கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நமக்கென்றொரு புல்வெளி

Page 1


Page 2

நமக்கென்ருெரு புல்வெளி
வ. ஐ. ச. ஜெயபாலன்
க்ரியா

Page 3
Wamakkenroru Pulveli D A Collection of Poems in Tamil by V S Jayapalan D . Copyright V S Jayapalan O First Edition March 1987 O Published by Cre-A: 268 R H Road Madras 600 014 Printed at Bagavathi Press 129 J J Khan Road Madras 14 O Price Rs 12-00

sLoiriuso Tib
தமிழ் பேசும் மக்களின் விடுதலைப்போரில் துணைநின்று வீரமரணமடைந்த கொழும்புப் பல்கலைக் கழக மாணவர் தலைவர், சிங்களப் புரட்சியாளர்
தோழர் தயா பத்திரானுவுக்கு.

Page 4
பொருளடக்கம்
முன்னுரை 5 நம்பிக்கை 13 பாலி ஆறு நகர்கிறது 14 இளவேனிலும் உழவனும் 17 புதிய பாலஸ்தீனம் 19 கவிதாஞ்சலி 20 புல்வெளிப் பூக்கள் 22 மாணவிகள் 24 நம்பிக்கையின் வேர்கள் 26 வேலிகள் போட்ட எங்கள் Spurrrch 29 தொற்றுநோயும் புதிய ஒருத்தியும் 30 ஒரு கிராமத்தின் கதை 32 என் பால்ய சிநேகிதிக்கு 34 கடற்புறம் 36 வைகறைப் பூக்கள் 38 பிரியை மெய்டி ருெஸ்வற்றிக்கு 39 கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும் 41 அறுவடைநாள் 43 பரிசோதனைக் குழாய்ப் பறவை 45 பிராங்போட் நகரத்து இரவு 47 சுவடுகள் துலங்குக 49 சோமபாலாவுக்கு அஞ்சலி 51 மாலைப் பொழுதும் கீழை வானமும் 53 ஒரு கோடை இரவு-1981 55 விடியல் 56 கார்காலத்து இரவு 57 அமெரிக்க நண்பனுக்கு 59 வாக்களிக்கப்பட்ட பூமி 61 மகனுக்குச் சொன்ன தாத்தாவின் கதை 63 gtbLDrr வுக்கு மகள் எழுதிய கடிதம் 66 நன்னிலம் 68 பாலஸ் தீனத்தின் கண்ணிர் 70 பூமி புத்திரர் 72 போர்க் களத்துள் வாழும் மனிதர்கள் 74 என் இனிய லோதி 76 எமது மண்ணும் இனிய வசந்தமும் 78 நமக்கென்ருெரு புல்வெளி 80 ஒரு யுகத்தின் தரிசனம் 91 காயத்திரி 98 ஒரு நிலா இரவு 101 4, பெப்ருவரி 1987 103

முன்னுரை
1960களின் நடுப்பகுதி என்று ஞாபகம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கம் ஒன்றில் ‘நான் ஏன் கவிஞனனேன்’ என்பதுபற்றிக் கவி சொல்ல அழைத்திருந்தனர்.
அந்தக் கவிதையின் பெரும் பகுதியும் என்னைக் கவர்ந்த கோட்பாடுகளின் தொகுப்புரை யாக அமைந்துவிட்ட போதும் உயிர்த்துடிப் பில்லாது போய்விடவில்லை. மக்கள் விசயம் தெரிந்தவர்கள்; கண்களை மூடிக்கொண்டு சாக சங்கள் செய்யத் தயாரில்லாவிட்டாலும் வரலாற் றுப்பரிதையில் முன்னேறிவருகிறவர்கள்; அவர்கள் தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டமையாலேயே மேற்படி கவிதையில் உயிர்த்துடிப்புமிருந்ததாக என்னல் நினைத்துப் பார்க்க முடிகிறது.
இல்லையென்ருல் ஒரு பூசாரியின் பதிலுக்கும் ஒரு மிஷனரியின் பதிலுக்கும் எனது பதிலுக்கு மிடையே உள்ளடக்கம் மட்டுந்தான் வேறுபட் டிருக்க முடியும்; அதுவும் உயிரற்ற உள்ளடக்கம்.

Page 5
6
பிணம் என்ருல் அது மனிதனின் பிணமென்ரு லென்ன, மாட்டின் பிணமென்ருல்தான் என்ன? இன்றும்கூட இத்தகைய வினக்களை நான் எதிர் நோக்கவே செய்கிறேன்.
சிறு வயதிலிருந்தே காலங்காலமாக நமது மூதாதையர்கள் சேர்த்து வைத்திருந்த வாழ்வனு பவங்களிலும் கலைச் செல்வங்களிலும் நம்பிக்கை களிலும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட் டிருந்தது.
வாள் தாங்கிய முட்டாள் போர்வீரனைப் போல, எதிர்ப்படுகிற எல்லாவற்றையும் வெட்டி வீசுகிற அணுகுமுறையுடன் நான் வாழ்வையும் மக்களையும் எதிர்கொள்ளவில்லை.
மக்கள் சார்ந்த எந்த விடயத்தையும் பிற் போக்கானது என்ருே, மூட நம்பிக்கை என்ருே, கவைக்குதவாதது என்றே நான் கண்மூடித்தன மாக நிராகரித்ததில்லை.
நவமணிகளைத் தேடி அலைகிறவர்களைப் போல எந்த உளைச்சேற்றையும் சல்லடை போட்டுச் சலித்துப்பார்க்க எப்பொழுதுமே தயாராக இருந்தேன்.
இது இலகுவாக இருக்கவில்லை, unrtful u போராட்டமாகவே அமைந்திருக்கிறது. கணத் துக்குக் கணம் ஆணவத்தோடும் அறியாமையில் இருந்து வெட்ட வெட்டத் தழைக்கும் போலி மேதாவித்தனங்களோடும் கோட்பாடுகளின் வறண்ட பகுதிகள் எழுப்பும் நெடும் மதில்களோ டும் போராட வேண்டியிருக்கிறது. நான் முத்தை யும் நவமணிகளையும் தேடிப் பாய்ந்த மக்களது

7
பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் என்கிற எந்த நீர்நிலைகளிலும் அவற்றைப் பற்றிய சுவரொட்டி: கள் இருந்தன.
படித்துப்பார்த்ததில் ஒன்றில் இது பல பாவங்களையும் தீர்க்கிற தீர்த்தம் என்று ஒகோ ஓகோ என்று புகழ்கிறதாகவோ அல்லது கவைக் குதவாத பிற்போக்குக் குட்டை என்று நிராகரிக் கிறதாகவோ, அவை இருந்ததைத் தெரிந்துகொண் டேன். ஒருவரும் அந்த நீர்நிலை உவர்ப்பா, மதுரமா என்கிறதை அறிந்திருக்கவில்லை; இதை, விட ஆச்சரியம் என்னவென்ருல் பலருக்கு அது கடலா குளமா ஆரு என்ற அடிப்படை விடயங்? களில்கூட அறிவோ ஆர்வமோ ந்திடவில்லை.
சிறிய வயதில் ஆர்சி ஆகேேரீபீல்ற்றிப்
படிக்க வாய்த்தது அதிர்ஷ்டம்தான். தற்செய. லாக ஒரு கிராமத்துப் பெண், மாட்டு அம்மை நோய் தனக்கு வந்திருப்பதாகவும் அதனுல் அம்மை நோய் வராதென்றும் சொன்னதை பாஸ்டர் கேட்க நேரிடுகிறது. நமது குட்டித், தத்துவ ஞானிகள் பலரைப் போல அவர் அந்த வார்த்தைகள் கவைக்குதவாத பேச்சு, விஞ்ஞான நோக்கற்ற மூட நம்பிக்கை என்று தள்ளிவிட வில்லை. இந்த வார்த்தைகளைப் புடம்போட்டுப் பார்க்கவும், அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவும் லுசயி-பஈஸ்டர் தயாராக இருந்தார். இப்படித் தான் மனிதகுல விரோதியாக இருந்த அம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இது இளமையில் என்னை வெகுவாகப் பாதித்த விடய மாகும். சமகாலத்தில் ருசியப் புரட்சி பற்றிய நூல்கள் என்மீது ஏற்படுத்திய பாதிப்புக்கு இது எள்ளளவும் குறைவானதல்ல. உண்மையைச் சொல்வதானுல் பாதிப்பு பல மடங்கு ஆழமான தாகும்.

Page 6
8
மக்கள் சமூகத்தினது அனுபவங்களின் விஞ் -ஞானத் தன்மையும் கலைகளின் உயிர்த்துடிப்பும் அயராத உழைப்பும் போராட்டங்களுமே, சமூ கத்தைப் பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களி னுாடாக முன்னெடுத்து வந்தன. இதில் எனக்கும் உனக்கும் உள்ள முக்கியத்துவத்தின் வரம்பும் காலமும் குறுகியவைகளாகும். மக்கள் தங்களது சமூக வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் ஏன், எனக்கும் உனக்கும்கூடப் பொறுப்பானவர்களாக இருக் கிருர்கள். சாகசங்களைச் செய்ய அவர்கள் தயா ரில்லைதான். இதனுல் சாகசக்காரர்கள் எல் லோரும் மத்தாப்புகள் போலக் கூத்தடிப்பதை நாம் ஏற்றுக்கொள்வதற்கில்லை. மக்கள் ஒவ் வொரு அடி எடுத்து வைக்கிறபோதும் தங்களை நிலைப்படுத்திக்கொள்கிருர்கள். பல சமயங்களில் மறு அடி எடுத்து வைக்க நீண்ட காலமாகிவிடு கிறது. ஆனலும் வரலாறு முன்னேக்கி செல் கிறது. மக்களது அறிவும் கலைகளும் வெறுமனவே பொதுமைப்பட்ட தன்மையை மட்டும் கொண் டிருப்பதில்லை. மக்களைச் சேருகிற எந்த விடயமும் குறித்த மக்களது வாழ்புலத்தின் சகல நிலைமை களையும், பல்துறை நெருக்கடிகளையும், வளங்களை யும் சமூக அரசியல் எல்லைகளையும் புரிந்துகொண்டு அவற்றையும் மீறி மானுடம் மேம்படுவதற்கான நடைமுறைச் சாத்தியமான உயிர்ச் செழுமை யுள்ள ஞானமாகவும் கலைகளாகவும் விளைச்சல் பெற்றுவிடுகிறது.
கரைசலில் படிகம் விளைகிறது போல மானிட வாழ்வில் விளைந்த கலைகளும் ஞானமும் செயற்படு தன்மையை இயல்பாகவே கொண்டிருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியும் நிபந்தனைகளுமற்று மக்களை அணுகும் பக்குவம் எம்மில் எத்தனை பேருக்கு

9
வாய்த்திருக்கிறது? நாம் தத்துவஞானிகள் அல்லது மேய்ப்பர்கள் என்று அசட்டுத்தனமாகக் கருதிக்கொண்டிருக்கிற வரைக்கும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுகின்ற பக்குவம் நம் ஒரு வருக்கும் வாய்க்கப்போவதில்லை.
சென்ற நூற்ருண்டில் தென்னமெரிக்காவில் தங்கம் தேடி அலைந்த ஸ்பானியர்களைப் போல மக்களது பாரம்பரியச் செல்வங்களைத் திரட்டச் கிராமம் கிராமமாக நான் அலைந்திருக்கிறேன். இதனுல் எனது ஏட்டுக்கல்வி பாதிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்வு குலைந்துபோனது. எனினும் நான் கவலைப்படுகிற விடயம் அதுவல்ல,
நடமாடும் கலை, அறிவுச் சுரங்கங்களாக நான்" சந்தித்த வயோதிகர்கள் பலர் இறந்துபோய்விட் L607th. பலர் மரணத்தின் எல்லைகளுக்குள் வாழ்ந்துவருகிருர்கள். போரும், இயக்கங்களின் உட்பகையும் ஆதரவின்மையும் இவர்களிடமிருந்து செல்வங்களைச் சேகரிக்கும் எனது தனித்த முயற்சி களைப் பாதித்துள்ளன.
இயக்கங்களாக மக்களிடமிருந்து கலைச் செல் வங்களையும், ஞானத்தையும் கற்றுப் பாதுகாக்க வும் அவற்றை வளர்த்தெடுக்கவும் பெரும்பாலும் யாரும் முன்வருகிருர்களில்லை. இதுவே எனது கவலை. எனது தோழர்கள் பலரும் ‘மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சுவர் கோஷம் மட்டும் எழுதி எழுதியே செத்துப்போய் விட்டார்கள்.
மக்கள் வெற்றிபெறுகிருர்கள் அல்லது தமது வெற்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று கருது கிருர்கள். தோற்றுப்போனதாக அவர்கள்

Page 7
1 O
புலம்பித் தீர்ப்பதில்லை. இதனை மக்களிடம் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ளத் தவறியதுதான் சோகம்.
ஒரு கலைஞன் என்கிற வகையில் எனது பலம் எனது பாரம்பரியக் கலைச் செல்வங்களைச் சேகரிப் பதும், நமது வரலாற்றின் இயங்கு திசைகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் செப்பனிடுவதும் தான். படைப்பியல் இவ்வண்ணம்தான் எனக்குக் கைவந்தது. தூய்மைப்படுத்திய கதிர்வீச்சுக் கணி மங்களிலிருந்து அணு வெடிப்பு நிகழ்வது போலத் தான் எனது கவித்துவமும் நிகழ்ந்தது. எனது அப்பாவும், அம்மாவும் கவிதைப் பித்தர்களாக இருந்ததற்கும் இது ஓரளவு சம்பந்தப்பட்ட விடயம்தான். இவற்றை எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முன்னுரையின் நேர்மைக்கு எனது படைப் புகளே உரைகல்,
இந்தக் கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஆர்வம் காட்டிய அனைவருக்கும் குறிப்பாக நண் பர்கள் பசுவையா, ரமேஷ், ராஜம்மா கோபால "கிரிஸ்ணன், வேலாயுதம்பிள்ளை போன்றவர்களுக்கு
எனது நன்றிகள்.
ஒடுக்கப்படுகிற, ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடுகிற ஒரு தேசத்தின் கலைஞர்களுள் ஒருவன் என்கிற முறையில் எமது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் தமிழகத்து மக்களையும் பதிப்பகங்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடை கின்றேன்.
எனது கவிதைகளின் முதலாவது தொகுதி *சூரியனேடு பேசுதல்’ இவ்வருட ஆரம்பத்தில்

11
கோவையில் வெளிவந்தது. எனது இரண்டாவது தொகுதி யாழ்ப்பாணத்தில் அச்சாவதாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
வ. ஐ. ச ஜெயபாலன் 30ஏ, நாட்டு சுப்பராய முதலி தெரு 39, 8,986 மைலாப்பூர், சென்னை-600 004

Page 8

நம்பிக்கை
துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம் போல மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்ருடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப்பொழுது அது. என்னருகே
வெம்மணலில் ஆலம் பழக்கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன். என்ருலும் எங்கோ வெகு தொலைவில் இனிய குரலெடுத்து மாரிதனைப் பாடுகின்றன் வன்னிச் சிருன் ஒருவன்.
அலை (1968)

Page 9
பாலி ஆறு நகர்கிறது
அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது. இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்குகின்ற ஒசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி.
ஏதுமொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கிப் பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றேடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து *துழும் என்னும் வரால் மீன்கள்.
என்ருலும் அமைதியை ஏதோ பராமரிக்கும். அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில், அடர்ந்துள்ள நாணல் அருகே, மணற் கரையில் இரு மருங்கும் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும்

15
மருத மர நிழலில், எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேருய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்ருய் ஆராய்ந்து சிரித்துக்
கேலி செய்து
சினந்து வாய்ச் சண்டையிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்ருர், ஆணுலும் அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது.
அந்நாளில், பண்டார வன்னியனின்* படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும்.
by6).Jait
தங்கி இளைப்பாறித் தானத் தலைவருடன் தாக்குதலைத் திட்டமிட்டுப் புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினல் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும்.

Page 10
16
அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்ருர் எங்களது ஊர்ப் பெண்கள். ஏதுமொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது.
ஈழநாடு (1968)
* ஈழத்தின் கடைசித் தமிழ்க் குறுநில மன்னன்.
1803இல் கற்சிலைமடுப்போரில் வெள்ளையரால் கொல்லப்பட்டான்.

இளவேனிலும் உழவனும்
காட்டை வகிடு பிரிக்கும் காலச் சுவடான ஒற்றையடிப் பாதை. வீடு திரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன்
தோளில் கலப்பை சுமந்து தொடர்கிருன்.
தொட்டதெல்லாம் பொன்னுக தேவதையின் வரம்பெற்ற மாலை வெய்யில் மஞ்சள் பொன் சரிகையிட்ட நிலப்பாவாடை
நீள விரிக்கிறது.
இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்.
பொற்குருவி ஒன்று மரக்கிளையின் நுனிக்கு வந்து அதட்டும். அங்குமிங்கும்
காட்டு மல்லிகைகள் காற்றையே தூதனுப்பிக் கண் சிமிட்டும்.

Page 11
18
அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா,
ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம்.
(1970) (م&;9ے

புதிய பாலஸ்தீனம்
காய்ந்த பாலை மணல் வெளியில் கணிகின்றன நேர வெடி குண்டுகள். காலம் மெல்ல மெல்லக் கழியும். யோர்தான் நதிப் படுகையில் காற்றும் சுடுமணலும் புரளும். நாணற் புதர்களிடை மீன்கொத்திப் பறவைகள் நம்பிக்கையுடன் பாடும். கந்தல் கூடாரங்களை புயல் அலைக்கும் போதெல்லாம் சம்மட்டிகள் உறுதியுடன் தொடர்ந்தொலிக்கும். முளைக்கட்டைகள் மேலும் மேலும் மண்ணுக்குள் ஊடுருவும். யூத பாலஸ்தீன உழைப்பவர்கள் சகவாழ்வின் புதியகொடி திராட்சைக் குலைகளைப்போல் எங்கும் சிரிக்கும். நாளை மலரவுள்ள லீலிகளின் மறைவில் இரைதேடும், காட்டுப்புருக்கள் பாடும் : 6 கானல் நீர் லீலிப் புதர்களையும் தங்க ஆறுகள் வரலாறுகளையும் அடித்து அள்ளிச் செல்வதில்லை."
SFEDir (1971)

Page 12
கவிதாஞ்சலி
செங்குருதி பொருக்கு வெடித்துச் சிலுவைக் காடாய்க் கிடக்கும் சிலி மணித்திருநாட்டில் உன்னுடைய கல்லறையை எங்கே நான் தேடுவேன். இலங்கை எங்கும் போராடும் உழைப்பவர்கள் சார்பாக மலர் வளையங்களைக் கண்ணிர் மணி மாலைகளை எங்கே நான் சூட்டுவேன். எங்கும் சிலுவைகள் காடாய் விரிகிறதே.
எங்கோ வெகுதொலைவில் எழுச்சி தரும் பாடலொன்றின் ரீங்காரம் கேட்கிறது. பாவமெதும் செய்யாத பாட்டாளித் தோழர்களின் கொலைக்களத்தில் குற்றமற்ற ஆத்மாக்கள் விம்மி அழுகின்ற வேதனையில் * சிறு நெருஞ்சிக் காட்டினிலே? பாவாணன் நெருடாவை வாயை அடைத்து, வாழவிட்டு அணுவணுவாய் வதைக்காமல் அடியோடு கொன்றவரே, எரிமலையின் வாய்மீது

21
கொற்றம் அமைத்துக் கொலுவிருக்கும் பாதகரே, பொன்னர் சிலியின் புதுயுகத்தின் வித்தான எங்கள் கவிஞனை எங்கே நடவு செய்தீர்?
உயர்ந்த மலைச் சரிவுகளில் ஊர்ப்புறத்துக் காடுகளில் தேசபக்தர் ஓயாது துப்பாக்கி வேட்டுகளால் செலுத்துகிருர் அஞ்சலியை.
ஸ்பெயினின் பாசிச இராக்கதரை வர்ணத்தால் பழி கொண்டான் மாகலைஞன் பிக்காசோ.
நானும் நெஞ்சக் கொதிப்போடு நிற்கின்றேன்.
புதுயுகத்தின் வித்தான எங்கள் கவிஞனை எங்கே நடவு செய்தீர்?
சிரித்திரன் (1974)

Page 13
புல்வெளிப் பூக்கள்
காட்டுத் தீ அஞ்சாது மழைத் துளி வீழ்ந்ததும் பசுமையாய்ப் படரும். புல்வெளி போன்ற வியட்நாம் கிராமம் குதுரகலம் மிக்க சிறுவரின் பிஞ்சுக் கால்களின் கீழே
ஒவ்வொரு
மண்ணின் பருக்கையும்
உயிர் பெறும்.
கைவிடப்பட்ட அமெரிக்க டாங்கியின் தோளிலும் தலையிலும் மண்ணின் புதல்வர்கள். * எங்கள் டாங்கி
இரும்பு யானை வானத்தைத் துழாவுகின்ற தும்பிக்கை துவளாது எப்போதும் ” பாட்டுக் கட்டிவிட்டார்கள் பாலகர்கள்.
வயல்சேறு கமகமக்கும் எருமைக்கடா ஒன்றில் இளவரசன் ஒருவன் எதிர்ப்படுவான். * விலகு, ஒரம் போ, எங்கள் இரும்பு யானையில் மலர் வளையமுடன் அவசரமாக ஹோ மாமாவின் சமாதி செல்கிருேம் குறுக்கே வராதே.” தன்னம்பிக்கை ஒலிப்பூ சிதறும்.

23
சின்னஞ் சிறுசுகள் சிரிப்பே இந்தப் பிரபஞ்சத்தின் ஜீவ வித்துகள். போர்க்குணத்தில் எருமைக்கடாவோ மண்ணை வகிறும் கும்மாளத்தில் சிறுவனின் குரலோ தீர்க்கமாய் ஒங்கும். * நில், திரும்பிச் செல் ! ஹோ மாமா மனம் உவக்கும் குறிஞ்சி மலர் வளையமெது? ஆக்கப் பணியன்றே? திரும்பிச்செல் திரும்பிச்செல்!? மீண்டும் சிரிப்பின் மலையருவி கொப்பளிக்கும்
மீண்டும் சிரிப்பு நேபாம் குண்டுகளை நாணிடும் சிரிப்பு. போராட்டத்தை அர்த்தப்படுத்தும் புழுதி தோய்ந்த புதல்வரின் சிரிப்பு. ஆயிரம் காட்டுத்தீயும் அணைந்தே போகும். முகங்கொடுக்கும் புல்வெளிகளோ பூத்துக் குலுங்கும்.
(1975)

Page 14
மாணவிகள்
தாய்மை தளிர்த்த இளம்பெண்ணின் பூவுடல்போல் பொலியும் திருக்கொன்றை நிழலை வளர்த்தி வைத்த வளைவு. நெடு நேரம், வாயாடிப் பெண்கள் வாலிபர் கண் மந்தைகட்கு ஆவுறிஞ்சிக் கற்களாய் அமைவதிலே, மனேரம்மியச் சூழல் நிலவும்.
எங்களது பல்கலைக் கழகத்தின் உயிர்த்துடிப்பாய்ப் பல்மொழி இனிமைகளும் கலகலக்கும்.
விரக்தி இல்லை, புறங்கூறல் இல்லை, எதிர்காலம் அஞ்சுகிற கோழைமையும் அங்கில்லை. பூவையரின் கண்களிலே புத்துணர்வே சுடராகும்.
நெருக்கடிகள் கோடி வாழ்வின் சுமை கோடி, சிலவயிற்றில் பசி கனலும் சேதிகளும் நானறிவேன்.

25
ஆனலும் அவர்கள் முகை வெடித்துகாலை இளம்பனியில் பூப்பு நீராடிச் சிரிக்கும் புது மலர்கள். புன்மை தகtக்கும் புதுயுகத்தின் தேவதைகள்.
சமர் (1976)

Page 15
நம்பிக்கையின் வேர்கள்
யாழ்ப்பாணத்து முற்றவெளி. கோடை மேகங்கள் வாடைக்கு விரித்துவைத்த மரகதப்பாயில் "ஆத்மாவை ஆறப்போட்டுத் தன்னந்தனிமையில் விடப்பட்டிருந்தேன். மாலைப்பொழுதோ காற்றில் கரையும் * கற்பூரம்போல
உணரப்படாமலே கழியும். அவளின் நினைவுகள் சிவனெளிபாதக் கற்சுவடுகள் வீணையில் நரம்புக்கூந்தலைக் கோதும்அவளது
வெண்நகம் பூத்த விரல்களின் நுனிகள் பந்தரில் பெருகும் பவளமல்லிகைகளாய் கண்களுள் நிறைந்து அசையும், போக்கினை மாற்றிப் புரண்ட கங்கை, பாலைவனமாக்கிய படுக்கை என் வாழ்க்கை, அதே முற்றவெளி.

27
இனி அவள் அருகே என்றும் இல்லை. இங்கே யாரும் இப்போதில்லை. தன்னம்பிக்கை சாகக்கிடக்கும். தலைக்கு மேலோ விரக்திக்கழுகுகள். அடித்துப்போட்ட பாம்பாய் நெளிந்தேன். கண்கள் நாலு புறத்தையும் அளக்கும். பாசி கறுத்துப் பார்வையில் இடறும் ஏகாதிபத்தியம் எழுப்பிய கோட்டை எத்தனை பெரிதாய் இருந்தும் அதனை என்னுடை நெஞ்சம் ஏளனப்படுத்தும். எத்தனை தடவை எங்களின் முன்னேர் முற்றுகை இட்டு முடக்கிய கோட்டை சொந்த மண்ணின் சுதந்திரம் காக்க அந்த நாளே ஆயுதம் தாங்கினுேம், மலையே வரினும் தலையே சுமவென நிலைகுலையாது நிமிர்ந்தே நின்ருேம்,
இன்றும் எம் வாழ்வில் அன்ருடம் தலையிடும் ஏகாதிபத்தியம்.

Page 16
28
வெள்ளை வேட்டி உள்ளூர்த் தரகர்கள். இவர்களின் நினைப்பு பஞ்சினில் விழுந்த
சிறு பொறியாக நெஞ்சினில் குரோத நெருப்பினை மூட்டும் எமது பாரம்பரியம் துலங்கத் துலங்க அவளும் இன்றி யாரும் இன்றி வெறிச்செனக் கிடக்கும் முற்றவெளியில்
உலகம் முழுவதும் தோளோடு தோளாய் என்னுடன் துணைக்கு இருப்பது புரியும்.
நாலு புறத்தும்
நம்பிக்கை முளைகள்
தலை எடுக்கும்.
இப்போது
சாவுக்கும் என்னல் சவால்விட முடியும் ; சவால்களை என்னல் சந்திக்க முடியும்.
அலை (1976)

வேலிகள் போட்ட எங்கள் கிராமம்
கோடை நாட்களில் புடமிடப்பட்ட புவிமுற்றத்தின் நாலா புறத்தும் புதிய ஒளியும் புதிய ஓசையும். காந்தர்வ லோக எல்லையின் கீழே வான்முடி முதலாய் மணிஅடி வரைக்கும் பறவைகள் இன்னிசை பயிலும்; நறுமணம் தோய்ந்த முந்தானைகளைப் பாதைகள்தோறும் நழுவவிட்டு வண்டோடி மலர்கள் சிரிக்கும்; வானே ஆயினும் மண்ணே ஆயினும் கடலே ஆயினும் சித்திரை நாட்களில் ஆத்மாவுக்குப் புத்துணர் வாகும். எங்கள் ஊரில் புழுக்கம் தீர பழைய கணக்கு ஏட்டின் தூசி முகங்களில் படிந்த பெரிய மனிதர்கள் ஆலமரத்தின் கீழே கூடுவர். தாங்கள் போட்ட கிடுகு வேலியின் உயரம் பற்றியும் அந்த வேலியின் பின்னே நரைகளைச்சூடும் தங்கள் பெண்களின் கற்பைப் பற்றியும், அவர்களுக்காக, மலை முகடுகளில் தங்க மலர்களைத் தாங்கள் தேடும் சாதனை பற்றியும் எத்தனை பெருமை பேசிக்கொள்ளுவர்!
சமையலறையின் வேலியைப் பிரித்தால் சமவெளி எங்கும் குறிஞ்சி மலர்கள்.
மல்லிகை (1977)

Page 17
தொற்றுநோயும் புதிய ஒருத்தியும்
மாரி மழைக்கரங்கள் பாய் விரித்த பசும் புல்லில் பூச் சொரிந்து இளமாலைப் பொழுது கமகமக்கும். வழிநீள நீட்டிநிமிர்ந்து கிடந்து தழுவும் கருநிழல்கள் தம்மைக் கண்டுகொள்ளாத செட்டோடு பல்கலைக் கழகத்துப் பாதையிலே இவள் இட்ட அடி பலர் கண்ணில் இவள் எடுத்த அடி பலர் நெஞ்சில்.
மைதானப் புற்பாய் விரிப்புக்கு அப்பாலும் கொத்தும் கருவிழிகள் தெறிக்கும், எழுப்பப்படுகின்ற கொங்கிரீட் விருட்சங்கள் மேலிருந்து ஏழைத் தொழிலாளர் வேலை முடிந்த களைப்போடு இறங்குகின்ருர், களைத்தென்ன உழைத்தென்ன, நாளையக் கஞ்சிக்கு யாரே வகை சொல்வார்.
அவளுடைய கிராமத்தும் இதுபோல் அவலங்கள். குப்பி விளக்கும் கொழுத்த வகையின்றி ஏழைக் கிராமத்தில் எத்தனையோ மாணவர்கள். நடை வரப்பின் தோகை மயிலாகத் தொடருமிவள்
தான் வந்த கிராமங்கள்,

31
வாழ்வுக்காய்ப் போராடும் சொந்தங்கள் எல்லாம் சொகுசில் மறப்பாளோ?
குளுகுளு அலுவலகம், மணியடித்தால் சேவகங்கள், வம்பளக்கத் தொலைபேசி; கப்பல்கார் இருக்கைகளில் கச்சிதமாய்த் தன்னுடலின் மிதப்புகளில் பதிவுகளில் மெல்ல விரல் நழுவவிடும், கொழுத்த துணை; வீட்டில் எடுபிடிக்கும் தன் மேல்நிலைமை காட்டுவதற்கும் மலையகத்தில் பிடித்த வாயில்லா ஒரு சிறுமி. இந்தக் கனவு நோய் இவளுக்கும் தொற்றிடுமோ? நடைவரம்பின் தோகை மயிலாகத் தொடருமிவள் தான் வந்த கிராமங்கள், வாழ்வுக்காய்ப் போராடும் சொந்தங்கள் எல்லாம்
சொகுசில் மறப்பாளோ?
மல்லிகை (1971)

Page 18
ஒரு கிராமத்தின் கதை
மிருசுவில் கிராம வயல் வரப்புகளில் செம்மண் தோய்ந்து மண்புழுக்களைப்போல் இழிசனர் சிலபேர் தரிசனம் தந்தனர். கிழடுகள் இளசுகள் சின்னஞ் சிறுசுகள் நூறு நூறு வருடத்தியல்புபோல் களை பிடுங்குவதற்காய்க் காலையில் நடந்தனர்.
நிலாமண் மீது மானிடன் மிதித்து தசாப்தம் ஒன்று கழிந்ததன் பின்னும் யாழ்ப்பாணத்துப் பள்ளிக்கூட வாசலை மிதிக்காப் பச்சைக் கன்றுகள் முன்னே துள்ளும், மாரி வெள்ளம் தேங்கிய பள்ளம் சவாலைப் போல முன்னே கிடக்க சிறிசு ஒன்று கல்லை விட்டெறியும்.
**சாதி வெள்ளாளர் குளிக்கும் குளமடா" *குளித்ததற்காக உங்கள் மாமனைத் தென்னை மரத்துடன் வெட்டி வீழ்த்தி சென்ற வருடம் கொன்றனர் பாவிகள்.”* நீர்விளையாட துருதுருத்தவனின் முதுகில் ஓங்கி ஓங்கி அறைந்து கிழடு ஒன்று ஒப்பாரி யாகும். இளசுகள் எல்லாம் வெம்மி வெடிக்கும். *நாங்கள் வளருவோம் நாங்கள் நிமிருவோம் அந்த மரத்தின் இலைகளைத் தொடுவோம். நாங்கள் இந்தக் குளத்தில் குளிப்போம்.” சிறுவன் மீண்டுமோர் கல்லை விட்டெறிவான்.

33
மாரி வெள்ளத் தேக்கம் கண்டு கிழடுகள் அஞ்சும், இளசுகள் விம்மும், மாவிட்ட புரத்துக் கோவில் வாசல் தடைகளைத் தகர்த்தவர் சந்ததி நாங்கள் என்ப போலச் சிறுசுகள் மட்டும் முன்னே விரியும் வயல்வெளியினிலே, கற்களைத் தேடிக் கண்களை எறியும்.
தீண்டாமை ஒழிப்பு பெருஜன மலர் (1977)

Page 19
என் பால்ய சிநேகிதிக்கு.
என்ருவதோர் மாரி காலத்துக் காலைப் பொழுதில், கலைந்து போன கனவுகள் போல காற்றுடன் புரளும் புற்றீசல் இறகுகள் கால்கள் நசிகையில் உந்தன் நினைப்பு ஒடி மறையலாம். தம்பலப் பூச்சியின் அழகு கண்டு அப்பா என்றென் செல்வம் வியக்கையில் மின்னலாய் உந்தன் எண்ணம் வெட்டலாம்.
நண்பர்களோடு சிறிது மதுவிலும் சிகரெட் புகையிலும் ஆழ்ந்து போயிருக்கையில். அர்த்தமற்ற வம்புப் பேச்சுடன் கை கால் மூக்கு கொம்புகள் வைத்து உனது கதைகள் வேடிக்கையாகும்.
இரவின், கடன்வழித் தன்மையை நீக்க ஊடலை - மாலைத் தேநீர் வேளையே தொடங்கும் மனையாளோடு உன்னைப் பற்றி எத்தனை பேசலாம் எங்கே மணந்தாய் எத்தனை பிள்ளைகள் தலைமயிர் இப்போ கொட்டி விட்டது என்பவைகூட ஆர்வந் தருபவை.

35
சந்திகள் ஆயிரம்
சந்திப்பு ஆயிரம் என்ருே மகிழ்ந்த வானவில் அழகு நாளையோர் வேளை மனேகரப் பொழுதில் நிண்வெனும் தொடுவான் முகப்பில் சுடரலாம்.
(1978)

Page 20
கடற்புறம்
காலமகள் மணலெடுத்துக் கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னுடி விண்ணுே தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்ருள்.
தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை : சிறு குடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழக்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்றுச் சுமந்து வரும். காற்றுப் பெருங்காற்று காற்றேடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்க கோஷமிட்ட கடற் பெருக்கு. கல்லு வைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது.

37
திரைகடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்தச் சிறுகுடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும் பிச்சை என்கின்ற கோணல் நினைப்பு, பெருமூச்சு.
தானுய் விடிவெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான். வாழ்வில் இருள் தொடரும்.
மல்லிகை (1979)

Page 21
வைகறைப் பூக்கள்
நெடுநாளின் பின் சன்னலைத் திறந்தேன். இனிய வசந்த இளைய ஞாயிறின் புத்தொளி தன்னை எதிர்கொள்வதற்காய் துன்பச்சிலந்தி வலைகள் சிதைய தூசிகள் கனக்கும் சன்னலைத் திறந்தேன். எங்கும் எங்கும் மலர்கள் சிரித்தன. எங்கும் எங்கும் பரவி நிறைந்த வசந்த நாளின் வைகறைச் செக்கல் இருளின் தீட்டைப் புனிதம் செய்தது. மனிதனை விடவுமோர் மகத்துவம் உண்டோ. வாழ்வை மிஞ்சுமோர் இழப்பும் உண்டோ, நினைவின் விரல்கள் ஓயாதுருட்டும் விரக்தி மணிகளின் செபமாலையினை பாதாளத்துள் வீசி எறிந்தேன். நொறுங்கிப்போன ஊர்களின் நடுவில் நொடித்துப்போக மறுத்து நிமிர்ந்த, மட்டக்களப்பு" மானிடன் போல என்னையும் உணர்ந்து குதுரகலமடைந்தேன். புத்துணர்வோடு தென்றலை நுகர்ந்தேன். எங்கே அந்த வானம்பாடி அடைத்துக் கிடந்தஎன் அறையின் வெளியே பள்ளியெழுச்சி பாடிய பறவையே இதோ இதோ, எனது கதவுகள் திறந்தன - ஈடன் பூங்கா நடுவில் அமர்ந்து, விலக்கப்பட்ட கனிகளைச் சுவைப்போம். எமது வைகறை ஒளியைத் தடுத்தால் கைலயங்கிரியின் மருப்பையும் தகர்ப்போம்.
அக்கினிக்குஞ்சு (1979)
* மட்டக்களப்பை புயல் அழித்த வருடம் 1979.

பிரியை மெய்டி ருெஸ்வற்றிக்கு
இரு மருங்கிலும் ஏவுகணைகளாய்க் கொங்கிறீட் எழுந்து முகில்களுக்கு முதுகு சொறியும் நியூயோர்க் நகர வீதிகளிலே
நீ そ
முகக் கணிப்பின்றி
சிறுத்துப்போய் தனித்துப் போனதோர் மாலைப் பொழுதில் அர்த்தமற்ற அவசரத்தோடு அறுந்த பட்டமாய் திசை ஏதுமின்றி இடம்பெயர்கையிலே பிரியை உன் மனசு என்னை நினைக்கலாம்.
நியூயோர்க் நகர சுப்பர் மாக்கட்டில்’ வாழ்வின் அர்த்தங்கள் கொள்வதற்குண்டென. நீ நம்பியதும்கீழைத் தேச வயல்புறங்களிலே சேற்றில் பூத்தவை சிரிக்குமென்று பிடிவாதமாய் நான் விவாதம்புரிந்ததும் இப்போ நினைக்கையில்
எத்தனை சிரிப்பு.
உடன்பாடின்றி ஆளையாள் விட்டு வழுவினேம் எனினும் உன்னை நான் நினைப்பேன். அறுவை வைத்திய அரங்கினுள்ளே மனேவசியத்தால் மயக்கிய ஒருத்தி மேல்

Page 22
40
கத்தியை ஊன்றும் வைத்தியணுக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பென்ற மரபுகள் நிறைந்து தான் இல்லாத கீழைத் தேய மனைவியை அணையும் நாளையில் நானும் உன்னை நினைப்பேன் அன்பே.
அந்தச் சித்திரா பெளர்ணமி இரவில் ஆலமரத்தின் தோகைக்குள் நாம் படுத்திருந்த கரும் நிழல்விரிப்பில் விரல்களை ஒட்டி நிலவுத்தேவதை வெள்ளிச் சருகைக் கோல மிழைக்க, இந்து சமுத்திரம் சாமரை வீச, கூதல் பனிக்கு ஒருவரை ஒருவர் போர்வையாய் மூட இழுத்துக்கொண்டது நினைவு மாலையில் இரத்தினப் பதிவு. வடபூம்பாதியின் அமெரிக்க மங்கை நீ; தென்பாதி வாழும் ஈழவன் நான். இதுவே நிஜத்தை எதிர்கொள்ளல் என்பது. இருவரும் தப்பி ஓடுவதற்கு
"யூட்டோப்பியா’ எனும் கோட்பாட்டு உலகம் இங்கும் இல்லை. அங்கும் இல்லை.
பிழைபடக் கோர்க்கப்பட்ட நம் உலகைக்
குலைத்து மீளக் கோர்ப்பதே நம் முன்
எஞ்சியுள்ளதோர் சவாலாகும். நிலவுப் பயணம்போல்
எதிர்கொள இது
ஒரு பெரும் சவாலே.
(1979)

கள்ளிப் பலகையும் கண்ணிர்த் துளிகளும்
*முரட்டு மேதை” என்பர் மேலோர் "இங்கிதம் அறியான் அறியான்’ என்பர் கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன் ஒரே ஒரு முறையே வாழுமிவ் வாழ்வில் கையாலாகாத கோழையைப் போல கொடுமையும் சூதும் நிறைந்த உலகைச் சகித்தும்
ரசிக்கும் பாவனை செய்தும் சான் ருேன் என்று மாலைகள் சூட நானும் எனது நண்பரும் விரும்போம்.
வீணையோடும் “ஸ்டெதஸ்கோப்' அரிவாள் சம்மட்டி போன்றவை பழகிப்போன கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி எனது தோழர் புடைசூழ்வார்கள்.
பொன்னய் அழகு பொலியினும் விலங்கை அப்பியமலருடன் அருவருத் துதலுவோம். வெடிமருந்து தோய்ந்த எம் நாவு ஓய்ந்திருக்காது. தடைகள் சீனப் பெருமதிலாயினும் தகர்க்கும் பணியைப் பேனைக்குச்சியால் அங்குரார்ப்பணம் செய்வேன். தடைகளைத் தகர்த்தும் விலகியும் தொடர்ந்து அதிமானிடராய் முன் சென்றிடுவோம்.

Page 23
42
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும் மானிடர் எமது வம்சக் கொடியை சவக்குழி விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ? விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
விடுதலை பெற்ற தோழியரோடு கட்டாந்தரையின் வாழ்வே உவப்பு. பெரிய இடத்துச் சீமைநாய்களாய் கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில் எமது தோழர் தோழியர் தேயார்.
*கொடிய உலகம் சான்ருேன் என்னவும் இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும், குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்? பெறுமதி கூடிய பாதணி இலங்கும் கால்களை தேடியே முத்தம் கொடுப்பார். பொன்முலாமிட்ட சவப்பெட்டிப் பரிசால் உலகம் அவர்களை கெளரவம் செய்க. வெளிப்பூச்சற்ற கள்ளிப் பலகையும் வெம்மை நிறைந்த கண்ணிர்த் துளிகளும், எங்களுக்காக இருக்கவே செய்யும்.
நுட்பம் (1979)

அறுவடைநாள்
கண் அளக்க முடியாத கிராமத்து வயற்பரப்பில், பொன் அளந்து நெல்மணிகள் சரிகின்ற ஒரத்தில், தெம்மாங்குத் தேன்சிந்தும் "தலைக்கறுப்பு சில பெயரும். ஆகாசக் கொள்ளைக்கு அல் அலையாய் நுழைகின்ற பறவைத் தொகுதிகளை விலக்குகையில் கைவளைகள் பாடும். நடை வரப்பின் ஓரத்தில் மலர்கின்ற வயலாம்பல் எழுகின்ற பகலவனின் கொடுமைகட்கு முகங்கொடுத்துச் சிரிக்கும். பொத்துகின்ற வெயில் கரத்தின் விரலிடையால் தப்புகின்ற காலைப் பணியின் புகார்த் திரையுள்
சேலைகள் தூக்கி செவ்வாழைக் கால் துலங்கும். வயிற்றில் பசியும் மனதிலே தோல்வியுமாய்த் துவண்டாலும் வாழ்வென்னும் நம்பிக்கைக் கொடிக்காலில் நிமிர்கின்ற பூங்கொடிகள் கையில் அரிவாளும்

Page 24
44
கால்நடையில் அணிவகுப்பும் மெய்யில் வியர்வையும் விழிச்சுடரில் நிதானமுமாய் எங்கள் கிராமம் எழுந்து வருகிறது
மல்லிகை (1 979)

பரிசோதனைக் குழாய்ப் பறவை
சோதனைக் குழாயுள் தேங்கி மெல்லப் பரவுகிற வண்ணப் புருேமின் ஆவியாய் வழுவுகின்ற பட்டினுள்ளே செவ்விளநீர் மேனி பொதிந்து நடை பயிலும் தேவதையே! காலைப் பணி தோய்ந்து புத்துணர்வு பொலிகின்ற பொன் நொச்சிப் பூவே! இன்னும் சில நொடிகள். இன்னும் சில அடிகள். விஞ்ஞான ஆய்வகம், உன்னை விழுங்கி விடும்.
நில் அங்கே, கவிஞன் நான் ஆதலினல், உன்னுடைய கவின் இளமை நலன் இனிமை தம்மில் சிறிது, லயித்தல் அறமாகும்.
இதயத்துள் ‘ஈதராய்' தெறிக்குமுன் கண்வீச்சை, நல்ல தமிழில் சிருஷ்டிப்பேன். நடந்த தென்ன இப்போ
‘துருசுக் கரைசலில் சிதையும் இரும்பில் செப்பாக,
நாணம் உன் கஸ்தூரி மஞ்சள் கன்னத்தில் படருவதேன்?

Page 25
46
நீ வடிவுடைய நாயகியாள். நல்ல கிராமத்து பெண் பாவை. விரிவுரை மண்டபங்கள் விஞ்ஞான ஆய்வகங்கள் இவைகள் மட்டுமல்ல பல்கலைக் கழகம்; அப்பாலும் ஓர் உலகம் பரந்துள்ளது.
(1979)

பிராங்போட் நகரத்து இரவு
குல்கொண்ட பன்றியின் கருவறை போன்ற 'பிராங்போட் நகரச் சந்தியில் ஓர் அறை. (போர்வையில் சுருண்ட யாழ்ப்பாணத்து நடைப்பிணம் சிலது எகிப்திய மம்மியாய் அடுக்கிக் கிடக்கும்.
தோட்டி வேலைக் குறிக்கோளோடு நாயாய் அலையும் பகல் பொழுதுகளும் அடித்த பாம்பாய்ப் படுக்கையில் புரளும் இரவுமாக நாட்கள் நகரும்.
வெப்பமானியில் பூச்சியத்தின் கீழ் பாதரசத்தின் வெண் நிரல் குறுகும் இந்த இரவில் யாரோ விம்மும். கனவுகளோடும் கற்பனையோடும் எதிர்பார்த்திருக்கும் தங்கைமர்ர்கள், ஊர்ப்பெரும் குடும்ப இரும்புப் பெட்டியில் மாட்டிய ஈடாய்க் காணி நிலங்கள், சொந்த நாட்டில் அநாதையாகவும் சர்வதேசத்தில் அகதிகளாகவும் புயல் கடந்த மட்டக்களப்பாய்ச் சிதைந்துபோகும்
ஒடுக்கப்பட்ட
இளமை வாழ்வு,
இவற்றில் ஏதோ அதனது நெஞ்சப் புண்ணில் முள்ளாய் நெருடும் போலும்.

Page 26
48
கால் மாட்டினிலே தனிக் குடித்தனம் நடத்த வாங்கிய *சோஸ்பான்’ சிலது இடறும், கைகளுக்குள்ளே முகூர்த்த நாளை முந்திக்கொண்ட விவாகம் குழம்பிய சேதி கசங்கும். கொசுவுக்கு அஞ்சி வீட்டைத் துறந்தவன் பனித்துகள் சொரியும் அந்த இரவுடன் மெளனமாக விம்மி அழுகிருன்.
மல்லிகை (1979 டிசம்பர்)

சுவடுகள் துலங்குக
இதோ இதோ எமது தோழனின் திருவுடல். இவனையே எமது சுதந்திரக் கோட்டையின் மூலைக் கல்லாய்ப் புதைப்போம் எழுக.
மத்தாப்பாக வானில் ஒளிர்ந்து பம்மாத்துக் காட்டும் பதர்களை விலக்கி இவனையே எமது துறைமுக வாசலில் கலங்கரைவிளக்கமாய்க் கொளுத்துவோம் வருக.
போர்க்களந்தன்னில் வாளை எறிந்து சரசங்களாடி சதுரங்கம் மகிழ்ந்து தோழர்கள் மீது சேற்றை இறைத்துக் கோமாளிக் கூத்தவன் ஆடியதில்லை. சேற்றிலும் மணலிலும் துயரிலும் இருளிலும் காட்டிலும் எமது துணைவந்தவனின் காலடிச் சுவட்டைப் பேணுவோம் வாரீர்.
திரேத யுகத்தின் கீதை முழங்கிய கண்ணன் சங்கு மண்ணில் விழுந்தது. காண்டீபத்தை விஜயரே எடுப்பிர் சங்கற்பங்கள் வீரரே எடுப்பிர்
கள்ளுக் குடிக்க மொட்டைப் பனைக்குத் தண்ணீர் இறைப்பவர் கேலிகள் சிரிக்க * வடலி வளர்த்தவன் எமது தோழன்.

Page 27
50
சருகுகள் குவிந்த எமது பூமியில் புதிய காற்று புயலாய் வீசும்; புயல் கடந்த பாதைகள் தோறும், உனது காலடிச் சுவடுகள் துலங்கும்.
தர்க்கீகம் (1980)
* குட்டிப்பனை
கே. சி. நித்தியானந்தாவின் மரண ஊர்வலத்தில் வாசிக்கப்பட்ட கவிதை. இவர் இலங்கைத் தொழிற் சங்கங்களின் வரலாற்றில் முக்கியமான ஒருவர். பின்னர், தமிழ் அகதிகளின்-குறிப்பாக மலையகத் தமிழர்களின்-புனர் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். “கிழட்டுப் புலி’ என சந்தேகிக்கப் பட்டவர்.

சோமபாலாவுக்கு அஞ்சலி
எழுபத்தேழில் மரண பயத்தால் உயிரைக் காக்க சாவின் வாசலில் பதுங்கியிருந்தோம். வென்புருக் குஞ்சாய் எங்கள் பிள்ளைகள் வெப்பக் காற்றில் வாடிய முல்லைகள். வானெலி எங்களைப் போருக்கழைத்தது. யாழ்ப்பாணத்துத் தெருக்களில்கூட எங்கள் ரத்தம் சுவைக்கப்பட்டதாம்.
நெடுநாள் கழிந்து எண்பதாம் ஆண்டில் நீதிகேட்டு நீங்களும் எழுந்தீர். வானெலி மீன்டும் பாழ்வாய் திறந்தது. வயிற்றில் அடிக்க வேண்டாமென்ற சோமபாலாவின் மனைவி மக்களின் வயிற்றிலும் நிரந்தர அடி விழுந்தது. வட்டிக் கடையில் பொற்சங்கிலியை இழந்த பெண்களுக்குச் சைக்கிள் சங்கிலி. இதுதான் இந்தக் கலியுக தர்மம். இதுதான் சாத்தான் ஒதும் வேதம். எங்களை மிதித்த அதே சப்பாத்துகள். எங்களை விளாசிய அதே சங்கிலிகள், முகவாய் இரத்தம் துடைக்கும்போது அடையாளத்தைக் கண்டுகொள்வீர். போர்ச் சன்னதங்கள் மெளனமான * சோமபாலாவின் சமாதியில் கண்ணிர்மாலை சூடினுேம் நாங்கள்.

Page 28
52
எங்கள் இளைஞரின் ஆழுத சாம்பரை உங்கள் கண்ணிர் ஆற்றிடுமானல் கிருத யுகத்து அசுரன் தோன்றுவான்; மலைகளைப் பிடுங்கி மடுவில் வீசுவான். உதைக்கும் அந்தச் சப்பாத்துகளையும் அடிக்கும் அந்தச் சங்கிலிகளையும் நரக லோக மூலையில் புதைப்பான். விருந்துகள் உண்டு சதுரங்கமாடும் இந்த நாட்களின் துட்டகைமுனுவை ** இந்த நாட்களின் எல்லாளனேடு பாதாளத்துள் தூக்கி வீசுவான். பீனிக்ஸ் பறவைபோல் எங்கள் இளைஞரின் சாம்பர் உயிர்க்கும். சோமபாலாவின் சமாதி திறக்கும்.
மனிதன் (1980)
* சோமபாலா, 1980 ஜூலைப் பொது வேலை நிறுத்தத்தின்போது காடையர்களால் கொல்லப் பட்ட சிங்களத் தொழிலாளி.
* துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை கி.மு இரண்டாம் நூற்ருண்டுப் போரில் கொன்றன். இவன் சிங்கள தேசிய வாதிகளின் ஆதர்ச புருசன்.

மாலைப் பொழுதும் கீழை வானமும்
வண்ண வண்ணச் சாந்துகளை மதலை கொட்டி அளைந்து வைத்த மேலைத் தொடுவானில் இன்னும் ஒளி துலங்கும்.
பின்னேரம் சாகவில்லை பிறை முளைத்த போதும். முன் இரவு இன்னும் முழுதாய்ப் பிறக்கவில்லை. தோல்வியுற்ற எனது காதலின் இளவரசி அந்தப் பம்மாத்துக் கள்ளி மெல்ல மெல்ல 6ான்மார்பில் முகம் புதைத்துக் கைகளினைத் தோள்களிலே பரப்புதல்போல் மெதுவாகப் பணிவாடை மேனிதனை ஸ்பரிசிக்கும்.
எல்லாம் இழந்து போர்க்களத்தில் தனித்தவரை மேலும் முன்நோக்கென்று முடுக்கிவிடும் கீழ்வானம்.
இந்த வையத்துச் செழுமையினை நுகர்ந்து மிதமதர்த்தேன். இந்த மேகம் இனிது.

Page 29
54
வாடை ஒரு சஞ்சீவி. இந்த உலகம் என்றும் இளமையுடன் நம்பிக்கை வாழ்ந்து வளருகின்ற அசோகவனம். அங்கொன்று இங்கொன்ருய்ச் சீதை சிறையிருப்பாள். அணியிழந்து இராமர்கள் தவிப்பார். என்ருலும்.என்ருலும் ஆறுதலாய் திரிசடைகள் ஒளடதமாய் சஞ்சீவி மலைகள் காவிவர அனுமன்கள் என்றும் இருப்பர்.
ஆயிரம் தோல்விகளினூடும் இந்த உலகம் இனிதாகும்.
கிருதயுகம் (1981)

ஒரு கோடை இரவு - 1981
சீமான் வீட்டுச் செல்வங்கள் நகைக்க உதையைத் தின்னும் வேலைக்காரச் சிறுமியைப் போல, பொன்னப் விரிந்த அச்செந்நெல் பரப்பின் கீழைப் புறமாய்த் தமிழரின் வயல்கள் கரூகிக் கிடந்தன. அந்தக் கொடிய மாலைப் பொழுதில் * ‘வெல்லா வெளியிலோர் குடிசையில் இருந்தேன். * முன்னை மாதிரி இல்லவே இல்லை இந்தக்கால இளம் யாழ்பாணிகள் நம்மிட பிள்ளைகள்’ எரிந்து கிடந்த பக்கத்து வீட்டில் ஊர்க்காவல் இருந்த ஒருத்தரின் விவாதம். சுட்ட மரவள்ளிக் கிழங்குக் கரிபடிந்த விரல்களைத் துப்பாக்கிக் குழலில் துடைத்தேன். நேற்று இந்நேரம் இந்தக் குடிலில் "பிள்ளையான் தம்பி’ **எம்முடன் இருந்தான். இன்று அந்த வாய்க்கால் கரையை விழுப்புண்களுடன் தழுவிக்கிடந்தான். இன்றைய இரவு எப்படிக் கழியுமோ? நாளைய இரவுகள் எப்படித் தொடருமோ?
புதுசு (1981) * கிழக்கு மாகாணத்தில் ஒரு எல்லைப்புற கிராமம். **கல்லோயா-நவக்கிரி ஆறு விவசாயத் திட்டத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகள், 1981 கோடை வறட்சியின்போது தமிழருக்குத் தண்ணீர் தரப்படுவதைத் தடுத்தனர். தமிழரது எதிர்ப்பை: ஒடுக்க இனக் கலவரம் கட்டவிழ்த்து விடப் பட்டது. “பிள்ளையான் தம்பி தன்னைப் பலி தந்து வாரைப் பாதுகாத்தான்.

Page 30
விடியல்
போராளிகள் மூன்னே தரையில் பரப்பிவைத்த வரைபடம்போல் என் முன்னே பள்ளத்தாக்கில் ஏரியாய் வீதிகளாய் இறைந்துள்ள கட்டிடமாய் நீட்டி நிமிர்ந்து கிடக்கின்ற கண்டிநகர் மெல்லத் துலங்கும். வெளிக்காத தூரத்து மலைமுகட்டில் தேயிலைக் காட்டுக்குள் நடமாடும் கண்ணி வெடிகளைப்போல் கூடைகள் தாங்கிக் கொழுந்தெடுப்பர் இளம்பெண்கள்,
புல்லால் இலையரும்பால் பூக்களால் துணி நெய்யும் மாரி முடக்கியதால் இந்த வசந்தத்தில்கூட கொழுந்தெடுக்கும் பெண்களைப்போல் கந்தற் பசும்சோலை கட்டியுள்ளாள் மலைமகளும், முகிழ்க்கும் இளம் மேதைமையை முற்ருய் விழுங்கிவிட்ட நினைப்போடு மனம் நிறையும் கலாநிதிகள் சிலர் போன்ற மூடுபனித்திரை
சிதறி
தலைநிமிரும் மலைமுகடு. வாழ்த்தும் ஒரு குயில்.
(1981)

கார்காலத்து இரவு
மாரி மழையில் சமிக்ஞை செவிமடுத்து மண்ணின் சிறை தகர்த்த பச்சைப் பசும்புல் விரிப்பு. இருள் தூங்கும்.
காதல் இழந்த கவிஞனது புன்னகைபோல் கார்கால வானத்தில் இருளோடு தூங்கும் நிலவு. மெல்லென்று நடப்பவள்தான் இளவாடை. பின்னடி ஒடுமந்தக் குறும்புப் பயலோ குளிராகும். தொடுவான முட்டாது எல்லைக் கடலில் மிதப்பவைகள் விண்மீனே? இராமேஸ்வரத்துப் படகுகள் இருல் தேடும். இது சொர்க்கமல்ல என்பதுபோல் நெடுந்தீவுக் காட்டுக் குதிரை கனைக்கும். ஆம் என்று உறுதிப்படுத்தும் ஆட்காட்டி,
சொக்கிப்போய் இருந்தேன். எந்தை பிறந்த பூமியிது சொர்க்கந்தான். இரவெல்லாம் இவள் மடியில் சாய்தல் சுகமாகும், அது எந்தன் பிறப்புரிமை, - கிராமியப் பாடல் புனைந்து மதி இரவில் எந்தன் ஏழேழு தலைமுறையும் பருகிக் கிடந்த அழகன்றே!
இருஇரு என்று அந்தராத்மா சொல் லும். அறிக தமிழன் நீ.
ஆதலினல் இளம் மனைவி பயங்கரங்கள் நூறு நினைத்துப் பரிதவிப்பாள்.

Page 31
58
போவென்று தள்ளும் பிடரியிலே ஏதோ ஒன்று. என்னுடைய பூமி இது என்ருலும் ஆணை சிரம் கொண்ட அலாவுதீனின் பூத அடிமைபோல் எழுகின்றேன்.
இருளில் சந்தடிகள் செய்யாது காலம் நழுவும்.
மல்லிகை (1981)

அமெரிக்க நண்பனுக்கு
காற்றுச் செம்மை செய்த மணிமண்டபத்தில் ஒலிபரப்பியும் பயபக்தியுடன் பதித்த இசையை மெல்லிதாய் இளக்கும். வண்ண முக்காட்டுள் மின்னெளி துவஞம்.
வெளியே வான் குளித்த இருளில் விண்மீன்களும் இருள் குளித்த கடலுள் வெண்நுரைகளும். பிரபஞ்சம் இழந்தது தொடுவானத்தை.
இத்தக்காளிப்பழக் கூழின் வாசனையை வெள்ளிக் கரண்டியால் கொள்ளுதல் கூடுமோ? இது என் நாட்டிலோர் விடுதியே எனினும் எனக்கிது எட்டா விதியே அறிவேன். செல்வமும் செருக்கும் செட்டும் செழிக்குமிம் மாலை உண்டி அழைப்புக்கு நன்றி.
எனினும் நண்பனே போதும் போதுமுன் வாழ்வில் மேம்படும் விஞ்ஞானத்தில் விரிவுரை வகுப்புகள். வேறெதும் பேசுவோம்.
மகிழ்ச்சி இல்லாத வாழ்வுதான் எனது. சரி சரி எனினும் உனது மகிழ்வில் வாழ்வு இல்லையே.
தங்கையின் சீதனம் திரட்டும் மாய்ச்சலில் அலுவலகத்துச் சிவப்பு நாடாவுள் மாலப் பொழுதையும் தளை செய்கிறவன்,

Page 32
60
வயோதிகத் தாயின் பராமரிப்பினையும் முதன்மைப்படுத்தியே துணை தேடுபவன், கற்கும் பிள்ளையை மனைவி சேவிக்க தொலை நகரங்களில் கிழடு பற்றுபவன் இத்தியாதிகள் என்னுள்ளும் உண்டு.
வாழ்வு என்பது சமூகப் பிராணியாய் அமைந்து போவதன் இழப்பீடன்ருே? உன் மனம் தளையெனக் கொள்வதையெல்லாம் உதறி நீ மேம்படல் தலையெனக் கொண்டாய். எனினும் நகைத்திட இல்லையே எதுவும். நாளை நீ வயோதிக விடுதி ஒன்றில் (உண்மைதான், குளிர்க்காற்று உறுதிசெய்த அதி நவீன வயோதிக விடுதியில்) சாவிற்காக வரிசை ஒழுங்கில் நேர்த்தியாகக் காத்திருக்கையிலே பேரனுடன் நான் தேவதைக் கதைகளும் கிராமியப் பாடலும் களிப்பேனல்லவா? (உண்மைதான் உண்மைதான், சிற்றில் திண்ணையில் பற்ருக்குறையுடன்)
நண்பனே வாழ்வின் திசைகள் இதுவெனும் ஞானுேபதேசம் தயவுடன் தவிர்ப்பாய்.
(1982)

வாக்களிக்கப்பட்ட பூமி
சாக்கடை ஒரம் தாமரை அரும்பெனக் குந்தியிருந்து புற்களைப் பிடுங்கவும், கொழும்பு மாநகரின் சிற்றுண்டிச்சாலையில் எச்சில் தட்டு மேசைகள் துடைக்கவும், சீமாட்டிகளின் வசவும் புகையும் திணறடிக்கும் சமையல் அறைகளில் தேநீருக்கு வெந்நீர் காய்ச்சவும் இதற்கோ உனக்கு இரண்டு கைகள்? கிழட்டுப் பிரம்மச்சாரி விரக்தியாய் இளம் காதலரைப் பார்ப்பது போல, உன் பிராயத்துப் பள்ளி செல்லும் பிள்ளைகள் தம்மை நீ பார்த்திடல் விதியெனில், நொறுக்கப்படுதலே தகுமிந்த நாட்டுக்கு.
திண்ணியணுக சிவனெளி பாத மலை முகடேறி வடக்கிலிருந்து தெற்குவரைக்கும், வாழ்பவர் செவிப்பறை அதிர்ந்திட இடிபோல் முழங்குக உனது விழிப்பை.
அதோ தேயிலையாலே தாவணி போட்டு, முகில்களைப் பறித்து முடிமயிர் கட்டி, கண்முன் விரியுமுன் அற்றன் மேடு, இதுவே இதுவே வரலாறுனக்கு வாக்களித்த தாய்த் திருநாடு,

Page 33
62
அலட்சியப்படுத்தி உன்னை ஒடுக்குவோரி இருளில் மறைந்த மலைமுகடுகளில் தாழப் பறக்குமோர் விமானியைப் போல திடீரெனத் தமதுஅழிவையே காண்பர்.
இதுவரை நீண்டது உனது வனவாசம். எழில்முடி புனைக இது உன் தேசம்!
தீர்த்தக்கரை (1982)

மகனுக்குச் சொன்ன தாத்தாவின் கதை
துக்கமென் முகத்தில் இருண்டு கிடக்கும் கதையைச் சொல்வேன் கேள் மகனே சோகத்தின் படர்தாமரை எனது முகத்தில் அரிக்கும் கதை சொல்வேன். கோடிப் புறத்தில் ஆந்தைகள் அலற வெளவால் எச்சம் குவிந்துபோய் நாறிப் பாழடைந்து கிடக்குமிவ் வீட்டில் முன்னம் எங்கள் தாத்தா இருந்தார். அதோ அந்தத் தாழ்வாரத்தில் ஒட்டைக் கதிரை உடைசல் கட்டில். எங்கள் தாத்தாவின் உலகம் அங்கே ஊர்ந்தன நாட்கள்.
இப்படியே நான் உன்னைப் போலவே துள்ளலும் துடிப்புமாய் மிகுந்த அந்நாட்களில் எங்கள் தாத்தா தினம் தினம் தங்கைக்குத் தாலாட்டுப் பாடுவார். மாதா மாதம் ஓய்வூதியத்துக்குப் பெருமிதத்தோடு கையொப்பமிடுவார். மகிழ்ச்சியாய் இருக்கையில் எங்களை அனைத்து மாலைப் பொழுதில் கதைகள் சொல்வார்.
ஐந்து வீடா இதுவொரு கேடா துரியோதனனின் ஏளனச் சிரிப்பும் திரெளபதையின் துகிலுரிகையிலே சங்கற்பங்கள் சபையில் முழங்கிய வீமன்கூடப் பொறுத்துக் கிடந்ததும் பாரதக் கண்ணன் கீதை உரைத்ததும்

Page 34
64
பாண்டவர் சார்பில் தேரோட்டியதும் குருச்சேத்திரத்து வெற்றியும் இப்படி, மகிழ்ச்சியாய் இருக்கையில் தாத்தா எமக்கு மாலைப் பொழுதில் கதைகள் சொல்லுவார். எங்கள் குடும்ப நெடுஞ்சாலையிலே ரயில்வேக் கடவைப் போன்றவர் தாத்தா. நாங்கள் அவரைச் சபிப்பதும் உண்டு. எங்கள் வீட்டுப் பின்புறமாகக் கருங் குளவிகள் கூடுகட்டுவதாய்த் தாத்தாவிடத்தில் கூறப்பட்டது. *எல்லோருக்கும் வசதியாய் ஒருநாள் கூட்டைக் கொளுத்த ஏற்பாடு செய்வோம்’ தாத்தா தனது தீர்ப்பை வழங்கினர். அப்பாவுக்கு வயல் இருந்தது. அம்மாவுக்கு அடுக்களை இருந்தது. தாத்தாவுக்கும் வயல் வரப்புகளில் பாடித் திரிந்த இளமையை மீட்கத் தொட்டிலுக்குள்ளே தங்கை இருந்தாள். எங்களுக்கும் எத்தனை சோலிகள். வீட்டைச் சுற்றி ஒளித்துப் பிடிப்பது கிணற்றுக்குள்ளே கல்லை வீசுதல் தோட்டப் புறத்தில் தக்காளி திருடுதல். கருகரு விழிகள் துருதுருக்கின்ற கூவைக்கட்டு நோய்வாய்ப்பட்ட குழந்தையின் முகம்போல் குளவிக்கூடு பெருத்து வந்தது. அப்பாவுக்கு வயல் இருந்தது. அம்மாவுக்கு அடுக்களை. தாத்தாவுக்கும் தங்கை இருந்தாள். எங்கள் வீட்டுப் பின்புறங்களிலே எட்டிப் பார்க்கவே நாங்கள் அஞ்சினுேம், விறகு சேர்க்கப் போன என் அம்மா குளவி குத்திப் படுக்கையில் வீழ்ந்தாள்.

65
யாவரும் சேர்ந்து முன் ஏற்பாடாய்க் கூட்டைக் கொளுத்தும் திட்டங்கள் ஒன்றும் செயற்படவில்லை. தாத்தாவுக்காக, தங்கைக்காக, படுக்கையில் வீழ்ந்த அம்மாவுக்காக எங்கள் கவலை எல்லை மீறியது.
வீர தீர சூரராய் நாங்கள் கல்லெறிந்து குளவிக் கூட்டைக் குலைத்துப் போட கொள்கை வகுத்தோம். அப்பா வீட்டில் இல்லாத நாளை தாக்குதலுக்காய் நாங்கள் தெரிந்தோம் தப்பி ஓட வாசலை எல்லாம் அகல அகலத் திறந்து வைத்தோம், நெருக்கடி மிகுந்தால் தங்கையோடு தாத்தா அம்மா எழுந்தோடி எம்முடன் வருவார். இது எம் நினைப்பு எல்லாம் இரகசியம், பயங்கரமான அம்மாவின் கூச்சலும் பரிதாபமான தங்கையின் கதறலும் அடங்கிப் போன தாத்தாவின் முனகலும் இன்றும் எந்தன் காதினுள் சுணைக்கும். இன்றும் எந்தன் கண்கள் பனிக்கும். பக்கத்து வீட்டார் எட்டிப் பார்க்கையில் தங்கையை அணைத்த தாத்தாவின் சடலம் படிக்கட்டு வரைதான் முன்னேறிக் கிடந்தது. அதன்பின் எமக்குக் குடும்பமுமில்லை அதன்பின் எமக்குக் குதூகலமுமில்லை துக்கமென் முகத்தில் இருண்டு கிடக்கும் கதையைச் சொன்னேன் என் மகனே.
புதுசு (1982)

Page 35
அம்மாவுக்கு மகள் எழுதிய கடிதம்
நீ சிந்தும் கண்ணிருக்கு வலிமையில்லை அம்மா ; ஏனெனில் எனது தோழர்கள் சிந்துவது இரத்தம். உனது அழுகைக்கு ஒலி இல்லை அம்மா ; ஏனெனில்
எனது அயலெல்லாம் மரண ஒலம். உனது வாக்குறுதிக்குப் பெறுமதி இல்லை அம்மா ; ஏனெனில் கொழுத்த சீதனம், பேணு மட்டும் ஏந்தும் மாப்பிளை, கரி படிந்த பரம்பரை அகப்பை எனது உயிரைக் காக்குமோ ? இன்று வேண்டுவதெல்லாம் ஊரின் தோழமை இன்று வேண்டுவதெல்லாம் எனக்கோர் ஆயுதம் போலிக் கிடுகு வேலிகள் யாவும் என்ருே சரிந்தன.
அவற்றின் கீழே நரைத்த தலையும் பரம்பரைப் பெருமையுமாக செல்விகளாக எத்தனை பெண்கள் நசிந்துபோய், இப்படி நானும் வீழ்வேனென்று நினைந்தனையோ ? பொன்முலாமிட்ட தமிழரின் கவுரவமெல்லாம் கறுத்துப் போனது அம்மா. ஒவ்வோர் வீட்டு ரொட்டித்துண்டிலும் பெண்களின் வியர்வை; தோட்ட நிலங்களில் நமது வியர்வை; தொழிலகங்களிலே நமது வியர்வை;

67
தடைகளை உடைத்துப் போர்க்கோலத்துடன் ஊர்வலம் போகும் கொதிப்பில் எல்லாம் பாதிக்கு மேலே பெண்கள் அம்மா. ஊரெல்லாம் கொடியவர் எரியிடும் காலம் ஒலைக் குடிசையுள் பதுங்கக் கூடுமோ? எதிரியிடத்தே நாம் எதனைக் கேட்டோம் ? ஒன்றுமேயில்லை. *கைது செய்த என் தோழனை விடுக. ஊருக்குத் திரும்புக’ என்ருேம். வீட்டிலும் வெளியிலும் இன்று நாங்கள் வீதியில் எப்படி
வெறி பிடித்த எதிரியைக் குந்தியிருக்க விடுவது? இன்று வேண்டுவதெல்லாம் ஊரின் தோழமை, இன்று வேண்டுவதெல்லாம் போரிட ஆயுதம். அண்ணன் ஜெர்மனி சென்றதும் நான் பல்கலைக் கழகம் செல்வதும் பொய்யென உனக்குத் தெரியுமா அம்மா ? இன்று நாமெல்லாம் விரிவுரை எடுக்கும் காலம். உன்னல் எம்மைக் காட்டிக் கொடுப்பது இயலுமா அம்மா?
உன் கண்ணிரைவிடவும் தடித்தது அம்மா தோழரின் இரத்தம்.
தோழி (1983

Page 36
நன்னிலம்
கோடைச் சூரியன் சூடு போட்டதில் இயல்பிழந்த செம்மண் பூமி பெருமூச்சில் வெடித்தது. தாயின் கறுத்த முலைக் காம்புகளாய் மேகம் குளிர்ந்து தாழப் பறந்தது. வெண்மணற் தூசுப் போர்வையுள் காய்ந்த நாணல்கள் மீது இறகும் எலும்புமாய் மீன்கொத்திகள் பாடும். நிராசைகட்கும் நம்பிக்கைக்கும் நடுவின் நின்ற அம்
மாலைப் பொழுதில், பாலியாற்றின் மணல் மீதுனது சுவடுகள் பதித்தனை ஆறி மக்சுமோட்டோ. மனசில் குளிர்நிழல் விழுத்தும்
எழிலார் வன்னிக்காட்டுப் பாதையில் நடக்கையில் ஒரு மலர் பறித்தோ பறவையை எழுப்பியோ உனை மகிழ்விக்கக் கைகள் முந்திய கணங்களில் எல்லாம் நிறுத்தெனத் தடுத்தன. “பூக்கள் போலவும் பறவைகள் போலவும் நிலவுமிவ் வியற்கையின் அங்கமே நானும், இங்கிருந் தெதையும் அகற்றிட நாம் யார்?" ஆறி!
நான் உணர்கிறேன். புற்கள் காடுகள் பூக்கள் பறவைகள் நாம் என நிலவும் பூமியின் இயற்கை. இப்படி இப்படிச் சிறு சிறு புள்ளியாய்த் தொகுத்தது அன்ருே

69
பிரபஞ்ச மென்னும் கோள்களின் குப்பை. எத்தனை இனிது இயற்கையின் நிலவுகை, சிறுவன் ஊதும் சவுக்காரக் குமிழிபோல் எத்தனை அழகு எங்களின் இருப்பு. முகரவே வாடும் *சியோக்சா' புல்லின் மென் பூக்களுக்காய் ஜப்பானியப் பணிப்புயல் இரவில் வருந்திடும் உனது மனசின் மென்மையே நமது சந்திப்பை அர்த்தம் செய்தது. பூமிப்பந்துள் தொலைந்து போகுமோ அன்புடை
நெஞ்சுகள். பிரபஞ்ச மென்னும் பெருவெளியினிலும் அன்புடை நெஞ்சுக்கு எட்டாத ஓர் இடமும் உண்டோ? போலிபட்ட நட்புடையாரை சிறு கட்டிலிலே புணர்ச்சிப் பொழுதிலும் எட்டுதல் கூடுமோ ? இட்டதற்காகக் கூழ்முட்டைகளை அடைகாத்திடுமோ பறவையும்? கட்டிலை நீத்தேன். புத்தன் அல்ல. உன் உடனிருப்பில் வாழ்வின் அர்த்தம் மேலும் புரிந்தது. இயற்கையின் அங்கமாய் சுதந்திரமாகக் காட்டுப்புறத்தில் கனிகள் தேடும் புருக்களைப் போலவும் கடற்கரை மணலில் சிப்பிகள் தேடும் குழந்தைகள் போலவும் காலம் கழித்தலே வாழ்வு. நன்னிலம் விழும் நல்வித்தினைப் போல வாழ்வு ஆனதுசிறு பொழுதெனினும் உனது உடனிருப்பு.
6 (1983)

Page 37
பாலஸ்தீனத்தின் கண்ணிர்
கொட்டும் பணி இரவில் கொடும் பாலை மணல் வெளியில் கண்களும் துப்பாக்கிக் குழலும் துருதுருக்க துயில் ஒதுக்கி சருகான நாணல் புதரின் பின் எச்சரிக்கையானன் ஒரு பாலஸ்தீனப் போராளி. சிறு நகைப்பு.
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை குள்ள நரியோ குழிமுயலோ சருகுகள் மேல். நிம்மதியாய்ப் பெருமூச்சு. நூற்ருண்டு நூற்ருண்டாய் ஒட்டைகளில் முன்னேர் ஊர்ந்து சென்ற தடங்களிலே தோழருக்கு அஞ்சித் துவக்கோடு விழித்திருந்தார். எதிரிகளை எண்ண எங்கே அவகாசம் ? பின்புறமாய் எதிரி முகாமில் எவனே மகிழ்வாகக் கின்னரத்தை மீட்டுகிருன் தேடல் ஒளிச்சுழல்வு தானே நிகழ்கிறது. பாலஸ்தீன அண்ணனும் தம்பியும் ஆளுக்காள் கழுத்தறுத்தால் கொடிய பகை முகாம்கள் கைகொட்டிப் பாடல் களியில் மிதக்காவோ?
பல்லை நெருடிப்பதைபதைத்தான் ஒரு வீரன் என்ருலும் றைபிள் எதற்கும் தயார்நிலையில்.

71
பதவி வெறியும் படுகொலையுமாகியதே பார்போற்றி நின்ற எங்கள் பாலஸ்தீனப் போராட்டம், சுந்தரம் கெட்டோம். குமாரர்களுக் கெதிராக நாமே சதி செய்தோம். தேவனே என்று நொந்து நொந்தழுதான் ஓர் முதிய போராளி. வாழ்வின் கனவெல்லாம் அவனுடைய சிறு ஆயுள் பொழுதில் குலையும் கொடும்பேறு நினைந்தழுதான். தேடல் ஒளி தானே சுழல்கின்ற எதிரி முகாமில்
கைகொட்டி ஆடும் களியில் கின்னரத்தின் நாதம் அமுங்கியது. அங்குமிங்காய்ப் பாலஸ்தீன வீரர் விடிவெள்ளி தோன்ருத வானின் கீழ் சருகான நாணல் புதர் மறைப்பில் மூர்க்கத் தலைமைகளை அஞ்சித் தோழர்களைக் கொல்வதற்காய்த் துயில் மறந்தார்.
அந்தக் கூதல் இரவிலும் வெம்மை தணியாது கால்களைத் தீய்க்கும் மண்; மண் வாரித் தூற்றும் புயற்காற்று; மூஞ்சியிலே துப்பும் பணி இரவு.
ஆனலும்
கைவிரல்கள், எதிரி முகாமில் எழுந்தொலிக்கும் பாடலுக்கு றைபிள் துடுப்பில் தம்மை மறந்து தாளங்கள் போட்டபடி
மல்லிகை (1983)

Page 38
பூமி புத்திரர்
அந்திப் பொழுதே நள்ளிரவு இறங்கிவரும் கொட்டும் மழைநாள்.
ஓடுவதும் நடப்பதும் நிற்பதும்
வெள்ளமென வெறிச்சோடிப்போய்க் கிடந்த வீதியிலே சிறு குடையில் தலை புதைத்து தலை புதைத்து நடந்து வந்தோம்.
கோழி நனைந்து குராவிக் கிடப்பதுபோல் செயல் முடங்கிப்போன கடைகள் இருமருங்கும். நன்றி மழைக்கென்முன் ஒருவன், முறுவலித்தோம்.
ஆமைகள் போன்ற எதிரிப்படைகளின் கூடாரங்கள் தம் காக்கித் தலைகளை இழுத்துக்கொண்டன. பிள்ளைகட்காய் இயற்கை அன்னை போர்க்களத்தில் பாதிப் பணி முடிப்பாள் என்பதறிந்தே இருந்தோம் நாம்.
சென்ற மழைநாள் நம்மோடு நடந்த Graff புற்போர்வை மூடத் துயில்கின்ருர், நாமோ,
ஒடுகின்ற வெள்ளத்தில் நீர்க்குமிழியாலே வாழ்வின் கவிதை எழுதி நடக்கின்ருேம்.

73
உதைபட்டோம்,
லண்டனென்றும் பரீசென்றும் ஒடுகளைத் தாங்கி ஒப்பாரி வைத்தபடி, பொக்கிசங்கள் உள்ளவர்கள் போனர் பரதேசம்.
எங்கே
ஏழைத் தமிழர்கள் நாம் செல்வோம் ? புறங்காட்டில் பாம்பு கழித்துவிட்ட சட்டையைப்போல் நாறுவதே எங்கள் விதியாகிப் போனலும் மனித இறப்புக்கு
ஏதுமோர் அர்த்தம் இருக்கட்டும்.
எங்கள் மண் இதுவென் றெழுந்தோம். ஒடுகின்ற வெள்ளத்தில் நீர்க்குமிழியாலே வாழ்வின் கவிதை எழுதி நடக்கின்ருேம்,
(1983)

Page 39
போர்க்களத்துள் வாழும் மனிதர்கள்
சென்னைச் சுவர்க் காட்டில் எனக்குப் பிடித்த ஒரு வீதி
தெரு நீள
செங்குருதிப் பூச்சூடி நிழல்வாடி மரங்கள் தலை நிமிரும். கையசைக்கும் பகலோடும் தலைக்கறுப்புக் காட்டும் இரவோடும் குதுரகலிக்கும் மாலைப் பொழுதொன்றில் தோழி ஒருத்தியுடன் தரையிறங்கும் தேவதைக் குஞ்சாய் உனைக் கண்டேன். யாழ்ப்பாணச் செம்மண் கிராமப் பரப்புகளில் துள்ளித் திரிந்து துடிதுடித்த பேரழகு சென்னைத் தெருவில், உன் புன்னகையில் சோகம் புதைந்தேன் கிடக்கிறது? கண்முறுவ லோடேன் ஈரம் கசிகிறது? கிணற்றடியில் கிடத்தி மறந்துவிட்ட குழந்தையினை சந்தைத் தெருவில் நினைத்து மனம் இடிந்தவள் போல மரணத்துள் விட்டுவந்த ஈழத் திருநாட்டை நினைந்தனையோ நண்பி. நிறுத்துக உன் பெருமூச்சை, கல்லூரிப் புத்தகத்துள்
மயில் இறகாய் ஈழ விடுதலையை மூடிவைத்துக் கனவுகளில் வாழாதே. சீமெந்து பாலைவனத்தில் போராடிப் போராடிப்

75
போராட்டத்துள்ளும் வேரோடி நிமிர்ந்து மலர் சூடும் நிழல்வாடி மரங்களைப் பாரி. நாமோ போர்க்களத்துள் வாழும் மனிதர். இராமர் அணைக்கு மண் எடுத்த சிறு அணிலாய் நாமோ போர்க்களத்துள் வாழும் மனிதர்.
தமிழமுது (1984)

Page 40
என் இனிய லோதி
கூதல் இரவு.
இமயப் பணிமுலையுள் முகம் புதைத்த குளிர்காற்று என்னைத் துரத்தி வரும்.
இருட் புலத்துள் தெருவிளக்கு ஒளி வேலியிட்ட டெல்கித் தெருவில் தனித்துப்போய் நடக்கின்றேன். லோதி எனும் பூந்தோப்புலகத்துப் பேரழகி சாலை அருகே இருள் போர்த்துக் கிடக்கின்ருள். அவள் இருப்பே கூவி அழைக்கும். என் கால்கள் தரிக்கும். அவள் கதவம் அடைத்திருக்கும். லோதி உனக்குக் கருவம் பிடித்ததுவோ? சற்று முன்னம் கவியரங்கில் மெச்சிகோ மாகவிஞன் ஒக்டோவியோ பாசின் புகழ்மதுவில் உந்தன் தலை கிறங்கிப் போனதுவோ? எல்லையற்ற நீல வானப் பரப்பின் கீழ் தனித்த ஒரு மரகதச் சிறு கோளாய் பூமியுடன் ஒட்டாதிருக்கும் எழிலே, லோதி எனும் தேவதையே, ஆப்பிள் விதை போல தனிமைச் சுழலில் என்னை உமிழ்ந்துவிட்ட அந்த மானிடத்து அழகியைப்போல் நீயும் சிறியவளா?

77
கூவி அழைத்துவிட்டுக் கதவை அடைத்ததென்ன? எத்தனை காலைகளில்
சூரியன் குளிப்பாட்ட நிர்வாணமாக நீ கிடக்கும் வேளையிலே ஒசைப்படாமல் உன்னிடத்தே வந்திருப்பேன். இலையாலும் பூவாலும் வேய்ந்த உன் அரண்மனையுள் எத்தனை நாட்கள் விரக்தியெனும் முள்முடியை வீசிவிட்டு நம்பிக்கை ஒலிவ் கிரீடம் புனைந்துள்ளேன்.
ஏழு கடல் தாண்டி ஐங்கோண மாளிகையில் என்னுடைய தாய்நாட்டை ஓர் அரக்கன் சிறைவைத்தான். சிறைமீட்கப் புறப்பட்ட சகோதரருள் நான் ஒருவன். காலை வருவேன் மீண்டும் ஒலிவ்முடி புனைய. கதவம் திறந்து வைப்பாய்.
கணையாழி (1984)

Page 41
எமது மண்ணும் இனிய வசந்தமும்
கொங்கிறீட் குளவிக் கூடுகளென மாடித் தொகுதியில் உலகாய் விரியும் சென்னைப் புறநகர்.
தனித் தனியாக லட்சம் மக்கள் அலுவலகத்துப் பைல் கோர்வைகளாய் பகலில் அலைவதும் அதன் அதன் அடுக்குள் மாலைகள்தோறும் இலக்க எண்படிக்குப் பணிமுடங்குதலுமாய்ப் பெருநகர் நடத்தும் அலுவல் வாழ்வு.
தனித்துப்போன ஈழவன் எனக்காய் பின்பணி பெய்யுமிக் கடைச்சாமத்தில் சன்னலின் வெளியே பசுமரம் சிலது இருளில் புலப்படும். பறவைகள் சிலது இங்கு பூபாளம் பாடும். இந்தப் பறவைகள் போல என் நாட்டில் நானும் வாழ்ந்தேன். மாரியின் பின்னே பூத்துக் குலுங்கும் எனது காடுகள். வசந்தநாளில் நாணற் புதரில் முதுகு சொறியும் எனது ஆறுகள். கரைகள்தோறும் கற்களைத் தேடி நீலமுந்தானை துவைக்கும் என் கடல்கள். எனக்கென நெல்மணி அள்ளித் தந்த பின்
மந்தைகட்காகப் பசும்புல் குவிக்கும் என்னரும் வயல்கள்.

79
எமது சுமைப்பொழுதினையும் சுகம்செய் தென்றல் உழைப்பிலும் களிப்பிலும் சளைத்திடாது விளையாட்டாக வாழ்வினை வென்று பூவார் மரத்து நிழலில் அமர்ந்து தேனிசை பாடுமென் தோழர் தோழியர். இவையெல்லாம் இழந்து அகதியாய் நானும் உயிர்த்திருப்பேனே? வீழுமோர் எதிரி
அழுகிச் சிதைய
வீழுமோர் தோழனே சங்கற்பம் செய்யும் ஆயிரம் வீரராய் சுடலைகள் தோறும்
உயிர்த்தெழும் மண்ணில் எத்தனை நாட்கள் இழிமையும் தொழும்பும்? எத்தனை நாட்கள் மிடிமையும் சாவும்? மீண்டும்
என்னரும் தமிழீழத்தில் உறுதியாய் இந்த வசந்தப் பொழுதை நுகர்வேன். றைபிள்களோடு பூத்த மரத்தின் நிழலில் புல்லில் அமர்ந்தோ புல்லின் கீழே என்னரும் மண்ணுள் துயின்றே எதிர் வரும் வசந்தப் பொழுதை நுகர்வேன்.
மார்க்சியம் இன்று (1984)

Page 42
நமக்கென்ருெரு புல்வெளி
ஒளியும் இருளும் “போல்றுரம் நடனம் பயிலும் கடலில் அலைகள் தூக்கிப் போயின. விழுந்து கிடந்த தங்கத் தூணை தூக்கி நிமிர்த்த பறவைப் பெண்கள் அலறித் தடுத்தும் சொற்கேளாது நீருள் இறங்கிய செந்தழல் சூரியன் அணைந்து போகும் நாள் நாடகத்தின் இறுதிக் காட்சி. வானில் இறங்கின வண்ணத் திரைகள்.
மணி ஒலி கேட்ட மாணவர் குழாமாய் பாலத்தடியில் நீர் சுழித்தோடும். கார்த்திகைத் தீபநாள் தெருக்களைப் போல கடலின் பின்னே கிடந்தது யாழ்நகர். இந்தப் பண்ணைப் பாலமென் பால்ய சிநேகிதம். உச்சி வானில் நிலா வந்ததென, பனிநீர் முகத்தினில் விசிறி காற்றெனத் தட்டி எழுப்பிடும் வரைக்கும் மறுநாட் பொழுதின்
சுமையும் தூரமும் வீடும் மறந்த இரவுகள் எத்தனையோ! இயந்திர உதிரியாய் நகரை இயக்கும் நெடும்பகல் வாழ்வு கழிந்து, மனிதம் முந்தும் மாலைப்பொழுதுகள் இப்போ இனிய நினைவென ஆனது. இப்போதெமது இரவுகள் போர்க்காலத்து இருட்டடிப்பினைப்போல்.

81
மாலை வந்ததும் பணிமனை முடங்கும் பஸ் வண்டிகளாய்த் தெரூக்களை இழந்தோம். மைம்மல் பொழுதே எமக்கு அகாலமானதில் சைக்கிள் வண்டியைத் தள்ளியபடிக்குத் திரும்பி நடந்தேன். பழைய நம்பை நினைவுகூர்ந்தது வாடைக் காற்று. ஒரிரு பறவைகள் போய் வா என்றன. நாளை நாளையே என்றேன். நாளையுள் எனது ஆயுள் விரிந்தால் மாலையில் மீண்டும் வருவேன் என்றேன். வழுக்குப்பாறை மலையேறியாக கணம் கணம் வாழ்வேன். எதிரியின் துப்பாக்கிக் குண்டினைவிடவும் எனது தாய் மண்ணில் பாதைகள் அறிவேன். எனினும் எதற்கு நாளையப் பேச்சு? வாழ்வேன்;
ஒருவனையேனும் வீழ்த்தியே வீழ்வேன். நாளை இங்கிவன் வாரான் ஆயின், நாளையோர் தசாப்தம் கழிந்தபின் இங்கு சுதந்திரக் காற்றை நுகரும் என் குஞ்சுகள் காலாறும் போதில் நடந்ததை அவர்களுக்கு எடுத்துச் சொல்க, இருளைக் கண்டதும் பதறி பறி நிறையாது மீனவர் சிலபேரி கரைகளில் தொற்றினர் கடத்தல்காரரின் பரபரப்போடு. பசியை அவர்கள் சுமந்து சென்றனர். நானும் சைக்கிள் வண்டியில் ஏறினேன்.
எம்மைப் பிடித்த பேய் வீடான டச்சுக் கோட்டை தாண்டிய பொழுதில்

Page 43
82
மற்றுமோர் சிநேகிதன் வழியை மறித்தான்.
நகரின் நடுவே இளவரசன்போல் நண்பர்கள் நிறைய வாழ்ந்தேன் ஒருகால். ஏனெனக்கிப்படி நிகழ்ந்தது சொல்க? மெளனமாய்க் கேட்டவன் புல்வெளி நண்பன். இது நெடுநாளுக்கல்ல என் புல்வெளி நண்பா, மெளனமாய்நானும் மறு மொழியுரைத்தேன். சைக்கிளை நீங்கினேன்.
சற்றே நடந்தேன்.
இருந்தேன்.
என்னை இருள் என்ன செய்யும்? தொட்டிலும் குழந்தையும் அன்ருே இப்புல் வெளியும் எனது ஆளுமையும். கன்னியர் அழகில் கண்படு சுகமும் காற்றும் வாங்கி நாம் வாலிபர் ஆனதும் இங்கே அல்லவா? இரண்டாம் காட்சி சினிமா முடிந்து நகர் சோதனை வந்து
விட்டில்களாய் விளக்கு சுடரும் கடைகள் தேடி கொதிக்கும் தேநீரில் நாவை அவித்து, மூட்டிய சிகரெட் புகையில் திணறி, குரல்புக இருமி எத்தனை இரவுகள் இங்கு வந்திருந்தோம்! பவளமல்லிகையின் சமிக்ஞை புரிந்து" வேலிகள் தாண்டும் வண்டுகள் போன்ற வாழ்வும் எமக்கு இருந்தது அன்றே! எத்தனை கூட்டம் இங்கு நாம் பார்த்தோம், எத்தனை துண்டுப் பிரசுரம் படித்தோம். எத்தனை தடவை இப்புல் வெளியில் நண்பராம் எம்மிடை சிவப்பு மட்டைப் புத்தகம் சுழன்றது.

83
இப்படி இப்படி எத்தனை கூட்டம் நாங்கள் கேட்டது எத்தனை கூட்டம் நாங்கள் போட்டது!
எனக்கு ஞாபகம். வாழ்வை மறத்தல் சாத்தியப்படுமோ? கிட்டினர் கடையோ பூபாலசிங்கம் புத்தக சாலையோ ஒருவர் ஒருவராய் வந்து கூடி கண்களவாக சஞ்சிகை படித்து அரசியல் பேசி விவாதம் புரிந்து சண்டைகள் வளர்த்து நண்பர்களோடு முகத்தை முறித்து மாறுபட்ட கருத்துக்கெல்லாம் தயாராய் இருக்கும் லேபில்கள் ஒட்டி பூசை வைக்கும் பிராமணர்போல் புரிந்தது பாதியாய்ச் சுலோகங்கள் பேசி பின்னர் சிரித்து பட்டியுள் அடையும் மந்தைகளாக எத்தனை இரவுகள் இங்கு வந்திருப்போம். முன்பு நாம் வாழ்ந்தோம், பகலிலும் இரவிலும்.
நாங்கள் வாழ்ந்த அந்த நாட்களில் இந்தப் பூமி பொதுவாய்க் கிடந்தது. சிங்கள மனிதனே, அமெரிக்க மனிதனே என்னைப் போலவே இந்த மண்ணில், எமது கால்கள் இடறப்பட்ட நாள் முதலாக தமர் பிறரென்று உலகம் பிரிந்தது. கொதிப்புடன் எனது கை முஷ்டிகளை அவர்கள் முகங்களின் முன்னர் அசைத்து இது என் பூமி என அறைகூவினேன்.

Page 44
84
அந்த நாட்களில் சாதி அரக்கனைப் போருக்கழைத்து வீதிகள் தோறும் வெற்றி ஊர்வலம் வந்தோம். பின்னர் வந்த அந்நியரிடத்தில் எமது வீதியை, நாங்கள் இழந்தோம். தமிழரை விற்று அமைச்சர் பதவி ஆள் அணி அம்பு பொலீஸ் படை என்று தளபதியர்கள் முடிபுனைந்தாண்ட யாழ்ப்பாணத்தின் பொற்காலத்தில் இரத்தம் தோய்த்த நெற்றிகளோடும் இரத்தம் தோய்த்த கொடிகளோடும் சாதிக்கொடுமை தகர்ப்பது என்று தோழர்களோடு ஊர்வலம் வந்து இப்புல் வெளியில் ஒருநாள் திரண்டோம். சபதங்கள் எடுத்தோம். கிராமங்கள்தோறும் குண்டுகள் வெடிக்க வரலாறென்றின் சாட்சிகளானுேம். வியட்நாம் மக்களின் வெற்றிகள் போற்றி இப்புல் வெளியில் விழாக்கள் எடுத்தோம். அன்று எமக்கு வீதிகள் இருந்தன; அன்று எமக்குப் புல்வெளி இருந்தது; பின்னர் வந்த அந்நியரிடத்தில் எமது வீதியை நாங்கள் இழந்தோம்.
குண்டாந்தடியும் கொடுந்தமிழ்ப் பேச்சும் காக்கியணிந்த அந்த நாட்களில், நாங்கள் இந்த வீதியில் நின்ருேம். மானிடராக முன்கை நிமிர்த்தி குண்டாந்தடிகளை விலக்கி நடந்தோம். பீரங்கி வண்டியும் சிங்கள வசவும் காக்கி அணிந்த இந்த நாட்களில்

85
வீதிகள் இழந்தோம். எம் புல்வெளியை அந்நியர் கொண்டார். இதை நான் எப்படி ஒத்துக்கொள்வது? இதை நான் எப்படி ஜீரணிப்பது?
இழந்துபோய், நினைவில் புதையலாய்க் கிடக்கும் முதற் காதலிக்காய்க் காத்திருந்த கழியாப் பொழுதும். எனது ஆளுமை தரிசனமான வியட்நாம் வெற்றிவிழாக் கவியரங்கமும். இப்படி இப்படி இப்புல்வெளியில் வேரும் விழுதும் விட்டதென் வாழ்வு; எம் புல்வெளியை அந்நியர் கொண்டனர். இதை நான் எப்படி ஒத்துக்கொள்வது? இதை நான் எப்படி ஜீரணிப்பது?
இப்புல்வெளியில் காளான்கள்போல் வேர்களில்லாத துவக்குகள் முளைத்தன. ஒவ்வோர் துவக்கிலும் காக்கியணிந்த சிங்களக் கூலியை மாட்டிவைத்திருந்தார்முன்னம் இவனேர் மனிதனய் இருந்தவன்; அழகிய சிங்களக் கிராமமொன்றில், வயல்வெளிகளிலே பாடித் திரிந்தவன்; ஆற்றங்கரையில் நீராடும் பெண்களின் அழகுகள் மகிழ்ந்து வாலிபமடைந்தவன்; துவக்கொன் றிடத்தே பிணைக்கப்பட்ட அந்த நாள் வரையில் மனிதனுய் இருந்தவன். எங்கள் கிராம வயல்வெளிகளிலே நாங்கள் பாடவும் எமது ஆற்றங்கரைகளில் அமர்ந்து பூம்புனலாடும் பொழுதை ரசிக்கவும்
7

Page 45
86
தடுத்தனன் அடிமை. கொடுங்கோல் அரசே. துப்பாக்கிகளில் அடிமையை மாட்டி எமதுரதர்களுக்கு வேலி போடுவையோ? சுட்டுக் கொன்று
இறக்கையைக் கட்டிப் பூச்சாண்டி காட்டக் காகமோ தமிழர்? ஓர் கணமேனும் சுமந்திடும் பேற்றுக்குத் தோழமையோடு ஆயிரம் கைகள் நெரிபடும். வீரனின் சவப் பெட்டியிலும் பெரும் பரிசுண்டோ மானிடர் வாழ்வில்? இது ஆயிரம் கோடைக்குச் சவால் விட்ட புல்வெளி; அந்த ஆயிரம் தடவையும் வசந்தத்தை விட்டுக் காதற் பூக்களைச் சூடிய புல்வெளி. இராமனின் ஆட்சியில் முடி புனையாது எங்களை ஆண்ட கறுவாங்காட்டுப் பெருங்குடித் தமிழர் எத்தனை தடவை இப்புல்வெளியில் மேடை அமைத்து,
எங்கள் அவலுடன் தாங்கள் கொணர்ந்த உமிகளைக் கலந்து ஊதி ஊதித் தின்று முடித்தனர். இன்று புல்வெளியை இழந்தனர் அவர்களும். இன்று ‘நம் புல்வெளி’ என்று முழங்கினர்.
இன்றவர் தமது கறுவாக்காட்டைப் பாதுகாப்பாக சென்னையின் மேட்டுக்குடிகளில் அமைத்தனர். பின்னர் அடிக்கடி இராமர் அணையால் நடந்து வந்து இப்புல்வெளியில்

87
பொன்முடி புனையும் கனவுகளோடு *இது நம் புல்வெளி’ என்று முழங்கினர். இது புழுதி பறக்கும் கோடையின் கானலில் “எமது புல்வெளியாக இருந்தது. இப்புல்வெளியில் அந்தக் காட்டுப் பூவரசின் கீழ் ஒருநாள் மாலை ஞானம் பெற்றேன். கார்ல்மார்க்ஸ் லெனின் மாஒ முதலாய் கஸ்ற்ருே வரைக்கும் என்போல் மானிடர் என்பது தெளிந்தேன். அன்றே எனது கோவில்கள் தகர்ந்தன. அன்றே எனது பூணுால் அறுத்தேன். அன்றே சுலோக பாராயணங்கள் சொல்வதை நிறுத்தென நாவினைப் பணித்தேன். இவர்கள் என்போல் இயல்பாய் வாழ்ந்தனர். அரசியல் தத்துவம் காதலில் அழகிய கவிதையில் என்று முழுமை வாய்ந்ததில் மனிதர்களானவர். இனிய கலையில் எழில் விரல் தடவும் பியானே உயிர்ப்பில் கரும் பியர் மதுவில் அழகிய சிநேகிதியின் அணைப்பில். இப்படி மானிடராக வெளிப்பட்டே இவர், மானிட உலகின் திசைகளை மாற்றினர். கைத்துப்பாக்கி, ஆஸ்த்மா குளிசை, மன்மதப் புன்னகை என்பவற்ருேடு சர்வதேச மானிடனுக பூமி எங்கணும் புரட்சியில் வாழ்ந்த சேக்குவேராவை உமக்குத் தெரியுமோ? கடவுள் அல்லர், தோழர்கள் இவர்கள்.

Page 46
88
அணுயுகத்தின் பிதாமகனன ஐன்ஸ்டீனுடைய சார்பு விதிபோல் ஏற்கவும் கழிக்கவும் வளர்க்கவுமாக எத்தனை உள்ளது இவர்களின் நூல்களில். ஐன்ஸ்டீன் என்பவன் ‘மானிடன்’ என்பதை அணு விஞ்ஞானிகள் அறிந்திடல் அவசியம். சிறுமி ஒருத்திக்கு முட்டாள் கணக்கு வாத்தியாரானதும் அவளுக்காகப் பியானே இசைத்ததும் ஐஸ்கிரீம் பெற்றதும் இதுவும் அவனது சார்பு விதி போல் முக்கியமானதே. நாங்கள் மானிடர் என்கிற அறிவே உலக அறிவின் அடித்தளமாகும். அணு விஞ்ஞானியோ அரசியல் அறிஞனே அல்லதோர் புரட்சிப் படையின் தலைவனே எவர்க்கும் சொல்வேன் *நாங்கள் மானிடர்! நாங்கள் மானிடர்! மானிடராக மானிடர்க்காக மானிடரோடு முன்னே நடப்பவர். இங்கு கோவில்கள் கட்ட யாருமே இல்லை. சிவப்புப் பூணுரல்கார இளைஞரே சற்றே விலகி இருங்கள்; என் மேல் பரிதியின் செங்கதிர் படட்டும். இப்படியாக, நான் இந்தப் புல்வெளிப் பூவரசின் கீழ், ஒருநாள் மாலை தோழர்கள் நடுவே ஞானம் பெற்றேன். இப்புல்வெளியை எப்படி இழப்பேன்? பூக்கள் மலர்ந்த வசந்த நாட்களில் பலரும் ‘நமது புல்வெளி’ என்றனர் அன்னியன் புகுந்த இக்கோடை நாட்களில்

89
நாமே மிகுந்தோம். “எமது புல்வெளி’ என்று நிமிர்ந்தோம். மீண்டும் வசந்த நாட்களை மீட்டிட துப்பாக்கிகளை ஏந்தியபடிக்குத் தீயுள் புகுந்தோம். பூக்களும் வசந்தமும் மீண்டிடும் நாளில் பலரும் நமது புல்வெளி என்பர். w மனம் மகிழ்வோம்.
சைக்கிளில் ஏறி நகர்ந்திட முனைகையில் மனசு தரிக்கும். ஆரம்ப நாட்களில் இனக்கொலை யுண்ட ஒன்பது வெண்புரு?* நினைவுக்கற்கள் கற்களாய் நிமிரும். நானுங்கூட இருளை அஞ்சினேன். நானுங்கூட எதிரியை அஞ்சினேன். மரண பயமே உலவும் வீதியில் சுவர்களே எம்முடன் சேதிகள் பேசின. அன்று நாம் காதுகள் இருக்குமென் றஞ்சிய இவைகளே இன்று எமக்கு தோழர்களாயின. திரைகடல் ஒடிய மூதாதையருக்குத் திசையென வானில் ஒட்டப்பட்ட சப்தரிசியும், தென்திசைக் சிலுவையும் எங்களுக்காக இன்று சுவர்களில் சுடரும். மூர்ச்சித்துக் கிடந்தது எனது நகரம். தாலி அறுத்த இளம் பெண்ணுகக் கைம்மை நோற்றன எனது தெருக்கள். நானும் சற்று எதிரியை அஞ்சினேன், நேற்றைய இருளில் நாங்கள் இல்லை. இன்றைய இருளில் அவர்களும் இல்லை. ஈரம் காயாத சுவரொட்டி ஒன்றைத்

Page 47
90
தாங்கிய பெருமையில் என்னை விளித்தது ஒரு சுவர். *நாளை நாம் இருப்போம் ஈழத்திலிருந்து எதிரியை விரட்டுவோம்” இது சுவரின் பேச்சு. "என்றே நம்மவர் தொடங்கிய போர்களின் வெற்றிகள் யாவும் ஈட்டப்படும்வரை எதிரியின் எல்லாக் கோட்டையும் தகர்த்து, எதிரியின் எல்லா முகங்களும் தறித்து, எங்கள் போர்கள் எல்லாம் இணைத்து, போர்க் குணத்தோடு பண்ணைக் கடலிலும் பூக்கள் சூடும் இப்புல்வெளியிலும் நாங்கள் நிலைப்போம்"
இது என் உரைப்பு. தூர எங்கோ துப்பாக்கி வெடித்து ஆமோதித்தவர் எனது தோழர்கள்.
ക്ര (1984)
* 1974 ஜனவரி 10இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிங்களப் பொலிசார் தாக்கியபோது மரணமுற்றேர் ஒன்பது
தமிழர்கள்.

ஒரு யுகத்தின் தரிசனம்
அகதி வாழ்வாம் கூடாரக் கந்தலை வீசி எறிவோம்.
மீள் பிரசவம்போல் ஈழக்கரைகளில் படகை நீங்குவோம்.
ஆயுதம் தாங்கிய இளைஞர் சிலரின் தோள்கள் மீது புவியையும் வானையும் சுமத்தி எத்தனை நாட்கள் விலகி இருப்பது?
உமர் முத்தார் போல தொண்டுக் கிழவர் கிழவியர்கூட எழுந்திட வேண்டிய தருணம் இதுவே. தேர் இழுக்க ஊர் கூடுகின்ற தருணம் இதுவே.
தலைக்குமேல் குண்டுகள் காற்றைக் கிழிக்கக் கடலில் மீன் கொணர்வோம், ஈயச் சரங்கள் உமிழும் இரும்புக் கழுகின் நிழல் விழுந்தூரும் வயல்களில் அறுவடை செய்வோம். துருவைத் துடைத்துப் பற்சக்கரங்களை மீண்டும் உருட்டுவோம். படைகள் நடத்துவோம். ஊர்கள்தோறுமெம் ஆட்சியை அமைப்போம். தளபதி ஒருவனின் பேச்சு மட்டுமா? படைகளை நகர்த்த உள்ளூர் வேட்டைக்காரன் ஒருவனின் அனுபவம் கூட முக்கியமானதே.

Page 48
92
போர் முரசிடையே திருமண முரசம், காலையில் சரிந்த பாடசாலையில் மதியமே கீதம்.
புதைகுழி முன்னே சிந்திய கண்ணுடன் குழந்தையின் வாய்மலருள்ளே வண்டா முலைக்காம்புகள் புகுந்திட
இளம் தாய்.
இப்படி
மீண்டுமெம் தேசம் எழுந்தது. அகதி வாழ்வென்னும் கல்லறைவிட்டு வெளியில் வருக.
(1986)

காயத்திரி
குட்டிச்சுவர்கள் தூண்கள் நடுவே நூல் விட்டது புகை. முற்றத்தில் சப்பாத்துத் தடங்களின் மீது காற்றுடன் புரண்டது சாம்பல். இறைந்து கிடந்து வெயிலில் பொற்சிமிழாகப் பகட்டும் தீர்க்கப்பட்டத் தோட்டாச் சிமிழ்கள். அங்குமிங்குமாய் சிங்களம் பொறித்த உணவு டப்பாக்கள் காலியாக.
புதையுண்ட ஒரு தொல்நகராக மரண ராச்சியம் அங்கே இருந்தது. குட்டிச்சுவரிடை சாம்பலும் நீறிய கபாலமும் எலும்புமாய் மானிடம் ஒன்று. ஈமத்துக்கேது ஆண்பால் பெண்பால்? கபாலத்தருகே சாம்பலில் மின்னும் தீயில் உருகிய தங்கத் திரட்டு.
செந்தீகூட இரைவிலங்காகவா பெண்ணைப் பார்த்தது?
காணியின் பின்புறம் காடு விரியும் காட்டின் உச்சியில் காலொடிந்த சூரியன் கிடக்கும்.

Page 49
94.
ஒருவழியாகப் பொழுது சாய்கையில் மோட்டார்ச் சத்தம்.
ஒரு சீரற்று
ஒரு சீரற்ற ஆயுதம் தரித்து இளைஞர்கள் சிலபேர் ஜீப்பை நீங்கினர். போரில் வீழ்ந்த தோழனைத் போல வீழ்ந்து கிடந்த அவ்வீட்டை நோக்கினர். யாரோ ஒருவன் மூக்கைச் சிந்தினன், காடுகளுக்குக் காது முளைத்தது. கண்கள் கால்கள் கைகளும் முளைத்தன வாயும் முளைத்தது. காளான்களாகக் கிடந்த மனிதர்கள் வெளியில் வந்தனர். அழுவதற்குச் சுதந்திரம் கிடைத்த அந்தக் கணமே மரண அமைதியைக் கிழித்துபோட்டாள் சிறுமி ஒருத்தி. கதிரியக்கம்போல் எங்கும் நிறைந்தது அந்தக் கூச்சல், காட்டை மண்ணை உயிரினங்களை ஒருகணம் தைத்தது அந்தக் கூச்சல் இளைஞர்கள் ஒருகணம் சில்லிட்டுறைந்தனர். அத்தனைபேரும் மூக்குச் சிந்தினர்.
அந்த மாலையே துக்கம் கொண்டாட வந்தது போலக் கறுப்புச் சட்டை அணிந்த வானம் ஊர்மேல் திரண்டது.
பறை அடித்து அந்த ஊரின் மக்களை உசுப்பிக் கைவிடமாட்டோம் என முழங்கியது கோபத்தோடு,

9.
காட்டிலிருந்து வந்த சிறுபுயல் மரண வாடையை உதைத்துத் தள்ளும். அந்த மண்ணில் சாவின் தீட்டைப் பெருமழை கழுவும். அந்த ஊரின் வயல்களைத் தேடிச் சாம்பலை உரமாய்க் குவிக்கும் வெள்ளம்.
இரவிரவாக வானம் அழுதது.
V
மரங்கொத்திப் பறவைகள் தாளம் போட்டன. சிள்வண்டுகள் சுருதி சேர்த்தன. பறவைகள் பாடின. காட்டிலிருந்து வெளிப்பட்ட மயில்கள் வாழ்வின் எழிலை ஆடிக் காட்டின. மீண்டும் மீண்டும் போய் வருகின்ற சூரியக் கிழவன் எங்கோ தொலைந்தான். அன்று பிறந்தது புத்திளம் சூரியன். புதுயுகம் ஒன்று பிறந்த சேதியைக் காற்றில் எழுதின பட்டாம்பூச்சிகள். எங்கோ ஒரு குயில் புதுயுகப் பாடலை அடித்து அடித்து அடித்தெழுதியது. கூரை பஸ்பம் இறைவன் அருளால் தீக்குத் தப்பின குட்டிச்சுவர்கள். குட்டிச்சுவர்களில் காட்டுத் தடிகள்: காட்டுத் தடிகள் சூடிக் கொண்டன வைக்கோற் கூரை.
கூடு நீங்கும் குருவிக் குஞ்சாய்ச் சிறகுக் கைகளைக் காற்றில் அசைத்து இடுப்பை முன் தள்ளி , ஓடிவந்தாள் ஒரு சிறு பாலகி.

Page 50
96
வியப்பால் இரண்டு விழிகளும் அகல நெடுநாளின் பின் விருந்தாய் வந்த காக்கையைப் பார்த்தாள். கா கா என்ருள்.
V
அம்மா சொல்லிய கதைகளில் இருந்து காக்கை பேசுதல் அறிவாள் சிறுமி. மானிடம் பேசும் சங்கதி தனக்கும் தெரியும் என்பது போல் கா கா என்று கதைத்தது காக்கை. *பாட்டி பாவம், வடை திருடாதே’ பெரிய மனிசிப் பாவனையோடு விரல்களை ஆட்டி அதட்டினுள் சிறுமி. மிரண்டது காக்கை. தப்புத்தான் எனத் தலையை ஆட்டி ஒத்துக்கொண்டது. இத்தனை நாளும் எங்கு போயிருந்தாய்? சிறுமி கேட்டாள். பெருமிதத்தோடு காக்கை நிமிர்ந்தது. அலகுகளாலே வானைக் காட்டி கா கா என்றது. வானத்திருந்த சிறுமியின் தாயைக் கண்டு வந்திருந்ததாம் அந்தக் காக்கை.
காயத்திரி காயத்திரி என அழுதபடிக்கா அம்மா இருக்கிருள்? சிறுமி வினவினுள். ஆம் ஆம் என்று கரைந்தது காக்கை. கண்கள் பனிக்க காயத்திரி இனி அழவே மாட்டாள். தப்புச் செய்யாள்

97
கொடுக்கிற பாலைக் கொட்டாமல் குடிப்பாள் சோறு சாப்பிடுவாள் அம்மாவை வரச்சொல் காக்கா என்ருள். காக்கை பறந்தது.
V
குட்டிசுவர்களின் மறுபுறமாக மனிதச் சந்தடி. சாம்பல் நிரவிய குழிகள்தோறும் ஒவ்வோர் வாழைக் குட்டியாய் இட்டு நகருமோர் உருவம்.
தடைகளை மீறி வாழவும் ரசிக்கவும் படைக்கவும் துடிப்பிலான் ஊனுடலாலே மட்டுமே மனிதன்; ஆத்மா தொலைத்த கடலட்டை மனிதன். அப்பா என்ற குரல் செவிபட்டதும் வாழைக் குட்டிகள் கைகளை நழுவும். முன்னே பாய்ந்து தனது குட்டியை அள்ளி அணைத்ததும் அந்த உருவுள் ஆத்மா புகுந்தது. அப்பா அந்தக் காக்கையைப் பாரெனக் கைகளை நீட்டினள். பகல் நிலாப் போல எங்கோ அந்தக் காக்கை இருந்தது. அப்பா அப்பா அந்தக் காக்கை அம்மாவோடு வரப்போகிறது இருந்து பார் நீ.
முகத்தைத் திருப்பித் தனது குஞ்சுக்குத் தென்படாமல் விசும்பி அழுதது அந்த மானிடம். தலையைத் திருப்பி அழாதே என்று அதட்டுமக்குஞ்சு.

Page 51
98
அழுதால் அம்மா வரவே மாட்டாள். சாப்பிட வேணும் தூங்க வேணும் படுக்கையில் மூத்திரம் பெய்தல் கூடாது தெரிந்ததா என்று சிறுமி அதட்டினள். இறுதியாய்ப் புன்னகை; மனிதப் புன்னகை. கெக்கலித்துச் சிரித்தாள் சிறுமி.
சிறுமியின் சிரிப்பில் மண் உயிர்ப்படைந்தது. சூரியனுக்குத் தெம்புண்டாயிற்று. வாழும் அவாவும்
ரசனையும் இடிய இடியப் புத்துலகியற்றும் மானிட ஆற்றலும் அவனுள் நிறைந்தன. புத்துணர்வடைந்து காடுகள் புனைந்த கிளர்ச்சி இசையை மீட்டத் தொடங்கிற்று காற்று. அரிச்சுவடி வாங்கிவா என்று அப்பனே விரட்டினுள் அந்தச் சிறுமி.
V11
செழித்திருந்தன வாழை மரங்கள். உழுத வயல்களில் மண் கமகமத்தது. வண்டியில் வந்த அயலூர் மனிதர்கள் விதைநெல் இறக்கினர்.
*நன்றி எதற்கு நாளை நமக்கு” என்ருர் முதியவர். காயத்திரியை அள்ளி எடுத்துக் கதை சொல்ல முனைந்தார். காக்கா வடைக் கதை தெரியும் தாத்தா. காட்டிலோர் சிங்கமா? நிறுத்துங்க தாத்தா தனது நிழலைப் பார்த்த சிங்கம்

99
பாழும் கிணற்றுள் குதித்தது தாத்தா. புத்திமான் பலவான் இந்தக் கதைதான் எப்பவோ தெரியுமே. நரியும் திராட்சையும் கதையா? புளிக்கும். அம்மாவைக் கூப்பிடப் போன காக்காவை வழியிற் கண்டால் வரச்சொல் தாத்தா, திணறிப் போனுர் அயலூர்த் தாத்தா.
தாத்தாவோடு வந்த மனிதரைக் காடு வெட்ட ஆள் அகப்படுமா என்று வினவினன் சிறுமியின் அப்பா. தேநீர் அருந்தித் தேறுதல் சொல்லி விடைபெற்ருர்கள் அயலூரார்கள். மனிதன் நிமிர்ந்தான். வீட்டில் விதைநெல் இருக்கிறதல்லவா!
VI1
நெருப்புள் உப்பெனச் சிடுசிடுவென்று சிறுமி மிகவும் கோபமாயிருந்தாள். என்ன ஏதென மனிதன் துடித்தான். “காடு வெட்ட ஆட்களேன் அப்பா? *தோட்டம் போட" *தோட்டமேன் அப்பா?* *காயத்திரிக்குப் பணம் காசு சேர்க்க.? *காயத்திரி எப்போ பணம் காசு கேட்டது? பணமும் வேண்டாம் காசும் வேண்டாம் இந்தக் காடு எனக்கு வேண்டும்!” கண்களைச் கசக்கி விம்மினுள் சிறுமி. மனிதன் பணிந்தான். காட்டின் ஆழத்தில் இருந்து நீண்ட தூய காற்று சிறுமியின் தலையைக் கோதிவிட்டது.

Page 52
100
X
முந்திரிப் பழத்தின் பருப்புப் போல மனிதனின் தோளில் சிறுமி இருந்தாள். காட்டைப் பார்த்தாள்.
கோடரியோடு பாவி மனிதர் கால் வைக்குமுன்னம் தேவதை இருந்தது இந்தக் காட்டில். ஒரு நாள் காலைக் கடன் கழிக்கக் காட்டுள் நடக்கையில் அம்மா சொன்னுள். வீட்டில் கக்கூஸ் கட்டப்பட்டது காயத்திரிக்குப் பிடிக்கவே இல்லை. கக்கூசுக்குள் புருக்களேது? மயில்களோடு கதைகள் பேசவும் தேவதைகளை எதிர்பார்த்திருக்கவும் கக்கூசுக்குள் சாத்தியப்படுமா?
காட்டைப் பார்த்தாள். மந்தையைத் தொலைத்த மேய்ப்பனின் கண்கள்கப்பல் தேடும் குருசோ கண்கள் காட்டை மேய்ந்தன. காட்டின் விளிம்பிலோர் தேவதை நின்றது கனவு போல. -
*தேவதை, எனக்கு அம்மா வேண்டும்” மிட்டாய்க் கடையில் பணம் நீட்டுதல்போல் சிறுமி மகிழ்ந்தாள். தப்புச் செய்யாமல் சமர்த்தாய் இருந்தால் தேவதை வருமாம். கேட்ட வரங்கள் யாவையும் தருமாம். திடீரென நாவைக் கடித்தாள் சிறுமி. கண்களவாகத் தந்தையைப் பார்த்தாள். *அப்பா அம்மா இருவரும் வேண்டும்.”
(1986)

ஒரு நிலா இரவு
* உதிர்வதும் பூப்பதுமாக மலர்கள். தேய்வதும் நிறைவதுமாக நிலவு. மரமென நின்றேன்.
துடிப்பது இருதயமல்ல இன்னுமென் கிளையில் எஞ்சியிருந்த ஒரே ஒரு சிறு குயில், அன்பே ஆரி மக்சிமோட்டோ உனது அத்திப்பூக் கடிதத்துக்கு இன்று இரண்டாவது பிறந்த தினம். *உண்மைக் காதல்கொண்டிருந்தேன் என்னைத் தனியே விடுக. மீண்டும் கூடலோ மீளாப் பிரிவோ அறியேன்” உனது சேதியின் சேதிதான் என்ன?
காற்றில் கரைந்த ஹைக்கூ கவிதை ஆனதே எமது காதல்.
தாயகத்தென்றல் எந்தத் துயரையும் தாங்கிடுவேனே வாழ்வினுல்.
நிலவு பணியாய்க் கொட்டுமிவ்விரவில் என்னரும் ஈழத் தாயக மண்ணிலோ காதல் மிகுந்து துணையைத் தேடி மான்கள் கூவும் காடுகள்தோறும் கண்கள் பனிப்பர் இளைய போராளிகள்.
இது இடுகாடு. கற்சிலுவைச் சமாதிகளென

Page 53
102
கொங்கிரீட் மட்டுமே நிமிரும் சென்னை. சிள்வண்டும் பாடாத தெருக்கள். வழிதவறிய ஒரு நிலவோடு ጳ புகலென வந்த நானும் அலைகிறேன். ஆரி நீயுன் தாயின் மடியில். *யாராவது என் சேதி சொல்லுங்கள் அவளிடம். இல்லை வேண்டாம்.”
வானத்தை வெறுத்துப் பிறந்தகம் வந்த வெண்பஞ்சு மேகம் காணுமிடமெலாம் முகம் புதைத்தழுகிற ஜப்பானியக் கொடும்பனி இரவில் பியானேவும் இசையும் இளைஞரும் மதுவுமாய் அவளாவது மகிழ்ந்திருக்கட்டும்.
(1987)

4, பெப்ருவரி 1987
கோடிக்கரை,
செத்த திமிங்கிலமாய்க் கரை ஒதுங்கிக்கிடந்தது 56. வான வீதியில் தென்திசைப் பெயர்ந்த செங்கால் நாரையில் குண்டடிபட்டு விழுந்த ஒன்றுபோல் நொந்துபோய் இருந்தேன்.
செஞ்சுடர் துயிலெழும் கீழைக் கடலும் பனைமரங்கள் பாரம் வைத்த வெண்மணல் விரிப்பும் பறவைகள் அரற்றும் உப்பங்கழிகளும் வயல்வெளிப் பரப்புமாய் சோழமண்டலக் கடற்புறமெனக்கு மட்டக்களப்பை மனதில் இருத்தும்.
செங்கால் நாராய்! ஆயிரம் ஆயிரம் காலத்தியல்பாய் ஈழநாட்டின் கீழைக் கரைகளைத் தேடிச் செல்லும் செங்கால் நாராய்! உனது சுவர்க்கமும் விருந்துமாய் நிறையும் மட்டக்களப்பு சுடுகாடானது.
சேற்றில் நெல்லை விதைக்கும் ஒருவன் வரப்பில் தென்படும் அழகியைச் சீண்டக் காற்றில் ஒருபிடிப் பாடலை விதைப்பான். காட்டில் எருமை மேய்க்கும் ஒருத்தன்மேல் சுள்ளி பொறுக்குமோர் சுந்தரி கல்லென ஒரு சிறு பாடலை வீசுவாள்.

Page 54
104
நிவ சிவ” என்றும்
*அல்லாஹ்” என்றும் பாவச் செயல்களை அஞ்சித் துயில் எழும் அதே ஆண்கள்
அதே அதே பெண்கள் வீடு புகுந்து இவர்களை இழுத்து வரிசைப்படுத்திச் சுட்டு வீழ்த்துதற்கு அரக்கருக்கும் மனது இடம்கொடாதே.
சிங்கள அரசே! கொலை பாதகரே! உழைப்பதும் பசியை மறந்து சிரிப்பதும் அன்றி ஏதுமறியாத மக்களின் பிணங்கள்மேல் சிங்கக் கொடியை வானுற ஏற்றி சுதந்திர தினமா குதூகலிக்கின்றீர்? யாருடைய சுதந்திரம்?
செங்கால் நாராய்! இது கொலைஞரின் நாட்கள். இது நீதித் தீர்ப்பின் நாட்கள் அல்ல. உனது சொர்க்கமாம் நீர்ச்சோலையிலே மீண்டும் வாழ்வும் பாடலும் நிறையும், அதன்முன் தாம் சிந்திய இரத்தத்தை தேடிப் புதைகுழிகளில் எம் மக்கள் எழுவர்.
ーOー

பல காரணங்களாலும். கவனக்குறைவாலும் சில பிழை கள் ஏற்பட்டுவிட்டன. இதற்கு வருந்துகிருேம்.
Lulėšasih
29
41
47
71
80
86
89
94
17
25
14
23
திருத்தங்கள்
பிழை
மணிஅடி
அப்பியமலருடன்
சந்தியில்
பணி
தூக்கிப்
விட்டுக்
தென்திசைக்
தோழனைத்
திருத்தம்
மண் அடி
அப்பியமலமாய்
சந்தில்
பணி
தூங்கிப்
மீட்டுக்
தென்திசைச்
தோழனைப்

Page 55
யாழ்ப்பாணத்தில் பிறந்த
ஈழத்துக் கவிஞர்களிலேே இலக்கியம் மட்டுமின்றி, சு இயக்கங்களில் தீவிரமாக இவருடைய முதல் கவிதை பேசுதல்' மிக அண்மையி 'ஈழத்து மண்ணும் எங்கள் தலைப்பில் வெளியிட்டிருக்
க்ரியா

வ.ஐ.ச. ஜெயபாலன் தற்கால ய மிகவும் முக்கியமானவர். Fமூக, அரசியல் ப் பங்கேற்றிருக்கிருரர். த் தொகுப்பு 'சூரியனுேடு பில் நீண்ட காவியம் ஒன்றை
முகங்களும்' என்ற
கிருரர்.
Cover design : S.N. Wenkoforoman