கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவை அப்பர்
Page 1
Page 2
Page 3
ஈழத்து B if UII I SI İ j j
கனக-செந்திநாதன்
அரசு வெ 23, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13, (இலங்கை).
Page 4
அரசு வெளியீடு : 6,
முதற் பதிப்பு: பெப்பிரவரி, 1964,
ി& ரூபாய் : 3-50
Eelathu Ilakkiya Valarchchi
(A Short History of Modern Ceylon Tamil Literature)
Author : KANAGA - SENTHIINATHAN
Publisher: ARASU PUBLICATIONS, 231, Wolfendhal Street, Colombo - 13, ( Ceylon).
First Edition : February, 1964.
Price : Rs. 3-50.
ரெயின்போ பிரிண்டர்ஸ், கொழும்பு-13.
சமர்ப்பணம்
இல்வாழ் வென்னும் சகடத்தை இருபத்து நான்கு ஆண்டுகளாய் நல்ல முறையில் இழுத்துவந்த கவைதீர் சோடி ஆனவளும்
பொன்னைப் பொருளைக் கேட்காமல் புத்தக மாகிய செல்வமதை கண்ணிற் கருமணி போல, பல காலங் காத்து வருபவளும்
பிள்ளை, குடும்பம், சுற்றமெனும் பெரிய மலையைத் தான்சுமந்து என்னைத் தனியாய் இலக்கியத்தில் இனிதே உலவ விட்டவளும்
கல்ல குணங்கள் பலகொண்ட நாயகி ஆகிய நாகம் மைக் கென்ன உண்டு கொடுப்பதற்கு? இதையே சமர்ப்பித் திடலானேன்.
Page 5
பதிப்புரை
ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடைய எண்ணிக்கை நாளொரு வண்ணமாக வளர்ந்து வருகின்றது. ஆனல் பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தற்கால இலக்கிய வரலாற்று அறிவு கிடையாது. அத்தகைய வரலாற்றினைச் சொல்லக்கூடிய நூலும் இதுவரையில் வெளிவரவில்லை. அவ்வப்பொழுது எழுதப்படுங் கட்டுரைகளில் வரலாறு அழிவழக்காடப்படுகின்றது. குழுக்களின், அல்லது வட்டா ரங்களின் நலன்களைப் பேணும் வகையில் வரலாற்றுச் செய்திகள் திரிக்கப்படுகின்றன
இந்நிலையில், ஈழத்து இலக்கிய முயற்சிகளுடன் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்பு கொண்டுள்ள பழம் பெரும் எழுத்தாளரான கனக - செந்திநாதன் gഖfങ്ക് அரும்பாடுபட்டு இந்நூலின எழுதியுள்ளார்கள். ஒரு பல்கலைக் கழகத்தின் வேலையை, அவர் தனித்துச் செய் ததில் நாம் வியப்பெய்தவில்லை. ஏனெனில், அவர் ஒரு
நடமாடும் வாசிகசாலையாவர்.
இந்நூல் எல்லோருக்கும் பயன்படத்தக்கது. எழுத் தாளர்களுக்கும், தற்கால இலக்கிய வரலாற்று மாணுக்கர் களுக்கும் நிச்சயம் பெரிதும் உபயோகமாக இருக்கும். அத்துடன், ஈழத்தின் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பற்றி அறிய விழையும் தென்னக எழுத்தாளர்களுக்கு இந்நூல் தேவையான தகவல்களைத் தருகின்றது.
Page 6
"ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்றும் நின்று நிலவப் போகும் அரிய நூலாகும். வருங்கால இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு இந்நூல் பலமான அத்திவாரமாக அமைந்துள்ளது. நமது இலக்கிய பாரம்பரியத்தினைப் பெருமையுடன் நினைத்துப் பார்க்க வைத்துள்ள, அரிய தொண்டினைச் செய்ததற்காக, கனக - செந்திநாதன் அவர்
களுக்கு ஈழமாதா பெரிதும் கடன்மைப்பட்டுள்ளாள்.
★
அரசு வெளியீடு, தமிழ் இலக்கியத்தின் ஒவ்வொரு துறையிலுஞ் சிறந்த நூல்களை வெளியிட்டு வருதலேயே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாண்டில், தமிழிலக்கிய வரலாற்றுத் துறையில் எழுதப்பட்டுள்ள இவ்வரிய நூலினை ஈழத்தமிழ்த் தாயின் திருப்பாதங்களிலே அர்ப்பணிப்பதிற் பெருமை
யடைகின்றேம்.
வணக்கம்.
எம். ஏ. ரஹ்மான் அரசு வெளியீடு.
முன்னுரை
நான் ஆசிரியப் பதவி வகித்துக் கடமை யாற்றிய பத்திரிகைகள் இரண்டு. ஒன்று ஈழகேசரி; மற்றது ஈழநாடு.
ஈழகேசரிக் காலத்தை என்னல் என்றுமே மறக்க முடியாது. எனது தலைவரும் தமிழ்த் தொண்டரு மான திருவாளர் நா. பொன்னையா அவர்களது பெருந்தன்மையாலும், காரியாலய நிர்வாகிகளது இன்முகத்தாலும், அரசியல் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும், எழுத்தாள நண்பர்களும் அங்கு அடிக் கடி வருவது வழக்கம். ஈழகேசரி அலுவலகம் எல்லோருக்கும் அடையா நெடுங்கத வாக" இருந்து வந்ததை யார் மறுப்பர் ?
ஒருநாள் எனது இலக்கிய நண்பர் கனக - செந்திநாதன் அவர்கள் அலுவலகத்துக்கு வந்த போது, தாம் பல காலமாகச் சேகரித்துப் பத்திரப் படுத்தி வைத்துள்ள பழைய பத்திரிகைகளை விற்று விடப் போவதாகவும், ஏதாவது உபயோகமான காரியத்தைச் செய்து விற்றுவிடின் நல்லதெனவும் கூறினர். அப்போது எழுந்த யோசனைதான் 'ஈழத் துப்பேன மன்னர்கள்" என்ற வரிசை.
இலக்கிய உலகை அதிசயத்தில் ஆழ்த்திய "அந்த அறிமுகம் முடியும் வரை அதனை எழுதுபவர்
Page 7
VIII
யார் எனத் தெரியக்கூடாதென்பதற்காகக் கரவைக் கவி கந்தப்பனுர் என்ற புனைபெயரை நானே அவருக் குச் சூட்டினேன். அப்பெயர் ஈழத்து இலக்கிய உல கில் நிலைத்துவிட்டதுமன்றி விமர்சனத்துறையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்துவிட்டது.
அதன் பின்னர், இலக்கிய விமர்சகர் செந்தி நாதன் அவர்கள் வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் பல எழுதினர். மேற் படி கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி மலர்ந்ததெனலாம்.
இத்தகைய இலக்கிய வளர்ச்சி நூல்களையும் ஆராய்ச்சிகளையும் பல்கலைக் கழகம் போன்ற செழுங்கலை நியமங்களே நுண்ணிதாக ஆராய்ந்து வெளியிட்டிருக்க வேண்டும். ஆனல், ஈழத்துப் பல்கலைக் கழகத்தின் கவனம் வேறு திசைகளில் போய்க்கொண்டிருக்கின்றது. பிற்கால இலக்கிய உலகப் பூசலுக்கே அது வித்தூன்றி வருகிறது. இந் நிலையில் தனி மனிதனின் முதல் முயற்சியாக இந்' நூல் வெளிவருவது போற்றற் குரியது.
விமர்சன காரர் என இப்போது பெயர் பெற்று ஈழத்தில் இருப்பவர்களிற் சிலர் பழமையைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாய், தங்கள் காலத்தே தான் எல்லாம் தோன்றின எனும் எண்ணமுடைய வராய் எழுதிவருகிருர்கள். திரு. கனக - செந்தி நாதன், ஆறுமுகநாவலர் தொடக்கம் இன்றைய இளங் கவிஞர்கள் வரை ஆராய்ந்து பழமையையும் புதுமையையும் நமக்கு இந்நூலிற் காட்டியுள்ளார். தமிழ்ச்சுடர் மணிகளையும், ஈழத்து ஒளி விளக்கு களையும், பேணு மன்னர்களையும் இளம் எழுத்தாளர்
ΙΧ
களையும் காலத்தை வைத்துப் பிரித்து ஆராய்ந் திருப்பது மிக நன்று. ஒவ்வொரு பத்தாண்டு காலத்தைப் பற்றி முகவுரையாக விஷயங்களையும் சரித்திர நிகழ்ச்சிகளின் எழுச்சிகள் ஆகியவற்றை யும் கூறிவிட்டு, அப்பத்தாண்டு காலத்தில் எழுதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளார். பின், முடிவுரையாக அப் பத்தாண்டுக் காலத்தில் இலக்கிய உலகம் என்ன சாதித்தது என்பதைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
தென் தமிழ் நாட்டுக்குப் பலதடவை இலக்கிய யாத்திரை செய்ததன் பயனக எனக்கு ஒர் அநு பவம் உண்டு. ஈழத்தைப்பற்றியும் , இங்குள்ள எழுத் தாளர்களைப்பற்றியும், அவர்களின் படைப்புக்களைப் பற்றியும் தென்னகத்தாரின் அறிவு போதியதன்று. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களையே அவர்கள் அறிவார்கள். இத்தனைக்கும் அது அவர்கள் தவரு காது. இத்தகைய நூல்கள் வெளிவந்திருந்தால் ஏற்கனவே அவர்கள் பல விபரங்களை அறிந்திருக் கலாம். அப்படியான ஒரு பெருங்குறை இப்போது நீங்கியிருப்பது உள்ளத்துக்குப் பேருவகை தரு கின்றது.
ஈழகேசரியின் சாதனைகள் பலவற்றுள் அதன் புத்தக மதிப்புரைகள் மேன்மையாக விளங் கின. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொடக்கம் ஈழகேசரி மதிப்புரைகளைப் படித்துக் கடித மூலம் வாழ்த்தினர்கள். அந்த மதிப்புரைகள், விசர்சனங் கள் என மதிப்புப்பெற்றன. ஒவ்வொரு துறை யிலும் அவ்வத்துறையில் துறை போனவர்கள் தாம் அதனை எழுதி உதவிஞர்கள். அவர்களிலே சோ. சிவபாதசுந்தரம், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை
Page 8
, Χ
ச. அம்பிகைபாகன், கனக - செந்திநாதன் ஆகி யோரை மறக்கவே முடியாது.
இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிக மிகத் தேவையானது. "நடமாடும் வாசிகசாலை’ எனப் போற்றப்படும் எனது மதிப்புக்குரிய நண்பர் கனகசெந்திநாதன் இத்தேவையைப் பூர்த்தி செய்து இலக்கிய உலகிற்குத் தமது பங்கினைப் பொறுப் புணர்ச்சியுடனும், முழுமையுடனுஞ் செய்துள் ளார்கள்,
இத்தகைய நூல்களை நல்லறிஞர்களும், எழுத் தாளர்களும் வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதிற் சந்தேகமேயில்லை. இத்தகைய நூல்களால் ஈழ மணித்திருநாடு பெருமையடைகின்றது.
இராஜ அரியாத்தினம்
'கலாநிதி" சாவகச்சேரி, 20-I-64.
பொருளடக்கம்
பதிப்புரை -> «» V v w II V
முன்னுரை A XIO N - - - Y KI KO VIII
கோபுர வாயில் WA WA VO 8 x w XIII நுழைவாயில் « «» a 1. 1922-1930 a a « -6 w 11 1931-1940 a w W - ། 19 1941-1950 - - - 26
முன்னுேடிகள் as e 27 * மறுமலர்ச்சி எழுத்தாளர் a 38 நாட்டுப் பாடல்கள் 51 “பண்டித வர்க்க எழுத்தாளர் . . །ན་54 LoGrassiT 62. மட்டக்களப்பிலே துளிர்த்த ஆர்வம் . . . 64.
69 * ܀ ܧ ܨ ܀ - ܀ ... 1960 س-I951
சிறுகதைகள் * 8 s 76 கவிதைகள் d a 9. நாவல்கள் ... 102 நாடகங்கள் ... 106 கட்டுரைகளும் விமர்சனங்களும். 13 பெண் எழுத்தாளர்கள் & 129
1960 இன் பின்னர் a 134
w. முஸ்லிம் எழுத்தாளர்கள் s a 135 பத்திரிகைகள் 0. 161 பல்கலைக் கழகம் 8 a 175 சங்கங்கள் 77 பிற முயற்சிகள் 8 • & 89 சாகித்திய மண்டலம் us s 198
திருக்கடைக்காப்பு *X ~ XX 204
Page 9
படங்கள்
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சி. வை. தாமோதரம்பிள்ளை அ. குமாரசுவாமிப் புலவர் பிரமயூரீ சி. கணேசையர் சுவாமி விபுலாநந்தர்
அவர்கள்
象 象
பிரமயூரீ சு. நவநீதகிருஷ்ண பாரதியார் s sp.
சுவாமி ஞானப்பிரகாசர் கல்லடி வேலுப்பிள்ளை க. சோமசுந்தரப் புலவர் வே. மகாலிங்கசிவம்
**இலங்கையர்கோன்'
மு. கல்லதம்பி பிரமயூரீ தி. சதாசிவ ஐயர் க. கவரத்தினம் ஆ. பி. அப்துல் காதிர் புலவர் அறபுத் தமிழ் மாதிரி கா. பொன்னையா
வே. திருஞானசம்பந்தபிள்ளை
跨纷
象列
s
கே ாபுரவ ாயில்
"ஈழத்து இலக்கிய வளர்ச்சியாகிய மணி மண்டபத்துள் நுழைந்து, எழுத்துலக மன்னர்களை யும், ஆற்றலிலக்கியச் சிற்பிகளையும், அவர் தம் படைப்புக்களையும் நான் எப்படி வரிசைப் படுத்தி யுள்ளேன் என்பதை அறிய அவாவிநிற்கும் வாசக நேயரே! இங்கே-கோபுர வாயிலில் வைத்தே-சில எச்சரிக்கைகளைச் சொல்ல எண்ணியுள்ளேன். ஏனெ னில், இந்நூலுக்கு - மணிமண்டபத்துக்கு - அவை நிச்சயந் தேவையாகும்.
மட்டக்களப்பிலே, சென்ற ஆண்டு ஆவணித் திங்கள் 23, 24, 25 ஆம் நாட்களில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்க அநுசரணையுடன் கிழக்கிலங் கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய தமிழ் விழா கோலாகலமான முறையில் நடந்தேறியது. ஈழத்தின் நானுபகுதிகளிலிருந்தும் அறிஞர்கள், பண்டிதர்கள், பெரும் எழுத்தாளர்கள், இளங் கவி ஞர்கள், கலைஞர்கள், இலக்கிய இரசிகர்கள் என இலக்கிய உலகின் பல பிரிவினரும் ஒன்ரு க ஒரே மேடையிலே தோன்றியமை இவ்விழாவின் சிறப் பம்சமாகும். மூன்று நாட்கள் நடைபெற்ற இவ் விழாவிலே மொத்தம் - பனிரெண்டு அரங்குகள் இடம்பெற்றன. இவற்றுள் உரை அரங்கிற்கும், கருத்தரங்கிற்கும் தலைமை தாங்கும்படி தழிழ்சிசி
Page 10
XIV
வின் பிரதம அமைப்பு நிருவாகியான திரு. எஸ். பொன்னுத்துரை என்னைக் கேட்டிருந்தார், கலா நிதிகளும், பேராசிரியர்களும், பட்டதாரி அறிஞர் களும், பழம்பெரும் பண்டிதர்களும் நிரம்பியுள்ள அவ்வவைக்கு என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டமை, என்னைச் சற்றே வியப்பில் ஆழ்த்தி யது. அதனை, பிரதம அமைப்பு நிருவாகியிடம் வெளிப்படையாகவே தெரிவித்தேன். அதற்கு அவர் கீழ்க்காணும் பதிலைத் தந்தார்:
'ஈழத்து இலக்கிய உலகத்துடன் நீங்கள் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியான தொடர்பு கொண்டுள்ளவர்கள். "ஈழகேசரி’க் குழுவிலே தொடங்கி, மறுமலர்ச்சி வட்டாரத் , துடன் நெருங்கியுழைத்து, முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திலுந் தொடர்புகொண்டு சேவை செய்தவர்கள். இத்தனை வருடங்களாக ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் வெளிவரும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் ஒழுங்காக வாசித்து, அவற்றிலே தரமானவற்றை அவ்வப் போது அறிமுகப்படுத்தியும் வருகின்றீர்கள். தற்கால இலக்கிய முயற்சிகளை ப்பற்றி நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் வேறு யாரிடமுமில்லை என்பது எனது நம்பிக்கை. தமிழ் விழாவில் இடம் பெறும் ஒவ்வொரு அரங்கிற் கும் அவ்வத் துறையிலே துறை போனவர்களைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்வதே தமிழ் விழாக் குழுவினரின் முடிபு.'
புகழ்ச்சி மொழி என்கிற மதுவில் ஒரு கணம்
திண்டாடினேன். ஒரு விழாவிற்குத் தலைமை தாங்க அழைப்பவர்களை 'நாலு முகமன் வார்த்தைகள்
XV
கூறி அழைப்பது தமிழரது வழக்கம். ஆனல், பொன்னுத்துரை அவ் வழக்கங்களுக்கு அப்பாற் பட்டவர். அவரை ஈழம் அறியும். கண்டனக் காரர்' என்று பெயர் பெற்றவர். தனக்குச் சரி யெனப் பட்டதை நண்பர்கள் - அணியைச் சேர்ந்த வர்கள் என்று பாராது சொல்பவர்; எழுதுபவர். மத்தாப்பு, மணிமகுடம் ஆகிய கூட்டு இலக்கிய முயற்சிகளில் என்னுடன் தொடர்புகொண்டிருந் தாலும், வீரகேசரியின் இலக்கிய சர்ச்சைப் பகுதி யில், ஈழத்தின் சிறுகதை - கவிதை - நாவல் ஆகிய வற்றின் தர மதிப்பீட்டில் என்னேடு மாறுபாடு கொண்டு ‘நெருப்பாகக் கக்கும் கண்டனக் கணை களைத் தொடுத்து முடித்திருந்தார். அவரைப் பொறுத்த மட்டில் நட்பும், அரசியல் உடன்பாடும் வேறு இலக்கிய மதிப்பீட்டு விடயம் வேறு. எனவே, அவர் கூற்றுக்கள் அவர் தம் உள்ளத்து அடித் தளத்தின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்தேன். அதனல், எனக்கு ஒருவகைத் திருப்தி ஏற்பட்டது.
光
நின் தலைமை தாங்கிய இரு அரங்குகளுக்கும் எஸ். பொன்னுத்துரையே வரவேற்புரை நிகழ்த் தினர். அப்போது அவர் பின்வருமாறு குறிப் பிட்டார்:
'கனக-செந்திநாதன் அவர்கள் ஒரு தமிழ்ச் சட்டம்பியார். ஆனலும், தமிழாசிரியர்களிலும் பார்க்க அவர் வேறு ஓர் இனம் - வர்க்கம். ஒரு பெண்ணிற்குச் சீதனமாகக் கொடுக்கக்கூடிய
Page 11
XVI
செல்வத்தைத் தமிழ்ப் புத்தகங்களும் பத்திரி கைகளும் வாங்குவதிற் செலவு செய்தவர். ஆங்கிலங்கற்ருேர்தாம் தமிழில் இலக்கிய விமர் சனஞ் செய்யலாம் என்று சில புதுமை விமர்ச கர்கள் சொல்லிவரும் இந்நாளில், மரபிலே திளைத்து, தமிழிலே தோய்ந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சனத்துறையைச் செப்ப னிடுபவர். சந்தனக்கட்டை தன்னைத்தானே தேய்த்து மணக் குழம்பு தருவதுபோல, தானே சிறுகதை - நாவல் - நாடகம் ஆகிய சிருட்டி இலக்கியங்கள் செய்திருந்தாலுந் தன்னை அதி கம் பிரபலப் படுத்தாமல், பழம் பத்திரிகைப் பரவையுள் மறைந்து கிடக்கும் எழுத்தாளர் களை வாசகர் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். அவர் எழுதியுள்ள கட்டுரைத் தொடர்களும், வெளியிட்டுள்ள நூல்களும் இதற்குச் சான்று LJ 5 (5 ub. அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா வின் கவிதைத் தொகுதியின் விமர்சனமாக கவிதைவானில் ஒரு வளர்பிறை என்ற விமர்சன நூலையும் , தமது மதிப்புமிக்க ஆசானுகிய பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர் களின் வரலாறும் வண்டமிழ் வளர்ச்சியுங் கொண்ட மூன்ருவது கண்ணையும், அகால மரண மெய்திய தமது மகள் பராசக்தியின் நினைவாக ஈழத்துக் கவிஞர் முப்பத்தைந்து பேரது கவிதை கள் அடங்கிய ஈழத்துக் கவிதை மலர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் தமது பணத்தில் மற்றைய எழுத்தாளர்களைப்போலத் தாம் எழு திய சிறுகதைகளை (ஒரு பிடி சோறு முதலியன), விதியின் கை - வெறும் பானை முதலிய நாவல் களை , தாகம் - மன்னிப்பு - ஒளி பிறந்தது என்ற நாடகங்களை வெளியிட்டிருக்கலாம். ஆனல்,
XVII
ஈழம் - அதன் எழுத்தாளர்கள் - அவர்கள் படைப்புக்கள் என்றே சதா எண்ணமிடும் அவரால் விரிந்த மனப்பான்மையில் அப்படித் தான் வெளியிட முடிந்தது.
இன்று நான் அவரிடம் விடுக்கும் வேண்டு கோள் ஒன்றுண்டு. உங்கள் பாதையை நாங் கள் வாழ்த்தி வரவேற்கிருேம். மற்றையோர் சிறுகதைகளையும் நாவல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கட்டும். நீங்கள் ஈழத்துப்பேனு மன்னர்களை, ஈழத்து ஒளி விளக்குகளை, கவிதைக் கடலில் கதை முத்துக்களை, ஈழத்து இலக்கிய வளர்ச் சியை எழுதியுள்ளிர்கள். அவற்றினின்றும் தொகுத்து, நிலைபெறக்கூடிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் விமர்சன நூல் ஒன்றைத் தாருங்கள். விமர்சனம் என்னும் பெயரால் வட்டார நலன்கள் மட்டுமே பேணப்பட்டு, உண்மை வரலாறு மறைக்கப்பட்டு வருகின்றது. கலாசாலைகளிலும் சருவ கலாசாலையிலும் கற் கும் மாணுக்கர் அவற்றையே உண்மையென நம்பி ஏமாந்து போகின்றர்கள். ஆகையால் தான் உங்கள் நூல் உடனடித் தேவையாக இருக்கின்றது. இங்கே இப்போதே அதற்கான சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். இஃது எனது வேண்டுகோள் மாத்திர மன்று, ஈழத்தமிழ்த் தாயின் வேண்டுகோளுமாகும்".
光
திமிழ்த்தாயின் பெயரால் ஒரு தமிழ் விழாவிலே தமிழ் எழுத்தாளருட் சிறந்தவர் ஒருவரால் விடுக்
Page 12
XVIII
கப்பட்ட வேண்டுகோள் என் நெஞ்சத்தடத்திலே நின்றுலாவியது. அநுமான் கூடச் சாம்பவானின் புகழ் மொழி கேட்ட பின்தான் கடலைத் தாண்டி னன் என்பது கதை. அன்பர் பொன்னுத்துரையின் உற்சாக மொழிகளினல் நான் மீண்டும் ஈழத்து இலக்கியக் கடலின் அகல-நீள-ஆழத்தைக் காண அதிற் குதி த்தேன்.
அதன் பயனக வெளிவருவதே இந்நூலாகும். நூலினை எழுதும்போது எத்தனையோ சங்க டங்கள் குறுக்கிட்டன . அவை முழுவதையும் இங்கு குறிப்பிடத்தேவையில்லை. இருப்பினும், இந்நூல் எழுதப்படுஞ் சூழ்நிலையைக் கவனத்திற் கொள்ளல்
வேண்டும்.
*குமாரசுவாமிப் புல வருக்குப் பின்னர் ஈழத் திலே எவ்விதமான இலக்கிய வளர்ச்சியும் ஏற்பட வில்லை. தமிழ், கடிவாள மற்ற குதிரை போலத் தறி கெட்டு ஓடுகிறது என்று நினைக்கும் "படித் தவர்'களும் நம் மத்தியில் இருக்கிரு ர்கள். தாங்க ளாகவே ஏற்படுத்திக்கொண்ட சுற்றுமதில்களுக்கு அப்பால் நடைபெறும் இலக்கிய முயற்சிகளைப் பற்றியும், ஆக்கங்களைப்பற்றியும் அறியும் அக்கறை எதுவுமின்றி, சிறுகதைகள் - நாவல்கள் ஆகியன இலக்கியங்களா ?’ என்று கேட்போரும் இருக்கின் ரு ர்கள். கதை முயற்சிகளுக்கு இலக்கியத்திற்கான * நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவரும் கால ஒட்டத்தினைத் தென்னகத்துத் தமிழறிஞர்கள் உணர்ந்து அவ்வகைப் பணிகளிலே தம்மை ஈடு படுத்திக்கொண்டார்கள். ஈழத்திலே இன்னமுஞ் சிலர் இதனை உணராது, கால ஓட்டத்தைத் தடுத்து
XIX
நிறுத்தலாம் என்று எண்ணுவதுதான் விந்தையிலும் விந்தையாகும்.
இஃது இவ்வாறு ஒருபுறமிருக்க, சிருட்டி இலக் கியகாரர் மத்தியிலும் Լ.j 6ծ குறைகள் உள. பழைமையில் வேரூன் ருத நிலையும் , தொல் காப்பியம் முதலாம். பழைய இலக்கண நூல்களைப் படியாவிட்டாலும், தமது எழுத்துத் துறைக்கு வேண்டியவற்றையேனும் அறிய முயலாமலும் ஈழத்தின் பழைய வரலாற்றினையும், நூல்களையும் படிக்க வேண்டுமென்னும் அவா இல்லாமலும், * ஏதோ எழுதினுல் எழுத்தாளராகிவிடலாம்" என் னும் அலட்சியப் போக்குள்ளவர்களாகப் பலர் இருக்கிரு ர்கள் . படித்தவர்களையும் அறிஞர்களை யும் அலட்சியமாக நோக்குவோரும் உளர். ஒரு பத்து வருட முயற்சிகளை அடுத்த பத்து வருடத்துள் மறைத்தும், மறுத்தும் எழுதும் விமர்சனகாரர்களும் இருக்கின்ருர்கள். பழைய எழுத்தாளரது இலக்கிய சிருட்டிகள் நூலுருவம் பெருது பழைய பத்திரி கைக் குவியலுள் மறைந்திருத்தல் இலக்கிய வர லாற்றுப் புரட்டர்களுக்கு வசதியாகவும் இருக் கின்றது.
关
இந்நிலையிற் குமாரசுவாமிப் புலவர் அவர்களது காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, பின்னர் நிகழ்ந்துள்ளவற்றை ஓரளவு விரிவாகக் கூறியிருக்கிறேன். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்து பாகம் பாகமாக நூல்கள் வெளிவருதல் வேண்டும். ஏன், தனித்தனி எழுத்தாளர்களின் முழுப்படைப்புக்களைப் பற்றிய விசர்சன நூல்கள் எழுதின லும் நல்லதுதான். அப்படியான நூல்கள் வெளிவருவதற்கு இந்நூல்
Page 13
XX
நிச்சயம் ஓரளவாவது உதவி புரியும் என்பதுண்மை யாகும்.
பெரியதோர் இலக்கிய வளர்ச்சிப் பரப்பினை ஒரளவு அடக்கமான முறையில், முக்கிய அம்சங்களை விட்டுவிடாமல் எழுதியுள்ளேன். ஈழத்துப்பேனு மன்னர் கள் வரிசையில் நாற்பது எழுத்தாளர்களைப் பற்றி யும், ஈழத்து ஒளிவிளக்குகளில் மறைந்த பதினன்கு அறிஞர்களைப்பற்றியும் சற்று விரிவாகவும் எழுதி யுள்ளேன். அத்தகைய விரிவைப் பல காரணங் களுக்காக இந்நூலிலே தவிர்த்துள்ளேன்.
இதன் கண் ஈழத்து இலக்கிய முயற்சிகளினதும், அவற்றின் வளர்ச்சிகளினதுமான வரலாற்றை எழுதியுள்ளேன். முயற்சிகள் நடைபெறுவதற்கான பின்னணியைச் சரித்திர நோக்குடனேயே அணுகி
யுள்ளேன்.
ஆணுல், இலக்கிய வளர்ச்சியின் சரிதத்தைச் சொல்லும் அளவிற்கு மட்டுமே, எழுத்தாளர்க ளுடைய சிருட்டிகளைப் பற்றிய விமர்சனம் இந் நூலில் இடம் பெறுகின்றது. விரிவான விமர்சன முறையைப் பிரக்ஞை பூர்வமாகவே தவிர்த்துள் ளேன். இத்தகைய உபாயத்தை நூலின் சுருக்கங் கருதிக் கையாண்டுள்ளேனேயன்றிப் பிறிதொன் றுக்கு மில்லை.
1931ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறிப்பிடப் படும் எழுத்தாளர்கள் சமகாலத்தவராவார்கள். அவர்களுட் சிலரேனும் வளர்ச்சித் தடத்திலே முன்னேறிக் கொண்டிருப்பவர்களாவர். பலர் என் னுடைய நண்பர்களுமாவர். அவர்களது முயற்சி களை எடைபோட்டுக் காட்டுதல், பகையை வலிந்து
XXI
விலைக்கு வாங்குஞ் செயலென்பதையும் நான் உணரு வேன். இருப்பினும், வரலாற்றினைச் சொல்வதற்கு அத்தியாவசியமான அளவிற்கு அவர்களுடைய எழுத்துக்களை நான் விமர்சனஞ் செய்துள்ளேன்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய நேர் மையான வரலாறு எழுதப்படல் வேண்டும் என் கிற வேண வாவே என் நெஞ்சமெல்லாம் நிறைந் திருந்தது. மனிதனிடம் இயல்பாகவுள்ள பந்த பாச உணர்வுகளை ஒரளவிற்கேனும் என்னிடமிருந்து பிரித்து வைத்து, வரலாற்ரு சிரியனின் பொறுப் புணர்ச்சியுடனும், அந்தரக் கயிற்றில் நடக்கும் கழைக் கூத்தாடியின் நிதானத்துடனும், இதனை எழுதியுள்ளேன் என்று துணிந்து கூறலாம்.
எழுத்தாளர்கள் அதீதக்கற்பனை வளங்கொண்ட வர்கள். தாங்கள் எழுத்துலகிற் சாதித்தவற்றைப் பார்க்கிலும், ஏதோவெல் லாஞ் சாதித்துள்ளதான மன மயக்கத்தில் மகிழ்பவர்கள். எனவே, எனது மதிப்பீடு சில சமயம் அவர்களுக்கு மனச் சுளிவினை
ஏற்படுத்தலாம். 'முதுகு சொறிவது” அல்லது இத
மாக நாலு வார்த்தைகள் கூறுவதுதான் விமர்சன மன்று. எழுத்தாளர்கள் தாம் சாதித்த வற்றின் எல்லைக் கட்டுகளை உணர்ந்து, மேலும் முன்னேற வேண்டுமென் கிற நல்லெண்ணத்திற் சில கசப்பான உண்மைகளையுஞ் சொல்லியுள்ளேன். இதனைச் சம் பந்தப்பட்ட எழுத்தாளர்கள் மனதில் வைத்திருப் பார்களேயானல் நன்று அறிவு சம்பந்தமான விசாரணையில் உணர்ச்சி வசப்பட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இந்நூலில், முஸ்லிம் எழுத்தாளர்கள் என்னும் பகுதியைத் தனியே சேர்த்துள்ளேன். சென்ற சில
Page 14
XXIII
மாதங்களாகப் பல முஸ்லிம் அறிஞர்களுடன் தொடர்புகொண்டு, பல தகவல்களைச் சேகரித்து, பல நூல்களை அறபுத் தமிழறிஞர் உதவியுடன் வாசித்து, பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப் பகுதியிலிருந்து, இன்று வரையுள்ள முஸ்லிம் புலவர் களையும் எழுத்தாளர்களையுந் தொகுத்துள்ளேன். இப்பகுதியின் தொகுப்பு வேலையிற் பலர் உதவி செய்திருப்பினும், விசேடமாகத் தெல் தொட்டை ஆ, பி. நூ. அல்லா பிச்சை அவர்களுக்கு நன்றி கூறுதல் எனது கடன் மையாகும்.
并
‘*ழத்து இலக்கிய வளர்ச்சி’யின் கையெழுத் , துப் பிரதியை அரசுப் பதிப்பக நிருவாகியிடங் கொடுத்து ஊர் திரும்பிய நான் , நோய்வாய்ப் பட் டேன். இடதுகை மணிக்கட்டுக்கு அப்பால் விரல் முழுவதும் உள்ளும் புறமும் வீக்கம். இருபத்தி யொரு நாட்கள் மானிப்பாய் மருத்துவ மனையிலே தங்கிச் சிகிச்சை பெற்றேன். இக்கோபுர வாயிற் குறிப்புக்களை எழுதும் பொழுதும் எனக்குப் பூரண சுகமில்லை. பின்னர் கிடைத்த மலைநாட்டு எழுத் தாளர் மன்றம் , இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றைப் பற்றிய ஓரிரு குறிப்புக்கள் விடுபட்டுப் போன மைக்கு இச் சுகயீனமே காரண மாகும்.
காரியம் மிகவும் பெரியது; என் ஆற்றலுள்ள வரை நீந்தியிருக்கின்றேன். என் நினைவுக்குப் படாமல் யாராவது எழுத்தாளரோ, நல்ல படைப்போ தப்பியிருப்பின், காகா கலேல்கர் தமது 'சப்த நதிகள்" என்னும் நூலின் முகவுரையில்,
XXIII
"இந்த நூலில் ஏழு நதிகளின் கரையில் வளர்ந் துள்ள நாகரிகத்தையுஞ் சரித்திரச் சம்பவங்களை யுமே குறிப்பிட்டுள்ளேன். அதனுல், மற்றைய நதி தீரத்து மக்கள் தாம் குறைந்தவர்களென்றே , சரித்திரப் பின்னணி இல்லாதவர்களென் ருே நினைத்துவிடவேண்டாம். காலம் வரும் பொழுது அவர்களையும் அறிமுகஞ் செய்து வைப்பேன். அப்படி விடுபட்டுப்போன நதி தீரத்து மக்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்’ எனக் குறிப்பிடும் பகுதியை நினைவுபடுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு காகா ஜீ யின் சமர்ப்பணத்தையே, நான் சமர்ப்பிக்க விழை கின்றேன் அவர்கள் அவற்றினை எனக்கு எடுத்துக் காட்டுவார்களேயானல், அடுத்த பதிப்பிற் சேர்த் துக்கொள்ளுதல் சாத்தியமாகும்.
இந்நூலின் இறுதியில் எழுத்தாளர்கள் - நூல் கள் - பத்திரிகைகள் - சங்கங்கள் ஆகியவற்றின் அட்டவணை ஒன்றையுஞ் சேர்க்க நினைத்திருந்தேன். எதிர்பாராத காரணங்களினல் அவ்வாசை இப் பதிப்பில் நிறைவேறது போயிற்று. இருப்பினும், புத்தக அமைப்பு முறையினுல், அட்டவணையின் துணையின்றித் தேவையான தகவல்களைச் சட் டென்று தேடிக்கொள்ளலாம் என்பது என் மனக் குறையைப் போக்கி திருப்தியைத் தருகின்றது.
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியை அறிய வேண்டு மென்று விரும்பும் எழுத்தாளர் - விமர்சகர் என் போர்க்கும், கல்லூரிகளிலும் சருவ கலாசாலைகளி லும் பயிலும் மாணுக்கர்களுக்கும் இந்நூல் பயன்படும். மேலும், பத்திரிகைகளையும் புத்த கங்களையும் ஏராளமாக அனுப்பி, ஈழத்தை விற் பனேச் சந்தையாக மட்டும் உபயோகித்துக்
Page 15
XTIW"
கொண் டு, ஈழத் தமிழர் கஃப் பற்றியும் , இங்குள்ள எழுத்தாளர்களேப் பற்றியும் ஒன்று மறியாமலிருக் கும் தென்னகப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இது நிச்சயம் பயன்படும்.
இந்நூலினத் தாமே வெளியிட வேண்டுமென விரும்பி ஏற்றுக்கொண்டு, அழகாக வெளியிட்டுள்ள JT J 1 | 5 ül rá, egy fil Li i s i. gr. ரஸ் மான் அவர் களுக்கும், முன்னுரை வழங்கியுள்ள "ஈழகேசரி" இராஜ அரியரத்தினம் அவர்களுக்கும், "ஈழத்தின ஒளிவிளக்குகளின் படங்களேத் தந்துதவிய சுே சரிக் காரியாலய - திருமகள் அழுத்த பீ அதிபர் மு. சபாரத்தினம் அவர்களுக்கும், புத்த கத்தின் முகப்பினே அமைத்துத் தந்துள்ள "சாணு ' அர் களுக்கும் எனது நன்றியுரித்தாகும்.
இனி "ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் மணிமண்டபத்திற்குள் நீங்கள் பிரவேசிக்கலாம்.
கனக - செந்திகாதன் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, 卓-器一卫盟f罩。
エ
. ¬ -
: ritro' வசனநடை கைவந்த வஸ்ஸா எார்
பூநீலரு ஆறுமுகநாவலர் அவர்கள்
Page 16
உபயம் : கன்ஜகம் மேகன் முக்கம் தமிழ்ப் பரோபகாரி
சி. வை. தாமோதாம்பிள்ளே அவர்கள்
நுழைவாயில்
"நல்லநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?' என்று ஒரு மேதை பாடினர். இது சரியான மதிப்பீடு. புலவர்களிடத்திலும் வித்துவான்களிடத்திலும் செய்யுள் நடை பயின்று கொண்டிருந்த தமிழ்ப் பாவையை அழைத்து " உனக்கு ஏற்ற வன்ன நனட வசன நடைதான் , இனிமேல் வாழக் கூடிய நடையும் வழங்கக்கூடிய நடையும் அது தான்' என்று பழக்கி வைத்த ஆசான் ஆறுமுகநாவலர் அவர்களே என்று பெருமிதம் விஞ்சக் கூறுகின்று ர் இன்னுெகு புலவர்.
அன்னாடை பிடியினடை அழகுநடை பல்லவென அகற்றி அக்காட் பன்றுமுது புலவரிடஞ் செய்யுணடை பயின்ற தமிழ்ப் பாவையாட்கு வன்னங்டை வழங்குநடை வசனநடை
யெனப்பயிற்றி வைத்த ஆசான் மன்னுமருள் நாவலன்றன் அழியாகல்
லொழுக்காடை வாழி வாழி.
இந்த அரு மந்த பாடல் - சொல் வென்ற மல சிலே பொருளன்ற புது மதுச் சோட்டிச் சுரக்கும்'
F-l.
Page 17
2 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பாடல் - சோமசுந்தரப் புலவர் அவர்களுடைய தாகும். இது நாவலரின் உண்மையான தமிழ் மூச்சினை நேர்மையாக விமர்சிக்கிறது. ஈழத்தின் தமிழ் வளர்ச்சிச் சரித்திரம் பூதந்தேவனர் என்ற புலவரோடு ஆரம்பிக்கிறது. பத்தொன்பதாம் நூற் ருண்டு வரையிலுள்ள ஈழத் தமிழ் முயற்சிகளை எழுதப் புகின், பெரியதோர் ஆராய்ச்சி நூலுக் கேற்ற ஏராளமான விடயங்கள் உள. பாவலர் சரித்திர தீபகம், தமிழ்ப் புலவர் சரித்திரம், ஈழமண்டலப் புலவர் சரித்திரம் என்னும் நூல்களிலே எத்தனையோ புலவர் பெருமக்களை நாம் சந்திக்கின்ருேம். முக்கியமாக இரகுவமிசம் பாடிய அரசகேசரி, மன்னர்களாக இருந்தும் மருத்துவமும் சோதிடமும் ஆக்கித்தந்து தமிழ் வளர்த்த செகராசசேகரன், பரராசசேகரன் ஆகியோர், ஈழத்து இலக்கிய வாயிலுக்குப் 'பொன் " பூச்சொரிந்து பொலிந்த செழுந்தா திறைக்கும்” பருளை விநாயகர் பள்ளைப் பாடிய சின்னத்தம்பிப் புலவர், யாழ்ப்பாண வைபவ மாலை இயற்றிய மயில்வாகனப் புலவர், பரசமய கண்டன மாகிய ஞானக்கும்மி பாடிய முத்துக்குமார கவிராசசேகரர், கல்லைக் குறவஞ்சி பாடிய இருபாலைச் சேணுதிராய முதலியார் ஆகியோர் நம் மனத்தகத்தை விட்டு நீங்காமல் கொலுவீற்றிருக் கிரு ர்கள்.
ஆனல், சுருக்கமான இக்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கட்டுரைக்கு முதற் கண் நிற்பவர் பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களே. இருப் பினும், அவருடைய சேவைகள் கூடத் தமிழ் நாட் டின் இக்கால ‘நவீன விமர்சகர்களால், 'பொய் யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே என்ற படி மறக்கப்பட்டு-மறுக்கப் பட்டு - அழிவழக்காடப்படுகின்றன. இதோ, தமிழ்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 3
நாட்டின் " சலங்கை நடை விமர்சகரான "பூரீ மான் ஒருவரின் விமர்சனத்தின் ஒரு பகுதியைப் பாருங் கள்:
* சரவணப் பெருமாளை யரும், விசாகப் பெருமாளையரும், இவர்களுக்குப்பின் தோன்றிய ஆறுமுகநாவலர் முதலானவர் களும் வளருந் தமிழிலக்கியத்தின் இன்றி யமையாத பகுதியாய் மதிக்கத்தக்க கட்டு ரைகளை எழுதி விட வில்லை . இராமலிங்கர் பாவலராகவும் நாவலராகவும் திகழ்ந்த வர். இவரது மனு முறை கண்ட வாசகத் திலே எடுத்துக் கொண்ட பொருளை விரித்து ரைக்கும் ஆற்றல் மிகுந்த வித்தகர் இவர் என்பதைக் காண்கின்ருேம்.'
ஒரு கண்ணிலே வெண்ணெயும், மறு கண் னிலே சுண்ணும்பும் வைத்துக்கொண்டு பேணு பிடிக் கும் இவ்வகை ஆராய்ச்சியாளருக்குப் பதில் சொல் வதற்கு இது தகுந்த இட மன்று. எஃது எவ்வாரு யினும், ஈழத்தமிழ் வளர்ச்சிச் சரித்திரத்திலே, பத்தொன்பதாம் நூற்றண்டின் நடுக்காலம் நாவலர் காலம். அக்காலம், வசன நடையாகிய குழந்தை தளர் நடைக்கு ஆயத் தம் செய்த காலம் . அக் குழந் தைக்கு நடை வண்டி கொடுத்து, உறுதியாக நடக்க உதவிய பெருமை ஆறுமுகநாவலர வர்களுடையது.
ஆறுமுக நாவலர் பரிசோதித்தும், புத்துரை யாத்தும், புதிதாய் எழுதியும் வெளியிட்ட நூல்கள் ஐம்பத் தொன்று. அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதி முடித் தவைகள் பத்து. எழுதத் தொடங்கிய வைகள் ஒன்பது. w ·
Page 18
4 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
எல்லா நூல்களையும் அக்காலத் தமிழிலக்கியச் சூழலிலே வைத்து,
பாலபாடங்கள் - சைவ வினவிடைகள் : பெரிய புராண - திருவிளையாடற் புராண வசனங்கள்;
நாவலர் பிரபந்தத் திரட்டு (கண்டனங்கள்) பெரியபுராண சூசனம்; அவர் பதிப்பித்த நூல்கள்
என ஐந்து பிரிவுகளாக வகுத்துக்கொண்டு ஆராய முற்படின், நாவலர வர்கள் தமிழ்ப் பாவைக்கு ஆசானகிய தன்மை ஒரு சிறிது புலப்படும். பாட சாலை மாணவர் தொடக்கம், பண்டிதர் வரைக்கும் படிப்படியாய்ப் படித்து அநுபவிக்கக்கூடிய ஆக்க வேலைகளை அவர் நமக்கு அளித்துவிட்டுச் சென்ற பெருமையுந் தெரியும்.
அடுத்து வருகிரு ர் ஒரு பரோபகாரி. "செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்ன ளேடுகளை தன் கண்ணிராலே கழுவித் தொல்காப் பியம், கலித்தொகை முதலிய தொன்னுரல்களைப் பதிப்பித்து, ஒல்காப் புகழ் மேவிய தாமோதரம்பிள்ளை தான் அவர், சென்னைச் சருவகலாசாலையிலே முதன் முதல் பீ. ஏ. பரீட்சையில் சித்தியடைந்து, உயர்தர உத்தியோகங்களை வகித்தும் , தமிழ்த்தொண்டை விடாமற் செய்த அவரது சேவைக்கு ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்துவிட்டார்கள்? பத்தொன்ப தாம் நூற்ருண்டின் இறுதிக்காலத் தமிழ்ச் சரித் திரமே தாமோதரம்பிள்ளையின் சரித்திரமாகும். கற்றுணர்ந்தோரேத்தும் கலித்தொகைக்கு அவர் கண்ணிரிலே தோய்த்து எழுதிய முகவுரையைத் தமி ழர் ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டும்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5
அவர் பதிப்பித்த நூல்கள் பதினென்று, எழுதிய நூல்கள் ஆறு.
இப்படித் தொண்டு செய்த பிள்ளையவர்களை யும் தமிழ்நாடு மறந்து கேலி செய்ததையும், உண்மையை மறைத்ததையும் எழுதப்புகின் அவை பாரத மாகிவிடும். இருபதாம் நூற்றண் டிலே கால் வைக்கு முன்பே அவர் அமரரரனர். அவர் அமர ராகிய தினம் 1-1-1900.
இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்தி லிருந்து ஏறக்குறைய இருபத்தைந்து வருடகாலம் தமிழ் மூச்சுவிட்ட புலவர் குமாரசுவாமிப் புலவர் ஆவர். படாடோபத்தைக் கண்டு மயங்காமல், தன்னை உள்ளபடி மதிக்கின்றவர்களிடத்தில் மதிப்பு வைத்து, பிழைகளைக் கண்டவிடத்துக் கண்டித்துத் தலைநிமிர்ந்து வாழ்ந்தார். வடமொழியி லிருந்து மேக தூதம், சாணக்கிய நீதி, இதோபதேசம், இராமோதந்தம் என்பவற்றை மொழிபெயர்த்தும்; தமிழ்ப் புலவர் சரிதம், இலக்கியச் சொல்லகராதி, சிசுபால சரிதம், கண்ணகி கதை. இரகு வமிச சரிதாமிர்தம் என்பனவற்ற்ை எழுதியும்; யாப்பு, தண்டி, அகப் பொருள் ஆகியவற்றிற்குப் புத்துரை எழுதியும்; கம்ப ராமாயணம் (பால காண்டம்), நிகண்டு, மறைசையக் தாதி, சதாசாரக் கவித்திரட்டு, ஞானக்கும்மி ஆகிய நூல்களைப் பதிப்பித்தும்; முப்பதுக்குமேற்பட்ட நூல்களைத் தந்ததுடன், மாணவர்களுக்கு முறை யாகப் பாடஞ் சொல்லியும் அவர் நடமாடும் புத்தகசாலை போன்று வாழ்ந்தார்.
இவர்களைத் தவிர இலக்கிய நயத்தை நுண்ணி தாக எடுத்துக்காட்டி உரை சொல்லிய வித்துவ
Page 19
6 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை; தமிழ் வரலாறு எழுதிய மட்டக்களப்புப் பூபாலப்பிள்ளை; ஈழமண்டல சதகம் செய்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை; தென்மொழி வரலாறு; அபிதானகோசம் என்பவற்றை இயற்றிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை; அகராதி வேலையை முறையாகச் செய்த கதிரைவேற்பிள்ளை , சனிவெண்பா இயற்றிய மட்டக்களப்பு வித் துவான் சரவணமுத்து ஆகியோரும், கவி சிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவர், திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானும் திராவிடப் பிரகாசிகை என்னும் நூலினை இயற்றியவருமாகிய கோப்பாய் சபாபதி நாவலர், தமிழ் காவலர் சரிதை பதிப்பித்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஆகியோரும் , பிறரும் ஈழத்தின் தமிழ் வளத்துக்குச் செய்த உபகாரம் கொஞ்ச மன்று.
மதிப்பிற்குரிய பார்சிவல் பாதிரியார் இருந்து தமிழ் வளர்த்த யாழ்-மத்திய கல்லூரியும், ' வட்டுக்கோட் டைச் செமினரி' என்று அக்காலத்தில் வழங்கப் பட்டு இப்பொழுது யாழ்ப்பாணக் கல்லூரி எனப் பெயர் பெற்ற நிலையமும், கத்தோலிக்க நாடகப் புலவர் பலரும், கிறிஸ்தவ மதத்தோடு தமிழையும் வளர்த்ததை நாம் புறக்கணிக்க முடியாது. முறை யான அகராதி தொகுப்பு வேலையையும், பிறநாட்டு விஞ்ஞான நூல்களைத் தூய தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட தொண்டையும், அக்கால அமெரிக்க மிஷன் பாதிரி மார்கள் ஏற்றுக்கொண்டு பெரும் புகழ் எய்தினர்கள். -
நாவலர் அவர்கள் 1822 இல் பிறந்தார். குமார சுவாமிப் புலவர் 1922 இல் மறைந்தார். இவற் றிற்கு இடைப்பட்ட நூறு வருடகாலத் தமிழ்ச்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 7
சரித்திரத்திலே ஈழ நாட்டின் பங்கு பொன்னெழுத் துக்களாலே பொறிக்கப்படவேண்டிய தென்பதில் ஐயமில்லை. ஈழநாடு தமிழ் நாட்டுக்கே வழிகாட்டித் தலைநிமிர்ந்து நின்றது. பண வருவாயை நாடாமல், உண்மையான தமிழ் அபிமானத்தால் உந்தப் பட்டுச் சேவை செய்தோர் பலர். உபயோக மான-வாழ்க்கைக்கு வழிகாட்டியான-சமயநூல் களையும் இலக்கிய நூல்களையும் வெளியிட்டும், வசனத்தில் எழுதியும், ஆராய்ந்தும், உரையெழு தியும் அவர்கள் செய்த சேவைக்கும், இப்போதைய எழுத்தாளர் செய்யும் இலக்கிய சேவைக்கும் உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் உள்ள பேதம் போன்றது.
1922க்குப் பின் - குமாரசுவாமிப் புலவர் அவர் கள் மறைந்ததின் பின் - இன்று வரை (ஏறக்குறைய நாற்பது வருட காலம்) ஈழ நாட்டில் நடந்த இலக்கிய முயற்சிகளைப் பற்றிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் தொகுத்து ஒரு நூலையேனும் விரிவாக எழுதவில்லை. குமாரசுவாமிப்புல வருக்குப் பின்னர் தமிழ் இலக்கியம் மங்கி, மறைந்து, சுவடே தெரியாமல் ஈழத்தை விட்டு ஓடிவிட்டதா? ஆம் , அப்படிக் கருதியவர்களும் இருந்தார்கள்.
கால ஓட்டத்தைக் கருத்திலே கொள்ளாமல் , வெறும் புராணங்களைப் பதிப்பித்தும், உரை எழுதி யும், சமயச் சண்டைகள் பிடித்தும், கண்டனக் கணைகள் தொடுத்தும், படித்தவர்களும் பண்டிதர் களும் காலத்தைக் கலா விநோதமாகக் கழித்தார் கள் - களிப்புற்றர்கள். பொதுமக்களின் பிரச்சினை கள், அவர்களது ஆசாபாசங்கள், மனே எழுச்சி கள், சிந்தனைகள் எதற்கும் அவர்கள் மதிப்புக்
Page 20
B 7 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கொடுக்கவில் ஃ. அவர்களது மொழி நடையைக் கூடக் கை பாளாமல், ஏதோ ஒரு படாடோபமான
நடையைக் 3.க பாண்டார்கன் . தப்பித்தவறி யாராவது கையாண்டால் இழிசனர் வழக்கு
என்று கேலியுஞ் செய்தார்கள். இதனுல், படித்த வர்களென்ரூ ல், அவர்கள் உலகம் தெரியாதவர்கள் என்றும், ஏதோ புதுவகைச் சாதி மனிதர்க் ளென்றும், தங்களுக்கிடையில் குழு உக் குறியாக ஒரு மொழியைக் கையாள்பவர்களென்றும் அவர் களுக்கும் பொது மக்களுக்குமிடையில் ஒருவன சுத் தொடர்புக்கும் இடமில்ஃயென்றும் கருதியவர் *ளும் இருந்தார்கள்.
குமாரசுவாமிப் புலவருக்குப்பின் இன்றுவரை உள்ள காலத்தை வரையறை செய்து எப்படிச் சுருக்காக ஆராயலாம்? இது சிக்கல் மலிந்த ஒரு பிரச்சினே. வளருக் தமிழ் என்ற புத்தகமெழுதிய சோமலெ" அவர்களே ப் போல எழுத்துக்களே இருபத் தெட்டு வகையாக வகுத்துக்கொண்டு எழுதினுல் நல்லது தான். அதற்கு மிகுந்த பி யான ச பும் கூட்டு முயற்சியும் தேவை , பிரபல சிறுகதை ஆசிரியராகிய கு. ப. ரா. அவர்கள் தமது வானுெலிப் பேச் சொன்றிலே "தற்காலச் சிறுகதை இலக்கியம்" பற்றிக் குறிப்பிடும்பொழுது எழுத்தாளர்கஃா மூன்று வட்டாரமாக்கிப் பேசினுர், அவை கலேமகள் 'மணிக்கொடி, ஆனந்த விகடன் என்பன, அப்படி ஈழத்திலே சொல்ல முயன்ருல் ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன் என மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். இந்தப் பிரிவு வெகு செயற்கை பானது எழுத் தானர் கஃசா அவர்கள் இப்பொழுதில்லாத ஏதோ ஒரு வட்டத் துட் கொண்டுபோய் விட்டுவிடும். இது
! n ۔ = ܗ . உபய பூ ரழகேசரி பின் எ ரிவிழா 1iம்
தமிழ்ப்புலவரேறு - அ. குமாரசுவாமிப்புலவர் அவர்கள்
Page 21
Fடபம் : கனோ : * பிப் f
தே ால்காப்பியக்கடல்
பிரமபரீ. சி. கணேசையர் அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 9.
துவேஷத்தை உண்டாக்கும் விஃன விளேக்கலாம். எனவே அப்படிப் பிரிப்பது முறையன்று என்றே நிஃ2 க்கின்றேன். இதைவிடப் பண்டித வார்க்கம், மறுமலர்ச்சி வட்டம், முற்போக்குக் குழுஉ எனப் பிரிக்கலாமா என்கிற எண்ணமும் எழுகின்றது. இந்த மூன்று வகைக்கும் வரைவிலக்கணம் கூறுதல் இலகுவான காரிய மன்று. மேலும் கால ஓட்டத்திலே ஒரு வட்டத்தை விட்டுப் பிறிதோர் வட்டத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற அநேகம் எழுத்தாளர் உளர். ஒவ்வொரு வட்டத்தைப் பற்றியும் முற்றி ஆரம் முரணு ன வரை விலக்கணங்களே ப் பலர், பல காலத்திற் கற்பித்துச் சிக்க ஃ மேலும் சிக்கலாக்கி வைத் திருக்கிருர்கள். இவற்றை விடுத்துக் காலத்தை ஒட்டிப்பிரிப்பது செளகரியமான வழி. அள்வக் கால எல்ஃப் புள் முற்கூறிய பகுப்புமுறையை உள்ளடக்கி பாழுதுவதுதான் சு:பமானது. அவற்றுள் அகப் படாதவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம் என்பதும் என் எண்னமாகும்.
எனவே,
1922 தொடக்கம் 1930 வரை
1931 தொடக்கம் 11 10 வரை
1941 தொடக்கம் 1950 வரை
1951 தொடக்கம் 1980 வரை 1960 இன் பின்னர் .
Page 22
O ஈழத்து இலக்கிய வளர்ச்சி
என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு மேலே செல்லலாம். இதிலே கூட எச்ச ரிக்கை தேவை. இக் காலவரையறை, சொல்லும் விடயத்தைச் சுலபமாகவும் - சுருக்கமாகவும் சொல்ல நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட உபா யமே ஒழிய, வரம்பன்று. சில நிகழ்ச்சிகள் சிறிது காலம் முன் பின்னுகவும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.
1922 - 1930
இக்கால எல்லையுள் நால்வரே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இந்நால்வரும் தம் மரண பரியந்தம் தமிழ்த்தொண்டு செய்த வர்களாயினும் - பிற்காலத்தேதான் புகழ் பெற்றி லங்கினராயினும் - இக்கால எல்லையைச் சேர்ந்த வர்களே. 'தொல்காப்பியம் - கணேசையர், “யாழ் நூல்' - விபுலாாகந்தர், "உலகியல் விளக்கம் - நவநீதகிருஷ்ண பாரதியார், 'சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி - சுவாமி ஞானப்பிரகாசர் என்போரே இவர்கள். இந்நால்வரும் ஈழத்தின் ஒளிவிளக்குகள் என்பதற்குச் சந்தேக மில்லை.
தமிழ்ச்சுடர் மணிகளாகிய நாவலர், தாமோ தரனுர், குமாரசுவாமிப் புலவர் என்போரது பழைய பண்பாட்டை மறவாத, சிஷ்ய பரம்ப ரையாக மகாவித்துவான் சி. கணேசையர் அவர் கள் விளங்கினர். மதுரைத் தமிழ்ச் சங்க வெளி யீடாகிய “செந்தமிழில் இலக்கண நுணுக்க விட யங்களை எழுதியும், பெரும் வித்து வான்களோடு தர்க்கித்தும் அவர் இக்காலத்திலேயே புகழெய்தி விட்டார். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவில்லாதது ஈழத்துக்குப் பெருமை தரக்கூடி யது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரை விளக்கக்
Page 23
ஈழத்து இலக்கிய வளர்ச்சி
குறிப்பெழுதியதைத் தான் இங்கு குறிப்பிடுகின் றேன்.
ஈழத்துப் பெரும் புவிவராகிய அரசகேசரியின் "இரது மிெசத்திற்கு உரை எழுதிய காலத்தைப் பார்க்கிலும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் வெளி வந்த காலத்திதோன் அவர் புகழ் ஓங்கத் தொடங்கிற்று. அவருடைய சஷ்டி பப் த பூர்த்தி விழாவை 8-10-38 இல் கொண்டாடிய பொழுது, தமிழ்நாடும் ஈரமும் ஒருமுகமாக வாழ்த்தின. அதை அடுத்து தொன் - சொல்ல திகாரத்தையும் பொருளதிகாரத்தையும் உரை விளக்கக் குறிப்புக் களுடன் வெளியிட்டு கனேசையர வர்கள் ஈழத்தின் புகழை மேலும் ஒருபடி உயர்த்தினூர்,
1859ஆம் ஆண்டில், சைமன் காசிச்செட்டி என்ப ரொல் ஆங்கிலத்தில் "தமிழ்ப் புலவர் சரித்திரம்" எழுதப்பட்டது. 1888 இல் ஆனல்ட் சதாசிவம்பிள்ளே அவர்களால் 'பாவலர் சரித்திர தீபகம்" என்ற பெயரால் தமிழ்ப் புலவர் சரித்திரம் தமிழில் எழுதப்பட்டது. இதனே விரித்து, 1918 இல் குமார சுவாமிப் புலவர் அவர்கள் , "தமிழ்ப் புலவர் சரித்திரத்தை எழுதினு ர். 1922 இல் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளே அவர்களால் மிகச் சுருங்கிய அளவில் "ஈழமண்டலப் புலவர் சரித்திரம்" தொகுக்கப் பட்டது. 1939 இல் இவை எல்லாவற்றிலும் இருந்து மலரெடுத்து அழகிய மாலே யாகத் தொடுத்து "ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதத்தைக் கனே சையர் அவர்கள் தத்தார்கள். இது கனேசையர் ஈழத் தமிழர்களுக்களித்த முதுசொத்து. இதை விட மாணவர்களுக்காக குசேலர் சரித்திரத்தையும்
டயர் : *ஆர் கிரு: என் 'நீ ம் முத்தமிழ் வித்தகர்
சுவாமி விபுலாநந்தர் அவர்கள்
Page 24
நடபம் : ழகேசரி வெள்ளிவிழா வர்
நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 3.
அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக் கன சுத்தத்தை முக்கிய நோக்கமாகக் கொண்ட அவரது தமிழ்நடை இறுக்கமும் கடினமும் கொண் டது என்பதுண்மை. சாதார ண மூன்ருந்தரப் புலவ ரும் முதற் றரக் கவிதா சிரேஷ்டர்களும் ஒரே வகையாக எழுதப்பட்டிருக்கிருர்கள் என்பது ஏழ ாண்டவப் புவவர் சரித்திரத்தைப் பற்றிய ஒரு குறை பாது ம .
ஈழ நாட்டிலே பி. எஸ்ளி. என்னும் ஆங்கிலப் பட்டத்தோடு முதன் முதலாக மதுரைத் தமிழ்ப் பண்டிதராகிய பெருமைக்குரியவர், கிழக்கு மாகா னத்திலுள்ள மட்டக்களப்பைச் சார்ந்த காரை நிவிலே பிறந்து, தமிழ்பேசும் இடமெல்லாவற்றிற் கும் உரிமையாளராக விளங்கிய விபுலாநந்தர் அவர் கள். அவரது "யாழ் நூல்" ஈழத் தமிழர்க்குப் பெருமை பளிக்கக்கூடியதென்பதிற் சந்தேகமில்லே. ஆணுல், 1927 இல் வெளியிட்ட மதங்க சூளாமணியும், பண்டித மணி கதிரேசச் செட்டியாரது மணிமலரில் எழு இப ஆங்கில வாணியுந்தான் சராசரித் தமிழ் பபுத்த இரசிகர் கஃாக் கவரக் கூடியன என்பது தான் என் முடிவு. 'விபுலாநந்தத்தேன்" Gf it II) it i. ருெ குதியும், அவருடைய கட்டுரைத் தொகுதி சுளும் சமீப வெளியீடுகளாக வெளிவந்திருக் கின்றன. அவருடைய சொற்பொழிவும் கட்டுரை களும் ஏற்ற இறக்கமின்றிச் சலசல என் ருேடும் ஒரு தெளிந்த நீரோன டபோன்று காட்சி அளிக் கின்றன. எத்தனையோ புதுமையான விடயங்களே அவர் சொல்வியிருப்பதோடு மறுமலர்ச்சி இலக்கி பத்துக்கு விந்து ன்றி, பாரதி பாடல் தொடக்கம் நாட்டுப் பாடல் வரை நாட்டில் முழங்க முயற்சியும் செய்திருக்கின் ருர்,
Page 25
4. − ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தமிழ் நாட்டிலுள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தை அடைந்து, ஈழத்தையே தாய்நாடாகக் கொண்டு வாழ்ந்த நவநீதகிருஷ்ண பாரதியார் 1922 இல் வெளியிட்ட உலகியல் விளக்கமும், பிற்காலத்தில் எழுதிய திருவாசக உரையும் படித்த - பண்டித வர்க்கத்தினராற் பெரிதும் போற்றப்பட்டன. அச்சேருத காந்தி வெண்பாவும், பிறபாடல்களும், மாணவர்க்காக எழுதிய இலக்கண நூல்களும், பொதுசன இரஞ்சக மான அவரது சொற்பொழிவுகளும் பாரதியாரைப் பற்றிய முடிவைச் சிக்கலாக்குகின்றன என்டி துண்மை . P.
தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சியையே g» u Grif மூச்சாகக் கொண்ட சுவாமி ஞானப்பிரகாசர் அவர் " கள், தமிழ்நாடே இன்னும் உள்நுழையாத தமிழ்ச் சொற்களின் தாது ஆராய்ச்சியில் இறங்கி அருமை யான அகராதியை உருவாக்கியிருக்கின்றர். சாதா ரண வாசகர்களுக்கு இது தெரியாத சங்கதி தான். எனினும், இதனுலே தமிழின் தொன்மை-பரப்புதனித்தன்மை - மற்ற மொழிகளுக்குத் தாயான விதம் எல்லாம் புலணுகும். மேலும், தமிழிலே, தருக்கம், யாழ்ப்பாண வைபவ விமரிசனம் முதலிய உபயோகமான நூல்களும், பல கண்டன நூல்க ளும் எழுதியிருக்கின்ரு ர். முந்திய மூவரிலும் பார்க்க நடையில் எளிமையும், சாதாரன வாசகனுக்கு விளங்கவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதி பலிப்பும் இவரிடம் காணப்படுகின்றன.
இந்நால்வருடன், இன்னும் ஒரு வரைப்பற்றி யும் குறிப்பிடவேண்டும். சாதாரண மக்கள் கவி யாக-விகடகவியாக-சாதாரண மக்களின் அபி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5
லாஷைகளைப்பாடும் கவியாக-இருந்த ஆசுகவி வேலுப்பிள்ளை தான் அவர். 'சுதேச காட்டியம் என்ற பத்திரிகையை நடாத்திப் பொதுசனப் புகழைப் பெற்ருர். பத்திரிகையின் குறிக்கோளாக அவர் போட்டுக்கொண்ட்து என்ன தெரியுமா? "யதார்த்த வாதி வெகுசனவிரோதி" என்பதுதான்! அவ ருடைய பெரும் முயற்சியாக “யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்ற பெரு நூல் விளங்குகின்றது. இது யாழ்ப்பாணத்தின் பழைய சரித்திர சம்பவங்களை யும், குடியேற்றங்களையும், சாதி ஆராய்ச்சிகளை யும் அறிய விரும்புகிறவர்கள் படித்துப் பார்க்க வேண்டிய நூலாகும். இவரது பாடல்களும், வசனமும் குத்தலோடும் கிண்டலோடும் கூடியவை. *கண்டனங்கள் கீறக் கல்லடியான்' என்ற பெருமை பெற்ருர் இவர். ---
ஆறுமுக நாவலர் தொடக்கம் வேலுப்பிள்ளை வரையுமுள்ள புலவர் பெருமக்களையும், வித்துவ இரத்தினங்களையும் எழுத்தாளர் வரிசையிலே சேர்க் கலாமா? இது கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. ‘எழுத்தாளன்' என்று இக்காலத்தில் வழங்கப்படும் பொருளில் - சொல்லில் - அவர்கள் விளங்கவில்லை யென்ருலும், அவர்கள் செய்த முயற்சிகளாலே தான் இன்றும் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்ருேம் என்பதுண்மை. இப்படியான ஒளிவிளக்குகளின் ஆராய்ச்சி நூல்கள், கண்டனங்கள், முதலிய வற்றேடு சாதாரண பொதுமக்கள் படித்து இரசிக் கக்கூடிய கதைகள்-நாவல்கள் இல்லையா? என்ற குரல் கேட்கின்றது.
தமிழ்நாட்டில் வேதநாயகம் பிள்ளை, மாதவையா, இராஜமையர், பொன்னுசாமிப்பிள்ளை, நடேச சாஸ் திரிகள் முதலியோர்களும், ரெங்கராஜ",துரைசாமி ஐயங்கார் போன்றவர்களும் இலக்கியத் தரமுள்ள
Page 26
6 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நாவல்களே பும், துப்பறியும் கதைகளே யும் எழுதி
ந்ேதபோது அதன் வாடை ஈழந்தைத் தாக்கி வில்லேயா? ஈழம் வேலிகட்டிக்கொண்டு வாழ்த்த தTF
இல் வவேயில் ஃ.
ஈழத்தின் புனே கதை இலக்கிய முயற்சிகள் திருகோணமலையிலே தொடங்கிற்று என்பது குறிப் பிடத்தக்கது. ஆங்கிலக் கதையைத் தழுவி, இன்னுசித்தம்பி அவர்கள் எழுதிய "ஊசோன்பாலந்தை கதை' 1891 இல் வெளிவந்தது. இதுவே ஈழத்திலே வெளியான முதல் நாவலாகக் கருதப்படுகின்றது. தி. த. கனகசுந்தரம் பிள் ஃாயின் தமையனர் திரு கோனாஃப் சாவணமுத்துப்பிள்ளே அவர்கள், மோக ணுங்கி என்னும் கற்பனே நாவஃவ எழுதி 1898 இல் பதிப்பித்தார். இரண்டாம் பதிப்பில் இந்நாவலின்
குடம் சொக்கநாதன் என்று மாற்றப்பட்டது.
"நாகரிகமான புதுமுறை கொண்டு தம் நாட்டிற் கற்பனு சரித்திரங்கன் எழுதி வெளியிட்டவர்கள் மிகச்சிவரே . இவர்களில் முத விாவதாக வைத் தேன்ணப்படுபவர்கள் சி. வை. சின்னப்பபிள்ளே பளர்கனே' என்று வண்ஃண நகர் மா. சிவராமலிங்கம் பிள்ளே அவர்கள் ஒரு முகவுரையிற் கூறுகின்று ர். சி. வை. சின்னப்ப பிள் ஃ அவர்கள் தமிழ்ப் பரோபகாரி: சி. வை. தாமோதரம்பிள் ஃ அவர் கனது கனிஷ்ட சகோதரராவர். இவர் இந்தியா விற் கெளரவமான நடத்தியோகத்திலமர்ந்து, பின் உபகாரச் சம்பளம் பெற்று இங்கு வந்து எஞ்சிய *ாபிக்விதக் கல்வி விருத்திக்கே அர்ப்பனித்தவர். இவர் வீரசிங்கன் கதை, இரத்தினபவாணி, உதிரபாசம், விஜயசீலம் முதலிய நாவல்களே எழுதியிருக்கின் ருர், ஈழ நாட்டின் சரித்திரத்தோடு சம்பந்தப்பட்ட
- | i . ai ai .
சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி
சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்
Page 27
ம் பூகோ சி வேள் சிப்
آ- - - - - !)
கல்லடி வேலுப்பிள்?ள அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 17
விஜயனின் கதை "விஜயசீலம்". அது 1916ஆம் ஆண்டிலேயே ஒரு நாவலாக எழுதப்பட்ட தென்கு ல் ஆச்சரியப்படக்கூடிய விடயமல்லவா ?
இவரை அடுத்துப் பலர் இத் துறையில் முயன் றனர். ஆணுல், வீரசிங்கன் கதை, விஜய சீலம் என்ற நூல்கள் பெற்ற வெற்றியை அவை அடைய வில் aே) என்று பலர் கருதுகின்றனர். இடைக்காடர் அர்ைகளால் எழுதப்பட்டு 1985 ஆம் ஆண் புள் வெளிவந்த சித்தகுமாான் என்ற இருபாக நாவஃ
நாவல்' என்று சொல்வதற்கு இயலாமல் இருக் ன்ே றது. வெறும் உபதேசங்கஃனக் கதா பாத்திரங் 4ள் மூலமாய்ப் போதிக்கும் ஒரு போதனே நூல் போல் அது காட்சியளிக்கின்றது.
ஆணுல், இதனோத் தொடர்ந்து வெளிவந்த அ. நாகலிங்கம் எழுதிய " சாம்பசிவ ஞானுமிர்தம்
அல்லது 'ஈன்னெறிக் களஞ்சியம்" (1937) ஏ ன் தும்
|l, I sւ, i; நல்லறிஞர்களின் பாராட்டைப்
பெற்றது.
துப்பறியும் நாவல்களாக பூங்காவனம் (மா. சிவ ராமலிங்கம் பிள்ளே), பவளகாங்தன், அருருேதயம் (வாணி யூர் இராசையா), செல்வாத்தினம் (வே. சு. நவரத்தினம்), கேவர்னன் (வே, வ. சிவப்பிரகாசம்), குலகாயகி திலக வதி (ம. க. சின்னேயா), காந்தமலர் (சி. வே. தாமோதரம்) என்பன இக்கால எல்லேயுள் எழுந்தன. இந்தியாவி விருந்து இங்கு வந்து விரகேசரியிற் கடமை பாற்றிய ப. கெல்லேயாவும் மூன்று நாவல்களே எழுதினு ர். -
F-3.
Page 28
8 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பெண் எழுத்தாளரும் இந்தக் காலத்தில் நாவல்கள் எழுதியுள்ளமையை விசேடமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். செ. செல்லம்மாள் என்பவர் ‘இராசதுரை' என்ற நாவலை எழுதினர்.
இக்கால எல்லையில் பழந்தமிழ் மரபினை அடி யொற்றிப் பிறந்த இலக்கிய முயற்சிகளையும், அவற் றினக் காலாகக் கொண்டு மலர்ந்த புதுவகை இலக் கிய முயற்சிகளையும் காணுதல் கூடும். பழைமையும் அதன் வழிவந்த புதுமையும் ஒருசேர சங்கமித்தமை யால், இதைச் "சங்க மகால'மெனவும் கூறலாம். அன்றியும், எதிர்காலப் புதுமை முயற்சிகளுக்கு இக்கால எல்லையின் முயற்சிகளே அடித்தளமாயும் அமைந்துவிட்டன.
1931 - 1940
இக்காலத்திலே, ஆசியாவின் இலக்கிய முயற்சி களிலே பரவலான மறுமலர்ச்சி தோன்றத் தொடங்கிவிட்டது எனப் பல விமர்சகர்கள் கருது கின்றர்கள் ; உண்மை. பாரத தேசத்திலும் - தமிழ்நாடு உட்பட-இக் காலத்தில் அரசியற் பின் னணி உந்துதலினலே இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட் டது. மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரக இயக்கம் தேசமெங்கும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, அகிம்சை ஆகிய கொள்கைகளைப் பிரசாரஞ் செய்ய ஒவ்வொரு மாகாணத்திலும் புதிய சத்திகள் கிளைத்தெழுந்தன. ஆட்சி மொழி யான ஆங்கிலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெருஞ் சோதியின் முன சோன் பயை இழந்தவை யாகக் கருதப்பட்ட சுயமொழிப் பத்திரிகைகள், புதிய கோலத்திலே சரிநிகர் சமானமாகத் தலை தூக்கின. தமிழ் நாடும் இத்தொண்டிலே பின் தங்கிவிடவில்லை ஆனந்த விகடன், தமிழ் நாடு, சுதந்திரச் சங்கு, ஊழியன் ஆகிய பத்திரிகைகள் அதிலே விசேடமாக முனைந்து முன்னேறின.
Page 29
20 ஈழதது இலககிய வளர்ச்சி
ஆங்கில விமர்சன அறிவுடன், சமகால நிகழ்ச்சி களை மட்டும் அசைபோட்டுக்கொண்டு, வித்தாரஞ் செப்ப முன்வந்துள்ள புது விமர்சகர், ஈழநாட்டின் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயுள்ள அரசியல் தாக்கத்தினை நாட்டின் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். 1956 இல் நடைபெற்ற 'மெளனப் புரட்சியிலிருந்து ஈழத்தின் ஆற்றலிலக்கிய முயற்சிகளின் கணக் கெடுப்பினை நடாத்த முன்வருவோருக்கும் பஞ்ச மில்லை. காலவரையறைகளை இப்படிச் சுருக்கிக் கொள்வது சில பல வட்டார நலன்களைப் பேணுவ தற்குச் செளகரியமாக இருக்கலாம். ஆனல், இஃது இலக்கிய வரலாற்று மாணுக்கனை ஏமாற்றுகின்றது. இலக்கியம் அரசியல் தாக்கங்களுக்கு மசிந்து கொடுக் காத சுயம்புவன்று. அரசியல் தாக்கத்தினுல் இலக், கிய விழிப்புணர்ச்சி பல சந்தர்ப்பங்களிலே ஏற்பட்டி ருக்கின்றது. இருப்பினும், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில், பெருமளவில் அரசியல் தாக்கத்தினை உணர்ந்த கால எல்லை, இதுதான் (1931-1940) என்பது எனது அபிப்பிராயமாகும். சில புத்தி சாலி” விமர்சகர்கள், ஒரு காலத்தின் இலக்கிய எழுச்சியை அவதானித்துவிட்டு, சரித்திரத்தில் உதிரியாகவுள்ள ஒரு சம்பவத்தினைப் பெயர்த் தெடுத்து, நேர்மையற்ற காரண வாதங்களுடன், பொருந்தாத் திருமணஞ் செய்து வைக்கின்ருர்கள். இச்செயல் வரலாற்றுப் புரட்டாகும்.
பாரத நாட்டின் காந்தீய இயக்கத்திற்கும், ஈழ நாட்டின் தமிழ் இலக்கிய முயற்சிகளிலே ஏற்பட்ட மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இக் காலத்தில் எழுதப்பட்ட பல கதைகள் காந்தீயப் பிரசார மூச்சினை அடிநாதமாகக் கொண்டு விளங்கி, எனது கூற்றினை நிரூபிக்கின்றன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 2
இக்கால எல்லையிலேதான் யாழ்ப்பாண வாலி பர் காங்கிரசின் “பகிஷ்கார இயக்கத்திற்குப் பக்க பலமாகவும், காந்தீய நோக்கை மக்களிடையே பரப்புந் தொண்டிற்காகவும், புதிய இளைஞருலகைக் கையேற்று அவர் தம் படைப்புகளை வெளியிடும் நோக்கத்திற்காகவும் திரு. நா. பொன்னையா அவர் களால் ஈழகேசரி தொடங்கப்பட்டது. அது தொடக்க காலத்தில் கடினமான இலக்கிய-சமயக் கட்டுரை களைக் கொண்டு வெளிவந்தது. பின்னர், பழைமைக் கும் புதுமைக்கும் நடந்த போராட்டமாக அது ஐந்து வருட காலத்தைக் கழித்தது. ஒரு புறத் திலே திருமுருகாற்றுப்படை, பெரும்பாணுற்றுப் படை, ஆயிரத்தெண்ணுாறு வருடங்களுக்கு முன் தமிழர் நிலை, வேளாளர் வருண ஆராய்ச்சி முதலிய விடயங்களும், மறு புறத்திலே சுயா, அநுசுயா முதலி யோரது யாழ்ப்பாண நடை ’க் கட்டுரைகளும், அருணுேதயம், பவளகாந்தன், தேவி திலகவதி முதலிய நாவல்களுமாக அது வெளியிட்டது.
இதே காலத்திற்ருன் க. வே. சாரங்கபாணி (ஆசு கவி வேலுப்பிள்ளையின் மகன்) என்ற எழுத்தாளர் அரசியல், விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலே தன் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்தார். கைவண்ணம் என்கிற சொல்லைக் கருத்துச் செறி வுடன் உபயோகிக்கின்றேன். மிக இளமையிலேயே மரணமடைந்த இந்த எழுத்தாளர் ஈழத்தின் ஒளி விளக்காகத் திகழ்வார் என்றே கருதப்பட்டார். இவரது ‘நமது தாயகம்" என்கிற நூல் மிடுக்கான வசனங்கொண்டது. அந்நூலும், சத்தியேஸ்வரி என்கிற நாடக நூலும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன,
Page 30
22 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இந்தக் கால எல்லையுள் முக்கியமாகக் குறிப் பிடப்பட வேண்டியவர் கவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களே. புலவர் அவர்களது "ஆடிப்பிறப்பு' *கத்தரி வெருளி முதலிய பாடல்களை வைத்துக்கொண் டும், பிற தனிப்பாடல்களை வைத்துக்கொண்டும் ,அவ ரைப்பற்றி கற்பனை வளமற்ற "வெறும் யதார்த்தக் கவிஞர்" எனப் பிழைபட்ட ஒரு முடிவுக்குச் சில தற்கால விமர்சகர்கள் வந்திருக்கிரு ர்கள். சிறுவர் களுக்குப் படிப்பிக்க உகந்த பாடல்களை - ஒரு தேவைக்காக அவர் எழுதிய அந்தப் பாடல்களை - வைத்துக்கொண்டு, ‘அவர் ஒரு புதுமைக் கவிஞர்' என்று முடிவு கட்டுவது தவறு. பழைமைக்கும் புதுமைக்கும் நடந்த போராட்டத்தின் பிரதிநிதி யாகத் தான் அவர் காட்சியளிக்கின்ரு ர். 'கவிஞர் திலகமாய் விளங்கியவரும் 1953 இல் காலமாகிய வருமாகிய நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஒரு பெருங் கவிஞராவர். அவருடைய புகழ் ஈழத்துக்கு வெளியே பரவாமலிருப்பது வருந்தத்தக்கது. அவர் பதினுயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள் ளார். 'ஆடிப்பிறப்பும், கத்தரித் தோட்டத்து வெருளியும் என்ற பாடல்கள் மிகச் சிறந்தன. இலங்கை வளமும் தால விலாசமும், சிறுவர் செந்தமி ழும் அவருடைய சிறப்பான நூல்கள் " என்று “வளருந் தமிழ்’ என்ற நூலில் ‘சோமலெ அவர் கள் எழுதியிருப்பதை வாசித்தால், அவரும் சோம சுந்தரப் புலவர் அவர்களைச் சரியாக மதிப்பிடவில்லை என்றே தோன்றுகின்றது. தங்தையார் பதிற்றுப் பத்து, நாமகள் புகழ்மாலை, உயிரிளங் குமரன் நாடகம், கதிரைச் சிலேடை வெண்பா என்பனவும், மரதனஞ்சலோட்டமும் புலவர் அவர்கள் பாடியவை என்பதை நாம் நினை விற்கொள்ளல் வேண்டும்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 23
1938 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்னர் பின்ன ராகப் பல எழுத்தாளர்கள் எழுத்துத் துறைக்கு வந்துவிட்டார்கள். எனினும், இவர்களையெல்லாம் 1940 ஆம் ஆண்டிற்குப் பின்வந்த எழுத்தாளர் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதா இருக்குமென நினைக்கின்றேன்.
ஈழநாட்டுப் புலவர் பெருமக்களையும் அறிஞர் களையுங் கொண்ட ' கலாநிலையம் என்னும் தாப னம் க. நவரத்தினம் அவர்களின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டு, அங்கு சொற்பொழிவுகளும் ஆராய்ச்சிகளும் நடாத்தப்பட்டன. கலை ஆக்கங் கருதி ஞாயிறு என்னும் சஞ்சிகையும், சில காலம் நடாத்தப்பட்டது. ஒரு சில இதழ்களே வெளி வந்தாலும் வாசகர் நெஞ்சிலே அது நிலையான ஒர்
இடத்தைப் பெற்றுவிட்டது.
இந்தச் சந்தர்ப்பத்திலே, அமைதியான முறை யில் இலக்கிய இரசனையையும், முறையான கல்வி யையும் பரப்பத் தொண்டு செய்த ஒருவரைக் குறிப் பிட்டேயாக வேண்டும். அவர்தான் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலையை மையமாகக்கொண்டு அவர் ஒரு காவிய பாடசாலையை உண்டாக்கினர். தமிழிற் பால பண்டித - பண்டித வகுப்புக்களும், சமஸ் கிருத-சிங்கள வகுப்புக்களும் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்பட்டன. பண்டிதர் அவர்களின் இரசிகத்தன்மையும், அவரு டைய படிப்பிக்கும் ஆற்றலும், சொற்பொழிவுத் திறனும் அங்கே படித்த மாணவர்களையும், அவர் களாற் பரம்பிய மாணவ வர்க்கத்தையும் இறுகப் பற்றிக்கொண்டது.
Page 31
4 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இதே காலத்திலே, கோப்பாப் அரசினர் ஆசிரி பர் சுவாசாஃலயில் தமிழ்ப் பேராசிரியாக இருந்த விரும் , சுற்பஃனக் களஞ்சியம் என்று போற்றப்படுப வருமான குருகவி மகாலிங்கசிவம் அவர்கள் தமது ஆழ்ந்த புலமையுள்ள சொற்பொழிவினுல் இலக்கிய இரசனேயை வளர்த்தனம் ஈண்டு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
1923 ஆம் ஆண்டிற்குப்பின் சுமார் பத்து வருட காலம் துரங்கிக் கிடந்த பாழ்ப்பான ம் - எதற் கெடுத்தாலும் தமிழ் நாட்டையே எதிர்பார்த் திருந்த யாழ்ப்பான ம் - தன் துரக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது.
இதைப்போன்ற ஓர் எழுத்தாளர் எட்டாரம் கொழும் பில் "வட்டத் தொட்டி"யாகக் கூடி ஈழத் தமிழரும், வளர்ந்து வரும் தமிழிலக்கியப் பரப்பை
அறிவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என முனேத்
Jj ሇj! "
இத்தகைய ஒரு பின்னணியிலே பழைமையை ஆராய வேண்டும் புதியனவற்றை ஆக்கவேண்டும்; அதிலும் ஈழத்துக்கே தனித்துவமாக அமைந்துள்ள கலாசாரத்தினபும் பண்பாட்டி ஃபேபும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற ஓர் எழுச்சி உதயமாயிற்று. பிற் காலத்திலே "தேசிய இலக்கியம்' என்பதை ஒரு "கோவு "மாக முன்வைத்தவர்கள் இந்தக் கால எல்லே பின் எழுச்சியை உணரக் கடன்மைப்பட்டவர்கள். இவ்வெழுச்சிக்கு ஏற்றதொரு சங்கப் பவன கயாக "ஈழகேசரி'யே எழுத்தாளர் முன் காட்சியளித்தது.
இக்காலத்தில் வட பெரும்பாக வித்தியாத சிசி
பாயிருத்த கே. எஸ். அருனந்தி அவர்கள், ஆசிரியர் சங்கங்களின் உதவியோடு பாடசாஃ மாணவர்கள்
፳፰፻፷ቖ
■
Iቖ..ቸ דק
உபயம் புகே சி பெ. வி - ர ற வர்
தங்கத்தாத்தா
திரு. க சோமசுந்தாப்புலவர் அவர்கள்
Page 32
I. iiiiiii : it is :* ச ரி :
குருகவி
திரு. வே. மகாளிங்கசிவம் அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 25
படிப்பதற்கேற்ற இலக்கிய பாடல்களேப் புனே பு மாறும் , அவற்றிற்குப் பரிசில்கள் வழங்கு மாறும் ஏற்பாடுகள் செய்தார். இந்த முயற்சியின் பெறு பேருகத் தமிழாசிரியர்களிடையே புதிய பல கவிஞர்கள் தோன்றினூர்கள். பிள்&ளப் பாட்டு ' ( 1938) என்ற அந்த நூ வால் எத்தனேயோ பேர் தன்னம்பிக்கை கொண்டு எழுத்துலகிற்கு வந்தனர்.
எனவே, 1910 ஆம் ஆண்டிற்குப் பின் தமிழி லக்கியத்திலுள்ள பல துறைகளிலும் எழுத்தாளர் முன்னேறித் தமது படைப்புகளே ப் பொது மக்க ருக்கு முன் வைப்பதற்கு வேண்டிய சாதகமான சூழ்நிலைகள், இக்கால எல்லேயின் பின் ஐந்து வரு டங்களுக்குமிடையிற் பரவலாக ஈழ நாட்டிலே தோன்ற ஆரம்பித்து விட்டதென்பதை - 고I தானிக்க வேண்டும். இச்சாதகமான சூழ்நிஃப்கள் உருவாகியிருந்த காலத்திலே தான், அப்பொழுது 'ஆனந்தவிகடன்" பத்திரிகையின் ஆசிரியராயிருந்த கல்கி அவர்களும், சித்திரக்காரர் மாலி " அவர் களும் ஈழத்திற்கு வந்தனர். ஈழத்தின் இரசனேத் திறனேக் கண்டு "கல்கி" ஆசிரியர், "இலங்கை யாத் திரை" என்னும் கட்டுரைத் தொடரில், இதனே ப் பல படப் புகழ்ந்துள்ளார்.
Page 33
1941 - 50
இந்தப் பத்து வருட காலத்தை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் எனக் குறிப் பிடுதல் மிகவும் பொருத்தமுடைத்து. சரியாக , வரையறுத்துச் சொல்வதானுல், 1938 ஆம் ஆண் டிற்கும் 1945 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிப்பிடவேண்டும். இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருந்த இவ்வேளை யில், ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது கவனிக்கத்தக்கது. யுத்தத்தின் தீமைகளைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனலும், யுத்தம் நாட்டுப் பற்றினையும், எழுச்சியினையும் உண்டாக்கு கின்றது என்பதை மறுக்க முடியாது.
கணேசையர வர்களது தொல்காப்பிய எழுத்ததிகார உரை விளக்கக் குறிப்பு, சுவாமி ஞானப்பிரகாசரது சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதியின் முதற் பாகங் கள், வித்துவான் சுப்பையா பிள்ளையினுடைய தஞ்சைவாணன் கோவை விளக்கவுரை, கலைப் புலவர் க. நவரத்தினம் எழுதிய தென்னிந்திய சிற்ப வடிவங் கள் ஆகிய சிறப்பு வாய்ந்த நூல்களெல்லாம் இக்காலத்தே தான் வெளிவந்தன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 27
இக்கால எல்லையில் தமிழ் மட்டும் படித்தவர் களுடன்-பண்டித, வித்துவான்களுடன்-ஆங்கிலம் படித்தவர்களும் எழுத்துத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தார்கள். கதாசிரியர்களும், நகைச்சுவைக் கட்டுரையாளர்களும் , நடைச் சித்திரம் எழுதுவோர் களும், கவிஞர்களும் தத்தமது துறைகளிலே தமது கைவண்ணத்தைக் காட்ட முற்பட்ட காலம் இஃதாகும்.
இக்கால எல்லையுள் நடைபெற்ற இலக்கிய முயற்சிகள் மிக விரிந்தனவாகும். எனவே, சில உப பிரிவுகளை வகுத்துக்கொண்டு எழுதுவதுதான்
செளகரியமான உபாயமாகும். * முன்னுேடிகள் " மறுமலர்ச்சி எழுத்தாளர், காட்டுப் பாடல்கள், பண்டித வர்க்க எழுத்தாளர், மலர்கள், மட்டக்
களப்பிலே துளிர்த்த ஆர்வம் என்கிற ஆறு உப தலைப்புகளுக்குள் இக்காலத்தின் இலக்கிய வளர்ச் சியை அடக்க விழைகின்றேன். இந்தப் பகுப்பு முறை வரலாற்றினை இலகுபடுத்திச் சொல்வதற்கே யன்றி, தரம் பிரிப்பதற்கன்று. இப்படி வகுத்து எழுதினுலும், ஒரே காலத்தின் இலக்கிய முயற்சி என்கிற இழை இவற்றினை ஒன்று சேர்ந்துப் பிணைப்
பதை அவதானிக்கலாம்.
முன்னுேடிகள் :
முன்னே டிகள் என்கின்ற விருதுடன் அறு வரைக் குறிப்பிடலாம். விசேட மென்னவென்ரு ல், ஐவர் ஆங்கிலப் பயிற்சியுடன் தமிழ் எழுத்துத் துறைக்கு வந்து இன்றளவும் ஒளி வீசிக்கொண்டிருப் பவர்கள்.
இக்கால எல்லையுள் வாழ்ந்த இளைஞர்கள் துடிப் பும், தேசாபிமானமுங் கொண்டவர்கள். தமிழ்
Page 34
28 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நாட்டிற்கு நாம் எவ்வகையிலும் பின்தங்கிவிடலா காது என்கிற உணர்ச்சி மிக்கவர்கள். தற்காலத்தில் வாழும் , சில எழுத்தாளர்களைப்போல, "அவருக் கென்ன தெரியும் ? எனத் தலைக்கணம் கொள்ள" மல், தமிழை முறையாகப் படித்தவர்களே மதித் தும், புதிது புதிதாக அறியவும், ஆக்கவும் ஆவல் கொண்டிருந்தார்கள். இப்பண்புகளினலே தான் அவர்களது புகழ் இன்றளவும் ஈழத்துத் தமிழ் கூறும் நல்லுலகில் நின்று நிலவுகின்றது.
ஆங்கிலம் படித்து ஆற்றலிலக்கியத் துறையிற் குதித்த ஐவரும், தமிழில் வெவ்வேரு ன துறை களிலே தங்களுடைய சத்திகளை வெளியிட்டிருக் கிருர்கள் என்பது எனது அபிப்பிராயமாகும்.
சோமசுந்தரப் புலவரது மகனகப் பிறந்து, A0 கவிதையையே மூச்சாகக் கொண்டு உழைக்க, சோ. கடராசன் அவர்கள் முன்வந்தார்கள். தாகூர், இராதாகிருஷ்ணன் போன்ற அறிவுலக மேதை களின் நாடகங்களையும், கட்டுரைகளையும் 1936 ஆம் ஆண்டிலேயே மொழி பெயர்த்துத் தமிழ் வாச கரின் முன் வைத்தார்கள். புராதன கால இலங்கை, இந்தியா சம்பந்தமான ஆராய்ச்கிக் கட்டுரைகளை எழுதினர். 'கற்சிலை போன்ற சிறு கதைகளையும் எழுதினர். இவ்வாறு பல்வேறு துறைகளிலும் தனது எழுத்தாற்றலைச் செலவு செய்திருப்பினும், கவிதைத் துறையிலேதான் மகத்தான வெற்றியை ஈட்டினர். 'மருதக் கலம்பகம்’ அவருடைய படைப்பு களில் உயர்ந்தது. காளிதாசரது "மேக தூதத்தை யும், தாகூரின் “கீதாஞ்சலி'யையும் தமிழிலே தந்துள் ளார். ஆரம்ப காலத்தில், அவரது கவிதைகளிலே கவிதா காம்பீரியம் நிமிர்ந்து நின்றது. பிற்காலத் தில், அவர் பாடிய பாடல்களிற் சில அங்கதச்சுவை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 29
மிகுந்தும், உட்பொருள் தெளிவற்றுமிருப்பதாகச் சில விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றர்கள், தம் மொழி அலுவலகத்தில் உயர் பதவி வகிக்கும் அவர், மொழி பெயர்ப்பினைத் தொழிலாகவும், இலக்கியப் பணியாகவும் வரித்துவிட்டார்போலும் ! பல நூல்களைத் தமிழாக்கியுள்ளார். அவற்றுள் "இதோபதேசம்’ ஆயிரம் ரூபா பரிசு பெற்றது என் பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் சிங்களத்தி லிருந்து தமிழாக்கிய பூவை விடுதூது ஒரு நல்ல முயற்சி. சமீப காலத்திற் பல புனைபெயர்களில் விமர்சனத் துறையிற் பல கட்டுரைகளை எழுதியுள் ளார். அவருடைய துணிச்சலைப் பாராட்டும் அளவிற்கு, விமர்சனத் துறைக்கு அவர் கையாளும் தெளிவற்ற வசன நடையைக் குறை கூறுவோரும் உளர். நாடகத் துறையில் அவர் சாதித்தவை குடத்துள் விளக்காக இருக்கின்றன.
ஈழத்துச் சிறுகதைத் துறையிலே, சுயா, பாணன், ஆனந்தன் எனப் பலர் முன்னரே எழுதத் தொடங்கி யிருந்தாலும், நவீன சிறுகதை உத்திகளைக் கொண்ட, கவர்ச்சிகரமான படைப்புகளைப் படைத்து, ஈழத் தின் சிறுகதைத் துறைக்கு வழி காட்டிய முதல்வர் என்கிற பெருமையைச் சம்பாதித்திருப்பவர் சி. வைத்திலிங்கம் அவர்களே.
இந்தச் சந்தர்ப்பத்தில், ஈழத்துச் சிறுகதை முயற்சிகளின் வரலாற்றினைத் தொட்டுக்காட்டுவது நன்று. மேலை நாட்டுச் சிறுகதை உருவங்களிலே நமக்குப் பயிற்சி ஏற்படுவதற்கு முன்னர், பண்டிதர் சந்தியாகோ சந்திரவர்ணம் பிள்ளை அவர்கள், மரியாதை இராமன் கதை’, ‘கோமுட்டி கதை", "மூடர் கதை" முதலிய ஏழு கதைகளடங்கிய "கதாசிந்தாமணி"
Page 35
30 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
என்னும் சிறுகதைத் தொகுதியை 1875 ஆம் ஆண் டில் வெளியிட்டார். இது சிவில் சேவையாளருக்கு ப் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ஊர்க் கதைகள் நூற்றியொன்றைத் தனது நடையில் எழு தித் தம்பி முத்துப் பிள்ளை புலவரும், ஹைதர் ஷா சரித்திரம்' என்னும் சிறுகதைத் தொகுதியை ஐதுரூஸ் லெப்பை மரைக்காரும் வெளியிட்டார்கள். இவ் வாறு வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளிலே 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த செ. சந்திரபால கணேசன் எழுதிய"கற்பவளத் திரட்டு' என்னுஞ் சிறு கதைத் தொகுதி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. இந்தக் குறிப்பீடு அதன் நடைக்காகவோ, கதை சொல்லப்படும் உத்தி முறைக்காகவோ அன்று. இக்காலத்திலே சாதிப் பிரச்சினைகளைப் பற்றியும், சர்வதேச அரசியலில் ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றியும் கதைகள் புனைவதுதான் முற்போக்கான இலக்கியப்பணி என்று ஒரு குரல் கேட்கின்றது. தீண்டாமை ஒழிப்பு, சீதனக் கொடுமை, மது ஒழிப்பு ஆகியன பற்றியும், இத்தாலியில் முசோலினி செய்த அட்டூழியங்களைப் பற்றியும் இத் தொகுதி யிலே கதைகள் உள்ளன என்பதை நிச்சயம் குறித் துக் காட்டவேண்டும்.
ஆனல், மேனுட்டு உத்திமுறைப் பயிற்சி யுடன், சிறுகதைகளுக்குத் தற்கால வண்ணக் கோலங் கொடுத்ததில் சி, வைத்திலிங்கம் முன் வரிசையில் முதல்வராக நிற்கின்றர். கலைமகளை யும், கு. ப ரா. வின் பாணியையும் மனதில் வைத் துக்கொண்டு அவர் தனது கதைகளைப் படைத்தார் என்று ‘தேசிய இலக்கியம்’ பற்றிப் பேசுபவர்கள் குறைபடுகின்றர்கள். இருப்பினும், கிராமப் புறங் களின் வர்ணனைகளும், களனி ஆற்றங்கரை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 31
வர்ணனைகளும் ஈழநாட்டிற்கே உரியவை. கதை யின் கருவுக்கேற்ற பகைப் புலத்தினை வீச்சுடனும் வளத்துடனும் அமைத்து, கலைத்துவம் ததும் புஞ் சில அழகான சிறுகதைகளை எழுதியிருக்கின்ரு ர். கதையின் கடைசிப் பகுதியிலே - இறுதி வசனத் திலே - திருப்பும் வியப்பு முடிவுக் கோட்பாட் டினை ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு ஒரளவு வெற்றியுடன் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்ரு ர். எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் இருபத் ைதந்து சிறுகதைகளைத் தானும் எழுதாத இந்தச் சிறுகதைச் சிற்பியை இன்றுங்கூட எழுத்துலகம் போற்றுகின்றதென்ரு ல் , இவரது கதைகளின் வலிமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. வட மொழிப் பிரே மையினல் வட சொற்கள் இவரது கதைகளிலே மிகுதி யென்று குறைப்படுவோரு முளர். மூன்றம் பிறை, கங்கா கீதம் என்பன முறையே தமிழ் நாட்டு, ஈழநாட்டுச் சிறுகதைத் தொகுதி களிலே இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுடன் பாற்கஞ்சி, கெடு வழி ஆகிய கதைகளும் வாழக்கூடி
வளம் மிக்கவை.
** இலங்கையர்கோன் ‘* பிற நாட்டு நல்ல சிறு கதைகளையும், நாடகங்களையும் மொழி பெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினர். இலங்கைச் சரித் திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதை களையும் மெருகிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினர். சரித்திர நாடகங்களையும், இலக்கிய நாடகங்களை யும் எழுதினர். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடை யையுங் கையாண்ட புதுமையை இவரது எழுத்துக் களிலே காணலாம் . பின்னர், பத்து வருட காலத்தை வானெலி நாடகங்களை எழுதுவதிலேயே
Page 36
3. ஈழத்து இலக்கிய வளர்ச்சி
செலவு செய்தார். காரியாதிகாரியாகக் கடமை பார்த்த அனுபவத்தை வைத்துக் கொண்டு எழுதிய 'விதானேயார் வீட்டில்' என்கிற தொடர் நாடகம் வானுெவிப் பிரியர்களிடம் நற்பெயர் பெற்றது. மேடை நாடகங்களே வாழத் தக்கன அவற்றிற்கு உயிரூட்டுதல் வேண்டுமென்று சங்கற்பஞ் செய்து கொண்டு எழுத நினேத்த காலேயில் அகால மரண ப்ெதினூர்.
மொழி பெயர்ப்பிலும், நாடகத்திலும் "இலங் கையர்கோன்" பெற்ற வெற்றின பச் சிறுகதைத் துறையில் ஈட்டவில்ஃல யென்று கருதுவோரும் உளர். இருப்பினும், காலத்திற்குக் காலம் வளர்ச் சித் தடத்திலே மிடுக்குடன் நடந்து, இறக்கும் வரை எழுதிக் கொண்டேயிருந்து பெருமை "இலங்கையர்' கோனே'ச் சாகும். ‘வஞ்சம் அவரது நல்ல கதை களுள் ஒன்று கும். "தேசிய இலக்கியம்" "மண்வளம்" என்று பிற்காலத்தில் எழுப்பப்பட்ட "கோஷங்களுக் துப் பொருத்தமான சிறுகதை யாகத் திகழும் "வெள் எளிப் பாதசாத்தை 1942 ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். மொழி பெயர்ப்பு நாவலாகிய முதற் காத ஆம் நாடக நூல்களாகிய மிஸ்டர் குகதாசன், மாதவி மடங்தை ஆகியனவும் அவரது காலத்திலேயே வெளி ந்ெதன. தந்தை மனம், கடற்கரைக் கிளிஞ்சல் என் அனுஞ் சிறுகதைகள் தமிழ் நாட்டு, ஈழ நாட்டுச் சிறுகதைத் தொகுதிகளிலே இடம் பெற்றிருக்கின் ') 'ಪತಿ' ; அன்ஜரின் சிறுகதைகள் விவ அடங்கிய வெள்ளிப் பாதசாம்" என்னுத் தொகுதியை அவரது பஃனவி பார் வெளியிட்டுள்ளார். "விஜய குமாரன்" ‘விடியாத இரவு' முதலிய நாடகங்கள் நூலுருப் பெற்று வெளிவந்தால் அவருடைய புகழ் நின்று துவங்கும்.
- - ட படிம 3 ஜகE list அமுக்காக
எழுத்துலக முன்னுேடி
* இலங்கையர்கோன்
Page 37
|
fi : il fiii : * I ? : J FT ALL ar FF igit Er
முதுதமிழ்ப்புலவர்
திரு. மு. நல்லதம்பி அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 33
சோ. சிவபாதசுந்தாம் தெளிந்த Hi, I "İrşı Tir. I Fr 3077 ராவர். "தோட்டத்து மீனுகூஜி' 'அழைப்பு முதலிய கதைகளே 'ஆனந்தவிகடனில் எழுதியிருந்தாலும், அவருடைய பிர மானக் கட்டுரை சுளும், விமர்சனங் களுமே வாசகரை ஆட்கொண்டன. பெரியவர், படித்தவர், புகழ் பெற்றவர், நட்பாளர் என்று பாராமல், தாம் பிழையெனக் காணுவதை நேர்னா ப்த் த2லநிமிர்ந்து எழுதிய பெருமை அவருக்கு உண்டு. போற்ற வேண்டியவற்றைப் போற்றப் பின்நிற்பவருமல்வர். சந்தர்ப்பங் கிடைத்த பொழு தெல்லாம், ஈழத்து இன்க்கிய முயற்சிகளின் மர பி:ன புத் தரத் தியுேம் வாழ்த்தியவர். 34, it is களில் நடைபெறும் மேளக் கச்சேரிகள் நமது மதிப் * இழந்திருந்தபொழுது அக்கலேயின் நுட்பக் தைப் பற்றி அவர் எழுதிய இரசனேக் கட்டுரைகள் . அக்கலைஞர்களுக்குப் புதிய உற்சாகத்தையும், ஊக்
த்தையுங் கொடுத்த எண்.
தமிழ் மொழியில் பட்டுமே பயிற்சிபெற்றிருந்த ஆசிரியர்களே யும், மாணவர்களேயும் T
டுத்தி, ஆலோசனைகள் நல்கி, எழுத்துலகிற்குக் காண்டு வந்த பெருமை (பும் அவரைச் சாரும். மாவைக்க வாசகர் அடிச்சுவட்டில், ஒலி பரப்புக் கலே ரென்ஃனப் பரிசு பெற்றது), புத்தர் அடிச்சுவட்டில் gfīlī F T சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) ஆகிய மூன்று பெரிய நூல்களும் அவரது எழுத்து என்மைக்குச் சான்ருக இருக்கின்றன. "காஞ்சனே" என்னும் அவரது சிறு கன்சி தமிழ் நாட்டுச் சிறு கதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது.
-i.
Page 38
34 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கவிதை - சிறுகதை - மொழிபெயர்ப்பும் நாடக மும் - கட்டுரை ஆகிய நான்கு துறைகளிலும் வழி காட்டிய இந்த நால் வருடனும், ‘சம்பந்தன்”, குல சபாாகாதன் ஆகிய இரு வரையுஞ் சேர்த்துத் தான் முன் னே டிகள் அறுவரானர்கள்.
"சம்பந்தன்' தமிழாசிரியராகப் பணி புரிந்து கொண்டு, சிறுகதைத் துறையில் பெரு வெற்றியீட் டியவராவர். 'விதி’, ‘புத்தரின் கண்கள் ஆகிய கதை கள் "கலைமகளிலே வெளிவந்த காலத்திலே தான் எழுத்துலகம் அவரது திறமையை அறியலாயிற்று. தேர்ந்தெடுத்த சொற்களை வைத்துக்கொண்டு, ஒரிரண்டு பாத்திரங்களையே நடமாடச் செய்து, அற்புதமான சிறுகதைகளைப் படைக்குங் கலை , அவரிடம் இலாவகமாக அமைந்துள்ளது. “பாசம்’ என்கிற அவரது நாவலிலும், சிறுகதைகளிலும் வரும் பாத்திரங்களின் பெயர்களும், நிலைக் களங் களும் ஈழத்தைப் பிரதிபலிப்பனவாக அமைய வில்லையென்று குறை கூறுவோரும் உளர். அவரது படைப்புக்களிலே வட சொற்களும், சாதாரணமான வாசகருக்கு விளங்காத சொற்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன என்பது உண்மையேயாகும். இருப்பினும், எண்ணிக்கையில் நம்பிக்கை வைக் காது, தரம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு, தான் எழுதுஞ் சிறுகதைகளை அழகாக எழுதுகின் ருர் என்கிற புகழுக்கு உரியவர். "விதி', 'மனிதன்” ஆகிய அவரது கதைகள் தமிழ் நாட்டு, ஈழ நாட்டுச் சிறுகதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருக் கின்றன. அவருடைய சிறுகதைத் தொகுதி யொன்றும் காவிய மொன்றும் சமீபத்தில் வெளிவர இருக்கின்றன. அவை ஈழத்தின் புகழை நிச்சயம்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 35
நிலை நிறுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இக்கால எல்லைக்குச் சற்று முன்னராகப் புகழ் மிக்க ஆராய்ச்சியாளராக விளங்கிய முதலியார் இராச காயகம் ( ' யாழ்ப்பாணச் சரித்திரம் ' என்கிற நூலின் ஆசிரியர்)அவர்களின் அடிச் சுவட்டில், குல. சபாநாதன் பணிபுரிகின் ருர் . பழைய புலவர்களைப் பற்றிய சீவிய சரித்திரங்களையும், ஈழத்தின் ஆலயங்களை ப்பற்றிய வரலாறுகளே யும், பழைய நூல்களிலே காணப் படும் மிக உபயோகமான குறிப்புக்களையும், நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். கதிர்காமம், கயினை நாகேஸ்வரி ஆகிய அழகிய நூல் களும், யாழ்ப்பாண வைபவமாலைப் பதிப்பும் அவரது பெயரை நிலைநாட்டப் போதுமானவையாக இருக் கின்றன. ‘பூரீ லங்கா’ என்கிற அரசினர் சமாசாரப் பத்திரிகையை இலக்கியத் தரத்திற்கு உயர்த்திய பெருமையும் அவரைச் சார்ந்தது.
தற்கால எழுத்தாளர்களின் முன்னே டிக ளென்று மேலே குறிப்பிட்ட அறுவரையுஞ் சொல் லுதல் மிகவும் பொருத்தமானது.இந்த அறு வருடன், இன்னெரு வரையும் . முன்னேடியாகக் குறிப்பிட வேண்டும். ‘சுயா’ என்னும் புனை பெயருக்குள் ஒளிந்திருக்கும் சு. கல்லையா அவர்கள், ஒரு தமிழா சிரியராக இருந்தும், அக்கால இரசனைக்கேற்ற நகைச்சுவைக் கட்டுரைகளை யாழ்ப்பாணப் பழகு தமிழில் எழுதி, தனக்கென ஓர் இடத்தினைப் பெற் றுள்ளார். இவர் பல சிறுகதைகள் எழுதியிருப் பினும், அவை இவரது நகைச் சுவைக் கட்டுரைகிள் பெற்ற வெற்றியைப் பெறவில்லை. பிற்காலத்திலே ஒரு நீண்ட தொடர் நாவலைத் 'தினகரனில் எழுதி யுள்ளார். கடந்த பத்து வருட காலமாக
Page 39
36 − ஈழத்து இலக்கிய வளர்ச்சி
எழுத்துலகிலிருந்து ஒதுங்கி வாழ்வதற்குக் காரணம் விளங்கவில்லை.
இவர்கள் யுத்த காலத்தின் கெடுபிடிக்குள் உலகம் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுதிய எழுத்துக்களை, பதினேழு வருடங்களின் பின், நிதானித்து அசைபோட்டு வாசிக்கும் பொழுது, சில உண்மைகளை உணர முடிகின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களான கு.ப. ரா., 'கல்கி" ஆகியோரது எழுத்தின் ஆதிக்க நிழல் இவர்க்ளு டைய எழுத்துக்களில் கவிந்திருக்கின்றது. "கலை மகளையும் 'ஆனந்தவிகடனையும் இலட்சியப் பத்திரி கைகளாக வைத்துக் கொண்டு எழுதிய தன்மையைக் கவனிக்க முடிகின்றது. யதார்த்த இலக்கியகார ரின் கருப்பொருள்களாகிவிட்ட வறுமை, பசி, முத லாளி - தொழிலாளிப் போராட்டங்கள் சூசகமா கவே கையாளப்பட்டன. பிரசாரத்தின் வேகம் கலைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவச் கள் கையாண்ட நடையில் ஒரு செழுமையும் பூர ணத்துவமூம் , வாசித்து முடித்த பின் ஓர் இன்ப மான அமைதியை அளிக்குந் தன் மயக்க நிலையும் இருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.
முன்னே டிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிய இடத்தினை மறுக்கும் ' புதுமை’ விமர்சகர்கள், அவர்களுடைய எழுத்துக்கள் கனவுலக எழுத்துக் களாகவும், மேற்றட்டு இலக்கியங்களாகவும் இருந் தன எனக் குறைகூறுகின்ருர்கள். இந்த விமர்சகர் களின் குரலாக, 1955 ஆம் ஆண்டு, மார்கழி மாதத்தில் வெளிவந்த " ஈழத்துத் தமிழ் இலக்கியம் ' என்னுங் கட்டுரை அமைந்திருப்பு தைக் காணலாம். மேனுட்டு இலக்கிய விமர்சன்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 37
முறையினைத் தமிழிலே திணிக்க முன்வந்துள்ள மேற்படி கட்டுரை ஆசிரியர் பின்வருமாறு எழுது கின் ருர் : v.
* குல. சபாநாதன், சோ. சிவபாதசுந்தரம் , சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந் தன் ஆகியோர் ஈழகேசரிக் குழுவினர் என்று கூறக்கூடிய வகையில் இலக்கிய முயற்சியில் ஈடு பட்டனர் எனினும் இன்று, அக்கால இலக்கிய முயற்சிகளைப் பின்னுேக்கிப் பார்க்கும் பொழுது, மேற்கூறிய இலக்கிய கர்த் தாக்கள் மறு மலர்ச்சி இலக்கியத்தையோ - இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ, புதிய புதிய பரிசீலனை களையோ அதிகம் வளர்த்தனர் என்று கூறுவ தற்கில்லை. ஆங்கில விமர்சகர்கள் கூறும் *ரோமான் டிசம்" என்னும் கனவுலகக் காட்சி களில் ஈடுபடச் செய்யும் இலட்சிய பூர்வமான சிந்தனைகளிலும் உணர்ச்சிகளிலும் மயங்கி எழு
தினர் என்றுதான் சொல்லலாம்."
தமிழ் இலக்கிய விமர்சன முறையைப்பற்றி முடிவு பெருத கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கலை விவகாரத்தில் ஒரு வழிதான் பொருந்தும் என வாதாடுவது முறையா? "நூறு மலர்கள் மலரட்டும் !" என்கிற கோஷம் இப் புதுமை விமர்சகர்களின் அரசியல் ஆசானற் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படி விட் டெறிந்து அபிப்பிராயங் கூறுதல் அறிவு சார்ந்த செயலாகாது. ஒவ்வொரு தனித்தனி எழுத்தாளர் களது படைப்பையும் ஆராய்ந்து மதிப்புக் கூற வேண்டுமே யல்லாது, ஒட்டு மொத்தமாகக் கூறும் விமர்சனம் சரியானதாக மாட்டாது. சிறுகதை -
Page 40
38 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நாவல் - நாடகம் ஆகிய படைப்புத் துறைகளிலே மேனட்டு உத்தி முறைகளிற் கூடக் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று சிலராற் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள விமர்சன அளவுகோல்களால் ஈழத்து முன்னே டி களின் படைப்புக்களை மதிப்பிடுவது பொருத்தமான தன்று.
அவர்களது படைப்புக்கள் என்கிற படிக் கற் களிலே ஏறித்தான், இலக்கிய வளர்ச்சிக் கோபுரத்தை நாம் அடையலாம். மேலும், இக் கால எல்லையுள் எழுந்த குவேனி, அனுலா, விஜயன், பூதத்தம்பிக் கோட்டை, சிகிரியா, யாழ்ப்பாடி ஆகிய சரித்திரக் கதைகளிலேயுள்ள அழகும் கலைத்துவ மும் தற்கால எழுத்தாளரது சரித்திரக் கதை களிலே காண முடியாததாகவிருக்கின்றது. "சுயா" 'அநுசுயா' 'சாணு ' ஆகியோர் எழுதிய யாழ்ப்பாண நடைக் கட்டுரைகளின் தரத்திற்கு, "மண்வளம் , பற்றி வானளாவப் பேசப்படும் இக்காலத்திற் கூட ஒரு வரும் எழுதவில்லை. இந்த வெற்றிகளை யும் நாம் மனதிலிருத்திக் கொள்ளுதல் நன்று.
'மறுமலர்ச்சி' எழுத்தாளர்
எழுத்துலகத்திற் புகுந்து தமது படைப்புத் திறமைகளை வெளிக்காட்ட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தவர்களும், 'ஈழகேசரி’ இளைஞர் பகுதியிற் சேர்ந்து, சிவபாதசுந்தரம் அவர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்களுமான இருபது, இருபத்தைந்து இளைஞர்கள் 1942ஆம் ஆண்டளவில் ஒரு சங்கத்தைத் துவக்கினர்கள். அதற்கு எழுத்தாளர் சங்கம் என்று பெயர்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 39
சூட்டப்படாவிட்டாலும், அதுதான் ஈழத்திலே தோன்றிய முதலாவது தமிழ் எழுத்தாளர் சங்க மாகும் "மறுமலர்ச்சிச் சங்கம்" என்னும் பெயருடன் அது சில காலந்தான் இயங்கிஞலும், குறிப்பிடக் கூடிய சேவையைச் செய்தது. மறைந்த சிறுகதை மன்னனுகிய கு. ப. ரா. வின் குடும்ப நிதிக்கு அது பணஞ் சேகரித்து அனுப்பியது. இஃது எழுத் தாளர் குடும்பத்தின் துயர் துடைக்கும் துடிப் பான செயலாகும். சுவாமி விபுலாநந்தர் அவர் களுக்கு வரவேற்பளித்தது. நவசக்தி ஆசிரியர் சக்தி தாஸன் சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த பொழுது, அச்சங்கம் அவரைக் கெளரவித்தது. பாரதி விழா - கம்ப்ர் விழா ஆகியவற்றைக் கொண்டாடியதுடன், மாதர் மாதம் கருத்தரங்கு களையும் நடாத்திற்று. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் சார்பில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தப்பட்டது. யுத்த காலத்திற்குப் பிற்பட்ட கால எல்லையுள் அச்சு வாகனம் ஏறி மிகப் பயன் தரும் இலக்கிய பரிசோதனைக் களம் அமைத்துக் கொடுத்த 'மறுமலர்ச்சிப் பத்திரிகைதான் அச் சங்கம் கையெழுத்துப் பத்திரிகையாக நடாத்திய சஞ்சிகையாகும்.
மறுமலர்ச்சிச் சங்கத்துடனும், மறுமலர்ச்சிப் பத்திரிகையுடனும் தொடர்பு கொண்டு முன்னேறிய எழுத்தாளர்களைத் தான் * மறுமலர்ச்சி’ எழுத் தாளர்களென்று குறிப்பிடுகின்றேன். -
பொருத்தமான பெயருடன் 'மறுமலர்ச்சி’ என்ற பத்திரிகை வெளிவரலாயிற்று. தனது இரண்டு வருட ஆயுட் காலத்திற்குள், அது புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கியது. இவ்வெழுத்
Page 41
40 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தாளர்களுட் பலர் இப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றர்கள். அவர்களுள், சிறுகதைத் துறையிலே அ. செ. முருகானந்தன், சு. வேலுப்பிள்ளை , அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராசன், சு. இராஜாகாயகன், தாழையடி சபாரத்தினம், 'சொக்சன்’ என்பவர்களைக் குறிப்பிடலாம். அவர்களது படைப்புகளைப் பற்றி ஈழத்துப் பேணுமன்னர்கள் வரிசையில் விமர்சனஞ் செய்துள்ளேன். இருப்பினும், இங்கே அவர் களுடைய படைப்புகளைப் பற்றிச் சிறிது குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
முருகானந்தன், சரியான யாழ்ப்பாணக் களமும் , பண்பாடும், கருவுங் கொண்ட கதைகளைப் படைத் துப் புகழீட்டினர். சவாரிக்காட்சியும் , நீதிமன்ற வழக்குகளுங்கொண்ட "புகையில் தெரிந்த முகம் என்னும் அவரது குறுநாவல் மிகுந்த பாராட்டுதல் களைப் பெற்றது. பல பத்திரிகைகளிலே உழைத் துக் களைத்து, பதினைந்து ஆண்டுகளின் பின், 'யாத்தின்ர" என்னும் நாவலையும், ஈழத்து இசை யாளர்களைப் பற்றிய தொடர் கட்டுரைகளையும் எழுதி, தன்னை மறந்திருந்த வாசகருக்குத் தன்னை நினைவூட்டினர். சரியான தூண்டுதலும், நல்ல சூழ் நிலையுமிருந்தால் சிறந்த சிறுகதிைகளைப் படைக்கக் கூடிய திறமைசாலி என்பதை அவரது சிறுகதை கள் பறைசாற்றி நிற்கின்றன. மனிதமாடு என்னும் அவரது கதை தமிழ்நாட்டுச் சிறுகதைத் தொகுதி யில் இடம் பெற்றிருக்கிறது. 'வண்டிச் சவாரி' என்கிற அவரது சிறுகதை குறிப்பிடத்தக்க நல்ல கதையாகும் . -
தற்காலத்திலே, தங்களை முற்போக்கு எழுத் தாளர் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 4.
முன்னேடியாக அ. ந. கந்தசாமி விளங்கினர். கதைத் துறையிலே வெற்றியீட்டத் தவறினலும், ‘இரத்த உறவு’ என்னும் கதை, அவரது அரசியற் போக் கினைக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. கவிதை எழுதும் ஆற்றல் அவரிடமுண்டு. 'கவீந்திரன்' என்ற புனைபெயரில் "துறவியும் குஷ்டரோகியும்" போன்ற சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளார். பல பத்திரிகைகளிலே கடமையாற்றித் தமது அணியிலுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தியவர். பல சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கின் ருர், ஏதா வது பிரச்சினையைக் கிளப்ப வேண்டுமென் கிற தொனி சில கட்டுரைகளிலே மேலோங்கி நிற்கின் றது. அரசினர் சமாசாரப் பகுதியிலிருந்து, வயது எல்லைக்கு முன்னர் ஓய்வு பெற்ற பின்னர், கேலிக் கவிதைகள் பாடுவதிலும், பிரச்சினைக்காகவே பிரச் சினைக் கட்டுரைகள் எழுதுவதிலும் திறமையை வீணுக்கிக்கொண்டிருக்கின்றர். அவர் தமது முழுச் சத்தியையும் ஒருங்கு கூட்டி நிலை பெறத் தக்க நாவல் - காவியம் - இயற்றவேண்டும். அப்போது தான் அவர் பெயர் நின்று நிலைக்கும்.
வாலிப உந்துதல்களுடன், காதலின் பல வகைக் கோலத்தையும், காமத்தையும் வைத்துச் சிறுகதை களைப் படைத்துத் தமது எழுத்தினல், தி. ச. வரத ராசன் ( வரதர்) வாசகர்களை மயங்கச் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய தாக மறுமலர்ச்சி, ஆனந்தன், தேன்மொழி (கவிதைப் பத்திரிகை), புதினம் ஆகிய பத்திரிகைகளைக் காலத் திற்குக் காலம் நடாத்திப் பார்த்தவர். ‘வாழ்க நீ சங்கிலி மன்ன! “ என்னும் வரலாற்று நூலை எழுதி
.6-س--F
Page 42
42 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யுள்ளார். வள்ளி, இலக்கிய வழி, மூன்றவது கண், சிலம்பொலி ஆகிய நூல்களைத் தமது வரதர் வெளியீடு மூலம் வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவித் திருக்கின் ருர், அதிக கால இடைவெளிக்குப்பின் காதல், கற்பு, வீரம் ஆகிய விடயங்களுக்குப் புரட்சி கரமான போக்கில் "கரு" சமைத்துப் பழையபடியுந் தமது இடத்தைத் தாபித்து, “கயமை மயக்கம்' என் னுஞ் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். *மூர்த்தி மாஸ்டர் பெரும்பாலான கதைகளிலும் நடமாடும் சுய பிம்பங் காட்டும் ஒரு பாத்திரமாகும்.
உருவகக் கதை என்கிற கடினமான கதை சொல்லுந் துறைக்குட் புகுந்து, முதலாவது வெற் றியை ஈட்டிய பெருமை சு. வேலுப் பிள்ளை (சு. வே.) யைச் சாரும். பாரதரத்தினம் சக்கரவர்த்தி இராஜ கோபாலச்சாரி (ராஜாஜி) அவர்களாற் புகழப்பட்ட *மணற்கோவிலையும், வாசகர் பலராற் பாராட்டப் பட்ட "வெறுங்கோவிலையும் எழுதித் தான் ஒரு பண் பாடான, சிந்தனை மிக்க ஒர் எழுத்தாளர் என்பதை நிலை நாட்டிவிட்டார். இவருடைய வர்ணனை அழகு கள், கற்பனை நயங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தன. நடையிலே சுத்தமும் ஒட்டமும் உண்டு. பாற்காவடி, மண்வாசனை போன்ற பல நல்ல சிறுகதைகளை எழுதி, தாம் ஒரு சிறுகதையாசிரியர் என்பதையும் நிரூபித் துள்ளார். ஈழத்தின் ஐந்து எழுத்தாளர் சேர்ந்து எழுதிய "மத்தாப்பு' என்னுங் குறுநாவலின் நடுநாயக மான அத்தியாயத்தை வாசித்தவர்கள் , அவருக்கு நாவல் துறையும் நேர்த்தியாக வருமென்று அபிப் பிராயப்படுகின்றர்கள். இராமாயணப் பாத்திர மான குகனே வைத்து இவர் எழுதியுள்ள 'குகனும் *சர்ந்திரமதியும் உப பாடப் புத்தகங்களாகை யினல், இலக்கியக் கணக்கெடுப்பிலிருந்து வழுவிவிட்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 43
டன. அண்மையில் அவரது 40 கட்டுரைகள் என்னும் நூல் வெளிவந்துள்ளது. அவரது கட்டுரை எழுதும் ஆற்றலுக்கு அக்கட்டுரைத் தொகுதி தகுதியான சான்ரு கும். パ
*சொக்கன்" தமது கதைகளுக்கும், நாடகங் களுக்குமான விடயங்களைப் பெரும்பாலும் இலங் கைச் சரித்திர நூல்களிலே இருந்து எடுக்கின்ரு ர். இச் சரித்திர நிகழ்ச்சிகளைச் சரித் திராசிரியனின் நேர் மையுடன் அணுகாமல், இலக்கியாசிரியனின் கற் பனை நோக்குடன் அணுகுகின்ற ர். அதனல், அவ் வெழுத்துக்களிலே மனுேரதியச் சாலையைச் சேர்ந்த கவர்ச்சி இருக்கின்றது. மலர்ப் பலி, செல்லும்வழி இருட்டு ஆகிய நாவல்களை எழுதியிருக்கின்றர். சிலம்பு பிறக் தது, சிங்கைகிரிக் காவலன் ஆகிய இரண்டு நாடகங் களுக்குக் கலைக்கழகத்தினரின் முதலாவது பரிசிலை இரண்டு தடைவைகளிற் பெற்றுள்ளார். சிறுகதை களையும், குறு நாவல்களையும் நல்ல தமிழ் நடையில் எழுதுகின்ருர். இருப்பினும், "எனக்கு நாடகங்களே எழுத வருகின்றன ' என்று சமீப காலத்திற் சொல் லத் தொடங்கியுள்ளார். வீரத்தாய் ' என் னும் கவிதை நூலையும் படைத்திருக்கின் ருர், மனேன் மணியத்தை வசன நடையில் மாணவர்க்காக எழுதி யுள்ளார்.
பிரபல எழுத்தாளரான சம்பந்தனின் அடிச் சுவட்டிலே நடந்து, தரமான சில கதைகளை ‘நன வோடை உத்தியில் எழுதியவர் சு.இராஜகாயகனுவர். உருவகங்களைத் தம் கதைகளிலே அழகாகக் கையா ளுகின்ருர். "அவன்’ என்கிற அவரது சிறுகதை ஈழத் துச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
Page 43
44 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
"கல்கி’ப் பத்திரிகை நடாத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் மூன்ரு வது பரிசைப் பெற்றதின் மூலம் பிரபலம் அடைந்து, "அசுரகதி’யிற் பல சிறுகதை களைப் படைத்து, தாழையடி சபாரத்தினம் வாசகரைக் கவர்ந்தார். ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் வெளியான "குருவின் சதி பழைய ஏகலைவன் கதை யாக இருந்தாலும், அதன் நடையும், புதுப்பார்வை யும், அதனைத் தரமான கதையாக ஆக்கிவிட்டிருக் கின்றன.
மறுமலர்ச்சி வட்டச் சிறுகதை ஆசிரியர்களை மொத்தமாக நோக்குமிடத்து, வாசகர்கள் அதிகம் பரவியிராத ஒரு காலத்தில், சிறுகதை இலக்கியத் தைப்பற்றி அலசி ஆராய்ந்து அதன் இலட்சணங் கள் தமிழில் வரையறுக்கப்படாத ஒரு நிலையில் , ' மிக இளம் வயதில், தமக்குத் தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு, ஏதாவது எழுத்துலகிற் செய்ய வேண்டுமென்ற துடிப்புடன் எழுத வந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனல், பதினெட்டு வருடம் கடந்து அவர்களது வளர்ச்சியையும், வளத் தையும் பார்க்கும்பொழுது, மகிழ்ச்சி தரத் தக்கன வாகவே இருக்கின்றன. கிராமச் சூழ்நிலைக் கதை (அ. செ. மு.), “முற்போக்கு’க் கதை (அ. ந. கந்த &F nruó), காதற் கதை (வரதர்), உருவகக் கதை (சு. வே.), சரித்திரக் கதை (சொக்கன்), "நன வோடைக் கதை (இராஜநாயகன்) என அவர்கள் புதிய கிளைப்பாதைகளில் நடந்து முன்னேறினர் கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
"காதல் இல்லாமல் கதை எழுத மாட்டார்கள்” என நையாண்டி செய்யும் படித்தவர்களுக்கு மறு மலர்ச்சி வட்டாரத்துச் சிறுகதை ஆசிரியர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 45
செய்துள்ள தொண்டு விளங்காதிருக்கலாம் . இக் காலத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்த ஒரு விமர்சகர், 'இவர்கள் "கலைக்காகவே கலை" என்ற கொள்கையிற் தம்மை அறியாமலே புகுந்து விட்டார்கள்" என எழுதியுள்ளார். இது சரியான மதீப்பீடன்று. இக்கால எல்லையுள் எழுதிய எழுத் தாளர்கள் கொள்கைக் குழப்பங்கள் என்கிற சகதிக்குள் அகப்படவில்லை. ஆனல், எழுத்துத் துறையைப் பற்றிப் பூரண பிரக்ஞை அவர்களுக்கு இருந்திருக்கின்றது.
ஈழத்து எழுத்தாளரை அறிமுகஞ் செய்து வைத்து, அவர்களது படைப்புக்களை வெளியிட்டு முன்னணிக்குக் கொண்டுவரும் பணியில், இக் காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழகேசரி’, * மறுமலர்ச்சி முதலிய ஈழத்துப் பத்திரிகைகளே முன்னுேடிகளாக விளங்கின. தமிழகத்துப் பத்தி ரிகைகள் ஈழத்து எழுத்தாளரை மாற்ருந்தாய் மனே பாவத்துடன் நடத்துகின்றன என்று தற் காலத்தில் ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவு கின்றது. "கங்கை”யின் ஆசிரியர் பகீரதன் முன் னிலையில் இந்த மனக்குறையை திரு எஸ். பொன்னுத் துரை எடுத்துச் சொன்னதைத் தொடர்ந்து, 'தினகரன்", “எழுத்து', "சரஸ்வதி", "கங்கை' ஆகிய பத்திரிகைகளிலே நடந்த வாதப் பிரதி வாதங்களை நாம் மறப்பதற்கில்லை. மேற்படி குற்றச்சாட்டில் ஒரளவு உண்மை இருக்கின்றது. இருப்பினும், *கலாநிலையமும் அவ்வப்போது 'ஆனந்த விகடனும் "கலைமகளும், 1942 ஆம் ஆண்டளவிற் 'கிராம ஊழியன்' 1960 ஆம் ஆண்டளவில் ‘சரஸ்வதி ஆகிய பத்திரிகைகளும், ஈழத்து எழுத்தாளரின் படைப்புக்களை வெளி
Page 44
46 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யிட்டுச் செய்த சேவையை நாம் புறக்கணித்து விட முடியாது.
"கிராம ஊழியனைப் பற்றி விசேடமாகக் குறிப் பிட வேண்டும் பிரபல எழுத்தாளராகிய கு.ப.ரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அப் பத்திரிகை, பிற்காலத்தில் திருலோக சீதாராம், வல்லிக் கண்ணன் ஆகியோரின் பொறுப்பில் வெளிவந்தது. அக்காலத்தே தான் ஈழத்து எழுத்தாளர் அப் பத்திரிகையைத் தமது சொந்தப் பத்திரிகையாக உரிமை கொண்டாடினர்கள். ஏனைய பத்திரிகை கள் விசேட மலர்களின் முதற் கட்டுரைக்காக முதல் அமைச்சரையோ, வேறு துறைகளிற் பிர பலமானவரையோதான் தேடிச் சென்றன; செல் கின்றன. கிராம ஊழியன்’ விசேட மலர் ஒன்றில் "இலக்கியப்பாதையில்" என்கிற கட்டுரையே முதலா வது கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அக் கட்டுரையின் ஆசிரியர் ஈழத்துப் பிரபல கவிஞரும், விமர்சகருமான பண்டிதர் சோ. தியாகராஜன் அவர் களாவர். அதனைக் கண்டு ஈழமும் தமிழக முந் திடுக் குற்றன. பத்திரிகை ஆசிரியரின் துணிச்சல் பாராட் டத் தக்கது. அதே ஆண்டு மலரில், ச. அம்பிகை பாகன், சி, வைத்திலிங்கம், இலங்கையர்கோன், இராஜ அரியரத்தினம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தார் கள். ‘இலக்கிய வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, தரமான விட யங்கள் எங்கிருந்து வந்தாலும் முக்கியத்துவங் கொடுத்துப் பிரசுரித்திருக்க, வியாபார நோக்கத் தோடு ஈழத்துப் பத்திரிகைச் சந்தையிலே புகுந் துள்ள இரண்டாந்தரப் பத்திரிகைகள் கூட, ஈழத்து எழுத்தாளரை ஏன் புறக்கணிக்க வேண்டும்?’ என்கிற நியாயமான கேள்வி ஈழத்து எழுத்தாளர்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 47
வட்டாரத்திற் சலசலப்பினை உண்டாக்கியதில் வியப்பில்லை.
* கிராம ஊழியன்’ மூலமும், 'மறுமலர்ச்சி’ மூலமும் எழுத்துலகிற் புகுந்த இளங்கவிஞர்களுட் பலர், இப்பொழுது ஈழத்தின் தரமான கவிஞர் களாக விளங்குவதைக் காணலாம். நாவற்குழியூர் நடராசன், “மஹாகவி’, ‘சாரதா" (க. இ. சரவண முத்து), சோ. தியாகராஜன், செ. கதிரேசபிள்ளை" ஆகி
யோரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடலாம்.
நாவற்குழியூர் நடராசன் புதுப்புது பிரசிச்னைகளைக் கவிதைகள் மூலம் எழுப்பிப் புதுப்பாதை வகுத்துக் கொண்டு முன்னேறியவராவர். திருலோக சீதா ராம் தொகுத்த தற்காலக் கவிமலர்களின் தொகுப் பில் இவரது சிலம்பொலி இடம்பெற்றுள்ளது. தற் பொழுது இலங்கை வானெலியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பதவி வகிக்கும் இவர், பல கவி யரங்குகளை வானெலியிலே நடாத்திப் பரிசளித்து, ஈழத்தின் கவிதை யூற்று வற்றிவிடாமற் பாது காத்து வருகின்றர். இவரது கவிதைகள் ‘சிலம் பொலி என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. அது தரமான கவிதை நூலாகும்.
ஈழத்துக் கவிதை உலகிலே மஹாகவி (து. உருத்திர மூர்த்தி)க்கெனத் தனியான இடமுண்டு. கிராமத்து அழகுகளையும், அம் மக்களின் இன்ப துன்பங்களையும் அவரது பாடல்களிற் காணலாம். பற்பல சந்தங்களிற் பல வகைத் திரிபு கொண்டு அவர் பாடுகின்ருர், "வள்ளி' என்ற கவிதைத் தொகுதி அவரது பெருமையில் ஒரு பகுதியைத் தான் புலப்படுத்துகின்றது. இன்னுஞ் சில தொகுதி
Page 45
48 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கள் வெளிவரவேண்டும். அவை ஈழத்தின் புகழை நிலைநாட்டும். ஆனல், அவருடைய இடைக்காலப் பாடல்களிற் சில வரிப்டாடல்களைப் போலத் தோற்றமளிப்பனவாகவும், மடங்கியும் முறிந்தும் விளக்கக் குறைவாக்க் காணப்படுவதாகவும், சில விமர்சகர்கள் அபிப்பிராயப் படுகின்றர்கள். “கல்லழகி","சடங்கு முதலிய சிறு காவியங்களும் அதன் பின் பாடியவையும் தரமாக அமைந்திருக்கின்றன.
பிரபல எழுத்தாளரான சோ. சிவபாத சுந்தரத்தின் தம்பியாகிய தியாகராஜன் ஒரு கண்டனக் காரராக எழுத்துலகிற் புகுந்தார். இலக்கிய நயங் களை எழுதுபவர்களை எடைபோடுவதில் சமர்த்துப் பெற்றவர். ஆனல், அவரது புகழ் இவற்றிவுே நிலைபெறவில்லை. அவர் பாடிய குழந்தைப் பாடல் களும், பெரியோரைப்பற்றி எழுதிய பாடல்களும் அவரைக் கவிஞர் வரிசையிலே உயர்த்தி வைத்தன. பண்டித பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராக வெளி வந்த அவர், தனது முழு ஆற்றலையும் வெளிக் காட்ட ஆயத் தமாகும் பொழுது, இலக்கியங் களோடு தொடர்பில்லாத உள்ளூர்த் தலைமைக் காரர் உத்தியோகங் கிடைத்துவிட்டது. அவ்வுத்தி யோகம் இலக்கிய ஆர்வத்தினைப் பின்னுக்குத் தள்ளினலும், நீறு பூத்த நெருப்பாக இலக்கிய ஆர்வம் கனன்றுகொண்டிருந்தது. அவர் தற் பொழுது ஆசிரிய உலகிற்குத் திரும்பிவந்துள்ளமை கவிதை உலகிற்கு நல்லதென்பது எனது எண்ண மாகும்.
நல்ல கருத்தாழமும், ஓசை நயங்கெடாதது மாகிய கவிதைகளை ஆரம்ப காலத்திற் பாடிய கதிரேசபிள்ளை , பிற்காலத்திற் கல்லூரி நாடகங்களிற்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 49
கவனத்தைத் திருப்பிவிட்டமை, ஈழத்துக்கவிதை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள நட்டங்களுள் ஒன்ரு கும். எனினும் சென்ற சில வருடங்களாகப் பல கவி யரங்குகளில் அவர் பாடிவருகின்ரு ர். ஒசை நயம் பொருந்திய கவிதைகளைத் தகுந்த இசையுடன் பாடுவதில் அவர் இப்போது பெற்றுவரும் வெற்றி யில் தகுந்த காவியம் ஒன்று வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
1941ஆம் ஆண்டிற்கும் 1950ஆம் ஆண்டிற்கு மிடையிலே தோன்றிய தமிழ்நாட்டுக் கவிதை ஆர்வம், ஈழத்திலும் இக் கவிஞர்களிடையே தலை யைக் காட்டிற்று, குறிப்பாகக் கலைவாணனின் கவிதைகள் இக் கவிஞர்களைக் கவர்ந்துள்ளன. அவ ரது பாணி இக் கவிஞர்களாற் பின்பற்றப்பட்டது. இக்காலத்தில், தனித்தனிக் கவிதைகளும், கவிதைக் கடிதங்களும் ஏராளமாகத் தோன்றின. இவற்றினை, இப்பொழுது பின்நோக்கிப் பார்க்கும் பொழுது , இலக்கியத் தராசில் நிற்கக்கூடியவையாக வெகு சிலவே தேறும். தேறக் கூடியவற்றுள் யோகசித்தி, சுவர்க்கபூமி ஆகிய இரண்டு கவிதைக் கதைப் பாடல்களும் நிச்சயம் இடம்பெறுமென்பது எனது அபிப்பிராயமாகும். இவற்றினைச் சரவணமுத்து * சாரதா என்கிற புனைப் பெயருக்குள் ஒளிந்திருந்து எழுதினர். கதைகள் தழுவல்களாக இருந்தபோதி லும், கவிதைத் தரம் உயர்ந்தே நிற்கின்றது. அவற்றிற்கு ஈடான சிறு காவியங்கள் ஈழத்தில் இன்னும் பாடப்படவில்லையென்பது இரசிகர்களு
டைய அபிப்பிராயமாகும்.
.7-د-F
Page 46
50 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இந்தப் பகுதியில் மறுமலர்ச்சி வட்டத்தைச் சேராது, அதே சமயம் தமிழ் மறுமலர்ச்சியிஃவ மூச்சாகக் கொண்ட எழுத்தாளர்களே புஞ் சேர்த்துக்கொள்ள வேண்டும். "யாழ்ப்பாணன்" (சிவக் கொழுந்து), "சாரு" (சண்முகநாதன்), ச, நமசிவாயம், பஞ்சாட்சா சர்மா ஆகியோரும் இக்கால எல்லேயிலே தான் எழுத்துத் துறைக்கு வந்தார்கள்.
பாடப் புத்தகங்கள் எழுதியும், பிரசுரித்தும் வருவதுடன், பல கவிதைகஃ யும் "யாழ்ப்பானான்" இயற்றியுள்ளார். கவிதைக்கன்னி, மாலேக்கு மாலை, கண்ணன்பாட்டு, பாலர் கீதம் என்னும் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. காயம்பட்ட பசு, கிழவன், பாலர் கோவில் கட்டி விளேயடுதல் என்பன நல்ல . கவிதைகள், அவருடைய பல பாடல்கள் பால பாடங்களில் இடம் பெற்றிருப்பதால், பாடசாஃல கள் தோறும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இலங்கை வானுெலி நிஃவ ரத்தில், தமிழ் நாடகப் பகுதிக்கு அதிகாரியாக இருக்கும் 'சாணு ' வை நடிகர் - ஓவியர் என்று அறிந்து வைத் திருக்கும் அளவிற்குத் தானும், அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. பழம் பெரும்
நூ வினிருத்து ஒரு பாடலே எடுத்து நயம் எழுதுபவர்
சுளேயே எழுத்தாளர் என்று ஒரு சாராரும், ஒரிரு சிறுகதைகளே எழுதினுற்ருன் எழுத்தாளர்களென்று பிறிதொரு சாராரும் கருதுகின் ருர்கள். ஆணுல், "சாணு ' தமக்கென ஒரு பாதையை எழுத்துத் துறையில் வசித்துக்கொண்டார். வ. ரா. அவர்கள் எழுதிய பிரசித்திபெற்ற நடைச் சித்திரங்களே ஒட்டி, யாழ்ப்பான ப் பாத்திரங்களே வைத்து, மிக நல்ல நடைச் சித்திரங்களேப் படைத்திருக்கின்ருர்,
ܡܢ
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5
நடைச் சித்திரங்களே மட்டுமன்றி, பல வகைக்
கட்டுரை கஃாயும் எழுதிக் கட்டுரை எழுத்தாளர் வரிசையிலே தனக்கென ஓரிடஞ் சம்பாதித்துக் *#; i'r G&T! Tri.
ச, நமசிவாயம் கட்டுரை, கவிதை, கதை எனப் பல துறைகளிலுங் ைகனவத்து, இனன மித் துடிப் புடன் எழுதினுர், ஆணுல், வானுெளிப் பகுதியிற் சேவைக்குப் புகுந்த பின்னர், இலக்கியப் பணியைக் 3 கவிட்டுவிட்டார்.
பஞ்சாட்சா சர்மா சமஸ்கிருதப் பண்டிதர்: தமிழிற் பாலபண்டிதர். ஆங்கிலமும் மலேயாள முந் தெரியும். எனினும், அவரை யாரும் பண் புத வர்க்கத்துடன் சேர்ப்பதில் ஃ. மறுமலர்ச்சி விட்டத் துடன் தொடர்புகொண்ட அவரது இலக்கியப் 1ணிை, மறுமலர்ச்சி இலக்கியப் போக்கின் சாயல் படிந்தது. தாகூரின் 'படித்துறை சொல்லும் கதை' யையும், மஃபான மொழியிலிருந்து சில கதை கனே யும் தமிழாக்கியுள்ளார். கிராமியக் கவிதை கள் சம்பந்தமாகவும், ஈழத்துக் கவிதைகள் சம் பந்தமாகவும் அவர் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சிறுகதை - கவிதை - நாவல் சம்பந்தமான எந்த எழுத்தாளரது முயற்சிகளே பும் என டபோட்டு வைப்பதிவே பிரியர். சர் மா அவர்களது அபிப் பிராயந் தெளிவானது கலங்கமில்லாதது.
நாட்டுப் பாடல்கள்
எழுத்தாளர்களுடைய படைப்புக்கள் ஒரு புற மாக வளர்ந்தோங்க, நாட்டுப்பாடஃபத் தொகுக் கும் முயற்சியும் நடைபெற்றது. தேவேந்திர சத்தியார்த்தி என்னும் வட இந்தியர் பாரததேசம்
Page 47
52 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
முழுவதுஞ் சுற்றித் திரிந்து, கிராமியப்பாடல்களேச் சேகரித்து, அவை ஒரு நாட்டின் பழங்காலச் செல்வங்களென்றும், அவற்றின் மூலந்தான் கிராம மக்களுடைய உணர்ச்சிகளே உய்த்துணர முடியுமென்றும் விளக்கி, புத்துயிர் உளட்டினுர், அவர் தமிழ்நாட்டிற்குஞ் சென்று. அங்கு வாழும் அறிஞர் பலரை இத்துறையிலே ஈடுபடும்படி ஊக்குவித்தார்.
கி. வா. ஜகந்நாதன், மு. அருணுசலம் ஆகியோர் தமிழ்நாட்டில் இத்துறையில் ஈடுபடத் தொடங்கிய அதே காலத்தில், ஈழத்திலும் பலர் இத்துறை யிலே ஈடுபடத் தொடங்கினர். கிராமியப் பாடல் களுக்குப் பெயர்பெற்ற மட்டக்களப்புப் பகுதியில் இவ்வேலே சுறுசுறுப்புப் பெற்றது. பேருழைப்
பாளியான சதாசிவஐயரவர்கள் அப்பகுதியிலுள்ள
ஆசிரிய சங்கங்களின் துனே யோடு மட்டக்களப்பு வசந்தன் கவித்திாட்டு என்னும் நூலேத் தொகுத்து வெளியிட்டார்.
ஈழத்தின் பிற்காலப் புலவர் பெருமக்களின் கூத்துக்களையும், நாடகங்களேயும், வரலாறு ஆளேயும் ஆராய்ந்து வெளியிடும் வெள்ளவத்தை மு. இராம லிங்கம் அவர்கள் கிராமியக் கவிதை சம்பந்தமாகச் செய்த பணி அளவிடற்கரியது. அவருடைய பேருழைப்பின் பயணுக, கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள், வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல் கள், களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. "கனகி புராணம்" என்னும் நூலேயும் பதிப்பித்திருக்கின்ருர், அசோக மாலா, நவமணி ஆகிய நாடகங்களே எழுதி, நூல்களாக வெளியிட்டிருக்கின்றர். "இரட்டை யர்கள்' என்கிற புனே பெயரில் கவிஞர் சாவன
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 53
முத்து அவர்களும், பண்டிதர் பஞ்சாட்சா சர்மா அவர் களும் தேயிலேத் தோட்டங்களிலே வழங்கிவரும் நாட்டுப் பாடல்களே வெளியிட்டு, அருமையான விளக்கங்களும் எழுதினு ர்கள். சமீபகாலத்தில், வித்து வான் எப். எக்ஸ் , எபி. நடராசா அவர்கள் ஈழத்து நாடோடிப் பாடல்களேத் தொகுத்து வெளியிட் டார். கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் பதிப் பாசிரியராக அமர்ந்து ஒரு நாட்டுப் பாடல் தொகுதியை வெளியிட்டுள்ளார். பண்டித மனப் பான்மையுடன் செயற்கையான முறையிலே பாடல் களே வகுத்துக் கவர்ச்சியைக் குறைத்துவிட்டார் கள் என்று சிலர் குறை கூறுகின்ருர்கள். வேறு சிலர், இத்தகைய பகுப்பு முறை வரவேற்கத் ஆக்கது என்று கருதுகின்றுர்கள். வாய்மொழி இலக்கியம் என்ற நாடோடிப்பாடல் தொகுப் பொன்றை, வடபகுதி சனசமூக நிஃபயங்கள் சமீ பத்தில் வெளியிட்டுள்ளன . மட்டக்கனப்புப் பகுதி பபிலே வசிக்கும் எழுத்தாளர்கள் - சிறப்பாக முஸ் லிம் எழுத்தாளர்கள் - அவ்வப்போது சில அருமை யான நாடோடிப் பாடல்களே வெளியிட்டிருக்கிருர் கள். பாடல்களே விளக்க அவர்கள் புனேயும் கதை கள், நாட்டுப் பாடல்களில் மூச்சினே நக க்கவே உதவிசெய்கின்றன. வேறு சில பொறுப்பற்ற எழுத்தாளர்கள், தாங்களே நாடோடிப் பாடல் கஃள இயற்றிக் கலப்படஞ் செய்யும் மோசடியில் இறங்கி புள்ளார்கள். இத்தகைய நேர்மையற்ற வழிகளிலே இறங்கி, நாட்டுப் பாடல்களின் சிறப்பினேக் குறைப் பது வேதனே தருஞ் செயலாகும்.
அரசாங்கத்தின் கலாசாரப் பகுதியினர் கண் விழித்து, இத் துறையில் ஈடுபாடுகாட்டத் தொடங்கி புள்ளனர். உண்மையான கோலாட்டப் பாடல்
Page 48
54 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கள், கிணறு வெட்டுப் பாடல்கள், தோணிப் பாடல் கள், விறகு கொண்டுபோகும் பெண்களுடையவை யாக அமைந்த பாடல்கள், தாளக் காவடிப் பாடல் கள் முதலியனவற்றை வெளியிட கலாசாரப் பகுதி யினர் முயன்ரு ல், அது நனி சிறந்த தமிழ்ப் பணி
யாக அமையும்.
“பண்டித வர்க்க எழுத்தாளர்
பண்டிதர்களுடைய இலக்கிய சேவையைச் சொல்லப்புகும் இச்சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டு இலக்கியப் பத்திரிகை ஒன்றில், "புதுமை இலக் கியம் படைக்கும் "பேரெழுத்தாளர் ஒருவர் எழுதிய வை ஞாபகத்திற்கு வருகின்றன. அவரு டைய கண்டு பிடிப்பு பின்வருமாறு அமைந்திருக் கின்றது: -
'வளரும் இலக்கியத்துக்கு எதிரிகள் என்று இரண்டு ரகத்தினரைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். (1) பண்டிதர்கள். (2) பத்திரிகைக் காரர்கள். பண்டிதர்களுக்குப் பழசைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது. பழசில் கூடத் தங்கள் இலாபங்கருதியே ஈடுபாடு. வளரும் தமிழைக் கண்டு கொள்ளும் சக்தி அவர்களிடம் இல்லை என்பது வெளிப்படை. பழசில் கூட இன்றைக்குத் தேவையானதைக் கண்டுகொள்ள அவர்களுக்குப் போதுமான சக்தி கிடையாது. இலக்கியம் பிறரை எட்டி விடக்கூடாது, தங்களுடைய ஏகபோகமான சொத்தாக இருக்கவேண்டும் என்று இக் குழாத் தினர் பாடுபடுவது புரிகிறது '
ஈழத்து இலக்கிய வளர்ச்சி - 55
ஈழநாட்டிலே எழுத்துத் துறையிலே புகுந் துள்ள பண்டிதர்களை இவ்வாறு ஏக சுருதியிற் புறக்கணித்துவிட முடியாது. இடையிடையே, மறைவாக , மேற்படி மனப்பான்மையைச் சில பண்டிதர்கள் காட்டினுலும், அவர்களுட் பலர், காலப்போக்கினை அனுசரித்து, வள ருந் தமிழிலக்கி யத்திற்குத் தங்களது பங்கினைச் செய்திருக்கிரு ர்
கள் .
ஈழத்துப் பண்டிதர்கள்ை ப் பேராசிரியர் "கல்கி" பின்வருமாறு எடையிட்டார்:
'இங்கு தடுக்கி விழுந்த இடமெல்லாம் பண்டி தர்களே. ஆனல், ஈழத்திலேயுள்ள பண்டிதர் களிற் சிலர்-பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பொ. கிருஷ்ணன் போன்றேர்-கட்டுப்பெட்டிக ளல்லர். எந்த நல்ல விஷயத்தையும் மன முவந்து வரவேற்பவர்கள் அவர்கள்தாம்.'
ஈழத்தில் பண்டிதர்களும் பாலபண்டிதர்களும் பல்கிப் பெருகி இருப்பதற்கு முக்கிய காரணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் பண் டித பயிற்சிக் கலாசாலையும் எனின் மிகையாகாது. ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைப் பற்றி நினைக்கும்போது, தேனிபோலச் சுறுசுறுப் பாக இருந்து, தகுந்தவர்களை ஒன்று கூட்டி அச்சங் கத்தைத் தொடங்கிய பிரம்மபூரீ சதாசிவஐயரவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அச்சங் கத்தின் முயற்சியினல் கரவை வேலன் கோவை, கதிரைமலைப் பள்ளு, ஐங்குறு நூறு முதலிய நூல் கள் வெளிவரலாயின. ஐயரவர்கள் சங்கத்தைத் தொடங்கி நூல்களை அச்சேற்றியது மாத்திர மல்லாமல், சமாளாதண்டக் கவிவெண்பா, கவரத்தின
Page 49
5, ஈழத்து இலக்கிய வளர்ச்சி
மாலே, தேவி தோத்திர மஞ்சரி, சித்திவிநாயகர் இரட்டை மணிமாலே, இருதுசங்காா காவியம், ஆகிய நூல் களேத் தாமே மொழிபெயர்த்தும், இயற்றியும் தமிழ்த் தாய்க்குச் சூட்டினுர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கிழக்கிழங்கையில் வழங்கிவந்த வசந்தன் கவிகஃா ச் சேர்த்து, 1910 ஆம் ஆண்டில் மட்டக் களப்பு வசந்தன் கவித்திரட்டு என்னும் நூஃ வெளி பிட்டார்கள். இலக்கிய முயற்சிகளில் இஃதொரு புதிய துறைக்கு வழிகாட்டிற்று. பிற்காலத்தில் கலாநிதி என்ற சஞ்சிகையையும் நடாத்தினு ர். "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றெல்லாம் மேடைமீது முழங்கும் தம்பிமார்களேப் பார்த்துச் சதாசிவ ஐயர் போன்ற உழைப்பாளிகளுக்குத் தமிழ் மக்களாகிய நாம் ஏதாவது ஞாபகார்த்தக் ைகங்கரியஞ் செய்துவிட்டு, அப்புறம் மேடை முழக்கத்தை வைத்துக்கொள்ளலாமென்று சொல் லத் தோன்றுகின்றது.
"நமது பண்டிதர்களுட் சிலர் கட்டுப்பெட்டிக எல்லர்" என்று கல்கி எடைபோட்டது சரிதான் என்பதை நிறுவுவதற்கு ஓர் உதாரணத்தை எடுத் துத் தரலாம். 'ஆனந்தவிகடன், 1935ஆம் ஆண்டில் நடாத்திய நாவலுக்காகிய விமர்சனப் போட்டியில், 'ஆனந்த மடம்" என்ற நாவலேப்பற்றி விமர்சனம் எழுதிப் பரிசு பெற்ற பண்டிதர் பொ. கிருஷ்ணன் அவர்கள், 1958 ஆம் ஆண்டிற்குரிய கட்டுரைகளுள் சிறந்ததான கட்டுரைக்குரிய பரிசைபம் பெற்ருர், து ய உள்ளமும், இளம் எழுத்தாளரைத் தட்டிக் கொடுக்கும் மனப்பான்மையும் , காலத்திற்கேற்ற வசன நடையும், "விண்ணுத்திப் பூச்சி" தொடக்கம் வள்ளுவர் வரை படித்து அருமையான விமர்சனக் கட்டுரை எழுதும் வன்மையுங் கொண்டு கிருஷ்ணன்
- ມ ກໍ புெ : ||
சங்கம் வள ர்த்த
பிரமயூரீ தி. சதாசிவ ஐயர் அவர்கள்
Page 50
உபயம் : நீருமதி , கலேப் புலவர்
திரு. க. நவரத்தினம் அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5 7
அவர்கள் விளங்குகின்மூர்கள். அவர் டி ரான
ஆக :ே ፵.‛ I'† r; i, fill i 1ான விபர் வினக் கட்டுரை கஃ எழுதிiருக்கின் முT. அக்கட்டுரைகள் ப என்ன சுப்பட்டன. அவரை ப் போன்ற எழுத்தாளர்களாலே தாம் ஈழம், காய்தல்உa த்துவின் றிச் சரியான இலக்கிய மதிப்பீடு செய்கின்றது என்கிற நற்பெயரைச் சம்பாதித்துக் கொண்டது.
ஈழத்தில், இலக்கிய இர சனே யைப் பெருக்கிய வர்களுள் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய வர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்களேயாம், ஈழத்தின் பழைமையை அஞ்சலிசெய்து, அதனே ப் புதுக்கோலத்தில் அறிமுகப்படுத்தியதுடன், சிங் தேயோ மூலேபில் பத்தோடு பதிஜென் ருசு இருத்த ஈழத்துப் புலவர் இரத்தினங்களேயெல்லாம் அவர் நறக்கு தங்ல முறையிலே அறியச் செய்தார். சின்னத்தம்பிப் புலவர், சேணுதிராய முதலியார், முத்துக் குமார கவிராயர், வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளே, மகாலிங்கசிவம், சோமசுந்தரப் புலவர் என் போரை அவர் ந க்கு அறிமுகஞ் செய்துவைத்து. அவர்களுடைய வாழ்க்கை முனறகளே யும். பாடல் *ஃபும் நுண்ணிதாக விளக்கினர். ஈழத்தின் பழைய கலாசாரம் கந்த புராண கலாசாரத்தான் ான்பதைத் தெளிவாக நிறுவியுள்ளார். இராமா பனம், பாரதம், திருக்குறள் , அன்பினேந்திணே ஆகியவற்றை அவர் அணுகி முறை மற்றையோர் ரெல்லாத தனிவழி புது வழி அவர் த மீது கட்டுரை களிற் பொருள் முக்கியத்துவத்தையே கவனிப் பவர். ஆரியம் - தமிழ் என்று பேதம் பாராட்டாது. இரண்டையும் இரு கண்களாக மதித் துச் சொல்வின்
-
Page 51
5B ஈழத்து இலக்கிய வளர்ச்சி
மூச்சிஜன அறிந்து உபயோகித்தல் வேண்டும் என்கிற கொள்கையுள்ளவர், பண்டிதமணி அவர்களுடைய நூல்களாக கதிர்காம வேலன் பவனி வருகிருன் இலக்கிய வழி, சைவநற்சிந்தனைகள், பாரத நவமணிகள், கந்த புராண கலாசாரம், கந்தபுராண போதனே, சமயக்
கட்டுரைகள் முதலியன வெளிவந்திருக்கின்றன.
"இலக்கணத்தை அதிகங் கவனியாது. தமிழ்
நடையை மலினமாக்கி உபயோகிக்கின்ருர்" என்று
சில பண்டிதர்கள் பண்டிதமணியவர்களுடைய
நடையைக் குறை கூறுகின்ருர்கள். ஆணுல் பண்டித மணி அவர்களுடைய நடை அவர்களுக்கே அமைந்த
கொடை அந்த நடைதான் அவரது தனித்து வத்தை வெளிப்படுத்துகிறது.
அடுத்து, பண்டிதமணியுடன் ஒருசாஃல மானுக் கராக, நாவலர் காவிய பாடசாஃப்பிற் பயின்று, கவிஞராய் ஒளிரும், மட்டக்களப்பைச் சேர்ந்த
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே அவர்களைக் క
பிடவேண்டும். "ஈழமணித் திருநாடு" என்ற கவிதை மூலம் பிரசித்தியடைந்த புலவர்மணி பகவத்
கீதையை வெண்பா உருவிற் பாடியுள்ளார். அதன்
முதலாவது பாகம் பகவத்கீதை வெண்பா என்கிற பெயரில் அச்சில் வந்து, பூரீலங்கா சாகித்திய
மண்டலப்பரிசில் பெற்றுள்ளது. விபுலாநந்தர் மீதும், மகாலிங்கசிவத்தின் மீதும் அவர் பாடிய
பாடல்களும், 'வாழி கல்லோயா நங்கை!" போன்ற தனிப்பாடல்களும் கிழக்கிலங்கையின் தமிழ் வளத்தினை நினைவூட்டுகின்றன. பல கவியரங்கு களிற் பங்குபற்றிய புலவர் மணி அவர்கள்
அழகும், மென்மையும், ஒசை நயமுங்கொண்ட பல பாடல்களே நமக்குத் தந்துள்ளார். இறுக்க மான வசனநடையிற் கட்டுரைகள் பல எழுதி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 59
யுள்ளார். இருப்பினும், அவர் கவிஞர் திலகமாகவே ஒளிருகின்ருர்,
கொழும்புப் பகுதியிலே தமிழை வளர்த்த மு. நல்லதம்பி அவர்கள், ஈழம் சுதந்திரம் பெற்ற பொழுது நடைபெற்ற மரதனஞ்சலோட்டப் போட் டிக் கவிதையில் பரிசுபெற்றதின் மூலம் முன்ன ணிைக்கு வந்தார். அது "மரதனஞ்சலோட்டம்" என்னும் பெயரில் அரசாங்க வெளியீடாக வெளிவந்திருக் கிறது. அந்தப் பாடலேப்பற்றி எவ்வளவோ அபிப் பிராய பேதங்கள் நிலவி வந்தபோதிலும், அவர் பாடியுள்ள குழந்தைப்பாடல்கள் ஈழத்தின் புகழை ஓங்கச் செய்யுமென்பதுண்மை. ஒரு நல்ல தொகுதிக்கான நூறு தரமான பாடல்கள் கூடத் தேடுவாரற்று மறைந்து போய்க்கிடக்கின்றன. மொழிப்பயிற்சி, ஈழவாசகம் ஆகிய பாடநூல்களோடு தான் அவர் வாழவேண்டும் போலும்!
இதே சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பினேப் பிறப்பிடமாகக்கொண்டு சைவத்தமிழ்ப் பணி புரியும் கா. அருணுசலத் தேசிகர் அவர்களேயும் குறிப் பிடவேண்டும். சமயத் தொண்டே அவரது சிந்தை யெல்லாம் நிறைந்திருந்தபடியால், இலக்கியம் அவரது சேவையைப் பெருமளவிற்கு இழந்து விட்டது என்றே சொல்லவேண்டும். இருப்பினும், சைவ சமய சிந்தாமணி என்கிற அவரது நூலில் அவ ரது தமிழ் வண்ணத்தைக் காணலாம்.
பத்துப்பாட்டு முதல், பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து, தெளிந்த கட்டுரைகள் எழுதி, தமிழ்த்தாய்க்குப் பல அணிகளேச் சூட்டியுள்ள வித்துவான் க. வேந்தஞர் அவர்கள் மேடைகளிலே
Page 52
E[] ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பலவிதக் கொள்கைகளைப் பேசிவந்தார். இதனுள். அவரது இலக்கியக் கொள்கைகள் குறித்து விமர் சகர்களிடையே பலவித வேறுபட்ட அபிப் பிராயங் கள் நிலவிவந்த போதிலும், அவர் நல்ல கவிஞர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். 'காலேத்
தூக்கிக் கண்ணில்ஒற்றி " என்கிற வரியுடன் கூடிய
"அம்மா' என்னும் பாடல், பாடசாஃகள் தோறும் முழங்கிக்கொண்டிருக்கின்றது. கவிதைக் கடித முறையில் அமைந்துள்ள அவரது தமிழன் குரல்"
நல்ல கவிதை நூலாக இருந்தாலும், மேலும்
அவரது கவிதைகள் நூல்களாக வெளிவந்தாற்ருன் அவரது பெருமை நன்கு புலணுகும்.
தமது இளங் காலத்திலேயே, அதாவது 1932
ஆம், 33 ஆம் ஆண்டுகளிலேயே, பண்டிதர் இராசை
பனுர் அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றிப்
பெரும் பாணுற்றுப்படை, சிறு பாணுற்றுப்படை
முதலிய சங்கப் பாடல்களே ஆராய்ந்து, தனித் தமிழ் நடையிலே கட்டுரைகள் எழுதிவந்த பண்டிதர் சோ. இளமுருகனுர் அவர்கள், நெடுங்
கால இடைவெளிக்குப்பின், தமயந்தி (நாடகம்),
செந்தமிழ்ச் செல்வம் அறப்போர்க்கு அறைகூவல் வழி நடைச்சிந்து, வேனில் விழா (அங்கதச் சுவையுடைய கவிதை நூல்), பூரணன் கதை, செந்தமிழ் வழக்கு ஆகிய படைப்புக்களே நமக்கு அளித்துள்ளார். அவர்தம் கவிதைகளிலே தமிழின் செழுமையையும், கனிந்த சுவையையும் நாம் கானக்கூடியதாக இருக்கின்றது. சுவாமி வேதாசலம் அவர்களது தனித் தமிழ் இயக்கத்திற்கு ஈழத்தின் பிரதிநிதியாக அவர் விளங்குகின்ருர், தனித்தமிழ்க்-கொள்கை
யைப்பற்றி ஈழத்தமிழறிஞரிடையே பலவித அபிப்
பிராயங்கள் நிலவுகின்றன. தமிழ்நடை பழைமை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 6
யைப் பின்பற்றுவதாய், மரபு பிறழாததாய் இருக்கவேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறை கொண்டுள்ள அவர், அந்த நடைக்குப் புறம்பாக அமைந்துள்ள நூல்களே, தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வமிகுதியினுவே தாக்கும்பொழுது, "கண்டன வாதி" என்று பெயர்பெற்று விடுதல் நூதின மன்று.
"சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன்
சாம்பல் தமிழ் மணக்க வேகவேண்டும்"
என்று வீறுடன் பாடியவரும், 'ஆனந்தத்தேன்" என்கிற கவிதைத் தொகுதியின் ஆசிரியருமாகிய சச்சிதானந்தன் பட்டதாரியாக இருப்பினும், ஒரு பண்டிதருமாவர், மனேவி கட்டிக்கொடுத்த சாதம் என்னும் பொருளே வைத்துக்கொண்டு அவர் பாடிய 'அமிழ்தம் ஈழநாட்டிற்கே பெருமையளிக்கக்கூடிய கவிதைகளுள் ஒன்ருகும். பண்டிதர்களுள் நல்ல நாவல் ஒன்றினைப் படைத்த பெருமையும் இவரையே சாரும். "அன்ன பூரணி" என்பது இந்
நூலின் மகுடமாகும்.
" மட்டக்களப்புச் சரித்திரத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் இயற்றிய எஸ். ஓ கனகரத்திருவின் மரு கரான வித்துவான் எப். எக்ஸ். எபி. நடராசா அவர்கள், பிற்காலத்திற்ருன் நிறைய எழுதியிருப் பினும், இவ்வெழுத்தாளர்களுடன் சேர்க்கத் தக்க வரே. சரித்திர - ஆராய்ச்சித் துறைகளிலே மிக்க ஈடுபாடுடையவர். அரிய பல நூல்களேயும், வாய் மொழி இலக்கியச் செல்வங்களேயுஞ் சேர்த்து வைத்துள்ளார். ஈழநாட்டில் வெளிவந்த நூல் சுளேப் பற்றிய அபரிமிதமான செய்திகளே இவர் சேகரித்து வைத்துள்ளதுடன், எழுத்தாளர் மரபி
Page 53
62 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
னைப் போற்றும் ஞானத்தைப்பெறும் வகையில் கட்டுரைகள் மூலமும், கைந்நூல்கள் மூலமும் வெளி யிட்டு வருகின்றர். ஈழமுந் தமிழும் என்னும் இவரது கைந்நூல் மிகவும். பயனுள்ளது. இலங்கைச் சரித் திரத்தின் அந்நியர் ஆதிக்கக் காலத்தை மூன்று பாகங்களாக எழுதியுள்ளார் எண்ணெய்ச் சிந்து, மொழிபெயர்ப்பு மரபு, ஈழத்து நாடோடிப் பாடல்கள், மட்டக்களப்பு மான்மியம் முதலிய நூல்கள் இதுவரை யில் வெளிவந்துள்ளன. மட்டக்களப்பு மான் மியம்’ பூரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசில் பெற் றுள்ளது.
பல பாடநூற் புத்தகங்களோடு, சக்திதாஸன் என்கிற புனைபெயரில், பொருள் செறிந்த பல கட்டுரைகளையும், தகர்க்க முடியாத பல கண்ட னங்களையும் எழுதிய பண்டிதர் வ. நடராஜன் அவர் களும், மட்டக்களப்புத் தமிழகத்தின் பெருமையைத் தொகுத்துக் கூற விழைந்த பண்டிதர் சீ. வீ. கந்தையா அவர்களும், சிவதொண்டன் பத்திரிகை மூலமாகச் சமய இலக்கியத் தொண்டும் கவிதைப் பணியும் ஆற்றும் க. கி. நடராஜன் அவர்களும், தற்காலத்தில் விரைவாக முன்னேறிப் பிரபல பேச்சாளராக விளங்குபவரும், ‘இனவெறியா? மொழிப்போராட்டமா? என்னும் நூலின் ஆசிரியருமாகிய வித்துவான் வேலன் அவர்களும் கதிரமலைப்பள்ளு நாடகம் எழுதிய பண்டிதர் வீரகத்தி அவர்களும் பண்டித வர்க்க எழுத்தாளர்களுட் குறிப்பிடத் தக்கவர்களாம்.
மலர்கள்
ஈழத்தமிழ் இலக்கிய வளத்துக்குப் பத்திரிகை ஆண்டு மலர்களும், பெரியோரது நினைவு மலர்
ஈழ்த்து இலக்கிய வளர்ச்சி w 63
களும், வெள்ளி விழா மலர்களும் இயன்றளவு துணை புரிந்திருக்கின்றன. இத்துறையில் "ஈழகேசரி' ஆண்டு மலர்கள் முக்கியமான இடத்தை வகித் துள்ளன.
பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் பல வகைக் கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கை யில் இன்பத் தமிழ், தாவாரமில்லை, நூற்றண்டுகளில் தமிழ் ஆகிய நூல்களை இயற்றித்தந்து, திருக்குறள் அறிவினை இளஞர் மத்தியிலே வளர்க்கத் திருக்குறள் விழாக்களையும், போட்டிகளையும் நடாத்தி வருபவர். அவர் தமிழ் வசன நடைக்கு வழிகாட்டியான நாவ லரது பெயரில் பூரீலயூரீ ஆறுமுக நாவலர் நினைவு மலர் ஒன்றையும், பேரம்பலப்புலவர் நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு மலர்களும் குறிப்பிடத்தக்க மலர்களாம்.
"தொல்காப்பிய உரைகள்’, ‘இருபதாம் நூற்றண்டு வசனம் ஆகியவற்றின் ஆசிரியரும், மறையக்கூடிய நிலையிலிருந்த பல சிறு நூல்களைத் தமிழ் வாச கருக்குத் தந்த வருமாகிய அ. வி. மயில்வாகனம் (*கோவை வாணன் ') அவர்கள், இலங்கைப் பல் கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வரும், தமிழ்ப் பரோபகாரி சி. வை. தாமோதரம் பிள்ளையின் புதல் வரும், இராம கதை, பாண்டவர் கதை, மனுேன்மணியம், சந்திரகாசம் ஆகியவற்றை எழுதிய வருமான கிங்ஸ்பெரி தேசிகரது நினைவாக வெளி யிட்ட மலரும் குறிப்பிட்டத்தக்கதாகும்.
குருகுல முறையிலே, தமது வீட்டிலேயே பாலர் வகுப்புத் தொடக்கம் பண்டிதர் வகுப்பு வரை நடாத்தியும், புராண - காவிய இரசனையை
Page 54
66 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
"கிழக்குத்தபால்" என்னும் பத்திரிகை வெளிவந்தா லும், நவீன இலக்கியப் போக்கில் நாட்டமற்ற தாகவே அது வெளிவந்தது. அதனேத் தொடர்ந்து, 1947 ஆம் ஆண்டில் "உதயம்" என்கிற பத்திரிகை வெளிவந்தது. "உதயம்" பத்திரிகையை நடாத்திய
வர் எஸ். டி. சிவநாயகம் ஆவர். இளமைத் துடிப்பின்
ஆவேசத்துடன் தொடங்கப்பட்ட அப்பத்திரிகை தான் இளைஞர் பலருடைய புனேகதைகளுக்கு முதற்களம் அமைத்துக் கொடுத்தது. சிவநாயகம் அவர்கள் கொழும்புப் பத்திரிகைகளிற் கடமை யாற்றச் சென்றபடியால், 'உதயம் அற்பாயுளா கவே மரித்தது.
ஆணுல், இஃளஞரின் துடிப்புக் கனன்றுகொண்டி
ருந்தது. தற்பொழுது பாராளுமன்றத்தில் மட்டக் களப்பின் முதலாவது உறுப்பினராக இருக்கும் செ. இராசதுரையும், ஜணுப் கே. எம். ஷா ("பித்தன்") வுஞ் சேர்ந்து "லங்காமுரசு’ என்ற பத்திரிகையை
நடாத்தினுர்கள். அதுவும், பொருள் வருவாயற்ற இ&ளஞரின் முயற்சியாகச் சில இதழ்களே வெளி வந்து இயற்கை எய்திற்று. ஈழத்தில், அதிகமான
கையெழுத்துப் பத்தரிகைகள் நடத்தப்படுவது
மட்டக்களப்பிலேதான். இத்தகைய கையெழுத்துப்
பத்திரிகைகளே, மட்டக்களப்பின் பொது வாசிக
சாலேயிலே காணலாம். எழுத்தார்வமுள்ள மட்டக் களப்பு இ&ளஞர்களுக்கு அத்தகைய கையெழுத்துப் பத்திரிகைகளே பிரசுர களமமைத்துக் கொடுத்தன. இவ்வாறு வளர்ச்சியடைந்த இளைஞருடைய முயற்சி
களே அடுத்த கால எல்லேயுட் பார்க்கலாம்.
其
ஈழத்து இலக்கிய வளர்ச்சி
1941 ஆம் ஆண்டிற்கும், 1950 ஆம் ஆண்டிற் கும் இடைப்பட்ட காலத்திலே வெளிவந்த ஓர் ஆண்டுமடலே எடுத்துவைத்துக் கொண்டு பார்த் தால், இந்தக் கால எல்லேயுள் நடந்த இலக்கிய முயற்சிகளின் "சொரூபத்தினே ஒரளவுக்குக் காண வாம். கட்டுரைப் பகுதி மிகுதியாகவும், கதை" கவிதைப் பகுதிகள் குறைந்தும் கானப்படுதலே அவதானிக்கலாம். கட்டுரைகளிலே பண்டித வர்க் கத்தினரின் ஆதிக்கமும் கதைகளிலே மறுமலர்ச்சி எழுத்தாளரின் புதுமைப்போக்கும், கவிதைகளிலே" ஆரம்பகாலத் தளர் நடையும் விரவியிருப்பதைக் காணலாம். கட்டுரைகளின் நடையையும் இறுக் கத்தையும் கண்டு 'ஈழம் இன்னும் பழைய # T31 Å, தைக் கைவிடவில்லே' என்று மதிப்பீடு செய்தவர் களும் இருக்கிருர்கள். ஆனல் ஈழத்தின் தரமான பல சிறு க்தைகள் இக்கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடTது
'அறிவிலும், ஆற்றலிலும் தமிழ் நாட்டுடன் போட்டியிடக்கூடிய பண்டிதர் பலர் இருந்தும், வெறும் பாடப் புத்தகங்களுக்கு உரை எழுது வதிலும், ஒருவரை ஒருவர் குறைகூறுவதிலும் காலத்தை வினே கழித்துவிடுகிருர்களே! உருப் படியான, இலக்கியத் தரமுள்ள பாரிய நூலொன் றையுஞ் செய்துவிடவில்லையே' என்று குறைப்படும் இரசிகர்களும் இருக்கிருர்கள். தனி மனிதர் சிலரால் எடுக்கப்பட்ட முயற்சிதான் மேலோங்கி நிற்கின் றனவே யொழியக் கூட்டு முயற்சிகள் செய்யப்பட வில்ஜல யென்பதும் மற்குெரு குறையாகும். எனி ஒனும், பல வகைப்பட்ட நூல்கள், வைத்தியக் கைம்முறை, சுத்தபோசனபாக சாஸ்திரம், சிவசம்புப்
Page 55
68 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
புலவர் பிரபந்தத்திரட்டு, அடியார்க்கு நல்லார் ஆராய்ச்சி, உலகவரலாறு, வானசாஸ்திரம், கதிர்காமம், மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில் என்பன இக்காலத்தே தான் வெளிவந்தன என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும். சுதந்திர ஈழத்தின் இலக்கிய
முயற்சிகளுக்கு புதிய பரம்பரையினர் தங்களைத் தயார் செய்துகொண்ட கால எல்லையும் இப் பகுதியேயாகும்.
1951-1960
இந்தக்கால எல்லையுள் நடந்த இலக்கிய முயற்சிகளைப் பற்றி எழுதப்புகுங்காலை மிகவும் எச்சரிக்கையோடும், நிதானத்தோடும் உள்நுழைய வேண்டியிருக்கிறது. இலக்கியப் படைப்பாளிகளான எழுத்தாளர்களுடன், 'வாசக' எழுத்தாளர், "நேயர் கடித" எழுத்தாளர், "கேள்வி-பதில் எழுத்தாளர் *எழுத்தாளர் சங்க அங்கத்துவ எழுத்தாளர் என்று பல தரப்பட்ட, பெயரளவிலே தோன்றியுள்ள எழுத்தாளர்களும் "பயிருடன் வளர்ந்த களை'களா கப் பல்கிப் பெருகியுள்ளார்கள்.
இத்தகைய எழுத்தாளர் களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டுமா? குறிப்பிடாவிட்டால் அவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு என்னுடன் சண்டைக்கு நிற்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இருப்பினும், அவர்களுடைய பெயர் களையுஞ் சேர்த்து வரலாற்று மோசடி செய்ய முடியர்து.
Page 56
70 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
சிருட்டி இலக்கியம் படைக்கும் எழுத்தாளரை எடுத்துக் கொண்டாலும், “த டி எடுத்தவனெல் லாந் தண்டற்காரன் என்பதுபோல, ஏதோ இரண் டொரு சிறுகதைகளை மட்டும் ‘எப்படியோ பிரசுரித்துவிட்டு, ‘நானும் ஓர் எழுத்தாளன் தான்,' என்று சொல்லித் திரியும் மிகப் பெரிய எழுத் தாளர் படையொன்று என் கண் முன் காட்சியளிக் கின்றது. மிகப் பழையவர்கள் இவர்களை எழுத் தாளர்களென்று ஒப்புக்கொள்வதில்லை. இத்தகைய வட்டார வியாதி தொடர்ந்து வளர்கின்றது. 1950 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கியவர்கள் கூட, 1956 ஆம் ஆண்டில் எழுத்துத் துறைக்கு வந்த வர்களே எழுத்தாள ரென்று ஒப்புக் கொள்வ தில்லையே! பண்டித மனப்பான்மையைச் சாடும் . இந்தப் புதுமை எழுத்தாளர்கள், தாங்களும் ஒரு வகையான பண்டித மனப்பான்மையைத் தான் பிரதி பலிக்கின் ருர்கள் என்பதை உணருவதில்லை. "பழைய இலக்கியங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்; மற்ற வர்கள் அணுகக்கூடாது" என்று பண்டிதர்கள் கருதுகிரு ர்கள் என்று சொல்லும் கதாசிரியர்கள், சிறுகதையோ-நவீன கவிதையோ-நாவலோ எங்க ளுக்குத் தான் சொந்தம்; நேற்றுப் பேணு பிடிக்கத் தொடங்கிவிட்ட இவர்கள் கதை எழுதத் தொடங்கி விட்டார்களாம்" என்று ஏளனமாகப் பேசுப வர்களையும் நாம் பார்த்திருக்கின்ருேம்.
இவற்றைத் தவிர வேறு ஒரு பெரிய சங்க டமும் இருக்கிறது. 1950 ஆம் ஆண்டிற்கு முன் பில்லாத வட்டார மனப்பிான் மையும், ஆரம் பத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்து, பின்னர் பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த வட்டார மனப் பான்மைக்கு ஆதாரமாக, இலக்கியக் கோட்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 7
பாடுகள் முன் வைக்கப்படினும், அரசியற் பின்னணி தான் கோலோச்சுகின்றது என்கிற உண்மை யும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த வட் டார மனப்பான்மை , பிறிதொரு வட்டத்தைச் சேர்ந்தவரது உண்மையான இலக்கிய ஆற்றலைச் சிலாகித்தாலுஞ் சீறுமளவிற்குக் கசப்பு நிலை அடைத்துள்ளது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே கவிந்துள்ள கிரகணம் என்றே இந்நிலையைக் குறிப் பிட வேண்டும். இந்தப் பிரிவு நிலையை மேலும் பிளவு படுத்தச் சில தற்கால விமர்சகர்கள் ஊக்கமுடன் உழைத்து வருதல் வேதனைக்குரிய செயலாகும்.
மேலே தரப்பட்ட அவல நிலைகளைப் பூரண மாக அறிந்து கொண்டு, கழைக் கூத்தாடியின் நிதானத்துடன், இந்தக் கால எல்லையின் வளர்ச் சியை எழுத விழைகின்றேன்.
இரண்டாவது உலக மகா யுத்தம், குடியேற்ற நாடுகளைக் கட்டியாண்ட ஏகாதிபத்தியத்தின் பலத் தினை வெகுவாகக் குறைத்ததுடன், குடியேற்ற நாடுகளின் சுதந்திர வேட்கையைப் பெரும் அளவில் வளர்க்கவும் உதவி செய்தது. இந்நிலையிலே, இந் தியா, இலங்கை, பர்மா போன்ற கீழைத்தேய நாடுகள் சுயாட்சி பெற்றன.
பாரத நாட்டினைப் போன்று, இலங்கை தேசீ. யப் போராட்டங்கள் நடாத்திச் சுதந்திரத்தினைச் சம்பாதிக்கவில்லை. இதன் காரணமாக, தேசிய விழிப்பை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளரும் கவிஞர்களும் ஈழத்திலே தோன்றவில்லை யென் பதையும் அவதானிக்கலாம். தற்காலத்திலே தேசீய உணர்வு மங்கி, இன உணர்ச்சி கோலோச்சு
Page 57
72 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வதற்கு தேசீய விழிப்பு ஏற்படாது, கன்றிப் பழுத்த சுதந்திரம் கிடைத்த மையும் ஒரு பிரதான ஏதுவாகும். இலக்கிய வரலாற்றைச் சொல்லப்புகுந் துள்ள எனக்கு, இத்தகைய அரசியற் சம்பந்த மான விசாரணை நடாத்தும் உரிமை கிடையாது. ஆணுலும், இலக்கியத்தின் டோக்கினை எவ்வளவு தூரம் அரசியல் தாக்கங்கள் பாதித்திருக்கின்றன என்று சொல்லுங் கடன்மைப்பாடு உண்டு.
சுதந்திரம் பெற்ற இலங்கையில், ஆங்கிலம் அன்று அலங்கரித்த திருப்பீடத்தைத் தேசீய மொழிகள் அலங்கரிக்க வேண்டும் என்கிற எண் ணம் மிக இயற்கையாக எழுந்தது. இதற்கு முன் , இலவசக் கல்விச் சகாயத்தினுல், படித்தோர் தொகை மிகுந்து, வேலையில் லாத் திண்டாட்டம் பூதாகரமாக உருவெடுக்கத் தொடங்கிற்று. தேசீய ஐக்கியத்தைப் பேணவும், அதேசமயம் பொருளா தார வளத்தினைப் பெருக்கவுங் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் சமர்ப்பிக்க இயலாத அரசியல் வாதி கள், மொழிப்பிரச்சினையை அதிகாரத்திற்கு வருங் குறுக்குப் பாதையாக மேற்கொண்டனர். இரு மொழிகளுக்குஞ் சம உரிமை என்கிற உறுதிமொழி பணியாய் மறைந்து, தமிழர் இரண்டாந்தரப் பிரசைகளாக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அடி கோலிய தமிழ்ச் சமூகம், தமது மொழி இந்நிலை யடைந்த பொழுது கொண்ட கொந்தழிப்பு, ஈழத்து இலக்கியப் படைப்புகளிலே தலைதூக்கின. இத்தாக் கங்களைச் சில எழுத்தாளரது படைப்புகளிலே து லாம்பரமாகக் காணலாம். இவற்றை, 'வெறும் இனவெறி எழுத்துக்கள்’ என்று ஏகவசனத்திலே ஒதுக்கிவிட (up 9-tist g5!.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 73
கம்யூனிச சித்தாந்தம் சர்வதேசீயத் தொனி யில் மலர்ந்தது. இங்கிலாந்து சென்று படித்துத் திரும்பியவர்களின் கைங்கர்யத்தினல், கம்யூனிசம் ஈழத்திலும் பரவியது. இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் சோவியத் ரூசியநாடு வல்லர சாக நிமிர்ந்து நின்றது. அந்நாட்டினது விஞ்ஞான சாதனைகளும், இலக்கிய முயற்சிகளும் இளைஞர் மனதினைக் கவரத் தொடங்கின. எனவே, அந்நாட்டு முயற்சிகளின் ஆதிக்கமும், கம்யூனிச சித்தாந்த அழுத்தமும் சில எழுத்தாளரது எழுத்துக்களிலே இடம்பெற்றன. அவர்களது எழுத்துக்களை வெறும் * கம்யூனிச பிரசாரம்' என்று ஏக வசனத்தில் கழித்துவிடவும் முடியாது.
திராவிட நாட்டுக் கோரிக்கை, இதே கால எல்லை யில் , தமிழ்நாட்டிலே அரசியற் பிரச்சினையாகவே எழுந்தது. எதுகை , மோனை கலந்த ஒரு வகை நடையை அறிமுகப் படுத்தி, திராவிட நாட்டுப் பிரசாரம் நடாத்தப் பெற்றது. இவ்வகையான நடையிலே தங்களையும் ஈடுபடுத்தியமையையும் சில எழுத்தாளரது எழுத்துக்களிலே அவதானிக் கலாம்.
யுத்த காலப் பணப் பெருக்கமும், யுத்தச் செய்தி களை அறியும் ஆவலும், வாசிப்புப் பழக்கத்தினைச் சாதாரண மக்களிடையில் ஏற்படுத்தின. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மஞ்சள் பத்திரிகைகளும், துப்பறியும் கதை ககளும் ஏராள மாக வரத்தொடங்கின. படிப்புக் குறைந்த மக்க ளிடமிருந்தும், சிற்றின்பப் பிரியர்களிடமிருந்தும்
F-10.
Page 58
* # 屬
Fኹናimm |స్ట్రీ (ኻ
閭
காரைக் கால்த் தீர்த்தக் கிணறு.
அப்பருக்குத் தண்ணீர் காட்டிய இடம்
Page 59
76 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
"1960 ஆம் ஆண்டிற்குப் பின்" என்கிற கடைசிப் பகுதியை வேறு பல துறைகளிலே நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப்பற்றி எழுதுவதற்காக ஒதுக்கி வைத்துள்ளேன். எனவேதான், 1950 ஆம் ஆண்டிற் குச் சற்று முன்னராக - சுதந்திரன் பத்திரிகையின் உதய காலத்திலிருந்து - எழுத்துத் துறைக்கு வந்த, வர்களையும், 1960ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத் துத் துறைக்கு வந்து, தற்சமயம் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களையும் இப்பகுதியிலே சேர்த்துப் பூரணப் படுத்த முயலுகின்றேன். இதனையும் மன தில் நிறுத்துக்கொண்டு, இக்கால் எல்லையுள் நடை பெற்ற இலக்கிய வளர்ச்சியினைப் பார்ப்போம்.
சிறு கதைகள்
இந்தக் கால எல்லேயுள் சிறுகதைத் துறை யிலேயே பெரும் அளவில் முயற்சிகள் நடைபெற் றன. உலக இலக்கிய அரங்கத்திலே சிறுகதைத் துறை பெற்றுவரும் செல்வாக்கினை அநுசரித்தே இம்முயற்சிகள் நடைபெற்றதை நாம் அவதானிக் கலாம். கதை சொல்லும் உத்தி முறைகளிலே பலவிதப்பட்ட பரிசோதனைகளும் நடாத்தப்பட் டன. இந்தக் காலத்திலே தோன்றிய எல்லா எழுத்தாளர்களுமே ஒரு சிறு கதையையாவது எழுதியிருக்கின்றர்கள். இருப்பினும், வ. அ. இராச ரத்தினம், எஸ். பொன்னுத்துரை, பித்தன், அருள் செல்வாகாயகம், செ. கணேசலிங்கன், என். கே. ரகு காதன், கே. டானியல், டொமினிக் ஜீவா, காவலூர் இராசதுரை, அ. முத்துலிங்கம், உதயணன், நவம், கீர்வைப் பொன்னையன் ஆகிய எழுத்தாளர்களே சிறு கதைத் துறையிலே பிரபலம் எய்தினர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 77
இந்தப் பெயர்களை ஒரே பட்டியலிலே தருவ தினுல், இவர்களுடைய படைப்புக்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே தரமானவை யென்று கொள் ளத் தேவையில்லை. சிலரது கதைகள் தரத்திலே உயர்ந்தும், சிலரது கதைகள் தரத்திலே தாழ்ந்தும் காணப்படுகின்றன என்பதுதான் உண்மையாகும். சிலரிடையே ஒரே காலத்தில் தோன்றிய எழுத் தாளர் என்பதைத் தவிர வேறு ஒற்றுமையைக் காணமுடியாது. ஒரே காலம் என்று சொல்வதிலும் ஒரு வில் லங்கம் உண்டு. 1950 ஆம் ஆண்டிற்கும் சற்று முன்னராகச் கிறு கதைத் துறைக்கு வந்தவர் களும் , 1960 ஆம் ஆண்டிற்ருன் வந்தவர்களும் இப்பட்டியலிலே இருக்கின்றர்கள்.
பழம்பெரும் சிறு கதையாசிரியர்கள் எழுத்துத் துறையிலிருந்து சற்றே ஒதுங்கிவிட, அவ்விடத் திற்கு வந்த சிறுகதைச் சிற்பிகளுட் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் வ. அ. இராசரத்தினமாவர். கொட்டியாரப் பகுதியைச் சேர்ந்த மூதூரைச் சேர்ந்த இவ் வாசிரியரது எழுத்துக்களிலே மகா வலி கங்கைக் கரையையும், அதன் அழகையும், வளத்தையும் பார்ப்பதுடன், கிழக்குக் கடற்கரை எழிலையுங் காணலாம். அழகான வர்ணனைகளை இணைத்து, தெளிவான நடையிலே, கட்டுக்கோப் பான பல நல்ல கதைகளை எழுதியுள்ளார். ஈழத் துச் சிறு கதைத் தொகுதியில் வெளிவந்த இவரது "தோணி" என்னுஞ் சிறுகதை ஈழத்திற்கே பெருமை தரும் படைப்பாகும். தமிழகத்தின் "ரீடேர்ஸ்டைய ஸ்ட்" டான மஞ்சரி அதை மறு பிரசுரஞ் செய்து கெளரவித்தது. "தோணி க் கதையையுஞ் சேர்த்து, அவரது சிறுகதைத் தொகுதி வந்துள்ளது.
Page 60
78 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
அதற்கு அவர் பூரீலங்கா சாகித்திய மண்டலத்தின்
பரிசிலைப் பெற்றுள்ளார். அத்தொகுதியிலே இடம் பெற்றுள்ள பாலன் பிறந்தான், பிரிவுபசாரம் ஆகிய கதைகள் நல்ல வை. அவை கதைக்கு ஏற்ற * கருவை அன்ருட வாழ்க்கையிலே தேர்ந்தெடுக்குந் திறமையைப் புலப்படுத்துகின்றன. ஈழகேசரி வளர்ப்புப் பண்ணையில் வளர்ந்த அவர் அப்பத்திரி கையில் எழுதும் பொழுதுதான் கவர்ச்சியுடன் எழுதினர். ஈழகேசரியிலே தொடர்கதையாக வெளி வந்த கொழுகொம்பு என்கிற நாவல் நூலுருவம் பெற்றிருக்கின்றது. சிறுகதையின் வெற்றியை, அவர் நாவல் இலக்கியத் துறையில் ஈட்டவில்லை. பிரஞ்சு மொழியில் வந்த "த பாற்காரன்" என்கிற நாவலின் உத்தியை அநுசரித்து, ஈழநாட்டில் எழுதிய துறைக்காரன் அவருடைய இரண்டாவது நாவலாகும். இவற்றுடன், சில சரித்திரக் கதை களையும், வானெலி நாடகங்களையும் எழுதியுள்ளார். ன்னினும், பழைய கவர்ச்சி சமீப காலச் சிறுகதை களிற் குறைந்தும், பிரசாரத் தொனி அதிகரித்து மிருப்பதாகச் சில இரசிகர்கள் அபிப்பிராயப்படு கின் ருர்கள்.
எஸ். பொன்னுத்துரை எழுத்துலகின் பல துறை களிலே தமது கைவண்ணத்தைக் காட்டியவராவர். ஈழத்திலே அதிகம் புனை பெயர்களுக்குள் மறைந்து நின்று, பல இலக்கியப் பரிசோதனைகளை நடாத்திப் பார்த்தவர். இக்கால எல்லையில், சிறுகதைத் துறை யில் உருவ அமைப்புகளிலும், உத்தி முறைகளிலும் பல பரிசோதனைக் கதைகளை எழுதி, புதிய வழிக ளையும் அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். ஐந்து பாணிகளிலே அமைந்த பசி என்னும் ஐங்குறு கதைகளும், யாழ்ப்பாணக்களத்தில் மலர்ந்த நிழல்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 79
மட்டக்களப்பு நிலைக் களத்தில் மலர்ந்த ஒளி ஆகியவற்றை அடக்கிய துருவக்கதைகளும் விமர்சகர் களின் பாராட்டுதல்களைப் பெற்றன. ஆபாசமாக வும், பெண் பாத்திரங்களின் வருணனைகளைப் 'பச்சை"யாகவுங் “கொச்சை' யாகவும் எழுதுகின் ருர் எனக் குறைப்படும் வாசகரு முளர், அவரைப் பற்றிச் சில விமர்சகர்கள் 'பிரச்சினைக்குரிய எழுத்தாளர்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். துணிவான ஒரு புதிய போக்கு அவரை அவர்கள் முன் அவ்வாறு நிறுத்தி யுள்ளது. "முற்போக்கு" "பிற்போக்கு’ என்கிற கோஷங்களுக்கு மத்தியில், நற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை முன்வைத்திருக்கின்ருர், சூடிக் கழிக்காத மலர் முதலிய அவரது அருமையான உருவகக் கதைகளைக் கலைமகள் விரும்பிப் பிரசுரித் திருக்கின்றது. முதல் முழக்கம், வலை ஆகிய நல்ல நாடகங்களை எழுதித் தாமே மேடையேற்றி, நாடகத் துறையிலும் வெற்றியீட்டியுள்ளார். "ஆபா சம்" என்று சொல்லி மற்றைய எழுத்தாளர் அணு கவுங் கூசும் விடயங்களை வருணனைகளின் மேன்மை யாலும், கவர்ச்சியான நடையாலும் வாசகருக்குச் சொல்லக்கூடியவர் என்பதற்குச் சான் முகத் "தீ" என்னும் அவரது நவீனம் அமைந்துள்ளது. அதே சமயம், அவா, வீடு ஆகிய அவரது குறுநாவல் கள் சிக்கலான இந்து - பெளத்த சமயத் தத்துவங் களைக் கொண்டவை என்பதையும் மறந்துவிடக் கூடாது. இவை தமிழிற் புதியவை; வெற்றி முயற்சி கள். கிறித்துவப் பின்னணியைக் கொண்டுள்ள நியமம், பேதுருவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நல்ல கதையாகும். கிறித்துவ நம்பிக்கைகளுக்குப் பிறழாது, அதே சமயம் புத்தம் புதிய ஒரு பார்வை யில் இக்க ைத் அமைந்துள்ளது. இஸ்லாமியப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட இத்தா
Page 61
80 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
என்னுங் கதையை இஸ்லாமிய உணர்ச்சியுடன், கிழக்கிழங்கை முஸ்லிம்களின் வழக்குத் தமிழில் எழுதி, வெற்றியீட்டியுள்ளார். அவரது தமிழ் நடையை விசேடமாகக் குறிப்பிட வேண்டும். அர்த்த பூர்வமாகச் சொற்களைத் தேர்ந்து, உருவ கங்களைப் பயனிலையிலேற்றி, போதை தரும் தனித் துவ முத்திரை கொண்டதாக அது திகழ்கின்றது. அந்நடையினல் சாதாரண வாசகனைக் கவர முடியுமா? இருப்பினும், தற்காலத்தில் அவரது பாணியைச் சில எழுத்தாளர்களும், பல இளம் எழுத்தாளர்களும் பின்பற்றுகின் ருர்கள். அவரது பாணியைப் பின்பற்றும் எழுத்தாளர்கள், அவர் இலக்கிய ஆக்கத்தின் மூச்சிற்கேற்ப வசன அமைப் பினை நுட்பமாக வேறுபடுத்திக் கொள்வதைக் கவனிக்க்த் தவறுகின்றர்கள். குத்தலும், கிண்டலும், அங்கதச் சுவையுங் கொண்ட நடையிற் பல கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார். விமர் சனத் துறையிலும் மிக்க ஈடுபாடுடையவர். நெருப்புப் பார்வை அவரது விமர்சன வழியாகும்.
கிழக்கு மகாணத்து முஸ்லிம்கள் மத்தியிலே புதிதாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி வரு கின்ரு ர்கள். அவர்களுடைய எழுத்துக்களில், வருங் காலத்தில் நின்று நிலைக்கத்தக்க இலக்கியம் படைக்க வல்ல ஆற்றல் தொக்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த எழுத்தாளர்களுக்கு முன் னேடியாகத் திகழ்பவர் கே. எம். ஷா என்பவராவர். பித்தன் என்கிற புனை பெயருக்குள் மறைந்து எழு தியதினல், பலருக்கு அவர் முஸ்லிம் எழுத்தாளர் என்பது தெரியாதிருக்கலாம். "சுதந்திரன்' பண்ணை யிலே வளர்ந்து, வெகு வேகமாக முன்னுக்கு வந்தவர். பாதிக்குழந்தை, தாம்பத்தியம் போன்ற
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 8
அருமையான சிறு கதைகளை நமக்குத் தந்துள்ள * பித்தன் பல காலமாக எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பது, ஈழத்துத் தமிழிலக்கிய முயற்சி களுக்குப் பொதுவாகவும், முஸ்லிம் இலக்கிய முயற்சிகளுக்குக் குறிப்பாகவும் பெரு நட்டமாகும்.
கிழக்கிலங்கை அளித்துள்ள இன்னெரு சிறு கதை எழுத்தாளர் அருள். செல்வநாயக மாவர். "கலை மகள்', 'அமுத சுரபி' ஆகிய தென்னகப் பத்திரிகை களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. பெரும்பாலானவை இலங்கைச் சரித்திரச் சம்பவங் களை ஒட்டியவையாக இருக்கின்றன. சரித்திரச் சம்பவங்களிலேயுள்ள பற்றுதலினலன்றி, இந்தியப் பத்திரிகைகளிலே இடம் பிடிக்கும் ஓர் உந்துதலி னல் இக்கதைகள் பிறந்தனவாகத் தோன்று கின்றன. மேற்படி கதைகளிலே, இதிகாசக் கற்பனை கள் சரித்திரச் சம்பவங்களை மறைத்து நிற்கின்றன. ‘ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள்’ ‘தாம்பூலராணி ஆகிய சிறுகதைத் தொகுதிகள் என் கூற்றினை மெய்ப்பிக் கின்றன. “வாழமுடியாதவன்" "மாலதியின் மனே ரதம்" முதலிய நாவல்களை எழுதியுள்ளார். இத் துறைகளிலே பெருத வெற்றியை இவர் பிறிதொரு துறையிலே ஈட்டியுள்ளார். மு. திருநாவுக்கரசு அவர்கள் வெளியிட்ட 'விபுலானந்த அடிகள்" 6 T 6ổT னும் நூலைத்தொடர்ந்து, இவர் 'விபுலாநந்த அடி கள்’ என்னும் நூலை வெளியிட்டார். இதனல் விபுலாநந்தருடைய எழுத்துக்களிலே ஈடுபாடு கொண்டு ஒரு நல்ல தொகுப்பாசிரியராகத் தமிழ்த் தொண்டு புரிகின்ரு ர். விபுலாநந்தரின் இலக்கியங் களைத் தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றர்.
F-11.
Page 62
82 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
விபுலாகந்தத்தேன், விபுலாநந்த ஆராய்வுகள், விபுலா கந்த வெள்ளம் ஆகியன நல்ல தொகுதிகளாகும்.
ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுள் மூன்று சிறுகதைத் தொகுதிகளை ( கல்லவன், ஒரே இனம், சங்கமம்) வெளியிட்ட பெருமை செ. கணேசலிங்க னைச் சாரும் . பல இலக்கிய நண்பர்களினதும், தமிழகத்தின் பிரசுர கர்த்தாக்களினதும் தொடர் புடையவர். இதன் காரணமாகத் தன் நண்பர்கள் சிலரது நூல்களையும் பிரசுரித்திருக்கின்றர். மு. வரத ராசனரின் தொடர்பினலோ என்னவோ, சிறுகதை எழுதுவதற்கு நன்கு அமையாத கட்டுரை நடை யைக் கதைகளைச் சித்திரிப்பதற்குக் கையாளு கின்றர். பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலே கணிசமாக வெற்றியீட்டியுள்ளார். பதவி துறந்தார் ! என்கிற இவரது சிறுகதை, ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. அக்கதை யிலும் பார்க்க மானம், விளம்பரம் காவிகள் ஆகியன இவரது சிறந்த கதைகளாகும். 1955ஆம் ஆண்ட ளவில், "சுதந்திரன்’ பத்திரிகையில் எழுத்தாளர் களையும், கலைஞர்களையும் புதிய முறையிலே அறி முகஞ் செய்து வைத்துள்ளார்.
கற்பனைக் கதைகளும், மனேர திய இலக்கியக் கோட்பாடும், படித்த வர்க்கத்தினரின் இலக்கியப் பொழுது போக்குகளாகக் கருதப்பட்டன. தொழிற் புரட்சி, பிரஞ்சியப் புரட்சி, அமெரிக்க சுதந்திரப் போர், ரூசியப் புரட்சி, உலக மகா யுத்தங்கள் ஆகிய அனைத்துலக அரசியல் நிகழ்ச்சிகள் மேலை நாட்டின் இலக்கியப் போக்குகளிலே, அவ்வப்போது பல "கோஷங்களை அறிமுகப்படுத்தி ைவத் தன . ‘இயற்கை இலக்கியம்', 'யதார்த்த இலக்கியம்",
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 83
‘தேசீய இலக்கியம், "சமதர்ம யதார்த்த இலக் கியம் , ஆகிய பல இலக்கியக் கோட்பாடுகள் உலக இலக்கிய அரங்கிற் பரம்பின. இத்தகைய கோட் பாடுகளின் சாயல்களைத் தென்னுட்டின் ‘மணிக் கொடி எழுத்தாளரது எழுத்துக்கள் அந்தக் காலத் திலேயே தாங்கி நின்றன. இதே 'மணிக்கொடி’ எழுத்து முயற்சிகளுக்குப் பிற்பட்ட இலக்கிய ஆக்கங்களில் மட்டுமே பரிச்சயங் கொண்ட ஒரு சாராரும் எழுத்துத் துறைக்கு வரவிரும்பினர். 1947ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலே கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை நிறுவப்பட்டது. சமத்து வத்தைப் போதிக்கும் அக்கட்சியின் பிரசாரங் களிலே துணிச்சல் பெற்று அவர்கள் தொழிலாளி வர்க்க எழுத்தாளராகவும், ஒடுக்கப்பட்ட இனத் தினரின் எழுத்தாளராகவும் எழுத்துத் துறைக்கு வந்தார்கள். இவர்கள், முற்போக்கு எழுத்தாளர் என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள். "முற் போக்கு’ என்பது கட்சி அடிப்படையில் எழுந்தது என்று சிலர் சுட்டினர். முற்போக்கு எழுத்தாளர் இக் குற்றச்சாட்டினை மறுத்தே வந்தனர். முற் போக்கு இலக்கியம் என்பது, மனிதப் பண் பின் உயர்வையும், உழைப் பின் பெருமையையும், நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும், தேசீய ஒரு மைப்பாட்டையும், சமாதான இலட்சியங்களையுங் கொண்டதுவாகத் திகழுமானல், அது சிந்தன சக்தி யுள்ள எல்லா எழுத்தாளருக்கும் பொதுவானவை யாக அமையும். ஆனல், "முற்போக்கு இலக்கியம் என்பது கட்சி சம்பந்தமான ஒரு கோஷம் என் பதைப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. (iii
SiS
!ff( 4£} ፪፻፺ zး မွို;'ဗွီဒ္ဒါ'!## கர்த்தாக்களாகச் சிறுகத்ைத் "SigEid. விளங்கு
Page 63
84 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
டவர்கள் என், கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா ஆகிய மூவருமே யாவர்.
முற்போக்கு முதல்வராகச் சிறுகதைகள் எழுதிய ரகுநாதன் திராவிட கழகப் பாணியில் ‘பொன்னி’ யிலும் "சுதந்திரனிலும் சில கதைகளை எழுதினர். உணர்ச்சிகளைத் தெளிவான நடையிலே சித்திரிக்கும் *இலட்சிய நெருப்பு போன்ற நல்ல கதைகளை எழுதி யுள்ளார். (இக்கதை வைத்திலிங்கத்தின் "உள்ளப் பெருக்கு" என்கிற கதைக்கு எதிர்க்கதையாக எழுந் தது என்பதையும் ஞாபகத்திலே வைத்துக் கொள் ளுதல் வேண்டும்.) இவரது ‘நிலவிலே பேசுவோம்!" என்கிற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத் தொகுதியிலே இடம்பெற்றிருக்கும் கதைகள் சாதிப் பிரச்சினைகளையும், இனப் பிரச்சினைகளையும் ஒருவித ஆவேச பிரசாரத் தொனியில் அணுகுகின் ஹன. "கனவு நல்ல கதையாகும். சமீப காலத்திலே சிறுகதை எழுதுவதை நிறுத்தி, தாம் சார்ந்த கட்சிப் பத்திரிகையான "தேசாபிமானியில் கட்டு ரைகள் எழுதிவருகின்றர்.
சிறுகதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தள விலே கே. டானியல் முதலிடம் பெறுகின் ருர், சுதந்தி ஏன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் அமரகாவியம் என்னும் கதைக் குப் பரிசில் பெற்றதன் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானர். "சுதந்திரன் காலத் திலேதான் 'கரு'வைச் சிதைக்காமல், அளவான வருணனைகளுடன் நல்ல கதைகளை எழுதினர். அவ்வாறு வெளிவந்த 'உப்பிட்டவரை!” என்னுங் கதை ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற் றுள்ளது. இவரது கதைகளிலே ரூசிய எழுத்தாள ரான கார்க்கியின் ஆதிக்கம் இடம் பெற்றுள்ளதை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 85
அவதானிக்கலாம். "டானியல் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். "சுதந் திரன்’ பத்திரிகையிலே பிரசுரமான நல்ல கதைகளை தவிர்த்து, அண்மைக் காலத்துக் கதைகளே இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கதை களிலே தாழ்த்தப்பட்ட இனத்தின் இராமர்களையும், உயர்ந்த சாதியார் மத்தியில் வாழும் இராவணர்களை யுமே பெரும்பாலுஞ் சந்திக்கிருேம். பிற்காலத்தில் 'கரு'ப் பஞ்சத்தினலோ என்னவோ, அசை போன்ற உண்மைக்கதைகளை எழுதி இடர்ப்படுகின் ருர், 'கெடுந்துராம்" என்னும் நாவல், இவருக்கு வெற் றியளிக்கவில்லை யென்பது வாசகரது அபிப்பிராய LDT Gg5 Lb.
தண்ணீரும் கண்ணிரும்’ என்னுஞ் சிறுகதைத் தொகுதிக்குப் பரிசில் பெற்றதன் மூலம் பிரபல மடைந்தவர் டொமினிக் ஜீவா ஆவர். சொன்ன தையே திருப்பிச் சொல்லி, வாசரை நிறுத்தி வைத்துப் பிரசங்கஞ் செய்யும் பாணியில் எழுது வது பெரும்பாலான கதைகளிலே உள்ள குறை பாடாகும். கதைத் தொடர்ச்சியைப் பேணுவதற் காக, மணிக்கூண்டில் நேரத்தைக் காட்டிக் கொண்டேயிருப்பார். இருப்பினும், ஞானம், முற்ற வெளி ஆகிய இரண்டு சிறுகதைகளும் மற்றைய கதைகளிலும் பார்க்க வேருகவும், சிறந்தன வாகவும் விளங்குகின்றன. பாதுகை' என்னும் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந் துள்ளது. ‘பாதுகை' என்னும் கதை ராஜாஜியி னுடைய கதையின் தழுவலென்று பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் பிரசுரமான "படு முடிச்சுப் போன்ற கதைகள் ஆரம்ப எழுத்தாளனுெருவனின்
Page 64
86 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
திருந்தாப் படைப்புக்களைப் போன்று காட்சி யளிக்கின்றன .
மேற்குறிப்பிட்ட இருவரும் சாதிப் பிரச் சினைகள், சிங்கள - தமிழர் ஒற்றுமை ஆகியவற்றைக் கட்சிக் கண்ணுேட்டத்திலேயே அணுகுகின்றனர். ஒரே விடயங்களைத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி அமைப்பில் சொல்வதினுல் வாசகரை என்றும் திருப்திப்படுத்த முடியுமா என்பது சிந்தனைக் குரியது. 'தமிழரின் புண்பட்ட உள்ளங்களை - அவர் களின் மனப் போராட்டங்களை - அறியாது அவர்களை அவமதிக்கும் முறையிற் கதைகளைப் படைக்கின் றனர்' எனக் குறை கூறுவோருமுளர், முற்போக்கு இலக்கியம், சந்திரபால கணேசனின் சீர்திருத்தக் கதைகளின் படியைத் தாண்டி மேலே செல்லா விடின், வாசகரிடையே சலிப்பினை ஏற்படுத்திவிடும் என்பதை இவர்கள் மனதிற் கொள்ளல் வேண்டும். இருப்பினும், தொழிலாளரிடையே தோன்றி, உடலுழைப்பையே நம்பி வாழும் இவ்விரு வரும், அதிக மொழிப் பயிற்சியின்றித் துணிவுடன் எழுது வது ஈழத்து இலக்கிய உலகிற்குப் புதிய இரத்தத் தையுஞ் சேர்த்துள்ளது.
காவலூர் ராசதுரை, அ. முத்துலிங்கம் ஆகியோர் 'தினகரன்' பண்ணையில் வளர்ந்த வர்களாவர். காவ லூர் ராசதுரை எழுதுவினைஞராக வாழ்க்கை நடாத்திய அநுபவத்தினல், கீழ்மட்ட மத்தியதர மக்களின் வாழ்க்கையையே தன்னுடைய கதை களிலே பிரதிபலிக்கின்ருர். இருப்பினும், இவ ருடைய கதைகள் பெரும்பாலும் நடைச் சித்திரங் களாகவே காட்சி தருகின்றன. "குழந்தை ஒரு தெய்வம்' என்கிற இவரது சிறுகதைத் தொகுதி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 87
வெளிவந்துள்ளது. அத்தொகுதியில் இடம் பெற் றுள்ள தொட்டாற் சுருங்கி என்னுங் கதை தர மானது.
அ. முத்துலிங்கம் மிகச் சுருங்கிய அளவு கால எல்லையுள் ஒரு சில சிறுகதை மட்டுமே எழுதியிருப் பினும், சிறுகதையாசிரியராகக் குறிப்பிடத் தக்க வ ராவர். ‘பக்குவம்’, ‘அனுலா ஆகிய கதைகள் போட்டிகளில் பரிசு பெற்றவை. தான் பிறந்த கிராமத்தின் சூழ்நிலைகளைத் தனது கதைகளிலே வருணித்துள்ளார். இவ்வருணனைகள் நீண்டு, புவி யியற் கட்டுரைகளாகக் காட்சியளிப்பதாகச் சில இரசிகர்கள் கருதுகின்ருர்கள். நனவோடை உத்தி யினை இவர் ஒரளவுக்கு வெற்றியுடன் கையாண் டுள்ளார். ‘பக்குவம்' என்னுங் கதை சந்தேகத்திற் கிடமின்றிப் பரிசு பெறத்தக்க நல்ல கதையாகும்.
*உதயணனின் கதைகளிலே சம்பவங்கள் நிறைய இடம் பெறுகின்றன. சில கதைகளிலே இலேசான நகைச்சுவையுடன் யாழ்ப்பாண மக்க ளின் விசித்திரமான குணங்களைக் கிண்டல் செய் துள்ளார். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், எழுது வினைஞர்கள் ஆகிய மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பாத்திரங்களை இவர் கதைகளிலே அறிமுகப்படுத்து கின்றபடியால், இவர் வாழ்க்கையை ஆழ்ந்து நோக்கவில்லை என்று கருதும் விமர்சகர்களுமிருக் கின்ருர்கள். தேடி வந்த கண்கள் கல்கிச் சிறுகதைப் போட்டியிலே பரிசில் பெற்ற கதையாகும். இதய வானிலே' 'மனப்பாறை' ஆகிய இரண்டு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார்.
"கல்கி', ஈழத்து எழுத்தாளர்களுக்காக நடாத் திய சிறுகதைப் போட்டியிலே, கந்தாவதி என்னுஞ்
Page 65
88 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
சிறு கதைக்கு முதற் பரிசு பெற்றதன் மூலம், "கவம்’ வாசகரைக் கவர்ந்தார். மட்டக்களப்புப் பகுதி யைச் சேர்ந்த அவரது கதைகளை வாசிக்கும் பொழுது, திராவிட முன்னேற்றக் கழக எழுத் தாளர்களின் கதைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகின்றது. ஓ ஹென்றி பாணியில் வியப்புத் திருப்பத்திலே முடிவுறும் கதையே சிறந்தது என்கிற எண்ணத்தில், செயற்கையான-கதைக் குப் பொருந்தாத-முடிவுகளையே பெரும்பாலுங் கையாளுகின்றர். அவரது ஏனைய கதைகளிலே காண முடியாத தெளிந்த நடையில் 'நந்தாவதி அமைந்துள்ளது. நீலவேணி என்னும் துப்பறியுந் தொடர் கதையைச் ‘சுதந்திரனில் எழுதியுள்ளார்.
ஈராண்டு எழுத்துப் பயிற்சியுடன் ஒரு சிறு கதைத் தொகுதியை வெளியிட்டுச் சிறுகதை எழுத்தாளர் வரிசையிலே நீர்வைப் பொன்னையன் சேர்ந்து கொண்டார். மேடும் பள்ளமும் என்னும் அச் சிறுகதைத் தொகுதி ஓர் அவசரப்படைப்பாகும். இஃது இவரிடம் கட்சி அரசியல் வேகம் இருக்கு மளவிற்கு, இலக்கியப் பயிற்சி இல்லாத குறை யைப் புலப்படுத்துகின்றது. இவரது எல்லாக் கதை களிலுமே முதலாளி என்கிற மேட்டையும், தொழி லாளி என்கிற பள்ளத்தையுஞ் சந்திக்கலாம். நிறைவு என்னுங் கதை நல்ல சிறுகதையாக அமை யாவிட்டாலும், நல்ல உருவகங்களைத் தன்னுட் கொண்டுள்ளது
இவர்களுடன், பொ. தம்பிராசா, த. ரஃபேல், கே. வி. நடராஜன், செந்தூரன், க. சா. அரியகாயகம், ஆ. பொன்னுத்துரை, ஆ. தங்கத்துரை ஆகியோரும் குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதகளை எழுதியிருக்கின்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 89
ருர்கள். அவர்களையுஞ் சிறுகதை எழுத்தாளர் வரிசையிலே சேர்த்துக்கொள்ளலாம்.
தற்காலத்தில் பெரிய எழுத்தாளர் படை யொன்று சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வரு கின்றது. ஒரு சிலர் நல்ல சிறுகதைகளைப் படைத்து வெகு வேகமாக முன்னேறி வருகின்ரு ர்கள் மற் றுஞ் சிலர் ஒரிரு சிறுகதைகளையே மட்டும் எழுதி யுள்ளார்கள். இளமைத் துடிப்புடன் சில கதைகளை எழுதிவிட்டு, எழுத்துலகத்திலிருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக்கொள்ளக் கூடிய எழுத்தாளர்களுமிருக் கிரு ர்கள். பூவில் உதிர்ந்து விடக்கூடிய எழுத் தாளர்களுமிருக்கிரு ர்கள்; கனிந்து பழுத்து இலக் கியத்தின் சுவையை ஏற்றவல்ல சிலரேனும் இவர் களுட் தேறலாம். எனவே, இந்த எழுத்தாளரது வெற்றி தோல்விகளை இன்னெரு பத்து ஆண்டுகள் கழித்துத் தான் மதிப்பிடமுடியும்.
ஆணுலும், சிறுகதைகள் எழுதிவரும் எழுத் தாளர் பட்டியலொன்றைக் கீழே சமர்ப்பிக்கின் றேன். அவர்களுடைய எழுத்தாற்றலை மதிப்பீடு செய்து, அவர்களுடைய பெயர்களை நான் வரிசைப் படுத்தவில்லையென்பதையுங் கவனத்திற் கொள்ளு தல் நன்று. இப்பட்டியலிற் சில பெயர்க்ள் தவறிப் போயுமிருக்கலாம். பின் வருவோர் சிறுகதைகள் எழுதிவருகின்ரு ர்கள் என். எஸ். எம். ராமையா,
ஜோவலன் வாஸ், செ. க தி ர் காம நாத ன், “செம்பியன் செல்வன்”, “செங்கை ஆழியான்", * அங் ைக ய ன் " , " மு ரு கு , துரு வ ன் ".
நா. சண்முகநாதன், தா. சண்முகநாதன், எஸ். சண்முகநாதன், பொ. சண்முகநாதன், எஸ். அகஸ்
F-12
Page 66
90 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தியர், பெனடிக்ற் பாலன், துரை. சுப்பிரமணியம், செ. யோகநாதன், ஜோர்ஜ் சந்திரசேகரன், "சத்தி யன்’, முத்து சிவஞானம், தங்க பிரகாஷ், தெளிய வத்தை ஜோசப், ஏ. வி. பி. கோமஸ் , ‘மணி வாணன்', க. நவசோதி, எஸ். பரமசாமி, ராம சுப்பிரமணியம், “புத்ததாசன்', வி. சிங்காரவேலன், * சாரல்நாடன்', பாமா ராஜகோபால், கலா பர மேஸ்வரன், வண்ணை கே. சிவராசரா, ஏ. மகா லிங்கம், சு. மகாலிங்கம், ‘பூரீரங்கன்’, ‘மகான் , *சசிபாரதி”, 'ரமணன்', ம. மனேகரன், என். என். பாலசிங்கம், மா.பாலசிங்கம், மர்த கல் செல்வா, வ. கு. க. சர்மா, சி. இராஜநாயகம், இரா சிவ சந்திரன், ‘நிமலன்", கரிகாலன், இ. சர்வானந்தன், * வட கோவை வளவையர்கோன்", அன்ரனி பெர் ஞண்டோ, டேவிட் இராசையா, அன்ரனி இரா சையா, ஈழத்து இரத்தினம், கல்லாற்று நடராஜன், எஸ். சிவலிங்கம், மி. ந. முத்துராசன், சி. தில்லை நாதன், “சித்தன்”, “கோபதி, ந. அ. தியாக ராஜன், 'மல்லிகைக்காதலன்", மல்லிகை சி, குமார், மு. சிவலிங்கன், ஆர். எஸ். மணி, எழிலன் பன், எம். பொன்னுத்துரை.
இந்தக் கால எல்லையுள் தென்னகத்திலும் பல நூறு சிறுகதையாசிரியர்கள் தோன்றியுள்ளார்கள். இருப்பினும், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிலஹரி, சூடாமணி ஆகிய சிலரே முன்னணிக்கு வந்துள்ளார்கள். அவர்களுடைய சிறுகதைகளிலும் பார்க்கத் தரமான பல கதைகளை நமது சிறுகதைச் சிற்பிகள் எழுதியுள்ளார்களென்று துணிந்து கூற லாம். பத்திரிகையின் பக்கங்களை நிரப்பவேண்டிய அவதியுடன் எழுதுவது தென்னக எழுத்தாளரது சிறுகதைகளிலே தெரிகின்றது. அவர்களது பிரசுர
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 9
களமும் விரிவானது. ஆனல், ஈழத்திலுள்ள சிறு கதை ஆசிரியருட் சிலரேனும், சிறுகதை இலக் கியத்தை உந்நத பீடத்திற்கு உயர்த்த வேண்டு மென்கிற பிரக்ஞையுடனும், இலட்சியத்துடனும் எழுதி, சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தி வருதல் ஈழத்திற்குப் பெருமை தருகின்றது. இருப் பினும், பிரசுர களம் சுருங்கியிருப்பதும், ஆற்ற லினுலன்றிப் பின் கதவு வழியாற்ருன் சில பத்திரி கைகளிலே பிரசுர இடம் பெறவேண்டியிருப்பதும் நல்ல சிறுகதை எழுத்தாளர்களின் பயனுள்ள் முயற்சிகளைப் பாதித்து வருகின்றது என்பதும் வேதனை தரும் உண்மைகளாம்,
கவிதைகள்
இவ்வாண்டுகளுக்கிடைப்பட்ட கதாசிரியர்களை யடுத்துக் கவிஞர்களை நோக்கினல், தரத்திலும் உற்சாகத்திலும், புதுமையான சந்தங்களையும் வழி களையும் கையாள்வதிலும் பலர் முன்னணியில் நிற்பது புலன கும். ஈழம் எப்பொழுதும் கவிதைத் துறையிற் பின் தங்கி நின்றதில்லை. அந்தப் பரம் பரையைக் காப்பாற்றுபவர்களைப் போலத்தான் இக்காலக் கவிஞர்களுங் காட்சியளிக்கின்றர்கள். பிரபலமடைந்த கவிஞர்களாக பரமஹம்ஸ் தாசன், முருகையன், அல்வாயூர் மு.செல்லையா, இ. காகராஜன், கே.கணேஷ், இராஜபாரதி, திமிலைத் துமிலன், மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளை, நீலாவணன்', 'தில்லைச்சிவன்", தான்தோன்றிக் கவிராயர், நயினை கவி இராமுப்பிள்ளை, ‘அம்பி’, ‘இதம், சக்தி, அ. பாலையா, ச. வே. பஞ்சாட் சரம், மு. க. சூரியன், கோசுதா’, பா. சத்தியசீலன், வன்னியூர்க் கவிராயர் ஆகியோர் விளங்குகிரு ர்கள்.
Page 67
92 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
"பரமஹம்ஸதாசன்" என்னும் புனை பெயருக் கேற்ப, மு. சுப்பராமன் இயற்றும் கவிதைகள் சாந்த மும் அமைதியுமுடையனவாய், தெய்வீக வாழ்க்கை யைப் பிரதிபிலிப்பனவாக விளங்குகின்றன. 'ஆத்ம ஜோதி’ப் பத்திரிகைக்கு ஏற்ப அவரது பாடல்கள் அமைந்து இருக்கின்றன. தமிழரசுக் கட்சியினர் நடாத்திய கதைப் போட்டியில் அவர் முதற்பரிசு பெற்றர். அப்பாடலை வைத்துக் கொண்டு பரம ஹம்ஸதாசனின் ஆற்றலை மதிப்பிடாமல், எல்லாக் கவிதைகளையும் மொத்தமாக நோக்கினல், சம தரையிலோடும் தெள்ளிய நீரோடையின் சாயல் அவரது கவிதைகளுக்கு உண்டு என்கிற முடிவுக்
a CD, Gaust b. 1da, it 56 5st 3, fair "Fruit Gathering
என்னும் நூலைத் தித்திக்கும் பாடல் களிற் "தீங்கனிச் சோலை யாகத் தந்திருக்கின்றர். அவ ருடைய பக்திப்பாடல்களைக் கொண்ட தொகுதியா பூரீ கதிரைமணி மாலை விளங்குகின்றது.
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறிய முருகையனிடம் இயற் கையான புலமையுண்டு. வயதிற் குறைந்த இந்தக் கவிஞருடைய நடையிலே பசுங்கன்றின் துள்ளல் இருக்கின்றது. புதுமைப் பாதையில் முன்னேறும் அவாவுடன் கவிதைகளை இயற்றி வருகின்ரு ர். திருப் புகழின் சந்தம் இவரது கவிதைகளுக்குச் சுவை யூட்டுகின்றது. கவியரங்குகளுக் கேற்ற முறையில் கவிதைகளை இயற்றி வாசிப்பதிற் சமர்த்தர். "குற்றம் குற்றமே முதலிய கவிதை நாடகங்களையும், பல சிறு காவியங்களையும் படைத்திருக்கின்றர். கவிதை பற்றியும், மரபு பற்றியும் புதிய பார்வை யிலே சில கட்டுரைகளை எழுத்து பத்திரிகையில் எழுதியிருக்கின் ருர்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 93
அல்வாயூர் மு. செல்லையா பழம் எழுத்தாளரா வர். அக்காலத்தில் 'அநுசுயா" என்னும் புனே பெயரிற் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள் ளார். இலங்கை வானெலியினரால் நடாத்தப் பெற்ற கவிதைப் போட்டியிலே, அவரது "புதிய வண்டுவிடுதூது" என்கிற கவிதை முதற் பரிசினைப் பெற்று, அவரை ஒரு நல்ல கவிஞராக நிலைநாட் டிற்று. 'வளர்பிறை', 'குமாரவேள் பதிகம் என்பன அவரது கவிதை நூல்களாக வெளி வந்திருக்கின் றன. அவரது கவிதைகளிலே பழைமையை அநுசரிக் கும் போக்கும், இலேசான நகைச் சுவையும் கலவி நிற்கின்றன.
இ. காகராஜன் கதாசிரியரா, கவிஞரா என்னுஞ் சந்தேகம் பலருக்கிருக்கலாம். அவர் "திரை','அடைக் கலம்’ ஆகிய நல்ல சிறு கதைகளை நமக்குத் தந்திருக் கின்றர். இருப்பினும், பெரும்பான்மையான கதை களின் நடையும் போக்குங் கவித்துவச் சாயலைக் கொண்டு விளங்குகின்றன. அவர் பாடியுள்ள பாலர் பாடல்களும், பிற பாடல்களும் கவிஞர்கள் வரிசை யிலே அவருக்குச் சிறப்பான இடத்தைச் சம்பாதித் துக்கொடுத்திருக்கின்றன. "ஈழகேசரி'யில், பல புனை பெயர்களில் மறைந்திருந்து, இனிய சந்தங்களைக் கொண்ட பாலருக்கேற்ற கவிதைகளைத் தந்திருக் கின்ருர். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பெரும் பாலான் பாலர் பாடல்களிலும் பார்க்க, இவை எவ் வளவோ மேன்மையானவை. இத்தகைய பாடல் களைச் சேர்த்து அவர் ஒரு தொகுதியாக வெளி யிடின், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் உப யோகமாக இருக்கும். "மேடையேறும் தம்பிமார்க்கு" ‘சூத்திரஞ் செய்த சூது" ஆகிய இரண்டும். அவரது நகைச் சுவைக்கும், கவிதா நயத்திற்கும் சான்முக
Page 68
94 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
விளங்குகின்றன. புத்தொளி, கூத்தாடி முதலிய சிறு காவியங்களை இயற்றியுள்ளதுடன், இரண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.
கண்டி - த லத்துஒயாவைச் சேர்ந்த கே. கணேஷ் மலைநாட்டின் தமிழ் இலக்கிய முயற்சிகளின் முன் னேடியாக விளங்கினர். இடதுசாரி அரசியலில் ஈடு பாடுடைய அவர், பாரதி என்னும் மாதப் பத்திரி கையை நடாத்திப் பார்த்தவர். இந்திய நாட்டின் ஆங்கில எழுத்தாளர்களுடன் நெருங்கிய தொடர் புடையவர். முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டாதான் என் னும் நாவலை மொழி பெயர்த்துள்ளார். கே. ஏ. அப்பாஸின் பத்துச் சிறுகதைகளை மொழி பெயர்த்து குங்குமப்பூ என்னுந் தொகுதியாக வெளியிட் டுள்ளார். அவருடைய ஆகஸ்டு தியாகி ஆறுமுகம் நல்ல சிறுகதையாகும். இருப்பினும், அவர் கவிஞ ராகவே வாழ்கின்றர். அவருடைய கவிதைகளுட் சில இடதுசாரி இயக்கத்தின் தேவைக்காக எழுதப் பட்டவையாகும். 1958ஆம் ஆண்டிலே யப்பானில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் ஓரிடம் பெற்று, யப்பானிய, மன்னரின் கெளரவப்பட்டத்
திற்குரியவரானர்.
'இராஜபாரதி சில அருமையான கவிதைகளை 'ஈழகேசரி'யிலும் "சுதந்திர னிலும் எழுதியுள்ளார். அந்தக் கவிதைகள் வீறும், ஓசை நயமுங் கொண்ட வையாகத் திகழ்கின்றன. தீயுண்ட வீரமுனை என் னும் அவரது சிறு காவியம் நூலுருவம் பெற் றுள்ளது. "யாழ்ப்பாணனுடன் 'ஜீவா என்னும் பெயரில் எழுதிய கடிதக் கவிதையும் நூலாக வந் துள்ளது. 'ஜீவா’ என்பது அவரா, அவரது மனை வியா என்கிற புதிர் இன்னமும் விடுபடவில்லை.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 95
பிற்காலத்தில் தமது மனைவி பெயரிலும், மகள் பெயரிலும் பத்திரிகைகள் இளங்கவிஞர்களுக்கு நடாத்தும் போட்டிகளிற் கலந்து, பல வெற்றிகளை ஈட்டியுள்ளார். "ஈழகேசரி'யில் வாழ்ந்த இராஜ பாரதியே வாழத்தக்கவர். காதலைக் கருப்பொரு ளாக வைத்து நல்ல பாடல்கள் இயற்ற வல்ல அவ ரிடம் பழைய இராஜபாரதி தோன்ற வேண்டும்.
சென்னைக் குழந்தை எழுத்தாளர் மன்றமளித்த கவிதைப் பரிசின் மூலம் திமிலைத் துமிலன் பாராட்டுக் குரிய கவிஞராகிவிட்டார். ஒவியருமான அவர், தமது கவிதைகள் சிலவற்றிற்குத் தாமே படங்கள் வரைந்து அழகூட்டியுள்ளார். அவர் இரண்டு சிறு காவியங்களையுந் தந்துள்ளார். ஆனலும், தனிப் பாடல்களிலேயுள்ள சிறப்பினை அவரது சிறுகாவியங் களிற் காண முடியவில்லை. நீரரமகளிர் என்னுங் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். அவரது பாடல் களிலே தேசிகவிநாயகம் பிள்ளை, பாரதியார் ஆகி யோரது அடிகள் அப்படியே இடம் பெறுவதினுல், அவரது சுய கற்பனை வளத்தைக் காணமுடியாது போய்விடுகின்றது. அவரது ஆற்றலுக்கேற்ற கவி தைகளைத் தந்து, கிழக்கு மாகாணத்தின் புகழை நிலைநாட்ட முன் வருதல் வேண்டும். அவர் பல சிறு கதைகளையும், சில நாடகங்களையும் இயற்றி யுள்ளார் என்பதுங் குறிப்பிடத்தக்கது.
மண்டூரைச் சேர்ந்த மு. சோமசுந்தரம் பிள்ளை அதி கம் பிரபலமடையாத நல்ல கவிஞராவர். புலவர் மணியின் மாணுக்கரான அவர் பழைமையிலே திளைத்துக் கவிதைகள் புனைகின்ரு ர் கவியரங்கு களிலே தமது பாடல்களை அற்புதமாக, இராகமுடன் பாடி அரங்கேற்றி, மக்களுடைய மனதைக் கவர்
Page 69
96 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கின்ருர் . மண்டூர் முருகன் மீது மிகுந்த பக்தியுள்ன அவர்,திருமண்டுர் முருகமாலை என்னும் நூலை இயற்றி யுள்ளார். ஒசை நயம் அவரது கவிதைகளின் மூச் சாகும். •
நீலாவணன் தமிழரசு இயக்கத்திற்கு இசைவான கவிதைகளைச் ‘சுதந்திரனில் எழுதி முன்னுக்கு வந் தார். சிறுகதைகளில் கையாளப்படும் வகையில், ஆரம்ப காலத்தில் உவமைகளைக் கையாண்டார். சமீப காலத்தில் அவரது போக்கு மாறி, தத்துவங் களைக் கொண்ட கவிதைகளை எழுதி வேகமாக முன் னுக்கு வந்தார். வானெலி தீபாவளிக் கவியரங்கு ஒன்றிலே, ஆலம்பழத்தை மேனுட்டுக் கவிஞர்க, ளுடைய பாணியில் உருவகப்படுத்திப் பாடிய கவிதை இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. * மரபு' பரிசோதனைக் களத்தில் அவரது வழி என் னுங் கவிதை இடம் பெற்றது. இந்தக் கவிதை ஒன்ருல் அவர் வாழ்ந்து கொண்டிருக்கலாம். பட்ட மரம் என்னுஞ் சிறு காவியத்திலும், மழைக்கை என் னுங் கவிதை நாடகத்திலும் ‘வழி'யின் புலமை யைக் காண முடியவில்லை. உணர்ச்சி வசப்படும் அவர் அண்மைக் காலத்தில் வசைக் கவிதைகள் பாடு வதில் காலத்தை விர யஞ் செய்து கொண்டிருப்பது வேதனை தருஞ் செயலாகும். "வழி"யின் சிந்தனை களுடன் கவிதைகள் எழுதி வந்தால், அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
தில்லைச்சிவன், பட்டணத்து மச்சினி என்கிற கவி தையால் மக்களுடைய கவனத்தை ஈர்ந்தார். கொத்தமங்கலம் சுப்புவினுடைய பாணியை ஓரளவிற் பின்பற்றி எழுதப்பட்ட அக்கவிதையில், நல்ல
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 97
கருத்தும், ஆழமான நகைச்சுவையுமுண்டு. அவரது சில ச விதைகள் கிராமியச்சூழலையும், அமைதியையும் பின்னணியாகக் கொண்டவை. வேறு சில கவிதை கள் இலக்கிய நடையில் அமைந்துள்ளன. கனவுக் கன்னி என்னும் அவரது கவிதைத் தொகுதி ஒன் றைப் பாரதி மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர்.
போட்டிக் கதையொன்றைப் பூர்த்தி செய்த தன் மூலம் எழுத்துத் துறைக்குட் புகுந்த தான தோன்றிக் கவிராயர் ஒரு நையாண்டிக் கவிஞராகவே நிலைத்துவிட்டார். தலைவர்கள் வாழ்க மாதோ, பாரதி தரிசனம், பரிசு கேட்ட அம்மானை ஆகியன எதிரிகளைச் சாடுஞ் சரங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய பாடல்களினுல் ஒரு விதச் " சலசலப்பினை ஏற்படுத் திப் பிரபலமடையலாமே தவிர, நின்று நில் வ முடியாது. "பன்றி பல ஈன்று மென்ன? குஞ்சரம் ஒன்றின்றதனுல் பயனுண்டாமே" என்பதை மனதி லிருத்தி, வரிக் கவிதை மோகத்திலிருந்து விடுதலை யாகி, பலவேறு சந்தங்களிலும், பாடலுருவங்களி லும் அவர் கவனத்தைச் செலுத்தினுல், நல்ல கவிதைகளைப் படைக்கலாம். பல வாணுெலி நாட கங்களை எழுதியும் நடித்துமுள்ளார். வாணுெவி நாடகங்களிலே நடித்த பயிற்சியுடன், ஒலிபெருக் கிக்கு முன்னுல் கருத்தாழ மற்ற வெறும் வரிப் பாடல்களையுஞ் சாமர்த்தியமாக அரங்கேற்றி மக் கள் மனதைக் கவர வல்லவர். பனை யரசன் நாட கத்தை "நேற்று-இன்று-நாளை' என் கி ) பெயரில் அரங் கேற்றியுள்ளார்.
வரகவி நாகமணிப் புலவர் வாழ்ந்த நயினு தீவிற் பிறந்த கயினை இராமுப்பிள்ளை, இயற்கையான கவிப்
13 - سمه"
Page 70
98. ஈழத்து இலக்கிய வளர்ச்சி
புலமையோடுகூடிய, ஓசை நயங் குன்ருத பாடல்
களை இயற்ற வல்லவர். காலிமுகக் களரி என்னும்
இவரது பாடல் மிகவும் பிரசித்தமானது. கதிர்
காமஞ் சென்ற வண்டே என்கிற பிறிதொரு பாடலும்
இரசிகர்களது அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.
கயினை நாகபூஷணி திருவோலக் காட்சியும் அவள் மாட்சி யும், கயினை கந்தவேள் அருள்வேட்டல் ஆகியன அவர்
பாடி வெளிவந்த கவிதை நூல்களாம்.
விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுபவராகவும் , சிறுகதை எழுத்தாளராகவும் எழுத்துத் துறைக்கு வந்த 'அம்பி’ (இ. அம்பிகைபாகன்) தமது பெய ரைக் கவிஞராகவே நிலைநாட்டியுள்ளார். இவரது கவிதைகளிலே விஞ்ஞானக் கருத்துக்களையும், புதிய போக்கினையும் அவதானிக்கலாம். பாரதியே இவ ரது ஆதர்ச கவியாவர். பல கவியரங்குகளிலே தமது திறமையை வெளிக்காட்டி வருகின் ருர் . இவ ரது அந்தப்பாவை என்னும் முதலாவது சிறுகாவி யமே இவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இதம் (வ. இளையதம்பி) ஒரு தமிழாசிரியராவர். பல தரமான குழந்தைப் பாடல்களை "ஈழகேசரி'யில் எழுதியுள்ளார். ‘மின் விளக்கு "சேவல் என்பன பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றவை. சிறுவ ருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் கூட்டல், பெருக்கல் வாய்பாடுகளைப் புதிய பாணியில், உவ மானப் பொருள்களுடன் இயற்றித் தந்தமைக்கு மாணவருலகம் என்றும் அவருக்குக் கடமைப்பட்டி ருக்கின்றது.
சக்தி ஏ. பாலையா மலைநாடு தந்த தலை நிமிர்ந்த
கவிஞராவர். நல்ல ஒவியரான அவர், ஒவியஞ் சம்பந்தமாக நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 99.
"மலையகக் கவிஞரது படைப்புக்களை ஏனையோர் மதிக் கின்ரு ர்களில்லை, யென்று சீறி யெழுந்தவர். இத்த னைக்கும் மேல், அவர் ஒரு நல்ல கவிஞராவர். மலை நாட்டுக் கலைஞரது உணர்ச்சியைத் தட்டியெழுப்பப் பத்திரிகையும் நடாத்தியவர். சொந்த காட்டிலே என் னும் நூல் வெளிவந்திருக்கின்றது. சுதந்திர வீறே இவரது கவிதைகளில் மேலோங்கி நிற்கின்றது.
ச. வே. பஞ்சாட்சரம், இந்து சாதனம் பத்திரிகையிற் பணிபுரியத் தொடங்கி, பத்திரிகையாளராக வாழ்ந்து, வேகமாக முன்னணிக் கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார். எழிலி என்னுங் காவியத்தை நூலுருவிலே தந்துள்ளார். இளைஞரான இவர், தரமான கவிதைகளால் ஈழத்தமிழன்னையை அலங்கரிப்பர்ரென எதிர்பார்க்கலாம்.
மு. க. சூரியன் குடத்துள் விளக்காக இருந்து கவிதைப் பணிபுரிந்து வருகின்றர். இதனுல் அவ ரது கவிதைச் சத்தியைப் பலர் அறியாதிருக்கின்ற னர், இவரது கதிரேசன் பாமாலை என்னும் நூல் இவரது ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாக அமைந் துள்ளது. ܕܝܡܐ
கோசுதா எண்ணிக் கையளவிற் பல தனிப் பாடல்களை இயற்றியுள்ளார். அவர் வானெலி நாடகப் புகழுடன் கவிதைத் துறைக்கு வந்தார். கவிதைக் குவியல் என்னுங் கவிதை நூல் அவரது கன்னிப் படைப்பாகும். அது சீரோ, சந்தமோ, ஒசைநயமோ அற்ற சொற்குவியல்களாகவே காட்சி. தருகின்றது. அதனைத் தொடர்ந்து வெளியான பாலர்பாடல்கள் அவர் கவிதைத் துறையில் முன்ன ணிக்கு வரலாமென்பதைக் கோடி காட்டி நிற் கின்றது.
Page 71
00 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பா. சத்தியசீலன், இளம் எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாம் பரி சைப் பெற்றதன் மூலம் பலருக்கும் அறிமுகமான வர். இருப்பினும், வெகுவிரைவாக முன்னேறி, கவிஞர்கள் வரிசையில் தமக்கென ஒர் இடத்தினைப் பிடித்துக்கொண்டார். மஹாகவி'யினுடைய ஆதிக் கம் இவரது பாடல்களிலே காணப்படினும், தனித்துவத்திற்குக் குறைவில்லை. மரபிலே கா லூன்றி, புதுமையை நோக்கவேண்டுமென்கிற நோக்கமுள்ள இவர், பல வகையான பாடல்’ உருவங் களிலும் கவிதைகள் புனைந்து வருதல் வரவேற்கத் தக்க தொன்ற கும்.
வன்னியூர்க் கவிராயர், வன்னிநாட்டிற்குப் புகழ் தேடித்தந்துள்ள கவிஞராவர். அடங்காப்பற்றில் வாழ்ந்தாலும், பல கவியரங்குகளிலே அடக்கமான பாடல்களை அரங்கேற்றியுள்ளார். வன்னிநாட்டிலே இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டு மென்று உழைத்துவரும் அவர் ஒரு சுதேச வைத் தியராவர். எஸ். எல். செளந்தரநாயகம் என்னும் தமது சொந்தப் பெயரில் சிறுகதைகளும் எழுதி வருகின்ருர்,
*ஜெயம்', 'மயிலன்', 'அமுது" ஆகியோரும் முன்ன ணிக்கு வந்து கொண்டிருக்கின்றர்கள். இவர்களு டன், பின்வரும் இளங் கவிஞர்களும் ஈழத்துக் கவிதை இலக்கிய உலகில், அவ்வப்போது தங்களு டைய படைப்புக்களை வெளியிட்டு வருகின்ரு ர்கள்: மு. பொன்னம்பலம், செ. து. தெட்சணுமூர்த்தி, சி. மெளனகுரு, செ. மகேந்திரன், ஆடலிறை , இறையொளி, புலவர் பார்வதிநாத சிவம், காசி ஆனந்தன், எருவில் மூர்த்தி, ஞானப்பிரகாசம்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி |0|
தணிகாசலம், அரிஅரன், க. சொக்கநாதன், வி. கந்த வனம், ஈழவாணண், ஜீவா - ஜீவரத்தினம், மு. சடாட்சரன், பாண்டியூரன், கே. டபிள்யூ. அரிய நாயகம், ஆரையூர் அமரன், யாழ்ப்பாணக் கவி ராயர், தமிழோவியன், மலைத் தம்பி, சிதம்பர நாத பாவலர், கவி. கோவிந்தசாமித்தேவர், அம ரன் நாகலிங்கம், வெளிமடைக் குமர்ன், பெரி யாம் பிள்ளை, சி. எஸ். காந்தி, ஈழக்கு மார், ஐயாத் துரை, நடராஜா, ‘சுபத்திரா", "முத்தழகு, குல ரத்தினம் , திமிலைக் கண்ணன் , திமிலை மகாலிங்கம். இவர்களுள் அநேகர் எதுகையையும் மோனையை யும் எங்கேயாவது இணைத்துவிட்டாற் கவிதை யாகிவிடும் என்கிற தப்பெண்ணத்திலே, ‘கவிதை கள்" என்கிற சொற்குவியல்களைப் படைத்து வரு கின்றர்கள். இவர்கள் பாடலிலக்கணத்தை அறிந்து எழுத முன் வரவேண்டும். சினிமாப் பாட்டுகளுக்கு வார்த்தை மாற்றி எழுதும் "கவிதை'களை நிச்சயம் ஈழமாதா ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை யும் சில இளங் கவிஞர்கள் உணருதல் வேண்டும்.
இக்கால எல்லையுள் கவிதைகள் புனைந்துள்ள அநேகர், வறுமையும் அதன் கோரமும், தமிழும் தமிழியக்கமும் முதலிய பொருள்களையே திரும்பத் திரும்பக் கையாளுகின்ரு ர்கள். அங்கதச் சுவை யுடைய "கேலிக் கவிதைகளும், வரிப் பாடல்களும் மிகுந்து காணப்படுகின்றன. கவிதை எழுதும் ஆற்றலோடு, செய்யுளுக்கு வேண்டிய உருவம், யாப்பு முறை முதலியவற்றை அறிய முயலுதல் வேண்டும். புதுமை வேண்டும்; அதனை ஈழத்து இரசிகர்கள் வரவேற்கின்ருர்கள். ஆனல், அப் புதுமை பழைமை என்னுந் தரையிலே வேரூன்றித் தான் மலரவேண்டும் இல்லுரதுபோனல், கவிதை
Page 72
02 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யென்னும் பெயரால் காகிதப் பூக்களே ஈழத்துக் கவிமலர்ச் சோலையை நிரப்பும் என்பதை நமது கவிஞர்கள் உணர்ந்து கொள்ளுதல் நன்று.
நாவல்கள்
ஈழத்திலே நாவல் இலக்கிய முயற்சிகள் மிக
வுங் குறைவானது என்பதை நாம் நேர்மையுடன் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். 1940 ஆம் ஆண் டிற்கு முன்னர் தோன்றிய நாவல்களின் எண் னிக்கை என்கிற பின்னணியிலே வைத்துப் பார்த் தால், நாவலிலக்கியத் துறையிலே ஏற்பட்டுள்ள தேக்கம் நன்கு விளங்கும். இத்தேக்கத்திற்கு, ஆற்றலிலக்கியத் தரக் குறைவன்று; பிரசுர வசதிக் குறைவே எனச் சாட்டப்படுங் காரணத்திலே ஓரளவு உண்மை இருக்கின்றது. ஈழத்தின் பிரசுர கர்த்தாக்கள் பாடநூல்களைப் பிரசுரிப்பதிலேயே நாட்டமுடையவர்கள். அவர்களது நோக்கம் உட னடி ஆதாயமாகும். அவசர யுகத்தில் அதிகம் விற்பனையாக முடியாத நானுாறு, ஐநூறு பக்கங் களைக் கொண்ட நாவல்களைப் பிரசுரிப்பதிலே அவர் கள் தங்களுடைய முதலை முடக்கி வைக்கத் தயா ராகவில்லை. எழுத்தாளர்களுந் தங்களுடைய செல விலேயே, அத்தனை பக்கங்களைக் கொண்ட நாவல் களைப் பிரசுரிக்கும் பண வசதி படைத்தவர்க ளல்லர். எனவே, ஈழத்து நாவலிலக்கிய முயற்சி கள் பத்திரிகைத் தொடர் கதைகள் எழுதுவதாக வும், குறுநாவல்கள் எழுதுவதாகவும் முடங்கிக் கிடக்கின்றன. -
பத்திரிகைத் தொடர்கதைகளை நாவல்களென்று ஏற்றுக்கொள்ளாத விமர்சகர்களுமிருக்கின்றர்கள். ஒரு பிரதியில் பிரசுரமாகும் தொடர் கதையின்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி V 03
ஒரு பகுதி, வியப்பினையோ ஆவலையோ தூண்டும் ஒர் இடத்தில் நிறுத்தப்படுகின்றது. வாசகனிடம் ஒன்றினை எதிர் நோக்கியிருக்கும் மனுேபாவத்தைத் தூண்டவே இந்த உபாயங் கையாளப்படுகின்றது. இது, நாவலின் தொடர்ச்சியினைக் கூறுபடுத்தி, செயற்கையான வியப்புச் சுவையை பொருத்து கின்றது. இக் குறைபாட்டினைச் சாண்டில்யனுடைய அநேகமான நாவல்களிலே தெளிவாகக் காணலாம் . இத்தகைய உபாயத்தினுல், ஞாபகசக்தி குறைந்த வாசகரை வெகுவாகக் கவர முடியும். ஆனல், அவற்றினைப் புத்தக உருவிலே படிக்கும் விமர்ச கன் ஏமாற்றமடைகின்றன். ‘வாரந்தோறும் ஒரு இலட்சம் வாசகர் படித்தின் புற்றது; ஆகையினல் இது சிறந்த நாவல்தான்’ என்று அதற்கு உயர்ந்த இடத்தினை ஒதுக்க முடியாது. இலக்கியத்தின் தரத் தினை எப்பொழுதும் வாசகரின் எண்ணிக்கையை வைத்துத் தீர்மானிக்க இயலாது. பிறிதொரு சாரார் "கல்கி'யினுடைய தொடர்கதைகளடைந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு, தொடர்கதைகள் சிறந்த நாவல்களாகவும் அமையலாம் எனக் கருது கின்ரு ர்கள். ஆனல், வாசிப்புப் பழக்கத்தைச் சாதாரண மக்கள் மத்தியிலே கொண்டு வந்ததில் * கல்கி அடைந்த வெற்றியை நாவலிலக்கியத் துறையில் அவர் ஈட்டவில்லையென்பது எனது அபிப்பிராயமாகும்.
இவற்றினை மனதிலிருத்திக் கொண்டுதான், நாவலிலக்கியப் பகுதிக்குள் நுழையவேண்டும். பெரும்பாலுந் தொடர்கதைகளையும் நாவல்களாக ஏற்றுக்கொண்டுதான், இப்பகுதியைப் பூரணப் படுத்துதல் - சாத்தியமாகின்றது, ஏனேவெனில், நூல்களாகவே பிரசுரமான நாவல்கள் வெகு குறைவாகும்.
Page 73
O4 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
எண்ணிக்கைகளைப் பொறுத்த மட்டில், இள்ங் கீரன் நாவலிலக்கியத் துறையில் முன்னணியில் நிற் கின் ருர், முஸ்லிம்ான இவர், சாமர்த்தியமான புனைபெயருக்குள் மறைந்துகொண்டு எழுதுகின்று ர் தமது உழைப்பின் நிமித்தம் இளமைப் பருவத்தில் மலாயா, இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்ந்தவர். ஓர் எழுத்தாளராக வளருவதற்கு இப்பிரயாணங் கள் பெரிதும் உதவிசெய்தன. தமக்காக ஒரு நடையையோ, கதைசொல்லும் பாணியையோ வரித்துக்கொள்ளாது. வாசகருடைய விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் வியாபாரத் தந்திரம் நன்கு அறிந்த வராக அவர் எழுதுவதை அவரது நாவல்கள் முழுவதையும் ஒன்ருக வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். ஈழத்து எழுத்தாளர்களுள் திரா விட முன்னேற்றக் கழகத்தினரின் எழுத்துநடையை மிக ஆதர்சமாகக்கொண்டு எழுதியவர் இனங்கீரன் தாம். வண்ணக்குமரி, நீதிபதி ஆகிய ஆரம்பகால நாவல்கள் தி. மு. க. ஆதரவாளர்களேத் திருப்தி செய்வதாகவே அமைந்துள்ளன. 1953 ஆம் ஆண் டில் வெளியான "வண்ணக்குமரி என்னும் நாவவில் "நம்நாடு' என்று இவர் தென்னிந்தியாவையே குறிப் பிடுகின்ருர், அந்த நாவல்கள் இராசரி : இராணிை சினிமாக் கதைகளாகவும், மிர சுதார் - பண்ஃரைக் கூலிகள் போராட்டமுள்ள "சீர்திருத்த"க் கதை களாகவுமே அமைந்துள்ளன. 'தினகரனில் "சொர்க் கம் எங்கே?" போன்ற நாவல்களே எழுதி, ஈழத்து வாசகர்களே ந் கவரவேண்டிய நிஃப் ஏற்பட்ட பொழுது கம்யூனிஸ் எழுத்தாளரான இளங்கீரனேக் சாண்கின்ருேம். ஈழத்துப் பின்னணியில் எழுதப் பட்ட கதைகளிலே தென்றலும் புயலும், நீதியே நீ கேள் ஆகியன நூலுருவம் பெற்றுள்ள கதைக ளாகும். "நீதியே நீகேள்" ஒரு செம்புப் பாலில்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி O5
ஒரு குடந் தண்ணிர் கலக்கப்பட்ட விதத்தில் அமைந்திருக்கின்றது" எனப் பிறிதோர் விமர்சகர் தெரிவித்த அபிப்பிராயத்தில் ஒரளவு உண்மை இருக்கின்றது. தற்போதைக்குத் "தென்றலும் புயலும் தேறும்.
அடுத்ததாகக் கசின் (க. சிவகுருநாதன்), எண் ணிைக்கையில் அதிகமான தொடர்கதைகளே எழுதி பிருக்கின்ருர், அவருடைய கதைகள் முறைதவறிய காதலேயோ, காமத்தையோ சித்திரிப்பனவாகவும், எங்கேயோ நடந்த உண்மைக் கதைகளே வாசிப்ப தான எண்னத்தை உள்ட்டுவனவாகவும் அமைந் திருக்கின்றன. ஆசிரிய சமூகத்தில் நடமாடும் பாத் திரங்களே அதிகமாக அவரது கதைகளிலே இடம் பெறுகின்றன. அவரது கதை சொல்லும் பாணி சிக்கவின்றி ஒழுங்காக அமைந்துள்ளதால், சாதா ரன வாசகரை அவராற் கவரமுடிகின்றது.இராசா மணியும் சகோதரிகளும், இதய ஊற்று ஆகிய கதைக ளடைந்த வெற்றியைப் பிற்காலக் கதையான கற்பகம் பெறவில்லே. "கசின்" சிறுகதைகளும் எழுதி யிருக்கின்ருர், ஆணுல், அச்சிறுகதைகளும் நெடுங் கதைப் பாணியிலே வளர்க்கப்பட்டுள்ளன.
காதல் பைத்தியம் (சி எஸ். பரமேஸ்வரன்)ஒன்றரை ருபாய், ஏழையின் காதல் (க நாகப்பு) முதலிய நாவல்களும் இக்காலத்தேதான் நூல்வடிவம் பெற் நன. "சமூகத்தொண்டன்" நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசுபெற்ற கச்சாயில் இரத்தினம், வன்னியின் செல்வி என்னும் நாவஃத் தந்திருக்கின் முர். அவரது பாட்டாளி வாழ்க்கையிலே என்னுஞ் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றது.
F-14.
Page 74
06 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ஐயோ கானு, காமசுந்தரி, பெண்ணுே பேயோ ஆகிய துப்பறியுங் கதைகளைத் தந்துள்ள ஜோ. ஏ. எம். தாஸ் துப்பறியும் நாவல்கள் எழுதுந் துறையில் முன்ன னிக்கு வந்து கொண்டிருக்கின்றர்.
சிறுகதை எழுத்தாளரது நாவல் முயற்சிகளை ஏற்கனவே கண்டோம். நாவலிலக்கியத் துறையில் ஈடுபட்டுப் பின்னர் நாடகத் துறைக்குச் சென்று விட்டவர்களுடைய முயற்சிகளையும், பத்திரிகை ஆசிரியர்களாக இருந்து தொடர் கதைகளை எழுதிய வர்களுடைய முயற்சிகளையும் வேறு பகுதிகளிலே தந்துள்ளேன்.
ஈழத்து நாவல்கள் பொதுப்படையாக, சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு, பொழுது போக் குக்காக வாசிப்போருக்கு ஏற்றவையாகவே இருக் கின்றன. மனித சமூகத்தின் அடிப்படை உணர்ச்சி களையும், எழுச்சிகளையும், இன்பதுன்பங்களையும் பிரதிபலிப்பனவாக அவை அமையவில்லை. சிலர் துப்பறியுங் கதைகளே எழுதியிருப்பினும், அவை ஈழ மண்ணிலே வேரூன்றவில்லை. ஈழத்தின் எழில் மிகு களங்களையும் நமது நாவலிலக்கிய முயற்சிகள் பயன்படுத்தத் தவறிவிட்டன. ஈழத்தின் கிராமப் புற வாழ்க்கையில் எத்தனையோ "செம்மீன்கள் தோன்றலாம். இத்துறையிற் பின்தங்கிவிடாது, ஈழத்து எழுத்தாளர் முனைந்து முன்னேற வேண்டி யது அவர்களது கடமையாகும்.
நாடகங்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் நாவலிலக்கியத்
துறையிலே தேக்கத்தினைக் கண்டு மனஞ்சோர்வ டைந்த நமக்கு, நாடகத்துறையின் வளர்ச்சி உற்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 07
சாகந் தரத்தக்கதாக அமைந்துள்ளது. முத்தமிழுள் ஒன்ருகக் கருதப்பட்ட நாடகத் தமிழின் இடைக்கா லத்தேய்வுக்கான காரணங்களை ஆராயத் தேவை யில்லை. அதனைப் பற்றிப் பலரும் ஆய்ந்து முடிவு கட்டிவிட்டனர். இருப்பினும், தமிழ் சினிமாவின் வருகைக்குப்பின்னர், தமிழ் நாடகத்துறையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது என்பதை மனதிலிருத்திக் கொள்ளுதல் நன்று. இந்நிலை ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பொதுவானது. 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'மெளனப் புரட்சி"யின் பயணுக சுய மொழிகளின் வளர்ச்சி வலியுறுத்தப் பெற்றது. சுய மொழிகளிலேயுள்ள இலக்கிய-கலை வளர்ச்சிகள் கருதி, அரசாங்கம் பூரீ லங்கா சாகித்திய மண்டலம், இலங்கைக் கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களைத் தாபித் தது. இலங்க்ைக் கலைக்கழகத்தின் ஒரு கிளை யான தமிழ் நாடகக் குழு, நாடக வளர்ச்சியினை ஊக்கு விப்பதைக் குறிக்கேளாகக் கொண்டுள்ளது. சிங்கள நாடகக் கலையடைந்துள்ள அதி துரித வளர்ச்சியைக் கண்டும் தமிழ் நாடகக் குழு திறம்படச் செயலாற்ற வில்லை என்கிற ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவி வருகின்றது. 1981 ஆம் ஆண்டில் இந்நாடகக் குழு பலத்த கண்டனத்திற்குள்ளாயிற்று. இருப்பினும், கலைக்கழகத்தின் தமிழ் நாடகக்குழுவினர் நடாத்திய நாடகப் பிரதிப் போட்டியினுல், பல எழுத்தாளர் நாடகங்கள் எழுதுவதில் ஆர்வங் காட்டினர்கள் என்பதை மறுப்பதிற்கில்லை. நான்கு வருடங்களாக நடாத்தப்பட்ட போட்டி, இவ்வாண்டு நிறுத்தப்பட் டுள்ளது. நாடகங்கள் எழுதுவது இலக்கிய முயற்சி யான தினுல், கலைக்கழகத்தின் நாடகக் குழு இத னைப் புறக்கணித்துவிட்டமை வருந்தத் தக்கதாகும்.
Page 75
08 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இருப்பினும், சிங்கள நாடகத்துறையிலேற்பட் டுள்ள வியத்தகு முன்னேற்றம், தமிழ் நாடகத் துறையில் ஊக்கத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தக் கால எல்லையுள் பல நல்ல நாடகங்கள் எழுதப்பட்டுள்னள; மேடையேற்றப்பட்டுள்ளன.
ஈழத்து நாடகத்துறையைக் கணக்கெடுக்கும் எவரும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை மறந்துவிட முடியாது. பழங்காலக் கூத்து முறை நாடகங்களிலிருந்து நவீன நாடகங்கள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை நாடகத் துரையிற் கவனஞ் செலுத்தி நடித்து, பயிற்று வித்து, நாடகங்கள் தயாரித்து வரும் பழம் பெரும் நடிகராவர். அவரையே ஈழத்து நாடகத்துறைத் தந்தை என்பர். அவரையும் இந்த இடத்தில் ஞாப கம் வைத்துக்கொண்டு, நாடக இலக்கிய வளர்ச்சி யினைப் பார்ப்போம்.
யாழ்ப்பாணம்-தேவன் பல துறைகளிலே உழைத் துத் தமது புகழை நிலைநாட்டியிருப்பினும், நாடகத் துறையிலேதான் சிறப்பான இடத்தைப் பெற்றுள் ளார். வானவெளியிலே என்னுங் கட்டுரை நூலையும், பிற கட்டுரைகளையும் வைத்துக்கொண்டு அவரை ஒரு நல்ல கட்டுரையாளர் என நினைப்பவர்களு மிருக்கின்றர்கள். மணிபல்லவம், வாடிய மலர்கள் ஆகிய மொழிபெயர்ப்பு நாவல்களை நமக்குத் தந்துள் ளார். அவர் தாமே புனைந்த கண்டதும் கேட்டதும் என் னும் நாவலை நூலுருவிலே தந்துள்ளார். பல சிறு கதைகளையும் எழுதியுள்ளார். இத்துறைகளிலே ஈட்டியுள்ள வெற்றிகளிலும் பார்க்க நாடகத்துறை யில் அவர் ஈட்டியுள்ள வெற்றியே குறிப்பிடத்தக்கது அவர் இப்சனின் நாடகத்தை "பத்தினியா? பாவையா?
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 09
என்னும் பெயரில் மொழி பெயர்த்து மேடை நாடக மாகத் தயாரித்துள்ளார். களதமயந்தி, கற்புக் கனல் ஆகியவற்றை நவீன மேடைக்கேற்ற விதத்திலே தயாரித்தளித்தார். சகோதர பாசம் என்னும் நாட கம், அவரிடமுள்ள இயல்பான நகைச் சுவையைப் புலப்படுத்தியது. அந்த நாடகத்தின் நகைச்சுவைப் பாத்திரங்களைக் கிராமிய நடையிலும், மற்றைய பாத்திரங்களின் உரையாடலைத்திருத்திய தமிழிலும் எழுதி வெற்றியீட்டியமை குறிப்பிடத் தக்கதாகும். தென்னவன் பிரமராயன் என்னும் நாடக நூலைச் சமீ பத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இரண்டு தடவை களில் கலைக்கழகப் பரிசில் பெற்றுள்ளார்.
த. சண்முகசுந்தரம் அவர்களும் நாவலாசிரிய ராகவே வாசகருக்கு அறிமுகமானர். அவருடைய ஆசை ஏணி ' சுதந்திரனிலே தொடர்கதையாக வெளிவந்தது. கலைக்கழகத்தின் தமிழ் நாடகக்குழு விலே கொண்டிருந்த தொடர்பினுற்போலும், நாட கத் துறையிலே தமது முழுக் கவனத்தையுஞ் செலுத்தலானர். மருதப்புரவீக வல்லியின் வர லாற்றை ஆதாரமாகக் கொண்டு வாழ்வுபெற்ற வல்லி என்னும் நாடக நூலை நமக்களித்துள்னார். அந் நூலுக்கு பூரீலங்கா சாகித்திய மண்டலத்தின் பரி சினைப் பெற்றுள்ளார். அண்மையில், பூதத்தம்பி நாடக நூலையும் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத் துள் சரித்திர சம்பவங்களைத் தேடி எடுத்து, அவற். றினை நாடகங்களாகப் புனையும் அவரது தொண்டு போற்றத் தக்கதாகும். w
சிறந்ததொரு நாடக நடிகராக, நாடகக்
கலையே மூச்சாக, வாழ்ந்து வருபவர் ஏ. ரி. பொன் னுத்துரை அவர்களாவர். வருஷம் பிறந்து முன்னம்
Page 76
10 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
முன்னம், ஆயிரத்தில் ஒருவர் ஆகிய ஓரங்க நாடகங்களை மேடையேற்றினர். ஒரங்க நாடகங் களின் சிறப்பினை ஈழத்து இரசிகர்களுக்கு அறி முகப்படுத்த வேண்டுமென்கிற ஆர்வமுள்ளவர். ஓரங்க நாடகங்களுடன், பகையும் பாசமும், பாசக் குரல் ஆகிய முழுநீள நாடகங்களையும் எழுதி,நடித் துத் தயாரித்துள்ளார். கிறைகுடம் ஈழத்தின் நானுபகுதிகளிலும் முப்பதுக்கு மேற்பட்ட மேடை களிலே நடிக்கப்பட்டு, அவருக்குப் பெரும் புகழ் சம்பாதித்துக் கொடுத்தது.
மட்டக்களப்பைச் சேர்ந்த வரும், சங்கீத ஆசிரி யருமான காலஞ் சென்ற எம். எஸ். பாலு நாடகக் கலையை வளர்க்க உழைத்து வந்தார். வானெலி நாடகங்களாகவும், ஒரங்கநாடகங்களாகவும் நூற் றுக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதினுர் அவரது நாடகங்களிலே நகைச்சுவையே மேலோங்கி நிற் கின்றது. அவர் முழுநீள நாடகங்களிலே கவனஞ் செலுத்தாதது துர்ப்பாக்கியமாகும். அவர் சில சிறு கதைகளையும், குழந்தைப் பாடல்களையும் இயற்றி புன்னார் மட்டக்களப்பு இளைஞர் பலரின் எழுத் தார்வத்தினை வளர்த்து, அவர்களுடைய முன்னேற் றப் பாதையைச் செப்பனிட்டுக்கொடுத்த அவரது சேவையை மட்டக்களப்பு எழுத்தாளர்கள் மறக்க வில்லை. அவரது ஞாபகார்த்தமாக ஒரு நாடகப் போட்டியை நடாத்திவருகின் ருர்கள். கலைக்கழகம் நடத்தும் போட்டி நிறுத்தப்பட்டுள்ள இச்சந்தர்ப் பத்திலே, இந்த நினைவுப் போட்டி வருடா வருடம் நடாத்தப்படுதல் விரும்பத் தக்கது.
சி. சண்முகம் பல வானுெலி நாடகங்களை எழுதியுள்ளார். அத்துடன் சில நகைச்சுவை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி
மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். பூரீமான் கைலாசம், பறந்தது பைங்கிளி ஆகியன இரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றன. பாத்திர அமைப் பிலும், சம்பவக் கோவையிலுங் க்வனஞ் செழுத் தாது, உச்சரிப்பு முறைகளுக்கே முக்கியத்துவங் கொடுத்து எழுதுதல் இவரது நாடகங்களிலுள்ள
குறைபாடாகும்.
கே. மாணிக்கவாசகர் நாடக இலக்கியத்துறையில் உழைத்து வருகின்ரு ர். நீ இல்லையேல்?, மஞ்சள் குங்குமம் ஆகிய நாடகங்கள் வெற்றிகரமான மேடை நாடகங்களாக அரங்கேற்றப்பட்டுள்ளன.
நடமாடி, சிறுகதை, குறுநாவல் ஆகிய இலக் கியத் துறைகளிலே வெற்றியீட்டத் தவறியிருப் பினும், நல்ல மேடை நடிகர் என்பதை நிலைநாட்டி யுள்ளார். இராசா இராணிக் கதைகளை, படா டோபமான வசனங்களிலே நாடகங்களாக்குவதி லேதான் இவருக்கு அதிகம் ஈடுபாடு இருக்கின்றது. இவர் எழுதியுள்ள சரிந்தது கொற்றம் என்னும் ஓரங்க நாடகமும், சங்கிலியன் முமு நீள நாடகமும் இரசிகர் களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.
ஆர். பாலகிருஷ்ணன் வெகு வேகமாகி எழுத்துல கில் முன்னேறி வருகின்றர். இலங்கையர் கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வழி என்னுஞ் சிறு கதிைக்கு முதற் பரிசு பெற்றதன் மூலம் வாசகரது கவனத்தை ஈர்ந்தார். அவர் எழுதியுள்ள கடுதாசிக் கூட்டம் என்கிற ஓரங்க நாடகம், ஒரங்க நாடகத் தின் இலக்கணமாக அமைந்துள்ளது என விமர்சகர் களாற் பாராட்டப்பட்டது. பலகாலமாக ஒரங்க நாடகங்கள் தயாரித்து வந்த அவர், கூண்டுக்கு
Page 77
2 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வெளியே என்னும் முழு நீள நாடகத்தை எழுதி வெற்றிகரமாகத் தயாரித்துள்ளார். யாழ்ப்பாண மக்களுடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, அவர்களது பலவீனங்களை அங்கதச் சுவையுடன் சித்திரிப்பதில் வல்லவராகத் திகழ்கின் ருர்,
அன்புமணி, பல காலமாகச் சிறுகதைத் துறை யிலே உழைத்து, பின்னர் நாடகத் துறையிலே தமது கவனத்தைத் திருப்பியுள்ளார். பல வானுெலி நாட கங்களை எழுதியுள்ளதுடன், கடல் தந்த தீபம் என் னும் நாடகத்தையும் மேடையேற்றியுள்ளார். இந் நாடகத்திற்குக் கலைகழகத்தின் பரிசிலைப் பெற்ருர், இவர் "சில்வர் டஸ்ட் உடுப்புகளுடன் நடிக்கத்தக்க, இராசா-இராணிக் கதைகளையே நாடகங்களாக்கு
கின் ருர்.
இராசரத்தினம் (ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்) போன்ளுேர், அநுபவ வாயிலாக நகைச்சுவை நாட கங்கள் தயாரித்து வந்தாலும் அவை இலக்கியக் கணக்கெடுப்பிலே சேர மாட்டாது.
நகைச்சுவை, சரித்திர சம்பவங்கள் ஆகிய வற்றையே திரும்பத் திரும்ப நாடகங்களிலே புகுத் தாமல்,அனைத்துலகத்திற்கும் பொதுவான உணர்ச்சி முரண்பாடுகளை வைத்து நாடகங்களை எழுவதின் மூலந்தான், தமது திறமைகளைக் கடலுக்கு அப்பா லுந் தெரியச் செய்யலாம் என்பதை நமது நாடகா சிரியர்கள் மனதிற் கொண்டு, அவ்வாருண நாடகங் களை எழுத முன் வருதல் வேண்டும்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 3
கட்டுரைகளும் விமர்சனங்களும்
இக்கால எல்லையுள் எழுத்துத் துறையில் மலர்ந்த கதாசிரியர்களையும், நாடகாசிரியர்களையும் அறிந்து கொண்டு, கட்டுரைத் துறைக்கு வருகின் ருேம். கட்டுரைகள் எழுதுவதும் இலக்கியத் துறை யின் ஒரு பிரிவு என்கிற எண்ணம் பல எழுத்தாளர் களிடமில்லை. கட்டுரை எழுத்தாளர், அரசியற் பிரச்சினைகளில் ஈடுபட்டு, தமிழரின் அவல நிலை கண்டு ஆவேசமுற்று, எழுதும் ஒரு போக்கினை வெளிப்படையாகவே அறிந்து கொள்ளலாம். அரசி Այ Փ கட்சி அபிமானங்கள் கதாசிரியர்களையுங் கவி ஞர்களையும் ஈர்த்ததைப் பார்க்கிலும், கட்டுரையா சிரியர்களையே பெரிதும் ஆட்கொண்டன என்பதும் புலணுகும். பல கட்டுரையாசிரியர்கள் அரசியற் பிர சாரக் கட்டுரைகளைத் தவிர, சிந்தனைக் கட்டுரை கள்-நகைச்சுவைக் கட்டுரைகள்-பிரயாணக் கட்டு ரைகள் ஆகிய துறைகளிலே எவ்வித முயற்சியுஞ் செய்யவில்லை. ஆழமான படிப்பும், நல்ல மொழிப் பயிற்சியும், சிந்தனைத் தெளிவு ங் கட்டுரையாசிரியர் களுக்குத் தேவை. வெறுஞ் சொல்லடுக்காய்-அட் டைக் கோபுர மாய்-அமைந்துவிடுங் கட்டுரைகளால் யாருக்கும் எவ்வித பயனுமில்லை.
கொழும்பு ருேயல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவரும், தற்பொழுது தம்மொழி அலுவலகத்திற் கடமை பார்ப்பவருமான கி. லக்ஷ மண ஐயரவர்கள் எழுதிய பாரதத்தூதுவர், கம்பனது கதாபாத்திரங்கள் ஆகிய நூல்களுக்கு நல்ல வரவேற் புக் கிடைத்தது. இந்தியத் தத்துவஞானம் என்னும்
15 س-F
Page 78
4 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தமது நூலுக்கு பூரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார்.
ச. ஹன்டி பேரின்பகாயகம் அவர்கள் நல்ல கட்டு ரையாளராவர். தமிழ் சிங்களப் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த பொழுது, இரு மொழி களும் ஆட்சி மொழியாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அல்லாவிடின் தமிழர் இரண்டாந் தரப் பிரசைகளாக்கப் படுவார்கள் என்று அவர் எழு திய தொடர் கட்டுரை, கட்டுரையாளருக்கு வழி காட்டுவதாக அமைந்துள்ளது. போட்டுக்கிடந்து எடுத்தது, யப்பான் யாத்திரை, அக்கிய மதம் என்பன அவரது நல்ல கட்டுரைகளாம். சமீபத்தில் அவர் எழுதி வெளியிட்டுள்ள ஆட்சி இயல் என்னும் நூல், உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தக மாக இருப்பினும், அவரது கட்டுரை எழுதுங் கைவண்ணத்தைக் காட்டுகின்றது.
தெல்லியூர் கடராசா " சுதந்திரன்’ பத்திரிகையிற் சொற்பகாலம் கடமை யாற்றியவர். சொந்தத்தி லும் பத்திரிகை வெளியிட்டுப் பார்த்தவர். தமிழன் மாட்சி, தங்கத் தாத்தா, பிளவுங்கள் இலங்கையை ஆகிய நூல்களைத் தந்துள்ளார். ச்ாரண இயக்கத் திற்கு உதவும் விதத்தில் இளைஞர் சாரணியம் போன்ற நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சோதிட சாத்திரத்திலே நம்பிக்கையுள்ள இவர், அது சம் பந்தமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சோம சுந்தரப் புலவரது பல பாடல்கள் இவர் நடாத் திய பத்திரிகையிலேதான் பிற்காலத்திற் பிரசுர் மானவையென் பதுங் குறிப்பிடத் தக்கது.
முருகேசபிள்ளை என்னும் நல்லறிஞரின் புத்திர ராகிய மு. கணபதிப்பிள்ளை விபுலாநந்த அடிகளாரி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5
டம் அன்புடையவர். அவரது நினைவாக ஈழமணி என்கிற சஞ்சிகையைச் சில காலம் நடாத்தியவர். அவரது குறிப்புக்களைக் கொண்டு எழுதப்பட்ட விபு லாநந்த வரலாறு 1951 ஆம் ஆண்டில் வெளியா யிற்று. தமிழன் எங்கே? என்னும் அவரது நூல் பன் மொழிப் புலவர் கா. அப்பாத்துரை போன்ருே ரின் பர்ராட்டுதலைப் பெற்றது. ஆனல், அவரது ஆரியதிராவிடக் கொள்கைகளை வரவேற்காத ஈழத்து நல்லறிஞர்களுமிருக்கின்ரு ர்கள். பரபரப்பூட்டும் வகையிலே சில சமயங்களில் புத்தக மதிப்புரை கள் எழுதிவருகின்ரு ர்.
புதுமைலோலன், 'ஆனந்தன்' பத்திரிகையிலும் கடமையாற்றிய தமிழாசிரியராவர். அரசியல் சம் பந்தமான சிறுநூல்களைக் கட்சிக் கண்ணுேட்டத் தில் எழுதியுள்ளார். ஆரம்பகாலத்தில் அவர் பல சிறுகதைகளையும் காணிவல் காதல், தாலி ஆகிய குறு நாவல்களையும் எழுதியுள்ளார். ஆனல், அவரது புகழ், கட்டுரையாசிரியர் என்கிற வகையிலேதான் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது. தாயின் மணிக்கொடி சிறிய நூலாயினும் நன்கு அமைந்துள்ளது. ஆரம்ப கால நடை தி. மு. க. வைப் பின்பற்றுவதாக இருந்தாலும், பிற்காலத்தில் உணர்ச்சியூட்ட வல்ல ஒரு நடையைத் தமதாக்கிக்கொண்டார். அவரது எழுத்திலும் பேச்சிலும் அடிக்கடி பாரதிதாசனுடைய பாடல்கள் இடம்பெறும்.
எழுத்தாளர் வட்டாரத்தில் நிருபர்' என்னுஞ் சொல் நாவற் காடு சி. செல்லத்துரையையே குறிக் கும் நிருபர்கள் செய்தி சேகரிப்பவர்களே யொழிய, இலக்கியகாரர்களல்லர். ஆணுல், இவர் வேறுபட்ட வராகவே வாழ்கின்றர். யார் என்ன நடையிற்
Page 79
6 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பேசினலும், அதே நடையிற் சுவை குன்ருத செய்தி களைத் தருவதினுல் அவர் கட்டுரையாளராகிவிட வில்லை. பல புனைபெயர்களில் ஒளிந்து நின்று, விழாக் களைப் பற்றிய விமர்சனங்களையும், அரசியற் சூழ் நிலைகளைப் பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள் ளார். விடயங்களை நேரடியாகச் சொல்லாமல், குறிப்பாலுணர்த்தும் தன்மையை அவரது கட்டுரை களிற் காணலாம். "இளவரசு’ என்னும் புனைபெய ரில் தமிழ் வளர்க்கும் செல்வர்கள் இருபத்தைந்து பேர் களைச் சுவைப்பட அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். அக்கட்டுரைகளில் அவரது விமர்சனச் சீர்மையினை யும், அதே சமயம் கண்டிக்க வேண்டியவற்றை நகைச்சுவையுடன் மறைபொருளிற் சொல்லும் அழகினையுங் காணலாம்.
கந்தி (டாக்டர் சிவஞான சுந்தரம்) குமுதம்" பத்திரிகையி லெழுதிப் பிரபலமடைந்த சிறுகதை யாசிரியராவர். ஆரம்பத்திற் பொழுது போக்குக் கதைகளை எழுதியிருப்பினும், பிற்காலத்தில் மனுே தத்துவக் கதைகளை எழுதுவதிலே அக்கறை காட்டி வருகின்ருர், மலையக மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை வைத்து மலைக்கொழுந்து என்னுந் தொடர்கதை எழுதினர். இந்தக் கன்னிப்படைப்பே அவருக்குக் கணிசமான வெற்றியைக் கொடுத் துள்ளது. ஆனல், அருமைத் தங்கைக்கு என்னும் நூல் அவரைக் கட்டுரையாசிரியராக உறுதிப் படுத்துகின்றது. இந்நூலில், கடித உருவத்தில் கட்டுரை சள் இடம் பெற்றிருக்கின்றன. கர்ப்பவதி களுக்கு நல்ல முறையிலே சுகாதார ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. w −
ஈழத்துச்சோமு புகைப்படக்கதைகள் எழுதும் சிறுகதை எழுத்தாளராக வாசகர் மத்தியில் பிரபல
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 7
மெய்தினர். "சமூகத் தொண்டனில் சில விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஈழத்து இலக்கியத் தைப் பற்றி ஒவ்வோர் ஆண்டிலும் கணக்கெடுப்பு நடத்தி, இளம் எழுத்தாளருக்கு வேண்டிய தகவல் களைத் தந்து கொண்டிருந்தார். தற்காலத்தில் சுவையான அறிக்கைகள் தயாரித் துப் பத்திரிகை களில் வெளியிட்டு வருகின் ருர்,
க. சி. குலரத்தினம், பாடப்புத்தகாசிரியர்களைப் போன்றல்லாது, எழுத்தாளரது உள்ளப்பாங்குடன் மிகவும் பயன்படத் தக்கமுறையில் அரசியற் சித்தாந்தங்களைப் பற்றி விவேகியில் தொடர்ச்சி யாக எழுதிவருகின்ரு ர். தெளிவான விளக்கங்களும், எளிமையான நடையும் அவரது கட்டுரைகளைச் சிறப்பிக்கின்றன . ஆழ்ந்த சமய அறிவும். தமிழ்ப் புலமையுங் கொண்டுள்ள அவர் தமது கவனத்தை இத்துறைகளிலுந் திருப்புவாராயின் ஈழம் பெரிதும் பயனடையும் .
பிரேம்ஜி தமிழரசுப் பத்திரிகையான ' சுதந்திர' னிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை யான தேசாபிமானியிலும் கடமையாற்றியவர். தற் பொழுது தூதுவராலய மொன்றில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்யும் அவர், கட்சிக் கொள்கைகளைப் பிரசாரஞ் செய்வதற்காகவும், எதிர்க்கருத்துக் கொண்டோரைச் சாடுவதற்காக வுமே கட்டுரைகள் எழுதிவருகின்றர். அவரது கட்டு ரைகளில் கட்சி முத்திரைச் சொற்களும், வட உச்ச ரிப்புச் சொற்களும் அடிக்கடி வந்து, சொல்லும் விட யங்களை நீட்டிவிடுகின்றன. 'தினகரன்’ பத்திரிகை யிற் கடமை பார்க்கும் சபாரத்தினம், மகேசன் ஆகிய இருவரும், பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவதற்
Page 80
8 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வல்லாமல், சுவையான கட்டுரைகளை அவ்வப்போது
எழுதி வருகின்ரு ர்கள்.
எஸ். வேலுப்பிள்ளை (மாயாவி) ஒரு தரமான கட்டுரையாளராவர். 'கண்டதும் கேட்டதும்' என் னும் பகுதியைத் 'தினகரனில் தொடர்ந்து எழுதி, ‘மாயாவி’ என்னும் பெயரில் பிரபலமடைந்தார். அவர், 'தினகரனில் தொடர்கதையும் எழுதியுள் ωτ π ή . -
ரீ. பாக்கியாகாயகம் நாடோடிப் பாடல்கள் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் எழுதியிருக்கின் ருர் . ஆனல், நகைச்சுவைக் கட்டுரைகளே அவருக்குப் புகழைக் கொடுத்தன. அவரது நகைச் சுவை, மேலோட்டமான சம்பவ முரண்பாடுகளிலே பிறக் கின்றது. இதனுல், சாதாரண வாசகரைக் கவர்ந்து விடுகிரு ர்.
ஆசிநாதன் (ச. பெனடிக்ற்), ஆ தம்பித்துரை ஆகிய இருவரும் நல்ல ஒவியர்கள் : இருவரும் ஓவியக் கலை சம்பந்தமாக ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். கற்காலக் கலையும் சுவையும், ஆசி நாதனது அருமையான நூலாகும். கட்டுரைகளுக்கு அவரே சித்திரங்களும் வரைந்துள்ளார். ஆ, தம்பித் துரை ஒவியக்கலை, சிறுவர் சித்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். "சிறுவர் சித்திரம் ஒரு புதிய முயற்சி. தாமே மரத்திற் செதுக்கிய படங்களை இந்நூலிற் சேர்த்துள்ளார்.
கான் கண்ட கலைப்புலவர் என்னும் நூலை எழுதி
யுள்ள க. மானிைக்கவாசகர் நூல் நிலையங்களைப் பற்றிப் பல உபயோகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 9
ஈழத்துச் சிவானந்தன், யான் கண்ட சொற்செல்வர்கள் என்னும் நூலில் ஈழத்து மேடைப் பேச்சாளரை அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். இவற்றுடன், நாவலர் சமயப்பணி (சீ.... சிவரத்தினம்), வாழையடி வாழை (க. செபரெத்தினம்), ஆறுமுகமான பெருமான் (க. தனபாலசிங்கம்), ஈழத்துச் சிதம்பரம் (கணபதீஸ் வரக் குருக்கள்), யார்நாடற்றவன்? (தமிழ்ப்பித்தன்) ஆகிய நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
இக்கால எல்லையுள் கட்டுரைத் துறைக்கு வந் துள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள், " சுயா எழுதியதைப் போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளை யோ, அநுசுயா எழுதியதைப் போன்று பல வகைக் கட்டுரைகளையோ, சோ. சிவபாத சுந்தரம் எழுதிய தைப் போன்று சிந்தனைக் கட்டுரைகளையோ, "சான’ எழுதியதைப் போன்று நடைச் சித்திரங்களையோ எழுதாமல், ஒரே பாதையிலும் பாணியிலும் எழுதி வருகின்ருர்கள்.
கட்டுரைகளுக்கேற்ற விடயங்களுக்குப் பஞ் சமா? தி. ஜ. ர. வின் "பொழுது போக்கும், வ. ரா. வின் மழையும் புயலும்", 'நடைச் சித்திரம்" ‘ என்ன ருசியோ" முதலியவையும், வே. சாமிகாத சர்மாவின் கட்டுரை நூல்கள் பலவும் நன்முக அமைந்திருக்கின்றன. இவற்றை நமது கட்டுரை யாசிரியர்கள் ஒரு முறை படித்தால், இந்தப் பரந்த உலகத்திற் கட்டுரைகள் எழுதுவதற்கு எத்தனையோ சுவையான விடயங்களிருப்பதை உணர்வார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.
ஆங்கிலத்தில் எழுதும் பிரபல மலைநாட்டு எழுத்தாளரான சி. வி. வேலுப்பிள்ளையின் மலை
Page 81
20 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நாட்டுத் தலைவர்களது அறிமுகக் கட்டுரைகளும், நாடோடிப் பாடல்கள் சம்பந்தமான கட்டுரை களும் 'தினகரனில் வெளிவந்தபோது வாசகர் விரும்பிப் படித்தனர். விடயங்களைச் சொல்லும் முறையில் அவை நன்முக அமைந்திருக்கின்றன. இத்தகைய கட்டுரைகள் எழுதுவதற்குக் கூர்மை யான அவதானமும், நடைத் தெளிவுந்தேவை யென்பதை நமது கட்டுரையாசிரியர்கள் உணர வேண்டும்.
இனி, நமது கவனத்தை இலக்கிய விமர்சனத் துறைக்குத் திருப்புவோம். மு ன்ன ரெப்பொழுதும் இல்லாத அளவிற்கு, ஈழத்தில் நேயர் கடித விமர் சனங்கூட பெருமளவில் வளர்ந்துள்ளது. ‘ஈழநாட் டில் விமர்சகர்களுக்குப் பஞ்சமில்லை" என்கிற கருத் தினைச் ‘சரஸ்வதி ஆசிரியர் வ. விஜயபாஸ்கரன் இங்கு வெளியிட்டிருந்தார். ஒர் எழுத்தாளர் சங் கம் நடாத்திய எழுத்தாளர் புகைப்படக் கண்காட் சிக்குச் சென்றிருந்தேன். பல புது முகங்களை எழுத்தாளர் வரிசையிற் கண்டேன். அவர்களுடைய படங்களுக்குக் கீழே ‘துறை இலக்கிய விமர்சனம்’ என்று போடப்பட்டிருந்தது, ' என்னை வியப்பி லாழ்த்திற்று. "இத்தனை இலக்கிய விமர்சகர்கள் இலக்கிய உலகில் ‘உயிர் வாழ்வதற்கு எத்தனையா யிரம் எழுத்தாளர் நம் மத்தியில் வாழவேண்டும்’ என்று என் மனதிற்குள் வேடிக்கையாக நினைத்துப் பார்த்தேன்.
பத்திரிகைகளிலே, ஏதாவதொரு கதை ‘நன்ருக இருந்தது "ஆபாசமாக இருந்தது' என்று அஞ்சலட்டை அபிப்பிராயங்களை அனுப்பி வைக் கும் இவ்வெழுத்தாளர் படையை நாம் விமர்சகர் களாகக் கொள்ளத் தேவ வயில்லை. இருப்பினும்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 2
புதிய கோணத்திலே இலக்கிய விமர்சனத்
துறையினை அணுகும் புதிய சந்ததி யொன்று தோன்றிக் கொண்டிருக்கின்றது.
புதியவர்களும் வளரட்டும்; பழையவர்களும் வாழட்டும். 'பழையவர்கள் இரசனைக் கட்டுரை களையே எழுதிவந்தார்கள். அவர்களுக்கு இலக் கிய விமர்சனத்தின் இலக்கணந்தெரியாது. ஆங் கிலங்கற்றுத்தான் தமிழில் இலக்கிய விமர்சனஞ் செய்யவேண்டும் என்று இந்தப் புதிய விமர் சகர்கள் ஓயா மற் பிரசாரஞ் செய்வதினுல், ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பாதகஞ் செய்து வருகின்றர்களென்பதை அவர்கள் உணரத் தவறுகின்றர்கள்,
‘இலக்கிய விமர்சனந் தமிழில் இருந்தது கிடையாது; வ. வே. சு. ஐயருக்குப் பின்னர் தான் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டது" என்னும் தப்பான நிலைக் களனிலிருந்து, இலக்கிய இலக்கினை அணுகுகின்றர்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு அதற்கு முற்பட்ட தமிழிலக்கியத்தி லும் விமர்சன முறைகளிலும் பரிச்சயங்கிடை யாது என அவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் விகடா லங்காரத்தினையும் அவதா னிக்கலாம். அவர்கள் விமர்சனத் துறையிலே புகுத்தும் பதங்களும், சில அளவுகோல்களும் அந்நியமாக இருப்பதினுல், சிலருக்குப் ‘புதுமை’ யாகத் தோன்றலாம். இப்புதுமை மோகத்தினல், சங்கந்தொட்டு வந்துள்ள இலக்கிய விமர்சன முறைகளும், அளவு கோல்களுந் தவருனவை யென அர்த்தமாகிவிடாது. பரதநாட்டியம் தமிழ்
F-16.
Page 82
22 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நாட்டு நடனமுறையாகும். அது நடன மேயில்லை, ரொக்-அன்-ரோல்தான் நடனமென்று நிலைநாட்ட முற்படுவது எவ்வளவு வேதனைக்குரியதோ, நாதஸ் வர இசையிலும் பார்க்க 'ஜாஸ் இசைதான் சிறந்தது என நிலைநாட்ட முற்படுவது எவ்வளவு வேதனைக்குரியதோ, அவ்வளவு வேதனைக்குரியது அவர்கள் விமர்சனத்துறை பற்றித் தெரிவிக்கும் கருத்துக்களாகும். நமது இலக்கிய இரசனையும், அதன் மதிப்பீடும் , நமது மண்ணிலே யும், தமிழர் நெஞ்சங்களிலேயும் வேரூன்றிய மர பினலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. "தனிப்பட்ட வர்களுடைய தீர்ப்பிலும் பார்க்க, சமூகத்தின் தீர்ப்பு மேன்மையான தீர்ப்பு’ என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகின்றேன்.
புதிய விமர்சகர்கள் புதிய பார்வையை நமக்கு அறிமுகஞ் செய்து வைப்பதற்கு நாங்கள் மறுப் புச் சொல்லவில்லை. ஈழத்து இலக்கியகாரர் கிணற்றுத்த வளைகளுமல்லர். ஆனல், புதிய விமர் சகர்கள் 1940 ஆம் ஆண்டளவில் ரா. பூரீதேசிகன் "கதை மரபு’, ‘கவிதை மரபு பற்றி எழுதியுள்ள கட்டுரைத் தொடர்களை வாசித்துப் பார்க்கவேண் டும். மேனுட்டார் இலக்கியத்தை அணுகும் முறைக் கும், கீழைத் தேசத்தினர் இலக்கியத்தை அணுகும் முறைக்குமுள்ள வேறுபாடுகளை அக்கட்டுரைகளிலே அறிந்து கொள்ளலாம், இலக்கியத்தை அணுகும் முறையிலே வேறுபாடு இருந்தால், இலக்கியம் பற்றிய சுவையும் வேறுபடுதல் இயல்பானதாகும். சுவை வேறுபடும் பொழுது, இலக்கிய மதிப்பீட்டின் அளவு கோல்களும் வேறுபடுகின்றன. ரா பூரீ தேசிக னைப்போல அவர்கள் இருவிதமான அளவு கோல் களிலும் பரிச்சயம் வைத்துக் கொண்டு, இலக்கிய
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 123
விமர்சனஞ் செய்யப் புகுவார்களேயானல், ஈழத் தமிழுக்கு அவர்களால் ஆக்க பூர்வமான தொண்டி னைச் செய்ய முடியும். புதிதாக அவர்கள் காட்டும் அளவு கோல்களைக் கூட அவர்கள் தெளிவாக விளங் கிக் கொண்டவர்களாகக் காணுேம். அவர்கள் தேர்ந் தெடுத்துள்ள கட்டுரை நடை, விடயங்களை விளக்கு வதை விடுத்து, மேலுங் குழப்புவதாகவே அமைந் துள்ளது. இலக்கிய விமர்சனம் என்பது வேறு, இரசனை என்பது வேறு என்பதை நான் மறுக்க வில்லை. ஆனல், "இலக்கிய இரசனை ஆகாது’ என் கிற பிரசாரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இர சிகமணி டி. கே. சி யின் இரசனை தேசிக விநாயகம் பிள்ளையையும், பண்டிதமணி சி. க. வின் இரசனை சோமசுந்தரப் புலவரையுஞ் சாதாரண வாசகருக்கு அறிமுகஞ் செய்து வைத்தன என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர் களது பிரசாரம் வலுப்பெறுமானல், இரசனைக் கட்டுரைகள் அருகிவரலாம். அவ்வாறு நிகழு மா ணுல், ஈழத்து எழுத்தாளரது நல்ல முயற்சிகள் சாதாரண வாசகரின் கவனத்தைப் பெரு மற் போய் விடவுங்கூடும். பண்டிதர் குழு ஊக் குறிகளை வைத்து ஏதோ செய்தது போலவே, அவர்களும் ஏதோ குழு ஊக் குறிகளை வைத்து எழுதுவதன் மூலம் புது வித மான பண்டித வர்க்கத்தை உருவாக்க முற்படு கின்ருர்களென்பதை உணரத் தவறிவிடுகின்றர்கள்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொ. கிருஷ் ண ன், சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் இரச னையை வளர்ப்பதிலும், இலக்கிய விமர்சனஞ் செய் வதிலும் முன்னணியில் நிற்பதை ஏலவே கண் டோம். இவர்களையடுத்து, ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமைபெற்றவரும், விபுலா
Page 83
24 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நந்தர வர்களுடன் உடனுறைந்து அவருடைய ஆக்க வேலைகளிற் பங்கு கொண்டவருமாகிய மா. பீதாம் பரம் அவர்கள் விமர்சனத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். ஆறுமுகநாவலரின் மறைவுக்கும், குமாரசுவாமிப் புலவரவர்களுடைய ஆக்க வேலைகள் தொடங்குவதற்குமிடைப்பட்ட ஓர் இருபது ஆண்டுகளில், கிறித்தவர்கள் தமிழ் நடையை எவ்வாறு ஈழத்திற் கையாண்டார்கள் என்பதைப்பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், யாப்பியற் சுருக்கம் ஆகிய அவரது கட்டுரைகள் அவரது தெளிந்த அறிவுக்குச் சான்றுகளாம். மெய்க் கூத்து, அபிநயக்கூத்து, நாடகம் என்பன பற்றி விளக்கங் கள் தந்து, நாடகச் சுவடிகள் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் தமி ழுக்கு ஆற்றிய தொண்டுகளை முதலில் எடுத்தி யம் பிய தமிழரும் அவரே யாவர். விபுலாநந்தரு டைய ஆங்கிலவாணியை நூல் வடிவிலே தந்துள்ளார். பிள்ளைப்பாட்டுப் போட்டியிலே கலந்து முதலாம் தொகுதியிற் பதினறு பாடல்களுக்கும், இரண்டாம் தொகுதியிற் பதினைந்து பாடல்களுக்கும் பரிசு பெற்றுள்ளார். ஈழத்திலும் தென்னகத்திலுமிருந்து வெளிவந்த பல நூல்ஞகக்கு விமர்சனஞ் செய் துள்ளார். பத்திரிகைகளிலே வெளிவரும் மதிப் புரைகள் விமர்சனங்களாக அமையாவிட்டாலும், பீதாம்பரம் அவர்களின் மதிப்புரைகள் உபயோக மான விமர்சனக் குறிப்புக்களைக் கொண்ட தரமான விமர்சனக் கட்டுரைகளாக விளங்குவதை எவரா லும் மறுக்க முடியாது.
திருவாசகம் (பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உரை) என்னும் நூலுக்கு வ. கந்தையா அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 25
எழுதிய விமர்சனம் அறிஞருலகிற் பெரும் பரபரப் பினை ஏற்படுத்தியது. வானெலியிலும், பத்திரிகை களிலும் பல நூல்களை விமர்சனஞ் செய்துள்ளார். மாணிக்க வாசக சுவாமிகளின் திருக்கோவையா ரைச் சாதாரண மக்களும் வாசிப்பதற்கேற்ற வசனநடையில் அமைத்துத் தந்துள்ளார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திற் படித்துக் கொண்டிருந்த பொழுது, வீரகேசரியில் ஈழத்து நாவல் களைப் பற்றி எழுதி, க. கைலாசபதி இலக்கிய விமர் சனத் துறைக்குள் நுழைந்தார். சிறுவயதிலே சிங்கப்பூரில் வாழ்ந்ததால், ஈழத்து நாவல் இலக்கிய முயற்சிகளைப் பற்றி முழுவதும் அறியாதிருந்தபோதி லும், அவரது கன்னி முயற்சி பாராட்டத்தக்கது தான். சில வருட காலமாக தினகரன் ஆசிரியராகக் கடமை பார்த்தார். அப்பொழுது அவர் ஞாயிறு தின கரனை இலக்கிய தரத்திற்கு உயர்த்தி, ஆற்றலிலக் கிய முயற்சிகளுக்குக் கணிசமான இடம் ஒதுக்கிக் கொடுத்துச் செய்துள்ள சேவையை ஈழம் மறக்காது. பல இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாக ங் கொடுத்து, தமது பரம்பரை என்று சொல்லக்கூடிய பல எழுத் தாளர்களை உருவாக்கினர். பாரிய விமர்சனக் கட்டு ரையாக அவர் எழுதியுள்ள மகாகவி கண்ட மகாகவி ஏமாற்றத்தையே தருகின்றது. இரண்டு மகாகவி களையும் நம்மாலே தரிசிக்க முடியாதிருக்கின்றது. காடும் காயன்மாரும் என்றும் பல்லவர்கால இலக்கியம் பற்றி ஆராய்ந்து ஒரு சிரு நூலையும் வெளியிட்டுள் ளார். அவர் தமிழ் நாட்டினருக்குத் தெரிந்த ஓர் இலக்கிய விமர்சகராவர். தமிழ் விரிவுரையாளராகக் கடமை பார்க்கும் கைலாசபதி தமது விமர்சனக் கட்டுரைகளிலே, ஆங்கில வசன அமைப்பினைக் கையாளுகின்றர்.
Page 84
26 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கா. சிவத்தம்பி, அங்க அசைவுகளினற் சிரிப்பூட் டக் கூடிய நகைச்சுவை நடிகராகவே அறிமுகமானுர், பல மேடை நாடகங்களிலும், வானெலி நாடகங்களி லும் நடித்துள்ளார். இருப்பினும், முற்போக்கெழுத் தாளரின் "விமர்சனப் பண்டிதராகவே எழுத்துத் துறையிற் புகழெய்தினர். தேனருவியில் அவர் எழுதி யுள்ள இயக்கமும் இலக்கியமும், அவர் நிறைய வாசிப் பவர் என்பதைக் காட்டுகின்றது. கைலாசபதியினு டையதிலும் பார்க்கத் தெளிவான நடையில் எழுதி, வாசகரைக் கவருகின்றர். இருவரது எழுத் துக்களிலும், தருக்கஞ்சார்ந்த விவாதங்கள் குறைந் தும், மார்க்ஸிசநோக்கு எல்லா இடங்களிலும் விர வியுங் கிடப்பதைக் காணலாம்.
காவேந்தன், கவிதை-சிறுகதை-கட்டுரையாகிய பலதுறைகளிலே உழைத்து வருகின் ருர், பிச்சைக்கா ரன், தலைவர் வன்னியசிங்கம், பூரீ அளித்த சிறை ஆகிய சிறு நூல்களைத் தந்துள்ளார். வாழ்வு என்னுஞ் சிறு கதைத் தொகுதியையும் நமக்குத் தந்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள பதினைந்து கதைகளுள் ‘வாழ்வு நல்ல கதையாகும். இருப்பினும், இவரை விமர்சகர் வரிசையிலேதான் சேர்க்க வேண்டியிருக் கின்றது. பிறரது அபிப்பிராயங்களைப் பற்றி இலட் சியஞ் செய்யாது, தமது மனதுக்குப்பட்டதையே எழுதுகின் ருர் ; பேசுகின்ரு ர். மேற்கூறிய இரு விமர் சகர்களும் ஒரு துருவ மென்ரு ல் , நாவேந்தன் அதன் எதிர்துருவத்தைச் சேர்ந்தவர். அவரையே ஆசிரிய ராகக் கொண்டு வெளிவந்த சங்கப்பலகையில் அவர் எழுதியுள்ள சில விமர்சனக் கட்டுரைகள், பக்கச் சாய்வான கண்டனங்களென்று ஒரு சாரார் கருது கின் ருர்கள். அவர் இலக்கிய விமர்சனத் துறையில் தமிழரசுக் கட்சியின் கண்ணுேட்டத்தைப் பிரதி பலிக்கின்றர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 27
அண்மையில், விமர்சன விக்கிரகங்கள், "முற்போக்கு இலக்கியம்’ ஆகிய கட்டுரைகளை எழுதி, விமர்சனத் துறையிலே ‘கலகலப்பினை ஏற்படுத்தியதன் மூலம் மு. தளையசிங்கம் எழுத்தாளர் கவனத்தை ஈர்ந்தார். மேற்கோள்களை ஆங்கிலத்தில் தருவதன் மூலமும், ஆங்கிலமும் , தமிழுங் கலந்த புதியதோர் மணிப்பிர வாள நடையைக் கையாள்வதின் மூலமும், சராசரி வாசகர்களைக் கவரத் தவறிவிடுகின்ருர், சமகால முயற்சிகளிலிருந்து தமது இலக்கிய விசாரணையைத் தொடங்குதல், இவரிடமுள்ள பிறிதொரு குறைப் பாடாகும். தீ என்னும் நாவலை விவகாரத்திற்குரிய தாக்கி, பாலெழுச்சிகளை மையமாகக் கொண்டு புனை யப் படுங்கதைகளை மேனட்டார் நோக்கிலே அணுகி, ‘எழுத்தில் புதியதோர் எஸ். பொன்னுத் துரையைத் தரிசிக்கின்றர். அக்கட்டுரை விமர்சன விசாரணையிற் சுயபோக்கினைக் காட்டுகின்றது. தமிழ் விழா-ஒரு வெட்டுமுகம் என்னுங் கட்டுரை, சிறிய சன்னலினூடாக உலகினைப் பார்க்கும் அவரது இயல் பினைப் புலப்படுத்துகின்றது. பாலெழுச்சிகளைக் "கருப்பொருள்களாக வைத்துக்கொண்டு பல சிறு கதைகளை எழுதியுள்ளார்.
"எழுத்து' என்னும் விமர்சன ஏட்டினல் தர்மூ.சிவ ராமு முன்னணிக்கு வந்துள்ள விமர்சகராவர். மெளனி, கா. பிச்சைமூர்த்தி, சி. சு. செல்லப்பா ஆகியோரது படைப்புக்களிலே மிகுந்த ஈடுபாடுள்ள அவர், அந்த ஆசிரியர்களுடைய எழுத்துக்களிலே இரசனையை ஏற்படுத்துவதற்காகவே எழுதுவதாகத் தோன்றுகின்றது. விளக்க மற்ற தத்துவக்கோட்பாடு களையும், விஞ்ஞான உண்மைகளையுங் குழப்பி யடித்து, ஏதோ பெரிய விடயங்களைச் சொல்ல வரு கின்ருர் என்கிற மன மயக்கத்தினை இளம் எழுத்தா
Page 85
28 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ளர் மத்தியில் ஏற்படுத்துகின் ருர், தெளிவற்ற சொற்குவியல் நடையில் எழுதுகின்றர். கட்டுரை யின் நோக்கம் கருத்தினைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அவற்றில் லாது போனல், ஏன் கட்டுரை கள் எழுதி வாசகரின் பொறுமையைச் சோதிக்க வேண்டும் என்று அவரைக் கேட்கத் தோன்றுகின் றது. மேலும், ஈழத்து இலக்கிய முயற்சிகளின் மூச்சினை உணராது அக்கரைப் பச்சையிலேயே மயங் கிக்கிடக்கின்றர். நம் நாட்டு விடுகதைகளைப் போல அமையும் "புதுக்கவிதை'களையும் எழுதியுள்ளார்.
கே. எஸ். சிவகுமாரன், தமிழ் சினிமா தொடக் கம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வரை சகலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஆவல் மிக்கவ ராகக் காணப்படுகின்ரு ர். இளம் எழுத்தாளருக்கு உபயோகமாகும் வகையில் மேனுட்டுக் கதாசிரியர் களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆழமான விமர்சன நோக்கில்லாது போனலும், விமர்சனம் என்னும் எண்ணத்திலே, இரசனைப்போக்கில், பல நூல்களை வாசகருக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது, ஆங்கிலப் பத்திரி கையிலே தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல் நற்பணியாகும். விமர்சகனுக்கு, எழுத்தாளரை வாசகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஒருவித கடன்மைப்பாடும் இருப்பதினலே தான், இவரை நான் விமர்சகர் வரிசையிலே , சேர்த்துள்ளேன்.
இந்தச் சந்தர்ப்பத்திலே, நமது இலக்கிய விமர்சகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை விடுத்தல் பொருத்தமானது. ஒரு விமர்சகன் இலக்கிய மதிப்பீட்டினைச் செய்யும் பொழுது சொந்த விரோத -குரோத, பந்த-பாச உணர்ச்சிகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 29
குறுக்கிடாது பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் எழுத்தாளருக்கும் வாசக ருக்குஞ் சரியான பாதை காட்டலாம். விமர்ச கருக்கு வெவ்வேறு பார்வைகள் இருப்பினும்,
மதிப்பீட்டு அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடக்
di L-ft gil.
பெண் எழுத்தாளர்கள்
உலக வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரை அளித்த பெருமை ஈழநாட்டிற்கு உண்டு. இதன் காரணமாக 'ஈழத்துப் பெண்கள் எழுத்துத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் முன்னணியில் நிற்கின்ருர்களென்று வெளிநாட்டி னர் நினைப்பதற்கு இடமுண்டு. ஆனல், வேறு துறை களில் எப்படியோ, எழுத்துத்துறையிலே பெண் களுடைய முயற்சிகள் திருப்தி தரத் தக்கனவாக இல்லை. எழுத்துத்துறையிலே, தென்னகப் பெண் மணிகள் முன்னணியில் நிற்கின்ருர்களென்பதுண் மையாகும். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எந்தப் பத்திரிகையையோ, விசேட வெளியீடு களையோ புரட்டிப்பார்த்தால் நாம் எத்தனையோ தரமான பெண் எழுத்தாளர்களைச் சந்திக்க முடி கின்றது. ஆனல், ஈழத்தில் பல்கிப் பெருகியுள்ள பட்டதாரிகள் - தமிழாசிரியைகளென்னும் பகுதி யிலிருந்துகூட, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத் தாளர்கள்தாமுந் தோன்றவில்லை.
1950 ஆம் ஆண்டில் மிகத் துணிச்சலுடன் மா. மங்கம்மாள் அவர்கள் ‘தமிழ் மகள்’ என்னும் பத் திரிகையை நடாத்தினர்கள். ஆன்றமைந்த படிப்
F-17.
Page 86
30 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பும், அடக்கமுமுடைய பண்டிதை வேதாநாயகி அவர்கள் பல நீண்ட கட்டுரைகளெழுதித் தம்மை எழுத்தாளராக நிலை நாட்டினர்கள். ஒரு புலவரின் மகளும், இளமுருகஞரின் துணைவியுமான பண் டிதை பரமேஸ்வரி அவர்கள் " நாமகள் புகழ் மாலை"க்கு அரியதோர் உரை எழுதியதுடன், "கதிரைச் சிலேடை வெண்பா விருத்தியுரையும், "சிறுவர் செந்தமிழுக்குப் பதவுரையும் எழுதி யுள்ளார்கள். இவற்றுடன், மங்கையர்க்கரசியார் என்னும் நாடகத்தையும், கதிரை முருகன் கலிப்பா வையும் இயற்றியுள்ளார்கள். கவிநயம், உரை என்பனவற்றை ஆன்ருேர் மரபு வழுவாது எழுதுவதில் வல்லவராவர். பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள் அழகான மேடைப்பிரசங்கி யாக இருந்தும், எழுத்துத் துறையில் இறங்கவில்லை. ஆனல், இன்னுெரு பிரபல பேச்சாளரான தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சமயக்கட்டுரைகள் எழுது வதுடன் எழுத்துத்துறைக்குக் காலெடுத்து வைத் துள்ளார்கள்.
சிறுகதைத் துறையில் சசிதேவி தியாகராசா, பவானி, சாந்தினி, குறமகள், புதுமைப்பிரியை, குந்தவை, பா. பாலேஸ்வரி, பாலாம்பிகை கடராசா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
சசிதேவி தியாகராசா அவர்கள் “ ஈழகேசரி ? "உதயம்' ஆகிய பத்திரிகைகள் நடாத்திய சிறுதைப் போட்டிகளிலே பரிசு பெற்றுக் கதாசிரியராகப் பிரபலம் எய்தினர். தெளிந்த நடையையும், காண்டேகரின் சாயல் கொண்ட உவமானங்களையும் இவரது கதைகளிலே காணலாம்."வாழ்வு உயர்ந்தது" என்னும் இவரது சிறுகதை ஈழநாட்டுச் சிறுகதைத்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 3
தொகுதியில் இடம்பெற்றுள்ளது. முன்னுள் உணவு அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி ஒருவரின் புத் திரியான பவானி, பெண் எழுத்தாளர்களுள் மிக வுந் துணிச்சலானவர். மேனுட்டு இலக்கியப் பயிற்சியுடன், ஆண்-பெண் உறவுகளிலேயுள்ள திடுக்கிடும் சம்பவங்களைத் தமது கதைகளிலே கையாளுகின்ருர், தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒவ் வாத, செயற்கையான அதிர்ச்சிகள் இடம்பெறும் அளவிற்கு, கதைசொல்லும் பாணி அமையவில்லை. கடவுளரும் மனிதரும் என்னுஞ் சிறுகதைத் தொகு தியைத் தந்துள்ளார்.
சாந்தினி (மகேஸ் வைரமுத்து) ஒரு சில சிறு கதைகளே எழுதியிருப்பினும், தமக்கென ஓர் இடத்தைச் சிறுகதைத் துறையிலே சம்பாதித் துள்ளார். இவரது எழுத்துக்களில் பெண் பாத் திரங்களுடைய உணர்ச்சிகள் மேலிட்டு நிற்கும். ஈழத்தின் சிறந்த பத்துச் சிறுகதைகளைப்பொறுக்கி எடுத்தால், இவர் எழுதியுள்ள நிறைவு என்னுங் கதை நிச்சயமாக ஓர் இடத்தினைப் பெறும்
குறமகள் (வள்ளிநாயகி) நல்ல பேச்சாளர்; எழுத்தாளர். தெளிவான நடையில் எழுதுகின் ருர் . ஐவர் எழுதிய "மத்தாப்பு’க் குறுநாவலில் மஞ் சள் வர்ணத்தை வைத்து ஓர் அத்தியாயத்தை நன்ருக எழுதியுள்ளார்.
புதுமைப்பிரியை (பத்மா காந்தன்) "சுதந்திரன்’ சிறுகதைப்போட்டியில் - ரத்தபாசம் என்னும் தமது கதைக்கு முதற்பரிசு பெற்றதன் மூலம் வாசக ருக்கு அறிமுகமானர்.
Page 87
32. ஈழத்து இலக்கிய வளர்ச்சி
குந்தவை (மு. சடாட்சர தேவி) நெடுங்காலமாக எழுதிவந்திருப்பினும், 'ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு முத்திரைக் கதையின் மூலம் பிரபல மடைந்துள் ளார். மேற்படி முத்திரைக் கதை நல்ல கதை யாகும்.
பா. பாலேஸ்வரியும், பாலாம்பிகை நடராசாவும் பெண் வாசகரை நன்ருகக் கவரக் கூடிய பல சிறு கதைகள் எழுதியுள்ளனர்.
தற்காலத்தில் சிதம்பர பத்தினி, புஷ்பா, ராதிகா கே. வி. பரம், யோகாம்பிகை வல்லிபுரம், கணேசாள், உமா, கு. பரமேஸ்வரி, ராணி, யாழினி, க. யோகேஸ் வரி ஆகிய பெண் எழுத்தாளர்களுஞ் சிறுகதைத் துறையிலே உழைத்து வருகின்ரு ர்கள். யாழ் கங்கை பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றர். தற்போது ‘வீரகேசரி"யில் உதவியாசிரியராகக் கடமை பார்க் கின்ரு ர்.
இருப்பினும், சிறுகதைத் துறையிலே பெண் எழுத்தாளர் காட்டும் ஆர்வத்தினை ஏனே கவி தைத்துறையிற் காட்டத் தவறுகின்றர்கள். ‘சந்தன கங்கை கவிதைத்துறையில் ஆற்றி வரும் அமைதி யான தொண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
நூலாசிரியர்கள் வரிசையில், வடபகுதி மா வட்ட வித்தியா தரிசியாகக் கடமையாற்றும் இரத்தி னம் கவரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவர். அவர் அளித்துள்ள இரு நூல்களுள் குறளில் உணர்ச்சி வளம் குறிப்பிடத்தக்கி நூலாகும். திருமதி மயில்வாக னம் அவர்கள் ஷேக்ஸ்பியருடைய நாடகக்கதை களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள். தெய்வீக
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 33
வாழ்வை ஈ. த. இராசேஸ்வரி மொழி பெயர்த்துள் ளார். கமலா காகமுத்து வானெலி நாடகத் துறை யில் உழைத்து வருகின்ருர், இந்திராணி மார்க்கண்டு, தங்கத்தாமரை என்னுஞ் சிறுவர் இ லக் கி ய நூலொன்றை அளித்துள்ளார்.
தென்னுட்டில் எத்தனையோ பெண் எழுத்தா ளர்கள் சிறுகதை-நாவலிலக்கியத் துறைகளிலே பிரகாசித்துக் கொண்டிருக்கின்ரு ர்கள் என்கிற உண் மையை மட்டும் நமது பெண் எழுத்தாளர்களுக்கு ஞாபக மூட்ட விரும்புகின்றேன்.
兴
இந்தக்கால எல்லையுள் எழுத்துத் துறையின் சகல பிரிவிலும், எண்ணிக்கையைப் பொருத்த மட்டிலா வது ஏராளமானவர்கள் வந்துள்ளமையை அவதா னிக்கலாம். அத்துடன், சிறுகதை, நாடகத்துறை களிலே அடைத்துள்ள வெற்றிகளைப் பற்றி ஈழம் பெருமைப்படலாம். இந்தக் கால எல்லையுள் எழுதப் பட்ட சிறுகதைகளுட் தரமானவற்றைப் பொறுப் புணர்ச்சியுடன் தேர்ந்தெடுத்து ஒரு தொகுதி வெளியிடுவோமேயானல், தென்னுட்டார் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிய ஒரு நல்ல வாய்ப்புண்டாகும் வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு எழுத்தாளரது முயற்சியினல், இக்கால எல்லையுள் சிறுகதைத் தொகுதிகளும், கவிதைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன. இருப்பி னும், வெளிவந்துள்ள தொகுதிகள், பொதுவான இலக்கிய வளர்ச்சியைப் பிரதிபலித்துக்காட்டத் தவறிவிட்டன என்றே கூறவேண்டும்.
米 米 米
Page 88
1960 இன் பின்னர்
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் புகுந்த நான் , இது வரையிற் சில பகுதிகளிலே நடை பெற்ற முயற்சிகளைப்பற்றியும், அதனலேற்பட்ட வளர்ச்சிகளைப் பற்றியும், ஒன்றுமே எழுதவில்லை என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
பத்திரிகைகளும் பத்திரிகை ஆசிரியர்களும் இலக் கிய வளர்ச்சிக்காக உழைக்கவில்லையா? எழுத்தா ளர் சங்கங்கள் எழுத்து ஆர்வத்தினை வளர்க்கவில்லை யா? இலங்கைப் பல்கலைக் கழகம் இலக்கிய வளர்ச் சிக்குப் பணியாற்றவில்லையா? ஏன் முஸ்லிம் எழுத் தாளர்களுடைய இலக்கிய முயற்சிகள் இருட்டடிப் புச் செய்யப்பட்டிருக்கின்றன? ஒரு கண்ணிலே சுண் ஞம்பும், ஒரு கண்ணிலே வெண்ணையும் வைக்கும் இச்செயல்தான் நேரிய விமர்சனமா? இவ்வாரு ன பல கேள்விகள் எழுதல் இயல்பாகும் . ஆனல் நான் காரண பூர்வமாகவே சில முயற்சிகளைப் பற்றி இது வரையில் எழுதவில்லை. இத்தகைய முயற்சிகளை ஒவ்வொரு கால எல்லைக்குள் அடக்கி மதிப்பீடு செய்வது இயலாத காரியமாகும். சிறுகதை-கவிதை யாகிய பல துறைகளிலே 1960 இன் பின்னரும் நட்ைபெற்ற இலக்கிய முயற்சிகளையுஞ் சேர்த்தே சென்ற அத்தியாயத்திற் பூர்த்தியாக்கியுள்ளேன். எனவே தான், வேறு வழிகளில் நடைபெற்ற இலக்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 35
கிய முயற்சிகளைப் பற்றி எழுதி இந்நூலினைப் பூர்த் தியாக்கவே, "1960 இன் பின்னர்' என்னும் இந்த அத்தியாயத்தை, ஏலவே ஒதுக்கி வைத்தேன்.
'1960 இன் பின்னர்" என்கிற தலைப்பு மலைவினை ஏற்படுத்துதல் இயல்பாகும். கால வரையறைகளை வைத்துக்கொண்டு இவ்வரலாற்றினை எழுதும் உபா யத்தினை வரித்துக் கொண்டமையினலே தான், இத் தலைப்பினை உபயோகிக்கின்றேன். இந்தப் பகுதியில் நான் விசாரணைக்கு எடுத்துள்ளதுறைகளில், ஆரம்ப காலந்தொட்டு இற்றை வரை நடந்துள்ள முயற்சி களையும், அவற்றின் அறுவடைகளையும் விபரித்துள் ளேன்.
இந்தப்பகுதியை ஆறு உபபிரிவுகளாக வகுத் துள்ளேன். அவையாவன (1) முஸ்லிம் எழுத்தாளர்கள் (2) பத்திரிகைகள் (3) பல்கலைக்கழகம் (4) சங்கங்கள் (5) பிற முயற்சிகள் (6) சாகித்திய மண்டலம். முஸ்லிம் எழுத்தாளர்கள்
பலவேறு காரணங்களுக்காக இந்தப் பகுதியைத் தனியாக எழுதவேண்டியிருக்கின்றது. ஈழத்து இலக் கிய முயற்சிகளைப் பற்றி அவ்வப்போது எழுதுகை யில், விகிதாசாரப்படி முஸ்லிம் எழுத்தாளர்களு டைய பெயர்களைக் குறிப்பிடவில்லை யென்று குறைப் பட்டோர் பலர் உளர். குடத்துளிட்ட தீபமாக மறைந்து கிடக்கும் இலக்கிய முயற்சிகளை தமிழ் வாசகர் மத்தியிலே வைக்க வேண்டிய கடன் மை முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு உண்டு. இந்தக் கடன் மையினை மறந்து, பல கோஷங்களுக்குப் பின்னுற் சென்று, சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடன் மைகளை மறந்து செயலாற்றுஞ் சில முஸ்லிம் எழுத்
Page 89
36 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தாளர்களுடைய செயல் நானுந்தகைமையுடையது. இந்தப் பொறுப்பற்ற செயலை வருங்கால சந்ததியி னர் மன்னிக்க மாட்டார்கள். வரலாறு எழுதப் புகுந்துள்ள ஒரு சிலரும், நேரிய வரலாறு எழுதுவ தாகவும் எனக்குப்படவில்லை. சித்தி லெப்பையுடன் முஸ்லிம் மக்களுடைய இலக்கிய முயற்சிகள் ஈழத் திலே தோன்றியதாக வலுப்பெற்ற பிரசார மொன்று நடைபெற்றது. இதனை மறுத்து, மருத முனை இ, மீராலெவ்வை ஆலிமின் "ஞானரை வென் ரு ன்' என்னும் நூலுடன் ஈழத்து இலக்கிய முயற்சிகளின் ஆய்வு நடாத்தப்படவேண்டும் என் றும் எழுதினர்கள். “ஞானரை வென்மு ன் அறு பத்திரண்டு முடிவுபெற்ற பாடல்களைக் கொண்ட சிறு நூலாகும். அது எழுதப்பெற்ற காலத்தை நிர்ணயிக்கப் போதிய சான்றுகளுமில்லை. இவ் வாருக வட்டார நலன்களை முன்வைத்தே சரித் திரம் எழுதும் பொழுது, உண்மையை அறிய முடியாது வரலாற்று மாணுக்கன் மலைவு கொள் ளுகின்றன்.
முஸ்லிம் பெருமக்களுடைய இலக்கிய முயற் சிகள் பற்றி எழுதுவதற்குச் சில காலமாகவே செய்திகளும், பழைய புத்தகங்களுஞ் சேகரித்து வந்தேன். 6) நண்பர்கள் மெய் வருத்தம் ப்ாராது எனக்குப் பூரண ஒத்துழைப்புத் தந்தார் கள், அவர்களுள் முக்கியமாகத் குறிப்பிடத்தக்கவர் தெல்தொட்டை, அன்பர் ஆ. பி. நூ. அல்லாபிச்சை அவர்களேயாவர். அவர் எண்ணிறைந்த குறிப் புக்களைத் தந்துதவியதுடன், பழைய புத்தகங் களையும் பார்வைக்குத் தந்துள்ளார்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 37
இப்பகுதியில், பல சந்தர்ப்பங்களிலே விமர் சன நோக்கினைக் காரண பூர்வமாகவே தவிர்த் துள்ளேன். இலக்கிய மதிப்பீட்டில் தர மற்றவை யாக எனக்குப் படுஞ் சில நூல்கள், மார்க்கத் துறையிலே அரிய நூல்களாக அமைந்திருத் தலுங்கூடும். எனவே, எனது இலக்கிய மதிப் பீடு முஸ்லிம் நண்பர்களுடைய மத உணர்ச் சிகளைப் புண்படுத்தக்கூடும். இன்னெரு சங்கட மும் எனக்கிருக்கின்றது. நான் குறிப்பிடுஞ் சில நூல்கள் அறபு எழுத்துக்களிலே எழுதப்பெற்ற வையாகும். இதன் காரணமாக அவற்றை என் ணுல் முழுமையாக வாசிக்க இயலவில்லை. சில முஸ்லிம் நண்பர்களுடைய உதவியுடன் சிலவற் றைத் தமிழாக்கி வாசித்துள்ளேன். இங்கு இடம் பெற்றுள்ள அறபுத்தமிழ் மாதிரிப்படம் எனது இடர்ப்பாட்டினைச் சுயமே விளக்கும். இது "தீன் மாலை" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
முஸ்லிம் எழுத்தாளர் அறபு எழுத்துக்களிலே உள்ள தமிழ் நூல்களைத் தமிழ் எழுத்துக்களிலே எழுதித் தந்தால், நாமும் அவற்றின் நயங் களைச் காணுதல் முடியும். இந்தப் பணியினை முஸ்லிம் அறிஞர்களுடைய கவனத்திற்கு விட்டு விடுகின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில், "கொழும்பு ஆலிம் அவர் கள் இயற்றிய அறபுத் தமிழ் நூல்களில் ஒன்றினைத் தமிழில் 'மிஃராஜ் என்னும் நபி பெருமானவர்களின் தெய்வீக வானுலக யாத்திரை" என்னும் பெயரில் அல்லாமா மெளலவி மீருன் சாகிபு குமாரர் பாணந் துறை, எம் எஸ். எம், அப்து ற் ற ஊபு (த க்யா தம்பி)
F 18
Page 90
38 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
அவர்கள் வெளியிட்டுள்ளமையை முன்மாதிரியாகக்
கொண்டு இப்பணியினை மேற்கொள்ளலாம்.
பல முஸ்லிம் எழுத்தாளர்களுடைய வேண்டு கோலுக்கு அமையவே இப்பகுதியைத் தனியாக எழுதுகின்றேன். இப்படிக் கூறுபடுத்தி எழுது வதில் என்னுடைய மனம் மிகவும் வேதனைப் படுகின்றது. மேலும், நான் முஸ்லிம் எழுத் தாளர்களை இரண்டாந் தரமான எழுத்தாளர்கள் என்று தனியாக எழுத முற்பட்டேன் என்று சில முஸ்லிம் எழுத்தாளர்கள் விதண்டாவாத முஞ் செய்தல் கூடும். என்னுடைய அவதிகளை உணர்ந்து, நேரிய வரலாற்றினை எழுத முற்படும் என்னுடைய நோக்கத்தினை, முஸ்லிம் பெருமக்கள் அநுதா பத்துடன் வரவேற்பார்களென்கிற நம்பிக்கை எனக் குண்டு.
தமிழிலக்கிய வளர்ச்சிக்கு, சீரு தந்த உயர் தனிப் பாவலர் உமறுப் புலவர் உட்படப் பல முஸ்லிம் அறிஞர்களும், கவிஞர்களும், எழுத் தாளர்களுஞ் செய்துள்ள தொண்டினைத் தமிழி லக்கியப்பரப்பு மறந்தது கிடையாது; மறுத்தது கிடையாது. மதவேறுபாடுகளைக் கடந்த ஒற்று மையை நிலைநாட்டுந் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழிலக்கிய வரலாற்றினை அறிந்தோர் இதனை அறிவர். பெளத்தமும், சைனமும் வடபுலத்திலிருந்து தென்னகத்திற்கு வந்தன. இருப்பினும், பெளத்தப் புலவரும், சைனப் புலவரும் இயற்றிய நூல்கள், தமிழ் நூல்களென்பதை மறுப்பதற்கில்லை. மேனடுகளி லிருந்து கிறித்துவத்தைப் பரப்பத் தமிழகத் திற்கு வந்த வீரமா முனிவர், காட்டுவெல்டு ஐயர்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 39
போப்பையர் முதலிய பேரஞறிஞர்கள் தமிழுக்குச் செழுமையூட்டியிருக்கிரு ர்கள். தேம்பாவணி தமிழ்த் தாயை அணிசெய்யும் முத்தாரமாகும். தமிழ் இலக்கிய மரபிலே திளைத்த உமறுப்புலவர், பாலை வனங்களைக் கூடத் தமிழ்ச் சுவையுடன் சோலை வனங்களாகச் சீருவிலே சித்திரித்துள்ளதைக் காணு தல் கூடும். உண்மை இவ்வாறிருக்க, "எங்களைத் தனியாகப் பிரித்துத் தான் இலக்கிய மதிப்பீடு செய்தல் வேண்டும்" என்று ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்கள் வற்புறுத்தி வருதல் சரியானதா என்பதை அவர்களே புனராலோசனை செய்து பார்த்தல் விரும்பத்தக்கது. இப்படி அவர்கள் மத வாரியாகத் தமிழிலக்கிய முயற்சிகளைப் பிரித் துக் கொண்டால் தமிழுக்கும் நட்டம்; அவர் களுக்கும் நட்டம் என்பது எனது அபிப்பிராய மாகும். எனது அபிப்பிராயத்திற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை ஈண்டு குறிப்பிடவிரும்புகின் றேன். இத்தகைய பிரிந்து செல்லும் ஒரு மனே பாவத்தினுலே, தமிழக முஸ்லிம் எழுத்தாளரது இலக்கிய முயற்சிகள் பெருமளவிற் பாதிக்கப் பட்டன. பாகிஸ்தான்’ தனியாகப் பிரியவேண்டும் என்கிற கோரிக்கை வறுப்பெற்ற பொழுது, தமி ழிலக்கிய முயற்சிகளும் அக்கோரிக்கையுடன் இணைந்ததாகவே கொள்ளப்பட்டது. இதனல், முஸ்லிம எழுத்தாளரது படைப்புக்களைச் "சாய் புத் தமிழ்’ என ஒதுக்கும் நிலையேற்பட்டது. ஈழத்து முஸ்லிம் மக்கள் ஆங்கிலங் கற்பதினுல் மத அநுட்டானங்கள் தளர்ந்து விடுமென்று த வருக எண்ணியதன் பயணுக, கல்வித் துறையில் முஸ்லிம் மக்கள் ஒரு நூற்ருண்டு காலம் பின் தங்கி நின்ருர்களென்பதை முஸ்லிம் பெரியார்கள்
Page 91
O ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பிற்காலத்திலே ஒப்புக் கொண்டார்கள். இவ் வெதார்த்த நிஃபை, முஸ்லிங்களின் எழுத்துக் கஃனத் தணியாக மதிப்பீடு செய்யவேண்டும்,
அவற்றிற்குத் தனிப்பரிசில்கள் வழங்கப்படவேண் டும்" என்று பிரிவினேக் கோஷம் எழுப்பும் நண் பர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடவர்.
ஈழத்து முஸ்லிங்கனின் இலக்கிய முயற்சி கஃளப் பற்றி வரலாற்றுக் கட்டுரைகள் எழுதப் புகுந்துள்ள நண்பர்கள் அரசியற் கர ராரே களிஞலேபோலும் சித்தி லெவ்வைக்கு "இலக்கிய" முக்கியத்துவம் கொடுத்து எழுதுகின்ருர்கள் அவருக்கு முன்னர், சீரு சரிதத்தை 73 இசைப் L I Ti si J., a, Tij, SR I 8. 7 8 ஆம் ஆண்டில் காண மாலே என்னும் நூலாக, காளி செய்குத் தம்பிப் புலவர் வெளியிட்டார். அதே ஆண்டில், கண்டி செய்கு முகமது லெவ்வை ஆலிம் புலவரது தீன்மாலே என் ணும் அரபுத் தமிழ் நூலும் வெளியாயிற்று, "ஞான ரை வென்மு ன்" என்னும் நூலும் இதற்கு முன்னர் இயற்றப்பட்டதாக அறியக் கிடக்கின்றது.
கண்டி முகமது காசிம் சித்திலெவ்வை ஒரு நியாய துரந்தர ராவர். தமது சமூகத்தின் முன்னேற்றத் நிற்காக அயராது உழைத்த சீர்திருத்தச் செம் மலாவர். பிற்காலத்தில் ரி. பி. ஜாயா அவர்கள், முஸ்லிம் மக்களது கல்வி முன்னேற்றங்கருதி உழைத்த துபோன்று, அக்காலத்தில் சித்திலெவ்வை பட்ட அரும்பெரும் பாடுகள் நம்மை வியப்பி வாழ்த்துகின்றன. முஸ்லிங்களுடைய பிரச்சினே களே எடுத்தியம்ப முஸ்லிம் நேசன் (1883) என்னும் பத்திரிகையை நடாத்தினு ர். இதுவே ஈழத்தில் வெளியான முதலாவது முஸ்லிம் தமிழ்ப் பத் திரிகை
:::: 3.
“မှိါးဒ္ဓိ
பயம் : அாக வெளியீடு வித்துவ தீபம்' மெய்ஞ்ஞான அருள் வாக்கியம் ஆ. பி. அப்துல் காதிர் புலவர் அவாகள
Page 92
《//.3 2イ、イ2つ ? を ....4%""ぞ
جيرم2 هي ليلة قرئتير کہ بیج a ?)タイタリイ・ 3.11 محصے ( سمس. بلاو کپی نمایلتزبھول یونیوٹ
۶ھې
イィ محصے イ 9 صمحبرمحی 1 ... محصہ آکوین برمقلیما، نالک دین ترکیبی . یہ دوسرصہ تک سڑمہ عرصہ تک محمد سر , ; |く2→"父。いづ به محصی .ご M وفية a تكي ويتكور ولقائيلي والي
உபயம்: கொழும்பு ரெயின்போ பிரிண்டர்ஸ்
மேலே இடம் பெற்றுள்ள விருத்தததின் முதலடி யை அப்படியே வாசித்தால்
வேகோ தந்றைநி ன்டவுரிய ம்குங்எ ளேருபொ ம்ருரகப
என வரும. முறையான தமிழாக்கம் பின்வருமாறு அமையும்,
தீன் மாலை பிஸ்மில்லா ஹிற்றஹ்மா னிற்றஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் இதைத் தொடங்குகிறேன்)
வி ரு த் தம் பகரரும் பொருளே எங்கும் பரிவுடன் நிறைந்த கோவே நிகரில்லா விறையே நின்மா நிலத்துறு மனுவில் தீனுேர்
அகமுடன் புறமும் ஈமானுக தீன் பறுளயெல்லாம் வகைதுகை விரித்துத் கூற வல்லவா துணை செய்வாயே
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 4.
யென அறியக்கிடக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த சித்திலெவ்வை, என்றுந் தம்மை ஓர் இலக்கியக் காரன் என்று நினைத்தது கிடையாது. அவரது சகோதரர் கவிஞராக இருந்தும், கவிதை கற் பனை வளத்தில் ஊறுவதென்றும், கற்பனையிலே ஈடுபட்டால் சமூக சீர்திருத்த வேலைகளை எதார்த் தமாகச் செய்து முடிக்க இயலாது என்றும் அவர் நம்பினர். அவர், சுறுத்துஸ்ஸலாத்து, அஸன் பேயுடயை கதை, அபுநுவாஸின் கதை, ஞான தீபம், அஸ்ராறுல் ஆலம் ஆகிய நூல்களை இயற்றி யுள்ளார். அவருடைய தமிழ் நடையிலே அற புச் சொற்களும், பேச்சு வழக்குகளும் விர விக் கிடப்பதை அவதானிக்கலாம். அறபுத்தமிழிலும் நூல்கள் இயற்றியுள்ளார். அவரது நூல்கள் அவரது தமிழ்ப் புலமையையோ, இலக்கிய ஆற்றலையோ வெளிப்படுத்தத் தவறியுள்ளன. 1892 ஆம் ஆண்டில் வெளியான “அஸ்ராறுல் ஆலம்" என்னும் நூலுக்கு முஸ்லிம் மக்களிடையே எதிர்ப்புத் தோன்றியது. எதிர்ப்பினை அடக்கச் சித்திலெவ்வைக்குச் சார்பாக நூல்கள் எழுதிய வர்களுள் கண்டி தர்ஹா வித்துவான் - மெய்ஞ்ஞான அருள் வாக்கியர் அப்துல் காதிர் புலவர் குறிப்பிடத் தக்கவராவர்.
ஈழத்து முஸ்லிம் மக்களுடைய இலக்கிய முயற்சிகளின் கொடுமுடியாக அப்துல் காதிர் புலவரே துலங்கிக் கொண்டிருக்கின்ரு ர். தமிழி லக்கிய மரபிலே திளைத்து அணியும் யாப்பும் சீர் மையுடன் அலங்கரிக்கும் செய்யுள் நடையையே, அவர் தமது இலக்கிய நடையாக வரித்துக் கொண்டார். தமது ஐம்பத்திரண்டு வயதிற்குள்
Page 93
42 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியுள் ளார். அவர் யாழ்ப்பாணத்துப் பொன்னம்பலக் கவிராயருடனும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துட னும் தொர்புடைய தமிழறிஞராவர். அவர் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டாலே, அவர் தமிழிலக்கியக் கவிதைத் துறையிலே கொண்டிருந்த ஆழ்ந்த புலமையை ஊகித்தறிந்து கொள்ளலாம். திரு மதீனத்து மாலை, கண்டிநகர்ப் பதிகம், 6) (ib uD u u b 5 fTrl ʻ (35)L u fT Lu fT சாகிபு காரணக்கும்மி, ஞான மணித் திரட்டு, திரு பகுதாது அந்தாதி, கண்டிக் கலம்பகம், மெய்ஞ் ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப்புராணம், வழிநடைச் சிந்து ஆகி யன குறிப்பிடத்தக்க நூல்களாம். 1909 ஆம் ஆண்டில் அவரால் இயற்றப்பட்ட சக்தத் திருப்புகழ் என்னும் நூல் அறிஞருலகின் ஏகோபித்த பாராட் டுதலைப் பெற்றது. இந்நூலுக்கு மதுரையைச் சேர்ந்த முத்துவாலை வெண்பாப்புலிக் கவிராயர் பின் வருஞ் சாற்றுக்கவியினே அளித்துள்ளார்;
சிருலவு முமற் புலவர் சீற நூலும்
சிறந்த விரா மாயணங்கம் பன்சொன் னுாலும் பேருலவு மருணகிரி புகழுங் காசீம்
பெரும்புலவோ ரவர்கடிருப் புகழும் போல மேருலவு புயத்தனல்லா பிச்சை செய்த
வேள்வியப்துல் காதிறியற் கவிஞன் சொன்ன வேருலவு திவிய சந்தத் திருப்பு கழ்ப்பா வினியநவ ரசமதுரத் தின்ப மாதோ!
இராமாயணம். சீருப் புராணம் ஆகிய நூல் களுக்கு அவர் ஆற்றிய இரசனைப் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்த யாழ்ப்பாண மக்கள் அவருக்கு 'வித்துவ தீபம்’ என்னும் விருதினைச் சூட்டிப்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 43
பரிசில்களும் வழங்கினர். அவரது கவிதா சக் திக்குச் சான்ருக அவரால் இயற்றப்பட்ட ஒரு விருத்தத்தினைக் கீழே தருகின்றேன்;
அத்துவி தத்தின் சோதி
யடங்கலு மாகி வெண்மை முத்துரு வாகி மஞ்ஞை
முதமறைக் கனியாய்க் கிந்தில்
சித்துரு வாகி ஆதம்
சிரத்தொளி வாகி யார்க்கும்
முத்தியின் வித்தாய் நின்ற
முஹம்மது நபியுல் லாவே.
முஸ்லிம் புலவர்களது இலக்கிய ஊற்று வற்றி விடாது, தொடர்ச்சியாக இலக்கிய முயற்சிகள் நடைபெற்றன. குத்புநாயக நிர்யாண மான்மியம் இயற்றிய யாழ்ப்பாணம், மு. சுலைமான் லெவ்வைப் புலவர், நாலாயிரம் கவிதைகளைக் கொண்ட முகைதீன் புராணம் இயற்றிய யாழ்ப்பாணம் பதுரு தீன் புலவர், சன்மார்க்க இலகு போத வின விடை எழுதிய யாழ்ப்பாணம் மீரான் முகதீைன் புலவர், ஆரண முகமதின் காரணக்கும் மி இயற் றிய யாழ்ப்பாணம் சுல்தான் தம்பிப்பாவலர், ஞானத் திருப்புகழ் இயற்றிய அக்குறணை இஸ்மா யில் லெவ்வை, மீரான் மாலை, மெய்ஞ்ஞானத் தூது முதலியன இயற்றிய வேரு வலை செய்கு முஸ்தபா ஆலிம் ஒலியுல்லாப் புலவர், மீமன் கப் பல் கும்மி முதலியன இயற்றிய திருகோணமலை யைச் செர்ந்தவரும், மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினருமான செய்கு மதார் புலவர், துற் றதுல் மபாஹிர் இயற்றிய கொழும்பு முகம்மது அசன் , மங்கள வாழ்த்து இயற்றிய தெல்தொட்டை கே. எஸ். முகம்மது முகைதீன், ஞானுந்தரத்தினம்
Page 94
44 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இயற்றிய கொழும்பு கா. அ. அப்துல் கனி சாய்பு, நாச்சியார் பதிகம் இயற்றிய நாவலப்பிட்டி அப்து ற் ற ஹ்மான் ஆராய்ச்சியார், சன்மார்க்க வினவிடை இயற்றிய கலகெதரை நூர்முகம்மது, மெய்ஞ்ஞான பரிபூரணக் களஞ்சியம் முதலியன் இயற்றிய கண்டி சாது கா. பீர்பாவா (சூபி), கலிமாத் திறவுகோல் முதலியன இயற்றிய காத்தான்குடி எம். ஏ. ஹாமிது லெவ்வை ஆலிம், மெய்ஞ்ஞான ரத்தினவலங்காரக் கீர்த்தனம் இயற்றிய கொழும்பு ஹம்ஸா லெவ்வைப் புலவர், மின்ஹதுல் அத்பால் முதலிய அறபுத் தமிழ் நூல்கள் இயற்றிய "கொழும்பு ஆலிம் ' என்றழைக் கப்படும் செய்யிது முகம்மது ஹஸ்ரத்து, நவரத்தின புராணம் இயற்றிய மூதூர் முகைதீன் பிச்சைப் புலவர், மண மங்கள மாலை இயற்றிய அட்டாளேச் சேனை அப்து ற் றஹ்மான் லெவ்வை ஆலிம் புலவர், ஒரு பாவொரு பஃது முதலியன இயற்றிய அக்கரை ப் பற்று வரகவி செய்கு மதார் புலவர், ஒப்பாரி பாடிய அக்கரைப் பற்று முகமது ருவிப் புலவர், கைப்புட்பச் சிசு மாலை இயற்றிய அக்கரைப்பற்று உமர் லெவ்வைப் புலவர், ரசூல் நாமா முதலிய அறபுத் தமிழ் நூல் களி யற்றிய தெல்தொட்டை, கதீப் எ. அ. ஆதம் லெவ்வை, மனுேரஞ்சிதத் தெம் மாங்கு இயற்றிய ராகலை,துவான் கிச்சில் ஜப்பார், சுகிர்ந்த மெய்ஞ்ஞா னக் கீர்த்தம் இயற்றிய மன்சூர் அப்துல் காதிர் புலவர், முபாரக் மாலை இயற்றிய காலி சம்சுதீன் புலவர், வேதவிளக்க ஆராட்டு முதலிய அறபுத் தமிழ் நூல்கள் இயற்றிய கொழும்பு, செய்கு அப்து ற் நஹ்மான் ஆலிம் , துன்பம் தவிர்க்கும் இன்பப்பிரார்த் தனை இயற்றிய கொழும்பு, அப்ஸலுல் உலமா பி. கே. Ꭷ T ᎿᎥᏱ . . அப்துல் காதிர் பாகவி, ஆசாரக் கோவை இயற்றிய கற்பிட்டி அப்துல் மஜீது புலவர்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 45
வேதாந்த விளக்கம் முதலியன இயற்றிய மாத் தளை செய்கு சுலைமானுல் காதிரி, தன் பீஹ"ஸ் ஸாலிகீன் இயற்றிய ஹபீபு முகம்மது ஆலிம், உறுதி உபதேச மாலை முதலியன இ ய ந் றி ய மெளலான செய்னுல் ஆபிதீன் வலியுல்லாஹ், அருமறைச் சிறப்பும் ஆநந்தக் களிப்பும் இயற் றிய காத்தான்குடி செய்யிது ஸ க்காபு பாறுல் அலவி மெளலான, காரண ரஞ்சித மஞ்சரி முதலிய தமிழ் நூல்களியற்றிய கொழும்பு ஹக்கீம் ம. அ. கா. அப்துற்ற ஹ்மான், மழைக் கவிகளும் தனிப்பாடல்களும் இயற்றிய சம்மாந் துறை இஸ்மா லெவ்வைப் புலவர், நவ வண்ணக் கீர்த்தனம் இயற்றிய புத் தளம்-காரைதீவு செய்கு அலாவுதீன் புலவர், செய்கு அஸ்ரப் ஒலிக்கும் மி இயற்றிய வேரு வலை. அகமது லெவ்வை மரைக் கார், ஆஷிக்கு அவதார மாலை இயற்றிய ஒலு வில் தா. ம. செய்கு இப்ருஹிம் மெளலான, உம்ததுல் இஸ்லாம் எழுதிய காத்தான் குடி முகம் மது காசிம் ஆலிம், நல்வழிக் கவிதைகள் முத லியன இயற்றிய அப்துல்லா புலவர், மழைக்கா வியங்கள் பாடிய பொத்துவில் மீரா லெவ்வை, தோத்திர புஞ்சம் இயற்றிய மக்கோளு அப்துல் ஹமீது புலவர் ஆகியோர் தொண்டாற்றினர்கள்.
இவர்களுடன் இரு வரை விசேடமாகக் குறிப் பிடவேண்டும். ஒருவர் புகழ்ப்பாவணி இயற்றிய சு. மு. அசனலெப்பை ஆலிம் புலவராவர். தமிழ்" அற்பு-ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளுங் கற்று முதலாவது முஸ்லிம் எழுது வினைஞராக உத்தி யோகம் பார்த்த அவர்கள், ஆறுமுக நாவலர் தமிழ் மூலம் சைவத்தை வளர்த்த தைப்போன்றே, அவர்
F. 9
Page 95
46 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
களுந் தமிழ் மூலம் இஸ்லாத்தை வளர்க்க உழைத் தார்கள். மற்றவர், சர்வ சமய சமரசத்திற்கு உழைத்த மாத்தறை முகம்மது காசிம் புலவராவர். அவருக்கு அறபு-தமிழ்-சிங்களம் ஆகிய மும் மொழி களிலுந் தேர்ந்த புலமை இருந்தது. அறபு இலக் கியம் ஒன்றினைக் கவிப்பரிவட்டம் என்னும் பெய if? G36 தமிழாக்கியுள்ளார். Figua Lott & Loyas கீர்த்தனைகள், கதிர்காமக் கடவுளின் காரணக் கும்மி உட்பட %J (ւք தமிழ் நூல்களை இயற்றி யுள்ளார். அத்துடன் ஒட்ருன்ன சக சிங்காசனய (முடியும் சிம்மாசனமும்) என்னுஞ் சிங்கள நூலை யும் இயற்றியுள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள புலவர் பெரு மக்கள் எல்லோரும் ஒரே தரத்தினரல்லர். சில ரது நூல்கள் மிகவுஞ் சிறியன; சிலரது நூல்கள் நமக்குக் கிடைப்பனவாக இல்லை. இருள் சூழ்ந்த இந்நிலையைப் போக்க, இத்துறையில் ஆராய்ச்சி செய்து, கட்டுரைகள் எழுதித் தெளிவினை ஏற் படுத்தவேண்டியது முஸ்லிம் எழுத்தாளரது தலை யாய கடன்மையாகும்.
* முஸ்லிம் நேசன் " முதலாவது நடாத்தப் பட்ட முஸ்லிம் பத்திரிகையாகும். அதனைத் தொடர்ந்து 1893ஆம் ஆண்டில் எல். எம். உதுமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாம் மித்திரன் சில ஆண்டுகள் தினசரியாக நடாத்தப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் வார இதழாக அதிக பக்கங்களுடன் வெளியாகியது. இப்பத்திரிகை இஸ்லாமியரின் சமய - அரசியல் - சமூக-பொருளா தார விடயங்களில் அதிக சிரத்தை கொண்டு உழைத் 355l o இப்பத்திரிகையின் தாபக ஆசிரியரான
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 47
எல். எம். உதுமான் அவர்கள் 1932-ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25ஆந் தேதி காலமானர்கள். அதன் பின்னரும் அவரது குமாரர்களான சுக்ரி, ரஸின் ஆகிய இருவரும்'இஸ்லாம் மித்திரன்’ பத்திரிகையை 1945 ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து நடாத் தினர்கள். இவர்கள் 'முஸ்லிம் என்ற பெயரில் ஒரு சதவிலையில் ஆங்கில ஏடொன்றையும் நடாத்தி ஞர்கள் . முஸ்லிம் பாதுகாவலன் என்னுந் தமிழ்ஆங்கிலப் பத்திரிகையை ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பத்திரிகை சேர். பொன் இராமநாதனின் அரசியற் கொள்கைகளை எதிர்த் தது. மார்க்க அறிஞர்களும் மெளலவிகளுமாகச் சேர்ந்து அல்-இல்ம் என்னும் மார்க்கப் பத்திரிகையை நடாத்தினர்கள். அதன் ஆசிரியர் என். டி. அப்துற் றஸ்ஸாக் (ஜமாலி ) ஆவர். அல் இஸ்லாம் என்னுஞ் சீர்திருத்தப் பத்திரிகை காலஞ்சென்ற ஒ. கே. மொஹிதீன் சாகிபு அவர்களால் நடாத்தப் பெற்றது.
ஆனல், 1946 ஆம் ஆண்டிலே தோன்றிய இஸ்லாமிய தாரகைதான் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் மத்தியிலே மறு மலர்ச்சியினை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கே. எம். முகம்மது சாலிஹ் அவர்களும் ஒ. கே. மொஹிதீன் சாகிபும் ஆசிரியர் களாகக் கடன் மை யாற்றினர். வாரப்பத்திரிகை யான'இஸ்லாமிய தாரகை பாகிஸ்தான் கோரிக்கை யையும், பின்னர் பாகிஸ்தானையும் ஆதரித்தமை யால் அதற்கு இந்தியாவிலே தடைவிதிக்கப்பட்டது. ஒரு சமயம் வாராவாரம் இரு பதினுயிரம் பிரதி கள் விற்பனையான அப்பத்திரிகை, படிப்படியாகத் தரங்குறைந்து, 1950 ஆம் ஆண்டளவில் இயற்கை எய்தியது.
Page 96
48 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
"இஸ்லாமிய தாரகையில் கடன்மையாற்றிய
கே. எம். ள் ம். சாலிஹ் தாரகை என்னும் பத் திரி கையை 1953 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். * தாரகையுடன் தொடர்பு கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் தற்காலத்தில் வேறு பத்திரிகை களிலே பிரகாசித்துக் கொண்டிருக்கிறர்கள்.
ஏ. எல். எம். கியாஸ் இருபது நீண்ட ஆண்டு கள்ாகத் 'தினகரனிலே கடன் மையாற்றுபவர். "முஸ்லிம் மஞ்சரி அவரது மேற்பார்வையில் வெளி வருகின்றது. ஆரம்ப காலத்தில், 'தினகரனை முஸ்லிம் வாசகர் மத்தியிலே அறிமுகப்படுத்த கியாஸ் சலியாது உழைத்தார். அவரது உழைப் பின் பயனகத்தான் 'தினகரன்", முஸ்லிம் மக்கள் மத்தியிலே செல்வாக்குப் பெற்றது என்ரு ல் மிகையாகாது.
எச். எம். பி. முஹிதீன் ப்ல வருடங்களாகக் கம்யூ னிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியின் ஆசிரியராகக் கடன்மையாற்றியவர். இப்பொழுது தொழிலாளியின் ஆசிரியராவர். பல சிறுகதைகளை யும் எழுதியுள்ளார். "கார்க்கியைக் கண்டேன்” என்னுஞ் சிறு நூலின் ஆசிரியராவர்.
டி. எம். பீர் முகம்மது மலைநாட்டிலே நடாத் தப்பட்ட பல பத்திரிகைகளிலே ஆசிரியராகக் கடன் மையாற்றியுள்ளார். பல சிறுகதைகளை எழு தியிருக்கின்றர். அவற்றுள் ஆறு சிறுகதைகள் "சிறுகதைகள் 6" என்ற பெயரில் நூலுருவம் பெற்றுள்ளது. சதியில் சிக்கிய சலீமா, கங்காணி மகள் ஆகிய இரண்டும் அவரது நாவல்களாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்புடைய
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 49
மேடைப் பேச்சுக்களினல், 'ஈழத்து அண்ணு' என்று அவரது அபிமானிகளால் அழைக்கப்பட்டார்.
எம். எச். எம். இப்ருஹிம் ' சுதந்திரனிலும் “வீர கேசரி"யிலும் உதவியாசிரியராகப் பல ஆண் டுகள் உழைத்தவராவர். பல கட்டுரைகளை எழுதி யிருக்கின்ருர், எஸ். எம். எம். மொஹிதீன், லங்கா ஜோதி என்னும் பத்திரிகையிலும் வேறு பத்திரிகைகளி
லும் ஆசிரியராகக் கடன் மை யாற்றியுள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், * தாரகைப் பத்திரிகையுடன் தொடர்புகொண்ட வர்களாகவோ அப்பத்திரிகை உருவாக்கியவர் களாகவோ விளங்குகின்ருர்களென்பது கவனிக்கத் தக்கது. கவயுகம், "பால்யன் ஹனீபா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. வார இதழான அஃது ஆரம்பகாலத்தில் விறுவிறுப்பாக வெளிவந்து, இறுதியில் அரசியல் சிக்கலில் மாட்டி மறைந்து விட்டது. இவர்களுடன் பத்திரிகையாள ரான வேறு சிலரையுங் குறிப்பிடுதல் பொருத்த முடைத்து ஆரம்ப காலத்தில் ஈ. வே. ரா. வுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்த வி. நூர் முகம்மது, தோழன் என்னும் மாதப்பத்திரிகையின் ஆசிரியராவர். இதுவரை முஸ்லிம் எழுத்தாளர் களால் நடாத்தப்பட்ட மிகச் சிறந்த மாதப்பத் திரிகை 'தோழன்’ என்பது பல அன்பர்களுடைய அபிப்பிராயமாகும். "அருள் ஜோதி என்னும் மாதப் பத்திரிகையை எம். ஏ. சி. ஜெயிலானி நடாத்தினர். மாதப் பத்திரிகைகளான தீனுல் இஸ்லாம் (மெளல வி எம். கே எம். மன்சூர்-நூ ரி), கேர்வழி (மெளலவி எம். ஐ. அப்துல் ஹமீது-நூரி), சமுதாயம் (எஸ். எம். ஹனீபா), மாணவன் குரல் (எம். பி. எம். மாஹிர்)
Page 97
50 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ஆகியன குறிப்பிடத்தக்கன. ஏ. எம். ஹனிபா வினல் நடாத்தப்பெற்ற மாணவ முரசு என்னுஞ் சிறுவர் பத்திரிகை இளம் எழுத்தாளரை ஊக்குவித்தது.
ஞானக்கடல் என்னும் பத்திரிகையை நடாத்திய அன்பர் பூபதிதாஸர், தற்பொழுது ‘வீரகேசரி’யின் இஸ்லாமிய உலக மலர்ப் பகுதியின் ஆசிரியராக நற்பணி புரிந்து, இஸ்லாமிய இளம் எழுத்தாளர் களை ஊக்குவித்து வருகின்ரு ர்.
'தினகரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கடன் மை யாற்றும் செய்னுல் ஹ"ஸைன் சிறந்த பிரயா னக் கட்டுரையாசிரியராவர். அவரது "கோடையில் உல்லாசம்’, ‘நாமறிக்த நாடுகள் ஆகிய பிரயாணக் கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தன. "ஆயிஷாவுக்குக் கல்யாணம்’, 'பிள்ளை குட்டிக் காரர்' ஆகிய முஸ்லிம் தொடர் சித்திரங்களை எழுதிப் புதிய துறைகளை முஸ்லிம் எழுத்தாளருக்கு வகுத் துக் காட்டியுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க இயக்கம் வாலிப முஸ்லிம் என்னும் மாதப் பத்திரிகையை நடாத்தி இளம் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தியது.
முஸ்லிம் பத்திரிகையாளர்களையடுத்து, நூலா சிரியர்களையும், கட்டுரையாளர்களையுஞ் சந்திப் போ ம் ,
மெளலவி உமர் ஹஸ்ரத்து அவர்கள் 'முஸ்லிம் மக்களின் சி. க ' என்று பெருமையுடன் அழைக்கப் படுகின்றர்கள். அவர் பன்மொழிப்புலமை பெற்ற அறிஞராவர். நபி பெருமானரின் நாற்பது மணி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 5
மொழி(ஹதீது) களைத் தமிழில் குறள் வெண்பா வடிவில், நாற் பய கந்நூல் என்கிற பெயரில் வெளி யிட்டுள்ளார். அவரது தமிழ்ப் புலமைக்கு அந்நூல் சான்று பகருகின்றது. அவர் மகரகம அறபிக் கல்லூரிக்கு அதிபராக இருந்த காலத்தில் செய் துள்ள இஸ்லாமியப் பணியும் தமிழ்ப் பணியும் மகத்தானது. அவரது காலத்தில் வெளியேறிய மெளல விகள் நல்ல தமிழறிவு பெற்றவர்களாகவும் விளங்குகின்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெலிகாமம் அறபிக் கல்லூரி அதிபராயிருந்த ஸக்கரிய்யா ஹஸ்ரத்து ‘அஹ்காமுல் ஹஜ்' என்னும் ஹஜ் யாத்திரை சம்பந்தமான ஒரு நூலை வெளியிட் டிருக்கிரு ர்கள். வெலிகாமம், வெலிப்பிட்டியைச் சேர்ந்த செய்யிது யாஸின் மெளலான அவர்களுஞ் சில நூல்களை இயற்றியுள்ளார்கள்.
தற்பொழுது, அரசாங்க சேவை ஆணைச் சபை உறுப்பினராகப் பணிபுரியும் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ், ஈழத்தின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளருமாவர். முஸ்லிம் மாணவர்களது முன்னேற்றத்திற்காக உழைத்து, முஸ்லிம் மாண வர்களுக்கு வெளிநாட்டுப் படிப்பு வசதியைப் பெருக்க இஸ்லாமிய கல்விச் சகாய நிதியை ஏற்படுத் தியவர். கல்விமானு ன அவர், சமய சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்; வானுெலியில் உரையாற்றியுள்ளார், இவற்றைத் தொகுத்து இலங் கையில் இஸ்லாம் என்னும் நூலை வெளியிட்டுள்ளார். முஸ்லிங்களது மொழித் தேவைக்காக அற பிச் சொற்களுக்குச் சில புதிய குறியீடுகளையுஞ் சேர்த் துக்கொள்ள வேண்டும் என்கிற குறிக்கோளுடை
L6 ft.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகக் கடன்மையாற்றும் ஐ. எல். எம். மஷ்ஹஜூர் பிறிதொரு
Page 98
52 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
முஸ்லிம் கல்விமானவர். அவரது உளமும் கல்வியும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஆசிரிய-மாணவ உலகத் திற்குப் பெரிதும் பயன்படத்தக்க அருமையான நூலாகும். முஸ்லிம்களின் கலாபிவிருத்தியில் மிகுந்த அக்கறையுடன் உழைத்து வருகின்ரு ர்.
எஸ். எம். கமால்தீன், கொழும்பு பொது நூல் நிலையப் பொருப்பாளராகக் கடன் மை யாற்றுகின் ரு ர். இளம் முஸ்லிம் இயக்கங்களிலே மிகுந்த ஈடுபாடுடைய அவர், பல அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளைத் தொகுத்து அவர் ஒரு நூலாக வெளியிட்டால் பெரிதும் பயனுண்டா
œg5 UD.
இலங்கை வர்த்தக சபையிற் கடன் மை பார்க் கும் எம். எம். உவைஸ், இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நெருங்கிய தொடர்புடை யவர். அவ்ர் ஓர் ஆங்கில நூலையும், இஸ்லாமியத் தென்றல், கம்பிக்கை ஆகிய தமிழ் நூல்களையுந் தந்துள் ளார். பாடப்புத்தகங்கள் சிலவற்றை உரையாசிரிய ராக அமர்ந்து பதிப்பித்துள்ளார். தேவராஜனின் வியாபார எண் கணிதம் போன்ற நூல்களைத் தமிழி லிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த்துச் சிங்கள மொழியை வளப்படுத்தவும் உழைத்து வருகின்றர்.
மாத்தளை எம். ஸி. மதார் சாகிபு, பாஸ்கரத் தொண்டைமானின் பாணியைப் பின்பற்றி, ஒவியஞ் சிற்பம் முதலியன பற்றி விளக்கக் கட்டுைைரகளை ஏராளமாக எழுதியுள்ளார். -
தென்னகத்தின் முதுபெருந் தமிழறிஞரான ம. கா. மு. காதிர் முஹ்யித்தீன் மரைக்காயரின் புதல் வ ரான எம். கே. எம். அபூபக்கர் 'தினகரன்' ஆசிரியர்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 53
குழுவிற் கடன் மை பார்ப்பதுடன், அவ்வப்போது இஸ்லாமியருக்குப் பெரிதும் பயன்படும் கட்டுரை களையும் எழுதி வருகின்ரு ர்,
அல்ஹாஜ் வி. எம். ஷம்சுத்தீன் பழம் பெரும் எழுத் தாளராவர். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிராக யாராவது எழுதிவிட்டால், உடனே கொதித் தெழுந்து, தகுதியான விளக்கங்கள் கொடுக்கும் இயல்புடைய்வர். டாரதியார் இஸ்லாமி யரைத் ‘திக்கை வணங்கும் துலுக்கர்" என்று எழுதி யதை மறுத்தெழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. தென்னகத்திலிருந்து வெளியாகும் முஸ்லிம் முரசு என்னும் பத்திரிகையின் கெளரவ ஆசிரியராக மேன்மைப்படுத்தப்பட்டவர்.
ஹாபிஸ் எம் கே. செய்யித் அஹ்மது இஸ்லாமிய வரலாற்றுத்துறையில் மிகுந்த ஈடுபாடுடையவர். தமிழ் கூறும் முஸ்லிம் கல்லுலகம் என்ற தொடர் கட்டுரையின் மூலம் இஸ் லாமியப் புலவர் களையும் , ஞானிகளையும் அறிமுகப்படுத்தி வருகின் ருர் .
இஸ்லாம் என்பது என்ன ? என்னு ந் தலைப்பில், இஸ்லாமிய சமய விளக்கத்தைத் தமிழ் - ஆங்கிலம் -சிங்களம் ஆகிய மும் மொழிகளிலும் எழுதி ஒரே நூலாக மாத்தறை, எஸ். ஒய் இஸ் ஸ்தீன் வெளி யிட்டுள்ளார். பர்ஸன்ஜி மெளலிது என்னும் அறபு இலக்கியத்தை மெளல வி ஓ. எல். எம். இபுரு ஹீம் தமிழாக்கியுள்ளார். கொழும்பு, எப். எம். இபு ரு ஹிம் அவர்கள் ஸ்"எப்ஹான மெளலித் என்னும் அற பிக் காவியத்தைத் தமிழிற் பிரசுரித்துள்ளார். அல்ஹாஜ் மெளலவி ஏ. சி. எம். நுஃமான் ‘தீன் மாலை"யைப் பதிப்பித்துள்ளார்.
. 20-سF!
Page 99
54 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இலங்கையில் தப்லீக் - கல்ஹின்னை மெளலவி சலாஹுத்தீன், உங்கள் பிரச்சினை - மெளலவி ஏ ஆர். எம். றுாஹ7ல் ஹக். மனுேதத்துவமும் இஸ்லாமும் - கல்முனை ஏ. எம் ஏ. கரீம், மாாகபியின் வாழ்வும் வாக்கும் - ஏ. எம் கனி என்னுந் நூல்கள் வெளி வந்துள்ளன. ஹப்புத்தளையைச் சேர்ந்த சொல்லின் செல்வர் எஸ். எம் ரஹீம் சாஹிபு அற்புதமான சொற்ப்ொழிவாளராவர். அவரது பேச்சுக்கள் நூலு ருவம் பெறின், இஸ்லாமிய உலகம் பெரிதும் பயனடையும்.
"ஈழமேகம்' பக்கீர்த்தம்பி கவர்ச்சியான மேடைப் பேச்சாளராவர். கவிதைகளையும் இயற்றியுள்ளார். அவரது கட்டுரைகளைத் தொகுத்து "உரைமலர்' என் னுந் நூல் வெளிவந்திருக்கின்றது.
1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் எழுத்துத் துறைக்கு வந்தவர்களுள் மூவர் குறிப்பிடத்தக்க வர்களாவர். ஜே எம். எம். ருஜியின் 'இஸ்லாமியர் கண்ட ஈழம்" என்னுங் கட்டுரைத் தொடர், அவரிடமுள்ள வர லாற்று ஞானத்தையும், எழுத்தாற்றலையும் புலப் படுத்துகின்றது. இஸ்லாமிய கலாசாரத்தைப் பேணியே ருஜி கட்டுரைகள் எழுதுகின்ருர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாக வித்தியா தரிசியாகக் கடன் மை பார்க்கும் எம். எம். சமீம், “முஸ்லிம் களின் திருமணச் சம்பிரதாயங்கள் போன்ற கட்டு ரைத் தொடர்களை எழுதியுள்ளார். இஸ்லாமிய வரலாற்றுத்துறையில் ஈடுபாடுடையவர். இஸ்லாமிய கலா(ச்)சாரம் என்னுந் நூலை வெளியிட்டுள்ளார். அந் நூல் உண்மையான இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்க வில்லையென்று, மணிவிளக்கு என்னும் பத்திரிகை கருதுகின்றது. எம். ஏ எம். சுக்ரியும்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 55
வரலாற்றுக் கட்டுரைகள் எழுதி வேகமாக முன் னுக்கு வந்து கொண்டிருக்கின்ருர் இவர் நல்ல மேடைப் பேச்சாளருமாவர்.
ஜே எம். எம் அப்துல் காதர், ஏ. எல்: எம். முஹ் ஸின், எம். வை. எம். முஸ்லிம், எம். அகமது லெவ்வை, எம். எஸ். ஹமீது, அபூ உ ைபதா எஸ், டி. அபூபக்கர், எஸ். எம். ஏ. ஹ ஸ ன், மெளல வி யூ. எம் தாஸிம், மெளலவி ஏ எல் எம் இப்ருஹிம், ஹலீம் தீன், யூ.எல். தாவூத், ஏ, இக்பால் ஆகியோர் கட்டுரை-மொழிபெயர்ப்புத் துறைகளில் ஈடுபட்டு உழைத்து வருகின் ருர்கள். கிராமியக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஏ. ஆர். எம். ஸ்லீம் தமது ஈழத்து முஸ்லிம் புலவர்கள் என்னுந் நூலுக்கு பூரீ லங்கா சாகித்தியப் பரிசு பெற்றுப் புகழெய்தியுள்ளார். -
இனி, ஆற்றிலிலக்கியத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர் செய்துள்ள முயற்சிகளைப் பார்ப்போம். கவிதைத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர் பிரகாசிக் கின்ரு ர்கள். உண்மையில், சென்ற அத்தியாயத் திலேயே புரட்சிக்க மால், எம் ஸி. எம். சுபைர், அண்ணல் ஆகியோர் சேர்க்கத்தக் கவர்களாவர், ஆனல், முஸ்லிம் முயற்சிகளைப் பிரித்து எழுத வேண்டும் என்கிற வற்புறுத்தல் மேலோங்கியிருப் பதினலே தான், அவர்களுடைய கவிதை முயற்சிகளை இந்தப் பகுதியிலே எழுத வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது என்பதை முதற் கண் சொல்ல விரும்பு கின்றேன். --
கவிஞர் அப்துல் காதர் லெப்பை ப்ழைய முஸ்லிம் புலவர்களுடைய மரபிற் காலூன்றி, புதிய பரம் பரையினருக்கு வழிகாட்டியாக விளங்கும் கவிஞ
Page 100
56 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ராவர். அவரது இக்பால் இதயம் என்கிற கவிதை நூலில் அத்தகைய ஒரு கவிஞரைத்தான் நாம் சந்திக்கின் ருேம்.
எம். ஸி. எம். சுபைர் (குறிஞ்சிக்குயில்), மலர்ந்த வாழ்வு என்னுஞ் சிறுகாவியத்தை நூலுருவில் தந்துள் ளார். பாட்டுடைத் தலைவியான ஸ்லீமாவைத் தமிழ்ப்பண்பு கமழ, அவர் சித்திரித்துள்ளார். மணிக் குரல் என்னும் மாதப் பத்திரிகையை நடாத்தி வருகின் ருர் .
எம். எம். சாலிஹ் (புரட்சிக்க மால்), எம். எஸ். எம், சாலிஹ் (அண்ணல்), எம். ஏ. கபூர் (யுவன்) ஆகிய மூவரும் கிழக்கிலங்கை தந்துள்ள முன்னணிக் கவிஞர்களாவர். புரட்சிக்கமால் கவிதைகள் என்னுங் கவிதைத்தொகுதி புரட்சிக்க மாலின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழார் வத்தினையும், மத நம்பிக்கைகளுக்குப் பிறழாத சீர்திருத்த வாதத்தினையும் இவரது கவிதைகளிற்
காணலாம்.
பெரிய கண்ணியாவைச் சேர்ந்த "அண்ணல்" 1953ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைத் துறையில் ஈடுபட்டு, சிறிது காலம் ஓய்ந்துவிட்டு, மறுபடியும் முழுமூச்சாகக் கவிதைத் துறையில் முனைந்து முன்னேறி வருகின்ரு ர். அவரது சமீபகாலத்துப் பாடல்கள் கவிஞர்கள் வரிசையில், அவரை வெகு முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ஒசை நயங்கொண்ட பாடல்களை, அழகாகக் கவி யரங்குகளிலே அரங்கேற்றி வருகின் ருர்,
'யுவன்" உணர்ச்சியுள்ள கவிஞராவர். ‘பாட்டுத் திறத்தாலே..." என்னுந் தலைப்பில் வானெலி யினர் நடாத்திய கவியரங்கிலே, முஸ்லிம் கவிஞர் களின் புகழை நிலைநாட்டினர். மிக வேகமாக
ஈழத்து இலக்கிய வளர்ச்சி ', 57
முன்னேறிவந்துள்ள இந்தக் கவிஞரின் கவிதை களைச் சமீப காலத்திலே காணவில்லை.
விடத்தல் தீவு முகம்மது காசீம் நீண்ட நாட் களாகக் கவிதை எழுதிவருபவரெனினும் சமீப காலத்தில் அவரும் எழுதுவதைக் காணவில்லை. கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு என்னுந் நூலை எழுதி யிருக்கின்றர். கம்பளை கி. மு. கல்ல தம்பிப் பாவலர் இசைத் தேன் என்கிற கவிதை நூலை வெளியிட்டுள் ளார். இராகங்களோடு பாடுவதற்கேற்ற முறை
யில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
இவர்களுடன், பின்வரும் இளங் கவிஞர்களும் முஸ்லிம் சமூகத்திலே தோன்றியுள்ளனர்: வழுத் தூர் ஒளியேந்தி, எம். ஏ. நுஃமான், யூ. எல். ஏ. மஜித், சாரணு கையூம், அவை வேந்து, பஸில் காரியப்பர், நாகூர் ஏ. பாவா, மருதமைந்தன், மருதூர்க்கனி, மருதூர்க்கைய்யாம், அன்பு முகை தீன், மு. ஆதம் லெவ்வை.
சிறுகதைத் துறையில் முஸ்லிம் எழுத்தா ளர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டத் தவறிவிட்டார்கள். "பித்தனுக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறுகதை எழுத் தாளர்கள் தோன்றவில்லை என்கிற கசப்பான உண்மையை நாம் கவனத்திற் கொள்ளுதல் நன்று.
மரபின லும், சிறுகதையின் எண்ணிக்கை யினலும் அ. ஸ. அப்துஸ் ஸமது முதலிடம் பெறுகின்ரு ர். அவரது கதைகளிலே ஆழ்ந்த உணர்ச்சிகளையோ, புதிய போக்குகளையோ காண முடியவில்லை. மொத்தத்தில், பத்திரிகைக் கதைகள்
Page 101
--
58 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
எழுதுகின்ருர் என்றே சொல்லலாம். வி. எம். இஸ் மாயில் (மருதூர்க் கொத்தன்),சமீப காலத்தில், எஸ். பொன்னுத்துரையின் கதை சொல்லும் பாணியைப் பின்பற்றி நல்ல கதைகள் எழுதி வருகின்ருர், வேலி அவருக்கு வெற்றியை அளித்துள்ள சிறு கதையாகும். மருதமுனை மஜீதும் நல்ல கதைகள் எழுதுகின்றர். அவரது கதைகள், வேறு பத்திரிகை களில் பிரசுரமான கதைகளின் சாயல்களிலே விளங்குகின்றன. எம். ஐ. எம். தாஹிரும் வளர்ந்து வருஞ் சிறுகதை எழுத்தாளராவர். o
இஸ்லாமிய மதம் நாடகக் கலையை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிகிறேன். இருப்பினும், சிறுகதைத் துறையிலும் பார்க்க, நாடகத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் கணிசமான வெற்றியீட்டியுள்ளார்கள். மன்னர்-மாதோட்டப் புலவர்களான பக்கீர் புலவர் சாந்தரூபி நாடகத்தையும் விதானைப் புலவர் எனப்படும் சி. முகைதீன் கப்புடையார் கபுகாகு நாடகம், காஞ்சி நாடகம் ஆகிய வற்றையும் அக்காலத்திலேயே இயற்றியுள்ளார் கள். தற்காலத்தில், எம். ஏ. அப்பாஸ் கள்ளத் தோணி என்னுந் தலைப்பில் மிகத் துணிவான நாடகம் நன்றினை இயற்றி மேடையேற்றினர். அவர் நாடக நூல்களாக கள்ளத்தோணி, துரோகி ஆகியவைகளை வெளியிட்டுள்ளார். வானெலி நாடகங்கள் பல எழுதிப் புகழ்பெற்றவர். ‘ஒரே இரத்தம்' என்கிற தொடர் நாவலைத் தினகர னில் எழுதியுள்ளார். அதுவும் நூலாக வெளி வந்துள்ளது.
எம். எம். மக்கீன், நாடகத்துறையில் குறிப்பிடத் தக்க முஸ்லிம் எழுத்தாளருள் ஒருவராவர். "டயல் எம் பார் மர்டர்' என்கிற ஆங்கில நாடகத்தைத்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 59
தமிழாக்கி, மேடையேற்றி வெற்றி கண்டவர். பல வானெலி நாடகங்களை எழுதியிருக்கின்ற ர். சிறுகதைகளும் எழுதிவருகின்றர்.
எம். கஸ்ருதீன் சிறந்த நாடக எழுத்தாளராவர். வானெலியில் ஏராளமான சமூக நாடகங்களை எழுதியவர். இவரின் ‘அழாதே கண்ணே" என்கிற மேடை நாடகம் இரசிகர்களின் நல்ல பாராட்டு தலைப் பெற்றது. --
ஆர். என். ஸைபுத்தீன் சாஹிபு மேடை நாடகத் துறையில் இறங்காவிடினும், வானெலியில்-முஸ்லிம் நாடகப்பகுதியில் தொடர்ந்து பல நாடகங்களை எழுதி வருகின்ரு ர்.
எம் ஏ. முகம்மது, வானெலி நாடகங்கள் நிறைய எழுதியிருக்கின்றர். சிங்களத்திலும் நாடகங்கள் எழுதி வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் எழுத்தாளர்களுள் இருப்பதுபோலவே முஸ்லிம் எழுத்தாளர்களுள்ளும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் எழுத்தாளர்களே உளர். இருப்பினும், முஸ்லிம் பெண் கல்வி என்கிற பின்ன ணியிற் பெருமைப் படத்தக்க முன்னேற்றமாகும்.
முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் விசேட மாகக் குறிப்பிடவேண்டியவர் பேராதனைஷர்புன்னிஸா பேகமே யாவர். இவர் பல ஆண்டுகளாகக் கட்டுரை, கதை எழுதிவருகின்றர்.
பேகம் சுபைர்தானி அப்துல் காதர் என்பவர் எழுதி வருவதோடு சொந்தமாக ஒரு பத்திரிகையும் நடாத்தி வருகின்ருர், 'கலை மலர்”, என்ற அப் பத்திரிகை இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி
Page 102
150 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வருகின்றது. இது பெண்ணுவகமே பாராட்டும் பெரு முயற்சியாகும்.
ரொஜஹானி புகாரி என்பவர் வானுெவி நாடகம், பேச்சு, கட்டுரைத் துறைகளில் ஈடுபட்டு வரு கின்று ர்.
சிறுகதை - கட்டுரைத்துறைகளில் (365; , i rai i'r ff; முன்னேறிவரும் ஃபோ முறிைதீன், பாத்திமா ஹலால் தீன், பூர்ணிமா, த பீமா ஏ. பசீர், மும்தாஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இறுதியாக முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு இன் னுெகு சோதஃன புங் காத்திருக்கின்றது என்பதை புஞ் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் , முஸ்லிம் அரசியல் வாதிகளுட் பெரும்பாலானுேர் தனிச் சிங்களச் சட்டத்தை ஆமோதித்துச் சிங்கள மொழி யையே தமது ஆட்சி மொழியாக ஏற்றுள்ளார்கள், இதனுள் முஸ்லிம் எழுத்தாளர்களது எழுத்துக்களே ப் பற்றிய அக்கறை வருங்காலச் சத்ததியினருக்கு ஏ ற் படாமலும் போகக் கூடும். இந்நிஃபயில் தழிழர் களுடன் தமிழராக வாழும் கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் எழுத்தாளர்களே, வருங்கா பே முஸ்லிம் எழுத்துக்களே மதிப்பீடு செய்யவேண்டிய நிஃயேற் படலாம். இஃது, அரசியற் சூழ்நிவேகளே அடிப்படை பாக வைத்துச் சொல்லப்படும் ஆரூடமே பாகும். இதனே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் எழுத்த னர் களும் பொய்ப்பிப்பார்களே பாகுல், ஈழத் தமிழ் மேன்மேலும் வளர்ச்சிட் டை யு மென்பது நிண் என
ாகும் ,
ஈழகேசரி
அவாகளே
போன்னேயா
நா.
Page 103
டயர் பூசேரி பன் f விழா Trijန္: ဖါ
"F2' 5l'), III: பலவிதம்
திரு. வே. திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 6. பத்திரிகைகள்
இலங்கையில் சமய வளர்ச்சி கருதியே ஆரம்பத் திற் பத்திரிகைகள் நடாத்தப்பட்டன. அவற்றுள் உதயதாரகை என்னும் பத்திரிகை 1841 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டு வருகின்றது. அப் பத்திரிகையின் ஆசிரியர்களுள் சுப்பிரதீபம் இயற்றிய கருேல் விசுவநாதபிள்ளேயும், ஆனல்டு சதாசிவம் பிள்ளேயும் குறிப்பிடத்தக்க வர்களாவர். 1841 ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி, உதயாதித்தன் என்னும் பத்திரிகையை நடாத்தினு ர்.
கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சி கருதி வெளி வந்து கொண்டிருக்கும் சத்தியவேத பாதுகாவலன் 1878 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்து கொண்டிருக் கின்றது.
இவ்வாறு கிறித்துவ மதத்தின் வளர்ச்சி கருதிப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தபொழுது, இந்து சமயத்தின் வளர்ச்சி கருதி இந்து சாதனம் என் னும் பத்திரிகை வெளிவரலாயிற்று, 'உதயதாரகை" "சத்தியவேத பாதுகாவலன்',"இந்து சாதனம்' ஆகிய மூன்றும் சமய வளர்ச்சியை மனதிற்கொண்டு வெளி வந்து கொண்டிருந்தமையால் அவற்றின் இலக்கிய சேவையை மதிப்பீடு செய்தல் முறையன்று.
வேருெரு காரணத்திற்காக, "இந்து சாதனம்" ஆசிரியராகவிருந்த ம.வே. திருஞான சம்பந்தபிள்ளே பின் சேவையை ஈண்டு குறிப்பிட்டுத்தானுகவேண்டும். பொது சனங்கள் இர சிக்கக்கூடியதாக, யாழ்ப் பாணப்பேச்சு வழக்கில், பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய், உலகம் பலவிதம் என்கிற தலேப்பில்
F-2.
Page 104
l62 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
துரைாத்தினம்-நேசமணி, கோபால் கேசரத்தினம் முதலிய கதை நூல்களை நமக்குத் தந்துள்ள ம, வே. திருஞான் சம்பந்தப்பிள்ளை தாம் தற்காலத்தில் எழுத்தாளர்" என்னுஞ் சொல் யார் யாரைக் குறிக்கின்றதோ, அவர்களுக்கெல்லாம் முன்னேடியாகக் காட்சியளிக் கின்றர். அவர் எழுதியுள்ள கதைகள், இளமை குன்ருத கவர்ச்சியுடன், இன்றும் இர சிக்கக்கூடியன வாக விளங்குகின்றன தற்பொழுது இந்து சாதனம்" ஆசிரியராகக் கடன்மையாற்றும் க. சிவப்பிரகாசம் அவர்கள் தந்துள்ள இலங்கை மாதா திருப்பள்ளி எழுச்சி பாரதியாரின் ‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி"யை நினைவூட்டி நன்கமைந்திருக்கின்றது. துரய செந் தமிழில் பேசியும் சமயக் கட்டுரைகள் எழுதியும் வருகின்ரு ர்.
இலக்கிய வளர்ச்சியுடன் தன்னை இரண்டறப் பிணைத்துக்கொண்ட பத்திரிகை கா. பொன்னையா அவர்களாலே தாபிக்கப்பட்ட "ஈழகேசரி'யாகும். அப்பத்திரிகையின் ஆசிரியராக குமாரசுவாமிப் புல வரின் புத்திரரான கு.அம்பலவாணர் கடன் மை பார்த் தார்கள். அவர் ஆசிரிய தலையங்கங்களையும், பிற ச நாட்டுச் செய்திகளையுஞ் சுவைப்பட எழுதிய போதிலும், பத்திரிகைத் தமிழைக் கீழே போக விடாது பார்த்துக்கொண்டார். குமாரசுவாமிப் புலவர் பெற்ற கடிதங்களை நமக்களித்து, புலவர வர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ் நாட்டிலும் ஈழ நாட்டிலும் வாழ்ந்த சமகால அறிஞர்களை அறிமுகப் படுத்தினுச்.
பிற்காலத்தில், “ ஈழகேசரி’யின் ஆசிரியராக இராஜ அரியரத்தினம் கடன் மை பார்த்தார்கள். அவர் தமிழ் நாட்டிற்கும், ஈழநாட்டிற்கும் பாலமாக
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 63
அமைந்து, பல இலக்கிய யாத் திரைகள் செய்துள் ளார். ‘தங்கப்பூச்சி' என்னும் நாவலைத் தந்துள்ள துடன், வெள்ளம் போன்ற அழகிய சிறு கதைகளையும் எழுதியுள்ளார். "வெள்ளம் ஈழநாட்டுச் சிறு கதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது: "சோணுசலக் கவிராயர்’ என்னும் பெயரிலே பல
கவிதைகளை எழுதியுள்ளார். "ஈழகேசரி'யில், * பாதையோரத்தில் - பாட்ட சாரி" என்னும் பகுதி யையும், ‘ஈழநாட்டில் ஆசிரியராக அமர்ந்த
காலத்தில் 'இரத்தினக் கம்பளம்” என்னும் பகுதி யையும் வாரா வாரஞ் சுவைப்பட எழுதி வந்தார். கல்கி பிறந்தார் என்னும் நூலையும் வெளியிட்டிருக் கின் ருர். பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்து எழுத்துத் துறைக்குக் கொண்டு வந்த பெருமையும் அவரைச் சாரும் .
கட்சி சார்பான வாரப்பத்திரிகைகளும், மத சார்பான வாரப்பத்திரிகைகளுமே ஈழ நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தென்னகத்தில் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் வாராவாரம் வெளிவந்து விற்பனையாகும் எத்தனையோ சஞ்சிகை கள் இருக்கின்றன. அத்தகைய வார-மாதப் பத்திரி கைகளே ஆற்றலிலக்கியத்துறையினை வளப்படுத்தி வருகின்றன. தரமான சிறுகதைகளுக்கும், சுவை யான தொடர் கதைகளுக்கும் இத்தகைய சஞ்சிகை களையே வாசகர்கள் எதிர்பார்க்கின்றர்கள். தினசரி கள் செய்திகளைத் தரும் பத்திரிகைகளாகவே வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையிலே, ஈழத் துத் தினசரிகளின் வாரப்பதிப்புக்கள், ஆற்ற லிலக்கிய முயற்சிகளுக்குக் கணிசமான இடம் ஒதுக்கிக் கொடுத்துச் செய்துவருஞ் சேவையை நம்மால் மறுக்க இயலாது. இதன் காரணமாகத்
Page 105
64 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
தான் ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் புகுந்த நான், தினசரிப் பத்திரிகைகளைப் பற்றியும் இங்கு எழுதவேண்டியிருக்கின்றது. க அ. மீரா முகைதீன் அவர்களால் நடாத்தப்பட்ட தினத் தபால் காலை மாலைத் தினசரிதான் ஈழத்தில் வெளியான முதலாவது புதினப் பத்திரிகையாகும். V,
அதையடுத்து வெளியான தினசரி வீரகேசரி யாகும். அதன் முதலாவது ஆசிரியராக அமர்ந்த வர் பெரி. சுப்பிரமணியன் செட்டியாராவர். அவரைத் தொடர்ந்து ஆசிரியர் பீடத்திலமர்ந்த எச். கெல்லையா அவர்கள், தொடர் கதைகளின் மூலம் வாசகரைக் கவர்ந்தார். காக்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி குறிப்பிடத்தக்க நூலாகும்.
பாரதியாரின் நண்பரும், மணிக்கொடி பரம் பரையின் முன்னேடியுமான வ. ரா. அவர்களும் * வீரகேசரி"யின் ஆசிரியராகக் கடன்மையாற்றி யுள்ளார். இனிமையான சுபாவமும், ஆழ்ந்த சமயப்பற்றுங் கொண்டுள்ள கே. பி. ஹரன் ஒரு சிறந்த "பத்தி எழுத்தாளராகவே தமது திற மையை வெளிப்படுத்தினர். தற்பொழுது "ஈழ நாடு” என்னுந் தினசரியின் ஆசிரியராகக் கடன் மை பார்க்கின் ருர்.
கே. வி எஸ். வாஸ் பல ஆண்டுகளாக “வீர கேசரி"யில் செய்தி ஆசிரியராக இருந்து, பின்னர் அதன் ஆசிரியராக உயர்ந்தார். பதினன்காவது வய தில், "கத்திச் சங்கம்’ என்னுஞ் சிறுகதையைச் * சுதேசமித் திர னில் எழுதியதன் மூலம் அவர் எழுத்துத்துறைக்கு வந்தார். இந்தியாவிலேயே எழுத்துத் துறையின் பல்வேறு துறைகளிலும் அவர்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 65
பிரகாசித்தார். "கைம்பெண்ணின் கண்ணீர்" என் னும் அவரது நாவல் செட்டிநாட்டு நாவல் போட்டி யிலே முதற் பரிசில் பெற்றது. 'மணிக்கொடி’ப் பத்திரிகையுடனுந் தொடர்புகொண்டு, அடிப் படைப் பொருளாதாரம் பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நூற்றுக்கணக்கான சிறுகதை களையும் புல தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். ‘வீரகேசரி'யில் அவர் எழுதிய குந்தளப் பிரேமா வாச கரின் பாராட்டுதலைப் பெற்று, பின்னர் நூலுருவி லும் வந்துள்ளது. கடந்த கால் நூற்ருண்டு காலம் வீரகேசரியில் கடன்மையாற்றி கந்தினி,தாரிணி, மலைக் கன்னி, ஏங்குதே என் நெஞ்சம்? போன்ற தொடர் கதைகளை எழுதியுள்ளார். அவர் "இந்து ஆங்கிலப் பத்திரிகையினதும் கல்கி, மலாயாப் பத்திரிகை களினதும் விசேட பிரதிநிதியாகக் கடன்மையாற்று கின் ருர். அவர் எழுதி, 'ஆனந்த விகடனில் வெளி வந்த ஈழத்தின் கதை அவரது புகழை நன்ரு க நிலை நாட்டியுள்ளது. அவரது சரித்திரப் புலமைக்கும், எழுத்தாற்றலுக்கும் அந்நூல் சான்று பகர்கின்றது. இயந்திர வேகத்தில், எதைப்பற்றியுஞ் சுவைபட எழுதக் கூடிய ஒரு பத்திரிகையாளராவர். தற் பொழுது கே. வி. எஸ். வாஸையும், எஸ். டி. சிவ நாயகத்தையும் கூட்டாசிரியர்களாகக் கொண்டு * வீரகேசரி" வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஞாயிறு வீரகேசரியின் பொறுப்பாசிரியராகப் பல காலஞ் சேவை செய்துள்ள வி. லோகாகாதன் அவர் கள் இலக்கியகாரராகவே வாழ்ந்தார்கள். காலத் தின் மாற்றங்களை அநுசரித்து இலக்கிய உலகின் நித்திய இளைஞராகவே வாழ்பவர். அவர் பல சிறு கதைகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுதி யாக ஊதிய விளக்கு என்னும் நூல் வெளியாயிற்று.
Page 106
66 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பல தொடர் கதைகளை எழுதியுள்ளார். அவரது பிரேமாஞ்சலி என்னும் நாவல் நூலுருவம் பெற் றுள்ளது. கடனஞ்சலி என அவர் எழுதியுள்ள நாட் டிய நாடகம் அற்புதமாக அமைந்துள்ளது. அது ஊர்வசி என்னும் பெயரில் அரங்கேற்றப்பட்டுப் பலரது பாராட்டுதல்களைப் பெற்றது. வெளி ந்ாட்டுப் பிரயாண அநுபவங்களை வைத்துக்கொண்டு பாரிஸ்டர் சிற்றம்பலம் என்னும் நாவலை எழுதினர். ஈழத்தில் வெளிவந்த மிகத் தரமான தொடர் கதை யான இதனைப் பூர்த்தியாக்காமலே, வீரகேசரியி லிருந்து விலகியமை ஈழத்தமிழிலக்கியத்திற்கு ஏற் பட்டுள்ள் பெரு நட்டமாகும். முதன் முதலில் 'தான் தோன்றிக் கவிராயர்" என்ற புனைபெயரைத் தமக் குச் சூட்டி சீட்டுக் கவிதைகள் இயற்றியுள்ளார்.
"வீரகேசரி’ பல காலமாகத் தென்னக எழுத் தாளருக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தது என்பது உண்மையாகும். ஆனல், 1956ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஈழத்து எழுத்தாளரது படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெருமையுடன் பிரசுரித்து வருகின்றது. அடிக்கடி எழுத்தாளர் கோஷ்டிகளுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளாது, ஆற்றலுக்கு மு க் கியத் துவ ங் கொடுத்து சிருட்டி இலக்கியத்தினைப் பிரசுரித்து வருதலை எவ்வளவு பாராட்டினுலுந் தகும். எழுத்துத் துறையிற் சற்றே பின்தங்கி விட்டவர்கள் என்று கொள்ளப்பட்ட மலைநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகத் தோட்ட மஞ்சரி என்னும் பகு தியை ஆரம்பித்த "வீரகேசரி', பெருமைப்படத்தக்க மலைநாட்டு இளம் எழுத்தாளர்களை உருவாக்கி யுள்ளத.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 67
நாடகத்துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு உழைத்த வை. இராமநாதபிள்ளை அவர்களே 'தினகர னின் முதலாவது ஆசிரியராவர். அவரைத் தொடர்ந்து இராமாகாத ஐயர் சில காலம் அதன் ஆசிரியராகக் கடன் மை யாற்றினர்.
ரி. எஸ். தங்கையா அவர்கள் ஆசிரியராக வந்த காலத்திலேதான் 'தினகரன் ஒரு செய்திப் பத்தி ரிகை என்கிற நிலையில் உயர்ந்தது. ‘தங்கையா வைப் போன்ற ஒரு சிறந்த பத்திரிகையாளரை நாங்கள் கண்டதேயில்லை" என்று பல சக பத்திரி கையாளர்கள் வாயாரப் போற்றுகின்ருர்கள். ஆங்கி லத்தில் நிருவாகம் நடைபெறும் பெரியதொரு தாபனத்தில் தங்கையாவின் பெருமை, இரவுப் பதிப்பு ஆசிரியராக முடங்கிக் கிடப்பது வேதனைக் குரிய நிகழ்ச்சியாகும்.
வி. கே பி. காதன் அவர்கள் 'தினகரனில் ஆசிரி யராக அமர்ந்திருந்த காலத்தில், வாரப்பதிப்பில் பண்டித வர்க்க எழுத்தாளரின் கையோங்கியிருந் ததை அவதானிக்கலாம். அதேசமயம், கணேச லிங்கன் போன்ற ஈழநாட்டு எழுத்தாளரின் சிறு கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டி ருந்தது. அவரைத் தொடர்ந்து க. கைலாசபதி தின கரன் ஆசிரியராகி, ஞாயிறு தினகரனை இலக்கியத் தரத்தில் உயர்த்தி வைத்தார்.
தற்பொழுது 'தினகரன்' ஆசிரியராக இருக் கும் ஆர். சிவகுருநாதன் பல்கலைக் கழகக் காலத்தில் "இளங்கதிர் ஆசிரியராக இருந்தவர். பல்கலைக் கழகத்தில் இந்து தர்மம்' என்னும் பத்திரிகையைத் தோற்றுவிக்க முன்நின்று உழைத்தார். அவர் 'தின கர*னரில் சில பரிசோதனைக் களங்களுக்கு இடமளித்
Page 107
B ஈழத்து இலக்கிய வளர்ச்சி
துள்ளார். தினகரன் ஒரு தேசியப் பத்திரிகையாகும், அஃது அவ்வப்போது, சில வட்டாரங்களுக்கே உழைத்து வருகின்றதோ என்கிற மயக்கத்தினேத் தருகின்றது. அச்சு வ ச திக ளே யும் , பிறவசதி களேயும் மனதிற்கொண்டு பார்த்தால், 'தினகர ணுல் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு எத்தனேயோ ஆக்க பூர்வமான வழிகளிலே தொண்டாற்ற முடியும் என்பதை மட்டும் அவர்களது கவனத்திற்கு இச்சந் தர்ப்பத்திலே சமர்ப்பிக்கின்றேன்.
1947 ஆம் ஆண்டில், தமிழ்க்காங்கிரஸ் அரசி பல வளர்ப்பதற்காகச் சுதந்திரன் என்னுத் தினசரி தொடங்கப்பெற்றது. சுமார் ஐந்து ஆண்டுகளே தினசரியாக வந்து, தற்பொழுது வாரப்பத்திரிகை பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதன் முதலாவது ஆசிரியரான கோ. நடேசையர் பல நூல் களே வெளியிட்டுள்ளார். அ வ ர து தமிழ்நடை தெளிவானது எளிமையானது. வெற்றியுனதே, 唱 மயங்குவதேன் முதலிய நூல்களேத் தந்துள்ளார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கணக்குப் பதிவு நூல், ஆயில் என்ஜின்கள், பம்புகளும் அவற்றை உபயோகிப்பதும் ஆகிய பலவகையிலும் பயன்படும் நூல்களே எழுதியுள்ளார் என்பது பெருமைப்படத் தக்க தொன்ரு கும்.
நடேசையருக்குப் பிறகு, நாகலிங்கம், நாதன், குமாரசாமி, தெல்வியூர் நடராசா சுப்பிரமணியம் ஆகிய பலர் "சுதந்திரனில் தற்காலிக ஆசிரியர் களாகக் கடன் மையாற்றினூர்கள், பின்னர் எஸ். டி.
சிவநாயகம் அவர்கள் "சுதந்திரன்" பத்திரிகையின் ஆசிரியரானுர்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 69
கிழக்கிலங்கையின் எழுத்தார்வத்தினே வளர்த்து உதயம் பத்திரிகையை நடாத்திய சிவநாயகம், 'தினகரன்" பத்திரிகையில் சொற்பகாலம் கடன்மை யாற்றிய பின் "சுதந்திரன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியரானுர், பல புனேபெயர்களில் சிறுகதைநாவல்-கவிதை-நாடகம் ஆகிய பல துறைகளிலும் எழுதினுர், மாயாவி என்னும் நாவலும், பச்சைக்கல் மோதிரம், துறவி ஆகிய சிறு கதைகளும் குறிப்பிடத் தக்கவை. நாடோடிப் பாடல்களேக் கதைகள் புனேவதின் மூலம் விளக்கும் பாணியை அறிமுகஞ் செய்துவைத்த பெருமை இவரைச் சாரும் ஒரே இரத்தம், உதயகுமாரி போன்ற ஏழு நாடகங்களே எழுதியுள்ளார். குயுக்தியார் கேள்வி-பதில் பகுதி மூலம் அரசியல் எதிரிகளேச் சாடினுர், "சுதந் திர'னே விட்டு விலகியபிறகு, தமிழின்பம் பத்திரிகை யிற் சேவைசெய்து, தற்பொழுது "வீரகேசரி'யின் கூட்டு ஆசிரியராகக் கடன்னமபார்க்கின் ருர் இவர் இலக்கியத்தின் பல உட்பிரிவுகளிலுஞ் செய்துள்ள சேவைகள&னத்திலும் பார்க்கப் பிறிதோர் வழியிற் செய்துள்ள சேவையே மேலோங்கி நிற்கின்றது. கிழக்கிலங்கையின் ஆற்றவிலக்கிய முயற்சிகளே ஊக்குவித்து, அத்துறையில் மட்டக்களப்புப் பின்
தங்கிவிடாது பார்த்துக்கொண்ட பெருமை இவரையே சாரும். இ ன் று கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும்
த&லநிமிர்ந்து நிற்பவர்களேச் "சுதந்திரன்' பண்ணே யிலே வளர்த்தார். இன்று முற்போக்கு இலக்கியம் பேசும் அ. ந. கந்தசாமி, பிரேம்ஜி, சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இவருக்குக்கீழ் இலக்கியப் பயிற்சி பெற்றவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது.
F
Page 108
70 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
கே, இராமசுவாமி "சுதந்திரனின் தற்போதைய ஆசிரியராவர். முப்பது ஆண்டுகளாகப் பத்திரி கைத் துறையிற் பணியாற்றும் இவர், தினகரன் , வீரகேசரி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகக் கடன் மையாற்றியிருக்கின் ருர் . இடதுசாரிக் கொள் கையில் நம்பிக்கையுள்ள இவர் இன்றையச் சீனம், 6GubGosfo6ös Log6001 afragFGOEŭo முதலிய நூல்களின் ஆசிரியருமாவர். தமிழரான இவர் சிங்களத்தில் ரஸ் கலா என்கிற பத்திரிகையை மூன்று ஆண்டு களாக நடாத்தி வருகின் ருர் என்பது குறிப்பிடத் தக்கது. பத்துக்கு மேற்பட்ட சிங்கள நாவல்களையும் எழுதியிருக்கின் ருர்.
* சுதந்திரன்" பத்திரிகை 1956 ஆம் ஆண்டு வரையில், ஈழத்து ஆற்றலிலக்கியத்துறையில் ஒரு புதிய பரம்பரையை உருவாக்க உழைத்து வந்தது. "ஈழகேசரி'யைப் போன்று அது மகத்தான சேவை செய்துள்ளது. ஆனுல் , 1956 ஆம் ஆண்டிற்குப் பின் னர், தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் பெருந் தொகையினராகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், “சுதந்திரன்' இலக் கியத்தை முற்றிலும் மறந்துவிட்ட ஒரு அரசியற் பத்திரிகையாகப் படிப்படியாக மாறிவிட்டது. இலக்கிய ஆற்றலைப் பொறுத்தவரையில் கட்சிச் சார்புகளை கணக்கிலெடுக்காத சுதந்திரன்’, தற் காலத்தில் அவ்வாரு ன ஒரு பக்கச் சார்பினைத் தேர்ந்தெடுக்கக் காரணம் யாதோ நாமறியோம்." ஆனல், ஈழத்து இலக்கியத்திற்கு இதனுற் பாரிய
நட்டமேற்படலாம்.
"ஈழகேசரி வெள்ளி விழாக் கொண்டாடிய
சொற்பகாலத்திலே இயற்கை எய்திற்று. அதன்
இடத்தினை நிரப்புவது போல ‘ஈழநாடு வெளிவந்து
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 7
கொண்டிருக்கின்றது. இராஜ. அரியரத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரப்பத்திரிகை யாக வெளிவந்த அது, இப்பொழுது தினசரியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. கே. பி. ஹரன் அதன் தற்போதைய ஆசிரியராவர். பல இளம் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அரங்கேற்று வதற்கு ‘ஈழநாடு" களம் அமைத்துக் கொடுத்துப் பணிபுரிகின்றது.
அரசியற் கட்சிகள் சார்பாகப் பல வாரப் பத்தி ரிகைகள் வெளிவந்தன. பதினெட்டு வருடங்க ளாக வெளிவந்து கொண்டிருக்கும் தேசாபிமானி யின் ஆசிரியராகக் கடன்மை யாற்றிய கே. இராமநாதன் குறிப்பிடத்தக்க பத்திரிகையாசிரியராவர். அவரது கட்டுரைகள் தாம் சார்ந்த கொள்கைகளைத் தெளி வாக விளக்கின; இளைஞர் மத்தியிலே போராட்ட ஆர்வத்தினையுந் தியாக சிந்தையையும் வளர்த்தன. இலக்கிய வளர்ச்சி கருதி 1946 ஆம் ஆண்டில் பாரதி என்னும் பத்திரிகையை நடாத்தினுர் . தற்பொழுது அவரது திறமையை தென்னகத்திலிருந்து வெளி வரும் ஜனசக்தி பயன்படுத்துகின்றது.
வேறும் பல வாரச் செய்தித்தாள்கள் தோன்றி, மஞ்சள் இலக்கியம் வளர்த்து, குறுகிய காலத்தில் மரிக்க, அவற்றின் இடத்திலே புதிய பத்திரிகைகள் தோன்றுகின்றன, இலக்கிய வளர்ச்சியின் விசார ணையில் அத்தகைய பத்திரிகைகளைச் சேர்க்கத் தேவையில்லை.
சனசமூக நிலையங்களின் சமாசம் நடாத்திய பத்திரிகையின் ஆசிரியராக க. பே. முத்தையா அவர் கள் உழைத்தார்கள். தமது பத்திரிகையில் பல புதிய எழுத்தாளர்களை ஆதரித்ததுடன், பல
Page 109
72. ஈழத்து இலக்கிய வளர்ச்சி
இளங் கவிஞர்களையுங் கிறித்தவர்கள் மத்தியிலே உருவாக்கினர். அவர், திருக்குறட் கருத்துக்களை யும் பெரியோர் பொன் மொழிகளையும் அழகாகக் கோத்துக் கட்டுரைகள் எழுதுகின்ருர், வெண்பா பாடுவதிலும் ஈடுபாடுடையவர். பாடசாலை மாணு க்" கருக்குப் பயன் படத்தக்க கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியிட்டுள்ளார். செங்தமிழும் சிலுவையும் என்னும் அவரது நூல் மிகவும் பய்னுள்ளது. அந் நூலில் கிறித்துவப் பெரியார்களாற்றிய தமிழ்த் தொண்டினை விபரித்துள்ளார்.
மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியான செ. இராசதுரை அந்தக் காலத்தில் சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வங் காட்டினர். "மிஸ் கனகம்” என்னுஞ் சிறு கதைத் தொகுதி வெளிவந்துள்ளது. "லங்கா முர” சைத் தொடர்ந்து, சொந்த அச்சு வசதிகளுடன் *தமிழகம்” என்னும் பத்திரிகையை வெளியிட்டார். முழுநேர அரசியல் ஊழியராகிவிட்ட அவரால் அப்பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்த முடிய வில்லை. நல்ல மேடைப் பேச்சாளராவர். பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் என்னுஞ் சிறு நூல் அவரது பேச்சு வன்மைக்குச் சான்று பகர்கின்றது. நல்ல நடிகருமான அவர், சங்கிலியன் நாடகத்தைத் தாமே எழுதி, தயாரித்து, மேடையேற்றியுள்ளார். இலக் கியத்தின் நட்டம் , அரசியல் ஆதாயமாக அமைந்து விட்டது.
ஈழத்தில் அவ்வப்போது தரமான பத்திரிகை கள் நடாத்தப்பட்டன. ஆனல், அவை தொடர்ந்து வெளிவராது, சிறுவயதிலேயே மரணமடைந்தமை நமது துர்ப்பாக்கியமாகும். சதாசிவஐயர் நடாத்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 73
திய கலாநிதி என்னுஞ் சஞ்சிகையுடன் வேறு சில சஞ்சிகைகளும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களங்களமைத்துக் கொடுத்ததை நாம் மறந்து விடக்கூடாது. 1921 ஆம் ஆண்டில் சி. பத்மநாம ஐயர், ஆனந்தசாகரம் என்னும் பத்திரிகையை வெளியிட்டார். பின்னர் 1928 ஆம் ஆண்டில் சரஸ் வதி என்னும் பத்திரிகையை வெளியிட்டார். அகவ லோசையிற் பாடல்கள் இயற்றவும் பாடவும் வல்ல ச. கந்தையாபிள்ளை 1933 ஆம் ஆண்டில் வித்தகம் என்னும் பத்திரிகையை நடாத்தினர். கிழக்கிலங் கையிலிருந்து மெதடிஸ்த திருச்சபையினல் நடாத் தப்பட்ட தீபம் என்னும் பத்திரிகையுங் குறிப்பிடத் தக்கது. பல கிறித்துவ நூல்களை இயற்றிச் சமயத் தொண்டும், கண்டியரசன் நாடகம், ஏகே லபலே குடும்ப சங்காரம் ஆகிய நூல்களை இயற்றித்தமிழ்த் தொண்டும் ஆற்றிய ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை “தேசத் தொண்டன்" என்னும் பத்திரிகையை நடாத்தினர்.
* மாதப் பத்திரிகைகளுள் சி. சரவணபவன் ('சிற்பி) அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் கலைச் செல்வி குறிப்பிடத்தக்க சேவையைச் செய்துள்ளது. ஈழத்தில், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் மாதப்பத்திரிகை என்கிற பெருமை அதற்கு உண்டு. புதிய பல எழுத்தாளர் களை அது அறிமுகஞ் செய்து வைத்தது. புதிய பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்து, முன்னுக்குக் கொண்டு வந்தது. நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி, நாவல் போட்டி ஆகிய புதிய துறை களிலே அது போட்டிகள் நடாத்தி எழுத்தாளரை ஊக்குவிக்கின்றது. அதன் ஆசிரியரான "சிற்பி பிறந்த மண், நிறைவு போன்ற பல சிறுகதைகளையும்,
Page 110
74 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
உனக்காக கண்ணே!, சிந்தனைக் கண்ணிர் ஆகிய குறு நாவல்களையும்"எழுதியுள்ளார். பெரு முயற்சியுடன் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியை வெளியிட்டுள்ள அவர், மேலுஞ் சில தொகுதிகளை வெளியிடுவா ராயின், அஃது ஈழத்து இலக்கியத்திற்கு மகத் தான சேவையாக அமையும், ܫ
தேனருவி ஆர்வமுள்ள இளைஞர்களால் நடாத் தப்பட்டு வருகின்றது. "சந்திரோதயம் போன்று, பிரச்சினைக் கதைகளுக்கு அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது. எதிர்த்துருவக் கருத்துப் பரி வர்த்தனைகளை அது வரவேற்கின்றது. விவேகி, பல ஆண்டுகளாக ஆசீர்வாதம் அவர்களால் வெளியிடப் படுகின்றது. மாணவ வாசகரைக் கவரும் விடயங் களே பெரும்பாலும் இடம் பெறுகின்றன.
"இங்கிலாந்திற் செய்யப்பட்டது" என்று வரும் அந்நியப் பொருள்கள் தான் சிறந்தவை என்கிற மனப்பான்மை நம் மத்தியிலே நிலவிவந்தது. அவற்றே இந்தியப் பத்திரிகை"தான் சிறந்தது என்னும் ஒரு பிழையான அபிப்பிராயத்தை நமது வாசகர்கள் வளர்த்து விட்டார்கள். இந்த மனே நிலையிற் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈழத்து வாசகர்கள், 'ஈழத்துப் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்குவோம் எனச் சங்கற்பஞ் செய்து கொள்ளுதல் வேண்டும். தொழிலதிபர்களும் விளம் பரங்கள் மூலம் நமது பத்திரிகைகளை ஆதரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது எழுத்தாளர் களுக்குப் பிரசுர களங்கள் அமைத்துக் கொடுக்கக் கூடிய தரமான பத்திரிகைகள் தோன்றும். பிரசுர வசதிகளில் லாவிட்டால் எழுத்தாளர்கள் சோர்வ டைந்து போவார்கள்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 75
பல்கலைக் கழகம்
இலங்கைப் பல்கலைக்கழகம், தமிழ் உணர்ச்சி யைப் பரப்புவதிலே முன்னணியில் நிற்கின்றது. ஆனல், தமிழ் வளத்திற்காக ஆராய்ச்சியையோ, ஈழத்தமிழர் சரிதத்தையோ, கல்வெட்டு ஆராய்ச்சி களையோ போற்றத் தக்கதாக அது செய்யவில்லை. இந்தியப் பல்கலைக் கழகங்களிலுள்ளதைப் போன்று ஆராய்ச்சிப் பீடங்கள் இங்கு அமைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. இருப்பினும், கூட்டு முயற்சியுடன் அவ்வாரு ன ஆராய்ச்சிகள் நடாத்தப் பட்டிருக்கலாம் பேராசிரியரிடமும், மற்றும் விரி வுரையாளரிடமும் ஈழத்தமிழன்னை அதிகம் எதிர் பார்க்கின்ருள் என்பதை அவர்கள் மறந்து விடுகின் முர்கள். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பது போல, பல்கலைக்கழகத்திற் பணியாற்றும் தமிழரி ஞர்கள் கூட்டு முயற்சிகளிலே ஒத்துழைக்க முன் வருதல் அவசியம் . பல்கலைக் கழகத்தின் முதற் பேராசிரியராக விருந்த சுவாமி விபுலாந்த அடிக ளாருடைய பணி இவர்களுக்கு வழிகாட்டியாக அமையவேண்டும். அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட வித்துவான் (டிப்ளோமா) வகுப்புகள் கூட நிறுத் தப்பட்டு, எல்லை சுருங்கி வருகின்றது.
தனிப்பட்ட முறையில், பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை அவர்கள் கவிதை நூல்களையும், பல நாடகங் களையும், பல கட்டுரைகளையுந் தந்துள்ளார். அவரது காதலியாற்றுப் படை என்னுங் கவிதை நூல், பழைய நடையையும் புதிய எண்ணங்களையும் பிணைத் துள்ளது. மாணிக்கமாலை, சங்கிலிநாடகம், நானுடகம் ஆகியன அவருக்கு நாடகத் துறையிலுள்ள ஈடு பாட்டினைக் காட்டுகின்றன. 'நாஞடகத்திலிடம் பெற்றுள்ள 'உடையார் மிடுக்கு புதுப்போக்கினை
Page 111
76 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யுடையது. கிராமியக் கொச்சையை நாடகங்களிலே துணிந்து புகுத்தினர். இப்பொழுது, அவரது வழி யைப் பின்பற்றி பலரும் நாடகங்கள் எழுதி வரு கின்றனர். ஆனல், மாணிக்க மாலை இலக்கிய நடை யில் மிளிர்கின்றது. அஃது அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. ஈழத்து வாழ்வும் வளமும் அவரது கட்டுரைத் தொகுதியாகும். அவரது அறிவாற்ற லுக்கு அவர் எவ்வளவோ செய்திருக்கலாம்.
கலாநிதி சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, இலக் கியத் தென்றல், கலையும் பண்பும் ஆகிய நூல்களைத் தந்துள்ளார். பின்னவை இரண்டும் முஸ்லிம் மக் களுடைய ஆதரவைப் பெற்றுள்ளன. அவரது புத்தகங்களனைத்தும் பாடநூல்களைப் போன்றே காட்சி தருகின்றன. மட்டக்களப்புப் பகுதியில் பண்டுதொட்டே, மரபு வழி பேணி, தென்மோடிவடமோடிப் பாணிகளிலமைந்துள்ள நாட்டுக் கூத் துக்கள் ஆடப்பட்டுவருகின்றன. வட்டக்களரியி லாடப்படுவது இத்தகைய கூத்து முறையின் சிறப்பு அமிசங்களுள் ஒன்ருகும். இந்த மரபினைத் தகர்த்து, மேற்படி கூத்துக்களை (நொண்டி நாடகம் - கர்ணன் போர்) நவீன மேடைகளிலே சு. வித்தியானந்தன் அரங்கேற்றி வருகின்ரு ர். இத்தகைய புதிய சினி , மாக் கவர்ச்சி, மேற்படி நாட்டுக்கூத்துக்களின் தனித்துவத்தைச் சிதைக்கமாட்டதா என்பது சிந் தனக்குரிய விடயமாகும்.
வி. செல்வாகாயகம் அவர்கள் தமிழ் இலக்கிய வர லாறு, உரை நடை வரலாறு ஆகிய நூல்களைத் தந் துள்ளார்கள். இவ்விரண்டு நூல்களும் அவரது படிப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டாக அமைந் துள்ளன. Y
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 77
கலாநிதி ஆ. சதாசிவம், கருத்துரைக் கோவை என் னும் நூலைத் தந்துள்ளார். அஃது அவரது திறமை களை நிலைநாட்டத் தவறியுள்ளது. அவர் மரபு பற் றித் தெளிவான கருத்துக்கள் கொண்டவராவர். கொச்சைத் தமிழையே உலக வழக்கென்று சில ஆற்றலிலக்கியக்காரர் மலைவு கொண்டுள்ள நேரத் தில், மிகத் துணிச்சலுடன் மரபு பற்றித் தமது கருத்துக்களை ஆணித்தரமாக வெளியிட்டு, ஒர ளவு பயனையும் அறுவடை செய்துள்ளார்.
இலங்கைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளி யேறிய மாணவர்கள், ‘எங்களுக்குத் தமிழ் தெரியாது' என்று சொல்லிக் கொள்வதை ஒரு காலத்தில் பெருமையாகக் கருதினர்கள். இந்நிலை யில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும். தமிழ் போதன மொழியாக மாறி யுள்ளது மட்டுமே இம் மாற்றத்திற்குக் காரண மென்று சொல்லிவிட இயலாது. தமிழ் உணர்ச்சி வளர்ந்துள்ளது. பல்கலைக் கழக மாணவர், இளங்கதிரைத் தரமான பத்திரிகையாக வெளியிட்டு வருகின்றர்கள். தங்களது படைப்புக்களான சிறு கதைகளை அவ்வப்போது தொகுதிகளாக வெளி யிட்டு வருகின்றர்கள். கதைப் பூங்கா, விண்ணும் மண்ணும் ஆகிய தொகுதிகள் நமக்குக் கிடைத் துள்ளன. பெருமைப்படத்தக்க எழுத்தாளர் பரம் பரையொன்று பேராதனையிலே தோன்றி வருதல், மனங்குளிர்விக்குஞ் செய்தியாகும்.
GF GG "5 695 6T கொழும்புதமிழ்ச்சங்கம் தமிழிலக்கிய வரலாற்றில் 'சங்க்க்ாலம் என்று கூறப்படுகின்றது. நம்முன்னேர்கள் முச்சங்கங்கள்
F-23.
Page 112
78 - ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வைத்துத் தமிழை வளர்த்தார்களென்பது பொது வான நம்பிக்கையாகும். நான் ஈண்டு குறிப்பிடுஞ் சங்கங்களும் அத்தன்மை யுடையனயெனக் கருதத் தேவையில்லை. பொதுவாக, இலக்கிய ஆர்வத் தினை வள்ர்க்கவும், கருத்துப் பரிவர்த்தனைகளுக்குக் களங்களமைத்துக் கொடுக்கவும் பல சங்கங்கள் உழைத்திருக்கின்றன. சங்கங்கள் ஆற்றியபணிகளை இப்பகுதியிலே தொகுத்துக் கூறலாமெனத் துணி கின்றேன்.
பிரமயூரீ தி. சதாசிவ ஐயரவர்களின் அரிய உழைப்பினுல் நிறுவப்பட்ட ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம், கலைப்புலவர் நவரத்தினம் அவர் களின் முயற்சியினலே தோன்றிய கலாநிலையம், துடிப் புள்ள இளைஞர்களின் ஆர்வத்திலே தோன்றிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆகியன ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணியினை ஏலவே பார்த் தோம்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத் தினைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதனுடன் இணைந்து செயலாற்றி, இன்னும் அதன் இயக்க சக்தியாக உழைத்துவருந் தமிழறிஞர் சு. நடேசபிள்ளை அவர்களையும் நினைவிலிருத்திக் கொள்ளுதல் வேண்டும். ஈழநாட்டின் தலைசிறந்த ஆரசியல் ஞானியும், கல்விமானுமான சேர். பொன், இராமநாதன் அவர்களின் மருகரான அவர், பரமேஸ்வராக் கல்லூரியின் தமிழ் வித்துவான கச் சேர்ந்து ஈழத் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றத் தொடங் கியதிலிருந்து, இற்றை வரை அதன் மேன்மைக்காக உழைத்து வருகின்ருர், சுதந்திர ஈழத்தில், தென்னகத்தின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அநு
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 79
சரணையுடன், தமிழ் கூறும் நல்லுலகின் தமிழ் விழா ஒன்று யாழ்ப்பாணத்திலே நடந்தேறியது. அத் தமிழ்விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அவர் முன்னணியில் நின்று உழைத்தார். கதிர்காம நாதன் திருபள்ளி எழுச்சி என்கிற அவரது பாடல்கள் வெளிவந்த பொழுதே, அவரை ஒரு சிறந்த புலவராக ஈழம் அறிந்துகொண்டது. சமீபத்தில் வெளிவந்துள்ள சகுந்தலை வெண்பா அதனைச் சந்தே கத்திற்கிடமின்றி நிலைநாட்டி விட்டது. ஆழ்ந்த தமிழ்ப்புலமை யுடைய அவர், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சிப் பேருரைகளைப் பல அறிஞர்களும் புகழ்ந்துள் ளார்கள். அவர் பண்பான பேச்சாளர். அரசி யலிலும் ஈடுபாடுடைய அவர் இலங்கைப் பாராளு மன்றத்தின் பிரதிநிதிசபையின் அங்கத்தவ ராகவும், தபால்-தந்தி-வானெலிப் பகுதி அமைச்ச ராகவும் கடன் மை பார்த்துள்ளார். தற்பொழுது அவர் மேற் சபை (Senate) அங்கத்தவராவர்.
யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய தமிழ் விழாவின் வெற்றிக்கு உழைத்தவர்களுள் இன்னெரு வர் காலஞ்சென்ற கே. கனகரத்தினம் அவர்கள் ஆவர். அவர் அப்பொழுது கல்வி அமைச்சின் பாராளு மன்றக் காரியதரிசியாகக் கடன்மை பார்த்துக் கொண்டிருந்தார். -
1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழத்திலே பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்றின. இலங்கை யின் இடதுசாரி இயக்கங்களுடன் ஒத்துழைத்த கே. இராமநாதன், கே. கணேஷ், எம். பி. பாரதி போன்ருே ரால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தாபிக்கப்பட்டது. அவர்களால் நடாத்தப்
Page 113
80 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பட்ட பாரதி என்னுஞ் சஞ்சிகை இலக்கியத் துறையில் மார்க்ஸிசக் கண்ணுேட்டத்தை அறி முகப்படுத்தியது. அச்சங்கம் பல ஆண்டுகள் செயலற்றுக்கிடந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களான எழுத்தாளரால் அதற்குப் புத் துயிரூட்டப் பெற்றது. பிரேம்ஜி அதன் பொதுச் செயலாளராக்கப்பட்டார். அதன் கிளை யாழ்ப் பாணத்தில் நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் வேறு எழுத்தாளர் சங்கங்கள் செயலாற்ருத காரணத்தால், எழுத்தாளர் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு ஏற்றதாகப் பல கருத்தரங்குகளை அது ஏற்பாடு செய்து கொடுத்தது. இக்கருத்தரங்குகள் யாழ்ப்பாணத் திலும் கொழும்பிலும் நடாத்தப்பட்டன. அத் துடன், பெரியோர் ஞாபகார்த்த விழாக்களையும் அது நடாத்திற்று. சோமசுந்தரப் புலவரின் ஞாப கார்த்தமாக ஒரு கவிதைப்போட்டியினை நடத்திப் பரிசில்கள் வழங்கிற்று. 1961 ஆம் ஆண்டிற்கு முன்னர், கட்சி அரசியலை மறந்து, பல்வேறு தரப் பட்ட அரசியற் கோட்பாடுடையவர்களும் முற் போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளிலே பங்கு பற்றினர்கள். கொழும்பில் ஆடம்பரமாக ஸாஹிருக் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்ட முதலாவது மகா நாட்டில், எதிர்க்கருத்துப் பரி வர்த்தனைக்கு இடமளிக்க மறுத்ததன் காரண மாகவும், அஃது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளரது தொழிற் சங்கமே என்று நிரூபிக்கப் பட்டதனலும், பல அங்கத்தவர்கள் அதிலிருந்து விலகினர்கள். அச்சங்கம் புதுமை இலக்கியம் என்னும் விமர்சனச் சஞ்சிகையை மிகுந்த ஆர்வத் துடன் பிரசுரித்து வந்தது. அதன் அச்சுக் கூலி யிலும் பார்க்கக் கூடுதலான விளம்பரத் தொகை
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 8
யைக் கூட்டுறவு மொத்த விற்பனவுப் பகுதி செலுத்தி வந்தபோதிலும், அதனைத் தொடர்ந்து நடத்தாதது விசனிக்கத்தக்கதே! ஆரம்பத்தில் ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்துவந்த மேற்படி சங்கம் , பிற்காலத்தில் சாகித்திய விழாக்களைக் குழப்புதலையே தனது பிரதான இலக்கியப் பணி யாக வரித்துக்கொண்டது. 1962 ஆம் ஆண்டில், தமது சங்க அங்கத்தவர்கள் சாகித்திய விழாவிற் பேச அனுமதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டஞ் செய்தது; 1963 ஆம் ஆண்டில் சாகித்திய விழாவிற் கலந்துகொண்ட பேச்சாளர்களுக்கு முட்டை யெறிந்து அறிஞருலகின் வெறுப்பினைச் சம்பா தித்துக் கொண்டது. எழுத்தாளர் மத்தியிலே ஐக்கியத்தை உருவாக்க உழைத்தபொழுது நன்முக இயங்கிய சங்கம், அவர்கள் மத்தியிலே பிரி வினையை வளர்க்க முயன்றபொழுது தாழ்ந்தது.
மலாயாவில் தமிழன் என்னும் பத்திரிகை நடாத்திய வித்து வான் வ. மு. கனகசுந்தரம் அவர் களின் முயற்சியினுற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வளர்ந்து வந்தது. அது வருடாவருடம் தென்னக அறிஞர்களை அழைத்து விழாக்கள் நடாத்திற்று.
ஆ. க. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியினல் இலங்கை எழுத்தாளர் சங்கம் 1952 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்டது. இருப்பினும், அது செயற்பட வில்லை. பின்னர், எஸ். டி. சிவாகாயகம் அவர் களுடைய முயற்சியினுல் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. கொழும் பில் இயங்கிய இச்சங்கங்களுடன், சோ சிவபாதசுந்தரம், ஆ. குருசாமி, வி. லோககாதன் ஆகியோரது முயற்சியின் பயணுக இலக்கிய அன்பர் வட்டம் சில ஆண்டுகளாகக் கிரம மாகக் கூடிவந்தது. ܫ
Page 114
82 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம் பத்தில் வேகமாகச் செயற்படாவிட்டாலும், பிற் பகுதியில் நன்கு இயங்கியது. நாவேந்தன், முருகையன், சொக்கன், யாழ்ப்பாணம்-தேவன் ஆகி யோர் அதன் செயலாளர்களாகக் கடன் மையாற்றி ஞர்கள். தமிழ் எங்கள் ஆயுதம் என்னுங் கவிதை நூலை அது வெளியிட்டது. வானெலிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற மு. செல்லையாவைத் தகுந்தபடி கெளரவித்ததுடன், முதன் முதலாக ச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்களையுங் கெளரவித்தது. தென்னகத்து நல்லறிஞர்களும், எழுத்தாளர்களும் ஈழத்துக்கு வருகை தந்தபோது, அஃது அறிமுகக் கூட்டங்களையும் ஒழுங்கு செய்தது.
இந்த யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கமே, சென்ற வருடம் விரிவுபெற்று இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாறியது. அதன் தோற்றம் ஈழத்தின் பல பகுதி எழுத்தாளர் * களினலும் வரவேற்கப்பட்டது. அது கிழக் கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் சேர்ந்து தமிழ் விழா ஒன்றைக் கோலாகலமாகக் கொண்டாடியது. ஐநூறு ரூபா பரிசு வழங்கப் பட்ட சிறுகதைப் போட்டியை வெற்றிகரமாக நடாத்திற்று. பரிசு பெற்ற கதைகளையும், பாராட் டப்பெற்ற கதைகளையுஞ் சேர்த்து போட்டிக் கதை கள் என்னும் நூலை வெளியிட்டுள்ளது. சு. வேலுப் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு இலங்கை எழுத் தாளன் என்னும் தரமான இலக்கிய விமர்சன ஏடொன்றை மாதாமாதம் வெளியிட்டு வருகின் றது. தமிழ் விழாவின்போது அஃது அகில இலங்கை அடிப்படையில் இயங்கவேண்டும் என்கிற அபிப் பிராயம் பல பகுதி எழுத்தாளர்களாலுந் தெரி
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 83
விக்கப்பட்டு, அதன் பிரகாரம் ஒரு தீர்மானமும் நிறைவேறிற்று. இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் சாதனைகளிலே பெரும் பங்கு அதன் செயலாள ராகக் கடன் மை யாற்றும் யாழ்ப்பாணம்-தேவனைச் சாரும் எனக் கூறின் மிகையாகாது.
யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் எழுத்தார்வமிக்க இளைஞர்களாலே தொடங்கப்பட்டு, முறையாகக் கூட்டங்கள் நடாத்தி, அறிஞர்களை அழைத்துப் பேசச் செய்து, தனது அங்கத்தவர்களுடைய வளர்ச் சிக்காக உழைத்தது. அதன் அங்கத்தவர்கள் தற் பொழுது சர்வகலாசாலையிலும், பிற இடங்களிலும் இருந்து ஓரளவு தங்களுடைய திறமையைக் காட்டி வருகின்றர்கள். அது வெளியிட்டுள்ள ஆண்டு மல ரொன்று நல்ல முறையில் அமைந்துள்ளது. அது வெளியிட்ட கவிதைத் தொகுதியின் மூலம் அறி முகமான இளங் கவிஞர்கள் வளர்ந்து வருதல் மகிழ்ச்சியைத் தருகின்றது. யாழ் இளம் எழுத் தாளர் சங்கத்திலேற்பட்ட அரசியற் கருத்துவே ற் றுமைகள் காரணமாக இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம் ஒன்றுந் தோன்றியுள்ளது.
தீவுப் பகுதி எழுத்தாளர் சங்கமொன்றும் இயங்கி வருகின்றது. கவிஞர் தில்லைச்சிவன் அதன் செய லாளராகக் கடன்மை யாற்றுகின்றர்.
நாவேந்தனை நாயகமாகக் கொண்ட இலக்கிய இரசிகர் சங்கமும் இயங்கி வருகின்றது. கொழும் பில் இவ்வாரு ன ஓர் இலக்கிய இரசிகர் குழு பய னுள்ள வேலைகளைச் செய்து வந்தது. அதன் செய லாளர் க்ளாக கே. கனகரத்தினம், எம். ஏ. ரஹ்மான் ஆகிய இருவருங் கடன்மையாற்றினர்.
Page 115
84 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்படா விட்டாலும், குரும்பசிட்டி சன்மார்க்க சபையையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமுடைத்து. தமிழ்த் தொண்டர் கா. பொன்னையா அவர்களால் தொடங் கப்பட்ட மேற்படி சபை கடந்த இருபத்தொன்பது ஆண்டுகளாக பல இலக்கியக் கூட்டங்களை நடாத்தி வருவதுடன், பண்டிதமணி சி. க. வின் சைவ நற்சிந்தனைகள், ஈழத்து எழுத்தாளர் ஐவர் எழுதிய மத்தாப்பு, ஆ, தம்பித்துரை எழுதிய ஓவியக் கலை, சிறுவர் சித்திரம் என்பனவற்றையும் அது வெளியிட்டுள்ளது.
ஈழத்துப் பண்டிதர் கழகம், பண்டிதர்களுடைய நலன்களைப் பேணுவதுடன், புதிதாகப் பண்டிதர் கள் தோன்றுவதற்கும் பணியாற்றி வருகின்றது. பண்டிதர் செ. துரைசிங்கம் அவர்கள் அதன் செய லாளராவர். அதன் தலைவராகக் கலாநிதி ஆ. சதாசிவம் அவர்கள் வந்ததுடன், மரபினைப் பேணும் இயக்கத்தை அது தீவிரப்படுத்தி வரும் அதே நேரத்தில், மற்றும் ஆற்றலிலக்கியக்காரர்களுட னும் நேச உறவினை வளர்த்துள்ளது.
மட்டக்களப்பில், 1941 ஆம் ஆண்டளவில் கலை மன்றம் என்கிற தாபனந் தோன்றிற்று. பண் டிதர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களே அது பரிசில் வழங்கி ஊக்குவித்தது. வெளியூர் அறிஞர் களையும் அழைத்துத் தமிழ் விழாக்கள் கொண் டாடிற்று. அத்துடன் ஞாயிறு தோறும் பயனுள்ள ஆராய்ச்சி வகுப்புக்களை நடாத்திற்று. எப். எக்ஸ். சி. நடராசா அவர்கள் செயலாளராக இருந்த பொழுதுதான் அம்மன்றம் சுறுசுறுப்பாக இயங் கியது. துடிப்பு மிக்க இளைஞர்களால் ஆரம்பிக்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி | 85
கப்பட்ட வாலிபர் சங்கம் பெரிய அளவிலே ஒரு தமிழ் விழா நடாத்தியது.
இருப்பினும், எழுத்தாளர் சங்கம் 1960 ஆம் ஆண்டு வரையில் மட்டக்களப்புப் பகுதியிலே தோன்றவில்லை. மட்டக்களப்புச் சிவானந்த வாசி கசாலை மண்டபத்தில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு ஒன்றில் அ ர சி ய ல் வேற்றுமைகளைக் கடந்து, எழுத்தாளர் ஐக்கியத்தை வளர்க்க ஒர் எழுத்தாளர் சங்கந் தோன்றவேண்டிய அவசியத் தை எஸ். பொன்னுத்துரை வற்புறுத்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து மட்ட்க்களப்புப் பகுதியிலே பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்றலாயின. மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதய காலத்தில் எப். ஜி. ஜெயசிங்கம், மிகவும் உற்சா கத்துடன் உழைத்து, அதனை நல்ல நிலையில் வைத்தார். தற்பொழுது அன்புமணியைச் செயலா ளராகக் கொண்டுள்ள அது, விபுலாநந்த நினைவு தினத்தை ஒழுங்காகக் கொண்டாடி வருவதுடன், தமது அங்கத்தவர்கள் ஏதாவது போட்டிகளிலே கலந்து கொண்டு வெற்றியீட்டினல், அவர்களைப் பாராட்டியுங் கெளரவித்தும் வருகின்றது. மாண வர்களிடையே கட்டுரைப் போட்டிகளையும், பேச் சுப் போட்டிகளையும் நடாத்துகின்றது. காலஞ் சென்ற எம். எஸ். பாலு அவர்களின் ஞாபகார்த் தமாக அஃது ஒரு நாடகப்போட்டியினை நடாத்து த ல் குறிப்பிடத்தக்கதாகும்.
கரவாகுப் பற்றுப் பகுதியில் கல்முனைத் தமிழ்
எழுத்தாளர் சங்கம் தாபிக்கப்பட்டது. அதன் செய லாளர் வி. எம். இஸ்மாயிலாவர், அது தனது முதற்
.24--سF
Page 116
86 s ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பணியாக நாடகத்துறையில் எஸ். பொன்னுத் துரை ஆற்றிய தொண்டுகளுக்காக~அவரை ப்பொற் பதக்கஞ் சூட்டிக் கெளரவித்தது. பல புத்தக அறிமுகக் கூட்டங்களை நடாத்தியதுடன், இலங்கை யர்கோன் ஞாபகார்த்த தினத்தை மிகக் கோலா கலமாகக் கொண்டாடிற்று. அவ்விழாவின் சிறப்பு அம்சமாக ஒரு சிறுகதைப் போட்டியை நடாத்தி, முந்நூற்றைம்பது ரூபா பரிசில் வழங்கிற்று.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அக்க ரைப்பற்றுக் கிளையின் தலைவர் அ. ஸ. அப்துஸ் ஸமது ஆவர். அக் கிளை சித்திலெப்பை நினைவு தினத்தைக் கொண்டாடியது.
மஹாகவி, பாலேஸ்வரி ஆகியோர் திருகோண மலையிற் கடன்மையாற்றிய பொழுது, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் நற்பணி புரிந்து வந்தது. அப் பொழுது ஒரு தரமான மலர் வெளிவந்தது. மல ரின் கவிதைப் பகுதி அழகுற அமைந்திருந்தது. இருவரும் கொழும்புக்கு மாற்றலாகி வந்தவுடன் மேற்படி சங்கம் இயற்கை எய்திற்று.
கவிஞர் அண்ணலுடைய ஊக்கத்தினலே கிண் ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கொட்டியாரப் பகுதியிலே தமிழ் விழிப்பினை உண்டாக்கும் முக மாகத் தாபிக்கப்பட்டிருக்கின்றது.
துறை நீலாவணைக் கிராம நலனைப் பேணும் வகையில் ஜீவா ஜீவரத்தினம் என்பவரால் இலக்கியப் பெரு மன்றமொன்று நிறுவப்பட்டுள்ளது. அஃது ஒரு கவிதைப் போட்டியையும் நடாத்தியுள்ளது.
கிழக்கிலங்கையிலே சிதறிக் கிடக்கும் எழுத்தா ளர்களை ஒன்று திரட்டும் அவாவுடன் கிழக்கிலங்கைத்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 87
தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதன் தலைவர் எப். எக்ஸ். ஸி. நடராசா, பண்டித வர்க்கத் தின் நலன்களைப் பேணவும், அதன் பொதுச் )o) 3Fש லாளர் எஸ். பொன்னுத்துரை ஆற்றலிலக்கிய முயற்சிகளின் ஆக்கங் கருதி உழைக்கும் வகையிலும் அஃது அமைந்துள்ளது. இச் சங்கத்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தமிழ் விழா ஒன் நினை நடாத்தினர்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது மகாநாடு எழுத்தாளர்களைப் பிரித்தது என்ரு ல், தமிழ் விழா எல்லோரையும் ஒன்று சேர்த்து வைத்தது என்று சொல்லலாம். அது கிழக்கிலங்கைப் புத்தக சபையை நிறுவி, பழந் தமிழ் ஏட்டுப் பிரதிகளை அச்சு வாகனம் ஏற்றும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. عیہ ۔
பக்கீர்த் தம்பியின் உழைப்பின் பயனுகச் சம் மான் துறையில் கலாபிவிருத்திக் கழகம் நிறுவப்பட் டுள்ளது. அது உரை மலர் என்னும் நூலை வெளி யிட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கள் நடாத்தி, விமரிசையாக ஆண்டு விழாக்கள் கொண்டாடி வருகின்றது.
மட்டக்களப்பின் இளைஞர் மத்தியிலே கலை - இலக்கிய ஆர்வத்தினை வளர்க்க மட்டக்களப்புத் தமிழ்க் கலாமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது கிழக்கிலங்கையிலே கலை இலக்கியத் துறைகளிலே முன்னணியில் நின்றுழைக்கும் நான்கு பெரியார் களைப் பொற்பதக்கஞ் சூட்டிக் கெளரவித்தது. கவிதைத் துறையிற் புல வர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையும், வரலாற்றுத்துறையில் எப். எக்ஸ். ஸி. நடராசாவும், புனைகதைத் துறையில் எஸ். பொன் னுத்துரையும், பேச்சுத் துறையில் செ. இராச
Page 117
88 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
துரையும் கெளரவிக்கப்பட்டார்கள். அது மட்டக் களப்புக் கலைஞர்களைக் கொழும்பு இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திற்று. மீன்பாடும் தேனுடு தந்த தவப் புதல்வர் விபுலாநந்தரின் நினைவாக ஒரு சிலை யினை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இம் மன்றத்தின் உயிராகவும், இயக்க சக்தியாகவும் உழைத்து வருபவர் எஸ். எஸ். எம் யூசுப் (மட்டு நகர் சாகிபு) சாகிபு அவர்களாகும். அவர் ஒரு சிறந்த நாடக நடிகராக இருப்பதுடன், கலை இலக்கிய முயற்சிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவும், தன்னை விளம்பரப்படுத்தாது பின் சக்தியாக இயங் கும் உழைப்பாளராகவும் திகழ்கின்றர். பூரீகாந்தா வைச் செயலாளராகக் கொண்டு இயங்கிய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் முன்னேற்றச் சங்கம் பல கருத்தரங்குகளை நடாத்திற்று.
கதம்பம் ஆசிரியர் கே. வி. எஸ். மோகனைச் செய லாளராகக் கொண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் ஒன்று தாபிக்கப்பட்டது. அது தென்னகத்தின் குழந்தைக் கவிஞரான அழ. வள்ளியப்பாவைத் தரு வித்துக் கூட்டங்கள் நடாத்தியது. பிறிதொரு குழந்தை இலக்கிய எழுத்தாளர் சங்கம் பெயரள விலே தாபிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் இருக் கும் இன்னெரு சங்கம் கவிஞர்கள் சங்கமாகும்.
தமிழ் எழுத்தாளர் மன்றம் கொழும்பில் தாபிக் கப்பட்டுள்ளது. இதன் தலைவராகப் பண்டிதர் கா. பொ. இரத்தினமும், செயலாளராக சங்கரப்பிள்ளை யும் கடன்மையாற்றுகின்ருர்கள். இச்சங்கம் கருத் தரங்கங்கள் நடாத்தியதோடு பல போட்டிகளில் பரிசு பெற்ற ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதை களைத் தொகுத்து ஈழத்துப் பரிசுச் சிறு கதைகள் என் கிற பெயரில் வெளியிட்டுள்ளது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 189
வீரகேசரியில் வெளிவருந் "தோட்ட மஞ்சரி? யினல் மலைநாட்டைச் சேர்ந்த பல இளம் எழுத் தாளர்கள் தமது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகின்ருர்கள். மலையகத்தில் ஒரு கேந்திரமான எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து இரா. சிவ லிங்கம், பெரி. கந்தசாமி, செந்தூரன், செ. மு. கார் மேகம் ஆகியோர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்து வருதல் மகிழ்ச்சி தருஞ் செயலாகும். பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலே இளம் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றி வருதல் மலையகத்தின் இலக்கிய விழிப் புணர்ச்சியைக் காட்டுகின்றது.
கிராமத்திற்கு ஒர் எழுத்தாளர் சங்கம், ஆளுக் கோர் எழுத்தாளர் சங்கம் என்கிற வகையிலே எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பகையுணர்ச் சியையும் வளர்த்து வரும் ஒரு சூழலை அவதானிக்க முடிகின்றது. எழுத்தாளன் ஒவ்வொருவனும் தனது தனித்துவத்தை இலக்கியத்திலே நிலைநாட்ட விழை கின்ரு ன். எனவே, ஓர் எழுத்தாளன் பிறிதோர் எழுத்தாளனுடன் கருத்து மாறுபாடு கொண்டி ருத்தல் இயல்பாகும் ஆன லும், இந்த வேற்று மைகளிலே ஒற்றுமையை நிலைநாட்டுதலே சிந்தனை யாளரான எழுத்தாளரின் கடன்மையாகும் . ஈழம் தமிழ் என்கிற விரிந்த அடிப்படையிலே நமது எழுத்தாளர் சங்கங்கள் செயலாற்ற முற்பட்டால், மிகுந்த பயனை நாம் அறுவடை செய்துகொள்ள 6) fTLD .
பிறமுயற்சிகள்
இதுவரையில் நான் எழுதிய பகுதிகளுள் அடங் காது நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப் பற்றி, இந்தப் பகுதியிலே எழுதுகின்றேன்.
Page 118
90 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பிற முயற்சிகளைப் பற்றி நினைக்கும்பொழுது முதலாவது ஏ. ஜே. கனகரத்தினுவைப் பற்றிய நினைவுதான் வருகின்றது. சொற்ப காலம், ஈழத் தின் ஆங்கிலத் தினசரிகளுள் ஒன்ரு ன "டெயிலி நியூ'ஸின் ஆசிரியர் குழுவிலே கடன்மை யாற்றிய அவர், ஈழத்துத் தமிழ் கதாசிரியரின் படைப்புக் களை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். பொ. தம்பிராசா, சாந்தினி, டொமி னிக் ஜீவா ஆகியோரின் கதைகளை மொழி பெயர்த்து, அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிகை களிலே வெளிவரச் செய்தார். பொ. தம் பிராசா வின் தலைக் கொள்ளி என்னுங் கதை ‘இல ஸ்ரேட்டட் வீக்லி ஒவ் இண்டியா’வில் வெளியாயிற்று. தற் கால ஈழத்துச் சிறுகதைகள் என்னுந் தொடர் *ஒப்சேவர்' பத்திரிகையின் வாரப் பதிப்பில் வெளி வந்த பொழுது, சிங்களக் கதாசிரியர்களிலும் பார்க்க, தமிழ்க் கதாசிரியர்கள் ஒரு படி மேலே நிற்கின் ருர்கள் என்று நிரூபித்த பெருமை அவ ரைச் சாரும் . அந்த வரிசையில் இடம்பெற்ற தோணி (வ. அ. இராசரத்தினம்), தாலி (சொக்கன்), நிழல் (எஸ். பொன்னுத்துரை), செம்மண் (கனகசெந்திநாதன்) ஆகிய கதைகளை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் நல்ல விமர்சகருமாவர். தென்னகத்தார் தரிசித்த மெளனி யிலும் பார்க்க பிறிதொரு 'மெளனி’யைத் தமது மெளனி வழிபாடு என்னுங் கட்டுரையிலே நமக்குக் காட்டியுள்ளார். முறையான ஆங்கில அறிவும், மிகுந்த தமிழ்ப்பற்றுங் கொண்டுள்ள இளைஞரான அவரிடம் ஈழத்தமிழ் மாதா அதிகம் எதிர்பார்க்
சர்வதேசப் புகழ்பெற்ற நம் நாட்டு ஆங்கில எழுத்தாளர் அழகு. சுப்பிரமணியமாவர். அவரது
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 9
சிறுகதை உலகச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதில், ஈழத்தமிழர் பெருமைப்படலாம். அவ ரது பல கதைகளைத் தமிழாக்கும் முயற்சி நடை பெற்றுச் சில கதைகள் 'தினகரனிலும், “வீர கேசரி"யிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அவரது கதைகளைத் தமிழாக்கும் பணியில் முன்னணியில் உழைப்பவர் ஈ. ஆர். திருச்செல்வமாவர்.
சி. வி. வேலுப்பிள்ளை நாடறிந்த ஆங்கில எழுத் தாளருங் கவிஞருமாவர். அவரது ஆங்கிலப் படைப் புக்களைத் தமிழாக்கும் பணியினை, “டெயிலி மிரர்’ ஆங்கிலத் தினசரியிற் கடன்மையாற்றும் பொ. கிருஷ் ணசாமி மேற்கொண்டுள்ளார். வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம் ஆகியன மொழிபெயர்க்கப்பட்டுத் 'தினகரனில் வெளியாயின. சமீபகாலத்தில் தாமே தமிழிலும் எழுத முயலுகின்ருர், ‘வீரகேசரி’யில் வெளியான வீடற்றவன் குறுநாவல் அதற்குச் சான் ருக அமைந்துள்ளது. ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத் Sögu ..." (In Ceylons tea garden) GT6ð gey lb -2| 6)) rg/ ஆங்கிலக் கவிதைத் தொகுதி பலரது பாராட்டு தல்களைப் பெற்றது.
"என் கவுண்டர்" பத்திரிகை நடாத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று, ஈழத்தின் புகழை நிலைநாட்டியவர், நம் நாட்டு ஆங்கில எழுத்தாளரான த. ராமநாதனுவர். அவரது குறு நாவலொன்று கரந்தும் உயிர் வாழ்தல் வேண் டின் ." என்னும் மகுடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுத் 'தினகரனிலே பிரசுரமாகிற்று. அவரது கதைகளை மொழிபெயர்ப்பதில் காவலூர் ராச துரை ஆர்வங் காட்டி வருகின்ருர்,
Page 119
92 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ராஜா புரக்டர், இ. சி. ரி. கந்தப்பா ஆகிய ஈழத் தமிழர்களும் ஆங்கிலத்திலே சில அருமையான கதைகளை எழுதி நூலாக்கியுள்ளார்கள். அவர்களது கதைகளையும் மொழிபெயர்க்கும் பணியில் நமது தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபடுதல் நன்று.
தமிழ்க் கதைகளைச் சிங்கள வாசகருக்கும் , சிங்களக் கதைகளைத் தமிழ் வாசகருக்கும் அறி முகப்படுத்தும் வகையிற் சில கதைகளை மொழி பெயர்ப்பதில், பாராளுமன்ற மொழிபெயர்ப்பாள ராகக் கடன் மை யாற்றும் கா. சுப்பிரமணியம் ஈடு பட்டுள்ளார்.
சென்ற காலப் பெரியோர்களது பிரபந்தங்கள் மறுபிரசுரஞ் செய்து வெளிவந்துள்ளமை மற்ற தொரு முக்கிய நிகழ்ச்சியாகும். சிவசம்புப் புலவர் பிரபஞ்சத் திரட்டையடுத்து, முத்துக் குமாரகவிராசசேகர ரது பாடல்கள், சங்கர பண்டிதரது நூல்கள், முரு கேச பண்டிதரது பாடல்கள், ஆறுமுக காவலர்-குமார சுவாமிப் புலவர் என் போர து நூல்கள் எளிதிற் பெறத் தக்கனவாக இருக்கின்றன. ஈழகேசரிப் பொன்னையா ஞாபகார்த்த வெளியீட்டு மன்றம், கலைப் புலவர் கவரத்தினம் அவர்களின் ஈழத்தில் கலை வளர்ச்சி, சி. கதிரவேலுப் பிள்ளை அவர்களின் கிரேக்க நாட்டுத் தத்துவ தரிசனம் ஆகிய சிறந்த நூல்களை வெளியிட்டு ஈழத்திற்குப் பெருமை தேடித் தந் துள்ளது.
தம்மொழி அலுவலகம் பல அரிய ஆங்கில நூல்களைத் தமிழாக்கித் தரும் பணியில் ஈடுபட் டுள்ளது. தமிழிலே விஞ்ஞான பாடங்களைக் கற் பிப்பதற்கான கலைச்சொற்களை ஆக்கியும், உயர்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 93
வகுப்பு மாணுக்கருக்கு உபயோகமான நூல்களை
மொழிபெயர்த்தும் வருதல் நற்பணியாகும். பேரா
சிரியர்களாகிய ஆ. வி. மயில்வாகனமும், அ. சின் னத்தம்பியும் தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க வேண் டும் என்கிற இயக்கத்திற்குத் தலைமை தாங்கு கின்ரு ர்கள். இருப்பினும், தம்மொழி அலுவலகத் தினர் கலாநிதி எஸ். பொன்னையா அவர்கள் காட் டிய மொழிபெயர்ப்புக் கொள்கையைப் பின்பற்று வது பற்றி அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறு
பாடு நிலவுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு பதத்
தின் தமிழாக்கத்தை இங்கு குறிப்பிட விரும்பு கின்றேன். Pig-iron என்பதைத் தம் மொழி அலு வலகத்தினர் பன்றி இரும்பு என்று மொழிபெயர்த் துள்ளனர். தென்னகத்தார் வார்ப்பு இரும்பு என் னுஞ் சொல்லை உபயோகிக்கின்ரு ர்கள். பண்டைக் காலந் தொட்டே pig-iron என்பதற்குப் பாளம் என்னுஞ் சொல் வழக்கில் இருந்துள்ளது. இவ் வாறு அர்த்தச் செறிவுடைய சொற்கள் வழக்கில் இருக்கும்பொழுது, ஏன் இவ்விதமான அவதி என் பதுதான் நமக்குப் புரியவில்லை.
கூட்டு முயற்சிகளான இலக்கியங்கள் தோன்ற வேண்டுமென்னும் ஆர்வத்துடன் எஸ். பொன்னுத் துரை உழைத்து வருகின்ரு ர். எஸ். பொ.வுக்கு எதையும் புதிது புதிதாகச் செய்து பார்த்து, அதன் வெற்றி தோல்விகளின் மீது மீண்டும் முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் மிகுதியாகவுண்டு. அவரது எண்ணத்தில் பல பரிசோதனைக் களங்கள் மலர்ந்தன. முதன்முதலில் ஐந்து எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய மத்தாப்பு என்னுங் குறுநாவல்
வீரகேசரியில் பிரசுரமாயிற்று. மத்தாப்பின் ஐந்து
R-25.
Page 120
94 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
வருணங்களைத் தேர்ந்தெடுத்து, இ. காகராஜன், கனக. செந்திநாதன், சு. வேலுப்பிள்ளை, (சு. வே ), குறமகள், எஸ். பொ, ஆகிய ஐவரும் ஒவ்வொரு அத்தியா யத்தை எழுதி, மேற்படி குறுநாவலைப் பூர்த்தி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 'தினகரனில் ஏழு எழுத் தாளர் சேர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்தைப் பூர்த்தி செய்த வண்ண மலர் என்னுங் குறுநாவல் பிரசுரமாயிற்று.
நவரசங்களையுஞ் சித்திரிக்கும் ஒரு நாவல் கூட்டு முயற்சியாகத் தோன்ற வேண்டுமென்று எஸ். பொ. விரும்பினர். ஒவ்வோர் அத்தியாயத் திலும் ஒவ்வொரு ரசம் மேலோங்கி நிற்பதாக ஒன்பது அத்தியாயங்களில் மேற்படி நாவல் பூர்த்தி யாகலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. Ᏸ5fᎢ ᎧᎫ லுக்குக் கண்டிச் சரித்திரம் பகைப்புலமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டது. இவ்வாறே மணிமகுடம் என்னும் நாவல் தோன்றியது. அது வீரகேசரியிற் பிரசுர மாயிற்று. இ. நாகராஜன், கனக. செந்திநாதன், எஸ். பொ. ஆகிய மூவரும் முறையே மூன்று மூன்று அத்தியாயங்களை ‘மணிமகுடத்தில் எழுதினர்கள்.
இப் பரிசோதனை முயற்சிகளிலே யாழ்ப் பாணத்து எழுத்தாளர்களே பங்குபற்றினர்கள். முழுக்க முழுக்க மட்டக்களப்பு எழுத்தாளர்களைக் கொண்டு ‘கோட்டைமுனைப் பாலத்திலே ' என்னுந் தொடரை தினகரனுக்காக எம்.ஏ. ரஹ்மான் தயாரித் தார். மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு, கோட்டை முனை ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைப்பது கோட்டை முனைப் பாலமாகும். அப்பாலத்தில் நிக ழுஞ் சம்பவங்களை வைத்து, இத்தொடரில் கட்டு
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 95
ரைகளும், சிறுகதைகளும், நடைச் சித்திரங்களும் இடம்பெற்றன. இத்தொடரில் பழம் எழுத்தாள ரின் எண்ணிக்கைக்குச் சமமான புதுமுகங்களும் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டன. ரஹ்மான்
கிழக்கிலங்கையின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்குச் செய்துள்ள சேவை மகத்தானதாகும். அரசு வெளி யீடு, ரெயின்போ பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் நிரு' வாகியான அவர், கிழக்கிலங்கை எழுத்தாளரது எழுத்துக்களை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்டார்; அரும்பாடுபடுகின்றார். கவிதை சிறுகதை ஆகிய ஆற்றலிலக்கியத் துறைகளிலே கிழக்கிலங்கை எழுத்தாளர் முதன் முதலில் பூரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெறும் வகையில் புலவர்/மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் பகவத்கீதை வெண்பா'வையும், வ. அ. இராசரத்தி னத்தின் "தோணி'யையும் அவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டுத் துறையில் அவர் அக்கறை காட்டுவதற்கு, அவர் எழுத்தாளராக இருப்பதுவே பிரதான காரணமாகும். 1950ஆம் ஆண்டில், திருச்சி ஷாஜஹான் பத்திரிகையிற் சமயக் கட்டுரைகள் எழுதி முஸ்லிம் எழுத்தாளர் வரிசையிற் சேர்ந்து கொண்ட அவர், தற்காலத்தில் உருவகக் கதைத் துறையிலேயே தமது ஆற்றல்களை வெளிப்படுத்து கின்ரு ர். தினகரன் நடாத்திய உருவகக் கதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ருர். பல நல்ல உருவகக் கதைகளை அவ்வப்பொழுது எழுதியுள் ளார். ஈழம் பெருமைப்படும் வகையில் மரபு என் னும் உருவகக் கதைத் தொகுதியைத் தந்துள்ளார். சிறுவர் இலக்கியத் துறையிலும் ஈடுபாடுடைய அவர், 'இளமைப் பருவத்திலே! என்னும் நூலைச் சிறுவருக்கேற்ற முறையில் மிக அழகாக அமைத்து வெளியிட்டார். இலங்கை ள்முத்தாளர் சங்கம்
Page 121
ஊர்ப் பொதுமன்றுகள் 7
இணுவையூரின் கல்வி வளர்ச்சிக்குத் துணை யாக இருப்பவை பாடசாலைகளும் படிப்பகங்களு மாகும். அந்த வகையில் நாவலருடன் உறவுபூண்ட திரு. வெங்கடாசல ஐயரால் தோற்றுவிக்கப் பட்டுப் பின் திரு. அம்பிகைபாகரால் பொறுப் பேற்கப்பட்டு அம்பிகைபாகர் பள்ளிக்கூடம் என வழங்கும் சைவப்பிரகாச வித்தியா சாஃலயையும் திரு. அப்பாக்குட்டியர் பெயரால் வழங்கும் அப் பாக்குட்டியர் பள்ளிக்கூடம் என்ற சைவ மகா ஜன வித்தியா சாஃலயையும் அதன் அண்மையில் உள்ள வேதப்பள்ளிக்கூடம் என வழங்கும் அமெ ரிக்கக் கிறிஸ்தவ இயக்கத்தினரால் (மிசன்) நடத் தப்பட்ட ஆரம்பப் பாடசாஃலயையும்; இணு விலின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனங்க ளெனலாம்.
அம்பிகைபாகர் பள்ளிக்கூடமான சைவப் பிர காச வித்தியா சாலை இணுவிலின் தெற்கில் பர ராசசேகரப் பிள்ளையார் கோயிலுக்கும் இணு விற் கந்தசுவாமி கோயிலுக்கும் இடையில் அமைந்
離蘇 :
歴
s
அஞ்சல் நிலையம்
Page 122
98 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
நடிக்கவும் வல்லவர். மற்றும் வி. என். பாலசுப்பிர மணியம், பி. இராமலிங்கம், திருமதி செளந்தரி இராம சாமி ஆகியோரும் நல்ல வானெலி நாடகங்க எழுதி வருகின் ருர்கள்.
இ. இரத்தினம் அவர்கள் பாஒதல் என்கிற அரங் கினை ஒழுங்கு செய்தார். அதற்கான விளக்கக் கட்டுரையும் எழுதியுள்ளார். 'ஓதல்' என்னுஞ் சொல் தமிழ்ச்செவிகளுக்குப் பொருந்துவதாக இல்லை. நாம் பண்டு தொட்டு வேதங்களைத் தாம் ‘ஓதி வருகின்றே ம். மரபு வழியாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நால் வகைப் பாக்கள் உள. அவற்றை நாம் பாடலாம். ஆங்கிலத்தில் Poetry என்பதை Recite புண்ணு வார் கள் (செய்யுள்களை ஒப்பு’விப்பார்கள்). Song (பாட்டு) என்பதைப் பாடுவார்கள். இவற்றினை ஒன்று சேர்த்து, பாட்டை 'ஓதல்' என்று குழப்பு `வதிலே அர்த்த மிருப்பதாக எனக்குப் படவில்லை.
சாகித்திய மண்டலம்
பாரதநாட்டிற்குச் சுதந்திரங் கிடைத்த அதே ஆண்டில், சோல் பரி அரசியல் திட்டத்தின் படி தேர்தல்கள் நடைபெற்றன. 1948 ஆம் ஆண்டில், ஈழத்துக்குச் சுதந்திரம் வழங்கப்பெற்றது. இருப் பினும், பொருளாதார-நிருவாக அமைப்புக்களிலே எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஈழத்தின் சுய மொழிகள் பாடசாலைகளிலே கட்டாய பாடமாக் கப்பட்டிருந்தாலும், ஆங்கில மொழியே முதன் மொழியாகக் கொள்ளப்பட்டது.
மொழிக் கொள்கையைப் பொறுத்த வரையில் 1956 ஆம் ஆண்டில், பெரும் மாறுதலேற்பட்டது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 99
தமிழுக்குஞ் சிங்களத்திற்குஞ் சம உரிமைகள் என்னுங் கொள்கை அரசியல்வாதிகளாற் கைவிடப் பட்டது "சிங்களத்தை ஆட்சி மொழியாக்கி, தமிழை வட-கிழக்குப் பகுதிகளின் பிராந்திய மொழியாக்குவேன்" என்று பிரசாரஞ் செய்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தலை ைமயிற் போட்டியிட்ட அபேட்சகர்கள் பெருந் தொகையினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதனல், அவர் பிரதமரானர். தேர்தற்கால வாக்குறுதி களைப் பேணும் முகமாக அவர் பல காரியங்களை மேற்கொண்டார். அவற்றுள் இலங்கைக் கலைக் கழகம், பூரீலங்கா சாகித்திய மண்டலம் ஆகிய வற்றை நிறுவியமை குறிப்பிடத் தக்க செயல் களாம் .
அவை நிறுவப்படுவதற்கு ஒரு மாமகத்திற்குச் சற்று முன்னராக, இலவசக் கல்விமுறை அமுலுக்கு வந்துவிட்டது. இதனுற் படித்த இளைஞர் பட்டாள மொன்று - குறிப்பாகச் சுயமொழிகளிலே தேர்ச்சி பெற்ற இளைஞர் பட்டாள மொன்று - தோன்றியது. அவர்கள் வாசிப்புப் பழக்கங் கொண்டவர்கள். அவர்களுடைய தேவையை ஈடுசெய்யும் வகையிற் சுயமொழி நூல்கள் பெருமளவில் விற்பனையாயின. சிங்கள மொழி நூல்களை வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் இயலாது. விகிதாசாரத்திற்கு ஏற்றதாகவேனும் ஈழத்திலே தமிழ் நூல்கள் பிரசுர மாகாததற்குத் தென்னிந்தியத் தமிழ் நூல்களின் இறக்கு மதியும் ஒரு காரணம் என்பது மறுப்பதற் கில்லை .
பிரசுரமாகும் ஈழத்து ஆசிரியர்களது நூல்களை ஏழு துறைகளிலே வகுத்து, ஒவ்வோர் ஆண்டும்
Page 123
200 - ஈழத்து இலக்கிய வளர்ச்சி
அவ்வத்துறைகளிலே வெளிவருந் தரமான நூல் களுக்கு ஆயிரம் ரூபா பரிசு வழங்கத் திட்ட மொன்று வகுக்கப்பட்டது. சிங்கள மொழி நூல் களைப் போலவே, தமிழ் நூல்களுக்கும் ஏழு பரிசு கள் வழங்கத் தீர்மானித்தமையை இருள் வானிலே தோன்றிய ஒளிரேகை யென்றே சொல்லல் வேண் டும். தமிழ் மொழியின் நலன்களைக் கவனிக்கும் வகை யில், அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியிற் கடன் மை யாற்றிய சங், பிதா. சேவியர் தனிநாயகம் அவர்கள் முதன்முதலாக பூரீ லங்கா சாகித்திய மண்டல உறுப்பினராக நியமிக் கப்பட்டார். தனிநாயகம் அவர்கள் ஈழத்துப் புத்திர ராயினும், தென்னகமும் மலாயாவுமே அவரது ஆற்றல்களைப் புரிந்து, உரிய மதிப்பளித்துப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. அவர் தற்பொழுது மலாயா நாட்டிலே கீழைத்தேய மொழிகளின் பேராசிரியராகப் பணிபுரிகின் ருர், 1959 ஆம் ஆண் டிலே வெளிவந்த தமிழ் நூல்களுக்கு ஒரு பரிசு தானும் வழங்கப்படவில்லை. பிரசுரமான எந்தத் தமிழ் நூலும் பரிசுக்குத் தகுதியானவையல்ல என்று மேற்படி நூல்களைப் பரிசீலனை செய்தோர் அபிப்பிராயந் தெரிவித்தமையே இதற்குக் காரண மாகும்.
அடுத்த ஆண்டில் நிலைமைகள் மாறின. நான்கு தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டலப் பரிசுகள் வழங்கப்பட்டன. பண்டிதர் சு. அருளம்பலனுரின் பதிற்றுப் பத்து ஆராய்ச்சிப் பதவுரை, சோ. சிவபாத சுந்தரத்தின் புத்தர் அடிச்சுவட்டில், கி. லக்ஷமண ஐய ரின் இந்திய தத்துவஞானம், டொமினிக் ஜீவாவின் தண்ணிரும் கண்ணிரும் ஆகியனவே பரிசு பெற்ற நூல் களாம். இந்நிகழ்ச்சி, எழுத்தாளர் மத்தியில்,
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 20
சாகித்திய மண்டலப் பரிசு பெறும் நோக்கத்துடன், தமது புத்தகங்களைப் பிரசுரிக்கவேண்டும் என்கிற சுறுசுறுப்பினை ஏற்படுத்தியது.
1961 ஆம் ஆண்டில் வெளியான நூல்களுள், சோ. கடராசனின் இதோபதேசமும், கலாநிதி சு. வித் தியானந்தனின் கலையும் பண்பும் ஆகிய இரு நூல் களுமே பரிசுகளுக்குரியனவாகத் தெரிவு செய்யப்
பட்டன.
1962 ஆம் ஆண்டிற் பிரசுரமான நூல்களுள் ஆறு நூல்கள் பரிசுகள் பெற்றன. கலாநிதி கைலாச காதகுருக்களின் வடமொழி இலக்கிய வரலாறு, புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் பகவத்கீதை வெண்பா, எப். எக்ஸ். ஸி. நடராசாவின் மட்டக்களப்பு மான்மியம், வ. அ. இராசரத்தினத்தின் தோணி, த. சண்முகசுந்தரத் தின் வாழ்வுபெற்ற வல்லி, ஏயாரெம் ஸ்லீமின் ஈழத்து முஸ்லிம் புலவர்கள் ஆகியனவே அந்நூல்களாம்.
கலாநிதி ஆ. சதாசிவம் சாகித்திய மண்டலத் தின் உறுப்பினராகிய பின்னர்தான், சாகித்திய மண்டலத்தின் நடவடிக்கைகளைப் பற்றி வாசகரும் அக்கறை காட்டத்தொடங்கினர். அதன் நடவடிக் கைகள் ஏதோ சில அங்கத்தவர்களுடைய இரகசி யக் கூட்டங்கள் என்கிற நிலை மாறி-பெரும் மணி தரின் ஏக பாத்தியதையான நிறுவனம் என்கிற நிலை மாறி-பொதுசன அபிப்பிராயப் பரிவர்த்தனை களும் நடக்கத் தொடங்கின. தமிழ்ப் பிரதேசங் களிலே தமிழ் சாகித்திய விழாக்கள் நடத்தும் பொறுப்பினைக் கலாநிதி சதாசிவம் மேற்கொண்டி
.26س--F
Page 124
202 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ருந்தார். யாழ்ப்பாணத்தில் இரு தடவைகள் இத் தகைய விழாக்கள் நடந்தேறி விட்டன.
தரமான நூல்கள் தோன்றுவதற்குத் தகுதி யான ஊக்கமுந் தேவை. அத்தகைய விரும்பத் தக்க ஊக்கத்தையாவது சாகித்திய மண்டலப் பரிசுத் திட்டம் அளித்து வருகின்றது என்னும் உண்மையை மறுப்பதற்கில்லை. இப் பரிசுத் திட்டம் அளித்துள்ள ஊக்கத்தினல், அடுத்த பத்து ஆண்டு களுக்கிடையில் குறைந்தது ஆயிரம் நூல்களாவது பிரசுரிக்கப்படலாம். அவற்றுள் உலக இலக்கியத் தட்டில் நிற்கக்கூடிய பத்து நூல்களாவது தேறுதல் சாத்தியமாகும். s
சாகித்திய மண்டலம் கலைப் பூங்கா என்னும் அரையாட்டைச் சஞ்சிகையை வெளியிட்டது. கலாநிதி ஆ. சதாசிவம் அதனை நடத்தும் பொறுப் பினை மண்டலத்தின் சார்பாக ஏற்றுக்கொண்ட திலிருந்து, ‘கலைப் பூங்கா’ கிரமமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
சாகித்திய மண்டலத்தின் தமிழ் உறுப்பினர் கள் தமிழ் வளர்ச்சி ஒன்றினையே கருத்திற்கொண்டு, சொந்த விரோத - குரோதங்களுக்கு இடமளிக்காது உழைப்பார்களேயானல், எவ்வளவோ காரியங் களைச் சாதித்தல் முடியும். இலங்கைக் கலைக்கழ கத்தின் பிரசுர சபை எவ்வளவோ சாதித்திருக் கலாம். இருப்பினும், இங்கு குறிப்பிடும் அளவிற்கு எதையுமே அது சாதிக்கவில்லை. நாடகக் குழுவின் சிபார் சிற் சென்ற ஆண்டுகளில் பரிசுபெற்ற நூல் களைக்கூட அஃது இன்னமும் பிரசுரிக்க பில்லை.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 203
எனவே, சாகித்திய மண்டல உறுப்பினர்கள் பொறுப்புணர்ச்சியுடன் பல வழிகளிலும் உழைக்க முன் வருதல் வேண்டும். திருக்குறள், மிஸி ஹாமி யினுற் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டமை மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும். நமது ஆற்றலிலக் கியப் பெருமைகளைச் சிங்கள மக்கள் அறியக்கூடிய தாகவும், அவர்களுடைய வளர்ச்சியை நாம் அறி யக் கூடியதாகவும் மொழிபெயர்ப்பு வேலைகளை மண்டலம் ஊக்குவிக்கலாம். ஈழத்தின் இலக்கிய முயற்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூல் களாக்கி, அவற்றைச் சர்வதேச அரங்கிற்கு அறி முகஞ் செய்து வைக்கலாம். தக்கவர்களை அமர்த்திப் பூதந்தேவனுர் காலந் தொட்டு, இற்றை வரை யிலுமுள்ள ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவான முறையில் எழுதலாம். ஆண்டு தோறும் வெளியாகும் மிகச் சிறந்த கதைகளைத் தொகுத்தும், கவிதைகளைத் தொகுத்தும் எழுத் தாளரது ஆர்வத்தைத் தூண்டலாம் . செற்கிடங் கிலே அழியும் நிலையிலுள்ள ஈழத்துப் பழம் புல வர்களின் இலக்கிய ஆக்கங்களை நூலுருவிற் கொணர்ந்து, நமது பாரம்பரியத்தின் தொன்மை யையுஞ் செழுமையையும் பாதுகாக்கலாம். மண்ட லத்தின் கவனத்திற்கு மேற்படி யோசனைகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
Page 125
திருக்கடைக்காப்பு
*ழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் இம்மணி மண்டபத்துட் பிரவேசஞ் செய்து, அங்கு தமிழ்ச் சுடர் மணிகளாய் விளங்குவோரையும், ஒளிவிளக் காய்ப் பிரகாசிக்கும் பேணு மன்னர்களையுந் தரி சித்து, 1922 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை அவர்கள் ஈழத்து இலக்கிய உலகிற் சாதித்த சாதனைகளைக் கண்டு, ஓரளவாவது மனநிறைவு பெற்றிருப்பீர்களென எண்ணுகின்றேன்
இம் முயற்சிகளைப் பற்றியும், இம் முயற்சி களுக்குக் கருவாயமைந்த எழுத்தாளர் பெருமக் களது கடந்த காலப் படைப்புக்கள் பற்றியும் பல்ர் பலவாறு கூறலாம். ‘பூ! கடந்த நாற்பதாண்டு களிலே ஈழஞ் சாதித்த சாதனைகள் இவைதாமா? இவைகளில் மண மலர்கள் ஒன்று கூட இல்லையே; எல்லாமே முருக்க மலர்கள்தாம் என்று மனம் போன போக்கில் ஏளனஞ் செய்யலாம். அதற்கு மாருக, "ஆகா! என்ன அதியற்புதமான முயற்சி கள்; அந்தக் கால மல்லவா பொற்காலம்’ என மனம்போன போக்கிற் பாராட்டல்ாம். இவை அந்தந்த வகை விமர்சகர்களின் மனப்பாங்கினைப்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 205
பொறுத்தவை. மேலெழுந்த வாரியாக, எதனையும் Lu Li Luftgil, ஆளைப் பார்த்தே விமர்சிப்போர் - மேஞட்டு விமர்சனப் படிக்கல் கொண்டு, நம் நாட்டு நூல்களை எடை காணும் விமர்சகர்கள்பற்றி எமக்கு எதுவித அக்கறையுமில்லை; அவர் களுக்கு இந்நூல் நிச்சயமாகப் பயன்பட மாட்டாது. எதனையும் நின்று நிதானித்து, கடந்த கால இலக் கியப் போக்கை காய்தலுவத்தலின்றிக் காண விரும்புவோர்க்கு இந்நூல் பல வகையிலும் வழி காட்டலாம். அன்றியும், எதிர்காலச் சந்ததியினர் தம் நாட்டு இலக்கியங்களின் தராதரத்தை நிருண யித்துக் கொள்ளவும் இஃது உதவியளிக்கலாம்.
இந்த இடத்தில் ஒன்றை மாத்திரங் கூறமுடி யும். இந்நூலிலே காட்டப்பட்டுள்ள ஈழத்து இலக் கிய கருத்தாக்களின் படைப்புக்களில் எவையெவை காலவெள்ளத்தோடு எற்றுண்டு செல்லாது, ஞான சம்பந்தர் ஏடுகள் வைகையாற்றில் எதிரேறியமை யைப் போன்று, எதிரேறிச் சென்று வாழுமோ அவையவை இலக்கியங்களாக வாழும்; அவைகளே வாழும் இலக்கியங்கள்; எதிர்காலச் சந்ததியின ரின் முதுசொமுமாகும்.
ஆனல், எவையெவையெல்லாம் நின்று நிலைத்து வாழும் என்று சொல்லமுடியாமையால் அவற்றை அலட்சியப்படுத்திவிட முடியாது. பொருளே இல்லை யாகிவிட்ட பிறகு, எதிர்காலம் பொருளின் தரத் தையோ, நிலைபேற்றையோ உணரமுடியாது. அஃது இன்மையுள் உண்மையைத் தேடியவாரும் . அத ஞல், இக்காலப் படைப்புக்கள் எல்லாம் அச்சு வாகனமேறி நூல் வடிவு பெற்று, நிகழ்கால வாச கன் கைகளில் ஒப்படைக்கப்படல் வேண்டும். அதன்
Page 126
206 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
பின்னர்தான் வாழும் இலக்கியம் எது என்பது நிர்ணயிக்கப்படும். பத்திரிகை எழுத்துக்களைக் கொண்டே வாசகன் எல்லாவற்றின் எல்லாவற் றையும் இனங்கண்டு கொள்ளுதல் சாத்திய மன்று. நூல் வடிவு பெரு தவரையில், கடல் கடந்து வாழுந் தமிழ்க் குலம் ஈழத்து இலக்கிய வளம் பற்றி உணர வும் வாய்ப்பு ஏற்படாது. எனவே, இன்று நம்மு ன் னுள்ள அவசியமும் அவசரமுமான தமிழ்த் தொண்டு, ஈழத்து இலக்கிய கருத்தாக்களின் படைப்புக்களை நூல் வடிவிற் கொணர்வதே.
ஈழத்திலுள்ள சாதாரண எழுத்தாளன் இன்று வரையிலே தன் படைப்புக்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. ஏதோ ஒருவகை அருட்டுணர்வால் எழுதினன்; ” எழுதுகின்றன். கூலியில்லை; பொருள் வருவாயில்லை. இந்நிலையில் அவனே தனது படைப்புக்களை நூல் வடிவிற் கொண்டு வரவேண்டுமென எதிர்பார்த்தல் அநியாயம் ; இலக்கியத்துக்குச் செய்யுந் துரோகம். அதனுடன், அவன் தனது படைப்புக்களை நூல் வடிவிற் கொணர்ந்தாலும் விற்பனவு வசதியில்லை. ஈழத்து வாசகனுடைய மனேநிலை ஈழத்துப் படைப் புக்களை அநுதாபத்தோடு நோக்குமளவிற்கு மாறி யுள்ளதேயன்றி, வெளியிடங்களிலிருந்து வரும் நூல்களைப் போற்றுமளவிற்கு-மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு-வளரவில்லை. வாசகனின் அநுசரணையில் லாத எந்த நூலும் வியாபார ரீதியில் நட்ட மடையும். எனவே, ஈழத்து இலக்கியம் வளர்வது, நூல்கள் பல வெளிவருவது என்பனவெல்லாம் வாசகனிடத்தே தங்கியுள. வாசகனின் அநுதாபத் தோடு நம் நாட்டுப் புத்தக வியாபாரிகளின் கூட் டுறவும் வேண்டப்படுகின்றது. சமீப காலத்தில்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 2O7
நம்நாட்டுப் புத்தக வியாபாரிகள் ஈழத்து நூல் களுக்கு உரிய மதிப்பை வழங்குவதைக் காணும் போது மனங் குளிருகின்றது.
வருடாவருடம் பாட நூல்களை மாத்திரம் வெளியிட்டு ஆதாயமடையும் புத்தக வெளியீட்ட கங்கள் தமிழ்த்தொண்டு கருதியாவது வருடத்தில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளி யிட்டு உதவுதல் வேண்டும். அதனல், அவர்கள் எவ்வகையிலும் இழப்படைய மாட்டார்கள். வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், அரசு வெளியீடு, கலா நிலையம், கலைவாணி, ஆசீர் வெளியீடு, ஆத்ம ஜோதி வெளியீடு என்பன இத்துறையில் ஈடுபட்டுள்ளமை பாராட்டத்தக்க செயலாகும். இவற்றின் இவ் வகை முயற்சி வளர்ச்சியடைவதோடு, இவற்றை ஏனைய பதிப்பகங்களும் பின்பற்றி நடத்தல் வர வேற்கத் தக்கது. பொது நூல் நிலையங்களும், கல் லூரி நூல் நிலையங்களும் ஈழத்து எழுத்தாளரது படைப்புக்களை வாங்கிப் பொதுமக்களிடத்தும் மாணுக்கரிடத்தும் அவை பரவும் வகை செய்தல் வேண்டும். பாடசாலைப் பரிசளிப்பு வைபவங்களுக்கு ஈழத்து எழுத்தாளரது நூல்களை ஆதரித்தல் வேண்டும். -
‘ஈழத்து நூல்களாக என்ன இருக்கின்றன? இங்கு யார் எழுதுகின்றர்கள்?’ என்று பிறநாட்டு இலக்கிய மோகங் கொண்ட சிலர் வெகு அலட் சியமாகக் கேட்பதை நாம் அறிவோம். அதனல், ஈழத்து இலக்கிய வேகம் தடைப்பட்டுத் தேங்கி விடப் போவதில்லை. அந்த அடிமை மனப்பாங்கின் குரல் கேட்டு நாம் தளர்ச்சியடையத் தேவையில்லை. சென்ற நாற்பது ஆண்டுகளில்-குறிப்பாகக் கடந்த
Page 127
208 ஈழத்து இலக்கிய வளர்ச்சி
ஐந்து ஆண்டுகளில்-இருபது சிறுகதைத் தொகுதி கள், சில கவிதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள், நாடகங்கள், பொது நூல்கள் என்பனவற்றை நாம் பெற்றிருக்கின் ருேம். இக் கணக்கெடுப்பில் வெற்ருர வாரஞ் செய்வோ ரின் பங்கு மிகக் குறைவு என்பதிலும், இல்லை யென்பதே பொருத்தமானது. எனவே, ஈழத்து இலக்கியத்தோடு எவ்வகைத் தொந்தமு மற்ற அவர்களது பேச்சு நமக்கு வேண்டாம்.
இறுதியாக, ஒன்று கூற விழைகின்றேன். ஈழத்தில் இலக்கியம் வளர்ச்சியுற வேண்டுமானுல், சாகித்திய மண்டலம், எழுத்தாளர் சங்கங்கள், நூல் நிலையங்கள், புத்தக விற்பனையாளர்கள் எல் லோரும் ஒருமித்து, இலக்கியப் பணியிற் கருத்துக் கொண்டு, நூல்களை வெளியிட முன் வருதல் வேண்டும். வாசகன் மத்தியில் அவற்ற்ைத் தக்க முறையில் அறிமுகஞ் செய்து, அவனது சுவையை வளர்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்து. இலக்கிய முயற்சிகள் மேன்மேலும் ஓங்கி வளரும்.
Page 128
Page 129
FFழகேசரி நா கள் பிறந்த குரு ப் ஆண்டு பிறந்த சோ. சிவபாதசுந் பிலே எழுத்துத் : திருநெல்வேலி ை பபிலே பண்டிதமணி டம் படித்து இலக்!
சிறுகதை நா துறைகளில் அவர்
எக்கிய விமர்ச சய்த சேவை பு பேணு மன்னர்கள் ! முகம் செய்து வைத் கஃ நம்மு ன் கT கதை முத்துக்களே !
அவரது நூல் ஒரு வளர்பிறை, மூ கவிமலர்கள் என்ப றன. மத்தாப்பு ே யக்கலே, சிறுவர் சி அவர் வெளியிட்ட மஞ்சரி 3, 4, 5 என் வேருெரு வருடன் ளோர். தமிழாசிரிய
t நூல்களே சேர்த்து வைத்தி
"எழுத்து'ப் அவரைப்பற்றி எழு "கனக, செந்தித வாசிக்சாஃப்".
CCVP.R. PRTFTET st"
231 LENDFT
பொன்னேயா அவர் ம்பசிட்டியில், 1916ஆம் கனக, செந்திநாதன், தரத்தின் அரவஃணப் துறை யுட் புகுந்தவர். ர வாசிரிய கலாசாலே ரி சி. கணபதிப்பிள்ஃாயி கிய இரசனே பெற்றவர்.
வல், நாடகம் ஆகிய * முயன்றிருந்தாலும் னத் துறையில் அவர் மகத்தானது. ஈழத்துப் நாற்பது பேரை அறி த்து, ஈழத்து ஒளிவிளக்கு ட்டி, கவிதைக் கடலில் எமக்கு அளித்தவர்.
களாகக் கவிதை வானில் பன்ருவது கண், ஈழத்துக் ன வெளிவந்திருக்கின் சவநற்சிந்தனேகள், ஓவி த்திரம் என்பனவற்றை ருக்கின்ருர், இலக்கிய பனவற்றைக் கூட்டாசுசேர்ந்து எழுதியுள் பராயுள்ள அவர் ஏராள யுஞ் சஞ்சிகைகளேயுஞ் ருக்கிரு ர். பத்திரிகையில் ஈழத்தான் ழ திப ஒரு வசனம் இது: ாதன் ஒரு நடக்கும்
T T.E. R. T. NF-3
L, TEET, COLOBO-13
ܒ ¬ .
Page 130
- 9
4. இணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி கோவி வின் வடக்கு வீதிக்கருகாமையில் ஒர் நெசவு நி3லயத்தையும், அருணகிரி அன்னதான மடத்தை யும் நிறுவி மக்களுக்கும் ஆலயத்துக்கும் பயன்படு மாறு செய்தார்.
5. அம்பலவானக் கந்தசுவாமி கே ரா யி ல் புனருத்தாரணம் செய்வதற்கு 1965 ல் எந்தெந்த வழிகளில் உதவிகள் செய்யமுடியுமோ அவற்றை யெல்லாம் போதிய அளவு செய்து கொடுத்தார்.
6. 1967 ல் மஞ்சம் அச்சுமுரிந்து ஓடமுடியாம லிருந்தபோது இரும்பினுலான அச்சுப் போடவும், மற்றைய திருத்த வேஃலகள் செய்யவும் தம்மா லான உதவிகள் அத்தனையும் செய்து வைத்தார்.
7. கலைத்திறன் மிக்க இணுவை மஞ்சத்தை உல்லா சப்பிரயாணிகள் வந்து பார்வையிடக் கூடியதான ஒழுங்குகளைச் செய்தார். இன்னும் பல உதவி களேச் செய்து கொண்டேயிருக்கிருர்,
.
iÈ
書
S.
Page 131
என்னைப்பற்றி.
எல்லா விஷயங்களையும் அறிகின்ற வாசக நேயர்கள் என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடாமலிருக்கும் பொருட்டு என்ஃனப்பற்றியும் சிறிது கூறிக்கொள்ளவேண்டியது அவசியமாகின் றது. அன்பர்களே!
இணுவில் அம்பலவாணக் கந்தன் தேவஸ் தான மனேஜராயும் உரிமையாளராயு மிருந்த திருவாளர் அ. கதிரித்தம்பி அவர்களுக்கு டிெ கோவில் பூசகர்களும் அவர்களோடிணைந்த நம் மவர்களும் கொடுத்த தொல்ஃகள் காரணமாய் மனந்தளர்வுற்ற கதிரித்தம்பி (எனது பெரிய தகப்பனர்) அவர்கள், எனது தகப்பனுராகிய திருவாளர் அ. சுப்பிரமணியம் அவர் கஃள டிெ கோவிலின் ரஸ்தியாக 1912 ம் ஆண்டில் நிய மனம் செய்து வைத்தார்கள். அதே ஆண்டில் எனது தகப்பனர் பூசகர் மீது நட்டத்துரட்சி வழக்கைத் தாக்கல் செய்யவே அவர்கள் தங் களின் சொந்தக் கோவில் என்றும் தாங்களே மனேஜரும் உரிமையாளரும் என்றும் மறுமொழி அணேத்து வழக்கை நடத்தினர்.
ஆட்சி, சாட்சி, திறப்பு என்பன அவர்களின் சார்பாயிருந்ததால் அவர்களின் சொந்தமென டிஸ்றிக் கோடும், சுப்பிரீம் கோடும் தீர்ப்பளித்
Page 132
- 2 -
தீன் - இந்த அவமானத்தையும் துக்கத்தையும் தாங்கமுடியாத நிலையில் எனது தகப்பனுர் மலா யாவுக்குப் பயணமானுர். அங்குள்ளவர்கள் இவ குடைய மனத்தைத் தேற்றி இங்கு அனுப்பிவைத் தார்கள். வந்து ஆருவது மாதம் (1916) சித் திரை மனநோய் காரணமாக இறந்தார். இறந் சிதும் மூன்று பிள்ளைகளும் (ஒரு ஆண் இருபெண்) தாயாரும் அபஃலகளானுேம், எங்கள் வல்வினைகள் திரண்டன. தகப்பனுர் உரிமையுமிழந்து உயிரையு மிழந்தார். நாங்கள் தகப்பஃனயுமிழந்து அவரது "PHலக்தையுமிழந்து, அவரின் இனபந்துக்களேயு மிமுந்து தவித்தோம்.
இந்த அவலநிலையைப் பெரிய சந்நியா சியா ரிடம் முறையிட்டோம். கொடிது கொடிது இள மையில் வறுமை. அப்பெருமான்தான் என்ன செய்வார்? வேற் பெருமானுக்கு நிவேதிக்கும் திருவமுதை அப்படியே அனுப்பி வந்தார். இந்த நிலையும் ஒருவருடகாலமே நீடித்தது. 1917 சித்தி ரையில் அவரும் சமாதியடைந்தார். எ ன து கி" யார் பசு மாடு வளர்த்தல் முதலான சிறு வருவாயுள்ள தொழில்களைச் செய்து கஷ்டப்பட்டு விTங்கரே வளர்த்து வந்தார். முதலாந் தரத் தோடு பள்ளிப் படிப்பைக் கைவிட்டேன்.
சுருட்டுக் கைத்தொழில் ப ழ க ச் சென் நு நாளொன்றுக்கு மூன்று சதம் சம்பளம் பெற்றேன். சேதுலிங்க உபாத்தியாரிடம் இரவில் படித்தேன். இராப் பள்ளிக்கூடமும் அப்போது நடைபெற்றது.
- 22
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நீதிநூல் கள், நிகண்டு, அந்தாதி வகைகள் படித்தேன். சதாசிவ உபாத்தியாயரிடம் புராணத்துக்கு உரை சொல்லப் பழகினேன். வடிவே ற் சுவாமி யாரிடம் தேவாரப் பண்முறை பழகினேன். பண் டிதர் கார்த்திகேசு (சரவணமுத்து) அவர்களிடம் எழுத்து, சொல், யாப்பு இலக்கணங்கள் ஓரளவு படித்தேன். நண்பன் உருத்திராபதி அவர்களிடம் வர்ணம் வரை சங்கீதமும் புல்லாங்குழலும் பயின் றேன். வைத்தியம் பழகத் தொடங்கியதும் இவை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதாயிற்று.
எனது இளேய சகோதரியை ஆவரங்கால் வைத் தியர் தாமோதரம்பிள்ளை அவர்களின் இஃளய மக னும் வைத்தியருமாகிய சின்னத்தம்பி அவர்கள் விவாகம் செய்தமையால் வைத்தியம் பழகும் படி என்னே அழைத்தார்கள். எனக்கு அதில் நாட்டம் செல்லவில்ஃல வடிவேற் சுவாமியார் அவர்களும் விசுவலிங்கத் தவில்காரர் அவர்களும் வற்புறுத்தியதின் பயணுக 13 வருடகாலம் அவரி டம் வைத்தியம் பழகி 1941 ம் ஆண்டில் பதிவு செய்த வைத்தியணுனேன். கொழு ம் பி லு ள் ள ஆயுள் வேத வைத்திய சபை வைத்தியர்களைப் பரி சோதித்துப் பதிவுசெய்தது அதில் வாதவைத்திய சிரேஷ்டன் (ஸ்பெஷலிஸ்ற்) எனப் பதிவு செய்து 459 இலக்கமுள்ள பதிவு பத்திரமும் 1953 ல் பெற் றேன். அத்துடன் கிருன்ரும் எடுத்துவந்தேன். வைத்தியத் தொழில் நல்லாய் நடைபெற்றது இலகையின் பல பாகங்களிலும் மிருந்து மக்கள்.
Page 133
一星器品一
வந்து வைத்திய சிகிச்சை பெறுகிறர்கள். தொழில் வகையால் நல்ல வருவாய் கிடைக்கப் பெற்று முன்னேற்றமடைந்தேன்.
வடிவேற் சுவாமியார் அவர்களின் தொடர்பு என் சிறுமையை நீக்கவும் தத்துவம் 95 ஐயும் இலகுவாய் விளங்கிக்கொள்ளவும் உதவிபுரிந்தது. வைத்தியப்படிப்பிற்கு பிரதானம் நான் விரும்பிப் படித்த நூல் " டக்ரர் கிறீன் பாதிரியார் " (மானிப்பாய்) அவர்களால் எழுதப்பட்ட "ரன விவத்தி, "" என்பதாகும். அந்த நூலில் உடம்பி அலுள்ள ஒவ்வோர் உறுப்பையும் அவற்றில் உண்டா கும் சகல நோய்களையும் பற்றி படங்களுடன் விளக்கமாகத் தமிழில் எழுதியுள்ளார். அதனை ஆதாரமாகக்கொண்டு பல ரோகங்களையும் மிக இலகுவாக உணரக்கூடியதாக இருந்தது.
நயிதீைவு பூரீமுத்துச் சாமி சுவா மிக ஸ், :fr: GL, T if: அத்வைதானந்தா, சுவாமி சத்தியா னந்தா (குரு), சுவாமி நிசானந்த பரமேந்திர சரஸ்வதி முதலான பெரியோர்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் பெறும் பெரும் பேறு கிடைத்தது. சுவாமி நிசானந்தாவிடம் வைத்தியமும் படிக்க வாய்புக்கிட்டியது.
வடிவேற் சுவாமியார் அவர்கள் எ ன து குடியிருப்புக்குரிய காணியை வாங்குவதற்கும், விவாகம் நடைபெறுவதற்கும் வகைசெய்து உதவி அறர்கள். 1938-ல் அம்பலவான க் கந்தசுவாமி கோவில் சம்பந்தமான ஒற்றி வழக்கு ஆரம்ப
HL"
Ts.
-
பண்டிதர் கார்த்திகேசு (சரவணமுத்து)வும் வயலின் வாசித்துக்கொண்டிருப்பவர், பிரபல நாதஸ்வர வித்து வான் உருத்திராவதியும் (வயலின் மடியில் வைத்திருப்
பவர்)
Page 134
- 24
ஒற்றி வழக்கு ஆரம்பமானது. அதில் ஈடுபட் டேன். 1941ல் கொ மிசன் பெட்டிசத்துக்குக் கையொப்பம் சேகரித்தேன். 1942ல் கொமிசன் விளங்கி, பொது வளக்குவைக்க உத்தரவு செய் தது. பொதுவழக்கிலும் 1948ல் பிராமணருக்குச் சாதகமாய் தீர்வை சொல்லப்பட்டது, அப்பீல் எடுக்கப்பட்டது, சுவாமியாரவர்களின் முயற்சி யால் இணுவில் ஐக்கியமுன்னணி சேவா சங்கம் உரு வானது. அதற்குத் தலைவராக என்னேத் தெரிவு செய்தனர். பூசக கர்களுடன் ஒத்துழையாமை இயக்கம் உண்டானது. அப்பில் வழக்கு நடத்தும் பொறுப்பு எனக்கே வந்தது. பொதுப் பணத் துடன் என்னிலும் கொஞ்சம் பொறுத்தது. கூடிய காலம் இதில் ஈடுபடக்கூடியதாக மனம் ஏவப்பட் டேன். 1953ல் பொதுக்கோவிலாக, சத்ததி உரி மையுடன் தீர்ப்பளிக்கப்பட்டது. மனந்தாழாத பெரியோர் சிலர் மாமுக வேலே செய்ய முன்னி?லப் பட்டனர்.
தங்கள் பணத்தில் வழக்கு நடத்தி எங்களுக்கு உரிமை தீர்ப்பித்தேன் என்றும், கள்ளக் கணக்கு வைத்தேன் என்றும், பிரசாரஞ் செய்யத் தொடங் கினர். பிரதானமாக ஆசிரிய, பண்டித சகோ தாராகிய திரு. இ. இரா சலிங்கம், திரு. இ. திரு நாவுக்கரசு என்பவர்களே முதன்மை வகுத் தனர். தற்காலிக றஸ் திசபையை 1935 ல் கோடு அமைத்தது. அதற்கும் தலைவராக என்னே நிய மித்தது. நான் அதை மறுத்து திரும்ப ஏற்றேன் , 12-8-57ல் நிரந்தரசபை தெரிவு செய்யப்பட்டது.
Page 135
- 25
அதிலும் என்ஃனத் தலைவராக்கினர்கள். சபையார் திருப்பணிக்கும் பொறுப்பாக்கினர். 21 - 9-65ல் ஆட்சி எடுக்கப்பட்டது. கோயில் முற்றுக இடி பட்ட நிலையில் கோபுரவாயிற் கதவு உடைத்து ஆட்சி எடுக்கப்பட்டது.
சபை அனுமதியுடன் ஊரெழு ச. சோமசுந் தரக் குருக்களை அழைத்துவந்து காட்டினேன். பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. மஞ்சத்துக்குப் பாதுகாப்புச் செய்யப்பட்டது. கோயிற் கட்டட வேலை தொடங்கவே எதிர்புச் சக்திகளும் சுயரூப மெடுத்தன. அவற்றையும் தாண்டி ஒருவாரு கக் கட்டிமுடித்து 2-9 - 66ல் கும்பாபிஷேகமும் நடந் தது. கெதியில் கும்பாபிஷேகம் நடைபெற்ருல் முன்நின்று நடத்துபவரை முடித்துப் போடும் என்று சொன்னுர்கள். அதுவும் சரிதான் என்ற நிலையில்
கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
தங்கள் காரியங்களே நிறைவேற்றுவதற்கு நான் தடையாயிருக்கிறேன் எ ன் று கருதியவர் களும் தங்கள் உள்ளக்கிடக்கையைத் தாமாகவே வெளிப்படுத்தத் தொடங்கினர். " "பிசுங் கான் அரைத்துப் போட்டேன்", "எனது பிள்ளே களுக்கு உரிமையாக்க உறுதி படைத்தேன்', "கோயிற்பணத்தை அபகரித்தேன்", "மஞ்சத் தின் வெண்கல முடியை விற்றேன்' என்ற பிர சாரங்களைச் செய்த தோடமையாது கோவிலி னுள்ளே பூட்டிவைத்து அடிக்கவும் முற்பட்டார்
கள். ஒவ்வொருவரதும் "நான்' என்ற ஆணவமே சாகடிக்கப்பட்டது. நான் நிரபராதியானேன்.
1967 ஆனிமாதம் கொடியேற்றத்துக்குரிய ஒழுங்குகள் செய்யப்பெற்றன. அப்போது கொடி யேற்ருது விட்டால் பின்பு 12 வருடங்கள் செல்ல வேண்டும் என்று குருக்கள் கூறியமையால் ஆயத் தம் செய்தோம். முதல் நாள் சாந்தி நடைபெற் றிது. எதிரிகள் தங்கள் மனச்சாந்தியை இழந் தனர். சாந்தி முடிந்து றஸ்தி சபையினரில் மூவர் வீடுநோக்கி வந்தோம். இரவுநேரம் நல்ல இரு ளில் தலைவருக்கு விழுந்தது தலையில் அடி மண்டை உடைந்தது, இரத்தம் ஓடியது. சேர்மன் முத்து லிங்கம் அவர்களின் உதவியுடன் பொலிசில் பதிவு செய்துவிட்டு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருந்து கட்டு வித்தேன். அடுத்த நாள் கொ டி யேற்றம். இங்கு வருவதற்கு டக்ரர் சம்மதிக்க வில்லே. கூடியவரை வாதாடி சிவப்பு மையால் ஒப்பம் வைத்து விட்டு முத்துவிங்கம் அவர்களின் காரில் வந்து சேர்ந்தேன். கொடியேற்றமும் நிறை வேறியது.
எதிரிகள் இந்த நடைமுறைகளைக் கண்ணுற்று மனம் பொருது கேலிசெய்தும், ஏசியும், தகாத வார்த்தைகளேப் பேசியும், சாம பேத, தான, தண் டங்களைப் பிரயோகித்தும், தங்கள் மன உளைச்சலை வெளிப்படுத்திக்கொண்டனர். பாண்டவர்களுக்கு நூற்றுவர் செய்த அக்கிரமங்களிலும் பார்க்க
Page 136
- 27
அதிகப்படியான அக்கிரமங்க*ள இன்றும் செய்து கொண்டேயிருக்கின்றனர்.
ஆண்டவன் திருவுளம் இதற்கு மறுதலேயாக அமைந்தது. பல ஊர்களிலும், தொழிற்சாலே களி லும், இல்லங்கள் தோறும் இரந்தும், தண்டியும் கோயிற் திருப்பணிகளையும் மஞ்சத்திருப்பணியை யும் செய்விக்கும் பொறுப்பையும் ஊக்கத்தையும் அரிய பெரிய உதவிகளையும், மனே திடத்தையும் அடியேனுக்குத்தந்து குறித்த விஷயங்களே நிறை வேற்றிவைத்தது.
இணுவை அப்பரின் சரித்திரத்தை வெளியிட வேண்டும் என்ற எனது பேராசையை நிறை வேற்ற இணுவை சு. கந்தசாமி ஆசிரியர் அவர் களதும் இணுவை சிெ. நடராசா ஆசிரியா அவர் களதும் பேருதவியைத் தந்ததோடமைய ாது தர்ம பரிபாலன சபையா ரினதும், பல பெரியோர்கள தும், பொருளுதவியையும், அச்சிடுவதற்குரிய வசதி களேயும் அள்ளித் தந்தது.
அப்பர் சாதியாகி 3 8 ஆண்டுகளாகியும் அவரது வரலாற்றை எழுதவேண்டும் என்ற எண் னம் எவர்களுக்கும் உண்டாகவில்லை. அடிபேன் மனதில் உதித்த எண்ணம் ஆசிரியர் வாயிலாக உருவாகியது. முதியவர்களும் அறிஞர்களுமாகிய மஞ்சத்தடி சதாசிவ உபாத்தியாயர், ஆறுமுக தா சர் ஆசிரியர் ஆகிய இருவருக்கும் தனித்தனி வாசித்துக்காட்டியபோது "அப்பப்பா ! அந்தப்
L. *
േ . . ܬܐ ག
Page 137
- 128
பெரியார் செய்த அற்புதங்களை நம்மால் அளவிட் டுக் கூறமுடியாது; அவருடைய சித்துவிளையாட் டுக்கள் சொல்லுந் தரமன்று எழுத ஏடு அடங் காது' என்றுகூறி முன்னுரைகளும் தந்தார்கள்.
இளமையில் அனதையாயிருந்த என்னை முத லில் சுருட்டுக் கைத் தொழிலாலும், ஓரளவு கற் பன கற்கற் செய்து வைத்தியத் தொழிலில் ஈடு படச் செய்து வாதவைத்திய சிரேஷ்டன் எனப் பதிவுசெய்யவைத்தும், பிரடல வைத்தியணுக்கியும் போதிய பொருளிட்டச் செய்தும், பலரிடத்தும் யாசித்துத் தரும கைங்கரியங்களை நிறைவேற்றக் கூடிய மனே நிலையைத் தந்தும், றஸ்த்தி சபைக் குத் தலைமைதாங்கச் செய்தும், புன்னெறிய தனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சிநல்கி, என் னையும் அடியானுக்கிய ஆண்டவனுக்கு எ ன் ன கைமாறு செய்ய வல்லேன்? அவன்ருளா வே அவன் தாள் வணங்கி, அவனது பாதச் சிலம்பொலியில் எனது மனம் ஒடுங்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கைமாறுமாகும்.
ஆவரங்கால் சின்னத்தம்பி சு. இராமலிங்கம்
வைத்தியசாலை, வைத்தியர்
இணுவில்,
Page 138
கோவில்திருப்பணி வேலைகளுக்குப் பொருளுதவியோர்
இணுவில், தாவடி, கோண்டாவில், கொக்கு வில், சுருமலை, மானிப்பாய், நவாலி, உடுவில், சுன்னகம் ஆகிய ஊர்களில் இல்லங்கள் தோறும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடத்தும், பல வூர் முதலாளிகளிடத்தும், பாடசாலைகளில் ஆசிரியர் களிடத்தும் சென்றுபொருளிட்டியதோடுசிலபெயர் வளிகளையும் குறிப்பிடுதல் வேண்டும். சி. சின்னத் துரை அவர்கள், மூலத்தானக் கட்டிடம், மஞ்சத் திருத்த வேலைகளிலும், க. கனகலிங்கம் (சுதுமலை) ஆறுமுகசுவாமி கோவில் மகாமண்டப வேலை களிலும் (நீதிரா சாவின் சகிலன்) மஞ்சத்திருத்த வேலைக்கு முதலியார் மகேசன் (நவாலி) அவர் கள் தான் உதவியதோடமையாது, எங்களுடன் தானுமொருவராக வந்து மற்றையவர்களின் உத வியையும் பெறுதற்கு உதவினர்கள். மஸ்க்கன் சுப்பிரமணியம், அவர்தம்பி நாகரா சாவும், மஞ் சித்துக்கு அச்சு இங்கிலாந்திலிருந்து வரவளைத்து, தங்கள் தொழிற்சாலையில் கடைந்து தந்தார். அச்செலவில் ஒரு பகுதியைத் தாங்கள் ஏற்றுக் கொண்டார்கள் . க பொன்னுத்துரை ஒவசியர், முத்துக்குமாரசுவாமி அம்பாள் திருஉருவங்களை
- 130
வார்த்துவைத்தும் மஞ்சக்கட்டிடத்துக்கு தகரமும் " யாக் ' கும் கொடுத்தார். மு. இராசா அவர் கள், சண்டேசுவர மூர்த்திகள் மேற்படி கோவில் உள்வீதி சகடைக்குமாகிய பொறுப்பில் ஈடுபட் டுள்ளார். ப. சு. சிவ சம்பு ஞானவயிரவ சுவாமி திருவுருவத்தை வார்ப்பித்தும், கோயிலைக் கட்டி யும், வாகனத்தைச் செ ய் தும் வைத்துள்ளார். க. கனகராசா (மில்க் வைற் சோப் ஸ்தாபன அதிபர்) நடேசர் கோவிலும் அதற்கு வேண்டிய அலங்காரத்துக்குரிய காணிக்கை பொருள்களையும் முடிகளையும் கொடுத்தார்கள். ச. தம்பியையா வடக்கு வீதி கொட்டகை வேலை செய் கார்கள். பிள்ளையார் கோவில் கட்டிட திருத்த வேலையில் பொ. சண்முக நாதன் நாலில் மூன்றுபங்கை ஏற்று செய்வித்தார். கு. கிருபா கான் தண்டாயுதபாணி திருவுருவத்தை வார்த்து வைத்தார். உரும்பிராய் திருமதி. திருவிளங்கம் (கன கம்மா) அவர்கள் கொடித்தம்பத்தின் திருத்த வேலைகளையும் சி. சிவ குமர்ரன் மூலமூர்த்திகளுக்கு வெள்ளி அங்கிகள் திருவாசி, கமலபீடம் (எனமல்) கதவுகளின் ? பொறுப்பை வி. கதிர்காமு வி. கார்த்திகேசுவும் இன்னும் மனேச்சர் கோவில் முடிகளும் , திருவா சிகளும், பீடம், கோமுகை, குத்துவிளக்குகள், பஞ்சாலாத்திகள், அடுக்கு தீபம், குடைகள், முத லிய காணிக்கை பொருள்களும் வாகனங்களும் கொடுத்துதவினர்கள். வயிரவருக்குரிய வெள்ளி அங்கிகளும் கொடுத்தார்கள். கட்டிடம் , மஞ்சத் திருத்தம், திருவுருவங்கள், அங்கிகள் காணிக்கைப் பொ ரு ட் கள் வாகனங்கள் ஐந்துலட்சத்துக்கு
Page 139
- I -
உதவிஞர்கள். ஆஞ ல் பிரதானம் தேருக்கும், மஞ்சத்துக்கும் நிலையான கட்டிடமும் ( வீடும் ) தேவை. தாங்களும் செய்யார்கள் மற்றையவர் மூலம் செய்விக்கவும் விடார்கள். அப்படிப் பெருவுள்ளம் படைத்த பெரியோர்களும் உண்டு.
i
i
Page 140
.ل
.
鄱,:
萱 | LP
தா) வீடு ப்
Page 141
இணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி தேவஸ்தான சங்குஸ்தாபன
ஜாதகக் குறிப்பு
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 27-ம்திகதி (12-12-65) ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 7 மணியள வில் திரு. சு. இராமலிங்கம் அவர்களால் சங்குஸ்தாபனம் செய்துவைக்கப்பெற்றது.
0. ராகு
சனி சந்
கிரக நிலை
சுக் - செவ்
புதன் 7 சூரியன் 4.
கேது
லக்கினத்தில் வியாழன் 2ல் சந்திரன்
6ல் புதன், சூரியன், கேது ----- 5 . به ۰ق 7. -- 8ல் சுக்கிரன் செவ்வாய் 9ல் சனி 10 II。ーー
Page 142
- 133
இதன் பலன் : பிறந்தது பெண்பிள்ளையாயிருக்கும், இரண்டுமாத காலத்துக்கு அரிட்டக்குற்றம் இருக்கும், இப்பிள்ளை சீவித்திருக்குமோ அல்லது சீவிக்கமாட்டாதோ என்ற நிலை ஏற்படும். இரண்டு மாதகாலம் கழிந்துவிட் டாலோ சொல்லத் தேவைஇல்லை. ஐந்து ஆறு லட்சத் தைக் கொண்டு வரக்கூடிய ஜாதகம் என்ருர்கள் அச்சு வேலி சி. இராசையா சோதிடர் அவர்கள்.
வேலைகள் தொடர்ந்து நடைபெறவே தூண்டுகோ லர்கள் சும்மாயிருக்கவில்லை. மேலதிகாரிகளிடம் 'இராம லிங்கம் கோயில் கட்டுகிருர், இதனல் இணுவில் கொலைக் களமாகப் போகிறது” என்று முறையிட்டனர். அதிகாரி கள் என்னைக் கூப்பிட்டு விசாரணை செய்தபோது றஸ்தி சபையே கட்டுவிக்கின்றது என்று பதிலளித்தேன். என் செய்வது? எதற்கும் தடைபோடுவதுதான் அவர்கள் பண் பாடு, குறித்த இரண்டு மாத காலம் கடந்தது. வான வரிவைத்துக் கட்டத் தொடங்கி, 2-9-66ல் கும்பாபிஷேக மும் நடைபெற்றது. 'மஞ்சவீடு கட்டுவதற்கும் த-ை போடப்பட்டிருக்கிறது" இற்றைவரையில் குறிப்பிட்ட தொகை வந்திருக்கும் என்பது துணிபு,
半米
- 134
ܝܘ முருகன் துணை
இணுவைக் கந்தன் கீர்த்தனைகள்
** இயலிசை வாரிதி யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயர் இயற்றியவை
கணபதி ஸ்துதி
1. ராகம் :- நாட்டை தாளம் :- ஆதி
பல்லவி கந்தன் புகழ்பாடக் கணபதியே அருள் வாய் செந் தமிழ்த் தேனமுதம் சொரிந்திட வரந்தருவாய்
அனுபல்லவி
சிந்தனைக்கும் இனிய சேந்தன் கழல்பாடி வந்தனே செய்தவனை வாயார நானும் போற்றிக் - கந்
சரணம் மாமயில் மீதினிலே மங்கை யிருவருடன் தாமரைப் பதந்தந்த தண்ணருள் முருகனை பாமலர் நிதம்தூவிப் பக்தி செய்தே கந்தன் நாம மகிமை தன்னை நவின்றிடநல் இணுவைக் - கந்
குமரா அருள்வாய்
2. ராகம் :- ஷண்முகப்பிரிய தாளம் :- ஆதி
பல்லவி "
குஞ்சரன் சோதரா குமார அருள் வாய் சஞ்ச மலர்ப்பாதம் கந்தனே தருவாய்
Page 143
سے 1935 سے
அனுபல்லவி
மஞ்சம் திகழும்புகழ் மன்பதி இணுவையில் கொஞ்சும் குமரிவள்ளி குலவும் குருபரனே - குஞ்
சரணம் கலாப மயில் மீதில் உலாவிவரும் முருகா நிலா விளம்பிறையணி நீலகண்டன் புதல்வா குலாவிடும் குஞ்சரியாள் கொழுநனே குமரா கலாநிதியான் கண்ணன் களித்திடும் மருகா - குஞ்
ராகம் :- ஹமீர் கல்யாணி தாளம் :- ஆதி
பல்லவி நொச்சியொல்லு கந்தன்ப தம்நீ பணி வாய் - மனமே
கச்சியப்பர்க் கருள்செய்த கந்தன் வாழும் நல்இணுவை
அனுபல்லவி
மெச்சிப் புவியேத்தும் பதி
மேவி வந்து எல் ல காட்டி
கச்சிதமாய் அமர்ந்தருள்
கடம்பன் அமரும் கோயில்
சரணம் அம்பலவன் பெற்றெடுத்த
ஆறுமுகன் அழகன் செம்பதுமத் தாளிணைகள்
சேவித்திடுவாய் நெஞ்சே உம்பர் தொழு தேத்தும் குகன்
உவந்தருள் செய்வான்பரன் எம்பவ வினைகள் தீர்க்கும்
எழில்வடி வேலன் வாழும்
36.
ஆவி துடிக்குதடி
4. ராகம் :- சுருட்டி தாளம் - ஆதி பல்லவி ஆவி துடிக்குதடி - ஸகியே பூவில்நல் இணுவைப் புண்ணியனைக் காண - ஆவி
அனுபல்லவி
தேவியாம் வள்ளியும் பூவை குஞ்சரியும் மேவிக் குலவிடும் வேலனைக் காண - ஆவி
சரணம் ஒளிரும் முகத்தழகும் மதிவதனத் தழகும் களிகொள் இதழ்முறுவல் நெளியும் குறும்பழகும் மிழிரும்பொன் வேலழகும் மேனியழகும் ஞானம் தெளியும் அருள் அழகும் இருகண் குளிரக்காண - ஆவி
பூவையே நீ தாதுசொல்லடி !
5. தாளம் - ஆதி பல்லவி பூவையே நீ தூது சொல்லடி - என்றும் நாவலர் போற்றிசெய்யும் நல் இணுவைக் கந்தனிப் - 8
அனுபல்லவி
கோவையிதழ் கனிய கோடியின்பம் தாரானே? பாவையென் வேதனைகள் வேலவன் தீரானே ? - பூவை
சரணம் தோகைமயில் ஏறி ஓடியே வாரானே ? தொண்டுசெய் காதலியாற் துடிப்பதைப் பார்ானுே? வாகைக் கடம்பணியும் மார்போ டணையானே ? வடிவேலன் எனையர வணக்க வந்திடுவானே ? - பூவை
Page 144
مه 7, 3 1 ح
சிந்தை துடிக்குதடி!
6. Τπαιό - கல்யாணி தாளம் :- ஆதி
பல்லவி கந்தஸ்வாமியைக் காண வேணுமென்று சிந்தை துடிக்குதடி - இணுவைக் - கந்த
அனுபல்லவி
அந்தி நேரந்தனிலே மந்தமா ருதம் வீச சந்திர வொளியிலே எந்தனை யணைத்திடும் - கந்த
சரணம் கதிர்காம வேலவன் அபிராமி பாலகன்' கருணகர முருகன் காதலெல்லாம் தருவன் மதிசூடும் அரன் மைந்தன் மாலவனின் மருகன் மயில் வாகனன் இணுவை தமிழ்மா முருகனும் - கந்த
கந்தன் கழலடிகள் பணிமனமே !
7. ராகம் :- நாட்டைக்குறிஞ்சி தாளம் - ஆதி பல்லவி
கந்தன் கழலடிகள் பணிமனமே - தினமே
உந்தன் வினையகற்றும் செந்தமிழ் இணுவை வளர் - கந் அனுபல்லவி
அந்தமில்லாத வேத அருமறை புகழ்பவன்
சுந்தரியாள் சுதன் சுப்ரமண்யன் குஹன் - கந்
சரணம்
முந்தை வினைகளெல்லாம் முற்றுமே நீக்கிடுவான் பந்தமகற்றி உந்தன் பாவங்கள் போக்கிடுவான் விந்தை மயில் மீதேறி விரைந்தருள் செய்திடுவான் சிந்தையால் அன்புசெய்யச் சிறப்பெல்லா நீ தத்திடுவான்
- 18
ஞானவேல் முருகன்
8. ராகம் - ஸஹாஞ தாளம் :- ஆதி
பல்லவி
ஞானவேல் முருகன் மோனக் குருபரன்
தேனமுதான் கழல் தினமும் பணிமனமே - ஞான
அனுபல்லவி
காணக் குறவள்ளி குஞ்சரியின் காந்தன் VM
கானத் தமிழ் திகழும் கவின் இணுவையம்பதி - ஞான
Fysio
நெக்கு நெக் காயுருவி நெஞ்சம் முருகன்பதம் எக்கணமும் மறவா தேத்திடு செந்தமிழில் திக்கு வேறில்லை எனத் திருவடித் தாமரைகள் அக்குகனும் திருவான் அருளை அள்ளிச் சொரிவான்,
மஞ்சமதிலேறிக் கொஞ்சி வந்தான்
9. ராகம் :- கானடா தாளம் - ஆதி
பல்லவி சேமதி லேறிக் கொஞ்சிவந்தான் - கந்தன் Ap *ஞ்சலெனக் குஹன் அபய கரந்தந்தான் - மஞச
அனுபல்லவி
நெஞ்சமதில் நிறைந்த என் நீலாயதாஷிபாலன் கஞ்சமலர்ப் பதத்தைத் தஞ்சமடையத் தந்தான்-மஞ்ச
Page 145
س- 39 l --
சரனம் நல்இணுவை வளர் நாதன் ஷண்மூக வேலன் கல்லும் கனியஅருள் காந்தமென இழுத்தான் வெல்லும்விறல் வேலேந்தி வள்ளி குஞ்சரியோடு சொல்லும் தமிழ்இனிக்க நல்இணுவை வீதியிலே.
ஆறுமுகத்தையனின் அழகு
0. ராகம் :- கரஹரப்ரிய தாளம் :- ஆதி
பல்லவி
ஆறுமுகத் தையன் அழகு - பருகிக் கூறுவதற்கோர் மொழி தமிழே இணுவை " - egy
அனுபல்லவி
நீறுதவழ் நெற்றி நிமிர்ந்திடும் ஞானவேலும் ஏறுமயில் வாகனமும் எழில்வன்வி குஞ்சரியும் - ஆறு
&JoJoJrb
அழகுக் கழகுசெய்யும் அழகன் அவன் முருகன் பழகுதமிழ் மொழியின் பண்புநிறை குமரன் தவழும்எழில் அழகின் தனிப்பெரும் தவத்தழகன் கமழும்பொழில் மலியும் கவின் இணுவையம்பதி
தெ. கோபாலசிங்கம் அவர்கள் பாடியது ( Luan )
பதியிற் பழமைப் புகழ்சேர் Lu Suunruh இணுவிற் கரசே இருஞானப்
பழமென் றடியார் பரவித் துதிசெய்
பரமே குமரப் பெருமானே
- 40
விதியிற் பழுதுற் றிழிமைப் tu (9)Garfiř விடிவிற் கொருபே ரொளியாஇ விழுவார் அழு வார் விழிநீர் Gollugryfanrif வினைதீர் வடிவேற் பெருமானே கதியொன் றிலையென் றுனையே தொழுவார்
கனவிற் களியுற் றருள்செய்யுங் கருணைக் கடலே மயில்வா கனனே
கவிஞர் முருகப் பெருமானே அதியற் புதமுற் ருெருநற் கனவிற்
றனதுற் பவ மென் றுரைசெய்தே அருநொச் சியொலைப் பதிபுக் கமகும்
அழகா இவனி வருவாயே
இணுவில் ழரீ கல்யாண வேலவர்
திருவூசல் அ. க வைத்தியலிங்கம் ஆசிரியர் இயற்றிய
காப்பு சீரேறு மீழவள நாட்டி னேர் சார்
திகழ்கின்ற யாழ்ப்பாண தேச மேவும் காரேறு பொழிலினுவை நகரில் வாழும்
கல்யாண வேலவர் மே லூசல் பாடப் பாரேறு பரராச சேகரப் பேர்ப்
பார்த்திபர்கோ னன்ன கரிற் றபித் தேத்தும் பேரேறு விநாயகமுக் கண்ணன் பாதம்
பேரன்பு கொண்டுநிதம் வாழ்த்து வாமே.
திருவள ரு மெழின்மருமச் செங்கண் DIT I G5
செம்பதும மலரோனுத் தேடிக் காணு
அருவுருவாஞ் சதாசிவன்றன் கருணை யாகி
யவதரித்துத் திருமுகமோ ராறு கொண்ட
Page 146
- Il 4 las
வரமருவு கல்யாண வேலர் மீது
வாஞ்சை பெறு மூஞ்சலிசை யினிது பாட * மருவு மங்குசபா சத்த ஞன
கணபதித னிரு சரணங் கருத்துள் வைப்பாம்
క
*ாரணமாந் நாதவிந்து தூண்க ளாகக்
கருத ரிய குடிலையது விட்ட மாக பூரணமா கியகலைகள் கயிற தாகப்
பொற்புறுநற் சிவாகமங்கள் பலகை யாக ஏரணங்கொள் சதாசிவமாம் பீட மீதில் ஏர் கபர சிவசோதி யென்ன வந்து காரணவு சோலை செறி யினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல். ( . )
செக்கர்வெயில் பயில்வளத் தூண்கள் நாட்டி
சிறந்தவொளி பொழிவயிர விட்டம் t!, 19தொக்கதங்கப் புரிபுனைந்த கயிறு மாட்டி
துலங்கு செழும் பதுமலர்ப் பலகை சேர்த்தி மிக்கமுத்தின் பந்தரிட்டு விதானம் போக்கி வெண் கவரி புனைந்த திரு வூசல் மீது கைக்களிற்றி னெரு துணையா யினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (2)
திருவிளங்கு நதியாட மதியு மாடச்
செஞ்சடைக்கா டா டமுக னேந்து மாட மருவிளங்கு தொடையாட வளக மாட
மங்கைசிவ காமிமன மகிழ்ச்சி யாட அருள் விளங்கு பதஞ்சலியும் புலியு மாட
வம்பலத்தே நடம் புரியு மெம்பிரான் றன் கருணைதங்கு பாலகரே யினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் ( 3 )
= 14--
அருள்பொழியுந் திருமுகங்க Grrrg) LorL
வாறிரண்டு திருக்கரமா மலர்க GTI மருள்பொழிமும் மலஞ்சீக்கும் வடிவே லாட
மங்கைதெய்வ யானை வள்ளி மகிழ்ந்தே யாட பொருள் பொழிசெங் கனககுண்ட லங்க ளாட
புண்டரிக சரணமல ரிரண்டு மாட கருணைபொழி கணபதிே ரினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (4)
இந்திரைகொழு தனும்சு தனும் வடந்தொட்
விமையவரு மித்திரனுங் கவரி விச (டாட்ட சந்திரனு மாதவனுங் கவிகை தாங்க
தனதன்முத லோரால வட்டம் வீச முந்துதவத் தினர்வேத கீதம் பாட
முத்ததகை வள்ளிதெய்வ யானை கந்தமலர்ப் பொழிலினுவை வாழ்வு செய்யும்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (5)
திங்களனி கணிமகுட மிருள் கால் சீப்பத்
தேவர் சொரி மலர்மாரி 36) is Gifu மங்களமார் முரசாதி யியங்க ளார்ப்ப
மறையவர் செய் வேதவொலி வானம் போர்ப்ப பங்கமிலா வள்ளிதெய்வ யானை யென்னும்
பத்திணிக ளிருவோரும் பாங்கர் மே வக் கங்கைதரு பாலகரே யினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல். (6)
வாரணனே டமரர்களைப் பேரிதும் வாட்டி
வருத்த மிகப் புரிந்தசூர் முதலை வீட்டி
ஏரணவும் பொன்னுலகங் கவர்க்கு நாட்டி
யேத்துவோர்க் கிடர்களெல்லாந் தீர வோட்டி
Page 147
- il 43
நாரணனு நாடfய பாதங் காட்டி
நாயேனை யாளாக நயந்து கொண்ட
காரணனே மறையவர் வா ழினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல். (7)
தடமதில்கோ புரங்கோயில் சமைப்போர் வாழத்
தாங்குநிழற் றருக்கள்பல தொகுப்போர்வாழக் கடமைபசு வாதியநீ ரருந்த நாளுங்
காவலுறு கேணி குளம் தொடுவோர் வாழப் படவரவு புனைபரம னடியார்க் கென்றும்
பாங்குபெறு திருவமுது கொடுப்போர் வாழக் கடமுனிநே ரறிஞர் செறி யினுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (8)
புரந்தரனு மிமையவரும் பொருமல் நீங்கப்
பூங்கமலத் தயனெடுமால் புவனந் தாங்க வரந்தரு சீர் நுதற்கணிடை வந்து தோன்றி
வயங்கு மழற் பொறியாருய் விழுமந்தீர்க்க சரந்திகழுஞ் சரவணப்பூம் பொய்கை மீது
சார்வுறுமோர் சிறுகுழவி வடிவே யாகிக் கரந்த யணு மறிவரிதா யினுவை வாழுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல். (9)
அந்தணர்கள் வாழிபசு நிரைகள் வாழி
யரசரொடு வசியர் பின் னேர்கள் வாழி
சந்த தமும் முகில்கள் மழை பொழிந்து வாழி
தகுதிபெறு மகளிர்பதி விரதம் வாழி
மூந்துமெழுத் தைந்தோடுகண் டிகையும் வாழி முதன்மைபெறு சிவநாமம் நீறும் வாழி
செந்திருவா ழினுவையினிற் கோயில் கொண்ட சிவதசுப் பிரமணிய ரருளும் வாழி. (10)
இணுவை நொச்சியம்பதி * முருகன் தேசத்திரம் " சுவமி வடிவேல் அவர்கள்
உயர்வதற்கோர்வழி யென்று உயர் பரங் குன்றினிலே தெய்வத யானை திருமணக் கோலத்தை தேர்ந்தவனை கைவேல் பிடித்துநக் கீரர்க்கு கண்ணருள் கற்பகத்தை மெய்யா ரினுவையம் நொச்சிப் பதியின்று மேவினனே: பன்னிரு கையன் பரஞ்சுடர்ச் சோதி பனிமலையின் மன்னிய அம்பிகை மாண்புறு புத்திரன் மாமலர்த்தான் சென்னியில் வைத்தென் சிறுமை தவிர்த்து கிறப்புறவே மன்னு மினுவை வளம்பதி நொச்சிப் பரஞ்சுடரே.
ஐயா வென்றுன் னடிபோற் றிடுந்தே வற் கன்ருெருநாள் மெய்மா யங் காட்டிப் பொருதிடுஞ் சூரர் பொருப்புடனே வையார் நுதிவடி வேலால் வதைத்து வரமளித்த
செய்யா ரினுவை வளம்பதி நொச்சியம் சேவ கனே.
உரும்பிராய் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
U Jag. M165J YM பன்றிக்குட்டிபோல பதினறு பிள்ளைப்பெற்ருர் அன்றுவருத்தமில்லை ஆசுப்பத்திரி போனதில்லை இன்றுபார் இணுவிலிலே பெண்கள் தொகை எண்னவோ முடியவில்லை
பனங்காய் பணுட்டுபிட்டு பழஞ்சோறு கூழ் குரக்கன் தினைச்சோறு கஞ்சிஒன்றும் சீர்திருத்தமில்லை யென்று தேனீரும் கோப்பியுமாம் பாருமடி வேடிக்கையை
-O-
Page 148
Page 149
. . ; : /* ...نژاد || || | . - ,
巫* If ill
r r
r - || -- :ெ எர்ேஃபூப்' பகுதி,
{n | л л л ё8. تمي"
戟 سمی - - | - | -- LI ĈI-TIM É. IL LJ || ||T Eātçi.” . 个人 - 鸭
鲇 பூெவில் அந்தசா கோ . 副 垂
- " 2.சந்நாசியார் cf;7 ل%8ء نا ہے۔
W C
Page 150
Page 151