கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாத்தின் தோற்றம்

Page 1

!=] 川 川
த LIELINLUIGüia

Page 2


Page 3

இஸ்லாத்தின் தோற்றம் சமூக ஒழுக்கவியல் அரசு -9dSLIG) bb86T LITfGOOITID 6)IGIriff
ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு
எம்.எஸ்.எம். அனஸ் மெய்யியல்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
வெளியீடு
பண்பாட்டு ஆய்வுவட்டம் பேராதனை
1997

Page 4
The Emergence of Islam: The Evolution of Social Ethics and the State - A Socio- Cultural Study
Author
Copyright
Publishers
Printers
Cover-Picture
First Edition
Price
M.S.M. Anes
Senior Lecturer
Department of Philosophy
University of Peradeniya
Peradeniya
Sri Lanka
C) 1997 M.S.M. Anes
Cultural Study Circle
C, 72, Meewathura
Peradeniya
Kandy
Unie Arts
48B Bloemendhal Road
Colombo-13
Acknoledgement, "Departure of Caravans' (p.19)
The Two Holy Mosques
Saudi Arabian Information Centre London
July 1997
RS, 18S

பொருளடக்கம்
முன்னுரை பக்கம்
அறிமுகக் குறிப்புரை 13 மார்ச்சிசமும் இஸ்லாமும்
தொன்மைச் சமூகம் * குலமரபுகள் சமூகவாழ்நிலை * வரலாற்றுவிதி இஸ்லாத்தின் சரித்திரம் 9 சமயமாற்றம்
தொன்மை அறேபியா 29 சமூகமும் நாகரிகமும்
மெஸெப்பொட்டேமியா * செமித்தியம்
கலாசாரக்கலப்பு 40 G 165T சந்திரக் கடவுள் * நபேத்தியர்
அறேபியப் பழங்குடி 52
அமைப்பும் பண்பாடும்
பழங்குடிச்சமூகம் சமத்துவ சமுதாயம் சமூக அமைப்பு * இரத்த பந்தம் அல்-அசயிய்யா 9 முர்ருஆ
சமயசிந்தனை 72
தொன்மைச்சமயமும் ஹனிப்வாதமும்
விக்ரகவழிபாடுகள் & சந்திர வழிபாடு ஆவிக்கோட்பாடு * ஹனிப்வாதம் இப்றாஹிமியம் * பலிச்சடங்கு

Page 5
05 பொருளாதார நிலை
()
07
O8
சமூக ம பவும் வர்க்கவேறுபாடும்
Di step o 56 fo6oL6otD all, Arhe istiti o olt" lj (ураор சரகாற்றம் 9 பழங்குடி ஒழுக்கம் குறுக்கியம் 9 தனிநபர்வாதம்
பெண்ணிலை குடும்பமும் திருமணமும்
குலஓழுங்கமைப்பு 9 தாய்வழிமரபு விதவைமணம் * மஹர் பெண்குழந்தைக்கொலை * ஆணாதிக்கமரபு வழக்காறு * பொருளியல்காரணி
புதிய தலைமைத்துவம் நபிகளின் வாழ்வும் நோக்கும்
ஹாவரீம்குலம் * பாலைவனவாழ்க்கை
பொருளியல் முரண்பாடு * வணிகர் எதிர்ப்பு மூதாதையர் நோக்கு * இன்பவாதம்
அரசியல் சிந்தனை மதீன ஒப்பந்தங்களும் அரசின் தோற்றமும்
மதீன ஒப்பந்தங்கள் 9 உம்மாவின் தோற்றம் நேசக்கூட்டமைப்பு கருத்தியலும் அரசியலும் சமூக ஒப்பந்தக்கோட்பாடு 0 இறைஅரசு
குறிப்புகள்
துணைநூல்கள் .
96
109
137
153
181
187

நன்றி
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு இதன் மூலவடிவம் முப்பது பக்க கையெழுத்துப் பிரதியாக இருந்தது. அதன் தலைப்பு "இஸ்லாத்தின் தோற்றமும் இஸ்லாத்திற்கு முந்திய அறபு சமூகமும்” என்பதாகும். அப்போது அக்கட்டுரை புத்தளம், காசீம் பெலசில் ஜனாப் S.I. Faust 2 D"gait (B.A, D6ff), g6O7. It li S.M. uddin (B.A. p56ff), 2.A.ஸன்ஹீர் (B.A), ஆகியோர் முன்னில் படித்துக்காட்டப்பட்டது. பொதுவாகக் கருத்து முரண்பாடுகள் எதுவும் எழவில்லை. ஆனால் அறேபிய குடும்பமரபில் தாய்த் தலைமை என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அப்படி ஒரு கருத்திற்கே இடமிருக்கமுடியாது என்று அவர்கள் வாதாடமுயன்றனர். Z.A.ஸன்ஹீர், அதன் பின்னர் நிகழ்ந்த சந்திப்புக்களில் இம்முரண்பாட்டை வலியுறுத்தியதோடு மேலும் சில விவாதத்துக்குரிய கேள்விகளையும் எழுப்பினார். உண்மையில் இந்நூல் கூறுவது கவனத்திற் கொள்ளத்தக்க தாய்வழி மரபின் அடையாயங்களைப்பற்றித்தான். இவ்விடயத்தை மேலும் விவாதிக்க சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் மூவருக்கும் எனது நன்றிகள்.
இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள அறபுப் பதங்களையும் அவற்றிற்கான பொருளையும் சரிபார்த்து உதவிய பேராதனைப்பல்கலைக் கழக அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளர் ஜனாப் M.S. ஹனிபா, அச்செழுத்துத்திருத்தப் பணியில் எனக்கு உதவிய மெய்யியல் துறை விரிவுரையாளர்களான ஜனாப் P.M.ஜமாஹிர், ஜனாப் A.H. M. B6) i Torv, Suéypg|60p விரிவுரையாளர் திரு. S.Y.பூரீதர் ஆகியோருக்கும் எனது நன்றிகள். துணைநூல்கள் பகுதியையும் ஆங்கிலப்பதங்களையும் சரிபார்த்து வழமைபோல் ஆலோசனைகள் வழங்கிய மதிப்புக்குரிய திரு.கிருஷ்ணராஜ் செல்வரட்ணம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலை அழகாக அச்சிட்டுத் தந்த கொழும்பு, யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தாருக்கும், குறிப்பாக, இந்த வெளியீடுகளில் உயர்ந்த நல்லுணர்வுடன் செயல்படும் நிறுவனப் பணிப்பாளர் திரு.P.விமலேந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள். கணனி எழுத்தமைப்புப் பணிகளை மிகுந்த அக்கறையுடன் அழகாகச் செய்து முடித்த ப்ரியா அவர்களுக்கும் எனது நன்றி.

Page 6
முன்னுரை
சமூகவியல் பண்பாட்டியல் நோக்கில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் இஸ்லாத்திற்கு முந்திய சமூக அமைப்பையும் ஆராய்கையில் எழும் பிரச்சினைகள் பன்முகத் தன்மை வாய்ந்தவையாகும். ஏனைய உலக சமயங்களைப் போல இஸ்லாமும் சிக்கலான தோற்றப்பாட்டையுடையது. தொன்மை மிக்க நீண்ட வரலாறும், பல நாகரிகங்களின் தாக்கமும், செல்வாக்குப் பெற்றிருந்த பழங்குடி அமைப்பும் இஸ்லாம் தோன்றிய மண்ணுக்குச் சொந்தமாயிருந்ததென்பது மனங்கொள்ளப்பட வேண்டியதாகும்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரே அறபு மண்ணின் பல்வேறு பாகங்களில் வளர்ச்சியடைந்திருந்த நாகரிகங்கள் காணப்பட்டன. மக்கா ஒரு வர்த்தக நகராக அதன் பிரசித்தத்தை வரலாற்றிற் பொறிப்பதற்கு முன்னரே முன்னேற்ற மடைந்திருந்த பலநகரங்களின் நாகரிகங்களையும் அவற்றிற்கே உரித்தான சமூக பொருளாதாரப் பின்னணியையும் அறபு மண் கொண்டிருந்தது. இஸ்லாத்தின் தோற்றத்தை அதன் பல்வேறு பரிமாணங்களிலும் ஆழமாகப் புரியும் முயற்சிக்கு இவற்றின் ஆதாரத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது.
முந்திய நாகரிகங்கள் வெறும் நாகரிங்கள் மட்டுமல்ல அதற்கும் முன்னரே இருந்து வந்த ஒரு சமூகப் பிரவாகத்தின் தொடர்ச்சியும் ஆனால் ஒரு முக்கிய கட்டமுமாகும். அந்த மண்ணிற்குரியனவாயிருந்த பண்புகளும் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதில் செயல்பட்ட சமூக விதிகளும் அடுத்த கட்ட அறபு சரித்திரத்தை மாற்றுவதில் பங்களிப்புச் செய்த வகையினைத் துல்லியமாக அறியாது இஸ்லாத்தின் தோற்றத்தை சமூகவியல் நோக்கில் புரிந்து கொள்ளலாம் என்பதில் எவ்வித நம்பிக்கைக்கும் இடமில்லை.

இஸ்லாத்தின் தோற்றத்தையும் தோற்றத்திற்கு முந்திய நாகரிகங்களையும் பொருளாதாரம் பண்பாடு என்பனவற்றின் தாக்கங்களையும் முதன்மைப்டுத்திய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே 56o Goppi 6.556op6or. L. Caetani, C.H. Becker, G.L.Dllavide, E.A. Belyear, Montgomery Watt, Bryan S. Turner Gu Taif G pit fair ஆய்வுகள் இவ்வகையில் கவனத்திற்குரியன. இ. எ. பெல்யிர், அஸ்கர் அலி இன்ஜினியர் போன்றோர் இதே விடயத்தை மார்க்ஸியப் பொருள் முதல்வாத நோக்கில் ஆராய்ந்துள்ளனர். நாகரிக மாற்றங்களிற்கு இட்டுச் சென்ற வரலாற்றியல் விதிகளைப் பற்றிய அனுபவம் சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளுக்கு, உகந்த வழிகாட்டியாகவோ முறையியலாகவோ அமைய முடியும். மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்றோரின் சமூகவியல் நோக்கு இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் காரணத்தினாலாகும்.
மார்க்சிய அணுகுமுறைகள் இடம் பெற்ற போதும் இது மார்க்சியத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான ஒப்பாய்வு அல்ல. மார்க்சிய வரலாற்றுப்பொருள் முதல்வாதம் (Historical Materialism) எவ்வாறு ஒரு சமயத்தை ஆராய்கிறது, என்பதும் இதன் விடயப் பொருள் அல்ல. இவ்வாய்வு இஸ்லாத்திற்கு முற்பட்ட சமூகத்தையும் அதன் கட்டமைப்பின் பிரதான இயல்புகளையும் மற்றும் சமயம், நாகரிகம் என்பனவற்றின் இயக்கக் கூறுகளையும், அவற்றின் இயல்புகளையும் வரலாற்றியல் சமூகவியல் நோக்கில் ஆராயும் முயற்சி என்ற வரையரைக்குட்பட்டதாகும்.
ஒரு பண்டைய சமூக சரித்திரத்தில் சமயத் தோற்றப்பாடு என்ற கருத்திலோ, அல்லது சமய எழுச்சியைத் தூண்டி அதை வெற்றிபெற வைத்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களையும் பொருளாதார மற்றும் பெளதிகக் கூறுகளின் நிர்ணயகராமான செயற்பாட்டையும்
ஆராயும் முயற்சி என்ற பொருளிலோ இதைக் கொள்ள முடியும்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முந்திய சமூகம் அதன் தொன்மைச் சமூகக்கட்டமைப்பின் தளர்வையும் அது கட்டிக்காத்து வந்த பழங்குடி அமைப்பின் தகர்வையும் தெளிவாக வெளிப்படுத்தியது. ஏனைய தொன்மைச் சமூகங்களின் கட்டமைப்போடும் அவற்றின் தகர்வோடும்
vii.

Page 7
ஒப்பாய்வு நோக்கில் இதனைப் புரிந்து கொள்வதும் ஹென்றி மோர்கன், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாத்தின் தோற்றக்கால அறபு சமூகத்தின் இயல்பினை ஆராய முயல்வதும் உற்சாகமூட்டும் அறிவு நடவடிக்கையாகும்.
எந்த ஒரு சமூகவடிவமும் அல்லது வரலாற்று மாற்றங்களும் தானே உருவானவையோ முந்நிகழ்ந்தனவற்றின் தொடர்ச்சியை பெறாதனவோ அல்ல. வரலாற்றில் ஒருமையும் தொடர்ச்சியும் காணப்படுவதை வரலாற்றியல் உணர்த்துகிறது. எக்காலத்திற்குரிய வரலாற்றுப் பிரிவும் முன்னர் நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சியை நிபந்தனையாகப் பெற்றுள்ளதென்பது வரலாற்றியல் உணர்த்தும் மற்றொரு உண்மையாகும்.
மார்க்சின் சமய அணுகுமுறை பற்றித் தவறான கருத்துக்களும், முற்கற்பிதங்களும் வளர்ந்துள்ள அளவு ஆரோக்கியமான கருத்துக்கள் வளரவில்லை. மார்க்சின் சமயம் பற்றிய கருத்துக்களை பொருளாதார விதிமுறைகளுக்கு மாத்திரம் வரையறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதனினும் விரிவான எல்லைகள் அவரது சிந்தனைக்கு உண்டு. எனினும் சமூக அல்லது சமய வரலாற்றைப் பொறுத்தவரை அவரது வரலாற்றுப்பொருள் முதல்வாத எண்ணக்கரு பாய்ச்சும் ஒளி இவ்விடயங்களில் நிர்ணயகரமான கருத்துத் தெளிவைப் பெற உதவுகிறது.
பொருளாதாரமும் சமூக இயக்கமும் சமூகஉறவுகளும் சமயமும் பிணைந்து கிடக்கும்நிலை கீழ் நாட்டுச்சமயங்கள் அனைத்திற்குமே பொதுவானதாய் ஏன் உள்ளதென்ற கருத்து நுணுகி நோக்குதற்குரியதாகும். கீழ்நாடுகளின் சரித்திரம் ஏன் மதங்களின் சரித்திரமாக உளதென்பது மார்க்சை ஆழமாகப் பாதித்த கேள்வியாகும். 'இன்னும் சில தினங்களில் நான் முகம்மதின் சரித்திரத்தை ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்வேன்’ என எங்கெல்ஸ் மார்க்சிடம் கூறியிருந்தார். இவையும் இஸ்லாம் சமயத்தின் எழுச்சியை ஆழமாகக் கற்க அவர்களுக்கு இருந்த ஆர்வமும் சமயங்கள் ஆற்றிய சமூகமாற்றப் பாத்திரத்தை அறிவதன் அவசியத்தைத் தூண்டி நிற்பனவாகும். தொன்மைச் சமூகத்திலிருந்து நவீன சமூக அமைப்பிற்கு அறபு சமூகத்தை
viii

மாற்றியதில் இஸ்லாம் வகித்த பாத்திர முக்கியத்துவம் இன்னும் அலசப்படாத வரலாறாகவே உள்ளது.
கீழ்நாடுகளின் சரித்திரம், முக்கியமாக அறபுநாட்டின் சரித்திரம் அடிப்படையில் மதங்களின் சரித்திரமாகவே உள்ளது. அரசியல் இங்கு வேறொரு பண்பாட்டு வடிவத்தினுடாக வெளிப்படுத்தப்படுகிறது. சமய நம்பிக்கைகளின் தளங்களிலிருந்து அதன் செயற்பாடுகள் துளிர்க்கின்றன. 'மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற அரிஸ்டோட்டிலின் கூற்று பண்பாட்டு வடிவம் எவ்வகையினதாக இருந்தாலும் அரசியல் உணர்வு அதில் வேர்விடக்கூடியது என்பதை இத்தகைய வரலாறுகள் உணர்த்துகின்றன.
சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியுமே இந்த நூலின் பிரதான பாடப்பொருளாயினும் அரசியல், பகுத்தறிவு, சிந்தனை மாற்றம், சமூக மாற்றம், பண்பாடு, கருத்தியல் என்ற எண்ணக்கருக்களின் விபரிப்பே இது என்பது நோக்குதற்குரியதாகும். இவற்றின் பின்னணியில் 'ஆன்மீகம் ஒரு உந்து சக்தியாக இருப்பதுதான் ஏனைய வரலாறுகளிலிருந்து இது மாறுபடுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. ஆயினும் ஆன்மீகத்தை ஆன்மீகத்தினாலன்றி மண்ணிற்குரிய எண்ணங்களினால் மீளப் பரிசீலனை செய்யாவிடில் சாதாரண
உண்மைகளும் புரிய முடியாத மர்மங்களாகவே என்றும் இருந்து விடும்.
தந்தைத்தலைமை அறபு மண்ணில் 4000ம் ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். கிடைக்கக்கூடிய வேதநூல்களின் சான்றுகளின் படி ஏப்ரஹாமை (இப்றாஹீம்) தந்தைத்தலைமைக்குரிய முதல்வராகவே கொள்ளலாம். அவர் ஏகத்துவக் கொள்கைக்காக (ஒர் இறைக் கோட்பாடு) ப் போராடினார். உண்மையில் ஒரு பொருளாதார முறையிலிருந்து இன்னொரு பொருளாதார முறைக்கும் ஒருவகைப் பண்பாட்டிலிருந்து இன்னொரு வகைப் பண்பாட்டிற்கும் பழைய மரபிலிருந்து புதிய மரபிற்கும் இதன் மூலம் அவர் அழைப்பு விடுத்தார்.
Χ

Page 8
கடவுள் கொள்கைகள் மாறும்போது அதனுடன் சமூகத்தைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் பல கட்டுக்களும், சடங்குகளும், மரபுகளும், ஏன் கருத்துக்களும் கூட மாற்றம்அடைகின்றன. புதிய சமய சிந்தனைகளினால் பொருளாதாரமும் பண்பாடுகளும் மாற்றமடைந்தனவா? மாற்றமடைந்து வரும் அடித்தளக் கட்டமைப்புக்களின் பிரதிபலிப்பின் விளைவுகளிலிருந்துதான் இதன் ஊற்றுக்களைத் தேடவேண்டுமா? என்ற கேள்விகள் சமூக மாற்றங்களுக்கான பெளதிகத் தளங்களை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. சமய ஆய்வுகளில் இத்தகைய நோக்கு பொதுவாகக் கைவிடப்படுவது பிரபலமான விடயமாகும்.
事
சமுதாய மாற்றத்தில் பங்கேற்கும் அடிப்படை அம்சங்களில் பெளதிகக் காரணிக்குள்ள முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்த முடியாது. இத்தகைய அறிவுப்பார்வையின் தேவை பற்றி நேராகக் குறிப்பிடா விட்டாலும் அல்லாமா இக்பாலின் பின்வரும் கருத்துக்களின் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையானதாகும்.
இஸ்லாத்தின் தாபகர் (நடரிகள்) மிகத் தெணிவான முறையில் நம்முன் தோற்றமளிக்கிற7ர். உண்மையில் அவர் ஒரு வரல7ற்றும் 4/ருஷ 7. ஆழமான ஆம்வு நோக்குள்ள விமர்சனங்களுக்கு கூடத்தம்மை சுதந்திரமாக உட்படுத்துபவர். புத்திமரீனம7ன 4/ர7ணக்கதைகள் அவரது தோற்றத்தை மறைத்துவிடாது. அவர் மிகவும் வெட்டவெளிச்சம7ன வரலாற்றுக் காலத்திற் பிறந்தவர். அவரது செயல்களின் உள்ள7ர்ந்த ஊற்றுக்களை ந7ம் நன்கு 4/ர7ந்து கொள்ளமுடி 4/ம். இப்பே7தைக்கு இயற்கைகடந்த கூறுகளை (Supernatural Element) நீக்கிவிட்டு இஸ்லாத்தின் கட்டமைப்பை ந7ம் 4/774 Gavaza (Iqbal, 1992 A: 31).
3
இஸ்லாத்திற்கு முந்திய காலப்பகுதி அறேபிய வரலாற்றில் பாரம்பரியமாக 'அல்ஜாஹிலியா', அறியாமையுகம் , அல்லது 'காட்டுவாசிக்காலம் (The age of Ignorance or barbarism) GTGOTës
X

குறிப்பிடப்படுகிறது. ஜாஹிலியாக்காலம் மிகத் தொன்மையான காலத்தை உள்ளடக்கியதெனக் கூறப்பட்டாலும் கி.பி. 6ம் நூற்றாண்டே ஜாஹிலியாக் காலமாகும் (Beg M.A.). 1981; 21) கி.பி. 6ம் நூற்றாண்டு பற்றி எழுதப்பட்ட வரலாறு இல்லை. இக்காலத்துக்குரிய தகவல்களைத் தருவதில் தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து நிலைத்துள்ள நாட்டார் பாடல்கள் முக்கிய மூலமாகக் கருதப்படுகிறன. அல்குர் ஆனிலும் ஹதீஸ்களிலும் (நபிவழிமரபுகள்) இக்காலத்தைக் குறிக்கும் சான்றுகள்
உள்ளன.
அறேபியாவின் ஜாஹிலியாக் காலச்சமூகம் பல் வகைப்பட்டதாக இருந்தது. தென் அறேபிய வட அறேபிய வேறுபாடுகள் முதலிற் குறிப்பிடப்பட வேண்டியனவாகும். தென் அறேபியா நிலையாகத் தரித்து வாழும் மக்கள் சமூகத்தைப் பெற்றிருந்தது. முன்னேற்றமடைந்த விவசாயம் அவர்களின் பிரதான தொழிலாகும். அங்கு மன்னராட்சி காணப்பட்டது. மறுபுறத்தில் வடமானில அறேபியர் மற்றொருவகை சமூக அமைப்பிலிருந்தனர். ஹெலெனிய நாகரிகத்தின் செல்வாக்கு இப் பகுதிகளில் ஊடுருவியிருந்தது. வட அறேபியாவிலும் மேற்கு அறேபியாவிலும் ஹெலெனிய செல்வாக்கு அரை-நாகரிக எல்லைப்புற அரசுகளை உருவாக்கியிருந்தது. இன அடிப்படையில் இப் பிரதேச மக்கள் அறேபியராயினும் இவர்கள் ஹெலனியச் செல்வாக்கிற் குள்ளாகியிருந்தனர். பொதுவாக ஆர்மெய்க் மொழியைப் பயன்படுத்தினர். நாடோடிப் பழங்குடிவாதம் (Bedouin Tribalism) இவர்களின் முக்கியமான வாழ்க்கை முறையாகும் ( பார்க்க, M. Abdal Ati, 1995:05).
இதேவேளை பாலைவனப் பசுந்தரை (Oasis) சார்ந்த பகுதிகளில் தரித்து வாழ்ந்த நாடோடிக்குழுவினர் முன்னேற்றமான நகர வாழ்க்கையைத் தாபித்தனர். அத்தகைய நகர்களில் நபிகள் பிறந்த மக்கா முக்கியமானதாகும். ஜாஹிலியாக் காலத்து சமூக அடுக்கமைவினை (System of Stratification) ப் பின்வருமாறு வகைப்படுதலாம்; 1. பிரபுத்துவ அறபுப் பழங்குடிகள் (குறைஷியர்) 3. பிரபுத்துவமல்லாத பழங்குடி கள் 3. சுதந்திரமளிக்கப்பட்டவர்களும் அடிமைகளும் 4 யூதர்களும் கிறிஸ்தவர்களும்(இவர்கள் பழங்குடிக்கும் அடிமைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தனர்) ( பார்க்க, 1981; 31)
Χί

Page 9
அடிப்படையில் ஜாஹிலியா யுகம் அடிமைச் சமூக அமைப்பிற்குரியதாகும் ஆயிரக்கணக்கான அடிமைகள் அறபு எஜமானர்களின் உடைமைகளாக இருந்தனர். குறிப்பாக மக்காவில் மத்திய ஆளும் சக்தியாக உயர்வணிகர் காணப்பட்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுவர்த்தகர் காணப்பட்டனர். மிகவும் அடித்தளத்தில் அடிமைகளும் உழைப்பாளிகளும் இருந்தனர். நபிகள் பிறந்தபோது அறபு சமூகம் இத்தகைய முரண்பட்ட அல்லது பலவகைப்பட்ட தன்மையிலிருந்தது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். சமூக இயக்கப்போக்கின் பெளதீக வகைப்பட்ட பொறிமுறையின் தளவரைபடம் என இதனைக் கொள்ளலாம்.
புதிய சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சீர்திருத்தங்கள் வகிக்கும் பாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். இப்றாஹிமியம், ஹனிப்வாதம் என்பனவற்றிற்குப் பிறகு பாரிய சிந்தனை மாற்றத்துக்கான வழிமுறைகளை இஸ்லாம் அறபு மண்ணிற்கு அறிமுகப்படுத்தியது. காட்டு வாசி வாழ்க்கையில் (Barbarism) அல்லது நாகரிகத்திற்கு முற்பட்ட நிலையிலிருந்த அறபு சமூகம் நாகரிக யுகத்துள் பிரவேசிக்கும்போது அதன் வழிகாட்டியாக நபிகள் இருந்தனர். ' தொன்மைக் காலத்திலிருந்து நவீன காலத்திற்கு அறபு சமூகம் மாறிய காலப் பிரிவென்று மகாகவி அல்லாமா இக்பால் இதனை அடையாளப்படுத்தினார். இதனால் இஸ்லாம், சமயம் என்பதற்கும் மேலானதாகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தன்று. அது சமூ/ மாற்றத்தினதும் சிந்தனை மாற்றத்தினதும் வரலாறும் வழி முடியுமாகும்.
முஹம்மது சாலிஹ் முஹம்மது அனஸ்
xii

அறிமுகக் குறிப்புரை Susi 1
இஸ்லாமும் மார்க்ஸிஸமும்
தொன்மைச் சமூக ஆய்வில் அல்லது மானிடவியல் (Anthropology) ஆய்வில் மார்க்ஸின் சிந்தனைகள் முழுமையான விளக்கத்தை அளிப்பனவாகக் கொள்ள முடியாது. எல். எச். மோர்கனின் படைப்பான தொன்மைச் சமூகம், (Ancient Society) மார்க்ஸின் மானிடவியல் பற்றிய கருத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியது. 1879-1882 களில் மார்க்ஸ் மோர்கனின் 'தொன்மைச் சமூகம் பற்றிய முக்கியமான குறிப்புக்களைத் தயாரித்திருந்தார். ஆதி சமூகம் பற்றிய ஏனைய ஆய்வாளர்களின் நூல்களையும் அவர் கற்றிருந்தார். எனினும் மார்க்சோ எங்கெல்சோ ஒரு முறையான மார்க்சிய மானுடவியல்வாதத்தை உருவாக்கினர் STSOTäs singpipiguurg (Tom Bottomore, 1985:23).
தொன்மைச் சமூகம்
குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (1884) எனும் எங்கெல்ஸின் நூல் எல். எச். மோர்கனின் கண்டுபிடிப்புக்களையும் மார்க்ஸின் இந்நூல்பற்றிய கருத்துக்களையும் கொண்டமைந்ததென்பது குறிப்பிடத்தக்கது. எங்கெல்ஸ் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருந்த வரலாறு பற்றிய அதே பொருள் ypg) is Tg5 Tsiorse Ts6505606) (Materialist Conception of History) Guomissir தனது வழியில் அமெரிக்காவில் மீண்டும் கண்டு பிடித்தார்’ (1972: 5). காட்டுவாசி நிலை அதாவது நாகரிகத்திற்கு முந்திய நிலை (Barbarism) நாகரிக நிலை இரண்டையும் பற்றி மோர்கனின் நூல் குறித்து மார்க்ஸ் விரிந்த அளவில் எழுதியிருந்த குறிப்புக்களையும் பயன்படுத்தியே தனது நூலை ஆக்கியதாக எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Page 10
பண்டைய சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சி விதியைக் கண்டறியும் முயற்சியை மோர்கனின் 'தொன்மைச் சமூகம் இலகுபடுத்தியது. மோர்கன் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் பொருள் முதல்வாதக் கருத்துக்கள் அவரது நூலில் பிரதிபலித்தன. மார்க்சும் எங்கெல்சும் இயக்கவியல் பொருள் முதல்வாதக் கண்ணோக்கில் இதனை ஆராய்ந்தனர். எங்கெல்சின் தனிச் சொத்து குடும்பம் அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் மோர்கனின் கண்டு பிடிப்புகளை இயக்கவியல் நோக்கில் நுணுகிக் காணும் ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாகும்.
மோர்கன் எடுத்துக்காட்டும்வரை தந்தைவழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது. மோர்கனின் ஆய்வுகள் தாய்த் தலைமைக் குலமே சமூக அமைப்பில் ஆதி வடிவம் என நிறுவின. தந்தைவழிக் குல அமைப்பு இதிலிருந்தே உருவாகி இருக்கவேண்டும். சொத்துடமையில் ஏற்படும் மாற்றமே தாய் வழியை தந்தை வழிக் குடும்பமாக மாற்றுகிறதென மோர்களின் ஆதாரங்களின் வழியாக மார்க்சிசம் நம்புகின்றது.
பொதுச் சொத்தைவிட தனி உடமையின் கை மேலோங்கும் போது வாரிசுரிமையில் மாற்றம் நிகழ்கிறது. தந்தை உரிமையும் அதைத் தொடர்ந்து ஒருதார மணமும் முதல் நிலைக்கு வந்து விடுகின்றன.
905 Rur Los Tih (Monogamy) ua) sensor LD6007th (Polygamy) குழு மணம் (Group Marriage) போன்ற திருமண முறைகள் சமூகத்தில் தான் தோன்றித் தனமாக உருவாகிச் செயல்பட்டவை அல்ல. அல்லது மனிதன் தனது இஷ்டத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொண்டனவுமல்ல. ஒரு குறிப்பிட்ட வகை சமூக பொருளாதார அமைப்பின் நிலவுகையே இவற்றில் ஏதேனுமொன்றை முதன்மை நிலைக்குரிய மணமுறையாக மேலே கொண்டு வருகிறது. எங்கெல்சின் கருத்தில் ஒரு துணை மணமுறை அதன் சொத்துரிமையைப் பாதுகாக்கும் நிறுவனமாக வந்து சேர்ந்தது. கால் நடை வளர்ப்பின் வளர்ச்சியும் பரிவர்த்தனை உறவுகளின் முன்னேற்றமும் தந்தை வழிக் குடும்பத்திற்கு வழி விட்டது. குழந்தைகள் தமது தந்தையின் இயற்கை வாரிசுகள் அதாவது சொத்துச் சுவீகாரத்திற்குரிய உரிமையாளர் என்பதை தந்தை வழிமுறை புலப்படுத்தியது. w
ஆதி சமூக அமைப்பிலிருந்து ஏற்பட்டு வந்த மாற்றங்களைப்
பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம். மிருகங்களைப் பழக்குவதும், மந்தைகளைப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத மூலதாரங்களிலிருந்து
4

பெருகி வந்த செல்வ வளமும் முற்றிலும் புதிய சமூக உறவுகளைத் தோற்றுவித்தன. முன்னர் காட்டுமிராண்டிக் காலத்தில் அல்லது அநாகரிக காலத்தின் இறுதிக் கட்டத்தில் காணப்பட்ட செல்வங்கள் மிகச் சொற்பமானவை. வீடு, ஆடைகள், செம்மையற்ற ஆபரணங்கள், உணவுபெறுவதற்குத் தேவையான ஆயுதங்கள், உணவைத் தயாரிப்பதற்கு உதவும் சில கருவிகள் என்பனவே அவர்களின் சொத்துக்கள். இப்பொழுது குதிரைகள், ஒட்டகைகள், கழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக் கூட்டமும் மேய்ச்சல் தொழில் புரியும் மக்கள் கூட்டமும் உருவாகி இருந்தன.
கால்நடைகள் பெருகின. இவற்றைக் கவனித்துக் கொள்ள அதிக அளவில் ஆட்கள் தேவைப்பட்டனர். போர்களில் பிடிக்கப்பட்ட கைதிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். இவற்றினால் செல்வ அதிகரிப்பு தீவிரமடைந்தது. இவ்வாறு பெருகிய செல்வம் பழங்குடிக்குச் (Tribe) சொந்தமாயிருந்தது. எனினும் இச் செல்வங்கள் குடும்பங்களின் தனிச் சொத்தாகி அது மேலும் மேலும் பெருகிய போது அது அப்போதைய சமூக அமைப்பிலும் திருமண முறையிலும் தாய்த் தலைமை முறையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. செல்வப் பெருக்கம் குடும்பத்தில் பெண்ணை விட ஆணுக்கு முக்கிய அந்தஸ்தைக் கொண்டு வந்தது. மனித நாகரிக வரலாற்றில் தாயுரிமையின் இடத்தை தந்தை உரிமை சுவீகரித்துக் கொண்ட விதத்தை எங்கெல்ஸ் இவ்வாறுதான் அணுகுகின்றார்.
பூர்வீகக் கூட்டுடைமை
பண்டைய சமூகத்தின் பொருளியல் உறவுகள் முற்றிலும் வேறுபட்டதாகும். அங்கு பூர்வீக கூட்டுடைமை காணப்பட்டது. அதாவது உற்பத்திச் சாதனங்கள் கூட்டுடைமையாக இருந்தன.
வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் மனிதன் ஈடுபட்டிருந்த ஆதிகாலத்தில் பொருள்களைச் சேர்த்து வைக்கும் எண்ணமே அவர்களிடையே இல்லாதிருந்தது. மீனையோ மாமிசத்தையோ சேர்த்து வைக்க முடியாது. வேட்டையோ மீன்பிடியோ எப்போதும் நிகழவில்லை. அப்போது அவன் உணவுக்காக மற்றவர்களையே எதிர்பார்த்தான். குறிப்பாக வேட்டையாடும் முறை வேட்டைப் பொருட்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதிலேயே தங்கியிருந்தது. மேலும், ஒருவன் உயிர் பிழைத்திருப்பதற்குத் தேவையானவற்றை மற்றவர்களின்
15

Page 11
உதவியின்றித் தன்னந்தனியாகப் பெற மனிதன் கண்டுபிடித்திருந்த ஆதிகாலக் கருவிகள் அவனுக்கு உதவவில்லை. எனவே மற்றவர்களை எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத நிலையில் அவன் இருந்தான்.
மேலும் இபற்கைச் சக்திகளை மனிதன் கூட்டுமுயற்சியினாலேயே எதிர்க்க முடிந்தது. எனவே, ஒத்துழைப்பும் பரஸ்பர உறவும் அடிப்படையாக விருந்தன. தமக்குக் கிடைத்தவற்றை அவர்கள் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். இது பண்டைய சமுதாய வாழ்க்கையில் காணப்பட்ட கூட்டுறவு விதிகளை உணர்த்துவதாகக் காணமுடியும். கிடைப்பனவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்ளும் முறை இக் கூட்டுறவு விதிகள் செயல்படுவதற்கான சூழலைத் தந்ததாகக் கருதலாம்.
அவர்களிடம் உபரி இல்லை. அதாவது அங்கு சுரண்டல் நிகழவில்லை. வேறு வகையில் கூறவதாயின் உற்பத்திச் சாதனங்களின் தனிஉடைமை இங்கு நிலவவில்லை.
சிறுபிள்ளையின் கள்ளங்கபடமற்ற தன்மையோடு மனித குலத்தின் இவ் வரலாற்று ரீதியான குழந்தைப் பருவத்தை மார்க்ஸ் ஒப்பிடுகிறார்: “மனித குலத்தின் வரலாற்று ரீதியான குழந்தைப் பருவம் அதனுடைய மிகவும் அழகு நிறைந்த காலமாகும். அந்தக் குழந்தைப் பருவம் இனி ஒருபோதும் திரும்ப முடியாது என்பதற்காக அதன் அழியாக் கவர்ச்சியை நம்மீது செலுத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? (1982:323).
இப்புராதனப் பொது உடைமை அமைப்பு அளவுக்கு மீறி எளிமைப் படுத்தலுக்குள்ளாகும்போது நம்ப முடியாத நிலைக்குள்ளாக இடமுண்டு. மனித சமூகம் பாதுகாத்து வளர்த்திருக்கக் கூடிய சில உயர்ந்த பண்புகள் அங்கிருந்தது என்பதை அது உணர்த்துகிறது என்று கொள்வதே பொருத்தமதிகமுடையதாகும். புராதன பொது உடைமையின் நயக்கத்தக்க அம்சங்களுக்கப்பால் இருந்த முரட்டுத்தனம், செம்மையற்ற அதன் யதார்த்தம் முதலியவைகளை மறந்து அபரிமிதமான வர்ணணைகளைச் சிலர் அள்ளி வழங்குகின்றனர்.
மார்க்ஸ் கூறிய குழந்தைப் பருவ நிலை என்ற எச்சரிக்கை மிக்க ஒப்பீட்டையும் கருத்திற் கொள்ளாது இலட்சிய இன்புரியாக அதை வர்ணிப்பதில் பலர் ஆர்வமாயுள்ளனர். இதிலுள்ள அபாயத்தைப் பற்றிய பேராசிரியர் கோசாம்பியின் எச்சரிக்கை மனங்கொள்ளத்தக்கதாகும்.
6

சிலர் இப்பொழுதுங் கூட புராதன பொது உடைமை பற்றிக் கூறும் போது கிடைத்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டும் கூட்டுறவு மூலம் தங்களது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இலட்சிய சமுதாய நிலை அது என்பது போலப் பேசுகிறார்கள். வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்த பழங்குடி மனிதன் மாண்புமிக்க நிலையிலிருந்தவன் என்னும் விசித்திரமான இன்பக் கற்பனைகளாக அள்ளி வீசுகிறார்கள்.
குல மரபுகள்
மக்கள் குலங்களாக வாழ்ந்த போது ஒவ்வொரு குலமும் தமக்குரிய மரபுகள் பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பெற்றிருந்தன. முதியோரை மதிப்பது, குலத்தீர்மானங்களை ஏற்பது, குல அங்கத்தவர்களுக்கு உதவி அளிப்பது போன்ற சமூக நடவடிக்கைகளாக அவை வெளிப்பட்டன. தமது வாழ்வுக்கும் குலத்தின் இருப்பிற்கும் இவை இன்றியமையாதவையாக இருந்தமையால் தொன்மைக் குலங்கள் இவற்றைச் செயற்படுத்துவதில் தீவிர மனப்பாங்கைக் கொண்டிருந்தன.
இவ்வழக்காறுகளையும் இவற்றோடு தொடர்பான பாரம்பரியங்களையும் மரபுகளையும் பூர்வீகக் குடிகள் மாற்ற முடியாத அந்தஸ்துடையனவாகக் கருதினர். நாட்டார் வழக்காறுகளை ஆழமாக ஆராய்ந்த பேராசிரியர் சம்னர் (W. G. Summer) நாட்டார் வழக்காறுகள் அநாதி காலமாக நிலவி வருபவையென்றும் ஒவ்வொரு இனமும் தனது மூதாதையிடமிருந்து அவற்றை பிதுர்ராஜ்ஜிதமாகப் பெற்று அடுத்த தலைமுறைக்கு வழங்குகிறதென்றும் கூறுகிறார். அது மனிதன் உணர்ந்தோ தேர்ந்தெடுத்தோ கடைபிடிப்பதல்ல. அது இயற்கைச் சக்திகளின் உற்பத்திச் சக்திகளுக்கு ஒப்பானதென்றும் விலங்குளின் இயல்பூக்கத்திற்குச் சமமானதென்றும் அவர் விளக்குகிறார்.
இவை நபிகள் கால அல்லது அதற்கு முந்திய பாலைவனப் பழங்குடி அறேபியரின் மரபுகளுடன் நன்கு ஒப்பிடுவதற்குரினவாகும். “ஒரு குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிட்ட விதமாக ஏன் செயல்பட்டீர் எனப் பூர்வீக மனிதனைக் கேட்டால் எனது மூதாதையர் அவ்வாறுதான் செய்தனர் எனப்பதிலிறுப்பான்” என்றும் “மூதாதையர் மீது ஆவித்தன்மையான அச்சமும் அதீத மரியாதையும் கொண்டவனாகப் பூர்வீக மனிதன் வாழ்ந்தான்’ என்றும் கூறும் சம்னரின் கருத்துக்களையும் அறாபியரின் மூதாதையர் வழிபாட்டுடன் ஒப்பு நோக்கலாம்.
7

Page 12
வரலாற்று விதி
வடிவம் எவ்விதமாக இருந்த போதிலும் சமூகம் என்பது என்ன ? மனிதனின் பரஸ்பர நடவடிக்கைகளின் சிருஷ்டியே சமூகம்' என்ற மார்க்சின் கருத்து இரு தளங்களில் கொள்ளப்பட வேண்டும். மனிதனின் செயற்பாடு மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நிகழ்வது மட்டுமன்று. அடிப்படையில் மனிதன் இயற்கையின் ஒரு பாகம். பரஸ்பர நடவடிக்கை என்பது மிகவும் தீர்மானமான சமூக விதிகளை உள்ளடக்கியதாகும்.
சமூகம் தனது தோற்றத்தின் மூலம் இயற்கையுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. சமூகத்தின் இருத்தலுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் இயற்கை அடிப்படையான நிபந்தனையாக உள்ளது. பேராசிரியர் டப். ஜி. சம்னரின் கீழ்வரும் கருத்து இத் தொடர்பில் கருதத்தக்க தொன்றாகும்.
வாழ்க்கையின் இருப்பிற்கான போராட்டம் வாழ்க்கை நிபந்தனைகளுடனும் அதனோடு தொடர்பான வாழ்க்கைப் போட்டியுடனுமே நடக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை நிபந்தனைகள் என்பதில் சுற்றாடலின் பல்வேறு கூறுகள் அடங்கியுள்ளன. வாழ்வதற்கு
ஆதாரமாயிருக்கக்கூடிய பொருட்களைப் பெறுவது, அவற்றின் பயனை அடைவதிலுள்ள இடர்ப்பாடு காலநிலை, தட்ப வெப்பநிலை முதலியன. இவை வாழ்க்கைக்கு ஆதரவளிக்கின்றன, அல்லது எதிராக அமைகின்றன (190616)
மக்களின் சமூக இருப்பு அல்லது வாழ்நிலை (Social Existence) சமூக உணர்வை நிர்ணயிக்கின்றது. மார்க்சிய சித்தாந்தங்களில் சமூகவாழ்நிலை என்பது மனிதன் இயற்கையுடனும் மனிதர் தமக்கிடையேயும் கொண்டுள்ள பொருளாயத (பெளதிக நிலைப்பட்ட) உறவுகளாகும்.
சமூக உணர்வு என்பது வர்க்கங்கள், கருத்துக்கள், எண்ணங்கள், சட்டம், தத்துவம், சமய உணர்வுகள் என்று பொருள்படும். சமூக உணர்வுகள் சுதந்திரமானவையல்ல. சமூக வாழ்நிலையே சமூக உணர்வை நிர்ணயிக்கிறது. சமூக செயற்பாடுகளினதும் பொருளாதாரத் தேவைகளினதும் பிரதிபலிப்பாகவே சமூக உணர்வுகள் அமைகின்றன.
18

சமுதாய வளர்ச்சி சில தீர்மானமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக மார்க்சியம் கூறுகிறது. இவற்றை இயற்கையின் விதிகளைப் போலக் கருதும் மார்க்சியவாதிகளும் உளர். வரலாற்று விதிகள் இயற்கை விதிகளை ஒத்தனவா என்பது பற்றி கருத்து பேதங்கள் உள. மார்க்சின் சொந்தக் கருத்துக்களே இவ்வகைக் கருத்துப் பேதங்களின் தீர்வுக்கு உசாவத் தகுதியானவை. வரலாற்று விதிகளை எவ்வாறு நோக்கினாலும் அவை மனித நடவடிக்கைகளின் விதிகளாகும். இயற்கை விதிகளையும் வரலாற்று விதிகளையும் வேறுபடுத்திக் காட்டும் அம்சம் மனித நடவடிக்கை என்பது அழுத்திக் கூறத்தக்கதாகும்.
மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் (Historical Materialism) 2-bug55 pmpsou (Mo de of Production) muy su Tibólir el úlusou இயக்கமாகக் கருதுகிறது. ஒவ்வொரு யுகமும் தனக்கென ஒரு உற்பத்தி முறையை கொண்டுள்ளது. அந்தந்த யுகத்துக்குரிய உற்பத்தி முறையே வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப்பூசல்களையும் தோற்றுவிக்கிறது. உற்பத்தி உறவுகள் வர்க்கப் போராட்டத்தைத் தவிர ஒன்றுமல்ல என மார்க்சியம் கூறுகிறது.
எவ்வாறு உற்பத்திமுறை வர்க்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் தருகிறது? காற்றாடி இயந்திரம் நிலப்பிரபுத்துவ சமூகத்தையும் நீராவி இயந்திரம் கைத்தொழில் முதலாளியையும் எப்படித் தருகிறது?
உற்பத்திக் கருவிகளின் உடைமை உரிமை அல்லது சொத்துடைமையே இதைத் தீர்மானிக்கிறது. மக்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது இயற்கையில் மாத்திரம் வேலை செய்யவில்லை. ஒருவருக்கொருவர் தெளிவான உறவுகளில் அவர்கள் பிரவேசிக்கின்றனர். இந்த உறவுகள் உடைமை உறவுகள். உற்பத்திக் கருவிகளைப் பெற்றிருப்போருக்கும் அவற்றைப் பெறாதோருக்கும் இடையிலான பொருளாதார நலன்களில் முரண்பட்ட இரு பகுதியினர்க் கிடையிலான உறவு
5||8||-
வர்க்கம் இருதுருவ வேறுபாடுடைய, கூர்மையடைந்து செல்லும் இரு முகாம்கள் என்ற கருத்து வர்க்கம் பற்றிய எளிமையான விளக்கவடிவமாகும். பாரிய வர்க்கப் பிரிவினை பற்றி மார்க்ஸ் அழுத்தமாகக் கூறியுள்ளார். எனினும், வர்க்கம் என்பது சமூகத்தின் சிக்கல்வாய்ந்த தோற்றப்பாடாகும். இந்த
19

Page 13
விடயத்தை மார்க்ஸ் உணர்ந்திருந்தார். வர்க்கங்கள் இருதுருவ நிலைப்பட்டவை மட்டுமே என்ற விளக்க வடிவத்திற்கு அப்பாலிருந்த சிக்கல் நிலையை அவரால் சுட்டிக்காட் முடிந்தது. ‘வரலாற்றில் முந்திய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புக்களாலாகிய சிக்கலான சமூகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப்படிநிலை அமைவு இருக்கக் காண்கிறோம் என மார்க்சும் எங்கெல்சும் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டனர்.
அடிப்படை வர்க்கத்துடன் தொடர்புற்ற சமூகத் தரப்படிவம் (Social Rank) அல்லது சமூக அடுக்கமைவு (Social Stratification ) முதலாளித்துவத்திற்கு முந்திய சமூக அமைப்புக்களில் காணப்பட்டதை அவர்கள் முன் மொழிந்தனர்.
உற்பத்தி செய்யப்படும் பொருள், அது பரிவர்த்தனையாகும் விதம், செல்வப் பகிர்வு என்பனவே ஒரு சமுதாயம் எப்படி வர்க்கங்களாக அல்லது சமுதாயப் படிமுறை அமைப்பாகப் பிரிக்கப்படுகிறது, என்பதைப் புரிய வைக்கிறது. விநியோகத்தில் எழும் வித்தியாசங்களிலிருந்து வர்க்க வித்தியாசங்கள் எழுகின்றன. உடைமை மேம்பாடுடையவர்களையும் உடைமை அற்றவர்களையும் சமுதாயம் பெறும் நிலை இவ்வாறு வந்து சேர்கிறது. மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: பீ.வி. அனன்கோவ்வுக்கு எழுதிய கடிதத்தில் (1846) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்திலிருக்கும் போது வணிகமும் நுகர்வும் குறிப்பிட்டதொரு அமைப்பிலிருக்கும் உற்பத்தி, வாணிபம், நுகர்வு என்பனவற்றில் குறிப்பிட்டதொரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பின் அதற்குகந்தாற் போன்ற சமூக அமைப்பும் ஏனைய நிறுவனங்களும் அல்லது வர்க்கங்களும் இருக்கும். ஒரு வார்த்தையில் கூறினால் அதற்குக் தகுந்தாற் போன்ற சிவில் சமூகமும் இருக்கும். (கார்ல் மார்க்ஸ்: 1973:156)
மார்க்சின் கருத்தில் உற்பத்திச் சக்திகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லை. உற்பத்திச் சக்தி என்பது முந்திய நடவடிக்கைகளால் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட சக்தியாகும். முன்னால் வாழ்ந்த ஒவ்வொரு பரம்பரையினரும் பெற்றிருந்த உற்பத்திச் சக்திகள் பின்வரும் ஒவ்வொரு பரம்பரையினருக்கும் புதிய உற்பத்திக்கு மூலப் பொருளாய் விளங்குகின்றன என அவர் கருதுகிறார்.
மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை மார்க்ஸ் மறுக்கவில்லை. ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அவர்களால் உருவாக்க
20

முடிவதில்லை. ஒரு சமுதாயவடிவத்தை அதில் அப்போது வாழும் மனிதர்கள் உருவாக்கவில்லை. அது அவர்களுக்குத் தரப்பட்ட முந்திய பரம்பரையின் சிருஷ்டி என்பதை மார்க்சிசம் வலியுறுத்துகிறது. லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர் எனும் நூலில் மார்க்ஸ் இதனைப் பின்வருமாறு கூறுகிறார். இதுவரை செத்துப் போயிருக்கிற பழைய தலைமுறைகளின் மரபு இன்று உயிரோடிருப்பவர்களின் மூளையில் அமுக்குப் பேயைப் போல் உட்கார்ந்திருக்கிறது. இப்பிரச்சினையின் சுருக்கத்தை மார்க்சின் வார்த்தைகளிலேயே பின்வருமாறு கூறலாம்: ‘ஒரு வகையிலான அல்லது வேறொருவகையிலான சமூகவடிவத்தை (Social form) த்தமக்காகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதருக்கு உண்டா? எந்தவகையிலும் அதற்கிடமில்லை (1973; 56).
வரலாற்றுப் பொருள்முதவாதம் பற்றிய தமது ஆரம்பகாலக் கருத்துக்களை மார்க்ஸ் தனது தத்துவத்தின் வறுமை (1847) எனும் நூலில் மேலும் திருத்தமான முறையில் முன்வைத்தார். அதில் அவர் முன்வைத்துள்ள பின்வரும் கூற்றுக்களை நோக்குவது பொருத்தமாகும் உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெற்றுக் கொள்வதற்காக மனிதர் தமது உற்பத்தி முறையை மாற்றுவதன் மூலம் தமது வாழ்க்கைக்காகச் சம்பாதிக்கும் வழியை மாற்றுவதன் மூலம் அவர்கள் தமது சமூக உறவுகள் அனைத்தையுமே மாற்றுகிறார்கள். கை இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுத்துவ சமூகத்தைத் தந்தது; நீராவி இயந்திரம் முதலாளிகளின் சமூகத்தைத் தந்தது, என்றும் பொருளாயத உற்பத்திக்கு உகந்ததைப் போல தமது சமூக உறவுகளை மாற்றும் இவர்கள் தமது சமூக உறவுகளுக்குகந்ததாகக் கருத்துளையும் கோட்பாடுகளையும் கூட மாற்றுகிறார்கள், என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டார். -
வளர்ச்சியில் குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் & 558,6ir (Material Productive Forces of Society) 9Curg) g(5igió) (5th உற்பத்தி உறவுகளுடன் மோதுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது' என்ற கருத்து பொருள் முதல்வாதச் சிந்தனையின் பிரதான அடிப்படைகளில் ஒன்றாகும். இவ்வாறு பொருளாதார அடித்தளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் விரைவாகவோ தாமதமாகவோ மேற்கட்டமைப்பு முழுவதையுமே உருநிலை மாற்றத்திற்குள்ளாக்கிவிடுகிறது.
2

Page 14
'ab d. All சக்திகள்’ என்ற எண்ணக்கரு மார்க்சின் பொருள்முதல்வாதச் சிந்தனையில் ஒரு தீர்க்கமான இடத்தைப் பெற்றுள்ளது. வரலாற்று விதிகளை பெளதிகவிதிகளுக்கு நெருக்கமாக இட்டுச் செல்லும் இயல்புகள் இதில் உள்ளன. உற்பத்திச் சக்திகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு இல்லை; என்பது மார்க்சின் பொருள் முதல்வாதச் சிந்தனையின் மகா வாக்கியமாகும். மார்க்சின் கருத்தில் உற்பத்திச் சக்தி என்பது மனிதனின் முந்தைய நடவடிக்கைகளால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட சக்தியாகும்.
V மனித சக்தியின் விளைவுகளே உற்பத்திச் சக்திகள் என்பதை மார்க்ஸ்
மறுக்கவில்லை. ஆனால் இந்த உற்பத்திச் சக்தியுங்கூட மனிதர்கள் வாழும் குழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த உற்பத்திச் சக்திகளைப் பெறுவதற்கு முன்பிருந்த சமூகவடிவத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த சமூகவடிவத்தை மனிதர்கள் படைக்கவில்லை. அது அவர்களுக்கு முந்திய பரம்பரையின் சிருஷ்டி, அவர்களது பெளதீக உறவுகள் தான் அவர்களின் சகல உறவுகளினதும் அடிப்படையாகும் என பீ. வி. அனன்கோவ்வுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார்.
மார்க்சின் சித்தாந்தம் மனிதர்களின் முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் இடமே இல்லை என்று கூறுவதாக இதற்குப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. மனிதன் முயற்சிக்கின்றான். சாதனைகள் செய்கின்றான். ஆனால் அப்போது முன்னர் அவன் செயற்பட்ட சமூகவடிவம் மாறத் தொடங்குகிறது. பிரித்தானிய முதலாளித்துவத்தின் நிகழ்வொன்றின் மூலம் மார்க்ஸ் இதனைக் காட்டினார்.
மத்திய காலத்தில் பிரித்தானியாவில் இருந்த வியாபார அமைப்புகள், கில்டுகள், சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் என்பன மூலதனத் திரட்டலில் ஈடுபட்டன. உற்பத்திச் சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகளாக இவை இருந்தன. மனித முயற்சியினால் பெரும் மூலதனம் திரண்டது. வெளிநாட்டு வியாபாரம் வளர்ந்தது. குடியேற்ற நாடுகள் உண்டாக்கப்பட்டன. இந்தச் சாதனைகள் உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்குமிடையில் பொருத்தமின்மையைத் தோற்றுவித்தன. மார்க்சின் மொழிகளிலேயே இதனை இவ்வாறு கூறலாம்.
இதையெல்லாம் செய்த மனித சாதனைகளை எந்த அமைப்புகளின் பாதுகாப்பின் கீழ் பெற்றனரோ அந்த அமைப்புகளை அப்படியே
22

வைத்திருந்தால் தாம் பெற்ற சாதனைகளை எல்லாம் அவர்கள் இழந்திருப்பர். அதனாலே தான் 1640, 1688 களில் இங்கிலாந்தில் இரு இடிமுழக்கங்கள் கேட்டன. அதாவது இரு புரட்சிகள் வெடித்தன. பழைய சிவில் சமுகத்தின் அதிகார பூர்வ வெளிப்பாடான பழைய பொருளாதார அமைப்புகள் அவைகளுக்குப் பொருத்தமான சமூக உறவுகள் அரசியல் நிலைகள் யாவும் இங்கிலாந்தில் அழிக்கப்பட்டன. புதிய உற்பத்தி முறைகளை பெற்றவுடன் மனிதர்கள் தமது உற்பத்திமுறைகளையும் மாற்றிக் கொள்கிறார்கள். அந்த உற்பத்தி முறையுடன் அந்த குறிப்பிட்ட உற்பத்தி முறையின் அவசியமான உறவுகளான சகல பொருளாதார உறவுகளும் மாறுகின்றன (1973:158)
மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வுகளைக் கொண்டு முடிவு செய்யும் பழைய முறையை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமுள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்கமுடியுமென அவர் கருதினார்.
இஸ்லாத்தின் சரித்திரம்
இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும் அதன் வரலாற்றுப் பாத்திரம் பற்றியும் பொதுவாக மார்க்சிய வாதிகள் மெளனம் சாதிக்கின்றனர் (1985; 138). எனினும் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே பண்டைய ஆசிய சமூகத்தாரின் சமூகம், அறேபியாவில் இஸ்லாத்தின் தோற்றம் என்பன பற்றி கருத்தற்றவர்களாக இருக்கவில்லை. அறேபியாவில் இஸ்லாத்தின் தோற்றம் குறித்து 1853 ல் மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் கீழ் நாடுகளின் சரித்திரம் மதங்களின் சரித்திரமாக இருப்பது ஏன் ? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
தனது வரலாற்றுப் பொருள்முதல்வாதச் சித்தாந்தத்தின் g585 ஆசிய சமூகத்திலும், பாலைவன அறேபியாவிலும் சமய எழுச்சியைத் தூண்டிய காரணங்களின் அடிப்படையை ஆராயும் ஆர்வம் மார்க்சிற்கு இருந்தது.
குடிபதிகளாக ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோருக்கும் நாடோடிகளுக்குமிடையே நிலவிய உறவு, முஹம்மது நபியின் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்குச் செல்லும் வர்த்தகப் பாதை திருத்தியமைக்கப்பட்டிருந்தமை, இந்தியா முதலிய நாடுகளோடு வர்த்தகத்தில்
23

Page 15
பெரும் பங்கு வகித்து வந்த அறேபிய நகரங்களின் வாணிபச் சீரழிவு போன்ற காரணிகளே இஸ்லாத்தின் எழுச்சிக்கான உந்து சக்திகளாய் இருந்தன என்று அவர் எழுதினார்.
இவ்வுந்து சக்திகளால் உருவான இஸ்லாத்தின் எழுச்சியை மார்க்ஸ் புரட்சி என்றே உnணர்ந்திருந்தார். எங்கெல்ஸ் மார்க்சிற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் 'நீங்கள் மிகவும் சரிவரக் கருதியுள்ள முஹம்மதியப் புரட்சியில் என ாழுதியிருந்தார். முஹம்மது நபிகளின் பிறப்பிற்கு முந்திய தென் அறேபிய niy,கத்தின் சீரழிவை மார்க்சும் எங்கெல்சும் புதிய இயக்கத்திற்கான உந்து சக்திகளில் ஒன்றெனக் கருதினர்.
கிறித்துவுக்குப் பிந்திய ஆறு நூற்றாண்டுகளின் வர்த்தக சரித்திரத்தை அறிவது இந்நோக்கினுக்கு உதவுமென எங்கெல்ஸ் கருதியதை இங்கு முக்கியமாகக் குறிப்பிடலாம். தென் அறேபியா மீது அபீசினியர் சுமார் 500 ஆண்டுகளாகத் தொடுத்த போரையும் தென் அறேபியாவைக் கொள்ளையடிக்கவும் அடிமைப்படுத்தவும் முயன்ற அபீசினியரின் போக்கையும் ஆராய்வதின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
அபீசினியரின் வெளியேற்றம் முஹம்மது நபிகளுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் நிகழ்ந்தது. அறேபியத் தேசிய உணர்வின் விழிப்பிற்கான முதல் அடையாளமென எங்கெல்ஸ் இதனைக் குறிப்பிட்டார். அறேபியாவின் வடக்கிலும், மக்கா வரையிலும் நடந்த பாரசீகப் படையெடுப்புக்களும் இத்தேசிய உணர்வைத் தூண்டிய மற்றொரு நிகழ்வென எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
ஆதிகிறித்தவ சமயத்தின் வரலாற்றை ஆராய்கையில் எங்கெல்ஸ் ஆதி இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பின், படிமுறைகள் குறித்து சில குறிப்புக்களை முன்வைத்தார். அன்றைய மோதும் இரு குழுக்களைப் பற்றிய அக் கருத்து ஏற்கனவே மார்க்ஸ் குறிப்பிட்டிருந்த பின்வரும் கூற்றின் வியாக்கியானத்தைப் போல அமைந்தது:
எல்லாக் குலங்களின் மத்தியிலும் சரித்திரம் தொடங்கிய காலத்திலிருந்து ஒரிடத்தில் தனித்து வாழ்ந்த குலங்களின் ஒரு பகுதியினருக்கும் தொடர்ந்து நாடோடி வாழ்க்கை நடத்தி வந்த மக்களுக்கிடையில் பொதுவான தொடர்புகள் இருந்தன. (1976106)
24

ஒரு புறத்திலே வியாபாரத்திலும் தொழில் துறையிலும் இருந்த நகரவாசிகளுக்கும் இன்னொருபுறத்தில் நாடோடிகளான பெடோயின்களுக்குமிடையில் ஒரு மதமாக இஸ்லாம் வளர்ந்ததை எங்கெல்ஸ் அதிற் குறிப்பிட்டிருந்தார். முரண்பாட்டின் கரு இங்கு இந்த இரண்டிற்குமிடையிலேயே உளதென்ற எங்கெல்ஸின் கருத்து நுணுகி நோக்குதற்குரியதாகும்.
நகர மக்கள் செல்வமும் செழிப்புமுள்ளவர்கள் சட்டத்தை மதிப்பதில் அவர்கள் தளர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். ஏழைகளான நாடோடிகள் ஒழுக்கவிதிகளுக்கு கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்கள். நகரவாசிகளின் செல்வங்களையும் இன்பங்களையும் பொறாமையோடும் பொருளாசையோடும் பார்த்து மனங்குமுறுகின்றார்கள். பாலைவன அறேபியரிடையே வளர்ந்து வந்த மோதலின் வித்தையும் முரண்பட்ட மனோபாவத்தையும் பற்றிய எங்கெல்சின் இக் கூற்று இப்னு கல்தூன் தனது படைப்பான முக்கத்திமா (Muqqadima) வில் நாடோடி படோயின்கள் (பதவிகள்) பற்றித்தரும் விரிவான விளக்கங்களுடன் ஒப்பு நோக்குதற்குரியதாகும்.
பாலைவன நாடோடிகள் தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச ஜீவனோபாயத்துடன் தமது வாழ்வை கட்டுப்படுத்திக் கொண்டனர். அல்லது அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதைக் கடந்து செல்ல அவர்களால் முடியவில்லை. ஆனால் ஒரிடத்தில் தரித்து வாழ்ந்த நகரவாசிகள் மகிழ்ச்சியான ஆடம்பர வாழ்விலிருந்தனர். எல்லாவகைக் களிப்புக்களையும் அவர்கள் அனுபவித்தனர். உலகியல் ரீதியான அவாவிலும் தீய செயல்களிலும் அவர்கள் தீவிர நாட்டம் கொண்டிருந்தனர். நாடோடி வாழ்வும் கட்டுப்பாடான ஏழ்மை நிலையும் எளிமையும் பாலைவன வாழ்க்கையின் ஆதார வாழ்க்கை முறையாகும் அதிலிருந்தே நகர வாழ்க்கையையும் ஆடம்பரத்தையும் நோக்கிப் பாலைவன நாடோடி தனது ஆவலை இலட்சியமாக்கி அதற்காகப் பாடுபடுகிறான் என்று இப்னு கல்தூன் குறிப்பிடுகிறார். எந்த நகரை எடுத்துக் கொண்டாலும் அதன் மக்கள் பூர்வீகத்தில் நாடோடிகளே என்றும் முக்கத்திமா கூறுகின்றது. (Ibn- Khaldun, 1958: 252 - 55)
பிரைன் டேர்னர் (Bryn Turner) கூறுவது போல இஸ்லாத்தின் தோற்றம், அதன் வரலாறு பற்றிய மார்க்ஸ், எங்கெல்சின் கருத்தாக்கங்கள்
பூரணமற்றவை என்றாலும் அவை கருத்தைத் தூண்டுவனவாகும்.
25

Page 16
இறுதியாகப் பின்வரும் விடயத்தை இங்கு நோக்குவது பொருத்தமாகும். இஸ்லாத்தை அதன் தனித்துவமான தோற்றத்துக்குரிய இலட்சணங்களாலன்றி யூத சமயத்தினதும் தென் அறேபிய கலாசாரத்தினதும் வெறும் பிரதிமைகள் என்று மட்டுமே வியாக்கியானப்படுத்திய கீழைத்தேய ஆய்வாளரின் முயற்சிகள் ஒரு தலைப்பட்சமானவை.
நபிகள் காலத்திலும் அதற்கு முன்னரும் அறேபியாவிலும் குறிப்பாக மக்காவிலும் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக, பொருளாதார கலாசாரக் காரணிகளின் பிரத்தியேகமான இயல்புகளை அத்தகைய சிந்தனையாளர் கருத்திற் கொள்ளத் தவறினர். மார்க்சினதும் எங்கெல்சினதும் சிந்தனைகள் இஸ்லாத்தின் தோற்ற வரலாறு ஆழமான தென்றும் அதற்கே உரித்தான சமூக, வரலாற்றியல் வேர்களைக் கொண்ட தென்றும் இனங் காட்டின. அதன் மூலம் இஸ்லாத்தின் தோற்றம் பற்றிய ஆய்வில் தனித்துவமானதும் மாறுபட்டதுமான போக்கினையும் தொன்மை அறேபிய சமூக விரிசலிடையே அதன் வரலாற்றுப் பாத்திரத்தையும் அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்தது. இதனை இஸ்லாத்தை நோக்கிய ஆழமான ஆய்வுக்கு அவர்களது முக்கிய பாங்களிப்பெனக் கருத
ԱpկթեւյԼ0.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மக்காவிலும் மதீனாவிலும் யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் செல்வாக்குடன் வாழ்ந்தனர். மதப் பரப்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். பண்டைய வட அறேபிய தென் அறேபிய நகரங்களிலும் யூத, கிறித்தவ சமயத்தவர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டன. அப்ரஹா போன்ற மன்னர்கள் கிறித்தவ ஒரிறைவாதத்தைப் பரப்ப படைப்பலத்தையும் பயன்படுத்தினர். அப்ரஹாவின் படைகள் மக்காவின் கஃபா வரையும் பிரவேசித்தமை புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வாகும்.
மக்காவாசிகளுக்கு யூத, கிறித்தவ சமயங்களைத் தழுவ வாய்ப்புக்களிருந்தன. எனினும் இஸ்லாம் தோன்றும் வரை எந்தப் புதிய கருத்தியலையும் (Ideology) ஏற்காதவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.
சமயமாற்றம்
மக்காவில் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோடும், புதிய சிந்தனைகளோடும் இஸ்லாம்
26

தோன்றியது. முந்திய சமய மரபுகளும் நம்பிக்கைகளும் ஏன் வழிபாட்டு முறைகளுங் கூட புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தன. சிந்தனையிலும் செயல் முறையிலும் மாறுபட்ட புதிய சமய இயக்கம் தன் முன்தோன்றிய எதிர்ப்புக்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளிப்படுவது தவிர்க்க முடியாததாயிற்று.
ஒவ்வொரு சிறு பொருளாதார மாற்றமும் சமய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறமுடியாது. (WMWatt, (A) 1961:30) ஆனால் உற்பத்தி முறை மாற்றத்தினால் உருவாகும் பாரிய பொருளாதார மாற்றத்தைத் தொடர்ந்து சமய மாற்றமும் தவிர்க்க முடியாது நிகழ நிபந்தனைப்படுத்தப் படுவதாகக் கருத முடியும். மார்க்சிய சிந்தனை இந்த விடயத்தில் அதிக ஒளி பாய்ச்சக் கூடியதென்பது மீண்டும் கூறத் தேவையற்றதாகும்.
மக்காவில் இஸ்லாம் தோன்றிய போது மக்காவின் உற்பத்தி முறை அதன் பாரம்பரிய இயல்புகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பேராசிரியர் மொன்ட்கொமறி வொட்டின் (W.M.Watt). வார்த்தைகளில் கூறுவதாயின் கால்நடைகளில் தங்கியிருந்த நாடோடிப் பொருளாதாரம் வர்த்தகமாகவும், சர்வதேச வர்த்தகமாவும் மாறியிருந்தது. இது மக்காவில் நிகழ்ந்த குறிப்பிட்டத்தக்க அடிப்படைப் பொருளாதார மாற்றமாகும்.
உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் முன்னைய சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனினும், பொருளாதார மாற்றத்திற்கும் சமய மாற்றத்திற்குமிடையில் நேர் தொடர்பைச் சமாந்தரமாகச் சுட்டுவது கடினமாகும். (1961:30). ஆனால் ஒரு சமூகம் குறிப்பிட்ட பொருளாதாரக் கட்டமைப்பில் இருக்கும் போது அப்பொருளாதார முறை, தொழில்நுட்பம், மரபுகள் ஆகியவற்றின் வழியில் மனிதனின் வாழ்க்கையும் நம்பிக்கைகளும் அமைவதாகக் &(5Ֆ (փդպth.
குர்ஆன் முந்திய நாகரிகங்களையும் விமர்சித்தது. அந்நாகரிகங்கள் அழிந்ததற்கான காரணிகளையும் அது ஆராய்ந்தது. யூத, கிறித்தவ சமயங்களையும் ஏனைய பண்டைய சமயங்களையும் பற்றிக் குர்ஆன் கருத்துத் தெரிவித்ததோடு விமர்சனங்களையும் முன்வைத்தது.
கடந்த காலத்தின் உயர்வான சிந்தனைகளுக்கும், சமூகமரபுகளுக்கும் குர்ஆன் மதிப்பளித்தபோதும் புதிய பண்பாட்டையும் புதிய சமூகத்தையும்
27

Page 17
உருவாக்க அது கொண்டிருந்த திடசங்கற்பமும் வர்த்தக வளர்ச்சியின் நலன்களை சாதாரண மனிதனும் பெறும் வகையில் அது முன் வைத்த சமத்துவச் சிந்தனைகளும் புதியனவாகும்.
அதனால் இஸ்லாம் ஏனைய மத்திய கிழக்குச் சமயங்களின் வெறும் தொடர்ச்சியே என்ற கருத்து இஸ்லாத்தை விளக்குவதற்குப் போதுமானதன்று. கி. பி. 6 ம் நூற்றாண்டு வரை அறேபியாவில் காணப்பட்ட கலாசார சமய முறைகளிலும் சமூக பொருளாதாரச் சிந்தனைகளிலும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் எழுச்சியையும் விரிவாக ஆராயாதவரை இவ்விடயம் குறித்த விவாதம் நிறைவு பெறாது.
28

ខ្លឹut 2
பூர்வீகக் குடிகளும் நாகரிகமும்
ーを**な%*※**リ
கி.மு. 3000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அறேபியாவைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இதனால் அறேபியாவின் பூர்வீகக் குடிகள் யார் என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது (Dela Vide, 1946:21). அறேபியாவின் நிலப்பாகம் மிகப் பரந்ததாயிருந்ததால் அது ஒன்றுக்கு மேற்பட்ட நாகரிகங்களைப் பெற வாய்ப்பிருந்தது. அறேபியாவின் தென்பாக நாகரித்துக்குரிய மக்களின் மூல இனம் யாது என்பது பற்றியும் பிரச்சினைகள் உள்ளன. இது இவ்வாறிருந்த போதும் அறேபியாவில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகள் அதன் பூர்வீகக் குடிகள் பற்றி முன்னேற்றமான தகவல்களைத் தந்துள்ளன.
அறேபியாவின் தொன்மைப் பண்பாடு மற்றும் அறேபியாவின் தொன்மைக் குடிகள் பற்றிய உரையாடல்களில் மெஸெபொட்டேமியா, பபிலோனியா, மற்றும் சுமேரியர், செமித்தியர் (Semitics) போன்ற சொற்கள் அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றன. இவை அறேபியாவின் தொன்மை நாகரிகம் பற்றிய சிந்தனைக்கு தூண்டுதலளிப்பனவாக உள்ளன.
சுமேரியர்
ஒன்றுக் கொன்று இணையாகப் பாயும் யூப்ரடீஸ் தைகிரிஸ் என்ற நதிகளுக்கிடைப்பட்ட வளமான நிலப்பகுதி மெஸெபொட்டேமியாவாகும். அறேபியத் தீபகற்பத்தின் மிகப் பரந்த பாலைவன அல்லது அரைப்பாலைவன நிலப்பரப்பினை மெஸெபொட்டேமியா தொட்டுநிற்கிறது. அறேபியா, சீரியா - பாலஸ்தீனம், மெஸெபொட்டேமியா ஆகிய முப்பெரும் நிலப்பாகங்கள் புவியியல் அமைப்பில் பெருமளவு ஒருமைப்பாடு கொண்டனவாகும். ‘மனித நாகரிக

Page 18
நாடகத் ல்ெ அக்காலப் பகுதியில் இப்பிரதேசங்களே முக்கிய பாத்திரத்தை ஏற்றிய .ன என்பர்.
மெஸெபொட்டேமியா என்ற கிரேக்கச் சொல்லுக்கு இரு நதி,ளுக்கிடையிலுள்ள நாடு என்று பொருள். இவ்விரு நதிகளும் கடலோடு கலக்குமிடங்களில் எரிது, ஊர் ஆகிய நகரங்களிலிருந்தன. கி. மு. 6000ம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நகர அமைப்புக்களும் நீர்பாசனத் திட்டங்களும் இங்கு இருந்துள்ளன. தென்மேற்கு ஆசியாவின் விவசாயத்திற்குப் பெயர் போன பிரதேசங்களில் மெஸெபொட்டேமியா பிரதான இடமாகக் கணிக்கப் படுகிறது. வளமிக்க வளர்பிறைப்பிரதேசம் (Fertile Crescent) என வரலாற்றாசிரியர் இதனை வர்ணித்தனர். மெஸெபொட்டேமியாவில் சுமேரியர் சிறந்த நாகரிகத்தைக் கட்டியெழுப்பினர். செமித்தியரல்லாத இவர்கள் கி.மு. 5000ம் ஆண்டில் அங்கு குடியேறினர். செமித்தியருக்கு முன்னரே சுமேரியர் அங்கு வாழ்ந்தகனரா என்பது பற்றிச் சர்ச்சைகள் உள்ளன. விவசாய நிலங்களால் சூழப்பட்ட சுதந்திரமான சிறிய நகர்ப்புறங்களில் சுமேரியர் வாழ்ந்தனர்.
நாகரிகம்
இரு வேறுபட்ட மூலங்களைச் சேர்ந்த மக்கள் குழுவினர் மெஸெபொட்டேமியாவின் கலாசாரத்தையும் வரலாற்றையும் கட்டியெழுப்பியுள்ளனர். சுமேரியர் (Sumerians) அக்காடியர் (Akkadians) ஆகிய இவ்விரு மக்கள் குழுவினரும் வழங்கிய வரலாற்று, பண்பாட்டு விருத்தியையே மெஸெபொட்டேமியா பெருமளவு பெற்றது. சுமேரியர் தமது கலாசார வரலாற்று அடையாளங்கள் பலவற்றை இங்கு விட்டுச் சென்றுள்ளனர்.
கி. மு. 4000 ம் ஆண்டளவில் மெஸெபொட்டேமியாவின் எல்லா நகரங்களிலும் சுதந்திரமான தனித்தனி நகர - அரசுகள் (City-State) காணப்பட்டன. அரசன் புரோகிதனாகவும் தெய்வங்களின் பிரதிநிதியாகவும் விளங்கினான். அரசர்கள் இராணுவ பலத்தின் மூலம் ஏழைகளையும் அடிமைகளையும் கொடுமைப்படுத்தினர். மெஸெபொட்டேமியாவின் நதிகள் அடிக்கடி பெருக்கெடுத்தன. வெள்ளப் பெருக்கினால் மக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்பட்டன. சில காலங்களில் யூப்ரடீஸ், தைகிரிஸ் நதிகள் பெரு வெள்ளத்தினால் ஒன்றிணையும் போது முழு உலகுமே நீரில் மூழ்கியதாக மக்கள் கருதினர்.
30

விவசாயம் இங்கு முக்கியமாக இடம் பெற்றது. நதி நீர்வளத்தையும், வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அதிகரித்த நீரையும் மக்கள் நீர்ப்பாசனத் திட்டங்களினூடாக விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். நீர்வளப் பய்ன்பாட்டில் அவர்கள் சிறந்த பொறியியல் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்ள நதிகளின் வெள்ளப் பெருக்கு அவர்களை நிர்ப்பந்தித்தது. அவர்களது பட்டினங்கள் கடலை அண்மித்திருந்ததால் வணிகமும் செழித்து வளர்ந்தது. பபிலோனியர் வணிகக் கடலோடிகளும் விவசாயிகளும் ஆவர். பபிலோன், யூப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்திருந்த வளர்ச்சியும் செழிப்புமிக்க நகராகும். அது மெஸெபொட்டேமியா வின் மிகப் பெரும் வர்த்தக நகராக விளங்கியது. எரிது (Eridu) ஊர் (Ur) நிப்பூர் (Nippur) என்பனவும் இங்கு காணப்பட்ட முக்கிய நகரங்களாகும்.
சமயம்
சுமேரிய காலப்பகுதியில் அனு, எயா, என்லில் ஆகிய கடவுள்கள் முக்கியம் பெற்றிருந்தன. இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது. சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது. அணு வானக் கடவுளாகும். அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம், மலை யாவும் வணங்குவதாகக் கொள்ளப்பட்டது. அது அதிக வல்லமைமிக்க, தெய்வம்.
என்லில் காற்றுக் கடவுளாகும். அடிப்படையில் என்லில் சுமேரியக் கடவுள், சுமேரிய மொழியில் “லில்” என்பதற்கு காற்று-சுவாசித்தல், ஆவி என்று பொருள் கொள்வர். மலைக் காற்றுடனும், வெள்ளத்துடனும் இத் தெய்வத்தின் பெயர் தொடர்புபட்டுள்ளது. எயா அல்லது என்கி தூய நீருடனும் அதன் மூலம், ஆக்கச் சக்தியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. அறிவு புத்தி என்பவற்றுடனும் எயா குறிப்பிடப்படுகிறது. கரையோர மீனவர்கள் எயாவைத் தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர். எல்லாவற்றையும் விட அது ஆற்றல் மிக்கதாக விளங்கியது. என்லில் சக்தி மிக்கது, எயா புத்தியும் புனிதமும் கொண்டது.
ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித வடிவிலமைந்திருந்தன. பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட எயா தெய்வத்தைவிட மெஸெபொட்டேமியத் தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன. ஏனைய மெஸெபொட்டோமியத் தெய்வங்கள் பல மனிதன், சந்திரன், நட்சத்திரம், தூய நீர் போன்ற பல்வேறு பொருட்களின் தோற்றத்தை
31

Page 19
விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர்.
சுமேரியக் கடவுளரையும் செமித்தியக் கடவுளரையும் வேறுபடுத்துவது கடினமாகும். செமித்தியக் காலப்பிரிவில் சுமேரியரின் கடவுள்கள் சுமேரியப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதே வேளை செமித்தியருக்கே உரிய கடவுள்களும் காணப்பட்டன. செமித்தியரின் கடவுளரில் மனிதப் பண்புகள் ஏற்றிக் கூறப்படுவது முக்கிய பண்பாக இருந்தது.
மெஸெபொட்டேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சுமேரியர் எண்ணிறந்த கடவுளரை வணங்கி வந்த போதும் அவர்களின் பிரதான கடவுள் சூரியனாகும். இதை அவர்கள் 'ஷமாஷ்' என அழைத்தனர். இது நீதிக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுளாகக் கருதப்பட்டது. சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர், இது அறிவுக் கடவுளாகவும் இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இது காரன்’ மற்றும் 'ஊர்' போன்ற நகர்களில் சிறப்பாக வழிபடப்பட்டது.
சுமேரிய சமயம் பூவுலகிலும் அதன் சக்திகளிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. எல்லாம் திட்டத்திற்கமைவான தென்றும் அமைதியும் பாதுகாப்பும் அவசியம் என்றும் அது கூறுகின்றது. சுமேரிய சமயத்தில் பூமி பெண் தெய்வமாகக் கருதப்பட்டது. தாய்த் தேவதை வணக்கத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். பபிலோனிய சமயம் கடவுளுக்குச் சேவை செய்வதே மனிதனின் பிரதான கடமை எனப் பணித்தது. இதற்காக மக்கள் சடங்குகளிலும் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் ஈடுபட்டனர். ஆயினும் பொதுமக்கள் தெய்வங்களை அணுக முடியாதிருந்தது. இச் செயல்களை புரோகிதர்களும் குருக்களும் செய்து வந்தனர்.
மரணத்தின் பின்னர் மனித உயிருக்கு வாழ்க்கை உண்டென்பது சுமேரியரின் நம்பிக்கை. சடலங்களைப் புதைக்கும்போது சவக்குழியுள் உணவும் நீரும் வைக்கப்பட்டன. இறந்த பின்னர் உயிர்கள் இருண்ட உலகொன்றுக்குச் செல்வதாகவும் அங்கு துன்பமனுபவித்து சில காலத்தின் பின்னர் விடுதலை அடைவதாகவும் அவர்கள் நம்பினர். உலக உற்பத்தியைப் பற்றியும் வெள்ளங்களைப் பற்றியும் உலகை மூழ்கடித்த ஏழு நாள் பெரு வெள்ளம் பற்றியும் பல நம்பிக்கைகள் அவர்களிடம் நிலவின.
32

செமித்தியர்
செமித்தியர் மெஸெபொட்டேமியாவில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் குழுவினராகும். சுமேரிய நாகரிங்களுக்கு அணித்தாக அவர்கள் வாழ்ந்தனர். பபிலோனிய வரலாற்றிற் பெரும்பகுதி செமித்தியரின் வரலாறாகும். தமது பெரும் சாதனைகளைச் செமித்தியர் பபிலோனியாவில் உருவாக்கினர். எனினும் பபிலோன் செமித்தியரின் மூலப் பிறப்பிடமா என்பது ஐயத்துக்குரியதாகும். அவர்களின் மூலப்பிறப்பிடமாக அறேபியா, மெஸெபொட்டேமியா, ஆபிரிக்கா என்ற மூன்று நிலப்பாகங்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் செமித்தியரின் மூலப் பிறப்பிடம் அறபுத் தீபகற்பம் என்ற கொள்கையே அதிக வலுவுள்ளதெனக் கருதுகின்றனர்.
தொன்மை வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது Semites என்பது ஒரு இனப்பண்புடைய சொல்லாகும். வரலாற்றுக்கு முந்திய மூலத்தோற்றமுள்ள மக்கள் குழுவினரை இச்சொல் குறிக்கிறது. (H.WF Saggs, 1965:29) இன்று கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் செமித்தியரின் மூலப்பிறப்பிடம் அறேபியாவின் உட்பகுதி என்றே கொள்ளப்படுகிறது. பனி ஊழியின் (Glacial Period) இறுதிப் பகுதியில் கி. மு. 8000 ம் ஆண்டிலிருந்து தற்காலம் வரை கருணைக்கிடமற்ற மண்ணரிப்பினால் அறேபியா சேதமாக்கப்பட்டது. இதனால் பாலைவன்ம் மேலும் விரிவுபெற்றுச் சென்றது. மக்கள் வாழ்வுக்கு ஆதாரமாயிருந்த ஈரலிப்பான நிலப்பகுதிகள் அருகிச் சென்றன. வரலாறு முழுக்க இங்கிருந்த மக்கள் வேறிடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர் (1965:29).
ஐரோப்பாவின் பாரிய பனி ஊழிக் காலப்பகுதியில் அறேபியா தற்காலத்தைவிடச் சிறந்த மழைவீழ்ச்சியைப் பெற்று வந்தது. இங்கு நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகள் பழைய கற்காலக் கலாசாரத்துக்குரிய - வரலாற்குக்கு முந்திய மக்கள் வாழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளன. இந்த மக்கள்தான் வளமான பபிலோனியப் பகுதிகளுக்கு பல தடவைகளில் சென்று குடியேறி வாழ்ந்துள்ளனர். பபிலோனியராகவும் அஸ்ஸிரியர்களாகவும் ஹிப்றுக்களாகவும் அறேபியர்களாகவும் பெரும் நாகரிகங்களை உருவாக்கியவர்கள் செமித்தியர்களே என்பது இக்கோட்பாட்டின் முடிபு. இதன்படி சுமேரியரைத் தவிர அக்காடியர், சால்டியர், அஸ்ஸிரியர், ஹிப்றுாக்களின் இனப் பின்னணியில் இருப்பதும் செமித்தியராகும். செமித்திய மொழி, நவீன மொழிகளில் அறபு, ஹிப்று ஆகிய மொழிகளுடனும்
33

Page 20
தொன்மை மொழிகளில் அக்கா டெய்ன் அறமெய்க் மொழிகளுடனும் தொடர்புடையதாகும். (பார்க்க, குறிப்பு : 01)
சுமேரியர் பபிலோனியாவை வந்தடைந்தபோது பபிலோனியா வெற்றுத்தரையாகக்கிடக்கவில்லை. பபிலோனியாவில் ஏற்கனவே காணப்பட்ட கிராமங்களை சுமேரியர் நகரங்களாக்கினர். கோட்டை கொத்தளங்களையும் நீர்ப்பாசனங்களையும் தொழில்நுட்பங்களையும் சுமேரியர் தழுவினர். தமது பங்கிர்',ப் புதிய பலவிடயங்களையும் பபிலோனிய நாகரிகத்திற்கு சுமேரியர் வழங்கினர். (1965:28). தென் இராச்சியத்திற்குச் சுமேரியர் வந்தபோது அது வெற்றிடமாக இருக்கவில்லை. அங்கு ஒரு மூத்த குடியினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் செமித்தியராக இருக்கலாம் என்பதே இன்றுள்ள வாகமாகும். தென் இராச்சியப் பகுதிகளில் சுமேரியர் குடியேறியபோது அங்கு செமித்தியர் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கு அகழ்வாய்வுச் சான்றுகள் காட்டப்படுகின்றன (பார்க்க, 1965:30),
எமது அறிவுக்கெட்டியவரை செமித்தியரின் பிறப்பிடம் அறேபியாவாகும் என்பார் ஹியூகோ வின்க்லர் (Hugo Winkler). பபிலோனிய வரலாற்றின் பெரும் பகுதி செமித்தியரின் வரலாறு என்றும் செமித்தியர் தமது பாரிய சாதனைகளை பபிலோனியாவிலே படைத்தனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். (umřėšas, Hugo Winkler 1907:09).
கலாசாரக் கலப்பு
மெஸெபொட்டேமிய வரலாறு சிக்கலானது. பல இனக்குழுக்களின் தாக்கங்களுக்கும் படையெடுப்புக்களுக்கும் அது இலக்காகி வந்துள்ளது. அவர்களது சமய வரலாறும் கலாசார வரலாறும் இதனைப் பிரதிபலிப்பதைக் காணலாம். குறிப்பாகச் சமய விடயங்களில் சுமேரிய பபிலோனிய, அஸ்ஸிரிய, செமித்தியக் கூறுகள் பிரித்தறியக் கடினமான முறையில் இங்கு ஒன்று கலந்துள்ளன. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட மக்கரின் பண்பாடும் கருத்துக்களும் மந்தைமேய்ப்பாளரின் பண்பாடும் கருத்துக்களும் இதில் ஒன்றிணைந்திருப்பதை அகழ்வாய்வுகள் காட்டியுள்ளன.
பூர்வீகத்தில் அறேபியா செழுமையான நிலப்பாப்பாக இருந்தது என்பதும் அதுவே செமித்தியரின் மூலப் பிறப்பிடம் என்பதும் இன்று பெருமளவு ஏற்கப்பட்ட கருத்தாகும். 920, 000 ஆண்டுகள் நீடித்த பணி உழிக்காலத்தில், ஐரோப்பா நிரந்தமான உறைபனியில் மூழ்கியிருந்தபோது எuறுபாரா மழை மிகுந்த
34

பிரதேசமாக இருந்தது. ஐரோப்பா மனித வாழ்க்கைக்குப் பொருந்தாததாகவும் ஸஹாரா மனித வாழ்க்கைக்கு ஏற்ற இடமாகவும் இருந்தது. பின்னர் நிகழ்ந்த புவியியல் மாற்றங்களின் போது ஸஹாரா நிலப்பாகம் மழைவீழ்சியை இழந்தது. ஐரோப்பா மனித வாழ்க்கைக்குரிய நிலப்பரப்பாக மாறிவந்தது (Carroll Quigly:1979:182).
கி.மு. 2500 ம் ஆண்டில் உண்டான வரட்சிக்காலத்தில் ஸஹாராவில் புல் நிலங்களும் கால் நடைகளும் வெகுவாகக் குறைவடைந்தன. வறுமை இங்கு வாழ்ந்த மக்களை செழிப்பான நிலங்களுக்கு விரட்டியது. பெருவறட்சிக் காலங்களில் அறேபியாவிலிருந்து சென்றவர்கள் செமித்தியரே என்பது கெரோல் குவிக்லியின் கருத்தாகும் (1979:195) இவ்வாறு சென்ற செமித்தியர் (1) கிழக்கில் மெஸெபொட்டேமியா (ii) மேற்குப் பகுதியிலிருந்த சிரியா - பாலஸ்தீனம் (iii) ஆபிரிக்காவின் தென்மேற்குப் பகுதிகள் ஆகியவற்றில் குடியேறினர். முதலாவது குடியேற்ற அலை கி. மு. 3000 ம் ஆண்டளவில் நிகழ்ந்துள்ளது. காலத்திற்குக் காலம் ஏற்பட்டுள்ள இப்புலம் பெயர் அலைகளில் சம்பந்தப்பட்டவர்கள், ஒருவரோடொருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாயிருந்த போதும் அவர்கள் தனித்துவமான பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டனர். பலஸ்தீனத்திற்கும் சிரியாவிற்கும் சென்றவர்கள் செமித்தியர் என்றும் கிழக்கு நோக்கிச் சென்ற இவர்களின் சகோதரர்கள் அக்காடியர் என்றும் மத்திய, வட சமவெளிகளில் குடியேறிய இதே பிரிவினர் அஸ்ஸிரியர் என்றும் அழைக்கப்பட்டனர். (1979:195)
எனினும் மெஸெபொட்டேமியாவின் வரலாறு கூறும் முதலாவது நாகரிகம் கி. மு. 5000 ம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருந்தது. விலங்குவளர்ப்பிலும் விவசாயத்திலும் ஈடுபட்டிருந்த ஐரோப்பாவின் மேட்டு நிலப்பரப்பைச் சார்ந்த மக்கள் (சுமேரியர்) இங்கு வந்து வாழத் தொடங்கினர். ஸஹாரா உட்பட சமநிலப் பரப்புக்களில் வாழ்ந்து வந்தவர்கள் இன்னும் வேட்டையாடுபவர்களாகவே காணப்பட்டனர். ஓரிடத்தில் தனித்து வாழும் காலம் தோன்றிய பின்னர் வேட்டையின் முக்கியத்துவம் குறைந்து சென்றது. ஆண்கள் விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆண்களுக்கும் விலங்குகளுக்குமான உணவு உற்பத்தியில் பெண் ஈடுபட்டாள்.
பெண்
வேட்டையிலிருந்து விவசாயத்திற்கு மாறியபோது வாழ்க்கை அதிக பாதுகாப்புள்ளதாகவும் வளர்ச்சியுள்ளதாகவும் மாறியது. போதிய நீர்வளமும்
35

Page 21
நிலவளமும் இருந்ததால் போரிடும் தேவை இருக்கவில்லை. நிலம் பயிர்களைப் பிறப்பிக்க வேண்டும் பெண் குழந்தைகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனிதன் இக்காலத்தில் கருதினான். வளம் (Fertility) பற்றிய எண்ணம் அவனில் வளர்ந்தது. பொருள் உற்பத்திக்கும் இனவிருத்திக்குமான வளம் பயபக்திக்குரியதாகியது. மண்ணும் பெண்ணும் போற்றப்படும் நிலையை இது தொடக்கிவைத்தது. முக்கியமாக சமூக பொருளாதார நிலைகளில் பெண்ணின் அந்தஸ்து உயர்ந்தது. இதன் செல்வாக்கு சமயங்களுக்கு ஊடுருவிய போது புதிய சமயக் கருத்துக்கள் தோற்றம் பெற்றன. முந்தைய வேட்டையாடும் மக்களிடத்திற் காணப்பட்ட சமயமான ஆவியுலகக் கோட்பாட்டு (Aninism) க்கு மாறுபட்ட பூமித்தாய் தெய்வ வழிபாடு ஆரம்பமாகியது (1979:177).
எனினும் அறேபிய சம நிலப்பரப்பு புதுக் கற்காலக் காலசாரத்திற்கு ஏற்றதாயிருக்கவில்லை. விலங்கு மேய்ச்சலுக்குரிய புல்வெளிகளைப் பெறுவதற்குச் சண்டைதேவையாக இருந்தது. நீர் வசதியும் போதியதாக இருக்கவில்லை. பொதுவில் யுத்தத்தில் தொடர்ந்திருக்க வாழ்க்கை இவர்களை நிர்ப்பந்தித்த போது இவர்களிடம் தந்தைத் தலைமை சிறப்புப் பெற்றிருந்தது. ஆண்மை மிக்க வானக் கடவுளை அவர்களின் சமயம் பிரதிபலித்தது. வெண்கல யுகத்தில் அவர்களது யுத்த ஆவல் மேலும் தீவிரம் பெற்றது. தந்தைத் தலைமை சமூக அமைப்பை அது மேலும் உறுதிப்படுத்தியது.
கால் நடை வளர்ப்பு முதன்மை பெற்றதும் ஆணின் சமூக முக்கியத்துவம் அதிகரித்தது. இனவிருத்தியில் ஆணின் பங்கு உணரப்பட்டது. புதிய கற்காலக் கலாசாரத்தில் பயிர் உற்பத்தியிலும் பிள்ளை உற்பத்தியிலும் பெண் பெற்றிருந்த இடத்திற்குச் சமமான இடத்தை ஆண் பெறுகிறான். மெஸெபொட்டேமியக் கலாசாரத்தில் பொருளாதார உற்பத்தியிலும் பிள்ளை உற்பத்தியிலும் ஆணின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது (1979:215). பெண்ணுடன் இணைந்திருந்த வளத்தன்மைக்கு சமயம் வழங்கிய முக்கிய இடத்தை இப்போது ஆண்மை பெற்றுக் கொண்டது.
பெண்ணை முக்கியப்படுத்திய பூமித்தாய் தெய்வம் பெண்வடிவில் சிருஷ்டிக்கப்பட்டது. ஆணுக்குரிய கடவுட் குறியீடாகத் தற்போது காளைமாடு வந்து சேர்ந்தது. ஆணின் அந்தஸ்து மேலோங்கிய போது புரோகிதத்துவம் (Priesthood) உடன் வளரலாயிற்று. புரோகிதத்துவம் மிகவும் பிரத்தியேகமாக
36

ஆணாதிக்க அமைப்பாக வடிவம் பெற்றது. பழைய பெண்கடவுள் வழிபாடு செல்வாக்கிழந்து சென்ற போதும் அது இல்லாதொழிந்து விடவில்லை.
சந்திரக் கடவுள்
மெஸெபொட்டேமியாவில் கலாசாரக் கலப்புக் காணப்பட்டதை சூரிய, சந்திர கடவுள்களுக்கிடையிலான குழப்பம் காட்டுகிறது. சூரியன் அதிக சந்தர்ப்பங்களில் ஆண் கடவுளாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளை குறைந்த அளவில் பெண் கடவுளாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சூரியக் கடவுள் ஒரு தட்டு வடிவமாகவோ அல்லது பல முனைகள் கொண்ட நட்சத்திர வடிவமாகவோ குறியீடாக்கப்பட்டிருந்தது. சந்திரன் வழமையாகப் பெண் கடவுளாகக் கொள்ளப்பட்டது அதே வேளை குறைந்த அளவில் ஆணாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சந்திரனின் பொதுவான அடையாளம் இளம்பிறையாகும் சில சந்தர்ப்பங்களில் அது முழு வட்டமாகவும் குறியீடாக்கப்பட்டிருந்தது. இவ்விரு விண்பொருட்களைப் பற்றிய வேறுபட்ட கருத்துக்களுக்கு புதிய கற்கால உழவனின் கருத்தும் செமித்திய மந்தை மேய்ப்போரின் கருத்தும் இவற்றில் கலந்திருந்தமையே காரணமென்பது கெரோல் குவிக்லேயின் கொள்கையாகும்.
தொன்மை வேட்டைக்கார மக்கள் தந்தைத் தலைமையைப் போற்றினர். சூரியனை விடச் சந்திரனை அவர்கள் பிரதானமாகக் கருதினர். வேட்டையாடுபவன் தனது வாழ்வுக்குச் சந்திரன் மிகுந்த பயனை அளிப்பதாகக் கருதினான். அநேக வேட்டையாடும் மக்கள் சந்திரனை ஆணாகவோ, தெய்வமாகவோ கருதினர். இது சூரியனைப் பெண்ணாக்கியதோடு சந்திரனின் மனைவியுமாக்கியது. செமித்திய மந்தை மேய்ப்போர் சந்திரனை ஆண்கடவுளாகக் கொண்டனர். மெஸெபொட்டேமியா இக் கருத்தை செமித்தியரிடமிருந்தே பெற்றது (1979:215). விவசாய வாழ்க்கையிலிருந்த மக்களிடையே ஆண்களைவிடப் பெண்கள் முதன்மை இடத்திலிருந்தனர். சூரியனைவிடப் பூமி அதிக கெளரவத்தைப் பெற்றுக் கொண்டது. புதிய கற்கால உழவர்கள் மழைச் செழுமைமிக்க மெஸெபொட்டேமிய ஆற்றங்கரைச் சமவெளிகளில் நாகரிக அபிவிருத்தியில் பங்கு கொண்டிருந்தபோது சமூக பொருளாதார வாழ்வில் ஆண்கள் பிரதான இடத்தைப் பெற்றனர். இது பூமித் தாய்க் கடவுளை இரண்டாம் நிலைக்குக் கொண்டு வந்தது. செமித்தியச் செல்வாக்கு அங்கு அதிகரித்தபோது சந்திரன் ஆணாகக் கருதப்பட்டதுடன் சந்திரனின் முக்கியத்துவமும் அதிகரித்தது.
37

Page 22
தென் அறேபியா
தேசிய மரபுகள், நாகரிகம், மொழியியல், வாழ்நிலை, புவியியல் வேறுபாடு என்பனவற்றின் அடிப்படையில் அறேபியாவை தென் அறேபியா, வட அறேபியா வென இரு பெரு நிலப்பாகங்களாகப் பிரிக்கலாம். அறபுத் தீபகற்பத்தின் முதற் பெரும் நாகரிகத்தை தென் அறேபியாவே பெற்றிருந்தது. தென் அறேபியா போதிய மழைவீழ்ச்சியும் நீர்வளமும் மேய்ச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பிரதேசமாகும். அறேபியாவின் வடபாகமும், வடமேற்குப் பாகமும் பாலை நிலமாகும். மலைப்பாங்கான இவ்வரண்ட நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்றதன்று. இஸ்லாம் தோன்றிய ஹிஜாஸ் மாநிலமும் நபிகளின் பிறந்தகமான மக்கா, மற்றும் யத்ரிப் என்பனவும் இந் நிலப்பரப்பிலேயே அடங்குகின்றன.
தென் அறேபியாவின் யெமன், ஹழறமவுத் போன்ற மாநிலங்கள் செழிப்பான பகுதிகளாகும். செமித்திய இனத்தவர் தமது வாழிடமான தென் யூப்ரடீஸ் நதியிலிருந்து குடி பெயர்ந்து குடியமர்ந்த பிரதேசங்களில் அறேபியாவின் இவ்வளமுள்ள பகுதியும் ஒன்றாகும். தென் அறேபியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகள் 19 ம் நூற்றாண்டிலிருந்து தான் வெளி உலகை எட்டத் தொடங்கின. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வுகள் தென் அறேபியா முன்னேற்றமான நாகரிகத்தைப் பெற்றிருந்ததை உறுதி செய்தன. தென் அறேபியா பற்றிய அறிவு முற்றுப் பெறுவதற்கு இன்னும் வெகுதூரத்தில் உள்ள போதிலும், இஸ்லாம் உதயமாவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறேபியாவில் இருந்த பழைமையான நாகரிகத்தை பற்றிய தகவல்கள் இன்று கிடைக்கின்றன.
சபாயின்கள்
தென் அறேபிய நாகரிகம் எவ்வளவு பழைமையானதென்பதைக் காலரீதியில் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. கி. மு. 15 ம் நூற்றாண்டுகளில் தென் ஆறேபியாவை ஆண்ட மன்னர்களைப் பற்றிச் சில வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளனர். இக் கருத்து போதுமான நிரூபணத்தைப் பெறவில்லை. எனினும், கி. மு. 10 ம் நூற்றாண்டளவில் தென் அறேபியாவில் காணப்பட்ட பல அரசுகள் பற்றி உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன.
தென் அறேபிய மாநிலங்களில் காணப்படும் தூர்ந்து போன நிலையில் உள்ள மாளிகைகளும் அரண்மனைகளும் பாரிய கற்றுரண்களைக் கொண்ட
38

கட்டிடத் தொகுதிகளும் அழிபாட்டிலிருந்து தப்பி நிற்கும் பல்வேறு கட்டிடங்களும் இந்நாகரித்தின் சான்றுகளாக உள்ளன. இதைத் தவிர நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களும் வரலாற்று ஆவணங்களும், நாணயங்களும், உலோக உருவங்களும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. மறைந்துபோன இந்நாகரிகத்தைப் பற்றி எங்கெல்ஸ் பின் வருமாறு கூறகிறார்.
எகிப்தியர்கள், அளபீரியர்கள், ஏனையோர்கள் வரிசையில், ஒரிடத்தில் நிலையான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தென் மேற்கு அறேபியர் ஒரு நாகரிகத்தைப் பெற்றிருந்தனர் என்பதற்கு அவர்களது கட்டிடக்கலைச் சாதனைகள் சான்றாக உள்ளன. (எங்கெல்ஸ், 1976:105)
கிடைத்துள்ள பழைமையான பதிவுகளின் படி தென் அறேபியாவின் புராதன அரசாக சபா' (Saba) குறிப்பிடப்படுகிறது. கி.மு. முதல் ஆயிரமாண்டுகளில் தென் மேற்கு அறேபியாவில் பல அரசுகள் தோன்றின. g|6) fbgpigit 60unsoftusit (Minaeans) &UTunsiT (Sabaeans) 555 TUTsiT (Kataban) ஹழறமவுத் (Hadaramaut) ஆகியவை தலைசிறந்த ராஜ்யங்களாகும். (S. Moscati 1957:184) சபா'பைபிள் குறிப்பிடும் ஷிபா இராணியுடன் (அறபியில் பல்கீஸ்) தொடர்பு படுத்தப்படுகிறது. சபஃ (சபா) சமுதாயம் பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
மெய்யாகவே அத்தேசத்தவர்களை ஒரு பெண் ஆட்சிபுரிவதை நான் கண்டேன். சகல சம்பத்தும் அவள் பெற்றிருக்கிறாள் மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது. (அத். 2724).
வரலாற்றுக் கால ஒழுங்கு பற்றிய பிரச்சினையில் மைணியன் அரசே அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது. மைனியன் அரசு சபாயின் அரசிற்கும் முந்தியதாக அல்லது சமகாலத்து அரசாகக் கருதப்படுகிறது. கி. மு. 400 ம் நூற்றாண்டில் மைணியன் ஆட்சி நிலவியதைக் காட்டும் சான்றுகள் உள. எனினும் கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவில் இவ்வரசு சபாயின் அரசின் அதிகாரத்திற்குள் வந்து விட்டது. கத்தாபீன் உட்பட ஏனைய அரசுகளும் படிப்படியாக சபாயின் அதிகாரத்திற்குள் வந்து சேர்ந்தன.
அனைத்துத் தென் அறேபிய சமுதாயங்களிலும் சபாயின்களே
செல்வாக்கும் அதிகாரமுமிக்க சமுதாயமாக விளங்கி வந்துள்ளனர். இவர்களின் ராஜ்யம் தென் யெமனில் அமைந்திருந்தது. இங்கு கண்டெடுக்கப்பட்ட
39

Page 23
கல்வெட்டுக்கள் கி. மு. 8 ம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வரசு நிலைபெற்றிருந்தமையை உறுதி செய்கின்றன. மேலும் பல கல்வெட்டுக்கள் சபாயின்களின் தொன்மையான நாகரிகச் சிறப்பையும் வளர்ச்சியையும் எடுத்துகாட்டுகின்றன. (1957:185)
m
சபாயின்கள் நிர்மாணித்த நகரங்களையும் அவர்களின் செல்வ வளத்தையும் அல் குர்ஆனின் சபஃ என்ற அத்தியாயம் குறிப்பிடுகிறது. சபாவை மட்டுமன்றி பாரிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்த வேறு பல நகரங்களையும் குர்ஆன் குறிப்பிடுகிறது. சபாவின் பொருளாதார நடவடிக்கைகளையும் செல்வவளத்தையும் பற்றிக் குர்ஆன் கூறுகையில் இவ்வுலகின் வளமிக்க நகர் என அதை வர்ணிக்கிறது.
மெய்யாகவே ஸபா (எனும் ஊர்) வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு ஒரு (நல்ல) அத்தாட்சி இருந்தது. (அதன் வழியாக செல்வோருக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகளிருந்தன. (இவைகளின் மூலம்) உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவைகளைப் புசித்துக் கொண்டு அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள் (இம்மையில்) வளமான நகரமும் மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு (அத், 34:15).
பொருளாதாரம்
தென் அறேபியா நீர்வளமுள்ள பகுதி, விவசாயம் இதன் பிரதான தொழிலாக விளங்கியது. தென் அறேபியர் அணைக் கட்டுக்களையும் கால்வாய்களையும் உருவாக்கி விவசாயத்தில் உயர்ந்த அபிவிருத்தியை ஏற்படுத்தினர். கடலை நோக்கிச் செல்லும் நீரைத் தேக்கி வைப்பதிலும் நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் நீரைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவதிலும் சபாயின்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். நீர்வள இயலில் அவர்களின் திறமை சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.
சபாயின் மன்னர்களில் ஒருவர் கி. மு. 750 ல் மஆரிபில் நிர்மாணித்த அரிம் அணை தென் அறேபியாவின் பரந்த நிலப்பரப்பிற்கு நீர் வளங்கிய பாரிய அணையாக விளங்கியது. எமன் தேசத்தின் செல்வச் செழிப்பிற்கு இவ்வணையே ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது. இதனை அல் குர்ஆன் மகத்தான அணை என்று வர்ணித்துள்ளது.
40

நறுமணப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தென் அறேபியாவே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. தென் அறேபியச் செடிவகைகளில் சாம்பிராணி உற்பத்திக்குப் பயன்பட்ட மரம் தென் அறேபியாவிற்குச் செல்வத்தையும் கீர்த்தியையும் பெற்றுத் தந்தது. கஸ்தூரி முதலிய ஆடம்பர வாசனைத் திரவியங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சபாயின் மஆரிப் நகர் பண்டைக்காலத்துப் பாரிஸ் என அழைக்கத் தகுதிவாய்ந்தது என்று வரலாற்றாசிரியர் வர்ணித்தனர். இதனை நறுமண அறேபியா' (Arabia Odorifera) எனவும் குறிப்பிட்டனர் (1970:10).
விவசாயத்தோடு வர்த்தக நடவடிக்கையிலும் தென் அறேபியர் ஈடுபட்டனர். நறுமண ஏற்றுமதியோடு பாரசீகக் குடாவிலிருந்து முத்துக்களையும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் பட்டையும் எதியோப்பியாவிலிருந்து அடிமைகளையும் மற்றும், யானைத் தந்தம், தங்கம், தீக்கோழி இறகு முதலியவற்றையும் கொள்வனவு செய்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். விலைமதிப்புள்ள கற்களுக்கும், தங்கத்திற்கும், வேறு கணிப் பொருள் வகைகளுக்கும் அன்று தென் அறேபியா மிகப் பிரசித்தி பெற்ற நாடாக விளங்கியது.
தென் அறேபியர் வர்த்தகத்திற்கான கடல் மார்க்கத்தையும் தரைமார்க்கத்தையும் பயன்படுத்தினர். செங்கடலைக் கடந்து உலகின் பல பாகங்களுக்கும் அவர்களது நாவாய்கள் சென்றன. இந்து சமுத்திரத்திலும் அவர்களது நாவாய்கள் பிரவேசித்தன. மிகத் தொன்மைக் காலந்தொட்டே யெமன் நாட்டவர் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கடற்பாதைகளை நன்கறிந்திருந்தனர். இந்தியாவின் மலபார் பகுதியிலும், இலங்கையின் குதிரைமலை போன்ற கரையோரத் துறைமுகங்களிலும் அவர்களின் நாவாய்கள் தரித்து நின்றன. கடற் பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தமையால் கடலைவிடக் குறைந்த ஆபத்துள்ள தரைமார்க்கங்களை அபிவிருத்தி செய்வதிலும் இவர்கள் முன்னோடிகளாக விளங்கினர்.
தென் அறேபிய, வட மேற்கு அறேபிய நாகரிகங்களை உருவாக்கியதில் சர்வதேச வர்த்தக நடவடிக்கையும் பாலைவன தரைவர்த்தகப் பாதையும் பிரதான இடத்தை வகித்தன. அறேபியப் பாலைவனம் முழுக்கப் பரந்து கிடந்த வர்த்தகப் பாதைகளில் தைகிரிஸ் ஊடாகப் பலஸ்தீனத்தை நோக்கிச் சென்ற பாதையும் யெமனிலிருந்து செங்கடலோரமாக மத்திய தரைக் கடற் துறைமுகங்கங்கள் வரை சென்ற பாதையும் இரு முக்கிய பாதைகளாகும். இப்பாரிய வர்த்தகப் பாதைகளிற் பல மக்காவையும் ஏனைய பல நகரங்களையும் ஊடறுத்துச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
41

Page 24
வீழ்ச்சி
கி. பி. 5ம் நூற்றாண்டில் இந்நாகரிகம் முற்றாக வீழ்ச்சியுற்றது. இந்நாகரித்தின் வீழ்ச்சிக்கு எத்தியோப்பியாவினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான படையெடுப்புக்கள் ஒரு முக்கிய காரணமாகும். யுத்தத்தினால் வர்த்தகமும் விவசாயமும் பாதிப்படைந்தன. யெமன் வாசிகள் நிர்மாணித்திருந்த பாரிய செயற்கை நீர்ப்பாசனத் திட்டங்கள் யுத்தங்களினால் சீரழிந்தன. யெமன் மட்டுமன்றி முன்னேறிய நாகரிகங்களைப் பெற்றிருந்த வேறு நாடுகளும் யுத்தங்களினால் நிர்மூலமாகியுள்ளன. எங்கெல்சின் வார்த்தைகள் இதனைப் பின்வருமாறு கூறுகின்றன.
ஒரு காலத்தில் அற்புதமாகப் பண்படுத்தப்பட்டிருந்த இப்போது வெறும் நிலமாகவும் தரிசாகவும் கிடக்கும் பல்மைரா, பெட்ரா, எமன் முதலிய நகரங்களிலுள்ள இடிபாடுகள் படுநாசமான யுத்தங்களினால் எவ்வளவு பெரியநாகரிகத்தையும் நாசமாக்க முடியும் என்பதற்கு சான்றாக உள்ளன. (1926:129)
முக்கியமாக கி.பி. 200 - கி. பி. 600 நூற்றாண்டுகளுக்கிடையே நடைபெற்ற எத்தியோப்பியாவின் தொடர்ச்சியான யுத்தங்கள் யெமனின் பெரு வீழ்ச்சியை நிர்ணயித்தன. ஆயிரமாண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்கிய இந்நாகரிக நகரம் இஸ்லாத்தின் தோற்றத்தின் போது முற்றாகக் கைவிடப்பட்ட பாழடைந்த வெறும் சின்னமாகக் கிடந்தது. ரோமானியர் காலத்திலிருந்து செழிப்புற்று விளங்கிய தென் அறேபிய நாகரிக நகரங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் வைவிடப்பட்டுப் போன தூர்ந்த இடிபாடுகளாகக் கிடக்கின்றன. என்ற எங்கெல்சின் கூற்று இதனை நன்கு பிரதிபலிப்பதாகக் கருதலாம்.
யுத்த அழிவுகள் ஒரு புறம் நிகழ, மறுபுறம் இந்நாகரிகத்தின் வீழ்ச்சியை உள்ளார்ந்த காரணிகளும் நிர்ணயித்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பயிர்ச் செய்கை நடைபெற்ற மலைச் சரிவுகளிலும் சமவெளிகளிலும் காணப்படும் அடையாளங்கள் என்பன சில உண்மைகளை உணர்த்துகின்றன. மக்கள் தொகை பெருகி வந்ததோடு உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற வேறு பிரச்சினைகளும் உருவாகின. உற்பத்தி ஒரே நிலத்தில் நடைபெற்று வந்ததாலும் மாற்றீடின்றி ஒரே நிலப்பகுதி மேய்ச்சலுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாலும் உற்பத்தியிலும் விவசாய நடவடிக்கைகளிலும் பெரும் பின்னடைவு ஏற்படலாயிற்று. (1986:28)
42

இவற்றோடு, யுத்தங்களும் மஆரிப் அணை உடைப்பும் யெமன் தேசத்தை மக்கள் வாழ முடியாத நிலப்பரப்பாக்கின. பெரு வெள்ளத்தினால் மஆரிப் அணை இருமுறை உடைந்ததாக வரலாறு கூறுகிறது. இரண்டாவதாக ஏற்பட்ட அணை உடைப்பினால் எஞ்சியிருந்த வளங்களும் நிர்மூலமாகின. நபிகள் பிறப்பதற்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது அணை உடைப்பு நிகழ்ந்தது. இது யெமனின் முழுப் பொருளாதாரத்தையும் சீர் குலைத்தது. மஆரிப் அணை உடைப்பை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
ஆகவே அவர்கள் மஆரியில் கட்டியிருந்த மகத்தான அரிம் அணையை உடைக்கக் கூடிய பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பி வைத்தோம். (அத், 34:16)
யெமன் தேசத்தவர் செய்த பாவத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாகவும் சிதறடிக்கப்பட்டதாகவும் மற்றொரு திரு வசனம் கூறுகிறது. (பார்க்க, குறிப்பு: 2).
ஆகவே (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களைப் பல இடங்களுக்குச் சிதறடித்து (ப் பலரும் இழிவாகப் பேசக்கூடிய) கதைகளாக்கி விட்டோம். (அத், 34:16).
தென் அறேபிய ராஜ்யங்களில் அரசியல் அமைப்புப் பற்றி ஒரளவு தகவல்களே கிடைத்துள்ளன. அங்கு மன்னராட்சி நடைபெற்றது. மன்னனும் அவனுடன் உயர்குடிகளின் சபையும் இருந்தது. மன்னன் தனக்குப் பின்னர் தனது மைந்தனிடமே ஆட்சியை ஒப்படைத்தான். உயர்குடிகளின் சபை அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. பெரும்பாலும் அரசு நில மானிய வடிவத்தைப் பிரதிபலித்தது. .
கட்டிடக் கலை
தென் அறேபியாவில் கருங்கற் பாறைகள் செறிவாகக் காணப்பட்டன. இதனால் கட்டிடக் கற்களை தென் அறேபியர் இவற்றிலிருந்து இலகுவாகப் பெற்றுக் கொண்டனர். தூண்களுக்குக் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அலங்கார வேலைப்பாடுகளுக்கும் சுவர்கள் அமைப்பதற்கும் செங்கற்கள்
43

Page 25
பயன்படுத்தப்பட்டன. சுவர்களிலும் தூண்களின் மேற்பகுதிகளிலும் காணப்படும் மலர், மற்றும் உருவ அலங்காரங்களிலும் தங்கமும் ஏனைய உலோகங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
பல மாடிகளைக் கொண்ட அரண்மனைகளும் வீடுகளும் சமய வழிபாட்டாலயங்களும் இங்கு காணப்படுகின்றன. கட்டிடங்கள் மெஸெபொட்டேமியக் கட்டிடங்களையும், செங்கல் வேலைப்பாடுகள் பபிலோனிய மரபையும் தழுவியிருந்தன. பாரிய கலைகளைத் தவிர சிறு அலங்காரக் கலைகளிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தங்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட சபாவாசிகளின் கோப்பைகளும் பூச்சாடிகளும் உயர்வாக மதிக்கப்படுகின்றன.
தங்க ஆபரணங்களும் அவர்களிடையே தாராளமாகப் புளக்கத்தில் இருந்தன.
6L el(spunt
பெற்ரா
கி. மு. 2ம் நூற்றாண்டில் வட அறேபியாவிலும் சில அரசுகள் உருவாகின. இவை நாகரிகமும் செல்வ வளமும் பெற்று விளங்கின. மேற்கிலும் கிழக்கிலும் ஊடறுத்துச் சென்ற பிரதான வர்த்தகப் பாதைகள் சந்திக்குமிடங்களில் இவ்வரசுகள் காணப்பட்டன. இவற்றுள் நபேத்தியர் (Nabataeans) அரசு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். நபேத்தியர் செல்வ வளத்தையும் முன்னேறிய நாகரிகத்தையும் பெற்றிருந்தனர். ஓரிடத்தில் தரித்து வாழ்க்கை நடத்திய இவர்கள் பல நகரங்களை உருவாக்கினர். அல்லது மறுசீரமைத்தனர். இவர்களது பொருளியல் நடவடிக்கை விவசாயத்திலும் வர்த்தகத்திலும் தங்கியிருந்தது.
Glusby T (Petra) usio6DDuomyr (Palmyra) JIT (Hira) Gumt sörgp606 இவ்வகையில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும். பெற்ரா அறேபியாவிலிருந்து சிரியா நோக்கிச் செல்லும் காரவன் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வட மாநிலத்தில் வளர்ச்சி பெற்ற வர்த்தக நிலையமாகவும் பெற்ரா நகரம் விளங்கியது. அங்கு காணப்பட்ட நீர்க் கால்வாய்களும் ஏனைய
நீர்பெறுமிடங்களும் நபேத்தியரின் திறனை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.
44

பெற்ராவின் மக்கள் நபேத்தியராகும். நபேத்தியருக்கு முன்னர் இது எடோமிட்டஸ் (Edomites) களின் வாழிடமாக இருந்தது. நபேத்தியரின் வர்த்தக, அரசியல் சாதனைகளின் பின்னணியில் இருவேறு நாகரிகங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அவை பபிலோனியாவின் அஸ்ஸிரிய நாகரிகமும் கிரேக்க நாகரிகமுமாகும்.
நபேத்திய நாகரிகம்
கி. மு. 65 அளவில் பலஸ்தீனத்தில் சில பகுதிகளை நபேத்தியர் தம் வசமாக்கினர். 'குறுகிய காலத்திற்குள் நபேத்தியரின் ஆதிக்கம் அல் ஹிஜ்ர் (மதாயின் ஸாலிஹ்) வரை பரவியது. இது மதீனாவிற்கும் தபூக்கிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். தமூத் (Thamud) சமூகத்தவர் உருவாக்கிய கட்டிடங்கள் இங்குள்ளன. அல்ஹிஜ்ர், அல் உலா ஆகிய நகரங்களில் தமூத் மக்களின் நாகரிகம் காணப்பட்டமைக்குச் சான்றுகள் உளதென்பர். தமூத் மக்களின் செல்வவளத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அல் குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது. நபேத்தியருக்கு முன்னதாகவோ அல்லது நபேத்தியரின் ஆதிக்கத்திற்குட் பட்டவர்களாகவோ தமூத் மக்கள் வாழ்ந்துள்ளனர். கிரேக்க, நபேத்திய எழுத்துப் பொறிப்புக்கள் தமூத் வாசிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. (1946:38) (பார்க்க, குறிப்பு: 03)
வேறு எந்த அறாபியரையும் விட இஸ்லாத்தின் தோற்றத்திற்குச் சற்று முன்னர் நபேத்தியரின் நாகரிகமே செல்வாக்குடன் விளங்கியதை இங்கு சுட்டிக் காட்டலாம். நபேத்தியர் தூய அறபு இரத்தத்தை உடையவர்கள், அல்லர் என்பர். அவர்கள் பெரிதும் அரெமெய்க் நாகரிகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரெமெய்க் விபியிலேயே காணப்படுகின்றன. நபேத்தியர் கிரேக்கருடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புகொண்டிருந்தனர். நபேத்தியரின் கலைகளில் கிரேக்க உரோமச் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது. V
நபேத்திய அரசு வீழ்ச்சியுற்றதன் பின்னர் பாலைவனப் பசுந்தரை நாடான பல்மைரா முன்னேற்றமடையத் தொடங்கியது. கி. மு. 1ம் நூற்றாண்டில் பல்மைரா வளர்ச்சியடைந்த நாகரிக அரசாக விளங்கியது. ஆசியாவையும் மத்தியதரைப் பகுதியையும் இணைக்கும் பிரதான வர்த்தகப் பாதையில் இந்நாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
A5

Page 26
பல்மைரா மக்கள் உண்மையில் அறேபியராயினும் அரமெய்க், மற்றும் கிரேக்க நாகரிகச் செல்வாக்கு அவர்களிடையே காணப்பட்டது. அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரமெய்க் மொழியாகவே விளங்கின. கிரேக்கத்துடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்களது சமய மரபுகளிலும் கருத்துக்களிலும் அரமெய்க் மெஸெபொட்டேமிய செல்வாக்குக் காணப்பட்டது.
பெற்ரா, பல்மைரா, ஹீரா போன்ற நகரங்கள் சமய மரபில் தொன்மை உருவ வழிபாட்டுவாதத்தை (Paganism) யே சார்ந்திருந்த போதும் இப் பழைய மரபை யூத, கிறித்தவ சமயங்கள் அசைக்க முயன்றன. குடியேற்றங் களினூடாகவும் படையெடுப்புக்களினூடாகவும் இவ்விரு உலக சமயங்களும் இந்நாகரிக நகரங்களை முற்றுகையிடத் தொடங்கின. (பார்க்க, குறிப்பு: 04)
நாகரிகமும் வீழ்ச்சியும்
வட மேற்குப் பாகத்தில் வாழ்ந்த தமூதுக் கூட்டத்தினரும் பெற்ரா, பல்மைரா, ஹீரா முதலிய நகரங்களில் வாழ்ந்த சமூகத்தவர்களும் கட்டிடக் கலையில் உயர்ந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கற்பாறைகளைச் செதுக்கிக் கட்டிடமமைக்கும் கலையில் (Rock Cut Architecture) அவர்கள் தனித்திறமை பெற்றிருந்தனர்.
இளஞ்சிவப்பு, செம்மஞ்சல், ஊதா முதலிய இயற்கை வண்ணங்களால் ஒளிதரும் பாரிய செங்குத்தான கல்மலைகளைக் குடைந்தும் செதுக்கியும் பெரும் பாறை மாளிகைகளை இவர்கள் நிர்மாணித்தனர். கோபுரங்களையும், ஆலயங்களையும், கல்லறைகளையும் அவர்கள் இதே அமைப்பில் உருவாக்கினர்.
பெற்ரா நகரில் வீதியை நோக்கி செங்குத்தாக அமைந்துள்ள கல்மலைகளில் செதுக்கப்பட்டுள்ள அழகிய கல்லறைகளும் கட்டிட முகப்புக்களும் இன்றும் அங்கு செல்வோரைக் கவர்வதாக உள்ளன. கல்மலைகளில் செதுக்கப்பட்ட எழுநூறு கல்லறைகள் பெற்ராவில் உள்ளன. இவற்றைவிட இயற்கையிலேயே அமைந்துள்ள நூற்றுக் கணக்கான குகைகளும் இப்பல்வர்ண கல்மலைச் சரிவுகளை அழகூட்டுகின்றன. பெற்ராவிலும் ஏனைய வட அறேபிய தொன்மை நகரங்களிலும் அமைந்துள்ள கல்மலைக் கட்டிடங்கள் பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (ஸ்தம்பங்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களா நீங்கள்
46

அழியாது என்றென்றும் இருப்பவர்கள் போல் உங்கள் மாளிகைகளில் உயர்ந்த வேலைப் பாடுகளையும் அமைக்கின்றீர்கள். (அத் 26:128; 129).
நீங்கள் அதன் ஸ்ம பூமியில் மாளிகைகளைக் கட்டியும் மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். (፵፪§ Z:74) V
பெற்ரர், பல்மைரா, ஹீரா போன்ற பண்டைய நகரங்களில் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கும் மாளிகைகளும் தூபங்களும் தூர்ந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளும் இவர்களின் கடந்த கால நாகரிகச் செழுமையின் சான்றுகளாக உள்ளன. இவ் வட அறேபிய நாகரிகத்தின் உட்துரண்டல்கள் கிரேக்க ரோம நாகரிகங்களைத் தழுவியனவாகும். தூண்களின் அமைப்பும் கட்டிடங்களின் முகப்புத் தோற்றமும் மலர் வடிவங்களையும் உருவடிவங்களையும் கொண்ட
செதுக்கு வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்டுள்ளன.
மக்கா ஒரு வர்த்தக நகரமாகத் தோற்றம் பெறுவதற்குச் சற்று முன்னர் வரை புகழுடன் விளங்கிய இந்நகர நாகரிகங்கள் அவை தோன்றி நிலைத்த சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே மறைந்து போகின்றன. இந்நகரவாசிகள் விஷமங் கொண்டலைந்ததனால் அவர்கள் அழிக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.
ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் (இறந்து) வீழ்ந்து கிடக்கப் பொழுது விடிந்தது. (அத். 7:78).
இஸ்லாத்தின் தோற்றத்துக்குச் சற்று முன்னர் வரை நபேத்திய நாகரிகம் இருந்தது. நபேத்திய நாகரிகத்தில் அண்மைக்கிழக்கினதும் கிரேக்க ரோம நாகரிகங்களினதும் முக்கிய கூறுகள் சங்கமித்திருந்தன. எனினும் நபேத்தியரிடையே இஸ்லாத்திற்கு ஒப்பான சக்தி மிக்க சமய ஆர்வமோ பலம் பொருந்திய இராணுவமோ காணப்படவில்லை. சில நூற்றாண்டுகள் மட்டுமே நிலைத்திருந்த இந்நாகரிக நகரம் கி. பி. 100 அளவில் முற்றாக வீழ்ச்சியுற்றது.
47

Page 27
தென் அறேபிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் வட அறேபிய அரசுகள் சிறிய அரசுகளாகும். மேலும் இச் சிறிய அரசுகள் உறுதியற்ற கட்டமைப்பையும் குறைந்த ஆயுளையும் பெற்றிருந்தன. நாடோடி வாழ்க்கையில் இருந்த மக்கள் மீது, தரித்து வாழ்ந்தோரின் நகர நாகரிகச் செல்வாக்கினால் உருவான நகரங்கள் இவையாகும்.
வர்த்தக வளர்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இப்பிரதேசத்திற்கே உரித்தான புவியியற் காரணிகளும் இச்சிறு அரசுகளின் தோற்றத்தையும் அழிவையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இந்நகரங்களின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் இந்நகரங்கள் பிரதான வர்த்தகப் பாதைகளில் அமைந்திருந்தமை மற்றொரு முக்கிய காரணமாகும்.
இப்பாதைகளில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை இப்பிரதேசத்தின் அரசியல் தீர்மானித்தது. இப்பாதைகள் வர்த்தகத்திற்காகத் திறக்கப்படுவதும் அல்லது மூடப்படுவதும் அரசியலேயே தங்கியிருந்தது. இதுவே அறேபிய எல்லைப்புறச் சிற்றரசுகளின் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் அமைந்தது. (1957:170)
தென் அறேபியாவிற்கும் வட அறேபியாவிற்குமிடையில் மிகத் தொன்மைக் காலந்தொட்டே தொடர்புகள் இருந்து வந்துள்ளன. நாகரிகங்களின் தோற்றமும் வணிக வளர்ச்சியும் அரசியல் சமயச் செல்வாக்கும் தென், வட அறேபியாக்களுக் கிடையில் பரஸ்பரத் தாக்கங்களை ஏற்படுத்தின. தென் அறேபியாவின் அரசியல் அதிகாரம் வட அறேபியா வரை பரவி இருந்தமைக்குச் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாய்வாளர் கூறுகின்றனர். தென் அறேபியாவினால் வட அறேபியா பெற்ற எல்லா நலன்களிலும் நகரமயமாக்கலில் வட அறேபியாவில் ஏற்பட்ட தாக்கமே முக்கியமானதாகும்.
வட அறேபியாவில் ஹிஜாஸிற்கு வட பாகத்தில் தென் அறேபியாவின் மைணியன் குடியேற்றங்கள் காணப்பட்டமையைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. (1946:32). எத்தியோப்பிய யுத்தங்களினாலும் மஆரிப் அணை உடைப்பினாலும் மக்கள் பல பகுதிகளுக்கும் பரந்து சென்று குடியேறினர். இவ்வாறு சென்ற யெமனியக் குலத்தவர்களில் பலர் நபி (ஸல்) பிறந்த ஹிஜாஸ் மாகாணத்திலும் குடியேறினர்.
பாலைவனப் பசுந்தரைகள் (Oases) தொடர்ந்தும் வெறும் பசிய நிலப்பாரப்பாகவோ பேரீச்சை மரங்கள் கொண்ட சிறு துண்டு நிலங்களாகவோ
48

இருக்க நேரவில்லை. அவற்றை ஊடறத்துச் சென்ற வர்த்தகப் பாதைகள் விரைவில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. ஆரம்பத்தில் வர்த்தகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் தரிப்பிடங்களாகவும் பின்னர் புதுவகை நகரக் குடியிருப்புக்களாகவும் அதாவது காரவன் நகரங்களாகவும் அவை வளர்ச்சி பெற்றன. அறேபிய சமூக அமைப்பில் வலிமை பெற்று வரும் வர்த்தக சமூகத்தினரின் ஆதிக்கத்தை முன்னடையாளப்படுத்தும் நிகழ்வுகளாகவும் இவை அமைந்தன.
நபிகள் நாயகத்தின் பிறப்பின் பின்னர் கி. பி. 7ம் நூற்றாண்டில் அறேபியாவில் நிகழ்ந்து கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவமிக்க சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த வர்க்கத்தினராக இவ்வர்த்தக சமூகத்தவரே காணப்பட்டனர்.
மக்கா
நபிகள் நாயகம் பிறந்த நகர் மக்காவாகும். இது வட அறேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்தில் உள்ளது. ஒரு புண்ணிய தலம் என்ற அறிமுகத்திலிருந்தே மக்காவின் பண்டைய வரலாறு ஆரம்பமாகின்றது. பெற்ரா, பல்மைரா முதலிய வட அறேபிய நகரங்களின் வீழ்ச்சியின் பின்னரே மக்கா அதன் முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியது. கி.மு 5ம் நூற் ஹெரோடோடஸ் (Herodotus) மக்காரபா’ (Makaraba) எனவும் 2ம் நூற். தொலமி மக்கோரபா (MacOraba) எனவும் குறிப்பிட்டிருப்பது மக்காவையே எனக் கொள்வர்.
மார்கோலியத் போன்ற கீழைத்தேய ஆய்வாளர் சிலர் மக்காவின் தொன்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் அல்லாமா ஷிப்லி நுஃமானி அதன் தொன்மை குறித்து தந்துள்ள ஆதாரங்களை (சுருக்கமாக) இங்கு நோக்குவது பொருத்தமானது.
மக்காவின் பழைய மூலப்பெயர் Bakka வாகும். அல்குர்ஆன் இதனை பக்கா (Bakka 3:96) எனக்கூறுகிறது. தவ்ராத் (ஆதியாகமம்) திப் பக்கா என்று குறிப்பிட்டிருப்பது மக்காவையேயாகும். பிரான்ஸ்நாட்டைச் சேர்ந்த கீழைத்தேயவாதியும் சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் டோஸி (Dozy) கிரேக்கப் புவியியலாளர் மெக்ரோபா என்று
49

Page 28
கூறுவது பக்கா என்ற அதே இடத்தேயே எனக்கூறுகிறார். ரோம 62uTGwmphp/teflifurf Favonivu gluoriv (Gius Sallustius Crispus C. 86.36B.C) "எல்லா வணக்க வழிபாட்டிடங்களை விடவும் உயர் வணக்கத்துக்குரியதாக இருந்தது கஃபா'எனக்குறிப்பிடுகிறார். இது கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். தொன்மையானவர்களில் ஒருவரான தொலமி (Ptolemy) தனது புவியியலில் மக்காவைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விட மக்காவின் பழைமைக்கு வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும். (பார்க்க, 1979; 135-5)
தென் அறேபிய மொழியில் மக்பர்’ என்றும் எத்தியோப்பிய மொழியில் “மெக்வராப்' என்றும் கூறப்படும் சொல்லின் வடிவமே மக்ரோபாவாகும். பாதுகாக்கப்பட்ட இடம் என்பது இதனபொருள் என்பர். 'உயிர்த்தியாகம் செய்யுமிடம் என்ற பொருளும் இதற்கு உண்டு (பார்க்க: 1969:87). ஹிஜாஸ் மாநிலத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சேர்ந்தோர் நினைவுக்கெட்டிய நாள் முதலே மக்காவை ஒரு புண்ணிய தலமாகப் போற்றி வந்துள்ளனர்.
புண்ணிய தலமாக மட்டுமன்றி மிக நீண்ட காலமாக மக்கா ஒரு வர்த்தக மையமாகவும் இருந்து வந்துள்ளது. அன்று யெமனிலிருந்து பலஸ்தீனம் வரை தெற்கிலிருந்து வடக்காக நீண்டு கிடந்த பிரதான வர்த்தகப் பாதைகளில் மக்கா ஒரு முக்கிய தரிப்பிடமாக விளங்கியது. மக்காவில் காணப்பட்ட தூயநீரூற்றும் யுத்த பீதியற்ற அதன் புனிதத் தல அந்தஸ்தும் வர்த்தகர்களைப் பெரிதும் கவர்ந்தன. புனித மாதங்களில் அறேபியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் புனித யாத்திரை மேற் கொண்டு மக்கள் பக்காவில் ஒன்று கூடினர். மக்காவைச் சூழ வாழ்ந்து வந்த நாடோடிகளும் சிறு வியாபாரிகளும் புனித யாத்திரைக் காலத்தில் வர்த்தகத்திற்காக மக்காவை நாடிவந்தனர்.
கற்களும் மணலும் கலந்த மக்காவின் வரண்ட நிலம் விவசாயத்திற்கோ மந்தை வளர்ப்பிற்கோ உகந்ததாயிருக்கவில்லை. எனினும் வர்த்தக வளத்திற்கான வாய்ப்பை மக்கா பெற்றிருந்தது. புனித யாத்திரைக் காலமும் வர்த்தகக் காரவன்கள் தரித்துச் செல்வதும் மக்காவாசிகளுக்கு வர்த்தகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தின. சிறு வர்த்தகர்களாகவும் வாங்கிவிற்கும் தரகர்களாகவும் வர்த்தகத் தொழிலை அவர்கள் ஆரம்பித்தனர். படிப்படியாக காரவன்களை அனுப்பும் பாரிய வர்த்தகர்களாகவும் அவர்கள் வளர்ச்சி
பெற்றனர். அல் குர்ஆன் இதனைப் பின்வருமாரு கூறுகிறது.
50

அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக யாத்திரரையின் மூலம்) அவர்களுடைய பசிக்கு ஆகாரமளித்து வருகிறான். (அத், 106:04)
வரலாற்று முக்கியத்துவமுடைய பரிமளப் பாதையில் (incense Route) தென் பாகத்து யெமனுக்கும் வடக்கைச் சேர்ந்த பெற்ராவுக்குமிடையில் மிக வாய்ப்பான வர்த்தக மையத்தில் மக்கா இருந்ததும் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்தது. மேலும் மக்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்தம் தடைசெய்யப்பட்ட புனித பிரதேசம் என்ற சமயக் கொள்கையும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளித்த மற்றொரு காரணியாகும். உண்மையில் புனித மாதங்களில் வர்த்தக நோக்கிலும் சமய நோக்கிலும் அறபு நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அங்குவந்து கூடிய மக்களிடையே ஐக்கிய உணர்வை ஏற்படுத்தவும் இச்சமயக் கொள்கை வழிவகுத்தது.
5

Page 29
அறேபியப் பழங்குடி Busiù 3
பழங்குடி
இன்று உலகம் எவ்வாறு தேசிய அரசு (Nation - States) களுக்குச் சொந்தமானதாக உள்ளதோ, அதே போல பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் இதற்குச் சமமாக இவ்வுலகு பழங்குடிக்குச் சொந்தமானதாக இருந்தது. (Sahlims Marshall,1968:195) நாகரிகம் தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். பழங்குடி (Tribe), நாகரிக உலகுக்கு வழிவகுத்த சமூக அமைப்பாகும். முன்னரிலும் பார்க்க உயர் கலாசாரத்தைக் கொண்ட சமூக அமைப்பு பழங்குடியிலிருந்தே உருவாகி வளர்ந்தது.
மனிதன் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த காலத்தை விட புதிய கற்காலம் மாறுபட்டிருந்தது. புதிய கற்காலம் (Neolithic Period) வழங்கிய விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற புதிய பொருளாதார முறைகளின் மூலம் உலக நிலப்பரப்பின் பெரும்பகுதியை பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பழங்குடி அமைப்பும் அவர்களின் பண்பாடும் புதிய கற்கால உற்பத்தித் தொழில் நுட்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. சுற்றாடலை ஆக்க பூர்வமாக மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளையும் இப்பழங்குடியினர் நன்கறிந்திருந்தனர். (1968; 197)
தாவரங்களையும் மிருகங்களையும் வீட்டுச் சூழலுக்குரியதாக மனிதன் மாற்றியதிலிருந்தே புதிய கற்காலத்தின் புரட்சி ஆரம்பமாகின்றது. இதன் மூலம் புதிய கற்காலத்து மக்கள் வேட்டையாடி வாழ்ந்த சமூகத்தைவிட உயர்ந்த சமூக ஒழுங்கமைப்பையும் பண்பாட்டையும் பெற்றவர்களாக நாகரிக வளர்ச்சி நிலையில் காணப்பட்டனர்.

பயிர்ச் செய்கையும் வீட்டுத் தேவைக்காக மிருகங்கள் பழக்கப்பட்டமையும் உயர்தரப் பொருளாதார உற்பத்தியையும் அதற்கும் மேலாக உறுதியானதும் நிலையானதுமான உற்பத்தியையும் ஊக்குவித்தன. எங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின்
மிருகங்களைப் பழக்குவதும் மந்தைகளைப் பெருக்குவதும் இது வரை கேட்டறியாத மூலாதாரங்களிலிருந்து பெற்ற செல்வமாக முற்றிலும் புதிய சமூக உறவுகளைத் தோற்றுவித்தன. இப்பொழுது குதிரைகள், ஒட்டகைகள், கழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக் கூட்டங்களும் மேய்ச்சல் தொழில் புரிந்த மக்கள் சமூகங்களும் ° ருவாகின. இவற்றினூடாக மக்கள் செல்வப் பெருக்கத்தையும் பெற்றனர். இந்தியாவில் கங்கை, சிந்து சமவெளியிலும் யூப்ரடீஸ், தைகிரிஸ் நதிக்கரை அருகே வாழ்ந்த செமிட்டியர்களிடையேயும் இதுவே நடைபெற்றது. (Engels, 19Z2:54)
சமுதாயப் படிமுறை வளர்ச்சியில் மூன்று சமுதாய நிலைகளை மானிடவியலாளர் எடுத்துரைப்பர். அவை (1) சமத்துவ சமுதாயங்கள் (Egaliterian Societies) (2) 5J5606)& f(upg|Turid, it (Rank Socities) (3) வர்க்க, சாதி சமுதாயங்கள் (Class, Caste Societies) என வகையீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாம் அவதானித்த ஆதி சமுதாய அமைப்புக்கள் சமத்துவ சமுதாயப்படி நிலைக்குரியனவாகும். (சீ. பக்தவத்சல பாரதி, 1990:291)
சமத்துவ சமுதாய அமைப்பில் முதலில் குலக்குழு (Band) வும் அடுத்த நிலையில் பழங்குடியும் இடம் பெறுகின்றன. வேளாண்மை தோன்றிய காலம் வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் - ஏறக்குறைய அனைத்து சமுதாயங்களும் குலக் குழுக்களாகவே வாழ்ந்தனரென மானிடவியல் கூறுகிறது.
சமத்துவ சமுதாயங்களில் வளங்கள் சமமாகப் பகிரப்பட்டன. சமுதாயத் தகுதியிலும் வேறுபாடிருக்கவில்லை. குலக்குழுவை அடுத்துத் தோன்றிய பழங்குடியில் அதிக அங்கத்தவர்கள் அல்லது குடும்பங்கள் காணப்பட்டன. பழங் குடிச் சமுதாயம் குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் முக்கியத்துவமளித்தது. ஒவ்வொரு குழுவும் நிலப்பகுதியை வரையறுத்துக்
53

Page 30
கொண்டன. (1990; 294) வர்க்க வேறுபாட்டிற்கு இடமளிக்கும் தனி உடைமைப் பொருளாதாரம் வளரும் வரை பழங்குடியிலும் பெரும்பாலும் சமத்துவ நிலையே காணப்பட்டது.
குலக்குழுவை விடப் பழங்குடி இரத்த உறவுத் தொகுதிகளை அதிக அளவில் பெற்றிருந்தது. இன்னொரு வகையில் பல இனக்குழுக்களின் தொகுதியாகவும் பழங்குடி அமைந்திருந்தது எனக் கூறலாம். பழங்குடி குலக்குழுவை விட அளவிற் பெரிதாக இருந்தமையால் அது ஐக்கியமின்மைக்கு இட்டு செல்வது இலகுவாயிற்று. எனவே பழங்குடிகளிடையே இயங்கும் சமதரத்தையுடைய கூறுகளிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குரிய புதிய ஒழுங்கு முறைகளும் உருவாகின.
அறேபியாவில் பழங்குடி
இஸ்லாத்தின் தோற்றத்தின் போது அறேபியா பழங்குடி சமூக அமைப்பில் இருந்தது. பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் கூறுவது போல பழங்குடி என்பதைவிட நபிகள் காலத்தில் ஒரே சமூகமாக ஒரே பொது வாழ்க்கையைப் பெற்றிருந்தனர், என்று ஒரு மக்கள் குழுவினரைக் குறிக்கும் வேறொரு பொருத்தமான எண்ணக்கருவை முன்வைப்பது கடினம்.
தொன்மை அறேபியரை நாடோடிகள், ஒரிடத்தில் தரித்து வாழ்ந்த விவசாயிகள், வணிகர்கள் என்று மூன்று பிரிவினராக வகுக்கமுடியும். எனினும் பழங்குடியே இவ்வலகுகள் அனைத்தினதும் பொதுச் சமூக அமைப்பாக இருந்தது.
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் நாடோடிகளே (Nomads) பெரும்பான்மையோராக இருந்தனர். இவர்கள் பதவி (Badaw) எனப்பட்டனர். பாலைவன நாடோடிகளைக் குறிக்கும் விஷேட பதம் இதுவாகும். சுதப்பிகளிலும் (Steppes) அரைப் பாலைவனங்களிலும் பதவிகள் பரந்து வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் பிறந்த வட அறேபிய, மத்திய பாகங்களில் பதவிகளே அதிகளவில் காணப்பட்டனர்.
பதவி, நாடோடி வாழ்க்கையில் இருந்தான். பாலைவனப்
பிரதேசங்களின் பூர்வீக வாழ்க்கை முறை அதுவென இப்னு கல்தூன் கூறுவார். நாடோடிகள் எனப்படுவோர் அர்த்தமற்று அலைந்து திரியும் கூட்டத்தினர் அல்ல.
54

‘ஒரு குறிப்பிட்ட வாழிடத்தைக் கொண்டு நிலையாக வாழாமல் பருவ காலத்திற்கேற்ப தொடர்ச்சியாக இடம் விட்டு இடம் சென்று வாழும் மக்களே நாடோடிகளாவர். இவர்கள் இடம் பெயர்ந்து வாழும் முறை ஒரு முறைப்படுத்தப்பட்ட சுழற்சியாக இருக்கும். இதனாலேயே இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை. (1990: 470)
விவசாயத்தில் ஈடுபடுவோர், கால்நடை வளர்ப்போர் எனப் பாலைவன நாடோடிகளை இரு பிரிவில் அடக்குவர். கால்நடை வளர்ப்போரையும் இரு பிரிவினராகக் கொள்ளலாம். இதில் முதல் நிலை ஒட்டக வளர்ப்புக்குரியதாகும். அறேபியாவின் முழுமையான நாடோடித்துவம் ஒட்டக நாடோடிகளையே சார்ந்திருந்தது. இவர்கள் முழு நாடோடிகளாவர். முழு நாடோடிகளே பாலைவனத்தில் உட்பிரதேசத்துள் சென்றனர். ஆடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த நாடோடிகள் அரைநாடோடிகளாவர். பாலைவனத்தின் ஒரப்பகுதிகளில் மட்டும் இவர்கள் சஞ்சரித்தனர்.
ஒட்டக நாடோடிகள்
ஒட்டகமோட்டிகள் பாலைவனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டனர். ஒட்டகத்திற்குத் தேவையான உணவு, நீர், வெப்பம் முதலியவற்றைத் தேடி ஒட்டக நாடோடிகள் பாலைவனத்தின் மத்திய பகுதிகளிலும் ஆழ்ந்த உட்பிரதேசங்களிலும் பிரவேசித்தனர். ஒட்டக நாடோடி தரித்து ஓரிடத்தில் வாழும் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்துவமானவனாக நின்றான். பாலைவனமும் ஒட்டகமும் அவனது வாழ்வைத் தீர்மானித்தன.
பாலைவன வாழ்க்கைக்கு பதவிகள் ஒட்டகத்தை நம்பியிருந்தனர். மறுபுறத்தில் ஒட்டகங்களின் வாழ்க்கைக்காகவும் பதவிகள் பாலைவன வாழ்க்கையை நாடினர். சுதப்பியிலும் வரண்ட பாலைவனத்திலும் வாழக்கூடிய ஒட்டகம் பதவியின் உற்றதுணையாகியது வியப்புக்குரியதன்று.
கி.மு. 2000 ம் ஆண்டளவிலேயே ஒட்டகம் வீட்டு மிருகமாக அறிமுகமாகியது. பாலைவன வாழ்க்கைக்குப் பயனுள்ள மிருகமாக ஒட்டகம் அறிமுகமானதன் பின்னர் பதவி தனது வாழ்க்கையை அதனோடு மாற்றிக் கொண்டான். ஒட்டகத்திற்குப் பாலைவன உட்பகுதியில் உள்ள புதர்களும், உவர் நீரும், பாலை மணலும், வெப்பக் காற்றும் இன்றியமையாத வையாகும். எனவே
55

Page 31
ஒட்டகப் பராமரிப்பு அவனைப் பாலைவனத்தின் ஆழமான உட்பகுதிகளுக்கு இட்டுச் சென்றது.
பதவிகளைப் பொறுத்தவரை ஒட்டகம் வெறும் பாலைவனக்கப்பல் என்பதற்கும் மேலானதாகும். பதவி தனது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒட்டகத்தையே நம்பி வாழ்ந்தான். ஒட்டகம் அவனது வர்த்தகக்காவரன், மணமகளுக்கான சீதனம், கொலைக் குற்றத்திற்கான இரத்த வெகுமதி, சூதாட்டத்தில் இலாபம், பணம், கூடாராம்,பாதணி, மருந்து, வாசனைத்திரவியம். இவ்வாறு ஒட்டகத்திலிருந்து அவன் நேராகவும் மறைமுகமாகவும் பெற்ற பலன்கள் பல. எலொய் ஸ்ப்ப்ரெஞ்சர் (Alois Sprenger) அறேபியரை ஒட்டக ஒட்டுண்ணிகள்’ என்று குறிப்பிட்டார். பதவிக்கு ஒட்டகம் அழகிய பிராணி. ஒட்டகத்தை உவமித்துப் பெண்களின் அங்கங்களை அவன் வர்ணித்தான். அதன் குளம்பொலிகளின் தாளத்திற்கிசைவாக இனிய ராகங்களை அவன் உருவாக்கினான்.
பதவிக்கு வாழிடமும் நிரந்தரமற்றது பாலைவனப் பசுமையும் தோன்றி மறைவது. ஒரு பசுந்தரையின் வரட்சி மற்றொரு பசிய நிலத்தை நோக்கி அவனை விரட்டியது. மேய்ச்சல் நிலத்தையும் நீரையும் தேடிச் செல்வது அவனது வாழ்க்கையின் விதி. ஒரேவிதமான சுழற்சி வாழ்க்கையில் அவன் இருந்தான். மாற்றத்தை அவன் விரும்பாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். தனிமையும் பட்டினியும் தொடர்ச்சியான பயணங்களும் எதிரிகளின் அச்சமும், இயற்கை உபாதைகளும், அவனைக் கடின குணமுள்ளவனாக்குகின்றன. ஆனால் இந்த அனுகூலமற்ற நிலைமைகள் எதுவுமே அவனது முயற்சிகளுக்குத் தடையாயிருக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவன் தயாராக இருந்தான். ஒட்டகமும் துணிவும் அவனது இப்பிரயத்தனத்திற்கு பெரும் துணையாக விளங்கின.
நாடோடிகள் தமது வாழ்க்கைக்குரிய கட்டாயமான, வெளிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. அதனை அவர்கள் கடந்து செல்வது கடினம். அதனால் அவர்கள் பாலைவனத் தேவைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தம்மை வரையறுத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர் (Ibun Khaldun, 1958: 249).
பாலைவனப் பசுந்தரைகளில் விவசாயம் நடைபெற்றது. பேரீச்சைச் செய்கைக்கு இவை பிரசித்தி பெற்றிருந்தன. மலைப் பிரதேசங்களில் உணவுத்
56

தானியங்கள் பயிரிடப்பட்டன. இவ்வகைச் செழிப்பான பகுதிகள் மக்களின் வாழிடங்களாகின. நபிகள் காலத்தில் மக்கள் தரித்து வாழ்ந்த யத்ரிப் (மதீனா) சிறப்பான பசுந்தரைப் பொருளாதாரத்தைப் பெற்றிருந்தது. இவ்வாறு ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோரின் வாழ்வுக்கும் நாடோடிகளின் வாழ்வுக்குமிடையில் இயற்கை ரீதியாகவே வேறுபாடுகள் காணப்பட்டன. தரித்து வாழ்வோரோடு ஒப்பிடுகையில் நாடோடிகளின் வாழ்க்கை நாகரிகமற்றதாகும். தரித்து வாழ்வோரின் செளகரியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் இது முற்பட்ட வாழ்க்கையாகும்.
சுற்றாடல் வேறுபாடுகள் தான் மக்கள் தமது வாழ்வை வெவ்வேறு வழிகளில் உருவாக்கிக் கொள்ளக் காரணமாகிறது, தரித்து வாழ்வோரும் நாடோடிகளும் தேவைகளின் அடிப்படையில் அமைந்த இரு இயற்கைக் குழுக்களாகும் (இப்ன் கல்தூன்).
சமூக அமைப்பு
பதவியின் சமூக அமைப்பு பழங்குடியாகும். ஒரு பழங்குடி பல குலங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பழங்குடியும் ஒரு முகாமையும் குடும்பங்களுக்கென தனித்தனி கூடாரங்களையும் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அல்லது பழங்குடியும் அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன.
பழங்குடியின் இரத்த உறவு வம்சவழித் தொடர்ச்சி, தாயிலிருந்து அல்லது தந்தையிலிருந்து கணக்கிடப்பட்டது. உலகின் ஆரம்பக் குல அமைப்பு தாய்வழிக் (Matrilenia) குரியதென்பது பொதுவான கருத்து. தாய்வழி மரபு பூர்வீக மனித குலத்தின் ஒழுங்கமைப்பின் ஆரம்ப வடிவமென எல். எச். மோர்கனும் (Lewis Morgan) எங்கெல்சும் நிறுவ முயன்றனர். இவ்வமைப்பு பொருளாதார மாற்றங்களால் பின்னர் மாற்றமடைந்தன எனக்கருதுவர். தாய்வழி, குலச் சமுதாயத்தின் ஆரம்பக் கட்டமாகும். மரபு வழி பெண்ணிடமிருந்து கணக்கிடப்படுவதை இது குறிக்கிறது. பெண்கள் ஆண்களை அடக்கியாண்டனர் என்ற கருத்தில் இது கொள்ளப்படுவதில்லை. எனினும் பொருளாதார முக்கியத்துவமும் தாய்த் தலைமை மரபும் இதிற் காணப்பட்டது.
அறேபியப் பழங்குடி அமைப்பு, நபிகள் காலத்தில் தந்தைவழி மரபையே பெற்றிருந்தது. எனினும் தாய்வழி மரபை அறபுப் பழங்குடிகள் பெற்றிருந்தமைக்கு அடையாளங்களிருந்தன. (பார்க்க, Jurgi zaydian, 1987:06) தாயின் கெளரவமிக்க இடம் இன்னும் மறைந்துவிடவில்லை, என்பதை அவர்களின்
57

Page 32
கலாசார மரபுகள் எடுத்துக் காட்டின. குலங்களைக் குறிக்கும் பெயர்களில் பெண்களின் பெயர்களும் காணப்பட்டன. (1937, 26) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் மனைவியை விடத் தாயைக் கெளரவிக்கும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. மனைவியைவிடத் தாயின் உறவு நிரந்தரமானதென மதிக்கப்பட்டது (1987:06).
அறேபியக் குல மரபில் தாய்வழி மாமனுக்கும் முக்கியத்துவமிருந்தது. இதற்குரிய உதாரணங்களில் நபிகளின் வாழ்வில் இடம் பெற்ற தாய் மாமன்களை நோக்கிப் பயணமான சம்பவங்கள் கவனத்திற்குரியதென ஜுர்ஜிஸெய்தான் விளக்குகிறார் (பார்க்க, குறிப்பு: 04).
தாயுரிமை மறைந்து தந்தை உரிமை நிலைபெறும் போது பெண்ணின் சமூக அந்தஸ்தும் பாதிக்கப்படுகிறது. பெண், அடிமையாகவும் வெறும் குழந்தைகள் பெறுபவளாகவும் ஒடுக்கப்படும் நிலை உருவாகிறது. நபிகளின் கால அறேபியாவின் நிலை இதுவாகவே இருந்தது. தந்தைவழிக் குடும்பத்தின் முக்கிய அடையாளமான பலதார மணம் தாராளமாகவே அறேபியப் பழங்குடி மரபில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. செமித்திய வடிவத்தில் இந்தக் குடும்பத் தலைவன் பலதார மணமுறையில் வாழ்கிறான்' என எங்கெல்ஸ் குறிப்பிடுவார்.
உண்மையில் பலதார மணமென்பது பணக்காரர்களுக்கும் பிரபுக்களுக்குமுரிய சலுகையாகும். பிரதானமாகப் பெண் அடிமைகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இம் மனைவியர் சேகரிக்கப்பட்டனர். செமித்திய வடிவத்தில் குடும்பத் தலைவனே இச்சலுகையை அனுபவித்தான். அதாவது பலதார மணமென்பது எல்லோருக்குமுரியதாக இருக்கவில்லை. இம்மணமுறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை நபிகளே முன்வைத்தனர்.
இது எவ்வாறெனினும் நபிகள் காலத்தில் குல உணர்ச்சியும் வம்ச வழித் தொடர்ச்சியும் ஒரு தந்தையிலிருந்தே தொடரும் முறை முதலிடத்தைப் பெற்றுவிட்டது (1987 06),
இரத்த பந்தம் அல் அசபிய்யா
ஒரு பழங்குடிச் சமூகம் அதன் நேரடியான இரத்தக் கலப்பினாலேயே நிர்ணயிக்கப்பட்டது. குல அங்கத்தவர்களிடையே உறுதியான பிணைப்பினை
58

ஏற்படுத்தும் முதற் சாதனமாக இரத்த உறவு விளங்கியது. உறவின் மறுபொருள் குல அங்கத்தவர்களின் பாதுகாப்பாகும். தந்தை வழியாயினும் தாய்வழியாயினும் குல அங்கத்தவர்கள் அனைவரினது நரம்புகளிலும் ஒரே இரத்தம் ஒடுவதாகவே அறேபியர் கருதினர்.
இரத்த பந்தம் என்பது பாசப்பிணைப்பு மட்டுமல்ல அது குலத்தின் வலுவுமாகும். கைமாறு கருதாத உதவியையும் பாதுகாப்பையும் அது குல அங்கத்தவர்க்கு வழங்குகிறது. பழங்குடிக் கலாசாரத்தில் ஒரு குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இதனை இப்னு கல்தூன் அல் அசபிய்யா எனக்கூறுகிறார்.
குழு உணர்வு இரத்த உறவினால் மட்டும் ஏற்படுவதாகும். அல்லது ஏதாவதொருவகையில் அதனோடு தொடர்புடையதாகும். இரத்த பந்தத்தை மதிப்பது அற்ப விதிவிலக்குகளைத் தவிர மனிதனின் பொதுவான சுபாவமாகும் (1958 264).
பழங்குடி மக்களின் எளிய பொருளாதார நடவடிக்கைகளும், சமூக வாழ்வும், சுற்றாடல் பிரச்சினைகளும் அவர்களிடையே குறிப்பிட்ட வகையான லெளகீக, ஒழுக்க குணாம்சங்களைத் தோற்றுவிக்கின்றன. நாடோடிகளாயினும் தரித்து வாழ்வோராயினும் அவர்கள் சிறு தொகையினராக இருந்தமையும் அவர்களது எளிய பொருளாதார முறையும் அவர்களைப் பெரிதும் சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கே இடமளித்தன. அரசு போன்ற ஆதிக்க நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாயிருக்கவில்லை. எனினும் அவற்றின் இடத்திற்கு ‘சமூக ஒருமைப்பாடு (அசபிய்யா) என்ற எளிய வடிவத்தைப் பெற்றிருந்தனர்' என்பார் இப்னு கல்தூன்.
இரத்த பந்தத்தின் அடிப்படையிலேயே அசபிய்யா என்ற எண்ணக்கருவை இப்னு கல்தூன் முன்வைத்தார். இரத்த உறவினருக்கு ஆபத்து நேராது பாதுகாப்பதும், தனது இரத்த உறவினர் நீதியற்ற முறையில் தாக்கப்பட்டால் அதற்காக வெட்கமடைவதோடு எந்த எதிர்ப்பு வரினும் உறவினருக்காக அப்பிரச்சினையில் தலையிடுவதும் மனிதனின் இயல்பான தூண்டுதல் என்று இப்னு கல்தூன் விளக்குகிறார். பழங்குடிச் சமூக அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கென அன்று மனிதனுக்கு இருந்த ஒரே வழி
59

Page 33
இவ்விரத்த பந்தமே என்பது அவரது கருத்தாகும். "இரத்த உறவினர்களை நேரடியாகப் பாதுகாப்பது என்ற உணர்விலிருந்தே அசபிய்யா தோற்றம் பெறுகிறது. இது குடும்பத்தையும் குலத்தையும் பாதுகாக்கும் வடிவமாகவும், அக்காலத் தேவைகளுக்கேற்ப இந்த இயல்பான உணர்வு திடமான சமூக வடிவமாகவும் வளர்ச்சியுறுகிறது”. (Muhsin Mahdi, 1957; 196) என்ற முஹ்ஸின் மஹ்தியின் கருத்தையும் இங்கு நோக்கலாம்.
இரத்த பந்தத்திற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கியத்துவத்தையும் இப்னு கல்தூன் எடுத்துக் காட்டினார். தனது கருத்துக்கு ஆதரவாக முடிந்த வரை உங்கள் இரத்த உறவை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் வம்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற நபிகளின் வாக்கினை அவர் முன்வைத்தார். (பார்க்க, 1958; 264) அல் குர்ஆனிலும் இரத்த பந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் கூற்றுக்கள் உள.(அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்புப் பந்துத்துவத்திற்கும் மதிப்பளியுங்கள். (அத், 4:1) என்பது அத்தகைய கூற்றுக்களில் ஒன்றாகும்.
பாலைவனப் பதவிகளின் இலட்சிய ஒழுக்கம் பாலைவன வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவனது இலட்சிய ஒழுக்கம் ‘வீர காவிய உணர்ச்சிவாதமாகும். அது'முர்ருஆ (Muruah) எனக் கூறப்பட்டது. வீரமரபும் பெருந்தன்மையும் இதன் இரு பிரதான பண்புகளாகும். அவனது சொல்லலங்காரத் திறனையும் இது குறித்தது. குடும்ப பந்தத்தோடு இணைந்திருந்த கடமைகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், இரத்தப்பழியை நிறைவேற்றும் பாரிய பொறுப்பு என்பனவும் இதில் அடங்கியிருந்தன. (1967:22) யுத்தத்தில் தீரம், துயரத்தில் பொறுமை, பழிவாங்குவதில் தீவிரம், பலவீனருக்குக் கருணை எனப் பாலைவனப் பதவிகளின் முர்ருஆ வை ஆர். எ. நிக்கல்ஸன் குறிப்பிடுவார்.
அடிப்படையில் 'முர்ருஆ'தனிநபருக்குரியதாயினும் சமூக உணர்விலும் அதற்குப் பங்கிருந்தது. பழங்குடிகளின் ஐக்கியம் நிலைபெற அதன் துணை பெரிதும் உதவியது (1986: 63). முர்ருஆ’ வின் ஒழுக்கப் பண்புகள் பாலைவனத்தின் கடின வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல்களுக்கு எதிரான மானிடக் கூட்டுறவென பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் குறிப்பிடுவார்.
60

குலங்களின் ஐக்கியம்
இரத்த பந்தத்தைத் தவிர வேறு பிணைப்புக்களும் இடம் பெற்றன. ஒரே இரத்தத்தில் தோன்றிய பிள்ளை குட்டிகளின் அலகாக அன்றித் தமக்குள் சண்டையிடுவதில்லை என்ற வாக்குறுதியுடன் நேச ஒப்பந்தங்கள் (Confederations) பல உருவாகின. இதன் மூலம் தனி நபர், குடும்பம் அல்லது குலங்கள் இணைவது சாத்தியமாயிற்று. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் நடைபெற்ற முத்தையாபின்', 'புலூல் (Fudull) ஆகியவை இவ்வாறு ஏற்பட்ட ஒப்பந்தங்களில் புகழ்பெற்றவையாகும். சிறிதும் தொடர்பற்ற தூரத்துக் குலங்களையும் இவை பிணைத்தன. (1987:09) இதில் பிணைப்புற்ற அங்கத்தவர்
எவராயினும் பழங்குடியின் உண்மையான அங்கத்தவராகவே கணிக்கப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட உறவாயினும் அறேபியன் அதில் இரத்த பந்தத்துக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றினான். பழங்குடியினுள் இணைந்தோருக்கு உரிய பாதுகாப்பு முழு அளவில் வழங்கப்பட்டது. அறேபியரிடையே வழங்கிய சகோதரர் என்ற பட்டம் இரத்த உறவினரை மட்டும் குறிக்கவில்லை. இரத்த உறவற்ற சகோதரத்துவத்திற்கு, ஒத்த கருத்து இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. (1969; 21)
ஏழைகளும், கைதிகளும், பலவீனர்களும் இவ்வகை நேச ஒப்பந்தங்களினால் பாதுகாப்புப் பெற்றனர். சக்தியற்ற குலங்களுக்கு இது பெரு வாய்ப்பாக அமைந்தது. அரசோ,சமாதானத்தைத் திணிக்கும் வேறு சக்தி மிக்க இயந்திரமோ இல்லாத நிலையில் மக்காவில் அப்போது ஏற்பட்ட புதிய நெருக்கடிகளுக்கு இதுவே இயலக்கூடிய அதிகபட்சத் தீர்வாக அமைந்தது. கடும் வரட்சி, உணவுத் தட்டுப்பாடு, வழிப்பறி, குலச்சண்டைகள் போன்ற பிரச்சினைகளின் தாக்கத்திலிருந்து தனிநபரை அல்லது பலவீனமான குலத்தைப் பாதுகாக்கவும் இப்பிணைப்பு உதவியது.
தொன்மை அறபு சமூகத்தில் உருவான இக்குல இணைவினை செயற்கைக் குல ஒருமைப்பாடு' என பேராசிரியர் வொட் குறிப்பிடுகிறார். நேச ஒப்பந்தங்களினால் இவ்வாறு உருவான குல ஐக்கிய எழுச்சி நபிகள் காலத்தில் பரவலாகக் காணப்பட்ட அம்சமாகும். இக்குல ஐக்கியங்கள் ஒரு அரசியல் இணைப்பினை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. (IgnaS Goldziher, 1967: 14)
61

Page 34
நபிகள் காலத்தில் நடைபெற்ற இக்குல ஐக்கியச் செயற்பாட்டில் வணிக நலன்கள் முக்கிய இடத்தைப் பெற்று வந்தன. வணிகப் போட்டியில் தனி ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த குலங்களுக்கு அல்லது வர்த்தகக் குபேரர்களுக்கு எதிராகவும் இவை உருவாகின. பலவீனமான வணிகர்கள் ஒப்பந்தங்கள் செய்து தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சக்திமிக்க குபேரர்கள் தமக்குள் குலக் கூட்டுறவை உருவாக்கிக் கொண்டது போல் பலவீனர்களும் தமது குல எல்லைகளைத்தாண்டி வேறு குலத்தவர்களுடன் அல்லது தனி நபர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். ஹில்ப்-அல்புலூல் இவற்றுள் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். குல ஐக்கியத்தின் இடத்திற்கு வர்க்க ஒருமைப்பாடு வந்து சேர்வதை இதுவும் இதுபோன்ற ஒப்பந்தங்களும் உணர்த்தின.
'ஹில்ப் அல் புலூல் அமைப்பை உருவாக்குவதில் நபி (ஸல்) அவர்களின் ஹாஷிம் குலத்தினரே முன்னணியில் நின்றனர். சுதந்திரமாக வர்த்தகக் காரவன்களை அனுப்பமுடியாத வர்த்தகர்களின் பாதுகாப்பு இதில் முக்கியத்துவம் பெற்றது. குபேர வணிகர்களினால் அல்லது வர்த்தகப் போட்டியில் தன்னாதிக்கம் செலுத்தியவர்களினால் நபிகளின் ஹாஷிம் குலமும் பாதிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் ஒருங்கிணைப்பை இதிற்காண முடிவது முக்கிய அம்சமாகும்.
மக்கா நகரில் ஒடுக்கப்படும் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு உதவி வழங்குவதென்று புலூல் உடன்படிக்கையின் போது பிரதிக்ஞை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைப்பாக மட்டுமன்றி பலவீனர்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததும் கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (Asghar Ali Engineer, 1980: 17) நபிகளின் இளமைப் பருவத்தில் நடைபெற்ற இவ்வுடன்படிக்கையின் போது நபிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். பிற்காலத்தில் இவ்வுடன் படிக்கையை நபிகள் நினைவு கூருகையில் இப்போது யார் இந்த உடன்படிக்கையின் பேரில் உதவி கோரினாலும் உதவத் தயாராக உள்ளேன்’ எனக் கூறினார்கள்.
போர்ச்சூழல்
அறேபியரின் வாழ்வில் இரத்தஞ்சிந்துதலும் கொள்ளையிடுதலும் பொதுவழக்காகும். விடுதலையளிக்கப்பட்ட மூன்று புனித மாதங்களைத்தவிர
62

வருடம்பூராவும் அவர்கள் போர்புரிந்தனர். ஒரு சாதாரணச் சச்சரவோ ஒரு தனிநபர்கொலையோ பல தசாப்தங்கள் நீடிக்கக்கூடிய போருக்குப் போதிய காரணங்களாயிருந்தன. அவர்களது போர்முறைகள் மிகக்குரூரமானவையாகவும் மனிதத்தன்மையற்ற வையாகவுமிருந்தன. நபிகள் காலத்திலும் அதற்கு முன்னரும் மனித நேயத்திற்குப் புறம்பான பல கொடூரங்களைப் போர்களில் அவர்கள் நிகழ்த்தினர். பண்டைய போர்களின் குரூரங்கள் பற்றிய பைபிளின் பதிவுகள் இவ்வாறு காணப்படுகின்றன.
சமுவேல் பவுலை நோக்கி இப்போது நீ போய் அமலேக்கைக் கொன்று அவன் உடைமைகள் அனைத்தையும் அழித்துவிடு. அவன்மேல் இரக்கங் கொள்ளாதே. அவனது சொத்துக்களில் ஒன்றையும் விரும்பாதே. ஆனால் ஆண்பிள்ளைகள் முதல், பெண் பிள்ளைகள் வரை, சிறுவர் பால் குடிக்கிற பிள்ளைகள், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், முதலியவற்றைக்கொன்றுவிடு. (15:13)
அவர்கள் கொள்ளைப்பொருட்களின் மேல் பாய்ந்து ஆடுமாடுகளையும் கன்றுகளையும் கொணர்ந்து தரையில் போட்டு அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டனர். (14:32, 33)
அறேபியப் போர்களிலும் இதற்குச் சமமான செய்திகள் உள்ளன. குழந்தைகளையும், பெண்களையும் அவர்கள் எரியூட்டிக் கொலை செய்தனர். கர்ப்பிணிகளின் வயிற்றை வெட்டிப்பிளந்தனர். அம்பெய்யும் பயிற்சிக்கு சிறுவர்கள் பலியாக்கப்பட்டனர். போரில் பிடிபட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் குரூரமாகச் சிதைக்கப்பட்டன. அங்கங்கள் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டன. தாயும் பிள்ளைகளும் பிடிக்கப்பட்டால் அவர்களைப் பிரித்துவைத்தனர். யுத்தத்தின் போது மரங்களையும் கட்டிடங்களையும் பாழ்ப்படுத்தினர்.
போர்க்கொள்ளை கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இருந்தது. கொள்ளைப் பொருள்களுக்காகவே அவர்கள் போர்களில் இறங்கினர். போர்க்கொள்ளையும் வழிப்பறியும் கண்டிக்கப்பட வில்லை. இவை அவர்களது ஜீவனோபாயமாக இருந்தமையால் அவர்களது ஒழுக்க நியமங்கள் இவற்றை ஆதரித்தன. போர்க்கொள்ளைக்குரிய அறபுப்பதம் கனீமத் ஆகும். அறபு மக்களின் வாழ்வில் கனிமத் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
63

Page 35
தார்விதி
பாலைவன அறேபியர் யுத்தத்தை நேசித்தனர். ஓரளவுக்கு யுத்தம், அவர்களது வாழ்க்கையுமாகும். 'தார்’ (Thar) முறை யுத்த ஆவலை அவனுக்கு மேலும் தூண்டியது. இதுதார்விதி (Law ofThar) எனப்பட்டது. ஏதாவதொரு வழியில் ஒரு பழங்குடிநபர் கொலைசெய்யப்பட்டால் அக்கொலைக்காக முழுக்குல அங்கத்தவர்களும் கூட்டுமுறையில் பழிவாங்குவதை தார்விதி கட்டாயப்படுத்தியது. இம் முறையில் எழும் போர்கள் பல நூற்றாண்டுகள் வரையும் நீடிக்கும். இந்த யுத்தங்களிலிருந்து கிளை யுத்தங்களும் தொடர்வதுண்டு. தார் அறேபியரின் குணப்பண்புகளில் ஊறியிருந்த ஒன்று என அல்லாமாஷிப்லி நூஃமானி குறிப்பிடுகிறார்கள் (பார்க்க: 1981: 245, Vol II)
கொலைக்குரிய பழிவாங்கப்படாத வரை கொலையுண்டவனின் ஆன்மா ஒரு பறவையாக ஒலமிட்டு அலையுமென்றும், பழி வாங்கப்படாதவரை கொலையுண்டவனின் சவக்கிடங்கு தீராத இருளில் மூழ்கிக்கிடக்கும் என்றும் அவர்களிடம் புராண நம்பிக்கைகள் நிலவின. இத்தகைய நம்பிக்கைகள் தார்விதியை மேலும் தீவிரப்படுத்தின. அறபுகளைப் பொறுத்தவரை காயப்பட்டு யுத்தகளத்தில் இறப்பதுதான் கெளரவமான மரணம். ஆன்மா மூக்கின் வழியாக அன்றி காயத்தின் வழியாக வெளியேறியது என்ற இறப்புச் செய்திக்கே அவர்கள் மதிப்பளித்தனர். േയ இயற்கையாய் மரணிப்பதை தொன்மை அறேபியன் இழிவுச்சாவெனக்கருதினான் - இதனை அவர்கள், மூக்கு மரணம் என்றனர். அவர்களது பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.
எமது எந்தத்தலைவனும் மூக்கினால் மரணிக்கவுமில்லை பழிவாங்கப்படாத நிலையில்
எங்களில் ஒருவன் கொலை செய்யப்படவுமில்லை
இஸ்லாம் பழைய போர் முறைகளிலும் போர்க்கொள்ளையிலும் (கனிமத்) மாற்றங்களை ஏற்படுத்தியது. போர் ஒழுக்கக் கோவை என்றுகூறுவதற்குச் சமமான கருத்துக்களை இஸ்லாம் போர் சம்பந்தமாக முன்வைத்தது. நீதியான வழியிலன்றிப் போரில்லை' என்ற அடிப்படைக்கருத்தை இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. ‘போரில் வரம்பு மீறவேண்டாம் அல்லாஹ்வின் வழியில் போர்புரியுங்கள் அநீதியிழைப்போருடன் மட்டுமே போர்’ என்ற குர்ஆனின்
64

கட்டளைகள் பழைய போர்முறைகளையும் அதற்கான காரணிகளையும் குர்ஆன் முற்றாக நிராகரிக்கிறது என்பதற்கான சான்றுகளாகக் கொள்ளலாம்.
அபூதாவூதின் பதிவின்படி நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்களுக்கு நபிகள் வழங்கிய போர் அறிவுரைகளிலொன்று பலவீனப்பட்ட முதியோர், சிறார்கள், மகளிர் எவரையும் நீங்கள் கொலை செய்துவிட வேண்டாம்' என்பதாகும். கலீபா அபூபக்கர் தமது தளபதிகளுக்குப் போர் அறிவுரை வழங்கியபோது பாதிரிமார்கள், வணக்கவாளர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களை அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொள்ளாத வரையில் தாக்க வேண்டாம் எனக்கூறினார்.
பிணைக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களையோ கைதிகளையோ கொலை செய்வதை நபிகள் தடுத்து விட்டனர். எதிரிகளின் சடலங்களைச் சிதைப்பதையும் சடலங்களிலிருந்து மூக்கு, காது, ஈரல் போன்ற உறுப்புக்களை அறுத்தெடுப்பதையும் நபிகள் தடுத்தனர். எதிரி நாட்டிற்குள் நுழைகையில் நாச வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் பள்ளிவாசல்களை கண்டால் அல்லது பாங்கோசையைக் கேட்டால் யாரையும் கொல்லவேண்டாம் என்றும் நபிகள் கூறினர். போர்த்தளபதிகளை நியமிக்கும்போது இறையச்சத்துடன் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுமாறு பணித்தனர். ஒப்பந்தங்களுக்கு மாறு செய்யவேண்டாம் என்றும் யாரையும் கோரப்படுத்தவேண்டாம் என்றும் சிறுவர்களைக் கொலை செய்யவேண்டாம் என்றும் தமது தளபதிகளுக்கு அறிவுரை கூறினர்.
நபிகள் காலத்தில் யுத்தங்கள் நடைபெற்றபோதும் அதில் மாற்றங்கள் தென்பட்டன. இரத்த வெறி இல்லாதொழிக்கப்பட்டது. யுத்தங்களுக்கு வரையறைகளும் விதிகளும் வகுக்கப்பட்டன. உண்மையில் ஆயுதப்பயன்பாடும் இரத்தஞ் சிந்துதலும் அதன் இறுதி எல்லைவரை கட்டுப்படுத்தப்பட்டது (Hamidu11ha, 1979:87) . மேலும் இதுகாலம்வரை பெரும் கெளரவத்துக்குரியதாகக்கருதப்பட்ட கொலைக்குரிய இரத்தக் கோரிக்கையை நபிகள் தமது இறுதி ஹஜ்ஜின் போது நிராகரித்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுமாறும் உலகியல் எதிர்பார்ப்புக்களைக் கைவிடுமாறும் நபிகள் கோரிக்கை விடுத்தனர். யுத்தத்தில் பொருள்களைக் கவர்வதைவிட மறுமையின் பலன்களே மேலானதென்று கூறியது புதியகருத்தாகும். இதன் மூலம் போர்க்கொள்ளையின் மீது அவர்கள் பாராட்டிவந்த மரபுரிமையை நபிகள் கேள்விக்குரியதாக்கினர்.
65

Page 36
பழிக்குப் பழி
அறபுப் பழங்குடியில் பழிக்குப் பழி ஒரு உயிர்ப்பாதுகாப்பு முறையாக விளங்கியது. குலத்தினது பொதுப் பாதுகாப்பும் இதில் அடங்கியிருந்தது. குலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தவர் தாக்கப்பட்டால், பொது எதிர்ப்பு உருவானால் காரணகாரிய ஆராய்ச்சியின்றி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. பதில் தாக்குதலைப் பழங்குடி புனிதக் கடமையாகக் கருதியது. இது பழங்குடி சமுதாய அமைப்பு அனைத்திற்கும் பொதுவான முறையெனக் கருதலாம்.
அமெரிக்க இந்திய இரொகுவாய் (Iroquois)ப் பழங்குடியிடம் காணப்பட்ட இதே வகைப் பண்பாட்டம்சத்தை எங்கெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பழங்குடியினுள்ளும் ஒருவருக்கொருவர் உதவுவதும், பாதுகாப்பளிப்பதும் குறிப்பாக அந்நியரின் கெடுதிகளிலிருந்து பாதுகாப்பளிப்பதும் கட்டாயச் செயலாகும். ஒவ்வொரு பழங்குடி அங்கத்தவனும் பாதுகாப்பிற்குத் தனது பழங்குடியை நம்பியிருந்தான், அவ்வாறு நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஒருவனுக்குச் செய்த அநியாயம் முழுப் பழங்குடிக்கும் செய்ததாகக் கருதப்பட்டது. பழங்குடியின் இரத்த இணைப்பிலிருந்தே இரத்தப்பழி வாங்கும் கடப்பாடு தோன்றுகிறது. (1972; 86)
நிறுவனப்படுத்தப்பட்ட சமாதான, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உருவாகாத தொன்மைச் சமூக அமைப்பில் பழிக்குப்பழி அவற்றின் இடத்தை நிரப்பியது. எதிரிகளை மன்னிப்பதும் சமரஸம் செய்து கொள்வதும் ஒழுக்கமென அறபுப் பழங்குடியினன் கருதவில்லை. நாடோடி அறயியரிடம் மாத்திரமல்ல உயர்ந்த நாகரிகத்திற்குரியவரெனக் கருதப்படும் பண்டைய எகிப்தியரிடமும் கிரேக்கரிடமும் இக்கருத்தே நிலவியது.
பழங்குடிச் சமூகத்திற்கும் நாகரிகச் சமூகத்திற்குமுள்ள வேறுபாடு போருக்கும் சமாதானத்திற்குமான வேறுபாடாகும். நாகரிகச் சமூகத்தில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்துவதற்கென நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைப் பெற்றிராத பழங்குடிச் சமூக அமைப்பு யுத்த சூழலிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. பலாத்காரத்திற்குக் கட்டற்ற உரிமை வழங்கப்பட்டது. ஹொப்ஸ் (Hobbes) இதனை 'Warre' எனக்குறிப்பிட்டார். இது நேரடியான யுத்தத்தைவிட பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கு அன்றிருந்த சுதந்திரத்தையே குறித்தது. நிறுவனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமாதானத்தையும் மனிதன் தேடுவதில் உள்ள நியாயம் இந்த யுத்த
66

சூழலிலிருந்தே (Warre) தோன்றுவதாக ஹொப்ஸ் கருதுகிறார். (Ashley Montagu, 1968: 201)
இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னரும் பழங்குடியின் யுத்த சூழல் இருந்தது. இது பண்டைய முர்ருஆவின் பழிக்குப் பழி, பதிலுக்குப்பதில் என்ற நிலை நீடித்திருந்ததையே காட்டுவதாகும் (1967:24). சமூகத்தில் இரத்தக் களரியை கட்டுப்படுத்தும் அரணாகப் பழிக்குப் பழி இயங்கியதை இஸ்லாம் அறிந்திருந்தது. ‘விசுவாசிகளே கொலைக்குப் பழிவாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது’ (அத் 2:178). எனக் குர்ஆன் குறிப்பிட்டது. 'அறிவாளிகளே கொலைக்குப் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு என்று மற்றோர் இடத்தில் குர்ஆன் கூறும் போதும் சமாதானத்தை ஏற்படுத்த உதவும் நிறுவனங்களற்றநிலையில் பழிக்குப்பழியின் சமுதாயப் பங்கினை அது உணர்த்துகிறது, எனக் கொள்ள வேண்டும்.
எனினும் பழிக்குப் பழி தொடர்ந்தும் அதன் பழைய நிலையில் இருந்து வருவதை புதிய சூழ்நிலை அங்கீகரிக்கவில்லை. பழிக்குப்பழியில் மாற்றம் நிகழ வேண்டியிருந்தது. பழிக்குப்பழி என்பதை விட இழப்பீட்டிற்கும் மன்னிப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. பழிக்குப் பழி என்பதிலும் அல்லது பதிலுக்குப்பதில் என்பதிலும் ஏற்பட்ட இம் மாற்றத்தை நபிகள் தமது சீர்திருத்தங்களில் முக்கியப்படுத்தினர். பழிக்குப் பழியே கெளரவமானது என்ற மனோபாவத்தை மாற்றவும் மன்னிப்பும் கெளரவமானதே என்பதை நிலை நிறுத்தவும் நபிகள் பெரிதும் முயன்றனர். இது பழங்குடிக்கே உரித்தான அடிப்படை ஒழுக்க அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். பண்டைய முர்ருஆவில் நபிகளின் புதிய தீன் ஏற்படுத்திய மாற்றமென இங்னஸ் கோல்ட்ஷியர் இதனைக் குறிப்பிடுவார்.
பழிக்குபழி அதன் பாத்திர முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்தது என்பதே உண்மை. பழிக்குப்பழிக்கு அனுமதி இருந்தபோதும் அதன் கொடூர நடைமுறைகளை குர்ஆனின் கட்டளைகள், தடுத்தன. பழிக்குப்பழியில் வரம்பு மீற வேண்டாம் (அத், 2: 278) எனக் குர்ஆன் எச்சரிக்கை செய்ததுடன் மன்னித்தலை வீரச் செயல் எனவும் வர்ணித்தது.
எவரேனும் பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால் இது
மிக்க வீரம் பொருந்திய காரியங்களில் உள்ளதாகும். (அத் 42:43)
67

Page 37
குல அரசியல்
குலம் அல்லது பழங்குடி தனக்கெனச் சில எளிமையான அதிகார அமைப்புக்களைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவனிருந்தான். அவனைச் செய்யித் அல்லது ஷெய்க் என அழைத்தனர். செய்யித் தலைவனாக இருந்தபோதும் அவனது தலைமைத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஷெய்க்கிடம் சில அதிகாரங்கள் இருந்த போதிலும் தீர்ப்புக்களை அவன் தனது சுய பொறுப்பில் எடுப்பதில்லை. மற்றவர்களின் ஆலோசனைகளை அவன் பெற வேண்டியிருந்தது.
சமாதான காலத்தில் தமது குலத்தவர் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்வதைக் கண்காணிப்பதும், முகாமமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வதும் ஷெய்க்கின் பணியாகும். குலத்திற்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதும் குலங்களுக்கிடையிலான பேச்சு வார்த்தைகளில் குலத்தின் சார்பாகப் பங்குகொள்வதும் செய்யிதைச் சார்ந்ததாகும். எனினும் யுத்த காலத்திற்குரிய தலைமையைக் குலம் வேறொருவருக்கே வழங்கியது. நீதிப் பிரச்சினைகளில் தீர்ப்பளிப்பதற்கு மூதாதையினரின் மரபுகளை நன்கறிந்த போதிய அறிவுள்ள (ஹக்கீம்) ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலைகளுக்கான இழப்பீட்டை அல்லது குருதி நிதியைப் (blood-money) பெற்றுத்தரும் பொறுப்பு செய்யிதுடையதாகும்.
பதவிகளின் தலைவர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள் இருக்கவில்லை. தலைவனை விளிக்கும் கெளரவச் சொற்களும் கிடையாது. தலைவனுக்கும் குலத்தின் சாதாரண அங்கத்தவர்களுக்குமிடையே அந்தஸ்து பேதம் இருக்கவில்லை. பாலைவனப் பழங்குடி சமூகத்தின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் முக்கிய சமூக அலகாக செய்யித் செயல்பட்டார்.
இரொகுவாய்ப் பழங்குடிகளின் ‘சாகெமிற்கும்’ ‘செய்யிதிற்கும்’ ஒற்றுமைகள் அதிகமுள்ளன. குல ஐக்கியம் சாகெமின் கைகளிலிருந்தது. சாகெமிடமோ, செய்யிதிடமோ அவர்களின் ஆணைகளை நிறைவேற்றும் பலாத்காரச் சாதனங்கள் எதுவுமே இருக்கவில்லை. இரொகுவாய்த் தலைவனின் அதிகாரம் தந்தையின் இடத்தையும் தார்மீகத் தன்மையையும் கொண்டிருந்தது என்ற கருத்து செய்யிதிற்கும் பொருந்துவதாகும். அறபுப் பழங்குடிகள் உட்படப் பொதுவாகப் பழங்குடிகள், குல ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதற்கு பலாத்காரமற்ற ஜனநாயக ரீதியான முறைகளிலேயே பெரிதும் தங்கியிருந்தனர்.
68

D GO
அறேபியக் குல அமைப்பில் தலைவனைத் தவிர ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு மஜ்லிஸ் அல்லது சபை இருந்தது. இம் மஜ்லிஸ்களின் ஒருங்கிணைப்பாக மாலா என்ற மேல்சபை உருவாகியது. மாலா முறை, நபிகள் பிறப்பதற்கு முன்னரே நடைமுறையிலிருந்த ஒரு அமைப்பாகும். நூஹ்நபி மற்றும் ஷாஜப் நபி காலத்திலும் கூட மாலா அமைப்புக் காணப்பட்டுள்ளது. அவர்கள் தம் காலத்துத் தலைவர்களுடனும் சபைகளுடனும் பேசிவந்துள்ளார்கள் (பார்க்க, 1984:19,20). இவ்வமைப்பு பொதுவாக நகர்ப்புறங்களில் காணப்பட்டுள்ளது. வெளியாரின் தாக்குதல்களிலிருந்து தமது நகரங்களைப் பாதுகாக்க மாலாக்கள் ஆரம்பத்தில் செயற்பட்டுள்ளன. இஸ்லாத்திற்கு முன்னர் மக்காவில் இது செயல்பட்டது (1984: 19.20).
மக்காவை மையமாகக் கொண்டியங்கிய மாலாவை மக்காவின் அரசாங்க உறுப்பெனக் கருதலாம். மாலாவின் தீர்ப்புக்களைக் குலங்கள் அங்கீகரித்தன. ஒவ்வொரு அங்கத்தவர்களும் அல்லது பிரஜைகளும் மாலாவின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தனர். எனினும் அங்கத்தவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இச்சபைக்கு இருக்கவில்லை. அங்கத்தவர்கள் சுதந்திரமாக இயங்கினர். அங்கத்தவர்களிடையே உயர்வு தாழ்வு காட்டப்படவில்லை. மக்காவின் மாலா எதென்ஸ் நகரத்தின் எக்லேஷியா (Eklesia) என்ற மக்கட் சபையைவிட அதிகளவு ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதென்பது பேராசிரியர் வொட் அவர்களின் கருத்து. (1979: 04)
எக்லேஷியாவில் பேச்சாற்றலுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. இதனால் நாவன்மை உள்ளவர்கள் சபையின் மதிப்பை இலகுவில் பெற்றனர். மேலும் மக்கள் சபையில் பேசுவதற்கு அங்கத்தவர்கள் உரிய தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. சொத்துடைமையோ, விவாகமோ பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளாகவிருந்தன. மாலாவின் உயர்வைக் காட்டும் பேராசிரியர் வொட்டின் கீழ்வரும் கருத்தையும் நோக்கலாம்.
எத்தேனியரின் எக்லேஷியாவை விட மக்காவின் மாலா கூடிய விவேகமுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும் இருந்தது. Լ0Ո 6vn 62Ո6ն எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெறும் பேச்சாற்றலினாலன்றி மனிதனின் உறுதியான திறமைகளின் பேரில் எடுக்கப்பட்டன. (1979 09)
69

Page 38
இலக்கியம்
அறேபியாவில் இஸ்லாத்திற்கு முந்திய இலக்கியம் பெரும்பாலும் கவிதையைத்தனித்துவமாகக் கொண்டது. நாடகம், காவியம் என்பன அவர்களிடத்தில் இருக்கவில்லை. அவர்களின் கவிதைகள் பாடல்கவிதை (Lyrical Poetry) வடிவில் அமைந்தவை. இப்பாடல்கவிதைகள் காவியங்களுக்குரிய நாடகங்களுக்குரிய சில கூறுகளைப் பிரதிபலித்தன என்பர். தொன்மைக்காலத்தில் நாடகங்களின் வளர்ச்சிக்கும் புராணவியலுக்கும் நெருங்கிய சம்பந்தமிருந்துள்ளன. அறேபிய மரபில் சிக்கல்மிகுந்த புராணவியல் இருக்கவில்லை. அறேபியரின், கடின வாழ்க்கை முறையும் பாலைவனச்சூழலும் நாடகம், காவியம் போன்ற கலைகளின் வளர்ச்சிக்கு சாதகமானதாக அமையவில்லை.
அறேபியரின் மனப்பாங்கு மிகக்கூரிய தனிநபர் தன்மை கொண்டது. இதனால் தனிநபர் மனோநிலைகளைக் கூறக்கூடிய சிறுபாடல்வகைகளில் அவர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். இவ்வகையிலான சிந்துகளும், கஸிதாக்களும் அவனுக்குக் கைவந்த கலைகளாகின (Adonis, 1990:14). இவை செவிப்புல வாய்ப்பாட்டுக்கவிதைகள், இவற்றுக்கு எழுத்து வடிவம் இல்லை. பரம்பரைபரம்பரையாக இக்கவிதைகள் வாய்மாறிச் சென்றன. இப்பாடல் கவிதைகளுக்குக் குரல் உயிர் மூச்சாகும். இவை பேச்சாகவோ அல்லது பேச்சுநிலை கடந்ததாகவோ ஆனால் குரலுக்கும் மொழிக்குமிடையிலான செழுமையும் சிக்கலும் நிறைந்த தொடர்பின் பிறப்பிடமாகவோ இருந்தன என்பார் எடொனிஸ் (1990:14) அறபுமக்களின் வழக்காறுகள், மரபுகள், வீரப்பிரதாபங்கள் துயரங்கள், தோல்விகள் முதலியனவற்றை இக்கவிதைகள் வெளிப்படுத்தின.
வாய்வழியாகக் கவிதையைக் கேட்பதையே முந்தைய அறேபியர் தகுந்த வடிவமெனக்கருதினர். அறபு மொழியில் பாடல் என்பது குரலையே வேர்ச் சொல்லாகக்கொண்டிருந்தது. வாய்வழியாய்க் கவிதை இசைத்தலை தனித்துவனமான கலையென அறேபியர் கருதினர்.
வருடாந்த சந்தைகள் கூடும்போது வர்த்தக நடவடிக்கையோடு கவிதை வெளியீடுகளும் வேறு பொழுதுபோக்குகளும் இடம்பெற்றன. மக்காவுக்கு அருகே இருந்த 'உக்காஸ் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்று விளங்கியது. கவிஞர்கள் கவிதைகளை இங்கு வெளியிட்டனர். பேச்சாளர் தமது மொழி அலங்கார வல்லமையைக் காட்டினர். வருவதுரைப்போரும், குறிசொல்வோரும் நடக்க இருப்பன பற்றி எடுத்துரைத்தனர் (பார்க்க 1979:165).
70

வீழ்ச்சி
பழங்குடியினரிடம் காணப்பட்ட பல்வேறு சமூக மரபுகளிலும் வழக்காறுகளிலும் உயர்ந்த பண்பாட்டம்சங்களுக்கும் ஒழுக்கங்களுக்கும் இடமிருந்ததை மோர்கன், எங்கெல்ஸ் போன்றோரின் எழுத்துக்கள் அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. குல அங்கத்தவர் பெற்றிருந்த சுதந்திரம், ஜனநாயக மரபுகள், அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படாத தலைமைத்துவம், இரத்த பந்தத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், குல ஐக்கியம், சகோதரத்துவம் என்பன இவற்றுள் எடுத்துக் காட்டக்கூடிய அம்சங்களாகும்.
அரசு தோன்றுவதற்கு முன்னதாக நாகரிக யுகத்தின் தொடக்கத்திலிருந்த நியாயமானதும் நயமானதுமான பண்புகள் கொண்ட, எளிமையும் அற்புதமுமான அமைப்பென எங்கெல்ஸ் இதனைப் புகழ்ந்துரைத்தார். எனினும் எளிமையும் அற்புதமுமான இவ்வமைப்பு தொடர்ந்தியங்க முடியாத நிலை உருவாகியது. அரசர்கள் அற்ற, போர் வீரர்கள் அற்ற இச்சமூக அமைப்பு அதன் தொன்மை மிக்க ஒழுங்கமைப்பினை இழக்கவேண்டியிருந்தது.
எளிமையும், குறைந்த தேவைகளும், பொதுச் சொத்துக்கள் என்ற உணர்வும், பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் பரோபகாரமும், தாராளத் தன்மையும் மாற்றமடைந்தன. இதனையே பண்டைக்காலப் பழங்குடிச் சமுதாயத்தின் ஒழுக்க மேன்மைகள் வீழ்ச்சியட்ைந்தன என்ற எங்கெல்ஸின் வார்த்தைகள் எடுத்துக் கூறின. மீண்டும் எங்கெல்ஸ் வார்த்தைகளில் கூறுவதாயின் உண்மையில் அந்த சமுதாயம் அழிய விதிக்கப்பட்டிருந்தது. அவர் இதனை இவ்வாறு கூறினார்:
இந்தப் பழங்குடி அழிவதற்கு விதிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. பழங்குடி என்பதற்கு மேலாக அது வளரவில்லை. நிகழ்ந்து கொண்டிருந்த குலங்களுக் கிடையிலான ஒருங்கிணைப்புக்கள் (Confederacy) ஏற்கனவே இதன் வீழ்ச்சியின் ஆரம்பத்தை அடையாளங்காட்டின (1972 97)
71

Page 39
Fou ffigenEJT Suá 4
தொன்மைச் சமயமும் ஹனிப் வாதமும்
" ቁቝጇommxኋm%ኝmmmmmm%ma፦mጿጿኝmኝm<ኋኝ°ፏmኋ*`ጇomጓ¥mm *?:%్య భ2* न шыны **బిళ
விக்ரகவழிபாடுகள்
நபிகள் நாயகத்திற்கு முந்திய அறேபியாவில் 'கடவுட் சமயம் இருக்கவில்லை. நாடோடி அறபிகளிடம் வழிபாட்டுச் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே காணப்பட்டன. மரங்கள், கற்கள், புனிதப் பொருட்கள், கோள்கள், நட்சத்திரங்கள் எனப் பல்வேறு இயற்கைப் பொருட்களில் தெய்வாம்சமோ 'ஆவியோ' இருப்பதாகக் கருதி அவற்றை வழிபட்டனர். எனினும் அவர்கள் வழிபாட்டு அக்கறை குன்றியவர்களாகவும் இயல்பில் ஆன்மீகப் பக்குவமற்றவர்களாகவுமே வாழ்ந்தனர்.
ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த அறபிகளிடம் காணப்பட்ட வணக்க முறைகள் பதவிகளின் சமயத்தைப் பார்க்க உயர்வான சமய வடிவங்களாக விளங்கின. எனினும்பொதுவாகப் பதவிகளினதும் ஏனைய பழங்குடிகளினதும் வணக்க வழிபாடுளில் ஒருமைப்பாடும் ஒழுங்கும் இருக்கவில்லை. குல வேறுபாடுகளினாலும் வாழ்க்கைமுறை வேறுபாடுகளினாலும் மூதாதையர் மரபுகளினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளாகவும் சடங்குகளாகவும் அவை விளங்கின. இதனால் அவர்களது நம்பிக்கைகளும், தெய்வாம்சப் பொருட்களும், தெய்வீக ஆற்றல் பற்றிய கருத்துக்களும் பெரிதும் சிதறிய வகையில் காணப்பட்டமை இயல்பென்றே கூறவேண்டும்.
வளர்ச்சியடைந்த கடவுட் சமயத்திற் காணப்படும் சீரான வணக்க முறைகள் இவர்களின் சமயங்களில் காணப்படவில்லை. பல்வேறு பழம் நம்பிக்கைகளையும், தொன்மை மரபுகளையும் கொண்ட ஒருமைப்பாடற்றவற்றின் தொகுதிகளே அவர்களின் சமயமாகும். தமது நம்பிக்கைக்குரிய வழிபாட்டு பொருட்களை அவர்கள் வணங்கினர் என்பதைவிட அவர்களது வணக்க

முறைகள் பேய்களைச் சாந்தி செய்வதற்குச் சமமாக இருந்தன. (Bertram Thomas, 1937 (1): 15).
சுமேரிய நாகரிகத்திலும் கடவுளுக்குப் பதிலாக மனிதன் பெளதிகப் பொருட்களின் ஆவிக்கு பயந்து வழிபாடுகள் செய்வதையே பெரிதும் காணமுடிகிறது. (Sayce, A, H. 1899; 234) நீரிலோ, வில் அம்புகளிலோ, இடிமின்னலிலோ இருப்பதாக அவன் கற்பித்த ஆவிகள் அவனை அச்சத்திற்குள்ளாக்கின. இவைகளை அவன் வணங்கினான் என்பதைவிட பேய்களுக்குப் பயப்படுவது போல இவைகளுக்கு அவன் பயந்தான் என்பதே பொருந்தும்.
அறேபியரிடையே விக்ரக வணக்கமும் கல்வழிபாடும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அவற்றிற்குச் சொந்தமான தேவதைகளையும் தெய்வங்களையும் விக்ரகவடிவில் பெற்றிருந்தன. விக்ரகங்களை வணங்கியதைப்போல உருவம் செதுக்கப்படாத கற்களையும் அவர்கள் வணங்கினர். அவிந்து போன எரிமலைப் பாறைகளின் துண்டுகளை வணக்கப் பொருள்களாக அவர்கள் கருதியிருக்க வேண்டும், என்ற விளக்கம் இதற்கு உண்டு. மேலும் மரங்களையும் தமது குலத்தினுள் இறந்த பெரியார்களையும் அவர்கள் வழிபட்டனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலிய விண் பொருட்களையும் அவர்கள் வணங்கினர்.
ஆன்மா
தொன்மை அறேபியன் மனித ஆன்மாவை சூட்சுமமான அல்லது காற்றுப் போன்ற பதார்த்தமாகக் கருதினான். இறந்தவர்களிடமிருந்து மூச்சு நின்றுவிடும் என்ற அனுபவத்திலிருந்து இந்த முடிவுக்கு அவன் வந்தான். அதாவது ஆன்மாவை அவன் மூச்சுடன் இனங்கண்டான். இயற்கை மரணத்தின் போது ஆன்மா நாசித்துவாரங்களில் வெளியேறுவதாகவும் வன்முறைச் சாவின் போது காயங்களின் வழியாக ஆன்மா வெளியேறுவதாகவும் அவன் நம்பினான்.
ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டால் அங்கு அதற்குப்பகரமான இரத்தப்பழி அவசியம். கொல்லப்பட்டவன் இரத்தப் பழிக்காகக் காத்திருப்பான்.
சவக்கிடங்கிலிருந்து இவன் வெளவாலின் வடிவில் வெளியேறி பருகத் தாருங்கள்
73

Page 40
(Isqumi) என அவல ஒலமெழுப்பி அலைவான். பழி நிறைவேற்றப்படும்வரை இவ்வோலம் தொடரும் (பார்க்க Inayathulla S. 1963; 1325).
இறந்தவனின் ஆவி மனிதனுள் அல்லது மிருகத்தினுள் புகமுடியும் என அவர்கள் நம்பினர். தமது மூதாதையர்களின் சமாதிகளை அவர்கள்வழிபட்டனர். இறந்தவர்களின் இறப்புக்குப் பிந்திய வாழ்க்கை நலனுக்காக ஒட்டகங்கள் பலியிடப்பட்டன. அநேகமாக தலைவர்களின் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையில் மிருகங்களை கட்டி வைத்து அவற்றைப்பட்டினியில் சாகவிடுவர். அறேபியரின் சிலவகைச் சவஅடக்கச் சடங்குகள் ஆன்மாவுக்கு எதிர்கால வாழ்வுண்டு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது என்று கருதத்தூண்டுகின்றன (1963; 132). எனினும் மரணத்திற்குப் பிந்திய வாழ்வு பற்றியோ ஆன்மா பற்றியோ’ இவர்களிடம் தெளிவான கருத்துக்கள் இருக்கவில்லை. (1967:73)
பல பழங்குடிகளின் குலப் பெயர்களில் மிருகங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை அறேபியரிடையே நிலவிய குலக்குறிமுறைகள் (Totemism) அல்லது விலங்கு வழிபாடு பற்றிய கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன. அஸத் (சிங்கம்), கல்ப் (நாய்), பக்ர் (இளம் ஒட்டகை), ஸஃலப் (நரி), தவ்ர் (எருமை), துப் (கரடி), திப் (ஓநாய்) என்பன இவற்றுள் அடங்கும். அமெரிக்க இரொகுவாய்ப் பழங்குடிகளிடமும் மிருகங்களின் பெயர்களைத் தாங்கிய பல குலங்கள் உள்ளன. ஒநாய், கரடி, ஆமை, மான், பருந்து முதலிய பெயர்களைக் கொண்டு அப்பழங்குடிகள் அழைக்கப்பட்டனர்.
ஒட்டகை இறைச்சியைச் சில முக்கிய தினங்களில் கூடிப்புசித்தனர். இதன் மூலம் ஒட்டகையின் பலம் கிடைக்கும் என நம்பினர். விக்கிரகங்களை மாவினால் செய்து உண்ணும் வழக்கமும் அவர்களிடையே இருந்தது. இது விக்கிரகங்களின் ஆற்றலை மனிதனுக்குத் தருவதாகக் கருதினர்.
சந்திர வாழிபாடு
சந்திரனையும் சூரியனையும் வழிபடுவது தொன்மைக்காலந் தொட்டு நிலவும் வழக்கமாகும். தொன்மை பபிலோனியாவின் முக்கிய நகரான ஊர்(Ur) மக்கள் சந்திரனைக் கடவுளாக வழிபட்டனர். தென் அறேபியாவின் மைனியர்களும் சபாயின்களும் கோள்களையும் நட்சத்திரங்களையும் வணங்கினர். சந்திரக்
74

கடவுள் வணக்கமும் அவர்களிடையே செல்வாக்குடன் காணப்பட்டது. இவர்கள் சூரியனையும் வழிபட்டனர்.
நாடோடிகளான பதவிகளும் சந்திரனை வழிபட்டனர். தமது வாழ்க்கையின் அபிவிருத்திச் சின்னமென சந்திரனை அவர்கள் கருதினர். பாலைவனத்தின் வெப்பத்தைத் தாங்க முடியாத அவர்களின் மந்தைகள் இரவில் பரந்த புல்வெளிகளில் மேய்ச்சல்தேடி அலைவதற்கு சந்திரனின் வருகை தேவையாயிருந்தது. செமித்திய இனத்தவர் நாடோடிகளாக இருந்த காலம் முழுக்க சந்திர வழிபாடு அவர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. கால் நடைகளின் மேய்ச்சலுக்கும் பாலைவனவாசி சந்திரனை நம்பியிருந்தான். தாவரங்களையும் மேய்ச்சல் நிலத்தையும் சூரியன் சாகடித்து விடுவதாக அவன் கருதினான். சந்திர வழிபாடு பொதுவாக ஆயர் சமூகத்தை அடையாளப்படுத்துவதாகக் கருதுவர்.
சந்திரப் பெருநாள்கள் கொண்டாடுவது பொதுவாக எல்லாத் தொன்மைச் சமூகங்களிலும் காணப்படுவதாகும். எனினும் செமித்தியரிடத்தில் இது அதிக அளவில் காணப்பட்டது. புதிய பிறையின் பிறப்பைக் கொண்டாடுவது அறபு மக்களிடம் தொன்மைக் காலந்தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். மிருகங்களைப் பலியிட்டு சந்திரனின் வரவை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொதுவாக இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவின் சமயநிலை பற்றி தெளிவான கொள்கைகள் இதுவரை முன்வைக்கப்படவில்லை. வளர்ச்சியடைந்த சமயக் கோட்பாடுகள் அறேபியரிடம் இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. தொன்மைச் சமூகங்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையுமே அவர்களின் சமய முறைகள் வெளிப்படுத்தின. புனிதப் பொருள் வழிபாடு (Fetishism) ஆவியுலகக் கோட்பாடு (Animism) குலக்குறிமுறை (Totemism) விக்கிரக வழிபாடு, மூதாதையர் வழிபாடு முதலியவற்றையே அவர்களின் சமயமாகக் காண முடிகிறது.
ஏகத்துவம்
எனினும் சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் பற்றி அறபு மக்களிடம் குறிப்பாக செமித்திய இனத்தாரிடம் கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. 9 (5 கண்ணோட்டத்திற் பார்ப்பதாயின் ஓரிறைக் கோட்பாடு (Monotheism) அறபு தீபகற்பத்திற்குப் புதியதன்று. ஒரிறைக் கோட்பாட்டைப் போதித்த கைவிடப்பட்டுப் போன பழைய LDL அம்மண்ணிற்குச் சொந்தமாயிருந்தது.
75

Page 41
மெஸெபொட்டேமியாவிலிருந்து மேற்கு அறேபியாவில் குடியேறிய நபி இப்றாஹீம் (ஏப்ரஹாம்) அங்கு ஏகத்துவத்தை நிலைநாட்ட முற்பட்டார். ஒரிறைவாதமும் மனித குலம் பற்றிய பொதுமையான சிந்தனைகளும் ஒழுக்கக் கருத்துக்களும் அவர் போதனைகளிலிருந்தன. மக்காவின் கஃபாவோடு ஒன்றிணைத்து இச்சிந்தனைகளை அவர் வளர்க்க முயன்றார்.
நபிகள் பிறப்பதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இப்றாஹீம் விட்டுச் சென்ற ஓரிறைவாதத்தை அறபுத் தீபகற்பத்தில் பல தீர்க்கதரிசிகள் போதித்து வந்தனர். தென் அறேபியாவின் ஆத் சமூகத்தவரிடையேயும் ஹிஜாஸின் ஸமூத், சுஹைப் சமூகத்தாரிடையேயும் தோன்றிய ஹூது, சாலிஹ் போன்ற தீர்க்கதரிசிகள் இப்பணியைச் செய்தனர். எனினும் அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இணைவைத்தலும், உருவவழிபாடுமே செல்வாக்குடன் வளர்ந்ததோடு இப்றாஹிமியம் உருவான கஃபா ஆலயம் உருவ வழிபாட்டிற்கும் பல்தெய்வ வணக்கத்திற்குமான மையநிலையமாக மாறியது. நபிகள் பிறப்பதற்கு சற்று முன்னர் கூட கஃபாவில் உச்சநிலையில் இருந்தது இவ்வகை வழிபாடுகளேயாகும்.
மக்காவின் சமயம்
கஃபா ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயுமாக குறைஷியருக்குப் பல தெய்வங்கள் இருந்தன. இவற்றுள் ஹாபல் பெரிய தெய்வமாகும். இது செந்நிறக் கருங்கல்லில் வடிக்கப்பட்டிருந்தது. கஃபாவினுள் வைக்கப்பட்டிருந்த ஹபல் சிலையை எல்லா அறேபியரும் வழிபட்டனர்.
கஃபாவின் சுவர்களில் தேவதைகளினதும் திருத்துTதர்களினதும் உருவங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றுள் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயில், கன்னி மேரியும் குழந்தையும் முதலிய ஓவியங்களும் அடங்கியிருந்தன. இவை தவிர கஃபாவிற்குள் 360 சிலைகள் இருந்தன. இது பற்றிக் குர்ஆனும் குறிப்பிடுகிறது. வணக்கத்திற்கெனப் புனித கல்லும் கஃபாவில் இடம் பெற்றிருந்தது.
வட அறேபிய நகரமான பெற்ராவின் தேசியக் கடவுள் டுசாரஸ் ஆகும். இது வளத் தெய்வம் என்பர். அதன் மனைவியாக அல்லாத் (Alat) கருதப்பட்டது.
மற்றொரு நகரான பல்மைராவில் செமித்திய நாகரிகத்துக்குரிய பால் (Bal) வணங்கப்பட்டது. பால் சூரியக் கடவுளோடு தொடர்புபட்டதாகும். மக்காவாசிகள்
76

அல்லாத், அல் மனாத், அல் உஸ்ஸா போன்ற தெய்வங்களை வழிபட்டனர். இத்தெய்வங்களை இவர்கள் அல்லாஹ்வின் குழந்தைகள் எனக்கருதினர்.
பழைமையான தெய்வங்களுள் மனாவும் (Manah) ஒன்றாகும். அவர்கள் தமது குழந்தைகளுக்கு அப்துல் மனாப், செய்யித் மனாப் என்று பெயரிட்டனர். அல்-லாத் (Al-lat) மற்றொரு தெய்வம். குறைஷிக் குலத்தவரிடத்தில் இதற்கு அதிக செல்வாக்கு இருந்தது. இத்தெய்வத்தின் பெயரைத் தமது குழந்தைகளுக்கு இட்டனர். தாக்கீப் என்ற பழங்குடியினர் இத் தெய்வத்தின் பாதுகாவலராக விளங்கினர். இப்பழங்குடியினர் இஸ்லாத்தில் இணையும் வரை மக்காவாசிகளும் அறேபியரும் இதனை வழிபட்டனர்.
அறேபியரிடையே குறிப்பாக மக்காவாசிகளிடையே புகழ்பெற்றிருந்த மற்றொரு தெய்வம் அல்-உஸ்ஸாவாகும் (Al-Uzza). தமது குழந்தைகளுக்கு அல்-உஸ்ஸா எனப் பெயரிட்டனர். குறைஷிகள் கஃபாவைச் சுற்றிவலம் வருகையில் அல்-உஸ்ஸாவின் பேரில் மந்திரங்களை ஜெபித்தனர். அல்லாத், அல்-உஸ்ஸா, அல்-மனா ஆகிய மூன்று தெய்வங்களும் மக்காவாசிகளிடையே அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தன. விக்ரகங்களாக அமைக்கப்பட்டிருந்த இம் மூன்றும் பெண் தெய்வங்களாகும். இஸ்லாத்தின் தோற்றத்தின் போது குர்ஆன் இத் தெய்வங்களை நிராகரிக்குமாறு விசுவாசிகளுக்கு கட்டளையிட்டது.
இவைகளெல்லாம் (லாத் உஸ்ஸாமனாத்) நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி (உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அவை தெய்வங்கள் என்ப) தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதோர் ஆதாரத்தையும் முந்திய எந்த வேதத்திலும் இறக்கிவைக்க வில்லை. அவர்கள் (தங்கள்) மனோ இச்சையையும் (வீண்) சந்தேகத்தையும் பின்பற்றுகின்றனரேயன்றி வேறன்று. (அத்,33; 23)
மக்காவில் விக்ரக வழிபாடு, உருவம் செதுக்கப்படாததும் செப்பனிடப் படாததுமான கல்வழிபாடு உட்பட, சபாயிய வழிபாடான கோள்களையும் நட்சத்திரங்களையும் வழிபடும் வழக்கதையும் கொண்டிருந்தது. மக்காவின் பொதுவான சமயப்பண்புகளை வெளிப்படுத்தும் மத்திய நிலையமாக கஃபா விளங்கியது. கஃபாவிலிருந்த கறுப்புக்கல் மக்காவிலும் பொதுவாக
77

Page 42
அறேபியாவிலும் தொன்று தொட்டு நிலவிய கல்வழிபாட்டைப் பிரதிபலிப்பதாகும். கஃபாவில் நட்சத்திர வழிபாட்டைப் பிரதிபலிப்பனவும் இடம் பெற்றிருந்தன. யூத, கிறிஸ்தவ ஓவியங்களும் அங்கு வரையப்பெற்றிருந்தன.
அனைத்துச் சமய, வழிபாட்டுக் குழுக்களையும் குலங்களையும் கவரும் ஐக்கிய சமய மத்திய நிலையமாக கஃபா விளங்கியது. அறேபியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் அதன் எல்லைக்கு அப்பாலிருந்தும் மக்கள் இப்புனித ஆலயத்தைத் தரிசிக்க மக்காவிற்கு வந்தனர். பெற்ரா, ஹீரா, யெமன், ஹழரமவுத் முதலிய இடங்களிலிருந்தும் யாத்திரிகர் வந்தனர். மக்காவின் சமயம் பரந்ததன்மையும் நெகிழ்ச்சியுமுடையதாக இருந்தமையை கஃபாவின் சமயநிலை பிரதிபலித்தது. கஃபாவின் வழிபாடுகளில் தொன்மைச் சமூகங்களின் செல்வாக்கு தொடர்ச்சியாக நிலவியது. நபிகள் காலம்வரை நீடித்த அதன் பாரம்பரிய வழிபாடுகளில் நபேத்திய சமயத்திற் காணப்படும் வழிபாடுகளுக்கு ஒப்பான விடயங்கள் பலவும் இடம் பெற்றிருந்ததாகக் கருதுவர்.
நபிகள் நாயகத்தின் காலத்தில் பண்டைய உருவ வழிபாட்டுவாதமும், பல தெய்வ வழிபாடும், விக்கிரக ஆராதனையும் அவை பெற்றிருந்த முன்னைய செல்வாக்கை இழந்து கொண்டிருந்தன (1888:23). புதிய சூழலுக்கு மக்காவின் பண்டைய உருவ வழிபாட்டுவாதம் பொருந்தாதிருப்பதை மக்காவாசிகள் உணரத் தொடங்கினர். உண்மையில் தொன்மை உருவ வழிபாட்டுவாதம் காலத்திற் கொவ்வாததாகிக் கொண்டிருந்தது (1905:24).
ரோம சாம்ராஜ்யத்துடனும் பாரசீகத்துடனும் வேறு முன்னணி நகரங்களுடனும் தொடர்புகொண்டிருந்த மக்காவாசிகள் தமது தொன்மைச் சமய முறைகள் கேலிக்குரியதாகிவருவதை அறிந்தனர். மேலும் இவற்றிற் காணப்பட்ட அநாகரிகமான அம்சங்களை சிலர் சுட்டிக் காட்ட முற்பட்டனர் (1904:24). சிலை வணக்கம் அறேபியாவில் ஏற்கெனவே கேள்விக்குரியதாகி விட்டது (1988:23).
யூத சமயத்தின் ஒரிறைக் கோட்பாடு யூதக் குடியேற்றங்களினாலும் யுத்தங்களினாலும் அறேபியாவில் ஊடுருவியது. இஸ்லாத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக யூதர் அறேபியாவில் குடியேறி வந்துள்ளனர். ரோமரின் தாக்குதல்களுக்கு அஞ்சிப் பல யூதக் குலங்கள் அறேபியாவிலும் குடியேறின. வட அறேபியாவில் யத்ரிப் இவ்வகை யூதக் குடியேற்றங்கள் அதிகமாகக் காணப்பட்ட நகரமாகும். தென் அறேபியாவில் யூத சமயத்தைப் பரப்புவதற்கு யூதர்கள் பெரிதும்
78

முயன்றனர். தென் அறேபியாவில் பல சக்தி மிக்க குலங்கள் யூத சமயத்தைத் தழுவியிருந்தன.
யூத சமயமும் கிறிஸ்த்தவ சமயமும் அவை ஊடுருவிய அறபுப் பிரதேசங்களில் தொன்மைச் சமயங்களின் வழிபாடுகளையும் பல தெய் வணக்கத்தையும் எதிர்த்தன. இதுவரை விக்ரக வணக்கம், கல்வழிபாடு போன்றவற்றினால் மக்கா பெற்றிருந்த கெளரவத்தை இது பாதித்தது. இது எவ்வாறாயினும் யூதமதமும் கிறிஸ்தவமும் அங்கு வேரூன்றிப் பரவ முடியாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கா வாசிகளின் தொன்மைச் சிலை வணக்கமும் பல்தெய்வ வழிபாடும் தொடர்ந்தும் சக்தியுடன் செயல்பட முடியாத நிலை உருவாகியது. இவற்றிற்கு எதிரான கருத்துக்கள் ஆங்காங்கே எழுச்சிபெறத் தொடங்கின. பெரிதும் தெளிவற்றதாயிருந்த போதும் ஒரு கடவுள் கொள்கையை ஆதரிப்பதற்கும் அதை அறிவதற்கும் சிலர் தீவிரமாக முயன்று வந்தனர். (Philip, K, Hitti, 1937; 108) ஏகத்துவ வாதத்தை அடிப்படையாகக் கொண்ட இவர்களது சமயச் சீர்திருத்தச் சிந்தனைகள் 'தீன் ஹனீபிய்" எனப்பட்டது.
தொன்மைச் சமூக உறவுகள் சிதைந்து வர்க்க உறவுகளைக் கொண்ட புதிய சமூக மாற்றத்தின் வாயிலில் மக்கா நின்றது. தொன்மைச் சமயக் கட்டமைப்பில் மாற்றங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதை புதிய சமய சிந்தனைகள் உணர்த்தின. பல்தெய்வ வழிபாடு ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்ததையும் அறேபியாவில் அதன் இடத்தை ஒரிறைக்கோட்பாடு நிரப்ப முயல்வதையும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு சற்று முந்திய சமய நடவடிக்கைகள் உணர்த்தின (1969:94).
ஹனீப்வாதம்
இஸ்லாம் தோற்றம் பெறுவதற்கு சிறிது முன்னர் ஹனீப்வாதிகளின் நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது. நேர்மையும் ஆர்வமுமுள்ள சிறு குழுவினர் விக்ரக வழிபாட்டை எதிர்த்துக் குரல் எழுப்பியதோடு மக்காவின் ஆலயங்களில் சிலைகள் இருப்பது தெய்வீகத் தூய்மையை இழிவுபடுத்தும் செயலெனவும் கூறினர். ஹனீப்வாதிகளின் பிரதான கோட்பாடு
79

Page 43
ஒரிறைவாதமாகும். (Monotheism) ஏற்கெனவே யூத, கிறிஸ்த்தவ சமயங்கள் ஒரிறைவாதத்தைப் போதித்து வந்தபோதும் ஹனீப்வாதிகள் இச்சமயங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கவில்லை.
மக்காவின் தொன்மை வழிபாட்டுமுறைகளை தாக்கிவந்தமையினாலும் வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறி வந்தமையாலும் மக்காவாசிகள் இக்குழுவினரை ஒதுக்கிவைத்தனர். (1989:27) ‘ஹனீபிய் (Hanift) என்ற பதம் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. முஸ்லிம் அறிஞர்களும் தமக்கிடையில் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இது, மேற்கத்திய அறிஞர்களுக்கும் பொருந்தும். இதன் பொருள் பற்றிக் குர்ஆன் விரிவுரையாளர்களிடமும் கருத்தொற்றுமை இல்லை. (Mahmoud M. Ayoub, 1984:164 Vol.I)
தபாரியின் கருத்துப்படி ஹனீப் (Hanifi) என்ற பதம் புனித யாத்திரைச் சடங்குகளை (rites ofpilgrimage) நிறைவேற்றுபவர்களைக் குறிப்பிடுவதாகும் எனச் சிலர் கூறுகின்றனர். முஜஹ்ஹித் ஹனீப் என்றால் யாத்திரிகன் என்றார்’ இப்னு அப்பாஸின் பிரமாணங்களும் இதனை வலியுறுத்துவதாக மஹ்மூத் எம். ஐயூப் எழுதுகிறார். 'இஸ்லாத்திற்கு முன் ஜாஹிலியாக் காலத்தில் புனித யாத்திரையை நிறைவேற்றுபவர்கள் 'ஹுனபாஉ' (ஹனீப் என்பதன்பன்மை) என அழைக்கப்பட்டனர். இதனாலேயே இறைவன் கீழ்வரும் வாக்கியத்தை இறக்கினான்: 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காது அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து வழிபட்டுவிடுங்கள் (ஹனிபா)(குர், 22:31) இப்றாகீஹீமின் வழிமுறைகளை (சுன்னா)ப் பின்பற்றுபவரே ஹனீப் ஆவர் எனச் சிலர் கூறினர். இப்றாஹீமின் சமயம் அல் ஹனபிய்யா என அழைக்கப்பட்டது. அல்- சுத்தியின் ஆதாரத்தைக் கொண்டு இறைவனில் மாத்திரம் நம்பிக்கை கொண்டவன் எவனோ அவனே ஹனீப் என அல்தபாரி குறிப்பிடுகிறார். (பார்க்க, 1984: 164, Vol I)
நபி எனத் தன்னைப் பிரகடனப்படுத்திய முஸைலமாவுடனும் அவரது கோத்திரத்துக்குரிய பெயருடனும் இச் சொல்லைத் தொடர்புபடுத்த டி. எஸ். Lost f(sitesugi (D. S. Margoliouth) typusirpiti.
ஹனிபிய் (Hanifi) என்றால் புரட்சி என்று பொருள். ஹிப்றுா,சிரியெக் மொழிகளில் இதன் பொருள் நம்பிக்கையற்றவர் என்பதாகும். பிரிவினைவாதிகள் ஒப்புக் கொள்ளாதவர்கள்’ என்ற பொருளும் இதற்கு உண்டு. ஹனீப் வாதிகளின்
80

எதிரிகள் இவ்வாறுதான் அவர்களை அழைத்தனர். (பார்க்க E. A. Belyaer 1969:94) ஒரிறை வாதிகளுக்குச் சிலை வணக்கவாதிகள் இட்டபெயராக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அல்லாமா ஷிப்லி நூஃமானி 'தீன் ஹனிபிய்" என இது ஏன் அழைக்கப்பட்டதென்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க. 1979: 113).
ஹனீப் (Hanif) என்ற பதத்தை, வரலாற்றுரீதியில் ஆய்வு செய்துள்ள செர். சார்ள்ஸ் ஜே. லியால் (Sir Charles). Lyal) இதன் தோற்ற மூலத்தை அறிவது கடினமானதெனக் கருதுகிறார்: "தோற்றத்தை விளக்க முடியாதவாறு, குர்ஆனிலும் பழைய கவிதைகளிலும் காணப்படும் பல சொற்களைப் போன்றதே ஹனீப் என்ற பதமுமாகும். அப்பதம் ஏறத்தாழ ஒரு சமயத்தைக் குறிப்பதை நாமறிவோம். அதன் தோற்றத்தைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது (Charles J. Lyal, 1903: 781) . எனினும் ஓரிறைக் கோட்பாட்டையே ஹனிப் வாதம் தனது கடவுள் கோட்பாடாகக் கொண்டிருந்தது என்பது பற்றி அபிப்பிராய பேதங்களில்லை (Charles J. Lyal. 1903:773). ஏனைய குர்ஆன் வியாக்கியானிகள் 'ஆப்ரஹாமின் சமயமே அல் ஹனீபிய்யா எனக் குறிப்பிடுகின்றனர் (1984:64).
ஹனீப் வாதத்தை இப்றாஹீமின் சமயத்தை தழுவிய கொள்கை எனக் கருதலாம் . ஹனிப் வாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் நேராகவோ மறைமுகமாகவோ இப்றாஹீம் நபியின் ஏகத்துவ இறைகோட்பாட்டையே தமது கொள்கையாக ஏற்றிருந்தனர். இப்னு இஷாக்கின் பதிவுப்படி வறக்கா இப்னு நவ்பல், அப் அல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், உத்மான் இப்னு ஹ"வைறித், ஸையித் இப்னு அம்று இப்னு நுபைல் ஆகியோர் இக்குழுவின் முக்கியஸ்தர்களாவர். இவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்களாகும். வறக்கா நபிகளின் முதல் மனைவி ஹதீஜா அவர்களின் பெற்றோரின் உடன் பிறந்தாரின் பிள்ளை (Cousin) யாவார். (1978:111: Vol I) இரண்டாவது நபரான உபைதுல்லா இப்னு ஜஹ்ஷ் அப்துல் முத்தலிபின் மகள் உமைமாவின் மகனாகும் அதனால் அவர் நபிகளின் பெற்றோரின் உடன் பிறந்தாரின் பிள்ளையாகும்’ (1903:772) ( பார்க்க, குறிப்பு:06).
இப்றாஹீமின் சமயத்தை ஆராய்வதற்காக அல்லது சமயக் கல்விக்காக ஸையித், வறக்கா உட்படச் சில மக்காவாசிகள் சிரியாவிற்குப் பயணம் செய்தனர். 'சஹீஹ் புகாரியின் ஆதாரத்தின்படி ஸையித் ஒரு முறை புனித கஃபாவின் முன்னால் நின்று "ஒ குறைஷிகளே இப்றாஹீமை நான் பின் பற்றுவதை நீங்கள்
81

Page 44
ஒருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார் (1979:112:vol). அவரது மகன் செய்து பின் ஸைய்த் மிகச் சிறந்த முஸ்லிம்களில் ஒருவராக விளங்கினார். இப்னு இஷ்ஹாக்கினால் அவரது சமய இலட்சியங்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: "அவர் விக்ரகவணக்கத்தைக் கை விட்டார். தானாக இறந்தவற்றையும், இரத்தத்தையும், தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றையும் அவர் உணவாகக் கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொண்டார். பெண்குழந்தைகள் புதைக்கப்படுவதை அவர் தடுத்தார். ஏப்ரஹாமின் (இப்றாஹீம்) கடவுளையே தான் வணங்குவதாகப் பிரகடனம் செய்தார்.
பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் அறோபிரியரின் வழக்கத்தை முதலில் கண்டித்தவர் ஸையிதாகும். பெண்குழந்தை ஒன்று கொல்லப்பட இருப்பதாக அவர் அறிந்தால் உடனே அக்குழக்தையின் பெற்றோரைச் சந்தித்து அந்தக் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அதனை வளர்க்கும் பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் அவர் கூறுவது வழக்கம் (1979:12).
தாயிஃபின் தலைவரும் புகழ்பெற்ற கவிஞருமான உமையா இப்னு அபி சல்ட் இக்காலப் பகுதியில் விக்கிரகவணக்கத்தை எதிர்த்துக் குரலெழுப்பியவர்களில் மற்றொருவராகும். உமையா பத்ர் யுத்தகாலம் வரை வாழ்ந்தார். உருவவழிபாட்டுக் காலத்தில் அவர் புனித வேதங்களைக் கற்றிருந்ததோடு உண்மையான இப்றாஹீமிய நம்பிக்கையையும் ஏற்றிருந்தார். இவர் இஸ்லாத்தைத் தழுவவில்லையாயினும் இவர் இயற்றிய நூற்றுக்கும் அதிகமான ஈரடிச் செய்யுள்களை விருப்பமுடன் செவியுற்று வந்த நபிகள் நாயகம் உமையா, இஸ்லாத்தை ஏற்பதற்கு மிக அருகாமையில் வாழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் (1979:12). உமையா உட்பட மேலும் சுமார் ஐந்து ஹனீப் வாதிகளின் பெயர்கள் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஹிஜாஸ் மாநிலத்தையும் மேற்கு அறேபியத் தீபகற்பத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிலை வணக்க எதிர்ப்பாளர்களாகவும் இப்றாஹீமின் கடவுளை ஏற்றவர்களாகவும் விளங்கினர். இவர்களுள் சிலர் துறவி நடைமுறைகளிலும் ஈடுபட்டனர். (1903, 774) (பார்க்க, குறிப்பு:06,07)
ஹனீப்வாதிகளுக்கும் நபிகளுக்குமிடையிலிருந்த தொடர்புகள் பற்றி
திருப்தியான தகவல்கள் இல்லை, எனினும் இக்குழுவினரின் ஒரு சிலருடன் நபிகளுக்குத் தொடர்பிருந்தது பற்றிச் சில பதிவுகள் தெரிவிக்கின்றன. சஹீஹ்
82

புகாரியின் பதிவின் படி நபித்துவத்தை அடைவதற்கு முன்னர் ஸையிதுடன்
நபிகளுக்குத் தொடர்பிருந்ததாக அறிய முடிகிறது (1979: 112). ஹதீஜா
நாயகியை நபிகள் மணந்ததன் பின்னர் ஹனீப்வாதத்தின் சக்திமிக்க
தலைவரும் ஹதீஜா நாயகியின் மைத்துணருமான வறக்கா இப்னு நவ்பல்
மூலமாக ஹனிப்வாதத்தை நபிகள் தெரிந்து கொண்டிருக்கலாம் என்ற கருத்தும்
முன்வைக்கப்படுகிறது. மேலும் அறேபியாவின் ஏனைய குலங்களைவிட
குறைஷிக் குலத்தைச் சேர்ந்த நபிகளின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் தமது கருத்துக்களில் இப்றாஹீம் நபியின் இறைகோட்பாட்டைப் பெரிதும்
அண்மித்திருந்தார் (1989:27) என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
ஹனீப் வாதிகள் ஓரிறை வணக்கத்தை ஆதரித்தனர். தேசியவாதம், நாட்டுபற்று என்பனவற்றையும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும் மக்காவின் மக்கள் ஹனீப்வாதிகளின் புதிய சிந்தனைகளை ஏற்கவில்லை. குறிப்பாக குறைஷியர் இவர்களை எதிர்த்தனர். புதிய கொள்கைக்கு குறைஷியர் காட்டிய எதிர்ப்பில் சமயப்பிரச்சினை மட்டுமன்றி பொருளாதாரப் பிரச்சினையும் அடங்கியிருந்தது. தொன்மை உருவ வழிபாட்டுவாதமும் பலதெய்வ வணக்கமும் மக்காவின் பொருளாதாரத்தோடு ஒன்றிணைந்திருந்தமையினால் புதிய சமய சிந்தனை இதனைத் தகர்க்கக் கூடுமென அவர்கள் அஞ்சினர். எல்லாப் பழம் வழிபாடுகளினதும் மத்தியநிலையமாக கஃபா பெற்றிருந்த கெளரவமும், மக்காவில் வளர்ந்து வந்த சாதகமான வர்த்தகச் சூழலும் பாதிக்கப்படுமென குறைஷியர் உணர்ந்திருந்தனர்.
ஹனிப் வாதிகள் பொதுவாக சமயக் கோட்பாட்டில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். மக்காவில் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை அவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை. மக்காவை அன்று வாட்டி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வுகளிருக்கவுமில்லை.
ஹனீப்வாதிகள் முன்வைத்த உலக முடிவு, நரக வேதனை போன்ற சமயக் கருத்துக்கள் சமய விடயங்களில் பெரும்பாலும் ஐயவாதிகளாயிருந்த அறபு மக்களை அதிகம் கவரவில்லை. (1969:96). புதிய சமய சிந்தனை மட்டுமல்ல, அன்றைய சமூகத்தை வேதனையிலாழ்த்தியிருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தேவையாக இருந்தன. இதனால் மனிதனின்
83

Page 45
விடுதலை மரணத்தின் பின்னர் வருவதே என்ற அவர்களின் சமய வாக்குறுதி அறபு மக்களிடத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இது எவ்வாறெனினும், என்றோ ஒரு காலத்தில் அறபுத் தீபகற்பத்தில் நிலவிய தொன்மைமிக்க ஏகத்துவ வாதத்தின் பழைய சுவடுகளில் செல்வதற்கு ஹனீப்வாதிகள் முன்வந்தனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
நபி இப்றாஹிம்
“தீன் ஹனீபிய்” இன் அடிப்படை இப்றாஹீம் நபிகள் போதித்த சமயமாகும். குறிப்பாக இப்றாஹிம் நபியின் ஒரிறைவாதத்தை ஹனிப்வாதிகள் தீவிரமாகப் பின்பற்றினர்.
மத்திய கிழக்கின் உலகச் சமயங்கள் அனைத்தும் தமது முன்னோடிச் சமயத் தலைவராகவோ, தந்தையாகவோ இப்றாஹீம் நபியையே ஏற்றுள்ளன. நபிமூஸா, நபி ஈசா, நபி முஹம்மத் ஆகியோரின் நிறுவனங்களாகப் பின்னர் வடிவமைந்த மூன்று சமயச் சிந்தனைப் பிரிவுகளின் ஊற்றாகவும் மூலமாகவும் இப்றாஹீம் விளங்கியுள்ளார்கள். (1977:219).
பழைய ஏற்பாடு (Old Testament) got 5s 666T இறைநம்பிக்கையையும் குணப்பண்புகளையும் மிக உயர்வாகப் போற்றுகின்றது. அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக்குவோம்’ என ஆண்டவர் இப்றாஹீமுக்கு வழங்கிய வாக்குறுதியை ஆதியாகமத்திற் காணமுடியும். ஆதியாகமம் மேலும் இவ்வாறு உரைக்கின்றது.
ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி நாம் உன்னைப் பெருங்குடியாய்ப் பெருகச் செய்து உன்னையும் ஆசீர்வதித்து உன்பெயரையும் மேன்மைப்படுத்துவோம். நாம் எல்லாம் வல்ல கடவுள் நீநமக்கு முன் நடந்து உத்தமனாய் யிரு. நீதிரளான மக்களுக்குத் தந்தையாவாய் அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக்குவோம்.
84

கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல கடவுளில் நம்பிக்கை வைத்து கடவுளைத் தேடும் எல்லாச் சமூகத்தவருக்கும் ஏப்ரஹாம் (இப்றாஹீம்) தந்தையாவார் என கிறிஸ்த்தவ இறையியல்வாதிகள் கூறுகின்றனர். (Maria Mathini Carlo, 1992: 13) uluu 6Jhumrů sir (New Testament) q6afg5 மத்தேயுவில் காணப்படும் 'ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்' என ஆரம்பிக்கும் வம்சத் தொடர்ச்சியின்படி ஏப்ரஹாமை ஆன்மீக நிலையில் மட்டுமல்ல உண்மைத் தந்தையாகவே கொள்ள முடியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் (1992:13).
நபி இறாஹீமைத் தூய விசுவாசி என்றும் உண்மையான சமயத்தைப் பின்பற்றியவர் என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
நிச்சயமாக மனிதர்களில் இப்றாகீமுக்கு மிக நெருங்கியவர் எவரென்றால் அவரைப் பின்பற்றியோரும் இந்த நபியும் இவரை விசுவாசம் கொண்டவர்களும்தான் (அத், 367, 68) என்பது அல்குர்ஆனின் வாக்கு,
இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயிலின் வம்சத் தொடர்ச்சியென்றே முஹம்மது நபிகளை இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. மூன்று அறபு இனப் பிரிவுகளில் இஸ்மாயிலிகள் ஒரு பிரிவினராகும். முஹம்மது நபிகளும், இஸ்லாத்தின் வரலாறும், நீண்ட காலத்துக்கு முன்னர் இப்றாஹீம் நபி போதித்த சமயத்தைக் கடைப்பிடித்த அவரது மகன் இஸ்மாயிலின் வம்சத்துடன் தொடர்பு பட்டதாகும் (1979:15). நபி இஸ்மாயில் அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நிச்சயமாக அவர் (இஸ்மாயில்) உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபிகளாகவும் இருந்தார். அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்துக் கொடுத்து வரும்படியும் ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். (அத்
19:54, 55).
இப்றாஹீம் என்பது ஹிப்று மொழிப் பெயராகும். அவர் ஹிப்றுா பழங்குடியிற் பிறந்தவர். மெஸெபொட்டேமியாவின் 'ஊர்' (Ur) நகரம் அவரது
85

Page 46
பிறப்பிடமாகும். அப்போது அங்கு செமித்திய சால்டியரின் (Chaldeans) ஆதிக்கம் நிலவியது. செமித்தியச் சால்டிய வழிபாட்டு முறைகளையும் ஒழுக்கத்தையும் அவர் தாக்கினார். அவர்களது நட்சத்திர, சூரிய மற்றும் சிலை வணக்கங்களை பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்றும் போலியானவை என்றும் வெளிப்படையாக அவர் வாதிட்டார். ‘ஒரு இறைவனை வணங்குமாறும் நேர்மையைக் கடைப்பிடிக்குமாறும் அவர் போதித்தார்.
இப்றாஹிமின் ஒரிறைவாதப் போதனை ஒரு புதிய சிந்தனையின் அல்லது சமயப்பிரிவின் தொடக்கமாக அமைந்தது. ஏனெனில் சால்டியச் சூழலின் ஆதிக்கத்தினுள் வாழ்ந்த இப்றாஹீம் பல தெய்வவாதியாகவோ, என்லில் வழிபாட்டாளராகவோ, சூரியவழிபாட்டாளராவோ அல்லது சிலை வணக்கத்தவராகவோ இருந்திருக்க வேண்டும். மாறாக இப்றாஹீம் ஒரிறைவாதத்தைப் போதிப்பவராக இருந்தார். சோதாம் நாட்டு மன்னனுடன் உரையாடும்போது தனது ஏகத்துவக் கோட்பாட்டை இப்றாஹிம் பின்வருமாறு வெளிப்படுத்தினார். விண்ணையும் மண்ணையும் ஆளும் அதி உன்னத கடவுளுக்கு என் கையை உயர்த்தி (ஆதியாகமம், 14:22) என அதைப் பழைய ஏற்பாடு கூறுகிறது. இதே தன்மையிலான நபி இப்றாஹீமின் ஏகத்துவக் கருத்தை நபிஇப்றாஹீமின் கூற்றாக அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அந்த ஒரு) வனின்பாலே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றேன். நான் (அவனுக்கு எதனையும்) இணைவைப்போன் அன்று ’ (அத் 6:79).
இப்றாஹீம் நபிக்கு, ஒரு வயதாக இருக்கும் போது இறைவனுடன் தொடர்பு கொள்ளும் அருள் கிடைத்ததென்றும், சிலர் 3 அல்லது 48 வயதில் இவ்வருள் கிடைத்தென்றும் கூறுகின்றனர். மற்றொரு வரலாற்றுக் குறிப்பு 14 வயதில் மனிதனின் அக்கிரமங்களைக் கண்டிக்க ஆரம்பித்தார் என்றும் போலியான விக்ரக வணக்கத்திலிருந்து தனது தந்தையைத் தடுக்க முற்பட்டார் என்றும் கூறுகிறது (1992:23). இப்றாஹீம் நபியின் ஒரிறைவாதத் தோற்றம் பற்றிய ஹெலனிய பிலோ (Philo) வின் கருத்து இன்னொரு கோணத்தில் அமைந்துள்ளது. ‘ஏப்ரஹாம் சால்டிய மரபில் தோன்றியவர், வானசாஸ்திரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட காலப்பிரிவு அது. பிரபஞ்சத்தைப் படைத்தவன் ஒருவனே என்ற கருத்தை இச்சூழல் அவருக்கும் வழங்கியிருக்க வேண்டும். இதனூடாகவே பிரபஞ்சத்தைப் படைத்தவன் ஒரு இறைவன் என்ற கருத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும்.
86

இது எவ்வாறெனினும் நபி இப்றாஹீம் புதிய மார்க்கத்திலிருந்தார் என்பதும் அந்த யுகம் ஏற்றுக்கொள்ளவிரும்பாத ஒரு கோட்பாட்டின் வெற்றிக்காக அவர் போராடினார் என்பதும் தெளிவு. தனது தந்தையை நோக்கி இப்றாஹீம் கூறுவதாக அமைந்துள்ள அல்குர்ஆனின் பின்வரும் வாக்கியத்தை இங்கு கூறுவது பொருத்தமானது: "என் தந்தையே உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின் பற்றுவீராக நான் உங்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பேன்’ (அத், 19:41). இதற்குத் தந்தையின் பதில் நான் கல்லால் அடிப்பேன் என்னைவிட்டும் பிரிந்து போய்விடு' என்பதாகவே இருந்தது. (அத்,9:41,42). சமய மாற்றம் மட்டுமன்றி அதனோடிணைந்து சமூக சீர்தீருத்தச் சிந்தனைகளும் அவரது கருத்துக்களில் எதிரொலித்தன.
அன்றைய சமூக அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக இப்றாஹீம் கிளர்ந்தார். மக்களைச் சூறையாடிய மன்னர்களுக்கு எதிராகப் போர்தொடுத்தார் (ஆதியாகமம் 14:12, 13). மேய்ச்சல் நிலப் பகிர்வில் நீதியை நிலை நாட்டினார். சிலைகளை உடைத்து ஏகத்துவத்தைப் போதித்ததுடன், நீதியான வாழ்க்கைக்குத் திரும்புமாறும் மக்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
இப்றாஹீம் நபியின் மார்க்கம் நேரான மார்க்கம் என குர்ஆன் கூறுகின்றது. இப்றாஹீம் கடைப்பிடித்த வழிமுறையிலேயே நபிகள் நாயகம் இருந்ததாகவும் அதுவே இறைவனின் உண்மையான வழிகாட்டுதலாகும் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது:
(நபியே) கூறுவீராக; நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான் அது முற்றிலும் சரியான கோணலில்லாத தீன் (நெறி) ஆகும். இப்றாஹீம் கடைப்பிடித்து வந்த வழி முறையுமாகும். மேலும் அவர் இணைவைப்பவரில் ஒருவராகவும் இருக்கவில்லை.
பலிச்சடங்கு
மத்திய கிழக்கு நாடுகளில் பலி க்கு முக்கிய இடமிருந்தது. பலியின்றி வழிபாடில்லை' என்பதே அப்போதைய அவர்களது சமய சுலோகமாகும். பலியும்
87

Page 47
நரபலியும் உலகெங்கினும் காணப்பட்ட தொன்மைச் சமய வழிபாட்டம்சம் எனக் கூறலாம். 'மிருகங்கள் பலிக்காகவே படைக்கப்பட்டுள்ளன. முழு உலகின் நன்மைக்காகவுமே, பலி ஏற்பாடு செய்யப்படுகின்றது' என மனுசாஸ்திரம் கூறுகிறது. யாகங்களில் எண்ணற்ற விலங்குள் பலியிடப்பட்டன. நரபலிகளைப் பற்றிய பட்டியல் யஜுர் வேதத்தில் உள்ளது.
புனிதச் சடங்குகளில் ஆச்சரியமளிக்கும் விடயம் பலிக் காணிக்கைகளாகும். அண்மைக் கால அறிஞர்களின் கருத்துப்படி பலிச் FLig556ir (Rites of Sacrifice) upril 8, fibest Gulf 660ty (Palaeolithic Age) செல்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் பல்வேறு பட்ட பலிவகைகளையும் அவை செய்யப்படும் விதத்தையும் காணமுடியும். தகனப் பலி, பாவப்பலி, குற்ற நிவர்த்திப்பலி, பரிகாரப்பலி எனப் பல்வேறு பலி வகைகளை லேவியராகமம் (பழைய ஏற்பாடு) குறிப்பிடுகிறது. லேவியராக மத்தில் வரும் பின்வரும் கூற்றிலிருந்து இதனை விளங்க முடியும்.
ஆண்டவரின் கட்டளையை மீறி ஒரு பாவம் செய்யும் போது. அவன் தன் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பானாக (எவ்வாறெனில்) சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவர் திரு முன்அதைக் கொணர்ந்து அதன் தலையின் மீது கையைவைத்து அதைக்கொன்று ஆண்டவருக்குப் பலியிடுவான். (லேவியராகமம், 4:1-5)
இவ்வகைப்பலிகளின் மூலம் புனித பீடங்கள் இரத்தத்தினாலும் மிருகக் கொழுப்புக்களினாலும் நீராட்டப்பட்டன. தீட்டிலிருந்தும் அறியாமற் செய்த பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட இத்தகைய பிராயச்சித்த பலிகள் உதவுவதாக சமய ஆகமங்கள் உணர்த்தின. இந்தியச் சமய மரபிலும் நரபலிகள் சமய அங்கீகாரத்தைத் பெற்றிருந்தன. பேராசிரியர் கோசம்பியின் கருத்தை இங்கு நோக்கலாம்:
நரபலிகளைப் பற்றிய பட்டியல் யஜுர் வேதத்திற் காணப்பட்டாலும் சதபதபிரமாணம் தோன்றிய காலத்திலேயே நரபலிகள் பிரமாணங்களிலிருந்து வழக் கொழிந்து விட்டன. இருப்பினும் கோட்டை வாயில் போன்ற வலுவான தளங்களைப் பகைவர் வெல்லாதிருக்கவும், நதிவெள்ளங்கள் அணைகளை
88

அடித்துக் கொண்டு செல்லாமல் இருக்கவும் எப்போதாவது நடத்தப்படும் நரபலிகள் அவசியமாகக் கருதப்பட்டன. அதன் பொருட்டு பலியிடப்படும் மனிதனை அஸ்திவாரத்தில் புதைத்து மேலே புதிய கட்டிடத்தை எழுப்புவார்கள். (கோசம்பி 1983: 181)
சமயங்களின் தோற்றத்திற்கும் இப்பலிகளுக்கும் தொடர்பிருந்தன. பலியிடுவதலைச் சமயங்கள் நேராகவோ மறைமுகமாகவோ அங்கீகரிக்கின்றன. பழங்கற்கால மனிதனும் சரி அதற்குப் பிந்திய நாகரிக யுகத்துக்குரிய மனிதனும் சரி பலிகளை நிறைவேற்றி வந்துள்ளான். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆவிகளை அல்லது கடவுள்களைச் சாந்திப்படுத்தவும், தனது எண்ணங்களை நிறைவேற்றவும், தெய்வங்களின் விரோதத்தை தணிவிக்கவும் மனிதன் பலிகளை வழங்கி வந்துள்ளான். பலிச் சடங்குகளில் பயம், குற்ற உணர்வு, தெய்வ ஆராதனை, வழிபாடு என எண்ணற்ற மனவெழுச்சிகள் அடங்கியிருந்தன (J.C.Livingston, 1989:120). நான் உனக்குத் தருகிறேன் நீ எனக்கு வழங்கு வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் ஒரு பேரம் பேசல் அங்கு நிகழ்ந்தது. இக்கருத்து ஹிந்துமத சடங்கொன்றில் சுருக்கமாக இவ்வாறு இடம் பெற்றுள்ளது. 'இதோ வெண்ணெய், எங்கே உனது வெகுமதி (1989:120). சடங்குகளிலும் வழிபாடுகளிலும் நன்கொடைகளிலும் கொடுக்கல்வாங்கல் முறையொன்று காணப்படுவதாகவும் கடவுளின் நல்லெண்ணத்தையும், பாதுகாப்பையும் பகரமாக மனிதன் விழைகிறான் என்றும் மானிடவியலாளர் (E. B. Tylor) கூறுவர்.
நரபலி
மெஸெபொட்டேமிய, செமித்திய வழிபாடுகளில் பலியும் நரபலியும் மட்டுமன்றி பகுத்தறிவுக்குப் பொருந்தாத வேறு குரூர வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தன. இப்றாஹீம் இப்பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த நரபலியையும் குரூரமான சமயச் சடங்குகளையும் கடுமையாக எதிர்த்தார்.
பலஸ்தீனத்திலும் நரபலியிடும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. முதலில் பிறந்தவை அனைத்துமே பலிக்குரியதாகக் கருதப்பட்டன. தலைப்பிள்ளையின் இரத்தத்தினால் பலி பீடங்கள் நீராட்டப்பட்டன (1935:159)
உன் முதற்பலனில் பத்தில் ஒரு பாகத்தை காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம் மேலும் உன் புதல்வரில்
89

Page 48
தலைச்சன்பிள்ளையை நமக்குக் கொடுப்பாயாக (யாத்ராகமம், 23:28)
எனக் கானான் தேசத்து நரபலி பற்றி பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. பலிபீடங்களில் மட்டுமன்றி புதிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்கும் உயிர்ப்பலிகள் தாராளமாகக் காணிக்கையாக்கப்பட்டன. 'ஆண், பெண், குழந்தை, மிருகம் ஏதாவதொன்றின் மரணத்தின் மீதே ஒவ்வொரு வீடும் (பலஸ்தீனத்தில்) கட்டப்பட்டது (A.S.Cook, 1908:40). ஹிந்து மரபிலும் இத்தகைய வழக்கங்களிருந்தன. கோட்டைகள் கட்டும் போது அவற்றின் அத்திவாரத்தில் நரபலியிடப்பட்டது. வரட்சி மிகுந்த காலத்தில் பாலை மண்ணில் மனித இரத்தத்தைச் சிந்தச் செய்து மழை பெய்விக்கும் முயற்சிகளும் நடந்தன.
ஆண் தலைப் பிள்ளைகளை பலி இடுவது ஒரு தொன்மையான வழக்கமாகும். ஆண் (மகன்) இரத்தப் பாவவிமோசனம் இரத்தக் கடனை தீர்ப்பதற்காகச் செய்யப்படும் இரத்தக்காணிக்கைச் சடங்காகும். இதன் மைய அம்சம் ஆண் தலைப் பிள்ளையைப் பலிகொடுப்பதாகும். கிரமமான முறையில் ஆண்கள் எண்ணற்ற அளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இரத்தப்பலி காட்டு வாசியுகத்தின் அடையாளமாகும். விலங்குத் தன்மை (Savegery) யுகத்திற்கு தன்னின உண்ணுந் தன்மை (Cannibalism) அடையாளமாகும். (பார்க்க, Evelyn-Reed, 1992; 898-9) இக் கொலைகளுக்கும் உறவுமுறை அமைப்பி (Kinship System) ற்கும் உள்ள தொடர்பை இவ்லின் றிட் விளக்கியுள்ளார். சுருக்கமாக இதனைக் கூறுவதாயின் சகோதரியின் மகனும் மனைவியின் மகனுமே இரத்தப்பாவவிமோசனத்துக்குள்ளாக்கப்பட்டனர். கணவனுக்கு மனைவியாயினும் சகோதரனுக்குச் சகோதரியாயினும் மகன்' பலியில் துன்பத்திற்குள்ளாகுவது தாய்தான். (1992:399)
பிந்திய கட்டத்தில் இரத்தப் பாவவிமோசனத்திற்கு முதற்பிள்ளைக்குப் பதிலீடாக வீட்டுமிருகத்தைப் பலியிடும் வழக்கத்தில் திருப்தி காணப்பட்டது. GgT6T 6Uustif' (John Layard) g560Tg JT6ôlốio (Stone Men of Mlekula) கூறியுள்ள மனித இரத்தப்பலிகளுக்குப் பதிலீடாகக் கொம்பன் பன்றிகளைத் தாம் பலியிடுவதாக மலெக்குலாவினர் கூறுவதை இங்கு நோக்குவது பொருத்தமாகும் (பார்க்க 1992 400). போர்க் கடவுளுக்கும், உணவுவிருத்திக்கும், இயற்கையின்
90

சீற்றத்துக்குமாக எண்ணற்ற மகன்களும் மனிதர்களும் இவ்வாறு பலியாக்கப்பட்டுள்ளனர். எனினும் பழைய உலகின் இந்த இரத்தப் பாவவிமோசனம் வெற்றி கொள்ளப்பட்டது. நாகரிகத்தின் அரும்புதலில் தனியார் சொத்துடைமையின் தோற்றம் இதற்கு முடிவைக் கொண்டு வந்தது. (1992:400)
செமித்திய மரபிலும் பலஸ்தீனத்திலும் வேரூன்றியிருந்த நரபலிச் சடங்குகளை இப்றாஹீம் நபி வன்மையாக எதிர்த்தார். ஒரு நாள் இப்றாஹீம் நபி தனது மகனை தானே அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டார். இதனை இறை கட்டளையெனக் கொண்டு தனது மகனைத் அறுத்துப் பலியிட ஆயத்தமானார். இச் சம்பவத்தை அல் குர்ஆனும் பழைய ஏற்பாடும் கூறுகின்றன. (பார்க்க: குறிப்பு: 08) குர் ஆனில் இச்சம்பவம் பின்வருமாறு கூறப்படுகிறது: அச்சமயம் நாம் அவரையழைத்துக் கூறினோம் “இப்றாஹீம் ! உண்மையாகவே உம்முடைய கனவை மெய்யாக்கிவிட்டீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். ஆகவே (அவருக்குப் பதிலாக ஓர் ஆட்டுக் கடாவைப் பலியிடச் செய்து) மகத்தான தியாகத்தின் மூலம் அவரை விடுவித்தோம்” (அத் 104:107). பைபிளில் இது பின்வருமாறு அமைந்துள்ளது. அடுக்கியிருந்த விறகுக் கட்டைகளின் மேல் அவனைக் (ஈசாக்கை) கிடத்தி தம் கையை நீட்டி வாளை உருவிப் பலியிட முயற்சித்தார். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் வானத்திலிருந்து கூப்பிட்டு உன் பிள்ளையின் மேல் கையோங்கி அவனுக்கு ஒன்றும் செய்யாதே என்று அசரீரி கேட்டது. அப்போது ஆபிரஹாம் திரும்பிப் பார்க்கையில் முட்செடியில் கொம்பு மாட்டிக் கொண்டு நின்ற ஒர் ஆட்டுக்கடாவைக் கண்டார். அதைப்பிடித்துத் தனது மகனுக்குப் பதிலாய் அதைத் தகனப்பலி கொடுத்தார். (ஆதியாகம், 22:4-14)
மகனுக்குப் பகரமாக செம்மறியாட்டைப் பலியிடுவதாக அந்நிகழ்சி முடிவுற்றது. உண்மையில் கானான் தேசத்திலும் அறபு தேசத்திலும் உலகின் வேறு பாகங்களிலும் நிலவி வந்த நரபலி வழிபாட்டை சமயத்தினாலே முறியடித்த நிகழ்வாக அது முடிவுற்றது. சுமேரிய - பபிலோனிய நாகரிகங்களில் மனிதத் தலைக்குப் பகரமாக ஆட்டின் தலையைப் பலியிடும் வழக்கம் மிக நீண்ட காலத்துக்கு முன்னரே நடைமுறையிலிருந்து வந்தது. தொன்மைச் சுமேரிய நாட்டார் கவிதை ஒன்று பின்வருமாறு கூறுகிறது:செம்மறியாடு மனிதனுக்கான பதிலீடு ஆகும். மனிதத் தலைக்குச் சரியான மாற்றீடு செம்மறியாட்டுத் தலையாகும் (1935; 165) (பார்க்க, குறிப்பு: 09).
91

Page 49
இப்றாஹீம் நபியின் ஒரிறைவாதமும் மனிதாபிமானமும் சீர்திருத்தக் கருத்துக்களும் ஹனீப்வாதிகளால் அறபு மண்ணில் மீண்டும் நினைவு கூரப்பட்டன. அல் குர்ஆன் இப்றாஹீமை ஹனீப் என்றும் முஸ்லிம் என்றும் கூறுகிறது. அவர் யூதரோ அல்லது கிறிஸ்தவரோ அல்ல என்றும் கூறுகிறது. “இப்றாஹீமோ யூதராயிருக்கவில்லை. இன்னும் கிறிஸ்த்தவராகவும் (இருக்க) இல்லை, ஆனால் அவர் ஹனிபாகவும் . முஸ்லிமாகவும் இருந்தார். (அத் 3:67 (1992)).
ஹறம்
இஸ்லாத்தின் தோற்றத்தோடு ‘ஹறம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. தொன்மை அறேபியாவில் 'ஹறம் ஒரு முக்கிய சமய நிறுவனமாக இருந்துள்ளது. வட, தென் அறேபியா அனைத்திற்கும் ஹறம்களில் புகழ்பெற்றதும் தொன்மைமிக்கதும் கஃபா (நாற்சதுரப் புனித ஆலயம்) ஆகும். குர்ஆன் கஃபாவைப் புராதன ஆலயம் அல்பைத் அல் அத்தீக், (குர்:22:29) எனக் கூறுகிறது. (1950:516)
கஃபா எப்போது யாரால் முதலில் கட்டப்பட்டது என்பது பற்றி தெளிவான கருத்துக்கள் இல்லை. ஆனால் அதை மீளக்கட்டியவர்களில் இப்றாஹீமையும் அவர் மகன் இஸ்மாயிலையும் முதன்மையானவர்களாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. இப்றஹீம் நபிகளுக்கு முன்னரே கஃபா இருந்துள்ளது (1950:516). இப் புனித ஆலயத்தை ஆதம் நபிதான் கட்டினார் என சில குர்ஆன் வியாக்கியானிகள் கருதுகின்றனர் (பார்க்க 1984:158,9). எவ்வாறாயினும் அது ஒரு பாதுகாக்கப்பட்ட புனிதமான இடமாக இஸ்லாத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரிருந்தே கணிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவே அவதானிப் பிற்குரியதாகும். குர்ஆன் வியாக்கியானி அல் கும்மி அபூஅல்ஹஸன் தரும்பின்வரும் பதிவிலும் இக் கருத்துப் பிரதிபலிப்பதைக் காணலாம்:அவர்களை (இஸ்மாயிலையும் அவர் தாயையும்) எனது புனிதத் தலத் (ஹறம்) திற்கு அனுப்புங்கள் அது பூமியில் மக்காவில் உள்ள பாதுகாப்பான இடம் (என இறைவன் &l-sólsorssör) (M. M. Ayoub; 1984: 158,9)
இஸ்லாத்திற்கு முன்னதாகவே Li6Ofsts, Gibušísir (Holy Family)
ாவாக அமைபபாகவும சமய ஆணைகளுககுரிய மையமாகவும ஹறம
影 ஆ (615 f XO e إلك
92

விளங்கியுள்ளது. மிகத் தொன்மைமிக்க வரலாற்றையுடைய வணக்கஸ்தலமான கஃபாவை அல்குர்ஆன் அல்பைத் அல்ஹறம் (5.97) அல்லது 'அல்முஹர்றம் (14:37) எனக் குறிப்பிடுகிறது. மீறப்பட முடியாத புனிதத் தன்மைமிக்க இடம் என்பது ‘ஹறம்' என்பதற்குரிய பொருளாகும். (பார்க்க, 1950:516)
'ஹறம்' என்பதைத் தற்காலத்துக்குரிய பொருளில் கூறுவதாயின் அது ஒரு சமய அரசியல் மையமாகும். கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்தாலும் தொன்மை அறேபியர் 'ஹறம்' களை மதித்து நடந்துள்ளனர். தென் அறேபியாவிலும் ஹறம்கள் காணப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்ச்சியை இன்றும் அங்கு காணலாம் (Serjeant). பொதுவாக ஒவ்வொரு பழங்குடி அலகும் யுத்தமாயினும் யுத்த நிறுத்தமாயினும் ஐக்கியக் கூட்டமைப்புக்களை உருவாக்குவதாயினும் தமக்கிடையே நடைமுறையிலிருந்த வழக்காற்றுச் சட்டங்களையே கடுமையாக அனுசரித்தன (1981:42). குருதிப்பண விவகாரம் போன்ற இன்னும் சில பிரச்சினைகளுக்கு தமது சொந்த சட்ட அதிகாரங்களுக்கு அப்பால் இயற்கை கடந்த ஒன்றின் தீர்ப்புக்கள் சுமத்தப்படுவதை பழங்குடி மனிதன் விரும்பி நின்றான். இத்தகைய சந்தர்ப்பங்களில் தெய்வீக அதிகாரம் பெற்ற சில புனித குடும்பங்களையோ அல்லது அவற்றுக்குச் சொந்தமான தீர்க்கதரிசிகளையோ, புனிதர்களையோ அவன் நாடினான்.
'ஹறம் புனிதக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு நிறுவனமாகும். தொன்மை அறேபியாவில் அறியப்பட்டிருந்த ஹறம் தென் அறேபியாவின் ‘ஹவ்தா (Hawtah) வுக்குச் சமமானதென்று சார்ஜண்ட் குறிப்பிடுகிறார். பெரும்பாலும் புனித குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு குறித்த நிலப்பகுதியை 'ஹறம் என வரையறுப்பதிலிருந்து இது உருவாகிறது.
ஹறம் தெய்வ ஆணைகளுக்கு அதிகாரம் பெற்ற ஒரு பிரதேசத்தைக் கொண்ட ஒரு பிரத்தியேக நிறுவனமாகும். இதன் பரிபாலகரான புனிதர்'கடவுள் கட்டளைகளுக்கு முகவராக இயங்குகிறார். அதை நடைமுறைப்படுத்துகிறார். முக்கியமாக கடவுளின் பெயரால் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு அல்லது சமாதானம் நிலை நிறுத்தப்படுகிறது. கொலைகளிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் தடுக்கப்பட்ட புனித பிரதேசம் என்பது இதன் பொருள். இதைத் தொடர்ந்து இங்கு வணிகர்களும் குடியானவர்களும் குடியமர்கின்றனர். பெரும்பாலும், ஒரு சந்தையாக இது பரிணமிக்கும். 'ஹவ்தாவும் இதற்குச் சமமானதே (Serjeant)
93

Page 50
ஹவ்தாவின் ஸ்தாபகர் மரணித்தால் அவரே அந்த ஹவ்த்தாவின் எஜமானனாக என்றைக்கும் கொள்ளப்படுவார். எனினும் அவரின் இடம் அவரது வம்சத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்ததெடுப்பதன் மூலம் நிரப்பப்படும்,'இதற்குரிய அவரது பதவிப் பெயர்மன்ஸிப் அல்லது 'மன்ஸுப்’ ஆகும். இதற்கான செந்நெறி அறபுப்பதம்மன்ஸிப் ஆகும். இது மறாத் (Maradd) என்ற சொல்லுக்குச் சமம். மறாத் என்றால் சுல்தான்,தலைமைக்காரன், பழங்குடிச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற பொருள்களைக் குறிக்கும்’ (1981: 111-144). நபிகளின் குடும்பத்தின் மூதாதையரான குஸை இத்தகைய முதல் மன்ஸப் ஆகக் கருதப்படுகிறார்.
பொதுவாக மக்காவின் 'ஹறம் தென் அறேபியாவின் 'ஹவ்தா இரண்டிற்குமே பணிகளிலும் வழிபாட்டு முறைகளிலும் சில ஒருமைப் பாடுகள் இருந்துள்ளன. பழங்குடிகளுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளுக்கு சமாதானத் தீர்வுகளைத் தருவதும், கொலைகளுக்குரிய பிரதியீடுகளை நிர்ணயிப்பதும், புனித தலத்தை வலம் வந்து வழிபடுவதும் அவற்றுள் அடங்கும். கஃபாவுக்கு லிவா என்ற கொடி இருந்தது போல் ஹவ்த்தாக்களுக்கும் கொடிகள் இருந்தன.
'ஹறம் உயர்குடியினரின் ஆதிக்கத்திலிருந்த புனித நிறுவனமாகும். புனிதக்குடும்பம் இவ்வுயர் குடியைச் சார்ந்தவர்களாகும். நபிகள் நாயகம் பிறந்த குடும்பத்தினர் நபிகள் பிறக்கு முன்னரே மக்காவின் புகழ்பெற்ற ஹறத்திற்கு (கஃபா)ப் பாதுகாவலர்களாகவும் தலைவர்களாகவும் விளங்கி வந்துள்ளனர். அதன் மூலம் புனித குடும்பம் என்ற தகுதியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருந்தனர். குறைஷியரினாலும் முழு அறேபியக் கோத்திரங்களினாலும் கண்ணியப்படுத்தப்பட்ட புனித தலமாக மக்காவின் ஹறம் பிரசித்தி பெற்றிருந்தது.
நபிகள் தமது சமயப் பணிகளை மக்காவில் ஆரம்பித்த தொடக்க காலப்பிரிவில் ‘ஹறத்தை தமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வரமுடியாதவர்களாகவே இருந்தனர். எனினும் மதீனாவில் மற்றொரு ஹறத்தை உருவாக்கி அதன் மூலம் தமது சமயப் பணிகளிலும் மதீனக் கோத்திரங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் வெற்றி கண்டனர். ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் ஒரு ஹறம் இருந்தது அல் மதீனா எனது ஹறமாகும் என்றும் மக்கா இப்றாஹீமின் ஹறம் மதீனா எனது ஹறம் என்றும் நபிகள் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க, 1981:50).
94

எனினும் மக்காவின் புனித ஹறத்தைப் பற்றிய ஆவல் நபிகளுக்கு எப்போதுமிருந்தது. படையுடன் சென்று நபிகள் மக்கா ஹறத்தைத் தம் வசமாக்கியதை அவர்களின் இலட்சிய நிறைவேற்றங்களில் ஒன்றாக இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. புனித பிரதேசத்துள் நபிகளின் பிரவேசம் நபிகளின் சமய அரசியல் வெற்றியை உறுதி செய்தது. இப்போது நபிகள் இரு ஹறம்களின் சொந்தக்காரரானார்கள். அதாவது பழங்குடிகளின் சமூக அரசியல் மைய நிறுவனங்கள் இரண்டின் கட்டுப்பாடு இப்போது நபிகளின் கைகளில் இருந்தது.
95

Page 51
பொருளாதார நிலை Susi 5
சமுக உறவும் வர்க்க வேறுபாடும்
பூர்வீகப் பொருளாதார அமைப்பு ஒரே விதமாக அமைந்திருக்கவில்லை. அநாகரிக அல்லது காட்டுவாசிக் (Barbarism) காலப்பிரிவிலேயே உடைமை உறவுகளில் மாற்றம் தோன்றிவிட்டது. மிருகங்களை வளர்ப்பது, பழக்குவது, பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது என்பன அநாகரிகக் கட்டத்தின் பண்புகளாகும். பொது உடைமையிலிருந்து தனி உடைமைக்குப் பூர்வீகப் பொருளாதாரம் மாறிச் செல்வதை செல்வ நிலையில் சமத்துவமற்ற சமூக அமைப்பு உணர்த்தியது.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே செல்வ அடிப்படையில் சமத்துவ மற்ற சமூக அமைப்பு உருவாகிவிட்டது. ஒவ்வொரு பழங்குடியினுள்ளும் உயர்குடியினர் உருவாகினர். அவர்கள் அதிக செல்வ வளத்தைப் பெற்றிருந்தனர். ஏராளமான கால்நடைகள் அவர்களுக்கு சொந்தமாயிருந்தன. இதுவரை பொதுவில் பழங்குடிக்குச் சொந்தமாயிருந்த மேய்ச்சல் நிலத்திலும் மிக அரிதாகவே காணப்பட்ட நீர் வளத்திலும் பாரிய உரிமை கோரக் கூடியவர்களாக அவர்கள் மாறினர். (1969:69)
அடிமை முறை
ஏராளமான அடிமைகளும் கைதிகளும் குலத்தலைவர்களான செய்யிதுகளிடமும் செல்வந்த உயர்குடியினரிடமும் ஊழியம் செய்தனர். இவர்களின் கால்நடைகளை இவ்வடிமைகளே பராமரித்தனர். இதனால் கால்நடைகளும் கால்நடை உற்பத்திப் பொருட்களும் அதிகரித்தன. செல்வ வளர்ச்சிக்கு வழி செய்த அடிமை முறை பொருளாதார சமத்துவமின்மையை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் அமைந்தது.

அடிமைகளைப் பயிர்ச்செய்கைக்கும் கால்நடை வளர்ப்பிற்கும் பயன்படுத்துவது ஒரு தொன்மை முறையாகும். தொன்மை நாகரிகங்கள் நிலவிய அஸ்ஸிரியா, பபிலோனியா, எகிப்து முதலிய நாடுகளில் அடிமை முறை பிரசித்தமானதாக இருந்தது. ஏனைய நாடுகளைப் போல அறேபியாவும் யுத்தத்தின் மூலமாகவோ வாணிபத்தினுாடாகவோ அடிமைகளை உடைமைகளாகப் பெற்று வந்தனர். குறிப்பாக எத்தியோப்பியாவுடன் மக்கா வணிகர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
அறேபியரின் அரண்மனைகளிலும் வீடுகளிலும் ஆயிரக்கணக்கான அடிமைகள் வேலைக்கமர்த்தப்பட்டிருந்தனர். கெளரவமான ஒவ்வொரு அறேபியனும் தனது வீட்டில் அடிமைகளை வேலைக்கமர்த்தியிருந்தான். (Jurji Zaydan,1987; 14, 15) மேலும் அடிமைப் பெண்களை அறேபியர் தமது மனைவியராக்கிக் கொண்டனர். அடிமைப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் அடிமைகளாகவே கருதப்பட்டனர். கால்நடை வளர்ப்பிற்கும் தொழில் விருத்திக்கும் செல்வந்தர்கள் இவ்வடிமைகளைப் பயன்படுத்தினர். இதன் மூலம் அவர்கள் அடிமைகளைச் சுரண்டினர்.
அடிமைமுறை குறிப்பிட்ட பொருளாதாரச் சூழலிலேயே சாத்தியமாகக் கூடியது. 'அடிமைகளைப் பயன்படுத்துவதாயின் சில நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். எங்கெல்ஸ் இதனைப் பின்வருமாறு கூறுகிறார்: “யார் வேண்டுமானாலும் அடிமைகளை வைத்திருக்க முடியாது. அடிமைகள் உழைப்பதற்கான கருவிகள், சாதனங்கள் அடிமைமுறை சாத்தியமாவதற்கு முன்னால் அந்த சமூகம் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது பொருளாதாரப் பகிர்வில் ஏற்கனவே அசமத்துவம் தோன்றிவிட்டதை அது அடையாளப்படுத்துகிறது.”
கால்நடை வளர்ப்பில் உயர்குடியினர் அதிக இலாபத்தைப் பெற அடிமை முறை பெரிதும் உதவியது. கால்நடைகளும் அவற்றின் உற்பத்திகளும் அதிகரித்தன. ஏராளமான ஒட்டகைகளும் குதிரைகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டன. தனி உடைமை வளர்ச்சியடைந்தது. உயர்குடியினர் அதிக உபரியைப் பெற்றனர். கால்நடைகள் தனியார் உடைமையாக மாறின. மேலும் அவை பண்டமாற்றுப் பொருளாகவும் பணமாகவும் பயன்படுத்தப்பட்டன.
97

Page 52
தனி உடைமை என்ற பொருளில் நோக்குவதாயின் ஏற்கெனவே கால்நடைகள் தனி உடைமையாகவே இருந்தன. வரலாற்றின் தொடக்க காலத்தில் கால்நடைகள் ஏற்கெனவே எல்லா இடங்களிலுமே குடும்பத் தலைவர்களின் தனிச் சொத்தாக இருந்துள்ளன. (1972:54) கால்நடைகளோடு ஒவ்வொரு பதவியும் தனக்கென சில உடைமைகளைச் சொந்தமாகப் பெற்றிருந்தான். வீடு, வீட்டுப் பாவனைப் பொருட்கள், உடைகள், ஆயுதங்கள் என்பனவே அவனது உடைமைகளாகும். நிலமும், நீர்வளமும் பழங்குடிக்கு அல்லது குல அங்கத்தினர்களுக்குப் பொதுவானதாக இருந்தபோது, தனிஉடைமை வளர்ச்சியும் கால்நடைகளின் அபரிமிதமான வளர்ச்சியும் நிலத்திலும் நீர்வளத்திலும் தனியார் ஆதிக்கத்தை வளர்த்தது.
சொத்துடமையில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் பாரம்பரிய சமூக உறவில் பாதிப்பை எற்படுத்தின. குல அமைப்பை இறுகப் பிணைத்திருந்த இரத்த பந்தத்தை இது வீழ்த்தியது. அதாவது இரத்த பந்தத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த குல அமைப்பு சிதறும் நிலைக்கு வந்தது. செய்யிதுகளும் உயர்குடியினரும் செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்நிலை பெற்ற விசேட வகுப்பினராக வளர்ந்தனர். இது இஸ்லாத்தின் தோற்றத்துக்கு சற்று முந்திய அறபு சமூகத்தின் செல்வ வளத்தில் ஏற்றத்தாழ்வுள்ள வர்க்கங்களின் வளர்ச்சியைத் தெளிவாக இனங் காட்டியது. இப்பொருளாதார மாற்றம் உயர்குடியினரை ஒரு புறமாகவும் ஏழை வகுப்பினரை மறுபுறமாகவும் ஏற்றத்தாழ்வுள்ள இரு வகுப்புக்களாக f6 (DI gög5S) uLuğ5I. (E. A. Belyaev, 1969 A: 67)
இரத்த பந்தத்தினால் பிணைப்புற்றிருந்த பூர்வீகக் குல ஐக்கியம் சிதறத் தொடங்கியதோடு புதிய சமூகப் பிரச்சினைகள் உருவாகின. பலர் வாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டனர். அனாதைகளும், நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டவர்களும் அதிகரித்தனர். ஜீவனோபாயத்திற்காகக் கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும் பெருகியது. சமூகத்தில் மற்றுமொரு பகுதியினர் எதற்குமே தகுதியற்ற தரித்திர நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வர்த்தக வளம்
யெமன், பெற்ரா, பல்மைரா போன்ற பண்டைய நகரங்களின் வீழ்ச்சியின் பின்னர் மக்கா செல்வாக்கு மிக்க வர்த்தக மத்திய நிலையமாக வளர்ச்சி பெற்றது.
மக்காவில் சிறிதளவு கால்நடை வளர்ப்புக் காணப்பட்ட போதும் கால்நடை
98

வளர்ப்பிலோ விவசாயத்திலோ மக்கா தங்கியிருக்கவில்லை. வரண்ட நிலம் மக்காவுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. எனினும் மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே மக்காவாசிகளும் நாடோடிகளும் வர்த்தகத்தைத் தமது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தனர்.
வடமாநில சிற்றரசுகளின் வீழ்ச்சியுடன் சர்வதேச வர்த்தகத் தொடர்புகளை உருவாக்குவதில் மக்காவணிகர் வெற்றி பெற்றனர். யெமன், சீரியா, பலஸ்தீன், எகிப்து, கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் விரிவு பெற்றன.
மக்காவின் செய்யிதுகளும் உயர்குடியினரும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளினால் பெரும் செல்வத்தைப் பெற்றனர். வணிகத்தில் ஈடுபடுவோரின் காரவன்களுக்கு நிதி உதவி செய்யக்கூடிய கொம்பணிகளையும் தமக்குள் அவர்கள் உருவாக்கினர். அவர்களது வர்த்தகம் பாரிய இலாபத்தை ஈட்டித் தந்தது. ஐம்பது சதவீதம் அல்லது நூறு சதவீதம் இலாபத்தை அவர்கள் FF60Trf. (Maxime Rodinson, 1971: 35)
பண்டமாற்றத்திற்கு இடமிருந்த போதும், வர்த்தக நடவடிக்கைகளில் நாணயப் பயன்பாடு தீனார்களாகவும் (தங்கம்) திர்ஹம்களாகவும் (வெள்ளி) தாராளமாகப் புழக்கத்திற்கு வந்தது (1971:35). வர்த்தகச் செழிப்பின் இவ்வடையாளங்கள் அறேபிய நகரங்களில் குறிப்பாக மக்காவில் தெளிவாகத் தெரிந்தது. இலாபநாட்டம், ஆடம்பர வாழ்வு, செல்வச் செழிப்பு என்பனவற்றை வாழ்க்கையாகவும் மனோபாவமாகவும் கொண்ட புதிய வர்த்தக வகுப்பு மக்காவிலும் ஏனைய நகரங்களிலும் வளரத் தொடங்கியது. கி. பி. 7 ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம் இப்புதிய வகுப்பின் எழுச்சிக்காலமெனக் கூறலாம். இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முந்திய காலப்பகுதி எனக் கூறப்படும் ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த அபூபக்கர், அப்பாஸ், உமர், உதுமான் போன்ற எதிர்கால முஸ்லிம் தலைவர்கள் பெருவர்த்தகர்களாகவே விளங்கினர்.
சமுதாயத்திற்கு இன்றியமையாத தொழிற்பாடாக உருவான பரிவர்த்தனை நடவடிக்கை இலாபமீட்டும் பெருவர்த்தகமாக வளர்ச்சி பெறுவதோடு அது ஒரு புதியவர்க்கத்தையும் உருவாக்கிவிடுகிறது. ‘உற்பத்தியில் பங்கெடுக்காது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் வியாபாரிகள் என்ற வர்க்கம் உருவாகிறது. என்பது எங்கெல்ஸ் கூறறு.
99

Page 53
வியாபாரிகள் சுரண்டல்காரர்கள். இலாபத்தைக் குவிப்பதில் பெரும் சக்தி பெற்றவர்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் உற்பத்தியின் மிகச் சிறந்த பகுதிகளை அவர்கள் வழித்தெடுத்துச் செல்லுகின்றனர். எல்லையற்ற செல்வத்தையும் அதனால் சமுதாயச் செல்வாக்கையும் விரைவில் பெருக்கிக் கொள்ளுகின்றனர் (1972 162)
என்ற எங்கெல்ஸின் இக்கருத்து 7ம் நூற்றாண்டின் ஆரம்பகால மக்காவிற்கும் சிறப்பாகப் பொருந்துவதாகும்.
செல்வ வளமிக்க வணிகரின் ஆதிக்கம் மக்காவில் வளர்ந்தது. இதன் வளர்ச்சியோடு இரத்த பந்தமும் அது வற்புறுத்தி வந்த மரபுகளும் பலவீனமடைந்தன. தமது சொந்த வர்த்தக விருத்திக்காக குலத்திற்குச் சொந்தமான பொதுச் சொத்தை செய்யிதுகளும் உயர்குடியினரும் தாராளமாகப் பயன்படுத்தினர். பெற்ற லாபத்தையும் குலத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை. ஆனால் தமது நேரடிப் பாதுகாப்பிலுள்ளவர்களுக்காக மட்டுமே செலவிடும் வழக்கத்தை உருவாக்கினர். இதனால் பலர் அனாதரவாகினர். பலவீனர்களையும் தேவையுள்ளோரையும் ஆதரிக்கும் முன்னைய தாராளத் தன்மை பெரும்பாலும் கைவிடப்பட்டது.
வறுமை நிலை
அடிமை முறையினாலும் வர்த்தக நடவடிக்கைகளினாலும் மக்காவில் பெரும் செல்வச் செழிப்பு ஏற்பட்டிருந்தது உண்மையே. எனினும் அதற்கு ஒரு மறுபக்கமும் இருந்தது. மக்காவின் வளத்திற்குப்பின்னால் ஒரு இருண்ட பகுதியும் இருந்தது எனப் பேராசிரியர் எச். ஏ. ஆர். கிப் (H. A. R. Gibb) இதனைப் பொருத்தமாகக் குறிப்பிட்டார். ஏற்கெனவே பார்த்தது போல வர்த்தக வளத்தோடு வறிய வகுப்பும் வளர்ந்து வருவதைத் தெளிவாகக் காண முடிந்தது. இவ்விருண்ட நிலைபற்றிய அரிய தகவல்களைக் குர்ஆனும் தன்னுள் அடக்கியுள்ளது. உதாரணத்திற்கு:
அவனுடைய (இறைவன்) விருப்பத்தைப் பெறுவதற்காக பந்துக்களுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விடுதலை விரும்பிய அடிமைகளுக்கும் கடன்காரர் முதலியவர்களுக்கும் கொடுத்துதவுங்கள். (அத். 227)
100

வழிப் போக்கர்களும் அநாதைகளும் அதிகரித்தனர். அநாதைகளின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. குல உறுப்பினர்களின் சொத்துக்கள் மோசடிக்குள்ளாகின. நம்பிக்கைப் பொறுப்பாளர்களே அவற்றைக் கையாடினர். இவ்விவரங்களைக் குர்ஆனிற் காணமுடியும். இத்தகையோரையே பிறரின் சொத்துக்களைக் கவர்ந்து விழுங்குபவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
நீங்கள் அனாதைகளின் பொருட்களை (அவர்கள் பராயமடைந்தபின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களின் பொருள்களை உங்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயம் இது பெரும் பாவமாகும். (அத். 4:2)
வணிகர்கள் அல்லது செல்வந்தர்கள் தமது ஆடம்பர வாழ்வுக்கும் அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திய மூலதனத்தில் அநாதைகளின் சொத்துக்கள் கலந்திருந்ததை இவ்வாக்கியம் உறுதிப்படுத்துகிறது. தொன்மை அறேபியச் சமூக மரபுகளின்படி குலத்தலைவர்களே சொத்துக்களைப் பராமரித்து வந்தனர். இப்போது அவை அவர்களின் சொந்த உடைமையாகின. பிறருடைய அனந்தரப் பொருள்களையும் பேராசையுடன் அபகரித்து விழுங்குகிறீர்கள்’ (அத். 89; 18) என்று இதனைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.
உயர் குடியினரின் இச்செயலால் பலர் பாதிக்கப்பட்டனர். புதிய சமூகப் பிரச்சினைகள் உருவெடுத்தன. அல் குர்ஆன் இது பற்றி விரிவாகக் கூறுகிறது. குர்ஆனின் கூற்றுக்களிலிருந்து பின்வரும் வகையினர் நபிகள் காலத்தில் பாதிப்படைந்தவர்களாக அல்லது நலிந்தவர்களாகக் காணப்பட்டனர்; ஏழைகள், உறவினர், அநாதைகள், அடுத்த வீட்டுக்காரர், அந்நியரான அடுத்த வீட்டவர், எப்பொழுதும் உடனிருக்கும் நண்பர்கள், வழிப்போக்கர்கள், செல்வந்தரின் ஆதிக்கத்தில் உள்ளோர், கடன்காரர்கள், அடிமைகள், கைதிகள், யாசகர்கள், விதவைகள், சிறுவர்கள், பலவீனர்கள், தரித்திரர்கள் முதலானோர்.
செல்வந்தர் தமது பாரம்பரியக் கடப்பாடுகளையும் மரபுகளையும்
புறக்கணித்தனர். சமூகத்தில் பலவீனர்களாயிருந்தவர்களைக் குறிப்பாக அநாதைகளையும் விதவைகளையும் வெட்கக் கேடான முறையில் ஏமாற்றினர்.
101

Page 54
அவர்களை ஒடுக்குதலுக்குள்ளாக்கினர் (1961:7). அடிமைப் பெண்களின் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டனர். அநாதைகளின் சொத்துக்களை உயர்குடியினர் தமதுடைமையாக்கினர். இது தரித்திரர்களை உருவாக்கியது.
நபிகள் காலத்தில் மோசமாக வளர்ந்து கொண்டிருந்த தரித்திரத்தின் கொடுமையை தர்மத்தை வலியுறுத்தும் குர்ஆனின் வாக்கியங்களின் மூலம் தெளிவாகக் காண முடியும்.
பந்துக்களில் உள்ள பசியையுடைய ஒர் அநாதைக்கோ தரித்திரத்தையுடைய மண்ணைக் கவ்விக்கிடக்கும் ஏழைக்கோ பசித்திருக்கும் ஓர் நாளில் உணவளிப்பதாகும். (அத். 90; 14-16)
உண்மையில் இரத்த பந்தம் சிதறிச் செல்கையில் ஏற்பட்ட மறு விளைவுகளை இதுவும் இதுபோன்ற திருவாக்கியங்களும் உணர்த்துகின்றன.
செல்வ வேட்கை
செல்வ வேட்கையும் அதிகார மோகமும் அன்றைய அறபு சமூகத்தின் பிரச்சினைகளை வளர்ப்பதில் இரு முக்கிய அம்சங்களாகச் செயல்பட்டன. இரத்தபந்தத்தின் தகர்வோடு இவ்விரு அம்சங்களும் வேகமாக வளர்ச்சி பெற்றன. அல்லது இரத்தபந்தத்தின் தகர்வுக்கு இவையும் காரணமாயிருந்தன. பழங்குடிகளின் வாழ்வில் முன்னர் பெற்றிராத மதிப்பைச் செல்வம் தற்போது பெற்றது. செல்வத்தைத் திரட்டுவதும் அதிகாரத்தை வளர்ப்பதுமே வாழ்க்கையின் நோக்கமாகியது. (1961. 51)
குல ஐக்கியத்திற்குப் பதிலாக தனிநபர் செல்வாக்கு தீவிரமடைந்தது. செல்வத்தையும் அதிகரரத்தையும் பெறுவதில் தனிநபர் அதிக அக்கறை காட்டினர். குர்ஆன் இவற்றை பின்வருமாறு கண்டித்தது. நீங்கள் மிக்க அளவு கடந்து பொருட்களை நேசிக்கின்றீர்கள். (அத். 89:19), நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிக வசப்படுத்திக் கொள்ளும் பேராசை அல்லாஹ்வை விட்டும் உங்களைப் பராக்காக்கி விட்டது. (அத். 102: 1, 2) இவற்றோடு புகழ்பெற்ற பண்டைய நாகரிகங்கள் பல அதிகரித்த செல்வ அவாவினாலும் அதிகார வெறியினாலும் அழிந்து போனமை பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அவர்களை எச்சரிக்கை செய்வதற்காக குர்ஆன் எடுத்துக் காட்டியது.
102

உலோபத்தனம் அதிகரித்ததோடு செல்வந்தர் உலோபத்தனத்தைத் தூண்டியும் வந்தனர். தமது பந்துக்களுக்கு செலவிடக்கூட அவர்கள் தயங்கினர். தமது சொந்த வாழ்வை ஆடம்பரமாக்க முயன்றனர். செல்வ வளமுள்ளோரின் இம்மனோபாவத்தைக் குர்ஆன் கண்டித்தது. பிறருக்கு வழங்காது செல்வத்தைத் திரட்டி வைப்பது தண்டனைக்குரிய குற்றமென எச்சரித்தது: உலோபத்தனம் செய்பவர்களையும் (மற்ற) மனிதர்களையும் உலோபத்தனம் செய்யும்படி தூண்டுபவர்களையும் அல்லாஹ் தன் அருளால் தங்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்பவர்களையும் (அல்லாஹ் நேசிப்பதில்லை.) (அத். 4: 37).
இதன் மறுபொருள் செல்வத்தை மக்கள் அளவுக்கதிகமாக நேசித்தனர் அல்லது அதையே பூஜிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர் என்பதே. பண்டைய பாலைவன வாழ்க்கை அறிந்திராத புதிய பொருள் முழுமையான அதன் ஆதிக்க ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. இதை நபிகள் தெளிவாக உணர்ந்திருந்தனர். வணக்கத்துக்குரியதாக செல்வத்தை அல்ல அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் குறிப்பிட்டதில் இக்கருத்து அடங்கியிருந்தது.
பண்டைய குலமரபிற் காணப்பட்ட நயக்கத்தக்க ஒழுக்கங்கள் சீரழிந்து கொண்டிருந்தமை பற்றிக் குர்ஆன் கண்டும் காணாதது போல் இருக்கவில்லை. புதிய செல்வ வேட்கை, பேராசை, அதிகார மோகம், உலோபத்தனம் முதலியவற்றை அது கடுமையாகக் கண்டித்ததுடன் மக்களின் நலனுக்காகச் செல்வத்தை நேர்மையாகச் செலவிடும்படி கட்டளையிட்டது. கடந்த கால நாடோடி வாழ்வின் சீரிய ஒழுக்கங்களாக மதிக்கப்பட்ட எளிமை, பரோபகாரம், பந்துக்களுக்கு உதவுதல், தாராளத் தன்மை முதலியவற்றைக் சமூக நலனுக்காக மீளவலியுறுத்தும் பல்வேறு கட்டளைகளைக் குர்ஆன் வெளிப்படுத்தியது.
வர்த்தகப் போட்டி
செல்வந்தரும் தரித்திரரும் என இருபிரிவினர் உருவாகியது போல செல்வவளத்தின் முழுப்பயனையும் அனுபவிப்போரும் வர்த்தகப் போட்டியினால் பாதிப்படைந்த வணிகர் என்ற மற்றொரு பிரிவினரும் உருவாகினர். செல்வ வளத்தைத் தமக்குள் பகிர்வதில் செல்வந்தரிடையே பாரிய ஏற்றத் தாழ்வுகள் வளர்ந்து வந்ததை இது காட்டியது. மக்கா வணிகர்களில் ஒரு சிறு பிரிவினரே
103

Page 55
அதிக செல்வத்திற்கு உரிமையாளராகும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தனர். காரவன் வர்த்தகத்தில் அதிகமான மக்கா வாசிகள் ஈடுபட்டிருந்த போதும் வர்த்தகத்தின் முழுப்பலனும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. பாரிய இலாபத்தை ஒரு சிறு பிரிவினரே ஈட்டி வந்தனர். அறபு சமூகத்தில் இது பாரதூரமான வேறுபாட்டை உருவாக்கியது. மொண்ட கொமறி வொட் இதன் விளைவுகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
கி. பி. 610 ல் மக்காவில் காணப்பட்ட பாரிய விரிசல் செல்வந்தருக்கும் ஏழைகளுக்குமிடையிற் காணப்பட்டதன்று. ஆனால் பெரும் செல்வந்தருக்கும் செல்வ வளத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட வேறுபாடாகும். மேலும், பெரிய செல்வந்தர் தமது செல்வத்திற்குப் புதிய பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். ஏனையோர் பாரம்பரிய மரபுகள் சிதறியமையாலும் சமூக உணர்வுகள் இழக்கப்பட்டமையாலும், தாம் பாதுகாப் பற்றிருப்பதாக உணர்ந்தனர். (1967 8)
தொன்மைச் சமூகத்தின் பழங்குடிப் பொருளாதாரத்திற்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகப் பொருளாதாரத்திற்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு இதுவாகும். குலப்பொருளாதாரம் யாரையும் செல்வந்தராகவோ தரித்திரராகவோ உருவாக்கும் ஒன்றல்ல. செல்வம் பகிர்ந்து செல்வதற்கு குலப் பொருளாதாரத்தில் போதிய வாய்ப்புக்கள் இருந்தன. செல்வம் ஓரிடத்தில் குவிவதற்கு குலப்பொருளாதார அமைப்பு இடமளிக்கவில்லை. பின்னர் வந்த வர்த்தகப் பொருளாதாரம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. செல்வம் ஓரிடத்தில் குவிவதற்கும் செல்வத்திரட்சிக்கும் பதுக்கலுக்கும் எளிதான வழிமுறைகள் இதில் உருவாகின. பேராசை, ஆடம்பரம், சுயநலவேட்கை முதலியவற்றையும் இது உடன் கொண்டு வந்தது சேர்த்தது.
வர்த்தகமும் பணப்புளக்கமும் ஒன்றிணைந்த போது சமூக உறவில் இதன் தாக்கம் கூர்மையாக வெளிப்பட்டது. பண உறவு முன்னணிக்கு வந்தது. எதையும் நிர்ணயிக்கும் ஒன்றாகப் பணம் மாறியது. முதலாளித்துவத்தின்-பணம் பற்றி மார்க்ஸ் கூறியுள்ளதை இங்கு நினைவு கொள்வது பொருத்தமானது. ‘எல்லா முதலாளித்துவ உறவுகளுமே முலாம் பூசப்பட்டவையாக இருக்கின்றன. அதாவது அவை பண உறவுகளாகத் தோன்றுகின்றது.
104

வட்டி
நாணயம் புளக்கத்திற்கு வந்ததன் பின்னர் அறேபியாவில் கடனும் வட்டியும் வேகமாக வளர்ந்தன. நலிவடைந்த வர்த்தகர்களும் சாதாரண மக்களும் வட்டியினால் மோசமாகப் பாதிப்படைந்தனர். எதென்ஸ், ரோமாபுரி போன்ற நாகரிக நகரங்களிலும் வட்டிகொள்வோரின் கொடுமையினால் மக்கள் பெரும் சுமைகளுக்குள்ளாகினர்.
பணத்திற்காகப் பண்டங்களை விற்பது ஏற்பட்டபிறகு பணத்தைக் கடனாகக் கொடுக்கும் முறை வந்தது. வட்டியும் கொடிய வட்டியும் வந்து சேர்ந்தன. பண்டைக்கால எதென்ஸ், ரோமாபுரி ஆகியவற்றைச் சேர்ந்த சட்டங்கள் கடன்காரர்களை கொடியவட்டிக்காரர்களின் காலடியில் தள்ளியது போல பின்னர் ஏற்பட்ட எந்தச் சட்டத்திலுமே நிகழ்ந்ததில்லை. (1972; 163)
அறேபியாவில் மோசமாகி வந்த வட்டிக் கொடுமையையும் அதற்குக் காரணமாயிருருந்தவர்களையும் குர்ஆன் கடுமையாக எச்சரித்தது.
வட்டியை (வாங்கி) விழுங்குபவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தங் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி(வேறுவிதமாக மறுமையில் எழுப்பப்பட மாட்டார்கள்.) எவரேனும் பின்னும் வட்டியை வாங்க முற்பட்டால் அவர்கள் நரக வாசிகளே (அத். 2 275).
மக்காவில் வட்டி பரவலாகப் பொருளிட்டும் ஒரு உபாயமாக வளர்ந்தது. தமது காரவன் வர்த்தகத்திற்காகவும், வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் வியாபாரிகளும் பொதுமக்களும் வட்டிக்குப் பணம் பெற்று வாழ்ந்தனர். வட்டி வீதம் எல்லையற்று வளர்ந்தது. ஒரு தீனாருக்கு ஒரு தீனார் ஒரு திர்ஹமுக்கு ஒரு திர்ஹம் என வட்டி வசூலிக்கப்பட்டது. இது நூறுவீத வட்டியாகும். இதற்கு இரட்டிப்பாகவும் வட்டி வசூலிக்கப்பட்டது. இதனைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. விசுவாசிகளே (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி விழுங்காதீர்கள்) (3:10). 'வட்டி இருநூறு விகிதம் அல்லது நானூறு விகிதமாகப் பெறப்பட்டதென்பதே இதன் பொருள். இவ்வட்டிக் கொடுமைக்கு நகர்ப்புறத்தவர் மட்டுமன்றி ஹிஜாஸின் நாடோடிகளும் சிக்கித் தவித்தனர் (1969; 90).
105

Page 56
சமூக மாற்றம்
அறபு மக்களின் தொன்மையான நாடோடித்துவப் பார்வை மாறி வர்த்தகப் பொருளாதாரத்திற்குரிய பார்வை அதன் இடத்தை நிரப்பத் தொடங்கியது. இது சமூக மாற்றத்தின் அடையாளமாகும். இதுவரை நிலவிய குல அமைப்பும் குல ஐக்கியமும் உடையத் தொடங்கின. குல அங்கத்தவர் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொருவருக்கும் இருந்த குலக்கடப்பாடும் ஐக்கிய உறவும் அவற்றின் செல்வாக்கை இழந்தன. உண்மையில் குல ஐக்கிய (Tribal Solidarity) த்தின் இடத்திற்கு தனி நபர்வாதம் (Individualism) வந்து சேர்ந்தது.
வர்த்தக வளர்ச்சியுடன் மக்காவில் தனிநபர்வாதம் தெளிவான தோற்றத்தைப் பெறுகிறது. குபேரவர்த்தகர்கள் எல்லா வற்றையும் விட வர்த்தக நடவடிக்கைகளுக்கே முதலிடம் தந்தனர். எல்லா விவகாரங்களிலும் முன்னர் போல தமது குல அங்கத்தவர்களுடனன்றி திIது òቻö வர்த்தகர்களுடனேயே தொடர்புகளை ஏற்படுத்திக் Gastónitiatif. (W. M. Watt, 1961:49)
தொன்மை அறேபிய வாழ்வியலில் ஆழ்ந்த சமயப்பற்றுறுதிக்கு
இடமிருக்கவில்லை. பல்வித வழிபாட்டு முறைகள் அறபியரிடையே காணப்பட்ட போதும் அவனது வாழ்வை மையப்படுத்தியிருந்த பொதுமரபு சமயத்தைவிட
பாலைவனச் சூழலை மையமாகக் கொண்டு அவன் உருவாக்கியிருந்த வாழ்க்கை முறையாகும். குல ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த இவ்வாழ்க்கை முறையைபழங்குடி மனித நலவாதம் (Tribal Humanism) எனக் கூறுவர். ஆண்மையும், துணிவும் இதன் பிரதான அடிப்படைகளாகும். பழங்குடி மனிதநலவாத மரபில் தனிநபர் குலத்திற்காகவே வாழ்ந்தான். தனிநபரின் வாழ்க்கைக்கு பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் பழங்குடி உத்தரவாதமளித்தது. பழங்குடி மனித நலவாதம் அறாபியரிடையே சமயத்திற்கு ஒப்பானதொரு வலிமைமிக்க கோட்பாடாக விளங்கியது. (1961:51)
புதிய பொருளாதார சூழல் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தனிநபர்
வாதம் புதிய சூழலில் தெளிவான தோற்றப்பாடாகியது. செல்வம் ஒரு சிலரது
கைகளில் குவிந்தமை பழங்குடியின் பொருளாதாரத்தை மாத்திரமல்ல பழங்குடிச்
சமூக அமைப்பையே தகர்த்தது. புதிய அம்சத்தின் முன்னே பழங்குடிமுறை
சக்தியற்றுக் கிடந்தது' என்ற எங்கெல்ஸின் கூற்று அறபு சமூகத்திற்கும்
106

பொருத்தமானதே. வர்த்தக மத்திய நிலையமாக மாறிவிட்ட மக்காவில் அல்லது நபிகள் பிறந்த நேரத்திற்குரிய மக்காவில் பழங்குடி மனிதநலவாதமும், முர்ருஆ’ என்ற ஒழுக்க அமைப்பும் சமூகரீதியில் பொருத்தமற்றவையாகின. (Tuner Bryan, S. 1974:84)
புராதன பயிர்ச்செய்கை முறையும் நாடோடிப் பொருளாதாரமும் வர்த்தகப் பொருளாதாரமாக மாறியமை மக்காவில் நடைபெற்ற முக்கிய பெளதீக மாற்றமாகும். பழங்குடிச் சமூக அமைப்பும் நாடோடி வாழ்க்கையும் சுதப்பிச் சூழலுக்கும் ஒட்டகவளர்ப்புக்குமே உகந்ததாக இருந்தது. பாலைவனச் சூழலில் தனி மனிதன் பழங்குடி அமைப்பில் கட்டுண்டு கிடந்தான். இது தவிர்க்க முடியாத நிபந்தனையுமாகும். எனினும் மக்காவின் புதிய பொருளாதாரம் இந் நிபந்தனைகளை மீறிச் சென்றது. பொருளாதார மாற்றங்கள் சமூக உறவிலும் சமூகக் கண்ணோக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாயினும் ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோருக்கும் நாடோடிகளுக்கும் பொருள் வளமற்றவர்களுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் தீவிரமடைந்தன. இவை பாலைவனத்தின் பாரம்பரிய வாழ்வு உடைந்து கொண்டிருந்ததன் அடையாளங்களாக வெளிப்பட்டன.
இவ்வாறு ஏற்பட்ட சமூக விரிசல் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இரத்தக்களரிகள் அதிகரித்தன. பதவிகளின் வாழ்வில் இரத்தக்களரிகள் புதியதல்லவாயினும் இரத்தக் களரிகளைத் தடுக்க அவர்கள் பயன்படுத்தி வந்த ஆயுதங்கள் பலவீனமடைந்திருந்தன. பதவிகளிடையே கட்டுப்பாட்டை வளர்ப்பதில் குல ஒருமைப்பாடு முக்கிய பங்கு வகித்தது. பழங்குடிகளிடம் காணப்பட்ட சில ஜனநாயக மரபுகள் சமாதானத்தை ஏற்படுத்த உதவின. சமாதானத் தீர்வுகளுக்குக் குலங்கள் மதிப்பளித்தன. சச்சரவுகள் நிகழ்ந்தாலும் அவற்றைத் தீர்த்து வைப்பதில் குலக் கவுன் சிலர்களும் செய்யிதுகளும் வெற்றி கண்டனர். எனினும் குல ஒருமைப்பாடும் பழங்குடியின் மரபுகளும் ஒழுக்க சம்பிரதாயங்களும் சிதறியமை சமாதானத்தையும் பாதுகாப்பையும் உருவாக்கி வந்த சாதனங்கள் அனைத்தையும் பலவீனமடையச் செய்தன.
பழங்குடி அங்கத்தவர்கள் முன்னர் போல பொதுவிவகாரங்களைக் கவனிப்பதற்காகக் கூடும் வழக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது. பொது ஸ்தாபனங்களில் செல்வ வளமுள்ளோரின் ஆதிக்கம் வலுவடைந்தது. பல்வேறு
குல அமைப்புக்களை உள்ளடக்கியிருந்த மாலா' என்ற பொது நிறுவனம் அதன்
107

Page 57
பழைய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதிருந்தது. உண்மையில் புதிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை அது இழந்துவிட்டது. செல்வந்தரும், உயர் குடியினரும் மாலாவைத் தமது நலன்களுக்கேற்ற விதத்தில் கட்டுப்படுத்தினர்.
மக்காவில் நாடோடிப் பொருளாதாரம் வர்த்தகப் பொருளாதாரமாக மாறும் நிலை மாறும் கட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது மாலாவின் அங்கத்தவர்கள் செல்வ வணிகராகினர். இதனால் மாலா ஒரு விதத்தில் சில ருரிமையாளரின் (Oligopolists) 5052 furduģ/. செல்வத்தைக் குவிப்பதில் ஈடுபட்டிருந்த கிளைக்குலத் தலைவர்களும் சக்திமிக்க தனி மனிதர்களும் மாலாவைக் GLGlu62őglamTsi. (Asgar Ali, 1980:14)
O8

6Lusti pignau Susi 6
குடும்பமும் திருமணமும்
குல ஒழுங்கமைப்பே பதவி சமூகத்தவரின் அடிப்படையாகும். ஒவ்வொரு கூடாரமும் ஒரு குடும்பத்துக்குரியது. பல கூடாரங்களைக் கொண்டது ஒரு முகாமாகும். இதன் அங்கத்தவர்கள் ஒரு குலமாக (qawm)க் கருதப்பட்டனர். இவ்வாறான பல குலங்களின் தொகுதியே கபீலா அல்லது பழங்குடியாகும்.
தொன்மை அறேபியரின் குறிப்பாக இஸ்லாத்திற்கு முந்திய அறேபியரின் பாலியல் மற்றும் திருமண உறவுகள்பற்றியும் அவற்றின் சட்டரீதியான தொடர்புகள் ujpSub G56f69 siT60)LO 91585(pair GT5) (Muhammed Ullah, 1990; iii). எனினும் நாம் கவனத்திற் கொள்ளக்கூடிய உலகெங்கினுமுள்ள பழங்குடிச் சமுதாயங்களுக்குச் சொந்தமான குடும்ப நிறுவனத்தையும் திருமண முறையையும் அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத பாலியல் உறவுகளையும் தொன்மை அறேபிய சமூகத்திலும் காணமுடியும்.
குடும்பம் மனித சமுதாயத்தின் மிகப்பழமை வாய்ந்த நிறுவனமாகும். அது எப்போது தோன்றியது என்பது பற்றித் தெளிவான முடிவுகள் இல்லை. ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே ஏதாவதொரு குடும்பவடிவம் இருந்துள்ளது. (1960:3). ஒரு ஆணையும் பெண்ணையும் கொண்ட அமைப்பு மட்டுமே குடும்பம் அல்ல. குடும்பம் ஒரு சிறிய குழுவாகவோ பலர் அடங்கிய ஒரு பெரிய குழுவாகவோ இருக்கலாம். குடும்பத்தையும் அதன் அளவையும் தீர்மானிப்பதில் திருமண முறைகளுக்கு முக்கிய பங்குண்டு.
தாய்வழி
ஒரு தார மணத்துக்கு முந்திய மணமுறையில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்திருந்தான். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன்

Page 58
உறவுபூண்டாள். குடும்ப நிறுவனமும் திருமணமுறைகளும் இன்று காணப்படுவதுபோலவே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் நிலவியதென்பதை மார்க்சிய சமூகவியல் உட்பட சில மானுடவியல் கொள்கைகள் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பம் குடும்பமற்ற (Non Family) நிலையிலிருந்து வளர்ந்துவரும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட ஒன்றாகும். மிகப்புராதன நிலையில் மனித சமுதாயத்தில் வரை முறையற்ற பாலுறவும் (Promiscuity) அதைத் தொடர்ந்து குழுமணமும் இருந்திருக்க வேண்டும் என்று சில மானிடவியல் கோட்பாட்டுகள் கூறுகின்றன. மார்க்ஸிய சமூகவியலும், இதனையே வலியுறுத்துகிறது.
பைபிள் வகைப்பட்ட வியாக்கியானங்கள் தந்தைவழிக் குடும்பத்தையும் (Patriarchal Family) usug, ITTLn600Typsop60)Luth (Polygamy) மிகத்தொன்மையான குடும்பப வடிவங்கள் என ஏற்றிருந்தன. தொடக்க காலச் சமுதாயம் பற்றிய பெக்கோஃபன் (J.Bachofen, 1815-1887) ஜோன் எப்.மெக்லீனான் (John tmclenan, 1827-1881) எல்.எச்.மோர்கன் (L.H.Morgan, 1818-1881) ஆகியோரின் கோட்பாடுகள் இத்தகைய பழைமைக் கோட்பாடுகளை நிராகரித்தன.
ஆரம்பகால மனிதசமூகம் வரைமுறையற்ற (Promiscuity) பாலுறவில் ஈடுபட்டிருந்தபோது யார் தந்தை என்பதை நிச்சயிப்பது சாத்தியமற்றதாயிருந்தது. எனவே வம்சவழி தாயிலிருந்து கணக்கிடப்படுவது இயல்பாயிற்று. தொடக்க காலம் தாய்வழிக்குரியதென பெக்கோஃபன் நிறுவமுயன்றார். தாய்வழியிலிருந்தே ஆண்வழியுரிமை எழுந்திருக்க வேண்டும் என அவரின் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆரம்பகாலத்தில் தாய்வழி மரபே தோன்றி வளர்ந்ததாக ஜோன் எப்.மெக்லீனானின் கொள்கை வலியுறுத்துகிறது.
குடும்பம் என்ற சொல் பல்வேறுவகையான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. ஏனெனில் குடும்ப அமைப்பு பல்வேறுவகை மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது. (Briffault). தொன்மைக் காலக்குடும்பம் நாகரிக காலக் குடும்பத்தைவிட விலங்குக் குடும்ப முறையுடன் மிக நெருக்கமானதாகும். தொன்மைக் குடும்பத்தில் தாய், குழந்தைகள் என்ற தொடர்பே காணப்படுகிறது. தந்தைத் தொடர்பு அங்கு காணப்படுவதில்லை. தாய், குழந்தைத் தொடர்பையே மிருகக் குடும்பங்களும் பெற்றுள்ளன. மனிதக்குடும்பங்களின் வளர்ச்சியும் மாற்றமும் தாயும் குழந்தைகளும் என்ற தொடர்பை மட்டுமே கொண்டு எண்ணற்ற தலை முறைகளைக் கடந்து
10

சென்றுள்ளன. (Britfault:1956; 41) இது பிறிபோல்ட் முன்வைக்கும் கொள்கையாகும்.
எங்கெல்ஸ் உட்பட எல்.எச்.மோர்கன், ஜெ.ஜெ.பெக்கோஃபன், மெக்லீனான், பிறிபோல்ட் ஆகியோர் முன்வைத்துள்ள குடும்பம்பற்றிய கோட்பாடுகள் குடும்பம், வரலாற்றில் பல படித்தரங்களைக் கடந்துள்ளதை வலியுறுத்துகின்றன. குடும்பவளர்ச்சியின் தொடக்க வடிவத்தில் தாய்த்தலைமை (Matriarchy) ஒரு முக்கிய படித்தரமாக அமைந்திருந்தது. குடும்பத்தின் பரிணாமவளர்ச்சியில் இவ்வகையான மூன்று கட்டங்களை மோர்கனும், மோர்கன் ஆய்வுகளைப் பின்பற்றி எங்கெல்சும் அடையாளப்படுத்தினர். விலங்குநிலை (Savagery) காட்டுவாசிநிலை (Barbarism) ET85fa3566DD6No (Civilization) g éfâu Lo Gafg5 நாகரிகக்கட்டங்களுக்கு இசைவாக இதனை அவர்கள் எடுத்துக்காட்டினர். விலங்கு நிலைக்கு அடையாளமாக குழுமணமும், காட்டுவாசி நிலைக்கு அடையாளமாக இணைக்குடும்பமும் (Pairing family) நாகரிக நிலைக்குக் குறிப்பு அம்சமாக ஒரு தார மணமும் இடம் பெற்றிருந்தது. பொதுவில் ஒருதார மணமுறைக்கு முன்னருள்ள எல்லாக் குடும்பவடிவங்களிலும் குழந்தையின் தகப்பனை சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளின் தாய் யார் என்பதை காண்பது சாத்தியமாக இருந்துள்ளது.
மிகப்புராதனமான குடும்பவடிவம் என குழுமணத்தையே எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். இந்த வடிவத்தில் முழுக்குழுக்களாக ஆண்களும் முழுக்குழுக்களாகப் பெண்களும் ஒருவருக்கொருவர் உறவு கொண்டு சொந்தமாயுள்ளனர். மிருகநிலையிலிருந்து மனிதநிலைக்கு மாறிச் சென்ற கட்டத்துக்குப் பொருத்தமான வரை முறையற்ற பாலியல் உறவு முறை குழுமணத்துக்கு முன்னர் நிலவியிருக்கவேண்டும். இதனைப் பொதுமகளிர் முறையென பெகோஃபன் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் பொது மகளிர் முறையிலிருந்து ஒருதார மணத்துக்கும் தாய் உரிமையிலிருந்து தந்தை உரிமைக்கும் மாறிச் செல்லும் பரிணாம வளர்ச்சி தவிர்க்க முடியாத வாரிசுரிமை சார்ந்த பொருளாதார மாற்றங்களின் விளைவு என்பதை மோர்கனும் எங்கெல்சும் தொன்மைக் குடும்பங்களின் வளர்ச்சிக்கட்டங்களினூடாக விளக்கினர்.
அறேபிய முறை
வரைமுறையற்ற பாலுறவுக்கு மிக அருகாமையில் தொன்மை அறேபியரின் திருமண முறை ஆரம்பத்திற் காணப்பட்டுள்ளது. (1937:16) பல கணவர்
11

Page 59
மணமும் (Polyandry) பல துணை மணமும் (Polygamy) இங்கு பரவலாகக் காணப்பட்டன. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் அது பல மனைவி மணம் (polygyny). பல ஆண்கள் ஒரு பெண்ணை மணந்து கொண்டால் அது பல கணவர் மணம் (polyandry) எனப்படும். மோர்கன் மெக்லீனான் ஆகியோர் பல கணவர் முறை சமூகவளர்ச்சியில் ஒரு இயற்கைக் கட்டமெனக் கருதுகின்றனர். பல கணவர் மணம் அறேபியாவில் காணப்பட்டுள்ளது. பின்வரும் நபிவழிமரபு (ஹதீஸ்) இதற்காகக் காட்டப்படும் ஆதாரங்களிலொன்றாகும்.
1. தொகையான ஆனால் பத்துக்குக் குறையாத ஆண்கள் ஒரு பெண்ணை உடலுறவுக்குப் பயன்படுத்திவந்தனர். அவள் கருவுற்றுப் பிள்ளை பெற்றபோது அப்பெண் அவர்களிடம் கூறினாள். எமது ஒப்பந்தத்தை நீங்களறிவீர்கள் இப்போது நான் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளேன். எனது அபிப்பிராயப்படி இக் குழந்தை இன்ன பெயருக்குரியவருடையதாகும். அவளால் பெயர்குறிப்பிடப்பட்ட தந்தை தனது தந்தை அந்தஸ்தை அங்கீகரிக்க வேண்டும்.
2. பல ஆண்கள் ஒரேபெண்ணை உடலுறவுக்குப் பயன்படுத்திவந்தனர். அவள் எந்தவிருந்தாளியையும் மறுக்கவில்லை. அவள் ஒரு குழந்தையைப் பெற்றபோது உடல் இலட்சணைச் சோதனை மூலம் யார் அந்தக் குழந்தையின் தந்தை என்பது முடிவு செய்யப்பட்டது (1990:IV).
கற்பு
ஒரு பெண் ஒன்றுக்குமேற்பட்டவர்களைக் கணவராய்க் கொண்டிருப்பது அறேபியாவில் பொதுவில் காணப்பட்ட வழக்கமாகும். (1985:16) இதுபற்றிப் பேராசிரியர் ரொபர்ட்சன் ஸ்மித் (W.Robertson Smith) பின்வருமாறு கூறுகிறார்:
சகோதரர்களுக்கு குழந்தைகளின் மீது உரிமையிருந்தது. (լքցն/5/6060 ஒழுங்கில் (Seniority) உள்ளவர்களின் வரிசைப்பிரகாரமே உறவு முறைகளும் ஏனைய அதிகாரங்களும் குலத்திற்குள் பகிரப்பட்டன. மூத்தவர் உயர் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். சொத்துக்கள் பொதுவிலிருந்தன. எல்லாரும் ஒரு
112

மனைவியை வைத்திருந்தனர். முதலில் வந்தவர்முதலில் பெறுவார்’ என்ற ஒழுங்கின்படி அவளுடன் அவர்கள் உறவு கொண்டனர். அவளிடம் முதலில் சென்றவர் ஒரு தடியை அடையாளமாக விட்டுச் சென்றார். எனினும் இரவை அவள் முதியோருடன் கழித்தாள். எல்லாரும் எல்லாருக்கும் சகோதரர்களாக இருந்தமையால் (தமது குலக்குழுவுக்குள்) அவர்கள் தாய்களுடனும் விவாகரீதியாக உடலுறவில் ஈடுபட்டனர். விபச்சாரகனுக்குத் தண்டனை மரணமாகும். விபச்சாரகன் என்றால் அவன் மற்றொரு குலக்குழுவைச் சேர்ந்தவன் என்று பொருள் (WRobertson Smith 1903: 133 in 1985:17)
கற்பு, விபச்சாரம் போன்றவற்றை தொன்மை அறேபியர் இன்றைய பொருளில் கருதவில்லை. நல்லகருவைப் பெறுவதற்காகத் தனது மனைவியை மற்றொருவனுடன் உடலுறவு கொள்ளவைக்கும் வித்தியாசமான நிறுவனமும் அங்கிருந்தது. (1990:vi) தனது மனைவியின் மாதவிலக்குக்காலம் முடிவுற்றதும் நல்ல கருவைப் பெறும் நோக்கத்துடன் மற்றொருவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் மனைவியை வேண்டிக் கொள்வான் அவனால் மனைவி கருவுறும் வரைக்கும் கணவன் அவளிடமிருந்து ஒதுங்கி இருப்பான். கருவுற்றபின்னர் மனைவியுடன் சேர்ந்து கொள்வான். (1990; wi) பேராசிரியர் ரொபர்ட்சன் ஸ்மித் இதுபற்றிக் கூறுவது வருமாறு: 'தொன்மை அறேபியாவில் மனைவியின் இல்லறவியல் விஸ்வாசத்தைப் பற்றிக் கணவன் அலட்சியமாக இருந்தான். அவன் தன் மனைவியை இன்னொருவனுடன் உடலுறவுக்காக அனுப்பிவைத்தான் (1903 16 in 1985: 34).
குல அமைப்பிற்குள் யார் தந்தை என்பது பற்றித் தெளிவின்மை இருந்தது. குழந்தைகள் குலத்தின் குழந்தைகளாகவே கருதப்பட்டனர். ஏனெனில் தாய் குலப்பெண்ணாக இருந்தாள். இதனால் தொன்மை அறபுக் குலங்களின் வழக்கில்- நாம் கருதும் பொருளில்-சட்ட ரீதியான பிள்ளை, சட்டரீதியற்ற பிள்ளை என்ற வேறுபாடு இருக்கவில்லை. அன்றைய அமைப்பின் கீழ் உண்மையான தந்தை யார் என்று அறிவது முக்கியமற்றிருந்தது. குலத்திற்குள் யாரேனும் ஒருவர் தந்தையாய் இருப்பதே வழக்கமாயிருந்தது. குழந்தையின் தனிப்பட்ட தகப்பன் (Individual Father) யார் என்ற பிரச்சினை நவீன நாகரிகத்துக்குரியதாகும். அறபுக்குல அமைப்பில் பெண் பெரும்பாலும் பொதுவில் இருந்தாள். குழந்தைகள் அவளுடனேயே வளர்ந்தன. கிறிஸ்த்தவயுகத்தின் ஆரம்பத்திலும் கூட தந்தையைவிடத் தாயின் பெயரையே பிள்ளைகள் தம்
13

Page 60
பெயருடன் இணைத்துக்கொண்டனர். நாடோடி அறபுகளிடம் இவ்வழக்கு இன்றும் காணப்படுகின்றது. (பார்க்க, Bertram Thomas, 1937:16)
அடிமைமுறை அறேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். இஸ்லாத்திற்கு முன்னர் அடிமைப் பெண்களை எஜமானர்கள் தமது பாலியல் உணர்வுகளுக்குப் பயன்படுத்தினர். சிலர் அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திப் பொருளீட்டினர். ஜாஹிலியாக் காலத்தில் அறபுமக்கள் தம் அடிமைப் பெண்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி அதிலிருந்து வருவாய் தேடிக்கொண்டிருந்தனர் (1992:181 பாகம் 11). அல்குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகிறது:
தங்கள் கற்பை இரட்சித்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப்பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை அடையும் பொருட்டு விபச்சாரம் செய்யும்படி நீங்கள் நிர்பந்திக்காதீர்கள் (அத்.4:33)
திருமணம் செய்யாது ஆனால் மனைவியரைப்போல் பெண்களை வைத்திருக்கும் மற்றொரு முறையும் (Concubimage) அவர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. யுத்தத்தில் கைதிகளாய் பிடிக்கப்பட்டவர்களையும் விலைக்கு வாங்கிய அடிமைகளையும் இத்தகைய உறவுக்கு அறேபியர் பயன்படுத்தினர்.
அடிமைப் பெண்கள் மீதான பாலியல் நிர்ப்பந்தம், விபச்சாரம், சட்டபூர்வமற்ற மனைவிமுறை ஆகிய பாலியல் உறவுகளை இஸ்லாம் கண்டித்தது அத்துடன் அவற்றைக் கட்டுப்படுத்தி சட்டபூர்வமான திருமண உறவுக்குள் அவற்றைக் கொண்டுவருவதற்கு சமய ரீதியாகவும் உலகியல் ரீதியாகவும் மக்களை அது நிர்ப்பந்தித்தது. மேலே குறிப்பிட்டுள்ள அல்குர் ஆனின் கூற்று (4:33) இத்தகைய கட்டளைகளில் ஒன்றாகும்.
முக்கியமாக அடிமைகளுக்கு விடுதலையையும் விவாக உரிமையையும் இஸ்லாம் வாக்களித்தபோது எஜமானர்கள் ஜாஹிலியாக் காலத்திலும் அதற்குப்பின்னரும் நடைமுறைப்படுத்திய சட்டரீதியற்ற பாலுறவுமுறைகளைத் தடைசெய்தது. 'திருமணமற்ற தாம்பத்தியம் முறையற்றது. (4:25). எனக் குர் ஆன் பிரகடனப்படுத்தியது. 'ஆண்களும், பெண்களும் தங்கள் கற்பைக் காத்துக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளனர். (33:35) என்பது குர்ஆனின் மற்றொரு அறிவுறுத்தலாகும். அடிமைப் பெண்களை விவாகபந்தத்துள் கொண்டுவரும்
114

இஸ்லாத்தின் தீர்வு பின்வருமாறு அமைந்திருந்தது (i) எஜமானனுக்கும் அடிமைப் பெண்ணுக்கும் திருமணம் (ii) சுதந்திரமாயுள்ளவர்களுக்கும் அடிமைகளுக்குமிடையில் திருணம் (i) இரு அடிமைகளுக்கிடையில் திருமணம்.
வன்முறை மூலம் கடத்திச் சென்று மணம் முடிக்கும் முறையும் அறேபியரிடமிருந்தது. பெண்களின் விருப்பத்தை அறியாதும் பாதுகாவலரின் அனுமதியின்றியும் பலாத்காரமாகப் பெண்ணை எடுத்தல் இதுவாகும். இவ்விதமாக மனைவியைத் தேடிக்கொள்ளும் முறை உலகின் பலபாகங்களில் காணப்பட்டுள்ளது. பிரசீலியப் பழங்குடிகள் (Brazilian tribes) மணமுடிப்பதற்காகப் பெண்களைக் கடத்திச் சென்றனர். எக்குவாடா இந்தியரிடமும் இவ்வகை மணமுறை உள்ளது. காரயா (Karaya) ஜிபாரோஸ் (ibaros) கள் பெண்களைக் கைப்பற்றுவதற்காக யுத்தங்களை நடத்தியுள்ளனர். அஹ்த் (Aht) களை சேர்ந்த ஒருவன் தனது மனைவியை தனது குலத்துக்குள்ளிருந்து திருடிக் கொள்கிறான் (பார்க்க 1922:240, 41).
விதவை
பெண்கள் பொருள்களைப் போலவோ அல்லது அதற்குக் குறைவாகவோ நபிகளின் காலத்தில் நடத்தப்பட்டதை அக்காலத்திருமண முறைகளிலும் விதவைகள் நடத்தப்பட்டவிதத்திலும் எளிதிற் காணமுடியும். தொன்மை முறையில் விதவைகளுக்குச் சுதந்திரமிருக்கவில்லை. விதவையைக் கணவனின் மகன்களோ, கணவனின் சகோதரர்களோ அல்லது உறவினர்களோ தமதுடைமையாக்கினர். பெண்ணின் விருப்பம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. விதவையை மணம் செய்வதில் கணவனின் மூத்தமகன் அதிக உரிமையைப் பெற்றிருந்தான். மகன்கள் இல்லையாயின் இந்த உரிமையை கணவனின் சகோதரர்கள் அனுபவித்தனர். விதவைtது ஒரு நீளமான துணியைப் போடுவது மூலம் அவளை அவர்கள் தமதுடைமையாக்கிக் கொள்வர். இவ்வாறு தமதுடைமையாக்கப்பட்டவர்களை அவர்கள் திருமணம் செய்துகொண்டனர், அல்லது தகுந்த விலை கிடைத்தால் மற்றவனுக்கு விற்பனை செய்தனர். விதவைக்குத் திருமண வாய்ப்பிருந்தது. ஆனால் அவளின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது.
விதவைகளை அவர்களின் விருப்பத்துக்குமாறாகத் திருமணம் செய்வதை நபிகள் தடுத்தனர். ‘விதவையின் அனுமதியின்றி அவளுக்குத் திருமணம் செய்துவைக்கலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதம்
115

Page 61
பெறாமல் திருமணம் செய்து வைக்கலாகாது’ என்பது நபிகள் வாக்கு (ஸ9ணன் திர்மிதி பாகம், 9). அல்குர் ஆன் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் இந்த) வழக்கத்தைத் தடை செய்தது. இத்தகைய மணமுறை மானக்கேடானதென்று குர்ஆன் வர்ணித்ததோடு பெண்களை இறந்தவனின் பொருள்களாகக்
கொள்ளவேண்டாம் என்றும் கட்டளையிட்டது:
முன்னர் நடந்துபோன சம்பவங்களைத்தவிர நீங்கள் உங்கள் தந்தைகள் மனம் செய்து கொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்தபின்னர் இனி) மணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இதுமானக் கேடாகவும் தீய வழியாகவும் இருக்கிறது (அத் 4:22).
விசுவாசிகளே பெண்களை (அவர்கள் உங்களை விரும்பாது வெறுக்க இறந்தவனுடைய பொருள்களாக மதித்து அவர்களை) ப் பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல (அத் 4:19).
முஸ்லிம் குடும்பச்சட்டம் தந்தைத்தலைமை முறையுடன் தொடர்புடையது. ஆனால் நினைவுக் கெட்டாத கால வழக்காறுகள் தாயை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்புக்கள் தொன்மை அறேபியாவில் பரவியிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன (1990: xi). அரசியல் அல்லது வீட்டுவிவகாரங்களில் அறேபியன் தனது மனைவிக்குக் கீழ்பட்டவனாக இருக்கவில்லை. ஆனால் எத்தனை ஆண்களுடனும் அவள் உடல் உறவு வைத்துக் கொள்வதற்கு அந்த முரட்டு நாகரிகம் அவளுக்கு இடமளித்தது (1990 : xi). தன்னுடன் உடல்உறவு கொண்ட சோர நாயகர்களில் யாரேனும் ஒருவரைத் தனது குழந்தைக்குத் தந்தையாகத் தெரிவு செய்ய அவளுக்குப் பூரண அதிகாரமிருந்தது. குடும்பத்திலும் அவள் வாழும் கூடாரத்திலும் கூட அவளுக்கென சில அதிகாரங்கள் இருந்துள்ளன.
கூடாரம் பெண்களின் ஆதிக்கமுள்ள இடமாகும். மனைவியின் அனுமதியின்றி கணவனுக்கும் கூடாரத்தினுள் பிரவேசிக்க அதிகாரமிருக்க வில்லை. கூடாரத்தின் வாயிலைக் கிழக்கிலிருந்து மேற்காக அல்லது ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு மாற்றிவைப்பதன் மூலம் தான் கணவனை விவகாரத்துக் செய்து விட்டதாக மனைவி கணவனுக்குத் தெரியப்படுத்தினாள். இத்தகைய வழக்கங்கள் தாய்த் தலைமையின் அடையாளங்களை அல்லது சமூக
116

உறவுகளில் பெண்களுக்கிருந்த மேலாதிக்கத்தைக் காட்டுவனவாகக் கருதலாம். (பார்க்க, 1990: xi) உண்மையில் தாய் வழிக்குடும்பம் என்பதன் இறுக்கமான பொருள் கட்டுப்பாட்டைத் தாய் அல்லது மனைவி தனது கையில் வைத்திருப்பதாகும்.
LDSMOT
மணமகளுக்கு மணமகன் வழங்கும் திருமண வெகுமதி மஹராகும். சட்டபூர்வமான திருமண உறவுக்கு இக்கொடுப்பனவு (மஹர்) இன்றியமையாத தென இஸ்லாம் வகுத்துள்ளது. மஹர் எனும் இம்மணக் கொடை (Dower) நபிகள் காலத்திலும் நபிகளின் காலத்திற்கு முன்னரும் அறேபியாவில் காணப்பட்ட ஒரு பழைய முறையாகும். இதுபற்றி ரூபன் லெவி (Reuben Levy) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
இது மணப் பெண் பண மணம் அல்லது ஒப்பந்த மண முறையாகும். (Marriage by Purchase or Contract) gyGuylfluTafai flavoflu இப்பழைய முறையில். மணமகன் மஹர் எனும் ஒரு தொகைப்பணத்தைப் பெண்ணுக்கு வழங்குகின்றான். இதனைப் பெண்ணின் தந்தை அல்லது நெருங்கிய உறவினர் பெற்றுக் Gastoirotif. (Reuben Levy, 1957.91)
மணப்பெண் பணம்
அறேபியாவில் மட்டுமன்றி ஏனைய பல தொல்குடிச் சமுதாயங்களிலும், பபிலோனிய செமித்தியப்பிரிவு மக்களிடையேயும் மணப் பெண் பணம் (Bride Price) காணப்படுகிறது. பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் நேராகச் சம்பந்தப்பட்டுள்ள இத்திருமணத்தை ஈடுசெய் திருமணம் அல்லது கைமாற்றுத் 5(5Lo 600TLh 6T60T (Marriage by Consideration) Gousio.Liftonfö, (Westermarck) குறிப்பிடுகிறார். பொன், வெள்ளி, பணம், கால்நடைகள், சேவை, உணவு என்று ஏதாவதொரு பெறுமதிக்குரிய பொருளை ஆண், தான் மணக்கவிருக்கும் மனைவிக்கு மணப்பெண் பணமாக வழங்குவதை இது குறிக்கிறது.
117

Page 62
இதுபற்றி நிலவும் கொள்கைகளில் ஒன்று, மணப் பெண் பணத்தை அல்லது கொள்வனவுத் திருமணத்தை (Marriage by Purchaese)5L556ò திருமணத்தோடு தொடர்புபடுத்துகிறது. கொள்வனவுத் திருமணம் கடத்தல் திருமணத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பது அக்கொள்கை தரும் செய்தியாகும். பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்பவர்கள் பின்னர் பெற்றோருக்கு நஷ்டஈட்டை அல்லது வெகுமதிகளைக் கொடுத்துக் கடத்தப்பட்ட பெண்ணை மனைவியாக்கிக் கொண்ட வழக்கம் மணப்பெண் பணமாக ஆகியிருக்கலாம் என்று, இக் கொள்கை கருதுகிறது. பூர்வீகக் குடிகளிடம் காணப்பட்ட திருமணப்பரிசுப் பரிமாற்றமே கொள்வனவுத் திருமணமாகியிருக்கலாம் என்றும், பரிசுப் பரிமாற்றம் இயற்கை கடந்த சக்திகளில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்றும் மற்றொரு கொள்கை கூறுகிறது. எனினும் ஏனைய சில தொன்மை வழக்கங்களுக்கு தோற்றத்தைக் காண்பது எவ்வாறு கடினமாக உள்ளதோ அவ்வாறுதான் மணப்பெண்பணமும் உள்ளது. மணப் பெண் கடத்தல் திருமணத்திலிருந்துதான் இது வளர்ச்சி பெற்றதென்று கூறப்போதிய நியாயங்களில்லை' என்று வில்லியம் எஃவ் கென்கெல் கூறுகிறார் (F. Kenkel, 1960:35).
இதன் தொடர்ப்பைப்பற்றிய கருத்துக்கள் எவ்வாறிருந்தபோதும் அறேபியாவில் கடத்தல் திருமண முறையும் கொள்வனவுத் திருமணமும் காணப்பட்டுள்ளன. இதன் ஆதி தோற்ற நிலைக்குப் பின்னர்வந்த காலங்களில் இதிற் பொதிந்திருந்த கருத்துக்களை இவ்வாறு கூறலாம்: பெற்றார் தமது மகளை இழப்பதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்வதும் அவளை வளர்த்து ஆளாக்கியதற்கான கொடுப்பனவை அவர்களுக்கு வழங்குவதும் இதில் அடங்கியுள்ளது. மேலும் பெற்றார் தமது மகளை நல்லொழுக்கமுள்ளவளாக வளர்ப்பதில் பெற்றவெற்றிக்கான பரிசாகவும் இது கொள்ளப்படுகிறது. உண்மையில் இதற்குரிய பொருள் The Price of a Virgin என்பதே (1960:35)
இலங்கை வேடுவர் மணப் பெண்ணின் பெற்றோருக்கு உணவை மணப்பெண் பணமாக வழங்குகின்றனர். பெராக் சாக்கியர் கத்தியை அல்லது மரவள்ளியை வழங்குகின்றனர். சில பழங்குடிகள் பெண்ணின் பெற்றோருக்கு சிறிதளவு புகையிலையை அல்லது அரிசியை வழங்குகின்றனர். பட்டாகோனியர்கள் குதிரைகளையும் வெள்ளி ஆபரணங்களையும் கொடுக்கின்றனர். ஆபிரிக்கரின் மணப்பெண் பணம் பொதுவாகக் கால்நடைகளாகும். பகாண்டோ சமூகத்தினர் பசுவை அல்லது பல ஆடுகளை
118

மணப் பெண் வீட்டுக்குக் கொடுக்க வேண்டும். லெண்டு, உகண்டா வாசிகள் பதினைந்து பசுக்கள் அல்லது நூறு ஆடுகள் கொடுப்பது வரையறுக்கப்பட்ட அளவாகும். மிகக் குறைந்த தரத்துப் பகண்டா சில எருதுகளையும் ஆறு தையல் ஊசிகளையும் அல்லது சப்பாத்து ஜோடி, கோட் போன்றவற்றையும் வழங்குகிறான். சில அமெரிக்க இந்திய பூர்வீக மக்கள் கம்பளி ஆடைகளை மணப்பெண் பணமாகக் கொடுக்கின்றனர். (பார்க்க, WWestermarck 1922: Vol, ii: 375 & 1990: 409-10) GLoiGLITé, (Murdock) 5TGh 9 Gus g60Té, குழுவியல் மாதிரிகளின் படி ஏறக் குறைய 60 சதவீத சமுதாயங்களில் மணப் பெண் பணம் காணப்படுகிறது (1990; 409).
மணப்பெண்ணுக்கான இக்கொடுப்பனவு தவணை முறையிலும் சில சமுதாயங்களில் வழங்கப்படுகிறது. சைபீரிய மக்கள் உரிய தொகையில் ஒரு குறித்த பகுதியை வழங்கிய பின்னரே கணவனை உடலுறவுக்கு அனுமதிப்பர். முழுமையாக இப்பணத்தைச் செலுத்தமுன்னரே சில பழங்குடிகளிடத்தில் திருமணம் நடந்தது. மேற்கு ஆபிரிக்கரிடையே திருமணத்திற்கு இரண்டு மூன்று வருடங்களின் பின்னரே இக் கொடுப்பனவு வழங்கி முடிக்கப்படுகிறது.
கொள்வனவுத்திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தைக்கு சேவை செய்வதும் ஒரு வழக்கமாக இருந்துள்ளது. எஸ்க்கிமோக்களிடமும் வடதென் அமெரிக்க சமுதாயங்களிலும் பல்வேறு சேர்பியக் குழுக்களிடேயேயும் இந்தியாவிலும் இவ்வழக்கம் காணப்படுகிறது (1922:361). வெவ்வேறு குழுக்களிடையே சேவைக்கால அளவு வேறுபடுகிறது. ஒரு வருடத்துக்குக் குறையாது பத்து அல்லது பன்னிரெண்டு அல்லது பதினைந்து வருடங்கள் வரை இது நீடிக்கலாம் (1922:364). அதுவரை மணப்பெண்ணின் வீட்டில் மணமகன் மணப்பெண்ணின் தந்தையுடன் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுகிறான்.
செமித்தியமுறை
PEGGls Lü Éc{50600TLh (Marriage by Consideration) 6Tsu6uff GleFLfilé55luUû பிரிவினரிடையேயும் காணப்பட்டுள்ளது. பபிலோனியாவில் கணவனாக வர இருப்பவன் மணப்பெண் பணம் கொடுக்க வேண்டும். (1922: 407 Vol II) தொன்மை பபிலோனியாவில் அதாவது ஹமு றாபியின் காலத்தில் -2150-1950 கி.மு. அளவில் - திருமணங்களைப் பெற்றோர் நிச்சயித்தனர். இத்திருமணம் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது கொள்வனவு முறை (Purchase) யைக்
119

Page 63
கொண்டிருந்தது. இதற்காக வெகுமதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டன. பணத்தொகை மணப்பெண்ணுக்கும் தரப்பட்டது (BJ.Stern(ed). 1938:69) மாப்பிள்ளையின் தந்தை மணப் பெண்ணின் தந்தைக்கு மணப்பெண் பணத்தை அல்லது அன்பளிப்பை வழங்குவார். இது பெண்ணுக்குரிய உடைமையாகக்கருதப்பட்டது. திருமணத்தின் பின்னர் மணப்பெண் அன்பளிப்புகளுடன் கணவனிடம் வருவாள் (John Longdom Davies, 1927: 153).
மணப்பெண்பணத்தோடு மணமகளின் தந்தை பெண்ணுக்குச் சீதனமும் (Downy) வழங்கினார். இதனையும் பெண்ணுக்குரிய சொத்தாகவே செமித்தியர் மதித்தனர். மணப்பெண் விவகாரத்துச் செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ அது அவளைச் சேர வேண்டும் அல்லது அவளது பிள்ளைகளைச் சேர வேண்டும். பிள்ளைகள் இல்லாத விடத்து அவளது சகோதரனைச் சேரவேண்டும். விவகாரத்துச் சட்டங்களில் இதுபற்றிய விதிகள் காணப்பட்டன. ஹமுறாபிச் சட்டத்தொகுப்பின் படி குழந்தைகளுடன் விவாகரத்து நடைபெற்றால் மனைவியின் திருமணப்பாகத்தை கணவன் மனைவிக்குக் கொடுத்துவிட வேண்டும். குழந்தை வளர்ப்பிற்காக விளைநிலம், நிலம், பொருள்களின் பயன்கள் முதலியவற்றையும் கொடுக்க வேண்டும். குழந்தைகளில்லையாயின் முடிந்த அளவு மணப்பெண்பணத்தையும் தந்தை வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்து சீதன உடைமைகளையும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் (1938; 70).
தந்தைவழிக்குடும்பம், மனைவி கணவனுடன் வாழ்வதையே கோருகின்றது. பெண் தனது வாழிடத்திலிருந்து விடுபட்டு கணவனுடன் கணவனின் குடும்ப அங்கத்தவராகின்ற இடங்களில் இக் கொடுப்பனவு
நிகழ்வதாக ரோபர்ட் பிறிபோல்ட் (Robert Briffault) கூறுகிறார். உண்மையில்
இத்தொகை, பெண்ணைக்கொள்வனவு செய்வதற்காக அல்ல அவளைக் கணவன் வீட்டிற்குக் கொண்டு செல்வதற்கான உரிமையை வாங்குவதற்கே வழங்கப்படுகிறது. மறுவார்த்தையில் கூறுவதானால் தந்தைவழிக்குடும்ப g60)LDů60)Lu 6606NofigliğgJuh (GUITës(85 g)gj6ITG5ih. (R. Briffault in M. F. Asheley Montagu (ed), 1956:35)
தொன்மை இஸ்ரேலியரிடம் மணப் பெண் பணம் வழங்கும் முறை பொதுவாகக் காணப்பட்டுள்ளது. இதனை அவர்கள் Mohr அல்லது Mahir என
120

அழைத்தனர். செமித்தியப்பிரிவினரிடையே காணப்பட்ட இம்மரபை Glousio. LLorfé, 560Tg History of Human Marriage și îlsir6u(Bunn (p கூறுகிறார்:
ஹமுறாபிச்சட்டங்களில் மணமகன் மணப்பெண்ணுக்கு வழங்கும் மணப்பெண் பணத்தை மட்டுமல்ல பரிசுகள் வழங்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதேபோன்ற பரிசுகளை (Mattan) தொன்மை ’ இஸ்ரேலியரும் மணப்பெண்ணுக்கு வழங்கினர். ஆபிரஹாமின் ஊழியன் “பொன் வெள்ளி ஆபரணங்களையும் பாத்திரங்களையும் w ஆடைகளையும் ரெபேக்காளுக்குக் கொடுத்தான். அவள் தாய்க்கும் சகோதரர்களுக்கும் விலையுயர்ந்த அன்பளிப்புக்களைக் கொடுத்தான். 'ஆதியாகமம் 24:53 (1922:498 Vol II)
வெகுமதிகளும் மணப்பெண்பணமும் மொத்தமாகவோ அவற்றில் ஒரு பகுதியோ செமித்திய மணப்பெண்களுக்குரியதாகின. இஸ்ரேலியரும் மொஹர்ப்பணத்தின் பாதியை அல்லது முழுவதையும் மணப்பெண்ணுக்கு வழங்கும்
வழக்கத்தை மேற்கொள்ளலாயினர்.
சதாக்
'மஹர் ஹிப்றுமொழியில் மொஹர் (Mohar) என்றும் சீரியமொழியில் 'மஹ்ரா” என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மணப்பெண் அன்பளிப்பு (Bridal gift), இதற்குரிய மூல அர்த்தத்தில் இது கொள்வனவுப் பணம்' (Purchase Mony) என்பதற்குச் சமம். தானாக விரும்பி வழங்கும் அன்பளிப்பு என்ற GUIT (C5G15úh ggb(5 96ữTG).” (UITrifės G5, Encyclopedia of Islam, 1913: 137, Vol. III)
தொன்மை அறேபிய மஹர் முறையுடன் சதாக் என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. தொன்மை அறேபியாவில் அல்லது இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் திருமண சமயத்தில் மணமகன் மணப்பெண்ணுக்குப் பரிசுகளை வழங்கினான். இது சதாக் (Sadaq) எனப்பட்டது. (1922:416)
மணமகன் மணப்பெண்ணின் தந்தைக்கு வழங்கிய கொடுப்பனவை 'மஹர்'
121

Page 64
(Bride Price) என அழைத்தனர். தொன்மை அறேபிய மணப் பெண்பணம் அதன் அடிப்படையில் கொள்வனவுத் திருமணம் (Marriage by Purchase) என்ற பொருளைப் புலப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. மஹரின் தொன்மை வடிவத்தில் மஹர் தொகையிலிருந்து மணப்பெண் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. பொதுவாக 'சதாக் மணப்பெண்ணுக்குப் போய்ச்சேர்ந்தது. மஹர் தொகையைப் பெண்ணின் தந்தை, சகோதரன் அல்லது பாதுகாவலர் யாரேனும் பெற்றுக் கொண்டனர். இந்த உரிமைக்குரியவர்கள் வலி (Wali) என அழைக்கப்பட்டனர்.
நபிகள் காலத்துக்குச் சற்று முன்னதாக மஹரை அல்லது அதில் ஒரு பாகத்தைப் பெண்ணுக்குக் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்திருந்தது. மணப்பெண்ணுக்கான தொகை இப்போதும் வழங்கப்பட்டது. ஆனால் மஹர்த் தொகை பெண்ணின் தந்தைக்கோ அவளது உறவினர்க்கோ அன்றி அது மணப்பெண்ணுக்கே கொடுக்கப்பட்டது (Reuben Levy, 1957; 94). தற்போது மஹர், சதாக் என்ற இரண்டும் கலப்புக்குள்ளாகி அதன் முன்னைய வடிவம் Lortsöph Gusbp)(55,55). (Reuben Levy, Westermarck). Qj5 Lortsöpó#160TTáj ஏற்கனவே 'மஹரில் தொனித்த மணப்பெண்ணை விலைக்குவாங்குவது என்ற கருத்து இப்போது பலவீனமுற்றது (1936:137:Vol.I).
அறேபியாவில் முன்னரே இருந்துவந்த மஹர் முறையையே சில திருத்தங்களுடன் நபிகள் பயன்படுத்தினர் (1957:94). மஹர் முறையை இஸ்லாம் கையாளத் தொடங்கியபின்னர் மஹர், சதாக் வேறுபாடு முற்றாக நீக்கப்பட்டது. முழுமையான மஹர் கொடுப்பனவு மனைவிக்கு மட்டுமே என்பது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதாவது மஹர் பெண்ணின் தந்தைக்கோ பாதுகாவலருக்கோ வழங்கப்படவேண்டும் என்ற பழைய மரபை இஸ்லாம் தடுத்துவிட்டது.
அன்பளிப்பு
மஹர்' எண்ணக்கருவுக்கு இஸ்லாம் தனது நோக்கில் மேலும் சில பெறுமானங்களைச் சேர்த்தது. இஸ்லாமிய மரபில் ஒரு திருமண உடன்படிக்கை சட்டப்படி வலிதாவதற்கு மஹர் இன்றியமையாத நிபந்தனையாகும்.
அல்குர்ஆன் மஹரை கணவன், மனைவிக்கு இனாமாகக் கொடுக்கவேண்டிய அன்பளிப்பு எனக் கூறுகிறது. இது அல்குர் ஆனின்
22

நான்காவது அத்தியாயத்தில் (அன்னிஸாஉ) இடம்பெற்றுள்ளது (4:4). இத்திருவசனத்தில் உள்ள சதக்கா', ‘நிஹ்லத்தன்' என்ற பதங்கள் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. குர்ஆன் மஹரை இங்கு சதக்கா (Sadaqa) என்ற சொல்லைக் கொண்டு அழைக்கிறது (மெளலானா முஹம்மதலி). இப்பதத்திற்கான வேர்ச் சொல்லின் பொருள் 'அவன் உண்மையானவன்’ என்பதாகும் என்றும் அதைச் செயல்படுத்துபவனின் நோக்கம் உண்மையானது என்பதே இதற்குரிய பொருளாகும் என்றும் மெளலானா முஹம்மதலி (1950:622) கூறுகிறார்கள். முர்த்ததா முத்தஹ்ஹரி (Murtada Mutahihari) யும் இதே 505560.5Gu Ji, golélprit. 'Saduqah is derived from the roote sadaq, dower is thus sadaq or saduqah for it is a token of the truthfulness and ernestness of the affaction of the man' (1981:20 l). 4th 5056) & 60T556it இறுதிச் சொல்லான நிஹ்லத்தன்’ என்பது தானாகவிரும்பி வழங்கும் அன்பளிப்பைக் குறிப்பதாகும். மஹர் பெண்ணுக்கு வழங்கும் அன்பளிப்பே அன்றி அவளுக்கு வழங்கும் கூலியல்ல என்று அத் திருவசனம் தெளிவுபடுத்துவதாகவும் முத்தஹ்ஹரி விளக்குகிறார்.
மஹருக்காகக் குர்ஆன் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தும் மற்றொருபதம் பரித்ழா (Faridzah) வாகும். இதன் பொருள் தீர்மானிக்கப்பட்ட அளவு அல்லது கடப்பாட்டுக்குரியது. (1950:622) குர்ஆனின் நோக்கில் மஹர் மணப்பெண்ணின் உரிமை. ஆணுக்கு அது கடப்பாடு. மேலும் அது திருமண உடன்படிக்கையின் இன்றியமையாத பாகமுமாகும்.
குர்ஆன் திருமணத்தை மிஸாக் (Mitha q ) as 6mmTony 6ir மனைவிக்கிடையிலான உடன்படிக்கை என்று கூறுகிறது. அதனை (மஹரை) நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை (ப் பலருமறிய அவள் பெற்று உங்களில் ஒருவர் மற்றவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே” (42) (பார்க்க, 1950:620).
எந்த நிலையிலும் மஹர் பெண்ணுக்குரியதென்றும் அது மீளப் பெறக் கூடிய கொடுப்பனவு அல்ல என்றும் அல்குர் ஆன் இத்தகைய வசனங்களின் ஊடாக வலியுறுத்திக் கூறுகிறது. நீங்கள் உங்கள் மனைவியை நீக்க விரும்பினால் ஒரு பொற்குவியலையே நீங்கள் மஹராகக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் (4:20) என்ற
123

Page 65
குர்ஆனின் கூற்றையும் இங்கு நோக்கலாம். உண்மையில் மஹர் இப்போது மணப் பெண் பணம் (bride price) அல்ல. அது மணப் பெண்ணுக்கான அன்பளிப்பு. அது மனைவியின் உடைமை (1986:137, Vol II) /
முன்னைய காலங்களில் பெண்ணின் பாதுகாவலர் அல்லது தந்தையர் அல்லது சகோதரர் மஹர் விடயத்தில் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை. பெண் ஏமாற்றப்பட்டதோடு அவளுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பாகத்தைத் தடுப்பதற்கும் அவர்கள் முயன்றனர். ஷிஆர்’ (Shighar) திருமணமுறை அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் ஒரு தந்தை அல்லது பாதுகாவலன் தனது மகளை அல்லது சகோதரியை மாற்றாகக் கொடுத்து மற்றொருவரின் மகளை அல்லது சகோதரியை மணந்துகொண்டான் (Welhausen, 1893:433 in 1922:358). இது ஷிஆர் என அழைக்கப்பட்டது. இந்தவகைத் திருமணத்தின் மூலம் அவர்கள் மஹரைத் தவிர்த்துக் கொண்டனர். பெண்ணுக்குரிய மஹர் உரிமையை இது தடுத்துவிடுவதனால் நபிகள் நாயகம் ஷிஆார் திருமணமுறையைத் தடை செய்தனர். 'மஹர் எச்சந்தர்ப்பத்திலும் பெண்ணுக்கு (மனைவிக்குக் கிடைக்க வேண்டிய உரிமை என்பதை இதன் மூலம் நபிகள் உறுதி செய்தனர் (பார்க்க, 1950:625).
திருமணத்தன்று இக்கொடுப்பனவு (மஹர்) கொடுக்கப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது (1950; 622). மஹருக்கென்று குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படவில்லை. அவரவர் பொருளாதார சமூகத்தகுதிக்கேற்ப நீதமான மஹர் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. நபிகள் காலத்தில் பொருளாதார நிலையில் மிக மோசமானவர்கள் மிகச் சொற்ப மஹரை வழங்கித் திருமணம் செய்து கொள்வதற்கு நபிகள் நாயகம் அனுமதி வழங்கினர்.
மஹரில் எந்த வரையறைகளும் எல்லைகளும் தரப்படவில்லை. குர்ஆனின் கருத்தில் மனைவி சார்பில் எந்த அளவு மஹர்த் தொகையையும் நியமிக்கலாம். நீங்கள் ஒரு பொற் குவையையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும் (4:20). அதனால் அதிகபட்ச குறைந்தபட்ச எல்லைகள் மஹருக்குத்தரப்பட வில்லை. நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவுக்கு நானூறு திர்ஹம்கள் மஹராக வழங்கப்பட்டது. (ஆரம்ப இஸ்லாமியக் காலப்பகுதியில்) ஆகக்
124

குறைவாக வழங்கப்பட்ட மஹர் ஒரு இரும்பு மோதிரமாகும் (Bu. 6752) இதனைக் கூடத் தரமுடியாதிருந்தவருக்கு நபிகள் நாயகம் திருக்குர் ஆனைக் கற்றுக் கொடுக்கும்படிக் கூறினர். இன்னொரு சந்தர்ப்பத்தில் கையளவு உணவினை அல்லது பேரீச்சம் பழங்களை மஹராக வழங்கும் படிக்கூறினர் (Ad12:29) (1950; 624) (பார்க்க (5նիմլի 10)
இரு தரப்பினரும் மஹரைப் பேசித் தீர்மானிக்க அனுமதி உண்டு. அவ்வாறு மஹர்த் தொகை நிர்ணயிக்கப்பட்ட பின்னர் அது திருமண உடன்படிக்கையின் ஒரு பகுதியாகி விடுகிறது (1992:23).
இக்கொடுப்பனவு முழுமையும் மனைவிக்குரியதாகும். இது முதலீடு செய்யப்பட்டால் அதில்வரும் இலாபமும் அவளுக்குரியதாகும் (1992:31). திருமணத்திற்குப் பின்னரும் பெண்ணின் பொருளாதார சுதந்திரத்தை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் காட்டப்படுகிறது. (பார்க்க 1992:31) மஹர் மட்டுமன்றி தனது பெற்றோரிடமிருந்து அவள் பெற்றுக் கொள்ளும் சொத்துக்களும், திருமணத்துக்காகப் அவளுக்குத்தரப்படும் வெகுமதிகளும் அவளுக்குரியதாகும். கணவன் இறந்துவிட்டால் கணவனின் சொத்துக்களிலும் மனைவிக்கு பங்கு உண்டு என்றும் இஸ்லாம் விதித்துள்ளது. இவை பெண்ணுக்கான பொருளாதாரப் பாதுகாப்பினைப் பற்றிய கருத்துக்களுடன் ஒப்பிடப்பட வேண்டிய விடயங்களாகும்.
பெண்குழந்தைக் கொலை
பெண்விடுதலை பற்றிய தற்காலக்கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் இஸ்லாத்தின் தோற்றக் காலத்திலும் அதற்கு முன்னரும் அறேபியாவில் பெண்களின் நிலை காட்டுவாசி (Barbarism) வாழ்க்கைக்கு ஈடு கொடுக்கும் ஒன்றாகக் காணப்பட்டதென்றே கூறவேண்டும். பாலியல், சொத்துரிமை போன்ற எல்லா சமூக உறவுகளிலும் அவள் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தாள். அவள் ஒரு பெண் என்பதை விட ஒரு பொருளாக மதிக்கப்பட்ட அடையாளங்களையே அங்கு அதிகமாகக் காணமுடிகிறது.
25

Page 66
நபிகளின் தூது அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஜாஹிலியாக் காலத்தில் அறபுகள் தந்தை வழிச் சமூக அமைப்பிலிருந்தனர். அவர்களது கடவுள்கள் ஆண்களாகவும் அவர்களது விக்ரிகங்களும் தேவதைகளும் பெண்களாகவுமிருந்தனர். அல்லாஹ்வுக்கும் அவர்கள் மூன்று பெண் குழந்தைகளைக் (தேவதைகள்) கற்பித்திருந்தனர். எவ்வாறாயினும் ஜாஹிலியாக் காலப் பண்பாடு ஆணாதிக்க மரபைப் பாதுகாக்கும் சமூகப் படிமுறைகள் பலவற்றை ஸ்தாபனமயப்படுத்திருந்தது. ஆணாதிக்க மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அறபுப் பழங்குடி ஆயத்தமாக இருந்தது என்பார் அலிஷரி அத்தி (Ali Shariathi, 1980: 123) அவர்கள் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொண்ட மூதாதையர் வழிபாடு (AnCeStor Worship) ஆணாதிக்க மரபுகளின் முழுவடிவமாகவே அமைந்திருந்தது. தந்தையர் வணக்கக் கோட்பாடும் முதிய ஆண்களின் ஆதிக்கமும் அவ்வழிபாட்டில் உள்ளடங்கியிருந்தன (1980:123).
மகள்
வறண்ட பாலைவனத்திற்குரிய கடின வாழ்க்கையும் அதனால் எழுந்த சமூகத்தேவைகளும் கோத்திரங்களுக்கிடையிலான இடையறாத யுத்தங்களும் சமுதாயத்தில் ஆணுக்கு அதிக அளவு முக்கியத்துவத்தை வழங்கின. மகளின் பிறப்பை விட மகனின் பிறப்பையே பேரார்வத்துடன் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் இருப்பவர்களும் உயிர்வாழ்வதற்குக் கடினமான சூழல்களை, எதிர்நோக்கி இருப்பவர்களும் மகன்களையே பலத்தின் மூலாதாரமாகக் கொள்கின்றனர். உணவு தேடுவதற்கும் பாதுகாப்பிற்கும் மகன்களிலேயே அவர்கள் தங்க வேண்டியுள்ளது. என்று மெக்லீனான் (1922:162. Vol.II) கூறுகிறார். குலத்தின் கெளரவத்தையும் பாதுகாப்பையும் மட்டுமன்றி செல்வ வளத்தையும் தரக்கூடியவன் மகனே என அறபுகள் நம்பினர். மாறாக மகளைப் பலவீனத்தினதும் இழிவினதும் சின்னமாக அவர்கள் கருதினர் (1980:125).
தந்தைவழிக் குடும்பத்தின் சிறந்த சின்னமாக இருந்தவன் மகனே, மகள் அல்ல. ஆண் குழந்தையைப் பெற்றிராத ஆண்களை அறபு சமூகம் வம்சத்தொடர்பு துண்டிக்கப்பட்டவர்கள்’ என ஏளனமாக அழைத்தது. நான்கு பெண் மக்களுக்குத் தந்தையாயிருந்த (ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம், பாத்திமா) நபிகளையும் வம்சத்தொடர்ச்சியற்றவர்'என்றே அறபுகள் அழைத்தனர். (1980; 129) அல்லாஹ் உனது வீட்டை ஆண்குழந்தைகளால் (Sibyan) நிரப்புவானாக' என்று கூறுவதுதான் ஒருவருக்கு இன்னொருவரால் கூறக் கூடிய
126

மிக உயர்ந்த வாழ்த்துரையாக இன்றும் பல அறபுக் குலங்கள் மதிக்கின்றன. புதிய திருமணத் தம்பதிகளை வாழ்த்துவோர் மகிழ்ச்சியும் ஆண் குழந்தைகளும் (rafah wa banin) Gup (366tioTGh’ 6T 6ôTGg) 6JTġġgé66óTp60Trf” (M. Lutfiya 1970:508).
பெண் குழந்தை பிறப்பதை அறபு மக்கள் இழிவாக மதித்தனர். பெண்குழந்தை பிறந்த செய்தியை கேட்கும் ஒரு ஜாஹிலியாக்கால அறபியின் உணர்வுகளை அல்குர்ஆன் இவ்வாறு சித்திரிக்கிறது: "அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக நன்மாராயங் கூறினால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்கிறான்’ (16:58). பல்வேறுவகைகளில் தனது குடும்பத்துக்கு ஒரு மகள் இழிவைக் கொண்டு வரக் கூடும் என அவன் திடமாக நம்பினான். பொருத்தமற்ற மருமகனை அவள் கொண்டு வரலாம் அல்லது யுத்தத்தில் அடிமையாகி இழிவைக் கொண்டுவரலாம் என்று அவன் நம்பினான். அலிஷரி அத்தியின் வார்த்தைகளில் கூறுவதாயின் பெண்களை வைத்திருப்பது மானக்கேடானதென்றும் ஆண்களைப் பெற்றிருப்பது கெளரவமானதென்றும் அவர்கள் கருதினர்’ (1980; 125).
வழக்காறு
குழந்தைகளைக் கொலை செய்யும் வழக்கம் பல்வேறு பழங்குடிச் சமுதாயங்களில் காணப்பட்டுள்ளது. பொதுவாக உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது குழந்தைக் கொலைக்கு சமூக அங்கீகாரம் கிடைத்தது. நெருக்கடிமிக்க வாழ்க்கைப் போராட்டக் காலங்களில் விலங்கு நிலை மக்கள் (Savage Peoples) குழந்தைகளைக் கொலை செய்தனர். எவ்வாறெனினும் புதிய நபர் தனது குலத்திற்கு வந்து சேர்வதை மனிதன் விரும்பி ஏற்றுள்ளான். குழந்தைகளின் இழப்புக்காக அவர்கள் துயர் கொண்டனர் என்பது இதன் பொருள். எனினும் ஜாஹிலியாக்கால அறேபியர் குறிப்பாகப் பெண் குழந்தைகளையே கொலை செய்தனர். 'பெண்குழந்தைக் கொலையை அருஞ்செயலாகப் போற்றி வந்துள்ளனர். அது அவர்களிடத்தில் வழக்காறாகவும் கடப்பாடாகவும் காணப்பட்டது (1990:V ).
ஸமாக்ஷாறி, அல்குர் ஆனின் அல்தக்வீர் சூறாவுக்குத்தந்துள்ள
உரையில் தங்கள் பெண்குழந்தைகளைத் தந்தையர் எவ்வாறு அலங்கரித்து இதற்காக வெட்டப்பட்டுள்ள குழிகளுக்குள் புதைத்தனர் என்பதைக்
127

Page 67
குறிப்பிட்டுள்ளார் (பார்க்க, 198517).மகளை மண்ணிற்குள் புதைப்பது மகத்தான புண்ணியச் செயல்' போன்ற மூதுரைகளும் அவர்களிடம் வழங்கி வந்தன (1985:17).
அறேபியாவில் பெண் குழந்தைக் கொலையின் தோற்றம் பற்றிப் போதுமான தகவல்கள் இல்லை. எனினும் தேவதைகளுக்கான பலிகளாகப் பெண்குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கம் அறேபியாவில் மிகத் தொன்மைக் காலம் முதல் இருந்துள்ளமைபற்றிச் சில தகவல்கள் உள்ளன. இதுகுறித்து பேராசிரியர் டப்ளியூ.ஆர்.ஸ்மித் குறிப்பிடுகையில். ‘பண்டைய அறேபியாவில் பெண் தெய்வங்களுக்குத் தமது சின்னஞ் சிறு பெண்குழந்தைகளைத் தந்தையர் பலியாகத்தந்தனர். (பார்க்க, W.G.Summer:1947:555) பெண் குழந்தைகளைத் தெய்வங்களுக்குப் பலியிடும் வழக்கத்தை குர்ஆனும் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறே இணைவைத்து வணங்குவோரிடம் அநேகர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக்கானும் படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி அவர்களது மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. (அத் 6:137)
பெண் குழந்தைக்கொலையை ஒரு வழக்காறாகவும் அருஞ்செயலாகவும் அறபியர் எடுத்துக் கொண்டதில் இம் முரட்டுச்சமயப்பின்னணி ஒரு காரணியாகச் செயல்பட்டிருக்கலாம். எனினும் சமூக பொருளாதாரக் காரணிகளின் தாக்கங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. யுத்தமும், வறுமையும், கடின சூழலுக்கு இசைந்து போக வேண்டியிருந்த அவர்களின் வாழ்க்கை முறையும், இவற்றிக்கு ஆதரவாக வளர்ந்திருந்த வழக்காறுகளும் பெண்குழந்தைக் கொலைக்கு இவர்களை உடந்தையாக்கின.
குழந்தை வளர்ப்பும், பராமரிப்பும் கடினமாயிருக்கும் கட்டங்களிலும் சமூகம் மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகும் சந்தர்ப்பங்களிலும் பொதுவாகப் பல்வேறு சமூகங்களில் குழந்தைக்கொலைகள் நிகழ்வது வழக்கமாயிருந்துள்ளது. நாகரிகமற்ற சமூகத்தவர்களில் அநேகர், தகாத உறவில் பெற்ற குழந்தைகளையும், பிறக்கும்போது தாயை இழந்த குழந்தையையும், முடமாகி அல்லது நோயுடன் பிறக்கும் குழந்தைகளையும் குலத்திற்குத் துரதிர்ஷ்டத்தைக்
128

கொண்டுவரும் என்று கருதப்படும் குழந்தைகளையும், கொலை செய்வது பொதுவில் காணப்படும் வழக்கமாகும் (Westermarck). வறுமையும், பொருளாதார நெருக்கடியும் குழந்தைக் கொலையில் குறிப்பாக பெண் குழந்தைக் கொலையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
வறுமை
குழந்தைக்கொலையில் குறிப்பாகப் பெண் குழந்தைக் கொலையில் மூடநம்பிக்கைகளுக்கு மேலாக வறுமையும் பொருளாதார நெருக்கடியும் முக்கிய அம்சங்களாக இருந்துள்ளன. 'திக்கோப்பியன் குடும்பம் பொதுவாக நான்கு குழந்தைகளுடன் வரையறுத்துக்கொள்கிறது. இதைவிட மேலதிகமாகப் பிறக்கும் குழந்தைகளை அவர்கள் உயிருடன் புதைத்துக் கொலை செய்கின்றனர். முதல் நான்கும் பெண் மக்களாயின் இனிப்பிறக்கும் பிள்ளைகள் ஆண்களாகப் பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒரு பெண் குழந்தையை அல்லது இரு பெண்குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். ஆசிய ஹிப்போபோரியன்கள் உணவுப் பற்றாக்குறைக்காகக் குழந்தைக் கொலையில் ஈடுபட்டிருந்தனர். இந்தியாவில் பரவலாகக் குழந்தைக் கொலைகள் காணப்பட்டுள்ளன. வெளிப்படையான காரணங்கள் கூறமுடியாத வழிபாட்டு நம்பிக்கைகளால் இக் கொலைகள் நடந்துள்ளன. நீண்டகாலமாக இந்தியாவில் பரவலாக பெண் குழந்தைக் கொலை நடைபெற்றுள்ளதை வில்கின்ஸ் (Wilkins) குறிப்பிடுகிறார். கியானா இந்தியர்கள் குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் குழந்தைக் கொலைக்கு அனுமதி வழங்குவர். இரட்டைக் குழந்தை, முடமாகப் பிறந்த குழந்தை, பெண்குழந்தை. தோடமார்க்கள் முன்னர் பொருளாதார நெருக்கடிகளின்போது பெண்குழந்தைகளைக் கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். (பார்க்க, Summer, 1947:1044-48)
பெண்குழந்தைக் கொலைக்கு வறுமை அல்லது பொருளாதாரநிலை ஒரு முக்கிய காரணியாகச் செயல்பட்டுள்ளது. வறுமையைக் கட்டுப்படுத்த பெண்களின் தொகையை குறைப்பது அதிக பயன்தரக்கூடியது என அவர்கள் நம்பியிருக்கலாம். அறேபியாவின் பெண் குழந்தை கொலைக்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. பொருளாதாரக் காரணி அதில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எனினும் அந்த சமூகத்துக்கே உரிய வேறுசில காரணிகளும் செயற்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமான சில காரணிகளை அல்குர் ஆன் விவாதித்துள்ளது.
129

Page 68
ஜாஹிலியாக் காலத்திலும் அதற்குப் பின்னரும் அறேபியாவில்
நிகழ்ந்துள்ள பெண்குழந்தைக் கொலைகளுக்கான காரணங்களை மெளலானா
அபுல் அஃலா மெளதுாதி அல்குர்ஆன்லிருந்து பின்வருமாறு வகையீடு
செய்துள்ளார்:
9•
எவரும் தம் மருமகனாக ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பெண்மக்களைக் கொல்வது அல்லது குலப் போர்களின் போது அவர்கள் எதிரிகளின் கரங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகக் கொல்வது அல்லது வேறெந்த வகையிலும் அப்பெண் மக்களால் அவர்களுக்கு இழிவு ஏற்படக் காரணமாகக் கூடாது என்பதற்காகக் கொல்வது.
அவர்களை வளர்க்கின்ற பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதற்காகவும் பொருளாதார வசதி குறைவாக இருப்பதால் அக்குழந்தைகள் தாங்க
முடியாத சுமையாய் ஆகிவிடுவார்கள் என்பதற்காகவும் கொல்வது.
குழந்தைகளைத் தம் கடவுளின் திருப்திக்காப் பலியிடுவது. (பார்க்க, அபுல் அஃலா மெளதுரதி, 1989 : 246:Vol. 1)
ஒரு வேளை குழந்தைக்கொலை அவர்களுக்குத் துயரத்தை
ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் அதைவிட அவர்களுக்கு வேறு வகை தெரிந்திருக்கவில்லை. தனது மகளைப் புதைகுழிக்குப் பலியாக்கிய தந்தையின் எண்ணங்களை ஒரு அறபு நாட்டார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
ஒருநாள் என் மகள் வறுமையின் கொடுமைக்குப் L65untaintair. துயர் மிக்க மிருகத்தனங்கள் தளிரான அவளைச் சூழும்போது நேர்வதோதீராத அவமானங்கள் பெற்ற மகளோ நான் வாழப் பிரார்த்திக்கிறாள். பெற்ற நானோ அவள் சாக யாசிக்கிறேன். நாதியற்ற என் சிறு தளிரே நான் உனக்குத்தருவதெல்லாம் புதைகுழியாம் புதுமனாளனையே
(1985:17)
130

தனது மகளுக்கு மணமகனாக- தனக்கு மருமகனாக -யாரும் வந்துவிடக் கூடாது என்ற பயம் அவர்களுக்கு இருந்துள்ளது (அபுல் அஃலா மெளதுதி) அலிஷரியத்தியும் இவ்வாறு கூறுகிறார்: மகளின் எதிர்கால மணாளனை நினைக்கும்போது தனது மகளுக்குப் புதை குழியை மணாளனாக்குவதையே உண்மையான மணாளனைவிடச் சிறந்ததென அவன் கருதுகிறான்.
உணவுப்பற்றாக்குறை மனித வாழ்வைத்தாக்கும்போது மனிதன் குழந்தைகளை முக்கியமாகப் பெண்குழந்தைகளைக் கொலை செய்ய முன்வந்துள்ளான். மானிடவியல் இக்கருத்தைப் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது. இதுபற்றிய மெக்லீனான் கருத்து இவ்வாறு அமைந்துள்ளது:
தொடக்க காலத்திலிருந்து குழுமுறையிலான கட்டுப்பாடற்ற பாலுறவு முறை தாய்வழிமரபினைத் தோற்றுவித்ததென (மெக்லீனான்) நம்பினார். அதன்பின்னர்ப் பெண்குழந்தைக் கொலை (female infanticide) பெருமளவு நிலவியிருக்கவேண்டுமென நம்பினார். ஏனெனில் பெண்கள் படைத்துறையிலும், வேட்டைத் தொழிலிலும் பயனற்றவர்களாகவும் உணவுப் பொருள்களை உண்டு செலவழிப்பவர்களாகவும் இருந்தனர். அதனால் பெண்குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் ஏற்பட்டு பெண்கள் பற்றாக் குறையும் ஏற்பட்டது. (1990:262)
உணவுப்பற்றாக்குறை ஏற்படும் போது வீட்டிற்கு வந்துசேரும் உணவுகளைத் தின்று தீர்ப்பவள் மட்டுமே பெண் என அறேபியன் கருதினான் (Ali Shariathy), பெண் குழந்தையையே கொலை செய்வதில் அறபுத் தந்தை ஏன் குறியாய் இருந்தான் என்பதற்கு இக்கருத்துக்கள் நியாயமான தூரம் திருப்திதரக்கூடியனவாகும். வறுமையிலிருந்து தப்புவதற்கு ஆண்குழந்தைகள் வளர்க்கப்படுவதும் பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதும் தகுந்த உபாயமென அவன் கருதியிருக்க வேண்டும். ஆண் மகன் குலத்திற்குக் கெளரவத்தைக் கொண்டு வருபவன் மட்டுமல்ல குலம் உயிர் வாழ்வதற்கான பொருளாதார பலத்தை வழங்குபவனும் அவனே. தெய்வங்களுக்கான பலிக்கு மட்டுமல்ல வறுமையின் பலிக்கும் அவன் பெண்குழந்தைகளையே தேர்ந்தெடுக்க இதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும்.
13

Page 69
இதற்கான காரணங்கள் எதுவும் அலசப்படாதிருந்த நேரத்தில் பெண்குழந்தைக் கொலைக்கு வறுமையும் உணவுப்பற்றாக்குறையுமே காரணங்கள் என குர்ஆன் தனது கருத்தை எடுத்துக் கூறியது.
(மனிதர்களே) நீங்கள் தரித்திரத்திற்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம். உங்களுக்கும் (அளிப்போம்) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக அடாத பெரும் பாவமாகும். (அத் 17, 31)
உண்மையில் குர்ஆன் இச்செயலைக் கண்டித்ததோடு அதைத் தடையும் செய்தது. இது குறித்த பொருளாதார ரீதியான அலசலையும் அது ஆரம்பித்து வைத்தது. அலிஷரியத்தியின் வார்த்தைகளில் கூறுவதாயின் அறேபியாவில் நடைபெற்று வந்த இத்துன்பியலுக்குரிய முதன்மையான காரணத்தைக் குர்ஆன் பொருளியலிலேயே காண வேண்டும் என்று கூறியதோடு அது மக்களை விழிப்படையவும் செய்தது (பார்க்க 1980; 129).
256).
இஸ்லாம் பெண்குழந்தைக் கொலையை முற்றாகத்தடை செய்தது. மேலும் பெண்குழந்தை பிறப்பது ஒரு நற்செய்தி’ (16:58) எனக் குர்ஆன் பிரகடனப்படுத்தியது. பெண்குழந்தைகளை வாழவைப்பதற்கான கருத்துக்களை அது பரப்பியது. இழிவின் சின்னமாக அறபுமக்கள் கருதிய பெண்மக்களை உயர்வான வார்த்தைகளால் நபிகள் புகழ்ந்துரைத்தனர். 'பெண்கள் பாசத்தினதும் கருணையினதும் வடிவங்கள் என்றும் குடும்பத்தின் நற்பாக்கியங்கள்’ என்றும் கூறினர். “பெண்குழந்தைகளால் சொர்க்கத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறந்து வைக்கப்படும்' என்றனர். “பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். நிச்சயமாக நான் பெண்குழந்தைகளின் தந்தையாவேன்’ என்பது நபிகளின் மற்றொரு வாக்காகும். (பார்க்க, 1966:18)
சொத்துரிமை
இஸ்லாத்தின் தோற்றக்காலத்திலும் அதற்கு முன்னரும் அறபு சமூகத்தில் ஆண் பெண் உறவு வர்க்க இயல்புகளை தீவிரமாக வெளிப்படுத்தியது. ஆண்கள் ஆளும் வகுப்பாகவும் உடைமைச் சொந்தக்காரர்களாகவும் பெண்கள் ஆளப்படுபவர்களாகவும் இருந்தனர். அறபு சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலிருந்த வேறுபாடு எஜமானனுக்கும் அடிமைக்குமுள்ள
132

வேறுபாட்டிற்கு ஒப்பானது என்பார் அலிஷரிஅத்தி. மியூலர் லையரின் (Muler 1yer) பின்வரும் கருத்தை இங்கு கூறுவது பொருத்தமானது: ஒவ்வொரு உழைப்புப் பிரிவினையும் அதன் பலவீனமான பங்காளியை ஒடுக்குவதையும் சுரண்டுவதையுமே முதல் விளைவாகக் கொள்கிறது. (1931:103) வறுமைக்குப் பலியிடவும், சொத்துரிமை அற்றவராக வைத்திருக்கவும் அறபுசமூகம் பெண்ணையே இலகுவில் தேர்ந்தெடுத்தது.
தாய்த்தலைமை முறையிலோ தந்தைத்தலைமை முறையிலோ அறபுப் பெண்கள் சொத்துரிமையைப் பெற்றிருக்கவில்லை. இவ்வகைக்குடும்ப வடிவங்கள் சமூக ஒழுங்கை ஏற்படுத்தவென சில நிர்வாக ஏற்பாடுகளைச் செய்திருந்தன. அந்த அமைப்பின் கீழ் அவை பன்னெடுங்காலமாக சிலவகை ஒழுங்கங்களைக்கடை பிடித்து வந்துள்ளன. மதீனாவில் தாய்வழிக்குடும்பங்கள் அதிகமிருந்தன. இங்கு பெண்களுக்குச் சொத்துடைமை இருக்கவில்லை. இதுபற்றி பேராசிரியர் மொண்ட்கொமறி வொட் இவ்வாறு கூறுகிறார்:
இங்கு (மதீனாவில்) ஒரு சமுதாய அமைப்புக் காணப்பட்டது. இதனைத்
தாய்வழி மாமன் அதாவது பெண்வழிச் சகோதரன் அல்லது மகன்
பராமரித்தனர். நிர்வாகிஇறந்தால் தகுதியுள்ள மற்றொருவர் அவரின்
இடத்திற்கு வந்து சேர்வார். தந்தை வழி மரபிலும் சொத்துக்கள்
பொதுமையாகவே இருந்தன. அவரது சகோதரனோ மகனோ
நிர்வாகியாகச் செயற்பட்டனர் (1962 290).
எனினும் இந்த நிர்வாக முறை தொடர்ந்து நீடிக்க வில்லை. வர்த்தக
வளர்ச்சி, தனிநபர் வாதத்தின் ஊடுருவல் என்பன இந்த முறையை செயலிழக்கச் செய்தன. தனிநபர், குல உடைமைகளைத் தனதாக்கிக் கொள்ளுவதை இக்காலப்பிரிவு தூண்டியது. இதன் பொருள் என்ன வென்றால் பலசாலி எல்லாவற்றையும் தன்வசமாக்கிக் கொள்ள முயன்றார். பலவீனர் வெறுங்கையாய் 6SLLJ'L60Tit. (W.M.Watt)
இப் பலவீனர் வகுப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகும். குடும்ப அல்லது குல நிர்வாக அமைப்புச் சீர்குலைந்ததனால் கடந்த காலங்களில் குலத்திலிருந்து பெற்ற பாதுகாப்பையும் பராமரிப்பையும் அவர்கள் இழந்தனர். இவர்கள் முறையாகப் பெற வேண்டியவற்றையும் தற்போதைய நிர்வாகிகள் தமதுடைமையாக்கிக் கொண்டனர். இத்தகைய சூழ்நிலைக்கு இஸ்லாம் பரிகாரம் தேட வேண்டியிருந்தது.
133

Page 70
ஆண் பெண் இருபாலாருக்கும் சொத்துக்களில் உரிமை உண்டு என்ற இஸ்லாத்தின் பிரகடனம் அக்காலப் பெண்களின் நிலையுடன் ஒப்பிடுகையில் அவர்களின் அந்தஸ்தைப் பலமடங்கு உயர்த்தியதாகவே கொள்ளவேண்டும். புதல்விகளும், விதவைகளும், தாய்மார்களும் இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் சொத்துரிமையற்றவர்களாகும். இஸ்லாம் இத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பூவுலகில் சொத்துரிமையை வாக்களித்தது.
(இறந்துபோன) பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் ஆண்களுக்குப்பாகமுண்டு. (அவ்வாறே) பெற்றோர்களோ நெருங்கிய உறவினரோ விட்டுச்சென்ற பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு (அத் 4:7)
திருமண வடிவத்திலும் சொத்துரிமை முறைகளிலும் புதியமாற்றங்களை நபிகள் நாயகம் புகுத்தினர். பெண்குழந்தைக் கொலையைத் தடுத்தனர். அடிமைப்பெண்களின் மீட்சிக்கும் அவர்களின் திருமண பந்தத்திற்கும் முன்னேற்றமான ஏற்பாடுகளைச் செய்தனர். பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் அவர்களின் பின்வரும் கூற்றையும் இதனுடன் இணைத்து நோக்குவது பொருத்தமானது.
திருமண மற்றும் குடும்ப உறவுகளில் முஹம்மது (நபி) ஆழமான தாக்கத்தையும் நீண்ட, தூர நோக்குடைய மறுசீராக்கங்களையும் உருவாக்கினார் (1962 289)
நுணுகி நோக்கின் ஆணாதிக்க சமுதாய அமைப்பினை மறுசீராக்கம் செய்வதற்கு அல்லது பெண்ணிற்கு சமுதாயத்தில் நீதியான இடத்தைப் பெற்றுத் தருவதற்கு நபிகள் கொண்டிருந்த ஆழமான அபிலாஷைகளின் அடையாளங்கள் இவற்றுள் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.
உறவுமுறை மாற்றம்
பெண் குழந்தைக் கொலையைப் பொருளியல் அலசலுக்குட்படுத்தும்போது அதனைத்தூண்டிய வறுமையை ஒரு அம்சமாகவும் உறவுமுறையின் (kinship
134

System) மாறும் பரிணாமத்தை மற்றொரு அம்சமாகவும் கொள்ளவேண்டும். பெண்குழந்தைக்கொலைக்கான உறவு முறைத்தொடர்பினை மங்கலாக வேனும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளதை இங்கு நினைவு கூரலாம். தாயுரிமை, தந்தையுரிமை மாற்றங்கள் நிகழும்போது ஆதிக்கம், வாரிசுரிமை என்பனவற்றின் மரபுகள் அசைக்கப்படுகின்றன. பொதுவாகக் குழந்தைக் கொலைக்கு இரத்தப்பலியுடன் தொடர்புபடுத்திய வகையில்-உறவுமுறையினடியாக எழுந்த வாரிசுரிமை முக்கியதாக்கத்தைச் செலுத்தியுள்ளது என ஈவலின் றீட் (Evelyn Reed) குறிப்பிடுகிறார்.
ஈவலின் றீட் முன்வைத்துள்ள கருத்துக்களின்படி பெண்குழந்தைக் கொலை, வரலாற்றில் பிற்பட்ட தோற்றப்பாடாகும். பொது உடைமைச் சொத்து தனி உடைமையாக மாறும் கட்டத்தில் இப்பெண் குழந்தைக்கொலை நிகழ்கிறது. பழைய முறையில் சொத்து தாய்வழியில் வந்து சேர்கிறது. சகோதரர்கள் அதன் பங்கினை தமதுரிமையாக்கினர். தந்தைத் தலைமைத்தவமும், உடைமை முறையும் ஆரம்பித்தபோது முன்னரிருந்த தாய் வழி, சகோதர வழி வம்ச உறவுகளும் வாரிசுரிமை முறையும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. தந்தைத் தலைமைச் சட்டங்களும் அரச அதிகாரங்களும் தோன்றி வம்சத் தொடர்ச்சியும் வாரிசுரிமை முறையும் தந்தையிலிருந்து மகனுக்கே என்ற வடித்தை உருவாக்கித் தந்தைவழி அமைப்பின் இலட்சியத்தை நிலைநிறுத்துகின்றன.
தந்தை உரிமை தந்தைத்தலைமை வம்சத்தையும், வாரிசுரிமையையும் பாதுகாக்க முயல்கிறது. இதனால் தந்தைத் தலைமை மரபில் மகன்’ ஒரு இலட்சியக் கூறாக அமைகிறான். இது நிறைவேறவேண்டுமாயின் தாய்வழியில் இருந்துவரும் போட்டியாளர்களின் தொடர்பை இல்லாதொழிக்க வேண்டும். இதற்காக மகள்- கொலைக்கு (daughter- murder) தந்தை தயாராக இருக்கிறார். தனது சொத்துக்களைத் தனது மகன்களுக்கு மகன்கள் இல்லையாயின் தனது சகோதரர்களுக்கு உரிமையாக்குவதே தந்தையின் நோக்கமாகும். இதற்காக ஈவலின்றீட் தரும் உதாரணம் இஸ்லாத்துக்கு முந்திய அறபு சமூக வழக்காற்றிலிருந்து பெறப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கதையில் உள்ள விபரங்கள் குழந்தைக் கொலைக்கும் வாரிசுரிமைச்சட்டத்துக்குமுள்ள புதுமைமிக்க தொடர்பைக்காட்டுவதாக
உள்ளன: ஒரு தந்தை (ஒரு குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருப்பவர்)
135

Page 71
பிறக்கப்போவது ஆண்குதிரைக்குட்டியாயின் சொத்துக்குப் பங்காளியாக்குவோம். பெண் குதிரைக் குட்டியாயின் அதைப் புதைத்து விடுவோம்’ (பார்க்க , 1992 :409) என அறபு , சமூகத்தில் கூறுவது வழக்கமாயிருந்தது.
மகன் பலியைத் தனியார் உடைமை முடிவுக்குக் கொண்டுவந்ததுபோல் அதுவே மகள் கொலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்போது பெண்குழந்தை விருப்புக்குரியவளானாள். ஏனெனில் அவளுக்காகத் தரப்பட்ட மணப்பெண் பணம்' (brideptice) அவளைத்திருமணத்திற்கு தகுதியாக்கியது. (1992:409) மணப் பெண் பணம், கண்டுபிடிக்கப்பட்டதும் பெண்குழந்தைக் கொலை கைவிடப்படுவதைப்பார்க்கிறோம். ஏனெனில் இப்போது பெண்கள் உயர் பெறுமதிக்குரியவர்களாகியுள்ளனர். (பார்க்க, 1992:419)
பெண்களைப் பண்டம் என்ற நிலையிலிருந்து மாற்றுவதில் இஸ்லாம்
அங்கீகரித்த மஹர் முறை ஒரு பாரிய சமூகவியல் பங்கை நிறைவேற்றியதாகக் கருதலாம்.
136

புதிய தலைமைத்துவம் இயல் 7
நபிகளின் வாழ்வும் நோக்கும்
நபிகள் நாயகம் புகழ்பெற்ற குறைஷிக் குலத்தையும் இப்றாஹீம் நபியின் புதல்வர்களில் ஒருவரான இஸ்மாயிலின் வம்சத்தையும் சேர்ந்தவர்களாகும். இவ் இரண்டு நிலையிலும் நபிகள் கெளரவத்தையும் அந்தஸ்தையும் பெற்று விளங்கினார்கள்.
குறைஷ்
குறைஷியர் மக்காவின் செல்வாக்கு மிக்க பழங்குடியைச் சேர்ந்தவர்களாகும். குறைஷிப்பழங்குடியில் சுமார் பத்துக் குலங்கள் அடங்கியிருந்தன. இவை அனைத்தும் ஒரு பொது மூதாதையரை உரிமை கோரின. குறைஷ்' என்ற பெயரின் தோற்றம் பற்றி பல அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.இஸ்மாயிலின் வம்ச வழியில் வந்த நத்ர் இப்ன் கினானாவுடனும் பிஹ்ர் என்பவருடனும் குறைஷ் என்ற பதத்தை சில ஆய்வாளர் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். அல்லது யாரேனும் ஒரு முக்கிய தலைவரின் பெயருடன் குறைஷ்' என்ற பதம், உடன் இணைகின்றது. பனூ அல் நத்ரின் காரவன் வந்து சேர்ந்ததும் குறைஷின் காரவன் வந்துவிட்டது' என அறபுகள் கூறினர். இந்தக் குறைஷ், பனூ அல் நத்ரின் பிரயாணத்திற்கு வழி காட்டியாகவும் பாதுகாப்பாளராகவும் இருந்துள்ளார். சில ஆய்வாளர் அல் நத்ர் இப்னு கினானாவின் சந்ததியினர் குறைஷ் என்று கூறப்பட, நத்ர் அறபுமக்களால் அவர் குறைஷ் ஒட்டகத்தைப் போன்றவர்’ என்று அழைக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இங்கு, மக்கள் இந்த குறைஷ் என்ற பதத்தை ஏன் பிரயோகித்தனர் என்பது பற்றித் தெளிவான 65(55g)556fligogu' (F.E.Peters)

Page 72
சில பரம்பரையியலாளர் மக்காவின் குறைஷிக் கோத்திரத்தின் பெயரை சுறா (Shark) என அடையாளப்படுத்தியுள்ளனர். (1959:1122) றொடின்சனும் இதே கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். (1971). கடல் உயிரினங்களை உண்டு வாழும் சக்தி மிக்க கடல் மீனின் அதாவது சுறாமீனின் (Grish) பெயரால் அல் நத்ர் இப்னு கினானாவை மக்கள் அழைத்திருக்கலாம் என்பது சிலரது அபிப்பிராயம் (Tabari). குறைஷியர் தமக்கென குலக் குறியைப் (Totem) பெற்றிருக்கக்கூடும் என்பதற்கு இச் செய்திகள் ஆதரவாக உள்ளன. குறைஷியரை ஒன்றுபடுத்தியவர்களை குறைஷ் அதாவது (Jagarasha) ஒன்றுபடுத்தியவர்கள் என்ற பொருளில் அறபு மக்கள் அழைத்தனர் என்பது ungibgpJıh éfl6uT g5I 85(C5ğöğ5I (uTrfé5é55, Tabari Annals 1.1 10-1 104 = Tabari VI:2930 in 1994:14)
டி. எஸ். மார்கோலியத் (D.S.Margoliouth) கருத்துப்படி குறைஷ் என்றபதம், அதன் வரலாறு பற்றி எதையும் குறிப்பிடுவதாயில்லை அது ஒரு குலக் குறிப் பெயரா (totem name) அல்லது எழுந்தமானமாக முதல் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஒன்றா அல்லது குறைஷ் என்ற நபரின் பெயரா என்று அறுதியிட முடியாதுள்ளது எனக் கூறுகிறார் (D.S.Mangoliouth, 1905:10). நபிகளின் மைத்துனரும் மருமகனுமான அலி குறைஷியர் மெஸெப்பொட்டேமியாவின் குத்தாவை (Kutha) ச் சேர்ந்த நபேத்தியராவர் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். குறைஷியர் இப்றாஹீம் நபியின் சந்ததியினரே என்பதை இப்பிரகடனம் அர்த்தப்படுத்துகிறது என்பார் மார்கோலியத் (1905 - 10).
கஃபா நிர்வாகம்
நபி இப்றாஹீம், அவர் மகன் நபி இஸ்மாயில் இருவராலும் கஃபா நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், புனித தலத்தை நோக்கித்திரளான மக்கள் ஈர்க்கப்பட்டனர். அவ்வாறு வந்தோரில் முதலிற் குடியேறியோர் ஜுர்ஹும் பழங்குடி (jurhum) மக்களாவர். இப்பழங்குடித் தலைவரின் மகளை இஸ்மாயில் மணந்தார்கள். இத்திருமணத்தின் மூலம் பன்னிரெண்டு பிள்ளைகளைப் பெற்றார். இவர்களின் பெயர்கள் தெளராத்தில் (Torah) தரப்பட்டுள்ளன. இஸ்மாயிலின் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் கஃபாவை நிர்வகிக்கும் பதவியைப் பெற்றார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவரது தாய் வழிப்பாட்டனார் அப்பதவியை ஏற்றார். இதனூடாகக் கஃபாவின் பாதுகாப்பு ஜுர்ஹாம் குடும்பத்தாரைச் சேரலாயிற்று. இவர்கள் மிக நீண்ட காலமாக கஃபாவைத் தமது பரிபாலனத்தில்
138

வைத்திருந்தனர். பின்னர் ஃகுஸா ஆ என்ற மற்றொரு பழங்குடியினர் ஜுர்ஹாம்களை அகற்றிவிட்டு அப்பதவியை தம்வசமாகக்கிக் கொண்டனர். ஜுர்ஹும் பழங்குடியினரும் ஃகுஸாஆகுலத்தவர்களும் தென் அறேபியாவைச் சேர்ந்தவர்கள். இஸ்மாயில் நபியின் மரணத்திற்கும் குஸை என்ற குறைஷிக் குலத்தலைவர் மக்காவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமிடையில் இவ்விரு குலத்தவர்களும் மக்காவில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.
aba ஃகுஸாஆ, அஸ்த் என்ற பெரிய பழங்குடியின் கிளைக்குலமாகும். ஒரு இக்கட்டான காலப்பகுதியில் தென் அறேபியாவைப்பிரிந்து வடஅறேபியாவி, i இவர்கள் குடியேறினர். இவர்களைச் சேர்ந்த இன்னும் சில பிரிவினர் மக்காவிற். அப்பால் உள்ள வேறு நாடுகளில் சென்று குடியேறினர்.
ஃகுஸாக்கள் மக்காவில் குடியேறியபோது மக்காவின் அதிகாரம் ஜூர் ஹம்களிடம் இருந்தது. அஸ்த் குலத்தலைவர் பொருத்தமான மேய்ச்சல் நிலம் கிடைக்கும்வரை மக்காவின் புனித எல்லைக்குள் வாழ்வதற்கு அனுமதி கோரினார். ஜுர்ஹாம்கள் அனுமதிதர மறுத்துவிட்டனர். இரு பகுதியாருக்குமிடையில் குரோதமும் சச்சரவுகளும் வளர்ந்தன. அஸ்துகள் பலவந்தமாகக் குடியிருப்புக்களை அமைந்தனர். இதனால் அடிக்கடி சண்டைகள் நடந்தன. இறுதியில் ஜுர் ஹூம்கள் ஃகுஸாக்களால் தோற்கடிக்கப்பட்டனர். இறுதியில் ஃகுஸாக்கள் மக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.
ஃகுஸாக்களின் தலைவர்களே மெஸெப்பெட்டேமியாவிலிருந்து ஹரப்பல் என்ற தெய்வச்சிலையை கஃபாவுக்குள் கொண்டுவந்தனர். கஃபாவைச் சுற்றி இருந்த அநேக சிலைகள் இவர்களால் வைக்கப்பட்டவையாகும். ஹபல் சிலையும் ஏனைய சிலைகளும் நபிகளின் காலத்திலும் கஃபாவில் இருந்தன. சுமார் 300 வருடங்கள் இவர்களின் அதிகாரம் மக்காவில் நடைபெற்றது.
கஃபாவின் பரிபாலனப் பொறுப்பை இழந்த இஸ்மாயிலின் சந்ததிகள் இன்னும் அங்கு வாழ்ந்து வந்தனர். இங்கு நடைபெற்று வந்த குழப்பங்களில் அவர்கள் பங்கு கொள்ளவில்லை. ஆனால் இதன் காரணமாக அவர்கள் மக்காவின் பல பாகங்களிலும் சிதறி வாழநேர்ந்தது. (Ibn Ishaq, 1955.6 in F.E. Peters, 1994:9)
39

Page 73
ஃகுஸாக்கள் குறைஷியர்களால் அகற்றப்படும்வரை அவர்கள் மக்காவை ஆட்சி செய்தனர். இவர்களின் குலத்தலைவர்களில் இறுதியாக ஆட்சி செய்தவர் ஹாலைல் இப்னு ஹபவியா என்பவராவார்.
குஸை ஆட்சி
இழந்த வம்ச உரிமையை நிலை நாட்டும் நோக்கோடு, யுத்தம் தடைசெய்யப்பட்ட புனித யாத்திரைக் காலத்தில் குஸை மக்காவினுள் பிரவேசித்தார். இது குறைஷியர் தமது முன்னைய உரிமைகளை மீளக் கோரும் முதல்நடவடிக்கையாக அமைந்தது. மக்காவில் ஏற்பட்ட திருமண சம்பந்தம் குஸையின் முயற்சியில் ஒரு திருப்பமாகியது. மக்காவின் அதிபதி ஹாலைலின் மகளைக் குஸை மணந்தார். ஹலைல் இறக்கும்போது தனது அதிகாரத்தை தனது மகளுக்கும் மருமகனுக்கும் விட்டுச் சென்றார். கஃபாவின் திறவுகோல் மகளின் கைகளுக்கு வந்தது.
ஹுலைலின் மறைவின் பின்னர் மக்காவின் ஆட்சியின்மீதும் புனித கஃபாவின் ஆதிபத்தியத்தின் மீதும் குஸை உரிமைக் குரல் எழுப்பினார். இஸ்மாயிலின் தூய குறைஷ் வம்சத்தைச் சேர்ந்த ஆட்சியதிகாரம் தனக்கே உரிமையுடையது என அவர் கோரினார். ஃகுஸாக் குலத்தினர் குஸையின் இக்கோரிக்கையை எதிர்த்தனர். இதனால் இரு பகுதியாருக்குமிடையில் யுத்தம் மூண்டது. யுத்தத்தின் போது ஏற்பட்ட சமரசத் தீர்வொன்றிற்கமைவாக குஸை மக்காவின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார். எவ்வாறெனினும் ஃகுஸாக்கள் மக்காவை விட்டும் வெளியேறினர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். இதுவே மக்காவில் ஃகுஸா ஆ’ ஆட்சியின் முடிவாகவும் குறைஷியராட்சியின் தொடக்கமாகவும் ஆகியது (1927:Vol I/984).
மக்காவையும், கஃபாவையும் தம் ஆதிக்கத்தினுள் கொண்டுவந்து குஸை அவற்றை ஒரு மன்னரைப்போல் ஆட்சி செய்ததாக இப்னு ஹிஷாமின் பதிவுகள் கூறுகின்றன. எவ்வாறாயினும் அறபுமக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கும் சில பொதுச் சேவைகளை விருத்தி செய்தவற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஸம்ஸம் ஊற்றின் நீரை புனித யாத்திரிகளுக்கு வழங்கும் உரிமையை அவர் தமக்குரியதாக்கினார். கஃபாவின் திறவுகோலையும் அவர் பெற்றுக் கொண்டார். யுத்தப்பதாகைகளை வழங்கினார். கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். உரிமைகளை இழந்து மக்காவின் பல்வேறு பகுதிகளில்
140

சிதறிக்கிடந்த தமது குலத்தை அவர் ஒன்றுபடுத்தியதோடு மக்காவின் புனித எல்லைகளில் அவர்களைக் குடியமர்த்தினார். இதனால் அறபுமக்கள் ஐக்கியப்படுத்தியவர்' என்ற அடைமொழியினால் அவரை அழைத்தனர். முந்திய ஆட்சிகளைவிட குஸையின் ஆட்சி ஆற்றல்மிக்கதாகவும் மக்களின் வரவேற்புக்கும் நம்பிக்கைக்கும் உரியதாகவும் அமைந்தது.
குஸையின் தீர்மானங்களையும் கருத்துக்களையும் மக்கள் சமயச்சட்டங்களுக்கு 65 TT 85 மதித்தனர். திருமணங்கள், பொதுப்பிரச்சினைகளைப்பற்றிய கலந்துரையாடல்கள், யுத்தப்பதாகைகளைக் கையளித்தல் போன்ற எல்லாப்பிரதானமான விடயங்களும் குஸையின் இல்லத்திலேயே நடைபெற்றன.
குஸை வாழ்ந்த போதும் அவரின் மரணத்தின் பின்னரும் குறைஷியர் மீதான அவரது அதிகாரம் மீறப்பட முடியாத சமயச் சட்டங்களைப் போல விளங்கின. (1955:53 in 1994:12). குறைஷியர் மீதான குஸையின் அதிகாரம் அவரது வாழ்நாளிலும் அதன் பின்னரும் மக்கள் பின்பற்றிய ஒரு சமயமாகக் காணப்பட்டது.’ என தபரியின் குறிப்புக்கள் கூறுகின்றன. (Tabari, Vi:24 in 1994 :13). குஸை அரசியல், அதிபதியாக மட்டுமல்ல மக்காவின் புனிதராகவே, (Saint or Holy Man) கருதப்பட்டார். (பார்க்க, 1994:417, Notes:35) என்ற மற்றொரு பதிவையும் இவற்றோடு நோக்குவது பொருத்தமானது.
கி. பி. 5ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் குஸை, ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குஸை மக்கா நகரின் பரிபாலனத்தை ஏற்றதிலிருந்து முன்னரை வி. குறைஷியரின் ஆதிக்கமும் செல்வாக்கும் மேலும் உயர் நிலையடைந்தது.
கஃபாவைப் பரிபாலித்தவர்களில் குஸை முக்கியமானவராகும். தமது குலத்தவர்களை அவர் மக்காவில் குடியேற்றியதோடு மக்காவை விசாலப்படுத்துவதிலும் ஈடுபட்டார். புனிதயாத்திரைக்காக மக்காவிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு உணவு, நீர் முதலியவற்றை வழங்கும் திட்டத்தையும் அவர் நடைமுறைப்படுத்தினார். புனித யாத்திரைக்காக குஸை நடைமுறைக்கு கொண்டுவந்தவை பல, அவை சிற்சில திருத்தங்களுடன் நபிகள் காலத்திலும்
141

Page 74
பின்பற்றப்பட்டதென்பர். (1923:ci) குஸை மக்காவின் ஷெய்காகவும் எல்லைப்புறங்களின் தலைவராகவும் செயல்பட்டார்.
மக்காவை நகரமயமாக்கும் குஸையின் நடவடிக்கைகள் மக்காவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. மக்காவை வர்த்தக மத்திய நிலையமாக உருவாக்குவதற்கும் குஸையின் முயற்சிகள் உதவின. தொன்மையான புனித யாத்திரைக்கு அவர் புத்துயிரளித்ததோடு கஃபாவுக்கு அருகே தாருந்நத்வா’ என்ற ஆலோசனை மன்றையும் நிறுவினார். பெரும்பாலும் எல்லாப்பிரச்சினைகளும் தீர்வுக்காக இம்மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
6ம் நூற்றாண்டில் மக்கா ஒரு பாரிய வணிகக் குடியரசாக மாறுவதற்குரிய முன்னோடி நடவடிக்கைகள் பலவற்றைக் குஸை நிறைவேற் றியிருந்தார். குஸையின் பின்னர் குஸையின் பேரனும் நபிகளின் பாட்டனாருமான ஹாஷிம் இப்பொறுப்பை ஏற்றிருந்தார். கோடைகாலத்திலும் குளிர்காலத்திலுமாக பெரும் வாணிபக் காரவன்கள் சென்றுவர அவர் ஏற்பாடுகளைச் செய்தார். ரோம ராஜ்ய எல்லைக்குள் குறைஷியரின் வர்த்தகக் காரவன்கள் பாதுகாப்புடன் செல்வதற்கு ரோம சக்ரவர்த்தியுடன் தொடர்பு கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பாரசீகம், யெமன், எத்தியோப்பியா வரை குறைஷியரின் வணிகக்கா ரவன்கள் சென்றன.
குறைஷிப் பழங்குடி உமையா,நவ்பல், ஸுஹ்ரா, மக்ஷும், ஹாஷிம், அஸத், தாய்ம் எனப்பல குலங்களைக் கொண்ட பெரிய அமைப்பாகும். இக்குலங்களுள் நபிகள் பிறந்த ஹாஷிம் குலமும் உமையாக் குலமும் மக்ஷும் குலமும் மூன்று முக்கிய குலங்களாக சிறப்புப் பெற்றிருந்தன. எனினும் 7ம் நூற்றாண்டளவில் ஹாஷிம் குல்ம் செல்வ வளத்தில் நெருக்கடிக் குள்ளாகியிருந்தது. குறிப்பாக உமையாக் குலமும் மக்ஷிம் குலமும் செல்வவளத்திலும் செல்வாக்கிலும் முன்னணியில் நின்றன. “ஹாஷீம் குலத்தினர் வர்த்தக வளத்தின் முழு நலன்களையும் பெற்று முன்னேறும் வாய்ப்பைப் பெற்றிருக்வில்லை. (1913:123)
இதே கருத்து இஸ்லாமியக்கலைக்களஞ்சியச் சுருக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “ஹாஷீம் குடும்பம் மக்காவின் உயர்ந்த, குடும்பங்களில் ஒன்றாகும். ஆனால் ஹாஷிம் குடும்பத்தை மக்ஷம், உமையா போன்ற மிகப் பிரசித்தி பெற்ற குடும்பங்களுடன் ஒப்பிட முடியாது. மேலும் நபிகள்
142

காலத்தில் ஹாஷிம் குடும்பம் வறுமையால் அதிக அளவு தாக்கப்பட்டிருந்தது. (Shorter Encyclopedia of Islam, 1953 : 391)
எவ்வாறெனினும் உள்ளுர்ப் பொருளாதாரத்தை ஹாஷிம் குலத்தினரே கட்டுப்படுத்தினர். புனிதத்தல யாத்திரை முதலிய சமய நடவடிக்கைகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக இருந்தனர். ஹாஷிம் குலம் செல்வாக்கைக் கட்டிக்காக்க முடிந்த போதும் செல்வவளத்தைப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர் நோக்கிய குலமாகவே இருந்தது.
நபிகள் செல்வ வளத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த ஹாஷிம் குலத்தின் அங்கத்தவர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ஒரு சிறு வியாபாரி. போதிய செல்வத்தைத் திரட்டு முன்னரே அவர் இளவயதில் இறந்து விட்டார். தாயார் ஆமினாவின் வயிற்றில் நபி முஹம்மத் இருக்கும் போது அல்லது பிறந்து ஒருசில மாதங்களுக்குள் தந்தை அப்துல்லாஹ்வை நபிகள் இழந்தார்கள். மதினாவில் தனது வியாபாரத்தை முடித்து விட்டுத் திரும்புகையில் இவர்களின் மரணம் சம்பவித்தது. அப்துல்லாஹ் தனது மனைவி ஆமினாவிற்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் மிகச் சொற்பமாகும். ஒரு அடிமை, ஐந்து ஒட்டகங்கள், சில ஆடுகள் என்பனவே அவற்றுள் அடங்கியிருந்தன. வயதான பாட்டனாரின் பொறுப்பில் நபிகள் வளர்ந்தார்கள்; இப்போது நபிகள் அனாதை. ஏழ்மையின் இலட்சணங்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தன.
அன்றைய அறபுநாட்டு உயர் குலத்தினர் தமது குழந்தைகளை பாலைவன நாடோடி பதவி செவிலித்தாய்களிடம் ஒப்படைக்கும் வழக்கமிருந்தது. உட்புறப் பாலைவனத்தின் காற்றையும் நாடோடிப் பதவி வாழ்க்கையையும் தமது குழந்தைகள் அனுபவிப்பதை அவர்கள் விரும்பினர். குழந்தை முஹம்மதையும் உயர்குலத்து வழக்கப்படி பூதவிச் செவிலித்தாயிடம் ஒப்படைக்கும் வேளை வந்தது. அந்த வருடம் குழந்தைகளைப் எடுத்துச் செல்ல வந்த செவிலித்தாய்கள் எடுக்கத் தயங்கிய குழந்தையாக முஹம்மத் இருந்தார்கள்.
உண்மையிலேயே அப்துல்லாவின் மகன் (முஹம்மத்) பெரிய - குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவரே ஆனால் அந்த வருடம் செவிலித்தாய்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆகவறிய குழந்தையாக நபிகளிலிருந்தார்கள். (1989 : 43)
143

Page 75
இறுதியில் நபிகளை ஏற்க முன்வந்த செவிலித்தாயும் ஒரு பரம ஏழையாகும். ஹலீமா என்ற அந்நாடோடிப் பதவிப் பெண் பனூசஅத் குலத்தைச் சேர்ந்தவர். ஒரு செல்வந்தக்குழந்தையைப் பெற்றுக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டு மக்காவுக்கு வந்திருந்த பாலைவனவாசி ஹலீமாவின் ஏழ்மை அவரது வாய்மொழியாக இவ்வாறு பதியப்பட்டுள்ளது.
அது ஒரு வரட்சிக்காலம். எங்கும் பஞ்சம் நிலவியது. உண்பதற்கு எம்மிடம் எதுவுமிருக்கவில்லை. நான் ஒரு பெண்கழுதையில் ஏறிவந்தேன். எம்மிடம் வயது போன ஒரு ஒட்டகம் இருந்தது. அதிலிருந்து ஒரு துளிப்பால் கூட கிடைப்பதில்லை. பசியினால் கதறியழும் எம் குழந்தையினால் நாம் தூங்குவதில்லை . . . பால் குழக்கும் குழந்தையைத்தேடி நாம் மக்காவிற்கு வந்தோம் நபிகளை எடுத்துச் செல்வதற்கு எந்த ஒரு செவிலித்தாயும் முன்வரவில்லை. அது ஒரு அனாதைக் குழந்தை என்பதனால் யாரும் அக்குழந்தையை ஏற்க மறுத்து விட்டனர். (1985 : 43)
குழந்தைப்பருவத்தில் நபி முஹம்மத் செவிலித்தாயான ஹலீமாவிடம் ஐந்து வருடங்கள் பாலைவனத்தில் வாழ்ந்தார்கள். இக்காலத்தில் பாலைவன வாழ்வையும் ஏழ்மையையும் நேரடியாகக் காணும் வாய்ப்பை அவர்கள் பெற்றார்கள்.
ஹாஷிம் குலம் தொடர்ந்தும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெற முடியாத நிலையிலேயே இருந்தது. நபிகள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்பு கொண்டிருந்த போதும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அவர்களும் பெற்றிருக்கவில்லை. இச்சந்தர்பத்திலேயே செல்வத்திலும் செல்வாக்கிலும் அப்போது மிக உயர்ந்த நிலையிலிருந்த மக்ஷபம் குலத்தைச் சேர்ந்த பெருவணிகையான ஹதீஜாவை நபிகள் மணந்தார்கள்.
பொருளாதார முரண்பாடு
நபிகள் இளம்வயதில் வணிகக்காரவன்களுடன் வர்த்தகப்பயணங்களில் சென்றனர். பின்னர் ஹதீஜா நாயகியின் வர்த்தக நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்குகொண்டனர். இதன் மூலம் நபிகள் மக்காவின் வணிகவளத்தையும் அதனால் ஏற்பட்டுவரும் துரிதமாற்றங்களையும், மறுபுறத்தில் வர்த்தகம் ஏற்படுத்தியுள்ள புதிய சமூகப் பிரச்சினைகளையும் நன்கறியும் வாய்ப்பைப்
144

பெற்றனர். வளர்ச்சியை மட்டுமல்ல வளர்ந்து வரும் தரித்திர நிலையையும் வறுமையையும் நபிகள் கண்டனர்.
மக்காவின் தொன்மை உருவ வழிபாடும் ஒழுக்கச்சீரழிவும் மட்டுமல்ல மக்காவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் தீமைகளும் நபிகளின் சிந்தனைகளில்பெரும் புயலைத் தோற்றுவித்திருந்தன. ஹிராமலைக்குகையில் பல தினங்கள் நபிகள் தனித்திருந்து மேற்கொண்ட தியானங்களில் ஒரிறை பற்றிய எண்ணம் மட்டுமல்ல சமகாலப் பொருளாதாரப் பிரச்சினைகளினால் மக்கா எதிர் நோக்கியிருந்த பாதகமான எதிர்காலம் பற்றிய மன வேதனையும் அடங்கியிருந்தது.
ஹிரா குகையில் நபிகள் பெற்ற இறையனுபவங்களிலிருந்து தொடர்ந்த இறைவாக்குகளில் ஆன்மீகப் போதனைகளோடு மக்காவில் உக்கிரம் பெற்றிருந்த சமூக வேதனையை நீக்குவதற்கான வழிமுறைகளும் சம அளவில் இடம் பெற்றிருந்தன. மக்காவில் இறங்கிய ஆரம்பகால குர்ஆன் திருவசனங்களில் வர்த்தகரின் மோசடிகள் கண்டிக்கப் படுவதையும் மக்காவின் ஆழமான சமூகப்பிரச்சினைக்கு செல்வப்பகிர்வின் சமமற்ற நிலையே காரணம் எனக் காட்டப்படுவதையும் தெளிவாக அவதானிக்க முடியும்.
நபிகள் ஒரே நேரத்தில் சமய மாற்றத்திற்காகவும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்காகவும் போராடினர். அறேபியரின் பலதெய்வ வணக்கத்தையும் உருவ வழிபாட்டு வாதத்தையும் அவர்கள் தகர்க்க முயன்றனர். இது அறேபியரிடம் குறிப்பாக வணிகக் குழாத்தினரிடம் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. தமது மூதாதையரின் சமயத்தை நபிகள் நிராகரித்தனர் என்பதற்காகமட்டுமல்ல, இச்சமய முறைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் தமது சமூக பொருளாதார நலன்களை இதன் மூலம் தாம் இழக்க நேரும் என்பதாலும் உயர் வணிகக் குழாத்தினர் ஆத்திரமடைந்தனர். தொன்மைத் தெய்வங்கள் நிர்மூலமாக்கப்படுவதனால் தமது தலைமைத்துவம் வீழ்ச்சியடையும் என்றும் நகரவாசிகளில் பெரும் பான்மையானோரை இஸ்லாத்தை ஏற்கச் செய்வதில் நபிகள் வெற்றி பெற்றால் அது இயல்பாகவே தற்போதைய தலைமைத்துவத்தை இல்லாதொழித்துவிடும் என்றும் மக்காவின் உயர் வணிகர் மிக யதார்த்தமாகவே அஞ்சினர்.
வணிகரின் மோசடி, பதுக்கல், போலி உடன் படிக்கை முதலியவற்றை நபிகள் கடுமையாக விமர்சித்தனர். இவை அநீதி என்றும் பாவம் என்றும்
145

Page 76
கூறினர். குர்ஆன் இத்தகைய செயல்களுக்கு நரகத்தை வாக்குறுதியளித்தது. தொன்மை உருவ வழிபாட்டு வாதம், செல்வம், மோசடி, அதிகாரம் என்பவற்றின் மூலம் தாம் அமைத்துள்ள வணிகராட்சி சரிந்துவிழக் கூடும் என உயர் குழாத்தினர் நியாயமாகவே பயந்தனர். அதிகார மாற்றம் நிகழக்கூடும் என்ற அச்சமே இதிலிருந்த முக்கிய அம்சமாகும். தமது வசமிருந்த சில்லோராட்சிச் (Oligarchy) சமூக அமைப்பில் நபிகள் தொடங்கியுள்ள போராட்டம் புதிய அரசியல் அதிகாரத்தை உருவாக்கும் என அவர்கள் அச்சங் கொண்டனர். ( 1953:26).
வணிகர் எதிர்ப்பு
நபிகளின் சமய இயக்கத்தினை உயர் வணிகக் குழாத்தினர் கடுமையாக எதிர்த்தனர். நபிகளின் குலமான ஹாஷிம் குலத்தின் போட்டிக் குலங்களும் இவ்வெதிர்ப்பில் இணைந்து கொண்டன. நபிகளின் முயற்சிகளை எதிர்ப்பதில் மிகத்தீவிரவாதியாக விளங்கிய நபிகளின் சம வயதினரான அபூஜஹில் ஹாஷீம் குலத்தின் போட்டிக்குலமான மக்ஷPம் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இயக்கத்தை நசுக்குவதற்கு அபூஜஹிலும் ஏனையோரும் கடுமையான வழிமுறைகளைக் கையாண்டனர். நபிகளின் மிகப்பழைய வாழ்க்கைச் சரிதையிலிருந்து (இப்ன் ஹிஷாம்) பெறப்பட்ட கீழ்வரும் பகுதியில் எதிர்ப்பாளரின் துன்புறுத்தும் மனோபாவத்தை நன்கு காணலாம்.
தீய எண்ணமுடைய அபூஜஹறில் குறைவுரியரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான். இஸ்லாத்தைத் தழுவியவர்கள் உயர் குடியைச் சேர்ந்தவராயின் அவன் அவர்களைக் கடுமையாக விமர்சித்தான். அவர்களை மோசமாக அவமானப்படுத்தியதோடு அவர்களை நோக்கிப் பின்வருமாறு உரைப்பான் " நீ உனது தந்தையின் சமயத்தைக் கைவிட்டாய் உனது தந்தை உன்னிலும் எவ்வளவோ உயர்ந்தவர். உனது அறிவையும் நீ எடுத்த முடிவுகளையும் நாம் தகுதியற்ற தாக்குகிறோம். உனது கெளரவத்தை இல்லாதொழிப்போம்,' 6Taituntair. இஸ்லாத்தைத் தழுவியவர் ஒரு வியாபாரியாயின் அவர்
146

அச்சுறுத்தப்பட்டதோடு உனது பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்போம் என்றும் வியாபாரத்தில் நீநஷ்டமடையும்வரை இத்தடையைத் தொடருவோம்’ என்றும் அவர் எச்சரிக்கப்பட்டார். இஸ்லாத்தை ஏற்றவர் சாதாரணமான வராயின் அவரை அடித்துத் துன்புறுத்தியதோடு அவருக்கு எதிராக மற்றவர்களையும் அபூஜஹில் தூண்டினான்.
ஹாஷிம் குலம் நபிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியமையால் நபிகள் தைரியத்தோடு தமது போதனைகளின் ஈடுபட்டனர். இறுதியில் மக்கா வணிகர் நபிகளின் ஹாஷிம் குலத்தைச் சமூகரீதியாகப் பகிஷ்கரிப்பதற்கு முடிவு செய்தனர். திருமண உறவு, வர்த்தகத் தொடர்புகள் உட்பட எல்லா உறவுகளையும் ஹாஷிம் குலத்துடன் துண்டித்துக் கொண்டனர். நபிகளை ஹாஷிம் குலத்திலிருந்து தனிமைப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தொடர்ந்து இருவருடங்கள் இப்பகிஷ்கரிப்பு கடுமையாகக் கடைபிடிக்கப்பட்ட போதும் நபிகளை ஹாஷிம் குலத்திலிருந்து தனிமைப்படுத்துவதில் செல்வந்த வணிக குழாத்தினர் தோல்வி கண்டனர்.
நபிகளின் பாதுகாவலரும் சிறிய தந்தையுமான அபூத்தாலிப் பலமுறை எதிரிகளால் எச்சரிக்கப்பட்ட போதும் முழு ஹாஷிம் குலமும் அச்சுறுத்தலுக்காளான போதும் குல ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க அபூத்தாலிபோ ஹாஷிம் குலமோ தயாராக இருக்கவில்லை.
எதிர்ப்புக்களின் மத்தியில் இஸ்லாம் மெல்ல வளர்ந்தது. ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் இளைஞர்களும் புதிய இயக்கத்தில் சேர்ந்தனர். சமூகப் பிரச்சினைகளை நபிகள் அணுகிய முறை பலவீனமான மக்களின் ஆதரவை இலகுவில் பெற்றுத் தந்தது. பெரும் வணிகருக்கும் சமூகத் தீமைகளுக்கும் எதிரான நபிகளின் போக்கு ஏழைகளையும் பாதிக்கப்பட்ட
வர்களையும் விரைவில் கவர்ந்தது.
குபேரவணிகர்களின் வணிக ஏகபோகத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களும் சிறு வியாபாரிகளும் படிப்படியாக நபிகளின் புதிய இயக்கத்திற் சேர்ந்தனர். குலத்தின் பாதுகாப்பை இழந்தவர்களும் அனாதைகளும் அடிமைகளும் நபிகளின் அணியில் இணைவது அதிகரித்தது.
147

Page 77
இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரும் அதற்கு எதிரானவர்களும் என இரு எதிரணிகள் உருவாகின. இவ்வெதிர் நிலை புதுமையை ஏற்போருக்கும் பழைமை வாதிகளுக்குமிடையிலான வேறுபாடாக மட்டும் இருக்கவில்லை. இறுக்கமான பொருளில் நோக்கினால் உயர் குடியினரும் குபேரவணிகர்களும் பழைமைவாதிகள் அல்ல. புதுமையையும் முன்னேற்றத்தையும் ஆதரிக்கும் தேவை இவர்களுக்கு இருந்தது. முன்னேற்றத்துக்குரிய வழிமுறைகள் நபிகளின் இயக்கத்திலிருப்பதை அவர்கள் அறியாமலுமில்லை. ஆனால் இங்கு அடிப்படையாக இருந்த பிரச்சினை, எல்லாவற்றையும் விட பொருளாதாரம் சார்ந்ததாகும். (1961 : 47)
புதிய சமய இயக்கம் அறிமுகப்படுத்திய பொருளாதாரச் சீர்திருத்தமே முரண்பாட்டுக்கான முக்கிய காரணி எனக் கருதப் போதிய காரணங்களிலிருந்தன. செல்வம் குபேரவணிகரிடையே மாத்திரம் சென்று குவிய அனுமதிப்பதா அல்லது செல்வம் முழுச்சமுதாயத்துக்குமாகப் பகிரப்படும் புதிய பொருளாதார மாற்றத்தை ஆதரிப்பதா என்பதே மையப்பிரச்சினையாகும். பேராசிரியர் வொட் முன்வைக்கும் பின்வரும் கருத்து இப்பிரச்சினைபற்றிய கூர்மையான மதிப்பீடெனக்கருதலாம்.
சமூக பொருளாதாரக் கருத்தியல் முறைமையை (Ideological System) ஒரு சிறு பகுதியினருக்காகப் பயன்படுத்த விளைவோருக்கும் முழுச் சமூகத்தின் நலனுக்காகவும் பயன்படுத்த விளைவோருக்குமான வேறுபாடே இதுவாகும் (1961 48)
மூதாதையர் நோக்கு
மறுபுறத்தில் நபிகள் பழைய பழக்க வழக்கங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் புதிய மாற்றங்களை வற்புறுத்தினர். இறைவனுக்கு இணைவைத் தலையும் தொன்மை உருவ வழிபாட்டு வாதத்தையும் நிராகரித்தனர். மூடப்பழக்க வழக்கங்களைக் கண்டித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் மக்காவாசிகளின் மனத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால் மக்கா வாசிகள் கலவரமடைந்தனர். குறிப்பாக நாடோடிப் பதவிகள் நபிகளின் இக்கருத்துக்களை ஏற்க மறுத்தனர். தமது மூதாதையரின் தமது தந்தையரின் வழிபாடுகளையும் வழக்கங்களையும் கைவிடக் கோரும் நபிகளின் புதிய சமய அழைப்பு அவர்களுக்குப் புதிராகவும் ஆத்திர மூட்டுவதாகவும் அமைந்தது.
148

பாலைவன அறபிகள் நபி முஹம்மதைச் சக்தியற்றவராகவே கருதினர். இறைவனின் நபி என்றால் அவர்களின் கருத்தில் (ஒரு முறை அவர்களே வினவியதைப் போல) இந்தப் பெண் ஒட்டகையின் வயிற்றிலிருப்பதை என்னவென்று அவரால் சொல்ல முடியுமா?’ போன்ற மறைவானதும் மர்மமானதுமான விடயங்களைக் கூற அல்லது அற்புதங்களை நிகழ்த்த அவருக்கு ஆற்றலிருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். உண்மையில் நபிகள் இத்தகையோரைப் பார்த்து நானும் உங்களைப் போல் சாதாரண மனிதனாகவே இருக்கிறேன். என்று கூறியபோது இவ்வார்த்தைகளில் அறபு மக்கள் எவ்வித கவர்ச்சியையும் காணவில்லை. முன்னர் அவர்களின் வாழ்க்கையில் எவ்வகையிலும் பிரசித்தி பெற்றிராத ஏக இறைவனைப்பற்றிய சிந்தனைகளோ மனிதன் இறைவனின் பிரதிநிதியாவான் என்பதோ மனிதர்கள் இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்பதோ அவர்களைக் கவரவில்லை. அல்லது அவற்றை அவர்கள் நம்பமறுத்தனர். அறபிகளின் இப்போக்கினை குர் ஆன் அஸ்ஸாஃப்பாத் அத்தியாத்தில் பின்வருமாறு
கூறுகிறது.
(நபியே) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) ஆச்சரியப்படுகின்றீர் அவர்களோ (அதனைப்) பரிகசிக் கின்றனர். அன்றிஅவர்களுக்கு நல்லுபதேசம் கூறப்பட்ட போதிலும் அதனை அவர்கள் கவனிப்பதேயில்லை. எந்த அத்தாட்சியைக் கண்டபோதும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். (அத் 37; 12 - 15)
இன்ப வாதம்
நகர்ப்புற அறபிகளைவிட நாட்டுப்புற அறபிகளே ஆன்மீக நம்பிக்கையின்மையிலும் உலகியல் அவாவிலும் அதிகம் ஊறியிருந்தனர். அவர்களது கருத்தில் புதிய சமயப் போதனைகள் பரிகாசத்துக்குரியனவாக இருந்தன. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்திய இவர்களது சமய அல்லது வாழ்க்கை இலட்சியத்தை இன்பவாதம் (Hedonism) எனக்கூறலாம். மதுவும் மங்கையும் அவனது வாழ்வில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. சுதந்திரப் பாலியலில் அவனுக்கு அதிக விருப்பமிருந்தது. இவ்விரு விடயங்களையும் நபிகள் விமர்சித்த போது அறபிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தன. தனது சொந்த வாழ்வில் திருப்தியையும் உலகியல் விடயங்களில் மகிழ்வையும் தரக்கூடிய வழிமுறைகளையே அவன் விரும்பினான்.
49

Page 78
இவ்வுலக வாழ்க்கை தனக்குக்கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பம் மட்டுமே என்பது அவனது திடமான நம்பிக்கையாகும். இந்திய உலோகாயதரின் அல்லது, கிரேக்க சடவாதிகளின் (Materialist) கருத்தை ஒட்டியதாக இவனது சிந்தனைகள் காணப்பட்டன. ஒரு முறை வாழ்க்கை இழக்கப்படுவதோடு எல்லாமே முடிந்துவிடுகிறது என்பதே அவன் அறிந்திருந்த வேதாந்தமாகும். அவர்களது இந்நோக்கினைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத்தவிர வேறு (வாழ்க்கை) இல்லை (இதில் தான்) நாம் வாழுகிறோம். - காலத்தைத்தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை (அத், 45; 24).
இத்தகைய கருத்துக்களில் அவன் மூழ்கியிருந்ததால் மரணத்தின் பின்னர் மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்ற கூற்று அவனுக்குப் பரிகாசமாகத் தோன்றியது. குர் ஆன் இப்பரிகாசத்தைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.
'நாம் இறந்து (உக்கி மண்ணாகவும் எலும்பாகவும் போனபின்னர் மெய்யாகவே எழுப்பப்படுவோமா (என்றும்) ('அவ்வாறே நம்முடைய மூதாதைகளுமா எழுப்பப் படுவார்கள்?’ என்றும் பரிகாசமாக கூறுகின்றனர். (அத், 37 16 - 18)
மது, மங்கை, கவிதை, அதிக அளவு குழந்தைகள், அதிக மனைவிகள் என்றே அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பினான். வரண்ட பாலை வனத்தின் கடுமையான வாழ்க்கைக்கு இவை அவனுக்குத் தேவையாக இருந்தன. அவற்றிற்கெதிராக உருவாகிக் கொண்டிருந்த புதிய கருத்துகளையும் நாகரிக விழுமியங்களையும் அவன் பொருட்படுத்தவில்லை. தமது மூதாதையர் தமக்குவிட்டுச் சென்ற பழக்கவழக்கங்களில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் அவன் நிராகரித்தான். எனவே முக்கியமாக நாடோடிகளின் விடயத்தில் நபிகளின் சமய அழைப்பு எளிதானதாக இருக்கவில்லை. அல் குர்ஆனின் பின்வரும் வாக்கியத்தை இங்கு நோக்குவது பொருத்தமாகும்.
அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின் பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் இல்லை எங்கள் தந்தையர்
150

பாட்டானார் எந்தவழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம் என்று மறுமொழி கூறுகிறார்கள் . . . அவர்கள் செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர் எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள். (குர் 2 170, 77)
மூதாதையர் நோக்கு அல்லது தமது தந்தையர்வழி' என்பது பாலைவன அறபிகளின் வாழ்வில் ஆழமாக வேருன்றியிருந்த நெறிமுறையாகும். இதன் மீதுதான் பதவி தனது வாழ்க்கைக் கோலங்களை அமைத்திருந்தான். எனவே மூதாதையர் வழிமுறைகளுக்கு எதிரான நபிகளின் போக்கினால் அவர்கள் பெரிதும் கலக்க முற்றனர். நபிகளின் பூாதுகாவலரான அபீத்தாலிபிடம் நபிகளின் எதிரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இவ்விடயங்களே அடங்கியிருந்தன. ஓ! அபீத்தாலிப் உமது சகோதரனின் மகன் (முஹம்மத்) எமது கடவுளர்களை அவமானப் படுத்துகிறார். எமது நடத்தைகளை விமர்சிக்கிறார். எமது பழக்க வழக்கங்கள் அநாகரிகமானவை எனக்கூறுகின்றார். எமது தந்தையரை அவமதிக்கிறார். (1967 : 20)
மூதாதையர் வழிமுறைகளில் அவர்கள் கொண்டிருந்த பற்று மிகத் தீவிரமானதாகும். எந்தச் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர்களிடம் கூறப்பட்டாலும் மூதாதையர் வழிமுறை' என்ற சூத்திரத்தைக்கொண்டு அது எவ்வளவு மோசமான செயலாயிருந்தாலும் அதனை நியாயப்படுத்தினர். அவர்களது இப்போக்கினை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவுபடுத்துகிறது. அவர்களின் செயல் ஒன்று மானக்கேடானது என்று கூறப்பட்டால் இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக்கண்டோம் என்று கூறினர். (குர் 7 : 28). மேலும் அல்லாஹ் இறக்கிவைத்த சட்டத்தின் பக்கமும் இறைதூதரின் பக்கமும் வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்படுமாயின் எங்கள் மூதாதையர் எந்த வழியில் வாழக்கண்டோமோ அதுவே எங்களுக்கும் போதுமானது என்றனர் (குர்5 104) அல்லாவின் இறக்கியருளிய வேதத்தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் தந்தையர் பாட்டனார் எந்தவழியைப் பின்பற்றினார்களோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறினர். (குர் 12:70)
இறைவாக்கு அல்லாஹ் விடமிருந்தே வருகின்றதென்ற கருத்தையும் பாலைவன அறபிகள் ஏற்க மறுத்தனர். பழைய தெய்வங்களைத்தாம் கைவிடப்
போவதில்லை என்பதையும் அவர்கள் உறுதியாக நபிகளுக்கு அறிவித்தனர்.
151

Page 79
“அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வோறொரு நாயன் இல்லை (அவனையே நீங்கள், வணங்குங்கள்)’ என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் கர்வங் கொண்டு என்னே நாங்கள் பைத்தியங் கொண்ட ஒரு கவிவாணருக்காக எங்களுடைய தெய்வங்களை விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர். (gé, 37: 35, 36)
மக்காவில் நபிகள் கடும் எதிர்ப்பை எதிர் நோக்கினர் என்பதற்கு இவை தகுந்த சான்றுகளாகும். ஹாஷிம் குலத்தைத்தவிர நபிகளை எதிர்ப்பதில் ஏறக்குறைய எல்லாக் குலங்களுமே ஒன்றிணைந்தன. அபீத்தாலிபின் மரணத்துடன் ஹாஷிம் குலமும் நபிகளைக் கைவிடும் சூழ்நிலை உருவாகியது. அபீத்தாலிபின் பின்னர் ஹாஷிம் குலத்தின் தலைமைத்துவத்தை ஏற்ற அவரது சகோதரர் அபூலஹப் இதுவரை நபிகளுக்குக் குலம் வழங்கிய பாதுகாப்பை நிறுத்தினார். எதிரிக் குலங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நபிகளை எதிர்ப்பவர்களின் குழாத்திற்குத் தலைமை தாங்கும் நிலைக்கு அவர்
வநதாா.
முன்னரைவிட நிலைமை மோசமாகியது. தொடர்ந்தும் மக்காவில் போதனைகளை மேற்கொள்ள முடியாத சூழல் தோன்றியது. இயக்கத்தையும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் பாதுகாப்பதற்காக மக்காவை விட்டும் வெளியேற நபிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
152

éNTeflueü ifjjengT guiù 8
மதின ஒப்பந்தங்களும் அரசின் தோற்றமும்
யூதப்பழங்குடிகள்
மதீனா அல் முனவ்வறாவின் பழைமையான பெயர் யத்ரிப் ஆகும். மக்காவிற்கு வடக்கே 300 மைல் தொலைவிலிருக்கும் நீர்வளமிக்க இந்நகரம் பாலைவனப் பசுந்தரைப் பகுதியைப் பெருமளவிற் கொண்டிருந்தது. நபிகளின் வரலாற்று முக்கியத்துவமிக்க ஹிஜ்ரத் நிகழு முன்னரே நபிகளுக்கும் மதீனாவுக்குமிடையில் தொடர்பிருந்துள்ளது.
மதீனாவின் முதற் குடிகள் யூதர்களாகும். இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறேபியாவில் யூதக் குடியேற்றம் நிகழ்ந்துள்ள பகுதிகளில் யத்ரிப் குறிப்பிடத்தக்க நகராகக் கருதப்படுகிறது. யூதர்கள் யத்ரிபிலும் ஹிஜாஸின் ஏனைய பகுதிகளிலும் எப்போது, எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்பது பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. பெரும்பாலும் சிரியா (ஷாம்) விலிருந்து வந்திருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாகும். சிரியாவை ரோமர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காலப்பகுதியில் யூதர்கள் சிரியாவிலிருந்து வெளியேறியிருக்கலாம். இவ்வாறு வெளியேறியோர் அறபுத் தீபகற்பத்தை வந்து சேர்ந்தனர். இங்கு வந்த யூதகுலங்களிற் பல Log560TT6Sgth (5ty (Eupils0T. (Akram Diya al Umari, 1991:43)
யத்ரிபின் வளமான நிலமும் சிரியாவை நோக்கிச் சென்ற வர்த்தகப் பாதையும் யூதர் இங்கு குடியேறக் காரணமாயிருந்தன. அதிக வளமான யத்ரிபின் கிழக்குப் பகுதியில் அவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இக் குடியேற்றத்தில் யூத சமயத்தைத் தழுவிய அறேபியரும் அடங்கியிருந்தனர். இருபது சிறிய யூதக் குலங்கள் குடியேறினவெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Page 80
அறேபியர் யத்ரிபில் குடியேறும் வரை யத்ரிபின் சமய பொருளாதார அரசியல் ஆதிக்கம் முழுமையாக யூதர்களின் வசமே இருந்தது. மேலும் மதீனாவின் பொருளாதாரத்தை ஆதியிலிருந்தே வடிவமைப்பதில் யூதரின் பங்கும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. விவசாயப் பொருளாதாரத்தை மதீனாவில் உருவாக்குவதில் யூதர்கள் முன்னோடிகளாயிருந்துள்ளனர். மாதுளங்கனி, பேரீச்சை, திராட்சை போன்ற கனிவர்க்கங்களையும் பல்வகைத் தானியங்களையும் மதீனாவில் அவர்கள் விருத்தி செய்தனர். கால்நடை வளர்ப்பிலும் அவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் செய்த கைவினைப் பொருட்கள் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு வெவ்வேறு உற்பத்தித்துறைகளை அவர்கள் வளர்த்து வந்த போதும் வட்டியே யூதர்களின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.
யூதர்கள் பழங்குடி மனப்பன்மையினால் பெரிதும் கட்டுண்டிருந்தனர். குல ஒருமைப்பாட்டின் அசபிய்யா' என்ற இலட்சணம் அவர்களின் வாழ்வில் சிறப்பாகப் பிரதிபலித்தது. இப்பழங்குடி ஆதிக்கம் யூத சமய அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைவதற்குத் தடையாக இருந்தது. இதனால் அவர்கள் தனித் தனிக் குல அலகுகளாகவே வாழ்ந்தனர். (1991:44) மதீன யூதர்கள் (குறைந்தது பெரும்பான்மையோராயினும்) யூதமதத்தைத் தழுவிய அறேபியர்களே என்ற கருத்தும் உண்டு. (1969:99) இவர்கள் ஹீப்று கலந்த அறபு மொழியைப் பேசினர். இவர்களுள் பல அறபுக்கவிஞர்களும் இருந்தனர். இவர்களின் பழங்குடி அமைப்பு அறபுப் பழங்குடியையே பெரிதும் ஒத்திருந்தது. குவைனூக்கா (Quainuqa), குறைஸா (Quaiza) நாதிர் (Nadir) என்பன யத்ரியில் வாழ்ந்த பிரதான மூன்று யூத குலங்களாகும்.
யூத - அறபு மோதல்
யத்ரிபில் யூதக் குடியேற்றத்திற்குப் பின்னரே அறேபியரின் குடியேற்றம் நிகழ்ந்ததென்பர். இவற்றுள் அவ்ஸ் (Awis), கஸ்ரஜ் (Khazraj) என்ற இரு பழங்குடிகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தென் அறேபியாவின் யெமனிய அஸது பழங்குடியைச் சேர்ந்த இவர்கள் கி. பி. 200 ம் ஆண்டளவில் யெமனிலிருந்து யத்ரிபில் குடியேறினர். தென் அறேபியாவில் ஏற்பட்ட மஆரிப் அணைஉடைப்பு, செங்கடற் பிராந்தியத்தில் உருவாகிவந்த ரோம ஆதிக்கம், அதனால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரப்பாடின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் தென் அறேபியாவைவிட்டும் வெளியேறினர் எனக்
154

கருதலாம். ஏற்கனவே குடியேறிய யூதர்கள் அதிக வளமான பகுதிகளைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். இதனால் வளமான நிலப்பகுதி பற்றிய பிரச்சினை யூதருக்கும் அறேபியருக்குமிடையில் உருவாக வாய்ப்பிருந்தது.
அறேபியர் வளமற்ற பகுதியில் குடியேறினர். அவ்ஸ் குலத்தினர் கஸ்ரஜ் குலத்தைவிட சற்று வளமிக்க பிரதேசங்களைப் பெற்றிருந்தனர். இவ்விரு குலங்களுக்குமிடையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பிணக்குகளுக்கும் யுத்தங்களுக்கும் நிலப்பிரச்சினை அடிப்படைக் காரணியாக இருந்துள்ளது (1991:45). இவ்விரு குலங்களுக்கிடையிலும் ஏற்பட்டு வந்த மோதல்களை யூதர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தனர். யத்ரிபில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக யூதர் இவ்விரு குலங்களையும் மோதவிடும் உபாயத்தைக் கையாண்டனர் (1991:45). இவ்விரு குலத்தாருக்குமிடையில் பல யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள்புஆத்யுத்தம் மிக நீண்ட காலமாக நடந்த யுத்தமாகும்.
அறபுக் குலங்களுக்கிடையிலே உள்ள மோதலை யூதர்கள் பயன்படுத்தித் தமது ஆதிக்கத்தை வளர்த்து வருகிறார்கள் என்பதை அறபுக் குலங்கள் உணரத் தலைப்பட்டன. கஸ்ரஜ், அவ்ஸ், இரு குலத்தாருக்கு மிடையில் மிக நீண்டகாலம் நடைபெற்ற புஆத் யுத்தம் அவர்களுக்கு பல உண்மைகளை உணர்த்தின. இதனால் அவர்கள் தமக்கிடையிலான பகைமையை முடிவுக்குக் கொண்டுவர சில சமாதான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இரு சாராரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரைத் தலைவராக்குவதன் மூலமாக சமாதானத்தை உருவாக்குவதற்கு முதலில் திட்டமிட்டப்பட்டது. உண்மையில் புஆத்' யுத்தமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அறபுக் குலங்களின் விழிப்புணர்ச்சியும் நபிகளின் தலைமைத்துவத்தை யத்ரிப் ஏற்கக் கூடிய ஒரு முன் சூழலை உருவாக்கியது போல் அமைந்தது. (1991:46) அன்னை ஆயிஷாவின் பின்வரும் கருத்து இதனைப் புலப்படுத்துகிறது.
புஆத் (Buath) யுத்தம்நபிகளின் மதீனா வருகைக்கு முன்னர் இறைவன் ஏற்படுத்தியதாகும். மதீனாவிற்கு இறைவனின் திருத்தூதர் வந்த போது கஸ்ரஜ், அவ்ஸ் ஆகிய இரு இனங்களும் போரிடும் இரு இனங்களாகும். அவர்களிடையே வாழ்ந்த தகுதிமிக்கவர்கள் பலர் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் இறைவன் நபிகளின் வருகைக்குச் சற்று முன்னர் இதை ஏற்படுத்தினான். ( 1991:46)
155

Page 81
மக்காவிற் போலவே மதீனாவிலும் சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய அரச இயந்திரமோ ஸ்திரமான பாதுகாப்போ இருக்கவில்லை. அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய குலங்களுக்கிடையில் நடைபெற்று வந்த யுத்தங்களினாலும், யூதர்களின் ஆதிக்கத்தினாலும் விவசாயிகளுக்கும் நாடோடிகளுக்குமிடையில் உருவாகிவந்த பிணக்குகளினாலும் யத்ரிப் சமாதானத்தை எதிர்பார்க்கும் நகரமாகியது. குலங்களுக்கிடையில் நடைபெற்று வரும் மோசமான யுத்தங்களை நிறுத்துவதற்கு நன்நோக்குள்ள அறேபியர் பலர் முயன்ற போதும் அதில் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அங்கு ஏற்பட்டிருந்த யுத்தச் சூழல் மிக ஆபத்தான கட்டத்தை எட்டியது. குல ஐக்கியம் யுத்தத்தை வளர்த்தது. இரு குலங்களைச் சேர்ந்த யாரேனும் இருநபர் சண்டையிட்டாலே போதும் அது முழு அளவிலான பொது யுத்தத்திற்கான தீயை மூட்டியது. இதன் பொருள் மதீனாவின் எல்லா இனத்தவரும் அழியும் அபாயத்தில் இருந்தனர் என்பதே. (1971; 141)
உண்மையில் சமாதானத்தை வெளியிலிருந்து சுமத்தக்கூடிய, தேவைப்பட்டால் பலாத்காரமாகச் சுமத்தக்கூடிய ஒரு அதிஉயர் அதிகாரம் அல்லது அரசு ஒன்றினாலன்றி இம் மோதலில் எவ்வித தீர்வும் காணமுடியாத சிக்கலில் மதீனப் பழங்குடியினர் சிக்குண்டிருந்தனர் (1971:141) என்பது கருத்திற்கொள்ளத் தக்க விடயமாகும்.
இரகசிய சந்திப்புக்கள்
மதீனாவின் பிரதான தெய்வம் மனாத் எனும் பெண் தெய்வமாகும். அத்தோடு வேறு வழிபாடுகளும் அங்கிருந்தன. எனினும் அல்லாஹ்வை முதல் நிலையாகக் கருதிய சிலரும், ஒரிறைவாதிகளான ஹனிப்கள் ஒரு சிலரும் மதீனாவில் வாழ்ந்தனர். நபிகளின் புதிய இயக்கம் பற்றிய செய்தியும் ஓரளவு அங்கு பரவியிருந்தது. நபிகளுக்கு ஏற்கெனவே மதீனாவில் தொடர்புகள் இருந்தன. நபிகளின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம் மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் பழங்குடியின் கிளைக்குலமான அதிய் இப்ன் அல் நஜ்ஜார் குலத்தில் ஒரு பெண்ணை மணந்தனர். இதன் மூலம் நபிகள் மதீனாவில் இரத்தத் தொடர்பைப் பெற்றிருந்தனர் (1973:24). வர்த்தகத்திற்காக மதீனா சென்று திரும்பிய நபிகளின் தந்தை அப்துல்லாஹ் மரணித்து அடக்கம் செய்யப்பட்டது தந்தையின் பனூ நஜ்ஜார் குலத்தின் தாய்வழி மக்களுடனாகும். நபிகளின் தாயார் ஆமினா தமது கணவரின் அடக்கஸ்தலத்தைக் காண்பதற்காகவும் தனது உறவினர்களைக் குழந்தை முஹம்மதுடன் சந்திப்பதற்காகவும் மதீனாவிற்குச் சென்று அங்கு பல நாட்கள் தங்கி நின்றுள்ளனர்.
156

புனிதத் தல தரிசனங்களுக்காக அடிக்கடி மக்காவிற்கு வந்து சென்ற மதீனாவாசிகள் சிலர் நபிகளைக் கண்டு உரையாடினர். இக்காலப்பகுதியில் மதீனா பல யுத்தங்களைச் சந்தித்து யுத்தத்தினால் களைப்புற்ற நகரமாக விளங்கியது. யுத்தங்களின் மூலம் மதீனாவில் தமது ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கு யூதர்கள் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்தோடு அறேபியக் குலங்களோடு மோதலில் ஈடுபடும் நேரமெல்லாம் அறபுக் குலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பின்வரும் செய்தியை அவர்கள் பரப்பினர்: இப்போது ஒரு திருத்தூதர் நம்மிடையே அனுப்பப்படுவார். அவர் வரும் நேரம் அண்மித்து விட்டது. நாம் அத்திருத்தூதரைப் பின்பற்றுவோம். அவரது உதவியுடன் உங்களை (அறேபியரை) நாம் அழித்தொழிப்போம். (Ibn Hisham Cited in 1971: 143)
யூதர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய அவர்களது இவ்வெதிர்வு கூறலினால் அறபுக் குலங்கள் கலவரமடைந்தன. யூதர்களின் இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறு முன்னதாகவே அறபுக் குலத்தாரிடையே இறைவனின் திருத்தூதுராகப் புதிய சமயத்தைப் போதித்து வரும் நபி முஹம்மதின் ஆதரவைப்பெற சில மதீன வாசிகள் முயன்றனர். கஸ்ரஜ் குல அங்கத்தவர் சிலர் இதில் தீவிரமாக ஈடுபட்டனர். சிலர் இஸ்லாத்தையும் ஏற்றனர்.
நபிகளையும் இஸ்லாத்தையும் பற்றிய செய்திகள் மதீனாவில் வேகமாகப் பரவின. நபிகளுக்கும் மதீன வாசிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. கி. பி. 621, 622 களில் நபிகளுடன் இடம் பெற்ற சந்திப்புக்களும் , இருதரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட அக்கபா உடன்படிக்கையும் வரலாற்று முக்கியத்துவமிக்கவையாகும்.
யத்ரிபின் மோசமான நிலையை யத்ரிப் குழுவினர் நபிகளுக்கு விளக்கினர். பகைமையினாலும் தீமைகளாலும் பிரிந்துவாழும் மக்கள் அவர்களைப் போல யாருமில்லை என அவர்கள் நபிகளுக்கு யத்ரிபின் யுத்த சூழலை வர்ணித்தனர். நபிகள் மதீனாவிற்கு வந்து தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினர். உள்நாட்டு யுத்தங்களினால் சின்னாபின்னமடையும் நிலையிலிருந்த மதீனாவை மறுசீரமைக்க நபிகளின் மதீன வருகை உதவும் என அவர்கள் நம்பினர். மக்காவின் குறைஷியரின் ஆபத்தான நடவடிக்கைகளிலிருந்து தமக்கும் இஸ்லாத்தை ஏற்றவர்ளுக்கும் யத்ரிபில் பாதுகாப்புக் கிடைக்கும் என நபிகளும் கருதினர். இதனால் நபிகள் யத்ரிபிற்கு இடம்பெயர்ந்து செல்ல முடிவு செய்தார்கள்.
157

Page 82
இது சாதாரண முடிவன்று. வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே யத்ரிபிற்கும் மக்காக் குறைஷியருக்குமிடையில் பிணக்குகளிருந்தன. கடும் அர்ப்பணத்திற்குத் தயாராகாதவரை நபிகளை யத்ரிபிற்கு அழைப்பது பயனற்றதும் ஆபத்தானதுமாகும். நபிகளுக்கும் கஸ்ரஜ் குலக் குழுவினருக்குமிடையில் அல் அகபாவில் நடைபெற்ற உடன்படிக்கைபற்றி குறைஷியர் கலவரமடைந்திருந்தனர். முஹம்மதுவும் புதிதாக இஸ்லாத்தைத், தழுவியவர்களும் போர் தொடுப்பதற்கு அகபாவில் சதித் திட்டம் தீட்டுவதாகக் கருதி குறைஷியர் ஆத்திரமடைந்தனர். எனவே இது ஒரு ஆபத்தான அழைப்பு என்பதை கஸ்ரஜ் குலத்தினர் நன்கறிந்திருந்தனர். நபிகளை யத்ரிபிற்கு அழைப்பது பற்றி நபிகளுக்கும் நபிகளைச் சேர்ந்த மக்காவாசிகளுக்கும் கஸ்ரஜ் குல அங்கத்தினருக்குமிடையில் நடைபெற்ற உடன்பாட்டின் போது இதன் பாதகமான விளைவுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. நபிகள் சார்பாக அங்கு பிரசன்னமாகிய நபிகளின் சிறிய தந்தை அப்பாஸ் பின் உபாதா இப் பிரச்சினையின் தாக்கத்தைப் பின்வருமாறு கஸ்ரஜ் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினார்.
கஸ்ரஜ் குலத்தவர்களே இந்த மனிதருடன் (முஹம்மத்) நீங்கள் செய்ய இருக்கும் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அறிவீர்களா? எல்லாவகைத் தாக்குதல்களையும் எதிர்ப்பதற்கு நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் எங்களிடையே அவர் பெற்றிருக்கும் கண்ணியம் உங்களுக்குத் தெரியும். இதுவரை நாங்கள் அவரை அவரது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துள்ளோம். இப்போது நீங்கள் உங்களுடன் உங்கள் நகரிற்கு அழைத்துச் செல்ல இருக்கின்றீர்கள். நீங்கள் அவரை அழைத்துச் செல்வதால் ஏற்படும் பெரும் பொறுப்புக்களையும் எதிர்ப்புக்களையும் உங்களால் சுமக்க முடியுமா? அப்படி நீங்கள் நம்பினால் அழைத்துச் செல்லுங்கள். அவ்வாறு அவருக்குப் பாதுகாப்பளிக்க முடியாதெனக் கருதினால் அவரை அழைத்துச் செல்வதைக் Gapø562f6(6)latíliessair. (Ibn Hisham in 1985 : 123)
அங்கிருந்த யத்ரிப் பிரதிநிதிகளிலொருவர் பின்வருமாறு கூறினார்.
அல்லாஹ்வின்தூதராக நாம்நபியை ஏற்றுக்கொண்டதன் மூலம் முழு அறேபியாவின் விரோ தத்திற்கும் அழைப்பு
158

விடுக்கின்றோம். நபிகள் யத்ரிபிற்கு வந்தால் நாம் தாக்கப்படுவோம்.
இத்தகைய கருத்து பேதங்கள் தோன்றிய போதும் எந்த நிபந்தனைகளுக்கும், எவ்வித இழப்பிற்கும் கஸ்ரஜ் குலம் தயார் என்பதை கஸ்ரஜ் குலப் பிரதிநிதிகள் அன்று தமது உறுதியான வாக்குறுதிகள் மூலம் வெளிப்படுத்தினர். மதினாவிற்கு நபிகள் இடம் பெயர்வது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
மதீனாவில் நபிகள்
மதீனாவிற்கு நபிகளின் வருகை இஸ்லாத்தைப் பொறுத்தவரையும், மதீனாவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்தது. யுத்தத்தினால் களைத்துப் போயிருந்த மதீனாவுக்கு அப்போது தேவையாக இருந்தது சமாதானத்திற்கான வழிமுறைகளாகும். இதனை நபிகள் நன்குணர்ந்திருந்தனர். கஸ்ரஜ், அவ்ஸ் குலங்களிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் முழு மதீனாவிலும் யுத்த பீதியை இல்லாதொழிப்பதற்கும் முக்கியமாக யூதர்களுக்கும் அறபு - முஸ்லிம்களுக்குமிடையிலான பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும் நபிகள் முயன்றனர். இதற்காக ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அதே வேளை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதும் நபிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
நபிகள் மதீனாவில் முதலில் உருவாக்கிய சமய சகோதரத்துவ முயற்சி மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிவரும் முஹாஜிரீன்களுக்கும் மதீன முஸ்லிம்களான அன்சாரீன்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தியமையாகும். மக்காவிலிருந்து அகதிகளாக வந்தவர்களின் நலன்களில் மதீனா முஸ்லிம்கள் பூரணமாகப் பங்கு கொள்வதையும் மக்கத்து அகதி முஸ்லிம்கள் மதீன முஸ்லிம்களோடு நட்புறவுடன் நடந்து கொள்வதையும் நபிகளின் முயற்சி உறுதிப்படுத்தியது. முஹாஜிரீன்கள் பல்வேறு பொருளாதார சமூக சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அவர்கள் தமது சொத்துக்களையும் குடும்பத்தையும் பிரிந்து வந்தவர்கள். அவர்கள் வர்த்தகத்தையே தொழிலாக அறிந்தவர்கள். மதீனாவின் விவசாயத் தொழில் அவர்கள் அறியாததாகும். வர்த்தகத்தை ஆரம்பிக்க அவர்களிடம் முதலும் இருக்கவில்லை.
159

Page 83
மதின ஒப்பந்தங்கள்
ஆவணம்
நபிகள் நாயகம் மதீனாவில் உருவாக்கிய ஒப்பந்தம், ஒப்பந்தம் என்பதற்கும் மேலானதாகும். மதீனாவின் பல்வேறு மக்கள் குழுவிரை நபிகள் இதன் மூலம் ஒன்றுபடுத்தினார்கள். இந்த ஒப்பந்தத்தின் பழைய மூலாதாரங்களின்படி இது 'அல்கிதாப்' (நூல்) என்றும் அல்சஹீஃபா’ (கடதாசித்தாள்) என்றும் கூறப்படுகிறது. நவீன ஆய்வுகள் அல் தஸ்தூர் (அரசியல் யாப்பு) அல்லது வத்தீக்கா’ (ஆவணம்) என்றும் கூறுகின்றன. (பார்க்க, Akram Diya al Umar, 1991:99).
சமயம், இனம், வர்க்கம், நிலையாக வாழ்வோர், அகதிகள் என்று பல அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் குழுவிரை இவ்வொப் பந்தத்தின் மூலம் நபிகள் ஒன்றுபடுத்தினர். எனினும் இவ்வொப்பந்தம் பற்றி முஸ்லிம் உலகிலோ மேற்கத்திய உலகிலோ போதிய அளவு கருத்துப்பரிமாறல்களோ ஆய்வுகளோ நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. மதீன ஒப்பந்தத்தின் வடிவத்தையும், கட்டமைப்பையும், சொற் பொருளியல் மரபுகளையும் விரிவாக ஆராய்ந்துள்ள ஆர்.பி. சார்ஜன்ட் (R. B. Serjeant) இது பற்றிய கருத்தை பின்வருமாறு கூறுகிறார்:
வரலாற்றாசிரியர்கள் அவர்கள் முஸ்லிம்களாயிருந்தாலும் மேற்கத்திய கீழைத்தேய வியலாளர்களாயிருந்தாலும் மதீன gyrefluusi uuITLÜLyLý Lushof) (Constitution of Madina) ufilases குறைந்த அளவு கவனமே செலுத்தியுள்ளனர். இது உண்மையிலேயே ஆச்சரியத்துக்குரியதாகும். இஸ்லாத்தின் ஆரம்பத் தோற்றத்தைப் பொறுத்தவரை, வரலாற்றுக் கண்ணோக்கில் இவ்வுடன்படிக்கை அதிக ஆவலைத் தரத்தக்கதும் முக்கியத்துவமிக்கதுமாகும். மேலும் ஐயத்திற். கிடமற்ற வகையில் உண்மையான யாப்புமாகும். (R. B. Serjeant, 1981: V2)
பொதுவாக இவ்வொப்பந்தத்தை ஒரு தனி ஆவணமாக வரலாற்றாசிரியர் பலர் காட்டியுள்ளனர். இப்ன் இஷ்ஷாக்கின் சீரா' வில் இது
160

ஒரு தனி ஆவணமாகவே காட்டப்பட்டுள்ளது. எனினும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களைக் கொண்டு உருவான ஆவணமாக ஆய்வாளர் கருதுகின்றனர். இவை ஒரு தனி ஆவணமாகக் காட்டப்பட்டிருந்தாலும் அவை வெவ்வேறு ஆவணங்கள் என்பது எனது கருத்தாகும் என ஆர். பி. சார்ஜன்ட் குறிப்பிடுகிறார். (1981: V4) இவ்வொப்பந்தத்தை விரிவாக நோக்கியுள்ள அக்றம்தியா அல் உமறி இவ்வொப்பந்த ஆவணத்தில் இரு பாகங்கள் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறார். பெரும்பாலும் மூலத்தில் இந்த ஆவணம் இருபாகங்களாகவே இருந்திருக்க வேண்டும். வரலாற்றாசிரியர் இதனை ஒன்றாக இணைத்துள்ளனர். அதில் ஒருபாகம் இறைதூதர் யூதர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அடுத்தது முஹாஜிரூன் (Muhajirum) அன்ஸார்களாகிய முஸ்லிம்களின் உரிமைகள் G5L6Dunass6O)6IT 66MTä55ủh umTsh. (Akram Diya Al Umary, 1991: 102, Vol.II) என்பது அல்உமயிறின் கருத்தாகும்.
இவை எழுதப்பட்ட காலம்பற்றி சிறுகருத்து வேறுபாடு காணப்படுகிறது. எனினும் இவற்றின் காலத்தை ஆய்வு செய்துள்ள அல்உமறி யூதர்களுடனான உடன்படிக்கை பெரும்பாலும் பத்ர் யுத்தத்திற்கு பின்னர் எழுதப்பட்டாகும். எனக் குறிப்பிடுகிறார் (1991; 102 Vol I).
உம்மா
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தாரையும் மற்றும் யூதப்பழங்குடிகளையும் முஹாஜிரின் அன்ஸார்கள் என்ற பல்வேறு தரப்பினரையும் இணைத்து நபிகள் ஒரு நேசக் கூட்டமைப்பினை (Confederation) உருவாக்கினர். நூற்றாண்டுகளாக சந்தேகத்தோடு வேறுபட்டு வாழ்ந்தவர்களையும் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டவர்களையும் சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய அகதிகளையும் இக்கூட்டமைப்பு, ஒன்றுபடுத்தியது. இதனால் நபிகள் ஐக்கியப்படுத்துபவர்' (Mujammi) ஆனார்கள். மூதாதையரான குஸை என்பவரும் சிதறிக்கிடந்த குறைஷிகளையும் இவ்வாறுதான் ஐக்கியப்படுத்தினார். (R.B.Serjent, 1981:Vi-4).
யத்ரிபில் (மதீனா) உருவான உடன்படிக்கை ஐக்கியப்படுத்தல், ஒன்றிணைத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உண்மையில் நபிகள் உருவாக்கிய புதிய நேசக் கூட்டமைப்பு 'உம்மா’ என்ற
சமுதாய வடிவத்தை உள்ளடக்கியிருந்தமை மற்றொரு முக்கிய அம்சமாகும்.
I é i

Page 84
அடிப்படையில் உம்மா அரசியல் நேசக்கூட்டமைப்பாகும். (1981:vi 4) இஸ்லாமிய சமுதாயத்தில் உம்மாவின் அல்லது இறையாட்சி நேசக்கூட்டமைப்பின் தொடக்கத்தை இது தெளிவாகப் பிரதிபலித்தது. உம்மா என்ற கருத்தைக் குறிப்பிடுகின்ற மதீன உடன்படிக்கையின் 'அ' பகுதி அல்-குர் ஆனால் பெரும்பாலும், சுட்டப்படுவதை 21:92 திருவசனத்திலிருந்து அடையாளப் படுத்தலாமென சார்ஜன்ட் கருதுகிறார். அது பின்வருமாறு:
(விசுவாசிகளே) நீங்கள் யாவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய) ஒரே (உம்மத்- சகோதரத்துவ) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தாம். (இதில் எத்தகைய வேற்றுமையும் கிடையாது) உங்கள் யாவருக்கும் இறைவன் நான் ஒருவனே’ (அத் 21:92)
இது ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவின்யிள் மொழிபெயர்ப்பாகும். இதே திருவசனத்தை தமக்கிடையில் உள்ள வேறுபாடுகளை அகற்றி ஒரு சமுதாயமாக என அபுல் அஃலா மெளதுாதியும் சகோதரத்து வத்தையுடையர்களாக என அல்லாமா யூசும் அலியும் 'உம்மா, வென ஆர்.பி.சார்ஜன்ட்டும் பெயர்த்துள்ளனர். ஒரு இறைவனின் கீழ் ஒன்றுபடும் சகோதரத்துவக் கூட்டமைப்பே உம்மா என அமைதி காணலாம்.
அடிப்படையில் சமயரீதியற்ற நடைமுறைக்குரிய உடன்பாட்டின் மூலமே நபிகள் இவ்வும்மாவினை உருவாக்கினார்கள் என்ற கருத்து சார்ஜன்ட்டினால் அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஒரு இறையாட்சியாகவும் கொள்ளலாம் என்பதை அவர் நிராகரிக்க வில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது இறைத்தூதர் முஹம்மதுவுமே மத்தியஸ்தத்தின் மூலாதாரம் என்று உடன்படிக்கையில் ஏற்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிடத்தவறவில்லை.
உடன்படிக்கையின் பிரதான தொனிப்பொருள் மூமினுான் முஸ்லிமூன் மற்றும் யத்திரிப்வாசிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு சமுதாயத்தை அல்லது உம்மாவை உருவாக்குவது பற்றிய சிந்தனையாகும்.
உம்மா என்ற சொல் அல்லது எண்ணக்கரு புதியதல்ல (சார்ஜன்ட்). ‘தென் அறேபியாவில் இப்போதும் வழங்கும் லும்மியா (Lummiyah) என்ற சொல் பழங்குடியின் நேசக்கூட்டுறவைக் (Tribal Confederation) குறிக்கிறது. சொற்பொருள்ரீதியில் இச்சொல் 'உம்மா’ (Ummah) என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். (1981:11,48) மேலும் தொன்மை அறேபிய சமுதாய மரபில்
162

உம்மா (சமுதாயம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டதையும் சார்ஜன்ட் உதாரணமாகத் தருகிறார். ஏற்கனவே நபிகளின் உம்மாவுக்கு முன்னர் நபிமார்கள் தோன்றிய பல உம்மாக்கள் இருந்தன என்று குர்ஆனும் (27:85) கூறுகிறது. சில வேறுபாடுகளைக் காட்ட முடிந்தாலும் தீன், சமய விதிகள் என்ற நிலையிலும், சமயத்தை மையக்கருவாகக் கொண்ட நேசக் கூட்டுறவு என்ற கருத்திலும் நோக்குவதாயின் உம்மா என்ற வடிவம் நபிகளுக்கு முன்னரே நடைமுறையிலிருந்ததாகும். (பார்க்க. 1981: 111.49)
இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்களில் இருந்த மற்றொரு முக்கிய அம்சம் ஒரு ஹறத்தையும் (புனிதத் தலம்) அது பிரகடப்படுத்தியமையாகும். யத்திரிபின் மத்திய பாகம் (அல்லது ஜவ்ஃப்) இவ்வுடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புனிதத்தல (ஹறம்) மாகும்’ என்பதை உடன்படிக்கை வெளியிட்டதோடு மதீனாவில் ஹறத்துக்குரிய எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டன (1981:11.50). உடன்படிக்கையின் பங்குதாரர்களுக் கிடையில் ஏதேனும் பிணக்குகள் ஏற்பட்டால் அவர்கள் அல்லாஹ்விடமும் அவனின் தூதர் முஹம்மதிடமுமே முறையிட வேண்டும் என்ற ஷரத்து உடன்படிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இவ்வொப்பந்தத்தின் ஊடாக நபிகள் நாயகம் யூதர்கள் பால் தமது சமாதான அபிலாஷைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்வைத்தனர். சக்திமிக்க இஸ்லாமிய சமூக அமைப்பு மதீனாவில் வளர்வதைத் தம்மால் நன்கு உணரக் கூடியதாக இருந்தபோதும் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளில் நபிகள் மிகுந்த தாராளத்தன்மையுடன் நடந்து கொண்டார்கள். யூதர்கள் தமது சமயத்தைக் கடைபிடித்தொழுகவும் சொத்துக்களைப் பெற்றிருக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதற்கும் மேலாக யூதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது முஸ்லிகளின் கடமை என்பதையும் ஒப்பந்தம் வலியுறுத்தியது.
நபிகள் உருவாக்கிய புகழ்பெற்ற ஒப்பந்தத்திலிருந்து அல்லது ஆவணத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில பகுதிகள் வருமாறு:
1. எல்லா மக்களும் ஒரே சமூகத்தவராவர் (உம்மா). 2. நம்பிக்கையற்றோருக்காக வேண்டி ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரைக் கொலை செய்யக் கூடாது. ஒரு
163

Page 85
10.
1.
12.
13.
14.
நம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு நம்பிக்கையற்றவருக்கு உதவுவது
கூடாது. எம்மைச்சார்ந்துள்ள யூதர்கள் உதவிக்கும் சமத்துவத்துக்குமுரியவர்கள். அவர்களுக்கு அநீதியிழைக்கக்கூடாது. அவர்களின் எதிரிகளுக்கு உதவி செய்வது கூடாது. நம்பிக்கை கொண்டோரின் சமாதானம் பிரிக்க முடியாத சமாதானமாகும். நிபந்தனைகள் நீதியானதாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருக்கவேண்டும். யூதருக்கு அநீதியிழைக்கக்கூடாது. அவ்வாறு இழைக்கப்பட்டால் அதைத் தடுக்க முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டால் நீதி பெற்றுத்தர யூதர்களும் முன்வர வேண்டும். இவ்வொப்பந்தத்திற்குட்பட்ட மக்களுக்கு யத்ரிப் ஒரு புனிதத் தலமாகும். (ஹறம்) யத்ரிபை எதிரிகள் தாக்கினால் ஒப்பந்தக்காரர்கள் யாவரும் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க உதவுவது கடமையாகும். பனூ அல்நஜஜார், பனூ அல்ஹாரித், பனூ அல்ஸாயிதா, பனூ ஜஸ்ஹாம், பனு அவ்ஸ் போன்ற எந்தக்குலத்தைச் சேர்ந்த யூதராயினும் அவர்கள் நம்பிக்கையாளருடனான ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராவர். (யூதர்ருக்கு யூத சமயம் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் சமயம்) பலதெய்வவாதிகளோடு யுத்தமேற்பட்டால் அனைவரும் சேர்ந்து போரிடவேண்டும். குறைஷியருக்கும் அவர்களின் உதவியாளருக்கும் பாதுகாப்பளிக்க
கூடாது. நேர்மை ஒன்றே பாவத்திற்கு எதிரான பாதுகாப்பாகும். ஒவ்வொரு தனிநபரும் அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். அநீதி செய்வோரையும் பாவம் புரிவோரையும் இவ்வொப்பந்தம் பாதுகாக்காது. நேர்மையின் பாதுகாவலன் இறைவனாகும். முஹம்மது அவனது திருத்தூதராகும். அபிப்பிராய பேதங்கள், முரண்பாடுகள், கருத்து பேதங்கள் எழுமாயின் அப்பிரச்சினைகள் இறைவனின் திருத்தூதர் முஹம்மதிடமும் ைெறவனிடமும் தொடர்புபடுத்தப்படவேண்டும்.
164

ஒப்பந்தத்தின் செயற்பாடுகள்
குலங்களுக்கிடையிலும் சமயப்பிரிவுகளுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் மிக உயர்ந்த நிலையில் இவ்வொப்பந்தத்தில் பேணப்பட்டிருந்தது. அதிகாரத்தை வென்றெடுக்கும் தகுதியிலிருந்த நபிகள் ஒப்பந்தப் பங்காளியான யூதரையும் ஏனைய யத்ரிப் குழுவினரையும் கெளரவமாக மதித்தனர்.
இஸ்லாமியச் சட்டங்களை யூதர்கள் ஏற்கவேண்டும் என்று ஒப்பந்தம் அவர்கள் மீது எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஒப்பந்தப் பத்திரத்தில் நபிகளை இறைவனின் திருத்தூதர் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதும் யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை.
ஒப்பந்தம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒரே சமமாகக் கருதியது. யூதர்களுக்கும் ஏனைய U6) தெய்வவழிபாட்டாளர்களுக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் விடயங்களில் பழங்குடிகளின் பழைய மரபுகளுக்கும் இடமளிக்கப்பட்டது. உண்மையில் மதீனாவில் வாழ்ந்த பழங்குடிகளையும் பழங்குடி அல்லாத எல்லா சமூக அலகுகளையும் ஒன்றுபடுத்தும் ஒரு நேசக் கூட்டமைப்பினை (Confederation) இதன் மூலம் நபிகள் உருவாக்கினர் (1980:27). முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்குமிடையில் நடைபெற்ற இம் முதல் உடன்படிக்கையினை இஸ்லாமிய அரசில் முஸ்லிம் அல்லாதவரின் உரிமைகளைப்பற்றிய கருத்துக்களைத் தெளிவாகக் கூறும் ஆவணமாகக் கொள்ள வேண்டுமெனப் பேராசிரியர் அப்துல் ஹமீது சித்தீக்கி எழுதுகிறார்கள் (1985; 147)
மதீன சமூகத்தின் ஐக்கியமே இவ்வொப்பந்தங்களின் பிரதான குறிக்கோளாகும். சமாதானம் இவ்வொப்பந்தங்களின் மையக்கருவாக இருந்ததென்பது ஐயத்திற்கிடமற்றது. ஆயினும் இவ்வொப்பந்தத்தின் எல்லைகள் சமாதான இலக்குகளையும் கடந்து நின்றன. ஏனெனில் நபிகளின் தூதுத்துவத்தின் இலட்சியங்களை இவ்வொப்பந்தங்கள் பிரதிபலித்தன. இதற்கும் மேலாக ஒரு அரசின் தோற்றத்தை இவ்வாவணம் பிரதிபலித்தது. பேராசிரியர் நிக்கல்சன் இது அரசியல் மேதைமையோடு எழுதப்பட்ட ஒப்பந்தம் என்றும் ஒரு புரட்சி என்றும் வர்ணித்துள்ளார்:
165

Page 86
இந்த உடன்படிக்கையை நோக்குவோர் இதை எழுதியவரின் அரசியல் மேதைத் தன்மையை அவதானத்திற் கொள்ளாதிருக்க முடியாது. அது மிக்க எச்சரிக்கையும் செயல் நுணுக்கமும் கொண்ட சீர்திருத்தம் என்பது வெளிப்படை (1969 173)
பழங்குடிகளின் அமைப்பிலும் அவற்றின் சுதந்திரத்திலும் ஒப்பந்தம் தலையீடு செய்யவில்லை. ஒப்பந்தம் பழங்குடியினரின் பழைய மரபுகளை அங்கீகரித்ததென்பது உண்மையே. ஆயினும் யதார்த்தத்தில் அது பழங்குடி அமைப்பைத் தகர்த்துவிட்டது. பழங்குடியின் அதிகாரத்தை புதிய சமூக அமைப்பிற்கு (உம்மாவிற்கு) மாற்றும் செயல் முறையை இவ்வொப்பந்தம் மிகநுணுக்கமாக நிறைவேற்றியது. இவ்வுடன்படிக்கை பல்வேறு பகுதியாரை ஐக்கியப்படுத்திய அதேவேளை ஒரு மத்திய அமைப்பிற்கு கட்டுப்படவேண்டிய தேவையை மறைமுகமாகவோ நேராகவோ உருவாக்கியிருந்தது.
பழங்குடி அமைப்பை முஹம்மது நபிகள் வெளிப்படையாகத் தாக்கவில்லை. ஆனால் அதனைத் தகர்த்தார். மத்திய அதிகாரத்தை அவர் பழங்குடியிலிருந்த சமூகத்திற்குமாற்றினார் (1969:173).
பண்டையப் பழங்குடிக்குள்ளிருந்து ஒருபுதிய (அரசியல்) சமூகம் வெளிப்பட்டதை ஒப்பந்த நிபந்தனைகள் மறைமுகமாக உணர்த்தின என்பதே இக்கருத்துக்களின் மொத்தப் பொருளாகும்.
யத்ரிப் நகரை மையமாகக் கொண்ட ஒரே சமூகத்தவர் என்ற உணர்வை இவ்வொப்பந்தமே உருவாக்கியது. ஒவ்வொரு பிரிவினரினதும் முரண்பாட்டுக்கான பிரச்சினைகளை நுணுக்கமாகவும் சமாதான நாட்டத்துடனும் இவ்வொப்பந்தம் அணுகியதால் ஒப்பந்தத்தில் பங்கு கொண்ட ஒவ்வொரு தரப்பினரும் தமக்கு இதில் பயன் இருப்பதாக உணர்ந்தனர்.
யூதர்கள் இவ்வொப்பந்தத்தை அரசியல் காரணத்திற்காக ஏற்றனர். மேலும் உள்நாட்டு யுத்தத்திற்கு இது ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் நம்பினர். அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு போரிடும் அறபுக் குலங்களும் பிணக்குகளை மறந்து ஒன்றிணைய உடன்படிக்கை ஒரு பாலமாகியது. அடிப்படையில் அறபு மக்களுக்குத் தனித்தியங்கும் தகுதியையும் சுய நம்பிக்கையையும் ஒற்றுமை
166

உணர்வையும் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. யூதரோடு கூட்டுச் சேர்ந்து தமது சகோதர அறபுக்குலத்தை யுத்தத்தில் சந்திக்கும் தேவையை ஒப்பந்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்ததையிட்டு அறபுக்குலங்கள் திருப்தியடைந்தன.
ஒப்பந்தமும் அரசும்
மதீன மக்களிடையே தாம் ஒரு நாட்டினம் (Nation) என்ற உணர்வை ஏற்படுத்த ஒப்பந்தம் முக்கிய பங்கை வகித்தது. அதேவேளை நபிகளின் எதிர்கால சமூக அரசியல் திட்டங்களுக்கும் அது ஒரு அடிப்படையாக அமைந்தது.
நபிகளின் அதிகாரம் வளர்ந்து செல்வதற்குரிய அத்தனை
அறிகுறிகளும் உடன்படிக்கையிலிருந்தன என்பது கருத்தில் கொள்ளக் கூடியதாகும். சமூக, சமய, அரசியல் அடிப்படையிலான தகுதியை இவ்வுடன்படிக்கை நபிகளுக்கு வழங்கியது என்பது பேராசிரியர் வொட் அவர்களின் அவதானிப்பாகும். கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது நபிகளின் தீர்மானமே இறுதியானது என்று உடன்படிக்கையிலிருந்த நிபந்தனை கேள்விக்கிடமற்ற முறையில் நபிகளின் அந்தஸ்தினை உயர்த்தியிருந்ததாகக் கருத முடியும்.
மேலும் இவ்வுடன்படிக்கை அரசின் தோற்றத்தைக் குறிப்பதாகவும் அமைந்தது. எனினும் மதீனாவில் வேரூன்றியிருந்த பழங்குடி அமைப்பின் ஆதிக்கம் முற்றாக அதன் செயல்பாட்டினை இழந்துவிடவில்லை. அவற்றின் சுதந்திர இயக்கத்திற்கு உடன்படிக்கையில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் அரசின் தோற்றத்துக்குத் தேவையான முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் ஒப்பந்தம் நுட்பமான செயற்பாட்டைக் கொண்டிருந்தது.
மக்காவின் பொருளாதாரமும் மதீனாவின் பொருளாதாரமும் வேறுபட்டதாகும். மக்கா வர்த்தகத்தையும் வர்த்தக மேலாண்மைத்துவ சமூக அமைப்பையும் கொண்டதாகும். அங்கு தனி உடைமை வளர்ச்சி பெற்றிருந்தது. மதீனா இன்னும் பழங்குடிப் பொருளாதார உற்பத்தியிலேயே தங்கியிருந்தது. பேரீச்சை இங்கு காணப்பட்ட பிரதான விவசாய உற்பத்தியாகும். நிலம் கூட்டு முறையில் பழங்குடிக்கே சொந்தமானதாக இருந்தது. மக்காவிற்போல மதீனாவில் செல்வந்த வணிக வகுப்போ செல்வந்த வகுப்போ இன்னும்
167

Page 87
வளர்ச்சியடைந்திருக்கவில்லை. தனிஉடைமை அமைப்பினை இன்னும் பெறாத நிலையிலேயே மதீன சமூகம் இருந்தது. எனவே சொத்துடைமையாளர் என்ற கேள்வி இன்னும் அங்கு எழாத ஒன்றாகும்.” (1980:26)
மதீனாவிற் காணப்பட்ட இச் சமூக அமைப்பு அரசு தோன்றுவதற்குச் சாதகமான சூழ்நிலை அல்லவாயினும் தொடர்ச்சியாய் நடைபெற்றுவந்த யுத்தமும் யுத்தத்தினை தூண்டிய நிலப்பயன்பாடு முதலிய காரணிகளும் நபிகளின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னர் இருந்திராத ஒரு அமைப்பிற்கு மதீனாவை இட்டுச் சென்றிருந்தது. இதனாலேயே சமாதானத்துக்கான உடன்படிக்கையை அரசின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட உடன்படிக்கை என வர்ணிக்க நேர்கிறது. அதாவது சமாதானத்தைப் பலவந்தமாகவேனும் சுமத்தும் ஒரு அதிஉயர் அதிகாரத்தையோ அல்லது அரசையோ உருவாக்காதவரை இச்சமூகத்திற்கு வேறு பொருத்தமான தீர்வில்லை என்ற கருத்து யதார்த்தமாகி வந்ததையே ஒப்பந்தங்களும் உணர்த்துகின்றன.
மதீன உடன்படிக்கை அரசு என்ற பொருளில் நோக்கக் கூடிய ஆவணமும் செயற் திட்டமுமாகும். ஒரே சமூகத்தவர் (உம்மா) என்ற கட்டுக்கோப்பை உருவாக்கியதில் மதீன ஒப்பந்தத்தின் பங்கு முக்கியமானதாகும். அரசின் தலைவர் நபிகளே என்பதை உடன்படிக்கை உடனடியாகக் கோரவில்லையாயினும் மதீன மக்கள் தமது சமாதான நடுவராக நபிகளை ஏற்றுக்கொள்ள ஒப்பந்தம் வழி செய்தது. மேலும் உடன்படிக்கை இஸ்லாத்தையும் அங்கீகரித்தது.
கருத்தியலும் அரசியலும்
சமூக ஒப்பந்தம்
நபிகளுக்கு முந்திய அறேபிய சமூக அமைப்பிலிருந்து மதீன ஒப்பந்தங்கள் வரையிலான வரலாறு தோமஸ் ஹொப்ஸின் (Thomas Hobbes) சமூக ஒப்பந்தக்கோட்பாட்டை பெருமளவில் நினைவுபடுத்துவன. ஹொப்ஸ் குறிப்பிடும் இயற்கை நிலைக்குச் சமமான நிகழ்வுகள் பலவற்றை அறேபிய வரலாற்றுப்பதிவுகள் கொண்டுள்ளன.
168

மனிதன் ஒருகாலத்தில் சமூகம் அல்லது அரசாங்கம் இல்லாது இயற்கை நிலையில் வாழ்ந்தான் (Natural State) . இந்த இயற்கை நிலையைத் தொடரமுடியாது என்று அவன் கருதியபோது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமூக அரசியல் நிறுவனங்களைக் கட்டி எழுப்ப முன்வந்தனர். இது சமூக ஒப்பந்தக் கோட்பாடு (Social Contract or Social Covenent) 6T60T5 in DuGapg). Losofggjé, (5 அரசு ஏன் தேவையாக இருந்தது என்ற கேள்விக்கு இதன் மூலம் ஹொப்ஸ்விடை காணமுற்பட்டார். குடும்ப உறவிலிருந்து படிமுறையாக அரசு தோன்றி வளர்ந்தது என்ற கருத்திலிருந்து ஹொப்ஸின் சிந்தனை மாறுபட்டதாகும்.
வரலாற்றில் ஏதாவதொரு காலப்பகுதியில் ஹொப்ஸ் சித்திரிப்பது போன்ற இயற்கை நிலையில் மனிதர் வாழ்ந்தனரா என்பது கேள்விக்குறியாகக் கொள்ளப்படலாம். ஏன் மனித சுபாவம் பற்றிய தத்துவார்த்தமான ஒரு எடுகோளாகவும் அது இருக்கலாம். வில்லியம் எபன்ஸ்டைன் (William Ebenstein) இவ்வாறுதான் இதனைக் கூறுகிறார்: "ஹொப்ஸின் இயற்கை நிலை பற்றிய வாதமென்னவெனில் அது தத்துவார்த்தமானது வரலாற்றுரீதியானதன்று. (W.Ebenstein, 196l:337).
ஹொப்ஸின் இயற்கைநிலைக் கோட்பாட்டுடன் பொருந்தக் கூடிய வரலாற்று நிகழ்வை தொன்மை அறேபிய சமூகத்தில் இனங்காண்பது இலகுவாகும். ஹொப்ஸ் இயற்கை நிலை என்று குறிப்பிட்டதையே ஜாஹிலியாயுகம் (அறியாமைக்காலம்) என அறபு வரலாற்றாசிரியர் அழைத்தனர் (Ilyas Ahmad, 1981:21) எனக் கருதலாம். ஜாஹிலியா சமூகம் சிவில் சமூக அமைப்பிற்கு முந்திய சமூகமாகும். தொன்மை அறேபியாவில் சமூக ஒழுங்கமைப்பிற்குரிய சில நிறுவனங்களிருந்த போதும் அவை சிவில் நிறுவனங்களுக்குச் சமமானவை அல்ல. அங்கு தலைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களிடம் மீயுயர் அதிகாரம் (Supreme Power) இருக்கவில்லை. வன்முறை, கொலை, கொள்ளை, வழிப்பறி என்பனவற்றுடன் நிரந்தரப் போர்ச் சூழலில் அச்சமூகம் இருந்தது.
மனிதன் சமூகம் என்ற வடிவத்தினுள் பிரவேசிக்குமுன்னர் அவன் வாழ்ந்த இயற்கை நிலையை ஹொப்ஸ் இவ்வாறுதான் வர்ணிக்கிறார். சுயநலவேட்கையும், போட்டியும் பெறாமையும் போர்ச்சூழலும் என்று அவரது வர்ணனை விரிந்து செல்கிறது. இயற்கை நிலையில் வெறும் யுத்தந்தான்
169

Page 88
இருந்தது. ஒவ்வொருமனிதனும் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரான யுத்தத்தில் இருந்தான்’ என்று அவர் குறிப்பிட்டார். மனித சுபாவம் பற்றிய அல்லது வரலாற்று நிகழ்வுபற்றிய மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாக இது இருக்கலாம். ஆனால் அது மனித சுபாவத்தின் முக்கியபண்புகளை விவரிக்கிறது.
மனிதனின் சுயநல வேட்கையே போருக்குக் காரணம் எனக்கூறும் ஹொப்ஸ் போரை மனித சமூகத்தின் சாபக்கேடு என்றும் வெறுத்தொதுக்க வேண்டிய தீமை என்றும் கூறுகிறார்.
தொடர்ச்சியான பீதியையும் வன்முறைச் சாவின் அபாயத்தையும் போர் கொண்டு வருகிறது. மனித வாழ்க்கையை இருண்டதாக, தரித்திரமுடையதாக, அருவருப்பானதாகக் காட்டுமிராண்டித்தனமானதாகப் போர் மாற்றுகிறது. (1961:337) என்பது போர்பற்றிய அவரது கருத்துக்களாகும்
தொன்மை அறபு சமூகத்தில் யுத்த சூழல் தேசிய ஐக்கியத்தைக் குலைத்தது. நிவாரணமளிக்க முடியாத தன்னல வேட்கையை இந்த யுத்தங்கள் வளர்த்தன. ஒவ்வொரு குடும்பமும் தனது தன்னலத்தையே பாதுகாத்ததுடன் கொலைக்கும் கொள்ளைக்கும் வழிப்பறிக்கும் மற்றக் குடும்பங்களைப் பலியாக்குவது தமது உரிமை என்றும் அறேபியர் கருதினர். (1981:21) அரசியலுக்கு piglu (Pre-Politics), fiss6i felp 55g)5(5 (Upfigu (Pre-Civil Society), அராஜக நிலையை நபிகளுக்கு முந்திய ஜாஹிலிய சமூகம் சித்திரிப்பதாகக் கொள்ளலாம். அரசியல் தலைமைத்துவத்துக்கு முற்பட்ட சமூக அமைப்பு இதுவாகும்.
அறேபியாவில் அரசியல் தலைமைத்துவ வெறுமை பற்றி வெல் ஹெவ்ஸன் (Welhausen) பின்வருமாறு கூறுகிறார். 'மீயுயர் அதிகாரமும் (Supreme Power) நிறைவேற்று அதிகாரமும் தொன்மை அறபு சமூகத்தில் சூன்ய நிலையிலிருந்து' (1981:24). அற்ப காரணங்களுக்காக அவர்கள் போர்களில் ஈடுபட்டனர் இவை பெரும்பாலும் முடிவில்லாது நீடித்த போர்கள். படுகொலையும், சூறையாடுதலும், படுநாசத்தை ஏற்படுத்துவதும் அவர்களின் வாழ்வில் சாதாரண விடயங்கள். அறேபியர் ஆதிக்கமுள்ள அதிகாரத்தைப் பெறாதிருந்ததே இதற்குக்காரணம் என்பது இப்னு கல்தூனின் கருத்து (1981:24).
ஹொப்ஸ் இத்தகைய சூழல் பற்றியே தனது இயற்கை நிலைக் கோட்பாட்டில் விவரித்தார். மனிதரைக்கட்டுப்படுத்தும் அல்லது ஒரு சீரான அமைப்பிற்கு நிர்ப்பந்திக்கும் பொது அதிகாரம் (Common Power) இருக்க
170

வில்லை என்றும் போர்க் குணம் கொண்ட மனித இயல்பை கட்டுப்படுத்தும் மேலாண்மை மிக்க அதிகாரம் அவசியம் என்றும் ஹொப்ஸ் கூறுகிறார். அதாவது மனிதர் உருவாக்கிக் கொண்டுள்ள சமூக ஒப்பந்தம் வெற்றியளிக்க வேண்டுமாயின் மேலாதிக்கமோ, அரசோ தேவை என்பது அவர் வாதம்.
தனிநபர்களுக்கிடையிலான ஒப்பந்த உணர்வு பற்றியே ஹொப்ஸ் பேசினாலும் போர் அற்ற சமாதான சூழலை உருவாக்கவென எண்ணற்ற ஒப்பந்தங்களில் தனி நபர்களும் குழுக்களும் இடையறாது பங்குகொண்டதை அறேபிய வரலாறு காட்டுகிறது. ஹில்ப் அல்-புதூல் உடன்படிக்கையிலிருந்து மதீன ஒப்பந்தங்கள் வரையும் அதற்குப் பிந்திய ஒப்பந்தங்கள் வரையும் இதனை அணுகலாம். நபிகளின் தூதுத்துவத்திற்கு முன்னரே இவ்வொப்பந்தச் செயற்பாடு இடம் பெறத் தொடங்கிவிட்டது. அரச மேலாண்மை போன்ற அதிகார நிறுவனங்கள் தோன்றியிராத நிலையில் அநீதியான சூழலுக்கு எதிராக ஒன்றுபடுவதாக ஒவ்வொருவரும் தமக்குள் வாக்குறுதியளித்தனர்.
நபிகளின் தூதுவத்திற்குப் பின்னர் நடைபெற்ற அக்கபா உடன்படிக்கையின்போது சூறையாடுதல், விபச்சாரம், குழந்தைக் கொலை போன்ற சமூகத் தீமைகளிலிருந்து மீள்வதற்காக மக்கள் உறுதி எடுத்தனர். போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், பொதுநன்மைக்கு மதிப்பளிப்பதும் சமாதான சூழலை ஏற்படுத்துவதும் தீமைகளை நிராகரிப்பதும் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தினதும் பொதுவான நோக்கங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மதீன நகர- அரசின் தோற்றம் அறேபியா இயற்கை நிலையிலிருந்து சமூக ஒப்பந்தத்திற்கு மாறிச் சென்ற படிமுறையை விளக்குவதாகக் கருதலாம். ‘சமாதானம்' 'ஒழுங்கு ‘பொதுநன்மை' போன்ற பதங்கள் முன்னெப்போதையும் விட வலிமை மிக்க பதங்களாயின. மதீனா, நாகரிக மேம்பாட்டிற்குரிய அரசமைப்பை அல்லது சிவில் சமூக வடிவத்தைப் பெற்றுவிட்டபோதும் மதீனாவைச்சூழவும் அதற்கு அப்பாலுமிருந்த அறேபியாவின் அனேக பிரதேசங்கள் ஹொப்ஸ் விவரித்த இயற்கை நிலையிலேயே இன்னுமிருந்தன.
இறையரசு
நபிகளின் மதீன அரசு பொதுவாக இறையரசு (Theocratic State) என்றே இனங்காணப்படுகிறது. எனினும் நபிகள் மதீனாவில் அரசை நிறுவியபோது
71

Page 89
அல்லது புதிய உம்மாவை உருவாக்கிய போது குர்ஆன் முழுமையாக இறங்கியிருக்கவில்லை. ஆரம்பகால இஸ்லாமிய அரச நிர்மாணப் பணிகளில் நபிகள் தமது சொந்தத் தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் ஆரம்ப கால மதீன அரசை இறையாட்சியாகக் கொள்ள முடியாதென்பது சிலரது வாதம். அஸ்கர் அலி இன்ஜினியரின் The Islamic State நூல் இதனை விரிவாக விவாதித்துள்ளது.
மதீன அரசு இறையரசு அல்ல என்பதற்கு அஸ்கர் அலி, இரு நியாயங்களை முன்வைக்கின்றார். அப்போது குர்ஆன் முழுமை பெற்றிருக்கவில்லை. அதாவது முன்னரே வரையறுக்கப்பட்ட முழுமையான இறையாட்சிக் கோட்பாடு வஹி வடிவில் - இறைவாக்காக- நபிகள் வசம் இருக்கவில்லை. இரண்டாவதாக நபிகள் தமது மதீன நீதித்தீர்ப்புக்களிலும் ராஜ்ய பரிபாலனத்திலும் தமது சொந்த மதிநுட்பத்தையும், தீர்மானங்களையும் தொன்மை அறேபிய வழக்காறுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதே நோக்கில், சார்ஜன்ட்டும் நபிகள் உருவாக்கிய ஆரம்ப உம்மா சமயத்தன்மையற்ற உலகியல் ரீதியான நடைமுறைகள் கொண்டதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். (பார்க்க, குறிப்பு : 1)
எனினும் இறையாட்சிக்குரிய அடித்தளங்கள் நபிகளின் உம்மாவில் இருந்ததென்பதை சார்ஜன்ட் மறுக்கவில்லை. இப்பிரச்சினையின் மையப்பொருள் இதுவேயாகும். எல்லாவிதமான கருத்துபேதங்களுக்கும் நபிகளையும், அல்லாஹ்வையுமே நாடவேண்டும் என்ற உடன்படிக்கையின் நிபந்தனை மதீன அரசை இறையரசாக்கி விட்டது. இப்போது மதீனா ஒரு அரசாகும். அது ஒரு இறையரசு ஏனெனில் உச்ச அதிகாரம் அல்லாஹ்வின் தீர்ப்புக்களைச் சார்ந்ததாயிருக்கும் என்ற மெக்சின் றொடின்சனின் (1971:220) கருத்தையும் நாம் கவனத்திற்கொள்ளலாம்.
முரண்பட்ட அபிலாஷைகளையுடைய மக்கள் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியில் மதீனாவில் நபிகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றனர். ஒப்பந்தங்களில் வரையறுக்கப்பட்ட சமாதானம்' என்ற இலட்சியத்தை, நிலைநாட்ட நபிகள் பெரிதும் பாடுபட்டனர். இஸ்லாத்தை ஏற்காத யூதர்களுக்கும் ஏனைய பழங்குடியினருக்கும் உம்மா அமைப்பினுள் இடமளிக்கப்பட்டது. இஸ்லாமியச் சட்டங்கள் இஸ்லாத்தை ஏற்காதவர் மீது திணிக்கப்பட வில்லை. யூதர்கள் அவர்களுக்குரிய வேதகட்டளைகளின்படி வாழவும் ஏனைய பழங்குடிகள் அவர்களது பழங்குடி மரபுகளைப் பின்பற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
172

ஹிஜ்ரத் நடைபெற்று சிலவருடங்களுக்குள் பாரம்பரிய அறேபியப் பழங்குடி அமைப்புக்களிலிருந்து வேறுபட்ட உம்மாவை உருவாக்குவதில் நபிகள் வெற்றிபெற்றனர். இச்சமூக அமைப்பின் சமயத்தலைவராகவும் தலைவராகவும் நபிகள் விளங்கினர். மதீனாவில் நபிகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்ற வகையில் வளர்ந்திருந்தது. இதனால் யூதர்களைப் போல ஏனைய நாடோடிப் பதவிகளும் புதிய சமூக அமைப்பில் ஒன்றிணைந்து கொள்ள முன்வந்தனர்.
மதீனாவாசிகள் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கியமையும், அவர்களின் படைபல அதிகரிப்பும் மக்காவின் குறைஷியரை கலக்கத்தில் ஆழ்த்தியது. கி.பி.630ல் 10,000 பேர் கொண்ட நபிகளின் படைபலத்தின் முன் மக்கா குறைஷியர் தோல்விகண்டனர். பல நாடோடிக் குலத்தவர்கள் மேலும் நபிகளின் இயக்கதில் இணைந்தனர். மதீனாவில் தோன்றிய நபிகளின் உம்மா இப்போது மக்கா வரையும் வியாபித்தது.
அறேபியாவில் அரசு
கி.பி. 622ம் ஆண்டு இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய ஆரம்பத்தைக் குறிக்கிறது. துன்பங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் முஸ்லிம்கள் விடுதலை கண்ட தினமாக அது கணிக்கப்படுகிறது. தம்மைவிடச் சக்திவாய்ந்த குறைஷியரின் எதிர்ப்பை எதிர்நோக்கியிருந்த மதீனா வாசிகள் தெளிவான முறையில் உயிர்பாதுகாப்புக்கும் முஸ்லிம்களின் சமூகவாழ்க்கைகும் கைமாறு கருதாது உத்தரவாதமளித்தனர். 2ம் அக்கபா சந்திப்பின்போது (கி.பி.620) நபிகளைப் பின்பற்றுவதாக மாத்திரமல்ல அவர்களுக்காகப் போரிடுவதற்கும் எல்லா எதிரிப்படைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் சத்தியம் செய்துதந்தனர் (Siddiqui, 1988:1).
மக்காவாசிகள் மீதான மதீனாவாசிகளின் சகோதரத்துவ உணர்வு இஸ்லாமிய உம்மாவின் தோற்றதையும் அதற்கான கருத்தியலையும் உம்மாவுக்குரிய தனித்துவமான அரசியல் மெய்யியலையும் வெளிப்படுத்தும் தகுதியைப்பெற்றிருந்தது. (1988: 4) இப்புதிய உம்மா அமைப்பின் தோற்றம் அறேபியத் தொன்மைச் சமூக அமைப்பின் அடித்தளத்தை உடைத்தெறிந்தது. இரத்த பந்தத்திற்கு அப்பால் சகோதரத்துவ இலட்சியத்திற்கு சமூக அரசியல் நோக்கில் அறேபியர் காலடி எடுத்துவைத்ததன் ஆரம்பமாக இது அமைந்தது. சொத்துரிமை உட்பட ஏனைய பல பழம் மரபுகள் இரத்த உறவுகளைக் கடந்து
173

Page 90
விரிவுபெற்றது. குடும்ப அமைப்பிலும் யுத்த நடைமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
மக்கள் பரிபாலனத்துக்கான பொது நிதியம் (பைத்துல்மால்) உருவாக்கப்பட்டமை சக்தியுள்ள ஒரு பொதுநிர்வாக அமைப்பின் தொடக்கத்தை உணர்த்தியது. நன்கொடைகளும் அறக்கொடைகளும் இந்நிதியத்தை வந்து சேர்ந்தன. ஸக்காத் கடமையாக்கப்பட்ட பின்னர் பணம் மட்டுமன்றி கால்நடைகளும் தானியங்களும் கனிவகைகளும் பைத்துல்மாலை வந்துசேர்ந்தன. வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உண்மையில் ஒரு திறைசேரிக்குரிய ஆரம்ப நடவடிக்கைகள் இதன் மூலம் பெரும்பாலும் முற்றுப்பெற்றிருந்தன. (பார்க்க, Hamidullah, 1979: 115)
* தபூக் யுத்தம் நடைபெறுவதற்கு முன்னதாகவே யுத்த ஆயத்தங்களுக்காக ஸக்காத் கோரப்பட்டது (1979:15). யுத்த நிலைமைகள் தீவிரமடைந்த காலப்பகுதிகளில் யுத்தம் கட்டாய சேவையாக்கப்பட்டது. எவ்வாறாயினும் நபிகள் காலத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துக்கான நிரந்தர இராணுவத்தை உருவாக்குவதற்கான விதைகள் தூவப்பட்டிருந்தன. (1979: 116)
இக்காலப்பகுதியில் நபிகளின் ஆட்சி சர்வாதிபத்திய பண்புகளை கொண்டிருந்தது. சுதந்திர இராணுவமும் திறைசேரியும் அதனிடமிருந்தது. (Maxime Rodinson, 1977: 215) Hoffgjå f6gstS) grunstff Pig வருடங்களுக்குள்ளாக பக்கத்து நாட்டவர்கள் மதிக்கக்கூடிய அல்லாஹ்வை உயர் ஆட்சியாளராகக் கொண்ட அரசாக அது வளர்ச்சியடைந்திருந்தது. (1971; 215)
சொத்துரிமையில் பெருமளவு இறுக்கமான விதிமுறைகள் புகுத்தப்பட்டன. 'மஹர்முறை அனுமதிக்கப்பட்டமை பெண்ணின் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பெண்களுக்கு சொத்துரிமைகளில் பங்குண்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதற்கான வழிமுறைகளும் அடிமைப்பெண்களுக்கான சட்டபூர்வமான திருமண அனுமதிகளும் நடைமுறைக்குவந்தன. பைத்துல் மாலும் ஸக்காத் விநியோகமும் வேறுவகை புதிய பொருளாதாரச் செயல்முறைகளும் அறபு சமூகத்திற் காணப்பட்ட சொத்துடைமையின் சமமற்ற தன்மையை மாற்றும் புதிய கருத்தியலை (Ideology) இஸ்லாம் அறிமுகப்படுத்தியது (1965; 115) என்பதை m உறுதி செய்தன.
174

நாடு என்பதற்கான பூரண பண்புகளைப் பெறாவிட்டாலும் எதிர்கால அரசாங்கம் பரிணமிப்பதற்கான கருத்தியல் (Ideology) உருவாகிவிட்டதை இவை உணர்த்தின. (1975:234) மற்றொரு புறம் தொன்மை அறேபியாவின் திருத்தமற்ற மனித நலவாதத்தை (Humanism) ஆன்மீக நெறிகளினூடாக செம்மையான மனித நலவாதமாக வழங்குவதில் நபிகள் நாயகம் வெற்றிகண்டனர் (1975:234).
இராணுவ பலம்
மக்கா வெற்றியும் ஹூனைன் வெற்றியும் நபிகளின் அரசியல் நிலையில் மேலும் ஸ்த்திரத்தன்மையை ஏற்படுத்தின (1961; 22). இதனால் முக்கியமான கோத்திரங்கள் நபிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றன. மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையில் வாழ்ந்து வந்த அனேகமாக எல்லாப்பழங்குடிகளும் தூதுக்குழுக்களை அனுப்பி ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முன்வந்ததை இக்காலத்தில் அவதானிக்கமுடிகிறது. ஆரம்பத்தில் இது நட்புரீதியான ஒப்பந்தங்களாக உருவாகினாலும் பின்னர் நபிகளின் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அத்தோடு வரிவசூலிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. வரிகளால் பெற்ற வருமானமும் யுத்தங்களில் கிடைத்தவைகளும் திறைசேரியின் செல்வத்தைபெருக்கின. யுத்தங்களின் வெற்றியும் திறை சேரியின் வளர்ச்சியும் புதிய சமயத்தின் அரசியற் பலத்தையும் செல்வபலத்தையும் வெளிப்படுத்தின.
கி.மு. 624ல் நடைபெற்ற பத்ர் யுத்தம் புதிய உம்மாவின் விஸ்தரிப்பில் நிகழ்ந்த முக்கிய செயற்பாடாகும். எதிரிகளைவிட மிகப் பலவீனமானதாக இருந்த முஸ்லிம் படைகள் பத்ர் யுத்தத்தில் பெற்ற தீர்க்கமான வெற்றி மக்காவையும் முழு அறேபிய நிலப்பரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறைஷியரின் படைபலம் அபகீர்த்திக்குள்ளாகிய முதற்சம்பவமாக இது அமைந்தது. மக்கா நகரின் கீர்த்தி மிக்க தலைமைத்துவமும் இதன் மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டது. மக்கா இராணுவத்தின் சரிவோடு பல்வேறு பழங்குடிகள் நபிகளின் புதிய இயக்கத்தோடு தொடர்பு கொள்ள முன்வந்தன. நபிகளின் செல்வாக்கு வேகமாகப் பரவிவருவதையும் மக்காவின் ஆட்சி நபிகளின் தலைமைத்துவத்தின் முன்னால் நிலை குலைந்து சென்று கொண்டிருப்பதையும் பழங்குடிகள் கண்டனர்.
தமது இறுதிக்காலத்துக்குள்ளாகவே முழு அறேபியாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபிகள் வெற்றி பெற்றார்கள் என்பது
5

Page 91
பொதுவாக இஸ்லாமிய மரபு வாதிகளின் கருத்து. இதனை பேராசிரியர் வொட் போன்ற சில மேற்கத்திய ஆய்வாளர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அறேபியா முழுவதையும் கவரக்கூடிய செல்வாக்குள்ள சிந்தனை மரபையும் கருத்தியலையும் படைபலத்தையும் நபிகள் உருவாக்கி முடித்திருந்தார்கள் என்பதை பேராசிரியர் வொட் ஏற்றுக்கொள்கிறார். “என்றுமில்லாத வகையில் தனது சமயம் மற்றும் அரசியல் சிந்தனைகள் மூலம் இனவியல் (Ethnology) ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முழு அறேபியாவையும் ஒரு அலகாக்குவதில் நபிகள் வெற்றிபெற்றிருந்தார்கள்.” (1961; 224).
கி.பி. 630ல் அறேபியா பெருமளவில் நபிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹானைன் வெற்றியும் மக்காவின் வீழ்ச்சியும் இஸ்லாமிய அரசின் வெற்றிக்கும் உறுதிப்பாட்டிற்கும் துணைநின்றன. கி.பி. 622குப் பிந்திய பல நிகழ்வுகள் சமயப்பண்புகளைப் பெற்றிருந்தாலும் குணாம்சத்தில் அவை அரசியலாகும். மார்கோலியத்தின் பின்வரும் வார்த்தைகளையும் இங்கு கருத்திற்கொள்வது பொருத்தமானது.
மக்கா வெற்றியின் பின்னர் யுத்த முனைக்குரிய நடவடிக்கைகளிலும் மற்றும் மக்களைச் சந்தித்தல், அண்டைப்பிரதேசங்களுக்குத் தூதுவர்களை அனுப்புதல், அரசியல் நிர்வாகத் திருமுகங்களுக்கு வாசகம் உரைத்தல், நீதிபரிபாலனத்தை நடத்துதல், சட்டங்களுக்கு வியாக்கியானம் வழங்குதல் போன்ற இத்தகைய அரசியல் பணிகளில் நபிகள் ஒய்வின்றி ஈடுபட்டுவந்தனர் (1905 448)
ஹுதைபா உடன்படிக்கையின் பின்னர் 17 சிறிய படையெடுப்புக்கள் நடைபெற்றன. இப்படையெடுப்புக்கள் இராணுவபலம் மதீன அரசுக்கே சாதகமாயிருந்ததை உணர்த்தின. பாதுகாப்பு, பொருளாதார நலன் என்று எந்த நோக்கில் பார்த்தாலும் நபிகளின் புதிய இயக்கத்தின் தொடர்பின்றி இருப்பதனால் பயனில்லை என்றோ அல்லது ஆபத்தானது என்றோ பழங்குடிகள் கருதத் தொடங்கினர். இதனால் பல பழங்குடிகள் நட்புரீதியிலோ வேறு வகையிலோ நபிகளுடன் தொடர்பு கொள்ளத் தூண்டப் பெற்றன. (1961; 264) இங்கு நடந்து கொண்டிருந்தவற்றை ஐரோப்பியப் பகுப்பாய்வுப் பதங்களினால் கூறுவதாயின் அது அரசியலே (1961:275).
176

கி.பி.630 அளவில் அனேகமாக எல்லாப் பழங்குடிகளும், குலங்களும், நபிகள் நாயகத்தைச் சந்தித்து தமது ஒத்துழைப்பையும் விஸ்வாசத்தையும் தெரிவித்துக் கொண்டன. கி.பி. 631 (ஹிஜ்ரி.9) தூதுக்குழுக்களின் ஆண்டு என வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றனர். பெருந்தொகையான தூதுக்குழுக்கள் நபிகளுடன் சந்திப்புக்கள் நடத்திய வருடமாக இது கணிக்கப்படுகிறது. 'இஸ்லாத்தை ஏற்று உம்மாவில் சேர்ந்து கொள்வதா அல்லது வரி செலுத்துவதன் மூலம் இஸ்லாமிய அரசுடன் இணைந்து கொள்வதா என்பதையே இப்போது பழங்குடிகள் தீர்மானிக்க வேண்டிருந்தது (1988:49). இக்காலப்பிரிவில் (கி.பி.630கி.பி 631) மதீன அரசின் எல்லைகள், அதன் தூது என்பன முழு அறபு தேசத்தையும் பெரும்பாலும் எட்டக்கூடியதாயிருந்தது.
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு (கி.பி.632) நபிகள் இறுதி ஹஜ்ஜினை நிகழ்த்தும்போது சிரிய எல்லையிலிருந்து யெமன் வரையும் செங்கடல் தீரத்தையும் பாரசீகக் குடாவையும் கொண்ட அறேபியத் தீபகற்பம் பெரும்பாலும் இஸ்லாமிய உம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது (1988:47).
அரசின் இயல்பு
நபி (ஸஸ்) அவர்கள் பிறந்த போது அல்லது அதற்கு முன்னர் மக்காவில் அரசு இருக்க வில்லை. மக்காவை ஆட்சி செய்ய கிரேக்கத்திற்போல தெரிவு செய்யப்பட்ட தலைவரோ அதிகாரபூர்வமான செனேற் சபையோ இருக்கவில்லை. படைகளும் வரிவசூலிக்கும் நிருவாக இயந்திரங்களும் கிடையாது.
எனினும் மக்காவின் அறபு சமூக அமைப்பில் என்றுமில்லாத மாற்றங்களிற்கான அறிகுறிகள் தென்பட்டன. பொருளாதாரக்கட்டமைப்பு அதன் பழைய முறையிலிருந்து மாறிக் கொண்டிருந்தது. சமூக, சமயசிந்தனைகளில் புதிய போக்குள் வளர்ந்து வந்தன. சொத்துடைமைபற்றிய கருத்து புதிய வடிவத்தைப் பெற்றிருந்தது. சக்தி பெற்ற பெருவணிகர் தோன்றினர். செல்வ வளர்ச்சியுடன் தனி உடைமையும் தனிநபர்வாதமும் (Individualism) வளர்ந்தன. செல்வந்த வணிகர் குழாத்தினர் தமக்குள் ஐக்கியக் குழுக்களை உருவாக்கினர்.
நாடோடிப்பொருளாதரம் வர்த்தகப் பொருளாதாரமாக மாறியதும், பழங்குடி பெற்றிருந்த கூட்டுடைமைப் பொருளாதாரம் தனியுடைமைக்கு மாறிச் சென்றதும்
177

Page 92
புதிய சமய, சமூகப் பிரச்சினைகளுக்கு வழிகோலின. இவை அறபு சமூகத்தின் உள்ளமைப்பில் அரசு தோன்றுவதற்கான முன்னிபந்தனைகளாகவும் அமைந்தன.
ஏற்கனவே ‘மாலா அரச அலகாக இயங்க ஆரம்பித்திருந்தது. எனினும் அது பழங்குடிச் சமூகத்துக்குரிய நிறுவன அலகேயன்றி அரசு அல்ல. ஜனநாயகப் பண்புகள் இதிற் காணப்பட்டாலும் அதன் அதிகாரங்கள் மட்டும்படுத்தப்பட்டவை. மாலாவுக்குத் தீர்மானம் எடுக்க சக்தியிருந்தது. ஆனால் அது அரசின் தீர்மானங்களைப்போல் பொதுமையானதாக இருக்கவில்லை. குபேர வர்த்தகரின் ஆதிக்கத்தினாலும் பொருளாதாரப் பகிர்வின் அசமத்துவத்தினாலும் உருவாகிய பிரச்சினைகளுக்கு தீர்ப்பளிக்கும் ஆற்றல் அதற்கிருக்கவில்லை. உண்மையில் புதிய சூழ்நிலையில் முன்னர் ஆற்றிவந்த சமூகப்பணிகளை தொடர முடியாத நிலையில் அது இருந்தது.
முன்னர் காணப்பட்ட பழங்குடி ஒருமைப்பாட்டின் (Tribal Solidarity) இடத்தை வர்க்க ஒருமைப்பாடு (Class Solidarity) நிரப்பியது. குலக்கட்டுப்பாடுகள் தளர்ந்து குலங்களுக்கிடையிலான கூட்டிணைப்புகள் உருவாகின. அதிகாரத்தைத் திணிக்கக் கூடிய முகவரோ அல்லது அரசு வகைப்பட்ட இயந்திரமோ புதிய தேவையாக இருந்ததை சமூக மாற்ற நிகழ்வுகள் உணர்த்தின.
பொருளாதாரப் பின்னணியை இறுக்கமாகக் கருதும் ஆய்வாளர் இஸ்லாத்தின் எழுச்சியை நகரவாழ்க்கைக்கும் வர்த்தகக் குபேரர்களுக்கும் எதிராக எழுந்த நடோடிப் பதவிகளின் இயக்கம் என்றும் அடிப்படையில் அது நிலத்துக்கான இயக்கம் என்றும் கருதுகின்றனர். வணிக நகரான மக்காவை விட்டு ஏழ்மையிலிருந்த விவசாய வளமிக்க மதினாவே நபிகளின் பிரசாரத்திற்கும் இயக்கச் செயற்பாட்டிற்கும் தளமாக அமைந்ததை இவர்கள் உதாணரமாகக் காட்டுகின்றனர். நபிகளின் பணி மதீனாவில் ஆரம்பமானபோது நாடோடிப் பதவிகள் நபிகளின் இயக்கத்தில் அதிக அளவில் இணைந்து கொள்கின்றனர். நாடோடிப் பதவிகளின் வருகை நபிகளின் இயக்கம் ராணுவ பலமுள்ள இயக்கமாக மாற்றமடைய வழிவகுத்தது. மக்காவில் இயக்கப்பணிகளில் ஈடுபட்டதைப்போலன்றி நபிகள் இப்பொழுது மதீனாவில் எதிரிகளை போர்முனைகளிலும் சந்திக்கத் தயாராக இருந்தார்கள்.
178

மக்காவில் வாழ்ந்த சக்திமிக்க குபேர வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்பட்ட நடுத்தர, சிறிய வர்த்தகர்களின் எழுச்சியாக, இஸ்லாத்தைச் சோவியத் ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றனர். பேராசிரியர் வொட் அவர்களும் ஏறக்குறைய இதற்குச்
சமமானகருத்தை முன்வைத்துள்ளார்.
நகர வணிகர்கள், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், நாடோடிகள், விவசாயிகள் உட்படப் பல்வேறு குழுக்களின் இணைவினை ஆரம்ப இஸ்லாத்தில் காணக்கூடியதாக இருப்பது முக்கிய அம்சமாகும். சிறிய வர்த்தகர்களின் எழுச்சியாகமட்டுமல்ல வறியவர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் எழுச்சியாக இஸ்லாத்தை வர்ணிப்பதற்கும் சான்றுகள் உள்ளன. அத்தியாயம் ஐந்தில் இந்த விடயம் கூடிய அழுத்தத்துடன் விபரிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்து வந்த பல்வேறு தரப்பினர்க்கிடையிலான முரண்பாடுகளையும் பூசல்களையும் தீர்ப்பதில் இஸ்லாம் வழங்கிய முன்னேற்றமான நடைமுறைகள் இந்நிலையை உருவாக்கியதெனலாம். சோவியத் ஆய்வாளர் Sergei Tokarew ன் கருத்து பெரிதும் இதனைப் பிரதிபலிக்கிறது: பல்வேறு வகை சமூகக் குழுக்கள் இஸ்லாத்தில் ஒன்றிணைந்தன என்பதே உண்மைக்கு மிக அருகில் உள்ள கருத்தாகும்'வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நகரவாசிகளை ஒரு புறமும் நாடோடிப்பதவிகளை மறுபுறமும் உள்ளடக்கிய சமயம் இஸ்லாம் என்ற எங்கெல்சின் கூற்றையும் தமது கருத்துக்கு ஆதாரமாக அவர் முன்வைக்கிறார் (பார்க்க, 1989; 370).
ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த நகர்ப்புறத்தவர்களுக்கும் மேய்ச்சல் நில நாடோடிகளுக்குமிடையில் நடந்த முரண்பாடுகள் இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிரதான காரணியாக இருந்துள்ளது என்ற கருத்தை பொட்டமோர் (Bottomore) வலியுறுத்துகிறார். இத்தகைய கொள்கையின் மூலக்கருத்துக்கள் இப்னுகல்தூனின் சிந்தனைகளில் இருந்தன. மக்காவை மையமாகக்கொண்டு அறபுத்தீபகற்பம் முழுக்கப் பரவியிருந்த வர்த்தக நலன்களும் வணிகக் கலாசாரமும் நகர்ப்புற உயர் குழாத்தினரின் செல்வாக்கும் இஸ்லாத்தின் எழுச்சிக்கு உந்துதலளித்துள்ளன. (பொட்டமோர்). எவ்வாறாயினும் தொன்மை மரபுகளைக்
கடந்து, மாறாக புதிய சக்தியுள்ள இயங்கும் அரசியல் கோட்பாட்டை இஸ்லாம்
179

Page 93
முன்வைத்தது என்பதே பெரிதும் கவனத்தை ஈர்க்கும் கருத்தாகும். பின்வரும் பொட்டமோரின் கருத்தும் இதனை மேலும் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்:
நகர்ப்புற சமய பக்தியையும் பழங்குடி ஒழுக்கத்தையும் கலந்து உருவான இஸ்லாம் இரத்தத்திற்கு மாறாக இறைபக்தியின் அடிப்படையில் அமைந்த அரசியல் ஒருமைப்பாடு பற்றிய புதிய கோட்பாட்டை வழங்கியது. போரிடும் குலங்களையும் கோத்திரங்களையும் ஒரு ஒற்றைச் சமய சமூகமாக (a Single religious community) நகர்ப்புற a/600flag தலைமைத்துவத்தின் கீழ் அது கொண்டு வந்தது. வர்த்தகத்தைப்பாதுகாத்ததுடன் அசைவியக்கமுள்ள gyefitgirls 600T gyrofluoi réigil (dynamic political forece) என்பதையும் இஸ்லாம் நிரூபித்தது. (Bottomore, 1981:239).
80

குறிப்புகள்
அறேபியர் உட்பட பபிலோனியர் (Akkadians) அஸ்ஸிரியர், அமோரிடஸ்னானியத், பீனிசியர், ஆர்மேனியர் பலஸ்தீனிய ஹிப்றுக்கள் என்ற இனப்பிரிவினர் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது செமித்திய இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து 18ம் நூற்றாண்டின் பின்னரே வலுவடைந்தது. அதுவரை ஐரோப்பியர்கள் இவ்வினத்தவர் வெவ்வேறு இனமூலங்களைச் சேர்ந்தவர்கள் என்றே கருதினர்.
அஸ்ஸிரோ - பபிலோனிய, ஹிப்றுா, ஆர்மெய்க், அறேபிய, எத்தியோப்பிய மொழிகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது இம்மொழிகளிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக மொழி அடிப்படையில் இவ்வினத்தவர்கள் செமியத்திய இனக்குழுவைச் சேர்ந்தவர்களே என்ற முடிவு ஏற்பட்டது.
அறேபியா,சிரியா, பாலஸ்தீன், மெஸெபொட்டேமியா ஆகிய நிலப்பரப்புக்கள் இம்மொழிகளைப் பேசியவர்களின் வாழிடங்களாக விளங்கின. மொழி அடிப்படையிலேயே பிரதான ஒற்றுமை எடுத்துக் காட்டப்பட்டபோதும் சமூக நிறுவனங்கள் சமய நம்பிக்கைகள் உடல் அமைப்பு போன்றவற்றிலும் ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர் எடுத்துக்காட்டினர். யூதர்களை விடவும் உடல்வாகு, உளத்தன்மை, மொழியியல் ஆகியவற்றில் செமித்திய இனச் செல்வாக்கு அறேபியரிடமே அதிகம் இருப்பதாகக் கூறுவர்.
தென் யூப்ரடீஸ் நதிதிரமே செமித்திய இனத்தாரின் மிகப்பழைய வாழிடமாகக் கொள்ளப்படுகிறது. பல நூற்றாண்டுகளின் பின்னர் மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் புலம் பெயர்ந்ததனால் குடியேற்றங்கள் உருவாகின. நீர்வளமுள்ள தென்பகுதியில் வந்து குடியேறிய செமித்திய இனத்தவர்களே
81

Page 94
2.
சபாயின்களாகும். பழைய ஏற்பாட்டிலும் ரோமகிரேக்க நூல்களிலும் இப்பெயர் இடம் பெற்றுள்ளது.
செமித்தியரின் முதற் தொடர்ச்சி அறபு இனத்தவர் என்றே
கொள்ளப்படுகிறது. இவர்கள் தமது முதல் வாழிடங்களிலிருந்து
பபிலோனியா, சிரியா, எகிப்து ஆகிய தேசங்களுக்குப் பிரிந்து சென்று குடியேறினர்.
மேலதிக விபரங்களுக்குப் பார்க்க பிலிப் கே gan) to it, luí air History of the Arabs (1964)
தென் அறேபிய நாகரிகங்களுக்கு ஊற்றாகவிருந்த இனத்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து ஆட்சியுரிமையை அனுபவித்தவர்களும் முற்றாக அழிந்தமை பற்றிக் குர்ஆன் குறிப்பிடும்போது பாவம் அல்லது சமூக அநீதி பற்றிய கருத்தை முன்வைக்கிறது. உலகியல் ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே அவர்கள் குறியாய் இருந்தனரென்றும் அதிகாரம், சுயநலம், செல்வம் போன்றவற்றில் அளவுக்கதிகமான வேட்கை கொண்டிருந்தனரென்றும் குர்ஆன் கூறுகிறது. இவற்றின் காரணமாகவும் வேறு காரணங்களினாலும் பூமியில் அதிகம் விஷமம் புரிந்தவர்கள் என்றும் இவர்களைக் குர்ஆன் குற்றம் சாட்டுகிறது (அத், 83:92).
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டமை, தமது சொந்த மக்களையே ஒடுக்குதலுக்குள்ளாக்கியமை, வறிய மக்களுக்கு ஆகார மளிக்கவோ அல்லது அவ்வாறு தூண்டுவதற்கோ துணியாதிருந்தமை போன்ற சமூக அநீதிகளை அவர்களின் விஷமங்கள் என குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. இவற்றின் காரணமாக அவர்களும் அவர்களது நாகரிகங்களும்
அழித்தொழிக்கப்பட்டதாகவும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆத், தமூத், ஜூர்ஹெமிடெஸ் (Jurhemites) என்பன அறேபியாவின் தொன்மையான இனங்களாகும். இவற்றுள் ஆத் கூட்டத்தார் பெரியதும் சக்திமிக்கதுமான இனமாக விளங்கினர். அறேபியா, பபிலோனியா, எகிப்து ஆகிய
182

தேசங்களில் அவர்களின் ஆதிக்கம் நிலவியதாக வரலாறு கூறுகிறது. இவர்களது காலம் 2200 B.C. இருந்து 1500 B.C. வரையுமென சில வரலாற்றாசிரியர் காலநிர்ணயம் செய்துள்ளனர். ஆத் இனத்தவர் அறேபியாவின் மிகச் சிறந்த பகுதிகளில் வாழ்ந்தனர். யெமன், ஹழரமவுத் என்பன அவர்களது பிரதான வசிப்பிடங்களாகும். இராக் வரை அவர்களின் அதிகாரம் பரவியிருந்தது.
ஆத் சமூகத்தாரைத் தொடர்ந்து தென் அறேபியாவில் தமூத் இனத்தவரின் நாகரிகம் பரவியது. நபேத்தியரின் மூல இனமாக தமூத் இனத்தவர்கள் கொள்ளப்படுகின்றனர். அல்-குர்ஆனின் 7:74 திருவசனம் ஆத் எனும் மக்களுக்குப் பின்னர் அவர்களுடைய பூமியில் உங்களைக் குடியேற்றியதாக அதற்கு அதிபதிகளாக்கியதாக தமூத் பற்றிக் கூறுகிறது. விரிவான 6)%732zz%óézzỷ Z/7/7zz: 4geographical History of Quran (1936), திருக்குர்ஆன்-விளக்கம் அபுல் அலே7 மெனதுரதி (1992)
தொன்மை உருவ வழிபாட்டு வாதம் என்ற சொல் இந்நூலில் Paganism (heathen) என்ற சொல்லுக்குச் சமமான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொன்மை கிரேக்க ரோம கடவுள் வணக்கத்தையும் அதுசார்ந்த நம்பிக்கைகளையும் இச்சொல் (Paganism) சிறப்பாகக் குறிப்பிடுகிறது. கிறிஸ்த்தவர்கள் கிறிஸ்தவரல்லாதவர்களின் சமயங்களை இச்சொல்லால் அழைத்து வந்ததிலிருந்து இது அறிமுகமானதாகக் கொள்வர். ஆரம்பத்தில் இஸ்லாம் சமயமும் அவர்களால் "Paganism என்றே குறிப்பிடப்பட்டது. தற்போது யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் அல்லாத தொன்மை உருவவழிபாடு, பல்தெய்வவழிபாடு சடங்கு, நம்பிக்கை முதலியவைகளைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில தமிழ் அகராதிகள் பொதுவாக 'புறச்சமயம் என்று இதனைக் மொழி பெயர்த்துள்ளன.
Prior to Islam the maternal uncle played an important role. The most obvious illustration is the aid afforded by the people of Medinah to the Prophet when he migrated thither; the
183

Page 95
fact that the people of Medinah stood in this relation to the Prohet was one of their most potent motives in aiding him. The Prophet's mother was of the Banu Najjar, a branch of he Kaazraj, a Kathanite clan, whereas his father was of Kuraish, a Mudarite clan. After his father's death, his mother took him to Medinah to take refuge with his maternal uncles, the numerous tribe of the Banu Najjar..... The Prophet's mother remained at Medinah in comfort and ease, and presently took him with her to his paternal uncles at Meccah, dying, however, on the Journey. When he proclaimed his message, and endured persecution at the hands of his paternal uncles, he fled to his maternal uncles at Medinah, where is relations ackowledged his kinship, inasmuch as his connexion with the Banu Najjar involved the whole of the Khazraj group in the relationship of maternal uncles to him. When he arrived at Medinah his relatives welcomed him, and the first of his adherents there were his maternal uncles or persons of kin to them. These were his most earnest champions and defenders. (See: Jurjzaydan, History of Islamic civilzation, 1987:07).
மேற்குறித்த நால்வரைத்தவிர உருவவழிபாட்டுக்காலத்தில் இன்னும் பலர் ஒர்இறைக் கோட்பாட்டை எடுத்துக் கூறிவந்துள்ளனர் அவர்களின் பெயர்களாவன. Urbãb b. al - Bara, of abd - al Kais. Ummyyah b. Abi - s- Salt.
Kuss b. Sãidah of Iyad. Abu kais sirmah b. Abi Anas of the Banu-n-najjãr of yathrib.
Khâlid b. Sinan b. Ghaith Of Abs. Abu Kais Saifi Abn al Aslat of the Aus-allah of yathrib.
இவர்கள் ஹிஜாஸ் மாநிலத்தையும் மேற்கு அறேபியத் தீபகற்பத்தையும் சேர்ந்தவர்கள் இவர்களது கொள்கை
கிறிஸ்த்தவத்திலிருந்து வேறுபட்டிருந்தது. ஹனிப்வாதத்திற்கு
184

சில குறிப்பிட்ட பண்புகளிருந்தன. சிலைவணக்க எதிர்ப்பு, சிலவகை உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளல், ஏப்ரஹாமின் கடவுளை வணங்குதல். துறவு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் புகழ் பெற்றவர்கள். இவர்களுள் சிலர் நபிகளைவிட வயதில் மிகவும் கூடியவர்கள். உமையாபின் அபிஸ்ல்ட் நபிகளை எதிர்ப்பவராகவும் அவர்களது வைரியாகவும் இருந்தார். மேலதிக விபரங்களுக்கு Z/7722. Sir. Charles J. Lyall air The Words Hanifi and Muslim (1903)
ஏப்ரஹாமுக்கு (இப்றாஹீம்) இஸ்மாயில் (Ishmael) இஸ்ஷாக் (1ssac) என்று இரு ஆண்குழந்தைகள் இருந்தனரென்பதை குர்ஆனும் பைபிளும் ஏற்றுக்கொள்கின்றன. சாறாள் ஈசாக்கைப் (இஸ்ஹாக்) பெற்றதாகவும் ஆகார் (ஹாஜிரா) இஸ்மாயிலைப் பெற்றதாகவும் ஆதியாகமம் கூறுகிறது. குர்ஆனின் கருத்தும் இதுவேயாகும். ஆனால் தியாகத்திற்குட் படுத்தப்பட்டவர் இஸ்மாயில், அவர்தான் இப்றாஹீமின் மூத்த புதல்வர் மூத்த புதல்வர்களைப் பலியிடுவதே அக் கால மரபுமாகும் என்று இஸ்லாமிய ஆய்வாளர் வாதிடுகின்றனர். யூதர்கள், தியாகத்திற்குட்படுத்தப்பட்டவர் ஈசாக் (இஸ்ஹாக்) என்று கூறுகின்றனர். இந்தத் தியாகம் நடைபெற்ற இடம் மக்காவெனக் குர்ஆன் கூறுகிறது. இந்தப் பலி நடைபெற்ற இடம் சிரியாவென்று யூதர்கள் கூறுகின்றனர். இஸ்மாயில் நபிக்கும் நபிமுஹம்மது (ஸல்) அவர்களுக்குமிடையிலான வம்சத்தொடர்ச்சிகளையும் யூதர்கள் நிராகரிக்கின்றனர். அல்குர்ஆன் யூதர்களின் இத்தகைய கருத்துக்களை மறுக்கின்றது. வரலாற்றாய்வாளர் யூதர்களின் கருத்துக்கள் சமய ரீதியில் பக்கசார்பானவை என்றும் தெளராத் (Torah) போன்ற தொன்மைச் சமயங்களின் கூற்றுக்களும் தொன்மைக்கால மரபுகளும் யூதர்களின் கருத்துக்களுக்கு மாறாக உள்ளன என்றும் வாதிடுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு zzzzzz; eyevavzzzza047а/74/723z076277z/%žr Sirati-un-Nabi VoIII (1981)
185

Page 96
10.
II.
தந்தைத்தலைமையுகம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம். பழைய ஏற்பாட்டின்படி ஏப்ரஹாம்
முதலாவது தந்தை தலைமைக்குரியவர். ஏகத்துவத்தின்
(Monotheism) தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். ஒரு கடவுள் சமயம் ஒரு தந்தைக் குடும்பத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தது. ஏப்ரஹாமின் கதை, மகன் இரத்தப் பலியின் முடிவையும் அதற்கான மிருகப் பதிலீட்டையும் குறிப்பிடுகிறது. ஈவலின் ரீடின் (ப.406) இக்கருத்தை 6ம் இயலில் குறிப்பிடப்படும் ஆண்குழந்தைக் கொலையுடனும் தொடர்பு படுத்தி நோக்கலாம்.
. இரும்பு மோதிரத்தையேனும் தேடுவீராக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் ஏதும் உமக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். ஆம் இன்னின்ன அத்தியாயம் தெரியுமென்றார். அதற்கு நபி (ஸஸ்) அவர்கள் உனக்கு குர் ஆன் தெரிந்திருப்பதனால் இவளை உனக்கு மண முடித்துத் தந்தேன் என்றார்கள்.
ஸரசனன் திர்மிதி (1993 பாகம் 9 ஹதீஸ் எண் 1130)
இதன் குறை நிறை எவ்வாறாயினும் மதீன அரசின் தோற்றத்தின்போது குர்ஆன் (வஹி) முழுமைபெறாத நிலையில் நபிகளின் மதிநுட்பத்தையும், சமூக மரபுகளையும் கொண்ட நிலையில் ஒரு ஆட்சி நடைபெற்றுள்ளதா என்ற வினா கவனத்திற்குரியதாகும்.
பைத்துல்மால் (பொதுநிதியம்) ஸ்க்காத் (தர்மவரி, ஏழைவரி) ஆகியன பற்றிய நூலாசிரியரின் நேக்கினை எச்.எஸ். இஸ்ம7யில் ஒரு சமூக அரசியல் ஆய்வு நூலில் 'இலங்கை பைத்துல்மால்' என்ற அத்தியாயத்திற் பார்க்கவும்.
186

Abd al Ati, H
Ahamd, I.
Ali, Moulana, Mohamed.
Adonis,
Ayoub, M.M
Beg Jabbar, M.A.
Belyaev E.A.
Bertram, Thomas.
Bottomore, T. (ed.)
Charles, L.J.
துணை நூல்கள்
( 1995)
(1981)
(1951)
( 1990)
(1984)
(1981)
(1969)
(1937A)
(1985)
(1903)
The Family Sturcture in Islam
USA: A.J. Publication
The Social Contract and the Islamic State, New Delhi: Kitabbavan
Mohamad the Prophet. Lahore: Ahmadiya Anjuman, (First Published 1927.)
An Introduction to Arab Poetics, Catherine Cobban Sagi Books
The Quran and it's interpreters, Albany: State University press, Albany
Social Mobility in Islanic Civilization, Malaysia: University Press.
Arabs, Islam and the Arab Caliphete in the Early Middle Ages. Russ. Trans. Adolphe Gourevitch. New York: Praeger.
The Arabs. London: Thornton Butterworth.
A Dictionary of Marxist Thought, England: Blackwell.
The words "Hanif and Muslims, the
Jurnal of the Royal Asiatic Society, London (PP,771-784)
187

Page 97
Cook, A. Stanley
Della Vide, G.L.
Ebenstein, W.
Engels
Engineer, Asghar Ali
Faruqi al Ismail, R. and
Lois Ilamya al Faruqi.
Ghouri Umer H.K.
Gibb, H. A. R.
Goldziher, Ignaz
Guillaume, A.
(1908)
(1946)
(1961)
(1972)
(1980)
(1986)
(1992)
(1969)
(1967)
(1955)
188
The Religion of Ancient Palestine in the Second Millennium B. C. London: Archibald Constable & Co., Ltd.
Pre-Islamic Arabia. in. The Arab Heritage. ed. Nabih Aminfaris. New Jersey: Princeton University Press.
Great Political Thinkers New York: Holtrinehart and winston
The Origin of the Family Private Property and the State. Moscow: progress publishers
The Islamic State. New Delhi: Vikas Pub. House.
The Cultural Atlas of Islam. New York: Macmilian Pub. Co.
Dowry and the Islamic Social System, Delhi: Delhi Markaji Maktaba
Mohamadanism. An Historical Survey. London: Oxford University Press, 1949.
Muslim Studies. ed. S. M. Stern, Trans. C. R. Barber and S. M. Stern. Vol. I. London: George Allen & Unwin Ltd.
The Life of Muhammad. A Translation of Ishaqes Sirat Rasul

Hamidullah, M.
Hitti, Phillip K.
Husayn, Haykal M.
Ibn, Kaldun
Inayatullah, S.
Iqbal,
Iqbal, Afzal
Kenel, W.F.
King, Leonard W.
Koelle, S. W.
(1973).
(1979)
(1937)
(1976)
(1958)
(1963)
(1992 A)
(1981)
(1960)
(1916)
(1988)
Allah. London: Oxford University Press.
Islam. England: Penguin Books Ltd., (First Published 1954.)
Muhammad Rasulu llah, Karachi: Hanifa Publications
History of the Arabs. London: Macmillan.
The Life of Mohamed. Iran: Centre for Islamic Studies.
The Muqadhimah. Trans: Franz Resenthal. London: Routledge & Kegan Paul.
Pre-Islamic Arabian thought in: A History of Muslim Philosophy M.M.Sharif, vol 1 (pp 126-136) wiesbaden: Otto Harraswowitz.
孙 Thoughts and Reflections of Iqbal (ed), S.A. Vahid, Lahore: S.H.M.Ashraf
Culture of Islam. Lahore: Institute of Islamic Culture.
The family in perspective. A fourfold Analysis, New Yourk: Applenton-Century Crofts. inc
Legends of Babylon and Egypt in relation to Hebrew Tradition. London: British Academy.
Mohammed and Mohama danism. London: Livingstons.
189

Page 98
Langdon, J. Davies,
Lewcok, Ronald
Lewis, Bernard.
Livingston, J.C.
Lutfiya, A.M.
Margoliouth, D.S.
Martini, C.M.
Marx, Engels
Marx, K.
Montagu, Ashley (ed)
Montagu F.A.
Morgan, L.H.
Moscati, Sabatino,
(1927)
(1986)
(1950)
(1989)
(1970)
(1905).
(1992).
(1976)
(1973)
(1968)
(1956)
(1982)
(1957)
190
A short history of women New York: Blue Ribbon Books.
Wadi Hasdramaut and the Walled City of Shibam. UNESCO.
The Arabs in History. London: Hutchinson House.
Anatomy of the Sacred. An Introd uction to Religion, New York: Macmillan publishing Company
The family in: Readings in Arab middle Eastern Society and Cultures. (ed), Abdullah M. Lutfiya, Paris : Mouton
Mohamed and the Rise of Islam. London.
Abraham, Gujarat: G.S. Prakash
On Religion. Moscow: Progress
Publishers.
The Powerty of Philosophy. Moscow: Progress Pubs.
The Concept of Primitive Society London: Collier Macmillan.
Marriage Past and Present. Boston porter, sargent publishers.
Ancient Society. New Delhi. (1877)
Ancient Semitic Civillizations. London: Elek Books.

Muhsin, Mahdi,
Muir, William,
Muller-Lyer
Nadvi, Syed, M. D.
Nicholsen, R. A.
Nomani, M. M.
Peters, E.F.
Quigley Carrol
Rabi Mahamoud
Reuben Levy
Reed, Evelyn,
(1957)
(1923)
(1931)
(1936)
(1969)
(1983)
(1994)
(1979)
1 Marv
(1957)
(1992)
191
Ibn Khaldun's Philosophy of History. London: George Allen & Unwin, Ltd.
The Life of Mohammad. Edinburgh: John Grant.
The family Trans: Fin stella Browne London: George & Uniwin Ltd (First Published. 1912)
A Geographical History of Ouran. Calcutta.
A Literary History of Arabs. London: Cambridge University Press.
Meaning and Message of the Traditions. Karachchi: Darul Ishaat.
Mecca, Newjersèy: Princeton
The Evolution of Civilization. Indianapolis: Liberty Press.
The Political Theory of Ibn
khaldun. Leiden: E. J. Brill.
The Social Structure of Islam Cambridge press.
Women's Evolution from Matriarchal clan to Pattiarchal family. London: fathfinder (frist published. 1974)

Page 99
Rodinson, M.
Sahlins, Marshall
Service, R. Elman
Saycee, A. H.
Serjeant, R. B.
Shaban, M. A.
Shaffer, J. G.
Shahid, I.
Shariati, Ali
(1971)
(1968)
(1962)
(1899)
(1981)
(1971)
(1982)
(1970)
(1980)
92
Mohammed. Trans: Anne Carter. London: Allen Lane. The Penguin Press.
Tribesmen in History and Anthropology. in: The Concept of the Primitive Society. ed. Ashley Montegu. (195-21 l).
London: Collier Macmillan.
Primitive Social Organization. New York: Random House.
Babylonians and Assyrians: Life and Customs. London: John C. Nimmo.
Studies in Arbian History and CίνίίίΖαίίοη. London: Variorum Printers.
Islamic History: A New Interpretation. Cambridge: Cambridge University Press.
Origins of Islam: A General Model. in Aspects of Society and Culture. Lucknow: Ethnographic and Folk Culture
Pre-Islamic Arabia. in: Cambridge University History of Islam. Vol. I. eds: P. M. Holt, Annk S. Lambton and Benard Lewis. (9-29). London: Cambridge University Press.
Fatima is Fatima. Trans: Leleh Bakhtiar, Tehran: The Sahriti foundation.

Siddiqui, A.H.
Siddiqui, MY.M.
Stephen & Nauidy Ronart
Stern, B.J., (ed)
Stierliw, H.
Sumner, W. G.
Sumner W.G and others
Turner, Bryan S.
Tokarev, S.
Watt, W. M.
(1985)
(1988)
(1959)
(1938)
(1984)
(1906)
(1947)
(1974)
(1989)
(1961A)
(1961)
193
The Life of Mohammed. Delhi: Hindustan, Publications.
Organization of Government under the Holy Prophet (SAW), Lahore: Islami Publications,
Concise Encyclopeadia of Arabic Civilization. Amssterdam: Djambatan.
The family past and present London: D. Applention century company.
The Cultural History of the Arabs. London: Aurum Press Ltd.
Folkways. London: Ginn & Co.
The Science of Society, vol (IV) New Harven: Yale University Press (First published 1927).
Weber and Islam. London: Routledge & Kegan Paul.
History of Religion, Trans: Paula Garb. Moscow: Progress Publishers.
Muhammad: Prophet and Statesman. London: Oxford University Press.
Islam and the Integration of Society. London: Routledge & Kegan Paul.

Page 100
and Bell,R.
Westermarck, E.
Winckly, Hugo,
Wooley, Leonard
Zaydan, J
Ulab, M.
The Encyclopaedia of Islam
(1962)
(1979)
(1970)
(1970)
(1922)
(1907)
(1935)
(1987)
(1990)
(1913)
(1927)
194
Muammed at Medina, Oxford: at the Clarendren press.
Muhammad dt Mecca. Karachchi: Oxford University Press.
Muhammad. in: The Cambridge History of Islam. ed. P. M. Holt and others. Vol. II (30-57).
Introduction to the Quran. Edinburgh: University Press.
The History of Human Marriage New York: The Alerton Book
company
The History of the Babylonia and Assyria. Trans: James Alexander Graig, London: Hedder & Stoughton.
Abraham. Recent Discoveries. London.
History of Islamic Civilization. Trans: D. S. Margolioth. New Dehli: Kitab Bhavan.
The Muslim Law of Marriage. Delhi: Kitabbavan.
(eds) M.Th. Houtma, T. W. Arnold R. Basser and R. Hartmann, London: Iuzce & Co.
(eds) M.Th.Houtma and others. Vol I

அந்திரேயெவ், இ. லி. (1987) "எங்கெல்ஸின் குடும்பம் தனிச்
சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல்’ மாஸ்கோ: முன்னேற்றம் பதிப்பகம்.
GstaffThus (1989) பண்டைய இந்தியா, நியூதில்லி: இந்தியன் கவுன்சில் ஒப் ஹிஸ்டோரிகல் ரி சேர்ச்.
பக்தவத்ஸல பாரதி, சீ. (1990) பண்பாட்டு மானிடவியல். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
மார்க்ஸ், எங்கெல்ஸ். (1975) கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மாஸ்கோ முன்னேற்றம் பதிப்பகம்.
மார்க்ஸ், (1975) மெய்யறிவின் வறுமை, மாஸ்கோ,
முன்னேற்றம் பதிப்பகம்
மாட்டின் லின்ங்ஸ் (1989) முஹம்மத். இலங்கை: இலங்கை இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம்.
பரிசுத்த வேதாகமம் (1970) திருச்சிராப்பள்ளி: தமிழ் இலக்கியக்.
கழகம்.
தியாகு, (பதி) (1992) விவிலியக் களஞ்சியம், பாகங்கள்
I,II,III, GolesF6T60N6OT.
TRANSLATIONS AND COMMENTARIES ON THE HOLY QURAN
Abdullah Yusuf Ali. (1975) The Holy Qur-an: Text,
Translation and Commentary.
Lahore: S. H. Muhannad Ashraf, (First Published 1938)
ஆ, கா. அப்துல்ஹமீது பாகவி, (1982) தர்ஜுமத்துல் குர்ஆன். சென்னை.
195

Page 101
சையித் அபுல் அஃலா மெளதுரதி
எம். அப்துல்வஹஹாப், கே. ஏ. நிஜாமுத்தீன், ஆர். கே. அப்துல் காதிர்,
ஹதீஸ்
ஸனேன்திர்மிதி
Mishkat Al- Masabih
Sahih Muslim
(1989)
(1992)
(1994)
(1990)
(1995)
96
திருகுர் ஆன். சென்னை இஸ்லாம் நிறுவனம் ட்ரஸ்ட்,
குர்ஆன் தர்ஜமா, சென்னை: திரியெம்பிரிண்டர்ஸ்.
முஹம்மது(எ) ஆபூஈஸா, தமிழாக்கம். P. ஜைனுல் ஆபிதீன் மதுரை: நபிலா பதிப்பகம் பாகங்கள் 14, 9, 8,
Transi James Robson Vol I, II, Lahore: SH.M. Ashraf
Trans: Abdul Hamid Siddiqi Vol „I, II, New Delhi: Kitabbavan


Page 102


Page 103
இஸ்லாத்தின் தோற் அறபு மண்ணும் அதற்கப்பால் ஒரு காலத்தில் மனித நா. இருந்துள்ளன. இஸ்லாத்திற்கு நாகரிகத் தடங்களும், செமித்தி நாகரிகங்களும்,இப்றாஹிமிய பல்வேறு நாகரிக சமய பண்பா கவர்வனவாகும். இந்நூலின் இந்தநாகரிகங்களையும் அ மரபுகளையும் பற்றிப் பேசுகின்
எனினும் இது ஒரு வர ஒரு தொன்மைச் சமூக சரித்தி எவ்வாறு நிகழ்ந்தது என்பது காரணிகளின் இயல்பு என் அமைப்புக்குள்ளிருந்து அரது வடிவங்களும் எவ்வாறு தோ நூலின் மைய ஆய்வுப்பொருள்
மறுபுறம் இஸ்லாத்தி கி.பி.6ம் நூ.மக்காவின் ச காரணிகளும் முக்கிய இடத் மேலாண்மையும், உயர்குலத்தி முறையும், ஆனாதிக்கமும், பழ தற்செயல் நிகழ்வுகள் அல்ல,
புதிய சமூக அமைப்ை நபி(ஸல்) அவர்களின் சீர்திருத்த நூஜாஹிலியா யுகத்துடன் ஒ எனினும் வழமையான விளக் மற்றும் சமூகவியல் நோக்கு காலடிக்கு விடயங்களைக்கொ தோற்றங்களை மண்ணிற்குரிய அவை வகுத்துள்ள வழிமுை நிர்ப்பந்திக்கின்றன.
Pinted by Unia Arts (E
 
 

றம் தனியான ஆய்வுக்குரியது. விரிந்து கிடக்கும் மணற்பரப்பும் கரிகங்களின் தொட்டில்களாக முன்னர் நிலவிய பபிலோனிய பமும், தென் அறேபிய நபேத்திய மும், ஹனீப்வாதமும், என்ற ட்டு மரபுகள் எமது கவனத்தைக் ன் ஆரம்ப அத்தியாயங்கள் வை உருவாக்கிய வழிபாட்டு ாறன.
லாற்று வகைப்பட்ட நூல் அல்ல ரத்தில் சமயத்தின் தோற்றப்பாடு ம் சமய எழுச்சியைத் தூண்டிய ன்பதும் பு ங்குடிச் சமூக யந்திரமும்புதிசமூக ஒழுக்க ன்றில் எர்ந்தன் என்பதும் இந் களாகும் ன் தோற்றும் பற்றிய ஆய்வில் முகவரலாறும் பொ ருளாதாரக் தைப் பெறுகின்றன. வர்த்தக நினரின் மேலாதிக்கமும், அடிமை ங்குடிச் சமுதாயத்தின் விழ்ச்சியும்
■
பக் (உம்மா) கட்டியெழுப்புவதில் Jir வகிக்கும் பாத்திரம் Engi. ப்பிடப்படுவது அவசியமாகும். I, III, II, ifigistirgi: rigo, Irisi imoill கள் உலகியல் நிலபரங்களின் ண்டு வருகின்றன:சமயங்களின் நிபந்தன்ைகளோடும் பார்க்க றகள் நம்மை மேலும் மேலும்
எம்.எஸ்.எம்.அனஸ்
TILLE GIFTET

Page 104
204 மெய்யுள்
புழுகுகளைக் கேட்டிருப்பது போல் வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ' புதிய விஞ்ஞானக் கற்பனைகள் " அல்லது ' சமயக் கற்பனைகள் " என்ற தலைப்புக்களில் தனது நாட்குறிப்பிற் குறித்து வைக்கவும் அவன் முயன்றதுண்டு.
அவற்றில் பரிசோதனை செய்து பார்க்க அவன் முயன்ற தில்லை. அந்த முயற்சி பின்புதான் வந்தது.
மேற்கத்தைய மனுேவியல் கொள்கைகளிலும், சமூக பொருளாதாரச் சித்தாந்தங்களிலும் அவனுக்கிருந்த பற்றுக் கள் மெல்ல மெல்ல இற்று விழத் தொடங்கிய பின்புதான் அப்புதுவகைப் பரிசோதனைகளின் அவசியத்தையும் அவன் உணரவந்தான்.
ஆத்மீகத் தேட்டம் என்பது ஆத்மாவோடும் சடவுலக வாழ்க்கையோடும் மட்டும் தொடர்பு கொண்டதாக இருக் காமல், அவற்றுக்கு இடைப்பட்ட சகல மனநிலைகளுக்குள் ளும் ஊடுருவிப்பரவும் ஓர் பூரணத் தேட்டம் என்பதை அதற்குப் பின்புதான் அவளுல் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் இன்றைய மனித பரிணுமக்கட்டம் அத்தகைய விடயங்களைப் பற்றிய அறிவையும் அவசியமாக்குகிறது என்றும், அவனது குரு அதையும் அழுத்த முயன்ற அவ தாரமே தான் என்றும் மெல்ல மெல்லத்தான் அவனுக்குத் தெரிய வந்தது.
ஆனல், அந்தப் பக்குவம் வருவதற்குமுன் ஏறக்குறைய ஏழு வருடங்களாகி விட்டன. ஆத்மீக முதிர்ச்சிக்கு ஏறக் குறைய இடையருத பன்னிரண்டு வருட காலப் பயிற்சி அவசியமென்ருல், அதில் பாதிக்காலம் முடிந்த பின்புதான் அவனுக்கு அந்த இடைத்தள அனுபவங்களையும் அதே ஆத் மீகத் தேட்டத்துக்குரிய வகையில் பயன்படுத்தும் பக்குவம் கைவரத் தொடங்கியது. அதற்குள் அவனது குருவும் சடவு லகக் கட்புலனுக்குத்தெரியாத தளத்துக்குச் சென்று விட்டார்.

அண்டை வீடுகள் 205
அதுவரை கட்புலனுக்குத் தெரியாத தளங்களைப் பற்றி விநாயகதாஸடுக்கிருந்த அனுபவங்கள் "அசாதாரணக் கன வுகள்" "தியான நித்திரைக் காட்சிகள்" "சிறு சூக்குமப் போக்குவரத்துக்கள்" என்ற வகையிலேயே இருந்தன. அவையெல்லாம் அடுத்த தளங்களுக்குரிய அனுபவங்கள் என்ற புத்தி பூர்வமான உணர்வு அவற்றை அனுபவிக்கும் போதே அதிகம் இருந்ததில்லை. எப்போதாவது இடைக்கிடை வரும் மெல்லிய சுயவுணர்வுக் குறுக்கீடுகள் அதிக நேரம் நிலைத்திருக்காது, அமிழ்ந்துவிடும். விழித்துக் கொண்டபின்பு தான் அவற்றின் நினைவுகள் திரும்பவும் புத்திபூர்வமாக விரியும்.
அவைதான் அன்றுவரை அந்தத் தளங்களைப்பற்றி அவனுக்கிருந்த அனுபவங்கள்.
ஆனல் அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு விளக் கங்களை முன்பைவிட இப்போ அவன் அதிக ஆவலோடு கேட்டும் வாசித்தும் தெரிந்து வைத்திருந்தான். தெரிந்த வற்றைத் தனது வசதிக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காக வும் வகைப்படுத்தியும் வைத்திருந்தான்.
முழுப் பிரபஞ்சத்திலும் காணப்படும் எண்ணற்ற உலகங் களை நான்கு அல்லது ஐந்து வகையாக வசதிக்காகப் பிரிக் கலாம் என்று விநாயகதாஸ் நம்பினுன்,
1. மனித கண்ணுக்குப் புலப்படக்கூடிய சடவுலகங்கள், இவை கோளங்களாக அமைந்தவை.
2. தட்டையான சூக்கும உலகங்கள், எண்ணற்ற தர வித்தியாசங்களைக் கொண்ட இவை மனித கட்புலனுக்குத் தெரியாதவை. இவை பலவகைப்பட்ட மன வளர்ச்சியைக் காட்டும் சூக்கும உயிரினங்கள் வாழும் தளங்களாக இருக் கின்றன. சூக்கும உயிர்களால் சூக்கும. உலகங்களையும்

Page 105
206 மெய்யுள்
சடவுலகங்களையும் பார்க்க முடியும். ஆன்மீக உலகங் களைப் பார்க்க முடியாது.
3. ஆன்மீக உலகங்கள், முக்தி அல்லது விடு தலைக்குரிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அனுபவிக்கும் நித்தியவுலகங்கள் என்றும் அழியாதவை, ஆன்மீகவுலகங் களில் இருப்போருக்கு சடவுலகங்களையும் பார்க்கும் சக்தி உண்டு. w
4. சட - சூக்கும - ஆன்மீக உலகங்களற்ற வெறும் விண் வெளி.
5. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எல்லாவற்றுக் கும் அப்பால் பட்டதாகவும் எல்லாமே தானுகவும் இருக்கும் நாமரூபங்களைக் கடந்த பேரானந்தப் பரம் பொருளான எல் லையற்ற ஏகப்பேரறிவு. இப்பேரறிவு ஆன்மீக உலகங்களில் அங்குள்ளோரின் வழிபாட்டிற்குரிய சில நித்திய திருஉருவங் களாகவும் காட்சியளிக்கும். அதேபோல் சடவுலகமான நமது பூமியில் அவதாரங்களாகவும் உருவெடுக்கும். எல்லா வேளைகளிலும் எல்லா வடிவங்களிலும் * அது" தன்னை கட்டுப்படுத்தாத எல்லையற்ற ஏகப்பேரறிவாகவேயிருக்கும்.
6. இந்தப் பல்வேறு வகைப்பட்ட நிலைகளெல்லாம் பூமியில் வாழும் மனிதனுக்கு அடையக்கூடியவையாகவே இருக்கின்றன. அவனது சடஉடலுக்கு உள்ளும் புறமுமாக அடுத்த சூக்கும - ஆன்மீக உருவங்களும் பேரறிவு நிலையும் காணப்படுகின்றன. மனதை அவற்றின் திசையில் விரித்து வளர்த்து ஆன்மீக பேரறிவு நிலையை அனுபவிப்பதே அவ னது விடுதலையும் நித்தியஞான ஆனந்த நிலையாகவும் இருக்கும்.
7. பூமியில் நடைபெறும் மனித வாழ்க்கைக்குரிய அர சியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளும் இந்தத் திசைகளில் முற்ருகத்

அண்டை வீடுகள் 207
திருத்தி வளர்க்கப்படவேண்டும். மனித பரிணுமம் இந்தத் திசைகளையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அயல் உலக விடயங்களைப்பற்றி விநாயகதாஸ் சேகரித்து வைத்திருந்த கருத்துக்களில் சுருக்கமானவைகள் இவை. இவையேதான், படுக்கையில் கிடந்தவாறே அன்றைய அனு பவத்தை மீட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்த விநாயக தாஸின் சிந்தனைப் படுக்கையாகவும் இருந்தன.
இவற்றின் பின்னணியில்தான் அன்றைய அவனது அனுபவத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
2
வெளி விருந்தையில் வாசலுக்கருகில் போடப்பட்டிருந்த நான்கு சாய்வு நாற்காலிகளில் வடக்கு மூலைப்பக்கமாக இருந்த ஒன்றில் விநாயகதாஸ் உட்கார்ந்திருந்தான்.
மங்கலான இருள். ஆணுல். அதே சமயம் பார்வைக் குப் பொருட்களும் உருவங்களும் தெரியாமல் இல்லை.
உட்கார்ந்திருந்த அந்த வேளையில்தான் திடீரென்று அந்த உணர்வு விநாயகதாஸாக்கு ஏற்பட்டது. தான் சூக்கும - ஆன்மீக உடலில் உட்கார்ந்திருந்தான் என்ற புத்திபூர்வமான சுயவுணர்வு.
அந்த உணர்வு வந்தவுடன் ஒருவித தடுமாற்றமும் அவ சரமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கின. உடலுக்குச் சடுதியாகச் திரும்பிவிடலாம் என்ற பயத்தோடு புதியவுலகில் நிற்கிருேம் என்ற மெல்லிய திகிலும் கலந்திருந்தன.
விண்வெளிக்கப்பலில் இருந்து வெளிப்பட்டு விண்ணில் மிதப்பது, சந்திரக் கலத்தில்

Page 106
208. மெய்யுள்
இருந்து வெளிப்பட்டு சந்திரத்தரையில் நடப் பது போன்ற நிலைகளில் விண்வெளி வீரர்
களுக்கு இதே உணர்வு இருக்கலாம்.
சந்திரக் கலத்தை சடவுடலாகவும் அதில் இருந்து இறங்கிச் சந்திரத்தரையில் நடக்கும் வீரனைச் சூக்கும உடலாகவும் நினைத்துப் பார்த் தால், இரு உடல்களுக்கும் உள்ள தொடர் பையும் உணர்வையும் உணரலாம். ஆபத்து வரும் வேளைகளில் உடனே சந்திரகலத்துக் குத் திருப்பிவிடத் தயாராகவிருக்கும் விண் வெளி வீரனைப் போலே சூக்கும உடலும் சதா நேரமும் சடவுலகுக்குத் திரும்பிவிடும் தயார் நிலையில் இருக்கும். சட உடலுடன் அது ஒர் வெள்ளிமயமான கொடியால் இணைக்கப்பட்டிருக் கும். அது விரும்பியமாதிரி நீண்டு கொடுக்கும். அது அறும்போதே மரணம் ஏற்படுகிறது.
விநாயகதாஸாக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த அப்போதைய அவதி யில் அவனது உருவம் எப்படி இருந்தது, என்ன மாதிரி அவன் உடுத்திருந்தான் என்பவற்றை அவனுல் அவதானிக்க முடியவில்லை.
அடுத்தமுறை அவற்றை நிச்சயமாக அவ தானிக்க வேண்டும் என்று அதை மீட்டிப் பார்க்கும்போது நிச்சயப்படுத்திக் கொண்டான் விநாயகதாஸ். ஆணுல், அதே தீர்மானத்தை ஏற்கனவே பல தடவைகள் எடுத்திருந்தான் என்பதும் அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தளவு சுயவுணர்வு பெரும்பாலும் சடவுலக வாழ்க்கையில்கூட இருப்பதில்லை. ஆடை

அண்டை வீடுகள் 209
மாற்றும்போதும், கண்ணுடிக்கு முன்னுல்நிற்கும் போதும் மனிதன் தன் தோற்றத்தையும் ஆடை யையும் நினைக்கிற அளவுக்கு மற்ற நேரங்களில் நினைப்பதில்லை. அவை பற்றிய உணர்வு அதி கம் இருப்பதும் இல்லை. அதேபோல் சூக்கும நிலையிலும் வழமையான ‘நான்" என்ற உணர்வு இருக்குமளவுக்கு அதன் அம்சங்களை அறிந்த சுயவுணர்வு இருப்பதில்லை. அந்தச் சுயவுணர்வின் வளர்ச்சியே பக்குவ வளர்ச்சி யாக இருக்கும்.
சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் வாசலால் இறங்கி வெளியே செல்லமுயன்ருன் விநாயகதாஸ். அந்த வேளையில் அவனுக்குப் பழக்கமான காளிதாசனின் குரலை ஒத்த ஓர் குரல் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் எங்கும் மெல் லப் பரவி வந்து கேட்டது.
" வெளிச்சம் தெரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா?" ஆணுல், யாரையும் காணவில்லை. வெளிச்சம் எதுவும் வந்ததாகவும் தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றபோது திடிரென்று ஒரு யோசனை ஏற்பட்டது விநாயகதாஸாக்கு.
" காளிதாசனின் அறை க்குப் போய் பார்த்தால் என்ன ?”*
அடுத்த கணம் அந்த அறையை நோக்கி அவன் நகரத் தொடங்கினன். மிதப்பதற்கும் நடப்பதற்கும் இடைப்பட்ட இலகு இயக்கம்.
காளிதாசன் நித்திரையாகி இருக்கலாம், அல்லது விழிப்பாக இருக்கலாம். அதை விநாயகதாஸால் அவதானிக்க முடிகிறதா

Page 107
210 மெய்யுள்
என்று சோதிக்கலாம். நித்திரை ஆகி அவனும் சூக்கும-ஆன்மீக உடலில் உலாவிக்கொண் டிருந்தால் சில விடயங்களைக் கதைத்துவிட்டு விழித்தெழுந்து அவை ஞாபகம் இருக்கிறதா என்று அவனைக் கேட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே அத்தகைய சோதனைகளை விநாயக தாஸ் செய்து பார்த்திருக்கிருன். ஆனூல், பூரண ஒருமைப்பாடு இன்னும் கண்டதில்லை.
காளிதாசனின் அறையை நோக்கி நகர்ந்த வேளையில் வேறு ஓர் பக்கம் அவன் இழுபட்டதை விநாயகதாஸால் உணர முடிந்தது. சுயமான விருப்பத்துக்கு எதிராகவரும் ஈர்ப்பு, குருவாகிய " அது " வின் அழைப்பாக இருக்கலாம் என்று ஏற்கனவே விநாயகதாஸ் தெரிந்திருந்தபடியால் அந்த ஈர்ப்புக்கு அவன் தன்னை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்ததுடன் அது 'வையே இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கவும் தொடங்கினுன்.
அடுத்த கணம் மிக வேகமாக எங்கோ ஒரு திசையில் பறந்து செல்வதை அவனுல் உணர முடிந்தது.
சூக்கும - ஆன்மீக உலகங்களில் உடல் வலு வால் இயக்கம் ஏற்படாமல் மனுேவலுவிலேயே ஏற்படுகின்றது. விரும்பிய இடத்திற்கு மனுே வலுமூலம் மிக வேகமாகச் செல்லலாம். போகும் வழியில் பழைய குரலைவிட தொனி கூடிய ஒரு புதுக்குரலில் பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடல் மூலம் பலவித அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.
பாடல்களின் முக்கியத்துவம் அழுத்தப்படு கிறது.

அண்டை வீடுகள் 211
அந்த அறிவுரைகளைக் கேட்டு முடிந்தபோது " அது " வைத் தரிசித்த திருப்தியும் விநாயகதாஸிடம் குடிகொள்ளத் தொடங்கியது. திருப்தியோடு அவன் திரும்பிவிட விரும் பினுன். ஆணுல் அதேசமயம் இன்னும் சடவுடலுக்குரிய விழிப்பு நிலைக்கு வருவதற்கு அவகாசம் இருந்தது என்ற உணர்வும் ஏற்பட்டதால் தொடர்ந்து 'அது'வை இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தித் துரிதமாக நடந்தான்.
இறுதியாக " அது " திருவுருவோடு இருந்த ஓர் இடத்தை அண்மித்துவிட்ட உணர்வு ஆட்கொள்ளத் தொடங் கியது. அப்படியே அவ்வேளையில் கட்டிடங்கள், அறைகள் எல்லாம் காட்சியாய் இருக்க ஓர் இடத்தில் " அது " முன்பு அவன் சடவுலகில் சந்தித்த கோலத்தில் தரிசனம் தந்தது.
விநாயகதாஸ் ஓடிப்போய் * அது "வின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு எழுந்தான். ' அது ' வின் ஆணையும் கிடைத்தது. S.
அதை ஏற்றுக்கொண்ட விநாயகதாஸ் திருப்தியோடு அங் கிருந்து அகலத் தொடங்கினன். அடுத்த கணம் சடவுலக வீட்டில் உள்ள தனது படுக்கையில் கிடந்தவாறே திடீரென்று விழித்துக்கொண்டதை அவனுல் உணர முடிந்தது. 1 ܝ ܀
வேகமாகத் திரும்பி வந்த உடலுக்குள் நுழையும் அதிர்ச்சி சடுதியான விழிப்பை ஏற்படுத்தும்.
அறைச்சுவரின் கூரைப்பக்கத்து நீக்கல் வழியாக அடுத்த அறையில் இருந்து வெளிச்சம் வந்ததை அவதானித்தபோது அங்கு காளிதாசன் இன்னும் தூங்காமல் இருந்தான் என்பதை அவனுல் யூகிக்க முடிந்தது.

Page 108
212 மெய்யுள்
3
படுக்கையை விட்டெழுந்து தண்ணிர் அருந்துவதற்காகக் குசினுக்குச் சென்றிருந்தான் விநாயகதாஸ். காளிதாசனின் அறையின் வாசல் திரைக்குள்ளால் மெல்லிதாக ஒளிக்கீற்று கள் வந்துகொண்டிருந்தன.
திரையை நீக்கி உள்ளே நோக்கியபோது காளிதாசன் வாசித்துக்கொண்டிருந்தான். மணி இரவு பதினென்றரை.
பேசாமல் தலையசைத்துவிட்டுச் சென்று தண்ணிர் குடித்து விட்டு, பின் படுக்கைக்குத் திரும்பியபோது பல பிரச்னை களுக்கு இன்னும் தெளிவு காண வேண்டியிருந்தது என்பதை விநாயகதாஸால் உணர முடிந்தது. w
" வெளிச்சம் தெரிகிறதா?" என்ற குரல் காளிதாசனின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தைக் குறித்ததா? அதனுல்தான அவனது குரலை ஒத்த குரலாகக் கேட்டது? அது யாருடைய குரல் ? 'அது' வை நோக்கி அவன் விரைந்தபோது வந்த பாடலின் குரல் யாருடையது? எல் லாமே ' அது " வின் வெளிக்காட்டல்கள் தானு? 'அது' வை அவன் தரிசித்த இடம் எது? " அது ' எந்த ஆன்மீக உலகம் ?
எந்தளவுக்கு அவற்றுக்குள் அவனது கற்பனைகள் புகுந் திருந்தன? எந்தளவுக்கு அவை அந்த அனுபவத்தின் முழு மைக்கு எதிரான தடைகளாக இருந்தன?
எதிர்கால ஆராய்ச்சிகளுக்குரிய திசைகளைக் குறித்துக் கொள்ளும் ஒரு விஞ்ஞானியைப்போல் அவற்றை மனதில் பதித்தவாறு, அன்றைய அனுபவத்தினுல எழுந்த சந்தோ சத்தின் அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிம்மதியாக நித்திரை கொள்ள முயன்ருன் விநாயகதாஸ்.


Page 109
வாழ்ந்தத
முழுவீச்சே நம்மிடைே
நூற்குண்
surf, LGT
மற்ருெவர் (3) ir Garso
எழுப்ப மு போனதை
அந்த வ தளேயசிங்
விடவும்
שTנוני "חוויווחו הדקו
பாதியின் திற்கு கெ திரத்திற்:
கஃள அள் என்று ெ
 
 
 
 
 
 

நூலாசிரியர் பற்றி.
"இருபதி ம் நூற்ருண்டில் ற்கான சாய Issa, u இவரைப்போல்
ாடு வெளிப்படுத்திய ஆளுமைகள் மே வேறு உள்ளனவா? இந்த என் முதல் பாதியில் இரண்டு கிடைக்கின்றன. ஒருவர் பாரதி புதுமைபித்தன். பாரதி தாழ்ந்து க்கு துக்கித்து மேலான ஒன்றை பன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து வெட்ட வெளிச்சமாக்கினும், ரிசையில் முன்ருவதாக வருபவர்
III. iii .
பாரதியின் கருத்துலகத்தை
தஃாயசிங்கத்தின் கருத்துலகம் முழு து. மற்ருெரு விதத்தில் சொன்னுல் சிந்தனேயை, இவர் தம் காலத் ாண்டு வந்து, இடைக்கால சரித் தம் எதிர்வினை தந்து, இடைவெளி டைந்து முழுமைப்படுத்த முயன்ருர்,
-சுந்தர ராமசாமி
T
து ஒரு சமுதாயம் வெளியிடு ()

Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7

நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)

Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7

நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10

Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8

நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7

Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.

நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8

Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.

நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7

Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5

நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,

Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)

நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9

Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17

நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -

Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26

நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2

Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.

நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4

Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7

நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.

Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்

நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO

Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7

நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5

Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4

நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2

Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6

நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.

Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10

நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6

Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2

நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5

Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.

நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2

Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4

நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,

Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8

நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9

Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7

நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15

Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22

நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே

Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7

நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7

Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6

நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17

Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7

நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.

Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்

நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).

Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)

நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :

Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11

நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)

Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)

நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)

Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)

நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6

Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10

நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.

Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.

நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18

Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).

நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi

Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8

நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்

Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7

நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)

Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9

நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)

Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ

நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5

Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே

நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.

Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.

நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.

Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10

நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19

Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.

நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6

Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2

நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)

Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2

நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.

Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ

நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3

Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5

நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299

Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.

நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.

Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12

நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10

Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.

நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /

Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்

நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)

Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6

நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12

Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12

நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.

Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10

நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,

Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13

நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2

Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10

நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்