிவினையை ஒரு தீர்வாக ஏற்கத் தயங்கும் மாக்ஸிய லெனினியவாதிகள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்ற அளவிலும் இன ஒடுக்கலுக்கு எதிரான எழுச்சி என்ற வகையிலும் அரச படைகட்கு எதிரான போராட்டத்தை ஏற்கின்றனர். டானியலின் தயக்கம், சாதியத்தையே பிரதான முரண்பாடாகக் கருதுவதன் விளைவாகவே தெரிகிறது.
டானியல், தனது முன்னுரையில், தன்னால் ஒன்றுதிரட்டப்பட்ட பாத்திரங்கள், தாம் பேசுவதற்கான தத்தமக்குரிய இயல்பான விதிகளை வரையறுத்துக் கொள்வதாகவும் அவை தம் இயல்பினின்றும் வழுவாது கண்காணித்துக் கொள்வதே தனது வேலை எனவும் மொழி ஆளுமை பற்றித் தன் முன்னுரையில் எழுதுகையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஒருசில இடங்களில் அவரது கவனம் பிசகி விடுகிறது.
உதாரணமாக, ‘செல்லக்கண்டர் நயினார் வீட்டிலை வேலை செய்யப் போகிறன். பிந்திப் போனம் ; பேசப் போகினம்! (ப. 133) இங்கு ‘போனம்' என்று வராது "டோனன்’ என்றே வரும்.
54

'உம்மடை பென்டிலை இஞ்சையோடா தேடுறது? (ப. 187) 'உம்' என்று விளிக்குமிடத்து 'அடா என்று வராது.
இவற்றைவிட முக்கியமான குறைபாடுகள் மலையகத் தமிழுடன் தொடர்பானவை. இவை தவிர்க்கக் கூடியவை. கதையில் வரும் மலையகத் தமிழர் இருவரது பேச்சில் யாழ்ப்பாணத்துக்கேயுரிய சொற்பிரயோகங்கள் (கேக்கேல்லை, மாதத்திலை, வீட்டிலை, சொல்லிப்போட்டு என்பன போன்று) பல வருகின்றன. இவை டானியலின் கவனயீனத்தை விடப் பரிச்சயப் போதைாமை காரணமானவை என்றே கூற வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்களுக்கு, அச்சுக் கோப்போர் ஒரு வரப்பிரசாதம். எல்லா எழுத்துப் பிழைகட்குமுரிய பழியை அவர்கள் மீது சுமத்திவிடலாம். எனினும், வட்டார வழக்குக்குரிய சொற்களையுடைய ஆக்கங்களில், இலக்கண மரபு சாராத ஒரு பதம், வழுவோ வழக்கோ என ஊகித்தல் கடினம். அதைவிட, வழக்கை அறியாதோரை அச்சுப் பிழைகளும் ஆசிரியர் பிழைகளும் குழப்பத்திலாழ்த்தக் கூடுவன. இவை பற்றியும் படைப்பாளிகள் கூடிய சிரத்தை காட்டல் நல்லது
நான் வாசித்த நாவல்களின் அடிப்படையில் டானியலை ஒரு சிறந்த நாவலாசிரியராகக் கருத எனக்கு இயலவில்லை. அவர் எழுதியவை அமர காவியங்களல்ல. அமர காவியங்களைச் சிருஷ்டிப்பது தான் படைப்பாளியின் பணி என நான் கருதவுமில்லை. பெரும் இலக்கியவாதிகள் செய்யாத ஒன்றை டானியல் செய்துள்ளார். அவரது படைப்பாற்றலின் குறைபாடுகளை விட அவரது அரசியலின் குறைபாடுகள் பாரியவை. இத்தனையும் மீறி, அவர் பயணஞ்செய்துள்ள போராட்ட இலக்கியப் பாதை தமிழ் இலக்கியத்துக்குப் புதியது. அதில் மேலுங் காத்திரமான படைப்புகளை உருவாக்க வல்ல படைப்(வாளிகள் பயணஞ்செய்யும் வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. அதற்கு டானியலின் பங்களிப்பின் முக்கியத்துவம் அவரது எழுத்தின் குறைாபடுகளை மீறி நிற்கிறது என்பது என் மதிப்பீடு.
55

Page 30
ஆர். எஸ். எஸ். இந்துத்துவ நிழலின் குரல்
(பின்தொடரும் நிழலின் குரல், ஜெயமோகன் தமிழினி பதிப்பகம், சென்னை, 2000 ப 721 ரூ. 29000)
கலைப்படைப்பில் அரசியல் பற்றித் துாய அழகியல்வாதிகள் எத்தனை தடையுத்தரவுகளை விதித்திருந்தாலும், அத்தனைக்கும் ஒரு அரசியல் அடிப்படை உள்ளது என்று மீளவும் மீளவும் கூறி வந்துள்ளேன். இலக்கியம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்போர் உண்மையில் தடை செய்ய முனைவது பாட்டாளி வர்க்க அரசியல் பிரசாரத்தையே என்பதையும் பன்முறை நாம் கண்டுள்ளோம். ஜெயமோகனைப் பொறுத்தவரை, அவர் அழகியற்காரர்கட்கு இனியவர். அவர் மாக்ஸிய விரோதப் பிரசாரகர் மட்டுமல்லர். சாதியப் பிரசாரகரும் இந்துத்துவப் பிரசாரகரும் கூட அழகியல் அங்கியால் அவரது உள்ளக் கிடக்கையை மூடுவது அவருக்கு எளிதாக இருந்ததில்லை. எனவே, நாடார் சமூகத்தினருக்கு எதிரான அவரது குரோதம் அவரது முதலாவது நாவலான ‘ரப்பர் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.
ஒரு தசாப்தமாகப் பலவாறாகத் தன்னை விளம்பரப்படுத்திக கொண்டுள்ள ஜெயமோகனுடைய இரண்டாம் நாவலான 'விஷ்ணுபுரம் சிலரை மலைக்க வைத்தது. ஆயினும் இவ்வாறான மலைப்பும் வியப்பும் அந்த நூலின் ஆர்ப்பாட்டமான தன்மையால் ஏற்பட்டவையே ஒழிய, ஒரு ஆழமான திறனாய்வுப் பார்வையின் விளைவானவையல்ல. ஜெயமோகனுடைய எழுத்தின் ஆர்ப்பாட்டமான தன்மைக்குப் பின்னாலிருந்த சிந்தனை வறுமையைப் பலர் அடையாளங் காட்டத தவறியமைக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். வாசிக்க அலுப்பூட்டிய நாவல் என்பது ஒன்றாயிருக்கலாம். பிரமிப்பூட்டும் நோக்கிலான வர்ணனைகளின் பின்னால் கதையமைப்பின் நுணுக்கங்களில் இருந்த பெரிய பலவீனங்களை அடையாளங் காண்பதற்குத் தடையாக அவ் வர்ணனைகளது ஆதிக்கம் ஓங்கியிருந்ததமை அதினும் முக்கியமான காரணமாயிருக்கலாம். இத்தனைக்கும் நடுவே, ஜெயமோகன் வலிந்து புகுத்திய சில நிகழ்வுகளும் கதையின் போக்கில் அவராற் கைவிட இயலாத சில மெய்யியற் கொள்கைகளும் அவரது அரசியலை அடையாளங் காட்டின.
'விஷ்ணுபுரம் கதைக்குள் நியாயமான ஒரு தேவையுமின்றி ஒரு நீக்ரோ புகுத்தப்பட்டுப் பத்தாம் வகுப்பு மாணவனுடைய சேட்டைப் பேச்சின்
S6

தோரணையில் ஏளனம் செய்யப்பட்டிருப்பதும் பக்தி இயக்கக் காலத்தில் நடந்த தாகக் கூறப்படும் ஒரு கதையில் முஸ்லிம் படையெடுப்பில் கோயில்கள் இடிபட் தாகவும் கூறப்படுவதும் (பாபர் மசூதி இடிப்பு - ராமர் கோவில் விவகாரத்துக்கு இதனுடன் தொடர்பு இராது என்றும் நம்புவோமாக) கவனிக்கத்தக்க உதாரணங்கள். இந்தியச் சிந்தனை முறைகளிடையிலான விவாதக்களமொன்றில் பல இந்திய மதச் சிந்தனைகள் மோதித், தோற்றவை போக. இறுதியில் அத்வைதமும் பெளத்தமும் மோதுகின்றன. பெளத்தம் சூழ்ச்சியால் வெல்கிறது. ஆயினும் அச் சூழ்ச்சியின் வெற்றியிலும் அத்வைதத்தின் காவலர்களது பங்கே பெரிதாக உள்ளது. இந்தியச் சிந்தனை முறைகளின் வரலாற்றுச் சமூகப் பண்புகள் பற்றிய கனதியான கவனிப்பை நாம் இந்த நூலில் எதிர்பார்த்திருக்க இடமில்லை ஆயினும், தோற்றத்தில் பெளத்தத்தை வெல்ல இடமளித்த ஒரு 'நடுநிலை நோக்கு, இந்துத்துவத்தை விட்டுக்கொடுக்காமலே அதைச் செய்வது பற்றிச் சிலர் கவனிக்கத் தவறியது என்னை வியக்க வைத்தது. அனைத்தினும் மேலாக, வெகுசனங்கள் பற்றி நுாலாசிரியரது பார்வையைச் சிலர் கண்டு கொள்ளவேயில்லை.
சமூக மாற்றங்கள் என்பன மக்கள் திரளின் ஆற்றலால் விளைகிறத11, ஏற்க இயலாமை ஒரு வரலாற்றுப் பார்வையை அடையாளப்படுத்துகிறது. இட பார்வையில், உலகில் முக்கியமானோர் சில மேதைகளே ஆவர். இவ்வாறு, வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் தலைமேல் உலக வரலாற்றையே ஏற்றி வைப்பதற்கான தத்துவார்த்தத் தேவையையும் நாம் இலேசாகப் புறக்கணிக்க முடியாது. அது பெருமுதலாளிய வர்க்க நலன் சார்ந்த ஒன்று என்பதை மட்டும் கூறுவது இங்கு போதுமானது. இத்தகைய மாமனிதர்களுள் துாய இலக்கியவாதிகள் அல்லது மெய்க்கலைஞர்கள் என்கிற ஒரு வகையினரையும் உள்ளடக்குவதில் மும்முரமாக உள்ளோரின் வரிசையில் ஜெயமோகன் இன்னொருவர்.
வெகுசன இயக்கங்கள், போராட்டங்கள், புரட்சிகர சமுதாய மாற்றம் போன்றவற்றை இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் இதுகாறும் எழுதிவந்துள்ள ஜெயமோகனுக்குத் தன் மாக்ஸிய விரோதமான மன அரிப்பை எல்லாம் அவிழ்த்துக் கொட்டும் களமாக அமைந்தது அவரது மூன்றாவது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரல்.
ஒருபுறம், வெறுமனே மாக்ஸிய வெறுப்பால் உந்தப்பட்டு ஒருவர் எழுதிய நூலாக இதை எவரேனும் புறந்தள்ளலாம். மறுபுறம் மாக்ஸிய விரோதத்தையே தமது உயிர் மூச்சாக உடையோர் இதை மகிழ்ந்து கொண்டாடலாம். பல்வேறு இடங்களிலிருந்தும் மாக்ஸியத்திற்குப் பகைமையான தகவல்கள் திரட்டப்பட்டு, மாக்ஸிய அரசியல் நடைமுறை ஒன்று அடையாளங் காணப்பட்டு, அதன் வழியே மாக்ஸியம் கொச்சைப்படுத்தப்படுவது நமக்குப் புதியதல்ல. ஆனானப்பட்ட இலக்கிய மேதைகள் எல்லாம் சி.ஐ.ஏயால் விலைக்கு
57

Page 31
வாங்கப்பட்டு எவ்வளவோ எழுதிக் குவித்துள்ளனர். (ஜெயமோகனின் இந்துத்துவ அரசியல் பரகசியமான விடயமாயிற்றே. எனவே அவர் எதற்காக இதைச் செயகிறார் என்று அதிகம் விசாரிக்க நமக்கு அவசியம் இல்லை).
இந்த நாவலில் அவர் தனது மாக்ஸிய விரோதக் கருத்துக்களை நகர்த்துகிற விதம் குறிப்பான கவனத்துக்குரியது. பொதுவாக எந்த இடத்திலும் கம்யூனிஸ் விரோதக் கருத்துக்கள் ஆசிரியர் கூற்றாக வராததோடு அவை அனைத்தும், முன்னாள் கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கவாதத்திற் சீரழிந்த கம்யூனிஸ்ட்டுகள், சந்தர்ப்பவாதக் கம்யூனிஸ்டுகள் போன்றோர் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. கம்யூனிஸத்திற்கு எதிராகச் செய்யப்பட்டு வந்துள்ள பிரசாரம் யாவும் கம்யூனிஸ் இயக்கத்திற்குள் இருந்து வந்தோர் வாயிலாக முன்வைக்கப்படுவதன் மூலம் ஒரு போலி நம்பகத்தன்மை அவற்றுக்கு வழங்கப்படுகிறது. ஜெயமோகன், தனது மதிப்பிற்குரிய 'சோ ராமசாமியை நினைவூட்டும் பாணியில், நக்கலாக நடுநடுவே எதையாவது சொல்லிவிட்டுப் போகும் எவ்வித அறப் பார்வையுமற்ற ஒரு பாத்திரமாகத் தன்னையும் கதையுட் புகுத்துகிறார். அத்தோடு முன்னுரையில் தனக்கும் ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட் அடையாளத்தைக் கற்பித்துக் கொள்கிறார். (இப்படி முன்னாள் கம்யூனிஸ்ட் அனுதாப அடையாளங்களைப் பயன்படுத்திய பெரிய புள்ளிகள் இருந்துள்ளனர். ஒருவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தன. இன்னொருவர் லீ க்வான் யூ. பெரிய மனிதாபிமானிகள்) சீரழிந்தோரதும் முன்னாள் முகவரிகளதும் வாக்குமூலங்களது உபயோகம் இன்னொரு வகையில் பயனுள்ளது. ஒன்றுக்கொன்று முரணானதே. தவறானதோ திரியானதோ என்ற கவலையின்றி மனதில் வரும் கருத்துக்களை எல்லாம் வசதியாக இவ்வாறானோர் வாயிலாக முன்வைத்து விட்டு, அவற்றை அந்ததந்தப் பாத்திரங்களது இயல்பான பன்ை பின் அடிப்படையில் நியாயப்படுத்திவிடலாம்.
ஜெயமோகன் எங்கும் உண்மைகளையும் பொய்களையும் கலந்தே முன்வைப்பதால், எது உண்மை எது பொய் என்பதைப் பகுத்து அறிவது, இடதுசாரி அரசியலிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களை விட மற்றவர்கட்கு இலகுவாக இராது. அவரது மேற்படி கைங்கரியம் கணிசமான செய்நேர்த்தியுடன் நூலின் முற்பகுதியில் செய்யப்பட்டாலும், பிற்பகுதியில் அவரது கம்யூனிஸ் விரோத ஆவேசம் அவரை ஆட்கொண்டு விடுகிறது. அவருடைய நாடார் சமூக விரோதமும் கதைக்குட் புகுந்து விடுகிறது. இஸ்லாம் ஒருவேளை தப்பும் என்று எண்ணியிருந்தால், நுாலின் பிற்பகுதியில் மதங்களைச் சாடுகிற விதமான ஒரு கூற்றினுாடாக இஸ்லாம் தன் பங்கிற்கும் சற்று அதிகமாகவே வாங்கிக் கட்டியுள்ளது. இவை போன்றவையும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அதிருப்தியால் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் சிலர் இந்துத்துவ அமைப்புகளில் இணைவது பற்றிய அங்கீகாரமும் எந்த இடத்திலும் இந்துத்துவ, பிராமணிய, இந்தி மேலாதிக்க அரசியல் பற்றிய விமர்சனக் கூற்றுக்கள் வராமையும், நூலின் அரசியல் பற்றிய ஐயங்கட்கு இடம் வைக்கவில்லை. இங்கே தான்,
58

ஜெயமோகனுடைய 'கலைத்துவப் பிரசாரத்தின் காலை அவரது ‘இந்துத்துவப் பார்வை இடறித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
ஜெயமோகனுடைய கதை கேரளத்து மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) அரசியலைக் களமாகக் கொண்டது. வசதி கருதித் தமிழக கேரள எல்லை சார்ந்த ஒரு தோட்டச் செய்கைப் பொருளாதரச் சூழலில் உள்ள கேரள மாநில தமிழ்ச் சமூகத்தை வைத்துக் கதை பின்னப்படுகிறது. றெஜி ஸிரிவர்தன எழுதித் தமிழில் நு.மானும் சேரனும் மொழிபெயர்த்த நூல், ஜெயமோகனுக்குக் கைகொடுத்துள்ளது. (நு.மானுடைய பேரை எவ்வாறோ ஜெயமோகன் தவறவிட்டுள்ளார்). றெஜி ஸிரிவர்தனவின் பிற்கால அரசியலின் போதாமைகளை அவரது நுால் தெளிவாக அடையாளங் காட்டியுள்ளது என்பது வேறு விடயம் றெஜியின் கருணை, கொடுங்கோலன் ஜார் மீது மட்டுமன்றி ஜாரின் நாய மீதும் பொழிந்தது அல்லவா. எனவே, ‘குளக்' எனப்படும் ரஷ்ய நிலவுடைமையாளர்கள். தமிழில் வர்க்க அடையாளம் தெரியாத குளக்குகளாக வந்து நமது கருணையை யாசிப்பதும் அரசியற் சந்தர்ப்பவாதியான புகாரின் ஜெயமோகன் கையில் ஸ்தாலின் மீதான தாக்குதலுக்கு ஒரு கருவியாவதும் வியப்பில்லை.
ஸ்தாலினுடைய காலத்திலேயே அவரது தவறுகளை மறுத்து உறுதியாக நின்ற சீனக் கம்யூனிஸ்ட் தலைமை, ஸ்தாலினை 1957ன் பின்பும் வரலாற்றில் வைத்தே மதிப்பிட்டது. மறுபுறம், ஸ்தாலின் மீதான க்ருஷ்ச்சொவின் தாக்கு "லாலும் அண்மைக்கால விஷமப் பிரசாரங்களாலும் தடுமாற்றத்துக்குள்ள7. சந்தர்ப்பவாதக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வேண்டுமானால், ஜெயமோகனுடைய சில வாதங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம். மிகைப்படுத்தப்படும் ஸ்தாலினின் தவறுகளை அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கும வரை. ஜெயமோகன் முன்வைக்கும் வாதங்களால் மிரளும் தேவை மாக்ஸியர்கட்கு இல்லை.
ஜெயமோகனைப் பொறுத்தவரை, ஆயுதமேந்திய போராட்ட அரசியலை மறுப்பதும் இழிவுபடுத்துவதும் அவரது தேவை. ஒரு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் (CPM) வாயிலாக ஈழத்தின் தமிழர் விடுதலைப் போரும் ஆப்பிரிக்க மக்களும் இழிவு செய்யப்படுகின்றனர். தலித்துக்களின் வன்முறைப போராட்டத்துக்கு ஒரு மாற்றாக காந்தி முன் நிறுத்தப்படுகிறார். காந்தியத்தின் நூற்றாண்டுக் கால அரசியல் தலித்துக்கட்கு செய்தது என்ன என்ற கேள்வியை ஜெயமோகன் எதிர்கொள்ள முயலவில்லை.
ஜெயமோகன் மாக்ஸியத்தைத் தாக்குவதற்குப் பயன்படுத்தும் ஆயுதங்களில் விரக்தி மனோபாவமும் தனிநபர்வாதமும் முக்கியமானவை. உண்மையை உட்கார்ந்த இடத்திலிருந்தே உணரவல்ல கலைஞர்கள் பற்றிய அவரது மயக்கத்தின் தோற்றுவாய் அவருடைய மாக்ஸிய விரோதத்துக்கு நெருக்கமானது.
59

Page 32
இந்த நூலில் அவர் பயன்படுத்துகிற ஒரு உபாயம், அடிப்படையிற் (பாய்மை சார்ந்த ஒரு போலி யதார்த்தப் பண்பாகும். எங்கே உண்மை முடிந்து பொய் தொடங்குகிறது என அறிய முடியாதவாறு, நிசமான மனிதர்களும் கற்பனையான மனிதர்களும் நிசமான நிகழ்வுகடும் கற்பனையானவற்றினுாடும் நகர்த்தப்படுகின்றனர். இங்கே இயற்பண்புவாத எழுத்தின் ஒரு பலவீனத்தைத் தனது பிரசாரத்திற்கு அவராற் பாவிக்க இயலுமாகிறது. உண்மைத் தோற்றமுடைய பல புனைவுகள் அவருக்கு ஒரு கவசமாகின்றன. எனவேதான். வரும் இந்த நுாலில் வரும் மாக்ஸிய விரோதக் கருத்துக்களையோ தகவல்களையோ ஒவ்வொன்றாக மறுக்க முனைவதைவிட, அவற்றின் தோற்றுவாய்களை மறுப்பது எளியதும் பயனுள்ளதுமாகும்.
மாக்ஸிய லெனினியத்தையும் மாவோவையும் தட்டிக் கழிப்பது ஜெயமோகனுக்கு வசதியானது. இலங்கையில் சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கடசியையும் பிலிப் குணவர்த்தன. எம்.எம். பெரேரா முதலாக விக்ரமபாகு கருணாரத்ன வரையிலான சந்தர்ப்பவாதத் த்ரொத்ஸ்கி வாதிகளையும் ஜே.வி.பி இனவாதிகளையும் காட்டியே மாக்ஸிய லெனினியத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. இங்கே ஜெயமோகனிடம் கற்க மாக்ஸிய எதிரிகட்கு அதிகமில்லை.
விஷ்ணுபுரத்தை விட அலுப்பு சலிப்பின்றி என்னால் வாசிக்க இயலுமான முறையில் இந்த நுால் இருந்தது என்றால், நூல் கூறும் விடயங்களுடன் எனக்கு இருந்த பரிச்சயமும் ஒரு காரணமாயிருக்கலாம். ஜெயமோகன் பயன்படுத்திய கதை கூறும் உத்திகள் நம் வழமைக்கு வித்தியாசமானவை என்பதை விட்டால், இதை இலக்கிய 'உன்னதங்களில் ஒன்றாகக் கொண்டாட எனக்கு ஒரு அடிப்படையுமே தெரியவில்லை.
60

படைப்பும் பார்வையும்
(ஜி.நாகராஜனின் படைப்புக்கள் காலச்சுவடு பதிப்பகம். நாகர்கோவில். 1997)
ஜி.நாகராஜனது எழுத்தை வாசிக்கும் போது எளிமையான தமிழின் வலிமையை நாம் உணரலாம். அவரது கதை கூறும் முறை பற்றியே படைப்பாற்றல் பற்றியோ பாரிய கருத்து முரண்பாடுகட்கு இடமிராது அவரது கதைப்பொருளும் கதை மாந்தரும் மட்டுமன்றி அவர் தனது கதைக:Lாக எண்ணவும் ஏற்கவும் துாண்டும் மனித விழுமியங்கள் பற்றியும் சர்ச்சைக்க நிறைய இடமுண்டு. இவற்றின் அடிப்படையில் சில தவறுகள் நேரலாம். இவற்றை வடிகட்டி நீக்கி ஒரு கலைஞனை அடையாளம் காணும் முயற்சிகளிலும் கொஞ்சம் அபத்தம் உள்ளது. பெரும்பாலும் ஒரே காரணத்திற்காக ஒருவரைச் சிலர் வெறுப்பதும் சிலர் உவப்பதும் நிகழ்வதுண்டு. நாகராஜன் பற்றிய மதிப்பீடுகளில் நிச்சயமாக இவ்வாறு நிகழ நிறைய இடமுண்டு.
நாகராஜனுடைய எழுத்தில் விளிம்பு நிலை மாந்தரில் ஒரு சிறு சாரரின் இடம் பெரிது. பிற கதைகளிலும் பாலியல் தொடர்பான நாட்டம் அதிகம். கம்யூனிஸ்ட் கட்சியினின்று அவர் விலகத் தொடங்கிய காலத்தையொட்டி அவரது கதை மாந்தர் இருந்த திசையும் விலகத் தொடங்குகிறது. அவரது கதை கூறும் முறை படிப்படியாக மெருகேறி அழகும் பொலிவும் பெற்ற காலத்தில் அவர் கம்யூனிஸ் எதிர்ப்பாளராகவும் மாறி விடுகிறார். இவற்றுக்கிடையிற் கற்பிக்கப்படும் திட்டவட்டமான உறவுகளின் அடிப்படையிலேயே நாகராஜன் கொண்டாடப்படலாம். எனினும் நாகராஜனது படைப்பினுாடு நாம் இனங்காணக்கூடிய இலக்கியப்பார்வை குறித்தும் சமூகப்பார்வை குறித்தும் சிறிது எழுதுவது அவரை மட்டுமன்றிப் பிற படைப்பாளிகளையும் அறிவதற்கான விவாதங்கட்குச் சிறிது உதவலாம். உதவாமலும் போகலாம். முயல்வதிற் தவறு இல்லை. . .
நாகராஜனுடைய கதை மாந்தரின் தன்மை தொடர்பாகவே அவர் அதிகம் விவாதத்துக்குரியவராக இடமுண்டு. இது அவரைப் பற்றிய ஒரு நியாயமான மதிப்பீட்டுக்குப் போதுமானதல்ல. இவ்விடயத்தில் மிகையான அழுத்தம் தவறான மதிப்பீட்டுக்கும் இடமளிக்கும். விளிம்பு நிலையில் சமுதாயத்தால் பொதுவாகவே வெறுத்தொதுக்கப்படும் மக்கள் பல வகைப்படுவர். இவர்களுள் விபசாரம் தொடர்பானோர் பற்றிய கவனம் நாகராஜனது படைப்பில்
61

Page 33
முக்கியமாகிறது. விபசாரிகள், 'மாமாக்கள் பற்றித் தமிழில் முதல்முதலாக எழுதியவர் நாகராஜன் அல்ல. அவர்கள் மீது சிறிது அனுதாபத்துடன் எழுதுபவருள்ளும் அவர் முதலானவரல்லர். ஆயினும் அவர்களது வாழ்க்கையை அவர்களது கோணத்திற் பார்க்கும் முயற்சி என்ற வகையில், இக்காரியத்தை அவர் செய்யும்போது அவர் சார்ந்த சமுதாய விழுமியங்களும் அவர்கள் மீது, எதிர்பாராத ஒரு வகையில், வந்து விழுந்து விடுகிறது.
விபசாரம், என்னளவில், மனித உறவுகளை இழிவுபடுத்தும் ஒரு செயல். சமுதாயத்தில் விபசாரம் இருக்கிறது என்றால், அதை நம்பி வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக முடியாது. அதில் மனிதரை ஈடுபடுத்தும் ஒரு சமுதாயச் சூழலும் அதன் போலியான விழுமியங்களும் அவற்றை நிலைநிறுத்தும் நிர்ப்பந்தமும் கண்டனத்துக்குரியன. வியற்னாம் போரில் விபசாரத்தால் உழைத்த பணத்தை விடுதலைப் போராட்டத்திற்கு ஈந்த பெண்கள் பற்றிய கதைகளை 70களில் வாசித்திருக்கிறேன். சைகொன் 60களில் அமெரிக்கப்படைகளது விபசார விடுதியாகியது. பின்பு பாங்கொக் அவர்களதும் உல்லாசப்பயணிகளதும் விபசார விடுதியாகியது. இதையொத்த நிலை இன்று மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலும் காணக்கூடிய ஒன்று. விபசாரம் குடும்பத்திற்கான ஒரு தியாகமாகப் பல இளம் பெண்களாலும் சிறுவர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுடன் ஒப்பிடுகையில் தமது அறிவையும் தொழில் ஆற்றலையும் கலைத்திறமையையும் மனிதரை மனிதர் அடக்கும் கொடுமைக்குத் துணைபோகும் விதமாகப் பயன்படுத்தும் விஞ்ஞானிகள், தொழில் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், கலைஞர்கள் போன்றவர்களை விட விபசாரிகளும் மாமாக்களும் சில்லறைத் திருடர்களும் பேட்டை ரவுடிகளும் யோக்கியமானவர்கள்.
விபசாரத்தை ஒரு சமுதாயச் சூழலின் விளைவான நிர்ப்பந்தமாகவோ ஒரு தேவையாகவோ கருதுவதற்கும் அதைப் போற்றுதற்குரிய ஒரு தவமாகக் கருதுவதற்குமிடையே வித்தியாசம் அதிகம். நாகராஜனின் கதைகளில் விபசாரத்தைக் கொஞ்சம் மேம்படுத்தி அதற்கு ஒரு மனோரதியத் தன்மை வழங்கும் போக்குத் தென்படுகிறது எனலாம். அதை மிகவும் வலியுறுத்தும் விதமாக அவரது ஒரு கூற்று அமைகிறது: “அடுத்து வருபவன் ஆணர், அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும். எது எப்படி இருப்பினும், 'தேவடியாள்’ என்பதை ஒரு வசைச்சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. வேண்டுமென்றால் தி. ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையோ அல்லது ஈஜின் ஒனலின் அன்னா கிறிஸ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள். பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன." (ப. 356)
62

போற்றத்தக்க மனமுள்ள பரத்தையர் பற்றிய கதைகளுக்கு மேலும் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. நம் முன்னுள்ள பிரச்சனை, பரத்தமையும் அதற்குக் காரணமாக சமுதாயச் சூழுலுமல்லாது, தனிப்பட்ட முறையில் எந்தப் பரத்தையினது நற்பண்புகளுமல்ல.
அடுத்து வருபவன் பற்றிய உணர்வே இல்லாது தன்னை அர்ப்பணிக்கிற சிறுமியிடம் தெய்வீக உணர்வைத் தரிசிக்கலாம் என்பதாலோ என்னவோ, கற்களாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளும் வழிபாட்டுக்குரியன ஆகின்றன. நாகராஜன் ஒரு சூழலுக்குப் பலியாகித் தனது விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்ட முடியாத விதமாகத் தொழில் புரிய நிர்ப்பந்திக்கப்படும் ஒரு நிலையைத் தெய்வீகமானதாகக் காண்கிறார். பரத்தையர் அனைவருமே உத்தமியரானாலும், பரத்தமை என்பது போற்றுதற்குரிய ஒன்றாகி விடாது. மாதவியின் நல்லியல்பாக நம் காவியங்கள் கூறுவது அவரது தொழிலை அல்ல. அவர் தொழில் நெறியினின்று விலகிக் கோவலன்பாற் காட்டிய நேசத்தையும் விசுவாசத்தையுமே நமது மரபு கொண் டாடுகிறது. மணிமேகலையிடம் குடிகொண்டவை குறிப்பிட்ட ஒரு பரத்தையின் (பரத்தமை சாராத) நற்பண்புகளென்றே நமக்குத் தெரிகிறது. பரத்தையரை வெறுமனே அவரது தொழில் காரணமாக இழிவாக கருதுவது தவறு என்ற வாதத்தை முன் வைக்கும் நாகராஜன், பரத்தமையைத் தெய்வீகப்படுத்தும் ஒரு வாதத்தினுள் அதை இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
பரத்தையர் பற்றிப் பேசும் போது, நாம், பொதுவாகவே, அத் தொழில் பெண்களுக்கு உரியது என்பதையிட்டு அதிகம் சிந்திப்பதில்லை. இன்று மேற்கில் பெண்களது நுகர்விற்கான ஆண்விபசாரிகள் சிறு அளவிலேனும் உள்ளனர். 'ஜிGோலோ’ என்ற சொல் பெண்களுக்குக் களிப்பூட்டிப் பிழைக்கும் ஆண்களைக் குறிக்கும். இவர்களது அந்தஸ்து சாதாரண பெண் விபசாரியினதைவிட மேலானது. இங்கே நாம் பரத்தமையில் பொதிந்துள்ள ஆணாதிக்கப் பண்பைத் தெளிவாகவே காண்கிறோம். ஆணாதிக்கம் பற்றி நாகராஜனது அக்கறை குறிப்பிடத்தக்க ஒன்றாகத் தெரியவில்லை. இந்த விதமான அக்கறைகள் கலைஞனுக்கு அவசியமில்லை என்று நாம் தட்டிக்கழிக்க முடியுமா? பரத்தமை சார்ந்த விளிம்பு நிலை மாந் தரின் நியாயத்தை நமக்கு முன் வைக்கிற நாகராஜன், அதை உணர்வுபூர்வமாகச் செய்யவில்லையா? அதிலே பிரசாரம் இல்லையா? கட்சி, கொள்கை என்று வந்தால் மட்டுமே ஒரு படைப்புப் பிரசாரம் என்றாகிவிடுமா? உண்மையில் பிரசாரம் செய்வதாக உணர்வுபூர்வமாய்ச் செய்கிறவரை விட எள்ளளவும் குறையாது. பிரசாரம் செய்யாதே என்று அடித்துப் பேசுகிறவர் பிரசாரம் செய்கிறார். அது, பல சமயங்களில், எவர்களால் சமுதாயமும் சமுதாய விழுமியங்களும் கலை உணர்வும் சீரழிவுக்கு ஆளாகின்றனவோ அவர்களையே ஆதரிக்க உதவுகிறது.
நாகராஜன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு மாக்ஸியத்தையே எதிர்க்கும் நிலைக்குத் தன்னை தள்ளிக் கொண்டவர். கம்யூனிஸ்ட்டுகள் மீது
63

Page 34
அவரது கதைகளில் ஒரிரு இடங்களில் வெளிவெளியாகவே தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. அழகியல்வாதிகள் அனேகமாக இதிற் குற்றங் காணமாட்டார்கள். ஏனெனில் இது அவர்கள் நிராகரிக்கும் பிரசாரமல்லவே. என்னளவில், நாகராஜன் இவ்வாறு செய்வது அவரது தெரிவு. அவரது சமூகப பார்வையை விளங்கிக் கொள்ள அது உதவுகிறது. அந்தப் பார்வை நமக்கு ஏற்புடையதா அல்லவா என்பது நம்முடைய நிலைப்பாடு சார்ந்தது. அவருக்கு ஒன்றைக் கூற உள்ள சுதந்திரம் இன்னொருவருக்கு அதை விமர்சிக்கவும் இருக்கிறது. நாகராஜன் எழுதத் தெரிந்தெடுத்த வாழ்வின் களங்கள், அவரது எழுத்தைக் கொண்டாடுவோர் அவ்வாறு செய்வதற்கான காரணங்கள். அவரை வெறுத்தொதுக்குவோர் கூறும் நியாயங்கள் ஆகிய எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. நாகராஜனின் அரசியலில் அதிகம் இரகசியம் இல்லை.
புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழின் எளிமையின் வலிமையைத் திறம்படக் கையாண்ட படைப்பாளிகளுள் நாகராஜனுக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. வாசகர்களை மிரள வைக்கும் நோக்குடன் வரும் வார்த்தை ஜாலங்களும் புதிர்களும் எங்கோ கண் தையெல்லாம் அரைவாசி கூட விளங்காமல் இங்கே கொண்டு வந்து கொட்டித் தமது மேதாவிலாசத்தைக் காட்டும் போக்குக்குப பலியாகாத படைப்பாளி அவர். அவருடைய “டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் கதையில் வரும் மாயப்புதிர், நமக்கு விடுவிக்க முடியாத ஒன்றாக இருந்தாலுங் கூட, விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இல்லை. தற்கொலை செய்யவிருந்த பெண்ணை அவரது பிரமை ஒன்று தடுக்கிறது. இதுவே விபசாரி அல்லாத ஒரு உயர்குடிப்பெண்ணுக்கு நேர்ந்திருந்தால் அதற்கு தமது சமூகச் சூழலில் தெய்வீக ஆன்மிக விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், இதுவும் மனித வாழ்வின் யதார்த்தத்தில் ஒரு பகுதி. இவ்வாறானவையே நியதி என்ற பார்வையுடையோர் பற்றி நான் இங்கு கருதவில்லை. அக்கினிப் பிரவேசம் கதையில் வரும் உண்மைக்கும் பிரமைக்கும் இடையிலான மயக்கம் கூட, விளங்க இயலாத விதமாக அமையவில்லை. நாகராஜனின் கம்யூனிஸ நிராகரிப்பு யதார்த்தவாத இலக்கியத்தின் நிராகரிப்பாக மாறவில்லை. தர்மோ சிவராம் (பின்னர் பிரமிள்) எழுதிய சதுரச் சிறகுகள் கதை பற்றிய விமர்சனக் குறிப்பில் அவரது கூற்றுக்கள் கவனத்துக்குரியன:
“புற உலக நிகழ்ச்சிகளுக்குக் குறைந்தபட்ச இடமே ஒதுக்கி விட்டு, அந் நிகழ்வின் விளைவுகளான மனநிலைகளையும் உணர்ச்சிகளையும் வாசகன் உள்ளத்தில் நேரிடையாக பதியும்படி எழுத முயலுவது, தர்மோ சிவராமை மட்டுமன்றி, ஏனைய பல எழுத்தாளர்களையும் தொற்றியுள்ள வியாதியாகப் LJGézgs” (L. 50)
மாக்ஸிய விமர்சனப் பார்வை என்பது காலம், இடம், சூழல்
ஆகியவற்றின் தாக்கத்துக்கு உட்பட்டது தான். அது, குறிப்பிட்ட இலக்கிய போக்குகள் பற்றி மேற்கொள்ளும் நிலைப்பாட்டை, எல்லாக் காலத்துக்கும்
64

எல்லாச் சூழலுக்கும் பொருத்தமான மாறா இயல்பினதாகக் கருதுவது ஆபத்தானது. சில மாக்ஸியரிடையே இவ்வாறான விறைப்பான பார்வை இருந்ததற்கான வரலாற்றுக் காரணங்களை நாம் மறக்கக்கூடாது. அதே சமயம், இதையே மாக்ஸியப்பார்வையாகவும் அதன் குறைபாடாகவும் காட்டும் விஷமமும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 60களின் தொடக்கத்தில் விலகிப் பின்பு மாக்ஸிய எதிர்ப்பாளரானவரான நாகராஜன் 1979ல் எழுதியது கவனிக்க உகந்தது.
"சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்களை பட்டாளி வர்க்க யதார்த்தவாதத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது நன்று. அவர்களது இலக்கியப் படைப்பு முழுமையுமே அக் கண்ணோட்டத்துக்குக் கட்டுப்பட்டதாகக் காண்பது வேறு. இப்பார்வை உண்மையில் கலை இலக்கியம், விஞ்ஞானம் போன்ற மேல் தள இயக்கங்களுக்கு அவையவற்றுக்கு உரித்தான பரிணாம வளர்ச்சியையும் அவ் வளர்ச்சியின் விதிகளையும் மறுக்க முயலும் எதிர்இயக்கவியல்வாதமாகும்.
“ஒரு கசப்பான உண்மையை மார்க்ஸிஸ்டு சிந்தனைவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மார்க்ஸிய சிந்தனா முறை இன்றைய மனித வர்க்கம் அடைந்துள்ள மிகவும் செழுமைப்பட்ட சிந்தனை முறையாக இருப்பினும், குறிப்பிட்ட துறைகளில் அதனைச் செயல்படுத்த அந்தந்தத் துறைகளில் முறையான அனுபவ ஞானம் வேண்டும். எந்தத் தொழிலியல் துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் மாக்ஸிய கண்ணோட்டம் எங்காவது ஒரு குறையை நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் அதை நடைமுறையில் சாதிக்க விரும்பும் மார்க்ஸிய சிந்தனையாளன் அந்தக் குறிப்பிட்ட துறையில் கணிசமான அளவாவது தேர்ச்சி பெற வேண்டும். இவ்வுண்மையை மார்க்ஸிய சிந்தனையாளர்கள் கலை இலக்கியத் துறைகளில் புகும்போது நினைவு கொள்ள வேண்டும்” (ப. 358)
மேற் கூறியதன் சாராம்சத்தோடு, கலை இலக்கியம் பற்றி அதிகளவு அக்கறை காட்டியவரும் ஒரு நல்ல கவிஞருமான மாஒ சேதுங் கூறியவை முரண்படவில்லை. இந்தியச் சூழலின் சில பிரச்சனைகளையும் சில அரசியல் நெருக்கடிகள் காரணமாகச், சீனா, கியூபா உட்பட, சோஷலிச நாடுகளில் நேர்ந்த தவறுகளையுமே மாக்ஸிய கலை இலக்கியப் பார்வையின் விளக்கமாகக் காணுகிற தவற்றின் சாயல் மேலே உள்ளதில் இருந்தாலும், நாகராஜன் மாக்ஸியம் பற்றிக் கூறுவன, அவரது மாக்ஸிய எதிர்ப்பினின்றும் சற்று வேறுபடுகின்றன. அவர் கூறும் உண்மை கசப்பானதல்ல. மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை எனது மாக்ஸிய நண்பர்கள் பலர் ஏற்றுக் கொள்வார்கள்.
ஒஸ்கார் வைல்ட் (OscarWide) பாணியில் அவர் 1972ல் உதிர்த்துள்ள சில ‘பொன்மொழிகளில் கொஞ்சம் புதுமைப்பித்தன் பாணியிலான கிண்டலும் வைல்டினதை ஒத்த ஒயிலும் காணப்படுகின்றன. அவரது இலக்கிய உச்சநிலை என்று கருதப்படும் ஒரு கால கட்டத்தில் கூறப்பட்ட இச் சொற்களில் மாக்ஸியப்
65

Page 35
பார்வைக்கு எதிரான தொனியைச் சற்று அவதானிக்கலாம். அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதரில் காணக்கூடிய உயர் பண்புகளை ஆதாரமாகக் கொண்டு அவலத்தையே உன்னதமாகக் காணும் நாகராஜனின் பார்வைக்கும் அவரது "பொன்மொழிகள் கூறும் பார்வைக்கும் உள்ள உறவு நமது கவனத்துக்குரியது. மனிதாபிமானம், சமுதாய மாற்றத்துக்கான இலக்கியம் போன்ற பலவற்றை ஏளனம் செய்கிற நாகராஜனுக்கும் எங்கோ உன்னதங்கள் தெரிகின்றன. அவர் நக்கலாக நிராகரிக்க முனையும் சில விழுமியங்களே அவரை அங்கு ஆட்கொள்கின்றனவோ என ஐயுறுகிறேன்.
ஒரு படைப்பாளியின் சித்தாந்தம், படைப்பாளியின் பார்வை செல்லும் திசையை மட்டுமன்றிப், பார்வையையும், அதன் மூலம், படைப்பையும் நிர்ணயிக்கிறது. நாகராஜன் இதற்கு விலக்கல்ல. அவரை ஒவ்வொருவர் கொண்டாடுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆயினும் அவற்றை அவரவரது சித்தாந்தத்தினின்று பிரித்தெடுப்பது சிரமம். சமூகமும் தனிமனிதனும் என்ற பிரச்சனையில், சமூகத்துடன் தனி மனிதர் காணும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்தும் போது, இந்த முரண்பாட்டுக்கு ஆதாரமாகவுள்ள சமூக அடிப்பபடையும் சமூக அளவிலான முரண்பாடுகளையும் எளிதாகவே தவறவிட இயலும், இந்த விதமான குறைபாடு தனிநபர்வாதத்தின் ஒரு முக்கியமாக பண்பாகவும் அமைகிறது. மறுபுறம், சமூகத்தில் உள்ள வர்க்கம் சார்ந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே கருதித் தனி மனித உணர்வுகளை உதாசீனம் செய்யும் போக்கும் உள்ளது. இதிலும் யதார்த்தம் தவறவிடப்படுகிறது. தனிமனித இருப்பைச் சமூக இருப்பின் ஒரு பகுதியாக் காணுகிற பார்வை மூலம் இரு வகையான தவறுகளையும் தவிர்க்க இடமுண்டு.
சமூக அமைப்பைக் கேள்விக்குட்படுத்தாமல் சமூக விழுமியங்களை மட்டும் கேள்விக்குட்படுத்தும் நிலையையும் நாம் நாகராஜனின் படைப்புகளில் அவதானிக்கலாம். விளிம்பு நிலை வாழ்வில் ஒரு எதிர்க்கலாசாரம் அல்லது மாற்றுக் கலாசாரம் அடையாளங் காணப்படலாம். இதனைச் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் ஒரு கலாசார மேலாதிக்கத்திற்கு ஒரு எதிர்வினையாகவோ அல்லது அதன் துணை விளைவாகவோ அடையாளங் காணலாம். இந்த இடத்தில், நாகராஜன் காட்டுகிற திசையில் நமக்குப் புதிய தரிசனங்கள் கிட்டுகின்றன. அவை எவ்வளவு துாரம் விளிம்புநிலை மக்களது பார்வையுடன் இசைவானவை என்பது பற்றி உறுதியாக எதுவுங் கூற முடியாவிட்டாலும், நிச்சயமாக நாம் அறிந்த பல பார்வைகளுடன் ஒப்பிடுகையில் அனுதாபம் (பரிதாபமல்ல) உள்ளது. அவரது மதிப்பீடுகளாகத் தெரிவனவற்றுடன் நமக்குள்ள முரண்பாடுகளை ஒரு புறம் ஒதுக்கி, அவர் வாயிலாக, நமக்குத் தெரியாத, ஆனால் தெரிய வேண்டிய, ஒரு உலகத்தைக் காண முடிகிறது. இதற்காக அவர் போற்றப்பட வேண்டியவர்.
66

அவர் வேறு காரணங்கட்காகவும் போற்றப்படுகிறார். அவருடைய கதைகள் மூலம் உலகத்தை 'உய்விக்க எதுவும் செய்யவில்லை என்பது ஒன்று. நாம் பிறருக்குக் காட்ட ஜோடித்து வைத்திருக்கும் வேடங்களில் அக்கறை இல்லாத கலைஞன்” என்பது இன்னொன்று. இவை சுந்தர ராமசாமியின் மதிப்பீடுகள். நாகராஜனின் கம்யூனிஸ விரோதம் அதன் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில், அதுவும், எந்த ஒரு அமைப்போ அரசியலோ சாராமை காரணமாகப் போற்றப்பட்டிருக்கும். இவை பற்றிச் சிறிது கூறாமல் விட மனமில்லை.
நாம் ஒவ்வொருவருமே, நம்மைச் சூழ உள்ள உலகத்தை நமது பார்வையின் விரிவிற்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் மாற்றத்தான் முயல்கிறோம். இல்லாவிடின் கலை இலக்கியங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான உரையாடல்கள் கூட அவசியமில்லாது போயிருக்க வேண்டும். தனி மானுடர் செய்யக்கூடியது அதிகமில்லை. ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு சிறு பங்களிப்பு பிறிதொரு சூழலில் அதையொத்த ஒன்றின் முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. எந்த வரலாற்று நாயகரும் தனது காலத்திற்கும் இடத்திற்கும் சிறிது இப்பாலோ அப்பாலோ தோன்றியிருந்தால், வரலாறு அவரைக் காணாமலே விட்டிருக்கக்கூடும். இது கலை இலக்கியவாதிகட்கும் பொருந்தும். உய்விக்கப் படைக்கிறாரோ சீரழிக்கப் படைக்கிறாரோ என்பது, நோக்கம் சார்ந்தது. படைப்பின் தாக்கம் அதன் உடனடியான சூழலும் காலமும் சார்ந்தது. நாகராஜனின் எழுத்து அவர் கண்டதற்கு மேலாக எதையும் சொல்ல முனையவில்லை என்பதால் உயரவில்லை. அவர் சொல்வதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதை வைத்தும் நமது மதிப்பீடு அமைகிறது.
நமக்கு ஒளிவட்டம் பூண்ட மாந்தர் தேவையில்லை என்பது என் எண்ணம். அப்படியானால், கலைஞன் என்ற ஒளிவட்டம் எதற்கு? இங்கே, நாகராஜன் “மனித குணங்களை மனிதர் சிலாகித்துப் பேசுவதைவிடக் கேலிக் கூத்துக் கிடையாது’ (ப. 347) என்று கூறியுள்ளது நம் கவனத்துக்குரியது. ஒரு கலைஞன் எவ்வாறு இன்னொரு மனிதனை விட உண்மையை அறியும் அருகதை உடையவனாயும் உயரிய பிறவியாகவும் அமையக் கூடும்? சமுதாயத்தின் சீர்கேடுகள் எல்லாத் துறைகளையும் தான் தீண்டுகின்றன. கலைஞர்கள் விலக்கல்ல. சகமனிதரும் புற உலகமும் பற்றிய பார்வை மனிதரது சமுதாய இருப்பில் எவரதும் உள்ளத்தின் உயர்வை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்பேன். கலைஞர்கட்குரியன என்று நாம் சிறப்பாகக் காட்ட முனையும் பண்புகளும் ஒரு வகையான சோடிப்பாகி விடாதா என்பது ஒரு நியாயமான கேள்வி.
நாகராஜன் அவரது கம்யூனிஸ் விரோதத்திற்காகக் கொண்டாடப்படுவதில்
வியக்க என்ன உள்ளது? எத்தனையோ பேருக்கு வழங்கப்பட்ட நொBெல் பரிசுகள் முதல் அண்மையில் அருந்ததி றோய் பெற்ற Bக்கர் பரிசு வரை,
67

Page 36
இந்த வகையிலான சர்வதேச விருதுகள் இலக்கிய உன்னதத்துக்காகவே வழங்கப்படுவனவல்ல. இன்னமும் கொலனி ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள் தான் உலகை ஆளுகிறார்கள். கொலனி அடிமை மனோபாவம் உள்ளவர்கள் நமது நாடுகளில் முக்கியமான அரச பொறுப்புக்களிலும் சமூகத்தின் பல்வேறு தலைமை நிலைகளிலும் இருக்கிறார்கள். எனவே கம்யூனிஸ எதிர்ப்பு ஒரு தகுதியாக வெகுகாலம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை, மாக்ஸியவாதிக i மத்தியில் விறைப்பான பார்வைகளும் கலை இலக்கியப் பணிகள் பற்றிய அசட்டையான போக்கும் பல நல்ல படைப்பாளிகளைத் தமது நல்ல பங்களிப்புகளைச் செய்யாது தடுக்கக்கூடும். அது மட்டுமன்றி, அதன்மூலம் யாருக்கெதிராகப் போராடுகிறோமோ அவர்களிடமே நமது நேச சக்திகளைத் தாரை வார்த்துக் கொடுக்கவும் வசதி செய்கிறோம் என்பதை மாக்ஸியவாதிகள் அடிக்கடி கவனத்திற் கொள்வது நல்லது.
68

பிரமிளின் படைப்பும் பார்வையும்
ஒரு படைப்பாளியின் பங்களிப்பின் தன்மையும் தரமும் அவற்றிலும் முக்கியமாகச் சமூகப் பயனுமே படைப்பாளியின் முக்கியத்துவத்தை திரமானிக்கின்றன. படைப்பாளியின் சாதனைகள் எனப்படுவனவற்றை விட அவை யாருக்கானவை, அவற்றின் நோக்கமும் முனைப்பும் எவை, அவற்றின் சமூகத் தாக்கம் எத்தகையது என்பன முக்கியமானவை. ஒரு படைப்பு நல்ல இலக்கியமாகத் தேறுகிறதா என்ற கேள்வியைத் தவிர்த்து மேற்கூறியவாறான மதிப்பீடு இயலுமானதல்ல. இலக்கியத் தரம் பற்றிய கேள்வி சமூகப் பார்வைக்கு அப்பாற்பட்ட ஒன்றலல. என்றாலும், ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமுரிய சில அழகியற் பண்புகளைப் புறக்கணிக்க இயலாது. பிரமிள் என்று அறியப்படும் த. சிவராமலிங்கம் திருகோணமலையைச் சொந்த ஊராகக் கொண்டவராயினும் அவருடைய இலக்கியப் பார்வையும் பங்களிப்பும் தமிழகத்தையும் அதன் ஒரு சில வட்டாரங்களையும் சார்ந்தே அமைந்தவை. அவரை ஈழத்துக் கவிஞர் என்று சொல்வது அந்த வகையிற் பொருந்தாது. 1970 அளவில் அவர் கொண்டிருந்த சமூகப் பார்வையில் 1980க்குப் பிறகு ஒரு நெகிழ்வு ஏற்பட்டதாகத் தோன்றினாலும் இலக்கியம் பற்றிய அவரது நிலைப்பாடு அதிகம் மாறியதாகக் கூற முடியாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் தனிமனித நட்பும் பகையும் அவரது திறனாய்வுகளிற் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. விமர்சனத்தைப் பொறுத்தவரை மற்றவர்களைக் கடுமையாக நிந்திக்கத் தயங்காத பிரமிள், தன்னுடைய படைப்புகள் மீதான விமர்சனக் கூற்று எதையும் சகிக்கக்கூடியவரல்லர். இவ்விடயத்தில் அவரை மிஞ்சக் கூடிய ஈழத்துப் படைப்பாளி ஒருவர் இருந்தால், அவர் எஸ். பொன்னுத்துரையாகவே இருக்கக்கூடும். மனித சமத்துவம் பற்றி பிரமிளுக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததாக என்னால் எண்ண முடியவில்லை. அவருக்கு ஒரு அறப்பார்வை இல்லை என்று யாரும் கூற முடியாது. அதன் வரையறைகட்கும் அவரது இலக்கியக் கொள்கைகட்கும் உறவு உண்டு என்பதே என் மதிப்பீடு.
1960 அளவில் சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து' சஞ்சிகை மூலம் தமிழகத்தில் அறியப்பட்ட சிவராமலிங்கம், ‘எழுத்து உறவிற்குப் பின் இலங்கையில் தான் இருந்த காலத்தில் தன்னை ஒரு இலக்கியவாதியாக அடையாளங்காட்டும் எதுவிதமான முயற்சியையும் இலங்கைத் தமிழ் ஏடுகள் எவற்றிலும் மேற்கொண்டார் என்று கூற முடியாது. இதற்கான காரணங்களில், அவருடைய இலக்கியப் பார்வை ‘எழுத்து சம்பந்தப்பட்டோரின் பார்வைக்கு நெருக்கமாக இருந்தமை ஒன்றாயிருக்கலாம். ஈழத்து இலக்கியப் போக்கை அவர் ஏற்கவுமில்லை, அதனுடன் தன்னை எவ்வகையிலும் அடையாளங் காண முனையவுமில்லை என்பது அவ.
69

Page 37
ருக்கும் அவரது சமூகத்துக்குமிடையிலிருந்த இடைவெளியை ஓரளவுக்கேனும் சொல்கிறது.
தமிழிற் புதுக்கவிதை தோற்றுவிக்கப்பட்ட காலம் உலகளவில் இலக்கியத்தில் தனி மனிதவாதப் போக்குக்களும் சமூகச் சார்பின்மையும் வெகுவாக ஊக்குவிக்கப்பட்ட ஒரு காலமுமாகும். தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கமும் ஆபிரிக்க, ஆசிய எழுத்தாளரிடையே கருத்துப் பரிமாறலும் உரம் பெற்ற காலத்தின் தொடர்ச்சியாக இத்தகைய போக்கு ஒன்று முனைப்புப் பெற்றதை வெறும் விபத்து என்று என்னாற் கருத இயலவில்லை. மிகவும் திட்டமிட்ட முறையிலேயே முன்னாள் கொலனிகளில் ‘துாய இலக்கியக் கோட்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டன. சில படைப்பாளிகளின் தன்முனைப்பு இதற்கு வசதியாக இருந்திருக்கலாம். ஆயினும் முன்னதன் அடிப்படை பின்னது அல்ல.
பிரமிள் இலங்கையில் இருந்த காலத்தில் அவரிடம் தெளிவான அரசியல் நிலைப்பாடு எதுவும் இருந்ததாக என்னாற் கூற முடியாது. எனினும் 1960களில் அவர் தமிழரசுக்கட்சியை மிகவும் ஏளனமாகவே கருதினார். தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் என்பன பற்றிய அவரது கருத்தும் அவ்வாறே அமைந்தது. 1970களில் நிச்சயமாக அவரிடம் ஒரு கடுமையான இடதுசாரி விரோதப் போக்கு நிலை கொண்டு விட்டது. இது வெறுமனே பிரதான இடதுசாரிக் கட்சிகள் மீதான பகைமையாக அல்லாது மாக்ஸியத்தின் மீதான பகைமையாகவே இருந்தது. இப் பகைமையும் அவருக்குத் தமிழகத்தின் ‘துாய அழகியல்வாத வட்டங்களில் ஒரு நல்ல வரவேற்பை அளித்தது என்றே நம்புகிறேன். சமூகச் சார்பான இலக்கியக் கொள்கையை எதிர்த்துச் சமூகத்திலிருந்து வேறுபட்டு உயர்ந்த இலக்கியவாதி', 'பிரசாரம் செய்யாத இலக்கியமே உண்மையான இலக்கியம்’ என்றவாறான கருத்தாக்கங்களை முன்வைத்தவர்கள் அனைவரும் 'பார்ப்பனியச் சிந்தனை சார்ந்தோர் எனவும் பிரமான சாதிய அடையாளம் உடையோர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு காலத்தில், பிரமிள் ஒரு பயனுள்ள பிராமணரல்லாத மாக்ஸிய விரோத விமர்சகராக இருந்தார்.
வெங்கட் சாமிநாதன் போன்ற சாரமற்ற காரமான விமர்சகர்களை விடப் பிரமிளிடம் இலக்கியம் பற்றியும் அழகியல் பற்றியும் ஒரு பார்வைத் தெளிவு இருந்தது. எனினும், வெங்கட் சாமிநாதன், க.கா.சு. போன்றோர் முதல், சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி ஆகியோர் வரையிலானவர்களது குறைபாடான இலக்கிய விமர்சன நேர்மையைப் பிரமிள் அடையாளங்காட்டிய காலங்கள், தனிப்பட்ட முரண்பாடுகளுடன் இணைந்து நிற்பதையும் நாம் தவறவிட முடியாது. பிரமிள் 'பார்ப்பனியத்தை அடையாளங்கண்ட போது, அவராற் பார்ப்பனியத்துக்கு அதிகம் பயன் இல்லை. 1980களின் வேறு பல இலக்கியப் போக்குகளின் ஆதிக்கத்தின் நடுவே பிரமிளின் முக்கியத்துவம் குறைந்ததற்கு அவருடைய தனிமனிதவாதமும் மனித உறவுகளைப் பேணுவதில் இருந்த போதாமைகளுங்கூடப் பங்களித்தன. அவருடைய விமர்சனங்களில், எப்போதுமே, தன்னைக் கவித்துவத்தின் உச்சாணிப் கொம்பில் வைத்து தன்னை உவக்காதவர்களை மிகவும் இழித்துப் பேசும் தன்மையை எவருமே எளிதாக உணர முடியும்.
70

பிரமிள் தன்னைப் பற்றிச் சொல்வன அனைத்தும் உண்மைகளா என்பது பற்றி எனக்கு மிகுந்த ஐயங்கள் இருக்கின்றன. தன்னை நியாயப்படுத்தும் நிரப்பந்தம் காரணமாகச் சில தகவல்களை அவர் தன் வசதிக்கேற்றபடி வடிகட்டியும் திரித்தும் வழங்கியிருப்பதை நான் அறிவேன். இது வெறும் அகச்சார்பான பார்வையின் விளைவு என்று என்னாற் கருத முடியவில்லை. எண் ஜோசியத்திலும் பலவாறான ஆன்மிகப் போக்குகளிலும் ஜே. கிருஷ்ணமூர்த்தி உட்பட்ட ஆன்மீகவாதிகள் பாலும் அவருக்கு இருந்த ஈடுபாடு அவருடைய கருத்துமுதல்வாதத்தை அடையாளங் காட்டுவது. தன்னையே உலகின் மையமாக அவர் கருதினார் என்பது அதிகம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது.
கவிதை, விமர்சனம் என்பன தவிர, ஒவியம், நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற துறைகளிலும் அவருக்கு நாட்டமிருந்தது. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல் ஒன்றைப் பிரசுரிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. அவருடைய ஆங்கில ஆளுமை சராசரிக்கும் மேலானது எனினும், அது அவரால் லாவகமாகச் செயற் படக்கூடிய அவரது முதல் மொழி அல்ல என்பதை அவர் உணர மறுத்தார் என்றே நினைக்கிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளில் "தென்னாசிய ஆங்கிலங்கள்’ என்று அடையாளப்படுத்தக் கூடிய மொழிகளின் தன்மைகள் தவிர்க்க இயலாதன. அவரது சில ஆங்கிலக் கவிதைகள் பிரசுரமான போதும், ஆங்கில மொழியில் அவரது கவிதைகள் அதிகங் கவனிப்பைப் பெற்றதாகத் தெரியவில்லை.
கவிஞராகவும் விமர்சகராகவுமே பிரமிள் முக்கியம் பெறுகிறார். அவரது கவிதையில் வலிமையான படிமப் பிரயோகம் இருந்தது. இன்றைய தமிழகத்தின் கவிதைப் போக்கில் படிமக் கவிதைகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. எனினும் இருண்மையான மொழிப்பிரயோகம், ஆன்மிகக் கவிதைக்கு அப்பாற் சென்று பிற ஆக்க இலக்கியங்களையும் ஊடுருவி நிற்கிறது. இது அவருடைய பங்களிப்பல்ல. இது தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த ஒரு 'பாண்டித்தியப் பாரம்பரியத்தின் நோய்க்கூறுகளில் ஒன்று.
பிரமிளின் கவிதைகளில் ஒரு பகுதியை ஏற்கனவே விமர்சித்து 1983 அளவில் எழுதியது, தாயகத்தில் பிரசுரமாகி, என் "விமர்சனங்கள்’ நூலில் தொகுக்கப்பட்டு, பிரமிளிடம் எனக்கு மட்டுமன்றி ஏ.ஜே. கனகரத்னா, தமிழவன், தி.க.சி. போல பலருக்கும் வசையை வரவழைத்தது. அவருடைய கவிதைகள் அனைத்தினதும் தொகுப்பை நோக்கும் போது, 1983ல் எழுதியதில் எதையுமே மாற்ற வேண்டிய தேவை எதுவும் தெரியவில்லை.
பிரமிளின் கவிதையின் தன்மை பற்றிக் கூறுவதானால், அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் புதுக்கவிதை பற்றி உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியல் அவரது கவிதை மீது நீண்டகாலப் பாதிப்பைச் செலுத்தியது. படிமங்களுக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் பெரிது. தனியொரு படிமமே கவிதையாகக்
71

Page 38
கருதப்பட்ட சூழலுக்கு அவரது பங்களிப்பு முக்கியமானது. எனினும் சிறப்பான முறையில் அவர் தனது படிமங்களை வகுத்துக் கையாண்டார் என்பது உண்மை. அவற்றின் மூலம் அவர் கூற முயன்றவற்றில் வெளிப்படுவது அவரது சமூகப் பார்வை, கலைஞனைச் சாதாரண மக்களிலும் உயர்ந்த பிறவியாக, அந்நியமான ஒரு சக்தியாக நோக்குகிற பண்பு காரணமாக, அவரது எழுத்தில் மனிதநேயம் போதியளவுக்குத் தன்னை அடையாளப் படுத்தவில்லை.
சமூகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்போரில் சமூகத்துக் கும் தனிமனிதனுக் குமிடையிலான முரண் பாடுகளை முதன்மைப்படுத்துவோரால் ஒரு முழுமையான சமூகப் பார்வையை விருத்தி செய்ய இயல்வதில்லை. பிரமிளுக்குச் சமூகத்தின் குறைபாடுகள் தெரிகின்றன. மனிதரின் குற்றங்குறைகள் தெரிகின்றன. அவற்றைத் தீர்ப்பதும் திருத்துவதும் அவருடைய கடமையாக இருக்க அவசியமில்லை. ஆனால் அவற்றுக்கான விளக்கங்களில் அவரது சமூகப் பார்வையை விட ஆக்ரோஷமாக ஒலிப்பது. நான், நான் என்ற குரல்தான். அவருடைய கவிதை ஒன்றில் “சேற்றில் விழுந்த சொற்கள்/ தானியமாயின/ புல் தரை மீது பூக்களாயின/ சருகுகளாகி/ தெருவிலலைந்தன பல” என்று தொடருகிறது. பிரமிளின் சொற்கள் எத்தகைய சிந்தனையின் விதைகள்? அவை எங்கே விழுந்தன?
அவரது அனைத்துக் கவிதைகளதும் தொகுப்பு ஒன்று மூன்று ஆண்டுகள் முன்பு லயம் வெளியீடாக கால சுப்பிரமணியத்தால் தொகுத்து வெளியிடப்பட்டது. அதிற் பெரும்பகுதி தனி நபர்கள் மீதான வசைகளும் கவிதையாகத் தேறாதனவுமே. பக்தி என்று வந்து விட்டால், வழிபாட்டுக்குரியவரது கொட்டாவி கூடச் சங்கீதமாகிவிடும். வரவு செலவுக் கணக்கு கூடக் காவியமாகிவிடும். பிரமிளின் வசையை ஒருவர் கவிதை என ரசிப்பதற்கு வசைக்குரியவர் மீதான பகைமை மிகவும் வலியதாக இருக்க வேண்டும்.
சொற்கள் மீது பிரமிளின் ஆளுமையையோ அல்லது கிண்டலான எழுத்தின் தாக்குதலின் வலிமையையோ நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் இந்த ஆளுமையும் ஆற்றலுமே அவர் எழுதிய "விமர்சனக் கவிதைகளைக் கவிதைகளாக்கி விடமுடியாது. உண்மையைத் தேடுகிற பயணம் தமது என்று புறப்பட்டுத் தம்மிடம் மட்டுமே உண்டு என்று மயங்குகிற மனநிலை பிரமிளுக்கு மட்டும் இருந்தது அல்ல. ஆயினும் தன்னை முதன்மைப் படுத்துகிற போக்கில் அந்தத் தேடல் திசை தவறிப் போகிறது.
படிமக் கவிதைகளிலிருந்து எழுந்த அவரது இடைக்காலக் கவிதைகளில் ஒரு வீச்சு இருந்தது. அதே வேளை பல தமிழகக் கவிதைகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செய்யும் இருண்மையும் அங்கே இருந்தது. இங்கும் கவிதை பற்றி பிரமிள் கொண்டிருந்த பார்வை அவரது படைப்பிற் தெளிவாகவே தெரிகிறது என்று சொல்லலாம். எனினும் ஒரு சமூகப் பார்வையை அவரால்
72

விருத்தி செய்ய இயலாது போனதன் இன்னொரு பக்கமாகவே தன்னை முதன்மைபLடுத்துகின்ற போக்கை அவரது கவிதையும் அடையாளங் காட்டுகிறது. எவ்வாறயினும், தமிழகக் கவிதைகளிலும் பிற ஆக்க இலக்கியங்களிலும் கடந்த ஒரிரு தசாப்தங்களாகக் காணப்படுகிற பசப்பான புத்திஜீவித்தனமும் புற உலகை மறுத்து நிகழும் உள்மனத் தேடல்களும் பிரமிளிடம் இல்லாமை கவனிக்க உகந்தது. அவர் காண மறுத்தவையும் காணாமல் தவிர்த்தவையும் அவருக்கு எட்டாமல் யாரும் மறித்தவை அல்ல. அவர் தன்னைச் சூழ எழுப்பிய ஒரு இலக்கிய வேலி அவரது பார்வையை மறைத்தது என்பேன்.
எனது கணிப்பில், பிரமிளின் சொற்சாதுரியமோ சிந்தனைக் கூர்மையோ பற்றி நான் அதிகம் அழுத்தம் வைக்கவில்லை. அவருடைய ஆற்றல் எந்தத் திசையில் போனது என்பதுதான் எனது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழீழ விடுதலை மீது அவருக்கு ஏற்பட்ட மோகமும் காலப்போக்கில் வலுப்பெற்று வளர்ந்த பார்ப்பனிய விரோதமும் அவர் பற்றிய மதிப்பீடுகள் சிலவற்றில் அவருக்கு ஒரு ‘புரட்சிகர அல்லது "முற்போக்குத் தன்மையை வழங்குகின்றன. அந்த மாற்றங்கள் ஆழமான ஒரு சமுதாயப் பார்வையின் விளைவானவை என்று கூறப் போதிய நியாயம் இல்லை.
1980களில் ஈழத்துக் கவிதைகள் பற்றித் தமிழகத்திற் கூடிய கவனிப்பு ஏற்பட்ட நிலையிலும் பிரமிள் அவை பற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. பின்னர் நடந்த இலக்கிய விவாதங்களில் அத்தகைய அக்கறை இருந்ததாகவும் தெரியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இயக்கப் பாடல்கள் எழுதிய காலத்திலும் அவரிடம் தேசிய இனப் பிரச்சினையின் மூலவேர்கள் எவை என்பது பற்றியோ தமிழ்த் தேசியத்தின் அக முரண்பாடுகள் பற்றியோ தெளிவான பார்வை இருக்கவில்லை. அவருடைய ஈழத் தமிழ்த் தேசியவாத உணர்வு திடீரென்று முற்றுக்கு வந்தாற் போலவும் அவரது விமர்சனப் பார்வை அங்கு செயலற்றுப் போவதாகவும் தெரிவது ஏன்?
இலக்கியத்திற்கு அரசியற் சிந்தாந்தம் வேண்டாம் என்ற கருத்து, மாக்ஸிய எதிர்ப்பையே இலக்காகக் கொண்டிருந்தது. வலிந்து மாக்ஸிய எதிர்ப்பில் இறங்கியவர்களுள் ஒருவராகவே பிரமிள் இருந்தார். சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது அக்கறை ஒரு தனி மனிதத் தளத்துக்கு மேல் உயரவில்லை என்பதே என் மதிப்பீடு. அவரை ஒரு ஞானியாகவும் இலக்கிய உன்னதங்களில் ஒன்றாகவும் கொண்டாடுகிறவர்கள் உள்ளனர். அவர்களுடைய உலகப்பார்வையும் என்னுடையதும் ஒன்றல்ல. பிரமிளின் முக்கியத்துவம் அந்த வட்டத்துக்குள் முடங்கியதற்கு அவரது திறமையின் போதாமை எதுவும் காரணமில்லை என்பது மட்டும் உறுதி.
73

Page 39
சிதைவுகள்
(சிதைவுகள், சினுவா ஆச்சிபி, தமிழில் என்.கே.மகாலிங்கம் காலம் வெளியீடு, கனடா, 1998, ப. 182, இந்திய ரூ. 7500)
இந்த நுால் பற்றிய மதிப்பீட்டில், அயல்மொழி இலக்கியங்களின் தமிழாக்கம் பற்றிய பிரச்சினைகளையும் தொடவேண்டியுள்ளது. ஆபிரிக்கா பற்றித் தமிழர் நடுவே உள்ள அறிவின் போதாமையையும் அக்கறையின்மையையும் மட்டுமன்றிக் கறுப்பு இன மக்கள் பற்றியுள்ள படிமங்களின் பின்னணியில் ஆபிரிக்க மக்கள் பற்றி அவர்கள் வாயிலாகவே வருகிற இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றியும் இந்த நுால் அத் தொடர்பில் நிரப்புகிற இடைவெளி பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆபிரிக்க மக்கள் பற்றிய நமது பார்வைக் குறைபாடு பற்றி முதலிலும் நுாலின் தமிழாக்கத்தின் சிக்கல்கள் பற்றி அடுத்தும் நுாலின் உள்ளடக்கமும் சாத்தியமான வாசிப்புகளும் பற்றி இறுதியிலும் எழுதலாமென எண்ணுகிறேன்.
கறுப்பு இனமக்கள் பற்றிய நமது பார்வையின் ஒரு பாகம் கொலனிய ஆட்சியிடமிருந்து நாம் வரித்துக் கொண்டது. இன்னொன்று வருணாசிரம வழியில் கறுப்பு நிறம் பற்றி நம்மிடையில் உருவாக்கியுள்ள மனோபாவம் சார்ந்தது. அகதிகளாயோ வயிற்றுப் பிழைப்புக்காகவோ அவுஸ்திரேலியாவுக்கோ ஐரோப்பாவுக்கோ அமெரிக்கக் கண்டங்கட்கோ போகிறவர்களும் ஆபிரிக்க நாடுகளில் பிழைப்புக்காகச் செல்கிறவர்களும் கறுப்பு இனத்தவரை ஒரு வகையான ‘சாதிய மனோபாவத்துடன் நோக்குவது பரவலான அளவில் உண்மை. இந்த மனோபாவம் ஆபிரிக்க மக்கள் பற்றிய அக்கறையுடன் கூறப்படுகின்ற சில கருத்துக்களிலும் இடையிடையே காணப்படும். பண்பாடு ஒவ்வொன்றையும் அதனதன் கால, இட, அரசியற் சூழலிகளின் அடிப்படையிற் காண மறுக்கிற போக்கு, பண்பாடுகளை எல்லாம் ஏதாவது ஏறுவரிசையில் அடுக்குகிற முயற்சிகட்கு உதவுகிற ஒன்றே. இதை மாற்றுவதற்கு, மனித, மனித சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தில் வாழ்வின் சகல கூறுகளையும் நோக்குகிற பார்வை நம்மிடையே விரிவடைய வேண்டும். அவ்வகையில், மூன்றாமுலக இலக்கியங்கள் மூலம் ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்கள் பற்றிய அறிவை நமக்கு வழங்கும் ஒவ்வொரு முயற்சியும் போற்றுதற்குரியது. குறிப்பாக, இருண்ட கண்டமாகக் காட்டப்பட்டு இருட்டடிப்புக்கு ஆளாகியுள்ள ஒரு பெருநிலப்பரப்பின் பல்வேறு தேசிய
74

இனங்களதும் பூர்வக்குடிகளதும் வாழ்முறைகளும் சமுதாய நெருக்கடிகளும் சமுதாய மாற்றங்களும் பற்றிய அளிப்புகள் தமிழில் வருவது சிறப்பானது. இதற்காக மட்டுமன்றிச் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு தமிழாக்கம் என்ற வகையிலும் மகாலிங்கத்தின் தமிழாக்கம் வரவேற்கவும் பாராட்டவும் உகந்தது.
தமிழாக்கத்தில் உள்ள சில முக்கியமான குறைபாடுகள், இனிவரும் நூல்களில் தவிர்க்கப்பட வேண்டியன என்ற நோக்கிற் சுட்டிக்காட்டத்தக்கன. அவற்றைக் கூறும் போது நூலின் எளிமையானதும் தெளிவானதுமான மொழி நடையைப் பற்றியும் கூறாமல் விடல் சரியல்ல. சில பதங்கள் தமிழக வாசகர்கட்குச் சொற்ப இடர் தரக்கூடும். ஆயினும் அவை வாசிப்பிற்குப் பெரும் இடைஞ்சல் எனக் கூற இயலாது.
தமிழாக்கம் என வரும்போது நூலின் தலைப்பே சிறிது பிரச்சனை தருவது. Things Fall Apart" என்ற நுாற்தலைப்பு ‘சிதைவுகள்’ என வருவது மூலத்தின் தலைப்புக் குறிக்கும் பொருளையும் மாற்றிவிடுகிறது. சில வேளைகளில், நேரடியான தமிழாக்கம் கச்சிதமான நூற்தலைப்பாக அமையாவிடின், நூலின் உள்ளடக்கத்திற்கேற்ப வேறு தலைப்பை வழங்குவது தகும். இன்னொரு பிரச்சனை, சினுவா ஆச்சிபி என்ற பேர், ‘Chinua Achebe" என்ற பேர் தமிழில் சினுவா அச்செபே (சினுஆ அசெBே) என்றவாறு வரக்கூடுமென்பது என் ஊகம். அயற் பேர்கள் அனைத்தையுமே ஆங்கில வாயிலாக உள்வாங்கும் நிலையில் தமிழர் இன்று உள்ளனர். (தமிழ்ப் பேர்கள் கூட இப்பொறிக்குள் சிக்கியுள்ளன). எந்தவொரு பேரையும் கைக்கு வந்த விதமாக எழுதி வாய்க்கு வந்த விதமாக உச்சரித்து அவ் வடிவங்களை எல்லார் மீதும் திணிப்பது ஆங்கில மொழி பேசும் சமூகங்கட்குக் கைவந்த கலை. ஆபிர்க்கப் பேர்கள் சில, இக் காரணத்தால் நம்மாற் தவறாக அறியப்பட்டுள்ளன. “வொலே ஸொயின்கா’ என்ற பேர், முன்னுரையில், வோல் சொயிங்கா என்று வரவும் இதுவே காரணமாகி இருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, கறுப்பு ஆபிரிக்க மக்களது மொழிகள் றோமன் எழுத்து முறையை உள்வாங்கியுள்ளன. ஆயினும் ஆங்கிலத்தின் குழறுபடிகள் இல்லாமல் அவை எழுத்திற் பயன்படுகின்றன என நம்புகிறேன். எனவே முன்குறிப்பிட்ட பேர்களின் உச்சரிப்பு, பொதுவாக ஆபிரிக்க மொழிகளில் வரும் பேர்களினது போன்று, ஒழுங்கான ஒலியியல் நெறி சார்ந்தது என்றே நம்புகிறேன். நான் சொல்வதிற் தவறு இருப்பின், அது திருத்தப்பட வேண்டும். எனினும் நூலில் வரும் பலவேறு பொருள், இட, ஆட் பேர்கள் மூலத்தில் உள்ளவாறு பேர் அகராதியாகத் தரப்பட்டிருப்பின் பயனுள்ளதாயிருந்திருக்கும்.
தமிழின் ஆங்கிலமாதல் வெறுமனே ஆங்கில மோகத்தால் மட்டும் நிகழ்வதல்ல. வழக்கிழந்த தமிழ்ச் சொற்களன்றி வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்களும் இழக்கப்பட்டு வருவதற்குச் சமூகக் காரணங்களும் உள்ளன. வணிக ஏடுகள் ஒரு நோக்கிலும் ஆய்வறிவாளர்களுக்கானவை வேறொரு நோக்கிலும் இதைச் செய்கின்றன. இதன் ஒரு வெளிப்பாடு, பரிச்சயங் குறைந்த ஆங்கிலப் பதங்கட்குரிய
75

Page 40
தமிழ்ச் சொற்களைத் தேடுவதில் போதிய ஆர்வமின்மை, அருவி என்ற சொல் (waterfall) Bj6ip3 du Tafsi L-gl (b. 2) ...g5TJ600TLD. ‘silk Cotton tree 6T6örgl (b பேர், சிதைவுகளில் ‘பட்டுப் பருத்தி மரம்' என்று வருகிறது. குறிப்பிட்ட மரம் இலவமரமாக இருக்குமோ என எனக்குள் ஒரு ஐயம். யாராவது தெளிவுபடுத்த முடியுமாயின் நன்றாயிருக்கும். இதைவிட ஆபத்தான ஒரு தமிழாக்கப் பிரச்சினை, மொழி வழக்குத் தொடர்பானது.
Spoil என்ற ஆங்கிலச்சொல் பழுதாக்கல் அல்லது கெடுத்தல் என்றே பொருட்படும். மிகுதியான அன்பு பாராட்டலையும் அது குறிக்கலாம். அங்கே அது உண்மையிற் கெடுதலை எந்த விதத்திலும் குறிக்காது. ஆயினும், இந்நூலில் அச்சொல் இந்த விளக்கமில்லாது தமிழாக்கப்பட்டுள்ளது. cat என்ற சொல் வழமையாக வீட்டுப் பூனை இனத்தைக் குறிப்பது. “பூனை” எனும் விசாலமான விலங்குக் குலம் முழுவதும் (சிங்கம், புலி, சிறுத்தை உட்பட) அச்சொல்லாலேயே குறிக்கப்படுவதுண்டு. ஆபிரிக்காவில், "பூனை” என்ற சொல், இப் பொதுப்பட்ட பொருளில் அதிகம் வருகிறது. எனவேதான், ‘நானுாறு பேரை வீசியதோடு ஒப்பிடத்தக்க வீரம் ‘நானுாறு பூனையை வீசியதில் உள்ளது. ஆயினும் தமிழில் பூனை” என்று வரும்போது இது எப்படி விளங்கிக்கொள்ளப்படும் என்பதை நான் விவரிக்க அவசியமில்லை. இவ்வாறான சில தவறுகள் ஒருபுறமிருக்கத், தமிழில் உரிய சொற்கள் இல்லாதவிடத்து மொழிபெயர்ப்பாளர் தீர்வுகளைத் தேட வேண்டிய இடங்களில் நல்ல தீர்வுகளும் வரலாம். கமுகு, தென்னை, பனை, ஈச்சை ஆகியன உள்ளடங்கிய தாவரக் குடும்பத்தைத் தமிழில் வழக்கிழந்து வரும் தெங்கு என்ற சொல்லால் ஆசிரியர் குறித்தமை பாராட்டத்தக்கது. இவ்வாறே kola nut' என்பது கோலாக் கொட்டை என வராமல் கோலாப் பாக்கு என்று வருவதும் செழுமையானது. நூலில் இவ்வாறான நல்ல பிரயோகங்கள் மேலுஞ் சில உள்ளன.
முற்கூறியன போக இன்னொரு முக்கிய குறைபாடுள்ளது. இது தமிழாக்கம் தொடர்பானதல்ல. கதை சொல்லியின் மொழி நடையிலும் கதைமாந்தரின் மொழிநடையிலும் பிறழ்வற்ற சொற்பாவனை சில இடங்களிற் பேணப்படவில்லை. இது வாசிப்பதற்கு இடைஞ்சலாக இராவிடினும், மொழி பெயர்ப்பாளரது யாழ்ப்பாணத் தமிழுடன் பரிச்சயமான வாசகர்கள் இப் பிறழ்வுகளை எளிதில் உணரலாம். இது பற்றியும் மொழிபெயர்ப்பாளர் சிறிது கவனங்காட்டியிருப்பின் சிறப்பாயிருந்திருக்கும்.
மூலக்கதை பற்றிய கருத்துக்கள் ஒவ்வொருவரதும் வாசிப்பிற்கேற்ப வேறுபடும் என்பது திறனாய்வின் தொடக்கக் காலந் தொட்டே இருந்து வந்த பிரச்சனைகளுள் ஒன்று, நூலாசிரியரையும் அவரது இலக்கியக் கொள்கையையும் வொலே ஸொயின்காவுடனும் அவரது பார்வையுடனும் முன்னுரையிலே சுந்தர ராமசாமி ஒப்பிடுகின்ற இடத்திலே இப்பார்வை வேறுபாட்டின் பிரச்சனையை நாம் காணலாம். தாய்மொழியிற் படைப்பது, சர்வதேச அங்கீகாரம் என்ற
76

இரண்டிற்குமிடையிலான முரண், அடிப்படையில் யாரைச் சார்ந்தும் யாருக்காகவும் எழுதுகிறோம் என்ற பிரச்சனை தொடர்பானது. நமது சூழலினின்று ஆபிரிக்கச் சூழல் இங்கு அதிகம் வேறுபடுகிறது. எனினும், தாய்மொழியில் எழுதல் என்ற கருத்தாக்கத்தை ஆபிரிக்கா தொடர்பாக நாம் வலியுறுத்தும்போது, அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியில் எழுதாமல் ஒவ்வொரு தமிழ்ச் சமுதாயப் பிரிவும் தனக்குரிய தமிழில் எழுதுவதையும் நியாயமென நாம் ஏற்றோராகிறோம். இது நல்லதுதான். ஆபிரிக்காவின் குறிப்பான வரலாற்றுச் சூழலில் ஆங்கிலம் அங்கு ஆற்றுகிற பங்கு தென்னாசியச் சூழலில் உள்ளதினின்றும் வேறுபட்டது என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஆபிரிக்காவில் வெள்ளையர் வருகையையொட்டிய சமுதாய வாழ்க்கையின் சமூகவியல், பண்பாட்டுக் கூறுகளை நமது கிராமச் சூழலுடனோ நாமறிந்த மரபுடனோ வைத்து நோக்குவதில் ஆபத்துக்கள் உள்ளன. ஆபிரிக்காவின் பழங்குடிச் சமூகவாழ்க்கை முக்கியமாக இரண்டு வகையான புறத்தாக்கங்கட்கு உள்ளாயிற்று. ஒன்று இஸ்லாத்தினதும் ஆதி கிறிஸ்துவத்தினதும் வருகை. மற்றது, காலத்தாற் பிற்பட்ட, மேனாட்டுக் கிறிஸ்துவத்துடன் கொலனிய ஆட்சிமுறையின் வருகை. நமது பழங்குடிச் சமூகம் அயலினின்று அடுத்தடுத்து வந்த பல மாற்றங்களை இருபது நூற்றாண்டுகள் முன்னமே உள்வாங்கத் தொடங்கியது. அதை விடச், சமஸ்கிருதப் பண்பாடு தமிழ்ச் சமூகப் பிரிவுகளை பல்வேறு விதங்களில் ஊடுருவியுள்ளது. நமது கிராமியப் பண்பாட்டில் அதைவிட வேறு அயற்கூறுகளும் உள்ளன. எனவே "சிதைவுகள் வழங்கும் கொலனிய காலத்துக் காட்சிகளை நமது சூழலின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளும் போது, மிகுதியான எளிமைப்படுத்தலாலும் தவறுகள் ஏற்படலாம்.
தெளிவானதும் சிக்கலற்றதுமான ஒரு தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இக் கதை, நைஜீரியாவின் தென்மேற்கில் பெருமளவில் வாழும் இபோ (இBோ) இனப்பழங்குடி வாழ்வு எவ்விதம் அயலார் வருகையையொட்டி மாற்றத்திற்கும் முடிவில் சிதைவுக்கும் ஆளாகிறது என்று கூறுகிறது. கதையின் முக்கியமான பாத்திரமாக வரும் ஒக்கொங்வோ என்பவரைச் சூழப் புனையப்பட்டுள்ள இக்கதையின் உண்மையான பிரதம பாத்திரம் ஒரு வாழ்க்கைமுறைதான். அதன் சிதைவு கதையின் நாயகன் மூலம் ஒருபுறம் உருவகமாகவும் மறுபுறம் அவரைச் சூழ நிகழ்வனவாலும் சித்தரிக்கப்படுகின்றன. சமுதாயத்தைச் சித்தரிப்பதில் அதன் நாட்டார் வழக்குகள் முக்கியயமான ஒரு பங்கை வகிக்கின்றன. நூலின் முற்பகுதியில், கதைகூறும் முறை சிறப்பாக அமைந்துள்ளதோடு, கதை முன்னும் பின்னுமாக நகர்த்தப்படுவதிற் கூட ஒரு செய்நேர்த்தியைக் காணலாம். சமுதாயத்தின் பல்வேறு கூறுகள் கதையின் நாயகன் மூலம் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான சித்திரம் உருவாகிறது. ஏனோ, இந்த விதமாக மரபோடு உறவாடிக் கதை கூறும் முறை ஒக்கொங்வோவின் நாடு கடத்தலின் காலமும் மீளலும் தொடர்பான பின்னைய இரு பகுதிகளிற் தவறிவிடுகிறது. ஒரு வாழ்க்கை முறையின் சரிவுக்கும் அவலமான சிதைவுக்குமுரிய பகுதியைச் சித்தரிப்பதில் மரபின் கதை வழக்கின்
77

Page 41
படிமங்கள் ஏன் பயன்படவில்லை என்ற கேள்விக்குப் பல விளக்கங்கள் தரப்படலாம். எவ்வாறாயினும், அந்த மக்களது கதை கூறும் மரபு இந்த விதமான மாற்றங்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பதும் முற்பகுதியின் தோரணையில் வழங்கப்பட்டிருப்பின் நுாலின் பகுதிகளிடையே கூடியளவு உடன்பாடா யிருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
இந்த நுாலின் உள்ளடக்கமும் இலக்கிய வடிவமும் பின் நவீனத்துவ விளக்கங்கள் பலவற்றுக்கு ஆட்படக் கூடியன. புதிய சமுதாய யதார்த்தத்திற்கு முகங்கொடுப்பதில் பழைய வாழ்க்கை முறை எங்கு எவ்வாறு தவறியது என்ற விதமான கேள்விகட்கான விடையை இந்த நூலில் தேடும் எவரதும் பார்வைக்கேற்ப அது அமையலாம். ஒவ்வொரு ஆபிரிக்க நாடும் தேசிய இனமும் பழங்குடியும் இன்று எதிர்நோக்கும் நெருக்கடியின் தன்மை மிகவும் சிக்கலானது. அதற்கான வரலாற்றில் பின்நோக்கிய ஒரு பார்வை மூலம் கிட்டுமா என்பதும் "மேனாட்டுச் சிந்தனையை நிராகரிப்பதின் மூலம் சாத்தியமாகுமா என்பதும் முக்கியமான கேள்விகள். குறுகிய தேசியவாதம் நம்மிடையே ஒரு வலிய அரசியற் போக்காக உள்ளது. இந்த நூலில் வரும் மக்களது பொது அடையாளம், தெளிவாகவே, நாம் கருதுகிற தேசிய, சாதிய அடையாளங்களினின்றும் வேறுபட்டு நிற்கிறது.
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எவரும் கட்டாயம் படிக்க உகந்த இந்த நுாலையும் சமகால ஆபிரிக்காவின் அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து வாசிப்பதன் மூலம் நாம் சில தெளிவுகளைப் பெற முடியுமாயின், நமது சகோதர சமுதாயங்களிடையில் மோசமடைந்து வரும் உறவுகளைச் சீர் செய்து எல்லாரதும் நலனுக்கான ஒரு திசையைக் காட்ட அவை உதவலாம்.
முடிவாக, வெகுநேர்த்தியான முகப்புடன் அச்சுப் பிழைகளில்லாமல்
இந்நூல் வெளியானமை அதன் மூலத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு கவுரவிப்பு என்பேன். காலச்சுவடு பதிப்பகத்துக்கு என் பாராட்டுக்கள்.
78

சிலுவையில் தொங்கும் சாத்தான்
(சிலுவையில் தொங்கும் சாத்தான், கூகி வா தியாங்கோ, தமிழாக்கம் - அமரந்த்தா, சிங்கராயர், தாமரைச்செல்வி பதிப்பகம், 2000, ப. 421, ரூ. 12500)
ஆப்பிரிக்க இலக்கிய உலகு பற்றிய நமது ஆர்வம் வளர்ச்சி பெற்று வருவது மிக நல்ல அறிகுறி. எவ்வாறோ நமமை எட்டும் ஆப்பிரிக்க இலக்கியங்களில் தெளிவான அரசியல் அ ைபாளம் உள்ளது. இது நமது துரிய அழகியல் நோக்காளர்களைப் பெரிதாக வருத்துவதாகத் தெரியவில்லை. என். றாலும் முதலில் கிக்கூய மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும் வெளியான Devi on the Cross, அச்சேறி இருபது வருடங்களின் பின்பும், அழகான ஒரு அரசியல் பிரகடனமாக, அழகியல் உபாசகர்கட்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதன் செய்தி, அதன் ஆசிரியர் கென்யாவின் சிறையில் வாடும் காலத்தில் எவ்வளவு செல்லுபடியாக இருந்ததோ, அதே அளவுக்கு, இன்னும் கென்யாவுக்கு செல்லுபடியாகிறது. அது மட்டுமல்லாது. மூன்றாம் உலகின் ஏகப்பெரும்பான்மை யான நாடுகட்கும் அது செல்லுபடியானதாக இருக்குமாறு ஏகாதிபத்தியத்தின் பூகோளமயமாக்கல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
இந்த நாவலில் வரும் கதைமாந்தர் யாவரும் பலவேறு சமூகச் சக்திகளின் குறியீடுகளாகவே வருகின்றனர். நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்பும் உடைமைகளும் எவ்வாறு ஏகாதிபத்தியத்தால் பறிக்கப்படுகின்றன என்பது, பல வேறு உள்ர்ச் சுரண்டற் சக்திகளின் தயக்கமற்ற வாக்கு மூலங்களாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த நூல் எழுதப்பட்ட காலத்தை விடவும் அதிகமான திமிருடன் இன்று சுரண்டற்காரர்கள் தமது கொள்ளையடிப்புப் பற்றிக் கூசாமற் பேசிக்கொள்கிறார்கள். அந்த வகையில் கொள்ளையர்களிடையே பெரிய கொள்ளையன் யார் என்ற போட்டியில், அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது கொள்ளையடிப்பை விவரிப்பது இன்று மிகவும் பொருத்தமானது.
சாத்தான் ஒரு குரலாக, வெளி வெளியாக அடையாளங்காண முடியாத ஒரு பாத்திரமாக வருகிறான். நல்லவர்களின் ஆன்மாவை வாங்கி அவர்களைப் பணத்தாசை மிக்கோராக மாற்றுகிற பணி சாத்தானுடையது. ஏகாதிபத்தியத்தின் முகவராகவும் தனிமனிதர் சீரழிவின் கருவியாகவும், சாத்தான் இயங்குவதை நம்மால் அடையாளங் காண முடிகிறது.
9י

Page 42
நாவலின் பிரதான பாத்திரம் கென்யாவின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக, மிகவும் பொருத்தமான முறையில், கிராமத்தினின்று நகரத்துக்கு வந்த ஒரு பெண்ணாக அமைகின்றமை கென்ய சமூகத்தின் ஆணாதிக்க கொடுமைகளையும் அடையாளங் காட்டி மனித விடுதலையின் குரலைப் பெண்ணுரிமையின் குரலோடு ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. வஞ்சித்து ஏமாற்றப்பட்டுக் கடுமையாகச் சுரண்டப்பட்ட வரீய்ங்கா என்ற இப் பெண்ணில் ஏற்படுகிற மாற்றம், கென்யாவின் சமூகத்தில் வளர்ந்து வாழும் கிளர்ச்சிப் போக்கை விட, அது பெற வேண்டிய வளர்ச்சியையே அடையாளங் காட்டுகிறது எனலாம்.
வரீய்ங்கா என்ற பெண் நகரத்திற் தனது இருப்பிடத்தினின்று வெளியேற்றப்பட்டுத் தன் ஊரை நோக்கிப் பயணம் செய்யும் போது, கொள்ளைக்காரரின் விருந்து வைபவத்திற்குப் போக நேர்கிறது. இதன் பின்னணியில் அவரது கடந்த காலமும் இதன் விளைவாக அவரில் ஏற்படும் மாற்றமும் சுவைபடக் கூறப்பட்டுள்ளது. வரீய்ங்காவுக்கு நிகழ்ந்தவை கென்யாவின் யதார்த்தம். வரீய்ங்கா முடிவில் வரித்துக் கொண்ட பாதை, அவரதும் கென்யாவினதும் விடுதலைக்குமான பாதை. நாவலின் இறுதிப் பகுதி என்னவோ நமது சினிமாப் படங்களினது போன்று கொஞ்சம் வலிந்து புகுத்தப்பட்ட திகிலுாட்டும் பண்புடன் அமைந்து நாவலைச் சற்றே வலுவிழக்கச் செய்துள்ளதாகவே கூறுவேன்.
எனினும், அரசியலையே இலக்கியமாக்குவதில் நாவலாசிரியர் பயன்படுத்திய கதை கூறும் முறை நம்மை வியக்க வைக்கிறது. இந்த நாவலுக்கு நமது நவீனத்துவ, பின்நவீனத்துவ வித்துவான்கள் என்ன அடையாளம் ஒட்டி வர்ணிப்பார்களோ எனக்குத் தெரியாது. என்னளவில் சமூக யதார்த்தமே நுாலின் ஒவ்வொரு பக்கத்திலுமிருந்து ஊற்றெடுத்து ஓடுகிறது. படிமங்கள் இங்கே எதையும் மூடி மறைக்கவோ மழுப்பவோ பயன்படவில்லை. அவை பச்சையாகவும் தெட்டத்தெளிவாகவும் மிகுந்த அங்கதச் சுவையுடனும் ஐயத்துக்கு இடமில்லாதவாறு, அதேவேளை, மிகுந்த கற்பனை ஆற்றலுடன் புனையப்பட்டுள்ளன. நூலின் வேறுபட்ட வாசிப்புக்கள் வேறு தளங்களிலும் இயலுமாக்கப்பட்டுள்ளன. நமது நேரடியான அனுபவங்களுடனும் தகவல் வாயிலான அறிவுடனும் கதையின் முக்கிய நிகழ்வுகளைப் பொருத்திப் பார்க்கிறபோது, அவற்றின் சாத்தியப்பாடுகள் எல்லையின்றி விரிகின்றன. இந்த நூலை வாசித்த பிறகு, ஒரு கட்சியின் அறிக்கையை கூட ஒரு கவிதையாகவும் காவியப்பாங்காகவும் கூற முடியும் என்ற நம்பிக்கை மனதிற் துளிர்க்கிறது.
இந்த நுாலின் வாசிப்பை வசதிப்படுத்துவதற்காக கூகி வா தியாங்கோ எழுதிய கென்யாவின் அரசியற் பின்னணியை பயனுள்ள முறையில் வழங்கியுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் நுாலில் வரும் பேர்களைத் தமிழிற் தருவதன் இடர்ப்பாடுகளை மனதிற் கொண்டு ஒரு சொற்பட்டியலையும் தந்திருக்கலாம். மொழிபெயர்ப்பின் ஒரு முக்கியமான பலவீனம், வாசித்துக் கொண்டு போகும்போது, இது ஒரு மொழிபெயர்ப்பு என்று தொடர்ச்சியாக நினைவூட்டுகிற வாக்கியங்கள்.
80

சொற் தெரிவிற் சில இடங்களில் ‘துாய’ தமிழ்ச் சொற்களும் வேறு இடங்களில் அயற்சொற்களின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவங்களுமாக வருவது சிறிது நெருடுகிறது. பாடல்களைத் தமிழில் வாய்விட்டுப் பாடக்மூடிய சீரான சந்தத்தில் அமைப்பது பற்றியும் மேலும் கவனமெடுத்திருக்க முடியும்.
இத்தகைய மொழிபெயர்ப்பு எளியதல்ல. இரண்டு மூன்று கட்டங்களில், இது, வாழும் தமிழுக்கு மேலும் நெருக்கமாக்கப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். எவ்வாறாயினும், தமிழில் இந்த நுாலின் வரவு இன்று மிகவும் பயனுள்ளது. தமிழகத்தின் அரசியற் சீரழிவுச் சூழலில் நம் சமுதாயங்கள் எதிர்நோக்குகிற நெருக்கடியான சூழலையும் போராட்டத்திற்கான தேவையையும் உணர்த்தும் ஒரு சிறந்த நூலின் வரவு பற்றி நாம் மகிழாமல் இருக்க முடியுமா?
81

Page 43
எனக்குள் பெய்யும் மழை
(எனக்குள் பெய்யும் மழை, தொகுப்பும் தமிழாக்கமும் : யமுனா ராஜேந்திரன், எக்ஸிவ் பிரான்ஸ், தாமரைச்செல்வி, சென்னை, ப. 175, ரூ. 7500)
சில விடயங்களை நாம் விமர்சிக்கத் தயங்குகிறோம். காலத்துக்குக் காலம் ஒவ்வொரு செயற்பாட்டுத் தளத்திலும் சூழலிலும் சில புனிதங்கள் உருவாக்கப்படுகின்றன. புனிதங்களை உடைக்கிற போக்கிலும் நோக்கிலும் இந்த உருவாக்கம் நிகழ்வதைக் காணலாம். புனிதமானவற்றினின்று அவை தொடர்பான ஆக்கங்களிலும் ஆக்குவோர்களிலும் இப் புனிதம் தொற்றிக் கொள்கிறது. அண்மைக்கால உதாரணங்களுள் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் போன்றன உள்ளடங்கும். இவற்றைக் கேடயங்களாக்கித் தமது குறைபாடுகளை மூடி மறைக்கிற ஒரு முனைப்புப் பற்றியும் நாம் கவனமாயிருக்க வேண்டும்.
“எனக்குள் பெய்யும் மழை பெண்ணிய நோக்குடையோரெனக் கருதப்படும் சில பெண்களின் கவிதைகளின் தமிழாக்கங்கள் அடங்கிய தொகுதி. பெண்ணியப் பார்வைகள் வேறுபடுகின்றன. பெண்ணியமாக எதை அடையாளங் காண்பது என்பதும் அகச்சார்பானது. கவிதைகள் கவிஞர்களை எவ்வளவு துாரம் சரியாக அடையாளப்படுத்துகின்றன என்பது அவற்றின் தெரிவிலும் அவற்றின் மொழிபெயர்ப்பிலும் தங்கியுள்ளது. இவற்றுக்கும் மேலாகக் கவிதைகளையும் கவிஞர்களையும் பற்றி வழங்கப்படும் தகவல்கட்கும் ஒரு பங்குள்ளது. இவை அனைத்தையும் மனதிற்கொண்டே இந்த நுாலை விமர்சிக்க முற்படுகிறேன்.
மொழிபெயர்ப்பாளரது தகைமை பற்றிய ஐயங்கள் முன்னுரையில் வருகிற சில மேற்கோள்களை ஒட்டியே கூட எழுகின்றன. அவற்றுள், மாக்ஸின்
நன்கறியப்பட்ட வாசகமொன்றன் தமிழாக்கம், அடுத்து வரவுள்ளன பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையாகவே அமைகிறது.
“தத்துவவாதிகள் உலகை பல்வேறு வகைகளில் வியாக்கியானப் படுத்தியிருக்கிறார்கள். பிரச்சனை அதை மாற்றுவது"
82

பிரச்சனை என்ற சொல்லின் பிரயோகமே இங்கு பெரிதும் பிரச்சனைக் குரியது. மேற்கூறிய வாசகம் ஆங்கிலத்திற் பலவாறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் problem, question ஆகிய சொற்கள் நம் தேவைக்குரியது, உலகை மாற்றுவதே என்கிற தொனியை வழங்கத் தவறியதில்லை. “பிரச்சனை அதனை மாற்றுவதே' என்கின்ற வாக்கியம் அவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகின்றதா என்பதை, வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். மொழிபெயர்ப்பின் குழறுபடிகள் பஞ்சமின்றி நூல் முழுவதும் பரவியுள்ளதால் ஒரு சில மேற்கோள்களுடன் நிறுத்துவது தகும்.
"நான் மணமுடிக்காதிருந்த வேளை/கண்ணைத் திறந்து சொர்க்கத்தை வாழ்த்தினாள்” (மெழுகு மாளிகை)
முதலாவது பகுதி ஒரு விறைப்பான சொற்பிரயோகம் என்றால் மற்றது heaven என்ற சொல்லின் பொருள் விளங்காததன் விளைவாகவே தெரிகிறது. கிறிஸ்துவ மரபில், heaven என்ற சொல் இறை என்ற பொருட்படப் பயன்படுகிறது. சொர்க்கம் என்ற சொல் நமது வழக்கில் அவ்வாறு அமைவதில்லை. மெழுகு மாளிகை என்பதும் house of wax அல்லது palace of wax என்பதன் தமிழாக்கம் என ஊகிக்கிறேன்.
"நேற்றைய கல்லறைகளைப் போல பவுடர் பூசிய சவ முகங்கள் என்னைக் காண வருகின்றன! மூளைகளின் கல்லறைத் தோட்டங்களின்/இம்மாதிரி/ ஒப்பனைகள் பொருத்தமானவைதான்” (துர் சொர்ப்பனம்).
இங்கே மொழிபெயர்ப்பு உயிரோட்டமின்றி இருக்கக் கல்லறைகள் காரணமில்லை. வரிப்பிரிப்பு, முதலாவது வரியில் குழப்பத்திற்குக் காரணமாகிறது. கவிதைத் தலைப்புக்கு 'அரசு அதிகாரிகளாக அல்லது நிர்வாகிகளாக இருப்போரின் துர் சொர்ப்பனம்' என்று ஒரு விளக்கக் குறிப்பும் உள்ளது. இதுவும் ஒரு தமிழாக்கமென ஊகிக்கிறேன். துர்ச் சொர்ப்பணம் அதிகாரிகளுடையது அல்ல அதிகாரிகள் பற்றியது எனவே எண்ணுகிறேன்.
இதே கவிதையின் ஈற்றில் "கத்தியைச் செய்கிற இரும்பு பட்டறைக்காரன் கூட தான் தான் வெற்றியை எழுதுகிறேன்! எனச் சொல்லிக் கொள்வதில்லை” என வருகிறது. இதுவும் ஆங்கில மொழி வழக்குப் பற்றிய குறைபாடான விளக்கத்தின் விளைவே.
“எனக்கு நீ ஒரு ரகசியம் தர வேண்டும்'
(ரகசியங்களை அருந்த வடித்தல்) இதற்குரிய மூலம், Youowe measecret என ஊகிக்கிறேன்.
“நியூசிலாந்து ஆடுகளுடன் சாப்பிட்டால் வைன் நன்றாகச் சேரும்” (போர் டாக்ஸி(1)லிருந்து வரும் வைன்).
83

Page 44
எனினும் நகைச்சுவைக்கு: “கோயிலுக்குப் போன/ஒரு மிக ஏழைப்பட்ட பாம்பே பெண்ணின் கண்களைப் போல் ஆனது' (இந்தியப் பெண் வீடும் வெளியும்).
பாம்பு எப்படிப் பெண்ணின் கண்களைப் போல ஆகும் என்றும் ஏழைப்பட்ட பாம்புகள் உண்டா என்றும் யோசித்துச் சிறிது பின்னரே பாம்பே என்பது பம்பாய் (இப்போது மும்பாய்) எனும் நகரம் எனும் உண்மை தெளிந்தது.
பொதுவாக மொழிபெயர்ப்புக்களை ஒருசில தடவைகளாவது மீள வாசித்துச் சாராம்சத்தை நமக்குள் தெளிவுபடுத்தி மூலத்துடன் ஒப்பிடுவது நல்லது. அது தவறின்மைக்கு உத்தரவாதமல்ல. கவிதை மொழிபெயர்ப்பு என்பது மூலத்துக்கு இழைக்கப்படும் துரோகம் என்ற கருத்தைப் பலர் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். அவ்வகையில் நம்மிற் பலரும் துரோகிகளே. துரோகமே மொழிபெயர்ப்பின் அளவுகோலானால் யமுனா ராஜேந்திரன் கூசாத மொழிபெயர்ப்பாளர் ஆகிறார்.
கவிதைகளின் தெரிவு ஒரு பிரச்சனையாவதற்குக் காரணம் மூன்றாமுலகப் பெண் ணிலைவாதம் : இருபத்திரண்டு ஆசியக் கவிகள்’ எனும் துணைத்தலைப்பாகும். இருவரது கவிதைகள் இருபத்தெட்டு. மிகுதி இருபதின்மருக்கு ஆளுக்கு ஒன்று. கிஷ்வர் நஹித், சுஜாதா பட் எனும் இருவரை அடையாளங் காட்டுகிற அளவுக்குப் பிற கவிஞர்களை அடையாளங்காட்ட இத்தொகுதிக்கு இயலவில்லை. இவர்களிற் சிலர் மூன்றாமுலகச் சூழலில் வாழாதவர்களுமாவார். பெருவாரியனோர் ஆசிய வம்சா வழியினரும், குறிப்பாகத் தென்னாசியருமாவார். இதை மூன்றாமுலகப் பெண்நிலைவாதம் என அறிவிப்பது நேர்மையான விளம்பரமல்ல. சிங்களப் பெண் கவிஞரான சீதா ரஞ்ஜினியின் கவிதையிற் பெண்ணிய அடையாளம் அற்பமானது. சிவரமணியினதும் இவ்வாறே. இவர்களது கவிதைகள் கூறும் நுண்ணுர்வுடனும் மென்மையுடனும் மனிதநேயத்துடனும் எழுதியுள்ள பல ஆண்களை நாம் அறிவோம். சிவரமணியின் கவிதைகளில் அவருடைய பெண்ணிய நோக்கு சமூக நீதிக்கான ஒரு விரிவான பார்வையுடன் இணைந்து காணப்படுவதற்கான பிற கவிதைகளை நான் அறிவேன். சீதா ரஞ்ஜினியின் கவிதைகளுடன் எனக்குப் பரிச்சயமில்லை.
அடுத்துக், கவிதைகட்கு வழங்கப்பட்டுள்ள சில குறிப்புக்களை அவதானிப்போம். •
"குளிர் நாடுகளில் அனேகமாக நமது நிழலுக்கு அருகில் நாம் நடக்க
முடியாது என்பதை நாம் ஞாபகம் கொள்ளலாம். வெள்ளையர்களால் சூரியனோடு நடக்க முடியாது என்பது இயற்கை சார்ந்த நிஜம்' (ப. 42).
84

இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களா நம்முருக்கு வருகிற வெள்ளையர்களா சூரியனோடு நடக்கிறார்கள் என்று தெரியவில்லை. ‘இப்படியான இயற்கை சார்ந்த நிஜங்களே இந்துத்துவம், Fாஸிஸம், நிறவெறி, சாதியம் எல்லாவற்றையும் நியாயப்படுத்துகின்றன.
நியூ மெக்ஸிகோ தென்னமெரிக்க நாடு என்று ஒரு குறிப்பு உள்ளது. (ப. 104) அயன்டே கம்யூனிஸ்ட் புரட்சியாளர் என இன்னொன்று (ப. 116). போக, 'பிரைடா, காலோ (பிரைடா கோலோ?!) த்ரொத்ஸ்கியுடன் சிலகாலம் காதல் கொண்டிருந்ததான குறிப்பால் (ப. 95) ஒரு உன்னதமான முற்போக்குப் பெண்ணியக் கலைஞருக்கு என்ன பெருமை? அண்மையில் தமிழகத்துச் சிற்றேடான ‘புதுவிசையில் த்ரொத்ஸ்கியை அவர் எவ்வளவு இழிவாகக் கருதினார் என்ற தகவல் வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் முன்னரே அவர் பற்றி விரிவாக எழுதியவர். இது மொழிபெயர்ப்பாளர் அறியாததா? எனவே தான், எல்லாப் பிசகுகளும் அறியாமையோ அசட்டையோ சார்ந்தன அல்ல என எனக்குத் தோன்றுகிறது.
கவிதைகளின் தெரிவு சில படைப்பாளிகளின் கலைப்பண்பு குறைவான பக்கங்களைக் காட்டுகிறதோ என்ற ஐயமும் என்னுள் எழுந்துள்ளது. சமபாற் காமமும் கலவியும் பற்றிய நிலைப்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து, இத் தொகுதியில் உள்ள சில கவிதைகளை நோக்கினால், அவற்றிற் பெண்கள் மீதான காம உணர்வு சார்ந்த அங்க வருணனைகளை ஒரு ஆண் செய்திருந்தால் அது பற்றிய மதிப்பீடு மிக மோசமானதாக இருந்திருக்கும் கலவியின் வருணனைகள் பெண்ணிலைவாதிகளால் வன்மையாக மறுக்கப்பட்டிருக்கும். அதே வேளை, இத்தொகுதிக்காகத் தெரியப்பட்டுள்ள சில கவிதைகள் கவிதைகளாகவே தேறவில்லை. உதாரணமாக, தஸ்லிமா நஸ்ரீனின் கவிதை. வேறுஞ்சில, மொழிபெயர்ப்பாளரின் உதவியின்றியே வெகு சாதாரணமானவை.
நாம் செய்ய முற்படுவனவற்றின் அளவைவிடத் தரமும் தன்மையும் முக்கியமானவை. “நேரடித் தொனியில் நெற்றியில் அடிப்பது போன்ற தொனி” தனியே கவிதைகக்கான தகுதியுமல்ல. படைப்பின் முக்கியத்துவம் அரைவேக்காட்டுத் தமிழாக்கத்தை நியாயப்படுத்தப் போதுமானதுமல்ல. முன்னுரை எழுதிய அமரந்த்தா கவனமாகவே தமிழாக்கங்கள் பற்றி எதுவுங் கூறுவதைத் தவிர்த்துள்ளார். என்னால் முடியவில்லை.
85

Page 45
ஈழத்தத் தமிழியலை ஒரு கமண்டலத்தள் அடக்க வேண்டாமே!
(இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள். க. அருணாசலம், குமரன் புத்தக இல்லம், சென்னை, 1997, ப. 475+ix, ლეხ. 150.00)
தமிழியல் என்பது தமிழ் மொழி சார்ந்த செயற்பாடுகள் பற்றிய ஆய்வுத்துறை என்ற கருத்திலும், அதனின்று சற்று விரிவாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. இலங்கையிற் தமிழ் மொழியினதும் இலக்கியத்தினதும் விருத்திக்காக மிகவுஞ் செய்யப்பட்டுள்ளது. இவற்றை விடத், தமிழ் மூலம் பல்வேறு சமூகச் செயற்பாடுகளது பயனாகச் சமுதாய உயர்வும் ஏற்பட்டுள்ளது. இவை பற்றிச் சீரான ஒரு பதிவு வரலாற்று நோக்கிலும், மொழி விருத்தியின் நோக்கிலும் பயனுள்ளதும் அவசியமானதுமாகும்.
அருணாசலம் மேற்கொண்ட முயற்சி பெரிது. அது வேண்டுகின்ற உழைப்பு, ஒரு கடுந்தவத்தினது பண்பினையுடையது. கடுமையையும், கவனத்தையும் மட்டுமன்றிக் கூரிய விமர்சனப் பார்வையையும் அது வேண்டுகிறது. பல்வேறு தளங்களில் நிகழ்வனவற்றுக்கிடையிலான உறவையும் விருத்திக்கும் மாற்றத்துக்கும் ஏதுவாயிருக்கும் முரண்களையும் அவற்றின் செயற்பாட்டையும் தெளிவாக உணரும் பக்குவத்தை அது வேண்டுகிறது. தகவல்களை முழுமைக்குச் சார்பாக நிறுத்தி அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அது வற்புறுத்துகிறது. அத்தகைய தவமியற்றும் ஆற்றலுடையோர் சிலர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாய்த்திருந்தனர். ஆயினும், இன்று அத்தகையோரைக் காண்பது அரிதாகி வருகிறது. அருணாசலம் நான் குறிப்பிட்டவாறான ஒரு தவத்தில் இறங்கினாரென நான் எண்ணவில்லை. எனினும், அவருக்கு வாய்த்த ஒரு சூழலைப் பயன்படுத்திச் சில பெருங்காரியங்களை அவர் செய்திருப்பாரென எதிர்பார்க்க நியயாமுண்டு.
தகவல்களின் செம்மை, முழுமை, தெளிவு, மிகைப்படக்கூறாமை, பங்களிப்புகளின் முக்கியத்துவம் பற்றிய நிதானமான கணிப்பு என்பனவற்றை உள்ளடக்கிய திட்டமிடல் அடிப்படையானது விரிவான ஒரு செயற்பாட்டுத்தளத்தில் சொற்சிக்கனம் அவசியம். ஆதாரங்களையும் உசாத்துணை ஆவணங்களையும் குறிப்பிடுவதில் கட்டுக்கோப்பானதும் பயன் சார்ந்ததுமான ஒரு நடைமுறை தேவைப்படுகிறது. இனறு தமிழ் சார்ந்த ஆய்வுகளில், குறிப்பாகத் தமிழில் வெளிவருவனவற்றில், மேற்கூறியன பற்றிய கவனம் போதியளவில் இல்லை.
86

அருணாசலத்தின் நூலும் இவ்வகையிற் குறைபாடானது. விவரங்களை இங்கு தருவதாயின் இக்கட்டுரை அலுப்பூட்டும் அளவுக்கு நீண்டு விடும்.
நூலின் அத்தியாயங்களை கவனிப்பின், அங்கும் சீரின்மையை நாம் காணலாம். நாட்டார் வழக்கியலும், அவைக்காற்றுக் கலைகளும் ஒரு அத்தியாயத்திற்குள் வரும் நியாயம் என்ன? இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனவும், மலையகத் தமிழரியல் எனவும் அத்தியாயத்தலைப்புக்களின் பண்பு வேறுபடுவது ஏன்? நவீன தமிழ்க் கவிதையும், புதுக்கவிதையும் என்ற தலைப்பு, புதுக்கவிதை, நவீன தமிழ்க்கவிதையின் பகுதியல்ல என்று கூறுகிறதா? இவை ஒரு புறமிருக்கச், சமகாலத் தமிழின் பிரச்சினைகட்கு முகங்கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவுமே நூலாசிரியராற் கருதப்படவுமில்லை. வணிகம், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈழத்தவரது முயற்சிகள், பல இடங்களில், தமிழகத்திற்கு முன்னோடிகளாக அமைந்துள்ளன. அகராதியியல் ஈழத்தின் பங்களிப்புக் குறைவான ஒன்றேயாயினும் கலைச்சொல்லாக்கத்தில் முழுமையான நோக்குடைய முயற்சிகள், மெய்யியல், கணிதம் ஆகியன தொட்டு எந்திரவியல் வரையிலும் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரிகை, சஞ்சிகைத் துறைகள் பற்றிய ஆய்வு இந் நூலில் இல்லாமை ஒரு புறமிருக்க, ஒலிபரப்புத் துறை உட்படத் தகவல் ஊடகங்கள் இன்று தமிழிற் செயற்பட இயலாது தடுமாறும் விதமான அயற்பேர்ப் பிரச்சினை பற்றிய குறைந்தபட்சக் கணிப்பும் நூலில் இல்லை. திறனாய்வு பற்றி இறுதி அத்தியாத்தில் நூலாசிரியருக்கு நினைவு வருகிறது. அது பற்றி எழுதும் முயற்சி, ஏனோதானோ என்ற போக்கில் அமைந்துள்ளது. சில விமர்சனங்கள் பற்றிய நீண்ட குறிப்புகள் வெவ்வேறு இடங்களிற் காணப்படுகின்றன.
நுாலின் மிகவும் பலவீனமான அம்சம், சில ஆய்வறிவாளர்கட்குச் சூட்டப்படும் கிரீடங்கள். தலைசிறந்த, விதந்துரைக்கத்தக்க, புகழ்பூத்த, முதுபெரும் போன்ற அடைமொழிகள் நூல் நெடுகலும் சிந்திக்கிடக்கின்றன. பெருவாரியான பங்களிப்புகளது முக்கியத்துவம், அவற்றின் தரமும் தகுதியும் சார்பாக மட்டுமன்றிப், பிறவற்றுடனான உறவும் முரணும் சார்பாகவும் கருதப்படவில்லை. ஏறத்தாழ எந்தவிதமான விமர்சனக் கண்ணோட்டமுமின்றி, அடிக்குறிப்புகளிற் குறிப்பிடப்படும் நூல்களும், நூலாசிரியர்களும் பற்றிய விவரங்களாகவே அத்தியாயங்களிற் கணிசமான பகுதி விரயமாகிறது.
உசாத்துணைகளதும், நூல்களதும் பட்டியல்கள் ஆசிரியருக்குப் பரிச்சயமானவர்களது ஆக்கங்களின் பட்டியல்களின் தொகுப்பாகப், போதிய மதிப்பீடின்றிப், புத்தக்தின் பல பக்கங்களை அடைத்துக் கொள்கின்றன. தமிழியல் பற்றிய ஒரு ஆய்வு நூலுக்கும், ஒரு நூலகவியலாளர் வழங்கும் தமிழியல் நுாற்பட்டியலுக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த நூல் இரண்டுங் கெட்டானாக அமைந்துள்ளது. பல்கலைக்கழகங்கட்கு வெளியே நூலாசிரியர் தகவல்களைத் தேட எடுத்த முயற்சியின் போதாமை அப்பட்டமாகவே தெரிகிறது.
Yr,

Page 46
சான்றாதாரங்களை வழங்குவதற்கு நூலாசிரியர் கையாண்டுள்ள முறை பரிந்துரைக்கத்தக்கதாக எனக்குத் தெரியவில்லை. அத்தியாயங்களில் அச்சுப்பிழைகள் குறைவாயினும் சான்றாதாரங்களிலும் உசாத்துணை நுாற் பட்டியலிலும் கணிசமான தவறுகள் உள்ளன.
இந்த நூலில் உள்ள பயனுள்ள தகவல்கள், நுாலின் நீளத்திற் பாதியினுங் குறைவான ஒரு பிரசுரத்தில் விமர்சன நோக்குடன் கூறப்பட முடியும். நூலாசிரியரால் எதிர்காலத்தில் அதற்கான முயற்சி எடுக்க இயலுமென எண்ணுகிறேன்.
கலாநிதி, பேராசிரியர், பெருமான் போன்ற முண்டாசுகளை எல்லாங் கழற்றி ஓரமாக வைத்துவிட்டுப் படைப்புகளையும், பணிகளையும் அவற்றின் தரமும், தகுதியுங் கொண்டு மதிப்பிடும் வல்லமை நமக்கு வேண்டும். அது வராதவரை, தமிழியலுக்கு "இரண்டாயிரம் வருடப் பழைய சுமை போதாமல் இன்னுஞ் சுமைகளுந் தொடரும்.
நூலாசிரியரது கடும் உழைப்பு, நிதானமான திட்டமிடல் இல்லாமையால், அதற்குகந்த பயனை அளிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வளவு விரிவான ஒரு துறையை ஒரு நூலில் அடக்குவதன் சிரமம் நாம் அறியமுடியாததல்ல. எனவே, நமக்கு எட்டக்கூடிய தகவல்கள் போதாதிருப்பின் பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வுகள் என்றவாறாக நூலாசிரியரது செயற்பாட்டுத் தளத்தைச் சுருக்கி, அதன் பின்பு, விரிவான ஆய்வுகளைப் பகுதி பகுதியாகவேனுஞ் செய்யலாம். ஈழத்துத் தமிழியல் ஒரு கமண்டலத்துக்குள் அடக்கக் கூடிய பொருளாக இருக்க வேண்டாமே.
88

இதர போதுமா?
(இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி. துரை மனோகரன், கலைவாணி புத்தக நிலையம், கண்டி 1998, ரூ. 10000)
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கையடக்கமான ஒரு நூலுக்கான தேவை மறுத்தற்கரியது. அதற்கான கனதியான முயற்சிகள் வரவேற்கத்தக்கனவும் ஊக்குவிக்கப்படவேண்டியனவும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்வாறான ஒரு முயற்சி, இலங்கையின் தமிழ் இலக்கியத் துறைக்கும் திறனாய்வுத் துறைக்கும் பெரும் பங்களித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையினின்று வரும்போது, நமது எதிர்பார்ப்புக்கள் வழமையினும் சிறிது அதிகமாக இருப்பது நியாயமானதே.
துரை மனோகரன் தனது நூலை ஐந்து இயல்களாக வகுத்திருக்கிறார். ஈழத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் சார்ந்த பகுதி, எண்ணி நான்கே பக்கங்களில் முடிகிறது. இதற்கான முக்கிய காரணங்கள், யாழ்ப்பாண அரசு தோன்றிய காலம் வரையிலான நூல்களின் நமது கைக்கெட்டக் கூடியன சிலவே என்பதும், வாய் மொழி இலக்கியம் நமது இலக்கிய வரலாற்றுத் திறனாய்வுத் துறைகளில் இன்னமும் சிறிது தாழ்வான ஒன்றாகவே காணப்படுவதும் தான் எனலாம். இரண்டாம் இயல் 23 பக்கங்கள் வரை விரிகிறது. ஆயினும் இக் காலப் பகுதியில் வந்த நூல்களில், தல புராணங்களும் அரச பரம்பரையின் புகழ்பாடும் நூல்களும் பல. இலக்கியமாகத் தேறுவன, பொதுமக்கள் சார்பான நூல்கள் தாம். இவற்றின் வலிமைக்கு அவற்றுக்கு முன்னிருந்த வாய்மொழி இலக்கிய மரபின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி நூலாசிரியர் சிறிது விரிவாகவே எழுதியிருக்க முடியும். மறுபுறம் யாழ்ப்பாண அரசின் தோற்றம் தமிழருக்கு ஒரு அரசின் தோற்றம் தொடர்பான முக்கியத்துவத்தை நூலாசிரியருக்குக் காட்டுகிறதை நோக்கும் போது, நுாலாசிரியரும் ஆண்ட பரம்பரையின் பேரில் தமிழ் மக்களது தேசிய இன அடையாளத்தை வலியுறுத்துகின்ற ஒரு போக்குக்குப் பலியாவதைக் காணலாம். (ப. 6,7,14). யாழ்ப்பாண இராச்சியத்திற்கும் இன்றைய தமிழ்த் தேசிய அடையாளத் தேடலுக்கும் உறவு காட்டுகிற முயற்சியின் வரலாற்று வறுமை பற்றி இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. ஆயினும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சி பற்றிய கனதியான ஆய்வுக்கு இது ஊறு செய்கிறது.
89

Page 47
போர்த்துக்கேய-ஒல்லாந்த காலத்து இலக்கிய வளர்ச்சி மூன்றாம் இயலாகிறது. ஆயினும் ஒல்லாந்தரின் சமயப் பொறையைக் காணுகிற நூலாசிரியர் (ப. 29) கத்தோலிக்க மதத்தவர் மீது டச்சு ஆட்சியாளர்கள் கவிழ்த்துவிட்ட அடக்குமுறையைப் பற்றியும் அறியக் கூடும். டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது, யாழ்ப்பாணத்தில் வேளாள நிலவுடைமையாளரது சாதிய மேலாதிக்கம் மேலும் இறுக்கமடைந்து தீண்டாமையும் வலிவு பெற்றது பற்றிய குறிப்புகளைச் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த நினைவும் உண்டு. போர்த்துக்கேயரை நோக்கும் முறையை விடக் கனிவுடன் ஒல்லாந்தரையும் ஆங்கிலேயரையும் நோக்குவது, யாழ்ப்பாணத்தில் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சைவ வேளாள நிலவுடைமை ஆதிக்கச் சக்திகளது பார்வையின் பிரதிபலிப்பு என்றே தோன்றுகிறது. இக் காலகட்டத்தின் புலவர்களது வித்துவத் திறமை எவ்வகையான படைப்பிலக்கியங்கட்கு வழிவகுத்தது என்பது பற்றிய விமர்சனப் பாங்கான எந்தக் கருத்தையும் துரை மனோகரன் கூறத் தயங்குவதும் ஏமாற்றம் அளிக்கிறது.
நான்காவது இயல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சி பற்றியது. இதில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அம்சம், இந்த நுாற்றாண்டின் முஸ்லிம் இலக்கியவாதிகள் பற்றிய விரிவான குறிப்புக்கள் என்பேன். அதே அளவுக்கு அக் காலகட்டத்தின் கிறிஸ்துவ இலக்கியப் பங்களிப்புகளுக்கும் இடம் ஈந்திருப்பின் சிறப்பாயிருந்திருக்கும்.
நூலின் பெரும்பகுதி எதிர்பார்க்கக் கூடியவாறு, இந்த நூற்றாண்டு தொடர்பானது.
இலங்கையின் அரசியலின் இனவாத முரண்பாடுகளை 1956ல் இருந்தே அடையாளங்காண முனையும்போது, (ப. 166) இந் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லிம் மோதல், 1948 குடியுரிமைச் சட்டம் போன்றவற்றின் பின்னணியையும் சிங்களம் மட்டுமே என்ற யோசனை சுதந்திரத்திற்கும் முன்னரே ஜயவர்த்தனவால் பிரேரிக்கப் பட்டதையும் நூலாசிரியர் கணிப்பிலெடுக்கத் தவறுகிறார்.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் 60களில் தான் சுதேசிய விழிப்புணர்வு கொள்ளத்தொடங்கின என்ற கூற்று (ப.120) எந்த அடிப்படையிலானது என விளங்கவில்லை. தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வி கற்றோர் பல்கலைக்கழகங்களுட் புகுந்தது, 60களில் என்பது உண்மை. ஆயினும் சுதேசிய உணர்வு அதற்கு முன்னமே வலுப்பெற்று விட்டது. குறுகியத் தமிழ்த் தேசியவாதப் பார்வை பின்பு விரிவடைந்ததில் சிங்களப் பேரினவாதத்தின் பங்கு முக்கியமானது.
கவிதை பற்றிக் கூறும் போது, நூலாசிரியர் நவீன கவிதை எனவும் புதுக்கவிதை எனவும் வேறுபடுத்துகின்றார். மரபுக்கவிதை, நவீனகவிதை,
90

புதுக்கவிதை என்பவற்றிடையிலான வேறுபாடு என்ன என அவர் தெளிவுபடுத்தியிருக்கலாம். சண்முகம் சிவலிங்கம் நவீன கவிதைகளை எழுதியவராகவே முக்கியம் பெறுவதும் (ப. 140) சிக்கலை அதிகமாக்குகிறது. புதுக்கவிதை தவிர்ந்த சமகாலக் கவிதை நவீனகவிதையெனின், “பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதி நவீனகவிதை இலங்கையிலேயே உயிரோட்டத்துடன் விளங்குகிறது’ என்ற கூற்றை இன்றைய நிலையிலும் நம்மாற் கூற முடியுமா? நூலாசிரியரின் நவீன கவிஞர் பட்டியலிலிருந்து நுட்மான் புதுக்கவிதையை நோக்கிப் பெயரத் தொடங்கி விட்டாரென ஊகிக்கிறேன். மஹாகவியும் நீலாவணனும் சில்லையூர் செல்வராசனும் இன்று இல்லை. முருகையனே மரபு வடிவில் நவீன சிந்தனைகளைக் கூறும் ஒரு சீரிய படைப்பாளியாக எஞ்சியுள்ளார். உயிரோட்டத்துக்கு இதுபோதுமானதா?
சிறுகதை, நாவல்கள் பற்றிய பகுதிகளில் நூலாசிரியர் எந்த விதமான திறனாய்வு ஆற்றல்களையும் பயன்படுத்த முயன்றதாகவே தெரியவில்லை. புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளது ஆக்கங்கள் பற்றிய அக்கறையே தென்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
நாடகத்துறை பற்றிய கூற்றுக்கள், சிவத்தம்பி போன்றோர் (நெஞ்சார அறிந்தும்) குறிப்பிட மறுக்கும் அவைக்காற்றுக் கலைக் கழகப் பங்களிப்புக்கள் பற்றிய ஒரு தவறான பார்வையை முன்வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவைக்காற்றுக் கலைக் கழகம் இலங்கையில் மேடையேற்றியவை பெரும்பாலும் மொழி பெயர்ப்புக்களே என்ற மயக்கத்தை வளர்த்து அவர்களது நாடகங்கள் பெற்றுவந்த பரவலான வரவேற்பை இன்னமும் மூடிக்கட்ட வேண்டிய நிர்ப்பந்தந் தான் என்ன? நாடகங்களை மீளவும் மீளவும் நிகழ்த்தி நாடகங்கட்கான ஒரு நிலையான ரசிகர் குழாமை வளர்த்தெடுக்கும் நாடக இயக்கமாக அவர்கள் ஆற்றிய பணி பெரியது. இதுவே அவர்கட்குப் புலம்பெயர்ந்த சூழலிலும் வழிகாட்டும் நாடகக் கொள்கையாகும்.
சமூக-அரசியல் முனைப்புடைய இலக்கியம் தொடர்பாக நூலாசிரியர் கூறியவை சிலவும் கடுமையாக மறுக்க வேண்டியன. உதாரணமாக, “இப் பரம்பரையில் மறுசாரர், எத்தகைய கோட்பாடுகளையும் வரிந்து கொள்ளாமல் இலக்கியவாதிக்குரிய மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல வேறு கோலங்களையும், பிரச்சினைகளையும் இலக்கிய உணர்வுடன் புலப்படுத்த முனைந்தனர்” (ப. 163).
உண்மையிலேயே கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட படைப்பும், படைப்பாளியும் இருக்க முடியுமா என்பது ஒரு பயனுள்ள கேள்வி. கடந்து சென்ற நூற்றாண்டுகளின் உன்னதமான படைப்புக்கள் பலவற்றினுாடும் மதம். அரசியல் போன்றவை தெளிவாக இழையோடவில்லையா? ஆறுமுக நாவலரது சைவமும் தமிழும் சாதியத்தையும் வரித்துக்கொண்டு போனது பற்றி நூலாசிரியர்
91

Page 48
காணத் தவறுவதை நோக்கும் போது இலக்கியத்தில் அரசியல் என்னவோ இந்த அரை நூற்றாண்டுக்குரிய விடயங்களெனவே அவர் கூறுகிறாரோ என ஐயுற நேரிடுகிறது.
சில படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் சில பேர்கள் சில இடங்களில் அமையும் முறையும் (சிறப்பாக, கே.எஸ். சிவகுமாரனின் பேர் புதுக்கவிதையாளர் என்ற வகையில் ராமலிங்கத்தினதிற்கும், மு.பொன்னம்பலத்தினதிற்கும் நடுவே அமைவது, (ப.132) நுாலாசிரியரது அளவுகோல்கள் பற்றி வியக்க வைக்கின்றன.
இந்த நூல் குறிப்பான இலக்கியப் போக்குகளைச் சமூகவியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தொடர்புபடுத்தி விபரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நூலை வாசித்துக் கொண்டு போகும் போதே தகர்ந்து விடுகிறது. நூலாசிரியரது விமர்சனத்துறை அனுபவம் நூலுக்கு எந்த வகையில் வலிமை சேர்க்கிறது என்பது நூலாசிரியர் தன்னையே கேட்க வேண்டிய கேள்வி.
பல பயனுள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்கட்கே உரிய சிறப்பான அச்சுத் தவறுகள் இந்த நூலுக்குட் சொற்பம் இருந்தாலும், அவற்றைத் தவிர்ப்பதில் காட்டப்பட்ட பெருங்கவனம் பாராட்டத்தக்கது. சான்றாதாரங்கள் சிறிது பொறுப்பான முறையில் வழங்கப்பட்டமையும் பெயர்கள், நூல்களும் சஞ்சிகைகளும், பொருள் ஆகியவற்றுக்கான அகர வரிசையிற் சுட்டி கவனத்துடன் தரப்பட்டமையும் மிகவும் மகிழ்ச்சிக்குரியன.
மொத்தத்தில் அனுபவமிக்க பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரை
யாளரிடமிருந்து இதை விட அதிகமாக நாம் எதிர்பார்க்க வேண்டும். தவறினால் தமிழ்த் திறனாய்வு உயர முடியாது.
92

முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்
(முஸ்லிம் தேசமும் எதிர்காலமும், விக்ரர். மூன்றாவது மனிதன், கொழும்பு 1997, ப. 148+10, ரூ. 12000)
தேசமாக வரையறுக்கப்பட்ட மக்களுக்கே தமது அடையாளத்தைப் பேணும் முறையிலான சுயநிர்ணய உரிமை உண்டு என்ற மயக்கம் சிலரிடம் மிகவாகவே உள்ளது. விளைவு? ஒடுக்கலுக்கும் அடையாள அழிப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு சமுதாயப் பிரிவையும் தேசமாகவோ குறைந்தபட்சம் தேசிய இனமாகவோ காட்டும் முயற்சிகள், பல சமயம் இத்தகைய முயற்சிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையினின்றே எழுகின்றன. அபூர்வமாக இத்தகைய முயற்சிகள் அச் சமூகங்கட்கு வெளியிலிருந்து வரும் போது நனைகிற ஆட்டுக்காக அழுகிற பிராணியின் நினைவு வருவது தவிர்க்க இயலாதது தான்.
பின் கூறப்பட்ட முயற்சியை ஒத்த ஒன்று, முஸ்லிம் தேசம் பற்றி விக்ரர் எழுதியுள்ள நூல். ஏராளமான குழறுபடிகளும் திரிப்புக்களும் அதில் உள்ளன.
நூலிற் புதிதான தகவல்கள் அதிகம் இல்லை. உள்ள தகவல்களைக் கையாளுவதில் தவறுகள் பல. இவை பற்றி விரிவுபடுத்துவதற்கு முன், நுாலின் முக்கிய செய்தியை நோக்குவது பயனுள்ளது. அதை விளங்கிக் கொண்டால் மற்றக் குழறுபடிகளை விளங்கிக் கொள்வதிற் சிரமம் இராது.
நூலாசிரியரின் பிரதான முடிபுகள் பின்வருமாறு:
I) வட-கிழக்கின் முஸ்லிம்கள் ஒரு தேசம்
2) "தமிழ் தேசத்தினுள் முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை (பிரிந்து செல்லும் உரிமையை) ஆதரிக்கும் நடவடிக்கைகள் அவசியம். முன்னையதை நிறுவத் தேசம் என்றால் என்ன என்பதன் வரைவிலக்கணம் கணிசமான அளவுக்கு வளைத்து இழுத்து முறுக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமன்றி, ஒரு முஸ்லிம் தேசத்தைச் சாத்தியமான ஒன்றாகக் காட்டும் தேவைக்காக, வட-கிழக்கு முஸ்லிம்கள், தொகையில் அவர்களை விட அதிகமாக உள்ள தென்னிலங்கை முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்தப் பட்டுள்ளார்கள்.
தேசங்கள் வரைவிலக்கணங்களால் உருவாவதில்லை. எந்த வரைவிலக்கணமும் ஒன்றை விளங்கிக் கொள்ளவும் அடையாளம் காணவும்
93

Page 49
உதவும் ஒரு சாதனமே தான். ஒன்றைத் தேசம் என்றோ இல்லை என்றோ வெட்டொன்று துண்டு இரண்டு என்ற விதமாக வகுக்கவல்ல வரைவிலக்கணம் எதுவுமில்லை. பொதுவான மொழி, தொடர்ச்சியான பிரதேசம், பொதுவான பொருளாதாரம், பொதுவான வரலாற்று அனுபவம் என்பனவற்றை ஒரு தேசத்தின் பொது அடையாளங்களாகக் கண்ட ஸ்தாலின், அவை அனைத்துமே இருக்காவிட்டால் ஒரு மக்கள் திரள் தேசமாக மாட்டாது என்று கூறவில்லை. மேற்கூறிய பண்புகளின் முக்கியத்துவம், தேசம் என்பதை தேசிய அரசு என்ற நடைமுறைத் தேவையுடன் இணைத்துக் காண்பதிலேயே தங்கியுள்ளது.
மதம், நிறம் போன்றன மக்களை வேறுபடுத்தினாலும் அவற்றின் அடிப்படையில் தேசங்கள் அமைவதில்லை. இஸ்ரேல், யூதமதம் என்ற அடிப்படையில் அல்லாது யூத இனமும் அதன் பொதுவான வரலாற்று அனுபவமும் என்பதை ஆதாரமாக வைத்தே மறுபடி உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் நீண்ட காலமாக ஐரோப்பாவில் நிகழ்ந்த யூத இன ஒடுக்குதலுக்குப் பெரிய பங்கு உண்டு. இந்தியா எவ்வாறு ஒரு தேசம் இல்லையோ, அவ்வாறே மதத்தை ஆதாரமாக வைத்துப் பிரித்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானும் ஒரு தேசமாக இல்லை. பிரதேசரீதியான தொடர்ச்சியற்ற பாகிஸ்தான் பிளவுபட்டது மட்டுமன்றி இன்று வேறுபட்ட தேசிய இனங்களைக் கொண்ட கூட்டாட்சியாகவே அதன் இருப்பு இயலுமாகிவிட்டது. மத அடிப்படையில் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்பட்டால் அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடும் தேவை ஏற்படுகிறது. இதற்கும் மேலாக, அவர்கட்கு ஒரு பொதுவான தனித்துவமான சமுதாய வரலாறும் இருந்தால், அ{}ர்கள் தமது தனித்துவத்தை மேலும் வலியுறுத்த இடமுண்டு. அது ஒரு தே ய இனம் என்ற அடிப்படையிலோ தேசமாகவோ அமைவது அதைச் சாத்த ம 15கக் கூடிய சூழல்களிலேயே தங்கியுள்ளது.
இலா கை முஸ்லிம்களதும் மலையகத் தமிழர்களதும் தனித்துவத்தைத் தமிழ் பேசும் பக்கள், தமிழ் ஈழம்' என்ற பேர்களின் கீழ்த் தமிழ்த் தேசியவாதிகள் அமுக்க முனைந்த போது, அந்த மக்களது தனித்துவம் பற்றி மாக்ஸிய லெனினிய சக்திகள் சுட்டிக்காட்டின. அன்று அவர்களைத் தமிழ் இனத்துரோகிகள் என்று பழித்த தேசியவாதிகள் இன்று அந்த உண்மையைப் பெருமளவும் உணர்ந்துள்ளார்கள். அவர்களில் ஒரு சிலர், இன்று மறு அந்தத்திற்குத் தாவி, முஸ்லிம் தேசம் பற்றிப் பேசுவது வினோதமானது தான்.
முஸ்லிம் தேசத்தைச் சாத்தியமாக்குவதற்காக 'விக்ரர் மிகவுந்தான் கஷ்டப்பட்டு விட்டார். அதற்கு விலையாக இலங்கை முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களது பொதுவான பண்புகள் அனைத்தையும் விட வட-கிழக்கு, தென்னிலங்கை முஸ்லிம் மக்களது சமுதாயச் சூழல்களில் உள்ள சில வேறுபாடுகள் பெரிதுபடுத்தப் படுகின்றன. அதே சமயம், வடக்கின் முஸ்லிம்களின் தலைமை கிழக்கு முஸ்லிம்களது தலைமையை நிராகரிப்பதுடன் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே தம்மைக் கருத முனைவதையும் விக்ரர்
94

காண விரும்பவில்லை. அம்பாறை-மட்டக்களப்பில் தமிழருக்கும் முஸ்லிம்கட்கும் மத்தியில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலைக்கும் திருகோணமலையில் அவை தோன்றிய சூழ்நிலைக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை இவற்றினும் வித்தியாசமானது. விக்ரரின் நூலில் இது பற்றிய அறிவோ அக்கறையோ அற்ப அளவிற் கூட இல்லை.
தென்னிலங்கை முஸ்லிம்கள் பற்றிய கவலையே இல்லாது, ஒரே தாயகத்தில் இரு தேசங்களாக நிலவுகிற தமிழ், (வட-கிழக்கு) முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வதன் அவசியத்தை விளக்குகிற விக்ரரால் அதே வாதத்தைத் தமிழ்-சிங்கள தேசிய இனங்கட்கு ஏன் பிரயோகிக்க முடியவில்லை?
தெற்கு முஸ்லிம் தலைமை பற்றிக் கடுமையான கண்டனத்தை முன் வைக்கும் விக்ரர், இதே விதமான தலைமையே தமிழர்கட்கும் சிங்களவர்கட்கும் நெடுங்காலமாக இருந்து வந்ததையும் கூறியிருக்கலாம். தென்னிலங்கை முஸ்லிம்களை ஒதுக்கி வைக்க இந்த அரசியற் தலைமையை இயலுமாக்கிய சூழல் உதவுமென்றால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் செறிவாக வாழும் இடங்கட்கு வெளியே உள்ள தமிழ் மக்கள் அவர் கூறும் தமிழ்த் தேசத்தினுள் அடங்குவார்களா என்பதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது.
தேசங்கள் உருவாவது வெறுமனே தற்செயலான வரலாற்று நிகழ்வு என்ற விதமாக விக்ரரின் வாதம், வடக்கு-கிழக்கு முஸ்லிம்களை ஒரு தேசமாக்கும் அகச்சார்பான தேவையினின்று எழுதுவதுதான். இந்த நூலில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்களைப் பார்க்கும் போது சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு தேசமாக மாட்டார்களா? தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வாழும் ஒவ்வொரு சாதிப்பிரிவினிலும் காணப்படும் அகமண முறையும் ஒவ்வொரு சாதிக்கும் இருந்துவரும் பொதுவான பண்பாட்டுக் கூறுகளும் மரபும் வரலாறும் ஒவ்வொரு சாதியையும் தனித்தனித் தேசமாக்கி விடாதா? இங்கே வட-கிழக்கு முஸ்லிம் தேசம் என்ற தொப்பிக்கு அளவாகத் தேசம் என்ற கோட்பாட்டின் தலையை வெட்டிச் சிதைத்ததைவிட வேறெதையும் விக்ரர் சாதிக்கவில்லை.
முஸ்லிம்களது வரலாறு பற்றி விக்ரருக்கு உள்ள அக்கறையின் போதாமை மலாய், இந்திய முஸ்லிம் சமுதாயங்கள் பற்றி அவரது அசட்டையில் மட்டுமன்றிப் பிற கவனயீனமான கூற்றுக்களிலும் தெரிகிறது. TB, ஜாயா எனும் பிரதான முஸ்லிம் தலைவர் மலாய் சமூகத்தவர் என்பதும் கள்ளத் தோணிகள் என அழைக்கப்பட்டடோர் மலையகத் தமிழரே அல்லாது முஸ்லிம்களல்ல என்பதும் விக்ரருக்கு விளங்க நியாயம் இல்லை. கொக்குக்கு ஒன்றே குறி என்கிற மாதிரி, விக்ரரும் வடக்குக் கிழக்கு முஸ்லிம் தேசத்தையே குறியாகக் கொண்டு தனது ‘ஆய்வை" நடாத்தியிருக்கிறார். ஜீ.ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த் "ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவத்தை வடக்கின் தமிழர்கள் தவிர்ந்த பிற சிறுபான்மையினரின்
95

Page 50
தலைவர்கள் நிராகரிக்கக் காரணம், விக்ரர் கூறுவது போலன்றி, முஸ்லிம் தலைவர்களது சந்தர்ப்பவாதமல்ல. அந்த 50-50 யாழ்ப்பாண வேளாளத் தமிழர்களது ஆதிக்கத்தை உறுதி செய்யும் நோக்கை உடையது என்பதாலேயே அது தோல்வி கண்டது. இவ்வாறு தமிழ்த் தேசியவாதிகள் கூறி வரும் வரலாற்றுத் திரிப்புக்களை கொஞ்சமாவது ஆராயாமல் எழுதுகிற விக்ரரின் வாதங்களில் உள்ள குழறுபடிகள் ஏராளம். மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் மோதல்களையும் 'சைவவேளாள சித்தாந்த ஆதிக்க அடிப்படையில் விளக்க முனையும் விக்ரருக்கு தேசம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தெரிய வேண்டியது அதிகம். தமிழ்த் தேசியவாதத்தின் குறுகியகால வசதிகட்காக இந்த முஸ்லிம் தேசக் கோமாளித்தனத்தை முன்வைக்கும் தேவை சிலருக்கு இருக்கலாம். இதன் தத்துவார்த்தத் தளம் மிகவும் பலவீனமானது. தமிழர்கள் முஸ்லிம்கள் தேசம் என்ற கோட்பாட்டை ஏற்கிறார்களோ என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களே அதை ஏற்பார்களோ என்பது தான் முக்கியமானது.
96

மாக்ஸியத்தை மறுக்கும் ஒரு முயற்சி
(ldeology Caste, Class and Gender, Selvy Thiruchandran, WERC, Colombo, 1997, Rs. 1500.00)
ஆணாதிக்கச் சமூக அமைப்பு நெடுங்காலமாகவே மாக்ஸியச் சிந்தனையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் ஏங்கெல்ஸின் அக்கறை பிரசித்தமானது. நவ சீனக் குடியரசில் ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்திச் சட்டமியற்றப்பட்டது. பெண்ணுரிமை பற்றி மாஓவின் கருத்துக்கள் சீனப் புரட்சிக்கு முன்பிருந்தே மிகவும் உறுதியயானவையாயும் தெளிவானதாயும் இருந்துள்ளன. இவற்றையெல்லாம் அலட்சியஞ் செய்து மாக்ஸியத்துக்கு எதிரான ஒரு மாற்றுக் கொள்கையாகப் பெண்ணுரிமை கொள்கையைப் பெண்ணியச் சித்தாந்தமாக வளர்க்கும் முயற்சி மேற்கில் சில தசாப்தங்களாகவே நடக்கிறது. செல்வி திருச்சந்திரனது பெண்ணியக் கோட்பாடு இதன் ஒரு பலவீனமான தொடர்ச்சி.
நீளமான இந்நூலின் தலைப்பும் நூலின் நீளமும் ஒரு விரிவான ஆய்வை எதிர்பார்க்குமாறு வாசகரைத் துாண்டலாம். பலவேறு தளங்களில் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ள வர்க்கம், சாதி, நிறம், பால் போன்ற முரண்பாடுகள் நமது சமுதாயத்தின் சடங்கு, சம்பிரதாயங்கள், மொழி, மதம் போன்ற சகலவற்றின் மீதும் தமது சுவட்டை ஆழப்பதிந்துள்ளன. இந்நூால் இவற்றையெல்லாம் கணிப்பிலெடுத்து எழுதப்பட்டது என எண்ணும் எவரும் ஏமாறாமலிருப்பது 8E6Lç60ILD.
நூலின் பெரும்பகுதி ஆசிரியையின் முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வு தொடர்பானது 9-10 ஆண்டுகள் முன்னம் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தமிழ்த் திரைப்படங்களில் ஆணாதிக்கமும் கொட்டகைகளில் பட்டம் ஓடிய கால அளவின் அடிப்படையில் தெரியப்பட்ட இப் படங்களின் ஆணாதிக்க கருத்துக்குப் பெண்கள் பலர் எவ்வாறு முகங்கொடுத்தனர் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளன. இப் பெண்களது குடும்ப உறவுகளுஞ் சிறிது அலசப்பட்டுள்ளன.
சமூகவியல் என்ற வகையில் இந்த ஆய்விற் கைக்கொள் "பட்டுள்ள அணுகுமுறையும் ஆய்வு நெறியும் மிகவும் குறைபாடுடையன. பல்கள்
97

Page 51
சேகரிப்பதில் உள்ள குறைபாடுகள் ஒருபுறமிருக்க, அவற்றைத் தொகுத்தளிப்பதில் உள்ள குறைபாடுகள் ஆய்வை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. இதைவிட விரிவான ஒரு ஆய்வை, கவனமாகத் தெரியப்பட்ட ஒரே ஒரு திரைப்படத்தையும் கூடிய அவதானத்துடன் தெரிந்தெடுக்கப்பட்ட பெண்கள் சிலரையும் வைத்துச் செய்திருக்க முடியும். இது ஒருபுறமிருக்க, நுாலின் உள்ளடக்கத்தைக் கவனிப்போம்.
தமிழ் சினிமா என்பது ஒரு சமூக நோயின் அறிகுறியாகும். அது ஒரு பாரிய சமூக நோயாகவும் உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் மீது அதன் பீடிப்பு அதிகம். பெண்களை இழிவுபடுத்திக் காமவேட்கைக்குரிய நுகர்பண்டமாகச் சிறுமைப்படுத்தும் இந்த வியாபாரத் துறையில் ஆணாதிக்கத்தை விட அதிகம் கவலைக்குரிய அம்சங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து ஆணாதிக்கக் கருத்துக்களை மட்டும் மையமாக்கி அவற்றைப் பெண்கள் எவ்வாறு நோக்கியுள்ளனர் எனவும் அதைப் பெண்ணிய நோக்கில் சிறிது உந்துவதற்கான தன் முயற்சியையும் நூலின் பெரும்பகுதி விலாவாரியாக விஸ்தரிக்கிறது.
ஒருபடம் தவறாமல், ஆடைக்குறைப்பு, ஆபாச நடனம், அர்த்தமற்ற வன்முறை, இரட்டை அர்த்தப் புளிச்சற் பகடிகள், காமக்கிளர்வூட்டும் கீழ்த்தரமான பாடல்கள் ஆகியன நிறைந்து யதார்த்த விரோதமான முறையில் வருகிற ஒரு சமூகத்தின் நோய் பயங்கரமானது. பெண்கள் தமிழ்த் திரைப்படங்கட்கு அதிகம் போகிறதாகவும் தெரிய வருகிறது. வெறும் ஆணாதிக்க சினிமா, ஆணாதிக்க ஆபாச சினிமாவாக மாறிய பின்னர், பெண்கள் சினிமாவுக்கு முண்டியடித்து ஓடுவது ஏன் என்ற கேள்விக்கான பதிலை ஆசிரியை ஏனோ தேடவில்லை. பெண்ணைக் காம நுகர்வுக்கான சதைப்பிண்டமாகக் காட்டும் சினிமா பற்றியும் அதை ஒழிக்க வேண்டிய தேவை பற்றியும் ஆசிரியை கேள்விகளைக் கேட்டிருந்தால் அது பெண்விடுதலைக்குத் தடையாக உள்ள சில விஷயங்களை அடையாளங் காட்டியிருக்கக் கூடும்.
ஆசிரியையின் பெண்ணிய நோக்கில் ஆணாதிக்கம் பிரதான முரண்பாடாகத் தனித்து நிற்பதாலோ என்னவோ, மற்ற முரண்பாடுகள் பற்றிய அக்கறை அதிகம் இல்லாததோடு, மாக்ஸியமும் அது போல வர்க்க முரண்பாடே முரண்பாடு, மற்றெல்லாம் அற்பமானவை என்று கருதுவதாக ஆசிரியை முன்னொரு நூலில் எழுதியதை மீளவும் எழுதியுள்ளார். (ப. 11) இதை மறுத்து அதிகம் எழுதுவதற்குப் பதிலாகச் சாதிய எதிர்ப்பு இயக்கம், தேசிய விடுதலை இயக்கங்கள், நிறவெறிக்கு எதிரான மாஓ, லெனின் போன்றோரது நிலைப்பாடு போன்றவற்றை நினைவூட்டுவது போதுமானது. மாக்ஸிய-லெனினியவாதிகளது போராட்டப் பங்களிப்பை மழுப்பி மூடிக்கட்டும் முயற்சிகட்கு ஆசிரியை பலியானாரோ அல்லது பங்காளியானாரோ என்பதை அவர்தான் உறுதி செய்ய (Մ0lգավLD.
98

பெண்ணுரிமை தொடர்பான மாக்ஸிய அணுகுமுறையை மறுதலிக்க வேண்டித் தமது பெண்ணியத்துக்கு எவர் என்ன சாயம் பூசி என்ன நாமம் சூட்டி அழைத்தாலும் அவர்களது வர்க்கப் பார்வையை அது முடிமறைக்க உதவாது. மாக்ஸியத்தைப் பொய்ப்பிப்பதற்கு ஆசிரியை மிகவும் முயன்றுள்ளார். இதன் இன்னொரு பகுதியாக, தாய்வழிச் சமூகம் என்று ஒன்று இருந்தது என்ற ஏங்கெல்ஸுடைய கருத்து கற்பனாவாதம் சார்ந்தது என்று ஆசிரியை யாருடைய கருத்தையோ சாட்சிக்கு அழைக்கிறார். சற்றுப் பின்னர், சங்ககாலத்தின் முன்பிருந்த தாய்வழித் தன்மைகள் பின்னைக் காலத்தில் அழிவுபட்டதற்கான சான்றுகளை அலசுகிறார். அப்போது செக் கவிஞர் மிரொஸ்லாவ் ஹொலுாப் எழுதிய கவிதை ஒன்று மனதுக்கு வந்தது.
“பூமி சுழல்கிறது” என்கிறார் மாணவர் அப்படியில்லை, ‘பூமி சுழல்கிறது” என்று திருத்துகிறார் ஆசிரியர் . ஏனென்றால் ஆசிரியருக்கே அதிகம் தெரியும். (பணிதல் மறந்தவர், மொழிபெயர்ப்புத் தொகுதியிலிருந்து)
மாக்ஸியவாதிகளுக்குக் குட்டுப்போட முயன்ற ஆசிரியை இங்கு தனக்கே குட்டுப் போட்டுக் கொள்கிறார். (எட்டு ஆண்டுகள் முன்பு சாந்தி சச்சிதானந்தன் பெண்வழிச் சமூகமே இயல்பானது என்று வாதித்து எழுதிய நூல் பற்றி ஆசிரிய்ையின் எண்ணத்தை அறிய விரும்புகிறேன்).
புத்த சமயத்தவரென்று மீள்கண்டுபிடிப்புச் செய்யப்படடுள்ள திருவள்ளுவரால் பரத்தமை பற்றிய ஆய்வு செய்யப்படாமை பற்றி ஆசிரியை ஏமாற்றம் தெரிவிக்கிறார். தேவகுமாரன் யேசு முதல் தேவதுாதர் நபிகள் வரையில் பெண்ணும் ஆணும் சமம் என்று அறியத் தவறிவிட்டனர். மஹாஞானிகளான புத்தரும் மஹாவீரரும் இவ்விஷயங்களைக் கோட்டை விட்டு விட்டனர். சாமான்யரான வள்ளுவர் என்ன செய்ய முடியும்? (திருவள்ளுவர் பரத்தமை பற்றி சமூகவியல் ஆய்வு நடத்த அந்தக் காலத்தில் என்ஜிஒக்கள் இருந்தனவா, என்ன!) எந்தவொரு சமூக அமைப்பிலும் நிலவுகிற சமுதாய விழுமியங்கள் அக்காலத்தின் இலக்கியங்களிலும் அறநூல்களிலும் வெளிப்படுவது தவிர்க்க இயலாததே. திருவள்ளுவரது குரல், ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியின் குரலல்ல. ஆயினும் அதற்கு முன்பான ஆண்களின் பாலியல் ஒழுக்கம் பற்றிய தமிழ் மரபினும் முற்போக்கானது என்று நினைக்கிறேன். மற்றப்படி, திருக்குறளோ வேறு எந்த அறநூாலோ எக்காலத்துக்குமான பூரண வழிகாட்டி என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆசிரியை, இன்று பேருந்துக்கள் முதல் பலசரக்குக் கடை வரை எல்லாவற்றிலும் திருக்குறளை வைக்க முயல்கிறவர்களிடம் கேள்வி எழுப்பினால் அது நியாயம். w
நுனிப்புல் மேய்கிற பாங்கில் ஆசிரியை பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார். அதே வேளை, அமைப்பியல் முதல் கிராம்ஸ்சி வரை
99

Page 52
அனைத்தும் அறிந்த தோரணையில் எழுதும் போது பரவலாக அறியப்பட்ட தகவல்கள் பற்றிய அறியாமை பூதாகரமாக எழுந்து நிற்கிறது. ஒளவையாரை ஞானியருள் ஒருவராகக் (Saint) கூறுவது அவரது கவனயீனமான சொற்பிரயோகங்கள் பலவற்றுள் ஒன்று. கோலமிடல், கருநாடக இசை என்பன பற்றிய அவரது குறிப்புக்களில் அவை பற்றி அவர் எழுதுவதற்கு அவசியமான குறைந்தபட்ச அறிவு பற்றியும் அக்கறையில்லாமலேயே எழுதியுள்ளார்.
தேவதாசிகள் பற்றிய குறிப்பில் (ப. 54) தேவதாசி முறை ஏற்பட்டதில் ஆணாதிக்கத்தை விடச் சனாதன முறை கூடிய பங்கு வகித்தது. அதேவேளை, எந்தக் கலைகள் தேவதாசிகளுடனும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடனும் சேர்த்துக் கருதப்பட்டனவோ, அதே கலைகள் இந்த நூற்றாண்டில் பிராமணர்களது ஏகபோகமாகி விட்டன. முதலாளித்துவம் இயலுமாக்கிய இந்த மாற்றம், பொருளாதாரம் எவ்வாறு சமுதாய விழுமியங்களைப் பாதிக்கிறது என்பதையே காட்டுகிறது. சகல ஒடுக்குமுறைகளிலும் பொருளாதார உறவுகளின் பங்கு முக்கியமானது. ஏனேர், ஆசிரியையின் பார்வை இந்தத் திசைகளில் அதிகம் LTu660606).
மாக்ஸிய அணுகுமுறையை நிராகரிப்பதற்கு ஆசிரியை பயன்படுத்தும் ஒரு அஸ்திரம், மாக்ஸிய வர்க்க ஆய்வில், மணமான ஒரு பெண்ணின் வர்க்கம் அவரது கணவனின் வர்க்கத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதாகும். இந்தக் கூற்று, ஆசிரியை சமூக யதார்த்தம் பற்றி எவ்வளவு ஆழமான அறிவுடையவராக உள்ளார் என்று கூறுகிறது. வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளைச் சேர்ந்தோரிடையிலான மண உறவின் பின்பு ஆணும் பெண்ணும் வெவ்வேறு வர்க்கத்தினராக வாழ்க்கை நடத்துகிறார்களா? ஆசிரியையின் ஆதங்கம், நடுத்தர வர்க்கத்து மனிதரது அந்தஸ்து தொடர்பான ஒன்றேயொழிய, வர்க்க சமுதாயத்தில் மனிதரது இருப்புப் பற்றியதல்ல என்பதையே அவரது குற்றச்சாட்டு நிறுவுகிறது.
ஆசிரியையால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்கள் 120 பேரில் 33 பேர் பிராமணர், 57 பேர் இடைப்பட்ட சாதியினர் என்று அவர் கருதும் முதலியார், பிள்ளை, செட்டிமார் போன்ற மேற்தட்டுச் சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் சேர்ந்தோர், 30 பேர் ஆதிதிராவிடர் என அவர் அழைக்கும் தலித்துக்கள், ஆயினும் 31 பக்கங்கள் பிராமணப் பெண்கள் பற்றிய குறிப்புக்கட்கும் 19 பக்கங்கள் இடைப்பட்ட சாதியினருக்கும் 13 பக்கங்கள் தலித்துக்கட்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியையால் கீழ்த்தட்டு மக்களுடன், அவர்கள் பெண்களாக இருந்தபோதும், நெருக்கத்தை ஏற்படுத்த இயலாமையைக் குறிக்கிறதா? அல்லது அவரது தெரிவிலேயே விகிதத்திற்கும் அதிகம் அழுத்தம் பெற்ற பிராமணர் அவரது ஆய்வில் மேலும் அழுத்தம் பெறுவதைக் குறிக்கிறதா?
இந்தப் பின்னணியில், நூலின் முற்பகுதியில் அவர் அம்பட்டன், பள்ளன் என்று இரண்டு சாதிகளைக் குறிப்பிடுவதையும் மற்ற எந்தச் சாதியையும்
100

ஒருமையில் அழையாமல் பன்மையில் குறிப்பிடுவதையும் பற்றிய விளக்கம் நமக்கு அவசியமாகிறது. ஆசிரியை சாதி உணர்வு மிகுந்தவராக இல்லாமலிருக்கலாம். ஆணாதிக்கச் சொற்பிரயோகம் பற்றிக் கண்டிப்பாகச் *றங் கூறுகிற ஒருவரது சொற்பிரயோகத்தில் உயர்சாதி ஆதிகக்கம் தென்படுவது நியாயமா என்பதுதான் என் கேள்வி.
இன்று தமிழ் எழுத்துலகில், குறிப்பாகத் தமிழகத்தில், பல புதிய இஸங்கள் வந்து போகின்றன. எல்லாவற்றுக்கும் பொதுவாக உள்ளது புத்திஜீவிப் பம்மாத்து, நிறைய வாசித்து அறிந்ததாக உலகுக்கு காட்டும் இப் போலிப் பண்டித மனோபாவம் ஈழத்திலும் சிறிது தொற்றி இருக்கிறது. இது பலரது எழுத்து நடையைப் பாதிக்கிறது. எனவேதான் வெகுசாதாரணமாக எல்லாருக்கும் எட்டக்கூடிய தகவல்கட்கெல்லாம் சான்றாதாரங்களும் துணை நூல்களும் சாட்சிக்கு அழைக்கப்படுகின்றன. ஆசிரியை பட்டியல் போட்ட பல்வேறு ஆய்வு முறைகளில் ஒன்றேனும் எவ்வாறு அவரது ஆய்வில் முறையாகப் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் தெரியவில்லை. சும்மா புறநானூற்றுச் செய்யுள்களைக் குறிப்பிடக் கூடக் கைலாசபதியும், ராமானுஜனும் தேவைப்படுகிறார்கள். இந்த மாதிரி நிறையவே சொல்லலாம்.
தமிழ்ச் சொற்களைச் சரிவர உச்சரிப்பதற்கான சொற்பெயர்ப்பு விதிகள் நூலிற் தரப்பட்டுள்ளன. ஆயினும் அவை கணிசமான அளவில் மீறப்பட்டுள்ளன. ஆங்கில மொழிப்பிரயோகத்திற் கூட ஆங்காங்கே மிகுந்த குழப்பமான வாக்கிய அமைப்புகள் உள்ளன. இவை எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடியவை.
ஆசிரியையின் ஆய்வு உபயோகமற்றது என்பது என் முடிவல்ல. ஆயினும் ஆய்வுத் தகவல்களை எல்லாம் திரட்டியவாறே நுலாகத் தருவதற்கு அவசியமில்லை. இந்த நூலை ஆங்கிலத்தில் ஆயிரத்தி ஐநூறு ரூபா விலையில் வெளியிடுவதற்குப் பதிலாக அதன் முக்கியமான தகவல்களை ஒரு சிறு நுாலாகப் பிரசுரித்திருந்தால் அது கூடிய அளவுக்குப் பயன்பட்டிருக்கும்.
O1

Page 53
சி.வை.தாமோதரம்பிள்ளையும் மதச்சார்பான ஒரு ஆய்வும்
(C. W. Thamotharampillai, Tamil Revivalist: the Man Bahind the Legend of Tamil Nationalism, SR H Hoole, CES, Colombo, 1997)
பேராசிரியர் ரத்னஜீவன் ஹPள் அமெரிக்காவிலும் இலங்கையிலும் எந்திரவியல் ஆய்விலும் அறிவிலும் உயர்ந்த ஒருவராகக் கூறப்படுபவர். அவரது ஆய்வுத் திறனை அவர் தாமோதரம்பிள்ளை மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பிரயோகித்து எழுதிய ஒரு கட்டுரை இரண்டு ஆண்டுகள் முன்பு லண்டன் தமிழ் Tைம்ஸ் ஏட்டில் வந்தது. அது கடுமையான மறுப்புகளைச் சந்தித்தது. ஆயினும்,விடாப்பிடியாகத் தன் கருத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமுமில்லாமல், தனது பழைய கட்டுரையை ஒரு சிறு நூலாகக் கடந்த நவம்பர் 17ம் திகதி வெளியிட்டு இனத்துவக் கல்விக்கான சருவதேச மையத்தின் (CES) கொழும்பு பணிமனையில் உரையாற்றினார்.
அகச்சார்பான ஆய்வு, அது எந்தப் பெரிய மேதையின் ஆய்வானாலும், முக்கியமான உண்மைகளை எளிதாகத் தவறவிடுவது இயல்பானது. எதையும் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ஆய்வுகளை மேற்கொள்வோர், தாம் நிரூபிக்க முயல்வது உண்மையா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. அவர்களது சிரத்தையெல்லாம் தமக்கு உடன்பாடான சாட்சிகளை, அவர்களது தகுதி எத்தன்மையைதாயினும், தேடிப் பிடிப்பதில் மட்டுமே காட்டப்படுகிறது.
சி.வை. தாமோதரம்பிள்ளை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராக இருந்து சைவராக மாறியது பற்றிய தகவல் இன்று பலரும் மறந்து போன ஒன்று. இதன் விளைவாக, அவரது எழுத்தின் அடிப்படையிலேயே அவரைப் பற்றிய விவரணங்களும் மதிப்பீடுகளும் வருகின்றன. தாமோதரம்பிள்ளையின் மதமாற்றச் சூழலை அவரைச் சிறிது ஏளனஞ் செய்யுந் தொனியிலே விமர்சிக்கும் ஹள், அவரது முன்னோரும் பிறரும் கிறிஸ்தவராக மதம் மாறிய சூழ்நிலையை மட்டும் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாமோதரம்பிள்ளை உயர் வேளாள சாதியினரல்ல என்று கூறும் ஹள், அவர் ஏதோ பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்ற மயக்கத்தை தோற்றுவிக்க முற்படுவதாகவே தெரிகிறது. சாதிக்குள் சாதி பார்க்கும் வேளாளர் பற்றி, ஹள்
102

சொல்லுமுன்பே நாம் அறிவோம். ஹள் அறியாததென்னவெனில், எந்தச் சாதி அமைப்பினுள்ளும் சில சமூகப் பிரிவுகள் பொருளாதார வளர்ச்சி பெற்று உயர்வதும் சில பிரிவுகள் நலிந்து தாழ்வதும் சமூக நடைமுறை. மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியினர், மதம் மாறி எந்த விமோசனமும் பெறவில்லை. ஏனெனில் புரட்டாஸ்தாந்து கிறிஸ்தவர்கள் மதம் மாறினாலும் சைவத்தின் சாதியமைப்பை முற்றாக உதறிவிடவில்லை. (இஸ்லாம் மட்டுமே சாதி விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விலக்காக இருந்தது எனலாம்).
ஹPள் தனது கூற்றுக்களுக்குத் தரும் ஆதாரங்கள் பலவீனமானவை. படுசராசரியான எழுத்தாளர் எவரதும் எழுத்தை மேற்கோள்காட்டி, அதுவே (சைவத்) தமிழ் ஆய்வாளர்களது பொதுவான அணுகுமுறை என்னும் விதமாகத் தனது ஆய்வில் அவர் பல முறை காட்ட முனைவது, சீரிய ஆய்வுமுறையின் பாற்பட்டதல்ல.
சைவர்களல்லாதவர்களது பங்களிப்பை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சைவ வேளாள சாதியப் பண்டிதர்கள் மீது சுமத்தப்படுவதில் மிகவும் நியாயம் இருக்கலாம். அதைப், பொதுவாக முழுச் சமூகத்தின் மீதும் சுமத்துவதும் முற்போக்குச் சிந்தனையாளர்களது நிலைப்பாட்டை மறைப்பதும் நெறிப்பட்ட ஆய்வல்ல. (ஹள், கைலாசபதி மீது தனது லண்டன் கட்டுரையில் வைத்த தவறான குற்றச்சாட்டை இங்கு மீண்டும் கூறாததற்கு, அவர் அப்போது சந்தித்த எதிர்ப்பு ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் தமிழுக்கு இஸ்லாமிய கிறிஸ்துவப் பங்களிப்புக்கள் நெடுங் காலமாகவே அடையாளங் காணப்பட்டுப் போற்றப்பட்டுள்ளதை அவர் எங்கும் குறிப்பிடவில்லை). சாதியத்திற்கு எதிரான வெகுசன இயக்கங்கள் கூட அவரது அக்கறைக்கு உரியனவல்ல.
யாழ்ப்பாணச் சமுதாயத்தின் கலாசார அடையாளத்தின் அடிப்படை சைவமும் தமிழும் என்ற கருத்தை மறுக்கும் ஹ*ள், யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியமும் ஆணாதிக்கமும் தமது நியாயத்தை எங்கிருந்து பெற்றதாகக் கருதுகின்றாரோ தெரியாது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்திற்கு சைவமும் தமிழும் அடிப்படையான கலாசார அடையாளம் என்பதும் அவை மட்டுமே அதன் அடையாளம் என்பதும் ஒன்றல்ல என அவர் அறியக் கூடும். இன்று சாதியமைப்பின் தகர்வுக்கான அறிகுறிகள் வலிவுபெறும் சூழலில் அந்தக் கலாசாரம் 'சைவமும் தமிழும் அல்லாத மத அடையாளங்களையும் மதச் சார்பற்ற அடையாளங்களையும் கூடிய அளவில் உள்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹளின் மிகவும் மோசமான கூற்றுக்கள் ஆறுமுகநாவலர் பற்றியன. ஆறுமுகநாவலரின் பங்களிப்புக்கள் என்ன, அவற்றின் வரலாற்று, இலக்கிய, மொழியியல் முக்கியத்துவம் என்ன என்று மிகவும் விரிவான முறையில் (சைவத் தமிழ் வேளாள நோக்கிலிருந்து விலகி நின்று) பாரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றைப் புறக்கணித்து ஆறுமுக நாவலரது பங்களிப்பை
103

Page 54
நிராகரித்து ஹள் பேசியதும் எழுதியுள்ளதும் அவரது ஆய்வின் தரத்தை அதல பாதாளத்துக்கே தள்ளியுள்ளது.
ஹளின் சைவவேளாள விரோதத்துக்குப் பல தனிப்பட்ட நியாயங்கள் இருக்கலாம். ஆயினும் வரலாற்றை அவற்றின் அடிப்படையில் வைத்து ஆராய்வது தவறான முடிபுகட்கே இட்டுச் செல்லும் கொலனி ஆட்சிக் காலத்தில் புரட்டஸ்தாந்து - சைவ மோதலின் போது நடந்த பல சம்பவங்களே மதப் பகைமைக்குக் காரணமாயின. அதில் ஒரு பக்கத்தை ஏற்று அதிலும் முக்கியமான இன்னொரு பக்கத்தை அப்படியே துாக்கி எறிவது நல்ல ஆராய்வல்ல.
பழைய புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷன்காரரது மதத் திமிர் இன்னமும் சில கிறிஸ்தவர்களிடம் தொடர்ந்தும் இருப்பதும் வருந்தத்தக்கது. 1980களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தம் ஒரு பாடவிதானமாக புகுத்தப்படுவதை ஒரு கிறிஸ்தவ விரிவுரையாளர் வன்மையாக எதிர்த்ததாகவும் சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதற்காக வாதாடும் தேவை தனக்கு ஏற்பட்டதாகவும் அங்கு பேராசிரியராக இருந்த சிவத்தம்பி மூலம் அறிந்தேன். ஹளுக்குக் கட்டுரை பற்றிய சில ஆலோசனைகளை வழங்கிய சிவத்தம்பி, இது பற்றியும் அவரிடம் பேசி இருக்கக்கூடும்.
ஈழத் தமிழ்ச் சமூகம் மதச் சார்பற்ற ஒரு இன அடையாளத்தை நோக்கி நகரும் தேவை இன்று ஏற்பட்டு வருகிறது. அது பரஸ்பர புரிந்துணர்வுடன் மட்டுமே இயலுமானது. மத அடையாளங்களை மட்டுமன்றித் தம் சமய மேம்பாடுகளையும் வலியுறுத்தும் விவாதங்கள், அவசியமற்ற சமயச் சண்டைகளைக் கிளறி விடும். ஓய்ந்து கிடக்கும். சில பழமைவாதப் பிற்போக்கு வாதிகள், காய்ந்து வரும் பழைய புண்களைக் கறள் ஊசியால் கிளற மட்டுமே இது வழிவகுக்கும்.
மற்றப்படி ஹஉள் சுட்டிக்காட்ட முயல்வது போல சி. வை. தாமோதரம்பிள்ளை சைவத்தை விடத் தமிழையே அதிகம் நேசித்து வலியுறுத்தினார் என்ற வாதத்தை அவரது பங்களிப்புக்களின் அடிப்படையில் மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் கூறமுடியும். அக் கருத்து எனக்கு மகிழ்வூட்டுவது.
104