கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலரும் நினைவுகள்

Page 1
ஈழத்து புதுமை இலக்கிய வளர்ச் சிக்கு 'மறுமலர்ச்சி மூலம் வழிகோலி யவர் வரதர் எழுத்துலகில் முத்திரை பதித்த இவரின் எழுத்துப்பணியின் மணி ஆண்டு இவ்வாண்டு ஜூலை முதல் தேதியன்று நிறைகின்றது. இலக்கிய உலகம் நன்றியோடு போற்றும் நன்னாள் இது.
வரதரின் கயமைமயக்கம் தொகுதி யிலுள்ள சிறுகதைகள் அத்தனையுமே முத்துக்கள் - இலங்கைத்தமிழ்ச் சிறுகதைகளின் முதல் வரிசை ஸ்தானத்தில் இன்றும் இருப்பவை. புதுக்கவிதை பற்றிப் பேசப்படுவதற்கு பலகாலத்துக்கு முன்னரே, அவ்வாறான புதுக்கவிதைகளை பரீட்சார்த்தமாக எழுதி இலக்கிய உலகின் நாடி பிடித்துப் பார்த்தவர்
இலக்கிய வளர்ச்சிக்காக 'மறுமலர்ச்சி', 'ஆனந்தன்", கவிதைக்கென "தேன்மொழி, செய்திக்கென புதினம் வெள்ளி மாணவர்க்கென அறிவுக்களஞ்சியம் அவர் நடத்திய பத்திரிகைகள்
இலக்கிய அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதற்காக தமது "வரதர் வெளியீடு நிறுவனம் ஊடாக 300க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்.
இத்தனை அனுபவசாலியான மூத்த எழுத்தாளரின் மலரும் நினைவுகள் புதிய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாகத் திகழப்போவது திண்ணம்.
- சோமகாந்தன்.
 
 
 
 
 
 
 

90ருS நினைவுகள்
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்

Page 2

மலரும் நினைவுகள்
வரதர்
விற்பனை உரிமை
பாரி நிலையம்
14, irri(SRI, Gagsirabar -600 108.

Page 3
முதற்பதிப்பு : ஜூன் 1996
(C)
விலை ரூ. 30-00
Vite : MALARUM NINAVUGAL
Subject : Articles of Past Recollections
Author : T. S. VARATHARAJAN
No. of Pages : 1 68
Турев : 1) Point
Paper : Creamwove 10.5 Kg.
Binding : Duplex Board
PrCG t . Rs... 30-00
Publishers : KUMARAN PUBLISHERS
9, 18t treet, Kumaran Colony, Vadapalani, Madras-600020.
Printers : Chitra Printo Graphy, adras- 14.
இலங்கையில் கிடைக்குமிடம் : i
。魏狄靴 பூபாலசிங்கம் புத்தகசாலை
v, 340, செட்டியார் தெரு, கொழும்பு-117

முகவுரை
1993.
யாழ்ப்பாணத்தில் போர் நடந்து கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ற விதமாக மக்களின் வாழ்க்கையும் ஏதோ ஒருவிதமாக நடந்து கொண்டிருக்கிறது. )
அந்த நெருக்கடி வாழ்க்கையிலும் "மல்லிகை" வெளி வந்து கொண்டிருக்கிறது.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஒரு நாள் என்னைச் சந்திக்கிறார். !
**கன நாளாய் நீங்கள் ஒண்டும் எழுதவில்லை, ஏதாவது
எழுதுங்கோவன்' என்கிறார்.
போர்க்காலச் சூழ்நிலையில் வழமையான வாழ்க்கை யைத் தவறவிட்டிருந்த நான், 'என்னத்தை எழுத." என்று சலித்துக் கொள்கிறேன்.
**ளதை வேணுமெண்டாலும் எழுதுங்கோ. உங்கடை இளமைக்கால நினைவுகள் எதையாவது எழுதலாமே!" என்று அடி எடுத்துத் தருகிறார் ஜீவா.
'பார்க்கலாம்." என்று நான் பதில் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

Page 4
அன்றிரவு.
"இளமைக்கால நினைவுகள்" என்று ஜீவா எடுத்துக் கொடுத்த அடி நெஞ்சில் அலை மோதுகிறது.
எனக்கு "ஆனா" சொல்லித் தந்த ஆசிரியரின் நினைவு கனவு போல வருகிறது. 'தீவாத்தியார்" என்று தலைப் பிட்டு எழுதத் தொடங்குகிறேன். ஒரு சிறிய கட்டுரை எழுதிக் கொடுப்பதே திட்டம்.
எழுதிக் கொண்டுபோக
இளமைக்கால நினைவுகள் தொட்டனைத் தூறும் மணிற் கேணியாயின.
அவை ஒரு கட்டுரையில் நிற்பதாக இல்லை. தொடர்ந்து எழுதினேன். மல்லிகையின் பதினைந்து இதழ் களில் அவை தொடர்ந்து வெளிவந்தன.
மல்லிகை வாசகர்களிடமிருந்து மனம் நிறைந்த பாராட்டுகள் கிடைத்தன.
50-60 ஆண்டுகளுக்கு முந்திய மக்களின் வாழ்வியல், இன்றைய இளைஞர்களுக்குப் புதுமையாக இருந்தது. முதியவர்களுக்கு ஒரு சுகமான மீட்டலாக அமைந்தது.
இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளி விட வேண்டுமென்று கணிக்கக் கூடிய பல நண்பர்களிட மிருந்து வேண்டுகோள் வந்தது. மல்லிகை ஜீவா தாமே வெளியிட வேண்டுமென்று விரும்பினார். யாழ்ப்பாணத்தில் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருந்ததால் உடனடியாக எதையும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில்தான் தான் வெறுங்கையோடு கொழும்புக்கு வரவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.

5
சகை கொடுக்க" இங்கே நண்பர்கள் இருந்தார்கள்.
எனது இனிய நண்பர் "ஈழத்துச் சோமு என்ற திரு. நா. சோமகாந்தன் அவர்கள் இத்தக் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட்டுவிட வேண்டுமென்று முற்பட்டார். எந்த ஒரு அலுவலிலும் அவர் முற்பட்டுவிட்டால், அதன் நிறைவைக் கண்டுதான் ஓய்வார். செயல்வீரர்.
ஈழத்துத் தமிழ் உலகுக்கு இன்றைக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருப்பவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள். இளமைக் காலம் தொடக்கம் என் தரத்தை அவர் அறிவார். அவர் சிறப்பை நான் அறிவேன். பேராசிரியரின் சிறப்புரை இந்த நூலின் கணிப்பை ஒருபடி உயர்த்தியிருக் கிறது.
இந்த நூலை வெளியிட்டிருக்கும் குமரன் பப்பிளிசேர்ஸ் திரு. செ. கணேசலிங்கன், ஈழத்தின் தலைசிறந்த நாவலாசிரி யர். இப்போது தமிழகத்தில் காலூன்றி நிற்கிறார். இவ ரும் என் மதிப்புக்குரிய நண்பரே.
நண்பர் வேலணை வீரசிங்கம் அவர்கள் நூல் வெளிவரு வதில் எடுத்துக்கொண்ட அக்கறை பிரதானமானது,
திரு. ஆர். பி. பூரீதரசிங் தமது தந்தையாரைப்போலவே எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன் நிற்பவர்,
இவ்விதம் எனது உற்ற நண்பர்கள் இந்த நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என் நெஞ்சில் இருக்கிறார்கள்.
-6u vsi

Page 5
"மலரும் நினைவுகளுக்கான முன்னுரை
வரதர் இலக்கிய வரலாற்று நிலைநின்ற ஓர் அறிமுகக் குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி
** மலரும் நினைவுகள்" என்னும் இந்நூல், வரதர் என்னும் ஈழத்து நவீன தமிழிலக்கிய முன்னணி எழுத்தாளர் தமது இளமைக்கால யாழ்ப்பாணத்தை " "மீள் சித்திரிப்பு'ச் செய்யும் ஒரு முயற்சியாகும்.
இலக்கிய வரலாற்றாசிரியர்களிலும் பார்க்க, சமூக வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படப்போகும் இந்நூல், முதலில், டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை" இதழ்களில் 1991-4 க்காலப் பகுதியிலே கட்டுரைத் தொட ராக வெளிவந்த தாகும்.
இந்த வருடம் (1996) தனது எழுபத்திரண்டாவது வயதை எட்டும் (1924) தியாகர் சண்முகம் வரதராசர், ஆகிய வரதர்', ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற் றில் விடுபடமுடியாத முக்கியத்துவமுடையவராவர் :

ஈழத்திலக்கிய வரலாற்றில் வரதருக்குரிய முக்கியத் துவத்துக்கான இடம் மூன்று அமிசங்களினடியாக வருவது. இவர்,
1. ஈழத்துச் சிறுகதையாசிரியர்களுள் முக்கியமான
ஒருவர்.
11. ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய நிறுவனமாக விளங்கும் 'மறுமலர்ச்சி" இயக்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் ஒருவர்.
11. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய பிரசுசகர்த்
தருள் ஒருவர்.
வரதரின் முக்கிய சிறுகதைகள் ஈழத்தின் தமிழர் நிலைப் பட்ட அனுபவங்களை மிகுந்த உணர் திறனுடன் பதிவு செய்துள்ள படைப்புகளுக்குள், இடம் பெறுவன. 1940 இதிலிருந்தே சிறுகதை எழுதி வந்துள்ள வரதர், ஐம்பது களின் பிற்கூற்றில் ஏற்பட்ட இலக்கிய உத்வேக வளர்ச்சியின் பொழுது தனது படைப்பாளுமையைக் " " கற்பு," "வீரம்" போன்ற தமது சிறுகதைகள் மூலம் பதிவு செய்துள்ளார். இவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம் பெறும் "கற்பு" எனும் சிறுகதை, 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக் கொள்ளும் கோயிற் பூசகரின் (அக்கதையின் பிரதான ஆண்பாத்திரம் ஒரு பூசகர் என்றே நினைக்கின்றேன்) மனத்திண்மை பேசப் படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் முதல் சமூக வியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.
மனித அவலவேளைகளில்ஏற்படும் விழுமியச் சிதைவு, மிகுந்த நுண்ணுணர்வுடன் சிந்திரிக்கப் பட்டுள்ளது. இத்தகைய சமூகப் பாங்கான எழுத்துக்களால், இவர் சமூகத்

Page 6
8
தின் போதுவான " "முற்போக்கு" "ச் செல் நெறிக்கு ஆதரவு நல்கினார். இதன் காரணமாக இவர் முற்போக்குச் சக்தி களின் ஆதரவாளராகக் கருதப்பட்டார். இலக்கியம் பற்றிய ஒரு சமூக நிலைப்பார்வைக்கு இக்கண்ணோட்டம். பெரிதும் உதவிற்று
வரதரின் "கதை கூறும் பாங்கு" " அவகானிக்கப்பட வேண்டியது. களத்தை அமைத்து அந்தப் பின்புலத்தில் மனித இயக்கங்களை எடுத்துக் காட்டும் முறைமை இவரு டையது. கதை கூறுபவரின் ஆளுமையோடு "இவர்" இணைத்து நிற்பார்.
** மறு மலர்ச்சி" எனும். சஞ்சிகையை ஆரம்பித்த இலக்கிய ஆர்வலர் குழுவில் வரதருக்கு முக்கிய இடம் உண்டு வரதரும், அ.செ. முருகானந்தனும் "மறுமலர்ச்சி' யின் இணை ஆசிரியர்களாக விளங்கினர். 'மறுமலர்ச்சி இயக்கம் 1942 இல் தொடங்குகின்றது. அது ** மறுமலர்ச்சி"ச் சஞ்சிகையை நடத்திற்று. ஏறத்தாழ மூன்று வருடகாலம் "மறுமலர்ச்சி” வெளி வந்தது. பின்னர் 1948 இல் தொடக்கப் பெற்றுச் சிலகாலம் நடத்தப் பெற்றுப் பின்னர் நின்றுபோயிற்று.
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வளர்ச்சியில் "மறு மலர்ச்சி"ச் சஞ்சிகைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
ஏறத்தாழ 1920 களிலிருந்து படிப்படியாக முளைவிட்டு வளர்ந்து கொண்டிருந்த நவீன ஈழத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் ஒரு இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்து நிலையோடு தொழிற்பட வந்த முதலாவது இயக்கம். மறுமலர்ச்சி இயக்கமாகும். இதில் முக்கிய இடம் வகித்தோர் நாவற் குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சரசர்மா, அ.செ. முருகானந்தன். சு. வேலுப்பிள்ளை, சு. இராசநாயகன் அ.ந. கந்தசாமி திச. வரதராசன் முதலியேராவர். இவர்

9
களின் இலக்கியக் கருத்துநிலை பிரதியை மையமாகக் கொண்டது என்பது புலனாகின்றது. 增
இவர்கள் பாரதி வழிவந்த புதிய இலக்கிய உத்வேகத் தையே தமது பிரதான தளமாகக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 1952 இல் முற்று முழுதான சமூகக் கூடப்பாடுடைய இலக்கியம் பற்றிய திட்டவட்ட மான ஒரு கருத்து நிலையைக் கொண்டிருந்த இலங்கிை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேற்கிளம்பியது.
மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம் புனைகதையிலும் பார்க்கக் கவிதையிலேயே நன்கு தெரியவந்தது. ஈழத்தின் தமிழ்க்கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சி இயக்கம் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். அ. ந. கந்தசாமி மஹாகவி க. இ. சரவணமுத்து (சாரதா) முதலியோர் இந்தத்திருப்பு முனை வழியாகவே வந்தனர். இவர்களுள் அ.ந. கந்தசாமி மறுமலர்ச்சி நோக்கின் தர்க்க ரீதியான அடுத்த கட்டமாகிய முற்போக்கு இலக்கிய வாதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சமூக மாற்றம் பற்றி இந்நூலில் வரும் குறிப்புக்களைப் பார்க்கும் பொழுது, வரதர் பழைமை பேண் வாதியல்லர் என்பது தெட்டத் தெளிவாகின்றது.
சமூக வளர்ச்சிப் போக்கின் வரலாற்றுத் தாக்கத்தை உணர்ந்து கொள்ளும் இந்தத் திறன்தான் வரதரைத் தொடர்ந்து சமூக இயைபுள்ள ஓர் எழுத்தாளராக வைத் திருக்கின்றது என்று துணிந்து கூறலாம்.
வரதரின் இலக்கிய முக்கியத்துவம் அவரது இலக்கியப் பிரசுர முயற்சியாலும் அழுத்தம் பெறுகின்றது. தொழின் முறையாக, வரதர், அச்சக உரிமையாளராவர். ஆனந்தா

Page 7
10
அச்சகம் என்பது இவரது அச்சகத்தின் பெயர். 1960 70களில் இவரின் " "வரதர் வெளியீடு" எனும் பிரசுராலயம், முக்கியமான நூல்கள் பலவற்றை வெளியிட்டது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளையின் 'இலக்கிய வழி" முதலில் வரதர் வெளியீடாகவே வந்தது. மஹாகவியின் தொடக்க கால வெளியீடான " "வள்ளி' என்பதும் வரதர் வெளியீடே. வித்துவான் பொன். முத்துக்குமாரன், செங்கையாழியான், கைலாசபதி, சாந்தன், சொக்கன் ஆகியோரது சில நூல் களும் "வரதர் வெளியீடு"களாக வந்தன. (எனது. நூலொன்றும் வெளிவருவதற்கான ஒர் ஆயத்தம் இருந்தது. எனது கவனயீனத்தினால் அது நிறைவேறவில்லை
வரதரின் முக்கிய வெளியீடுகளில் ஒன்று. "வரதரின், பல குறிப்பு" என்பதாகும். ஈழத்துத்தமிழர், தமிழிலக்கியம் பற்றிய ஒரு தொகுப்பு ஆவணமாக (Directory) அது விளங் கிற்று. 1970 களில் இது வெளிவந்தது. நான்கு பதிப்புக் களின் பின்னர் வெளிவரவில்லை.
வரதர் இன்று ஈழத்துத்தமிழ் எழுத்தாளரிடையே மதிப்பு மிக்க ஒரு ‘*மூத்தோனாக' விளங்குகிறார்.
அவரிடத்துக் காணப்படும் நேர்மை நோக்கு மிக முக்கியமான அம்சமாகும்.
அந்ந நேர்மையினை இவர் தனது இளவயது நினைவு களை மீட்டும் முறைமையிலே நன்கு தெரிகின்றது, தமது இளமைக் கால நினைவுகளை எடுத்து கூறிய போது எழுத் தாளர் சிலரிடத்துக் காணப் படாத "இலக்கிய உண்மை" " இந்த எழுத்துக்களில் நன்கு பளிச்சிடுகின்றது.
'மலரும் நினைவுகள்' என்ற இந்த நூல் 1920, 80 களில் யாழ்ப்பாணம் இருந்த நிலைமையினை நன்கு காட்டு கின்றது. இவர் சித்தரிக்கும் பகுதி யாழ்ப்பாணத்தின்

1.
வடக்கு, வடமேற்குப் பகுதிகளாகிய வலிகாமப் பகுதியாகும். யாழ்ப்பாணக்குடா நாட்டின் கிழக்குப் பகுதியான வடமராட்சி யிலும் 1930களில் ஏறத்தாழ இந்த நிலைமையே காணப் பட்டது. வாழ்க்கைமுறை, பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியனவற்றிற் சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. எனினும் இந்த நூலில் வரும் விவரணத்தை 1920-30 யாழ்ப்பாணத்தின் விவசாய வாழ்க்கை நிலைபற்றிய (Peasant tite) உண்மையான சித்திரிப்பு எனக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றாய்வுகளை நோக்கும் பொழுது, குறிப்பாக நவீன காலத்தை நாம் சில பெரு மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளாகவே கண்டு வந்துள் ளோம் என்பது தெரிய வருகின்றது. இதனால் 18, 19, 20 நூற்றாண்டுகளின் சமூக அசைவியக்கம் பற்றிய வரலாற்றுத் தரவுகளை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. இத்தகைய நூல்களில் வரும் தரவுகள் சமூக வரலாற்றுக்கான மதிப்பு மிக்க ஆவணங்களாகும். இவற்றை நன்கு பயன்படுத்தி உரிய சமூக வரலாற்றை எழுதிக் கொள்ளலாம்.
இந்த வகையில் டானியல், ஜிவா, ரகுநாதன், தெணி யான் போன்றோரின் படைப்புக்கள் ஒரு "வெட்டு முக’’த்தைத் தந்துள்ளன. வரதரின் இந்த விவரணம் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பின் அதிகாரப்படி முறை களையும் (Hierarchies) அவற்றில் ஏற்பட்ட மாற்றங் களையும் காட்டுகின்றன.
படைப்பிக்கியகர்த்தர்கள் உலகெங்கும் வரலாற்று விவரணங்களுக்கு உதவியுள்ளனர்.
வரதருடைய இந்த ஆக்கம், அந்த வரிசையிலே வைத்து
நோக்கப்படவேண்டியது.
கார்த்திகேசு சிவத்தம்பி
கொழும்பு முது தமிழ்ப் பேராசிரியர்.
9. 5, 1996 யாழ். பல்கலைக்கழகம்.

Page 8
பதிப்புரை
இந்தியாவில் "மணிக்கொடி‘ காலம் என படைப் பிலக்கிய நலனாய்வாளர்கள் கூறுவதுபோல ஈழத்தில் மறு மலர்ச்சிக் காலம்" என 1940களை கலாநிதி கைலாசபதியே கணிப்பிட்டுக் கூறுவார். அத்தமிழிலக்கிய வரலாற்றுக் காலத்தின் முன்னோடிகளில் ஒருவராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது மதிப்புக்குரிய வரதர் ஆவார்.
வரதரின் இலக்கியப் படைப்புகள், வெளியீட்டுத் துறையில் ஆற்றிய சேவை பற்றி கலாநிதி சிவத்தம்பி அவர்களே விரிவாக விளக்கியுள்ளார்.
வரதரின் "மலரும் நினைவுகள்" என்ற தலைப்பில் வெளியிடப்படும் கட்டுரைகள் அன்னாரின் சிறப்பையும் திறமையையும் எளிதில் காட்டவல்லன. ஒன்று, யாழ்ப்பாண வழக்காக உள்ள சொற்களின் தனித்துவத்தையும் படைப் பாற்றல் வளமாகக் கையாளும் முறையையும் இக்கட்டுரை களிலேயே காணலாம். அடுத்து சிறு சிறு விஷயங்களையும் கவிஞர்போல கலைஞனாக எடுத்தாளும் போக்கும் வர்ணனை யும். இவை உருவம் பற்றியன. உள்ளடக்கத்தில் அவரது பகுத்தறிவான கருத்துக்களை, முற்போக்கான எண்ணங் களை எளிதில் அன்னாரின் எழுத்துகளில் காணலாம். சம்பவங்களை நிகழ்ச்சிகளைக் கூறும்போது வெறும் கற்பனைகளைக் காண முடியாது. ஒரு படைப்பாற்றலுள்ள

18
எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய உண்மையைத் துணிச்ச லோடு கூறும் நேர்மை, வாய்மையைத் தெளிவாகப் பார்க்கலாம். அவரது எழுத்துகளில் சமுதாய உணர்வு தொக்கி நிற்பதையும் தரிசிக்கலாம்.
பெண்ணியம் சார்ந்த புதுமைக் கருத்துகள் இன்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது. உடையிலும் முடி யிலும் ஆண்களோடு பெண்களும் சமத்துவமாக வாழும் புதிய கலாசாரப் புரட்சியை வரதர் வரவேற்பது ஒன்றே சமுதாய மாற்றத்தை அவர் வரவேற்பதைக் காட்டி நிற்கும்.
1990ன் பின்னர் யாழ்ப்பான வாழ்க்கையில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை நேரில் நின்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் அவரை மலரும் நினைவுகளாகப் பின்னோக்கிப் பார்க்கத் தூண்டியதாக எண்ணத் தோன்றுகிறது.
முதலாளித்துவ உற்பத்தி தரும் நுகர்பண்டங்களில் பழக்கப்பட்ட மக்கள் சிறிது சிறிதாக அவற்றை இழக்க வேண்டிய அரசியல், பொருளாதாரச் சூழல் ஏற்பட்டது. அவ்வேளை ஆறு, ஏழு தசாப்தங்களின் முன்னிருந்த வாழ்க்கை முறையையும் கிடைத்த பண்டங்களுடன் மன நிறைவு பெற்று வாழ்ந்ததையும் வரதர் தன் கட்டுரைகளில் நினைவூட்டுகிறார். இது ஒரு தவிர்க்க முடியாத சமரசப் போக்கே. நுகர்பண்டச் சந்தையில் பழக்கப்பட்டவர்களுக்கு புதிய சூழலை ஏற்பது சிரமமாகவே இருப்பினும் முன்னைய பரம்பரையினரின் வாழ்க்கை முறையை உணர்ந்து ஆறுதல் பெறமுடியும். பண்டைய பெருமைகளை இனங்கண்டு, பேசி நாம் மனநிறைவு பெறுவதில்லையா?
சமுகவியல், ஆய்வாளருக்கும் இக்கட்டுரைகள் நன்கு பயன்படும்.

Page 9
14
கலை, இலக்கியத் துறையில் வரதரின் பங்களிப்பு மிகக் குறைவாகவே தோன்றலாம். ஆயினும் அவர் தமது சிறு கதைகளில் ஆணித்தரமாக பல சமுதாய விழுமியங்கள் பற்றிய தன் கருத்துகளைப் பதித்துள்ளார். அவற்றையும் மேலேயுள்ள கலாநிதியின் அறிமுகக் குறிப்பில் காணலாம்.
"வரதர் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியில் வரும் "வெறி” என்ற கதை தேர்தல் ஊட்டும் வெறியை மட்டும் கூறி நிற்பதல்ல. அதன் முடிவில் கதை மாந்தர்களை ஆசிரியர் கையாளும் சிறப்பையும் காட்டி நிற்கும். கதையை இன்பியலாக முடிக்க வேண்டும் என எதிர் பார்ப்பது மட்டுமல்ல முற்போக்காக அமைக்க வேண்டும் என்பதையும் வரதர் மறைமுகமாகக் கதை மூலம் தெரிவிக் கிறார். கதை மாந்தரை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களை எழுத்தாளனே ஆக்கபூர்வமாக உருவாக்கி கதையை நகர்த் திச் செல்கிறான் என்ற அடிப்படை உண்மையையும் அக்கதையின் இறுதிப்பகுதி வேளிப்படுத்தி விடுகிறது.
வரதர் தமது எழுத்து வேலைகள் முடிந்து விட்டதாக எண்ணாது மேலும் தமது படைப்பாற்றலை வெளிக் கொணர வேண்டும் என விரும்புகிறேன்.
சென்னை, செ. கணேசலிங்கன். 23-6-96.

பொருளடக்கம்
Teisir ár rotb
புன்னாலை பொன்னாலையானது சாதிகள் கடந்துபோன கற்காலம் வீடுகள், மாடுகள்
சைவம்
அப்பா
பிரசித்தகாரன் விளையாட்டுகள்
பேய் பிசாசுகள்
நீர் விளையாட்டு புகழ்பெற்ற வைத்தியர்கள்
அப்பாவின் கடை
தி வாத்தியார்
பெரிய பள்ளிக்கூடம்
இந்தியப் பயணம்
2-6T6 உடையும் நகையும்
17
26.
33
42
47
59
66.
75
80
86
9.
94.
100
123
1.31
141
152
159.

Page 10

1. எங்கள் கிராமம்
1928-ம் ஆண்டாக இருக்கலாம். அப்போது எனக்கு வயது நான்கு.
நான் பிறந்து வளர்ந்த கிராமம் பொன்னாலை. இது யாழ் குடாநாட்டின் வடமேற்கு முனையில் அமைந் திருக்கிறது.
மிகச் சிறிய கிராமம் .அப்போது மிக ஏழைக் கிராமம் என்று கூடச் சொல்லலாம்.
ஏழைக் கிராமமாக இருந்த போதிலும் அதற்கு ஒரு சொல்வாக்கும், நல்ல வரலாறும் உண்டு. அந்தப் பெருமை யைத் தந்தது பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம். அந்தச் சுற்று வட்டாரமெங்கும் மிகவும் புகழ் வாய்ந்த ஆலயம். ஏதோ ஒரு காலத்தில் அந்தக் கோயி லுக்கு பிரமாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். கடைசியாக ஒல்லாந்தர் அந்தக் கோயிலை இடித்து, சங்கிலித் தொடராக ஆட்களை நிறுத்தி அந்தக் கற்களைச் சங்கானைக்கும் வேறு இடங் களுக்கும் கொண்டு சென்று வேறு கட்டிடங்களைக் கட்டிய தாகச் சொல்வார்கள்.
எனக்குத் தெரியத்தக்கதாக இப்போதுள்ள வயிரக்கல் மூலத்தானமும், முன் பண்டபமும், உள் வீதியைச் சுற்றி மதிலும், அந்த மதிலைச் சுற்றி வெளி வீதியும் இருந்தன, கோபுரம் கட்டுவதற்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது.
up-2

Page 11
8 மலரும் நினைவுகள்
சிறு வயதில் எங்களுடைய விளையாட்டுக் களம் அந்தக் கோயிலும் அதன் வீதிகளும் தான்.
கோயில் மண்டபங்களின் மேல் ஏறி ஒழித்து விளையாடி யதும், தேர் முட்டியிலிருந்து பந்தயம் போட்டுக் குதித்ததும், மேற்கு வீதியில் தாச்சி’ விளையாடியதும், மாரி காலத்தில் கோயில் கேணியில் ஒல்லி கட்டி நீந்திப் பழகியதும் எனக்கு இப்போது நினைவுக்கு வந்து நெஞ்சை நிறைக்கின்றன. திரும்பக் கிடைக்க முடியாத அற்புதமான, மகிழ்ச்சியான காலம் அது
பொன்னாலைக் கோயில் அந்தக் காலத்தில் வருடம் பதினொரு மாதங்களும் வெறிச்சோடிக் கிடக்கும்.
ஆவணிமாதத்தில் பதினேழு நாட்கள் திருவிழா நடக்கும் போது மட்டும் கோயில் கலைகட்டும். எல்லா நாட்களுமல்ல. சில திருவிழா நாட்களில் சாமி தூக்கவும் ஆளில்லாமல், தற்காலிகத் தேனீர்க் கடையின் முன்னால் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களைக் கூட்டிக் கொண்டுபோகவேண்டியிருக்கும்.
ஏழாந்திருவிழா, பன்னிரண்டாந்திருவிழா என்றால் கடத்து நடக்கும். கூத்து என்றால் ஏழாந்திருவிழாவன்று கொட்டகைக் கூத்து கொட்டகை போட்டு, அதனிடையே மேடை அமைத்து "சீன்" கட்டி ‘பெற்றோமாக்ஸ் வெளிச் சத்தில் நடக்கும். ஏழாந் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் "லங்கா தகனம்' நாடகந்தான். இணுவில் நாகலிங்கம் இராமனாக வருவார்.
"ஐயோ என் ஜானகியை
அரக்கன் கொண்டு
போயினானே. 參 溺 என்று அவர் பாடிக் கொண்டு தலையில் கைவைத்துப் புலம்புவது என் கண்முன் இன்றும் தெரிகிறது. கடைசியில்

ராவணனாகவும் அவரே பத்துத் தலைகளைக் கட்டிக் கொண்டு வருவார்.
நெல்லியடி ஆழ்வாப்பிள்ளை சீதை, பபூன் செல்லை யாவும் முக்கியம். அனுமானாக வந்தவர் யாரென்று நினை வில்லை. ஆனால் அவர் மேடையில் ஒரு சால்வையை விரித்துவிட்டு, அதையே கடலாகப் பாவனை செய்து கொண்டு பாய்கிறேன். கடலை. என்ற பாட்டுடன் தொங்கிப் பாய்ந்தது நினைவிருக்கிறது. (இந்த லங்கா தகனம் நாடகத்திலும் வேறு பல நாடகங்களிலும் 1940 மட்டில் பொன்னாலை வரகவி பி, கே. கிருஷ்ணபிள்ளை பங்குபற்றி "போட்டா போட்டிகள் நடத்தியது மிக பிரசித்தம். அவரைப் பற்றிப் பின்னால் எழுதுகிறோன்.)
பன்னிரண்டாந் திருவிழாவில் நடப்பது கொட்டகைக் கூத்தல்ல. அது மக்கள் கூட்டத்தினிடையே நடக்கும். பொன்னாலைக் கோயில் கூத்து என்றால் சுமார் பத்து மைல் சுற்றாடலிலுள்ள மக்களெல்லாம் வந்து குவிவார்கள். ஒற்றை மாட்டுத் திருக்கல் வண்டிகளும், வில் வண்டிகளும் இரட்டை மாட்டு வண்டிகளும் கோயிலின் பக்கத்தேயுள்ள வளவுகளில் நிரம்பிவிடும்.
அந்தக்காலத்தில் வானொலி, தொலைக் காட்சி, சினிமா கூட இல்லை மக்களுக்கு முக்கியமான பொழுது போக்கு கோயில் திருவிழாக்கள்தான்.
திருவிழாக்களினும் மேளக் கச்சேரி, சதிர்க் கச்சேரி என்ற சின்னமேளம், கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றால்தான் மக்கள் திரண்டு கூடுவார்கள். s
மேளக் கச்சேரியை விட சின்ன மேளத்துக்குக் கூட்டம் அதிகமாக வரும். நேரத்தோடு வந்து அங்காங்கே படுத்துத் தூங்கியவர்களெல்லாம் மத்தளச் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்து மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள். நலி செற், பண்டிருட்டி செற் என்ன அந்த நாளில் மிக பிரபலம், மக்களுக்கு அவர்களுடைய நடனச் சிறப்புகள் முக்கியமல்ல.

Page 12
20 மலரும் நினைவுகள்
5 ஏதோ அந்தப் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு சபை நடுவே துள்ளிக் குதிப்பதும், அவர்கள் பாடும் பாட்டுக்களும் தான் முக்கியம்.
"பண்டித மோதிலால் நேரைப் பறிகொடுத்தோமே பறிகொடுத்தோமே. நெஞ்சம் * பரிதவித்தோமே - (பண்டித)
என்று ஒரு பாட்டு,
"வாங்கித் தர வேண்டும் கதராடை அடுத்த தீபாவளிக்கு எங்கம்மாவுக்கும் எனக்கும்' "
- வாங்கி
: என்று ஒரு பாட்டு. எல்லாம் தென்னிந்திய இறக்குமதிகள். மக்களுக்கும் பாட்டின் பொருள் முக்கியமல்ல. இசையும், பர்டுபவரும்தான் முக்கியம்.
பன்னிரண்டாந் திருவிழாக் கூத்து- கிருஷ்ண லீலா" மக்கள் மத்தியில் நடக்கும். மேடையோ, சீனோ எதுவும் கிடையாது.
என்னுடைய இன்றைய நினைப்பில் பெரிய சன சமுத் திரம். நடுவில் பாதை விட்டு இரு பிரிவாக மக்கள் அமர்ந்தி குப்பார்கள். ஒரு பக்கம் ஆண்கள். மறுபக்கம் பெண்கள். நடுவே இருக்கும் பாதையில் தான் கூத்து நடக்கும்,
திருவிழா ஆரம்பிக்கும் முன் கோயிலில் முன் மண்டபத் தில் கூத்தின் முதற் காட்சி நடைபெறும். பூதகி என்ற அரக்கி வருவதும் அவளைக் கண்ணன் கொல்வதும் அங்கே நடக்கும். பூதகியாக மூளாய் பெரியதம்பி என்ற நடிகர் சபையில் வந்ததும் "பூ" என்று பெரிதாக வாயால் ஊதுவார். நெருப்புப் பொறிகள் பறக்கும் (அப்போது அது எனக்கு

வரதர் ら 21.
மிகுந்த அச்சம் தந்த காட்சி. அது ஏதோ குங்கிலிய விளை யாட்டு என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.
சாமி புறப்பட்டு வந்து தெற்கு வீதி தாண்ட மூன்னர் லுள்ள கேணியடியில் கூத்தின் இரண்டாம் காட்சி நடை பெறும். கோபிகைகளின் துணிகளைக் கண்ணன் கவர்கிற காட்சி. (இது அவ்வளவாக என் நினைவில் இல்லை)
வடக்கு வீதியில் கூத்தின் கடைசிக் காட்சி நடைபெறும். கம்சனைக் கண்ணன் கொல்கிற காட்சி. கழிவுபுரம் பண்டாரி என்பவர் கம்சன் வேடத்தில் வந்து மிக அட்டகாசமாகப் பாட்டுகள் பாடி வாசனங்களும் பேசுவார். கண்ணனாக வந்தவர் பெயர் நினைவில்லை. யாரோ அன்னாவி என்று சொல்லுவார்கள். ஒரு சால்வையைக் கயிறு போல உருட்டி அதை இரண்டு பேர் வழியின் குறுக்காகப் பிடித்திருக்க, கயிற்றின் ஒரு பக்கத்தில் கண்ணனும் மறுபக்கத்தில் கம்ச னும் நின்று துள்ளிக் குதித்து சண்டையிடுவதாகப் பாவனை செய்வார்கள்.
கடைசியில் கண்ணன் கயிற்றைத் தள்ளிக் கொண்டு மறு பக்கம் போய் கம்சனை விழுத்திக் கொல்லுவார்.
இவ்வளவுடன் கூத்து முடியும். பொழுதும் விடியும்.
இதெல்லாம் 1930 ஆண்டளவிலான கதை. 1940 மட்டில் பொன்னாலைக்குப் புகழ் சேர்க்க ஒரு அருமையான கவிஞர் தோன்றுகிறார். 'கவிஞர்" என்பதை விட, நாடகக் கலைஞர்" என்றுதான் அவர் மக்களிடையே பிரசித்தம் பொன்னாலைக் கிருஷ்ணன் என்றால் அந்தக், காலத்தில் தெரியாதவர்கள் இல்லை. பபூன் கிருஷ்ணன்" என்றும் சொல்லுவார்கள். ஊரில் எல்லாரும் "அண்ணாவி யார்" என்று அன்போடு அழைப்பார்கள். அவர் அவ்வப் போது அச்சிடுவித்து வெளியிட்ட சிறு சிறு பாட்டுப் புத்தகங் களில் "இஃது மூளாய் திரு. கணபதிப்பிள்ளை அவர்களின் சீடன், பொன்னாலை வரகவி பே, க. கிருஷ்ணபிள்ளை

Page 13
22 小 மலரும் நினைவுகள்
அவர்களால் இயற்றப்பட்டது" என்று அச்சிடப்பட்டி ருக்கும்.
இந்தக் கிருஷ்ணபிள்ளை ஆங்கிலம் கற்று அந்த தாளைய வழக்கப்படி மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த்தார். அங்கே போயும் நாடகப் பைத்தியம் அவரை விடவில்லை. அங்கே அவர் ஒரு சிறிய புகைவண்டி நிலையத்தின் பொறுப்பாளராக இருந்ததாக வும் ஒரு நாள் ஒரு நாடகத்தில் பங்கு பெறுவதற்காக, புகை வண்டி வரும் போது வளையத்தைக் கொடுக்கும்படி அங் கிருந்த சிற்றுாழியரிடம் சொல்லிவிட்டு இவர் நாடகம் நடிக்கப் போனதாகவும், அன்று புகைவண்டி வந்தபோது சிற்றுாழியன் தூங்கி விடவே, கடமை தவறிய குற்றத்துக் காக கிருஷ்ணபிள்ளையின் வேலை போய்விட்டதாகவும் சொன்னார்கள்.
வேலை போனபின் கிருஷ்ணபிள்ளை தமது ஊராகிய போன்னாலைக்குத் திரும்பிவிட்டார். அதன் பிறகு தமது புலமையை யாழப்பாணம் எங்கும் பரப்பினார்.
பொன்னாலைக் கிருஷ்ணனை எனக்கு நன்றாகத் தேரியும். ஒரு கவிஞனுக்குரிய முத்திரைகள் அவரிடம் நிறைய இருந்தன.
எந்தப் பெரியகொம்பன் எதிர்ப்பக்கத்தில் இருந்தாலும் அவர் நியாயத்தின் பக்கமே தலை நிமிர்த்திப் பேசுவார்.
குடிப்பது நமது பிறப்புரிமை, என்பது போல நன்றாகக் குடிப்பார். ஆனால் குடியின் கொடுமைகளைப் பற்றி மக்களிடையே பிரசாரம் செங்வார்,
'மதுவெனும் குடிவகையே - கெடு மதியொடு தரும் பகையே - அட மனிதனே

மகா புனிதனே - உந்தன்
மனைவியுடைய மனதும்
கெடுக்கும்'" (மதுவெனும்) இப்படி ஒரு பாட்டு,
பொன்னாலைக் கிருஷ்ணன் ஒரு சிறந்த சந்தக் கவி. மக்களுக்கு நலன் தரும் கருத்துக்களை மிக ஆழமாக எடுத்துச் சொன்ன புலவர் அவர்.
நியாயம், நேர்மை, நீதிக்காக வாதாடிய கவிஞர் அவர் மனித நேயம் கொண்டவர்.
அவருடைய கவிதையில் சொற் சுவைக்கு ஒரு உதாரணம்:
அவரது விட்டில் ஒருமுறை களவு போய்விட்டது. ஏழைக் குடும்பம், கல் அடித்தும், புல் செதுக்கியும், வெயிலில் அலைந்தும் சேர்த்த பொருள் போய் விட்டது. கவிஞர் பாடுகிறார்.
கல்லடித்துப் புற்செருக்கிக்
கானலுண்டு, கடுகளவாய்
மெல்ல மெல்லச் சேர்த்த நகை
மிக்கவா யிரத்தினையும்
கொள்ளை கொண்ட
கள்வர்களும்
கொண்டநகைச்
செல்வர்களும்"
LLL LLL K SL LLLS LL 0L LSL LLS LL L0L L LL LLL 0L S LLLL KL LL LLL TS L
கடைசி வரி என் நினைவில்லை. எத்தனையோ ஆண்டு களுக்கு முன் படித்த பாடல், ஆயினும் அதன் சொற்கவை,

Page 14
24 மலரும் நினைவுகள்
பொருட் சுவையினால் இன்னும் என் நெஞ்சில் பதிந்திருக் கிறது!
அற்புதமான கவிஞர் அவர்!
எங்கள் பனைமரத்தின் மீது அவருக்கு அபார நம்பிக்கை தோளில் ஒரு பனை ஓலைப் பெட்டி தொங்கும் (அதற்குள் அவருடைய பாட்டுப் புத்தகங்கள்.)
'பனைப்பாட்டு அல்லது தாலபுரக் கீதம்' என்று ஒரு கவிதை நூலே எழுதியிருக்கின்றார்.
பனை வேரிலிருந்து, பனை ஓலைவரை பனையிலிருந்து பெறக் கூடிய பயன்களைப்பற்றி அந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்நியப் பொருட் 'களின் மோகத்தினால் மக்கள் பனையைக் கைவிட்டு விட்டார் கள்" என்று கவிஞர் அழுதிருக்கிறார். (பனை அபிவிருத்திச் சபையோ அல்லது யாழ்ப்பாணத்து அபிமானிகளோ அந்தப் வனைப்பாட்டு நூலைத் தேடி கண்டுபிடித்து அச்சிட்டு வெளி விட்டால் அது காலத்துக்கேற்ற செயலாக அமையும். கவிஞரையும் கெளரவித்ததாக இருக்கும்.)
இந்தக் கவிஞரின் அருமையைச் சரியான காலத்தில் நான் உணரத் தவறியமைக்காக இப்போது வருந்துகிறேன். அவருக்கு எவ்வளவோ செய்திருக்க வேண்டும்.
எனது ஊரின் பெயர் "பொன்னாலை" என்று இப்போது வழக்காகிவிட்டது.
ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் அதைப் பொன்னாலை என்று சொல்வதில்லை. "புன்னாலை" என்று தான் எல்லாரும் சொல்வார்கள். "புன்னாலைக் கோயில்" "புன்னாலைச் சாமி" என்ற சொற்கள் அதிகமாக வழங்கும். "உந்தப் புன்னாலைச் சாமியாரறிய" என்று சத்தியங்கள் (பொய்ச் சத்தியங்களும்) செய்வது சாதாரணம். சில முக்கிய

வரதர் 25
எழுத்து வழக்குகளில் மட்டும் "பொன்னாலை" என்று எழுதப்படும்.
எனக்குக் கொஞ்சம் அறிவு வந்த வயதில் இந்தப் புன்னாலை என்ற பெயர் ஏதோ எங்கள் ஊரைத் தரக்குறை வாக மதிப்பிடுவது போலத் தோன்றிற்று. எங்கேயாவது "புன்னாலை" என்று எழுத்தில் காணப்பட்டால் மனதுக்குள் எனக்குப் பொல்லாதகோபம் வரும்.
"புன்னாலை"யை "பொன்னாலை ஆக்குவதற்காக அப்போது நான் செய்த ஒரு முயற்சி சற்றே வேடிக்கை UT675! • . . - ܕܐ

Page 15
2. புன்னாலை பொன்னாலையானது!
யாழ்ப்பாணப் பட்டனத்துக்கு பத்து மைல் தூரம்சைக்கிளில் போகிற வயது எனக்கு வந்துவிட்ட காலம்.
சொந்தமாகச் சைக்கிள் கிடையாது. என்னுடைய நண்பர்களிடமும் இல்லை. சைக்கிள் வாங்கும் அளவுக்கு நாங்கள் பணக்காரர்கள் அல்லர்.
பக்கத்து ஊரான மூளாயில் சைக்கிள் கடை இருந்தது. *சைக்கிள் கடை" என்றால், சைக்கிள் விற்கும் கடையல்ல. சைக்கிள் வாடகைக்கு விடுமிடம், முதல் ஒரு மணித்தியாலத் துக்கு 25 சதமும், அடுத்த ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 15 சதமும் வாடகை என்று நினைவு. ஒரு இரவு முழுவதுக் கும் எடுத்தால் ஒரு ரூபா மட்டுமே வாடகை, அப்படியான ஒரு இரவுக் கட்டணத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துத் தான் நான் சைக்கிள் ஒடப் பழகினேன். என்னோடு இன்னொரு நண்பரும் சேர்ந்து பழகினால் சைக்கிள் வாடகை ஆளுக்கு ஐம்பது சதம்
ஒரு பூரணை இரவில் பொன்னாலைக் கோயிலுக்குப் பின்னாலுள்ள பரந்த வெளியில் சைக்கிள் ஓடிப் பழகத் தொடங்கியது; எங்களோடு முஸ்பாத்தியாகப் பொழுது போக்க வந்த பெரிய பையன் ஒருவர் என்னைச் சைக்கிளில்

வரதர் 27
இருத்தித் தள்ளிக் கொண்டு போய், ப்ற்கு கையை விட்டது; நான் சைக்கிளோடு விழுத்தது: பழக்கிய ஆசானிடம் ஏச்சு வாங்கியது; குட்டுப்பட்டது; பிறகு கொஞ்ச நேரத்தில் பெடல் பண்ணப் பிடிபட்டதும் (ஆஹா என்ன உற்சாகம்) அந்தப் பரபரப்பில் "பிறேக்" பிடிக்கக் கை ஏலாமல் சிறிய மேட்டில் சைக்கிளை ஏற்றி விழுந்தது; அதனால் முழங் காளில் கல் அடித்து சிறு காயம் ஏற்பட்டது; என்னுடைய ஆசான் அந்தக் காயத்துக்கு புழுதியை அள்ளித் தூவித் துடைத்து விட்டது- ஒ: எல்லாம் எவ்வளவு உற்சாகமான நினைவுகள்!
சைக்கிள் ஒடப் பழகியபின் வாரக் கடைசி நாட்களில் ஏழெட்டுப் பேராகச் சேர்ந்து கீரிமலைக்குச் சைக்கிளில் போவோம். கீரிமலையில் குளிப்பதைவிட, போகவரச் சைக்கிள் ஒடுவதே முக்கியமான காரியம்.
இரண்டுபேர் சேர்ந்து வாடகைச் சைக்கிள் எடுப்போம். யார் ஒடுவது என்பதில் போட்டி.
'குறிப்பிட்ட சந்திவரை நீ ஒடு; நான் பின்னுக்கு இருச் கிறேன். சந்தி வந்ததும் என்னிடம் ஓடத் தந்துவிட்ே நீ பின்னுக்கு இருக்க வேண்டும்" என்ற ஒரு ஒப்பந்தம் ஓடிக் கொண்டு போகிறவர் குறிப்பிட்ட சந்திவந்தாலும் நிற்க மாட்டார். அதிக தூரம் சைக்கிள் ஓடும் ஆசை. பின்னுக் கிருப்பவர் விடுவாரா? சந்தியில் சைக்கிள் நிற்கவில்லை யென்று கண்டதும், பின் சீற்றிலிருந்து குதித்து இறங்கி சைக்கிளை இழுத்தப் பிடித்து நிறுத்தித்தான் ஓடுவார்1
அப்படிச் சைக்கில் ஒடுவதற்குப் போட்டி போட்ட வயது அது
இப்போது?
"சைக்கிள் ஒடவா? தானா?

Page 16
28 மலரும் நினைவுகள்
அப்படிச் சைக்கிளில்தான் போகவேண்டுமென்று நிர்ப் பந்தம் ஏற்பட்டாலும், "நான் பின்னுக்கு இருக்கிறேன், நீங்கள் உழக்கிக் கொண்டுபோய் விடுகிறீர்களா. $ $ .
காலம் மாறிவிட்டது. வயதும் போய்விட்டது அந்தக் காலத்தில் அடிக்கடி சைக்கிளில் யாழ்ப்பாணம் போவோம். முக்கியமாக “படக்காட்சி (சினிமா) பார்ப்பது தான் நோக்கம்.
அதுவும் இப்படி இரண்டுபேர் பங்குபோட்டு வாடகைக்கு எடுத்த சைக்கிள்தான்.
ஒட்டுமடம் சந்திவரையும் "ட்பிளில் வருவோம். சந்தி வந்ததும் பின்னால் இருப்பவர் இறங்கி நடக்க வேண்டும் ஏன் என்றால், ஒட்டுமடம் சந்திக்குப் பிறகு 'ரவுண் வந்து விடும். மின்சார விளக்குகள் எரியும் ரவுனுக்குள் சைக்கிளில் "டபிள்' போகக்கூடாது என்று சட்டமாம். பொலிஸ்காரர் கண்டால் பிடித்து வழக்கு எழுதி விடுவார்களாம்
சட்டத்துக்கு அந்த நாளில் எவ்வளவு மரியாதை பயம்!
ஒட்டுமடம் சந்தியிலிருந்து படமாளிகை வரை சுமார் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு பேரிய விஷயமல்ல. சிம்பிள்!"
படக்காட்சிக்கு நேரம் நெருங்கி விட்டதென்றால் நடப்ப தாவது: சைக்கிளில் போகிறவருக்குப் பின்னால் ஒடியே போய்ச் சேர்ந்து விடுவோம்!
சொல்ல வந்த "புன்னாலை"யைக் "பொன் • • • • • • ابو$ னாலை ஆக்கிய விஷயம்.
நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும் கைகாட்டி மரங்களில் "புன்னாலைஇத்தனை மைல்" என்று எழுதியிருப்பதைப் பார்ப்பேன். யnaைla என்று ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே எழுதி

வரதர் 29
யிருக்கும். அந்தக் காலத்தில் அரசாங்கத்தோடு சம்பந்தப் பட்ட விஷயங்களெல்லாம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டியது மக்களுடைய கடமை என்று அரசாங்கம் கருதிற்று.
இந்த "Punnai’ என்ற எழுத்துக்களைக் கண்டதும் என் மூளைக்குள் ஒரு அற்புதமான யோசனை தோன்றிற்று. அதில் இரண்டாவதாக உள்ள U என்ற எழுத்தின் மேற் பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டுவிட்டால் அது 19" ஆகிவிடும் Punmalai (புன்னாலை) Ponnela (பொன் னாலை) ஆகிவிடும்!
என்ன அருமையான யோசனை! அதை எப்படியும் செய்து முடித்துவிட வேண்டுமென்று மனம் துருதுருத்துக் கொண்டேயிருந்தது எதையும் சாதிக்க முடியுமென்று நம் பிக்கை. உடனே செய்துவிட வேண்டுமென்ற துடிப்பு.
என்னுடைய யோசனையை சில நண்பர்களிடம் சொன் னேன். அவர்களும் மிக உற்சாகமாக ஆமோதித்தார்கள்.
ஒருநாள் ஏழெட்டுப் பேராக யாழ்ப்பாணப் பட்டணத் துக்குப் படக்காட்சி பார்க்கப் போனோம்.
பாட்லிங்மணி, எஸ். எஸ். கொக்கோ நடித்த “மெட் ராஸ் மெயிலா
ஆர். பி. லட்சுமிதேவி நடித்த 'டுபான் குயினா
எஸ். ஆர். செல்லம் நடித்த "வனராஜ கார்சன்" என்ற TřFFT6ör Lu LDT
டி. ஆர். மகாலிங்கம் நடித்த 'நந்தகுமா"ரா.
எம். கே. தியாகராஜபாகவதர் சந்தானலட்சுமி நடித்த அம்பிகாபதியா- w
-எந்தப் படமென்று நினைவில்லை.

Page 17
3 ( மலரும் நினைவுகள்
ஹே, காலையில் 'டித்த நூலின் பெயர் கூட மாலையில் நினைவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த படங்க தேம் அதில் நடித்த நடிகர்களின் பெயர்களும் நினைவிருக் கிறதா ஒகோ, என்றானாம்!
மினைக்கெட்டுப் பத்து மைல் தூரத்திலிருந்து யாழ்ப் பாணப் பட்டணத்துக்குப் படக்காட்சி பார்க்கப் போனால், றோயல் டாக்கிஸ் என்ற தகரக் கொட்டகையில் (p56 in th காட்சியும், றிகல் தியேட்டரில் இரண்டாவது காட்சியுமாக இரண்டு படங்களைப் பார்த்துவிட்டுத்தான். திரும்புவோம்.
டிக்கட் கலரி சதம் 25,
அப்பொழுதெல்லாம் கியூவரிசைக் கிராமத்தைப்பற்றி யாரும் கேள்விப்பட்டதுமில்லை!
கலரி டிக்கட் கொடுக்கும்: இடத்துக்கு முன்னால் ஒரு பெரிய கும்பல் நிற்கும். அதற்குள் நுழைந்து சென்று டிக்கட் வாங்கி வருவது ஒரு பெரிய கலை! ஒருவர் எத்தனை டிக் கட்டுகளும் வாங்கலாம்.
எங்களில், உசாரான ஒகுவர் தன்னுடைய சேட்டைக் கழற்றி எங்களிடம் தந்துவிட்டு, வேட்டியைச் சுருக்கிக் "கொடுக்கு கட்டுவார். (கொடுக்கா, அது என்ன என்று கேட்பவர்களும் இப்போது இருக்கக் கூடும்.) ஆளுக்கு 5 சதவீதம் எங்கள் எல்லாரிடமும் வாங்கி அந்தப் பணத்தை ஒரு கையில் இறுகப் பொத்திக் கொண்டு, கும்பலின் ஊடே அவர் சரிந்து நெகிழ்ந்து உட்புகுவார். வேறு இரண்டு பேர் அவருக்கு உதவியாக (மற்றவர்கள் இடித்துப் பின் தள்ளாதபடி) பக்கத்தில் செல்வோம்.
இடிக நெரி. தள்ளு.
அவர் ஒருமாதிரி டிக்கட் கையில் பொத்திக்கொண்டு வந்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு டிக்கட்டை கொடுப் பார். என்ன ஆச்சரியம்! ஒரு நாளாவது டிக்கட்டுகள் கூடிக் குறைந்ததில்லை!

வரதர் 3.
இப்படி ஒரு தியேட்டரில் மடிம் பார்த்துவிட்டு t முடிந்ததும் அடுத்த தியேட்டருக்கு அரச அங்கேயும் பு பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு சாமம் தாண்டி யிருக்கும்!
அன்று முன்னேற்பாடாக நான் சிகு சிறிய டின்னில் கொஞ்சக் கறுப்புப் பெயின்ரும், ஒரு சிறியூ பிறவுதிம் கொண்டு போயிருந்தேன்.
படம் முடிந்து திரும்பி வரும்போது-நடுச்சாமத்தில்ட ஒவ்வொரு சந்தியிலும் நிற்போம். கைகாட்டி மரத்துக்குப் பக்கத்தில் அதைப் பிடித்துக்கொண்டு ஒருவர் நிற்பார்: தான் அவர்மீது ஏறி நின்று Pun என்பதன் வின் மேலே ஒரு வளைவை கறுப்பு மையினால் அழகாகப் Guar வேன். அந்த U என்ற எழுத்து "O" ஆக LorólesíîGb. Punnalai, Ponnalai gasingoh!- இப்படியே யாழ்ப் பாணம் சுடுகாட்டாலடிச் சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை, மானிப்பாய் சண்டிலிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, சுழிபுரம்-எல்லாச் சந்திகளிலுமுள்ள கைகாட்டி மரங்களில், புன்னாலை பொன்னாலை ஆகிவிட்டது.
சட்டத்துக்கு மாறான செயல்தானே? ஒரு சட்டமறுப்புச் செய்த உற்சாகம் எங்களுக்கு: பெரிய சாதனை செய்து விட்ட திருப்தி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் பெயர்ப்பலகை திருத்திய கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையின்படி அந்தக் கைகாட்டி மரங்களுக்குப் புதிதாக பெயின்ற் அடித்து ஊர்ப் பெயர்களையும் புதுப்பித்தார்கள்.
அப்போது

Page 18
32 மலகும் நினைவுகள்
பொன்னாலை என்று இருந்ததை புன்னாலை என்று மாற்றி எழுதவில்லை. பொன்னாலை என்றே எழுதினார்
set
பிற்காலத்தில் தமிழ்மொழிக்கும் சற்றே இடமளிக்க முன் வந்த அரசாங்கம், கைகாட்டி மரங்களில் ஆங்கிலத்தோடு தமிழிலும் ஊர்ப் பெயர்களை எழுத ஏற்பாடு செய்தது. அப்போதும் குறித்த கைகாட்டி மரங்களில் தமிழிலும் "பொன்னாலை’ என்றே எழுதி வைத்தார்கள்.
அதன் பிறகு எங்கும் பொன்னாலை" என்றே ஆகி விட்டது

3. சாதிகள்
என்னைப் பற்றிச் சொல்ல முன் என்னுடைய தகப்பனா ரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில்
அவர் ஒரு க.ை வைத்திருந்தார். அந்தக் கடை ஊரில் cypaddu in r a poo sivAbwab .
அப்பாவையும் அவருடைய கடையையும் பற்றிச் சொல்ல u avanu RAE di Lodi asso6T பற்றி கொஞ்சம் சொல்ல Calabi (b.
பொன்னாலை என்பது ஒரு சிறிய கிாரமம், ஏழைக் கிராமமாக இருந்தது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இந்தக் கிராமத்தில் சுமார் 250-300 குடும்பங்கள் அப் போது இருந்தன.
அந்தக் காலத்தில் மக்களைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்கள் என்ன சாதி என்பது முக்கியம். ஒவ்வொரு ஊரிலும்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியார் வசிப் பார்கள்
*நீ எந்தப் பக்கம்? (எந்தப் பகுதி)" என்று கேட்டால், அவர் கிழக்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்றும், தெற்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்றும்-இப்படியே ஒவ்வொரு பக்கத்துக்கு இன்ன இன்ன சாதி என்று அவ
ሠ–ቆ

Page 19
34 மலரும் நினைவுகள்
ருடைய கிராமத்தைப் பற்றி தெரிந்தவர்கள் அறிந்து கொள் வார்கள்.
இந்தியயவில் எந்த தாழ்த்தப்பட்ட சாதியினரும் தாங் கள் இன்ன சாதி என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொள் வார்கள், யாழ்ப்பாணத்தில், குறைந்த சாதிக்காரர் எனப் டுவோர் தங்கள் சாதியைப் பகிரங்கப்படுத்த விரும்புவ தில்லை. அதனால்தான் இங்கே நீ என்ன சாதி" என்று Gílsrfuroso *நீ எந்தப்பக்கம்" என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.
பொன்னாலையில் முக்கியமாக மூன்று சாதிகள் இருந்தன. 3
தாங்கள் உயர் சாதியென்றும் மற்றவர்கள் குறைவு என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
இரண்டாவது கோபியர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவர்கள் வேளாளர்களைப் போல பொதுவாக எல்லாச் சமூக உரிமைகளையும் பெற்றிருந்தார்கள். -
மூன்றாவது நளவர். இந்த நளவர் என்ற சாதியைப் பற்றி ஒரு பல்கலைக் கழக மாணவன் ஆராய்ச்சி செய்யலாமென்று நினைக்கிறேன். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், முன்னேற முடியாதபடி அடக்கி வைக்கப்பட்டவர்கள். . . . .
பின்தங்கிய எங்கள் கிராம மக்களிடையே இவர்கள் மேலும் அதில பாதாளத்தில் பின் தங்கியிருந்தார்கள்
இவர்களுக்குச் சொந்தமான நிலம் புலிம் இருந்ததில்லை அயஅர்களிலிருந்த பெரிய வேளாளர்களுக்குச் சொந்தமான sittsbr நிலங்களிலேதான் இவர்கள் குடியிருந்தார்கள்.

வரதர் 35 அதற்கு ஈடாக நிலச் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது அடிமை குடிமை வேலைகள் செய்வார்களென்று நினைக் dadh (np6ởT.
அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கிணறுகளே கிடையாது. மாதோ ஒரு கிணறு இருந்தது. அதுவும் உப்புத் தண்ணிர்.
நல்ல தண்ணிர் பெறுவதற்காக அவர்கள் வயல் பக்கப் போவார் ள். ஆனால் அங்கே உள்ள கிணறுகளில் இவர்கள் தண்ணிர் அள்ளக் கூடாது. யாராவது உயர்ந்த சாதிக் காரர் வந்து தண்ணிர் அள்ளி இவர்களுடைய மண் பானை களில் ஊற்றி விடும்வரை காத்திருக்க வேண்டும்.
இவர்களுடைய தொழில் மரமேறுதல், கள், கருப்பதீர் சேர்த்தல், சிறிய அளவில் மீன் பிடித்தல், வேளாளருடைய வயல்களிலும், வீடு, வளவுகளிலும் கூலி வேலை செய்தல் ஆகியன தான்.
அந்தக் காலத்தில் பொன்னாலையில், கல்வீடுகள் என்று பெயருக்கு இரண்டு மூன்று வீடுகள் மட்டுமே இருந்தன. மற்றவையெல்லாம் மண் வீடுகளும், தென்னோலைத் தட்டி விடுகளுமே,
நளவ சாதியினரிடையே மண் வீடுகள் கூட இல்லை. எல்லாம் சிறு சிறு ஒலைக் குடிசைகளே.
அவர்கள் உயர் சாதியினரின் வீடுகளுக்குள்ளோ? கே. ஸ்களுக்குள்ளோ நுழையக்கூடாது. றோட்டுகள்து ஒழுங்கைகளில் நடந்து போகலாம். அதுவும் மேல்சாதிக்கார கரைத் தூரத்தே கண்டுவிட்டால், தலையிலோ, தோளிலோ இருக்கும் சால்வைத் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு வேலி ஒரமாக ஒதுங்கி வழிவிடுவார்கள். Y. . .
இந்த நிலையிலும் அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்குப் போக அனுமதியிருந்தது.

Page 20
36 மலரும் நினைவுகள்
ஆனால், பாடசாலையில் மற்றப் பிள்ளைகளேல்லாம் வாங்குகளில் இருந்து படிக்கும்போது இவர்களுடைய பிள்ளைகள் கீழே மண் நிலத்தில்தான் இருப்பார்கள். ஆசிரியருடைய மேசையைச் சுற்றி நின்று மாணவர் பாடம் கேட்கும்போது, இநதப் பிள்ளைகள் ஒரு பக்கமாக ஒதுங்கியே நிற்பார்கள்.
பள்ளிக் கூடம் என்றதும் நினைவு வருகிறது. என்னு டைய அறிவுக்குச் சற்று முற்பட்ட காலத்தில் பொதுவாக எல்லாச் சாதியினரிலும் பல பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது கிடையாது. அதிலும் ஒதுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
எனக்குத் தெரிந்த காலம் முதல் எல்லாப் பிள்ளைகளும் 14 வயதுவரை கட்டாயமாகப் பள்ளிகூடம் போக வேண்டும் என்று சட்டம் இருந்தது. அப்படிப் போகாத பிள்ளைகளின் பெற்றோர் மீது வழக்குத் தொடரப்படும். அதற்கென்றே ஒரு உத்தியோகத்தரும் இருந்தார்.
இந்த வழக்குக்குப் பயந்தே பலர் பிள்ளைகளைப் பாட சாலைக்கு அனுப்பினார்கள்,
வீட்டிலோ வயலிலோ ஏதும் வேலையிருந்தால் அன்று அந்த மாணவன் பாடசாலைக்குப் போகமாட்டான்,
ஆசிரியர் கேட்டால் "வீட்டில் இன்ன வேலை" என்று பதில் சொல்வான். அவன் பொய் சொல்லாமலிருந்தால், அது நியாயமான பதிலாக ஆசிரியரால் ஏற்றுக் கொள்ளப் படும்.
அதிகமானவர்கள் பத்து வயதிலேயே "அவனுக்கு வயதாகி விட்டது" என்றோ, அவன் வேலைக்குப் போகிறான்" என்றோ படிப்பை நிறுத்தி விடுவார்கள்.
ஒழுங்காகப் படித்தால் 10 வயதில் ஐந்தாம் வகுப்புக்கு வந்திருப்பான். அதற்கு மேல் படிக்க அநேகமான கிராமப்

on 25 it 37
பாடசாலைகளில் வகுப்புகளும் இருக்கமாட்டா. பொன் னாலை அ.மி. பாடசாலையிலும் 5ம் வகுப்புவரைதான் இருந்தது.
3ம். 4ம் வகுப்புப் படித்து விட்டாலே, "எழுதப் படிக்கப் பழகிவிட்டான், இனி என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறான்" என்று படிப்பை நிறுத்தி எங்கேயாவது கடை களில் வேலைக்கோ அல்லது வீட்டில் உதவியாகவோ வைத்து விடுவார்கள்.
பெண் பிள்ளைகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. "இனிப் பெரிய பிள்ளையாகி விடுவாள்' என்றும், "பெட்டைக் குப் படிப்பு எதற்கு?’ என்றும் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.
அந்தக் காலத்தில் 4ம், 5ம் வகுப்புகளுக்கு மேல் பெண் பிள்ளைகள் படிப்பது மிக அபூர்வம்.
பள்ளிக்கூடம், படிப்புப் பற்றி, பிறகு-நான் படித்த விஷயம் வரும்போது சொல்கிறேன்.
இந்த நளவ சாதியைப் பற்றி யாராவது நிறைய ஆராய்ந்து எழுத வேண்டும். இவர்களிடையே கூட, பொன் வாாலையில் இரண்டு பிரிவுகள் இருந்தனவாம். ஒரு பிரிவுக்கு 'வாடை" என்று பெயர். மற்ற பிரிவுக்கு சோளகம் என்று
இயற்கையான காற்றுகளின் பெயர்களையே இவர்கள் தங்கள் பிரிவுகளுக்குப் பெயர் வைத்திருப்பது வியக்கத்தக்க தாக இருக்கிறது.
ஏதோ பெயருக்கு இரண்டு பிரிவுகள் இருந்தனவே தவிர, இவர்களிடையே எந்த வித்தியாசமும்-ஏற்றத் தாழ்வும் இருந்ததாகத் தெரியவில்லை. ν
இவர்களிடையே வழங்கிய பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்களாக இருந்தமை கவனத்துக்குரியது.

Page 21
38 மலரும் நினைவுகள்
வேலன், கந்தன், முருகன், வெள்ளையன், நாகன், பெரியான், சின்னான், மற்றும் வள்ளி, தெய்வி, பொன்னி, சம்பரத்தி முதலிய பெயர்களெல்லாம், மற்ற மேல் சாதிக் காரரிடையே அருகிப்போய், அந்த நேரத்திலும் நளவ சாதி யினரிடையே வழக்கிலிருந்தன.
நாகரிகம் என்று கருதிக் கொண்டு மேல் சாதிக்காரர், வேலுப்பிள்ளை, முருகமூர்த்தி, வரதராசா, கந்தையா (ஐயா) என்று வால் சேர்த்து வைத்த பெயர்களை தாழ்வு சாதியினர் வைக்க அனுமதி இருந்திருக்காதென்று நினைக் கிறேன்.
இவர்களில் யாராவது சற்றே தலைதூக்கினால்-கல்வி கற்றால், பணம் சம்பாதித்தால், நாகரிகமாக வாழ்ந்தால், பெரிய சாதிக்காரர்களுக்குப் பொறுக்காது. −
ஒரு கீழ் சாதிப் பயல் 'தன்னுடைய நிலை" தவறி இப்படி உயருவது தங்களை அவமதிப்பதாகுமென்று சாதிமான்கள் நினைத்தார்கள்.
ஒரு சம்பவம் நினைவு வருகிறது.
அப்போகு வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மிகப் பிரசித்தம்.
பொன்னாலைக்கு சமீபமாக, சுழிபுரத்தில் விக்டோரியாக் கல்லூரி இருந்தது. இக்கல்லூரி உள்ளூர் தமிழ் மக்களா லேயே தாபிக்கப்பட்டது. ஆயினும் தங்களுடைய அரச விசுவாசத்தை வெளிப்படுத்துமுகமாக விக்டோரியா மகா ராணியின் பெயரை அக்கல்லூரிக்குச் சூட்டினார்கள் போலும் அந்தக் காலத்தில் அரச விசுவாசம் மிக அதிக மாகவே இருந்தது. நான் படித்த நாலாம் வகுப்புப் புத்தகத்தில்,

arbf 39
"வாழ்க வாழ்கவே
ஜர்தாம் ஜார்ஜா மன்னர் வாழ்கவே!" என்று ஒரு பாட்டு (பாடம்) இருந்தது.
பொன்னாலையின் இன்னொரு பக்கமாக சற்றுத் தொலைவில், வட்டுக்கோட்டையில் இருந்தது யாழ்ப் பாணக் கல்லூரி.
இந்த யாழ்ப்பாணக் கல்லூரி மிகப் பெரியது. அமெரிக் கன் மிஷைனரியாரால் நூற்றாண்டுக்கு முன்பு தாபிக்கப் பட்டது. இலங்கை முழுவதும் கல்விமான்களிடையே மிகவும் பிரபலமானது. ஒரு பல்கலைக் கழகத்துக்கு உள்ள மதிப்பு இந்தக் கல்லூரிக்கும் இருந்தது.
அப்போதெல்லாம் இலவசக் கல்வி கிடையாது. வசதியுள்ள பணக்காரவிட்டுப் பிள்ளைகள் மட்டுமே அங்கே படித்தார் கள். வசதி குறைந்த பிள்ளைகள் ஊர்தோறும் இருந்த தமிழ்ப் பள்ளிகளில் படித்தார்கள், தமிழ்ப் பள்ளிகளை அமெரிக்கன் மிஷன் தாபனத்தாரும், அந்தந்த ஊரிலுள்ள சைவப் பெரியார்களும் நடத்தி வந்தார்கள். பின்னால் சைவ வித்தியாவிருத்திச் சங்கப் (இந்துப் போட்) தோன்றி ஊர் தோறும் பாட சாலைகளைத் தாபித்து அமெரிக்கள் மிஷனறிக்குச் சரியான போட்டியாக வளர்ந்தது.
யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி மட்டுமல்ல, மாண வரின் உடை, ஒழுங்குமுறை எல்லாவற்றிலுமே மிகுந்த கண்டிப்பு உண்டு.
உயர் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் "கோட்" போட் டுக் கொண்டுதான் வகுப்புக்கு வரவேண்டும் என்று கூடச் சட்டம் இருந்ததாம்!
மாணவர்களை ஆங்கில நாகரிகத்தில் வழிப்படுத்துவதி லூம் இப்படியான கல்லூரிகள் அந்த நாளில் கண்ணாக இருந்தன.

Page 22
40 மலரும் நினைவுகள்
இந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நளவ இனத்தைச் சேர்ந்த ஒரு பீயோன் இருந்தார். கிறிஸ்தவர், கிருஸ்த வதானங்களில் உத்தியோகம் வழங்கும் போது தமது மதத் தவர்களுக்கே முன் வரிசை வழங்குவது அன்றைய வழக்கம்.
உத்தியோகத்துக்காக மதம் மாறியவர்கள் அக்காலத் தில் அநேகர்,
கிறிஸ்தவராக இருந்த படியால்தான் அந்த நளவ இன வாலிபருக்கு யாழ்ப்பாணக் கல்லூரியில் "பீயோன் வேலை கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன்.
இந்துக் கல்லூரிகளில் நளப் பிள்ளையைக் கிட்டவும் எடுத்திருக்க மாட்டார்கள்.
அந்தப் பீயோனுக்கு என்ன பெயர் என்று தெரிய வில்லை. "நாச்சாண்டியன்" என்று ஊரில் சொல்வார்கள். *நாச்சாண்டியன்" என்பது இயற் பெயரா இடுகுறிப் பெயரா என்பதும் இன்றுவரை எனக்குத்தெரியாது.
இந்த நாச்சாண்டியன் பொன்னாலையிலிருந்த ஒரே ஒரு கிறிஸ்தவ நளவ குடும்பத்தில் திருமணம் செய்தி குந்தார். (பொன்னாலையில் இன்னும் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது அது வேளாளக் குடும்பம். இரண்டு குடும்பங்கள் மதத்தால் ஒன்றுபட்ட போதிலும் அவை இரண்டும் இரண்டு துருவங்களாகவே இருந்தன. கிறிஸ்தவ ரானாலும் மேல் சாதிக்காரர் மேல் சாதிதான். கீழ்ச் சாதிக் காரர் அவர்களுக்குக் கிட்டவும் போக முடியாது)
நாச்சாண்டியன் எங்களூர் நளவர்களைவிட வித்தியாச மானவராக இருந்தார். சுத்தமாக உடை அணிந்திருப்பார். வட்டுக் கோட்டையிலிருந்து பொன்னாலைக்கு சைக்கிளில் வந்து போவார் (ஒரு நளப்பிள்ளை சைச்கிளில் போவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்!)

வரதர் 41
இப்படி ஒரு கீழ்சாதிக்காரன் தலை தூக்குவதைப் பெரிய சாதககாரர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு நளப் பயல் இப்படிப் பெரிய சாதிமான்களைப் போல நடந்து தங்களை அவமதிப்பதாக அவர்கள் உண்மை யிலேயே நம்பினார்கள்.
ஒருநாள் நாச்சாண்டியன் வட்டிக்கோட்டையிலிருந்து சைக்கிளில் வருகிறார். இவர் மீது சில நாட்களாகவே கண் வைத்திருந்த பெரிய சாதிக்கார வாலிபர் இருவர் அவரை வழிமறித்தார்கள். ஒரு 'வீரன்" உதைத்த உதையில் நாச் சாண்டியன் ஒரு பக்கமும் சைக்கிள் ஒருபக்கமுமாக விழுந் தார்.
அதற்குப் பிறகு நாச்சாண்டியனைத் தூக்கி நிமிர்த்தி நிறைய "சாத்துப்படி” சாத்தினார்கள். அதன் பிறகு தூக்கடா சைக்கிளை! நளவன் சைக்கிள் ஓடக் கூடாது. தூக்கிக் கொண்டு போடா" என்று சைக்கிளைக் தூக்கிக் கொண்டு போகும்படி செய்தார்கள்.
அந்த வீர வாலிபர்களைப் பற்றி அப்போது ஊரிலே பலர் பெருமையாகப் பேசிக் கொண்டது நினைவி ருக்கிறது.
அந்தப் பீயோன் சற்றே படித்தவர், கொஞ்சம் உலகம் தெரிந்தவர். "அவர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய் திருக்கலாமே" என்று நினைக்கிறீர்களா!
அரசாங்கம் என்றால் கார்?

Page 23
سمي
4. கடந்து போன கற்காலம்
கிராம மக்களைப் பொறுந்த மட்டில் விதானையார், அவருக்கு மேல் உடையார், அவருக்கு மேலே மணியகாரன். அவருக்கும் மேலே அரசாங்க ஏஜன்டர் -இவர்கள்தான் அரசாங்கம்.
என்ன பிரச்சினையொன்றாலும் கிராம மக்கள் விதானை யாரிடம்தான் போகவேண்டும். மேற்கொண்டு பொலிசுக்குப் போவது, கோர்ட்டுக்குப் போவது எல்லாம் விதானையார் தீர்மானிக்க வேண்டிய விஷயம். -முக்கியமாக ஏழை மக் களைப் பொறுத்தமட்டில்!
இந்த விதானை, உடையார், மணியக்காரர் - இவர் கள் எல்லாருமே அரசாங்கத்தால் நியமிக்கப்பெற்ற உத் தியோகத்தர்கள், இவர்களை நியமிக்கும் போது, இவர் களுடைய படிப்பு அறிவுக்கு மேலாக இவர்களுடைய உயர் குலத் தன்மையும், ஊரில் இவர்களுக்குள்ள செல்வாக்குமே முக்கிய தகுதிகளாகக் கவனிக்கப்படும் ,
கிராமத்தைப் பொறுத்த மட்டில் விதானையார் ஒரு சர்வாதிகாரி" மாதிரி. விதானை என்றால் சாதாரண கிராம சேவகரல்லர். அவர் பொலீஸ் விதானை!” அப்போ தெல்லாம் "பொலிஸ் நிலையங்கள் பட்டணங்களில் மட்டுமே இருக்கும். கிராமங்களில் பொலீசின் கடமையும் அதிகாரமும் விதானையாருக்குத்தான்.

வரதர் 43
பெரிய சாதிமான்களாகிய இந்த விதானைமார், தங் களையொத்த சாதிமான்களுக்கு எதிராகக் கீழ் சாதிக்காரர் கள் முறைப்பாடு கொண்டு போனால் பெரும்பாலும் அதைக் * கவனிக்க' மாட்டார்கள். சில சமயங்களில் முறைப்பாடு செய்யப் போனவனுக்கே தண்டனை பெற வேண்டிய சந்தர்ப்பமும் நேரிடலாம்!
விதானை யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர் தமது சமூகத்தைப் பகைத்துக்கொண்டு வாழ விரும்புவாரா?
மேலும் ஒரு கீழ் சாதிக்காரன், தனக்கு ஏற்படும் பிரச் சினையைத் தீர்ப்பதற்குத் தனது அயலிலுள்ள நாட்டாண் மைக்கார வோளாளரிடம் தான் போவானே தவிர விதானை யாரிடம் போகமாட்டான். அவன் விதானையாரிடம் முறைப் பாடு செய்யப் போனால் அதுவே பெரிய குற்றமாகி விடலாம்.
ஓ! எவ்வளவு மோசமான நிலையில் அந்தக் காலத்தில் சில மக்கள் வாழ்ந்தார்கள்!- இன்னும் dொற்காலம் வர வில்லைதான். ஆனால் நிச்சயமாக அந்தக் கற்காலம் போயே போய் விட்டது
இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல் கிறேன்.
ஒரு பஸ் வண்டியில் நடந்த சம்பவம். பஸ் வண்டியென்றால் நீங்கள் இப்போது பார்க்கின்ற இ. போ. ச. பஸ் மாதிரியல்ல.
ஒரளவுக்கு இப்போதைய மினி பஸ் வண்டியின் அளவு இருக்குமாயினும், அமைப்பு முறையில் மிகவும் பின்தங்கிய Geor. 6i.
பின்னால் நெல்சன் பஸ் வந்தபிறகு இவற்றைத் "தட்டி பஸ் என்ற பெயரால் பொது மக்கள் வழங்குவார்கள்.

Page 24
44 மலரும் நினைவுகள்
(இப்படியான பெயர்கள் சூட்டுவதில் பொதுமக்களுக்கு ஒரு தனி வல்லமை உண்டு. சமீப காலத்தில் ஒரு வகை விமானத்துக்குச் சகடை" என்ற பெயர் சூட்டினார் களே !}
இந்தத் தட்டி பஸ்களில் உள் கூடாரத்தின் சட்டத்தில் "பிரயாணிகள் 21" என்று எழுதியிருக்கும். முன்பக்கத்தில் ஒட்டுநருக்குப் பக்கத்தில் (லொறிகளில் இருப்பது போல) இரண்டு பேருக்கு இருக்கை உண்டு
உள்ளே (உள்ளே போவதற்குப் பின்பக்கத்தால் ஏற வேண்டும்) நீளப் பக்கமாக இரண்டு பக்கத்திலும் இரண்டு பலகை ஆசனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் தலா 9 பயணிகள் வீதம் 18 பயணிகள். நடுவில் ஒட்டுநருக்குப் பின்பக்கமாக ஒரு பயணிக்கு இருக்கை எல்லாமாக 21 பயணிகள்,
பொதுவாகப் பத்து பன்னிரண்டு பயணிகளோடுதான் பஸ் ஓடிக் கொண்டிருக்கும் இப்போதையைப் போல அந்த பஸ்ஸில் நெருக்கடி கிடையாது. ஆடி அமாவாசைத் தீர்த்தம், நயினாதீவு தேர் போன்ற சில நாட்களில்மட்டுமே *ஒவலோட் அமளி துமளியாக இருக்கும்
பொன்னாலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பத்து மைல் பயணம் செய்ய 25 சதம் கட்டணமென நினைக் கிறேன். டிக்கட் என்று ஒன்றும் கிடையாது. நடத்துனரே பஸ் முதலாளியாகவும் இருப்பார். அல்லது முதலாளிக்கு மிக நம்பிக்கையான ஆளாக இருப்பார். அவர் பணத்தை வாங்கிக் கொள்வார். டிக்கட் வழக்கமே இல்லை.
பஸ் சேவையுல் லாபமும் நட்டமும் நடத்துனரின் திறமையிலேயே தங்கியிருந்தது. என்ன சிரமப்பட்டும் பயணிகளைச் சேர்ப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப் பார். காரை நகர்ப் பாலத்தில் - சுமார் அரை மைல் தூரத்தில் பஸ் வருவதைப் பொன்னாலை றோட்டிலிருந்து

வரதர் 45
கண்டதும், தோளிலிருந்த சால்வையை எடுத்து தலைக்கு மேலே உயர்த்தி விசுக்கிக் காட்டினால், பொன்னாலைச் சந்தியில் வந்து பஸ் நின்று விடும். சைகை காட்டிய அந்தப் பயணி வந்து பஸ்ஸில் ஏறும் வரை காத்து நிற்கும். (சால் வையைத் தெரியாதவர்களும் இந்தக் காலத்தில் இருக்கக் கூடும் , அந்தக் காலத்தில் எல்லாரும் சால்வை அணிந்தி ருப்பார்கள். வெயில் நேரத்தில் அது தலைப் பாகையாகி தலையில் ஏறிவிடும், எங்காவது நிலத்தில் உட்கார நேரும் போது சால்வையை மடித்து நிலத்தில் போட்டு அதன் மேல் உட்காருவார்கள். கைகால் முகம் கழுவினால் ஈரம் துடைக்க உதவும், வியர்வைக் காலத்தில் அதை ஒத்தித் துடைக்கவும் விசிறியாக விசுக்கவும் உதவும், சிலரைப் பிடித்துக் கட்டுவ தற்குக் கயிறாகவும் மாறும். இப்படிச் சால்வையின் உபயோகம் பலவிதம்.)
ஒருவர் அடுத்த நாள் காலையில் யாழ்ப்பாணம் வருவ தாக பஸ் நடத்துனரிடம் சொல்லி வைத்தால், அடுத்தநாள் காலையில் அவர் வீட்டுப் படலையருகே பஸ் வந்து நின்று * பாம், பாம்" என்று "கோண்” அடிக்கும் (அந்தக் கோணைக் கூட இப்போது காணோம்!) பஸ் கோண் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுவன் ஓடிவந்து ஐயா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார், நிக்கட்டாம்" என் றால் "கெதியாய் வரச்சொல்லு தம்பி" என்று சொல்லிவிட்டு நடத்துனர் பஸ்ஸை நிறுத்தி வைத்திருப்பர்! அப்படிப் பயணம் செய்த காலம் அது,
இந்தத் தட்டி பஸ் வண்டிகளில் சாதி வித்தியாசம் பாராமல் கீழ் சாதி மக்களையும் ஏற்றுவார்கள். ஆனால் மக்கள் பஸ் வண்டியில் ஆசனங்களில் இருக்கக் கூடாது. ஆசனங்கள் ஆட்களின்றி காலியாக இருந்தாலும், இந்த கீழ் சாதிக்காரர்கள் இரண்டு ஆசனங்களுக்கும் நடுவேயுள்ள "வக்"கில்தான் - கீழே - இருக்க வேண்டும். எங்கேயிருந் தாலும் பயணக் கட்டணம் ஒன்றுதான்

Page 25
மலரும் நினைவுகள்
இந்த நடைமுறையைப் பல காலம் பஸ் பயணத்தின் போது கவனித்திருக்கிறேன்"
கொஞ்சக் காலத்துக்குப் பிறகு “நெல்சன்" பஸ் பயணச் சேவை தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து பஸ் கம்பெனி களுக்கு மாறிவிட்டது. கம்பெனிகளின் மீது அரசு பல விதி முறைகளை விதித்திருந்தது.
காலமும் மாறி வந்தது.
நெல்சன் பஸ்ஸில் இன்றைய பஸ்கள் மாதிரியே குறுக்கு வாட்டில் இருக்கைகள். ஒவ்வொரு இருக்கையில் 2 القلاا6 (6 كيب 3 பேர் இருக்கலாம். இந்த இருக்கைகளில் முன்பக்கமாக இரண்டு வரிசைகள் பெண்களுக்கு’ என்று ஒதுக்கப்பட்டி ருக்கும். அவற்றிலும் ஆண்கள் உட்காரலாம். ஆனால பெண்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்க வேண்டும்.
ஒருநாள் நான் இந்த நெல்சன் பஸ்வண்டியில் ஏறி யாழ்ப்ப்ாணம் வந்து கொண்டிருந்தேன். மூளாயில் ஒரு பெரிய வேளாளர் ஏறினர். அவர் ஏறும்போதே பஸ் இருக் கைகளில் இடமில்லை. பெண்களின் இருக்கைகள் மட்டும் வெறுமையாக இருந்தன. அந்த வேளாளர் வெறுமையாக இருந்த பெண்களின் இருக்கை ஒன்றில் இருந்து (o) sr6šTL Tř.
பஸ் சுமார் அரை மைல் தூரம் ஓடிவந்து சுழிபுரம் சந்தி யில் நின்றது. பஸ்ஸை மறித்துச் சிலர் ஏறினார்கள், ஏறிய வர்களில் இருவர் பெண்கள். ஏறிய பெண்கள் இருக்க இட மின்றி நிற்கிறார்கள். பெண்களின் இருக்கையில் பெரிய வேளாளர் உட்கார்ந்திருக்கிறாரே!
நடத்துனருக்கு ஆட்களை விளங்கவில்லையோ அல்லது விளங்கியிருந்தும் நியாயத்தை சட்டத்தை அமுல் செய் தாரோ தெரியாது.
ஆரங்கை, பொம்பிளையளின்ரை சீற்றிலை இருக் கிறது? பொம்பிளையள் வந்துவிட்டினம். இடத்தைக் கொடுங்கோ
நடத்துநரின் குரல் கம்பீரமாகப் பளிச்சென்று கேட்டது பெரிய வேளாளர் இரண்டாம் பேச்சின்றி எழுந்து நின்றார். அந்த கீழ்சாதிப் பெண்களுக்கு இருக்க இடம் கொடுத்து விட்டுத்தான் எழும்பி நின்றார்!
ஆம், அந்தக் கற்காலம்" போயே விட்டது

5. வீடுகள், 'மாடுகள்
நான் . ஆனாப் படிக்கத் தொடங்கிய காலத்தில். அதாவது 1928 ஆம் ஆண்டளவில் பொன்னாலைக் கிராமத் தில் மூன்றோ, நான்கோ கல்வீடுகள் தான் இருந்தன. அவற்றுள் ஒரு வீட்டுக்காரரை கல்வீட்டுக் கிருட்ணர்" என்றே வழங்குவார்கள். அவரே முதன் முதலில் கல்வீடு கட்டியவராக இருக்கலாம்:
எங்களுடைய வீடும் ஒரு கல்வீடாக இருந்தது. கல்வீடு என்றால் ஏதோ பெரிய மாடமாளிகையல்ல. பக்கம் பக்கமாக இரண்டு அறைகள். அவற்றின் முன்னும் பின்னும் இரண்டு விறாந்தைகள், சீமெந்து, கொங்கிறீற் என்று ஒன்றும் கிடை, யாது. சுண்ணாம்புச் சாந்தினால் கட்டப்பட்ட வீடு, அப்போ தெல்லாம் கோயில்கள் முதலிய பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு சுண்ணாம்பையே பயன்படுத்தினார்கள் சுண்ணாம்பு இடிப்பதற்கென்றே சிறு தொட்டி மாதிரியான ஒரு அமைப்பு பொன்னாலைக் கோயிலில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. திருவாசகத்திலும் சுண்ணாம்பு இடிக்கும் பெண்களை வைத்து ‘சுண்ணாப் பாட்டு வருகிறது. (இது திருவாசகமாயினும் மரணச் சடங்குகளில் மட்டுமே பாடப்படு கிறது. அதனால் வேறு சந்தர்ப்பங்களில் இத் திருவாசகப் பாடல்களைப் படாமல் ஒதுக்கி விட்டார்கள்!)
பெரிய சூளை வைத்துச் சுண்ணாம்பு தயாரிப்பார்கள், ாங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் "அருணாசலம்" என்று ஒரு

Page 26
48 மலரும் நினைவுகள்
பெரிய சமக்காரர். அப்பொழுது அவரிடம் பெரிய இரட்டை மாட்டு வண்டியும் அவற்றுக்கான ஒரு சோடி அண்ணாமலை எருதுகளும் இருந்தன.
அண்ணாமலை மாடுகள் முற்றிலும் நல்ல வெள்ளை நிறத்தனவாய், நீண்டு வளர்ந்த கொம்புகளுடன், உயர மாயும், பார்வைக்குக் கம்பீரத் தோற்றமுடையனவாயும் இருக்கும். அவற்றின் கொம்பு நுனிகளில் பித்தளையிலான குப்பி’யும் (முடிபோன்ற அமைப்பு), கழுத்திலே கெச்சை யும் அணியப்பட்டிருக்கும். சிலர் சலங்கைளும் அணிவித்திருப் பார்கள். மாடுகள் நடக்கும் போது இந்தக் கெச்சை, சலங்கைகள் ஜல், ஜல்" என்று ஓசை எழுப்பி, உற்சாகம் தரும்.
அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள திருவண்ணாமலை" என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் "உரு" என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் (அவைகளைக் கப்பல்கள் என்றே சொல்வோம்) அந்த மாடுகள் இந்தியா வில் ஏற்றப்பட்டு, இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப் படும். இப்படி மாடு வரும் காலத்தில் அவற்றை வாங்கு வோரும், தரகர்களும், சும்மா விடுப்புப் பார்க்க வருபவர் களுமாக ஊர்காவற்துறை (காரைநகர் துறைமுகப்பகுதி) திருவிழாக் காலம் போலக் களை கட்டிவிடும்.
சுண்ணாம்புச் சூளை ஒன்று வைப்பதென்றால், வண்டி வண்டியாக முருகைக் கற்களையும், மரக்குற்றிகள் விறகு களையும் ஒரு வளவு நிறையக் கொண்டு வந்து குவிப்பார்கள். பிறகு நடுவில் மூன்று நான்கு மரக் குற்றிகளை நட்டு, அதைச் சுற்றிச் சுமார் பத்து அடி விட்டத்தில் மர விறகுகளை ஒரு படை அடுக்குவார்கள். அந்த விறகுகளின் மேல் முருகைக் கற்களை ஒரு படை பரப்பி அடுக்குவார்கள். இப்படி நாலைந்து படைகள் அடுக்குவார்கள். இந்த வேலை களை அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களே செய்வார்கள்.

வரதர் ή και και 8 49
அடுக்கி முடிந்த பிறகு ஒரு நல்ல நாளில் மர விறகுகளின்
தீயைப் பற்ற வைப்பார்கள் பெரிய 'சொக்கப்பனை" போல ஐந்தாறு நாட்களுக்கு நெருப்பு எரியும். புகை மண்டலம் வானளாவி எழும்பும்.
ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு நெருப்பை ஆற்றிவிட்டுப் ப்ாரித்தால் முருகைக் கற்களெல்லாம் வெந்து சுண்ணாம்பாசி யிருக்கும். அதை அள்ளி எடுத்து கட்டிடம் கட்டுபவர்களுக்கு விற்பார்கள். * it. w
எங்கள் வீடு முருகைக் கற்களினால் கட்டி, கூரையும் ஒட்டினால் வேயப்பட்டிருந்தது. ஓடு என்றால் நீங்கள் இப்போது சாதாரணமாகக் காணும் ஒடுகள்தான். அப்போது ஒடுகளும் இந்தியாவிலிருந்துதான் வந்திறங்கின ஒடுகள் மட்டுமா? அரிசி, நெல், எள் மற்றும் தவதானியங்கள், மண் சட்டி, பானைகள் இப்படித் தேவைப்பட்ட பல பொருட்களும் இந்தியாவிலிருந்துதான் வந்து இறங்கின. அதனால் காரை நகர் துறைமுகப்பகுதி ஒரு குட்டி நகரம் போல விளங்கிற்று. "கிட்டங்கி’ என்ற பண்ட சாலைகளும், கடைகளும் அங்கே நிறைந்திருந்தன. '''
சற்று முந்திய காலத்தில் "ஒடு" என்றது "பீலி” ஒடு களைத் தான். சுமார் ஒரு சாண் நீளத்தில் பீலிபோல அந்த ஒடுகள் அமைந்திருக்கும். அவற்றை ஒரு வரிசை நிமிர்த்தி யும் அதன்மேல் ஒரு வரிசை கவிழ்த்தும் அடுக்கி கூரைகளை வேய்வார்கள். இப்போது கூட எங்கேயாவது அந்த மாதிரி ஒடுகள் வேய்ந்த கூரைகளை நீங்கள் பார்க்க முடியுமென்று நம்புகிறேன்.
அப்போதெல்லாம் ஒரு குடும்பம் குடியிருக்கும் வளவு ரன்பது ஒரு பரப்பு, இரண்டுபரப்பு நிலமல்ல. ஐந்து பரப்பு முதல் பத்துப் பதினைந்து பரப்புவரையில் ஒரு குடியிருப்பு வளவு அமைந்திருக்கும். .િ
Lo- 4

Page 27
'50 மலரும் நினைவுகள்
வளவு நிறையப் பனைமரங்களும், வடலிகளும் காணப் படும், எங்கள் வளவு இருந்தது பொன்னாலை மேற்குப்
பக்கத்தில் நல்ல தண்ணிச் இல்லாத படியால், தென்னை
முதலிய வேறு மரங்கள் அங்கே இல்லை. ஆனால், வேம்பு, புளி முதலிய சில மரங்கள் இருக்கும்.
வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின்
அத்தியாவசிய தேவையாகக் கருதப்பட்டது. வேலி முழுவதும்
வரிசையாக பூவரசு மரங்கள் நிற்கும். சில இடங்களில்
கிளுவை, முள் முருக்கை மரங்களையும் வேலிக்கு நடுவதுண்டு. s'
மாரி காலத்தில் பூவரச மரத்தின் குழைகளை வெட்டி,
வண்டி வண்டியாய் செம்பாட்டுப் பக்கம் அனுப்புவார்கள்.
அங்கே இவை தோட்டங்களில் பசளையாக நிலத்துள்
புதைக்கப்படும்.
ஒவ்வொரு குடியிருப்பு வளவுக்கும் அதன் உறுதியில் ஒரு
பெயர் உண்டு. நாங்கள் குடியிருந்த வளவுக்கு "தெருவில்
புலம்’ என்று பெயர். அது ஒன்பது பரப்பு நிலம்,
பொதுவாக அந்தக்காலத்தில் ஒரு வீடு (நாற்புறமும்
மண் சுவர் வைத்துக் கட்டப்பட்ட அறை) அதன் முன்னால்
ஒரு திண்ணை (விறாந்தை) எல்லாக் குடியிருப்பு வளவு களிலும் இருக்கும். வீட்டுக்கு முன்னால் தலைவாசல் இருக்கும். இன்றைய வீடுகளில் "ஹோல்' என்று சொல்
கிறோமே. அதற்குப்பதிலாக அமைந்திகுந்ததே இந்தத்
தலைவாசல். சிலர் இந்தத் தலைவாசலைச் சுற்றி தென்னோலைத் தட்டியினாலோ அல்லது பன்னாங் கினாலோ மறைப்புச் செய்திருப்பார்கள்.
விட்டு அறைக்கு ஒரு பக்கமாக அதோடு தொடர்பில்லா மல் குசினி இருக்கும். அப்போது இதைக் குசினி என்று சொல்வதில்லை. அடுக்களை" என்று தான் சொல்வோம். இந்த அடுக்களை அரைச் சுவர் வைத்து மேலே பனை

வரதர் 51
மட்டையினால் வரிந்து அடைக்கப்பட்டிருக்கும். குசினிக்குள் வெளிச்சம் புகவும், உள்ளேயிருந்து புகை வெளியேறவும் இந்த அமைப்பு வசதியாக இருந்தது. இந்த அடுக்களையின் முன்பாகவும் ஒரு சிறு திண்ணை இருக்கும். இந்தத் திண்ணையில் அம்மி குளவி வைத்திருப்பார்கள், (எங்கள் வீட்டு அடுக்களை இந்த அமைப்பில் இருக்கவில்லை. வீட்டு அறையோடு சேர்ந்திருந்த ஒரு சிறிய அறையே அடுக்களை யாகப் பாவிக்கப்பட்டது.)
தலைவாசல், அடுக்களை தவிர ஒரு மாட்டு மாலும், மாட்டுவண்டி இருந்தால் வண்டிமாலும் இருக்கும்.
அநேகமாக எல்லார் வீட்டுத் தலைவாசலிலும் ஒரு கட்டில் இருக்கும். கெளரவமான மனிதர்கள் வீட்டுக்கு வந்தால் கட்டிலில் உட்கார வைத்துக் கதைப்பார்கள். மற்றவர்கள் எல்லாரும் தலைவாசல் தரையில் இருந்துதான் கதைப்பார்கள், கனம்பண்ண வேண்டிய பெண்கள் வந்தால் (அவர்கள் கட்டிலில் உட்கார மாட்டார்கள்.) அவர்களுக்குப்
புற்பாய் விரித்து இருக்க விடுவார்கள்.
இன்றைய வீடுகளைப் பார்த்தால் வீடு நிறையப் பொருள்கள்! இப்பொழுது வீடுகளில் காணப்படும் பொருள் கள் எதுவுமே அன்றைய வீடுகளில் இல்லை :
செற்றிகள், கதிரைகள், மேசைகள், கட்டில்கள், அலுமாரிகள் மின் விசிறிகள். குளிர்சாதனப் பெட்டி, ரெலிவிஷன், ரேடியோ-இவைகள் எதுவுமே அன்றைய வீடுகளில் இல்லை! (இன்றைய வீடுகளில் இவ்வளவையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் வீடு ‘ஓ’ என்று விடும்!) -'
தலைவாசலில் இருக்கும் கட்டிலும், வீட்டுக்குள் இருக் கும் பெட்டகமுந்தான் அன்றைய முக்கியமான பொருட்கள். பெட்டகம் என்பது தடித்த மரப் பலகையினாலான ஒரு பெரிய பெட்டி. வீட்டுக் கதவுக்கு இருப்பதுபோல அதற்கும் ஒரு பெரிய திறப்பு இருக்கும். இந்தப் பெட்டிக்குள்ளேதான்,

Page 28
52 மலரும் நினைவுகள்
முக்கியமான பணம், நகை, உறுதி முதலியவற்றை வைத் திருப்பார்கள். சில வீடுகளில் இந்தப் பெட்டகம் ஆறு அடி நீளம் இருக்கும். வீட்டுக்காரர் இரவில் அதன்மீதே படுத் துறங்குவார். (காவல்!)
மோட்டுமால்" என்பது முக்கியமாக மாடுகள் கட்டுவதற் காக அமைக்கப்பட்டது. பொதுவாக எங்கள் கிராமத்தில் எல்லார் வீடுகளிலும் பசு மாடுகள் இருந்தன. எங்கள் வீட்டில் நான்கு பசுக்களும் இரண்டு கன்றுக்குட்டிகளும் இருந்தன. பசுக்களுக்கு கழுகி, செங்காரி, சுட்டி, சிவப்பி என்று பெயர்களும் உண்டு.
காலையில் ஒருவர் வீடு வீடாகச் சென்று மாடுகளைக் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், பொன்னாலைக் கோவிலின் பின்புறத்தே உள்ள பரந்த புல் வெளியில் மேய விட்டு, மாலையில் வீடுகளுக்குக் கொண்டுவந்து விடுவார். அதுதான் அவருக்குத் தொழில். மாட்டுச் சொந்தக்காரர் அவருக்குச் சம்பளம் என்று எதுவும் கொடுப்பதில்லை. மாடு கள் காடுகளில் மேயும் போதும் போய் வரும்போதும் போடும் சாணியை அவர் ஒரு கடகத்தில் சேர்த்து காட்டிலேயே குவியல் குவியலாகக் குவித்து வைத்திருப்பார். அவ்வப்போது அவற்றை விற்பதனால் கிடைக்கும் பணமே அவருக்கு ஊதியமாகும்! "
சிறுவயதில் நாங்கள் படிப்பைக் கவனியாமல் எந்த நேர மும் விளையாட்டித் திரியும்போது எங்கள் பெற்றோர், *உன்னுடைய தலையில் கடகத்தை வைத்து மாடு மேய்க்கத் தான் விடுவோம்!" என்று ஏசுவது வழக்கம்-அவ்விதம் மிகவும் வருவாய் குறைந்த தொழிலாகவே அது கணிக்கப் பேட்டது. r, 球
ஒவ்வொரு வீட்டிலும் வைக்கோல், பட்டன்டயாகக் குவிக்கப்பட்டிருக்கும். காட்டில் மேய்ந்துவிட்டு வந்த மாடு களுக்கு சிறிது வைக்கோலும் போடப்படும்.

வரதர் 53
காலையில் எங்கள் தெருவால் நூற்றுக்கன்க்கான மாடு கள் ஏதோ ஊர்வலம் போலக் காட்டுக்குச் செல்வதும், மாலையில் அவை திரும்பிக் கூட்டமாக வருவதும் ஒரு கல் கலப்பான காட்சி.
மாடுகளுக்குப் புல் செதுக்கி வருவதற்காக, மிக அதிகாலைப் பொழுதில் (விடிவதற்கு முன்) பல ஆண்களும். பெண்களும் கடகமும் உளவாரமும் கொண்டு காட்டுக்குப்" போவார்கள். போகும்போது அந்த இருட்டு நேரத்தில், வழக்கமாக புல் செதுக்க வருபவர்களின் வீட்டருகே வந்ததும் கூப்பிட்டுக்கொண்டு போவார்கள் , மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியில் பெண்கள் அதிகாலை வேளையில் துயிலெழும்பும் காட்சி நினைவு வருகிறது.
விடிந்து ஏழு மணிபோல, (வெயில் சுடத் தொடங்கு முன்) கடகம் நிறையப் புல் நிரப்பிக்கொண்டு வீடு திரும்பு வார்கள். புல் செதுக்கும் உளவாரத்தை இன்று பலர் அறியாமலிருக்கலாம். ஐந்தாறு அங்குல நீளத்தில் முன் பக்கம் தகடாகக் கூர்மையாகவும், பின்பக்கம் குழாய் போன்ற அமைப்பும் உள்ளதுதான் உளவாரம் . அதை ஒரு மரப்பிடியில் இறுக்கிப் புல்லைச் செதுக்குவார்கள். திருநாவுக் கரசு நாயனார் உளவாரத் திருப்பணி செய்தாரென்று படித்திருக்கிறோமல்லவா?
'கன்னும் சிறிது காலம் போனால் இந்த உளவாரம், பாக்குவெட்டி, காம்புச்சத்தகம், கொக்கச்சத்தகம், வெற் றிலை பாக்கு உரல், குத்தூசி. வெற்றிலைத் தட்டம் , மற்றும் உமல், திருவணை, உறி, பட்டை, தட்டுவம் இப்படிப் பலபொருட்களை நூதன சாலையில்தான் பார்க்க வேண்டி வரும் போலிருக்கிறது!
எல்லா வீடுகளிலும் பசுக்கள் இருந்தன. எல்லா வீடு
களிலும் பால் இருக்கும். நாங்கள் இப்போது இந்த நகரத் துல் பால்காரரிடம் வாங்கும் பொருளுக்கும் "பால் என்று

Page 29
否4 மலரும் நினைவுகள்
தான் பெயர். ஆனால் அந்தக் காலத்தில் பொன்னாலைக் காடுகளில் பசும் புல் மேய்ந்துவிட்டு வந்த பசுக்கள் கொடுத்ததுதான் உண்மையான பால்! அதற்கென்று ஒரு மணம், அதற்கென்று ஒரு ருசி.-அந்த மாதிரிப் பாலை இனிக் காண்போமென்று தோன்றவில்லை.
அப்போது பாலை யாகும் விற்கமாட்டார்கள். எப்போ தாவது யாருக்காவது பால் தேவைப்பட்டுப் பால் கொடுத் தால் அதற்குப் பணம் வாங்கமாட்டார்கள். பால் (pri விலைக்கு விற்க கூடாதென்று சொல்வார்கள்.
எல்லா வீடுகளிலும் கோயிலுக்கென்று கொஞ்சம் பால் தினசரி கொடுப்பார்கள். காலை வேளைகளில் வீட்டுக்கு வீடு” பால்காவடி தூக்கிச் சென்று பால் சேகரித்துக் கொண்டு போய் கோயிலுக்குக் கொடுப்பதையே ஒருவர் தொண்டாகக் கொண்டிருந்தார்.
வீடுகளில் பால், மோரை புனிதமாக உபயோகிப்பார் கள். பால் மோர் புழங்கும் பாத்திரங்களை (மண் பாத்திரங் கள் தான்) மற்றைய சமையல் பாத்திரங்களுடன் கலக்கா மல் தனியாக வைத்திருப்பார்கள். அதனால், எவ்வளவு சுத்த ஆசாரமுள்ளவர்களும், பால், மோரை எந்த வீட்டிலும் வாங்கிப் பருகுவார்கள்.
வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்கள் எல்லாமே பொது வாக மண் பாத்திரங்கள் தான். மிகச் சிலரிடம் மட்டும் பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் சில இருந்தன. (இப் போது வீடுகளில் நிறைந்திருக்கும் "எவர் சில்வர்" பாத்திரங் கள் மிகச் சமீபத்திய வரவு.)
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் வீட்டி லிருந்த மாட்டு பால் இதோ என் கண்முன்னே தெரிகிறது!
பெரிய மால் அது. நாலு "மொக்கு மரத் தூண்களில் வளை வைத்து மேலே பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது.

வரதர் 55
அதன் ஒரு பக்கத்தில் நிலத்திலே கட்டைகள் அறைந்து அவற்றில் பசுக்கள் கட்டப்பட்டிருக்கும். அவைகளைக்சி கட்டிய பனைநார்க்கயிறு நுனியிலே ‘கண்ணி வைத்துச் * செய்யப்பட்டிருக்கும். மாடுகளின் கால்களிலே இந்தக் கண்ணிகளைப் பிணைப்பதும். தேவையானபோது கழற்றி விடுவதும் மிக இலகுவாக இருக்கும்.
மாலின் இன்னொரு பக்கத்தில் விறகுகள் குவிக்கப்பட் டிருக்கும். வளையிலிருந்து ஒரு 'அசைவு" கட்டி அதில் கருக்கு மட்டைகள் அடுக்கியிருக்கும். பக்கத்தில் கங்கு மட்டை, கொக்கரை, பன்னாடை முதலியவை குவிக்கப்பட் டிருக்கும்-எல்லாம் பனையிலிருந்து பெறப்பட்டவையே!
இந்தப் பனைமரம் அன்றைய மக்களோடு மிகவும் நெருங்கியிருந்தது. பனை வேரிலிருந்து அதன் குருத்து
வரை மக்களால் உபயோகப்படுத்தப்பட்டது.
ஒரு வழியில் பார்த்தால் பனையின் வேர்தான் பனம், கிழங்கு, இந்தக் கிழங்கைச் சுட்டும் அவித்தும் உண்பார்கள். பனங்கிழங்கைச் சுட்டு, தும்பு வார்ந்து, துண்டு துண்டாக முறித்து உரலிலிட்டு அதனுடன் தேங்காய் வெங்காயம் ? பச்சை மிளகாய் முதலியன போட்டு இடித்தால்-ஓ, நினைக்கல வாயூறுகிறது!
கிழங்கை அளித்துப் பிளந்து தம்பு வார்ந்து வெயிலில் காயாவத்து எடுத்தால் அது ஒடியல். இந்த ஒடியலை ? இடித்து பாவாக்கி, பிட்டு அவிக்கலாம். கூழும் காய்ச்சலாம். 1 ஒடியல் பிட்டும். முடியல் கூழும் யாழ்ப்பாணத்தின் முத்திரை", Lusis alau7nAuh
பனம் பாத்தியிலிருந்து கிழங்கை எடுக்கும்போது அதன். வாலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஊமலை இரண்டாகப் பிளந்தால் அதற்குள் "பூரான்" இருக்கும் அதன் சுவைக்கு, வேறு இணையில்லை! ·芯,,' ''', , છે

Page 30
56 மலரும் நினைவுகள்
பனம்பழத்தைத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து அதில் வரும் பாணியை நாள்தோறும் பாயில் பரவிக் காயவிட்டால் சுமார் பத்து நாட்களில் பனாட்டு வந்துவிடும்!
பனையைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்!
is 6 மரத்தின் உபயோகம் எத்தனை
விட்டுச் சுவர்களுக்கு மேல் எல்லாம் பனைமரங்களே! வளைகள், குறுக்கு மரங்கள், சலாகைகள்- இவற்றின்மேல் பனை ஓலைக்கூரை. வீட்டின் சுவர்களைத் தவிர மற்ற யாவும் பனையிலிருந்தே பெறப்பட்டன.
மனைமட்டை, நார், ஒலை, குருத்தோலை- இந்தக் குருத்தோலையிலிருந்துதானே எங்கள் அறிவுக் கருவிகளான ஏடுகள் தயாரிக்கப்பட்டன!
இதைவிட பனங்கள்? கருப்பநிர்-இந்தக் கருப்ப நீரி லிருந்து பனங்கட்டி, கல்லாக்காரம்.
இன்று பனையின் உபயோகங்கள் எல்லாம் வீண் போகின்றன. அவற்றின் இடங்களை அந்நிய நாட்டுப் பொருட்கள் பிடித்துக்கொண்டு விட்டன. யாழ்ப்பாணத்தான் பனையை ஒதுக்கிவிட்டு வெகுதூரம் விலகி விட்டான்
எங்கள் வீட்டு மாலின் நடுவே இரண்டு உரல்களும் உலக்கைகளும் இருக்கும். உரல்களில் ஒன்று பெரிது. மற்றது சிறிது-பொக்கணி உரல். பெரியது குற்ற; சிறியது All-.
மாலின் இன்னொரு பக்கத்தில் நீளமாக அசைவு கட்டி அதில் உலர்த்தும் பாய்கள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். மாலின் இரண்டு பக்கங்கள் தென்னோலைத் தட்டியினால் அடைக்கப்பட்டிருக்கும். மற்ற இரண்டு பக்கங்களும் அடைப் பெதுவும் இல்லாமல் திறந்தபடி இருக்கும்.

57 iiر ق«k شا
எங்கள் வீட்டில் ஒரு சிறிய வண்டி மாலும் இருந்தது. அது தனியாகக் கட்டப்படாமல், வீட்டின் ஒரு பக்கத்தில்" பத்தியாக இறக்கப்பட்டுத் தென்னோலையால் வேயப்பட்டி ருந்தது. அதற்குள் எங்கள் ஒற்றைத்திருக்கல் வண்டி நிற்கும். அதற்குப் பக்கத்தில் அதை இழுக்கும் நாம்பன்" மாடு கட்டி நிற்கும்.
இந்த வண்டிதான் அப்பாவின் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக கிழமையில் இரண்டு மூன்று தரம் சங்கா னைச் சந்தைக்கும், மாதத்தில் இரண்டு தரம் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கும் போய் வரும். * வண்டி இழுக்கும் மாடுகளின் கால்களில் “லாடம்" கட்டு வார்கள். லாடம் கட்டாவிட்டால் மாடுகளின் காற்குளம்புகள் தேய்ந்து அவை நடப்பதற்குக் கஷ்டப்படும்.
எனக்கு ஏழெட்டு வயதாயிருக்கும் போது, எங்கள் நாம்பனுக்கு லாடம் கட்டுவதற்காக அப்பா வண்டியைக் கொண்டு போன போது நானும் கொல்லர் வீட்டுக்குப் போயிருந்தேன்.
அந்தப் "பயங்கர காட்சி இன்னும் என் நினைவிலிருக் விறது.
மாட்டுக்கு லாடம் கட்டுவதை நான் அதற்கு முன் பார்த்ததில்லை. எனக்கு அப்போது ஆறேழு வயதுதானிகுக் கும்.
கொல்லர் வீட்டில், வண்டியிலிருந்து மாட்டை அவிழ்த்து ஒரு மரத்தடிக்குக் கொண்டு போறார்கள். நான் வண்டிக்குள் ளேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாட்டின் கால்களிலே ஒரு கயிற்றைச் சுற்றிப்போட்டனர். வேடிக்கையாகக் கவனித்துக் கொண்க
Abbas6ir.

Page 31
58 மலரும் நினைவுகள்
"தொபுகடீர்" என்று அந்த நாம்பன் மாடு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது
நான் திடுக்கிட்டுப் பயந்து போனேன். அப்படி ஒரு அவலமான பயங்கரக் காட்சியை அதற்கு முன் நான் கண்டதில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இருந்த "எங்கடை நாம்பன்' இப்படி அடியற்ற மரம் போல விழுந்ததை-விழுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘ஓ’ என்று நான் பலத்துக் குரலெடுத்து அழத் தொடங்கி விட்டேன்.
கொல்லர் ஓடிவந்து என்னைத் தூக்கித் தடவி "அழாதை ராசா, தம்பியின்ரை மாட்டை நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம். இப்ப விட்டிடுவம். * என்று ஆறுதல் கூறித் தேற்றிய காட்சி இன்றும் என் மனத்திரையில் தெரிகிறது.
"சிறு பிள்ளைகளுக்கு முன்னால் இப்படியான அவலக் காட்சிகளைக் காட்டுவது நல்லதல்ல" என்ற உளவியல் கருத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை யென்று நினைக்கிறேன். அன்றியும், அன்றைய கிராமத்துச் சூழ்நிலையில் மிகச்சிறு வயதிலிருந்தே இத்தகைய கொடுமை யான காட்சிகளுக்குச் சிறுவர்கள் பழக்கப்பட்டிருப்பார்கள்.
i
ஆனால் என்னுடைய நிலை வேறு.

, , , , uweza . '
6. சைவம்
ன்ே இத்தகைய காட்சிகளுக்குப் பழக்கப்பட்டிருக்க வில்லை.
ஓடுகிற சிறு எறும்பைக் காலால் நசித்துக் கொன்றால் "அதுவும் பாவம். அப்படிச் செய்யக் கூடாது" என்று என் பெற்றோர் போதித்தார்கள். தும்பியைப் பிடித்து அதன் வாலில் புல்லைச் செருகிப் பறக்க விட்டால், "அப்படிச் செய்யாதே, அடுத்த பிறப்பில் நீ தும்பியாய்ப் பிறக்க அந்தத் தும்பி பொடியனாய்ப் பிறந்து உன்னை வருத்தும்" என்று சொல்வார்கள்.
கிழுவை மரத்திலிருக்கும் பொன் வண்டைப் பிடித்து பழைய நெருப்புப் பெட்டிக்குள்ளே நாலைந்து கிழுவை இலைகளையும் உணவாக வைத்து, அதற்குள் பொன் ! வண்டைப் பத்திரப்படுத்தி வைத்தால், "பாவம் அந்தப் பொன் வண்டு-அதை அடைத்து வைக்காதே’ என்பார்கள்.
* எல்லாப் பொடியன்களும் வைத்திருக்கிறார்களே” என்று நான் நியாயம் சொன்னால், "அவர்கள் வைத்திருக்' கட்டும், நீ சைவப்பிள்ளை. நீ வைத்திருக்கக் கூடாது" orcruri seir .
ஓம். நான் சைவப்பிள்ளையாகப் பிறந்து சைவப்பிள்ளை யாக வளர்ந்தவன்.

Page 32
மலரும் நினைவுகள் •
* சைவம்' என்பது ஒரு சமயம். எங்களூரில் பொதுவாக எல்லாருமே சைவ சமயத்தவர்கள்தான்.
ஆனால் நான் இந்தச் சைவத்துக்குள்ளும் தனியான ஒரு "சைவம்! "
இந்தச் 'சைவக்காரர்கள், பொதுவாக வேளாளர் களாக இருந்த போதிலும் தாங்கள் ஒரு தனிச் 'சாதி” போல வாழ்கிறார்கள்.
சைவ சமயத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களைச் சற்றே னும் தவறாமல் கைக்கொண்டு நடப்பது இவர்களின் க்ோள்கை. .
இவர்கள் மச்ச, மாமிசம்-முட்டை கூட உண்ண மாட் டார்கள். மது அருந்துதல், சுருட்டுக் குடித்தல் முதலிய வேண்டாத பழக்கங்களையும் முற்றாக நீக்கி விட்டார்கள்
மற்றவர்கள் கண்காண் உண்ணமாட்டார்கள். தங்களை யொத்த ஆசாரமுள்ள சைவர்களின் வீடுகளைத் தவிர மற்ற வர்களின் வீடுகளில் உணவு கொள்ளமாட்டார்கள். பச்சைத் தண்ணிரைக் கூட அவர்களிடம் வாங்கிக் குடிக்க மாட்டார் கள்.
இவருடைய உறவினர் ஒருவர் அவரும் நல்ல உயர் வேளாளராக இருந்த போதிலும்-அவர் மச்ச மாமிசம் உண்பவராக, சைவக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவராக இருந்தால் அவருடைய வீட்டிலும் உணவு கொள்ள மாட்டார்கள்.
இந்தச் 'சைவக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலும் கொஞ்சக் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வேதம் ஒதி, கோயில்களில் பூசை செய்வ தும் உண்டு.
இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்ல வருகிறது.

வரதர் 禽1
சைவ சமயத்தவர்களின் சமயச் Fl-ide5 assossar நடத்தும் பிராமணக் குருமார்கள், ஒரு மனிதனின் முக்கியமான மரணச் சடங்குகளைச் செய்ய வரமாட்டார்கள்.
மரணச் சடங்குகளை மூறையாகச் செய்யாவிட்டால், இறந்தவனுடைய ஆவி நாசமாய்ப் போய்விடும்’ என்று ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை சைவசமயத்தவர்களிடையே யும் உண்டு.
ஆனால் அப்படி அவனுடைய ஆவியைக் காப்பாற்றி
கடைத் தேற்றுவதற்கு, சைவசமயத்தின் குருமாரான பிராமணர்கள் வரமாட்டார்கள்
பிராமணர் அல்லாத மற்றையோரின் பிரேதத்தைப் பார்த்தாலே பாவம் வந்துவிடுமென்று அவர்கள் நம்புகிறார் களாம்!
இப்படிப் பிராமணக் குரூமாரினால் தள்ளி வைக்கப்பட்ட மரணச் சடங்குகளை இந்தச் சைவக் குருமாரே நடத்தி வைத்து இறந்துபோன மனிதனின் ஆன்மாவை சடேற்றி வைக்கிறார்கள். ν ;3
நான் ஒரு சைவப்பிள்ளையாக இருந்தது பற்றிச் சிறுவயதில் கவலைப்பட்ட பல நிகழ்வுகளுமுண்டு.
Dadr, Lottfarb உன்பதற்கு நான் என்றுமே ஆசைப்பட்ட தில்லை.
சிறுவயதில் அந்த உணவு குறித்து அருவகுப்பு உள்ள வனாய் இருந்தேன், அறிவு வந்த பிறகு, அது தகாத செயல்
என்று உணர்ந்து தவிர்க்கிறேன்.
இது போலவே மதுபானம் அருந்தலும். கருட்டுக் 60 AA56ö (P56ódu Gorengi.
எனக்குக் கவலை தந்த நிகழ்வுகள் எப்படியென்றால், சிறுவயதில் எங்காவது காடு மேடுகளில் அலைந்து திரிந்து

Page 33
62 மலரும் நினைவுக்ள்
விட்டு தண்ணிர் விடாய்த்தால் என்னுடைய நண்பர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணிரை வாங்கிக் குடிப்பார்கள். அல்லது அகப்பட்ட கிணற்றில் (பக்கத்திலிருக்கும்) வாளி யாலோ, பட்டையாலோ தண்ணீரை அள்ளிக் குடிப்பார்கள்.
ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது. மற்றவர் களின் வாளியால் தண்ணீரை அள்ளிக் குடிப்பதும் கட்டுப்
பாட்டை மீறிய செயல், மிக அவசியமானால், வீட்டுக் ாரரிடம் ஒரு செம்பு வாங்கி, அதை முதலில் கழுவிச் சுத்தம் செய்த பின், அதற்கு ஒரு கயிறு கட்டி கிணற்றில் தண்ணிரை அள்ளிக் குடிக்கலாம்.
தண்ணிர் குடிப்பதற்கு இந்தப் பாடென்றால் உணவு வகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!
சைக்கிளில் கீரிமலை, யாழ்ப்பாணம் என்று திரிந்த காலங்களில், நண்பர்கள் ஒரு தேநீர்க் கடையில் பலகாரம் ாப்பிட்டுத் தேநீரும் குடிப்பார்கள். ஆனால் எனக்கு சைவாள்கடை", "பிராமணாள் கடை அகப்பட்டால் சரி; இல்லையென்றால் பட்டினிதான். *込 。
பிராமணாள் கடையிலும் மற்ற நண்பர்களெல்லாம் ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக உணவு உண்ணும் போது நான் மட்டும் உள்ளே போய் ! கண் காணாமல்’ சாப்பிட்டு விட்டு வரவேண்டும்
w சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் சேர்ந்து "வேட்டை'க்குப் போவதுண்டு. எல்லார் வீட்டிலும் தாய்களுண்டு. அந்த நாய்களையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போவார்கள். .
‘蒲、
பொன்னாலைக் கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்னால் பரந்திருந்த சிறு பற்றைக் காடுகள் தான் வேட்டை தடை பேறும் இடம்

●aሠ፱rÆታ፡ rt. 63
அங்கே இவர்களின் நாய்களின் உதவியோடு முயல், உடும்பு முதலிய சிறு பிராணிகனை வேட்டையாடுவார்
ሓ •ዝ IT th .
நான் இந்தக் குழுவில் சேர முடியாது. என்னிடம் நாயும். இல்லை. (எங்கள் வீட்டில் நாய் வளர்ப்பதும் தடை செய்யப் All-L-g) .، "
ஏனென்றால் நான் சைவப் பிள்ளை' ነቃ,
நான் மிகச் சிறுவனாக இருந்த காலந் தொட்டே இந்தச் சைவக் கட்டுப்பாடுகளை மிக ஒழுங்காகக் கடைப் பிடித்து வந்தவன். அப்பா, ஆச்சிக்குத் தெரியாதுதானே" என்று கருதி நான் ஒருபோதும் எந்தக் கட்டுப்பாட்டையும் மீறி நடந்தது கிடையாது. -
நான் வளர்ந்து அறிவு பூர்வமாக நடக்கத் தொடங்கிய பிறகும் அந்தச் சைவக் கட்டுப்பாடுகள் பலவற்றைப் பேணியே வருகிறேன். ஏனென்றால் இந்தக் கட்டுப்பாடு: கள் நீதியையும், உடல் நலத்தையும் ஆதாரமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.
இப்படி மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குடும்பத். திலிருந்த போதிலும் அப்போது எனக்கு முன்னேற்ற, காரமான ஒரு சலுகை கிடைத்திருந்தது,
ஓம், அந்தக் காலத்திலேயே நான் குடுமி வைத்திருக்க, assau)6).
نسمة .
அந்தக் காலத்துக்குச் சற்று முன்பாக, பெண்களைப் போல ஆண்களும் குடுமி வைத்திருந்தார்கள். நான் சிறுவ வாாக இருந்த காலத்திலும் அநேகமான சிறுவர்கள் குடுமி வைத்திருந்தார்கள். என்னையொத்த சைவக் குடும்பத்தி லுள்ள ஆண்களுக்கு குடுமி ஒரு கட்டாய்ச்சின்னம். அவர் கள் தலையில் முன்பகுதியை மழுங்கச் சிரைத்து பின் பகுதி மயிரை வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள். ... --
' <
:زازرم

Page 34
64 மலரும் நினைவுகள்
ஏனோ என்னுடைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே என்னுடைய தலைக்கு "கிலுப்பா" தான் வைத்திருந் தார்கள்.
அந்தக் காலத்தில் இதை ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய தகப்பனார் தமது இளம் பராயத்தில் நிச்சயமாகக் குடுமி வைத்திருந்திருப்பார். ஆனால் நான் அறியத் தக்கதாக அவர் தலையை மொட்டை அடித்திருந்தார். முதலில் சில காலம் உச்சியில் நாலைந்து மயிர் மட்டும் (துருக்கித் தொப்பியில் இருக்கும் குஞ்சம் போலவும், மகாத்மா காந்தியின் சில படங்களில் காண்பது போலவும்) இருந்தது. பிறகு அவையும் இல்லாமல் ஒரே மொட்டையாக இருந்தது.
தலை மயிரை வளர்ப்பதிலும், வெட்டுவதிலும், அதை அலங்கரிப்பதிலும் எங்களுடைய பண்பாடு - தமிழ்ப் பண் பாடு இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். இதே போல :உடை அணிவதிலும் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று இருப்ப
தாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் பல பெண் கன்-இதற்குமுன் இரண்டு பின்னல்களாகப் பின்னிக்கட்டி விருந்த - தமது கூந்தலை வெட்டி "குரோப்' செய்திருப் பதைப் பற்றி சிலர் தமிழ்ப் பெண்களின் பண்பாடு அழி கிறதே?! என்று குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன்"
பண்பாடு, நாகரிகம் என்றால் என்ன?
ஒரு இனத்தின் பழக்க வழக்கங்களையே அந்த இனத் தின் பண்பாடு என்று சொல்கின்றோம்.
இந்தப் பழக்க வழக்கங்கள் என்றுமே மாறாமல் "அன்றைக்கு" இருந்தபடியே இன்றைக்கும் இருக்க வேண் டும். இனியும் என்றென்றைக்கும் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள் - அவர்களும் தமது தந்தையரின் காலத்தில் இருந்தது போலவும், பேரனாரின் காலத்தில்

aurgat 65
இருந்தது போலவும் தான் இன்றைக்கும் இருக்க வேண்டு
மன்று விரும்புகிறார்கள். அதற்குமிஞ்சி அவர்களால் விரும்ப" முடியாது. ஏனென்றால், எல்லாச் சக்திகளையும் மீறிக் கொண்டு மாற்றங்கள் நடந்து கொண்டேயிருக் Aldrpor.
தமிழ்ப் பெண்ணொருத்தி, நீண்ட கூந்தலோடு, சேலை உடுத்தி, பொட்டிட்டு, பொன் நகை அணிந்து வந்தால் தான்' அது தமிழ்ப் பண்பாடு" என்று நினைக்கிறோம். ரனென்றால், எமது தந்தையர் காலத்திலும், பேரனார் காலத்திலும் அத்தகைய தோற்றத்தில் தான் பெண்களின் அழகைக் கண்டிருக்கிறோம். படித்த இலக்கியங்களிலும், பார்த்த ஓவியங்களிலும் அத்தகைய தோற்றத்திலேயே அழகிய பெண்களைக் கண்டிருக்கின்றோம். அதுதான். ) என்று எங்கள் மனத்தில் பாடம் செய்திருக் வின்றோம்.
கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ் ஆண் மக்கள் எல்லாரும் தங்கள் குடுமிகளை வெட்டி எறிந்து தமிழ்ப் பண்பாட"டை மீறி விட்டார்கள். s, w
அப்படி மீறி நிற்கிறவர்களே இன்று பெண்கள் தமது கந்தலை வெட்டுவதைக் கண்டு "ஐயோ தமிழ்ப் பண்பாடு, தொலைகிறதே!" என்று ஒலமிடுகிறார்கள்.
இதே மாதிரித்தான் மனிதர்களுடைய - தமிழர் களுடைய உடுப்புகளும்.
கொஞ்சக் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ்த் தலைவர் ள்ை தலைப்பாகை அணிவதைக் கண்டிருக்கிறோம். அதற்குச் சுற்று முன், உத்தியோகம் பார்க்கிற எல்லாருமே தலைப்
அணிவார்கள்.
தமிழர் பண்பாடு நாகரிகம் என்ற பெயரால் எல்லாப் பழைமைகளையும் கட்டி அழத்தேவையில்லையென்று நான் சர்வறைக்கு நினைக்கிறேன். எந்தப் பெரிய கொம்பனாெ ஆப அவைகளைக் கட்டி நிறுத்தி வைக்க முடியாது.
நல்லவைகளை எடுத்துக் கொள்வோம் கெட்டவுை. களை - பயனற்றவைகளை நீக்கி நடப்போம். . مه . ... Abo,
5-س-D

Page 35
ጼጎሪ -rres.
7. அப்பா
என்னுடைய பெற்றோர்கள் "நாகரிகம், பண்பாடு” என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆசாரம், ஒழுக்கம் கட்டுப்பாடு என்றே அவர்கள் அறிந்திருப்பார்கள்.
அவர்கள் மெத்தப் படித்தவர்கள் அல்லர். ஆனாலும் "ஊரோடு ஒத்து வாழ்' என்ற ஆத்திசூடிக் கருத்தையும், தமது முன்னோரிடமிருந்து ஆசாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பனவற்றையும் அறிந்திருந்தார்கள். w அப்படியிருந்தும், தம்மைப் பொறுத்த விஷயங்களில் மற்றவர்களைப் பாதிக்காத விஷயங்களில், பழைய வழக்கங் கள் சிலவற்றை எனது தகப்பனார் மறுத்து நடந்திருக்கிறா ரென்றே தோன்றுகிறது - எனக்குச் "சிலுப்பா' வைத்தது மட்டுமல்ல; இப்படி இன்னும் பல விஷயங்கள்!
அப்பா!
என்னுடைய தகப்பனாரை நான் "அப்பா" என்றுதான் சொல்வது வழக்கம். தாயாரை "ஆச்சி’ என்று சொல்வேன்.
ஆனால் எங்கள் கிராமத்தில் எல்லாரும் தகப்பனை அப்பு’ என்றுதான் சொல்லுவார்கள், "அப்பா' என்றால்: அவர்களுடைய கருத்தில் அது பேரனைக் குறிக்கும்.

hA ܚ s
எங்கள் வீட்டில், பேரனை பெத்தப்பா" என்று சொல்வோம்.
அப்பா அல்லது அம்மாவின் தகப்பன் பேரன். மகன் அல்லது மகளின் மகன் தன்னுடைய பெத்தப்பாவை’ இப்போது "தாத்தா” என்றுதான் சொல்லுகிறான்.
அந்தக் காலத்தில் சிறிய தந்தையை குஞ்சியப்பு, சீனி யப்பு என்பார்கள். அவர் இப்போது சித்தப்பா ஆகிவிட்டார்." அதே மாதிரி குஞ்சியாச்சி சின்னம்மா வாகவும்: அம்மான், பாமாவாகவும் மாறிவிட்டார்கள் (டாடி, மம்மி, அங்கிள் அண்டி என்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை)
سمبر
எனது பதினைந்தாவது வயதில் அப்பா இறந்து' போனார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த போது, எல்லா ருடைய அப்பாக்களையும் போல அவரையும் சாதாரண, அப்பாவாகவே நினைத்திருந்தேன்.
წჭ.4
இப்போது சிந்தித்துப் பார்க்கும்போது, ஒ அவர் எத் தகைய மாமனிதர் என்று பிரமித்துப் போகிறேன். அப்படிப், பட்ட ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்தது குறித்து மிகுந்த மன நிறைவு கொள்கிறேன்.
“ኚ} {∂ கறுத்த நிறம். வாட்ட சாட்டமான உடம்பு. ஆழ்ந்த சித்தனை நிறைந்த கூரிய பார்வை. மொட்டைத் தலை; முழங்காலோடு நிற்கும் சுத்தமான நாலு முழ வேட்டி, ஒரு பக்கத் தோளில், சுருக்கி மடித்துப் போடப்பட்ட சால்வைத் துண்டு இவைகளோடு ஒரு உறுதிவாய்ந்த மனிதரின் தோற்றம் என் மனத்தில் தெளிவாக இருக்கின்றது. 9
*ჯა), ჯ. ე. *Y
அவர் கல கல வென்று சிரிப்பது மிக மிக அருமை. அதி mr Tato கர்வம் பிடித்தவர் போன்ற ஒரு முகத்தோற்றம்,
நேர்மையும் வாய்மையும் அவருடைய வழிகள். say,

Page 36
மலரும் நினைவுகள்
யாருடைய சோலி சுரட்டுக்கும் போகமாட்டார். தமது கடமைகளில் இம்மியும் தவறாதவர்.
காலையில் அவர் எப்போது எழும்புகிறார் என்பதை தான் ஒரு நாளும் கண்டதில்லை. விடிகிறது விடியுமுன் அவர் முற்றத்தை "சறக் சறக்" விளக்கு மாற்றால் கூட்டும் சத்தம் கேட்கும். அவருக்கு எல்லாமே சுத்தமாக - மிகச் சுத்தமாக இருக்க வேண்டும், காலை ஏழு மணிக்கு முன்பே. எங்கள் வீட்டின் முன் பக்க விறாந்தையிலிருந்த தமது கடையைத் திறந்து விடுவார்.
எங்கள் வீட்டில் அப்போது மணிக்கூடு இருக்கவில்லை. ஆனாலும் ஏதோ நிழலை அடையாளம் வைத்துச் சரியாகப் பதினொரு மணிக்கு ஒரு பித்தளைத் தவலை"யையும் வாளி யையும் எடுத்துக் கொண்டு குளிக்கப் போவார். எங்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. ஆனால் அது உப்புத் தண்ணீர். பொன்னாலை மேற்குப் பகுதியில் எல்லாக் கிணறுகளுமே உப்புத் தண்ணிர்தான். குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தேவையான நல்ல தண்ணிரை சுமார் கால் மைல் தூரம் நடந்து போய் வயல் வெளியிலுள்ள கிணறு களில்தான் அள்ளி வருவார்கள்.
அப்பா மேலும் கொஞ்ச தூரம் நடந்து "அறுகம் பிட்டி" என்று சொல்லப்பட்ட மிகவும் நல்ல தண்ணீர் கிணற்றுக்குத் தான் குளிக்கப் போவார். அவர் "சோப் போட்டுக் குளித்த தில்லை. வெகு நேரமாக உடம்பைத் தேய் தேயென்று தேய்த்து அழுக்கு நீக்கிக் குளிப்பார். "சோப்" போட்டுக் குளிப்பவரின் உடம்பு கூட அவ்வளவு சுத்தமாக இராது.
குளித்துவிட்டு வரும்போது தவலைத் தண்ணீரைத் தோளிலும். வாளித் தண்ணிரைக் கையிலும் சுமந்து கொண்டு வந்து சேருவார்.
வீட்டு வாசலுக்கு சில யார்கள் முன்பு வரும்போதே அவர் சேருமுவதும், நாங்கள் தயாராக வைத்திருக்கும் ஒரு

வரதர் 6)
பேணியை அவரிடம் கொடுத்து விட்டு. தவ்ன்ல்த் தண்ணிரை இறக்கி வாங்கி வைப்பதும் நாள் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சி நாங்கள் கொடுத்த பேணியால் வாளித் தண்ணிரில் சிறிது அள்ளி கால்களைக் கழுவிவிட்டுத்தான் அப்பா வீட்டுக்குள் நுழைவார்.
அப்பா தமது உணவு விஷயத்திலும் மிகுந்த கட்டுப் பாடுடையவர். கோப்பி, தேநீர் ஒருபோதும் அருந்தமாட் டார். காலையில் எந்த உணவும் உண்பதேயில்லை. நண் பகலிலும் இரவிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்டி அளவு உணவே உண்பார் .
அப்பாவுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இருந்ததென்பது நிச்சயம். ஆனால் ஆடம்பரமாகக் கடவுளை அவர் துதித் ததை நான் கண்டதில்லை. சாமி கும்பிடுவதற்காக அவர் கோயிலுக்குப் போனதில்லை. பொன்னாலை வரதராஜம் பெருமாள் கோயிலில் ஆவணி மாதத்தில் வருடாந்தற். திருவிழாத் தொடங்கும். கொடியேற்றத்துக்குச் சில நாட் களுக்கு முன்பு, கோயில் பூசகர் ஊரிலே முக்கியமான ஆட் களுக்கெல்லாம் இன்ன திகதியில் திருவிழாத் தொடங்கு கிறதென்று போய்ச் சொல்வது வழக்கம், ஜயர் வந்து வீட்டில் சொல்லிவிட்டுப் போனாரே என்பதற்காக கொடி யேற்ற தினத்தன்று அப்பா கோயிலுக்குப் போய் கொடி யேற்றும்வரை அங்கே நின்றுவிட்டு வீடு திரும்புவதே வழக்கம். இதுதான் நான் கண்ட அப்பா கோயிலுக்குப் போன காட்சி,
நான் மிகச் சிறுவனாக இருந்தபோது. அப்பா தினசரி தீட்சை அனுட்டானம்" பார்ப்பதும், நெற்றி. மார்பு கைகள் முதலிய இடங்களில் திருநீற்றைக் குழைத்து மூன்று விரல்களால் அழகாகப் பூசுவதும், சந்தக் கல்லில் சந்தனம் அரைத்துப் போட்டு வைப்பதுமுண்டு. ஆனால் பிறகு, அவற்றையெல்லாம் விட்டு விட்டு விபூதியை நெற்றியில்

Page 37
70 மலரும் நினைவுகள்
பரவிப் பூசி ‘சிவ சிவ” என்று சொல்லிக் கொள்வதோடு அவருடைய கடவுள் வணக்கம் நின்றுவிட்டது. * ஆனால், இன்னொரு விஷயத்தை மட்டும் எனக்குத் தெரிந்த நாள் முதல் கடைசிவரையும் ஒழுங்காகச் செய்து வந்தார்.
அது தியானம் யோகாப் பியாசம் என்று சொல்ல 6A | 0 .
தினசரி அதிகாலையில் பொழுது விடியுமுன்" கொடியிலி குக்கும் மான்தோலை எடுத்து ஒரு தட்டுத்தட்டி தூசி கலைத்துவிட்டு அதைக் கட்டிலின்மீது, போடுவார். அதன் மேல் ஒரு சுத்தமான நாலு முழத் துண்டை மடித்துப் போடுவார். பிறகு அதன் மீது கால்களைப் பத்மா சனமாகப் போட்டுக் கொண்டு உட்காருவார். இரண்டு கைகளையும் முழங்கால்களின் மீது வைத்துக் கொள்வார், பிறகு கண் களையும் மூடிக்கொண்டு ஏதோ கணக்குப் பண்ணி மூச்சை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதுமாக இருப்பார் - இது சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நடக்கும், அதன் பிறகு சில நிமிடங்கள் குறிப்பிட்ட சில பாடல்களைப்
_n(66) Tř.
*சீதர களப்பச் செழுந்தாமரைப் பூவும், "பொல்லாப் பிழையும் இல்லாப் பிழையும்’ ஆகிய பாடல்களை அவர் தினசரி பாடுவது நினைவு வருகிறது.
இதே யோகாசனக் காட்சி இரவிலும் சுமார் ஏழுமணி யளவில் - சாப்பாட்டுக்கு முன் நடக்கும்.
தினசரி காலையும் மாலையும் அப்பா யோகப்பியாசம் செய்வதை நான் பல ஆண்டுகளாகப் பார்த்திருக் கிறேன்.
இந்த யோகாப்பியாசப் பயிற்சிக்கு அவருக்கு யாரும்
*குரு" இருந்ததாகத் தெரியவில்லை. அந்த வழியில் அவரை ஊக்கியவர் யாரென்பதும் தெரியவில்லை. எங்களு

வரதர் - 71
ரில் அப்படி வேறு யாரும் யோகாப்பியாசப் பயிற்சி செய்த தாகவும் தெரியவில்லை. .
அப்பாவிடம் இரண்டு புத்தகங்கள் இருந்தன. அவற் றுள் ஒன்று கடப்பை, சச்சிதானந்த யோகீஸ்வரர் என்பவர் எழுதிய யோகாசனம் பற்றிய நூல், பெரிய மொத்தப் புத்தகம். அதில் சச்சிதானந்த யோகீஸ்வரர் பத்மாசன மிட்டு யோகாசனத்தில் இருக்கும், ஒரு அழகான போட் டோப் படமும் இருந்தது, அப்பா அந்தப் புத்தகத்தைப் படித்தே யோகாசனப் பயிற்சியைத் தொடங்கியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நூலை வாங்கவோ, யோகாசனப் பயிற்சி வேண்டுமென்ற விருப்பத்தை அவருக்கு உண்டாக்கவோ யாரோ ஒருவர் இருந்துதானிருக்க வேண்டும். அது யாரென்று தெரிய assigopol).
யாழ்ப்பாணத்தில் அப்போது யோகர் சாமியார் இருந்த காலம். அப்பாவும் யோகரும் சம காலத்தவர்கள், யோகச் சாமி பிறந்தது 1865 ம் ஆண்டென்றும், மறைந்தது 1964 ம் ஆண்டென்றும், திரு. ச. அம்பிகைபாகன் எழுதிய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி அப்பா யோகச் சுவாமிக்கு பதின்ைந்து வயது இளையவர். இவ்வுலகில் சுமார் நூறு ஆண்டுகள் வாழ்ந்த சாதனை யோகர் சுவாமிக்குண்டு. அப்பா அறுபது ஆண்டுகளே வாழ்ந்தார். அப்பாவும் யோகர் சுவாமியும் சம காலத்தவரேயாயினும், யோகரோடு அப்பா வுக்குப் பழக்கம் இருந்ததில்லை.
யோகர் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக ஒருமுறை அப்பா கொழும்புத்துறைக்குப் பானாராம். அப்பா யோகரை அதற்குமுன் கண்ட தில்லை. வழி விசாரித்து யோகரின் வீட்டுக்குப் போயிருக் கிறார். அங்கேயிருந்த ஒருவரிடம் யோகர் இருக்கிறாரா?" வாய்நூறு கேட்டிருக்கிறார்.

Page 38
72 மலரும் நினைவுகள்
"அவன் இங்கே இல்லை. கொழும்புக்குப் போய்விட். rär!”” என்று அப்பாவுக்குப் பதில் கிடைத்தது. "யாரிவன், சுவாமியை "அவன் இவன்" என்று கதைக் கிறானே' என்று நினைத்துக் கொண்டு அப்பா திரும்பி விட்டார்.
பிறகு யாரிடமோ இந்த நிகழ்ச்சியைச் சொல்லிக் கதைத்த போது, அப்பாவுக்குப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பியவர்தான் யோகர் என்று தெரியவந்தது, ፧ ነ
மீண்டும் ஒருமுறை யோகர் சுவாமியைப் பார்ப்பதற்காக அப்பா பயணம் வெளிக்கிட்டார். - பயணந்தான். பொன் னாலையிலிருந்து கொழும்புத்துறை பன்னிரண்டு மைல் தூரம் பஸ்ஸா, காரா? - மாட்டுவண்டிப் பயணந்தானே!
அப்ப்ா தனது ஒற்றைத் திருக்கல் வண்டியில் புறப்
வட்டார். இம்முறை என்ன நினைத்தாரோ, மிகச் சிறு பையனாக இருந்த என்னையும் கூட்டிக் கொண்டு போ னார். அதிகாலை நாலு மணிக்கு எழுப்பி மாட்டுவண்டியில் புறப்பட்டது நினைவிருக்கிறது. வழிப் பயணமெதுவும் தெரியாது வண்டிக்குள் நித்திரை. அப்பொழுது எனக்கு ஏழெட்டு வயதுதானிருக்கும்.
என் வீட்டின் தலைவாசல் போன்ற ஒரு இடத்தில், சுமார் பதினைந்து இருபது பேர்கள் கூடியிருந்தார்கள். கூட்டத்தின் தலைவர் போல ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர்தான் யோகர் சுவாமியாக இருக்க வேண்டும், குத்து விளக்கு ஏற்றியிருந்ததும், கற்பூரம் எரிந்ததும், யாரோ தேவாரம் பாடிக்கொண்டிருந்ததும் என் நினைவின் அடி ஆழத்திலிருந்து நிழற் காட்சிகளாக இப்போது எனக்குத் தெரிகின்றன.
அந்த அடியார் கூட்டத்தில் நானும் அப்பாவும் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டோம். தேவாரம் பாடி முடிந்தது. ஒவ்வொருவராக யோகர் சுவாமியின் அருகில்

65 78
சென்று அவரை வணங்குகிறார்கள். சிலர் கற்கண்டு; வாழைப்பழம் முதலிய பொருள்கள்ை அவர் முன் படைக் கின்றார்கள். 黨
. ." . . . . . .
அப்பா அவரை வணங்கி எழுந்த பிறகு நானும் நிலத் தில் நீளக் கிடந்து (அட்டங்கமாக) யோகரை வணங்கி? எழுகிறேன்.
*溶T砂 இந்த இடத்தில் ஒரு புது நினைவு. இப்போதெல்லாம்? கோயில்களில் கூட தரையில் குப்புறப் படுத்து அட்டாங்க வணக்கம் செய்யும் பழக்கம் குறைந்து வருவதுப் போலத் தெரிகிறது. இதைப் பற்றி ஏன் எழுதுகிறேனென்றால், இந்தக் காலத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் கொழும்பு சென்றிருந்த போது நண்பர் சில்லையூர் செல்வராசனைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய புகழ்வாய்ந்த மனைவி கமலினியும் ஒரு சிறுவ னும் அந்த இடத்துக்கு வந்தார்கள். சிறுவனைத் தங்கள் மகன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவனிடம் ஏதோ மெதுவாகச் சொன்னார் செல்வராசன். உடனே அந்தச் சிறுவன் என் காலருகே தரையிலே குப்புறப்படுத்து அட்டாங்கமாக வணக்கம் செய்தான்!
ஒரு கணம் திணறிப் போனேன். "இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பண்பாடா?’ என்று. › ሥ
இது இருக்க.
நான் யோகர் சுவாமியை வணங்கி எழுந்ததும் 'என்ன
பெயர்?' " என்று அவர் கேட்டார்,
: i.
நான் "வரதராசா' என்று மிக அடக்கமாக எனது பெயரைச் சொன்னதும், அவரே தம் முன்னாலிருந்த தட்டி லிருந்து கொஞ்சம் கற்கண்டை எடுத்து என்னுடைய கைகளில் தந்தார். பிறகு, 'நீ பின்னுக்கு நல்லாயிருப்

Page 39
74 மலரும் நினைவுகள்
பாய்" என்று ஒரு வாழ்த்தும் சொன்னார். யோகர் சுவாமி இப்போதும் என் நினைவில் இருக்கிறார்.
- அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அப்பாவுக்கும் யோகர் சுவாமிக்குமிடையே எவ்வித்த் தொடர்பும் இருந்ததில்லை!
மீண்டும் யோகரிடம் அப்பா போனதில்லை. உவரிடம் எனக்கு அலுவலில்லை" என்று கருதியிருக்கலாம்.
அப்பாவின் ஒற்றைத்திருக்கல் மாட்டு வண்டிக் கூடா
ரத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய போட்" பலகை இருக்கும். அதில், 'தி. சண்முகம், தொல்புரம், கமம்" என்று மூன்று வரிகள் எழுதியிருக்கும். ஆனால் அப்பாவுக்கு கமம் (விவசாயம்) இருந்ததில்லை. அந்தக் காலத்தில் விவசாயத் தேவைக்கான வண்டிகளுக்கு வரிகட்டத் தேவையில்லை. ஏனைய வண்டிகளுக்கு ஏதோ ஒரு வரி இருந்திருக்க வேண்டும். அதனால் எல்லா வண்டிக்காரர்களுமே தங்கள் வண்டியில் "கமம்" என்று தான் எழுதியிருப்பார்கள்! அப்படி எழுதுவதை ஒரு தவறாக யாரும் கருதுவதில்லை.
அப்பாவின் ஊரும் "பொன்னாலை தான். ஆனால் பொன்னாலைக்குரிய விதானையார் தொல்புரத்திலேயே இருந்தார். தொல்புரத்தில் ஒரு பகுதியாகவே பொன்னா லைக் கிராமமும் சட்டப்படி கருதப்பட்டது.
அப்பாவுக்குக் "கமம்? இருக்கவில்லை. ஆனால் ஒரு "கடை" இருந்தது. அந்தக் கடைக்குத் தேவையான பொருட்களை சங்கானை, சுன்னாகம் சந்தைகளிலும் பெரியபட்டணத்திலும் (யாழ்ப்பாணம்) போய் வாங்கி வருவ தற்காக அவருக்கு அந்த வண்டி தேவையாக இருந்தது. எப்போதாவது எங்கள் குடும்பம் கோயில்களுக்கோ உற வினர் வீடுகளுக்கோ போய் வருவதற்கும் அந்த வண்டி உபயோகப்பட்டது.
 

8. பிரசித்தகாரன்
இன்று ஓடிக்கொண்டிருக்கும் உலகத்துக்கு மாட்டு வண்டி தோதாக இல்லைத்தான். ஆனால் அன்றைய உலகம் இப்படியெல்லாம் 'அவசரப்படாத" உலகம். அதற்கு மாட்டு வண்டி மிகத் தோதான வாகனம். எரிபொருள் செலவு எதுவு மில்லை, மாட்டுக்கான தீவனம் மட்டுந்தான் செலவு. அன் றைய கிராமத்திலே அது அவ்வளவு பெரிய விடயமல்ல. வண்டிக்கான பராமரிப்புச் செலவு, "இல்லை" என்று சொல்லக்கூடிய அளவுக்கு எப்போதாவதான் வரும். ஊர்த் தச்சரும், கொல்லரும் அதைச் சொற்ப செலவில் செப்பம் செய்து விடுவார்கள். -
இன்று "போக்கு வரத்து" என்பது பெரிய பிரச்சினை. யாகவும். பெருஞ்செலவை உண்டாக்குவதாகவும் வளர்ந்து நிற்கின்றது! "கட்டைவண்டி’க் காலத்தின் அமைதியும் நிம்மதியும் இனி ஒரு போதும் வராது!
"கமம்" அல்லாத வண்டிகளுக்கு ஆண்டு தோறும் எத்தனை ரூபா வரிப்பணம் கட்டவேண்டியிருந்ததென்பது தெரியவில்லை.
ஆனால், இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட உழைப் பாளிகளான ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டு தோறும் ஆளுக்கு ஒரு ரூபா வரிப்பணம் கட்ட வேண்டியிருந்தது.

Page 40
76 மலரும் நினைவுகள்
அந்த வரி எதற்கு? அவர் உயிரோடு ஊரில் வாழ்வதற்குத் தான். அந்த வரிக்குப் பெயரே தலைவரி" என்பதுதான்!
இந்தத் தலைவரியைக் குறித்த தவணைக்குள் கட்டிவிட வேண்டுமென்று அரச அறிவித்தல் வரும்.
இப்போது அரச அறிவித்தல்கள் செய்தித் தாள்களில் வரும் வானொலியில் வரும், தொலைக்காட்சியிலும் வரும். அந்தக் காலத்தில் இந்த மக்கள் தொடர்புச் சாதனங்கள் எதுவுமே மக்களிடம் செல்வதில்லை. எனினும், அரச அறிவித்தல்கள் யாவும் கிராமம் கிராமமாக மூலை முடுக்கு களில் வாழ்ந்த மக்களையெல்லாம் ஒழுங்காகச் சென்ற டைந்தன.
எப்படி?
அந்தக்கால அரச அறிவித்தல்கள் எல்லாம் பிரசித்தம்" மூலம் வரும்!
அரசாங்க ஏஜண்டர் மணியகாரனுக்கு அறிவிக்க, மணியகாரன் உடையாருக்கு அறிவிக்க, உடையார் விதானையாளுக்கு அறிவிப்பார். அறிவித்தல் கிடைத்த உடனே விதானையார். வழக்கமாக ஒழுங்கு செய்து வைத் திருக்கும் பிரசித்தகாரனை (பறையடிப்பவன்)க் கூப்பிட்டு, ஒரு கடிதத்துண்டில் அறிவித்தலை எழுதிக் கொடுப்பார். அவனுக்கு வாசிக்கத் தெரியாதாதலால் அந்த வாசகத்தை அவனுக்கு வாய் மூலம் சொல்லிப் பாடமாக்குவித்து அனுப்புவார்.
ஒழுங்கையில் "டும், டும், டும்’ என்று பறை ஒலி கேட்டதும் எல்லாரும் படலைகளைத் திறந்து கொண்டு பிரசித்தகாரனை எதிர்நோக்கி நிற்பார்கள். கிட்ட வந்ததும் ** என்ன பிரசித்தம்? “ என்று கேட்பார்கள். அவனும் விதானையார் பாடமாக்குவித்து அனுப்பிய அறிவித்தை
* இத்தால் சகலமானவருக்கும் தெரிவிப்பது." என்று

&lyst 77
முறையாக எடுத்துச் சொல்வான். மிக அருமையாக யாரர் வது படித்தவர்கள்" சந்தித்தால் அவர்களிடம் விதானையார் எழுதிக் கொடுத்த அறிவித்தலை ‘நயினார் பாக்கவும்" என்று சொல்லிக் காட்டுவான். 赛
இந்தப் பறையடிக்கிறவர்களுக்கு ஊரிலுள்ள எல்லுர மனிதர்களினதும் குலம் கோத்திரம் எல்லாம் அப்பொழுது தெரிந்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களுக் குரிய பட்டப்பெயர் ஒன்று தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். எங்கள் வி டாரை 'செகராச சேகரம்’ என்பார்கள். இது என்ன பட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு சில காலம் "நாங்கள் செகராச சேகர அரக பரம்பரையாக்கும்!’ என்று பொரும்ை யாக நினைத்ததுண்டு. அது எப்படி இருந்தாலும் இப்போது நான் "பரம்பரை’க்கு மதிப்புக் கொடுப்பதில்லை. பரம் பரைக்கு மதிப்புக் கொடுத்த காலம் "மலையேறி விட்டது!"
இப்போது இன்றைக்கு யாரிடம் ஒழுக்கமும், அறிவும், பதவியும், செல்வமும் இருக்கிறதோ அவர்தான் உயர்த் தவர்; இந்த நான்கு பொருள்களும் ஒருவரிடம் வரிசைக் கிரமப்படி மேலோங்கி நிற்பதை அறிந்து அவருடையம் மதிப்பையும் கணக்கிட்டுக் கொள்ளலாம். அப்படி உயர்ந்த மதிப்புப் பெறுகிறவர்தான் இன்று உயர்ந்த "சாதி" பெரும் பாலும் இன்று நியாயம் நடப்பதாகவே தோன்றுகிறது.
இது இருக்க.
பறையறைந்து பிரசித்தம் செய்யும் முறை ಹಿಜ್ಡ காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் வழக்கமாயிருந்திருக்கிறது. தமிழ் நூல்கள் பிரசித்த காரனை "முரசறைவோன்" என்று கூறும். -
அப்பாவின் மாட்டு வண்டி நினைவுக்கு வந்ததும், அத
னுடைய அமைப்பு என் கண் முன்னே தெரிகிறது. வெளி லுக்கும் மழைக்கும் பாதுகாப்பாகப் பயணம் செய்யக் கூடியதி

Page 41
78 V, மலரும் நினைவுகள்
ஒரு சாதாரன வண்டிதான் அது. அலங்காரங்கள் எதுவும் கிடையாது. அப்போது சில பணக்காரர்களிடம் அழகான வில் வண்டிகள் இருந்தன. அப்பாவின் வண்டி சாதாரண *ஏபோட்டி" கார் என்றால், அவைகள் நவீன யப்பானிய டயோட்டா, டற்சன் மாதிரியிருக்கும் அந்த வில்வண்டி அமைப்புகளெல்லாம் எமது அடுத்த சந்ததிக்குத் தெரியாமல், போகக்கூடும்!
வில் வண்டிக் கூடாரங்களெல்லாம் நல்ல பிரம்டி களினால் அமைக்கப்பட்டு அதன்மேல் உயர்ந்த பூத்துணி கரும் அதன்மேல் மெழுகுசீலையும் போட்டு அமைக்கப்பட் டிருக்கும். அழகாக வண்ணம் பூசப்பட்டிருக்கும். உள்ளே உட்காரும் இடத்துக்கு வைக்கோல் பரப்பி அதன் மேல் புற்பாய் விரிக்கப்பட்டிருக்கும். "எங்கள் வண்டிக்கு ஒருமுறை கூடாரம் அமைத்தது. எனக்கு நினைவிருக்கிறது.பொன்னாலைக் கிருஷ்ண்ன்' கோவிலுக்குப் பின்னாலுள்ள தரவையில் அலரிச் செடிகள் நிறைய இருந்தன. நல்ல றோசாப் பூக்களைப் போல, அதே நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சொரியும் போது மிக அழகாக இருக்கும். ஆனால் அலரிப் பூக்களுக்கு வாசனை கிடையாது. தற்கொலை செய்ய விரும்புகிறவர்கள் இந்த அலரியின் விதைகளையோ, வேர்களையோ அரைத்துச் சாப்பிட்டு உயிரை விடுவதாகச் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அப்பா ஒரு கத்தியுடன் போய், அலரிச் செடிகளில் மிக நீண்ட தடிகளைப் பார்த்து பத்துப் பதினைந்து தடிகளை, வெட்டிக்கொண்டு வந்தார். வீட்டு வளவுக்குள் அவைகளை நிலத்தில் போட்டு மேலும் கீழும் உக்கிய பனைஒலைகளைப் போட்டு எரித்தார். ஓரளவுக்கு எரிந்ததும். தடிகளை வெளியே எடுத்து அவற்றின் தோல்களை உரித்தார். நல்ல துப்பரவாகத் தோல்கள் கழற்றி, தடிகள் வெள்ளை வெளே’
ag airg as Tavrihu LeT.

வரதர் 79
அடுத்த நாள் கூடாரம் கட்டுவதில் தேர்ச்சி பெற்ற ஒரு தொழிலாளி வந்தார். அப்பாவும் அவருமாக, அலரித் தடிகளை வண்டியின் இரு பக்கத் தடிகளிலுள்ள துவாரங் களில் பொருத்தி மேற்பக்கத்தை அளவான உயரத்தில் வளைத்துப் பொருத்திக் கட்டினார்கள். முன் பக்கமும் பின் பக்கமும் சற்றே நீண்டு இருக்கக் கூடியமாதிரி தடிகள் வளைத்துக் கட்டப்பட்டன . அதன் பிறகு மெல்லிய கமுகம் சலாகைகளை குறுக்குப் பாட்டில் வைத்துக் கட்டினார்கள். கூடு சரியாக அமைந்து விட்டது. அதன் மேல் நல்ல பனை ஒலைப் பாய்களை இரண்டு பட்டாகப் போட்டு மூடி, அவற்றின் ஓரங்களைக் கூடாரத்தின் அளவாக வெட்டினார் கள். அதன் மேல் "தார்ச்சாக்குப் போட்டு மூடி ஒரங்களைத் தடிகளுடன் சுருட்டித் தைத்து விட்டார்கள். இந்தத் தார்ச் சாக்குகள் எந்த மழையையும் தாங்கும். இப்படிக் கட்டப் பெற்ற கூடாரம் பல ஆண்டுகளுக்குப் பழுதுபடாமல் நின்று' பிடிக்கும். -
மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் இந்தக் கூடாரம் கட்டுவது பற்றி எழுதிவிட்டேன். ஆனால் கூடாரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நாட்கள் சென்றதாக நினைப்பு: ஒவ்வொரு வளையத்தையும் மிக அவதானமாக அளவு தவறாமல் தொழில் நுட்பத்தோடு செய்தார்கள். பயிற்சி இல்லாதவர்கள் இப்படியான வேலைகளைச் செய்ய. இயலாது.
Al
அந்தக் காலத்தில் இப்படிப் பல தேர்ச்சி பெற்ற் கைவினைஞர்கள் இருந்தரர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். *୫
கோயில் சப்பரத்துக்குப் ப்டல் கட்டும் சிலர் பச்சைத் தென்னோலையிலேயே, இடையிடையே மஞ்சள் குருத் தோலைகளை இணைத்து அவற்றில் அழகிய சித்திரவேலை களைச் செய்வார்கள். .
எங்களூரில் 'நாராணிச் சட்டம்பியார்" என்று ஒரு வயோதிபர் இருந்தார். நான் சிறுவனாக இருந்தபோதே, அவர் காலமாகி விட்டார். அவர் பல நுட்பமான கைவேலை கள் செய்வாரென்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளைஞர்களுக்கு "எட்டு மூலைப் பட்டம்", "கொக்குப்ெ பட்டம்" முதலிய பட்டங்களை மிக அழகாகச் செய்து, அவை: களுக்கு "விண்ணும் கட்டிக் கொடுப்பாராம் நாராணிச்,
சட்டம்பியார். . . :اف. ن. ۰ ۰به : S جي. فلذا لم . us .

Page 42
9. விளையாட்டுகள்
ஆடிமகதம் வந்துவிட்டால், இளைஞர்கள் மட்டுமல்ல, சில பெரியவர்களும் பெரிய பெரிய பட்டங்களுடன் கடற் கரைக்கு வந்து பட்டம் விடுவது வழக்கம். பட்டங்கள் உயரப் போனதும், அவற்றில் கட்டியிருக்கும் * விண்" கள் கொஞ்ஞ். ’ என்று பெரிதாக ஒசை எழுப்பிக் கொண் டிருக்கும்.
பெரியவர்கள், பெரிய பெரிய பட்டங்களைத் தடித்த சணல் நூல்களில், இரண்டுபனை மூன்று பனை உயரங்களில் பறக்க விட்டுக் கொண்டிருக்க, மிகச் சிறுவர்களாகிய நாங் கள், ஒரு பெரிய தென்னிர்க்கை எடுத்து அதன் குறுக்காக,
பனை ஈர்க்கை தையல் நூலினால் கட்டி, பனை ஈர்க்கை ஒரு மாதிரி இருபக்கமும் வள்ைத்து நடுவிலுள்ள தென்னீர்க் கின் முனைகளுடன் நூலிலே பொருத்தி, அதற்கு அளவாக ஒரு கடதாசி எடுத்து அதன் ஓரங்களில் சோற்று பசையைப் பூசி ஒட்டி * சீனாப்பட்டம்" செய்வோம். எங்களுக்குச் சரியாக அது அமையாவிட்டால் சற்றே மூத்த அக்காவையோ அண்ணையையோ கெஞ்சி, அவர்கள் சொல்கிற வேலை ளெல்லாம் செய்து கொடுத்து, அவர்களைக் கொண்டு செய்விப்போம் அந்தப் பட்டத்துக்கு "முச்சு" கட்டியபின் பழைய வேட்டியின் கரையைக் கிழித்து அதற்கு "வால்" கட்டுவோம். அந்தப் பட்டத்தின் முச்சில் தையல் நூலைக் கட்டியதும் ஒரு நண்பன் அதைத் தூக்கிப் பிடித்துவிட,

வரதர் , 81
நாங்கள் நூலைப் பிடித்துக் கொண்டு தெரு நீளம் ஒடுவோம். நாங்கள் ஓடும் வரையும் பட்டமும் பறக்கும். நாங்கள் நின்ற தும் அதுவும் தரையில் படுத்து விடும். எப்போதாவது சில சமயங்களில் காற்று வளமாக அடிக்க, பட்டம் சற்றே உயரப் பறப்பதுமுண்டு. அப்படிப் பறந்து தெரு ஓரத்திலுள்ள மரக் கொப்புகளில் சிக்கிக் கொள்வதுமுண்டு.
அப்போதெல்லாம் ஆகாயத்தில் மிக உயரத்தில் விண் கூவிக் கொண்டு பறக்கும் பெரிய எட்டுமூலைப் பட்டங்கள் தான் எங்கள் இலட்சியக் கனவுகளாக இருந்தன.
இப்படி எத்தனை விளையாட்டுகள் எந்த விளையாட்டும் தொடர்ந்து நெடுநாளைக்கு நீடிப்பதில்லை. ஏதோ சொல்லி வைத்தது போல, கொஞ்ச நாட்களில் விளையாட்டும் மாறிவிடும். வட்டக்கோடு, கெந்தியடித்தல், "வார்' ஓட்டம், வளையம் உருட்டுதல், ஒளித்து விளையாடுதல், இவைகளுக்கெல்லாம் "ரரஜன்" போன்ற பெரிய விளையாட்டு "தாச்சி மறித்தல்". இதைக் * கிளித்தட்டு" என்றும் சொல்வார்கள். இந்த விளையாட் டைக் கொண்டு நடத்தும் சூத்திரதாரிக்கு விளையாட்டில் * கிளி" என்றுதான் பெயர்.
இவற்றைவிட, வருடப்பிறப்பு வந்துவிட்டால், பெரிய மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவது, கைவிசேஷக் காசை வைத்துக் கொண்டு ‘காசு கட்டுவது தீபாவளியன்று கடற்கரையில் நிற்கும் மீன்பிடிகாரரின் சிறிய தோணிகளை யும், கட்டுமரங்களையும் எடுத்துக் கொண்டு கடலில் தோணி யோட்டுவது-இப்படிக் காலத்துக்குக் காலம் விளையாட்டு களும் மாறிக்கொண்டேயிருக்கும்.
மாரி காலம் வந்துவிட்டால், கோயில் வீதியிலும். கிராமத்துச் சாலையிலும் எங்களால் விளையாட முடியாத நிலை ஏற்படும். எங்கள் விளையாட்டிடங்கள் எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கும்.
LD-6

Page 43
மலரும் நினைவுகள் 822 ذه
மற்றைய கிராமங்களின் ஒழுங்கைகள் போலன்றி எங்கள் பொன்னாலையில், கிருஷ்ணன் கோயிலிருந்து பிள்ளையார் கோவில் வரை சுமார் கால் மைல் தூரத்துக்கு மிக அகலமான சாலை இருக்கிறது. வேட்டைத் திருவிழா வன்று, வரதராஜப் பொருமான், மகாலட்சுமி பூலட்சுமி ஆகிய மூவரும் தனித்தனியே மூன்று குதிரை வாகனங்களில், மிகப் பெரிய மேல் சாத்துப்படி கீழ்ச்சாத்துப்படிகளுடன் ஒரே வரிசையில் பிள்ளையார் கோயிலுக்கு வந்து போவதற்காக அந்தச் சாலை இப்படி அகலமாக அமைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். அந்தச் சாலையும் எங்களுடைய முக்கிய மான விளையாட்டுத் தளங்களுள் ஒன்றாக இருந்தது
இன்று போல அப்போது தார்போட்ட சாலைகள் யாழ்ப் பாணத்தில் மிக மிகக் குறைவு. மிகச் சில பிரதான சாலைகள் மட்டுமே தார் போடப்பட்டிருந்தன. வேறு சில சாலைகள் கல் பரப்பி உருளை விட்டுச் சமப்படுத்தப்பட்டிருந்தன. இவைகளை "மக்கி றோட்" என்று சொல்வார்கள். அந்தக் காலத்து "உருளைகளை மாடுகள்தான் இழுத்தன. உருளையை வண்டித் துலா போன்ற அமைப்பிலை இணைத் திருக்கும். அந்தத் துலாவில் நுகத்தைப் பொருத்தி அதில் இரண்டு மாடுகளைப் பூட்டி உருளையை இழுப்பார்கள்
மழைக்காலம் வந்து, எங்கள் விளையாட்டு இடங்களை பழுதாக்கி விடவே, எங்களுடைய விளையாட்டையும் மாற்றிக் கொள்வோம்.
மாரி காலத்தில், கேணிகள், குளங்களில் நீந்திக் கும்மாளமடிப்பதுதான் எங்களுடைய முக்கியமான விளை யாட்டு.
எங்களூரில் சின்னக்குளம், பெரிய குளம் என்று இரண்டு குளங்களும், பல கேணிகளும் உண்டு.
பெரிய குளம் என்பது உண்மையிலேயே மிகப் பெரியது. யாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய குளம் வேறு இருப்பதை

வரதர் 83
நான் அறியேன்; அதன் கிழக்கு எல்லையாக மூளாய், தொல்புரம் கிராமங்களும், வடக்கு எல்லையாக நெல்லி யான் சுழிபுரம் கிராமங்களும் இருக்கின்றன. தெற்கு, மேற்கு ஆகிய இரு எல்லைகளும் பொன்னாலைக் கிராமத் துக்குரியன. "பொன்னாலைக் குளம்" என்பதுதான் அதன் பெயர். இது ஆழமற்ற பரந்தகுளம். கோடை காலம் முழுதும் நீரின்றி வரண்டு, பெரு வெளியாக இருக் கும். நாங்கள் சுழிபுரம் போக வேண்டியிருந்தால் அதற் கூடாக நடந்துபோய் விடுவோம். மாரிக் காலத்தில் இந்தக் குளம் நீர் நிறைந்து, சிறிய கடல் போலக் காணப்படும். சுற்றிவர நெல்வயல்கள். நெற்பயிர் வளர்ந்து வரும் போது, சில காலங்களில் மழையில்லாமல் பயிர் வாடுவ துண்டு; அக்காலங்களில் பெரிய குளத்திலிருந்து வயல் களூடே வெட்டப்பட்ட வாய்க்கால்களிலிருந்து ஏற்றுப் பட்டை மூலம் வயல்களுக்கு நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும் இடத்தை "துலை' என்று சொல்லுவார்கள்.
இப்படி நீர் இறைப்பவர்கள் அதி காலை நாலு ஐந்து மணிக்கே இறைப்பதைத் தொடங்கி விடுவார்கள். வெயில் வரமுன்னர் இறைப்பு முடிந்துவிடும். துலையில் இரு கர்ை களிலும் இரண்டுபேர் நிற்பார்கள். எற்றுப்பட்டையின்மேலும் கீழும் போடப்பட்ட இரு கயிறுடன் இரு பக்கமும் செல்லும் இரண்டுகயிறுகளையும்இரண்டு கைகளில்பிடித்துக்கொண்டு, பட்டையில் தண்ணீரைக் கோலி அள்ளி வரம்புக்கு உயர்த்தி பட்டையின் கீழ்க் கயிற்றைச் சரித்து மிக நேர்த்தியாக நீரை வயலுக்குள் பாய்ச்சுவார்கள். அநேகமாக பக்கத்துக்கு இருவர் வீதம் நாலு பேர் நின்று இரண்டு பட்டைகளால் நீரிறைப்பதே வழக்கம். அப்படி இறைக்கும்போது களை தெரிய மலிருக்கப் பாட்டுக்கள் பாடுவதுண்டு; அதி காலை நேரத்து, ல் பனிக் காலத்தில் அவர்கள் பாடும் பாட்டின் சத்தம் சுமார் அரைமைலுக்கப்பால் வீட்டில் படுத்திருந்த எனக்குக் கேட்டதுண்டு. தொலைவிலிருந்து வந்ததான் சத்தம்தான் கேட்கும். சொற்கள் விளங்காது. எங்கள்

Page 44
姆4 மலரும் நினைவுகள்
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இந்த துலை இறைப் பைப் பயன்படுத்தி ஏறாத மேட்டுக்கு இரண்டு "துலை" என்று ஒரு அருமையான பாடல் எழுதியிருக்கிறார்.
இந்தப் பெரிய குளம் நீச்சல் விளையாட்டிற்கு ஏற்ற தாக இருக்கவில்லை.
ஆனால் பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலிருந்த சின்னக்குளம் நீந்தி விளையாடக் கூடியதாக இருந்தது, ஆனால் அது ஊருக்கு நடுவே இருந்ததால் எங்கள் விளை யாட்டுக்கு அவ்வளவாகப் பயன்படவில்லை. அங்கே நீந்தி விளையாடிக் கொண்டிருந்தால் பெற்றோரோ அயலவரே ஏசிக் கலைப்பார்கள்.
கேணிகள் தான் எங்கள் நீச்சல் விளையாட்டுகளுக்கு மிக வாய்ப்பாக இருந்தன. கேணிகள் இருந்த இடங்களில் குடிமனைகள் இல்லை. அங்கே எங்கள் இராச்சியத்தை சுதந்திரமாக நடத்தலாம்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் எங்குமே கேணிகள் ஒரு முக்கிய தேவையாக இருந்தன; எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தன. தரவைகளில் புல் மேய்ந்துவிட்டு வரும் மாடுகள் தண்ணிர் குடிப்பதற்கு இந்தக் கேணிகள் அவசியம் தேவைப் பட்டன. அநேகமான கேணி களின் பக்கத்தில் மரத்தின் அடிப்பாகம் போன்ற ஒரு கல் தூண் சுமார் 3-4 அடி உயரத்தில் நாட்டப் பெற்றிருக்கும். அந்தக் கல் தூண்களுக்கு "ஆவுரோஞ்சிக் கல்' என்று பெயர் கேணியில் தண்ணீர் குடித்துவிட்டு வரும் மாடுகள் தங்கள் உடம்பை அந்தக் கல்லில் தேய்த்து உடல் அரிப்பைப் போக்கிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு; அந்தக காலத் தில் மாடுகளின் நலனில் மக்கள் எவ்வளவு அக்கறையாக இருந்தார்களென்பதற்கு இது ஒரு உதாரணம்.
பொன்னாலைக் கிருஷ்ணன் கோயிலுக்கு ஒரு கேணி பும் தென் மேற்கு மூலையில் அந்தியேட்டி மடத்தையடுத்து ஒரு கேணியும் இருந்தன.

வரதர் 85
அந்தியேட்டி மடம் என்றதும் ஒரு விடயம் நினைவு வரு கிறது. இந்த அந்தியேட்டி மடம்தான் எங்களில் பலருக்கு ஒரு வித பாலியல் பாடம் படிப்பித்த இடமாக இருந்தது.
இந்த மடத்தின் தெற்கு, வடக்குப் பக்கங்களில் சுவர். மற்ற இரண்டு பக்கங்களுக்கும் அடைப்பில்லாமல் வெளி யாக இருந்தது மடத்தின் நடுவில் அந்தியேட்டி செய்வதற் கான ஓம குண்டம் ஒன்று இருந்தது. அந்தக் குண்டத்தில் எந்தநாளும் நெருப்பு எரிந்த கரித்துண்டுகள் இருக்கும். அந்தக் கரித்துண்டுகளை எடுத்து, வடக்கும் தெற்குமாக இருந்த இரண்டு சுவர்களிலும், ஊரிலே நடக்கும் பாலியல் செய்திகளை சில எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள். சில ஒவியங்கள் அந்தச் செய்திக்குரிய நாயக நாயகியரைப் படங்) களாகவும் தீட்டியிருப்பார்கள். பாலியல் தொடர்பான உறுப்புகளின் பெயர்களையும் நிகழ்வுகளின் பெயர்களையும் நான் அந்தியேட்டி அந்த மடத்துச் சுவர்களில்தான் முதலில் படித்து அறிந்து கொண்டேன். அந்தப் பெயர்களை கிராமங்களில் வாய்ப்பேச்சுகளில் கேட்பது சர்வ சாதாரணம். ஆனால் அவைகளை எழுத்தில் படிப்பதற்கு அந்தியேட்டி மடந்தான்! ஒருநாள் ஒரு நண்பர் அந்த மடத்தில் எழுதிய வன் எழுத்துப் பிழைவிட்டு எழுதியிருக்கிறான். ‘பி’ாைவுக் குப் பதிலாகப் பு"னாப் போட்டு எழுதியிருக்கிறான்!” என்று ஒரு குற்றம் கண்டு பிடித்துச் சொன்னான். எனக்கு இன்றைக்கும் அது சந்தேகமாக இருக்கிறது. எந்தப் பண்டி தரிடம் போய்க் கேட்பது? எந்த அகராதியில் பார்ப்பது?
தமிழில் இப்படியான சில சொற்கள் வாய் வழியாகவே சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

Page 45
10. பேய் பிசாசுகள்
இந்தச் "சுவையான" அந்தியேட்டி மடத்துக் கேணியை விட ஊருக்கு வெளியே சுமார் ஒரு மைல் தூரத்தில் பெரியவர் கோயில் கேணியும் ஒன்றிருந்தது.
இந்தப் பெரியவர் கோயிலுக்குப் பக்கத்திலேதான் எங்களூர்ச் சுடலை இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் "சுடலை என்பது சர்வ சாதா ரணமான ஒரு இடமாகிவிட்டது. அந்தக் காலத்தில் "சுடலை" என்றால் எங்களுக்கெல்லாம் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பயம். ஏங்கே பேய், பிசாசு, முனிஇவைகளெல்லாமே குடியிருப்பதாக மனதில் ஒரு எண்ணம். அந்தப் பேய் பிசாசுகளெல்லாம் இப்பொழுது எங்கே போய் விட்டனவோ தெரியாது. அந்தக் காலத்தில் எத் தனை பேர் தாங்கள் பேயைக் கண்டதாக, முனியைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். பயங்கரமான பல பேய்க்கதைகளை நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். சிலருக்குப் பேய் பிடித்து மந்திரவாதி வந்து பூசை போட்டு அவர்களை ஆட வைத்து, மந்திரப் பிரம்பினால் அவர்களை அவர்கள் மீது குடி கொண்டிருக்கும் பேய்களை அடித்துப் டேயோட்டியதையும் பார்த்திருக்கிறேன்.
'நீ ஆர்?" என்று மந்திரவாதி பேயிடம்- பேய் பிடித்த ஆளிடம் கேட்பான், அது ஏதோ ஒரு பெயர் சொல்லும். *எப்படி இந்த ஆளை வந்து பிடித்தாய்?" என்று கேட்பான்.

வரதர் 87
அதற்கும் பதில் சொல்லும். பதில் சொல்லாவிட்டால் மந்திரப் பிரம்பினால் அடி விழும். அதற்குப் பயந்து "பேய்" ஒழுங்காகப் பதில் சொல்லும். கடைசியாக "உனக்கு என்ன வேணும்!" என்று கேட்பான் . அது பூசை பொங்கல்-முக்கிய மாகக் கோழிச் சாவலும் கேட்கும். மந்திரவாதி அது கேட்ட தெல்லாம் தருவதாகச் சொல்லி " அந்த ஆனை விட்டு ஓடிப் போகிறாயா? என்று கேட்பான். பதில் வரத் தயங்கினால் மந்திரப் பிரம்பால் அடி!
கடைசியாகப் போகிறேன் போகிறேன்" எனச் சொன்ன பிறகுதான் விடுவான். ஏதோ உடம்புக்குள் இருக்கும் பேயை மத்திரங்கள் சொல்ல தலை உச்சிக்குக் கொண்டுவந்து, உச்சி மயிரிலே பேயை இறக்கி, 9 is 5 Duffs) கொஞ்சம் - பேயுடன் சேர்த்து வெட்டி எடுப்பானேன்றும், அந்த மயிரைக் கொண்டு Susruiu சுடலையிலுள்ள ஆலமரத்தில் ஆனிவைத்து அறைந்து விடுவானென்றும் சொல்வார்கள். மயிரோடு சேர்ந்து அந்தப் பேய் சுடலை ஆலமரத்தில் அறையப்பட்டு சிறைப்பட்டுப் போகும் என்று நம்பிக்கை.
எங்களூர்ச் சுடலையிலுள்ள ஆலமரத்தில் இப்படிப் பல ஆணிகள் மயிருடன் சேர்த்து அறையப்பட்டிருந்ததை என் கண்களால் பார்த்து இருக்கிறேன்.
ஆட்களைப் பிடித்து ஆட்டும் செய்வினைப் பேய்களை விட, ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி பல ஆலமரங்களிலும் பேய்கள் முனிகள் குடிகொண்டிருந்து மக்களைப் பயமுறுத் திக் கொண்டிருந்தன.
இப்போது அந்தப் பேய்களும், முனிகளும் எங்கே போய் விட்டன-மக்களின் மனசுகளில் தான் பேய்களும், முனி களும் உருவாகி, "நம்பிக்கை" என்ற நீர் ஊற்றி வளர்க்கப் பட்டு வந்தன. இன்று அந்த நம்பிக்கை வரண்டுவிட்ட தால், பேய்கள், முனிகள் செத்துவிட்டன. ஆனால், இன்றைக்கும் இப்படி வேறுவிதமான மூட நம்பிக்கைகள் மக்களின் மனத்திலே வளர்ந்து கொண்டிருக்கின்றன,

Page 46
88 மலரும் நினைவுகள்
சுடலைப்பக்கம் நாங்கள் அடிக்கடி போய்வந்த காரணத் தால், பகலிலே சுடலைப்பயம் எங்களிடமிருந்து போய் விட்டது. ஆனால் இரவு வந்துவிட்டால் சுடலைப் பயமும் வந்துவிடும்!
எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். அப்பொழுதே நான் பல பகுத்தறிவுக் கட்டுரைகளைப் படித்துவிட்ட காரணத்தால், இந்தப் பேய் முனிக் கதையெல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்ற எண்ணம் என் மனதில் படியத் தொடங்கி விட்டது.
ஒருநாள் இரவு பொன்னாலைக் கோயிலில் திருவிழாக் காலம். அன்று இரவுத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. நல்ல நிலாக்காலம், இரவு பதினொரு மணிக்கு மேல் நடுச் சாமத்தை அண்மித்துக் கொண்டிருந்த நேரம். வழக்கம் போல் கோயிலடியில் கூடியிருந்த ஐந்தாறு நண்பர் களிடையே ஒரு பந்தயம். பேய் பிசாசுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்டவினை. பேய்பிசாசு உண் டென்று வாதிட்ட ஒருவர், "இந்தச் சாம நேரத்தில் சுடலைக்குப் போய்வர யாரால் முடியும்?" என்று கேட்டார். இல்லையென்று வாதிட்ட நானும், இன்னொரு நண்பரு மாக அந்தச் சவாலை ஏற்று, "நாங்கள் போய்வருகிறோம். என்ன பந்தயம்" என்று கேட்டோம்.
* இப்போதே சுடலைக்குப் போய் போனதற்கு அடை யாளமாகச் சுடலைச் சாம்பலைக்கிள்ளி எடுத்துக் கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் பத்துச்சதம் தாங்கள் தருவோம். அப்படிச் சாம்பலை எடுத்து வராவிட் டால் நீங்கள் பத்துச்சதம் எங்களுக்குத் தரவேண்டும். என்று பந்தயம் ஒப்பந்தமாகி, பந்தயப் பணத்துக்குப் பொறுப்பாக ஒரு நடுவரையும் நியமித்துக் கொண்டோம் .
பத்துச் சதம்" என்பது அந்தக் காலத்தில் பெரிய காசு!

வரதர் く ・ ー 89
கோயிலடியில் ஒரு சதம் கொடுத்து கடலைக்காரியிடம் கடலை வாங்கினால், "கச்சான். உருண்டைக் கடலை, சோழன்” எல்லாம் கலந்து மடிநிறைய வாங்கலாம்; பத்துச் சதத்துக்கு எவ்வளவு பொருள்கள் வாங்கலாம்! ஒரு கொத்து அரிசி வாங்கலாம்; ஒரு போத்தல் மண்ணெண்ணை வாங்க ' லாம்; பெரிய தோசையாக ஐந்து தோசை வாங்கலாம்இப்படி எவ்வளவோ.
அந்தக் காலத்தில் அரைச்சதம் என்ற நாணயம் சாதார ணமாகப் புழக்கத்தில் இருந்தது. பல பொருட்களுக்கு அரைச் சதக் கணக்கில் விலைகள் இருந்தன. ஒரு தீப் பெட்டியின் விலை இரண்டரை சதம். ஒரு இறாத்தல் சீனி யின் விலை இரண்டரை சதம்.
நான் சிறுவனாக இருந்ததற்குச் சற்று முந்திய காலத் தில்காற் சதத்துக்கும் ஒரு நாணயம் இருந்திருக்கிறது. நான் அறிய அது புழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் நான் அந்தக் காற்சதக் குத்தியைப் பார்த்திருக்கிறேன்.
சேம்பிலே செய்யப்பட்ட ஒரு சதநாணயத்தை உங்களிற். பலர் பார்த்திருப்பீர்கள். அது சுமார் இரண்டு செ. மீ. விட்டமுடையது. அதனுடைய பாதியளவே அரைச்சத நாணயம். அந்த அரைச் சதத்திலும் பாதி அளவானதே. காற்சத நாணயம் , t
பத்துச் சதத்திற்குப் பந்தயம் ஏற்றுக் கொண்ட நானும் ானது நண்பனுமாக உடனேயே - அந்தச் சாமத்தில் சுடலைப் பயணத்தைத் தொடங்கினோம், நண்பர்கள் கோயில் வீதியின் தென்மேற்கு முனைவரை எங்களுடன் வந்து அங்கேயே நின்று கொண்டார்கள். அங்கிருந்து பார்த்தால் சுமார் அரை மைல் தூரத்துக்கு நாங்கள் போ வதை நிலவு வெளிச்சத்தில் கண்காணிக்கலாம்.
என்னதான் பகுத்தறிவுக் கட்டுரைகளைப் படித்தும் பேய் பிசாசுகளை மூட நம்பிக்கைகள் என்று தெரிந்து வைத்

Page 47
90 மலரும் நினைவுகள்
திருந்த போதிலும், சிறு குழந்தையிலிருந்தே மனத்தில் வளர்த்து வைத்திருந்த நம்பிக்கை என் நெஞ்சுக்குள்ளே படபடத்து, ஆனால்
முன்வைத்த காலை இனிப் பின்வைக்க முடியாது? நண்பர்களின் முன்னே தோற்றவனாகப் போய் நிற்பதா என்ற வீம்பு
பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆளுக்காள் உற்சாகமாகக் கதைத்துக் கொண்டும், இடையே உரத்த தோனில் ஏதோ பாட்டுக்களையும் பாடிக்கொண்டும் நானும் நண்பனும் சுடலைக்குப் போய் விட்டோம் ,
இருவரும், ஒவ்வொரு கை நிறைய சுடலைச் சாம்பலை அள்ளிக் கொண்டோம்.
*படக், படக்" என்று நெஞ்சு அடித்துக் கொண்டது தான்.
ஆனாலும் துணிச்சல்தான்
சுடலைச் சாம்பலைக் கொண்டுவந்து நண்பர்களிடம் காட்டியபோது -
ஓ! அது எவ்வளவு பெரிய, தீரச் சாதனையாக இருந் தது!
அன்று பத்து சதத்துக்குக் கடலை வாங்கி எல்லா நண் பர்களுமாக ஒரு "சமா’ நடத்தினோம்!
அந்தச் சுடலைக்குப் பக்கத்திலிருந்த பெரியவர் கோயில் கேணியும் எங்கள் நீச்சல் இடங்களில் ஒன்று,

11. நீர் விளையாட்டு
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீந்தி விளையாடப் புறப் பட்டால், முதலில் ஒரு பாட்டம் கிருஷ்ணன் கோயில் கேணி யில் விளையாடி, பிறகு அடுத்திருந்த அந்தியெட்டி மடக் கேணியில் விளையாடி, பிறகு ஒரு மைல் தூரம் நடந்து போய் பெரியவர் கோயில் கேணியிலும் நீந்திய பிறகுதான் அன்றைய விளையாட்டு ஒயும். நேரம் மதியம் தாண்டி சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.
நீந்திப் பழகுபவர்கள், இரண்டு ஒல்லித் தேங்காய்களை நடுவில் சுமார் ஒரு அடி இடைவெளி விட்டு நாரினால் முடிந்த அந்த இடைவெளிக்குள்-நாரிலே தங்கள் உடலைப் பொருத்திக் கொண்டு, தண்ணீரில் மிதந்து நீந்தப்பழகு வார்கள். ஒல்லித் தேங்காய்கள் நீந்துபவர்களுடைய பாரத் தையும் சுமந்து கொண்டு தண்ணிரில் மிதக்கக் கூடியவை.
எங்களூரில் அப்போது பெரும்பாலான ஆண்கள் அனைவ ருக்குமே நீந்தத் தெரியும். பல பெண்களும் கூட நீந்து 6)Jss656T,
ஏழெட்டு வயதிலேயே எங்களிற் பலர் நீந்தப் பழகி விட்டோம். எங்களுடைய நீச்சல் உடை "கோவணம்"தான். ஆண்கள் எல்லோருமே கோவணம் கட்டிக் கொண்டிருப்பது அந்தக் காலத்து வழக்கம் சிறுவர்களாக இருக்கும் போதே கோவணம் கட்டவேண்டுமென்பதை பெரியவர்கள் வற்புறுத்

Page 48
92 மலரும் நினைவுகள்
துவார்கள். நான் தமிழ்ப்பள்ளிக் கூடத்தில் எஸ். எஸ். ஸி தேர்வை முடித்துக் கொண்ட பிறகு, யாரோ ஆலோசனை கூறியதன் பேரில் ஆங்கிலம் கற்பதற்காக சுழிபுரம் விக்டோரி யாக் கல்லூரிக்குச் சென்றதுண்டு. (மூன்றே மூன்று மாதங் கள் மட்டுமே நான் அங்கே படித்தேன், அது வேறு கதை) அப்போது விக்டோரியாக் கல்லூரியில் சோமசுந்தரம்" என்று ஒரு ஆசிரியர் இருந்தார். சரியான "சைவப்பழம்" தாடி வைத்திருந்தார். மாணவர்கள் கோவணம் கட்டியிருக்க வேண்டுமென்பதில் அவர் சரியான கண்டிப்பு. ஒவ்வொரு மாணவனாகக் கூப்பிட்டு தமது கைப்பிரம்பினால் பின்பக்கத் தில் உரோஞ்சிப் பார்ப்பார்.
இப்போது சிறு குழந்தைகளைக் கூட உட்காற்சட்டை இல்லாமல் பார்க்க முடியாது. அப்போது சிறுவர்கள் இரண்டு மூன்று வயதுவரை - சிலர் பள்ளிக்கூடம் போகிற வரை உடம்பிலே எவ்விதத் துணியும் அணிவதில்லை. சில சிறு பெண் குழத்தைகள் அரசிலை வடிவில், வெள்ளியிலோ, செப்பிலோ செய்த ஒரு ஆபரணத்தை (அதை "அரை மூடி” என்று சொல்வார்கள்) அரைஞாண் கொடியில் கோத்துத் தொங்கவிட்டு. பெண்ணுறுப்பை மறைத்திருப்பார்கள். ஆண் குழந்ைைதகளுக்கு எதுவும் வேண்டியிருக்கவில்லை. அரை ஞாண்கொடி ஆண், பெண் எல்லாருக்குமே அவசிய மானது, அநேகமாக அந்தத் தேவைக்கென்றே ஒரு கறுப்புக் கயிறு கடைகளில் விற்கும். வசதியுள்ளவர்கள் வெள்ளியில் அரை ஞாண்கொடி செய்து அணிந்திருப் பார்கள். மிகச் சில பெரிய பணக்கார விட்டுப் பிள்ளைகள் தங்கத்தில் செய்த அரைஞாண் கொடி அணிவதுண்டு.
அரைஞாண் கொடி கட்டுவதும் (கோவணம் கட்டுவ தற்கு அது அவசியம் தேவை) காது குத்துவதும் பொது வான வழக்கமாக இருத்தது.
நான் வெள்ளியினால் செய்த அரைஞாண் கொடியை பல காலம் அணிந்திருந்தேன் காது குத்திக்கொண்டது

வரதர் 93
முண்டு. ஆனால் தோடோ அல்லது கடுக்கனோ அணிய வில்லை, சாத்திரப்படிக்குக் குத்திவிட்டு பிறகு அதை அப்படியே சோரவிட்டு விட்டார்கள், என்னுடைய காது களில் இன்றைக்கும் அந்த அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் துவாரங்களும் தூர்ந்து விட்டன,
நாங்கள் கேணியில் நீந்தி விளையாடும் போது கோவணந்தான் கட்டிக் கொள்வோம். எல்லாரும் எல்லா நேரமும் கோவணம் கட்டியிருப்பதில்லை. கோவணம் கட்டி யிராதவர்கள், கேணிக் கரையில் முன்பு யாரோ அவிழ்த்துப் போட்டிருந்த கோவணத் துணிகளை எடுத்துக் கட்டிக் கொள்வார்கள்.
*நீர் விடையாடேல்" என்று ஒளவையார் சொல்லியிருந் தாலும், நீரில் நீந்தி விளையாடுவது மிக உற்சாகமான, சுவையான விளையாட்டு.
கேணியில் நீர் நிறைந்திருக்கும்போது, கேணிக் கரையி லிருந்து சுமார் 20-25 அடி தூரம் பின்னுக்குப் போய், அங் கிருந்து வேகமாக ஓடிவந்து, கேணிக்கட்டில் ஒரு காலை ஊன்றி, எழும்பிப் பாய்ந்து தண்ணிருக்குள் "டுமீல்' என்று குதிப்பது, குதித்த வேகத்தில் கேணியின் அடிவரை சென்று சேற்றில் கால் முட்டி, பிறகு மேல் நோக்கி எழுந்து, இடை நீந்தலில் தண்ணிருக்கு மேல் தலையை உயர்த்தி ஆவ் ஆவ்' என்று பெரிய மூச்செறிவதும், நீருக்குள் மூழ்கி கேணியில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சுழியோடிப்போய் மிதப் பதும், அப்படிச் சுழியோடிப் போகும்போது யாராவது ராட்டுந் தண்ணீரில் நின்றுகொண்டிருப்பவர்களின் கால் களைத் தூக்கிச் சரித்துவிடுவதும்-இப்போது நினைக்கும் போதும், அப்படியொரு மாரிக்கேணியில் குதித்து நீந்த வேண்டும்போலிருக்கிறது. இயலுமா?

Page 49
12. புகழ்பெற்ற வைத்தியர்கள்
பொன்னாலை என்ற எங்கள் கிராமத்துக்கு அந்தக் காலத்தில் புகழ் சேர்த்த பெருமை இரண்டு ஆயுள்வேத வைத்தியர்களுக்குண்டு,
ஒருவருக்குப் பெயர் கந்தையா, மற்றவர் கணபதிப் பிள்ளை. இருவரும் சகோதரர்கள்,
கந்தையா மூத்தவர். "கந்தையா" என்றால் யாருக்கும் தெரியாது. "பரியாரி இராசா என்றால், இப்போதும்கூட வயதானவர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். அதே மாதிரித் தான் அவருடைய தம்பி கணபதிப்பிள்ளையும், "பரியாரி பெத்தார்" என்றால்தான் அவரைத் தெரியும்.
அந்தக் காலத்தில் பலருக்கும் இப்படி இரண்டு பெயர் கள் இருக்கும். ஒன்று இடாப்புப் பெயர். மற்றது வீட்டுப் பெயர். பிறப்புப் பதியும்போது வைத்த பெயர்தான் இடாப் புப் பெயராக இருக்கும். இடாப்புப் பெயர் என்பது பள்ளிக் கூடத்து இடாப்பில் பதிந்த பெயர். அதுதான் சட்டபூர்வ பெயர். ஆனால் சிறு வயது முதலே வீட்டிலே செல்லமாக வேறு ஒரு பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். அநேகமாக அது பேரன், கொப்பாட்டனின் பெயராக இருக்கும். இடாப் புப் பெயர் வேலாயுதம்" என்றிருக்கும். பாடசாலையிலும் படிப்பு முடிந்து அவர் ஏதும் உத்தியோகத்தில் சேர்ந்தால் அலுவலகத்திலும் அவரை வேலாயுதம் என்றே அழைப்பாச்

6. Taif 95
கள், ஆனால் ஊர் முழுவதும் அவரை "சின்னராசா” என்ற விட்டுப் பெயரால்தான் அழைப்பார்கள். வேலாயுதம்" SF6irg விசாரித்தால் பலருக்குத் தெரியாமலிருக்கும்.
*பரியாரி பெத்தார்’ என்ற கணபதிபிள்ளை சற்று தாக ரிகமானவர். அந்தக் காலத்திலேயே சிறிது ஆங்கிலம் கற்று மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த்தவர். ஆங்கி லம் பேசுவார். மிடுக்கும், நாட்டாண்மைத்தனமும் அவ ருடன் கூடப் பிறந்தவை இந்தக் குணத்தினால்போலும் உத்தியோகம் பார்த்த இடத்தில் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை. உத்தியோகத்தைத் துறந்துவிட்டு ஊருக்கு வந்து தமது பரம்பரைத் தொழிலான வைத்தியத்தைப் படித்து, அதையே தொழிலாகக் கொண்டிருந்தார். எங்கள் வரில் செய்தித்தாள் படித்து உலகச் செய்திகளைப்பற்றி யெல்லாம் சற்று விபரமாகக் கதைக்கிறவர் இவர் ஒருவரா
கத்தானிருந்தார்.
இரண்டாவது மகாயுத்தம் நடந்த காலத்தில் இவர் மிகவும் உற்சாகமாக ஹிட்லரின் வீரத்தைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் தியாகராஜபாகவதருக்கும் எம். ஜி. ஆருக்கும் உயிரையே கொடுக்கக்கூடிய "பக்தர்கள்" இருந்ததுபோல; அப்போது ஹிட்லருக்கும் பல விசிறிகள் இருந்தார்கள். அவர்களில் பலர் "ஹிட்லர் மீசை வைத் திருந்தார்கள். பரியாரிபெத்தாரும் ஹிட்லர் மீசை வைத் திருந்தார். ஹிட்லரைப்பற்றி இப்போது வரலாறு படிக்கும் மாணவர்கள்தான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அப்போது ஹிட்லரைப்பற்றிக் கேள்விப்படாத மனிதர்களே இல்லை யென்று சொல்லலாம். இப்பொழுது "பிரபாகரன்" என்ற பெயரைத் தெரியாமல்; தமிழர்கள் யாரும் இல்லையல்லவா? அதுபோல
ஹிட்லரைப்பற்றி யாரும் குறைவாகப் பேசிவிட்டால் பரியாரி பெத்தரிடம் தப்ப முடியாது!

Page 50
'96 மலரும் நினைவுகள்
பரியாரி இராசா மூத்தவர். அவருடைய வீடு எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஒழுங்கையில் இருந்தது. அவர் அதிகம் படித்தவரல்லர். ஏதோ வைத்திய வாகட நூல் களைப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய அறிவு இருந்தது போலும். இவர் தம்பியார் பெத்தாரைப்போல உலக விவகாரங்களெல்லாம் பேசமாட்டார். ஊர்க் கதைகள்தான் அவருக்கு. அதற்கும் அதிகமாக நேரமிருக்காது. அதிகாலை யிலிருந்தே நோயாளிகளைப் பார்க்கும் வேலை அவருக்கு வந்துவிடும். −
இப்போதெல்லாம் ஏதாவது நோய் வந்தவுடன் மருத்துவ மனைக்கு ஓடிப் போகிறோம். நடக்க முடியாத நோயாளி களை வாகனங்களில் ஏற்றிச் சென்று மருத்துவர் முன் நிறுத்துகிறோம்.
அந்தக் காலத்தில் பெரும்பாலும் நோயாளி இருக்கு மிடம் தேடி மருத்துவர் வருவார், அநேகமாக எல்லா ஊர் களிலும் இரண்டொரு வைத்தியர்கள் இருப்பார்கள். அந்த ஊர் மக்களின் நோய்களை அவர்களே தீர்த்து வைப்பார்கள்
முற்றிப்போன சில பெரிய நோய்களுக்கு சில குறிப்பிட்ட *ஸ்பெஸலிஸ்டுகள்' வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அப்படியான நோயாளிகளை சற்று வசதியுள்ளவர்கள் மோட்டார் வண்டியிலோ, மாட்டு வண்டியிலோ ஏற்றிக் கொண்டு சிறப்பு மருத்துவர் இருக்கும் ஊருக்குக் கொண்டு போவார்கள். சில சமயங்களில் அவரை அழைத்து வந்து நோயாளியைக் காட்டுவார்கள். 1.
நாயன்மார்க்கட்டு, ஒட்டகப்புலம், சுதுமலை சில் லாலை என்று இப்படி இன்னும் பல ஊர்களில் இப்படியான சிறப்பு மருத்துவர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ் வொரு நோய்க்கு "ஸ்பெஷலிஸ்ட்."
எங்களூர் பரியாரி இராசாவும் அத்தகைய சிறப்பு மருத்து வர்களில் ஒருவராக இருந்தார். "சன்னி" நோய்க்கு பரியாரி

வரதர் 97
இராசா மிகவும் புகழ் வாய்ந்த வைத்தியர். மிகத்தூர இடங் களிலிருந்தெல்லாம் " சன்னி நோய்க்காரர்கள் பொன்னா லைக்கு வருவதுண்டு.
நான் மிகச் சிறு வயதில் மோட்டார் வண்டியைப் பார்த் து பரியாரி இராசா வீட்டுக்கு வந்த மோட்டார் வண்டியைத் தான் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி மாட்டு வண்டிகளும், மோட்டார் வண்டிகளும் வரும். சிலர் நோயாளிகளை அழைத்து வருவார்கள். சிலர் அந்த வண்டிகளில் பரியா ரியாரைக் கூட்டிக்கொண்டு போவார்கள்.
அந்தக் காலத்தில் மோட்டார் வண்டிகள் மிக அருமை. மாட்டுவண்டிச் சில்லில் இருப்பதுபோல மரத்தினாலான சட்டங்கள் பொருத்திய சில்லுகளுடன் கூடிய அந்த மோட் டார்கள், "பாம் பாம்" என்று தமது றப்பர் பந்து பொருத்திய கோணை அடித்துச் சத்தம் போட்டுக்கொண்டு, தெருப் புழுதியை அள்ளி விசிறிக்கொண்டு வரும்.
தூரத்தில் மோட்டார் வண்டியின் சத்தம் கேட்டால் கை அலுவலை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து படலையைத் திறந்து, தெரு ஓரமாக நின்று நாங்கள் மோட்டார் வண்டி யைப் பார்ப்போம்!
அது அப்போது ஒரு காட்சிப் பொருள்.
பரியாரி வீட்டருகே மோட்டார் வண்டி நின்றதும், ஆட் கள் இல்லாவிட்டால் கிட்டப்போய் புழுதிபடிந்து கிடக்கும் அதன் உடம்பில் எங்கள் ஒரு விரலினால் எங்கள் பெயர்களை எழுதி வைப்போம்.
இப்போதெல்லாம், புகழ்பெற்ற "டொக்ரர்"களிடம் போய் "கியூ"வில் காத்திருந்து எங்கள் முறை வந்ததும் உள்ளே போய், எங்களுக்கு என்ன வருத்தம், என்ன குணம் குறி, எங்கள் பரம்பரையில் அப்படி நோய் இருந்ததா என்
uー7

Page 51
98 மலரும் நினைவுகள்
 ைபோன்ற விபரங்களையெல்லாம் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அவர் "ஸ்டதாஸ்கோப்பை நெஞ்சிலும், முதுகிலும் வைத்துப் பார்த்துவிட்டு பல கேள்விகள் கேட் ார். அவற்றுக்கெல்லாம் நாங்கள் மறுமொழி சொன்ன பின், ஒரு துண்டில் மருந்தை எழுதிக்கொடுப்பார். அந்தத் துண்டைக் கொண்டுபோய் மருந்து வாங்க வேண்டும்.
அந்தக் காலத்தில் தமிழ் வைத்தியரிடம் போனால் அவர் கையைப் பிடித்து நாடி பார்ப்பார். அந்த நாடியே அவருக்கு எல்லா விபரங்களையும் சொல்லிவிடும், அதன் பிறகு, சில குணம் குறிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தமது மருந்துப் பெட்டியைத் திறந்து சில குளிசைகளை எடுத்துத் தகுவார்.
ஒரே குளிசையே சில சமயங்களில் வெவ்வேறு நோய் களுக்கும் தரப்படும். ஆனால் நோய்களுக்கேற்றபடி "அனு மானங்கள்' மாறும். ஒரு நோய்க்கு முலைப்பால் அனுமானம் என்றால், வேறொன்றுக்கு குடிநீர் அனுமானமாக இருக் கும். பத்தியங்களும் மாறும். "குடிநீர்" என்றால் குடிக்கும் தண்ணீரல்ல. திற்பலி, வேர்க்கொம்பு முதலிய பல மருந்துச் சரக்குகளை நீரில் போட்டுக் காய்ச்சி எடுத்த நீருக்கே "குடி நீர்" என்று பெயர். இந்தக் குடிநீரிலும் பலவகையுண்டு, குடிநீரே பல நோய்களுக்கு மருந்துமாகும்.
பரியாரி இராசா ஒரு சிறு குழந்தையின் கை நாடியைப் பிடித்தும் பார்த்துவிட்டு, குழந்தையின் வயிற்றில் பனை ஒலைத்துண்டு இருப்பதாகக்கூறி மருந்து கொடுத்ததாகவும், பிறகு குழந்தைக்கு வயிற்றால் போனபோது ஒலைத்துண்டும் போனதாக யாரோ சொன்னது நினைவிருக்கிறது.
அந்தக் காலத்தில் சிறு குழந்தைகளை பனை ஓலைத் தடுக்கில்தான் வளர்த்தியிருப்பார்கள். அந்தத் தடுக்கிலிருந்து ஒலைத்துண்டு குழந்தையின் கைக்குள் அகப்பட்டு வாய்க்குள் போயிருக்க வேண்டும்.

வரதர் 99
இப்போதெல்லாம் ஆயுள் வேதக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற "டொக்டர்"கள் அநேக நோய்களுக்கு ஆங்கில மருந்துகளையே கொடுக்கிறார்கள்.
பரம்பரைப் புகழ் வாய்ந்த நமது நாட்டு வைத்தியம் மெல்ல மெல்ல அற்றுப் போய்க் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அரசாங்கம் ஏதோ ஆயுள்வேத வைத்தியத்துக் கென்று ஒரு துறையை அமைத்து, உள்ளூராட்சி அலுவலகங் கள் மூலம் ஆதரவு செய்வதுபோல் தோன்றினாலும், அந்த வைத்தியத்துறை சரியான இடத்தில் வைக்கப்படவில்லை சியன்றே தோன்றுகிறது.
புகழ்பெற்ற வைத்திய வாகடங்கள் சில குடும்பங்களுடன் மறைந்துபோய் விடுமோ என்று தோன்றுகிறது.

Page 52
13. அப்பாவின் கடை
எங்கள் கிராமத்தில் அப்பா ஒரு கடை வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கடைசி வரையும் அவருடைய தொழில் அந்தக் கடைதான். எங்கள் வீட்டின் பின்பக்க விறாந்தை தெருவின் ஓரமாக அமைந்திருந்தது. அந்த விறாந்தையில்தான் கடை. விறாந்தைக்கும் தெரு வுக்கும் இடையில் சுமார் நான்கு அடி இடைவெளியிருக்கும். விறாந்தையிலிருந்து தெரு ஓரம் வரை பந்தி இறக்கியிருந் தது. விறாந்தையின் நடுப்பகுதியில் கடைக்கான பெரிய வாசல். அதன் இருபுறமும், பந்தியில் இரண்டு வாங்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வாங்குகளில் எந்த நேரமும் யாராவது இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். கடைக்குப் பொருள் வாங்க வருபவர்களும் சில சமயங்களில் அங்கே தங்கிக் கதைத்துவிட்டுப் போவார்கள். ஊரில் அவ்வப் போது நடக்கும் நிகழ்வுகள் தொடக்கம், உலக விவகாரங்கள் வரை அவர்களுடைய உரையாடலில் அடிபடும் ,
அப்பா அதிகம் கதைக்கமாட்டார். எப்போதாவது சுருக்கமாகத் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுவார்.
அந்தக் "கடைச் சபை'யில் ஆண்கள் மட்டுமல்ல, பெண் களும் கலந்து கொள்வார்கள்.
விறாந்தையின் நீளம் சுமார் இருபத்தைந்து அடி. அகலம் பத்து அடியிருக்கும். அந்த விறாந்தை நீளத்துக்குப் பலவிதமான பொருள்களும் பரவிக் கிடக்கும் சுவர் ஒரமாக

வரதர் 101
ஒரு றாக்கை. அதில் தகர டப்பாக்களிலும், போத்தல் களிலும் விற்பனைப் பொருள்கள் அடுக்கியிருக்கும். சுவரின் இன்னொரு பக்கமாக ஒரு கோர்க்காலி; சில சாக்கு மூடை களிலும், பனை ஓலை உமல்களிலும் சில பொருள்கள் இருக்கும்.
எனக்கு இப்போதும் அந்தக் கடையில் இருந்த பொருள் கள் வரிசைக் கிரமமாக நினைவில் இருர்கின்றன. அந்தப் பொருள்களைக் கவனித்தால் அன்றைய மக்களின் தேவை களைப் பற்றி ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.
விறாந்தையின் மேற்குச் சுவரோடு மண்சட்டிபானைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியிருக்கும். புரட்டாசிச் சனிக் கிழமைகளில் சனிஸ்வரனுக்கு எரிக்கும் சிறிய சுட்டிகள் முதல். உலைமுடிகள், தட்டைச் சட்டிகள் குண்டான் சட்டிகள், பானைகள், கள்-கருப்பநிர் சேர்க்கும் முட்டிகள் இப்படிப் பலவித பாண்டங்களும் அங்கேயிருக்கும்.
* சனிஸ்வரனுக்கு எரிக்கும் சட்டி" என்றது நினைவு வருகிறது. பொன்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு அப் போது மிகப் பெருந்தொகையான சனக்கூட்டம் வருவது புாட்டாதிச் சனிக்கிழமைகளில்தான். கடைசிச் சனி" என்றால் . அதிகாலையிலிருந்து பொழுது படும்வரை சனக்கும்பல்தான்.
இப்போது எல்லாக்கோயில்களிலுமே நவக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள் நவக்கிரகங்களில் சனிஸ்வரனும் இருப்பார். அந்தந்த ஊரில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் கோயிலிலுள்ள சனிஸ்வரனை வழிபட்டுத் தப்பிக் கொள்
nm tas 6ňr .
ஆனால் அந்தக் காலத்தில் பொன்னாலைக் கிருஷ்ணன் (காயிலில் மட்டுந்தான் சனிஸ்வரன் இருந்தார். அதிலும், டிாயில் உள்வீதியில் சனிஸ்வரனுக்கென்றே தனியாக ஒரு மயில் இருந்தது. ペ

Page 53
103 மலரும் நினைவுகள்
அந்தச் சனிஸ்வரன் மிகவும் பிரசித்தமானவர், கிருஷ்ணன் கோயிலோடு சேர்ந்திருக்கும் சனிஸ்வரனுக்கு சக்தி அதிகமாம்!
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் நடந்தும், மாட்டுவண்டிகளிலும், சிலர் மோட்டார் வண்டியிலும் சனிஸ் வரனைத் தேடிக்கொண்டு அங்கே வருவார்கள்.
கோயிலுக்கும் நல்ல வருமானம். சட்டி, எள்ளுப் பொட்டலம், எண்ணெய் எல்லாவற்றையும் வெளியில் வாங்கிக் கொண்டுபோய், சனிஸ்வரனின் கோயிலின் முன் பாக வைத்து எரிப்பதத்கு கட்டணம் பத்துச் சதம் (ஒரு கொத்து அரிசியின் காசு!) ;
அது இருக்க, மறுபடியும் அப்பாவின் கடைக்கு வரு வோம், சட்டி பானைகள் அடுக்கியிருந்த இடத்தை அடுத்து, வெளிக்கிறாதி ஓரமாக ஒரு மண்பானையில் "ஊத்தைச் சோடா” இருக்கும். ஊத்தைச் சோடாவை பானையிலிருந்து அள்ளி எடுப்பதற்காக ஒரு அகப்பையும் இருக்கும். சோடா வைக் கையினால் எடுத்தால் அது கையைக் கடிக்கும்.
கடையிலிருக்கும் சர்க்கரை, சீனி, கற்கண்டு முதலிய இனிப்புப் பொருள்களை நான் அவ்வப்போது எடுத்து வாயில் போட்டுக்கொள்வது வழக்கம். அந்த வழக்கப்படி பானையிலிருந்த ஊத்தைச் சோடாவை மாச்சீனி (ஐசிங் சுகர்) என்று நினைத்துக் கிள்ளி வாயில் போட்டுவிட்டேன்.
பிறகு நான் குழறிக் கூக்குரலிட்டதும் அயலட்டையெல் லாம் கூடி ஆளுக்கொரு கதை சொன்னதும் யாரோ ஆட்டுப் பாலைக் கொண்டுவந்து குடிக்கத் தந்ததும் நினைவிருக் கிறது.
ஊத்தைச் சோடாப் பானைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய தகர டப்பாவில் மண்ணெய் இருக்கும். சுமார் ஒரு அடிச் சதுரமும் ஒன்றரை அடி உயரமுமுள்ள தகர டப்பா. வெள்ளைவேளேரென்ற நிறம். எழுத்துக்கள் லேபில் எதுவு

வரதர் 03
மில்லை. தலைப்பக்கத்தில் சிறிய கைப்பிடி இருக்கும். தலைப் பக்கத்தின் ஒரு மூலையிலுள்ள அதன் வாயை உடைத்து அதற்குள் ஒரு "பம்' வைத்திருக்கும். அந்தப் "பம்’ ம்ை அடிக்க மண்ணெய் குழாய் வழியாக வெளி வந்து பக்கத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் புனல்வைத்த போத்தலில் விழும்.
போத்தல் கணக்காக மண்ணெய் வியாபாரம் அநேகமாக நடப்பதில்லை. ஒரு சிறிய அளவு கரண்டி இருந்தது. அது நிறைய விட்டால் இாண்டு சதம். (ஒரு போத்தல் மண்ணெய் பத்துச் சதத்துக்குள்ளாகவுே இருக்க வேண்டும்.)
மண்ணெய் அப்படி மலிவாக இருந்த போதிலும் கிராமத்து மக்கள் மிகவும் கட்டுச் செட்டாகவே அதை உபயோகிப்பார்கள்.
பலருடைய வீடுகளில் அரிக்கன் லாம்பெல்லாம் கிடை யாது. தகரத்தில் செய்த குப்பி விளக்குத்தான். பின்னால் அது பித்தளையில் அழகாகச் செய்யப்பட்டு புழக்கத்தி லிருந்தது.
மண்ணெய்த் தகரத்துக்குப் பக்கத்தில் கடையின் நடுநாயகமாக ஒரு "ஐஞ்சறைப் பெட்டி, ஆனால் அந்த அடுக்கில் ஐந்தல்ல, பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு சரக்கு. மல்லி, மிளகு, வெந்தயம், சீரகம், வெண்காயம்இவைகள் ஒருபக்கம். ஓரமாக சற்றே பெரிய 'பக்கீஸ்" பெட் டியில் சீயக்காய் இருக்கும்.
சீயக்காய் அப்போது முக்கியமான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எல்லோரும் எண்ணை தேய்த்து முழுகுவார் கள். சிலர் கிழமைக்கு இரண்டு முறை முழுகுவார்கள். எண்ணெயைப் போக்குவதற்கு சீயக்காய் தேவையாக இருந்தது. அதற்கு முன்னால் "அரப்புத்தான் உபயோகிக் கும் வழக்கமிருந்தது. அரப்பு என்பது இலுப்பைப் புண்ணாக்கு, அரப்பை இடித்து, நீரில் போட்டு, அதனுடன்

Page 54
104 மலரும் நினைவுகள்
ஒரு எலுமிச்சம் பழத்தையும் போட்டு அவிப்பார்கள். முதலில் எலுமிச்சம் பழத்தை நன்றாகத் தலையில் தேய்த்துவிட்டு பிறகு அரப்பைத் தேய்ப்பார்கள். எப்படித்தான் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் அரப்புத் தூள் கண்ணுக்குள் புகுந்து நெடு நேரம்வரை கண்ணை உறுத்திக் கொண்டிருக் கும், அரப்பு தலைமயிரை முரடாக்கி விடும் என்பது போன்ற எண்ணத்தினால் பிறகு அநேகமானோர் சீயக்காயை!ே! உபயோகித்தார்கள். பிறகு சீயக்காய் தூளாகவே பக்கெட்டு களில் வந்துவிட்டது. அதுவும் போய் இப்போது "ஷாம்பூ" தேவைப்படுகிறது.
எண்ணை முழுக்கென்றால் சும்மா ஒருகை எண்ணை யைத் தலையில் வைத்து முழுகுவதல்ல. கோவணத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே எண்ணைக் குளியல்தான். எண்ணை வைத்துவிட்டால் உடனே போய் முழுக விடமாட்டார்கள். உடம்பல் எண்ணை ஊறுமட்டும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்துதான் முழுக வேண்டும்.
முழுக்குத் தினத்தில் சாப்பாடும் சிறப்பாக அமையும். ஊன் உண்பவர்களால் அன்றைய தினம் பல கோழிகளின் ஆயுள் முடியும். அன்றைக்குச் சில பத்தியங்களும் காக்க வேண்டும். குளிரான பழங்கள் உண்ணக் கூடாது. வியர்வை வரும்படி வேலை செய்யக் கூடாது. ஆண் பெண் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படிச் சில பத்தியங்கள் உண்டு.
ஒழுங்காக எண்ணை வைத்து முழுகாவிட்டால் உடம்பில் சூடு சேர்ந்து பலவித தொந்தரவுகளும் ஏற்படுமென்று சொல்
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் "தமிழ் வாணன் எண்ணை முழுக்குப் பற்றி ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அது தேவையற்ற ஒரு வேலையென்றும்,

வரதர் , 105
அதனால் பெரிய பலன் ஏதுமில்லையென்றும் பல ஆதாரங் களுடன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நான் எண்ணை முழுக்கை நிறுத்திவிட்டேன். (எனக்குப் பிடிக்காத ஒரு வேலையை நிறுத்துவதற்கு அந்தக் கட்டுரை ஒரு சாட்டாகவும் அமைந்தது!) எண்ணை முழுக்கினால் ஏற்படக் கூடிய நய நட்டங்களைப் பற்றி என்னால் சரிவர எழுத முடியவில்லை. ஆனால் எண்ணை முழுக்கை நிறுத்தியதனால் என்னுடைய உடம்புக்கு எவ்விதக் கெடுதியும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
அப்பாவின் கடையில் சீயக்காய்ப் பெட்டிக்குப் பக்கத் தில் தான் "ஐஞ்சறைப் பெட்டி இருந்தது சுமார் நான்கு அடி நீளமும், இரண்டு அடி அகலமுமான ஒரு நீளப் பெட்டி, குறுக்கும் நெடுக்கும் பலகைகள் போட்டு சிறிதும் பெரிது மான பல அறைகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவைகளுக் குள்தான் மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் முதலிய பலசரக்குகள் இருந்தன. ஒரு பெரிய அறையில் செத்தல் மிளகாயும், இன்னொன்றில் ஈரவெண்காயமும் இருந்தன. ஈரவெண்காயம் என்று புதிதாக ஒன்றுமில்லை. சாதாரண வெண்காயந்தான். ஆனால் அதை ஈரவெண் காயம்" என்று சொல்லுவோம். அது ஏன் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. சீரகத்தை "நற்சீரகம்" என்போம் , இன்னொரு சீரகம் இருந்தது. அதைப் பெருஞ் சீரகம்" என்போம். "சோம்பு" என்றும் சொல்வதுண்டு. இறைச்சிக் கறி ஆக்குகிறவர்கள்தான் பெருஞ்சீரகம் வாங்கு வார்கள் அந்தப் பெட்டியில் ஒரு சிறிய அறையில் பாக்கு இருந்தது. அதைக் கொட்டைப் பாக்கு" என்போம். பாக்கைச் சீவி சீவலாகவும் விற்பதால் இதைக் ‘கொட்டைப் பாக்கு" என்று குறிப்பிட்டிருக்கலாம். பாக்குச் சீவலில் இரண்டு விதம் உண்டு. ஒன்று பாக்குவெட்டியால் கை யினால் சீ6 எடுப்பது. இந்தப் பாக்கு வெட்டியில்தான்

Page 55
106 மலரும் தினைவுகள்
எத்தனை விதம் இருந்தது. சில பாக்குவெட்டிகள் கலை யுணர்வோடும் செய்யப்பட்டிருக்கும்.
கைச்சீவலை விட்டால் மற்றது "மெஷின்" சீவல் சுமார் ஒன்றரை அடி நீளமான மரக்குத்தியில் பாக்குகளின் அடிப் பாகத்தைப் பொருத்தக் கூடியதாக சிறு குழிகள் இடைவெளி விட்டுச் செய்யப்பட்டிருக்கும். அந்தக் குழிக்குள் சுமார் 10-12 பாக்குகளை வரிசையாகப் பொருத்தி வைப் பார்கள். பிறகு மரம் சீவும் சீவுளியினால் மெல்லிதாக-கடதாசிச் தடிப்பில் சீவுவார்கள். மெலிதாக இருப்பதால் அவை சுருண்டு சுருண்டு விழும். பொன்னாலைக் கோயில் திருவிழாக் காலத்தில் ஒருவர் தினந்தோறும் "இந்த மெஷின்" பாக்குச் சீவிக் கொடுப்பதை நான் பார்த்திருக் கிறேன். திருவிழாக் காலத்தில், திருவிழா முடிந்ததும் வந்தவர்கள் எல்லாருக்கும் விபூதி, தீர்த்தம் சந்தனம் என்பவற்றொடு வெற்றிலை பாக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதற்குப் பாக்கைக் கையால் சீவி மாளாது என்று மெஷினில் சீவி எடுப்பார்கள். மெஷின் சீவல் பொலிவாகவும் இருக்கும்.
அந்தக் காலத்தில்-சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சதம் கொடுத்துப் பலர் கறிச் சரக்கு வாங்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தட்டத்தில் கொஞ்சம் மல்லி, ஐந்தாறு மிளகு, கொஞ்சம் சீரகம், ஒரு சிறு மஞ்சள் துண்டு இவ்வளவையும் போட்டு வாங்க வருபவர் சால் வைத் துண்டை விரித்துப் பிடிக்க, அப்பா அந்தச் சரக்கை அதில் கொட்டி விடுவார். இவ்வளவுக்கும் ஒரு சதந்தான் பெறுமதி (ஒரு ரூபா வல்ல; ஒரு சதம்!)
பலர் இப்படித்தான் அன்றாடக் கறிச் சரக்கு வாங்கு வார்கள். மிக மிகச் சிலர்தான் இவைகளைக் கூடுதலாக வாங்கி உரலிலிட்டு இடித்து, தூளாக்கி வைத்திருப்பார்கள், இப்போது உரலாவது உலக்கையாவது- எல்லாவற்றுக்கும் மெஷின்

வரதர் 07
கடையின் ஒரு பக்கத்தில் தேங்காய்கள் குவிக்கப் பட்டிருக்கும். ஒரு தேங்காயின் வீலை இரண்டு அல்லது மூன்று சதம் இருக்குமென்று நினைக்கிறேன். அதைக்கூட முழுத் தேங்காயாக வாங்குகிறவர்கள் குறைவு, உடைத்துப் பாதித் தேங்காய் வாங்குவார்கள். அதற்கும் வழியில்லாத சிலர் சொட்டாகத் தோண்டி அரைச் சதத்துக்கு வாங்குவது முண்டு.
அந்தக் காலத்தை நினைத்துப் பார்த்தால் இப்போது மக்களின் "வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்ந்திருக்கிற தேன்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைக்கும் மற்றைய பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்கள் மிகவும் கீழே தான் இருக்கிறோம். (இன்றைய போர்க்காலச் சூழ் நிலையில் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பின்னேறிவிட்டோமென்பது வேறு விஷயம்.)
தேங்காய் குவியலுக்குப் பக்கத்தில் தேங்காயெண்ணை டின்னும், அதற்குப் பக்கத்தில் வெற்றிலைக் கூடையும் இருந்தன. அந்தக் கூடையில் எப்போதும் நாலைந்து கட்டு வெற்றிலை இருக்கும். ஒரு கட்டில் நூறு வெற்றிலை. அந்தக் காலத்தில் வெற்றிலை, பாக்கு மிக முக்கியமான பொருட்கள். பொதுவாக எல்லாருமே வெற்றிலை பாக்கு உண்பார்கள். எல்லார் வீட்டிலும் வெற்றிலைத் தட்டம் இருக்குக் இந்தத் தட்டங்கள்தான் எத்தனை வகை சில: கீழே கால் வைத்து சுமார் அரை அடி உயரத்திலிருக்கும். எல்லாமே பித்தளைத் தட்டங்கள்தான். பல தட்டங்களில் சித்திரவேலைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஒருவர் வீட்டுக்கு (ன்னொருவர் போனால் முதலில் வெற்றிலைத் தட்டத் தைக் கொண்டு வந்து வைத்துத்தான் உபசரிப்பார்கள்.
திருமணம் முதலிய எந்தக் கொண்டாட்டமாயிருந்தா லும், வெற்றிலை பாக்குக் கொடுப்பது மிக மிக முக்கியமான Ceith pr.

Page 56
其08 மலரும் நினைவுகள்
வெற்றிலை பாக்குப் போடுவது சாப்பிட்ட உணவைச் சீரணிக்கச் செய்யுமென்றும், வாயில் துர்நாற்றத்தைப் போக்குமென்றும் சொல்வார்கள். சில பெண்களுக்கு வெற்றிலை பாக்குப் போடுவதால் உதடுகள் சிவந்து (லிப்ஸ்டிக் பூசியது போல) அழகாகவும் இருக்கும்.
வெற்றிலைச் சாற்றைத் துப்புவதனால் பல இடங்களில் அது அசிங்கமாக இருக்கும், முதலில் பாக்கை வாயில் போட்டு சப்பிக்கொண்டு, அதன் பின் வெற்றிலையில் காம் பையும் நரம்புகளையும் களைத்து அதன்மேல் சுண்ணாம்பு பூசி வாயில் போட்டு மெல்லுவார்கள். சிலர் இவற்றுடன் புகையிலையும் ஒரு துண்டைச் சேர்த்துக்கொள்வார்கள். இப்படிப் புகையிலை சேர்ப்பவர்கள்தான் சாறைத் துப்புவது அதிகம்.
பிற்காலத்தில் மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் டாக் டர் சாக்கோ என்பவர் ஆஸ்பத்திரிக்குள்-வார்டுகளில்வெற்றிலை வைத்திருப்பதற்குத் தடை விதித்ததுண்டு. வெற்றிலையைப் போட்டு, அதன் சிவந்த சாறைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் பலரும் துப்பி அசிங்கப்படுத்தி யதே அவர் அப்படித் தடை விதித்ததற்குக் காரணம். ஆனால் பலர் களவாக வெற்றிலையை ஒளித்து மறைத்து உபயோகித்துக்கொண்டுதாணிருந்தார்கள். சிகரெட், பீடி, சுருட்டுக் குடிப்பவர்கள்போல வெற்றிலை போட்டுப் பழகிய வர்களும் அது இல்லாமல் இருக்க முடியாது.
அப்பாவின் கடையில் இரண்டு சாக்குகளில் புகையிலை கள் தனித்தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் தின் புகையிலை, மற்றதில் சுருட்டுச் சுற்றும் புகையிலை,
புகையிலைச் சுருட்டுக் குடிப்பவர்களும் அந்தக் காலத் தில் அதிகம். பெண்கள் பலர்கூடச் சுருட்டுக் குடிப்பார்கள். சுருட்டாக விற்பதை வாங்குபவர்கள் குறைவு. தாங்களே புகையிலையை வாங்கி, வேண்டிய அளவுகளில் கிழித்துச்

வரதர் 109
சுருட்டாக்கிக் கொள்வார்கள். அதுவும் ஒரு கலை, அப்போது சுருட்டு வியாபாரம் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று. பல ஊர்களிலும் சுருட்டுக் கொட் டில்கள்" இருந்தன. இப்போதாயின் அவற்றுக்கு பெயர் குட்டி "சுருட்டுத் தொழிற்சாலை’ என்று சொல்வார்கள். அப்போது மிகச் சிலவற்றைத் தவிர மற்றவைகளுக்குப் பெயர் கிடையாது. "சுருட்டுக் கொட்டில்கள் தான்!
வேறு வேலை கிடையாதவர்களெல்லாம் சுருட்டுக் கொட் டில்களில் போய், சிறிது காலம் பழகி, சுருட்டுக்காரர்கள்" ஆகிவிடுவார்கள். நாட் சம்பளம், மாதச் சம்பளம் என்றெல் லாம் கிடையாது. ஆயிரம் சுருட்டுச் சுற்றினால் இவ்வளவு கூலி என்றுதான் கணக்கு. அவரவர் திறமைக்கும் உழைப் புக்கும் ஏற்பச் சம்பாதித்துக்கொள்ளலாம்.
இந்தச் சுருட்டுக் கொட்டில்கள் பற்றி எனக்கு நேரில் பார்த்த பட்டறிவு எதுவுமில்லை. அதனால் அதுபற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆனால் இந்தச் சுருட்டுக் கொட்டில்களைப்பற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றன என்று மட்டும் தெரியும். யாராவது தெரிந்தவர்கள் இதுபற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதலாம், சுருட்டுக்குத் தேவையான புகையிலையைச் சேகரிப்பது, பாதுகாப்பது, பின்னர் சுருட் டுச் சுற்றுவதற்குத் தோதாகக் கிழித்து தயார் செய்வது, சுருட்டுகளைச் சுற்றும் விதம், சுருட்டுக் கொட்டிலின் அமைப்பு, சுருட்டுகளுக்கு "கோடா" போடுவது, சிறு சிறு கட்டுகளாகக் கட்டுவது, அவற்றைப் பனை ஓலைப் பாயினால் சுற்றி சிப்பங்கள் ஆக்குவது, விற்பனைக்காகச் சிங்கள ஊர் களுக்கு அனுப்புவது, "யாழ்ப்பாணத் திறம் சுருட்டு" என்ற புகழ். சுருட்டு முதலாளிகள், தொழிலாளர்கள் - இப்படிப் பல விடயங்களைப்பற்றியும் ஒரு பெரிய கட்டுரை எழுதலாம்.
அந்தக் காலத்திலேயே சுருட்டுக்குப் போட்டியாக சிக ரெட்டும், பீடியும் வந்துவிட்டன. இவைகள் வெளிநாடுகளி லிருந்தே இறக்குமதியாயின. சிகரெட், பிரித்தானியாவி

Page 57
10 மலரும் நினைவுகள்
லிருந்து வந்ததென்று நினைக்கிறேன். பீடி இந்தியாவி லிருந்து வந்தது. 'சொக்களால் ராம் சேட் பீடி' என்ற பெயர் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
சிகரெட் சிவப்பு நிறக் கடதாசி சுற்றிய வட்ட டின்னில் இருந்தது. "எலிபன் (யானை) மார்க் சிகரெட், ஒரு டின் னில் 100 சிகரெட்டுகள் இருக்கும். ஒரு சிகரெட் இரண்டு சதம் விற்றதாக நினைவு, இரண்டு சதம் கொடுத்து சிகரெட் வாங்கும் தகுதி மிக மிகச் சிலருக்கே உண்டு. அதனால் சிகரெட் உபயோகம் அவ்வளவாக இல்லை. ஆனால் பீடி ஒரு சதத்துக்கு மூன்றோ நாலாக இருந்தன. இதனால் பீடி உபயோகம் மிக வேகமாகப் பரவிற்று.
சிகரெட் டின்னுக்குப் பக்கத்தில் நெருப்புப் பெட்டி பக்கட் இருந்தது. நெருப்புப் பெட்டியும் அந்தக் காலத்தில் வெளி நாட்டிலிருந்துதான் வந்தது. சுவீடன் நாட்டிலிருந்து வந் திருக்க வேண்டும்.
மூன்று நட்சத்திரம்" அடையாளமாகப் போட்ட தீப் பெட்டிகளை எனக்கு நினைவிருக்கிறது. ஒரு பெட்டியின் விலை மூன்று சதமென்று நினைக்கிறேன்.
மூன்று சதம் விற்றாலும் பல வீடுகளில் தீப்பெட்டியே இருக்காது. சுருட்டுப் பற்றவைப்பவர்கள் அடுப்பிலிருந்து ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்துப் பற்ற வைப்பார்கள். அடுப்புப் பற்றவைப்பதற்கும் சிலர் அடுப்பு எரியும் பக்கத்து விட்டில் போய் ஒரு பன்னாடையில் கொஞ்ச நெருப்புந் தணல் வாங்கி வந்து, அதை ஆட்டியும் தேதியும் நெருப்பை உண்டாக்கிக்கொள்வதுண்டு.
அந்தக் காலத்துச் சிக்கன வாழ்வு தொடர்ந்து வந் திருக்குமானால், இன்றைய போர்க்காலப் பஞ்சம் யாழ்ப்பா ணத்து மக்களை கொஞ்சமும் பாதித்திருக்காது
ஒரு அறுபது ஆண்டுக் காலத்துக்குள், எவ்வவவோ ஆடம்பர வாழ்க்கையைப் பழகிக்கொண்டு இப்போது அவை கள் கிடைக்கவில்லையே என்று கூக்குரலிடுகிறோம்!

a Tas ft
இரண்டு சிறிய டின்களில் சீனி இருந்தது. ஒன்றில் மாச் சீனி (ஐசிங் சுகர்) மற்றதில் தற்போது சாதாரண பழக்கத்திலுள்ள சீனி. அதை "கிறேப் சீனி என்போம்.
மாச்சீனி ஒரு றாத்தல் மூன்று சதம். கிறேப் சீனி ஒரு றாத்தல் இரண்டரைச் சதம்.
தேயிலையும ஒரு டின்னில் இருந்தது. அப்படித் தேயி லையை இப்போது கடைகளில் இருப்பது போல் gif6 Tes இல்லாமல் நீள நீள இலைச் சுருள்களாக இருக்கும். டின்னைத் திறந்தால் "கம்" மென்று அருமையான தேயிலை மணம் வீசும்.
கோப்பிக் கொட்டையும் ஒரு டின்னில் இருந்தது.
அப்போதெல்லாம் கோப்பி, தேநீர் குடிப்பவர்கள் மிகக் குறைவு. சுகயினமானவர்களுக்கு கோப்பி, தேநீர் கொடுப்ப துண்டு. காலையில் பழஞ்சோற்றுத் தண்ணிர் குடிப்பார்கள்: அதற்குள் வெங்காயத்தை வெட்டிப் போட்டு, சிறிது மோகும் கலந்து குடிப்பதுண்டு. அநேகமாக எல்லார் வீட்டிலும் மோர் இருக்கும். குடிபானங்களில் மோரும் முக்கியமானது. சில எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து தண்ணீர் கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிப்பார்கள். கருப்ப நீர்க் காலத்தில் கருப்பருேம் குடிப்பார்கள். (கள் குடிப்பவர்களின் கதை வேறு)
எனக்குத் தெரிய, தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து, ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினா கள், தேயிலைப் பிரசார சபையின் வேலையாக இருந்திருச் கும். அதன் பயன்? இன்றைக்கு காலையில் TOpisg56 Loir தேநீர் குடிக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே JB5 ArdFubgraé விட்டது போன்ற மனப்பான்மை வத்து விடுகிறது!
அறுபது ஆண்டுகளுக்குள் எப்படி எப்படியெல்லாம் மாறி Grib '', d'

Page 58
112 மலரும் நினைவுகள்
ஒரு வகையில் பார்த்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது உண்மைதான்.
ஆனால் இன்றைய போர்க் காலச் சூழ்நிலையில் ஒரு உண்மை தெளிவாகத் தெரிகின்றது. அன்று எங்களுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் எங்கள் நாட்டி லேயே உற்பத்தி செய்து கொண்டோம். அல்லது எங்கள் நாட்டில் கிடைக்க கூடிய பொருட்களுக்கு ஏற்றதாக எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.
ஒரு உதாரணத்துக்குப் பார்த்தால் எரி பொருளுக்காக இன்று தவண்டையடிக்கிறோம்! அந்தக் காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை! அவரவர் வீட்டுச் சமைய லுக்குத் தேவையான எரிபொருள் அவரவர் வளவுகளுக்குள் ளேயே இருக்கும். சொந்த வளவுகள் இல்லாதவர்கள் கூட, அங்கே இங்கே தேடி விறகுகளை இலவசமாகவே பெற்றுக் கொள்வார்கள்.
விளக்கு எரிப்பதற்கு மண்ணெய் வருமுன் தேங்கா யெண்ணை, இலுப்பெண்ணை முதலிய எண்ணைகளை சிக்கனமாக உபயோகிப்பாச்கள்
போக்கு வரத்துக்கு, பிறவியிலேயே அமைந்த இரண்டு கால்கள் இருந்தன. பத்துப் பதினைந்து மைல் தூரங்களைக் கூட நடந்து போய் வருகிறவர்கள் உண்டு. இதற்குமேல் மாட்டு வண்டிகள் இருந்தன.
எரிபொருள் கஷ்டம் எப்படி வரும்!
அப்பாவின் கடையிலே இன்னும் பல பல பொருள்கள் இருந்தன. எங்களுர் மக்களுக்கு எது எது தேவையாக இருந் ததோ அவையெல்லாம் அநேகமாக அந்தக் கடையில் இருந்தன.
ஒரு பெரிய சாடியில் சர்க்கரை, ஒரு தகர டப்பாவில் கற்கண்டு. இப்போது கற்கண்டு என்பது ஏதோ சீனியைக்

வரதர் 1.3
கட்டியாக்கி வைத்தது போலிருக்கிறது. அன்றைய கற் சண்டை எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக் கிறது. அவற்றில் சில பக்கங்கள் கண்ணாடி போல அழுத்த மாக இருக்கும். இடையிடையே சில கற்கண்டுகள் நூலினால் கோர்க்கப்பட்டிருக்கும். கற்கண்டு டின்னைத் திறந்து நான் அடிக்கடி ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டு கொள் வேன். சில சமயங்களில் அப்பா வயிற்றில் பூச்சி வைக்கும்" என்று பேசி எடுக்க வேண்டாமென்று தடுப்பதுமுண்டு. என்றாலும் தினசரி ஏழெட்டுக் கற்கண்டுக் கட்டிகளையாவது நான் எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். இனிப்பு அதிகம் சாப்பிட்டால வயிற்றில் பூச்சி உண்டாகும் என்பது உண்மையாகத்தானிருக்கும். ஏனென்றால் அடிக்கடி சுமார் 3-4 மாதங்களுக்கொருமுறை எனக்குப் பேதி மருந்து வாங்கிக் கொடுப்பார்கள் . பரியாரி இராசாதான் எங்களு டைய குடும்ப வைத்தியரும் நண்பருமாக இருந்தபோதிலும், பரியாரி பெத்தாரிடம்தான் எனக்குப் பேதி மருந்து வாங்கித் தருவார்கள். பணம் கொடுக்காமல் மருந்து வாங்கினால் அது சித்திக்காது என்று சொல்லி, இருபத்தைந்து சதம் தந்து விடுவார்கள். நான் அதைக்கொண்டு போய் பெத்தார் பசி யாரிடம் கொடுத்து, "பச்சைத் தண்ணிப் பேதி” வாங்கி வருவேன். வழக்கமாகப் பேதி மருந்தை விழுங்கிவிட்டு, தேநீர் குடிக்க வயிற்றால் போகும். பச்சைத் தண்ணீர்ப் பேதி மருந்தை விழுங்கிவிட்டு அவ்வப்போது பச்சைத் தண்ணிரைக் குடிக்க வயிற்றால் போகும். ஒருமுறை அளவுக்கதிகமாக வயிற்றால் போய் நான் களைத்து விழுந்ததும், பிறகு வயிற் றால் போவதை நிறுத்துவதற்கு மருந்து வாங்கித் தந்து நிறுத்தியதும் நினைவிருச்கிறது. இப்போதெல்லாம் கண்ட படி பேதி மருந்து எடுக்கக் கூடாதென்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். அது அந்தக் காலம்! காலத்துக்குக் காலம் வைத்திய முறைகளும் மாறிக் கொண்டுதானே இருக் dfloir pBUT.
8سس-up

Page 59
卫14 மலரும் நினைவுகள்
கற்கண்டை விட பல்லி முட்டை" என்ற இனிப்பும் ஒரு போத்தலில் இருந்தது. அதை இனிப்பு என்று சொல்வ தில்லை. ‘ஒரு சதத்துக்குப் பல்லிமுட்டை தாருங்கோ’ என்று தான் கேட்பார்கள், சிறு சிறு உருண்டைகளாக வெள்ளை, சிவப்பு மஞ்சள், பச்சை என்று பல நிறங்களிலும் அந்த இனிப்பு உருண்டையாய் இருக்கும். வெள்ளை நிறத்திலிருக் கும் இனிப்பு சரியாகப் பல்லியின் முட்டையைப் போலவே இருக்கும். அதனால் அதற்கு ‘இனிப்பு’ என்ற பெயர் மறைந்து "பல்லிமுட்டை' என்ற பெயரே வழங்கிற்று.
சிறு சிறு துண்டுகளான "சொக்கிளேற்றுகளும் அப் போதே வந்திருந்தன. அழகான வட்ட, சதுர டின்களில் அவை வரும். ஒவ்வொரு துண்டும் முதலில் சிறு ஒயில் பேப்ப ரால் சுற்றப்பட்டு அதன் மீது பல வர்ணங்களில் அழகான டிசைன்கள் போட்ட ஈயவத்திகளினால் சுற்றப்பட்டிருக்கும். "சொக்கிளேற் "சைச் சாப்பிட்டுவிட்டு நான் அந்த ஈய வத்தி களை எறிந்துவிட மாட்டேன். அவற்றை நெளிவு நிமிர்த்தி அடுக்கிச் சேர்த்து வைத்திருந்தேன். எவ்வளவு அழகான வத்திகள் அவை!
மூன்று தகர டப்பாக்களில் "பிஸ்கட்டுகள் இருந்தன. அந்த டப்பாக்களின் முன்பக்கத் தகரம் வெட்டப்பட்டு கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. பிஸ்கட்" என்றதும், நைஸ், மாறி, கிறிம்கிராக்கர்ஸ் என்ற வகைகளை நினைத்துவிட வேண்டாம். ஒரு டின்னில் றஸ்க், இன் னொன்றில் மடத்தல், மற்றதில் பொழிஞ்சி. இந்தப் பொழிஞ்சி பிஸ்கட் இப்போது அருகி விட்டது. சிறுசிறு துண்டுகளாக, சீனிக் கரைசலில் அவைகள் தோய்க் டிருக்கும். தின்பதற்கு "மொரு மொரு என்றிருப்பதோடு இனிப்பாகவும் இருக்கும்.
"பொழிஞ்சி" என்றதும் என்னைப் படிப்பித்த ஒரு நல்ல ஆசிரியரின் நினைவு வருகிறது. அவருக்கு "பொழிஞ்சியர்* என்று பட்டம். பொதுவாக நாங்கள் அவருடைய பெயரைச்

வரதர் 115
சொல்வது கிடையாது. "பொழிஞ்சியர்' என்றுதான் கதைப் போம். அவர் முதன் முதலாகப் பாடசாலைக்கு வந்ததும் அவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்தோம் . ஒரு மாணவன் **டேய், இவர் துறைமுகத்தடியால்தான் வந் திருப்பார். அங்கே பொழிஞ்சி கிடைக்கும். பொழிஞ்சி வாங்கித் தின்று கொண்டு வந்திருப்பார்' என்று தனது கற் பனையை எடுத்துவிட்டான். எப்படியோ அன்றுமுதல் அவர் *பொழிஞ்சியர்" ஆகிவிட்டார்!
அந்தக் காலத்திலேயே ஆசிரியர்களுக்குப் பட்டம் சூட்டு வதில் மாணவர்கள் வல்லுநர்களாக இருந்தார்கள். வாக்கர், அவட்டை பிரசங்கி, மீசையர், சூழர்-என்று இப்படிப் பல பட்டங்கள் கொண்ட ஆசிரியர்களிடம் நான் படித்திருக்கின் றேன். தீவாத்தியார்' என்பவரும் இவர்களில் ஒருவர் தான் !
பிஸ்கட் டின்களுக்குப் பக்கத்தில் அகலமான வாயுள்ள் ஒரு போத்தலில் நூல் பந்துகள் இருந்தன. இவை தையல் தைப்பதற்கான நூல் பந்துகள் . தையல் ஊசிக்கும் ஒரு சிறு பெட்டி மேசையின் மீது இருந்தது. அப்போது கிராமத்தில் தையல் நூலும் ஊசியும் அவசியமான தேவைகள். தையல் மெஷின்களோ, தையற்காரர்களோ அங்கே இருந்ததில்லை. கிழிந்து போன வேட்டி, சால்வை, சேலைகளைத் தூக்கி மூலையில் போட்டுவிட மாட்டார்கள். கிழிசல்களைத் தைத்துத் தைத்து உபயோகிப்பார்கள். அநேகமாக பல பெண்களுக்குத் தைக்கத் தெரியும். தைப்பதென்றால் கிழிந்த துணிகளைத் தைப்பது; பெண்கள் தங்களுக்குத் தேவையான *றவிக்கை'யையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். "ஃபாஷன் சமாச்சாரமெல்லாம் கிடையாது. கையையும் கழுத்தையும் வெட்டி பொருத்தி ஒரு சட்டை தைத்தால் சரி: ஆண்கள் பொதுவாகச் சட்டை போடும் பழக்கம் இல்லை. அதனால் தையல் பிரச்சனையும் இல்லை.
அந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளுக்குத் தையல்
பாடம்" என்று ஒரு பாடம் முக்கியமாக இருந்தது. முக்கிய

Page 60
1.16 மலரும் நினைவுகள்
மாக ஊசியில் நூல் கோர்க்கவும், இரண்டு விரல்களைமடித்து அதனூடே தைக்க வேண்டிய துணியை விறைப்பாகப் பிடித்துக் கொள்ளவும், நூலோடவும், ‘விசுப்பம் தைக்கவும் அதற்கு மேல் போனால் தெறிஓட்டை தைக்கவும் பெண்கள் பாடசாலையில் பயின்று கொள்வார்கள்.
இப்போது பாடசாலைகளில் பெண் ஆசிரியைகளே பெரும்பான்மையாகி விட்டார்கள் போலிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒரு பாடசாலைக்கு ஒரே ஒரு பெண் ஆசிரி:ை தான் இருப்பார் அவரை "ஆசிரியை’ என்றோ ரீச்சர்' என்றோ சொல்வதில்லை. "தையலம்மா’ என்றுதான் சொல் வார்கள். அவருக்கு முக்கியமான வேலை பெண் பிள்ளை களுக்கு தையல் பாடம் படிப்பிப்பதுதான். நேரமிருந்தால் அரிவரி, முதலாம் வகுப்புகளுக்கு பாட்டு, வாசிபபு, கணிதம் முதலிய சில பாடங்களையும் படிப்பிப்பார்.
1940ஆம் ஆண்டில் மூளாய் சைவப்பிரகாச வித்தியா சாலையில் நான் எஸ். எஸ். ஸி வகுப்பில் படித்துக் கொண் டிருந்தபோதுகூட அந்தப் பெரிய பாடசாலையில் ஒரே ஒரு பெண் ஆசிரியைதான் இருந்தார், அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. அவரையும் தையலம்மா என்றுதான் சொன் னோம். ஆனால், அவர் தையல்பாடம் படிப்பித்தாரா என்பது தெரியவில்லை. பாலர் வகுப்புத்தான் அவருக்குரிய வகுப்பாக இருந்தது!
கடையில் தையல் ஊசிச்சரை இருந்த சிறிய மேசையில் சிகரட், பீடியுடன். ஒருபக்கத்தில் ஒரு கர்ப்பூரப் பெட்டியும் இருக்கும். அந்தச் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற கிருஷ் ணன் கோயில் சமீபத்தில் இருந்ததால் கர்ப்பூர வியாபாரம் ஒழுங்காய் நடந்தது. கர்ப்பூரம் இப்போது போல வெறும் கடதாசிப் பக்கட்டுகளில் வரவில்லை. அதுவும் வெளி நாட்டி லிருந்தே வந்தது. கைக்கு அடக்கமான-சுமார் ஒரு சாண் நீளம், அரை அடி அகலமான தகரப் பெட்டிக்குள் சிறு சிறு பக்கட்டுகளாக அது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கர்ப்பூரம்

Ghrib i 117
முடிந்தால் அந்தத் தகரப் பெட்டி பல தேவைகளுக்கு உதவிற்று. முக்கியமாக பெண் பிள்ளைகளின் தையல் பெட்டி யாக அந்தக் கர்ப்பூரம் வந்த பெட்டிதான் வழங்கிற்று.
அந்தச் சிறிய மேசைமீது இன்னொரு முக்கியமான பொருள் இருந்தது. அதுவே கடையின் கணக்குக் கொப்பி. அந்தக் கொப்பியில் கொள்முதல் கணக்கோ, விற்று வரவுக் கணக்கோ-அப்படியான ஒன்றும் இருக்காது. கடன் வாங்கு பவர்களின் பெயர்களும், இன்ன திகதியில் இன்ன பொருள் இன்ன விலைக்குக் கடனாக வாங்கினார் என்ற விபரமும் இருக்கும். உண்மையில் அது கடைக்கணக்குக் கொப்பியல்ல. கடன் கணக்குக் கொப்பிதான்.
கடனுக்குப் பொருள் கொடுக்கும்போது சிட்டை எழுது வதோ, கடன் வாங்குபவரிடம் கையெழுத்து வாங்குதோ கிடையாது.
அநேகமாகக் கடன் வாங்குபவர்கள் ஒழுங்காக அவ்வப் போது பணத்தைக் கொடுத்து விடுவார்கள். யாரும் கணக்குத் தவறு என்றோ, தான் வாங்கவில்லையென்றோ சொன் னதை நான் அறியேன். ஒழுங்காகத் திருப்பிக் கடன் பணத்தைக் கட்டக் கூடியவர்களுக்குத்தான் கடன் கொடுக்கப்
Lu Gb.
எப்போதாவது ஒருவர் கடனைக் கட்டாமல் நெடுநாட் களுக்கு இழுத்தடித்தாரானால், அப்பா கணக்குப் புத்த கத்தை, கிராமக் கோட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் கடனாளியைச் சித்தாரிப்பார்" (வழக்குப்பதிவு செய்வார்) இந்த வழிக்குக் சட்டத்தரணிகளோ வேறு எந்தச் செலவு களோ கிடையா, கிராமக் கோட்டு நீதவான். விதானை யார் மூலம் எதிரிக்குக் கட்டளை அனுப்பிக் கூப்பிட்டு, குறிப்பிட்ட ஒரு தவணைக்குள் பணத்தைக் கட்டிவிடும்படி கட்டளையிடு வார். அநேகமாக அந்த அளவில் பிரச்சினை முடிந்து விடும்.

Page 61
1.18 மலரும் நினைவுகள்
இந்தக் "கிராமக் கோடு" என்பது பின்னால் இல்லாமல் போயிற்று. சிறு சிறு வழக்குகளுக்கெல்லாம் பொலிஸ் கோட் டுக்குப் போகவும்; அங்கே சட்டத்தரணிகளுக்குப் பணம் கொடுத்துக் கெட்டழியவும் வேண்டிய நிலை ஏற்பட்டது!
கடையின் உட்பக்கச் சுவர் ஒரமாக ஒரு தடித்த நீளப் பலகை, அரை அடி உயரத்தில் கால் வைத்து வைக்கப்பட் டிருந்தது. அந்தப் பலகையின்மீது ஒரு பெரிய கடகத்தில் ஊர் அரிசி இருக்கும். அப்பாவே நெல் மூடை வாங்கி வந்து, அவித்துக் காயவைத்து, மாட்டுவண்டியில் சங்கானைக்குக் கொண்டுபோய் அங்கேயிருந்த "மில்லின் குற்றிக்கொண்டு வந்த அரிசி. மில்லிலிருந்து அரிசியை ஒரு சாக்கிலும், தவிட்டை இன்னொரு சாக்கிலும் கட்டிக்கொண்டு வருவார். தவிட்டை தலைவாசல் மூலையிலிருந்த ஒரு வெற்றுச் சீமெந்துப் பீப்பாவில் கொட்டி வைப்பார். மாடுகளுக்கு அவ்வித தவிடு கொடுப்பது வழக்கம்.
இப்போதுள்ள பலருக்கு சீமெந்துப் பீப்பாவைத் தெரி யாது. இப்போதெல்லாம் தடித்த கடதாசிப் பாக்"கில் தானே சீமெந்து வருகிறது. அந்தக் காலத்தில் சீமெந்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள். பெரிய பீப்பாக்களில்தான் வரும். சீமெந்தை உபயோகித்த பிறகு அந்தப் பீப்பா வேறு பல தேவைகளுக்குப் பயன்படும்.
சீமெந்துப் பீப்பா என்றதும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஒரு வீட்டில் சிறு பிள்ளைகள் ஒளித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒளித்து விளையாடுவதும் இப்போது அருகிக் கொண்டு வருகிறது. ஏழெட்டுப் பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள். ஒரு பிள்ளையின் கண்களை இன்னொருவர் பொத்திக் கொண் டிருக்க, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிப்போய் ஒவ்வொரு மறைவிடங்களில் ஒளித்துக் கொள்வார்கள். பிள்ளையின் கண்களைப் பொத்திக் கொண்டிருப்பவர் **கண்ணாரே கடை யாரே. காக்கணமாம் பூச்சியாரே! எனக்கொரு முட்டை

MA TAS f' " ... , , . 119
உனக்கொரு முட்டை பிடித்துக் கொண்டோடி வா!" என்று ஒரு பாட்டுப்பாடி கண்களை மூடிய கைளை எடுத்துப் பிள்ளை யைப் போகவிடுவார். அந்தப் பிள்ளை ஒடி ஒடி மற்றவர்கள் மறைந்திருக்கும் இடங்களைத் தேடி அவர்தளைக் கண்டு பிடிக்க வேண்டும். முதலில் கண்டு பிடிக்கப்படுபவரே அடுத்த முறை கண்கள் பொத்தப்படுவார்.
என் வீட்டில் இப்படி ஒளித்து விளையாடிக் கொண் டிருந்த போது ஒரு முறை ஒரு சிறு பிள்ளையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் கண்டு பிடிக்க வேண்டிய வர் மாத்திரமன்றி எல்லாப் பிள்ளைகளுமே சேர்ந்து தேடத் தொடங்கினார்கள். பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். பலனேதுமில்லை. கடைசியில் வீட்டுப் பெரியவர்களுக்கு மட்டுமன்றி அயலட்டைக்கும் இது தெரியவரவே, எல்லோரு மாகச் சேர்ந்து அந்தப் பிள்ளையைத் தேடினார்கள். கிணற்றையும் எட்டிப் பார்த்தார்கள்.
கடைசியாக அவர்களுடைய வீட்டுத் தலைவாசலில் கிடந்த சீமெந்துப் பீப்பாவுக்குள் அந்தப் பிள்ளை இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டது!
ஒளிப்பதற்கு நல்ல இடமென்று கருதி சீமெந்துப் பீப்பா வுக்குள் இறங்கிப் பதுங்கிய அந்தப் பிள்ளை சற்று நேரத்தில் அப்படியே நித்திரையாகி விட்டது! 'y
பெரிய கவலையுடன் பதறிப் போய் தேடிக் கொண் டிருந்த எல்லோரும் ஒ, ஓ என்று சிரித்தது இன்னும் நினைவிருக்கிறது.
அப்பாவின் ஊர் அரிசிக் கடகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சாக்கில் வெள்ளைப் பச்சை அரிசி இருக்கும். "ாங்கன் பச்சை அரிசி" என்று பெயர். பர்மாவிலிருந்து இறக்குமதியாவது, அப்பம், தோசை முதலிய பலகாரம் செய்பவர்கள் அந்த அரிசியைத்தான் வாங்குவார்கள்.

Page 62
120 மலரும் நினைவுகள்
பச்சை அரிசி மூண்டக்குப் பக்கத்தில் ஐந்தாறு பெரிய உமல்களில் சில பொருள்கள் இருந்தன. ஒரு உமலில் செத்தல் மிளகாய் இருந்தது. மற்றவைகளில் உழுந்து, பயறு முதலிய பொருள்கள் இருந்தன.
இப்போது எந்தப் பொருள் வாங்குவதானாலும் **பாய்க்" தேவைப்படுகிறது. முன்பு இந்த "பாய்க்'குகளின் இடத்தை உமல்களும், பெட்டிகளுமே பெற்றிருந்தன இந்த உமல்களில் எத்தனை வகை சிறிய ஒரு அடி அகலம். ஒரு அடி நீளமான உமல்களிலிருந்து பெரிய 2 அடி அகலம் , 3 அடி உயரமான உமல்களும் இருந்தன. எல்லாம் பனை ஒலையினால் செய்யப்பட்டவை. உள்ளூர் மூலப் பொருட் களைக் கொண்டு உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை. இந்த "பாக்குகளுக்காக மட்டும் ஒரு ஆண்டில் எங்களுடைய பணம் எவ்வளவு தொகையாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்பதை யாராவது அறிந்து சொன்னால் திகைப்பாக இருக்கக் கூடும்.
இப்போது கச்சான் கடலை வாங்குவதற்குக்கூட "பாக்? தேவையாக இருக்கிறது. முன்பு இப்படியான பல பொருட் களை மடி"யில்தான் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். :5டி" என்றால் தெரியுந்தானே? 'குழந்தையை மடியில் வைத்திருந் தாள்' என்று சொல்கிறோம். இது அந்த மடியல்ல. உடுத்தி விருக்கும் வேட்டியில் வயிற்றுப் பக்கமாகச் சற்றே வெளியே இழுத்தெடுத்து ஒரு சிறு "பை" போல ஆக்கிக்கொள்வது தான் மடி. **மடியில் கனமிருந்தால் வழியில் பயம்" என்ற ஒரு பழமொழியும் உண்டு.
சில சமயங்களில் "மடி"க்குப் பதிலாக "சண்டிக்கட்டை” யும் பயன்படுத்திக்கொள்ளுவதுமுண்டு. இதென்ன "சண்டிக் கட்டு" என்கிறீர்களா? உடுத்தியிருக்கும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொள்வதுதான் சண்டிக்கட்டு. இந்தச் சண்டிக் கட்டு மடிப் பின்பகுதியை ஒரு “பை”போலப் பாவித்து அதற் குள் பொருள்களைப் போட்டுக்கொண்டு நடக்கும் வழக்கமும்
இருந்தது.

வரதர் 121
கடையின் பின் சுவர் ஓரமாக ஒரு மூலையில் பெரிய தொரு பானை இருந்தது. கன்னங் கரேலென்று இருக்கும். அதற்குள் நல்லெண்ணை இருந்தது. நல்லெண்ணை அன்று மிக முக்கியமான ஒரு பொருளென்பதை முன்பே சொல்லி யிருக்கிறேன்.
கடைக்குப் பக்கத்தில் ஒரு அ. மி, பாடசாலை இருந்த தால் அதன் தேவை நோக்கி, சிலேற், பென்சில், கொப்பி, பேனை, மைக்கூடு, மைக்கட்டி, (இந்தக் கட்டியை நீரிலே கரைத்து மைக்கூட்டுக்குள் விட்டு வைத்துக்கொள்ளலாம்) முதலியனவும், புத்தகங்களான மிஷன் தமிழ்ப் புத்தகமும் * இயற்கை விளக்க வாசகம்" என்ற புத்தகமும் விற்பனைக் காக இருந்தன.
இவை எல்லாவற்றுக்கும் புறம்பாக இன்னொருவகைப் பொருள்களும் அந்தக் கடையில் இருந்தன.
எங்களூரில் புகழ் வாய்ந்த இரண்டு வைத்தியர்கள் இருந்தார்களென்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? அநேகமாக அவர்கள் நோயாளிகளுக்கு "குடிநீர் மருந்து எழுதிக் கொடுப்பார்கள். அதனால் அந்த மருந்துப் பொருள்களும் பற்பல விதமான டின்களில் இருந்தன். திற்பலி, வேர்க் கொம்பு, பரங்கிக்கிழங்கு, தேத்தாங்கொட்டை-இப்படிச் சில மருந்துப் பொருள்களின் பெயர்கள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன. ஒரு சிறிய வாய் குறுகிய சாடியில் பாதரசம்" என்ற பொருளும் மருந்துத் தேவைக்காக இருந்தது. அதிக விலையுள்ளது. செத்தல் மிளகாய் ஒன்றை எடுத்து அதன் காம்பைக் கிள்ளி விதைகளைக் கொட்டி விட்டு, அந்த மிளகாய்க் கோதுக்குள்தான் இந்தப் பாதசரம் என்ற பொருள் மிகக் கவனமாக விட்டுக் கொடுக்கப்படும். * கவனம்" என்று நான் சொல்வதில் மிகுந்த பொருள் உண்டு. பாதரசம் என்பது குழு குழு என்று திரவமு மில்லாமல் திடமுமில்லாமல் இருக்கும். ஈயம் போலக் கனக் கும். ஒரு துளி கீழே விழுந்தால் சிறு சிறு கடுகுகள் போலப்

Page 63
22 மலரும் நினைவுகள்
பிரிந்து ‘சிதறும். அந்தத் துகள்களை மெதுவாகக் கூட்டி ஒன்று சேர்த்தால் பழையபடி ஒன்றாகச் சேர்ந்துவிடும். உள்ளங்கையில் விட்டால் ஒட்டாது. தாமரையிலையில் தண்ணிர்போல ஒடிக்கொண்டிருக்கும். அதில் ஒரு சிறு துளி எடுத்து வெற்றிலை சாரோடு சேர்த்து கசக்கி, அதை ஒரு சதக் காசின்மீது தேய்த்தால், செம்பினாலான அந்த ஒரு சதம், வெள்ளிக்காசான 50 சதம்போல நிறம் மாறிவிடும். இதை யாரோ எனக்குச் சொல்லி நான் செய்து பார்த்திருக் கிறேன். (அந்தக் காலத்தில் ஒரு சதமும், 50 சதமும் ஒரே அளவானவை) அந்தப் போலி 50 சதம் பல மணி நேரங் களுக்கு நிறம் மாறாமலிருக்கும்.
அப்பாவின் கடையை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய விடயங்கள் எழுதுவதற்கு இருக்கக்கூடும். இப்போ தைக்கு நினைவில் வந்தவை இவ்வளவுதான். கடையை இவ்வளவுடன் நிறுத்திவிட்டு வேறு ஏதாவது சொல்லலாமா யார்க்கிறேன்.

14. தீ வாத்தியார்
பொன்னாலையில் ஒரு அ. மி. த. க. பாடசாலை இருந்தது அதுவே எங்களூரில் முதன் முதலாகத் தோன்றிய பாடசாலை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த ஆண் டில் அங்கே தோன்றிற்று என்பது தெரியவில்லை. யாரை யாவது விசாரித்தால் ஓரளவு-கிட்டத்தட்ட எப்போது அது தொடங்கியது என்பதை அறியலாம். ஆனால் இதை எழுதும் போது அப்படி விசாரிக்கக் கூடிய ஒருவரும் பக்கத்தில் இல்லை. நான் பிறந்தது 1924ஆம் ஆண்டில், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூட அந்தப் பாடசாலை இருந் திருக்கிறது, s
பொன்னாலையில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தின் அநேக கிராமங்களில் அ.மி.த.க. பாடசாலைகள் அந்தக் காலத்திலேயே இருந்தன. "அ.மி.த.க." என்பதன் விரி வாக்கம் " "அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை" என்பதாகும்.
அமெரிக்கன் மிஷனரிமார் தமது கிறித்துவ மதத்தைப் பாப்புவதற்காக இந்தப் பாடசாலைகளை நிறுவியதாகச் சொல்கிறார்கள்.
ఆ| . . 5 & . பாடசாலைகளைத் தவிர, றோ. க. (றோமன் கத்தோலிக்க) பாடசாலைகளும் வேறு சில மிஷன் யா.சாலைகளும் யாழ்ப்பாணக்குடா நாட்டின் பல பாகங் களிலும் பரவலாகக் கிடந்தன.

Page 64
124 மலரும் நினைவுகள்
தமது பிள்ளைகளைக் கிறித்தவர்கள் மதம் மாற்றப் போகிறார்கள் என்ற பயத்தினால், பல கிராமங்களிலிருந்த வசதி படைத்தவர்கள், தமது ஊர்களில் சைவப் பாடசாலை களைத் தொடங்கினார்கள். Q
தொடக்கத்தில் தமது சொந்தப் பணத்தினாலும், நிதி சேகரிப்பினாலும் பாடசாலைகளை நடத்தி வந்தார்கள். பிறகு அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளமும், பாடசாலை நிர்வாகத்துக்கு நன்கொடையும் கொடுக்கத் தொடங்கவே, அவர்களில் சிலர் "மனேச்சர்" என்ற பதவிப் பெயரோடு குட்டி முதலாளிகளாக விளங்கியதுமுண்டு.
மனேச்சரின் முன்னிலையில் சில ஆசிரியர்கள், காலி லிருந்த செருப்பைக் கழற்றி, தோளால் சால்வையை எடுத்து மரியாதை செய்த காலமும் உண்டு.
யார் என்ன சொன்னாலும், கிறித்துவ மிஷனரிமார்களே யாழ்ப்பாணத்து மக்களிடையே பரந்து பட்ட அளவில் கல்விக் கண்ணைத் திறந்துவிட வழி செய்தவர்கள் என்பதை உரத்துச் சொல்ல விரும்புகிறேன். அவர்களுடைய வழியைப் பின்பற்றித்தான் நல்லை நகர் ஆறுமுக நாவலர் பாடசாலை களைத் தொடங்கினார். அவரைப் பின் பற்றியே ஆங்காங் கிருந்த பல சைவப் புரவலர்கள் சைவப் பாடசாலைகளைத் தொடங்கினார்கள்.
அதற்கு முன் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் பல கிராமங்களிலிருந்த கல்வி மான்கள், சில குறிப் பிட்ட மாணவர்களுக்கு மட்டும் சைவமும் தமிழும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆர்வமும் வசதியுமுள்ள மிகச் சிலரே அவ்விதம் கல்வி பயின்றார்கள். -
அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடங்களை எனக்குத் தெரி யாது. எங்கள் ஊரில் அப்படி ஒன்று இருந்திருக்கவும் முடி யாது. வேறு பல ஊர்களில் இருந்ததாகப் பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். முறையான பாடசாலைகள் தோன்றத்

வரதர் 125
தொடங்கியதும், அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மெல்ல மெல்ல மறைந்து போயிருக்க வேண்டும்
அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடங்களின் ஆசிரியர்கள், தமது மாணவர்களிடம் மாதாந்தக் கட்டணம் அறவிட்டிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் பணம் மூலமான கொடுக்கல் வாங்கலும் அதிகமில்லை. வசதிபடைத்த வீட்டுப் பிள்ளை கள், ஆசிரியரின் வீட்டுக்குத் தேவையான அரிசி முதலிய பொருள்களை அவ்வப்போது கொடுத்திருப்பார்கள். மற்ற வர்கள் அவருடைய வீட்டில் உடலுழைப்புச் செய்திருப்பார் கள் , "குரு'வுக்குத் துணி தோய்த்துக் கொடுப்பது, கால் பிடித்து விடுவது, விசிறுவது முதலிய கடமைகளைச் சீடர்கள் செய்வது அக்காலத்து வழக்கம்.
பெரிய சங்கீத வித்துவான்களிடம் சங்கீதம் பயில்வோர், குருவின் வீட்டிலேயே தங்கியிருந்து, இப்படியான பணி விடை கள் செய்து பயிலுவது மிகப் பிற்பட்ட காலங்களிலும் வழக்கிலிருந்தது. இப்போது சங்கீதம் பயில்வதற்கும் கல்லூரிகள் வந்து விட்டனவே!
தங்களைப் பராமரிக்கும் வசதி படைத்த மாணவர்களிடம் ஆசிரியர் சற்றே மரியாதையுடன் கூடிய கவனம் செலுத்து வது தவிர்க்க முடியாமலிருந்திருக்கும். அதுபோல் தமக்கு அதிகமாகச் சேவை செய்யும் மாணவரையும் ஆசிரியர் கவனித்திருப்பார். இவர்களை விடவும் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டி திறமைசாலிகளாக விளங்கும் மாணவர்களை ஆசிரியர் அதிகம் கவனித்திருப்பார். --இது என்றுமுள்ள வழக்கு
அன்றைய குரு-சீடன் முறை வேறு. இன்றைய ஆசிரியர்-மாணவன் முறை வேறு. ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் கல்வி கற்கும் முறை யில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது!
**பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் வாங்கக் கூடாது" என்ற மாதிரியான ஒரு கொள்கையும் அந்தக்

Page 65
26 மலரும் நினைவுகள்
காலத்தில் இருந்திருக்க வேண்டும். அதாவது கல்வியைப் பணத்துக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை. இந்த இடத்தில் எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், அப்போது ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த "கல்கி"யின் வேண்டு கோளின்படி ஆனந்தவிகடன் தீபாவளி மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார்! நாவலர் எழுந்தார்" என்ற கட்டுரை அந்தக் கட்டுரைக்காக இருபத்தைந்து ரூபாக் களை ஆனந்த விகடன் அன்பளிப்பாக அனுப்பியிருந்தது. அந்தக் காலத்தில் அது ஒரு கணிசமான தொகை. பண்டித மணி அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்பி "நாங்கள் எழுத்தை விற்பதில்லை' என்று எழுகினாராம். பின்னால் பண்டிதமணி அந்தக் கொள்கையை மாற்றிக் கொண்டு விட் டார். சில கொள்கைகள் காலத்தினால் மாறக் கூடியவை களே.
எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் பொன்னாலை அ. மி. பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்தார்
தீவாத்தியார்!"
தீவாத்தியாக உயர்சாதி வேளாளரல்லர். சற்றே குறைந்த சாதி. அவர் கிறித்துவ மதத்தில் சேர்ந்த படியால் தான் அந்தக் காலத்தில் ஒரு ஆசிரியராகத் தலைநிமிர முடிந்ததென்று நினைக்கிறேன். கிறித்துவ பாடசாலைகளில் கிறித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பார்கள். கிறித் துவ ஆசிரியர்கள் கிடைக்காமலிருந்தால்தான் மற்றவர் களுக்கு இடம் கிடைக்கும், முக்கியமாகத் தலைமையாசிரியர் கிறித்துவராகவே இருப்பார், எப்படியும் அந்த ஊருக் குள்ளும் ஒருவரை ஆசிரியராக நியமித்து வைத்திருப்பார்கள். அவர் புற சமயத்தவராயிருந்தாலும், அதிகம் படிக்காதவரா யிருந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆரம்ப காலங்களில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களோ, ஆசி ரிய தராதரப் பத்திரமுள்ள ஆசிரியர்களோ அதிகமாக

வரதர் 27
இல்லை. ஏதோ ஒரு அளவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கக் கூடியவர்களை ஆசிரியராகச் சேர்த்துக் கொள்வார்கள்.
பின்னால் ஆசிரிய கலா சாலை என்று தொடங்கிய போது, தகுதி வாய்ந்தவர்கள் போதாமையால் அப்படியான மாணவர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களைத் தேடிப்போய் அழைத்து வந்து ஆசிரிய கலாசாலையில் சேர்த்துப் பயிற்றி
னார்கள்.
என்னுடைய நினைவிலிருக்கும் தீவாத்தியாருக்குசுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். பெரிய தோற்றமான ஆளல் லர். வேட்டி உடுத்து, சேட்போட்டு, அதன்மேல் "கோட்டுப் போட்டிருப்பார். அந்தக் காலத்தில் உத்தியோகம் பார்க்கிற வர்கள் "கோட்" போடுவது வழக்கம். இப்போது "கோட்" போடுபவர்களையே காணோம்!
தீவாத்தியாரின் சொந்தப் பெயர் செல்லப்பா. அவர் காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகர் அந்தக் காலத்தில் * காரைதீவு’ என்றே வழங்கிற்று. எங்கள் பக்கத்தில் பொது வாகத் தீவு’ என்றால் அது காரை தீவையே குறித்தது. தீவிலிருந்து வந்த வாத்தியார், தீவு-வாத்தியார்-தீவாத்தி யார் ஆகிவிட்டார்! அந்தக் காலத்தில் ஆசிரியர்களை "வாத்தியார்’ என்றும் "சட்டம்பியார்" என்றும் சொல்வதே வழக்கம். அதன் பிறகு "மாஸ்டர்" என்ற சொல் பெருவழக் காக இருந்தது, யாழ்ப்பாணத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்த மாஸ்டர்மார் மிகவும் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தார்கள். இப்போது "மாஸ்டர்" என்ற பெயரும் அருகி வருகிறது "சேர்’ என்பது மாணவர்களிடையே மட்டும் வழக்கிலிருக்கிறது.
பொன்னாலை அ.மி. பாடசாலையில் தீவாத்தியார் தலைமையாசிரியராக இருந்தார் அவருடைய மனைவிதாள் அங்கே தையலம்மாவாக இருந்தாள். "கட்டையம்மா" என்பது அவருடைய பட்டப் பெயர். கணவனும் மனைவியும்

Page 66
128 மலரும் நினைவுகள்
ஆசிரியர்களாக இருந்தால், கணவன் ப்டிப்பிக்கும் பாட சாலையிலேயே மனைவி தையலம்மாவாக இருப்பார்.
பொன்னாலை அ , மி. பாடசாலையில் "பிரசங்கியார்’ என்று ஒரு உதவி ஆசிரியரும் இருந்தார். அவருடைய பெயர் தெரியவில்லை. "பிரசங்கியார்” என்றுதான் சொல்வோம். வேறும் இரண்டொரு உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் 'முத்து வாத்தியார்' என்ற உள்ளூர்க் காரர். பிரசங்கியார் ஒரு கிறித்தவர். செக்கச் செவலென்று பூசினிப் பழம்போல இருப்பார். மிஷனோடு நெருங்கிய தொடர்புள்ளவராக இருந்திருக்க வேண்டும். தீவாத்தியா ருக்கு தலைமையாசிரியர்" என்ற மதிப்பு மரியாதையை அவர் அவ்வளவாகக் கோடுப்பதில்லை. நான் நாலாம் வகுப்பில் படித்தபோது இந்தப் பிரசங்கியாரிடம் படித்த நினைவிருக்கிறது. அதிலும். ஏதோ வினாவுக்குச் சரியான் பதில் சொல்லாததற்காக அவர் அடிமட்டத்தை எடுத்து அதன் நுனியுடன் எனது வயிற்றுப் பகுதியைச் சேர்த்துப் பிடித்து அப்படியே தசையை முறுக்கி ஒரு தண்டனை கொடுத்தது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; 6T6ს6სnr மாணவர்களுக்கும் அவருடைய தண்டனை அநேகமாக இப்படித்தான் இருக்கும்.
அந்தக் காலத்து ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்குப் படிப்பிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அவ்வப்போது தண்ட னைகள் கொடுப்பதிலும் மிக அக்கறையாக இருந்தார்கள்.
பொதுவாக "வாத்தியார்’ என்றால் அவருடைய கையில் ஒரு கம்பு இருக்கும். சிலர் நல்ல பிரப்பங்கப்பு சம்பாதித்து, அடிக்கிற அடியில் அது கிழிந்து விடாமலிருப்ப தற்காக அதன் நுனிகளை நெருப்பினால் சுட்டு வைத்திருப் பார்கள். சிலர் அவ்வப்போதே மாணவர்களை அனுப்பி வெளியில் நிற்கும் பூவரச மரத்தில் நல்ல கம்பாகப் பிடுங்கி வரச் சொல்வார்கள். தவறுகள் ஒரே மாதிரியாக இருந்

வரதர் 29
தாலும் மாணவர்களுடைய தகுதியை உத்தேசித்து அடியின் எண்ணிக்கையும் வேகமும் கூடிக்குறையும்.
சிலர் கம்பை உபயோகிக்காமல், தமது கையையே உப யோகித்து மாணவர்களின் தலையில் பலமாகக் குட்டுவார் கள். அல்லது, வயிற்றிலோ, சொக்கையிலோ, காதிலோ இரண்டு விர்ல்களை குரடுபோல பாவித்துக் கிள்ளி முறுக்கி உயிரெடுப்பார்கள்! இதைவிட முழங்காலில் நிற்க விடுவது, ஒற்றைக்காலில் நிற்க விடுவது, வெயிலிலே தலையை அண்ணாந்தபடி நிற்க வைத்து தெற்றியிலே சிறு கல்லை வைத்து விடுவதுண்டு, (நெற்றியில் வைத்த கல் கீழே விழாதபடி அண்ணாந்த நிலையில் நிற்க வேண்டும்.)
இப்படியான தண்டனைகளை அனுபவித்தும், உடன் மாணவர்கள் அனுபவித்ததைக் கண்டும் நிலைகுலைந்த மாணவர்கள், ஆசிரியர்" என்றாலே ஏதோ யமதூதன் மாதிரி மனத்திலே படம் போட்டு வைத்திருப்பார்கள். பாட சாலைக்கு வெளியே, ஒழுங்கையில் ஆசிரியரின் தலை தெரிந் தாலும் பூனையைக் கண்ட எலி மாதிரி ஒடித் தப்பி விடுவார் கள்
ஒரு நாள் பாடசாலை நடந்து கொண்டிருக்கும் போது தீவாத்தியார் தமது மனைவியான தையலம்மாவுடன் ஏதோ வாக்குவாதப்பட்டு, தமது கையிலிருந்த கம்பினால் மனைவிக்கு இரண்டு மூன்று அடிகள் போட்டு விட்டார். ெ
அடுத்த வகுப்பிலிருந்த பிரசங்கியார் உடனே ஓடிவந்து திவாத்தியார் அடிப்பதைத் தடுத்து, 'பாடசாலையில் வைத்து இப்படியெல்லாம் செய்யக் கூடாது' என்று கண்டித் திருக்கிறார். "நான் எனது மனைவிக்கு அடிப்பதை நீர் என்ன கேட்கிறது?" என்ற மாதிரி தீவாத்தியார் பதில் சொல்ல, 'கணவன் மனைவி என்பதெல்லாம் வீட்டோடு, இங்கே நீர் தலைமையாசிரியர், அவர் உதவியாசிரியர்,
p-9

Page 67
0. மலரும் நினைவுகள்
தலைமையாசிரியர் தமது உதவியாசிரியருக்கு கை நீட்டி அடிக்கக் கூடாது' என்ற மாதிரிப் பிரசங்கியார் சொல்லி யிருக்கிறார்.
வாய்ப் பேச்சு முற்றி கை கலந்து கொண்டார்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தீவாத்தியாரும் பிரசங்கியாரும் கைகளைப் பின்னிக் கொண்டு தள்ளுப்ப , ஊரவரான முத்து வாத்தியார் அவர்களுக்கு நடுவில் அலர் களின் கைகளில் தொங்கிக் கொண்டு இருவரையும் விலக்கி விட முயற்சித்தார்.
அந்தளவில் அன்றைய தினம் பாடசாலை மூடப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குவந்துவிட்டோம்.
அடுத்த நாளும் பாடசாலை நடக்கவில்லை. ஆனால் மிஷனிலிருந்து மேலதிகாரிகள் வந்து விசாரணை நடந்தது. நாங்கள் பாடசாலையின் பக்கத்து வளவில் போய் வேலிக் கருகே குனிந்திருந்து வேலி மட்டை இடை வெளிக்குள்ளால் பார்த்தோம்.
நெடு நேரமாக விசாரணை நடந்தது. கடைசியில் தீவாத்தியார் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து அதிகாரிகளை வணங்கியதையும் பார்த்தோம்.
தீவாத்தியார் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்தப்பட்டிருக்க வேண்டும். என்ன தண்டனை என்று தெரியவில்லை. இடமாற்றமாக இருக்கலாம். ஒருவேளை வேலை நீக்கமாகவும் இருந்திருக்கலாம்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீவாத்தியார் பாடசாலைக்கு வரவில்லை!

15. பெரிய பள்ளிக் கூடம்
பொன்னாலைக்குப் பக்கத்தில் இருப்பது "மூளாய்" என்ற கிராமம். மூளாயில் "சைவப்பிரகாச வித்தியாசாலை" என்ற ஒரு பாடசாலை இருந்தது- இன்றும் இருக்கின்றது. ஆனால் அந்தக் காலத்தில்- 1930-40 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அந்தப் பாடசாலை ஒரு தனிச் சிறப்போடு துலங்கிற்று.
அந்தச் சுற்று வட்டாரத்திலிருந்த தமிழ்ப் பாடசாலை கள் எல்லாவற்றிலும் மூளாய்ச் சைவப்பிரகாச வித்தியா சாலை ஒரு தனிச் சிறப்போடு கொடிகட்டிப் பறந்தது.
அது ஒரு தனியார் பாடசாலை. அதைத் தாபித்தவர் யாரென்று தெரியவில்லை. 1940 ஆம் ஆண்டளவில் அதன் முகாமையாளராக, தொல்புரத்துச் சட்டத்தரணி நவரத்தினம் என்பவர் இருந்தது தெரியும், "சட்டத்தரணி" என்பது மிகச் சமீபத்தில் வந்த சொல். அப்போது "பிரக்கிராசி நவரத் தினம்" என்போம்.
மூளாய்ச் சைவப்பிரகாச வித்தியாசாலை, சாதாரண மான பாடசாலை போன்றதல்ல. அது ஒரு கல்லூரிக்குச் சமமாக இருந்தது. வைரக் கல்லினால் கட்டப் பெற்ற, அழகிய உறுதியான பெரிய மண்டபம். அதன் ஒரு புறம் "சரஸ்வதி அறை" (பூசை அறை) அதன் எதிரே மண்டபத் தின் மறு கோடியில் தலைமை ஆசிரியர் அமர்ந்திருப்

Page 68
五3盛 மலகும் நினைவுகள்
பதற்கான மேடை. இந்த மேடை நாடகங்கள் நடத்தக் கூடிய அளவுக்கு விசாலமானது.
இந்தப் பெரிய மண்டபத்தைத் தவிர வேறும் இரு மண்ட பங்கள். பெரிய மண்டபத்தில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் ஒன்பதாம் (S.S.C.) வகுப்பு வரை இருந்தன. இரண்டாவது மண்டபத்தில், இரண்டாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை இருந்தன. சற்றுத் தள்ளியிருந்த மூன்றாவது மண்டபத்தில், அரிவரியும் (u raji கீழ்ப்பிரிவு) முதலாம் வகுப்பும் இருந்தன.
பாடசாலையின் முன்பக்கம் வைரக்கல்வி ை நன்கு கட்டப் பெற்ற கிணறு, துலா அமைப்புடன் இருந்தது. வாசலில் இரு பக்கமும் பூந்தோட்டம். உயர் வகுப்பு மாணவர் களுக்கு தனித் தனி மேசையும் கதிரையும்- இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் ஒரு தமிழ்ப் பாடசாலை எத்தனை சிறப்புகளோடு இருந்ததை நினைக்க நெஞ்சு நிறைகிறது.
எனக்குத் தெரிய "பாக்கிய நாதர்" என்பவர் அங்கே தலைமையாசிரியராக இருந்தார். அவரும் ஒரு சாதாரண தமிழ்ப் பாடசாலையின் தலைமையாசிரியரைப் போலன்றி ஒரு கல்லூரியின் பிறின்சிடல்? போலவே விளங்கினார். அவரும் கோட்" அணிந்திருந்தது நினைவிருக்கிறது. அவருடைய காலத்தில் அங்கே பெற்றோர் தினவிழா"க் களெல்லாம் மிகக் கோலாகலமாக நடக்கும். ஒருமுறை இலங்கைக் கல்விப் பகுதியின் வித்தியாதிபதியாக இருந்த ஒரு வெள்ளைக்காரர் அந்தப் பாடசாலைக்கு விஜயம் செய்ததும், விழா முடிந்து அவர் திரும்பிச் செல்வதற்காக மோட்டார் வண்டியில் ஏறியதும், இருபக்கமும் வரிசையாக நின்ற மாணவர்கள் 'ஹிப் ஹிப் கூறே! ? என்று கோஷம் போட்டதும் எனக்கு நினைவிருக்கிறது.
பொன்னாலை அ.மி. பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையுமே இருந்தது. அந்தக் காலத்துக் கிராமப் பாடசாலை
தளுக்கு அவ்வளவும் போதியதாய் இருந்தது. ஐந்தாழ் 俊、 ༄་་་་་་་་་ సి? 3 , ❖. ❖ -· ጎ! s

aur A5 rł 1.33
வகுப்புக்கு வரு மூன்னரே பல மாணவர்கள் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு படிப்பை நிறுத்திவிடுவார்கள். பெண் பிள்ளைகளைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் வரை ஆண்களோடு சமான மாக எண்ணுத் தொகையில் இருந்த பெண்கள் ஐந்தாம் வகுப்பில் மிக அருகிவிடுவார்கள். ஆறாம் வகுப்புக்குப் போவது அத்தி பூத்தது போல இருக்கும். அதற்குமேல் அனேகமான பெண்களின் படிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் பிறகு அவர்கள் "பெரிய பிள்ளை" ஆகி விடுவார்கள் "பெரிய பிள்ளை ஆன பெண், திருமணம் ஆகும் வரை வீட்டுப் படலையைத் தாண்டக் கூடாது!
இன்று பாடசாலைகளில் மட்டுமன்றி வீதிகளிலும் விழாக்களிலும் நிறைந்து வழியும் "பெரிய பிள்ளைகளைப் பார்க்கும் போது- ஓ, காலம் எவ்வளவு வேகமாக மாறு கிறது
எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்புகிறவர்கள் மூளாய் சை. பி. வித்தியாசாலைக்குத் தான் போய்ச் சேருவார்கள்.
மூளாய்ப் பள்ளிக் கூடத்துக்குப் போகப் போகிறோம் என்ற நிலை வந்தால் எங்களுக்கு ஒரே பரபரப்பு-ஏதே7 பல்கலைக் கழகத்துக்குப் புதிதாகப் போகிற மாணவர்களின் மனநிலை,
பொன்னாலையில் நான் படித்த காலத்தில் வழமை போல ஆண்டுக்கொரு முறை வகுப்பேற்றத் தேர்வு நடக்கும். இப்போதையைப் போல கிட்டத்தட்ட எல்லா மாணவர் களையுமே வகுப்பேற்றிவிட மாட்டார்கள், தேர்வுகளும் எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே நாளில் நடக்காது. 『\。
இன்ன திகதியில் இந்தப் பாடசாலையில் தேர்வு நடக்கு மென்று கல்வியதிகாரிகளிடமிருந்து அறிவித்தல் வரும். அது

Page 69
134 மலரும் நினைவுகள்
வந்த உடனே பாடசாலை சுறு சுறுப்பாகிவிடும். சில சமயங் களில் பின்னேர வகுப்புக்களும் நடக்கும்.
தேர்வு நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்பே பாடசாலை களில் படிப்பைவிட வேறு பல அலுவலங்கள் மும்மரமாக நடக்கும்.
*தேர்வு’ என்ற சொல் மிகச் சமீப காலங்களில் வழக்கத் துக்கு வந்த சுத்தமான தமிழ்ச் சொல். அதற்கு முன் அதை * பரீட்சை' என்று கெளரவமாகச் சொன்னார்கள்; எழுதி னார்கள்,
நாங்கள் பொன்னாலையில் படித்த காலத்தில் இதே தேர்வை "சோதனை" என்றுதான் சொல்வோம். :
பாடங்களைப் படிப்பித்த ஆசிரியர்களே அப்போது பரீட்சையையும் நடத்துவதில்லை. பரீட்சை நடத்துவதற் கென்று பரீட்சாதிகாரி" என்ற ஒரு உத்தியோகத்தர்காற்சட்டை மேற்சட்டை, கோட், தொப்பி எல்லாம் போட்டுக் கொண்டு வருவார். இந்தப் பரீட்சாதிகாரியையே பின்னால் "வித்தியாதரிசி" என்று "தமிழ்’ப்படுத்தினார்கள். மிக அண்மைக் காலத்தில்தான் அவர் "கல்வியதிகாரி" என்று தமிழானார். ஆனால் நாங்கள் அவரை "சோதனைகாரன்" என்றே சொன்னோம்,
சோதனைக்கு ஒரு கிழமைக்கு முன்பே, மாணவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து பாடசாலை வளவை மிக அழகாகத் துப்புரவு செய்வோம். பாடசாலைக் கட்டிடத்தையும் கூட்டிக் கழுவித் துப்புரவு செய்வோம். வாங்குகளை தண்ணீர் ஊற்றி உரஞ்சோ உரஞ்சென்று உரஞ்சி அவற்றில் ஓராண்டு கால மாகப் படிந்திருந்த அழுக்கை அகற்றுவோம். "சிலேற்று களைக் கழுவி சுற்றியுள்ள மரச் சட்டத்தை பீங்கான் ஒட்டி னால் சுரண்டிப் புதிசாக்குவோம்.
சில மாணவர்கள் புத்தகங்களைப் படித்துக் கிழித்திருப் பார்கள். அந்தப் புத்தகங்களில் பல ஒற்றைகள் இருக்காது.

வரதர் 185
சிலருடைய சிலேற்றுகள் உடைந்திருக்கும். உடனடியாகப் புதிய சிலேற் வாங்கிக் கொடுக்கும் வசதி அவர்களுடைய பெற்றோருக்கும் இருக்காது.
இதற்காக, பக்கத்திலிருந்த மூளாய் அ.மி. பாடசாலை யிலிருந்து கொஞ்ச சிலேற்றுகளும் புத்தகங்களும் சோதனைக் கென்று இரவலாக வாங்கிவரப்படும். (இதே மாதிரி அ.மி க்குச் சோதனை வரும்போது இங்கிருத்து அங்கே போகும்)
புத்தகங்கள் சிலேற்றுகள் இல்லாதவர்களுக்கு சோதனை யிலன்று இவை கொடுக்கப்பட்டு சோதனை முடிந்ததும் திரும்பிப் பெறப்படும்.
கரும்பலகைக்குப் புதிதாகக் கறுப்பு மை பூசப்படும். வெள்ளையடிக்கக் கூடிய சிறிய சுவர்த்துண்டுகளுக்கு வெள்ளையும் அடிக்கப்படும்.
சோதனைகாரன் இருப்பதற்கு நல்லதாய் ஒரு கதிரை யும் மேசையும் போடப்படும். மேசையின்மீது அழகான துணி விரிக்கப்பட்டு, அதன் மீது பூச்செண்டும் வைக்கப்படும்.
ஒருமுறை அந்த மேசையில் இரண்டு மூன்று எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன.
யாரோ ஒருவர் "அது ஏன்?" என்று விசாரித்ததும். மற்றவர் "இன்றைக்கு வரும் சோதனைகாரன் “மூளைக் கலக்கப் பொன்னையா; மூளைக் கலக்கத்தால் அவர் ஏதும் பிழையாக நடக்காமலிருக்கத்தான் எலுமிச்சம்பழம் வைத் திருக்கிறார்கள். எலுமிச்சம்பழ மணத்துக்கு மூளைக்கலக்கம் தெளிந்துவிடும்" என்று பதில் சொன்னதும் எனக்கு நினை விருக்கிறது. இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைச் சத்திய வாக்காக நான் நம்பினேன்!
ஒருமுறை ஒரு சோதனைகாரன் ஒரு மோட்டார் சைக் கிளில் வந்தார். அந்த மோட்டார் சைக்கிளுக்குச் சைட்

Page 70
36 மலரும் நினைவுகள்
கா"ரும் பூட்டப்பட்டிருந்தது. அதைப் புதுமையாக நாங்கள் வேடிக்கை பார்த்தோம். அந்தச் செட் காருக்குள் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஆள் இருக்காவிட்டால் குலுக்கியடிக்குமாம் அதற்காக கல்லைப் பாரமாக வைத் திருக்கிறார்கள். என்று "விஷயம் தெரிந்த ஒருவர் எங்களுக்கு விளக்கமளித்தார்.
சோதனை நாள் வந்துவிட்டால் அது எங்களுக்கு மிக முக்கியமான நாள், எல்லாரும் வெள்ளையாக - சுத்தமாக உடையணிந்து, ஒழுங்காகத் தலைசீவி, விபூதி பூசிக் கொண்டு போவோம்.
"வேத பாடசாலை"யாக இருந்த போதிலும் நாங்கள் விபூதி பூசிக்கொண்டு போனதற்கு ஒருபோதும் தடையிருக்க வில்லை.
விபூதி பூசுவது அந்தக் காலத்தில் மிக மிக முக்கியமான ஒரு விடயம், காலையில் எழுந்து காலைக் கடன் கழித்து, பல் துலக்கி, முகம் கழுவி நெற்றியில் விபூதி பூசுவது ஒரு நாளும் தவறாத காரியம், "நீறில்லா நெற்றி பாழ் என்ற பழமொழியும் உண்டு. இப்போது விபூதி பூசுபவர் தொகை மிகக் அருகி விட்டது. பலர் கோயிலுக்குப் போகையில் அங்கே ஐயர் கொடுக்கும் விபூதியை வாங்கி "அப்பனே முருகா" என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொள்வதோடு கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.
வீட்டில் விபூதி வைத்துப் பூசுபவர்களிலும் பலர் அதிை கடையில்தான் சுலபமாக வாங்கிக் கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாரும் தேவையான விபூதியை தாங்களே தயாரித்துக் கொள்வார். பசுமாட்டின் சாணியை எடுத்து நன்றாகப் பிசைந்து வட்ட வட்டமாக வராட்டியாகத் தட்டி வடை மாதிரி நடுவில் ஒரு துவாரம் போட்டு, சில நாட்கள் வெயிலில் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின், வளவுக்குள் ஒரு இடத்தில் உமியைப் பரப்பி அதன் மேல் வராட்டிகளை அடுக்கி உமியால் மூடியபின் நெருப்பு வைப்

வரதர் 137
பார்கள். அநேகமாக மறுநாளே உமியெல்லாம் எரிந்து ஒரு சாம்பல் குவியலாக இருக்கும். அதை மெதுவாகக் கிளறி உள்ளேயிருக்கும் வராட்டிகளை எடுத்தால் அவை நன்றாக வெந்து வெள்ளை வெளெரென்று இருக்கும். அது தான் விபூதி. அதை ஒரு பானையில் போட்டு வைத்து, அவ்வப் போதைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு பனை ஒலைக் குட்டானிலோ, அல்லது தேங்காய் குடுவையிலோ போட்டு வைத்து உபயோகிப்பார்கள்,
விபூதி சுட்ட உமிச் சாம்பல்தான் காலையில் பல்விளக்க உதவும், அது கிணற்றடியில் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கப்பட்டிருக்கும்.
விபூதிக் குட்டான் தலைவாசல் வளையிலே அல்லது தென்னோலைத் தட்டியின் விளிம்பிலோ கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். குட்டானில் விரல்களை விட்டு சிறிது விபூதியைக் கிள்ளி ‘சிவ சிவா" என்று சொல்லிக்கொண்டு நேற்றியில் பூசிக் கொண்டால் "கடவுள் வணக்கம் முடிந்து விடும் விபூதியை அப்பிப் பூசிக் கொண்டு சிலர் செய்கிற அக்கிரமங்களைக் கண்டதால் எனக்கு அந்த விபூதியின் மீதும் சினம் ஏற்படுகிறது
பொன்னாலை அ. மி. பாடசாலையில் நான் ஐந்தாம்
வகுப்பை முடித்துக் கொண்டு, ஆறாம் வகுப்பு படிப்பதற்
காக மூளாய் சைவ பாடசாலைக்குப் போய் சேர்ந்தேன், அது 1930 ஆம் ஆண்டாக இருக்கும்.
எப்படி இதை இரண்டு வரிகளில் மிகச் சுலபமாக எழுதி விட்டேனோ, அதுமாதிரி மிகச் சுலபமாக நான் ஆறாம் வகுப்பில் போய் சேர்ந்துவிட்டேன். இங்கே எனது சேர்ட்டுபிகேட்"டைக் கேட்டதும் மறுபேச்சின்றி உடனே தந்துவிட்டார்கள். அங்கே கொண்டுபோய் அதைக் கொடுத்ததும் வருக வருக" என்று சேர்த்துக் கொண்டார்
6. .

Page 71
138 மலரும் நினைவுகள்
இப்போது ஒரு டசாலையில் ஆறாம் வகுப்பில் ஒரு மாணவரைச் சேர்ப்பதென்றால் 8 8 s அடேயப்பா! அதற்கு ஒரு தேர்வு எழுத வேண்டும். சேரும் புதிய பாடசாலைக்கு ஆயிரக்கணக்கில் 'நன்கொடை கொடுக்க வேண்டும்.
காலம் எப்படி மாறிவிட்டது!
அந்தக் காலத்தில் புதிதாக மாணவர்களை சேர்ப்பதென் 6 , பாடசாலைக்காரர்களுக்கு ஏதோ விருந்து கிடைத்தது மாதிரியிருக்கும், மாணவர்களை அதிகமாகச் சேர்த்து கொண்டால், ஆசிரியர்கள் தொகையும் அதிகரிக்கலாம், sy Tafiti assissir நன்கொடையும் அதிகமாகும். பெரிய பாடசாலையாகி நல்ல பெயர் கிடைக்கும்-மாணவர்களைச் சேர்ப்பதிலும், int-liics606ml படிப்பதிலும் அன்றைய ஆசிரி 'ளுக்கு ஒரு அக்கறையிருந்தது."இப்ப்ேது ே விட்டது. ஏன்? a.
மாணவர்களைச் சேர்ப்பதில் மீட்டுமல்ல; அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருகிறார்கா என்பதிலும் ஆசிரியர்கள் கருத்தாக இருந்தார்கள். பாடசாலைக்கு வராமல் கள்ளமடித்து' நிற்கிற மாணவர்களை அவர் களுடைய வீட்டுக்கேபோய் இழுத்துவந்த ஆசிரியர்களை நான் அறிவேன். ப டசாலைக்கு வராமல் ஒளித்துத் திரிந்த ஒரு மாணவனை , ஆசிரியர் ஒருவர் அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்துப் போக, அவன் பனங்கூடல்கள், வடலிகளுக்குள்னால் தாவி ஒட ஆசிரியரும் விடாமல் ஒடிக் கலைத்துப் பிடித்து பாடசாலைக்குக் கொண்டுவந்து நல்ல சாத்துபடி கொடுத்ததையும் நான் கண்டிருக்கிறேன் ,
மூளாய்ப் பாடசாலைக்குப் போவதென்றால் எங்களுக்கு. ஏதேர பல்கலைக்கழகம் போவதுபோல இருக்குமென்று, முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன் ஊர்ப் பாட சாலைக்கு அழுக்குப்பிடித்த ஒரு நாலுமுழ வேட்டியை மட்டுமே "யூனிபோம்" ஆகக் கொண்டிருந்த நாங்கள், எட்டு முழ வேட்டிகட்டி, மேலே சால்வையும் போர்த்திக் கோண்டு

வரதர் ያ 189
மூளாய்ப் பாடசாலைக்குப் போனோம். சால்வையை கோளிலேபோர்த்தி அதன் ஒரு தலைப்பை மீண்டும் கழுத் தைச் சுற்றிக் கொண்டு வந்து முன்பக்கத்தில் சொருகிக் கொள்வது ஒரு "ஸ்ரையில்!"
அதுவரை ஒரு சிலேற்றும் பென்சிலும், இரண்டு புத்தகங் களும் மட்டுமே பாடசாலைக்குக் கொண்டு சென்ற நாங்கள், இப்போது - ஆறாம் வகுப்புக்கு, ஏழெட்டுக் கொப்பிகள், ஐந்தாறு புத்தகங்கள், "கொம்பாஸ்' பெட்டி, கலர்ப்பெட்டி, றோய்ங் கொப்பி, "மாப்பிங்" கொப்பி! இவற்றையெல்லாம் அடுக்கி ஒரு "பெல்ற்றினால் கட்டி, அந்தப் பொதியை ஒரு பக்கத்துத் தோளிலே வைத்துக் கொண்டு போவோம். பேனைத்தடி, லெற்பென்சில், அடிமட்டம் முதலிய கருவி களையும் பெல்ற்றின் பக்கத்தில் சொருகி வைத்திக் கொள்வோம்.
பேனைத் தடிகளில்தான் எத்தனை வகை; வாழக்காய்ப் பேனை செருகிய கருங்காலிப் பேனைத் தடிதான் நம்பர் வண். "ஜி" நிப் சர்வ சாதாரணம். பித்தளைப் பேனா , வேலாயுதப் பேனை போன்ற "நிப்புகளும் அருமையாக உண்டு.
பாடசாலைக்குப் போகும்:ே1ாது, தோளில் இருக்கும் புத்தகக் கட்டை ஒரு கை தாங்கிக் கொள்ளும், மற்றக் கை யில் ஒரு தூக்குச் சட்டி!
தூக்குச் சட்டியைத் தெரியாதவர்கள் பலர் இருக்க 6) Arb.
சிறிய வாளியைப் போல பித்தளையால் செய்யப் பட்டது துக்குச் சட்டி. வாளிக்கு அடிப்பாகம் குறுகியது. வாய்ப்பாகம் அகன்று இருக்கும். தூக்குச்சட்டிக்கு இகு பக்கமும் சமமாகவே இருக்கும். இறுக்கமான முடியும், உள்ளே ஒரு தட்டும் இருக்கும்.
w8

Page 72
140 மலரும் நினைவுகள்
தூக்குச் சட்டியில் மதிய உணவு கொண்டு போவோம், ஏனென்றால் பாடசாலை காலை - மாலை இரு நேரமும் நடக்கும். மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் வீவு விடுவார்கள். நாங்கள் அதற்குள் வீட்டுக்குப் போய்வர இயலாது. சுமார் ஒன்றறை மைல் தூரம். பயணமே கால் நடைதான்.
இப்போது எல்லா மாணவர்களிடமும் சைக்கிள் இருக்கிறது. அப்போது சைக்கிள் கூட மிக அருமை. புத்தம் புதிய சைக்கிள் டைனமோ லைற் எல்லாம் பூட்டியது ரூபா நூற்றைம்பதுக்குள் தான் இருக்கும். ஆனால் அப் போது அதுவே பெரிய தொகை! அன்றியும் "நடக்கிறது" என்பது அப்படியென்றும் கஷ்டமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நடையோ நடையென்று நடந்து பழக்கப் பட்ட கால்கள், மனமும் அதைப் பெரிதாக நினைத்துக் களைத்துப் போவதில்லை!

16. இந்தியப் பயணம்
,·兹
எனது பாடசாலை நினைவுகளோடு தொடர்ந்து நீண்ட தூரம் வந்துவிட்டேன். இந்தக் கட்டுரையின் நோக் கம் 50-60 ஆண்டுகளுக்கு முந்திய யாழ்ப்பாணத்து நிலையை ஓரளவு எடுத்துக்காட்டுவதாகும். பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்து சென்றதால் இனி அதிகம்
பழம் கதைகள்' இருக்காதென்று நினைக்கிறேன்.
எனவே திரும்பச் செல்கின்றேன்.
1935ஆம் ஆண்டாக இருக்கலாம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்து மக்களுக்கு சிதம்பரம் ஒரு (முஸ்லிம்களுக்கு) - மெக்கா" போல.
உள்நாட்டில் பெரிய யாத்திரைத் தலமாக விளங்கியது கதிர்காமம். ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர் காமம் போய் வருகிறார்கள் பல்லாயிரம்பேர். கந்தன் கன வில் வந்து "உத்தரவு கொடுத்தால்தான் கதிர்காம யாத் திரை போகலாமென்றும் அப்படியில்லாமல் போனால், "திசைமாறா'வில் திசைமாறி காட்டுக்குள் அலையவேண்டி வரும் அல்லது வேறு ஏதும் ஆபத்துக்கள் வருமென்றும் சொல்வார்கள். ஆனால் போக விரும்பியவர்களுக்கெல்லாம் இந்த உத்தரவு தாராளமாகக் கிடைத்துக்கொண்டுதாணி ருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் வழியா கக் கால்நடையாகவே கதிர்காம யாத்திரை செல்பவர்களும் பலர் இருந்தார்கள்.

Page 73
142 மலரும் நினைவுகள்
கதிர்காமத்துக்கு அடுத்த பெரிய யாத்திரைத் தலம் சிதம்பரம்.
சிதம்பரம், யாழ்ப்பாணத்தவர்களுக்கு ஏதோ சொந்த இடம்போல இருந்தது.
சிதம்பரம் கோயிலுக்கு அண்மையில் “ஞானப் பிரகாசம்’ என்ற குளத்தைச் சுற்றி யாழ்ப்பாணத்தவர்களுக்குச் சொந்த மான மடங்கள் இருந்தன. ”மடங்கள்' என்றால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் பார்க்கின்ற மடங்கள் மாதிரியல்ல. அநேக அறைகள், அதைவிட நெல் முதலியவற்றைச் சேமித்து வைக்கும் களஞ்சிய அறைகள், பெரிய சமையல்கூடம் , தடுவே அமைந்த பெரிய முற்றங்கள், திண்ணைகள் பின் னால் வண்டிகள் நிறுத்தும் இடங்கள், மாட்டுத் தொழுவங் கள்-இப்படி ஒவ்வொரு மடமும் மிக விசாலமாக அமைந் திருக்கும். ጆፍ
யாத்திரீகர்கள் அங்கே போனால் வசதியாகத் தங்கி, இலவசமாகவே சாப்பாடும் கொள்ளலாம்.
மடத்தில் பொருளாதார நிலைக்கேற்ப இந்த வசதிகளும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு மடத்துக்கும் இந்தியா விலும், யாழ்ப்பாணத்திலும் நிறையச் சொத்துக்கள் இருந் தன. ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடாதிபதி இருப்பார். அவர்கள் நல்ல செல்வாக்குடன் குட்டி ஜமீந்தார்கள் மாதிரி இருந்தார்கள்
இந்த மடங்களுக்கும் சிதம்பரம் கோயிலுக்கும் தமது நிலபுலம்களை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சிவகதி" அடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் பல பேர். பிள்ளைகள் இல்லாத பலர் தமது சொத்துக்களை இப்படி எழுதி வைத் துப் புண்ணியம் தேடுவது வழக்கமாக இருந்தது. மனைவி, பிள்ளைகள்மீது ஏதும் வெறுப்புக்கொண்டவர்களும், "எனது சொத்துக்களை உங்களுக்கு விடமாட்டன். எல்லாத்தையும் சிதம்பரத்துக்கு எழுதிவிடுவேன்' என "ஏசு"வதும் உண்டு.

வரதர் 14器
இந்த மடங்களில் சில இப்போதும் சிதம்பரத்தில் பண் டைச் சிறப்பிழந்த நிலையில் இருக்கின்றன. இந்த மடங் களுக்காக யாரோ புண்ணியவான்கள் எழுதி வைத்த பல நிலங்களை ஆங்காங்கே உள்ள சிலர், மெல்ல மெல்லத் தமக்கே சொந்தமாக்கியும் கொண்டுவிட்டார்கள்.
அந்தக் காலந்தில் ஆறுமுக நாவலர்கூட சிதம்பரத்திலே தான் தமது பல தொண்டுகளைச் செய்திருக்கிறார்.
சிதம்பர தரிசனம் செய்ய வேண்டுமென்ற பெரிய ஆசை யாழ்ப்பாணத்திலுள்ள பல குடும்பங்களில் இருந்தது போலவே எங்கள் குடும்பத்திலும் இருந்தது.
எனது தகப்பனார் முன்பே சில முறைகள் சிதம்பரம் போய் வந்திருக்கிறார். தாயார் போனதில்லை, தம்பதி சமேதராகப் புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடிச் சுவாமி தரிசனம் செய்தாலே முழுப் பயனும் கிடைக்குமென்று புரா ணங்கள் சொல்லியிருக்கின்றன. பின்னால் பிதிர்க் கடன் செய்யப்போகிற புத்திரனையும் அழைத்துச் சென்றால் மேலும் அதிகமாகப் பயன் கிடைக்குமென்று எண்ணியிருப்
TIT” ES 6 .
1935ஆம் ஆண்டளவில் சிதம்பர யாத்திரைக்கான ஏற் பாடுகள் யாவும் செய்யப்பட்டன.
எனது தகப்பனார், தாயார். நான் எனது ஒன்றவிட்ட அண்ணர் (வித்துவான் பொன். முத்துக்குமாரன்) , நடராசா என்ற அயல்வீட்டு இளைஞர் ஒருவர்-இந்த ஐந்து பேருந் தான் பயணக்குழு.
"பாஸ்போர்ட்", "விசா" என்ற பேச்சே கிடையாது. *எக்சேஞ்' என்ற பணமாற்றுப் பிரச்சினையும் இல்லை.
அப்போது இலங்கைக்கென்ற ஒரு ரூபா நாணயம் கிட்ை
யாது. இந்திய ஒரு ரூபா நாணயமே இங்கேயும் வழக்கி விருந்தது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மேன்மை

Page 74
144 மலரும் நினைவுகள்
தங்கிய ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் படமும் மறுபக்கத்தில் * துந்தியாவின் சக்கரவர்த்தி’ என்ற எழுத்துக்களும் இருந்தன.
ஒரு ரூபாக் குற்றியை விட்டால், அதற்குக் கீழே இலங் கையில் 50 சத, 25 சத. 5 சத , 1 சத, அரைச் சத நாணயக் குற்றிகள் இருந்தன. அதற்கு முன் காற்சத நாண மும் புழக்கத்தில் இருந்தன.
இந்தியாவில் 8 அணா (50 காசு), 4 அனா, 2 அனா, 1 அணா, அர்ை அணா, கால் அணா, தம்படி என்பது கிட்டத்தட்ட அரைச் சதம். (16 அணா 1 ஒரு ரூபா.)
ஒரு ரூபாய்க்குக் குறைந்த இந்திய நாணயங்கள் இலங் கையில் செல்லா. இலங்கை நாணயங்கள் இந்தியாவில் செல்லா .
ஆனால் ஒரு ரூபா நாணயக் குற்றி மட்டும் இரு நாடு களிலும் செல்லுபடியாகும்!
இந்தியாவுக்குக் கொண்டு போக வேண்டிய பணத்தை அப்பா ஒரு ரூபா நாணயக் குற்றிகளாக மாற்றிக் கொண் டார். சுமார் 2 அங்குல கனமும், 2 முழ நீளமும் கொண்ட ஒரு “பை” காக்கித் துணியில் தைத்து அதற்குள் அந்த ஒரு ரூபா நாணயங்களைப் போட்டு, பெல்ற் கட்டுவது போல வேட்டிக்குள் இடுப்பில் கட்டிக் கொண்டார். அது நல்ல பாதுகாப்பான வழியாக இருந்தது. இந்தியாவில் வழிப்பறி காரர்களும், எத்தர்களும் அதிகமென்று கேள்விப்பட்டி ருந்தோம் - ஏழைகள் நிறைந்த நாட்டில் கள்ளர்களும் அதிகமாகவே இருப்பர்
இந்தியாவைப் பற்றி அப்பா சொன்ன ஒரு "பொன் மொழி நினைவுக்கு வகுகிறது.
கோடி சீமானும் இந்தியாவில்தான், கோவணக் குண்டியனும் இந்தியாவில்தான்' மெய்யான வார்த்தை?

dAurAsh 145
இன்றைக்குக்கூட அது ஒரளவு சரியாகத்தானிருக் áp6l.
ாங்களுடைய இந்தியப் பயணம் அப்போது விமான வழியிலல்ல. விமானத்தை அப்போது ஆகாயத்தில் எப்போ தாவது பார்த்தோமா என்பதும் சந்தேகம்.
1940 க்குப் பின்னால் நான் பலமுறை விமான மார்க்க மாக இந்தியாவுக்கும் போயிருக்கிறேன். பலாலியிலிருந்து திருச்சிக்குப் போய்த் திரும்ப ரூபா 95 மட்டுமே விமானக் alt-60 TLD.T.s 3C5/555.
1935 - 45க் கிடையான பத்து ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றங்கள்.
அப்போது தலைமன்னர் வரை ரயிலில் சென்று அங் கிருந்து இந்தியக் கரையான "மண்டபம் காம்ப்" வரை சிறிய கப்பலில் பயணித்து, அதன் பின் இந்திய றயிலில் செல்வதே வழக்கமான முறை. இவ்வழியில் போவதா னால், யாழ்ப்பாணறயில் நிலையத்திலேயே இந்தியாவில் நாங்கள் போகவேண்டிய ஊருக்கு டிக்கட் வாங்கிவிடலாம். இந்தியாவிலும் அது செல்லுபடியாகும்.
ஆனால் நாங்கள் சென்றது இன்னுமொரு புதிய பாதை.
அப்போது, ஊர்காவற்றுறைக்கும் இந்தியாவிலுள்ள கோடிக்கரை முதலிய துறைகளுக்குமிடையே பழைய காலத் துப் பாய்க்கப்பல்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்து அரிசி முதல் அண்ணாமலை மாடுகள் வரை அந்தக் கப்பல்களில் வந்து ஊர்காவற்றுறையில் இறங்கின. ஊர்காவற்றுறை என்று பெயர் இருந்தாலும் இக்கரையிலிருந்த காரைதீவுப் பக்கமாகவும் அதிக இறக்கு மதிகள் நடந்திருக்க வேண்டும். காரைதீவின் அந்தப் பகுதியை "கிட்டங்கியடி’ என்று தான் இன்றைக்கும் சொல் at tissir.
10سس-9

Page 75
146 மலரும் நினைவுகள்
கப்பலிலிருந்து பொருள்களை இறக்கிக் களஞ்சியப்படுத் தும் அறைகளுக்கு "கிட்டங்கி" என்று பெயர். அத்தகைய கிட்டங்கிகள் காரைதீவு முனையில் இருந்தன. அதனால் அந்தப் பகுதியைக் "கிட்டங்கியடி’ என்றே சொல்வார்கள். அந்தப் பகுதியில் பல கடைகளும், பயணிகள் தங்கிச் செல்லக் கூடிய ஒரு பெரிய மடமும் கூட இருந்தன.
காரைதீவு இப்போது காரை நகராகிவிட்டது. துறை முகமும் அந்தக் கலகலப்பும் மறைந்து போயின. கிட்டங்கிக் கட்டிடங்களும் அந்த மடமும் இப்போதும் களையற்று இருக்குமென்று நினைக்கிறேன்.
ஊர்காவற்றுறைக்கு இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றிவந்து, திரும்பிச் செல்லும் பாய்க்கப்பல் ஒன்றில்தான் எங்களுடைய பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதுவே மிகவும் மலிவான பயண வழியாக இருந்திருக்க வேண்டும்.
ஒருநாள் காலையில் பொன்னாலையிலிருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு காரைநகர் கிட்டங்கியடிக்கு-துறை முகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கேயிருந்த மடத்தில் தங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு பிற்பகல் இரண்டு மணியளவில் கப்பலுக்குப் போய் ஏறிக் கொண்டோம். * கரையிலிருந்து சிறு தோணி மூலம் கப்பல் நிற்குமிடத் துக்குச் சென்று கப்பலில் கட்டியிருந்த ஒரு கயிற்று ஏணி மூலம் கப்பலுக்குள் ஏறிய நினைவிருக்கிறது.
அந்தக் கப்பல் பயணத்துக்கு-இலங்கையிலிருந்து இந்தியா செல்வதற்கு-ஒரு ஆளுக்கு ஐந்து ரூபா மட்டும் கட்டணம். சிறு பையனாக இருந்த எனக்கு அரைக் கட்டண மாக இருந்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால், நான் முதன் முதலில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணப் பணமாக செலுத்திய கட்டணம் இரண்டரை ரூபாதான்!
கப்பலின் மேல் தட்டில் "வானமே கூரையாக" நாங்கள்
இருந்ததும், ஒருபக்கத்திலிருந்த படிக்கட்டு வழி மூலம் ஒரு

mir, to V, 147
முறை நான் கீழே இறங்கிப் பார்த்ததும், மேல் தட்டில் பாய் மரங்கள் நிறுத்தியிருந்ததும். ஒரு பக்கத்தில் ஒரு சிறிய அறை போன்ற இடத்தைக் காட்டி அது 'தண்டே'லின் இடம் என்று யாரோ சொன்னதும் கதைபோலத் தெரி கின்றன. தண்டேல்" என்பது கப்பலின் தலைவனைக் குறிக்கும் சொல்,
அன்றிரவு வெகு நேரத்தின் பின்-கிட்டத்தட்ட சாமப் பொழுதாக இருக்கலாம்-கப்பல் பாய் விரித்துப் புறப்பட்டது.
நான் நித்திரையாகி விட்டேன். கப்பலின் ஆட்டத்தி ளால் நான் வாந்தி எடுத்தது மட்டும் நினைவிருக்கிறது
அடுத்த நாள் காலை நல்ல வெயில் வந்த பிறகு-காலை 8 மணியளவில் இந்தியாக் கரையை அடைந்தோம். கரையி லிருந்து வெகு தூரத்துக்கப்பால் கப்பல் நின்று விட, மீண்டும் சிறு தோணி மூலம் இந்தியக் கரையை அடைந்தோம். அந்த இடம் வேதாரண்யம்,
‘வேதாரண்யம்" என்பது ஏற்கெனவே நான் கேள்விப் பட்ட பெயர்.
வேதாரண்யத்தில் இருந்து காலத்துக்குக் காலம் முறை வைத்து யாழ்ப்பாணம் வந்து, வழக்கம்பரை அம்மன் கோயிலடியில் தங்கியிருந்த குருக்கள் மார்தான் எங்களுக்கு மத சம்பந்தமான கிரியைகள் செய்யும் குருமாராக இருந்தார் கள். இரண்டு மூன்று பேர் வந்து சுமார் ஆறுமாத காலம் வரை தங்கியிருப்பார்கள். பிறகு இவர்கள் மூன்று பேர்
வருவார்கள்.
எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ருக்க வேண்டும். அப்பாவைப் போல நல்ல வாட்டசாட்ட மாக இருப்பார்கள். ஆனால் அப்பா கறுவல். அவர்கள் நல்ல் நிறமாக இருந்தார்கள். துப்புரவான வெள்ளை வேட்டி  ைடுத்து உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகளும் நெற்றியில்

Page 76
48 மலரும் நினைவுகள்
சந்தனப் பொட்டுமாக அவர்கள் குமிழிமிதியடியில் நடத்து வரும்போது ஒரு மதிப்பான தோற்றமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் ஆசாரமுள்ள சைவப் பிள்ளைகள் எல்லோருமே சுமார் பத்து வயதில் சமய தீட்சை பெற்றுக் கொள்வது வழக்கம். எனக்கு இந்த வேதாரண்யக் குரு 3 களில் ஒருவர்தான் சமய தீட்சை செய்து வைத்தார் . கொஞ்சக் காலம் அதே பராக்காகக் strsosut jub Loretosuu i அனுட்டானம் பார்த்தேன். விபூதிக் குறிகள் வைத்தேன கொஞ்சக் காலந்தான். இப்போது முதல் மந்திரம் "ஈசானா ய நம" என்பதும் கடைசியில் *சிவாய நம" என்பதும் தேடிப் பார்க்க நினைவு வருகின்றன. மற்றவையெல்லாம் pruuloir di விட்டன. இப்போதெல்லாம் எப்போதாவது யாரும் பெரிய வர்கள் விபூதியைத் தந்தால் மரியாதைக்காக வாங்கி நெற்றி வில் தொட்டுக் கொள்வதோடு சரி-உண்மை என்னவென் றால் எனக்கு "ஞானம்" முற்றிவிட்டது
வேதாரண்யத்தில் இறங்கி அந்தக் குருக்கள் வீட்டுக்குப் போனோம். அப்பாவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களைக் கண்டவுடன் அப்பா அட்டாங்கமாக நிலத்தில் விழுந்து வணக்கம் தெரிவித்தது இன்று ஒரு படம்போலத்
அன்றைய தினம் அங்கேயே வேதாரண்யேஸ்வரர் குளத்தில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து குருக்கள் வீட்டிலேயே உணவருந்தினோம். அன்று மாலையில் அங்கிருந்து புறப்பட்டு "திருத்துறைப்பூண்டி' என்ற ரயில் நிலையத்துக்குச் சென்றோம். : திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தை நான் "பட்டிக் காட்டான் பட்டணம் பார்த்தது போல’ப் பார்த்தேன். அதற்கு முன் நான் ரயிலைப் பார்த்ததில்லை! அதைவிட, அங்கிருந்த கடைகளும், வெளிச்சமும், மக்கள் கூட்டமும், கல கலப்பும் எனக்குப் புதுமையாக இருந்தன. மாலை மாலையாகத் தொங்கிய பூக்கடைகளையும், அழகாக அடுக்கி

வரதர் A. 149
வைக்கப்பட்டிருந்த பழக் கடைகளையும் வியப்போடு பார்த்தேன்.
திருத்துறைப்பூண்டியில் ரயிலேறிச் சிதம்பரம் சென் றோம். நான் ரயிலைப் பார்த்ததும் அன்றுதான். அதில் ஏறிப் பயணம் செய்ததும் அன்றுதான்.
சிதம்பரத்தில் சிவபுரி மடத்துக்குப் போய் அங்கே தங்கி னோம். அந்த மடாதிபதி எங்களுக்கு ஒரு வகையில் உறவினர். முகமலர்ச்சியோடு வரவேற்று எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்
ாங்களுர்க் கோயில்களைப் பார்த்த கண்களுக்குடி sy; bu Th Gas Té666ðir gorgot LLD (T60T அமைப்பும், அண்ணாந்து பார்க்க வைத்த வானளாவிய கோபுரங்களும் பெரும் திகைப்பையளித்தன.
"தில்லைவாழ் அந்தணர்கள்" என்ற தீட்சிதர்கள்தான் சிதம்பரம் கோயிலின் உரித்தாளிகளும் பூசகர்களுமாக இருந்தனர். சாதாரணமான பிராமணர்களைவிட இவர்கள் உயர்ந்தவர்களாம். அவர்களைத் தவிர வேறு யாரும் பஞ்சாட்சரப் படிகளைத் தாண்டி சுவாமி இருக்கும் இடத்துக் (குள் போகக் கூடாது. மற்றப் பிராமணர்களிருந்து தங்களை வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதற்காகக் குடுமியை உச்சி விலே முடிந்திருப்பார்கள்.
சிதம்பரம் சிற்சபையில் "சிதம்பர ரகஸ்யம்" என்று ஒன்று இருக்கிறது. குறிப்பட்ட பணம் கொடுத்து விசேட அர்ச்சனை செய்விப்பவர்களுக்கு ஒரு திரையை நீக்கி அந்த "ரசஸ்ய"த்தைக் காட்டுவார்கள். நானும் பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. அந்த இருட்டுக்குள் தோரணங்கள் போல ஏதோ வில்வமாலைகளாகத் தெரிந்தன. அது என்ன காஸ்யமோ-எனக்கு இன்றுவரை புரியாத ரகஸ்யம் அது!

Page 77
;
50 மலரும் நினைவுகள்
சிதம்பரத்தில் நான் பார்த்த சுவாமி தரிசனத்தை விட, இன்னொரு தரிசனம் தான் எனக்கு அப்பொழுது மிக முக்கியமாகப் பட்டது.
நாங்கள் தங்கியிருந்த மடத்துக்குப் பக்கத்தில் ஒரு *டுரிங் டாக்கீஸ்". அதில் பேசும் படங்கள்"-சினிமாப் படங் கள் காட்டினார்கள். தரை டிக்கட் இரண்டு அணா, கீழே நல்ல மணல் பரவியிருந்தார்கள். அந்த மணலில் இருந்து இரண்டு நாட்கள் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று *பவளக்கொடி. " மற்றது "நவீன சாரங்கதரா. இரண்டும் எம்.கே, தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள்.
முதன் முதலாகச் சினிமாப் படம் பார்க்கிறேன். படங் கள், உண்மையான மனிதர்களைப் போல நடிப்பதும், பேசுவதும் பாடுவதும் எனக்குப் பெரிய புதுமையாக முதலில் தோன்றின. பிறகு அவற்றின் கதையில் ஆழ்ந்து நன்கு சுவைத்தேன். சாரங்கதரா படத்தில் கடைசிக் காட்சியில், கதா தாயகனின் வெட்டித் துண்டாடப்பட்ட கைகள் வெட்டிய கொலையாளியின் மூக்கைப் பிடித்துத் தர தர வென்று நெடுந்துரம் இழுத்துச் சென்ற காட்சி, பல நாட் களுக்கு என்னை வியக்க வைத்துக் கொண்டிருந்தது.
சிதம்பரத்தில் ஆருத்தரா தரிசனம் செய்து கொண்டு, அங்கிருந்து சீர் காளி மாயவரம், திருவாரூர், திருப்புன்கூர் முதலிய பல தலங்களுக்குச் சென்றோம். எல்லாக் கோயில் களுமே பிரமாண்டமான கட்டிடங்களுடனும் வானளாவிய கோபுரங்களுடனும் விளங்கின.
இப்படிப் பல் ஊர்களுக்கும் போயிருந்த போது எந்தெந்தக் ஹோட்டல்களில் தங்கினோம், எவ்வித உணவு
களை உண்டோம் என்று நினைக்கிறீர்கள்?
ஹோட்டலா?--அந்தப் பேச்சே இல்லை. பல ஊர்களில் ஹோட்டல்கள் இருந்ததாகவும் தெரியவில்லை.

வரதர் 151 ی
ஒவ்வொரு ஊரிலும் கோபுர வாசலுக்கு முன்னால் உள்ள பெரிய வீதிகளில் வீதியையே எல்லையாகத் தொடர்ந்து வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வளவுகளும், சுற்று மதில்கள்-வேலிகளும் அதில் படலைகளும் எங்கள் யாழ்ப் பாணத்து மனக்கண் முன் தோன்றும். அந்த வீடுகள் எல்லாம் வீதியின் ஒரத்தையே வாயிலாகக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் தெருத் திண்ணைகள் இருந்தன, திண்ணைகளின் சுவர் மாடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட தெருத் திண்ணை ஒன்றில் இரவு தங்கப் போகிறோம் என்றால் வீட்டுக்காரர்கள் தடை சொல்ல மாட்டார்கள். பல இடங்களில் அத்தகைய தெருத் திண்ணை களில்தான் தங்கினோம்.
கோயில்களில் பூசை முடிந்ததும், புக்கைக் கட்டிகள் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். புக்கை என்றால் தயிர்ச் சாதம், புளிச்சாதம் சர்க்கரைச் சாதம், நெய்ச் சாதம் என்று பல்வகைச் சுலைகளிலும் கிடைக்கும். ஒரு புக்கைக் கட்டி கால் அணா. ஒரு ஆளுக்குப் போதும். அநேகமாக எங்களுடைய உணவு இந்தப் பிரசாதமாகவே
இருந்தது!

Page 78
17. உணவு
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்திய யாழ்ப்
பாணத்துக் கிராம மக்களின் வாழ்க்கை முறையை இதுவரை இந்தத் தொடரில் எழுதி வந்தேன், என்னை மையமாக வைத்து, என் நினைவுக்கு வந்தவைகளை இதுவரை எழுதி விட்டேன். இந்தத் தொடரை நிறைவு செய்யுமுன், அந்தத் காலத்துக்கும் இந்தக் காலத்துக்குமுள்ள வேறு பாடுகளைப் பல துறைகளிலும் ஒரு தொகுப்பு முறையாக எழுத விரும்பு கின்றேன்.
மனித வாழ்க்கைக்கு முக்கியமான உணவையும் உடை யையும் பற்றி முதலில் பார்க்கலாம்.
உணவு விஷயத்தில் மக்களின் பழக்கம் இப்போது பெரிய அனவில் மாற்றம் கண்டிருக்கிறது.
இப்போது காலையில் எழுந்தால் எனது முதல் வேலை கடைக்குப்போய் செய்திப் பத்திரிகையும் பானும் வாங்கி வருவதுதான்.
பாண் இல்லாவிட்டால் காலை உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்ற அளவுக்குப் பாணின் ஆதிக்கம் வலுத்துவிட்டது.
இந்தப் பாண் எப்பொழுது எங்கள் மக்களுக்கு அறிமுக மாயிற்று?-அநேகமாக இரண்டாவது மகாயுத்தக் காலத்தி லாகத்தான் இருக்கும்.

வரதர் 153
1947-ஆம் ஆண்டளவில் நான் எழுதிய 'வாத்தியார் அழுதார்' என்ற சிறுகதையில் இந்தப் பாண் வருகிறது. அப்போது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாகப் பாண் கொடுக்கப்பட்டதாக அந்தக் கதையில் வருகிறது. எனவே 1947ஆம் ஆண்டுக்கு முன்னரே இங்கே பாண் வந்து விட்டது (வரலாற்று ஆய்வுகளுக்கு சிறுகதைகளும் உதவு மென்பதற்கு இது உதாரணம்!)
யுத்த காலத்தில் அரிசித் தட்டுப்பாடு காரணமாக *கோதுமை'யை அறிமுகம் செய்தார்கள். அதற்கும் இப் போது நாங்கள் வாங்கும் "கோதுமை மா'வுக்கும் சம்பந்த மில்லை. அது அரிசியிலும் சற்றே பெரிய தானியமாக, மணி மணியாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
அந்தக் கோதுமைத் தானியத்தை எப்படி எப்படிப் பயன் படுத்தலாம் என்பதற்குப் பிரச்சாரமும் செய்தார்கள். அத னுடைய சிறந்த போஷாக்குச் சத்துப் பற்றி எடுத்துக் கூறி னார்கள். அதிலிருந்து உணவு வகைகளைச் செய்து கண் காட்சிகளில் வைத்துக் காட்டினார்கள்.
அதை வறுத்து மாவாக இடித்து எங்கள் வீட்டில் பிட்டு அவித்தது எனக்கு நினைவிருக்கிறது. அது நல்ல வாசனை யாகவும் சுவையாகவும் இருந்தது. ஆனால் அரிசிமாப் பல காரங்களையே உண்டு பழகிய எங்கள் மக்களின் வாய்க்குக் கோதுமைச் சங்கதி அவ்வளவாக ஒத்துவரவில்லை!
பிறகும் கொஞ்சக் காலம் "கட்டி அடித்தால் அதுவும் பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் யுத்தம் முடிய, பழையபடி அரிசி வந்து குவிந்ததும் கோதுமை கண்ணில் காணாமல் போய் விட்டது.
ஆனால் இந்தப் புதிய பலகாரமான "பாண்" மட்டும் மெல்ல மெல்ல மக்களைப் பிடித்துக் கொண்டது
யுத்தகாலத்துக்கு முன்பு ஒரு "சிங்கள மாமா' உயரமான ஒரு கூடையைத் தலையில் சுமந்து பிஸ்கட், கேக் முதலிய

Page 79
卫54 • மலரும் நினைவுகள்
புதிய பலகாரங்களை றோட்டு றோட்டாகக் கூறி விற்றுக் கொண்டு போவார். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் அந்த் "மாமாவிடம் புதிய பலகாரங்களை வாங்கிச் சுவைப்பார் கள். ஆனால் அவர் "பாண்' விற்றதாகத் தெரியவில்லை. அப்படி விற்றிருந்தாலும் யாரும் அதை ஒரு நேர உணவுப் பொருளாக வாங்கி உண்ணவில்லை.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலே "பேக்கரி வைத்து நடத்தியவர்கள் சிங்களவர்தான். தமிழர்களுக்கு அது தெரியாத ஒரு வித்தையாக இருந்த காலம் அது W
எங்கள் கிராமத்தை வைத்துக்கொண்டு பார்த்தால் அந்தக் காலம் சாப்பாட்டுக்கே மக்கள் மிகுந்த கஷ்டப்பட்ட &lr6სLib.
சிலருக்குக் காலையில் சாப்பிடும் பழக்கமே இல்லை! அதிகமானவர்களுடைய காலை உணவு * பழஞ்சோறு’தான்! பழைய கறி, குழம்பு முதலியவற்றுடன் சம்பல், உப்புமிளகாய் முதலியவற்றுடனும் பழைய சோற்றை உண்ணுவார்கள். (பழஞ்சோறு என்பது முதல்நாள் சமைத்த சோறு. இதைப் படுக்கப் போகும்போது சோற்றுப் பானையில் தண்ணிரை ஊற்றி வைப்பார்கள். அதுதான் பழஞ்சோறு.)
சில வீடுகளில் பழஞ்சோறும் போதியளவு இருக்காது. அதற்குள் நிறையத் தண்ணீரை ஊற்றிப் பெருக்கி அந்தப் பழஞ்சோற்றுத் தண்ணிரையே காலை உணவாகக் குடித்து விட்டு இருப்பார்கள்
பழஞ்சோற்றுத் தண்ணிருக்கு உப்பைப் போட்டுக் கரைத்து, அதை வெங்காயம், பச்சை மிளகாய் எதையாவது கடித்துக்கொண்டு குடிப்பதுண்டு.
பழஞ்சோற்றுத் தண்ணீருக்குள் தயிரைவிட்டு, வெங்கா யத்தை வெட்டிப் போட்டு கொஞ்சமாகப் பச்சை மிளகாயை யும் வெட்டிப்போட்டு, ஊறுகாயையும் அதில் கரைத்துக்

வரதர் 155
குடித்தால். அப்படிக் குடித்த நினைவு வருகிறது. நாக்கில் ஐலம் ஊறுகிறது
பழஞ்சோற்றுத்தண்ணீரை 'நிலாத் தண்ணீர்" என்றும் சொல்வார்கள். அதன் பொருள் இன்னமும் எனக்கு விளங்க வில்லை.
மத்தியான உணவு அரிசிச் சோறுதான். சிலருக்கு அதுவும் கஞ்சியாகத்தான் கிடைக்கும். சில சமயம் கூழாகவும் மாறும். இந்தக் கூழைப் பற்றி நிறைய எழுதலாமென்று நினைக்கிறேன். எழுதக் கூடிய பட்டறிவு எனக்கில்லை. அரிசிக் கூழ், ஒடியற் கூழ், ஊதுமாக் கூழ் என்று சில கூழ் களின் பெயர்கள்தான் நினைவு வருகின்றன, * கூழ் ஆனா லும் குளித்துக்குடி’ என்ற சொல் கூழின் எளிமையை எடுத் துக் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் கூழில் மிக றிச்" சான கூழும் உண்டு. (விஷயம் தெரிந்தவர்கள் யாராவது கூழைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதினால் உபயோக மாக இருக்கும்.)"
பலருக்கு இந்த மாதிரி மூன்று நேரமும் உணவு கிடைப் பதே கஷ்டம்.
புழுக்கொடியல், பனாட்டு முதலியவற்றையும் பசி போக்கும் உணவாகப் பலர் உபயோகித்தார்கள்,
*உணவுக்குப் பஞ்சமே தவிர பல வீடுகளில் குழந்தை குட்டிகளுக்குப் பஞ்சம் இருக்காது. "குடும்பக் கட்டுப்பாடு" பற்றியே கேள்விப்பட்டிராத காலம்.
ஒரு குடும்பத்தில் நிறைய உறுப்பினர் இருந்ததும் சில ருடைய உணவுக் கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தது.
அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை நினைவு வருகிறது.

Page 80
1.56 மலரும் நினைவுகள்
எங்களூரில் "முட்டு இராமலிங்கம்" என்று ஒரு கிழவர் இருந்தார். நடக்கும்போது இரண்டு முழங்கால்களையும் முட்டி முட்டி நடந்ததால் அவருக்கு அந்தப் பெயர் வந்தது. முன்பின் யோசியாமல் காரியம் செய்கிறவர்களை "முட்டு இராமலிங்கம் ஒரு கொத்தரிசிச் சோற்றைத் தின்றமாதிரி" என்று சொல்வதுண்டு.
ஒரு சனிக்கிழமை, சனிக் கிழமையென்றால் முழுக்கு நாள். ஒளவைப் பாட்டியே 'சனிநீராடு" என்று சொல்லி வைத்தாள்,
முட்டு இராமலிங்கம் வீட்டில் ஏழெட்டுப் பிள்ளைகள். இராமலிங்கத்தின் மனைவி முழுக்கு நாளுக்கென்று ஒரு கொத்து அரிசி போட்டு சோறாக்கி வைத்திருந்தாள்.
முதலில் வீட்டுத் தலைவர்தான் சாப்பிடுவது வழக்கம். இராமலிங்கம் சாப்பிட உட்கார்ந்தார். மனைவி தட்டில் சோற்றையும் கறிகளையும் படைத்தாள்.
தட்டில் போட்ட உணவை இராமலிங்கம் சாப்பிட்டு: முடிக்க மனைவி மீண்டும் தட்டை நிரப்பினாள். இராம லிங்கம் சாப்பிட்டார். அது முடிவதைக் கண்டு மனைவி மீண்டும் போட்டாள்.
மீண்டும், மீண்டும்.
இப்படியே பானையிலிருந்த சோறு முழுவதும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் இராமலிங்கம் விழித்துக் கொண்டு "ஐயையோ, உனக்கும் பிள்ளைகளுக்கும் இல்லா மல் எல்லாவற்றையும் தின்றுவிட்டேனே' என்று அவதிப் பட்டாராம்! ;
நல்ல வேளையாக வீட்டில் அரிசி இருத்தபடியால், இராமலிங்கத்தின் மனைவி அவசரம் அவசரமாக மீண்டும் சமையல் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்தாராம்-இப்படி ஒரு கதை ,

வரதர் ケ 157
சாப்பாடு கிடைக்காவிட்டால் பச்சைத் தண்ணிரைக் குடித்துப் பசியை அடக்குவதும், சாப்பாடு கிடைத்த நேரம் அளவு கணக்கின்றி வயிற்றை நிரப்புவதும் சிலருக்குப் பழக்கப்பட்டிருந்தது.
சாப்பாடு பற்றிய இன்னுமொரு அந்தக் காலத்துக் கதையையும் சொல்லி வைக்கிறேன்.
இது காரைதீவில் கேட்ட கதை. காரைதீவு என்பது புராதனப் பெயர். இப்போது அது "காரைநகர்" என்ற பெயரை நிலை நிறுத்திவிட்டது! பெயரில் மட்டுமே 'நகர்" வந்ததே தவிர அங்கே இன்னும் “நகரசபை' வரவில்லை. உருவத்தில் இன்று கிராமமாகவே இருக்கின்றது. அஃதிருக்க,
நான் காரைநகரில் கேட்ட கதையைச் சொல்கிறேன்.
மாரிகாலம் வந்துவிட்டால், அங்கே மாடுகள் மேயும் தரவைகளிலெல்லாம் தண்ணீர் நிறைந்து விடும். மாடு களுக்கு மேச்சல் நிலம் கிடையாது, மாடுகளை வீட்டில் கட்டி வைத்துப் பராமரிப்பது கஷ்டம்.
இதே நேரம் செம்பாட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு மாடுகள் தேவைப்படும். செம்பாடு என்பது வலி-வடக்குப் பகுதி என்று நினைக்கிறேன். அங்கே உள்ளவர்கள் அநேக மாக நெல் விளைவிப்பதில்லை. எல்லாம் தோட்டக் காணி கள் வெங்காயம், மிளகாய், புகையிலை முதலிய தோட்டப் பயிர்கள் செய்வதுதான் அவர்களுடைய முக்கியமான விவசாயம். குரக்கனும் விளைவிப்பார்கள் போலிருக்கிறது. நெல் விதைப்பதற்கு காலம் சரிவருவதில்லை.
தங்களுடைய தோட்டங்களின் எருத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, செம்பாட்டுக் கமக்காரர் காரைநகருக்கு வந்து மாரிகாலத்தில் மாடுகளைக் கொண்டுபோய் வைத் திருப்பார்கன் மாடுகள் போடும் சாணி அவர்களின் தோட் டங்களுக்கு மிகவும் தேவையான எரு.

Page 81
158 மலரும் நினைவுகள்
அப்படி மாடுகளைக் கொண்டு போனவர்கள் இடைக் கிடை காரைநகருக்கு வந்து மாடுகளின் நிலைமை பற்றிச் சொல்வது வழக்கம். ኵ
அப்படித்தான் கொண்டு போன மாடுகளைப் பற்றிச் சொல்வதற்காகச் செம்பாட்டுக்காரர் காரைநகரிலுள்ள மாட்டுச் சொந்தக்காரரின் வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அவர் வந்ததற்கு வேறொரு உள் நோக்கமும் இருந்தது.
காரைநகர் வீட்டுக்காரர். நித்தியம் அரிசிச் சோறு தின்று அலுத்துப்போய். மாற்றத்துக்காக, அருமை பெருமை யாய் அன்றைய தினம் குரக்கன் பிட்டு அவித்திருந் தார்கள்.
செம்பாட்டார் மாடுகளைப் பற்றிக் கதைத்த பின், வழக்கம்போல அவரைச் சாப்பிடும்படி சொன்னார்கள்.
அவரும் ஆவலோடு சாப்பிட உட்கார்ந்தார். சாப்பாட் டுத் தட்டில் அன்று தாங்கள் அருமையாகத் தயாரித்த குரக் கன் பிட்டைக் கொண்டுவந்து போட்டார்கள். ". . .
செம்பாட்டார் திகைத்துப் போனார். பெரிய ஏமாற்றம் அவருக்கு.
** அட. எனக்கு முன்னம் நீ இங்கே வந்துவிட்டாயா!' என்றாராம் அவர்.
செம்பாட்டுக்காரரின் வீட்டில் அந்தக் காலத்தில் பெரும் பாலும் குரக்கன் பிட்டுத்தான் சாப்பாடாம் அவருடைய கடுமையான உழைப்புக்கு அரிசி நின்று பிடிக்காது. குரக்கன் தான் நின்று பிடிக்கும். அவர் மாடுகளைப்பற்றிக் கதைக் கும் சாட்டில் அரிசிச் சோறு சாப்பிடும் எண்ணத்திலேதான் அன்று காரை நகருக்கு வந்திருந்தார். அவரை முந்திக் கொண்டு குரக்கன்பிட்டு அன்று காரை நகருக்கு வந்துவிட்ட தைக் கண்டு அவருக்குப் பெரிய ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது!
இது வெறும் கதையாகவே இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து உணவுப் பழக்கத்தைச் சற்றே "பிட்டுக் காட்டுகிறதல்லவா?

18. உடையும் நகையும்
ஒகு மனிதனின் வெளித் தோற்றத்துக்கு முக்கியமான காரணமாயிருப்பவை அவனுடைய ஆடையணிகளும் தலை முடி (கூந்தல்) அமைப்புமே "ஆள் பாதி, ஆடை பாதி” என்று பழமொழியும் உண்டு.
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் பொது வாக ஆண்களும் பெண்களும் முடியுடை வேந்தர்களாகவே இருந்தார்கள். அதாவது குடுமி வைத்திருந்தார்கள் *சிலுப்பா" வெட்டிய ஆண்களை மிக அரிதாகவே காண முடியும். ;
ஆண்களும் குடுமி வைத்திருப்பது அக்காலத்தில் ஒரு சமூக வழக்கமாக இருந்தது. அந்தச் சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பெரும்பாலானவர்கள் துணியவில்லை.
இப்போதெல்லாம் புதுமை செய்வதற்காகவும் பகுத் தறிந்து சரியானதைச் செய்வதற்காகவும் சமூக வழக்கங் களை உடைத்துக்கொண்டு வருவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்தக் குணம் மக்க ளிடையே சற்றுக் குறைவாகவே இருந்தது. அப்பா எப்ப டிச் செய்தார், அப்பாவின் அப்பா எப்படிச் செய்தார், நாமும் அப்படித்தான் செய்யவேண்டுமென்ற ஒரு மனப் பதிவு அன்
றைய மக்களிடம் இருந்தது. ெ

Page 82
160 மலரும் நினைவுகள்
இப்போது புலிப் பெண்களில் சிலர் ஆண்களைப்போலச் சிலுப்பா" வெட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக் கிறது. அந்தக் காலத்தில் யாராவடி, இதை நினைத்துக் alLi Li Titu Trias6Trr?
சில ஆசாரக் குடும்பங்களில் பெண்களின் கணவர் இறந்து விட்டால் அந்தப் பெண்களின் தலையை மொட்டையடிப்பார் கள். இந்தியப் பிராமணர்களிடையே இந்தப் பழக்கம் முன்பு பெருவழக்கு. யாழ்ப்பாணத்திலும் மிக மிகக் குறைந்த அளவில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்தது.
புலிப் பெண்களின் சிலுப்பாத் தலைகளைப் பார்க்கும் போது என் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது எங்கள் பெண்களின் முன்னேற்றப் பாதைக்கு இது ஒரு அடையாளம் என்றே நான் கருதுகிறேன். "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே.”*
(ஆனால் "ஐயோ, நமது தமிழ்ப் பண்பாடு சீரழிந்து போகிறதே!" என்று கூக்குரலிடும் பழைமைவாதிகள் இப் போதும் நிறைய இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடி யாது. அவர்களின் வாய்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருப் பது நல்லதே!)
அந்தக்காலத்தில் ஆண்கள் சிலர் தலையின் முன் பக்கத்தை மழுங்கச் சிரைத்து பின் அரைவாசிக்கே மயிரை வளர்த்துச் குடுமி வைத்திருப்பார்கள்.
* காற்சட்டை, கோட் போட்டுக்கொண்டு கச்சேரி? உத்தியோகத்துக்குப் போன பலர்கூட அந்தக் காலத்தில் குடுமியை வெட்டத் துணியவில்லை. அவர்கள் தமது தலைப் பாகைக்குள் குடுமியை மறைத்து வைத்திருப்பார்கள்,
ஆண்களின் இந்தக் குடுமி மோகம் மிக விரைவில் மாறத்
தொடங்கிற்று. 1930களில் பல இளைஞர்கள் குடுமிகளை வெட்டிச் சிலுப்பா வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

.16 . tפץ שנחc
குடுமி வைத்திருந்த இளைஞர்களை மற்றச் சிறுவர்கள் டேய், குடும்பாஸ்" என்று கேலி செய்யவும் தொடங்கி னார்கள். அதற்குப் பயந்து தமது குடுமிகளை வெட்டிக் கொண்ட சில நண்பர்களை நான் அறிவேன்.
பெண்களின் தலைமுடி அன்று தொடக்கம்-இன்றும் கூடப் பெரும்பாலும் மறையாமல் இருக்கிறதென்று சொல்ல arub.
ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்ற சில பெண்கள் தமது கூந்தலை சற்றே தோள்வரை வெட்டிவிட்டதுண்டு. ஆனால் அவர்களும் தமது திருமணத்துக்கு முன்பு கூந்தலை வளர்த் துக் கொண்டை போட்டுக்கொள்வார்கள். அல்லது பின்னித் தொங்கவிடுவார்கள்.
கூந்தலை வளர்த்து அழகாகக் கொண்டைகள் போடு வதும், அல்லது விதம் விதமாகப் பின்னி விடுவதுமே தமக்கு அழகாக இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை பெண்களிடம் பொதுவாகப் பரவியிருக்கிறது.
அழகு, நாகரிகம் என்பனவெல்லாம் அவர்கள் மனதிலே வளர்த்துக்கொண்ட எண்ணங்களால் ஏற்படுகிற ஒரு தோற்றந்தான்!
ஆபிரிக்காவுக்குப் போகவேண்டாம், பக்கத்திலுள்ள தமிழ்நாட்டுக்குக்கூடப் போக வேண்டாம். இங்கே யாழ்ப் பாணத்தில்கூட, முன்பெல்லாம் காதுகளில் துளை போட்டு, அவற்றில் பெரிய பெரிய பாரமான ஆபரணங்களைத்தொங்க விடுவதும், அதனால் காதுத் துவாரம் இரண்டு விரல்களை நுழைக்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகப் போவதும் அழ கென்று, நாகரிகமென்று நினைத்தார்கள். சேலை கட்டு வதில்கூட ஒரு காலத்தில் பதினாறு முழச் சேலையைச் சுற்றிச் சுற்றி வரிந்து கட்டினார்கள். பிறகு பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டும்போதுகூட அதன் முந்தானையைத்
ഥ-l1

Page 83
iÖ2 மலரும் நினைவுகள்
தோள்மீது போட்டு, பின்பக்கமாக எடுத்து, இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றி மறுபடியும் பின்பக்கத்தில் "பின் பண்ணித் தொங்கவிட்டார்கள். அதுவே அழகென்றும் நாகரிகமென் றும் நினைத்தார்கள். இன்றைக்கு யாராவது அப்படிச் செங் தால் அதை அழகாயிருக்கிறதென்று சொல்வார்களா? நாகரிகமென்று சொல்வார்களா?
பெண்களைத் தங்கள் ஆளுகையின் கீழ் அடக்கி வைத் திருக்கவேண்டுமென்றும், அவர்களை அழகுபடுத்தித் தங்கள் போகப்பொருளாக வைத்திருக்க வேண்டுகென்றும் இன்றைக்கும் பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ... இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி அடக்கி அடக்கமாக இருப்பதே - அல்லது அப்படி இருப்பதாக உலகுக்குக் காட்டுவதே நாகரிகம் என்றும், பண்பாடு என்றும் பெண்களும் நினைக்கிறார்கள்!- சிறு வயதிலி ருந்தே பெண்களுக்கு அப்படிப் பாடம் படிப்பித்து வைக்கப் பட்டிருக்கிறது.
'கணவன் எப்படித்தான் கொடுமைப்படுத்தினாலும் அவற்றையெல்லாம் பொறுத்து வாழ்வதே பெண்ணின் பெருமை' என்ற இந்தப் படிப்பு இன்னும் பல நாட்களுக்கு நின்று பிடிக்காதென்றே நினைக்கிறேன். உலகெங்கும் பெண்ணியல் வாதமும் பகுத்தறிவு வாதமும் தலைதூக்கியி ருக்கிறது. நமது தமிழீழப் பெண்கள் தமிழ் கூறும் நல்லு லகுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதுக்குமே வழிகாட்டிக ளாக நெஞ்சில் உரமும் நேர் கொண்ட பார்வையும் கொண் டவராய்க் கைகளில் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்கள்
ஈழத் தமிழகம் பெருமைப் படலாம்! அந்தக்காலத்தில் இரண்டு மூன்று வயதுச் சிறு பிள்ளை கள் பலர் உடம்பில் உடை என்று எதுவுமில்லாமல் பிறந்த மேனியாகத் திரிவதை நான் பார்த்திருக்கிறேன்" இப்போது

வரதர் 163
குழந்தை பிறந்த உடனேயே "நப்கின்" என்றும், பிறகு "யங்கி" என்றும் அணியாத பிள்ளைகளைப் பார்ப்பதே
அரிது!
முன்பு, மூன்று நாலு வயதாகும் போது ஆண் பிள்ளை களும் சரி. பெண் பிள்ளைகளும் சரி இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியிருப்பார்கள்.
இன்னும் சற்றே வளர்ந்ததும், பெண்பிள்ளைகள் மேலுக்கு ஒரு சட்டையும், அரையில் சிற்றாடையும் அணி வார்கள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றா டைகள் (சிறிய சேலைகள் - நீளமும் குறைவு; அகலமும் குறைவு) அப்போது விற்பனைக்கு வந்தன. அத்தகைய சிற்றாடை தயாரிக்கும் தொழிலே இப்போது நின்று, விட்டிருக்குமென்று நினைக்கின்றேன்
"பெரிய பிள்ளை ஆகிவிட்ட, வசதிபடைத்த பெண்" பிள்ளைகள். வெளியே விசேடங்களுக்குப் போகும்போது, கீழே பாவாடைகட்டி, மேலே சட்டை போட்டு, அதன் மீது தாவணி அணிந்து செல்வார்கள்.
இப்போது கூடச் சில இந்துப் பாடசாலைகளில் சரஸ் வதி பூசை போன்ற விசேட தினங்களில் பெண்பிள்ளைகள் இப்படித் தாவணி அணிந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி உடை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் அல்லது ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பெண் பிள்ளைகள் இப்படிப் பாவாடை தாவணி அணிந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகச் சிலர் நினைவு கொள்கிறார்கள்!
ஆனால், அவர்களும் ஆண் பிள்ளைகள் வேட்டி சால்வை - அவசியமானால் தலைப்பாகையும் அணிந்து தமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று வற்புறுத் துவதில்லை!

Page 84
64 மலரும் நினைவுகள்
இங்கேயும் பெண்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர் கள் என்ற நினைவே தலைதூக்கி நிற்கிறது!
முன்பெல்லாம் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் சேலைதான் அணிவார்கள். வீட்டுக்குள் இருக்கும்போதும் சேலைதான்; வெளியே போகும்போதும் சேலைதான்!
இப்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே போகும்போது தான் சேலை அணிவது என்று ஆகிவிட்டது. சில பெண்கள் திருமணமான சில பெண்கள் வெளியே போகும்போது கூடப் பாவாடை சட்டை, "கவுண்" போன்றவற்றை அணிகிறார் கள். அவர்களை யாரும் தள்ளிவைத்து விடவில்லை!
ஆண்கள் காற்சட்டை அணிவது இப்போது சர்வ சாதாரணம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, காற்சட்டை போட்டவர் ஏதோ வெள்ளைக்காரருக்கு அடுத்த துரை என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ள வர்கள் மட்டுமே காற்சட்டை அணிவார்கள். அவர்களில் சிலவகை உத்தியோகத்தர்கள் - முக்கியமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரைக் காற்சட்டையே அணிவது வழக்கம். (அரைக் காற்சட்டை என்பது "சோட்ஸ். அது முழங்காலுக்குக் கீழே இறங்காது.) s
அந்த அரைக் காற்சட்டை இப்போது காணக்கிடைக் காத ஒரு பொருளாகிவிட்டது. முன்பு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அரைக்காற்சட்டைதான் அணிவார்கள். (பாடசாலைகள் என்றதும் ஆங்கிவப் பாட சாலைகள், தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே வேட்டியும் சால்வையும்தான் அணிவார்கள்) பல்கலைக்கழகம் போகிறவறையும் அரைக் காற் afoolதான் மாணவர்களின் யூனிபோம் ஆக இருந்தது.
இப்போது மூன்று வயதுப் பையனுக்கும் முழுக்காற் சட்டைதான்!

வரதர் ሶ 65
பதவி, அந்தஸ்து வித்தியாசங்களின்றி காற்சட்டை பொது உடைமையாகிவிட்டது. "தமிழ்ப்பண்பாடு அழி கிறதே!" என்று முக்கியமாகப் பெண்கள் சேலை உடுக்க வேண்டும், சிறுபெண்கள் பாவாடை, சட்டை தாவணி போட வேண்டும் என்று அழுகிறவர்கள் யாருமே இந்தக் காற்சட்டை நாகரிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவ தில்லை. ஏனென்றால் அப்படிக் குரல் கொடுக்கக் கூடிய வரும் காற்சட்டைதான் அணிந்திருப்பார். அல்லது அவ ருடைய உறவினர்கள் நண்பர்கள் எல்லோருமே காற்சட்டை அணிந்தவர்களாக இருப்பார்கள்.- ஏன் வம்பு? சிறிய வாய்க்காலில் வரும் நீருக்கு அணைபோட்டுப் பார்க்கலாம். சீறிப் பொங்கி வரும் காட்டாற்றுக்கு அணைபோட நினைப்
Lu Třs6TT.
இப்போது வேட்டி உடுக்கும் ஆண்களில் அநேகர் சால்வை போடுவதில்லை. "சேட்" தான் போடுகிறார்கள்
முன்பு சிறுவர்கள் வேட்டி உடுத்தி மேலே சேட்" போடு வார்கள். சேட் போட்டால் அனேகர் சால்வை அணிவ தில்லை. ஆனால் பெரியவர்கள் வேட்டி உடுத்துவதானால் "நாஷனல்" என்னும் சட்டை அணிந்து, அதற்கு மேல் கழுத் தைச் சுற்றி சால்வை அணிவார்கள். "நாஷனல் சட்டை என்பது தமிழாசிரியர்களின் 'யூனிபோம்" மாதிரியே அந்தக் காலத்தில் விளங்கிற்று. சேட்" வெள்ளைக்காரருடைய உடுப்பு. "நாஷனல்’ என்பது எங்கள் நாட்டுக்குரிய சட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் பெயர்மட்டும் "நாஷனல்" என்று இந்திய மொழியிலேயே வழங்கப் பட்டது.
முன்பெல்லாம் ஆண்களில் பலரும் நெற்றிப் பொட்டு வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது, இப்பொழுது அந்தப் பழக்கம் மிக அருகிவிட்டது. நெற்றியில் விபூதிக் குறிவைத்துப் பெரிய அளவில் அதன்மீது சந்தனப் பொட்டு வைப்பவர்கள் ஒருவகை. விபூதியையோ பவுடரையோ

Page 85
166 மலரும் நினைவுகள்
அழுத்திப் பூசி, புருவங்களின் நடுவே சின்னஞ் சிறு வட்ட மிான சிந்தனப்பொட்டு இட்டுக் கொள்வார்கள். அந்தச் சந்தனப்பொட்டின் தடுவே சிறு குச்சி முனையால் குங்குமம் வைத்து அலங்கரிப்பவர்களும் உண்டு. "
ஆண்களில் சிலர் கழுத்திலே தங்கச் சங்கிலியில் *அச் சரக்கூடு" கோத்து அணிந்ததும் உண்டு. அது அவர்களின் செல்வச் செழிப்பின் அறிகுறியாகவும் இருந்தது
பெரும்பாலான ஆண்களும் பெண்களைப் போலக் காது களில் துளை போட்டிருந்தார்கள். அதிலே கடுக்கன் போட்டுக் கொள்வதே அழகாகக் கருதப்பட்டது. இப் போதும் திருமணச் சடங்கின் போது மணமகனுக்குக் கடுக்கன் அணிவது ஓர் முக்கிய சடங்காக நடக்கின்றது. இப்போது ஆண்கள் காதில் துளை போடுவதில்லையாதலால் அவர்களுக்காக "வில்லுக் கடுக்கன்" வந்திருக்கிறது!
பெண்களின் நகைப்பித்து அன்றைக்கும் உள்ளதுதான் இன்றைக்கும் உள்ளதுதான். ந ை$ப்பித்தும் புகைவைப் பித்தும் பெரும்பாலான பெண்களோடு உடன் பிறந்த ' வியாதி.
புடைவைகளின் தரத்திலும் மாதிரிகளிலும் அணியும், விதத்திலும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போலவே நகைகளின் வடிவங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. み
பெண்களின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான 'அட்டியல்' என்னும் நகையை இப்போது காணோம். அட்டியல் கழுத்தைச்சுற்றி இறுக்கமாக பட்டை போல அணியப்படும். அதன் நடுவில் ஒரு சிறிய பதக்கம் தொங்கும்.
பல பெண்கள் காதுகளின் கீழ்ப்பக்கம் நடுப்பக்கம் மேல் பக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் துளை போட்டு அவற்

வரதர் 67
றில் நகைகள் அணிந்ததுண்டு. காதில் மேற்பக்கத்தி லிருந்து தொங்கிய நகைக்கு "வாளி' என்று பெயர். கீழ்க் காதில் அணிந்த தோடு பெரிய கொட்டைப் பாக்கின் அளவில் பல சிவப்புக் கற்கள் பதித்ததாகவும், வேறு பல வடிவங்களிலும் இருந்தது. m
பெண்கள் கழுத்தில் இப்போது முக்கியமாக அணியும் "நெக்கிலஸ் அப்போது இல்லை. அட்டியலைவிட, இரட்டைப்பட்டுச் சங்கிலி, பெரிய பதக்கம் கோத்த சங்கிலி முதலியவற்றை அப்போது அணிந்தார்கள். பெரிய பணக் கார வீட்டுப்பெண்கள் கழுத்தில் காசு மாலையும், இடுப்பில் தங்க ஒட்டியாணமும் அணிந்ததுண்டு.
கைகளில் அப்போது அணியும் காப்புகள் இப்போது போல மெல்லிய வளையல்களாக இருக்கவில்லை. ஒவ்வொன் றும் இரண்டு பவுனுக்கு குறையாத தட்டையான தடித்த காப்புகளையே அன்று அணிந்தார்கள்.
கை விரல்களில் தங்க மோதிரமும் கால் விரல்களில் வெள்ளி மோதிரமும் அணியும் வழக்கம் இருந்தது.
பெண்களின் இந்த நகை விஷயத்திலும் அத்தக் காலத்து வேறுபல நடைமுறைகளிலும் சரி எனக்குத் தெரி யாதவையும் நான் மறந்துவிட்டவையும் இன்னும் நிறைய இருக்கலாம்.

Page 86
(9) 10)
(II) (፲2) (13) (14) (15) (16) (17) (18)
ஐந்திணை எழுபது - மூவாதியார் திணைமொழி ஐம்பது - சாத்தத்தையார் மகனார்
கண்ணஞ் சேந்தனார்
திணைமொழி நூற்றைம்பது - கணிமேதையார்
திரிகடுகம்- நல்லாதனார்
ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் பழமொழி மூன்றுறையரையார் சிறு பஞ்சமூலம் - காரியாசான் கைந்நிலை - புல்லங்காடனார் முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதையார்.
இவற்றுட் சில கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவையாகும்
எமக்குக் கிடைத்த கடைச்சங்க நூல்களும் அடிகளும்t
நூல் திருக்குறள் மணிமேகலை; சிலப்பதிகாரம் கலித்தொகை இன்னா நாற்பது பெருங்குறிஞ்சி குறிஞ்சி (ஐங்குறு நூற்றிற் கபிலர் பாடியது) திருமுரு காற்றுப்படை நெடுநல் வாடை பெருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை மதுரைக் காஞ்சி மலைபடு உகடாம் பதிற்றுப் பத்து
புறநானூறு அகநானுறு
குறுந்தொகை நற்றிணை முதலிய தனிப் பாடல்கள்
ー忍56ー
அடிகள்
名660
4857
4957
430s
60
261
0.
37
88
245 248
201
701.
553 600
4000
a 4,386

பழைய தமிழ் நூல்களிற் பல எமக்குக் கிடையாது. அழிந்தொ ழிந்து விட்டன. இவற்றுட் சிலவாவன:- மாபுராணம், இசை நுணுக் கம், பூத புராணம், கலி, குரு, வெண்டாளி, வியாழ மாலை அகவுள் அடிநூல், அணியியல் அவிநயம், ஆசிரிய மாலை, ஆனந்தவியல், இந்திர காளியம், இளந்திரையம், ஐந்திரம், ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, கவிமயக்கறை, கவிக்கேட்டுத்தண்டு, களரியாவிரை, கனவு நூல், காக்கையாடினியம், காலகேசி, குணநூல், குண்டலகேசி, கூத்து, கோணுால், சங்கயாப்பு, சயந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிந்தம், சிறு காக்கை பாடினியம், சிறு குரீஇ, உரை, சிற்ப நூல், சிற்றெட்டகம், சிற்றிசை, செயன்முறை செயிற்றியம், நகடுர் யாத்திரை, தந்திரவாக்கியம், தான சமுத்திரம், தாளவகையோத்து, தும்பிப்பாட்டு, தேசிகமாலை, நாகசூமார் காவி யம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பரி நூல், பலகாயம். பல காப்பியம், பன்னிருபடலம், பாட்டு மடை, பாவைப் பாட்டு, புணர்ப் பாவை, புதையனுால், புராணசாகரம், பூதபுராணம், பெரியபம்பம், பெருவல்லம், பேரிசை, போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகம், தமிழ் நூல், மந்திரநூல்,மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், மார்க்கண் டேயர் காஞ்சி முதுகுருகு, முதுநாரை, முத்தொள்ளாயிரம், முறுவல், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், வச்சத் தொள் ளாயிரம், வஞ்சிப் பாட்டு, வரி வளையாபதி, வாய்ப்பியம், விளக் கத்தார் கூத்து, அகத்தியம், அகத்தியர் பாட்டியல் அசதிக்கோவை, உலகாயதம், செங்கோன் தரை செலவு,
- 157 -

Page 87
அட்டவணை 3
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல்
(ஆதார நூல்கள் :- யாழ்ப்பான சரித்திரம் - இராசநாயக முதலியார் யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர்)
(1) யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி. பி. 785 இல் உக்கிரசிங்கனுடன் தொடங்குகிறது. இவனுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நாகச் சிற்றரசர் ஆண்டனர்; இவன் இராசதானி யைக் கதிரை மலையிலிருந்து சிங்கை நகருக்கு மாற்றினான். இவ னுடைய காலத்திலேதான் மாவிட்டபுரக் கந்தசுவாமி கோவில் கட் டப்பட்டது. விசயன் கதைபோல இவனைப் பற்றியும் புராணக் கதையுண்டு.
(2) உக்கிரசிங்கன் இறந்தபின் அவனுடைய மகனாகிய ஜெய துங்க பரராசசேகரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்திலே தான் யாழ்ப்பாடி எனும் பாணன் பரிசில் பெற்றான். இவன் காலத் தில் வரகுணன் எனும் பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இவனையும் பொலனறுவாவில் ஆண்ட சிங்கள அரசனையும் வென்றான். ஜெயதுங்க பரராசசேகரனைக் கொன்றான்.
(3) கி. பி. 9ம் நூற்றாண்டு மத்தி தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய சோழருக்குச் சிற்றரசர் களாக யாழ்ப்பாணத்திலாண்டனர். இக்காலத்தில் அடிக்கடி ஏற் பட்ட சோழ,பாண்டிய பல்லவர் படையெடுப்புக்களையும் வெற்றிகளை யும் தென்னிந்தியச் சாசனங்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இக்காலத்திற் சிங்கை அரசரும் சிங்கள அரசரும் மணத்தொடர்பும் நெருங்கிய உறவும் உடையவராக இருந்தனர். கி. பி. 941-49இல் சோழன் பராந்தகன் சிங்கை அரசனை வென்றான். சிங்களவரசனைப் புறங்கண்டான். கி. பி. 995இல் முதலாம் இராசேந்திரன் இலங்கை மேற் படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தனைப் பொலனறுவாவி லிருந்து துரத்தினான். கி. பி. 1014இல் இராசேந்திர தேவன் மகிந் தனைச் சிறைசெய்து இலங்கை முழுவதையுஞ் சோழ மண்டலத்திற் சேர்த்தான். வட இலங்கை கி. பி. 944 தொடக்கம் கி. பி. 1070 வரையும் 126 வருடங்கள் சோழப் பிரதானியாக விருந்தது. சிங்கை அரசர் சோழருக்குக் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத் தில் சிங்கை அரசர் சிலர் கலகம்விளைவித்ததினால் சோழரினாற்கொலை செய்யப்பட்டனர். மானாபாணன், வீரசலாமேகன், கிறீவல்லப மதன
ܗܡ= 158 ܚ

ராசன் என்போர். இரண்டாங் குமாரகுலோத்துங்கன் காலத்திலே (கி, பி. 1118 - 1146) புகழேந்திப் புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது சிங்கை அரசனைப் பாடிப் பரிசில் பெற்றார். மேலும் கி.பி. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு,
(4) முதலாம் பராக்கிரமவாகு: குலோத்துங்கன் காலத்துக்குப் பின்பு சோழப் பேரரசு பலங்குன்றிற்று. சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தமது நாடுகளைத் திரும்பவும் பெற்றனர். இராச இராஜ னாற் கி. பி. 1038 இற் கொல்லப்பட்ட மானாபாணன் எனும் சிங்கை அரசனின் மகள் திலக சுந்தரியை சிங்கள அரசனாகிய முதலாம் விஜய பாகுவும், விஜயபாகுவின் சகோதரி மிற்றாயை மானாபாணனின் மகனும் மணஞ் செய்தனர். இம் மானாபாணனின் பிள்ளைகள் மூவரா வர். மானாபாணன், கீர்த்திசிறீமோகன், சிறீவல்லபன். மானாபாணன் இரத்தினவல்லியை மணஞ்செய்தான். இவர்களுடைய புத்திரனே முதலாம் பராக்கிரமவாகு. பராக்கிரமவாகு இளமையில் யாழ்ப் பாணத்தில் வளர்ந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் மரபு முறைப்படி உபநயனம் பெற்றவன். வன்னியை வென்று பனங்காமத்திற் சிற்றர சனாக விருந்தான். பின்பு பொலனறுவாவிலாண்ட தனது மைத்து னன் இரண்டாம் கயவாகுவை வென்று இலங்கை முழுவதையும் ஆண் டான். பராக்கிரமவாகுவின் பின்பு, வட இலங்கையும் தென்னிலங் கையும் வெவ்வேறு இராச்சியங்களாகின.
(5) கலிங்கமாகன் செகராசசேகரன்: (கி. பி. 1215 - 1240) இவன் பொலனறுவாவை வென்று அங்கிருந்து கி. பி. 1236 வரையும் ஆட்சி செய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இவனுக்குப்பின் வட இலங்கை அரசர் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்பட்டனர்!
**தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்" எனப் போற்றப்பட்டான். பொலனறுவா, புளச்சேரி, கந்தளாய், கந்துப்புலு, குருந்து, பதவியா, மாட்டுக்கொணா, ஊராத்தொட்டை கொமுது, மீபாதொட்டை மண்டலி, மன்னார் முதலிய இடங்களிற் கோட்டைகள் கட்டினான்.
(6) குலசேகரச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி-பரராசசேகரன் (கி.பி. 1240 - 1270) அந்தகக் கவியின் வருகையும் ஆரூருலா பாடப்பட்டதும் இவன் காலத்திலாகும். கி. பி. 1253 இற் சோழப்படை வெற்றி: கி. பி. 1256 இற் சந்திரபானுவின் படையெடுப்பு,
سس ,159 مســـــ

Page 88
(7) குலோத்துங்க சிங்கையாரியன் - மசகராசசேகரன் - கி. பி. 1270 - 1292 இக்காலந்தொட்டு சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குத் திறைகட்டி ஆண்டனர். மன்னார்க் கடலில் முத்துக்குளிக் கும் உரிமைக்கு இக்காலத்திற் செகராசசேகரனுடன் சிங்கள அரசன் புவனேகபாகு போர் செய்தான். கி* பி. 1284 இல் மார்க்கோ போலோ என்ற புகழ்பெற்ற பிரயாணி யாழ்ப்பாணத் துறைமுக மொன்றில் இறங்கினான். யாழ்ப்பாணத்தைப் பற்றியும், ஆரியச் சக்கர வர்த்தி ஆட்சிமுறைகள் பற்றியும் தனது நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறான்.
(8) விக்கிரமசிங்கையாரியன்-பரராசசேகரன் - கி. பி. 1292 - கி. பி. 1302. இவனுடைய காலத்தில் யோவான் எனுங் கிறிஸ்தவ குரு யாழ்ப்பாணம் வந்தார். இவரும் யாழ்ப்பாணத்தைப் பற்றியுஞ் சிங்கை அரசைப்பற்றியுங் குறிப்பிடுகிறார். கி. பி. 1296 இல் யாப் பாகுவில் தோல்வியுற்ற புவனேகவாகுவின் குமாரனுக்கு அவனுடைய அரசை சப்பெற உதவிசெய்தான். ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறை கட்டப் புவனேகவாகுவின் மகன் உடன்பட்டான். பின்பு யாழ்ப்பாண அரசருக்குப் பயந்தோ அல்லது திறை கட்ட மறுத்தோ சிங்கள அரசர் தமது இராசதாணியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும் கம்பளைக்கும் மாற்றினர். வன்னி அதிகாரிகள் பலர் சிற்றரசர்களாக ஆளத் தொடங்கினர். இஃது அக்கால நிலப் பிரபுத்துவ முறையுடன் இணக்கமுடையதாக இருந்தது.
(9) வரோதய சிங்கை ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1302-1325
கி. பி. 1303 இற் குருநாக்கலில் அரசு செய்த நாலாம் பராக்கிரம வாகு சிங்கை அரசருக்குத் திறை கட்ட மறுத்துத் தனது இராச தானியை தம்பதெனிக்கு மாற்றினான். இப்பராக்கிரமபாகுவின் சபையிலேதான் போஜராஜ பண்டிதர் என்பவர் சரசோதிமாலை எனுந் தமிழ்ச் சோதிட நூலை அரங்கேற்றினார். அக்காலத்திற் சிங் கள மேன் மக்களிடையில் தமிழே கற்றவர் மொழியாக இருந்தது. சுந்தரபாண்டியன் தான் இழந்த இராச்சியத்தைப் பெற வரோ தய சிங்க ஆரியனின் உதவியை நாடினான். இக்காலத்திலே தென்னிந் தியாவில் மகமதியர் செய்த கொடுமைகளினால் பல பெருங்குடி மக்கள் வட இலங்கைக்கு வந்து குடியேறினர். இக்காலத்தில் இலங்கைக்கு வந்த பிரையர் ஒடொறிக் எனும் கத்தோலிக்கப் பாதிரியார் இவ்வர சனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினான்.
-- 60 Il -سسه

(10) மார்த்தாண்டசிங்கை ஆரியன்-பரராசசேகரன்-கி. பி. 1325-1347,
இவனுடைய காலத்தில் இபின் பட்டூட்டா எனும் மகமதியப் பிரயாணி இலங்கை வந்தான். ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றிய் அவருடைய குறிப்புக்களை முன்பு இந்நூலிற் கூறினோம்.
(11) குணபூஷணன்-செகராசசேகரன்-கி. பி. 1347.
கி. பி. 1348 இல் போப் சீனாவிற்கு அனுப்பிய தானாதிபதியத் தலைவன் யாழ்ப்பாணம் வந்தான். யாழ்ப்பாணத்தைப் பற்றிப் பல விபரங்கள் எழுதியிருக்கிறான்.
(12) விரோதய சிங்கை ஆரியன்-பரராசசேகரன். இவனுடைய காலத்தில் வன்னி நாட்டிற் பல கலகங்கள் நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கித் தனதாட்சியைப் பலப்படுத்தினான்" கி. பி. 1380 இல் இறந்தான்.
(13) ஜெயவீரசிங்கை ஆரியன் - செயராசசேகரன்- கி. பி. 1380-1410. ஆரியச் சக்கரவர்த்திகளில் இவனே மிகப் புகழ்பெற்றவன். விடையும் பிறையும் பொறித்த நாணயங்களை அடித்தான்.
கி. பி. 1340இற் கோட்டையில் அளகக் கோனார் ஆட்சி தொடங் கிற்று. இவன் வஞ்சி நகரத்து மலைய குலத்தைச் சேர்ந்தவன். கம் பளையில் மூன்றாம் விக்கிரமவாகுவின் மந்திரியும் படைத்தலைவனு மாகவிருந்தவன். சிங்கள அரசில் ஒரு பகுதியைக் கவர்ந்து கோட்டை யில் தன்னரசை நிறுவினான். சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குக் கட்டிவந்த திறையைக் கட்ட மறுத்தான். திறை கேட்க வந்த ஏவலாளரைக் கொன்றான். அளகக்கோனுக்கும் ஜெயவீர சிங்கை ஆரியனுக்கு மிடையிற் போர் மூண்டது. அழகக்கோன் வென் றான் எனச் சிங்கள இதிகாசங்கள் கூறுகின்றன. சிங்கை ஆரியன் வென்றானெனச் சில காலத்துக்கு முன்பு கேகாலைப் பகுதியிற் கண் டெடுக்கப்பட்ட சாசனங் கூறுகிறது. செகராசசேகரம் எனும் வைத் திய நூல், செகராச சேகரமாலை எனுஞ் சோதிட நூல், காரி வையாவின் கணக்கதிகாரம் எனும் கணித நூல், தக்ஷண கைலாச புராணம் இவன் காலத்தவையாகும்.
(14) குணவீரசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி. பி. 1410-1440
இவனே இராமேச்சுரக் கர்ப்பகிரகம் கட்டுவித்தவன். TgTTF சேகரம் எனும் வைத்திய நூல் இவன் காலத்தில் எழுதப்பட்டது.
- 16 l -

Page 89
(15) கனகசூரிய ஆரியன் - செகராசசேகரன் - கி.
இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த் மலையா ளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய் தான். இவன்ே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். கி பி. 1467இல் பராக்கிரமவாகு இறந்தபின் கோட்டை யரசனாகி னான். கனகசூரியன் யாழ்ப்பாணத்துக்குப் படைகளுடன் திரும்பி வந்து அரசைக் கைப்பற்றினான்.
(16) சிங்கைப் பரராசசேகரன்- கி. பி. 1478.
இரண்டாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவினான். இச் சங்கத்தில் இவனுடைய மைத்துனன் அரசகேசரி 'இரகுவமிசம்" எனும் நூலை அரங்கேற்றினான். பரராசசேகரன் உலாவும் இக்காலத்ததாகும். இவனுடைய காலந்தொட்டுச் சிங்கை ஆரியர் ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கிற்று. வன்னியர்கள் திறை கொடுக்க மறுத்துத் தம்மாட்சி நடத்தினர். இலங்கையின் வியாபாரம் முழுவதையும் மகமதியர் கைப் பற்றினர். போர்த்துக்கீசர் நாட்டிற் புகுந்தனர். பரராசசேகர னுக்கு நான்கு புத்திரர். சிங்கவாகு, பண்டாரம், பரநிரூபசிங்கம், சங்கிலி, சங்கிலி அண்ணன்மாரைச் சூழ்ச்சியினாற் கொன்று அரசைக் கைப்பற்றினான். சிங்கை அரசர் போர்த்துக்கீசரின் பொம்னிம களாகினர்.
சங்கிலியின் ஆட்சிக் காலத்திற் சங்கிலிக்கும் போர்த்துக்கீசர் களுக்குமிடையில் இடையறாப் போர்கள் நடந்தன. போர்த்துக்கீசர் பரநிரூபசிங்கனைக் கிறித்தவனாக்கி அவனை அரசனாக்க எத்தனித் தனர். கி. பி. 1565இற் சங்கிலி இறந்தான்.
காசி நயினார் அல்லது குஞ்சி நயினார் - பரராசசேகரன். போர்த் துக்கீசர் இவனைச் சிறைப்படுத்தி வேறோர் அரச குமாரனை நியமித் தனர். ஆனாற் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகியவுடன் காசி நயினார் புதிய அரசனைக் கொன்று மறுபடியும் அரசனாகினான்.
போர்த்துக்கீசர் காசி நயினாரை நஞ்சூட்டிக் கொன்று பெரிய பிள்ளை எனும் அரசகுமரனை செகராசசேகரன் எனும் பட்டத்துடன் கி. பி. 1570இல் அரசனாக்கினர். கி. பி. 1582இற் பெரியபிள்ளைக் குப்பின் புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் என்னும் நாமத்துடன் அரசனானான். புவிராஜ பண்டாரம் பலமுறை போர்த்துக்கீசருடன் போர் செய்து தோற்றான். ஈற்றிற் போர்த்துக்கீசரனினாற் கொல் லப்பட்டான். போர்த்துக்கீசர் அவனுடைய மகன் எதிர்மன்னசிங் கனைத் தங்கீழ் அரசனாக்கினர். இவன் பரராசசேகரன் எனும் பெயர் பெற்றான். இவன் கி. பி. 1591 தொடக்கம் கி. பி. 1618 வரையும் ஆட்சி செய்தான். இவன் இறந்தபோது சங்கிலி எனும் அரசகுமாரன் பட்டத்தைக் கைப்பற்றினான். இச் சங்கிலி ஈற்றிற் போர்த்துக்கீசரி னாற் கொலை செய்யப்பட்டான். கி. பி. 1620இற் போர்த்துக்கீச ரின் நேராட்சி தொடங்கிற்று.
ബ് 162 -

• نۓ1
13.
l4.
l5。
6.
17.
8.
ei.Lh62693T 4, 5
ஆதார மேற்கோள் நூல்கள்
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர்
-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழர் சரித்திரம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழ் இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
திராவிட இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை திராவிட நாகரிகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை தென்னகப் பண்பு - பன்மொழிப் புலவர்
திரு. கா. அப்பாத்துரை தென்னாட்டுப் போர்க்களங்கள்
பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை
தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
-திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்
அகத்தியர் வரலாறு *。
-திருமந்திரமணி துடிச்ைகிழார் அ. சிதம்பரனார்
திராவிடமக்கள் வரலாறு திரு. E. L. தம்பிமுத்து
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-டாக்டர் ம. இராச்மாணிக்கனார்
தொல்காப்பிய ஆராய்ச்சி-பேராசிரியர் 9, இலக்குவனார்
சிந்துவெளி நாகரிகம் a.
-வித்துவான் மா. இரர்சமர்ணிக்கம்பிள்ளை தமிழக வரலாறு-பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுகள் தமிழக வரலாறு-திரு. அ. மு. பரமசிவானந்தம் தமிழர் வாணிகம்-புலவர் கா. கோவிந்தன்
- 163 -

Page 90
19.
20.
2丑。
2发。
26.
岔7。
28.
29.
30.
3.
32.
33.
34.
35。
ஆயிரத்துத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் -திரு. வி. கனகசபை
1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்
-பேராசிரியர் M. S; பூரணலிங்கம்
மறைந்துபோன தமிழ் நூல்கள்-மயிலை சீனி வெங்கடசாமி
பல்லவர் வரலாறு-வித்துவான்
மா. இராசமாணிக்கம்பிள்ளை
சோழப் பேரரசு-வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை தமிழர் மதம்-மறைமலையடிகள் தமிழ்நாட்டு வரலாறு-டாக்டர் மு. ஆரோக்கியசாமி Tramil India-by Prof. Purnalingam Pillai The Ancient Tamils-by S. K. Pillai Tamil History-by R. Raghava Aiyangar
நூற்றாண்டுகளில் இன்பத் தமிழ்
-பண்டிதர் கா. பொ. இரத்தினம்
தமிழ் ஈழம்-நாட்டு எல்லைகள்-திரு. J. R. சின்னத்தம்பி வன்னியர்-கலாநிதி சி. பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை-மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணச் சரித்திரம்-முதலியார் செ. இராசநாயகம்
Tamils and Cultural Pluralism in ancient Sri Lanka
by Rev. D. J. Kanagaratnam Ph. D.
Atlantis-Edgar Cayce.
- 64 -


Page 91
ഗ്ര/ سمي~~~
தமிழர் வர
பொருளியல் துவி
பெற்று அத்துறையிலே அ பொ. சங்கரப்பிள்ளை அவர் யுறும் அளவுக்கு தமிழியல் இலக்கியம், அரசியல், சமூ பல்வேறு நெறிகளிலும் து துறைகளிலே அகலமாகவி முற்பட்டவர்.
இந்நூல் தமிழர்களி றினை மட்டும் ஆய்வதுட பண்பாடு, கலைகள், இன் தொழில், விவசாயம் போ சிகள் போன்றனவற்றைய ஆய்வு ரீதியாகவும் அணு பழந் தமிழ் இலக்கிய புடைய ஆசிரியர் பரந்த விருந்து ஏராளமான துகள் யும் அகழ்ந்தெடுத்து இந்த பயன்படுத்தியுள்ளார். ட வெறும் இலக்கியங்கள் ம வரலாற்றுப் பண்பாட்டு, ! ஆய்வுகளுக்கும் உதவுவன துள்ளுரார். அத்துடன்
இலக்கிய வரலாறு பற்றி சுற்று அவற்றில் பொதித் யும் இந் நூலில் நன்கு ட தமிழரின் வரலாற்று பாட்டுக் கலை இலக்கியப் வுற எடுத்துக்காட்டும் இ நல்லுலகினால் என்றென்
வேண்டியவர்.
Carr, சமூக விஞ்ஞான் கொழும்புப் ப

லாற்று நூல்
நபிவே று பர் பட்டங்கள் அறிஞராக விளங்கிய திரு. கன் தமிழ் மக்கள் பெருமை தமிழர் வரலாறு தமிழ் கவியல், மெய்யியல் ஆகிய துறைபோசு 'கற்றவர். இத் ம் ஆழமாகவும் ஆராய
ன் அ ர சி ய ல் வரலாற் -ன் நில்லாது அவர் தம் க்கிபந்தன், சமயம், கைத் ன்ற போருளாதார முயற் ம் வரலாற்று ரீதியாகவும் குகின்றது. ங்களில் மிகுந்த புலமை தமிழ் இலக்கியப் பரப்பி வல்களையும் கருத்துக்களை ஆய்வு நூலிலே விரிவாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் ட்டுமன்றி ஒரு இனத்தின் சமய, பொருளாதார, சமூக என்பதை நன்கு நிரூபித் அவர் தமிழர் வரலாறு ப ஏராளமான நூல்களைக் துள்ள ஆய்வு முடிவுகளை பயன்படுத்தியுள்ளார். த் தொன்மையும் பண் பெருமைகளையும் தெளி ந் நூலாசிரியர் தமிழ்கூறும் ாறும் நினைவு கூரப்பட
சந்திரசேகரம் 5 கல்வித்துறைத் தலைவர், ல்கலைக்கழகம்,
■

Page 92
74
உறுதியுண் டாகு முண்மையொன் றுளது சிறுமதி சூடிய சிவபெரு மானை இறுதியுள் ளளவும் மறவா தேத்திப் பொறுதியா யிருந்து பூரண மாகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊணு யுணர்வா யுயிருக் குயிராய் நானுய் நீயாய் நன்மையாய்த் தீமையாய் வானுய் மதியாய் வாயுவாய்த் தேயுவாய்த் தானுய் நின்ருன் சச்சிதா னந்தனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊழிக் காலத்து மொருவா வொருவனை வாழி வாழியென் றேத்தி வணங்கி ஆழிசூ முலகி லாசை யெலாம்போய் தாளி ரண்டுஞ் சரணெனச் சாருதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊமத்தை கொன்றை யுவந்த பிரானைப் பாவத்தை நீக்கும் பராபர வஸ்துவைச் சேமத் தைத்தருந் திறமெனக் கொண்டு ஒமத்தை யாற்றி யொருவழிப் படுவோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊரும் பேரு மில்லா னுள்ளான் நீரும் நிலனு மாகி நின்ருன், ஆரு மறியா வாற்ற லுடையான் சீருஞ் சிறப்பு முடைய சிவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊசி முனையி லிருந்தோம்பு வோர்கள் பேசி யறியார் பிறரை யுலகில் நாசி வழியில் நடக்கும் பிராணனைத் தேசி போலச் செலுத்த வல்லாரே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தன்ை
25
26
27
28
29
30

நற்சிந்தனை
என்னைக் கணமும் பிரியா விறைவன் அன்னை போல வன்பு சான்றவன் பொன்னைப் பொருளைப் போகத்தைத் தள்ளி உன்னு வோர்க ளுறுவர் பரகதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
எங்குந் திருவிழி யெங்குந் திருச்செவி எங்குந் திருக்கர மெங்குந் திருக்கழல் எங்குந் திருவடி வெங்கு மிவனே எங்கு மிவனென் றேத்து வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
என்செய லாவ தில்லைச் சிவனர் தன் செய லென்னல் தகுமென வெண்ணி முன்செய் வினையெல்ாம் முழுதும் போக்கிப் பின்செய் வினையிலை பிறப்பிறப் பிலையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எட்டாத கொப்பி லிருக்குந் தேனுக்குக் கொட்டாவி கொண்ட முடவன் கொள்கைபோல் அட்டாங்க யோக மறியாத நாங்கள் நட்டோ மென்று நவிறல் நகையே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எல்லாம் நீயே யென்றிருந்த மாதவர் சொல்லாலே சொல்லப் புகார்நீ சும்மா நில்லா யென்ன நிறுத்துவ ரதனை நல்லோ ரறிவார் நயந்து போற்றுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஏக னநேக னெல்லார்க்கு மீசன் மோகமார் தக்கன் வேள்வி முனிந்தவன் வேகமா கரியை யுரித்துப் போர்த்தவன் தாகமா நாடினுேர்க் கருடரு வானே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
75
3.
2
33
34
35
36.

Page 93
76 நற்சிந்தனை
ஐயனை யழகன யன்பர் சகாயனைத் தையல் பாகனத் தத்துவா தீதனை வையகம் வானகம் வணங்கும்பொற் பாதனை மையல் தீர வந்திப்போம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒன்ரு யிரண்டாய் மூன்ருயோ ரைந்தாய் நின்ருய் நின்லை நினையவல் லார்கள் பொன்றத் துணையும் போகமும் பொருந்துவர் என்ருர் பெரியோ ரிறைஞ்சுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஓங்காரத் துட்பொரு ளானவுத் தமன நீங்கா தெங்கும் நிறைந்த வஸ்துவைப் பாங்கார் பஞ்சாட் சரப்ப ரமனைத் தூங்காது நாளுந் தோத்திரிப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒளவிய மனத்தின ரறியா வறிவைச் செளபாக் கியமுடைத் தற்பர வஸ்துவை நெளவியு மழுவு மேந்து நம்பனைக் கெளரவத் துடனே கழறுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கறங்கு போலக் கலங்கு மனத்தைத் திறங்கொள் யோக சித்தியால் நிறுத்தி உறங்கி யுறங்கா திருந்து நோக்கிற் பிறப்பிறப் பென்பது பிராந்தியா கும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கங்குலும் பகலு மில்லாக் காட்சியன் சங்கரன் தானு சம்பு சதாசிவன் பொங்கர வணிந்த பூத நாதன் மங்கையோர் பாகன் மான்மழுக் கரனே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
37
38
39
49
4.
43.

நற்சிந்தனை
சத்தியுஞ் சிவமும் தானய் நின்றவன் பத்திசெ யடியரைப் பரகதி சேர்ப்பவன் எத்திக்கு மாகி யிருக்கு மிறைவன் சித்தத் துள்ளே தித்தித் திருக்குமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அஞ்ஞான விருளை யகற்று மாதவன் மெய்ஞ்ஞானி கட்கு வீட்டைத் தருபவன் செஞ்ஞா யிற்றை யொத்த சிவனுர் எஞ்ஞான்று மென்ற னுள்ளத் துளனே ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இடம்வல மோடி யியங்கும் பிராணனைத் திடம்பெறச் சுழுமுனை தன்னிற் சேர்த்தால் திடம்பெறுங் காயஞ் சித்திக ளெய்தும் மடம்பெறு வஞ்சக மனம்மா யும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வணக்கி ஞன்மா மேரு மலையினைக் கணக்கிலா வசுர கணங்கள் மாய்ந்தன பணுமுடி யாதி சேடனும் பயந்தான் கணுதி பர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தன்னை யறியத் தவத்தை யாற்றிப் பின்னமற் றெல்லாம் பிரமமே யென்ன அன்னை போல அன்பு கூர்ந்து இன்னல் தீர வென்றுமேத் துதுமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நமச்சி வாயவே நாம்சொல்லும் மந்திரம் எமக்கி னிக்குறை யொன்றுமே யில்லை
தமர்பிற ரென்னுந் தளையுந் தீர்ந்தோம் சமமா யுயிரெல்லாந் தாம்நினை வோமே
εδ . g ஓதுக வது நாம ஓமதத சதலும.
12
177
43
44
45
46
47.
尘8°

Page 94
178
பற்றற் ருர்பற்றும் பரம்பொரு டன்னச் செற்றம் நீக்கிச் செய்வன செய்து நற்றவர் தங்க ளுறவினை நாடிப் பற்றுது மதுவே பாக்கிய மாகும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
மத்தர் பேயர் மதலைய ரெனவே அத்த னருள்பெற்ற வன்ப ரிருப்பர் சித்தரு மவரே தேவரு மவரே முத்தி வேண்டி முறைமையான் வணங்குதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
இயமன் வருணன் குபேரன் இந்திரன் வியக்கத் தகுந்த வேறுபல் தெய்வமும் வியனடி வேண்டி யாற்றினர் வெகுதவம் முயலுதும் நாமும் முதன்மை யடைகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அரவரைக் கசைத்த விசைசால் பரமன் குரவு வார்கழல் கும்பிடும் பாக்கியம் தரைமிசை பெற்றேர் தமக்குச் சமமாய் எவரையுங் காண்கிலம் இறைஞ்சுது மவரடி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்:
இலங்கை வேந்தன் இராவண னென்பான் நலங்கொள் கயிலையை நாடி யெடுத்துக் கலங்கின காரணங் கண்டு மடியேம் நிலந்தனிற் ருழ்ந்துநீ ளகந்தை யகற்றுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வடியார் சூலம் வலக்கர மேந்தி இடியார் பேரொலி யெங்கு மார்ப்ப அடியார் காணவன் முடிய கூத்தை அடியேங் காண வாசைகொள் வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
49
50
51
52
5$
64

நற்சிந்தனை
அழல்சேர் கையு மருவிபாய் சென்னியும் கழற்கீழ் முயலகன் கலங்கும் வன்மையும்
இளநிலா வெறிப்பும் எடுத்தபொற் பாதமும்
பழவினை நீக்கும் பார்வையும் காணுதும் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இளமையு மூப்பு முள்ளா னில்லான் களவிலா நெஞ்சினர் காட்சிக் கெளியன் மழவிடை யூர்தியன் மாசி லாமணி யளவு கடந்தவ னவனடி சூடுதும் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
அறம்புரி வோர்கள் திறம்பா வாற்றலர் உறங்கி யுறங்கா திருக்கு முத்தமர்
கறங்குபோல் மனத்தைக் கடந்த சித்தர் இறந்தும் பிறந்து மிடுக்கணெய் தாதவர் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
சனகர் சனந்தன ராதியாந் தவத்தினர் இனந்தனி லெம்மை யிருத்தி வைத்துச் சினந்தனை நீக்கிச் சிவானந்த மென்னும் வனந்தனில் வைக்க வள்ளலைப் பாடுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கற்பனை கடந்த வற்புதன் கமலப் பொற்றுணை மலரடி போற்றி யுலகில் நிற்பதும் நடப்பது மாய வுயிரெலாம் சிக்கன வாழ்வுறச் சிந்தைசெய் வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
காரா ராணவக் காட்டைத் திருத்திப் பாரார் விண்ணுேர் பரவுஞ் சிவமெனும் பேரார் வித்தை யிட்டுப்பே ரின்பமாம் சீரார் தெவிட்டாக் கணியருந் துவமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
179
55
56
57
58
59
60

Page 95
18O
கிஞ்சுக வாயுமை கேள்வனை யமரர் சஞ்சலந் தீர்த்த சற்குரு நாதனை நெஞ்சக மலரிடை நினைந்து நாடொறும் வஞ்சனை கோபம் பொருமைமாய்ப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கீரன் சொன்ன வாசகங் கேட்டுப் பேரன் புற்றுப் பிணியை நீக்கி மாரனைக் காய்ந்த மறைமுதல் வோனைப் பூரண மாகப் போற்றுவோம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கையையுங் காலையு முன்பணிக் காக்கிச் செய்கை யெல்லாந் திருவடிக் காக்கிப் பொய்யுங் கொலையும் புலையும் போக்கி மெய்யன் புடன்மே தினியில் வாழ்வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். V
கொன்றை மத்தம் தும்பை கூன் பிறை துன்று கங்கை சூடிய சொக்கனை மன்றுள் மாணிக்க வல்லி மகிழ்நனை என்று மேத்தி -யிறைஞ்சுதும் நாமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
கோகனகத் தானுங் கோவிந் தனுந்தேடி ஆகம் நொந்து அறிவழிந் தார்கள் மோகஞ்சேர் மாரன் முழுது மழிந்தான் யோக நாதன்றன் னுரைக்கா ரொப்பார் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சக்கரம் மாலுக்குத் தந்த பரமனை அக்கரந் தோறு மமர்ந்த பெருமானைத் துக்கம் வெட்கம் தொலைய நினைந்து தக்க வன்பொடு சமர்ப்பிக் குதும் நாம் ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம். .
நற்சிந்தனை
61
69
63
64
65
C6

நற்சிந்தனை
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெம்மை யாண்ட
போத குருவைப் புண்ணிய மூர்த்தியை நாதங் கடந்த ஞான வெளியிடை பேத மின்றிக் கண்டுபிறப் பற்ருேம் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சித்திர காரன் தீட்டிய தீபம்போல் நித்திய வஸ்துவில் நினைப்பு மறப்பற முத்தியி லிருக்கும் முறையைப் புகல்வாய் எத்திக்கு மாகி யிருக்கு மீசனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சீரக முள்ள சீவான் மாவே பாரக மெல்லாம் பரந்த தென்னத் தாரக மோதிச் சாந்தம் பொறுமையோ டோரகஞ் சார வுறுதி தந்தருள் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
செல்வர்பின் சென்று தினமலை யாமல் நல்வரந் தருவாய் ஞானிகள் நாட்டமே சில்பக ருேன்றிச் சிதையா வண்ணம் எல்லையில் கால மென்றனுக் கருளுதி ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சேணிடை விடைமேற் றிருஞான சம்பந்தர் காணிய வண்ணங் காட்சி கொடுத்த ஆணிப் பொன்னே அம்பல வாணு வேணியா வென்முன் வெளிப்பட வருக ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சைவனே யுன்னைத் தமசம மாதியோ டைவரும் பொன்ற வடியே னுக்குக் கைவர மருள்வாய் கால காலா மைதவ ழம்மை மருவு மார்பனே
ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
81
67.
68.
69.
70
71.
72.

Page 96
182
சொன்ன பாணன் சுந்தரன் கவிக்காய்ச் சொர்ண மளித்த சொக்க நாதனே இன்னு மென்னை யிடருற வைத்தால் என்ன செய்குவே னேழை யேனே ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
சோடி ழந்த வன்றில் சுகத்தைத் தேடி யலையுஞ் செய்கை போல நாடி யானு முன்னை யணுக ஓடி வந்தரு ஞதவு வாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தந்தை தாயும் மைந்தரும் பிறரும் வந்த வாழ்வுமோ ரிந்திர சாலம் அந்த மாதியு மில்லா வரனே எந்த நேரமு மென்னைக் காக்குதி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தாவும் வேங்கை யுடையாய் சடையாய் ஏவும் மார னெனைத்தொட ராமல் கூவு மென்குரல் கேட்டி ரங்குதி தாழ்வும் வாழ்வும் இல்லாச் சம்புவே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
திங்கள் கங்கை வைத்த செல்வனே அங்கை தன்னி லனலேந்து மாதியே மங்கை பங்கனே மறலி காலனே எங்கே நினைப்பினு மென்னெதிர் நிற்குதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தீவினை கெஞ்சத் தீப்பிணி யஞ்ச நாவினில் நமச்சி வாயங் கொஞ்ச
சாவிற் சஞ்சல முழுதுந் துஞ்ச சேவிக்க வருள்தா செஞ்சர னிணையினை
ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
73
75
76
77,
78

நற்சிந்தனை துண்டப் பிறையாய் தூவெண் நீற்ருய் அண்டர் பிரானே அரகர சிவனே தொண்டர் மனத்தாய் சோதியுட் சோதி கண்டவ ருண்டோ கடவுளே யுன்னை ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தூதுசுந் தரர்க்காய்ச் சென்ருய் நல்லிருட் போதுசம் பந்தர்க்குப் பொற்கிழி கொடுத்தாய் மாதுலற் காக வழக்குமுன் னுரைத்தாய் சேது மேவிய செல்வா நீதுணை ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தென்னவன் தீப்பிணி தீர்த்தாய் முன்னுள் மன்னவ ஞக மதுரையில் வாழ்ந்தாய் அன்னந் தண்ணி ரரசுக் கீந்தாய் என்ன நான் கேட்பே னெந்தாய் இரங்காய் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தேவர் பிரான் பழி தீர்த்தாய் கூடலில் சேவக ஞகக் குதிரை செலுத்தினை மூவர் தமிழ்மொழி கேட்டுகந் தாய்முன் காவல ஞகவும் நடித்தனை நீயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தையலை வேட்டுச் சார்ந்தாய் மதுரையில் வையகம் வானக முட்க நடித்தாய் பையர வந்தனை யார்த்தாய் பணியாய் ஐய ஐயவென் றனக்கரு ளாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தொல்லைநா விருவர் காணுச் சோதியே தில்லை யம்பலத் தாடிய சிவனே எல்லை யில்லா ஏக வெளியே ஒல்லை வந்தரு ஞதவுவாய் கடனே ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
183
79
J
81
82
83
84

Page 97
184 நற்சிந்தனை
தோளா முத்தே சுடரிற் சுடரே பாழா யடியேன் ப ைதயா வண்ணம் நீளா வருள்நீ தருவாய் வருவாய் ஆள்வா யடியார் குடிவாழ் பவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 85
நந்தா விளக்கே ஞானச் சுடரே இந்தா றணியு மிறையே முறையோ வந்தாள் தருணம் மறையின் முடிவே எந்தா யென்றுங் காப்பா யெனையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 86.
நாமார்க் குங்குடி யல்லோம் நாடிற் தாமார்க் குங்குடி யல்லாச் சங்கரன் கோமான் வைத்த குடியே நாங்கள் ஏமாப் போம்பிணி யறியோ மென்றும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 87.
நின்ன வார்பிற ரில்லை யெலாம்நீ சொன்னர் முன்னேர் தோத்திரஞ் செய்து பன்ன விரிப்படிப் பயிலப் பயில என்ன யகமே யெமக்கறி வுண்டோ ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம். 88
தாமரையில் நீர்போற் சகத்திலே தம்பிநீ சேமமுடன் வாழ்வாய் சிவனைநினை-ஆமளவும் நன்மையையே செய்வாய்நீ நல்லோரைப் பேணிநட தன்னை யறியலாந் தான். - l
தந்தை தாய் மற்றுந் தமர்தார மெல்லாருஞ் சந்தையிற் கூட்டமிது தப்பாது - எந்தைபால் 1 எப்போது ம ன்புவை எல்லா மவன் செயலே இப்போ சமய மிணங்கு, . . 2

நற்சிந்தனை 185
பராயரக் கண்ணிகள் 1
அன்னைதந்தை சுற்றம் அரிய சகோதரர்கள் உன்னையன்றி யுண்டோ என்னுயிரே பராபரமே. I
ஆக்கையே கோயில் அகமே சிவலிங்கம் འ་ பூக்கைகொண்டு போற்றவருள் புரியாய் பராபரமே. 2 இருவினையால் கட்டுண்டு இடர்ப்பட்டுத் திரிவேனக் கருணையா லாட்கொண்ட கண்ணே பராபரமே. 3 ஈயாத புல்லர் இடந்தோறும் நாயடியேன் வாயார வாழ்த்தி வாழவிட்டாய் பராபரமே. 4. உன்னைப் பிரிவேனே உயிர் நான் தரிப்பேனே என்னைப் பிரிவாயோ இறையே பராபரமே. 5 ஊரும் பேருமில்லா ஒருவன் உலகத்திலே ஆரென்று காட்டென்பார்க் கென் சொல்வேன் பராபரமே.6
எல்லாமா யல்லவுமாய் இருப்பான் இறைவனென்ருல் சொல்லாலே எப்படிநான் சொல்வேன் பராபரமே. 7.
ஏக னனேக னென்றுசொல்லும் விந்தை தேகத்துக்கோ சித்துக்கோ செப்பாய் பராபரமே. 8. ஐம்பொறியும் மனமும் அறியாமல் நிற்குமொன்று எம்மறிவுக்கு எட்டுமோ எந்தாய் பராபரமே. 9.
ஒருபொல் லாப்புமில்லை உண்மை முழுதுமென்ற திருவாக்கை யாரறிவார் செப்பாய் பராபரமே. 10.
ஓங்காரத் தாலே உலக முதிக்குமென்ற பாங்கறிவார் யார்தான் பகர்வாய் பராபரமே. 11 ஒளவிய நெஞ்சத்தார் அறியா ரெனவுரைத்தால் ஒளவிய நெஞ்சமிலார் யார்தான் பராபரமே. 12. அஃகுத லில்லா அறிவுடைய பெரியோர்யார் வெஃகுத லின்றி விளம்பாய் பராபரமே. 13

Page 98
186 நற்சிந்தனை
II.
ஒருபொல்லாப்பு மில்லையென்னு மொருமொழியால்
உள்ளம் உருகாதோ வென்றன் உயிரே பராபரமே. I. எப்பவோ முடிந்ததென எந்தை குருநாதன் செப்புந் திருவாக்கின் சீர்தருவாய் பராபரமே. 9.
நாமறியோ மென்றுமுன்னுள் நல்லூரில் சொன்னமொழி நாமறிந் துய்யவரம் நல்காய் பராபரமே. 3
ஆரறிவா ரென்றுமுன்னுள் ஆசா னுரைத்தசொல்லின் சீரறியச் செய்வாய் சிவமே பராபரமே. 4
அப்படியே யுள்ளதென அன்ருசான் சொன்னமொழி இப்படியில் யானறிய இரங்காய் பராபரமே. 5
என்றுநீ யன்றுநாம் என்னுந் திருவாக்கைக் கண்டுதொண்டு செய்யக் கருணைசெய்வாய் பராபரமே. 6
அஞ்செழுத்தை நெஞ்சில் அழுத்தா தழுத்திநிற்கக் கஞ்ச மலரடியைக் காட்டாய் பராபரமே. 7
பஞ்சப் புலன்வழிபோய்ப் பாரி லலையாமல் செஞ்சரணே தஞ்சமெனச் செய்வாய் பராபரமே. 8
கட்டுப்படா மனத்தைக் கட்டத் திருவருளை இட்டமுடன் நீதாராய் எந்தாய் பராபரமே. 9
ஊன யுயிராய் உடலாயென் னுட்கலந்த தேனு ரமுதே தீங்கரும்பே பராபரமே. Ι0
ஒருதெய்வம் ஒருலகம் உண்மை முழுதுமென்னும் திருவருளில் நிற்கவருள் செய்வாய் பராபரமே. ll

நற்சிந்தனை 187
III சிந்தித்துச் சிந்தித்துச் சிவமேநா மென்றெண்ணத்
தந்திடுவாய் நல்லவரம் தற்பரனே பராபரமே. 1 அந்தமு மாதியு மில்லா ஆண்டவனே என்தன் பந்தத்தை நீக்கிடுவாய் பராபரமே. 2 ஆரறி வாரென்ற அருமைத் திருவாக்கின் சீரறியச் சிவஞானம் தருவாய் பராபரமே. 3. இருவினையை நீக்கி யின் பத்திலே நான்தேக்க வருவாயென் னுள்ளத்தில் வாழ்வே பராபரமே. 4
ஈசனே யெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் நிற்கும் தேசனே சிந்தை தெளியவைப்பாய் பராபரமே. 5 உருகி யுருகி உணரும்மெய்ஞ் ஞானிகளின் திருக்கூட்டஞ் சேரவருள் செய்வாய் பராபரமே. 6 ஊரூராய்த் திரிந்து உன்மத்த னிவனென்னும் பேரூரச் செய்து பிறப்பறுப்பாய் பராபரமே. 7 எல்லாமா யல்லவுமா யிருக்குந் திருவருளைச் சொல்லாமற் சொல்லுஞ் சுகந்தருவாய் பராபரமே. 8 ஐயப் படாமல் அருள்வழியே செல்லநல்ல துய்ய வருள்தாராய் என்துணையே பராபரமே. 9. ஒன்பதுவாய்த் தோற்பைக்கு உணவளிக்க நான்திரிதல் என்ன மதிதான் இயம்பாய்நீ பராபரமே. O ஓங்காரக் கம்பத்தின் உச்சியிலே நிற்குமுனை பாங்காய்ப் பணியவருள் பண்ணுய் பராபரமே. ஒளவிய மில்லாதார் அகம்மேவும் ஆண்டவனே எவ்வித மாய்ப்பணிவேன் இயம்பாய் பராபரமே. I 2. அஃகமுங் காசுந்தேடி அலையும் அடியேன நஃகுதல் செய்யாமல் வரந்தாராய் பராபரமே. 3

Page 99
188 நற்சிந்தனை
IV
அன்பிற் கரைந்துருகி யடிபணியும் மெய்யடியார் இன்ப நிலையே எந்தாய் பராபரமே. l
ஆருய்க்கண் ணிர்பெருக்கி அவசமுறும் மெய்யடியார் மாருக் கருணை மனவிளக்கே பராபரமே. 2
இருவினையை நீக்கி இரவுபக லற்றவன்பர் கருவினையை நீக்கும் கதியே பராபரமே.
ஈசனே யெங்குமென வெண்ணுகின்ற மெய்யடியார் வாசனே நல்லவழி காட்டாய் பராபரமே. 4.
உன்னை யுணர்ந்தவர்கள் ஒசையற்ற நிட்டையிலே தன்னை மறந்திருப்பார் சத்தே பராபரமே. 5
ஊணு யுயிராகி யுட்கலந்த சோதிதனை நான ரறியவென்றன் நட்பே பராபரமே. 6.
எல்லாம் நினதுசெய லென்றறிந்த மெய்யடியார் நில்லா வுலகை நினைவரோ பராபரமே. 7.
ஏது மறியாத ஏழையென்று கைவிட்டால் யாதுசெய் வேனென்ன யாள்வாய் பராபரமே. 8
ஐயுந் தொடர்ந்து அறிவழியு முன்னமென் கையுந் தொழப்பண்ணிக் காப்பாய் பராபரமே. 9
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலான் நல்லூர்க் குருவாக வந்து குறைதீர்த்தான் - வருவாரை வையாமல் வைது வரந்தருவான் நாமெல்லாம் உய்யாமல் உய்வோம் உவந்து.
சிவமேநா மாமென்று சிந்திக்கச் சீரார் சிவமேநா மென்று தெளிவோம்-அவமே மனமே யுடன் போகும் மற்றுமோர் தெய்வம் கனவிலும் எண்ணுது காண். 2.

நற்சிந்தனை 189
ஊதூது சங்கே ஊதூது
ஊதுாது சங்கே ஊதூது
ஒம்சிவாய நமவென் றுாதுாது (1) ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப் பில்லையென் றுாதூது (2) ஊதூது சங்கே ஊதூது உட்பகையை விட்டிடென் றுாதுாது (3) ஊதூது சங்கே ஊதூது உங்கள்பிரான் இங்குவர ஊதூது (4) ஊதூது சங்கே ஊதூது ஒருவருக்குந் தெரியாதென் றுாதூது (5) ஊதூது சங்கே ஊதூது ஐம்பூதம்நா மல்லவென் றூதூது (6) ஊதூது சங்கே ஊதூது ஐம்பொறி நாமல்லவென் றுாதுாது (7) ஊதூது சங்கே ஊதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது (8) ஊதூது சங்கே ஊதூது பஞ்சவாய்வு நாமல்லவென் றுாதுாது (9) ஊதூது சங்கே ஊதூது தசநாடி நாமல்லவென் றுாதுாது (10) ஊதூது சங்கே ஊதூது அடிமுடி இல்லையென் றுாதூது (11) ஊதூது சங்கே ஊதூது காமக்குரோதம் நாமல்லவென் றுாதுாது (12) ஊதூது சங்கே ஊதூது உன்னையுன்னுல் அறியென் றுாதுாது (13)
ஊதூது சங்கே ஊதூது சிவதொண்டன் வாழ்கவென் றுTதூது (14)

Page 100
90
நற்சிந்தனை
ஊதூது சங்கே ஊதூது II
ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப்பு மில்லையென் றூதூது காது செவிடுபட ஊதூது
கங்குல்பகல் காணுமல் ஊதூது.
நல்லூரான் திருமுன்புநின் றுாதுாது நாமேநா மென்றுசொல்லி ஊதுரது எல்லாஞ்சிவன் செயலென் றுரதூது ஏகமன தாய்நின் றுாதுாது.
அல்லும்ப கலுமற ஊதூது ஆணவத்தை நீக்கிநின் றுாதூது வெல்லும் பகையொழிய ஊதூது வேறுபொருள் இல்லையென் றுாதுாது.
ஐம்பூதம்நா மல்லவென் றுாதூது ஐம்பொறிநா மல்லவென் றுாதுாது ஐம்புலன் நா மல்லவென் றுாதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது.
ஆன்மாவே நாமென் றுாதுரது ஆசானைப் பணிந்துநின் றுாதூது ஆரறிவா ரென்றுசொல்லி ஊதூது அன்பே சிவமென்று ஊதுாது.
மாதுமை பங்கனென் றூதூது மங்களம் மங்களமென் றுாதுாது சோதி சொரூபனென் றுாதுரது சுந்தரர்து தானுனென் றுாதுாது.
அடியார்க் கடியானென் றுாதுாது ஆதியந்த மில்லானென் றுாதூது
திங்கட் சடையானென் று தூது தேவாதி தேவனென் றுாதுாது.

நற்சிந்தனை 191
ஆன்மா நீ
அன்பி னுருகி அவனேநா னென்றுசொல்லி இன்பக் கடலில் இளைப்பாறித்-துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் இறப்பும் பிறப்புமில்லைச் சொன்னே னிதுவே சுகம். I
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு நீயல்லை ஐம்புலனும் நீயல்லை ஆன்மாநீ-உண்மையில் செம்மையாய் வாழ்ந்துசீ வன்சிவ னென்றமுழு உண்மை யறிவாய் உகந்து. 2
உகந்து மணங்குவிந்து ஒன்றுக்கு மஞ்சா தகந்தை அவாவெகுளி யாற்றிச்-சகந்தனிலே தாமரையிற் றண்ணிர்போற் சாராமற் சார்ந்துநற் சேமமொடு வாழ்வாய் தெளிந்து. - 3.
சிந்தனைக் கெட்டாத தெய்வத்தை நாம்நிதமும் வந்தனை செய்து வணங்குவோம்-பந்தமுண்டு முத்தியுண் டென்று முனைத்துநில் லாமலே நித்தியணு மென்றே நினை. 4.
தன்னை யறியத் தனக்கொருகே டில்லையென முன்னைப் பெரியோர் மொழிந்தனரால்-தென்னைபனை சேரிலங்கை வாழுஞ் சிவநேயச் செல்வர்காள்! தேரீரிச் சீவன் சிவன், 5 ܖ
தெரிந்து செயலாற்றுந் தீரர்களே நல்ல விரிந்த அறிவுள்ள மேலோர்-திரிந்து மதியிழந்து வாடாமல் மாணடியை யென்றும் துதிமனமே சொன்னேன்வெற் றி. 6
வெற்றிதரும் வேண்டியன வெல்லாந் தருமனமே பத்தியுடன் பாடிப் பணிசெய்வாய்-சித்தத்தில் ஆனந்தம் பொங்கும் அதுவே நானென்று தியானஞ்செய் சீவன் சிவன். 7

Page 101
192 நற்சிந்தனை
உற்றதுணை
१ " வெண்பா சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் சிவனென்று பாவித்துக் கொண்டாலிப் பாரினிலே -ஆவிக்கே
உற்ற துணையென் றுறுதிகொண்டு நல்லூரில் நற்றவனை நாடுவோம் நாம் . 1
நாமந்தி சந்திதொறும் நல்ல சிவநாமம் சேம முறப்பாடிச் சிந்தையிலே-காமமுதல் கட்டறுத்து நிட்டையிலே கங்குல் பகலின்றி இட்டமுடன் வாழ்வோம் இனிது. 2
இனியே தெனக்குன் அருள்வருமென் றெண்ணுது கனிகாய் அருந்திக் கடும்பசிக்குத்-தனியே இருந்துமுத்தி சேர்வதற் கெண்ணுவதே யல்லால் பொருந்துவனே பூவிற் புகுந்து. 3.
போதுகொண்டு போற்றேன் பொறிவழியே போயலையேன் தீது செயுமனத்தைச் சேர்ந்திடேன்- யாதுக்கும் \ அஞ்சேன் அவரிவரை அண்டிடேன் எஞ்ஞான்றுந்
தஞ்சமென்று வாழ்வேன் தனித்து. 4
சற்குருவைப் போற்றித் தரணியிலே சீரடியார் பொற்பதத்தைப் போற்றிப் புகலுவேன்-கற்றவர்கள் நாடுஞ் சிவதொண்டன் நாஞ்சிவம் என்றுசொல்லி ஓடி வருவான் உவந்து. 5
உவந்து வருவானே மென்றுரு வேற்றிப் பவம்வெந்து போக வருள்வான்-தவஞ்செய்வார் கண்டு மகிழுவார் காதலுட னுதரிப்பார் பண்டுபோ லென்றும் பரிந்து. 6 பரிந்தன்பர் பாதத்தில் பாங்குடனற் போது சொரிந்துசிவ தொண்டன் தொழுது-கரங்கூப்பிச் சீவன் சிவனச் சிவநாமம் பாடுவான் தேவர் புகழநிற்பா ன் தேர்ந்து. . . 7

நற்சிந்தனை 193 யோகமறியேன்
யோக மறியேன்யான் யோகியரை யும்மறியேன் ஆகுநெறி மற்ருென் றறியேன்யான் தேகமிது வீழ்வதன் முன்னுன் விரையார் மலர்த்தாளைச் சூழப் பணியாய் தொழுது. .
தொழுது வணங்கிநின் துரநெறியே செல்லும் முழுமனத்தார் தங்கூட்டம் முன்னி-அழுதே உருகி யுருகி யுளநைந்து கண்ணிர் பெருக வரந்தருவாய் பின், 2
பின்ன ரெனக்குப் பிறப்போ டிறப்பென்னும் மன்னுபெரு வாதைமற் றென்செய்யும்-உன்னைச் சரணென் றடைந்த தகவுடையார் பாதம் அரணென் றிருந்தேற் கறி. 3
அறிவுக் கறிவாகி யப்பாலுக் கப்பாற் பிறிவற் றிருக்கும் பெருமான் -நெறிநின்றர் நீடூழி வாழ்வாரே நீநா னவனென்று பாடுபட மாட்டார் பரிந்து. 4
பரிந்து பணியாற்றிப் பாவமெல்லாந் தீர்த்தேன் இருந்த படியிருக்கு மெம்மான் - வருந்த வழியு மினியுண்டோ வாழ்வுடன் தாழ்வோ செழுமலர்ப் பாதஞ் சிரம். 5
சென்னிக் கணியுன்ருள் சேவித்து நிற்றலே பண்ணுக் கணியுன்னைப் பாடுதலே-கண்ணுக் கணியுன் வடிவுகண் டானந்தங் கொள்ளல் பணியை யணிந்தாய் பரம். 6
பரவுமடி யார்க்கருளைப் பாலிக்கும் ஐய!
இரவுபகல் காணுநின் றேத்த-வரமருள்வாய்
வாய்விட்டுச் சொல்ல வகையெனக்கிங் கில்லையே
நீவிட் டிடாதே நினை. 7
13

Page 102
194
நற்சிந்தனை
நினைவி னினைவாகி நீயிருக்க நாயேன் வினைவழியே சென்று மெலிகோ- எனையும் இடுக்க ணெனக்கில்லை நின் செயலே யாவும் நடுக்கமெனக் குண்டோ நவில். 8
நவிலு மறைநான்கு மாகமமுந் தேடி நவில முடியாத நாத-தவமுடையார் தம்மனத்தாய் நாயடியேன் சாற்றுங் கவிக்கிரங்க எவ்வமுண்டோ கூரு யினி. 9
இனிப்பிறவா நன்னெறிக்க ணெய்தினர் சேவைக் கினிப்பிறக்க வென்னைப் பணியாய்-இனித்ததிருக் கோலத்தா லைந்தொழிலுங் கூட்டிக் குனித்தருளுஞ் சீலத்தாய் தில்லைச் சிவ! 10
பதைப்பற்றிரு நெஞ்சமே இராகம்-தன்னியாசி, தாளம்-ஆதி
பல்லவி
பார்ப்பதெல் லாஞ்சிவ மாகவே கண்டு பதைப்பற்றிரு நெஞ்சமே.
அநுபல்லவி
பதைப்பற்ற பேர்க்கேசிவ பாக்கிய முண்டு பஞ்சேந் திரியம் அஞ்சையும் வென்று. (ւմn rՒ)
சரணம்
மார்க்கஞ் சொல்லும் வழிதனிற் செல்லு மாருத மெளனத் தியானத்தில் நில்லு தீர்க்க மானகுரு செல்லப்பன் பாதம் w சிந்திக்கும் யோகசுவாமி வந்திக்குங் கீதம். (LunTrif) ,

நற்சிந்தனை 195
முத்தி நெறி
நேரிசை வெண்பா-அந்தாதித்தொடை
நல்லூர்ப் பதியிலே ஞான நெறிகாட்டச் செல்லப்பன் என்னும் திருப்பெயரான்-பொல்லாப்பிங் கொன்றுமே யில்லையென ஒதினுன் ஒதயான் கண்டுமெய் தேறினேன் காண்.
காண்பதெலாம் பொய்யென்று காட்டினன் காட்டயான் வீண்பா வனையெல்லாம் விட்டொழிந்தேன்-மாண்புடனே நீயும் மனத்தில் நினைத்தால் வினையெல்லாம்
மாயும் இதைநீ மதி. 2
மதிக்கும் மதிகொடுக்கும் மாநிலத்தை யாள விதிக்கும் விமலனடி சேர்க்கும்-துதிக்கும் அடியவர்கள் துன்பம் அகற்றி அருளுங் கடிமலராற் பூசித்துக் காண். 3.
காணுவார் தொண்டர் கருதுவார் சொன்னசொற் பேணுவார் பேணிப் பெரிதுவப்பார்-சாணு வளர்க்க வழிதேடி வையத் தலையார் கலக்கமறக் கண்டு களி. 4.
களிபெருகுங் காமக் குரோதமெலாங் குன்றுந் தெளிவுண்டாஞ் சித்தத்தில் தீமை -விளியுமே ஆரறிவா ரென்றதனை அந்திசந்தி சிந்தித்தாற் பேரறிவு தான்வருமே பின், 5
பின்னுமுன்னு மில்லைப் பிரமமே யுள்ளபொருள் என்னு மொழிதம் இதயத்தில்-மன்னுபவர் சாந்தம் அடக்கம் தயவுடனே வாழ்ந்தினிது சேர்ந்திடுவார் முத்தி தெரி. 6

Page 103
96. நற்சிந்தனை இலங்கை நம் நாடு
தூண்டு சுடர்ச்சோதி தொல்லுலகில் வந்துநமை யாண்டுகொண் டான மார்க்குங் குடியல்லோம் வல்வினையும் போச்சு வரம்பிலின்ப மேயாச்சு நல்வினை சேரிலங்கை நாடு.
வேண்டுதல் வேண்டாமை யில்லான் விரும்பிவந்து ஆண்டுதான் கொண்டான மார்க்குங் குடியல்லோம் பொய்பேசு கில்லேம் புறங்கூறு கில்லேம்யாஞ் செய்யா ரிலங்கை நமது. . . 2
இல்லையென்று சொல்கிலோம் யார்பாலு மன்புடையோம் எல்லையில்லா வின்ப மெவர்க்குங் குடியல்லோம் தில்லைவாழ் தெய்வத் திருவடியைச் சிந்தித்து நைவோ மிலங்கைநம் நாடு. 3
தீமையெவர் செய்தாலும் சித்தத்திற் கொள்ளேம்யாம் ஆமைபோ லடக்குவோ மார்க்குங் குடியல்லேம் செய்வோம் சிவபூசை தீங்கவிகள் பாடுவோம் உய்வோ மிலங்கைநம தூர். 4.
அச்சமொடு கோபத்தை ஆகா வெனத்தடுத்தோம் இச்சையெல்லாம் விட்டோம் எவர்க்குங் குடியல்லோம் நெஞ்சிற்பஞ் சாக்கரத்தை நேச முடனுரைப்போம் மஞ்சு தவழிலங்கை வைப்பு. 5
ஆதியு மந்தமு மில்லைநமக் கென்றுமென ஒதி யுணர்ந்தோ மொருவர் குடியல்லேம் ஆறுங் குளமும் அணியார் பொழில்களுஞ் சேருநம தூரிலங்கை தேர். y 6 சிந்திக்க நெஞ்சும் தெரிசிக்கக் கண்ணிரண்டும் வந்திக்கச் சென்னிபிறர் வைத்தகுடி நாமல்லோம்
-அந்திசந்தி வாழ்த்தி வணங்குவோம் வாயாரப் போற்றுவோம் தாழ்த்திநிற் போமிலங்கை தாள். 7

நற்சிந்தனை I97
எல்லார்க்கு மாங்கடவு ளொன்றென் றியம்புவோம் பொல்லாங்கு செய்யோம் பிறர்குடி யல்லேம் கொலைகளவு கோபத்தைக் கொள்கிலேம் நெஞ்சில் நிலையென் றிலங்கை நினை. 8
நிற்போம் சமாதியிலே யென்றும் நிலைத்திருப்போம் பெற்ருேம் பிறர்க்கடிமை நாமல்லோம்-சுற்றந் துறந்தோம் பிறவாத தொல்பதியைச் சேர்ந்தோம் சிறந்தோ மிலங்கை தெரி. 9
செல்வநிலை யாதென்று தேர்ந்தோம் சிவபெருமான் நல்ல பதமறவோம் ஆளல்லோம்-அல்லலுற மாட்டோ மவனி மதித்தாலு மின்புருேம் வேட்டோ மிலங்கை வெளி. 10
இலங்கைவாழ் தெய்வ மெமையாளுந் தெய்வம் கலங்க விடாத்தெய்வம் காணின்
-புலன்வழியிற் செல்ல விடாத்தெய்வம் தேவர் தொழுந்தெய்வம் நல்லதெய்வம் நாடோறும் நாடு. 11
எல்லாந் தருந்தெய்வம் எல்லாமா குந்தெய்வம் எல்லாந் தொழுந்தெய்வ மெந்தெய்வம்-நில்லாநீர் செஞ்சடைசேர் தெய்வம் சிரஞ்சீவி யானதெய்வம் அஞ்செழுத் தானதெய்வ மாம். 12
நிலனகிக் காற்ருகி நீராகுந் தெய்வம் அலகி லருக்கனு மம்புலியும்-பலபலவாம் வேடங் கொளுந்தெய்வம் வேதாளஞ் சூழ்தெய்வம் மாட மலியிலங்கை வாழ்வு. 13

Page 104
198 நற்சிந்தனை
தன்?னயறிந்தோர் தலையானுேர்
Go6nu saru T
தன்னை யறிதல் தலையானேர் தங்கடமை என்னப் பெரியோ ரியம்புவரால்-மின்னனைய பொய்யான வாழ்வைப் புதுமையென வெண்ணுவரோ கைமேற் கணியாகக் காண்.
தெரிந்து வினையாற்றுந் தீரர்களே மண்ணில் அருந்தவர்க ளென்றுமுனே ராய்ந்தார்-பொருந்துவன செய்து சிறுதொழில்கள் செய்யா தொழியவிட்டு உய்வாய்நீ யென்னி லுறைந்து, 2
சிவத்தை விடத்தெய்வம் வேறில்லை யென்போர் அவத்தி லழுந்துவரோ வன்றே - உவத்தல் வெறுத்தலாற் றெய்வம் பலவாய் விதித்தோம் அறுத்தார்க்கு முண்டோ வவை. 3
அவைக்கஞ்சா வீர ரவர்தம்மை நோக்கில் சுவைமுதலாய் வென்றநல்ல தூயோர்-நவைசேரும் இந்திரனே சாலுங் கரியென்ருல் வேறெனக்குச் சந்தேக மேன்காணுஞ் சாற்று. 4
சாற்று முடல்பொருளு மாவியுந்தந் தோர்களிந்த மாற்றமாம் வையம் மதிப்பாரோ-தோற்றமெலாம் தாமே யலவென்று தம்மையறிந் துய்வோருக் காமாறென் காணு மறை. 5
அறையும் மறைநாலு மாகமங்கள் தாமும் இறையளவும் தெய்வ மியம்பா-தறநெறியே கும்பிட்டார்க் கல்லால் குளிர்ந்த மலர்ப்பாதம் இம்மட்டென் றேகூற லில். ... ' 6
இசையும் பொருளை யிரப்போருக் கீந்தே இசைபடவே வாழ்வார்க்கிப் பூமி-திசையறியப் பூங்கோயி லாகப் பொருந்துமே யாதலினல் நீங்காம லீந்தே நிலை. 7

நற்சிந்தனை 199
நாடு மீழத்து நற்றமிழ் நாடனே
அந்தி சந்தியுஞ் சிந்திக்கு மெய்யன்பர் பந்த பாசங்க டீர்க்கும் பரிசினன் அந்த மாதியு மில்லா வியல்பினன் இந்த விலங்கை யெழில்நக ரானே. l
ஆடு பாம்பணிந் தம்பலத் தாடுவான் பாடு வார்பவந் தீர்த்திடும் பண்பினன் ஒடு கங்கை யுடன் வைத்த சென்னியன் நாடு மீழத்து நற்றமிழ் நாடனே. 2
இருவினை வந்தெனைத் தாக்கா திருக்கவும் கருவி கரணமென் கட்டளை கேட்கவும் அருவி கண்களி லாருய்ப் பெருகவும் தருக வருளிழத் தண்ணக ரானே. 3.
ஈவது கடைப்பிடித் தென்று மொழுகவும் நோவது பேசாது நோன்பைப் பிடிக்கவும் சாவது வந்தாலுஞ் சத்தியந் தழைக்கவும் தேவர்தொழு மிலங்கைத் திருநக ரானே. 4
உண்டான போதுநா னுற்ருர்க் குதவவும் சண்டாள ரோடுசச் சரவின்றி வாழவும் கண்டொன்று சொல்லாமற் காலங் கழிக்கவும் மண்டலம் புகழிலங்கை மாநக ரானே. 5
ஊன யுயிரா யுடலா யுறுப்பாய்க் கோணய்க் குருவாய்ச் சீடனுய் நீநின்ருய் யான ரறிவே னம்பலத் தரசே தேன ரிலங்கைத் திருநக ரானே. 6
ஐயா றகலாத வானந்தக் கூத்தனே தையலாள் தன்னைப் பிரியாத தாணுவே மையல்சேர் மாரனை நீறுசெய் வள்ளலே தெய்வமே யீழச் செழுநக ரானே. 7

Page 105
200 நற்சிந்தனை
ஒப்பற்ற தெய்வமே உயிருக்கு ஞயிரே தப்பற்ற மாதவர் தாந்தொழுங் கோவே துப்பிதழ் மடந்தை சேவிக்குஞ் செல்வமே இப்புவி யீழத் தெழில்நக ரானே. 8 ஒதுவார் தீவினை உடன்தீர்க்குந் தெய்வமே மாதுமை பாகனே மான்மழுக் கையனே பாதுகாப் பதுகடன் பாரேழு முன்னிடம் மீதுநீ கிருபைவை வேலையிலங் கையானே. 9 ஒளவிய மில்லா மனந்தா வடியாரைத் திவ்விய மாய்ப்பாடுஞ் சித்தமும் நீதா நவ்வியை யேந்தும் நம்பா நடராஜா கெளரிதன் பாகனே கடியிலங்கை நகரானே. Ι0
முழுவதும் உண்மை
பல்லவி முழுவதும் உண்மையென்று மோன முனி சொன்னனன்று.
அநுபல்லவி பழுதொன்று மில்லையென்று பண்ணுவாய் சிவதொண்டு. (முழு)
சரணங்கள் ஒழிந்துபோ கும்பிறவி அழிந்துபோம் பழிபாவம் எழுந்திரு விழித்துக்கொள் எல்லாம் உனக்குவெற்றி
((Մ) (Լք) 1 தளர்ந்துபோ காதேகுரு சாற்றிய ஞானமொழி தெளிந்துகொண் டாற்சீவன் சிவனெனக் காணலாம்.
((Մ) (լք) 2 சொல்லித்து திக்கும்யோக சுவாமியைத் தினங்காக்கும் செல்வன்திருப் பாதமே யல்லும்ப கலுந்துணை. (முழு) 3

நற்சிந்தனை - 2 Ol
96)6O)85uTGGOT
கலிவிருத்தம்
மதியும் நதியும் வைத்த சென்னியன்
விதியு மரியு மறியா விமலன் துதிசெ யடியார் துன்பந் தீர்ப்பவன்
மதில்சே ரிலங்கை மாநக ரானே. l
நீருங் காலும் நிலனுந் தீயுந் ஆரும் வானு மம்புலி கதிருஞ் சீருந் திருவுஞ் சிறப்பு முடையான் நேரு மிலங்கை நெல்வய லானே. 2
எண்ணி யெண்ணி யுருகு மடியார் மண்ணில் வந்து பிறவா வண்ணம் உண்ணின் றருளை யுதவும் நாதன் எண்ணில் வளஞ்சே ரிலங்கை யானே. 3
போக்கும் வரவும் இல்லாப் புனிதன் ஆக்கும் அழிக்கும் அவனி யெல்லாங் காக்கும் அடியார் கவலை தீர்க்கும் பூக்கும் இலங்கைப் பொன்னக ரானே. 4
பொன்னும் பொருளும் புகழுந் தருவான் முன்னும் பின்னும் இல்லா முதல்வன் என்னுள் அறிவா யென்றும் விளங்கும் துன்னும் வரைசூழ் இலங்கை யானே. 5
நினைக்கு மடியார் நெஞ்சத் துள்ளே முனைக்கும் காமக் குரோதம் மோகம் அனைத்தும் போக்கும் அம்மான் பெம்மான் சுனைச்சே ரிலங்கைத் தொன்னக ரானே. 6 நீள நினைக்கு மடியார் பாவம் மாள வருளை வழங்கும் பெருமான்
ஆழ நீள வாழி சூழ்ந்த நீள விலங்கை நெல்வய லானே. 7

Page 106
202
நற்சிந்தனை
மூவ ரறியா முதல்வ னுலகில் தேவ ராலு மறியாத் தெய்வம் யாவ ரேனுந் தொழு வார் பாவம் வேவ வருளு மிலங்கை யானே.
செக்கர் போலும் மேனிச் செல்வன் அக்கு மாலை யணியு மமலன் சொக்க னென்னுஞ் சொந்தப் பெயரான் இக்கு மலியு மிலங்கை யானே.
ஆளும் பெருமா னகத்து விருக்க நாளுங் கோளு நங்கட் கெங்கே வீழு மருவி விளங்கு மிலங்கை வாழும் பெருமான் மலர்த்தாள் காப்பே.
36A6061T6óT கலிவிருத்தம்
நேசத் தாலரன் நீள்கழல் போற்றுவார் பாசத் தாற்றுயர் பாரினி லெய்திடார் வாசக் காபல சேரு மிலங்கையித் தேசத் தான் சொல்லைச் சிந்தையிற் கொண்மினே.
எல்லாம் வல்ல இறைவன் றிருப்பதம் சொல்லும் பூக்கொடு தோத்திரஞ் செய்பவர் கல்லா ராயினுங் கதியுண் டிலங்கையான் சொல்லைச் சிந்தித்துத் துன்பத்தைத் தீர்மினே.
மொழிக்கு நற்றுணை முன்னஞ் செழுத்துமே விழிக்கு நற்றுணை மென்மலர்த் தாள்களே வழிக்கு நற்றுணை வண்புகழ் பாடலே
களிக்கு மிலங்கையான் கட்டுரை கேண்மினே.
பொறிவ Nமனம் போயலை யாமலே நெறிவ பூழிநிற்கக் கற்றுக் கணந்தொறும்
அறிவ பூழிந்திட ரெய்தீ ரிலங்கையான்
குறிவ பூழிச்செலக் கூடிடும் முத்தியே.

நற்சிந்தனை 203
புன்னெ றிசெலும் போக்கை யொழித்துநீர் நன்னெ றிதனில் நாட்டத்தை வைத்திடிற் சென்னெ றிக்குநற் செல்வ மிலங்கையான் சொன்னெ ஹிதனைச் சோரா துணர்மினே. 5
சமய தீக்கையைப் பெற்றுப்பின் சற்குரு அமையு மப்பா லவன்வழி செல்விரால் தமையு ணரறிவு தலைப்படு மிலங்கையான் சுவைதருஞ் சொல்லைக் கேட்பது தக்கதே. 6
காண்பான் காட்சி காட்சிப் பொருளிவை மாண்பாய் விட்டு மலரடி சிந்தித்தால் வீண்பா வங்கள் வெருண்டோடு மிலங்கையான் மாண்பாச் சொன்னது மனத்திடை வைம்மினே. 7
இருப்பி னும்நடந் தெத்திசை செல்லினும் பொருப்பில் வாழ்ந்திடு புங்கவன் பொற்பதம் விருப்ப மாவிளம் பீரிவ் விலங்கையான் விருப்ப மானசொல் வீட்டை யளிக்குமே. 8
அம்மை யப்ப னரிய சகோதரர் இம்மை யில்லிறை யென்றுநீ ரெண்ணியே மும்மைக் காலத்தும் போற்றி ரிலங்கையான் செம்மை யான சொன் முத்தியிற் சேர்க்குமே. 9
போன காலத்தை யெண்ணிப் புகையுநீர் ஞான நாயகன் நற்பதம் போற்றுவீர்
ஈன மானவை யேகு மிலங்கையான் மோன நல்கு மொழிதனை உள்ளுமின். 10
எனக்கினி யான் பிறர் யாவர்க்கு மினியான் தனக்கொப் பிலாதான் தத்துவா தீதன் சினக்குங் கரியுரி திருமேனி போர்த்தான் வனப்புறுஞ் சோலைகு Nலங்கை மன்னுமே. l

Page 107
204 . · நற்சிந்தனை
எங்கு முள்ளவன் எல்லாம் வல்லவன் மங்கையோர் பாகன் மான்மழுக் கையினன் பங்கயன் மால்பறந் திடந்துங் காணுன் கொங்கவிழ் காவிலங்கை கோயில்கொண் டானே. 12
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் அன்னை தன்னினு மன்புமிக் குள்ளவன் தன்னை யெவரு மறியாத் தலைமையன் தென்னைசே ரிலங்கை தேடியாண் டானே. 13
நல் வரம் தா கலிவிருத்தம்
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் தென்னை மாப்பனை சேரும் நல் லூருளான் அன்னை தன்னினும் மேம்படு மன்புளான் தன்னை நாடினன் தந்தன னேர்வரம். I மதியி லேரவி வைத்திடும் மாதவர் துதிசெய் தூய மலரடி யென்னுளம் பதிய வைத்திடும் பாக்கியம் யான்பெற மதியை வேண்டினேன் தந்தரு விரிவ்வரம். 2 இருவி னைக ளெனக்கண்டா லஞ்சவும் வருவி னைகளில் வையத்திற் கெஞ்சவும் குருப ரனுடன் கூடிச் சிறக்கவும் மருவு பாவம் மறக்கவுந் தாவரம். 3 அதுவி துவென்ற வவையெல்லாங் கண்டாருக் கதுவி துவுமாய் நின்ற பரம்பொருள் பொதுவி னில் நடங் கண்டு களிக்கவுன் புதும லரடி போற்றிடத் தாவரம். 4 ஆதா ரத்தால் நிராதாரஞ் சென்றுயான் பேதா பேதங்கள் காணுப் பெருமையை வேதாக மத்தில் விளங்கும் விமலனே நாதா நீதா எனக்கிந்த நல்வரம். 5

நற்சிந்தனை 265
இன்பம் எது
கலிவிருத்தம் எல்லாம் நீயென எண்ணுதல் இன்பமே எல்லாம் நானென எண்ணுதல் இன்பமே எல்லாஞ் சிவன்செயல் என்பதும் இன்பமே எல்லாம் என்செயல் என்பதும் இன்பமே. 1
குருபரன் அடியிணை ஏத்துதல் இன்பம்
குருபரன் அருட்பணி ஆற்றுதல் இன்பம்
குருபரன் அருள்வாக் காக்கிடும் இன்பம் ኣ குருபரன் சரண்புகக் கூடிடும் இன்பமே. 2
மோனத் தாழுதல் முடிவிலா இன்பம் ஞானத் துயருதல் நவையறு மின்பம் மானமார் நற்றவம் மதிப்பரு மின்பம் யானென தற்றிடல் எல்லையில் இன்பமே.
தன்னலம் வீந்திடத் தோன்றிடு மின்பம் இன்னல்செய் வினையற இயைந்திடு மின்பம் துன்னிய மலமறத் தழைத்திடு மின்பம் மன்னிய பிறப்பற மலர்ந்திடு மின்பமே. 4
ஐம்புலப் பந்தனை அற்றிடல் இன்பம் வெம்புறு வெகுளி விலக்குதல் இன்பம் துன்புறு காமத் தொடக்கறல் இன்பம் வம்புறு ம்யக்கற வாய்த்திடும் இன்பமே. 5
மன்னுயி ரெல்லாம் மகிழ்ந்திடல் இன்பம் என்னுயிர் போலவை ஓம்பிடல் இன்பம் இன்னுயி ரிவையெலா மிறைவன் வடிவென உன்னிடும் மெய்யுணர் வுற்றிட லின்பமே. 6
யாவருஞ் சமமென வுணர்ந்திட லின்பம் யாவருஞ் சகோதர ரென்பது மின்பம் யாவரும் நலனுற வுழைத்திட லின்பம் யாவரு மொன்றென வொன்றிட லின்பமே. 7

Page 108
206 நற்சிந்தனை
பணிதலைக் கொள்ளல் பாரினி லின்பம் பணிபயன் கருதா தாற்றிட லின்பம் பணிமுயன் ருற்றி முற்றுற லின்பம் பணியெலாஞ் சிவபணி யாக்கிட லின்பமே. கூசுங் கொலைகள வொழித்திட லின்பம் மாசுடை மதுவகை நீக்கிட லின்பம் பூசலும் பகைமையும் போக்கிட லின்பந் தேசத் தொற்றுமை யோம்பிட லின்பமே. நல்லன புரிந்திடல் நவின்றிட லின்பம் அல்லன வஞ்சி யகற்றிட லின்பம் புல்லியோர் பிழையெலாம் பொறுத்திட லின்பந் தொல்லைக ளல்லல்கள் தாங்கிட லின்பமே. வாய்மையும் ஆற்றலும் வளர்த்திடல் இன்பம் தூய்மையும் அழகும் ஆர்த்திடல் இன்பம் மேயநன் னிதி மேவிடல் இன்பம் நேயஅன் புலகினில் நிறைந்திடல் இன்பமே. பாமர மக்கட் பணிசெயல் இன்பம் தோமற அவர்வாழ் வுயர்த்துதல் இன்பம் சேமநச் சாலைகள் நிறுவுதல் இன்பம் வாமநூற் கலைகள் வகுத்திடல் இன்பமே. முத்தமிழ்ச் சங்கம் மல்குதல் இன்பம் வித்தகர் சங்கம் விரவிடல் இன்பம் பத்தர் சங்கம் பரவுதல் இன்பம் நற்றவர் சங்கம் நாட்டிடும் இன்பமே. எங்கும் மாதவர் மாமறை முழக்கம் எங்குஞ் சான்ருேர் அறவுரை முழக்கம் எங்குந் தொண்டர் சுதந்திர முழக்கெனிற் பொங்கும் இன்பம் புவிடமிசைச் சிறந்தே. பவநெறி கடக்கப் பிறந்திடு மின்பம் அறநெறி துடைப்ப அணைந்திடு மின்பம் தவநெறி தலைப்படத் தழைத்திடு மின்பஞ் சிவநெறி பூத்திடுஞ் சச்சிதா னந்தமே.
12
13
14
15

நற்சிந்தனை 207
ஏதும் இயம்ப மாட்டேன் கலிவிருத்தம்
ஒன்றென இரண்டென எண்ணவும் மாட்டேன் நன்றெனத் தீதென நண்ணவும் மாட்டேன் அன்றென இன்றென அறையவும் மாட்டேன் சென்றன வருவன தெரிந்திட மாட்டேன். l
ஒருபொல்லாப்பு மிலையென ஒரவும் மாட்டேன் குருவென்றுஞ் சீடனென்றுங் கொள்ளவும் மாட்டேன் இருவினை யுண்டென இயம்பவும் மாட்டேன் சுருதியின் முடிவெனச் சொல்லவும் மாட்டேன். 2
இகழ்ச்சி புகழ்ச்சியென ஏங்கவும் மாட்டேன் மகிழ்ச்சியி லேமனம் வைக்கவும் மாட்டேன் முகமன்சொல் வாரிலே மோகமும் வையேன் அகம்பிர மாஸ்மியென் றனுதினம் நையேன்.
இடையரு அன்பென எடுத்துநான் சொல்லேன் கொடைகொடு விடுவெனக் கூறவும் மாட்டேன் மடையரை ஞானியரை மதிக்கவும் மாட்டேன் இடைமுதல் முடிவென இயம்பவும் மாட்டேன். 4
அஞ்சென ஆறென எட்டென அறியேன் வஞ்சனை சூதென மனத்தினிற் குறியேன் நஞ்சிது அமுதென நயக்கவும் மாட்டேன் வெஞ்சினம் சஞ்சலம் விரும்பவும் மாட்டேன். 5
வேறு பார்க்குமிட மெங்குஞ்சிவ தொண்டராய்ப் பார்க்கவொரு வார்த்தை சொல்லவந்த மகத்தே சிவதொண்டா. 1 ஆர்க்குங் கடல்சூழ்ந்த அகிலமெலாம் தொண்டரெனக் காக்குங் கருணைக் கடலே சிவதொண்டா. 2 மூர்க்க குணமில்லை முழுதுஞ்சிவ தொண்டரெனப் பார்க்கும் அறிவுதந்த அன்பே சிவதொண்டா. 3

Page 109
208 ላ' நற்சிந்தனை
ஆசான் அருள் கலிவிருத்தம்
ஆசான் அருளால் அகந்தை அழிந்தது ஆசான் அருளால் அகங்கு விர்ந்தது ஆசான் அருளால் அன்பு வளர்ந்தது ஆசான் அருளால் ஆசானைக் கண்டிலன் . 1.
அளந்தேன் அருளால் பூதங்கள் ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்பொறி ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்புலன் ஐந்தும் அளந்தேன் அருளால் ஆன்மாவை அறிந்தேன். 2
சிவதொண்டு செய்தல் செகத்திற் சரியை சிவதொண்டு செய்தல் செகத்திற் கிரியை சிவதொண்டு செய்தல் செகத்தில் யோகம் சிவதொண்டு செய்தல் சிவஞானம் ஆமே. 3
ஆவதும் இல்லை அழிவதும் இல்லை போவதும் இல்லைப் புகுவதும் இல்லை தேவரும் இல்லைத் திசைகளும் இல்லை யாவரும் இல்லை யார்தான் அறிவார். 4.
அயலறி யாத ஆனந்தம் பெற்றேன் மயலறி யாத மெளனத்தில் உற்றேன் செயலறி யாத சிவத்தினைக் கற்றேன் இயம நியமாதி யாவையு மற்றேன். 5
ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தூணில் துரும்பும் துரும்பில் தூணும் காணுங் கண்ணுங் காணுத கண்ணும் பேணும் அடியார் பிறப்பற் ருரே. 6
பூவும் மணமும் போலப் பொலியும் நாவுஞ் சுவையும் போலத் தெளியும் தேவுக் கடியார் செய்யுந் தொழிலும் நாவுக் கெளிதோ நாமறி வோமோ. 7 د -ت.

நற்சிந்தனை
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஐந்தும் நன்றுந் தீதும் நாளுங் கோளும் ஒன்றி லொன்றி இருக்கு முபாயம் கண்டு கொண்டவர் கலங்காச் சித்தரே.
திங்களுங் கங்கையுஞ் சீறும் பாம்பும் மங்கையும் மானும் மழுவுஞ் சூலமும்
அங்கியு முடுக்கையும் அரக்கனும் பொலியும்
சிங்காரங் கண்டார் சீவன் முத்தரே.
அகரத்தில் உகரமும் மகரமும் சேர்த்து
சிகரமும் வகரமும் யகரமும் செபித்தாற்
பகர வொண் ணுத பாத மணிந்து தகரா காயத்தில் தனித்து வாழலாம்.
அகலிடத் தாசான் அருளா லடியேன் புகலும் பத்தும் போற்றி யேத்துவார் இயல்சேர் இருவினை இடுக்கண் நீக்கிப் பகலிர வில்லாப் பதவி யடைவரே,
நல்லூர்ச் செல்வன்
209
10
ஒருபொல்லாப்பு மில்லையென்று சொல்வான்-செல்வன்
உல்லாச மாகவே நல்லூரிற் செல்வான்.
குருசீடம் முறையொன்றுங் கொள்ளான்-செல்வன் குனதித ஞெருவரையுங் கும்பிட்டு நில்லான். அருவென்றும் உருவென்றும் சொல்லான்-செல்வன்
ஆரறி வாரென் றதட்டியே வெல்வான்.
வருவாரைப் போவாரைத் தெருவில் -செல்வன்
வைவான் சிரிப்பான் மகிழ்ச்சி தருவான்.
மருமத்தில் மருமமா யிருப்பான்-செல்வன்
மாதவ ருமறி யாதம கத்தான்.
14

Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7

நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)

Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7

நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10

Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8

நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7

Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.

நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8

Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.

நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7

Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5

நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,

Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)

நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9

Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17

நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -

Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26

நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2

Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.

நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4

Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7

நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.

Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்

நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO

Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7

நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5

Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4

நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2

Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6

நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.

Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10

நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6

Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2

நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5

Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.

நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2

Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4

நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,

Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8

நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9

Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7

நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15

Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22

நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே

Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7

நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7

Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6

நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17

Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7

நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.

Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்

நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).

Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)

நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :

Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11

நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)

Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)

நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)

Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)

நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6

Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10

நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.

Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.

நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18

Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).

நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi

Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8

நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்

Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7

நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)

Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9

நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)

Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ

நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5

Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே

நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.

Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.

நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.

Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10

நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19

Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.

நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6

Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2

நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)

Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2

நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.

Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ

நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3

Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5

நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299

Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.

நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.

Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12

நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10

Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.

நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /

Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்

நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)

Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6

நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12

Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12

நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.

Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10

நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,

Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13

நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2

Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10

நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்