கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக வாய்மொழி இலக்கியம்

Page 1
சவுத் ஏசியன் புக்ஸ்
 

DIGONGOLIG, GITTIGLDITS

Page 2

மலையக வாய்மொழி இலக்கியம்
சாரல்நாடன்
தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ்

Page 3
Malaiyaha Vaaymozhi lakkiyam
Sara linadan First Edition : April 1993 Printed at : Suriya Achagam
Published in Association with
National Art & Literary Association by South Asian Books 6 1 , Thayar Sahib lil Lane, Madras-600 002.
Rs... 10.00
மலையக வாய்மொழி இலக்கியம்
சாரல்நாடன் முதற்பதிப்பு : ஏப்ரல் 1993 அச்சு சூர்யா அச்சகம், சென்னை-17
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை-600 002. elp. 10.00 .

பதிப்புரை
இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் மலையகததுத் தமிழ் மக்கள் உள்ளடங்குகின்றபோது இம்மலையகத் தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான ஒரு பாரம்பரியம் உண்டு. இந்திய வம்சாவழியினரான இவர்கள் இந்தியத் தமிழர்கள் என்று இலங்கைத் தமிழர்களிடமிருந்து, வேறுபடுத்தி அழைக்கப்படுவதும் உண்டு. இம்மலையகத் தமிழ் மக்கள் நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அடிஆதாரமான உழைப்பாளர்களாக இருந்து வருகின்றார்கள். இலங்கை யின் ஏனைய மக்களின் சாதாரன உரிமைகளும் வாழ்க்கை வசதிகளும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம். குடியிருப்பதற்கு சொந்தமான நிலமோ, வீடுகளோ இல்லாது சமூகரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டவர்கள். இவர்களின் ஒட்டு மொத்தமான வாழ்வு பெரும் துன்பியலுக்குரிய ஒன்று அந்தத் துன்பியல் வாழ்வினுள்ளேயும் இன்பத்தைக் காட்டு கின்ற காதல், கல்யாணம், குழந்தைபிறப்பு, முதலிய குடும்ப நிகழ்ச்சிகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும், பொதுக் கொண்டாட்டங்களும், கலை கலாச்சார நிகழ்ச்சிகளும், சமய வைபவங்களும் நிகழ்ந்தே வந்திருக் கின்றன.
எழுதப் படிக்கத் தெரியாத பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் "நாட்டார் பாடல்’ என அழைக்கப் பெறும் வாய்மொழிப் பாடல்கள் எல்லா நாடுகளிலும், எல்லா இன மக்களிடையேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழிப்பாடல்கள் ஏட்டில் எழுதா இலக்கியமாக

Page 4
இருந்து வருகின்றன. தென்னிந்தியத் தமிழ் மக்களின் வம்சாவழியினர் என்பதால் தென்னிந்திய - தமிழக நாட்டார் பாடல்களை ஒத்த பல பாடல்கள் இவர்தம் வாய்மொழிப் பாடல்களில் இருக்கின்றபோதும் இலங்கை யில் மாற்றம் அடைந்த இவர்தம் வாழ்க்கைச் சூழல்கள், இயல்புகளுக்கேற்ப இந்த வாய்மொழிப் பாடல்களும் மாற்றமடைந்து இம்மலையக மக்களுக்கேயுரிய தனித்துவ மான பாடல்களாக இருப்பதை அவதானிக்கலாம்.
மல்ையகத்தின் கலையாக்கங்கள் பலவும் வெளிவந்து மலையக மக்களின் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதில் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு. என்றும் உற்சாகமான ஆர்வம் உண்டு. மலையகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவராகிய சாரல்நாடன் அவர்களால் எழுதப்பெற்ற "மலையக வாய்மொழி இலக்கியம்’ எனும் இந்த ஆய்வு நூலினை வெளியிடுவதில் தேசிய கலை இலக்கியப் பேரவை மகிழ்ச்சியடைகின்றது.
இந்நூலை எம்முடன் இணைந்து வெளியிடும். சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினர்க்கும் இந்நூலை வெளியிட அனுமதியளித்த சாரல்நாடன் அவர்களுக்கும். எமது இதயபூர்வமான நன்றிகள்.
மேலும் பல மலையக இலக்கியங்கள் வெளிவர இந்நூல் தூண்டுதலாக விளங்கும் என எதிர்பார்ப்ப துடன் வழமைபோல் ஆக்கபூர்வமான விமர்சனங்களை யும் வரவேற்கின்றோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை இல : 14, 57ஆவது ஒழுங்கை கொழும்பு - 06 l-4-93

உள்ளே.
. விளக்கம்
முக்கியத்துவம்
சூழலில் பிறக்கும் பாடல்கள்
தொழிற் பாடல்கள்
. கங்காணிப் பாடல்கள்
கும்மியும் கோலாட்டமும்
. வாழ்வளித்த வாய்மொழிப் பாடல்கள்
ஒப்பு நோக்கு மயக்கும் இன்பம்
உணர்வுகளுக்கு வாய்க்கால் . அவலக் குரல்
முடிவுரை
மேற்கோள்கள் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்
2U
26
38
44
4&
52
62
66
72
82
84
ど36

Page 5

முன்னுரை
வாய்மொழிப்பாடல்கள் இன்று படிப்படியாக வழக்கிலிருந்து மறைந்து வருகின்றன. இதன் காரணமாக வாய்மொழிப்பாடல்களை எழுத்துருவில் பதித்து வைக்கும் முயற்சிகள் உலகின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப் படுகின்றன. வரும் தலைமுறையினர் அச்சில் வெளியான பாடல்களைப்பற்றி அறிவைப் பெறும் வாய்ப்பே எஞ்சியிருக்கும்.
மலையகத்தில், வரலாறு எழுதப்படாத குறையை பெருமளவில் நிவர்த்திச் செய்யும் தகவல் களஞ்சியமாகத் திகழும் இவ்வாய்மொழிப் பாடல்களை எழுத்துத்துறை யில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த முதலே சேகரிப்பதற்கு நான் முயன்றுள்ளேன். அவ்வப்போது சஞ்சிகைகளிலும் நாளேடுகளிலும் அதுபற்றி எழுதவும் செய்தேன். அதுவே மறைந்த மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையுடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்தியது.
எனது ஆத்தாள் சிவகெங்கை சீமையில் பிறந்தவர், தந்தை மதுரையைச் சேர்ந்தவர். இருவருமே இசையோடு பாடும் வளம் பெற்றிருந்தனர். பல பாடல் 5Gc) அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். ஏனையவற்றைத் தொழிலாளர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.
மேலும், இப்பாடல்கள் எழுத்தறிவில் குறைந்திருந்த ஒரு சமுதாயத்தினரின் பல்வேறு வாழ்க்கை அம்சத்தை
LD-l.

Page 6
10
வெளிப்படுத்தும் இலக்கியமாகவும் விளங்கும் உண்மை யையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். இந்த நூல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது.
தமது பாடபுத்தகத்தில் மலையக வாய்மொழி இலக்கியம் பற்றிய குறிப்பில் எனது பெயரைக் கண்டதி லிருந்து, இந்த நூலை அச்சில் பார்ப்பதற்கு என்னைவிட அதிக ஆர்வம் எனது புதல்வன் சிறிகுமாருக்கும் புதல்வி ஜிவகுமாரிக்கும் ஏற்பட்டிருந்தது. எனினும், நூலாக வெளியிடும் முயற்சிகள் கைக்கூடவில்லை.
இவ்வருடம். அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் இந்த நூலை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் கடிதம் கைக்கு வந்துள்ளது. பணமில்லாததால் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் நண்பர் அந்தணி ஜீவாவும், தேசிய கலை இலக்கியப் பேரவை செயலாளர் தேவராஜா அவர்களும் இந்த நூலை அச்சிட்டுத் தருவதற்கு முன்வந்தனர்.
இந்த மாத ஆரம்பத்தில் மலேசிய நண்பர்கள் இருவர்; தி ஸ்டார், ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த கே. பரதன் அவர்களும், நூலாசிரியரான மு. வரதராச அவர்களும், எனதில்லத்துக்கு வருகை தந்திருந்தனர். நண்பர் அந்தனி ஜீவா அவர்களை அழைத்து வந்திருந் தார். அவர்களுடன் கதைத்து விளங்கி கொண்டவை களையும், பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் "தமிழர் நாட்டுப் பாடல்கள்’ மூன்றாம் பதிப்பையும் வாசித்தப் பின்னர் முகிழ்த்த கருத்துக்களையும் எழுதி இன்னேர்ர் அத்தியாயத்தை இந்த நூலில் சேர்க்க எண்ணியிருந்தேன்.
எனினும், இடைவிடாத வேலைப்பளு இதற்கு இடம் கொடுக்கவில்லை. . இலங்கையில் பெருந்தோட்ட

11
நிர்வாகம் மீண்டும் தனியார் முகவர்களுக்குக் கையளிக்கப் பட்டு நெருக்கடிகள் அதிகரிக்கப்பட்டுவரும் ஒரு நிலை திரி காலத்தில், நான் அங்கத்துவம் வசிக்கும் தொழிற்சங்கத் தில் - இலங்கை தோட்டச் சேவையாளர் காங்கிரஸ் பொதுச் செயலராகத் தெரிவுச் செய்யப்பட்டுள்ளேன். இதனால் பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த நூலில் எழுதி இணைக்க நினைத் ததைச் செயல்படுத்த முடியாது போய்விட்டது. எனவே, முதலில் எழுதிய விதத்திலேயே அச்சில் வெளிவருகின்றது. இதன் மறுபதிப்பில் புதிய அத்தியாயமொன்றை இணைத்திட முடியுமென நம்புகின்றேன்.
வேலைத் தளத்தில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் ஒன்றினால் தோட்ட நிர்வாகம் எனக்கெதிராக வழக் கொன்றை நடாத்தியது. இரண்டாண்டுகள் நீடித்த இந்த வழக்கில், தொழில் செய்து கொண்டே போராடி நான் வெற்றி பெற்றிருக்கும் வேளையில் இந்த நூல் வெளிவருவது எனக்கு நீடித்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.
இந்த நூலை அழகிய விதத்தில் குறுகிய காலத்தில் வெளியிட உதவிய சவுத் ஏசியன் புக்ஸ் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
அன்புடன்
சாரல்நாடன். டன்சினேன், பூண்டுலோயா I5-1%-1992.

Page 7
1. விளக்கம்
நாடோடிப் பாடல் என்ற பெயர் பலரும் அறிந்த ஒன்றே. நாட்டுப்பாடல், கிராமியப் பாடல், பாமரர் பாடல் என்ற பெயர் பலருக்கும் பழக்கமானவைகளே.
தற்காலப் புதுமையிலக்கிய ஈடுபாட்டுடன் எழுதா இலக்கியம், வாய்மொழி இலக்கியம், காற்றிலே மிதக்கும் கவிதை என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெயர்களும் பழக்கமானவைகளே. இப்பெயர்கள் யாவும் எதைக் குறிக் கின்றன?
படிப்பறிவில்லாத உழைப்பாளி மக்களிடையே வழக் கத்திலிருந்து வரும் பாடல்களைக் குறிக்கின்றன.
இந்தப் பாடல்கள் அந்த உழைப்பாளி மக்களிடையே தலைமுறை தலைமுறையாக உயிர் வாழ்ந்து வருகின்றன. ஒரு சந்ததியினரிடமிருந்து அடுத்த சந்ததியினர் வாய் மொழியாகவும், கேள்வி மூலமாகவும் இவைகளைச் சுவீகரித்துக் கொள்கின்றனர்.
இந்தப் பாடல்கள் இலக்கணத்துக்குட்படுத்தப்பட்டு எழுதப்படுவன அல்ல. மக்கள் தமது உள்ளத்துணர்ச்சி களை தாம் நாளாந்த வாழ்க்கை உபயோகத்துக்குப் பயன் படுத்தும் எளிய சொற்களால், நேரடியாக வெளிப்படுத்த முனைந்ததன் விளைவே இந்தப் பாடல்கள் எனலாம். இவை, எளிய சொற்களும் எதுகை நயமும் இயல்பாய் அமையக் கேட்போர் மனதில் ஆழப்பதிந்து விடும் தன்மை கொண்டவை.

l3
இந்தப் பாடல்களில் மக்களின் இதய ஒலியைக் கேட்க லாம்; இன்பத்தில் துள்ளிக் குதித்து இவர்கள் ஆடி மகிழும் பாங்கினைக் காணலாம்; துன்பத்தில் ஆழ்ந்து அடங்கிச் சோர்ந்து போகும் அவலத்தைப் பார்க்கலாம்; சிறுமையை கண்டு சினந்து எழும் தனிமனித உணர்வுகளைத் தமது அவல வாழ்க்கை அமைப்பின் பொதுப் பின்னணியில் இணைத்து வைத்துக் குமைகின்ற சோகத்தைக் காண லாம். .
இந்தப் பாடல்களை யாரும் எழுதி வைத்து மனனம் செய்வது கிடையாது. எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் இவைகளில் அதிக ஈடுபாடு காட்டுவதுமில்லை. எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாயிருந்த முன்னாட்களில் இப்பாடல்கள் செழித்து வளர்ந் திருந்தமையும் தற்போது படிப்படியாக மறைய ஆரம்பித்திருக்கமையும் இதை மெய்ப்பிக்கும். இவைகளை அழிவினின்றும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, இந்த பாடல்களை அச்சுவாகனமேற்றும் முயற்சி 1940ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருந்த பாடல்களைத் திரட்டி 'வசந்தன் கவித் திரட்டு’ என்ற தலைப்பில் தி. சதாசிவ ஐயர் இந்த நூலை வெளியிட்டார். தமிழில் (தமிழகம் உட்பட) வெளிவந்த முதல் வாய்மொழித் தொகுப்பு நூல் இதுவேயாகும்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி களான மட்டக்களப்பு, மன்னார் , யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வழங்கப்படும் பாடல்களைத் திரட்டி வட்டுக் கோட்டை மு. இராமலிங்கம், மட்டு நகர் வித்வான் எஃப். எக்ஸ். நடராசா, கலாநிதி சு. வித்தியானந்தன் ஆகியோர் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கை மலையக மக்களிடையே வழங்கும் நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அவ்வப்போது பத்திரிகைகளில்

Page 8
14
வெளியிட்டவர்களில் சி. வி. வேலுப்பிள்ளை, ஏ. பி. வி. கோமஸ், சாரல்நாடன், க. நவசோதி ஆகியோர் முக்கிய மானவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.?
இவர்களோடு டி. எஸ். இராஜ", சி. அழகுப்பிள்ளை, எஸ். வேதாந்தமூர்த்தி, சி. வே. ராமையா, எஸ். பி. தங்கவேல், சி. எஸ், காந்தி ஆகியோரும் குறிப்பிடத்தக்க அளவு இத்துறையில் பணியாற்றி இருப்பதையும் மறுப்ப தற்கில்லை. வாசகர் வட்டம் வெளியிட்டிருந்த 'அக்கரைத் தமிழ்” என்ற நூலில் “தேயிலையில் பிறந்த தெம்மாங்கு” என்ற நீண்ட கட்டுரையை வட்டுக்கோட்டை மு. ராமலிங்கம் எழுதியிருந்தார்.
இத்துறையில் தனது அனுபவத்தையும், ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஒன்றிணைத்து சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு விதந்து கூறப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தப் பாடல்களின் பெருமையை உணர்ந்த அவர் இவைகளைத் திரட்டி இலங்கையில் தினகரன், வீரகேசரி, ஈழநாடு, இந்தியாவில் மஞ்சரி ஆகிய தமிழ் ஏடுக்ளில் வெளியிட்டு வைத்தார். மேலும் இலங்கையில் 'டைம்ஸ் ஒஃவ் சிலோன்", "ஒப்சேவர்', இந்தியாவில் “மெட்ராஸ் மெயில்" ஆகிய ஆங்கில ஏடுகளிலும் இவ்ைகன்ள அறிமுகம் செய்து வைத்தார்.
இவரால் தொகுக்கப்பட்ட பாடல்கள் இலங்கையில் ‘மாமன் மகள்ே" என்ற தலைப்பிலும், இந்தியாவில் "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்ற தலைப்பிலும் நூலுருவம் பெற்றிருக்கின்றன. ஏ. பி. வி. கோமஸ் "அங்க மெல்லாம் நெறஞ்ச மச்சான்" என்ற ஒரு நூலை வெளி யிட்டுள்ளார். மலையக வாய்மொழிப் பாடல்கள் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வளர்ந்து வந்திருக் கும் ஒரு சமுதாயப் பின்னணியை வெளிப்படுத்த உதவு கின்றன.

15
வெளியுலகத்துக்கு இதுவரை அறிமுகப்படுத்தப் படாத அவர்களின் ஆசைகளையும், கனவுகளையும் அந்த பாடல்கள் உள்ளடக்கியிருக்கின்றன.
அவர்கள் அனுபவித்தறிந்த துன்பங்களையும் துயரங் களையும் அவைகள் சிறைபிடித்து வைத்திருக்கின்றன. எதிர்காலத்தை நோக்கி ஏங்கிய அவர்களின் உணர்வுகள் ததும்பி வழிவதை அவைகளில் பரக்கக் காணலாம்.
மக்களின் மறைக்கப்படாத உளப்பாங்கை தெரிந்து கொள்வதற்கு வாய்மொழிப் பாடல்கள் பெருமளவு உதவுகின்றன என்பன்த உலகம் பூராவும் இன்று ஏற்றுக் கொண்டுள்ள வாய்மொழிப் பாடல்களைப் பற்றிய அறிவு இல்லாது எழுதப்படுகின்ற ஒரு மக்களைப் பற்றிய ஆய்வு பூரணத்துவம் பெறாது அமைந்து விடுவதும் உண்டு.
அமெரிக்கவாழ் கறுப்பின மக்களைப் பற்றி ஆய்வுகள் நிகழ்த்தியவர்கள்கூட அந்த மக்களின் தோட்ட வாழ்க்கை அடிமைமுறை, சரித்திரச் சம்பவங்கள் என்று கவனம் காட்டிய அளவுக்கு அவர்களிடையே உயிர் வாழ்ந்த வாய்மொழிப் பாடல்களைப் பற்றிக் கவனம் காட்ட வில்லை என்ற குறைப்பாடு உண்டு,
உல்ரிட்ச் பிலிப்ஸ், சேமியல் எலியட் மொரிசன் ஹென்றி ஸ்டீல் கொமாகர் ஆகியோரது ஆய்வுகள் இவ்விதக் குறைப்பாட்டுக்குள்ளாயின.?
இலங்கையிலும் அந்தகார வாழ்க்கை நடாத்தும் மலையகத் தோட்டப்புற மக்களை பற்றிச் சிறப்பாக ஆய்வுகள் மேற்கொண்ட கலாநிதி குமாரி ஜெயவர்தனா, கலாநிதி தர்மப்பிரிய வெசும்பெரும, ஜேன்ரஸ்ஸல் ஆகியோரும் இந்தக் குறைபாட்டிலிருந்து தப்ப முடிய வில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.4

Page 9
6
வாய்மொழிப் பாடல்களில் நிரம்பிய பரிச்சயம் பெற் றிருத்த மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை இதே கருத்தை பலமுறை வலியுறுத்துகின்றார் என்பதும் குறிப் பிடத்தக்கது. மலையக வாய்மொழிப்பாடல்கள் இந்த மக்களின் முதல் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கூறும் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இலங்கையின் கடந்த அரை இறுதிகால வரலாற்று ஆதாரமாகக் கொள்ளக் கூடிய தகவல்களைக்கூட இவ்விதமே உழவு சம்பந்தமான கதைகள், விழாக்கள் வாய்மொழிக் கதைகள், பாடல்கள் வெளிப்படுத்து கின்றன என்பது கவனித்கத்தக்கது.

2. முக்கியத்துவம்
மலையக வாய்மொழிப் பாடல்களைப் பற்றி எழுதும் பொழுது “அவை அந்த மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர் களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்கு கின்றன” என்று மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி கருத்து வெளியிட்டுள்ளார். “தோட்டத்துரைமார்கள் ள்முதி வைத்த குறிப்புகள், "சிவில் சேர்விஸில் ஈடுபட் டிருந்தோரின் குறிப்புகள், தேசாதிபதிகளின் எழுத்துக் கள், குடியேற்ற குடியகல்வு சட்டங்கள், பிரஜாவுரிமை சட்டம், தொழில் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகள், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கைகள், தொழிற்சங்க வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றுக் கூடாக மலைநாட்டு மக்களின் வரலாற்றை அறிய முனைந்து நிற்கும் முயற்சி பக்கபலமாக, இவை அத்தனையையும் இழைத்தோடும் சான்றாக" இந்த மலையக வாய்மொழிப் பாடல்கள் விளங்குவதை இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்."
வாய்மொழி இலக்கியம் வரலாற்றுச் சான்றாகக் கொள்ள முடியும் என்பதனால்தான் "எழுத்து, பேச்சு, செய்தித்தாள் குறிப்புக்கள் இல்லாதபோது வரலாறு, வெறுமனே பதியப்படாத அனுபவங்களாக அமைந்து விடுகின்றன" என்று கருத்து வெளியிட்ட அமெரிக்கவாழ் கறுப்பின ஆய்வாளர்களுக்கெதிராக ஸ்டேன்லி எல்கின்ஸ் ஸ்டேர்லிங் ஸ்டக்கி என்போர் சினந்து எழுந்தனர்.8 தோட்டக் குறிப்புக்கள், யாத்ரீகர் குறிப்புக்கள், குடிசன மதிப்பீட்டறிக்கைகள் என்பவைகளிலிருந்து பெறப்படு பவைகள் ருசிகரமாகத் தகவல்களை வெளியிட்டாலும் அவையனைத்தும் எஜமானர்கள் நிலையிலிருந்து எழுதப் பட்டனவைகளாகும்.

Page 10
18
எழுத்து மூலச்சான்றுகளைக் கொண்டு வரலாறு எழுதப்படுகின்ற நிலையிலிருந்தும், நாட்டுப்புறக் கூறு களைக் கொண்டும் வரலாற்றினை உருவாக்கலாம் என்ற புதுவித நிலை உண்டாயிற்று. இந்தப் புதுவித நிலைப்பாடு, மக்களின் வாழ்க்கையையும், பண்பாட்டை யும் அறிவதற்கு பயன்படும் என்பதை ஸ்டேன்லி எல்கின்ஸ்தான் 1959ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட “அடிமைமுறை" என்ற நூலின் மூலம் நிரூபித்தார். வரலாற்றியலில் 'அடிமைமுறை' என்ற நூல் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.9
வாய்மொழிப் பாடல்கள் நீர்ச்சுனைப் போன்றவை கள். ஐயமும், ஆயாசமும் ஏற்படுகின்றபோது மக்கள் இவைகளில் மூழ்கி புத்துணர்வு பெற்றனர்” என்று பேராசிரியர் ஸ்டேர்லிங் பிரவுண் குறிப்பிடுகின்றார்.
“அவை புட்டியில் அடைபட்ட வைன் அல்ல. தேவை யானவர்கள் கவனித்துத் தேடிக் குடித்துக் களிப்புற, அவை இயற்கையான, தெளிந்த நீர். நமக்குத் தெரியா மலேயே நம் நாளாந்த தாகத்தைத் தணிப்பவை” என்று கூறுகிறார் சோவியத் கலை விமர்சகர் வஸ்லி வோர்னாவ், “சமூக உணர்வுகளின் கைகாட்டிச் சின்னங்களாகக் கருதப்படக் கூடியவைகள் இந்தப் பாடல்கள். கடந்த கால வாழ்க்கையின் இருள் படர்ந்த காலப் பகுதியில் ஒளிவீசக் கூடிய ஆற்றல் இவைகளுக்குண்டு" என்று கறுப்பின வாய்மொழிப் பாடல்களை ஆராய்ந்த அவன்வோமா என்ற இன்னொரு ஆய்வாளர் குறிப்பிடு கின்றார்.
*தென்னமெரிக்காவில் செறிந்து வாழும் கறுப்பின மக்களோடு தனக்கு நெருங்கிய உறவு இல்லாத போதும் அங்கிருந்து வந்த லாய்மொழிப் பாடல்களைத் தனது சிந்தனையைத் தூண்டுவித்தன. தனது பெற்றோர்கள் அந்தப் பகுதியிலிருந்து வந்த காரணத்தால் தனக்கும் அந்த பாடல்கள் சொந்தமானவைகள்" என்று குறிப் பிட்டு பெருமைப்பட்டு "1866இல் இசைக்குழுவாக

19
இணைந்த நான்கு கறுப்பு இளைஞர்களும், ஐந்து கறுப்பு யுவதிகளும் அந்த வாய்மொழிப் பாடல்களைக் கடல் கடந்த தேசங்களுக்குச் சென்று இசைத்தனர்ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஒல்லாந்து, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் சுற்றியலைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் தங்கள் தாயகம் திரும்பியபோது அந்த இசைக் குழுவினர் ஐம்பதாயிரம் டாலர் பணம் திரட்டி வந்திருந் தனர், அந்த பணத்தைக கொண்டு அமைந்த பல்கலைக் கழகம்தான் FISK UNIVERSITY 35 go t’iuň FG5$g5TGOT பல்கலைக்கழகம்" என்று 1903இல் முப்பத்தேழு ஆண்டு களின் பின்னர், பெருமையுடன் நினைவு கூறுகின்றார் கறுப்பினத் தலைவர்களில் முக்கியமாகக் கருதப்படும் டபிள்யூ. ஈ. பி. டியூபோய்ஸ் என்பவர். தான் எழுதிய கறுப்பின மக்களின் ஆத்மா” என்ற நூலில் ஒவ்வொரு சிந்தனையும் வாய்மொழிப் பாடல்களால் தூண்டப் பட்டவை என்றும் குறிப்பிடுகின்றார்.
இந்த வாய்மொழிப் பாடல்கள் அடிமைகள் வெளி உலகுக்கு சொல்லத் துடிக்கின்ற தகவல்களைக் கொண் டவைகள் என்றும் கறுப்பின மக்களின் இலக்கியத்தை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்களது வாய் மொழி இலக்கியத்தை ஆராய்வது தவிர்க்க முடியாத ஒர் அம்சமாகக் கருதப்படல் வேண்டும்” என்றும் வலியுறுத்து கின்றார்.10
வாய்மொழி இலக்கியம் மனித மனத்தின் உள்ளுணர் வைத் தட்டிச் செல்லும் தன்மையுடையது. சந்ததி சந்ததி யாக வாய்க்கு வாய் பரவும் பாடல்களாக மாத்திரம் வாய்மொழி இலக்கியம் அமையவில்லை. மாறாக, மொழி தெரிந்தவர்கள் மத்தியில் சந்ததி சந்ததியாக, கலை, மொழி, பண்பாடு, மத நம்பிக்கை, வாழ்க்கைப் பண்பு, வரலாற்று நிகழ்வு என்பனவற்றை பின்னி பிணைத்து செல்லும் தொடர்பு சாதனமாகவும் அது விளங்குகிறது. - • .

Page 11
3. சூழலில் பிறக்கும் பாடல்கள்
மலையக மக்கள் என்று இன்று இனம் காணப்படுப வர்கள் இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வந்து குடியேறியவர்களின் சந்ததியினராவர்.
1828ஆம் ஆண்டு ஆங்கிலேயத் தோட்டச் சொந்தக் காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றம் 1952ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.
ஆரம்பகாலப் பகுதியில் மிகுதியாக ஆண்களே வந்த, னர். நூறு ஆண்கள் வரும்போது இரண்டு மூன்று பெண் களே வருவர். அவர்களும் வந்து போவோராகவே இருந்த னர். கோப்பி பழம் பறிக்கும் நாட்களிலேயே அதிகஉழைப்பாளர்கள் தேவைப்பட்டனர்.
தேயிலை பயிரிடப்பட்ட 1858ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற குடியேற்றம் குடும்ப சகிதம் மேற். கொள்ளப்பட்டது அப்படி வந்தவர்கள் தோட்டங்களில் நிரந்தர உழைப்பாளர்களாகக் குடியமர்த்தப்பட்டார்கள்.
குடும்பத்து ஆண்கள் மலையில் வேலை செய்யவும், பெண்கள் கொழுந்தாயவும், பிள்ளைகள் அவர்களுக்குத் தொழிலில் உதவி புரியவும் என்று குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே உழைப்பை மூலதனமாக்கும் ஒரு வாழ்க்கை முறைக்கு பழகிப் போனார்கள். W
இந்தக் காலப் பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக் கும் பிரயாணம் செய்வதில் இப்போது நடைமுறை யிலுள்ள குடியகல்வு கட்டுப்பாடு இருக்கவில்லை. 1-10-1949 தொட்டுதான் தற்போதைய கடவுச்சீட்டு: முறை அமுலுக்கு வந்தது.

21 ኣ
எனவே, இந்தியாவில் தமது சொந்த கிராமத்தில் உள்ள குடும்பத் தொடர்பை அறுத்துக் கொள்ளாம லிருக்க குடிபெயர்ந்த மக்களுக்கு முடிந்தது. இந்தியாவில் தமது சொந்தக் கிராமத்தில் இடம்பெறும் சமய விழாக் களுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்யவும், உறவினர் களின் இல்லத்தில் நடைபெறும் முக்கியக் குடும்ப நிகழ்ச்சி களில் பங்கேற்கவும் அவ்ர்களுக்குத் தடையிருந்ததில்லை.
இங்கு குடியேறியவர்களில் சிலரே இந்த வாய்ப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினர். அந்த சிலரிலும் குறிப்பிட்டு கூறக்கூடிய விதத்தில் அடிக்கடி இந்திய பயணத்தை மேற் கொண்டவர்கள் நகர்ப்புற வியாபாரிகளும், தோட்டத்து பெரிய கங்காணிமார்களுமாவர். இந்த இருவருமே மலை யகத் தமிழர்களிடையே கலை, கலாசார, பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும் தமிழக பண்பாடு இவர்களிடையே தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதற்கும் காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர்.
தோட்டங்களில் பெரிய கங்காணி முறை ஒழிக்கப் பட்ட பின்னர் நகர்ப்புற வியாபாரிகள் - பெரும்பாலா னோர் பெரிய கங்காணியின் சந்ததியினர், இந்த பணியை இன்றும் தொடர்கின்றனர்.
தமிழகத்தின் பண்டைய கிராமியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக விவசாய மக்களிடையே புழக்கத்திலிருந்த அத்தனை அம்சங்களும் இலங்கை மலையகத்துத் தோட்ட கலாசாரத்துக்கு ஆதாரமாய் அமைந்தது.
இந்திய கிராமங்களின் வழக்கத்திலிருந்த பாடல்கள், கலைகள் ஆகியன தோட்டங்களில் குடியேறிய மக்க ளோடு சேர்ந்து இலங்கையின் மலைப்பகுதிகளில் அறிமுக மாயின.
குழந்தைகளை உறங்க வைக்கப் பாடுகிற தாலாட்டுப் பாடல்கள், குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்து விட்ட துயரத்தில் பாடுகிற ஒப்பாறி பாடல்கள், ஆண்டவனை

Page 12
22
பயத்தோடு துதிக்கும்போது பாடுகிற பக்திப் பாடல்கள் ஆகியன அந்த மக்கள் அறிந்து வைத்திருந்தவைகள்தாம் - அவை அதைைனயும் இந்திய தமிழ் கிராமங்களில் பாடப்பட்ட அதே உருவில் இங்கும் வேர் விட ஆரம் பித்தன. ஆயிரக்கணக்கான பாடல்கள் - தாலாட்டு, ஒப்பாரி, தெம்மாங்கு என்று தமிழகத்திலும் - மலையகத் திலும் எவ்வித வேறுபாடுமின்றி காணக் கிடைப்பது இந்த காரணத்தினால்தான்.
ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெருந்தொகையினரான மக்கள், ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டில், குடியேறும்போது இவ்விதம் ஒரு பாரம்பரியத் தொடர்பு உருவாவது இயல்பான ஒன்றே.
தமது மத சுதந்திரம் பேண விரும்பிய மக்கள் உரிமை யுணர்வோடு கடல் தாண்டி இன்னொரு நாட்டில் முதலில் அமெரிக்காவிலும் அடுத்து கனடாவிலும் குடியேறினார்கள். அப்படி குடியேறியதன் பின்னாலும் பூகோள - பொருளாதார, சுற்றுச் சார்பால் வேறுபட்ட வாழ்வை மேற்கொண்ட வேளையிலும், அடிப்படைக் கொள்கைகளிலும் உணர்வுகளிலும் இங்கிலாந்தின் பண்பாட்டையே பிரதிபலித்தனர் என்பது வரலாறாகும். சிறப்பாக, அமெரிக்க கவிஞன் வால்ட் விட்மனின் *புல்லிதழ்கள்" என்று புகழ்பெற்ற கவிதை நூலைப் பற்றி குறிப்பிடுகையில் “இப்படி ஒரு நூலைப் படைப்பதற்கு புகழ்பூத்த ஒரு பாரம்பரியம் அவருக்கிருந்திருக்க வேண் டும்" என்று சிலாகிக்கப்பட்டதைக் கவனிக்கலாம்.
லங்கை மலையகத்து மக்கள் இவ்விதமே தமிழக பண்பாட்டைப் பிரதிபலித்தனர், தமிழகத்தில் உழவு வாழ்க்கையின் மூலாதாரமாயிருந்தது. மலையகத்தில் உழைப்பு வாழ்க்கையின் மூலாதாரமானது. அடிப்படை யில் இயற்கையை நேசித்துப் பழகிய கடும் உடல் உழைப் பாளர் சமூகமாகவே இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை இங்கு தொடர்ந்தனர். இவர்களில் முதல் இரண்டு

28
தலைமுறையினர் முழுதாக இந்தியாவில் பிறந்தவர்களாக இருந்தனர். மூன்றாம் தலைமுறையினரில் சிலர் இலங்கையில் பிறந்தவர்களாக இருந்தனர்.
1871ஆம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்த இந்த மக்களில் பன்னிரண்டு சதவிகிதத்தினர் இலங்கையில் பிறந்தவர்களாயிருந்தனர். 1921ஆம் ஆண்டு இது இருபத்தொரு சதவிகிதமாக இருந்தது. 1941ஆம் ஆண்டு எண்பது சதவிகிதமாக அதிகரித்தது என்று அரசாங்க சபையில் இந்த மக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணிய கோ. நடேசய்யர் பேசியிருக்கிறார்.11
எனவே, சூழல் மனிதனைப் பாடத் தூண்டுகிறது என்ற உண்மையின் அடிப்படையில் - சூழல்தான் பாடல் களைப் பிறப்பிக்கின்றது என்ற உண்மையின் அடிப் படையில், படிப்படியாக இலங்கை மலையகத்தில் பாடப் பட்டு வந்த இந்திய கிராமப் பாடல்களில் புதிய சூழலின் செல்வாக்கு பதிய ஆரம்பித்தன.
மாலை தந்தா வாடுமின்னு - செல்வமே மலர் தொடுத்தா உதிருமின்னு பூ தந்தா வாடுமின்னு பிள்ளையார் தந்தார் தாலாட்ட
என்று பாடியவர்கள்,
காணிக்கை கொண்டு - செல்வமே கண்டி கதிருமலை போனோமையா வழியா வழி நடந்து - செல்வமே வரத்துக்கே போனோமையா
என்று பாட ஆரம்பித்தார்கள் (இந்த இரண்டு தாலாட்டுப் பாடல்களையும் தனது "மலைநாட்டு மக்கள் பாடல்கள்” என்ற நூலில் சி. வி. வேலுப்பிள்ளை திரட்டி எழுதியிருக்கிறார்)

Page 13
24
சங்கு முழங்குதய்யா - சிவ சங்கரனார் கோவிலிலே, எங்கும் முழங்குதய்யா - ஈஸ்வரனார் கோவிலிலே தானை முழங்குதய்யா எங்க தாயாரின் வாசலிலே, வெள்ளிக்கு வெள்ளி பெத்தாள் பெருமாட்டி பெயர் வைத்தாள் நாக கன்னி வளர்த்தாள் கமலக்கன்னி வரங்கொடுத்தாள் மீனாட்சி
என்று பாடிக் கொண்டிருந்தவர்கள்,
காணிக்கை கொண்டு
கதிர்காமம் போகையிலே
மாணிக்கப் பிச்சையென்று
மடிப்பிச்சை தந்தாரே 6Tairg, list- ஆரம்பித்தார்கள். (இந்த இரண்டு தாலாட்டுப் பாடல்களையும் தனது "மலையகத்தில் நிலவி வரும் மனங்கவரும் தாலாட்டுக்கள்” என்ற கட்டுரையில் சி. வே. ரா. திரட்டி வெளியிட்டிருக்கிறார்.)
கூடை எடுத்ததில்ல - நாங்க கொள்ளி மல பார்த்ததில்ல, கூடை எடுக்கலாச்சு - நாங்க கொழுந்து மல பார்க்கலாச்சு கொழுந்து குறைந்த துன்னு கொரை பேரு போட்டார்கள், அறுவா எடுத்த தில்ல
அடைமழையும் பார்த்த தில்ல, அரும்பு கொரைஞ்சதுன்னு அரைபேரு போட்டார்கள், பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலேபாலகனை பெத்தெடுத்த பாண்டியரும் முள்ளுக்குத்த,

。25
வேலைக்குப் பிந்தினேன்னு வெரட்டிடுவார்
கங்காணி
தூங்குடா என் மகனே என் துயரைப்பாடி வாரேன்.
என்ற தாலாட்டுப் பாடலும்
அடி அளந்து வீடு கட்டும் நம்ம
ஆண்டமனை அங்கிருக்க
பஞ்சம் பொழைப்பதற்கு
பாற்கடலை தாண்டி வந்தோம்
பஞ்சம் பொழைச்சு நம்ம
பட்டனம் போய் சேரலியே
கப்பல் கடந்து
கடல் தாண்டி இங்க வந்தோம்
காலம் செழிச்சு நம்ம
காணி போய் சேரலியே என்ற தாலாட்டுப் பாடலும் இலங்கை மண்ணில், புதிய சூழல் பிறப்பித்த தாலாட்டுப் பாடல்களாகும்.
குழந்தைகளைத் துயிலவைப்பதற்காகத் தாய்மார்கள் கனியும் அன்போடு கற்பனைச் சுவை கலந்து பாடுவன வாகத் தாலாட்டுப் பாடல்கள் அமைவது வழக்கம். இந்த வழக்கத்துக்கியையவே வளர்ந்து வந்த மலையகத் தாலாட்டுப் பாடல்கலிலிருந்து புதிய சூழலில் பிறப் பெடுத்த பாடல்கள் வேறுபட ஆரம்பித்ததைக் கவனிக்க
5) TLD).
புதிய பாடல்களில், அவர்கள் இந்த நாட்டுக்கு வந்த பஞ்ச பிழைப்பு அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. பாசஉணர்வோடு பாடுகை யிலேயே தம் பாலகரிடத்தில் பசுமை நினைவுகளையும், பஞ்சத் துயர்களையும் பகிர்ந்துகொள்ள இத் தாய்மார் கள் தலைப்பட்டார்கள்.
LD-2

Page 14
4. தொழிற் பாடல்கள்
சூழல் உருவாக்கிய புதிய பாடல்களை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைந்திருப்பன இந்த மக்களால் பாடப்படும் தொழில் பாடல்களாகும். இவை அனைத்தும் தெம்மாங்குப் பாடல் வகையைச் சேர்ந்தனவாகும்.
தமிழகத்தில் போல ஏற்றப்பாட்டு, ஏர்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்று வகைப்படுத்தும் விதத் தில் இவர்களின் வாழ்க்கை இலங்கையில் அமையவில்லை. இவர்களின் தெம்மாங்குப் பாடல்கள் பெரியதுரை, சின்னதுரை, கங்காணி, கணக்கப்பிள்ளை, கண்டாக்கு என்று தாங்கள் தொழில் செய்யுமிடத்தில் உள்ள எஜமானர்களைப் பற்றியதாக இருந்தன; கொழுந்து பறிப்பவர்கள், முள்ளுக்குத்துபவர்கள், கான் வெட்டுப வர்கள், கவ்வாத்து வெட்டுபவர்கள், உரம்போடுபவர் கள் என்று - பல மட்டங்களில் தோட்ட த் தொழில் புரிபவர்கள் - பலரையும் பற்றியதாக அமைந்தன.
தோட்டத் தொழிலும், உழைப்பாளர்களோடு தொழில்புரியும் களத்தில் நேரடித் தொடர்பு கொள்வ தற்கு அவசியமில்லாத உத்தியோகத்தர்களிருந்தனர். தோட்ட நிர்வாக அமைப்பில் கிளாக்கர், டீமேக்கர், ரப்பர் மேக்கர், டொக்டர் என்ற அந்த உத்தியோகத்தர் களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும் - தொழில் களத்தில் தொழிலாளர்களோடு நேரடி சம்பந்தமில்லாத தால், அவர்களைப் பற்றிய பாடல்கள் தோன்றிய அறிகுறிகள் காணப்படவில்லை.

27
மலையகத்தில் வழக்கிலிருக்கும் தொழில் பாடல்கள் தொழிலாள மக்களின் சொந்த அநுபவத்தில் பட்டு வெடித்த உண்மையின் வெளிப்பாடுகளாகக் கொள்ளத் தக்கன என்ற எண்ணத்தை இது உறுதிப்படுத்துகின்றது. தொழில் புரியுமிடத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாதவர் கள்-தொழிலின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமானவர் களாயிருந்தாலும், தொழிலாளர்களின் கவனத்துக்கு உரித்தாக்கப்படுவதில்லை என்ற உண்மையையே இது வலியுறுத்துகின்றது.
இலங்கையில் இத்தொழிலாளர்கள் வேலை செய்ய ஆரம்பித்தது இந்திய கிராமத்தினின்றும் வேறுபட்ட ஒரு நிலையிலாகும். உண்மையில், இங்கு எத்தகைய வாழ்வை மேற்கொள்ள வேண்டி வரும் என்ற திடமான முன்னறிவு எதுவுமின்றி வந்து குடியேறிய இந்த மக்கள் அன்றாடங் காய்ச்சியான வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள் நிர்ப்பந்தத்துக்குள்ளான இந்த வாழ்க்கை இந்திய கிராமத்தில் இவர்கள் அறியாத ஒன்று. எத்தனை வறியவர்களாயிருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவில் சொந்தம் கொண்டாட ஒரு துண்டு நிலம் என்றாலு மிருந்தது.
இந்த மக்களைப் பறறிய ஆய்வு செய்த பலரும் இந்த உண்மையை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. இவர் களுக்குச் சொந்தமாக இந்திய கிராமத்தில் காணிகள் இருந்தன. அந்தக் காணிகளை வெற்றிகரமான விளைச்சல் நிலங்களாகப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமமே - நிலவிய கடும் வரட்சியே இவர்களைப் புலம் பெயரவைத்தது. கடல் கடந்த நாடுகளுக்கு மலேயா, பர்மா, இலங்கை, ஆபிரிக்கா என்று இவர்கள் போக ஆரம்பித்தது இதனாலேயே. இந்த உண்மை நிலைமை இவர்களின் தொழில் பாடல்களில் தெரிவதைவிட இங்குள்ள பெண் களின் தாலாட்டுப் பாடல்களிலே துலாம்பரமாகத் தெரிகின்றன என்பதை ஏற்கனவே கண்டோம்.

Page 15
28
இலங்கை தோட்டங்களில் மிகப் பெரிய நிலப்பரப் பில் உழைப்பாளர்களாக இருந்தபோதும் சொந்தம் என்று கூறுவதற்கு இவர்களுக்கு கையளவு காணிகூட இருக்கவில்லை என்பது விசனிக்கத்தக்கது.
இந்திய கிராமங்களில் இந்த மக்கள் விவசாயம் செய்வதில் கைதேர்ந்தவர்களாயிருந்தார்கள், கைராசிக் காரர்களாகவும் இருந்தார்கள். கதிர் அடிக்கையில் அவர் கள் பாடுவது பொலிபாட்டு என்று அறியப்படும்.
“பொலி வளர பொலி வளர
பொலியான பொலி பொலி"
(தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் - டாக்டர்
சு. சண்முகசுந்தரம் - பக் 112)
இந்தப் பாடலையும், பழக்கத்தையும் இங்கு வந்த பின்னரும் இவர்கள் தொடர்ந்து கடைபிடிக்கவேச் செய்தனர். இன்னும் உதயதேளையில் கொழுந்து பறிக்க ஆரம்பிக்கும் போது, பிடிநிறைய கொழுந்து சேர்ந்து, முதல்பிடி கொழுந்தை தத்தமது கூடையிலிடும் முன்னர் *பொலியோ பொலி" என்று பெண்கள் ஒருமித்துச் சப்தமிட்டு மகிழும் நிலை நீடித்துக் கொண்டுதாணிருக் கின்றது.
தொழில் பாடல்களின் பொருளடக்கத்தை ஆராய்ந்த டாக்டர் சு. சண்கசுந்தரம் “தொழில் பாடல்களில் தொழிலுக்கடுத்த நிலையில் காதல் இடம் பெறுவதுண்டு. காதல் உணர்வுகள் அவர்களது களைப்பை எளிதில் போக்கிவிடுகின்றன. அதோடு மனத்தில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் எழுப்பிவிடுகின்றன” என்று கருதுகின் prtů. 1°
"கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளிப் போற பெண்ணே கொண்டு வந்தேன் மல்லிகப்பூ ஒன் கொண்டயில சூட்டிவிட"

29
“சவுக்கு மரம் போல
சரடா வளர்ந்த புள்ள இன்னும் செத்த நீ வளந்தா செத்திருவேன் ஒன் மேல”
*அஞ்சு மணியாச்சு
ஐயா வர நேரமாச்சு கொஞ்சி விளையாடிாதீங்க கோளுக்காரன் கங்காணி"
“கொந்தரப்புகாரக் குட்டி
கொழுந்தெடுக்கும் சின்னக்குட்டி - ஒன் கொந்தரப்பே கண்டவுடன் கொழுந்தெடுக்க கூடலையே”
“அஞ்சிங் கிளியழகே
ஆடு தொடை ரெண்டழகே கொஞ்சுங் கிளியழகே '
“கொந்தரப்பா வெட்டப்போற"
போன்ற பாடல்கள் இலங்கை மலையகத்தில் ஆண்கள் பாடுவதாக அமைந்துள்ளன. சிறுமிகள் பொதுவாக தங்கள் தாய், அல்லது தமக்கைமார்களுக்கு உதவியாக கொழுந்தெடுக்கச் செல்வதுண்டு. மற்றும்படி, அவர்கள் தேயிலை மரங்களுக்கிடையில் வளரும் களையை அகற்று வதற்கான தொழிலிலேயே பெரும்பாலும் அமர்த்தப்படுவ துண்டு. இந்தக் களையகற்றும் பணியை - புல்வெட்டுதல்என்பார்கள். பெரும்பாலும் இது ஒப்பந்த அடிப்படை யில் கங்காணிமார்களிடமே பொறுப்பாகக் கொடுக்கப் பட்டிருந்தது. தொழிலாளர்களின் பிள்ளைகளை சதக் கணக்கில் சம்பளம் கொடுத்து இந்த புல்வெட்டுக் கொந்தரப்பில் ("வீடிங் கொண்ட்ரக்ட்" என்று ஆங்கிலத் தில்) உழைக்கப் பண்ணி லட்சக்கணக்கில் பணம்
சம்பாதித்த கங்காணிகளுமுண்டு.

Page 16
30
மலையகப் பெண்கள் பாடுவதாகக் காணப்படும் சில பாடல்கள் கீழ் வருமாறு
"குத்துக்கட்டை மேலேறி கொழுந்து வெத்தல போடயிலே கைபுடி லேஞ்சு கண்டு என் கள்ள மனம் துள்ளுதையா"
"காவிலேயும் வெள்ளி மிஞ்சி கழுத்திலேயும் தங்கக் காரை மேலிலேயும் வெள்ளை லேஞ்சு - எனக்கு வேலை செய்யக் கூடலியே"
"பனிய லயத்து சாவல்
பாசமுள்ள வெள்ளச் சாவல் காலு வளர்ந்த சாவல் கண்டாலும் பேசுதில்ல"
“கவ்வாத்துக் காரப்பையா
கத்திவெட்டும் பாண்டி மன்னா கத்தி என்ன மின்னுறது, உன் கவ்வாத் தென்ன பிந்துறது?"
“முன்னுாறு ஆளுக்குள்ள
முள்ளுக் குந்தும் என்சாமி முள்ளு மூணும் மண்ணுக்குள்ள முழிக ரெண்டும் என்மேல”
(சி.வி. வேலுப்பிள்ளை - மலைநாட்டு மக்கள் பாடல்கள்)
வேலை செய்யும் களைப்புத் தோன்றாமலிருப்பதற் காக பரிகாசவுணர்வையும், கேலியும் கிண்டலும் கலந்த FTG) fello சம்பவங்களையும் அவர்களின் பாடல்களில் காணலாம்.

3.
*கங்காணி கோவத்துக்கும்
காட்டுதொங்க ஏத்தத்துக்கும் நம்ம தொரை கோவத்துக்கும் நடந்திட்டாலும் குத்தமில்ல"
“ஏலரிசி பெட்டிக்குள்ள
ஏம் மனசு உன்னுக்குள்ள வாழாட்டி போனாலும் வாயருமை போதுமையா”
“வெள்ளக்கல்லு மோதிரமே
கல்லு வச்ச மேஉருவே உருலோசு சங்கிலியே உனக்கொசரம் “சீக்' கிருந்தேன்"
“வெட்டின கட்டையிலே
வெடிச்ச மருக்கொழுந்தே ஏலம்பூ சர்க்கரையே என்னதான் நான் சொன்னேன் எதனால கோவமான?”
“மாணிக்கவத்தை தோட்டத்திலே
மயிருவத்தி கண்டாக்கையா உருலோச அடகு வச்சு உருட்டுறாரே ஜின்’னு போத்த"
தொழில் பாடல்களில் தொழில் தரும் எஜமானர் களைத் துதிக்கும் பாடல்களும் நிறையவே இடம்பெறுவ துண்டு.
“காலுசட்டை மேலுசட்டை
உள்கமுசு, வாசுகோட்டு அந்த தங்க உருளோசு என் கண்ணைப் பறிக்குதடி"

Page 17
32
“கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளைப் பிரட்டெடுத்து துண்டுகளைக் கொடுத்து துரத்துராரே கங்காணி”
"செடியே செடிக்கொழுந்தே
சின்னதொரை டீ கொழுந்தே வண்ணக் செடிக் கொழுந்தே வந்திட்டாரே நம்மதொர”
“கோப்பி குடிச்சிட்டாராம்
குதிர மேலே ஏறிட்டாராம் பச்சக்காடு சுத்தி வர பத்தே நிமிசம் செல்லும்”
“பொட்டுப் பொட்டா பொஸ்தகமாம்
பொன் பதிச்சு பேணாகுச்சி ஆதரிச்சு பேருபோடும்
ஐயா கணக்கப்புள்ள”
“செம்புச்சிலை போல பொண்டாட்டிய
சிம்மாசனத்தில வச்சுப்பிட்டு வேலைக் கிறங்கிற கங்காணிக்கு ஏழெட்டுப்பேராம் வைப்பாட்டிக”
“கிருச்சு மிதியடியாம்
கீபோட்ட சோமாங்களாம் வேட்டநாய கைப்புடிச்சு வேல விட வாராறாம்"
என்ற சில பாடல்களை இதற்கு உதாரணமாகக் காண லாம். இவ்விதம் பாடப்படும் தொழில் பாடல்களில் சில வேதனைக்கு வடிகால்களாய் அமைவதை தன் ஆராய்ச்சி யில் டாக்டர் சண்முகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்; மலையகத் தொழில் பாடல்களில் சில.

(ஏ.
33
“ஒடி நெர புடிச்சி
ஒரு கூட கொழுந்தெடுக்க பாவி கணக்கப்பிள்ள பத்து ராத்த போடுறானே"
“பொழுதும் எறங்கிருச்சி பூமரமும் சாஞ்சிருச்சி இன்னமும் இரங்கலையோ எசமா,ே ஒங்க மனம் அவசரமா நான் போறேன் அரபேரு போடாதீங்க"
பி. வி. கோமஸ் - கண்டிச்சீமை வந்த சணம்’
என்ற தினகரன் தொடர் கட்டுரையில்)
“கூனி அடிச்ச மலை
கோப்பிக் கன்னு போட்டமலை அண்ணனைத் தோத்த மலை அத்தா தெரியுதடி"
*கங்காணி காட்டு மேலே
கண்டாக்கையா ரோட்டு மேலே பொடியன் பழமெடுக்க பொல்லாப்பு நேந்ததையா"
"கானுல நெரே புடிச்சு
காட்டு தொங்க போய் முடிச்சு கூடே நெறயலயே - இந்தக் கூனப்பய தோட்டத்திலே"
(LD. 5r. L). LT)
தொழிற் பாடல்களில் மிகக் குறிப்பிடத்தக்கவை
கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்யும் கருவியாக அமைந்திருக்கும் பாடல்களாகும். இத்தக பாடல்கள் மிகக் குறைவானவைதாம் என்றாலும், நேரடியாக

Page 18
34
எதிர்க் குரல் எழுப்ப முடியாத பஞ்சை மக்கள் இத்தகு பாடல்களையும் பாடியிருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
தனிமனித உணர்வுகளாகமாத்திரமின்றி சமுதாயப் பார்வையோடு - இதனால் இது நடக்கின்றது என்று கூறும் பாடல்களும் இவைகளில் அடங்கியிருக்கின்றன என்பது ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய ஒரம்சமாகும்,
“எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கையிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலையத்தக் கங்காணி"
என்ற (ம. நா. ம. பா) பாடல் இவ்விதம் அமைந்த ஒன்றாகும்.
கங்காணி என்பவர் தோட்டச் சமுதாய அமைப்பில் மிக உயர்ந்த நிலையில் - துரைக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தோட்டச் சமுதாயம் ஒன்று இலங்கை மலைப் பகுதிகளில் தோற்றுவிக்கப்படுவதற்கு கங்காணிகளே மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். எனினும்,
இவர்களில் பெரும்பான்மையினோர், தங்களுக்குக் கிடைத்த வரம்பற்ற அதிகாரங்களைத் தவறாக பயன் படுத்தி பலரது எதிர்ப்புக்களையும் சம்பாதிக்கத்
தொடங்கினர்.
'எண்ணிக் குழிவெட்டி என்றாரம்பிக்கும் பாடல் கங்காணிக்கு எதிரான உணர்வுக்கு உயிர் கொடுக்கும் பாடலாக உருவெடுத்தது போல் தோன்றுகின்றது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கன்றுகளை நடுவதற்கு குழிகள் வெட்டுவதென்பது மிகவும் கவனத் தோடு செய்யப்பட வேண்டிய ஒரு காரியமாகும். ஆக, இந்தக்குழிகளில் நடப்படும் தேயிலைக்கண்றுகள் மதர்த்து வளர்ந்து செழித்துப் பயன் தருவதில்தான் நாட்டின்

35
அதிமுக்கிய அந்நிய செலவாணியைப் பெற்று தரும் பொருளாதாரமே தங்கியிருக்கின்றது. இத்தகு முக்கியத் துவம் வாய்ந்த குழிவெட்டும் வேலைப் பொதுவாகத் தோட்டப் புறங்களில் கணக்கு வேலையாகக் ("டாஸ்க் வேர்க்' என்று ஆங்கிலத்தில்) கொடுபடுவதுண்டு. நூறு குழிகள் பதினெட்டங்குல ஆழத்தில் வெட்டுவதின் மூலமே தனக்கு ஒரு நாள் சம்பளம் கிடைப்பதற்கான அங்கீகாரம் தரும் “பெயர்’, ‘செக்ரோலில், இடப்படும் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படும் ஒவ்வோர் ஆண் தொழிலாளியும், தான் வெட்டும் ஒவ்வொருக் குழிய்ையும் கணக்கிடுவதற்கு தவறுவதே யில்லை. அவ்விதம் கணக்கிட்டு குழிகள் வெட்டி, தனக் குள்ள எண்ணிக்கை முடிந்ததென்று எண்ணி நிற்கும் போது இடுப்பொடியும் சிரமத்தை முடித்து நிற்கின் றோம் என்று எண்ணி திருப்தியடையும்போது - தனது எஜமானத் திறமைக்கு மேலும் சிறப்புத்தேட விரும்பிய கங்காணி, தன்னிடம் இன்னும் வேலை வாங்க முயற்சிக் கும் தந்திரத்தை, சுயநலச் சுரண்டலை இந்தப் பாடல் ஆத்திரத்தோடு வெளிப்படுத்துகின்றது எனலாம்.
“வேலை முடிஞ்சிருச்சி
வீடு போக நேரமாச்சு வேலையத்த கண்டாக்கையா வெரட்டுறாறு எங்களத்தான்" (LD. [BIT. LID. Lurt)
என்ற பாடலும் எஜமானத் தந்திரத்துக்கு இரையாகா திருக்கும் தொழிலாள விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்ற இன்னொருப் பாடல் எனலாம்.
“அந்தனா தோட்டமினு
ஆசையர் தானிருந்தேன் ஒர மூட்ட தூக்கச் சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா (ம.நா.ம.பா)

Page 19
36
“கல்லாறு தோட்டத்திலே
கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டே புடுங்குதின்னு மூணாள விரட்டி விட்டான்” (uo.57. D.1 fT)
"கோனக்கோன மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதைச்சானப்யா சின்ன தொரை”
(மு. க. நல்லையா "வாய்மொழி இலக்கியத்தில் தோட்டப் பாடல்கள்' என்ற வீரகேசரி கட்டுரையில்) என்ற LUFTL - 65 Gir எஜமான அதிகாரத்தால் - தாம் பாதிக்கப்பட்டதைத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றதெனலாம்.
“தோட்டம் பிரளில்லே
தொரே மேலே குத்தமில்லே கங்காணி மாராளே கனபிரளி யாகுதையா"
“றப்பர் மரமானேன்
நாலு பக்கம் வாதானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீஸுக்காரனுக்கு ஏறிப்போகக் காரானேன்"
“சவுக்கு மரமானேன்
"சாருகட்ட நானானேன் சுத்த சவுக்கு மரம் சூழ்ந்த தொரு மாசிமூட்டம்"

37
"ஆத்தோரம் கொந்தரப்பு அது நெடுக வல்லாரை வல்லாரை வெட்டியல்லோ என் வல்லமைக் குறைஞ்சதய்யா"
என்ற பாடல்கள் - எஜமான தந்திரத்தையும், எஜமான அதிகாரத்தையும் - எதிர்கால மக்களின் சிந்தனைக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் அமைந்தனவாகக் கருதப்பட இடமிருக்கின்றது.

Page 20
5. கங்காணிப் பாடல்கள்
தென்னிந்திய மக்கள் இலங்கை மலைப் பகுதிகளில் பெருமளவுக்குக் குடியேறுவதற்கு கங்காணிகளே அதிக அளவுக்கு காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர்.
ஆள்கட்டுவதற்கான அனுமதியைப் ("ரெக்ரியூட்டிங் லைசென்ஸ்’ என்று ஆங்கிலத்தில்) பெற்றுக்கொண்டு இந்திய கிராமங்களிலிருந்தும், தனது சொந்த ஊரிலி ருந்தும் நூற்றுக்கணக்கானவர்களை இங்கு கொண்டு வந்து தனக்குக் கீழேயே தொழிலில் அமர்த்திக் கொண்டனர்.
இவ்விதம் இலங்கைக்கு வரும் அரிய வாய்ப்பை தனக்குப் பெற்றுக்கொடுத்த கங்காணியே தனக்கு சர்வமும் என்று மனப்பூர்வமாக ஒவ்வொரு தொழிலாளி யும் நம்பி ஆரம்பித்தான். இவ்விதம் இலங்கை வர ஆசைப்பட்ட ஒருவனுக்கு இந்தியாவில் முன் பணம் கொடுத்து அழைத்து வந்த கங்காணி அவனுக்கு வேண்டிய அத்தனையையும் அவன் கேளாமலேயே இலங்கைக்குவந்து சேரும் வரைக்கும் அவனுக்குச் செய்து கொடுத்தார்.
இந்திய கிராமத்தில் அவனுக்கிருந்த EL 68) T கங்காணிதான் பணம் கொடுத்து அடைத்தார். தோணி யில் கடல் கடல் கடந்து வரும் பிரயாணச் செலவை அவன் கொடுக்கவில்லை. அவனைப் பொறுத்தவரையில் கங்காணி கொடுத்ததாகவே நினைத்தான். உணவுக் கென்று ஒரு சதமும் அவன் கொடுக்கவில்லை. அவனைப்

39.
பொறுத்தவரையில் கங்காணி கொடுத்ததாகவே நினைத் தான், இலங்கைக் கரையில் அவன் இறங்கியவுடனேயே பரிச்சயமில்லாத கால நிலையை அவன் உணர்ந்தபோது, கம்பளிப் போர்வையை அவனுக்குக் கொடுத்துக் கதகதப்பைத் தந்த போது கூலி என்று எதையும் கேட்க வில்லை. தலைமன்னாரிலிருந்து தோட்டங்களுக்கு இரு நூறு மைல்கள் அவன் நடந்து வந்தபோது வழியில் அம்பலத்தில் தங்குவதற்கும், உணவு உட்கொள்வதற்கும் அவன் கங்காணிக்குக் கூலியாக எதையும் கொடுக்க வில்லை. ஆக தோட்டங்களுக்கு இந்திய விவசாயியான அவன் எந்தவித செலவுமின்றியே வந்தான். உண்மையில் இங்கு வந்து - ஆறோடு ஆறுவரை - வெய்யிலிலும், குளிரிலும் வாடிவதங்கி வெந்து சாகும்போது கூட இவ்விதம்தான், மிருகத்தனமாக நடாத்தப்படுவதெல்லாம் தன்னுடைய பிரயாணச் செலவை நூறு மடங்காக மீட்டுத் தருவதற்காக என்பதை அவன் உணரவில்லை. அவனைப் பொறுத்தமட்டில் வாழ்நாள் முழுக்க கங்காணியே சர்வமும் என்ற நமயிக்கையில் கொஞ்சமும் மாற்றமில்லை. கடல் கடந்து தாம் கொண்டு வந்து சேர்த்தத் தொழிலாளர்களுக்கு வெறும் "ஆள் கட்டும்? கங்காணியாக மாத்திரமல்ல, தலைவனாகவும். தகப்ப னாகவும் இந்தக் கங்காணிகள் விளங்கினர் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. தோட்டத்துறையை அதிகாரம் பண்ணுமளவுக்கு அவர்களில் சிலர் சக்திவாய்ந்தவர் களாக இருந்தனர் என்பதையும் அவர்களில் பெரும் பாலான அனைவரும், தமது எஜமானரான வெள்ளைத் துரைமார்கள் தன்னை எஜமானராகக் கருதும் தமது தொழிலாளர்களைத் தண்டிக்க முனையும்போது, இடை யில் புகுந்து அதீதமான தண்டனைகளிலிருந்து அவர் களைக் காப்பதை தமது கடமைகளில் ஒன்றாகவேக் கருதினர். சி. வி வேலுப்பிள்ளை எழுதிய "வீடற்றவன் என்ற குறுநாவல், சி. வே. ரா. எழுதிய "யாருக்கு அவமானம்' என்ற நாடகம் போன்ற தற்கால இலக்கிய முயற்சிகளில் இந்த உண்மை சித்தரிக்கப்படுகின்றது :

Page 21
40 “அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்
அவராலே மானங்கெட்டோம் முழி மிரட்டிச் சாமியாலே மூங்கியாலே அடியும் பட்டோம்" என்பது பாடல். கங்காணிமார்களின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மலையக வாய்மொழிப் பாடல்களில் கணிசமான எண்ணிக்கை அவர்களைப் பற்றியதாகவே இருக்கின்றது.
வெள்ளைக்கமிஸ், கறுப்புக்கோட்டு, சரிகைத் தலைப் பாகை, கோட்டின் இடப்புறத்துமேல் பொக்கெட்டுக்கு மேலே வெள்ளிச் சங்கிலி, அதில் தொங்கும் பொக்கெட் உருலோசு இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக் g5T6ör egy6)Élé95TULD''
காதிலே கடுக்கன் - குண்டலம் என்பர், கழுத்திலே தங்க வளையம் - கெவுடு என்பர், கையிலே பிரம்புகொண்டை என்பர் - இவைகள் கங்காணியின் அத்தியா வசிய அணிகலன் எனலாம்.
தோட்டப் புறங்களில் தொழிற்சங்கங்கள் ஊடுருவும் வரை கங்காணிமாரின் நிலை இந்திய கிராமத்து ஜமீன் தாரின் நிலையிலேயே இருந்தது.
1946இல் கங்காணி முறையை ஒழிப்பதைக் கொள்கை அளவில் இலங்கை அரசாங்க சபை ஏற்றுக்கொண்டது. அதற்குப் பின்னர் புதிதாக பெரிய கங்காணிமார் நியமிக்கப்படவில்லை18
மலையகக் கலை முயற்சிகளுக்கும், பண்பாட்டு விழுமியங்களுக்கும், வாய்மொழிப் பாடங்களின் வளர்ச் சிக்கும், சமய ஆசார முறைகளுக்கும் பெரிய கங்ககாணி கள் காட்டி வந்த ஆதரவை எவரும் மறுப்பதற்கில்லை.
தோட்டங்களிலும் மலையக நகர்ப்புறங்களிலும் இன்று காணக்கிடைக்கின்ற இந்து கோவில்களைக் கட்- முன்நின்றவர்கள் அவர்கள்தாம்.

4l
இன்று மலைநாட்டு நகர்ப்புறங்களில் இயங்குகின்ற பழைய தமிழ்க் கல்லூரிகள் அனைத்தும் அவர்கள் கட்டு வித்த இந்து சமய பாடசாலைகள்தாம் என்று குறிப்பிடு கின்ற ஜி. ஏ. ஞானமுத்து, கோவில் திருவிழாக்களின் போதும், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போதும் அவர்களது வீடுகளுக்கு வருகை தந்த தமிழகத்து அண்ணாவிமார்கள், சமயப்புலவர்கள் போன்றவர்களே நாட்டார் பாடல்களையும், கும்மி, கோலாட்டம் போன்ற கலைகளையும் நன்கு அறிமுகப்படுத்தினர் என்று கூறுகின்றார்14
மேலும் இந்தியாவில் மறைந்து வரும் அல்லி அரசாணி, காமங்கூத்து என்ற இரண்டும் மலைநாட்டில் உருமாறமல் இருக்கின்றது என்றும் இதற்கும் பெரிய கங்காணிகளின் பங்களிப்பே காரணம் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
தாங்கள் மகிழ்ந்து குதூகலிக்கும் நாட்களில், அது சமய சம்பந்தமானதாக இருந்தாலென்ன தீபாவளி பண்டிகையாக இருந்தாலென்ன, தமது குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற நிகழ்ச்சியாக இருந்தா லென்ன, தொழிலாளர்கள் கங்காணிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை; கங்காணிக் கும்மிபாடி அவர்களைக் கணம் பண்ணவும் தவறுவதில்லை. இதோ:-
"சொலு சொலுன்னு மழைபெய்ய துப்பட்டி தண்ணி அலை மோத சொகுசா வாராராம் நம்மய்யா கங்காணி தோடு மின்னலைப் பாருங்கடி”
6s
கலகலன்ணு மழை பெய்ய கம்ப்ளித் தண்ணி அலை மோத காரியக்காரராம் நம்பய்யா கங்காணி கடுக்கன் மின்னலைப் பாருங்கடி"
LD-3

Page 22
42
இந்தப் பாடல்கள் பாடப்பட்ட-1946க்கு முற்பட்ட காலப்பகுதியில்-இலங்கை மலையகப்பகுதியில் பொதுவாக மழை வீழ்ச்சி அதிகமாகவே இருந்துள்ளது. அந்தக் காலப் பகுதியில் பொதுவாகப் பெண்கள் ரவிக்கை அணியும் பழக்கம் மலையகப் பகுதிகளில் இருக்கவில்லை. ع
மார்பு சேலையோடு வேலைக்குப் போகும் அவர்களை மழையிலிருந்து காப்பது கம்ப்ளி ஒன்றேதான் என்ற பின்னணியில் இந்தப் பாடலின் நயத்தைப் பார்க்க வேண்டும். W S.
இதோ இன்னொருப் Lunt L.-6ão
“சித்திர புத்திர கண்டாங்கியாம்,
செப்புக் கொடத்திலே எழுதியிருக்கும். எடுத்துக் குடுப்பாராம் நம்மையா கங்காணி இழுத்து மாராப்பு போடச் சொலி"
(LD./5fT.4 D. umt)
சித்திர புத்திர கண்டாங்கி என்பது ஒரு பெயர் பெற்ற கண்டாங்கிச்சேலை, தீபாவளி போன்ற பண்டிகை நாட் களில் பெண்கள் கும்மி, கோலாட்டம் போன் றவற்றைப் பாடி, ஆடி தோட்டத்தை மகிழ்விக்கும் வேளையில், கங்காணி வீட்டுக்குச் சென்று பாடி ஆடுகையில் அவர் கொடுத்தச் சேலையைப் பற்றிய பாடல் இது.
இதேவிதத்தில், தங்கள் குலதெய்வத்தைப் பற்றிய பாடல்களையும் இந்தமக்கள் பாடினார்கள்.
உதாரணமாக,
"கலகலன்னு மழைப் பொழிய கன்னங்களிரண்டும் கிளி கூவ காரியக்காரராம் வள்ளடியான்
கடுக்கண் மின்னலைப் பாருங்களே”

43
“சொலு சொலுன்னு மழைப் பொழிய
துப்பட்டி தண்ணி அலை மோத சொகுசுக்காரராம் வள்ளடியான் தோடு மின்னலைப் பாருங்களே”
என்ற பாடல்கள் வள்ளடிக்காரர் ஆலயம் அமைந்துள்ள
அக்கரப்பத்தனையைச் சேர்ந்த லெட்சுமி தோட்டத்தில்
இன்றும் பாடப்படுகின்றன.
ஆக, தெய்வத்துக்குச் சமானமான ஒரு நிலையில்
கங்காணியை வைத்து இந்த மக்கள் பாவித்தார்கள்பாடினார்கள்-பரதவித்தார்கள்.

Page 23
6. கும்மியும் கோலாட்டமும்
வாய்மொழியோடு தொடர்புபட்ட ஆடல்களை மூன்று வகைப்படுத்தலாமென்றும் அவை 1) பக்தி ஆடல்ாள் 2) வீர ஆடல்கள் 3) சமூக ஆடல்கள் என்றும் வகைப்படுத்தும் டாக்டர் சு. சண்முகசுந்தரம் கும்மி என்பது பக்தி, வீரம், சமூகம் ஆகிய மூன்றையும் தழுவிச் செல்லுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.19
கும்மியின் வகைகளைக் குறித்தெழுதும்போது கும்மிப் பாடலின் வடிவில் புலவர்கள் எழுத முனைந்தபோதுதான் புதிய நிலை உருவாகியது என்று கூறும் அவர், பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு சமயக் கருத்துக்கள், புராணக் கருத்துக்கள், வரலாற்றுச் செய்தி கள், வாழ்வியல் நிகழ்வுகள் என்று நான்கு வகையாகப் பகுத்துள்ளார்.19
மலையகத்தைப் பொறுத்தமட்டில் இந்த நான்கு வகைகளுள்ளும்-வாழ்வியல் நிகழ்வுகளே முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதும் - அந்த முக்கியத்துவம்-கங்காணி களின் முக்கியத்துவமாகக் கருதப்படல் வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.
“வட்டமிட்டுப் பெண்கள் - கொட்டியிசைத்திடும்கூட்டமுதப் பாட்டினில்" நெஞ்சு பறி கொடுத்தப் பாரதியார் “விடுதலைக்கும்மி பாடினார் என்று கூறி “நல்ல நிலவுக் காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் பெண்கள் கூடி கும்மியடித்து களிநடம் புரிவதுண்டு கையொலியை இயற்கையான தாளமாக்கி, வட்டமாக நின்று, பாட்டுப் பாடி, குனிந்து நிமிர்ந்து பாடி மகிழ்வ துண்டு" என்று சேர்த்து,

°45
“முன்கைய நீட்டி வளையலிட்டு
முன்னுாறு பேருக்கு நெல்லளந்து * ' கண்ணாடி போட்டு கணக்கிட்டுப் பார்க்கிற காரியக்காரண்டி நம்ம மாமா”
(த.நா.பா)
என்ற பாடலையும் உதாரணம் காட்டுகின்றார் முத்து எத்திராசன்.
"திண்ணைய திண்ணைய கூட்டுங்கடி அந்த
தெருவு திண்ணைய கூட்டுங்கடி நம்மையா கங்காணி சாஞ்சிருக்கிற சருகை திண்ணைய கூட்டுங்கடி
சுரை படந்ததைப் பாருங்கடி அது
சுத்திப் படந்ததைப் பாருங்கடி சுரை விதைபோல நம்மையா கங்காணி
சொல்லு வருகையைப் பாருங்கடி
பாகை படந்ததைப் பாருங்கடி அது பத்திப் படந்ததைப் பாருங்கடி பாகை விதைபோல நம்மையா கங்காணி பல்லு வரிகையைப் பாருங்கடி
குதிரே வாரதைப் பாருங்கடி குதிரே குனிஞ்சி வாரதைப் பாருங்கடி குதிரே மேலே நம்மையா கங்காணி கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி"
(D. birt. LD. unt.)
என்ற கும்மிப் பாடல்கள் இந்திய விவசாயிகளிடம் பாடப் படும் பாடல்களையே சிறுசிறு சொல் மாற்றங்களுடன் மலையகத்து மக்கள் பாடி வருகின்றார்கள் என்பதை , வெளிப்படுத்தும்.

Page 24
46
கும்மியாட்டம் போலவே கோலாட்டம் என்பதும் கூட்டாக ஒன்று சேர்ந்து ஆடும் ஆட்டமாகும். தமிழகத் தில் இது பெண்கள் ஆட்டாமாயிருந்து பின்னர் ஆண் களும் பெண்களும் இணைந்து ஆடும் ஆட்டமாயிற்று.
இலங்கையில் இது ஆண்கள் ஆட்டமாகவே வளர்ந் துள்ளது.
ஈழத்தில் வசந்தன் ஆட்டம், கேரளத்தில் கோல்களி தமிழகத்தில் வைந்தனை கோலாட்டம் என்று வழங்கப் படும். இந்த ஆட்டம் மலையகத்தில் வெறுமனே கோலாட்டம் என்றே குறிக்கப்படுகின்றது. ஒரடி நீளமுள்ள இரு கோல்களைக் கைக்கு ஒன்றாக தங்களிரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு, எதிர்த் திசையில், இன்னொருவர் கையில் இதே விதத்தில் பிடிக்கப்பட்டுள்ள கோல்களைத் தாக்கி ஒலியெழுப்பி ஆடுவதே கோலாட்டம். இவ்விதம் மாறிமாறி தட்டியும், இடம் மாறி நகர்ந்தும், குனிந்தும், வளைந்தும், பாட்டுக் கேற்ப ஆடுவர். இந்த ஆட்டத்தில் இருபது முதல் முப்பது பேர்வரை கலந்து கொள்வர்.
சமய விழாவின் போதும், தனிமனிதர்க்கான விழா வின் போதும் ஊர்வலம் செல்லுகையில் முன்னால் கோலாட்டம் அடித்துச் செல்வதுமுண்டு.
கதிர்காமக் கடவுள் கோலாட்டம் :
“ஓடினேன் கப்பலேறி-கதிர்காமம்
ஓங்குவடி வேலைத்தேடி
- (சல்) ஆடுவோம் பாடுவோமே-கோலாட்டம் ஆண்டவன் உன் பாதமே! சந்தன சாதுவத்தி-சவ்வாது சாம்பிராணி வாடை காட்டி

47
அந்தர கந்தாயுதா திரு-கங்கை அன்பு வடிவாய் பொங்குதே!"
(நயமிகு நாட்டுப்புறப் பாடல்கள், - முத்து எத்திராசன்பக்-50)
துரைமார்களையும் அவர்களது பங்களாக்களைப் பற்றியும்கூட இந்த மக்களின் பாடல்கள் குறிப்பிடத் தவறவில்லை. குழுவாகக்கூடி கும்மி கோலாட்டம் போன்றவைகளை துரையின் முன்னிலையில், அவரது பங்களா முன்றலில், ஆடி மகிழும் போது இத்தகு பாடல் கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது அறிவுக்கு ஒப்பி வரும் துணிபாகும்.
“கொய்யாப்பழம் பழுக்கும்
கொட மல்லிகே பூ பூக்கும் சீத்தாப்பழம் பழுக்கும்-நம்ம சின்னத் தொரை வாசலிலே”
“ஆறடிதான் வங்களவாம் அறுவதடி பூந்தோட்டம் பூஞ்செடிக்கு தண்ணிபோடும் புண்ணியரே என் பொறப்பு”,
*சாமித் தொரை பங்களாவில்
தாராவும் கோழியும் மேயுதாம் தோட்டத்தைச் சுத்தி பூஞ்செடியாம் சுத்தி வளைஞ்சு பாருங்கடி"
மக்களிடையே ஏற்பட்டு வரும் கல்வி அபிவிருத்தி பழைய கலைகளை மறக்க வைக்கின்றது பழைய கலை களான கும்மியும்--கோலாட்டமும் திருவிழாக் காலங் களில் மாத்திரம் அதுவும் ஒரு சில தோட்டங்களிலேயே சிறப்பாக இப்போதும் பேணப்படுகின்றன.

Page 25
7. வாழ்வளித்த வாய்மொழிப் பாடல்கள்
வாய்மொழிப் பாடல்கள் ஜீவக்களையோடு உயிர் வாழுவது மலையகத்தில் பேணப்படும் காமன் கூத்து ஆட்டத்தில் எனலாம்.
காமன்கூத்தின் மூலம் தென்னிந்திய தமிழ் மக்கள் தெய்வங்களுக்கு தங்கள் நன்றியறிதலை அர்ப்பணம் செய்தார்கள்.
இலங்கை மலையகத்தில் அது தனது பழைய நோக் கங்களை மறந்து தைப்பொங்கல் அல்லது அர்ச்சுணன் தபசு போன்ற ஒரு மதவைபவமாகவே இன்று கொண் டாடப்படுகின்றது.
புரோகிதர் ஒருவரைக் கொண்டு பொதுவான இடத்தில் மன்மத ஸ்தாபனம் தேர்ந்தெடுக்கப்படு கின்றது. அவ்விடத்தில் பந்தலமைத்துத் தினமும் மாவிலைத் தோரணங்களால் அழகாக அலங்காரம் செய் யப்படும். பந்தலின் மத்தியில் சதுரமான மேடை போனறதோர் பீடமமைத்து அப்பீடத்தைச் சாணம் கொண்டு மெழுகி கோலங்கலிட்டு அலங்கரிப்பர்.
அந்தப் பீடத்தின் மத்தியில் ஒரு கம்பம் நடப்பட்டுக் காய்ந்த தென்னை ஒலையினால் சுற்றிக் கட்டி மறைக் கப்படும்-இக்கம்பத்தை மன்மதனாகப் தினம் தினம் பூசை செய்து மக்கள் பயபக்தியோடு வணங்குவர், * ...
ஆண்டுதோறும் மாசித் திங்களில் மாத்திரமே இந்தக் கூத்து நடைபெறும். மாதம் முழுக்க நடைபெறும்.
'உன் கணவன் வருடத்துக்கொரு முறை மாசித் திங் களில் உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். கண்டு கலந்து

49
கொள்" என்று சிவபெருமான், எரிந்த தனது கணவன் மன்மதனை உயிர் மீட்டுத் தரும்படி மன்றாடிய ரதிதேவி மிடம் கூறிய ஐதீகத்தின் நம்பிக்கையாக இது தொடர் கிறது.
திருக்கைலாசத்தின் தவமிருக்கும் சிவபெருமானின்
தவத்தைக் கலைப்பதற்கு இந்திரன் முதலான தேவர்கள் மன்மதக் கலையில் வல்லவரான மன்மதனை உடன்
அழைத்துச் சென்றதும், கரும்பு வில்லையும், அரும்பு மலரையும் பாவித்து அவர் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயல்வதும், சினம் கொண்ட சிவபெருமானின்
நெற்றிக்கண் திறந்து மன்மதன் எரிந்து சாம்பலாவதும், தேவர்கள் சிவபெருமானிடம் சரண் புகுந்து விடுவதும்
அந்தக் கூத்து கூறும் கதையம்சம்.
கடல் கடந்த தேசத்துக்கு பிறரால் அழைத்துவரப் பட்டு, நாட்டின் பொருளாதார முறையையே மாற்றி யமைத்து நாள்தோறும் ‘எரிந்த சாம்பலாய் ஒதுக்கப் பட்ட ஒரு சமுதாய மக்கள்-தம் உணர்வினை-எரிந்தும் எரியாத நிலையில்-நீறு பூத்த நெருப்பாக-வைத்திருக்க இந்தக் கூத்து உதவுகின்றது.
மலையகத்தின் பல பாகங்களிலும்-எல்லாத் தோட் டங்களிலும் ஆடப்படும் 'காமன் கூத்து அதன் மூலக் கதை மாறுபடாத விதத்தில்,பலவகையான வாய்மொழிப் பாடல்களால் பாடப்படுகின்றது. அந்தப் பாடல்கள் மந்திர சக்தியோடு ஒலிக்கின்றன. அந்தப் பாடல்களில் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் செல்ல முயற்சிப்பதை ரதிதேவி தடுத்து வாதிடுவ முக்கிய இடம்பெறும்.
மலையகத்தில் உயிர்வாழும் காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு, சங்கர்பொன்னன் கதை, அவர்கள் விரும்பி பாடும் நளமகராசன் கதை, நல்லதங்காள் கதை என்பவைகளெல்லாம் அவர்களின் நாளாந்த வாழ்வில்

Page 26
50
மிகுந்து காணப்படும் அவலச்சுவையினால் மெருகேற்றப் பட்டு இன்னும் ஆதரிக்கப்படுகின்றன என்று நம்புவதற்கு இடமுண்டு. வாய்மொழிப்பாடல்களுக்கு வாழ்வளித்த இன்னுமோர் பாத்திரம் “கோடாங்கி", கோடாங்கி என்பவர் மாந்ரீக வைத்தியர் எனலாம்; குறிசொல்பவ ருக்கு அடுத்த நிலையிலுள்ளவர் என்றும் கூறலாம்.
தோட்டத்தில் யாராவதொருவர் நோய்வாய்ப்பட் டால், தோட்ட டிஸ்பென்ஸரின் உதவியைவிடக் கோடாங்கியின் உதவியே மேலெனக் கருதப்பட்ட ஒரு காலமுமிருந்தது. முப்பத்தைந்து, நாற்பதாண்டுகளுக்கு முன்னம் இருந்த வசீகரம்கோடாங்கிக்கு இன்று இல்லை.18
கோடாங்கி வெள்ளை வேட்டியுடனும் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டும் உருத் திராட்ச மணிகளை அணிந்து கொண்டும், உயர்ந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொள்வார். சாம்பிராணித் தட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும். உடுக்கும், தடித்த சணல் கயிற்றிலான சாட்டையும் சிறிய முத்து மணி களைக் கொண்ட ஒரு சிறிய பையும் கோடாங்கியின் முன்னால் வைக்கப்படும்.
கோடாங்கியின் விசேட திறமை, எண்ணாப் பிரகாரம் அவ்வவ்விடத்திலேயே சட்டென பாடல்களைப் பாடுவதாகும். அவருடைய குரல் பிடிலின் நாதத்தைப் போலத் தெளிவாக தொனிக்கும்; இயற்கைக்கு அப்பாற் பட்ட முறையில் ஒருவித அச்சத்தை உண்டாக்கும் ஒலியுடன் அமைந்திருக்கும். நள்ளிரவின் பயங்கர அமைதியிலே அவருடைய குரலொலி ஒரு மைல் தூரத்துக்குக் கேட்கும். எனினும், கோடாங்கி ஒரு சாதாரணத் தொழிலாளியே; அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால், அவருடைய பாடல்களில் செய்யுள் விதிகள் பின்பற்றப்பட்டிருப்பதைக் காண ஆச்சர்யம் படும்படியாக இருக்கும் என்று கூறும் மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை கோடாங்கியின் பாடல்கள்

5.
ஆங்கிலப் பிரபந்தத்தைப் போல் அமைந்திருக்கும் என்பார். உதாரணத்துக்கொன்று :
"சொல்லுகிறேன் பஞ்சாயம் துவங்குகிறேன் கம்பையிலே யாரு செய்த குத்தம் எவரு செய்த தீவினைகள் நச்சு வலியும் நம் வீட்டில் நையாண்டி கூத்துகளும் ஆணால் அருங்கூத்து பெண்ணால் பெருங்கூத்து கேளப்பா சொல்லுகிறேன்நஞ்சு திண்ணு நஞ்சு கக்கும் நடுச்சாம வேளையிலே நம்மமட்டம் சிறுசு நம்ம மதளையும் கண்ணுகளும் ஒரு சாமம் வேளைவிட்டு மறுசாம வேளையிலே நம்மண்ணன் முனியன் நம்ம அடங்கா புலி எருது வேட்டைக்கு போயி திரும்பு மந்த வேளையிலே பட்ட மரம் குச்சி படக்கினு ஒடிந்த தப்பா கண்ணி பயந்த மங்கை கண்டு பயந்தாலே பொட்ட தொரு அம்பு - முனியன் பின் வாங்க மாட்டான் - போ, பொறுக்க முடியாது பூமியிடம் கொள்ளாது”
ஆக வாய்மொழிப்பாடல்கள் சிலரின் வாழ்வோட்டத் துக்கே வழி வகுத்திருக்கின்றன என்பதும் இந்தப் பாடல்களுக்குரித்தான ஒரு சிறப்பாகும்.

Page 27
8. ஒப்பு நோக்கு
ஆரம்பகால மலையக வாய்மொழிப் பாடல்கள் பலவற்றின் மூலவேர் தென்னிந்திய கிராமப்பாடகள்தாம் என்பது அப்பட்டமான உண்மை. தென்னிந்தியப் பாடல் ᏯᏠ5ᎧᏈᎠᎧnᎢ நாட்டுப்பாடல்கள் எனவும், ஈழத்தில் மட்டக்களப்பு போன்ற விவசாயப்பிரதேசங்களில் வழங்க படுபவைகளைக் கிராமியப்பாடல்கள் எனவும், மலையகத் தில் உயிர்வாழும் பாடல்களைத் தோட்டப்பாடல்கள் எனவும், வேறுபடுத்திக் காணும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு, பத்திரிகைகளில் எழுதினர். குறிப்பிட்டுக் கூறும் படி டி.எஸ். ராஜ" - 'நூரளை மலைச்செல்வன்' என்ற பெயரில் எழுதிய தினகரன் கட்டுரைகள், இந்நூலாசிரி யர், மு. க. நல்லையா என்ற இயற்பெயரில் எழுதிய வீரகேசரி கட்டுரைகள் அமைந்திருந்தன.
தென்னிந்திய திருநெல்வேலி பகுதியில் வழங்கப்படும் நாட்டுப் பாடல்கள் மலையத்தில் ஹட்டன், டிக் கோயாப் பகுதிகளில் மிகுதியாகப் பாடப்படுவதையும், மதுரைச் சீமையில் வழக்கிலுள்ளவை அக்கரைப்பத்தனை பகுதியில் அதிகமாகப் பாடப்படுவதையும் எடுத்துக்காட்டி இந்தப் List — Gð5Gfløör மூலம் தென்னிந்தியக் குடியேற்றம் எந்தெந்தப் பகுதிகளில் கிராமவாரியாகவும், சாதிவாரி யாகவும் இலங்கையில் ஏற்பட்டன என்பதை ஓரளவுக் கேனும் அறிந்திட முடியும் என்று அந்தக்கட்டுரையாளர் கள் குறிப்பிட்டுள்ளனர்.
நூரளைப் பகுதியிலிருந்து எட்டியாந்தோட்டை பகுதியில் பாடப்படும் பாடல்களில் காணப்படும் வேறு பாடுகளும் விளக்கப்பட்டிருந்தன.

53
தென்னிந்தியாவிலும் இலங்கை மலையத்திலும் வழக் கிலிருக்கும் பாடல்களில் தாலாட்டு, ஒப்பாரி ஆகியவை களைத் தவிர்த்த வேறு சில பாடல்களை இங்கு ஒப்பு நோக்குவோம்.
மலையகத்தில் வெகு பிரபல்யமாக - தேயிலை வளரும் எல்லாத் தோட்டங்களிலும் பாடப்படும் lust-65gil,
"கூட மேலே கூட வச்சு
கொழுந்தெடுக்கப் போற புள்ளே கூடே எறக்கி வச்சு குளுந்த வார்த்தை சொல்லிப்போடி" என்று பாடப்படும் பாடல் ‘புள்ளே' என்பதற்கு பதில் “பெண்ணே" என்றும் ‘போடி' என்பதற்கு பதில் ‘போவே" என்றும் சில வேறுபாடுகளோடும் பாடப் படுவதுண்டு.
தோட்டத்துப் பெண்ணைப் பற்றிய இந்தப்பாடல் ஆண்மகன் ஒருவனின் கூற்றாக அமைந்திருப்பதால் அந்தப் பாடலுக்குப் பதிலாக பெண்ணொருத்திப் பாடிய பாடலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆண் பெண் இருபாலாரும் தர்க்கித்துக்கொள் ளும் பாடல்களாக - அவர்களிடையே அரும்பிவரும் உறவுமுறையை வளர்த்தெடுப்பதற்கு உதவியாகவோ, வேண்டாத தொடர்பை விலக்கிவிடுவதற்கு உதவி யாகவோ அமைந்து விடும் பாடல்களாக, மலையக வாய்மொழிப் பாடல்களில் காணக்கிடக்கும் ஏராளமானப் பாடல்களில் இதுவுமென்ேறு.
“என் புருசன், கங்காணி
என் கொழுந்தன் கவ்வாத்து எளைய கொழுந்தனுமே இஸ்டோரு மேல் கணக்கு" என்று பெண் பதில் தருகின்றாள்.

Page 28
54
பெண்ணின் கூற்றாக அமையும், இன்னும் சில பாடல்களை சிலர் பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியுள்ள னர். அவைகளில் சில புதிதாக உருவாக்கப்பட்டவைகள் என்பதில் ஐயமில்லை.
மலையக நாட்டுப் பாடல்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அதிகாரப்பூர்வமாகவும், நம்பத்தகுந்தவிதமாகவும் சேகரித்து தந்தவராக மறைந்த மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை அவர்களையே அறிஞர்கள் அங்கீகரித்தனர் என்று மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்"19 இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது சிவி சேகரித்து அச்சேற்றிய பாடல் ஆகும்.
இனி இதைப் போன்ற தமிழகத்து நாடோடிப் பாடலைப் பார்ப்போம்,
"கூடைமேல் கூடடுக்கி ஒட்டப்பொண்ணே
கொடிவழியா போறபொண்ணே ஒட்டமாதே கொடிவழியா போறபொண்ணே கூடைய கீழெறக்கி ஒட்டமாதே குளுந்த வார்த்தை சொல்லிப்போடி
ஒட்டப்பொண்ணே குளுந்த வார்த்தை சொல்லிப்போடி"
“சாதிலே ஒட்டப்பொண்ணு செட்டிப்பையா நீ கிட்ட வந்தா பட்டிடுவே செட்டிப்பையா நீ கிட்ட வந்தா பட்டிடுவே"
(டாக்டர் ஆறு. இராமநாதன் எழுதிய "நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர்வாழ்வியல் பக்கம்-278)
இதுபோன்ற பாடல்கள் கலப்பு மணங்களைப் பற்றிய மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்து கின்றன என்று கூறி இந்தப் பாடல் செட்டிப்பையன் தன் காதலை வெளிப்படுத்துவதையும், ஒட்டப்பெண் முதலில் மறுப்பதையும் வெளிப்படுத்துகின்றது என்பர்.

55
"கூடைமேலே கூடை வச்சுகுட்டி கூடலூரு போற பொண்ணே, கூடை வந்து அரைப்பணமாம், உன் கொண்டைப்பூ காப்பணமாம்"
(கவிஞர் மா. வரதராஜன் எழுதிய 'தமிழகநாட்டுப் பாடல்கள்" பக்கம்-185) .
என்ற ஒரு பாடல் காதல் பாடல்கள் என்ற பிரிவுக்குட் படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம்.
ஆக, அடிப்படையில் ஆண் பெண் என்ற இருபாலரி டத்தும் முகிழ்த்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் உறவு முறைகளை வளர்த்துக் கொள்ளவும் இவைப் பயன்பட்டுள்ளன என்பது பெறப்படுகின்றது. இலங்கை மலையகத்தில் தமிழகக் கிராமத்தைப்போல சாதி ஆதிக்கம் இல்லை; சாதியினால் தொழில் முறையில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதில்லை.
“கண்டி கண்டி எங்காதீங்க
கண்டிபேச்சு பேசாதிங்க
சாதி கெட்ட கண்டியிலே
சக்கிலியன் கங்காணி" என்ற வாய்மொழிப் பாடல் இதை மெய்ப்பிக்கும்.
எனவே தென்னிந்தியாவில் கலப்பு மணத்தைப்பற்றிய பாடலாக இது கொள்ளப்பட்டாலும் மலையக தோட்டப் புறங்களில் இந்தப் பாடல் மனங்கள் கலப்பதற்கு ஏதுவாக இருக்கின்றதென்றெண்ணுவதே பொருந்தும், கூடவே பொருந்தா உறவை தடுத்து நிறுத்தும் சீரிய பணிக்கும் அருமருந்தாக பயன்படுகின்றது என்பது ஒரு சிறப்பம்சமாகும். -
இனி கும்மிப்பாடல்களில் ஒன்று.
இலங்கை மலையகத்தில் பாடப்படுவது.

Page 29
56
“குதிரே வாரதைப் பாருங்கடி
குதிரே குனிஞ்சு வாரதைப்பாருங்கடி குதிரே மேலே நம்மையா கங்காணி கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி"
தமிழகத்துக்கிராம கும்மிப்பாடல்களில் ஒன்று
“ஒட்ட வருதா பாருங்கடி ஒட்ட
ஒசந்து வருதா பாருங்கடி ஒட்டமேல குந்தி நம்பமொதலாளிவராங்க ஒசந்த சம்பளம் கேளுங்கடி"
“ஆனவருதா பாருங்கடி ஆன அசந்து வருதா பாருங்கடி ஆனமேல குந்தி மொதலாளி வராங்க அதிக சம்பளம் கேளுங்கடி"
(நா. பா. கா. த. வா. பக்கம்-390)
இந்தப் பாடல்களில் தமிழகத்தில் பண்ணையாரைப் புகழ்ந்து பாடுபவைகளாக அமைந்துள்ளன. அத்தகு புகழ்ச்சிகளுக்கூடாகவே, அதிக சம்பளத்துக்கான வேண்டு கோள் விடுக்கப்பட்டிருப்பதையும் அந்தப் பாடல்களில் கண்டு கொள்ளலாம் என்பதை தனது நூலில் டாக்டர் ஆறு. இராமநாதன் விளக்கியுள்ளார்.20 தோட்டப்புறத்து மக்களும் சம்பளத்தைப்பற்றி பாடினாலும் அது 'ஒசந்த சம்பளம்' பற்றியோ ‘அதிக சம்பளம்” பற்றியோ அமைய வில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தோட்டப்புறங்களில் தொழிலாளர்களின் சம்பளம் பெரிய கங்காணிமார்களிடம் கொடுக்கப்படும் வழக்கமே இருந்தது துரையிடமிருந்து வாங்குகிற சில சமயங் களிலும் கூட அப்டி வாங்கிய பணத்தை ‘கங்காணி ஐயா விடம் உடனேயே சேர்ப்பித்து விட்டு தங்களுக்கு அத்தியா வசியமான வேளைகளில் கேட்டு வாங்கும் வழக்கமே

57
இருந்தது. அப்படி கேட்கும்போது கூட, கும்பிட்டுக் கேட்கும் பழக்கமேயிருந்தது என்பதை இந்தப் பாடல் தெட்டென வெளிப்படுத்துகின்றது.
ரதம், பல்லக்கு என்பவைகள் பெயரளவில் மக்கள் நினைவில் இன்னும் போற்றப்படுகின்றன. இவ்விதமே குதிரையில் செல்வதும் உயர்வானதாக-அரச மரியாதை யுடன் கருதப்பட்டு -நடைமுறை வாழ்க்கையில் இல்லாது போனாலும், நாகரிகச் சின்னங்களாகக் கருதப்பட்டு புகழ்ச்சியாகப் பாட வேண்டிய சமயங்களில் பாடல் களில் சேர்க்கப்பட்டுள்ளன.
தேயிலைத் தோட்டங்களைச் சொந்தமாக வைத் திருந்த கங்காணிகள், மோட்டார் வாகனங்களைச் சொந்தமாக வைத்திருந்த கங்காணிகள் என்று பலரைப் பற்றிக் கேள்விப்படுகிறோமே தவிர குதிரைகளைச் சொந்தமாக வைத்திருந்த கங்காணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.
குதிரைகள் வெள்ளைத் துரைமார்களின் ஏகபோக அதிகார அந்தஸ்தை நிலை நிறுத்தும் - உயர்மட்டச் சின்னமாகக் கருதப்பட்டன. இந்தப் பின்னணியில் இந்தக் கும்மிப் பாடலில் உள்ள புகழ்ச்சி மொழிகளைக் கருதுதல் பொருந்தும்.
“ஏத்தமடி பெத்துராசி
எறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பி தோட்டம்
தொடர்ந்து வாடி நடந்து போவோம்"
என்று இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத்து மக்கள் பாடுவதைப் போலவே,
LD-4

Page 30
53
“ஏத்தமடி தேவிகுளம் எறக்கமடி மூணாறு தூர வழி நம்ம தோட்டம் தொயந்து வா நடந்திடுவோம்"
w (த. மி. நா. பா.--பக்கம் 281) என்று தேயிலைத் தோட்டத்துக்கு வேலை செய்யச் செல்லும் மக்கள் பாடுவதாக அறியக் கிடக்கின்றது. அதே முறையில்
“கங்காணி கோவத்துக்கும்
காட்டு தொங்க ஏத்தத்துக்கும் நம்ம தொரை கோவத்துக்கும் நடந்திட்டாலும் குத்தமில்லை” என்று இங்குள்ளவர்கள் பாடுவதைப் போன்றே
“கங்காணி கோபத்துக்கும்
காப்பித் தொங்க ஏத்தத்துக்கும் நம்ம துரை கோபத்துக்கும் நடந்திட்டாலும் குத்தமில்லை"
(த.மி. நா. பா.-பக்கம் 281)
என்று இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் பாடியிருக் கின்றனர். சூழ்நிலைக்குத் தக்கவாறு சொற்களை மாற்றி யமைத்துத் தங்களின் கருத்துக்களை நயம்பெற வெளியிடு வதில் தொழிலாளர்களின் உள்ளத்துடிப்பு ஒரே விதத்தில் தான் செயல்பட்டிருக்கின்றது.
“கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளைப் பிரட்டெடுத்து துண்டுகளைக் கொடுத்து துரத்துராரே கங்காணி” (சி. அழகுப்பிள்ளை "மலையக நாட்டுப் பாடலிலே கங்காணி’ என்ற 'காங்கிரஸ்" கட்டுரையில்) என்ற தொடக்க வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கும்.

59
“கொண்டப் பிரம்பெடுத்துக் கூலியாளை முன்னேவிட்டு அண்டையிலே நிற்கிறாராம் அருமையுள்ள கங்காணி"
(தமி. நா. பா-பக்கம் 281) என்ற பாடலிலும் இதேவிதமாக தெரிந்த சொற்கள் தெரிந்த சூழ்நிலையில் தெறித்து விழுந்து பாடலாய் அமைகின்ற ஒருமைப்பாட்டைக் காணலாம்.
வாய்மொழிப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழக நாட்டுப் பாடல்கள் என்ற நூலின் முன்னுரையில் பின்லருமாறு கூறுகிறார் பெ. தூரன்:21
“தமிழர் வாழும் எந்த ஊரிலே இது முதலில் உருவா யிற்று? தெரியாது. இது தமிழ் மண்ணிலே, தமிழருடைய உள்ளத்துடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக் கின்றது அவ்வளவுதான் சொல்லலாம். எந்த ஊரிலும் இது இதே வடிவத்திலும் சற்று மாறிய வடிவத்தில் கூட்டி யும் குறைத்தும் பாடப்படலாம். இதயம் என்னவோ தமிழ் இதயம். அது எப்படியோ இந்தப் பாட்டின் உணர்ச்சி அலைகளை மோதும்படி உருவாக்கி விட்டது. இப்படித்தான் தமிழக நாட்டுப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் தோன்றியிருக்கின்றன."
அவர் சிலாகித்து உதாரணமாகக் காட்டுகிற பாடல்,
“ஒடுகிற தண்ணியிலே
உரச்சி விட்டேன் சந்தனத்தை, சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் நெத்தியிலே”
என்பதாகும். இதே பாடல் இலங்கையில் பாடப்படுவது
“ஒடுற தண்ணியிலே
ஒறச்சு விட்டேன் சந்தனத்தை சேர்ந்துச்சோ சேரலியோ-அந்த செவத்த புள்ள நெத்தியிலே”

Page 31
60
என்ற முறையிலாகும். அங்கு பெண்பிள்ளையின் வாய் மொழியாகக் கூறப்படும் அதே பாடல் வரிகள் இங்கு ஆண்மகனின் கூற்றாக்கப்பட்டிருக்கிறதைக் கவனிக்க லாம்.
இதை வெறுமனே பால் மயக்கம் என்று கூறி அலட் சியப்படுத்த முடியாத விதத்தில் இன்னுமொரு பாடலி லும், இந்த ஆண் பெண் வேறுபாடு, தெளிவாகப் புலப் படுத்தப்பட்டிருக்கின்றது.
பொட்டு மேலே பொட்டு வைச்சு பொட்டலிலே போற தங்கம் பொட்டலிலே பேஞ்சமழை ஒன் பொட்டுருகப் பேயலியே என்று இலங்கை மலையகப் பகுதிகளில் ஆண் பாடுவதாக அமைந்துள்ள பாடல்
பொட்டு மேலே பொட்டு வச்சு பொட்டலிலே போற சாமி பொட்டலிலே பெய்தமழை உன் பொட்டுருகப் பெய்யலையோ V*
(தமி. நா. பா பக்கம்-186)
என்றுபெண்ணொருத்திப் பாடுவதாக அமைந்துள்ளது.
இந்த வேறுபாடு இந்தியா - இலங்கை என்று வேறு பட்ட இரண்டு நாட்டின் சமுதாய அமைப்பில் பெண் களின் சுதந்திர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று எண்ணத் தூண்டுகின்றது. பொருளாதார மேம் பாட்டுக்குப் பெண்களின் உழைப்பே பிரதானமான காரணமாக விளங்கினாலும் இலங்கை மலையகத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு அடங்கியதாகவே உளளது.
வாழ்த்துவதற்கும், வாடுவதற்குமுள்ள சுதந்திரம், உள்ளத்தில் பொங்கிப்பிரவகிக்கும் சிருங்கார ரசனையைப்

6.
பாடலாக்கி மகிழ்வதில் இலங்கை மலையகப் பெண் களுக்கு இல்லையென்பதை இந்தியக் கிராமப் பெண் களுக்கு இருக்குமளவுக்கு இல்லை என்பதை, இந்த வேறுபாடு புலப்படுத்துகின்றது எனலாம்.
இந்த முடிவுக்கு மேலும் வலு சேர்க்குமாப்போல அமைந்த இன்னொரு பாடலையும் காணலாம்.
இந்தப் பாடலில் ஆண் கூற்று பெண் கூற்றாக வெளிப்பட்டிருக்கின்றது. பாடலோ வேதனையின் வெளிப் பாடாக அமைந்திருக்கின்றது.
நெத்திக்கான் ஒரத்திலே
நெடுஞ்சவுக்குப் பள்ளத்திலே
வாழைப்பழம் தின்னவெக்கு
பாழாய்க் கிடக்குதடா (நூரளை மலைச்செல்வன் எழுதிய 'தினகரன்' கட்டுரை) என்ற பாடலில் எண்ணி ஏங்குகிற இளம் பெண்ணின் நெஞ்சைக் கண்ட நாம்
கூடி இருந்த இடம் குட்டி
கும்மாளம் போட்ட இடம்
வாழைப்பழம் தின்ற இடம் குட்டி
பாழாய்க் கிடக்குதடி &
(தமி. நா. பா.-பக்கம் 196) என்ற பாடலில்-தமிழகத்துப் பாடலில், ஆணின் இதயத்தைக் காணுகிறோம்.
三塾5。 வேதனை விம்மல்கள்ை, வேகும் உள்ளங்களை பெண்களுக்கென்றே உரித்தாக்கும் மலையக சமூக நிலைப்பாடு இந்தப் பாடல்களில் துலாப்பரமாக வெளிப் படுகிறது.

Page 32
9. மயக்கும் இன்பம்
சிறுவர் சிறுமியர் ஒருவர் தோளை ஒருவராகப் பின் நின்று பிடித்துக் கொள்வதன் மூலம் ஒரு நீண்ட வரிசை அமைத்துக் கொண்டு பாடுகின்ற பாடல் இது.
“சிக்கு புக்கு -
நீலகிரி தொப்பி தோட்டம்
நாங்க வந்த
கப்பலில மிச்ச கூட்டம்"
என்ற பாடல் தோட்டப்புறத்துச் சிறுவர்கள் - லயத்து வீடுகளில் அடுத்தடுத்து இருக்கின்ற சிறுவர்கள் நாள் தோறும் பாடி வந்த பாடலிது.
வீட்டில் வெறுமனேப் பொழுதைக் கழிக்க முடியா மலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாமலும் இருக்கின்ற சிறுவர் சிறுமியர் வயது வித்தியாசமின்றி வரிசையில் சேர்ந்து பாடுவதும், அந்த வரிசை நீண்டு கிடக்கும் லயத்தைச் சுற்றி சுற்றி வருவதும் முன்பு நாள் தோறும் நடக்குமொரு நிகழ்ச்சியாகும் லயக்காம்பராக் கள் பத்து, பன்னிரெண்டு ஒரே வரிசையில் ஒரு பொதுக் கூரையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும்போது ஒரு லயத்து முன்றல் நூற்றிருபது அடிவரை நீண்டிருக்கும்.
இதுபோன்ற இடத்தில் சிறுவர் சிறுமியர் இருபது இருபத்தைந்து பேர் வரிசையாக ஊ.ஊ.என்று ரயிலைப் போன்று ஒலியெழுப்பி.சிக்.புக்...சிக். புக் என்று ஒசைப் பண்ணிக் கொண்டு லயத்தைச் சுற்றி சுற்றி வருவதை மனக்கண்ணால் பார்ப்பவர்களுக்குக்

63
கூட மேற்குறித்த பாடலின் பொருள் விளங்க ஆரம்பித் திருக்கும்.
நீலகிரி என்பது நானுஒயாவையும், தொப்பி தோட்டம் என்பது அட்டனையும் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, இந்த இரண்டும் மலையகத்தின் இரு பெரும் புகையிரத நிலையங்கள், புகையிரதத்தின் மூலம் மலையகத் தோட்டங்களுக்கு வரும் போது இந்த இரண்டு நிலையங்களில் ஒன்றில்தான் இறங்க வேண்டியிருந்தது என்பதையும் புரிந்து கொண் டால் இந்தப் பாடலின் முழு அர்த்தமுமே விளங்கி விடும்.
தென்னிந்தியாவிலிருந்து கப்பலில் வந்ததையும் கோச் ஏறி பிரயாணம் செய்ததையும் தினந்தோறும் நினைத்து நினைத்து, அந்த நினைவு சிறார்களின் பொழுதுபோக்கு விளையாட்டிலும் புகுந்து விட இந்தப் பாடல்கள் வழி சமைத்துள்ளன. நீலகிரி எனப்பட்ட நானுஓயாவுக்கும் மேலே நுவரெலியா கந்தப்பளை வரை இந்த இரயில் சேவை நீடிக்கப்பட்டது. ஆனால் நுவரெலியாவின் இயற்கை அழகையும், சுகாதார சுவாத் தியத்தையும் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர் வெகு குறுகியகால இடைவெளி யிலேயே நானுஒயாவுக்கு மேலே நீடித்த கந்தப்பளை இரயில் சேவையை நிறுத்தி விட்டனர்.
தண்டவாளங்களையும், கைவிடப்பட்ட ‘கோச் பெட்டிகளையும் இந்த நகரங்களில் இன்னும் காணலாம். நானுஒயாவிலிருந்து பதுளை நோக்கி நீடிக்கப்பட்ட இரயில் சேவை தொடர்ந்து நடக்கின்றது.
மலைநாட்டு வாய்மொழிப் பாடல்களில் பொதிந்து கிடக்கின்ற இதுபோன்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு அவர்களைப் பற்றிய வரலாற்று அறிவும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

Page 33
64
இந்த வாய்மொழிப் பாடல்கள் இதற்கு மாத்திரம்
தான் உதவும் என்று நினைப்பது தவறு. “மழலை இன்பம் போன்றதொரு மயக்கும் இன்பம் கமழ்வதே இந்தப் பாடல்களின் சிறப்பு" என்று கூறுகிறார் டாக்டர் சு. சண்முகசுந்தரம்? அப்படி ஓர் இன்பத்தைத் தோற்று விக்கும்போதே ஒரு சமுதாயத்தினரின் பண்பாட்டுணர்வு களுக்கு உயிர் கொடுக்கும் பழக்க வழக்கங்களை யும் இந்தப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
மலைநாட்டு வாய்மொழிப் பாடல்களில் பெண்களுக் கும் சேலை கொடுப்பதைப் பற்றி நிறையவே பேசப்படு கின்றன. சீக்கில்லாமல் வேலை செய்பவர்களுக்கு சேலை கொடுப்பது, திருவிழாக்களின்போது தொழில் புரிபவர் களாகத் தனக்கு கீழிருப்பவர்களில் ஆண்களுக்கு வேட்டி யும் பெண்களுக்குச் சேலையும் என்று கங்காணிமார்கள் பரிசு கொடுப்பது என்பவைப் பொதுவாக நடைபெறு கிற நிகழ்ச்சியாகும்.
"எடுத்துக் கொடுப்பாராம் நம்மையா கங்காணி
இழுத்து மாராப்பு போடச்சொல்லி” என்று தோட்டத்துப் பெண்கள் ஆனந்த பண்ணே பாடியிருக்கின்றனர்.
“அச்சடி சீலை கட்டி
அடுத்த தோட்டம் போற குட்டி
அச்சடி சீலையிலே
அடிச்சு விட்டேன் மேவிலாசம்”
என்று ஆண்கள் குதூகலத்தில் கூவியிருக்கின்றார்கள்.
உண்மையில், பரிசுப் பொருளாக சேலை கொடுப் பதும், அதை ஒரு பெண் வாங்குவதும் அவளது ஒழுக்கத்தைப் பற்றிய கணிப்புக்கு வழிவகுக்கும் அளவுக்கு இது பல்கிப்பெருகியது. இதோ ஒரு பாடல். ஆண் : வட்டவட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டையிலே

65
ஆர்கொடுத்த சாயச்சீலை ஆலவட்டம் போடுதடி?
பெண் : ஆரும் குடுக்கவில்லே
அவுசாரி போகவில்லே கையாலே பாடுபட்டு கட்டி.ே) ன் சாயச்சீலை
(LD. gid5nT. LD. LurT )
ஆங்கில நாட்டில் முயல் தோலையும், ஜப்பானில் பொம்மைகளையும், சைனாவில் புல்லாங்குழலையும், அமெரிக்காவில் மோதிரத்தையும் பரிசுப் பொருட்களாககுழந்தைகளுக்குத் தாயர் தரும் பரிசுப் பொருட்களாகவெளிப்படுத்தும் பாடல்கள் உண்டு என்கின்றார் டாக்டர் சு சண்முகசுந்தரம்28 தோட்டத்துப் பெண் களுக்குச் சேலை பரிசாகக் கொடுப்பதை விளக்கும் பாடல்களையும் நிறையவே காணலாம். உண்மையில் காதலிக்கு சேலை அன்பளிப்பாகக் கொடுப்பது தோட்டப் பாடல்களில் காணக்கிடக்கின்றது எனலாம். தோல் தொப்பி அன்பளிப்பாக-காதல் பரிசாகக் கொடுப்பது அமெரிக்க நாடோடிப் பாடல்களிலும், ஆபரணங்களை அன்பளிப்பாகக் கொடுப்பது ஆங்கில நாடோடிப் பாடல் களிலும் காணக்கிடைப்பதைப் போல காதலிக்கு சேலை அன்பளிப்பாக் கொடுக்கும் பாங்கில் பிற்காலத்தைய பாடல்கள் அதிகமாக உருவாகத் தொடங்கின எனலாம்.

Page 34
10. உணர்வுகளுக்கு வாய்க்கால்
மலையக வாய்மொழிப் பாடல்கள் பலவற்றின் வேர் தென்னிந்தியக் கிராமப் பாடல்களில் காணக்கிடைக்கின்ற தென்பதால் - எத்தனை ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னரும், சுரை விதைத்தால் சுரைதான் முளைக்கும் என்ற நியதியின்படி இலங்கை மலையகத் தோட்டப்புறப் பாடல்களில் இந்தியக் கிராமத்து நாட்டுப்புறப் பாடல் , களோடு ஒப்புவமைக் காணக்கூடியதாயிருக்கின்றது.
இலங்கைக்கு தென்னிந்திய தமிழர்கள் வர ஆரம்பித்த காலத்தில் (1824), தேயிலைப் பயிரிடப்பட்டபோது குடும்பத்தோடு வர ஆரம்பித்தகாலத்தில் (1858), ரயில் பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட காலத்தில் (1880). இந்தியாவுக்குப் போய்வருவதில் சிரமம் இல்லாத காலத்தில் (1620) இந்தியப்பயணம் சிரமமான ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் (1950) இலங்கையராக வாழத் தீர்மானம் கொண்டகாலத்தில் (1964) இந்தியாவுக்குப் போய்விடலாமா என்ற ஊசலாடும் மனம் உருவாகத் தொடங்கிய காலத்தில் (1983) என்றெல்லாம் இந்த மக்க ளின் உணர்ச்சிகள் வெவ்வேறான காலப்பகுதியில் வெளிப் பட்டு வாய்மொழிப் பாடல்களாக உருவெடுத்திருக் கின்றன.
நாட்டுப்புறப் பாடல்கள் அந்தந்த நாட்டின் தனி உடைமை என்பார் அறிஞர் பெ. தூரன்.24 இன்றைய காலப் பகுதியில் இது முற்றும் சரியான கருத்தாக அமை யாது. உண்மையில், ஒரு மொழிப் பேசுவோரின் தனி யுடைமையாகவே இப் பாடல்கள் அமைகின்றன என்றே
கருதுதல் தகும்.

67
நாடு விட்டு நாடுபோய் குடியேறுகிற வேளையிலும் ஒருமொழி பேசும் மக்கள் தங்களின் தனி உடைமையான இந்தப் பாடல்களைப் புதிய சூழலில் உயிர்ப்பெறச் செய்து விடுகின்றார்கள்.
*1946க்கு முன்பு வரை எழுதப்பட்டிருக்கும் இலக்கியங்களை நமது நாட்டு இலக்கியமென்று ஏற்க முடியாதென்றாலும் காற்றில் கலந்து, நீரில் நனைந்து நம் செவிகளில் பாய்கின்ற நாட்டுப்புறப் பாடல்களை நம் நாட்டு இலக்கியம் அல்ல என்று ஒதுக்கிவிடமுடியாது” என்று மலேசிய இலக்கியம்பற்றி பேசுபவர்கள் கூறுவது இதனால்தான்2
"தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர் களாக வந்தவர்களில் தேர்ந்த புலவர்களோ, செஞ்சொற் பாவலர்களோ இருந்ததில்லை என்றாலும் கல்லாமல் கவிபாடும்திறன் கொண்டிருந்த தோட்டத் தமிழர்களின் நாட்டுப்புறப்பாடல்களே மலேசிய தமிழ் இலக்கியத்தின் மூத்த கலைச் செல்வங்களாக விளங்குகின்றன என்று சொல்வது தவறாகாது” என்று கூறுகிறார் முரசு நெடுமாறன்.26
மலேசிய நாட்டுப் பாடல்களைத் திரட்டும் “முயற்சி யிலும், ஆய்வு முயற்சியிலும் ஈடுபட்ட காலஞ்சென்ற டாக்டர் இரா. தண்டாயுதம்” மலேசியத் தமிழ் நாட்டுப் பாடல்கள் சமுதாயத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத் தும் வாயில்களாக அமைந்துள்ளன" என்று கூறுவதும் இதனால்தான்.
இலங்கை மலையகத்து வாய்மொழிப் பாடல்களைப் பற்றியும் இதேவித கருத்துக் கெள்வதற்கே இடமுண்டு.
கங்காணி என்பது ஆரம்ப காலத்தில் தொழிலைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கபட்ட பெயராகும், மனம் விட்டுச் சிரித்து மகிழ்வதற்கென்று வேலை

Page 35
68
நேரத்தில் தொழில் புரியும் உப்பளத்து வேலைக்காரி பாடும் பாடலாக அமைந்த பாடல் இது:
கங்காணி கங்காணி கருத்தச் சட்டை கங்காணி நாலு ஆளு வரலேன்னா
நக்கிப் போவான் கங்காணி
(த. நா. பா-499)
கடல் கடந்த தேசங்களுக்கு மக்களை கூட்டிச் சென்று குடியேற்றுவதற்கு உதவியவர்கள் கங்காணி என்றே அழைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் அவர்களைப் பற்றிய பாடல்கள் போற்றியும் புகழ்ச்சியும் அமைந்திருந் தாலும் நாளாவட்டத்தில்-அவர்களை வெறுத்தொதுக் கும் பாடலாக-அவர்கள் தம்மை ஏமாற்றி விட்டதை உணர்ந்து பாடிய பாடலாக அமையத் தொடங்கின.
“கங்கானி என்பதற்கு கடல் கடந்த நாடுகளில் கருப்பு அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கேவலமான முறை யில் ஆள் விழுங்கும் பிசாசுகளுக்கு ஒப்பாகவே இருந்தது
என்பார் கோ.நடேசய்யர் 27
*கங்காணின்னா கங்காணி
கறுப்புச் சட்டைக் கங்காணி சஞ்சியிலே கூட்டி வந்து சாகடிக்கும் கங்காணி
சீனிக்குக் காக்கா போட்டுச்
சீராக வாழலான்னு
சிரிக்கச் சிரிக்கப் பேசிவந்து சீரழிக்கும் கங்காணி
ஆவடியில் கிடைமடக்கி அஞ்சடியில் நிக்கவச்சி

69
பெனாங்குச் சீமையிலே பெரட்டுக்களம் போட்டவனாம்"
(முரசு நெடுமாறன் எழுதிய-மலேசியத் தமிழ்க் கவிதை வரலாறு' என்ற கட்டுரை) என்பது மலேசியவாய்மொழிப் .(6-LחJ_ו
*கங்காணி கங்காணி
உங்காணி வெங்காணி"
என்று தனது தந்தை அல்லாப்பிச்சையைப் பார்த்து அருள் வாக்கி அபிதுல் காதிர்ப்புலவர் பாடியதும்
"கொங்காணி போட்டு பழக்கமில்லை
கொழுந்தெடுத்தும் பழக்கமில்லை சில்லறை கங்காணி சேவுகமே எங்கள சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி” - என்று தோட்டத் தொழிலாளர்கள் கெஞ்சி நின்றதும் இலங்கை மலையக வாய்மொழிப் பாடல்களில் சரித்திர மாக சாட்சி பகர்கின்றன.
தமிழகத்து கிராமத்திலிருக்கும் போது
"சிரிக்க நல்ல பல்வரிசை மச்சான்
செந்தூரப் பொட்டழகன் முறுக்கு மீசை படர்ந்திருக்க அவர் முந்திவிட்டார் கப்பலிலே"
(டி. எஸ். ராஜ" எழுதிய கண்டிக்குப் போன மச்சான் என்ற கட்டுரை)
மலேசியத் தோட்டத்திலே
“பாலுமரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறிவந்தேன் நாப்பத்தைஞ்சி காசைப்போட்டு நட்டெலும்பை முறிக்கிறானே

Page 36
70
முப்பத்தைஞ்சி காசைப்போட்டு மூட்டெலும்பை முறிக்கிறானே"
(முரசு நெடுமாறன்)
இலங்கை மலையகத்திலே
“வாடையடிக்குதடி
வாடகாத்து வீசுதடி
சென்னல் மணக்குதடி-நம்ம
சேர்ந்து வந்தகப்பலிலே”
(LD. spiT. LD. Luit)
என்ற வாய்மொழிப் பாடல்களில் வாழ்க்கையில் நேரும் மாற்றங்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது. இலங்கை மலையகத்து வாய்மொழிப் பாடல்களில் தோட்டப்புற மக்களின் உள்ளம் தெரிகிறது; விசுவாசத்தோடும், கீழ்ப்படிதலோடும் துன்பங்களையும் துயரங்களையும் சகித்துக்கொள்ள அவர்கள் பழக ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதற்கு அவைகள் சான்று பகர்கின்றன. எதிர்த்துப்பேச விரும்பாது துன்பங்களை மெளனத்தோடு சகித்துக் கொண்டவர்களாக இந்த மக்களைப் பற்றி சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னன்? என்ற வரலாற்றாசிரியர் எழுதிச் சென்றது எந்த அளவுக்கு உண்மைஎன்பதை இந்தப் பாடல்கள் வெளிப் படுத்துகின்றன.
நூற்றியெழுபத்திரெண்டு வருடங்களாக நீண்டு வந்த அவல வாழ்க்கையின்போது-காற்று நுழையாத கருங்கல் லாக அவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கவில்லை. தமக் கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள அவர்கள் முயன்றார்கள்.
அந்த முயற்சியில் அவர்களது உணர்வுகளுக்கு வாய்க்கால் அமைத்துக் கொடுத்தவை இந்த வாய்மொழிப் பாடல்களே.

7.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் அட்வான்ஸ் கொடுப்பதும், அஞ்சு ராத்தல் கொழுந்துக்கு, அரை பேர் போடுவதும் வாழ்க்கை நெறியாக வளர்ந்து வந்திருப்பது தெரிகிறது; ஆண்கள் மிஞ்சிபோடுவதும், கடுக்கன் போடுவதும், அருணாகொடி அணிவதும். பெண்கள் ஈய வளையல் போட்டு, தண்டட்டி அணிவதும், தக்காளி சாறில் பொட்டுவைப்பதும் தெரிய, வருகிறது; வெள்ளைத் துரைமார்கள் ஜே.பியாக இருந்த தும் குதிரையேறித் தொழில் பார்த்ததும் மனக்கண்முன் விரியத் தொடங்குகின்றது.
மலையகத்தில் ஆயிரக்கணக்கான வாய்மொழிப் பாடல்களைச் சேகரிக்க முடியும். உலகின் பல பாகங்களி லும், தமிழகத்திலும்கூட, பயிற்சி பெற்றவர்கள் இவை கிளைச் சேகரிக்கவும் இயற்கைச் சூழலில் பாடப்படும் பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்தும் வருகின்றனர், இவைகள் பண்பாட்டின் ஆய்வுத்துறை யினருக்கு பலவித ஆதாரங்களைக் கொடுத்துதவும் கருவூல மாக விளங்குகின்றன.
மலையக உழைப்பாளர்களின் வரலாற்றைக் கூறும் வாய்மொழிப்பாடல்கள் பலவிதங்களிலும் பேணப் படுதலவசியம். நூற்றியெழுபது வருடங்களுக்கும் மேலான கொடுமை மிகுந்த வாழ்வுக்கெதிராக இரத்தக் களரி உண்டு பண்னும் சம்பவங்களைச் செய்யவில்லை என்பதனால் அந்த மக்கள் மனிதஉணர்வுகளுக்கு மதிப்புக் கொடாது வாழ்ந்தனரென்று ஆகிவிடாது.
அவர்களின் உணர்வுகள் பாடல்களாக Oெப்பட்டிருக். கின்றன.
அது அந்த மக்களின் ஆத்மாவாகும். அதை புரிந்து கொள்ள பக்குவம் தேவை.

Page 37
11. அவலக் குரல்
வங்காளம் கொங்கு மலையாளம் டில்லியாழ்ப்பாணம் கண்டி கொழும்புசீமை மங்களம் போயி நொடி நொடுச்சி வந்து நிக்குமாம் தொண்டிகப்ப
தென்னிந்தியாவிலிருந்தும் ‘தொண்டி துறைமுகத்தி லிருந்தும் கப்பல் மூலமாக இலங்கைக்குத் தொழிலாளர் கள்-தோட்டத் தொழிலாளர்கள் கொண்டுவரபட்டனர். அவர்கள் பாடிய பாடலே இது. கதைப்பாட்டாக கொள்ளத்தக்கது. தென்னிந்தியாவின் பாம்பன், தொண்டி, அம்மாபட்டணம் என்பவைகளோடு கொழும்பு துறைமுகத்துக்கு இவ்விதம் இணைப்பு ஏற்பட்டது 1890ஆம் ஆண்டிலாகும்.?? இந்த இணைப்பை ஏற்படுத்திய கப்பலைதான் தொண்டிகப்ப என்கின்றார்கள்.
அந்தக் கப்பலில் ஏறி இருப்பவர்களில் பெரும்பாலா னோர் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று தேயிலைக்கடி யில் விளையும் "தேங்காயும் மாசியும் உண்டு நிம்மதியான வாழ்வு வாழலாம் என்று கனவு காண்பவர்கள். ஊர் களின் பெயர்கள் ஒழுங்காக இல்லைதான். ஆனால், அந்த ஒழுங்கின்மையே பிரயாண நொடி நொடிப்பைக் காட்டுகின்றது எனலாம்.
தொண்டி இருகரை பொங்கையிலே ரெண்டு சோடிகள் மட்டங்கு நிக்கையிலே மேகங்கள் ஒடி பொழுதைமறைக்க மெல்லியரே கொஞ்சம் தள்ளிநட

73
கப்பலில் ஏறுவதற்காக காத்திருந்தவர்கள் அவசர அவசரமாக ஏறுகின்றனர். ஏனென்றால் தொண்டி வழியாக வருகின்ற கப்பல் கிழமைக்கு ஒரு நாளே வரும். எனவே, ஏறுவதில் பின்தங்கிபோனவர்களை-பெண்களை விரைவாக ஏறச்சொல்கின்றார்கள்.
இந்தப் பாடல் பெண்கள் பாடுவதாக-தம்மைப்பற்றி தமக்குள்ளாகவே பாடிக்கொள்வதாக அமைந்துள்ளது. கப்பலில் ஏறி இருப்பவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். கொழும்பு போய்தான் கரை இறங்கவேண் டும். கப்பலோ நீராவி கப்பல். எப்போது போய்சேரும்? அதுவரை என்னச்செய்வது?
தங்களை அழைத்துப்போகும் கங்காணியைப்பற்றி பாட ஆரம்பித்து விடுகின்றார்கள்.
உலக்கை குத்தும்போது ‘அகவல்" பாட்டும், *வள்ளை'ப்பாட்டும் பாடி, உளக்கிடக்கையை வெளிக் கொணரும் மங்கைகளல்லவா? பின் கேட்க வேண்டுமா பாடுவதற்கு?
கங்காணி ஐயாவே வாருமையா ஒரு காரியம் சொல்லுறேன் கேளுமையா சில்லறை கங்காணி சேவுகமே நீங்க சீமைக்குப் போய்வாங்க அக்கறையா என்று ஒரு பெண் பாட, இன்னொரு பெண் பதில் பாட்டுப்பாட ஆரம்பித்து விடுகின்றாள்.
கங்காணி ஐயாவே பயப்படாத கப்பல் கடல்கர வந்து சேரும் ஆளுங்க அன்புக இல்லாட்டி தொரை வட்டிகள் வாசிகள் போட்டெடுப்பார்
AA-5

Page 38
74
கங்காணி கடல் தாண்டி ஆள்சேர்த்து வருகின்றான். வரும்வழியில் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி வருமாம். அப்படி வரா திருந்து அதன் பயனாகத் தொழில் செய்வதற்கு ஆட்கள் இல்லாது போய்விட்டால் பணத்தை வாரிக் கொட்டி இறைத்தேனும் ஆட்களையும் அவர்களின் அன்பையும் பெறுவதற்குத் துரை தயாராக இருக்கின்றாராம்.
ஆள்கட்டி வர முனைந்த கங்காணி சும்மாவா போனார்? பின் எப்படி? இதோ.
வெள்ளைச் சட்டை ஒன்று போட்டுக் கொண்டார் வெள்ளைக் குஞ்சமொன்று வைத்துக் கொண்டார் துள்ளுரார் சீமைக்கு ஆள் கட்டிப் போவதற்கு சோக்கைப்பாரடி தோழிப் பெண்கmள் அழகாக உடுத்திக் கொண்டால் மாத்திரம்
Glunt LDIT? அரை சார்சு துண்டையும் வாங்கிகொண்டார். அவர் தகரத் துண்டையும் சேப்பில் வைத்தார் கடல் தாண்டி சீமைப் போவதற்கு காலத்தைப் பாருக பெண்டுகளா
தொண்டித் துறைமுகத்திலேறி கொழும்பு துறை முகத்தில் கரை சேர்பவர்கள் ராகம கேம்ப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தே தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவ்விதம் செல்லும் முன்னர் ஏழு நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுத் தொற்றுநோய் பரீட்சைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்த வழியாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வர்கள் 1890ஆம் ஆண்டில் ஏற்பட்ட தேயிலைச் செழிப்ப தால் புதிது புதிதாக திறக்கப்பட்ட களனிவெளி, களுத்து துறைப் பகுதியிலுள்ள தோட்டங்களுக்கே கொண்டு செல்லப்பட்டார்கள்.

75
இந்த வழியாக ஆட்களைக் கொண்டு வரும் முயற்சி யில் இதற்கான பிரயாணச் செலவில் சலுகை பெற்றுத் தருவதில் தோட்டத்துரைமார்களே முன்னின்றனர். அரை சார்சு துண்டு என்பது இந்த சலுகையைத்தான் சரி, குறிப்பாக எந்தத் தோட்டத்துக்கு இவர்கள் பயண மாகிக் கொண்டிருக்கின்றார்கள்?
அதற்குதான் தகரத் துண்டு வேண்டுமென்கின்றது. டின்டிக்கெட்" என்று இந்தப் பாடல் குறிக்கின்றது.
தகரத்துண்டில் இரண்டு இலக்கங்களும் ஒர் ஆங்கில எழுத்தும் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஒர் இலக்கம் கொடுக் கப்பட்டிருந்த காரணத்தால் ஒரு தகரத்துண்டு என்பது *வி. பி. பி." பார்சலைப்போல உரியவரிடத்தில் தொழி லாளியை ஒப்படைத்து விடும் தன்மை கொண்டிருந்தது என்று ‘டின்டிக்கெட்' முறைப் புகழப்பட்டது.80 அதாவது இனி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தோட்டத்துக்குப் போய் தொழில் செய்வதிலிருந்து தப்ப {ւpւգ-ԱIIT5].
இந்தமுறை 1902இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் முதல் சேலம் ஜில்லா வரைக்கும் கும்பிட்டழைத்தாராம் பேன்சு காசுக்கு
தென்னிந்தியாவில் தஞ்சாவூர் தொட்டு சேலம் வரை பரந்து விரிந்து கிடந்த நிலத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு ஆட்களை அழைத்தார். அதுவும் எப்படி? கும்பிட்டு அழைத்தாராம்.
ஏனிந்த விநயம்? ஏனிந்த பணிவு? எல்லாம் சுயநலமும் பணம் தேடும் நோக்கத்தில்தான்.
அவர் தன்னோடு அழைத்துச் செல்லும் அத்தனை பேரும் தோட்டத்தில் அவர் 'கணக்கில்" பேப் ,யப் படுவார்கள். அவ்விதம் பேர் பதியப்படும் ஒவ்வொரு

Page 39
76
தொழிலாளிக்கும் தொழிலுக்கு வரும் ஒவ்வொரு நாளைக்கும் மூன்று சதவீதம் என்று கணக்கிடப்பட்டு அந்தப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும். அதைத் தான் பேன்சு காசு என்று இந்தப் பாடல் குறிப்பிடு கின்றது. -
பின் ஏன் அவர் கும்பிட மாட்டார்?
இந்த வழக்கம் பெரிய கங்காணி முறை ஒழிக்கப்பட்ட தோடு வழக்கொழிந்தது.
அரசியல்வாதிகள் எவ்வளவு நளினமாகப் பேசி இன்று வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனரோ அதேவிதத்தில் கங்காணிகள் நளினமாகப் பேசி ஆள் சேர்த்தனர். அந்த நளினமான பேச்சில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் குள்ள நரி கொம்பைப் போன்றது.
குள்ள நரி கொம்பை வைத்துக்கொண்டு
இந்தியாவுக்கும் தென்கிழக்கே
இலங்கை என்றதோர் தேசம் Ω என்று அவர் ஏமாற்றுப் பேச்சுக்கு ஆரம்ப அடிகள் எடுத்ததுதான் தாமதம்.
காற்று மழைகள் அதிகமுண்டாம் அங்கே
ஏற்ற இறக்கங்கள் மெத்தவுண்டாம் என்று குறுக்கே பாடுகிறாள், குறும்பே உருவான பெண் ணொருத்தி, அவளுக்கு இலங்கைக் தீவைப் பற்றிய அறிவிருக்கின்றது.
காற்று மழைகள் அதிகமில்லை
ஏற்ற இறக்கங்கள் மெத்தஇல்லை என்று பதில் கூறுவதோடு மட்டுமா அமைந்தார்?
வாழைப்பழத்திலே வீடு மெழுகிய
வாசலுக்குப் பாக்கு வெற்றிலையாம்
இப்படிப்பட்ட இலங்கைச் சீமையை
கொடுமை சொல்லவும் காரணமாம்

77
அந்தப் பெண் சொன்னதை மறுத்ததோடு மாத்திர மல்ல. அதை மறைத்து விடவும் எத்தனை அழகாகப் கதை பின்னுகிறார் என்பதை இந்தப் பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
வாழைப்பழத்தில் வீடு மெழுகவும் வாசல் நிறைய வெற்றிலையால் அழகு பண்ணவும் ஏழைகளுக்கு ஆசை காட்டி அழைத்து வரப்பட்ட மக்கள் கப்பலில் ஏற்றப் பட்டதன் பின்னர் எப்படி இருக்கின்றனர்?
பட்டியில் மாடு அடைத்தது போல அவர் பட்டபாடு இரவு முழுவதும் காலை விடியவே கரை வந்து சேரவே ராகமத் துறையில் வந்திறங்கி பார்த்தார்கள் நெஞ்சை தட்டியும் கொட்டியும் படிச்ச வித்தையெல்லாம் கூட்டி ஏத்தினார் ஆளை கோச்சியில் போவதற்கு ஏழுதாள் காவல் முடிந்த பின்பு
புகையிரத வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டால் மனம் சும்மாவா இருக்கும்? யன்னல் வழியாக வழி நெடுக வியாபித்துக் கிடக்கும் காட்சிகளை வேடிக்கைப் பார்க்கத் தூண்டுகிறது.
தண்டவாளங்களும், அதன் நெளிவு சுளிவுகளும், கள்ளர் கூடாரம் போன்ற சுரங்கங்களும், புகை வண்டிச் செல்கையில் எழுப்பும் ஒலியும் மனத்தைக் கவரத் தக்கன. ஆனால், இவைகளையெல்லாம் கவனிக்காது இலங்கை மலைநாட்டைப் பற்றிய இன்ப கற்பனையில் தங்களுக் குள் ஏதேதோ கதைத்துக் கொண்டு வருகின்றனர்.
இயற்கைக் காட்சிகளில் மனம் லயித்திருந்த ஒருத்திக்கு இது பிடிக்கவில்லை. பாடத் தொடங்குகிறாள்.
கோச்சியும் பாதையும் கோணலும் மாணலும் குறுக்கே பொந்துகள் கூடாரமாம்

Page 40
ry
8
வீச் வீச்சென்று சத்தங்கள் போடவே வேடிக்கை என்னடி தோழிப்பெண்காள்
என்று வினவுகின்றாள். அதற்கான விடை அவள் எதிர் பார்க்காத இடத்திலிருந்து வருகிறது.
வேடிக்கை பார்க்கலாம் தேயிலைக் காட்டிலே விட்டு இறங்கடி டேசனிலே
வேடிக்கைப் பார்ப்பதை தேயிலைத் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். இறங்க வேண்டிய இடம் வந்தாகி விட்டது இறங்குங்கள் என்று கட்டளையிடு கிறார் கங்காணி. வானம் முட்ட எழுந்து நிற்கும் மலை களில் வருந்தி உழைப்பதற்கும் மழையில் நனைந்து உழைப்பதற்கும் உள்ளூர் சிங்களவர்கள் முன்வராத காரணத்தால் கடல் கடந்த அயல் நாட்டிலிருந்து ஆட்களைக் கொண்டு வருவது இலகுவான தொழிலா? அதுவும் ஒரு காலத்தில் கடலைக் கட்டியாண்ட பரம்பரையில் வந்தவர்களை தேயிலைக்கடியில் தேங்கா யும் மாசியும் விளைகிறது என்பதை நம்ப வைத்துக்கூட்டி வருவது அத்தனை இலகுவானதா?
இனி அவர்களால் என்ன பண்ண முடியும்? இனி மோசமில்லையென்று கங்காணியார்பாடு முன்ன விட்டோடினார் தோட்டம்வரை. தோட்டத்துக்குள் நுழைந்ததும் வாருங்கள் வாருங்கள் நேசர்களே நீங்க வந்து இருங்களே தோழர்களே
கங்காணி இலேசுபட்டவரா? மாக்கியவல்லியையும், சாணக்கியனையும் போன்ற இராஜதந்திரிகளைப் போலல்லவா வார்த்தைகளை இடமறிந்து பிரயோகிக் கின்றான். தாய்நாடு என்பதைவிட தந்தையர் நாடு என்று சொல்வதைத்தான் விமர்சன முறையில் சிந்தித்த சரித்திர வீரர்கள் விரும்பினர்.

79
ஏனெனில், தந்தையர் நாடு எனும்போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
ஆள் சேர்த்து வரும் கங்காணியும் அதை அறிந்து வைத்திருந்தார் போலும், அதனால்தான் மலையேறி, மழையில் நனைந்து, வெய்யிலில் வாடி, பனியில் நடுங்கி, பசியில் வதங்கி, ஆண்களைப்போல பெண்களும் தொழில் செய்ய வேண்டும் என்பதை தோழர்களே, நேசர்களே, என்ற ஆண்பால் விளித்தொடர்களால் சூசகமாகக் கோடி காட்டுகிறார். இடையில், தோட்டம் வருவதற்கு முன்ன தாகச் சும்மாவா இருந்தார்?
சோத்துக்கடையில சாதம் சாப்பிட
துட்டுக் கொடுத்தாரு தந்திரமாய்
அன்னாசி காயோடு தென்னங் குரும்பைகள்
அவல் கடலை பொரி உருண்டை
கொண்டைக்குப் பூவு கண்டாங்கி சேலை
குலுங்கி நடக்க வளையல் தந்தார்
தண்டைக் கொலுசுகள் கண்டவர் மெச்சிட
அருமை வெள்ளிகள் வாங்கி போட்டார்.
அதுமட்டுமா?
தோட்டம் வருகின்ற பாதையிலே, கொஞ்சம்
தோசை பலகாரம் வாங்கித் தந்தார்
இவ்வாறு
போட்டு நடாத்தியே
தோட்டம் வர அங்கு
பொழுது விடியலே
காத்து நின்றார்.
களப்பலிக்கு வந்து நிற்கும் ஆட்டுக்கடாவுக்கு பூசை யும், மணியும் புரியவா செய்யும்?
DDI--------- 961. . . . . . 26. . . . . . 26I. . . . . . கதிரொளி படரும் காலை வேளை. ஆலய மணியின் ஒசையையும் பூசை சங்கின் ஒலியையும் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது :

Page 41
80
ஆலைச்சங்கின் ஒலி என்பது தெரியாதுதான். அதனால் தான்
ஆத்தாமார்களே சேதி என்ன இங்க
ஆருக்கு மங்கள காரியங்க
தாத்தார் கோயில் பூசையதோ இங்கே
சங்கதி ஒண்ணும் தெரியலியே என்று பாடுகின்றார்கள். பாடலைக் கேட்டு விட்டார் கங்காணியார்.
ஊ ஊவென்று சத்தமொன்று
உரமாய் கேட்குதா ஒரு புறத்தில்
சங்கதி கேட்டாயோ இளமயிலே
தாளங்கள் கோலங்கள்
தப்பு முழக்கங்கள்
இங்கிலீஷ்காரர்
வேலைக்கு அழைக்கின்ற
இங்கிதமான குரலோசை
என்று சொல்லி முடிக்கின்றாரோ இல்லையோ,
ஒசையைக் கேட்டு நீர் வேலைக்குப் போகாட்டி ஒட்டாண்டி ஆவாயே உண்மையாக
என்று இதுவரை கேட்காதவொரு கர்ண கடூரமான குரலொலி கேட்கிறது.
யார் அப்படிச் சொல்வது? தெரிய வேண்டாமா? சப்பாத்துத் தொப்பியும் வைத்துக் கொண்டார் அவர் சட்டையை நீளமாய் தைத்துக் கொண்டார் கத்துறார் என்னவோ கண்டவர் போலவே கண்டாக்கு என்று பெருங்கணக்கர் இந்தக் குரலைக் கேட்டதும் அஞ்சி நடுங்கினர் அந்தப் பெண்கள் கூட்டத்தினர். இப்படி இடையில் ஒர் உத்தி யோகத்தர் இருப்பதையே இதுவரை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

8.
தங்களை இதுவரை வழி நடாத்திய கங்காணி என்பவர் கண்டக்டரை விடப் பெரியவரா? சிறியவரா? என்பதை அவர்களால் தீர்மானித்துக் கொள்ள முடிய வில்லை.
கொங்காணி போட்டும் பழக்கமில்ல நாங்க கொழுந்தெடுத்தும் பழக்கமில்ல சில்லறைக் கங்காணி சேவுகமே எங்களை சீமைக்கு அனுப்புங்க சாமி.சாமி
இலங்கை மலையகத்தில் அடியெடுத்து வைத்து தேயிலைக்கடியிலிப்பது பொன்னும் பொருளுமல்ல - தேங்காயும் மாசியுமல்ல, என்பதை அறிந்து கொண்ட அடுத்த கணமே அந்த அரிவையர் கூட்டம் தென்னக்ம்' திரும்பவே விழைந்தது.
இலங்கைக்கு வந்த தங்களின் பயணம் அக்கரைப் பச்சையாகி விட்டதை அறிந்த உடனேயே. தாயகம் திரும்புவதற்குத்தான் அந்த உழைப்பாளர் கூட்டம் விரும்பியது.
அதற்கிணங்காது ஏதோதோ கூறி அவர்களை அழைத்து வருவதால் ஏற்பட்ட செலவைத் தந்து விட்டுப் போகும்படி நிர்ப்பந்தித்தனர்.
கங்காணிக்கும் அவரது சகாக்களுக்கும் தாம்பட்ட கடனை அடைத்துவிட்டுச் செல்வதென்று முடிவுசெய்து அந்த உழைப்பாளர் கூட்டம் இங்கேயே தங்கியது. அவர்களின் குரல் இன்னும் ஒலிக்கின்றது. இன்னும் எத்தனைக் காலத்துக்கு அவலக்குரலாய் அது ஒலிக்கும் என்பதை காலம் வெளிப்படுத்தும். அந்த வெளிப்படுத்தல் ஏற்படுத்தும் வரையிலும், நம்பி ஏமாந்து நலிந்துவிட்ட சமுதாயத்தின் குரலாக மலைச் சமுதாயத்தின் உணர்ச்சி யையும் முயற்சியையும் வெளிப்படுத்தும் முரசொலி கேட்கவேச் செய்யும்.

Page 42
12. முடிவுரை
மலையகத் தமிழர் என்று இன்று இனம் காட்டப்படு கின்ற மக்களனைவரும் இந்திய வம்சாவளித் தமிழினத் தவராவர். 1937இல் தோட்டத் தொழிலுக்கென்று இலங்கைக்கு ஆள்கட்டும் முறை நிறுத்தப்பட்டாலும் 1957 வரையிலும் இந்தியாப்போய் வருவதில் இந்த மக்களுக்குச் சிரமம் இருந்ததில்லை. இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவாகி 1948இல் அவர்களது குடியுரிமைப் பாதிக்கப்படும் வரையிலும் அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் தொழில் தேடிவந்த இந்தியர்களாகவே வாழ்ந்தனர்.
உண்மையில், 1870களில் கோப்பிப்பயிர்ச் செய்கை நோயினால் பீடிக்கப்பட்டு, அந்த அழிவில் சிங்கானோ வும் தேயிலையும் அறிமுகமானது.
அதுவரையிலும், நிலையாக இலங்கையில் தாடர்ந்து இருக்கும் அவசியம் ஏற்படாததால்-ஒரே சமயத்தில், இலங்கை கோப்பித் தோட்டங்களிலும் இந்திய வயல்வெளிகளிலும் வேலை செய்பவர்களாகவே இந்த மக்கள் லாழ்ந்து வந்திருக்கின்றனர்.
1930 வரையிலும் தங்களது சாதியினரோடும், ஊரவர்களோடும் ஒரே தோட்டத்தில் குடியேறி வாழ்வதையே இவர்கள் விரும்பினர். எனவே தமிழகத்து சாதி, கிராம ஆசாரங்கள் இவர்களால் பேணப்பட்டன. இவர்களது குலதெய்வங்களும் இந்த நிலையிலேயே பூசிக்கப்பட்டன.

83
1946இல் பெரிய கங்காணிமுறை ஒழிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு "தோட்டப்பிரட்டில் சேர்வதற் கான அங்கீகாரம் அரசாங்க அனுமதியோடு கிடைத்தது.
இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்கு முன் நின்று உழைத்தவர்களில் கோ. நடேசய்யர் என்பவரின் பெயர் தனித்துமுளிர்கின்றது. அவரும் அவரது மனைவி மீனாட்சியம்மையும் வர்ய்மொழிப் பாடல்களின் மெட்டி லமைந்த பல பாடல்களை எழுதிப் பரப்பினர்.
தோட்டம்விட்டுத் தோட்டம் மாறும் வசதிகள் கூடியபோது பலவித ஆசார மரபுகள் ஒன்றி கலந்தன.
மஞ்சல் மினுக்கியடி
மயிரெல்லாம் பூமினுக்கி
கொண்டை மினுக்கியடி ஒன்னை
கொண்டு போறன் தொங்கதோட்டம் என்பதைப் போன்ற பாடல்கள் 1930இக்குப் பிற்பட்ட காலத்தில்தான் தோன்றிது.
1833ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராஜ்யத்திலும்
1861ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் சாம்ராஜ்யத்திலும்
1868ஆம் ஆண்டு டச் சாம்ராஜயத்திலும் அடிமை
முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை மலையகத்தில் சட்டப்பூர்வமாக அடிமை கள் இல்லை என்பதை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வது என்பதை இதயத்து ஒலியாக விளங்கும் வாய்மொழிப் பாடல்கள் விளக்குகின்றன.
ஆக, வாய்மொழிப் பாடல்கள் மக்களின் மணத்தைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாக விளங்குகின்றனவே.

Page 43
மேற்கோள்கள்
நாட்டுப்புற இலக்கிய வரலாறு
டாக்டர் சு. சண்முகசுந்தரம் (மணிவாசகர்
நூலகம், சென்னை) பக்கம் 11,
. நாட்டார் பாடல்கள்
இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 1981 பக்கம் 12
. America's Black Past Edited by Eric Foner
Harder 8. Row, USA 1970 References made to Ulrich, B. Rhilips, Samuvel Elliot Morison 8 Henry Steele Commager by Srerling Stuckey in a chapter "Through the Prism of Folklore'
The Rise of the Labour Movement by Visaka Kumarie Jayawardhane Indian immigrant Plantation workers in Srianka by Dharmapiria wesumperuma Communal Politics (1931-1947) by Jane Russel
. Sinha lese Social Organiqaion-Kämdyperod
by Ralph Pieries-1956 P. 268
. மலைநாட்டு மக்கள் பாடல்கள்
சி. வி. வேலுப்பிள்ளை - கலைஞன் பதிப்பகம். சென்னை, பக்கம் 7
. அஞ்சலி மாதசஞ்சிகை மே 1971, *வாய்மொழி
இலக்கியம்’

10.
11.
2.
3.
: 14.
l5. 16.
17.
18.
19.
20.
2l.
85
. America's BlackPast References Made To
Stanley Elkins & Sterling Stuckey
. America's Blackpast - Reference made to the
book Slavery by Stanley Elkins.
Afro - American Writing An Anthology Edited by Richard A. Long Eugenia W. Colier, New York - University Press, F. 290
Hanzard for Year 1941 - P. 691
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் டாக்டர் சு. சண்முகசுந்தரம்-சிதம்பரம்-தமிழ்நாடு பக்கம் 116
Federation Ouarterly-Celon Estates Emplover Federation 1946 P. 23
Education and the indian Flantation Worker ir Sri Lanka – G. N. Gnanamuthu — 1968 P. 15 தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் பக்கம் 232. அதே பக்கம் 237, ஈழநாடு- 'காமன் கூத்து' தினகரன்- 'கோடாங்கி" மலைநாட்டு மக்கள் பாடல்கள்-முன்னுரையில் க. கைலாசபதி நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் டாக்டர் ஆறு. இராமநாதன் (மணிவாசகர் நூலகம் சிதம்பரம்) பக்கம் 229 தமிழக நாட்டுப் பாடல்கள் (தொகுத்தவர் கவிஞர் மா. வரதராஜன் வானதி பதிப்பகம்) 1983.

Page 44
22.
23. 24.
25.
26.
27.
28,
29.
30.
86
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் பக்கம் 15
அதே பக்கம் 65 தமிழக நாட்டுப் பாடல்கள் முன்னுரையில் பெ.தூரன், 哆 மலேசியத் தமிழ்க் கவிதைக் கருத்தரங்க மலர்கோலாலம்பூர் மா. இராமையா-மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு. அதே முரசு நெடுமாறன்-மலேசியத் தமிழ்க் கவிதை வரலாறு. தேசபக்தன் (நாளிதழ்) ஆசிரியர் கோ. நடேசய்யர். 18|4|29.
Ceylon by Sir James Emerson Tennent P. 86.
Indian immigrant plantation workers in Sri Lanka by Dharmapriya wesumberuma - P. 55.
47th Annual Report of planters' Association of Ceylon-1901 - P. 1912.1.

சுருக்கங்களுக்கான விளக்கங்கள்
LD. fB5fT. LAD. LufT. - மலைநாட்டு மக்கள் பாடல்கள்.
சி. வி. வேலுப்பிள்ளை-கலைஞன் பதிப்பகம், சென்னை-1983.
5. 57. Lf7. - தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்.
டாக்டர் சு. சண்முகசுந்தரம், மணிவாசர் பதிப்பகம், சிதம்பரம்
1985
p5. BIT. List - நயமிகு நாட்டுப்புறப் பாடல்கள். முத்து எத்திராசன் MA, நர்மதா பதிப்பகம், சென்னை-1985
நா. பா. கா. த. வா - நாட்டுப்புறப் பாடல்கள்
காட்டும் தமிழர்வாழ்வியல் டாக்டர் ஆறு. இராமநாதன், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம் 1982
தமி. நா. பா. - தமிழக நாட்டுப் பாடல்கள்
கவிஞர் மா. வரதராஜன், வானதி
பதிப்பகம், சென்னை 1983.

Page 45
பயன்படுத்தப்பட்ட கட்டுரைகள்
சி.வி.வேலுப்பிள்ளை- ஈழநாடு 1959 'காமன்கூத்து" சி.வி.வேலுப்பிள்ளை- தினகரன் 7-6-1959
*கோடாங்கி’.
மு.க.நல்லையா - வீரகேசரி 2-6-1963
"வாய்மொழி இலக்கியத்தில் தோட்டப்பாடல்கள்
சி.வே.ராமையா. - வீரகேசரி 16-6-1963
"மலையகத்தில் நிலவிவரும் மனங்கவரும் தாலாட்டுக்கள்’
சாரல்நாடன் - வீரகேசரி 20-10-1963 "மலையக
கதைப்பாட்டு”
சாரல்நாடன் - அஞ்சலி மே 1971 ‘வாய்மொழி
இலக்கியம்’
டி. எஸ். ரர்ஜ" - தினகரன் 19-1-1964.
டி. எஸ், ராஜ" - செய்தி 1965.
டி. எஸ். ராஜ" - மக்கள் மறுவாழ்வு 1987
ஆண்டுமலர் கண்டிக்குப் போன் மச்சான்’
ஏ. பி. வி. கோமஸ் - தினகரன் “கண்டிச் சீமைவந்த
சனம் 1987 சி. அழகுப்பிள்ளை - காங்கிரஸ் ‘மலையக நாட்டுப் பாடலிலே கங்காணி 15,685

5.

Page 46
சிறு குடிசைகள் காணப்படுகின்றன. மனையின் புறத்திற் பருத்திச் செடியும் பீர்க்கு முதலாங் கொடிகளும் பரந்து கிடக்கின்றன. மனையை அடுத்து ஒரு குப்பைமேடு. இங்கு கோழிகள் குப்பையைக் கிளறுகின்றன. பறவைகளும் பன்றிகளும் வளர்க்கப்படுகின்றன. ஊரின் நடுவே கிணறும் பொதுவிடமும் இருக்கின்றன. ஊர் மக்கள் ஆட்டுக்கிடாய் கோழிச் சண்டை பார்த்துப் பொழுது போக்குகின்ற 60Yr nif.
(2) வரகுக் கற்றையால் வேய்ந்த சிறு குடிசைகள் உள்ளே ஆட் டுத்தோல் விரிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகள் மனையைச் சுற்றிக் கட்டப் பட்டிருக்கின்றன.
(3) நிரை மரங்களாலான வேலி குழ்ந்த மனை. அதற்கருகில் ஒரு பந்தல். மேலும் ஒரு கொட்டில். இங்கு கலப்பைகளும் வண்டி களுங்கிடக்கின்றன. வரகு வைக்கோலால் மனை வேயப்பட்டிருக்கிறது.
(4) தென்னங் கீற்றுக்களால் வேய்ந்த மனை. மரச் செடிகள் வளவில் வளர்ந்து இருக்கின்றன.
(5) கடற்கரையில் பரதவர் குடிசைகள் காணப்படுகின்றன. மீன் பிடிக்கும் பறிகள் குடிசையின் முன்னே கிடக்கின்றன. சுரை முத லாங் கொடிகள் காய்த்துத் தொங்குகின்றன.
(6) பரவர் குடிசைகள்:- மூங்கிலைப் பரப்பி அதன் மேற்கிளை களை வைத்துத் தாழை நாணாற் கட்டப்பட்டு மேலே தருப்பைப் புல் லால் வேயப்பட்டிருக்கின்றன. தாழ்ந்த குடிசைகள். அவற்றின் முற் றங்களிற் பறிகள்.
(7) நன்னன் நாட்டுக் குறவர் மூங்கிற் குழாய்களில் தேனாற் செய்த கள்ளையும் நெல்லாற் சமைத்த கள்ளையும் குடிக்கின்றனர். மாவையும் புளியையுங் கலந்து உண்ணுகின்றனர். அரிசியினாலாக்கிய வெள்ளிச் சோறும் உண்ணுகின்றனர்.
(8) அந்தணர் வாழும் ஊர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. வீடு கள் பசுஞ் சாணியினால் மெழுகப்பட்டிருக்கின்றன. பந்தல்களிற் பசுக் கன்றுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளில் நாய் கோழிகள் இல்லை. சங்க காலத் தமிழகத்தில் வறுமை இருக்கவில்லையெனக் கூறமுடி யாது. சிற்றுார்களிலும் பேரூர்களிலும் வறியோர் சிலரும் வாழ்ந்தனர். வறுமையின் கொடுமையைச் சில புலவர் பாடினர். கிழிந்த கற்றை அணிந்த மக்களும் இருந்தனர். குப்பையிலே பயிரான கீரையை நகத் தினாற் கிள்ளி எடுத்து உப்பில்லாமல் வேகவைத்து வாயிற் கதவைத் தாளிட்டுச் சுற்றமுடன் உட்கார்ந்து ஒருத்தி உண்டாளெனக்
- 76 -

கூறப்படுகிறது. புல்லரிசியை உப்புடன் கலந்து வேடர் உண்டனர். ஆனால், வறுமையிலும் பண்பாடுடைய வாழ்க்கை நடத்தினர். இப் பண்பாட்டை விளக்குவதே இவ்வதிகாரத்தின் நோக்கமாகும்.
சிற்றுார் காட்சிகள் ஒருபக்கம். பேரூர் காட்சிகள் மறுபக்கம், நகரங் களில் அரசரும், அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், வணிகரும், செல்வர்களும் பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்களும் வாழ்ந் தனர். பிறநாட்டு வாணிபரும் தொழிலாளரும் இருந்தனர்.
*" கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் கலந்திருந்துறை மிலங்கு நீர் வரைப்பும்"
சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப் படை, மதுரை காஞ்சி, நெடுநேல் வாடை முதலிய நூல்கள் இந் நகர வாழ்க்கையைச் சிறப்பாகக் கூறுகின்றன. அரசரேயன்றிச் செல்வர் களும் மாடமாளிகைகளில் வாழ்ந்தனர். பல தட்டுக்களுடைய வீடு களில் இடைத் தட்டுக்களில் மக்கள் வாழ்ந்தனர். கால நிலைக்கு ஏற்ற பள்ளியறைகள் வீடுகளில் இருந்தன. வேனிற் பள்ளி, உதிரிப்பள்ளி என்பன.
** மழை தோய் உயர் மாடம்"
** முகில் தோய் மாடம்" ** நெடுநிலை மாடத்து இடைநிலையில்" *" வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்'
பூம்புகார் நகர்ச் செல்வப் பெண்களின் வாழ்க்கைக் காட்சி ஒன்று:-
"பூம் புகார் நகரத்தில் வண்ணமும், சுண்ணமும், தண்ணறுஞ், சாந் தமும், பூவும், புகையும் விரையும் வீதிகளில் விற்கப்பட்டன. பத்து வகைப்பட்ட விரகாலும் ஐந்து வகைப்பட்ட விரையாலும் முப்பத்து வகைப்பட்ட வாசனைப் பொருட்களினாலும் ஊறிக் காய்ந்த நண்ணி ரிற் பெண்கள் நமது கூந்தலைத் தோய்த்து நனைத்தனர். ஈரத்தை வாசனைப் புகையில் உலர்த்திக் கூந்தலுக்குச் சவ்வாது முதலிய நறு மணங்கள் பூசினர். பொன்னாலும் நவமணிகளினாலும் செய்யப்பட்ட பல்லாபரணங்கள் அணிந்தனர்,
தொல்காப்பியத்திற் குறிப்பிடப்பட்ட தனிப்பட்ட திணை வாழ்க்கை கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே ஓரளவுக்கு மறைந்து விட்டது. எனினும், மரபு முறைபற்றிக் கடைச்சங்க நூல்களும் இல்வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றன. கடைச்சங்க காலத்தில் நானில
-- 77 --سے

Page 47
மக்களிடையிலும் பொருளாதாரத் தொடர்புகளும் உறவுகளும் ஏற் பட்டு விட்டன. தமிழ்நாட்டு மூவேந்தர்களும் நாடெங்கும் வீதி களும் வழிகளும் அமைத்தும், இடையூறு மிகுந்த இடங்களிற் பாசறை களிற் படைகளை நிறுவியும் பிரயாணிகளுக்கும் வணிகருக்கும் பாது காப்பு அளித்தனர். திரையன் ஆண்ட தொண்டை நாட்டில் வழி களில் வில் வீரர் நின்று வணிகரைக் காத்தனர் எனப் பெரும் பாணாற் றுப்படை கூறுகிறது.
** கழுதைச் சாந்தோடு வழங்கும்
உலகுடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுவடை வைப்பின் வியன் காட்டு இயல்பு'
ஆய்ச்சியர் தயிர் கடைந்து வெண்ணெய் மோரை மருதநில மக் களுக்கு விற்று அந்நிலப் பொருட்களை மாற்றாகப் பெறுகின்றனர். நெய்தல் நில மக்களும் மருதநில மக்களும் தமது பண்டங்களை மாற் றிச் கொள்ளுகின்றனர். குறிஞ்சி நிலப் பொருட்களாகிய தேனுங் கிழங்குகளும் ஏனைய நிலங்களில் விற்கப்படுகின்றன, இத்திணை மயக் கத்தைச் சங்கப்பாடல் ஒன்று அழகாகக் கூறுகிறது.
** தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறுவு மறுகவும் தீங் கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையோடு மது மறுகவும் குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் நறும் பூங் கன்னிக் குறவர் ஆடக் கானவர் மருதம் பாட, அகவர், நீணிற முல்லைப் பஃறிணை நூலலக் காணக் கோழி கதிர் குத்த மனைக் கோழி தினை கவர வரை மந்தி கழி மூழ்கக் கழி நாரை வரை இறுப்பத் தண் வைப்பின் நாடு குழீஇ'
துங்க பத்திரை யாறு வரையிற் சேர, சோழ, பாண்டிய, குறும்ப, எருமை நாடுகள் இருந்தன. தமிழ் நாட்டிற்கு வடக்கே கொங்கணர், கலிங்கர், இராட்டிரகூடர் முதலிய நாகரிகங் குறைந்த மக்கள் வாழ்ந்தனர். மேலும் வடக்கே வங்காளம், பிகார் சிந்து நாடு, கசமார் நாடு (Kashmir) gasif DirG (Bhutan) (p56 யன இருந்தன. இப் பகுதிகளில் வாழ்ந்த திராவிட மக்கள் சித் திய, காக்கேசிய சீனக் குழுக்களுடன் சேர்ந்து மொழி, பண்பாடு வேற்றுமையடைந்து விட்டனர்.
سست 78 سیسے

2. கடைச் சங்ககால விவசாயம்
கடைச் சங்க காலத்திலும் விவசாயமே அடிப்படைத் தொழி லாகும். நீர்வளமும் நிலவளமுமுடைய தமிழ் நாட்டில் அக் காலத் நில் உணவுக்குப் பஞ்சமில்லை. பாரதப் போரின் போது, ஒரு பாண் டியனே இரு சேனைகளுக்கும் உணவளித்தான். மூவேந்தருஞ் சிற்ற ரசர்களும் கிணறுகள் குளங்கள் வெட்டியும் ஆறுகளுக்கு அணைகள் கட்டியும் நீர்வளத்தைப் பெருக்கினர். இடைச் சங்க காலத்திற் காந்தமன் எனுஞ் சோழன் காவேரியை வெட்டிச் சோழ நாட்டிற் குத் திருப்பினான். தமிழர் மறையாகிய திருக்குறளில் வள்ளுவர் உழவின் சிறப்பைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார், “Spy பான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில்; செய்விக்குங்கால் ஏனையோருக்கு முரித்து; இது, மேற் குடியுயர்தற்கேது வென்ற ஆள் வினைவகையாகலின், குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது." என்பது பரிமேலழகர். உரைக்குறிப்பாகும்.
*வோளாண் மாந்தர்க் குழுதுர னல்ல
தில்லென மொழிப" "ஏரினு நன்றா வெரு விடுதல் கட்டபி
னிரினு நன்றதன் காப்பு" "சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை" "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லார்
தொழுதுண்டு பின் செல் பவர்" "இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
னில மென்னு நல்லா னறும்." "வரம்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்;
நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்: கோலுயரக் கோன் உயரும்."
கடைச் சங்க கால விவசாயமுறை நிலப்பண்ணை முறை என்ப கற்குப் பல சான்றுகளுண்டு. எல்லா நிலங்களும் விளைபொருளில் .ஆறிலொரு பங்கும் அரசனுக்குரியவை. அரசர் சேனைத் தலைவர் களுக்கும் புலவருக்கும் நிலங்களை வழங்கினர் எனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்கள் பல சலுகைகள் பெற்றனர். பல கடமைகள் செய்யவேண்டியும் இருந்தனர். இவர்கள் இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுக்களைப் போன்றவராவர். யூதர் கி. பி. முதலாம் நூற் றாண்டில் தமிழ் நாடு வந்தனர். அவர்களுடைய தலைவர்களில் ஒருவ
سسسس 79 س

Page 48
னாகிய யோசப் இரப்பயனுக்குத் தமிழ் நாட்டரசன் ஒருவன் அஞ்சு வள நாட்டை வழங்கிய செப்புப் பட்டயம் பின் வருமாறு கூறுகிறது. "யாம் யோசப் இரப்பயனுக்கு அஞ்சு வளநாடு, பணமாகவும் பொருளாகவும் திறை பெறும் உரிமை, அஞ்சு வளத்தின் வருமானம், பகல் விளக்கு தெரு விரிப்பு, பல்லக்கு, குடை வடுக முரசு, எக் கானம், கால் மிதியடி, அணித் தோரண வளைவுகள், மேற்கட்டிகள் முதலிய பெருமகனுக்குரிய 72 சிறப்புரிமைகளையும் கொடுத்துள் Garmub.
நிலவரியும் நீர் வரியும் கொடுக்குங் கடமையிலிருந்து அவருக்கு விலக்குரிமை கொடுத்திருக்கிறோம். அரண்மனை வகைக்கு மற்றை நாட்டு வாசிகள் வரி செலுத்துஞ் சமயம் அவர் வரி செலுத்த வேண்டியதில்லை யென்றும் அவர்கள் பரிசுகள் பெறுஞ் சமயம் அவ ரும் பெறுவாரென்றும் இந்தச் செப்புப் பட்டயம் மூலம் நாம் கட்டளை செய்கிறோம்."
3. கைத் தொழில்கள்
சங்க காலத்திலே நகரங்களிலும் பட்டினங்களிலும் பேரூர்களி லுஞ் சிற்றுார்களிலும் பல்வேறு கைத்தொழில்கள் செழிப்படைந் திருந்தன. புகார் நகரின் தொழிற் சிறப்பை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் பின்வருமாறு விவரிக்கிறார்.
வண்ணமுஞ் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் தூசுந் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும் பால்வாக தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்னொடை யாட்டியர் மீன்வி ைலப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் பன்னின வினைஞரோ டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும் கஞ்ச சாரருஞ் செம்புசெய் குநரும்
- 80 -

மரங் கொல் தச்சருங் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணிட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னருங் கிழியினுங் கிடையினுந் தொழில் பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங் குழலினும் யாழினுங் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித் திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா னிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாள ரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோ ரிருக்கையும் வீழ்குடி உழவரோடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதருங் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோ டணிவளை போழுநர் அகன் பெரு வீதியும் சூதர் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில் தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரோடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தே ரூருநர் கடுங்கண் மறவர். இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்” கச்சி மாநகரின் தொழிற் சிறப்பை மணிமேகலையிற் காணலாம்,
"பன் மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர் மைந்தின விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் சஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொற் றச்சரும் மண்ணிட்டாளரும் வரந்தர வெழுதிய வோவிய மாக்களும்

Page 49
தோலின் துன்னருந் துன்ன வினைஞரும் மாலைக் காரரும் காலக் கணிதரும் நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப நிலக்கலங் கண்ட நிகழக் காட்டும் பான ரென்றிவர் பல்வகை மறுகும் வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின் சுத்தியல் யறிந்த கூத்தியர் மறுகும் பால்வே றாக வெண்வகைப் பட்ட சுலங் குவைஇய கூல மறுகும் மாசுதர் சூதர்வே தாளிகர் மறுகும் போகம் புரக்கும் பொதுவர் பொலிமறுகும் கண்ணுழை சுல்லா நுண்ணுரற் கைவினை வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும் பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோ ரருந்தொழில் குறையா மறுகும் அரசியன் மறுகு மனமச்சியன் மறுகும் ஏனைப்பெருந் தொழில் செ பேனோர் மறுகும்"
பாண்டி நாட்டு மதுரையின் தொழிற் சிறப்பையும் இளங்கோவடிகள் கூறுகிறார். மதுரைக் காஞ்சியிலும் இச்சிறப்பினைக் காணலாம்.
நெசவு கடைச்சங்க காலத்தில் தமிழ்நாடு நெய்தல் தொழிலிற் புகழ்பெற்றிருந்தது. உறையூர் ஆடைகள் உரோமாபுரிச் செல்வர் களினாற் பெரிதும் விரும்பப்பட்டனவெனவும் இதனால் தமிழ்நாடு உரோமப் பேரரசிலிருந்து பெருந் தொகை பொன்னைப் பெற்ற தெனவும் ரோம வரலாறு கூறுகிறது. நெசவுத் தொழிலையும் நெய்யப் பட்ட ஆடை வகைகளையும் பற்றிய குறிப்புக்களைப் பல சங்க நூல் களிற் காணலாம்.
"நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னு றடுத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும்" (சிலப்பதிகாரம்) " பாம்புரி பன்ன வடிவின காம்பின்
கழையடு சொலியி னிழையணி வாரா" (புறநானூறு) " நோக்கு நுழைகல்லா நுண்வம பூக்கனித்து
அரவுரி யன்ன வறுவை" " இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்"
(மலைபடுகடாம்) " ஆவி யன்ன அவிர் நூற் கலிங்கம்" (பெரும்பாண்)
- S -

" போதுவிரி பகன்றைப் புது மலரன்ன
அகன்று மடி கலிங்கம் முடீஇ'
(புற நானூறு)
' பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கம்" "அரவுரியன்ன அறுவை' "இழை மருங்கறியா நுழைநூல் கலிங்கம்" " கொட்டைக் கரைய பட்டுடை நல்கி
கொட்டைக் கரைபோட்ட பட்டா டை கொடுத்து" ' பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின மெல்விய கனி மயிர் குளிர்ப்பண் கண் கொனாதன சவி மயிர்ப் போர்வை"
(சீவகசிந்தாமணி)
நெய்யப்பட்ட ஆடை வகைகளாவன :- கோசிசம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கொங்கலர், கோபம், சித்திரக் கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம் பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி, வெண் பொத்தி, செம்பொத்தி, மணிப்பொத்தி என்பன வாகும்.
அணிகலன்கள் :- ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டு மக்கள்ஆடவரும் பெண்டிருங் குழந்தைகளும்-அணியும் ஆடைகளிலிருந் தும் ஆபரணங்களிலிருந்தும் வீட்டிற் புழங்கும் தட்டு முட்டுப் பொருட்களிலிருந்தும் அறியலாம். கடைச் சங்க காலத்திற்கு முற் பட்ட காலத்திலே பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களைப் புதைபொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சங்க காலத்தில் எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். கடலாடு காதையில் இளங்கோவடிகள் மாதவி அணிந்த அணிகள்:ன்களைக் குறிப்பிடு கிறார். இவை அக்காலத் தமிழ் மாதரின் அணிகலன்களுக்கு உதா ரணமாகும். மதுரையிலிருந்த ஆபரணக் கடைகளும் அங்கு விற் கப்பட்ட பொன் நவரத்தினங்களும் சிலப்பதிகாரத்திற் குறிப்பிடப் படுகின்றன - நால்வகை வருங்ணத்து வைரங்கள் மரகதங்கள் பதுமம், நீலம், விந்தம் படிதம் எனப்படும் நால்வகை மாணிக்கங் கள்; புருடராகம்; வயிடூரியங்கள்: பல்வேறு வகை மணிகள்: முத்து வருக்கங்கள், சிவந்த கொடிப்பளை வர்க்கங்கள், சாதருடம், கிளிச் சிறை, ஆடகம், சாம்பூத்தம் எனும் நால்வகைப் பொன்:
- 83 -

Page 50
மதுரையில் விற்கப்பட்ட ஏனைய அலங்காரப் பொருட்களாவன:- (அ) அகில்:- அருமணவன், தக்கோலி, கிடாரவன் காரகில்
முதலிய வகைகள், (ஆ) ஆரம்:- மலையாரம், தீமுரன், பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிச் சந்தனம், வேர்ச்சுக் கொடி முதலிய வகைகள். (இ) வாசம்:- அம்பர், எச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புனுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாகி, திரியாசம், தைலம் முதலிய வகைகள். (ஈ)கருப்பூரம்:- மலைச்சரக்கு, கலை அடைவு சரக்கு, மார்பு இள
மார்பு ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று வராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோசு சூடன், சீனச் சூடன் முதலிய வகைகள்:
சிற்பக் கட்டடக் கலைகள்
பண்டு தொட்டுத் தமிழர் சிற்பக் கட்டடக் கலைகளிற் சிறந்து விளங்கினர். திராவிடச் சிற்பக்கலை எல்லா நாடுகளிலும் பரவி யிருப்பதைக் காணலாம். சிந்து வெளியிலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அரண்மனைகளையும், நகரங்களையும்,கோட்டை கொத்தளங்களையும், அரண்களையும், மதில்களையுங் கட்டினவர் திராவிட மக்களே. அரண்களின் அமைப்புங் காவலும் பல சங்க நூல் களிற் கூறப்படுகின்றன. வள்ளுவர் அரணின் சிறப்புக் களைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார். சங்க காலத்துக்குப் பின்பு தென்னாட்டிற் பெருங் கோயில்களையுங் கோபுரங்களையுங் கட்டியவரும் திராவிட மக்களே. உருவங்களைச் சமைத்தவரும் இவர்களே. சங்க நூல்கள் 'மழைதோய்" "முகில் தோய்" மாடங்களைக் குறிப்பிடுகின்றன.
** வேயா மாடமும் வியன்கல இருக்கையும். மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண் போர்த் தடுக்கும் பயனற வறியா யவன ரிருக்கையும்"
(சிலப்பதிகாரம்) திவாகரம் சிற்பத் தொழிலின் உறுப்புக்களைக் கூறுகிறது.
*" கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாவன"
سست 84 مسی-۔

பிற நாட்டுத் தொழிலாளரும் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், தொழில்கள் நடத்தினர்.
** மகத வினைஞரும் மாரட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடித்
தொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை"
(DafGunas Marv) பண்டைத் தமிழர் நாகரிகம் கடலக நாகரிகமாகும். வேளாண் மைக்கும் தொழிலுக்கும் உள்நாட்டு வாணிபத்துக்குங் கொடுத்த அதே முக்கியத்துவத்தைப் பண்டைக்காலத் தமிழர் கடல் வாழ்வுக்குங் கடல் வாணிபத்துக்குங் கொடுத்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேய ரைப் போல இவ்வாணிபத்தின் பொருட்டுக் கடலாட்சி செய்தனர். கடற்படைகள் வைத்திருந்தனர். மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் முத்தெடுத்தல், சங்கெடுத்தல், முத்துக்கோர்த்தல், சங்கறுத்து வளையல்கள் செய்தல் முதலிய கடற்றொழில்கள் பல தமிழ் நாட்டில் நடைபெற்றன. கரையோரப் பயணத்துக்குரிய சிறு கலன்களையும் ஆழ்கடலைக் கடத்தற்குரிய நெடுநாவாய்களையும் தமிழர் கட்டினர்.
பல தொழினுட்ப நூல்கள் சங்ககாலத்திலே தமிழில் இருந்தன என அறிகிறோம். "மந்திரவாத நூல்கள், மருத்துவ நூல்கள், சாமுத் திரிக்க நூல்கள், நிலைத்து நூல்கள், சிற்ப நூல்கள், ஆயுத நூல்கள் பத்துவிச்சை நூல்கள், ஆடை நூல்கள், அணி நூல்கள், அருங்கல நூல்கள், இசை நூல்கள், கூத்து நூல்கள்" மேனாட்டுக் "கில்டு" முறையே சங்ககாலத் தமிழ் நாட்டுத் தொழின் முறையும் போலத் தோன்றுகிறது.
4. வெளிநாட்டு வாணிபம்
"திரைகடலோடியுந் திரவியந்தேடு" என்பது எமது பழமொழி களில் ஒன்றாகும். பண்டு தொட்டுத் திராவிட மக்கள் கடலோடி களாகவும் உலக வாணிபராகவும் இருந்தனர். கடலாட்சி செய்த திராவிட வினங்கள் வரலாற்றிற் பலவுள - வட ஐரோப்பாவிலிருந்த ஐபீரியர், ஸ்பெயின் நாட்டு பாஸ்குகள், இத்தாலி நாட்டு ஏட்றஸ் கானர், தென் ஐரோப்பிய, வட ஆபிரிக்க கிழக்காசிய நாடுகளிற் பரவிய கார்த்தேசியர், பினீசியர், கிறீசிலும் கிறீட்டிலும் வாழ்ந்த ஈஜியர், செங்கடலுக்கு அப்பெயர் அளித்த எரிதிரையர், சுமேரியர், ஏலமியர், இந்தியாவில் வாழ்ந்த திரயர், பரவர், சிந்துவெளி மக்கள். இவர்கள் யாவரும் திராவிடவின மக்களாவர். வாணிபத்துக்காகச் சென்ற திராவிட மக்கள் மேற்கே அத்திலாந்திசு வரையும் கிழக்கே பசுபிக்சமுத்திரம் வரையுங் குடியேறினர்.
- 85 -

Page 51
கி. மு. 1000 அளவிற் சொலமன் ஆட்சிக்காலத்தில் கீபுறு நாட்டிற்குந் தென்னிந்தியாவிற்கும் இடையில் வியாபாரம் நடை பெற்றது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கீபுறுக் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்து பொருட்களை ஏற்றிச் சென்றன. தமிழ் நாட் டரசர் ரோமுக்குத் தூதனிப்பினர். ரோமருடனும், கிரேக்கருடனும் வியாபாரஞ் செய்தனர். யவனர் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். ரோமப் பொன் நாணயங்கள் தமிழ் நாட்டில் வழங்கின.
** யவனர் தந்த வினைமா னன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங் கெழு முரிசி" (அகநானுரறு)
' கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையு மிலங்குநீர் வரைப்பும்"
(சிலப்பதிகாரம்)
** மொழி பலபெருகிய பழிதீர் தேஎத்தும்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (பட்டினப்பாலை)
எகிப்து முதலிய நாடுகள் செங்கடல் வழியாகத் தென்னிந் தியாவுடன் வாணிகத் தொடர்புகள் கொண்டன. கிரேக்கரும் யவனரும், கோசியரும், பினிசியரும் இவ்வியாபாரத்தை நடத்தினர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சால்டிய வேந்தன் நபோணி தாசு காலத்திலேயே இவ்விந்திய வாணிபஞ் சிறந்து விளங்கிற்று, கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி "செங்கடற் செல வைப்" பற்றிய நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
**எகிப்து நாட்டு ஒசிசிஸ் துறையினின்று புறப்படுங்கலம், தென் மேற்குப் பருவக் காற்றைத் துணைக் கொண்டு நாற்பது நாட்களில் முசிறித்துறையை அடையும். அத்துறையிற் கடற்கொள்ளைக் கூட்டத் தினர் இருந்தனர். அவர்கள் நித்திரியான் என்ற இடத்தில் உறை பவர். முசிறித்துறைக்கும் கலம் நிற்கும் இடத்திற்கும் நெடுந்தூரம் இருந்தமையினாற், பொருட்களைச் சிறு சிறு படகுகளிற் கொணர வேண்டும், முசிறியிலும் பார்க்க நியாசிண்டி நாட்டிலுள்ள பாரேஸ் துறைமுகஞ் சிறந்து விளங்குகிறது. இந்நாட்டு வேந்தனாகிய பாண்டி யோன் உள்நாட்டில் மதுரை எனும் நகரில் இருக்கிறான். பாரேஸ் துறைக்குக் கோட்டநாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன."
سے 86 سے

முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மாண்க எனவும் வடக்கிலிருந்தும் எகிப்திலிருந்தும் கலங்கள் எப்பொழுதும் இத் துறைக்கு வந்து போயின எனவும் இவ் வியாபாரத்துக்குத் தமிழ் மக்கள் பயன்படுத்திய சிறு கலங்கள் பெருங்கலங்கள் பெருநாவாய்கள் பற்றியும் பெரிபுளுஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
கடைச்சங்க காலத்திலே தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய் யப்பட்ட பொருள்கள் அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருவாப்பட்டை, மிளகு, வெற்றிலை, துணிவகைகள், முத்து, பவளம், சக்கிமுக்கிகள், வெள்ளி, தந்தம், மைக்கல், மாணிக்கம், வைரம் ஆமையோடுகள், தேக்கு கருமருது, சந்தனம், குரங்குகள், மயில் கள் குரங் க்கும் மயிலுக்கும் விவிலிய வேதச் சொற்களாகிய கபிம், துகிம் என்பவை தமிழ்ச் சொற்களாகும். இறக்குமதி செய்த பொருட்களாவன:-
தங்கம், பொற்காசுகள், உயர்வகை மதுக்கள், குதிரைகள், கண்ணாடி, பித்தளை, ஈயம், தகரம், சாடி, திராட்சை ரசம்,
பர்மா, மலாயர், யாவா, சுமாத்திரா, சீனா முதலிய கீழைத் தேசங்களுடனுஞ் சங்க காலத் தமிழர் வியாபாரஞ் செய்தனர். த்திற் கீழைத் தேசங்களுக்கும் மேலைத் தேசங்களுக்கும் யாபாரம் தமிழ் நாட்டின் ஊடாகவே தடைபெற்றது. சுமாத்திரா, யாவா, பார்லி, பர்மா, சீயம், இந்துச் சீனா முதலிய நாடுகளில் தமிழ் வியாபாரிகள் குடியேறினர். சில காலங்களில் இந் நாடுகளிற் சிலவற்றைக் கைப்பற்றியும் ஆண்டனர். சாவகத் நீவிலுள்ள் நாகபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் அரசர் 956/60th பற்றி மணிமேகலை குறிப்பிடுகிறது. சீனக்கப்பல்கள் 'சங்" எனப் பட்டன. ஏனைய நாட்டுக் கப்பல்களைக் காட்டினும் இவை பெரிய வையாக இருந்தன. இக் கப்பல்கள் இந்தியாவிற்குக் கொண்டுவந்த பொருட்கள் சீனக் கோப்பைகள், பட்டாடைகள், ஈயம், செம்பு, யாடுகள், பவளம், அகில், கரிக்கோடு, மரப்பிசின்கள் முதலிய சுவையுர்கும். இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற பொருட்கள்:- முத்து, , விரைபொருட்கள், நீலம், பூந்துகில்கள், கண்ணாடிச் சாமான் கள், பாக்கு முதலியவையாகும்.
கிழக்கிலும் மேற்கிலும் பல துறைமுகங்கள் இருந்தன. ц6йт முசிறி, நெல்கின்ற7, முமரி முதலியவை மேற்குத் துறைமுகங்க evritish. காவிரிப்பூம்பட்டினம் நாகபட்டினம், கொற்கை, புதுச்சேரி. மரக்காமை, தசார்க்கு முதலியவை கிழக்குத் துறைமுகங்களாகும்.
காலத்திற் காவிரிப்பூம் பட்டினம் முசிறி கொற்கை முதலி யவை புகழ்பெற்ற துறைமுகங்களாக இருந்தன. இங்கு p560
حسبہ 87 س............ ۔

Page 52
பெற்ற வியாபாரத்தைப் பற்றியும் குழுமி நின்ற கப்பல்களைப் பற்றி யும் சங்க நூல்கள் கூறுகின்றன:-
"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங் கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெளிய வீண்டி’ (பட்டினப் பாலை.)
y தமிழர் அன்று ஈழத்தில் இருந்திராவிடின் சழத்துணவை யார் அனுப்பினர்? ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விவசாயம் முன்னேற் றம் அடைய முன், தமிழர் இந்நாட்டில் நூற்றுக்கண்க்கான வரு டங்கள் வாழ்ந்திருக்கவேண்டுமல்லவா?
"கடலருகே இருக்கும் பரதவருடைய அகன்ற தெருவிடத்தே அரிய காவலையுடைய பண்டசாலையுண்டு. கடலில் ஏற்றுவதற்குக் கொண்டுவந்த பண்டங்களும், கடலிலிருந்து இறக்கிய பண்டங்களும், சுங்கங் கொள்வதற்கு முத்திரை பொறித்துப் புறம்புே அடுக்கப் பட்ட பண்டங்களும் பண்டசாலையில் மலைபோற் குவிந்து கிடந்தன. சங்கங் கொள்வோர் எப்பொழுதும் ஓய்வின்றிச் சுங்கங் கொள்வர்." (பட்டினப்பாலை)
கடைச் சங்க காலத்தில் வெளிநாட்டு வியாபாரமேயன்றி D-6ir நாட்டு வியாபாரமும் அபிவிருத்தியடைந்திருந்தது. தமிழ்நாடு முழு வதும் பொருளாதாரத் தொடர்பிருந்தது. குறிஞ்சி, முல்லை நில மக்கள் தமது பொருட்களை மருத நிலத்தில் விற்று நெல்ை پهنtb றனர். நெய்தல் நிலத்துப் பரதவர் எல்லா நிலங்களிலும் உப்பு விற்றனர். உப்பை எருது வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். நகரங் களிலும் பேரூர்களிலும் நானிலப் பொருட்களும் பிறநாட்டுப்பொருட் களும் விற்கப்பட்டன. நாணயங்கள் வழங்கின. கடன்படலும் கொடுத்தலும் அக் காலத்தில் வழக்கமாகும்.
நகரங்களிற் பெருங்குடி வாணிகர் இருந்தனர். செல்வ நிலைக் கேற்ப வாணிகர், இரப்பர், கலிப்பர் பெருங்குடியரெனப்பட்டனர். செல்வமும், புகழும் பெற்ற வணிகரை அரசர் "எட்டிப்" பட்டங் கொடுத்துக் கெளரவித்தனர். பிறநாட்டு வியாபாரம் பெரும் பாலும் வர்த்தகக் குழுக்களினால் நடத்தப்பட்டது. தாம் தேடிய செல்வத்தில் ஒரு பங்கை இக் குழுக்கள் சமூகத் தொண்டிலும் சமபுத்
مس 83ا ســـــــه

தொண்டிலுஞ் செலவிட்டன, கோயில்கள் கட்டின. தமிழர் நாகரி கத்தையுஞ் சமயத்தையும் பிறநாடுகளிற் பரப்பிட இக்குழுக்களுக்கு அரசர் ஆதரவளித்தனர். நகரங்களில் வாழ்ந்த வாணிகரின் சிறப் பையுஞ் செல்வத்தையுஞ் சிலப்பதிகாரங் கூறுகிறது.
* உரைசால் சிறப்பின் அரகவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழுங்கு கடல் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றோம் ஒருங்கு நொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலந்தினுங் காலினுந் தருவன ரீட்டக் குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்'
வாணிகரின் பண்பைச் சங்க நூல்கள் கூறுகின்றன.
* நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சி னோர் வடுவஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள் வதுTஉ மிகைப் படாது , கொடுப்ப தூஉங் குறை படாது பல் பண்டம் பகர்ந்து வீசும் தொல் தொண்டி துவன்றிருக்கை”
(பட்டினப்பாலை)
பிற்காலத் திவாகரம் வாணிகர் பண்புகளைப் பின்வருமாறுகூறுகிறது:-
*" தனிமை யாதல் முனிவில னாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்தல் உறுவது தெரிதல் இறுவ தஞ்சாமை ஈட்டல் பகுத்தல் - என்றிவை யெட்டும்
வாட்டமிலா வணிகர தியற் குணமே"
an-sur 839 un

Page 53
ஒன்பதாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம்
(தொடர்ச்சி)
1. தமிழர் வீரம்
" உயர் வீரஞ் செறிந்த தமிழ்நாடு”
" சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு"
* சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபம் - மிக நன்று வளர்த்த தமிழ் நாடு”
(Lunt utga umTri )
வரலாறுக்கு முற்பட்ட பண்டைக் காலத்திலேயே திராவிட மக்கள் இலேமூரியாவிலிருந்து வடக்கேயும், மேற்கேயும், கிழக்கேயுஞ் சென்று பல நாடுகளிற் குடியேறித் தமது ஆட்சியையும் நாகரிகத்தையும் பரப்பினர். சேரர் ஆட்சி இந்தியாவின் மேற்கில் இமயம் வரையும், சோழர் ஆட்சி இந்தியாவின் மத்திய பகுதியிலுங் கிழக்கிலும் இமயம் வரையும் பாண்டியர் ஆட்சி தெற்கே ஒளி நாடு வரையும் பரவியிருந் தன. மூவேந்தர் ஆட்சி தொல்காப்பியருக்கு மிக முற்பட்ட காலத்தி லிருந்தே இருந்து வருவதனால் அவற்றை அநாதியாகவுள்ளவை
சங்கப் பாடல்கள் புகழ்ந்துரைக்கும் முதலாவது பேரரசன் நெடி யோனாவான். இவன் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனவும், வடி வலம்ப நின்ற பாண்டியன் எனவும், சயமாகீர்த்தி எனவும் ஆதிமனு எனவும் குறிப்பிடப்படுகிறான். இவனின் தலைநகர் பஃறுளியாற்றங் கரையிலிருந்த தென் மதுரையாகும். பஃறுளியாறும் தென் மதுரை யும் கடற்காளினால் அழிந்தபின், இவன் இமயம்வரை வென்று தனது ஆட்சியைப் பரப்பினான் எனச் சிலப்பதிகாரங் கூறுகிறது.
مست۔ 90 :۔جیسے

'பஃறுளி யாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்சையும் இமயமுங் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன்'
இவன் கடல்கடந்த நாடுகளிலும் தனது ஆட்சியை நிறுவினான். முந் நீர் விழவின் நெடியோன் எனுஞ் சிறப்புப் பெயர் பெற்றான்.
"முழுங்கும் முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம் தாளில் தந்து தம்புகழ் நிறீஇ ஒருதாம் ஆகிய உரவோன்' எனக் குடபுலவியனாரும்
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணல்"
என நெட்டிமையாரும்
"வானியைத்த இருமுந்நீர்ப்
போ நிலைஇய இரும்பெளவத்துக் கொடும்புணரி விலங்கு போழ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ!"
என மாங்குடி மருதனாரும் இம்மன்னனைப் புகழ்ந்து பாடினர். உயர் நெல்லின் என்பது சுமாத்திரா நாட்டிலுள்ள சாலியூராகும். யாவா, சுமாத்திரா, மலாயா முதலிய நாடுகளில் இம் மிகப் பழங்காலத்தி லேயே தமிழர் இராச்சியங்கள் இருந்ததற்கும் தமிழ் மொழி வழங் கியதற்கும் வேறு பல சான்றுகளுமுள. சேர மன்னரிற் மிகப் பழைய வனாகிய இமயவரம்பன் என்ற வானவரம்பனின் இராச்சியம் இமயம் வரையும் இருந்ததெனக் கூறப்படுகிறது. சோழர் பரம்பரை யிற் சூரியச் சோழன், முசுகுந்தன் மனுநீதிகண்ட சோழன் என்போர் பழைய மன்னராவர். இவர்களுடைய வெற்றிகளையும் புகழையும் பல சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
கடைச்சங்க காலத்திலும் பல தமிழ் வேந்தரின் வடநாட்டு வெற்றி களைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. சேர,சோழ-பாண்டியர் இம
பத்திலே தமது கொடியைப் பொறித்தனர்.
سه 91 س

Page 54
*கயலெ முதிய விமய நெற்றியின்
அயலெ முதிய புலியும் வில்லும்'
"ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்'
(அகநானூறு)
மோரிய அரசனாகிய அசோகனைப் போரில் வென்றவன் சோழன் இளஞ்செட்சென்னியாவான். மோரியரின் தென்னாட்டுப் படை யெடுப்பைத் தடுத்து நிறுத்தியவன் இவ:ே . கடைச்சங்க காலத் திலே வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த சேர முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகக் குறிப்பிடப்படுகிறான்.
*"ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோ டாயிடை மன்மீக் கூறுநர் மறம்தபக் கடத்தே"
(பத்துப்பாட்டு)
பிற்காலத்திற் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றிகளை இளங்கோவடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"வடபே ரிமயத்து வான்றாகு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் ஒனவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல் அறியாது மலைத்தி ஆரிய மன்னரைச் செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்- வொன்பதிற் றிரட்டியென்று யாண்டும் மதியும் நாளுங் கடிகையும் ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள் வருபெருந் தானை மறக்கள மருங்கின் ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு"
* வடவரைமேல் வாள் வேங்கை ஏற்றினன்
திக்கெட்டும் குடை நிழலிற் கொண்டளித்த கொற்றவன் காண் அம்மானை"
سست 92 س۔

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழாவெடுத்தபோது அங்கு வந்திருந்த மன்னரைச் சிலப்பதிகாரங் கூறுகிறது:-
'அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்"
கடைச்சங்க காலத்தில் வடதிசை வென்ற பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனாவான்:-
"வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப் புரைநீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசில் சுட்டிலில் துஞ்சிய பாண்டியன் தெடுஞ்செழியன்" (சிலப்பதிகாரம்)
கடைச் சங்ககாலச் சோழ மன்னரில் வட நாடு வென்று இமயத் திலே தனது சின்னத்தைப் பொறித்தவன் இரண்டாங் கரிகால னாவான்.
கடைச்சங்க காலத்திலே தமிழ் மக்கள் - ஆண்களும் பெண் களும் பிள்ளைகளும் - வீரராக வாழ்ந்தனர். "வீரஞ் செறிந்த தமிழ் நாடு". நோய் காரணமாகப் பிள்ளைகள் இறப்பினும் அல்லது இறந்து பிறப்பினும், அவர்களை வீரர் செல்லும் உலகத் துக்குச் செல்க வென்று வாளால் வெட்டிப் பின்பு புதைப்பர். போரில் வீழ்ந்த வீர ரைக் கல்லில் அமைத்து வழிபடுதல் அக்காலத்திற் பெரு வழக்காக இருந்தது. நடுகல் அமைத்து வழிபடும் முறைக்குத் தொல்காப் பியரே இலக்கணம் வகுத்தனர். வேந்தரின் படைகளையும் அரண் களையும் பற்றிச் சங்க நூல்கள் பல விடங்களிற் கூறுகின்றன. அர சர் பலவகைப்பட்ட படைகள் வைத்திருந்தனர் - யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை, வேளைப்படை, மூலப் படை, விலைப்படை, விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை படை மாட்சியை வள்ளுவர் இருபது குறள்களில் விளக்குகிறார்.
**விழுப்புண் படாத நா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து."
'உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர் குன்ற லிலர்"
س- 93 --

Page 55
அரண்களின் அமைப்பையுஞ் சிறப்பையும் திருக்குறளிலும் சிலப் பதிகாரத்திலுங் காணலாம்.
"மணிநீரு மண்ணு மனவுபு மணி நிழற்
காடு முடைய தரண்." "உயர் வகலந் திண்மை பருமையிந் நான் கி
னேனமரை னென்றுரைக்கு நூல்." (திருக்குறள்)
"பினை புங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர ஐாகமும், கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் ஈப்பொன் உலையும் கல்லிடு கூடையும் தாண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
நிவையும் கழுவும் புதையும் புழையும் ஐயளித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பனையும் எழுவுஞ் சீப்பும், முழுவிறற் கிணையமும் கோலும் குந்தமும் விேலும் பிறவும்" (சிலப்பதிகாரம்)
சங்க காலத் தமிழ் நாடு வீரத் தாய்மார் வாழ்நத திருநாடாக விளங்கிற்று. வீரத்தின் அறிகுறியாக ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் புலிப்பற் கோர்த்து அணிந்தனர் புலிப் பல் தாலி கட்டினர். புலித்தோல் போர்த்தனர்.
" மறங்கொள் வியப்புலி வாய்பிளந்து பெற்ற
காலை வெண்டல் தாவி,"
இளந் தமிழ்ப் பெண்கள் அன்று வீரனை மணஞ் செய்யவே விரும் பினர். உத்தி யாக மாப்பிள்ளை தேடி அலையவில்லை.
"Fருநயத் தக்க பண்பிணிவள் நலனே
போருநர்க் கல்லது பிறர்க்கா காதே"
ஏறுகளை எதிர்த்துப் பொருது அடக்குவதற்கு, அஞ்சும் ஆயனை எந்த ஆய்ச்சிம் விரும்ப பாட்டாள்.
" கால்னேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
ல்லாளே ஆய மகள்"
"கோல்வேறு கொண்டார் இவள் கேள்வன் என்று தாரார்
( Fால்லும் சொல் சீேனா அலை மாறி பாம்வரும்
செல்வம் எங் கேள்வன் மோ எங் கேளே."
ታ፵፫፻፴
- d -

வீரப் பெண்களின் கடமையாது என்பதைப் பொன் முடியா எனுஞ் சங்க காலப் பெண் புலவர் தெளிவாகக் காட்டுகிறார்.
"ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவா ளருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
தகடூர் யாத்திரையிலுள்ள அரிய பாடலொன்று பின்வருவதாகும்.
"" தருமமும் ஈதேயாம் தானமும் சதாம்
கருமமுங் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற் கோள்வாண் மறவர் தலைதுமிப்ப என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின்."
முதல்நாட் போரில் ஒருத்தி தனது தமையனை இழந்தாள். இரண் டாம் நாட் போரிற் கணவனை இழந்தாள். எனினும், மூன்றாம் நாட் போருக்குத் தனது பால் மனம் மாறாச் சிறுவனை உவப்புடன் அனுப்பு
றாள்.
" மேனாள் உற்ற செருவிற்கிவள் தன்னை
பானை எறிந்து களத்தொழித் தனனே நெருநல் உற்ற செருவிற்கிவள் கொழுநன் பொருநரை விலங்கி ஆண்டுப்பட் டன்னே இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே"
உன்மகன் எங்கே சென்றான் என்ற கேள்விக்கு ஒரு தமிழ்த்தாயின் டை பின்வருவதாகும்.
" சிற்றில் நற்றுரண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவதி என் மகன் யாண்டுள னாயினும் அறியேன் ஓடும் புலிசேர்ந்து போகிய நல்லளை போல ஈன்ற வயிறே விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்கனந் தானே."
- Բ է: -

Page 56
இறந்த மகனின் உடலைப் போர்க்களத்திலே கண்டு உவப்பினால் ஒரு வீரத்தாயின் வாடிய முலைகள் பாலூறிச் சுரந்தனவெனப் புற நானூறு கூறுகிறது,
"இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே. றாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி வாடுமுலை பூறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே"
தன் மகன் போரிற் பின்வாங்கி ஓடினான் எனக் கேட்டு ஒரு தாய் சினங் கொண்டாள். அவன் அவ்வாறு செய்திருப்பின், அவனுக்குப் பாலூட் டிய முலையை அறுத்தெறிவேன் எனச் சபதஞ் செய்தாள்.
சிறுவன்
"பாடை யழித்து மாறுன னெற்று பலர்கூற
10ண்டமர்க் குடைந்த னனாயின் னுண்டவென் முலையறுத் திடுவேன் யானெனச் சினை இக் கொண்ட வாளோடு படுபிணம் பெயராச் செங்களத் துழவோன் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுரஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’
சங்க காலத்துக்குப் பின்பும் தமிழர் வீரம் மறையவில்லை. பாண் டிய சோழப் பேரரசுகளைப்பற்றி அடுத்த அதிகாரத்திற் படிப்போம். இன்று தமிழர் ஆட்சி யெங்கே! நிலைமை மாறிவிட்டது.
"கால மென்பது கறங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய் 10ாற்றிடுந் தோற்றம்"
எமது வரலாறு இலங்கை வேந்தன் சோகக்கதை போலாயிற்று.
"வார ணம் பொருதமார் பன், வரையினை எடுத்ததோ ளன் பா1ெ7ாடு விண்ணும் அஞ்சிப், பதைத்திட உரப்பும் நாவன் தார ( E மவுலிபத் தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும் களத்தேபோட்டு, வெறுங்கையோடு இலங்கை
புக்கான்
سے 969 ۔ ۔۔۔

2 நாம் தமிழர் கண்ட அரசு
'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு"
**முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்" (திருக்குறள்)
அரசு சட்டமுறை அதிகாரத்தின் இருப்பிடம் எனவும், பலமே அதற்கு ஆதாரம் எனவும் மேனாட்டு மெய்ம்மையியலாளர் கூறுகின் றனர். அரசு மக்களின் இணக்கம் ஒத்துழைப்பு முதலியவற்றின் அடிப்படையில் உருவாகிறது எனவும், அஃதொரு சமூக ஒப்பந்தம் எனவும் உறுரசோ கூறுகிறார். "பெரும்பாலான மக்கள் தமது சமூக நலனை மிகவுயர்ந்த படிக்கு ஏற்றுவதற்காக உதவும் அமையம் அரசு" எனப் புகழ் பெற்ற அரசியல் ஞானியாகிய கறோல் லாக்சி கூறு கிறார். தனியார் தமது பரஸ்பர நன்மைக்காக அமைத்த நிறு வனம் அரசென்பது இவர்களுடைய கருத்தாகும்.
வேறுசில மேனாட்டுக் கருத்துக்களாவன:-
'சாத்தியமான உயர்ந்த மட்டத்தில் மக்களின் தேவைகளைத் திருப்தி செய்வது அரசின் நோக்கம்’
"பாதுகாப்பு, நீதி, சமூக நலன் எனும் மூன்றும் அரசின் முக் கிய குறிக்கோள்களாகும்' பேற்றிறன் றசல்.
**அரசு அறத்தை அடையும் வழியர்கும்.” -கீகெல்
"சட்ட முறைப்படி அதிகாரஞ் செலுத்தும் தாபனமாக மக்கள் அரசை வழக்கமாகக் கருதுகின்றனர். மக்களின் பொது நன்மைக்காக அரசு அதிகாரஞ் செலுத்துகிறது.'
அரசு வன்கண் அதிகாரம் எனவும், பொருளாதார பலம் உடைய வர்க்கத்தினர் அரசியல் அதிகாரத்தையும் பெற்று ஏனைய மக்களைச் சுரண்டுவர் எனவும், அரசு அழிந்தாலன்றி மக்கள் சுதந் திரமாக வாழமுடியாது எனவும் மாக்சிய வாதிகள் கூறுகின்றனர். சாணக்கியர், மைக்கியாவல்லி ஆகியோர் எழுதிய பழைய நூல் களும் இக் கருத்துக்களையே வற்புறுத்துகின்றன.
மேனாட்டவர் பொருளாதார பலத்தின் அல்லது அதிகார பலத் தின் அடிப்படையில் அரசுக்கு இலக்கணங் கூறினர். தமிழர் கண்ட அரசுக்கு அறமே அடிப்படையாகும். அரசியல் என்பது உல கிடை மறவினை பரவாது அறவினை பரவுவதற்கு ஏற்படுத்தப்பட்ட
- 97 -

Page 57
ஒர் அமைப்பாகும். அறம் தவறி நடைபெறும் ஆட்சி அரசாகாது.
இக்கருத்தைத் திருக்குறளில் மட்டுமன்றிப் பல சங்கப்ப7.ல்களிலுங் காணலாம்.
"அறம் துஞ்சும் செங்கோல்" "அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டம்" "அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்” "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"
அறத்தின் முன்னிலையிற் பெரும்பான்மை, சிறுபான்மை, சாதி, மதம், குலம், எனது மக்கள், உனது மக்கள் என்ற பேதங்களில்லை. தமக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியில்லை. யாவருஞ் சமம்.
"நான்குடன் மாண்ட தாயினும்
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால், தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது”
அரசன் உலகபாலகனாய் நின்று மக்களையும் அறத்தையும் காப் பாற்றுவதினால், தமிழ் மக்கள் அவனை இறைவனுக்குச் சமமாகக் கருதினர்.
'திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே" 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்"
அரசனைக் காவலன் என்பர்; காவலன் என்ற சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் பெரு மான் தெளிவுற விளக்கினார்.
"மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங்கால் தானதனுக் கிடையூறு தன்னால், தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ'
அரசன் அறத்தினின்று தவறினாற், செங்கோல் கோடினால், அந்த அரசனேயன்றி நாடும் அழியும். அநீதிகள், கொடுமைகள் செய்த பல வல்லரசுகளின் அழிவை வரலாற்றிற் படிக்கிறோம். அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாவதே சிலம்பின் கதையாகும்.
سس- 8 9 سس

* அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை உகுத்துவந் தூட்டும் என்பதூம் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுளென"
இக் கருத்தை வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
அல்லற்பட்டாற்றா தழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" ** முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்." * ஆபயன் குன்று மறு தொழிலோர் நூன் மறப்பர்
காவலன் காவா னெனின்." சித்தலைச்சாத்தனார் மணிமேகலையில்:-
* சோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும் மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை” நாட்டில் நீதி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதை மனுநீதி கண்ட சோழன் கதை கூறுகிறது. ஒரு பசுவின் முறையீட் டைக் கேட்டு தன் மகனையே கொன்றான்.
* வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்புகார் என்பதியே"
"ஒரு மைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பது உணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந்தன் தேராழி உறஊர்த்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளி தோதான்'
பிற்காலத்திற் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத் தமிழ் இலட்சியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். மக்களுக்கு அரசன் உயிரேயன்றி உடம்புமாவான் என்கிறார்.
வயிரவாள் பூண் அணி மடங்கல் மொய்ப்பினான் உயிர்எலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிர்இலா உலகனில் சென்று நின்றுவாழ் உயிர் எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்"
அரசன் எப்படிப்பட்டவனாக க்க வேண்டும் d Ο buri இரு வண்டும் என்பதையும்
- 99 -

Page 58
"தாய் ஒக்கும் அன்பில்: தவம் ஒக்கும் நயம் பயப்பில்
சேய் ஒக்கும் முன்னின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால் நோய் ஒக்கும் என்னின மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்." முடியரசாயினும் சரி குடியரசாயினும் சரி, அறத்தினின்று தவறும் அரசு கொடுங்கோலாகாது. அரசியல் அமைப்பு உமிக்குச் சமனாகும். அதன் ஒழுக்கம் அல்லது நடத்தை அரிசிக்குச் சமமாகும். அரிசியை விட்டு இன்று நாம் உமிக்குச் சண்டை போடுகிறோம்.
சனநாயகத்தை மெச்சுவது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனாற் சனநாயகத்தில் இன்று நடைபெறும் அதர்மங்களையும், அநீதிகளையும், நசுக்கல்களையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும், சுயநலப் போராட்டங்களையும், மரபுக்குழுக் கலவரங்களையும், வர்க்கப் போராட்டங்களையும் நாம் கவனிப்பதில்லை. ஒன்பது வாக்குக்கெதி ராகப் பத்து வாக்கென்றால் அதர்மம் தர்மமாகுமா? அநீதி, நீதி யாகுமா? எந்த நாயகம் என்றாலென்ன, அறமும் நீதியும் முக்கிய
DIT GOT'66 .
தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தொடங்கிய மூவேந்தர் ஆட்சிகள் சங்க காலத்திலும் தொடர்ந்து இருந்தன. இம் மூவரும் பேரரசர்களாவர். பெருங்கோ, மாவேந்தர் எனப்பட்டனர். கி. பி. 1ம், 2ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பின்வருவோராவர்.
சேரர்: இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், சேரன் செங் குட்டுவன், மந்தரம் சேரவிரும்பொறை.
சோழர்: முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், இளஞ் சேட் சென்னி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப் பெருஞ் சோழன், பெருநற்கிள்ளி.
பாண்டியர்-முதுகுடுமிப் பெருவழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், வெற்றிவேற் செழியன், தலையங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
பேரரசருக்குக் கீழ்ச் சிற்றரசர் இருந்தனர். இச் சிற்றரசருக்குக் கீழும் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் மன்னர் எனப்பட்டனர். சங்க காலத்திலும் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் இச்சிற்றரசர்களை அண்டியே பெரும்பாலும் புலவர் வாழ்ந்தனா. சங்கநூல்கள் குறு நில மன்னர் பலரைக் குறிப்பிடுகின்றன. வேளிர், மோகூர், பழையன், மாரன் நன்னன், வேண்மான், வில்லவன், கோதை, ஓய்மாநாடன், நல்லியக் கோடன், நிதியன், வேள், ஆய், வேள்பேகன், வேள்எவ்வி, வேள்பாரி, நன்னன், வேள் மான் முதலியோர் வேளிர்ச் சிற்றரசர்களிற் சிலராவர். மேலும் கோசர், எயினர், கட்டியர், கருநாடர் முதலி யோரும் தத்தமக்கெனத் தனிச் சிற்றரசுகள் நிறுவியிருந்தனர்.
தலைநகரிற் பேரரசருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவும் எண் பேராயமும் இருந்தன. ஐம்பெருங்குழு:- அமைச்சர், புரோகிதர்,
سیسم 100. معمہ

படைத்தலைவர், தூதர், ஒற்றர். எண் பேராயம்:- கணக்காயர், கரும விதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர் மாந்தர், படைத் தலைவர், யானை மறவர், இஷளிமறவர்.
உண்மையில் ஆட்சி சிற்றரசர் கையிலும் நாட்டவை, ஊரவை களின் கையிலும் இருந்தன. பேரரசரின் நேர் ஆட்சி நகர எல்லை களுக்குட்பட்டதாகும். சிற்றரசர் பேரரசருக்குத் திறை கட்டி ஆண்டனர். அவைகளின் அங்கத்தவர் மக்களினால் தெரிவு செய்யப் பட்டனர். யார் யார் தேர்தலுக்குத் தகுதியற்றவர் என்பதையும் தேர்தல் முறைகளையும் சங்கநூல்கள் கூறுகின்றன. மக்கள் சுதந்திர மாக வாழ்வதற்கு அதிகாரம் கிராம மட்டம் வரையும் பன்முகப் படுத்தப்பட வேண்டுமென இன்று தாம் கற்பனை செய்கிறோம்" ஆனாற் சங்ககாலத் தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆட்சி முறையே இருந்தது. இன்று போல அதிகாரம் மையமாக்கப்பட்ட சிலராட்சி இருக்கவில்லை. ۔
பண்டு தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி வரையும் இந்தியாவில் நிலவிய ஆட்சிமுறை இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ முறை போன்றதாகும். தென்னிந்தியாவில் மூன்று பேரரசர் இருந்தனர். சேர சோழ பாண்டியர். வட இந்தியாவில் முதலாவது பேரரசு மகதப் பேரரசாகும். இவர்களுக்குக் கீழ் பல்லாயிரஞ் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் பேரரசருக்குத் திறைகட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திற் சிற்றரசர் திறைகட்ட மறுத்தனர். பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையிற் பல போர்கள் நடந்தன. ஒரு சிற்றர சனைப் பேரரசன் வென்றால் அச்சிற்றரசன் மறுபடியும் திறைகட்ட வேண்டி நேரிடும். திறைபெறும் உரிமைக்கே பேரரசர் போரிட்டனர். சிற்றரசரின் நாட்டைக் கவர்ந்து அதை நேரே ஆளப் பேரரசர் எத்தனிக்கவில்லை. பேரரசர்களும் தமக்கிடையிற் போரிட்டனர். ஒரு பேரரசனை மற்றொரு பேரரசன் வென்றால், முந்திய பேரரசனின் கீழிருந்த சிற்றரசர்களிற் பலர் பிந்திய பேரரசனுக்குத் திறை கட்ட வேண்டி நேரிடும். இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை_எவ் கினும், நாட்டாட்சி சிற்றரசனினதும் ஊரவைகளினதுங் கையில் இருந்தது, மரபு முறைப்படி அரசரும் ஊரவைகளும் ஆட்சி செய்த னர். கடைச்சங்க காலத்துக்குப் பின்பு பேரரசர் சிற்றரசராவதும் விற்றரசர் பேரரசராவதும் வழக்கமாயிற்று. எனினும் ஆட்சிமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
வழங்கவதர் ங் கூ வையங்கள் š, 3607. (2) g”) ni
நீதி 臀 ಕ್ಲಿಲ್ಲಿ?:°: ਕੋ நகரில் இருந்ததென இளங்கோவடிகள் கூறுகிறார்.
حساس h0 i --

Page 59
'அரசுகோல் கோடுனும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப் பாவைதின் றழுஉம் பாவை மன்றமும்."
சோழருக்குரிய உறையூரில் அறங்கூறு அவையத்தில் நீதியும் தர்மமும் எப்பொழுதும் நிலவிற்றென ஒரு புலவர் பாடுகிறார்.
"மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற் றாகலின் அதனால் முறைமைநின் புகழும் அன்றே."
3 கல்வியும் பண்பாடும்
"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் - மனம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு." இது வீண் புழுகன்று. அன்று தமிழராகிய நாம் கல்வியிற் சிறந்து விளங்கினோம். இன்றுஞ் சிறந்து விளங்குகிறோம். எல்லாவற்றையும் இன்று நாம் இழந்துவிட்டபோதிலும், கலைமகளின் கடாட்சத்தை இழந்துவிடவில்லை. எமது கல்விச் சிறப்பைக் காட்டக் கள்ளப் புள்ளிகள் வேண்டியதில்லை. கல்வியும் ஞானமும் பாடசாலைகளையும் ஏட்டுப்படிப்பையும் பொறுத்தனவல்ல. பரம்பரையான ஒழுக்கமும் பண்பாடும் குடும்பச் சூழ்நிலையும் இவற்றுக்குக் காரணமாகும்.
கடைச்சங்க காலத்திற் பெண்புலவர் பலர் இருந்தனர். ஆண் களும் பெண்களும் சரி சமமாகக் கல்வியிற் சிறந்து விளங்கினர். நாம் கல்விக்கு அளிக்கும் மதிப்பைச் செல்வத்துக்கோ பதவிக்கோ அளிப்பதில்லை.
* கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே." தமிழ் நாட்டரசர் கல்விக்குப் பேராதரவு அளித்தனர் "உற்றுபூழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.” என்பது பாண்டிய மன்னன் ஒருவன் வாக்காகும்.
"ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்.” என்பது சங்கப் பாடல்களில் ஒன்றாகும்.
- O -e

வள்ளுவர் கல்வியின் சிறப்பைப் பத்துக் குறள்களிலும் கல்லா மையின் இழிவைப் பத்துக் குறள்களிலும் விளக்குகிறார்
** கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றையவை." ** ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து." ** அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்." *" விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்."
சங்ககாலப் புலவர்களின் பெயர், ஊர், குலம் முதலியனவற்றை நோக்கும்போது, அவர்கள் பல இனத்தவராகவும் குலத்தவராகவும், பேரூர்களில் மட்டுமன்றிச் சிற்றுார்களில் வாழ்ந்தவராகவுங் காணப் படுகின்றனர். பலர் நாகரினத்தைச் சேர்ந்தவராவர். சங்ககாலத் தமிழ் நாட்டிற் பரந்த கல்விமுறை இருந்ததுமன்றி அது உயர்ந்த மட்டத் திலும் இருந்திருக்க வேண்டும்.
எவ்வளவு செல்வமும் அதிகாரமும் இருப்பினும், பண்பாடில்லா விட்டால் மக்களின் வாழ்க்கை சிறப்படையாது.
"பண்பெணப் படுவது பாடறிந் தொழுகல்" (நெய்தற்கலி)
“ “ Lu67. GODLuurrrif Lu *GEGðarwG) Davish” (திருக்குறள்) *" பெயக்கண்டும் நஞ்சுண்ட மைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்." (திருக்குறள்)
ஒழுக்கம் உயர் குலம். தமிழர் விரிந்த மனப்பான்மையும் அன்பும் அறனுமுடைய வாழ்க்கை நடத்தினர்.
'யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனையோ லாருயிர் முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே" (цдодторлду)
m 109 re

Page 60
இக்காலத்திற் சமவுடைமையாளர் பொதுநல நோக்கத்தை வலியுறுத்துகின்றனர். அன்று ஒரு சங்கப் புலவர்:-
** உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவதஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே."
(கடலுள் பாய்ந்த இரும் பெருவழுதி)
அரசியலில் மட்டுமன்றித் தமது வாழ்க்கையிலும் அறத்தைக் கண்டவர் தமிழர், அறத்தின் வழி நின்று பொருளை ஈட்டித் தமக்கும் பிறருக்கும் பயன்படுவழியிற் செலவழித்து இன்பத்தை அடைவதே வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டனர்.
* சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉத் தோற்றம் போல” " இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை." குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்றனர். இல்லறம் நல்லறமென வாழ்ந்தனர்.
** அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று." * அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." • இல்லறத்தின் சிறப்புப் பண்புகளை வள்ளுவர் 240 குறள்களில் விளக்குகிறார்.
ஒரு சமூகத்திலுள்ள பெண்களின் நடத்தை அச்சமூகத்தின் பண்பாட்டைக் காட்டும்.
** மங்கல மென்ப மனையாட்சி மற்றத
னன்கல நன் மக்கட் பேறு." ** மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை." " பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்."
མ-- ༈ 094 ཡང་ཁ་ལགས །

பெண்களின் குணங்களாவன:-
"அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." "செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண் பாலன." 'உடம்போடு உயிரிடையென்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு." "யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
விருந்தோம்பல் இல்வாழ்வோர் கடமையாகப் பல விடங்களிற்
குறிப்பிடப்படுகிறது:
'இருந்தோம்பி இல் வாழ்வ தெல்லாம் .
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு"
கணவனைப் பிரிந்திருந்த போது தான் இழந்தவற்றைக் கூறிக் கண்ணகி பின்வருமாறு வருந்தினாள்.
"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர் கெதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" தமிழர் எக்காலத்திலும் பிள்ளைகளைச் செல்வமாகக் கருதினர்.
"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும், தொட்டும், கவ்வியும், நுழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே."
(பாண்டியன் அறிவுடை நம்பி) 'அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்." "குழலினி துயாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளா தவர்." (திருக்குறள்)
- 105 -

Page 61
செல்வத்தின் பயன் ஈதலாகும். கொடையைச் சங்கப்புலவர் புகழ்ந்து பாடினர். அதே போல இரத்தலின் இழிவையுங் கூறினர். அறத்தைக் கடமையாகச் செய்தனரன்றி இக்காலத்திலே போலப் பயன் கருதிச் செய்யவில்லை.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்."
முல்லைக் கொடிக்குப் பாரி தன் தேரைக் கொடுத்தான்;
எல்லா மக்களும் இன்புற்றிருக்க வேண்டுமெனத் தமிழ் மக்கள் எண்ணினர். தனியொருவனுக்கு உணவில்லை யென்ற நிலையைத் தாங்க முடியாததென மருதன் இள நாகனார் எனுஞ் சங்கப் புலவர் பாடினார்.
ஒரு நாள் ஒரு பொழு தொருவன் ஊணொழியப் பார்க்கும் நேர் நிறை நில்லா தென்றுமென் மனனே"
இக் கருத்தையே பிற்காலத்திற் பாரதியாரும்:
"தனியொருவனுக்கு உணவில்லை யென்றாற்
சகத்தினை அழித்திடுவோம்" எனக் கூறினார்.
4 தமிழர் சமயம்
தொல்காப்பியர் காலத்திலும் சிந்துவெளிக் காலத்திலும் தமிழர் சமயம் பற்றி முன்பு கூறினோம். சமய உண்ர்ச்சி தமிழர் சமுதா யத்தில் அநாதியாகவே தோன்றி இன்று வரையும் நீடித்து நிலைத் திருக்கிறது. இறைவன் ஒருவன் உளன். அவன் பேர், ஊர். குணங் குறியில்லாதவன். மனம் வாக்குக்கு எட்டாதவன். உயிர்கள் பிறந் திறந்து துன்புறுகின்றன. மறுபிறப்புண்டு. அறம் கொல்லாமை, புலால் உண்ணாமை. இச் சைவக் கொள்கைகளும் ஆசாரங்களும் தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழர் சமுதாயத்தில் இருந்து வருகின்றன என மறைமலையடிகள் கூறுகிறார். இச் சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பல சங்கப் பாடல்களிற் காணலாம். பிற்காலத்தில் தேவாரதிருவாசகத்திலும், திருமந்திரத்திலும், சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் இக் கொள்கைகள் தெளிவாக விளக் கப்பட்டன. முப் பொருளுண்மையைப் பின்வருஞ் செய்யுள் சுருக்க மாகக் கூறுகிறது;
*சான்றவ ராய்திடத் தக்க வாம் பொருள்
மூன்றுள மறையெல்லாம் மொழிய நின்றன ஆன்றநோர் தொல்பதி யாருயிர்த் தொகை வான்றிதழ் தளையென வகுப்ப ரன்னவே" (கந்தபுராணம்)
ܗܩܗ 106 ܚ

"சைவ சித்தாந்தமாவது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இச் சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் இன்றும் நிறைந்து விளங்கு கிறது." (சேர். யோன் மாசல்)
ஆனாற் தொல்காப்பியர் காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் எல்லாத் தமிழ் மக்களும் இச் சைவ மதத்தைப் பின்பற்றினர் என் பது ஐயமாகும். பலவின மக்கள் பலவகைப்பட்ட வழிபாடுகளும் கொள்கைகளும் உடையவராக இருந்தனர். நிலத்திற்கேற்ப வழி பாடுகள் வித்தியாசப்பட்டன. சங்க காலத்திற் பல தெய்வ வழிபாடு களும் சிறு தெய்வ வழிபாடுகளும் தோன்றிவிட்டன. புகார் நகரி லுள்ள கோயில்களை இளங்கோவடிகள் இந்திரவிழாவூரெடுத்த காதை யிற் குறிப்பிடுகிறார்.
* பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வாள்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வாழாஅ நான் மறை மரபின் தி முறை யொருபால் தால் வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறு வேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் அறவோர் பள்ளியும் அறனோம் படையும்"
ஊர்காண் காதையில் மதுரையிலுள்ள கோயில்களைக் குறிப்பிடு Sprit.
"நுதல் விழி நாட்டத் திறை யோன்கோயிலும்
உவணச் சேவ லுயர்ந்தோன் கோயிலும் மேழிவல ஒயர்ந்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும், அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்?
சிவன் திருமால் கோயில்கள் மட்டுமன்றிப் பல வகைப்பட்ட கோட்டங்களும் இருந்தன:- அமரர் கோட்டம், பல தேவர் கோட் டம் வெள்யானைக் கோட்டம், சூரியன் கோட்டம், நிலாக் கோட் டம், ஊர்க் கோட்டம், வேல் கோட்டம், சாத்தான் கோட்டம், காமதேவன் கோட்டம். குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலங்களுக்கே விசேடமான வழிபாடுகளும் தெய்வங்களும் இருந்தன.
ܥ- 07 ܐ =ܡܗ

Page 62
சங்க காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்களாவன:- சிவன், திருமால், முருகன், இந்திரன், பலதேவன், பிரமன்,
சிறு தெய்வங்க ளா வன:- தேவி, கொற்றவை, காளி, கிருட்டணன், வருணன், திருமகள், நீர்த் தெய்வம், ஞாயிறு, திங்கள், பதினெண் கணத் தேவர்கள். பாம்பு வணக்கமும் இறந்த வீரருக்குக் கல் நட்டு விழாவெடுத்து வணக்கஞ் செய்வதும் அக்கால வழக்கங்களாகும். பெண் தெய்வ வழிபாடு வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டு திராவிடர் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் இருந்து வந்தது. மக்கள் பல பெயர்களினாற் பெண் தெய்வத்தை வழிபட்ட னர். சங்க காலத்திற் கொற்றவை வணக்கம் மறவரிடையிற் பெரு வழக்காக இருந்தது. மறவர் கொற்றவைக்குப் பலி கொடுத்து வழி பாடு செய்தனர்,
* சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை" வேலன் வெறியாட்டு, குரவை, நுணங்கு முதலிய வழிபாட்டு முறைகளும் குறிஞ்சி நில மக்களிடையில் இருந்தன.
பலவகைப்பட்ட பழக்க வழக்கங்களுஞ் சங்க நூல்களிற் குறிப் பிடப்படுகின்றன. சாதிக் கட்டுப்பாடுகள், நல்லநாட் கெட்ட நாட் பார்த்தல், சகுனம் பார்த்தல், குறி சொல்லல், சோதிடம் பார்த் தல், பலி கொடுத்தல், புலால் உண்ணல், கள்ளுண்ணல், சூதாடல், பரத்தையோடு வாழ்தல். இப் பழக்க வழக்கங்கள் பொதுவாக இருக்காவிடினுஞ் சிற்சில குலங்குடிகளில் இருந்தன. உடன் கட்டை யேறும் வழக்கமுங் குறிப்பிடப்படுகிறது.
வட நாட்டு வேள்விகளும் சடங்குகளும் சங்க காலத் தமிழ் நாட் டிற் புகுந்து விட்டன.
* எண்ணாணப் பல வேட்டும்
மண்ணாணப் புகழ் பரப்பியும்" ** அறுதொழில் அந்தணர் அறம்பிரித் தெடுத்த
தீயொடு விளங்கும் நாடன்' பிராமணீயமும் புராணக் கதைகளும் தோன்றிவிட்டன. புத்த சமண சமயக் கொள்கைகளும் எங்கணும் பரவிவிட்டன. பல புத்த சமண நூல்கள் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றின. பெயர் பெற்ற புத்த நூல் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை யாகும். உருவ வழிபாடு எங்கணும் இருந்தது.
است. 108 -س

தமிழ் நாட்டில் அக் காலத்தில் வழங்கிய பல மதக் கோட்பாடு களைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம். வைணவ வாதம், வேத வாதம், நிகண்ட வாதம் ஆசீவக வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம், பூத வாதம் புத்தம், எனினும், அன்றும் இன்றும் சமயத் துறையிற் சமரசங் கண்டவர் தமிழராவர். சங்க காலத்தில் தமிழிற் சமண புத்த பேரி லக்கியங்கள் தோன்றின. பிற்காலத்திற் கிறிஸ்த்துவ மகம்மதியப் பேரிலக்கியங்கள் தமிழில் தோன்றின.
5 திருக்குறளும் வள்ளுவரும்
கடைச் சங்க காலத்தைப் பற்றிக் கூறும்போது திருக்குறளைப் பற்றிக் கூறாதுவிட முடியாது. இது கடைச்சங்க நூல், கி. பி. முத லாம் நூற்றாண்டு நூல். வள்ளுவரைப் பற்றி பல கட்டுக்கதைகள் உள. இவையாவும் நம்ப முடியாதவை. பிற்காலத்தில் எழுந்த கற் பனைகள். தமிழ் மொழியிலுள்ள நூல்களில் தலை சிறந்து நிற்பது திருக்குறளாகும். எம்மதச் சார்போ வகுப்புச் சார்போ இல்லாத நூல். இக்காரணம் பற்றிப் பொதுமறை எனப்படும். பொய்யாமொழி, தெய்வநுால், பொதுமறை, தமிழ் மறை என இந்நூலுக்குப் பெயர்க ளுள. திருக்குறள் உலகிலுள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. போப் முதலிய மேனாட்டறிஞர் யாவரையும் மிகக் கவர்ந்த தமிழ் நூல்கள் திருக்குறளும் திருவாசகமுமாகும். எக்காலத் துக்கும் பொருத்தமான உண்மைகளைக் கூறுகிறது.
"திருக்குறள் போன்ற விழுமிய மெய்யறிவுச் சால்புரைத் திரட்டை உலகிலுள்ள வேறெம் மொழியிலாவது காணவியலாது,
-சுவெயிற்சர்
திருக்குறளை அரசியல், பொருளாதாரம், வாழ்க்கையியல், ஒழுக்க நெறியியல், சமூகவியல், குடும்பவியல், மெஞ்ஞானம் எனும் பல கோணங்களிலிருந்தும் பார்க்கலாம். எல்லாப் பொருள்களும் திருக்குறளில் உள.
"எல்லாப் பொருளும் இதன்பா லுளஇதன்பால்
இல்லாத எப்பொருளு மில்லையாற்-சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ரூவனார் சுரந்தபா வையத் துணை' அரசியல் நூல் என்ற அளவில் திருக்குறளை சாணக்கியரின் அர்த்த சாத்திரத்துடன் அல்லது கறொல்ட் லாக்சியின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாற் குறளின் சிறப்புப் புலனாகும். நீதி நூல் என்ற அளவிற் குறளை மனுதர்ம சாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
سے 109 -سی

Page 63
"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி"
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் எனும் முப்பாலும் கூறுகிறது. எல்லாத் துறைகளிலும் அறத்தின் அடிப் படையில் நடத்தையை விளக்குகிறது. 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உடையது.
1. அறத்துப்பால் அதிகாரங்கள் குறள்கள்
பாயிரவியல் 04 40 இல்லறவியல் 20 200 துறவறவியல் 13 30 ஊழியல் 0. O 2. பொருட்பால்
அரசியல் 25 250 அங்கவியல் 32 320 ஒழிபியல் 3 ፲80 3. காமத்துப்பால்
களவியல் 07 70 கற்பியல் 8 180
133 1330
பாயிரவியலிற் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.
'அகர முதல வெழுத் தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு" திருக்குறளுக்குப் பிற்காலத்தில் உரைசெய்தோர்: தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், காளிங்கர், பரிப் பெருமான் முதலியோராவர்.
திருக்குறளின், நுண் பொருளை விளக்குவது எனது நோக்கமன்று: பெரும்பாலான தமிழ் மக்கள் திருக்குறளைக் கற்றிருப்பர். குறளைப் பற்றிப் புலவர் பாடிய பாக்களிற் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்,
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை" "வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" (ump3umíř)
- 110 -

"கடுகைத் துழைத் தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்." - (இடைக்காடனார்)
** என்றும் புலரா தியானர்நாட் செல்லுகினும்
நன்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் குன்றாத் செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல் மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்" (9)60pu Jarmiř)
* மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு LDT6ất quumrör ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடி யால் வையத்தார் உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து" (Luirewrif)
"நான் மறையின் மெய்ப் பொருளை முப் பொருளா
நான்முகத் தோன்
றான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ் சஞ் சிந்திக்க கேட்க செவி' - (உக்கிரப் பெருவழுதியார்)
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி' (assiiv Savrrrf)
"மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும் முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடி மேற் றாரன் றோ பாமுறை தேர் வள்ளுவர் முப்பால்"-
(சீத்தலைச் சாத்தனார்)
"சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந் - தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார் எப்பா வலரினு மில்" - (ஆசிரியர் நல்லத்துவனார்)
சிந்தைக் கினிய செவிக் கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா"
- 1 1 7 =ܘ

Page 64
'பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
பாவிற்கு வள்ளுவர் வெண்பா'
'அறன் அறிந்தேம்: ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம் - மறன் எறிந்த வாளார் நெடுமாற! வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு' (356aTnt ti)
*" தெள்ளு தமிழ் நடை
சின்னஞ் சிறிய இரண்டடிகள் அள்ளு தொறுஞ் சுவை உள்ளுந் தொறும் உணர்வாகும் வண்ணம் கொள்ளும் அறம் பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்த திரு வள்ளுவ னைப் பெற்ற தாற் பெற்ற தேபுகழ் வையகமே" (பாரதிதாசன்)
سس Il2 -سس--

பத்தாம் அத்தியாயம் கடிைச்சங்க காலத்துக்குப் பின்-நாம் தமிழர்.
கடைச்சங்க காலத்துக்குப் பின் தமிழரின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. பண்டுதொட்டுத் தென் நாட்டையாண்ட மூவேந் தர் ஆட்சிகள் மறைந்தன. சேர அரச குலம் முற்றாக அழிந்தது. பாண்டியரும், சோழரும் பல காலஞ் சிற்றரசர்களாக இருந்தனர். தமிழ் நாட்டை பல்லவர், களப்பிரர், சாளுக்கியர், கங்கர், கதம்பர், கோசர், இராட்டிரகூடர் ஆண்டனர். இவர்கள் யாவரும் தமிழ் நாட்டிற்கு வடக்கே தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மக் களாவர். ஆனால், இவர்களுடைய தாய்மொழி தமிழன்று. கன்ன டம், தெலுங்கு மராட்டி, கலிங்கம் முதலியவை தாய்மொழிகளா கும். இப்பகுதிகளிலே தான் சமஸ்கிருதம் இடைக்காலத்திற் பெரு வளச்சியடைந்தது. ஆதலால், இவ்வரசர் வடமொழிக்குப் பேராதரவு அளித்தனர். தமிழ் மொழி அரியாசனத்தை இழந்தது. இக்காலத்தில் வட மொழி தமிழ் நாடு முழுவதும் பரவிப் பெருஞ் செல்வாக்கடைந்தது. பிராமணியம் தமிழர் சமயத்துடன் கலந்து தற்காலச் சைவ வைணவ மதங்கள் தோன்றின. இளவரசர் பலர் ஆரம்பத்திற் புத்த சமண சமயத்தவராக இருந்தனர். இச்சமயங்களை ஆதரித்தனர். ஆனாற், பிற்காலத்தில் இச்சமயங்கள் மறைந்து சைவ மும் வைணவமும் தலையோங்கின. இவ்வரசர்கள் மொழியளவில் அந்நியராயினும், சமயம், பண்பாடு, நாகரிகம், கலை முதலியனவற் நில் இவர்களுக்கும் தமிழருக்கும் முரண்பாடில்லை. சில காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பின் இவர்கள் தமிழரோடு கலந்து தமிழ ராகினர். தமிழ் மொழிக்கும் ஆதரவளித்தனர். இக் காலத்திற் சமயத்துறையிற் பெரு முன்னேற்றத்தைக் காணலாம். பக்தி மார்க் கம் தென்னாட்டிலே தொடங்கி இந்தியா முழுவதும் பரவிற்று. தென் நாட்டிலுள்ள பெருங் கற்கோயில்கள் இக் காலத்திற் கட்டப்பட் டவையாகும். சங்கீதம், சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் இக் காலத்தில் வளர்ச்சியடைந்தன.
கடைச்சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றிப் பல வர லாற்று நூல்கள் உள. தமிழர் வாழ்க்கையிலேற்பட்ட சில மாற் றங்களை மிகச் சுருக்கமாகக் காட்டுவதே எனது நோக்கமாகும்
ست. به 1 il -سست.

Page 65
ஆதலாற் கடைச் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தை இரு பகுதி களாகப் பிரிக்கிறேன். (1) கி. பி. 3ஆம் நூற்றாண்டு தொடக் கம் 14ஆம் நூற்றாண்டு வரையும் (2) 14ஆம் நூற்றாண்டுக்குப்
Sar
(1) 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையும்
களப்பிரர் : களப்பிரர் தொண்டை நாட்டின் வட பகுதியில் வாழ்ந்த கணவர் அல்லது குறும்பர் எனுஞ் சாதியினராவர். இவர் களுடைய தாய்மொழி தமிழாயினும், இவர்கள் நாகரீகத்திலும் பண் பாட்டிலுஞ் சற்றுக் குறைந்தவர்களாக இருந்தனர். இவர்கள் பல்ல வரையும், சோழரையும், பாண்டியரையும் வென்று தம்து ஆட்சியைப் பரப்பினர். பாண்டியரை இவர்கள் வென்றதினாற் கடைச்சங்கம் அழிந்தது என்பர். இஃது எவ்வாறாயினும், இவர்களுடைய ஆட்சிக் காலம் கலவரங்களும், நாட்டில் அமைதியின்மையுமுண்டான காலம் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழி இக்காலத்திற் சீரழிந்தது. இக்கால நூல்கள் மிகச் சிலவாகும். கி. பி. 300 தொடக்கம் இ. பி. 500 வரை இருநூறு வருடங்கள் இவர்கள் தமிழ் நாட்டிற் பேராட்சி நடத்தினர். இக் காலத்தில் எத்துறையிலாவது குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
பல்லவர் : இவர்கள் எந் நாட்டவர் என்பது பற்றிக் கருத்து வேற்றுமையுண்டு. இராசநாயக முதலியார் இவர்கள் மணிபல்லவ (ஈழ நாட்டு) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். ஆனால் இக் கொள்கைக்குப் போதிய ஆதாரமில்லை. தமிழ் நாட்டிற்கு வடக்கே தெலுங்கு நாட்டில் தென்பெண்ணை கிருஷ்ணா ஆறுகள் பாயும் பகுதியிற் பல்லவர் சாதவாகன அரசரின் கீழ்ச் சிற்றரசர் களாக இருந்தனர். சாதவாகன அரசு பலங் குன்றியப்போது, இவர் கள் சுதந்திர மன்னராகினர். பின்பு சோழ நாட்டைக் கைப்பற்றிக் காஞ்சியில் தமது அரசை நிறுவினர். படிப்படியாகத் தமது அரசைத் தென்னாட்டிற் பரப்பினர். பல காலங்களிற் பாண்டி நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர். கி. பி. 7ஆம் நூற்றாண்டிற் பல்லவர் ஆட்சி தென்னாடு முழுவதும் பரவியிருந்தது. முதலாம் நரசிம்மன் சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், இராட்டிர கூடர் முதலிய யாவரை யும் வென்று வாதாபி வரையும் தனது பேரரசை நிறுவினான். இவன் ஈழத்தையும் வென்றான். 9ஆம் நூற்றாண்டின் இறுதியிற் பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
- !!! അ

பல்லவர் சோழ நாட்டிற்கு வடக்கே வாழ்ந்த தெலுங்கர் என்ப தைப் பல சான்றுகள் காட்டுகின்றன.
(அ) மன்னர்களின் பெயர்கள்: (ஆ) பல்லவர் ஆட்சியில் வடமொழியே அரசாங்க மொழியாக இருந்தமை,
(இ) இவர்களுடைய காலத்தில் ஆரிய-திராவிடப் பிராமணிய மும் வடமொழியும் தென்னாட்டிற் பரவியமை.
(ஈ) பல்லவர் புத்த சமண சமயங்களை ஆதரித்தனர். அக்காலத் திற் காஞ்சி இச்சமயங்களுக்கு இருப்பிடமாக இருந்தது.
(உ) பல்லவ மன்னர் பெரும்பாலும் தெலுங்கு சாளுக்கிய மன்னர் குலங்களிற் கல்யாணஞ் செய்தமை.
(ஊ) பல்லவருக்கும் மூவேந்தருக்கும் எவ்வித தொடர்புமின்மை; கதம்பர், மேலைக்கங்கர், இராட்டிர கூடர், சாளுக்கியர்: கதம்பர் கன்னட நாட்டவர், பல்லவரையும் கங்கரையும் வென்று தமது ஆட் சியைப் பரப்பினர். மேலைக்கங்கர் மைசூரில் ஆண்ட அரச வமிசத் தவர். சமண சமயத்தை ஆதரித்தனர். வடமொழியையும் கன்னடத் தையும் வளர்த்தனர். சோழரையும் இராட்டிர கூடரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். மேலைச் சாளுக்கியர் தக்கணத்தின் பிஜாப்பூரில் ஆண்ட பண்டை மராட்டியராவர்.
கடைச்சங்க காலத்துக்குப் பின் 200 ஆண்டுகள் தமிழ் நாட்டில் ஓர் இருட் காலமாகும். ஆனாற் பல்லவர் ஆட்சியில் தமிழ் பழைய நிலையை அடைந்தது. பல நூல்கள் தோன்றின. பண்டிதர் கா. பொக் இரத்தினம் எழுதிய "நூற்றாண்டுகளில் தமிழ்" என்ற புத்தகத்தில் இக்கால நூல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கிய மானவை சில இங்கு குறிப்பிடப்படுகின்றன.
1. மணிவாசகப் பெருமானின் திருவாசகமும் திருக்கோவை யாரும்,
2, கொங்கு வேளிர்-பெருங்கதை.
3. திருமூலர்-திருமந்திரம்
4. அப்பர் சம்பந்தர், சுந்தரர்-தேவாரங்கள்
5. ஆழ்வார்கள்-நாலாயிரப் பிரபந்தம்
6: ஐயனாரிதனார்-புறப்பொருள் வெண்பா மாலை,
7. பெருந்தேவனார்-பாரதவெண்பா,
- 15 -

Page 66
8. நந்திக் கலம்பகம் 9. திருக்குறள் தவிர்ந்த ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள்,
பிற்கால நூல்கள் பெரும்பாலுஞ் சமயத் தொடர்பானவையான படியினால் அவற்றிலும் பார்க்கச் சங்ககால நூல்களைச் சிறந்தவை யாகச் சிலர் கருதுகின்றனர். ஆனாற் சங்க நூல்களை இன்று மிகச் ஒலரே படிக்கின்றனர். இப்பிற்காலச் சமய நூல்கள் பெரும்பாலான மக்கள் போற்றும் நூல்களாகும். உதாரணமாகத் திருவாசகத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு ஒப்பான நூல் எம்மொழியிலுமில்லை. திருக்குறளையும் திருவாசகத்தையும் தமிழ் நூல்களில் தலை சிறந்த வையாகக் கருதவேண்டும். "தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும், முனிமொழியும்-கோவை திருவாசகமும், திருமூலர் சாலும் ஒருவா சகமென் றுணர்." இக்காலத்தில் தமிழுடன் வட மொழி கலந்த போதிலும் இதனால் தமிழ் சிறப்படைந்ததேயன்றி இழிவடையவில்லை. வளரும் மொழி பிற மொழிகளிடமிருந்து கடன் படுவது இயல்பாகும்.
சமயத்துறையிற் பக்தி மார்க்கத்தின் எழுச்சியும் வெற்றியும் இக் காலத்தில் நடைபெற்றன. சமணமும் புத்தமும் தமிழ் நாட்டிலிருந்து மறைந்தன. தென்னிந்தியாவிலுள்ள பெரிய கற்கோயில்கள் பல்லவர் காலத்திற் கட்டப்பட்டவையாகும். கலைகள் இக்காலத்தில் வளர்ந் தன்.
சோழப் பேரரசும் பாண்டியர் பேரரசும்
சோழப் பேரரசில் மறுபடியும் தமிழராட்சி தென்னாடு முழுவதி லும் பரவிற்று. மறுபடியும். தமிழ் அரச மொழியாகி அரியாசனம் ஏறிற்று. சைவமும் தமிழும் வளர்ந்தன. சங்க காலத் தமிழரின் வீரத்தையுஞ் செல்வத்தையும் கல்வியையும் புகழையும் மீண்டும் சோழப்பேரரசிற் காண்கிறோம்.
கி. பி. 9 ம் நூற்றாண்டிற் சோழர் உறையூரிற் சிற்றரசர்களாக இருந்தனர். சங்ககாலத்துக்குப் பின்பு எழு நூற்றாண்டுகள் சோழர் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் பல்ல வர் ஆட்சி பலங்குன்றிச் சீரழிந்தது. ஆதித்தியன் எனுஞ் சோழ அரசன் கி. பி. 890இல் பல்லவரை வென்று தொண்டைமண்டலத் தைக் கைப்பற்றினான். பின்பு கொங்கை நாட்டையும் மேலைக் கங் கர் தலைநகரத்தையும் தனதாக்கினான். இலங்கையையும் வென்றான்;
- 16 -

முதலாம் பரந்தகன் : (கி. பி. 907-953) இவன் ஆதித்தியனுக்குப் பின் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலம் 46 ஆண்டுகளாகும். பாணரையுங் கங்கரையும் பல்லவரையும் பாண்டியரையும் வென்று சோழப் பேரரசைக் கன்னியாகுமரி வரையும் பரப்பினான். மதுரையில் ஆட்சி செய்யச் சோழப் பிரதிநிதிகளை நியமித்தான். கி. பி. 934இற் கும் கி. பி. 944இற்கும் இடையில் இலங்கையைப் பலமுறை வென்று பொலநறுவாவில் தனதாட்சியை நிறுவினான்.
**வெங்கோல் வேந்தன் றென்னன் நாடும் * ஈழமுங் கொண்டதிறல் செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன்"
ஒட்டைக் கூத்தர் மூவருலாவிற் பரந்தகனின் ஈழநாட்டு வெற் றியைப் புகழ்கிறார். y
"ஈழம் எழுநூற்றுக் காவதமும் சென்று எறிந்து வேழம் திறை கொண்டு மீண்ட கோன்' w
முதலாம் இராசராசன் : (கி. பி. 985 - 1014) இவன் காலத்திற் சோழப் பேரரசு மேலும் உச்சநிலையடைந்தது. இவனுடைய எண்ணற்ற வெற்றிகளையும் ஆட்சிக் காலத்திலேற்பட்ட பல சீர் திருத்தங்களையும் பல நூல்கள் கூறுகின்றன. இவனுடைய முதலாவது போர் கந்தளூர்ப் போராகும். இப் போரிற் சேரனை வென்று அவ னுடைய இராச்சியத்தைக் கைப்பற்றினான். பின்பு பாண்டி நாட்டை வென்றான். இவ்வெற்றிகளுக்குப் பின்பு வடக்கே பெயர்ந்தான். குடகு, கங்கைபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலிய நாடுகளை வென்றான். கி.பி. 991இல் இலங்கை மேற் படையெடுத்து அனுராத புரம், பொலநறுவா, மாந்தோட்டை முதலிய நகரங்களைக் கைப் பற்றினான். இலங்கையிற் பல பாகங்களில் இன்றுஞ் சோழர் ஆட்சிச் சின்னங்களைக் காணலாம். பின்பு சாளுக்கியரை வென்றான். வடக்கே சீட்புலி நாடு, வேங்கை நாடு, கலிங்கம் முதலியவற்றையும் மேற்கே மாலைதீவுகளையுங் கைப்பற்றினான். முதலாம் இராசராச னின் வெற்றிகளைப் பின் வரும் பாட்டுக் கூறுகிறது :
* காந்த ஞர்ச்சாலை கல மறுத் தருளி
வேங்கை நாடும் கங்கை பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்லமும் அலிங்கமும் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்
- 117 -

Page 67
இரட்டைபாடி ஏழரை இலக்கமும் முந்நீரப் பழந்தீவு பன்னிராயமுங் கொண்டு-தன் எழில் வளர் ஊழியில் எல்லாயாண்டும்”
இரண்டாம் இராசேந்திரன் :- கி. பி. 1014இல் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தபோது, சோழப் பேரரசு தற்காலத் தமிழகம் முழு வதையும், தற்கால ஆந்திரம், கேரளம் முழுவதையும், கன்னடத் தின் பெரும் பகுதியையும், ஏறக்குறைய இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இருந்தது. இராசேந்திரன் இவ்வரசை உலகப் பேரரசாக் கினான். முதலில் கன்னியாகுமரி தொடக்கம் இமயம்வரை பல நாடு களை வென்றான். இராசேந்திரனின் வடதிசை வெற்றிகளை மெய் கீர்த்தி எனும் புலவர் பாடுகிறார். இவன் வென்ற நாடுகளாவன:-
(அ) இடைத்துறை நாடு: இது கிருஷ்ணா - துங்கபத்திரா ஆறு களுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். தற்போது பம்பாய் மாவட் டத்திலுள்ள இரேய்ச் சூரப் பகுதியாகும்.
(ஆ) வனவாசி பன்னிராயிரம்; இது மைசூரின் வடமேற்குப் பகுதியும் அதற்கு வடக்கிலுள்ள கோவாப் பகுதியுமாகும்.
(இ) மண்ணைக் கடக்கம் இது சாளுக்கிய இராட்டிர கூடப் பேரரசின் தலைநகரமாகும்.
(ஈ) ஈழம் :- ஏனைய சோழ, பாண்டிய அரசர் பெரும்பாலும் இலங்கையில் வடக்கு, வட கிழக்குப்பகுதிகளை மட்டுமே வென்றனர். மத்திய தென் பகுதிகளில் இவர்கள் ஆட்சி பரவவில்லை. இராசேந் திரன் இலங்கை முழுவதையும் வென்றான். −
(உ) சக்கரக் கோட்டம்: இது தற்போதைய நடு மாகாணத் திலுள்ள ஒரு நகரமாகும்.
(ஊ) ஒட்டர் தேசம்-இது தற்கால ஒரிசாவாகும்: (எ) கேர்சலம்-இது கங்கைச் சமவெளியிலுள்ள பண்டை நகர மாகும்.
(ஏ) தண்டபுத்தி-தற்கால வங்க மாகாணத்தின் மீதுன்புரி மாவட்டம்
(ஐ) வங்காளம். (ஒ) தக்கணலாடம் - இது குஜராட்டின் தென் பகுதி. (ஓ) உத்தரலாடம் - இது குஜராட்டின் வட பகுதி. இராசேந்திரனும் அவனுக்குப் பின் வந்த சோழ அரசர்களும் அந்தமான், நிக்கோபார்த், மாலைதீவுகளையும் பர்மா, மலேஷியா,
y
سست 1183 سے

சுமத்திரா முதலிய கிழக்காசிய நாடுகளையும் வென்று சோழப் பேரர சிற் சேர்த்தனர். கடல் கடந்து இரண்டாம் இராசேந்திரன் வென்ற நாடுகளாவன. •
(1) சீர் விசயம்:- சீர் விசயம் கடாரப் பேரரசின் தலைநகரமாகும்: (கடாரம் தற்காலச் சுமாத்திரா) சங்க காலத்திலும் அதற்கு முன்ன ரும் சுமத்திராவைத் தமிழ் மன்னர் ஆண்டனர். சீர் விசய நகர் அர சரி குலம் சேர, சோழ, பாண்டியரைப் போன்று மிகப் பழையதாகும்.
(2) மலையூர்-மலையூர் சுமாத்திராவின் ஒரு பகுதியாகும். (3) பண்ணை-இது சுமாத்திராவின் கீழ்க்கரைப் பகுதியாகும்; (4) மாயுருடிங்கம்-மாயுருடிங்கம் தற்கால மலேஷியாவின் ஒரு பகுதியாகும்.
(5) இலங்கா சோகம்-இது மலேஸியாவின் கீழ்க் கரையிலிருந்த ஒரு நகரமாகும். - ...
()ே மாமப்பனரம்-இது மலேஷியாவின் வட பகுதியாகும். (7) தலைத்தக்கோணம்-இது மலேஸியாவின் மேற்குப் பகுதி turrgh. ys
(8) தாமரலிங்கம்-இதுவும் மலேஸியாவின் கீழ்க்கரைப் பகுதி μπΘ51b.
(9) இலாமுரி-இது மலேஸியாவின் வட பகுதியாகும். (10) Luri uDmt- ܚ (11) மாகக்கவாரம்-நிக்கோபார்த் தீவுகள்: (12) அந்தமான் தீவு(13) மாலைத்தீவுகள்(14) சாந்திமத் தீவு-இது அரபிக் கடலில் இருந்த ஒருதீவாகும்.
வரலாற்றில் குறிப்பிடப்படும் ஏனைய பேரரசுகளுடன் இச் சோழப் பேரரசை ஒப்பிடுக. இச் சோழ அரசர் கடலாட்சியும் தரையாட்சியும் செய்தனர், இரண்டாம் இராசேந்திரன் காலத் திலும் வீர இராசேந்திரன் காலத்திலும் சோழப் பேரரசு உச்ச நிலை யில் இருந்தது. இப் பேரரசைப் பற்றிய பல நூல்களுள. இவற்றைத் தமிழராகிய நாம் தவறாது படிக்க வேண்டும்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திலே சோழப் பேரரசிற் பல குழப்பங்கள் உண்டாயின. அரசு ஆட்டங்கானத் தொடங்கிற்று. எனினும் குலோத்துங்கன் கலிங்க போர்களில் இருமுறை வெற்றி கண்டான்.
- 119 al

Page 68
குலோத்துங்கனுக்குப் பின்பு சோழப் பேரரசு படிப்படியாகப்பலங் குன்றிற்று. 11 ம் நூற்றாண்டு தொடக்கம் 13 ம் நூற்றாண்டின்நடுப் பகுதி வரையிலுமான 350 வருடங்கள் இப்பேரரசின் காலமாகும்.
பாண்டியர் பேரரசு
பண்டு தொட்டுப் பாண்டியர் பேரரசு நிறுவி ஆண்டனர். இவர் கள், பெருவள நாட்டுப் பேரரசர் குடும்பத்தவராவர். சங்கங் களை நிறுவியவர் பாண்டிய மன்னராவர். தமிழைப் பேணிவளர்த்த வர் பாண்டியரே. பாண்டி நாடே செந்தமிழ் நாடெனும் பெருமைக் குரியதாகும். 3ம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டி நாட்டைக்கைப் பற்றி 200 வருடங்கள் ஆண்டனர். 6ஆம் நூற்றாண்டில் மறுபடியும் பாண்டியர் எழுச்சியுற்றனர். களப்பிரரை வென்றனர். பாண்டிய மன்னன் இராச சிம்மன் காலத்தில் பல்லவ சாளுக்கிய அரசுகளின் பலங் குன்றின போது, இவன் கூடல், வஞ்சி, கோழி எனும் பாண்டிய சோழச் சேரத்தலை நகர்களைக் கைப்பற்றினான்.
கி. பி. 815 இற் பட்டமெய்தியதிரு வல்லவன் ஈழம் வரை வென் றான். குடமுக்கு என்ற இடத்தில் கங்கர், பல்லவர், சோழர்,கலிங் கர், மகதர் படைகளைத் தோற்கடித்தான் எனவும் வில்லினம் என்ற இடத்தில் சேரனை வென்றான். எனவும் சின்னமதுார்ப் பட் டயம் கூறுகிறது. சோழப் பேரரசின் போது பாண்டியர் சிற்றரசர் களாக இருந்தனர். சோழர் பிரதிநிதிகள் மதுரையில் ஆண்டனர்.
கி. பி. 1187 இல் விக்கிரமன் மதுரையிற் பாண்டிய அரசனான காலத் தொடக்கம் பாண்டிய அரசு மறுமலர்ச்சியடையத் தொடங் கிற்று. கி. பி. 1190 இற் குல சேகரன் பட்டமெய்திய பின் மேலும் வளர்ந்தது. சுந்தர பாண்டியனின் காலம் (கி. பி. 1216 - 38) பொற் காலமாகக் கருதப்படுகிறது. சுந்தர பாண்டியன் சோழ நாட்டை வென்று உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான். முத லாம் சடாவீரமன் காலத்தில் பாண்டியர் திருவாங்கூரையும் கோய சாளரையும், சோழரையும், ஈழத்தையும் வென்றனர். இக் காலத் திலே தான் வட இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி குடும்பத்தவரின் ஆட்சி தொடங்கிற்று. வீரபாண்டியன் கி. பி. 1310இல் மகமதி யரின் உதவியை நாடினான். உதவிக்கு வந்த மகமதியர் மதுரை யைக் கைப்பற்றி 50 வருடங்கள் ஆண்டனர். மகமதியரிடமிருந்து விசயநகரப் பேரரசு பாண்டி நாட்டைக் கைப்பற்றிற்று. இதற்குப் பின் மேனாட்டவர் தென்னிந்தியாவிற்குட் புகுந்தனர்.
பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் பார்க்கிலும் பரப்பிற் குறைந்ததாயினும், செல்வாக்கிலும், செல்வத்திலும் குறைத்ததன்று.
வன 120 கன

பாண்டி நாட்டிற் குவிந்து கிடந்த செல்வத்தையும் அதற்குக்காரண மான வாணிபத்தையுங் கவரவே மகமதியரும், போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தமிழகஞ் சூழ்ந்த தென்கிழக்காசியாவில் வட்டமிடத் தொடங்கினர்.
மூவேந்தர் ஆட்சி முற்றாக மறைந்தது. வரலாறுக்கு முற்பட்ட
காலந்தொட்டு வந்த தமிழ் மக்கள் சுதந்திரத்தை இழந்து அடி மைகளாகினர்.
சோழப் பேரரசில் தமிழ் மொழியும் சைவமும் தழைத்தோங் கின. பல நூல்கள் எழுந்தன. ஒரு மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், தொழில் வாணிபம், செல்வம், முதலியவற்றின் வளர்ச்சிக்கும் அரசியற் சுதந்திரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியத்திற் பல குறைபாடுகளைச் சிலர் எடுத்துக் காட்டுகின்றனர்.
(1) நூல்கள் பெரும்பாலும் பிரபந்தங்களாகும். கோவை:உலா இரட்டை மணிமாலை, கலம்பகம், பரணி எனப்பிரபந்தங்கள் முப்பத் தாறு வகைபடும்.
(2) நூல்கள் பெரும்பாலும் சமயச் சார்புடையவை.
(3) தமிழில் வடமொழி அதிகங் கலந்து விட்டது.
(4) பிராமணியக் கொள்கைகள் பரவி விட்டன.
(5) நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து G. Lo mt AS
பெயர்ப்புக்களாகும்,
இவற்றைக் குறைபாடுகளாக எடுத்துக் கொள்ள முடியாது ஒவ்வொரு நூலையும் அதன் சொல் பொருள் நயம் பற்றி மதிப்பிட வேண்டும்,
10ம் நூற்றாண்டு
வளையாபதி குண்டலகேசி-நாத குத்தனார் சிந்தாமணி-திருத்தக்கதேவர்
யாப்பருங்கலம்யாப்பருங்கலக்காரிகை அமிதசாகரர் س
பட்டினத் தடிகள் பாடல்கள்
- 121 അ

Page 69
7,
9.
10. 11. 12.
13.
4.
15.
6.
17.
18.
9.
20.
21.
22.
23.
11ம் நூற்றாண்டு
உதயண குமார காவியம் யசோதர காவியம் நாககுமார காவியம்
வீரசோழியம்-புத்தமித்தரனார் தண்டியலங்காரம்-தண்டி கலிங்கத்துப்பரணி-சயங்கொண்டார்
12ம் நூற்றாண்டு
கந்தப்புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார் பெரிய புராணம்-சேக்கிழார் இராமாயணம்-கம்பர்
மூவருலா
ஆத்திசூடி முதலிய ஒளவையார் நூல்கள் திருவுந்தியார் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் நளவெண்பா-புகழேந்திப் புலவர்
நன்னூல்-பவணந்தி முனிவர்
13ம் நூற்றாண்டு
சிவஞான போதம்-மெய்கண்ட தேவர்
சிவஞான சித்தியார்-அருணந்தி சிவாச்சாரியார்
(2) 14ம் நூற்றாண்டு தொடக்கம்
இச்சமீப காலத்தைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் உள. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நாம் தமிழரைப்பற்றி எழுதுவது எனது நோக்கமன்று. இதுவரையும் அரசுகளும் அரசர்களும் மாறின போதிலும், பேரரசுகள் காலத்துக்குக் காலம் தோன்றி மறைந்த போதிலும் இவை யாவும் ஒரே நாகரிகமும் பண்பாடுமுடைய ஒரு நாட்டு ஓரின மக்களிடையில் நடந்தவையாகும். போர்கள் அடிக் கடி நிகழ்ந்த போதிலும், இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை
- 188 അ

பாதிக்கப்படவில்லை. பண்டுதொட்டுப் பற்பல காலங்களில் இந்தியா விற்குட் புகுந்த சீன, சித்ய காக்கேசியக் குழு மக்கள் இந்திய மக் களுடன் கலந்து ஒன்றாகினர். இக்கலப்பிலிருந்து இந்திய மொழி களும், நாகரிகமும், பண்பாடும், சமயங்களும் தோன்றின. ஆரியம் திராவிடம் என்பவை திசையைக் குறிக்குஞ் சொற்களன்றி இனத் தைக் குறிக்குஞ் சொற்களன்று எனக் கண்டோம். சீன, சிதிய காக்கேசியக் குழுக்களின் பேச்சு மொழிகளுடன் திராவிடம் கலந்து வட இந்திய மொழிகள் தோன்றின. சமஸ்கிருதம் மத்திய இந்தியா விற் பிற்காலத்திலே தோன்றி வளர்ந்த செயற்கை மொழி. தமி ழும் சமஸ்கிருதமும் தொடர்புடைய ஓரின மொழிகள் எனக் காஞ்சி புராணங் கூறுகிறது.
"வட மொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென் மொழியை
உலக மெலாம் தொழு தேத்தும்
குடமுனிக்கு, வலியுறுத்தார்
கொல் லேற்றுப் பாகர்"
14ஆம் நூற்றாண்டிலிருந்து மொழிகள், பண்பாடு, சமயத்தில் வேறுபட்ட அந்நியர் இந்தியாவிற்குட் புகுந்தனர். இவர்கள் வர்த் தகத்துக்காக இந்தியாவிற்குட் வந்து நாட்டின் பல பாகங்களைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமது ஆட்சியை இந்தியா முழுவதிலும் நிறுவும் வரை யும் நாடெங்கும் போர்களும், கொலைகளும், கொள்ளையடித்தலும் நடந்தன. இவ்வந்நியரின் சமயங்கிள் இந்தியாவிற்குட் புகுந்தன? சமயச் சண்டைகளும், மத மாற்றங்களும் தோன்றின. இந்தியா (தமிழ் நாடும் உட்பட) அழிந்தது. இந்து சமயமும் இந்தியப்பண் பாடும் நாகரிகமும் சீர்குலைந்தன. செல்வம் செழித்தோங்கிய இந் திய நாடு வறுமையடைந்தது. விவசாயமும் தொழில்களும் குன் றின. வாணிபத்தை அந்நியர் கைப்பற்றினர்
இக்காலத்தில் தென்னாட்டை மகமதியரும் விசயநகரப் பேரர சர்களும் ஆண்டனர். இவர்களிடையில் இடையறாப்போர்கள் நடந் தன. 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விசயநகர அரசர் துங்கபத் திரை நதிக்கரையிற் சிற்றரசர்களாக இருந்தனர். படிப்படியாகப் பல மன்னர்களை வென்று சில காலத்திற்குள் இச்சிற்றரசு சோழப் பேரரசை ஒத்த பேரரசாகிற்று. விசய நகரப் பேரரசைப் பற்றிய
مست۔ 1223 سس۔

Page 70
பல நூல்கள் உள. இங்கு நாம் இப்பேரரசின் விளைவாகத் தமிழ் நாட்டிலேற்பட்ட மாற்றங்களை மட்டுமே சுருக்கமாகப் பார்ப் Guntab. м
(அ) விசயநகரப் பேரரசர் வடமொழியையும் தெலுங்கையும் ஆதரித்தனர்.
(ஆ) இக் காலத்தில் தெலுங்கர் பெருந்தொகையாகப் படை யெடுத்து வந்து தமிழ் நாட்டிற் குடியேறினர். தெலுங்கர், கன்னடி யர் படைகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டன. தெலுங்கு நாட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் தமிழ் நாட்டிற் குடியேறி னர். தமிழ்ச் சிற்றரசர்களின் இடத்தில் நாயக்கர் ஆண்டனர். தெலுங்கருக்கே நிலங்கள் அளிக்கப்பட்டன. இவர்கள் நிலப்பிரபுக் கள் அல்லது பண்ணைக்காரராயினர். ஆட்சியை மட்டுமன்றி வாணி பத்தையும் செல்வத்தையும் கைப்பற்றினர். தமிழ் மக்கள் மேலும் வறுமையடைந்தனர். ஒரு பக்கம் மகமதியர் கொடுமையினாலும் மறு பக்கம் தெலுங்கர் கொடுமையினாலும் தமிழ் மக்கள் துன்புற்ற னர்,
(இ) தெலுங்குப் பிராமணர் தமிழ் நாட்டிற்கு வந்தனர். பிராமணியம் மேலும் பரவிற்று. இக்காலத்தில் சாதி வேற்றுமை களும் இந்து மதத்துக்கு இழுக்கான கொள்கைகளும் பழக்க வழக் கங்களும் பரவின. தெலுங்குப் பிராமணர் சைவருக்கும் வைணவ வருக்குமிடையிற் பகைமையையும் பொறாமையையும் உண்டாக்கினர். வைணவ சமயம் பரவிற்று.
(ஈ) எனினும், விசயநகரப் பேரரசு தென்னாட்டில் மதத்தைக் காப்பாற்றிற்று. இப்பேரரசு இருந்திருக்காவிடின், தென் இந்து நாட் டில் இந்து மதம் அழிந்திருக்கும்.
தமிழ் மொழி இக்காலத்தில் வளர்ச்சியடையவில்லை. பெரும் பாலான நூல்கள் பண்டார சாத்திரங்களாகும். தல புரணங் களும் சதகங்களும் பள்ளுகளும், சிற்றரசர்களைப் பற்றிய மான்மியங் களும் தோன்றின, சுதந்திரமற்ற தமிழ் மக்கள் உன்னத இலட்சியங் களை இழந்தனர், அற்ப சிறு விடயங்களைப் பற்றி நூல்கள் எழு தினர். இந்நூல்களில் அடிமை மனப்பான்யைக் காணலாம். இக் காலத்திற் சிறந்த நூல்களாக மிகச் சிலவற்றையே குறிப்பிடலாம்:
1. பாரதம்-வில்லிபுத்தூராழ்வார்
திருப்புகழ்-அருணகிரிநாதர் சீறாப்புராணம்-உமறுப்புலவர் தேம்பாவணி-வீரமாமுனிவர்
தாயுமானவர் பாடல்கள்
:
c
一 124一

(8) இராமலிங்க சுவாமிகள் பாடல்கள் (7) தமிழ் விடுதூது - அமிர்தம் பிள்ளை
ஆங்கிலேயரும் வாணிபத்திற்காகவே இந்தியாவிற்கு வந்தனர். கிழக்கிந்திய தீவுக் கொம்பனியின் ஆட்சிக் காலத்திற் பல அநீதி களும் போர்களும் கொலை களவுகளும் நடந்தன. ஆங்கிலேயர் தமது சாம்ராச்சியத்திலிருந்த நாடுகளைச் சுரண்டிச் செல்வமடைந்த னர். என்பதில் ஓரளவு உண்மையுண்டு. எனினும், இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அரசியல் நிலை படிப் படியாகச் சீரடைந்தது; இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்தனர். நாடு முழுவதிலும் கலவரங்களை யும் போர்களையும் தடுத்து அமைதியை நிலை நாட்டினர். யாவருக் கும் சம நீதி வழங்கினர், சமவாய்ப்பு அளித்தனர். கல்வியைப் பரப் பினர், இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் என்றுமுள தமிழ் மீண்டும் தலையோங்கிற்று. பல துறைகளில் பல தமிழ் நூல் கள் தோன்றின,
"தந்தை அருள் வலியாலும்-இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும் பழி தீரும்-புகழ் ஏறிப் புவியிசை என்றும் இருப்பேன்"
surpris),
ஆங்கிலம் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்த தன் றிச் தடையாக இருக்கவில்லை. தமிழர் தொழிலிலும் வாணிபத்தி லும் முன்னேறினர் ஆங்கில சாம்ராச்சியத்திலிருந்த பல நாடுகளிற் குடியேறினர்
ح--- 235 Il بسته

Page 71
பதினொராம் அத்தியாயம்
ஈழத்தில்-நாம் தமிழர்
**புத்த மதத்தின் மூலம் வட நாட்டுப் பண்பாடு புகுந்து சிங்கள மொழி வேறுபடுவதற்கு முன், இலங்கை தமிழகமாக இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும், வட இலங்கை தமிழ் நாட்டை விடத் தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவ ரான வட இலங்கைத் தமிழர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வரல்லர். அவர்கள் சிங்களவரிலும் பழமையான இலங்கை நாட்டு மக்களாவர்' - பன்மொழிப் புலவர் கா, அப்பாத்துரை. 'அதிசயம் மிக்க இந்து வெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட இனம் பண் டைக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. ஹதரபாட்டில் எடுக்கப்பட்ட பிரேதங்கள் புதைக் கும் தாளிகளும், தின்னவேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாத்திரங்களும் கேகாலையி னுள்ள குகை யொன்றிற் காணப்பட்ட கல் வெட்டுப் பொறிப்புகளும் இதற்குச் சான்று பகர்கின்றன" வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரி யார். 'இலங்கையில் முதன் முதலிற் குடியேறியவர் தென்னிந்திய மக்கள் என்பதையும் விஜயன் வருகைக்கு முன்னர் திராவிடமும் திராவிட நாகரிகமும் இலங்கை முழுவதும் பரவியிருந்தன என்பதை யும், வட மாகாணத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கிலேதான் நாகரிகம் முதன் முதலில் தோன்றிப் பின்பு ஏனைய பகுதிகளுக்குப் பரவிற்று." புலவர் C. S. நவரத்தினம்
"சிங்களம் உண்மையில் ஒரு திராவிட மொழியாகும். தமிழ் அடிப்படையில் வளர்ந்தது. பாளியிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந் தும் பெருந்தொகையான சொற்களைக் கடன்பட்ட போதிலும் அஃது அமைப்பிலும் அறிகுறிகளிலும் தமிழின் குழவியாகும் சொற் றொடரியல் மரபு வழக்கியல் விதிகள் பெரும்பாலும் தமிழ் விதிகளை ஒத்தனவாக இருக்கின்றன"-முதலியார் குணவர்தன.
சிலர் பாண்டி நாட்டைச் செந்தமிழ் நாடென்பர், வேறு சிலர் சோழநாட்டைச் செந்தமிழ் நாடென்பர். ஆனால், வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடென்பதை இவ்வதிகாரத்திற்
- 126 -

காண்போம், (பண்டு தொட்டுத் தமிழுககும் சைவத்துக்கும் ஈழம் இருப்பிடமாக விளங்கியது. ஈழத்தை நினைக்கும் போது,
“எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே" என்பதை நினைவு கூர்வோமாக
இன்று இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகும். விஞ்ஞான உலகம், முன்னோக்குப் பேசுகிறோம். எனினும், இலங்கை வரலா றாக ஒரு புராணங் கற்பிக்கப்படுகிறது. மகாவம்சம் அநுராதபுரத் திலாண்ட சிற்றரசர் வம்சத்தின் புராணம் அல்லது மான்மியமா கும். இச்சிற்றரசர் புத்த மதத்தையும் சங்கத்தையும் ஆதரித்தபடி , யினால், அவர்கள் புகழைப் புத்த குருமார் பாடினர். சங்கத்தின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் நிலை நாட்டுவது இந்நூலின் நோக்கமாகும். புராண முறைப்படி எழுதப்பட்டது. புராணங்கள் எழுதுவதிற் புத்தகுருமார் எமது பிராமணரிலும் பார்க்க குறைந்த
வர்களல்லர்.
பண்டைக்காலத்தில் இந்தியாவிற் பல்லாயிரஞ் சிற்றரசுகள் இருந்தன. ஒவ்வொரு குலமுங்குடியும் தன்னைத்தானே ஆட்சி செய் தது. காலத்துக்குக் காலம் பேரரசுகள் தோன்றின. தென்னாட்டிலே சேர, சோழ, பாண்டியர் பேரரசுகள் நெடுங்காலம் நீடித்திருந்தன. எனினும், இவர்களும் சிற்றரசர்களாக இருந்த காலங்களுமுண்டு. சிற்றரசர் பேரரசருக்கு திறை கட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திலே திறை கட்ட மறுத்தனர். அடிக்கடி போர்கள் மூண்டன இலங்கையிலும் பல சிற்றரசுகள் இருந்தன. அநுராதபுரச் சிற்றரசு இவற்றில் ஒன்றாகும். அநுராதபுர அரசர் இங்கையிற் பேரரசாக இருந்தனரா? அவ்வாறாயின் எவ்வெவ் காலங்களில்? அநுராதபுரச் சிற்றரசின் புராணம் இலங்கையின் வரலாறாகாது. இந்தியாவிற் சிற்றரசர் புராணங்கள் பல்லாயிரம் உள. இலங்  ைக யி லும் இவைபோன்ற புராணங்கள் உள) சிங்களத்தில் மகாவம்சம், சூளவம்சம் முதலியன தமிழில் யாழ்ப்பாண வைபவ மா லை, வூன்னியர் புராணம், கோணேஸ்வர புராணம், மட்டக்களப்பு மகாத்
கம், முதலியன.
- 127 -

Page 72
சிங்களவர் தம்மை ஆரியர் என ஒரு கட்டுக் கதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆரியர் எனுஞ் சொல்லின் பல கருத்துகளை யும் இரண்டாம் அதிகாரத்திற் படித்தோம். எக்கருத்தில் இவர் கள் தம்மை ஆரியர் என்கின்றனர். இன அடிப்படையில் ஆரியரா? அதாவது இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானியக் குழுக் களின் சந்ததிகளா? அல்லது திசை அடிப்படையில் ஆரியரா? அதா வது வட இந்தியாவிலிருந்து வந்தவரா? விஜயன் இலங்கைக்கு வர முன் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் நாகரும், இயக்கரும் முண்டரும் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.
இவர்கள் அழிந்து விடவில்லை. இலங்கையில் வாழும் மககளிற் பெரும்பான்மையானோர் தமிழராயினும் சரி சிங்களவராயினும் சரி இவர்களின் சந்ததிகளாவர். நாகர் இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்தனர். ஆதலால் தமிழர் பெரும்பாலும் நாகரா வர். இயக்கரும் முண்டரும் கிழக்குப் பகுதிகளிலும் மத்திய பகு திகளிலும் வாழ்ந்தனர். ஆதலாற் சிங்களவர் பெரும்பாலும் இயக் கரும் முண்டருமாவர். இவை யாவுந் திராவிட இனங்களென முன்பு கூறினோம். எவராவது சத்தேகப்பட்டால் தம்மைத்தாமே கண்ணாடி யிற் பார்த்துத் தெளிவு பெறலாம்.
அக்காலத்திற் குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆத லாற் பண்டுதொட்டுத் தென்னிந்தியாவிலிருந்து பல குழு மக்கள் பற் பல காலங்களில் இலங்கைக்கு வந்து குடியேறினர். இங்கு வாழ்ந்த நாகர் இயக்கர், முண்டர்களுடன் கலந்து ஒன்றாகினர். வட இலங் கையிற் குடியேறியவர் பெரும்பாலும் பாண்டி நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் வந்த தமிழராவர். சிங்களவர் தங்களை விஜயனின் சந்ததிகள் எனக் கூறிக்கொள்ளுகின்றனர். விஜயனின் அரச பரம்பரை, ஐந்தாம் தலைமுறையுடன் அழிந்தது எனவும் அதற்குப்பின் நாகர் வமிசத்தவரும் தமிழரும் கலப்பு மிசிர குலத்த வரும் அநுராதபுரத்தில் ஆண்டனர் எனவும் மகாவம்சமே கூறுகிறது: சிங்களவரிற் சிலர் விஜயனின் சந்ததிகள் என எடுத்துக் கொண்டா லும், எல்லாச் சிங்களவரும் விஜயனின் சந்ததிகளாக இருக்க முடி யாது. விஜயனும் திராவிடன் என்பதை அறிந்தால் அவனையே தூற்றுவர்;T இக்காலச் சிங்களவர் போல் இருக்கிறது. விஜயன் கலிங்க தேசத்திலிருந்து காவாலித் தோழர்களுடன் நாடு கடத்தப் பட்டவன். கலிங்கம் பழைய காலத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தது. தக்கணத்தில் இருக்கிறது. அன்றும் இன்றும் இந்நாட்டில் வாழும் மக்கள் திராவிடராவர். விஜயன் திராவிடன். இந்து மதத் தவன். இதில் எவருக்காவது சந்தேகமிருந்தால் ஒரு முறை கலிங் கத்துக்குப் போய் அங்கு இன்றும் வாழும் மக்களைப் பார்த்துத் தெளிவு பெறலாம்.
- 128

இதை உணர்ந்த பிற்காலச் சிங்களவர் சிலர் தாம் இன அடிப் படையில் ஆரியர் என்பதை நிலைநாட்டுவதற்கு விசயனின் தாயகம் வங்காளம் என வாதித்தனர். வங்காளம் போனாலும் அங்கு வாழும் மக்கள் மங்கோலிய திரவிடர் என்பதை இவர்கள் உணரவில்லைப் போலும். ஒருவர் கலிங்க நாடு மலேசியாவில் இருந்ததெனவும், அங்கிருந்தே விசயன் வந்தான் எனவும் எழுதினர். இதன் உண்மை எவ்வாறாயினும், மலேசியாவிற்குப் போனாலும் அங்குவாழும்மக்கள் மங்கோலிய - நாகர் திராவிட இனத்தவர் என்பதை இவர் உணர வில்லை. இப்போது ஒரு புதுக்கதை தோன்றியிருக்கிறது. சிங்கள வர் அலெக்சாண்டருடன் இந்தியாவிற்குட் புகுந்த படைகளின் சந்ததிகளாம். ஒரு வேளை தாயகத்தை வட துருவத்துக்குக் கொண்டு சென்றாலும் செல்லலாம். அங்கு வாழும் எஸ்கிமோக்களும் திரா விடர் என்பதை அறிந்தால் இவ்வாறு செய்யமாட்டார். ஒரு கட்டுக்கதைக்கு ஆதாரம் தேடி எத்தனை கட்டுக் கதைகள்? புராணங்கள் ? அண்டப் புழுகுகள் ? இலங்கை வாழ் சிங்களவரும் தமி ழரும் பெரும்பாலும் விசயன் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த நாகர், யக்கர், முண்டர், லம்பகர்ணர், கபோயியர், மிசிரர், மோரி யரி, புலையர், முரிதிசர், வேளிர், தமிழர், வணிகர், பிராமணர் குலங்குடிகளாவர்.
சிங்களவர் பெரும்பாலும் நாகரும், இயக்கரும், முண்டரும், கலிங்கரும் கலந்த இனத்தவர். பிற்காலத்தில் வேறு பல குலங் களும் இங்கு வந்து குடியேறிக் கலந்தன.
(அ) பாண்டிய சோழப் படை வீரர் - பெரும்பாலும் மறவர் படைகள் - சிங்களப் பிரதேசங்களிற் குடியேறிச் சிங்களவருடன் கலந்து இன்று சிங்களவராகி விட்டனர்.
(ஆ) வன்னியர் - சோழப்படைகளுடன் வன்னியர் இந் நாடு வந்து குடியேறினர். வன்னியர் வரலாறு பற்றிப் பல நூல்கள் உள. வன்னியர் விசேடமாகத் தொண்டை நாட்டவர் காடவர் மரபினர். காடுகள் அடர்ந்த முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். படைக்கலப் பயிற்சியிற் சிறந்து விளங்கினர். போரில் வீரர், மறவருக்குச் சம மானவர். தென்னாட்டு வேந்தருக்குப் படைத்தலைவர்களாகப் பலர் இருந்தனர். சோழர் படையில் வன்னியர் பெருந் தொகையாக இருந் தனர். இலங்கைக்கு வந்த வன்னியரிற் பெரும்பாலானோர் இன்று சிங்களவராகி விட்டனர். வன்னியருடன் இங்கு வந்த வேறு பல குலத் தவரும் - வில்லி துரையர், வாகையர், ஒட்டர், மலையாளிகள் - இலங்கையிற் குடியேடினர். இவர்கள் வடமத்திய மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் இன்று பெருந்தொகையினராக வாழு கின்றனர். சிங்கள மொழி பேசுவதனால் இன்று சிங்களவராவர் - பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தென்னிந்தியாவில் இருந்து மூன்று குலத்தவர் - கரவர், சலாராகமா, துவர் - இங்கு வந்து குடியேறி னர். இவர்கள் இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதிகளிலிருந்து
- 129 m

Page 73
வந்தனர். இவர்களுடைய தாயகங்களைப் பம்பாய்க்கும், மலையாளத் துக்கும் இடைப்பட்ட பகுதிகளாகக் கருதலாம். இவர்களும் தம் மைப் பற்றி புரணங்கள் எழுதி வைத்திருக்கலாம். எனவே சிங் களவர் எக்குலத்தவராயினும் திராவிடர். அவர்கள் மொழியுந் திராவிட மொழிகளில் ஒன்றாகும் பண்டை இலங்கை மக்களின் மொழி ஈழு அல்லது எலு எனப்படும். புத்த சமயத்தின் பின் பாளி சமஸ்கிருதக் கலப்பினாற் சிங்களமாயிற்று. கிறிஸ்து சகாப் தத்தின் பின் சிங்களம் இலக்கியமும் இலக்கணமும் பெற்றது - வட இலங்கையில் ஈழு மொழி தமிழுடன் கலந்து தமிழாயிற்று.
இந் நாட்டில் வாழும் தமிழரும் சிங்களவரும் ஓரினத்தவர் - திராவிடர். மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டவர். இன்று மொழிகளின் அடிப்படையில் இனங்கள் வகுக்கப்படுகின்றபடியினால் ஈரினந்தவர் எனக் கூறலாம். பண்டுதொட்டு இந்நாடு சிங்களவருக் கும் தமிழருக்கும் சொந்தமானது, பல நாடுகளில் இரண்டு மூன்று இன மக்கள் ஒற்றுமையாகவும் நாகரீக மனிதராகவும் வாழ்வதைக் காண்கிறோம். இரண்டு மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. இலங் கையில் ஏன் ஆக்கிரமிப்பும் அநீதிகளும் அட்டூழியங்களும் நடை பெறுகின்றன? ஈரின மக்கள் சரிசமனாகவும் ஒற்றுமையுடனும் பொதுவுடமைச் சமுதாயத்தில் மட்டுமே வாழலாம் எனப் பொது வுடமை வாதிகள் கூறுகின்றனர். இஃது உண்மையா? இக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப் பாகும், ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யலாம்? பொதுவுடமை வாதிகள் கூறுவது உண்மையானால், யாவரும் பொது உடமைவாதிகளாவது நன்று!
இப்போது ஈழத்தில் தமிழராகிய எமது வரலாற்றைச் சுருக்க மாகப் பார்ப்போம். வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக்காலத்திலே எமது நாடு தமிழகமாகிய குமரி நாட்டிற்கு வடக்கேயும் தாமிர பரணியாற்றுக்குத் தெற்கேயும் இலேமூரியாக் கண்டந்திலிருந்த பகுதியாகும். இப்பகுதி இராமாயணக் காலம் வரையும் இந்தியாவுடன் தொடர்பாக இருந்தது. மாலைதீவுகள் வரையும் பரவிக் கிடந்தது. அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தவரான முண்டரும் இயக்கரும் நாகருமாவர். மிருகேந்திர புராணம் இவர் களை மிலேச்சர் எனக்குறிப்பிடுகிறது. தலைச்சங்கமிருந்த முரஞ்சியூர், முடிநாகராயர் ஈழ நாட்டு நாகர் குலத்தவராகக் கருதப்படுகின்ற னர். தொல்காப்பியர் ஈழநாட்டுக் 'காப்பியர்" குலத்தவரென இராச நாயக முதலியார் கூறுகிறார். கடைச்சங்கப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவராவர். இவருடைய ஏழுபாடல்
سے 130 سے

கள் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. இவை எவ்வாறாயினும், இம் மிகப் பழைய காலத்திலே ஈழநாடு தமிழ்நாடாக இருந்தது என்பதில் ஐயமில்லை. al
இராமாயண காலத்தில் இயக்கர் கோனாகிய இராவணன் இலங்கையிற் பேரரசனாக இருந்தான். இக்காலத்துக்கு முன்னரே சிற்சில கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்து விட்டது. இராவணன் தென்னிந்தியாவிலுஞ் சில பகுதிகளை வென்று ஆண்டான். இவன் மறத்தமிழன், சிவ பக்தன்.
"தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா அன்றிருந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்" (பாரதிதாசன்) இராவணன் காலத்துக்குப் பின்பு இயக்க அரசர்கள் வலிகுன்றி அவர்களுடைய சீருஞ்சிறப்பும் செல்வமும் புகழும் மறைந்தன. அன்று இயக்கர் குலத்தை இனத்துரோகி ஒருவன் வேதம் பேசி அழித்தான். இன்று எம்மைப் பலர் பணஞானம் பேசி அழிக்கின்றனர், நாகர் அரசுகள் தோன்றின. ஒருவேளை இயக்கர் சிற்றரசர்களாகச் சிலவிடங்களில் இருந்திருக்கலாம். இராவணனின் மனைவி மண்டோ தரி. இவள் மாதோட்டையில் வாழ்ந்த நாகர் அரச குலத்தவள். இக் கம்மிய நாகரைப் பற்றி இராசநாயக முதலியார் அநேக வர லாற்று விபரங்கள் கொடுக்கிறார். இப்பண்டைக் காலத்திலே யாழ்ப் பாணத்தின் நிலைமையைப் பற்றியும் அவர் கூறுகிறார். மகாவம்சம், சூளவம்சம், யாழ்ப்பாண வைபவமாலை முதலிய வை போன்று இவருடைய நூல் புராணமன்று, இது வரலாற்று ஆராய்ச்சி நூலாகும், 'இப்போது குடாநாடாகவிருக்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில் - அதாவது கிறித்துவுக்கு அநேக வாயிரம் ஆணடுகட்கு முன்னர் - இரண்டு தீவுகள, கவிருந்தது. மேற்கே நாகதீவம், மணி நாகதீவம், மணபுரம், மணிபல்லவம் எனும் நாமங்கள ல் வழங்கப் பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு, எரும்ைத்தீவு என்று பெயர் பெற்ற சிறு தீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிககப் பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த தீவகம் பல தீவுகள1கப் பிரிந்தது. காரைத்தீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினா தீவு, நெடுந்தீவு முதலிய தீவகங்களும் வலிகாமமும் இப்பெருந் தீவ கத்தின் பகுதிகளேயாம். அவ்வாறே, கிழக்கே ஒன்றாயிருந்த சிறு
- 13 m

Page 74
தீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப் பள்ளியெனும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல், எனுங்களப் புக் கடல்கள், முன்னே வங்காளக் குடாக் கடலுடன் சேர்ந்து ஆழ மும் அகலமும் உள்ளனவாயிருந்தன. அன்றியும் மேலைத்தேசங்களி லும் சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய் யுங் கப்பல்களுக்குப் பெரு வழியாகவும், சோளகம், வாடைக்காற்றுக் கள் தொடங்கும் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு அக்கப்பல் களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன. .
ஒவியரல்லாத மறுநாகர் வகுப்பைச் சேர்ந்த அரசர்கள் கந்த ரோடையிலும், எருமை முல்லைத் தீவிலும், குதிரை மலையிலுமிருந்து அரசாண்டு வந்தார்கள், அல்லியரசாணியும், எழுணியும், பிட்டங் கொற்றனும் குமணனும் குதிரை மலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக் கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமை யூரன் எருமை முல்லைத்தீவிலும் இருந்து அரசாண்டமை பண்டைத் 9;Lfilltb 906vé8uil4, artréi) 91,0) in I Gort tib... - · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · ·
LLLLLL SLLLLLY SSSSSSS SLLLL0L SSSLLLLLL LLL LLLLLLL L LSLSLLL LLLL SSSS LLLLLL LLLL S S S S L0L00 CLC0L LL LLLLLS L0LLL LLLLC LLLLLL 0CL00 LLLLL LL 0 LL L LC CLLLLLL L L0LSL LLLLLCL0
பன்னெடு காலமாகப் பீனிசியர் என்னும் அரேபிய தேசவாசிகள் இந்தியா இலங்கையுடன் கப்பல் மார்க்கமாக வாணிபம் நடத்தி வந்தார்கள். விவிலிய நூலில் 'ஓவிர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும், தந்தமுங், குரங்குத் தோகையுங் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்ட ஒவிர் தேசம் ஓவியராகிய நாகர் வாழ்ந்த மாந்தையே’
வs இலங்கையிலுள்ள் பெரிய குளங்கள்
வவனிக் குளம், பாவற்குளம் முதலியவை விசயன் இலங்கைக்கு வரமுன் கட்டப்பட்டவையாகும். கி. பி. முதலாம் இரண்டாம் நூற் றாண்டுகளிற் கட்டப்பட்ட பெரிய குளம், மாமடு, ஒலுமடு, கனக ராயன் குளம், பண்டாரகுளம் முதலியவையுந் தமிழராற் கட்டப் பட்டவையாகும். திருகோணமலைப் பகுதியிலுள்ள கந்தளாய்க் குள மும் விசயன் காலத்துக்கு முற்பட்டதாகும். நாகதீவு, நாகர்கோயில், மாதோட்டம் முதலியவை பற்றிய குறிப்புக்கள் குறுந்தொகையிற் காணப்படுகின்றன.
புத்தமதம் இலங்கைக்கு வரமுன் ஈழ மக்கள் இந்துக்களாக இருந்தனர். மத மாற்றத்தினால் இன மாற்றம் ஏற்படுவதில்லை;
- 132 -

"விசயன் இலங்கைக்கு வருவதற்கு ஆதிகாலத்துக்கு முன்னரேயே இலங்கையிற் பெயர் பெற்ற ஐந்து சிவாலயங்கள் இருந்தன-திருக் கேதீசுவரம், முனிசுவரம், தண்டேசுவரம், திருக்கோணேசுவரம், நகு லேசுவரம்." - பீரிஸ். இந்த ஐந்து கோயில்களையே இன்று சில சிங்களவர்கள் பறிக்க எத்தனிக்கின்றனர்.
திருகோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயில் பற்றிப் பல நூல்கள் உள; தட்சண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணாசல வைபவம். இக்கோயிலின் தொடக்கத்தைக் கோணே சர் கல்வெட்டுக் கூறுகிறது.
"திருந்துகலி பிறந்தைஞ்னூற் றொருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர் புரிந்திடப மாதமதி லீரைந்தாந் தேதி திங்கள் புணர்ந்த நாளில்" அதாவது கி. மு. 2590இல் என்க. குளக்கோட்டன் சோழ மகராசா என்ற புராணக் கதையை நாம் நம்பவேண்டியதில்லை. புராணத்திற் சாதாரண மனிதனும் மகாராசா வாகிறான். நாடு கடத்தப்பட்ட விசயன் மகாவம்ச புராணத்திற் சிங்கத்திலிருந்து உதித்த கலிங்கத்து இளவரசனாக வில்லையா?
திருகோணமலை எக்காலத்திலும் சைவத்திருத்தலமாகிய தமிழ் நாடாக இருந்தது. சோழப் பேரரசுக் காலத்தில் திருகோணாமலை யைச் சோழப் பிரதிநிதிகள் நேராக ஆண்டனர். திருகோணாமலையி லாண்ட சிற்றரசர் சில காலம் தனியாட்சி செய்தனர். சில காலம் சிங்கள அரசருக்குத் திறைகட்டி ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பேரரசின்கீழ்ச்சிற்றரசர்களாக இருந்தனர். திருகோணா மலை தேவாரப் பாடல்கள் பெற்ற திருப்பதியாகும்.
"மந்திரத்து மறைப் பொருளுமாயினான் காண்
மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே'
- திருநாவுக்கரசு நாயனார்.
** மாதரொடு மாடவர்கள் வந்தடி
யிறைஞ்சி நிறை மாமலர் கடுய்க் கோதைவரி வண்டிசை கொள் கீத முரல் கின்றவளர் கோகரணமே”
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்: நம்பொத்த என்ற சிங்கள நூல் வட இலங்கையைத் தமிழ்ப் பட்டணம் எனவும் இப்பட்டணத்துளடங்கிய இடங்களுள் திரு
- 133 -

Page 75
கோணமலை ஒன்றாகும் எனவுங் குறிப்பிடுகிறது. போர்த்துக்கீசப் பாதிரியார் குவைறோஸ் என்பவர் கோணேசுவரர் கோயிலைப் பற் றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-
"இக்கோயில் கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக் களின் உரோம புரியாகும்; இத்திருத்தலத்துக்கு யாத்திரிகர் கூட் டங்கள் இடையறாது வந்து சென்றன, இந்தியாவிலுள்ள புண்ணிய தலங்கள் பலவற்றைக் காட்டிலும் - இராமேஸ்புரம், காஞ்சிபுரம் திருப்பதி, திருமலை, ஜகத்நாத், விஜந்தி முதலியவற்றைக் காட் டிலும்-திருகோணாமலை சிறந்த புண்ணிய தலமாகக் கருதப்பட் டது.'
கி. மு. 1000இற்கு முற்பட்டிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் வந்து வட இலங்கையிற் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்தனர். விசயன் வருகைக்கு முன்பு கி. மு. ஆறாம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தை ஆண்ட குளோதரன் நாக தீவி லாண்ட மாகாதரனின் மருகன் என மகாவம்சங் கூறுகிறது. தென் னிந்தியாவிற்கும் வட இலங்கைக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது.
கி. மு. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் தென்னிந்தியத் தமி ழருக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் சமுதாய மணத் தொடர்புகள் இருந்தன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலும் முத லாம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் தமிழர் மரபினர் இலங்கையி லாண்டனர். கி. மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி. பி. முதலாம் நூற் றாண்டுக்கும் இடையில் பாண்டிய நாட்டவரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க் குடிமக்களாக வேற்றுமையின்றி நேசத் தொடர்பு கொண்டிருத்தனர். இத் தொடர்புகள் வட இலங்கைத் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை,
கி. மு. 543இல் விசயன் இலங்கையில் இறங்கியதாக மகாவம்சங் கூறுகிறது. இப்புராணக் கதை எவ்வளவுக்கு உண்மையானது என் பதை அறியோம். விசயன் கலிங்க தேச இளவரசன். அவ்வாறாயின், திராவிட இனத் தெலுங்கன். சைவமதத்தவன். விசயன் மரபினருக்கும் வட இலங்கை அரசருக்கும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்புகளை வைபவ மாலை கூறுகிறது. இயக்கர் குலத்து மாது குவேனியைத் துரத்திய பின்பு, பாண்டிய பேரரசன் மகளை விசயன் மணந்தானென மகாவம்சங் கூறுகிறது. இது பெரும் புளுகுக் கதையாகும். விசயன் யாழ்ப்பாணத்திலாண்ட நாக அரச குலத்தில் மணஞ் செய்தான். மேலும் தேவநம்பியத்தீசனின் அன்னையும் மூத்த சிவனின் மனைவியு மாகிய பெண் யாழ்ப்பாண நாகர் குலத்தவள்.
ബ് 184 -

மகாவம்சத்தில் தமிழர் வெற்றிகளெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த படைவீரர் வெற்றிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத் திலே சோழ, பாண்டிய பல்லவப் பேரரசர் இலங்கையிற் படை யெடுத்து வென்றது உண்மையே. ஆனால், அநுராசபுர அரசின் ஆரம்ப காலத்தில் அதை வென்று ஆண்ட தமிழர் வட இலங்கையி லாண்ட தமிழராவர். சுப்பன் எனும் காவற்காரன், சேனன் எனும் குதிரை வாணிகன், ஏலேல சிங்கன் அநுராதபுரத்திலாண்ட மறவர் தலைவர் ஐவர், பாண்டு வமிசத்தவர் - இவர்கள் யாவரும் வட இலங்கைத் தமிழராவர். இவ்வுண்மையை H. W. கோடிறிங்கன் எனும் வரலாற்றாசிரியர் வற்புறுத்துகிறார்.
"போதிய பலமுடைய நிலையான தமிழ்க்குடிகள் அருகில் இருந் திருக்காவிட்டால், ஏலேலசிங்கன் அன்னிய மக்களான அனுராதபுரத் துச் சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டிருக்க முடியாது. தென் னிந்தியாவிலிருந்து இடையறாத குடிவரவினால், அக்காலத்தில் வட இலங்கை தமிழ் நாடாக இருந்தது. மன்னார் மாவட்டத்திற் சிங் களப் பெயர்களோ சின்னங்களோ முற்றாக இல்லாதிருப்பது குறிப் பிடத்தக்கதாகும்." மன்னாரைப் போர்த்துக்கீசர் அழித்தனர்.
கரிகாலன் காலத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாண்டிய, சோழப், பல்லவ, அரசர் இலங்கைமேற் படை யெடுத்து வெற்றி கண்டனர். இந்திய வரலாற்றிலும் சாசனங்களிலும் பல இலங்கைப் படையெடுப்புக்களும் வெற்றிகளும் குறிப்பிடப்படுகின் றன. இவற்றுட் பல மகாவம்சத்திற் குறிப்பிடப்படவில்லை. ஏனென் றால், இக்குறிப்பிடப்படாத படையெடுப்புக்கள் வட இலங்கை அரசின் மேலாக இருந்திருக்கலாம். சிங்கள அரசர் பாதிக்கப்படாவிடின் மகாவம்சங் குறிப்பிடக் காரணமில்லை. இலங்கையிலாண்ட அரச வம்சங்கள் யாவும் தென்னிந்திய அரச வம்சங்கள் என்பதை உணர வேண்டும். இவை கலிங்கர், பாண்டியர், கலிங்கரும் நாகருஞ் சேர்ந்த மிசிரர் முதலிய குலங்களாகும். பிற்காலத்திற் கண்டி அரசர் மலை யாள வம்சத்தவர். கோட்டையிலாண்ட அளகக்கோனார் குடும்ப மும் மலையாளத்தவராக இருக்கலாம். நடுக்கால ஐரோப்பிய அரச குடும்பங்களிடையிற் போல இவர்களிடையிலும் நெருங்கிய உறவும் மணத் தொடர்புகளும் இருந்தன.
வட இலங்கையில் தனிப்பட்ட அரசு இருக்கவில்லையென இக் காலத்திற் சில சிங்களவர் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கின்றனர். விசயன் வருகைக்கு முன்பு வட இலங் கையிலிருந்த நாகவரசுகளைக் குறிப்பிட்டோம், விசயன் வருகைக்குப்
e- 135 -

Page 76
பின்னும் இவ்வரசுகள் தொடர்ச்சியாக இருந்தன. அக்காலத்தில் அநுராதபுரச் சிற்றரசர்களுக்கும் வட இலங்கை சிற்றரசர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்புமிருந்தன. அக்காலத்திலே தான் சில தமிழ் அரசரும் சேனை வீரரும் அநுராதபுரத்தைக் கைப் பற்றிச் சில காலங்களில் ஆட்சி செய்தனர். சிங்கள அரசருக்குத் தமிழ்ப் பிரதானிகள் இருந்தனர்,
வட இலங்கையிற் சிங்கை ஆரியர் ஆட்சி கி. பி. 785 இல் உக் கிரசிங்கனுடன் தொடங்கி கி. பி. 1620 இற் சங்கிலியுடன் முடிவடை கிறது. எட்டு நூற்றாண்டுகள் காலம் இவர்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு அரசு செலுத்தினர் முதலாம் பராக் கிரமபாகு சிங்கை ஆரியர் வம்சத்தவன். கி. பி. 1215இற் கலிங்க மாகின் சிங்கை ஆரியர் அரசைப் பேரரசாக்கினான். பொலனறு வாவை வென்று இலங்கை முழுவதுக்கும் பேரரசனானான், சக்கர வர்த்தி எனப் பெயர் பூண்டான்.
"தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை மன்னவனாஞ் சிங்கை யாரிய மால்" போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த போது சிங்கை அரசர் கடற்படையோடு தரைப்படையுங் கொண்டு வலிமை மிக்க அரசர்களாக விளங்கினர். இவ்வரசின் பரப்பையும் தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளையும் ஜே. ஆர். சின்னத்தம்பி என்பவர் "தமிழ் ஈழம்-தாட்டு எல்லைகள்” எனும் நூலில் தெளிவாக விளக்கு கிறார். மேற்கே கரையோரமாக மாஒயாவரையும் - சிலாபம் முனிஸ்வரம், குசலை, உடைப்பு, ஆணைமடு, புத்தளம், கற்பிட்டி, வண் ணாத்தி வில்லு, குதிரைமலை, வில்பற்று, நானாட்டான் முதலிய பகுதிகள்-ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சியில் இருந்தன. கிழக்குக் கரையோரமாகக் குறுப்பன் ஆறு வரையுமிருந்த நிலப்பரப்பும் ஆரி யச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவ்விராச்சியம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமராட்சி, தென் மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று, பச்சிலைப்பள்ளி, கரைச்சிக்குடி யிருப்பு என்பவை அரசரின் நேராட்சியில் இருந்தன. ஏனைய பகுதி கள் வன்னிமைகளினால் ஆளப்பட்டன. வன்னிமைகள் ஆரியச் சக் கரவர்த்திகளின் மேலாணை ஏற்றனர். திறை கட்டினர். இவ் வாறு வன்னிமைகளினால் ஆளப்பட்ட பகுதிகள் முள்ளியவளை வன் னிமை, கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை பாணமை வன்னிமை, பனங்காம வன்னிமை, கரைத்துறை வன்னிமை, கரைவாகுப்பற்று வன்னிமை, கற்பிட்டிவன்னிமை என்பவைகளாகும்.
حسس 136 مسد

குமணை, உகந்தை, பொத்துவில், அம்பாறை முதலிய பகுதிகள் பானமை வன்னிமையின் ஆட்சியில் இருந்தன. மகாவலிகங்கையை மேற்கெல்லையாகவும் வெருகல் ஆற்றை வடக்கெல்லையாகவும் கொண்டதும் மட்டக்களப்பு, உகணை, ஒமுனை முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் பழுகாம வன்னிமையாகும். வெருகல் ஆற்றுக்கு வடக்கேயும் பறங்கி ஆற்றுக்குத் தெற்கேயும் உள்ளதும், செரு விலை, மூதூர், தம்பலகாமம், திருகோணமலை, கந்தளாய், பதவி யாக்குளம், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் கொட்டியாற்றுப்பற்று வன்னிமையா கும். முல்லைத்தீவு வவுனியாப்பகுதிகள் முள்ளியவளை வன்னிமை யில் இருந்தன. மன்னார்ப் பகுதிகள் பனங்காம வன்னிமையில் இருந் தன. மாஒயா தொடக்கம் முசலிவரையும் கரைத்துறைப்பற்று கற் பிட்டி வன்னிமைகள் இருந்தன. t
போர்த்துக்கீசர் சங்கிலியை வென்றபோது ஆரியச் சக்கரவர்த்தி களின் இராச்சியத்திலிருந்த எல்லாப் பகுதிகளையும் வெல்லமுடிய வில்லை. குடாநாட்டிற்குத் தென்கிழக்கிலிருந்த வன்னிப் பகுதிகளும் முள்ளியவளை வன்னிமையும் போர்த்துக்கீசரின் மேலாண்மையை ஏற்கமறுத்தன. எனினும் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடவில்லை. தன்னாட்சி செய்தன. கொட்டியாற்றுப்பற்று, பழுகாமம், பாணமை வன்னிமைகள் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடி அவர்களுடைய மேலாண்மையை ஏற்றன. எனினும் இப் பகுதிகள் தன்னாட்சித் தமிழ்ப் பிரிவுகளாக இருந்தன. ஆனால் இக் காலந்தொட்டுச் சிங்கள வர் இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்.
சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குப் பயந்தோ திறை கொடுக்க மறுத்தோ தமது இராசதாணியை அநுராதபுரத்திலிருந்து பொலநறுவாவிற்கும் பின்பு குருநாகலைக்கும் தம்பதெனியாவிற்கும் கம்பளைக்கும் மாற்றினர். கி. பி 1344இல் இலங்கைக்கு வந்த இஸ் லாமியப் பிரயாணியாகிய இபுன் பற்றுாற்றா என்பவர் அக்காலத்தி லாண்ட ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:-
"இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தியாகும். கடற்படை வலிகொண்டவன். மலையாளத்திலே நான் தங்கியிருந்தபோது, இவன் தாவாய்கள் சிறியவையும் பெரியவையுமாக நூறு கப்பல்கள் நங்கூர மிட்டுக் கெம்பீரமாக அங்கு நின்றன. இவன் அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன். பாரசீகமொழியில் வல்லுநன். அம் மொழியில் என்னுடன் உரையாடினான். எனக்கு நல்ல பரிசில்களை வாரி வாரியிறைத்தான். தனது இராச்சியத்திற் கிடைக்கும் திறமான
yn 732 appryn

Page 77
முத்துக்களையும் பரிசாக ஈந்தான். நான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரை செய்ய உதவியுஞ் செய்தான்.""
சிலாபத்தில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை ஆரிய அரசருக்கே இருந்தது. கி. பி, 1278இல் யாப்பகுவாவில் ஆரியச் சக்கரவர்த்தியின் வெற்றிக்குப் பின்பு வடமத்திய மாகாணத்தின் பெரும்பகுதியும் யாழ்ப்பாண அரசின் கீழிருந்தது. உக்கிரசிங்கன் தொடக்கம் சங்கிலி வரையுமான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் பெயர்களும் காலங் களும் IIவது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.
போர்த்துக்கீசரும் ஆரியச் சக்கரவர்த்திகளும் கி. பி. 1519 தொடக்கம் கி. பி. 1620வரை ஒரு நூற்றாண்டு காலம் போராடினர், ஈற்றில் சி. பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று. சங்கிலி சிரச்சேதம்செய்யப்பட்டான். சிங்கை ஆரியர் அரச பரம்பரை அழிந்தது. ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளாகினர். பல விடுதலைப் போராட்டங்கள் தோல்வியடைந்தன. போர்த்துக்கீசர் பத்தொன்பது வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தபோதிலும், இவர்களுடைய கொலை, களவு, கொடுமைகள் 140 வருடங்கள் நடைபெற்றன.
கி.பி. 1638 தொடக்கம் கி.பி. 1796 வரையுமான 157 வருடங்கள் ஒல்லாந்தர் இந்நாட்டை ஆண்டனர். கண்டி இராச்சியத்தையும் கயிலாய வன்னியன் ஆண்ட வன்னிப் பகுதிகளையும் இவர்களினாற் கைப்பற்ற முடியவில்லை. அக்காலத்து மேனாட்டவர் பலர் ஈழத் திலே தமிழர் வாழ்ந்த பகுதிகளைத் தெளிவாகக் காட்டுகின்றனர்.
கண்டி அரசனின் படைகளினால் திருகோணமலையிற் சிறைபிடிக் கப்பட்ட றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் கி. பி. 1679இல் தப்பி அநுராதபுரத்தின் வழியாகச் சென்றார். அக் காலத்தில் அநு ராதபுரத்திற் சிங்களமொழி தெரிந்தவர் எவருமில்லையெனவும் தமிழ் மொழி தெரிந்தவர்களே அங்கு வாழ்ந்தனர் எனவும் கூறுகிறார். கைலாயவன் னியனின் தனியாட்சியையுங் குறிப்பிடுகிறார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைக்கு வந்த ரேலண்ட் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இந்தத் தீவின் பெரும்பருதி தமிழர்களின் வாழ்விடமாக உள் ளது. இந்தப் பகுதி (வன்னி) கைலாயவன்னியனால் ஆட்சி செய்யப் படுவதுடன் அவனின் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சிங்களவர் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் அல்லர். எங்கள் (ஒல்லாந் தர்) ஆட்சிக்குட்பட்டவருமல்லர். கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுட் பெரும்பான்மையினோர் தமிழ்மொழி பேசுகின்றனர்.

நீர்கொழும்பில் இருந்து தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ளகரை யோரப் பகுதிகளிற் சிங்கள மொழி பேசப்படுகிறது."
கி. பி. 1700 இல் இலங்கைக்கு வந்த சுவைட்சர் என்பவர் lair வருமாறு குறிப்பிடுகின்றார்.
"இத் தீவின்மற்றக் குடிகளான தமிழர் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம்,அரிப்பு, கற்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வரையும் வாழ்கிறார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழ ரைத் தவிர ஏனைய தமிழர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்ளார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழர் தமக்கென ஓர் அரசைக் கொண்டுள் ளார்கள்.
ஒல்லாந்தர் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளையும் தனித் தனியாகப் பிரித்து ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் தாம் ஆண்ட பகுதிகளை ஆறு ஆட்சிப் பிரிவுகளாகவும் மூன்று நீதிப் பிரிவுகளாகவும் வகுத்தனர். கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் - கற்பிட்டி ஆட்சி மாவட்டம் யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம், திருகோணமலை ஆட்சி மாவட்டம், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம், காலி ஆட்சி மாவட்டம். நீதிப் பிரிவுகள்: யாழ்ப்பாணம், கொழும்பு, காலி.
ஆங்கிலேயர் ஆட்சி கி. பி. 1795 தொடக்கம் கி. பி. 1948 வரை யிலுமான 153 வருடங்களாகும். கி. பி. 1815 இற் கண்டி அரசையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். தமிழ் மொழியே கண்டி அரசின் ஆட்சி மொழி. இலங்கை முழுவதையும் ஒருகுடைக்குக் கீழ்சொண்டுவந்தனர். எனினும் கி. பி. 1829 கோல்புறுாக் திட்டம் வரையும் தமிழ்ப் பகுதி களையும் சிங்களப்பகுதிகளையும் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர் சிலரின் குறிப்புகளையும் பார்க்கலாம்.
கி. பி. 1799 இற் கிளெர்க்கோர்ன் குறிப்புகள் பின்வருவன:-
"இலங்கைத் தீவானது மிசப்பழங்காலந் தொட்டே இரு வெவ் வேறு நாட்டினங்களால் வெவ்வேறு பகுதிகளாக உடமை கொண் டாடப்பட்டது. இத் தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருத்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இத் தீவின் வட க்குக் கிழக்குப் பகுதிகள் தமிழர்களினால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்." இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் சிங்களவரும் தமிழரும் நாட்டினங்களாக கருதப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியச் சொற்களான பெரும்பான்மை சிறுபான்மை என்பவை பேசப்படு கின்றன. என்னே எமது அரசியல் அறிவு வளர்ச்சி. கி. பி. 1806 இல் அலெக்சாண்டர் யோன்சனின் குறிப்புப் பின்வருவதாகும்.
- 139 -

Page 78
"நான் சேகரித்த உள்நாட்டு வழக்கத்திலுள்ள சில் சட்டங்கள் புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்பு, ஆகிய நான்கு மாகாணங்களிலும் வழமையில் உள." மேலும் அக் குறிப்பில்:
**வட மேற்கிலுள்ள புத்தளத்தில் இருந்து தென்கிழக்கே உள்ள நிலப்பகுதி தமிழர்களின் குடியிருப்பாகும். மேற்கே சிலாபம் ஆற்றி லிருந்து தென் கிழக்கேயுள்ள குமணை ஆறு வரையுள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பாகும்.” ஆங்கிலேயரும் சுரண்டலுக்காக இங்குவந்த போதினும், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நாடு முன்னேறியது. எங்கணும் அமைதி நிலவிற்று. காடர்ையும் கொள்ளைக் காரரையும் அடக்கினர். சட்டத்தையும் நீதியையும்நிலை நாட்டினர். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். பொலிஸ் இராணுவ அட்டூழியங்கள் இல்லை. தமிழராகிய நாம் கல்வியிலும் பொருளா தாரத்திலும் முன்னேறினோம்."
வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடாகும்: தமிழுக்கு இருப்பிடம் பண்டைத் தமிழ் நாடு. அன்னியர் ஆட்சிக் காலங்களிலும் தமிழர் பண்பாடும் மரபு முறைகளும் அழிந்து விட வில்லை,
"நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திலரேற்
சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - யெல்லவரு மேத்து புராணாகமங்களெங்கே பிரசங்கமெங்கே யாத்த னறிவெங்கே யறை"
நாவலர் பரம்பரை மிக நீண்டதாகும். அவர் அக்காலத்துக்குஒரு சந்ததி முன் இருபாலைச் சேனாதிராயரும் நல்லைச் சரவண முத்துப் புலவரும் இவர்களுக்கு ஒரு சந்ததி முன் நெல்லைநாத முதலியாரும் மயில் வாகனப் புலவரும் இவர்களின் குரு கூழங்கைத் தம்பிரான், இவ்வாறு அரசகேசரி வரையும் செல்லலாம், சிங்கை ஆரியச் சக்கர வர்த்திகள் இரு தமிழ்ச் சங்கங்களை நிறுவினர். இரகு வம்சம் முதற் பல புகழ் பெற்ற தமிழ் நூல்கள் ஈழத்தில் தோன்றின. செந்தமிழுக்கு இன்பத் தமிழுக்கு இனிய தமிழுக்கு, தூய தமிழுக்கு வட இலங்கை
A என்பர்.
سسه l40 سب

பன்னிரண்டாம் அத்தியாயம்
எமது மொழி தமிழ்
தமிழ் என்ற சொல்லுக்கு 'இனிமை", "தூய்மை", "அன்பு" என்பவை பொருளாகுமென இந் நூலின் ஆரம்பத்திற் குறிப்பிட் டோம். இனிமைக்கும் தூய்மைக்கும் தன்னொப்பிலா மொழி தமி ழாகும். 'தேனினுமினியது தமிழ்: தெவிட்டாச் சுவையது தமிழ்; இலக்கணஞ் சிறந்தது தமிழ் இயல் வளஞ் செறிந்தது தமிழ் ஒப் புயர்வற்றது தமிழ்; ஒண்கலை நிறைந்தது தமிழ்; தன்னேரிலாதது தமிழ்; தனிப்புகழ் வாய்ந்தது தமிழ் பண்ணிற் சிறந்தது தமிழ்; மண்ணிற் பழையது தமிழ்; செந்தமிழ்; உயர்தனிச் செம்மொழி', என்றெல்லாம் புகழ்பெற்ற மொழி எமது தமிழ். இவ்வாறு நாம் மட்டுமன்றி, மொழிகளை ஒப்பிட்டுச் சீர்தூக்கி ஆராய்ந்த மேனாட்ட வருங் கூறுகின்றனர்.
"தமிழ் தழிஇய சாயலவர்"
(திருத்தக்கதேவர்) "தமிழ் பாட்டிசைக்குத் தாமரையே’ *" என்றுமுள தென்றமி பூழியம்பியிசை கொண்டான்"
(கம்பர்) ** இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்"
(பிங்கள நிகண்டு)
மேலும், "தமி" என்ற பதத்திற்கு "ஒப்புயர்விலாத" என் பதும் கருத்தாகும். இறைவனைத் 'தமியன்” என்கிறோம். இறை யிலக்கணம் தமிழுக்கும் பொருத்தமாகும். எமது தமிழ் ஆதியும் அந்தமுமில்லாத மொழி. அன்பே உருவமானது. அருள் வடிவானது. இன்பத்தமிழ், தெய்வத்தமிழ். கந்தன் அருளிய தமிழ்
"கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோட மர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ், ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
(திருவிளையாடற் புராணம்)
- 41 -

Page 79
** வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ (காஞ்சிபுராணம்)
* சங்கத் தமிழின் தலைமைப் புலவா
தாவே தாலேலோ." (குமரகுருபரர்)
** தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் என்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ, மறுபுலச் சொற்களோ? சாற்றீர்”
(பரஞ்சோதியார்) * ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்"
பண்டு தொட்டுத் தமிழ்மக்கள் இறையுணர்ச்சியுடைய வாழ்க்கை நடத்தினர். இந்த இறையுணர்ச்சியை வெளிப்படுத்தத் தமிழ்மொழி போன்று அருள்மொழி வேறில்லை. தமிழிலுள்ள பெரும்பாலான நூல்கள் சமய நூல்களாகும், பக்திப்பாடல்களாகும். நாயன்மாரும் நம்மாழ்வாரும் தமிழ் இசையையும் இறைவனையும் ஒன்றுபடுத்தி அன்புருகினர். பண்ணார்த்த பாட்டிசைத்தனர். ஞானசம்பந்தர் தம்மை 'நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். "தமிழொடு இசை பாடல் மறந்தறியேன்” எனத் திருநாவுக்கரசர் உருகுகிறார். சுந் தரர் இறைவனையே தமிழுக்கு ஒப்பிடுகிறார்.
"பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்” " மற்றுநீ வன்மை பேசி
வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் தம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்."
- 142

திருமூலர்:
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
பூதத்தாழ்வார்:-
"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்" இப் பக்தி உணர்ச்சிக்கு உதாரணமாக இரட்சணிக யாத்திரீகத் திலுள்ள சிலுவையின் பெருமையைப் பற்றிய பின்வரும் பாடலைப் untridissent b.
'தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பல்பாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர் பிழையை மன்னியும் என்று எழற்கணிவாய் மலர்ந்தார் நம் அருள்
வள்ளல்" தமிழருக்கு எம்மதமுஞ் சம்மதமென்பர். எல்லா மதநூல்களும் தமிழில் உள. எல்லா மதத்தவரும் இறைவனைத் தமிழிற் பாடி இன் புற்றனர்.
சைவம்:- பன்னிரு திருமுறைகளும் பதின்னான்கு சித்தாந்த சாத்திரங்களும், பிற்காலத்தில் பட்டினத்தடிகள் பாடல்கள், அருண கிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்கசுவாமி assir umTu6ios Gir.
வைணவம்:- நாலாயிரப் பிரபந்தம், பாகவத புராணம். பெளத்தம்:- மணிமேகலை, வீரசோழியம், திருப்பதிகம், சித் தார்தத் தொகை, புத்த ஜாதகத் கதைகள்.
சமணம்:- நாலடியார், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். கிறிஸ்த்தவம்:- தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம்.
இஸ்லாம்:- சீறாப்புராணம்.
ܣܗܚܗ 43 7 ܚ

Page 80
இயல், இசை, நாடகம் என முத்தமிழ் என்பர். தொல்காப் பியரே இசைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரென்றால், அவர் காலத்துக்கு முற்பட்டே தமிழிற் பல இசை நூல்கள் இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் இயல் இசை நாடக நூலாகும். பலவகைப் பட்ட இசைப்பாடல்கள் சிலப்பதிகாரத்திலுஞ் சங்கநூல்களிலுங் குறிப்பிடப்படுகின்றன:- "ஆற்றுவரி, சாந்துவரி, சாயல்வரி, நிலை வரி, முரிவரி திணைநிலைவரி, அம்மானை வரி, ஊசல்வரி, முகவரி, முகமிலவரி, வள்ளைப்பாட்டு முதலியவை. தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியவை பண்ணார்த்த இசைப் பாடல்களாகும். கீர்த்தனம், சிந்து, தெம்மாங்கு, பல்லவி, பாவை யர் பாட்டு, ஒப்பாரி முதலியவை பிற்காலத்திலே தோன்றின. வட மொழியில் இசைநூல்கள் இயற்றிய பரதரும் சாரங்கதேவரும் தமி ழிலிருந்து கடன்பட்டனர்.
" ஏற்றப் பாட்டும் இறைவைப் பாட்டும்
காவடிப் பாட்டும் சப்பற் பாட்டும் படையி னெழுச்சியும் பள்ளி யெழுச்சியும் சிந்தமுஞ் சந்தமுந் திருத்தா லாட்டும் கல்லுளிப் பாட்டுங் கவனெறி பாட்டும் பாவைப் பாட்டும் பலகறை பாட்டும் மறத்தியர் பாட்டுங் குறத்தியர் பாட்டும் பள்ளுப் பாட்டும் பலகடைத் திறப்பும் வள்ளைப் பாட்டும் பிள்ளைப் பாட்டும் கறத்தற் கயர் திறத்துரை பாட்டும் பொருத வேந்தர் விருதுப் பாட்டும்
கணாலப் பாட்டும் காதற் பாட்டும்"
சங்க நூல்களிற் பல கூத்து வகைகள் குறிப்பிடப்படுகின்றன:-
"அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வசைக்கூத்து, புகழ்க் கூத்து, சாந்திக் கூத்து, இயல்புக் கூத்து, ஆரியக் கூத்து தமிழ்க் கூத்து, விநோதக் கூத்து, தேசியக் கூத்து. பழைய நாடகத் தமிழ் நூல்கள் பல மறைந்து விட்டன. அகத்தியம், பரதம், குண நூல், கூத்த நூல், சந்தம், சயந்தம். செயன்முறை, செயிற்றியம்,
- 144 -

மதிவானர் நாடகத் தமிழ் நூல், முறுவல், பூமபுலியூர் நாடகம், விளக்கத்தார் கூத்து.
பலவகைப்பட்ட இயல் நூல்கள் தமிழில் உள. காப்பியங்கள், வீர காவியங்கள், புராணங்கள், பி ர ப ந் தங்கள், தோத்திரங்கள், வேதாந்த சித்தாந்த சாத்திரங்கள்.
காப்பியங்கள்
ஐம்பெருங் காப்பியங்களாவன:- சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி. பிற்காலத்திலெழுந்த பெருங் காப்பியங்களாவன:- கம்பர் இராமாயணம், வில்லிபுத்தூர் ஆழ்வார் மகாபாரதம், சேக்கிழார் பெரியபுராணம், கச்சியப்ப சிவாச் சாரியர் கந்தப்புராணம், வீரமாமுனிவர் தேம்பாவணி, உமருப்புலவர் சிறாப்புராணம், ஐஞ்சிறுங் காப்பியங்களாவன: சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாக குமார காவியம், பெருங் கதை வீரகா வியங்களாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள். நீதி நூல்கள் :- திருக்குறள், நாலடியார், பதினென் கீழ்க் கணக்கு நூல்கள், ஒளவையார். இலக்கண நூல்கள்: பெருநூல் இயல் நூல், குமரம், அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன் னுால், வீரசோளியம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை உரிச்சொல் நிகண்டு, இலக்கணக் கொத்து:
இவற்றைவிடப் பல புராணங்களும் அருட்பாடல்களும், பிரபந் தங்களும், உரை நூல்களும் தமிழில் உள.
*புத்தம் புதிய கலைகள் - பஞ்ச, பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்: மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" எனப் பாரதியார் மனம் உருகினார். இன்று இக்கலைச் செல்வங்க ளும் தமிழில் உள. இலக்கிய இலக்சண வளங்களில் உலகில் முதனிலையிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
"கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந்திட்ப மும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கிலுஞ் சொல் வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தை யும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும்" கலாநிதி வின்சிலோ, தொன்மையிலும், சொன்னயத்திலும், இலக்கிய இலக்கண வளத்
--سسہ : 145 حنسے

Page 81
திலும், அறிவிலும், இனிமையிலும், தெளிவிலும், பண்பாட்டிலும், சிறப்பிலும் தமிழுக்கு ஒப்பான மொழியில்லையென இந்நூலிற் பல விடங்களிற் கூறினோம். மொழியுலகில் தமிழ் அன்னை சிறப்பா சனம் வகிக்கிறாள். இப்போது தமிழைப் பற்றிய புலவர் பாடல் களிற் சிலவற்றைப் பார்ப்போம். தமிழின் தொன்மையைப் பின் வரும் பாடல்கள் காட்டுகின்றன:-
"தொன்று நிகழ்த்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ் கலை வாணரும்-இவள் என்று பிறந்தவள் என்று ணராத இயல்பின ளாம் எங்கள் தாய்" (unpi Sun if)
"பற்பல ஆயிரம் ஆண்டுகள்.இந்தப்
பாரினில் இருந்தறம் பூண்டவள் அற்புதம் இன்னமும் கன்னியே.புது அழகு தரும் தமிழ் அன்னையே" (நாமக்கல் கவிஞர்)
"பேராற் றருகில் பிறங்கு மணி மலையில்
சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ - நேராற்றும் பேரவையி லேதுாற் பெருமக்கள் சூழ்ந்தேத்த பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி" (தமிழ் விடு தூது)
"சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதாயின் முது மொழி நீ அனாதி யென மொழிகுவதும் வியப்பாமே" (மனோன்மணியம்)
"பல்லுயிரும் பல உலகும்
படைத்தளித்துத் துடைக்கினு மோர் எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக் கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" (மனோன் மணியம்)
- Ꮧ46 --

இன்பத் தமிழ், அமிழ்தத் தமிழ், அருமைத் தமிழ், எங்கள் தமிழ் -
"யாரறிவார் தமிழருமை ? என்கின்றே னெனின்
அறிவீனமன்றோ ? உன் மதுரை மூதூர் நீரறியும், நெருப்பறியும், அறிவுண்டாக்கி நீயறிவித் தாலறியும், நிலமுந் தானே "
(பரஞ்சோதியார்)
"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
(பாரதம்)
"ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்”
(சேக்கிழார் பெருமான்)
*வானார்த்த பொதியின் மிசைவளர்கின்ற மதியே மன்னிய மூவேந்தர் கடம் மடிவளர்ந்த மகளே தேனார்த்த தீஞ்சுளைசால் திருமாலின் குன்றம் தென்குமரியாயிடை நற் செங்கோல் கொள் செல்வி கானார்ந்த தேனே! கற்கண்டே! நற்கனியே கண்ணே கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே அம்மே நின்சீர்முழுவதும் அறைதல் யார்க்கெளிதே'
(கவியரசு வெங்கடாசலம்பிள்ளை)
"இருந்த தமிழே உன்னால் இருந்தேன்
இமயவர்தம் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”
(தமிழ்விடுதூது)
*நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக்கு எழிலொழுகும் ரோரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநற் றிருநாடு அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே" (பேராசிரியர் சுந்தரம்பிள்ளை)
-سے 1447 ==

Page 82
இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கை கடந் தியலிசையில் செய் நடமே! வாழியரோ பயிற்சி நிலப் பயிர்களெலாம் பசுமை யுற ஒளி வழியே உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த உயர் தமிழ்த் தாய்! GITÁLu (3grmrti
(வி. கல்யாணசுந்தர (psalmunt ri)
‘'தேவினை நெஞ்சில் திகழவும் வைத்தாய்;
சித்தியை ஞானியர் செப்பவும் வைத்தாய்; பாவினை நூலிற் சுவைக்கவும் வைத்தாப் பத்தியைத் தொண்டர் புகழ்க்கிடை நட்டாய் பூவினைக் காக்கென வேத்தியல் சொற்றாய்; புத்தியைக் காக்கப் புலவரை யுய்த்தாய்; யாவினைக் குங்குடி மக்களை வைத்தாய்: எத்தனை செய்தனை? நற்றமி ழன்னை;"
(ரா.இராகவையங்கார்)
* வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே."
'வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்!’ (Lurrar Suurrrf)
"தமிழே, தமிழே, தமிழர்க்குயிரே
அமுதே, அழகே யன்பே அருளே சங்கரன் போற்றிய சங்கத் தமிழே மங்கலம் பொலியும் மாமணி விளக்கே பாண்டியன் வளர்த்த பச்சிளஞ் செல்வியே வேண்டிய வரங்கள் ஈண்டிய திருவே"
(பைந்தமிழ்ச் சோலை
'மூவேந்தர் தாலாட்ட முச்சங்கத்தே கிடந்து
பாவேந்தர் செந்நாளில் நடைபழகி மொழி பயின்று மங்குலுறை வேங்கடமும் வான்குமரிப் பேராறும் தங்குமிடைத் தமிழுலகும் அரசுபுரிந் தமிழ்த்தாயே"
*மாவாழ் பொதிய மலையிற் பிறந்து வரமுனிவன்
பூவாழ் கரமெனும் பொற்றொட்டி லாடிப் புலவர்சங்கப் பாவாழ் பலகை இருந்து ஏட்டி லே தவழ்பாவையென்றன் நாவாழ்வு உகந்தமை நான் முன்பு செய்திட்ட நற்றவமே
سست l48 |

"தவந்தரு மேலாந் தனந்தரும் இன்பத் தருந்தனியா
நவந்தரு சீர் தரும் நட்புத் தரும் நல்ல வாழ்வு தரும் பவந்தரு தீவினை வேரும் மரமும் பறித்தழியாச் சிவந்தருஞ் செந்தமிழ்ச் செல்வியின் ஞானத் திருவடியே"
(நவாலியூர் சு. சோமசுந்தரப் புலவர்)
" என்ன புண்ணியம் செய்தேனே தான்
இந்நன்னாட்டினில் வந்து பிறத்திடவே??
" மன்னவர் மூவரும் வளர்த்த தீந்தமிழ்
இன்பம் காதினிலே என்றும் சேர வே"
"அம்புவி யோர்க்கெல்லாம் அமுதென வேவளர்
கம்பநா டன் தரும் காவியம் கேட்கவும் இன்ப வாழ்க்கையே எய்த மெய்ம் LDGasp தந்த வள்ளுவன் தமிழ் படிக்கவும்??
(ம: ப. பெரியசாமித்தூரன்)
வீரத்தமிழ், எங்கள் தமிழ் :
"யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் ፻ கொண்டு இங்கு வாழ்ந்திடல் நன்றோ? சொல்வீர் தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
"யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க்
- 149 -

Page 83
குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்"
(urt Jgbuurtsr)
" வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர் வாளும் போலே வண்ணப்பூவும் மணமும் போலே மகரயாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ? வையகமே உய்யு மாறு வாய்த்த தமிழ் என் அரும் பேறு துய்யதான சங்க மென்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை (தம்) கையிலே வேலேந்தி - இந்தக் கடல் உலகாள்மூ வேந்தர் கருத்தேந்திக் காத்தார் அந்தக் கன்னல் தமிழும் நானும் நல்ல”
"தமிழ் எங்கள் இளமைக்குப்பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தr
"தமிழுக்கு அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பந் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமிந்த ஊர்”
* நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்'
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
(பாரதி தாசன்)
= 1് 0) i

"எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே"
(unt p 6uurtff)
நங்கை தமிழை, மங்கை தமிழை, மாது தமிழை அன்னை தமிழைக் கண்டேன். காலாதி காலமெல்லாங் கண்டேன். பெருவள நாட்டிலே பிறங்கு மணிமலையில் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்யக் கண்டேன். குமரி நாட்டிலே பாண்டியர் ஆட்சியிலே சங்க மேறக் கண்டேன். கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அத்திலாந்திசு வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலுமிருந்த நாடுகளிற் பேருலா வரக்கண்டேன். இமயந் தொடக்கம் இந்தியா முழுவதிலும் தனியரசு செய்யக் கண்டேன். ஆடல் புரியும் அரன் தமிழ்ப் பாடல் புரியும் பரன் வாழ் கூடலிற் சங்கப் புலவர் போற்ற மங்களமாக வீற் றிருக்கக் கண்டேன். நம்மாழ்வார் நாயன்மார் நாவில் திருநடனம் புரியக் கண்டேன் சோழப் பேரரசில் உலகாளக் கண்டேன். இன்று என்ன காட்சி, என்ன கோலம்! பூவிழந்து பொட்டிழந்து எமது அன்னை தலை விரித்தழக் கண்டேன், காலில் தளைகள், கைக்கட் டுச் சங்கிலிகள், காடையர் பூசிய தார் திருமேனியில், அடி உதை பட்டுப் புண்பட்ட அங்கம், வாடிய வதனம், நீர் பெருக்கெடுத்து ஒடுங் கண்கள்.
*பதி யிழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த நிதியிழந்த னம் இனி நமக்குளதென நினைக்கும் கதியிழக்கினும் கட்டுரை இழக் கிலேன்' அரிச்சந்திரனின் இந்நிலைமையே இன்று எமதுமாகும். இந்நிலைமையிலும் அரிச்சந்திரன் நேர்மையிலிருந்து விலக மறுத் தான். இதுவன்றோ விரதமும் வைராக்கியமாகும். என்ன நேரினும் எமக்குத் தமிழ் மொழியில் நீங்காப்பற்றுந் தணியா ஆர்வமும் இருக்க வேண்டும்.
*எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்'
இது பொய்யாப் மொழிப்புலவரின் வாக்காகும்.
am 151 an

Page 84
அட்டவணை-1
W
கால அட்டவணை
கி. மு: 3,000 இற்கு-சேரன் இமயவரம்பன் என்ற வானவரம் முன்: பன், சூரியச் சோழன், மதியன் என்ற
சுந்திரபாண்டியன். கி. மு. 30,000 - கி. மு. 29.920 - நெடியோன், மாகீர்த்தி எனப் பட்ட முதலாம் நிலந்தரு திருவிற்பாண்டியன். கி. மு. 30,000 - கி. மு. 16,500 -பஃறுளியாற்றுத் தமிழ்ச் சங்கம் 6. αρ. 16,000- பொதியமலை அகத்தியரும் பொதியமலைத்
தமிழ்ச் சங்கமும்: கி. மு. 16,000 - கி.மு. 14,550-மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம் கி. மு. 14,550 - கி. மு. 14,470 - மணி மலைத் தமிழ்ச் சங்கம். கி. மு. 14,550 - முத்தூர் அகத்தியர். கி. மு. 14,490 - இந்தியாவிற்குள் மங்கோலியர் வருகை. கி. மு. 14,100 - கி. மு. 14,030 - முசுகுந்தச் சோழன். கி. மு. 14,058 - தமிழ் நாட்டில் முதற் கடற்கோள், வாதாபி
அகத்தியர். கி. மு, 14,038 - கி. மு: 14,004 - குன்ற மெறிந்த குமரவேள்
தமிழ்ச் சங்கம். கி. மு. 14,004 - கி. மு. 9594 - தலைச் சங்கம்: கி. மு. 14,004 - காய்ச்சின வழுதி என்ற இரண்டாம் நிலந்தரு
திருவிற் பாண்டியன். கி. மு. 9,564 -தமிழ் நாட்டில் இரண்டாங் கடற்கோள். கி. மு. 9000 - இந்தியாவிற்குட் சிதியர் காக்கேசியக் குழுக்களின்
வருகை. கி. மு. 7500 - கி.மு. 6700 - பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி காலத்துத் தமிழ்ச் சங்கம். கி. மு. 6805 - கி.மு. 3105 - இடைச்சங்கம். கி. மு. 6805 - கி. மு. 6730 - வெண்டோர்ச் செழியன் என்ற
நேர்மாறன் பாண்டியன்.
கி. மு. 6000 - கி- மு. 5,925- மூன்றாம் நிலந்தருதிருவிற் பாண்
டியன்,
- 152 -

கி. மு. 3145-கி. மு. 3105-பெரு சோற்று உதியன் சேரலாதன்
கி. மு.
S.
(p.
鹅
e.
3105-கடற்கோள் 3102-கலியுகந் தொடக்கம் 2450-5l-pó G5tr6ir (Enoibias)
2387-கடற் கோள் (இலங்கை வரலாறு=Tennent) 2341-கடற் கோள் (urobur) 2344-கடற் கோள் (பழைய விவிலிய வேதம்)
2300-கடற் கோள் (ஆரியசப்த பிராமணம்) 2150-கடற் கோள் (கீபுறு வரலாறு)
2000-கடற் கோள் (பாபிலோனிய வரலாறு)
1730-கி. மு. 1695-மூன்றாம் முடத்திருமாறன் என்ற
Lumraniwugulu Gör
1715-கடற் கோள்
1715-6). L. 235 s, gold Fridih
120-கி. மு. 90-முதலாங் கரிகாலன்
50-கி. பி. 37-இரண்டாங் கரிகாலன்
31 - வள்ளுவர் ஆண்டு தொடக்கம்
85-கி. பி. 160-இளங்கோவடிகள்
235-பாண்டி நாட்டிற் களப்பிரர் ஆட்சித் தொடக்கம்
கடைச் சங்க முடிவு.
- 53 m

Page 85
அட்டவணை 2.
கடைச் சங்க காலப் புலவர்களிற் சிலரும் நூல்களும்
0.
11.
12.
13.
14,
I5.
16.
17.
18.
காழாந்தலை உருத்திரக் கண்ணனார் இயற்றிய நூல்கள்:- பெரும்பாணாற் றுப்படை, பட்டினப்பாலை. V கபிலர்-இயற்றிய நூல்கள்:- பார்ப்பனர்நால்,பெருங்குறிஞ்சி, இன்னா நாற்பது, ஐங்குறு நூறில் நூறு பாடல்கள், பதிற்றுப் பத்திற் சேரன் ஆதனைப் பற்றிப் பாடிய பத்துப் பாடல்கள். நக்கீரர் இயற்றிய நூல்கள்:- திருமுருகாற்றுப்படை, நெடு நல் வாடை, இவருடைய தனிப்பாடல்கள் பல புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களிற் காணப்படுகின்றன. கல்லாடனார்-தொல்காப்பியத்திற்கு இவர் ஒருரை இயற்றிய தாகக் கூறப்படுகிறது. இவ்வுரை எமக்குக் கிடைக்கவில்லை. மாமூலனார்-இவருடைய பாடல்கள் அகநானூறிலும் குறுந் தொகையிலும் நற்றிணையிலுங் காணப்படுகின்றன. மாங்குடி மருதனார்-இயற்றிய நூல் மதுரைக் காஞ்சி. இவ ருடை சில பாடல்கள் புறநானூறிற் காணப்படுகின்றன. திருவள்ளுவர்-இயற்றிய நூல் திருக்குறள். கோவூர் கிழார்-இவருடைய பாடல்கள் புற நானூறிற் காணப்படுகின்றன. இறையனார் - இயற்றிய நூல் அகப்பொருள் பரணர் - தனிப்பாடல்கள் முடத்தாமக் கண்ணனார்-இயற்றிய நூல் பெருநராற்றுப்
JG) பெருங் கெளசிகனார்-இயற்றிய நூல் மலைபடுஉகடாம். ஒளவையார் - இயற்றிய தனிப்பாடல்கள் புறநானூறிலும் அக நானூறிலுங் காணப்படுகின்றன. இடைக் காடனார் - இயற்றிய நூல் ஊசிமுறி. இளங்கோவடிகள் - இயற்றிய நூல் சிலப்பதிகாரம். சீத்தலைச் சாத்தனார் - இயற்றிய நூல் மணிமேகலை. அரசியல் கிழார் - இவருடைய பாடல்கள் தகடூர் யாத்திரை யிற் காணப்படுகின்றன.
سس۔ 154 مسیت

(19) பொன்முடியார் - இவருடைய பாடல்கள் பதிற்றுப் பத்திற்
காணப்படுகின்றன. வேறு பல புலவரும் கடைச்சங்கத்தில் இருந்தனர். இவர்களு டைய பெயர்ப் பட்டியலைப் பண்டிதர் க. பொ. இரத்தினம் எழு திய "நூற்றாண்டுகளில் தமிழ்" எனும் நூலிற் காணலாம்.
கடைச்சங்க நூல்கள்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை,
எட்டுத் தொகை நூல்களாவன:- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு, புறநானூறு. இவை புறப் பொருளையும் அகப்பொருளை யும் பற்றிப் பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகை நூல் களாகும். பத்துப் பாட்டு நூல்களாவன:-
(1) திருமுருகாற்றுப் படை - நக்கீரர் (2) பெருநராற்றுப் படை - முடத்தாமக்கண்ணியார். (3) சிறு பாணாற்றுப்படை - இடைகழி நாட்டு
நல்லூர் நத்தத்தனார், (4) பெரும்பாணாற்றுப் படை - கடியலூர் உருத்திரங்
கண்ணனார், (5) முல்லைப்பாட்டு - பொன்வாணிகனார் மகனாரி
நப்பூதனார்
(6) மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார் (7ル நெடு நெல் வாடை - நக்கீரர் (8) குறிஞ்சிப்பாட்டு - கபிலர் (9) பட்டினப் பாலை - கடியலூர், உருத்திரக்
56oaT6oor67 nrrî (10) மலைபடுஉகடாம் - இரணயமுட்டற்றுப் பெகுங்
குன்றுார்ப் பெருங் கெளசிகனார்) பதினெண் கீழ்க் கணக்கு நூல்களாவன:.
(1) திருக்குறள் - திருவள்ளுவர் (2) நாலடியார் - சமண முனிவர்கள் (3) நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் (4) இனியவை நாற்பது - பூதஞ் சேந்தனார் (5) இன்னா நாற்பது - கபிலர் (6) கார் நாற்பது - மதுரைக் கண்ணங் கூற்றனார் (7) களவழி நாற்பது - பொய்கையார் (8) ஐந்தின்ை ஐம்பது - மாறன் பொறையனார்
m 55 =

Page 86
(9) 10)
(II) (፲2) (13) (14) (15) (16) (17) (18)
ஐந்திணை எழுபது - மூவாதியார் திணைமொழி ஐம்பது - சாத்தத்தையார் மகனார்
கண்ணஞ் சேந்தனார்
திணைமொழி நூற்றைம்பது - கணிமேதையார்
திரிகடுகம்- நல்லாதனார்
ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் பழமொழி மூன்றுறையரையார் சிறு பஞ்சமூலம் - காரியாசான் கைந்நிலை - புல்லங்காடனார் முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதையார்.
இவற்றுட் சில கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவையாகும்
எமக்குக் கிடைத்த கடைச்சங்க நூல்களும் அடிகளும்t
நூல் திருக்குறள் மணிமேகலை; சிலப்பதிகாரம் கலித்தொகை இன்னா நாற்பது பெருங்குறிஞ்சி குறிஞ்சி (ஐங்குறு நூற்றிற் கபிலர் பாடியது) திருமுரு காற்றுப்படை நெடுநல் வாடை பெருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை மதுரைக் காஞ்சி மலைபடு உகடாம் பதிற்றுப் பத்து
புறநானூறு அகநானுறு
குறுந்தொகை நற்றிணை முதலிய தனிப் பாடல்கள்
ー忍56ー
அடிகள்
名660
4857
4957
430s
60
261
0.
37
88
245 248
201
701.
553 600
4000
a 4,386

பழைய தமிழ் நூல்களிற் பல எமக்குக் கிடையாது. அழிந்தொ ழிந்து விட்டன. இவற்றுட் சிலவாவன:- மாபுராணம், இசை நுணுக் கம், பூத புராணம், கலி, குரு, வெண்டாளி, வியாழ மாலை அகவுள் அடிநூல், அணியியல் அவிநயம், ஆசிரிய மாலை, ஆனந்தவியல், இந்திர காளியம், இளந்திரையம், ஐந்திரம், ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, கவிமயக்கறை, கவிக்கேட்டுத்தண்டு, களரியாவிரை, கனவு நூல், காக்கையாடினியம், காலகேசி, குணநூல், குண்டலகேசி, கூத்து, கோணுால், சங்கயாப்பு, சயந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிந்தம், சிறு காக்கை பாடினியம், சிறு குரீஇ, உரை, சிற்ப நூல், சிற்றெட்டகம், சிற்றிசை, செயன்முறை செயிற்றியம், நகடுர் யாத்திரை, தந்திரவாக்கியம், தான சமுத்திரம், தாளவகையோத்து, தும்பிப்பாட்டு, தேசிகமாலை, நாகசூமார் காவி யம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பரி நூல், பலகாயம். பல காப்பியம், பன்னிருபடலம், பாட்டு மடை, பாவைப் பாட்டு, புணர்ப் பாவை, புதையனுால், புராணசாகரம், பூதபுராணம், பெரியபம்பம், பெருவல்லம், பேரிசை, போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகம், தமிழ் நூல், மந்திரநூல்,மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், மார்க்கண் டேயர் காஞ்சி முதுகுருகு, முதுநாரை, முத்தொள்ளாயிரம், முறுவல், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், வச்சத் தொள் ளாயிரம், வஞ்சிப் பாட்டு, வரி வளையாபதி, வாய்ப்பியம், விளக் கத்தார் கூத்து, அகத்தியம், அகத்தியர் பாட்டியல் அசதிக்கோவை, உலகாயதம், செங்கோன் தரை செலவு,
- 157 -

Page 87
அட்டவணை 3
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல்
(ஆதார நூல்கள் :- யாழ்ப்பான சரித்திரம் - இராசநாயக முதலியார் யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர்)
(1) யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி. பி. 785 இல் உக்கிரசிங்கனுடன் தொடங்குகிறது. இவனுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நாகச் சிற்றரசர் ஆண்டனர்; இவன் இராசதானி யைக் கதிரை மலையிலிருந்து சிங்கை நகருக்கு மாற்றினான். இவ னுடைய காலத்திலேதான் மாவிட்டபுரக் கந்தசுவாமி கோவில் கட் டப்பட்டது. விசயன் கதைபோல இவனைப் பற்றியும் புராணக் கதையுண்டு.
(2) உக்கிரசிங்கன் இறந்தபின் அவனுடைய மகனாகிய ஜெய துங்க பரராசசேகரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்திலே தான் யாழ்ப்பாடி எனும் பாணன் பரிசில் பெற்றான். இவன் காலத் தில் வரகுணன் எனும் பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இவனையும் பொலனறுவாவில் ஆண்ட சிங்கள அரசனையும் வென்றான். ஜெயதுங்க பரராசசேகரனைக் கொன்றான்.
(3) கி. பி. 9ம் நூற்றாண்டு மத்தி தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய சோழருக்குச் சிற்றரசர் களாக யாழ்ப்பாணத்திலாண்டனர். இக்காலத்தில் அடிக்கடி ஏற் பட்ட சோழ,பாண்டிய பல்லவர் படையெடுப்புக்களையும் வெற்றிகளை யும் தென்னிந்தியச் சாசனங்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இக்காலத்திற் சிங்கை அரசரும் சிங்கள அரசரும் மணத்தொடர்பும் நெருங்கிய உறவும் உடையவராக இருந்தனர். கி. பி. 941-49இல் சோழன் பராந்தகன் சிங்கை அரசனை வென்றான். சிங்களவரசனைப் புறங்கண்டான். கி. பி. 995இல் முதலாம் இராசேந்திரன் இலங்கை மேற் படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தனைப் பொலனறுவாவி லிருந்து துரத்தினான். கி. பி. 1014இல் இராசேந்திர தேவன் மகிந் தனைச் சிறைசெய்து இலங்கை முழுவதையுஞ் சோழ மண்டலத்திற் சேர்த்தான். வட இலங்கை கி. பி. 944 தொடக்கம் கி. பி. 1070 வரையும் 126 வருடங்கள் சோழப் பிரதானியாக விருந்தது. சிங்கை அரசர் சோழருக்குக் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத் தில் சிங்கை அரசர் சிலர் கலகம்விளைவித்ததினால் சோழரினாற்கொலை செய்யப்பட்டனர். மானாபாணன், வீரசலாமேகன், கிறீவல்லப மதன
ܗܡ= 158 ܚ

ராசன் என்போர். இரண்டாங் குமாரகுலோத்துங்கன் காலத்திலே (கி, பி. 1118 - 1146) புகழேந்திப் புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது சிங்கை அரசனைப் பாடிப் பரிசில் பெற்றார். மேலும் கி.பி. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு,
(4) முதலாம் பராக்கிரமவாகு: குலோத்துங்கன் காலத்துக்குப் பின்பு சோழப் பேரரசு பலங்குன்றிற்று. சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தமது நாடுகளைத் திரும்பவும் பெற்றனர். இராச இராஜ னாற் கி. பி. 1038 இற் கொல்லப்பட்ட மானாபாணன் எனும் சிங்கை அரசனின் மகள் திலக சுந்தரியை சிங்கள அரசனாகிய முதலாம் விஜய பாகுவும், விஜயபாகுவின் சகோதரி மிற்றாயை மானாபாணனின் மகனும் மணஞ் செய்தனர். இம் மானாபாணனின் பிள்ளைகள் மூவரா வர். மானாபாணன், கீர்த்திசிறீமோகன், சிறீவல்லபன். மானாபாணன் இரத்தினவல்லியை மணஞ்செய்தான். இவர்களுடைய புத்திரனே முதலாம் பராக்கிரமவாகு. பராக்கிரமவாகு இளமையில் யாழ்ப் பாணத்தில் வளர்ந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் மரபு முறைப்படி உபநயனம் பெற்றவன். வன்னியை வென்று பனங்காமத்திற் சிற்றர சனாக விருந்தான். பின்பு பொலனறுவாவிலாண்ட தனது மைத்து னன் இரண்டாம் கயவாகுவை வென்று இலங்கை முழுவதையும் ஆண் டான். பராக்கிரமவாகுவின் பின்பு, வட இலங்கையும் தென்னிலங் கையும் வெவ்வேறு இராச்சியங்களாகின.
(5) கலிங்கமாகன் செகராசசேகரன்: (கி. பி. 1215 - 1240) இவன் பொலனறுவாவை வென்று அங்கிருந்து கி. பி. 1236 வரையும் ஆட்சி செய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இவனுக்குப்பின் வட இலங்கை அரசர் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்பட்டனர்!
**தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்" எனப் போற்றப்பட்டான். பொலனறுவா, புளச்சேரி, கந்தளாய், கந்துப்புலு, குருந்து, பதவியா, மாட்டுக்கொணா, ஊராத்தொட்டை கொமுது, மீபாதொட்டை மண்டலி, மன்னார் முதலிய இடங்களிற் கோட்டைகள் கட்டினான்.
(6) குலசேகரச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி-பரராசசேகரன் (கி.பி. 1240 - 1270) அந்தகக் கவியின் வருகையும் ஆரூருலா பாடப்பட்டதும் இவன் காலத்திலாகும். கி. பி. 1253 இற் சோழப்படை வெற்றி: கி. பி. 1256 இற் சந்திரபானுவின் படையெடுப்பு,
سس ,159 مســـــ

Page 88
(7) குலோத்துங்க சிங்கையாரியன் - மசகராசசேகரன் - கி. பி. 1270 - 1292 இக்காலந்தொட்டு சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குத் திறைகட்டி ஆண்டனர். மன்னார்க் கடலில் முத்துக்குளிக் கும் உரிமைக்கு இக்காலத்திற் செகராசசேகரனுடன் சிங்கள அரசன் புவனேகபாகு போர் செய்தான். கி* பி. 1284 இல் மார்க்கோ போலோ என்ற புகழ்பெற்ற பிரயாணி யாழ்ப்பாணத் துறைமுக மொன்றில் இறங்கினான். யாழ்ப்பாணத்தைப் பற்றியும், ஆரியச் சக்கர வர்த்தி ஆட்சிமுறைகள் பற்றியும் தனது நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறான்.
(8) விக்கிரமசிங்கையாரியன்-பரராசசேகரன் - கி. பி. 1292 - கி. பி. 1302. இவனுடைய காலத்தில் யோவான் எனுங் கிறிஸ்தவ குரு யாழ்ப்பாணம் வந்தார். இவரும் யாழ்ப்பாணத்தைப் பற்றியுஞ் சிங்கை அரசைப்பற்றியுங் குறிப்பிடுகிறார். கி. பி. 1296 இல் யாப் பாகுவில் தோல்வியுற்ற புவனேகவாகுவின் குமாரனுக்கு அவனுடைய அரசை சப்பெற உதவிசெய்தான். ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறை கட்டப் புவனேகவாகுவின் மகன் உடன்பட்டான். பின்பு யாழ்ப்பாண அரசருக்குப் பயந்தோ அல்லது திறை கட்ட மறுத்தோ சிங்கள அரசர் தமது இராசதாணியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும் கம்பளைக்கும் மாற்றினர். வன்னி அதிகாரிகள் பலர் சிற்றரசர்களாக ஆளத் தொடங்கினர். இஃது அக்கால நிலப் பிரபுத்துவ முறையுடன் இணக்கமுடையதாக இருந்தது.
(9) வரோதய சிங்கை ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1302-1325
கி. பி. 1303 இற் குருநாக்கலில் அரசு செய்த நாலாம் பராக்கிரம வாகு சிங்கை அரசருக்குத் திறை கட்ட மறுத்துத் தனது இராச தானியை தம்பதெனிக்கு மாற்றினான். இப்பராக்கிரமபாகுவின் சபையிலேதான் போஜராஜ பண்டிதர் என்பவர் சரசோதிமாலை எனுந் தமிழ்ச் சோதிட நூலை அரங்கேற்றினார். அக்காலத்திற் சிங் கள மேன் மக்களிடையில் தமிழே கற்றவர் மொழியாக இருந்தது. சுந்தரபாண்டியன் தான் இழந்த இராச்சியத்தைப் பெற வரோ தய சிங்க ஆரியனின் உதவியை நாடினான். இக்காலத்திலே தென்னிந் தியாவில் மகமதியர் செய்த கொடுமைகளினால் பல பெருங்குடி மக்கள் வட இலங்கைக்கு வந்து குடியேறினர். இக்காலத்தில் இலங்கைக்கு வந்த பிரையர் ஒடொறிக் எனும் கத்தோலிக்கப் பாதிரியார் இவ்வர சனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினான்.
-- 60 Il -سسه

(10) மார்த்தாண்டசிங்கை ஆரியன்-பரராசசேகரன்-கி. பி. 1325-1347,
இவனுடைய காலத்தில் இபின் பட்டூட்டா எனும் மகமதியப் பிரயாணி இலங்கை வந்தான். ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றிய் அவருடைய குறிப்புக்களை முன்பு இந்நூலிற் கூறினோம்.
(11) குணபூஷணன்-செகராசசேகரன்-கி. பி. 1347.
கி. பி. 1348 இல் போப் சீனாவிற்கு அனுப்பிய தானாதிபதியத் தலைவன் யாழ்ப்பாணம் வந்தான். யாழ்ப்பாணத்தைப் பற்றிப் பல விபரங்கள் எழுதியிருக்கிறான்.
(12) விரோதய சிங்கை ஆரியன்-பரராசசேகரன். இவனுடைய காலத்தில் வன்னி நாட்டிற் பல கலகங்கள் நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கித் தனதாட்சியைப் பலப்படுத்தினான்" கி. பி. 1380 இல் இறந்தான்.
(13) ஜெயவீரசிங்கை ஆரியன் - செயராசசேகரன்- கி. பி. 1380-1410. ஆரியச் சக்கரவர்த்திகளில் இவனே மிகப் புகழ்பெற்றவன். விடையும் பிறையும் பொறித்த நாணயங்களை அடித்தான்.
கி. பி. 1340இற் கோட்டையில் அளகக் கோனார் ஆட்சி தொடங் கிற்று. இவன் வஞ்சி நகரத்து மலைய குலத்தைச் சேர்ந்தவன். கம் பளையில் மூன்றாம் விக்கிரமவாகுவின் மந்திரியும் படைத்தலைவனு மாகவிருந்தவன். சிங்கள அரசில் ஒரு பகுதியைக் கவர்ந்து கோட்டை யில் தன்னரசை நிறுவினான். சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குக் கட்டிவந்த திறையைக் கட்ட மறுத்தான். திறை கேட்க வந்த ஏவலாளரைக் கொன்றான். அளகக்கோனுக்கும் ஜெயவீர சிங்கை ஆரியனுக்கு மிடையிற் போர் மூண்டது. அழகக்கோன் வென் றான் எனச் சிங்கள இதிகாசங்கள் கூறுகின்றன. சிங்கை ஆரியன் வென்றானெனச் சில காலத்துக்கு முன்பு கேகாலைப் பகுதியிற் கண் டெடுக்கப்பட்ட சாசனங் கூறுகிறது. செகராசசேகரம் எனும் வைத் திய நூல், செகராச சேகரமாலை எனுஞ் சோதிட நூல், காரி வையாவின் கணக்கதிகாரம் எனும் கணித நூல், தக்ஷண கைலாச புராணம் இவன் காலத்தவையாகும்.
(14) குணவீரசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி. பி. 1410-1440
இவனே இராமேச்சுரக் கர்ப்பகிரகம் கட்டுவித்தவன். TgTTF சேகரம் எனும் வைத்திய நூல் இவன் காலத்தில் எழுதப்பட்டது.
- 16 l -

Page 89
(15) கனகசூரிய ஆரியன் - செகராசசேகரன் - கி.
இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த் மலையா ளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய் தான். இவன்ே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். கி பி. 1467இல் பராக்கிரமவாகு இறந்தபின் கோட்டை யரசனாகி னான். கனகசூரியன் யாழ்ப்பாணத்துக்குப் படைகளுடன் திரும்பி வந்து அரசைக் கைப்பற்றினான்.
(16) சிங்கைப் பரராசசேகரன்- கி. பி. 1478.
இரண்டாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவினான். இச் சங்கத்தில் இவனுடைய மைத்துனன் அரசகேசரி 'இரகுவமிசம்" எனும் நூலை அரங்கேற்றினான். பரராசசேகரன் உலாவும் இக்காலத்ததாகும். இவனுடைய காலந்தொட்டுச் சிங்கை ஆரியர் ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கிற்று. வன்னியர்கள் திறை கொடுக்க மறுத்துத் தம்மாட்சி நடத்தினர். இலங்கையின் வியாபாரம் முழுவதையும் மகமதியர் கைப் பற்றினர். போர்த்துக்கீசர் நாட்டிற் புகுந்தனர். பரராசசேகர னுக்கு நான்கு புத்திரர். சிங்கவாகு, பண்டாரம், பரநிரூபசிங்கம், சங்கிலி, சங்கிலி அண்ணன்மாரைச் சூழ்ச்சியினாற் கொன்று அரசைக் கைப்பற்றினான். சிங்கை அரசர் போர்த்துக்கீசரின் பொம்னிம களாகினர்.
சங்கிலியின் ஆட்சிக் காலத்திற் சங்கிலிக்கும் போர்த்துக்கீசர் களுக்குமிடையில் இடையறாப் போர்கள் நடந்தன. போர்த்துக்கீசர் பரநிரூபசிங்கனைக் கிறித்தவனாக்கி அவனை அரசனாக்க எத்தனித் தனர். கி. பி. 1565இற் சங்கிலி இறந்தான்.
காசி நயினார் அல்லது குஞ்சி நயினார் - பரராசசேகரன். போர்த் துக்கீசர் இவனைச் சிறைப்படுத்தி வேறோர் அரச குமாரனை நியமித் தனர். ஆனாற் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகியவுடன் காசி நயினார் புதிய அரசனைக் கொன்று மறுபடியும் அரசனாகினான்.
போர்த்துக்கீசர் காசி நயினாரை நஞ்சூட்டிக் கொன்று பெரிய பிள்ளை எனும் அரசகுமரனை செகராசசேகரன் எனும் பட்டத்துடன் கி. பி. 1570இல் அரசனாக்கினர். கி. பி. 1582இற் பெரியபிள்ளைக் குப்பின் புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் என்னும் நாமத்துடன் அரசனானான். புவிராஜ பண்டாரம் பலமுறை போர்த்துக்கீசருடன் போர் செய்து தோற்றான். ஈற்றிற் போர்த்துக்கீசரனினாற் கொல் லப்பட்டான். போர்த்துக்கீசர் அவனுடைய மகன் எதிர்மன்னசிங் கனைத் தங்கீழ் அரசனாக்கினர். இவன் பரராசசேகரன் எனும் பெயர் பெற்றான். இவன் கி. பி. 1591 தொடக்கம் கி. பி. 1618 வரையும் ஆட்சி செய்தான். இவன் இறந்தபோது சங்கிலி எனும் அரசகுமாரன் பட்டத்தைக் கைப்பற்றினான். இச் சங்கிலி ஈற்றிற் போர்த்துக்கீசரி னாற் கொலை செய்யப்பட்டான். கி. பி. 1620இற் போர்த்துக்கீச ரின் நேராட்சி தொடங்கிற்று.
ബ് 162 -

• نۓ1
13.
l4.
l5。
6.
17.
8.
ei.Lh62693T 4, 5
ஆதார மேற்கோள் நூல்கள்
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர்
-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழர் சரித்திரம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழ் இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
திராவிட இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை திராவிட நாகரிகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை தென்னகப் பண்பு - பன்மொழிப் புலவர்
திரு. கா. அப்பாத்துரை தென்னாட்டுப் போர்க்களங்கள்
பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை
தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
-திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்
அகத்தியர் வரலாறு *。
-திருமந்திரமணி துடிச்ைகிழார் அ. சிதம்பரனார்
திராவிடமக்கள் வரலாறு திரு. E. L. தம்பிமுத்து
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-டாக்டர் ம. இராச்மாணிக்கனார்
தொல்காப்பிய ஆராய்ச்சி-பேராசிரியர் 9, இலக்குவனார்
சிந்துவெளி நாகரிகம் a.
-வித்துவான் மா. இரர்சமர்ணிக்கம்பிள்ளை தமிழக வரலாறு-பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுகள் தமிழக வரலாறு-திரு. அ. மு. பரமசிவானந்தம் தமிழர் வாணிகம்-புலவர் கா. கோவிந்தன்
- 163 -

Page 90
19.
20.
2丑。
2发。
26.
岔7。
28.
29.
30.
3.
32.
33.
34.
35。
ஆயிரத்துத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் -திரு. வி. கனகசபை
1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்
-பேராசிரியர் M. S; பூரணலிங்கம்
மறைந்துபோன தமிழ் நூல்கள்-மயிலை சீனி வெங்கடசாமி
பல்லவர் வரலாறு-வித்துவான்
மா. இராசமாணிக்கம்பிள்ளை
சோழப் பேரரசு-வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை தமிழர் மதம்-மறைமலையடிகள் தமிழ்நாட்டு வரலாறு-டாக்டர் மு. ஆரோக்கியசாமி Tramil India-by Prof. Purnalingam Pillai The Ancient Tamils-by S. K. Pillai Tamil History-by R. Raghava Aiyangar
நூற்றாண்டுகளில் இன்பத் தமிழ்
-பண்டிதர் கா. பொ. இரத்தினம்
தமிழ் ஈழம்-நாட்டு எல்லைகள்-திரு. J. R. சின்னத்தம்பி வன்னியர்-கலாநிதி சி. பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை-மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணச் சரித்திரம்-முதலியார் செ. இராசநாயகம்
Tamils and Cultural Pluralism in ancient Sri Lanka
by Rev. D. J. Kanagaratnam Ph. D.
Atlantis-Edgar Cayce.
- 64 -


Page 91
ഗ്ര/ سمي~~~
தமிழர் வர
பொருளியல் துவி
பெற்று அத்துறையிலே அ பொ. சங்கரப்பிள்ளை அவர் யுறும் அளவுக்கு தமிழியல் இலக்கியம், அரசியல், சமூ பல்வேறு நெறிகளிலும் து துறைகளிலே அகலமாகவி முற்பட்டவர்.
இந்நூல் தமிழர்களி றினை மட்டும் ஆய்வதுட பண்பாடு, கலைகள், இன் தொழில், விவசாயம் போ சிகள் போன்றனவற்றைய ஆய்வு ரீதியாகவும் அணு பழந் தமிழ் இலக்கிய புடைய ஆசிரியர் பரந்த விருந்து ஏராளமான துகள் யும் அகழ்ந்தெடுத்து இந்த பயன்படுத்தியுள்ளார். ட வெறும் இலக்கியங்கள் ம வரலாற்றுப் பண்பாட்டு, ! ஆய்வுகளுக்கும் உதவுவன துள்ளுரார். அத்துடன்
இலக்கிய வரலாறு பற்றி சுற்று அவற்றில் பொதித் யும் இந் நூலில் நன்கு ட தமிழரின் வரலாற்று பாட்டுக் கலை இலக்கியப் வுற எடுத்துக்காட்டும் இ நல்லுலகினால் என்றென்
வேண்டியவர்.
Carr, சமூக விஞ்ஞான் கொழும்புப் ப

லாற்று நூல்
நபிவே று பர் பட்டங்கள் அறிஞராக விளங்கிய திரு. கன் தமிழ் மக்கள் பெருமை தமிழர் வரலாறு தமிழ் கவியல், மெய்யியல் ஆகிய துறைபோசு 'கற்றவர். இத் ம் ஆழமாகவும் ஆராய
ன் அ ர சி ய ல் வரலாற் -ன் நில்லாது அவர் தம் க்கிபந்தன், சமயம், கைத் ன்ற போருளாதார முயற் ம் வரலாற்று ரீதியாகவும் குகின்றது. ங்களில் மிகுந்த புலமை தமிழ் இலக்கியப் பரப்பி வல்களையும் கருத்துக்களை ஆய்வு நூலிலே விரிவாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் ட்டுமன்றி ஒரு இனத்தின் சமய, பொருளாதார, சமூக என்பதை நன்கு நிரூபித் அவர் தமிழர் வரலாறு ப ஏராளமான நூல்களைக் துள்ள ஆய்வு முடிவுகளை பயன்படுத்தியுள்ளார். த் தொன்மையும் பண் பெருமைகளையும் தெளி ந் நூலாசிரியர் தமிழ்கூறும் ாறும் நினைவு கூரப்பட
சந்திரசேகரம் 5 கல்வித்துறைத் தலைவர், ல்கலைக்கழகம்,
■

Page 92
74
உறுதியுண் டாகு முண்மையொன் றுளது சிறுமதி சூடிய சிவபெரு மானை இறுதியுள் ளளவும் மறவா தேத்திப் பொறுதியா யிருந்து பூரண மாகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊணு யுணர்வா யுயிருக் குயிராய் நானுய் நீயாய் நன்மையாய்த் தீமையாய் வானுய் மதியாய் வாயுவாய்த் தேயுவாய்த் தானுய் நின்ருன் சச்சிதா னந்தனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊழிக் காலத்து மொருவா வொருவனை வாழி வாழியென் றேத்தி வணங்கி ஆழிசூ முலகி லாசை யெலாம்போய் தாளி ரண்டுஞ் சரணெனச் சாருதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊமத்தை கொன்றை யுவந்த பிரானைப் பாவத்தை நீக்கும் பராபர வஸ்துவைச் சேமத் தைத்தருந் திறமெனக் கொண்டு ஒமத்தை யாற்றி யொருவழிப் படுவோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊரும் பேரு மில்லா னுள்ளான் நீரும் நிலனு மாகி நின்ருன், ஆரு மறியா வாற்ற லுடையான் சீருஞ் சிறப்பு முடைய சிவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊசி முனையி லிருந்தோம்பு வோர்கள் பேசி யறியார் பிறரை யுலகில் நாசி வழியில் நடக்கும் பிராணனைத் தேசி போலச் செலுத்த வல்லாரே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தன்ை
25
26
27
28
29
30

நற்சிந்தனை
என்னைக் கணமும் பிரியா விறைவன் அன்னை போல வன்பு சான்றவன் பொன்னைப் பொருளைப் போகத்தைத் தள்ளி உன்னு வோர்க ளுறுவர் பரகதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
எங்குந் திருவிழி யெங்குந் திருச்செவி எங்குந் திருக்கர மெங்குந் திருக்கழல் எங்குந் திருவடி வெங்கு மிவனே எங்கு மிவனென் றேத்து வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
என்செய லாவ தில்லைச் சிவனர் தன் செய லென்னல் தகுமென வெண்ணி முன்செய் வினையெல்ாம் முழுதும் போக்கிப் பின்செய் வினையிலை பிறப்பிறப் பிலையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எட்டாத கொப்பி லிருக்குந் தேனுக்குக் கொட்டாவி கொண்ட முடவன் கொள்கைபோல் அட்டாங்க யோக மறியாத நாங்கள் நட்டோ மென்று நவிறல் நகையே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எல்லாம் நீயே யென்றிருந்த மாதவர் சொல்லாலே சொல்லப் புகார்நீ சும்மா நில்லா யென்ன நிறுத்துவ ரதனை நல்லோ ரறிவார் நயந்து போற்றுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஏக னநேக னெல்லார்க்கு மீசன் மோகமார் தக்கன் வேள்வி முனிந்தவன் வேகமா கரியை யுரித்துப் போர்த்தவன் தாகமா நாடினுேர்க் கருடரு வானே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
75
3.
2
33
34
35
36.

Page 93
76 நற்சிந்தனை
ஐயனை யழகன யன்பர் சகாயனைத் தையல் பாகனத் தத்துவா தீதனை வையகம் வானகம் வணங்கும்பொற் பாதனை மையல் தீர வந்திப்போம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒன்ரு யிரண்டாய் மூன்ருயோ ரைந்தாய் நின்ருய் நின்லை நினையவல் லார்கள் பொன்றத் துணையும் போகமும் பொருந்துவர் என்ருர் பெரியோ ரிறைஞ்சுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஓங்காரத் துட்பொரு ளானவுத் தமன நீங்கா தெங்கும் நிறைந்த வஸ்துவைப் பாங்கார் பஞ்சாட் சரப்ப ரமனைத் தூங்காது நாளுந் தோத்திரிப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒளவிய மனத்தின ரறியா வறிவைச் செளபாக் கியமுடைத் தற்பர வஸ்துவை நெளவியு மழுவு மேந்து நம்பனைக் கெளரவத் துடனே கழறுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கறங்கு போலக் கலங்கு மனத்தைத் திறங்கொள் யோக சித்தியால் நிறுத்தி உறங்கி யுறங்கா திருந்து நோக்கிற் பிறப்பிறப் பென்பது பிராந்தியா கும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கங்குலும் பகலு மில்லாக் காட்சியன் சங்கரன் தானு சம்பு சதாசிவன் பொங்கர வணிந்த பூத நாதன் மங்கையோர் பாகன் மான்மழுக் கரனே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
37
38
39
49
4.
43.

நற்சிந்தனை
சத்தியுஞ் சிவமும் தானய் நின்றவன் பத்திசெ யடியரைப் பரகதி சேர்ப்பவன் எத்திக்கு மாகி யிருக்கு மிறைவன் சித்தத் துள்ளே தித்தித் திருக்குமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அஞ்ஞான விருளை யகற்று மாதவன் மெய்ஞ்ஞானி கட்கு வீட்டைத் தருபவன் செஞ்ஞா யிற்றை யொத்த சிவனுர் எஞ்ஞான்று மென்ற னுள்ளத் துளனே ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இடம்வல மோடி யியங்கும் பிராணனைத் திடம்பெறச் சுழுமுனை தன்னிற் சேர்த்தால் திடம்பெறுங் காயஞ் சித்திக ளெய்தும் மடம்பெறு வஞ்சக மனம்மா யும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வணக்கி ஞன்மா மேரு மலையினைக் கணக்கிலா வசுர கணங்கள் மாய்ந்தன பணுமுடி யாதி சேடனும் பயந்தான் கணுதி பர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தன்னை யறியத் தவத்தை யாற்றிப் பின்னமற் றெல்லாம் பிரமமே யென்ன அன்னை போல அன்பு கூர்ந்து இன்னல் தீர வென்றுமேத் துதுமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நமச்சி வாயவே நாம்சொல்லும் மந்திரம் எமக்கி னிக்குறை யொன்றுமே யில்லை
தமர்பிற ரென்னுந் தளையுந் தீர்ந்தோம் சமமா யுயிரெல்லாந் தாம்நினை வோமே
εδ . g ஓதுக வது நாம ஓமதத சதலும.
12
177
43
44
45
46
47.
尘8°

Page 94
178
பற்றற் ருர்பற்றும் பரம்பொரு டன்னச் செற்றம் நீக்கிச் செய்வன செய்து நற்றவர் தங்க ளுறவினை நாடிப் பற்றுது மதுவே பாக்கிய மாகும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
மத்தர் பேயர் மதலைய ரெனவே அத்த னருள்பெற்ற வன்ப ரிருப்பர் சித்தரு மவரே தேவரு மவரே முத்தி வேண்டி முறைமையான் வணங்குதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
இயமன் வருணன் குபேரன் இந்திரன் வியக்கத் தகுந்த வேறுபல் தெய்வமும் வியனடி வேண்டி யாற்றினர் வெகுதவம் முயலுதும் நாமும் முதன்மை யடைகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அரவரைக் கசைத்த விசைசால் பரமன் குரவு வார்கழல் கும்பிடும் பாக்கியம் தரைமிசை பெற்றேர் தமக்குச் சமமாய் எவரையுங் காண்கிலம் இறைஞ்சுது மவரடி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்:
இலங்கை வேந்தன் இராவண னென்பான் நலங்கொள் கயிலையை நாடி யெடுத்துக் கலங்கின காரணங் கண்டு மடியேம் நிலந்தனிற் ருழ்ந்துநீ ளகந்தை யகற்றுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வடியார் சூலம் வலக்கர மேந்தி இடியார் பேரொலி யெங்கு மார்ப்ப அடியார் காணவன் முடிய கூத்தை அடியேங் காண வாசைகொள் வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
49
50
51
52
5$
64

நற்சிந்தனை
அழல்சேர் கையு மருவிபாய் சென்னியும் கழற்கீழ் முயலகன் கலங்கும் வன்மையும்
இளநிலா வெறிப்பும் எடுத்தபொற் பாதமும்
பழவினை நீக்கும் பார்வையும் காணுதும் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இளமையு மூப்பு முள்ளா னில்லான் களவிலா நெஞ்சினர் காட்சிக் கெளியன் மழவிடை யூர்தியன் மாசி லாமணி யளவு கடந்தவ னவனடி சூடுதும் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
அறம்புரி வோர்கள் திறம்பா வாற்றலர் உறங்கி யுறங்கா திருக்கு முத்தமர்
கறங்குபோல் மனத்தைக் கடந்த சித்தர் இறந்தும் பிறந்து மிடுக்கணெய் தாதவர் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
சனகர் சனந்தன ராதியாந் தவத்தினர் இனந்தனி லெம்மை யிருத்தி வைத்துச் சினந்தனை நீக்கிச் சிவானந்த மென்னும் வனந்தனில் வைக்க வள்ளலைப் பாடுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கற்பனை கடந்த வற்புதன் கமலப் பொற்றுணை மலரடி போற்றி யுலகில் நிற்பதும் நடப்பது மாய வுயிரெலாம் சிக்கன வாழ்வுறச் சிந்தைசெய் வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
காரா ராணவக் காட்டைத் திருத்திப் பாரார் விண்ணுேர் பரவுஞ் சிவமெனும் பேரார் வித்தை யிட்டுப்பே ரின்பமாம் சீரார் தெவிட்டாக் கணியருந் துவமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
179
55
56
57
58
59
60

Page 95
18O
கிஞ்சுக வாயுமை கேள்வனை யமரர் சஞ்சலந் தீர்த்த சற்குரு நாதனை நெஞ்சக மலரிடை நினைந்து நாடொறும் வஞ்சனை கோபம் பொருமைமாய்ப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கீரன் சொன்ன வாசகங் கேட்டுப் பேரன் புற்றுப் பிணியை நீக்கி மாரனைக் காய்ந்த மறைமுதல் வோனைப் பூரண மாகப் போற்றுவோம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கையையுங் காலையு முன்பணிக் காக்கிச் செய்கை யெல்லாந் திருவடிக் காக்கிப் பொய்யுங் கொலையும் புலையும் போக்கி மெய்யன் புடன்மே தினியில் வாழ்வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். V
கொன்றை மத்தம் தும்பை கூன் பிறை துன்று கங்கை சூடிய சொக்கனை மன்றுள் மாணிக்க வல்லி மகிழ்நனை என்று மேத்தி -யிறைஞ்சுதும் நாமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
கோகனகத் தானுங் கோவிந் தனுந்தேடி ஆகம் நொந்து அறிவழிந் தார்கள் மோகஞ்சேர் மாரன் முழுது மழிந்தான் யோக நாதன்றன் னுரைக்கா ரொப்பார் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சக்கரம் மாலுக்குத் தந்த பரமனை அக்கரந் தோறு மமர்ந்த பெருமானைத் துக்கம் வெட்கம் தொலைய நினைந்து தக்க வன்பொடு சமர்ப்பிக் குதும் நாம் ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம். .
நற்சிந்தனை
61
69
63
64
65
C6

நற்சிந்தனை
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெம்மை யாண்ட
போத குருவைப் புண்ணிய மூர்த்தியை நாதங் கடந்த ஞான வெளியிடை பேத மின்றிக் கண்டுபிறப் பற்ருேம் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சித்திர காரன் தீட்டிய தீபம்போல் நித்திய வஸ்துவில் நினைப்பு மறப்பற முத்தியி லிருக்கும் முறையைப் புகல்வாய் எத்திக்கு மாகி யிருக்கு மீசனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சீரக முள்ள சீவான் மாவே பாரக மெல்லாம் பரந்த தென்னத் தாரக மோதிச் சாந்தம் பொறுமையோ டோரகஞ் சார வுறுதி தந்தருள் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
செல்வர்பின் சென்று தினமலை யாமல் நல்வரந் தருவாய் ஞானிகள் நாட்டமே சில்பக ருேன்றிச் சிதையா வண்ணம் எல்லையில் கால மென்றனுக் கருளுதி ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சேணிடை விடைமேற் றிருஞான சம்பந்தர் காணிய வண்ணங் காட்சி கொடுத்த ஆணிப் பொன்னே அம்பல வாணு வேணியா வென்முன் வெளிப்பட வருக ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சைவனே யுன்னைத் தமசம மாதியோ டைவரும் பொன்ற வடியே னுக்குக் கைவர மருள்வாய் கால காலா மைதவ ழம்மை மருவு மார்பனே
ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
81
67.
68.
69.
70
71.
72.

Page 96
182
சொன்ன பாணன் சுந்தரன் கவிக்காய்ச் சொர்ண மளித்த சொக்க நாதனே இன்னு மென்னை யிடருற வைத்தால் என்ன செய்குவே னேழை யேனே ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
சோடி ழந்த வன்றில் சுகத்தைத் தேடி யலையுஞ் செய்கை போல நாடி யானு முன்னை யணுக ஓடி வந்தரு ஞதவு வாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தந்தை தாயும் மைந்தரும் பிறரும் வந்த வாழ்வுமோ ரிந்திர சாலம் அந்த மாதியு மில்லா வரனே எந்த நேரமு மென்னைக் காக்குதி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தாவும் வேங்கை யுடையாய் சடையாய் ஏவும் மார னெனைத்தொட ராமல் கூவு மென்குரல் கேட்டி ரங்குதி தாழ்வும் வாழ்வும் இல்லாச் சம்புவே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
திங்கள் கங்கை வைத்த செல்வனே அங்கை தன்னி லனலேந்து மாதியே மங்கை பங்கனே மறலி காலனே எங்கே நினைப்பினு மென்னெதிர் நிற்குதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தீவினை கெஞ்சத் தீப்பிணி யஞ்ச நாவினில் நமச்சி வாயங் கொஞ்ச
சாவிற் சஞ்சல முழுதுந் துஞ்ச சேவிக்க வருள்தா செஞ்சர னிணையினை
ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
73
75
76
77,
78

நற்சிந்தனை துண்டப் பிறையாய் தூவெண் நீற்ருய் அண்டர் பிரானே அரகர சிவனே தொண்டர் மனத்தாய் சோதியுட் சோதி கண்டவ ருண்டோ கடவுளே யுன்னை ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தூதுசுந் தரர்க்காய்ச் சென்ருய் நல்லிருட் போதுசம் பந்தர்க்குப் பொற்கிழி கொடுத்தாய் மாதுலற் காக வழக்குமுன் னுரைத்தாய் சேது மேவிய செல்வா நீதுணை ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தென்னவன் தீப்பிணி தீர்த்தாய் முன்னுள் மன்னவ ஞக மதுரையில் வாழ்ந்தாய் அன்னந் தண்ணி ரரசுக் கீந்தாய் என்ன நான் கேட்பே னெந்தாய் இரங்காய் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தேவர் பிரான் பழி தீர்த்தாய் கூடலில் சேவக ஞகக் குதிரை செலுத்தினை மூவர் தமிழ்மொழி கேட்டுகந் தாய்முன் காவல ஞகவும் நடித்தனை நீயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தையலை வேட்டுச் சார்ந்தாய் மதுரையில் வையகம் வானக முட்க நடித்தாய் பையர வந்தனை யார்த்தாய் பணியாய் ஐய ஐயவென் றனக்கரு ளாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தொல்லைநா விருவர் காணுச் சோதியே தில்லை யம்பலத் தாடிய சிவனே எல்லை யில்லா ஏக வெளியே ஒல்லை வந்தரு ஞதவுவாய் கடனே ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
183
79
J
81
82
83
84

Page 97
184 நற்சிந்தனை
தோளா முத்தே சுடரிற் சுடரே பாழா யடியேன் ப ைதயா வண்ணம் நீளா வருள்நீ தருவாய் வருவாய் ஆள்வா யடியார் குடிவாழ் பவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 85
நந்தா விளக்கே ஞானச் சுடரே இந்தா றணியு மிறையே முறையோ வந்தாள் தருணம் மறையின் முடிவே எந்தா யென்றுங் காப்பா யெனையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 86.
நாமார்க் குங்குடி யல்லோம் நாடிற் தாமார்க் குங்குடி யல்லாச் சங்கரன் கோமான் வைத்த குடியே நாங்கள் ஏமாப் போம்பிணி யறியோ மென்றும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 87.
நின்ன வார்பிற ரில்லை யெலாம்நீ சொன்னர் முன்னேர் தோத்திரஞ் செய்து பன்ன விரிப்படிப் பயிலப் பயில என்ன யகமே யெமக்கறி வுண்டோ ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம். 88
தாமரையில் நீர்போற் சகத்திலே தம்பிநீ சேமமுடன் வாழ்வாய் சிவனைநினை-ஆமளவும் நன்மையையே செய்வாய்நீ நல்லோரைப் பேணிநட தன்னை யறியலாந் தான். - l
தந்தை தாய் மற்றுந் தமர்தார மெல்லாருஞ் சந்தையிற் கூட்டமிது தப்பாது - எந்தைபால் 1 எப்போது ம ன்புவை எல்லா மவன் செயலே இப்போ சமய மிணங்கு, . . 2

நற்சிந்தனை 185
பராயரக் கண்ணிகள் 1
அன்னைதந்தை சுற்றம் அரிய சகோதரர்கள் உன்னையன்றி யுண்டோ என்னுயிரே பராபரமே. I
ஆக்கையே கோயில் அகமே சிவலிங்கம் འ་ பூக்கைகொண்டு போற்றவருள் புரியாய் பராபரமே. 2 இருவினையால் கட்டுண்டு இடர்ப்பட்டுத் திரிவேனக் கருணையா லாட்கொண்ட கண்ணே பராபரமே. 3 ஈயாத புல்லர் இடந்தோறும் நாயடியேன் வாயார வாழ்த்தி வாழவிட்டாய் பராபரமே. 4. உன்னைப் பிரிவேனே உயிர் நான் தரிப்பேனே என்னைப் பிரிவாயோ இறையே பராபரமே. 5 ஊரும் பேருமில்லா ஒருவன் உலகத்திலே ஆரென்று காட்டென்பார்க் கென் சொல்வேன் பராபரமே.6
எல்லாமா யல்லவுமாய் இருப்பான் இறைவனென்ருல் சொல்லாலே எப்படிநான் சொல்வேன் பராபரமே. 7.
ஏக னனேக னென்றுசொல்லும் விந்தை தேகத்துக்கோ சித்துக்கோ செப்பாய் பராபரமே. 8. ஐம்பொறியும் மனமும் அறியாமல் நிற்குமொன்று எம்மறிவுக்கு எட்டுமோ எந்தாய் பராபரமே. 9.
ஒருபொல் லாப்புமில்லை உண்மை முழுதுமென்ற திருவாக்கை யாரறிவார் செப்பாய் பராபரமே. 10.
ஓங்காரத் தாலே உலக முதிக்குமென்ற பாங்கறிவார் யார்தான் பகர்வாய் பராபரமே. 11 ஒளவிய நெஞ்சத்தார் அறியா ரெனவுரைத்தால் ஒளவிய நெஞ்சமிலார் யார்தான் பராபரமே. 12. அஃகுத லில்லா அறிவுடைய பெரியோர்யார் வெஃகுத லின்றி விளம்பாய் பராபரமே. 13

Page 98
186 நற்சிந்தனை
II.
ஒருபொல்லாப்பு மில்லையென்னு மொருமொழியால்
உள்ளம் உருகாதோ வென்றன் உயிரே பராபரமே. I. எப்பவோ முடிந்ததென எந்தை குருநாதன் செப்புந் திருவாக்கின் சீர்தருவாய் பராபரமே. 9.
நாமறியோ மென்றுமுன்னுள் நல்லூரில் சொன்னமொழி நாமறிந் துய்யவரம் நல்காய் பராபரமே. 3
ஆரறிவா ரென்றுமுன்னுள் ஆசா னுரைத்தசொல்லின் சீரறியச் செய்வாய் சிவமே பராபரமே. 4
அப்படியே யுள்ளதென அன்ருசான் சொன்னமொழி இப்படியில் யானறிய இரங்காய் பராபரமே. 5
என்றுநீ யன்றுநாம் என்னுந் திருவாக்கைக் கண்டுதொண்டு செய்யக் கருணைசெய்வாய் பராபரமே. 6
அஞ்செழுத்தை நெஞ்சில் அழுத்தா தழுத்திநிற்கக் கஞ்ச மலரடியைக் காட்டாய் பராபரமே. 7
பஞ்சப் புலன்வழிபோய்ப் பாரி லலையாமல் செஞ்சரணே தஞ்சமெனச் செய்வாய் பராபரமே. 8
கட்டுப்படா மனத்தைக் கட்டத் திருவருளை இட்டமுடன் நீதாராய் எந்தாய் பராபரமே. 9
ஊன யுயிராய் உடலாயென் னுட்கலந்த தேனு ரமுதே தீங்கரும்பே பராபரமே. Ι0
ஒருதெய்வம் ஒருலகம் உண்மை முழுதுமென்னும் திருவருளில் நிற்கவருள் செய்வாய் பராபரமே. ll

நற்சிந்தனை 187
III சிந்தித்துச் சிந்தித்துச் சிவமேநா மென்றெண்ணத்
தந்திடுவாய் நல்லவரம் தற்பரனே பராபரமே. 1 அந்தமு மாதியு மில்லா ஆண்டவனே என்தன் பந்தத்தை நீக்கிடுவாய் பராபரமே. 2 ஆரறி வாரென்ற அருமைத் திருவாக்கின் சீரறியச் சிவஞானம் தருவாய் பராபரமே. 3. இருவினையை நீக்கி யின் பத்திலே நான்தேக்க வருவாயென் னுள்ளத்தில் வாழ்வே பராபரமே. 4
ஈசனே யெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் நிற்கும் தேசனே சிந்தை தெளியவைப்பாய் பராபரமே. 5 உருகி யுருகி உணரும்மெய்ஞ் ஞானிகளின் திருக்கூட்டஞ் சேரவருள் செய்வாய் பராபரமே. 6 ஊரூராய்த் திரிந்து உன்மத்த னிவனென்னும் பேரூரச் செய்து பிறப்பறுப்பாய் பராபரமே. 7 எல்லாமா யல்லவுமா யிருக்குந் திருவருளைச் சொல்லாமற் சொல்லுஞ் சுகந்தருவாய் பராபரமே. 8 ஐயப் படாமல் அருள்வழியே செல்லநல்ல துய்ய வருள்தாராய் என்துணையே பராபரமே. 9. ஒன்பதுவாய்த் தோற்பைக்கு உணவளிக்க நான்திரிதல் என்ன மதிதான் இயம்பாய்நீ பராபரமே. O ஓங்காரக் கம்பத்தின் உச்சியிலே நிற்குமுனை பாங்காய்ப் பணியவருள் பண்ணுய் பராபரமே. ஒளவிய மில்லாதார் அகம்மேவும் ஆண்டவனே எவ்வித மாய்ப்பணிவேன் இயம்பாய் பராபரமே. I 2. அஃகமுங் காசுந்தேடி அலையும் அடியேன நஃகுதல் செய்யாமல் வரந்தாராய் பராபரமே. 3

Page 99
188 நற்சிந்தனை
IV
அன்பிற் கரைந்துருகி யடிபணியும் மெய்யடியார் இன்ப நிலையே எந்தாய் பராபரமே. l
ஆருய்க்கண் ணிர்பெருக்கி அவசமுறும் மெய்யடியார் மாருக் கருணை மனவிளக்கே பராபரமே. 2
இருவினையை நீக்கி இரவுபக லற்றவன்பர் கருவினையை நீக்கும் கதியே பராபரமே.
ஈசனே யெங்குமென வெண்ணுகின்ற மெய்யடியார் வாசனே நல்லவழி காட்டாய் பராபரமே. 4.
உன்னை யுணர்ந்தவர்கள் ஒசையற்ற நிட்டையிலே தன்னை மறந்திருப்பார் சத்தே பராபரமே. 5
ஊணு யுயிராகி யுட்கலந்த சோதிதனை நான ரறியவென்றன் நட்பே பராபரமே. 6.
எல்லாம் நினதுசெய லென்றறிந்த மெய்யடியார் நில்லா வுலகை நினைவரோ பராபரமே. 7.
ஏது மறியாத ஏழையென்று கைவிட்டால் யாதுசெய் வேனென்ன யாள்வாய் பராபரமே. 8
ஐயுந் தொடர்ந்து அறிவழியு முன்னமென் கையுந் தொழப்பண்ணிக் காப்பாய் பராபரமே. 9
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலான் நல்லூர்க் குருவாக வந்து குறைதீர்த்தான் - வருவாரை வையாமல் வைது வரந்தருவான் நாமெல்லாம் உய்யாமல் உய்வோம் உவந்து.
சிவமேநா மாமென்று சிந்திக்கச் சீரார் சிவமேநா மென்று தெளிவோம்-அவமே மனமே யுடன் போகும் மற்றுமோர் தெய்வம் கனவிலும் எண்ணுது காண். 2.

நற்சிந்தனை 189
ஊதூது சங்கே ஊதூது
ஊதுாது சங்கே ஊதூது
ஒம்சிவாய நமவென் றுாதுாது (1) ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப் பில்லையென் றுாதூது (2) ஊதூது சங்கே ஊதூது உட்பகையை விட்டிடென் றுாதுாது (3) ஊதூது சங்கே ஊதூது உங்கள்பிரான் இங்குவர ஊதூது (4) ஊதூது சங்கே ஊதூது ஒருவருக்குந் தெரியாதென் றுாதூது (5) ஊதூது சங்கே ஊதூது ஐம்பூதம்நா மல்லவென் றூதூது (6) ஊதூது சங்கே ஊதூது ஐம்பொறி நாமல்லவென் றுாதுாது (7) ஊதூது சங்கே ஊதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது (8) ஊதூது சங்கே ஊதூது பஞ்சவாய்வு நாமல்லவென் றுாதுாது (9) ஊதூது சங்கே ஊதூது தசநாடி நாமல்லவென் றுாதுாது (10) ஊதூது சங்கே ஊதூது அடிமுடி இல்லையென் றுாதூது (11) ஊதூது சங்கே ஊதூது காமக்குரோதம் நாமல்லவென் றுாதுாது (12) ஊதூது சங்கே ஊதூது உன்னையுன்னுல் அறியென் றுாதுாது (13)
ஊதூது சங்கே ஊதூது சிவதொண்டன் வாழ்கவென் றுTதூது (14)

Page 100
90
நற்சிந்தனை
ஊதூது சங்கே ஊதூது II
ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப்பு மில்லையென் றூதூது காது செவிடுபட ஊதூது
கங்குல்பகல் காணுமல் ஊதூது.
நல்லூரான் திருமுன்புநின் றுாதுாது நாமேநா மென்றுசொல்லி ஊதுரது எல்லாஞ்சிவன் செயலென் றுரதூது ஏகமன தாய்நின் றுாதுாது.
அல்லும்ப கலுமற ஊதூது ஆணவத்தை நீக்கிநின் றுாதூது வெல்லும் பகையொழிய ஊதூது வேறுபொருள் இல்லையென் றுாதுாது.
ஐம்பூதம்நா மல்லவென் றுாதூது ஐம்பொறிநா மல்லவென் றுாதுாது ஐம்புலன் நா மல்லவென் றுாதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது.
ஆன்மாவே நாமென் றுாதுரது ஆசானைப் பணிந்துநின் றுாதூது ஆரறிவா ரென்றுசொல்லி ஊதூது அன்பே சிவமென்று ஊதுாது.
மாதுமை பங்கனென் றூதூது மங்களம் மங்களமென் றுாதுாது சோதி சொரூபனென் றுாதுரது சுந்தரர்து தானுனென் றுாதுாது.
அடியார்க் கடியானென் றுாதுாது ஆதியந்த மில்லானென் றுாதூது
திங்கட் சடையானென் று தூது தேவாதி தேவனென் றுாதுாது.

நற்சிந்தனை 191
ஆன்மா நீ
அன்பி னுருகி அவனேநா னென்றுசொல்லி இன்பக் கடலில் இளைப்பாறித்-துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் இறப்பும் பிறப்புமில்லைச் சொன்னே னிதுவே சுகம். I
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு நீயல்லை ஐம்புலனும் நீயல்லை ஆன்மாநீ-உண்மையில் செம்மையாய் வாழ்ந்துசீ வன்சிவ னென்றமுழு உண்மை யறிவாய் உகந்து. 2
உகந்து மணங்குவிந்து ஒன்றுக்கு மஞ்சா தகந்தை அவாவெகுளி யாற்றிச்-சகந்தனிலே தாமரையிற் றண்ணிர்போற் சாராமற் சார்ந்துநற் சேமமொடு வாழ்வாய் தெளிந்து. - 3.
சிந்தனைக் கெட்டாத தெய்வத்தை நாம்நிதமும் வந்தனை செய்து வணங்குவோம்-பந்தமுண்டு முத்தியுண் டென்று முனைத்துநில் லாமலே நித்தியணு மென்றே நினை. 4.
தன்னை யறியத் தனக்கொருகே டில்லையென முன்னைப் பெரியோர் மொழிந்தனரால்-தென்னைபனை சேரிலங்கை வாழுஞ் சிவநேயச் செல்வர்காள்! தேரீரிச் சீவன் சிவன், 5 ܖ
தெரிந்து செயலாற்றுந் தீரர்களே நல்ல விரிந்த அறிவுள்ள மேலோர்-திரிந்து மதியிழந்து வாடாமல் மாணடியை யென்றும் துதிமனமே சொன்னேன்வெற் றி. 6
வெற்றிதரும் வேண்டியன வெல்லாந் தருமனமே பத்தியுடன் பாடிப் பணிசெய்வாய்-சித்தத்தில் ஆனந்தம் பொங்கும் அதுவே நானென்று தியானஞ்செய் சீவன் சிவன். 7

Page 101
192 நற்சிந்தனை
உற்றதுணை
१ " வெண்பா சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் சிவனென்று பாவித்துக் கொண்டாலிப் பாரினிலே -ஆவிக்கே
உற்ற துணையென் றுறுதிகொண்டு நல்லூரில் நற்றவனை நாடுவோம் நாம் . 1
நாமந்தி சந்திதொறும் நல்ல சிவநாமம் சேம முறப்பாடிச் சிந்தையிலே-காமமுதல் கட்டறுத்து நிட்டையிலே கங்குல் பகலின்றி இட்டமுடன் வாழ்வோம் இனிது. 2
இனியே தெனக்குன் அருள்வருமென் றெண்ணுது கனிகாய் அருந்திக் கடும்பசிக்குத்-தனியே இருந்துமுத்தி சேர்வதற் கெண்ணுவதே யல்லால் பொருந்துவனே பூவிற் புகுந்து. 3.
போதுகொண்டு போற்றேன் பொறிவழியே போயலையேன் தீது செயுமனத்தைச் சேர்ந்திடேன்- யாதுக்கும் \ அஞ்சேன் அவரிவரை அண்டிடேன் எஞ்ஞான்றுந்
தஞ்சமென்று வாழ்வேன் தனித்து. 4
சற்குருவைப் போற்றித் தரணியிலே சீரடியார் பொற்பதத்தைப் போற்றிப் புகலுவேன்-கற்றவர்கள் நாடுஞ் சிவதொண்டன் நாஞ்சிவம் என்றுசொல்லி ஓடி வருவான் உவந்து. 5
உவந்து வருவானே மென்றுரு வேற்றிப் பவம்வெந்து போக வருள்வான்-தவஞ்செய்வார் கண்டு மகிழுவார் காதலுட னுதரிப்பார் பண்டுபோ லென்றும் பரிந்து. 6 பரிந்தன்பர் பாதத்தில் பாங்குடனற் போது சொரிந்துசிவ தொண்டன் தொழுது-கரங்கூப்பிச் சீவன் சிவனச் சிவநாமம் பாடுவான் தேவர் புகழநிற்பா ன் தேர்ந்து. . . 7

நற்சிந்தனை 193 யோகமறியேன்
யோக மறியேன்யான் யோகியரை யும்மறியேன் ஆகுநெறி மற்ருென் றறியேன்யான் தேகமிது வீழ்வதன் முன்னுன் விரையார் மலர்த்தாளைச் சூழப் பணியாய் தொழுது. .
தொழுது வணங்கிநின் துரநெறியே செல்லும் முழுமனத்தார் தங்கூட்டம் முன்னி-அழுதே உருகி யுருகி யுளநைந்து கண்ணிர் பெருக வரந்தருவாய் பின், 2
பின்ன ரெனக்குப் பிறப்போ டிறப்பென்னும் மன்னுபெரு வாதைமற் றென்செய்யும்-உன்னைச் சரணென் றடைந்த தகவுடையார் பாதம் அரணென் றிருந்தேற் கறி. 3
அறிவுக் கறிவாகி யப்பாலுக் கப்பாற் பிறிவற் றிருக்கும் பெருமான் -நெறிநின்றர் நீடூழி வாழ்வாரே நீநா னவனென்று பாடுபட மாட்டார் பரிந்து. 4
பரிந்து பணியாற்றிப் பாவமெல்லாந் தீர்த்தேன் இருந்த படியிருக்கு மெம்மான் - வருந்த வழியு மினியுண்டோ வாழ்வுடன் தாழ்வோ செழுமலர்ப் பாதஞ் சிரம். 5
சென்னிக் கணியுன்ருள் சேவித்து நிற்றலே பண்ணுக் கணியுன்னைப் பாடுதலே-கண்ணுக் கணியுன் வடிவுகண் டானந்தங் கொள்ளல் பணியை யணிந்தாய் பரம். 6
பரவுமடி யார்க்கருளைப் பாலிக்கும் ஐய!
இரவுபகல் காணுநின் றேத்த-வரமருள்வாய்
வாய்விட்டுச் சொல்ல வகையெனக்கிங் கில்லையே
நீவிட் டிடாதே நினை. 7
13

Page 102
194
நற்சிந்தனை
நினைவி னினைவாகி நீயிருக்க நாயேன் வினைவழியே சென்று மெலிகோ- எனையும் இடுக்க ணெனக்கில்லை நின் செயலே யாவும் நடுக்கமெனக் குண்டோ நவில். 8
நவிலு மறைநான்கு மாகமமுந் தேடி நவில முடியாத நாத-தவமுடையார் தம்மனத்தாய் நாயடியேன் சாற்றுங் கவிக்கிரங்க எவ்வமுண்டோ கூரு யினி. 9
இனிப்பிறவா நன்னெறிக்க ணெய்தினர் சேவைக் கினிப்பிறக்க வென்னைப் பணியாய்-இனித்ததிருக் கோலத்தா லைந்தொழிலுங் கூட்டிக் குனித்தருளுஞ் சீலத்தாய் தில்லைச் சிவ! 10
பதைப்பற்றிரு நெஞ்சமே இராகம்-தன்னியாசி, தாளம்-ஆதி
பல்லவி
பார்ப்பதெல் லாஞ்சிவ மாகவே கண்டு பதைப்பற்றிரு நெஞ்சமே.
அநுபல்லவி
பதைப்பற்ற பேர்க்கேசிவ பாக்கிய முண்டு பஞ்சேந் திரியம் அஞ்சையும் வென்று. (ւմn rՒ)
சரணம்
மார்க்கஞ் சொல்லும் வழிதனிற் செல்லு மாருத மெளனத் தியானத்தில் நில்லு தீர்க்க மானகுரு செல்லப்பன் பாதம் w சிந்திக்கும் யோகசுவாமி வந்திக்குங் கீதம். (LunTrif) ,

நற்சிந்தனை 195
முத்தி நெறி
நேரிசை வெண்பா-அந்தாதித்தொடை
நல்லூர்ப் பதியிலே ஞான நெறிகாட்டச் செல்லப்பன் என்னும் திருப்பெயரான்-பொல்லாப்பிங் கொன்றுமே யில்லையென ஒதினுன் ஒதயான் கண்டுமெய் தேறினேன் காண்.
காண்பதெலாம் பொய்யென்று காட்டினன் காட்டயான் வீண்பா வனையெல்லாம் விட்டொழிந்தேன்-மாண்புடனே நீயும் மனத்தில் நினைத்தால் வினையெல்லாம்
மாயும் இதைநீ மதி. 2
மதிக்கும் மதிகொடுக்கும் மாநிலத்தை யாள விதிக்கும் விமலனடி சேர்க்கும்-துதிக்கும் அடியவர்கள் துன்பம் அகற்றி அருளுங் கடிமலராற் பூசித்துக் காண். 3.
காணுவார் தொண்டர் கருதுவார் சொன்னசொற் பேணுவார் பேணிப் பெரிதுவப்பார்-சாணு வளர்க்க வழிதேடி வையத் தலையார் கலக்கமறக் கண்டு களி. 4.
களிபெருகுங் காமக் குரோதமெலாங் குன்றுந் தெளிவுண்டாஞ் சித்தத்தில் தீமை -விளியுமே ஆரறிவா ரென்றதனை அந்திசந்தி சிந்தித்தாற் பேரறிவு தான்வருமே பின், 5
பின்னுமுன்னு மில்லைப் பிரமமே யுள்ளபொருள் என்னு மொழிதம் இதயத்தில்-மன்னுபவர் சாந்தம் அடக்கம் தயவுடனே வாழ்ந்தினிது சேர்ந்திடுவார் முத்தி தெரி. 6

Page 103
96. நற்சிந்தனை இலங்கை நம் நாடு
தூண்டு சுடர்ச்சோதி தொல்லுலகில் வந்துநமை யாண்டுகொண் டான மார்க்குங் குடியல்லோம் வல்வினையும் போச்சு வரம்பிலின்ப மேயாச்சு நல்வினை சேரிலங்கை நாடு.
வேண்டுதல் வேண்டாமை யில்லான் விரும்பிவந்து ஆண்டுதான் கொண்டான மார்க்குங் குடியல்லோம் பொய்பேசு கில்லேம் புறங்கூறு கில்லேம்யாஞ் செய்யா ரிலங்கை நமது. . . 2
இல்லையென்று சொல்கிலோம் யார்பாலு மன்புடையோம் எல்லையில்லா வின்ப மெவர்க்குங் குடியல்லோம் தில்லைவாழ் தெய்வத் திருவடியைச் சிந்தித்து நைவோ மிலங்கைநம் நாடு. 3
தீமையெவர் செய்தாலும் சித்தத்திற் கொள்ளேம்யாம் ஆமைபோ லடக்குவோ மார்க்குங் குடியல்லேம் செய்வோம் சிவபூசை தீங்கவிகள் பாடுவோம் உய்வோ மிலங்கைநம தூர். 4.
அச்சமொடு கோபத்தை ஆகா வெனத்தடுத்தோம் இச்சையெல்லாம் விட்டோம் எவர்க்குங் குடியல்லோம் நெஞ்சிற்பஞ் சாக்கரத்தை நேச முடனுரைப்போம் மஞ்சு தவழிலங்கை வைப்பு. 5
ஆதியு மந்தமு மில்லைநமக் கென்றுமென ஒதி யுணர்ந்தோ மொருவர் குடியல்லேம் ஆறுங் குளமும் அணியார் பொழில்களுஞ் சேருநம தூரிலங்கை தேர். y 6 சிந்திக்க நெஞ்சும் தெரிசிக்கக் கண்ணிரண்டும் வந்திக்கச் சென்னிபிறர் வைத்தகுடி நாமல்லோம்
-அந்திசந்தி வாழ்த்தி வணங்குவோம் வாயாரப் போற்றுவோம் தாழ்த்திநிற் போமிலங்கை தாள். 7

நற்சிந்தனை I97
எல்லார்க்கு மாங்கடவு ளொன்றென் றியம்புவோம் பொல்லாங்கு செய்யோம் பிறர்குடி யல்லேம் கொலைகளவு கோபத்தைக் கொள்கிலேம் நெஞ்சில் நிலையென் றிலங்கை நினை. 8
நிற்போம் சமாதியிலே யென்றும் நிலைத்திருப்போம் பெற்ருேம் பிறர்க்கடிமை நாமல்லோம்-சுற்றந் துறந்தோம் பிறவாத தொல்பதியைச் சேர்ந்தோம் சிறந்தோ மிலங்கை தெரி. 9
செல்வநிலை யாதென்று தேர்ந்தோம் சிவபெருமான் நல்ல பதமறவோம் ஆளல்லோம்-அல்லலுற மாட்டோ மவனி மதித்தாலு மின்புருேம் வேட்டோ மிலங்கை வெளி. 10
இலங்கைவாழ் தெய்வ மெமையாளுந் தெய்வம் கலங்க விடாத்தெய்வம் காணின்
-புலன்வழியிற் செல்ல விடாத்தெய்வம் தேவர் தொழுந்தெய்வம் நல்லதெய்வம் நாடோறும் நாடு. 11
எல்லாந் தருந்தெய்வம் எல்லாமா குந்தெய்வம் எல்லாந் தொழுந்தெய்வ மெந்தெய்வம்-நில்லாநீர் செஞ்சடைசேர் தெய்வம் சிரஞ்சீவி யானதெய்வம் அஞ்செழுத் தானதெய்வ மாம். 12
நிலனகிக் காற்ருகி நீராகுந் தெய்வம் அலகி லருக்கனு மம்புலியும்-பலபலவாம் வேடங் கொளுந்தெய்வம் வேதாளஞ் சூழ்தெய்வம் மாட மலியிலங்கை வாழ்வு. 13

Page 104
198 நற்சிந்தனை
தன்?னயறிந்தோர் தலையானுேர்
Go6nu saru T
தன்னை யறிதல் தலையானேர் தங்கடமை என்னப் பெரியோ ரியம்புவரால்-மின்னனைய பொய்யான வாழ்வைப் புதுமையென வெண்ணுவரோ கைமேற் கணியாகக் காண்.
தெரிந்து வினையாற்றுந் தீரர்களே மண்ணில் அருந்தவர்க ளென்றுமுனே ராய்ந்தார்-பொருந்துவன செய்து சிறுதொழில்கள் செய்யா தொழியவிட்டு உய்வாய்நீ யென்னி லுறைந்து, 2
சிவத்தை விடத்தெய்வம் வேறில்லை யென்போர் அவத்தி லழுந்துவரோ வன்றே - உவத்தல் வெறுத்தலாற் றெய்வம் பலவாய் விதித்தோம் அறுத்தார்க்கு முண்டோ வவை. 3
அவைக்கஞ்சா வீர ரவர்தம்மை நோக்கில் சுவைமுதலாய் வென்றநல்ல தூயோர்-நவைசேரும் இந்திரனே சாலுங் கரியென்ருல் வேறெனக்குச் சந்தேக மேன்காணுஞ் சாற்று. 4
சாற்று முடல்பொருளு மாவியுந்தந் தோர்களிந்த மாற்றமாம் வையம் மதிப்பாரோ-தோற்றமெலாம் தாமே யலவென்று தம்மையறிந் துய்வோருக் காமாறென் காணு மறை. 5
அறையும் மறைநாலு மாகமங்கள் தாமும் இறையளவும் தெய்வ மியம்பா-தறநெறியே கும்பிட்டார்க் கல்லால் குளிர்ந்த மலர்ப்பாதம் இம்மட்டென் றேகூற லில். ... ' 6
இசையும் பொருளை யிரப்போருக் கீந்தே இசைபடவே வாழ்வார்க்கிப் பூமி-திசையறியப் பூங்கோயி லாகப் பொருந்துமே யாதலினல் நீங்காம லீந்தே நிலை. 7

நற்சிந்தனை 199
நாடு மீழத்து நற்றமிழ் நாடனே
அந்தி சந்தியுஞ் சிந்திக்கு மெய்யன்பர் பந்த பாசங்க டீர்க்கும் பரிசினன் அந்த மாதியு மில்லா வியல்பினன் இந்த விலங்கை யெழில்நக ரானே. l
ஆடு பாம்பணிந் தம்பலத் தாடுவான் பாடு வார்பவந் தீர்த்திடும் பண்பினன் ஒடு கங்கை யுடன் வைத்த சென்னியன் நாடு மீழத்து நற்றமிழ் நாடனே. 2
இருவினை வந்தெனைத் தாக்கா திருக்கவும் கருவி கரணமென் கட்டளை கேட்கவும் அருவி கண்களி லாருய்ப் பெருகவும் தருக வருளிழத் தண்ணக ரானே. 3.
ஈவது கடைப்பிடித் தென்று மொழுகவும் நோவது பேசாது நோன்பைப் பிடிக்கவும் சாவது வந்தாலுஞ் சத்தியந் தழைக்கவும் தேவர்தொழு மிலங்கைத் திருநக ரானே. 4
உண்டான போதுநா னுற்ருர்க் குதவவும் சண்டாள ரோடுசச் சரவின்றி வாழவும் கண்டொன்று சொல்லாமற் காலங் கழிக்கவும் மண்டலம் புகழிலங்கை மாநக ரானே. 5
ஊன யுயிரா யுடலா யுறுப்பாய்க் கோணய்க் குருவாய்ச் சீடனுய் நீநின்ருய் யான ரறிவே னம்பலத் தரசே தேன ரிலங்கைத் திருநக ரானே. 6
ஐயா றகலாத வானந்தக் கூத்தனே தையலாள் தன்னைப் பிரியாத தாணுவே மையல்சேர் மாரனை நீறுசெய் வள்ளலே தெய்வமே யீழச் செழுநக ரானே. 7

Page 105
200 நற்சிந்தனை
ஒப்பற்ற தெய்வமே உயிருக்கு ஞயிரே தப்பற்ற மாதவர் தாந்தொழுங் கோவே துப்பிதழ் மடந்தை சேவிக்குஞ் செல்வமே இப்புவி யீழத் தெழில்நக ரானே. 8 ஒதுவார் தீவினை உடன்தீர்க்குந் தெய்வமே மாதுமை பாகனே மான்மழுக் கையனே பாதுகாப் பதுகடன் பாரேழு முன்னிடம் மீதுநீ கிருபைவை வேலையிலங் கையானே. 9 ஒளவிய மில்லா மனந்தா வடியாரைத் திவ்விய மாய்ப்பாடுஞ் சித்தமும் நீதா நவ்வியை யேந்தும் நம்பா நடராஜா கெளரிதன் பாகனே கடியிலங்கை நகரானே. Ι0
முழுவதும் உண்மை
பல்லவி முழுவதும் உண்மையென்று மோன முனி சொன்னனன்று.
அநுபல்லவி பழுதொன்று மில்லையென்று பண்ணுவாய் சிவதொண்டு. (முழு)
சரணங்கள் ஒழிந்துபோ கும்பிறவி அழிந்துபோம் பழிபாவம் எழுந்திரு விழித்துக்கொள் எல்லாம் உனக்குவெற்றி
((Մ) (Լք) 1 தளர்ந்துபோ காதேகுரு சாற்றிய ஞானமொழி தெளிந்துகொண் டாற்சீவன் சிவனெனக் காணலாம்.
((Մ) (լք) 2 சொல்லித்து திக்கும்யோக சுவாமியைத் தினங்காக்கும் செல்வன்திருப் பாதமே யல்லும்ப கலுந்துணை. (முழு) 3

நற்சிந்தனை - 2 Ol
96)6O)85uTGGOT
கலிவிருத்தம்
மதியும் நதியும் வைத்த சென்னியன்
விதியு மரியு மறியா விமலன் துதிசெ யடியார் துன்பந் தீர்ப்பவன்
மதில்சே ரிலங்கை மாநக ரானே. l
நீருங் காலும் நிலனுந் தீயுந் ஆரும் வானு மம்புலி கதிருஞ் சீருந் திருவுஞ் சிறப்பு முடையான் நேரு மிலங்கை நெல்வய லானே. 2
எண்ணி யெண்ணி யுருகு மடியார் மண்ணில் வந்து பிறவா வண்ணம் உண்ணின் றருளை யுதவும் நாதன் எண்ணில் வளஞ்சே ரிலங்கை யானே. 3
போக்கும் வரவும் இல்லாப் புனிதன் ஆக்கும் அழிக்கும் அவனி யெல்லாங் காக்கும் அடியார் கவலை தீர்க்கும் பூக்கும் இலங்கைப் பொன்னக ரானே. 4
பொன்னும் பொருளும் புகழுந் தருவான் முன்னும் பின்னும் இல்லா முதல்வன் என்னுள் அறிவா யென்றும் விளங்கும் துன்னும் வரைசூழ் இலங்கை யானே. 5
நினைக்கு மடியார் நெஞ்சத் துள்ளே முனைக்கும் காமக் குரோதம் மோகம் அனைத்தும் போக்கும் அம்மான் பெம்மான் சுனைச்சே ரிலங்கைத் தொன்னக ரானே. 6 நீள நினைக்கு மடியார் பாவம் மாள வருளை வழங்கும் பெருமான்
ஆழ நீள வாழி சூழ்ந்த நீள விலங்கை நெல்வய லானே. 7

Page 106
202
நற்சிந்தனை
மூவ ரறியா முதல்வ னுலகில் தேவ ராலு மறியாத் தெய்வம் யாவ ரேனுந் தொழு வார் பாவம் வேவ வருளு மிலங்கை யானே.
செக்கர் போலும் மேனிச் செல்வன் அக்கு மாலை யணியு மமலன் சொக்க னென்னுஞ் சொந்தப் பெயரான் இக்கு மலியு மிலங்கை யானே.
ஆளும் பெருமா னகத்து விருக்க நாளுங் கோளு நங்கட் கெங்கே வீழு மருவி விளங்கு மிலங்கை வாழும் பெருமான் மலர்த்தாள் காப்பே.
36A6061T6óT கலிவிருத்தம்
நேசத் தாலரன் நீள்கழல் போற்றுவார் பாசத் தாற்றுயர் பாரினி லெய்திடார் வாசக் காபல சேரு மிலங்கையித் தேசத் தான் சொல்லைச் சிந்தையிற் கொண்மினே.
எல்லாம் வல்ல இறைவன் றிருப்பதம் சொல்லும் பூக்கொடு தோத்திரஞ் செய்பவர் கல்லா ராயினுங் கதியுண் டிலங்கையான் சொல்லைச் சிந்தித்துத் துன்பத்தைத் தீர்மினே.
மொழிக்கு நற்றுணை முன்னஞ் செழுத்துமே விழிக்கு நற்றுணை மென்மலர்த் தாள்களே வழிக்கு நற்றுணை வண்புகழ் பாடலே
களிக்கு மிலங்கையான் கட்டுரை கேண்மினே.
பொறிவ Nமனம் போயலை யாமலே நெறிவ பூழிநிற்கக் கற்றுக் கணந்தொறும்
அறிவ பூழிந்திட ரெய்தீ ரிலங்கையான்
குறிவ பூழிச்செலக் கூடிடும் முத்தியே.

நற்சிந்தனை 203
புன்னெ றிசெலும் போக்கை யொழித்துநீர் நன்னெ றிதனில் நாட்டத்தை வைத்திடிற் சென்னெ றிக்குநற் செல்வ மிலங்கையான் சொன்னெ ஹிதனைச் சோரா துணர்மினே. 5
சமய தீக்கையைப் பெற்றுப்பின் சற்குரு அமையு மப்பா லவன்வழி செல்விரால் தமையு ணரறிவு தலைப்படு மிலங்கையான் சுவைதருஞ் சொல்லைக் கேட்பது தக்கதே. 6
காண்பான் காட்சி காட்சிப் பொருளிவை மாண்பாய் விட்டு மலரடி சிந்தித்தால் வீண்பா வங்கள் வெருண்டோடு மிலங்கையான் மாண்பாச் சொன்னது மனத்திடை வைம்மினே. 7
இருப்பி னும்நடந் தெத்திசை செல்லினும் பொருப்பில் வாழ்ந்திடு புங்கவன் பொற்பதம் விருப்ப மாவிளம் பீரிவ் விலங்கையான் விருப்ப மானசொல் வீட்டை யளிக்குமே. 8
அம்மை யப்ப னரிய சகோதரர் இம்மை யில்லிறை யென்றுநீ ரெண்ணியே மும்மைக் காலத்தும் போற்றி ரிலங்கையான் செம்மை யான சொன் முத்தியிற் சேர்க்குமே. 9
போன காலத்தை யெண்ணிப் புகையுநீர் ஞான நாயகன் நற்பதம் போற்றுவீர்
ஈன மானவை யேகு மிலங்கையான் மோன நல்கு மொழிதனை உள்ளுமின். 10
எனக்கினி யான் பிறர் யாவர்க்கு மினியான் தனக்கொப் பிலாதான் தத்துவா தீதன் சினக்குங் கரியுரி திருமேனி போர்த்தான் வனப்புறுஞ் சோலைகு Nலங்கை மன்னுமே. l

Page 107
204 . · நற்சிந்தனை
எங்கு முள்ளவன் எல்லாம் வல்லவன் மங்கையோர் பாகன் மான்மழுக் கையினன் பங்கயன் மால்பறந் திடந்துங் காணுன் கொங்கவிழ் காவிலங்கை கோயில்கொண் டானே. 12
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் அன்னை தன்னினு மன்புமிக் குள்ளவன் தன்னை யெவரு மறியாத் தலைமையன் தென்னைசே ரிலங்கை தேடியாண் டானே. 13
நல் வரம் தா கலிவிருத்தம்
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் தென்னை மாப்பனை சேரும் நல் லூருளான் அன்னை தன்னினும் மேம்படு மன்புளான் தன்னை நாடினன் தந்தன னேர்வரம். I மதியி லேரவி வைத்திடும் மாதவர் துதிசெய் தூய மலரடி யென்னுளம் பதிய வைத்திடும் பாக்கியம் யான்பெற மதியை வேண்டினேன் தந்தரு விரிவ்வரம். 2 இருவி னைக ளெனக்கண்டா லஞ்சவும் வருவி னைகளில் வையத்திற் கெஞ்சவும் குருப ரனுடன் கூடிச் சிறக்கவும் மருவு பாவம் மறக்கவுந் தாவரம். 3 அதுவி துவென்ற வவையெல்லாங் கண்டாருக் கதுவி துவுமாய் நின்ற பரம்பொருள் பொதுவி னில் நடங் கண்டு களிக்கவுன் புதும லரடி போற்றிடத் தாவரம். 4 ஆதா ரத்தால் நிராதாரஞ் சென்றுயான் பேதா பேதங்கள் காணுப் பெருமையை வேதாக மத்தில் விளங்கும் விமலனே நாதா நீதா எனக்கிந்த நல்வரம். 5

நற்சிந்தனை 265
இன்பம் எது
கலிவிருத்தம் எல்லாம் நீயென எண்ணுதல் இன்பமே எல்லாம் நானென எண்ணுதல் இன்பமே எல்லாஞ் சிவன்செயல் என்பதும் இன்பமே எல்லாம் என்செயல் என்பதும் இன்பமே. 1
குருபரன் அடியிணை ஏத்துதல் இன்பம்
குருபரன் அருட்பணி ஆற்றுதல் இன்பம்
குருபரன் அருள்வாக் காக்கிடும் இன்பம் ኣ குருபரன் சரண்புகக் கூடிடும் இன்பமே. 2
மோனத் தாழுதல் முடிவிலா இன்பம் ஞானத் துயருதல் நவையறு மின்பம் மானமார் நற்றவம் மதிப்பரு மின்பம் யானென தற்றிடல் எல்லையில் இன்பமே.
தன்னலம் வீந்திடத் தோன்றிடு மின்பம் இன்னல்செய் வினையற இயைந்திடு மின்பம் துன்னிய மலமறத் தழைத்திடு மின்பம் மன்னிய பிறப்பற மலர்ந்திடு மின்பமே. 4
ஐம்புலப் பந்தனை அற்றிடல் இன்பம் வெம்புறு வெகுளி விலக்குதல் இன்பம் துன்புறு காமத் தொடக்கறல் இன்பம் வம்புறு ம்யக்கற வாய்த்திடும் இன்பமே. 5
மன்னுயி ரெல்லாம் மகிழ்ந்திடல் இன்பம் என்னுயிர் போலவை ஓம்பிடல் இன்பம் இன்னுயி ரிவையெலா மிறைவன் வடிவென உன்னிடும் மெய்யுணர் வுற்றிட லின்பமே. 6
யாவருஞ் சமமென வுணர்ந்திட லின்பம் யாவருஞ் சகோதர ரென்பது மின்பம் யாவரும் நலனுற வுழைத்திட லின்பம் யாவரு மொன்றென வொன்றிட லின்பமே. 7

Page 108
206 நற்சிந்தனை
பணிதலைக் கொள்ளல் பாரினி லின்பம் பணிபயன் கருதா தாற்றிட லின்பம் பணிமுயன் ருற்றி முற்றுற லின்பம் பணியெலாஞ் சிவபணி யாக்கிட லின்பமே. கூசுங் கொலைகள வொழித்திட லின்பம் மாசுடை மதுவகை நீக்கிட லின்பம் பூசலும் பகைமையும் போக்கிட லின்பந் தேசத் தொற்றுமை யோம்பிட லின்பமே. நல்லன புரிந்திடல் நவின்றிட லின்பம் அல்லன வஞ்சி யகற்றிட லின்பம் புல்லியோர் பிழையெலாம் பொறுத்திட லின்பந் தொல்லைக ளல்லல்கள் தாங்கிட லின்பமே. வாய்மையும் ஆற்றலும் வளர்த்திடல் இன்பம் தூய்மையும் அழகும் ஆர்த்திடல் இன்பம் மேயநன் னிதி மேவிடல் இன்பம் நேயஅன் புலகினில் நிறைந்திடல் இன்பமே. பாமர மக்கட் பணிசெயல் இன்பம் தோமற அவர்வாழ் வுயர்த்துதல் இன்பம் சேமநச் சாலைகள் நிறுவுதல் இன்பம் வாமநூற் கலைகள் வகுத்திடல் இன்பமே. முத்தமிழ்ச் சங்கம் மல்குதல் இன்பம் வித்தகர் சங்கம் விரவிடல் இன்பம் பத்தர் சங்கம் பரவுதல் இன்பம் நற்றவர் சங்கம் நாட்டிடும் இன்பமே. எங்கும் மாதவர் மாமறை முழக்கம் எங்குஞ் சான்ருேர் அறவுரை முழக்கம் எங்குந் தொண்டர் சுதந்திர முழக்கெனிற் பொங்கும் இன்பம் புவிடமிசைச் சிறந்தே. பவநெறி கடக்கப் பிறந்திடு மின்பம் அறநெறி துடைப்ப அணைந்திடு மின்பம் தவநெறி தலைப்படத் தழைத்திடு மின்பஞ் சிவநெறி பூத்திடுஞ் சச்சிதா னந்தமே.
12
13
14
15

நற்சிந்தனை 207
ஏதும் இயம்ப மாட்டேன் கலிவிருத்தம்
ஒன்றென இரண்டென எண்ணவும் மாட்டேன் நன்றெனத் தீதென நண்ணவும் மாட்டேன் அன்றென இன்றென அறையவும் மாட்டேன் சென்றன வருவன தெரிந்திட மாட்டேன். l
ஒருபொல்லாப்பு மிலையென ஒரவும் மாட்டேன் குருவென்றுஞ் சீடனென்றுங் கொள்ளவும் மாட்டேன் இருவினை யுண்டென இயம்பவும் மாட்டேன் சுருதியின் முடிவெனச் சொல்லவும் மாட்டேன். 2
இகழ்ச்சி புகழ்ச்சியென ஏங்கவும் மாட்டேன் மகிழ்ச்சியி லேமனம் வைக்கவும் மாட்டேன் முகமன்சொல் வாரிலே மோகமும் வையேன் அகம்பிர மாஸ்மியென் றனுதினம் நையேன்.
இடையரு அன்பென எடுத்துநான் சொல்லேன் கொடைகொடு விடுவெனக் கூறவும் மாட்டேன் மடையரை ஞானியரை மதிக்கவும் மாட்டேன் இடைமுதல் முடிவென இயம்பவும் மாட்டேன். 4
அஞ்சென ஆறென எட்டென அறியேன் வஞ்சனை சூதென மனத்தினிற் குறியேன் நஞ்சிது அமுதென நயக்கவும் மாட்டேன் வெஞ்சினம் சஞ்சலம் விரும்பவும் மாட்டேன். 5
வேறு பார்க்குமிட மெங்குஞ்சிவ தொண்டராய்ப் பார்க்கவொரு வார்த்தை சொல்லவந்த மகத்தே சிவதொண்டா. 1 ஆர்க்குங் கடல்சூழ்ந்த அகிலமெலாம் தொண்டரெனக் காக்குங் கருணைக் கடலே சிவதொண்டா. 2 மூர்க்க குணமில்லை முழுதுஞ்சிவ தொண்டரெனப் பார்க்கும் அறிவுதந்த அன்பே சிவதொண்டா. 3

Page 109
208 ላ' நற்சிந்தனை
ஆசான் அருள் கலிவிருத்தம்
ஆசான் அருளால் அகந்தை அழிந்தது ஆசான் அருளால் அகங்கு விர்ந்தது ஆசான் அருளால் அன்பு வளர்ந்தது ஆசான் அருளால் ஆசானைக் கண்டிலன் . 1.
அளந்தேன் அருளால் பூதங்கள் ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்பொறி ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்புலன் ஐந்தும் அளந்தேன் அருளால் ஆன்மாவை அறிந்தேன். 2
சிவதொண்டு செய்தல் செகத்திற் சரியை சிவதொண்டு செய்தல் செகத்திற் கிரியை சிவதொண்டு செய்தல் செகத்தில் யோகம் சிவதொண்டு செய்தல் சிவஞானம் ஆமே. 3
ஆவதும் இல்லை அழிவதும் இல்லை போவதும் இல்லைப் புகுவதும் இல்லை தேவரும் இல்லைத் திசைகளும் இல்லை யாவரும் இல்லை யார்தான் அறிவார். 4.
அயலறி யாத ஆனந்தம் பெற்றேன் மயலறி யாத மெளனத்தில் உற்றேன் செயலறி யாத சிவத்தினைக் கற்றேன் இயம நியமாதி யாவையு மற்றேன். 5
ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தூணில் துரும்பும் துரும்பில் தூணும் காணுங் கண்ணுங் காணுத கண்ணும் பேணும் அடியார் பிறப்பற் ருரே. 6
பூவும் மணமும் போலப் பொலியும் நாவுஞ் சுவையும் போலத் தெளியும் தேவுக் கடியார் செய்யுந் தொழிலும் நாவுக் கெளிதோ நாமறி வோமோ. 7 د -ت.

நற்சிந்தனை
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஐந்தும் நன்றுந் தீதும் நாளுங் கோளும் ஒன்றி லொன்றி இருக்கு முபாயம் கண்டு கொண்டவர் கலங்காச் சித்தரே.
திங்களுங் கங்கையுஞ் சீறும் பாம்பும் மங்கையும் மானும் மழுவுஞ் சூலமும்
அங்கியு முடுக்கையும் அரக்கனும் பொலியும்
சிங்காரங் கண்டார் சீவன் முத்தரே.
அகரத்தில் உகரமும் மகரமும் சேர்த்து
சிகரமும் வகரமும் யகரமும் செபித்தாற்
பகர வொண் ணுத பாத மணிந்து தகரா காயத்தில் தனித்து வாழலாம்.
அகலிடத் தாசான் அருளா லடியேன் புகலும் பத்தும் போற்றி யேத்துவார் இயல்சேர் இருவினை இடுக்கண் நீக்கிப் பகலிர வில்லாப் பதவி யடைவரே,
நல்லூர்ச் செல்வன்
209
10
ஒருபொல்லாப்பு மில்லையென்று சொல்வான்-செல்வன்
உல்லாச மாகவே நல்லூரிற் செல்வான்.
குருசீடம் முறையொன்றுங் கொள்ளான்-செல்வன் குனதித ஞெருவரையுங் கும்பிட்டு நில்லான். அருவென்றும் உருவென்றும் சொல்லான்-செல்வன்
ஆரறி வாரென் றதட்டியே வெல்வான்.
வருவாரைப் போவாரைத் தெருவில் -செல்வன்
வைவான் சிரிப்பான் மகிழ்ச்சி தருவான்.
மருமத்தில் மருமமா யிருப்பான்-செல்வன்
மாதவ ருமறி யாதம கத்தான்.
14

Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7

நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)

Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7

நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10

Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8

நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7

Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.

நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8

Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.

நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7

Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5

நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,

Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)

நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9

Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17

நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -

Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26

நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2

Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.

நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4

Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7

நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.

Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்

நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO

Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7

நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5

Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4

நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2

Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6

நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.

Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10

நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6

Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2

நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5

Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.

நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2

Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4

நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,

Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8

நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9

Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7

நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15

Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22

நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே

Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7

நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7

Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6

நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17

Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7

நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.

Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்

நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).

Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)

நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :

Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11

நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)

Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)

நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)

Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)

நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6

Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10

நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.

Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.

நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18

Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).

நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi

Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8

நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்

Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7

நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)

Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9

நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)

Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ

நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5

Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே

நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.

Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.

நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.

Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10

நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19

Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.

நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6

Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2

நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)

Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2

நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.

Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ

நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3

Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5

நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299

Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.

நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.

Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12

நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10

Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.

நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /

Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்

நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)

Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6

நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12

Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12

நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.

Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10

நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,

Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13

நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2

Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10

நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்