கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கல்வி நிறுவன நூலகங்கள்  
 

 

 

இயல் ஒன்று

பாடசாலை நூலகங்கள்

உலக நாடுகளிலுள்ள பாடசாலை நூலகங்களின் அடிப்படை நோக்கம் மாணவர்களுக்கு நூலகப் பயன்பாட்டினை விளக்குவதும், அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதுமேயாகும். இப் பாடசாலைகள் யாவும் ஆரம்பநிலை, கனிஷ்ட இடைநிலை, சிரேஷ்ட இடைநிலை என்ற மூன்று தரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வப் பாடசாலைகளின் தரம் பொருளாதார நிலை, சூழல் என்பவற்றுக்கமையவே நூலகங்களும் அமைந்துள்ளன.

நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்குச் சிறு பராயத்திலிருந்தே பயிற்சியளிக்கப்படுதல் அவசியம். இந்த வகையில் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கும் மாணவர்களுக்கு நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தையும், அக்கறையையும் ஏற்படுத்தக் கூடியனவாகச் சிறுவர் நூலகங்களும், பாடசாலை நூலகங்களும் செயற்படுகின்றன. பெற்றோர் தம் சிறார்களை சிறுவர் நூலகங்களுக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் நூல்ககளை வாசிக்கும் வகையில் ஊக்கப்படுத்துதல் வேண்டும். பாலர் பாடசாலை ஆசியர்கள் தம் மாணவர்களை மட்டுமன்றி அம் மாணவர்களது பெற்றோர்ருக்கும் இவ்வகையில் ஊக்கமும் வழி காட்டலும் அளிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் அனேகமான இடங்களில் பெற்றோர் தாம் நூலகங்களுக்குச் செல்லும்போது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று சிறு வயது முதலே நூலகங்களைப் பயன்படுத்துவதில் அவர்களை ஈடுபடச் செய்கின்றனர். வுளர்முக நாடுகளில் இவ்வாறு பெற்றோர் தம் பிள்ளைகளை நெறிப்படுத்தும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. இந் நாடுகளில் பாலர் வகுப்பு முதல் படிப்படியாகச் சகல வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற நூல்களை அறிமுகப்படுத்தி நூலகத்திற்குச் சென்று அவற்றை வாசிக்குபம்படி தூண்டுதலில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு எடுக்க வேண்மும்.

எனவே பாடசாலை நூலகமானது மாணவர்களுக்கு நூலகப் பயன்பாட்டை ஆரம்பித்து வைக்கும் ஒரு நிறுவனமாகச் செயற்படுகின்றதெனலாம் . சகல தர பாடசாலைகளிலும் அந்தந்தப் பாடசாலையின் வசதிக்கேற்ப நூலக வசதியினை ஏற்படுத்துதல் முக்கியமானது. மாணவர்கள் இலகுவில் அணுகக் கூடியதான இடத்தில் நூலகம் அமைந்திருத்தல் வேண்டும். ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் மாணவர்கள் நூலகத்தை அணுகக்கூடியதும், பாடசாலையின் மத்தியிலுள்ளதுமானதோர் இடத்தில் நூலகம் அமைந்திருத்தல் வேண்டும்.

பாடசாலையின் தரம் மாணவர்களது தொகை என்பவற்கேற்ப போதிய இடவசதியுடையதாக நூலகம் அமைதல் அவவியம். நூல்களை ஒழுங்குபடுத்தி வைக்கவும், மாணவர்கள் இருந்து நூல்களை வாசிக்கவும், நெருக்கடியின்றி மாணவர்கள் நூலகத்தில் நடமாடவும், நூல் இரவல் வழங்கல் றடவடிக்கைகளுக்கு வசதியாகவும், நூலகம் அமைந்திருத்தல் வேண்டும். மாணவர்கள் குழுவாகவோ, வகுப்பாகவோ, நூலகத்தை பயன்படுத்தவும், ஓய்வு நேரவாசிப்பிற்கு இடமளிக்கவும், போதிய இட வசதியுடையதாக இருத்தவ் வேண்டும். சாதாரணமாகப் பாடசாலைகளில் ஒரு வகுப்பறையையே நூலகமாகப் பயன்படுத்துதல் வழக்கம். நூலகத்தைச் சுத்தமாகவும், ஒழுங்காகவும் மாணவர்களது மனதைக் கவரக்கூடிய விதத்தில் அழகாகவும் வைத்திருத்தல் நூலனரது கடமையாகும்.

பாடசாலை நூலகத்தின் முக்கிய நோக்கங்கள்

1. பாட விதானத்தோடு தொடர்புடைய நூல்களையும், அடிப்படை வாசிப்பிற்கு உதவக்கூடியவையான நூல்களையும் சேகரித்து வழங்கல்.
2. பாடசாலையிலுள்ள எல்லா மாணவர்களுக்கும் அவரவர் கல்வித்தரத்திற்கும், அறிவாற்றலுக்குமேற்ற வகையில் நூல்களை வழங்கல்.
3. நூல்களிற் குறிப்பிடப்படுகின்ற கருத்துகளை உணர்ந்து பயன்பெறக்கூடிய வகையில் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முனைதல்.
4. மாணவர்களுக்கு வீட்டு வாசிப்பிற்கு வேண்டிய நூல்களை வழங்குதல் மூலம் ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாகக் கழிக்க உதவுதல்.
5. ஆசியர்களுக்கு அவர்கள் கற்பிக்கும் பாடங்களுடன் தொடர்பான நூல்களையும் அவர்களது தொழில் அபிவிருத்திக்கு உதவக்கூடிய நூல்களையும் வழங்குதல்.

ஏனைய நூலகங்களைப் போலவே பாடசாலை நூலகத்தின் அபிவிருத்தியைக் கவனிப்பதற்கென குழுவொன்று நியமிக்கப்படுதல் வழக்கம் பாடசாலை அதிபர், நூலகர் ஆகியோருடன், கல்வி அமைச்சின் கீழ் அந்தந்த பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருக்கும் கல்வி அதிகாரி முதலியோர் இத்தகைய குழுவின் முக்கிய உறுப்பினர்களாகப’ பணிபுரியலாம். நூலக நிர்வாகம், நூற் கொள்வனவு முதலிய கொள்வனவு முதலிய விடயங்களில் இக்குழு நூலகருக்கு அறிவுரை வழங்கக் கடமையுடையதாகும்.


வாசகர்கள்:

பாடசாலை நூலகத்தினைப் பயன்படுத்துகின்ற மாணவர்களும், ஆசிரியர்களுமே அந் நூலகத்தின் வாசகர்களாவர். நூலகம் ஆசிரியர்களுக்கு அவர்களது கற்பித்தல் நெறியோடு தொடர்புடைய ஆவணங்களை வழங்குதல் வேண்டும். மாணவர்களுக்கு வாசிதத்தற் பழக்கத்தை ஏற்படுத்தி அதில் ஊக்கப்படுத்துதல், அவர்களது பாடசாலை வேலைகளுக்கு உதவக்கூடியனவும் ஆக்க வேலைகட்குப் பயன்படக்கூடியனவுமான நூல்களை வழங்குதல், பொது நூலகங்களையும், கட்புல செபிப்புல சாதனைகளையும் எவ்வாறு பயன்படுத்துவதென்பது பற்றி அறிவுறுத்துதல் முதலான வழிகளில் மாணவர்களை நெறிப்படுத்துதல் நிறுவனமாகப் பாடசாலை நூலகங்கள் செயற்பட வேண்டும்.

நூலகத்தைத் திறமையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தும் இயல்பு எவருக்கும் இயற்கையாக அமைந்துவிடுவதில்லை. அல்லாமலும் நூலின் பாவனை, நூலகப் பாவனை என்பவற்றைக் கற்றல் மூலமும் அறிந்து கொள்ள முடியாது. இதில் பயிற்சியும் தேவையும் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். பாடசாலை நேரங்களில் ஒரு வகுப்பு நேரத்தையேனும் நூலகத்திற்கென ஒதுக்கிக் கொள்ளலாம். ஆசிரியர்கள் நூல்களின் முக்கிய அம்சங்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல், சிறந்த நூல்களைப் பற்றி உரையாடல், தாம் வாசித்த நூல்களில் மாணவர்களுக்கு ஏற்ற பகுதிகளை விமர்சித்தல், குறிப்பிட்ட சில பகுதிகளை மாணவர்களுக்கு வாசித்துக் காட்;டுதல் ஆகிய நடவடிக்கை மூலம் மாணவர்களுக்கு நூல்களை வாசிக்கும் பயிற்சியில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். அதேபோல நூலகத்திற் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், விதிமுறைகள், ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க உதவக்கூடிய வழிகள் என்பனவற்றையும் அவர்களுக்கு அறிவுறுத்தல் அவசியமாகும். எனவே பாடசாலை நூலகமானது தான் சேவை வழங்கும் மாணவ சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதோடு, மாணவர்கள் நூலகத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய விடயங்களைத் தாமாகவே தேடிப் பெற்றுக் கொள்வதற்கும், அவை பற்றிய சுயமான சிந்தனையைப் பெறவும், மாணவர்களுக்குப் படிப்படியாகப் பயிற்சியளிக்கின்றது.

இதற்கேற்ப ஆரம்ப பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும், அவர்களது விருப்பு, செயல்முறைகள், விளையாட்டு முதலிய நடவடிக்கைகளுக்கும், ஆசிரியர்களின் வழிகாட்டலின்படி அவர்கள் அவதானித்த அம்சங்களையும், ஆரம்ப பாடசாலை நூலகம் கொண்டிருத்தலே விரும்பத்தக்கது.

இடைநிலை பாடசாலைகளில் நூலகத்தை உபயோகிப்பதற்குரிய பயிற்சியையும், அறிவுரைகளையும் பெறும் வாய்ப்பினை மாணவர்கள் எதிர்நோக்குகின்றனர். இவ் வகையில் பெற்றோரும், பாடசாலை நூலகமும் இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம். சிரேஸ்ட இடைநிலைப் பாடசாலை மாணவர்கள் தகவல்களைத் அவர்களது வகுப்புப் பாடங்களில் தாம் அவதானித்த விடயங்களுடன் ஒப்பிட்டுத் தமது சொந்தக் கருத்துக்களை உருவாக்கவும், வெளியிடவும், ஊக்கப்படுத்துகின்றனர். எனவே, பாடசாலை நூலகமானது மாணவர்களது சிந்தனா சக்தியைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ள உதவும் நிறுவனமாகத் தொழிற்படுகின்றது.

ஆசிரியர்கள் தமது ஓய்வு நேரங்களில் பாடசாலை நூலகத்தினைப் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெறுகின்றனர் அவர்களது கற்பித்தல் நெறிக்கு உதவக்கூடிய விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், மாணவர்களது மனோதத்துவம், கற்பித்தல்முறை முதலியவை சம்பந்தமான நூல்களைப் பெற்று வாசிப்பதற்கும், பாடசாலை நூலகமானது ஆசிரியர்களுக்குச் சிறப்பாக உதவுதல் வேண்டும்.

நூற் சேகரிப்பு :

புhடசாலை நூலகத்திற்குரிய நூல்களைத் தெரிவு செய்வதற்கென ஆசிரியர்களை உள்ளடக்கிய நூற்றெரிவுக் குழுவொன்றிருத்தல் அவசியமாகும். நூலகரோ அல்லது அதிபரோ நூல்களைத் தெரிவு செய்ய முன்பு இக் குழுவுடன் கலந்தாலோசித்தல் வேண்டும். நூலகர் நூல் விமர்சனங்களை வாசிப்பதோடு குறிப்பிட்ட நூல்கள் பற்றி ஆசியர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்வதன் மூலம் தரமான நூல்களைக் கொள்வனவு செய்யலாம். மாணவர்களது தரத்திற்கேற்றவையும், அவர்களது வகுப்பு வேலைகட்குப் பயன்படக்கூடியனவுமான நூல்களைத் தெரிவு செய்ய ஆசிரியர்களின் உதவி பெரிதும் விரும்பத்தக்கது. இவ்வகையில் நூல்களைத் தெரிவு செய்வதன்மூலம் பாடசாலைக் கல்விநெறியோடு நூலகத்தை நெருங்கிய தொடர்புடையதாகச் செயற்படுத்தலாம்.

நூல் தெரிவிற்குரிய கருவி நூல்களை ஆசிரியர்கட்கு அறிமுகப்படுத்துவதோடு புதிதாக வெளிவருகின்ற நூல்கள் பற்றியும் அவ்வவ்போது ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்துதல் நூலகரின் கடமையாகும். ஆசியர்கள் தாம் கற்பிக்கும் பாடங்களுடன் நெருங்கிய தொடர்புடைய நூல்களையே அதிகம் வாங்குவதற்குச் சிபார்சு செய்தல் வழக்கம். பாட விதானத்தோடு நேரடியாகத் தொடர்பற்ற அதேவேளையில் அவற்றுக்குச் சமமான முக்கியத்துவம் வகிக்கின்ற, நூல்களையும் நூற்சேர்க்கையிற் சேர்த்துக்கொள்வது நூலகரின் முக்கியமான பொறுப்பாகும்.

முhணவர்களது திறமை, வயது என்பவற்றிற்கேற்ப, அந்தந்தத் தரத்தினருக்குரிய நூல்கள் கொள்வனவு செய்யப்படல் வேண்டும். மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய சிறந்த இலக்கியத் தொகுதிகள், கவிதைகள், கட்டுரைகள், பெரியார்களது வாழ்க்கை வரலாற்று நூல்கள், பயணக்கதைகள், விஞ்ஞானக் கண்டு பிடிப்புக் கதைகள் ஆகியவற்றோடு, அவர்களது திறமையும், ஆக்க சக்தியையும் வளர்க்க உதவக்கூடிய விளையாட்டுக்கள், படம் வரைதல், இயந்திரத் தொழில் நுட்பம் முதலிய பொழுது போக்கு நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட நூல்கள் என்பவற்றையும் பாடசாலையின் இடம், நிதி வசதிக்கேற்ப நூலக இருப்பிற் சேகரிக்க முயலுதல் இன்றியமையாததாகும்.

இவற்றோடு பாட விதானத்திலுள்ள பல விடயங்களை உள்ளடக்கியமையாக வெளிவருகின்ற நூல்களையும் நூலகத்திற்குப் பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது. இத்தகைய நூல்களைக் கொள்வனவு செய்யும்படி ஆசிரியர்கள் சிபார்சு செய்தல் குறைவு. ஆகவே, நூலகரே இத்தகைய ஆக்கங்களைத் தெரிவு செய்து பெற்றுக் கொள்ள முயலுதல் வேண்டும். இவை தவிர விடயங்கள் தொடர்பான அடிப்படைக் கருத்துக்களை நல்கக்கூடிய கலைக்களஞ்சியத் தொகுதிகள், அகராதிகள், புவியியற் படங்கள், வீதி வழிகாட்டிக் கைநூல்கள், உல்லாசப் பயணத்துறை வழிகாட்டிக் கைநூல்கள், அரசாங்க வெளியீடான ஆண்டுப் புத்தகம் ஆகியவற்றையும் நூலக ஆவணச் சேர்க்கையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பாடசாலை நூலகம் மாணவர்களது பொது அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியதாகின்றது.

அத்தோடு மாணவர்களுக்கு வகுப்புப் பாடங்களுக்குத் துணையாகப் பயன்படக்கூடியவையான ஒளிப்படங்கள், வரைபடங்கள், முதலியனவும், கொள்வனவு செய்யப்பட்டு உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படல் நன்று. வகுப்பறையில் கற்பிக்கின்ற சில விடயங்களை இலகுவில் தெளிவுப்படுத்த இவை பயன்படுத்தப்படலாம். மாணவர்கள் அன்றாட நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள உதவக்கூடியனவையாக ஒரு சில உள்ளுர் பத்திரிகைகள், அவர்களது கல்வி விருத்திக்கு உதவக் கூடிய சில பருவ இதழ் வெளியீடுகள் ஆகியவற்றையும் பாடசாலை நூலகத்தின் தரம் இடவசதி, நிதிநிலைமை என்பவற்றிகேற்ப நூலகத்திற் சேர்த்துக் கொள்ளலாம்.

புhடசாலை நூலகங்களில் பாடநூல்கள், உசாத்துணை நூல்கள், என்பவற்றோடு அந்தந்தப் பாடசாலை அமைந்துள்ள சுற்றாடல் பற்றிய விளக்கங்களய் அங்குள்ள மக்கள், அவர்களது பண்பாடு முதலியவற்றை எடுத்தியம்பும் நூல்கள், பத்திரிகைத் துணுக்குகள், சிறு பிரசுரங்கள் போன்றனவும், சேகரிக்கப்பட்டு வருதல் விரும்பத் தக்கது.

அழகியல் அனுபவங்கள் மனிதனை முழுமை நிறைந்த ஆளுமை வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன. எனவே, பாடசாலை நூலகங்களிலும் அழகியல் அனுபவங்களைப் பெறத்தக்க நூல்கள், ஓவியத் தொகுதிகள், ஒலிப்பதிவுக் கருவிகள் என்பனவும் அமையப் பெற்றிருத்தல் அவசியமாகும். சமூக, பொருளாதார வளர்ச்சி போன்;ற நாடுகளில் இத்தகு வசதிகள் அமைந்திருப்பினும் வளர்முக நாடுகளின் பாடசாலை நூலகங்களில் இவை கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன.

உலக நாடுகளில் நூல்களில் இடம்பெறும் ஆவணங்களில் கட்புல செவிப்புல சாதனங்களும் இன்று மிக முக்கிய இடம் பெறுகின்றன. மாணவ சமுதாயத்திற்குப் பல்வேறு வழிகளிலும் பயன்படக்கூடிய சாதனங்களாக இவற்றைக் கருதலாம். புhடசாலையின் தரத்திற்கேற்ப, அதிபரின் உதவியுடன் மேலிடங்களுடன் தொடர்புகொண்டு இத்தகைய வசதிகளை மாணவர்களுக்கு வழங்குதல் அவசியமாகும். குறிப்பிட்ட விடயம் தொடப்பான சொற் பொழிவினையோ, பரிசோதனையோ விளக்கப் படங்களுடன் தொலைக்காட்சியில் அவதானிக்கும்போது மாணவர்கள் கூடிய விளக்கம் பெறக்கூடியதாகின்றது. இதேபோல நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்த நாடாக்களைப் போட்டுக் காட்டக்கூடிய வசதியினையும் நூலகர் ஏற்படுத்திக் கொள்ளுதல் உகந்தது இத்தகைய வசதிகளை உயர்தர வகுப்புகளையுடைய பாடசாலை நூலகங்கள் முக்கியமாக வழங்க முற்படுதல் வேண்டும். நூலகரது பொறுப்பிலிருக்கும் இவ்வாவணங்களை மாணவர்களுக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தி காட்டுவதற்கு ஆசிரியர்களுக்கு அவ்வப்போது அனுமதியளிக்கப்படல் வேண்டும்.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் பாடசாலை நூலகங்களின் வளர்ச்சியுடன் வளர்முக நாடுகளிலுள்ள பாடசாலை நூலகங்களை ஒப்பிட்டு நோக்குகையில் வாசகர்களது தேவைகளை முற்றாக நிறைவேற்ற முடியாத நிலையில் நூலகமும் வாசகர்களால் வேண்டப்படுகின்ற சகலவிதமான நூல்களையும் கொள்வனவு செய்யக்கூடிய அளவில் அதனிடம் நிதிவசதியிருப்பதில்லை . இதற்குப் பாடசாலை நூலகம் விதிவிலக்கல்ல. இந்நிலையில் பாடசாலை நூலகங்கள் நேரடியாக நூல்களைக் கொள்வனவு செய்வதோடு நின்றுவிடாமல் அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற அறிஞர்களிடமுள்ள சொந்த நூற்றொகைகளிலிருந்து அன்பளிப்பாக நூல்களைப் பெறவும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பாடசாலை நூல்களையே சேர்ப்பையிற் சேர்த்துக் கொள்ளுதல் விருபத்தக்கது.

குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழக நூலகமோ அல்லது வேறு நிறுவன நூலகங்களோ தமது வாசகர்களுக்குப் பயன்படாதெனக் கருதும் நூல்களை இரத்துச் செய்யும்போது பாடசாலை நூலகங்கள் அவற்றோடு தொடர்புகொண்டு, பாடசாலை நூலக வாசகர்களுக்குப் பயனளிக்கத்தக்க ஆக்கங்களைத் தெரிவு செய்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதன்மூலம் தமது நூலகங்களை மேலும் நிறைவடையதாக்க்லாம். முக்கியமாக வளர்முக நாட்டுப் பாடசாலை நூலகங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படலாம். இலங்கையில் பிரித்தானியக் கவுன்சில் நூலகம், அமெரிக்க தகவல் நிலையம் ஆகியன இந்த வகையில் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு உதவிவழங்கி வருகின்றமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

சேவைப்பகுதிகள் :
பல்கலைக்கழக நூலகம், பொதுசன நூலகம் ஆகியவற்றைப் போலன்றிப் பாடசாலை நூலகமானது சிறிய இடத்தினைக் கொண்ட நூலகமாக இருப்பதனாலும், வாசகரின் தேவை, நூலக பாவனையின் ஆரம்ப நிலையாக இருப்பதனாலும், தனித்தனிச் சேவைப்பகுதிகளாகப் பிரித்துச் சேவை வழங்குதல் மிகக் குறைவாகும். எனினும் நூல்களின் தன்மை கொண்டு நூலகத்திலேயே பயன்படுத்துவதற்குரிய உசாத்துணை நூல்கள், உடனடி உசாத்துணை நூல்கள் ஆகியவற்றையும் மாணவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடிய நூல்களையும் வேறுபடுத்தி ஒழுங்குபடுத்தல் அவசியமாகும்.

உசாத்துணை நூல்கள்

பாடசாலை நூலகமானது உசாத்துணைச்சேவை மூலம் மாணவர்களிடையே ஆய்வுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். துமக்கு வேண்டிய விடயங்களைப் பல்வேறு நூலக ஆவணங்களிலிருற்தும் தேடிப் பெற்றுக் கொள்ளும் வசதியினை உசாத்துணைச் சேவை வழங்குகிறது. நூலகத்திற்குக் கொள்வனவு செய்யப்படும் நூல்களைத் தெரிவு செய்து இயலுமாயின் தனியறையில் அல்லது நூலகத்தில் தனி இருக்கையில் அல்லது அலுமாரியில் ஒழுங்குபடுத்தல் வேண்டும். அகராதிகள், கலைக்களஞ்சியத் தொகுதிகள், பாடவிதானத்தோடு தொடர்புடைய அரசாங்க வெளியீடுகள் முதலியவற்றோடு பாடசாலை அமைந்துள்ள சுற்றாடல் பற்றிய ஆக்கங்களையும்,, உசாத்துணைப் பகுதியிலேயே பாதுகாத்தல் நன்று. பத்திரிகைகளில் வெளிவருகின்ற கல்வியோடு தொடர்புடைய செய்திகள், கட்டுரைகள், ஆகியவற்றைக் கத்தரித்து அவற்றைப் பேரேடுகளில் ஒட்டிப் பாதுகாத்தல் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையும். மாணவர்கள் இந்த ஆவணங்களை நூலகத்திலேயே பயன்படுத்த வேண்டியிருப்பதனால் அதற்கேற்ப இருக்கை வசதிகளையும் ஒழுங்குபடுத்துதல் நூலகரது கடமையாகும்.

இரவல் வழங்கல் சேவை :

மாணவர்கள் தமது பாடசாலை நேர அட்டவணையில் ஒதுக்கப்பட்;ட “ நூலக நேரத்தில் ’’ நூலகத்திற்கு வந்து வேண்டிய நூல்களை அங்கேயே பயன்படுத்துவதோடு, இரவலாகப் பெறத் தகுதியுள்ள நூல்களில் தமக்கு விரும்பியவற்றைத் தெரிவுசெய்து வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு நூல்கள் இரவல் வழங்குவதற்கு பிறவுண் நூல் இரவல் வழங்கல் முறையையோ (டீசழறn உhயசபiபெ ளலளவநஅ) நிய+வார்க் நூல் இரவல் வழங்கல் முறையையோ (நேறயசம உhயசபiபெ ளலளவநஅ ) பின்பற்ற வேண்டியதில்லை . பாடசாலை நூலகங்களில் அனேகமாகப் பேரோட்டு முறையையே (டுநனபநச ளலளவநஅ) பின்பற்றுதல் வழக்கம். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பதிவேட்டைப் பராமரித்து மாணவர்களது பெயரின்கீழ் அவர்களால் இரவல் பெறப்படும் நூல்களைப் பதிவுசெய்து, பின்பு அவை நூலகத்திற் கையளிக்கப்படுமிடத்து இப்பதிவினை இரத்துச் செய்து விடுதல் இலகுவான முறையாகும்.

இன்றும் அனேக வளர்முகநாடுகளின் பாடசாலை நூலகங்களில் அனேகமாக ஒரு ஆசிரியரே நூலகராக இருப்பதனாலும், பெரும்பாலும் நூலகவியற்றுறையில் பயிற்சியற்றவராக இருப்பதனாலும், மாணவர்களது தொகையைப் பொறுத்தும், இத்தகையதொரு முறையே சிறந்ததாகும். ஆயினும் உயர்தர பாடசாலையின் மேற்குறிப்பிட்ட அம்சங்களைக் கருத்திற் கொண்டு, வசதிக்கேற்ப பிறவுண் முறையையும் பின்பற்றலாம். இவை தவிர ஒவ்வொரு நூலுக்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தி அதில் அந்நூலைப் பயன்படுத்தும் வாசகர் பெயரைக் குறித்து, பின்நூல் திரும்பத் தரப்படும்போது பெயரை இரத்துச் செய்யலாம். அல்லது ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு அட்டையை வழங்கி அதில் அவர் இரவல் பெறும் நூலின் விபரங்களைப் பகிர்ந்து நூலகத்திற் பாதுகாத்துப் பின்பு நூல் திரும்பக் கையளிக்கப்படுமிடத்து அப்பதிவினை திருப்பிக் கொடுத்தும் நூலை இரவல் வழங்கல் முறையை நடைமுi8றப்படுத்தலாம்.

நூலகர் :

பொதுவாகப் பாடசாலை நூலகங்களில் பயிற்சிபெற்ற நூலகர்களை நியமித்தல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அனேகமாக ஆசிரியரில் ஒருவரே நூலகப் பொறுப்பினையும் ஏற்று நிர்வகித்தல் வழக்கம். அவர் சக ஆசிரியகள், மாணவத் தலைவர்கள் ஆகியோரின் உதவியுடன் நூல்களை ஒழுங்குபடுத்திச் சேவையை மேற்கொள்ளலாம். நூலகர் மாணவர்களுடன் அன்போமு ஆறுதலாகக் கேட்டு, பொறுமையோடு உதவக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

பாடசாலை நூலகரின் முக்கிய கடமைகள் :

1. நூலக ஆவணங்களைத் தெரிவு செய்து சேகரித்தல்
2. மாணவர்கள் ஆசியர்கள் ஆகியோருக்கு நூலகத்தைப் பயன்படுத்துவதில் ஆலோசனை வழங்கல்
3. நூலக ஒழுங்கு விதிமுறைகளை உருவாக்கல்

பாடசாலை வேலைகளுக்கு நூலகம் எத்தகைய பங்களிப்பினைச் செய்ய முடியும் என்பதனை அறிவதோடு, தனது சக ஆசிரியர்களுக்கும் அதுபற்றி அறிவுறுத்துதல் வேண்டும். தமது நூலகத்திலுள்ள நூல்கள் ஆவணங்கள் ஆகியன பற்றிய தெளிந்த அறிவுடன் இருப்பதோடு புதிய வெளியீடுகள் பற்றி அறிவதில் ஆர்வமுடையவராகவும் தனது நூலகத்திலுன்ன நூல்களை ஒழுங்குபடுத்தித் திறமையான முழுமையான சேவையினை வழங்கக் கூடியவராகவும் இருத்தல் வரவேற்கத்தக்கதாகும்.

எனவே பாடசாலை நூலகமானது மாணவர்களைச் சிறுவயது முதலே நூலகங்களைப் பயன்படுத்துவதற்கு நெறிப்படுத்தும் களமாக விளங்குகின்றது. புhடசாலை நூலகர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் நூல்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதன் மூலம் மாணவர்கள் தமது ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கப் பழகிக் கொள்கின்றனர் : பயனுள்ள நூல்களை வாசிப்பதிலும், அவை பற்றித் தமது சக மாணவர்களுடன் உரையாடுவதிலும் அக்கறை செலுத்துகின்றனர். அவர்கள் வளர்ந்தவர்களான பின்பும் இப்பண்பு அவர்களிடமிருப்பதனால் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆரம்பப் பணியில் பாடசாலை நூலகங்களும் பங்கு வகிக்கின்றனவெனலாம்.

இலங்கையில் பாடசாலை நூல்கங்கள் :

இலங்கையிலுள்ள பாடசாலை நூல்களின் அமைப்புமுறையினை மேற்கு நாடுகளிலுள்ள அமைப்பு முறையுடன் ஒப்பிடுகையில் அது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இவ்வாறு காணப்படுகின்றமைக்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கல்விமுறையும் பின்னணியாக அமைகின்றது. இலங்கையில் இலவசக்கல்வியின் அறிமுகத்திற்கு முன்னர் கல்வியும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. புhடசாலைகள் யாவும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்ற மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்படலாயின. ஆங்கிலப் பாடசாலைகளே உயர்கல்வி அளிப்பனவாகச் செயற்பட்டன . தழிழ், சிங்களப் பாடசாலைகளின் தரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

1940 ஆம் ஆண்டில் இலங்கையில் கல்விநிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட நியமிக்கப்பட்ட விசேட கல்விக் குழுவினர் தமது அறிக்கையில் இலவசக் கல்வியின் அறிமுகத்தை வற்புறுத்தினர் இதனை தொடர்ந்து 1945 இல் இலங்கையில் இ.லவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இலவசக் கல்வியை வழங்குவனவாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

இந்த மாற்றத்தோடு பாடசாலைகளின் நூலக வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படலாயிற்று, சமய நிறுவனங்களின் ஆதரவுடன் இயங்கி வருகிவனவும் தனியாரினால் நடாத்தப்பட்டனவுமான பாடசாலைகளில் நூலக வசதிகள் ஓரளவு நல்ல நிலையிலிருந்தன. ஆயினும் இந் நூலகங்களைப் பயன்படுத்துதல் குறைவாகவே இருந்தது. நூல்கள் பெரும்பாலும் அலுமாரிகளில் ப+ட்டப்பட்ட நிலையிற் பாதுகாக்கப்பட்டன. பொழுதுபோக்கு வாசிப்பிற்குரிய நூல்கள் இந் நூலகங்களில் மிகக் குறைவாகவே இருந்தன.
அத்தோடு மாணவரிடையே வாசிப்புப் பழக்கமும் மிகவும் மந்த நிலையிலேயே இருந்தது. 1960 களின் பிற்பகுதிவரை இந்நிலை நீடித்தது எனலாம்.

1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பாடசாலை நூலக வளர்ச்சியில் ஆர்வம் காட்டப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது. புhடசாலை நூலகங்கள் தொடர்பான முதலாவது சட்டம் 1960 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1961 இல் நியமிக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவினால் பாடசாலை நூலகங்களில் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. இதே காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதந்த யுனஸ்கோ நிறுவன நிபுணரான எச். வி. பொனி (ர்.ஏ.டீழலெ) என்பவர் பாடசாலைகட்கான மத்திய நூலக நிறுவனத்தை அமைபபதற்குச் சிபார்சு செய்தார். ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 1967 ஆம் ஆண்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட செல்வி. ஈ.ஜே. ஈவான்ஸ் (நு.து.நுஎயளெ) என்பவர் இலங்கையில் பாடசாலை நூலகம், பொது நூலகம் என்பவற்றை விருத்தியடையச் செய்வதற்கான திட்டமொன்றை தயாரிக்கும் படி பணிக்கப்பட்டார்.

அதே ஆண்டில் கொழும்பில் ஆசியாவில் நூலக சேவையை தேசிய அடிப்படையில் திட்டமிடுதல் (யேவழையெட Pடயnniபெ ழக டுiடிசயசல ளுநசஎiஉந in யுளயை) என்ற விடயம் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் தோற்றத்திற்கு அடிகோலப்பட்டது. 1970 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தின்படி இச் சபை நிறுவப்படுவதாயிற்று. இலங்கையில் பாடசாலை நூலகங்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுதல் தேசிய நூலகச் சேவைகள் சபையின் கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. 1967 இல் நடைபெற்ற இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இலங்கையில் பாடசாலை நூலகங்கள் நூறு நிறுவப்பட்டமையும் இலங்கையிலுள்ள பாடசாலை நூலகங்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதொரு நடவடிக்கையாகும்.

ஈழத்துப் பாடசாலைகளில் மரபு வழியாக எண்கணிதமும், கணிதமும் முறையே கலைத்துறை மாணவர்களுக்கும், விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கும் போதிக்கப்பட்டு வந்தன. 1972க்குப் பின்பு இவ்விரு பாடநெறிகளும் ஒன்றிணைக்கப்பட்டு “ கணிதம்” என்ற பெயரில் அனைத்து மாணவர்கயுளுக்கும் போதிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய நவீன கல்வி கோட்பாட்டில் அனைத்து மாணவருக்கும் கணித அனுபவங்கள் என்ற சிந்தனை செயங்படுத்தபட்டு வருகிறது. அவ்வகையில் பாடசாலை நூலகங்களில் கணித நூல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இவை கணித பாடநெறி நூல்களாக மட்டுமன்றி கணிதத்தோடு தொடர்புடைய புதிர்கள், விளையாட்டுக்கள், கதைகள் சார்ந்த நூல்களாகவும் அமைதல் இன்றியமையாததாகும்.

இது போன்ற இன்றைய விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞானக் கல்வியின் மேம்பாடும் அதன் பயன்தரு நெறிகளும் உணரப்ட்டுள்ளன. கணிதநெறி நூற்சேகரிப்புப் போன்றே தனியே பாட நூல்களாக மட்டுமன்றி மாணவர்களின் சுயசிந்தனை, கற்பனை என்பவற்றைத் தூண்டத்தக்க, வகையிலான பொது அறிவு விஞ்ஞானநெறி நூல்களைப் பாடசாலை நூலகங்கள் கொண்டிருத்தல் மிக அவசியமாகும். புதிய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் விஞ்ஞானக் கதைகள், விஞ்ஞானந்தரும் அற்புதங்கள் என்பன பற்றிய நூல்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றோடு விஞ்ஞான விளக்கப்படங்கள், விஞ்ஞானத் திரைப்படக் காட்சிகள் என்பனவும் ஈழத்துப் பாடசாலை நூலகங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தல் வேண்டும்.

1981 ஆம் ஆண்டு இலங்கைக் குடிசனமதிப்பீட்டின் முழுச் சனத்தொகையில் நகரமட்டத்தில் 8’9 வீதத்திற்கும், கிராமிய மட்டத்தில் 14’5 வீதத்தினரும் பாடசாலைக்குச் செல்லாதோராகக் கணிக்கப்பட்டனர். எனவே ழுமு இலங்கையின் சனத்தொகையினை நோக்கும்போது பாடசாலைக்குச் சென்றோரது எண்ணிக்கை மிகப்பெரிதாகவே உள்ளது. எனவே முழுச் சனத்தொகையின் மிகக் கணிசமான பகுதியினர் செல்கின்ற பாடசாலைகளிலமையும் நூலகங்களின் அமைப்பிலும், அவற்றைத் திட்டமிடுதலிலும் மிகவும் கவனம் எடுக்க வேண்டியது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

1977 ஆம் ஆண்டு இலங்கையில் ஏறக்குறைய 700 பாடசாலை நூலகங்கள் இருந்ததாகவும், பாடசாலை நூலக அபிவிருத்திக்கென அவ்வாண்டில் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றன. 1982 ஆம் ஆண்டில் 3800 பாடசாலை நூலகங்கள் இயங்கியதோடு அவற்றின் அபிவிருத்திக்கென 65 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிகின்றது. புhடசாலை நூலக அபிவிருத்தியின் முக்கியமான அறிகுறியாக கருதலாம். புhடசாலை நூலகங்களுக்கு வேண்டிய நூல்ககள், சஞ்சிகைகள் , ஆய்வுப்படத் தொகுதிகள் புவியியற்படங்கள் என்பன இந்நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.

இன்று அனேகமாகச் சகல தரப்பட்ட பாடசாலைகளிலும் அவற்றின் நிதி, இடவசதி மாணவர்களின் தொகை என்பவற்றுக்கேற்ப நூலக வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அனேகமான பாடசாலைகளில் பாடசாலை ஆசிரியர் ஒருவரே படிப்பித்தலோடு நூலகப் பொறுப்பையும் ஏற்று நடத்துமாறு நியமிக்கப்படுகின்றார். நிதிவசதியுள்ள சில பாடசாலைகளில் நூலகர் நியமிக்கப்பட்டிருக்கக் காணலாம். பாடசாலை நூலகங்களுக்குண்டு.

இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையானது பாடசாலை நூலகர்களுக்கென பயிற்சி வகுப்புகளை மாவட்ட அடிப்படையில் நடத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட சில பாடசாலை நூலகங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றின் முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியுடன் அந்நூலகங்களை விருத்தி செய்யும் முயற்சி ஆரம்பிக்கப்படுவதாயிற்று. பாடசாலை நூலகங்களில் கடமையாற்றுகின்ற நூலகர்களுக்கெனக் குறுகிய சேவைக் காலப் பயிற்சித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டன. 1973 ஆம் 1974 ஆம் ஆண்டுகளில் இத்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருடந்தோறும் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் உள்ள பாடசாலை நூலகர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளினால் பாடசாலை நூலகங்களில் நூலகவியல் துறையில் அடிப்படைக் கல்வியைப் பெற்றவர்களையாவது நூலகர்களாக நியமித்துத் தரமான சேவையினை வாசகர்களுக்கு நல்கக்கூடியதாகவுள்ளது.

இலங்கையின் பாடசாலை நூலகர்கள் பெரும்பாலும் ஒரு வகுப்பறையை மட்டுமே கொண்டவையாக இருக்கின்றன. ஒரு சில உயர்தர பாடசாலைகளிலேயே இடவசதியுள்ள நூலகங்கள் தொழிற்படக் காண்கின்றோம். பாடசாலை அதிபர்கள் நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நூலகத்தை விரிவாக்க வேண்டிய நடைமுறைகளைக் கவனித்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள ஓரளவு பெரிய அறையையாவது நூலக சேவைக்கு ஒதுக்குவதோடு கல்வி அதிகாரியுடன் தொடர்புகொண்டு நூற்றொகையை விரிவாக்குவதற்கும் முயற்சியெடுத்தல் வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர் ஆசியர்சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், என்பவற்றிற்கும் நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி அவர்கள் மூலம் நூலகத்தை விருத்தி செய்து கொள்ளலாம்.

பாடசாலைகள் தோறும் “ நூலக வாரத்தை’’ ஒழுங்கு செய்து மாணவர்;கள் மூலம் அந்தந்தப் பிரதேச மக்களிடமிருந்து நூல்களையோ, நிதி உதவியையோ பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும். வேறு நூலகங்கள் தமது வாசகருக்குப் பயன்படாதென நூல்களை இரத்;துச் செய்யும் போது அவற்றில் பாடசாலை மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய நூல்கள் இருந்தால் அவற்றைப் பெற முயலலாம்.

பாடசாலை நூலகமானது எப்போதும் அண்மையிலுள்ள பொது நூலகத்துடன் முக்கியமாக மாநகரசபை நூலகத்துடன் அல்லது தத்தமது பகுதிகளிலுள்ள பெரிய பொது நூலகத்துடன் தொடர்பு வைத்திருத்தல் வேண்டும். பாடசாலை மாணவர்கள் அண்மையிலுள்ள பொது நூலகத்திற்குச் சென்று நூலகர் ஆகியோரது கடமையாகும். பாடசாலை நூலகமானது எத்துணை சிறந்த சேவையை வழங்குவதாக இருந்தாலும் ஆசிரியரும் நூலகரும் ஒன்றிணைந்து செயற்பட்டுப் பொது நூலகத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பயனடையச் செய்தல் வேண்டும்.

இதைத் தவிரக் குறிப்பிட்ட பிரதேசத்தில் சேவையாற்றுகின்ற பொது நூலகமானது அப்பகுதிப் பாடசாலை மாணவர்களது தரத்திற்கேற்ப நூல்களைக் கொள்வனவு செய்து, அவற்றை ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு ஒழுங்குமுறையில் வழங்கி மாணவர்களுக்குச் சேவை புரியலாம். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகை நூல்களை வழங்கி உதவி செய்யலாம். அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இம்முறை பொது நூலகம் ந}ல்களை வழங்கிச் சேவை நல்க முன்வருதல் வேண்டும்.

அத்தோடு குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை நூலகங்களே தமக்குள் நூலகக் கூட்;டுறவை ஏற்படுத்தி நூல்களை ஒன்றுக்கொன்று இரவல் வழங்கிக் கௌ;வதன் மூலமும் வாசகரது தேவையைப் ப+ரணப்படுத்தலாம். இலங்கையின் பாடசாலை நூலகங்களில் காணப்படுகின்ற பொதுவான அம்சமாகிய இடவசதியின்மை, நிதிப்பற்றாக்குறை ஆகிய நிலைமைகளைச் சமாளித்து நல்லமுறையில் நூலகப் பயன்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய நடவடிக்கைகள் உதவியாக அமையும் என எதிர் பார்த்தல் ஏற்புடையதாகும்.

அனேகமான பாடசாலைகளில் நூலகம் இருந்தபோதிலும் வகுப்புகளுக்குரிய பாடநேரங்களில் ஒன்றையேனும் நூலக பாவனைக்கென ஒதுக்கியுள்ளதாக அறிய முடியவி;ல்லை. இதில் அதிபர்களும் ஆசிரியர்களும் அக்கறை காட்டுவதோடு மாணவர்களிடையே நூலகப் பண்பாடு பற்றியும் எடுத்துகூறுதல் வேண்டும். மாணவர்களைப் பாடசாலைப் பாடவிதான வட்டத்தோடு இருக்கவிடாது பரந்துபட்ட அறிவைப் பெறும் பொருட்டு அவரவர் தரத்திற்கேற்ப நூல்களை வாசிக்கும்படி தூண்டுதல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

பாடசாலை நூல்களிலே நூலகர் மாணவர் மத்தியில் எழுத்தாற்றலையும், கற்பனைத் திறனையும் தூண்டும் வகையில் இடைநிலை வகுப்புகளிலிருந்து உயர்வகுப்பு மாணவர்வரை வகுப்பு ரீதியாக “ கையெழுத்துச் சஞ்சிகைகளை’’ எழுதுவித்து நூலகங்களிற் பேணி வரலாம். ஆண்டுதோறும் இவ்வாறான சஞ்சிகைகளைத் சேகரித்து, அவற்றை வழிவழி வரும் மாணவர் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் அளிக்கும்போது மாணவரின் இயல்ப+க்க சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் இவை துணையாக அமைகின்றன.

ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோரும் தமது பிள்ளைகளை அறிவியல் நூல்களை வாசிக்கத் தூண்டுதல் வேண்டும். சில பாடசாலைகளில் நூல்களை வாசிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்குக்கூட பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களைப் பொறுப்பாக பெற்றுச்சென்று அவற்றை மீளவும் நூலகத்திற் கையளிக்கச் செய்தல் வேண்டும். சிறுவர்கள் நூல்களைத் தவறவிடக்கூடும். அல்லது சேதப்படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடு பாடசாலை நூலகர்களுக்கு ஏற்படுதல் இயல்பே.
எனவே பாடசாலை நூலகசேவை திறம்பட நடைபெற ஆசிரியர்களது பங்கு மட்டுமன்றி பெற்றோரின் பங்களிப்பும் மிகவும் வேண்டப்படுவதொன்றாகின்றது. முக்கியமாக ஆரம்பப் பாடசாலைகளின் நூலக சேவைகளில் பெற்றோர் கூடியளவு கவனம் செலுத்துதல் வேண்டும். சிறு வயது முதல் நூலகத்தைப் பயன்படுத்திவரும் ஒரு மாணவன் இடைநிலைப் பாடசாலைகள்குச் செல்லும்போது பொறுப்புணர்ச்சியோடு நூலகத்தைப் பயன்படுத்தும் பக்குவத்தைத் தானாகவே அடைந்துவிடுகின்றான்.

இலங்கையிலுள்ள நூலகங்களுக்குள் முக்கியமாகப் பாடசாலை நூலகங்கள் எதிர்நோக்குகின்ற மற்றுமொரு முக்கிய பிரச்சினை தாய் மொழிகளில் போதியளவு நூல்கள் கிடைக்கப்பெறாமையாகும். பாடசாலைகளின் தரத்திற்கேற்ப இலக்கிய ஆக்கங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், உசாத்துணை நூல்களாகிய கலைக்களஞ்சியம், அகராதிகள் என்பன ஆங்கில மொழிகளிலுள்ளவைபோல தெரிவுசெய்து வாங்கக்கூடியளவிற்குத் தமிழ், சிங்கள மொழிகளில் குறைவே. தழிழ் மொழியைப் பொறுத்தமட்டில் பெருமளவிற்குத் தழிழ்நாட்டு வெளியீடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே இலங்கையிலுள்ள இலக்கிய ஆக்கங்களையே எழுத முன் வருதல் வேண்டும். அத்தோடு, அந்தந்தப் பாடசாலை மாணவர்களது தரத்திற்கேற்றவாறு அவர்கள் படிப்படியாக வாசித்து முன்னேற உவக்கூடியவையான ஆங்கில நூல்களையும், ஒவ்வொரு பாடசாலை நூலகமும் தனது இருப்பிற் சேர்த்துக் கொளளுதல் வேண்டும்.

1979 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டமையையொட்டி எழுத்தாளர்களிடையே சிறுவர்களுக்கான நூல்கள் எழுதும் போட்டியொன்று நடாத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறுவர் நூல் ஆசிரியர்களுக்குப் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, முதல் இடங்களைப் பெற்ற சிறுவர் நூல் ஆசிரியர்களுக்குப் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, முதல் 20 இடங்களையும் பெற்றோருக்குச் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. இவ்வாறு இலக்கியகர்த்தாக்களை ஊக்கப்படுத்துவதில் இலக்கிய மன்றங்கள், எழுத்தாளர்கள் சங்கங்கள் ஆகியனவும் கவனம் செலுத்திப் பாடசாலை மாணவர்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய நூல்களை வெளியிடுவதற்கு முன்வருதல் வேண்டும்.

பாடசாலை நூல்களில் நூற்சேர்க்கையை மாணவர்கள் இலகுவில் இனங்காணக்கூடியதாக விடய அடிப்படையில் பிரித்து ஒழுங்குபடுத்தவ் நூலகரது கடமையாகும். தூயிதசாம்சப் பகுப் பார்க்கத் திட்டத்தின் சுருக்கப் பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இதனைச் செயற்படுத்தலாம் மாணவர்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்தும் முறையினை தெளிவாக விளக்குவதன் மூலம், அவர்கள் தாமாகவே நூல்களைத் தேடிப் பெற்றுக் கொள்ளும் திறமையை அடைகின்றனர். இதனால் பாடசாலை நூலகத்தை மட்டுமன்றிப் பொதுநூலகத்தின் அங்கத்தவராகச் சேரும் மாணவன் அங்கும் எவ்வித க~;டமுமின்றி இலகுவில் தனக்கு வேண்டிய நூலைத் தெரிவு செய்து கொள்ள முடிகின்றது.

எனவே பாடசாலை நூலகங்களில் அபிவிருத்தியில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு பெற்றோரும் அக்கறை காட்டுவதன் மூலம் தமது பிள்ளைகள் தரமான நூலக சேவைபை; பெற்று அறிவை விருத்தி செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. மாணவர்களின் ஆளுமை வகுப்பறைகளில் மட்டுமன்றி, நூலகங்களிலும் வளர்க்கப்படுகின்றன. தோற்றுவிக்கப்படுகின்றன. எனவே மாணவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்கத் தக்கதான பாடசாலையின் நூலகச் சூழல் என்னும்போது கல்வி, கலை, கலாசாரம், சிந்தனை நவீனத்துவம் அனைத்தையும் பெறத்தக்க ஒரு அறிவியற் சூழல் கொண்டதாக பாடசாலை நூலகம் திட்டமிடப்பட வேண்டும்.

இயல் இரண்டு

பல்கலைக்கழக நூலகங்கள்

பல்கலைக்கழக கல்வியின் உயிர்நாடியாக விளங்கிய மாணவர்கள், விரிவுரைகள், ஆராச்சியாளர்கள் ஆகியோருக்குச் சேவை வழங்கி வருவது பல்கலைக்கழக நூலகமாகும். பல்கலைக்கழகக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாகவே நூலகம் கருதப்படுகின்றது. பல்கலைக்கழக நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் பிரித்தானியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் 1921 ஆம் ஆண்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஒரு பல்கலைக்கழகத்தின் சிறப்பும் திறமையும் அதன் மத்திய உறுப்பான நூலக சேவையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றது. எனவே பல்கலைக்கழகத்தில் நூலகம் முக்கியத்துவம் பெறுவதால் அந்நூலகம் முழுமை வாய்ந்ததாகவும், மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் முழுநிலையான சேவைகளை வழங்கக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றதா என்பதில் அப்பல்கலைக்கழக நிர்வாகம் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும்.

எந்தவொரு பல்கலைக்கழகமும் அதன் நூலகத்தினது வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் அவசியமாகும். உயர்கல்வியின் பல்வேறு துறைகளிலும் துரித வளர்ச்சியேற்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் நூலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய இடமும் அதன் செயற்பாடுகளும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

பல்கலைக்கழகத்தின் நோக்கத்திற்கமைய பல்கலைக்கழக நூலகத்தின் நோக்கமும் செயற்பாடுகளும் அமைகின்றன. இந்த வகையில் ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் அல்லது செயற்பாடு பற்றி அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள்

பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் எவை என்பதனை அறிந்து கொள்வதன் மூலம் அதன் உயிர்நாடியாக விளங்கும் நூலகத்தின் செயற்பாட்டினை விளங்கிக் கொள்ளுதல் எளிதாகின்றது. இவ்வுலகில் காலத்திற்குக் காலம் வாழ்ந்து வந்த அறிவாளிகள், ஞானிகள் ஆகியோரின் அறிவுப் பொக்கி~ங்களைப் பாதுகாக்க வேண்டிய இடம் பல்கலைக்கழகமேயாகும்.. இப் பௌதிக உலகில் மனிதன் பகுத்தறிவுவாதத்தினால் திரட்டப்பட்ட கருத்துகளையும் சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க வகையில் செயற்பட வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமையாகின்றது.

இவ்வாறான சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட மூத்த தலைமுறையினரின் அறிவும் கருத்துக்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் சுமுதாயத்தின் எதிர்காலத் தலைவர்களாக மாணவர்களது கல்விக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆகியோராலும் இவை பயன்படுத்தப்படப் பல்கலைக்கழககம் வாய்ப்பளிக்கின்றது.
கல்லூரிகள் கற்பித்தலையே குறிக்கோளாகக் கொண்டியங்குவன. ஆனால், பல்கலைக்கழகங்கள் கற்பித்தலோடு ஆராய்ச்சித் துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டமை. ஆராய்ச்சி மேற் கொள்ளக்கூடிய வசதிகளை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் செய்து கொடுப்பதன்மூலமும், சுயசிந்தனை , சுய ஆக்கம் முதலியன வளரத்தக்கவகையில் பல்கலைக்கழகம் செயற்படுகின்றது. இதன் மூலம் ஒரு பல்கலைக்கழகம் தனது நாட்டின் சமூகப் பொருளாதார அறிவியல் துறைகளில் மட்டுமன்றி ஆன்மீகத்துறைகளிலும் கல்வியாளர்களை நெறிப்படுத்தும் செயவல் துறைகளில் ஈடுபடக்கூடியதாகின்றது.

பல்கலைக்கழகமானது ஆராய்ச்சியிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பதிலும் ஈடுபடுவது மட்டுமல்லாது, புதிய புதிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் முடிவுகளை உலக மக்களுக்குத் தனது வெளியீடுகளின்மூலம் வழங்கும் பணியினையுடையது.

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல்துறை மாணவர் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மட்டுமன்றி உழைக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் நூலகம் தனது தேவையை விரிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளது. பல நாடுகளில் தொழிலாளர்களுக்கான கல்விப்போதனை (றுழமநசள நுனரஉயவழைn) வளர்ந்தோர் கல்வி (யுனரடவ நுனரஉயவழைn) ஆகியன பல்கலைக்கழகங்களில் பரந்தளவில் நடைபெற்று வருவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இது போன்றே நாட்டுப்புற மையங்களில் விரிவுரைகள், பயிற்சி வகுப்புக்கள் முதலியவற்றையும் ஒழுங்குசெய்தல் அவசியமாகும். இவ்வாறாகப் பல்கலைக்கழகம் ஒரு நாட்டில் முழு சமூகத்திற்கும் பயன்படக்கூடிய செயற்பாடுகளைக் கொண்டதாக அமைய வேண்டும். பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வசதிகள் சமூக சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பல்கலைக்கழகத்தில் குறுகியகால வகுப்புக்களும் நடைபெறுகின்றன. இவை தவிர முதலியனவும் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பல்கலைக்கழகத்தினால் மேற் கொள்ளப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சி முடிவுகள் ஏனைய அறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டியவையாகும். ஆதற்கேற்றவகையில் ஆராய்ச்சி மகாநாடுகள்,கருத்தரங்குகள் என்பன நடாத்தப்படடுக் கருத்துக்கள் பரீசீலிக்கப்படவேண்டும். ஆய்வாளரின் கருத்துக்கள் அங்கீகாரம் பெற்று அவை சமூகத்திற்குப் பயன்படவேண்டும். இவற்றையும் பல்கலைக்கழகம் தனது செயற்பாட்டில் கவனித்தல் அவசியமாகும்.

மேற்கூறப்பட்ட செயற்பாடுகளைப் பல்கலைக்கழகம் திறப்படச் செய்து கொள்வதற்குப் பல்கலைக்கழக நூலக சேவையானது திட்டமிட்ட முறையில் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஒரு நூலகம் திறமையான முறையில் தனது சேவைகளை நிறைவேற்ற சில அடிப்படைத் தேவைகள் இன்றியமையாதனவாகின்றன.

பல்கலைக்கழக நூலகத்தின் திறம்பட்ட சேவைக்கு அவசியமான அடிப்படைத் தேவைகள்

1. அறிவுறுத்தல், ஆராய்ச்சி, விரிவாக்கல் ஆகியவற்றுக்கான நூல்கள் : பல்கலைக்கழகத்தின் நோக்கங்களையும் அறிவுறுத்தல், ஆராய்ச்சி, விரிவாக்கல் ஆகிய செயற்பாடுகளையும் செல்வனே செய்வதற்குப் போதுமான அளவு நூல்கள் அவசியமாகும். நூலகத்தின் முக்கிய நோக்கங்கள் தீர்க்கப்பட்டதும் நூலகமானது நூல்விவரப் பட்டியல்கள் நூல்கள், பருவ இதழ்கள், பத்திரிகைகள், கையெழுத்துப் பிரதிகள், படங்கள் முதவியவற்றைத் தனது வாசகர்களுக்கு வழங்க முன்வர வேண்டும். நூலகத்தின் நூல் சேகரிப்புக் கொள்கையானது பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைசார்ந்த நடவடிக்கைகளுடனும் தொடர்புடையதாக அமைதல் வேண்டும் அத்தோடு அவ்வவ்போது, பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற மேலதிக விடயங்களுக்கு ஏற்ற வகையில் இடவசதி தளபாட உபகரண வசதிகள் ஆகியவற்றை விரிவுபடுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

2. அலுவலகர்
ஏத்துறையிலும் சரி அவ்வத்துறைகளில் விசேட கல்வி பயிற்சி பெற்ற திறமையான அலுவலர்களே தத்தம் துறைகள் வளரக் காரணிகளாகின்றனர். நூலக அலுவலர்கள், பல்வேறு கல்வித் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் நன்கு பயிற்றப்பட்டவர்களாகவும், பல்கலைக்கழகத்தின் நோக்கத்தை உணர்ந்தவர்களாகவும், இருந்தால்தான் பல்கலைக்கழக நூலகமானது தரமான சேவையை வழங்குவதோடு, பல்கலைக்க நிகழ்ச்சிகளிலும் உதவ வாய்ப்பாக இருக்கும்.

3. ஆவணங்கள் ஒழுங்குபடுத்தல்
மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக நூலகத்திலுள்ள நூல்கள், ஆவணங்கள் ஆகியன ஒழுங்குபடுத்தப்பட்;டிருத்தல் வேண்டும். சகல ஆவணங்களும் உரிய முறையில் பட்டியலாக்கம், பகுப்பாக்கம் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், கல்விக் கொள்கைகள், நடைமுறைகள் என்பனவற்றோடு நூலகமும் நெருங்கிய தொடர்பினை வைத்திருத்தல் இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழக நூலகம் அப்பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைக்கு ஆதரவளிக்கும் முறையில் செயற்படுதல் அதன் தலையாய செயற்பாடாகும். ஆதனைத் திறம்படச் செய்வதாயின் நூலக அலுவலர்கள் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டியவராகின்றனர். பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் நூலகத்தைப் பாதிக்கக்கூடியவையாகையால் நூலகம் அவ்வவ்போது அவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

4. நூலகமானது சமூக, பிரதேச தேசிய சர்வதேச நூல்களுடன் ஒருமைப்பாடுடையதாக இருத்தல்: குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்திற்கும் அதன் நூலகத்திற்குமுள்ள ஒருமைப்பாடு தொடர்பு ஆகியன பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் இருத்தல் வேண்டும்.

நூலக அமைவிடம்

இவ்வாறு பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சேவைபுரியும் கடமைப்பாடுடைய நூலகமானது பல்கலைக்கழகத்தின் மத்தியில், சகல பீடங்களைச் சார்ந்தவர்களும் இலகுவில் அணுகக்கூடிய இடத்தில் அமைந்திருத்தல் அவசியமாகும். பல்கலைக்கழகத்தின் இடவசதியின்மை காரணமாக ஏதாவதொரு பீடம் வேறொரு இடத்தில் அமைடந்திருக்குமாயின் அப்பீட மாணவர்கள் மத்திய நூலகத்திற்குச் சென்று பயன்படுத்துவது கடினமாகலாம். இத்தகைய நிலையில் பல்கலைக்கழக நூலகத்தின் சேவை பரவலாக்கப்படுகின்றது (னுநஉநவெசயடணைவழைn) அப்பீடத்திற்கென விசேட நூற்றொகையைக் கொண்டதான நூலகமொன்று உருவாலக்கப்படல் இன்றியமைததாகின்றது.

பல்கலைக்கழக நூலகத்தின் சேவையை இவ்வாறு பரவலாக்கிய போதிலும், அப்பீட நூலபத்தின் நிர்வாகப் பொறுப்பு மத்திய நூலகத்தையே சார்ந்ததாகும். இதனால் குறிப்பிட்ட பீடத்திற்கென விசேட நூலக சேவையை வழங்க முன்வரும் போதுப் பல்கலைக்கழக நூலகர் சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியவராகின்றார். ஆவையாவன : ( 1 சேவைக்கும் பாதுகாப்பிற்குமாக ஊழியர்களைப் பீட நூலகங்களில் கடமையீலீடுபடுத்துவதிலுள்ள சிரமம் (2 குறிப்பிட்ட நூல் பிரதான நுநூலகத்திலும்,பீட நூலகத்திலும் வாசகருக்குத் தேவைப்பட்டால் மேலதிக பிரதிகளைப் பெறுவதில் ஏற்படக்கூடிய நிதிப்பிரச்சினை : ( 3 நூலகரின் நேரடியான கண்காணிப்பின் கீழ் இன்மையால் ஏற்படக்கூடிய நிர்வாகப் பிரச்சினைகள் இவையும் இலகுவில் தீர்க்கப்படக் மூடிய பிரச்சினைககள் அல்லவாயினும் வேண்டியவிடத்து இயன்றளவு பரந்துபட்ட சேவையை வழங்குவதும் அவசியமாகின்றது.

நூலகக்குழு :

பல்கலைக்கழக நூலகங்களின் நிர்வாகப் பொறுப்புப் பிரதான நூலகரையே சாந்ததாகும். நூலக சேவையில் தலையிடும் அதிகாரம் எந்தவொரு தனி மனிதனுக்கோ குழுவிற்கோ இல்லை ஆயினம் நூலகருக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஒரு நூலகக்குழு இருத்தல் அவசியமாகும். இக்குழுவில் பல்கலைக்கழக ஆசிரியர்களே முக்கிய உறுப்பினர்களாக இருப்பார்கள்.

நூலகர் இக் குழுவின் உறுப்பினராக இருப்பதோடு, செயலாளராக அல்லது தலைவராக பதவி வகிப்பது வழக்கம். முக்கியமாக இக்குழுவானது நூலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பற்றியும் ஆலோசனை வழங்கும் கடமைப்பாடுடையதாகும். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி, கல்வித் திட்டங்கள், நிதி என்பன தொடர்பான எல்லாக் குழுக்களிலும் ஒரு பதவி முறைப்பட்ட உறுப்பினராக நூலகர் அங்கம் வகித்தல் மிகவும் பயனுடையதாகும்.

வாசகர்கள்:

பல்கலைக்கழக நூலகமானது மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்குச் சேவை வழங்குகின்றது. இம் மூன்று வகையினரிலும் மாணவர்களே மிக முக்கிய பங்கினை வகிக்கின்றனர். அவர்களது பாடவிதாத்தோடு தொடர்புடைய நூல்களையும், மேலதிக உசாத்துணை நூல்களையும் இந் நூலகமானது தனது இருப்பிற் சேர்த்துக் கொள்கின்றது. மாணவர்கள் தமது நேரத்தில் பெரும்பகுதியை நூலகத்திலேயே கழிக்க வேண்டியவர்களாகின்றனர். விரிவுரை மண்டபத்தில் கொடுக்கப்பட்ட குறிப்புக்களைக் கொண்டு மேலதிக நூல்களை வாசித்துக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாகத் தெளிவான விளக்கத்தைப் பெறும்பொருட்டு இவர்கள் பல்கலைகழக நூலகத்தை நாடுகின்றனர். அவர்களது பாடங்களுக்கேற்ப தேவையும் வேறுபடுகின்றது. மாணவர்களுக்கு வேண்டிய நூல்களைக் கொள்வனவு செய்து சேவை வழங்குதல் பல்கலைகழக நூலகத்தின் கடமை.

மாணவர்களது சுய அறிவு வளர்ச்சிக்குரிய ஆய்வுகூடமாக இந்நூலகம் விளங்குகின்து. மாணவர்களே இந் நூலகத்தின் முக்கிய வாசகர்களாகக் கணிக்கப்பட்டபோதிலும் அவர்களில் அனேகருக்கு நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் முறையில் அவர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழிகாட்டலும் வழங்கப்படுவதன் மூலமே நூல்கள் பருவ இதழ்கள், அறிக்கைகள் முதலிய சகல நூலக ஆவணங்களையும் பயன்படுத்தும் திறமையை அவர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. அன்றேல் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலங்களில் நூலகத்தில் அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியவையான அனேக நூல்கள் அவர்கள் அணுகக்ப்படாமலே விடப்படலாம். நூலகத்தில் உசாத்துணைச்சேவை வாசகர் சேவைபை; பகுதியானது மாணவர்களைச் சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நூலகத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை அவர்கள் பெறுகின்றார்கள்.

விரிவுரையாளர்கள் தமது விரிவுரைகளுக்கு வேண்டிய குறிப்புக்களைத் தயாரிக்கும் பொருட்டும், தமது மேற்படிப்பு ஆய்வுக்குரிய விடயங்களைப் பெறுவதற்காகவும், நூலகத்தை நாடுகின்றனர். இவர்கள் அண்மையில் வெளியான விசேட வெளியீடுகளைப் பெரிதும் விரும்புவர். பல பீடங்களைக் கொண்ட ஒரு பல்கலைக்கழக நூலகமானது இவர்களனைவரது தேவைகளையும் கவனித்தல் கடினமானதாகலாம். ஆயினும் பல்கலைக்கழக நூலகர் பீடாதிபதிகள், துறைதலைவர்கள், விரைவுரையாளர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு அவர்களது நூலகசேவைத் தேவை பற்றி அறிதல் உகந்ததாகும். இந் நூலகமானது சகல கல்வித் துறைகளுக்கும் சமமான சேவையினை வழங்கும் மத்திய நிலையமாக விளங்கி, விரிவுரையாளர்களுக்குமிடையே சுமூகமான தொடர்பு இருத்தல் அவசியமாகின்றது முக்கியமாக நூல் தெரிவு முதலான விடயங்களில் நூலகருக்கு விரிவுரையாளர்களது உதவி அவசியமாகும்.

மேற்குறிப்பிட்ட இரு வகையினரையும் தவிர ஆராய்ச்சியாளர்களும், பட்டப்பின்படிப்பு மாணவர்களும் பல்கலைக்கழக நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களேயாவர். அநேகமாகப் பல்கலைக்கழக நூலகங்களில் ஆராய்ச்சிக்கு உதவக்கூடியவையான நூல்கள் கட்டுரைத் தொகுதிகள், ஆய்வுக்கட்டுரைகள், அறிக்கைகள் முதலின ஏனைய நூல்களிலிருந்து வேறாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் உகந்தது. ஆராய்ச்சி மாணவன் பிறரது இடைய+றின்றித் தனது ஆய்வினை மேற்கொள்ளக்கூடிய படிப்பகச் சூழ்நிலையைப் பல்கலைக்கழக நூலகம் உருவாக்கிக் கொடுத்தல் விரும்பத்தக்கதாகும்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் எல்லா அலுவர்களும் இந் நூலகத்தைப் பயன்படுத்தும் தகுதியுடையவர்களே . அவர்கள் பொழுது போக்கிற்காக வாசிப்பதற்கும் வாசிப்பதற்கும் மேற்படிப்பைத் தொடர்வதற்கும், உதவக்கூடிய நூல்களைப் பெறும் பொருட்டு நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

வாசகர்கள் சரியான நூல்களைப் பெற்றுக்கொள்ள அவர்களை வழி நடத்தக்கூடிய விதத்தில் நூலக அலுவலர்கள் உற்சாகத்தோடு செயற்படுதல் மிக இன்றியமையாததாகும். வாசகர் தமக்கு வேண்டிய நூல்கள் நூலகத்தில் இருக்குமிடத்தை அறிந்து கொள்வதற்குக் கையாள வேண்டிய வழிமுறைகளை உணர்த்துபவர்களாக அலுவலர்கள் செயற்படுதல் வேண்டும். பல்கலைக்கழகத்தின் முக்கிய உயிர் நாடியாக நூலகம் விளங்க வேண்டுமாயின் வாசகர்களுக்கு தேவையான நூல்கள், சஞ்சிகைகள், ஆவணங்கள் ஆகியவற்றை தலைமுறையில் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அமைந்திருத்தல் இன்றியமையாததாகும்.

நூற்சேகரிப்பு

பல்கலைக்கழக நூலகத்திற்கு வேண்டிய நூல்களைக் கொள்வனவு செய்யும் போது நூலகர் சிலவிதிமுறைக் கடைபிடித்தே செயற்பட வேண்டியவராகின்றார் . ஒவ்வொரு பீடத்திற்குமென ஒதுக்கப்பட்ட நிதித் தொகையைப் பயன்படுத்தி நூல்கள், பருவஇதழ்கள், அரசாங்க ஆவணங்கள், அறிக்கைகள் கையேடுகள் என்பவற்றை இயன்றவு கொள்வனவு செய்யும் கடமை நூலகரைச் சார்ந்ததே.

மாணவர்களது பாடவிதானத்தோடு தொடர்புடையனவையும் எல்லாப் பயிற்சிகளிமுள்ள மாணவர்களாலும் வேண்டப் படுபவையுமான நூல்களைத் தெரிவு செய்தல் அவசியமாகும். ஆராய்ச்சி மாணவர்கள், பீட உறுப்பினர்கள் ஆகியோரது ஆராய்ச்சி வேலைகட்குப் பயனளிக்கக்கூடிய நூல்களையும் நூலகமானது பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இவற்றோடு நூல் விவரப் பட்டியல்கள், சுருக்கங்கள், அட்டவணைகள், பொது , விசேட கலைக் களஞ்சியத் தொகுதிகள், அகராதிகள், உள்ளுர் - வெளிநாட்டுப் பத்திரிகைகள் என்பவற்றையும் கொள்வனவு செய்தல் வேண்டும். பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் நூற்சேகரிப்பில் இடம்பெறுதல் அவசியம். ஏனைய நூலகங்களைப் போலன்றி அனேக பல்கலைக்கழக நூலகங்களில் நூலக ஆவணங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி பருவ இதழ்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தபடுதல் வழக்கமாகும்.

இந்த அடிப்படை நோக்கங்களுடன் பல்கலைக்கழக நூலகமானது அந்தந்த நாட்டோடு தொடர்புடைய, அல்லது அப்பல்கலைக்கழககம் அமைந்துள்ள பிரதேசத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆக்கங்களையும் சேகரித்தல் வேண்டும். பழமையானவையும், அச்சிற் கிடைக்காதவையுமான பழைய நூல்கள், ஆவணங்கள், புதிய ஆவணங்கள் ஆகியவற்றை சேகரித்தல் வேண்டும். அந்தந்த நாட்டோடு தொடர்புடைய வெளியிடப்பட்ட ஆவணங்களையும், வெளிவராத ஆவணங்களையும் சேகரித்தல் அவசியமாகும். இந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது முக்கியமாக இலங்கையில் வெளிவருகின்ற தழிழ், ஆங்கில நூல்களையும், கையெழுத்துப் பிரதிகள், ஏடுகள், முதலியவற்றையும் திரட்டுவதில் மிகுந்த கவனமெடுத்து வருகின்றமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும். இதிலும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோர்களது வாழ்க்கை குறிப்புகள், அப்பிரதேச மக்களது கலாசார விடயங்களை எடுத்தியம்பும் ஆக்கங்கள் என்பவற்றிற்கு இந் நூலகத்தில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றமை எதிர் காலத்தில் இந் ந}லகம் ஒரு பண்பாட்டு நிலையமாக விளங்க வாய்ப்பளிக்குமென்பதைனையே காட்டுகின்றது.

பல்கலைக்கழக நூலகமானது கொள்வனவு செய்தல், நன்கொடைகள், மாற்றுச் செய்தல், நிறுவனங்களில் அங்கத்துவம் வகித்தல் என்பவற்றின் மூலம் தனது நூற்சேகரிப்பைச் செய்கின்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் சிபார்சு செய்யப்பட்ட நூல்களோடு, நூற்தெரிவுக் கருவி நூல்கள் வெளியீட்டாளர்களினால் அனுப்பி வைக்கப்படுகின்ற நூல் விபரப்பட்டியல்கள், நூல் விமர்சனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி நூலகர் தான் தெரிவு நூல்களையும் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கொள்வனவு செய்கின்றார். இவை தவிர மாணவர்களது தேவை அறியும் பொருட்டு நூலகத்தில் சேவைப்பகுதியில் ஒரு பதிவேட்டினை வைத்து அவர்கள் விரும்பும் நூல்களை குறிப்பிடும் படி பணிக்கலாம். இவை துறைதலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது சிபாரிசின் பேரில் கொள்வனவு செய்யப்படுதல் உகந்தது.

அநேகமாகப் பல்கலைக்கழக நூலகமானது நேரடியாக விற்பனையாளர்களுடன் தொடர்பு கொண்டே நூல்களைக் கொள்வனவு செய்கிறது மேற்கு நாடுகளைப் பொறுத்தமட்டில் பல்கலைக்கழக நூலகத்திற்கு வேண்டிய நூல்கள் அவ்வவ்போது அந்நாடுகளிலேயே பெறக்கூடியதாகின்றது. ஆனால் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் பல்கலைக்கழக நூல்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. புதிதாக வெளிவந்த நூல் தெரிவுக் கருவிகள் ஒழுங்காகக் கிடைக்கப்பெறாமை வாசகர்களுக்குத் தேவைப்படுகின்ற நூல்களின் பெரும்பகுதி அந்தந்த நாட்டிலேயே கிடைக்கப்பெறாமை நூல்ல்களைப் பெறுவதற்குரிய கட்டளைகளை அனுப்புவதற்கும், அவற்றை பெற்றுக் கொள்வதற்குமிடையிலான காலதாமதம், வெளிநாட்டுக் கொடுப்பனவுகளை நிவிர்த்தி செய்வதிலுள்ள தாமதம், வாசகரின் உடனடித்தேவையை நிறைவேற்ற முடியாது போதல் பல பிரச்சினைகளை இவை எதிர்நோக்க வேண்டியவையாகின்றன.

இத்தகைய இடைய+றுகளுக்கிடையிலும் தமது வாசகரின் தேவையை நிநைவேற்றும் பணியில் பின்னிற்காமல் சகல பல்கலைக்கழக நூலகங்களும் வேண்டிய நூல்களைக் கொள்வனவு செய்வதில் முனைகின்றன. உள்ளுர்ப் புத்தக நிலையங்கட்குத் தாமே நேரிற் சென்று நூல்களைத் தெரிவு செய்ய முடியும். புpறநாட்டு வெளியீட்டாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நூல்களுக்குரிய பட்டியைத் தயாரித்து அனுப்பிஈ நூல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதும் உரிய பணம் செலுத்தப்படுகின்றது. இவை தவிர புத்தக நிலையங்களிற் சில தமது நூல்களைக் காலத்திற்குக் காலம் பல்கலைக்கழக நூலகங்களில் கண்காட்சிக்கு வைக்கின்றன. இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் தமக்குப் பயன்படக்கூடிய நூல்களை வாங்குவதற்குக் சிபார்சு செய்கின்றனர். மேலும் நூலகரம் வேண்டிய நூல்களைத் தெரிவு செய்து கொள்வனவு செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.

பருவ இதழ்களைப் பொறுத்தமட்டில் அனேகமாக ஒரு பிரதி நிதிய+டாகப் பெற்றுக் கொள்வதனால் நேரமும், செலவீனமும் குறைக்கப்படலாம். ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குரிய சந்தா செலுத்தப்பட்டு நிலையான கொள்வனவுக் கட்டளை ளுவயனெiபெ ழசனநச) பிறப்பிக்கப்படுகின்றது. வருடத்தில் இரு தடவையேனும் பருவ இதழ்களுக்குரிய பதிவுகள் பரீட்சிக்கப்பட்டுப் பருவ இதழ்கள் ஏதாவது வராதிருந்தால் அதைப் பற்றிப் பிரதிநிதிக்கு அறிவித்துப் பருவ இதழ்களில் கொள்வனவு இடைவெளிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்.

பல்கலைக்கழகமானது தனது உறுப்பினர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டே தொகுதிகள் வெளியிடுதல் வழக்கம் இத்தகைய வெளியீகளை பிற நூலகங்கள், நிறுவனங்கள் என்பவற்றிகு அனுப்பி வைப்பதன் மூலம் அந்தந்த நிறுவனங்களின் வெளியீடுகளை மாற்றுமுறையில் (நுஒஉhiபெந) பெற்றுக் கொள்கின்றது சில நிறுவனங்களில் அங்கத்துவம் வகிப்பதன் மூலமும் அவற்றின் வெளியீடுகளைப் பெறும் வாய்ப்பினை எந்தவொரு பல்கலைக்கழக நூலகமும் பெற முடியும்.

இவை தவிர நன்கொடையாகவும் பெருமளவு நூல்கள், பருவ இதழ்கள் என்பன பல்கலைக்கழக நூல்களுக்குக் கிடைத்தல் வழக்கம் பல்கலைக்கழக நூலகங்களின் வரலாற்றை ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகம் ளுசை வுhழஅயள டீழனடநல என்பவரது நன்கொடையைக் கொண்டு தொடங்கப்பட்டமையைக் காண்கின்றோம் பாரிஸ் பல்கலைக்கழக நூலகமும் நன்கொடையைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. எனவே பல்கலைக்கழக நூலக வளர்ச்சியில் இத்தகைய நன்கொடைகள் மிக முக்கிய இடம் பெறுகின்றன.

நூலகர்களுக்கு இத்தகைய நென்கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அவை வாசகர்களுக்குப் பயன்படக்கூடியனவா என்பதனைக் கவனித்தல் முக்கியமானதாகும். விஞ்ஞானம், தொழில் நுட்பத்துறை சார்ந்த நூல்களில் பழைய பதிப்புகள் அதிகம் பயன்படாது போகலாம் அதேவேளை கலைத்துறை சார்ந்த விடயங்களோடு தொடர்புடைய நூல்களை கட்டுரைத் தொகுதிகள் முதலியன பெரிதும் பயனளிக்கக்கூடியனவாக அமைவதோடு அத்தகைய ஆவணங்களிற் பலஅ ச்சிற் கிடைப்பதும் அரிதாகலாம். புதிய உரைகளுடன் கூடிய நூல்களையும் ஆய்வாளர்கள் விரும்புவது வழக்கம். இதனால் நன்கொடைத் தொகுதிகளைத் சேர்த்துக்கொள்வதில் எந்தவொரு பல்கலைக்கழக நூலகமும் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

இவ்வாறு நன்கொடையாகப் பெற்ற நூல்களினால் ஏற்கனவே நூலகத்திலுள்ள நூல்களுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் நன்கொடையாகப் பெறப்பட்டவற்றின் பாவனைக் காலத்தை நீடிப்பதற்குமாகத் தகுந்த முறையில் அவற்றை பராமரித்துப் பாதுகாத்தல் நூலகரது கடமையாகும்.

பல்கலைக்கழக நூல்களில் வாசகர் தேவைக்கேற்ப நூலகத்தில் நூல் உருவல்லாத ஆவணங்களுக்கும் முக்கிய இடமளிக்கடுதல் அவசியமாகும். பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நெறியில் கட்புல செவிப்புல சாதனைகளின் பயன்பாடு முக்கிய இடம் பெற்று வருவதனால் பல்கலைக்கழக நூலகர் தனது ஆவணத் சேகரிப்பு கொள்கையில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுதல் முக்கியமானதாகின்றது. மேற்கு நாடுகயில் கற்பித்தல் முறையில் பின்பற்றப்படும் தொழில்நுட்பத்தில் கட்புல செபிப்புல சாதனங்களின் பயன்பாடு துரிதகதியில் வளர்ச்சியடைந்து வருகின்றமையை ஈண்டு முக்கியமாகக் கருத்திற் கொள்ளுதல் பயன் தருவதாகும்.

கட்புல செவிப்புல சாதனங்களைப் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் பெற்றுக் கொள்வதில் தயாரிப்புத்திறன் பராமரிப்பு, பயன்படுத்துதல் ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியமைகின்றன மேலம் தகுதி வாய்ந்த அலுவலர்கள், உபகரணங்கள் என்பவற்றோடு, கட்புல செவிப்புல சாதனைகளைக் கொள்வனவு செய்வதற்கு மேலதிக நிதியும் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் போதிய இடவசதியும் தொழில் நுட்பமும் தேவைப்படுகின்றன. பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளது தேவைக்கேற்ப இவை கொள்வனவு செய்யப்படலாம்.

பல்கலைக்கழக நுஸலகத்திற்கென பெற்றுக் கொள்ளப்பட்ட நூல்கள் நூல் வடிவில்லாத ஆவணங்கள் யாவும் அவற்றிற்குரிய பதிவேடுகளிற் பதியப்பட்டு, நூலக முத்திரையிடப்படுகின்றன. மாணவர் இலகுவில் அவற்றைப் பெற்றுப் பயன்பெறும் வகையில் பகுப்பாக்கமும் பட்டியலாக்கமும் செய்யப்பட்டுச் சேவைப்பகுதிகளுக்கு அவை அனுப்பப்படுகின்றன.

பகுப்பாக்கமும் பட்டியலாக்கமும் :

நூலகத்திலுள்ள நூல்கள், ஆவணங்கள் யாவும் பகுப்பார்க்கமும் பட்டியலாக்கமும் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தல் வேண்டும் உலகின் பல்வேறு நாடுகளிலும் நூலக ஆவணங்களைப் பட்டியலாக்கம் செய்வதற்குப் பின்பற்றப்பட்டு வருகின்ற ஆங்கிலோ அமெரிக்கப் பட்டியலாக்க விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நூலகங்களில் சகல ஆவணங்களும் பட்டியலாக்கம் செய்யப்படுதல் உகந்தது. அதேபோல இவற்றைப் பகுப்பாக்கம் செய்வதற்குத் தூயிதசாம்சப பகுப்பாக்கத் திட்டமே பொதுவாகப் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழக ந}லகங்களிலும் பின்பற்றப்படுகின்றது. நூலக வாசகரின் தன்மை கருதி வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திப் பயன்படுத்துவற்குரிய நிகழ்ச்சித் தன்மையுடையதாக இத்திட்டம் விளங்குகின்றது.

பட்டியல் பதிவுகளை ஒழுங்குபடுத்தி வைப்பதற்கு அகரவரி சைவப்பட்டியலிலும் பார்க்கப் பட்டியலே பல்கலைக்கழக நூலகங்களில் விரும்பத்தக்கதாகும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அதிகமாகக் குறிப்பிட்ட விடயத்தில் கீழேயே நூல்களைத் தேடுதல் மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட விடயம் பற்றிய நூல்களையும் அதோடு தொடர்பான விடயங்கள் பற்றிய நூல்களையும் ஓரிடப்படுத்திக் காட்;டும் பண்பில் அகர வரிசைப்பட்டியலிலும் பார்க்கப் பகுப்பாகப்பட்டியலே சிறந்ததாகும். அத்தோடு பகுப்பாக்கப் பட்டியலில் ஒரு பகுதியாக ஆசிரியர் தலைப்புக்கோவை (யுரடிழச ஃவுவைடந கடைந) இருப்பதனால் ஆசிரியர் பெயர் அல்லது நூலின் தலைப்பின் கீழ் ஒரு நூலைத்தேடும் வாசகருக்கும் இது உதவியளிக்கின்றது. மாணவர்களுக்கு ஆரம்பத்தில் பகுப்பாக்கக்கோவையைப் பயன்படுத்தும் திறமை குறைவாக இருந்தாலும் அவர்களது பல்கலைக்கழகக் கல்வியில் முதலாம் ஆண்டு முடிவில் அனேகமாக அவரவர் கற்கும் பாடங்கள் சம்பந்தமான வகுப்பு எண்களைத் தெரிந்து கொண்டவர்களாகின்றனர். இதனால் பல்கலைக்கழக நூலக ஆவணங்கள் யாவும் பகுப்பாக்கப்பட்டியலுக்குரியவாறு பகுப்பாக்கம் பட்டியலாக்கம் செய்யப்பட்;டு ஒழுங்குபடுத்தலே உகந்தது.

சேவைப் பகுதிகள் :
ஒரு பல்கலைக்கழக நூலகத்தில் அமைய வேண்டிய முக்கிய சேவைப் பகுதிpகளாக நூல் இரவல் வழங்கும் பகுதி, உசாத்துணைப்பகுதி, பருவஇதழ்கள் பகுதி, விசேட ஆவணச்சேர்க்கையை பகுதி என்பவற்றைக் குறிப்பிடலாம். நூல் இரவல் வழங்கும் பகுதியில் அனேகமாக நூல்கள் யாவும் திறந்த அணுகு முறையில் () வைக்கப்படுதல் வேண்டும். அத்தோடு ஆங்காங்கே இறாக்கைகளிடையே வாசகர் பயன்பாடு கருதி இருக்கை வசதிகளும் வழங்கப்படுதல் பொருத்தமானதாகும். இதனால் குறிப்பிட்ட மாணவர் ஃ ஆராய்ச்சியாளர் தமக்கு வேண்டிய குறிப்புக்களை எடுத்துக்கொள்ள உதவியாகின்றது. இப் பகுதியிலுள்ள நூல்களை இரண்டுவார காலத்திற்கு வாசகருக்கு இரவல் வழங்குதலே உகந்தது. பல்கலைக்கழக நூலகத்திற்கேற்ற நூல் இரவல் வழங்கல் முறையாகப் பிறவுண் நூல் இரவல் வழங்கல் முறையைக் கல் முறையாகப் பிறவுண் நூல் இரவல் வழங்கல் முறையைக் (டீசழறநெ ஊhயசiபெ ளுலளவநஅ)

உசாத்துணைச் சேவை :

வாசகர்கள் நூலகத்திலேயே இருந்து பயன்படுத்த வேண்டிய நூல்களைக் கொண்ட பகுதி இதுவாகும். உடனடி ஆய்வுத் துணை நூல்களான அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் கைநூல்கள் முதலியனவும் வாசகரால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனவும், பெறுமதி வாய்ந்தனவுமான நூல்கள் இப்பகுதியில் முக்கியமாக இடம்பெறுகின்றன. இப்; பகுதியில் வாசகர்களுக்குப் போதுமான அளவு இருக்கை வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதிகம் நெருக்கடியின்றி, பிறரது இடைய+றில்லாமல் தமது வாசிப்பில் கவனம் செலுத்தக்கூடிய விதத்தில் இருக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இப் பகுதியில் கடமை புரியும் நூலக அலுவலர்கள் வாசகரோடு சுமுகமான முறையில் பழகுவதோடு அவர்களுக்கு வேண்டிய விடயம் தொடர்பான நூல்களைத் தெரிவு செய்வதில் உதவி புரியக்கூடிய திறமையுடையவராகவம் இருத்தல் விரும்பத்தக்கது.

பருவ இதழ்கள் பகுதி :

பல்கலைக்கழக நூலகத்திற்குக் கொள்வனவு செய்யப்படுகின்ற தொடர்ச்சியான பருவ இதழ்களிற் கடைசியாகப் பெறப்பட்ட பிரதிகள் இப் பகுதியில் அவற்றிற்கென உரிய ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வழக்கம். பொதுவாக நூலகத்திற்கு வெளியே இவற்றை எடுத்துச் செல்ல வாசகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இப் பகுதியில் வாசகர்களுக்கென இருக்கைகள் போடப்பட்டிருத்தல் இன்றியமையாதாகும். குறிப்பிட்ட பருவ இதழின் பழைய பிரதிகள் வேறாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட பருவ இதழின் ஒரு தொகுதிக்குரிய எல்லாப் பிரதிகளும் நூலகத்திற்குக் கிடைக்கப்பெற்றதும் நிதி வசதிக்கேற்ப அவை ஒன்றாகக் கட்டப்பட்டு பட்டியலாக்கம் பகுப்பாக்கம் செய்யப்பட்டு வாசகரின் உபயோகத்திற்கென இப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்படல் உகந்தது.

வாசகர்களால் முக்கியமாக விரிவுரையாளர்கள, ஆய்வாளர்கள் ஆகியோரால் அண்மைக்காலப் பருவ இதழ் வெளியீடுகள் பெரிதும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. இதனால் வாசகரால் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற பருவ இதழ்கள் நூலகத்திற்கு வந்ததும் இவற்றின் பொருளடக்கப் பகுதியிலிருந்து பிரதிகளை எடுத்து அவ்வத்துறையினருக்கு அனுப்பி வைத்தல் நல்லது. தமக்குப் பயனளிக்கக்கூடிய விடயங்கள் அதிலுண்டா என்பதனைக் கவனித்து வாசகர்கள் உடனுக்குடன் அப்பருவ இதழ்;களைப் பயன்படுத்த இத்தகைய சேவை உதவியாக இருக்கும்.

விசேட ஆவணக்சேர்க்கை

இப் பகுதியில் முக்கியமாக அந்தந்த நாட்டோடு தொடர்புடைய வெளியீடுகள், கையெழுத்துப்பிரதிகள், பழைய ஓலைச்சுவடிகள், கிடைத்தற்கரிய நூல்கள், முதலியன சேகரிக்கப்பட்டிருக்கும். இப் பகுதியிலுள்ள ஆவணங்கள் யாவும் மூடிய அணுகுகை (ஊடழளநன யஉஉநளள ) முறையில் பாதுகாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இப் பகுதியிற் கடமை புரியும் அலுவலர் வாசகருக்கு வேண்டிய ஆவணத்தைப் பதிவேட்டில் பதிவு செய்து வழங்கலாம். புல்கலைக்கழக நூலக வாசகர்களில் இறுதியாண்டு மாணவர்கள், விரிவுரையாளர், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கே இப் பகுதியிலுள்ள ஆவணங்கள் மேற்குறிப்பிட்ட முறையில் வழங்கப்பட வேண்டும், ஏனையோருக்கு இப் பகுதியிலுள்ள ஆவணங்கள் வழங்கப்படும்போது நூலகரின் விசேட அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். இப் பகுதியிலுள்ள ஆவணங்கள் எக்காரணம் கொண்டும் நூலகத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

ஆராய்ச்சிப் பகுதி :

இப்பகுதி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு வேலைகட்குப் பயனளிக்கக்கூடிய நூல்களையும் ஆவணங்களையும் கொண்டதாக இருத்தல் வழக்கம். அந்தந்தப் பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வேலைகளடன் தொடர்புடைய ஆவணங்களை இப் பகுதியில் ஒழுங்குபடுத்தி வைக்கலாம். இப் பகுதியில் ஒழுங்குபடுத்தி வைக்கலாம். இப்பகுதி விசேட ஆவணச் சேர்க்கைப் பகுதியுடன் இணைந்ததாகவோ அல்லது அதற்கு அண்மையிலோ இருத்தல் வாசகரின் நேரத்தைச் மீதப் படுத்த உதவும்.

ஆய்வாளர்கள் நூல்களைத் தமது பொறுப்பில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய மேசைகள் (ளுவரனல ஊயசசநடள) உடன் கூடிய படிப்பக அறைகள் இப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வழக்கம் . ஆய்வாளர்கள் ஆராய்ச்சி வேலைகளைப் பாதுகாத்து வைத்துத் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கு இத்தகைய வசதிகள் பெரிதும் உதவியாக அமைகின்றன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தவிரச் சில பல்கலைக்கழக நூலகங்களில் வாசிப்புப் பகுதியென ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தல் உண்டு. இப் பகுதியில் மாணவர்கள் விரிவுரைகளில் எடுத்துக் கொண்ட குறிப்புகள் , சொந்த நூல்கள் போன்றவற்றைக் கொண்டு வந்து வைத்துப் பயன்படுத்த இடமளிக்கப்பட்டிருக்கும்.

பல்கலைக்கழக நூலகத்தில் சேவைப்பகுதியிலிருந்து தாயாரிக்கப்படுகின்ற புள்ளிவிபரங்களைக் கொண்டு வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற துறை சார்ந்த புதிய நூல்களை மேலும் கொள்வனவு செய்து சேவைப்படுத்தல் சாத்தியமாகும்.

பல்கலைக்கழக நூலகமானது பிரதிபண்ணல் சேவையை வழங்குவதற்குரிய ஒழுங்குகளையும் மேற்கொள்ளுதல் அவசியமாகும். குறிப்பிட்ட ஒரு பருவ இதழ் கட்டுரையையோ, நூலின் பகுதிகளையோ வாசகர்கள் பிரதி எடுக்க விரும்பும்போது நுஸலகத்திலேயே இத்தகைய வசதியிருக்குமாயின் மிகவும் பயனளிப்பதாகும். அத்தோடு வாசகரினால் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒரு நூலின் பல பிரதிகளைக் கொள்வனவு செய்ய முடியாதவிடத்து நூலகத்திலேயே பிரதிபண்ணல் இயந்திரம் இருக்குமாயின் மேலதிக பிரதிகளை எடுத்து வாசகர் தேவையைப் ப+ர்த்தி செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அலுவலர்கள் :

நூலகரோ பல்கலைக்கழக நூலகத்தில் பிரதான நிர்வாகியாவார். பல்கலைக்கழகப் பேராவியர்களைப் போன்று ஒத்த தகுதியுடையவராகவே நூலகர் இருத்தல் வழக்கம். பல்கலைக்கழக நூலகத்தின் நிர்வாகப் பொறுப்பு அனைத்திற்கும் நூலகரே பொறுப்பதிகாரியாவார். நூலக நிர்வாகம், நூல்தெரிவு, ஒழுங்குகள் விதி முறைகளைத் தயாரித்தல், பல்கலைக்கழகக் கூட்டங்களிற் பங்கு பற்றுதல், நூலக அலுவலர் நியமனம், அவர்களுக்குப் பயிற்சியளித்தல், பதவி உயர்வுக்குச் சிபார்சு செய்தல், நூலகத் துறைசார்ந்த கருத்தரங்குகளில் பங்குபற்றுதல், வருடாந்த அறிக்கையைத் தயாரித்தல், அலுவலர் கைந}லைத் தயாரித்தல் என்பன பல்கலைக்கழக நூலகரின் முக்கிய கடமைகளிற் சிலவாகும்.

நூலகருக்கு அடுத்தபடியாக, சிரே~;ட உதவி நூலகர்கள், உதவி நூலகர்கள், கனி~;ட உதவி நூலகர்கள் ஆகியோர் கடமை புரிபவர் இவர்கள் பல்வேறு துறை சார்ந்த கல்வித் தகைமையுடையோராகவும் இருத்தல் வேண்டும். நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொறுப்புள்ளவர்களாக இவர்கள் நூலகரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களைத் தவிரக் கல்விப்புலம் சாராத அலுவலர்களாக நூலக உதவியாளர்கள். நூலகப் பணிப்பாளர்கள் என்போரும் நூலகத்திற் கடமை புரிவார்.

ஒரு அலுவலர் புதிதாக நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அவருக்கு நூலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமைபுரிய இடம் அளிக்கப்படல் வேண்டும். இரண்டு வார காலத்திற்கோ அல்லது ஒரு மாத காலத்திற்கோ நூலகத்தின் எல்லாப்பகுதியிலும் வேலை செய்ய வாய்ப்பளித்தல் வெசியம் . இவ்வாறு பயிற்றப்படுவதனைச் சேவைக்காலப் பயிற்சியளிப்பதனால் அவசியம் ஏற்படுமிடத்து நூலகத்தின் எந்தவொரு பகுதி சேலையையும் அவர்கள் திறம்படச் செய்யும் தகுதியைப் பெற்றவராகின்றனர்.

நூலக வேலைகள் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு நூலகர், உதவி நூலகரிடையே நட்புறவும் புரிந்துணர்வும் நிலவுதல் அவசியமாகும். அவ்வவப்போது நூலகர் உதவி நூலகர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நூலகத்திலுள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் என்பவற்றை அறிந்து அவற்றை நீக்க வழிவகை செய்ய முடியும். இவை தவிர நூலகர் வருடத்தில் இரு முறையேனும் கல்விப் புலம்சார் உத்திளோகத்தர்களைச் சந்திப்பதன் மூலம் அவர்களது பிரச்சினைகள் அறிந்து அவற்று அவற்றுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படலாம். இதனால் நூலகரிலிருந்து இவர்கள் அந்நியப்படுத்தப்படுகின்ற தன்மை குறைய வாய்ப்புண்டு. இவர்களது வேலைகளுக்கு நேரடியாகப் பொறுப்பு வகிக்கின்ற உதவி நூலகர்களின் நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளைக் கூட நூலகர் அறிய இத்தகைய சந்திப்புக்கள் இடமளிக்கலாம்.

ஒரு பல்கலைக்கழக நூலகமானது தனது சேவையைக் பல்கலைக்கழக வாசகருடன் மட்டுப்படுத்தாது . பரந்தளவில் வழங்குதல் வேண்டும். அபிவிருத்தியடைகின்ற நாடுகளில் இது முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். பல்கலைக்கழக நூலகர், ஆகியோர் அந்தப் பிரதேசத்து ஏனைய நூலகங்களுடன் தொடர்பு கொள்வதோடு, உள்ளுர் நூலக அமைப்புக்களின் நடவடிக்கையில் முழுவதாகப் பங்குபற்றுவதன் மூலம் சமுதாயத்திற்குப் பல்கலைக்கழக நூலகமானது சிறந்த பங்களிக்கினைச் செய்து . அப் பிரதேசத்தின் ஒரு முக்கிய நூலகமாகத் திகழ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே பல்கலைக்கழக நூலகமானது போதிய அளவு இடவசதி, நிதிவசதி போன்றவற்றைப் பெற்று நூற்சேர்க்கையைப் பலப்படுத்திக் கொண்டது பல்கலைக்கத்திற்கு அப்பாலும் சேவையை வழங்க முன் வரலாம்.

முழுச் சமுதாயத்திற்கும் சேவை வழங்க முடியாது போயினும் குறிப்pபட்ட பிரிவினருக்கு அதாவது பல்கலைக்கழகத்திற்கு அப்பால் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்குச் சேவையை வழங்குவதோடு தனது சேவையை எல்லைப்படுத்தி ஏனைய நூலக அதிகாரசபைகளை நூலக சேவையை விரிவாக்கும்படி தூண்டுதல் வேண்டும். அத்தோடு பல்கலைக்கழக நூலகமானது நூலக உத்தியோகத்தருக்கும் பயிற்சியளிக்கும் பொறுப்பையும் ஏற்று நடத்தலாம். இதனால் ஒவ்வொரு நாட்டிலும் இயங்குகின்ற பல்கலைக்கழக நூலகங்களில் ஆவணச்சேர்கையானது ஒரு பரந்துபட்ட சமுதாயத்தினரால் பயன்படுத்தப்பட்டு பண்பட்ட தலைமுறையினரை உருவாக்க உதவுகின்றதெனலாம்.

இலங்கையில் பல்கலைக்கழக நூலகங்கள் வரலாறு

வரலாறு

இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நூலகங்களின் வரலாறு இலங்கைப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியோடு இணைந்து காணப்படுகின்றது. இலங்கைப் பல்கலைக்கழழக வரலாற்றைக் கொழும்பில் 1921 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியுடன் தொடங்க வேண்டியுள்ளது. 1942 ஆம் ஆண்டில் 21 ஆம் இலக்க இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்கு வித்திடப்பட்டது. ஆதன்படி பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்கு வித்திடப்பட்டது. அதன்படி பேராதனை பல்கலைக்கழகத்திற்குரிய இடமாகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அங்கு பல்கலைக்கழகக் கட்டிட வேலைகள் ப+ர்த்தியாகும் வரையும் கொம்பிலேயே சகல துறைகளும் இயங்கி வந்தன. 1952 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவம், வி;ஞ்ஞானம், பொறியியல் தவிர்ந்த ஏனைய துறைகளைக் கொண்டதாக இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையில் இயங்கத் தொடங்கியது. ஆவற்றைத் தொடர்ந்து 1961, 1962 ஆம் ஆண்டுகளில் விஞ்ஞான மருத்துவ பீடங்களும் பேராதனையில் ஆரம்பிக்கப்பட்டன. 1963 இல் பொறியியல் பீடமும் கொழும்பிலிருந்து பேராதனைக்கு மாற்றப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏழு மாடிகளைக் கொண்டதாக நூலகமொன்றும் அமைக்கப்பட்டது. இங்குள்ள பாடநெறிகளோடு தொடர்புடைய நூற்றொகுதிகளுடன் மிகவும் பழமை வாய்ந்த இலக்கியத் தொகுதிகளும் இந் நூலகத்தில் இடம் பெறலாயின. இந் நூலகம் பல்கலைக்கழகச் சமூகத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1946 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு சட்ட வைப்பு நூலகமாகவும் (டுநபநட னந pழனவை டுiடிசயசல) பிரகடனப்படுத்தப்பட்டமையினால் இலங்கையில் வெளி வருகின்ற நூல்களின் பிரதிகளைத் தனது இருப்பிற் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது. இன்று ஏறக்குறைய 41ஃ2 லட்சம் நூல்களைக் கொண்டதாகவும் தென்னாசியாவிலேயுள்ள மிகப் பெரிய நு{லகங்களில் ஒன்றாகவும் இந் நு{லகம் விளங்குகின்றது. மேலும் மருத்துவம், பொறியியல், விவசாயம், விஞ்ஞானம் ஆகிய பீடங்களிலே தனித்தனி நூலகசேவை வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்களது தொகை அதிகரிக்கத் தொடங்க மேலும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டியதாயிற்று. பௌத்த பிக்குகள் பயிலுமிடங்களாக விளங்கிய வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவினாக்களுக்குப் பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொடுக்கும் 1958 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, வித்தியோதய வித்தியாலங்காரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1959 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு பிரிவினாக்களும் பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றப்பட்டன. பௌத்த மதத்தை சார்ந்த பெருமளவு நூல் தொகுதிகளுடன் தற்போது அங்கு கற்பிக்கப்படுகின்ற சகல பாடநெறிகளுடனும் தொடர்பான நூல்கள் சேகரிக்கப்பட்டு இங்குள்ள நூலகங்கள் சிறந்த சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விரு நூலகங்களிலும் தற்போது தனித்தனியே ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

மானுடவியல் சமூகவியல் துறைகளில் பல்கலைக்கழகக் கல்வியை மேற்கொள்ள வருகின்ற மாணவர்களது தொகை தொடர்ந்து அதிகத்தமையினால் 1965 ஃ 66 ஆம் கல்வி ஆண்டிலிருந்து இத்துறை சார்ந்த முதலாம் வருட மாணவர்களுக்கும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அனுமதியளிக்க வேண்டியகாயிற்று. கொழும்பில் உள்ள குதிரைப்பந்தய மைதானத்திலுள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக விரிவுரைகள் நடாத்தப்பட்டன. அக்கட்டத்தில் கீழ் மாடியின் ஒரு பகுதியில் இம் மாணவர்களுக்கு நூலக வசதியும் அளிக்கப்பட்டது. சிறந்த முறையில் அங்கு சேவை நல்கப்பட்டதாகக் கருதுவதற்கில்லை ஆயினும் அங்கு பயின்றவர்கள் முதலாம் வருட மாணவர்களாகையினால் ஓரளவு அவர்களது தேவை ப+ர்த்தி செய்யப்பட்டதெனலாம். 1961 இல் பேராதனையிற்புதிதாக விஞ்ஞான, மருத்துவ பீடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் ஏற்கனவே இருந்த இவ்வித பீடங்களும் நிரந்தரமாக கொழும்பிலேயே இயங்கின. இதனால் 1967 ஆம் ஆண்டிலிருந்து விஞ்ஞான, மருத்துவ, கலைப்பீடங்களைக் கொண்ட இலங்கை பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகமாகச் செயற்படத் தொடங்கியது. இப் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான நூலகம் றீட் மாவத்தையில் உள்ள தனியான புதிய கட்டடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு சேவையாற்றி வருகின்றது. 1984 ஆண்டின் இறுதியில் 155,000 நூல் தொகுதிகளை இந் நூலகம் கொண்டிருந்தது.

இவ் வளாகத்தின் மருத்துவப்பீடம் சேய்மையிலிருப்பதனால் அதற்கென தனியான நூலகசேவையும் வழங்கப்பட்டு வருகிறது. 1984 ஆம் ஆண்டிலிருந்து விஞ்ஞான பீடத்திற்கெனத் தனியான நூலகசேவையும் வழங்கப்பட்டு வருகின்றது. இவை தவிர கலைப்பீடத்தின் சில துறையினரும் விசேட நூற்சேர்க்கையை அமைத்து அவ்வவ்துறை மாணவர்களுக்கு நூலக சேவையினை ஆற்றி வருகின்றனர். இப் பல்கலைக்கத்திலுள்ள நூலக சேவையினை ஆற்றி வருகின்றனர். இப் பல்கலைக்கழத்திலுள்ள சட்டத்துறை நூலகமானது இலங்கையிலேயே சிறந்த சட்டத்துறை நூல்களைக் கொண்டதாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பத்தையில் இயங்கி வந்த தொழில் நுட்பக் கல்லூரியானது 1972 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வளாகமாக மாற்றப்பட்டது. அங்கு தொழில்நுட்பத்துறை சார்ந்த மாணவர்களே கல்வி பயிலுவதனால் இந்நூலகம் தொழில்நுட்பத்தை சார்ந்த விசேட நூல்களைக் கொண்டதாக விளங்குகின்றது. பொறியியல் கட்டடக்கலை முதலிய விடயங்கள் சம்பந்தமான நூல்களே இந் நூலகத்தில் உள்ளன. ஏறக்குறைய 75.000 நூல்களைக் கொண்டதாக இந்நூலகம் விளங்குகின்றது.

மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் யாவும் இலங்கையின் தென்பகுதியிலேயே சேவையாற்றி வருகின்றன. இந் நிலையில் வட பகுதியில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ் வளாகம் பரமேஸ்வராக் கல்லூhயில் நிறுவப்பட்டது. பரமெஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளினதும் நூல் தொகுதிகளைச் சேர்த்து இப் பல்கலைக்கழகத்தின் நூலகம் பரமெஸ்வராக் கல்லூரியிலிருந்த ஒரு கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக அறிஞர்கள் பலரது நூல் தொகுதிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. யாழ் வளாகத்தின் விஞ்ஞான பீடம் 1978 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை யாழ்ப்பாணக்கல்லூரியிலே இயங்கிவந்தமையினால் விஞ்ஞானபீட நூலகம் அக்கல்லூரியிலேயே இயங்குவதாயிற்று. 1978 இல் விஞ்ஞானபீடம் திருநெல்வேலியில் அமைந்த வளாகக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதுடன் விஞ்ஞானபீட நூலகமும் இங்கு கொண்டுவரப்படுவதாயிற்று.

1981 ஆம் ஆண்டு தொடக்கம் நூலகத்திற்கெனத் திட்டமிடப்பட்ட புதிய கட்டடத்தின் ப+ர்த்தியான பகுதிக்கு நூலகம் மாற்றப்பட்டுச் சேவை சேவை வழங்கி வருகின்றது. தற்போது ஏறக்குறைய 80,000 நூல்களைக் கொண்டதாக விளங்கும் இந் நூலகம் வட மாகாணத்திலேயே தலை சிறந்த நூலகமாகக் கருதப்படுகின்றது. இந் நூலகத்தின் கட்டிட வேலைகள் நிறைவானதும் மேலும் சிறந்த முறையில் இந் நூலகம் தனது சேவையை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், சித்தமருத்துவத் துறை ஆகியன பிரதான நூலகத்திலிருந்து சேய்மையில் இருப்பதனால் அவற்றுகென விசேட நூலக சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இவற்றோடு இப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற இராமநாதன் நுண்கலைக் கல்லூரியிலும் தனியான நூலகசேவை ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்தின்படி மேற் குறிப்பிட்ட வளாகங்கள் யாவும் பல்கலைக்கழகங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன் அவற்றில் அமைந்திருந்த நூலகங்களும் பல்கலைக்கழக நூலங்களாயின.

1979 ஆம் ஆண்டில் உறுதுணைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகக் கல்லூரியின் விவசாயம், மருத்துவம் விஞ்ஞானம் ஆகிய 3 பீடங்களும் முறையே பேராதனை கொழும்பு, களனிப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்புடையன வாகச் செயற்பட்டு வந்தன. 1984 ஆம் ஆண்டில் உறுதுணைப் பல்கலைக்கழகக் கல்லூரிக்குப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டு உறுதுணைப் பல்கலைக்கலைக்கழகமெனப் பெயரிடப்பட்டது. இப் பல்கலைக்கழ நூலகத்தில் ஏறக்குறைய 35,000 நூல்கள் இருப்பதாக அறியமுடிகின்றது.

மட்டக்களப்புப் பல்கலைக்கழகக் கல்லூரி 1981 ஆம் ஆண்டில் விஞ்ஞானம், விவசாயம் ஆகிய பீடங்களைக் கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டது. இது 1986 ஒக்டோபர் மாதம் பல்கலைக்கழக, அந்தஸ்தைப் பெற்றது. இப் பல்கலைக்கழத்தின் நூலகமானது வளர்ச்சி நிலையில் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. ஏறக்குறைய 10,000 நூல்களைக் கொண்டதாக மிகவும் சிறிய கட்டிடமொன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பல்கலைக்கழகத்திற்குரிய கட்டிட வசதிகள் ப+ரணப்பட்டதும், சிறந்த பல்கலைக்கழக நூலகமாக மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலேயே பெறுமதிவாய்ந்த நூல்தொகதியைக் கொண்ட நூலகமாகத் திகழுமென எதிர்பார்க்கலாம்.

மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களைவிட இலங்கையின் உயர் கல்வி அமைப்பில் இடம் பெறுகின்ற கல்வி நிறுவனங்களையும். இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். 1972 ஆம் ஆண்டின் இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டம் இல 1 இற்கு அமைய மருத்துவப் பட்டப்பிற்படிப்பு நிறுவனம் (Pழளவ புசயனரயவந ஐளெவவைரவந ழக ஆநனiஉiநெ) விவசாயப் பட்டப்பிற்படிப்பு நிறுவனம் (Pழளவ புசயனரயவந ஐளெவவைரவந ழக யுபசiஉரடவரசந) பாளி பௌத்த கல்விப் பட்டப்பிற்படிப்பு நிறுவனம் (Pழளவ – புசயனரயவந ஐளெவவைரவந ழக Pயட யனெ டீரனனளைவ ளுவரனநைள) ஆகியன முறையே 1974, 1974,1977 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன. இவை 1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி தொடர்ந்தும் சேவையாற்றும்; உரிமை பெற்றன.

இவற்றைவிடப் பட்டப்படிப்பினை வழங்குவனவாக சுதேசிய மருத்துவ நிறுவனம் (ஐளெவவைரவந ழக ஐனெபைநழெரள ஆநனiஉiநெ 1976) அழகியற்கல்வி நிறுவனம் (ஐளெவவைரவந ழக யுநளவாநவiஉ ளவரனநைள – 1974) தொழிலாளர் கல்வி நிறுவனம் (ஐளெவவைரவந ழக றுழசமநள நுனரஉயவழைn - 1975) ஆகியன செயற்பட்டு வருகின்றன. இவ்விருவகை நிறுவனங்களும் கொழும்பு, போராதனை, களனிப் பல்கலைக்கழகங்களுடன் யாவும் குறிப்பாக ஒவ்வொரு விடயம் தொடர்பாக உயர்கல்வியினை வழங்குபவையாக இருப்பதனால் இவற்றிலுள்ள நூலகங்களும் அந்தந்த விடயம் சம்பந்தமான நூலக ஆவணங்களைத் தம்மிடத்தே கொண்டு வாசகர்களுக்குச் சிறப்பான சேவையினை நல்கி வருகின்றன.

இவற்றோடு 1980 ஆம் ஆண்டிலே நாவல என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழக நூலகமும் இவ்வரிசையிற் குறிப்பிடவேண்டியதாகும். இந்நூலகம் அங்கு கடமையாற்றும் கல்விப்புலம் சாhந்த அலுவலர்களுக்குச் சேவை வழங்குகின்றது. அத்தோடு திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை அலுவலகங்கள் திறந்த பல்கலைக்கழக மாணவர்களு;ககு இலங்கையின் 24 மாவட்டங்களிலும் நூலக வசதியினை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நூலகங்கள்

இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நூலகங்களின் சேவையைப் பொதுவாக நோக்கும்போது போதிய இடவசதியின்மை, நிதிப் பற்றாக்குறை என்பன காரணமாக இந்நூலகங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குபவையாகவே உள்ளன. ஒரு நூலகம் சிறந்த முறையில் சேவையினை வழங்குவதறங்கு நூலகம் மட்டும் இருப்பதால் போதாது. முதலில் நூலகம் அமைதியான சூழலிலும், அதே சமயம் வாசகர் இலகுவில் அணுகக்கூடிய இடத்திலும் அமைந்திருத்தல் வேண்டும். நூலகத்திற்கெனத் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் போதிய இடவசதியுடையதாக நூலகம் அமைந்துள்ளதால்தான், நூலக ஆவணங்களைச் சீரான முறையில் ஒழுங்குபடுத்திச் சிறந்த சேவையினை வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நூலகங்களைப் பொறுத்த மட்டில் பேராதனை, களனி ஆகிய பல்கலைக்கழக நூலகங்களே நூலகத்திற்கெனத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட கட்டிடத்திற் செயற்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலே நூலகத்திற்கென திட்டமிடப்பட்ட கட்டிடத்தில் நூலகம் இயங்கினாலும் அதன் வேலைகள் ப+ர்த்தியாக்கப்பட்டாமையினால் தற்போது இடநெருக்கடியினைக் கொண்டதாகவுள்ளது. ஏனைய பல்கலைக்கழக நூலகத்திற்கெனத் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கட்டிடங்களிலேயே செயற்பட்டு வருகின்றன. ஆயினும் அவ்வவ் பல்கலைக்கழங்களில் நூலகக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் வேலைகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றமை எதிர்காலத்தில் நல்ல நூலக சேவை இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அமையும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. பல்கலைக்கழகங்களில் அமையும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. பல்கலைக்கழகங்களில் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இதனால் நிர்மாண வேலைகளை விரைவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல் எந்தவொரு பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் முக்கியமான கடமையாகும்.

புதிதாக நூலகத்தினை அமைக்கும்போது சகலவிதமான நூலக ஆவணங்களையும் பாதுகாத்துப் பராமரிக்கக்கூடிய விதத்தில் நூலகச் கட்டிடம் அமைக்கப்படல் வேண்டும். இலங்கையின் கால நிலையைக் கருத்திற் கொண்டு நூலகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியையேனும் குளிரூட்டிக் கட்புல செவிப்புல சாதனங்களின் பாதுகாப்பிற்கென ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தலும் நூலகர்களது கடமையாகும். அத்துடன் மிகப் பழமையானதும், மிகவும் இன்றியமையாத சான்றுகளாகவுமுள்ள ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள் ஆகியவை பழுதுபடாமல் இருக்க அவற்றையும் குளிரூட்டப்பட்ட அறையில் பேணுதல் அவசியமாகும்.

பல்துறை அபிவிருத்திகளின் பயனாகப் பல்துறைப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், அறிக்கைகள் முதலியவை எண்ணிக்கையிலும், வகையிலும் தற்போது பெருந்தொகையாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதே வேளையில் அவற்றின் விலையும் கூடிக்கொண்N;ட போகின்றது வாசகரின் தேவைகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அத்தோடு, இலங்கையில் தாய்மொழிக் கல்வியின் விளைவாகப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்கள் தமது தாய்மொழியில் எழுதப்பட்ட நூல்களையே பெரிதும் விரும்பி வாசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உள்ளுரில் வெளியிடப்படுகின்ற நூல்கள், சஞ்சிகைகள் முதலியனவற்றின் எண்ணிக்ககையும் பல்கலைகழகங்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை. பல்கலைக்கழகக் கல்விக்குத் தேவையான நூல்களை எழுதக்கூடியோர் இருப்பினும் வெளியீட்டு வசதியின்மையால் அவர்களது முயற்சியும் தடைப்பட்டதாகவே உள்ளது. நூல் வெளியீட்டாளர் தாம் வெளியிடுகின்ற பல்கலைக்கழக வாசகர்களுக்குரிய நூல்களைப் பல்கலைக்கழக நூலகங்களும் பல்கலைக்கழக மட்டத்திலுள்ளவர்களும் மட்டும் வாங்குவதனால் இலாபமீட்ட முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். பல்கலைக்கழக நூலகங்களுக்கு வாங்கப்படும் பெருந்தொகையான நூல்களை விற்பனை செய்யும் புத்தகசாலைகளும் அவற்றை வெளிநாடுகளிலிருந்தே பெறுகின்றன. இதனால் நூல்களின் விலையும் அதிகமாகவே இருக்கின்றது. நேரடியாக வெளிநாட்டு வெளியீட்டாளர்களிடமிருந்து பெறும் நூல்களுக்கும் அதிக பணம் செலவிட பிரச்சினைகளை ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நூல்வெளியீடு, நூல் இறக்குமதி ஆகியவற்றிலுள்ள நடைமுறைப் பிரச்சினைகளின் பின்னணியில் பல்கலைக்கழக நூலகங்கள் தமது வாசகரின் தேவையை முற்றாகப் ப+ர்த்தி செய்ய முடியாத நிலையியேயுள்ளன. ஏனைய நாடுகளில் நூலகவியற்றுறை அடைந்துள்ள வளர்ச்சியிளை நோக்கும்போது, இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய நடவடிக்கைகள் ஆங்கு கையாளப்படுகின்றன. இவ் வகையில் அந்நாடுகளிலுள்ள நூலகங்கள் கூட்டுறவு முறையில் செயற்பட்டு வருகின்றமையை ஈண்டு முக்கியமாகக் குறிப்பிடலாம். இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்கள் யாவும் ஒருங்கிணைந்து கூட்டுறவுமுறையில் செயற்படுதல் சாத்தியமானதே. ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் செயற்படுதல் சாத்தியமானதே. நூல்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்தல், பகுப்பாக்கம் (ளுவழசயபந) நூலகங்களிடையே நூல் இரவல் வழங்கல் ஆகிய விடயங்களில் இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்கள் யாவும் கூட்;டுறவாக இயங்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

எனவே இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நூலகர் அனைவரும் ஒன்றிணைந்து நூலகக் கூட்டுறவுக்குரிய (டுiடிசயசல ஊழழிநசயவழைn) விதிமுறைகளைத் தயாரித்து அதன்படி இயங்குதல் வளர்முக நாடாகிய இலங்கைக்கு மிக இன்றியாத ஒரு வளர்ச்சி நெறியாகும். நூல்களைக் கொள்வனவு செய்வதில் ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகமும் தான் சாதாரணமாக வாங்கும் நூல்களை விட குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக வெளிவருகின்ற வகையில் பல்வேறு விடயங்களும் பல்கலைக்கழக நூலகங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்ற வேண்டும். இவ்வாறு திட்டமிடப்படும்போது அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படுகின்ற பாட நெறிகள் கவனத்திற்கெடுக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நூலகமும் தனக்கு வழஙக்கப்பட்ட விடயம் தொடப்பான நூல்களைக் கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். அவ்விடயம் தொடர்பான நூல்கள் ஏனைய நூலகங்களுக்குத் தேவைக்கப்படுமிடத்து, நூலகங்களிடையே நூல் இரவல் வழங்கல் முறை (ஐவெநச – டுiடிசயசல டுழயn) மூலம் அந் நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படாமை. இதனால் ஒவ்வொரு நூலகத்திலும் ஒரு பகுதி நதி மீதப்படுத்தப்பட்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகின்றது. அத்தோடு அரசாங்கமும் உள்நாட்டில் நூல்வெளியீட்டாளர்களுக்கு ஆதரவளித்து, உள்ளுர் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தி, அதிகளவு நூல்களை உள்ளுரில் வெளியிடச் செய்யலாம்.

பருவ இதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பல்கலைக்கழ நூலகங்கள் பெருமளவு செலவு செய்கின்றன.
உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1985 இல் நூல் கொள்வனவிற்கு என ஒதுக்கப்பட்ட ரூபா 1.5 மில்லியனில் ஏறத்தாள ரூபா 1 மில்லியனையும் விஞ்ஞான, மருத்துவ, கலைப் பீடங்களுக்கான பருவ இதழ்களைக் கொள்வனவு செய்வதற்குச் செலவிட்டுள்ளமையைச் சான்றாகக் காட்டலாம். பருவ இதழ்களில் முக்கியமாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறை குறிப்பிட்ட காலத்தில் பின் அதிக பயனற்றவையாகின்றன. இதனால் பல்கலைக்கழக நூலகங்கள் தம்மிடையே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதன்படி இவற்றைக் கொள்வனவு செய்யலாம். ஒரு பல்கலைக்கழகம் கொள்வனவு செய்யாத பருவ இதழ் வாசகருக்குத் தேவைப்பட்டால் , அதனைக் கொள்வனவு செய்யும் நூலகத்திலிருந்து பருவ இதழைக் கடனாகப்பெற்று, அல்லது வாசகரால் வேண்டப்பட்ட கட்டுரையை அப்பருவ இதழிலிருந்து பிரதிபண்ணிப் பெற்று வாசகரின் தேவையைப் ப+ர்த்தி செய்யலாம்.

அத்தோடு ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகமும் கொள்வனவு செய்கின்ற பருவ இதழ்களை வாசகர்கள் எவ்வளவிற்குப் பயன்படுத்துகின்றாகள் என்பதும் அறியப்படவேண்டிய விடயமாகும். நூல் கொள்வனவிற்கென ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பணம் பருவ இதழ்களுக்கே செய்யப்படுவதனால், அவற்றின் பண்பாடு பற்றிய மதிப்பீட்டினைத் தயாரித்தல் முக்கியமாகும். சில பருவ இதழ்களைக் கொள்வனவு செய்யும்படி விரிவுரையாளர்கள் சிபார்சு செய்தாலும் அவையாவும் உண்மையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. மேலெழுந்தவாரியான எமது கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட சில சஞ்சிகைகளை மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஆகியோர் ஆவலோடு எதிர் பார்ப்பதனையும் பயன்படுத்துவதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகமும் சரியான முறையில் பருவ இதழ்களின் உபயோகம் பற்றிய மதிப்பீட்னை எடுத்தல் வேண்டும். இதற்குப் பருவ இதழ் களின் முன் பக்கத்திவ் அல்லது கடைசி பக்கத்தில் ஒரு தாளினை ஒட்டி புள்ளியிடும்படி அறிவுறுத்தலாம். அல்லது வாசகர்கள் எடுத்துப் பயன்படுத்திய பருவ இதழ்களை மேசை மீது விட்டுச் செல்லும்படி பணிக்கலாம். முதற் குறிப்பிட்ட முறை ஓரளவிற்காவது மதிப்பீட்டைப் பெற உதவலாமென நம்பப்படுகின்றது. இவ்வாறு குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு ஒவ்வொரு பருவ இதழினதம் சில இதழ்களின் உபயோகம் பற்றிய மதிப்பீட்டினைக் கணித்துக் கொள்ளலாம். இதன்படி பயன்படுத்தப்படாத பரு இதழ்கள் பற்றிய பீடத் தலைவர்கள், விரிவுரையாளர்களுடன் ஆலோசித்து அவற்றின் சந்தாவை நிறுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மீதப்படுத்தப்படும் நிதியை வேறு பயனுள்ள பருவ இதழை அல்லது நூல்களைக் கொள்வனவு செய்யப் பயன் படுத்தலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டவாறு இலங்கையில் பல்கலைக்கழகங்களின் அமைப்பிற்கேற்ப நூலகக் கட்டிடங்களை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை இதனால் அனேக பல்கலைக்கழகங்களில் இடவசதியின்மைம ஒரு பெரும் பிரச்சினையாகவேயுள்ளது. நூலகங்களுக்குக் கொள்வனவு செய்யப்படுகின்ற நூல்கள், பருவ இதழ்கள் முதலியவற்றை பல குறிப்பிட்ட காலத்தில் பின் வாசகரால் பயன்படுத்தப்படுதல் மிகவும் அரிதாகி விடுகின்றது. இத்தகைய நூல்கள் இறாக்கைகளிற் பெருமளவு இடமத்தை பெறுவதனால் புதியனவற்றை ஒழுங்குபடுத்த முடியாது போகின்றது இந் நிலையில் சகல பல்கலைக்கழகங்களும் வாசகரால் பயன்படுப்படாத நூல்களை அவ்வவ்போது சேகரித்து ஒரு மத்திய இடத்தில் பாதுகாத்து வைக்கலாம். இவ்வாறு சேகரிப்பிற்கு அனுப்பபடுகின்ற நூல்கள் பற்றிய விபரத்தை அந்தந்த நூலகங்கள் வைத்திருக்க வேண்டும் . தேவையேற்படும்போது மீண்டும் அவற்றைப் பெற்று வாசகர்களுக்கு சேவைப்படுத்த அந் நூல்கள் பற்றிய விபரங்கள் பயன்படலாம். இத்தகைய ஒரு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குப் போக்குவரத்து வசதிகள், தபால்சேவை என்பன சீராக இயங்குதல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் தென்னிலங்கையில் இயங்கும் பல்கலைக்கழக நூலகங்களாவது இம் முறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கல்களும் இல்லை. நூலகங்களின் இட நெருக்கடியினைத் தவிர்க்க இம் முறை பெரிதும் உதவத்தக்கது.

பல்கலைக்கழகங்கள் கூட்டுறவு முறையிற் செயற்படுவதற்கு இந் நூலகங்களிலுள்ள நூல்களுக்குரிய கூட்டிணைப்பப் பட்டியல் (ருnழைn ஊயவயடழபரந) ஒன்று தயாரிக்கப்படல் மிகவும் அவசியமாகும். இக் கூட்டிணைப்புப் பட்டியல் அச்சிடப்பட்டுப் பிரதிகள் சகல பல்கலைக்கழக நூல்களுக்கும் வழங்கப்படுதல் வேண்டும். அத்தோடு ஒவ்வொரு வருடமும் இதற்குப் பின்னிணைப்பாகப் புதிய நூற்சேர்க்கைகளையும் (நேற யுஉஉநளளழைளெ) அச்சிட்டு இணைத்து இதனைப் புதுப்பித்தல் நன்று. இதனால் ஒரு நூலக வாசகர்களுக்குரிய நூல் எப் பல்கலைக்கழகத்தில் உண்டென்பதனைக் கூட்டிணைப்புப் பட்டியலின் உதவியுடன் கண்டறிந்து, இலகுவில் அந்நூலகத்தோடு தொடர்புகொண்டு, நூலகங்களிடையே நூல் இரவல் வழங்கல் முறையின் மூலம் குறிப்பிட்ட நூலைக் கடனாகப் பெற்றுத் தமது வாசகர் தேவையைப் ப+ர்த்தி செய்யலாம். சகல பல்கலைக்கழகங்களுக்கும் மத்தியிலுள்ள பல்கலைக்கழக நூலகமாகக் கொழும்புப் பல்கலைக்கழகம் திகழ்வதனால் இத்தகைய பட்டியல் ஏனைய நூலகங்களின் உதவியுடன் கொழும்புப் பல்கலைக்கழக நூலகம் தயாரித்து, நூல் இரவல் வழங்கல் சேவையைத் துரிதப்படுத்த உதவலாம்.

இவை தவிர உத்தியோகத்தர்களுக்குப்ட பயிற்சியளித்தல், நூலக உபகணரங்கள் ஏனைய நூலகங்களுக்குக் கடனாக கொடுத்துதவுதல் போன்றவற்றிலும் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழக நூலகங்கள் ஆரம்பக் கட்டத்திலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரி நூலகங்கட்கு உதவி புரிவதன்மூலம் சகல பல்கலைக்கழகங்களும் தரமான சேவையினை வாசகர்களுக்கு வழங்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்களின் வாசகர்களை எடுத்துக் கொள்வோமாயின் முக்கியமாக மாணவர்கள் நூலகங்களை மிகவும் குறைந்தளவிலேயே பயன்படுத்துகின்றரென்பது உண்மை. பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள், விரிவுரைக் குறிப்புகளுடன் மட்டும் திருப்திபடாது மேலும் அவை தொடர்பான விடயங்களையும் நூலகத்திற்குச் சென்று வாசித்து அறிதல் வேண்டும். இலங்கையில் மாணவர்களை வழிப்படுத்தும் பொறுப்பு விரிவுரையாளர்களுக்குரியதாகும். பரீட்சைக் காலத்தில் மட்டுமே பல்கலைக்கழகங்களின் சேவைப் பகுதிகள் யாவற்றிலும் மாணவர்கள் நிறைந்திருப்பார்கள். நூலகத்திற்குச் சென்று தமது பாடத்தோடு தொடர்பான குறிப்புக்களைச் சேகரிப்பதிலோ, பொது விடயங்கள் பற்றி வாசிப்பதிலோ மாணவர்கள் அதிகம் அக்கறை காட்டுவதாக இல்லை.

சில மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் இறுதியாண்டிலேயே நூலகத்தை நாடுகின்றனர். இத்தகைய நிலை தவிர்க்கப்படல் வேண்டும். புதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிபெற்று வந்ததும் அவர்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரி;த்து நூலகப் பாவனை பற்றிய அறிவுரைகளை நூலகர், உதவி நூலகர்கள் ஆகியோர் நிகழ்த்துவதோடு, நூலகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர்களு;ககு எடுத்தியம்புதல் இன்றியமையாதது. பல்கலைக்கழகத்திற்கு வருகின்ற மாணவர்களிற் பலர் கல்வி பயின்ற பாடசாலைகளிற் பாடசாலை நூலகங்கள் இல்லாதிருக்கலாம். அல்லது அவர்கள் பாடசாலை நூலகங்களையோ பொது நூலகங்களையோ பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். இதனால் பல்கலைக்கழக நூலகங்களில் அவர்களுக்குச் சிறந்த வழி காட்டல்கள் வழங்கப்படுதல் அவசியமானதாகின்றது. நூலகத்திலுள்ள பட்டியலைப் (ஊயவயடழபரந ) ;பயன்படுத்துவதற்கும், நூல்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் மாணவர்களுக்கு உதவியளிக்கப்படல் வேண்டும். இது ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகத்தினதும் வாசகர் சேவைப்பகுதியின் முக்கிய கடமையாகும்.

இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்லைக்கழகங்களில் மாணவர்களுக்குரிய விடுதி வசதிகள் போதியளவு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தனியார் விடுதிகளிலிருந்தே பல்கலைக்கழகங்களுக்குக் கல்வி பயில வர வேண்டியதாகவுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் அமைதியாக இருந்து படிக்கக்கூடிய கூழ்நிலை இருக்குமென எதிர்பார்க்க முடியாது. இந் நிலையில் இந் நூலகங்களிற் போதிய இருக்கை வசதிகளைக் கொண்ட வாசிப்புப் பகுதிகளை ஒதுக்குதல் வேண்டும். நூலகத்தின் பெரிய குறிப்புப்புத்தகங்களைக் கொண்டு செல்லுதல் தடை செய்யப்படுதல் அனேக நூலகங்களின் வழக்கமாகும். எனவே பல்கலைக்கழக நூலகங்களில் இடவசதியிருக்குமாயின் மாணவர்கள் அமைதியாக இருந்து வாசிப்பதற்n கன ஒரு தனிப் பகுதியினைக் கொண்டிருத்தல் மிகவும் விரும்பத்தக்கது இப்பகுதியும் நூலக அலுவலர் ஒருவரது மேற்பார்வையின் கீழேயே இருத்தல் வேண்டும். புதிதாக அமைக்கப்படும்ட பல்கலைக்கழக நூலகங்கள் இவ்வம்சத்தைக் கருத்திற் கொள்ளுதல் உகந்தது. இதனால் உண்மையில் நூலகத்தினைப் பயன்படுத்துவோருக்கு நூலகத்தின் ஏனைய சேவைப்பகுதிகளில் இலகுவில் இருக்கைகள் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

பல்கலைக்கழக நூலகங்கள் ஆண்டுதோறும் கொள்வனவு செய்து, புதிதாக நூலக இருப்பிற் சேர்த்துக் கொள்ளும் முக்கியமான நூல்களை அவற்றிற்குரிய பகுதிகளுக்கு அனுப்ப முன்னர் வாசகர் அனைவரும் காணக்கூடி இடத்தில் காட்சிக்கு வைத்திருதல் அவசியமாகும். இல்லாவிடில் இந் நூல்கள் குறிப்பிட்ட சில வாசகர்களினாலேயே மாறிமாறிப் பயன்படுத்தப்படலாம். இதனால் அந் நூல்கள் நூலகத்தில் இருக்கின்ற விடயமே ஏனையோருக்குத் தெரியாது போகலாம் பட்டியல் பதிவுகள் உரிய வேளையில் கோவைப்படுத்தப்பட்டாலன்றி இந் நூல்கள் பற்றி வாசகர் உடனே அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடையாது போய்விடும்.

பல்கலைக்கழக நூலக வாசகர்களது தேவை, நூலகத்தில் அவர்களால் உணரப்பட்ட குறைபாடுகள் என்பனபற்றி நூலகர் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல் இன்றியமையாததாகின்றது வாசகர்கள் தமது நேரத்தைச் செலவு செய்து நூலகரை அணுகி இவற்றைக் கூறுவார்கள் என எதிர்பார்த்தல் தவறு முக்கியமாக மாணவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கென ஒரு குறிப்புப் புத்தகம் நூலகத்தில் வாசகர் சேவைப் பகுதியில் அல்லது அதற்கு அண்மையில் வைக்கப்பட்டிருத்தல் நன்று. கிழமைக்கு ஒரு தடவை அல்லது மாதத்திலொருமுறை இதில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நூலகரோ உதவி நூலகரோ கவனத்திற் கொண்டு அவற்றுக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நூலக சேவைiயினைத் திறம்பட வழங்கலாம்.

இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற ஒவ்வொரு பல்கலைக்கழக நூலகமும் கலாசார நிலையமாகவே திகழ்கின்றதெனலாம். இவை தமது பல்கலைக்கழக வாசகர்களுக்கு மட்டுமல்லாது அந்தந்தப் பிரதேச சமூகத்தினருக்குச் சேவைபுரியும் கிழக்குப் பகுதிகளை எடுத்து நோக்குவோமாயின், இப் பகுதிகளில் தரம் வாய்ந்த பெருமளவு நூல்களைக் கொண்ட வேறு நூலகங்கள் தற்போது இல்லை. இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகமும், பல்கலைக்கழக அந்தஸ்தை அண்மையில் பெற்றுக் கொண்ட மட்டக்களப்புப் பல்கலைக்கழ நூலகமும் அந்தந்தப்பகுதியிலுள்ள ஆய்வாளர்கள், வெளிவாரிப்பட்டதாரி மாணவர்கள் போன்றோருக்கும் சேவையினை நல்குதல் வேண்டும். இத்தகையோருக்கு நூல்களை இரவல் வழங்காவிடினும், நூலகத்திலேயே பயன்படுத்த அனுமதியளிக்கலாம். இந்த வகையில் இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்கள் யாவும் பரந்தளவிலான சேவையினை நல்கினால் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என நம்பலாம்.

மூன்றாம் இயல்

தொழில் நுட்பக் கல்லூரி நூலகங்கள்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிலையங்களினின்றும் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டதொரு கல்வி நிறுவனமே தொழில் நுட்பக் கல்லூரியாகும். இங்கு பல்வேறுபட்ட தொழில்துறை சார்ந்த (ஏழஉயவழையெட வுசயiniபெ) கல்வியே போதிக்கப்படுகின்றது. இங்கு பயிலும் மாணவர்கள் தாம் விரும்பிய தொழில் துறைகளில் விடேச பயிற்சி பெறும் வாய்ப்பை இக் கல்லூரி அளிக்கின்றது.. தொழில்நுட்பத் துறையிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் (ஐரளவைரவந ழக வுநஉhழெடழபல) தொழில்துறை சார்ந்த மேற்பட்டப்படிப்பினைப் பெறும் வாய்ப்பும் வசதிகளும் அமைந்துள்ளமையும் கருத்திற்கொள்ளத்தக்கது.

தொழில்நுட்பக் கல்லூரியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படக்கூடிய விதத்தில் மாணவர்களைப் பயிற்றுவிப்பதோடு, அவர்கள் சுயமாகத் தொழில் துறைகயில் ஈடுபடுவதற்குரிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் துணை செய்கின்றது. இத்தகு இயல்புகளைக் கொண்ட தொழில்நுட்பக் கல்லூரிகளிலுள்ள நூலகமானது மேற்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக நின்று சேவை வழங்குதல் அவசியம்.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது விரிவுரைகள், பயிற்சி நெறிகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாக விளங்குதல் வேண்டும். நூலகத்தினதும் தகவல் சேவையினதும் முக்கியத்துவத்தை மாணவர்கள் உயரும் வகையில் அவர்கள் நெறிப்படுத்தப்படுதல் இன்றியமையாததாகும். நூலகத்திலுள்ள நூல்கள் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்தவையாகவும், கல்லூரியின் பாட விதானம், சூழல் என்பவற்றைச் சார்ந்தவையபகவம் இருத்தல் அவசியம்.

வாசகர்கள் :

தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தின் வாசகர்களில் அங்கு பயிலும் மாணவர்களும் விரிவுரைகளும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்களோடு தொழில்நுட்பக் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில துறைகள் பற்றி விரிவுரை நிகழ்வதற்குப் பகுதி நேர விரிவுரையாளர்களாக வருகை தருகின்ற விஞ்ஞான தொழில்நுட்ப நிபுணர்கள், பொறியியலாளர்கள் ஆகியோரும் இந் நூலகத்தைப் பயன்படுத்துவோராகின்றனர். எனவே இவர்கள் அனைவரும் பயன்படக் கூடியதாக நூலக ஆவணச் சேர்க்கையை உருவாக்குதல் நூலகர் கடமையாகும்.

சகல துறை சார்ந்த மாணவர்களும் இலகுவில் அணுகக்கூடியதும் அமைதியானதுமான கூழலில் நூலகம் அமைந்திருத்தல் அவசியமாகும். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தொகைக்கேற்பவும், நிதி வசதிகேற்பவும் நூலகம் போதிய இடவசதியுடையதாகவும் விளங்குதல் இன்றியமையாததாகும்.

நூற் சேகரிப்பு :

தொழில்நுட்பக் கல்லூரிக்கு நூற்சேகரிப்புச் செய்யும் நூலகர், பொது நூலகம் பாடசாலை நூலகம், பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றின் நூலகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையே எதிர்நோக்க வேண்டியவராகின்றார். மேற்கு நாடுகளிலுள்ள சில தொழில்நுட்பக் கல்லூரிகள் பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்களுக்கு விசேட பயிற்சியை நடத்துகின்றனர். வேறு சில தொழில்நுட்பக் கல்லூரிகள் பட்டப்பிற்படிப்பு மாணவர்களுக்குரிய பாடநெறிகளைப் போதிக்கின்றன. எனவே அந்தந்தத் தொழில்நுட்பக் கல்லூhயிpல் போதிக்கப்படுகின்ற பாடநெறிகளோடு நூலகத்திற்கு வழங்கப்பட்ட நிதிவசதி, இடம், அலுவலர்கள் முதலிய பல்வேறு அம்சங்களும் நூலக சேவையை வழங்குவதிற் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது தனது அங்கத்தவர்களது கலாசாரம், ஆக்கம், ஆராய்ச்சி ஆகிய சேவைகளைப் ப+ர்த்தி செய்ய முயற்சித்தல் வேண்டும். மாணவர்கள் தமக்கு வேண்டிய நூல்களை அவ்வவ்போது பெற்றுப் பயனடையக்கூடியதாக நூலகசேவை இருத்தல் வேண்டும். மாணவர்களது உபயோகத்தைப் பொறுத்துக் குறிப்பிட்ட நூல்களில் மேலதிக பிரதிகள் பெறுதல் தீர்மானிக்கப்படலாம்.

நூலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதித்தொகையை நூல் கொள்வனவிற்குச் செலவிடும்போது சகல துறைசார்ந்த நூல்களுக்கும் முக்கியத்துவமளிக்கப்படல் அவசியமாகும். தொழில்நுட்பக் கல்லூரிகளில் பருவ இதழ்கள் முக்கிய இடம்பெறுவதனால் அவற்றிற்குரிய பணத்தை முதலில் ஒதுக்கீடு செய்து பின்னர் உசாத்துணை நூல்கள், நூல் வடிவமல்லாத ஆவணங்கள் ஆகியவற்றிற்கும் குறைந்தது 30 மூ மாவது பயன்படுத்திக் கொண்டு மிகுதியையே நூல் கொள்வளவிற்கு உபயோகித்தல் உகந்தது.

நூல்களைக் கொள்வனவு செய்யும்போது முதலில் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்ற நூல்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்லூரி விரிவுரையாளர்கள் அவர்களது கற்பித்தல் நெறியோடு தொடர்புடையனவான நூல்களைக் கொள்வனவு செய்ய நூலகருக்குச் சிபார்சு செய்தல் வேண்டும்.

நூல் வெளியீட்டாளர்களினால் வெளியிடப்படுகின்ற நூல்கள் பற்றிய பட்டியல்கள் என்பவற்றை நூலகர் அவ்வப்போது பெற்றுக்கொண்டாலும் தெரிவில் விரிவுரையாளர்கள், பொறியிலாளர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிப்பதன் மூலம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களது உபயோகத்திற்கேற்ப பயனுள்ள நூல்களைக் கொள்வனவு செய்து கொள்ளலாம். தொழில்நுட்பத்துறை சார்ந்த நூல் வெளியீட்டாளர்களுடன் நூலகர் தொடர்பு வைத்திருந்தால் வெளியீட்டுப் பட்டியல்களையும் அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். சில தொழில்நுட்பக் கல்லூரிகளின் நோக்கம் குறிப்பிட்ட துறை சார்ந்ததாக மட்;டும் விளங்கினாலும் அக்கல்லூரி நூலகம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை இலக்கியங்கள், பொது உசாத்துணை நூல்கள் என்பனவற்றையும் தனது இருப்பிற் சேர்த்துக் கொள்ளுதல் விரும்பத்தக்கது.

தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் சில சமயங்களில் தம் நிறுவனத்திற்குரிய பாடநெறிகளுடன் தொடர்பற்ற அதேவேளையில் தமது அறிவு வளர்ச்சிக்கும், மேற்பட்டபடிப்பிற்கும் உதவக்கூடிய சில நூல்களையும், சஞ்சிகைகளையும் விரும்பிச் சிபார்சு செய்யக்கூடும். அத்தகைய விரிவுரையாளர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டிய நூலக வசதிகளை வழங்குதல் தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தின் கடமையாகும். ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி மாணவர்களுக்கும் அவர்களது பாடநெறிக்கு அப்பால் அவர்களது அறிவினை விருத்தி செய்ய உதவக்கூடிய ஆக்கங்களை அளிப்பதிலும் நூலகம் கவனம் செல்லுதல் வேண்டும். இந்த வகையில் தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது கலாசார மூல நிலையமாகப் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது.

சில விடயங்கள் தொடர்பாக மாணவர்கள் உயர்தரப் பாட நூல்களை விரும்புவது வழக்கம். மாணவர்களது தேவையைப் பொறுத்து இவற்றில் மேலதிக பிரதிகள் கொள்வனவு செய்யப்படல் வேண்டும். ஏற்கனவே நூலகத்திலுள்ள உசாத்துணை நூல்களுடன் ஒப்பிட்டு, மேலும் உசாத்துணைக்கு உதவக்கூடிய நூல்களை மதிப்பீடு செய்து வேண்டியவற்றைக் கொள்வனவு செய்தல் மூலம் வாசகர்களது தேவையை நிறைவேற்றலாம். பூரணமாக முழுமையான தகவல்களை வழங்கக்கூடிய விதத்தில் ஆவணங்களைச் சேகரித்தல் இன்றியமையாததாகும்.

அச்சிற்கிடைக்காத நூல்கள், முன்பு பயன்படுத்தப்பட்ட நூல்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கு அத்தகைய நூல்கள் பற்றி வெளியிடப்படுகின்ற நூற்பட்டிகள், பருவ இதழ்களில் வருகின்ற விளம்பரங்கள் விமர்சனங்கள் என்பன பெரிதும் பயனளிப்பனவாகும். அத்தோடு ஏனைய நூலகங்களுடன் நூல்களை மாற்றுச் செய்வதன் மூலமும் இத்தகைய நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பிரித்தானிய தேசிய நூல் நிறுவனம் (டீசவைiளா டிழழம உநவெசந) பயன்படுத்தப்பட்ட நூல்களுக்கும், பருவ இதழ்களுக்குமென இரு பட்டியல்களைத் தமது சந்தாதாரர்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய நிறுவனங்களில் அங்கத்துவம் வகிப்பதன் மூலமும் தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது வேண்டிய நூல்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் நூல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பருவ இதழுக்கும் அளிக்கப்படுதல் வேண்டும்.
புதிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஆவணமாகப் பருவ இதழ்கள் விளங்குவதனாலும், ஏற்கனவே சந்தா செலுத்தப்படுவதனால் நூலகத்திற்கு நிச்சயம் அவை கிடைக்கும் என்றதொரு நம்பிக்கையினாலும், ஆராய்ச்சி துறையினர் பருவ இதழ்களைப் பெரிதும் விரும்பி வாசிக்கின்றனர். தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது விஞ்ஞானம், தொழில்நுட்பத்துறை சார்ந்த தரமான பருவ இதழ்களைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.
தொழிலநுட்பக் கல்லூரி அளவில் பெரியதாகவும் ஆராய்ச்சி வேலைகளில் அதிகம் ஈடுபடுவதாகவும் இருக்குமாயின் அங்கு நூல்களிலும் பார்க்க பருவ இதழ்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டு வருதல் வழக்கமாகும்.

பல்வேறு துறைசார்ந்த ஆராய்ச்சியாளர்களும் நடைமுறையிலுள்ள பருவ இதழ்களை மட்டுமல்ல, பழைய பருவ இதழ்களையும் தமது ஆய்வுக்குத் தேடிப் பெறுகின்றனர். இதனால் தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது அவர்களது இத்தகைய ஆராய்ச்சிக்கு உதவக்கூடிய பருவ இதழ்களையும் தனது இருப்பில் பாதுகாத்தல் அவசியமாகும். இதற்கு உதவக்கூடியதாக அட்டவணை சுருக்கங்கள் ஆகியவற்றையும் இந் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளுதல் வாசகருக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமையும்.

சுருக்கங்கள் (யுடிளவசயஉவள) இதழ்களிலேயே சேர்த்து வெளியிடப்படல் வழக்கம். இவற்றைப் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால் அல்லது பருவ இதழ்களைத் சேகரிப்பதில் இடப் பிரச்சினையை நூலகம் எதிர்நோக்க நேரிடில் நுண் வடிவில் (ஆiஉசழகழசஅ) அவற்றைப் பிரதி எடுத்துப் பயன்படுத்தலாம்.
இதற்கென நுண்வடிவங்களைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கும்போது அப்பருவ இதழ்கள் எவ்வளவு காலத்திற்கு நூலகத்திற் பேணப்பட வேண்டியவை என்பதனையும் கருத்திற் கொள்ளுதல் அவசியமாகும். வாசகர்கள் நேரடியாகப் பருவ இதழ்களை வாசிப்பதனையே பெரிதும் விரும்புவர். ஆயினும் மலிவான தரமான வாசிப்பு உபகணரங்கள் இருக்குமாயின் வாசகர்கள் அவற்றைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுதல் சாத்தியமாகலாம்.

பொதுவாக சகல நூலகங்களிலும் இடம் பெறுகின்ற ஆவண வகைகளாக நூல்களையும் பருவ இதழ்களையும் குறிப்பிடலாம். தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது சிறப்பாக ஒரு விசேட நூலகத்தின் தன்மையுடையதாக விளங்குவதனால் அங்கு சேகரிக்கப்படுகின்ற ஆவணங்களிலும் பல்வேறு வகைகள் இடம் பெறுகின்றன. இத்தகைய ஆவணங்கள் ஒரு பல்கலைக்கழக நூலகத்தின் அல்லது பொதுசன நூலகத்தின் நூற்சேகரிப்பினின்றும் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. ஆனால் தொழில்நுட்பக் கல்லூரி நூலக வாசகர்களிடையே இத்தகைய ஆவணங்களின் தேவை அதிகமாகும்.

இந்த வகையில் தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் விளம்பரங்கள் கட்டளைகள், அறிக்கைகள், வர்த்தகப்பட்டியல்கள், அளவை வரைபடங்கள், புகைப்படங்கள் என்பன முக்கியமாக இருக்க வேண்டியவையாகும். ஏனைய விடயங்களுடன் தொடர்புடைய விளக்கப் படங்கள் முக்கியமானவையாகும். விளம்பரப்படுத்தல், படம் வரைதல் போன்றவற்றிற்கு இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பெட்டிகளில் அல்லது பேழைகளில் கோவைப்படுத்திப் பாதுகாக்கலாம் கடித உறைகளிலிட்டு வைத்து அல்லது அட்டைகளில் ஒட்டி வைத்தும் பயன்படுத்தலாம்.
உலகப்படங்கள் பல்வேறு அளவிலான உள்ளுர்ப் படங்கள், முதலியன நூலகத்தில் இருக்க வேண்டியனவாகும். மடிக்கப்படாத தாள்வடிவமான படங்கள் பெரிதும் விரும்பப்படலாம். இவை செங்குத்தாக அல்லது சமாந்தரமாக வைத்துப் பாதுகாக்கப்படலாம். மடிக்கப்பட்ட படங்கள் உசாத்துணைத் தேவைக்குப் போதுமானவையாகக் கருதப்படுகின்றது.

கட்டளைகள் (ளுவயனெயசனள) தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. பாடநெறி, ஆய்வுகூட வேலைத் தாள்கள், விரிவுரைகள், பாடநூல்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்படுகின்ற கட்டளைகளைத் தொழில்நுட்பக் கல்லூரி நூலகம் கோவைப்படுத்தி வைத்து வாசகர்களது பயன்பாட்டிற்கு வழங்குதல் நன்று . கட்டளைகள் எப்பொழுதும் ப+ரணமானவையாகப் பாதுகாக்கப்படவேண்டும். புதிய கட்டளைகள் அறிவிக்கப்பட்டதும் அவற்றைத் தொடர்ந்து நூலகத்திற்குப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவகையில் கட்டளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிலையான கொள்வனவுக் கட்டளையிடல் உகந்தது. இதனால் சில சமயங்களில் நூலகத்திற்குத் தேவையற்ற கட்டளைகளும் வந்து சேரும். ஆயினும் ஒவ்வொரு தடவையும் கட்டளைத் தெரிவு செய்தல். பணம் செலுத்துதல் ஆகியன சம்பந்தமாக விரயமாக்கப்படுகின்ற நேரம் மனித வலு என்பன மீதப்படுத்தப்படுகின்றன. தொழில் நுட்பக் கல்லூரி நூலகமானது கட்டளைகளை விநியோகிக்கும் நிறுவனத்தின் அங்கத்தவராகச் சேர்வதன் மூலம் அந் நிறுவனத்தின் ஆண்டுப்புத்தகம், நடவடிக்கை அறிக்கைகள் ஏனைய வெளியீடுகள் ஆகியவற்றை இலவசமாக அல்லது குறைந்த விலைக்குப் பெறும் வாய்ப்பினையும் ஈட்டிக்; கொள்ளலாம். அபிவிருத்தியடைகின்ற நாடுகளின் தூதரகங்கள் மூலம் இவற்றைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகளுமுள.

வுpயாபார நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அரசாங்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முதலியனவற்றின் அறிக்கைகள் தொழில்நுட்பக் கல்லூ நூலகத்திற்கான நூற்சேகரிப்பில் இடம்பெற வேண்டியவையாகும் ஆராய்ச்சி அறிக்கைகளும், இந்நூலகத்தின் வாசகர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை வரையறுக்கப்பட்ட முறையிலோ விநியோகிக்கப்படுவதனால் இலவசமாகவோ, பணம் செலுத்தவோ, இவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல் நூலகரது கடமையாகும்.

அந்தந்த நாட்டு அரசாங்க வெளியீடுகளில் தொழில்நுட்பக் கல்லூரியின் பாடவிதானத்தோடு தொடர்புடையவற்றைக் கட்டாயம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அரசாங்க அச்சகத்துடன் தொடர்பு கொண்டு நிலையான கொள்வனவுக் கட்டடளையைக் பிறப்பித்தல் மூலம் இவற்றைத் தொடர்ச்சியாகப் பெறலாம். சில அரசாங்க ஆவணங்கள் இலகுவாகவே நூலகங்களுக்கு வழங்கப்படுதல் வழக்கம். வர்த்தகக் கம்பனிகள் அரசாங்க நிறுவனங்களது வருடாந்த அறிக்கைகள் சிறு பிரசுரங்கள் வழிகாட்டி நூல்கள் என்பனவும் தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் முக்கிய இடம் வகிப்பவையேயாகும்.

இதேபோல வர்த்தகப் பட்டியல்களும் (வுசயனந ஊயவயடழபரந) தொழில்நுட்பக் கல்லூரி நூற்சேகரிப்பில் முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. வர்த்தகப் பட்டியல்கள் தனித்தனி தாள்வடிவிலும் சிறுதுண்டுப் பிரசுரங்களாகவும், நூல்வடிவிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு மிகக் குறைந்த நிதியே தேவைப்படுகின்ற போதிலும், பாதுகாப்பதற்குப் போதிய இடம் தேவைப்படுகின்றது. வர்த்தகப் பட்டியல்களை வெளியிடுகின்ற நிறுவனங்களின் அகரவரிசை ஒழுங்கில் இவை ஒழுங்குபடுத்தப்படுதல் வழக்கமாகும். இவற்றைக் கொள்வனவு செய்வதற்குரிய தெரிவு மூலமாக வர்த்தக வழிகாட்டிகள் , விளம்பரங்கள், வர்த்தக நிறுவன நூலகங்களின் சேர்க்கைப்பட்டிகள் என்பவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

நூல்கள், பருவஇதழ்கள், அறிக்கைகள் முதலிய மேற்குறிப்பிட்ட அச்சிடப்பட்ட நூலக ஆவணங்களோடு, தற்போது அச்சுவடிவமற்ற ஏனைய சாதனங்களும் நூலகங்களில் முக்கிய இடம் பெறுகின்றன. இதனால் நுண் வடிவப் படச்சுருள்கள், தட்;டுகள், நாடாக்கள் முதலியலற்றையும், தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள் கொள்வனவு செய்து கொள்ளுதல் வேண்டும். மாணவர்களது பாடவிதானத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை இவற்றில் பதிவு செய்து வைத்து விரிவுரை வகுப்புகளில் பயன்படுத்தலாம். இத்தகைய சாதனங்களைப் பேணுவதற்கேற்ற முறையில் நூலகத்தில் இடவசதியினையும் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நூல்கள், ஆவணங்கள் யாவும் வாசகரால் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமாயின் அவற்றைத் தக்க முறையில் ஒழுங்குபடுத்துதல் வேண்டும். பட்டியலாக்கம் பகுப்பாக்கம் செய்யப்பட்டு உரியமுறையில் இவை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலே வாசகர்கள் சிரமமின்றித் தமக்கு வேண்டியவற்றை இலகுவில் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். தூயிதசாம்சப் பகுப்பாக்கத்திட்டம், சர்வதேச தசாம்சப் பகுப்பாக்கத்திட்டம், ஆங்கிலோ – அமெரிக்கப்பட்டிலாக்க விதி முறைகள் என்பவற்றைப் பின்பற்றி பகுப்பாக்கமும் பட்டியலாக்கமும் செய்தல் சிறந்தமாகும்.

சேவைப் பகுதிகள் :-

பொதுவாக நூலகங்களில் உள்ள இரவல் வழங்கல் பகுதி உசாத்துணை சேவைப்பகுதி, பருவஇதழ் சேவைப்பகுதி ஆகியவற்றை முக்கியமானவையாகக் கருதலாம்.

இரவல் வழங்கும் பகதி மாணவர்களது தொடர்ச்சியான வாசிப்பிற்குந்தவையும், பாடநெறியோடு தொடர்புடையவையுமான பாடநூல்கள், பொழுதுபோக்கு வாசிப்பு நூல்கள், பொது விடயங்கள் பற்றிய நூல்கள் ஆகியவற்றை கொண்டதாக விளங்கலாம். ஒரு தரமான தொழில் நுட்பக் கல்லூரி நூலகமாயின் பிறவுண் நூல் இரவல் வழங்கல் முறை மூலம் நூல்கள் இரவல் வழங்கப்படல் சிறந்ததாகும்.

உசாத்துணைப் பகுதியில், கலைச் சொற்றொகுதிகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் வழிகாட்டி நூல்கள் ஆண்டுப் புத்தகங்கள் என்பவற்றோடு, முக்கியமானவையும், பெறுமதி வாய்ந்தவையுமான உசாத்துணை நூல்களும் இடம் பெறுகின்றன. இன்னும் கட்டளைகள், அறிக்கைகள், அரசாங்க வெளியீடுகள், வர்த்தப் பட்டியல்கள் வரைபடங்கள் தேசப்படங்கள் போன்றனவும் இப் பகுதியிலேயே உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்;தல் உகந்தது. தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும், விரிவுரையாளர்களும் இவற்றை அமைதியாகப் பயன்படுத்தக்கூடிய முறையில் இப் பகுதி இருத்தல் வேண்டும்.

நூலகத்தில் இடவசதியிருக்குமாயின் தேசப்படங்கள், விளம்பரங்கள், விளக்கப்படங்கள், கட்டளைகள் போன்றவற்றைத் தனியான அறையில் ஒழுக்குப்புறமாக ஒழுங்குபடுத்தலுமட் விரும்பத்தக்கது. விரிவுரையாளர்கள் வகுப்பு மாணவர்களை அழைத்து வந்து அவற்றைப் பாடபோதனையின்போது பயன்படுத்த இத்தகைய ஒழுங்குமுறை வாய்ப்பாக அமையும்.

ஏனைய நூல்களைப் போலவே இங்கும் பருவ இதழ்கள் நூலகத்திலேயே பயன்படுத்துவதற்கென தட்டையான தட்டுகளையுடைய ராக்கைகளில் ஒழுங்குபடுத்தப்படலாம். பருவ இதழ்களுக்குரிய அட்டவணைகள், சுருக்கங்கள் என்பனவும் இவற்றுக்கு அண்மையில் இருத்தல் வாசகருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகமானது மேற்குறிப்பிட்ட சேவைகளோடு சில விசேட சேவைகளையும் வழங்கி வருவதனை மேற்கு நாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. நன்கு வளர்ச்சியடைந்த, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைசார்ந்த கல்வியைப்புகட்டும் தொழில் நுட்பக் கல்லூரி நூலகங்களில் பின்வரும் விசேட சேவைகளையும் வழங்குதல் அவசியமாகும்.

விசேட சேவைகள் :

தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் அட்டவணைப்படுத்தல் சேவை முக்கியமாக இடம்பெறுதல் வேண்டும். பருவ இதழ்கள் அரசாங்க வெளியீடுகள், விஞ்ஞான தொழில்நுட்ப அறிக்கைகள், கட்டளைகள் வர்த்தகத்தோடு சம்பந்தப்பட்ட ஆக்க வெளியீடுகள் ஆகியன முக்கியமாக அட்டவணைப்படுத்தப்பட வேண்டிய ஆவணங்களாகும். அட்டவணைப்படுத்தப்படவேண்டிய ஆவணங்களாகும். அட்டவணைப்படுத்தல் சேவையின் முக்கியத்துவம் பின்வரும் சந்தர்ப்பங்களில் அவசியம் வேண்டப்படுகின்றது.

1. ஒரு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம்.
2. உள்ளுர்க் கைத்தொழிலுக்குத் தகவல் சேவையை வழங்க வேண்டிய சந்தர்ப்பம்.
3. கல்லூhயிpல் சில விரிவுரைகள் திட்ட அடிப்படையில் நடைபெறும் சந்தர்ப்பம்
4. நீண்ட கட்டுரைகளைத் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் சந்தர்ப்பம்

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அட்டவணைகள் சுருக்கங்கள் அச்சில் கிடைக்குமாயின் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நூலகர் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

நூலக ஆவணங்களுக்குப் பல்வேறு வகையான பதிவுகளைத் தயாரித்துக் கொள்வதன் மூலம் அவ்வாவணங்களை வாசகர்கள் இலகுவில் இனங்கண்டறிந்து பயன்படுத்த உதவ முடிகிநது. அதேபோல அவ்வவ்போது புதிதாக நூலகத்திற்கு வருகின்ற ஆவணங்கள் பற்றியும் உடனுக்குடன் வாசகருக்கு அறிவித்தல் இன்றியமையாததாகும். இத்தகைய சேவையினை இரண்டு வழிகளில் செய்து கொள்ளலாம். சகல வாசகருக்கும் வழிகாட்ட உதவுவன முதலாம் பிரிவினவாகும். இதற்குப் பயன்படக்கூடியனவாகப் பின்வரும் சேவைகளைக் குறிப்பிடலாம்.

அ. புதிய சேர்க்கைகளின் பட்டியலைத் தயாரித்து விநியோகித்தல்:-
பட்டியல் பதிவைத் தயாரித்து அவற்றைக் கொண்டு புதிய ஆவணங்கள் பற்றிய பட்டியை உடனுக்குடன் அச்சிட்டு விநியோகித்தல், பொதுவாக எல்லா நூலகங்களிலும் பின்பற்றப்படுகின்ற செயலாகும்.

ஆ பருவ இதழ் கட்டுரைத் தலைப்புக்களின் பட்டி :
பருவ இதழ்க் கட்டுரைகள் தலைப்புக்களைத் தட்டச்சுப் பதித்து வாசகருக்கு வழங்கலாம். அல்லது பருவ இதழ்களின் பொருளடக்கப் பக்கத்தில் பிரதிகளை எடுத்து வழங்கலாம்.

இ பருவ இதழின் பாவனை அதிகமாக இருக்குமாயின்:-

பருவ இதழ்க் கட்டுரைகளின் சுருக்கங்களைத் தும் சுருக்கப்பிரசுரமாக (யுடிளவசயஉவ டீரடடநவin) வழங்குதல் உகந்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் யாவற்றையும் உள்ளடக்கியதாக நூலகப் பிரசுரத்தைத் (டுiடிசயசல டீரடடநவin) தயாரித்து வாசகருக்கு வழங்குதல் மிகவம் சிறந்தது. இதனைத் தயாரிப்பதற்குத் திறமையான அலுவலர்களும் நேரமும் தேவையாகும். இத்தகைய வெளியீட்டை விடய அடிப்படையில் ஒழுங்குபடுத்தித் தயாரித்தல் அவை வாசகருக்குப் பெரிதும் பயன்படலாம்.

தனிப்பட்ட வாசகரது தேவையைப் ப+ர்த்தி செய்யக்கூடிய தகவல்களை வழங்குதல் இரண்டாவது பிரிவில் அடங்குகின்றது.

அ. பருவ இதழ்களை வாசகருக்குக் கிடைக்கும்படி வழங்குதல் :-
இதனால் தனிப்பட்ட வாசகர் பருவ இதழ்க் கட்டுரை பற்றிய தகவலைவிட பருவ இதழையே பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கிறது. ஆயினும் குறிப்பிட்ட வாசகரிடமிருந்து மற்றவருக்கு அப்பருவ இதழ் வழங்கப்படக் காலதாமதம் ஏற்படலாம். சில சமயம் அவை தவறி விடவும் கூடும். ஆகையால் இம் முறையை நூலகர்கள் பின்பற்றுதல் குறைவாகும்.

ஆ தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை வழங்கல்:-
(ளுநடநஉவiஎந னுநளiஅநயெவழைn ழக ஐகெழசஅயவழைn ) இதன்படி குறிப்பிட்ட வாசகருக்கு ஈடுபாடுள்ள விடயம் தொடர்பாகத் தகவல்கள் நூலகத்திற்கு வந்ததும் அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. இச் சேவையினைப் பின்வரும் முறையிற் செயற்படுத்திக் கொள்ளலாம்.



1. நூலகத் தகவல் மீட்சி முறையிற் பயன்படுத்தப்படுகின்ற அட்டவணைப்படுத்தல் மொழியைப் (ஐனெநஒiபெ டுயபெரயபந) பயன்படுத்தி, வாசகருக்கு ஆர்வமுள்ள விடயம் பற்றிய கோவையைத் (Pசழகடைந) தயாரித்துக் கொள்ளல் வேண்டும். இதனை வாசகர் கோவை (ருளநச Pசழகடைந) என்பர்.
2. நூலகத்திற்குப் புதிதாக வருகின்ற ஆவணங்களிலுள்ள தகவல்கள் அட்டவணைப்படுத்தப்படுகின்றன. இதனையே ஆவணக்கோவை (னுழஉரஅநவெ Pசழகடைந ) என்பர்.
3. காலத்திற்குக் காலம் வாசகர்கோவையும் ஆவணக் கோவையும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு வாசகர்களுக்குப் பயன்படக் கூடிய தகவல் இருப்பதாக அறியப்படுமிடத்து, அந்த வாசகருக்குக் குறிப்பிட்ட ஆவணம் நூலகத்திலிருப்பது பற்றி அறிவிக்கப்படுகிறது.
4. வாசகர் ஆவணத்தை இரவல் பெற்றுப் பயன்படுத்தலாம் அல்லது அதன் பிரதியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகம், முக்கியமாகப் பட்டப்பிற்படிப்பினை வழங்குகின்ற தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள் குறிப்பிட்ட ஒரு விடயம் சார்ந்த வெளியீடுகள் பற்றிய கணிப்பீடுகளையும் (டுவைநசயவரசந ளுரசஎநல) தயாரித்து வாசகருக்கு வழங்குதல் அவசியமாகும். இத்தகைய விடயக் கணிப்பீட்டினை மேற்கொள்வதற்குக் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக ஆழ்ந்த அறிவு இன்றியமையாததாகின்றது.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள் வழங்கக்கூடிய பிறிதொரு சேவையே மொழிபெயர்ப்புச் சேவையாகும். அந்தந்த நாட்டு மொழியல்லாத பிறமொழி ஆக்கங்களை வாசகர்கள் வேண்டியவிடத்து மொழிபெயர்த்து வழங்கக்கூடிய வசதிகளையும் தொழில்நுட்பக்கல்லூரி நூலகங்கள் கொண்டிருத்தலை அனேகமான மேற்கு நாட்டுத் தொழில்நுட்பக் கல்லூகளில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உதாரணமாக ரு~;யமொழி, ஜேர்மனிய மொழி, பிரஞ்சுமொழி ஆகியவற்றிலுள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமது வாசகருக்கு வழங்கும் சேவையினை அமெரிக்க, பிரித்தானிய நாட்டுத் தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்களிற் பல மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சகல தொழில் நுட்பக் கல்லூரி நூலகங்களிலும் இத்தகைய விசேட சேவைகளை வழங்கக்கூடிய வசதியிருக்குமென எதிர்பார்க்க முடியாது ஆயினும் தொழில்நுட்பக் கல்லூரியின் தரத்தினையும், வாசகர்களின் சேவையினையும் கருத்திற்கொண்டு நூலகர்கள் இச் சேவைகளைத் தமது நூலகங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்த முயற்சியெடுத்தல் வேண்டும் மாணவர்களைவிட, விரிவுரையாளர்களே விசேட சேவையினால் பெரிதும் பயனடையவர்களாகின்றனர். அட்டவணைப்படுத்தல், சுருக்குதல் முதலிய சேவைகயை ஒழுங்குபடுத்தக் கூடிய திறமையுடைய நூலகரும் இருத்தல் வேண்டும்

அலுவலர்கள்:-

மேற்கு நாடுகளில் தொழில்நுட்பக்கல்லூ நூலகங்களில் பிரதான நூலகரும் அவருக்கு உதவியாளர்களும், இலிகிதர்களும் கடமை புரிதல் வழக்கம். நூலகர் தொழில்நுட்பக் கல்லூரியின் பாடநெறிகளை நன்கு உணர்ந்தவராக இருத்தல் அவசியம். விஞ்ஞானம் தொழில்நுட்பத் துறைகளில் தேர்ச்சிபெற்றவராகவும், தொழில்சார் தகமைகளையுடையவராகவும் இருத்தல் விரும்பத் தக்கதாகும்.

வாசகர்களுக்குப் பயன்படக்கூடிய நூலக ஆவணங்களைச் சேகரித்தல், ஒழுங்குப்படுத்தல் அட்டவணைகளைத் தயாரித்தல் ஆகிய நடவடிக்ககைகள் மூலம் வாசகர்களது தேவையைப் ப+ர்த்தி செய்வதோடு விடயத்தேடுகள் சம்பந்தமான தொழில் நட்பத்தை அறிந்தவராகவும் நூலகர் இருத்தல் வேண்டும். தொழில்நுட்பக் கல்லூரிக்குப் புதிதாகச் சேர்ந்த விரிவுரையாளர்களை நூலகத்திற்கு வரவேற்று அவரவருக்கு ஆர்வமுள்ள விடயங்கள் நூலகத்தில் கிடைக்கக்கூடிய நூல்கள், மற்றும் நூலக ஆவணங்கள் பற்றி எடுத்துரைத்தல் வேண்டும். அவ்வவ்போது துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்களைச் சந்தித்து நூலக சேவையை முன்னேற்றுதல் பற்றிக் கலந்தாலோசித்தல் நூலக சேவையை திறம்பட வழங்க உதவும். நூலகசேவை பற்றி விரிவுரையாளர்களது கருத்துக்கள் விமர்சனங்கள் என்பவற்றையும் அறிந்து கொள்ளுதல் சேவையை விரிவாக்கப் பயனளிக்கலாம்.

இந்த வகையில் தொழில் நுட்பக் கல்லூரி நூலகமானது மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்குப் பயனளிக்கக் கூடிய சேவைகளை நல்குவதன் மூலம் , அவர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவிபுரிந்து, நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குவதற்கும் வழி வகை செய்கின்றது.

இலங்கையில் தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள் :-

இலங்கையில் எல்லாமாக 23 தொழில்நுட்பக் கல்லூரிகள் தற்போது இயங்குகின்றன. 1894 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மருதானை தொழில்நுட்பக் கல்லூரியே இவற்றுள் மிகவும் பழமை வாயந்ததாலும். ஏனைய தொழில்நுட்பக் தொழில்நுட்பக் கல்லூரிகள் யாவும் 1950 ஆம் ஆண்டின் பின்னர் நிறுவப்பட்டமையே. யாழ் தொழில்நுட்பக் கல்லூரி 1959 இல் நிர்மாணிக்கப்பட்டது. இத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் யாழ்ப்பாணம், சம்மாந்துறை, ஆகிய இரு இடங்களிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாத்திரமே தழிழ்மொழி மூலம் பாடநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய தொழில் நுட்பக் கல்லூரிகள் யாவும் 1978 ஆம் ஆண்டில் உயர்கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல், கல்வி அமைச்சின் கீழேயே செயற்பட்டு வந்தன. இவற்றில் பாடசாலைகளிலிருந்து விலகிய மாணவர்களுக்கும். தொழில் புரிகின்றவர்களுக்குமாகப், பொறியியல், தொழில் நுட்பவியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் தேசிய டிப்ளோமா வகுப்புகளும் தேசிய சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. விவசாயத்துறை சார்ந்த வகுப்புக்களும் ஓரளவு நடைபெறுகின்றன. இத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் அவற்றின் தரத்திற்கேற்ப நூலகசேவையும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஏனைய நூலகங்களைப் போலவே தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்களிலும் வாசகர்களது தேவையைப் ப+ர்த்தி செய்யக் கூடியளவிற்கு நூலக ஆவணங்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதிவசதி இடமளிப்பதில்லை. அத்தோடு நூலக சேவைக்கெனத் தகுந்த கட்டிட வசதிகள் வழங்கப்பட்டதாகவுமில்லை. எனவே, நிதி, இடம் என்பன பற்றாக்குறை காரணமாக இலங்கையிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் பலவற்றில் திருப்திகரமான சேவை வழங்கப்படுவதாகக் கூற முடியாது . அத்தோடு இத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் மிகச் சிலவற்றிலேயே தகுதி வாய்ந்த நூலகர்கள் கடமையாற்றுகின்றனர். அனேகமான கனி~;ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் அதிபரால் நியமிக்கப்பட்ட போதனையாளர் ஒருவரே நூலகராகவும் பணிபுரிந்து வருகின்றார். இந்தகைய தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்களும், ஆசிரியர்களும், இந் நூலக சேவையில் பல குறைபாடு இருப்பதாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இக் குறைபாடுகளை நீக்கி முழுமையான சேவையினை வழங்குவதற்கு இக் கல்லூரி அதிபர்கள் முயற்சி செய்தல் அவசியமாகும். இக் கல்லூரி நூலகங்களுக்கு முழு நேரமும் சேவையாற்றக்கூடிய திறமையான நூலகரை நியமிப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். தொழில்நுட்பக் கல்லூ நூலகர்கள் இலங்கை நூலகச் சங்கத்தினரால் நடாத்தப்படுகின்ற இடைநிலைப் பரீட்சையிலாவது சித்தியடைந்தவர்களாக இருப்பதால்தான் நூலகத்தைச் சிறந்த ஒழுங்குபடுத்தித் திருப்திகரமான சேவையினை நல்கக்கூடியதாகவிருக்கும்.

நூலகர்தான் பணியாற்றுகின்ற தொழில் நுட்பக் கல்லூரியில் போதிக்கப்படுகின்ற பாடநெறிகள் பற்றித் தெளிவான அறிவுடையவராக இருத்தலோடு, மாணவர்கள், ஆசிரியர்கள் தேவைகளையும் உணர்ந்து செயற்படுதல் வேண்டும்.

பல்கலைக்கழக நூலகங்களிற் போலவே இங்கும் பயிலுகின்ற மாணவர்கள் தமது வகுப்பு நேரங்கள் தவிர்ந்த வேலைகளில் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டியவர்களாகின்றனர். அவர்களது பாடநெறிகளுக்குரிய நூல்களையும், அவற்றோடு தொடர்புடைய விடயங்கள் பற்றிய நூல்களையும் இத் தொழில் நுட்பக் கல்லூரி நூலகங்கள் தமது இருப்பிற் சேர்த்தல் அவசியமாகும்.

அனேகமான நூல்கள் ஆங்கிலமொழியிலேயே இருப்பதனால் இங்கும் மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்குரிய பாடநூல்களோடு, அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், கலைச் சொற்றொகுதிகள் என்பனவும் முக்கியமாக நூலகத்தில் இருக்கக் வேண்டிய ஆவணங்களாகும். பாடசாலைக் கல்வியினைக் முடித்துக் கொண்டு தொழில்நுட்பக் கல்லூhயிpல் சேரும் மாணவர்கள் புதிய துறை சார்ந்த கல்விநெறியினை மேற்கொள்வதனால் அவை பற்றிய அடிப்படை அறிவினைப் பெற்றுக் கொள்ள இந்நூல்கள் பெரிதும் துணைபுரியத்தக்கவையாகும்.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்களும் பருவ நூலகங்களும் பருவ இதழ் கொள்வனவிற்கெனக் கணிசமான அளவு நிதியினை ஒதுக்கவேண்டியவையாகின்றன. வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய பருவ இதழ்களைக் கொள்வனவு செய்தல் மிகவும் இன்றியமையாததாகும். பருவ இதழ்களுக்குரிய அட்டவணைகள், சுருக்கங்கள் என்பன அவ்வவ்போது வெளியிடப்பட்டாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் நூலகளுக்குக் காலதாமமேற்படலாம். இதனால் தொழி;ல்நுட்பக் கல்லூரி நூலகரே இவற்றில் வருகின்ற கட்டுரைகளை அட்டவணைபடுத்தி அட்டவணைபடுதல் சேவையினை வழங்க முன் வருதல் வேண்டும். அல்லது பருவ இதழ்களின் பொருளடக்கப் பக்கத்தைப் பிரதி பண்ணித் தம் தொழில்நுட்பக் கல்லூரியிலுள்ள பல்வேறு துறைசார்ந்த விரிவுரையாளர்களுக்கும் வழங்குதல் நல்லது.

தொழில்நுட்பக் கல்லூரி நூலகர்கள் அரசாங்க நிறுவனங்கள், கட்டளைகள் பணியகம் (ளுவயனெயசன டீரசநயர) ஆவணவாக்க நிலையங்கள் ஆகியவற்றோடும், வெளியீட்டாளர்களுடனும் தொடர்புகொண்டு அவர்களது வெளியீடுகள் வெளியீட்டாளர் பட்டியல்கள் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் வேண்டும். இந் நிறுவனங்களது வெளியீடுகள் இலவசமாகக் கிடைக்கப்பெறாவிடின், இவற்றிற்கென நிலையான கொள்வனவுக் கட்டளையைப் பிறப்பித்து உரிய நேரத்தில் வெளியீடுகளைப் பெற்றுத் தமது வாசகர்களது தேவையைப் ப+ரணப்படுத்த முயற்சி;த்தல் அவசியம்.

வளர்முக நாடுகளிலுள்ள நூலர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்கின்ற நிறுவனங்களான ஆசிய நிறுவனம் (யுளயை குழரனெயவழைn) வெளிநாட்டு அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (ழுனுயு) ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தாம் பணியாற்றுகின்ற தொழில்நுட்ப கல்லூரிகளின் பாடநெறிகளோடு தொடர்புடைய விடயங்கள் பற்றிய நூல்களைப் பெற்றுக் கொள்வதில் நூலகர் அதிக ஆர்வம் செலுத்துதல் நன்று. அத்தோடு இலங்கையில் நூலக சேவையினை வழங்குகின்ற பிரித்தானியக் கவுன்சில் நூலகம், அமெரிக்கத் தகவல் நிலைய நூலகமட ஆகியன தமது வாசகர்களுக்குப் பயன்படாதெனத் தீர்மானித்துத் தமது இருப்பிலிருந்து இரத்துச் செய்கின்ற நூல்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகேற்றவற்றை நூலகர்கள் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பும் உள்ளது. நூல்கொள்வனவிற்கெனப் பெருமளவு நிதி கிடைக்காதவிடத்து இத்தகைய வழிகளில் நூல்களைச் சேகரிப்பதிற் கூடிய கவனம் செலுத்துதல் எந்தவொரு நூலகரதும் முக்கிய கடமையாகும்.

இக் கல்லூரிகள் இருக்கின்ற மாவட்டத்திலுள்ள பொதுவான நூலகத்தோடு தொடர்பு கொண்டு அல்லது அப்பிரதேசத்தில் பல்கலைக்கழக நூலகமிருக்குமாயின் அந் நூலகத்தோடு தொடர்பு கொண்டு சேவையை விருத்தி செய்ய முயற்சிக்கலாம் வாசகர்களால் வேண்டப்படுகின்ற ஒரு நூல் தமது நூலகத்திலில்லாதவிடத்து, அண்மையிலுள்ள பொதுசன நூலகத்திலிருந்தோ அந்நூலைக் கடனாகப் பெற்று வாசகரது தேவையை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்தல் முக்கியமானதாகும். உதாரணமாக யாழ் தொழில்நுட்பக் கல்லூரி நூலகம் நூலகங்களிடையேயான நூல் இரவல் வழங்கல் திட்டத்திற்கமைய யாழ். பல்கலைக்கழக நூலகத்திலிருந்து அவ்வவ்போது நூல்களைக் கடனாகப் பெற்றுத் தமது வாசகர் தேவையைப் ப+ர்த்தி செய்து வருதல் குறிப்பிடத்தக்கதாகும். தொழில்நுட்பக் கல்லூரி நூலகர் வாசகர்களது தேவையை அறிவதோடு, பாடநெறியில் ஏற்படுத்தப்படுகின்ற புதிய மாற்றங்களையும் கவனித்துத் தமக்கு நிதி ஒதுக்கும் உயர்கல்வி அமைச்சுடன் கலந்தாலோசித்து மேலதிக நிதியை நூலக அபிவிருத்திக்கெனப் பெற்றுக் கொள்ள முயலுதல் வேண்டும்.

இலங்கையிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரி நூலகர்கள் அனைவரும் தமக்குள் சுமூகமான தொடர்பினை வைத்திருந்து நூலக சேவையினை விருத்தி செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொள்ளுதல் பயன்தரும் செயலாகலாம். பல்கலைக்கழக நூலகங்கள் யாவும் தமக்குள் கூட்டுறவாக இயங்கிச் செயற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பது போலவே, இத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலுள்ள நூலகர்களும் கூட்டுறவு அடிப்படையிற் செயற்படலாம். இந் நிறுவனங்கள் யாவும் ஒரே துறை சார்ந்தவையாக இருப்பதனால் ஒரே நூலகமும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற நூல்கள், பருவ இதழ்கள், அறிக்கைகள் கருத்தரங்குக் கட்டுரைத் தொகுதிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதோடு, ஏனையவற்றைப் பொறுத்தமட்டில் தம்மிடையே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அதன்படி ஒவ்வொரு நூலகத்திற்குதெனக் குறிப்பிட்ட விடயங்களைப் பகிர்ந்தெடுத்து அவ்விடயங்கள் பற்றிய நூல்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கலாம். இத்தகைய முறையில் கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் கூட்டுறவு அமைப்பில் பங்குபற்றுகின்ற பிறிதொரு தொழில்நுட்ப கல்லூரி நூலக வாசகருக்குத் தேவைப்படுமிடத்து நூல் இரவல் வழங்கல் முறை மூலம் அந் நூலகத்திற்கு வழங்கப்பட்டு வாசகரது தேவை நிறைவு செய்யப்படலாம். இதனால் நூல்களில் நிதிப்பற்றாக்குறை,இடநெருக்கடி என்பன ஓரளவாவது குறைக்கப்படுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.

விஞ்ஞானம்,தொழில்நுட்பத் துறைசார்ந்த சிறந்த நூல்கள், பருவ இதழ்கள் முதலிய ஆங்கில மொழியிலேயே கிடைக்கக்கூடியனவாக இருக்கின்றன. இலங்கையில் தாய்மொழிக் கல்வியே போதிக்கப்படுவதனால் மாணவர்கள் ஆங்கில நூல்களை வாசித்து விளங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்படுதல் இயல்பு. இதனால் நூலகர்கள் மொழிபெயர்ப்புச் சேவையினையும் வழங்க முன் வருதல் சிறந்தது. குறிப்பிட்ட விடயம் பற்றிய ஆழ்ந்த அறிவும் மொழிப்புலமையும் உடையவர்கள் மூலமே மொழிபெயர்ப்புச் செய்யப்படுதல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மொழி பெயர்ப்புத் தேவைப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதிலும் நிதிப்பற்றாக்குறை ஏற்படலாம். இதனால் தொழில்நுட்பக் கல்லூரிகள் யாவும் கூட்டாகச் செயற்பட்;டு ஒரு சிறிய மொழி பெயர்ப்புக் குழுவொன்றை நியமித்தல் மூலம் நிதி நெருக்கடியினையும் சமாளித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு கட்டுரை மொழி பெயர்க்கப்படுமிடத்து அதன் பிரதிகள் சகல தொழில்நுட்பக் கல்லூரி நூலகர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இத்தகைய சேவை மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாகும்.

எனவே தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்கள் நூலகசேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமது நூலகர்களுக்குத் தகுதி வாய்ந்த நூலகர்களை நியமிப்பதில் முதலிற் கவனம் செலுத்துதல் வேண்டும். நூலகர்கள் அதிபரின் உதவியோடு மேலிடங்களுடன் தொடர்பு கொண்டு நூலக அபிவிருத்திக்கு வேண்டிய நிதியினைப் பெற்றுத் தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்களின் சேவையினை மேலும் விரிவாக்க நடவடிக்கை எடுத்தல் இன்றியமையாததாகும்.

ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்கள்

ஒரு நாட்டிற்கு சிறந்த சமுதாயத்தினை உருவாக்குகின்ற அறிவாளிகளின் வரிசையில் பாடசாலை ஆசிரியர்களும் மிகவும் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். சிறுவயது முதல் மாணவர்களை நல்வழிப்படுத்தி வழிநடத்திச் செல்லும் பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்ததாகும். பாடசாலை ஆசிரியர்களில் பட்டதாரிகள் மட்டுமன்றி, பாடசாலைகளில் உயர்வகுப்பிற் சித்தியடைந்தவர்களும் இடம் பெறுகின்றனர். இத்தகைய ஆசிரியர்களும் ஆசிரியப் பயிற்சியினை வழங்கும் நிறுவனங்களே ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளாகும். எனவே, இந்நிறுவனங்களில் ஆசிரிய மாணவர்கள், அவர்களது விரிவுரையாளர்கள் ஆகியோர் அங்கத்தவர்கள், அவர்களது விரிவுரையாளர்கள் ஆகியோர் அங்கத்தவர்களாக இடம் பெறுகின்றனர்.

மேற்கு நாடுகளில் இக் கல்லூரிகள் ஆசிரிய கல்லூரிகள் (வுநயஉhநசள வுசயiniபெ ஊநடடநபநள) எனவும் கல்விப் பாடசாலைகள் (ளுஉhழழட ழக நுனரஉயவழைn) எனவும் பல்வேறு பெயர்களில் செயற்பட்:டு வருகின்றன. இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் நிர்வாகத்தின் கீழ் அவற்றின் ஒரு பகுதி நிறுவனங்களாகவும் இயங்குகின்றன. இவ்வாறு வேறுபட்ட பெயர்களில் அமைந்திருந்தாலும் இவற்றின் குறிக்கோள் புதிதாகச் சேவையில் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி நெறிகளை வழங்குதலாகும். இத்தகைய நிறுவனங்களில் பயிலுகின்ற ஆசிரிய மாணவர்களுக்கும், பயிற்சிவிக்கின்ற ஆசிரியர்களுக்கும் வேண்டிய நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சேவை வழங்குதலே ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களின் நோக்கமாகும்.

ஓவ்வொரு பயிற்சிக் கல்லூரியிலும் போதிக்கப்படுகின்ற பாட நெறிகளோடு தொடர்புடையனவையான நூல்கள், பருவஇதழ்கள், அறிக்கைகள், விளக்கப்படங்கள், கருத்தரங்குக் கட்டுரைத்தொகுதிகள் முதலிய நூலக ஆவணங்களை அங்குள்ள நூலகங்கள் தமது இருப்பிற் சேர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

வாசகர்கள் :-

ஆசிரிய மாணவர்கள் சுயமாக நூல்களை வாசித்து அறிவை விருத்தி செய்ய உதவக்கூடிய வகையில் நூலகங்களில் போதிய அளவு நூல்களும் ஏனைய நூலக ஆவணங்களும் சேகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவர்கள் தமது கல்வி அறிவையும் தொழில் சார்ந்த தகைமைகளையும் விருத்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் நூலகத்தைப் பயன்படுத்துமாறு விரிவுரையபளர்களினால் தூண்டப்படுகினறனர். ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகர் அவர்களை மாணவர்கள் என்ற ரீதியில், நூல்களைப் பயன்படுத்துதற்கு உற்சாகப்படுத்துவதோடல்லாது ஆசிரியர்கள் நிலையில் வைத்தும் நெறிப்படுத்துதல் வேண்டும் நூல்களைப் பற்றி அறிதல், அவற்றைப் பயன்படுத்துதல் என்பன பற்றி எடுத்துக்கூறி அவற்றைக் கற்பித்தலோடு தொடர்புபடுத்திக் காட்டுதலே நூலகரது பொறுப்பாகும். பொது நூலகம், ஏனைய கல்வி நிறுவன நூலகங்கள் ஆகியவற்றில் இம் மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பயனுள்ள சேவைகள் பற்றிறும் விவரித்தல் நூலகரது கடமையாகின்றது.

ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களும் இக் கல்லூரி நூலகர்களின் வாசகர்களேயாவார். எனவே ஆசிரிய மாணவர்களுக்கு மட்டுமன்றி, அங்குள்ள கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் அவர்கள் கற்பிக்கின்ற பாட நெறிகளோடு தொடர்புடைய நூல்களை வழங்குதல் வேண்டும். அத்தோடு இவ்வாசிரியர்கள் தமது nசொந்த ஆய்வு வேலைகளுக்குப் பயனளிக்கக்கூடிய நூலக ஆவணங்களையும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களிலிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய நூலக வசதிகளையும் வழங்குதல் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகரது கடமையாகும்.

நூல் சேகரிப்பு:-

ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்தந்தக் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பாடநெறிகள் பற்றிய நூல்களோடு அவை தொடர்பான உசாத்துணை நூல்கள், உடனடி உசாத்துணைநூல்கள் முதலியனவும் நூலக இருப்பிற் சேகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை தவிர கற்பித்தல் சம்பந்தமான நூல்கள் சிறுவர் உளவியல், கல்விக் கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிய நூல்கள் ஆகியனவும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் விசேடமாக இடம் பெறத்தக்க நூல்களாகும். கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவ ஆசிரியர்களுக்கும் பாடசாலைப் பிள்ளைகளது வேலைகளில் பயனளிக்கக்கூடியனவும், அவர்கள் பயன் பெற்று மகிழக்கூடியனவுமான சகல வகை ஆவணங்களையும் வழங்க முயற்சி எடுத்தல் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகரது கடமையாகும். அந்தந்த நாட்டிலுள்ள கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளும் இந் நூலகத்தில் சேகரிக்கப்பட்டிருத்தல் விரும்பத்தக்கதாகும்.

ஆசிரிய மாணவர்கள் கற்பித்தல் பயிற்சியினை மேற் கொள்கின்ற பிரதேசம் பற்றிய புள்ளிவிபரம், விளக்கப்படங்கள், அப்பிரதேசம் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் முதலியவற்றையும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகத்தில் சேகரித்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஏனைய நூலகங்களைப் போலவே ஆசிரி;ய பயிற்சிக் கல்லூரி நூலகங்களிலும் அவற்றின் நிதி, இடவசதிகேற்ப கட்புல செவிப்புல சாதனங்கள் சேகரிக்கப்பட்டு ஆசிரிய மாணவர்களது பயன்பாட்டிற்கு வழங்கப்படுதல் வேண்டும். ஒலிப்பதிவு நாடாக்கள் தட்டுக்கள், படச்சுருள்கள், ஆகியவற்றோடு இன்னும் பல்வேறுபட்ட நூல்வடிவங்களையும் பயன்படுத்தக்கூடிய வசதியினையும் வாய்ப்பினையும் ஆசிரிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்குதல் இந் நூலகங்களின் கடமையாகும். போதிய அளவு இடவசதி, நிதி வசதி ஆகியவற்றினையுடைய மேற்கு நாட்டு ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களில் இத்தகைய அச்சிடப்படாத ஆவணங்களைக் கொள்வனவு செய்வதிலும் சேவைப்படுத்துவதிலும் எத்தகைய பிரச்சினையும் தோhன்றாது. ஆனால் வளர்முக நாடுகளில் பொதுவாக நூலகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாக நிதி, இடம் ஆகியன உள்ளன. இதனால் இத்தகைய ஆவணங்களையும் அவற்றைப் பயன்படுத்துவதற்குரிய கருவிகளையும் பெற்றுக் கொள்வதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் நூலகர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். ஆயுpனும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளின் பாடநெறிகளுக்கு அவை அவசியமெனக் காணப்படும் பட்சத்தில் மேலிடத்துடன் தொடர்பு கொண்டு இவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் நூலகர்களது கடமையாகும்.

சேவைகள் :-

ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களில் நூல் இரவல் வழங்கல் சேவை, உசாத்துணைச் சேவை என்பன மிகவும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஆசிரிய மாணவர்கள் தமக்கு வேண்டிய நூல்களை எடுத்து சென்று பயன்படுத்த வசதியளிக்கப்படுவதோடு நூலகத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டிய உசாத்துணை நூல்களை உபயோகிப்பதற்கென உசாத்துணைப் பகுதியில் இருக்கை வசதிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருத்தல் வழக்கம்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் இந் நூலகங்களில் தகவல் சேவையும் வழங்கப்பட்டு வருகின்றது. கல்வி, கல்வியோடு தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமான விசேட தகவல்களையும், அவ்விடயங்களோடு தொடர்புடைய நூல் விபரப் பட்டியல்கள், நூற்சேர்க்கைப் பட்டிகள் முதலியவற்றையும் வழங்குகின்றன. அத்தோடு நூலக ஆவணங்களைக் கொண்ட கண்காட்சிகளை நூலகத்திலும், வெளியிலும் ஒழுங்குபடுத்துவதன் மூலம் கல்லூரி ஆசிரியர்களின் கற்பித்தல் நெறியினை நவீன முறைப்படுத்தக்கூடிய வாய்ப்பும் கிடைக்கின்றது.

நூலகர் :-
ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களின் சேவை திறம்பட நடைபெறுவதற்கு தொழில்சார் தகுதி வாய்ந்த நூலகரும் உதவியாளர்களும் அவசியமாகின்றனர். நூலகர்கள் அங்குள்ள ஆசிரியர்களுக்குச் சமமான தகுதியுடையவராக இருத்தல் விரும்பத்தக்கது. ஆசிரியர்களுடன் சுமூகமான உறவினை வைத்திருப்பது அவர்களது தேவையை அறிந்து சேவையினை வழங்குதல் வேண்டும். ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பாடநெறிகளில் ஏற்படுத்தபடுகின்ற மாற்றங்கள் பற்றி அவ்வவ்போது நூலகர் அறிந்து ஏற்ற வகையில் நூல் சேகரிப்பினையும் பலப்படுத்திக் கொள்ளும் திறமையுடையவராக இருத்தல் வேண்டும். ஆசிரிய மாணவர்களை நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு நெறிப்படுத்தும் திறமையுடையவராக இருத்தல் அவசியம். நூலகத்தை நல்ல முறையில் நிர்வகித்தல், தனது அலுவலர்களுக்கு வழிகாட்டல், நூல் சேகரிப்பிற்கென ஒதுக்கப்பட்ட நிதியினைப் பயன்படுத்திப் பயனுள்ள ஆவணங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தல் என்பனவற்றில் திறமையுடையராக நூலகர் விளங்குதல் வேண்டும்.

இலங்கை :-
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதரப் (சாதாரணம்) (உயர்தரம்) பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும் ஆசிரியர் பதவி வழங்கப்படுகின்றது. அவ்வாறான ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி நெறியினை மேற்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன. சிங்களம், தமிழ் ஆகியனவே தற்போது போதனாமொழியாக உள்ளன. வட மாகாணத்தில் உள்ள கோப்பாய், பலாலி ஆகிய இரு இடங்களிலும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் இயங்கி வந்தன. அண்மைக் காலமாகப் பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கே இடம் மாற்றப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இவை தவிர அட்டாளைச்சேனை , மட்டக்களப்பு தலவாக்கொல்லை, அழுத்கமை ஆகிய இடங்களிலுள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் தழிழ் மொழி மூலம் பயிற்சிநெறிகள் வழங்கப்படுகின்றன. பேராதனை, மட்டக்குளிய ஆகிய இடங்களிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் வகுப்பகள் நடைபெறுகின்றன. மகரகமை, குண்டசாலை முதலிய 40 இற்கும் மேற்பட்ட இடங்களிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் சிங்களம் போதனாமொழியாக உள்ளது.

இவ்வாசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள நூலகங்களில் வாசகர்களது தேவையை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு நூலக ஆவணங்கள் இருப்பதாக இல்லை. ஏனைய கல்வி நிறுவன நூலகங்களைப் போலவே இந் நூலலகங்களில் இடவசதியின்னை நிதிப்பற்றாக்குறை முதலிய பிரச்சினைகளுள. அத்தோடு எல்லா ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களிலும் திறமையான நூலகர்கள் இருப்பதாகவும் இல்லை. மேற்கு நாடுகளைப் போலன்றி கட்டிடத்தின் சிறப்பு பகுதியிலேயே நூலகங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றிலுள்ள நூல்களும் சிறந்த முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு சேவைப்படுத்தப்படவில்லை. சில ந}லகங்களிலேயே உரிய முறையில் பகுப்பாக்கம், பட்டியலாக்கம், செய்யப்பட்டு நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

நூலக சேவையைத், திறம்பட வழங்குவதற்குத் தொழில்சார் தகைமையுடைய நூலகர் நியமிக்கப்படுதல் வேண்டும் இக் கல்லூரி அதிபர்கள் நூலக அபிவிருத்தியில் கவனம் செலுத்தி, நூலகரைத் தெரிவு செய்வதோடு, உள்ளுரில் உள்ள பல்கலைக்கழக நூலகத்திலாவது நூலகரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சிக்கு அனுப்புதல் நல்லது நூலகர், நூலகவியல் பரீட்சைகளில் சித்தியடைந்திருந்தாலும், பல்கலைக்கழகம் போன்ற ஒரு பெரிய நிறுவன நூலகத்தில் பெறும் பயிற்சி மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு ஏற்படலாம். நூலக சேவையைச் சிறந்த முறையில் ஒழுங்கு செய்து கொள்வதற்கு இத்தகைய பயிற்சி பயனளிக்கலாம்.

வாசகர்களுக்கு வேண்டிய நூல்கள் இந் நூலகத்திலில்லாத விடத்து, பொது நூலகம், பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு நூல்களைக் கடனாகப் பெற்று வாசகர்களது தேவையைப் ப+ர்த்தி செய்ய நூலகர்கள் முன் வருதல் வேண்டும். அல்லது குறிப்பிட்ட நூல் கிடைக்கக்கூடிய நூலகத்திற்கு வாசகரை நெறிப்படுத்துதல் நூலகரது கடமையாகும். இதற்கு நூலகர் ஏனைய நூலகங்களுக்கு அவ்வவ்போது சென்று அங்கு கிடைக்கக்கூடிய ஆவணங்கள் பற்றிய பொதுவான கருத்தினைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தல் உதவியாக இருக்கும் அத்தோடு இந் நூலகங்களினால் வெளியிடப்படுகின்ற புதிய நூற்சேர்க்கைப் பட்டிகளைப் (டுளைவ கை நேற யுஉஉநளளழைn ) பெற்றுக் கொள்ள வேண்டிய ஒழுங்குகளைச் செய்து கொள்ளுதல் பயனுடையதாகும்.

அபிவிருத்தியடைந்த மேற்குநாடுகளில் இத்தகைய நூலகங்கள் தம்மிடையே கூட்டுறவுத் திட்டங்களை ஏற்படுத்திச் செயற்பட்டு வருகின்றன. உதாரணமாக பிரித்தானியாவிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்கள் பருவ இதழ்களைக் கூட்டாகச் சேகரித்தல், கல்வி சம்பந்தமான வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தல், கூட்டிணைப்புப் பட்டியலின் உதவியுடன் நூலகங்களிடையே நூல் இரவல் வழங்கல் முதலியவற்றைச் செய்து வருகின்றன. இவ் வகையில் இலங்கையிலுன்ன ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களும் இயன்றவிற்குக் கூட்டுறவுத் திட்டங்களை ஏற்படுத்தச் செயற்படுதல் சாத்தியமாகும். இத்தகைய செயற்பாடுகளினால் நிதி மீதப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களிலே தேவையற்ற ஒரே நூற் பிரதிகள் இடம் பெறுவதனைத் தவிர்க்கலாம் மிகவும் குறைவாகப் பயன்படுத்தபடுகிறவையும் அச்சில் கிடைக்காதவையுமான நூல்களை நூலகங்களிடையே நூல் இரவல் வழங்கல் திட்டத்தின் மூலம் கடனாகப் பெற்றுத் தமது வாசகர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.

மேற்கு நாடுகளிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்கள் வழங்குகின்ற சேவையுடன் வளர்முக நாடாகிய இலங்கையிலுள்ள இந் நூலகங்களின் சேவைகளை ஒப்பிட்டு நோக்கும்போது இவை மிகவும் பின்தங்கிய நிலையிலேயுள்ளமை தெளிவாகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு ஒவ்வொரு ஆசிரிய பயிற்சிக் கல்லூரி அதிபரும் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு வேண்டிய நிதியினைப் பெற்றுக் கொள்ளுதல் அவர்களது முதற் கடமையாகின்றது ஆசிரிய பயிற்சிக் கல்லூரியினைப் பயன்படுத்துகின்ற வாசகர்களது தொகைக்கேற்ப நூலகத்தினைத் திட்டமிடுவதோடு தகுதி வாய்ந்த நூலகரையும் நியமிப்பதில் அக்கறை எடுத்தல் வேண்டும். காலத்திற்குக் காலம் மேலதிக நிதியினைப் பெற்றுத் தரம் வாய்ந்த நூலக ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள நூலகருக்குச் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும். நூலக ஆவணங்கள் உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு, நூலக சேவைகள் வழங்கப்படும்போது இலங்கையிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நூலகங்களின் சேவை மேலும், விருத்தியடைய வாய்ப்புண்டு.




REFERENCE BOOKS

COREA, Ishvari, Handbook for School Libraries
Colombo : (n.d.)
DUREY, Peter, Staff management in University and
College libraries Oxford : Pergamon Press, 1976
ENCYCLOPAEDIA of Librarianship : Third Revised Edition.
Ed.by Thomas Landau. London : Bowes and Eowes, 1966.

A LIBRARIANS handbook. Comp. by C.J.Taylor. London:
Library Association, 1976

LIBRARIES and people . Ed by Ishvari Gorea, Colombo:
Municipal Council, 1975.

MEWS, Hazel. Readers instruction in colleges and Universities:
An inuoducttory handbook London : Clive Bingley, 1972.

MURPHY Mary . Handbook of Library regulations, By Mary
Murphy and Clands J.Johns. New York : Marcel Dekker Ins
1977

RAY, Colin – Library Service to school and children
Paris : Unesco, 1979

ROAD, to wisdom ; Ed by Ishvari Corea, Colombo Municipal
Council, 1980

SRI LANKA, Minisitry of Higher Education. Report of the
Committee on Technical Education August 1979.
Colombo : The Minusty , 1980

SRI LANKA, University Grant commission. University
Grant Commission and the Universities of Srs Lanka, 1985
Colombo : University Grant Commission, (n.d )

SRI LANKA . University Grant commission. University of Sri Lanka Handbook, 1983. Colombo : University Grant Commission (1983)

STOCKHAM, K.A.d. The Government and control of libraries ; 2nd revised edition . London : Andro Deutsch, 1975

THE TECHNICAL College Library ; a primer for its development . Ed . by G.A. Thompson. Oxford, Andre Deutsch, 1969

UNESCO Bulletin for libraries Vol. xvii, No. 1, 1963;
Vol xviii, No .2 , 1964 ; Vol. xx, No. 2 1966 ; Vol. xxiii,
No. 6, 1969 ; Vol. xxi, No. 2, 1967

நூலகவியல் . மலர் 2, இதழ் 2, 1986.

எமது வெளியீடுகள்

நூலகவியல் காலண்டுச் சஞ்சிகை
பதிப்பாசிரியர் : என். செல்வராஜா
தனிப்பிரதி ரூபா 7 – 50
ஆண்டுச்சந்தா ரூபா 30 – 00

முதல் உதவி
ஆசிரியர் : வைத்தியகலாநிதி ந. சிவராஜா
விலை ரூபா : 20 – 00

நூற் பகுப்பாக்கம்
ஆசிரியர் : வே. இ. பாக்கியநாதன்
டீ.யு.இ ஆ.ளுஉ. (டுiடி. ளுஉ.)
விலை ரூபா : 15- 00

பிரதிகள் கிடைக்குமிடம் :

அயோத்தி நூலகசேவைகள, ஆணைக்கோட்டை
பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
ஸ்ரீலங்கா புத்தசாலை, யாழ்ப்பாணம்.