கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாமோதரம்
Page 1
முதிறுேச் ( ẳ0ậ.öI0)
- - -
= —
ܐ ܒܚ ܲ - ܒܒ ܨ ܒ
ܡܡܐ .1 ܒܗܘ
Page 2
Page 3
தாமோதரம்
இராவ் பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, பி.ஏ.,பி.எல், அவர்கள் தாம் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய பதிப்புரைகளின் தொகுப்பு
ஒப்பீட்டில் உதவியவர்:
ப. தாமரைககணணன, எம்.ஏ, எம்.ஃபில், தமிழ் முதுநிலை விரிவுரையாளர், மாநிலக் கல்லூரி (தன்ட்ைசி), GssiT66T - 600 005.
வெளியீடு & விற்பனை குமரன் பப்பிளிஷர்ஸ்.
3, மெய்கை விநாயகர் தெரு, வழி : குமரன் காலனி 7வது தெரு, வடபழநி : சென்னை - 600 026.
Page 4
முதற்பதிப்பு:1971 மறுபதிப்பு : செப்டம்பர்,2004
G)
விலை: ரூ.50.00
Title : THA:M0.THARAM
Subjed : A Collection of Prefaces
Author : C.W. Thamotharam Pillai, B.A., B.L.,
No. of Page 68
Size : 12.5 x 8 cm
Type : Point
Poper : Creamwovell.6 kg
Cover : Art Board
Price. Rs. 50.00°
Publishers Kumaran Publishers
3 (l2) Meigai Winayagar Street, (Vici) Kumaron Colony 7th Street. Wudopoloni, Chennai- 600026. India.
Typeset : SIVAM's. Ph.9444232005
மறுபதிப்புக்குநன்றி:
யாழ். கூட்டுறவுத்தமிழ் நூற்பதிப்பு விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம்
பொருளடக்கம்
L முன்னுரை - ப. தாமரைக்கண்ணன்
1. அணிந்துரை - சி. கணபதிப்பிள்ளை 1. தாமோதர வரலாறு - இ. செல்லத்துரை IV. சி.வை.தா. வரலாற்றுச் சுருக்கம் V. நன்றியுரை - சி. சிவகுருநாதன் வீர சோழியப் பதிப்புரை
வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக் கவிகள்
கலித்தொகைப் பதிப்புரை இலக்கண விளக்கப் பதிப்புரை சூளாமணிப் பதிப்புரை தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்புரை விளம்பரம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நன்றிகூறல் தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை பின்னிணைப்பு
தொல்காப்பியப் பதிப்பு - சி. கணபதிப்பிள்ளை
9.
11.
14
2O
51
92
13
132
137
138
139
156
156
Page 5
1. முன்னுரை
தமிழ் கூறு நல்லுலகம் பயன்பெறத் தாமே அரிதின் முயன்று தேடிப் பதிப்பித்த பழந்தமிழ் நூல்களுக்கு அருமையான ஆராய்ச்சிப் பதிப்புரைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஈழத் தமிழறிஞர் சி.வை.தாமோதரனார்.
இவர், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை அடியொற்றி அருந்தமிழ்நூற்பதிப்பினில் ஈடுபட்டவர். பேரறிஞர்உ.வே.சாமிநாதர் அவர்களுக்கு முன்னோடியாகப் பெருமை பெற்றவர்.
சி.வை.தா. எழுதி வைத்துள்ள பதிப்புரைகளைத் தொகுத்துத் தாமோதரம்" என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுத்தமிழ்நூற்பதிப்பு விற்பனைக்கழகத்தார்வெளியிட்டனர். அந்நூல் இப்பொழுது கிடைப்பதற்குஅரிதாக உள்ளது.
தமிழ் பதிப்பு வரலாற்றில் சி.வை.தா.வின் ப்ங்களிப்பினைப் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழிலக்கியத் துறையில் பேராசிரியர்முனைவர்வீ. அரசுஅவர்கள்மேற்பார்வையில் ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்)பட்டப்பேற்றிற்குஆய்வுசெய்யத் தாமோதரம்" பேருதவியாகத்திகழ்ந்தது.
ஆய்வேட்டினை, என் அருமைத் தந்தையார் திரு. கெ. பக்தவத்சலம் அவர்களின் கெழுதகை நண்பரும், தலைசிறந்த இலங்கைத்தமிழ் எழுத்தாளருமானதிரு.செ.கணேசலிங்கன்அவர்கள் "ஈழத்தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை' என்னும் தலைப்பில் அண்மையில் குமரன்பப்ளிஷர்ஸ் வாயிலாகநூலுருவாக்கிஉதவினார். அவருக்கு என் இனிய நன்றி. அதன் தொடர்ச்சியாகத் தாமோதரம்" வெளிவந்து உங்கள்கைகளில் தற்போது தவழ்கிறது.
அறிஞர் சி. கணபதிப் பிள்ளை அவர்கள் கூறுவது போல இந்த நூல் 'தமிழ் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்தும்" என்றே நானும் நம்புகிறேன்.
தமிழ் அறிஞர்களும் ஆய்வு மாணவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இந்நூலினைவரவேற்பர்என்றும் நம்புகிறேன்.
தமிழில்லம் பதாமரைக்கண்ணன் 19, கோமதிபுரம் முதன்மைச்சாலை,
திருநின்றவூர் - 602024
12.9.2004. (சி.வை.தா. பிறந்தநாள்)
"நீடிய சீர்பெறு தாமோ தரமன்ன நீள்புவியில் வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புறரீ பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன்யான் கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே'
- வேதநாயகம் பிள்ளை
"தாமோதரம்பிள்ளை சால்(பு) எடுத்துச் சாற்றனவர் தாமோதரம்உடையார்?"
- வி.கோ.சூரியநாராயண சாத்திரியார்
"பிள்ளை அவர்கள் தமிழன்னைக்குப் புரியுந் திருத் தொண்டிற் பிற வித்துவான்களும் உழைத்துவர வேண்டு மென்ற கொள்கையையே உடையவர்கள்; ஒருசிலர் தம்மைத் தவிரத் தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியில் இறங்கிய பிறருக் கெல்லாம் நரக தண்டனை வதித்துச் சபித்து வந்துள்ளார்கள்; பிள்ளையவர்கள் இவ்வினத்தைச் சேர்ந்த வர்களல்லர்; உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா பிருந்தது".
- வையாபுரிப்பிள்ளை.
* * *
Page 6
6 தாமோதரம்
மேற்காட்டிய மூவரில் முதல் இருவரும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்; சி.வை.தமோதரம்பிள்ளை அவர்களை நேரில் அறிந்தவர்கள்; வேதநாயகம் பிள்ளை தமிழ்ப்புலமை கனிந்து முதிர்ந்தவர்; "பிரதாப முதலியார் சரித்திரம்" என்கின்ற பிரசித்திபெற்ற புனைகதையை உதவி யவர்; உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரான மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய “குளத்தூர் வேதநாயகன் கோவை"யின் பாட்டுடைத் தலைவர்.
சூரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞன் என்று தம் பெயரை வழங்குபவர்; தமிழிற் பெரிதும் ஈடுபாடுடைய வர்; பல நூல்கள் செய்து புகழ் படைத்தவர்; நாவலரைத், தமிழ் வசனத்தின் தந்தை" என்றவர்.
வையாபுரிப்பிள்ளை இந்த நூற்றாண்டிற் பிரசித்தமான வர்; சென்னை சர்வகலாசாலையில் தமிழ்த்துறைத் தலைவ ராயிருந்து, தமிழாராய்ச்சி செய்தவர்; ஆராய்ச்சித்துறையில் பெரும் புகழ் படைத்தவர்; சி.வை.தாமோதரம்பிள்ளை அவர் கள் அருமந்த நூல்களைப் பதித்ததற்குப் பட்ட கஷ்டங்களை உள்ளவாறுணர்ந்தவர்; பிள்ளையவர்களின் அழுக்காறற்ற தூய இதயத்தை நன்கு தெரிந்தவர்.
சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதி காரமும் தமிழன்னையின் இரு கண்மணிகள். இந்த இரண்ட னையும் பதித்துதவியதே சி.வை.தாமோதரம்பிள்ளை அவர் களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது.
大、 ★ ★
அணிந்து60 7
இறையனார் களவியலுரையில், "இஃதென்னுதலிற்றோவேனின் தமிழ் நுதலிற்று? என்ற வசனத்தையும்
‘எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறே மெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" என்ற வசனத்தையும் பீஜமாக வைத்துக் கொண்டு களவியலையும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் ஆராய்ந்து சங்கத்தார் ஆராய்ந்த தமிழினியல்பையும், அகத்திணை புறத்திணைகளின் சிறப்பியல்புகளையும் ஆரியத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையான தொடர்பையும், இன்னோரன்ன நூற்றுக் கணக்கான பல்வேறு துறைகளையுங் கண்டு தம்மை யணுகிய வர்கள் எட்டக்கூடியவைகளை எட்டத்தக்க அளவில் உபதேசித்துக் கொண்டு, ஒரு தத்துவப்பெரியார் இந்த நூற் றாண்டிலும் எங்கள் மத்தியிலிருந்ததை நான் நன்கு அறிவேன். அவர் இந்தச் சட் உலகுக்கு அப்பாற்பட்ட சித்துலகத் தொடர் புடையவராய், என்போன்றவர்களுக்கு எட்டாதவரா யிருந்தார். அந்த மகான் தமிழ் பற்றியும், ஆரியம்பற்றியும் சொன்னவைகளில் ஒரு சிறு துளியைத் தானும், இன்று நடை பெறும் ஆராய்ச்சித் துறைகளிற் கண்டதுமில்லை; கேட்டது மில்லை.
தத்துவப் பெரியார் ஒருவருக்குத் தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்புக்களில் இரு புத்தகம் உபகாரப்பட்டு, அவர் சிந்தனைக்குத் தூண்டுகோலாயமைந்தமையை நினைத் குந்தோறும் பிள்ளைபால் ஓர் ஆராமை பிறக்கிறது; உள்ளம் குளிருகிறது.
Page 7
8 தாமோதரம்
பதிப்புத்துறையில் சென்ற நூற்றாண்டின் மத்திய பகு தியை நாவலர் காலம் சென்று சொல்லலாம். அவர் மக்களை வாழ்வாங்கு வாழவைக்கும் முறையில், வசன நூல்களை எழு தியும், நூலுரைகள் செய்தும், பழைய நூலுரைகளை வெளிப் படுத்தியும் அச்சிற் பதிக்குந்துறையைப் பயன்படுத்தினார். நாவலரையடுத்துச் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி தாமோதரம்பிள்ளையவர்களின் காலமே யாம். அதனைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டு தொடக்கமான பகுதி சாமிநாதையர் காலம் ஆகும்.
பதிப்புத்துறையில் இங்கே குறிப்பிட்ட மூவருக்கும்
நெருங்கிய தொடர்புண்டு. பிள்ளையவர்களின் தமிழார்வத்
தைக் கண்ட நாவலர், 1868 இல் தொல்காப்பியம் சொல்லதி
காரப் எாவரையருரையைப் பரிசோதித்துப் பிள்ளையவர் களை*ே*காண்டு பதிப்பித்துப் பிள்ளையவர்களைப் பதிப்புல
கிற் பிரவேசிக்கச் செய்தார். அதன்மேல் முக்கியமான பஞ்ச லக்கண நூல்களையும் தொல்காப்பியம் பொருளதிகாரத்தை
யும் பதித்து 1885 இல் பிள்ளையவர்கள் சற்றே மூச்சு விட்டுச் சிரமபரிகாரஞ் செய்தார்கள். பின் 'கற்றறிந்தார் ஏத்துங்கலித்
தொகையைப் பரிசோதித்து, அச்சிட்டுக் கொண்டிருக்குங் காலத்திலேதான், சீவகசிந்தாமணி ஏடுகளோடு போராடிக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் அவர்களைச் சந்தித்தார் கள். அப்பொழுது ஐயர் அவர்களுக்கு வயசு 33. அச்சுத் துறைக் குப் புதியவராகையால் அத்துறையில் நீந்துவதற்கு அச்சங் கொண்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சந்திப்பு சிந்தாம
ணியை விரைந்து அச்சிடும் ஊக்கத்தை ஐயர் அவர்களுக்கு அளித்தது.
"இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்ததற்கு விருப்புடைய னேனும், இவற்றை விரைவிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்
அணிந்து ரை 9
யும்படி, யாழ்ப்பாணம் ம.பூரீ.சி.வை.தாமோதரம்பிள்ளையவர் கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்’
என்கின்றார்கள் ஐயர் அவர்கள். இது 1887 இல் வெளிவந்த சீவக சிந்தாமணி முதற்பதிப்பு முகவுரையில் உள்ளது.
★ ・ ★ 大 பிள்ளையவர்களின் பதிப்புரைகள் பல்துறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. ஆராய்ச்சிகாரருக்கு நல்ல தூண்டுதல்கள் என்று கொள்ளத்தக்கவை.
ஆராய்ச்சி அவ்வவர் அறிவாற்றலுக்கேற்ற ஊகம்.என் பது, ஆராய்ச்சித்துறையில் மேம்பட்ட மேலைத் தேச ஒருவரின் கூற்று.
தம் ஆராய்ச்சிகளை முடிந்த முடிபுகள் என்று பிள்ளைய வர்கள் வற்புறுத்தவில்லை. நல்ல முடிபுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் பிள்ளையவர்களிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையவர்களின் தமிழார்வம் விடா முயற்சி, மன்ப் புனிதம், பரோபகாரம் என்பவை நாம் எல்லாம் பின்பற்ற வேண்டியவை. பிள்ளையவர்களின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரத்தின் ஒரு பகுதி.
★ ★
இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன், இங்கே ஒரு சூழ்ச்சி நடந்தது. சேனாவரையத்தைப் பிள்ளையவர்கள் பதிப் பிக்கு முன் மற்றொருவர் பதித்தார் என்கின்றதொரு எண் ணத்தை நிலைப்படுத்துவதே அச் சூழ்ச்சியின் மர்மம். அந்தச் சூழ்ச்சியின் மர்மத்தை ஆராய்வதற்கு இரண்டு வருடகாலங்
Page 8
10 தாமோதரம்
கழிந்தது. மகாவித்துவான் சி.கணேசையர் அவர்களின் உதவி யால், மதுரைச் சங்கத்தார் மூலம் சூழ்ச்சியின் வஞ்சம் வெட்ட வெளியாயது. அதுபற்றி விரிவான கட்டுரை, 'தொல்காப்பியப் பதிப்பு' என்ற தலையங்கத்தில் 17.9.50 ஈழகேசரியில் வெளி வந்தது. அக்கட்டுரையின் முக்கிய பாகம் இந்நூல் அநுபந்தத்திற் சேர்க்கபபட்டிருக்கிறது.
★ ★ ★
அப்பொழுது பிள்ளையவர்களின் பதிப்புரைகளைத் தொகுத்து அச்சிட வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு உதித்தது. சைவப் புலவர் திரு.இ.செல்வத்துரை அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பும் கிடைத்தது. கிடைத்தும் என் எண்ணம் சித்தியெய்தவில்லை. வருடங்கள் பறந்தன. நான் அவ்வெண்ணத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழிந் தும், பிள்ளையவர்களின் ஆன்மசத்தி திரு. இ.செல்வத்துரை அவர்களை அசைத்துக் கொண்டேயிருந்தது. அன்றி, திரு. சி.சிவகுருநாதன், எம்.ஏ,அவர்களையும் பிள்ளையவர்களின் ஆன்மசத்தி ஆட்கொண்டுவிட்டது.
குறிப்பிட்ட இருவர் வாயிலாகவும் பதிப்புரைத் தொகுப் பாகிய தாமோதரம் அன்றி, வேறுபல பயன்படும் நூல்கள் வெளிவருவதற்கும் பிள்ளையவர்களின் ஆன்மசத்தி தூண்டு தல் செய்து கொண்டே யிருக்குமென்பது எனது நம்பிக்கை.
- பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை
.
பண்டிதர், சைவப் புலவர், சித்தாந்த பண்டிதர் சிறுப்பிட்டி திரு. இ. செல்லத்துரை அவர்கள் எழுதி உதவிய தாமோதர வரலாறு
"சி.வை. தாமோதரம்பிள்ளை யாழ்ப் பாணத்திற் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திர மாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு; அதற்குப் பரிகாரஞ் செய்யும் முறை யில் அவர் பதித்த பதிப்புகளில் உள்ள பதிப்புரை களைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் தாமோதரம்" என்ற பெயரில் வெளியிடுதல் நன்று. பதிப்புரைகள் அவ்வக் காலத் தமிழ்ச் சரித்திரமாய், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையாதனவாய் அமையும்"
இப்படியொரு பந்தி, பண்டிதமணி, சி.கணபதிப் பிள்ளையவர்கள் எழுதிய இலக்கியவழி - புதிய பதிப்பிலே, தமிழ் தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையிலே வரு கின்றது. இந்தப் பந்தியை வாசித்த பொழுது என் சிந்தனை பதினெட்டு வருடங்கள் பின்நோக்கி என்னை இழுத்துச் சென்று 1952 ஆண்டிலே நிறுத்தியது.
அப்பொழுது திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை யிலே நான் பயிற்சி பெற்றுவந்தேன். பண்டிதமணியவர் களிடத்திலே நல்ல தமிழை அறிந்து அனுபவிக்கும் ஒரு பெரும் பேறு, முன்னைத்தவ விசேடத்தினால் எனக்கு வாய்த் தீது,
பூரீலழறி ஆறுமுகநாவலர், இராவ்பஹதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை முதலான சான்றோர்கள் ஆற்றிய அரிய
Page 9
12. தாமோதரம்
பெரிய பணிகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் பண்டித மணியவர்கள் மனதார வாயார எடுத்துச் சொல்லிக் கேட்போ ரின் உள்ளத்திலே என்றும் மாறாத பாஷாபிமான தேசாபிமான மதாபிமானங்களை வளர்த்து வந்தார்கள்.
சி.வை.தா. அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அன்பளிப்புச் செய்த சின்னஞ்சிறிய கிராமத்திலே - சிறுப்பிட்டி யிலே, நான் த ப்பித்தவறிப் பிறந்ததொரு பேற்றினாற் போலும், பண்டிதமணி யவர்கள் "சி.வை.தா. அவர்களைப் பற்றி வகுப்பிலே விமர்சனம் பண்ணும் பொழுதெல்லாம் பெருமிதமும் அபிமானமும் ஊற்றெடுக்குமாறு கிருபா நோக்கஞ் செய்யத் தவறுவதில்லை.
அந்தக் கிருபாநோக்க விசேடத்தினாலே, சி.வை.தா." அவர்களிடம் நான் கொண்ட அபிமானம் மேன்மேற் செழித்து வளருவதாயிற்று. அது காரணமாக, அந்தத் தமிழ்த் தந்தையின் பெயரினால் ஏதாவதொரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் என்னைப் பிடர்பிடித்து உந்தியது.
இந்நிலையில் ஒருநாள், பண்டிதமணியவர்கள் என்னை அழைத்து, "சி.வை.தாமோதரபிள்ளை பதித்த நூல்களிலுள்ள பதிப்புரைகளைத் தொகுத்து ஒரு நூல்வடிவில் வெளியிடுதல் நன்று' என்று சொல்லி, அப்பதிப்புரைகளைத் தொகுக்கு மாறு பணித்தார்கள். அப்பணிப்புரை கேட்டு எனக்கு உண் டான உவகை சொல்லுந்தரமன்று.
மற்றை நாள் முதற்கொண்டே, சி.வை.தா. அவர்கள் பதித்து வெளியிட்ட நூல்களைத் பிரதிபண்ணுவதிலும் ஈடு படலானேன். நான் எடுத்துக் கொண்ட கருமம் இரண்டொரு மாசத்திலே ஒருவாறு நிறைவுற்றது. அரிதில் முயன்று தேடிய அப்பதிப்புரைகளின் தொகுப்பை மனமகிழ்ச்சியுடன் பண்டிதமணியவர்களிடம் சமர்ப்பித்தேன். அவர்கள் அதற் கோர் அணிந்துரையும் எழுதிச் சேர்த்து வைத்திருந்தார்கள். தொகுப்புத் தவறிவிட்டதுபோலும், அச்சில் வரவில்லை.
தாமோதரவரலாறு-இ.செல்லத்துரை 13
கடவுள் கருத்தை ஆரறிவார் பதினெட்டு வருடம் ஏறக்குறைய ஒரு தலைமுறை கழிந்தது. 1970 ஆம் ஆண்டும் ஆயிற்று. .
பண்டிதமணியவர்கள் இலக்கியவழியிலே குறிப்பிட்ட பகுதி அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அத னாலே 'தாமோதரம்" என்ற பெயரில் பதிப்புரைத் தொகுப்பு நூல் ஒன்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னை விழுங்கி யது; இக்காரணத்தால் இரண்டாம் முறையாகப் பதிப்புரைத் தொகுப்பு வேலை ஆரம்பமாயிற்று; ஆரம்பமாயிற்று என்ப தெல்லாம் வீண் கால தாமதமே ஆரம்பமானது ஆரம்பமாகு முன்னமே தாமோதரம் வெளிவந்து, இதோ உங்கள் கையிலே இருக்கின்றது. இந்நிகழ்ச்சி இந்நாளிலே காண்டற்கரிய மகா அற்புதமானது; அடைதற்கரிய பேராச்சரியத்தை அளிப்பது.
இவ்வற்புதத்தை நிகழ்த்தியவன் நானல்லன்; இது நிகழ் தற்குக் காரணர்களானோர் அறுவர் பெருமக்கள் உளர்.
அவர்களுள், பண்டிதர் பிரம்மபூரீ ச. பஞ்சாட்சர சர்மா, பண்டிதர் திரு. ச.சுப்பிரமணியம், சைவப்புலவர் திரு. க.சி. குலரத்தினம், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் புத்திரர் திரு. கு.அம்பலவாண பிள்ளை, பலாலி அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நூலகர் திரு. பொ.இராச ரத்தினம் என்னும் ஐவ ரும் தேவையான நூல்களை உடனுக்குடன் உவந்து உபகரித் தவர்கள். ஆறாமவரான திரு. சி.சிவகுருநாதன், M.A. Dip -in - Ed.அவர்கள் இத்தாமோதரத்தின் அருமை பெருமை களை உள்ளவாறுணந்தவர்கள்; இதனை அழகிய முறையில் விரைந்து வெளியிடுவதன் மூலம் இந்நூலுக்கும் எமக்கும் அபயமளித்தவர்கள்;
இந்த இருதிறந்து அற்புதர்கள் அறுவர்க்கும் பண்டிதமணி அவர்களுக்கும் நானும் நீங்களும் பெருநன்றிக் கடப்பாடுடையோம்.
Page 10
V.சி.வை.தா. வரலாற்றுச் சுருக்கம் (12.9.1832-1.1.1901)
இராவ் பஹதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை யவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினி யாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பிறந்தார்கள்.
அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத் தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப் பயிற்சியும், இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் தமிழ் விற்பன்னராய் விளங்கினார்கள்.
தமிழோடு ஆங்கிலமும் பயில விரும்பிய பிள்ளையவர் கள், தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் கலாசாலையிலே ஆங் கிலக் கல்வியை ஆரம்பித்தார்கள். பின்னர் அம்மொழியிலே உயர்தரக்கல்வி பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டை யிலுள்ள 'யாழ்ப்பாணச் சர்வ சாத்திரக் கலாசாலை"யை அடைந்து 1844 வருடம் அக்டோபர் மாதம் 12ம் தேதி தொடக்கம் பயிற்சி பெற்று வருவாராயினார்கள். அக் கலா சாலையிலே, கறல் விஷ்வநாதபிள்ளை, வித்துவான் கதிரைவேற்பிள்ளை, நெவின்ஸ், சீ. டி. மில்ஸ் முதல்ான பேரறிஞர்கள் பிள்ளையவர்களுக்கு ஆசிரியர்களாயிருந்து கற்பித்து வந்தார்கள். பிள்ளையவர்கள், அங்குக் கற்பிக்கப் பட்ட பாடங்களுட் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வானசாத்திரம் என்னும் பாடங்களிலே விசேட திறமை பெற்று முதன் மாணவராய் விளங்கி, யாவரானும் நன்கு
சி.வை.தா. வரலாற்றுச் சுருக்கம் 15
மதிக்கப் பெற்றார்கள். பிள்ளையவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக் கண்டு இறும்பூதெய்திய ஆசிரியர் நெவின்ஸ் அவர்கள், பிள்ளை யவர்களைப் "பண்டிதன்” என்று அழைப்பது வழக்கமாயிற்று.
இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டு வருட காலத்தை ஆங்கில உயர்தரக் கல்வியிற் பயன்படுத்திய பிள்ளையவர்கள், 1852 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி தமது இருப தாம் வயசிலே, கோப்பாயிலிருந்த போதனா சத்தி வித்தியா சாலையின் ஆசிரியர்களுள் ஒருவராக நியமிக்கப்பெற்றார்கள் இங்குக் கற்பித்துவரு நாளிலேயே நீதிநெறிவிளக்க உரை பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது.
அந்நாளிற் சென்னையிலே வாழ்ந்த பார்சிவல் பாதிரியார் பிள்ளையவர்களது விவேகசாதுரியத்தையுந்த தமிழ்ப் புலமை யையுங் கேள்வியுற்று, அவர்களைச் சென்னைக்கு அழைத்துத் தினவர்த்தமானி என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித்தார் கள். பிள்ளையவர்கள் பத்திரிகா தருமத்தினின்றும் எட்டுணை யுந் தவறாமல், நடுநின்று விடயங்களை ஆராய்ந்து, வசன நடையை அணிபட அமைத்துப் பத்திரிகையை நடாத்தியும் லஷ்சிங்டன்துரை முதலான ஆங்கிலேயர்க்குத் தமிழ் கற்பித் தும் வந்தார்கள். இதனால் பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்த அரசினர், அவர்களைச் சென்னை இராசதானிக் கல்லூரித்தமிழ்ப் பண்டிதராக நியமித்தார்கள். (இப்போதைய மாநிலக் கல்லூரி)
பிள்ளையவர்கள், இராசதானிக் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராயிருந்து கடமை புரிந்து வருநாளிற் சென்னைச் சர் வசாத்திரக் கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டது. அக்கலாசாலை யில் 1857 ஆம் வருஷம் முதன்முதல் நடத்தப்பட்ட பிரவேச பரீட்சைக்குப் பின் நான்கு திங்களும், முதன் முதல் பி. ஏ. பரீட்சையும் நடைபெற்றது. இப்பரீட்சைக்கும் பிள்ளையவர்
Page 11
16 தாமோதரம்
கள் தமது ஆசிரியரான காறல் விஷ்வநாத பிள்ளையவர்களு டன் தோற்றிச் சித்தியடைந்தார்கள். இதன் பின், கள்ளிக்கோட் டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதவியாசிரியராக நியமிக்கப் பெற்றார்கள். அவ்வித்தியாசாலையிற் கடமையாற் றிய ஆறுமாத காலத்துள், அவ்வித்தியாசாலையிலு:ண்டாக் கிய விசேட அபிவிருத்திகள் சீர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்களுக்கு அரசாங்க வரவு செலவுக் கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியும் அத்துறையிற் காட்டிய திறமை காரணமாக விசாரணைக்கர்த்தர் பதவியும் முறையே கிடைத்தன. இக்காலத்திலே (1871) பிள்ளையவர்கள் பி.எல். பரீட்சையிலும் வெற்றி பெற்றார்கள்.
சின்னஞ்சிறு பிராயந்தொட்டே தமிழ்மொழியில் மிக்க பயிற்சியும் சிறந்த தமிழ பிமானமு முடைய ராய் இருந்த பிள்ளையவர்களுக்கு, வரவு செலவுக் கணக்குச் சாலையிற் கடமை யாற்றி வருங் காலத்திலே - ஒய்வு நேரங்களிலே - பண்டைத் தமிழ்க் கிரந்தங்களை மேன்மேற்கற்பதிலும், பரிசோதனஞ் செய்வதிலும் ஈடுபாடு உண்டாயிற்று. கடல் கோளாலும் பிற காரணங்கள:லும் அரிய பெரிய தமிழ் நூல்களெல்லாம் அழிந் தொழிய, எஞ்சி நின்ற சில நன்னூல்களும், அந்நாளிலே "செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னா ளேடு'களாய், ஒரஞ் சிதைந்தும் இதழ் ஒடிந்தும் "சீரழிந்து கெட்டுச் சிதைந்து நிரைமாறிப் பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடி யாகி - முன்பின் முரணி முழுதும்புழுவுழுது - கம்பை நடு முரிந்து கட்டு விட்டுச் சிதறி - மூலைக்கு மூலை மடங்கி முடங்கி" எடுப்பாரும் அடுப்பாருமின்றி மண்ணுக்கிரை யாகிக் கிடந்தன. இந்நிலையைக் கண்ட பிள்ளையவர்கள், அழிந்தொழிவனவாய அக்கிரந்தங்களுட் சிறந்தனவற்றை விரைந்தச்சிட்டுப் பாதுகாக்க வேண்டியது எத்துணை இன்றி யமையாப் பெருங் கடமையென்பதை யுணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
சி.வை.தா. வரலாற்றுச் சுருக்கம் 17
முன்னர் - தமது இருபதாம் வயசிலேயே நீதிநெறி விளக் கத்தை அச்சிட்டு வெளிப்படுத்திய பிள்ளையவர்களுக்கு ஏடு களைப் பரிசோதனைஞ் செய்து அச்சிடுவது புதியதொரு முயற்சியன்று. ஆயினும், இராசாங்க உத்தியோகத்திலிருந்த தமக்குத் தேசமெங்குஞ் சென்று பரிசோதனத்துக்குத் தேவை யான ஏட்டுப் பிரதிகளைப் பெறுதற்குப் போதிய அவகாசமின் மையானும் அந்நாளிலே தமிழ்நாடெங்கணும் மெய்யறிவு றுத்திய ஆசாரியரும் மகா வித்துவசிரோமணியுமாய்த் தமக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கிய பூரீலழறி ஆறுமுக நாவலரவர்கள் இப்பெருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் விரித்தும் அச்சிடுவித்து வந்தமையானுந் தாம் அச்சிட்டு வெளியிடத் தொடங்காமல், நாவலரவர்களது பரிசோதனம் பெற்று வெளியாவதே நன்றென்று கருதி, அவர்களுக்குத் தம் மாலியன்ற உதவி களைப் புரிந்துவந்தார்கள். இத்தொடர்பினால் நாவலரவர்தள் பரிசோதித்துக் கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரத் தைப் பிள்ளையவர்கள் தம்பெயரால் அச்சிட்டு விபவ (1868) ஆண்டு புரட்டாதி மாதம் வெளியிட்டார்களென்பது இங்கு நினைவுகூரத் தக்கது.
இந்நூல் வெளிவந்தபின் பதினொரு வருடங்கள் கழித்து - 1879ஆம் வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் தேதி நாவலரவர் கள் இறைவனடி யடைந்தாராக, அதனால்,
"வேதம்வலி குன்றியது; மேதகுசி வாகம
விதங்கள் வலிகுன்றி, வைடற் சூதன்மொழி மூவறுபு ராணம் வலி குன்றியது;
சொல்லவரி சைவ சமயப் போதம்வலி குன்றியது; பொற்பொதிய மாமுனி
புகன்றமொழி குன்றி யதுநம் நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
நாவலரடைந்த பொழுதே'
Page 12
18 தாமோதரம்
என்று வருந்தி நாவலரவர்கள் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து நன்னூல்களை யெல்லாம் அச்சிட்டுத் தமிழைப் பாதுகாத்தலே தம் வாணாட் கடமையா மெனத் துணிந்த பிள்ளையவர்கள் வீரசோழியம் என்னும் நூலை 1881 ஆம் வருடம் வெளியிட்டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து இராசாங்க உத்தியோகத்தி னின்றும் பிள்ளையவர்கள் இளைப்பாறினார்கள். அதன்பின் நமது முழு நேரத்தையும் தாம் ஆற்றத் துணிந்த நற்பணிக்குச் செலவிடுவாரானார்கள். அதன் பயனாய், 1883 ஆம் வருடம் தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் என்பனவும், 1885 ஆம்ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரமும், 1887 ஆம் அண்டு கலித்தொகையும், 1889 ஆம்ஆண்டு இலக்கண விளட்கம், சூளாமணி என்பனவும், 1891 ஆம் ஆண்டு தொல் காப்பிய எழுத்ததிகாரமும், 1892 ஆம் ஆண்டு தொல்காப்பியச் - சொல்லதிகார (நச்சினார்க்கினிய)மும் வெளிவந்தன. (1897 ஆம் ஆண்டு பிற்பகுதியிலே அகநானூறு மணிமிடை பவளம் வரை பிள்ளையவர்களாற் பரிசோதிக்கப்பட்டதாயினும், வெளியிடப்படவில்லை)
இந்நூல்களை வெளியிட்டதோடமையாது, கட்டளைக் கலித்துறை என்னும் இலக்கண நூலையும், பொருட் பொலிவு உவமான உபமேய சிறப்பு நடையழகு முதலியன செறிந்து கற்றோர்க்கு வியப்பைத் தரும் வசன குள7மணியை யும் சைவ மகத்துவம் என்னும் செய்யுளும் உரையும் செறிந்த சைவ நூல்களையும், ஆறாம், ஏழாம் வாசக புத்தகங்களையும்
X இந்நூலிற் பதிப்புரை இல்லை.
இந்நூலிற் பதிப்புரைக்குப் பதிலாக நன்றிகூறல் உளது.
* இந்நூலை முதலில், தாவடி அம்பிகைபாக உபாத்தியாயரவர்களைக் கொண்டு எழுதுவித்தா ரெனவும் பின்னர்ப் பலரது வேண்டுகோளுக்கி ணங்கத் தாமே திருத்தியும் புதுக்கியும் எழுதினாரெனவும் கூறுப.
சி.வை.தா. வரலாற்றுச் சுருக்கம் 19
நட்சத்திர மாலை முதலியனவற்றையும் தாமே யாத்து வெளி யிட்டார்கள்.
பிள்ளையவர்கள் இராசாங்க உத்தியோகத்தினின்று ஒய்வு பெற்ற பின் 1887ம் ஆண்டு தொடக்கம் புதுக்கோட்டைச் சமஸ்தான மகாமன்றத்து நியாயாதிபதிகளில் ஒருவராயும், நீதி பதியாயும் நான்கு வருடங்கள் கடமை யாற்றியவர்கள்; சென்னை திராவிடக்கிரந்த பரிபாலன சபை, நியாய பரிபாலன சபை என்பவற்றில் அங்கத்தவராயும் சென்னை சர்வகலா சாலைத் தமிழ்ப் பரீட்சகராயும் இருந்து பணிபுரிந்தவர்கள். 'சென்னைச் சர்வகலாசாலையின் முதல் வித்தியார்த்தி என்ற பெருமைக்கு உரிமையுடையவர்கள்.
தேச மத பாஷாபிமானமிக்கவரும் சிவ பூசாதுரந்தரரும் ஏடுகாத்த பீடுடையாரும் ஆகிய சி.வை.தாமோதரம் பிள்ளை யவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1875ஆம் ஆண்டு இராவ் பஹதூர் (Rao Bahadur) என்னுங்கண் ணியப் பட்டம் நல்கிக் கெளரவித்தது.
இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தித் தமிழரனைவர்க்கும் ஒரு தமிழ்த் தந்தையாய் வாழ்ந்த பிள்ளையவர்கள் 1901 ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவிலே வைகுந்த ஏகாதசி என்னும் புண்ணிய காலத் திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சிவனார்தந் திருவடிக்கீழ் எய்தி அயராவின்பத் தழுந்தினார்கள்.
/7ی Z4%A7627 Zo/7zی /747z//2 /ضZ وی7447z/ 62/zo62)67 Z//f//62 வாழிய வதுகொள் சங்கம் வகுத்தநன்னூல்களெல்லாம்/ வாழிய ரருநூல் வல்ல வண்புகழ்ப் புலவர் மேலும் வாழிய ரந்நூ லே7ம்/ம் வள்ளவெந்த7ம னன்ன7/
Page 13
V. நன்றியுரை
பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமான் அடிச்சுவட்டிற் சென்று பல அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினார் உயர் திரு. சி.வை.தா. அவர்கள். அந்நூல்களுக்கு அவர்கள் எழுதிய பதிப்புரைகள் விலைமதித்தற்கரிய செல்வங்கள்.
1945 ஆம் ஆண்டில் வெளிவந்த "ஈழகேசரி’ புதுவருட விசேட அநுபந்தத்தில் அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரா யிருந்தவரும், இப்போது மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராயிருப் பவருமாகிய உயர் திரு. வித்வான் தெ.பொ.மீனாட்சி சுந்தர னார் M.A., B.L., M.O.L.,அவர்கள், "சைவத் தமிழ் அன்பரின் பாடல்கள்’ என்ற தலைப்பில் நீண்டதொரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார்கள். அது சி.வை.தா.வின் கவிதைகளுக்கு ஒரு முன்னுரையாக அமையுமெனினும் அன்னாரது உரை நSடயைப் பற்றியும் குறிப்பிடுவதாயிற்று.
'தாமோதரம் பிள்ளை யவர்களின் திருநாளைத் தமிழுலகங் கொண்டாடுகின்றது. இத்திருநாளைப் பற்றிய எண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே பயின்று வரும் இலங்கை மாணவருள்ளத்தேயே அரும்பிவிட்டது என அறிந்து எனக்கு ஓர் இறுமாப்புண்டு. இல்லை; செம்மாப்பே உண்டு, பிள்ளையவர்கள் எழுதிய உரை நடைப் பகுதிகளை தொகுத்துத் திருநாள் மலராக அச்சிட்டு வழங்கவும் அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அஃது அதற்கு ஒரு காலம் உண்டு; அக்காலம் இன்னமும் வரவில்லை."
பேராசிரியப் பெருந்தகையாரின் அக்கட்டுரையே இந் நூல் வெளியீட்டுக்கு வித்து. வித்து முளையாகி வளர்ந்த வரலாற்றை நண்பர் இ.செல்லத்துரை அவர்களின் இந் நூலிலுள்ள 'தாமோதர வரலாறு’ கூறுகின்றது.
ன்றியுரை 21
இந்நூல் வெளிவர வேண்டுமென்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பேரூக்கங்காட்டி அணிந்துரை யும் வழங்கினார்கள். அவர்களுக்குத் தமிழ் பேசும் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். எங்கள் நன்றியும் வணக்கமும் கூறாமலே யமையும்.
பன்மொழிப் புலவர், பல்கலைச் செல்வர் உயர்திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் 1945ஆம் ஆண்டிலே தாம் எழுதியதை நினைவுகூர்ந்து இவ் வெளியீட்டுக்குப் பாராட்டுரை ஒன்று வழங்கியுள்ளார்கள். ஆழ்ந்தகன்ற கல்விக் கும், நேர்மையான ஆராய்ச்சிக்கும் அன்பு, பணி முதலாய பண்புகளுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ்ப் பெரியார் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்கள் மீது பெருமதிப்பும், தம்மையடைந்த ஈழநாட்டுத் தமிழ் மாணவரிடம் ஆரா அன்பும் வைத்து எம்மையெல்லாம் மகிழ்விப்பவர். அவர் கட்கு நாம் நன்றி கூறியமையாது.
சி.வை.தா.வின் நினைவைப் பரப்பப் பல வழிகளில் முயன்று வெற்றியும் கண்ட புலவர். நா.சிவபாத சுந்தரனார். ஆசியுன்ர வழங்கும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். அவர் களுக்கும் எங்கள் நன்றி உரியது.
இந்நூல் வெளிவருவது தனியொருவருடைய முயற்சி யாலேயே. அவர்தான் பண்டிதர், சைவப் புலவர் இ.செல்லத் துரை அவர்கள். அவர்களுக்கு யார் எப்படி நன்றி கூறுவது?
இந்நூலை இத்துணைச் சிறப்புற அச்சிலேற்றித் தந்த யாழ்ப்பாணம் சைவப் பிரகாச அச்சியந்திரசாலை அதிபர், தொழிலாளர் முதலியவர்கட்கு எங்கள் நன்றி உரியது.
(பொங்கற்றிருநாள்) சி.சிவகுருநாதன் 14.1.1971 தலைவர்
தமிழர் திருநாள் யா.கூ.த.நூ.ப.வி.கழகம்
Page 14
1. வீரசோழியப் பதிப்புரை
தெய்வாசாரிய வணக்கம் யானை யானனப் பிரணவச் சிகரனை யிதயத் தான மேயவாஞ் சண்முகன் றனைமறை மூல மான வாதியை யருட்கயி லாயநாதப்பேர் ஞான சற்குரு நாதனை நாடொறு நவில்வாம்.
சரசுவதி வணக்கம் வெள்ளிதழ்த் தாமரை நள்ளணங் கிணையடி உள்ளுதூஉந் தமிழ்வளங் கொள்ளுதல் குறித்தே.
தமிழாசிரிய வணக்கம் எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன் முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா கத்துயர் மரபினோன் முத்துக் குமார வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவனே.
அவையடக்கம்
செந்தமிழ் விந்தைகை வந்தபா வாணரென்
சிந்தையிற் சந்தத முந்திவாழ் குநரே.
மலர்தலை யுலகிற் குலவுபற் பலவள-நலமெலா மில கிய தலமெனாநிலவிய-பொலிவுடைப் புண்ணிய் பூமியாகிய பரதகண்டத்தில் வழங்கும் பாஷைகளுள் ஆதிகாலந் தொட் டுள்ளன சம்ஸ்கிருதமும் தமிழுமாம். இவற்றில் ஒன்று சிவ பெருமானிடத்தும் மற்றது சுப்பிரமணியக் கடவுளிடத்தும் உற் பவித்தன என்னும் ஆகம ஐதீகப் பிரமாணங்களே இதற்குச் சான்றாகும்.
வீரசோழியப் பதிப்புரை 23
'ஆதியிற் றமிழ்நூலகத்தியற் குணர்த்திய - மாதொரு பாகனை வழுத்துதும்" எனவும் "வடமொழியைப் பாணி நிக்கு வகுத்தருளியதற்கிணையாத் - தொடர்புடைய தென் மொழியை யுலகமெலாந் தொழுதேத்தக் - குடமுனிக்கு வற் புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ எனவுந் தமிழிற்கும் ஈசுவ ரோற்பத்தியே கூறுவாருமுளர். சம்ஸ்கிருதத்திற்குப் பாணிநீ யம் போலத் தமிழிற்கு ஆதியிலக்கணஞ் செய்தவரன்றித் தமிழ் மொழியைத் தந்தவர் அகத்தியரல்ல ரென்றறிக. அழகி னானும் வலிமையானுமன்றிக் காலத்தினானும் ஒன்றற் கொன்று சமத்துவமுடையதென் றொப்பித்தற்கண்றே ஒன்றை வடமொழி யென்பார் மற்றதைத் தென்மொழி யென்பதுஉம் ஒன்றைச் சிவபெருமான் தந்ததென்பார் மற்றதைச் சுப்பிரமணி யக் கடவுள் தந்தருளியதென்பதும்உம்; வடக்குக்குத் தெற்கும் சுவாமிக்குச் சக்தியும் பிந்திய வென்றாற் சம்ஸ் கிருதந் தமிழிற்கு முந்தியதென்க. சம்ஸ்கிருத தமிழ்க் கடல்களின் கரைகண்ட பேராற்றலுடைய சிவஞான யோகீசுவரர்
"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரியல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியுமான்றவரே தழீஇயினா ரென்றாலிவ் இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ" என இரண்டனதும் ஒப்புமையை மெய்ப்படுத்தினர்;
ஆதிகாலத்தாரியரோடு சம்ஸ்கிருதம் இமயமலைக்கப்பா லிருந்து வந்ததென்றும், ஆரியர் வடபாலிற்புக்குக் கங்காதீர தேசங்களை வென்று கைப்பற்றியபோது அங்கே வசித்தவர் கள் தமிழரென்றும், ஆரியரைச் செயிக்க முடியாமையானும் அவர்க்குக் கீழ்ப்பட்டிருக்க மனமொவ்வாமை யானுஞ் சுயேஷ்டபங்கம் உறுவதினுந் தமது நாட்டைக் கைவிட்டுப் பிற விடஞ் சேர்ந்து சஞ்சரித்தலே தமக்குச் சிறப்பென்று
Page 15
24 தாமோதரம்
கருதித் தமிழர் தென்றிசைச்சென்று வதிந்து தமக்குள்ளே சேர சோழ பாண்டிய இராச்சியங்களை ஏற்படுத்தினார்களென்றுந் துணிவார் பலருளர். இவர் மதத்திற்குச் சார்பான அயற் சாட்சி களும் பலவுள. இஃதுண்மை யாயின் இந்தியாவிற்கு ஆதிபாஷை தமிழென்றே முடியும்.
காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தாரோடு மாறு கொண்டு, அவரிறுமாப்பை அடக்கும்பொருட்டு அகத்தியர் நெடுநாட் பொதிய மலையிற் றவம்புரிந்து, சுப்பிரமணிய சுவாமி வரத்தினாற்றமிழுக் கிலக்கணஞ் செய்து சம்ஸ்கிருத நூலாரைத் தலைகவிழச் செய்தாரெனிற் றமிழின் மான்மியம் வேறு சொல்லவும் வேண்டுமா? கலைக்கியான நூல்களுஞ் சாஸ்திரப் பயிற்சியுஞ் சம்ஸ் கிருதத்தில் முற்பட்டதும் அதிலிருந்து பல நூல்களும் அவற்றோடு பல்லாயிர மொழிகளுந் தமிழில் வந்ததும் மெய்யே. அதனாற் றமிழ் பிந்திய தென் றெங்ங் னம் போதரும் வடமொழி மந்திரத்து வாழ்ந்தார் கொண்ட அகந்தையை ஆண்டுச் சிற்றில் நிகர்த்த தென் மொழியைச் சிறப்பித்துக் கூடகோபுரம் வகுத்து மாடமாளி கையாக்கி அடக்கினமையால் வடமொழி முந்தியதா? ஒரு காலத்திற் குடிசையாயிருந்து பின் மண்டபமாயினதால் அக் குடிசை தோன்றியகாலம் அயலில் வகுத்த மண்டபத்திற்குப் பிந்தியதென்று சாதிப்பது தர்க்கலகூடிணமாகுமா? விபரீதம்! விபரீதம்!!
இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில் லாப் பாஷை என்னும் பொருள் பயப்பது. அங்ங்னமாயின், தமியேன் என்பது போல இழிவு பொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் என
வீரசோழியப் பதிப்புரை 25
வும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமி ழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென்சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிட மென்னும் வடமொழியே தமிழென்றாகிய தெனச் சற்றும் ஆலோசனையின்றிக் கூறுவாரு முளர். அவர் மதஞ்சாலவு நன்றாயிருந்தது!!
தமிழிலே தமிழ் என்னும் பதம்வருமுன்னர்ச் சம்ஸ்கிரு ததிற்றிராவிடம் என்னுமொழி உளதாகில் அப்பெயர் எப்பொ ருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன் னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற்றமிழுக் கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சம்ஸ்கிருதத்திலிருந்து அதற்குப்பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகை விளைக்குமே; இஃதொன்றோ யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சம்ஸ்கிருத மொழிக்கொப்ப நிகழுமா யின் அது சம்ஸ்கிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர்.
மேலைத் தேசவாசிகளின் இங்கிலீஷ் முதலிய அந்நிய பாஷை களில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர்மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர், மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெ னில் யாது குற்றம்? தருக்கத்திற் காகதாலிய நியாயத்தி னுண்மை அறியாமலும் ஆரிய மொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின்
Page 16
26 தாமோதரம்
காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்ப னைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாரான் முடியும்!
இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழிப்பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது" என்பர்; இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாருந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவு பற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுத மென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான்புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலியாதாரங்கள் காட்டி, வாய்வல்லான் சொல்லே மன்ேறு கொளுமென்று வாளா நம்பித், தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவ ரல்லர்.
ஹேமசந்திர நாநார்த்தத்தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது "மகாநதி முதற் குடி ரியீறாக ஓடி வளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. இது பலதேசத் தார் நிகழ்ச்சியும் நடையுந் தோன்ற வடமொழியில் ஈராயிரம் வருஷத்தின் முன் உச்சயினிபுரத்தில் இயற்றி ஆடிய ஒரு நாட கத்தில் முதன்முதல் எடுத்தாளப்பட்ட தென்பதுTஉம், அதில் விதர்ப்பநாடு மத்தியாகப் பிராச்சிய தகூடிணாத்திய திராவிட பாரசீய மென அயனாடுகள் குறிப்பிக்கப்பட்டனவென்ப தூஉம், பின்னர் இவற்றை இழிதகைமைத்தாய கொடுமொழி யையும் பல்பாஷை விரவிய சங்கரமொழியையும் முறையே குறித்த சாண்டாளி சாவரி என்னும் பதங்களோடு சேர்த்து அவ் வத்தேச பாஷைகளைக் குறிக்கும்படி பிரயோகிக்கப்பட்ட தென்பதூஉம் பிராகிருத நிர்ணய வியாக்கியிற் கரதலாமலகம்
* உலில்ஸனாசிரியர் கருமணல் முதலென்றார் அதுசரியன்று
வீரசோழியப் பதிப்புரை 27
போற் காட்டப்பட்டன. மேலுந் திராவிடம் என்பது தமிழ் மொழிக்கிட்ட பெயராயின் பஞ்சதிராவிட்மென்பதென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராஷ்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து பாஷையையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொல் வடமொழியிற் கோடி மண்ட லத்தின் குறியீடாகவே நின்ற தென்க. அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருஷப்பாஷைக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் தமிழ் திராவிடமாயது உந் திராவிடந் தமிழாயதுஉம் இரண்டுந் தவறென்றுணர்க;
தமிழ் தற் பாஷை என்பதற்குப் பூர்வாசிரியர்கள் கீழ் வாய்க்கணக்கிற்கும் விரவியல் செய்யுட்கும் மணிப்பிரவாளத் திற்கும் வேற்றுமை வகுத்த இலக்கணமே சாட்சி பகராதா? தற் காலத்தில் இங்கிலீஷ் பிராஞ்சியாதி மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழியென்றெல் வாறு பெறப்படும்? கடைச் சங்கத்திலுங் கடைக்காலத்துப் பிறந்த நாயனார் குறள் ஒளவைபாடல் திரிகடுகம் நான்மணிக் கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின்.
நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்நன்றி யென்று தருங்கொ லெனவேண்டா - நின்று சலியா திளந்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்றருத லால்.
Page 17
28
தாமோதரம்
கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவிட்கட் போறாற் னுழவும் - இளைஞனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்று முள்ளன போலக் கெடும்.
நல்லார்க்குத் தம்மூரென்றுாரில்லை; நன்னெறியிற் செல்வார்க்குந் தம்மூரென் றுாரில்லையல்லாக் கடையார்க்குந் தம்மூரென் றுாரில்லைத் தங்கைத் துடையார்க்கு மெல்வூரு மூர்.
சிலம்பிக்குத் தன்சினை கூற்றநெடுங் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - பலன்படா மாவிற்குக் கூற்றம் விளைஞண்டிற் குப்பார்ப்பு நாவிற்கு நல்லார் வசை,
அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப் பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால் மறைபுரிந்து வாழுமேன் மண்ணொழிந்து விண்ணோர்க் கிறைபுரிந்து வாழ்த லியல்பு.
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலின் முழுகி மறைந்து கிடக்கு நுணலுந்தன் வாயாற் கெடும்.
இற்றையனவாகிய குமரகுருபரசுவாமி நூல்களெத்தன்
60)l du?
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைக - ணி லெழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.
வீரசோழியப் பதிப்புரை 29
இவையெல்லாஞ் சமஸ்கிருதத்தினின்று பிறந்தனவாம்! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்ப மிட்டு வடிந்து, நிலம் நீர் எனப்பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் "பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந்தமிழ்மொழி' என்று சூத்திர மியற்றிய சுவாமிநாததேசிகரே, தம்மரபின் முன் னோர் மதத்தையும் மறந்து, 'நூலுரை போதகாசிரியர் மூவரு - முக்குண வசத்தான் முறைபிறழ்ந்தறைவரே" என்னுந் தன் விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற்போல, "அன் நியு மைந்தெழுத்தாலொரு பாடையென்-மறையவு நாணுவ ரறிவுடை யோரே7 யென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடைய ராய் அதன்மேற் கொண்ட பேரபிமா னத்தானும், அம்மொழியின் மேற் றென் மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ?
உலகத்தில் எப்பாஷைக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெ ழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன் றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத் தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு பாஷை யின்றே யென்று சமஸ்கிருதத்தையும் புரட்டி விட லாமே.
இங்கிலீஷ் பாஷையில் வடமொழிக்கில்லாத எழுத்துக் கள் F, Z இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு பாஷையின் றேயென அதனையும் மறுப்பார்போலும்; இரண்டற்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்ற மாம். உண்மை உரைப்பின் உரோமாபுரிப் பாஷையாகிய லத் தீனுக்கும் இங்கிலீஷ னக்குமுள்ள சம்பந்தமே சமஸ்கிருதத்திற் குந் தமிழுக்குமுள்ள தெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங் களையுடையதாயினும் லத்தீன் மொழி விரவாத கிரந்தமொன் றும் இங்கிலீஷில் இல்லாதவாறு போலவே சமஸ்கிருத மொழி சற்றாகிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லா திருக்க
Page 18
30 தாமோதரம்
லாமாகவே 'அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று-ளொன் றேயாயினுந் தனித்தமிழுண்டோ'என இலக்கணக் கொத்து டையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக.
அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்பு வினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விகுதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணையியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுலிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக் கணமாகிய அகத்தியத்திலே முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்ஸ்கிருதத்தினின்று பிறவாத தற்பாஷை என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒரு வர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப் படற் பாலனவா? அகத்தியர் மகாரி வீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றேயெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந் தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்துமுறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும் , யாதொரு கிரமமும் முன்னொடு பின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமை யானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் பாஷை யினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.
தமிழ்ப்பாஷையின் காலவருத்தமானம் அபோத காலம், அக்ஷரகாலம், இலக்கணக/7லம், சமுத7யகாலம், அநாதார காலம், சமணக/7லம், இதிகாசகாலம், ஆதீனகாலமென எண் கூறுபடும்.
வீரசோழியப் பதிப்புரை 31
அபோத காலம்
வரிவடிவின்றி ஒலிவடிவு மாத்திரமாய்நிகழ்ந்த காலத்தை அபோத காலமென்றாம். அஃது அகத்தியர்க்குமுன் சென்ற காலமாகும். அகத்தியர் தமிழ்மொழியை அவலோகித முனிவர்பாற் கற்றுணர்ந்தாரென்னும் அருகர் மத முஞ், சுவாமியிடந் தமிழ்மொழியையுஞ், சுப்பிரமணியக் கடவுளிடம் அதன் இலக்கணத்தையும் ஒதியுணர்ந்தாரெனக் கூறுஞ் சைவர் மதமும் அகத்தியர்க்கு முன்னுந் தமிழுண்மைக்குச் சான்றா கும். சிலர் சுவடி எழுத்து நெடுங்கணக்கு முதலிய சொற்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு அளவுக்கு வரிவடிவெழுத்தும் முன்னர் இருத்தல் வேண்டும் எனக் கூறுவர்.
இங்ங்னமாகவும், வடமொழி தென்மொழி மகோததி பருகிப்-படிமிசைத் தமிழ்மகா பாடியம் வகுத்துக்-குசைநுனி யதனினுங் கூரிய மதிபெறீஇத்- திசையெலாந் தன்பெருமிசை நிறீஇ உயர்ந்த மகானாகிய (பெயர் சொல்லவும் வாய் கூசுகின் றதே) சிவஞான முனிவரர் இதனை மறந்து அகத்தியரான் தமிழ் பூமியில் உற்பத்தியாயின தெனக் கொண்டு, அகத்தியம் "அச்செந்தமிழ் நிலத்து மொழிதோன்றுங் காலத்துடன் றோன் றிய நூல்" எனவும் மயங்குவாராயினர். 'சிறிய கேள்வியோர் கழியவுஞ் செருக்குடை யோரென்-றறிஞர் கூறிய பழஞ் சொலென் னளவிற்றே" யாயினுமாகுக. 'முந்துநூல்' 'முந்தை நூல்' என்பன முதனூற்குப் பெயர்களாகவும், இளம் பூரணரும் நச்சினார்க்கினியாரும் அவ்வாறே பொருள் கூறி 'நிலத் தொடு' என்பதற்குச் செந்தமிழ் நிலத்து வழக்கொடு எனப் பொருளுரைத்திருப்பது கண்டாராகவும் "நிலத் தொடு முந்துநூல் கண்டு" என்பதற்கு எண்ணுப் பொருளில் நிலத்தையும் (அதாவது நிலத்தின்கணுள்ள இயற்றமிழ் வழக்கையும் ) முதனூலையுங் கண்டு எனச் செம்பாகமாகப் பொருள் வெட்ட வெளிபோலக் கிடப்பதாக வும், இவர் உடனிகழ்ச்சிப் பொருள் கொடுத்து 'முந்து'
Page 19
32 தாமோதரம்
என்பதை வினைத்தொகையாக்கி, அறுகம்புல்லிற்றடக்கிய யானைபோல, இவ்வாறு இடர்ப்பட்டது கால கதியோ அன்றேற் பிற ஆசிரியர் மதங்களை மறுத்தலும் ஆங்காங்குத் தமது நூதன மதத்தை நாட்டுதலுந் தமக்கு என்றும் இயல் பாயினமை பற்றியோ அறியோம்.
நடுவினா யகமி லக்காய்
நலமழிந் திடுவே மெங்க ளிடையினக் கீர னில்லா
திருப்பினென் றவைசொல் வோனை விடையினான் றமிழ்நூல் கூறும்
விதிவிலக் குணரா னென்றாற் படியினில் யாவர் வல்லார்
பாற்றமிழடங்கிற் றம்மா!
“அகத்தியன் பயந்த செஞ்சொ லாரணங்கு', 'பொற் பொதிய மாமலையான் மொழி, ' 'பொற் பொதிய மாமுனி புகன்ற தமிழ், ' 'குறுமுனிகவனார் தமிழ்’ என வில்லிபுத்து ரராதிய கூறியவெல்லாம் உபசாரவழக்கென்க. அல்லதுஉஞ் சுவிகாரபுத்திர தருமமெனக் கொள்ளினும் அமையும்.
அகூடிரகாலம்
அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறியது வரைக்குஞ் சென்ற காலத்தை அக்ஷரகாலமென்றாம். அது சிறு காலமாயினுங் கைக்குழந்தை மழலைபயின்று சிற்றில்கோலி விளையாடிய பருவமாதலிற் பெற்றாருற்றார்க்குப் பேராநந்தந் தந்த வயதாயிற்று. பின் நிகழ்வது இலக்கணகால மாகலானும் இலக்கியம் பிறந்த வழியே இலக்கணம் அமைவதாதலானும் அக்ஷரகாலமே தமிழுக்கு ஆதியிலக்கிய காலமென்றுங் கொள்க. அன்றியுஞ் சுருதியொப்புச் செவிவாயிலாய் அதற்கு முன்கால்த்தினின்று வந்தனவும் பலவுளவாதல் வேண்டும். அவ்வாறிருந்தன
வீரசோழியப் பதிப்புரை 33
வென்றே துணிவாரும் "பலருளர். இதன்ை இவ்வாறு அக்ஷர காலம் ஏற்பட்ட பிறபாஷைகளின் உவமானப் பிரமாணத்தாலு முணர்க.
இலக்கணகாலம்
அப்பால் இலக்கண காலம் . இது தொல்காப்பியன் அதன்கோட்டாசான் துராலிங்கன் செம்பூட்சேய் வையாபிகன் வாய்ப்பியன் பனம் பாரன் கழாரம்பன் அவினயன் காக்கைபாடினியன் நற்றத்தன் வாமனன் என்னும் பன்னிரு சீஷரும் அகத்தியரிஷியிடத்தில் அவர் செய்த பேரகத்தியஞ் சிற்றகத்தியம் இரண்டும் முற்றக் கற்றுத் தத்தம் பெயரால் வேறு வேறிலக்கணமும் அனைவரும் ஒருங்கு சேர்ந்து புறப்பொருட் பன்னிரு படலமும் எழுதிய காலமாம் . அகத்தி லிருந்து சிற்றில்கோலி ஆடிய சிறு மகவு ருதுவாயினாற்போல இதுவுந் தமிழணங்கிற்கோர் விசேஷ பருவமேயாம்.
சமுதாய காலம்
அப்பாற் சமுதாயகாலம். அது மதுரைச்சங்கத்தார் காலமா கும். சர்வபூஷணாலங்கார நாரியாய்த் தமிழ்மாது தருணதாத சையடைந்து அரங்கேறிய மகோற்சவகாலம் அதுவேயாம். அப்பொழுது அவளுடைய சீருஞ் சிறப்பும் இத்துணைய வென்று சொல்லற்பாலனவல்ல. அக்காலத்திற்றான் அவள் சம்ஸ்கிருதநாயகனை மணந்தது. மணந்துமென் மாமியார் வீட்டு மருகன் போல இன்றியமையா வேட்கைக்குரியபோ தன்றி மற்றும்படி ஒருசார் ஒதுங்கியிருந்தமையாற்றமிழ் தன்
* திருவிளையாடற் புராணம்
விடைகொடு போவானொன்றை வேண்டினனேகுந் தேயந் தொடைபெறு தமிழ்நாடென்று சொல்லுப வந்த நாட்டி னிடையயின் மாந்த ரெல்லா ழாய்ந்து கேள்வி யுடையவரென்பகேட்டார்க்குத்தரமுரைத்தல் வேண்டும். சித்தமா சகல வந்தச்செந்தமிழியனூறன்னை அத்தனேயருளிச் செய்தியென்றன னனையான்றேற
வைத்தனை முதனூ றன்னைமற்றது தெளித்து பின்னு நித்தனே யடியே னென்று நின்னடிகாண்பே னென்றான்.
Page 20
34 தாமோதரம்
சிறப்பிற் சற்றுங் குறையாதிருந்தனள். இது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூன்றாகும். இவற்றுள்முதற் சங்கத்தார் காலத்தே உற்ப வித்து இடைச்சங்கத்தார் காலத் திற்கே உரியவாயினவெனவும் அகத்தியரோடு தொல்காப்பி யரும் இடைச்சங்கத்தில் இருந்தனரெனவுங் கடைச்சங்கத்தி லுந் தொல்காப்பியர் வீற்றிருந்தன ரெனவுங் கூறுவாருமுளர். அது யுத்திக்கிசைந்ததன்று. அவரவர் நூற்பெருமையான் வந்த உபசார வழக்காகக் கொள்ளலாம். அகத்தியத்தோடு தொல் காப்பியராதியோர் நூல்களுந் தலைச்சங்கத்தார் காலத்து நில வியும் அகத்தியத்தையே அஞ்ஞான்றார் ஆதாரமாகக் கொண் டாரென்றும் அகத்தியருடைய விரோதத்தினாற் றொல்காப்பி யம் அப்போது தலையெடாம லிருந்ததென்றுந் தொல்காப்பி யத்தின் சிறப்புத் தோன்றத் தோன்ற அஃது அகத்தியத்திற்குச் சரியா யெழுந்து இடைச் சங்கத்தாருக்கு இரண்டும் ஆதாரமா யின வென்றும் ஈற்றில் அகத்தியம் மகத்துவந்தாழத் தொல் காப்பியம் மேம்பட்டுக் கடைச்சங்கத்திற்றானே தனிநின்ற தென்றுங் கொள்வதே தகுதி. பாண்டியன் அவைக்களத்து "அதங்கோட்ட7சாற்கரிறபத் தெரித்து' எனப் பனம்பாரான ராற் கூறப்பட்டமையிற் றொல்காப்பியமும் ஏனைப் பதினொ ருவர் நூல்களும் முன்னர் உற்பத்தியாயும் பின் தலைச்சங்கத் தில் அரங்கேறியதாகக் கொள்க.
“நூலாநா லாயிரநானூற்றுநாற் பத்தொன்பான் பாலாநானூற்றுநாற் பத்தொன்பான் - மேலாநாற் பத்தொன்பான் சங்கமறு பத்துநாலாடலுக்குங் கத்தன் மதுரையிற்சொக் கன்.”
என்னுங் காளமேகப் புலர் வாய்மொழியைத் துணைக் கொண்டு தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மரெனவும்,இடைச் சங்கத்துப் புலவர் நானூற்று நாற்பத்தொன்பதின்மரெனவுங், கடைச்சங் கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மரெனவுங் கூறுவாருளர். அது சரியன்று. அவ்வச் சங்கத்து வீற்றிருந்தோர் முறையே அகத்தியனார், விரிசடையத்தனார், முருக முதல்வனார், முடி
வீரசோழியப் பதிப்புரை 35
நாகராயர், நிதிக்கிழவனார், அதங்கோட்டாசிரியனார், பனம் பாரனார், தொல்காப்பியனார் முதலாய் ஐஞ்னூற்று நாற்பத் தொன்பதிமரும் இருந்தையூர்க் கருங்கோழிமோசியார் வெள் ளூர்க்காப்பியன் சிறுபாண்டரங்கன் திரையன்மாறன்துவரைக் கோமான் சீரந்தையார் முதலாய ஐஞ்னூற் றென்பதின்மருஞ் சிறு மேதாவியார் சேந்தன் பூதனார் மதுரையாசிரியர் நல்லந் துவனார் மருதனிளநாகனார் உருத்திரசன்மனார் கபிலர் பரணர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலாய * நாற்பத்தொன் பதின்மருமெனவும், அவ்வச் சங்கத்திற்றத்தங்காவியம் அரங் கேற்றிய புலவர் தொகை நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதும், மூவாயிரத் தெழுநூறும், நானூற்று நாற்பத் தொன்பதுமெனவும், நூலும் உரையும் இரண்டும் சங்கத்தர்ர் காலத்தனவாகிய இறையனா ரகப்பொருளுரையாற் றெள்ளி தினுணர்க. அல்லாமலும் இதனையே:
“ஏழேழொ டைஞ்னூறு மேழே ழொடுபஃதும் ஏழேழுஞ் சங்க மிரீஇனார் - ஏழேழ்சேர் நாற்பதினா நூறுமுப்பா னேர்துறு நானூற்று நாற்பதினொன் பான்கவிஞர் நாடு." என்னுஞ் சங்கத்தார் காலத்துச் செய்யுளும் வற்புறுத்தும். மூன்று சங்கத்திற்குங் காலம், முதற்சங்கத்திற்கு முன்பின் நாலாயிரத்தைஞ்ஞாறும் மூன்றாஞ்சங்கத்திற்கு இரண்டாயிரமு மாக ஆகப் **பதினாயிரம் வருஷமென்ப, அவற்றுள் முதற் சங் கங் காய்சினவழுதி முதற் கடுங்கோன் வழுதி ஈறாக எண்பத் தொன்பதின்மர் பாண்டியரையும், இடைச் சங்கம் வெண் டோட்செழியன் முதல் முடத்திருமாறனிறாக ஐம்பத் தொன்
* நாற்பத்தொன்பதின்மர் பெயருந்திருவள்ளுவமாலையிற் காண்க.
** விவிலியநூலோடுடாடி அதன் கதைகளையுங்கால நிரூபணங்களையும் நம்பியவர்களுக்கு இஃதோர் கட்டுக்கதை போற் றோற்றும். அவன் அறுபதி னாயிரம் ஆண்டாண்டான் இவன் எழுபதினாயிரம் ஆண்டாண்டான் என்னுங் கற்பனைகள் போலாகாது, சங்கம் இரீஇய பண்டியர்கள் பெயரும் முறையும் தொகையும் ஆகமப்பிரமாணமாக நமது கைக்கு வந்திருக்க, எவ்வெச்சாதியா ரும் மனிதருக்கு மிக நெடிய வயது கூறிய பண்டைக்காலத்திற், சராசரி ஒரோ ரரசனுக்கு ஐம்பது வருடச் செங்கோன்மை வகுத்த இந்நிரூபணம் யாதாயினு மொரு சமுசயமுமன்றி முற்றவும் நம்பற்பாலதேயாம்.
Page 21
36 தாமோதரம்
பதின்மர் பாண்டியரையுங், கடைச் சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் பாண்டியரையு முடையன; பாண்டியருட்கவியரங்கேற்றினார் முதற்சங்கத் தெழுவரும் இடைச் சங்கத்தைவரும் கடைச் சங் கத்து மூவருமாம்.
தலைச் சங்கத் தரங்கேற்றிய நூல்கள் தொல்காப்பியம் காக்கை பாடினியம் அவினயம் நற்றத்தம் வாமனம் புறப் பொருட் பன்னிரு படலம் முறுவல் சயந்தம் குணநூல் செயிற் றியம் பரிபாடல் பெருநாரை பெருங் குருகு களரியாவிரை முதலியன; அவர்க்கு நூல் அகத்தியம். அதில் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் மூன்றும் வகுத்துரைக்கப்பட்டன. அவற்றுட் டொல்காப்பியம் முதலியவற்றில் இயற்றமிழும், பெருநாரை பெருங்குருகு முதலியவற்றில் இசைத்தமிழும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் முதலியவற்றில் நாடகத் தமிழும் விரித்துரைக்கப்பட்டன. இவர் சங்கம் இரீஇயது கடல் கொள்ளப்பட்ட தெக்ஷண மதுரை யென்ப.
இடைச் சங்கத்தரங்கேறியன கலிகுருகு வெண்டாளி முதலின. இவர்க்கு நூல் அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் இசைநுணுக்கம் பூதபுராணமென்பன. இவர் இரீஇய இடங் கபாடபுரம்.
கடைச் சங்கத்தில் அரங்கேறியன நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, எழுபது பரிபாடல், கலி நூற்றைம்பது, பதிற்றுப்பத்து, கூத்துவரி, சிற்றிசை, பேரிசை முதலியன. இவர்க்கு நூல் முற் கூறியவும் புதியா நுட்பம் பிரணிகை சாயித் திய மாதியவுமாம். இவர் சங்கம் இருந்த இடந்தற்காலத்துள்ள உத்தர மதுரை. இஃது இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் முடத் திருமாறன் காலத்துக் கடல் கொண்டபின் தோன்றியது. சங்கத்தார் காலத்து நூல்கள் அநேகம் இக்காலத்தில்லாமல் அடியோடே இறந்து விட்டன.
இன்றைக்கு ஏறக்குறைய* ஈராயிரம் வருஷத்தின் முன்பு உக்கிரப் பெருவழுதி காலத்திற் சங்கத்தார் அதிக அகந்தை
* சங்கம் ஒழிந்ததுசுத்த சந்திரவம்சத்திற்கடைசியாய் அரசு புரிந்த கூன் பாண்டியன் காலமென்று கொள்ளினும், அதன்பின் சோமசுந்தரன் முதற்
வீரசோழியப் பதிப்புரை 37
கொண்டு தெய்வசிந்தனையில் லாராய்ப் புலவர்களை அவமதித்துத் தம் நெறி பிசகினபோது தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாராலும் ஒளவை இடைக்காடராலும் அவமானப்பட்டுக் கர்வபங்கமடைந்து அத்தோட சங்கமுமு டிய வேதுவாயிற்று.
சங்கத்துள் அரங்கேறியவற்றுட்டேவர் குறளே கடைசி யானது. அதன்பின் ஏறக்குறைய இருநூறு வருஷஞ் சேரசோழ பாண்டியர் அவைக்களத்திற் றனக்குப் பேராதரவில்லாதிருந் துஞ் செந்தமிழ்ச் செல்வி தன் சிறப்புக் குறையாமல் உலாவிக் கொண்டிருந்தனள். அக்காலத்தினையே ஐந்தாவதான அநாதார காலமென்று குறிப்பித்தோம். அதனைப் புத்தர் கால மெனினும் இழுக்காகாதென்று கொள்க.
சமணர் காலம்
அப்பாற் சமணர்காலந் தொடங்கியது. தமிழில் மிக அரு மையான இலக்கிய இலக்கண கலைக்கியான நூல்கள் அநேகஞ் சமணவித்துவான்களாற் செய்யப்பட்டிருக்கின்றன.
பராக்கிரமன் வரைக்கும் நாற்பத்திரண்டு அதுலோம பாண்டியர்கள் அரசு செய்திருக்கின்றனராதலில், ஒவ்வோர் அரசனுக்குச் சராசரி இருபத்தைந்து வருடம் வைப்பினும் ஆயிரத்தைழ்பதாகிறது. பராக்கிரம பாண்டியனைமுறி படித்துத் துலுக்கர் முதன் முதல் மதுரையாண்டு எண்ணுற்றைம்பது வருட மென்பது இதிகாசரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆதலிற் கூன் பாண்டியன் காலமே இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் பின்னாயிற் றென்றறிக. அன்றி பும் பூரீஇராமர் இலங்கைக்கு வந்தது.அநந்தகுணபாண்டியன்காலம். அவன் கூன் பாண்டியனுக்கு முன் அறுபத்து மூன்றாவது பாண்டியன். ஆதலாலும் இத்தொகை அதிகமல்லவென்று காண்க. மேலும் இற்றைக்கு மூவாயிரத் தைஞ்னூறு வருஷத்தின் முன்இருந்த வியாசர்காலத்தவனாகிய அர்ச்சுனனுக் குத் தன் மகளைக் கொடுத்த சித்திரவாகன் மதுரைக்குச் சமீபமான பூழி என் னும் மணலிபுரத்தில் அநந்தகுணபாண்டியனிலிருந்து பதினெட்டாவது பாண் டியனாகிய சித்திரவிக்கிரம பாண்டியன் காலத்திற் சிற்றரசு புரிந்தவன். இத னாலும் இக்கால நிர்ணயந்தவறென்பது தெள்ளிதிற்புலப்படும். மேலும் கூன் பாண்டியன் காலத்து ஞானாசாரியராக எழுந்தருளிய திருஞானசம்பந்தமூர்த் திகள் மரபிற்றற்காலம் வரைக்கும் ஆசாரியாபிஷேகம் பெற்றோர் நூற்றுப் பதினால்வர். இஃதொன்றே கூன்பாண்டியன் காலம் இற்றைக்கு ஈராயிரம் வருஷத்தின் மேற்பட்டதென்பதை எட்டுணையும் ஐயமறக்காட்டும்.
Page 22
38 தாமோதரம்
சங்கத்தின் பிற்காலஞ் சமணர்தலைப்பட்டது தாயிறந்த பெண் ணுக்கோர் சற்குணநிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலும். * புத்த வைஷ்ணவ வித்துவான்கள் ஆண்டாண்டுத் தலைமை பெற்ற காலத்திற் றமது மத சார்பான சில நூல்கள் இயற்றின தன்றிச் சர்வ சனோபகாரமாகிய கிரந்தம் ஒன்றுஞ் செய்திலர். இது தமிழ் தம் பெயருக்கு மோனையாகாத கோபம் போலும். சமணரோ அங்ங்னமாகாது தமிழ் விருத்தியில் மிக முயன்றவர் கள். தமிழ் கற்கப்புகும் மாணாக்கர்பெரும்பான்மையும், படிக் கும் நிகண்டு நன்னூல் காரிகை நம்பியகப் பொருள் முதலிய சிறு கிரந்தங்கள் மாத்திரமல்ல புலவர் பெருமான்களாலுங் கல்வி வல்ல அரசராதியோராலும் வியந்து துதிக்கப்படுஞ் சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களும் அநேகம் அவர் களாற் செய்யப்பட்டன. பெரியவுங் கடியவுஞ் சிறந்த நடையை யுடையவுமாகிய பல கிரந்தங்களுக்கு மிக மாண்பு பொருந்திய உரைகளெழுதிவைத்த நச்சினார்க்கினியாரும் பின்பு சைவ மதத்தை அநுசரித்தவராயினும் முன்னர்ச் சமணர்
* இலக்கண இலக்கிய கலைக்கியான கருத்தாக்களையன்றிச் சைவ நாயன்மாரையொப்பச்சமயாதீதமான தொண்டர்கள் ஆழ்வாராதியரைஈண் டுக் குறித்திலேம். வஞ்சகச் சூதினால் வடவேங்கடத்தைக் கைப்பற்றியது போலவும் விக்கினேசுவரரைத் திருநாமஞ்சாத்தித்தும்பிக்கையாழ்வாரென்று கொண்டதுபோலவுந், தமிழ் நூலுடையார் தஞ்சமயத்தாரில் யாருமில்லாத குறையை நிவர்த்திக்க முயன்று, வல்லடி வழக்காக, வைஷ்ணவர்கள், சாதி யில் ஒச்சனுஞ் சமயாசாரத்திற் பிடாரியூனுமாகிய கம்பருக்குஆழ்வார்நாமஞ் சாத்தியும் அடிப்பட்ட சிவாசாரிய குலத்துப்பிறந்து சாம்பரியந்தஞ் சிவார்ச்ச னையே செய்த பரிமேலழகரை'அரிமேலழகுறுநூஉம் அன்பமையந்தணன் பரி மேலழகனென வாய்ப்பகட்டுப் பேசியும் யாது பயன்? ஊரை உலைமூடி யான் மறைக்கவா! வைஷ்ணவருட்டமிழ்க் காப்பியஞ் செய்தார் வில்லிபுத் தூராழ்வார்ஒருவரே. இவர்அருணகிரியிற் சிவநிந்தனை செய்து கண்ணிழந்து அச்சாப நீங்கும்பொருட்டுச்சிவபரமாக ஒரு நூல் செய்ய ஆஞ்ஞாபிக்கப்பட் டுங் கொடிய வைஷ்ணவராதலிற் றன்மதாபிமானத்திற்குப் பங்கம் வராது சிவஸ்துதி இடையிடை விரவிவரவும் வெளித்தோற்றத்திற் கண்ணன் சரிதை யாகவும் பிறர் மயங்கப் பாரதத்தைச் சாபநிவர்த்திக்காகவே செய்தனரென் றுணர்க. இதனுண்மை அருணகிரியார் சரித்திரத்தால் நன்கு வெளிப்படும். (இவை யாவும் சி.வை.தா.வின் சைவ சமயப் பற்றினை விளக்குவதாகும்)
வீரசோழியப் பதிப்புரை 39
கூட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் மேற்கூறிய கிரந்தமெல் லாம் ஈண்டு வகுத்த சமணகாலத்திற் செய்யப்பட்டனவென்று கொள்ளற்க. இவற்றுட் சில பின்வரும் இதிகாசாதீன காலங்க ளில் எழுதப்பட்டன. அவர்கள்தன்மை இன்னதென்று மெய்ப் பித்தற்கு எடுத்துக்காட்டாக இதனை ஈண்டுக் கூறினோம். இவர்கனூலுட் சிந்தாமணி யெழுதி இப்போது ஆயிரத்தெண் ணுாறு வருஷமிருக்கலாம். இவர்களிடந் தமிழ் பரிபாலனம் பெற்றது ஒருத்தேசம் முந்நூறு வருஷத்திற்குண்டு.
இவர்கள் காலத்தில் அநேக சமஸ்கிருதப் பதங்கள் தமிழில் வந்து கலந்தனவாயினும் வண்டு கைக்கொண்ட கிருமிபோலவும் வேரின் வாய்ப்பட்ட எருப்போலவுஞ் சமஸ் கிருத நிறமும் மணமுமின்றி ஆர்த்தபம் மயிடம் பகுதி விகுதி முதலியன போலச் சுத்த தமிழுருவமாகவே திரிந்து வந்தன. இதிகாச காலம் அப்பால் முன்பின் எண்ணுறு வருஷம் இதிகாசகாலம். பற்பல புராண காவியங்களுங் கலைஞான நூல்களும் இக் காலத்தில் எழுதப்பட்டன வாயினுந் தமிழிற் சிறந்த இதி காசங்களாகிய நைடதம், பாரதம், இராமயணம், இரகுவமிச மென்பன தோன்றிய காலமாதலில் இதிகாச காலமென்றாம். வடமொழியிலிருந்து புராணேதிகாசங்கள் சமயசாஸ்திர ஸ்தலமான்மியங்கள் கணித சோதிடாதிகள் சுத்த சமஸ்கிருதா காரமாய்த் தமிழில் மொய்க்கத் தலைப்பட்டதும் வடமொழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சகிக்கலாற்றாது மூழ்கியதும் இக் காலத்திலேதான். அதுமட்டோ? போகர் முதலிய ஆயுணுலா ரும் பிரகர் முதலிய கணிதவல்லாருஞ் "செந்தமிழணங்கின் திருமேனியெல்லாம் - வெந்தழல் கொழுத்தி வெதுப்பிய வாவெனக் - கொடுந்தமிழ் மலிந்து கொப்புளித் தெழுந்து" புண்படச் செய்ததும் இக்காலமே. இதில் அதிவீரராமன், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதி, தமிழ்தண்டி, வில்லிபுத்தூரர், வரந்தருவார் முதலிய பெரும்புலவர்கள் சேர சோழ பாண்டிய தேசங்களில் எழுந்து சொலித்தனர். தொண்டை மண்டலத்திற் கச்சியப்ப சுவாமிகள் சேக்கிழார்
Page 23
40 தாமோதரம்
முதலிய புராணகவீச்சுரர்கள் சிறப்புற்றோங்கினர். ஈழமண்ட லத்தில் அரசகேசரி செகராச சேகரர் முதலிய தமிழ் வல்லோர் தலைப்பட்டனர். பின்பு படிப்படியாகத் தமிழ்க் கல்விக்கு அரசபரிபாலனங் குறைந்தது. சமஸ்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டியது. தமிழ் தனி நில்லாது தத்தளித்து, வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மை வார்த்த உடம்பு போலத் தேகமெல்லாஞ் சமஸ்கிருதத் தழும்பு ஏறியது. கொப் புளித்த திருமேனியிற் கொடு முள்ளுமேறிய தென்னத் திசைச் சொற்கள் வந்து மரீஇன. ஈற்றில் ஏழரை நாட்டுச் சனியும் பிடித்தாற் போல, "ஆவீன மழைபொழிய இல்லம் விழ அகத் தடிமை ச7வமனையாள் மெய் நோவ-மாவீரம் டே/குதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் - சாவோலை கொண்டொருவ னெதிரே யெய்தத் தன்னவொண்ண7 விருந்துவரச் சர்ப்பந்தீண்டக் - கோவேர் தன்று/தர்நின்று கடமை கேட்கக் குருக்களுந்தட்சணைக்கு வந்து குறுக்கிட்டாரே' யென்று துலுக்க சேனை வந்து விழுந்து தேசத்தைச் சூறையாடி ஆங்காங்கு இறவாதெஞ்சிய புத்தகங்களையும் அழித்தகன்றனர்.
ஆதீன காலம்
அப்பாற் தற்காலத்து நிகழும் ஆதீன காலமாம். இது சந் தான குரவர் காலத்தையும் சேர்த்து இற்றைக்கு * எழுநூறு வரு
* காஞ்சி நகரத்திற் காமக்கோட்டி பீடமும் கன்னட தேசத்திற் சிங்கேரி மடமும் இதற்கு வெகுகாலத்தின்முன்தோன்றிஆண்டும் பலநூல்களும் பாஷ் யங்களுஞ் செய்யப்பட்டுள்ளவாயினும் அவையெல்லாஞ்சமஸ்கிருதத்திலா யினமையால் அவற்றைச் சேர்த்திலேம். கூன்பாண்டியன் காலத்ததாதலிற் றிருஞானசம்பந்த மடம் இதற்கும் முந்தியதாயினும் முதலிலே மதுரையில் ஞானசரிய பீடமாகமாத்திரம் ஏற்பட்டுப் பின் நாயனார் காலத்திலே தானே திருநெல்வேலியைத் தனக்கு மூலஸ்தானமாகப் பெற்ற அம்மடம் அழிந்து போனமையானும் அதிற்றமிழ் பரிபாலிக்கப்பட்டுங்கிரந்தங்கள்எழுதப்பட் டும் இருந்ததாகத் தோன்றாமையானும் அதனையும் ஒழித்தனம். அதற்கு உப யமடமாகிப் பின் மூலத்தானத்துவம் பெற்று ஓங்கிய மதுரை மடமே திருவி ளையாடற் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர்முதலியோர் எழுந்தருளப் பெற்றுத் தமிழ்க்கல்வியைப் பரிபாலனஞ் செய்தது.
வீரசோழியப் பதிப்புரை 41
ஷத்தின் முன் றொடங்கியது. சரஸ்வதியாலயமாய்க் கல்விக்களஞ்சியமாக முதன்முதற் றமிழ்நாட்டில் மடமேற் படுத்திய மகான்மா பூரீகைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதம பரமாசாரியராய் எழுந்தருளிய பூரீலழறி நமசிவாய தேசிகரே. இவர் மரபில் முன்னர் நான்காஞ் சந்தான குரவராகிய உமாபதி சிவாசாரியராற் சில சித்தாந்த சமய சாஸ் திரங்கேளயன்றிச் சாலிவாகன சகாப்தம் 1200 அளவிற் கோவிற் புராண முதலிய பல அரிய இலக்கியங்களுஞ் செய்யப் பட்டன.
பின்னர் ஈசான தேசிகரெனத் திருநாமம் வழங்கப் பெற்ற சுவாமிநாத குரவரால் இலக்கணக் கொத்தும் அவரது மாணாக் கர் சங்கர நமச்சிவாய தேசிகரால் நன்னூல் விருத்தியும், வேலப்ப தேசிகராற் பறியலூர்ப் புராணமும் அகத்தியர் வரத் தாற் செகத்தி லுற்ப வித்து அவர் ஒரு கடலுண்டுமிழ்ந்தால் யாமிருகடலுண்டுமிழேமா வெனத் தென்கலை வடகலைக் கடல்களை முற்றக் கற்றாநந்தித்த சிவஞான யோகீஸ்வரராற் றொல்காப்பியச் சூத்திரவிருத்தி, தருக்க சங்கிரகம், அன்னம் பட்டீயம், புத்தம்புத்துரை, காஞ்சிப்புராணம், முதுமொழி வெண்பா முதலிய மிக்க சாதுரிய கிரந்தங்களுங் கற்று வல் லோர் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் பெருஞ் சிறப்பினையுடைய திராவிட மகாபாஷியமுஞ் செய்யப்பட்டன.
கல்வி விருத்தி செய்து சமயஸ்தாபனம் பண்ணும் பொருட்டுத் தமிழ்நாட்டிற் றருமபுராதீனம், திருவண்ணா மலை யாதீனம், மதுரை யாதீனம், மங்கலபுரத்துச் சங்க மாதீனம் முதலிய மடங்கள் ஆதீனங்கள் வேறும் பல அங்கங்கே தர்மசீலோத்தமர்களால் ஏற்படுத்தப்பட்டன. அவற்றின் கண் ணும் இவ்வாறே காலத்திற்குக் காலஞ் சமய சாஸ்திரங்களன்றி இலக்கிய இலக்கண கலைஞான நூல்கள் செய்தோர் தரும புரத்திற் குமரகுருபர சுவாமிகள், சம்பந்த சரணாலய சுவாமி கள், சம்பந்த சுவாமிகள், வெள்ளியம்பலத்தம் பிரான், சச்சிதாநந்த தேசிகர், சிவப் பிரகாச சுவாமிகள், திருவாரூர்
Page 24
42 தாமோதரம்
வைத்தியநாத நாவலர் முதலியோருந், திருவண்ணாமலை யாதீனத்தில் அமிர்தலிங்க சுவாமிகள், குகை நமச்சிவாயர், ஞானப்பிரகாச சுவாமிகள், ஆடியபாத சுவாமிகள், சுப்பிரம ணிய சுவாமிகள் முதலியோரும், மதுரையிற் பரஞ்சோதி முனி வர் முதலியோரும், மங்கலபுரத்திற் சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோரும் அநேகர் உளர்.
தம்மையடைந்தவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும், அவருட் பரிபக்குவ தசையுடையோரை ஞானாசாரிய அபிஷேகஞ் செய்து வைப்பதும் புலவராய்த் தம்பால் வந்தோருக்குப் பல பரிசளிப்பதும் அவருட் சிரேஷ்ட வல்லமை யுடையோரைத் தமது ஆதீனவித்துவான்களாக நியோகித்துச் சிறப்புச் செய்வ தும் இன்னோரன்ன பிறவுமாகிய ஆதீன பரிபாலனம் இல்லா தொழியின் இது வரையிற் றமிழ் மிகவுங் குறைந்து போய் விடும். தமிழின் மகிமை இப்பொழுது இவர்களாலேயே நிலைபெற்றது.
அரசாட்சியாருந் தமது வித்தியாசாலை மாணாக்கருக்கு அவரவர் சொந்தப் பாஷையையுங் கற்பிக்கும் விருப்புடைய ராய்த் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவரது சுயபாஷையாகிய தமிழை ஒரோவழி ஒதுவிக்கின்றனர். நீந்துதற் றொழிலைக் கற்பிப்பான் ஓர் நீராசிரியன் கற்பானை ஏரி நதி கிணறு குளங்க ளில் இறங்க விடாது குடத்திற் றண்ணிர் மொண்டு சிறு குழியில் விட்டுக் கால்மறை யாத் தண்ணீரில் மாரடிக்க விட்டாற்போலக், கடனீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்குங், குளநீரெனிற் சளிபிடிக்குந் தலைநோவுண்டாம், யாற்று நீரெ னிற் சர்ப்பந்தீண்டும் முதலை பிடிக்கும், என்று ஒரோர் நூலுக்கு ஒரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலும் இறங்கவிடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமு மாக அள்ளி வைத்துப் படிப்பிடிக்கும் அவரது முயற்சியாற் பெரும் பயன் விளைவதேயில்லை. அவரிடங் கற்றுத் தமிழ் வல்லோராயினாரை யாண்டுங் கண்டிலேம். அன்றியும் இவ்
வீரசோழியப் பதிப்புரை 43
வித்தியாசாலைகளில் * நிகண்டுகற் றிலக்கிய வாராய்ச்சி யில்லாதார்க்குச் சிற்றிலக்கணங்களை மாத்திரங் கற்பித்தலால் அன்னோர் வா வந்தானெனக் கண்டு காகந்தானென்றுஞ் சா செத்தானெனக் கண்டு. தாதெத்தானெனவுங் கூறுவர் போலத் தமிழைப் பலவாறு விபரீதப்படுத்துகின்றனர். இதனாற் றமி ழுக்கு வருங் கெடுதியைக் குறித்து மிக அஞ்சுகின்றோம். இவ் வாறு விளைந்த விபரீதங்களுக்குச் சில உதாரணங் காட்டல் தகுதியாயினும் பிறர்க்கு விரோதமா மென்று விடுத்தனம்.
இலக்கியங்களைப் போதுமான அளவு கற்பிப்பாராயின் இலக்கணத்தை ஒருங்கே ஒழித்து விடினுங் குற்றமுறாது. இலக்கிய வல்லாருக்கு இலக்கணந் தானாயமையும். இஃது எந்தப் பாஷைக்குஞ் சாதாரண தர்மம். இங்கிலீஷ் பாஷையில் மகாபாண்டித்தியமுள்ளோர் சிலர்தாம் இங்கிலீஷ் இலக்கணங் சிறிதுங் கற்றதே யில்லையென்று சொன்னதை நாம் காதாரக் கேட்டிருக்கின்றோம். தமிழில் நல்ல பிரபந்தங்கள் நூல்கள் எழுதினோர் பலர். அவ்வாறிலக்கணப் பயிற்சி இல்லாதா ரென்பது யாருமறிவர்.
மேல் வகுத்த காலங்களுள் இந்நூலுடையார் காலஞ் சமணர் காலமென்று கொள்க. வீரராசேந்திர னெனவும் விக்கிரம சோழனெனவும் பெயர் வழங்கிய வீரசோழன் காலத்தில் அவன் கீழ்ப் பொன்பற்றியூரிற் சிற்றரசு புரிந்த புத்தமித்திர அரசனால் எழுதப்பட்டு அவ்வீர சோழனது பெயர் வகிக்கப் பெற்றமையே இந் நூலெழுதி முன்பின் ஆயிரத் தைஞ்நூறு வருஷஞ் சென்றிருத்தல் வேண்டுமென்பதற்குச் சான்றாகும்.
* ஐரோப்பிய பாஷைகள் போல ஒவ்வொரு மொழியுந்தன் சுயரூப மாகப் பக்குவிட்டு நில்லாது பலவாறு பிரியுந் தன்மையவாய்ப் புணர்ந்து நிற்குஞ்சமஸ்கிருத தமிழ் வாக்கியங்களை, அவற்றுள்ள பதங்களை அர்த்தத் தோடு முன்னர் உணர்ந்தாலன்றிப் பிரித்துப் பயன் கொள்ளுதல் அருமை யாதலில், அமரம் நிகண்டு முதலிய முதலே கற்றல் மிக அவசியமென்பது இத்தேச மொழிவல்லார் துணிவு.
Page 25
44 தாமோதரம்
மேலும் "ஏத மறு சகாத்த மெழுநூற்றில்' பூg கச்சியப்ப சுவாமிகள் ஸ்காந்தம் அரங்கேற்றிய போது "திகடசக்கரம்" என மொழிபுணர்ந்ததற்கு விதி காண்பிக்கும்பொருட்டு இந்நூல் கொண்டுவரப்பட்டமையானும், அக்காலத்துப் புலவர் களுக்கு இந்நூற்பெயருந் தெரியாமலிருந்தமையானும், தமது காலத்து நூலாயின் அவர்கள் தமக்கு நூதனமாயிருந்த அவ் விதியை ஆட்சேபியாமல் ஒத்துக் கொள்ளார்களாதலானும், இந்நூலின் அருமையை அவர்கள் மிகவியந்து கொண்டமை யானும் இஃது அவர் காலத்திற்குப் பல நூறு வருஷங்களின் முன்னர்ச் செய்யப்பட்ட தென்பதற்கு மயக்கமில்லை.
இந்நூலாசிரியர் ஒரு சமணர். உரையாசிரியருஞ் சம ணரே. அந்தச் சிறப்பில் அவர்க்குப் பெருந்தேவனென்று பெயர் குறித்திருப்பினுஞ் சமணர் தமது வித்துவான்களைத் தேவரென்று சாதாரணமாய்ச் சொல்லும் வழக்க முண்டாத லின் இவரதியற்பெயர் வேறாயிருக்கலாம். பாரதப் பெருந்தே வனாருங் கவிசாகரப் பெருந்தேவனாரும் ஆயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட இவர் காலத்துக்கு முன் இருந்தவர்களாதலின் அவர்கள் இவரினின்று வேறென்பது சொல்ல வேண்டிய தில்லை. அன்றியும் அவர்கள் சமணரல்லர். உரையில் எடுத்துக்காட்டாகப் பல செய்யுள்களை விக்கிரம சோழன் மகன் மகனாகிய அநுபமன சோழனது புகழாகப் பாடிச் சேர்த்ததனால் உரையாசிரியரும் ஆசிரியரும் ஒரே காலத்தினரா யிருத்தல் வேண்டும். உரையைக் "கடனாகவே நவின்றான்" என்றுரைத் சிறப்புப் பாயிரத்தார் கூறினமையால் அவர் புத்தமித்திரனார் மாணாக்கரிலொருவரென உத்தேசிப்பாரும் பலருண்டு.
முதல் வழி சார்பு மொழிபெயர்ப்பு என்னு நாலனுள் இஃது சார்பு நூல். அகத்தியத்தின் வழி இயற்றமிழ் விரித்துணர்த்திய தொல்காப்பியமுங் காதந்திரகாவியதரிசனங் களும் இதற்கு முதனூலென்ப. பொருளதிகாரத் துறையில்
வீரசோழியப் பதிப்புரை - 45
நாடகத்தமிழும் விரவிவரும் அலங்காரத்தைத் "தண்டி சொன்ன - படிவடநூலின் படியே யுரைப்பான்’ என ஆசிரியர் கூறியது தண்டியாசிரியர் வட நூலில் இயற்றிய காவிய தரிசனமாமெ னக் கொள்க. அதனைத் தமிழில் வடநூலின்படி தண்டியாசிரி யர் இயற்றிய தண்டியலங்கார மெனச் சிலர் மயங்குப. சிலர் ஒரு தண்டியே வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்ல ராய் உபயகவியென நாமம் வழங்கப் பெற்றிருந்தனரென்றும் அவரே காவியத் தரிசனந் தண்டியலங்காரம் இரண்டிற்கும் ஆசிரியரென்றும் ஆதலால் அவற்றுள் எதனை முதலாகக் கொள்ளினும் அமையு மென்றுங் கூறுப. இரு சாரார் கூற்றுந் தப்பென மறுக்க, தண்டியலங்காரமியற்றினார் அம்பிகாபதி யின் புத்திரர். அம்பிகாபதி கம்பர் மகன். கம்பர் குலோத்துங்க சோழன் காலத்தில் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலி யார் முன்னர் "எண்ணிய சகாத்த மெண்ணுரற் றேNன்மேற்’ றமது இராமாயணம் அரங்கேற்றியவர். இதற்கு நூற்றெழு வருஷத்தின் முன் குமர கோட்டத்தில் அரங்கேறிய ஸ்காந்தத் திற்கு வீரசோழியத்தினின்று இலக்கண விதிகாட்டப் பட்டதா தலால் இஃது பொருந்தாமை காண்க. அன்றியுங் காவிய தரிச னஞ்செய்த தண்டியாசிரியர் ஒரு சமணர். தண்டியலங்கார முடையார் சைவர். ஆதலால் இருவரும் வேறு. மிகப்பழைய நூலாகிய காவிய தரிசனமே வீர சோழியவலங்காரந் தண்டிய லங்காரம் இரண்டிற்கும் முதனூலாயிருந்ததென்க.
கரலிகிதங்களால் ஏட்டுப் பிரதிகளிற் காலந்தோறும் புக்க அக்ஷரவழுவுஞ் சொற்சிதையும் வாக்கியப்பிறழ்வும் இத் துணையவென்று சொல்லற்பாலதன்று. இதிகாச சிரோரத்தின மாகிய இராமாயணத்தை எழுதி அரங்கேற்றிய கம்பர் சோழன் மேற்கொண்ட சில வெறுப்பினால் அவனுரை விட்டு இருபது முப்பது வருஷஞ் சேரனிடம் போயிருந்து பின்பு சோழனைக் காண அபேட்சையுடையாராய்த் திரும்பி வரும் வழியில் ஒரு மடத்திலே சில வித்துவான்கள் சேர்ந்து இராமாயணப்
Page 26
46 தாமோதரம் ,
பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். அஃது தனது இராமாயணப் பிரசங்கமெனத் தெரியாதிருந்துங் கற்றாரைக் கற்றார் காமுறு தல் இயல்பாதலின் கம்பர்யாது பிரசங்கமாயினுமாகுக கல்விப் பிரசங்கங் கண்டுங் கம்பன் புறம் பொழுகலாமா வென்று, தன்னை இன்னானென்றன்னோர்க்குத் தெரிவியாது யாரோ வழிப் பிரயாணக்காரன் போல உள்ளே சிலநேரம் போயிருந்து ஒன்றையொன்று பார்த்தெழுத எழுதப் பிரதிகள் தோறும் புக்க வழுக்களுந்திரிபுகளும் அதிகப்பட்டிருந்தமையால் அஃது தனதிராமாயண மென்று மட்டிடாமற் றன்வாக்குஞ் செய்யுட் களும் இடைக்கிடை யாரோ சொருகுகவிகள் சேர்ந்திருப்ப தாகச் சொன்னாராம். ஒருவர் காலத்திலே இவ்வளவாயின் ஆயிரத்தைஞ்நூறு வருஷத்துத்திரிவு எப்படியிருக்கலா மென்பதை அநுமானித்துக் கொள்க.
ஒரு தேசத்தில் வழங்கிவரும் பிரதிகளை மாத்திரம் பார்த் தார்க்கு இம்மாறுபாட்டின் பெருக்கந் தோன்றாது. மதுரைப் பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு, யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விரு தேசப் பிரதிகட்கும் வேறு. தஞ்சாவூர் பிரதி முதன் மூன்றிற்கும் வேறு. சென்ன பட்டினப் பிரதிகள் இவை யெல்லாவற்றிற்கும் வேறு. எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகா ரத்தும் அத்துணைப் பெரும் வித்தியாசம் இல்லை. அதற்கு நியாயம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. அப்பால் மூன்றதிகாரங்களிலும் பிற்காலத்தோராற் செய்யும் உரை உதா ரண மென்றிவை யெல்லாந்தங்கடங்கள் மனம்போன வழியே மாற்றப்பட்டன. சில செய்யுளும் உரையும் ஒருங்கே தள்ளப் பட்டன. பழைய உதாரணங்களை நீக்கிப் புது உதாரணங்கள் பின்னூல்களிலிருந் தெடுத்துப் பதிலாகச் சேர்க்கப்பட்டன. தென்தேசப் பிரதிகளில் அலங்காரத்தின் பிற்பகுதி முழுவதும் யாப்பிற் சில பகுதியும் மூலமும் உரையும் ஒருங்கு பிறழ்ந்து செய்யுட்டொகையோடு மாறிப்போயின. இதனாற் பிற்காலத் தாராற் சேர்க்கப்பட்ட உதாரணங்கள் இப் பதிப்பிலும்
வீரசோழியப் பதிப்புரை 47
பல விடத்துச் செறிந்திருக்கு மென்றஞ்சுகிறோம். அது கொண்டு நூலின் பழமையை மறுக்கற்க,
மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால்போலப் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்திலும் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வாலென்றுங் கட்டிலைக் கடாலென்றும் பஞ்ச பாண்டவரைப் பிஞ்சுப் பாகற்காயென் றும் மாற்றி எழுதிவைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா? அதுபோலவே 'விலாசம், பரிசர்ப்பம், விதுதம், சமம், நாபம், நமதுரதி, பிரகமம், நிரோதம், பரியுபாசனம், வச்சிரம், புட்பம், உபநியாசம், வருண சங்காரம் இவை பயிர் முகத்தில் அங்கம் பதின்மூன்று" என்பது "பிவாசம் விருத்திய பம் விவாசம் தாவனபம் சயதுாரகம் மரிசோதம் பரியானம் பாவைச்சிரம் செல்வம் வருணசங்கரம் இவை பிரதிமுகத்திலங் கும் பதின்மூன்று" எனக்கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசையென்னுங் சொல் போதுமா? முதலி னின்று முடிவுவரைக்கும் ஒரொருவரி ஒரொரு நொடியாகவே கொண்டுழைத்தோம். *ஏடுகளிலிருந்த பிரகாரம் 186வது
* வேறும் ஒரு பிரதியில் அகப்பட்ட நான்காவது ரூபத்தைத் திருநெல் வேலித் தாசில்தார் மகா மகாருரீசின்னத்தம்பிப்பிள்ளையவர்கள் அனுப்பி வைத்தனர். அச்செய்யுளைச் சரிப்படுத்த முயல்வோர்க்கு உபயோகமா மென்றெண்ணி அதனையும் ஈண்டுக் குறிக்கின்றோம்.
'மாலவனமுதலிய விமையவாதி பவானபுயிரெலுணமிககால னெழி லலனனகாரிய வியலங்கிககெ செடனின குருவாம தெவ்ாகாங் சுகவாணங்க மில தாசில னெனற பொனறிவுன னெதிரிபவன பகவன மகாமுணாவா சொன்ன மணகாலன னறுவெத நானெனனான கழகுநாடன மிலக னறுன் னிய வென்று கந்து சொரிய மிரெயிலெய தாயொலினொங் கூபதார்தம ரொங்கூ மவாம மாண்டாரநதவிணாக கொல்ாபூண மாலைச் சார்பின மகிழ டித தொனறிக் கயச்சடை யெதபூண்டினியுயிர்மெற்ப காடெண்ணியலாரநன னெடுமாலை யிடககிளியை தத்மால கொளாய விண்ணினிலாரமன்ல லார விழிதத்னா சிறபட்புக் கூவிசிபன னொறக ரொபபெணணாநதுநிககிலுவா யத் தாரங்கொள்கை யினொயதிரததார் லிவிவி லொயவெக துதுணையா வெலவென நுவள வினவிகுதிரெ."
Page 27
48 ۔۔۔۔ தாமோதரம்
பக்கத்திற் பதித்திருக்கும் “மால வன முதலிய" என்னுஞ் செய்யுளை எடுத்தது திருத்த முயல்வோருக்கு இந்நூலில் யாமெடுத்த உழைப்புச் சிறிதே விளங்கும்.
பிரதி எத்துணைப் பழையதோ அத்துணை அதன் மாறுபாடுகள் குறைவு. ஆனால் பூர்வ பிரதிகள் பாண வாய்ப் பட்டு எழுத்தொன்றற்குப் பாணவரி மூன்றென்றால் யாதுதான் செய்யத்தக்கது “ஒளவையாராணையொன்று’ என்று சாபம் பெற்றுக்கிடந்த பிரதிகளின் ஏடுகளை ஒன்றை விட்டொன்று பிரித்தெடுத்ததே பேரற்புதமாயிற்று.
பழம் பிரதிகளுள் பூரீலழறி திருவாவடுதுறைப் பெரிய சற் குருநாத சுவாமிகள் தயைகூர்ந்து கட்டளையிட்டருளியது நெடுங்காலத்தது. கைவிட்டுக் கடன் கொடுத்த கைப்பிரதிகள் திரும்பி உடையார்பால் மீள்வதரிதாகிய இயல்பினையுடைய இக்காலத்தில், முன் நம்மை அறியாதவர்களாயினும் நமது பிரார்த்தனையை மறாது கிருபை புரிந்ததுமன்றி ஆதீனத்துப் பழம் பிரதிகளுட் பல நாளாகத் தமது பரிசனத்தைக் கொண்டு தேடுவித்து எடுத்தனுப்பிய பரிபூரண கிருபைக்காக மிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். பெரிதும் ஈனஸ்திதியில் இருப் பதால் உங்கள் காரியத்திற்கு உபயோகமாகாதென்று எண்ணு கின்றோம், என்று சுவாமிகள் கட்டளையிட்டருளிய பிரதியே அவர்கள் ஆசீர்வாதத்தினால் நமக்கு மற்றெல்லாவற்றிலுஞ் சிரேஷ்ட பிரதியாயினது. சமுசயம் நிகழ்ந்த இடமனைத்திலும் அதனையே ஆதாரமாகக் கொண்டு மற்றத் தேசத்துப் பிரதி களை அதற்கு உபபலமாக வைத்துப் பரிசோதனை செய்து, எடுத்த முயற்சியை ஒருவாறு நிறைவேற்றினோம்.
"கயிலியகொவளனறனனை கதிரம" "பாரிநனகுடை யினடங்கவெ - சொரிநிரதற கிருநத மாலனெ" "கொவணமாலை மாவாரெநதா வராமாலை மாறுக" "காதமதணிடததுல கணணினமான பெநது மானிதாதுகுமாணடதனது குறுமானி' "புவிதானிட நதுலவி ரணடாாாடடயதுதா டாளாகி முடடவிாாசெநதிரனி"
வீரசோழியப் பதிப்புரை 49
ஆயினுந் தற்காலத்திற்றமிழ் நாடுகளில் வழங்கும் பிரதி கள் அனைத்தினும் இப்பொழுது யாம் அச்சிட்டு வெளிப்படுத் தும் ரூபம் மேலானதென்று கொள்வதேயன்றி ஏட்டுப் பிரதி யின் ஆதாரமில்லாது யாம் ஒரு மொழியும் மாற்றிலேமாயி னும், இதுதான் ஆசிரியரெழுதிய சுத்தரூப மென்று கொள்ளற்க. அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டு தல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது. பிறநூற்றுணிவிற்கு மாறுபட்டுந் தற்கால வழக்கத்தை விரோதித்துஞ் சரியான அர்த்தம்* புலப்படாமலுஞ் சமுசயம் நிகழ்ந்த இடத்தும் எல் லாத் தேசத்துப் பிரதியும் ஒத்திருந்தனவற்றையும் யாம் சிறிதுந் திருத்திப் பதிப்பித்திலேம். அவற்றைத் தம் மதத்தின்படி திருத் துதல் அறிவுடையார்க்கு இயல்பன்று.
முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவர் பொற்புலவர் - அன்னோர் நடையிடையத் தம்வழியே நாட்டி மொழிமாற்றல் கடையிடையர் மாட்டுவினை காண்.
என்னுஞ் செய்யுளிற் கூறியபடி அஃது துணிவு, திரிபு, ஐயம் இவற்றினை முறையே உடைய உத்தமர், மத்திமர் கடை யருள் விபரீத அறிவினையுடைய மத்திமர்க்குஞ் சந்தேக ஞானத் தையுடைய அதமர்க்கும் உரிய தொழில் என்றுணர்க. பிரதிகள் அனைத்தும் ஒத்திருந்தமைபற்றி நாந்திருத்தாதொழிந்து விட்
* அர்த்தம் புலப்படாதனவற்றிற்குச் சில உதாரணம் 127-வது பக்கத்தில் யாப்புப் படலம் 33-வது காரிகை யுரையில் வரும் மேற்கோட் சூத்திரங்களிற் காண்க. பெரும்பான்மைய பிரதிகளில் ஒழிக்கப்பட்டமையானும், அவற் றிற்கு ஆதாரம் வடநூல்களினுங் காணப்படாமை யானும், அர்த்தந் தெரியா தனவற்றை அச்சிட்டும் பயனின்மையானுஞ் சில வித்வசனர்கள் அவற்றை நீக்கி விடும்படி சொன்னார்கள். இறந்துபோகவிடாது. நிலை நிறுத்துவதே யன்றி உலகத்திற்கு வீரசோழியத்தை உணர்த்துவது நமது நோக்கமன்றாதலா னும் இவ்வாறு பொருள் விள்ளாதிருந்தன சில பின்னர் வீசகணி தாதாரமா கக் கணக்கேற்றியபோது புலப்பட்டமையானுங் கூட்டுதலும் மாற்றுதலும் போலக் குறைத்தலும் ஒருவர்நாலைப் பதிப்பிப்போர்க்குப் பெருங்குற்றமா தலானும் அவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தனம்.
Page 28
50 தாமோதரம்
டவற்றை வழுவெனக் கண்டுழித் திருத்திக் கொள்ளுதல் நூலை வாசிப்போர் கடனாம் ஆதலால் அவர்க்கு, ஓரா தெழுதினே னாயினு மொண்பொருளை ஆராய்ந்து கொள்வதறிவுடைமை - சீராய்ந்து குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். என்று உரையாசிரியரே எழுதியிருப்பதை இவ்விடம் நினைப் பூட்டுகின்றோம். நல்ல வித்துவான்களுள்ளும் அநேகர் தாம் வீரசோழியமென்னும் பெயரைக் கேட்டதன்றி நூலைப் பார்த் தறியேமெனப் பலபல சமயங்களில் நமக்கு நேரே சொல்லி னர். ஆதலால் அழிந்திறந்துபோன நூல்களுட்டானு மொன் றாகி இன்னுஞ் சில காலத்தில் மருந்துக்கு மகப்படாமற் போய்விடுமென்றஞ்சி, அதன் பாலிய யவ்வன சொரூபங் கிட் டதாயினுங் கிடைத்தவரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்தநோக்கமென் றுணர்க.
வடநூற் பயிற்சியில்லாத எனக்குப் பொருள் யாப் பலங் காரங்களில் வரும் அரிய சமஸ்கிருத விதிகளிற் றுணை செய் தோராய அடியேனது பரமாசாரியர் வேதாரணியாதீனம் பூரீலயூரீ கைலாயநாத சந்நிதிக்கும், சென்னபட்டினம் பச்சை யப்ப முதலியார் பாடசாலைச் சமஸ்கிருத பண்டிதராகிய பூீரீமத் மண்டைக்குளத்தூர் கிருஷ்ணசாஸ்திரியாருக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலி மகாமகாபூரி சிவ சங். சிவப்பிரகாச பண்டிதருக்கும் மிக்க வந்தனஞ் சொல்லுகின்றனன். சந்தனத் தருவைச் சார்ந்திடு வேம்புந் தகைமணமே தந்திடு மென்பவச் சால்பெதற் காமிந்தத் தாரணியில் அந்தமில் கேள்வி அறிஞரை நாளு மடைந்தவென் சொல் சந்தமுறாதிருந்த தாற்றவ றார்வயிற் சார்வதுவே.
சென்னபட்டணம் சி.வை.தா. விசு வருடம் சித்திரை மாதம் }
1. அ. வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக் கவிகள்
1.
தஞ்சாவூர் சதாவதானம் - சுப்பிரமணிய ஐயர் சொல்லிய அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் சொல்துளைத்த நாவலர்க ளெழுதிவைத்த
முதுவீர சோழியத்தைச் செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி
விரவாத சென்னா ளேட்டிற் பல்துளைத்து வண்டுமண லுழுதவரி
யெழுத்தெனக்கொள் பரிசி னாய்ந்து கல்துளைத்த வெழுத்தாவச் சிட்டனன்தா மோதரனாங் கலைவல் லோனே.
2.
புரசை அஷ்டாவதானம் - சபாபதி முதலியார் சொல்லிய நேரிசை வெண்பா கல்லா மகலியைநீள் காசினிக்கு ராமனியல் நல்லாளாச் செய்யு நலமென்கோ - சொல்லாருந் தாமோதரன்வீர சோழியமுன் தந்ததக்கோர் தாமோ துருவாத் தரல்.
Page 29
52 தாமோதரம்
3. கோப்பாய் வித்துவான் - சபாபதிப்பிள்ளை சொல்லிய
நேரிசை வெண்பா மாயைதனி னின்றுலகம் வந்தவா வென்னுகோ மேயவிந்திர சாலமென விள்ளுகோ - போயவுருத் தொல்லையது போல்வீர சோழியந்தா மோதரன்றன் வல்லமையா லின்றுபெற்ற மாண்பு.
4. துரைத்தன வித்தியாசாலைத் தமிழ்ப் புலவர் தொழுவூர் - வேலாயுத முதலியார் சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் புனனாடென்றுரைக்குமுரை போயடங்க
வொருகோழிப் பூழி யின்வி றினநாடா வகைபடைத்த வீரசோ
ழியமெங்கே யெங்கே யென்னத் தினநாடு புலவர்மனங்களிதூங்க
வெளிப்படுத்த திறத்தை நோக்கிக் கனநாடி யெவர்தாமோ தரமிவர்க்கென்
றியற்பெயராற் கருதி னாரே.
5. திரிசிரபுரம்
சோடசாவதானம் - சுப்பராயச்செட்டியார் சொல்லிய
நேரிசைவெண்பா வழுவாகும் வன்மகர வாய்ப்பட்ட நூலைத் தழுவாத்தா மோதரவேள் சாலவ் - வழுநீக்கித் தந்ததுமுன் வன்றொண்டர் சார்கரா வாய்ப்பனவற் றந்ததனை யொக்குந் தகைத்து.
வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக்கவிகள் 53
6 சொர்ணநாதபுரம் துவாத்ரிம்ச சதவதானம் - இராமசாமிச் செட்டியார் சொல்லிய
நேரிசை வெண்பா
இறந்தபூம் பாவை யெலும்பினைச்சம் பந்தர் சிறந்தபெண்ணாச் செய்த சிறப்பாம் - திறம்பலசேர் தாமோதரன்வீர சோழியத்தார் சாற்றுருவம் பூமீதியைத்தனெப் போற்று.
7.
சுன்னாகம் அ.குமாரசுவாமி உபாத்தியாயர் சொல்லிய
கட்டளைக்கலித்துறை
பொன்னிற் பொலிந்திடும் பூணாக்கு மாக்களைப் போன்ற
சொல் விற் பன்னரைப் பாரிற் பரவுவர் காண்வன் பரலுலத்தைச் சொன்னம தாக்கிய தாமோத ரேந்திரன் றொல்புகழை யென்னென்ப வோவிதற் கோர்ரச வாதமு மீடல்லவே.
(பொன்பற்றிகாவலன், புத்தமித்திரனார் இயற்றிய இவ் வீரசோழியம்: யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை யால் பெருந்தேவனா ருரையோடு பல தேசப் பிரதி ரூபங் களைக் கொண்டு பரிசோதித்துச் சென்னை சின்னைய நாடார் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. ஜய வருடம் மார்கழி
ongsb: l895.)
Page 30
2. கலித்தொகைப் பதிப்புரை
கயிலை மன்னிய கடவுட னனுக்கிரகத்தி னியல்பு காட்டிமற் றேழையேம் பொருட்டுரு லேய்ந்த செயல்கை லாயநாதக்குரு திருமறைக் காட்டிற் பயில வாய்ந்ததென் றாய்ந்தவ னிணையடி பணிவாம்.
திங்க ளாம்பலுஞ் செங்கதிர்ச் செல்வன் கொங்கவிழ் நறையிதழ்ப் பங்கய மலகு நீர்மிசை யலர்த்துஞ் சீர்வறி தரக வளமலி யுலகிலுளநிறை புலமைக் கலைக்கதிர் கொடுகருஞ் சிலைக்கிணை கடந்த
என் இதயமுங் சிறிதளவு உதயமாம்படி பார்மிசைப் பக்குவிட நெகிழ்த்திய மிக்க சிறப்பினையுடைய,
சுன்னை முத்துக் குமாரன் றுணைக்கழல் சென்னி நாவொடு சிந்தை திருந்தவைத் தன்ன மூதறி வாளர் பதந்துதித் திந்நி லத்திவ் வுரையின் றியம்புகேன். தமிழ் சுயபாஷையென்பதுஉம், அதன் பெயர் திருவிட மரூஉவன்று தமிழ் மொழியே யென்பதுஉம், அஃது பரத கண் டத்தில் எப்பாஷைக்கும் பிந்தியதன்றென்பதுஉம், எவ்வாற் றானும் பிறபாஷைகளுக்குத் தாழ்ந்த தொன்றன் றென்பதுஉம் வீரசோழியப் பதிப்புரையில் ஆக்ஷேபநிராகரணசகிதமாக விவரித்தெழுதி யிருக்கின்றேன்.
கலித்தொகைப் பதிப்புரை 55
ஆயினும் என்கூற்றை நன்குணராது, திரவிடமென்னுஞ் சமஸ்கிருதபதந்தமிழெனத் திரிதற்கு மார்க்க மில்லையென்று யான் மறுத்தது போலச் சிலர் மயங்கி, வெகு கஷ்டப்பட்டு விதிநாட்டித், திரவென்பது தவ்வாகியும், வகரடகரங்கள் மகர ழகரங்களாகியும் மருவி அம்மீறு கெட்டுத் தமிழாயிற்றென்று பல்லுதாகரணங்கள் காட்டி வாதித்து, இனியான் தம்மதத் திற்கு உட்படுதலே தக்கதென்றும் போதித்தனர். இப்படி மரு வுதற்கு விதியில தென்று யான் யாண்டுஞ் சாதித்திலேன். இதுவும் ஒரு பெருமயக்கே. தமிழென்பதற்குந் திரவிட மென் பதற்கும் உள்ள சப்த பேதத்தைக் குறித்து விசாரிப்புழியன்றே இது பயன்படுவது? அன்றியும் மரூஉ மொழியிலக்கணமு மொன்று உளதாக விதிவிதி யென்று மாரடிக்க வேண்டிய தலைவிதிதா னென்னோ? மரூஉMற்கு ஒருவழிப்பட்ட விதி யுண்டா? திரவிடந் தமிழென மரீஇயிற்றென்றாற் போதாதா? தமிழென்னுஞ் சொல் தமிழ்ப்பாஷைச் சுயமொழியா திரவிட மென்னும் வடமொழித்திரிபா எஃதுண்மையென ஆராய்ச்சி செய்வான் புகுந்தபோதே திரவிட மென்பது தமிழென மாறு தற்கு விதியுண்டென்று யான் ஒத்துக் கொண்டதுதானே போதருமல்லவா?
இனி, இவர் கூற்றின் சாராமிசத்தைச் சிறிது கவனிப் போம். மதுரையில் ஒரு திருமலை நாயக்கன் இருந்தனன். சென்னையில் ஒரு திருமலை நாயக்கன் இருந்தனன். இருவ ரும் வடுகர். சென்னைக்கும் மதுரைக்கும் மிகச் சுளுவிலும் விரைவிலும் போய்வரத்தக்கதாகப் புகைரத வீதியுண்டு. ஆத லால் இரண்டிடத்தும் இருந்தது ஒரே திருமலை நாயக்கன் தா னென்பதே. இஃதென்ன தர்க்க லக்ஷணம்! என்ன விபரீதம்! ஒரே காலத்தில் இருந்தாரென்று கொள்ளினும் இது சித்தாந்த மாகாதே. பின்னை அகத்தியர் காலத்தின் முன் தொட்டுள்ள பதினாயிரம் வயதுள்ள தமிழ்ப் பதத்தையும் உச்சயிணிபுரத்தில் இரண்டாயிரம் வருஷத்தின்முன் பிறந்த திராவிடபதத்தையும்
Page 31
56 தாமோதரம்
ஒன்றென்றால் யார்தான் நகையார்? மூதாதை திருமன்றலிற் பெளத்திரன் சந்தன தாம்பூலம் பரிமாறினா னென்பதற்கும் இதற்கும் யாது பேதம்? தமிழென்னும் பதத்தை எடுத்தாண்ட அகத்திய தொல்காப்பியர் காலத்துச் சமஸ்கிருத நூலுடையோ ராய நாரத வியாச வசிஷ்டராதியர் வாய்மொழியினின்று திரவிட சப்தம் வழங்கியதை முதற்காட்டியன்றோ பின்னர் இம் மதம் நாட்டப் புகுதல் வேண்டும்? சிவபெருமான் அகத்திய
ரைப் பொதியிற்கு அனுப்பிய கதை ஸ்காந்தம் முதலிய பழைய புராணங்களில் உளதாகவும், ஆண்டுத் திரவிட சப்தத் தைக் காண்கிலமே. ஆலசியபுராணம் பாகவதம் முதலிய பிற்றை நாள் நூல்களிலன்றோ அது முளைத்தது? யான் போகும் இடங் கலைவல்லோரும் முனிவரும் நிறைந்த பெரு மாண்பினதாதலில் அவர்கள் மொழியை உபதேசித்து என்னை ஆண்டனுப்புக என்றதன்றித் திரவிடமென்று கேட்டதில் லையே.
வியாசர் புராணங்கள் செய்த காலத்திற் றமிழ் இல்லை, இருப்பினன்றோ அதன் பெயர் வரும். இஃதொன்றே தமிழ் பிற்றை நாளது என்பதற்குச் சான்றாகுமென்றும் வாதிப்பார் போலும். புராண இதிகாசங்களினகத்துச் சேய்ஞ்ஞலூர் மண லியூர் முதலிய சுத்த தமிழ்ப் பெயர்கள் கூறப்பட்டுக்கிடப்பதே தமிழ் அவர்காலத்து உண்மைக்குச் சான்றாகும்.
ஒன்றினின்று ஒன்று பிறந்தது உண்மையாயின், அதற்கு வேறு ஏது காட்டி முடிவு செய்யலாம். எழுத்திலக்கண விதி யினால் ஒன்றனை ஒன்றன் யாயென்று கூறி, அதுமாத்திரத்தாற் றமது மதந் தாபிக்கப்பட்டதென்று முழங்குவது ஆன்றோர் அறிவிற்குப் பெருமையன்று. மேலும் ஸ்தாபனப் பொறுப்பும் அவரதே. எழுத்திலக்கணவிதி யொன்று மாத்திரமே கொண்டு நியாயம் பேசில் (Wall) உவால் என்னும் அங்கிலேய பதம் பந்தல்பந்தர் சாம்பல் சாம்பரென்றாற்போல் லகரம் ரகரமாப் பிரவாளம் பவளம் பிரயாணம் பயணமென்றாற்போல ஆகாரங்
கலித்தொகைப் பதிப்புரை 57
குறுகிச் சீலம் சுசீலம் சுகம் சுசுகமென்றாற்போலச் சுப்பிரயத் தியம் பெற்றுச் சுவரென்னுந் தமிழ்ச் சொற்சனித்த தென்றுஞ் சிவிறி விசிறி யென்றாற்போல (Horse) ஹோர்ஸ் குதிரையென்றும் (Rice) றைஸ் சோறென்றும் ஆயிற்றென்றுஞ் சொல்லலாமே. (Sunday)ஸன்டே முதலிய வாரப் பெயர்க ளெல்லாம் ஸன்னினின்று சூரியனும் மூனிலிருந்து சோமனுந் தியூஸ் ஸ்யூத்தென மாறிச் செவ்வாயும் பிறந்ததென்று சாதிக்க லாமே. இதுவா அந்தோ! இவர்கள் கற்ற எழுத்திலக்கண (υριφ. 6) 2
இனி கால நிர்ணயத்தையாவது கொஞ்சமேனுங் கவனிக் கின்றார்களா? சோமசுந்தரபாண்டியனென்ற பெயரை ஒருவற் கதிகம் வகித்தல் தகாதென்றாற் போலக் கிரேக்கர் இந்தியா விலே ஒரு சோமசுந்தர பாண்டியனோடு இற்றைக்கு 1500 வருஷத்திற்கு முன் கொண்டாட்ட முடையராயிருந்தனராதால் அவனே ஆதி சோமசுந்தர பாண்டியனென மயங்கி மதுரைத் திருவிளையாடற் சரிதை யெல்லாம் முந்தநாளைச் சரிதை யென்று துணியுங் காலுவலாசிரியர் கூற்று எத்தன்மையது? இன்னோரன்னோர்க்குத் தமிழ்க்கு 16,000 வயதும் திரவிடத் துக்கு 2000 வயதுமென்று யாங் காட்டுவதனால் யாது பயன்?
மேலும் ஆனனம் பங்கசங் கிரீடமென் றின்னன வொப்பத் தமிழென்பதுந் திரவிடமென்பதும் ஒரு பொருள னவா?அதுவுமன்று. அங்கம் வங்கங்குலிங்கம் வங்காள மென் றாற்போலத் திராவிடம் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் ஆகுபெயராய் அந்நாட்டு மொழியைக் குறிப்பது. அங்கர் வங் கர்போலத் திராவிட ரென்பது திராவிட தேசத்தாரென்னும் பொருளதன்றித் திராவிட பாடை பேசுவோரென்னும் பொரு ளுடையதன்று. தமிழ் அங்ங்னமன்று. தமிழரென்றாற்றமிழ் நாட்டாரென்னும் பொருளே தொனியாது. தமிழ்மொழி பேசு வோரென்னும் பொருளே தொனிப்பது. சமஸ்கிருதத்தினின்று தமிழில் வந்த சொற்களுக்கு இவ்வாறாய பொருட்பேத
Page 32
58 . தாமோதரம்
மின்று. சமஸ்கிருதத்திற் குறிக்கும் பொருள் எதுவோ அதுவே தமிழகத்துங் குறிக்கப்படும். இதனானுந் தமிழுந் திரவிடமும் வேறுவேறென்பது போதரும்.
இன்னும் இரண்டொரு நியாயந் தமிழ் வழக்கை ஒட்டி ஈண்டுக் கூறுவன். தமிழ் திராவிடத்தின் திரி பாகிய வட மொழியாமாயிற் பஞ்ச திரவிடமென்பார் பஞ்ச குற்றம் பஞ்ச கேள்வி பஞ்சதொழில் பஞ்சதாயர் பஞ்சதிணை பஞ்சபா லென்று இன்னோரன்ன தொகைகளை ஒழித்துவிட்டாற் போலப் பஞ்ச தமிழென்பதனையும் விலக்கிவிட்ட தென்னோ? ஐவகைப் பொருள் தொக்க வடமொழிப் பெயர் களெல்லாம் பஞ்ச என்னும் எண்ணுப் பெயர் புணர்தற்பால வன்றோ? முத்தீயைத் திரிதீயென்னார்; முப்பழத்தைத் திரிபழ மென்னார்; அஃதொப்ப முத்தமிழைத்திரிதமிழழென்னார். மேலுந் திரிபுரத்தைத் திரிபட்டணமென்னார்; பஞ்ச பாதகத் தைப் பஞ்சமறமென்னார்; அவ்வாறே பஞ்சதிரவிடத்தையும் பஞ்சதமிழென்னார். வேறென்ன சாட்சி வேண்டும்? சிறுகால் அருகி வழங்குஞ் சதுர்மறை சத்தகடலென்னும் அற்பவழக்கு விலக்கென்றொழிக. அதுவும் அடிபட்ட ஆன்றோர் வழக் கன்று. கொடுந்தமிழின் பாற்பட்ட இழிவு வழக்கேயாம். பஞ்சதமிழ் திரிதமிழென்று அங்ங்னே இழிந்தும் வழங்கிற்றில தென்பது யான் கூறவேண்டியதில்லை.
உரியநெய் தாளதாமரை எனல்போலத் தமிழப் பிள்ளை தமிழப் பல்லவன் தமிழ வண்ணல் தமிழநாகன் எனத் தமி ழென்னுஞ் சொல் அகரச்சாரியை பெற்று வருதலும் அஃது ஆரிய மொழி யல்லாத சுத்த தமிழ்ச் சொல்லாதல் பற்றியே யென்றறிக. தமிழில் மகர ஈறு பெற்று அதுபற்றி அத்துச் சாரியை சேரப் பெற்ற சில மொழித விர யாதொரு சொல் தமிழ்ச் சாரியை பெற்றது அது தமிழ்ச் சொல்லென்றே துணிக.
இனி ஆரியத்தில் வழங்கிய திராவிட மென்னும் பெயர் யாது பொருளைக் குறித்தது? அப்பொருள் உள்ள இடத்தில்
கலித்தொகைப் பதிப்புரை 59
யாது பெயர்அதற்கு நிகழ்ந்தது பல்லாயிர வருஷமாகத் தமிழ் தனக்கொரு பெயரில்லாமலா இருந்தது? என்று யான் கேட்ட தற்கு முகமென்னும் பெயர் வடமொழியினின்று வருதற்கு முன்பே தமிழில் முகத்திற்கு யாது பெயர் வழங்கிற்றென்றுங் கேட்பாருளர் யாதாயினும் ஒரு மொழியில் இரண்டோரெழுத்துச் சமஸ்கிருதத்திற்குந் தமிழிற்கும் பொதுவாயின் அது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்று சாதித்தல் சரியன்றென் றும் இங்கிலீஷிலுள்ள பாதர் மதர் ஒப்பத் தமிழிற் பிதா மாதா என்றிருத்தலால் ஒன்றினின்று ஒன்று வந்ததன் றென்றும் யான் வற்புறுத்தியதைச் சிந்தை செய்தனராயின் முகமென்பதும் அங்ங்னே இரு மொழிக்கும் பொதுவென்று கொள்ளாது. இவ்வாறு கேட்பது சாத்தியக் கோளென்னும் போலி நியாயமல் லவா? சமஸ்கிருதமொழி ஒன்றாவது பயிலாத கலித்தொகை முதலிய சங்கத்தார் நூல்களில் முகமென்பது எத்தனையோ இடத்தில் வருகின்றதே. அன்றியும் முகமென்னும் பல பொருளொருசொல் தமிழ்த்திரிசொல்லென்டது அதற்குச் சமஸ் கிருதத்தில் வழங்காத பொருள்களும் வழங்குவதினாற்போத ரும். இதுபோலத் திரு அகம் புதன் தாமரை மனமென்றற்றொ டக்கத்து அளவிறந்த சொற்கள் இருமொழிக்கும் பொதுவா யுள்ளனவற்றை ஒன்றற்கே உரிய தென்று கோடல் நடுவு நின்லமையன்று. ஒருமொழி பல பாஷைக்குப் பொதுவாக நிகழ்வது பாஷா சம்பந்தம் உணர்ந்தோர்க்கு நூதனமன்று. திருமண திருநீறு திருவிழா அங்கை அஞ்செவி புதன்கிழமை செந்தாமரை முதலிய செந்தமிழ் வழக்கும் புணர்ச்சியும் சமஸ்கிருத மணமுமில்லாத பண்டைய சுத்த தமிழ் நூல்களில் ஆங்காங்குப் பல இடங்களிலுங் காணலாம்.
இவற்றோடு பெரும்பாலும் ஊடாடாது பிற்றைக் காலத் தனவாகிய இதிகாச புராணாதிகளிலும் சமய சாஸ்திரங்களி லும் மிக்க பயிற்சியுடையோரே தமிழின் தொன்மையையுஞ் சுவயத்துவத்தையும் நன்குணராமல் அதனை வடமொழி
Page 33
60 தாமோதரம்
யினின்று உற்பத்தியாயிற் றென்பர். இலக்கணக் கடலாகிய ஈசானதேசிகரே இவ்வாறு மயங்கின ரெனின் மற்றையோர் பிழைப்பது அதிசயமா? இவர், 'அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோ" என்று கூறியதே அவர் இந்நூல்களிற் பயிலாமைக்குச் சான் றாம். தமிழ் செய்த தவக்குறைவே அன்னோர் வடமொழிச் சாகரத்தில் மூழ்கி ஆனந்தித்துத் தமிழை அலட்சியஞ் செய் 5Si.
* வடநூற் பயிற்சியில்லாத என்போலியர் இவ்வித ஆராய்ச்சியில் ஒரு முடிவுகாண அருகரன்றென்று சிலர் வாதித் தனர். காண்டல் கருதல் உரையென்னும் மூன்று பிரமாணங் களே அறிவிற்குக் கருவியாம். அவற்றுள் முன்னையது இவ் வாராய்ச்சிக்கு ஒவ்வாது. பின்னையவற்றுள்ளுங் கருதல் காண்ட லானும் உரையானும், பெற்ற சாதனங்கள் மேற் சென்று நிகழ்வது. ஆதலால் உரையே ஈண்டு இன்றியமையா ததாம். இன்றி இவ்வுரைப் பிரமாணங் கல்வி கேள்விகளால் அடைவது. இவற்றுட் கேள்வியில்லாக் கல்வி சிறப்புறாது. கல்வியின்றியுங் கேள்வி சிறப்புறும். "முற்றப் பகலு முனியா திணிதோதிக் - கற்றலிற் கேட்டலே நன்று. ' திருவள்ளுவ
* "வடநூற்பயிற்சியில்லாத எனக்கு" என்று யான் வீரசோழியப் பதிப் பரையில் எழுதியது அப்பாஷையறிவு சிறிது இன்மையானன்று. சமஸ்கிருதத் திற் சந்தியுங்கிரியையும் பாடம் பண்ணி, அமரமும் நானார்த்தரத்தினாவலி யும் ஒதி இதோபதேசமும் ரகுவமிசமும் பார்த்துளேனாயினுஞ் சின்னூல் கற் றுப் பன்னூற்புலவர்போலத் தம்மை மதிப்பார் போலாது என் வடமொழி யுணர்ச்சி ஒருணர்ச்சியன்றென்று யான் கருதியமைபற்றியே யெனக் கொள்க. தமிழிலேதானும் யான் என்னை ஒரு பொருளாக மதியாமை தொல்காப்பியப் பதிப்புரையிற் பண்டிதர் கவிராசர் வித்துவான் புலவனென்றின்னோரன்ன பட்டத்திற்கு அருகானாகாது இன்னும் பலகாலந் தமிழ்ப் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போலிய ரென்பதனான் விளங்கும். நமது தமிழ்நூல் களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது.
கலித்தொகைப் பதிப்புரை 61
நாயனாருஞ் "செல்வத்துளெல்லாந்தலை" என்றது.அதனையே. பின்னைச் சமஸ்கிருத நூற்களின் பொருள் அந்நூற்களில் வல்ல புலவர் வாயிலாகக் கேட்டறிந்த அறிவின்மேல் யுத்தி பூர்வமாகக் கருதல் நடந்துழி வருங்குறையாதோ? அன்றியுங் கல்வியாலாகும் அறிவிற் கேள்வியான் வருவது நூறுமடங்கா குமே. ஆதலாற் பல காலும் விபரீத உணர்ச்சியையுந் தருவதா கிய கல்வியே இதற்குப் உபகாரப் படுவதென்றென மறுக்க.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு” வடமொழியின் மகத்துவத்தை யான் எஞ்ஞான்றும் எட்டுணையும் அவமதித்திலேன். தமிழ் அனாதியென்றாவது சமஸ்கிருதத்திற்கு முந்திய தென்றாவது கொள்கிலேன். ஆரியர் வருவதற்கு முன் பாரதகண்டத்திலிருந்த பாஷை தமி ழென்றும் ஆரியரால் முறியடிக்கப்பட்ட தமிழர் "தென்றிசைச் சென்ற சேர சோழ பாண்டிய ராச்சியங்களை ஏற்படுத்தினார் களென்றும் ஆதலாற் பரதகண்டத்திற்குத் தமிழே முந்திய தென்று சாதிப்பாருளராகவும், யான்,
"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரிசைவாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியுமான்றவரே தழிஇயினா ரென்றலிவ் இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ"
* இதற்கு அயற் சாட்சிகளும் பிற உளவென்றேன். சென்னை ஹைகோர்ட் சிரேஷ்ட நியாயாதிபதியாயிருந்த சர்சாள்ஸ் தேணர்துரையவர் கள் இமயமலைச் சாரலில் இருக்கும் ஒரு வேடச் சாதியாருடைய பாஷை தமிழோ டொற்றுமையடையதென்று தெரிவித்தனர். இதனால் தென்றிசைத் சென்றோர் பலராகச் சிலர் வடதிசைச் சென்று மலையடிவாரங்களிற் குடியு றைந்தனரென்றுங்காலாந்தரத்திற் பல விகற்பங்களை யடைந்த அவர்தமிழ் இப்பொழுது பிறிதொரு பாஷையாயிற்றென்றுங்கொள்ளலாம். இங்கு வந்த தமிழரினின்று சிதறிநீலகிரியிலுங்குடகத்திலும் வதிந்ததோடர்குடகர்பாஷை களும் அன்ன என்றறிக.
Page 34
62 தாமோதரம்
என்ற முனிவரர் பதத்தைச் சிரமேற்றர்ங்கி இருமொழியுஞ்
சமத்துவமுடையன வென்றும் ஆகவே தமிழிற்குச் சமஸ்கிரு தந்தாய்மொழியன்றென்றுந் தமிழின் பெயர் திரவிடமென்ப
தன் மரூஉவன்றென்றுஞ் சாதிப்பான் நின்றனன்.
ஆயினுஞ் சுதேசமித்திரன் வாயிலாகத் தோன்றிய இருவர் யான் கூறாத கூற்றுக்களையும் என்தலைமேலேற்றிச் சமஸ்கிருதத்திலும் வைஷ்ணவத்திலும் அசூயை கொண்டிருக் கின்றேனென்று பழிசுமத்தினார். சைவருஞ் சமணரும் போல வைஷ்ணவர் தமிழைப் பரிபாலித்திலரென்று யான் சாற்றிய தில் வைஷ்ணவ நிந்தை எவ்வாறு பெறப்பட்டதோ? "வைணவர்கள் திராவிடத்தைப் பள்ளித்தமிழென்று ஏளனமா யுரைப்பர்’ ‘‘வைணவக் கிரந்தந் தமிழிற் செய்தால் அது தமிழுக்குக் கவுரவம்" என்று கழறிய அவர் கூற்றே என் சொல்லை மெய்ப்பிக்கவில்லையா? பின்னை என்மேல் ஏன் அவர்க்கு இவ்வளவு நிந்தனை விதவையை மொட்டை யடிக்கும் உறவினர் அவள் அளகத்தின்மேற் கொண்ட வெறுப்பினாலா அவ்வாறு செய்விக்கின்றனர்?
யானை தன் தலைமேல் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதுபோல் இன்னும் பல சைவ நிந்தனைகளுக்கும் சைவாசிரிய நிந்தனைகளுக்கும் இவர்தம்மை ஆட்படுத்திக் கொண்டதனால் எனக்கு யாதும் மனக்கோட்டமிலது. ஆயினும் அவர் கடிதத்தில் என் கூற்றுக்கு ஆக்ஷேபமாகச் சில வாதந் தொடுக்கப்பட்டமையால் அவற்றை மாத்திரம் ஈண்டு நிராகரிக்கின்றேன்.
"ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையா" என்றார். இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின் றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்.
கலித்தொகைப் பதிப்புரை 63
'அகத்தியத்திற் கீர்வாணத் தோரணைகள் அநேகங் காணலாம். நாடகத்தை நாடகமெனவே அகத்தியர் கூறுவர்" என்றார். அகத்தியத்தை இப்பெருமான்யாண்டுக்கண்டனரோ இரண்டொரு தோரணைகளைக்காட்டி உதாகரித்தாலன்றோ அஃது ஆரியச் சிறப்புத் தோரணை யென்று தெரியலாம்? அங்கிலேய பிராஞ்சிய ஜர்மானிய ருஷிய கிரேக்க லத்தீனாதி பாஷைகளின் வியாகரணங்களிலெல்லாஞ் சமஸ்கிருதத் தோரணை காணலாமே. எழுவாய் பயனிலை கொண்டு முடியுமென்றால் இஃது எந்தப் பாஷைத் வியாகரணங்கட்கும் பொது இலக்கணமுண்டாயிருத்தல் அவசியமாமே. இயலிசை நாடகத் தமிழெனத் தமிழிற் கூறிய நாடகமும் புராண இதிகாச காவிய நாடகமென வடமொழியார் கூறும் நாடகமும் வேறு வேறென்று அவர் அறிந்திலர் போலும். ஒன்று மொழியியைபு விலாசங்களைக் குறிப்பது; மற்றது கிரந்த நடை சுவைகளைக் குறிப்பது. இவை தம்முள் வேற்றுமையாம்;
"தமிழெழுத்துக்களே கிரந்தாக்ஷரங்களின் திரிபு" என்றார். இதனாற் போந்ததென்? கிரந்தாக்ஷரம் முந்திய தென் றாகும். தருமன் துரியோதனனுக்கு மூத்தவனென்றாற் பாண்டு திரிதராட்டிரன் தமையனாவானா? இனி "ஆதிகாலத்தில் மனு மான்கள் தேவபாடை பேசினதாகத் தெரியவருகிறது. மூல வாக்கிய வேதம் கீர் வாணமே" என்றதனாற் சித்தாந்தமானது யாது? வடமொழி முந்தியதென்பதே. அவ்வாறு வட மொழியே முந்தியதாகுக. காலத்தால் முந்தியதெல்லாம் பிந்தியதற்குக் காரணமாமா? அதிதி முந்தியவளாதலால் தைத் தியருக்குத் தாயாயினாளா? ஒன்றைச் சித்தாந்தஞ் செய்யும் போது அதன் பூர்வோத்தர பசுஷங்கள் திருட்டாந்தங்களை நிச்சயித்தன்றோ துணிதல் வேண்டும்?
"காசியிற் சங்கத்தை அடக்கத் தவம் புரிந்து வரம் பெற் றுத் தமிழையடைந்தது உலகம் அகத்தியன் மூலம்" என யான் எஞ்ஞான்றுங் கூறிற்றிலேன்.
Page 35
64 தாமோதரம்
"கீர்வாணநாயகனை மணந்தவன் வேட்கை வேளையில் மாத்திரம் அவனை இச்சித்துத் தன் மன வழியே நடந்ததினா லன்றோ அந்தப்பட்டி சோபியாமல் இழிவடைந்தாள்" என்று திட்டியுங்"காளமேகமே நீஎமது நாளைமேகம்போல் பொய்த் தனையே! சிறப்புத்தானுனக்கு" என்று புலம்பியும் இன்னோ ரன்ன குழிமொழிகள் செறிந்தும் வருங் கூற்றுக்களுக்கு யான் விடையெழுதுவேனல்லேன். உலகத்தில் இவர் போலிய ராலே திட்டப்படுவதற்குத் தகுந்த யோக்கியதையாவது உள்ள வனாக யான்மதிக்கப்பட்டதே எனக்குப் பெருஞ் சிறப்பென்று கொண்டனன்.
தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற் கணுள்ள நாடுகளுங் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்திய போது தமிழ்ச் சங்கத்திற்கு ஆலயமாய்ச் சர்வ தமிழ்க் கிரந்த மண்டபமாயிருந்த கபாடபுரம் அதன்கண் இருந்த எண்ணாயி ரத்தொருநூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருண பகவானுக்கு ஆசமனமாயிற்று. பாண்டிய நாட்டின் வட பாலில் ஆங்காங்குச் சிதறுண்டு குலாவிய சாதாரணசன விநோ தார்த்தமான சில கிரந்தங்களும் பள்ளிக்கூடங்களிற் சிறுவர்தங் கல்வித் தேர்ச்சிக்குரிய வாய் வழங்கிய சிறு நூல்களுஞ் சில்லறை வாகட சோதிடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவனவாயின.
ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ்சாலந் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென்றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயருமாள்.
எனப் புலம்பிய நமது முன்னோரிடத்திலிருந்து நாம் அடைந்த பிதிரார்ச்சிதம் வெறும் பெயரினுஞ் சிலவேயாம்.
கலித்தொகைப் பதிப்புரை 65
இப்பால் வடமதுரைச் சங்கம் ஏற்ப்பட்டு, இடமிடந் தோறும் நடைபெற்றுள்ள சுவடிகளைச் சேகரித்துத் தமிழ்ப் பரிபாலனம் பண்ணித், தன் காலத்தும் நானூற்றைம்பது புது நூல்களை அரங்கேற்றி வைத்தது. அதன் பின்னர்ச் சமண வித்துவான்கள் தலையெடுத்துப் பலபல நூல்கள் இயற்றித் தமிழை வளர்த்தனர். அதன்மேல் இதிகாச புராணாதிகள் சமஸ்கிருத மொழியினின்று வித்துவன்களால் மொழிபெயர்க்கப் பட்டு மறுபடியுந் தமிழ் தலையெடுத்தபோது, நாடு முகமதீ யர் கைப்பட, அவர்கள் கோறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேல் என்று மத வைராக்கியங் கொண்டு அந்தோ நமது நூற்சாலைகள் அனைத்தும் நீறாக அக்கினி பகவானுக்குத்தத்தஞ் செய்தனர். இவர்கள்கைக்குத்தப்பின சின் னுரல்களே இந்நாளில் நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னுந் தமக்கு என்ன பேரவதி வரு மோவென்று பயந்தாற்போல இங்கும் அங்கும் ஒளித்துக் கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாருமின்றிச்
"செல்துளைத்த புள்ளியன்றி மெம்ப்புள்ளி விரவாத சென்ன7 ளேட்டிற் பல்துளைத்து வண்டு மணலுழுத 62//767z/)7یویی உடையவாய்ச் செல்லினால் அரிக்கப்பட்டும் பானங்களாற் றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பூதமான மண்ணின் வாய்ப்படுகின்றன.
என் சிறுபிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்குந் தேடியும் அகப்பட வில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைக் தொட்டுப் பார்த்தா லன்றோ தெரியவரும் ஏடு எடுக்கும்போது ஒரஞ் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.
Page 36
66 தாமோதரம்
இது நிற்க, இக்காலத்துப் புத்தகங்களைத் தேடிப் பரிசோ தித்து அச்சியற்றும் வித் வசனர்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலை போகும் விநோத நூல் களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாட புத்தகங் களையும் சர்வகலாசாலையாராற் பற்பல பரீஷைகளுக்கு ஏற் படுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர். சரஸ்வதியின் திருநடனஞ் சொலிக்கப் பெற்றனவாகிய சங்க மரீஇயநூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சற்றேனுந் திருட்டி சென்றலது.
இதனைக்கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்து போகுஞ் சுவடிகளை இயன்ற மட்டுந் தேடி அவற்றுட் டமிழிற்குப் பேரிலக்கணமாகிய தொல்காப்பியம் சொல்லதி காரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம், நச்சினார்க் கினியம், வீரசோழியம், இறையனாரகப்பொருள், திருத்தணி கைப் புராணமென்று இன்னவற்றைப் பல தேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன். இதனால் எனக்குப் பிரதிகள் விலைபோகாமல் மூவாயிரத்தைஞ்நூறு ரூபாவரை யிற்றிரவிய நஷ்டம் நேரிட்டது. இவ்வாறான நஷ்டத்தைத் தரும சீலரான பிரபுக்கள் நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரித்தாலன்றி என் முயற்சியைக் கைவிடும்படி நேரிடுவது கண்டு பரபவமுற்றுச் சென்ற வருஷம் ஆடிமாதம் ஹிந்து பத்திர வாயிலாக ஓர் அபயம் எழுதி என் குறைநிறையை உலகத்திற்குந் தெரிவித்ததுமன்றி எனது இஷ்டர்கள் பலர்க்குந் தமிழ்ப் பிரபுக்கள் சிலர்க்கும் அக்கடிதத்தின் பிரதியைப் பிரத்தியேகமாகவும் அனுப்பினேன். அதுகண்டு அநுதாப முற்றோர் சிலரன்றி இலர்.
விசு வருடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் அச்சிட ஆரம்பித்தபோது மேல்வரும் நஷ்டத்தை முன்னுணர்ந்து யான் மனந் தளர்ந்தது கண்டு என்னை உற்சாகப்படுத்தி அதனை அச் சிடப் பிடிக்குங் காகிதச் செலவிற்காக இப்பொழுது மைசூர் சீப்-கோர்ட்டு நியாயாதிபதிகளில் ஒருவராக இருக்குங் கவுரவ
கலித்தொகைப் பதிப்புரை 67
அ.ராமச்சந்திரையரவர்கள் 125 ரூபாவுஞ் சென்னை இராஜ தானி வித்தியாசாலைக் கணிதாசிரியர் இராயபஹதூர் பூ.அரங்கநாத முதலியாரவர்கள் 100 ரூபாவும் முன்னேறக் கொடுத்ததுமன்றி அந்நூலைப் பதிப்பித்தலால் எனக்கு நஷ்டம் நேரிடும் பட்சத்தில் தாங் கையளித்த பணத்தை யான் தமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியதில்லையென்றும் மிக்க தயாளத்தோடு துணைபுரிந்தனர். இவர்களது பாஷாபி மான சிந்தை எவராலும் ஏத்தித் துதிக்கற்பாலதன்றோ?
திருத்தணிகைப் புராணச் செலவை எனது உயிர்நண்பரும் யாழ்ப்பாணத்தில் ஒரு வித்துவானும் பிரபுவுமாகிய கொழும் புத்துறை பூரீ தி.குமாரசாமிச் செட்டியாரவர்கள் தருவதாக ஒத்துக் கொண்டனர்.
இந்து பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய கடிதத்தைக் கண்டு ஈண்டுக் கீழே குறித்திருக்கும் பிரபுக்கள் தங்கள் தங்கள் பெயர்க்கு நேரே காட்டிய தொகையை எனது முயற்சிக்கும் பிரயாசைக்குந் தமது வெகுமதியாக அனுப்பி உபசரித்து என்னை மிகவுங் கெளரவப்படுத்தினர். அவர்கள் தயாளத்தையும் பரோபகார தேசோபகார சீலத்துவத்தையும் பாராட்டி யான், அவர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி கூறுகின்றேன். சென்னைப் பாடசாலைப் புத்தக சமாசீயர் முதலியோர் என் முயற்சிக்குத் துணை செய்யும் பொருட்டு வாங்கிய புத்தகங்களின் கிரயமும் டிெ வெகுமதிகளின் தொகையுஞ் சில்லறையில் விலையானதுஞ் சேர்ந்து இப்போது யான் செலவிட்ட பணத்தில் முக்காற் பங்கு வந்து விட்டது எனக்குப் பேரூக்கத்தைக் கொடுத்தது.
ரூபாய் இராஜா சர் த.மாதவராயர் IOO,OO சர். ச.இராமசாமி முதலியார் OO.OO கெளரவ நியாயாதிபதி அ.இராமச்சந்திரையர் 350. OO கெளரவ இராயபஹதூர் சூ.ச.சுப்பிரமணியையர் ქნ0. 00
கெளரவ ப.செனசல்ராயர் O.OO
Page 37
68 தாமோதரம்
பேரூர் ஜமீன்தார் முத்துவிஜய ரகுநாத தும்பையசாமி
தும்பச்சி நாயக்கர் 50.00 ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் 100.00 கும்பகோணம் சப்-கோர்ட் நீதிப்தி தி.கணபதியையர் 20.00 கும்பகோணம் சப்-கோர்ட் வக்கீல்
சா.இராகவையங்கார் 25.00 கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலைத் தலைவர்
ஜே.பி.பில்டர் பெக்துரை 20.00 கும்பகோணம் துரைத்தன வித்தியாசாலை
பாஷாசிரியர் சா.சேஷையர் 50.00 * கொழும்பு சுப்பிறீம்கோர்ட் நியாயதுரந்தரர்
பொ.குமாரசாமி முதலியார் 25.00 * கொழும்பு சுப்பிறீம்கோர்ட் அத்வக்காத்து கெளரவ -
பொ.இராமநாத முதலியார் 25.00 * மாத்துறை டிஸ்திரிக் கோர்ட் நீதிபதி
பொ.அருணாசல முதலியார் 25.00 யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு மணியம்
ஆ.இரகுநாத முதலியார் 20.00 **சீகாழி கிருஷ்ணசாமி முதலியார் 20.00
* இவர்கள் மூவரும் யான் இனிமேற் பிரசுரஞ் செய்யும் ஒவ்வொரு கிரந்தத்திற்குத்தலைக்குஇருபத்தைந்து ரூபாஉபகரிப்பதாக எழுதியிருக்கின் றனர்.
** இவர் இதனை யான்அனுப்பிய பிரதிகளின் கிரயமென்றுந் தாம் யாதாயினும் ஒருநூலைமுழுச்செலவுந்தந்து பதிப்பிப்பதாகவும் எழுதியனுப் பினார். இவரிடத்தும் எனது பரமாசாரியர் வேதாரணியாதீனம் சற்குருநாத சுவாமிகள் பூரீலழரீ கைலாசநாத தேசிக மூர்த்திகளிடத்துந் திப்பனந்தாளாதீ னம் பூரீ குமரகுருபர சுவாமிகள் மரபிலெழுந்தருளிய பூரீமத் குமாரசாமி முனிவரிடத்தும் பெருமை ஒத்தாசையை எதிர்பார்த்திருந்தேன். எனது தவக் குறையோ தமிழன் துரதிஷ்டமோ தெரிகிலேன் இம்மூவரும் இளம் வய திலே சிவபதமடைய என்நம்பிக்கை நிறைவேறாமற் போய்விட்டது.
கலித்தொகைப் பதிப்புரை 69
பூரீமத். திருப்பனந்தாளாதீனம் குமாரசாமித் தம்பிரான் 50.00
வித்தியா விசாரணைக் கருத்தர் கு.நாகோஜிராயர் 30.00 கவித்தலம் துரைசாமி மூப்பனார் 10.00 ராவு ஸாகிப் சேலம் இராமசாமி முதலியார் 20.00
தஞ்சாவூர் சப்கோர்ட்டு நீதிபதி பூரி திரு. கனகசபை முதலியாரவர்கள் எனக்கு இம்முயற்சியிற் பணத்திலும் பார்க்கப் பிராசீன நூல்கள் தேடித்தருவதே மிக்க உபயோக மாமென உணர்ந்து மதுரையிலிருந்து 35 பூர்வக்கிரந்த ஏட்டுப் பிரதிகள் அழைப்பித்துத் தந்தார்கள். இவற்றை யான் அத்துணைப் பொன் மொகராவாக மதித்து அவர்களுக்கு வந்தனஞ் செய்கின்றேன்.
தொண்டமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந்திரியும் பிரதிகாலவலருமாகிய கவுரவ அ.சேஷையசாஸ்திரியாரவர்கள், பூர்வக் கிரந்த பரிபாலனங் காரணமாக யான்படும் பிரயாசை யையும் அதனால் எனக்கு நேரிடும் நஷ்டத்தையும் சொல்லக் கேட்டலும் பரமதயாள சீலத்துவம் முகத்தே நின்று சொலிக்கத், தமிழாகிய தமது தாயாருக்கு வந்த நிலையான் மிக நாணமுற் றார் போல, 'யான் யாது செய்தல் வேண்டும்" என்று என் னையே கடைக்கணித்தார்கள். ஏதாவது ஒர் பழைய நூல் தாங் கள் தங்கள் பொறுப்பிற் பதிப்பித்தால் நல்லதென்று யான் சொல்லிமுடிக்கா முன்னரே, தொல்காப்பியப் பதிப்புரை யிலும் இந்து பத்திரிகையிற் கடிதத்திலும் யான் கூறியிருக்கு மாறு, "அப்படியாகுக" என்று உத்தரவருளிச் சங்கத்தார் காலத்துப் பேரிலக்கியமாயுள்ள தொன்றைத் தெரிந்து கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தார்கள். உடனே “கற்றறிந்தா ரேத்துங் கலியே" அவ் இலக்ஷணஞ்செறிந்த தெனவும் முன்னரே இதனை அச்சிடுதற்கு யான் கொண்ட அவா நிறைவேறுதற்கு இஃது சரஸ்வதி கடாக்ஷ மெனவுந்துணிந்து, இதனை அவர்
Page 38
70 தாமோதரம்
கள் காருண்ணிய திரவியோபகாரத்தைக் கொண்டு இப்பொ ழுது அச்சிட்டு முடிக்கலாயினேன். அதன் செலவு முழுவதும் அவர்களே கொடுத்தருளியனமையாற், கலித்தொகைப் பிரதி கள் விற்பனவாகும் பணத்தைக் கொண்டு பின்னர்க் குறிக்கப் படும் எட்டுத் தொகையில் இன்னும் இரண்டொரு நூலை அவர்கள் பெயரால் அச்சிடுவிக்க உத்தேசித் திருக்கின்றேன்.
இந்து பத்திராதிபர்களாகிய பூரீ க.சுப்பிரமணியையர், பூரீமு.வீரராகவாசாரியாரிருவரும் 30-31 பாரத்திற்கு மேற்படாமல் ஒரு நூல் காகிதச் செலவோடு கூடத் தமது அச்சியந்திரசாலை யிற் பதித்துத் தருவதாக உத்தரவு செய்தார்கள். இருவர்க்கும் மிக்க வந்தனை செய்து இவர்களைக் கொண்டு பதிப்பிக்கும் படி, இன்னும் ஒருவராலும் அச்சிற் றோற்றாத தொல்காப்பி யம் நச்சினார்க்கினியம் சொல்லதிகாரத்தையும், இஃது என் பொருளதிகாரத்தோடு கூடி நச்சினார்க்கினியம் பூரணமாதற் பொருட்டு, முன் மகாலிங்கையரால் அச்சிடப்பட்ட சொற்ப பாகமாகிய ன்முத்ததிகாரத்தையுஞ் சேர்த்து ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து வருகின்றேன். இவர்கள் முன்மாதிரி யைப் பின்பற்றிப் பிற அச்சுக்கூடத் தலைவர்களுந் தலைக்கொரு பழைய நூலைத் தத்தம் யந்திர சாலையில் தக்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்துப் பதிப்பாரா யின் எத்தனை நூல் அழியா தொழியும்? அன்றியும் அஃது அருந்தந்திரங்கள் இறவாமல் நிலைபெறுவதற்கானதோர் பெருந் தந்திர மாகுமன்றே?
மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முன்னர் அவ்வக் காலத்துப் புலவர் கொண்டு வந்து அரங்கேற்றிய நூல்கள் பல்லாயிர மாகும். அவையெல்லாம் அச்சங்கத்தார் தாமாக நமக்கு அருளிய நூல்கள் அனேகம் உண்டு. அவற்றுட் கடைச் சங்கத் தார்.அருளியன எட்டுத் தொகை பத்துப்பாடல் பதினெண்கீழ்க் கணக்கென்று மூவகைய. அவை இன்னன வென்பது முறையே:
கலித்தொகைப் பதிப்புரை 71
'நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியே.யகம்புறமென் றித்திறந்த வெட்டுத் தொகை."
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வடமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து'
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைப்முப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூல மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"
என்னுஞ் செய்யுட்களான் அறிக. இவற்றுட் கோவையென் றது ஆசாரக் கோவையை. முப்பாலென்றது திரிகடுகம் ஆசாரக் கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகிய போன்று நாலடி வெண்பாவான் இயன்று அக்காலத்திலே வழங்கிய மூன்று சிறுத் தரும நூல்களை யென்றும் இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின் பெயரை யென்றும் உத்தேசிக்கின்றேன். அன்றேல் ஐந்திணை அகப்பொருட்டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாக, இவர்க்குக் கீழ்க்கணக் குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? இவ்விடர்நோக்கிப் போலுஞ் சிலர் ஐந்திணையை ஐந்தொகை யென்று பாடம் ஒது வர். 'அன்னோர் நெடுந்தொகை யொன்றொழிய வேறு தொகையின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பிற் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத் தொகைக்கு நூல் காணாது பேரிடர்ப்படுவர். "இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென் பவே" என்றும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு குறைவதன்றிக் கணக்குச் சரி பெறாது.
Page 39
72 தாமோதரம்
இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை வாத புரீசராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் சங்கத் தாரைப் பங்கப் படுத்தி அழித்து விட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் திருக்குறளுமென்று மயங்கித் தடுமாறுப. பெயர்படைத்த வித்துவான்களுள்ளுஞ் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேதமென்றாவது சிந்தித்தா ரில்லை. திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தா கீழ்க்கணக் கின் கீழகப்பட்டது!!! இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறையையும் ஒருங்கு சேர்த்து முப்பதாக்கிவிட்டாரில்லை!! மேலும் 'நாலடி நான்மணி" என்றற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார்காலத்தது? யாண் டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப் புலவரு ளொருவராற் சொல்லப்பட்ட தென்பது உண்மை யாயின், நாயனார் திருக்குறளின் பின் சங்கம் எங்கே யிருந்தது? இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும் நாற்பத்தொன் பதின்மர் புலவருங் கூடி மனத்தாலும் வாயாலும் வாழ்த்திய மாலையின் சாரம் அதனைத் தமது சிறு நூல்களோடு ஒக்க வைத்தற் கருத்தினையுடையதா?
இந்நூல்" முதலிற் குறித்த எட்டுத் தொகையுள் ஒன்று. அது மதுரைக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின் மருள் ஒருவராகிய நல்லந்துவனார் இயற்றியது. சிலர் இவர் இஃது இயற்றினோரல்லர்; சிறந்த கவிச் செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுத்தவரென்பர். அவ்வாறு தொகுக்கப்பட்ட அகம் புறம் நற்றிணையென்றின்னோரன்ன நூலுளெல்லாம் அவ்வச் செய்யுளின் கீழ் அதன் ஆக்கியோன் பெயர் குறிக்கப்பட்டதுபோல் இதனுட் குறிக்கப்படாமையா னும், நல்லந்துவனார் தொகுத்தாரென்று பல்லாசிரியர்கள் கூறிய இடம் அனைத்தும் அவர் 'முல்லை குறிஞ்சி மருத
* கலித்தொகை
கலித்தொகைப் பதிப்புரை V 73
நெய்தலெனச் சொல்லிய முறையார் சொல்லவும் படுமே" எனவும் 'நடுவணைந்திணை நடுவண தொழியப் - படுதிரை வையம் பாத்திய பண்பே" எனவும் ஆசிரியர் தொல்காப்பிய னார் அடுக்கிய முறை பிறழப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலெனக் கோத்த தொகுதியையே கொள்ளக் கிடந்தலானும், "உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார்" புரிவுண்ட புணர்ச்சி யென்றற் றொடக்கத்து நெய்தற்கலியின் கீழ்ச் "சொல்லொடுங் குறிப்பொடு முடிவு கொளியற்கை - புல்லிய கிளவி யெச்சமாகும்" என்பதனாற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந் துவனார் செய்யுட் செய்தாரெனக் கூறியமையானும் இஃது அவ்வாசிரியராற்றாமே இயற்றப்பட்டமை தெள்ளிதின் விளங்கக் கிடந்ததெனக் கூறி மறுக்க.
இது சங்கத்தார் காலத்து இலக்கியங்களுக்கெல்லாம் பேரிலக்கியமாக மதிக்கப்பட்டதென்பது அவராற்றாமே கொடுக்கப்பட்ட “கற்றறிந்தா ரேத்தும்" என்னும் விசேஷ ணத்தாற் பெறப்படும். ஆகவே இதன் சிறப்பு இத்துணைத் தென்பது எம் போலியரால் எடுத்துச் சொல்லக்கடவ தொன்றன்று. இதன் மகத்துவத்திற்கு யான் காரணங் கற்பிக் கப்புகிற் பொன்னின் மாட்சி மைக்கு மங்கலகரமாகிய மஞ்சணிறத்தையும் வைரத்தின் பெருமைக்கு அதன் துல்லிய வெண்மையையுங் கூறி மெய்ப்பிக்கப் புகுவதொக்கும்.
இது சமஸ்கிருத மொழிகள் தமிழோடு வந்து கலக்கப் பெறாத சுத்த தமிழ்க் காலத்த தென்பது இக்கவிகளுள் வட மொழியென்ற மணமும் இல்லாமையே தெரிவிக்கும். நற்றிணை முதற் புறநானூறீறாகக் கிடந்த தொகையனைத்தும் இப்பெருஞ் சிறப்பு வாய்ந்தனவாகவும் "ஒன்றேயாயினுந் தனித்தமிழுண்டோ" என்று ஞான தேசிகர் கூறியது இன்றைக்கு இருநூறு வருஷத்தின் முன் இவர் காலத்தே தானே இந்நூற்கள் கற்பார் கைக்கு அகப்படாது அருமையாய் மறைந்துவிட்டன என்பதற்குச் சான்றாகுமெனிற் பிழை யாமா? பின்னை இக்காலத்தில் இதன் அருமை கூறல்
Page 40
74 தாமோதரம்
வேண்டுவதென்? இவற்றைக் கற்றோரைக் கண்டாரைக் காண்டலுங் கார்த்திகைப் பிறையாயிற்று.
இது கடைச் சங்கத்தார் காலத்து நடுக்கூற்றின்கட் டோன்றியது. கடைச்சங்கம் ஒழிந்து இரண்டாயிரம் வருடமாயிற் றென்பது வீரசோழியப் பதிப்புரையிற் றமிழின் கால நிரூபணம் கூறிய இடத்துச் சித்தாந்தஞ் செய்து காட்டியிருக் கின்றேன். ஆதலால் இந்நூல் உண்டு பட்டு இப்போது எவ் வாற்றானும் இரண்டாயிரத்தைஞ் ஞாறு வருஷத்திற் குறை யாது. மூவாயிரமெனினும் இழுக்காகாது.
இதற்கு உரை யெழுதினார் மதுரையாசிரியர் பாரத் துவாசி நச்சினார்க்கினியார். இம்மகான் இதற்கு உரை எழுதி வையாதொழியின் இந்நூலைப் படித்துணர்தல் இக்காலத் தார்க்கு இசையாது. ஆகவே இத் தமிழ் நமக்கு நச்சினார்க் கினியார் இட்டதோர் பிச்சையென்றுணர்க.
பச்சைமா லனைய மேகம்
பவ்வரீர் பருகிக் கான்ற எச்சினாற் றிசையு முண்ணு
மமிழ்தென வெழுநா வெச்சில் மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத நச்சினார்க் கினியா னெச்சி
னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்”
என்றதன் வாய்மைக்கு இஃதொன்றே திருஷ்டாந்தமாம்.
“பாலெல்லா நல்லாவின் பாலாமோ’ என்ற உவமைக்கு உவமேயமாக “நூலிற் றெரித்த வுரையெல்லாம் பரிமேலழகர் - பரித்தவுரையோ பகர்' என்பது அது பெரும்பான்மைபற்றி அவரது சொல்வன்மையையும் பொருணுண்மையையுமே நோக்கியது; இஃது அவற்றோடு, "உள்ளுறை யுவமமும் இறைச்சிப் பொருளும் - வள்ளிய நவரச வாரிசமளை இத் தெள்ளிதின் விளக்கிய தீந்தமிழ் செறிந்தது."
கலித்தொகைப் பதிப்புரை 75
பரிமேலழகரும் நச்சினார்க்கினியாரும் ஒரேகாலத்தினர். அவர் திருக்குறள் ஒன்றற்கே உரை யெழுதினவர். இவரோ தமது காலத்து உரைபெறாது சிக்குமுக்காய்க் கிடந்த பன்னூல் களைப் பட்டப்பகலில் வெட்டவெளிபோல மயக்கறுத்துக் காட்டி உரை வகுத்த மஹாவியாக்கியானி. வேராசிரியரும் விளங்காமற் றடுமாறிய குறுந்தொகை இருபது பாட்டிற்குப் பொருள் இவரே யாவர்க்கும் இனிது புலப்பட மொழித்திறத் தின் முட்டறப் பிட்டுக்காட்டியவரென்றால் இவர் வல்லபத் திற்கு வேறு சான்று வேண்டிலது.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரை யருரையும் திருக்குறளுக்குப் பரிமேலழகருரையும் இவருரை யினின்றும் வியந்து கொண்டாடப்படற்பாலன வென்றே கொள்ளினுங் கொள்க. அதனால் அவர்கள் இவரிலும் பெருஞ் சிறப்பும் பயனும் உடையவர்களாகார்கள். என்னை? அன்னோரிருவரும் தாந்தாம் தாமெடுத்த ஒரொரு நூலுக்கே உரையிற்றியவராதலின், இருவரும் வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்து அதன் இயைபு கொணர்ந்து நாட்டியவர்கள். இவரும் வடநூற்பயிற்சில்லாதவரல்லர். தமிழிற்கு அவரினுங்காட்டிற் சிறந்த அதிகாரி. இது கருத்தானன்றே "நச்சினார்க்கினியார் சேனாவரையர் பரிமேலழகர் உரையாசி ரியர் முதலாயினோர்' என நன்னூல் விருத்தியுரையார் முறைப்படுத்து வைத்தது! தமிழிலுள்ளதுணுக்கங்களை இவர் போல எடுத்துக்காட்டி மாணாக்கர்க்கு மிக உபயோகமாம்படி பெரு நூல்கட்கு உரை செய்த ஆசிரியர்யாரும் இலர்.
இதனால் இவரினுந் தமிழ் வல்லோர் இருந்திலரென்று சொல்லப் புகுந்தேனல்லேன். அகத்திய மகாமுனிவர் வரத்திற் றோன்றி மிகக் கூரிய விவேகமும் வடகலைப் பயிற்சியும் நுண்ணிய தமிழறிவுமுடையராய், பூறி கைலாச பரம்பரைத் திருவாவடுதுறையிலெழுந்தருளி விளங்கிய சிவஞானசுவாமிகள்
Page 41
76 தாமோதரம்
இவரையும் புறங்காண வல்லரென்பது அவர் சங்கர நமச்சிவாய தேசிக ரியற்றிய நன்னூல் விருத்தியுரையிற் செய்த திருத்தங்களானுந் தொல்காப்பிய முதற் சூத்திரத்திற்கு விரித் துரையாக இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியானும் நன்கு துணியப்படும். ஆயினும் இலக்கிய இலக்கணங்களுள் யாதாயினுமோர் அரிய பெரிய நூற்கு அவர் உரையெழுதாமை யானுஞ் சித்தாந்த சாத்திரத்தை விளக்குதலே முக்கிய கருத்தா யினுந், தமிழின் சிறப்பும் அதன் நுண்மையும் அருமையும் இடந்தொறுஞ் சொலிக்க அவர் செய்த சிவஞான பாடியம் அவராதீனத்து மடாதிபதிகட்கு ஓர் இரத்தின மகுடமாய்க் கிடந்து துலங்கப்பெறுவதன்றித் தமிழ்ப் புலவர்கைக்கு அகப் படாமையானும் அவர் சாமர்த்தியத்துக்குத் தக்க பெரும் பயனைத் தமிழுலகம் அடைந்திலது.
இவரது மகாபாடியத் திவ்வியாமிர்தத்தை உலகம் உண்டுகளிக்க வையாதது, சந்திரனுக்குக் களங்கமுஞ் சூரிய னுக்குப் பன்முரிவும்போல, ஒன்றானுங் குறைவின்றி எல்லாச் சுகுணமும் நிறைந்திலங்கும் பரம தயாள மூர்த்திகளாகிய பூரீலழறி சுப்பிரமணிய சுவாமிகளுக்கும் ஒரு குறைவுண் டென்று சொல்வதற்கு ஏதுவாகின்றது. பூலோகத்தில் ஒரு குறைவாயினுந் தம்பால் இருக்கப் பெறாதார் இலராதல்ற் திருஷ்டி பரிகார நிமித்தமாய் இக்குறை வைச் சகித்திருக் கின்றனர் போலும். சைவசமய சாத்திரமாதலிற் பரிபக்குவர்க் கன்றி அளித்தற்காகாதெனிற் சித்தாந்த சாத்திரமெல்லாம் அச்சின்வாய்த் தோன்றி அகில லோகமும் பரவிக்கிடக்கும் இஞ்ஞான்றைக்கு ஈதமையாதென்றன்றோ மறுக்கப்படும். மகா சந்நிதானத்தின் திருவுள்ளம் இதனைச் சற்றே சிந்தித் தற்குச் சிவபெருமான் கிருபை புரிவாராக.
நச்சினார்க்கினியார் சமணர் காலத்தராதலின் இந்நூற்கு
இவர் உரையெழுதி ஆயிரத்திருநூறு வருஷத்திற்குறையாது. சங்கமரீஇய நூல்களிற் போலச் சீவக சிந்தாமணி முதலிய
கலித்தொகைப் பதிப்புரை 77
பிற்றை நூல்களினின்று தமது உரைகட்கு வேண்டிய உதார ணங்கள் ஆங்காங்கு எடுத்து ஆண்ட இவர், அவைகள் மலிந்து கிடக்கும் பாரத ஸ்காந்த ராமாயணங்களிலிருந்து ஒர் இலக்கி யமுங் காட்டாததே இவையனைத்தும் இவர் காலத்திற்குப் பிந்தியனவென்று உள்ளங்கை நெல்லிக்கனி போலக் கொள்ளக்கிடக்கின்றது. இந்நூற்களில் காலமே அவ்வள வாயிற்றே. p
இந்நூற்பதிப்பை ஏட்டுப்பிரதிகளின் போக்கிலே விடாது
சிற்சில இடங்களிற் சில விகற்பங்கள் செய்திருக்கின்றேன். அவை இன்னனவென உணர்த்தல் என் கடமையாம்.
l.
பாட்டுக்கடோறும் முதலிலே அவ்வப்பாட்டின் முதற் குறிப்பைச் சொல்லி இஃதின்ன துறைத் தென்று கிளவி கூறிப் பின்னர்ப்பாட்டுவரும். அதனை யான் மாற்றி முத லிலே பாட்டை அச்சிட்டு அதன்கீழ் இஃதின்ன கிளவி யெனக் கூறுங் கருத்துரையை அச்சிட்டிருக்கின்றேன்.
பாட்டு முழுதும் ஒருங்கே தொடர்ந்து வராது எடுத்துக் கொண்ட உரைக்கு வேண்டிய அளவாய்ப் பிளவுபட்டுப் பின்னம் பின்னமாய்க் கிடந்ததை ஒரு தொடராகச் சேர்த்து ஒவ்வொரு கலிப்பாவையு முடித்த பின்னர் அவ்வப் பகுதியை முதலும் ஈறுங்காட்டி மீளவும் பகுத்து அப்பகுதியின் உரையைப் பதித்திருக்கின்றேன். விசேட உரைகள் சில உரைக்கு முன்னுஞ் சில உரைக்குப் பின்னுஞ் சில இடைப்பிற வரலாக உரைக்கிடையினுங் கிடந்தவற்றை ஒரு கிரமப்படுத்தி அனைத்தும் பாடமும் உரையுமான பின்னரே வரும்படி சேர்த்திருக்கிறேன்.
தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென நிகழும் பாட்டுறுப்புக்களில் மூலம் ஒன்றினும் உரை ஒன்றினுமாகச் சில இடங்களிற் பிறழ்ந்து கிடந்தவற்றை
Page 42
78
தாமோதரம்
இரண்டும் ஓரிடத்தாம்படி உரையிடத்தை மாற்றியிருக் கின்றேன். இவைகளுக்கெல்லாம் உதாரணம் எடுத்துக்காட்டி விளக்கின் மிக விரியுமென் றஞ்சியும் அதனால் ஒரு பெரும் பயனில்லாமை நோக்கியும் ஒழித்தனன். இவ்விகற்பங்களிலெல்லாம் ஓரிடத்துக் கிடந்த வாக்கியத்தைப் பின்னோரிடத்தில் இடமாற்றி வைத்ததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஒரெழுத்தையாவது யான் மாற்றியதேயில்லை.
“முன்னோர் மொழி பொருளேயன்றி யவர் மொழியும் - பொன்னே போற் போற்றுதல்’ அவரினின்று வேறாக வழி நூல் சார்பு நூல் செய்தோர்க்குங் கடனாகவே, அவர் நூலையே அச்சொரூபமாக எடுத்துப் பதிப்பிப்போர் ஓர் அக்ஷரமாவது மாற்றுதல் பெருந்தவறென்பது யார்க்கும் உடம்பாடே.
ஆயினும் இந்நூல் துரைத்தன வித்தியாசாலை களிலும் பிற கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டுமென்னும் அவாவினாலே தற்காலம் அவை யிற்றுக்கு இணங்காததோர் இழிசொல்லும் மகளிர் சிறப்பவயத்தின் இடக்கர்ப் பெயருமாகிய குஃ றொடர்ந்த அன்மொழி இந்நூல் முழுதினும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்துஞ் செய்யுள் ஊனமுறாதிருத்தற்பொருட்டு அதற்குப்பதிலாக அவ்வவ்விடத்திற்கு இசைந்த பிற அவயவத்தின் பெயரைச் சந்தத்திற்கு வேண்டிய அளவு விசேஷணத் தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொரு கியது இன்ன இன்ன மொழி இன்ன இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியிலென்பதை யாவரொருவராயினும் அறிய விரும்பின் அவற்றை ஈண்டுக் காண்க. மாற்றி
கலித்தொகைப் பதிப்புரை
79
வைத்த பிரதிமொழியின் பொருளே, உரையகத்தும் மாறி யிருக்கு மென்பதும் சொல்ல வேண்டியதில்லை. நாலாவது பந்தியில் நட்சத்திரக் குறி அக் குஃறொடர்ந்த அன்மொழித் தானத்தைக் காட்டும்:
(கலி, பா. வரி முன்பாடம் பிரதிமொழி ༄༽
கடவுள் வாழ்த்து 6 அகல்* அகல் குறி
LIS)S) I3 | 5 அகன்ற* ஆரெழிற்றிதணி குறிஞ்சி 14 24 *என்றோழி ஆகத்தென்
றோழி
sy I6 16 அகல் * ஆள் அமர்நுசுப்பி
ᎧᏈᎢᎢᎢᏳᏍᎢ
罗鲜 24 4 வரியார்ந்த *ஆய் மயிலியன் மட
நலலாய
மருதம் 2 O அகல் * பிறைநுதல்
5 2. *வரி ஒல்குமிடை
22 37 அகல் * காழகம் அரை செறி
. காழகம்
முல்லை 8 2 அகல்* நகிலம்
9 10 அகல்* அகல்குறி
Uநெய்தல் 8 17 தடவர* தடவரவாகம்”ノ இவ்வாறு மாற்றியது குற்றமாயின் அதனை உலகம்
மன்னிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன்.
"நொந்திரந்தனர் நுவல்குறை பொறுத்திட7 ராக்கஞ் சிந்து மென்டது செகத்தினர் சுருதிய7 கமங்கள் முத்து வாப்மையின் மொழிந்தது நிதியு மதுவே தந்த தாமெனிலிண்டது தவிர்க்கலாந்தகைத்தே'
Page 43
80 தாமோதரம்
நெய்தற்கலி 29-ம் செய்யுள் 7-ம் அடியில் "உண்ணிறை மல்க' எனவும் 16-ம் அடியில் 'தூவற" எனவும் பாடமாக, உரையில் அவற்றிற்கு முறையே "உண்கண்-நீர் நிறைகையி னாலே" எனவும் "வலியறும்படி" எனவும் பொருள் கூறி யிருப்பது பிற்காலத்து ஏடெழுது வாரால் நேரிட்ட தவறென்றும் நீரென்றதற்கும் வலியென்றதற்கும் இயையுமாறு பாடத்தை உறையென்றுந் தாவென்றும் மாற்றிவிடுதல் தகுதியென்றுஞ் சில தக்கோர் சொல்லியும் யான் அதற்கு உடம்பட்டிலேன். நீரிற்கு உறையென்பது போல இறையென்றும் வலிமைக்குத் காவென்பதுபோலத் தூவென்றும் முற்கால வழக்கு இருந்தி ருக்கலாமே. எத்தனை சொற்கள் தற்கால வழக்கில் எடுத் தாளாத பொருளிற் பண்டையோராற் பிரயோகிக்கப்பட்டிருக் கின்றன.
இலக்கிய இலக்கண ஆதாரமாக ஒன்றினைத் தவறென்று ஒருதலையாக நிச்சயித்துழியன்றி ஏட்டுப் பிரதிகள் யாவும் ஒத் திருந்தனவற்றை யான் மாற்றகில்லேன்.
அடியேன் சிற்றறிவுக்கேற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அடியோடழிந்து போகும் பழைய நூல்களிை நிலை நிறுத்துவான் புகுந்தே னாதலின் நூலைத் திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமையன்று.
இயன்றளவும் பூர்வ ரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற் கொப்பிப்பதுமே யான் தலை யிட்ட தொழிலென்பதை இன்னும் ஒருகால் உலகத்தார்முன் விண்ணப்பஞ்செய்து கொள்கின்றேன். பிழையாயினவற்றைத் திருத்திப் படித்தல் ஆன்றோர் கடன். கண்ணுக்கும் அகப்படா மற் கிடந்த ஏட்டுப் பிரதிகளைக் கடிதத்திற் பல பிரதிரூபஞ் செய்து கைக்கெட்டப் பண்ணுகின்றேனென்றே கொள்ளுக.
கலித்தொகைப் பதிப்புரை 81
முற்றும் வழுவறப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்ய எல்லோர்க்குத் தொல்காப்பியப் பதிப்புரையில் யான் விவரித் துக் கூறிய பல ஏதுக்களால் இவ்வித முயற்சியிற் சிந்தை சென்றி லதாதலினன்றோ, சகிக்கலாற்றாத பரிதாப சிந்தையோடு பதி னாலாம் நாளைப் போரிற் றுரியோதனன் தன் சேனாதிபதி யிடஞ் சென்று முறையிட்டு இனி அர்ச்சுனனோடு சண்டையிட யானாவது போகின்றேனென்று போனதை யொப்ப யான் இத்தொழிலிற் பிரவேசித்தது. ஆதலால் என்னைக் கடந்து சிற்சில வழுக்கள் இலைமறை காய்போல் அங்குமிங்குங் கிடப்பின் அதையிட்டு என்மேற் குற்றமேற்றல் மறைமுகத்தாற் றர்மமா காது போவதினில்லாது நேர்முகத்தாற் பேரநியாயமா மென்றறிக.
இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர், உரை யாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக் கடிய தென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன். தூக்கினாலன்றோ தெரியுந் தலைச்சுமை? பரிசோதனாசிரியர் படுங் கஷ்டம் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது. இவையெல்லாம் அநுபவத்தாலன்றி அறியப் படாப் பொருள்கள். ஒன்றற்கொன்று ஒவ்வொத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப்பண்டிதர் பூரீமத்வே, சாமிநாதையரைக் கேட்டால் இந்நால்வகை யாசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி.
ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுதற்கு முதலிற் கையெழுத்துப் பிரதிகள் சம்பாதிப்பதே மஹா பிரயாசை, அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காததுமானால்
Page 44
82 தாமோதரம்
எழுதுவாரும் ஒதுவாரு மில்லாமல் இருக்கிற இடமுந் தெரியாமற் போய் விடுகின்றது.
கலித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயி னாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலபாடப் பிரதி. அது தலை யுங் கடையுமின்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஒருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப் புண்டாய் நீக்கிவிட்டேன்.
பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடிய போது பூரீலழறிஆறுமுகநாவலரவர்கள் பிரதி சேர்க்கப்பட்டது. அது கொண்டு கலித் தொகை அருமை யுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிட வேண்டுமென்னும் அவாவுற்று பூரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன். காருண்ணியமுங் கலாபரிபாலனமுமே தமது திருமேனியாகக் கொண்டு விளங்குந் திருவாவடுதுறைச் சற்குருநாத சுவாமிகள் உடனே தங்கள் மடத்துப் பிரதியுடன் வேறும் இரண்டு பிரதி தென்றேசத்தினின்று வருவித்தனுப்பி அச்சிட்ட பிரதியும் 20 எடுத்துக் கொள்வதாக உத்தரவு செய்தது. இப்பேருபகாரத்திற்கு யானே அங்கு அடிமையாவ தன்றி வேறு யாது கைம்மாறுளது? விண்ணோடு கைலைவழித் தேசிகர் வெவ்வினைக்கு நெற்றிக் கண்ணா னனசுப்ரமண்யசு வாமிகள் கான்மலரை நண்ணாத் தலையினசைதீரத் தாங்கநற் கோகழிவாய் மண்ணாய்ப் பிறந்தில னேஐய கோஇந்த வையகத்தே
சிரமாலை யாகவுஞ் சின்முடி யாகவுஞ் செய்யகண்ட சரமாலை யாகவும் யானடி யேனினை யேன்றருவாய் பரமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்ரமணியா மரமாய்நின் பாத குறடாய் வருதற் கொருவரமே!
கலித்தொகைப்பதிப்புரை 83
மதுரை மடாதிபதிகள் அத்தருணத்தில் தெக்ஷணத்திலே ஸ்தல யாத்திரையிற் பிரசன்னமாகி யிருந்தமையாற்றிரும்பி ஆதீனம் வந்து சேர்ந்ததன்மேல் என் விண்ணப்பங் கவனிக்கப் படுமென்று கட்டளையிட்டருளியது. பின்னர் அதனைத் திருவுள்ளத்து அமைத்திலது போலும். எஞ்சிய மடங்களி லிருந்து யாதும் பதில் வராமையால் இந்நூல் ஆண்டு இலதென்று தீர்மானித்துக் கொண்டேன்.
சுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலபாடத் தையாவது பரிசோதித்து, ஓர் அரும்பத அகராதியும் இலக்கணக் குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, அதனை நல்ல பரம்பரைத் தமிழ் விற்பத்தியுங் கூரிய விவேகமுமுடைய யாழ்ப்பாணம் நல்லூர் பூரீ சிற். கைலாச பிள்ளையைக் கொண்டு எழுதுவித்தேன். பின்னர் மேலே தெரிவித்தவாறு கவுரவ சேஷைய சாஸ்திரியாரவர்கள் ஆஞ்ஞை கிடைக்கப் பெற்றமையால் வேறு பிரதிகளுங் தேடுவான் முயன்று பல இடங்களுக்கு எழுதலாயினேன்.
யாழ்ப்பாணத்து மல்லாகம் விசுவநாத பிள்ளையவர்கள் புத்திரருந் தமிழ்க்கலை விநோதந் தமக்குப் பொழுது போக்காக உடையவருமான பூரீ கனகசபைப்பிள்ளையவர்கள் தமது பிரதியுந், திருமணம் கேசவ சுப்பராய முதலியார் மயிலை இராமலிங்கப்பிள்ளை பிரதியுந் தயை செய்தார்கள்.
சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதிமாலிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றை களைச் சேர்த்துக் கட்டி ஒரொரு பிடியோடு கலித்தொகை யென்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது. இவற்றாற் பிரயோசனமிராதென்று நீக்கிவிட்டு வேறு எவ்விடத்தும் பிரதி அகப்படாமையால் அகப்பட்ட பிரதிகளை வைத்துக் கொண்டு அச்சிட ஆரம்பித்தனன்.
Page 45
84 தாமோதரம்
போகப் போக ஒன்றொன்றாக ஆங்காங்கு முடிவுபெற்று நான்காவது முல்லைக்கலி முடியுமுன்னந் திருவாவடுதுறைப் பிரதி ஒன்றொழிய ஏனைய அனைத்துந் தலைகட்டிக்கொண் டன. இத்தசையில் யாது செய்வதென்று தெரியாது மயங்கி, வேலையை நிறுத்தி இன்னும் பிரதி தேடும்படி ஒரொருதிசைக் கொருவராகக் குணாது தெனாது குடாது மூன்றற்கும் மூன்று பெயரை அவ்வத் திசையினுள்ள தக்க உத்தியோகஸ்தர்கள் பெரிய மனு ஷர்களுக்குக் கடிதமெழுதி அனுப்பிவைத்து வடாது திக்கிற்கு யானே பிரயாணமானேன்.
யான் முப்பத்தைந்து வருஷத்தின் முன் பிரமாதீத வருஷம் ஒருதரம் அருமையான தமிழ் நூல்கள் தேடி யாழ்ப் பாணத்தினின்று இக்கண்டத்தில் வந்து நடமாடிய போது கூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்க பிள்ளையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத் திருந்தது என் ஞாபகத்திற்கு வர, அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன். முன்னையவர் இருந்த இடமுந் தென்பட்டி லது. பின்னையவர் இருந்த இடத்தில் விசாரித்து அவர் வமி சத்தில் அவரது தெளகித்திரியுங் குடும்பமும் அடுத்த ஊரில் இருப்பதாகக் கேள்வியுற்று ஆங்கடைந்து தெளகித்திரியின் நாயகனை வினவியபோது அவர் ஏதோ ஒரு கட்டுச் சுவடிகள் பூர்வார்ச்சிதமாக வைத்திருக்கின்றோம். நமக்கு அவற்றின் பெயருந் தெரியாது. தங்களுக்கு வேண்டிய திருந்தாற் பார்த்து எடுத்துக் கொள்ளலாமென்று மகா உதாரத்துவத்தோடு ஏட்டுக் கட்டை அளித்தனர். ஏடுகள் இருந்த நிலைமை கண்டு யானுற்ற பரிவத்திற்கு என் விழியினின்று பெருகிய கண்ணீரே சாகூF. கலித்தொகையும் அங்கும் இங்கும் மிக ஊனம் அடைந் திருந்தும் எனக்கு வேண்டிய நெய்தற் கலியிருந்தமையால் மிக மகிழ்வோடு வாங்கி வந்தேன்.
கலித்தொகைப் பதிப்புரை 85
அப்பால், திண்டிவனத்திலும் ஒரு பிரதி அகப்பட்டது. அதில் நெய்தற்கலியின் முதற்பாகம் இருந்தது.
திரிகோணமலை பூரீ த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்திற் றான் நெய்தற் கலி பார்த்தே னென்று உறுதியாகச் சொன்னமையால் மீளவும் அவ்விடஞ்சென்று முன்யான்நீக்கி வைத்த ஏடுகளே இப்பொழுது எனக்கு வேண்டிய நெய்தற்கலியுடையவா யிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷமடைந்தேன். அஃதல்லாமற் பின்னும் ஒரு பிரதி நெய்தற்கலி 23-ம் செய்யுள் வரைக்கும் அம்மண்ட பத்தே அகப்பட்டது. உடனே பிள்ளையவர்களும் யானுமாக இருந்து அதனை எனது பிரதியோடு ஒத்துப் பார்வையிட்டு ஆங்காங்குக் கண்ட பாட பேதங்களைக் குறித்துக் கொண் டோம்.
பின்னர்த் திருத்தணிகைக் குருசாமி ஐயர் கிருகத்திற் சென்று, சென்னையில் மிகப் பெயர் பெற்றிருந்த வித்துவானாகிய அவரது பிதாமகன்பூரீசரவணப் பெருமாளை யருடைய புத்தக நாமாவலியைப் பார்வையிட்டதில், அவரது கலித்தொகைச் சுவடி கோயமுத்தூரில் ஒருவர் கையிற் போயிருப்பதாகத் தெரியவந்தது. அதனைச் சின்னாள் இரவலாக வாங்கியனுப்பும்படி அவ்வூரிற் பெரிய மனுஷர் சிலருக்குக் கடிதம் விடுத்தேன். அவர்கள் அரவின் சுடிகை அரதனத்திற் கும் ஆழிவாய் இப்பியுண் முகத்திற்கும் அவை உயிரோடிருக் குங்காறும் ஆசை கொளல் வேண்டாவாறு போல, இம் மஹானுடைய சீவதசையில் இவர்கைவிடப்பட்ட புஸ்தகங் களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிகவென்று பதிலெழுதினர். சிவனே! சிவனே! இதுவுங் கலித் தொகை யைப் பிடித்ததோர் கலித்தொகையோ என்று உளநொந்தேற்குக் கடைசியில், அஃதும் மற்றைப் பெரும்பான்மைய பிரதி களொப்ப நெய்தல் வளம் பெறாது முல்லையோடு முடிந்த பிரதியெனக் கேள்வியுற்றுச் சஞ்சலம் ஒழிந்தேன்.
Page 46
86 தாமோதரம்
பூரீ இராமசாமி சாஸ்திரிகள், பூரீ கோபாலகிருஷ்ணமச் செட்டியார், பூறி வைத்தியலிங்கச் செட்டியார் முதலிய உத்தி யோகஸ்தர்களும், பூரீ வெங்கட்ட ரமண சாஸ்திரிகள், பூறிதிருச் சிற்றம்பலபிள்ளை, பூரீ விசுவலிங்க பிள்ளை, பூரீ சொக்க லிங்கக் கவிராயர் முதலிய வித்துவான்களும் யான் கடித வாயிலாகக் கேட்டுக் கொண்டபடி தங்கடங்களாலான பிரயாசப்பட்டும் பிரதி கிடையாமையால் அவர்களிடம் யான் அனுப்பி வைத்த மூவரும் வெறுங் கையாய் வந்து சேர்ந்தார் கள். ஆதலால் நெய்தற்கலி முழுமையும் பரிசோதித்தற்கு உபயோகப்பட்டது மூன்று பிரதியே.
குறைப் பிரதியாயினும் முழுப் பிரதியாயினும் அகப் பட்ட இப்பத்துப் பிரதிகளையுங் கொண்டு கலித்தொகையைப் பதிப்பித்து நிறைவேற்றியதில் பூரீ தொண்டமான் புதுக் கோட்டை மஹாராஜாவின் மந்திரியும், பிரதி நாவலருமாகிய கவுரவ சேஷைய சாஸ்திரியாரவர்கள் காருண்ணியத்திற்கு மிக்க கடமை பூண்டொழுகின்றேன். இன்னும் இவ்வகைப் பட்ட பழைய அருமையான நூல்களைத் தேடி எடுத்து உலோகோபகாரமாக அச்சிட்டுப் பரிபாலனம் பண்ணத்தக்க ஸ்திதியில் அவர்கள் என்னை வைத்திருப்பதற்காகத் தமிழ் நாடு முழுவதும் அவர்களுக்கு ஒருங்கு கடமைப் பட்டிருக் கின்றது. w
இது நிற்க. இக்காலந் தமிழிலக்கணங் கற்போர் பெரும் பாலும் நன்னூலொன்றையே கற்றுப் பொருள் யாப்பணி களின் பயிற்சி குன்றிப் போவதால் இலக்கண விளக்கம் ஐந்தி லக்கணமுஞ் சேர்ந்திருப்பதனாலும், பேரறிவினர்க்கே புலப் படுந் தகைத்தாய தொல்காப்பியம் போலாகாது சாதாரண மாணவர்களுக்கும் உபயோகமாதற் பாலதாதலானும் அது கற்போர்க்கு எளிதில் அகப்படாது ஏட்டுப் பிரதிகளில் மிக அருமையாக மறைந்து கிடத்தலானும், அதனை அச்சிட்டாற் றமிழ் நாடனைத்திற்கும் பேருபகாரமாமென்று எண்ணினேன்.
கலித்தொகைப் பதிப்புரை 87
அஃது இற்றைக்கு இருநூறு வருஷத்தின் முன், திருவாரூரி லுள்ள அபிஷேகத்தார் மரபிலுதித்த தமிழ் ஞானபானுவாகிய வைத்தியநாத நாவலர் அருளிச் செய்தது. அதனது மகத்துவத்தை அதற்கு இன்றுகாறுஞ் சான்றோரால் வழங்கி வருங் குட்டித் தொல்காப்பிய மென்றும் பெயரே இனிது விளக்கும். அன்றியும் அது தோன்றிய பின்னர் நன்னூற் பயிற்சி குன்ற, அதுவே தலையெடுத்து வந்தமை ஒன்றுமே அதன் மாட்சியை நன்கு புலப்படுத்தும், ஐம்பது வருஷத்தின் முன் சரவணப் பெருமாளையர் நன்னூற் காண்டிகையை அச்சிட்டு யாவர்க்கும் மிக எளிதில் அகப்படச் செய்யும் வரைக்குங் கற்போர் யாரும் ஒதிவந்ததும் அதுவே.
சூறாவளி மாறாய் மோதியென்? சூத்திர விருத்தி வான் ஆர்த்ததிர்த் திடித்தென்? கன்ன துரோண சயித்திரர் என்ன துரோகம் இயைத்திடினுந் 'தேரொன்று கிடையாத குறை யன்றே7களத்தவிந்தான் சிறுவன்'. அச்சுவாகனங் கிடையாத குறையென்றோ இலக்கண விளக்கம் மடங்கியது?
அதனையான் எடுத்துப் பிரசுரஞ் செய்யத்துணிந்தும் இது வரையிலும் அச்சிட்ட நூல்களால் எனக்கு நேரிட்டிருக்கும் நஷ்டம் இடங்கொடுத்தில தாதலாற் பிறர் திரவிய சகாயம் அவசியம் வேண்டியதாய் அது விஷயத்தை ஆங்காங்குள்ள சில மஹான்களுக்குத் தெரிவித்தேன். அப்பொழுதுந் திருவா வடுதுறை மகாசந்நிதானம் அம்மடத்துப் பிரதிகளும் அனுப்பி 100 ரூபாயும் தருவதாக உத்தரவு செய்தது.
அதனை அச்சிட 1,000 ரூபா பிடிக்குமென்று யான் பகிரங்கஞ் செய்த தோர் விளம்பரத்தைக் கண்ணுற்று, இறங்கூன் கமிஷனராபீஸ் மானேஜர் எனது சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளையதம்பிப்பிள்ளையும் அவரது இஷ்டர் சிலருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். அவ் வுதவியை முன்னிட்டு இலக்கண விளக்கம் அச்சிடத் தொடங்கு
Page 47
88 தாமோதரம்
வதற்குள், மதுரை போடிநாயக்கனூர் ஜமீந்தார் பூரீ திருமலை போடய காமராஜசயபாண்டிய நாயக்கர் துரையவர்கள் செலவு முழுவதுந்தாமே தருவதாக ஒத்துக் கொண்டு 500 ரூபா அனுப்பி, மீதி அச்சிட ஆரம்பித்த பின் தருவதாகத் தயை புரிந்தார்கள். இவர்கள் தயாளத்துவம் யாவரானும் வியக்கற் பாலதே. இலக்கண விளக்கம் இப்போது அதி விரைவில் அச்சாகி வருகின்றது. சர்வதாரி வருஷத் தோடு பவனி வருமென்று நம்புகின்றேன். ۔۔۔۔۔۔۔۔
இறங்கூனிலிருந்து வந்த பணத்திற்கு அதனை அனுப்பி னோரது சம்மதி பெற்றுப் பஞ்ச காவியங்களுட் சிறந்த சூளாமணியை அச்சிடச் கருதிப் பரிசோதித்து வருகின்றேன். இஃது யாப்பருங்கலக் காரிகையுரைக் குணசாகர முனிவர் முத லியோராற் றமக்கு மேற்கோளாக எடுத்தாளப்பட்ட மாண் பினையுடையதோர் அரிய பூர்வக்கிரந்தம். தமிழ் நாடனைத் தினும் இதற்கு மூன்று கையெழுத்துப் பிரதியே அகப்பட்டது. பின்னர் இஃது எவ்வளவு சீக்கிரத்தில் அந்தரத்தானமடையும் ஸ்திதியிலிருந்த தென்பது வாசிப்போரே உணர்வாராக.
சங்கமரீஇய நூல்களாய் வகுக்கப்பட்ட எட்டுத்தொகை பத்துப் பாடல் பதினெண்கீழ்க் கணக்குட் டலமை பெற்ற எட்டுத் தொகைகளில் இக்கலித்தொகையும் பத்துப்பாட லுள்ளே திருமுருகாற்றுப் படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற்போதுமா? பதினெண் கீழ்க்கணக்குட்டானும் இன் னும் வெளிவராது கிடப்பன உள. இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்வாம் சர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியார் மடாதிபதிகளென்றினோர் இவற்றிற் கடைக் கண் பதிக்குமாறு சரஸ்வதியே அநுக்கிரகிப்பாளாக.
கலித்தொகைப் பதிப்புரை 89
பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒன்றொன்றாய் நலிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப் பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்க உற்றா ளில்லை.
திருவுடையீர்! நுங்கருணை இந்நாட்டவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு தரம் அழிந்த தமிழ் நூற்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத் துள் எடுத்துமென்? ஒடன்றோ கிட்டுவது! காலத்தின் வாய்ப் பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினுங் கம்பையும் நாராச முந்தான் மீரும். அரைக் காசுக் கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. சங்க மரீஇய நூல்களுட் சில இப் போது தானுங் கிடைப்பது சமுசயம். முப்பால் அப்பாலாய் விட்டது. என் காலத்தில் யான் பார்க்கப் பெற்ற ஐங்குறுநூறு இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன் றன் பின் ஒன்றாய் அழிகின்றன.
சீமான்களே! இவ்வாறு இறந்ததொழியும் நூல்களில் உங் களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம் ஆச்சரியம் அயலான் அழியக் காண்கினும் மனந் தளம்புகின் றதே! தமிழ் மாது நுந் தாயல்லவா! இவள் அழிய நமக்கென் னென்று வாளா இருக்கின்றீர்களா தேசாபிமானம் மதாபி மானம் பாஷாபிமானமென்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்பீர்களாக.
இந் நூலைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டுப் பிரதி யளித்த கனவான்களுக்கும் இதனைப் பரிசோதித்து அச்சிடுவ தில் எனக்கு அப்போதப் போது சகாயஞ் செய்த பூரீமத் ந.க.சதாசிவப்பிள்ளையவர்க்ட்கும் பூரீ யாழ்ப்பாணம் சிந்தா மணி உபாத்தியாயர் வேலுப்பிள்ளையவர்கட்கும் பூரீநல்லூர்
Page 48
90 தாமோதரம்
சிற். கைலாசபிள்ளையவர்கட்கும் பூரீதிருகோணமலை ந.க.க னகசுந்தரம்பிள்ளையவர்கட்கும் என் நன்றி கூறுகின்றேன்.
இந்நூல் பதிப்பில் யாவர்க்காயினுங் குற்றங்கூற இஷ்ட முளதாயின், அன்னோர் இன்னும் அச்சிற்றோற்றாத நற் றிணை பரிபாடல் அகம் புற மென்றிவற்றினொன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன் மேற்குறை கூறும் படி வேண்டிக் கொள்கின்றேன். யான் வித்தியாகங்காரத்தினா லாவது திரவிய ஈட்டத்தினாலாவது இதில் ஏற்பட்டவனல்ல னென்பதை இன்னுமொருகால் வற்புறுத்துகின்றேன்.
"குற்றமே தெரிவார் குறுமாமுனி சொற்பாவினு மோர்குறை சொல்வராற் கற்றிலாவென் கவிவழு வாயினும் உற்றுநாடி வல்லோ ருய்த்துரைக்கவே."
கயிலாயநாத குருவே நம. திருச்சிற்றம்பலம் புதுக்கோட்டை இங்ங்ணம் சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் 3ஆம் தேதி. சி.வை.தா.
கலித்தொகைப்பதிப்புரை 91
கலித்தொகை உரையாசிரியர் சிறப்பு
பச்சைமா லனைய மேகம்
பெளவநீர்பருகிக் கான்ற எச்சினாற் றிசையு முண்ணு
மமிழ்தென வெழுநா வெச்சில் மெச்சிநா னாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத நச்சினார்க் கினியா னெச்சி
னறுந்தமிழ் நுகர்வர் நல்லே. ர்
நல்லுந்துவனார் கலித்தொகை, மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கினியார் உரையோடும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பல தேசப் பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, பூரீ தொண்டமான் புதுக்கோட்டை மகாராசாவின் மந்திரியும் பிரதிகாவலருமாகிய கெளரவ அ.சேஷையசாஸ்திரிகள் C.S.I. காருண்யோபகார திரவியத் தைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது. சர்வஜித்து வருடம் gig Longsub, 1887. (Printed at the Scottish Press, by Graves,
Cookson and Co. Madras)
Page 49
கணபதி துணை
3.இலக்கண விளக்கப் பதிப்புரை
திங்க டங்கிய செஞ்சடை முடியினன் றிருத்தாட் பங்க யங்கயி லாயநாதனைமுனிப் பழிச்சிச் சங்க மங்களத் தமிழ் முத்துக் குமாரன்றண் மலர்ப்பா தங்கள் வங்கமாத் தமிழ்க்கடலிடைப்படி குவனே.
முத்தமிழ் வாணர்தம் வித்தக வடியிணை சித்தமெய் மொழிகளில் வைத்து வாழ்குவனே.
பூமிசைத் தென்மலைப் புங்கவன் புகன்ற சீர்மிகும் அகத்தியம் பார்மிசை இறந்துபட்டதாதலின் அன்னோன் மாணாக்கர் பன்னிருவருட் டலைமை பெற்ற திரணதுரமாக் கினி யென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பிய மகாரிஷி அவ்வகத்தியத்தின் வழித் தந்தருளிய தொல்காப்பியமே மதுரைக் கடைச் சங்கத்தார் காலந்தொட்டு ஐயாயிர வருஷ மாகத் தமிழுக்கு ஆதாரமான பேரிலக்கணமாயுள்ளது. அது மிக ஆழியதோர் கடலணையது. ஆதலாற் கற்று வல்லோர்க் கன்றி மற்றையோர் அறிதற்கு அரியதாயிற்று. அது கொண்டு சிறுவர் முதலியோர் இலக்கணம் பயிறற்கு உபயோகமாகப் பவணந்தியாதியோர் பலரும் நன்னூல் சின்னூல் காரிகை என்றின்னன சிற்றிலக்கண நூல்கள் பல செய்வாராயினார். அவை பெரும்பாலும் தமிழ் நன்கறிதற்கு இன்றியமையாத ஐந்து இலக்கணங்களையும் முற்றக் கூறாது ஒன்றொன்று
இலக்கணவிளக்கப் பதிப்புரை 93
ஒன்றிரண்டு மாத்திரம் உணர்த்தா நின்றன. சிறுபான்மை வீர சோழியம் போன்றன ஐந்தும் எடுத்துக் கூறினவேனும் மிகச் சுருங்கிய வாய்க் கற்போர்க்கு வேண்டிய அளவு இலக்கண ஞானங் கொடாமையிற் பெரும்பயன் தருவனவல்லவாயின. இவ்விரு திறத்தனவும் போலாது பஞ்சலகூடிணமும் மாணாக் கர்க்குப் போதுமான அளவு செறிந்தது இலக்கண விளக்க மொன்றே. இதன் மகிமை இதற்குச் சான்றோரால் வழங்கி வரும் “குட்டித் தொல்காப்பியம்” என்னும் பெயரானே இனிது விளங்கும். VN
இந்நூல் மூலமும் உரையுமாகச் செய்தவர், மன்னார் குடித்தாலுகாவிலுள்ள ஆதித்தேச்சரத்திற்கு அணித்தான திருக் களரில் இப்பொழுது அதிவயோதிபராயிருக்கின்ற பூரீமத் சூரியமூர்த்தி தேசிகரைத் தமக்கு ஆறாவது சந்ததியாக உடைய வரும் இன்றைக்கு 250 வருஷத்தின் முன் சத்தவிடங்கத் திவ்விய க்ஷேத்திரங்களில் முதன்மையுடைத்தாகிய திருவாரூரின்கண், அவ்வூர் அபிஷேகத்தார் மரபிற் சிறப்புற்றோங்கிய பூரீவன்மீக நாத தேசிகர் குமாரருமாகிய வைத்தியநாத தேசிகர். இராமநாதபுரத்தில் 1685-ம் ஆண்டுமுதல் 1723-ம் ஆண்டுவரை யும் அரசு புரிந்த இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்து வானான படிக்காசுப் புலவர், இந்நூலாசிரியரிடங் கல்வி கற்றவராதலானும் சற்றேறக்குறைய 180 வருஷத்தின்முன் நன்னூல் விருத்தியுரை இயற்றிய சங்கர நமச்சிவாயப் புலவரது இயற்றமிழாசிரியராகிய சாமிநாத தேசிகர் இவர் காலத்துச் சிறு வயதினராயிருந்தமையானும், இவர் காலம் இன்றைக்கு 250 வருஷத்தின் முன்னென்பது போதரும்.
நூற்கு உரையும் பாயிரமும் அணியியலிற் சொல்லணிச் சூத்திரங்களும் வைத்தியநாத தேசிகருடைய புதல்வர் ஐவருள் மூத்தவராகிய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன எனக் கூறுவாருமுளர். ஆயினும் ஆசிரியரை நேரிலே பார்த்து அறிந் தவரும் மகாவித்துவானுமாகிய பூரீ கைலாச பரம்பரைத்
Page 50
94 தாமோதரம்
திருவாவடுதுறை ஈசான தேசிய சுவாமிகள் தமது இலக்கணக் கொத்தில் ஒருவரைச் சூத்திரத்தினகத்துத் தாமே தமது நூற்கு உரையியற்றியதற்கு மேற்கோளாக "எண்கண்காணத் - திருவாரூரரிற்றிறக்கூட்டத்திற் -றமிழ்க்கிலக்காகிய வைத்திய நாத - னிலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன்' எனக் கூறுமாற்றானும், "பொருளணி சொல்லணி யெனவலங்கார - மிருவகை நெறிய7 னியலு மென்ட்" என நிறுத்திப் புகுந்து பொருளணி உணர்த்திய ஆசிரியர் நிறுத்த முறையானே சொல் லணியும் ஒருவாறாவது உணர்த்தாதொழியா ராகலானும்,
சதாசிவ தேசிகர் சொல்லணிச் சூத்திரங்களுட் சிலவும் பாயிரமும் மாத்திரமே செய்தவரென்றும் இலக்கண விளக்கம் மூலமும் உரையுமாகவே ஆசிரியரால் இயற்றப்பட்டதென் றுங் கொள்வதே தகுதி. சொல்லணியகத்துத் தந்தையார் குத்திரமிவை மைந்தனார் சூத்திரமிவையெனப் பகுத்தறிய ஏதியாதுங் காண்கிலேம்.
இந்நூற் பாட்டியல் வைத்தியநாத தேசியர் இயற்றிய தன்று . யாப்பிலக்கணஞ் செய்தார் பிறரநேகர்போல இவரும் அதனாற் பெரும்பய னின்று கூறாதொழிந்தனர் போலும். ஆயினும் அஃதில்லாததோர் குறைவை அவரது இரண்டாவது புத்திரராகியதியாகராச தேசிகர் நிவிர்த்திசெய்தனர். பாட்டியல் செய்தார் தியாகராச தேசிகர் என்பது நூற்பாயிரம் புனைந் தருளிய சதாசிவதேசிகர் குமாரர் தியாகராச தேசிகர் எழுதிய பதிகச் செய்யுளான் அறிக. இதனாற் பாட்டியலுடையார் தமது நூலுக்குத் தாமே பதிகம் பாடினவரல்ல ரென்பதுஉம் ஒரே பெயரினராயினும் இருவரும் வேறென்பதுஉம் பதிகத்தார்க் குப் பாட்டியலுடையார் சிறியதந்தை என்பதுஉம் உணர்க.
நமதாசிரியர் வமிசம் முன்னும் பின்னும் பல தலைமுறை யாகப் பேர் பெற்ற வித்துவான்களாற் சிறப்புற்ற தோர் வமிசமேயாம். வைத்தியநாத தேசிகர் தந்தையாகிய வன்மீக நாத தேசிகர் நமது பாவன்மையாற் பரிசு பெற்ற சூனாம்
இலக்கணவிளக்கப் பதிப்புரை - 95
பேட்டை மானியமும் உப்பளமும் நாளது வரைக்கும் அவர் சந்ததியார் அநுபவித்து வருகின்றார்கள். வைத்தியநாத தேசிகர் கல்வித்திறமைக்கு இந்நூலின் வேறுசான்று வேண்டா. அவர் மலையாளத்திராசாவின் பேரிற் சில பிரபந்தம் பாடி அவ்வரசனாற் கிராமங்களுஞ் சன்மானங்களும் அளிக்கப்பெற்றதும்,
அவை அரங்கேற்றியஞான்று,
ஒதும்பிரபந்தங்க னொருகோடி நிமிஷத்து
ரைக்கும்பிரசண்ட anaia உத்தண்ட வமிர்தரச சித்திரவித்
தாரகவி பு/பயகவிராசராசன் போதும் பசுந்தமிழ்ப் பலகையுங் குடி4/கப்
4/லமக னெனுங் குமாரி W புதுநலந்தனைநுகர்ந்தவனுநீயாகிலுன்
4/ഖഞ്ഞzoങ്ങ4/ ഖഗ്ഗക്ട് ഖഥ/? காதுங் கடுங்கொலைப் பாகடுங் கடதடச்
களியானை யரச வெள்ளங் கணிசவைப் பரணிமட லந்தாதிதுதுலாக்
காதல் செய வோத வல்லாப் மோதுந்தனிக்கொற்ற வாயிலாப் முதண்ட முழுதும் பரந்த சித்தி முருகுகமழ் தருகமலை வருவைத்திய நாதகுரு
முத்தமிழ்க்கவிராச னே7
என அவ்வரச சபையாராற் றுதிக்கப்பட்டதும் உலகறியாத தல்ல. இந்நூலன்றிப் பல பிரபந்தங்களும் அவரால் இயற்றப் பட்டுள்ளன. மேலும் இவர்கல்வித்திறமையை அவர்காலத்து வித்துவான்களில் ஒருவராகிய கவி வீரராகவ முதலியார் சொல்லிய,
Page 51
96 ر தாமோதரம்
'ஐம்பதின்மர் சங்கத்தார7கிவிடா ரோநாற்பத் தெ7ன்பதின்ம ரென்றே யுரைப்பாரோ - இம்பர்புகழ் வன்மிக நாதனருள் வைத்தியநாதன்யுடலி தன்மிதந் நாட்சரித்தக் கால்." என்னும் வெண்பா நன்கு புலப்படுத்தும்.
அவர் மாணாக்கரில் ஒருவராகிய படிக்காசுப்புலவர் ஒருகாற் செம்மற்பட்டிக்காடு வழியாகத் தமது குருபுத்திரர் சதாசிவநாவலரைக் காண வந்தபோது அச்சதாசிவ தேசிகர் மாணாக்கர் சிலர் வனத்திற்றுதுளங்காய் பறிக்கையிற் காரிகை யைப் பாராயணஞ் செய்து கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு வியப்புற்றுவந்து
"கூடுஞ் சபையிற் கலிவாரணங்களைக் கோளரிபோற் சாடுஞ் சத7சிவ சுற்குரு வேமுன்னுன்றந்தை தம்மாற் பாடும் 4/லவர்கள7னே7மின்றிச் செம்மற் பட்டியெங்குங் காடுஞ் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்றதுவே"
என்று கொண்டாடினர்.
பாட்டியல் செய்த தியாகராச தேசிகர் இன்னோர் இளவலென்பது முன்னர்ச் சொன்னோம். இவர் தம்பி சிதம்பர தேசிகர் சிவஞான சித்தியாருக்கு ஒர் சிறந்த பொழிப்புரை செய்திருக்கின்றனர்.
சதாசிவதேசிகர் மகன், பதிகச் செய்யுள் பாடிய தியாகரச தேசிகர் திருமுல்லைவாயிற் புராணம், தேவையந்தாதி, காழி யந்தாதி முதலியன இயற்றி இராமநாதபுரத்தில் மந்திரியா யிரந்த தாமோதரம்பிள்ளையினாற் சூரியக் கோட்டை கிராமம் பரிசு பெற்றும், விஜய அருணாசல வணங்காமுடியாகர் பேரிற் கோவையும் உலாவும் பாடித் தண்டிகை வரிசையும் மரவனேந்தல் முதலிய மூன்று கிராமமும் பரிசு பெற்றும் மிகச் சிறப்புற்றிருந்தனர்.
இலக்கண விளக்கப் பதிப்புரை 97
இவர் குமாரர் சதாசிவ தேசிகர் அவர் காலத்திற் பூரீகைலாசபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தில் எழுந்த ருளியிருந்த மகாசந்நிதானத்தின் முன் கேட்டோர் யாவரும் அதிசயிப்பஒரு பெரும் வித்வப் பிரசங்கஞ் செய்தபோது ஆண் டிருந்த இலக்கணம் அம்பலவாணத் தம்பிரானால்
"வன்மீக நாதன் வரத்த7 லவதரித்த வன்மீக நாதன் மரபினோன் - வன்மீகர் த7மே7ர்தமிழுருவாய்ச்ச7ர்ந்த சதாசிவனை யாமே7 புகழவல்லே மீண்டு. "
எனத் துதித்து மதிக்கப் பெற்றவர். இவர் புத்திரனாகிய வன்மீகநாத தேசிகருடைய பிள்ளையே இப்பொழுது திருக்கள ரூரில் இருக்கும் பூரீமத் சூரியமூர்த்தி தேசிகர். இவ் வருஷம் இவர்க்கு 77 வயதும் இவர் தனயன் பூரீசண்முகதேசிகருக்கு 37 வயதும் நடக்கின்றது. இவர்கள் இருவரும் தமிழ் நன்கு கற்ற வித்துவான்களாகவே இருக்கின்றார்கள். ஒருகால் அவ்வூர் மிராசுதார் பூரீசீநிவாச முதலியார் பெருமையைக் குறிப்பிட்டு,
"தேடிநிதி யங்கொடுக்குஞ் செல்வரைப்ப7ர்த் தெள்ளளவும் لیجی/Z(تبر تھوZ ۔ یونلو) 7///74/424 Z جھے تھے Z//7Z2474 /Z2 வாசமலர்த்தடஞ்குழ் வண்களர்வாழ் வாஞ்சிதி ഖ/് ബിസ്മെ6ിക7ബീബ് ഖ/Z, ' என்று துதித்தவர் இச்சூரியமூர்த்தி தேசிகரேயாம்.
படிக்காசுப் புலவர் இந்நூலாசிரியர்க்கு மாணாக்கரா கவே, இராமநாதபுரத்தில் 1685-ம் ஆண்டுவரையும் அரசாண்ட சேதுபதி பேரால் ஒருதுறைக்கோவை பாடிய அமிர்தக விராயருங் கவிவரராகவ முதலியாரை ஒப்பு இந்நூலாசிரிய ரோடு ஒரு காலத்தவரென்று கொள்ளல் தவறாகாது.
முதலில் இவர் நன்னூலிற்குச் சைன முனிவருரை தக்க உரையல்லவென்று கண்டு தாமோர் உரையெழுதுவாராயினர். பின்னர் அதிற் பல இடங்களில் நன்னூலாரோடு தம்மதம் மாறு பட்டமையால் இந்நூலை இயற்றத் தொடங்கினர்.
Page 52
98 தாமோதரம்
அவ்வாறியற்றுவான் புகுந்தவர் நன்னூல்போல் எழுத்துச் சொல்லிரண்டோடும் முடியாது உலகிற்குப் பெரும் பயன்பட ஐந்திலக்கணமும் முற்றுப்பெறச் செய்தனர். முற்றுப் பெற்று மென்? அச்சின்வாய்த் தோற்றாமையாற் கற்போர்க்குக் கிடைத்தற்கரிதாகி அதனால் அடையற்பாலதாம் பயனை உலகம் பெறாமற் போகத் தக்கதாய் வந்துவிட்டது. இதனை உணர்ந்தே அடியேன் இப்பொழுது அதனை அச்சிட்டுப் பிரசுரஞ் செய்யத் தலையிட்டனன்.
அச்சின்வாய்த் தோற்றாமலும் பரிபாலனம் அடையா மலும் இருக்கும் நூல்கள் எத்துணைச் சீக்கிரம் இறந்து விடுகின்றனவென்பதற்குச் சொற்ப காலத்திற்கு முன்னர் உதித்த இந்நூலின் கடைசி இயல்களுக்குத் தமிழ்நாட்டிலே பிரதிகள் அகப்படாமையும், எங்கெங்குந் தேடியும் யாது முயற்சி செய்தும் பாட்டியலுக்கு இரண்டு பிரதிமாத்திரம் அகப்பட்டதுஞ் சான்று பகரும். சில பல இடங்களில் அகப் பட்ட பொருளதிகாரப் பிரதிகள் அவிழ்த்துப் பார்ப்பதற்கும் உபயோகமில்லாத தசையடைந்து விட்டன.
இந்நூல் உலகிற்றோற்றிய கால முதல், நூற்றைம்பது இருநூறு வருஷமாக, நன்னூல் முதலிய ஏனைய சிற்றிலக்க ணங்களெல்லாம் பயிற்சி குன்ற, இதுவே தலையெடுத்து வந்தது. பதினேழாஞ் சகாப்தம் முதல் இற்றைக்கு ஐம்பதறு பது வருஷத்திற்கு முன் வரைக்குஞ் சென்னை, காஞ்சி, புதுவை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி,யாழ்ப்பாண மென் றின்னோரன்ன தமிழ்த் தேசங்களில் இலக்கணங் கற்போர் பெரும்பாலும் ஒதிவந்ததும் இதுவே.
இஃது இவ்வாறு பிரசித்தியடைந்து வருகையில் பூரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தார், சோழ நாட்டிற் றமது ஆதீன மரபினை யொத்ததுஞ் சந்தான குரவர் வழித் தோன்றியதுமாயினும், பலகாலும் பல விஷயங்
இலக்கண விளக்கப் பதிப்புரை 99
களிலேயே தம் மோடு முரணிய தருமபுராதீன சம்பந்தம் இதற்கு ஒரோவழி யுண்மை பற்றி இதன் மகிமையைக் குறைக்க நினைத்தோ, அல்லது நன்னூலின் பண்டைக் கொள் கையான் அதன்மேற் பச்சாத்தாபங் கொண்டோ, நன்னூலை மேன்மைப்படுத்த எண்ணி, அதற்குத் தமதாதீனத்துச் சங்கர நமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை எழுதுவித்தும் நன் னுரலினகத்தும் அதன் சமணவுரையினகத்தும் முன்னரில்லாத பல விதிவிலக்குகளை உரையிற்கோடலாற் புணர்ப்பித்தும் இன்னும் அவ்வுரை சிறக்கும்படி சமஸ்கிருத திரவிடக் கடல் கள் முழுதுண்டு தேக்கிய பூரீ சிவஞான முனிவராற்றிருத்திப் புத்தம் புத்துரை எழுதுவித்தும், அதுவும் போதாதெனக்கண்டு அம்முனிவரால் இலக்கண விளக்கச் சூறாவளியென்று ஒர் அநியாய கண்டனம் இயற்றுவித்தும் இந்நூலை நசிக்க முயல் வராயினர். சமணர் காலத்தின் பின்னர்த், தான்தோன்றிய கால முதற் றென்னாடெங்குந் தமிழ்க் கல்வியை விர்த்தி செய்வதி லுங் சைவ சமயத்தை வளர்ப்பதிலும் முதன்மை பெற்றோங் கிய இவ்வாதீனத்தாருக்கு இஃதெஞ்ஞான்றும் ஒரு களங்கமே யாம். "திருவாரூரிற் றிருக்கூட்டத்திற் - றமிழ்க் கிலக்காகிய வைத்திநாதன்' என ஆசிரியர் தமிழ் வல்லமையைப் புகழ்ந்த ஈசான தேசிகனும் "முன்னுரலொழியப் பின்னூல் பலவினு - ணன்னூலார் தமக் கெந்நூல7ருமினையோ வென்னுந் துணிவே மன்னுக" என நன்னூலையே புகழ்ந்தது தமதாதீன வைராக்கிய மென்றே கோடற் பால தோ, அன்றேல் அவர் வைத்தியநாத தேசிகர் இந்நூலை மூலமும் உரையுமாகச் செய்து கொண்டிருந்ததைக் கண்டது மாத்திரமன்றி நூலைப் பார்த்தறிந்தவரல்லரோ அறிகிலேம்.
பூரீகச்சியப்ப சுவாமிகள் திருத்தணிகையிற் கந்தப்பையர் முதலியோருக்குத் தமிழ் கற்பிக்கையிற் றம் மாணாக்கர்கள் இலக்கியப் பயிற்சிக்காகச் சீவக சிந்தாமணியைப் பாராட்டி யது கண்ணுற்றபோது தம்பாலெழுந்த சமயாபிமானத்தா
Page 53
100 தாமோதரம்
னன்றோ அதற்கிணையாகச் சைவ இலக்கிய மொன்று நிலை பெறும்படி தணிகைப் புராணத்தைச் செய்தருளினார்!
பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாயசோழனை இடித்துரைத் துக் கண்டித்த அருண்மொழித் தேவர் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்சுவை பொருட்சுவைகளின்மேற் றம்மாணாக்கர் மனஞ் செலுத்திய இடத்தன்றோ பரிதாபமடைந்தனர்? பின்னை அபிஷேகத்தர் மரபிலுதித்துச் சுத்த சிந்தாந்த சைவ சமயியாய்ச்சைவ சமயாசாரியராய் எழுந்தருளிய இந்நூலாசி ரியர் இயற்றிய நூலும் உரையுஞ் சிறப்புடையனவாகவும், பஞ்சலக்ஷணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன்தருவன வாகவும் இருக்க, அதனை விரோதித்துப் பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை இச்சித்தல் போல, இரண்டிலக்கணமாத்திர முடைத்தாய்ச் சமணாசிரிய ராற் செய்யப்பட்டுள்ள நன்னூலைச் சிறப்பிக்க முயன்றது திரு வாவடுதுறை யாதீனத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமானமுடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளற்பாலதேயாம்.
சகல சற்குணமும் எல்லாக் கல்விச் சிறப்புமுடையராய் வீற்றிருந்து இப்பொழுது அடைந்துபோன பரம தயாளு வாகிய பூரீலழறி சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள் இவ்வாறு தமது ஆதீனத்தார் செய்தது தப்பென்று நேரிலே ஒத்துக்கொண் டதுமன்றி, இலக்கணவிளக்கம் அச்சில் வெளிப்படுமாயின் மீளவும் முன்னைச் சிறப்பு அடையாமற் போகாதென்று சொல்லி, அதனை எவ்வாற்றானும் அச்சிடுவிக்க வேண்டு மென்று அடியேற்குக் கட்டளையிட்டருளியது. மேலும் சிறு காப்பியங்களில் ஒன்றாகிய சூளாமணி இப்பொழுது எங்ங்னுங் கிடைத்தற்கு அரிதாகி இறந்துபோகுந் தசையடைந்திருத்த லால் அதையும் அச்சிடுவித்தல் உலகிற்குபயோகமாகுமென உத்தரவு செய்தது. இஃது இலக்கண விளக்கம் அச்சில் வெளிப்
இலக்கண விளக்கப் பதிப்புரை 101
படும்போது நன்னூற்பயிற்சி சிதைவுறு மென்னும் நிச்சயத் தாற் சமணர்க்குச் செய்ததோர் நஷ்டபரிகாரம் போலும். யான் அப்பணிகளைச் சிரமேற்கொண்டு,
"குறிப்பினாலரிய குரவ ரெண்ணமது
கூறு முன்புரி குணத்தினேன் பொறுப்ப னோவடிகள் புவியி லென்னையொரு
பொருளெனக்கொடு புகன்றநூல் சிறப்புறப்பிழை திருத்தி யச்சில்வெளி
செய்தொ ரோர்பிரதி தேவரீர் நறைப்பெ ருஞ்சரண நளினி சந்நிதியி
னல்கி டாதினி யென்னாளினே"
என விண்ணப்பஞ் செய்தனன். உடனே மடத்திலிருந்த இலக்கண விளக்கப் பிரதிகள் யாவுஞ் சூளாமணிமகாலிங்கை யர் பிரதியொன்று தமது மடத்திலிருந்ததும் என் கைவசம் அனுப்பி, வழக்கப்பிரகாரம் மடத்திற்காக வாங்கும் பிரதி களின் கிரயத் தோடு இந்நூல் ஒவ்வொன்றிற்கு 100 ரூபா உபகாரமுங் கொடுப்பதாக அநுக்கிரகித்தது. சுவாமிகளது சீவ தசையில் இவை இரண்டன் பதிப்பும் முற்றுப் பெறாதது அடியேற்கோர்பெரும் விசனமே. ஆயினும் இவை விரைவில் அச்சாகிவருவதைச் சுவாமிகள் அறிந்திருந்தது என் மனத்திற்கு ஓர் ஆறுதலாம்.
இந்நூல் அச்சில் வராமையே அதன் பயிற்சி இஞ்ஞான் றும் குன்றுவதற்குக் காரணமென்பது முன்பே கலித்தொகைப் பதிப்புரையிலும் "குற7வளி மாறாப் மோதியென்? குத்திர விருத்தி வான் ஆர்த்ததிர்த்திடித்தென்2 கன்னதுரே7ண சயித் திரதர்என்னதுரோகம் இயைத்திடினுந் தேரொன்று கிடையாத குறையன்றோ களத்த விந்தான் சிறுவன் 2 அச்சு வாகனங் கிடையாத குறையன்றே7 க்கண விளக்கம் மடங்கியது" எனக் குறித்திருக்கின்றேன்*
Page 54
102. தாமோதரம்
இங்ங்னம் இதனைப் பாராட்டுதலாற்றவத்தாற்றுாயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுள்ளாரது நூல்களோ டொத்த பெருஞ் சிறப்பினையுடைய தென்று சொல்கின்றேனல் லேன். சிற்றறிவினோர் இயற்றும் எந்த நூலினுந் தப்பில்லாமற்போகாது. இலக்கண விளக்கமுடை யார் மதங்களுள்ளுஞ் சில கற்றுவல்லேரால் அங்கீகரிக்கத் தகாதனவுள. ஆயினுந் தாரதம்மியச் சிறப்பானும் ஐந்திலக் கணமும் உடைமை யானும் பின்னூலெவற்றினும் இதன் மாட்சி பெரிதெனக் கொள்க.
இலக்கண விளக்கச் சூறாவளியை ஓர் அநியாய கண்டனமென்று யான் கூறியதை ஈண்டுத்தாபிக்கப்புகின் மிக விரியும். அஃது அன்ன இயல்பின தென்பது நடுவு நிலைமை குன்றாது அதனை வாசிப்போர் அனைவர்க்கும் புலப்படும். ஆயினும் அநியாயமென்றோர் குற்றமேற்றி, பின் அதற்குச் சில உதாரணமாவது காட்டாமற்போதல் சரியன்றென்று உட் கொண்டு, அங்குமிங்குந் தேடியெடாமற் சூறாவளியில் முதன் முதற் சொல்லியவற்றையே சொற்ற முறைப்படி எடுத்துக் கொண்டு அவை சிவஞான யோகீசுவரர் உணர்த்தியவாறு நமதாசிரியர்மேற் போந்த குற்றமல்ல வென்பதை மாத்திரம் இங்ங்னம் காட்டுகின்றேன். காட்டுமுன் அடியேன் சொல்ல வேண்டிய தொன்று உளது.
அகத்திய முனிவர் வரத்தினாற் றோன்றித் தென்மொழி வடமொழிக் கடல்களின் நிலை கண்டுணர்ந்து, முன்னும் பின்னுந் தமக்கிணையின்றி வீறித், தமிழிலுள்ள நூல்களுக் கெல்லாஞ் சிரோரத்தினமாய்ச் சொல்லியா நிற்கும் மகாபாடி யத்தை அருளிச்செய்த யோகீஸ்வரரது பேரறிவு இமாசல மொப்பது. எளியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதூளி போல்வது. அன்னோர், தப்பை ஒப்பென்று தாபிக்கவும், ஒப்பைத் தப் பென்று வாதிக்கவும் வல்லர். அஃது அவர் காஞ்சிபுரத்து வைஷ்ணவ வித்துவான்கள் கொண்ட
இலக்கண விளக்கப் பதிப்புரை 103
இறுமாப்பை ஒழித்தற் பொருட்டு, அவர்கள் தலைமேற் கொண்ட இராமாயணத்து நாந்திச் செய்யுளை முதலிற் பங்கப் படுத்திப், பின்னர் அதனையே அவர்கள் தலைவணங்கித்தம் பிழையைப் பொறுத்தருள்கவென்று வேண்டியபொழுது சரி யென்று நாட்டியதனான் விளங்கும். ஆதலால் இன்னோரன்ன பெருஞ் சிறப்பினரை எதிர்த்து இலக்கிய இலக்கணப் படைக் கலங்கள் தாங்கி அவர் சூறாவளியை மாறாயNக்கப் புகுந்தே னென்று கொள்ளண்மின். அவரும் அவர் மரபினோரும் உவந்து பாராட்டிய நன்னூற்கு இந்நூல் இழிவுடைய தன் றென்னும் மாத்திரையே யான் சொல்லலாயினேனென்க.
l.
'முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்று ரைத்துப் பின்னர் அது கேட்டமாணாக்கர்க்கு நூலுரைப் பான் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவ தென்னை என்னுங்கடா நிகழ்தற்கு இடனுளதாயவழி, இவ்விரு வேதுக்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்க வேண்டுமென்று இறுத்தல் அமையும் அவ்வாறோர் இயைபுமின்றித் திருவிளங்கிய மாநகரம் முதலாக எடுத்துரைக்கும் உத்தரஞ் செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாய் முடியுமென்க' என்றார். “வலம்புரி முத்திற் குலம் புரி பிறப்பும்" என்று தலையிட்ட ஆத்திரையன் பேராசிரியன் எந்தப் பாயிரத்தை முன்னர் வைத்து இது பாயிரமென்று உரைத்துப் போந்தனன்? ஆண்டு யாண்டையோ கிடா நிகழ்ந்ததும் விடையிறுத் ததும் அமையப்பெற்றது?
"முகவுரை பதிகம்" என்றற் றொடக்கத்துப் பொதுப் பாயிர முதலியன கூறிய நன்னூலார் "மாடக்குச் சித்திர மும்' என ஈற்றிலே கூறியதனை இந்நூலார் முதலிலே எடுத்து உரைத்தது தானா ஒரு தவறாயிற்று? இது குற்றமாயின் நன்னூலாரும் "முகவுரை பதிகம்’
Page 55
104
தாமோதரம்
என்னுஞ் சூத்திரங் கூறற்கு முன்னர்த் தன்பாயிரத்தை வைத்து இஃதியாது? இதன் பெயரென்னை? என்று கடா நிகழ்தற்கு இடனாயவழியென்றோ அச்சூத்திரஞ் செய் தல் வேண்டும்! அவ்வாறின்றி "முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் - புறவுரைதந்துரை புனைந்துரை பாயிரம்’ எனச் சொற்றது செப்புவழுவும் மற்றொன்று விரித்தலுமாகுமே. இதனைத் குற்றமென்று தெரிக்கப் புகுந்ததே குற்றமாமென்றொழிக.
'அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காதென்றார், அவற்றியல்பு உணராமையின்’ என்றனர். இதற்கு விடை 'இன்னும் நூனுதல் பொரு ளைத் தன்னகத்தடக்கி" என்பதனைத் தழிஇயனாராக லின், நூலியல்பு பாயிரத்து ளடங்காதென்றல் அவர்க் குங் கருத்தன்றென மறுக்க' என்னும் அவரது சொந்த வாய்மொழியேயாமெனக் கூறுக. நூல் குணியும் நூலி யல்பு குணமுமாகலின், நூல்வேறு நூலியல்பு வேறென் றொழிக. ஆதலால் பல அவயவங்களை உடையதோர் அவயவி அவற்றொன்றில் அடங்காதாகுதல் பொருத்த முடைத் தென்றும் அடங்குமென்பார் கூற்றிற்குப் பொருள் வேறென்றுங் கூறிவிடுக்க.
"எழுத்ததிகாரம் என்புழி அதிகாரம் முறைமை யென்றார். அதிகாரமென்னும் வடசொற்கு அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறிய வாற்றான் அறிக’ எனச் சொற்றனர். இதற்கு விடை 'அதிகாரம் முறைமை' எனவே உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியார் முதலியோர் கொண்டன ரென்க. மேலும் இப்பொருள் வடமொழியிலும் உண்மை சமஸ்கிருத அகராதிகளிற் கூறிக்கிடத்தலான் அறிக.
இலக்கண விளக்கப் பதிப்புரை ', 105
4. "மலைமக ளொருபான் மணந்துல களித்த -
தலைவனை வணங்கிச் சாற்றுவ னெழுத்தே"
என்னும் எழுத்ததிகாரத் தற்சிறப்புப் பாயிரத்தில் நான்கு குற்றம் பாரித்து, முதலாவது "மலைமகளென்பது மலையும் மகளெனவும் அமங்கலப் பொருள்தந்து "தொகையார் பொருள் பலவாய்த் தோன்றலின்’ மலை தன் மங்கலப் பயன் குறித்து வராமை யறிக’ என்றார். நன்னூலார் எடுத்தாண்ட "பூமலி’ என்பது இலை நிறைந்த என்றும் இடம் அகன்ற என் றும் பொருள் தரத்தக்கதாகலால் "தொகையார் பொருள் பல வாய்த் தோன்ற இடமில்லையா? 'நீடாழியுலகம்" என்று மங்கலம் வகுத்த வில்லி புத்தூராழ்வாரை அது நீள் தாழி எனவும் பகுக்கக் கிடந்த தென்று குற்றப்படுத்தல் பொருந் துமா? அன்றியுந் தாமே ஒரு கால் உவந்ததோர் மங்கலமொழி யைப் பிறர் கொண்டக்காற் குற்ற மென்றது பேரற்புதமே. மேலுந் தம் மரபினோர் அனைவருக்கும் அங்கீகாரமான சிவதருமோத்திரத்தில்,
"மலைக்குமகள் பெற்றமகனைக் கயமுகத்தனை,
மனத்தெழுதிய7
னலற்பிணி பிறப்பற வணுக்களை யகத்திய முனிக்கருளின7 னுலப்பில் கருணைக்க டலுருத்திரனுருத்தனிலுதித்தகுமர னிலக்குமியலைக்கலியிளைக்கவுமுரெட்டலுல கிட்டமுறவே" என மறைஞான சம்பந்த நாயனார் எடுத்தாண்ட மங்கல மொழியை அமங்கலப்படுத்தல் தன் தாயை வேசியென்று ஏசுதல் போலும்.
இரண்டாவது 'மணந்து' என்றதும் ஒரு குற்றம்; என்னை இஃது ஈண்டு 'இந் நூல் நின்று நிலவுதல் வேண்டியென் றார்க்கு' மறுதலையாகப் பொருளதிகாரத்தில் "உமையுரு வுருமடுத்தென்றது இந்நூல் நின்று நில வாது இறுதல் வேண்டி எனப் பொருள் தருதலின் என்றார். ஏனையவற்றிற் கும் ஏற்குமாறு பொருள் விரித்துரைக்க' என்று ஆசிரியர் கூறி னாராக, இவரை ஏலாமாறு பொருள் கொள்ளச் சொன்னது ιμπ(βυπ 2
Page 56
106 ܖ தாமோதரம்
மூன்றாவது, உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உல்கு பொருட்கு உரிய வேந்தனென்றல் அவன் இறைமைக்கு ஏலாத வாறு போல ஐந்தொழிற்கும் உரியதலைவனை உலகளித்த தலைவனென்பது தலையன்மை யின்" உலகளித்த தலைவனென்றது குற்றம் என்றார். எழுத்ததி காரத்தில் "உலகளித்த தலைவன்’ எனவுஞ் சொல்லதிகாரத் தில் 'உலகுபுரந்தருளும் அமைவன்' எனவும் பொருளதி காரத்தில் "உலகிளைப் பொழிக்கும் இமையவன்' எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலுங் கூறிய புகுந்தாராகலின் ஈண்டுபட்ட குற்றமென்னோ? ஆன்றோர் ஆங்காங்குக் கூறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமை அனைத்தும் ஒருங்கு சொல்லாவது இரண்டொரு குணமாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக்கேயாம். முனிவரர் இஃது உணராதவரா? இதனாற் "குற்றமே தெரிவார் குறுமா முனி - சொற்றபாவினும் ஓர் குறை சொல்லுவர்" என்பதற் குத் தம்மை இலக்கியமாக்கினா ரன்றோ
நான்காவது "வணங்குதல் சிறப்பு வினையாவதல்லது பொது வினையாகாமையின் வணங்கி யென்பது' குற்றம் என்றனர். "மனமொழி மெய்களின் வணங்குவது மகிழ்ந்தே என்புழி ஒப்புமை பற்றிக் கூறியதே யாம்' எனத் தாமே கூறும் இவர் "மனத்தாற்றுணிவு தோன்ற நினைத்தலும் மொழியாற் பணிவு தோன்ற வாழ்த்தலுந் தலையாற் றணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி" என்று கூறிய ஆசிரியர் மேற் குற்றஞ் சொல்வதென்னை? சிருஷ்டியுந் திதியுஞ் சங்காரத்தில் ஒடுங்குவதாற் சங்காரத்திற்கு முதன்மை கூறுஞ் சுத்த சைவசித்தாந்த சாகரமாகிய யோகீஸ்வரர் நினைத்தலுந் துதித்தலுஞ் சேர்ந்து அந்தர்ப்பித்து நடைபெறும் வணக்கத்திற்கு முதன்மை கொடுப்பதே முறையாகும். வில்வணக்கந் தீது குறிப்பது போலச் சொல்வணக்கம் நன்மை
குறிக்குமே. ஆதியில் வளைதற் பொருளிற் பிறந்த வணக்கம்
இலக்கணவிளக்கப் பதிப்புரை 107
ஒப்புமையால் இப்போது மனம் வாக்குக் காயம் மூன்றற்குஞ் செல்லுமென்று கொள்க.
5. "எண் பெயர்முறை பிறப்பு" என்னுஞ் சூத்திரத்தில் "எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற் கூறாதது முறையன்று. எண்ணும் முறையும் போல்வன வற்றால் ஒரு பயனின்மையின், அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாறறிக. போலி யெழுத்தென ஒன்றில்லையென்பது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுட் காண்க." என்று மூன்று குற்றமேற்றி னர். இஃது இலக்கண விளக்கச் சூறாவளியன்று நன்னூற் கருப்பைப் படையோடு சார்தற்பாலதென்று விடுக்க.
சிவஞான முனிவர் தெரிவித்த குற்றங்களின் இலக்ஷணம் எத்தன்மைய என்பதற்கு மேலே காட்டியுள்ள ஐந்து உதாரண மும் போதுமாதலின் இவ்வளவில் நிறுத்துதும்.
இன்னோரன்ன குதர்க்கங்களான் இலக்கண விளக்கம் எட்டுணையுந் தாழ்வடையாது தமிழ் நாடெங்கும் பரவி வருகையிற், றிருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் நன்னூற்கோர் காண்டிகையுரை செய்து அச்சிற் பதிப்பித்தனர். பின்னர் அது மாணவர்கட்கு இலேசில் அகப்படற்பாலதாயி னமையின் அதனையே யாவரும் வாங்கிப் படிப்பாராயினர். அதனால் அதன் விருத்தி யுரையையும் யாழ்ப்பாணம் நல்லூர் பூரீலழறி ஆறுமுகநாவலரவர்கள் அச்சிட்டு யாவர் கைக்கும் எளிதில் அகப்படச் செய்தார்கள். இனி ஐந்திலக்கணமுங் செறிந்த இலக்கண விளக்கத்தையே தமிழ் மாணாக்கரனை வரும் ஆவலோடு வாங்கிப் படிப்பாரென்று நம்புகின்றேன்.
சூத்திரங்களைப் பாடம் பண்ணுவோர் ஒரு பொருளிற் பல சூத்திரத்தை நெட்டுருப் பண்ணுதல் வீண்காலக் கழி வென்று கொண்டு இலக்கணாசிரியர்கள் தத்தம் முதனூற் சூத்திரங்களையே தமக்கு வேண்டிய விகற்பத்தோடு
Page 57
108 - தாமோதரம்
எடுத்தாளுதல் பெருவழக்காதலின், இந்நூலாரும் பெரும் பாலுங்கற்போர்க்கு உபகாரமாகத் தமதுகாலத்தின் முன்னுள்ள சூத்திரங்களையே கூடியவரையும் வைத்துக் கொண்டனர்.
கலித் தொகை வீரசோழியங்களின் பதிப்புரைகளிற் றமிழைக் குறித்து யான் எழுதியவற்றிற் சில விஷயங்களுக்கு மாறாகக் கண்டனங்கள் எழுதினோர் இருவர் உளர். அக் கண்டனங்களை நிராகரிக்க வேண்டுமென்று எனது இஷ்டர் கள் பலர் கேட்டுக் கொண்டாலும் அவைகள் உலோகோப காரங் கருதியும் உண்மையை ஆராய்ந்தறிய வேண்டுமென்று அவாவியும் எழுந்த வாதம்போல எனக்குத் தோற்றாமையால் யான் அவற்றைக் குறித்து யாதும் எழுதிற்றிலேன்.
இவருள் ஒருவர் பூரீமத் சபாபதி நாவலருடைய ஞானாமிர்தபத்திரிகாசிரியர். இவர் தாமோதர பிள்ளையெனத் தன்பெயர் கைச்சாத்திட்டு அப்பத்திரிகையின் தமிழ் நடைக் கெல்லாந் தானே உத்தரவாதியென்று விக்கியாபனஞ் செய்த வர். பின்னர்க் கலியாண சுந்தரப் பெயர் கொண்டடெழுந்து, யான் தாமோதடும் பிள்ளையென என் பெயரெழுதுதல் தவ றென்றும் அது தாமோதரப்பிள்ளை என்றிருத்தல் வேண்டு மென்றுங் கிளம்புகின்றார். அப்படிப்பட்டவரோடு யாது வாதம் புரிவது? தன் பெயர் எழுதுதற்கே இன்னுங் கற்றுக் கொண்டிருக்கின்றார் போலும். இவரை எதிர்த்தல், "வென்றா லுந் தோற்றாலும் வசையேயன்றோ’? இக்காலத்துப் புலவர் பெருமானென யாவருங் கொண்டாடுந் திரிசிரபும் மீனாகூதி சுந்தரம் பிள்ளையவர்கள், இராமநாதபுரம் வித்து வான் பொன்னுசாமித் தேவரவர்கள், நவீன பவணந்தி’ எனச் சிறப்பு பெயர் விளங்கிய ஐயம் பிள்ளை உபாத்தியாயரவர்கள், திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளையவர்களென்று இன்னோ ரெல்லாந்தம்பெயர் வல்லொற்று மிகாமல் எழுது பவராயின் யான் தாமோதரம்பிள்ளை யென்று எழுதுதலும் விலக்காகுமன்றிக் குற்றமாகாதே. விதி விலக்கு இரண்டும்
இலக்கண விளக்கப் பதிப்புரை 109
உணர்ந்தாரன்றோ குற்றங்காட்டதற்கு உரியராவர்? அப்பசுவா மிகளையும் அப்பச் சுவாமிகளாக்குவாரென் றஞ்சுகின்றேன். யான் சாதித்த மெளனத்தை என் இஷ்டர்கள் மன்னிக்க.
மற்றவர் தஞ்சை ஜனமித்திரனிற் றோன்றித் தூஷணப் படை கொண்டு ஒரு சிறுச்சண்டை செய்ய முயன்றனர் போலும். இன்னோரன்னோரோடு சண்டை செய்ததற்கு யான் அருகனல்லேன். இவர் யான் வீரசோழியப் பதிப்புரையிற். றமிழ் என்னும் மொழி "எவ்வாறாயினும் ஆகுக'. ' அது "தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரேயாமெனக் கொள்க’ என்று கூறியதனால் மொழியின் உற்பவத்தைக் குறித்து எனக்கு அதிகவாதமில்லையென்றும் அது திரவிட மென்னும் வடமொழியினின்று வராத தோர் தென்மொழி யென்று சாதிப்பதே என் கருத்தென்றும் உணர்வாராக.
இன்னோர்போலாது மகாமகாபூரி கொ.பூரீநிவாச ராகவாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில் 'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முடர்ப7ல்கடுங் கே7வை பழமொழி" என்பவற்றுள், 'ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாகக், கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ?' என யான் கொண்ட *கொள்கைமாற, “ஐந்திணை என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்’ எனக் கூறி ஐந்திணையைம்பது ஐந் திணையெழுபது திணைமொழியைம்பது திணைமாலை நூற் றைம்பது இந்நான்கும் அவ்வைந் திணையைச் சேர்ந்தன் வென்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டு மென்றுஞ் சொற்றனர். கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப் பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான்கூறிய கூற்றுச் சரியன் றென்று ஒத்துக் கொள்வதுமன்றி ஆசாரியாரவர்கட்கு என்
* கலித்தொகை பதிப்புரை 17-ம் பக்கம் (இந்நூலில் 72ம் பக்கம்)
Page 58
10 தாமோதரம்
வந்தனமுங்கூறுகின்றேன். பிறர் சிலரொப்பக் கோவையைத் திருச்சிற்றம்பலக் கோவை என்று கொள்ளாது யான் சொல்லி யது போல ஆசாரக் கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடைத்தேயாம்.
முப்பால் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது "ஆலும் வேலும் பல்லுக்குறுதி - நாலு மிரண்டுஞ் சொல்லுக்குறுதி" என்னும் பிற்றைநாண் மொழியைச் சங்கத் தார் காலத்து முதுமொழிபோற் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்துகின்றேன். கோவை திருக்கோவையாராகாது ஆசாரக்கோவையாயினாற்போல முப்பாலும் நாயனார் தமிழ் வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டு மென்பது என் துணிவு மாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டு பேசிய பல மடாதிபதிகள் வித்துவான்கட்கும் இஃதொப்பென்றறிக.
இஃதெழுதிய பின்னர், பூரீதிரு. த.கனகசுந்தரம் பிள்ளை யவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், 'நாலடி நான்மணி" என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணையைம்பது ஐந்திணையெழுபது திணைமொழியைம் பது திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப் பட்டிருக்கின்றன வென்றும், முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒரு வாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கின்றதென்றுங், கைந்நிலை யென்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர்தனிநூலாகக் கண்டிருக்கிறதென்றும் எழுதியறிவித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்துகின்றது. இதனால் 'நானாற்ப தைந்
இலக்கண விளக்கப் பதிப்புரை 11
திணை' என்றதில் நாலென்னும் அடையை நாற்பது ஐந் திணை என்னும் இரண்டனோடும் ஒட்டி நானாற்பது நாலைந் திணை யென்று கோடல் வேண்டுமென்றும், ஐந்திணை, யான் கூறியவாறு, ஒரு நூலுமன்று. ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று ஐந்திணைப் பொருள் உணர்த்திய நான்கு நூல்களென்று கொள்ளத்தக்க தென்றுஞ் சொல்ல ஏதுவாகின் றது. அங்ங்னமாயின் முப்பாலென்றது ஒரே நூலாகவும், இந்நிலை சொல்லென்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவுங், கைந் நிலையென்றது வேறொரு தனி நூலாகவுங் கொள்ளல் தகும். இவ்வாறு கொள்ளிற் 'கைந்நிலை யோடாங்கீழ்க் கணக்கு" என்று ஈற்றடிப்பாடந் திரிதல் வேண்டும். எட்டுத் தொகை பதினெண்கீழ்க் கணக்குக்களுள் இன்னும் அச்சிற்றோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களும் மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஓர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவ்வாறு போய்த் திரும்பியபின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்.
மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஐந்தும் எவ்வாற்றானும் ஒதி உணர்தல் வேண்டுமென்னும் விருப்பம் மிக்குளேனாத லானும், அவர்களுட் பெரும்பான்மையோர் அதிக செல்வ ரல்லராதலானும், வித்தியாசாலைகளிற் றமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பிப்பின் இப்புத்தகம் அவர்களுக்கு அரைவிலையாகக் கொடுக்கப்படும்.
உலோகோபகாரமுந் தமிழ்ப்பரிபாலனமுங் கருதி இந் நூலை அச்சிடும்படி திரவிய சகாயஞ் செய்து அடியேனை
ஆதரித்த போடிநாயக்கனூர் ஜமீன்தார் பூரீ திருமலை போடய காமராச பாண்டியநாயக்கர் துரையவர்களுக்குப் பெருங்
Page 59
112 தாமோதரம்
கடமைப்பட்டுள்ளேன். துரையவர்கள் வாய்மொழி தவறாது நிறைவேறச் செய்ய உடன்பட்டிருக்கும் அவர் தேவியராதி யானோர்க்கு மிகவும் வந்தனங் கூறுகின்றேன்.
எடுத்த முயற்சியில் யான் தளர்வடையாவண்ணம் அடிக்கடி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்குந் தொண்ட மான் புதுக்கோட்டை இளவரசு ராஜா பூரீ பாலசுப்பிரமணிய ரகுநாத தொண்டமான் துரையவர்கள், பிரதிகாவலர் கெளவர அ.சேஷைய சாஸ்திரிகள், மைசூர் நியாயாதிபதி கெளரவ அ.இராமச்சந்திரரையரவர்கள் முதலிய கனவான்களுக்குந் தென்றேசப் பிரதிகள் தேடியழைப்பித்துத் தருவதில் அதிக பிரயாசை வகித்துக் கொள்ளும் மாஜி திருநெல்வேலி நீதிபதி மகா மகா பூரீதிரு. கனகசபை முதலியாரவர்கட்கும், இவ் வேலை விரைவில் நடைபெறும்படி வேண்டிய ஒத்தாசைகள் செய்யும் பூரீமத் ந.க.சதாசிவம்பிள்ளையவர்கள் மகா மகா பூரீ திரு.த.கனசுந்தரம்பிள்ளையவர்களென்றிவர்களுக்கும் நன்றி சொல்லுகின்றேன். சுவாமிகள் பட்டத்திற்கு எழுந்தருளி யிருக்கும் பூரீலபூரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் செய்து வருவதுபோலவும், மற்றைத் தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் மகா சந்நிதானங்கள் கை கொடுத்து வருவார்களாயின் இன்னும் பல பண்டைக் காலத் துக் தமிழ்நூல்களை எடுத்துப் பரிசோதித்துப் பிரசுரிப்பதில் அதிக ஊக்கம் உடையவனாவேன்.
சென்னைப் பாடசாலைக் கிரந்த சுதேச பாஷாவித்தியா பரிபாலன சபையார் எனக்குச் செய்துவருஞ் சகாயம் யான்
ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று. தொண்டமான் புதுக்கோட்டை விரோதி வருடம் ஐப்பசி மாதம் சி.வை.தா.
2.
கணபதி துணை
4. சூளாமணிப் பதிப்புரை
குருவணக்கம் இறைவனோ ருருவுகொண் டெழுந்தாங்கு வீற்று மறைசையா தீனத்து மன்னுட வதிந்த கரணை யம்பதிக் கைலாசநாத குரவன திருபதி மருமலர் சிரமிசை யிருத்திவெங் கருமுதல் களைவாம்.
தமிழாசிரிய வணக்கம்
தெள்ளுதமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைப்படிந்து
திரிபில் ஞானக் கொள்ளை கொண்டு நுகர்ந்தமுத்துக் குமாரகவி மேகமிதைக்
கொடிச்சுன் னாக வள்ளலென துள்ளமதி கொள்ளநறை விள்ளுதமிழ்
மணஞ்சற் றேறி வெள்ளறிவின் முட்ைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள் மலைவன் மாதோ! ܝ தமிழுஞ் சமஸ்கிருதமும் ஈஸ்வரன்பால் உதித்த இரட்டைப் பிள்ளைகளாம். சமஸ்கிருதத்திற்குப் பாணினியுந் தமிழிற்கு அகத்தியருஞ் செவிலித்தாய ராயினர். சமஸ்கிருதம் வடபாலில் நைமிசாரணியத்து ரிஷிகள் கோட்டத்திலும் தமிழ் தென்பாலில் மதுரைப் பாண்டியர் அவைக் களத்திலும் வளர்ந்து முறையே வடமொழி தென்மொழியெனும் நாமம் வழங்கப்பெற்றன.
Page 60
114 தாமோதரம்
இருமொழிக்குங் கண்ணுதலே முதற்குரவ ரியல்வாய்ப்ப TTATALA MATATTTTTTTTT TMMLAAAAALLAAAAALA இருமொழியுந்தழிஇயின7 ர7ன்றவரே யென்றாலிவ் இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ'
அகத்தியர்க்குத் தமிழிலக்கணம் அறிவுறுத்தியவர் சுப்பிரமணியக் கடவுளெனச் சைவர் கூறுவர்; சமணர் அதனை மறுத்து அவர்க்கு அவ்வறிவுறுத்தினார் அவலோகிதனென்பர். அகத்தியர் சைவோத்தமராதலின் அது பொருந்தாது. அஃதெவ் வாறாயினும் ஆகுக: தமிழணங்கிற்குப் பாலருத்தி வளர்த்தவர் அகத்திய ரென்பது அனைவருக்கும் உடம்பாடேயாம்.
வளர்ந்த இடம் மதுரையாயினுந் தமிழின் சனனபூமி கங்காதீரமே யென்பதுஉம், ஆரியர் வடமேற்றிசையினின்று வந்து காங்காதீரத்திற் குடியேறினபோது ஆண்டு இருந்த தமிழர் அவரோடு இணங்கியிராது பிரிந்து பற்பல இடங்களிற் சென்று சிதறுண்டு வதிந்தன ரென்பது உம், அவர்க்ளிற் றென்னாட்டிற்கு வந்தவர்களே ஈண்டுச் சேர சோழ பாண்டிய இராச்சியங்களை நாட்டினாரென்பதுஉம், மதுரைச் சங்கத்தில் வளர்ந்து விருத்தியடைந்து சிறப்புற்ற தமிழோடு அவ்வாறு சிறப்புறாதனவாய்க் காலவேற்றுமை சிறிதடைந்து வழங்குந் தென்மேற்கிற் புக்கு உறைந்த மலையாளரதும், மேற்கிற் புக்கு உறைந்த குடகரதும் உதகமண்டலத்துப் புக்கு உறைந்த தோட ரதும் வடக்கிற் புக்கு உறைந்த இமயமலைச்சாரலில் ஒருவகை வேடரதும் பாஷைகளுக்குள்ள ஒற்றுமையான் விளங்கும்.
சம்ஸ் கிருதம் உச்சாரண வன்மை யானும் வேதாகம திகாரத்தானும் மந்திரரோபதேசப் பயிற்சியானும் ஆடூஉலகூடிண முடையதாகத், தமிழ் தன் மிருதுத் தன்மையானுங் குயில் கிளி பூவைகள் தலைநாணும் ஒசையுங் கரும்பு தேன்பாகு பாலென றிவற்றை வென்று தேவாமிர்தத்தோடொத்த இனிமையும் உடைமை யானுந் தேவார திருவாசகாதிகளினாற் சாக்ஷாத்
சூளாமணிப் பதிப்புரை 15
ஈஸ்வரனையும் மயங்கச் செய்யும் வசீகரணத்தினானுஞ் சங்கீத சாகித்ய செய்யுள் விநோதங்களானும் மகடூஉ லக்ஷணம் மேற்பட்டது.
இரண்டும் ஒன்றோடொன்று கலவாது விந்தகிரிக்கும் வேங்கடமலைக்கும் இடையே கிடந்ததோர் பேராரணியத் தாற் காக்கப்பட்டு வளர்ந்தன. ஆயினும் மங்கைப் பருவமுற்ற கன்னித்தமிழ் பின்னர்த் தன் புராணேதிகாச காலத்திற் சமஸ்கிருத நாயகனை மாலை சூட்டி மணம் புரிந்தது. ஆதலால் இஞ்ஞான்றைத் தமிழில் வழக்கினுஞ் செய்யுளி னுஞ் சமஸ்கிருதம் எங்கணும் வியாபித்துக் கொண்டிருக்கி றது. பண்டைத் தமிழோ அக்கலப்புடையதன்று. இஃது இரண்டு பாஷையின் இலக்கண விதிகளாலுஞ் சங்கமரீஇய பழைய தனித்தமிழ் நூல்களானும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளிதிற் புலப்படும்.
நைமிசாரணிய ரிஷிஸ்வரர்கள் காலத்தின் பின்னர்ச் சமஸ்கிருதம் ஆரியப் பிராமணாசிரியர்களாற் பராமரிக்கப்பட்டது போல் மதுரைச் சங்கத்தார் காலத்தின் பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனஞ் செய்தவர்கள் சமணரென்பது உம், இக்காலத்திற் றமிழ் கற்போர் இலக்கிய இலக்கணப் பயிற்சிக்காக ஓதி வரும் நூல்களிற் பெரும்பான்மையன சமணர்காலத்திற் சமணசிரியர்களால் எழுதப்பட்டனவென்ப தூஉம் முன் வீரசோழியப் பதிப்புரையிற் கூறியிருக்கின்றேன். அவற்றுட் சீவகசிந்தாமணி முதலிய பெருங்காப்பியங் களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர் எழுதி வைத்த யசோதர காவியம் உதயண காவியம் நாக குமார காவியம் சூளாமணி நீலகேசியெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள. இன்னும் அநேக பிரபந்தங்கள் இதிகாசங்கள் புராணங் கள் சமயாசார தத்துவ சாஸ்திரங்கள் உள. அவைகள் காலாந் தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிய பிழைகளினாற் பேதப் பட்டு மிக விகார முற்றுக் கிடக்கின்றன.
Page 61
116 தாமோதரம்
"இற்றவர் தேவர7யப்ப் பிறப்ப ரிண்டுடல் (یکصی27tz/ a ۶۶Z2Z۶a2Oz - z7 4472y Zo/fزZAz 2ெற்றென விழ்ந்தெனச் சிதைந்து போகுமான் மற்றினி மக்கடம் வண்ணஞ் செப்பு/வாம்"
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளின் மூன்றாம் அடி ஒரோ வொரு பிரதியில் "அற்றென முற்றிலு மழிந்து போகுமால்" எனவும் "தெற்றென வீழ்தென வீந்து போகுமால்' எனவும், 'இற்றென விழிந்தென வீந்து போகுமால்' எனவுஞ் சில பிரதிகளில் முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் முற்றும் ரூபம் மாறி "அற்றமில் பறவைகளடையக் கொண்டு போய்ச் - சுற்றிய பாற்சுட றுளும்ப வீட்டிடும் - பொற்றிரள் வரை யொடு மின்னுப் போலவே' எனவும் பிறழ்ந்து கிடப்பின் பழஞ் சுவடிகளை ஒப்பிட்டுப் பரிசோதனை செய்பவர் களுக்கே இவைகளால் நேரிடும் வருத்தந் தெரியும்.
சூளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதிகளி லிருக்குங் குறியீட்டினாற் றெரியவருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக் கிரமம் இன்னதென்றும் விளங்கவிலை. நீலகேசி என் கைக்கு அகப்படவில்லை. ஆயிரத்து நானூற்றுச் சொச்சஞ் செய்யு ளுள்ள மேரு மந்தர புராணத்தில் முதற்பாகமும் யசோதர காவியமுங் காஞ்சிபுரத்தி லிருந்த பூரீ பாகுபவி நயினாரால் அச்சிடப்பட்டன. எஞ்சியன அச்சில் வரவில்லை. சுரவிரத காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினுந் தமிழிற் செய்யப்பட்டதாகத் தோற்றவில்லை.
யாப்பருங்கல விருத்தியிலும் அதனை முதனூலாகக் கொண்டு அமிதசாகரர் இயற்றிய காரிகைக்குக் குணசாகரர் சகாப்தம் 200 - 300 அளவில் எழுதிய விரித்துரையிலுஞ் சூளாமணியிலிருந்து அநேக செய்யுள்கள் இலக்கியமாக
சூளாமணிப் பதிப்புரை 117
எடுத்துக் காட்டப்பட்டிருந்தாலானுஞ், சூளாமணியின் காலஞ் சோழமண்டலத்திற் கார்வெட்டி நகரத்திலிருந்து அரசு புரிந்த விசயராசன் காலமென்பது நூற்சிறப்பிற் “திக்கெட்டும் புகழ் படைத்த திறல் விசயன்" என்றற் றொடக்கத்துச் செய்யுளான் அறியக் கிடத்தலாலும், கார்வெட்டி நகரின் காலம் உறந் தைக்கு முந்தியதாதலானும் இந்நூலின் வயது ஆயிரத்தைஞ் நூறு வருஷத்திற் குறையாது.
எவ்வெப் பாஷையினும் பெருங்காவியங்கள் தோற்றிய பின்னரும் ஆங்காங்குக் காலந்தோறுஞ் சிறுகாவியங்கள் உதித்து நடைபெறுதல் வழக்காயினும் சிலபல சிறுகாவியங் கள் செனித்த பின்னரே பெருங்காவியங்கள் பிறத்தல் இயல்பு. மேற்கூறிய சிறுகாவியங்களை ஒழித்தாற் சமணருக்குட் சிந்தா மணிக்கு முன்னர்த் தோற்றிய சிறுகாவியங்கள் வேறில்லை. இருந்து இறந்ததாகவுங் கேள்வியில்லை. அன்றியுங் குண சாகரர் காலத்திற் சிந்தாமணி முதலிய பெருங்காவியங்கள் இருந்தனவாகில் விசேஷமாக அவற்றினின்றே உதாரணங்கள் காட்டியிருப்பர். ஆதலால் இந்நூல் ஆருகதப் பெருங் காப்பியங்களுக்கு முந்தியதென்று கொள்ளல் தவறாகாது.
யகர ஆசெதுகைக்குக் "காய்மாண்ட" என்னுஞ் சிந்தா மணிச் செய்யுள் காட்டாக எடுத்து ஆளப்பட்டிருக்கின்ற தாலோவெனின், ஆண்டு உரையாசிரியர்கள் காட்டியது. *"வேய்காயு மென்பணைத் தோள்' என்னுஞ் சூளாமணிச் செய்யுளென்றும், அஃது ஆசிரியராற் சவலை விருத்தத்திற்கு ஓர் இலக்கிய மாதற்பொருட்டு வைக்கப்பட்டது உணராது, **கொகுடி யென்பதோர் மரப்பெயருளதென்று அறியார் கோங்கமென்று மாற்றினாற்போல், அச்செய்யுளில் இரண்
* சூளாமணி அரசியற் சருக்கம் 404ஆம் செய்யுள் ** சூளாமணி துதுவிடு சருக்கம் 4ஆம் செய்யுள்
Page 62
118 தாமோதரம்
டாம் "அடி சீர் குறைந்திருப்பது பிற்காலத்துச் சிதைவென்று கருதி, அதனை ஒழித்து, அதற்குப் பதிலாகக் "காய்மாண்ட" என்றற் றொடக்கத்துச் செய்யுளை இக்காலத்தில் யாரோ சொருகிவிட்டார்களென்றும், எழுபது எண்பது வருஷத்திற்கு முந்திய பழஞ் சுவடிகளில் "வேய்காயு மென்பணைத்தோள்’ என்னும் உதாரணமே இன்னுங் காணலா மென்றும், ரகர ழகர ஆசெதுகை மூன்றாமெழுத் தெதுகை முதலியவைகட்குச் சூளாமணி யிலக்கியங் கொண்ட உரையாசிரியர்கள் யகர
மொன்றற்கு மாத்திரஞ் சிந்தாமணியிற் கைவைத்தற்கோர் அவசியம் இருக்கமாட்டா தென்றுஞ், சிந்தாமணியிற் புதிதாகத் தேடி எடுத்த தென்பதற்கு அஃது அக்காப்பியத்தின் முதலாவது இலம்பகத்தின் முதலிலே கிடப்பதே ஒரு சான்றென்றுங் கூறிவிடுக்க நூல் முழுவதிலுஞ் சிந்தாமணி உதாரணம் வேறில்லையே.
நாலைந்து வருஷத்தின் முன் யான் பூீரீ கைலாச பரம் பரைத் திருவாவடுதுறை யாதீனத்துச் சற்குருநாதசுவாமிகள் பூரீலழறி சுப்பிரமணிய தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கப் போயி ருந்தபோது சுவாமிகள் சூளாமணி ஒர் அருமையான நூலென் றும் அஃது இப்பொழுது மரண தசை அடைந்திருப்பதால் அதனை அச்சிட்டுக் காப்பாற்றுதல் தக்க தென்றுந் தமிழ்ப் புராதன நூல்களை என்னால் இயன்ற மட்டுந் தேடிப் பரிசோதித்து வெளியிடும் முயற்சியிற் கையிட்டிருப்பதால் யானே அதனைச் செய்தல் வேண்டுமென்றுங், கட்டளையிட்டதுமின் றிச் சென்னை மகாலிங்கையர் பிரதியொன்று தமது ஆதீனத்தி லிருந்ததை எடுத்து என்வசம் அனுப்பியு மருளியது. அதனை வாங்கிப் வாசித்துப் பார்த்தபோது, காரிகையில் இலக்கிய மாகக் காட்டப்பட்டுள்ளனவுஞ் சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தனவாயினும் யாது நூலகத்திருந்து எடுக்கப்பட்டன வென இக்காலத்து அதனை ஒதுவார்க்குத் தெரியாதனவு மாகிய விருத்தங்கள் ஆங்காங்குக் கிடத்தல் கண்டு, அஃதோர்
* சிந்தாமணி நாமகளிலம்பகம் 2ஆம் செய்யுள்
சூளாமணிப் பதிப்புரை 119
அரிய இலக்கியமேயெனத் தேறிச் சுவாமிகள் கட்டளையைச் சிரமேற்றாங்கி, வேறு பிரதிகள் தேட ஆரம்பித்தனன். அவ்வவ் இடங்களில் இருக்கும் எனது இஷ்டர்களான உத்தி யோகஸ்தர்கள் வித்துவான்களுக்குப் பிரதிகள் விசாரித்துச் சம்பாதிக்க எழுதியதில் அப்பொழுது கருவூரிலிருந்த பண்டிதர் பூரீமத் வெங்கட்டராமையங்காரவர்கள் தம்மிடம் இருந்ததோர் பிரதியை அனுப்பினதுமன்றி மன்னார் குடியிற் சைன தெரு வில் ஒரு பிரதி இருப்பதாகவுந் தெரிவித்தார்கள். அந்தப் பிரதிக்காக ஆளனுப்பி, அது கும்பகோணத்துச் சாசனப்பதிவு சாலையில் உத்தியோகமாயிருந்த சைன மாணவர் ஒருவர் எடுத்துப் போயிருப்பதை அறிந்து அவரிடம் நேரிலே சென்று கேட்டதற்கு அவர் யான் அப்பொழுது கலித்தொகைப் பரிசோதனையிற் கையிட்டிருந்தமை பற்றித் தன்னிடம் இருக்கும் புத்தகம் எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது அனுப்பி வைப்பதாக வாக்களித்தனர். மற்ற இடங்களிலிருந்து இப்பெயருள்ளதோர் நூலிருப்பதாகவும் அங்குள்ளவர்களுக் குத் தெரியவில்லையென்று பதில் வந்தது.
இம் மூன்றுபிரதிகள் தாம் தமிழ் நாட்டிலுண்டடென்று எண்ணிக் கொண்டு, அதுகாறும் பிரசுரஞ் செய்த நூல்களால் எனக்கு நேரிட்ட செலவைக் குறித்து ஆலோசித்து, இந் நூலைச் சென்னைச் சர்வகலாசங்கத்தார் தமது பொறுப்பில் அச்சிடுவித்து நாலைந்து வருஷத்திற்குப் பிரவேச பரிகூைடிக்கு ஏற்படுத்தினால் உத்தமமாக இருக்குமென்று அச்சங்கத் தலைவர்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். அவர்கள் தங்கள் உத்தியோகத் தவணையை அதிக்கிரமித்து நாலைந்து வருஷத் திற்குப் பாட நியமனம் பண்ணுதல் கிரமத் தாழ்வென்று உத்தேசித்துப் போலுஞ் சென்னைச் சமஸ்கிருத திரவிடக்கிரந்த பரிபாலன சபையாரால் என் விண்ணப்பங் கவனிக்கப்படும் படி அச்சங்க லிகிதருக்கு என் விண்ணப்பத்தை அனுப்பினார் கள். அச்சபையார் நூலை அச்சிடுதற்கு இசைந்து என் சந்தேகங் களைப் பூரணமாகத் தெரிவிக்கும்படி எனக்கு எழுதினர்.
Page 63
120 தாமோதரம்
இதற்குள் இந்நூற் பிரகடனாதி செலவுகட்கு யான் காத் திரா வண்ணம் ஒருவழி ஏற்பட்டது. தமிழ் கற்கும் மாணாக்க ருக்குப் பஞ்சலகூrணப் பயிற்சி உண்டாதற் பொருட்டுத் திருவாரூர் வன்மீக நாத தேசிகர் குமாரர் வைத்தியநாத தேசிகர் இயற்றியருளிய இலக்கண விளக்கம் மூலமும் உரையும்" அச்சிட எண்ணி அதன் செலவிற்காக ஒரு விளம்பரஞ் செய்தி ருந்தேன். அப்பொழுது அச்செலவில் ஒரு பாதியைத் தாங்கள் பொறுத்துக் கொள்வதாக றங்கூன் டிப்டிக் கமிஷனராபீசில் மானோஜராக இருக்கும் எனது சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளைய தம்பிப்பிள்ளையும் அவர் இஷ்டர்கள் சிலருஞ் சேர்ந்து 500 ரூபா அனுப்பி வைத்தார்கள். பின்பு அந்நூற் பிரகடனச் செலவு முழுவதுந் தாமே தருவதாகப் போடி நாயக்க னுார் ஜமின்தார் மகாமகாபூரி திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர் துரை தெரிவித்தனர். அதனை அவர் களுக்கு அறிவித்து அவர்கள் அனுப்பிய பணத்தை வேறொரு பூர்வக்கிரந்த பிரகடனத்திற்காகச் செலவு செய்யலாமா எனக் கேட்பித்தேன். அவர்கள் அனைவரும் அதற்குச் சம்மதி கொடுத்தார்கள்.
இஃதிவ்வாறிருக்க என் கலித்தொகைப் பதிப்பு வெளிப் பட்டது. அது சென்னைச் சர்வகலா சங்கப் பரிசுைஷகளுக்கு உபயோக மாதற் பொருட்டு, அதன் பதிப்புரையில் யான் தெரிவித்தவாறு அதிற் பதினோரிடத்திற்குஃறொடரன்மொழி வந்தனவற்றை மாறறியிருந்தனன். பற்பல சிரேஷ்ட கனவான் கள் அச்செய்கையை மிகவுங் கண்டித்து எனக்குக் கடிதம் எழு தினார்கள். அதனால் அஃதன்ன இடக்கர் மொழிகளைச் சிதைத்து அச்சிடுதல் தர்மமன்றென்று தெளிந்தும், டிெ சபை யார் அவற்றின் செறிவோடு நூல்களைப் பிரசரியாரெனத் துணிந்தும், அவ்வாறு பிரசரித்தல் எனக்குக் கட்டளையிட்ட ருளிய சுவாமிகளின் அனுமதிக்கு மாறாகுமென்று நினைத்துஞ் செலவிற்கு வேறு வழி ஏற்பட்டதைப் புகழ்ந்தும் யானே
சூளாமணிப் பதிப்புரை 12
எவ்வாற்றானும் இந்நூலை அச்சிடத் தீர்மானித்தேன். இறங்கூன் பணம் அதற்கு உபயோகமாயினது.
இப்பால் முன் தஞ்சாவூர்க் கீழ்க்கோர்ட் நீதிபதியாயிருந்த மகா மகா பூரீ திரு. கனகசபை முதலியாரவர்கள் என் முயற்சிக்கு எஞ்ஞான்றுந் தமது கஷ்டத்தைப் பாராமற் கையெழுத் துப் பிரதிகள் தேடி உபகரிப்பவர், அப்பொழுதும் பற்பல இடங்களினுந் தமதிஷ்டர்கள் மூலஞ் சூளாமணிப் பிரதிகள் தேடுவாராய் வேதாரணியம் பூரீ அருமைப் பெருமாள் முதலியார் மகன் அநந்த விஜயமுதலியார் பிரதியொன்றும் பெருமண்டூரிலுள்ள ஒரு சைவவித்துவானுடைய பிரதியொன் றுமாக இரண்டு பிரதி தமக்கு அகப்பட்டன அனுப்பிவைத் தனர். அதன் மேல் விழுப்புரம் டிஸ்ற்றிக்ட் முன்சிப் மகாமகா பூரீ இராமச்சந்திரையரவர்கள் வழியாக வீடுர்ச் சைன வித்துவ சிரோமணி பூரீமான் அப்பாசாமி சாஸ்திரிகள் பிரதியொன்று அகப்பட்டது. மன்னார்குடிப் பிரதியை வேண்டியபோது தருவோமென்று வாக்குப்பண்ணிய மாணவகன் இதற்குள் இறந்துவிட, அப்பிரதி யாவர் கையிற் சிக்குண்டதென்று எவ்வளவு தூரம் விசாரித்துந் தெரியவரவில்லை. கிடைத்த பிரதி கள் ஐந்தில் வேதாரணியப் பிரதியுங் கருவூர்ப் பிரதியும் வீடூர்ப் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டனவாதலாற் பரிசோதனைக்குப் பயன்படத்தக்க சுய பிரதிகளாகாமற் போய்விட எஞ்சிய மூன்று பிரதிகளையுங் கொண்டே அச்சிட ஆரம்பித்தேன்.
நூறுபக்கம் அளவு அச்சான பின்பு, தென்றேசப் பிரதி யொன்று, எனது நண்பரும் பண்டைத் தமிழ்நூல் ஆராய்ச்சியே தமக்குப் பொழுதுபோக்கும் வினோதமாக உடையவருஞ் சென்னைத் தபாலாபிசுகளின் மேல் விசாரணைத் தலைவரு மாகிய மகாமகாழி மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளையவர் களுடையது, அவரிடந் திரிசிராப்பள்ளியிற் றமிழ் முனிவி ஒருவர் வாங்கி வைத்திருந்து இறந்துபோகக், கும்பகோணத்
Page 64
122 தாமோதரம்
தில் ஒரு ஹெட் கன்ஸ்டேபில் கையிற் சேர்ந்திருந்ததை
அறிந்து அதனை அவ்விடத்திற் போலீஸ் மேல் விசாரணை யிலிருக்கும் மகா மகா பூரீகிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் சகா யத்தாற் றருவித்தேன். அதற்கும் முதன் மூன்று பிரதிகளுக்கும்
அநேக வேறுபாடுகள் இருந்தமையால் இன்னுஞ் சில பிரதி
எவ்விடத்தாயின் இருக்குமாயின் அவற்றையுந் தேடி ஒத்துப்
பார்த்துக் கொண்டே அச்சிடுதல் அத்தியாவசியக மென்று
உட்கொண்டு, அங்கங்கே சமணர்கள் குடியிருக்கும் இடங்
களுக்கெல்லாம் நேரிலே ஒரு சுற்றுப் பிரயாணம் பண்ணிக்
காஞ்சிபுரத்தில் மாத்திரம் ஒரு மிகப்பழம் பிரதி கண்டு அதனை வாங்கி வந்தேன்; இவ்விரண்டோடும் ஒத்துப் பார்த்ததில்
முன்பு அச்சிட்ட அவ்வளவும் மறுபடி திருத்தி அச்சிடவேண்டிய
தாயிற்று. வேறு பிரதி எங்கும் அகப்படவில்லை. கும்ப
கோணத்திற்குப் போயிருந்ததாக யான் முன்னர்ச் சொன்ன மன்னார்குடிப் பிரதி வீடுர்ப் பிரதியையே பார்த்தெழுதப்
பட்டதென்று அதன் சொந்தக்காரர் மன்னார்குடியிற் சொன் மையால் அதனை யான் பின்பு இச்சித்துத் தேடவில்லை.
காலாந் தரத்தில் ஏடெழுதுவோராற் பெருகிப் பெருகி வந்த பிழைகளினாற் காவியங்கள் மிகவும் பேதப்பட்டு விகாரம் அடைந்திருக்கின்றமை முன்னமே சொன்னேன். இம் மாறுபாடுகளைக் குறித்து இந்நூல் பதிப்பில் அடியேனுக்கோர் துணிவு புதிதாகப் பிறந்தது. இது காறும் அச்சிட்ட பழைய நூல்களில் ஒரு பிரதியின் ஆதாரமாவது இல்லாது பாட பேதத்தைத் திருத்துதல் ஒழிந்த யான், இப்பொழுது பிரதிகள் அனைத்தும் பிழையென்றும் பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய்மொழியாய் இருக்கமாட்டாதென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியரி னின்றும் வேறுபட்ட பிழைபாடென்றும் நிச்சயிக்க ஏதும் உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்தையாவது மொழி யையாவது சந்தர்ப்பத்திற்கும் பொருளுக்கும் இயையுமாறு
சூளாமணிப் பதிப்புரை 123
திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதுமன்றிச் சில பாடங்கள் ஒரு பயனுந் தராமலுஞ் சில முன் பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும் நிற்குமாதலிற்றிருத்தம் அத்தியாவசியக மாயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்பென்று உணர்ந்து இங்ங்னந் தெரிவிக்கலாயினேன்.
பிரகடனாசிரியர்கள் நூலிலுள்ள தப்பு ஒப்பிற்கு உத்தர வாதிகளல்லரே! ஆசிரியர் பாடம் இஃதென்று நிச்சயித்து உண ராவழி இருந்த வண்ணம் நூலை உலகிற்கு ஒப்பிக்கிறது தானே! வீரசோழியம் தொல்காப்பியம் முதலியவைகளில் அப்படி ஒப்பிக்கவில்லையா என்பாருளராயின், அன்னோர் மேல் வரும் நியாயங்களைச் சீர்தூக்கி என் செய்கையை மன்னித்தருள்வாராக.
முதலாவது அந்நூல்களிற் பிரதிகளில் இருந்தபடி ஒப்பித்த வழுக்கள் மூல பாடத்தின் அர்த்தத்திலாவது உள்ளன அல்ல. மூலத்திலும் அர்த்தத்திலும் வரும் வழுக்கள் ஒன்றாலொன்றன் பூர்வ சொரூபம் அறிந்து திருத்தப்படற் பாலனவாம். உரையாசிரியர்கள் பிற நூல்களிலிருந்து எடுத்துக் காட்டிய உதாரணச் செய்யுளிலாவது மேற்கோள்களிலாவது புகுந்த வழுக்களே பிரதிகளிற் கண்டபடி ஒப்பிக்கப்பட்டன. அவைகள் அவ்வவ் நூலாராய்ச்சியாற் பிறர் அவ்வப்போது திருத்திக் கொள்ளக் கூடியன. இவை அவ்வாறு பின் எக்காலத்துந் திருத்தப்படா.
இரண்டாவது, உதாரணங்கள் மேற்கோள்களிற் புகுந் திருக்கும் வழுக்கள்தாமும் ஆங்காங்கு எடுத்தோதிய பொருட் டுனிபிற்கு எம்மாத்திரம் வேண்டியதோ அதனுட் புகுந்த வழுவல்ல. எஞ்சிய பாகங்களில் ஏதாவது வழுக்கிடத்தலாற் கற்போர் பெறக் கருதிய பயன்எவ்வாற்றானுஞ் சிதைவு படாது. உதாரணமாகச் "செய்யுளுளும் முந்தாகலு முரித்தே"
Page 65
124 தாமோதரம்
என்னும் இலக்கணமும் அதனுரையும் வழுப்படாமல் ஆராய்ந்து பதித்திருக்க, அதற்கு இலக்கியமாகக் காட்டிய செய்யுள்கள் - “தெண்டிரை மிசைப் பாயுந்து" "நீர்க்கோழி கூப் பெயர்க்குந்து’ என்று பிரிந்தாலென் "தெண்டிரை’ என்றிருப் பினென்! 'தண்டிரை' என்றிருப்பினென் தெண்டிரையோ தண்டிரையோ என்பது "நீர்’ எதனைச் சேர்தல் சரியென்பதும் அவ்விலக்கியங்கள் இருந்து எடுக்கப்பட்ட நூல்களாற் றிருந்த உணர்தற்பாலவாயினும் “பாயுந்து" "பெயர்க்குந்து' என வரும் விதியினை உணரும் உணர்ச்சி அவ்வழுவாற் சிதைவு படாதன்றோ? நீர்க்கோழிக்குக் கூவுதற் றொழிலில்லை யாதலா னும் பாயுந்து என்னும் எச்சத்திற்கு முடியும் பெயர் வேண்டு மாதலானுஞ் சிறிதாலோசனையால் "நீர்' முன்வாக்கியத் தோடு சேர்தற்பாலதென்றும் புத்தி நுட்பக் குறைவால் ஏட்டுத் தொடரெழுத்தைப் பிரிக்க அறியாமல் வழுப்பட்டதென்றுஞ் சொல்வீராயின், அற்றன்று; கூவுதற்கு அழைத்தற் பொருளும் உண்டென்றும் நீர்க்கோழி தன் துணையைத் தன்னோடு செல் வான் அழைத்துப் பெயர்த்தல் இயல்பென்றும், பெயருந்து என்னாது பெயர்க்குந்து என்றதாற் றன் பெயர்ச்சியைக் கருதாது துணையைப் பெயர்தலைக் கொள்ளலுந் தகுமென் றும் "பாயுந்துநீர்" என முடியுஞ் சொல் சேர்ந்ததாயின் பெயர்க் குந்து யாண்டையோ முடிந்ததென்றும் விடுத்தொழிக.
இன்ன நூலிலிருந்து உதாரணம் எடுக்கப்பட்டதென்று அறிந்து அந்நூலையுந் தேடிப்பார்த்தாலன்றி யதார்த்தரூபம் அறிதல் அசாத்தியமென்க. அவ்வாறு எட்டுத்தொகை பத்துப் பாடலென்றின்னோரன்ன சங்கத்தார் காலத்து நூல்களைத் தேடிப்பார்த்து அவற்றால் அறியத் தக்கன பின்னர்த் திருத்தற் பொருட்டாகவே தொல்காப்பியப் பொருளதிகாரத்து உதாரணச் செய்யுள்களிற் சில பிழைகளைப் பிழையென்று நிச்சயமாயுணர்ந்தும் பிரதிகளிற் கிடந்தபடி விட்டிருக்கின் றேன். நற்றிணையாகிய தொகைகளிலும் பத்துப் பாட்டிலும் பின்னராய்ச்சியால் யான் இப்பொழுது செய்து வைத்திருக்கிற
சூளாமணிப் பதிப்புரை 125
திருத்தங்களுள் அநேகம் அப்பொழுது யான் இவை இன்ன வாறு இருத்தல் வேண்டுமென்று உத்தேசித்தபடியே இருக் கின்றன. ஆயினும் பூருவ சொரூபம் இதுதானென்ற நிச்சய மின்மையானும், ஒருகாலமில்லாதிருந்தால் வேறொரு காலத் தில் எப்படியும் பூருவசொரூபந் தேடி அறிதற்பாலவாயினமை யானும் அவற்றை என் உத்தேசத்தின் பிரகாரந் திருத்தத் துணிந் திலேன்.
மூன்றாவது, உரை எழுதப்பட்டிராத தோர் இலக்கிய நூலின் மூலபபாடத்திற் சாஸ்திரமுடிபுங் கதைப் பொருத்தமே அயனூலாராய்ச்சி கொண்டு துணிதற்பாலன. வாக்கிய முடிபு அங்ங்னமன்று. அது பலபல பிரதிரூபத்தின் சகாயத்தால் மாத் திரமே அறிதற் பாலது. நாடெங்குந் தேடியும் வேண்டிய அளவுக்குப் பிரதிகள் அகப்படாமல் வழுக்கள் நிறைந்து மாரணதசையும் அடைந்ததோர் உரையில்லா நூலை ஒன்றிற் பிரசுரஞ் செய்யாமல் இறந்துபோக விட்டுவிட வேண்டும். அன்றேற் கற்போர்க்குப் பயன்படத்திருத்தியே அச்சிடல் வேண்டும். இவ்விரண்டில் எது தக்கது? எலும் பழுகிய நாசியைச் சத்திரம் பண்ணிப் பொன்னாசி பொருத்தினாற் போலப் பூர்வ சொரூபம் இறந்து பிறந்த இடத்தில் அஃதறிய வேறு வழியின்றேற் புதுத் திருத்தஞ் செய்வதை வழுவமைதி யாக்கி மன்னிக்க.
நான்காவது, ஒரு திருத்தமுஞ் செய்யாது பழம்பிரதிகளின் படி ஒப்பிப்பதால் வரும்பயன் யாது? வீரசோழியத்திற் சில சில இடங்களிள் பிழைப்பட்டனவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தேனன்றோ? யாவர் அவற்றுக்குப் பூர்வ சொரூபங் கொடுத்தார்! தேடமுயன்றவராயினும் உளரா! என்பு நொறுங் கிய காலை வெட்டியெறிந்து பொய்க்கால் வைத்தாற்போல அவற்றிற்குப் புத்துதாரணங்கள் செய்து சேர்த்திருப்பேனாயின் கற்போர்க்குச் சிறிதாவது பயன்படத்தக்கதாயிருக்குமே!
Page 66
26 தாமோதரம்
ஐந்தாவது சிற்சில இடங்களிற் புதுத் திருத்தமான பின் இந்நூலைத் தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணியெனல் பொய்படுமன்றோவெனின், புதுமொழி சில சேர்த்தமையை உலகிற்குத் தெரிவியாது சொருகிவைத்த யாவும் ஆசிரியர் வாக்கென்று நடைபெற விடுவதே தவறாவது. நன்னூற்குச் சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிய விருத்தி யுரையென்று இக்காலத்தார் கொள்வதெது! அன்னோருரை யில் அங்குமிங்குஞ் சிவஞான முனிவராற்றிருத்தப்பட்ட புத்தகம் புத்துரையன்றோ! முனிவர்திருத்தியமை உணர்ந்தோ ராமல் அவராற் றிருத்தப்பட்ட விருத்தியுரையென்று அச்சுப் பிரதிகளின் நாமதேய பக்கத்திற் போட்டிருப்பது யான் அறிந்துளேன். ஊரில் வழங்குங் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து அதிற் படித்தோரை இஃதியாவருரை யென்று கேட்ட றிக. 1842ஆம் வருடம் யான் நன்னூல் விருத்தியுரை எழுதிப் படித்த போது முனிவரால் அது திருத்தப்பட்டதென்று கேள் விப்பட்டதுமில்லை. பூரீலழறி நாவலரவர்கள் அச்சிட்டபின் எல்லாருஞ் சொல்லுவர். இப்பொழுதும் அதிற் புலவர் எழுதியதிது முனிவரர் திருத்தியதிது என்று பகுத்தறியக் கிடக் கின்றதா?
'நன்னூலுட்கருத்துலகோ நறியவுரை செய்கவென நரேந்திர சிங்கத், தென்னுற்று மலைமருதப்பன் புகலப், பொருள் விளங்கச்
செய்தான் பாரி வெந்நூற்கு மெழுத்தொடுசொற் பொருளறி சங் கரநமச்
சிவாயனென்னும், பன்னூற் செந்தமிழ்ப்பு/லவன் சைவசிகாமணி :
நெல்லைப் பதியினானே'
என்பதுதான் வெளி. வைத்தியநாத தேசிகர் செய்த இலக்கண விளக்கத்து அணியியலிற் சில சூத்திரங்கள் அவர் மகன் சதாசிவ தேசிகராற் சேர்க்கப்பட்டனவன்றோ அதில் மைந்தனார் தந்தன இவையென யாவர் பிரித்துக் காட்ட வல்லார்? ஆதலால் உலகறியச் சொல்லித் திருத்தல்
சூளாமணிப் பதிப்புரை 127
தவறிலதாக, முழுத் தோட்டமும் அகத்தி நாட்டினும், வெற்றிலைத் தோட்டம் வெற்றிலைத் தோட்டமேயா மென்க.
ஆறாவது சுவடிகளிற் பிழைப்பட்டிருக்கும் ரூபம் ஆசிரி யரதன்று என்பது மலையிலக்கு. பின்னை எப்படியும் யான் பிரசுரஞ் செய்யத்தக்கது ஆசிரியர் செய்த ரூபமல்லாதபோது பிழைப்பட்டு ஒரு பொருளுந் தராமலாவது. விரோதப் பொருள் பயந்தாவது நிற்கும் ரூபத்தில் அவ்விரோதமில்லாத படிக்கு யான் வைத்த ரூபந் தாழ்வுடையதன்று.
ஏழாவது, ஆருகத நூலை இவ்வாறு திருத்துவது சமணர்க்கு வெறுப்பாயிராதோ வெனின், திருத்திய இடம் அனைத்திலுஞ் சுவடிகளின் பாடமும் அவற்றின் குற்றமும் அவைகளில் யான் செய்த திருத்தமுஞ் சைன வித்துவான்களிற் சிறந்தோர் பலர்க்குக் காண்பித்து அன்னோர் முழுச்சம் மதி யுடனேயே பதிப்பித்தேனென்றறிக. இருந்தபடியே பதிப்பிப் பது நூலாசிரியரின் மகத்துவத்தை ஒரோவொரு இடத்தில் இழிவு பெறச் செய்யத் தக்கதாதலின் அதுவே அவர்க்கு வெறுப்பாயிருக்கு மென்பது அவர் மேரு மந்தர புராணப் பதிப்பிற் காட்டும் அரோசிகத்தாற் றெளியலாம். மேலும் என் திருத்தங்களை அவர்கள் தங்கள் பிரதிகளிலுங் குறித்துக் கொண்டதே அவர்கள் சம்மதிக்குச் சான்றாகும்.
எட்டாவது, அப்படியாயின் இன்னாராற் றிருத்தப்பட்ட தென்று நாமதேய முகத்திற் போடுவதுதானேயெனில் இலை மறைகாய் போல் எங்கேயோ ஒவ்வொரு மாறுபாடு செய்த தால் நூல் என்னாற் றிருத்தப்பட்டதாகாது. அல்லாமலும் ஆக்கியோன் மொழியினை யான் திருத்தினவனல்லன். பின் புக்க வழுவையன்றோ யான் திருத்தியது? மேலும் எனது திருத்தமே பூர்வ சொரூபமாக இருப்பினும் இருக்கலாமே. நூலைத் திருத்தியவனென்ற மேன்மைக்கு யான் அருகனல் லேன். இக்காரணங்களால் உலகமென்னை மன்னிக்குமென்று முற்றிலும் நம்புகிறேன். என் திருத்தங்கள் எப்படிப்பட்டன
Page 67
128 தாமோதரம்
வென்று யாவரொருவர் அறிய விரும்புவராயின் அவர்க்கு அதனைத் தெரிவித்தல் என் கடன். தெரிந்து எடாது கைக்கு எதிர்ப்பட்டபடியே அவற்றிற் சிலவற்றைக் குறிப்புப்பண்ணி ஒர் அநுபந்தமாகச் சேர்த்திருக்கின்றனன். ஆண்டுக் கண்டு கொள்க.
மேற்கண்ட பிரதிகளை வைத்துக் கொண்டு பரிசோ தனை பண்ணுகையில் ஆருகத சமயக் கோட்பாடுகள், தத்துவ பேதங்கள், புராணக் கதைகள் சிறப்புப் பெயர்களிற் சில சமுசயங்கள் நேரிட்டன. அதற்காக வீடூர் வித்துவான் பூரீமான் அப்பாசாமி சாஸ்திரிகளை வரவழைத்து மூன்று மாதக் காலம் அவர்களைக் கூட வைத்திருந்து எனக்குள்ள சமுசயங்களைத் தீர்த்துக் கொண்டதுமின்றி அவர்கள் போன பின்பு நிகழ்ந்தன சிலவற்றை அவ்வப்போது அவர்களுக்குக் கடிதமெழுதித் தெரிந்து கொண்டேன். இன்னுஞ் சந்தேகத் தீராத இடங்களும் இரண்டொன்று உண்டு. அவர்கள் இத்தனை தூரம் வந்திருந்து எனக்குச் செய்த உதவியை எப்பொழுதும் மறவேன்.
இந்நூலுணர்ச்சிக்கு உபயோகமான சமண கிரந்தங்களை எனக்குக் காண்பித்ததுமன்றித் தமது கையிலிருக்கும் ஏடுகளில் எப்பொழுதேனும் யாதாயினும் வேண்டுமாயின் அதனை உடனே அனுப்பி வைப்பதாகக் தயை புரிந்த மன்னார்குடி பூgரீமு.அப்பாண்ட முதலியாருக்குஞ்சித்தாம்பூர் முதலிய இடங் களிலுள்ள சமணர் வசம் இருக்கும் நூல்கள் வேண்டிய காலங் களில் வாங்கி அனுப்புவதாக வாக்களித்த காஞ்சிபுரம் பச்சை யப்ப பாடசாலைத் தமிழ் பண்டிதர் மகாமகாபூரீ வ.கணபதிப் பிள்ளையவர்களுக்கும் என் வந்தனஞ் சொல்லுகின்றேன்.
இந்நூல் அருகத மகா புராணத்திற் கூறிய நவவாசுதேவப் பிரதிவாசுதேவர்களிற் திப்பிரஸ்ட வாசுதேவனதும் அவ்வாசு தேவனுக்குப் பகையாய் அவரித்த அயக்கிரீவப் பிரதிவாசு தேவனுதுஞ் சரித்திரத்தை விரித்துக் கூறிய, பெரும்பாலுஞ் சமண காவியங்கள் துறவும் முத்தியும் உணர்த்தி முடியுமாறு
சூளாமணிப் பதிப்புரை 129
போல், இருபத்து நாலு தீர்த்தங்கரருட் சிரேயசுவாமி தீர்த்த காலத்திற் சுரமை நாட்டின்கண் போதனமா நகரத்திலிருந்து அரசு புரிந்த பயாபதி அரசன் தன் குமாரனான அவ்வாசுதேவ னைப் பூமியாள வைத்துத் துறந்து தன் தேவிமாரோடு முக்தி பெற்ற கதையை எடுத்துச் சொல்லும்.
இந்நூற் சீயவதையும் வித்தியாதர விவாகமுஞ் சேடியர் சங்கராமுங் கிருஷ்ண சரித்திரத்திற் சேர்ந்தனவரல்லவாயினுந் திவிட்டராசன் குணாதிசயங்கள் திருமாலின் அவதாரமாகிய கண்ண பெருமானதுந், திவிட்டனுக்கு மூத்தோனாகிய விசயன்குணாதிசயங்கள் கண்ணன் அண்ணன் பலபத்திரனதும் இலகூடிணங்களோடு ஒருவாறு ஒத்திருக்கும்.
சீவக சிந்தாமணிச்சரித்திரத்தைச் சிந்தாமணிப் பதிப்பின் முதலிற் பூரீமத் சாமிநாதையரவர்கள் சுருக்கிக் காட்டியது போல, இந்நூலை எளிதிற் படித்து உணர்வதற்கு உபயோக மாக இதன் முதலிலுந் திவிட்டன் கதையைப் பொழிப்பாகக் காட்டும்படி எனது இஷ்டர் சிலர் கேட்டுக் கொண்டனர். இக் கதையை வனச ரூபமாக யாழ்ப்பாணம் வித்துவான் தாவடி பூg அம்பிகைபாக உபாத்தியாயர் எழுதி வருவதால் அதன் சாரத்தை இவ்விடம் வேறாகப் பதித்தல் அவசியமன்றென நிறுத்தினன். அன்றியும் இக்காலத்து மிகச் சிறந்த வித்துவான் ஒருவர், இந்நூற்கு உரையெழுதி அச்சிடுவிக்கக் கருதியிருப்ப தாகவுந் தெரிய வருகின்றது.
இக்கதையில் வரும் அரசராதியோர் பெயர் ஊர் சம்பந்தம் முதலிய அறிதல் கதைத் தொடர்ச்சியை லேசில் உணர்வதற்கு உபயோகமாகுதலின் அவற்றிற்கு ஒர் அகராதி சேர்த்திருக்கின்றேன்.
பிரதிகள் தேடிப் பரிசோதித்து இந்நூலைப் பதிப்பித்தற்கு உபயோகமான திரவியம் றங்கூனிலிருக்கும் என் சகோதரன் செல்வச் சிரஞ்சீவி இளைய தம்பிப்பிள்ளையும் அவரது இஷ் டர் சிலருஞ் சேர்ந்து அனுப்பியதென்று முன் தெரிவித்தேன்.
Page 68
130 தாமோதரம்
அவர்களைப் போல்வார் பிறர்க்கும் இப்படிப்பட்ட விஷயத் தில் ஊக்கம் உண்டாதற்பொருட்டு அன்னோர் பெயர் விவ ரத்தை இவ்விடந் தருகின்றேன்:
பணம் அனுப்பினோர் பெயர்வழி
@・ மகாமகாழி தி.எம். குட்டியாபிள்ளையவர்கள்,
றங்கூன் கமிசேரியட்றொட்டிச்சாலை மானேஜர் 100.00 மகாமகாழி ஏ. சரவணமுதலியாரவர்கள்,
றங்கூன், கன்டிறோலர் ஆபீசு, சுப்பரின்டென்டன்ட் 50.00 மகாமகாரு வி. நமசிவாயபிள்ளையவர்கள்.
எம்.ஏவிஎல்: கல்கத்தா ஹைகோர்ட் வக்கீல் றங்கூன்றிக்கார்டர்ஸ் கோர்ட்
அட்வக்கேட் 50.00 மகாமகாபூரி பா. குப்புசாமி முதலியாரவர்கள்,
றங்கூன் கமிசேரியட் மானேஜர் 50.00 மகாமகாருரீதி.வி.கிருஷ்ணசாமி நாயுடுகாரு
றங்கூன் கண்டிறாக்ற்றர் 50.00
மகாமகாழி வேதாசல முதலியாரவர்கள்,
றங்கூன் பர்மா ஸ்டேட் றேல்வே பொக்கிஷதாரர் 50.00
மகாமகாழி தி.எம். பொன்னுசாமிப்பிள்ளை
அவர்கள், றங்கூன் பேப்பர் கறென்ஸி ஆபீசு, பொக்கிஷதாரர் 50.00
மகாமகாரு சி.வை. இளையதம்பிப்பிள்ளையவர்கள்
றங்கூன் டிப்டி கம்மிஷனர் ஆபீசு ஹெட் அக்கவுண்டன்ட் 100.00
SS LSS LSS S LSSLS S S SSSS LSLSLS LS LS LSS LSS S SS SS SS
SS SL S LSL LSS LSL LSS S LSS SL S SLS LS LS
சூளாமணிப் பதிப்புரை 13
இவர்கள் செய்த இவ்வுபகாரத்தை யான் ஒருபோதும் மற வேன். இவர்கள் முன் மாதிரியைப் பின்பற்றி இன்னும் அநே கர் தத்தமக்கு ஏற்ற வித்துவான்களைக் கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களைவெளிப்படுத்தி நிலை நிறுத்தக் கலை மகள் கடாட்சிப்பாளாக.
தொண்டமான் புதுக்கோட்டை }
விரோதிவருடம், கார்த்திகை மாதம் சி.வை.தா.
(இரண்டாவது காவியம், தோலாமொழித்தேவர் இயற்றியருளிய சூளாமணி. இஃது யாழ்ப்பாணம் சி.வை.தா மோதரம்பிள்ளையால் GR) பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, இறங்கூனிலிருக்கும் சில தமிழ்ப் பிரபுக்களது காருண்ய திரவியோபகார சகாயத்தினால், சென்னபட்டணம் வித்தியாதுபாலன யந்திரசாலையில் பதிக்கப்பட்டது.
விரோதி வருடம் கார்த்திகை மாதம் 1889. (இதன் விலை ரூபா. 1-50)
Page 69
5.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பதிப்புரை
பேரருட்கயி லாயநாதப்பெருங் குரவன் சீரடித்துணை சிரத்தினிற் திருத்திமுத்துக்கு மார நற்கவி ராசனை வழுத்திமா லயனுந் தேரகிற்றிலா நடேசர்தாள் சிந்தனை செய்வாம்.
சங்கம் மரீஇய இலக்கியங்களுக் கெல்லாம் இலக்கண மாயுள்ளது தொல்காப்பியம். இதன் உணர்ச்சியில்லார் அவ்விலக்கியங்களின் பொருட் டுறைகளை நுண்மையாக உணரப் பெறார்.ஆதலாற்றமிழாராய்ச்சியிற் புகுவோர்க்கு இந்நூல் இன்றியமையாப் பெருஞ் சிறப்பிற்றாயது.இஃது அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருட்டலைமை பெற்றவருந் திரண தூமாக்கினி யென்னும் இயற் பெயரினை உடையவரு மாகிய தொல்காப்பிய மகா ரிஷியினாற் செய்யப்பட்டு எழுத்துச் சொற்பொருளென்னும் மூன்று அதிகாரங்களை உடையது.
இதற்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவ ரையர், நச்சினார்க்கினியர் என்று ஐவரால் உரையெழுதப்பட் டதாயினும், பூரண உரையாய் நமது காலம் வரைக்கும் வந்திருப்பது நச்சினார்க்கினியராற் செய்யப்பட்டது ஒன்றுமே. அஃது ஆக்கியோன் பெயரினால் நச்சினார்க்கினி யமென வழங்கும். சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையிட்டனர். இளம்பூரணர்ஆதியுரையாசிரியராத
தொல்காப்பியம் எழுத்ததிகாரப்பதிப்புரை 133.
லின் அவர்க்கு "உரையாசிரிய "ரென்னுஞ் சிறப்புப் பெயர் கொடுத்தே யாருஞ் சுட்டுவர். அவர் உரையில் எழுத்ததிகார முஞ் சொல்லதிகாரமும் பொருளதிகாரத்துச் செய்யுளியலும் ஒழிந்து எஞ்சிய பாகம் இக்காலத்து இறந்தது போலும். கல்லாடர்பேராசிரியர் உரைகளிற் சிற்சில பின்னங்கள் மாத்திரம் இங்கும் அங்குஞ் சிதைந்து கிடக்கின்றன. யாதாயினும் ஓர் இயலுக்காவது பூரணமாயிருப்பது தெரியவில்லை. எழுத்ததி காரத்திற்கு இளம்பூரணமுஞ் சொல்லதிகாரத்திற்குச் சேனாவ ரையமுஞ் சிறந்தனவாயிருந்தன. ஆயினும் நச்சினார்க்கினி யம் மூன்றதிகாரத்து உரையும் ஒருங்கொத்த சிறப்பினையுடை யதாய் , அனைத்துரைகட்கும் பின்னாக எழுந்து, ஏனையோர் மதங்களை ஆங்காங்குக் கண்டித்ததனால், அவ்வுரையே பிற் காலத்து அனைத்தினும் மேலாக உபயோகப்படுவதாயிற்று.
இதன் எழுத்ததிகாரவுரை சென்னப்பட்டணம் சகலகலா சாலைத் தமிழ்ப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கைய ரால் ஐம்பது வருஷத்தின் முன் அச்சிடுவிக்கப்பட்டிருந்தது. எழுத்திற்கு இளம்பூரணமுஞ் சொல்லிற்குச் சேனாவரையமும் பின் அச்சாயின. ஆதலால் யாதோருரையாயினும் பிரசுரமாகா ததும் எழுதுவாரும் படிப்பாருமின்றி மாரண தசை யடைந் ததுமான பொருளதிகாரத்தை முதலில் அச்சிடுவித்தல் அவசி யமெனக்கண்டு அதனை நச்சினார்க்கினியருரையோடு சென்ற பார்த்திய வருடம் பதிப்பித்து வெளிப்படுத்தினேன். பின்னர்ச் சொல்லதிகாரத்தையும் அவருரையுடன் பதிப்பித்துவிட்டாற், றொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியருரை பூரணமாய் யாவர்க்கும் எளிதில் அகப்படற்பாலதாமென்று உட் கொண்டு, பலதேசத்தினின்றும் பிரதிகள் வரவழைத்துப் பரி சோதிக்கையில், என் இஷ்டர் அநேகர் சொல்லதிகாரம் பிரசுர மான பின்னரும் உரை பூரணமாயகப்படுதற்கு எழுத்ததிகாரப் பிரதி கிடையாதென்றும், அதனையும் யான் சேர்த்து அச்சிடா தொழியின், என் பிரதி வாங்குவோர் சொல்லும் பொருளும்
Page 70
134 தாமோதரம்
பெற்றும் எழுத்தில்லாமற் றலையற்ற உடலையே தாங்க லாகுமென்றும், ஆதலால் எழுத்தையும் யானே சேர்த்து அச்சிடுதல் வேண்டுமென்றுங்கட்டுரைத்தனர். அதனால் ஐயர் பதிப்புச் சென்னப்பட்டணப் பிரதிகளின் வழிப்பட்டது நோக்கி, அதனைத் தென்றேசப் பிரதிகளோடும் பரிசோதித்து அச்சிடுவித்தனன்.
புதுக்கோட்டைச் சமஸ்தானம் மகா மன்றத்து நியாயாதி பதிகளில் ஒருவராகிய மகாமகா பூரீ ம.அண்ணாமலைப் பிள்ளையவர்கள் இவ்வெழுத்ததிகாரத்தை அச்சிடுவதற்கு மிக்க திரவியோபகாரஞ் செய்தனர். அவருடைய தயாள குணத்தையும் பிரபுத்துவத்தையும் அதிக நன்றியறிவோடு பாராட்டுகின்றேன். •
ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களைமீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்கா யிற்று. அன்றியும் ஒரு நூலின் முதலிலேயுள்ளதோர் சொற்ப டாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதியடைந்து விட்டாற் , பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலக வழக்கமும் அதுவே.
இப்பொழுது நச்சினார்க்கினியம் சொல்லதிகாரம் அச் சாகி வருகின்றது. எட்டுத்தொகை பரிசோதனையிலிருக்கின் றது. இதிற் புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும் பரிபாடல் பூரண பிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்துங்கடைசிப்பத்தும் இன்னும் அகப்படவில்லை. இவற்றை வைத்திருக்கும் மகான் கள் யாவராயினுஞ் சில நாளைக்கு அவற்றை இரவலாக அனுப்புவாராயின் அவர்க்கு மிகக் கடமைப்படுவதுமன்றி அன்னோர் அனுப்பிய பிரதிகளோடு கூட எனது வழக்கப் பிரகாரம் இவ்விரண்டு அச்சுப் பிரதியும் அனுப்புவேன்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பதிப்புரை 135
தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றொன்றாய் அழிந்துபோகும் அருமையான பழைய தமிழ் நூல்களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப்பரி சோதித்து அச்சிடுவதிற், புத்தகங்கள் விலை போகாமல் நேரி டும் நஷ்டத்தைக் குறித்து விய வருடம் ஆடி மாதம் ஹிந்து பத்திரிக்கை வாயிலாக ஒர் அபயம் எழுதித், தமிழபிமானமுந் தருமந்தையுமுடைய பிரபுக்கள் என் நஷ்டத்தை நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரிக்குமாறு வேண்டிக் கொண் டேன். அப்பொழுது எனக்குக் கைகொடுத்து உதவிசெய்த கனவான்களின் பெயருந் தொகையும் அடுத்த சர்வசித்து வருடம் ஆவணி மாதம் எனது கலித்தொகைப் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றேன். அதன்பின்பு சில பிரபுக்கள் அளித்த உதவியையும் உலகிற்குத் தெரிவிப்பது என் கடனாதலின் அதனை ஈண்டுக் குறிக்கின்றனன்.
@・ சென்னபட்டணம் வித்தியாசாலை
விசாரணாதரிசி பூரீபம்மல் விஜயரங்க முதலியார் 25.00 கொழும்பு சுப்ரீம்கோட் அத்வக்காத்
கி.பிறிற்றோதுரை 75.00 திருநெல்வேலி சப்கோர்ட் பழைய நீதிபதி
பூரீதிரு. கனகசபை முதலியார் 25.00
சென்னபட்ட>ணம் வித்தியா பரிபாலகரின்
விசேஷஉபகிருதம் போதனாசிரிய வித்தியாசாலைப் பிரதம உபதேசகருமாகிய பூரீயாழ்ப்பாணம் சிந்தாமணி வேலுப்பிள்ளை 100.00 பாலக்காடு நகராதிகார மந்திரம் மாகாண
விசாரணைச் சபைகளில் ஒருவராகிய பூரீஜ.சின்னச்சாமி பிள்ளை 25.00
Page 71
136" தாமோதரம்
சென்னபட்டணம் பச்சையப்ப முதலியார் தருமபரிபாலன சபாபதி பூரிபாளையம் சோமசுந்தரச் செட்டியார் 100.00
இம் மகான்களை யொப்பப் பிறருந் துணைநின்று தத்தமக்கு இஷ்டமான அளவுக்குத் திரவிய சகாயஞ் செய்வா ராயின் எட்டுத்தொகை, தகடூர்யாத்திரை முதலியன விரைவில் வெளிவரும். எவ்வெம் முயற்சிக்குந் துணைக்காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்காலஞ் சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்குவரும் பரீக்ஷா நிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்தி வருகின்றேன் . அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோவென்று கட்டி வருகின்றது.
சென்னபட்டணம் இங்ங்ணம் கர வருடம் வைகாசி மாதம் } சி.வை.தா.
(தொல்காப்பியம், எழுத்ததிகாரம்: மதுரையாசிரியர் பாரத் துவாசி நச்சினார்க்கினியா ருரையோடும்; யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து பூரீ தொண்டமான் புதுக்கோட்டை நியாயாதிபதி ம.அண்ணாமலைப்பிள்ளையவர்கள் திரவியோ பகார சகாயத்தினால் சென்னபட்டணம் வித்தியாதுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. கர வருடம் வைகாசி மாதம். (1891); இதன் விலை ரூ.1.50)
6. விளம்பரம்
இதன் அடியிற் குறித்தபடி யான்பதிப்பித்த புத்தகங்கள் சென்னபட்டணத்தில் வித்தியாதுபாலன யந்திரசாலையில் ந.க.சதாசிவப்பிள்ளை அவர்களிடத்தும், காலரத்நாகர அச்சுக் கூடத்தில் ஊ. முத்துக்குமாரசாமிச் செட்டியார் அவர்களிடத் தும், சிதம்பரத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலை விசார ணைக் கருத்தர் க. பொன்னுசாமிப்பிள்ளை அவர்களிடத்தும், யாழ்ப்பாணத்தில் ஏழாலைச்சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை அவர்களி டத்தும், தஞ்சாவூரிற் புத்தக வியாபாரம் தா. திருவேங்கட பிள்ளை அவர்களிடத்தும், கோயமுத்தூரிற் புத்தகவியாபாரம் இ.ஒன்னைய கவுண்டரவர்களிடத்தும் வாங்கிக் கொள்ள
e).
ლტ . თr. தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் எழுத்ததிகாரம் 1.50 * டிெ டிெ சொல்லதிகாரம் .50 டிெ டிெ பொருளதிகாரம் 6 OO **டிெ டிெ முழுவதுஞ் சேர்த்து 7.50
டிெ சொல்லதிகாரம் சேனாவரையம் 2.00 நல்லந்துவனார் கலித்தொகை 3.50
தணிகை புராணம் m 3.00 வீரசோழியம் 50 இறையனாரகப்பொருள் Η έδO இலக்கண விளக்கம் 5.00 சூளாமணி 50 டிெ பத்துப் புத்தகமும் ஒருமிக்க வாங்குவோருக்கு 2.00 கட்டளைக் கலித்துறை O6 நக்ஷத்திரமாலை O6
* அச்சாகி வருகின்றது. வருஷமுடிவில் வெளிவரும். **முழுவதிற்கும் பணஞ் செலுத்துவோருக்குச் சொல்லதிகாரம் வெளி வந்த உடனேஅனுப்பப்படும்.
Page 72
7. தொல்காப்பியம்-சொல்லதிகாரம்
நன்றிகூறல்
படிப்பாரும் எழுதுவாரு மின்றிப் பாணவாய்ப்பட்டுத் தேடுவாருந் தொடுவாரு மின்றிச் செல்லுக்கிரையாகியுங் காலாந்தரத்தில் ஒன்றொன்றாய் அழிந்துபோகும் பழைய தமிழ்நூல்களை இயன்றமட்டும் அச்சிட்டு நிலைநிறுத்தத் தொடங்கிய என் முயற்சிக்கு உதவியாக ஆங்காங்குள்ள தரும சீலர்கள், சென்றவருஷம் வைகாசி மாதம்வரையும் எனக்கு அவ்வப்பொழுது உபகரித்த பணத்தொகையைக் கலித் தொகை, தொல்காப்பிய எழுத்ததிகாரம் இவற்றின் பதிப்புரை யிலே அவரவர் நாமதேயத்தோடு தெரிவித்திருக்கிறேன்.
அதன்பின்பு இறங்கூனிலே கடை வைத்திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளுள் பூரீ இராமநாதன் செட்டியென வழங்கப் பெயர்பெற்ற மகா மகா பூரீரா.ம.சொ. சொக்கப்பசெட்டியார் ரூபா 50.00 அனுப்பிவைத்தார்; அவரது தயாள குணத்தை என்றும் மிகுந்த நன்றியறிவுடன் பாராட்டுவேன்.
தருமச் செலவுகளில் இக்காலத்தில் அதி பிரசித்தியடைந் திருக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளில் வேறு பெயர்களும் இம் முன்மாதிரியை அனுசரித்து இப்படிபட்ட முயற்சியுடையவர்களுக்கும் ஒருவாறு துணைசெய்யும்படி அவர்கள் மனத்தில் எந்நாளுங் குடிகொண்டிருக்கும் பூரீ நடேசப்பெருமான் அருள்புரியுமாறு அவரது திருவடிக ளைப் பிரார்த்திக்கின்றனன். நந்தன வருடம் புரட்டாதி மாதம்.) சி.வை.தா.
(தொல்காப்பியம் சொல்லதிகாரம்:மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியாருரையோடும் பல தேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையால் சென்னபட்டணம் விக்டோரியா ஜுபிலி யந்திரசாலையில் பதிக்கப்பட்டது.
நந்தன வருடம் புரட்டாதி மாதம் 1892. இதன் விலை ரூ.1.50)
சிவமயம்
8.தொல்காப்பியப் பொருளதிகாரப்
பதிப்புரை
யானை யானனனைத் தேனிமிர்கடம்பனை வானமர் குழவியா லுேஈனுறை சடையனை இமய சிமிலமென்குமரியென்றமையும் உமையைத் தமியேன் றமமலந்துமிப்பப் போத சற்குருவாய் மாதொரு பாகன் வேத வனத்தெழுஉ மேதகு கயிலாய நாத தேசிகன் பாதவருட் கொடுதொழிஇக் கற்றறி வில்லாக் கடையனேன் றனக்கு நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை முத்துக் குமார வித்தக னடியிணை சித்தத் திருத்திமற்றுத்தம புலவர் அடிக்கம லங்களென் முடிக்கணி கொடுக்க நின்(று) அடியேன் கூறுவ(து) ஒன்றுளது. உலகிலுள்ள கல்லெல்லாஞ் சாதி ரத்தினமாயின் அவை உயர்வுடையனவாமா? இழிந்தனவும் உளவாயினன்றே
Page 73
140 தாமோதரம்
ஒழிந்தன உயர்வாவது? ஆதலாற்றம் உயர்வு விளங்குதற் பொருட்டாகவாவது என் புன்மொழியையும் பெரியோர்தம் பொன்மொழியினடுவே வைத்தலொழியாரெனத் துணிந்தனன்,
*"வீங்குகடலுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ ஞக்கிய முதனூல்" எனப் புகழ்ப்பெற்ற அகத்தியம், முதற்சங்கத்தார் காலத்திற் றொல்காப்பியத்திற் றலைமை பெற்றும், இடைச்சங்கத்தார் காலத்தில் அதனேடு கூடநின்றுலவியுங், கடைச்சங்கத்தார் காலத்தில் இறந்துவிட்டது. அதன்பின் இதுவரைக்குந் தமிழுக் குப் பேரிலக்கணமா யுள்ளது தொல்காப்பியமே. இஃது அகத்தியர்பாற்றமிழ் நன்குணர்ந்த அவர் மாணாக்கர், திரண துரமாக்கினி, அதங்கோட்டாசான், துராலிங்கன் ,செம்பூட் சேய், லையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவினயன், காக்கைபாடினியள், நற்றத்தன், வாமனன், என்னும் பன்னிருவருள் முதன்மாணாக்கரென்று தம்மனோர னைவரானுந் துதிக்கப்பட்ட திரணதுரமாக்கினியென்னும் இயற்பெயரினையுடைய தொல்காப்பிய முனிவரர் அருளிச் செய்தது.
அகத்தியர் மாணாக்கர் அனைவருள்ளும் இவரே மிகச் சிறந்தவரென்பது "தொல்காப்பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடன்" எனவும், அகத்தியரிடம் "பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பி யன்” எனவும் பல்காப்பியத்தும் பன்னிருபடலத்தும் விதந் தோதப்பட்டமையானும், மற்றையோருட் சிறந்து இவரோ
* புறப்பொருட் பன்னிரு படலம், சிறப்புப்பாயிரம்
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 41
டொருதலை அகத்தியனார்பொருட்டு முரணிய "அதங்கோட் டாசாற் களிறபத் தெரித்து" எனப் பனம்பாரனாராற் றுதிக்கப் பட்டமையானும் உணர்க.
அகத்தியர் உத்தரதிசையினின்று நீங்கித் தெக்ஷணத்தில் வதிந்த பின் தமிழிற்கு இலக்கணஞ் செய்வான் கருதி, இயலிசை நாடகங்களில் ஆங்காங்குத் தமது ஆராய்ச்சியின் கண் எதிர்ந்தவாறே குறிக்கப்பட்ட விதிகளைப் பின்னர் ஒருங்கு திரட்டி அகத்தியமெனப் பெயரிட்டுக் கொடுத்தனர். அது நெறிமுறைமைப்பட இயைக்கப்பட்டிலாது, இயலிசை நாடகத் தமிழ்களும் இயலுள்ளும் எழுத்துச்சொற்பொருள் களும், ஒருங்கு விரவிப் பெரிதும் பரந்துகிடந்ததோர் நூலாயிற்று, அதனை வெவ்வேறு பிரித்து அடைவுபடுத்துத் தொல்காப்பியமுடையார் இயற்றமிழையும், பெருநாரை பெருங்குருகு முதலிய நூலுடையார் இசைத்தமிழையும், முறுவல் சயந்தங் குணநூல் செயிற்றியமென்றிவையுடையார் நாடகத் தமிழையும், வகுத்தும் விரித்தும் மயக்கற முறை காட்டித் தத்தம நூல்யாத்தனர்.
இவற்றுள்ளும் “முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி” “மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி” ஐந்திர நிறைந்தெழுந்த தொல்காப்பியத்தின்மாண்பு, இளங்கதிர்கான் றுதித்த பாலசூரியன் உச்சியடைந்து சொலித்தாற்போல வர வர அதிகரிக்கத், துரோணர்புக்கவிடத்து முன் குலவி விளங் கிய கிருபாசாரி யாஞ்ஞையையொத்து அகத்தியாப்பியாசங் குன்றினமையானுந், தவத்தான் மனந் தூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடையாரா கிய தொல்காப்பியர் ஒருகாலத்துத் தமக்கு அகத்தியனாரால் வந்ததோர் மனத்தாபத்தினிமித்தம் இட்ட சாபத்தின் வலிமை யினானும், அகத்தியம் இறந்துபோக நேர்ந்தது. அல்லாக்கால் என்றென்றுஞ் சிரஞ்சீவியாயிருக்கப்பெற்றுள்ள அகத்தியனார் அருளிச்செய்த நூல் சங்கத்தார் காலத்திற்றானே வீழ்ந்து
Page 74
142 தாமோதரம்
போகாது. ஆசாரிய வழிப்பாட்டிற் குறைவில்லாத திரண துரமாக்கினி அவ்வாறு சபித்தற்பாலரோ என்பாரு முளர். அஃதன்றே அவர் ஆசாரியரைச் சபியாது அவராற் செய்யப் பட்ட நூலைச் சபித்ததென்க. சீஷரது சாபத்தை ஆசாரியர் தடுக்க வன்மையிலரோவெனில் ரிஷிகள் சாபத்தைக் கடவுளர் தடுக்கும் வன்மையிலரெனின் இது கடாவன்றென மறுக்க.
பராக்கிரம பாண்டியனை வென்று துலுக்கர் முதன்முதல் மதுரையாண்டு எண்ணுற்றைம்பது வருடத்தின் மேலாயிற்று. சங்கத்தார்காலத்திற்கும் பராக்கிரம பாண்டியன் காலத்திற்கும் இடையிலே சோமசுந்தரபாண்டியன்முதலாக நாற்பத்திரண்டு அநுலோம பாண்டியர் அரசு செய்திருக்கின்றனர். ஆதலாற் கடைச்சங்கம் ஒழிந்த காலம் இரண்டாயிரம் வருஷத்திற் குறையாது.
முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியீறாகக் கடைச்சங்கம் இரீஇய நாற்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் இரண்டாயிரம் வருஷமும், வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறனிறாக இடைச்சங்கம் இரீஇய ஐம்பத்தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்தகாலம் மூவாயி ரத்தைஞ்னூறு வருஷமுங், காய்சினவழுதி முதற் கடுங்கோன் வழுதி யீறாக முதற்சங்கம் இரீஇய எண்பத் தொன்பதின்மர் பாண்டியர் அரசு புரிந்த காலம் நாலாயிரத்தைஞ்னூறு வருஷமுமாம்.
ஆகவே முதற்சங்கத்திற்கு முன்னரே முதனூல் கண்ட ஆசிரியர் அகத்தியஞரிடந் தமிழ்கற்று அச்சங்கத்திற் றாமும் உடனிருந்து தமது நூல் நிலவச் செய்த திரணதுரமாக்கினி முனிவரர் தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னிராயிரம் வருடத்திற் குறையாது. இக் கால விவரணம் வீரசோழியப் பதிப்புரையில் விரிவாக ஆக்ஷேப நிவாரணத்தோடும் எழுதியிருக்கின்றேன். ஆங்குக் கண்டுணர்க.
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 143
இவ்வாறு பன்னிராயிர வருஷ காலத்தின் மேற்பட்ட நிலைபெற்றோங்கித் தமிழ்க்கோர் தனிச்சுடர் போலப் பிரகாசித்துவந்த தொல்காப்பியமுந், தற்காலத்து இலக்கணங் கற்போர் அனைவரும் அதன்வழித் தோன்றிய சிற்றிலக்கணங் களையே கற்று அம்மட்டோடு நிறுத்திவிடுதலால் எழுது வாரும் படிப்பாருமின்றிப் பழம்பிரதிகளெல்லாம் பாணவாய்ப் பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிதைவுபட்டுப் போக, யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பியவழியுஞ் கிடைப் பது அருமையாய்விட்டது. தமிழ் நாடனைத்திலும் உள்ள தொல்காப்பியப் பொருளதிகாரப் பிரதிகள் இப்போது இருபது இருபத்தைந்திற்கு மேற்படா. அவையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னுஞ் சில வருஷத்துள் இறந்து விடுமென்று அஞ்சியே அதனை உலோகோபகாரமாக அச்சிடலானேன்
இந்நூற்கு உரையெழுதினோர் இளம்பூரணர் கல்லாடர் பேராசிரியர் சேனவரையர் நச்சினார்க்கினியார் ஐவர். இவ ருள் "வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த" சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே மற்றை உரைகளினும் மிகச் சிறந்ததோர் உரையெழுதினர், இளம்பூரணர் பேராசிரியருரை கள் முழுவதும் இப்போது இல்லை. கல்லாடருரை மிகச்சுருங் கியது. நச்சினார்க்கினியாருரையே பிற்காலத்தது. பூரணமாக வும் விரிவாகவும் உள்ளதும் பெரும்பாலும் ஒதிவரப் பெற்ற தும் அஃதொன்றே.
அது கடைச் சங்கத்தார் காலத்தின்பின் சமணர் தமிழ்ப் பரிபாலனஞ் செய்த காலத்துத் தோன்றியதாதலானும், நச்சிஞர்க்கினியாரும் பரிமேலழகரும் ஒரே காலத்தினராத லானும், இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷத்தின் முன்பு எழு தப்பட்டிருத்தல் வேண்டும். அன்றியுந் தமிழிற் சிறந்த இதிகாசங் களாகிய இராமாயணம் பாரதங்களினின்றும் பெருங்காப்பிய மாகிய கந்தப்புராணத்தினின்றும் உதாரணங்கள் கொள்ளப்
Page 75
144 தாமோதரம்
படாமையே இதற்குச் சான்றாகும். இவைகள் எழுதப்பட்டு ஆயிரத்திருநூறு வருஷஞ் சென்றமை யாவரானும் மறுக்கப் Lillnel.
சென்னப்பட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத் தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின் எழுத்துஞ் சொல் லுமே யன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை யுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லையென்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலுந் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங் கேட்கும் விருப்பமுடையரானபோது பிறையூரிற் றிருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக் கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவி யச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்பமுதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனலும், அது காரணமாக அவருக்குத் "தொல்காப்பியம் வரதப்ப முதலி' யாரென்று பெயர்வந்தமை யானும், பின்பு அவர்காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்.
பொருளிலக்கண ஆராய்ச்சி குறைவுபட்டது தற்காலத்து மாத்திரமன்று. கடைச்சங்கத்தார் காலத்திலேயே உக்கிரப் பெருவழுதி "நூல் வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மென்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின்
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 145
பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம், எனச் சொல்லி வருந்தினான்' என்றும், மதுரை ஆலவாயெம்பெருமான் இறைவனார் அகப்பொருட் சூத்திரம் அறுபதும் அருளிய வழியும் அவற்றின் பொருள் காண்பாரின்றி வருந்திக் கடவுளையே தன் சங்கத்தாரோடு சென்றிரந்து பொருள்காண வல்லானொருவனைப் பெற்றா னென்றுஞ், சங்கப் புலவர்சிகாமணியாகிய நக்கீரர் வாயாற் கூறப்பட்டுக் கிடக்கின்றதே. பின்னை இக்காலத்து அதன் அருமை ஆச்சரியமாமா?
இந்நூலைப் பரிசோதித்து அச்சிட முயன்ற பின் தமிழ் நாடுகளில் ஆங்காங்குத் தேடிப் பல பிரதிகள் சம்பாதிப்பது பெரும் பிரயாசையும் நெடுங்கால வேலையுமாயிற்று. இது தமிழ்நாட்டிற்கு ஒர் பேருபகாரமான முயற்சியென்று கண்டு பூரீ கைலாசபரம்பரைத் திருவாவடுதுறை ஆதினத்து மஹா சந்நிதானமுந் தம்மை அடைந்தோர்க்குப் பெருங்கருணைத் திருவுவமுமாகிய பூரீலழறீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகளுஞ், சைவ சமயாபிமானியுஞ் செந்தமிழ்ப் பரிபாலகருமாகிய பூரீமத் யாழ்ப்பாணம் ந.க.சாதசிவப்பிள்ளையவர்களும், எனது அதி இஷ்டராகிய திருநெல்வேலித் தாசில்தார் பூரீகணி த சிங்கம் வை . சின்னத்தம்பியாபிள்ளை யவர்களும் பல பழைய ஏட்டுப் பிரதிகள் அழைப்பித்துத் தந்தனர். இவர்கள் செய்த நன்றியை எஞ்ஞான்றும் மறக்கற்பாலல்லேன். இப்பிரதிகளோடு பூரீதிருத்தணிகைச்சரவணப்பெருமாளையர் பெளத்திரர்துரைசாமியையர் பிரதியொன்றும், புரசபாக்கம் பூரீ சாமுவேற்பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையிஞலே எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றும், அடியேன் வசமிருந்த தொல்காப்பியம் வரதப்பமுதலியார் பிரதியொன்றும், மதுரைப் பிரதியொன்றுஞ் மதுரைப் பிரதி இரண்டு, தஞ்சாவூர் பிரதி மூன்று சேர்த்து இவற்றுள்ளே, திருநெல்வேலிப் பிரதி மூன்று, சென்னபட்டணம் பிரதி மூன்று, யாழ்ப்பாணப் பிரதி
Page 76
146 தாமோதரம்
இரண்டாகப் பன்னிரண்டு பிரதி கொண்டு பரிசோதித்து என் விருப்பத்தை ஒருவாறு நிறைவேற்றினேன்.
ஆயினும் இஃது இப்போது வழுவறப் பிரசுரஞ் செய்யப் பட்டதென்று கொள்ளற்க. எனக்குச் சந்தேகம் பிறந்துழியெல் லாந் தற்காலத்துப் பெயர் போந்த வுத்துவான்களாயுள்ளோர் பலரையும் வினவியும் அயனுாற்றுணிபுகள் மேற்கோள் களோடு சீர்தூக்கியும் இன்னும் ஐயமறுத்துக் கொள்ளாத இடங்கள் அநேகம் உள. அவைகளைக் கூடிய மாத்திரம் பிரதிகளிலிருந்தவாறு அச்சிடுவித்தனன், ஆயினும் பொருட்டொகுதி போருட்டொகுதி பேரர் உட்டொகுதி பேர் அருட்டொகுதி, பேரருட் டேர்குதி, போருட்டேர்குதி, பொருட்டேர்குதி என்றற் றொடக் கத்தனவாய் இன்னும் பல பாடபேதமாகப் படித்தற்கிடம் பெற்றுப் பொருடடொகுதி என்றெழுதிக்கிடந்த தொன்றை யான் அவற்றுள் ஒன்றாக என் சிற்றறிவு சென்ற வழிக் குறிப்பிட்டுப் பதிப்பித்தமைபற்றி அதுவே பாடமென்று நிச்சயிக்கற்க, சமுசய நிகழ்வுபூழி யெல் லாஞ் சந்தியை மீளவும் இலக்கணப்பிரகாரம் புணர்த்துத் தீர்க் கபேதத்தையும் புள்ளியையும் நீக்கிப் பாடபேதப்படுத்திப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். 伊
சம்பளத்திற்காக ஏடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் வீதத்தை யும், பழைய காலத்து ஏட்டுப்பிரதிகள் அடைந்திருக்கும் ஈன ஸ்திதியையும், பாடங்கேட்டார் இல்லாத தன்மையையும் நோக்கில், அநேக வித்துவான்களாய் ஒரு சபை சேர்ந்து ஒருவரோ டொருவர் தீர்க்க ஆலோசனை செய்து பதிப்பினும் பல வழுக்கள் புகுதற் கிடனாய இவ்வரிய நூலை, யான் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்தமையால் இடமிடந்தோறும் பலபல வழுக்கள் செறிந்திருத்தல் இன்றி யமையாமையாம்.
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 147
ஐயந்திரிபறத் தாங் கற்றறியாத தோர் நூலை இவர் இங்ங்னம் வழுவுற அச்சிடவேண்டிய தென்னையென யாரும் வினவுவாராயின், வழுச்செறிந்ததாயினும் அடியோடழிந்து போகின்ற நூலை அடியேன் பாதுகாத்தது பேருபகாரமன்றோ என்க. மேலும்.இதனை உரையுதாரணங்களோடு பாடங் கேட்டவர் யாராவது உளராயினன்றோ அவரையன்றி யான் செய்தது தவறாவது? யார் செய்யினும் இதுவே முடிவாயின் அடியேன்மேற் குறை கூறுதல் தர்மமன்று.
அன்றியுஞ் சும்மாகிடந்த் அம்மையாருக்கு அரைப்பணத் துத் தாலி போதாதா? காண்டற்கும் அரிய நூலைக் கைக்கெட்டப் பண்ணினது கேடாமா? பிரதி கிடைப்பதே மிக அருமையாயுங், கிடைப்பினுங் குறைப்பிரதிகளாகவும் , அவைதாமும் ஒரோவொரு வரிக்குப் பல வழுவாக ஆயிரக் கணக்கான வழு உடையனவாகவும் இருக்க, அடியேன் அவ்வழுத் தொகையைக் குறைத்து நூற்றுக்கணக்காக்கி விட்டதா என்மேற் குறையாயிற்று.
அங்ங்னமாயின் இவரினும் வல்லோராய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசுரஞ் செய்யத்தக்க வித்துவான் கள் இலரோவெனின், உளராயின் ஏன் செய்திலரென விடுக்க. பல பெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிடவிரும்பியதும், முயன்றதும், இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்ட துந், தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான் இதனை அச்சிடிற்றம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜபண்டிதர் மஹா வித்து வான் புலவ ரென்றின பெரும் பட்டச் சுமையைத் தலை மேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்குரிமைபூண்டு நிற்கும் என்போலியரே இதிற் கையிடுவது பேரவசிய மாயிற்று.
Page 77
148 தாமோதரம்
பஞ்சகாவியம் பஞ்சலக்கியம் அகநானூறு புறநானூறு நற்றிணை கலித்தொகை குறுந்தொகை திணைமரபு செய்யுட் டொகை கல்லாடம் பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு பரிபாடல் தகடூர்யாத்திரை பெருந்தேவனார் பாரதம் பதினெண் கீழ்க் கணக்கு வெண்பாமாலையொன்று இன்னோரன்ன இலக்கியங் களும் புறப்பொருட் பன்னிருபடலம் வையாபிகம் வாய்ப்பி யம் அவினயம் காக்கைபாடினியம் நற்றத்தம் வாமனம் பல் காயம் பல்காப்பியமென்று இன்னோரன்ன இலக்கணங்களும் முற்றக் கற்று வல்லோரே இந்நூலைப் பரிசோதித்தற்கு அருக ராவர். அப்படிச் சிறந்துளோர் தற்காலத் திலரென்பது யான் கூறவேண்டியதில்லை.
"விடியல வெங்கதிர் காயும வெயமல கலறை” என்னும் வாக்கியத்தையும் ஒர் பரிபாடற் செய்யுளையுஞ் சரியாய்ப் பிரித்துணர்தற்கு எத்தனை புலவரிடங் கொண்டுதிரிந்தேன்? எத்தனை வித்துவான்களுக்குக் கடிதமெழுதிக் கைசலித்தேன்? எனக்கு வந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் மிக வும் வெட்கக்கேடென்றறிக. அவை பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமான் மகத்துவத்தை நன்கு விளக்கின.
மேலும்,சரகத்தைச் சாகமென்றும், அளபை அன்பென் றும், இதரவிதரத்தை இதாவிதாவென்றும், திகந்தராளத்தைத் திகந்தாரளமென்றும், மென்மையை மேன்மை யென்றும் தபுதார நிலையைத் தபுதராநிலையென்றும் மூதலன் என்பதை முதல்வனென்றும் இன்னும் பலவாறாக மயங்கினோர் பெயர் பெற்ற வித்துவான்களே யாதலின் ஏட்டுப் பிரதியோடு ஊடாடிய சிரேஷ்ட புலவர்கள் அடியேன் தவறுகளைப் பாராட்டாது பொறுத்தருளுவதுமன்றி இன்னும் இம்முயற் சியை வியந்துகொள்வார்களென்பதிற் சந்தேகமில்லை. ஏடு பிடித்து வாசிக்க அறியாத அச்சுப்பிரதி வித்துவான்களுந், தம தகத்து மெய்ப்பெருமையொன்றிலராய்ப் பிறரைக் குறைதூற் றலாற்றாம் நிறைவுடையார்போலத் தோற்றலாமென மயங்
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 149
கும் போலிவித்துவான்களுமே இவ்வித வழுக்களைக்குறித்து என்னை இகழ்வர்; எனக்கு அது குறைவன்று, இவர் கூற்றைப் பெரியோருங் கவனியார்.
குறைகூற இஷ்டமுள்ளவர்கள் இன்னும் அச்சிலே தோற் றாதனவாய், அடியேன் காட்டுங் கிரந்தங்களில் இரண்டொரு ஏட்டையாயினும் எழுத்துப்பிழையற மாத்திரம் வாசித்துக் காட்டுவாராயின் அவர்கள் பாதாம் புயத்தை உச்சிமேற்சூடி அவர்கட்குத் தொண்டு பூண்டொழுகுவே னென்று அறிவா ராக, ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்துத் தேகவியோக மான தந்தை கையெழுத்துப்போற் றோன்றிற்றென்று கண்ணீர் பெருக அழுதகதையு முண்டன்றோ?
காலாந்தரத்தில் நூல்களுஞ் செய்யுட்களும் அடைந்திருக் கும் மாறுபாடு இவ்வளவிற் றெனற்பாலதன்று. கம்பர் சேர தேசத்திலிருந்து வரும் வழியிற், பாலைக்காட்டிலே, சிலர் செய்த இராமாயணப் பிரசங்கத்தைக் கேட்டபோது, தமது பாட்டுக்களும் இடைக்கிடை வருவனவாகச் சொல்லிய கதை கேள்வியுற்றிருக்கலாமே.
"அடிசிற் கினியாளே ஆக்கஞ் செய்வாளே/
ترZ24 تر/yZ262یے -- /7ZZ//762//4 نیل //Z62 بھی زZZ/ھ4/42.67 பின்னூங்கி முன்னெழுஉம் பேதையே/ போதியோ, வென்று/ங்கு மென்கண் ணினி2"
எனத் திருவள்ளுவநாயனார் சொல்லியதாக இக்காலத்து வழங்கும் பாட்டுக்கும் , நமது உரையாசிரியர் தமது காலத்து வழங்கியபடி எழுதியிருக்கும்,
"அடிசிற் கினியாளை, அன்/டை யாளைப்,
படுசொற் பழிநாணு வாளை, - யடிவருடிப், பின்ற7ங்கி முன்னுணரும் பேதையை, யாண்டபிரிந்தா வென்றாங்கு மென்க ணெனக்கு"
என்பதற்கும் எவ்வளவு பேதம்
Page 78
150 தாமோதரம்
அடித்தொகை சீர்த்தொகைகள் மாறுபட்டுப் பாவே வேறுபட்டுப் போயினவும் அநேகம் உள, இப்போது அறுசீர டியாசிரியவிருத்தமாக வழங்குகின்ற
"முன்னைத்தஞ்சிற்றின் முழங்கு கடலோத
மூழ்கிப் பெயர,
வன்னைக் குரைப்ப னறிவாப் கடலேயென்
وL02لع67 لتلاعه وعلى
ت2 وی6یش67e2/ea بویای 27e2و aaz2ی وی 7z۶//62 سzصی ص6a7622Z وی
தகைச7ல் கானர்,
4/ன்னை யரும்பென்னடப் போவாரைப் பேதுறுக்கும்
۶۶ /7/صع 4/6/7Gr 67z/z2
என்னும் புகார்ச்சிறப்பை ஆசிரியர் மூன்றாம் அடி நான்கு சீரே யுடையதாக வேறு பாவின் பாற்படுத்தி உதாரணங் காட்டினர். இவ்வாறு மாறுபட்ட செய்யுட்கள் அநேகம் உரையகத்து ஆங் காங்குக் காணப்படும். அவைகள் ஆசிரியர் காலத்திற்கு முன் னர்த்தானே எத்துணைத் திரிபடைந்தனவோ? இனி இவற்றின் பூர்வ சொரூபம் நிச்சயித்தல் யார்க்கும் அரிது அரிது.
sa
இந்நூலின் இயலடைவுகளேயன்றி அதிகாரத்தொகை தானும் உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பிறழ்ந்து போயின. அவையிற்றை ஆசிரியர் பலவிடத்துங் குறித்த கண்டனைகளானுணர்க.
உரையாசிரியர் காட்டிய உதாரணச் செய்யுட்களிலே தற் காலத்திலுள்ள வில்லங்கத்தைக் குறித்துஞ் சில மொழி சொல் வது யான் அவற்றோடு பட்ட பிரயாசத்தை ஒரு வாறு விளக்கும்.
x"விண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென் றான்" எனவும், "வாம்பெருந்திரை வளாகமென் மொழியசெவ்
X விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரவிற் ெ
காண்டுதாங்குறு குறட்படை கோடிநூlண்டப்
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 15
வழியாழ்” எனவும். மோனையுந் தவறாது அடியளவும் விகாரப்படாது இரண்டு உதாரணம் குறிக்கப்படுமாயின், இவற்றை ஒன்றொன்று ஒரோவொரு செய்யுளின் முதலும் ஈறு மென்பது அச்செய்யுட்களைக் கந்தப்புராணத்திலும் பெரியபுராணத்திலுங் கண்டறிந் தோர்க்கன்றி மற்றையோர்க் குப் புலப்படுவ தெங்ங்ண்? "மண்டமாலோ’ “தண்ணறுங் கோங்கமலை’ என்பன 'மண்டமா.லோ" "தண்ணறுங் கோங்க. மலை" என முன்னையதில் ஒரெழுத்தும் பின்னை யதில் இரண்டெழுத்துமே மாத்திரம் அவ்வச் செய்யுளின் ஈற் றெழுத்து எனக் கண்டுபிடிப்பது எந்த ஞானக்காட்சி கொண்டோ! இவற்றுள் அநேகம் இக்காலத்து இல்லாத நூல்களில் உள்ளனவாயின் யாதுதான் செய்தற்பாலது? உள்ள நூற்கும் எல்லாவற்றுக்கும் பெயர் குறித்தாரா?
இதுமட்டோ? ஒரோரிடத்தில் ஒன்றினின்று ஒன்றைப் பிரிக்கும் அடைசொல்லாவது குறியாவது இன்றி முதலும் ஈறும் முதலும் ஈறுமாகப் பல செய்யுட் குறிப்பு ஒரு தொடராய் வருவனவும் உள. இவற்றின் அடிமுடி தேடுவது பூரீஅருணா சலேஸ்வரனுடைய அடிமுடி தேடிய பிரம விஷ்ணுக்களின் பிரயாசைக்கு எட்டுணையேனுங் குறையுமா?
பண்டுதாங்கலந்தரியர னிருவரும் பயந்த செண்டு தாங்குகைம் மேலையோன்மால்வரைச் சென்றான்.
-கந்தபுராணம் கணங்கள்செல் படலம்,8 வாம்பெருந்திரை வளாகமுனகுடிபயில் வரைப்பிற் றாம்பரப்பிய கயல்களின் விழிக்கயறவிரக் காம்பி னேர்வரு தோளியர்கழிக்கயல் விலைசெய் தேம்பொதிந்தசின் மழலைமென்மொழிய செவ்வழியாழ்.
- பெரியபுராணம், திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,38
Page 79
152 தாமோதரம்
இதனால் உரையாசிரியர்மேற் குற்றஞ் சொல்கின்றே னென்று கொள்ளற்க. அவர்காலத்து அச்செய்யுட்களும் அவற்றையுடைய கிரந்தங்களும் வழக்கத்துள்ளனவாதலால் அவர் அப்படிச் செய்யலாயிற்று. நமது தேசத்துக் கிரந்த மண்டபங்கள் துலுக்கரால் அக்கினி பகவானுக்கு அளிக்கப் படுமென்றும், தப்பிக் கிடந்தனவும் எழுதுவாரும் படிப் பாரு மின்றி ஒன்றொன்றாய் இத்தனை இலே சில் இறந்து விடுமென்றும் அவர் கனவிலும் நினைத்தவரல்லர். அவை இறந்து போன இக்காலத்திற்கே இஃதோர் பெருஞ் சங்கட மாயினது. அல்லதூஉம், அவர் குறியீடு கொடுத்துப் பிரித்தும் இருக்கலாமே.
இனிச் செய்யுண் முழுவதுங் காட்டப்பட்டவற்றுள்ளும் இஃது இன்ன பா இன்ன பாவினமென்று நிச்சயிப்பதும் பல விடத்து மிக அருமையாயினது. கலியினமான சில செய்யுட் களை அடிபிரிப்பதிற் சந்தேகமுற்றுப் பல தக்க பண்டிதரை எழுதி விசாரித்தபோது அவர்களும் மயங்கி இணைக்குறளா சிரியப்பாவாகப் பிரித்தனுப்பினர். யாது செய்யுளைத்தான் இணைக்குறளாசிரியமாகப் பிரிக்கக் கூடாது?
முதலில் ஒரே செய்யுளென அடியேன் கொண்டதோர் உதாரணம் பின்னர் அயனூல் உதாரணச் செய்யுட்களால் வெவ்வேறு நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு செய்யுளெனக்கண்டு அவ்வாறு மாற்றலாயிற்று. பொருட் சுவையே பெரிதெனக்கொண்டு மோனை எதுகை ஆகிய சிறப் புக்களைப் பாராட்டாத சங்கச் செய்யுட்களைப் பழம் ஏட்டுப் பிரதிகளில் வாசித்து அடிவகுத்தறிந்த பெரியோர்க்கு இதன் பிரயாசை தெரியாதிராது.
இனி, "இனி 'என்சொற் கொள்ளண் மாதோ’ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினைக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க' என்றாற்
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 153
போலவும் 'அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் கடுவும் உப்பும் புளியுங் கரும்பும் போல்வன” என்றாற் போலவுஞ் சொன்முடிவு பொருண்முடிவு பூரணப்படாமல் நின்றுNயும், ஆக்ஷேப விடைகள் பிறர்கோட் கூறல் தன் மதங் கோடலென் றிவற்றில் ஆசிரியர் மதமிது பிறர் மதமிதுவெனக் காட்டற் கவ சியமான அடைகள் சிதைவுற்றுக் கிடந்துழியும் , இன்னோ ரன்ன பிறழ்ச்சி பிற அநுமானிக்கப்பெற்றுபூழியும், பிரதிகள் அனைத்தும் ஒத்திருப்பனவற்றை எட்டுணையும் யான் மாற்றி லேன். எவ்வகைப் பொருட்டிருத்தமும் யானாகச் செய்த தின்று. துடங்கல் கலிழ்தலாதியவற்றின் ரூபத்தை மாத்திரம் இக்காலத்ததாகத் தொடங்கல் கலுழ்தலென மாற்றியிருக்கின் றேன்.
இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் இப்பதிப் பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும் படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன். அன்னோர் அறிவிக்குந் திருத்தங்களைத் திரட்டி, இன்ன இன்ன வழு இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டனவென்று குறிப்பிட்டுத், தொல்காப்பியப் பதிப்புத் திருத்த மென்றொன்று உடனே அச்சிட்டு வெளியிடக்காத்திருக்கின்றேன். ஐம்பது புதுத் திருத் தங்களுக்கு ஒரு பிரதி என் நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந் நூல் பிழையற வழங்கச்செய்தல் ஓர் பெரும் லோகோப காரமென்று உணர்வாராக.
இதனைப் பதிப்பித்தல் அச்சிற்குங் காகிதத்திற்கும் வந்த செலவினும் பரிசேர்தனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்றதாகலானும், இப்பெயர்ப்பட்ட அரிய நூல்களைப் படிக்க விரும்பி வாங்குவோர் சிலரேயாதலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம்முதலுக்கே நஷ்டத்தை விளை விக்கின்றது. ஆதலாற்றமிழ் விருத்தியில் அபிமானமுள்ள பொருட்செல்வர்களாற் சிறிது சகாயம் பெற்றாலன்றி இன்
Page 80
154 தாமோதரம்
னும் இதுபோல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தலில் ஊக்கஞ் செல்லாது. இதுவரையும் அச்சுமணமும் பெறாத பூர்வ கிரந் தங்களையே தேடிப் பதிப்பிக்கும் நோக்கமுடையேற்குக் கல் வியருமை தெரிந்த திரவிய சீலர்கள் கைகொடுப்பார்களென்று நம்புகின்றேன்.
ஒரொருவர் ஓரொருநூலைத் தமது செலவிற் றமக்கு இஷ்டமான வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிடுவிப்பினுந் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேருபகார மாகும்? எத்தனை அரிய நூல்கள் இற வாதொழியும்? அடியேன் வேண்டுகோளின்படி, முன்பு திருவனந்தபுர அரசற்கு மந்திரியாயிருந்த கனம் பொருந்திய பூரீமத். அசேஷையசாஸ்திரியாரவர்கள் கலித்தொகையையும், கூடலுர்ப் பிரபுக்களில் ஒருவருந் தர்மசீலருமாகிய பூரீமத் மஞ்சக்குப்பம் இராஜரத்தின முதலியாரவர்கள் தொல் காப்பி யம் சொல்லதிகாரத்தையும், நச்சினார்க்கினியாருரையோடு தமது செலவாகப் பரிசோதித்துப் பதிப்பிக்கும்படி உத்தரவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முன் மாதிரியைப் பிறரும் அனுஷ்டிப்பாராக. இதில் முந்தி நிற்க வேண்டியவர்கள் மடாதிபதிகள்.இவர்கள் கருத்து இதிற் செல்லுமாறு சரஸ்வதி கிருபைபுரிவாளாக,
திரவியலாபத்தை எவ்வாற்றானுங் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டங் கொஞ்சமன்று. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்ட முறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீகூைடியிற் றேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர்தத் தஞ் சொய பாஷையில் அச்சிடப்படும்பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமையென் றெண்ணுகின்றேன்.
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை 155
இந்நூலைப் பதிப்பித்தற்கு வேண்டிய காகிதத்திற் காகத் திரவியசகாயஞ் செய்த கண்ணிய தருமசீலர் இருவர் உளர். . அவர்களுக்கு மிக்க நன்றி கூறுகின்றேன். கும்பகோணம்
பார்த்திப வருடம் ஐப்பசி மாதம் சி.வை.தா.
(தொல்காப்பியம், பொருளதிகாரம்: இஃது பாரத்துவாசி நச்சினார்க்கினியார் இயற்றிய உரையோடும் பல தேசப்பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. பார்த்திப வரு Lb gajshudrigub Madras: Printed at the Scottish Press, by Graves, Cookson and Co, 1885. g)g56ör Giớ60) av e5.6.00)
Page 81
பின்னிணைப்பு
ஈழகேசரி:ஞாயிறு, 17-9-1950
ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப் பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல் விட்டெண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம் பிள்ளை கண்டார், கண்ணிர் வடித்தார். தொல்காப்பியக் கடலில் இறங்கினார்.
தொல்காப்பியப் பதிப்பு தமிழ் தந்த தாமோதரம் பிள்ளையின் பரமோபகாரம் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னே . 1847ஆம் ஆண்டு பில வங்க வருடம் ஆவணி மாதம் முதன்முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள்தொல்காப்பியம் எழுத்த திகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித் தார்கள். பன்னிராயிர வருஷகாலம் கற்றோர் மனசிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்துவந்த தொல்காப்பிய மூலத்தில் எழுத்த திகாரமும், பல நூறு வருஷங்களாக அவ்வாறு இருந்துவந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனம் ஏறின.
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 157
இந்த மகாலிங்கையர் அவர்கள்தாம், ஆறுமுகநாவலர் அவர்கள் நாவலர்ப்பட்டம் பெறுமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்லநடைப்படுத்திக் கொடுத்த பைபிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்ததென்று வியந்து நாவலர் அவர்களையும் அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள்.
மகாலிங்கையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர் கள்போல அக்காலத்திலிருந்த வேறு இரு அறிஞர்கள், விசா கப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவருஞ் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்; சிவஞான சுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய கச்சியப்ப முனிவரின் மாணவர். விசாகப் பெருமாளையர் மூத்தவர். நாவலரவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்ப் புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி நேரிலும் சந் தித்து அடிக்கடி சம்பாஷித்திருத்திருக்கிறார்கள் . விசாகப் பெருமாளையர் இளமையில் தந்தையாருடன் சென்று-தந்தை யாரின் குரு கச்சியப்பமுனிவர், முனிவரின் குரு சிவஞான சுவாமிகள்-சுவாமிகளை "வணங்குகிறவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞான சுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக் கின்றார். இழவுகளிற் சந்தேகமானவர்கள்-ளகரழகர பேத சந்தேகிகள் - விசாகப்பெருமாளையரோடு சம்பாஷித்தால், எளிதிற் சந்தேகம் தீர்த்துக்கொள்ளலா மென்று நாவலர் அவர் கள்- விசாகப்பெருமாளையரின் உச்சரிப்பை அடிக்கடி பாராட் டுவார்களாம். இது நிற்க.
மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சி னார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும்,
* சிவஞானசுவாமி, கச்சியப்பமுனிவருக்குஆசிரியராயினும் கச்சியப் பர்சிவபதமடைந்த பிறகும் மூன்று ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர்.
Page 82
58 தாமோதரம்
ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்துவைத்தும், தமிழ் நாட்டுப் புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வர வில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருண்முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியந் தொலையக்கூடாதென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்பது கருதத்தக்கது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல் காப்பியப் பிரதிகள் வர வர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டெண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந் தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவ சூடாமணிகள் சிலர், தாமோதரம் பிள்ளை இமாசலத் தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டுபோகப் போகி றார் என்று சிரித்தார்கள்.
1868ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன்முதல் தமிழ் மன்னன் தாமோதரம் பிள்ளை, தமிழ்நாடு உய்யும் பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் சென்னைத் தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப் பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந் ჭნტl•
சூரியநாராயண சாஸ்திரியார் "தாமோதரம்பிள்ளை சால் பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேதநாயகம் பிள்ளை"கோடிபுலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே' என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடினார்கள். மனோன்மணியம்
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 159
சுந்தரம்பிள்ளை, கலாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், சேஷைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹைக்கோர்ட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மாகராசாக் கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகலித்தார்கள். பூரீலழறி சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ் செய்தார்கள்.
ஆனால் வித்துவசூடாமணிகளான கோமளயுரம் இராச கோபால பிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர் களுக்கு அடிவயிற்றிலே அக்கினிசூடாமணி வேலைசெய்யத் தொடங்கிற்று. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரைமறைவில் நின்று, நரசிங்கபுரம் வீராசாமிமுதலியாரைக் கிள்ளிவிட்டார் கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால் அவர்தாம் இன்னாரென்று இதோ விளம்புகின்றேன். இவர் இராமலிங்க சுவாமியின் முதற் சீடர். அருட்பாப்புராணத்தில் ‘தவக் கொழுந்து" என்று புகழப்பட்டிருக்கிறார். இராமலிங்கரின் அடுத்தவாரிசு இவரே என்று சுத்தானந்த பாரதியார் முழங்கு கின்றார். இந்த வீராசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும் நாவலரையுந் திட்டிப் பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின் றார். 'தீவாந்தர சைவ விநோதம்" என்ற நூலிலே நாவலரைப் படுகிருஸ்தவரென்றும் நாவலருக்குக் கிருத்துவப் பெயர் 'பைராட்" என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திருக்கின்றார். இந்த அருட்பாப் புலவராகிய வீராசாமி முதலியார் அந்த இரு இலக்கண் மேதைகளின் உதவிகொண்டு தாமோதரம்பிள்ளை யின் சேனாவரைய விளம்பரத்தில் இலக்கணப் பிழைகள் கண்டு பிடித்து "இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும் சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான் களில் தமக்கு இணையில்லாதவருமாகிய " என்று நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விசேடணத்தை ஆக்ஷேபித்து, "இணையில்லாதவர்' என்பதற்குப் 'பெண் சாதி யில்லாதவர்” என்று மெய்ப்பொருள் பண்ணி, தாமோதரம்
Page 83
160 தாமோதரம்
பிள்ளையையும் நாவலரையும் தூஷித்து, 1869ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘விஞ்ஞாபனப் பத்திரிக்கை" என்று ஒரு தூஷண பத்திரிகை வெளியிட்டிருக்கிறார்.*
தாமோதரம்பிள்ளை கறையான் வாயிலிருந்து சேனா வரையத்தை மீட்டு வெளிட்டதற்கு இராசகோபாலபிள்ளை முதலிய சென்னைப் பண்டிதமணிகள் சிலர் செய்த கைம்மாறு, "பெண்சாதி நியாயம் பேசும், இந்த ‘விஞ்ஞாபனப் பத்திரிக்கைத் தூஷணந்தான்.
இந்த இராசகோபாலபிள்ளை ஒருவர் பதித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பைப் புதிது பண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்ல வர் கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தா ராகிய கூடலூர்க் குமரகுரு சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப் பித்த "பரமோத்தர ரசாபாச தருப்பணத்"தில், 35ஆம் 36ஆம் பக் கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அது வருமாறு;-
'இராசகோபால பிள்ளை திருத்தியச்சிற் பதிப்பித்த புத்த கத்தைப் பாராதீர். ஏனெனில் அவர் முதனூர் கருத்தறியாதவ ராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப், பெரி யோர் செய்த வாக்கை அழிக்கக்கூடாதென்று சிறிதும் அஞ்சது, சிவபரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத்தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத்திரித்தும், மனம் போனவாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால், அதனை நீக்கி வில்லிபுத்தூர7ர் 4/7டினபடியே ஆறுமுகநாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதித்துப் பாரும் பாரும்.
*தாமோதரம்பிள்ளை அவர்கள் அறிஞர்கள் பிரபுக்கள் சூழலிலும், உயரிய உத்தியோக அந்தஸ்திலும் இருந்தமையால், அழுக்காற்றுக் கண்டனங் களால் தளர்வடையவில்லை. ஆயினும், பிள்ளையவர்களைச் சோர்வடையாமல் ஊக்கும் பொருட்டுப் போலும், நரசிங்கபுர வீராசாமி முதலியாரே" என்று விளித்து, நல்லறிவுச் சுடர் கொளுத்தல் என்ற உக்கிர கண்டனம் நாவலர்அவர்களால் தீட்டப்பட்டது.
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 161
உமது சந்தேகந் திரும் திரும். நாவலர் என்னும் பட்டம் அவருக்குத் தகுமேயன்றி உமக்கெல்லாம7தகும்/4/லியை நோக்கிப் பூனை குடிக்கொண்டால் 4/ழுத்துச் சாமேயன்றிப் 4/லியாமா/அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுகநாவ லரை நோக்கி நீரும் அப்பெயர்தரித்துக் கொண்டார் பழியும் 477 oo Zعyیۓy60p4 627/7Zیے فتح کیے/4 تر74/6A7zھ) 627 y6224یے تھzص/76.2//Z
ya)4 4.7i. '
இத்துணைப்பெருஞ் சிறப்பினராய இராசகோபால பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடுக்கி லிருந்து வந்த தாமோதரம்பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேனா வரையம் பதிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதா? மனிதர் ஒரு சூழ்ச்சி செய்தார். நினைக்க முடியாத சூழ்ச்சி; திகைக்கக் கூடிய சூழ்ச்சி. அஃதாவது, தம் பெயராலும் ஒரு சேனாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான் இராசகோபாலபிள்ளையும் சேனாவரையம் பதித்தார் என்று சொல்லப் பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்புத் தமிழ்நாட்டில் வழங்கியதாக. வழங்குவதாகத் தெரிய்வில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி.வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதித்தார் என்று இருக்கிறதேயன்றி இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னைச் சர்வகலாசாலையில் தமிழ்ப் பகுதி முக்கியஸ்தர் களான திரு.வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள், இராச கோபாலபிள்ளை சேனாவரையம் பதிப்பித்ததாகத் தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை அப்படி ஒரு பதிப்பைக் கண்டது மில்லை என்கிறார்கள். ஆனால்,
மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமாநுஜையங்கர் அவர்கள், "சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபிள்ளை யால் பரிசோதித்து, மு.கந்தசாமி முதலியார் வர்த்தமான
Page 84
162 தாமோதரம்
தரங்கிணிசாகை அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது' என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கிறதென்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலபிள்ளை பதிப்பு எப்பொழுது பதிக்கப்பட்டது என்று கேட்டபோது (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம் என்று அம் முகப்பில் தானே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இராசகோபால பிள்ளை பதிப்பு ஒன்று இருக்கவேண்டும் என்பவர்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரியதொரு சம்பவமேயாயினும் , தாமோதரம் பிள்ளை பதிப்புக்கு முன் இராசகோபாலபிள்ளை பதித்திருக்க வேண்டும்" என்று மனப்பால் குடிக்கிறவர்களுக்கு மெல்ல வாயை மெல்லுவதற்கோ-மகிழ்ச்சி கொள்ளுவதற்கோ இடமேயில்லை. தாமோதரம்பிள்ளை பதிப்பு இரண்டு மாசங் களுக்கு முன் (1868) விபவ வருஷம் புரட்டாதியிற் பதிக்கப்பட் டுவிட்டது, ஆகவே இராசகோபாலபிள்ளை சேனாவரையப் பதிப்புப் ப்தித்தால் அது ஏடுகளைப் பரிசோதித்துப் பதித்த பதிப்பு என்று சொல்ல முடியாது.
1906இல் மதுரைச் சங்கத்தில் படித்த கோபாலையர் என்பவர் "சேனாவரைய ஆராய்ச்சி என்று ஒரு கட்டுரை "செந்தமிழ் ப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை தாமோதரம்பிள்ளை பதிப்பிலும் பார்க்க, ஒரு சில திருத்தஞ் சொல்லி இராசகோபால பிள்ளை பதிப்பைப் பாராட்ட முயற்சிக்கின்றது. ஆனால் இராசகோபாலபிள்ளை யும் சேனாவரையம் பதித்திருக்கின்றார் என்று அறுதியிட்டுக் கூறாது, இராசகோபாலபிள்ளை பதிப்புப் புத்தகம் என்று கருகல் செய்து நடக்கின்றது. இக்கருகலாலும், அரசாங்க புத்தகப் பதிவில் இராசகோபாலபிள்ளை பெயரால் சேனாவ ரையப் பதிப்பு இல்லாமையாலும் இராசகோபாலபிள்ளை திருட்டுப் பிரசித்தமாகையாலும் தாமோதரம்பிள்ளை பதித்து இரண்டு மாசத்துக்கிடையில் திடீரென்று தோன்றினமை யாலும், தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதி கிடைத்தாலும்,
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 163
இராசகோபாலபிள்ளை பதிப்புக் கிடையாமையாலும், தாமோதரம்பிள்ளை முதலிய யாழ்ப்பாணத்து அறிஞர்களில் இராசகோபால பிள்ளைக்கு மாற்சரியம் உண்மையாலும், திரு, இராமாநுஜையங்கார் அவர்களிடமிருக்கும் இராச கோபாலபிள்ளை பெயராலுள்ள சேனாவரையம், "புதிய பதிப்புத்தானோ, தாமோதரம்பிள்ளை பதிப்புச் சிலதாள்கள் வேறுபட்டுத் தோற்றுந் தோற்றமோ என்பதை அறிஞர்கள் ஊகிக்கக்கடவர்கள். எங்ங்னமாயினும், என்னைப் பொறுத்த வரையில் இராசகோபால பிள்ளைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் தாமோதரம்பிள்ளை பதிக்கு முன் தாம் பதித்ததாகக் காலத்தை முன்னுக்குத்தள்ளாமல் எக் காரணத்தினாலோ (தாமோதரம்பிள்ளை பதிப்பில் பிழை காண்பான் போலும்) தம் பதிப்பைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்காக நன்றி செலுத்த வேண்டாமா என்கின்றேன். இராசகோபாலபிள்ளை வாழ்க. w
அதே விபவ வருடம் (1868) கார்த்திகை மாதம் மற்றொரு தொல்காப்பியப் பதிப்பு வெளிவந்தது. அது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை. இதனைப் பதித்தவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் மாண வர் சுப்பராயச் செட்டியார் அவர்கள். எழுத்ததிகாரம் இளம் பூரணத்தை ஏட்டிலிருந்து முதன்முதல் அச்சில் கொணர்ந்தவர் கள் செட்டியார் அவர்களே.
தமிழ்நாடு தொல். எழுத்தையும் சொல்லையும் எழுத் துக்கு நச்சினார்க்கினியம் இளம்பூரணம் என்கின்ற உரைகளை யும் சொல்லுக்குச் சேனாவரையத்தையும் பெற்றுக்கொண் டது. இவற்றை முதன்முதற் பதித்த பெருமக்களைக் காலக் கிரமஞ் செய்தால் மழைவை மாகலிங்கையர், சி.வை.தாமோ தரம்பிள்ளை, சுப்பராயச் செட்டியார் என்றே கிரமஞ்செய்ய வேண்டும். எழுத்தையும் அதற்கு நச்சினார்க்கினியத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை மகாலிங்கையருக்
Page 85
164 தாமோதரம்
குரியது. அவ்வாறே சொல்லையும் அதற்குச் சேனாவரையத் தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்குரியது. எழுத்துக்குரிய இளம்பூரணத்தை முதன் முதல் அச்சில் தந்த பெருமை சுப்பராயச் செட்டியார்க்குரியது. சந்தேகப் பேர்வழியாகிய இராசகோபாலபிள்ளைக்குப் பதிப்பாளர் நாமாவலியில் இடங்கொடுக்க இடமில்லை. அப்படிக் கொடுப்பினும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை அவருக்குக்கிடையவே கிடையாது. இல்லையே இல்லை! இராசகோபாலபிள்ளையின், அரசாங்கப் பதிவு புத்தகத்தை ஏமாற்றிய கள்ளச் சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம். தாமோதரம்பிள்ளையின் அரசாங்க பதிவு புத்தகத்தை ஏமாற்றாத களவில்லாத சேனாவ ரையப் பதிப்புக்காலம் (1868) விபவ வருடம் புரட்டாதி மாதம் இரண்டு மாசங்கள் முந்தி.
மழைவை மகாலிங்கையர் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதித்து இருபது வருஷங்களுக்குப் பிறகு, சுப்பராயச் செட்டியார் (1868) விபவ வருடம் கார்த்திகை மாதம் எழுத்து இளம்பூரணம் அச்சிற்பதிக்க இரண்டுமாசங்களுக்கு முன், அஃதாவது இற்றைக்கு 80 வருஷங்களுக்கு முன்னமே.
இந்தப் பூமண்டலத்திலே தமிழ்நாட்டிலே தொல்காப்பி யம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை, தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத பூரீலழறி ஆறுமுகநாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து, முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப்பித்தவர்கள் தமிழ்மகார் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியைக் கோடாதுகோடி கூறிட்டு, அக்கூறுகளில், ஒரு கூறாகிய ஒரு மயிர்நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை! இஃதிங்ங்ணமாக,
எழுத்துச் சொல் பதித்தவர்கள் நாமாவலியை, 'மழைவை மகாலிங்கையர், சுப்பராயச் செட்டியார், இராசகோபாலபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை"
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 165
என்று வரிசைப்படுத்தி, காலத்தால் இரண்டாம் இடத்தினராய் முதன் முதல் பதித்தலாகிய செய்கையால், மகாலிங்கையரோ டொப்ப முதலாம் இடத்தினராய சி.வை. தாமோதரம் பிள்ளையை, நான்காம் இடத்தினராக்கி, "இராசகோபால பிள்ளை பதிப்பையே தாமோதரம்பிள்ளை பார்த்துப் பதித்திருக்கவேண்டும்" என்று படிக்கிறவர்கள் உணரும்படி வைப்புக் கிரமம் செய்யாமற் செய்து,
செய்ந்நன்றி கொல் வோரும் இப்பூமிக்குப் பாரமாய் உளராயின், அவர்தம் அதோகதிக்கு இரங்கி, (1868) விபவ வருஷத்திலும், ஏனைய வருஷத்திற் போலவே, கார்த்திகைக் குமுன் ஐப்பசி; ஐப்பசிக்குமுன் புரட்டாதி, என்று விரல்விட் டுக் காட்டுவதோடு, மகாலிங்கையர் பதிப்பு 80 வருஷத்துக்கு முந்தியதன்று; நூறு(100)வருஷத்துக்கு முந்தியது; தாமோதரம் பிள்ளை பதிப்புதான் 80 வருஷத்துக்கு முந்தியதென்றும் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.
'உலகத்த7ருண்டென்பதில்லென்பான் வையத் ക്രഖഞൿ//7 ഞഖൿz7 //ശ്രമ', இனி அப்பாற் செல்வோம்.
"எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறே மெனின் இவை பெற்றும் பெற்றிலேம்"
என்று ஒரு குரல் கடைச்சங்க காலத்துப் பாண்டிய அரச னொருவன் வாயிலிருந்து கேட்கின்றோம். கடைச்சங்கத்துத் தலைமைப் புலவோராகிய நக்கீரரே அக்குரலைப் பெருக்கு கின்றார்.
இக்குரலிலிருந்து தொல்காப்பியத்தின் உயிர் நிலையம் எந்த அதிகாரம் என்பதை எவருந் தொட்டுக்காட்டலாம். அந்த உயிர் நிலையமாகிய பொருளதிகாரம் 1868ஆம் ஆண்டு கழிந்து , 1878ஆம் ஆண்டும் போய், 1884ஆம் ஆண்டும் நீங்கி
Page 86
66 தாமோதரம்
இன்னும் அச்சில் வெளிவரவில்லை. ஓர் இராசகோபால பிள்ளையோ, ஒரு தொழுவூர் வேலாயுத முதலியாரோ, இவர்கள் சூத்திரப் பாவையான வீராசாமி முதலியோ திருவுள்ளம் இரங்கவில்லை! வெறுங்கைக்கு முழம் ஏது!
தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார ஏடு ஒரு சில வாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப் பட்டும் சிதைந்து, இறுதி மூச்சு விடுவதைத் தமிழ்மகன் ஒரே ஒரு தாமோதரன்தான் கண்ணுற்றான்; கண்ணீர் சொரிந்தான். 1885ஆம் ஆண்டு பொருளதிகாரம், முதல் ஐந்தியல்கள் நச்சி ஞர்க்கினியர் உரையோடும் பின்னான்கியல்கள் பேராசிரியர் உரையோடும் அச்சுவாகனம் இவர்ந்து, தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டில் பவனி வந்தது.
'பல்கர் பழகினுந் தெரியா உணவேல் தொல்காப் பியந்திருவள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும் ” அன்றோ!
நாவலர் பதிப்புக்களான திருவள்ளுவர் கோவையார் என்பவைகளோடு, தொல்காப்பியம் முழு உருத்தரித்துக் கைகோத்துக் குதூகலித்தது. தமிழ் அன்னை புன்னகை பூத்தாள்.
1891ஆம் ஆண்டில் பலருடைய வேண்டுகோளின்படி மழைவை மகாலிங்கையர் பதித்த எழுத்து நச்சிஞர்க்கினி யத்தை மிக அருகினமையால் திருப்பிப் பிள்ளை அச்சிட்டார். அடுத்த ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் பிள்ளை யால் முதன்முதல் அச்சிடப்பட்டது. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் தவிர, சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப் பெல்லாம்,மற்றொருவர் பதியாத புத்தம் புதிய பதிப்புக்களே. "ஒருமுறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்கா
தொல்காப்பியப் பதிப்பு-சி.கணபதிப்பிள்ளை 167
யிற்று. அன்றியும் ஒரு பெருநூலின் முதலிலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதி யடைந்து விட்டால் பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடு வோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலக வழக்கும் அதுவே."
என்ற பிள்ளையவர்கள் கூற்றுங் கரிபோக்கும். 1881இல் வீரசோழியமும், 1883-ல் தொல் - பொருளதிகா ரத்துக்குத் திறவு கோலான இறையனார் களவியல் உரையும், அவ்வாண்டில்தானே சிவஞான சுவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் இயற்றிய தணிகைப் புராணமும், 1887இல் கற்றறிருந்தா ரேத்துங் கலியும் உரையும், 1889இல் குட்டித் தொல்காப்பியமாகிய இலக்கண விளக்கமும், சூளாமணியும் பிள்ளை அவர்கள் அச்சிட்ட புத்தம் புதிய பதிப்புக்களே.
திரு. நா.பொன்னையா அவர்கள், மகா வித்துவான் கணேசையர் அவர்களின் மரபு நெறியப்பட்ட ஆன்ற அறிவைப் பயன்படுத்தி, சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபமாக தற்காலத்துச் சனநாயகத் தமிழுக்குத் தலைக்கெட்டாத "கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழ்வாய்” நுழை வார்க்கு அரியதொரு சாதகமாக, பிள்ளையவர்கள் பதித்த தொல்காப்பியம் முழுவதையும் நாற் பெருங்கூறிட்டு, அழகிய முறையில் அச்சிட்டுபகரித்தது, பழந் தமிழறிஞர்கள் பாராட்டியமையாது. d
திரு. பொன்னையா அவர்கள் தேச கைங்கரியங்கள் செய்து வருவதையிட்டு அரசாங்கம் "ஜே.பி.யாக நியமித்தி ருக்கிறது. நான் அவர்களுடைய சாஸ்திர கைங்கர்யங்கள் குறித்து, "வராகம்’ என்கின்ற பட்டத்தை வழங்க விரும்புகின் றேன்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் 'கற்கி" (கல்கி) அவ தாரம் போல, "வராகம்’ என்பதும் ஒரு விஷ்ணு அவதாரம்.
Page 87
168 தாமோதரம்
அறிவுப் பொக்கிஷங்களாகிய தொல்காப்பியம் போன்ற நூல் களை அசுரர்கள் சிதைத்து ஆழ்த்துங் காலங்களிலே, விஷ்ணு வராகமாய்த் தோன்றித் தனது வக்கிர தந்தங்களில் ஆழ்த்திய அறிவுப் பொக்கிஷங்களைத் தேடி எடுத்து ஏந்தி உபகரிப்பது புராணப் பிரசித்தம்.
தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத் தேடி எடுத்து ஏந்திப் பரமோபகாரஞ் செய்த சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் ஆதிவ்ராகம். பிறகு தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறை கிற சமயத்திலே, நன்றிமறவாமல் அதனை எடுத்துத் தாங்கிப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. பொன்னையா அவர்கள் "உத்தரவராகம்’.
திரு. நா.பொன்னையா ஜே.பி. அவர்கள் செய்த புண்ணி யத்தோடு புண்ணியமாக, சி.வை.தாமோதரபிள்ளை பதிப்பு களில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப்புரைகளை ஒன்று சேர்ந்து, ஒரு தக்க முன்னுரையோடு அடிக் குறிப்புக்களோ டும், வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பிள்ளை அவர்களின் பதிப்புரைகள், தமிழ் வரலாறு தமிழ் நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புகளுக்கு வரலாற்றுப் பாடமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
- 6.9.1950
Page 88
Page 89
பதிப்புச் arr (2 ra - 5ЈОI DIJE, U
திரு.சி.வை. தாமோத பதிப்பித்த நூல்களுக்கு தொகுப்பே இந்நூல்.
இந்நூல் வெளிவரு மதுரைப் பல்கலைக்கழக
மீனாட்சிசுந்தரன் அவர்கள்
திரு.சி.வை.தாே அவர்களின் உரைந தொகுத்து 'தா' பெயரில் வெளியி கேட்டு மட்ட கொள்கிறேன். பின் ஆராய்ச்சியையும் இந்த உரைநடை தெளிவுடன் எடுத்
செம்மல் 'ம்பிள்ளை
நரம்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய பதிப்புரைகளின்
வதை அறிந்த முன்னாள் உப-வேந்தர் தெ.பொ. பின்வருமாறு வாழ்த்தினார்:
மோதரம்பிள்ளை டைப் பகுதிகளைத் மோதரம்" என்ற பிடப் போவதைக் :ற்ற மகிழ்ச்சி ர்ாளை அவர்களின் தமிழ் அன்பையும் நூல் தெள்ளத் துக் காட்டும்.
Page 90
ஒலிபரப்புக் கலே
கொண்டு போய் உச்சத்தில், எடுத்துக்கொண்ட முக் ய சம்பவத்தை அமைத்தல்வேண்டும். அதன் பின்னர் ாடகத்தை மீட்டாமல் விறுவிறுப்பான நடையில் இறக்
மைதியாக முடித்தல் வேண்டும். சங்கீத பரிபாஷையில் சொன்னுல், நாடகம் ஆரோகனம் பெற்று சங்கதிகள் /ல செறிந்து, துரித கதியில் உச்சஸ்தாயியைத் தெரிட வேண்டும். பின்னர் வேகமாக அவரோகணமாகிப் பக்குவ மான அமைதியில் முத்தாய்ப்பைப் பெறவேண்டும்.
ரேடியோவுக்கு எழுதப்படும் பேச்சில், சிறுகனித உரு வங்களேப்போல, நாடக உருவத்திலும் சில சிறப்பான அம்சங்களே நாடகாசிரியர்கள் கவனித்தல் வேண்டும். நடிகர்கள் பேசும் வார்த்தைகளெல்லாம் நடிப்பு அம்ச மில்லாமல் வெறும் சொற்கூட்டமாக இருந்தால் ரேடியோ நாடகம் கேட்கும் கேயர்கள் உள்ளத்தில் எவ்வித உணர்ச்சி யையும் எழுப்பமுடியாது. ஆகையால், நாடகாசிரியர்களாக வர விரும்புவோர் இந்த விதியை நன்கு கவனித்தல் வேண்டும். வெறும் வார்த்தை யலங்காரமாக, வருணனேச் சொற்களே அபரிதமாகக் கோத்து, பிரசங்கம் செய்யும் பாவனேகளேத் தவிர்த்தல் வேண்டும். நடிகருடைய பேச்சில் புகுத்தும் வசனங்களெல்லாம் அந்த நடிகரின் இதயமும் அவயவங்களும் நடிக்கத் தக்க செயல் நிறைந்த வசனங் களாயிருத்தல் வேண்டும்.
சம்பாஷணையை எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்தி ரத்துக்கும் நிதானமான அளவில் சம்பாஷனே தீர்மானிக் கப்பட வேண்டும். அளவுக்கு மிஞ்சி ஒரு பாத்திரத்தின் சம்பாவுணே நீண்டிருந்தால், நேயர்களின் புலனே அலுக்க வைக்குமாகையால், சுருக்கமாகவே சம்பாஷணை அமைத்தல் ரேடியோ நாடகத்துக்கு அழகு தரும்.
ரேடியோச் சாதனம் ஒரு வரையறுக்கப்பட்ட குழு வினருக்கோ சமூகப் பிரிவினருக்கோ கட்டுப்படுத்தப்பட்ட
ரேடியோ நாடகம் ፲8ኛ
கருவியல்லவாகையால் ஒலிபரப்பப்படும் பேச்சுக்களும் நாடகங்களும் எல்லார்க்கும் பொதுவானவை என்ற உண் மையை நாம் மனத்தில் இருத்திக்கொள்ளுதல் வேண்டும். ஆகையால், இந்த நிலையில், நாடகம் எழுதும் கதாசிரியர் கள் விவாதத்திற்குரிய விஷயங்களேயும், அரசியல், மத தூஷணயென்று கருதக்கூடிய விஷயங்களேயும் தவிர்த்தல் கடன் வாழ்விலே துரதிருஷ்டவசமாகச் சில மக்களுக்கு உடற்குறை ஏற்பட்டிருப்பது மற்றவர்கள் பரிகாசத்துக்கோ ஏளனத்துக்கோ உரிய விஷயம் அல்ல. அவர்களேக் கண்ணியமாக மதிக்க வேண்டியது ம்ே ஒவ் வொருவருடைய கடமையாகையால், ரேடியோ நாடகத்தி லும் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலாவது இங்ஙனம் பிறவியில் துரதிருஷ்ட மடைந்தவர்கள் மனத்தைப் புண்படுத்தவோ அல்லது அவர்கள் இடுக்கனே ஞாபகப்படுத்தவோ கூடாது. குறிப் பாகக்கூட ஞாபகப்படுத்துவது விரும்பத்தக்கதல்ல. அன்றி யும், நடிகர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் சிலேடை மொழியாகவோ, அல்லது விரும்பத் தகாத பொருள் கொள்ளக்கூடிய தொனியாகவோ இருப்பதையும்' விலக்க வேண்டும்.
காடகத்தின்மூலம் பண்பாட்டை வளர்த்தலேமுக்கிய கோக்கமா யிருக்கவேண்டு மாகையால், நாடகாசிரியர்கள் வசன நடையில் மதிப்பும் உயர்வும் தொனிக்க வேண்டியது இன்றியமையாதது. கோபம் கொண்ட சமயத்தில் ஒரு நடிகர் உபயோகிக்கும் வார்த்தைகளிற்கூடப் பண்பாடற்ற இழி சொற்களேச் சேர்த்தலாகாது. உதாரணமாக, நாயே, கழுதையே மிருகமே என்று திட்டுவது நடைமுறை வாழ் வில் சில இன மக்களிடையே காணப்பட்டபோதிலும் ரேடியோவில் இந்தப் பழிச் சொற்களே உபயோகித்த லாகாது; அது மரபாகாது. ஆகையால், சபை மரபுக் கேற்ற விதமாகச் சம்பாஷணை எழுதுவதே நலம்
Page 91
138 ஒலிபரப்புக் கலை
பயங்கரச் சூழ்நிலை நிறைந்த காட்சிகள்-கொலை, தற்கொலை, குத்து, வெட்டு, அதிக்கிரமம்-ரேடியோ நாட கத்துக்கு ஏற்றனவா என்பது விவாதத்துக்குரிய விஷயம். பொதுவாக இத்தகைய காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டு மென்று ஒரு சாரார் சொல்லுவார்கள். இளம் உள்ளங்களை இவை பாதித்து, அச்சத்தையும் பீதியையும் விளைவிக்கும் என்ற காரணத்தால் விலக்கப்பட வேண்டுமென்பது அவர் கள் கருத்து. ஆணுல், வாழ்வின் மார்க்கத்தில் எத்தனையோ துறைகள் எதிர்ப்படுவது இயல்பு. இவற்றில் கல்லன வற்றை வளர்த்து, தீயனவற்றை அகற்றுவதே நாடகத் தின் நோக்கமாகையால் தீயனவற்றைச் சுட்டிக் காட்டாம லிருக்கவும் முடியாது. ஆயினும், கேயர்களுக்கு அருவருப் புத் தோன்றக்கூடிய வகையில் கொலை, தற்கொலை, காமக் காட்சிகள், அல்லது வேறு கொடுமைகளை அளவுக்கு மிஞ்சி அழுத்திக் காண்பிப்பது ரேடியோ நாடகத்தில் விலக்கப்படுதல் வேண்டும். உயர்ந்த பண்பாட்டை வளர்ப்பதே நோக்கமாகக் கொண்டால் நாடகாசிரியர் பணி செவ்வனே நிறைவேறும்.
ஒலிபரப்பப்படும் பேச்சோ நாடகமோ காட்டின் சட்ட திட்டங்களுக் கமையவேண்டியதைக் கவனித்தல் நிலைய கிர்வாகிகளைப் பொறுத்த கடமையாயினும், கதாசிரி யர்களும் நாடகாசிரியர்களும் அச் சட்ட திட்டங்களைப் பூரணமா யறிந்திருத்தல் இன்றியமையாதது. நாடகாசிரியர் கள் தமது சொந்தக் கற்பனையில் நாடகங்களைச் சிருஷ்டிப் 'பதே மேலானது. பிறருடைய நாடகங்களைத் தமதெனச் சொல்லித் தர்ஜமா' செய்தல் துரோகமாகும். ஆனல் பிற ஆசிரியர்களின் கதைகளை அவ்வாசிரியர் பெயரால் அங்கீ கரித்துத் தமது சொந்த முயற்சியால் நாடக ரூபமாக்கு வதை எவரும் குறை கூற மாட்டார்கள். மூலத்தை எழுதிய ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை யும் பெயரையும் அங்கீகரிப்பது மாத்திரமல்ல; நியாயமாக
ரேடியோ நாடகம் 139
அக்த ஆசிரியருக்குரிய சன்மானத்தையும் கொடுத்துதவ வேண்டியது தழுவலாசிரியரின் கடமையாகும்.
பெரும்பாலான கதாசிரியர்களின் நூல்களெல்லாம் *உரிமை பதிவு செய்யப்பெற்றன’வாகவே இருக்கக் காண லாம். இந்த உரிமைச் சட்ட விதிகளை நாடகாசிரியர் களும் ரேடியோ நிலைய நிர்வாகிகளும் கன்ருகத் தெரிந்திருத் தல் அவசியம். பிரபலமான ஆசிரியர்களின் கதைகளும் 15ாடகங்களும் புத்தக ரூபமாக வெளிவந்திருக்கின்றன இவற்றை ரேடியோ நாடகமாக ஒலிபரப்ப விரும்பும் நிலைய கிர்வாகிகள், முதலில் அந்த ஆசிரியர்களிடமோ நூலின் உரிமையாளரிடமோ, பிரசுரகர்த்தாக்களிடமோ, அநுமதி , பெற்றுக்கொள்ள வேண்டும். அன்றியும், ஒலிபரப்புக்கு அவ்வாசிரியர் முயற்சியை உபயோகிப்பதற்குரிய சன்மா னத்தையும் கொடுத்துவிட வேண்டும்.
உரிமை செய்யப்பெருத எத்தனையோ இலக்கியங்கள் தமிழ் மொழியில் பாரம்பரியமாகக் கிடைக்கின்றன. உதா ரணமாக, சங்க நூல்களும் மற்றும் பல பழைய ஆசிரியர் களின் நூல்களும் பதிப்புரிமை இல்லாமல் மக்களின் பொதுச் சொத்தாக நிலவுகின்றன. அவ்வாசிரியர்கள் மறைந்து பல நூற்ருண்டுகள் ஆகியிருக்கலாம். ஆயினும், சில நூல்கள் புது முறையில் தற்கால ஆசிரியர் சிலரால் திருத்தி யமைக்கப்பெற்று அது காரணமாகப் பதிப்புரிமை பெற்றிருக்கலாம். அவற்றை உபயோகிக்கும்போதும் நாடகாசிரியரோ நிலைய நிர்வாகிகளோ ஜாக்கிரதையா யிருத்தல் வேண்டும்.
பதிப்புரிமைச் சட்டம் மாத்திரமல்ல. மான கஷ்டம் அல்லது அவதூறுச் சட்ட விதிகளையும் நாடகாசிரியர் கவ னிக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ நாடகங்களில் யாரையாவது பாதிக்கத் தக்க விஷயங்கள் ஏற்படலாகாது. அவதூறு வழக்கில் ஒருவரை கேரடியாக மானபங்கப்
Page 92
140 ஒலிபரப்புக் తాడి
படுத்தும் வார்த்தைகள் மாத்திரமல்ல, குறிப்பாகக்கூட உணர்த்தக்கூடிய கருத்துக்கள் இருந்தாலும் அவை குற்றமாகும். ஆகையால், நாடகாசிரியர்கள் தம் கதாபாத் திரங்களைச் சிருஷ்டிக்கும்போது எவர் ஒருவரையாவது மனத்தில் படம் பிடித்து வைத்துக்கொண்டு எழுத முற் படுவது ஆபத்தை விளைக்கலாம். வழக்கு ஏற்பட்டால் 5ாடகாசிரியரும் ஒலிபரப்பு நிர்வாகிகளும் நடிகரும் இடர்ப் 4ul- (3505th.
பன்னிரண்டாம் அத்தியாயம் நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும்
15ாடக ஒலிபரப்பிலே ரேடியோவின் பல்வேறு நிகழ்ச்சிகளின் பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப் பெறும் என்று முக்திய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருச் தோம். தனிப் பேச்சு, சம்பாஷணை, இசை, ஒலி விநோதம் முதலிய எத்தனையோ விதமான காரியங்களையெல்லாம் நாடக ஒலிபரப்பில் கொண்டுவந்து சேர்த்துவிடலாம். ஆகவே, ரேடியோ நாடகத்தை ஒலிபரப்புக்குத் தயாரித்து அதை நிறைவேற்றி வைக்கும் கலைஞர் மேற்சொன்ன சகல விதமான செயல்களிலும் தேர்ச்சியும் அநுபவமும் ஆற்ற லும் உள்ளவரா யிருத்தல் அவசியம். பொதுவாகச் சொல்லப் போனல் இலக்கியம், கவிதை, இசை, நாடகம் முதலிய துறைகளில் ஆழ்ந்த அறிவும், ஒலிபரப்பு யந்திர சாதனங்களைப்பற்றியும் அவற்றின் தொழின் முறை பற்றியும் போதிய அநுபவமும் பெற்றிருத்தல் இன்றி யமையாதது. அத்துடன், கேயர்கள் ரஸிகத்தன்மையையும் அவர்கள் மனப்பாங்கையும் சுலபமாக ஊகித்தறியும் ஆற்றலும் வேண்டும். ஆகையால், ரேடியோ நாடகத்தின் குத்திரதாரியாக ஏற்படத் தக்கவர் பண்புகளைப்பற்றி இங்கு ஆராய்த்து பார்த்தல் அவசியமாகின்றது.
சூத்திரதாரி
ரேடியோ நாடக குத்திரதாரிக்கு, முதலாவதாக, நாடக மேடையைப்பற்றிய எல்லாத் தகவல்களும் பூரண மாகத் தெரிந்திருத்தல் இன்றியமையாதது. மேடை, காட்சி யமைப்பு, 15டிப்பு 5டிகர் பண்புகள் சபை - இந்த
Page 93
142 ஒலிபரப்புக் கல்
விவரங்களைப்பற்றிய அறிவிருந்தால்தான் ஒலி மூலம் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றத்தக்க ஆற்றல் ஏற் படும். சபையோரை மகிழ்விக்கும் நடிப்புத் திறமை யிருந்து, அந்தத் திறமை மூலம் கற்பனைக் கண்கொண்டு, காட்சிப் புலனுக்குரியவற்றை யெல்லாம் வார்த்தைகளைக் கொண்டோ அல்லது வேறு ஒலி வடிவங்களாலோ, செவிப் புலன் நுகரும்படி சிருஷ்டிக்கவேண்டிய பொறுப்பு நாடக குத்திரதாரியைச் சேர்ந்தது. ஆகையால், காட்சிக்குரிய நடிப்பின் தத்துவங்களையும் அவற்றின் பலணுகிய அநுபவத் தையும் மனத்திலே படம் பிடித்து, சிந்தித்து, அதற்குத் தக்கவிதம் ஒலி மூலம் நடிப்புக் கற்றுக் கொடுப்பவரா யிருத்தல்வேண்டும்.
சபையோரைக் கவரத் தக்க பேச்சு வன்மையும், கலை விஷயத்தில் நுண்ணிதாக ஆராய்ந்து குறை நிறைகளை எடுத்துக் காட்டவல்ல பண்பும் அமையப் பெற்று, குத்திர தாரி, கேயருடைய நிலையில் தம்மையே வைத்துப் பார்க்கும் விசேஷ பக்குவம் வாய்ந்தவரா யிருத்தல்வேண்டும். கேயர் கிலையிலிருந்து பற்றற்ற முறையில் கவனிக்கத்தக்க பண்பு தான் மிக முக்கியமானது. இந்தப் பண்பிருந்தால்தான் தமது தயாரிப்பின் தாரதம்மியத்தைக் கவனித்துச் சிறந்த முறையில் ரேடியோ நாடகத்தை உருப்படுத்த முடியும்.
எல்லாவற்றையும்விட மேலாக, நாடக குத்திரதாரி மற்றவர்கள் மதிப்புச் செலுத்தத் தக்க சுபாவமும் கம்பிக்கை கொள்ளத் தக்க ஆற்றலும் கொண்டிருத்தல் வேண்டும். பலவித நடிகரையும் பலவித மனப்பான்மையும் கொள்கையுமுடைய கதாசிரியர்களையும் சமாளிக்கத் தக்க திறமையும் சாதுரியமும் வேண்டும். நடிகர் யாவருக்கும் நடிக்கக் கற்பிப்பதும், தாம் விரும்பிய கடிப்பு ஏற்படா விட்டால் அதைச் சாந்தமாகப் பொறுத்துக்கொள்வதும் எல்லாருக்கும் இலகுவான காரியம் அல்ல. இருந்தும்
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 148
A g g
அந்தப் பொறுமையை வரவழைத்துக்கொள்வது சூத்திர தாரிக்கு இன்றியமையாத பண்பா யிருத்தல்வேண்டும் அதே சமயம் தமது கருத்திற் கொண்ட பலனைப் பெறும் வண்ணம் நடிகரை கடிக்கச் செய்யும் ஆற்றல் முக்கிய மானது. இதற்கு, 5ாடக சூத்திரதாரி ஒரு சிறந்த ஆசிரியரா யிருத்தல் அவசியம். மாணவர்களுக்குப் பொறுமையுடன் கற்பிக்கும் ஆசிரியரைப்போல, குத்திரதாரியும் நடிகரிடம் கடந்துகொள்ளவேண்டும்.
இசை ஞானமும் இசை அநுபவமும் நாடக ஒலிபரப் பும் சூத்திரதாரிக்கு மிக இன்றியமையாதவை என்று ஒலி பரப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். நாடகமெல்லாம் சங்கீத மயமானவை என்பது இதன் அர்த்தமல்ல. ஆனல், இசை நுட்பம் தெரிந்திருந்தால், அல்லது இசையை அநுப விக்கும் ஆற்றலிருந்தால் அழகுச் சுவையின் நுட்பங்களை எளிதில் உணரலாம் என்பதுதான் காரணம். அழகுச் சுவையுணர்ச்சி நாடக ஒலிபரப்பிலே பலவிதக் கற்பனை களைச் சிருஷ்டிக்க இன்றியமையாத கருவியாகும். நாடகத் தில் சூழ்நிலையை ஒலி மூலமோ இசை மூலமோ காண்பிக்க வும், காட்சி மாறுதல்களில் ஒலி மூலம் திரையிடவும் சிறந்த கற்பனைக்கண் வேண்டும். அந்தக் கற்பனைக் கண்ணைப் பெறுவதற்கு இசையுணர்ச்சி இன்றியமை யாதது.
முதற் கடமை
ரேடியோ நாடக சூத்திரதாரியின் முதற் கடமை நாடகப் பிரதியை கன்ருக ஆராய்ந்து படித்துப் பார்த்தல். எவ்வளவு திறமை வாய்ந்த எழுத்தாளரின் சிருஷ்டியான ஆலும் நாடக சூத்திரதாரி தமது தயாரிப்புக்கு வேண்டிய வாறு அமைத்துக்கொள்ளச் சில மாற்றங்கள் செய்ய வேண்டியே இருக்கும். இந்த மாற்றங்கள் அல்லது திருத் தங்கள், நாடகப் பிரதியின் தன்மையைப் பாதிக்கக்
Page 94
144 ஒலிபரப்புக் கல்
கூடியனவா யிருந்தால், அதாவது பெரிய திருத்தங்களா யிருந்தால் அவற்றைக் கதாசிரியர் ஒத்துழைப்போடு திருத்துவதுதான் விரும்பத் தக்கது. ஏனெனில், பிரதியைத் தயாரித்த ஆசிரியர் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டே ஒவ்வொரு கருத்தையும் எழுதியிருப்பார். ஆகையால், அவர் கோக்கத்தையோ கற்பனையின் பாதையையோ அறியாத இன்னுெருவர் அதில் கை வைத்தல் விரும்பத் தக்கதல்ல. கூடியவரையில், குத்திரதாரி முதலில் நாடகத் தைப் படித்துவிட்டு, கதாசிரியரை அழைத்து வைத்து ஒலிபரப்பு நுட்பத்துக்கு வேண்டிய முறையில் பரஸ்பரம் கலந்துரையாடி, ஆகவேண்டிய முக்கியத் திருத்தங் களையோ மாற்றங்களேயோ செய்துகொள்வதுதான் கண் ணியமானது. இம்மாதிரியான ஒற்றுமையோ சம்மதமோ இல்லாமல், கதாசிரியரின் பிரதியில் குத்திரதாரிகள் சிலர் தம் இஷ்டம்போல் மாற்றங்களைச் செய்து, இறுதியில் ஒலிபரப்பப்பட்ட நாடகத்தைக் கேட்டுக் கதாசிரியர் ஏமாற்றம் அடைந்த சங்கர்ப்பங்களை நாம் அறிவோம். ஒலிபரப்பு விஷயம் குக்திகாரியின் சொந்தத் துறை. அதில் அவர்தாம் உரிமை பெற்றவர். ஆனல் கதையைச் சிருஷ் டித்தவர் கதாசிரியர் என்பதையும், அந்தச் சிருஷ்டியில் அங்கக் குறைவு ஏற்படுத்த மற்றவருக்கு உரிமை இல்லை யென்பதையும் குத்திரதாரியும் மற்றவர்களும் உணர வேண்டும்.
கதையை கன்ருகப் படித்து, பாத்திரங்களின் குண விசேஷங்களையெல்லாம் நிச்சயப்படுத்திக்கொண்டு, குழ் நிலைகளையெல்லாம் வரிசைப்படுத்தி வைத்து, அவற்றுக் குரிய ஒலி வேறுபாடுகளை யெல்லாம் தீர்மானித்த பின்னர், குத்திரதாரி அதற்கேற்ற விதமாக நாடகப் பிரதியை ஒலி பரப்புப் பிரதி"யாக உருவாக்கிக்கொள்வார். இந்தக் காலத் தில் டைப் ரைட்டர் கருவி உபயோகத்தில் வந்திருப்பதால் ஒலிபரப்புப் பிரதியின் மூலத்திலிருந்து எத்தனை படிகள்
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 145
வேண்டுமானலும் தயாரித்துக்கொள்ள வசதியுண்டு. 5டிகர், குத்திரதாரி, ஒலியறையில் இருக்கும் இஞ்ஜினியர், வேறு சகாக்கள் யாவருக்கும் ஆளுக்கு ஒரு தனிப் பிரதி கையில் இருக்கவேண்டியது அவசியம். ஆகையால், ஒலி பரப்புக்கு வேண்டிய அடையாளங்கள் இடப்பட்ட பிரதி யிலிருந்து பல படிகள் எடுத்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். w
நடிகர் தெரிவு
மேடைக்கு நடிகர் நல்ல தோற்ற முள்ளவராயும், சினிமாவில் படம் பிடிக்க நல்ல முகவெட்டுள்ளவராயும் இருத்தல்போல, ரேடியோவுக்கு நடிகர் குரல் பொருத்தம் உள்ளவரா யிருத்தல்வேண்டும், அன்றியும், கதையில் வரும் பாத்திரங்களின் மன நிலை குணம் முதலியவற்றைப் பிரதிபலிக்கத் தக்க பேச்சாளராயும் இருத்தல் வேண்டும். அத்தகைய கடிகரை, எடுத்துக்கொண்ட நாடகத்துக்குப் பொருத்த முள்ளவர்களாகத் தெரிவு செய்யும் குத்திர தாரியின் பொறுப்பும் மிகவும் கஷ்டமானதென்றே சொல்லவேண்டும். ஆகையால், முதலில் குத்திரதாரி ஒரு பரீட்சை வைத்துத் தமக்கு வேண்டிய குரல்களைத் தெரிவு செய்வார். அதாவது, நடிகர் அல்லது பேச்சாளர் பலரை வரவழைத்து 5ாடகப் பிரதியிலிருந்து சில பகுதிகளை வாசிக்கச் செய்து, பொருத்தமான குரலுள்ளவர்களைத் தெரிக்தெடுப்பார்.
ஒரு நாடகத்துக்கு நடிகர் தெரிவு செய்யும் விஷயத்தில் சில அடிப்படையான விதிகள் அநுசரிக்கப்படும். உதார ணமாக, கான்கு ஆண்களும் மூன்று பெண்களும் நடிக்கும் ஒரு நாடக்ம் என்று வைத்துக்கொள்வோம். இதில் ஆண் களுடைய குரல் ஒன்றுக்கொன்று வெவ்வேறு தன்மையில் இருக்கவும், பெண்கள் குரலும் அப்படியே தனித் தனி இனம் கண்டு பிடிக்கத் தக்க கனம் கொண்டதாக இருக்
Page 95
146 ஒலிபரப்புக் கலை
கவும் பார்த்துக்கொள்ளவேண்டும். அதாவது, எந்த இரு குரல்களாவது ஒரே மாதிரி இல்லாமலிருக்குமாறு கடி கரைத் தெரிவு செய்யவேண்டும். கதாநாயகிக்கும் தோழிக்கும் குரல் வேறுபாடு தெளிவா யிருத்தல்வேண்டும், வேஷப் பொருத்தமென்பது ரேடியோ நாடகத்தில் குரல் மூலமே அமையவேண்டுமாகையால், அந்தக் குரல்கள் கன வேறுபாடுகள் கொண்டு நாடக பாத்திரங்களின் உருவங்களைப் பிரதிபலிக்கவேண்டும். ஆகவே, நாடக குத்திரதாரி குரல் உருவங்களை அளவுகோலாக வைத்துக் கொண்டு நாடக பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகரைத் தெரிவு செய்தல் அவசியம்.
குரற் பொருத்தம் இருந்தால் மாத்திரம் ரேடியோ 15டிகராகிவிட முடியாது. காடகப் பிரதியைப் பார்த்துத் தயங்காது பேசக்கூடிய ஆற்றலும், அங்ங்னம் பேசும்போது வசனங்களிலுள்ள பொருளை உணர்ந்து அந்த உணர்ச்சி களையெல்லாம் அநுபவித்துத் தமது குரலில் தொனிக்கச் செய்யும் திறமையும் வாய்ந்திருக்கவேண்டும். பொரு ளுணர்ச்சி தோன்ற கடிக்கும் 5டிகரைக் கண்டு பிடிப்பது தான் அநுபவத்தில் கஷ்டமா யிருக்கும். எழுத்துப் பிரதி யிலுள்ள வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல் ஒப் பிப்பது நடிப்பாகாது. பொருளை யுணர்ந்து, வேண்டிய இடங்களில் பொருளுக்கேற்பக் குரலிலே அழுத்தம், குழைவு, வலிவு, மெலிவு முதலிய பண்புகளைக் கொண்டு வருதல் ரேடியோ 5டிகருக்கு இன்றியமையாதது.
ஒத்திகை
ரேடியோ நாடகத்துக்கு எத்தனை ஒத்திகை வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனல், இதற்குத் தீர்மானமாக எந்த விதியையும் ஏற்படுத்த இயலாது. மூன்று அல்லது கான்கு, அல்லது ஆறு ஒத்திகைகள் கடத்தினலும் தகும் என்று மாத்திரம் சொல்லலாம். அளவுக்கு மிஞ்சிய நடி
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 147
கரை வைத்து அலுப்புத் தோன்றுமாறு ஒத்திகைகள் கடத் துவதும் விரும்பத் தக்கதல்ல. அப்படியானல் உணர்ச்சி யெல்லாம் குன்றி வெறும் கிளிப்பிள்ளை நாடகமாக முடிந்து விடும். அதற்கு மாருக, ஒத்திகைகள் குறைந்தாலும் காட கத்தில் பல குறைகள் திருந்தாமல், வெற்றி தளர்ச்சி யடையும். ஆகையால், இரண்டோர் ஒத்திகைகள் கடத்திப் பார்க்கும்போதே நாடக குத்திரதாரி கிலைமையை உணரக் கூடும். நடிகர்கள் யாவரும் தங்கள் பாகங்களைப் பக்குவ மாக நடிக்கிருர்கள் என்று கண்டதும், மேலே ஒத்திகை செய்வதை நிறுத்திக்கொண்டு ஒலிபரப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதுதான் ஒத்திகை விஷயத்தில் அநு சரிக்கக்கூடிய விதி என்று சொல்லலாம்.
இன்னுமொரு முக்கியமான விதி என்னவென்ருல், ஒத்திகையுடன் தொடர்ந்து ஒலிபரப்பு நடைபெற வேண்டும். அதாவது, எந்த 5ாடகத்திலும் ஒத்திகைகள் நடத்தி வரும்போது, திருப்தி ஏற்பட்டு, மேலும் ஒரே ஒர் ஒத்திகை போதுமென்று கண்டால், அந்த இறுதி ஒத்தி கையை நாடக ஒலிபரப்பு நேரத்துக்குச் சற்று முன்னதாக வைத்துக்கொள்ளவேண்டும்; இறு தி ஒத்திகைக்குப் பின்னர் நடிகர் சூட்டோடு சூடாக ஒலிபரப்ப் வேண்டு மென்பதுதான் விதி. இதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. இறுதி ஒத்திகையின்போது நடிகரும் மற்ற வர்களும் தத்தம் கடமையைப் பூரணமாக அறிந்து கொண்டிருப்பார்கள். அதே ஞாபகம் தவறிப்போகாமல் இருந்தால் ஒலிபரப்பும் சமயத்தில் யாவும் ஒழுங்காக நிறை வேற வசதி யளிக்கும். சிறிய விஷயங்களும் அந்தச் சமயத்தில் ஞாபகத்தி லிருந்து 15ாடகத்தின் வெற்றிக்கு உதவியளிக்கும். ஆகையால், இறுதி ஒத்திகை எப்பொழு துமே ஒலிபரப்பு கேரத்துக்குச் சற்று முன்னதாக அமைய வேண்டு மென்பது விதியானலும் ஒத்திகை முடிந்த வுடன் திடீரென்று ஒலிபரப்பை ஆரம்பித்துவிடவேண்டு
Page 96
148 ஒலிபரப்புக் கலை
மென்பது அர்த்தமல்ல. நடிகரும் யந்திர சாதனங்களை இயக்கும் சகாக்களும் இறுதி ஒத்திகையை முடித்துக் கொண்டு அரை மணி நேரமாவது சிறிது ஒய்வெடுத்துக் கொண்டோ அல்லது சிரம பரிகாரம் செய்துகொண்டோ, அதன் பின்னர் ஒலிபரப்பை ஆரம்பிப்பதுதான் மிகவும் விரும்பத் தக்கது. இது ஒலிபரப்பும் சமயத்தில் யாவருக்கும் மன நிம்மதியையும் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் 5(bLD).
எந்த நாடக ஒலிபரப்புக்கும் சாதாரணமாக மூன்று ஒத்திகைகள் இன்றியமையாதன என்று கருதுவர். முதலா வதாக, கடிகரைத் தெரிவு செய்துகொண்டபின் ஆரம் பிக்கும் ஒத்திகையில், ஒவ்வொரு கடிகரும் தமது பாகத்தைச் சாதாரணமாக வாசித்து விளங்கிக்கொள் வதுடன் கதைப் போக்கையும் மற்றைய பாத்திரங்களின் தன்மையையும் அறிந்துகொள்ள ஒரு சக்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த ஆரம்ப ஒத்திகையில் குத்திரதாரி, எல்லா கடிகரையும் ஒன்று கூட்டிவைத்து, முதலில் கதையை விளக்கிச் சொல்லுவார். பின்னர், ஒவ்வொரு பாத்திரத்தின் குண விசேஷங்களையும் தனித்தனியாக எடுத்து விளக்குவார். அடிப்படையான இந்த விளக் கங்களைத் தெரிந்துகொண்ட பின்னர் நடிகர் ஒவ்வொரு வராகத் தமது பாகத்கை, தம்மாலியன்ற அளவு படிப் பார்கள். ஆரம்ப வாசிப்பின்போது குத்திரதாரி இடையில் நிறுத்தி நடிப்புக் கற்பிக்க லாகாது. ஆரம்ப வாசிப்பு நடிகர்களுக்கு நாடகத் தொடர்ச்சியையும் அதில் பரிசயத் தையும் மாத்திரம் கொடுக்க ஏற்பட்டது. இந்த இரண்டு விஷயங்களிலும் நடிகர் ஈடுபட்ட பின்தான் நடிப்பைப் பற்றிச் சூத்திரதாரி கவனம் செலுத்தவேண்டும். அதன் பின், தொடர்ந்து இரண்டாவது மூன்ருவது வாசிப்புக் களிலேயே குத்திரதாரி நடிகர்களின் 5டிப்பில் கவனம்
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 149.
செலுத்தி, ஒவ்வொருவராகத் தனித்தனியே அவரவர் பாகத்தைப் பக்குவப்படுத்துவார்.
மேற்சொன்ன விஷயமெல்லாம் நிலையத்து ஸ்டூடியோ ஒன்றிலேதான் நடைபெற்ருலும் ஒலிபரப்புக்குரிய கருவி களும் யந்திர சாதனங்களும் இந்த ஒத்திகையில் இடம் பெறமாட்டா. சூழ்நிலைக்காக மைக்கிரபோனே மாத்திரம் நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச் சுற்றி நடிகரும் குத்திர தாரியும் கிற்க, முதலில் நடிப்புக்குரிய முக்கியமான பேச்சுப் பயிற்சியே இங்கு நடைபெறும். ஆகையால், ஒலிபரப்புக் கருவிகள் இதற்கு வேண்டியதில்லை. இந்தப் பேச்சுப் பயிற்சி நன்கு ஒத்திகை செய்யப்பட்டு, குத்திரதாரி திருப்தி அடைந்த பின்னரே இரண்டாவது ஒத்திகை ஆரம்பிக்கும். சில சமயங்களில் நல்ல அநுபவப்பட்ட நடிகராயிருந்தால், ஒரு தடவை வாசித்துக்கொண்டே முதல் ஒத்திகையில் திருப்தி கண்டுவிடலாம். ஆனல், ரேடியோவுக்குப் புதிய வர்களா யிருந்தால் எட்டு அல்லது பத்துத் தடவையும் திருப்பித் திருப்பி வாசித்துப் பயின்றுகொள்ளும்படி ஏற்படவும் கூடும்.
ரேடியோ நடிகர்
இரண்டாவது ஒத்திகையில்தான் ஒலிபரப்புக் கருவிகள் இடம் பெற ஆரம்பிக்கும். அன்றியும், நடிகரின் திறமையை உண்மையில் பரீட்சிப்பதற்கும் இந்த ஒத்திகையே பிரதானம், நாடகத்தில் வெற்றி பெறுவது அபூர்வம் என்றுதான் சொல்லவேண்டும். மேடையிலே கின்று அவயவங்கள் பலவற்றைத் துணைக்கொண்டு, தமக்கு முன் உட்கார்ந்திருக்கும் சபையோரின் முகக் குறிப்புக் களைப் பின்பற்றி கடிக்கும் மேடை நடிகருக்கு ரேடியோவில் அந்த வசதி ஒன்றும் கிடைக்காது. அதனல், மேடையில் அதுடவப்பட்ட பல பழக்கங்கள் ஒலிபரப்பு மண்டபத்
Page 97
150 ஒலிபரப்புக் கலை
திலும் வந்துவிடும். இவற்றை மேடை நடிகர் தவிர்ப் பதற்கு வெகு நாளாகும். இதே காரணத்துக்காகத்தான் ரேடியோ நிலையத்தில் வேலை பார்க்கிற அறிவிப்பாளர் களும் செய்தி வாசிப்பவர்களும் நாடகத்தில் நடிப்பதற்குப் ப்யன்பட மாட்டார்கள். பல காலம் தமது துறைகளில் விசேஷ அநுபவமும் பயிற்சியும் பெற்ற இந்த அறிவிப் பாளர் நாடகத்தில் நடிக்கும்போது பழைய பாணியும் உச்சரிப்பு முறையும் தம்மை அறியாமல் தோன்றிக் கொண்டிருக்கும். இதற்குப் புறநடையாகச் சிலர் இருக்க லாம். ஆனல், பொதுவாகச் சொல்லப்போனல் அறிவிப் பாளர்களாக வேலை செய்கிறவர்களை நாடகத்தில் கலந்து கொள்ளச் செய்வது நல்லதல்ல. மேடை நடிகரைப் போல இவர்கள் பேச்சுப் பாணியும் ஒரு தனி முறையில் பழக்கப் பட்டிருப்பது ஒரு காரணம்; இன்னென்று, இவர்கள் குரல் ஏற்கெனவே கேயர்கள் கேட்டுப் பழகி யிருப்பதால், அதுவும், அறிவிப்புக்களிலும் செய்திகளிலுமே கேட்டுப் பழகி யிருப்பதால், நாடக நடிப்பிலே மீண்டும் கேட்கும் போது புதுமையோ அல்லது கவர்ச்சியோ கொடுக்காது. இந்தக் காரணங்களை வைத்தே ரேடியோ நாடகங்களில் அறிவிப்பாளர்களை நீக்குவது நல்லது.
மேடை கடிகரைப்போல ரேடியோ நடிகர் முன் கூட்டியே வசனங்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லையாயினும், எழுத்துப் பிரதி யைப் படிக்கும்போது உணர்ச்சியுடன் நடிக்கவேண்டு மென்பதை மறந்துவிடுவார். இதற்காகவே அத்தகைய நடிகருக்குப் போதிய அளவு ஒத்திகை வேண்டியிருக்கும். இதையெல்லாம் குத்திரகாரி கவனித்து ஒத்திகையை கடத்தவேண்டும்.
இரண்டாவது ஒத்திகையில் குத்திரதாரி முன்போல ஸ்டூடியோவிலுள்ள மற்றைய கடிகர் மத்தியில் நிற்க
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 151,
மாட்டார். ஸ்டூடியோவை அடுத்துள்ள யந்திர அறை யொன்றில் உட்கார்ந்துகொண்டு ஸ்டூடியோவிலிருக்கும் 15டி கரைக் கொண்டு ஒத்திகை கடத்துவார். ஸ்டூடியோவுக்கும் யந்திர அறைக்குமிடையிலுள்ள கண்ணுடி ஜன்னல் வழி யாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளலாம்; அத்துடன் யந்திர அறைக்கும் ஸ்டூடியோவுக்கும் ஒலிக்கருவிகள் மூலம் பேச்சுத் தொடர்பு இணைந்திருந்தால் மைக்கின் மூலம் ஒரு வருக்கொருவர் பேசிக்கொள்ளவும் முடியும். இந்த இரண் டாவது ஒத்திகையிலேதான் நடிகரின் குரல் நிதானம். நடிப்பின் முக்கிய சாயல்கள், இசை முதலிய புற ஒலிக் கலப்புக்கள் யாவும் மதிப்பிடப்படும். நடிகர் குரலின் காத்திரம், கனம், ஸ்தாயி இவைகளைக் கவனித்து, மைக்கிர போனுக்கு எவ்வளவு தூரம் விலகி நிற்கவேண்டும் என்ற விஷயமும் இந்த ஒத்திகையிலேயே தீர்மானிக்கப்படும்.
நாடக ஒலிபரப்பில் எல்லாக் காரியத்துக்கும் பொறுப் பாளி நாடக சூத்திரதாரி என்பதைச் சம்பந்தப்பட்ட யாவரும் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். நடிகர் தமது கடமை கடிப்பது மாத்திரக்தான் என்பதையும் மறந்துவிடலாகாது. ஆகையால், 5டிகர் ஸ்டூடியோவுக்கு வெளியே என்ன அந்தஸ்திலிருந்தபோதிலும் ஸ்டூடியோவி னுள்ளே குத்திரதாரியின் கட்டளைகளுக்குப் பணிய வேண்டியது அவசியம். பணிவும் அடக்கமும் விசுவாசமும் இன்றியமையாதன. அதே போல, குத்திரதாரியின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் யந்திர இயக்கியும் குத்திர தாரியின் தேவைகளுக்குத் தக்கவிதமாக உற்சாகத்துடன் ஒத்துழைக்கவேண்டியது அவசியம். வேண்டிய இடங்களில் ஒலியை அதிகப்படுத்துவது அல்லது குறைப்பது, ஒலியை மெதுவாக கழுவவிட்டு வந்து மூடுவது அல்லது படிப்படி யாக எழுப்புவது, ஒலிக் குறிப்புக்கள் வரவேண்டிய இடங் களில் அவற்றைக் கலப்பது - இங்ஙனம் பல்வேறு தேவை களுக்கிணங்க, குத்திரதாரி விரும்பும் சூழ்நிலைக்குத் தக்க
Page 98
I53 ஒலிபரப்புக் கஃ0
படி ஒலியை இயங்கச் செய்வது யந்திர இயக்கியின் கடமை. உண்மையில் குத்திரதாரியும் யந்திர இயக்கியும் ஒருவருக் கொருவர் கொடுத்துவாங்கி ஒத்துழைத்தால்தான் நாடக ஒலிபரப்பு வெற்றி அடைய முடியும்.
ஒலி விநோதங்கள்
இந்தச் சந்தர்ப்பத்தில், ஒலியை உருவங்களாக்கி, காட்சி, ஜோடனை, மகிழ்ச்சி, சோகம், வீரம், சாந்தம் முதலிய குழ்நிலைகளையெல்லாம் எப்படிச் சிருஷ்டிப்ப தென்பதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லி வைப்பது உபயோகமாயிருக்கும். முக்கியமாக, ஒலிபரப்பு காடகம் தயாரிக்கும் குத்திரதாரிகளுக்கும், காடகம் எழுத விரும்பும் எழுத்தாளர்களுக்கும் இந்தக் குறிப்புக்கள் பயனளிக்கும். நாடகத்தில் நடிப்பு முழுவதும் கதாபாத்திரங்கள் வாயிலிருந்து வெளிவரும் வசனங்களிலேயே முக்கியமாகத் தங்கியிருந்தபோதிலும், அந்த நடிப்பெல்லாவற்றையும் பூரணமாக அநுபவிப்பகற்கு வேறு பல ஒலிகளைக்கொண்டு ஜால வித்தைகள் செய்யவேண்டும். நாடகத்தில் இயற்கை யாக ஏற்படும் ஒலிகளைக் தவிர, சூழ்நிலைக்காகச் சிருஷ் டிக்கப்படும் ஒலிகளைப்பற்றியே இங்கே குறிப்பிடுகிருேம். முதலில், காட்சி மாறுகல் சம்பந்தமான சூழ்நிலையைப் பற்றிக் கவனிப்போம். மேடை நாடகமானுல் காட்சி மாறும்போது திரை போடுவார்கள். அடுத்த காட்சிக்கு வேருெரு திரை தயாராகப் போடப்பட்டிருக்கும். ஆனல் ரேடியோ நாடகத்தில் இந்தத் திரைகளெல்லாம் பெரும் பாலும் ஒலி மூலமாகச் சிருஷ்டிக்கப்படும். சில சமயங் களில் எவ்வித ஒலியும் இல்லாத மெளனமே காட்சியை மாற்றவும் கூடும். ஆனல் அது அவ்வளவு தூரம் வெற்றி யளிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில், சாந்தம் அல்லது அமைதி நிலையைக் காட்டுவதற்கும் ஒலியையே
bird. . ஒத்திகையும் ஒலிபரப்பும் 153
திறம்பட உபயோகிக்கலாம். நிம்மதியான ஓர் இரவு வேளையில் தம்புராவை எடுத்து மந்தரத் தந்தியை மிக இலே சாக மீட்டிப் பாருங்கள். அதிலிருந்து பிறக்கும் நாதத்தில் படர்ந்து வரும் அக்தர காந்தார ஸ்வரம் மேலே தவழ்ந்து ரீங்காரம் செய்யும்போது உற்றுக் கவனித்தால் சர்வ லோகமுமே அடங்கி ஒடுங்கிய எல்லை யில்லாத அமைதி யைக் காண்பிக்கும்; நிச்சப்தமான நடுநிசியை இன்னும் வற்புறுத்திக் காட்டும்; சகிக்க முடியாத தனிமையை மேலும் புலப்படுத்தும். பிற ஒலிக் கலப்பில்லாத ஒற்றைச் சுருதி அந்தர காந்தாரத்துக்கு இத்தனை சக்தி யென்பதை காம் உணரலாம். இதே போல்தான் சோகம், இரக்கம், பிரிவு முதலிய ரஸங்களில் ஒரு காட்சி முடியும்போது ஏதாவது ஒரு தக்தி வாத்தியத்தில் ஒரு நரம்டை மாத்திரம் மீட்டிச் சோகத்தைத் தரும் ஒரு ராகச் சாயலைக் காட்டினல் அந்தக் காட்சியை முடிப்பதற்கும் அடுத்த காட்சியை எடுப்பதற்கும் பொருத்தமாயிருக்கும். எப்பொழுதும் ஒவ் வொரு காட்சி முடிவடையும் போதிருக்கும் சூழ்நிலையையே உபயோகித்து இசை மூலமாகவோ அல்லது வேறு ஒலி மூலமாகவோ காட்சி மாற்றம் செய்யவேண்டும். அது தான் வாய்ப்பாக அமையும். சில சமயங்களில் பின்னூல் வரப்போகும் ஒரு காட்சியின் அறிவிப்பைக் கொண்டும் காட்சி மாற்றம் செய்யலாம். ஆனல், இதற்கு முந்திய காட்சி முடிவை நடிகரின் சம்பாஷணை மூலம் அறிவிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, இரு நண்பர்கள் சம்பாஷித்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு நாடகம் பார்க்கப் போகிருர்கள், அல்லது ஒரு கடனக் கச்சேரி பார்க்கப் போகிருர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் சம்பாஷணை முடிவில், 'நாடகம் ஆரம்பிக்கவேண்டிய சமயமாகிவிட்டது; வா போகலாம்" என்று சொன்னல் அவர்கள் சம்பாஷணை முடிகிறதாகவும், அந்தக் காட்சி முடிகிறதாகவும் தெரிந்துவிடுகிறது. அடுத்த காட்சி நாடக
Page 99
154 ஒலிபரப்புக் கல
அரங்காயிருக்கு மென்பதும் அவர்கள் சம்பாஷணை மூலம் தெரிகிறது. ஆகையால், அந்தக் காட்சிக்குரிய ஒலிக்" குறிப்பை உடனே வரவழைக்கலாம். நாடகம் ஆரம் பிக்கும் முன் கேட்கும் சில வாத்தியங்களின் ஒலியை இங்கே புலப்படுத்தலாம்.
இதே விதமாக, வாத்தியங்களைக்கொண்டு காட்சிக்கும் சந்தர்ப்பத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமான இசை உருவங்களைச் சிருஷ்டித்து ரேடியோ நாடகத்தில் திரை' அமைக்கலாம். இன்னும், ஒரு காட்சியின் முடிவில் படிப் படியாக ஒலியைக் குறைத்து அற்றுப் போகும்படி செய் வதன் மூலமும் சிலர் காட்சி மாற்றத்தைக் காட்டு வார்கள். வேறு சிலர் கட்டியக்காரன் முறையை அது சரித்து, ஓர் உரைநடையைப் புகுத்திக் காட்சியை மாற்று வார்கள் இங்ங்னம் பல்வேறு விதமான ஒலி விநோதங்களை அநுஷ்டித்தபோதிலும் எந்த முறையும் மிகச் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. ஒவ்வொன்றிலும் ஏதாவது குறைபாடு இருக்கத்தான் இருக்கும். ஏற்கெனவே காம் குறிப்பிட்டபடி, சூழ்நிலையை 5ன்ருக உணர்ந்துகொண் டால் சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு குத்திரதாரி பொருத்த மான உபாயத்தைக் கையாள முடியும்.
இனி, ஒலிபரப்பு 5ாடகத்தில் சூழ்நிலைக்கு மாத்திரம் உபயோகிக்கும் ஒலிக் குறிப்புக்களைத் தவிர, சம்பவங் களுக்குத் தக்க ஒலிக் குறிப்புக்களேயும் காண்பிக்கவேண்டி யிருக்கும். ஆள் கடமாட்டத்தில் காலடிச் சப்தம், கதவு திறத்தல், மூடுதல், மற்றக் காரியங்களில் சாதாரணமாகக் கேட்கும் சப்தம், இயற்கையில் காற்று, புயல், இடி முழக்கம், கடல் அலை, பறவை விலங்குகளின் சப்தம், குழந்தை அழுதல், வண்டி வாகனங்கள் இயங்கும் சப்தம்இப்படிப் பல்வேறு வகையான ஒலிகளை யெல்லாம் ரேடியோ நாடகத்தில் தத்ரூபமாகக் காண்பிக்கலாம். இவற்றுக்கெல்லாம் இந்தக் காலத்தில் எத்தனையோ சிறந்த
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 155.
ஒலிப்பதிவுகள் இருக்கின்றன. தேவைக்குகந்தபடி உப யோகித்துக்கொள்ளலாம்.
ஒலிக்குறிப்புக்கள் ரேடியோ நாடகத்தில் சூழ்நிலை யைப் பெருக்குமாயினும், அளவுக்கு மிஞ்சி, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் உபயோகிப்பது விரும்பத்தக்கதல்ல. முக்கியமான இடங்களில் மாத்திரம் உபயோகித்தால் போதுமானது. இல்லாவிட்டால் நாடகம் கேட்கும் கேயர் களின் கவனத்தைச் சிதைத்துவிடக்கூடும். ஒலிக்குறிப்புக் களில் சூழ்நிலையைச் சித்திரிக்கும் வாத்திய இசை முதலிய வற்றை அளவுக்கு மிஞ்சி நீடிக்கலாகாது. மிக அதிக மானல் பத்து அல்லது பதினைந்து செகண்டுக்கு அதிகரிக் காமல் ஒலிக்குறிப்புக்களை உபயோகிக்கவேண்டும்.
இரண்டாவது ஒத்திகை
முதலாவது ஒத்திகையில் 5டிகர் தம் பாகங்களைச் சுத்தமாகவும் பிழையறவும் வாசித்துப் பயின்றுகொள்ள வேண்டும் என்று கூறினுேம், அந்தப் பயிற்சியைக் கொண்டு இரண்டாவது ஒத்திகையில் நாடகத்தில் வரும் எல்லா கடிகளின் பாகங்களையும், ஒலிக்குறிப்புக்கள் தொடர்ச்சிகள் முதலியவற்றையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒத்திகை பார்க்கவேண்டும். இதிலே, நடிகர் எழுத்துப்பிரதி யிலுள்ள தத்தம் பாகங்களை மாத்திரம் சிவப்பு அல்லது நீலப் பென்சில் கொண்டு அடையாளமிட்டு வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு கடிகர் பேசி முடிந்து மற்றவர் பாகம் வந்ததும், அவர் தொடர்ச்சியை விடாது சட்டென்று பேசுவதற்குத் தயாராயிருக்கவேண்டும். அதுவுமன்றி, ஒலிக்குறிப்புக்கள் அல்லது காட்சி மாற்றங்கள் வருமிடங் களிலெல்லாம் எழுத்துப் பிரதியில் குத்திரதாரி அவற்றை விவரமாகக் குறிப்பிட்டிருப்பாராகையால், அவற்றையும் கவனித்து எங்கெல்லாம் நிறுத்தவேண்டு மென்பதையும் தெரிந்துகொள்ளல் வேண்டும். அங்ங்னம் ஒலிக்குறிப்
Page 100
156 ஒலிபரப்புக் கலே
புக்கள் வரும்போது, பொதுவாக அவை ஒலிப்பதிவுகள் மூலம் வழங்கப்படுமாகையால், ஸ்டூடியோவிலுள்ள நடிகர் காதுகளுக்கு எட்டா. யந்திர அறையிலிருக்கும் குத்திர தாரிக்கும் யந்திரத்தை இயக்கும் சகாவுக்கும் மாத்திரம் கேட்கும். அவர்களே நடிகர் பேச்சையும் ஒலிக்குறிப்புக் களையும் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்து, கலக்க வேண்டிய இடத்தில் கலந்து ஒலிபரப்பில் வழங்குவார்கள். இந்த ஒழுங்கைப் பின்பற்றி வரும் குத்திர தாரி, கண்ணுடி ஜன்னல் வழியாக, 15டிகர் நிறுத்தவேண்டிய இடங்களையும் ஆரம்பிக்க வேண்டிய இடங்களையும் சைகை மூலம் காண் பிப்பார். இப்படிச் சைகை காண்பிக்கும்போது சில நடிகர் அவற்றைப் பின்பற்றிக்கொள்ள முடியாமல் இருக்கு மாகையால், முன்னகாகவே குத்திரதாரி கடிகருக்கு எல் லாச் சைகைகளையும் விளக்கிவைத்தல் நல்லது. பெரும் பாலான ஸ்டுடியோக்களில் இந்தக் காலத்தில் "ஸ்பீக் பாக்' என்ற பேச்சு யந்திர வசதி யிருப்பதால், யந்திர அறையி லிருக்கும் குத்திரதாரி ஸ்டூடியோவிலிருக்கும் நடிகருக்கு ஒத்திகை வேளையில் தமது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.
இந்த இரண்டாவது ஒக்திகையின்போது இடத்துக் கிடம் கிறுத்தி கிறுத்திச் குத்திர காரி ஒவ்வொரு கடிகருக் கும் தனித்தனியே பயிற்சி அளித்துச் செல்ல, சாதாரண மாக அரைமணி நேர காடகம் இரண்டு மணி நேரத்தைப் போக்கி விடக்கூடும். ஆகையால், இரண்டாவது ஒத்திகை யில் 5ாடகத்தின் கால அளவைக் கணக்கிடுதல் முடியாது. நடிகரின் பாகங்கள் தனித்தனியே பூரண பக்குவம் பெற்றுள்ளனவா, ஒலிக்குறிப்புக்களெல்லாம் அந்த அந்த இடங்களில் சேர்க்கப்படுகின்றனவா, இவற்றை நடிகர் கவனித்துத் தங்கள் பாகங்களைச் செவ்வனே ஒப்பிக் கின்றனரா என்பதையெல்லாம் குத்திரதாரி கவனிப்பார். இதுதான் இரண்டாவது ஒத்திகையின் நோக்கம். இரண்
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 15?
டாவது ஒத்திகை யென்று இதனை நாம் குறிப்பிட்ட போதிலும் எண்ணிக்கையில் இது இரண்டாவது அல்ல; ஒத்திகையின் இரண்டாவது படி என்று சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த ஒத்திகை ஒரு தடவை: நடந்தவுடன் திருப்தி ஏற்பட்டு விடுமென்று சொல்வதற். கில்லை. நடிகரின் திறமையைப் பொறுத்து இரண்டு மூன்று தடவையும் திருப்பித் திருப்பி கடத்தவேண்டி 5ேரிடலாம். எத்தனை தடவை ஒத்திகை பார்த்தாலும் ஒவ்வொரு 15டிகரும் பக்குவமாக கடிக்கும்வரையில் குத்திரதாரி ஒத்தி கையைக் கைவிடலாகாது.
இறுதி ஒத்திகை O
ஒத்திகையின் இரண்டாம் படியில் திருப்தி கண்ட வுடன் மூன்ருவது படி, அதாவது, ஒலிபரப்புக்கு முக்திய இறுதி ஒத்திகை இலகுவாயிருக்கும். இதிலேதான் கடிகளின் பேச்சுப் பகுதி, ஒலிக் குறிப்புக்கள், இசை, பாட்டு, முதலிய சகல அம்சங்களுக்கும் காலக் கணக்குப் பார்க்க வேண்டும். ஒலிபரப்பு நிகழ்ச்சி எதுவாயிருந்தாலும் காலக் கணக்கு இன்றியமையாதது. ஆகையால், நாடக ஒலி பரப்பும் அதற்கெனக் குறிக்கப்பட்ட அரை மணி நேரத் திலோ அல்லது முக்கால் மணி நேரத்திலோ, ஒரு கிமிஷ: மாவது அதிகரிக்காமலும் குறையாமலும், சரியான அள வில் நிறைவேறவேண்டும். அதுவே நல்ல ஒலிபரப்பின் லக்ஷணம். மூன்ருவது ஒலிபரப்பில் சூத்திரதாரி கடிகார மும் கையுமாக நின்று கால அளவைக் கவனிப்பார். குறிப் பிட்ட 5ேரத்துக்கு அதிகரிக்குமாளுல்ை பொருத்தமான சில: வசன பாகங்களை நீக்குவார். இதற்கு மாரு க, குறிப்பிட்ட ஒலிபரப்பு கேரத்துக்குப் போதாமல் இருந்தால் நாடகத்தில் என்ன செய்வது? இதுதான் ரேடியோ நாடகம் தயாரிப்பவர் களுக்கு அதிகத் தலைவலியைக் கொடுக்கும் ஒரு பிரச்சினை. ஆணுல், இந்தப் பிரச்சினைக்கே இடம் வைக்காமல், திறமை,
Page 101
158 ஒலிபரப்புக் கல்
யுள்ள நாடகாசிரியர் தமது நாடகத்தை எப்பொழுதுமே சிறிது நீளமாக எழுதிக்கொடுப்பார். நேரத்துக்கதிகமாக எழுதப்பட்டால் சிற்சில வசன பாகங்களைக் குறைப்பது மிக எளிது. ஆனல், போதாமல் குறைவாயிருந்துவிட்டால் புதிதாகச் சிருஷ்டிப்பது கஷ்டமானது. ஆகவே, எந்தச் சமயத்திலும் காடகாசிரியர் உத்தேசமாக இரண்டு நிமிஷம் அதிகப்படத் தக்கதாகவே தமது பிரதியைத் தயார் செய்து கொடுத்தல் இன்றியமையாதது. சூத்திரதாரியின் வேலையை இது சுலபமாக்கும். அன்றியும், அநுபவ வாயிலாக ஒலி பரப்பாளர் கண்ட ஒர் உண்மை என்னவெனில், பெரும் பாலும் ஒத்திகை சமயத்தில் சரியாக முப்பது கிமிஷ நேரம் பிடிக்கும் ஒரு நாடகம் ஒலிபரப்பப்படும் சமயத்தில் ஏறக் குறைய முப்பத்தொரு நிமிஷத்துக்கு நீண்டுவிடும். ஒத்தி கையின்போது பெரும்பாலான 15டிகர்களும் சிறிது துரித மாகவே வாசித்துவிட்டு ஒலிபரப்பும் சமயத்தில் பொறுப் பும் அக்கறை யுணர்ச்சியும் தம்மைத் தாக்கிக்கொண் டிருக்கும் காரணத்தால் தாமதமாகவே பேசுவார்கள். இதன் விளைவாக அவர்களே அறியாமலே நாடகம் நீண்டு விடும். இதனைச் குத்திரகாரி உணர்ந்து முன்னெச்சரிக்கை யாகவே நாடகத்தை முப்பது அல்லது நாற்பது செகண்டு குறைவாகவே வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஒலி பரப்புச் சமயத்தில் 5ாடகம் குறையுமென்று கண்டால் இடையிலே இசையையோ அல்லது ஒலிக்குறிப்புக்களையோ சிறிதளவு நீட்டி நாடகத்தைச் சரியான கால அளவில் பூர்த்தி செய்துவிடலாம். ஆனல், கால அளவுக்கு அதிகப் பட்டால் கடைசி வேளையில் நடிகர் தமது பாகங்களை அவசர அவசரமாகப் பேசவேண்டி வரும். இது நாடகப் பந்தாவைக் குலைத்து ரபிெக்க முடியாமல் செய்துவிடும். ஆகவே, ஒலிபரப்புக்கு எப்பொழுதும் சுமார் ஒரு நிமிஷ 5ேரத்தைக் கை காவலாக வைத்துக்கொண்டு ஒத்திகை கடத்துவதுதான் 5ல்லது.
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 159
இந்த ஒத்திகையிலே குத்திரதாரி கால அளவைக் கவனிப்பதுடன் நடிகரின் குரல்கள் மைக்கிரபோனில் அமையும் சரியான நிலையையும் கவனிக்கவேண்டும். சாதாரணமான பேச்சாயிருந்தால் இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் நின்று பேசலாம். அதற்குக் குறைக் தால் ரேடியோவிலே குரல் சிதைந்து வரும். கூடினல்) எங்கோ தூரத்தில் நின்று பேசுவது போல் கேட்கும். அத்தகைய ஒரு பாவனை தேவையா யிருந்தால் மாத்திரம் மைக்கிரபோனுக்கு நேரே தொலைவில் நின்று பேசலாம். ஆனல், சிலருடைய குரலின் கனம் அதிகமாயிருந்தால் மைக்கிரபோனுக்கு மிகவும் தள்ளி நிறுத்தப்படவேண்டும் என்று சிலர் கினைப்பது தவறு. மைக்கிரபோனை விட்டுத் தூரத்தில் சென்ருல் அந்தத் தூரம் ஒலிபரப்பிலும் பிரதி பலிக்கும். இதைத் தவிர்க்க ஒரு வழியிருக்கிறது. சாதாரண மாக இந்தக் காலத்தில் ரேடியோ கிலையங்களில் உபயோகிக் கும் மைக்கிரபோன், அதுவும் நாடகத்துக்கு உபயோகிக்கும் மைக்கிரபோன், ‘ரிபன் மைக்' என்று சொல்லப்படும் இரு பக்கம் இயங்கும் கருவிதான். இது 5ான்கு பக்கங்களைக் கொண்டது. அகலமான இரு பக்கங்கள், ஒன்றுக்கொன்று எதிர்ப்புறமாயுள்ளவை, இயங்கும் சக்தியுள்ளன. ஒடுக்க மான மற்றைய இரு பக்கங்களும் இயங்கமாட்டா.இயங்கும் இரு பக்கத்திலும் நடிகர் பலர், எதிருக்கெதிர் நின்று ஏக சமயத்தில் பேச இந்த மைக்கிரபோன் வாய்ப்பானது. இந்த இயங்கும் சக்தியும் மைக்கிரபோன் மத்தியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் காத்திரமா யிருக்கும். அதைத் தாண்டினுல் காத்திரம் குறையும். மிகவும் கன முள்ள சாரீரமானல், மைக்கின் ஒரு பாகத்தில், காத்திரம் குறைந்த எல்லையில் நிறுத்தக் கனம் குறையும்; ஆனல் 5ாம் முன் குறிப்பிட்ட தூர உணர்ச்சி இதில் ஏற்படாது. அடுத்த பக்கத்தில் உள்ள படத்தில் இருபக்கம் இயங் கும் மைக்கிரபோனைப்பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
Page 102
160 ஒலிபரப்புக் கலை
அதில், மிக அதிகம் சக்தி வாய்ந்த மண்டலம், சக்தி குறைந்த மண்டலம், சக்தி முழுவதும் இல்லாத பக்கம் ஆகிய எல்லைகளைக் காணலாம். முதல் மண்டலத்தில் நின்று பேசினுல் குரல் காத்திரமாக எழும். அதே மண்டலத்தின் எல்லைக்குள், ஆனல் சிறிது நீண்ட தூரத்தில் நின்று
ܟ ܥܢܕ `. M محم
.in N ܓܓ ܠܶ` محه هم محی ̄ ܔ ܓ ܢ 7 7ܓܖ ̄ ܠ /...../ イ ダ صے “ سے
. Y a ܓ ܢ ܠ ܕ ܠ محمحہ برمحہ 12 سے ح イっイ < /ン。ゲベ Y J ns N' ' S
Ms NA NI WA wa همریم سي همه ܓ ܓܓܠ ܠ ܠ ܠ بر محمحبر محے سمہ ܓܓ ܓ ܠܓ ܢ M همه بر سر هم % 2 %///、/ ༄།S ་་《 N N N ޗަ. ޗި %2/ ܢ 7 ܠܠ イ.イル? WANN N W V محی ۔ Af? N مر م a عم هم
W
இரு பக்கம் இயங்கும் மைக்கிரபோன்
பேசினல் அந்தத் துர்ரமும் ஒலிபரப்பில் பிரதிபலிக்கும். இரண்டாவது மண்டலத்தில் இரண்டு அல்லது மூன்றடி தூரத்திலிருந்து பேசினல் குரலின் கனம் குறைந்து கேட் கும். ஆனல், குரலின் தன்மையில் விபரீதம் ஏற்படாது. மூன்ருவது எல்லையாகிய சக்தியற்ற பக்கத்திலிருந்தால் ஒலியே கவரப்படாது. ஆகையால், இந்தக் குணங்கள் நிறைந்த மேற்சொன்ன மைக்கிரபோன் நாடக ஒலிபரப் புக்கு மிகவும் பொருத்தமானது. ரகசியப்பேச்சு, உரத்துக் கத்தவேண்டிய கோபப் பேச்சு, தூரத்தில் நிற்பவர்கள்
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 161
பேசும் பேச்சு, பேசிக்கொண்டே ஒருவர் வெளியே போகும் பாவனை-இவற்றுக்கெல்லாம் இந்த மைக்கிரபோனே மிக வாய்ப்பானது.
ஆண்களின் குரலுக்கும் பெண்களின் குரலுக்கும் ரேடியோக் கருவிகளில் ஒன்ருகிய மைக்கிரபோன் இயல் பாகவே பாரபட்சம் காண்பிப்பது வழக்கம். பெண்களின் குரல்கள் ஸ்தாயியில் உயர்ந்திருப்பதால் மேல் ஸ்தாயி அநுஸ்வரங்கள் அதிகமாகத் தோன்றி ரேடியோவில் சில விபரீதங்களை ஏற்படுத்திவிடும். ஆகையால் பெண் குரல் களை மைக்கிரபோனில் பதியவைக்கும்போது ஆண்களைப் போல மைக்கின் நேர் எதிரில் நிறுத்தாமல் அவர்களைச் சிறிது வலப்புறம் அல்லது இடப்புறமாகத் தள்ளி நிறுத் துவதுதான் 5ல்ல பலனைத் தரும். அன்றியும், பெண்கள் அழுதாலும் சிரித்தாலும் இயல்பாகவுள்ள ஸ்தாயி மேலும் உயரும். அது காரணமாக ரேடியோவில் இயற்கையான ஒலி தொனிக்காது. ஆகையால், ரேடியோ நாடகத்தில் பெண்கள் சிரிப்பதோ அழுவதோ சாதாரணமாக அவர் களது இயற்கைச் சிரிப்பாகவோ அழுகையாகவோ இருக் காமல், சிறிது ஸ்தாயியைக் குறைத்து, நடிப்புச் சிரிப்பாக வும் அழுகையாகவும் காண்பிக்க வேண்டும். இவற்றை ஒத்திகையின்போது 15ன்ருகப் பரீட்சித்து நிதானப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இன்னுமொன்று : மைக்கிர போனுக்கு ஒலி மாத்திரம் பிடிக்குமல்லாமல் காற்ருேடு அது சேர்க்கு வந்தால் வெறுப்புக்கொள்ளும். ஆகையால், சிரிப்பிலும் அழுகையிலும் மூச்சை அதிகமாகப் பிரயோ கிக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக மூச்சோடு வரும் விம்முதல் புயற்காற்றும் இடி முழக்கமும் போலக் கேட்கக்கூடும்! -
இத்தகைய உபாயங்கள் யாவும் மூன்ருவது ஒத்தி கையில் சரிவரப் பரீட்சித்துத் தீர்மானிக்கப்படவேண்டும்.
Page 103
162 ஒலிபரப்புக் கல
நடிகர் இவற்றை அப்பியாசப்படுத்திக்கொண்டு தாம் நிற்க வேண்டிய ஸ்தானங்களையும் நிதானமாக ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஒலிபரப்புச் சமயத்தில் இந்த ஒழுங்குகளை யெல்லாம் சரிவரப் பின்பற்ற வேண்டும்.
ரேடியோ 5ாடக ஒத்திகை 5டக்கும்போது எந்த கடிக ராவது அது ஒத்திகைதானே என்று அலட்சியமாயிருக் காது, ஒலிபரப்பே நடைபெறுகிறதென்ற எண்ணத்துடன் அக்கறையும் பயபக்தியும் கொண்டு கடித்தல் வேண்டும். விளையாட்டுப் புத்தி, வேடிக்கை மனப்பான்மை இவை யெல்லாம் நாடக ஒத்திகையின்போது வைத்துக்கொள்ள லாகாது. அளவுக்கு மிஞ்சி மூச்செறிதல், இருமுதல், கனைத்தல், சிரித்தல், கையில் உள்ள காகிதத்தை அசைத்து ஒலியுண்டாக்குதல், ஸ்டூடியோவிலே அங்கும் இங்குமாக அலைந்து திரிதல்.இத்தகைய செயல்களைத் தவிர்த்தல் வேண் டும். நாடக குத்திரதாரிக்கு நடிகர் யாவரும் ஒத்திகைச் சமயத்திலும் ஒலிபரப்புச் சமயத்திலும் மரியாதையுடன் கீழ்ப்படிதல் மிக மிக இன்றியமையாதது. நடிகரின் குறை பாடுகளை யெல்லாம் திருத்தும்போதும், தாம் நினைத்த பிர காரம் ஒலிக்குறிப்புக்கள் அமையாதபோதும், ஒத்திகை தமது இஷ்டப்படி பலன் தராதபோதும், குத்திரதாரிக்குச் சில சமயங்களில் சகிக்க முடியாத கோபம் எழக்கூடும். அந்தக் கோபத்தை வெளிக்காட்டி கடிகளின் உற்சாகத் தைப் பாதிக்கும் குத்திர தாரி அவ்வளவு திறமைசாலி என்று சொல்ல முடியாது. ஆயினும், சிறந்த கலைஞராகவும் சாதாரண வாழ்வில் இங்கிதம் நிறைந்தவராகவும் உள்ள குத்திரதாரிகளும் இருக்கிருர்கள். 5ாடக ஒத்திகையில் தமது முழுக் கவனத்தையும் ஒப்படைத்துத் தமது கற்பனை யின் பிரகாரம் எல்லாம் கடந்துகொண்டிருக்க, ஒரோரிடத் தில் சிறிது கோணிவிட்டால் அவர்கள் விசுவாமித்திரர் கள் ஆகிவிடவும் கூடும். அதைக் க்ண்டு நடிகர் திகைத்துப் போகாமல் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். ஏனெனில்,
நாடக ஒத்திகையும் ஒலிபரப்பும் 163
நாடகம் ஒலிபரப்பி முடிந்ததும் அந்தக் கலைஞர் பழையபடி தமது இங்கித சுபாவத்துக்கு வந்துவிடுவார். ஒலிபரப்புக்கு முக்திய இறுதி ஒத்திகை முடிந்தவுடன், காம் முன்பே குறிப்பிட்டபடி, கால்மணி நேரமோ அரைமணி நேரமோ ஒய்வு பெற்று, அதன் பின்னரே ஒலிபரப்பை ஆரம்பிக்க வேண்டும். இந்த ஓய்வு மிகவும் இன்றியமையாதது. இதில் நடிகரும் சூத்திரதாரியும், சம்பந்தப்பட்ட மற்றவர்களும் ஒத்திகையில் தாம் அடைந்த கஷ்டங்களை யெல்லாம் ஒரு சிறிது மறந்து, முடுக்கிவிடப்பட்டிருந்த நரம்புகளையெல் லாம் தளர்த்தி, ஆத்திரங்கள் சீற்றங்கள் அதிர்வேட்டுக் களை மறந்து, காபித் தம்ளர்களுடன் சிரம பரிகாரம் செய்துகொள்வது பின்னல் கடக்க இருக்கும் ஒலிபரப்புக்கு எவ்வளவோ உதவியா யிருக்கும்.
இறுதியாக, ஒலிபரப்பு கடக்கிறது. ஸ்டூடியோவில் மைக்கிர போன் கருவிக்குச் சரியான தூரத்தில் அந்த அந்த கடிகர் கிற்கிருர்களா என்று குத்திரதாரி ஒரு தடவை பார்த்துக்கொள்வார். யந்திர சாதனங்களெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று யக்திர நிபுணர் பரீட்சித்துப் பார்த்து, ஸ்டூடியோவிலும் யந்திர அறையிலும் கடிகாரங் கள் சரியான நேரம் காண்பிக்கின்றவா என்றும் பார்த் துக் கொள்வார். 15டிகர்கள் தம் கையிலுள்ள எழுத்துப் பிரதிகளெல்லாம் சரியான ஒழுங்கில் பக்கம் பக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்வார்கள். ஒலிக்குறிப்புகளே இயக்குவதற்கு நிய மிக்கப்பட்டவர் தமது காரியத்தில் கண்ணுங் கருத்துமாகக் காத்திருப்பார். கடிகார முள் குறிப்பிட்ட நேரத்தை எட்டி யதும் அறிவிப்பாளர் ஆரம்பிக்கிருர், நாடகத்தின் விறு விறுப்புக்கும் கதையின் போக்குக்கும் தக்கதாக அறிவிப் பாளர் வார்த்தைகளும் இருத்தல் வேண்டும். அதாவது, நாடகத்தின் ஒரு பகுதியாகவே நாடக அறிவிப்பாளரின் அறிவிப்பும் இருத்தல்வேண்டும். செய்தி அறிவிப்பு, இசை
Page 104
164 ஒலிபரப்புக் கண்
நிகழ்ச்சி அறிவிப்பு முதலிய மற்றைய அறிவிப்புக்களைப் போலல்லாது 5ாடக அறிவிப்புக்கு ஒரு தனிப் பாணி வேண்டும். கேட்கும் கேயர்களே வரப்போகும் காடகத் துக்குத் தயார்ப்படுத்தும் ஒருவித எடுப்பான பாணிதான் விரும்பத் தக்கது.
நன்றியுரை
நாடக ஒலிபரப்பு முடிந்தவுடன் குத்திரதாரிக்கும் நடிகருக்கும் இடையில் சம்பாஷணைகளும் விமரிசனங்களும் எழுவது இயல்பு. இந்தச் சக்தர்ப்பத்தில் குத்திரதாரி கடந்துகொள்ளும் முறை ஒரு முக்கியமான பாகமாகும். எல்லா கடிகரையும் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி குன்றி பாராட்டி அனுப்பவேண்டியது பெருங்கடமை. எந்த நடிகரையாவது தனிப்படுத்திப் பெருமை பாராட்டு வதோ அல்லது குறை கூறுவதோ சிறிதும் விரும்பத்தக்க தல்ல. எல்லாருக்கும் ஒரே விதமாக முகஸ்துதி கூற வேண்டும். சிலர் சிறப்புற நடித்திருக்கலாம். இன்னும் சிலர் எதிர்பாராத தவறுகள் செய்திருக்கலாம். ஆணுல், ஒலிபரப்பு முடிவில் இவற்றைப் பொருட்படுத்திச் சிலரைப் பாராட்டுவதும் வேறு சிலரைக் கண்டிப்பதும் நடிகரின் உற்சாகத்தைத் தளர்த்துவதாகும். அன்றி, அது இங் கிதமும் அல்ல. ஒலிபரப்பு முடிவில் நடிகர் யாவரும் திருப்தியுடனும் மனச் சாக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வீடு செல்வதற்கு இரண்டு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புதல் வேண்டும். ஆகையால், சிறந்த குத்திரதாரிக்கு இந்தப் பண்பு மிகவும் இன்றியமையாதது (இந்நூலின் இறுதியிலுள்ள அநுபந்தத்தில் ஒத்திகைக்கு முன்னும் பின்னும் என்ற நாடகத்தைப் பார்க்க).
பதின்மூன்ரும் அத்தியாயம் வானெலியும் சங்கீதமும்
ஒலிபரப்பு விஞ்ஞான வளர்ச்சியின் பயணுக எல்லாக் கலைகளுமே கன்மை அடைந்தபோதிலும் இசைக்கலைக்குத் தான் அதிக அதிருஷ்டமென்று சொல்லவேண்டும். கேள்விப் புலனில் தங்கியுள்ள இந்தக் கலை ரேடியோவின் வருகையால் அளவற்ற முன்னேற்றம் பெற்றுள்ளது. பொதுமக்களைக் களிப்பிக்கும் மேடையைவிட, கச்சேரியின் இசை நுட்பங்களையெல்லாம் தெளிவாகவும் சிறப்பாகவும் காண்பிப்பதற்கு ரேடியோவே சிறந்த வசதிமிளிக்கிறது. அன்றியும், சாஸ்திரோக்தமான முறையில் நமது இசைக் கலையில் புதிய முயற்சிகள், சாதனைகளை நிறைவேற்றவும், புத்தம் புதிய கலையுருவங்களை ஆக்குவதற்குச் சோதனைகள் பல செய்யவும், வழி முறை வந்த பாடாந்தரங்களையும் பாணிகளையும் பிற்சந்ததியாரின் உபயோகத்துக்குப் பேணி வைத்துக் கொடுக்கவும் ரேடியோ விஞ்ஞானம் இன்று பயன்படுகிறது.
இத்தகைய அநுகூலங்களையெல்லாம் தரும் ரேடியோ இருக்கையில் அதனை எல்லா வகையிலும் வளப்படுத்தி கமது இசைக்கலையை விருத்தி செய்யவும் புதிய சிருஷ்டிகளை ஆக்கவும் ரேடியோ நிர்வாகிகள் தம்மாலான முயற்சிகளைச் செய்தல்வேண்டும். மக்களுக்குக் கலையை வழங்குவது மாத் திரம் கடமையல்ல; அந்தக் கலையை விருத்தி செய்ய ஆதார மளிப்பது அதைவிடப் பெரிய கடமை. ஆகவே, பல விதத்தில் அநுகூலங்கள் நிறைந்த ஒலிபரப்புச் சாதனத் தைத் தக்கவாறு பயன்படுத்தி காட்டின் கலையை வளப்
Page 105
ஒலிபரப்புக் ຫມທີ່:
பக்தி மக்களுக்கு விகியோகிப்பதுடன் அந்தக் கஃலக்குப் ய உருவங்கள் கொடுத்தும் மறைந்துபோன உருவங் பகுப் புத்துயிரளித்தும் வளம்படுத்தவேண்டும். இந்தக் கடமைகளே மனத்தில் வைத்துக்கொண்டே ரேடியோவில் சங்தே ஒலிபரப்புத் துறையிலுள்ள நிர்வாகிகளும் கஃவஞர் களும் பணியாற்றுதல் வேண்டும். கச்சேரி நிகழ்ச்சி
கர்நாடக சங்கீத வித்துவான்கள் சாதாரணமாக மேடையில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் உட் கார்ந்து கச்சேரி செய்வது சம்பிரதாயமாக இருந்து வருகிறது. ஆணுல் ரேடியோ ஒலிபரப்புக்குள்ள நேரத்தில் ஒரு கச்சேரிக்காக மாத்திரம் மூன்று மணி நேரத்தை ஒதுக்கிவிடுவது சாத்தியமாகாது. ஆகையால், ரேடியோ சம்பிரதாயத்தில் அதிகப்படி ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரங்தான் ஒதுக்கிவைப்பார்கள். பொதுவாக இசை விகழ்ச்சிகள், பாட்டா யிருந்தாலும் சரி, வாத்தியக் கச்சேரியா யிருந்தாலும் சரி, அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ைேடபெற்று வருகின்றன. சென்னே, திருச்சிராப்பள்ளி முதலிய கிலேயங்களில் சாதாரணமான கச்சேரிகளுக்கு அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் கொடுக்கிருர்கள். பெரிய வித்துவான்களுடைய கச்சேரி களாயிருந்தால் ஒன்றேகால் மணி நேரமும் கொடுக் கிருர்கள். இந்த நேர எல்லேக்குள் பாடகரும் வாத்தியக் காரரும் எவ்வகையாகத் தமது கச்சேரியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதுபற்றியும், கிலேய நிர்வாகிகள் முக்கியமாகச் சங்கீதப்பகுதி நிர்வாகிகள் எவ்விதம் இந்த நிகழ்ச்சிகளேத் தயாரிக்கவேண்டும் என்பதுபற்றியும் ஆராய்வோம்.
மேடைமீது கச்சேரி செய்து அநுபவப்பட்டவர் களயே ரேடியோ நிர்வாகிகள் பெரும்பாலும் ஒலிபரப்
வானுெலியும் சங்கீதமும் I6ኛ
புக்குத் தெரிவு செய்வார்கள் அல்லது, மேடையில் கச்சேரி செய்யத்தக்க ஆற்றலுள்ளவர்களேத் தெரிவு செய்வார்கள். மேடை அநுபவம் பெற்றவர்கள்தாம் ரேடியோவிலும் விரைவில் ர்ேத்தி பெறுவார்கள். இந்தக் காரணத்தால், பெரும்பாலான பாடகர்கள் தாம் மேடையில் சாதாரண மாக அதுஷ்டிக்கும் முறைகளேயே ரேடியோ நிலேயத்தி லுள்ள ஸ்டூடியோவிலும் அநுஷ்டித்து வருகிருர்கள். மைக்கிரபோன் கருவியையும் ஒலிபரப்புக்கு உதவும் பிற யந்திரங்களேயும் இவர்கள் பொருட்படுத்துவதில்லே. ஒலி பரப்பு நிர்வாகிகள்தாம் பா ட க ரி ன் கிலேமையைக் கவனித்து தமக்கு வேண்டிய பலஃனப் பெறுவதற்கு ஏதோ ஒருவிதமாகச் சமாளித்துக்கொள்ளவேண்டும் என்ருகி விடுகிறது. இந்த வகையில் சில பாடகர் அதிருஷ்ட முள்ளவர்களானுல் ஒலிபரப்பும் திருப்தியாய் அமைந்து விடுகிறது. அவ்வளவு அதிருஷ்டம் வாய்க்கப் பெருதவர் களாகுல் ரேடியோவில் வெற்றி பெற முடிகிறதில்லே. ரேடியோ கிலேயத்திலுள்ள மைக்கிரபோனும் யந்திர சாதனங்களும் கிலேய கிர்வாகிகளின் இஷ்டப் பிரகாரம் கேட்டு கடப்பவை அல்ல. ஆகையால், கச்சேரி செய்யும் கலேஞரும் அதை உணர்ந்து ஓரளவில் கிலேய நிர்வாகி களுடன் ஒத்துழைத்து, அவர்கள்' தேவைகளேயும் சற்றே அநுசரித்து நடந்தால் கச்சேரியும் ஒலிபரப்பும் வெற்றி பெறலாம். ரேடியோ நிர்வாகிகள் ஒலிபரப்புச் சாதனங் களின் தனிப்பட்ட குணுதிசயங்களேக் கலேஞருக்கு நன்ருக எடுத்து விளக்கவேண்டும். கஃலஞரும் தாம் சாதாரண்மாக ஒரு மேடையில் உட்கார்ந்திருப்பதாக நினேக்காமல் ஒரு IL LOEL u ITL LI GEJT ஸ்டூடியோவில், சில விருப்பு வெறுப்புக் கிளேக் கொண்ட மைக்கிரபோனுக்கு முன்னுல் உட்கார்க் திருப்பதை உணரவேண்டும். இங்ங்னம் இரு பக்கத்தினரும் தமது கடமைகளே உணர்ந்து, தேவைகளே அநுசரித்து கடந்தால்தான் ஒலிபரப்பின் சிறந்த பல&னப் பெறமுடியும்,
Page 106
168 ஒலிபரப்புக் கலே
சாரீர வளம்
முதலாவதாகக் கவனிக்க வேண்டிய விஷயம் சாரீரம். கனிந்த பக்குவமான சாரீர வளமில்லாதவர்கள் ரேடியோ வில் சிறப்படைய முடியாது. ஒரு திறந்த மண்டபத்தில் பல மக்கள் கூடியுள்ள சபை முன்பு, மிருதங்கம், கஞ்சிரா, கடம் முதலிய பக்க வாத்தியங்கள் முழங்க ஒருவர் பாடினல், பொதுவாக அவரது சாரீரத்தின் நன்மை தீமைகள் அந்தப் பக்க வாத்தியங்களின் முழக் கத்தில் மறைந்துவிடும். மேலாழ்ந்தவாரியாகச் சுருதியும் தாளக் கணிசமும் மாத் திரம் சபையோரால் கவனிக்கத் தக்கனவா யிருக்கும். சார் ரத்தின் மெருகையோ கமகக் குழைவுகளையோ கன்கு கவனிக்க முடியாதிருக்கும். ஆனல் ரேடியோ விஷயத்தில் இங்ங்னம் திரை போட்டு மூடமுடியாது. தவறுகள் யாவற்றையும் பெரிது பெரிதாகப் புலப்படுத்திவிடும் மைக்கிரபோன். வீணே அல்லது வயலினில் காதம் எவ்வளவு சுத்தமா யிருக்கவேண்டுமென்று காம் எதிர் பார்க்கிருேமோ அவ்வளவு சுத்தமாக வாய்ப்பாட்டுச் சாரீர மும் இருக்கவேண்டு மென்றுதான் மைக்கிரபோனும் ரேடியோ அலைகளும் விரும்பும்.
மேடையில் உட்கார்ந்து பாடும் ஒருவரை காம் கேட்கும் போது அவர் குரல் எவ்விகத் தடைகளையும் எதிர்ப்படா மல் நமது காதில் கேரில் வந்து விழுகிறது. ஆனல் ரேடி யோவில் அவர் பாடும்போது அந்தக் குரல் எத்தனையோ வடிகட்டிகளின் வழியாகச் சென்று பற்பல வேற்றுருவங் களைப் பெற்று, ஈற்றில் பழைய உருவத்தின் ஒரு சாய லாகத்தான் நம்மை வந்து அடைகிறது. ஆகவே, ரேடியோ அலைகளுக்குப் பொருந்தாத சில தன்மைகள் சாரீரத்தில் இருந்தால் விபரீதப் பலகீனத்தான் தரக்கூடும். இதற்கு மாரு க, சிலருடைய சாரீரம் நேரில் கேட்பதைவிட ரேடியோவில் விசேஷமா யமைந்துவிடுகிறது. இப்படி
வானுெலியும் சங்கீதமும் 169
மைக்கிரபோனுக்கு நன்கு பொருந்தும் குரலை ‘மைக்கிர போன் குரல்" என்பார்கள். எல்லாருக்கும் இந்த மைக்கிர போன் குரல் அமைவதில்லை. இந்தக் குரலின் கிதானமான ஸ்தாயியும் கனமும் அநாவசியமான அநுஸ்வரங்கள் இல்லாமல், சுத்தமும் தெளிவும் கொண்டிருக்கும். சில ருடைய குரலில் பிளவு அல்லது கவர் தென்படும்; வேறு சிலரிடம் காத்திரமில்லாமல் வெறும் காற்றுத்தன்மை காணப்படும்; இன்னும் சிலரிடத்திலே காதப் பண்பில்லாத, அதிர்வுகள் குறைந்த, மட்ட ரகமான குரல் இருக்கும். இவையெல்லாம் ரேடியோவுக்குப் பொருந்தா. கண்டத்தி லுள்ள நரம்புகளும் சவ்வுகளும் கன்ருகச் சுருதிகூட்டிய வீணை நரம்புகள் போல நிதானமாக ஒலியைப் பிறப் பிக்கவும், சுவாசப் பைகளிலிருந்து காற்று அளவோடு பிறந்து அந்த ஒலியை ஏந்திச் செல்லவும் தக்க சாரீரமா யிருந்தால்தான் மைக்கிர போனுக்கும் மகிழ்ச்சி யேற்படும். சில பாடகர் தொண்டையிலிருந்து பிறக்கும் சாரீரத்தில் காதக் கட்டில்லை யென்று கண்டால் காசியின் வழியாகவும் ஒரு பகுதியைப் பிறக்கவைத்து 'மூக்கினல் பாடும்’ சுபாவ முடையவர்களாயிருப்பதைக் காண்கிருேம். இந்தச் சாரீ ரத்தை கேரில் கேட்கும்போது அவ்வளவு வெறுப்பு ஏற்படாவிட்டாலும் ரேடியோவில் கேட்டால் தெளிவில் லாமல் ஒரே குழப்பமாய்க் தொனிக்கும். காசி வழியாக வரும் தொனி உச்சஸ்தாயி அநுஸ்வரக் கூட்டங்கள் பல வற்றைப் பிறப்பித்துக்கொண்டு வருவதால் அவை ரேடியோ அலைகளில் சிதைவுற்று இயல்பாக வரும் சாரி ரத்தை அலங்கோலப்படுத்திவிடுகின்றன. இதனுல் சாரி ரத்தில் தெளிவில்லாமல் போய்விடுகிறது.
பாடகர் நிலை
கல்ல சாரீர வளமுள்ள பாடகரா யிருந்தாலும் மைக்கிரபோனுக்கு முன்பு உட்கார்ந்து பாடும்போது சரி
Page 107
ஒலிபரப்புக் கமே
யான கிலேயில் உட்காராவிட்டால் ரேடியோக் கச்சேரி சுகப்படாமல் போய்விடும். மைக்கிரபோன் எதிரிலே, சாரீரத்தின் பூரணமான கனமும் சக்தியும் பெறக்கூடிய அளவான தூரத்தில் உட்காரவேண்டும். கிலேயத்தில் கடமை பார்ப்பவர்கள் இதனேக் கவனித்து அதற்குத் தக்க விதமாகப் பாடகரை உட்கார வைப்பார்கள். சாரீரம் அதிகமாக உதைக்காமலும் வலிமையற்றுக் குறையாமலும் உள்ள தாரமே பொருத்தமானது.
பொதுவாக, பாரியான சாரீரமா யிருந்தால் மைக்கிர போனுக்குக் கொண்டாட்டம். அதனுல்தானுே என்னவோ இந்தக் காலத்தில் பலர் சுருதியைக் குறைத்து வைத்துக் கொண்டு பாடுகிருர்கள். அரைக் கட்டை, ஒரு கட்டை, ஒன்றரைக் கட்டைச் சுருதியில் பாடுபவர்களே ஆண் பாட கர்களில் அதிகமாகக் காணப்படுகிருர்கள். இது இயல் பாகவே பாடகரின் சுருதியா யிருந்துவிட்டால் நல்லதுதான். ஆணுல், தமது இயற்கையான சாரீரம் உயர்ந்த சுருதியி லிருக்க, வேண்டுமென்றே தளர்த்திக்கொள்பவர்கள் சாரீரம் தொய்வு கொண்ட வீஃனத் தந்திடோல் மட்ட மாகக் கேட்கும். ஆகவே, அவரவருக்கு இயல்பான சுருதியை வைத்துக்கொண்டு பாடுவதே நல்லது. மைக்கிர போனிடம் ஏமாற்ற முடியாது.
நமது கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிலெல்லாம் உட் கார்ந்த கிலேயில் பாடுவதே சம்பிரதாயமாகத் தொன்று தொட்டு வந்திருக்கிறது. மேல்நாட்டார் ஒருபோதும் உட் கார்ந்திருந்து பாடமாட்டார்கள். நின்று பாடினுல்தான் சாரீரம் பூரணமாயிருக்கும் என்று அவர்கள் சொல்லு கிருர்கள். ஆணுல், நம்மால் அப்படிப் பாட முடிகிற தில்லே. இது பழக்கமே யொழிய வேறில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, 'உட்கார்ந்து பாடும்போது கூடியவரையில் நமது குரல் மைக்கின் மத்தியில் செறியு
வானுெலியும் சங்கீதமும் 1፩ኛI
மாறு பாடவேண்டும். உடலே அங்கும் இங்கும் அசைத்தோ அல்லது த&லயைத் திருப்பியோ குரலே நாலு திக்கிலும் வீசியோ பாடுதல் ரேடியோவில் விரும்பத் தக்கதல்ல. சிலர் பாடும்போது சிற்சில சமயங்களில் பூமியைப் பார்த்தும் வேறு சமயங்களில் முகத்தை மேலே உயர்த்தியும் பாடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அங்ானம் பாடும் போது மைக்கிர போனில் ஒலி சரியாகப் போய் விழாமல் தடைப்படும். ராக ஆலாபனேயின்போதும் வேறு சமயங் களிலும் சிலர், உதடுகளே மூடிக்கொண்டு ஒலிப்பதும் உண்டு. முதலில் வாயைத் திறந்து தரன்ஞ.ணு." என்று பொலிவான ஒலியைப் பெருக்கிவிட்டு, Φ, ί, 3ο:ιτ தா.ணம்' என்று உதடுகளே மூடி இனங்காரம் செய் வார்கள். அது என்னவோ மாதிரி கேட்கும். கூடிய
வரையில் உதடுகளே மூடாமல் பாடுவதே நல்லது. சில: வேளேகளில் அத்தகைய ஊங்காரம் கருதி குறைந்தும்
ஒலிக்கக்கூடும்.
பாடகரோ அல்லது அவர் பக்கத்திலுள்ள வேறு எவரோ தாளம் போடும்போது துடையில் பலமாக அடித்துப் போடுவது நல்லதல்ல. அதுவும் ஒரு கடமோ கஞ்சிராவோ என்று நேயர்கள் சி&னத்துவிடக்கூடும். ஆகை பால் தாளம் போடுவது வெளியே கேட்காதவாறு போட் டால் பெருமையாயிருக்கும்.
பொதுவாக மேடையில் உட்கார்ந்து பாடும்போது கொனஷ்டையாயிருந்தாலோ பலவிதச் சேஷ்டைகளேப் புரிந்தாலோ அது சபைப் பழக்கமாகாது என்று சொல் வார்கள். ஆணுல் ரேடியோவில் அவ்வித அங்க சேஷ் பைகள் வெளியே யிருக்கும் நேயர்களுக்குத் தோன்ரு விட்டாலும், பாடகரின் சுருதி, சாரீரத்தின் கனம் முதலிய வைகளேப் பாதித்துக் கச்சேரியைக் கெடுத்துவிடும். ஆகை பால் அவற்றை முற்றும் அகற்றி, நன்முக Riயிர்ந்து
Page 108
1?3 ஒலிபரப்புக் கல்
உட்கார்ந்து உடலைக் கோணுமல், சாரீரத்தை மைக்கின் மத்தியை கோக்கிப் பிரயோகித்துப் பாடினுல் கச்சேரியும் கன்ருயிருக்கும். வாத்தியங்கள்
மேடைக் கச்சேரியில் பாடகரும் பக்கவாத்தியக்காரரும் உட்காருவதற்கு ஒரு சம்பிரதாயம் உண்டு. வழக்கமாக, பாடகர் 5டுவில் இருக்க, அவருக்கு இடது புறத்தில் வயலின்காரரும் வலது புறத்தில் மிருதங்கக்காரரும் உட் காருவார்கள். சில சமயங்களில் இடது கைப் பழக்கமுள்ள மிருதங்கக்காரரா யிருந்தால் மேற்சொன்ன ஒழுங்கு மாறி யிருக்கும். மிருதங்கத்தின் வலக்தரை எப்போதும் சபையை கோக்கி யிருக்கவேண்டும் என்ற விதியை அமைத் திருக்கிருர்கள். ஆணுல், இதே ஒழுங்கை ஒலிபரப்பு நிலை யத்தின் ஸ்டூடியோவிலும் கடைப்பிடிக்க முடியாது; கடைப்பிடிக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், கச்சேரி செய்பவர்கள் முன்னுல் சபையோர் உட்கார்க் திருக்கிறதில்லை. ஆகையால், ஸ்டூடியோவில் மைக்கிர போன் நிலைக்குத் தகுந்தபடியும், ஸ்டூடியோ அமைப்புக்குத் தகுந்தபடியுந்தான் பாடகரும் பக்க வாத்தியக்காரரும் அமர்ந்திருக்கவேண்டும்.
மைக்கிரபோன் கருவிகளில் பொதுவாக மூன்றுவித மான அமைப்புக்கள் இருக்கின்றன. ஒன்று, ஒரே பக்கம் இயங்கும் மைக்கிரபோன்; இன்னென்று இரண்டு பக்கம் இயங்குவது; வேருென்று, எல்லாத் திசைகளிலும் இயங்கு வது; ஒரு திசையில் மாத்திரம் இயக்கமுள்ள மைக்கிர போன் பேச்சுக்கு நல்லது; இரண்டு திசையில் இயங்குவது கச்சேரிகளுக்கும், நாடகம், விவாதம் முதலிய நிகழ்ச்சி களுக்கும் வாய்ப்பானது; எல்லாத் திசைகளிலும் இயங்கும் மைக்கிரபோன் வாத்தியகோஷ்டி முதலிய பல பேர் சேர்ந்த கிகழ்ச்சிகளுக்கு வசதியானது. பொதுவாக இரண்டு
வானெலியும் சங்கீதமும் 1?3.
திசையில், எதிருக்கெதிர் இயக்கமுள்ள ‘ரிபன் மைக்கிர போனையே கச்சேரிகளில் உபயோகிப்பதால், அந்த மைக்கிர போனுக்கு முன் கச்சேரியில் சம்பந்தப்பட்ட பாடகரும் பக்க வாத்தியக்காரரும் எப்படி உட்காரவேண்டும் என்பதை ஆராய்வோம்.
பாட்டுக் கச்சேரி
மேலேயுள்ள படத்தில் பாடகரும் பக்கவாத்தியக்கார ரும் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலைகள் காட்டப்பட்டிருக் கின்றன. பாடகருடைய குரல் நேரே மைக்கிரபோன் மத்தியில் போய் விழுகிறது. அவர் பக்கத்திலுள்ள தந்தி வாத்தியமாகிய தம்புராவும் அதே நிலையில் இருக்கிறது. முன் புறத்தில் வயலின்காரர் மைக்கின் எதிரில் உட்காரா மல் ஒரு பக்கமாகத் தள்ளி உட்கார்ந்திருப்பார்; மிருதங் கக்காரரும் அதே விதமாக மைக்கிரபோனை ஒரு பக்கத்தி லிருந்து கோக்கியவாறு உட்கார்ந்திருப்பார். மிருதங்கத்தின்
Page 109
7. ஒலிபரப்புக் கல்ே
வலக்கைப் புறமுள்ள வலந்தரை மைக்கின் ஒரு கோணத் தில் இருப்பதைக் கவனிக்கலாம். மிருதங்கக்காரர் இடக் கைக்காரரா யிருந்தால் மேடைக் கச்சேரிகளில் உட்கார்க் திருப்பதுபோல வயலின்காரரும் மிருதங்கக்காரரும் தமது ஸ்தானங்களே மாற்றிக்கொள்ளலாம்.
வயலின் தந்தி வாத்தியமாகையால் உச்சஸ்தாயி ஸ்வரக் கூட்டங்களே அதிகமாகப் பிறப்பிக்கும். ஆகை யால் மைக்கின் எதிரில் இருந்தால் பாடகரின் சாரீரத் தோடு போட்டி போட்டுக்கொண்டு ஸோலோ வயலின் மாதிரி கேட்கும் பக்கவாத்தியமாக, கச்சேரியிலுள்ள பாட்டு, மிருதங்கம் இவைகளுடன் அளவான காதத்தைக் கொடுப்பதற்கு, மைக்கிரபோனுக்கு எதிரில் வைக்காமல் சிறிதளவு திருப்பி ஒரு பக்கமாக வைத்தால் சிறப்பா யிருக்கும். வில் அழுத்தத்தைப் பொறுத்துக்கூடக் குறையத் திருப்பிக்கொள்ளலாம். மைக்கிரபோனுக்கும் வயலினுக்கும் இடையிலுள்ள தூரம், வயலினுக்குரிய சுத்தமான நாதமும் கனமும் தெளிவாயிருக்கும்வண்ணம் நிதானிக்கப்பட வேண்டும்.
மிருதங்கத்தின் வலந்தரையிலிருந்து உச்சஸ்தாயி ஸ்வரங்களும், தொப்பியிலிருந்து கீழ் ஸ்தாயி ஸ்வரங்களும் பிறக்கின்றன. வாசிக்கும்போது வலந்தரையிலிருந்து வரும் மீட்டுச் சாப்பு காதங்கள், தொப்பியிலிருந்து தட்டுக்கள், தொம் சப்தங்கள்-இவ்ையெல்லாம் மிகத் தெளிவாயிருங் தால்தான் மிருதங்கத்தை அநுபவிக்க முடியும். இந்த விதம் விதமான ஸ்வரக்கூட்டங்களேக் கொண்ட ஒலிகளே யெல்லாம் அளவறிந்து மைக்கிரபோனில் பதிய வைத்தால் தான் ரேடியோவில் நன்ருயிருக்கும். வலந்தரைப் பக்கத்தி லுள்ள உச்ச ஸ்தாயி ஸ்வரங்கள் மிக அதிகமாக வந்து மைக்கிலே நேரில் பதிந்தால் கன மிகுதியால் ரேடியோ அலைகளில் அவை பங்கப்பட்டுவிடும். ஆகையால்,
வானுெலியும் சங்கீதமும்
அவற்றின் கனத்தைக் குறைப்பதற்காகவே வலந்தரைப் பக்கம் ஒரு கோணத்தில், சிறிதளவாக மைக்கின் கோடிப் புறத்தை நோக்கி வைக்கப்படுகிறது. அதே விதமாகக் கீழ் ஸ்தாயி ஸ்வரக் கூட்டங்களே எழுப்பும் தொப்பி மைக்கின் எதிரிலே இருந்தாலும் நாதம் குழம்பிப் போகும். ஆகை யால், தொப்பிப் பக்கம் மைக்கிரபோனே நோக்கி இருக் காமல் திரும்பியிருந்து ஆணுல் அதிலிருந்து பிறக்கும் நாதம் மைக்கிரபோனின் இயங்கு எல்லேக்குள் பரவக்கூடிய தாக இருந்தால் சுகமாயிருக்கும். தொப்பி நாதம் அதிக மாயிருந்தால் பாடகரின் சாரிரத்தை அமுக்கிவிடுமாகை பால்தான் மைக்கிரபோனே நோக்காமல் திருப்பிக் கொள்வது. கீழ் ஸ்தாயி ஸ்வரங்களென்ருல் மைக்கிர போனுக்குக் கொண்டாட்டம் என்று முன்பே சொல்லி வைத்திருக்கிருேம். ஆகையால் கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் நிறைந்த தொப்பி கூடியவரையில் மைக்கின் இயங்கும் எல்லேயிலிருந்து விலகியிருக்கவேண்டும். ஆணுல், முற்றும் விலகிப் பின்புறம் திரும்பியிருந்தாலும் நல்லதல்ல. அங்கான மாயின் மிருதங்கத்தின் உண்மையான நாதம் கேட்காது.
தபேலா விஷயத்திலும் இதே வழியைத்தான் கடைப் பிடித்தல் வேண்டும். தபேலா வாசிப்போர் மைக்கிர போனின் நேர் எதிரில் ஒருபோதும் உட்காரலாகாது. சிறிது கோனத்தில் உட்கார்ந்து தொப்பிப் பாகத்தை மைக்கிர போனின் இயங்கும் பரப்புக்கும் இயங்காத பரப்புக்கும் இடையிலுள்ள எல்லேயில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றைத் தாள வாத்தியங்களாகிய கஞ்சிரா, கடம் முதலியவற்றில் மிருதங்கத்தில்போல ஸ் வ ர பேதம் கொண்ட சாதக்கை எழுப்ப முடியாதாகையால் அவற்றை மைக்கின் எதிரில், ஒலியின் கனத்தை மதிப்பிட்டு, அதற்குத் தகுந்த அளவு தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
Page 110
176 ஒலிபரப்புக் கல்
வயலின் ஸோலோ கச்சேரியாயிருந்தால் மைக்கிர போனின் எதிர்ப்பக்கத்தில் கேரே உட்கார்ந்து வாசிக்க லாம். பக்கவாத்தியம் மிருதங்கம் மறுபுறத்தில், முன்னே சொல்லப்பட்ட விதமாக வைக்கப்பட வேண்டும்.
வீணை வாத்தியத்தில் தந்தி மீட்டப்படுகிற இடத்தி லிருந்துதான் 5ாத அலைகள் பிறக்கின்றனவாகையால் அந்த இடமே மைக்கிரபோனுக்கு எதிரில் இருக்க வேண்டுமென்று நினைத்தலாகாது. மீட்டுகின்ற ஒலியல்ல, மீட்டிய பின் தந்தியில் அதிருகின்ற ஒலிதான் வீணையில் பிரதானம். ஆகையால் மீட்டுப் பக்கத்தைச் சிறிது ஒரு பக்கமாக வைத்துக்கொண்டு தண்டின் நடுப்பாகம் மைக்கிர போனுக்கு எதிரில் இருக்கத் தக்கதாக உட்காரலாம். வீணை நாதம் அதிக காத்திரமில்லாமையால் மைக்கிரபோனுக்குச் சமீபமாக இருத்தல் வேண்டும். ஆனல் அதிகச் சமீபமா யிருந்தாலும் குழப்பம் ஏற்படும். கோட்டு, ஸித்தார் முதலிய வாத்தியங்களுக்கும் இதே விதிகளைக் கையாள வேண்டும்.
நாகசுரக் கச்சேரி ஒலிபரப்பும்போதுதான் பல ஒலி பரப்பாளர்கள் கஷ்டப்படுவார்கள். கிம்மதியான வேளையில் எவ்வளவோ தூரத்துக்குக் கேட்கக்கூடிய சக்தி வாய்க் தவை நாகசுரமும் தவிலும். வாய்ப்பாட்டாயிருந்தாலென்ன, வேறு எந்த வாத்தியமாயிருந்தாலென்ன, காகசுரத்தைப் போன்ற சக்தி பெற்றிருக்க முடியாது. ஆகையால், சாதா ரணமாக ஒரு ரேடியோ கிலேயத்து ஸ்டூடியோவில் வைத்து நாகசுரத்தையும் தவிலையும் அவற்றின் பண்பு கெடாமலும், இசையின் அழகு கெடாமலும் ஒலிபரப்புவது கடினமான காரியந்தான். அதிகச் சக்தியும் கனமும் வாய்ந்த இந்த இரு வாத்தியங்களின் நாதமும் ரேடியோ அலைகளில் செல்லக்கூடியதாகப் பதப்படுத்துவதற்கு ஸ்டூடியோவிலே மைக்கிரபோனின்முன் அவற்றுக்கு இடம் வகுப்பதில் சில
வானெலியும் சங்கிதமும் 1?
தந்திரங்களைக் கையாளலாம். இரு புறம் இயங்கும் மைக்கிரபோனே நாகசுரக் கச்சேரிக்கு மிகவும் வாய்ப்பான கருவி. நாதத்தின் கனத்தில் வேண்டிய அளவை மாத்திரம் உபயோகித்துக்கொண்டு மிகுதியை இந்த மைக்கிர போனின் இயங்கா எல்லைப்பகுதியில் கழித்துவிடலாம்.
நாகசுரக் கச்சேரி
மைக்கிரபோனின் இயங்கும் எல்லையின் ஒரமாகச் சுமார் 15ான்கு அல்லது ஐந்தடி விலகி நாகசுரமும், அதற்கு நேர் எதிர்ப்புறமாகச் சுமார் எட்டடி விலகித் தவிலும் வைக்கப்பட்டால் ஓரளவு வேண்டிய பலனைப் பெறலாம். அங்ங்ணமாயின், இந்த இரு வாத்தியங்களின் 5ாதத்துக் குரிய இயல்பான கனம் குறைக்கப்பட்டு மைக்கிரபோன் தாங்கக்கூடிய அளவு மாத்திரம் ஒலிபரப்பியில் செல்லும் ஒத்திகையின்போது மைக்கிரபோனுக்கு எவ்வளவு தூரம்
Page 111
178 ஒலிபரப்புக் கல்
இந்த வாத்தியங்கள் இருக்கவேண்டுமென்பதைத் தீர்மா னித்துக் கொள்ளலாம்.
வாத்தியகோஷ்டி நிகழ்ச்சி ஒலிபரப்பைப் பொறுத்த வரையில் மேலே நாம் தனித்தனி வாத்தியங்களுக்குச் சொன்ன விதிகள் யாவும் கவனிக்கப்படவேண்டும். சாதாரணமாக ஒரு வாத்தியகோஷ்டியில் அதிக அளவாக எத்தனை வாத்தியங்கள் அநுமதிக்கப்படலாம் என்பது ஒலி நிபுணர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அது, வாத்தியங்களின் தன்மையையும் ஒலிபரப்பு மண்டப வசதி யையும் பொறுத்தது. இருந்தும், எண்ணிக்கையில் அளவுக்கு மிஞ்சி வாத்தியங்களைச் சேர்த்தால் பலன் நன்ருயிருக்காது. உதாரணமாக, மிக அதிக அளவில் ஒலிபரப்புக்கு அநுமதிக்கத்தக்க வாத்தியங்கள் அடங்கிய ஒரு வாத்தியகோஷ்டியைப் பின்வரும் அட்டவணையில் தருகிருேம். விதேச வாத்தியங்கள் சில, கர்நாடக சங்கீதத் துக்குப் பொலிவு கரும் என்ற காரணத்தால் இவ்வட்ட வணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுருதி 2 தம்புரா
தந்தி வாத்தியங்கள்
4 வயலின்
கோட்டு
வியோலா
டபிள் பேஸ்-லயத்துக்கு மாத்திரம்
குழல் வாத்தியங்கள்
1 புல்லாங்குழல்
வானெலியும் சங்கீதமும் 179
1 கிளாரிநெட்
முக விணை
தாள வாத்தியங்கள்
மிருதங்கம் தபேலா கஞ்சிரா
கடம்
மண்டப வசதி
மேலே காட்டப்பெற்ற அட்டவணையில் இருபது வாத்தியங்கள் சேர்த்திருப்பதைக் காணலாம். இந்த இருபது வாத்தியங்களையும் வைத்து வாத்திய கோஷ்டி இசை யெழுப்ப மிகப் பெரிய அளவினதான ஸ்டூடியோ வேண்டும். உட்காரும் இடப்பரப்பு மாத்திரமல்ல, மண்ட பத்தில் நாதம் போதிய அளவு சஞ்சரிக்கக்கூடிய வெற்றிட மும் இதற்கு அவசியமானது.
இதைப்பற்றிச் சிறிது விளக்குவோம். ஒலிபரப்பு ஸ்டூடியோவில் மைக்கிரபோனுக்கு முன்னிலையில் பேச்சோ பாட்டோ வாத்திய இசையோ பிறக்கும்போது அந்த ஒலி நேரடியாக மைக்கில் போய் விழுவதில்லை. மண்டபத்தில் அவ்வொலியின் பெரும்பகுதி சுழன்று, சிறிது சில சாதனங் களில் மறைந்து போக, மற்றது பலவித எதிர் ஒலிகளைக் கூட்டிக்கொண்டு திரண்டு வந்து மைக்கில் செறிகிறது. இந்தவிதமான எதிரொலிகள் மூல ஒலியிலுள்ள ஸ்வரங் களுக்குத் தக்க விதமாகக் குறுகவும் நீளவும் செய்யும். கீழ் ஸ்தாயி ஸ்வரக்கூட்டங்கள் எப்போதுமே எதிரொலியில் சிறிது தாமதித்து நிற்கும். தக்குச் சுருதி யுள்ள ஆண்கள் ஸ்கான அறையில் நின்று பாடும்போது அவர்கள் தம்மையும் அறியாமலே பரவசப்பட்டு மகிழ்வதை
Page 112
180 ஒலிபரப்புக் கல்
அநுபவத்தில் கண்டிருக்கிருேம். இதற்குக் காரணம் ஸ்நான அறையில் அவர்கள் சாரீரம் வெகு தேரமாக எதிரொலித்து சிற்பதுதான். 15ாற்புறமும் கருங்கல் சுவர்கள் குழ்ந்த கோவில் மண்டபங்களில் வேத பாரா யணம் நடக்கும்போது உள்ளே இருப்பவர்களுக்கு ஒருவித மெய்ம்மறதி ஏற்படுவதற்கும் காரணம் இதுதான். ஆனல், உச்ச ஸ்தாயி ஸ்வரக் கூட்டங்கள் அவ்வளவாக மீண்ட நேரம் எதிரொலிப்பதில்லை. எப்படியாயினும் மண்டபத்தில் வாத்தியங்களிலிருந்து எழும் ஒலிக் கூட்டங்கள் ஓரளவாவது சஞ்சாரம் செய்து எதிரொலி யுடன் கலந்தால்தான் மேளம் கட்டி நாதம் பொலிவா யிருக்கும். இந்தப் பண்பு ஏற்படுவதற்கு இசை மண்ட பத்தில் அதற்கு அளவான வெளி இருத்தல் அவசியம். அது குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்காமலும் குறையாம லும் இருத்தல் வேண்டும். கட்டிடக் கலையில் வல்லவர்கள் ஒலிபரப்பு நிலையத்தில் ஸ்டூடியோ அமைக்கும்போது, அந்த ஸ்டூடியோ ஒரு தனி மனிதனின் பேச்சுக்கா, அல்லது பலர் சேர்ந்து கடிக்கும் 5ாடகத்துக்கா, அல்லது சாதாரணமாக நாலைந்துபேர் சேர்ந்த கச்சேரிக்கா அல்லது பதினைந்து இருபது பேர் சேர்ந்த வாத்திய கோஷ்டிக்கா உபயோகப் படும் என்பதைத் தீர்மானித்து, மண்டபத்துக்குச் சேர்க்கப் படும் கட்டிடப் பொருள்கள், சபை கூடுவதாயிருந்தால் அதில் கலந்துகொள்ளக்கூடிய மக்கள் எண்ணிக்கை, தள வாடங்கள் ஆகியவற்றையும் மதிப்பிட்டு, அதற்கேற்ற முறையில் ஸ்டூடியோ நிர்மாணிப்பார்கள்.
வாத்தியகோஷ்டி ஒலிபரப்புக்கு மிகவும் வாய்ப்பான மைக்கிரபோன் திஸிள்' மைக் என்று சொல்லப்படும் சர்வ திக்குகளிலும் இயங்கும் கருவி. இந்த மைக்கைச் சுற்றி எல்லா வாத்தியக்காரர்களும் வட்ட வடிவமாக உட்கார்க் திருக்க வசதி இருக்கும். இரு பக்கம் இயங்கும் ‘ரிபன்' மைக்கானுல் மைக்கின் இருபுறத்திலும் வாத்தியக்காரர்
வானெலியும் சங்கீதமும் 181
எதிர்முகமாக உட்காரவேண்டும். ஒரு ச ைப யி ன் முன்பு ஒலி பரப்பப்படும் வாத்திய கோஷ்டியானல் மேற் சொன்ன இருவித மைக்கிரபோன்களும் உதவா. ஒரே பக்கம் இயங்கும் மைக்கிரபோனே பொருத்தமானது. ஆயினும் பரந்துபட உட்கார்ந்திருக்கும் வாத்தியக்காரர் எல்லாருக்கும் ஒரேயொரு ைம க் போதாதாகையால், இதற்கு இரண்டு அல்லது மூன்று மைக்கிரபோன்கள்
Gதவைப்படும்.
வாத்திய கோஷ்டி அமைப்பு ,
மேல் காடுகளில் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது பேர் கலந்துகொள்ளும் மிகப் பெரிய வாத்திய கோஷ்டி ஒலிபரப்புக்களில் சாதாரணமாக உபயோகிக்கப்படும் மைக்கிரபோன்களைத் தவிர, "குழ்நிலை மைக்" என்று
Page 113
182 . . ஒலிபரப்புக் கலை
தனியாக இன்னெரு மைக்கிரபோனையும் உபயோகிப் பார்கள். கோஷ்டியின் பூரண ஒலியும் ஸ்டூடியோ அல்லது மண்டபத்தில் திரண்டு சஞ்சரிக்கும்போது அந்தச் சூழ் நிலையைக் கவர்ந்து ஒலிபரப்பில் சேர்த்தால் கேட்பதற்கு ஒரு கல்ல அழகைத் தரும், அதனல், பெரிய வாத்திய கோஷ்டிகளில், வாத்தியங்களுக்கு கேர் எதிரில் இல்லாமல் சில அடி தூரத்தில், மேலே உயரத்தில் ஒரு மைக்கிர போனைக் கட்டித் தொங்கவிட்டால் அது சூழ்நிலையைப் பிரதிபலித்து ஒலிபரப்பப்படும் இசையின் தரத்தை மேம்படுத்தும்.
பொது விதிகள்
மேலே சொன்ன விதிகளெல்லாம் சாரீரத்திலும் வாத் தியங்களிலும் நாம் அவசியம் கவனிக்கவேண்டிய ஒலிப் பண்பு சம்பந்தமாக, அந்தத் தூய தன்மையை ரேடியோவில் பெறுவதற்கு ஆதாரமாகச் சொல்லப்பட்ட விதிகள். மிடற்றிலிருந்து பிறக்கும் ஒலியும், தந்தி வாத்தியங்களி லிருந்து பிறக்கும் ஒலிகளும், தோல் வாத்தியங்களிலிருந்து பிறக்கும் ஒலிகளும் அவற்றின் வெவ்வேறு விதமான குணதிசயங்களைக் கொண்டவை. அவை ரேடியோ அலை களில் செல்லும்போது வெவ்வேறு விதமான மாறுதல்களைக் கொள்ளுகின்றன. ஆகையால் எல்லாவற்றையும் ஒரே விதமாகப் பாவித்தால் அவற்றின் இயல்பான நாதத்தை ரேடியோவில் பெறமுடியாது. அதற்காகவே ஸ்டூடியோவில் மைக்கிரபோன் கருவி முன்பு இவற்றுக்கு இடம் வகுக்கும் போதே தக்க முறையில் வகுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சில பொது விதிகளை எடுத்துச் சொன்னுேமேயல்லாமல், இவைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இன்றியமையாத விதிகள் என்று ஆரம்ப ஒலி பரப்பாளர் கொண்டுவிடலாகாது. ஸ்டூடியோ அமைப்பு, மைக்கிரபோன் கருவியின் த ன் ைம ஆகியவற்றைப்
வானெலியும் சங்கீதமும் 183
பொறுத்து இந்த விதிகளை மாற்றிக்கொள்ளுதல்வேண்டும். வாத்தியங்களின் குணதிசயங்களைக் கொண்டு, அவற்றின் தனிப்பட்ட சில பண்புகளைக் கொண்டு, இந்த விதிகளை எடுத்துச் சொன்னுேம். ஆனல், ஒலிபரப்பாளர் எப்போதும் ஸ்டூடியோவில் ஒத்திகை செய்யும்போது நன்ருகப் பரி சோதித்துப் பார்த்த பின்பே ஒலிபரப்ப முற்படவேண்டும். இயற்கையாக ஒவ்வொரு வாத்தியத்திலும் என்ன கல்ல அம்சங்களை நாம் எதிர்பார்க்கிருேமோ, என்னவிதமான 15ாதத்தை நாம் நமது காதினுல் கேட்கிருேமோ, அந்த நாதத்தையே ரேடியோவிலும் கேட்கத்தக்கதாக ஒலி பரப்பை அமைக்கவேண்டும். இதுவே முக்கியமான விதி. வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பாட்டும் வியலினும் மிருதங்க மும் அதற்குரிய பிரமாணம் தவருமல் இருக்கவேண்டும். பாட்டு அதற்குரிய முதன்மை ஸ்தானத்தைப் பெற்றும், பக்க வாத்தியங்கள் பாட்டை அடக்காமலும் இருத்தல் வேண்டும். அதேவிதமாக வயலின் ஸோலோ அல்லது வீணைக் கச்சேரியானுலும் மிருதங்கம் அதற்குரிய இடத்தி லிருந்து முக்கியமான வாத்தியத்தின் பொலிவை மறைக் காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கச்சேரி சம்பிரதாயம்
ரேடியோக் கச்சேரியானுல் என்ன, மேடைக் கச்சேரி யானுல் என்ன, ரஸிகர்களை மகிழ்விப்பதே கோக்கமா யிருத்தல் வேண்டும். ஆகையால் ஒரு கச்சேரி சிறப்படை வதற்குத் தெரிக்தெடுக்கப்படும் பாட்டுக்கள் ராக வகை யிலும் தாள வகையிலும் கன்கு பொருத்தமாக அமைதல் வேண்டும். மேடைக் கச்சேரி சம்பந்தமாகத் தமது அநுபவ யோசனைகளைச் சங்கீத வித்துவான் செம்மங்குடி பூரீநிவாச ஐயர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருப்பது இங்கே உபயோகப்படும்.
Page 114
184 ஒலிபரப்புக் கலை
"கச்சேரியின் ஆரம்பத்தில் தனது சாரீரம் எந்த அளவு பாட முடியும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளவேண்டும். பிறகு ஒரு சிறிய வர்ணமோ, பெரிய வர்ணமோ, அல்லது சிறிய கீர்த்தனமோ சாரீரத்தின் தன்மையைப் பொறுத்து ஆரம்பித்துப் பாடினல் சாரீரத் தின் நிலைமை ஒருவாறு புலப்படும். அதிலிருந்து ரக்தி யுள்ள பல ராகங்களிலுமுள்ள மத்தியம காலக் கீர்த் தனைகளை மாறி மாறிப் பல தாளங்களிலும் பல காலப் பிரமாணங்களிலும் பல மேள கர்த்தாக்களிலும் கலந்து வரும் வகையில் கேட்போரின் மனத்தைக் கவரும் விதத் தில் பொறுக்கிப் பாடவேண்டும். ராகம், ஸ்வரம் இவை களை மிதமாகப் பாடிக்கொள்ளவேண்டும். அதன் பிறகு பல்லவிக்கான கனராகத்தை எடுத்துக்கொண்டு விஸ் தாரமாக இரண்டு மூன்று ஸ்தாயிகளில் ராகத்தின் ஸ்வரூபத்தை நன்கு விளக்கிப் பாடிய பின் மத்தியம காலம் என்று சொல்லும் காளத்தைப் பாடவேண்டும்.
'பிறகு ஸாஹறிக்யம் குறைவாகவுள்ள பல்லவிகளைப் பிராசீன முறைப்படி செளக்க, மத்தியம, துருத காலங் களுடனும் பதகர்ப்பத்துடனும் கி ர வ ல் செய்து மிருதங்க வித்துவானுக்குக் தனி ஆவர்த்தனம் விட்ட பிறகு அரை ஆவர்க்கனம், முழு ஆ வர் த் தனம் இவ்வாறு ராகப் பொலிவுடன் ஸ்வரங்களைப் பாடி, பின்னர்ப் பெரிய ஆவர்த்தனமாக ஸ்வரம் விஸ்தாரமாகப் பாடவேண்டும். அது முடிந்தவுடன் பல்லவியை மத்தியம காலமாகவோ துருத காலமாகவோ செய்துகொண்டு அநேகம் ரக்தி ராகங்களில் ராக மாலிகையாக ஸ்வரம் பாடவேண்டும். அது ரொம் பவும் ரஞ்சகமாகவும் வித்வத் தன்மை பொருந்தியதாகவும் இருக்கும்.
"பிறகு ராகமாலிகை, ஜாவளி, பதம், தில்லான முதலியவை பாடி முடிப்பதுதான் கச்சேரி செய்யும்
வானெலியும் சங்கீதமும் 185
முறை. இந்த முறையில் அ5ேகம் பழைய பெரிய வித்து வான்கள் கச்சேரிகளைச் செய்து உலகத்தோரால் நன்கு மதிக்கப்பட்டு வருகிருஜர்கள்.
'தற்காலம் சங்கீதக் கச்சேரிகளில் சில அளவு இல்லா மல் இருக்கிறது. உதாரணமாக, கீர்த்தனம் பாடுவதற்கு எந்த அளவு ராகம் பாடவேண்டும், எந்த அளவு ஸ்வரம் பாடவேண்டும் என்ற அளவு தாண்டி எல்லாக் கீர்த்த னங்களுமே ராகம் பல்லவிபோல் கருதப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அதிலும் சிற்சில வித்துவான்கள் முறை தவருமல் கச்சேரிகளைச் செய்துகொண்டே வந்திருக் கிருர்கள்.
"பாவத்துடன் உணர்ச்சி ததும்பும் சங்கீதத்தைக் கேட் கும்பொழுது-பாடுகிறவர்களும் தம்மை மறந்து காத வெள்ளத்தில் மூழ்கி லயித்துப் பாடும்போது-கர கோஷம் மூலமோ வேறு எந்தவிதமாகவோ அவர்க ளுடைய சக்தோஷத்தை வெளியிட முடியாதபடி, பாடு பவரும் கேட்போரும் தம்மை மறந்து கிற்கும் நிலையை உண்டாக்கக் கூடிய சங்கீதமே உயர்ந்த சங்கீதம் என் பதற்கு அடையாளமாகும்.
'சங்கீதக் கலையைத் தொழிலாகக் கொண்டு மேடை யில் கச்சேரி செய்யும் வித்துவான்களுக்கு எந்தவிதத்தில், எந்த மாதிரியாக, எவைகளைப் பாடி ஜனங்களைச் சந்தோ ஷிக்கச் செய்து, அவர்களின் திருப்தியையும் ஆதரவை யும் அடையலாம் என்ா) எண்ணம் இருந்தபோதிலுங் கூட, வெகு காலமாக இருந்துவரும் சம்பிரதாயத்தை அதுசரிக்கும் லகரிய லக்ஷணங்களை அறிந்தும் நிஜமான சங்கீதத்தைப் பாடுவதுதான் உசிதமாகும். கேட்போரின் ருசியை மாற்றுவது பாடுபவர்களின் மகத்தான பொறுப் பாகும்.
Page 115
f86 ஒலிபரப்புக் கல்
"உயர்தரமான சங்கீதத்தையே மிகுதியாக விரும்பும் படி செய்வதும், அவர்களுடைய மனம் சாந்தி நிறைந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருக்கச் செய்வதும் உயர்ந்த சங்கீதத்தைப் பாடும் வித்துவான்களின் வசமே இருக்கின்றன.”*
பாட்டுக்கள் தெரிவு
கச்சேரி சம்பிரதாயத்தைப்பற்றி வித்துவான் பூீங் வாச ஐயர் சொல்லியிருப்பது மேடைக் கச்சேரிகளையே முக் கியமாகப் பொறுத்ததாயினும், ரேடியோப் பாடகர்களும் அநுசரிக்க வேண்டிய பல விதிகள் அதில் அடங்கியுள் ளன. முதலாவதாக ரேடியோக் கச்சேரிகளில் பாடகர் களும் நிலையத்துச் சங்கீத உத்தியோகஸ்தர்களும் மிக முக் கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் பாட்டுத் தெரிவு. பெரும்பாலும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒழுங்கு செய்யப்படும் ரேடியோக் கச்சேரிகளில் மேடைக் கச்சேரிபோல அகாயாசமாக உட்கார்ந்து தம் இஷ்டம் போலப் பாட முடியாது. அந்த அரைமணி அல்லது ஒரு மணிக்குள்ளே பல அம்சங்கள் பரிமளிக்கத் தக்கதாகப் பாட்டுக்களைத் தெரிவு செய்யவேண்டும். அன்றியும், ஒலி பரப்பப்படும் சமயத்தைக் கருத்தில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற ராகங்களாகப் பொறுக்கியெடுத்தல் வேண் டும். உதாரணமாக, மாலே ஐந்து மணிக்கும் ஆறு மணிக் கும் இடையிலுள்ள நேரத்தில் பிலஹரி, பெளளி, சாவேரி முதலிய சில ராகங்கள் ரஞ்சகமாயிருக்க முடியா. பூரி கல்யாணி, சங்கராபரணம், ஆாபி, காட்டை முதலிய ராகங் கள் மிக எடுப்பாயிருக்கும். இரவு ஒன்பது மணி பத்து மணி வேளையில் ஹிக்தோளம், கேதார கெளளை, எதுகுல காம்போதி, சாரங்கா, வராளி முதலிய ராகங்கள் கவர்ச்சி
*திருவனந்தபுரம் ரேடியோவில் Curupi 'வாமூெலி"யில் வெளிவந்தது.
வானுெலியும் சங்கீதமும் 18?
கச்சேரி ஆரம்பத்தில் ஒரு சிறிய வர்ணமோ அல்ல்து ஒரு மத்தியம கால உருப்படியோதான் விரும்பத் தக்கது. அன்றியும் அது ஷாடவ அல்லது ஒளடவ ராகத்தில் அமைந்தால் விறுவிறுப்பைக் கொடுத்து நேயர்களைக் கவ ரும். கச்சேரி ஆரம்பிக்கும்போதே ராக ஆலாபனை செய் வது உதவாது. கேட்டுக்கொண்டிருக்கும் கேயர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க விறுவிறுப்பான சங்கதிகளும் கடையும் இருத்தல் அவசியம். அப்போதுதான் மனம் கச்சேரியில் ஈடுபட்டு நிலைக்கும். கச்சேரி, ஸ்டுடியோ வில் பாடகருக்காக மேளம் கட்டுவது மாத்திரமல்ல, கேட் போர் உள்ளங்களிலும் மேளம் கட்ட வேண்டுமென் பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையைப் பெறுவதற்காகத் தான் மத்தியம காலத்தில் ஒரு சிறிய வர்ணமோ அல் லது கீர்த்தனமோ பாட வேண்டும் என்பது. இதை அறி யாது பலர் ஆரம்பத்திலேயே ராக ஆலாபனை செய்து ரேடியோக் கச்சேரியைக் கவர்ச்சியில்லாமல் செய்துவிடு கிருர்கள்.
அரை மணி நேரக் கச்சேரியொன்றுக்குத் தெரிவு செய்யும் பாட்டுக்கள் மீண்ட உருப்படிகளாயில்லாமல் ஒரு மத்திய தரத்தில் உள்ளவையாயிருப்பது நல்லது. சுமார் கான்கு அல்லது ஐந்து உருப்படிகளாவது அரை மணிநேரக் கச்சேரியில் சேர்க்கப்பட்டால்தான் அது பூரணமான கச்சேரியாகத் தோன்றும். இல்லாவிட்டால் அரைகுறை யாகத் தெரியும். வித்துவான் பூரீநிவாச ஐயர் சொல்வது போல, ஒரு சிலர் ராகம் பாடுவதையும் ஸ்வரம் பாடுவதை தம் அளவு தெரியாமல் பாடுவதால், கச்சேரிச் சூழ்நிலையே கலங்கிப் போய்விடுகிறது. அரை மணி நேரக் கச்சேரி களிலும் அளவுக்கு மிஞ்சி ராகம், கிரவல், ஸ்வரம் முதலிய வற்றைப் பாடுவதால் கச்சேரி சுகப்படுகிறதில்லை. அரை மணி நேரக் கச்சேரிகளில் ஒரு பாட்டுக்கு இரண்டு கிமிஷத்துக்கு அதிகமாக ராகம் பாடுவதோ அல்லது
Page 116
188 ஒலிபரப்புக் கலை
ஸ்வரம் பாடுவதோ பொருத்தமா யிருக்காது. ஒரு மணி நேரக் கச்சேரியாயிருந்தால் மாத்திரம் ஒரு முக்கியமான கனராக ஆலாபனையும் அதற்குரிய உருப்படியில் ஸ்வரமும் பாடலாம். அந்த உருப்படியும் சுமார் இருபது அல்லது இருபத்தைந்து நிமிஷத்துக்கு அதிகப்படலாகாது. மிகுதி யாயுள்ள நேரத்தில் நான்கு ர்ேத்தனங்களாவது அழகாகப் பாட முடியும். இவற்றிலும் இரண்டொரு கீர்த்தனங் களுக்கு மிதமாக ராகமும் ஸ்வரமும் பாடலாம். பொதுவா கச் சொல்லப்போனல், அரைமணி அல்லது கால் மணி கேரம் கச்சேரி செய்பவர்கள் மேடையில் அநுஷ்டிக்கும் சம்பிரதாயங்களை முழுவதும் மறந்து, ரேடியோவில் அள வறிந்து உருப்படிகளே மாத்திரம் பாடினுல் கன்ருயிருக் கும். ரேடியோவில் பாடும் பெரும்பாலான இளம் பாடகர் கள் தாம் ஒவ்வொரு பாட்டுக்கும் ராகமும் ஸ்வரமும் பாடி ஞல்தான் கேட்பவர்கள் தம்மை வித்வத் தரத்தில் மதிப் பார்கள் என்ற ஒரு கவருண எண்ணம் கொண்டிருக்கிருர் கள் என்பதை அநுபவத்தில் கண்டிருக்கிருேம். இவர் களிற் பலர் பாடும்போது ராகமெல்லாம் பக்குவம் இல் லாமலும் ஸ்வர மெல்லாம் சிட்டையாகவும் ஒலிப்பதை ரேடியோ நேயர்கள் கவனிக்காமலிருக்கவில்லை. ஆகை யால், இந்த இளம் பாடகர்கள் கொண்டுள்ளதற்கு எதிர் மாருன அபிப்பிராயமே நேயர்கள் மனத்தில் படுகிறதென் பதை கிலையத்திலுள்ள சங்கீகப் பகுதி உத்தியோகஸ்தர் பாடகருக்குத் தெளிவாக எடுத்துணர்த்தக் கடமைப்பட் டுள்ளார்கள். V
கச்சேரிக்குப் பாட்டுக்கள் தெரிவு செய்யும்போது ஒரே வர்க்கத்திலுள்ள ராகங்கள் ஒன்றையொன்று பின் தொடர்ந்து வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கச்சேரி உருப்படிகளில் ராகங்களெல்லாம் ஒரே தன்மை யான சஞ்சாரத்தைக் கொண்டிருந்தால் அழகு கொடுக் காது என்பதுதான் காரணம். ஆணுல், சில ராகங்கள்
வானெலியும் சங்கீதமும் 189
ஆரோகண அவரோகணக் கிரமத்தில் ஏறக்குறைய ஒரே தன்மையாயிருந்தும், தாம் கொண்டுள்ள விசேஷ மூர்ச் சனேகள் காரணமாக வேறுவிதச் சாயல் பெறுகின்றன. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும் மத்தியமம் ஒன்றைத் தவிர மற்றைய ஸ்வரங்களெல்லாம் ஒரே மாதிரியா யிருந்தும் காக்தார நிஷாதங்களின் விசேஷ மூர்ச்சனைகள் காரணமாக வெவ்வேறு சாயல் பிறக்க இடமிருக்கிறது. அன்றியும், வேறு சில ராகங்களில் பூர்வ மேளமோ அல்லது உத்தர மேளமோ ஒரே மாதிரி ஒலிக்கும் இரண்டு ராகங்களைக் கச்சேரிப் பாட்டுத் தெரிபவர்கள் அடுத்தடுத்து வைக்க மாட்டார்கள். உருப்
படிகளை ஒழுங்குபடுத்தும்போது ராக உருவங்கள் ஒரே தன்மையான சாயலைக் கொண்டில்லாமல் வேறு வகையான உணர்ச்சியைத் தரக்கூடியனவாக அமைத்தல் வேண்டும். அதே விதமாக, தாள வகையிலும் ஒரு கச்சேரியில் முழுவதும் சதுரஸ்ரமோ, திரிஸ்ரமோ, கண்டமோ இல் லாமல் பல கடைகளும் கலந்து வரக்கூடியதாயிருந்தால் கேட்போருக்கு ரஞ்சகமளிக்கும். கச்சேரிச் குழ்கிலையில் அமைதியும் விறுவிறுப்பும் மாறி மாறி வரத் தக்கபடி விளம்பம், மத்தியமம், துருதமாகிய கதிகளும் ஏற்பட வேண்டும்.
இசைத் தட்டுத் தெரிவு
வானெலி மண்டபமாகிய ஸ்டூடியோவில் பாடகர் களைக் கொண்டு நடக்கும் கச்சேரிகளுக்குப் பாட்டுக்கள் தெரிவு செய்யும் விஷயமாகப் பேசும்போது அத்துடன் சம்பந்தப்பட்ட இன்னெரு விஷயத்தையும் இங்கே சொல்லி வைக்கவேண்டியது அவசியம். ரேடியோ நில்ை யங்களில் சங்கீதப் பகுதியைக் கவனிக்கும் உத்தியோகத் தரும் அறிவிப்பாளரும் இசைத் தட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும்போதும் மேற்சொன்ன விதிகளை
Page 117
190 ஒலிபரப்புக் கல்
மனத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். இசைத் தட்டு நிகழ்ச்சிகளிலும் ராகப் பொருத்தம், தாளப் பொருத்தம் ஆகிய இவற்றைக் கவனிக்கவேண்டும். அன்றியும், பாடகரின் தனிப்பட்ட பாணிகள், அவர்கள் பாடியுள்ள சுருதிகள், வாத்தியங்களின் சுருதி, அவற்றின் ஒலிக் கனம் ஆகியனவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கவனிக்கவேண்டிய விஷயங்கள். எந்தவித ஏற்பாடாயிருந்தாலும் கேயர் காதுக்குச் சுகமாயிருக்கவேண்டியது அவசியம். சாரீர விஷயத்தில் ஆண்களின் சாரீரங்களிலேயே பல சுருதிகளில் பாடப்பெற்ற இசைத் தட்டுக்கள் இருக்கலாம். இவற்றை மாறி மாறிக் கலக்காமல் பொருந்தக்கூடிய சுருதிகளாகப் பார்த்துத் தெரிவுசெய்தல் வேண்டும். பெண் குரல்களே, ஆண் குரல்களுடன் கலக்காமல் அவற்றைத் தனிப்பட வைத்துக்கொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால், ஒரு கட்டைச் சுருதியில் ஓர் ஆண் பாடகரின் பாட்டைக் கேட்டுவிட்டு, கான்கு கட்டைச் சுருதியுள்ள பெண்ணின் பாட்டைக் கேட்டு, மீண்டும் ஒன்றரைக் கட்டைச் சுருதிப் பாட்டைக் கேட்டால் ரஞ்சகமா யிருக்க முடியாது. வாத்திய சங்கீத இசைத் கட்டுக்களைச் சேர்க்கும்போதும் பொருத்தமாகத் தெரிவு செய்யவேண்டும். உதாரணமாக, மூன்று கட்டைச் சுருதியிலுள்ள ஒரு பாட்டைக் கேட்டு விட்டு, ஏறக்குறைய அதே சுருதியுள்ள ஒரு வயலின் இசைத் தட்டைக் கேட்கும்போது விரசமா யில்லாமல் பொருந்தும். அதாவது, ஒரு கச்சேரியில் வயலின் தனியே வாசித்து முடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்படத்தக்கதாக அந்த இசைத் தட்டுப் பொருந்துவதுதான் அழகாயிருக்கும். ஆண்களின் குரல்களைத் தனியாகவும் பெண்களின் குரல் களைத் தனியாகவும் அமைத்து இசைத் தட்டு நிகழ்ச்சிகளை அமைப்பதே விரும்பத்தக்கது. வாத்திய இசைத் தட்டுக் களைத் தனியாக ஒரு நிகழ்ச்சியில் அமைப்பது 15ல்லது. இவற்றைக் கலப்பதானுல் காம் முன்னர்ச் சொன்ன
வானெலியும் சங்கீதமும் 191
வகையில் இருக்கலாம். எவ்வாருயினும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விதி என்னவென்ருல், இசைத் தட்டு நிகழ்ச்சியொன்றைக் கால்மணி நேரமோ அரை மணி நேரமோ ஒரு பூரணக் கச்சேரி நிகழ்ச்சியாகக் கருத வேண்டும் என்பதுதான். ஒவ்வோர் இசைத் தட்டும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாயிருக்காமல், பல இசைத் தட்டுக் கள் மூலம் சித்திரிக்கப்பட்ட ஒர் இசை நிகழ்ச்சியென்று கருதி அதற்குத் தக்கவிதமாகப் பாட்டுத் தெரிவு, சுருதி ராகம், தாளம் யாவும் பொருந்த அமைக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிகழ்ச்சி தரப்படும். குரல் வகை, கேயர் விருப்பம், வாத்திய சங்கீதம் திரைப்பட மெட்டுக் கள் என்று இன்னுேரன்ன தலைப்புக்களில் இசைத் தட்டுக்களை எவ்விதத் திட்டமோ ஒழுங்கோ இல்லாமல் கதம்பமாக ஒலி பரப்புவதில் அர்த்தமே இல்லை. பாட்டுக் களின் பொருட் பொருத்தம், பாடகரின் பாணிப் பொருத்தம், ராகப் பொருத்தம் ஆகியவற்றை அநு சரித்தே இசைத் தட்டு நிகழ்ச்சிகளை கிலையத்துச் சங்கீத உத்தியோகத்தர் ஒழுங்கு செய்தல் வேண்டும்.
பொதுவாக ஒலிபரப்பு நிலையங்களிலெல்லாம் நிகழ்ச்சி கள் குறித்த காலத்தில் ஆரம்பித்துக் குறித்த காலத்தில் முடிவுறவேண்டுமென்ற விதியிருக்கிறது. எட்டு மணி முதல் எட்டே கால் வரை கடை பெறவேண்டிய நிகழ்ச்சி, சரியாக எட்டு மணி அடிக்குப்போதே ஆரம்பித்து, பதினைந்து நிமிஷம் பூரணமாக முடியும்வரை நடைபெற வேண்டும். அரை நிமிஷம் கூடவுமாகாது; குறைதலு மாகாது. சில வேளைகளில் பேச்சோ நாடகமோ வேறு நிகழ்ச்சியோ ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் குறையக் கூடும். அந்தச் சந்தர்ப்பங்களில் அடுத்து வரும் நிகழ்ச்சியை உடனே ஆரம்பிக்காமல் குறைந்த நேரத்தை நிரப்ப வேண்டும். அப்படி நிரப்புவதற்கு எப்போதுமே நிலையத் தவர்கள் ஒரு வாத்திய இசைத் தட்டைக் கைக்காவலாக
Page 118
192 ஒலிபரப்புக் கல்
வைத்திருப்பார்கள். இந்த நிரவல் இசையைக்கூட வேண்டாவெறுப்பாகத் தெரிவு செய்யாமல் சந்தர்ப் பத்துக்குப் பொருத்தமாகவும், பின்னல் வரும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகவும் தெரிவு செய்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். பின்னல் தொடரும் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரியாயிருந்தால் அக் கச்சேரியில் வரும் உருப்படியோ ராகமோ நிரவல் இசைத் தட்டில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வாத்தியக் கச்சேரியா யிருந்தால் அதே வாத்தியமுள்ள நிரவல் இசைக் தட்டைத் தெரிவு செய்த லாகாது. அதேவிதமாக, கச்சேரி நிகழ்ச்சிகள் முடிந்த சமயத்தில் நேரம் நிரப்பவேண்டி யிருந்தாலும் கிரவல் இசை மேற்சொன்ன முறையிலே அமையவேண்டும். முக் கியமாக ஒலிபரப்பு கிலேயங்களிலுள்ள அறிவிப்பாளர் இந்த விதிகளை நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும்.
பாடகர் தெரிவு
ரேடியோக் கச்சேரியில் பாடுவதற்கு எத்தனையோ வித்துவான்களும் பாடகரும் வாத்தியக்காரரும் விருப்பம் கொள்வது இயல்பு. இதறல் ஒலிபரப்புக்குப் பொருத்த மானவர்களைத் தெரிக்கெடுப்பது ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள உத்தியோகத்தரைச் சேர்ந்த, பெரும் பொறுப்பு. நிலையத்திலுள்ள சங்கீத கிகழ்ச்சி அதிகாரியும் மற்றும் இசையறிவுள்ள மூன்று அல்லது 5ான்கு பேரும் இந்தக் கடமையைப் பார்ப்பார்கள். கிலேயத்துக்கு வரும் விண்ணப் பங்களைப் பரீசீலனை செய்து தக்கவர்களை வரவழைத்து, நிலையத்தில் ஒலிபரப்பு 5டவாத ஓய்வு நேரத்தில் பாடகரை யும் வாத்தியக்காரரையும் ஒலிபரப்புக்குப் பரீட்சிப்பார்கள். இது, 'ஆடிஷன்' அல்லது இசைப் பரிசோதனை என்று
சொல்லப்படும்.
இவ்வித இசைப் பரிசோதனை கடத்துபவர்கள் நிறைந்த சங்கீத ஞானமும், நல்ல கேள்வி ஞானமும்,
வானெலியும் சங்கீதமும் 193
சாகித்தியங்களைப்பற்றிய நல்லறிவும் கொண்டவர்களா யிருத்தல் அவசியம். சாஸ்திரோக்தமான சங்கீதத்தை நன்கு உணரக்கூடிய தகுதியும், ரஞ்சகமாகப் பாடுபவர்களைத் தெரிக்தெடுக்கக்கூடிய மதிநுட்பமும் பெற்றவராயிருத்தல் வேண்டும். அத்துடன், நிலையத்தின் கலைஞர் அட்டவணை யில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பவர்களின் தகுதியை யும் அவரவர் தராதரத்தையும் நன்கறிந்தவராயிருந்தால், பாடகர்களை வரிசைப்படுத்தி, தகுதிக்கேற்ற விதமாக ஒப்பு நோக்கிப் பாகுபாடு செய்து வைக்கவும் இயலும்.
இசைப் பரிசோதனையில் கலைஞரிடம் எதிர்பார்க்கும் தகுதிகளும் பண்புகளும் எவை? முதலாவதாக, பாடகருக் குச் சாரீர வசதி இருக்கிறதா என்பதைக் கவனித்தல் முக் கியமானது. முன்பே பல தடவை நாம் குறிப்பிட்டுள்ள படி, மேடையிலே கேரில் கேட்கும் சாரீரத்தை ரேடியோ வின் மைக்கிலும் 5ம்பி எதிர்பார்க்க முடியாது. அதனல் தான் இந்த இசைப் பரிசோதனை ஸ்டூடியோவில் ஒலிபரப் புக்கு வேண்டிய யந்திர சாதனங்களுடன், ஒலிபரப்புச் சூழ்நிலையில் நடக்க வேண்டுமென்பது. சாரீரத்தின் பண்பு, அதன் கனம், ஸ்தாயி முதலியவற்றை மைக்கிரபோன் மூலமே பரீட்சிக்க வேண்டும்.
சாரீரத்தைத் தவிர, சங்கீதத் திறமையும் கச்சேரித் திறமையும் பரீட்சிக்கப்படும். ராக தாள ஞானம், பாணி, சாகித்திய உச்சரிப்பு முதலியனவும் கற்பனைத் திறமையும் கவனிக்கப்படும். இன்னெரு முக்கியமான விஷயம்: பாடகர் கைச் சரக்கு எவ்வளவு இருக்கிறத்ென்பதும் ரேடியோ இசைப் பரிசோதனையில் கவனிக்கப்படும். புதிதாகச் சங்கீதம் பயின்று மேடையில் சில காலமாவது கச்சேரி செய்யாதவர்கள் மூன்று நான்கு உருப்படிகளை மாத்திரம் நன்கு மனப் பாடம் செய்து பயின்றுகொண்டு ரேடியோப் பரீட்சைக்குத் தோற்றக்கூடும். அதில் சித்தியடைந்தபின்,
Page 119
194 ஒலிபரப்புக் கல்
இரண்டாவது கச்சேரிக்கு உருப்படி கிடைக்காமல் இவர் கள் பழைய அட்டவணையையே சமர்ப்பிப்பார்கள். ஆகை யால், பாடகர் கையிருப்பில் பத்துப் பதினைந்து உருப்படி களாவது நன்முகப் பாட இருக்கின்றனவா என்பதையும் இசைப் பரிசோதனையிலேயே அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.
வாத்தியக்காரரைப் பொறுத்த வரையில், அவர்கள் இசை ஞானம் மாத்திரமல்ல, வாத்தியத்தைக் கையாளும் முறையும் கவனிக்கப்பட வேண்டும். வயலினில் வில் போடும் முறையிலும், வீணையில் மீட்டுக் கொடுக்கும் முறையிலும் அகாவசியமான உரைசல் தேய்தல் முதலியன இல்லாமல், தெளிவாகவும் சுத்தமாகவும் இருத்தல் வேண் டும். ஏதாவது ஒரு குறை இருந்தாலும் மைக்கிரபோன் பெரிதாகக் காண்பித்துவிடுமாகையால் ரேடியோவில் வாசிக்கும் வாத்தியக்காரர் இந்த விஷயத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
ரேடியோக் கச்சேரிக்கு இசைப் பரிசோதனை என்பது கலாசாலைப் பரீட்சை போன்றதல்ல. கலைஞனுடைய ஞானம் எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை மட்டும் ஆடிஷன் குழுவினர் பரிசோதிப்பது முக்கியமல்ல; அந்தக் கலைஞருடைய கச்சேரி ரேடியோ கேயர்களால் அங்கீகரிக் கப்படுமா என்பதுதான் முக்கியம். ஆகையால் கலைஞ ருடைய திறமை கச்சேரியில்தான் பிரதிபலிக்க வேண்டும். கேயர்கள் அங்கீகரிக்கத் தக்கதாக அவர்கள் காரியத்தில் செய்து காண்பிக்க வேண்டும்.
நிகழ்ச்சி தயாரிப்பு
எந்த வானெலி நிலையத்திலும் சங்கீதப் பகுதி மிக
முக்கியப் பகுதியாகையால் இதைக் கவனிப்பதற்கென்று ஒரு சங்கீத நிபுணர் நியமிக்கப்பட்டிருப்பார். இசைக்
வானெலியும் சங்கீதமும் 195
கலைஞரைத் தேர்ந்தெடுத்தல், கச்சேரி ஒழுங்கு செய்தல், கச்சேரிக்குப் பாட்டுக்கள் தெரிதல், ஸ்டூடியோவிலே இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கண்காணித்தல் ஆகிய காரியங் களெல்லாம் இந்தச் சங்கீத நிகழ்ச்சி உத்தியோகத்தரின் பொறுப்பில் இருக்கும். சில பெரிய நிலையங்களில் கலைஞர் தொகை அதிகமாயிருந்தாலும் நிகழ்ச்சிகள் பல ஒலிபரப் பப்பட்டாலும் சங்கீத நிகழ்ச்சி உத்தியோகத்தருக்கு உதவி யாக மேலும் இரண்டொருவர் இருப்பார்கள். நடைமுறைக் கடமைகளாகிய கடிதப் போக்குவரத்து, இசைத்தட்டு ஒழுங்கமைப்பு, ஒத்திகை முதலியவற்றைக் கவனிப்பதற்கு இந்த உதவியாளர் இருப்பார்கள்.
ஆயினும், இசை நிகழ்ச்சித் தயாரிப்பு முழுவதும் சங் கீத நிகழ்ச்சி உத்தியோகத்தரின் பொறுப்பிலேயே இருக் கும். இசைப் பரிசோதனையில் தேறி ஒலிபரப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் பெயரெல்லாம் அட்டவ ணைப்படுத்தப்பட்டு நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது பட்சத்துக்கு ஒரு தடவையோ நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கும்போது இசைப் பகுதிக்குரிய கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு, சந்தர்ப்பத் துக்கும் வேளைக்கும் பொருத்தமான கலைஞர் பெயர்களைச் சங்கீத உத்தியோகத்தர் தெரிந்தெடுப்பர். பின்னர், அக் கலைஞருக்குக் கடிதங்கள் அனுப்பிக் கலைஞரின் சம்மதத் தைப் பெறுவதுடன், அவர்களிடமிருந்து கச்சேரிக்குரிய பாட்டு நிரலையும் வரவழைப்பார். இந்தப் பாட்டு நிரல், ஒலிபரப்பு நிலையத்தில் நிகழ்ச்சி அட்டவணை தயாரிப்பதற்கு மிகவும் இன்றியமையாத தென்பதைச் சில கலைஞர் உணர்ந்துகொள்வதில்லை. சில வித்துவான்கள் குறிப் பிட்ட வேளையில் மாத்திரம் நிலையத்து ஸ்டூடியோவிலே நுழைந்து, அந்தச் சந்தர்ப்பத்தில் மன நிலை எப்படியிருக் குமோ அதற்குத் தக்கவிதம் பாடிவிட்டுப் போக விரும்பு வார்கள். ஆனல் தம்மைப்போல எத்தனையோ பாடகர்
Page 120
196 ஒலிபரப்புக் கல்
வாரத்தில் ஏழு நாட்கள், அதிலும் எத்தனையோ கச்சேரி களில் பாடப் போகிருர்களே என்பதையும் இவர்கள் பாட் டுக்களையெல்லாம் நேயர்கள் கேட்கப் போகிருர்கள் என்ப தையும் உணரவேண்டும். இதிலேதான் நிலையத்திலுள்ள சங்கீத உத்தியோகத்தரின் கடமை முக்கியமானதாகிறது. உதாரணமாக, ஒரு வாரத்தில் பன்னிரண்டு கச்சேரிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பன் னிரண்டு கச்சேரிகளிலும் சுமார் ஐம்பது அல்லது அறுபது உருப்படிகள் வந்தால் கூடியவரையில் அந்த வாரத்தில் பல திறப்பட்ட ராகங்கள், தாளங்கள், உருப்படிகள் வரக் கூடியனவாகப் பாட்டு அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரே நாளில் இரு பாடகர் ஒரே ராகத்தை ஆலா பனை செய்வதோ அல்லது ஒரே உருப்படியைப் பாடுவதோ விரும்பத் தக்கதல்ல. இக்கக் காரணங்களை உத்தேசித்துத் தான், தினசரி கக்சேரிகளில் பாட்டு அட்டவணையைத் தயா ரிப்பதற்காக நிலையத்து உத்தியோகத்தர் பாடகரிடமும் வேறு கலைஞரிடமுமிருந்து அவர்கள் பாட இருக்கும் உருப் படிகளை ஏற்கெனவே எழுதி வாங்கிக்கொள்வார்கள். அப்படி அனுப்பும்போது குறிப்பிட்ட சில பாட்டுக்களைப் பல கலைஞர்கள் எழுதியிருந்தால் நிகழ்ச்சி தயாரிப் பாளர் மீண்டும் அவர்களிடம் வேறு பாட்டுக்களைக் கேட்க வேண்டி நேரிடுமாகையால், இந்தச் சங்கடம் எழாமல் பார்த்துக்கொள்ள முன்கூட்டியே கச்சேரிக்குத் தேவையான பாட்டுக்களே விட அதிகமாக ஐந்தாறு உருப் படிகளைக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். அப்படியானல் அந்த உருப்படிகளிலிருந்து தேவையானவற்றையும் பொருத்தமானவற்றையும் கலேஞருக்கு இடைஞ்சல் இல் லாமல் தெரிக்தெடுத்து நிகழ்ச்சி அட்டவணையில் சேர்க்க வசதி உண்டாகும். w
நிலைய நிர்வாகிகளின் இந்தப் பெரும் பொறுப்பை உணர்ந்து ரேடியோக் கலைஞர் யாவரும் ஒத்துழைக்க
வானெலியும் சங்கீதமும் 19?
வேண்டுமாகையால் இந்த விவரத்தை இங்கு எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது. சங்கீத வித்துவான்கள் தமது வித் வத்தையோ அல்லது கெளரவத்தையோ ரேடியோ நிலையத் தவர்கள் கட்டுப்பாடு செய்கிருர்கள் என்று ஒருபோதும் கருதலாகாது.
ஒத்திகை
கலைஞரிடமிருந்து பாட்டுக்களைப் பெற்ற பின் கிலே யத்துச் சங்கீத உத்தியோகத்தர் நிகழ்ச்சி அட்டவணையைப் பூர்த்தி செய்வார். பின்னர் நிலையத்தில் கடக்கும் சங்கீத ஒத்திகையைப்பற்றிக் கவனிப்பது அவசியம்.
கச்சேரி ஒத்திகை என்ருலும் பெயர் பெற்ற சில வித்துவான்கள் தம்மை நிலையத்தவர்கள் பரீட்சிக்கிருர்கள் என்று தவருக அபிப்பிராயம் கொண்டு மனம் கோணக் கூடும். ஆனல், ரேடியோ விஷயமாக அநுபவம் பெற்ற வித்துவான்களும், பரந்த நோக்கமுள்ளவர்களும் அப்படி ஒருபோதும் கினைக்காமல் தாராளமாக ஒத்துழைப்பதைக் காண்கிருேம். உண்மையைப் பார்க்கப்போனுல், ரேடி யோச் சாதனம் ஒன்றின் மூலம் நிலைய நிர்வாகிகள் ஒரு புறமும் கலைஞர் மற்ருெரு புறமும் ஒரே நோக்கத்தைத் தான் நிறைவேற்ற விழைகிருர்கள். கலைஞரின் சிறந்த கச்சேரியை ஒலிபரப்பினுேம் என்று திருப்தியடைய விரும்பு பவர்கள் கிலைய நிர்வாகிகள் தமது கச்சேரியை நேயர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள் என்று திருப்தியடைய விரும்புப் வர்கள் கலைஞர். இப்படியிருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அவரவர் தனிப்பட்ட கஷ்டங்களை உணர்ந்து, ஒத்துழைப்பதில் என்ன குறை வந்துவிட்டது?
இதிலேதான் நிகழ்ச்சி நிர்வாகிகளின் பக்குவமும் திற மையும் முக்கிய இடம் பெறுகின்றன. ஸ்டூடியோவில் கச்சேரி செய்ய வந்து உட்கார்ந்திருக்கும் கலைஞரின் மன
Page 121
198 ஒலிபரப்புக் கலை
நிலையையும் அவரவர் விருப்புவெறுப்புக்களையும் வெளி உலகத்தில் அவர்கள் அடைந்திருக்கும் செல்வாக்கையும் கன்கு உணர்ந்த நிர்வாகிதான் ஸ்டூடியோ ஒத்திகையைத் திறம்படக் கொண்டு நடத்த முடியும். கலைஞரின் மனம் கோணமல் கடந்து, அவர் திருப்திப்படத்தக்க சூழ்நிலை ஏற்படுத்தி, அதே சமயம் தமக்கு வேண்டிய பலனைப் பெறுவதற்கு அபார சாமர்த்தியமும் சாதுரியமும் வேண்டும். புதிய பாடகராயிருந்தால், அல்லது வெளி புலகத்தில், மேடையில், இன்னும் கீர்த்தி பெருத இளம் பாடகராயிருந்தால், சில காரியங்களைச் சொல்லிச் செய்வித்துக்கொள்ளலாம். ஆனல், ஏற்கெனவே மேடைக் கச்சேரிகளில், புகழ்பெற்றுள்ள வித்துவான்களை ஸ்டூடி யோவில் இருத்தி, இன்ன உருப்படிகளைத்தான் பாட வேண்டும், இன்ன உருப்படிகளுக்குத்தான் விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்யவேண்டும் அல்லது ஸ்வரம் பாட வேண்டும் என்று கட்டளே இடுவது அசம்பாவிதமாகத் தோற்றும். சபைகள் பலவற்றில் பாடி, எத்தனையோ வித மான ரஸிகர் கூட்டங்களே யெல்லாம் திருப்திப்படுத்தி அநூ பவம் பெற்ற வித்துவான்களுக்கு காம் பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிவது மதியீனமாகக் கருதப்படும்.
இருந்தபோதிலும் ஒலிபரப்பு விஷயம் தெரிந்த நிலைய நிர்வாகிகள் தமக்கு வேண்டிய சில தேவைகளை அநுசரிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அவை நிறை வேற்றப்படவேண்டியதும் நல்ல ஒலிபரப்புக்கு இன்றி யமையாதது. இதனை எப்படிச் சமாளிப்பது?
முதலாவதாக, கலைஞரின் கடமையைப்பற்றிக் கவனிப்போம். கச்சேரி ஒலிபரப்பு நேரத்துக்குச் சுமார் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் முன்பாகவே கலைஞர் நிலையத்துக்கு வந்துவிடவேண்டியது இன்றியமையாதது. அரைமணி நேரக் கச்சேரியாயிருந்தால் அது சுமார்
வானெலியும் சங்கீதமும் 199,
இரண்டு மணி நேர வேலை என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கென கேரம் ஒதுக்கி வைக்கவேண்டியது கலைஞரின் பொறுப்பு. கச்சேரிக்குத் தம்புரா எவ்வளவு அக்கறை யுடன் சுருதி சேர்க்கப்படவேண்டுமோ அவ்வளவு அக் கறையுடன் ஸ்டூடியோவும் தயார்ப்படுத்தப்படவேண்டும் என்பதையும், இதற்காகவே கிலேய கிர்வாகிகளும் பாடுபடு கிருர்கள் என்பதையும் உணரவேண்டும். தமது கச்சேரித் திறமையை மேலும் உயர்த்துவதற்கே நிலையத்தவர் காத் திருக்கிருர்கள் என்ற உணர்ச்சி கலைஞருக்கு ஏற்பட்டு விட்டால் பின்னர் எவ்வளவோ பலன்கள் அதனைத் தொடர்ந்து வரும். சிலையத்தவர்கள் கடமையும் சுலபமாய் இருக்கும்.
கிலையத்துக்கு வரும் கலைஞரை இனிய முகத்துடனும் உபசார மொழிகளாலும் வரவேற்க நிலையத்தவர்கள் கடமைப்பட்டவர்கள். எவ்வளவுதான் பழகிய மனிதரா யிருந்தாலும் கலைஞரை ஒலிபரப்பு நிலையத்தில் வர வேற்கும்போது, மேற்சொன்ன மதிப்பும் கெளரவமும் இன்றியமையாது காண்பிக்கப்பட வேண்டும். அது கலைஞரை உற்சாகப்படுத்தி மகிழ்விக்க ஏதுவாகும். அவர் களை வரவேற்று, ஸ்டூடியோவில் அழைத்துச் சென்று மரி யாதையாக உட்காரவைத்து, மைக்கிரபோனைப் பொருத்த மான இடத்தில் வைத்து ஒத்திகை செய்வதற்கு எவ் வளவோ சாதுரியம் வேண்டும். பாடகரையும் பக்க வாத்தியக்காரரையும் ஒலிபரப்புக்குப் பொருத்தமான இடங்களில் இருத்துவதற்கு அநுசரிக்கவேண்டிய முறை களைப்பற்றி முன்பே சொல்லியிருக்கிருேம். அவற்றைக் கவனித்து மனம் கோகாமலும் உபசாரமாகவும் கலைஞரைக் கொண்டு ஒத்திகை கடத்தவேண்டும். W
ரேடியோவில் அநுமதிக்கப்படும் எல்லாப் பாடகரும் கச்சேரி அநுபவமுள்ளவராயிருப்பார்கள் என்று சொல்
Page 122
800 ஒலிபரப்புக் கலே
வ1, ஸ்ல்ெலே. ஆகையால், இவர்களைப் பக்குவப்படுத்தி ம 1, வியளிப்பதற்காகச் சில நிலையங்களில் சங்கீத மேற்பார் வையாளர் என்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். புதிய பாடகரை ஸ்டூடியோவில் வைத்து ஒத்திகை செய்து, ராகம் ஸ்வரம் பாடும் அளவை மட்டிட்டு அதற்குத் தக்க ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, கச்சேரி நிறைவுபெறக் கூடிய உதவிகளை அளிப்பதே இவர் கடமை.
வாத்திய கோஷ்டி
ரேடியோ நிலையங்களில் நடக்கும் இசை ஒலி பரப்புக் களில் இந்தக் காலத்திலே வாத்தியகோஷ்டி மிக அதிக மாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. மேடையில் இதன் உபயோகம் அவ்வளவாக இல்லாவிட்டாலும் ரேடி யோவில் எத்தனையோ வகையில் பயன்படுவதைக் காண் கிருேம். தனியாகக் கச்சேரி, வாய்ப்பாட்டுக்கு அநுபந்த மாக வாசித்தல், ஒலிச் சித்திரம் நாடகம் முதலிய நிகழ்ச்சி களில் இசையணியாக வாசித்தல் முதலிய உபயோகங்கள் ரேடியோவில் வாத்திய கோஷ்டிக்கு ஏற்படுகின்றன. இந்தக் காரணத்தால் ரேடியோ நிலையங்களில் இந்தக் காலத்தில் கிரந்தரமாக வாத்தியக்காரரை நியமித்து வாத்திய கோஷ்டி இசையைப் பயன்படுத்தி வருகின்றனர். வாத்தியங்களின் மூலம் இசையெழுப்பி, அதன் மூலம் பலவிதச் சூழ்நிலைகளைச் சிருஷ்டிப்பதற்கு ரேடியோ கமக்குச் சிறந்த வகையில் பயனளிக்கிறது. ஒன்று, பல வித வாத்தியங்களை ஒருசேர வைத்து நமக்கு வேண்டியவித மெல்லாம் பரிசோதனைகள் கடத்துவதற்கு ஒலிபரப்பு நிலை யத்திலுள்ள சாதனங்களைப்போல் மேடையில் கிடைப்ப தரிது. புதுப்புது இசை வடிவங்களைச் சிருஷ்டிக்கவும், அந்த வடிவங்களை ஒலிப்பதிவு செய்து கேட்டுப் பார்க்கவும், நாளுக்கு நாள் பல ஆராய்ச்சிகளைச் செய்யவும் ரேடியோ வசதி அளிக்கிறது. இதன் விளைவாகவே இன்று சினிமா
வானெலியும் சங்கீதமும் Va 201
உலகில் கட்புலனுக்குரிய சில காட்சிகளிலும் ஒலி உருவங் களைச் சேர்த்துச் சூழ்நிலைகளை வற்புறுத்த வாத்திய கோஷ்டி இன்றியமையாததாகிவிட்டது.
இங்ங்ணம் முக்கிய இடம் பெற்ற வாத்தியகோஷ்டியை ரேடியோவில் பக்குவமாகக் கொண்டு கடத்துவதற்குத் தகுதி வாய்ந்த கலைஞர் இருத்தல் இன்றியமையாதது. வாத்திய கோஷ்டியை நடத்தும் தலைவர் வெறுமனே சங்கீத வித்துவானுக மாத்திரமிருந்தால் போதாது. வாய்ப்பாட்டில் சிறந்த பாடகராகவும், அதாவது, வாத்தியங்களுக்குத் தக்க விதமாகப் பாடாந்தரங்களை வாயினுல் ஸ்வர சுத்தமாகப் பாடிக் காண்பிக்க வல்லவராகவும், வயலின், வீணை, புல் லாங்குழல், கோட்டு முதலிய வாத்தியங்களின் தனிப்பட்ட குணதிசயங்களை நன்கறிந்தவராகவும், மிருதங்கம் முதலிய தாள வாத்தியங்களைப்பற்றி அறிந்தவராகவும், தாள வகைகளையும் மிருதங்க பாடாந்தரங்களையும் பயின்றவ ராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன், கர்நாடக சங்கீதத்திலுள்ள ராகங்களின் தன்மைகள், அவை உள் ளத்திலே எழுப்பும் உணர்ச்சி வேறுபாடுகள் ஆகியவற்றை கன்கறிந்து, தேவைக்குத் தக்கவாறு ஸ்வரக்கோவை செய்து இசையமைக்க வல்லவராயும் இருத்தல்வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பெற்ற ஸ்வரக் கோவைகளை அந்த அந்த அமைதிகளுக்குத் தக்கவாறு பாடிக் காண்பிக்க வல்லவராயும் இருத்தல் வேண்டும். நிலைய வாத்திய கோஷ்டியின் தலைவர் இந்தப் பண்புகளெல்லாம் நிறைந்த வராயும் மற்ற வாத்தியக்காரரை வைத்து நடத்தும் சாதுரியம் வாய்ந்தவராயும் இருத்தல் அவசியம்.
வாத்தியகோஷ்டியில் சேரும் கலைஞர் யாவரும் நல்ல அநுபவம் பெற்றவரா யிருத்தல் இன்றியமையாதது. நான்கு வயலின் வாத்தியக்காரர் இருந்தால் அந்த நால்வரும் ஒரே தன்மையான பாணியுடையவராயும், ஒரே விதமாக வில் போடும் பழக்கம் பெற்றவராயும் இருத்தல் வேண்டும்.
Page 123
2O2 ஒலிபரப்புக் கலே
அதே விதமாக வீணே வாத்தியக்காரரிடம் மீட்டுக்கள் ஒரே தன்மையிலிருத்தல் விரும்பப்படும். அல்லாமல், ஒருவர் ஒருவிதமாகவும் இன்னுெருவர் வேருெரு விதமாகவும் வயலினில் வில் போட்டால் அல்லது வீணேயில் மீட்டினுல் ஸ்வரஸ்தானங்கள் சரியாகத் தோன்றினபோதிலும் பந்தாக் குறைவாக ரேடியோவில் தொனிக்கும்.
சாதாரணமாக நமது சம்பிரதாயத்தில் உருப்படிகளே யும் மற்ற இசை வடிவங்களேயும் மனனம் செய்து வாசிப்பதே வழக்கம். தனிக் கச்சேரிகளில் அவரவர் திறமையைக் காண்பிக்கச் சங்கதிகள் சேர்த்தல், நிரவல், ஸ்வரம் வாசித்தல் ஆகியவற்றில் கற்பனேயை உபயோகிப் பார்கள். ஆஞல், வாத்தியகோஷ்டியைப் பொறுத்த வரையில், அதில் கலந்துகொள்ளும் வாத்தியக்காரர் தமது சொந்தக் கற்பனேகளுக்கோ சங்கதிகளுக்கோ ஒருபோதும் இடம் அளித்தலாகாது. கற்பனேகள் சங்கதிகள் யாவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, ஸ்வரப்படுத்தி எழுத்துப் பிரதியில் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். வாத்திய கோஷ்டியில் வாசிக்கும் ஒவ்வொருவரும் எழுத்து ப் பிரதியைப் பார்த்துத் தயக்கம் இல்லாமல் வாத்தியத்தில் வாசிக்கும் சிறந்த அ நு ப வம் பெற்றவராயிருத்தல் அவசியம். இது மிகவும் முக்கியமான பண்பு.
மேற்சொன்ன விதிகள் எல்லாம் சாதாரணமாக வாத்தியகோஷ்டிக் கஃலஞர் யாவருக்கும் வேண்டியவைக ளானுலும், ரேடியோ ஒலிபரப்பைப் பொறுத்தவரையில் மிகவும் இன்றியமையாதனவாகக் கருதப்படுமாகையால் இவற்றை இங்கே குறிப்பிட நேர்ந்தது. ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு வாத்தியகோஷ்டியின் அது கூலங்கள் அளவிட முடியாதனவாகையால், நிலேய கிர்வாகி களும் சங்கீதப் பகுதி உத்தியோகத்தரும் அவற்றைக் கூடியவரையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது முக்கிய கடமை.
பதினுன்காம் அத்தியாயம் ஒலிச்சித்திர நிகழ்ச்சிகள்
பேச்சு, நாடகம், இசை - இந்த மூன்று வகையான நிகழ்ச்சிகளும் ரேடியோ ஒலிபரப்பிலே தனித்தனி முக்கிய இடம் பெற்றபோதிலும், இவை மூன்றும் கலந்த கதம்ப நிகழ்ச்சிகளும் அழகு தரக்கூடியன. இவற்றை ஒலிச் சித்திரங்கள் என்று சொல்லலாம். விவரணச் சித்திரம், இசைச் சித்திரம், இசை நாடகம், நாட்டிய நாடகம் எல்லாம் ஒலிச்சித்திர வகையைச் சேர்ந்தன.
விவரணச் சித்திரம்
பேச்சுப் பாகமே முக்கியமாயிருந்து நாடகத்துக்குரிய சம்பாஷணையும் ஒலிக் குறிப்புக்களும் இடையிடையே கலந்து வந்தால் விவரணச் சித்திரம் என்று சொல்லப்படும். சாதாரணமாக ஒரு விஷயத்தைப்பற்றி நேரடியாக ஒரு பேச்சு நிகழ்த்துவதற்குப் பதிலாக, அப்பேச்சுடன் சம்பாஷஃனகளும் ஒலிக் குறிப்புக்களும் கலந்து கதம்பமாக வழங்கினுல் அது கவர்ச்சியைத் தரும். உதாரணமாக, மிருகக் காட்சிச்சாலேயைப்பற்றி ஒருவர் தாம் கேரில் கண் டதைப் பத்து அல்லது பதினேந்து மிமிஷப் பேச்சாக அமைத்துப் பேசலாம். ஆனுல், அதே பேச்சில், மிருகக் காட்சிச் சாலேக்குத் தாம் போன வரலாற்றைச் சொல்லி, இடையிலே அங்குள்ள ஓர் அதிகாரியைப் பேட்டி கண்ட விவரம், மிருகங்கள் இட்ட சப்தங்கள் முதலியவற்றையும் சேர்த்துக்கொண்டால் அது ஒரு விவரணச் சித்திரமாக, கேட்போருக்குத் தத்ரூபமான காட்சிகளே எடுத்து விளக்கும்.
Page 124
፵04 ஒலிபரப்புக் கல்
விவரணச் சித்திரம் எழுதுவதற்கு நாடகப்பாணி இன்றியமையாதது. காட்சி வருணனேகளேத் தெளிவாக எடுத்து எழுதி, ஒலிக்குறிப்புக்கள் வரவேண்டிய இடங்களே முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.
விவரணச் சித்திரங்களே இரண்டுவிதமாகத் தயாரிக்க லாம். ஒன்று தன்மயமாக வைத்து வருணிப்பது; அதாவது, பேச்சாளர் தமது சொந்த அநுபவமாகக் கூறி நேயர்களேத் தம்கூட அழைத்துச் சென்று சகல விவரங்களேயும் சுட்டிக் காண்பிப்பதாக அமைப்பது, மற்றது பேச்சாளர் அசரீரி போன்று தனியே நின்று, தம்மை மறைத்துப், பொருள்மய மாயிருந்து விவரிப்பது. உயர்ந்த கலேப் பண்புள்ள ஒலிச் சித்திரங்களுக்கு இத்தகைய பொருள்மய வருணனே அழகைத் தரும். ஆஞல், விவரணச் சித்திரத்தில் சம்பா ஷனேகளும் ஒலிக் குறிப்புக்களும் குறைவாயிருந்து பேச்சு மாத்திரம் அதிகமாயிருத்தல் வேண்டும். பேச்சுக் குறைந்து சம்பாஷணையும் ஒலிக்குறிப்பும் அதிகப்பட்டால் விவரணச் சித்திரம் நாடகமாக மாறிவிடக் கூடும்.
விவரணச் சித்திரத்திலே முக்கியப் பாத்திரமாகிய பேச்சாளர் கம்பீரமும் தெளிவுமுள்ள குரல் பெற்றிருத்தல் "அவசியம். வார்த்தைகளெல்லாம் தெளிவாகவும் விளக்க மாகவும் நேயர் கர்துகளிலே போய் விழவேண்டும். உச் சரிப்பிலே வசீகரமும் கவர்ச்சியும் தொனிக்க வேண்டும். பேசப்படுவது வசனமாக இருந்தபோதிலும் அதில் ஒசை ஈயம் தோன்றவேண்டும். அப்போதுதான் அது வெறும் பேச்சாக இல்லாமல் சொல்லோவியமாகக் காட்சியளிக்கும். விவரணச் சித்திரத்தின் அழகு யாவும் அதில் வரும் முக்கி யப் பேச்சாளரிடமே இருக்கிறதென்று சொல்லவேண்டும்.
ஆணுல், எவ்வளவு நல்ல பேச்சாளரா யிருந்தபோதிலும் ஒலிச்சித்திரப் பிரதி அதற்குரிய பாணியில் தயாரிக்கப்படா
ஒலிச்சிந்திர நிகழ்ச்சிகள் 25
விட்டால் தகுந்த பலகீனப் பெற முடியாது. வசனம் ஒவ் வொன்றும் கவிதைக்குரிய கற்பனேப் பொலிவும் ஓசையும் கொண்டிருத்தல் வேண்டும். அதற்காக அடுக்குச் சொற் களேயும் எதுகை மோனேகளேயும் கிறைத்துவிட வேண்டு மென்பதில்லை. அதற்கும் எல்லேயுண்டு வசனங்கள் பொருள் நிறைந்தவைகளாயும், மனக்கண்ணில் பல உரு வங்களேச் சிருஷ்டிக்க வல்லனவாயும், விவரிக்கும் பொரு ளுக்கேற்பத் தெரிந்தெடுத்த சொற்கோவையாயும் இருத் தல் வேண்டும்.
இசைச் சித்திரம்
ரேடியோவில் நேரடியாக ஒலிபரப்பப்படும் கச்சேரி நிகழ்ச்சியைத் தவிர, இசையின் மூலம் ஒலிச் சித்திரங்க ளான பல நிகழ்ச்சிகளேயும் தயாரித்து வழங்குவார்கள். பழக்கப்பட்ட இசையுருவங்களாகிய கீர்த்தனேகளைப் பாடி யும் வாத்தியங்களில் வாசித்தும் ஒலிபரப்புவதோடு, புதிய இசை வடிவங்களேச் சிருஷ்டித்து, அங்கிகழ்ச்சி ஒரு சூழ் விலேயை ஏற்படுத்தும் வகையில் கதை முறையிலோ அல் லது ஒரு வர்ணச் சித்திரம் போலவோ நேயர்கள் உள்ளத் தில் ஒரு புதிய உணர்ச்சியைத் தோன்றச் செய்யலாம். மேல்நாட்டுச் சங்கீதத்தில் சிம்ப்வனி என்ற இசை வடிவம் உண்டு. இயற்கைக் காட்சியொன்றை இசையின் மூலம் வருணிப்பதே அதன் நோக்கம். பேதோவன் என்ற புகழ் பெற்ற மேல்ாேட்டு இசையாசிரியர் பல அருமையான இசையோவியங்களைச் சிருஷ்டித்துள்ளார். அவற்றுள் பாஸ்டொரல் சிம்ப்வனி' என்பதும் ஒன்று. இதனே முன்மேக் காட்சி என்று தமிழில் சொல்லலாம். மங்தைகள் மேய்வது, கோவலர் புல்லாங்குழல் இசைப்பது, ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளேயாடுவது கதறுவது, இருந்தாற் போலிருந்து மேகம் கறுத்து இடியிடித்துப் புயற் காற் றுடன் மழை பொழிவது பயங்கரமான குழ்கிலேயில்
Page 125
206 ஒலிபரப்புக் கல்
மங்தைகள் வெருண்டு ஓடி ஒதுங்குவது, முடிவில் மழையும் புயலும் ஒய்ந்து அமைதி ஏற்படுவது - இப்படியான காட்சி களை முற்றும் இசை வடிவமாகவே சித்திரித்துள்ளார். இத் தகைய இசையுருவம் நமது கர்நாடக சங்கீதத்தில் கிடையா தாயினும் பல்வேறு ராகங்களும் தாள வகைகளும் இருக் கும்போது அவற்றைக் கொண்டு எத்தனையோ சூழ்நிலைச் சங்கீத உருவங்களை நாமும் சிருஷ்டிக்கலாம். ரேடியோவும் ஒலிப்பதிவு வசதியும் பல்வேறு வாத்தியங்களும் வாய்ப்பா யிருக்கும்போது புதிய இசைச் சிருஷ்டிகளைப் பரீட்சித்துப் பார்க்க முடியும்.
இசைச் சித்திரங்களில் இசைதான் முக்கிய இடம் பெறவேண்டும். முற்றும் இசை மயமாகவும் இங்கிகழ்ச்சி யைத் தயாரிக்கலாம்; அல்லது பெரும்பாலும் இசைமய மாகி, ஒரு சிறிது பேச்சாகவும் அமைக்கலாம். இத்தகைய நிகழ்ச்சிகளில் வாத்திய கோஷ்டி முக்கியமான இடம் பெறும். அதிலும் சாதாரணமாக நமது கர்நாடக இசை மரபில் ஆளப்படும் வீணே, புல்லாங்குழல், வயலின், மிரு தங்கம் ஆகிய வாத்தியங்களேத் தவிர விதேச வாத்தியங்க ளாகிய வியோலா, சாக்ஸோபோன், பியானே, டபிள் பேஸ், கிளாரினெட், சித்தார், சாரங்கி, கித்தார் முதலியன வும் சேர்ந்தால் பல விதமான புதிய ஒலி யுருவங்களைச் சிருஷ்டிக்க உதவியளிக்கும். ராக உருவங்கள் மாத்திரம் இசைச் சித்திரத்துக்குப் போதா, ராகத்துக்குரிய லக்ஷணங் களுக்கு அமையச் சூழ்நிலை பலவற்றைச் சிருஷ்டிக்க மேற் சொன்ன வாத்தியங்களின் தொனிகள் எவ்வளவோ பயன்
5QDLD.
இசை நாடகம்
சில ரேடியோக்களிலே சாதாரண நாடகத்தில் சில பாட்டுக்களை மாத்திரம் சேர்த்துக்கொண்டு அதனை இசை
ஒலிச்சித்திர நிகழ்ச்சிகள் 20?
நாடகம் என்று ஒலிபரப்புவதைக் கேட்டிருக்கிருேம். ஆணுல், உண்மையில் இசை நாடகமா யிருந்தால் வசன நாடகமாயில்லாமல் முழுவதும் இசையாலமைந்த நாடகமா யிருத்தல் வேண்டும். அன்றியும், கவிதை நாடகத்துக்கும் இசை நாடகத்துக்கும் வித்தியாசம் உண்டு. கவிதை நாட கத்திலே வசனத்துக்குப் பதிலாகச் சம்பாஷணைகள் எல் லாம் கவிதைகளாய் அமைந்திருக்கும்; அவ்வளவுதான். ஆனல், இசை நாடகத்தில் இசை முக்கியப் பங்கு பெறும். கந்தபுராணக் கீர்த்தனை, திருவிளையாடல் கீர்த்தனை, நந்த ஞர் சரித்திரக் கீர்த்தனை, ராம 15ாடகம் முதலியன முழுவ தும் இசை நாடக வகையைச் சேர்ந்தன. இவற்றை ரேடி யோவில் அழகான இசை நாடகங்களாகத் தயாரித்து ஒலி பரப்பலாம். ஆனல், பாத்திரங்கள் வெறுமனே தமக்குரிய கீர்த்தனைகளை மாத்திரம் பக்கவாத்தியங்களுடன் பாடி முடிப்பது இசை 15ாடகமாகாது. நாடகத்துக்குரிய காட்சி, குழ்நிலை ஏற்படத்தக்கதாக, வாத்திய கோஷ்டியின் மூலம் தகுந்த பின்னணி இசை தயாரித்து அழகான சித்திரங் களாக இடையிடையே பெய்து வைத்தால்தான் அது இசை நாடகமாகத் தோற்ற முடியும்.
இசை நாடகத்தில் வசனத்துக்கு இடமில்லை. ஆனல், கீர்த்தனை முதலிய இசையுருவங்களோடு காட்டிய இசை மிகவும் பயன்படும். உதாரணமாக, குறவஞ்சி, குரவை, பதம் முதலிய இசையுருவங்களுடன் அவற்றுக்குரிய நாட் டிய இசையும் சேர்ந்து வழங்கினல் இசையும் காட்டியமும் ஒரு குறிப்பிட்ட கதையின் விளக்கமாக நின்று, கேட்கும் கேயர்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
இசைச் சித்திரங்களும் இசை நாடகங்களும் தயாரிக் குப்போது பெண்களும் ஆண்களும் அவற்றில் பங்கு பெற நேரிடுமாகையால், அவர்கள் குரல்கள் வெவ்வேறு சுருதியி லிருப்பது நிகழ்ச்சி தயாரிப்பாளருக்குத் தொல்லையைக்
Page 126
208 ஒலிபரப்புக் கல்
கொடுக்கும். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சுருதி ஒலித்தால்தான் அந்த நிகழ்ச்சியில் அழகு பிறக்கும். பல சுருதிகளில் தம்புராக்களே மாற்றி மாற்றி மீட்டுவது நிகழ்ச்சியின் ஓட்டத்தைச் சிதைக்கும். ஆகவே, ஒரே தம்புராவை வைத்துக்கொண்டு முற்றும் அதே சுருதியில் நிகழ்ச்சியை கடத்துவதுதான் விரும்பத்தக்கது.
பதினைந்தாம் அத்தியாயம் பெண்களும் சிறுவரும்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் யாவும் பெரும்பான்மையான மக்கட் கூட்டத்துக்கு உபயோகமாகும் வண்ணம் ஒரு பொது நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டபோதிலும், அந்த மக்கட் கூட்டத்திலே இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள், மாணவர், கலைஞர், தொழிலாளி, முதலாளி என்ற பல இனத்தவர்கள் அடங்கியிருப்பதைக் காண்கி ருேம். இவர்கள் யாவருக்கும் எந்த நிகழ்ச்சியாவது ஒரே விதமான அநுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்வதற் கில்லை. மேற்சொன்ன இனத்தவர்களின் லட்சியங்கள் வெவ்வேறு; அவர்கள் ரஸனைத்தரம் வெவ்வேறு; கிரகிக்கும் ஆற்றல் வெவ்வேறு. இங்கிலையிலே சில முக்கியமான இனத்தவர்களுக்குத் தனிப்பட்ட சில நிகழ்ச்சிகளை, அவர் கள் கிரகிக்கும் ஆற்றலையும் ரஸனைத் தரத்தையும் பயனை யும் அளவிட்டு, அதற்கேற்ற வகையில் தயாரித்து ஒலி பரப்ப வேண்டிய பொறுப்பு ரேடியோ நிலையத்தவர்களைச் சேர்ந்தது. ஆகவே, பெரும்பாலான நிலையங்களில் மேற் சொன்ன விசேஷ கேயர் கூட்டங்களுக்கு, விசேஷ நிகழ்ச்சி கள் ஒலிபரப்பப்படுவதைக் காண்கிருேம். . இக் கேயர் இனங்களில் மிக முக்கியமாக இருப்பவர்கள் சிறுவர், மாண வர், பெண்கள், கிராமவாசிகள் ஆகியோர். வருங்காலத்துச் சந்ததியை வளர்ப்பதற்கு முக்கியமாக விளங்குபவர்கள் சிறு வர்களும் மாணுக்கரும். பிற்போக்கு நிலையிலுள்ள கிராம வாசிகள் பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டியவர் களாகையால் ரேடியோச் சாதனத்தைக்கொண்டு அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அறிவை வளர்க்கவும், நகர
Page 127
210 ஒலிபரப்புக் கல்
மக்களுக்குக் கிடைக்கும் பொழுதுபோக்கு வசதிகள் அவர் களுக்குக் கிடைக்கவும் ரேடியோ வழி உண்டாக்க வேண்டும். ஆகையால், இம்மூன்று இனத்தவர்களுக்கும் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் சில விசேஷ வசதிகள் செய்து கொடுப்பதில் நிலையத்தவர் பொறுப்பு இன்றியமையாதது.
இந்தப் பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுவது? சிறுவர்களுக்கு அவர்கள் வயதுக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான சிறுவர் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்குக் கல்வி ஒலிபரப்புக்கள், பெண்களுக்குத் தனி நிகழ்ச்சிகள், கிராமத்திலுள்ளவர்களுக்குத் தனி நிகழ்ச்சிகள் - இவற் றைத் தயாரிக்கும் முறைகளைப்பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப்பற்றியும் இங்கு ஆராய்வோம்.
சிறுவர் நிகழ்ச்சி
ரேடியோ நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில் சிறுவர் என்ற பாகுபாட்டில் சுமார் கான்கு அல்லது ஐந்து வயது முதல் பதினன்கு அல்லது பதினைந்து வயதானவர்களே அடக்கலாம். பிள்ளைப் பிராயத்திலுள்ள இவர்களுடைய உள்ளம் முதிர்ச்சி அடையாமலிருப்பதால் சிந்தனை முயற்சி அதிகம் தேவைப்படாத விகழ்ச்சிகளே இவர்களால் கேட்டு ரஸிக்க இலகுவாயிருக்கும். நிகழ்ச்சிகளிலே பொழுது போக்கு வகையான கிகழ்ச்சிகள் சிறுவர்க்கு ஏற்றவை. கல்வி நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் பிறிதோரிடத்தில் கூறு வோம். இங்கே சிறுவர் நிகழ்ச்சி என்ற அம்சத்தில் போத னைக்குரிய விஷயங்கள் யாவற்றையும் விளையாட்டு விளை யாட்டாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலமே சேர்க்க வேண்டும். சிறுகதை, நாடகம், இலகுவான இசை இவை யெல்லாமே சிறுவர் நிகழ்ச்சிக்குரிய பொழுதுபோக்குகள். இவற்றைக் கொண்டு பலவகைப்பட்ட போதனைகளைப் புகட்ட இடம் உண்டாகும்.
பெண்களும் சிறுவரும் 211
சிறுகதையா யிருந்தாலும் நாடகமா யிருந்தாலும் அதனைச் சிறுவருக்குப் பொருத்தமான முறையில் தயாரிப் பதில் போதிய விவேகமும் அநுபவமும் தேவை. மற்றைய நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பவருக் குத்தான் பொறுப்பு அதிகம் என்று சொல்லவேண்டும். வருங்கால மக்களாகிய இவர்களின் உள்ளங்களைப் பக்கு வப்படுத்தி, அவர்களின் ரஸிகத் தன்மையை வளர்த்து, உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். ஆகையால், நிகழ்ச்சியில் சேர்க்கப்படும் கருத்துக்கள் சிறுவருக்கு உபயோகமாயிருத்தல் இன்றி யமையாதது. அன்றியும் அவர்கள் ஆற்றலுக்கு உகந்த தாயும் இருத்தல் வேண்டும். தூய்மையான சிந்தனையை வளர்க்கவும் உதவியாயிருத்தல் வேண்டும். இந்த நோக் கங்களை முதலில் கருத்தில் ஏற்றுக்கொண்டால் சிறுவர் நிகழ்ச்சிக்கு விஷயம் தேடுவதில் கஷ்டம் இருக்காது. பொதுவாக, சிறுவர்க்குரிய பேச்சுக்கள், நாடகங்கள் அல்லது ஒலிச் சித்திரங்களில் சமூக வாழ்வில் காணப்படும் கொலை, களவு, காமம் முதலிய கருத்துக்கள் எட்டியும் பார்த்தலாகா என்பது எல்லாரும் ஒப்புக்கொண்ட ஒரு விதி. இளம் உள்ளங்களில் இத்தகைய கருத்துக்கள் பதிக் தால் அது விபரீதத்தை விளைக்கக்கூடுமாகையால் ரேடியோ நிகழ்ச்சியிலும் விலக்கப்படவேண்டும். ஒரு காதல் கதை அல்லது நாடகம் வயதுவந்த கேயர்களுக்கு அழகான கலைப் பொருளாக ஒலிபரப்பப்பட்டபோதிலும் அது சிறுவர் உள்ளங்களுக்கு ஏற்றதல்ல. அதேபோல், அநாகரிகமான வார்க்கைகள், 5ாயே கழுதையே போடா வாடா என்ற இழிசொற் பிரயோகங்கள், சிறுவர் நிகழ்ச்சியில் எந்தச் சமயத்திலும் இடம் பெறலாகா. நல்ல போதனைக்குரிய விஷயங்களைக் கதை மூலமாகவோ நாடக மூலமாகவோ தூய்மையான சொற்களில் அமைத்து வழங்குதல் வேண்டும்.
Page 128
212 ஒலிபரப்புக் ශබීඝ
சிறுவர் நிகழ்ச்சிக்கு எழுதும் கதையும் நாடகமும் மற் றைய நிகழ்ச்சிகளைப் போன்ற பாணியிலோ அல்லது தகுதி யிலோ அமைய முடியா. சிறுவர் உள்ளங்களில் இலகு வாகப் பதியத்தக்க விளக்கமான முறையில் அவற்றை எழுதவேண்டும். அந்த அந்த வயதுக்கேற்ற சொற்கூட்டங் களை உபயோகித்து, அவர்களுக்கு எளிதாக விளங்கும் முறையில் எழுதவேண்டும். இதில் சில எழுத்தாளரே வெற்றி பெற்றுள்ளார்கள்.
சிறுவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இந்தக் காலத் தில் சிறுவர்களே கலந்து ஒலிபரப்பும் வழக்கம் பரவி வரு கிறது. ஒருசில காடுகளில் சிறுவர்களை எந்தத் தொழிலி லும் உபயோகிக்கலாகாது என்று சட்டம் விதிக்கப்பட் டிருப்பதால் ரேடியோவிலும் மிகக் குறைவாகவே சிறுவ ரைச் சேர்த்துக்கொள்கிருர்கள். ஆனல், சிறுவர் பங்கு பெறும் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ஒரு தனி யழகு இருக் கிறது. மழலைச் சொற்களைக் கேட்பதிலும் அவர்கள் குழந்தை நடிப்பைக் காண்பதிலும் எவ்வளவோ சிறப் பிருக்கிறது. அன்றியும், கலை வளர்ச்சியில் சிறுவர்கள் இளம் வயதிலேயே ரேடியோச் சாதனத்தின் மூலம் பயிற்சி பெறுவது இன்றியமையாகது. இந்தச் சாதன வசதியிருப்ப தால் சிறுவர்களுக்கு அதிகச் சந்தர்ப்பம் கொடுத்து உற் சாகப்படுத்த வேண்டியதும் நமது கடமை.
ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறுவர்களை எப்படிப் பயிற்றுவது, எங்கனம் ஒத்திகைகளைக் கவனிப் பது என்பது ஒரு சிக்கலான விஷயம். அடுத்தடுத்து ஒத்திகைகள் வரும்போது சலித்துப்போகும் பெரியவர்களைக் கொண்டே ஒலிபரப்பு நடத்துவது சிரமமான காரியமா யிருக்க, விளையாட்டுப் புத்தி நிறைந்த சிறுவர்களைக் கொண்டு ஒலிபரப்பை நிறைவேற்றுவது எவ்வளவு கடின மான காரியமென்று பலர் கருதக்கூடும். ஆனல், ரேடியோ
பெண்களும் சிறுவரும் − 213
வில் ஒத்திகை விஷயத்திலும் சரி, ஒலிபரப்பு விஷயத்திலும் சரி, சிறுவர்களைப்போன்ற நல்ல பாத்திரங்களைக் காண முடியாதென்பது அநுபவஸ்தர் கண்ட உண்மை. ஒத்திகை யில் சொல்லிக்கொடுக்கும் கருத்துக்களை உடனுக்குடன் மனத்தில் வாங்கி காம் சொல்வதுபோல் ஒரே கொடியில் செய்து காண்பிக்கவல்லவர்கள்; ஆகையால், சிறுவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரே ஒத்திகையுடன் காரியத்தை நிறைவேற்றி விடலாம். அதற்குமேல் சிரமப்படவேண்டிய அவசியமே இல்லை. அன்றியும், அந்த ஒத்திகைக்குப் பின் ஒலிபரப்பில் ஏதாவது சிறு தவறுகள் நேர்ந்தபோதிலும் சிறுவர் என்ற வகையில் அந்தத் தவறுகளும் இயற்கையாக அமைந்து, ஒலிபரப்பு கிளிப்பிள்ளை ஒப்பிப்பது போல் இல்லாமல் இயல்பாகத் தோன்றும். சில நிகழ்ச்சிகளில் அத்தவறுகள் அழகைக் கொடுக்கவும் செய்யும்.
சிறுவர் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்தும் தயாரிப் பாளர், குழந்தை வளர்ப்பிலும் அவர்கள் பிரத்தியேக உணர்ச்சிகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதிலும் அநுபவ முதிர்ச்சி உடையவரா யிருத்தல் வேண்டும். பாட சாலைகளில் பாலர் வகுப்புக்களை கடத்தி அநுபவப்பட்ட ஆசிரியர்களும், தாய்மார்களுமே இந்தத் துறையில் வெற்றி பெறக்கூடியவர்கள். ஆனல், ஆசிரியத் தொழிலில் பழக்கப் பட்டவர்களைச் சிறிது சாவதானமாகவே ரேடியோவில் உபயோகிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிக்கூட உபாத்தியாயர்களும் பாடசாலை வகுப்பறைகளில் கட்டளை கள் பிறப்பித்துப் பழக்கம் உடையவர்களா யிருப்பதால் அந்தப் பழக்கம் ஒலிபரப்பிலும் வந்துவிடக்கூடும். ஒலி பரப்பு நிகழ்ச்சியில் அது உதவாது. ஆயினும் இதற்குப் புறநடையாக எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிருர்கள். பெண்கள், அதுவும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள், ரேடியோவில் சிறுவர் நிகழ்ச்சி நடத்துவதற்கு மிகவும்
Page 129
214 ஒலிபரப்புக் கலை
பொருத்தமுடையவர்கள். ஹாஸ்யமும் சாந்த மனப்பான் மையும் பொறுமையுமுடைய ஆண்களும் ரேடியோவில் சிறுவர் நிகழ்ச்சியை நடத்தலாம். பல ரேடியோ நிலையங் களில் இத்தகைய ஆண்கள் ரேடியோ மாமாக்களாகவும், அண்ணுக்களாகவும் பெயர் பெற்றிருப்பதைக் காண் கிருேம். ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்கும் கேயர்களில் அளவற்ற அபிமானம் காண்பிக்கும் கேயர்களும், நிகழ்ச்சி ஒலிபரப்பாளர் மீது விரைவில் அன்பும் மதிப்பும் காட்டும் கேயர்களும் சிறுவர்கள்தாம். அதே சமயம், நிகழ்ச்சி பிடிக்கவில்லையானல் வேண்டாம் என்று துணிவுடன் சொல்லக்கூடியவர்களும் அவர்களே. ஆகையால், அவர்கள் அன்பையும் அபிமானத்தையும் கவர்ந்து சிறுவர் நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துவது பெரிய பொறுப்பா யிருந்தபோதிலும் அதிலுள்ள திருப்தியும் மகிழ்ச்சியும் வேறெந்த ஒலிபரப்பிலும் பெற முடியாது.
சிறுவருக்குரிய நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் கலந்து கொள்ளும்போது பல சங்கடங்கள் எதிர்ப்டடக்கூடும். சிறு வருடைய உள்ளத்தை உணர்ந்து, அவர்கள் கிலையில் இறங்கிவந்து அவர்களுடன் ஒரு பாத்திரமா யிருந்து நடிப்பது இலகுவான காரியமல்ல. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவரில் ஒரு பெரிய சிறுவனுக" இருக்க வேண்டும் அவர். அறிவிலும் அநுபவத்திலும் முதிர்க்த ஒரு "சிறுவனுக'. ஆனல் அந்தஸ்தில் மற்றச் சிறுவர்களில் ஒருவராக இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும், அதுவே முக்கியமானது. சிறுவருக்குக் கதை சொல்லுதல். அல்லது சிறுவர் காடகங்களில் நடித்தல் ஆகிய கருமங்களில் பெரியவர்கள் கலந்துகொள்ளும்போது கூடியவரையில் சிறுவர் அந்தஸ்தில் இறங்கி கின்றுகொள்ள வேண்டும். சிறுவருக்கென்றே ஒரு மழலைப் பாணி யிருப்பதால் அதனைச் சிதைக்காதவாறு பொருத்தமான முறையில் பேச வேண்டும்.
பெண்களும் சிறுவரும் 215
பெண்கள் பகுதி
விசேஷ கேயர் கூட்டத்தில் பெண் இனத்தவர்களும் ஒரு முக்கிய வகுப்பினரா யிருப்பதால் ரேடியோவில் பெண் களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகள் தயாரித்து ஒலிபரப்பு வது வழக்கத்தில் வந்துவிட்டது. பெண்கள் என்னும் போது அவர்களுக்குச் சில பிரத்தியேகப் பிரச்சினைகளும் கடமைகளும் இருப்பதாலும், இப்பிரச்சினைகளும் கடமை களும் மற்றைய பொது ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் இடம் பெருமல் விடக்கூடுமாகையாலும் பெண் இனத்தவர்களுக் குத் தனிப்பட்ட ஒலிபரப்பு வேண்டியதாகிறது. இக்த ஒலிபரப்பிலே எத்தகைய விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப்பற்றி இங்கு ஆராயவேண்டிய அவசியமில்லை. எந்த ரேடியோ சிலையத்திலுள்ளவர்களுக் கும் பெண்கள் பகுதிக்குரிய விஷயங்களைப்பற்றி கன்கு தெரியும். முக்கியமாக, குடும்பக்கலை, சமையல் பகுதி, பிள்ளை வளர்ப்பு முதலியன அவசியமாக இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும். ஆனல், பெண்களுக்குரிய, அதாவது, பெண் இனத்தவராகிய கேயர்கள் கேட்கவேண்டிய ஒலிபரப்பை நிகழ்ச்சி நிரலில் எந்த வேளையில் சேர்க்கவேண்டும் என்பது பற்றியும், அந்த ஒலிபரப்பு என்ன விதம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுபற்றியுமே நாம் இங்கு ஆராயவேண்டும்.
நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை அமைக்கும்போது, அங்கிகழ்ச்சியைக் கேட்கும் பெரும் பாலான கேயர்கள் வீட்டிலே சாவகாசமாயிருந்து ரேடியோ கேட்கத்தக்க வேளையைத் தெரிக்தெடுக்கவேண்டியது நிலை யக்கவர்கள் பொறுப்பு. விசேஷமாக நம் நாட்டு வழக் கத்தில் பெண்கள் பெரும்பாலும் நாள் முழுவதும் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்று செய்துகொண்டே யிருப் பார்கள். காலேயிலெழுந்தவுடன் ஆபீசுக்குப் போகும் கணவனுக்கு ஆகாரம் தயாரிப்பதிலும் மற்றக் கடமை
Page 130
216 ஒலிபரப்புக் கல்
களிலும் வீட்டுப் பெண் ஈடுபட்டிருப்பாள். குழந்தை களைக் கவனித்து அவர்களைப் பள்ளிக்கூடம் அனுப்புவதி லும் ஈடுபட்டிருப்பாள். இத்தனை காரியங்களும் அதி காலையிலிருந்து ஒன்பது பத்து மணிவரை ஓயாமல் நிறைக் திருக்கும். கணவன் ஆபீசுக்குப் போய், குழக்தைகளும் பள்ளிக்கூடம் போனதும் பெண் ஓய்வு பெறுவாள் என்று சொல்வதற்கில்லை. மத்தியான்ன போஜனத்துக்கு வேண் டிய சமையல் வேலையிலும், வீட்டைச் சுத்தமாக்குவதிலும் அவள் மறுபடியும் ஈடுபட ஆரம்பிக்கிருள். ஆகையால், சமைய முதலிய கருமங்கள் முடியுமட்டும் அவள் ஓய்வு பெற வழியொன்றுமில்லை. இந்த வேளைகளில் ரேடியோ கேட்பதற்கு அவளுக்கு எவ்வித வசதியுமில்லையென்று சொல்லவேண்டும். மேல் காடுகளில் வீட்டுப் பணி நடை பெறும் வேளைகளுக்கென்றே பிரத்தியேகமாகச் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புகிருர்கள். வீட்டின் அமைப்பும், சமையல்கட்டு அண்மையில் இருப்பதும் ரேடியோவைத் திருப்பிவிட்டு அதில் வரும் ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டே அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வேலை செய்வதற்கு வசதியாயிருக்கின்றன. ஆனல், அந்த நிலைமை நம் நாட்டில் ஏற்படவில்லை. சில பெரிய நகரங் களில் மாத்திரம் சமையல் கட்டிலிருந்தும் வசதியாகக் கூடத்திலிருக்கும் ரேடியோவைக் கேட்க முடிகிறது. தமிழ் காட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வசதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமாயின், மத்தியான்னத்துக்கு முன்பாக, சுமார் பத்தரை அல்லது பதினுெரு மணிக்கு ரேடியோவில் இலகுவான சங்கீதம் அல்லது வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைப் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒலிபரப்புவது மிகவும் உபயோகமாய் இருக்கும். வீட்டு வேலையின் ஆயாசம் தோன்ருமல் ரேடியோ நிகழ்ச்சியைக் காதில் விழுத்திக்கொண்டே பெண்கள் குதூகலத்துடன் வேலை செய்வார்கள்.
பெண்களும் சிறுவரும் 21?
மத்தியான்னச் சமையலும் சாப்பாடும் முடிந்து, அதற்குப் பின்னுள்ள பிற்பகல் வேளையில்தான் பெரும் பாலான 15ம் நாட்டுப் பெண்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இவ்வேளையே அவர்கள் ஆறுதலாக உட்கார்ந்து ரேடியோ கேட்பதற்கு மிகவும் ஏற்ற சமயம். பெண்களுக்குரிய பேச்சுக்களாயினும் சரி, நாடகம், ஒலிச் சித்திரமாயினும் சரி, பிற்பகல் ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையி லுள்ள நேரத்தில் ஒலிபரப்புவதுதான் சிறந்தது.
பெண்கள் பகுதிக்கென ரேடியோவில் தயாரித்து ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகள் அதற்குரிய தனிப் பண்புடன் இருக்கவேண்டியது அவசியம். மற்றப் பொது ஒலிபரப்பில் சாதாரணமாக அமையக்கூடியதாயிருக்குமானல் தனிப் பட்ட ஒரு நிகழ்ச்சியாக வைக்கவேண்டிய அவசியம் இல் லாமல் போய்விடும். ஆகையால், பேச்சுக்களையும் நாட கங்களையும் பெண்களுக்கு உபயோகமான முறையில் தயாரித்து ஒலிபரப்ப வேண்டும். அந்த நிகழ்ச்சியைக் கேட்டுப் பெண்கள் தமது நிகழ்ச்சியென்று பெருமைப்பட வேண்டும். ஆகவே, பெண்கள் பகுதி ஒலிபரப்பில் பெண்களே கலந்துகொள்ள வேண்டியது அவசியம். பெண்ணின் உள்ளத்தை அறிந்து அவள் விருப்பு வெறுப் புக்களை கன்கு தெரிந்தவர்கள் அதனைத் தயாரித்து கடத்த வேண்டும்.
Page 131
பதினுரும் அத்தியாயம் கல்வி ஒலிபரப்பு
பல நூற்ருண்டுக் காலமாகப் போதன முறை, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணுக்கர் கேட்டுக்கொள்வ தாகவோ, அல்லது மேல் வகுப்புக்களில் ஆசிரியர் துணையோடு மாணுக்கர் பல நூல்களைப் படித்து அவற்றி லுள்ள கருத்துக்களைக் கிரகித்துக்கொள்வதாகவோ மாத் திரம் இருந்துவந்தது. ஆனல், இன்று போதன முறை எத்தனையோ வகையில் மாற்றம் அடைந்துவிட்டது. "ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதையும், பாட புத்தகங்களில் உள்ளதையும் மாத்திரம் மாணுக்கர் படித்தால் போதாது; அவர்கள் தாமாகவே எல்லாப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும்; சிந்திக்கவேண்டும்; உணர்ந்து சிருஷ்டிக்க வேண்டும்' என்ற அடிப்படைதான் இன்றியமையாதது என்று கருதுகிருரர்கள். அதாவது, மாணுக்கர் பாடம் கேட்பது போதாது, அவர்கள் உணர்ச்சியானது அநுபவம் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய நிபுணர்கள் கண்டுபிடித்துள்ள தத்துவமாகும்.
இத்தகைய அநுபவக் கல்வியை விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் பலவிதச் சாதனங்களை நாடுகின்றனர்; பல விதச் சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். ஊர்களைப்பற்றி யும், தேசங்களைப்பற்றியும், மக்களைப்பற்றியும் மாணுக்கர் கேரில் பழகி அறிந்துகொள்ளவேண்டும்; இலக்கியத்திலும் கலைகளிலும் நேரில் சம்பந்தப்பட்டு அநுபவிக்கவேண்டும்; விஞ்ஞானத்தில் இளம் உள்ளங்கள் பல சிக்கல்களையெல் லாம் நேரில் புரட்டிப் பார்த்துத் தீர்த்துக்கொள்ள வேண்டும்; பூமி சாஸ்திரம், சரித்திரம், குடியியல் முதலிய
கல்வி ஒலிபரப்பு 219°
துறைகளிலே உலகக் காட்சிகளையெல்லாம் மாணுக்கர் தமது வகுப்பறையிலேயே காணச் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். இவ்வாருக, வெறும் புத்தகப் படிப்பாக மாத் திரமில்லாமல் எல்லாக் கலைகளையும் கேரில் அநுபவிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய தத்துவம்.
இந்த அநுபவ இயக்கத்தை எப்படி வளர்ப்பது என்று ஆசிரியர் வழி தேடும்போது, சினிமாவும் ரேடி யோவும் ஒரளவு துணை செய்கின்றன. இந்த இரு சாத: னங்களும் காட்சிப் புலனுக்கும் கேள்விப் புலனுக்கும் உரியனவாகையால் ஒரளவில்தான் உதவும். புத்தகத்தில் படித்ததற்கும் ஆசிரியரிடம் கேட்டதற்கும் துணையாக மாத்திரம் நின்று, மாணுக்கரின் அநுபவ உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக உதவுகின்றன. உதாரணமாக, தமிழ் காட்டு மாணுக்கன் ஒருவன் அமெரிக்கா தேசத்தைப் பற்றியும், அங்காட்டு மக்களைப்பற்றியும் புத்தகத்தில் படித்துவிட்டுத் தனக்குத் தெரிந்த அளவில் கற்பனை செய்தே அக்காட்சிகளைக் காணவேண்டும். ஆன ல், அமெரிக்காவில் பிடிக்கப்பட்ட சினிமாவைப் பார்த்து ஓரளவு அநுபவ உணர்ச்சியைப் வளர்க்கலாம்; அல்லது அங்கே கேரில் சென்று திரும்பிய ஒரு பிரயாணி ரேடி யோவில் தம் அநுபவங்களைச் சொல்லும்போதும் புத்தகத் தில் படித்ததை அநுபவிக்கலாம்.
ரேடியோ ஒலிபரப்பினல் மாணுக்கருக்கு ஒருவித அநுபவ உணர்ச்சியை வளர்ப்பது மிகவும் சுலபமாகை யால், இந்தச் சாதனத்தை அதிகமாக இன்று உபயோகித்து வருகிறர்கள். உலகத்தின் பல பாகங்களிலும் மக்கள் வாழ்க்கையைப்பற்றியும் 5 ட க் கும் சம்பவங்களைப் பற்றியும் ரேடியோ மூலம் சித்திரித்து மாணுக்கர் தாமே 5ேளில் அநுபவிக்கத் தக்கதாகச் செய்வதுடன் இலக்கியத் திலும் கலையுணர்ச்சியிலும் அவர்கள் கற்பனைக் கண்,
Page 132
220 ஒலிபரப்புக் கல்
கொண்டு பார்க்கவும்லTசெய்துவிடலாம். சரித்திரத்தில் மாளுக்கர் மகாத்மா காந்தியைப்பற்றிப் புத்தகத்தில் படிக்கலாம். ஆன ல், ரேடியோவில் காந்தியடிகளைப் பற்றிய சில தகவல்களை, அவரை நேரில் காணச் சந்தர்ப்பம் கிடைத்த ஒருவர் தமது சொந்த அநுபவமாகச் சொல்லவும், இடையிலே ஒலிப்பதிவு செய்யப்பட்ட காந்தியடிகளின் பிரசங்கத்தை ஒலிபரப்பவும் மாணவர் கேட்டால் அந்த அநுபவம் எல்லையில்லாத உணர்ச்சியை மனத்தில் பதிய வைக்கும். இசையறிவும் இசையை அநுபவிக்கும் அறிவும் எல்லா மாணவருக்கும் இன்றியமையாதனவாகையால் அதைப்பற்றி ரேடியோவில் பேச்சுக்கள் ஒழுங்கு செய் வதுடன், சாதாரணமாக மாணவர் கேட்க வசதியற்ற பெரிய கச்சேரிகளையெல்லாம் ஒலிப்பதிவுகளாக உபயோ கித்து வழங்கலாம். புத்தகத்தில் மாத்திரம் படிக்கும் விஷயத்தை மாணுக்கர் கேரில் பார்க்கச் சந்தர்ப்பம் வேண்டு மென்பதற்காக, பொருட்காட்சிச்சாலை, மிருகக்காட்சிச் சாலை, சரித்திரப் பிரசித்திபெற்ற பட்டணங்கள், ஊர் களுக்குச் சிற்சில சமயம் ஆசிரியர் மாணுக்கரை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனல், எப்போதும் இது சாத்தியப் படாது. அதற்காகவே கேரில் பார்த்து வந்தவர்களைக் கொண்டு ரேடியோ மூலம் பேச வைத்து மாணுக்கரின் அநுபவத்துக்கு ஓரளவு உதவி அளிக்கலாம். ஒரு பிர யாணி தான் தூர தேசங்களில் கண்டவற்றை எடுத்துச் சொல்லலாம்; புலவர், என்ஜினியர், மிருக வைத்தியர், காட்டு இ லா கா இன்ஸ்பெக்டர் இவர்கள் தமது சொந்தத் தொழில்கள் பற்றிச் சொல்லலாம்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கலாசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட பழைய மாணவர்கள் தொழில் தேடுவதைப் பற்றியுள்ள பிரச்சினைகளை விவாதிக்கலாம். இவை யெல்லாம் மாணுக்கர் ரேடியோவில் ஒருவரின் குரல் மூல மாக அநுபவிக்கும் அறிவு.
கல்வி ஒலிபரப்பு る3f
ரேடியோ மூலம் கல்வி ஒலிபரப்பு முக்கியமாகப் பிரிட் டனிலே ஒரு தனி முயற்சியாக கடந்து வருகிறது. லண்டன் பி. பி. வி. ஸ்தாபனத்தில், கல்வி ஒலிபரப்பைக் கவனிக்கும் பகுதியில் பயிற்சியும் அநுபவமும் வாய்ந்த சிறந்த ஆசிரி யர்கள் பலர் பணி புரிகிருர்கள். எல்லோருமே ஆசிரியத் தொழிலில் நன்கு அநுபவம் பெற்றவர்கள். அத்துடன் ஒலிபரப்புக் கலையில் நல்ல பயிற்சி பெற்றவர்கள். இவர் களைத் தவிர, கல்வி ஒலிபரப்புச் சங்கம் என்ற ஒரு ஸ்தாப னம் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, கல்வித் துறையில் புகழ் பெற்ற அறிஞர் பலர் இந்தச் சங் கத்தில் உள்ளனர். இவர்கள் காலத்துக்குக் காலம் கூடிப் பல பிரச்சினைகளைப்பற்றி ஆராய்ந்து தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஒலிபரப்பு நிபுணர்களுக்கு அறிவித்து வருவார்கள்.
கல்வி ஒலிபரப்பு ஒரு பக்கத்துக் கடமையாயிருக்க முடியாது. ஒலிபரப்பு நிலையத்திலுள்ள கலைஞரும் பாட சாலைகளிலுள்ள ஆசிரியர்களுமாகிய இரு பக்கத்தாரது கூட்டு முயற்சியே சிறந்த பலனளிக்கும். ஒலிபரப்பு நிலை யத்தார் மாணுக்கருக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை என்ன வகை யில் தயாரித்து ஒலிபரப்ப வேண்டுமென்று தீர்மானிப்பார் கள். நேரடியான பேச்சா யிருக்கவேண்டுமா, நாடகமா யிருக்கவேண்டுமா, சம்பாஷணையா யிருக்கவேண்டுமா என்று முதலிலே ஆராய்ந்து, அதற்குத் தக்கவிதமாக நிகழ்ச்சியைத் தயாரிப்பார்கள். இதற்கு, நிலையத்திலே கல்வி ஒலிபரப்புப் பகுதியில் இருப்பவர்கள் மாணுக்கரின் மனநிலையைப்பற்றியும் தகுதியைப்பற்றியும் பாடத்திட் டங்களைப்பற்றியும் கன்கு அறிந்தவர்களா யிருத்தல் வேண்டும்.
மறுபுறத்தில், பாடசாலைகளிலே ஆசிரியர்களாயிருப் பவர்கள் கல்வி ஒலிபரப்பை மாணுக்கர் கேட்பதற்குத்
Page 133
233 ஒலிபரப்புக் கல்ை
தமது பாடத் திட்டத்தில் ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வைப்பதுடன், நிகழ்ச்சியைக் கேட்கும் மாணுக்கர் அதனைப் பூரணமாக அநுபவிக்கவும் வசதிகள் செய்து கொடுத்தல் வேண்டும். ரேடியோ கிலையத்திலே மாணுக் கரை கேரில் காண முடியாமல் இருந்துகொண்டு நிகழ்ச்சி கள் தயாரித்து ஒலிபரப்புகிறவர்களுக்குத் துணை கிற்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே. பாடசாலை வகுப்பறை யில் ஆசிரியர்களிடம் கேரில் பாடம் கேட்கும் மாணுக்கர் தம் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிந்து கொள்ள வசதியுண்டு. ஆணுல், அத்தகைய வசதியை ரேடியோ ஒலிபரப்பில் .ெறமுடியாது. பேசுவோருக்கும் பேசப்படுவோருக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை கடைபெறுவதற்கு ரேடியோவில் வழியில்லை.
ஆனல், ரேடியோவில் நடைபெறும் கல்வி ஒலிபரப்பை ஒரு பாடம் என்று சொல்ல முடியாது. அது மாணவர் உள்ளத்தில் ஒருவித அநுபவத்தை மாத்திரம் கொடுக்கிற தென்று முன்பே சொல்லியுள்ளோம். அந்த அநுபவத் தில் பல புதிய கருத்துக்களே ஆசிரியர் வளர்த்துக் கொடுக்க உதவியாயிருக்கும். மாணுக்கர் மனநிலையை நேரில் அறிக் துள்ள ஆசிரியரே அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் அநு பவ உணர்ச்சியைக் கொண்டு கல்வி புகட்டுவதற்கு வல்ல வர்கள். ஆகையால் ரேடியோ ஒலிபரப்பில் மாணவரின் அநுபவம் ஏற்பட அகைக் துணைக்கொண்டு ஆசிரியர் தமது கடமையை இலகுவாக்கிக் கொள்ளலாம்.
மாணுக்களின் உளநிலையை கேரில் அறிந்த ஆசிரியர்கள் ரேடியோ நிலையத்திலுள்ளவர்களுக்கு அடிக்கடி ஒலிபரப் புக்களைப்பற்றிய தம் அபிப்பிராயங்களையும் மாணுக்கர் அநுபவங்களையும் எழுதித் தெரிவிக்கலாம். இத்தகைய ஆதரவு ஒலிபரப்பாளரின் முயற்சிக்குத் துணை செய்யும். சிறப்பாக, பாடசாலையிலுள்ள ஆசிரியர் ஒலிபரப்பாளரின்
கல்வி ஒலிபரப்பு 223
சேவையை வளர்க்கவேண்டுமானல், கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மாணுக்கர் கேட்டு அநுபவிப்பதற்கு எல்லா வித உதவியும் செய்துகொடுத்தல்வேண்டும். சாதாரண மாக ரேடியோவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கேட்கும் முறை ஒன்று; ஆனல் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி களைக் கேட்கும் முறை வேறு. அதற்கு ஆசிரியர்களே வழிகாட்டிகளாகையால், அவர்களே கல்வி ஒலிபரப்புக் களைக் கேட்கும் முறையை வகுத்து, மாணுக்கர் கவனத்தை வளர்த்து வைத்தல் வேண்டும்.
சில ஆசிரியர்கள், கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சியையும் ஒரு பாடமாகப் பாவித்து, கரும்பலகை முதலிய சாதனங் களை வைத்துக்கொண்டு, ஒலிபரப்பு கடைபெறும்போது மாணுக்களிடம் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்டும், ஒலிபரப் பில் குறிப்புக்கள் எழுதச் சொல்லியும், தாமே சில குறிப் புக்கள் எழுதியும் பாடம் 15டத்துவார்கள். இது மிகவும் பொருத்தமற்ற முறை. ரேடியோவில் வந்துகொண் டிருக்கும் ஒலிபரப்பை முழுவதும் கேட்பதற்கு முன்பு மாணுக்கர் புலனைத் தடுத்தலாகாது. ஒலிபரப்பு முடிந்த பின்தான் கேள்விகள் கேட்பதும் சந்தேக நிவர்த்தி செய்த லும் குறிப்புக்கள் எழுதுவதுமாகிய காரியங்களை வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒலிபரப்பை மா னக் கர் தொடர்ச்சியாகக் கேட்பதற்கு முதலில் இடம் கொடுத்து அதன் பின்னரே ஆசிரியர் அதைக் கொண்டு பாடம் நடத்த வேண்டும். இங்ங்னம் சில ஒலிபரப்பைக் கேட்ட பிறகு மாணக்கர்கள் கல்வி ஒலிபரப்பைக் கேட்கும் முறையைப் பழக்கத்தில் வளர்த்துக்கொள்வார்கள். ஒலிபரப்பு முடிந்த பின் ஆசிரியர் கேட்கும் கேள்விகளிலிருந்து இன்ன விஷயங் களைத்தான் முக்கியமாக மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்.
Page 134
234 ஒலிபரப்புக் கல்
கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி தயாரிப்பாளர், பாடசாலை யின் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மாணுக்கரின் வயதுப் பிரிவுகளை வைத்துக்கொண்டு தயா ரித்தல் வேண்டும்: ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுக்கு ஒரு பிரிவு; ஆறுக்கும் ஒன்பதுக்கும் இடையிலுள்ளவருக்கு இன் னுெரு பிரிவு; ஒன்பதுக்கு மேற்பட்டவருக்கு மற்ருென்று. கடைசியாகச் சொன்ன பிரிவை இரண்டு வகுப்பாக்கி, மத்திய வகுப்பு மாணவர் என்றும், மேல் வகுப்பு மாணவர் என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த வகையில் மாணக் கரைத் தரம் பிரித்துக்கொண்டு, அவரவர்க்கு ஏற்ற முறை யில் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவது சுலப மாக இருக்கும்.
கல்வி ஒலிபரப்பில் எத்தனையோ வகையான நிகழ்ச்சி களைப் பாடத் திட்டங்களுக்கு உதவியாக ஒலிபரப்பப் பல நிலையங்கள் முயன்று வருகின்றன. உதாரணத்துக்காக மாத்திரம் சில பாடப் பிரிவுகளை இங்கு எடுத்தாளுவோம்.
மொழியும் இலக்கியமும்
மாணுக்கரின் மொழியறிவுக்கும் வளர்ச்சிக்கும் பேச் சுச் சாதனமாகிய ரேடியோ மிகவும் வாய்ப்பான கருவி என்று சொல்லவேண்டும். முக்கியமாக, கீழ் வகுப்பு மாணக்கரிடையே மொழிப்பயிற்சியை வளர்க்கக் கதை, நாடகம் முதலிய நிகழ்ச்சிகள் பெரிதும் பயன்படும். மத்திய வகுப்புக்களில் இலகுவான இலக்கியங்களைக் கதை வடிவத் திலும் 5ாடக வடிவத்திலும் ஒலிபரப்பி, மேல் வகுப்புக் களிலே சங்க இலக்கியக் காட்சிகளையும், தற்கால இலக் கியப் பண்புகளையும், நூலாசிரியர் வரலாறுகளையும் பல விதமான நிகழ்ச்சி உருவங்களாக்கி ஒலிபரப்புவதோடு இலக்கிய நயம் தெரிதலைப்பற்றி அறிக்தோர் வாயிலாகவும் புலப்படுத்தலாம்.
கல்வி ஒலிபரப்பு 235
சரித்திரம், பூமி சாஸ்திரம், குடியியல் ஆகிய பாடங் களே இக்காலக் கல்வி நிபுணர்கள் ஒன்று படுத்திச் சமூக சாஸ்திரம் என்று ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தியுள்ளார்கள். அதாவது, ஒன்ருேடொன்று சம்பந்தப்பட்டவை யாகை யால் இம்மூன்றையும் தனித் தனிப் பிரிவாகக் கற்பிக்காமல், இணைத்துக் கற்பிக்கவேண்டுமென்பது அவர்கள் முடிபு. ஒரு காட்டின் சரித்திரத்தை ஆராயும்போது, அங் காட்டின் நிலப் பாங்கு, அதில் வசிக்கும் மக்களின் வர "லாறு, அவர்கள் பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலியன வளர்ந்த விதம், நாட்டிலே புகழ் பெற்ற பெரி யாருடைய வரலாறு, காட்டிலே ஆட்சி முறை வளர்ந்த விதம், மக்களின் உரிமைகள், கடமைகள்-இந்த விதமாகப் பாடங்களை வகுத்துக்கொண்டால் மேற்சொன்ன சமூக சாஸ்திரம் என்ற பிரிவில் அடங்கிய எல்லா விஷயங் களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சங்கீதம்
சங்கீத பாடத்துக்கும் ரேடியோ மிகவும் வாய்ப்பான சாதனம். பிறக்கும்போதே தாயின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டு வந்த குழந்தை தனது வாழ்நாளில் இசை யறிவை வளர்த்துக்கொள்ள எவ்வளவோ வசதியிருக் கிறது. ஆணுல், நமது நாட்டில் எத்தனே பள்ளிக்கூடங் களில் இசையைக் கட்டாய பாடமாக வைத்திருக்கிருர் களென்று சொல்லத் தெரியவில்லை. சமூகத்தின் பண்பாட் டில் விருப்பமுள்ள சில குடும்பங்களில் மாத்திரம் சங் கீதத்தை வீட்டுப் பாடமாக வைத்திருக்கிருர்கள். அதுவும் பெண்களுக்கே பிராதான்யம் அளிக்கப்படுகிறது. ஆண்கள் சங்கீதம் கற்பது பாட்டு வாத்தியார் தொழில் பார்ப்பதற் காகவோ கச்சேரி செய்து பிழைக்கவோ என்றுதான் ஓர் அபிப்பிராயம் இன்னும் நிலவுகிறது.
Page 135
226 ஒலிபரப்புக் கல்
ஆனல், மற்ற நாடுகளில் மாணுக்கர் வாழ்க்கையில் அவர்கள் அறிவு வளர்ச்சிக்குச் சங்கீதத்தையும் ஒரு கட்டாய பாடமாக வைத்திருக்கிருர்கள். இசையின்பத்தை அநுபவிப்பதும் அதில் பக்குவப்படுவதும் உள்ளத் தூய் மைக்கும் பண்பாட்டுக்கும் இன்றியமையாதன என்பது அவர்கள் கருத்து. பள்ளிக்கூடங்களிலே இசையை ஒரு பாடமாக வைக்காவிட்டாலும் கல்வி நிகழ்ச்சியை ஒலிபரப் பும் ரேடியோ கிலையங்கள் இந்தத் துறையில் எவ்வளவோ சாதிக்க முடியும் என்று சொல்லவேண்டும். வசன பாடமும் கவிதையும் மாத்திரம் மாணுக்கருக்குப் போதா. ஆத்திகுடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கன்னெறி ஆகிய கவி தைத் தொகுதியிலுள்ள பாட்டுக்களை 5ெட்டுருப் பண்ணி ஒப்பித்தால் மாத்திரம் போதாது. ஆகையால் சங்கீதத் துறையில் ரேடியோச் சாதனம் நல்ல துணை செய்யலாம்.
மேலே சொன்ன பாடங்களிலும் மற்றும் பலவற்றி லும் ரேடியோ நிலையத்தில் மாணுக்கருக்குக் கல்வி ஒலி பரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்கள் கடமையும் பொறுப் பும் மிக மிக முக்கியமானவை. வயதுப் பிரிவுகளை வகுத்துக்கொண்டு அந்த அக்தப் பிரிவுக்குப் பொருத்த மாக ரேடியோப் பாடத்திட்டங்களை அமைத்து, அவற்றை அநுபவமும் தகுதியும் வாய்ந்தவர்களைக் கொண்டு எழுது வித்து, தக்கவர்களைக்கொண்டு ஒலிபரப்புதல் வேண்டும். கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சித் திட்டம் வகுப்பதற்கு உதவி யாக, உதாரணத்துக்கு மாத்திரம் சில குறிப்புக்களை இங்கே தருகிருேம்:
முதல் பிரிவு ஐந்து அல்லது ஆறு வயது மாணவர் மொழிப் பயிற்சி:
உப கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்-இவைகளை கேரே கதை ரூபமாகவும் 5ாடக ரூபமாகவும் அல்லது
கல்வி ஒலிபரப்பு ܫ V 22?
இரண்டும் கலந்த நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பலாம். சிறு பிள்ளைகளுக்கான பாட்டுக்களை ஒலிபரப்பலாம். சரித்திரம்:
பெரியார் வரலாறு அல்லது புராதன மக்களைப் பற்றிய வரலாறு, தேச சரித்திரங்களிலிருந்து சில கதைகள்-இவற்றைப் பலவித உருவங்களில் குழங் தைகள் விரும்பக்கூடிய முறையில் ஒலிபரப்பலாம். இசை :
'நிலா நிலா ஒடி வா’ என்பதுபோன்ற குழந்தைப் பாட்டுக்களை இலகுவான இசையில் பாடுதல், பலவித வாத்தியங்களைப்பற்றிய இன பேதம் தெரிந்து கொள்ளச் செய்தல், பிள்ளைகள் கேட்டு நடிப்பதற்கு உதவியான இலகுவான பாட்டுக்களைப் பாடுதல் ஆகிய ஒலிபரப்புக்கள். மேலே சொன்ன திட்டத்தில் இரண்டாவது பிரிவு மாணவருக்கு அவர்கள் வயதுக்குப் பொருத்தமாக மாற்றம் செய்துகொண்டு, உயர்தர வகுப்பு மாணவருக்குத் திட்டம் அமைக்கும்போது இலக்கியத்தில் நயம் தெரிவித்தல், சிறந்த ஆசிரியரின் கடை முதலியவற்றை அநுபவித்தல், இசை யின் நுட்பங்களை அநுபவிக்கும் ஆற்றலைப் புரிந்து கொள்ளல், பெரியகச்சேரிகளில் பாடகரின் பாணி முதலிய வற்றை மதிப்பிட முறை தெரிந்துகொள்ளல் - ஆகிய அது பவ ஞானத்தை வளர்க்கத் தக்க முறையை ஆளலாம்.
கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சியின் வெற்றி, நிலையத்து நிகழ்ச்சி நிர்வாகிகளின் திறமையையும் பள்ளிக்கூட ஆசிரி யர்களின் ஆலோசனையையும் சேர்ந்த ஒத்துழைப்பையுமே பொறுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் சொல்லி யுள்ளோம். ஆகையால், இரு திறத்தினரும் தத்தம் பூரண அநுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தினுல் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தக்க பலனைத் தரும்.
Page 136
பதினேழாம் அத்தியாயம்
ரேடியோவும் கிராம மக்களும்
முன்னேற்றம் அடைந்துள்ள எல்லா நாடுகளிலும் இந்தக் காலத்தில் பிற்போக்கிலிருக்கும் கிராம மக்களுக் கென்று பலவிதச் சமூக சாதனைகள் செய்யப்பட்டு வரு கின்றன. அத்தகைய சமூக சாதனைகளில் ரேடியோ மூலம் கல்வி புகட்டுவதும், பொழுதுபோக்களிப்பதும், மற்றைய அறிவுத் துறைகளில் சேவை செய்வதும் பெரு வழக்கில் வந்துவிட்டன. இதனுல், ரேடியோ நிலையங்களில் நிகழ்ச்சி தயாரிக்கும் பிர்வாகிகள் கிராம மக்களுக்கென்றே தனி நிகழ்ச்சி தயாரிப்பதிலும் ஒலிபரப்புவதிலும் விசேஷ கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன், அங்கிகழ்ச்சி களைக் கேட்டுப் பயன்பெறுவதற்கு அரசாங்கங்களும் பல விதமான செளகரியங்களைச் செய்துகொடுக்கின்றன. ஜன சமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் முதலிய நிலையங்களை ஸ்தாபித்து அங்கிலையங்களிலே கிராம மக்கள் தமது ஒய்வு கேரங்களிலே கூடுவதற்கும், கூடி அளவளாவு வதற்கும் வாசகசாலை, நால் நிலையங்கள் முதலியன ஏற் படுத்திக் கொடுத்து, கிராம மக்கள் செளகரியமாயிருந்து கேட்க இலவசமாக வானெலிப் பெட்டிகளும் வழங்கி வருகின்றன.
பட்டணத்துப் பண்பாடு ஒன்று; கிராமத்துப் பண் பாடு வேருென்று. அவை வெவ்வேருயிருந்தபோதிலும் ஒன்றுக்கு மற்றென்று உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்பட்லாகாது. ஆகையால், சமூக முன்னேற்றச் சேவையில் ஈடுபட்டோர் கிராமத்துப் பண்
ரேடியோவும் கிராம மக்களும் 229.
பாடு தாழ்ந்தது என்ற எண்ணத்துடன் அதனையும் பட் டணமாக்க முற்படுவது அசம்பாவிதம். அறியாமையுள்ள இடத்தில் அறிவைப் பெருக்குவதே நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, ஒரு சமூகத் தின் பழக்கப்பட்ட வாழ்க்கை மு ைற ைய மாற்றியமைக்க முற்படுவது பேதைமை. ஆகையால், கிராமத்துப் பண்பாட்டை மாற்றி யமைக்க முயலாமல், அப்பண்பாட்டைப் பேணி வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இந்த அடிப்படையிலேயே கிராம மக்களுக்கான ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிப் பவர்கள் சிந்தித்து வேலை செய்யவேண்டும். கிராம மக் களுக்கு ஒரு பாஷை கடையிருக்கிறது. அவர்கள் சிந்தனைப் போக்கு வாழ்க்கையின் சூழ்நிலையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. ஒய்வு 5ேரங்களில் பொழுது போக்குவதும் வாழ்க்கைத் துறையுடன் நெருங்கிய சம்பந்தமுடைய தாகக் காணலாம். இவை காரணமாகவே காட் டு ப் பாடல்கள், நடனங்கள், கூத்துக்கள், நாடகங்கள், விளை யாட்டுக்கள், பேச்சிலே ஒரு தனிப்பட்ட சாயல்-இத் தகைய பண்பாடு மற்றைய சமூகப் பிரிவிலிருந்து வேறு பட்டதாயிருக்கக் காண்கிருேம்.
மேலே சொன்ன விவரங்களை மனத்தில் கொண்டு கிராம ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தனிப்பட்ட முறையில் தயாரித்து வழங்குவது ரேடியோ நிலையத்தினர் கடமை யாகும். இந்தக் கடமையில் ஈடுபடும் நிர்வாகி கிராமத்துப் பண்பாட்டில் 5ல்ல அநுபவம் பெற்றவராயும், முதியோர் கல்விப் பயிற்சி, கலை ஞானம், கற்பனைத் திறன் இவற்றில் வல்லவராயும் ஒலிபரப்பு நுட்பங்களை நன்கறிந்தவராயும் இருக்கல்வேண்டும். நிகழ்ச்சி தயாரிக்கும்போது கிராமத்து மக்களுக்குப் பொழுதுபோக்களிப்பது மாத்திரமல்ல, அறிவுத் துறையில் எல்லாவித அநுபவங்களையும் வழங்கத் தக்கதாகத் திட்டம் வகுக்கவேண்டும். கிராம மக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள அவர்கள் மொழிநடையில்,
Page 137
8፵0 , ஒலிபரப்புக்கம்ே
அவர்கள் சிந்தனைப் போக்கில், அவர்கள் வாழ்க்கை அடிப்
படையில் நிகழ்ச்சிகளேத் தயாரிக்கவேண்டும்.
கிராம நிகழ்ச்சி ஒலிபரப்பில் இன்று பாரத நாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டு ரேடியோ கிலேயங்கள் மிக உயர்ந்த தரத்தில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்குகின்றன என்று சொல்லவேண்டும். மற்ற எந்த காட்டையும் விடத் தமிழ் ாேட்டுக் கிராமச் செல்வம் அபரிமிதமாக நமக்குக் கிடைக் கிறது. விவசாயத்திலேயே தலமுறை தலைமுறையாக வளர்ந்து வரும் கிராமத்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு தனிப்பட்ட பண்பாட்டைப் பெருக்கி வந்துள்ளார்கள். அவர்கள் தொழில் முறையிலே அநுபவ முதிர்ச்சியில் வந்த அரிய சாதனேகள் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கண்டு பிடிக்கப்படாத பல உண்மைகளேக் கொண்டுள்ளன. அவர்கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அன்பும் பரிவும் பரிமளிக்கின்றன. அவற்றின் விளைவாக, ஒரு கலேயை வளர்த்துப் பாட்டிலும் கூத்திலும் விழாக்களிலும் இன்பங் காண்கின்றனர். இவையெல்லாம் நமது தமிழ்நாட்டில் கிராம ஒலிபரப்பு நிகழ்ச்சிக்கு அள வற்ற கருப்பொருளேக் கொடுத்துதவுகின்றன.
கல்வி ஒலிபரப்புக்கு ரேடியோ நிலயத்திலுள்ள நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கும் பாடசாலைகளிலுள்ள ஆசிரி பர்களுக்கும் எப்படித் தொடர்பு அவசியமோ அதேபோல, கிராம ஒலிபரப்புக்கும் கிலேயத்து கிர்வாகிகளுக்கும் கிராம பரிபாலன அதிகாரிகளுக்கு மிடையில் நல்ல தொடர்பு வேண்டும். கிராம மக்களின் தேவைகள், அவர்கள் குறைகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றை கிலே பத்தில் உள்ளவர்கள் நன்குனர்ந்து அவற்றிற்கு ஏற்ற வாறு நிகழ்ச்சிகளேத் தயாரிக்கவேண்டும். திருச்சிராப் பள்ளி கிலேயத்தில் நடைபெறும் கிராம நிகழ்ச்சிகளில் கிராமத்து மக்களுடன் நேரடியான தொடர்புக்காகக் கிராம
县
|
ரேடியோவும் கிராம மக்களும் 33.
ரேடியோ சங்கம் என்று பல சங்கங்களே அமைத்து, அந்தச் சங்கங்களிலிருந்து பிரதிநிதிகளே வரவழைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்கிருர்கள்.
ரேடியோவில் கிராம நிகழ்ச்சி ஒலிபரப்பும்போது கிராமத்து மக்களுக்கு உபதேசம் செய்யும் தன்மையோ அல்லது கற்றுக்கொடுக்கும் பாவனேயோ தொனித்த லர்காது. கிராமத்து மக்கள் தமக்கென ஒரு பண்பாட் டைக் கொண்டுள்ளார்களாகையால், ரேடியோ மூலம் அவர்களுக்கு உபதேசம் செய்வதை வெறுப்பார்கள். ஆதிவே, எந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும்போதும் அவர்களில் ஒருவராக இருந்து அவர்களுடன் கலந்து பேசுவதே அல்லாமல் போதனே'உணர்ச்சி ஏற்படாமல் ார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சுக்கள், நாடகங்கள், விவாதங்களெல்லாம் ஏற்கெனவே கிராமத்தவர் தமக்கென விளர்த்துக்கொண்ட பாணியில் இருத்தல் வேண்டும். எத்தகைய புதிய விஷயங்களே எடுத்துச் சொன்னுலும் அவை கிராமத்தவர்களுக்கு எளிதில் விளங்கும் நடையில் இருத்தல் வேண்டும்.
கிராம நிகழ்ச்சிக்கு என்னவிதமான பொருள் தேட வேண்டுமென்பதில் எவ்விதச் சங்கடமும் இருக்கவேண்டிய தில்லே. கிராமத்துக்கே பிரத்தியேகமாயுள்ள பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், அவர்கள் வாழ்க்கையில் கலந் துள்ள விழாக்கள் முதலியன யாவும் ஒலிபரப்பு நிகழ்ச்சி களுக்கு வாய்ப்பானவை. இவற்றைவிட, கிராம மக் களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய எல்லாக் கருத்துக்களேயும் பேச்சாகவோ, விவாதமாகவோ, சம்பாஷ்னேயாகவோ, நாடகமாகவோ தயாரித்து அவ்வப்போது வழங்கலாம். ஆணுல் இங்கிகழ்ச்சி உருவங்கள் யாவும் சாதாரணமாக ரேடியோவில் நடக்கும் மற்றைய நிகழ்ச்சிகளேப் போன் றிருக்காமல் ஏற்கெனவே கிராமத்தில் வழங்கும் பேச்சு,
Page 138
232 ஒலிபரப்புக் கலை
நாடகம் முதலிய பாணியில் அமைந்திருந்தால்தான் அவர்கள் எளிதில் கிரகித்துக்கொள்ள வசதியாயிருக்கும். நிகழ்ச்சி தயாரிப்பாளர் இந்த அடிப்படையை நினைவு வைத்துக்கொண்டு பணி புரியவேண்டும்.
கிராம ஒலிபரப்புக்குக் கிராமத்தில் உள்ளவர்களையே நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்யவேண்டுமென்ற தி ! கிடையாது. நிலையத்திலேயே இதற்கெனப் பயிற்சி பெற்ற ஒலிபரப்பாளர்தாம் சிறப்பாகக் கொண்டு நடத்த முடியும். சில விசேஷ நிகழ்ச்சிகளில் கிராமத்தவர்களும் கலக் கொள்ளலாம். ஒலிப் பதிவு வசதியிருப்பதால் கிராமத்துச் குழ்நிலை கொண்ட பல அரிய சம்பவங்களையும் நாடகங் களையும் பாட்டுக்களையும் கேரிலேயே ஒலிப்பதிவு செய் நிகழ்ச்சிகளில் வழங்கலாம்.
பதினெட்டாம் அத்தியாயம் ஒலிபரப்பு விளம்பரம்
பத்திரிகை, சினிமா முதலிய சாதனங்கள் வர்த்தகத் துறையில் விளம்பரத்துக்கு உபயோகப்படுவதுபோல, ரேடியோவும் டெலிவிஷனும் இக்காலத்தில் சில நாடுகளில் அபரிமிதமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனல், ஒலிபரப்புக் கலையில் சாதாரணமாக மக்களின் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் கடத்தப்படும் நிகழ்ச்சிகளைத் தவிர, விளம்பரத்துக்காகவே கடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் அவற்றை ஒலிபரப்புவதிலும் பல கலைஞர் விசேஷப் பக்குவம் பெறவேண்டி ஏற்பட்டிருக்கிறது. சிறப்பாக, அமெரிக்காவில் இந்த விளம்பர ஒலிபரப்பு எத்தனையோ ஆண்டுகளாக வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. ஒலிபரப்புக் கலைஞரிற் பலர் இந்தத் துறையிலே கவனம் செலுத்தி விசேஷப் பயிற்சியும் அநுபவமும் பெற்றுள் ளார்கள், விளம்பர ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் நிலையத்துக்கு நிலையம் பலத்த போட்டி போட வேண்டியிருப்பதால் தயாரிப்பாளரும் ஒலிபரப்பாளரும் கண்ணும் கருத்துமா யிருந்து, பணம் கொடுக்கும் வர்த்தக முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதற்கு உயர்தரத்தை ஸ்தாபிக்கவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. இந்தக் காரணத்தால் கலைஞரும் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் தமது முயற்சியில் வெற்றி கண்டால் அவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
நமது பிரதேசத்தில் இப்போது ரேடியோ சிலோன் என்ற இலங்கை வானெலியும் மேற்கிந்தியாவில் கோவா
Page 139
234 ஒலிபரப்புக் கஃ9
ரேடியோவும் விளம்பர ஒலிபரப்புத் துறையில் இறங்கி ஓரளவில் ஸ்தாபித்துக்கொண்டு வருகின்றன. பாரத 5ாட்டில் இன்னும் விளம்பர ஒலிபரப்பு இடம் பெறவில்லை. உலகத்தின் பல பாகங்களில் பரவிக்கொண்டு வரும் இந்த இயக்கம் என்றே ஒரு5ாள் பாரத நாட்டிலும் ஏற்படக் கூடும் என்றே சொல்லவேண்டும். விளம்பர ஒலிபரப்பு மக் களின் கீழ்த்தரமான சுவையைத் தூண்டிவிடும் என்றும், கலாசார வளர்ச்சியைத் தடை செய்யும் என்றும் பல அறிஞர்கள் அபிப்பிராயப்படுகிருர்கள். ஆனல் அது தவ ருன அபிப்பிராயம் என்று வேறு பல அறிஞர்கள் கருது கின்றனர். பிரிட்டனில் பல ஆண்டுகளாக 5டந்த இந்த அபிப்பிராயப் போராட்டத்தில் இப்போது வர்த்தகக் குழு வினர் ஒரளவு வெற்றி பெற்று, விளம்பர டெலிவிஷன் ஸ்தாபிக்க அரசாங்கத்தை இசையச் செய்துவிட்டனர். ஆகையால் வருங்காலத்தில் இந்த ஒலிபரப்புச் சாதனம் வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு பக்க பலமாக விளம்பர விநியோகத்தையும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கெனவே போட்டி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்க, நிறைந்த வருவாயைத் தரும் அம் முயற்சியை எந்த நாடாவது ஏற்றுக்கொள்ளாமல் இருக்க (ԼՔԼԳ.Ա IITցյl.
விளம்பர ஒலிபரப்பு இப்போது ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுவிட்டது. சாதாரண ஒலிபரப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள் விளம்பரத் துறையிலும் தக்க பயிற்சியும் அநுபவமும் பெறவேண்டியது வருங்கால உபயோகத்துக்கு இன்றியமையாத தாகையால் அதுபற்றியும் இந்த நூலில் சிறிது சொல்லி வைப்பது கன்றென எண்ணுகிறேன்.
சாதனச் சிறப்பு
சாதாரணமாகப் பத்திரிகைகளில் காம் பார்க்கும் விளம்பரங்களைவிட ஒலி மூலம் நடைபெறும் பிரசாரத்தில்
ஒலிபரப்பு விளம்பரம் 335.
எவ்வளவோ சிறப்பிருக்கிறது. மனிதருடைய குரல் தரும் கவர்ச்சியும் கம்பிக்கையும் தனி. அவற்றுடன் அந்தக் குரல் நம்மிடம் நேரிலேயே விண்ணப்பிக்கும்போது அதில் அளவற்ற சக்தி இருக்கிறது. இன்னும், விளம்பர ஒலி பரப்பு நிகழ்ச்சியில் கேயர்கள் சிறந்த பல கச்சேரிகளையும் காடகங்களையும் பிற கலையம்சங்களையும் கேட்டதுபவிக்க விளம்பர கர்த்தாக்கள் ஏற்பாடு செய்வதால் வர்த்தகர் களிடம் கேயர்களுக்கு அபிமானமும் பற்றுதலும் ஏற்படு கின்றன. அது விளம்பரக்காரருக்குச் சிறந்த பயனைத் தரும். இப்படியாக, ஒலி மூலம் விகியோகிக்கும் பிரசாரத்துக்கு அதிகச் செல்வாக்கு என்று விளம்பரக் கலை தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
சாதாரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்களைக் காட்டிலும் விளம்பர ஒலிபரப்புத் தயாரிப்பவர்களின் கடமை மிகவும் கஷ்டமானது. விளம்பரக் கலையே மிகவும் விசேஷப் பண்புகளை உடையதாகையால் அதற்கென்று ஏற்பட்ட கிபுணர்கள் அடங்கிய விசேஷ ஸ்தாபனங்கள் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன. வியாபார ஸ்தாபனங்கள், முதலாளிகள் ஆகியோர் தமது விளம்பர விஷயம் யாவற்றையும் அந்த நிபுணர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். ரேடியோவில் ஒலிபரப்பு நேரம் விலைக்கு வாங்குவது, ஒலிபரப்புக்கு வேண்டிய நிகழ்ச்சிகளைத் தயார் செய்வது, விளம்பரத்துக்கான பிரதிகள் தயா ரிப்பது, ஒலிப்பதிவு செய்வது ஆகிய சகல காரியங்களையும் விளம்பர ஸ்தாபனங்களே கவனித்துக்கொள்ளும். நிகழ்ச்சி கள் தயாரிப்பது மாத்திரமல்ல, அந்த நிகழ்ச்சிகளில் பேச் சுக்கள், அறிவிப்புக்கள் முதலிய யாவும் விளம்பரக்காரர் விரும்பிய முறையில் இருக்கவேண்டுமாகையால் அந்தக் கடமைகளையும் விளம்பர ஸ்தாபனங்கள் நிறைவேற்று கின்றன. பெல்ஜிய காட்டிலிருக்கும் ரேடியோ லக்ஸம் பர்க் என்ற ஒலிபரப்பு ஸ்தாபனம் முற்றும் விளம்பர ஒலி
Page 140
386 ஒலிபரப்புக் கல்
பரப்பிலேயே கடைபெற்று வருகிறது. "இங்கிருந்து ஒலி பரப்பாகும் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவின் பல நாடுகளில் தெளிவாகக் கேட்கக்கூடியனவா யிருப்பதால் விளம்பரக் காரர் பலர் இங்கிலையத்தை உபயோகித்து வருகின்றனர். ஆனல், இங்கு ஒலிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் லண்டன், பாரிஸ், நியூ யார்க், பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் விளம்பர நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு களாக வழங்கப்படுவன. அமெரிக்காவில் பல நிலையங்களில் இம்மாதிரி ஒலிப்பதிவு நிகழ்ச்சிகள் கடந்தபோதிலும் ஸ்டூடியோ சிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன. ஆஸ்தி ரேலியாவிலுள்ள அநேக விளம்பர ஒலிபரப்பு நிலையங் களிலும் ஸ்டூடியோ கிகழ்ச்சிகள் பல உள.
தயாரிப்பு
விளம்பர ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கேயர்களை எவ்வாறு வசீகரிக்கவேண்டுமென்ற கோக்கமே. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு விளம்பரக்காரர் தமது முழு ஆற்றலை யும் பயன்படுத்துவார். ஆனல், அதே சமயம் தமது விளம் பரத்தைத்தான் அவர்கள் முக்கியமாகக் கருதுகிருர்கள் என்று எண்ணி, கேயர்கள் வெறுப்புக்கொள்ளாமல் இருக்கவேண்டி, "நிகழ்ச்சியின் கலைப் பண்பிலும் அதிகச் சிரத்தை காண்பிப்பார்கள். நல்ல விளம்பர நிகழ்ச்சிகளில் அந்த நிகழ்ச்சி சிதைவுபடாதிருக்க ஊடே ஊடே விளம் பரங்களைச் செருகாமல் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பார்த் துக்கொள்வார்கள். கலை நிகழ்ச்சி பூரணமாக முடிந்தபின் தான் விளம்பரத்தை அறிவிப்பார்கள். அன்றியும், விளம் பரத்துக்கும் அதைச் சேர்ந்த நிகழ்ச்சிக்கும் சரியான தொடர்பு இருக்கவேண்டியது அவசியம். நல்ல அருமை யான பிராசீன சங்கீதத்தை ஒலிபரப்பிவிட்டு உடனே பேதி மருந்து விளம்பரத்தைச் செருகுவது வெறுப்பைத்
ஒலிபரப்பு விளம்பரம் 38?
தரும். அல்லது, உயர்ந்த அத்தர் திணிசு ஒன்றை விளம் பரம் செய்யும் நிகழ்ச்சி ஒரு சில்லறை கிகழ்ச்சியா யிருந் தாலும் அந்த வர்த்தகச் சரக்கின் மதிப்பைக் குறைத்து விடும். இத்தகைய விஷயங்களுக்காகவே விளம்பர நிபுணர்கள் நிகழ்ச்சி தயாரிப்பதற்கென்று கியமிக்கப்படு கிருர்கள்.
அறிவிப்பாளர்
ஆயினும், ரேடியோ நிலையத்தில் உடனடியாக ஒலி பரப்பில் சம்பந்தப்பட வேண்டிய அறிவிப்பாளர் எல்லா ரும் விளம்பர ஸ்தாபனங்களின் உத்தியோகத்தரா யிருக்க முடியாது. ஆகையால் கிலேய அறிவிப்பாளர் விளம்பர ஒலிபரப்பில் என்ன பங்கு பெறவேண்டு மென்பது ஆரா யத் தக்கது. உண்மையில், விளம்பர ஒலிபரப்பில் நிகழ்ச்சி யைக் காட்டிலும் அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அறி விப்பாளரும் அறிவிப்புமே நிலையத்தின் ரேடியோ நேரத்தை மார்க்கட்டில் விலைப்படுத்த வேண்டியன. அறி விப்பாளரின் அறிவிப்பைக் கேட்ட கேயர்கள் இன்னுமொரு தடவை கேட்கலாம் என்று விரும்பக்கூடிய கண்ணியம் வாய்ந்த குரலும் பாணியும் அவரிடம் இருத்தல் வேண்டும். கவர்ச்சி முக்கியமாயிருப்பதோடு, விளம்பர ஒலிபரப்புக்கு, பண்டங்களின் விலை கூறும் பாவமும் தோற்றவேண்டு மென வியாபாரிகள் விரும்புவார்கள். ஆகையால், சாதா ரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் அதுட்டிக்கும் இயல்பை விட நேயர்களை அழைக்கும் பாவனை விளம்பர ஒலிபரப்பில் தேவைப்படும். அதுவே விளம்பரத்தை எங்கும் பரவச் செய்து, அறிவிக்கும் பண்டத்தை கேயர்கள் உள்ளத்தில் பதியச் செய்து விற்பனையைப் பெருக்கும் என்பர்.
விளம்பர ஒலிபரப்பு அறிவிப்பாளர், நிறைந்த அநுபவ மும் பக்குவமும் பெற்ற பேச்சாளரா யிருக்கவேண்டியது
Page 141
238 ஒலிபரப்புக் கல்
அவசியம். சாதாரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் எங்காவது தெரிந்தும் தெரியாமலும் தவறு ஏற்பட்டாலும் கேயர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனல் விளம்பர ஒலிபரப்பு அறிவிப்புக்களில் அஜாக்கிரதை காரணமாக ஒரு சிறு தவறு கேர்ந்துவிட்டால் போதும், விளம்பரத்தின் சக்தி குன்றி வியாபாரிகள் போட்ட முதலும் செலவும் அனர்த்த மாகிவிடும். ஆகையால், விளம்பர ஒலிபரப்பு அறிவிப்பா ளர் அசாத்தியத் திறமைசாலிகளா யிருக்கவேண்டியது இன்றியமையாதது.
பத்தொன்பதாம் அத்தியாயம் ஒலிபரப்பு நிர்வாகம்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை முறைப்படி நிர்வகிப்பதற்கு ஒரு ரேடியோ நிலையத்தில் பல்வேறு உத்தியோகத்தர் கிய மிக்கப்பட்டிருப்பார்கள். கிலையத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் "ஸ்டேஷன் டைரக்டர்’ அல்லது நிலையத் தலைவர் என்ற உயர்தர அதிகாரி ஒருவர் கையில் இருக்கும். இவருக்குக் கீழே ஒலிபரப்பு விஞ்ஞானப் பகுதியைக் கவனிக்க ஒரு பிரதம இன்ஜினியரும், நிகழ்ச்சி நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு 'புரோகிராம் டைரக்டர்’ அல்லது நிகழ்ச்சி அதிகாரியும் இருப்பார்கள்.
நிகழ்ச்சி நிர்வாகமே இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுமாகையால் அதுபற்றி விவரமாக கோக்குவோம். ஒலிபரப்புத் துறையிலே நிகழ்ச்சி கிர்வாகம் பல உப பிரிவு களாக வகுக்கப்பட்டிருக்கும். இசைப் பகுதி, பேச்சுப் பகுதி, நாடகப் பகுதி, கல்வி ஒலிபரப்புப் பகுதி, கிராம ஒலிபரப்புப் பகுதி, வெளிப்புற ஒலிபரப்புப் பகுதி-இப் படியாக நிர்வாக வசதிக்குத் தக்கவாறு பிரிவுகளை வகுத்து, ஒவ்வொன்றுக்கும் தனித் தனி உத்தியோகத்தர், உதவி உத்தியோகத்தர் முதலியவர்கள் நியமிக்கப்பட்டிருப் பார்கள். இவர்களைத் தவிர, அறிவிப்பாளர், எழுத் தாளர், நடிகர், பாடகர், வாத்தியம் வாசிப்போர், வாத்திய கோஷ்டி கடத்துவோர் முதலிய கலைஞர்களும் நிலையத்தின் தேவைக்குத் தக்க அளவில் கியமிக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலான நிலையங்களிலெல்லாம் இந்தக் கலைஞர்கள் கிரந்தர உத்தியோகத்தராயில்லாமல் ஒப்பந்த முறையில் கடமை ஆற்றுவார்கள். இந்த ஒப்பந்தம் வருஷத்துக்கு
Page 142
340 ஒலிபரப்புக் ఆశీలి
வருஷம் புதுப்பிக்கப்படும்; அல்லது புதிய கலைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். காலத்துக்குக் காலம் புதிய குரல் களையும் புதிய இசையாளர்களையும் நடிகரையும் தேடி நிகழ்ச்சிகளில் உபயோகிக்கவேண்டுமென்பதே நோக்கம். அதாவது, கேயர்கள் அடிக்கடி கேட்டு அலுத்துப் போகாமல் புதிய குரல்கள் ரேடியோவில் தோன்றிக் கொண்டிருக்கவேண்டும். ஆனல் நடைமுறையில் ரேடி யோவில் தொழில் பார்த்தவர்களை ஒப்பந்தம் முடிந்தவுடன் நிலையத்தவர் வெளியேற்றிவிடுவதில்லை. ஒப்பந்தங்களை நீடிக்கச் செய்து வேறு பல துறைகளில் அவர்கள் பணி புரி வதற்கு வசதி செய்வார்கள். சாதாரணமாக, எவ்வித அநுபவமுமில்லாத புதியவர்களை ரேடியோ ஒலிபரப்புக்குச் சேர்ப்பதென்ருல் நிகழ்ச்சி ஒழுங்கும் நிர்வாகமும் கிரம மாய் கடக்க முடியாதாகையால், பயிற்சி பெற்றவர்கள் உதவிதான் என்றும் முக்கியமானது. ஆகவே, எந்தத் துறையிலாவது சேர்க்குகொண்டவர்களுக்கு கிலேயத்தின் பலவிதக் காரியங்களையும் கேரில் அறிந்து பழகிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதை கிலேயத்துக்கு ஒரு சாதகமாகவே கருதவேண்டும்.
நிகழ்ச்சி நிர்வாகப் பகுதியும் ஒலிபரப்பு யந்திர கிர்வாகப் பகுதியும் ஒத்துழைத்து, ஒருமித்த பாதையில் சென்ருல்தான் ஒலிபரப்பு வெற்றி யளிக்கும். நிகழ்ச்சி தயாரித்து ஒலிபரப்பும் உத்தியோகத்தர்களுக்கு, யந்திர சாதனங்களை இயக்கும் உத்தியோகத்தரின் ஆதரவும் ஒத் துழைப்பும் அவசியம், அவர்கள் நிகழ்ச்சி நிர்வாகிகளின் முயற்சியையும் பொறுப்பையும் உணர்ந்து சிரமத்தைப் பாராது ஊக்கத்துடன் உதவியளித்தல் இன்றியமையாதது.
திட்டம் வகுத்தல்
ஒலிபரப்புக் கலையில் வல்லவர்கள் இருந்தபோதிலும், ஒரு நிலையத்து நிகழ்ச்சிகளை நிர்வகித்து கடத்துவதற்கு
ஒலிபரப்பு நிர்வாகம் 241
விசேஷ அநுபவமும் பயிற்சியும் விவேகமும் தேவை. ஒலி பர ப் பு நேரத்தை மதிப்பிடுதல், சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான சிகழ்ச்சியைத் தீர்மானித்தல், அதற்கு வேண்டிய திட்டங்களை வகுத்தல் முதலிய பல்வேறு நிர் வாகக் கடமைகள்தாம் ரேடியோ நிலையத்து உத்தியோகத் தரின் பொறுப்பில் வரும்.
நிகழ்ச்சி நிர்வாகப் பகுதியில் நிகழ்ச்சி அதிகாரி, சங்கீதம், பேச்சு, நாடகம் முதலிய பிரிவுகளுக்கு பொறுப் புடைய தம் உதவியாளரை அழைத்து ஆரம்பத்தில் ஆலோசனை நடத்துவார். தினசரி ஒலிபரப்பு நேரம் எவ்வளவு என்பது அந்த சிலையத்தின் கொள்கையளவில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்த விகிதப் படி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் போன்ற கால எல்லை யில் பேச்சு, இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு என்ன விகிதம் ஒதுக்குவது என்று தீர்மானிப்பார்கள். சில நிலை யங்களில் இந்தக் கொள்கைத் திட்டம் தொடர்ந்தாற் போல மூன்று மாதங்களுக்கும், வேறு நிலையங்களில் ஆறு மாதங்களுக்கும் வகுக்கப்படும். ஓர் ஆண்டுக்குமேல் ஒரே திட்டத்தைத் தொடர்ந்து கடத்துவது அபூர்வம். ஏனெனில், ஒரே விதமாக வாரங்தோறும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதனல் கேயர்களுக்குச் சலிப் புத் தட்டக்கூடும். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்கொரு தடவை திட்டத்தைப் புனராலோசனை செய்துகொள்வதே மேல்.
நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கும்போது ஒலிபரப்பின் எல்லா அம்சங்களும் இடம் பெறக்கூடியதாக வகுக்கப் படும். சில அம்சங்கள் வாரத்துக்கொரு தடவையில்லாமல் பட்சத்துக்கொன்ருகவும் வரலாம். இப்படியே மூன்று மாத காலமாகிய பதின்மூன்று வாரங்களுக்கு ஓர் அட்ட வணைச் சுருக்கம் முதலில் தயாரிக்கப்படும்.
இந்தவிதமான நேர அட்டவணை தயாரிப்பதில்தான் நிலைய நிகழ்ச்சி உத்தியோகத்தரின் அநுபவமும் விவேக
Page 143
242 ஒலிபரப்புக் கல்
மும் சோதனைக்குட்படும். நிகழ்ச்சித் தலைவர், இசைப் பகுதி, நாடகப் பகுதி, பேச்சுப் பகுதி முதலிய பிரிவுகளின் நிர்வாகிகள் யாவரும் ஒன்றுகூடி, எல்லோருடைய அபிப் பிராயங்களும் திட்டம் வகுப்பதில் கலந்து வரும்.
உதாரணமாக, காலை வேளையில் ஒலிபரப்பு எத்தனை மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்ற பிரச்சினை எழலாம். நாட்டிலே மக்கள் வாழ்க்கை முறை, அவர்கள் பழக்க வழக் கங்கள், காரியாலயங்களிலும் தொழிற்சாலைகளிலும் கருமங்கள் ஆரம்பிக்கும் நேரம் ஆகிய விஷயங்களை யெல் லாம் மனத்தில் கொண்டு அதற்குத் தக்கவிதமாக, கேயர்கள் அதிகாலையில் எந்த வேலையில் ரேடியோ கேட்க வசதியாயிருக்கும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
நேயர் விருப்பு வெறுப்பு
கால கிர்ணயம் செய்யப்பட்ட பிறகு எத்தகைய நிகழ்ச்சி அந்த வேளைக்குப் பொருத்தமாயிருக்கும் என் பதைக் கவனிக்கவேண்டும். உதாரணமாக, காலை ஏழரை மணிக்கு நம் காட்டில் பட்டணங்களிலுள்ள வீடுகளில் மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் எ ன் று கவனிப்போம். தகப்பனுர் தம் காரியாலயத்துக்குப் புறப்பட ஆயத்தம் செய்துகொண்டிருப்பார். குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆயத்தமாவார்கள். இவர்களே அனுப்புவதற்கு முன் ஆகாரம் முதலியன தயாரிப்பதில் தாய் சமையல்கட்டில் ஈடுபட்டிருப்பாள். இந்த நெருக்கடி யான சமயத்தில் ரேடியோவில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை, அதாவது நேயர்கள் ஆற அமர உட்கார்த்து கேட்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புவதில் எவ்விதப் பயனுமில்லை. இலகுவாகக் காதில் போட்டுக் கொண்டு மற்ற வேலைகளையும் கவனிக்கத்தக்க சிகழ்ச்சி தான் அந்தச் சமயத்துக்குப் பொருத்தமாயிருக்கும். இலகு சங்கீதம் அல்லது சினிமாப் பாட்டுக்கள் அந்த வேளையில்
ஒலிபரப்பு நிர்வாகம் 243
ஒலிபரப்பப்படலாம். பேச்சு 15ாடகம் ஆகிய நிகழ்ச்சி களை R&னக்கவும் முடியாது.
இம்மாதிரியாகவே ஒருநாட் பொழுதில் காலை வேளை யில், மத்தியான்னத்தில், மாலையில், இரவில் - வேளைக்குத் தக்கபடியும், மக்களின் அன்ருட அலுவல்களை உணர்ந்தும், வாழ்க்கை முறையைக் கவனித்தும் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டியது ரேடியோ நிலைய நிகழ்ச்சி நிர்வாகிகளின் கடமையாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முன்னேற்றமுள்ள பல நாடு களில் கேயர்களின் விருப்பு வெறுப்புக்களை ஆராயும் ஒரு முறையை இங்கே குறிப்பிடவேண்டும். ரேடியோ நிகழ்ச்சி களைக் கேட்கும் கேயர்கள் எந்த எந்த வேளைகளில் அதிக மாகக் கேட்க விரும்புகிருர்கள், அந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிருர்கள் என்ற இன்னுேரன்ன விவரங்களையெல்லாம் தெளிவாக அறிந்துகொள்வதற்கு ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த ஸ்தாபனத்திலுள்ளவர்கள் கேள்விப் பத்தி ரங்கள் தயாரித்து நாட்டின் பல பாகங்களிலுள்ள கேயர்களில் ஒரு தொகையினரைப் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு அனுப்பி வருவார்கள். இதைத் தவிர, கேர் முகமாகவும் பலரை விசாரிப்பார்கள். நே ய ர் க ள் ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கும் பதில்களை ஆராய்ந்து அபிப்பிராயங்களையெல்லாம் விகிதாசாரப்படி கணி ப் பார்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கேட்க நேயர்களில் நூற்றுக்கு எண்பது விகிதமானவர் இரவு எட்டு மணி ஒலிபரப்பை விரும்புகிருர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல் வேறு நேரத்தில் ஒலிபரப்பப்படும் அங்கிகழ்ச்சியை நிலையத்தவர்கள் இரவு
Page 144
244 ஒலிபரப்புக் கலை ,
எட்டு மணிக்கு அமைத்துக்கொள்வார்கள். புதிதாக ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி கேயர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததா அல்லது அவர்களேக் கவர்ந்திருக்கிறதா என் பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிந்துவிடும். நிகழ்ச்சிகளி லுள்ள குறை நிறை எல்லாம் தெளிவாக அறிந்துகொள் வதற்கு ஆராய்ச்சியே முக்கியமானது. இங்ங்ணம் கேயர் களின் விருப்பு வெறுப்புக்களை ஆராயும் முயற்சி, நிகழ்ச்சி நிர்வாகிகளுக்கும் ஒலிபரப்புக் கலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அளவற்ற உபயோகமாயிருக்கும்.
ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்பதில் கேயர்களின் பழக்கம், அவர்கள் வாழ்க்கை முறை, ஓய்வு நேர அநு பவம், விருப்பு, வெறுப்பு - இவைகளைப்பற்றிய முழு விவரங்களையும் நிலையத்தில் நிகழ்ச்சித் திட்டம் வகுப்ப வர்கள் நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும். அதனுடன் அவர்கள் கற்பனைத் திறன், கலைத் திறன் எல்லாம் படைத் தவர்களாயிருத்தல் வேண்டும். மேற்சொன்ன விவரங்களை யெல்லாம் நன்குணர்ந்த பின் நிலையத்து நிகழ்ச்சி நிர் வாகிகள் ஒரு வாரத் திட்டம் அமைப்பார்கள். ஒலிபரப்பு நேரங்களை வரிசைப்படுத்தி, அதில் எந்த எந்த வேளையில் என்ன எ ன் ன நிகழ்ச்சி நடைபெறவேண்டுமென்று குறித்துக்கொள்வார்கள். முக்கியமாக, தினந்தோறும் மாறுபடாமல் வரும் நிகழ்ச்சிகளே அந்த அந்த நேரத்துக் கெதிராகக் குறித்துக்கொள்வார்கள். உதாரணமாக, காலை ஏழரை மணிக்கும், பகல் ஒரு மணிக்கும், மாலை ஆறரை மணிக்கும் செய்தி ஒலிபரப்பாயிருந்தால் அது முதலில் குறிக்கப்படும். பின்னர்ப் பாட்டு, பேச்சு, நாடகம், விவாதம், பெண்கள் பகுதி, சிறுவர் நிகழ்ச்சி, கல்வி ஒலி பரப்பு, கிராம நிகழ்ச்சி . இத்தகைய நிகழ்ச்சிகள் எந்த எந்த நாட்களில் என்ன என்ன 5ேரத்தில் வரவேண்டு மென்பது குறிக்கப்படும். நேர அட்டவணை தயாரான பின் சங்கீதம், பேச்சு 15ாடகம் முதலிய தனிப்பட்ட பகுதி
ஒலிபரப்பு நிர்வாகம் 245
களைக் கவனிக்கும் நிர்வாகிகள் விஷயங்களையும் அவற் றுக்கு ஒலிபரப்பாளரையும் தீர்மானித்து அட்டவணையில் கிரப்பிக் கொள்வர். நிகழ்ச்சி நிர்வாகத்தின் முதற்படி இது சாதாரணமாக இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிப்பது ஒலிபரப்புக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெறும். அது தயாரானவுடன் நிகழ்ச்சியைப்பற்றிய சிந்தனே ஆரம்பிக்கும். கலைஞர்களுக்கு எழுதி அவர்கள் சம்மதம் பெறுவது, வசதியற்றபோது வேறு கலைஞரைக் கண்டுபிடிப்பது, எழுத்துப் பிரதிகள் தயாரிப்பது ஆகிய காரியங்களுக்கெல்லாம் போதிய அவகாசம் வேண்டும். இதற்கிடையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு கேயர்கள் கையில் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பே கிடைக்கத் தக்கதாகச் செய்யவேண்டும். இதற்காகவே ரேடியோ கிலேய கிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே ஆயத்தங்களைச் செய்துகொள்வர். V %*
நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்வது விரும்பத்தக்க காரியமல்ல. ஆகையால் ரேடியோ நிலையத்தவர்கள் கூடியவரையில் / தாம் ஏற் கெனவே திட்டம் போட்டபடி எல்லா நிகழ்ச்சிகளையும் அட் டவணைப் பிரகாரம் ஒலிபரப்புவதில் கவனம் செலுத்தி வரு வார்கள். எதிர்பாராத காரணத்தால் நிகழ்ச்சி நிரலில் அறி விக்கப்பட்ட பாடகரோ பேச்சாளரோ வர முடியாமற் போனல் மாத்திரம் அதற்கு வேருெரு பாடகரை அல்லது பேச்சாளரை உடனே ஏற்பாடு செய்யவும் காத்திருப் பார்கள். விசேஷ நிகழ்ச்சிகள்
விகழ்ச்சிநிரல் தயாரிக்கும்போது முன்னேற்பாடாகவே சமய சந்தர்ப்பங்களை நோக்கி நிலையத்தவர்கள் திட்டம் வகுப்பது வழக்கம். விசேஷ காட்கள், பண்டிகைகள், விழாக்கள் முதலியவற்றையும் நிகழ்ச்சித் திட்டம் அமைக்கும்போது கவனத்தில் வைத்துக்கொள்வார்கள்.
Page 145
ጆይ46 ஒலிபரப்புக் கல்
தைப் பொங்கல், தமழ வருஷப் பிறப்பு, தீபாவளி முதலிய தமிழர் திருகாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய் வார்கள். சங்கீத விழா முதலிய விசேஷ சம்பவம் கடக்கும் போதும் அதை அஞ்சல் செய்து கேயர்களுக்கு வழங்க ஏற் பாடுகள் முன்கூட்டியே செய்துவைத்துக்கொள்வார்கள்.
சில சமயங்களில் முன்கூட்டியே தெரியாமல் சில சம்ப வங்கள் ஏற்பட நேர்ந்தால், ஏற்கெனவே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சிகளை மாற்ற முடியாதே என்ற பிரச்சினை எழலாம். ஆனல், ரேடியோவைப் பொறுத்தவரையில் எந்த நாளும் இசைக் கட்டு நிகழ்ச்சிகள் காணப்படுமாகை யால் அவற்றில் ஒன்றை உடனே நிறுத்திவிட்டு அவசிய மான கிகழ்ச்சியை ஒலிபரப்ப முடியும். இதற்காகவே சில நிலைய அட்டவணைகளில் இடைவேளைச் சங்கீதம் அல்லது குரல் வகை என்று பொதுவாக ஒரு நிகழ்ச்சியை வைத்துக்கொள்வார்கள். அவசியம் நேரிட்டபோது அதனை நீக்கிவிட்டு விசேஷ மிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாம்.
ரேடியோ நிகழ்ச்ய் கிர்வாகம் அதில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் ஒய்வு ஒழிவின்றி நாளும் பொழுதும் சலியாமல் உழைக்க வேண்டிய ஒரு கடமை என்பதை உணர வேண்டும். நிகழ்ச்சிப் பகுதியிலுள்ள நிர்வாகிகளும் யந்திர சாதனங்களை இயக்குபவர்களும் கலைஞரும் தமது முழு நேரத்தையும் அர்ப்பணம் செய்து ஒரு தொண்டாகப் போற்றவேண்டியது கடமை. சிலவேளைகளில் உண் ணவோ உறங்கவோ ஒய்வின்றி உழைக்கவேண்டியும் ஏற் படலாம். ஆனல், ஒலிபரப்புக் கலைஞர் ஆர்வம் கொண்டு விட்டார்களானல் ஊனும் உறக்கமும் அவர்களுக்குப் பெரியவையாகத் தோன்றமாட்டா. எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும்போது அவர்கள் உள்ளத் தில் எழும் திருப்தியும் அநுபவமும் அளவற்ற பெருமிதத் தைக் கொடுக்கும்; அதுதான் அவர்கள் பெறும் பரிசு.
முற்றும்
அ ஆ ப ந் த ம்
Page 146
அநுபந்தம்-1
ரேடியோ நாடகம்
'ஒத்திகைக்கு முன்னும் பின்னும்"
(சோ. சிவபாத சுந்தரம்)
பாத்திரங்கள் அருமைநாயகம் : ரேடியோ நாடகத் தயாரிப்பாளர்
நிறைந்த அநுபவசாலி; எல்லா நடிகருடனும் சமயோசித மாக கடந்துகொள்ளும் சுபாவமுடையவர்.
சாம்பசிவம்: கதாசிரியர்; நல்ல அநுபவப்பட்ட எழுத் தாளர் என்ற நம்பிக்கையில் எல்லாக் காரியங்களையும் கடைசி நேரம் வரைக்கும் சோரப் போட்டுவிட்டு முடி வில் ஏதாவது ஒரு நாடகத்தைச் சிருஷ்டிக்கும் பழக்கம் S) 6T6T6) IIT.
நாகலிங்கம்: போலீஸ் இன்ஸ்பெக்டர்; நிலையத்து உத்தி யோகத்தரின் நண்பர், தமாஷ் பேர்வழி; கிண்டல் பண்ணினலும் உடனே அதைக் கிரகிக்க முடியாத அப்பாவி.
கந்தசாமி நடிப்பே இன்னதென்றறியாத பேர்வழி:
சொன்னலும் புரியாது.
சரஸ்வதி நாடகத்தில் கடிக்க வந்தும் அலட்சியமாக
இருக்கும் பேர்வழி. கோபம் அதிகம்.
Page 147
250 ஒலிபரப்புக் கல்
மணி : நாடக மேடைப் பேர்வழி, ரேடியோவிலும் அந்தப் பாணியில் பேசுபவர்; தம்மைவிடச் சிறந்த நடிகர் கிடை யாது என்ற அகம்பாவமுடையவர்.
தங்கவேல் : பொறுமை கிடையாது. அநுபவக் குறைவு.
மற்றும் ஆறுமுகம், ராமன், லக்ஷ்மணன் ஆகியோர்.
காட்சி-1
(ரேடியோ நிலையத்தில் ஓர் அறை. நாடக குத்திர தாரி - டைரக்டர் - அருமைநாயகம் பிள்ளையும் கதாசிரியர் சாம்பசிவமும் பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) அருமை : என்ன சாம்பசிவம், கதை தயாராகிவிட்டதா?
ஒலிபரப்புக்கு நாள் 5ெருங்கிவந்துவிட்டதே.
சாம்ப : கதைக்கென்ன, உட்கார்ந்தால் ஒரு மூச்சிலே எழுதி முடித்துவிடலாம். ஆனல் கடிகர் யார் யார் என்று நீங்கள் இன்னும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?
அருமை: நடிகர் உமக்கு எதற்கு? கதையை எழுதி முடித்துவிட்டால், உம் கதாபாத்திரங்களுக்குத் தக்க ஆட்களைத் தெரிந்துவிடலாம்.
சாம்ப : டைரக்டர் ஸார், நான் சொல்கிறதையும் கொஞ்
சம் கேட்டுக்கொள்ளுங்கள். கதையை எழுதி முடித்து விட்டு அதிலுள்ள பாத்திரங்களுக்குத் தக்க ஒலிபரப்பு நடிகர்களைச் சேகரிப்பதென்ருல் பகீரதப் பிரயத்தனக் தான். அந்தத் தொக்தரவொன்றுமில்லாமல், அகப்படக் கூடிய ஆசாமிகளை மனத்தில் வைத்துக்கொண்டு, அவர் களுக்குப் பொருத்தான பாத்திரங்களாக அமைத்துக் கதையைச் சிருஷ்டிப்பதுதான் இந்தக் காலத்துக்குப் பொருத்தமாயிருக்கும்; சுலபமுங்கூட.
அநுபந்தம்-1 251
அருமை : நீர் சொல்வதை கான் தெரிந்துகொள்ளாம லில்லை, சாம்பசிவம். ஆனல், உமது கதை தானுக வராமல் வலிந்து சிருஷ்டிக்கப்பட்டு விடுமே என்றுதான் யோசிக்கிறேன்.
சாம்ப (சிரித்துக்கொண்டு) இது நல்ல வேடிக்கை
நீங்களோ கதை எழுதும்படி உத்தரவு போட்டுவிட்டீர் கள். அந்த உத்தரவுக்கு நான் கதை எழுதினலே வலிந்து சிருஷ்டிக்கப்பட்டதாகத்தானே இருக்கப்போகிறது? அருமை : ஆமாம், அதுவும் உண்மைதான். (யோசித்துக் கொண்டு) என்ன செய்கிறது? இந்தக் காலத்தில் எல் லாம் வியாபாரத் தொழிலாயிருக்கும்போது அப்படித் தானே செய்யவேண்டியிருக்கிறது?
(நண்பர் காகலிங்கம் வருகிருர்.) இதோ கம்ம காகலிங்கமும் வந்துவிட்டார். எல்லோரு மாக யோசித்து விஷயத்தைத் தாமதமில்லாமல் முடித்து விடலாம்.
நாக என்ன, ஏதோ பிரமாதமான திட்டங்கள் போட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே! சாம்ப : ஆமாம், காகலிங்கம்! பிரமாதமான திட்டத்தான். ஆனல் மீ இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற மாட்டேன் என்கிறது நாக: பூ என்ன அப்படிப் பிரமாதம்? நம்ம உலகப் பிரசித்திபெற்ற டைரக்டர் மிஸ்டர் நாய்க் இருக்கும் போது எந்தத் திட்டமும். அருமை : அது யாரப்பா மிஸ்டர் நாய்க்?
நாக: சாக்ஷாத் தாங்களேதான். வேறு யார்? அருமை காயகம் பிள்ளையை இந்தக் காலத்துச் சம்பிரதாயத்திலே சுருக்கமாக "மிஸ்டர் நாய்க்" என்று சொன்னேன்.
Page 148
252 ஒலிபரப்புக் கனே
சாம்ப (சிரித்துக்கொண்டு) சினிமா உலகப் பரிபாஷை யிலே ஒருவேளை அந்த மாதிரி இருக்கலாம், காகலிங்கம்! ஆனல் ரேடியோ உலகத்தில் அப்படியல்ல. முழுப் பெய ரையும் சொல்லி, அதற்கு முன்னேயும் ஒரு பெயரை வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் கன்வென்ஷன்
தாக ஓகோ, அதுவும் அப்படியா? அப்போது, மிஸ்டர்
குண்டப்பா பிள்ளை அருமைநாயகம் பிள்ளை என்று . சொல்லவேண்டுமாக்கும்?
சாம்ப : அப்படியல்ல, சும்மா குண்டப்பா அருமைநாயகம் என்று சொன்னுல் காதுக்கு கன்ருயிருக்கும். ரேடியோ விலே முக்கியமாகக் காதில் விழும் தொனியைத்தான் கவனிப்பார்கள் பார்!
நாக சரி சரி சரி; இப்போது தெரிந்துகொண்டேன். தொனி அப்படியே குண்டு குண்டாயிருக்கவேண்டு மென்று சொல்கிறீர்களாக்கும்?
சாம்ப . (சிரிப்பு.)
அருமை : (அதட்டிக்கொண்டு) நாகலிங்கம்!
நாக : ஸார்!
அருமை : போலீஸ் இலாகாவில் நீ எப்படித்தான் உத்தி யோகம் பார்க்கிருய் என்று எனக்குப் பெரிய ஆச்சரியமா யிருக்கிறது!
நாக என்ன அப்படிச் சொல்கிறீங்க? பெரிய பெரிய கேஸ் எல்லாம் இப்போது என்னிடந்தான் பொறுப்புக் கட்டி வருகிருர்கள் என்று தெரியாதா உங்களுக்கு? "மகாலசுஷ்மி விலாசம் கொலைக் கேஸ் யார் கடத்தி வெற்றி பெற்றது தெரியுமா? இந்தச் சூரப்புலி காக லிங்கத்தான். இப்போது பிரமோஷன் ஆகி, வேருெரு கொலைக் கேஸ் கைவசமிருக்கிறது, தெரியுமா?
அநுபந்தம்-1 353
சாம்ப; என்ன? உனக்கா கொலைக் கேஸ்?
நாக : ஆமாம் என்றுதான் சொல்றேன். ஏன், கான்
என்ன அதுக்கு லாயக்கில்லையா?
சாம்ப : லாயக்கில்லையென்று யார் சொன்னது? யாரைக்
கொலை செய்தாய் என்றுதான் கேட்டேன்!
நாக : (அசட்டுச் சிரிப்பு) சரியாப் போச்சு! நான் யாரையும் கொலை செய்யவில்லை, ஸார். கொலைகாரனைப்
பிடிக்க ஏற்பட்டிருக்கும் துப்பறியும் இன்ஸ்பெக்டர்!
சாம்ப ஒகோ, அப்படியா சமாசாரம்?
அருமை : அது சரி, காகலிங்கம்; உன் துப்பறியும் சாமர்த் தியம் இருக்கட்டும்; இப்போது கம்ம நாடக விஷயத் தைக் கொஞ்சம் கவனிப்போம்.
நாக அதுதானே, ஸார், கானும் இங்கே அவசரமாக வந்திருக்கிறேன். எத்தனையோ பிரசித்தி பெற்ற நாட கங்களை கடத்தி நீங்கள் பெயர் வாங்கி இருக்கும்போது காங்களும் கொஞ்சம் பக்கத்திலே யிருந்தால் அநேக விஷயங்களேத் தெரிந்துகொள்ளலா மல்லவா?
அருமை : ஆமாமாம், உன் அபூர்வ சாமர்த்தியத்துக்கு மீ பக்கத்தில் இருப்பது எங்களுக்கும் நல்ல ஆதரவுதான்.
சாம்ப காகலிங்கம் இல்லாவிட்டால் பொழுது போவ
தெப்படி?
நாக : அப்படிச் சொல்லுங்கள், ஸார். அது சரி, உங்கள்
கதை ரெடியாகிவிட்டதா?
சாம்ப; அதைப்பற்றித்தான் இப்போது பேசிக்கொண் டிருந்தோம். நடிகர் யார் யார் என்று டைரக்டர் இன் னும் தீர்மானிக்கவில்லை. அதனல் கதையும் தாமதப் படுகிறது.
Page 149
&54 ஒலிபரப்புக் கல்
அருமை : உன்னுடைய அபிப்பிராயம் என்ன, காகலிங்கம்? 5டிகரை வைத்துக்கொண்டு கதை எழுதுவதா, அல்லது கதையைத் தயாரித்துக்கொண்டு கடிகரைத் தெரிக் தெடுப்பதா? நாக: அதெல்லாம் எழுத்தாளரைப் பொறுத்த விஷயம், ஸார். நம்ம நாடகாசிரியர் மிஸ்டர் சாம்பசிவம் இருக் கிருரே, கடைசி நிமிஷம்வரை இந்த மாதிரித்தான் தட்டிக் கழித்துக்கொண்டு இருந்துவிட்டு, முடிவிலே நாடகம் ஒலிபரப்பவேண்டிய சமயத்தில் திடீரென்று ஒர் அசல் சித்திரத்தைத் தீட்டிவிடுவார்! சாம்ப பார்த்தாயா, பழையபடி உனக்குச் சினிமாப் பாணி
யிலே வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டன? தாக ம்..மன்னிக்கவேணும், ரொம்பக் காலமாய் சினிமா ராணி கேஸ் ஒன்றிலே ஈடுபட்டிருந்தபடியால் அந்த மாதிரி அவர்களுடைய வசனங்களும் சொற்பிரயோகங் களும் பழக்கப்பட்டுவிட்டன. ரேடியோ நாடக ஆசிரியர் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிருர் என்பதை மறந்துவிட் டேன். அது இருக்கட்டும், உங்கள் கதை என்னவாச்சு? சாம்ப கதை ஐந்து நிமிஷத்து வேலை, ஆட்களைச் சொல்,
பார்க்கலாம்? நாக ஆட்களுக்குத்தான பஞ்சம்? நான் ஒருத்தன்
இருக்கவே இருக்கிறேன். நீங்க ஒருத்தர். சாம்ப அது முடியாது. 15ாடகம் எழுதுகிறவர் 15டிக்கக்
கூடாது என்பது சம்பிரதாயம். நாக: அதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா, ஸார்? நம்ப டைரக்டர் குண்டப்பா அருமைநாயகம் இருக்கிருரர். அருமை : நாடகத்தை டைரக்ட் செய்பவர் 5டிக்கக்கூடாது
என்பது சட்டம். அது தெரியாதா உனக்கு?
அநுபந்தம்-1 255
நாக: ஒகோ, அதுவும் அப்படியா? அப்படியானல், எழுத் தாளர் நடிக்கக்கூடாது, டைரக்டர் நடிக்கக்கூடாது; யார்தாம் நடிக்கலாம்? அருமை : கடிகர்தாம் நடிக்கலாம். நாக ; அதுவும் சரிதான். நடிகர்தாம் கடிக்கலாம்! ம்..! (யோசித்துக்கொண்டு) ஸார், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒத்தவாடைப் பக்கம் போனல். அருமை : உன் அபூர்வ யோசனையை மெச்சத்தான் வேண்டும். ஆனல், மேடையிலே ஏறிப் பழக்கப்பட்ட வர்களுக்கு ரேடியோ நாடகம் கொஞ்சம் அப்படியும் இப்படியுந்தான்! நாக. இப்படியே சொல்லிக்கொண்டு போனுல் காரியம் எங்கே ஸார் ஆகப் போகிறது? ஏதோ அகப்பட்டதைக் கொண்டு முடிச்சுவிடுங்கள். அருமை : ஆமாம், நாடகத்துக்கு இ ன் னும் அதிக காளில்லை. அதற்குள்ளே கதை தயாரித்து, ஒத்திகை கடத்தி ஒலிபரப்புவதென்ருல் எப்படி யிருக்குமோ! சாம்ப சரி சரி, கதைதானே வேண்டும்? நாளைக் காலையி லேயே கதை ரெடியாயிருக்கும். நீங்கள் ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டு ஒத்திகைக்கு ஆயத்தப்படுத்துங்கள். நாக எனக்கும் இதிலே ஏதாவது பங்குண்டா? சாம்ப பார்க்கலாம். உனக்கு எந்தவிதமான பாத்திரம்
பொருத்தமா யிருக்குமென்றுதான் யோசிக்கிறேன். நாக : பாத்திரமென்ன ஸார், நல்ல அக்ஷய பாத்திரமாகக் கொடுங்கள். (சிரிப்பு) எனக்கும் ரேடியோவிலே நடிக்க வேண்டு மென்று ரொம்ப நாளாக ஆசை. அருமை : சரி, எல்லாம் ஒத்திகையிலே பார்த்து, கடிக்கப்
பொருத்தமென்ருல் சேர்த்துக்கொள்ளலாம்.
நாக : ரொம்ப சரி.
Page 150
&56 ஒலிபரப்புக் கமே காட்சி-2
(ஸ்டூடியோவிலே நடிகர்கள் கூடியிருக்கிருர்கள். டைரக் டர், கதாசிரியர், யந்திர நிபுணர் முதலியோர் சேர்ந்து ஒத்தி கைக்கு ஆயத்தப்படுத்துகிருர்கள். நடிகர் கலகலப்புப் பேச்சு.]
அருமை : (அமைதியை நிலை. நாட்டி) சரி, சரி, எல்லாரும் ஒத்திகைக்குத் தயாராக கில்லுங்கள்! ஒருவரும் இந்தச் சமயத்தில் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தக் கூடாது. எல்லாரும் அவரவர் எழுத்துப் பிரதியை மாத்திரம் கவனித்துக்கொண்டு, கதைப் போக்கைத் தொடர்ந்து, அவரவர் பாகத்தை உணர்ச்சியோடு தத் ரூபமாக நடிக்க வேண்டும், தெரிகிறதா? கதை எல்லா ருக்கும் தெரிந்த கதைதான். ராமாயணக் கதை. பஞ்ச வடியிலிருந்து சீதா பிராட்டியை இலங்கைவேக்தன் ராவணன் தூக்கிச் செல்கிருன். கவலையுற்ற ராம லசுஷ்மணர்கள் தேடிச் செல்கிருர்கள். வழியிலே சடா யுவைக் கண்டு தகவல் தெரிந்து, சுக்கிரீவன் அனுமான் முதலியவர்கள் துணையோடு சைனியம் தி ர ட் டி ராவணனை வெல்லச் செல்லுகின்றனர்.
நாக : மன்னிக்கவேண்டும்! சீதையை மீட்கச் செல்லு
கிருர்கள் என்றிருக்கவேண்டும்.
அருமை : சரி; அப்படியே ைவத் து க் கொள்வோம். எல்லோரும் ரெடியா! எங்கே சீதையைக் காணவில்லை?
நாக: (இடக்காக) சீதை எங்கே? அசோக வனத்திலே
தான்!
அருமை : மூடு வாயை யார் அங்கே வாசலண்டை
நிற்கிறது, மணியம்!
மணி: நான் ரெடி, ஸார்.
அநுபந்தம்-1 35?
அருமை : எங்கே சரஸ்வதியைக் காணவில்லை? ஒத்திகை என்ருல் எல்லோரும் அந்த அந்த இடத்தில் நிற்க வேண்டாமோ? மணி; சரஸ்வதி இப்போதான் காபி சாப்பிடப் போயிருக்
கிருள். சிக்கிரம் வந்துவிடலாம். அருமை : கல்ல நேரம் பார்த்துக் காபி. (சரஸ்வதி
வருகிருள்). மணி இதோ வந்தாச்சு. அருமை : என்ன சரஸ்வதி, ஒத்திகைக்கு எல்லோரும்
காத்துக்கொண்டு சிற்பது தெரியவில்லையா? சரஸ் ; ஏன், என்னுடைய பாகம் அப்புறந்தானே வரப்
போகிறது? அருமை : அப்புறம் கிப்புறம் ஒன்றும் இல்லை. எல் லோரும் ஒரே நேரத்தில் இருந்தால்தான் நாடகம் கடத் தலாம், தெரிகிறதா? சரி, ரெடி : முதலாவது காட்சி, ராவண சங்கியாசி சீதையின் பர்ணசாலைக்கு வருதல், கந்தசாமி ராவணன் எப்படிப்பட்டவன், என்ன வித மாகக் கபட நாடகம் 15டிக்கிருன் என்பதையெல்லாம் கற்பனை செய்துகொண்டு அதற்குத் தக்கவிதமாக நடிக்க வேண்டும், தெரிகிறதா? சரஸ்வதி சீதையின் பாகத்தை இந்த இடத்தில் மிக அடக்கமாகவும் பயபக்தியோடும் நடிக்கவேண்டும். சரி, ஆரம்பியுங்கள் பார்க்கலாம். கந்த : (எவ்வித உணர்ச்சியும் நடிப்புமில்லாமல்) பரம சிவம், பரமசிவம், அம்மா, தாயே! இந்த ஏழையின் பசி யைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா. சரஸ் : (உணர்ச்சியில்லாமல் வெறுமனே வாசிக்கிருள்.) யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னந்தனியாக வந்தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோ தனர் போலல்லவா இருக்கிறீர்கள்?
Page 151
&58 ஒலிபரப்புக் கல்
அருமை : (அதே உணர்ச்சியற்ற வாசிப்பில்) நிறுத்துங் கள்! வெறும் உணர்ச்சியற்ற பேச்சு (சாதாரணமாக) என்ன கந்தசாமி, ராவணன் சங்கியாசி வேஷத்தில் வந்திருக்கிருன் என்பதை மறந்துவிட்டாயா? சங்கியாசி என்ருல் எப்படி, எந்த சிலையில், எவ்வளவு அமைதி யாகப் பேசுவார் என்பது தெரியாதா? இதோ பார். (5டித்துக் காண்பித்தல்) பரமசிவம், பரமசிவம், அம்மா, தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா. கந்த (திருப்பி வாசித்தல்) பரமசிவம், பரமசிவம்,
அம்மா. அருமை : சே சே! பரமசிவம் முன்னுக்கு நின்ருலொழிய
அந்த அடக்கமும் சாந்தமும் வராது போலிருக்கே! நாக : ஸார், ஒரு சந்தேகம், அருமை : அதென்ன நீ குறுக்கிடுகிருய் நாக : இல்லை, கதையைப்பற்றித்தான் சந்தேகமாயிருக் கிறது. இந்தக் கதை கம்ப ராமயாணத்திலா, அல்லது வால்மீகி ராமாயணத்திலா எடுக்கப்பட்டது? அப்புறம் இலக்கிய சோரம் என்ற அபவாதத்துக்கு நாம் ஆளாகப் படாதல்லவா? அருமை . கம்ப ராமாயணத்தை நாடகமாக 5 டி க்க வேண்டுமானுல் இனிக் கம்பரிடம் ஆசிரிய உரிமை கேட்க வேண்டுமாக்கும்? சாம்ப; ராமன் கதை கம்பனுக்கும் வால்மீகிக்கும் அல்லது உனக்குந்தான் என்ன குடும்பச் சொத்தா? இந்த முட்டாள் நியாயத்தை விட்டுவிட்டு, இப்போது ஒத்திகையைக் கவனிப்போம். ம், கடக்கட்டும்!
அருமை : சரி, முதலிலிருந்து ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.
அநுபந்தம்-1 名59
கந்த (தனது பாகத்தைப் படித்தல்) பரமசிவம், பரம சிவம், அம்மா தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா, சரஸ்வதி : யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னக் தனியாக வங் தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோதனர் போலல்லவா இருக்கிறீர்கள்? அருமை : சே! உப்புச் சப்பில்லாத பேச்சு. யாரது வாசலில் நிற்பது' என்று அவள் ஒரு கேள்வி போடு கிருள். அதற்குத் தக்கவிதமாக ஆச்சரியம், சந்தேகம், பயம் எல்லாம் கலந்து குரலிலே தொனிக்கவேண்டும். "யாரது வாசலில் நிற்பது? - இது அவள் ராவணனைக் கானு முன்பு சொன்ன வார்த்தை. ஆனபடியால், சந்தேகமும் பயமும் கலந்திருக்கவேண்டும். அப்புறம், ராவண சங்கியாசியின் முகத்தைக் கண்டபின், ஸ்வாமி, தாங்கள் யார்?" என்ற கேள்வியைப் போடுகிருள். முதலில் சந்தேகத்தோடு தன்னைத் தானே கேட்டுக் கொள்ளுகிருள்; பிறகு தாங்கள் யார் என்று சக்கியாசி யிடம் கேட்கிருள். அதற்குத் தக்கவிதமாகக் குரலை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கே பார்க்கலாம். சரஸ் : (வாசிக்கிருள்) யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார் எங்கே இந்தக் காட்டில்? தன்னந்தனியாக வந்தீர்கள்?. அருமை : (ஆச்சரியத்துடன்) என்ன, என்ன? நல்ல வேடிக் கையாக இருக்கிறது! மூச்சு விடாமல் பேசுவீர்கள் போலிருக்கே?'ஸ்வாமி, தாங்கள் யார்?' என்ற இடத்தில் ஒரு கேள்வி அடையாளம் இருப்பது தெரியவில்லையா? சரஸ் : அப்படி ஓர் அடையாளத்தையும் இங்கே காண வில்&ல. 'எங்கே இந்தக் காட்டில்?’ என்ற இடத்தில் தான் கேள்வி அடையாளம் ஒன்று இருக்கிறது.
Page 152
360 ஒலிபரப்புக் கல்
அருமை: டைப் அடித்தவர்கள் பிழை செய்தால் அதைத்
திருத்தி வாசிக்கவேண்டாமோ?
சரஸ் : "எழுத்துப் பிரதிக்குக் கொஞ்சமும் மாறக்கூடாது"
என்று ஆரம்பத்தில் கட்டளே போட்டுவிட்டீர்களே!
அருமை : பிரதியைவிட்டு விலகக்கூடாதுதான். ஆனல் எழுத்துப் பிழையிருந்தால் அதைத் திருத்தி வாசிக்க வேண்டாமா? சரி, கதையை விட்டுவிட்டு முதலிலிருந்து ஆரம்பியுங்கள், பார்க்கலாம். கந்த : பரமசிவம், பரமசிவம் அம்மா தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா.
சரஸ் : யாரது வாசலில் சிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னந்தனியாக வந்தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோ தனர் போலல்லவா இருக்கிறீர்கள்?
கந்த அம்மா! பல வருஷ காலமாக நான் இந்தக் காட்டில் தவம் செய்துகொண்டிருந்தேன். இப்போது என் தவம் முடிந்துவிட்டது. இந்தப் பர்ணசாலையைக் கண்டதும் யாரோ எனது சகோதர முனிவர் ஒருவர் இருக்கிருர் என்று நினைத்து வந்தேன். தங்களைக் கண்டதும் எனக்கு இல்லறத்தின் ஞாபகம் வந்துவிட்டது. அதனுல், சாதாரண மனிதனைப்போல் வயிற்றுப் பசியும் ஆரம்பித்துவிட்டது. மணி : (அனுமான் பாகம் நடிக்கவேண்டியவர்) ராமா யணத்தில் இந்தமாதிரி நான் படித்ததாக ஞாபகமில்லை. இது இலக்கிய மாரீசம்! நாக: இது யார், சாக்ஷாத் அனுமார் சுவாமிகளா? மாரீ 'சனத்தான் ராம லசுஷ்மணர்கள் துரத்திக்கொண்டு
போய்விட்டார்களே! இங்கே இருப்பது ராவணன்.
அநுபந்தம்-1 S. 261,
மணி : நான் அதைச் சொல்லவில்லை. இங்கே கதை
பொருத்தமில்லாமல் போலி இலக்கியம் கலக்கிறது. சாம்ப முதலில் நாடகத்தை நடித்துப் பார்க்கலாம். இலக்
கிய ஆராய்ச்சியை அப்புறம் வைத்துக்கொள்வோம். சரஸ் : இந்தமாதிரி நீங்கள் சண்டை போட்டுக்கொண் டிருந்தால் ஒத்திகை கடந்தபாடுதான்! எங்களுக்கு வேறு வேலை கிடையாதா? மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. நான் பிள்ளைகுட்டிக்காரி. நாக: (கிண்டலாக) அம்மா! தாயே, சீதாபிராட்டி, தங் களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லையென்றல்லவோ நான் நினைத்தேன்? சரஸ்: மூடு வாயை சீதையும் தமயந்தியுந்தான்! நான்
இங்கே சரஸ்வதி, தெரியுமா? தங்கவேல் : (சுக்கிரீவன் வேஷம் போடுபவர்) இது என்ன ஒத்திகையா, விளையாட்டா? இந்தமாதிரி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் ஒத்திகை எப்படி 15டக்க முடியும்? ஆரண்ய காண்டத்தில் இப்படி ஒரு நாள் முழுதும் போக்கினல் கிஷ்கிந்தைக்கு வர ஒரு வாரமாகப் போகிறது? நாக; நண்பர் சுக்கிரீவன் சொல்வதிலும் நியாயமிருக்
கிறது. தங்க : நாடகத்தில்தான் சுக்கிரீவன். இங்கே என் பெயர்
தங்கவேல். - . நாக எல்லாமே நாடகமாயிருக்கும்போது பெயரில்
என்ன ஐயா இருக்கிறது? அருமை : சரி, சரி, அமைதியாயிருங்கள். முதல் இரண்டு பக்கங்களைத் தள்ளிவிட்டு, ராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் காட்சிக்கு வருவோம். அத்தோடு சரஸ்வதியை அனுப்பிவிடலாம். உம், ஆரம்பியுங்கள், பார்க்கலாம்?
Page 153
263, ஒலிபரப்புக் கல்
சரஸ் : (நடித்தல்) ஹா ஐயோ, ஐயோ, லக்ஷமண! எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம்? ஹா! அருமை : கிறுத்துங்கள். எங்கே நம்ம டெக்னிஷியன்? “சப்த ஜாலம்" என்று எழுத்துப் பிரதியில் போட்டிருப் பதைக் கவனிக்கவில்லையா? ராவணன் சீதையை அப கரிக்கும் இந்தக் கட்டக்தில் இடிமுழக்கம்போன்ற சப்த ஜாலம் செய்தால்தான் சீதையின் மனக் கொந்தளிப்புத் தெரியும். எங்கே ஆறுமுகம்? ஆறு : ஆமாம் ஸார், மறந்துபோனேன். எங்கே, இன்
னெரு முறை ஆரம்பியுங்கள் பார்க்கலாம்? சரஸ் ; ஹா ஐயோ, ஐயோ, லக்ஷமணு எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம், ஹா!
(சப்த ஜாலம் இடி முழக்கம்) அருமை : சே சே! சரியேயில்லை! ராவணன் சீதையைத் தூக்க முயலும்போகே இந்தச் சப்தம் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் அச்சமான சூழ்கிலை ஏற் படும். சில விநாடிகள் கழித்து, அந்தச் சப்தத்தின் பின்னணியில் சீதையின் அலறல் கேட்கவேண்டும். எங்கே, இன்னுெரு முறை பார்ப்போம். ரெடி! சரஸ் ; ஹா ஐயோ.. அருமை : ம்.ஹ. ! அவசரப்பட வேண்டாம். சப்தம்
வந்த பின்தான் ஆரம்பிக்கவேண்டும். சரஸ்: சப்தமா? எனக்கொன்றும் கேட்கவில்லையே! அருமை : அது கேட்காது. இங்கே என் காதில் மாட்டி யிருக்கும் கருவியில் கான் கேட்டு, ஆரம்பிக்கவேண்டிய சமயத்தில் கையைக் காட்டுவேன். அப்போதுதான் ஆரம் பிக்கவேண்டும். ரைட்! ஆறுமுகம்.
(சப்த ஜாலம்)
அநுபந்தம்-1 s 263
சரஸ் ; ஹா ஐயோ, ஐயோ, லக்ஷ்மணு! எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம், ஹா!
அருமை : பேஷ்! இப்போதுதான் சரியாக வந்தது. ஆனல், பேச்சில் உணர்ச்சியில்லை; அதுதான் ஒரு குறை. பயந்து நடுநடுங்கி உயிர் போவதுபோல் அலற வேண்டும். நாக: சும்மா கல்லுப் பிள்ளேயார் மாதிரி ராவணன் கின்றுகொண்டிருந்தால் சீதை எப்படி ஸார் பயந்து அலற முடியும்? முதலிலே, ராவணனுக்கு வேஷப் பொருத்தமில்லை. கந்தசாமி வெறும் எலும்புக் தோலு மாக கிற்கிருர் ராவணனுக்கு வேண்டிய ராக்ஷச உட லமைப்பு இல்லை. சங்கியாசிக்கு வேண்டிய தாடி மீசை காஷாயம் ஒன்றுமில்லை. அதுவுமல்லாமல் ராவணன் சீதையைத் தூக்கவேண்டாமோ? சும்மா பார்த்துக் கொண்டு கின்ருல் சீதைக்கு எப்படித்தான் உணர்ச்சி வரும்? அருமை : இதோ பார், காகலிங்கம்! இது நாடக மேடையு மல்ல, சினிமாவுமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். ரேடியோ நாடகத்தில் அதெல்லாம் தேவை யில்லை. குரலில்தான் கடிப்புத் தோற்றவேண்டும். உரு வத்தை கேயர்கள் பார்க்கப்போகிருர்களா, என்ன?
சரஸ் சரி, சரி, எனக்கு நேரமாகிறது. என்னுடைய ஒத்திகையை நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள். இனி எனக்கு சிற்க முடியாது (போகிருள்).
அருமை : கல்லது, இப்போது ராம லசுஷ்மணர்கள் சடாயு வைக் காணும் பகுதியைக் கொஞ்சம் ஒத்திகை பார்ப் போமா? ஆரம்பியுங்கள் பார்க்கலாம்: எட்டாம் பக்கம் திருப்புங்கள்.
Page 154
264 ஒலிபரப்புக் கல்
ராமன் தம்பி, லசுஷ்மணு சீதையின் கை வளையல்களும் மற்ற நகை கட்டுக்களும் இங்கே காணப்படுவதால் இந்த வழியாகத்தான் அவளை யாரோ திருடிக்கொண்டு போயிருக்கவேண்டும். லகஷ்ம : அப்படித்தான் அண்ணு நானும் நினைக்கிறேன்.
(யாரோ முனகும் சப்தம் கேட்கிறது.) யாரோ முனகும் சப்தம் கேட்கிறதண்ணு. யாராயிருக்க லாம்? வாருங்கள், பார்க்கலாம். ராம ; அடேடே, ஒரு கருடனல்லவா மனிதரைப்போல
முனகுகிறது? சடாயு; ராமசந்திரா ராம : என்ன ஆச்சரியம் பெயர் சொல்லி அழைக்கிறதே! சடா : அப்பா, பயப்படாதே. உன் தேவியைக் காப்பாற்ற நான் எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் முடியாமல் போய் விட்டது. லங்காபுரி ராவணன்.ஹா. (சடாயு மூர்ச் சித்து விழுதல்.) ராம : என்ன? மூர்ச்சை போட்டுக் கருடன் விழுந்து
விட்டதே! தாங்கள் யார்? சடா : (அரை உயிரில்) நான் சடா.யு.(உயிர் போகிறது)
ராம : (கோபத்தோடு) அந்த ராவணப் பதரா சேர்ரத் தனமாக வந்து என் தேவியைக் கொண்டுபோனன்? இதோ புறப்படுகிறேன் இலங்கைக்கு.
லக்ஷம: அண்ணு! விடுங்கள்! நானே முதலில் போய் அவனைச் சங்கரித்துவிட்டுத் தேவியாரை மீட்டுக் கொண்டு வருகிறேன். ராக்ஷச குலத்தை நிர்மூலமாக்கி விடுகிறேன்.
ராம தம்பி! அவசரப்படாதே. காம் முதலில் அதற்குத் தக்க சைனியத்தைத் திரட்டிக்கொள்ளவேண்டும். என்
அநுபந்தம்-1 265
நண்பன் சுக்கிரீவன் கிஷ்கிந்தையில் இருக்கிருன். அவன் துணையைக் கொண்டால் எல்லாம் வெற்றியாக முடியும். வா, கிஷ்கிந்தைக்குப் போவோம், புறப்படு.
அனுமான் சரி, சரி, கன்ருகத்தான் நடித்திருக்கிறீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டுக் கிஷ்கிந்தைக்குப் போகவேண்டிய அவசியம் வேண்டாம். நான் வாயு புத்திரன் அனுமான். இதோ அடுத்த காட்சிக்குத் தயாராய் கிற்கிறேன். என்ன, டைரக்டர் ஸார் அடுத்த சினை ஒத்திகை பார்க்கலாமா?
அருமை: சரி, பார்த்துவிடுவோம், ஆரம்பியுங்கள்.
அனு: (நாடகப் பாணியில்) ராமசந்த்ரப் பிரபோ! அடியேன் வணக்கம். நான்தான் தங்கள் தாஸன் அனு மான். தங்கள் ஆக்ஞையைச் சிரமேல் தாங்கக் காத் திருக்கிறேன்.
அருமை : (அதே பாணியில்) மெச்சினேன், அனுமானே! நிறுத்திக்கொள் உன் பிரசங்கத்தை (சாதாரணமாக) என்னப்பா, ஒரே நாடக மயமாயிருக்கிறதே! ரேடியோ நாடகத்தில் இந்த மாதிரி மேடைச் சம்பிரதாயங்கள் பொருந்தா.
அனு: வேறு எப்படித்தான் நடிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்கள்? (கோபத்தோடு) நடிப்பும் வேண்டு மாம், அத்தோடு மேடைச் சம்பிரதாயங்களும் கூடா வாம்! என்ன முட்டாள்தனம் நடிப்புக் கற்றுக் கொடுக்கிருர்களாம், நடிப்பு உப்புச் சப்பில்லாமல் எழுத்துப் பிரதியிலுள்ளதை அப்படியே பாடம் ஒப் பிக்கச் சொல்லுகிறீர்களாக்கும், ம்! ஒய்! நான் பதி னேந்து வருடம் நாடக மேடையில் பிரசித்தி பெற்று விளங்கின நக்ஷத்திரம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்; தெரிகிறதா?
Page 155
266 ஒலிபரப்புக் கல் அருமை : பலே பேஷ்! அப்படியா சமாசாரம்?
நாக நல்ல வேளையாக ரேடியோ மேடை ஏருமல் விட்
டீரே ரேடியோவுக்கு விமோசனம்!
அனு: இனிமேல் இந்தப் பக்கத்திலும் கால் எடுத்து
வைப்பதில்லை (போகிருர்).
அருமை : பரவாயில்லை, மற்றவர்கள் பகுதியைப் பார்ப் போம். தங்கவேல் பொன்னம்பலம்! வாசியுங்கள் பார்க்கலாம்.
சுக்கிரி: ராமசந்த்ரப் பிரபு! உங்கள் பிரதாபத்தை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். வாலியைக் கொன்று என் விரோதியைத் தொலைத்து நிம்மதியைத் தந்ததற்கு நான் என்றும் தங்களுக்குக் கடமைப்பட் டிருக்கிறேன். ஆனல், சோகத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே, என் அண்ணு.
அருமை : நிறுத்து...! நல்ல வேடிக்கையாயிருக்கிறது!
(எல்லோரும் சிரித்தல்.)
சுக்கிரி: (கோபத்தோடு) இதுதான் நான் நடிக்கமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே சொன்னது. குரங்கு வேஷம் போடச் சொன்னல் எப்படியிருக்கும்? அது போதா தென்று எல்லாருக்கும் சிரிப்பாயிருக்கிறது!
நாக (சிரித்துக்கொண்டே) ஒய்! அதற்காகச் சிரிக்கல்லிங் காணும்.எழுத்துப் பிரதியிலுள்ளதையெல்லாம் அப் படியே ஒப்பித்துவிட்டீரே! அதுதான் வேடிக்கையா யிருக்கிறது. (சிரிப்பு)
சுக்கிரீ; உனக்கு ரொம்பவும் தெரிஞ்சுபோச்சாக்கும். எழுத்துப் பிரதியிலுள்ளதை அப்படியே வாசிக்க வேண்டுமென்பதுதான் டைரக்டர் உத்தரவு; தெரியுமா?
அநுபந்தம்-1 , 36?
அருமை : அது சரிதான், மிஸ்டர் தங்கவேல்; எழுத்துப் பிரதியில் பேசவேண்டியது தவிர, நடிப்புக்கு வேண்டிய குறிப்புக்கள் கீழ்க் கோடிட்டு இருக்கிறதைப் பார்த் தீரா? சோகத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டே, என்ற இடத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகக் குரலில் பேசவேண்டும், தெரிகிறதா? அதையும் சேர்த்துப் படிக்கிறதல்ல.
சுக்கிரி: ஓகோ, அதுவும் அப்படியா? சரி, இப்போது ஆரம்பிப்போம். (நடிக்கிருர்) ராமசந்த்ரப் பிரபு! உங்கள் பிரதாபத்தை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக் கிறேன். வாலியைக் கொன்று தாங்கள் என் விரோதி யைத் தொலைத்து நிம்மதியைத் தந்ததற்கு (அநாவசிய மான அழுத்தம்) நான் என்றும் தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல். என் அண்ணு இறந்து விட்டான் என்றுதான்.
அருமை : (அதிருப்தியுடன்) ம்..ஹம். சோகம் அதிலே போதாது. அதுவுமல்லாமல் அழுத்த வேண்டிய இடத் தில் அழுத்தாமல் தவருன இடத்தில் அழுத்தக்கூடாது. ‘நிம்மதியைத் தந்ததற்கு' என்று ‘நிம்மதியில்' அழுத்த வேண்டுமல்லாமல், தந்ததற்கு என்ற இடத்தில் அழுத்தப்படாது. ‘என் அண்ணு இறந்துவிட்டான்' என்ற இடத்தில் அளவற்ற துயரச் சாயல் தோற்ற வேண்டும். எங்கே பார்ப்போம்?
சுக்கிரி நிம்மதியைத் தந்ததற்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல், (ஒரே அழுகையுடன்) என் அண்ணு இறந்துவிட்டான் என்றுதான்.
அருமை : ம் ஹ்ம்..! அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. அப் படியெல்லாம் அழவேண்டுமென்று கட்டாயமில்லை. சோகம் வேறு, அழுகை வேறு. சோகத் தொனி மாத் திரம் கேட்கவேண்டும்.
Page 156
28 ஒலிபரப்புக் கல்
விக்கிரி: இதோ பாருங்கள் டைரக்டர் இந்த மாதிரிக் கஷ்டப்படுத்தினுல் என்னல் நடிக்கவே முடியாது. இந்தக் தொந்தரவு எனக்குத் தேவையில்லை. ரேடியோ நாடகம் இப்படிக் கஷ்டமான் காரியமென்ருல் நான் ஒப்புக்கொண்டே இருக்கமாட்டேன். அருமை : கோபப்படலாகாது, மிஸ்டர் தங்கவேல்! எல்
லாம் போகப் போகச் சரியாய் வரும். பரவாயில்லை. சுக்கிரி: முடியவே முடியாது. நான் போகிறேன். நீங்கள் எதை வேண்டுமானுலும் செய்யுங்கள். (போகிருர்.) ஆறு : என்ன ஸார், ஒத்திகை கடக்கப்போகிறதா,
அல்லது இத்தோடு நிறுத்தப்போகிறீர்களா? அருமை : ஆறுமுகம்! கொஞ்சம் பொறுத்துக் கொள் ளப்பா. இன்னும் இரண்டொரு காட்சியை ஒத்திகை பார்த்து முடித்துக்கொள்வோம். அப்புறம் மிச்சத்தை நாளைத் தினம் பார்த்துக்கொள்ளலாம். ஆறு : இனிமேல் எங்கே ஸார் நேரமிருக்கப்போகிறது? ஸ்டூடியோ மற்றப் புரோகிராமுக்குக் கொடுபட வேண்டும். அரைமணி நேரக் கூத்துக்கு ஐந்து நாட்களா ஒத்திகை பார்க்கவேண்டும்? முக்கால் மணி நேரமாக மூன்று வசனத்தை வைத்துப் பிசைந்துகொண்டிருந்தால் அடுத்த ஆண்டிலேதான் நாடகம் நடக்கும். எனக்கு இனி இங்கே கிற்க முடியாது ஸார், கான் போகிறேன். அருமை : சரி, ஒத்திகை முடிந்தது; எல்லோரும் போக
6) TLD
காட்சி-3
(ஸ்டூடியோவில் அருமைநாயகமும் சாம்பசிவமும் காக லிங்கமும் மாத்திரம் நின்று பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) அருமை : என்ன மிஸ்டர் சாம்பசிவம் நாடகம் உருப்
படுமா?
அநுபந்தம்-1 269
சாம்ப என்னைக் கேட்டால்? இந்த மாதிரி அசடுகளை வைத்துக்கொண்டு நாடகம் கடத்தினுல் உருப்பட்ட மாதிரித்தான்!
அருமை : என்ன செய்கிறது? விடிந்தால் கல்யாணம்,
தாலி கட்டித்தானே ஆகவேண்டும்?
சாம்ப இதற்குத்தான் கான் எற்கெனவே சொன்ன ஆலோசனையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும். நடிகர் யார் யார் என்று தெரிந்துகொண்டால் அதற்குப் பொருத்தமாக காம் ஒரு கதை புனைந்து வெற்றிகரமாக ஒலிபரப்பிவிடலாம். சீதைக்கு நடிக்க வந்தவளோ என் முல் சூர்ப்பணகைக்கு மிகவும் பொருத்தமானவளாகத் தெரிகிறது. சுக்கிரீவனுக்கு வந்தவன் கும்பகர்ணன் மாதிரிப் பேசுகிருன். சாந்தமே உருவாயிருக்கவேண்டிய அனுமான் என்னடா என்ருல், சுடு சுடென்றிருக் கிருன், இந்த லக்ஷணத்திலே 15ாடகம் நடந்தபாடுதான்!
நாக : மிஸ்டர் சாம்பசிவம் சொல்கிறதிலும் உண்மை
யிருக்கிறது, ஸார்!
சாம்ப அனுமான் வேஷம் உனக்கெப்படி இருக்கும்,
நாகலிங்கம்?
நாக என்ன வேஷம் வேண்டுமானுலும் கான் கடிக்கத்
தயார்.
அருமை : அனுமானுக்கு ஏற்ற நல்ல முகவெட்டு உனக்கு
இருக்கிறதென்பதை மறுக்க முடியாதுதான்!
நாக (காலகூேடிப பாணியில் நடிக்கிருர்.) அசோக வனத்திலே, அந்தச் சீதாபிராட்டியைக் கண்ட மாத் திரத்திலே. அனுமானனவன் தேவியாரின் பூரண அழகைக் கண்டு வியந்து வருணிக்கிருன். (பாட்டு) காண வேணும் லக்ஷம் கண்கள், சீதா தேவியை.
Page 157
270 ஒலிபரப்புக் கல் அருமை : சிறுத்து! போதும் உன் கடிப்பெல்லாம். அது இருக்கட்டும், மிஸ்டர் சாம்பசிவம், காளைப் புரோகிரா முக்கு என்ன செய்யலாம்? - - - சாம்ப என்ன செய்யலாம்? எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. ༣.
நாக : ஸார், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. “எதிர்பாராத காரணத்தால் இன்று கடைபெற வேண்டிய நாடகம் கடக்க முடியவில்லை' என்று அறி வித்துவிட்டு இசைத்தட்டுக்களை ஒலிபரப்பிவிடுங்கள்.
அருமை : அதுவும் நல்ல யோசனைதான். வேறு வழி?
காட்சி முடிகிறது.
அநுபந்தம்-2 இசைச் சித்திரம்
தயாரிப்பு பெருங்குளம் டி. எஸ். மணி பாகவதர்
கானல் வரி
பாத்திரங்கள் :
இளங்கோ, கோவலன், மாதவி.
வாத்தியங்கள் :
வீணை இரண்டு, தம்புரா இரண்டு, புல்லாங் குழல் ஒன்று, மிருதங்கம் ஒன்று. அறிவிப்பாளர்: காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரை. இந்திர விழாவின் எழில் காணவேண்டி, கோவலனும் மாதவியும் அங்கே புது மணற் பரப்பில் புன்னை மர கீழலில் பாளையம் அமைத்து, ஒவியம் தீட்டிய திரை போட்டு, வெள்ளிக்கால் பூட்டிய அமளிமிசை அமர்ந் திருக்கிருர்கள். பொழுது போக்குக்காக அவர்கள் யாழை எடுத்து இசை கூட்டித் தனித் தனிப் பாடிய பாடல்கள் எதிர்பாராதவிதமாக மீளாப் பிரிவைத் தந்த சோகக் கதையே
(வீணையில் கல்யாணி ராகம்]
f5) if ds(T . . . . . if . . . . . 6m T . . . .
(என்று ஆரம்பித்து)
Page 158
279 ஒலிபரப்புக் கல்ெ
f f ST - f 5 lp uT - SIT f 6v f 6rvT -
நிரி க ம தா பா - காரி ஸ O O. O.
(என்றபடி)
இளங்கோ : (கல்யாணி ராகத்தில் பாடுகிருர். ஒரு வீணை
மர்த்திரம் பக்க வாத்தியமாகத் தொடருகிறது.)
சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடும் ஆணியும் நரம்புமென்று இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது
வாங்கி பண்ணல் பரிவட்டண் ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவு தீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளேபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடையென இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்ட வகைதன் செவியின் ஒர்த்து ஏவல் அன்பின் பாணி யாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்
அநுபந்தம்-2 ኃ?8
கோவலன் : (பக்க வாத்தியங்களுடன் பாடுகிருன். ஹரி
காம்போஜி ராகம், ஆதி தாளம்) علمی
கா ம க ரீ ஸா ஸா - ஸ ரி கா ம க - மா , , திங் கள். . மா லை வெண். குடை , யான்
5 ) Lui LD é5RT ʼ— é5 LD i LI LD - LJAT , ,
சென்னி. செங் , கோல் அதுவோ. ச் f நீ தா த நி பா - த நி ஸ் நி - ஸ்ா , ,
கங்கை தன் . னைப் பு னர் ந்தா , லும் , , நி ரி ஸ்ா ஸ் நி தா - த ப த நி - ஸ்ா , , t-! ல வாய் வா . ழி கா வே . 庇 . ஸ் ரி க்ா க் ம் க்ா - க் ரி க் ரி - ஸ்ா , ,
கங் . கை தன் . னைப் புணர்ந்தா. லும்
நி ரி ஸ்ா ஸ் நி தா - த ப த நி - ஸ்ா , , பு ல வா தொ ழி தல் கயற்கண், ணய் ஸ்ா நீ நி த பா - ப த ம க - மா மர் ம ங்கை மா , தர் பெ ருங் கற் . பென் று
க ம பா த நி பா - த நி ஸ் நி - ஸ்ா , , அறிந்தேன் வா பூழி கா . வே . ரி
மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுவேர்ச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
Page 159
274
ஒலிபரப்புக் கல்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணுய் மன்னு மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி உழவ ரோதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதம்கொள் விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா மழவர் ஒதை வளவன்தன்
வளனே வாழி காவேரி
நடபைரவி தாளம் : கண்ட ஏகம்
நி த பா ப ம த ப ம க ரி க மா த . ரு ந - று - ம ல . ரே i് ക ബസ ffn 35 Ld Ld l uir மணம் . விரி ம ல ரே
நி த நி நி ஸ் நி ஸ்ா த று தி ரு மொ ழி யே ബ് ബ് ஸ் நி ரி ஸ் ஸ் நி தா பா யி ள வ ன . மு , லை யே
് ബ ரி ஸ் ரிக் ரிக் ஸ் ரீ, LD ğ5 புரை மு - க - மே .
அநுபந்தம்-2 375
ரி க் ம்ா க் ரி க் ரி க்ம் க்ரி ஸ்ா CP பு ரு வில் . லி , ணை யே ஸ் நி ஸ் ஸ் ஸ் நி ரி ஸ் நி த பா த ம 6T (up த ரு மின் . . . இ . டை G8 u
ப த நி த நி நி ஸ் நி ஸ்ா எ னை யி டர் செய் . த வை யே!
திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதகு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே முன்வளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணை முல் யே எனே யிடர் செய் தவை யே.
ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி
ஸ்ரிஸ்நி தா ப ப பா - க ம பா - ப ப ம க மா ப , வ - ள உலக் கை கையாற் ப ற் . . றி
க ம பா ப ப பா - த நி ஸ்ா , த - நீ ஸ்ா த வ ள முத். தம் குறு வாள் - செங்கண்
Page 160
ጳ?6 ஒலிபரப்புக் கலை
நி ஸ் ரி ரி ரி ரி - ஸ்ரி க்ா -ம் க் க்ரி - ஸ்ா த வ ள முத். தம் குறு வாள் செங் . . கண்
ஸ்ரி ஸ்ா , ரி ஸ் நி தா பா - க ம பா - த நிஸ்ா
குவ ளை . . ய ல் , ல கொடிய கொ டிய ,
புன்னை நிழற் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நட்ப்பாள் செங்கண் கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம். கள் வாய் நீலம்,கையின் ஏந்திப் புள் வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள் வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.
இளங்கோ : (கல்யாணி ராகத்தில் பாடுதல்)
கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டுஇவன் தன்னில் மயங்கினுன்
எனக் கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கத் தானுமோர் குறிப்பினள் போல் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனம்மகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத்
தொடங்குமன் மாதவி : • ராகம் : அடாணு தாளம் : ஆதி ப ப ம ம ரி மா பா பா - ப ப பா - தநீ, பா
ம ருங் . . கு வண் டு சிறந்தார்ப் ப .
அநுபந்தம்-2 - 372 ம ப ஸ்ா ஸ்ா ஸ்ா ஸ் ஸ் த நி - ஸ்ா , , மணிப் பூ வா டை ய து போர்த் து . . ரி ர் h F ம் ரி ஸ்ா - ஸ் நிரீஸ் நி ஸ் - தா , , கருங்க ய ந் . கண் விழித் தொல் . கி
ப த நீ , ரி ஸ்நிபா பா - பாநிப பாதிப- தநிபா நடந் தா ய் வா . . N கா . . வே. . f..
நி ஸ்ா ரி ரி ? - ரி ரி ரி , ம் - ஸ்ரீ ஸ் க ருங் க யற்கண் விழித்தொல் . கி .
ஸ் ரீ ஸ் ஸ்ா ஸ்ா - ஸ்ா ஸ் நிரிஸ் - தா , , ந டந்த வெல்லாம் நின் க - ண வன் . .
நி ஸ்ா க் க்ாம் ரி ஸ்ா - ஸ்ாஸ்ா - ஸ் நிரிஸ் தா திருந்து செங் . கோல் வ ளை 6OD
ப த நீ , 府 ஸ்நிபா பா - பாநிப பாநிப- தநி பா அறிந்தேன். வா , பூழி கா . . வே. . ரி.
பூவார் சோல் மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மால் யருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி,
Page 161
ኃ?8 w ஒலிபரப்புக் கல்
வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி மாழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.
ராகம் : உஸேனி தாளம்: ஆதி
ரீ க ம ரீ க ஸ ஸா ஸா - ஸ ஸ பா - பா ப தா ம கை. . தை , வே லிக் க பூழிவாய் வந் தெம்
த'நி ஸ்ா ஸ்ா - ஸ்ர் , நி ரிஸ் நி த - ப ப மா பொய்தல பூழித் துப் போ , ஞ . . . ரொருவர்
பா த நி ஸ்ா ஸ்ா - ரீ க் ரிக்ஸ் - ஸ்ா ரிஸ் நிதபம பொய்தல பூழித் துப் போ ஞ. . ர . . வர்தம்
பா ஸ்நிஸ்ா ப ப பாதப- க க மபமம - க ரி ரீகஸ
மை யல். . மனம்விட். . ட கல் வா , ரல் லர் .
கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்ரு ரொருவர் நீநல் கெனறே நின்ரு ரவர்தம் மானேர் நோக்கம் மறப்பா ரல்லர்.
அன்னத் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்ரு ரொருவர் தென்னல் நோக்கி நின் முர் அவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவார் அல்லர்.
அநுபந்தம்-2 3?9
ராகம் : எதுகுல காம்போஜி தாளம் : கண்ட் திருபுட்ை 6m) ff LDIT LD LD LDIT 35 LD — . u Lu l JIT — LJIT 35 Lu LDIT
நுளையர் விள ரி நொடி த ருதீம் பா லை . .
த த த த த நி ஸ்ாநித த த - நிஸ்நிதபா - பா தபமா இளிகிளையிற்கொள் - ளஇறுத் தா , யால் மா லை .
ப த த ஸ் ஸ் ஸ்ா ஸ் ஸ் ஸ் - ரிக்ாரிஸா - தஸ்நித இளி கிளையிற்கொள்ளஇறுத் தாய். மன் னி. . .யேற்
ப த ப ஸ் ஸ் தாப பா - , பாம - மபாம கா ரீ
கொளை வல்லா யென்னுவிகொள் வாழி மா . . லை .
பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளி னிழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மால் உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்ரு வேந்தன் எயிர்ப்புறத்து வேந்தனுே டென்ணுதி மாலை. பையுணுேய் கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருண்மாலை மால்நீ யாயின் மணந்தா ரவராயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
இளங்கோ (கல்யாணி ராகம்-வீணை மாத்திரம் பக்க
வாத்தியம்.)
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினுளென யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை வந் துறுத்ததாகலின் உவவுற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனணுய்ப்
Page 162
1 ܨ .
லிபரப்புக் கலே
பொழுதிங்குக் கழிந்ததாகலின் எழுதுமென் றுடனெசிாது எவலாளருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர் தாதவிழ் மலர்ச்சோஃ0 யோதையாய்த் தொலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடனன்றியே மாதவிதன் மண்புக்கான்,
(வீ&ணயில் கல்யாணி தானம்)
நிரிஸ் நிரி ஸ்நி தபம தபம கரி ககரிஸ நிஸ்திநிதப் மப ககரிஸ் நிஸ் ஸ்ா . . . . . .
(தொடர்ந்து வாத்திய கோஷ்டி)
ராகம் : ஆரபி தாளம் : ஆதி மத்யம காலம்
தர்ஸ் நி ததபா தபமக ரிஸரிம-பாமீா பா,-மபமக ரிஸ்ரீ
மகரிஸரீ ததயா ஸ்நிதா ரிஸ்=ம்க்ரீ;ஸ்ரி-ஸ்நிதபமகரீ
fifts, fertiff upsf. ததபா-ரிஸ்ரித L தர்ஸ்-ரிம்க்ரி
ஸ்நிதத
hஸ்ாநி தயதரிஸ்ாதபாப்-மகரிஸரீ;-தரீரி ரிம்க்ரி-ஸ்ா.
سمې
= دمای
முற்றும்
Sihl,
Page 163
Page 164