கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றத்துக் குமுறல்

Page 1
als,
in இராஜேந்திரன்
 

■ E |- 5. s= No.
எஸ். பன்ன்ர்செசிம்

Page 2

குன்றத்து குமுறல் (கவிதைத் தொகுதி)
சி. சிவசேகரம் 2. 3b6)U UM சிவ இராஜேந்திரன் எஸ். பன்னீர்செல்வம்
சவுத் ஏசியன் புக்ஸ்
آہ۔
~ഷ
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Kuntrathu Kumura A Collection of Poems Si. Siva sekaram, E. Thampaiya, Siva Rajendiran, S. Pannirselvam First Edition : May 1993 Printed at : Suriya Achagam, Madras. Published in Association with
National Art & Literary
Association
by
South Asian Books
61, Thayar Sahib II Lane
Madras-600 002. R. 1 3-00
குன்ாத்து குமுறல்
(கவிதைத் தொகுதி) சி. சிவசேகரம், இ. தம்பையா, சிவ இராஜேந்திரன், எஸ். பன்னீர்செல்வம்: முதற்பதிப்பு : மே, 1993
அச்சு சூர்யா அச்சகம், சென்னை. வெளியீடு : தேசிய கலை இலக்கியப்
பேரவையுடன் இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது
சந்து, சென்னை-600 002 ტენ. 13-00

உள்ளடக்கம்
பதிப்புரை முன்னுரை : ஒரு குலைக் குருதிப் பூக்கள் 9
சி. சிவசேகரம்
இ.
தாராளவாதிகட்கு குன்றத்துக் கும்மி
3b60)U UM
மலையின் கனல் விடுதலை செய்க அழுகைக் கோச்சியிலே. அஞ்சலிகள்
வேலிகள் אי நிம்மதியில்லை எனக்கு மண்ணைக் காப்போம் இனி பிழைவிடமாட்டேன் கதை நிஜமாகும்
மலையாண்டி
சிவ இராஜேந்திரன்
நிதர்சனம் பீடித்துண்டுக்கு ஒட்டுப்
போடுவனா? சிவனு இலட்சுமணனுக்கு.
5
7
21 23
27
28
29
f
32.
34
37
39
41
43
46
| 8 50

Page 4
தலைவரு கண்டிக்கிறார் இருவர் பாடல் காலம் நெருங்குது கண்ணாத்தா விடிவை நோக்கிய "வேலைக்காடு" மீட்சியை நோக்கி மாவலியை மாற்றிடாதீர் அறியது கேட்கின். ஜேம்ஸ் டெயிலருக்கு இதயவெட்டு-1948 சூரியப்பிரியனுக்கு ஒரு மரணம் பல ஜனனம். பொடிமெனிக்கேயும்
இராமானுஜமும் சர்வதேச வாழிடத்தினமா?
எஸ். பன்னீர்செல்வம்
எழுச்சி வேள்வி உறங்கும் எரிமலை சுதந்திர குழந்தை மானுடம் எங்கே?
ஆண்டவனுக்கு மனு தேசம் அழுகிறது லயத்து ஒப்பாரி மலையகத்து தாய் அருமை அம்மா! அஞ்சலைக்கு அஞ்சலி தடுக்காதே!. அமெரிக்க கழுகை விரட்டு மேதினம் சுதந்திரன் வருகிறான்
6
52
55 58 j0 62 64 66
69 72
74 77
79 8.
84 86
ዶ$8 90
92
94. 96 99
10.
105 108 O 112 114

பதிப்புரை
சவுத் ஏசியன் புக்ஸுடன் இணைந்து தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிடும் புதிய முயற்சி இது: இந்திய வம்சாவழி யினர், மலையக மக்கள் என அழைக்கப்படும் தனித்துவ அம்சங்கள் பொருந்திய (இலங்கைத் தமிழ் தேசிய இனத்திலிருத்து வேறுபட்ட குணாம்சங்களை உடைய) சிறு பான்மை இனம் ஒன்றின் குரல் கவிதை களாய் இங்கே வடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இப்படைப்பு எமது வெளியீடுகள் அனைத்திலும் வேறுபட்டது; தனித்துவம்மிக்கது.
'தாயகம்' இதழில் தொடர்ந்து எழுதிய இ. தம்பையா, சிவ இராஜேந்திரன் ஆகி யோரின் கவிதைகளில் "தாயகம் கவிதைகள் அறுபத்தாறில்” இடம்பெற்றவை இத் தொகுதியில் சேர்க்கப்படவில்லை.
இத் தொகுதிக்கென எழுதப்பட்ட கவிதைகள் தவிர ஏனனையவை, வீரகேசரி, தினகரன், ஆகிய பத்திரிகைகளிலும் தாயகம், குன்றின் குரல் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தவை. அவர்கட்கு எமது நன்றிகள்.

Page 5
இந்த வெளியீட்டில் பங்களிப்பு நல்கும் அனைவர்க்கும் அச்சகத்தினர்க்கும் எமது நன்றிகள்.
உங்களுடைய ஆக்கபூர்வமான விமர் சனங்களை எதிர்பார்க்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 14, 57ஆவது ஒழுங்கை உருத்திராமாவத்தை வழி கொழும்பு-6 இலங்கை 30-9-92

ஒரு குலைக் குருதிப் பூக்கள்
மலையகத்துக்கும் வீரத்துக்குமிடையே யான பந்தம் இன்று நேற்று ஏற்பட்டதாய்த் தோன்றவல்லை; இரண்டாரம் ஆண்டு கட்கு முன்பே குறிஞ்சியின் குருதிச் சுவடு களை அழுத்திக்கூறும் கவிதைகளைத் தரிசித் திருக்கிறோம்.
குறுந்தொகையின் முதற்பாடல் அத்தகை யது; குறிஞ்சித் தலைவிக்குத் தன் காதலை வெளிப்படுத்துமுகமாக ஒரு குலைக் கார்த் திகைப் பூக்களை கொடுத்தனுப்ப எண்ணிய வனுக்கு அக்கையுறை மறுத்து தோழி கூறிய கூற்று இது:
6 é f \\
இரத்தத்தால் ஏற்கனவே சிவப்பேறிய போர்க்களத்தில் வீழும்படி அசுரர்களைக் கொன்றொழித்த, குருதியால் சிவந்து திரண்ட அம்பினையும் சிவப்பேறிய தந்தங் களைக் கொண்ட யானையையும் நெகிழ் வா ைவளையல்களையும் உடைய செவ்வேள் முருகன் உறையும் எமது மலையின் கண் உதிரம் போன்று சிவந்த பூக்களையுடைய கொத்துக்கள் நிறைந்த கார்த்திகைப்பூ ஏராளமாயே உண்டு.”
@ーl

Page 6
செங்களம் படக்கொன்று அவுணர்த்
தேய்த்த செங்கோல் அம்பிற் செங்கோட்டுயானைக்
கழல்தொடிச் சோய் குன்றம் குருதிப்பூவின் குலைக்காந்தட்டே
(குறுந்தொகை, 11 காதல் உணர்வைக்காட்டும் அகப் பாடலே போர்ப்பரணியாக எச்சரிக்கைக்குர லெழுப்புவது விண்முட்டும் மலைச்சிகரத்தின் தனித்துவப் பண்பு, இன்றும், முகில்களை அளாவித் தேயிலைத் துளிர்களை இப்பூவுல குக்குக் கொணரும் மலையக மாந்தரின் அகமும் புறமும் சிவப்பேறியிருப்பதை இத்தொகுதியின் கவிதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
மலையகத்தை வீரத்தின் விளைநிலமாக மாற்றியது அந்த மக்களின் சோக வாழ்வு தான், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னரே - இலங்கையின் மலைகளைச் செப்பனிடத் தொடங்கிய அன்றிலிருந்தே - கடும் வாழ்க்கைப் போராட்டம் அவர்களை போராட்ட உணர்வுக்கும் ஆற்றுப்படுத்தி யிருந்தது. அப்போதெல்லாம் நாட்டார் பாடல்களுக்குள் உறைந்து கிடந்த சோகத்தி ஒதுள் அந்த வீரம் மறைந்து கிடந்தது.
கூனி அடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதடி. (மலைநாட்டு மக்கள் பாட்டு பக்-181
O

என்று அங்களாய்த்தபோது மலைகள் மீதான உரித்தை வெளிப்படுத்தியதோடு தனது அடுத்த சந்ததிக்கான போராட்ட 2 னர்வையுந்தான் புதைத்துவிட்டிருந்தார்
sh 6.
இப்பாடலுக்கு மலையகப் பெருங்கவி சி. வி. வேலுப்பிள்ளை எழுதிய குறிப்பு
இங்கு மனங்கொள்ளத்தக்கது: “காடுகளை அழித்துப் புதிய மலைகளை உருவாக்கும் போது, சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும்
நிச்சயம் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்தத் தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாகத்தானிருக்கும். மலை யகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால், உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்துவையுங்கள். ஏனெனில் - அவை அண்ணனைத் தோத்த மலைகள்." (சி. வி. வேலுப்பிள்ளை. “மலை நாட்டு மக்கள் பாட்டு.” கலைஞன் பதிப் பகம், 54, பாண்டிபஜார், சென்னை-600017 1ஆம் பதிப்பு: நொவெம்பர் 1983).
அத்தகைய இரத்தத்தை தாரைவார்த்து வளப்படுத்திய மண்ணை, பேரினவாதிகள் கபடத்தனமாய் கபஸ்ரீகரம் செய்ய முனைந் தால் இளைய தலைமுலை முடங்கிக் கிடக்குமோ? அப்படிக்கிடந்தால் தம்மை இழப்பது மட்டுமல்ல, தமக்காக அந்த
ll

Page 7
மலைகளை வென்றெடுத்துத் தந்த மூத் தோர்க்குப் பெரும் பாவமும் இழைத்தவர்கள் ஆகியிருப்பர்.
அவ்வாறு நேரவில்லை; மலைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் போலீஸ்படை களத்தில் குதித்த நிலையிலும் வீரஞ்செறிந்த தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளை மறைத்தபடி நெருக்கியடித்து முன்னேறியதில் தேயிலைத் தோட்டத்தை யும் தம் உரிமைகளையும் காவாந்து பண்ணி னார்கள். அன்றைய தோட்டத்தில் பேரின வெறியின் துப்பாக்கிச் சன்னத்துக்கு வீர இளைஞன் சிவனு இலட்சுமணன் தன் னுயிரைத் தியாகம் செய்தான்.
அது வெறும் இழப்பல்ல, அவன் சிந்திய இரத்தம் உயர்கல்வி மாணவர்களை வீதிக்கு இழுத்தது. மலையக மக்களை சிந்திக்கத், தூண்டி தொடரும் செயலூக்கத்துக்கு வழி காட்டும் மக்கள் தொண்டர்களாய் பல இளைஞர்களை புடம்போட்டெடுத்தது. அன்று அவ்வாறு களத்தில் இறங்கிய இரு வரின் (இ. தம்பையா, சிவ இராஜேந்திரன் 1 கவிதைகள் அதே உணர்வு குறையாதபடி இங்கே வடித்துத்தரப்பட்டுள்ளன.
டெவனில் தேயிலைகளை மறைத்து நின்ற மக்கள் கூட்டம், அட்டன் வீதிகளில்
12

ஹைலன்ஸ் மாணவர்களால் சிந்தப்பட்ட புதிய இரத்தம், மலையகமெங்கும் உயர்த்தப்பட்ட மனித முஸ்டிகள். மாபெரும் விருட்சமாய், மலைகளாய் மலையக மக்கள் முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்
கிறார்கள். என்ற சிவ இராஜேந்திரனின் வரிகள் வெறும் அழகியல் வெளிப்பாடுகள் அல்ல. தாமே சிந்திய இரத்தத்தை பதிவு செய்வன. அந்த உணர்வு மலையகமெங்கும் செறிந்தபோது நாம் இந்த மண்ணுக்குரிய வர்கள் என்ற பற்றும் வலுத்தது. அழகைக் கோச்சியிலே ஏற்றிக் கடலுக்குள் தள்ளி அந்நியதேசம் போகச் சொல்வோர் குரல் அடைத்தது. நீண்டகால மக்கள் போராட் டம் பிரஜாவுரிமையை வென்றெடுத்தது. பிரஜாவுரிமை வெறும் வாக்குரிமையில்லை; வாழும் உரிமை; உயிர்மூச்சு; மக்களுக்காக முனைப்புடன் செயலாற்றியவர்களின் சீறிய மூச்சுக்கள். அது ஆதிக்க வானைப் பிளக்கும் வல்லமை பெற்றது. அதனால் தினம் பிரிவுகளே கருவாகிப் பிறக்கின்ற உலகத்தில் சிலரின் சீறிய மூச்சுக்கள் சிதறப் பிளக்கிறது வானை.
(இ, தம்பையா.1 13

Page 8
ஆயினும் இப்போராட்டப் பாரம் பரியத்தை வார்த்தை ஜாலங்களாக்கி, மேடை முழக்கங்களை நிகழ்த்தி, அதன் வாயிலாய் பாராளுமன்றம் ஏறி, போராட் டத்தை காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவோர் எங்கும் போல் இங்கும் உருவாகுதலைத் தடுக்க முடியவில்லைத்தான். ஒரு தசாப்தம் இந்த வீணர்களின் பொய் யுரைகளால் கறைபட்டுப் போனது.
அதுகூட வெறும் இருண்ட தசாப்தம் அல்ல. பழைய போராட்ட உணர்வுக்கு துணையாக பல இளம் சந்ததிகளை வென்றெடுக்க் முடிந்த தசாப்தம். அந்தப் புதிய இளம் மக்கள் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்த கபடத்தனங்களையும் சோகமூச்சு களையும் கண்டு சினந்தனர். பேசாமல்’, புதைகுழிக்கே போய்விடலாம் என்று பிரளாபித்தனர், எப்படி - எச்சங்களை விதைப்பதற்காக அப்படிச் செய்யக் கோரிக்கை விடுத்தனர்:
போராடி போராடி தோற்றுப் போனால் வெறுமனே புதையோம் எச்சங்களை வளர்த்து விடிவு உச்சியினை அடைவதற்காய் உயிரோடு புதைவோம்.
(எஸ். பன்னீர்செல்வம்).
14

ஆக, காட்டிக் கொடுப்புகளால் வீரம் செத்துப் போய்விடாது. அது 'உறங்கும் எரிமலையாக உள்ளே குமுறும் போராட் டம் - தோல்வி - மீண்டும் போராட்டம், வெற்றிவரை, எனும் வரலாறு தொடரும்.
அதனை, வீறார்ந்த புதுக்கவிதையின் முன்னோடிகளுள் ஒருவரான சி. சிவசேகரம் (மலையகத்தின் கண் துலங்கும் அதியுயர் கல்வி ஸ்தாபனமான பேராதனை பல்கலைக் கழகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவ ரென்ற வகையிலும், அப்போது நெருங்கிய ஊடாட்டத்தை கொண்டிருந்த வகையிலும் மலையக மக்களை நன்கு அறிந்தவர்) இவ்வாறு வெளிக்கொணர்கிறார்:
மானுடர்க்குப் பொது நீதி மறுப்பவர் மேனி நடுங்கிடக் கும்மியடி.
அந்த வகையிலே, மலையகத்து வீரம் அற்பவிடயங்களுக்கு விரயமாக்கப்படாமல் மனுக்குல விடுதலைக்கு அமைவாக ஒழுங்கு படுத்தப்பட்டு பயன்படுவது வெளிக்காட்டப் படுகிறது. மலையக மக்கள் திரளில் தொழி லாளி வர்க்கமே தொந்நூறு வீதத்திற்குமேல் விஞ்சிநிற்பதால், இலங்கையின் ஏனைய சமூகத்தினரிட்ையே சிறு முதலாளி வர்க்கப் பிரிவு பெரும்பான்மையாய் இருந்து விழைக் கும் கபடத்தனங்கள் இங்கு குறைவாகவே விலைபோகிறது. இவ்வாறு சொல்வதன் அர்த்தம் மலையக சமூகத்தில் சிறு முதலாளி வர்க்கப் பிரிவு இல்லையென்பதோ, ஆளும்
丑5

Page 9
வர்க்க மேலாதிக்க கழுகு நரித்தந்திரங் களுக்கு எடுபட்டு, ‘புரட்சியின் அவசரத் தன்மை’ எனும் நோயால் பீடிக்கப்பட்டு: காலத்துக்கு முன் களத்தில் வீழ்ந்து புரட்சிக்கு தடைகளைக் கொணரும் செயற் பாடுகள் அறவே இல்லையென்பதோ அல்ல. அவற்றையும் மீறி தொழிலாளி வர்க்க பலம் போதிய அளவு இங்கு உண்டு என்பது கவனிக்கத்தக்க அம்சம்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலையகக்கிளை தொழிலாளி வர்க்கத்தின ரால் அதிகம் செழுமை பெற்றது, பேரவை யின் மலையகக்கிளை அந்தப் பலமான அம்சத்தை உள்வாங்கி பல கனதியான காரியங்களை நிகழ்த்தியிருக்கிறது. பாரதி நூற்றாண்டு விழா, லூசுன் நூற்றாண்டு விழா, கைலாசபதி நினைவுக் கூட்டம் ஆகியன விதந்துரைக்கத்தக்க நிகழ்வுகள் (அவற்றுள் ஒன்றான கைலாசபதி நினை தினக்கூட்டத்தில், அடுத்த நாள் "அழுகைக் கோச்சியிலே' அடாத்தாக அனுப்பப்படு வதைக்கூறி அழுதபடி பேசிச் சபையையும் கண்ணிர் சிந்த வைத்தார், பேரவை உறுப்பினராகக் காத்திரமான காரியம் பல ஆற்றிய நண்பர் சிங்கராயர். இந்த சம்பவம் தனது உள்ளத்தை உலுக்கியதால் பேராசிரி யர் சி. சிவசேகரம் எழுதிய ‘ஒரு பிரியா விடை’ எனும் கவிதை "தாயகம்' சஞ்சிகை யில் வெளிவந்து பின்னர் அவருடைய
16

*செப்பனிட்ட படிமங்கள்’ கவிதைத் தொகுதி யில் இடம்பெற்றிருந்தது-பார்க்க: செப்ப னிட்ட படிமங்கள்’. சி. சிவசேகரம். சென்னை புக்ஸ். பக்கங்கள் 7/14).
இவற்றைவிட இசைப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள், நாடகங்கள், கலைஇலக்கிய நிகழ்வுகள் என தோட்டந்தோட்ட மாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், மலையகத்தில் பேரவை நன்கு வேரோடி நிலையூன்ற வழிசமைத்தமை பிரதான அம்சமாகும். இத்தகைய செயற்பாடுகளில் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைமை உறுப்பினர்களான இ. தம்பையா, சிவ இராஜேந்திரன், வி. விஜயரட்னம், சிங்கரா யர், பத்மா போன்றோர் முன் நின்று உழைத்தனர்.
இவர்கள் பேரவையின் புனர் நிர்மான வேலைகள் முன்னெடுக்கப்பட்ட எண்பதாம் ஆண்டு ஆரம்பத்தில் நிகழ்ந்த மக்களுக்கான ஆக்க இலக்கிய பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து செயற்பட்டனர். அத்தொடர் கருத்தரங்குகட்கு பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவரான பேராசிரியர் க. கைலாசபதி தலைமைதாங்கி நடத்தியிருந் தார். அச்சந்தர்ப்பத்தில் அவர் இந்த மலையக கலை-இலக்கிய நண்பர்களுடன் மிகுந்த சிரத்தையுடன் உரையாடி மலையகப் போக்குகளை அலசியுள்ளார். சிவ இராஜேந் திரனின் "பாரதி பன்முகப்பார்வை ஆய்வுக்
17

Page 10
கட்டுரைக்கு ஆலோசனை வழங்கி நெறிப் படுத்தியபோதும் மலையக கலை-இலக்கிய வேலைகளின் வளர்ச்சியை அறிந்து ஆலோசனைகள் வழங்கியிருந்தார். அது மலையக கிளைச் செயற்பாட்டின் ஸ்தாபனத் தன்மைக்கும் செயல் வீச்சுக்கும் பெரிதும் உதவியுள்ளது.
இவர்களின் செயற்பாடுகள் அடுத்த சந்ததி கலைஞர்களையும் தோற்றுவித்ததன் விளைவே எஸ். பன்னீர்ச்செல்வம். அந்த வகையிலே, இலங்கை தேசிய இலக்கிய வரலாற்றின், கைலாசபதி, சிவசேகரம் என்ற இரண்டு சந்ததியை தொடர்ந்த இந்த மலையகத்து இரு சந்ததியினரின் வெளிப்பாடுகள் ତ7 କ0t', நேரடியாகவோ மறைமுகமாகவோ, நான்கு சந்ததிகளின் சங்கமிப்பு இங்கு நிகழ்ந்திருக்கிறது.
இத்தொகுதியில் சி. சிவசேகரத்தின் இரு கவிதைகளும் இ. தம்பையாவின் பத்து கவிதைகளும், சிவ இராஜேந்திரனின் பதி னாறு கவிதைகளும், எஸ். பன்னீர்செல்வத் தின் பதினான்கு கவிதைகளும் இடம்பெற். றுள்ளன. மலையகத்து இலக்கிய இதயத் துடிப்பை பட்டவர்த்தனமாக அவை பதிவு செய்துள்ளன.
‘மலையக கலை-இலக்கியப் பேரவை’, "கொழுந்து' வெளியீட்டகங்கள், ‘தீர்த்தக் கரை' 'நந்தலாள’ பேர்ன்ற பல சஞ்சிகைகள்
18

ஏற்கனவே மலையக கலை-இலக்கியப் பதிவுகளை வழங்கியுள்ளன; வழங்கிவருகின் றன. அந்த வரிசையில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலையக உறுப் பினர்களின் ஆக்கங்களும் காத்திரமான பாத்திரத்தை இனி வகிக்கும் என்பதை இத்தொகுதி கட்டியங்கூறுவதாகக் கொள்ள லாம்.
தேசிய கலை இலக்கிய பேரவை இலங்கை மலையகம் 4-10-92
19

Page 11
A தாராளவாதிகட்கு A குன்றத்து கும்மி
சி. சிவசேகரம்

தாராளவாதிகட்கு
ஒய்வாகத்
தொந்தி சரியக் கதிரையிலே
சாய்ந்து புதைந்து சாப்பிட்டது செமிக்கப்
பேசுவீர் உலக விவகாரம்
இடையிடையே
ஏப்பம் விடுவீர்
நெருப்பெடுப்பீர் ஊதுவீர்
புகைநடுவே அனல் உமிழ்வீர்
வாய்வெந்து போகாமற்
கிண்ணத்தில் ஊற்றுவீர்
உறுஞ்சுத் தணிவீர்
மறுபடியும் தீமூட்டி
நெருப்பாய்க் கொதிப்பீர்
சாய்ந்த உடம்பு கதிரையிலே பெயராமல்
மின்னாது நீள
வெட்டி முழக்குவீர்
சீமைச் சிறைக் கூட அறைகட்கு நாலுபேர்
அதிகம் எனத் தீர்ப்பீர்
சீனத்துச் சிறைகளிலே சிற்றெறும்புத்
தொல்லையென
சோவியத்துச் சுரங்கத்திற் காற்றோட்டம்
இல்லையென
21

Page 12
வியற்னாம் அகதிகளை மந்தைகள் போற்
கப்பலிலே ஏற்றுவது கொடுமையெனச் சிறிச் சினப்பீர் பிறேஸிலிலே பிள்ளைகட்குப் பள்ளிப்
படிப்பின்றிக் கூலி உழைப்புக் கொடுமைக்காய் குரல்
கொடுப்பீர் தோட்டம் உமது தேயிலையில் லாபமென ஈட்டும் பொருள் உமது மலையகத்துத் தொழிலாளர் வீட்டு வசதி வோட்டுரிமை தோட்டத்துப் பள்ளிப் படிப்பு மாதச்சம்பளக் கதைகள் கேட்டாற் பிசகு கேளாதீர் நீளமாய்ப் பேசுவோம் ஒய்வாக உலக விவகாரம்.
22

குன்றத்துக்கும்மி
கும்மியடி தோழி கும்மியடி மலை நாடு விழித்தெழக் கும்மியடி
நம்மையுறுஞ்சிக் கொழித்திடும் அட்டைகள்
காலில் நசித்திடக் கும்மியடி
கொழுந்து கிள்ளிய கைகளிற் செங்கொடி
கொள்கை ஒளிதரக் கும்மியடி
அழுது வற்றிய கண்களிலே சினம்
அனல் எழுப்பிடக் கும்மியடி
பள்ளிப்படிப்புக்கும் பட்டம் பதவிக்கும்
பிள்ளைகட்குத் தரம் இல்லையென்றார் கள்ளத் தனங்களைக் கண்டுகொண்டா
யெங்கள் கல்வியுரிமைக்குக் கும்மியடி
தோட்டத்துக் கூலிக்கு நாட்டுவளப்பமேன்
வோட்டுகள் வேண்டியதில்லை
யென்றார் காட்டை நடத்தி நல் நீதி வழங்கிட
நாங்கள் வல்லோமென்று கும்மியடி
23

Page 13
நோய்ப்பட்டு வைத்திய சாலை
விளுந்தையில் வாடிய நாட்களை மாற்றிடுவோம் நோயைத் தவிர்க்கவும் வந்ததைப்
போக்கவும் நல்ல வயித்தியம் நாம் வகுப்போம்
கூடுகள் போல் லயன் காம்பராச் சீவியம்
கூலி அடிமைக்குப் போதுமென்றார்
வீடு வளவுகள் வீதிகள் தோட்டங்கள்
வேண்டுமெமக்கென்று கும்மியடி
நல்ல பல கலை நாட்டியங் கூத்துகள்
நாடகம் நல்லிசை நாமமைப்போம் கல்வி தொழில்களின் நுட்ப நுணுக்கங்கள்
கற்றறிவோமென்று கும்மியடி
ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதிகள்
வேறில்லை சாதிப் பிரிவுகள் தேவையில்லை மானுட சாதியைக் கூறுசெய்யும் முறை
மாய்த்து மறைந்திடக் கும்மியடி
பாடுபடுகின்ற மானுடர் ஓரினம்
பூமி அவரது என்றுரைப்போம்
நாடு மொழி இன பேதம நமக்கில்லை நாளை நமதென்று கும்மியடி
ஆலை உழைப்பவர் ஆளுமை, நல்வயல்
ஆழ உழுபவர் தம் உரிமை ஆழக்கடல் மலை ஆறு வனம் வெளி
அத்தனையும் பொது கும்மியடி
24

மானுடசாதியிற் பேதம் இல்லையெனும் ஞானம் வளர்ந்திடக் கும்மியடி
மானுடர்குப் பொது நீதி மறுப்பவர் மேனி நடுங்கிடக் கும்மியடி
தென்றல் புயலெனச் சீறிஎழக் குரல் வானை இடித்து எதிரொலிக்கக்
குன்றம் அதிர்ந்திடக் கும்மியடி கத்துங் கடல் கொதித்தெழக் கும்மியடி
@ー2

Page 14
மலையின் கணல். விடுதலை செய்க
அழுகைக் கோச்சியிலே. அஞ்சலிகள்
வேலிசன்
நிம்மதியில்லை எனக்கு மண்ணைக் காப்போம் இனி பிழைவிட மாட்டேன் கதை நிஜமாகும் மலையாண்டி
இ. தம்பையா

மலையின் கனல்
மலைகளில் படர்வது பணியென நினைத்து மலைகள் உறங்குவதாய் தொடரும் அழிவுகள்
அழிலால் மலைகள் உயிர்க்கும் கனலை ஊதி நெருப்பாக்க பெருகும் நியாயங்கள்.
மலைகள் எரியும்! அழிவை தடுக்கும். மலைகளில் படர்ந்தது, நீறென புரியும்!
1991, ஏப்ரல் தினகரன்
27

Page 15
விடுதலை செய்க
முள்ளினுள்ளே தேயிலை நான் முடங்கிப் போய்தான் பேசுகிறேன். என்னை ஆக்கிய மகான்களே! மலையகப் பாட்டாளி மகான்களே நீங்களே என்னை ஆக்கிவிட்டு முள்ளின் வேலியுள் விட்டதேனோ?
அடிமையாய் இருந்தே ஆக்கியதால் என்னையும் அடிமை ஆக்கிவிட்டீர் என்னை முட்கள் தடுக்கும் வரை வண்டில் மாட்டின் முன்னாலே கட்டிய வைக்கோல் நானாவேன் கடைசி வரையும் கிடைப்பேனோ?-நீங்கள் வண்டில் மாடாய் இருந்து விட்டால்
1987 நவம்பர் 29 வீரகேசரி
2&

அழுகைக் கோச்சியிலே
அழுகைக் கோச்சியிலே அவர்கள் செல்கிறார்கள் அதில் பலர் பெற்ற மக்களையும் ஈன்ற பெற்றோரையும் வாழ்க்கை துணைவரையும் வாழ்க்கை
துணைவியையும் வசந்த காலத்து சோடிகள் போல் வானத்தை வட்டமிட்ட வாலிபரும் வனிதையரும் ஏனோ மாடுகள் ஆடுகள் போல் பிரிந்தே செல்கிறார்கள்.
“சிக்கு புக்கு நீலகிரி தொப்பித்
தோட்டம்-நாங்கப் ப்ோற கோச்சியிலே ஆளுக்கூட்டம்" என்று இன்றும் உண்மைக் கதை கூறும்-பல ஊமைகள் நிலை கூறும். அழுகைக் கோச்சியிலே அவர்கள் செல்கிறார்கள்.
29

Page 16
அதனால் தினம் பிரிவுகளே கருவாகிப் பிறக்கின்ற உலகத்தில் சிலரின் சீறிய மூச்சுக்கள் சிதறப் பிளக்கிறது வானை
அவர்கள் நாட்டிற்கு உழைத்தவர்கள் நாயாய் திரிகின்ற போதும்-அவர்களை நாடுகடத்து தற்கே சிலர் பேயாய் திரிகின்ற போது ஓங்காரம் தானும் செய்யாது-இந்த சங்கார வாழ்க்கை எமக்கேனோ?
-1983 ஜனவரி காயகம்
30

அஞ்சலிகள்
தேயிலை சாயம் ஆயும்சாலை-பல தேகத்தின் சாயம் ஆய்ந்த மாலை காணா பிணமதை தேடுவது மாறி கண்ட பிணங்களை கோரியதைப் பாரீர்
இங்கே யந்திரங்கள் ஒலிக்கும் எங்கள் கரங்களும் ஓங்கும் மாலையில் அவையும் சோரும் ஓங்குவதும் சோருவதும் ஓயாது நிகழும்.
வருடா வருடம் மலைகளில் இரத்தம் தோய்ந்து தோய்ந்து குளிப்பது வழமை குளிப்பில் சிலரும் மூழ்க எங்கள் மலைகளும் குமுறும் குமுறி குமுறி வெடிக்கும் - அந்தச் சிலரையும் உயிர்க்கும்.
(1987இல் தலவாக்கொல்லை (சென்கூம்ஸ் தோட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து எழுதப்பட்டது) 1988 பெப்ரவரி 2
வீரகேசரி
3l

Page 17
வேலிகள்
ஐயோ!
எம்மை காத்திடுவோம் வேலியிலிருந்து காத்திடுவோம்-முள் வேலியிலிருந்து காத்திடுவோம் வேலியின் முள்ளை அகற்றிவிட்டு வேங்கை மேயா நிலையினிலே வேலியேயில்லா தொழித்திடுவோம்.
பாரதம் 'கொலணி" ஆனதனால் பாவிகள் எம்மை "தத்தெடுத்து" பாதையில் விட்டுச் சென்றுவிட்டார்.
இப்போ எமது தோட்டமும் கொலனியானதனால் இந்த வேலிகள்-சிங்கள "கொலனி வேலிகள் எங்கள் குடிகளில் சிலதை மேய்ந்தனவே மிஞ்சிய எம்மையும் மேய்வதற்கே முள்ளால் வேலியாய் அமைந்தனவே
32

ஐயோ! எம்மை காத்திடுவோம்-முள் வேலியிலிருந்து காத்திடுவோம், வேலியின் முள்ளை அகற்றிவிட்டு வேங்கை மேயா நிலையினிலே வேலியேயில்லா தொழித்திடுவோம்
1988 ஏப்ரல் 10 வீரகேசரி
33

Page 18
நிம்மதியில்லை எனக்கு
இன்னும் நாடற்று ஊர்கெட்டு, வீடற்று நீங்கள் திரிவதனை எண்ணியெண்ணி-என் நெஞ்சம் பதைக்கிறது.
“பூட்ஸ்” சத்தமும் “டிரக்" இரைச்சலும்-மரண ஒலங்களும் மிகையாகி காதைக் குடைவதனால் இன்னும் சாகவில்லை! சாகவும் முடியவில்லை.
கழுகு கூட்டிற்குள் வாடும் குஞ்சுகளின் தாயின் உள்ளங்கள் புகையும் நிலையுணர்ந்து எனக்கு புரைக்கேறும்!
மரமாடி காத்தடிக்கிறதா ? காத்தடித்து மரமாடுகிறதா ?
34

இதைக் கூட அறியாது இருட்டுக் கூட்டிற்குள் வெளியுலகை எண்ணி விம்மி அழும் குஞ்சுகளால்-எனது தலையே விறைக்கிறது.
நான் “காட்டுக் கறுப்புமில்லை” “ரோதை முனியுமில்லை” கிட்ட வாருங்கள்! கிட்ட வாருங்கள்! கேட்டுச் செல்லுங்கள்!
அட என்னைத் தெரியவில்லை ? "நான் தான்” ஏழாயிரம் ஏக்கர் காக்கப் போய் நிரந்தரமாய் சாய்க்கப்பட்டேன் டெவனில் கிடக்கிறேன் நிரந்தர துரக்கமில்லை-எனக்கு நிம்மதி சாவுமில்லை.
ஏழாயிரம் என்ன ?-இப்போ பல்லாயிரம் ஏக்கர் பறிபோயும்-உங்கள் முனகல் மட்டுமே கேட்பதனால்-நான் மோசம் போகவில்லை மோசம் போகவும் முடியவில்லை.
கிட்ட வாருங்கள்! கிட்ட வாருங்கள்!
கேட்டுச் செல்லுங்கள்
35

Page 19
و سLاNے.
என்னைத் தான் மொய்க்கிறதென்றால் உங்களையும் மொய்ப்பதேனோ ? ஈக்கள் மொய்ப்பதேனோ ?
1988-மே-8 வீரகேசரி
(1977ஆம் ஆண்டு மே மாதம் தலவாக் கொல்லை டெவன் தோட்டத்தில் பொலிசா ரினால் சுட்டுக் கொல்லப்பட்ட சிவனு லட்சுமணன் நினைவாக)
36

மண்ணைக் காப்போம்
“இந்திய” “சைனா" கன்றுகள் முந்திய தேயிலைக் கன்றுகள். “ரீ. ஆர். ஐ.” கன்றுகள், இன்றைய தேயிலைக் கன்றுகள்-நாம் பிந்திய பரம்பர்ைக் கன்றுகள்.
நோயை எதிர்ப்போம்-சூரிய தீயை தணிப்போம்-மழை நீரை வடிப்போம்-ஆழ வேரை பதிப்போம் மண்ணைக் காப்போம்-எங்கள் வளத்தை சேர்ப்போம்.
அனலுக்கும் புனலுக்கும்-மலைச் சரிவுக்கும் அரிப்புக்கும்-இடையில் அரிதாய் பிறந்தவர்கள்-இந்த மலையில் பிறந்தவர்கள் பாட்டன்கள் பூட்டன்கள்
37

Page 20
பெற்றவர்கள் உற்றவர்கள்-கற்றப் பாடத்தை தொகுத்தவர்கள் நாங்கள்!
இன்றைய தேயிலைக் கன்றுகள்
ரி. ஆர். ஐ.” கன்றுகள் இன்றைய பரம்பரை கன்றுகள்
1989 டிசம்பர்

இனி பிழைவிட (x) மாட்டேன்
"நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது காணி நிலம் கிடைக்குது பிரசாவுரிமை கிடைக்குது “மகசீனில்" இருக்கும்-மக்கள் மனை வந்து சேருது மக்கள் சபையில என்னை மந்திரி ஆக்கிடுங்க மறக்காம போட்டிடுங்க-உங்கள் ஒட்டைப் போட்டிடுங்க”
இப்போ எங்கள் லயத்துக் கோடியிலே இப்படித்தான் ஒலிக்குது ஓயாமல் ஒலிக்குது.
தலையில முண்டாசில்லை! கையிலே குடுப்பையில்லை! நோட்டீசும் கையுமாய் ஸ்பீக்கரும் வாயுமாய்-சிலர்
39

Page 21
வெள்ளையும் சொள்ளையுமாய் நாயாய் அலையிறாங்க பேயாய்த் திரியிறாங்க
"இவங்கத்தான்" w என் மகனை பிடிச்சப்போ விழி பிதுங்கி நின்றவங்க-அவன் விடுதலைக்கு கேட்டப்போ *வேற வேலையில்லை’ என்றவங்க காணி கேட்டப்போ காறி உமிழ்ந்தவங்க-பல குண்டுகளை தந்தவங்க கொன்பிரன்சு மேசையில கோணி நின்றவங்க சிட்டிசன் போம் நிரப்ப சந்தோஷம் கேட்டவங்க “இவங்களுக்கு” பிழையிட (X) மாட்டேன்-நான் பிழைவிட மாட்டேன்!
1987 gjGLITur
40

கதை நிஜமாகும்
வடக்கும் எரிகிறது தெற்கும் எரிகிறது
வானமே! நீ அழுதால் நீர் நிறையும் நெருப் பழியும்
வீண் பயமோ ?
விண்ணுக்கும், இழிவான இரணியன்றும் உன் மடியில் தவழ்வதனால்
தாமதமோ ?
குடில்கள் எரியும் கோடிகள் அதிர-உன் இளைய மைந்தர்கள் நாளும் மடிகிறார்கள் டயரோடு எரிக்கிறார்கள்
3 س-زین)

Page 22
பலியாகும் மைந்தர்கள், முகிலாக நின் மடியில் இரக்கமில்லை, ஈரமில்லை, நின் பேர் விழிக்கு
நின் இடி ஒய்ந்து, பீரங்கி இடிக்கும், குண்டுகள் வெடிக்கும், இலங்கையர் நாளாய், தீவிரம் அடைகிறது. தப்பியவர் ஒழிப்பதுவும் ஒழித்தவரை பிடிப்பதுவும் தழைப்பதை தளப்பதுவும் முகாம்களில் வாடுவதும் புனர் ஜென்மம் எடுக்கிறது
இலங்கையின் கோடிகளில் வாழ்வு மடிகிறது. வையம் புரிகிறது. நீயோ மறுக்கின்றாய் நின் பேர் விழி
நீர் சிந்த
வானமே!
நீர் மறுத்தால், மண்ணின் வகை அறிந்து வாழும் நிலை தெரியும்
காதை நிஜமாகும்.
1986 பெப்ரவரி
42

D606vU (6T ly
எனக்கேன் இந்தப் பேர் ? நான் கேட்டப் போதெல்லாம் "ஒன் பேரு மலையாண்டி பெரியங்காணி* வச்சப்பேரு” பெருமையோடு எங்கம்மா பெரிசா சொல்லி வரும்.
பாட்டன் பூட்டன் மாதிரியே நானும் உழைச்சிருக்கேன்-இந்த மண்ணுக் குழைச்சிருக்கேன் ஒன்னாம் நம்பர் புதைகுழியில் ஒதுங்க நினைச்சிருந்தேன்.
"பென்சன்" கொடுத்திட்டு வீட்டையும் பறிச்சிட்டான்
பெரிய கங்காணியை பேச்சுவழக்கில் பெரியங்காணி என்பர்.
43

Page 23
பிள்ளைகளும் வேலையில்லை, தோட்டத்தில் இடமுமில்லை. ஒதுங்கக் கூட வழியுமில்லை.
அறுபது வயதினில் தான் அர்த்தம் புரிகிறது. எனக்கேன் இந்தப் பேர் ? “என் பேர் “மலை ஆண்டி" பெரியங்காணி வச்சப்பேர்.”
1991 டிசம்பர்

A நிதர்சனம். A பீடித்துண்டுக்கு ஒட்டுப்
போடுவனா ? A சிவனு இலட்சுமணனுக்கு. A தலைவரு கண்டிக்கிறார். A இருவர் பாடல். A*காலம் நெருங்குது கண்ணாத்தா. விடிவை நோக்கிய “வேலக்காடு”. மீட்சியை கோக்கி. மாவலியை மாற்றிடாதீர்
அரியது கேட்கின்.
A
A
A
A A ஜேம்ஸ் டெயிலருக்கு A இதயவெட்டு-1948 A சூரியப்பிரியனுக்கு A ஒரு மரணம் பல ஜனனம் A பொடிமெனிக்கேயும் இராமானுஜமும் சர்வதேச வாழிடத் தினமா ?
OONI... go6I... I
a
சிவ இராஜேந்திரன்

Page 24
நிதர்சனம்
இது விடியலைத் தேடும் பூபாளம் இதில் விளையப்போவது ஏராளம்இது வெற்றியை நோக்கிய வீரப்படை விவேகமே அதற்கு அடிப்படை
வானம் சிவக்கவும் பூமி சிறக்கவும்
புறப்படுது ஒரு புதிய படை-பொது போரினைத் தொடுத்து புதுமைகள் காணவே
பொங்கி வருகுது மக்கள் படை
எழுந்து வாருங்கள் தோழர்களே! இருளை அகற்றுவோம் வீரர்களே! சமத்துவம் என்பது நமது பாதை-நம் சரித்திரத்தில் இது புதிய பாதை.
மலையகத்தில் பெரும் மாற்றத்தைக்கண்டிட மலைகளாய் உயருது மக்கள் படை-எம்
அடிமை வாழ்வினை அறுத்துத்
தொலைத்திட ஆறாய் பெருகுது தொழிலாளர் படை
46

உரிமைகள் இன்றியே உழைத்திட்ட
மக்களின் உண்மைத் தோழனாய் இணையும் படை உழைப்போர்க்காய் இந்த உலகை மாற்றிட உறுதி கொண்டது மக்கள் படை
சீரிய பாதையில் சிவந்த கொடியினில் சீறிப் பாயட்டும் புதியபடை புது இலங்கையை அமைத்திட சமத்துவம் படைத்திட எழுந்து வருகுது மக்கள் படை
04-05-199.
47

Page 25
பீடித்துண்டுக்கு ஒட்டுப் போடுவனா?
பெரிய படிப்பு படிக்காட்டியும் பேப்பர் படிக்க முடியுமுடா-நான் பொறந்த காலம் முதல்-உங்க போக்குகள அறிஞ்சவன்டா
நாப்பத்தியெட்டினிலே நமக்கு நாடில்லாம ஆக்கிப்புட்டு நயவஞ்சக வேல செஞ்சி நாளெல்லாம் அலைய வச்சி வேடிக்கப் பார்த்து நின்ற வெறி நாயி கூட்டத்திற்கு-ஒட்டு போடுவனா.போடுவனா ?
இருந்ததெல்லாம் புடுங்கிப்புட்டு-நம்மல இரண்டாந்தர பிரசையாக்கி எத்தனையோ கொடுமைகள எமக்கு செய்த துரோகிகளுக்கு போடுங்க ஒட்டையினா போடுவனா ? போடா நாயே.
48

எழுவத்தேழு கொலப்பத்துல-நம்மல எரியவுட்டு பார்த்தானே குமரி புள்ளகளுக்கு கொடுமைகள
செஞ்சானே பச்ச குழந்தகள பலியாக எடுத்தானே இதயெல்லாம் மறந்துப் புட்டு இனி ஒட்ட போடுவனா?
ஏன் ? எம்பத்தி மூனு கரச்சலுல-நம்மல என்ன பாடு படுத்தினாங்க. இப்பவும் சும்மாவா இருந்திருந்து எரிக்கிறானே மொனராகலயில நம்ம முதுகுதனை பிளக்கலயா ? இதயெல்லாம் மறந்துப் புட்டு இனி ஒட்டு போடுவனா ?
பீத்த உடுப்போட-நான் பெரட்டுக்களம் போகையில பீடிக் கட்டு தருவாங்கண்ணே பெரியவருக்கு ஒட்டுப்போடு சாராயம் குடுப்பாங்க-நம்ம தலைவருக்கு ஒட்டுப்போடு என்று நீ சொன்னாக்க-நான் இனிமேலும் கேட்பேனா ?
1990
49

Page 26
சிவனு லட்சுமணனுக்கு.
உரிமைக்காய் உயிர்நீத்த உயர்ந்த நல் தோழனே உனை எண்ணிப் பாடுகின்றோம் உயிரான தோழனே
டெவன் தோட்ட வீதியிலே விழுந்த உன் குருதியிட்ால் மலையகம் விழித்ததன்று மலைபோலே உறுதி கொண்டு அந்நாளில் உயர்ந்த கைகள் எந்நாளும் ஓயாதுதொழிலாளர் உறுதியென்றும் துளி கூட குறையாது.
இன்னலோடு இலங்கை வந்து இவ்உயர்ந்த மலைநாட்டை பணத்தினை அள்ளி தரும் பசுஞ்சோலையாய் மாற்ற வெளியேறி சென்றிடடா
50

உரிமையற்ற இந்தியனே என கூறி எமைவிரட்ட விடலாமோ தோழனே.
எம்மாலே உருவான ஏழாயிரம் ஏக்கர் தோட்டத்து நிலங்களையே துணிவோடு பறிப்பதோ-நீ எனக் கூறி முன் பாய்ந்த இளஞ்சிங்கம் எம் தோழன் இலட்சிய பாதை காட்டும் இனிய நல் லட்சுமணன்
15-04-90
5.

Page 27
தலைவரு கண்டிக்கிறார்
தம்பி தண்ணியடித்துவிட்டு தலைகீழா ஆடுறியா நல்லது-நம்ம தலைவருக்கு கோபமில்லை.
பொம்பள தேடிக்கிட்டு பொறுக்கியா அலையிறியா போதா கொரைக்கு புகை வேற ஊதுறியா-இது பொதுவான விசயந்தானே பொழுது போக்கு ஹி..ஹி.
படிக்கிற புத்தகம் விட்டு பாலியல் புத்தகம் பாக்கிறீயா பட்டுக்கோட்ட பிரபாகர் பச்ச பச்சயா எழுதுவானே படுக்கும் வரை நல்லாபடி பாத்துப்புட்டு எனக்குங் குடு.
52

பள்ளிக்குடம் போறேனுட்டு படம் பாக்க போறியாமே பானுக் குட்டி ஆடுறாளாம்-அதோட பச்சப் பச்சயா காட்டுறானாம் பதுங்கி மெல்ல போய் பாரு பாதகம் ஒன்னுமில்ல-நானும் பாக்க வேணும் நேரமில்ல
கோடிப்பக்கம் நின்னுக்கிட்டு கொரங்கு வேல பன்னுரியா கோவம் கீவம் ஒன்னுமில்லகொமரிகளையும் சேர்த்துக்கிட்டா கொறவு ஒன்னும் இருக்காது இளம் வயசுல செய்யாம இனி எப்ப செய்ய போற
தம்பீ.
மக்களத் திருத்தப்போறேன் மாற்றங்கள காணப்போறேன் வீடு வீடா சென்று நானும் விசயங்கள சொல்லப் போறேன் இழிவாகத் திரியும் நம்ம இளவயசுப் பொடியங்கள இழுத்து வந்து திருத்தப்போறேன் சமுதாய சிந்தனைய சம உடமைக் கொள்கைகள் சாகும் மட்டும் சொல்லப்போறேன் மக்கள ஒன்று சேர்த்து மாற்றங்கள காணப்போறேன்
53

Page 28
என்றுதான் கூறிக்கிட்டு இளவயசுக் கூட்டமொன்று இரவிரவா திரியிதாமே உயிர் போனாலும் பரவாயில்லனு ஊர் ஊரா திரியிதாமே
அதுல மட்டும் சேராமஅனைத்தையுமே செஞ்சி வா நீ பெரிய தலவரு இததான் பெருசாக நினைப்பாரு.
1992

இருவர் பாடல்
பெண்:
கோழிக் கூடா லயம் அமைச்சி கொள்ளப்பக்கம் பீலயும் வச்சி கும்மிருட்டில் வாழ விட்டான் கொடும காரனே-நம்ம சொகமேதும் கண்டதுண்டா சொல்லு மச்சானே
ஆண :
வெளிச்சத்துல வாழ்ந்தமுனா விசயங்கள வெளங்கிக்குவோம் அதனால அடச்சி வச்சான் ஆங்கிலேயனே-அதுதான் ஆண்டாண்டா தொடர்ந்திருக்கு அன்பு மச்சாளே
பெண்:
பட்டிபோல பள்ளிக்குடம் பள்ளத்துல கட்டிவச்சி பாசாங்கு பன்னுரானே பாசமச்சானே-இந்த பாதகம் ஏன் தானென்று சொல்லு மச்சானே
55

Page 29
ஆண் :
பெண் :
கூனியடிச்ச கன்றுகள கொழந்தகதான் புடுங்காம அடக்கி வைக்க கட்டிப்போட்டான் அந்த பட்டிய - அதுல அறிவு பெருக வசதியில்ல ஆச மச்சாளே
தோட்டங்கள பிரிச்சிவச்சி தொரமார காவல் வச்சி துன்பங்கள தந்ததும் ஏன் ஆச மச்சானே-இது தொடர்ந்தும் இன்று வருவதும் ஏன் சொல்லு மச்சானே
நாம ஒற்றுமையா இருந்தமுனா ஒலகமே மாறிவிடும் அதனால பிரிச்சி வச்சான் ஆச மச்சாளே-அது அடியோட மாறிவருது அதையறிவாயே சங்கமுனும் கட்சியினும் சாதியினும் படிப்பு என்றும் பிரிவயெல்லாம் மாத்த வேனும் பிரிய மச்சாளே-இதுக்கு பெரிய தொரு படை வருது சேரு மச்சாளே.
56

பெண்:
ஆண் :
பொம்பளய மிதிச்சி வைக்கும் பொழைப்பு எல்லாம் மாறிவிடும் புதுவாழ்வு வாழ்ந்திடலாம் புரியும் மச்சானே-உந்தன் போக்கப் பத்தி தெரிய நானும் கேட்டு வச்சேனே
கோவிந்தன் பாதையிலே கோடிசனம் சேர்ந்துவரும் கூடி போவோம் அந்த நேரம் ஆச மச்சாளே கோப்பி கத்தியோட வந்து சேரு வீர மச்சாளே.
1992

Page 30
காலம் நெருங்குது கண்ணாத்தா
கூட மேல கூட வச்சி கொழுந்து கொண்டு போற பெண்ணே-உன் கூட நெறஞ்சி என்ன கண்ணு ரத்தினமே
-உன் கொழந்தக பசியில தான் பொண்ணு
ரத்தினமே
காடுகாடா நாமலைஞ்சி கஸ்டப்பட்டு வேல செஞ்சும் கண்ணிரு கொறயலயே-கண்ணு
ரத்தினமே-நம்ம கவலக தீரலியே பொண்ணு ரத்தினமே
கால மொத மால வர கஸ்டப்பட்டு வேல செஞ்சும் கால்வயிறும் ரொம்பலயே கண்ணு
ரத்தினமே-நமக்கும் நல்ல காலம் எப்பவருமோ பொண்ணு
ரத்தினமே
58

வேல விட்டு வீடு வந்து வெற கெடுக்கப் போற பெண்ணே-சொந்த வீடுக நமக்கு உண்டா சொல்லு ரத்தினமே -இதுக்கு வெளக்கம் எப்ப காணப்போறோம்
பொண்ணுரத்தினமே
கூலிகள கூட்டிக் கேட்டு குரல்கொடுத்து நிற்கயிலே கொரவளய நசுக்குறானே-கண்ணு
ரத்தினமே-நாம கூடி எப்ப சேரப்போறோம் சொல்லு
ரத்தினமே
வாழ்வதற்கு வழியுமுண்டு வயித்துக்குஞ் சோறுமுண்டு வந்து சேரு என்னுடனே கண்ணுரத்தினமே -நமம வாலிபர்கள் சேர்ந்துவந்தோம் பொண்ணு
ரத்தினமே
மட்டக்கம்ப கையில் கொண்டு மட்டந்தட்ட வாரும் பொண்ணே மேடுபள்ளம் எல்லாத்தையும் கண்ணு
ரத்தினமே மெல்ல மெல்ல மாத்திடுவோம் பொண்ணு ரத்தினமே.
1991-04-28
59

Page 31
விடிவை நோக்கிய வேலக்காடு”
கங்காணி
ஏழு மணி சங்கு அங்க இறைஞ்சிதான் அடிக்குது கேள் என்னா புள்ள அங்க கத எட்டிவச்சி வேகம்பண்ணு
பழைய மலையிலயும் பதனஞ்சி கிலோ எடுக்காட்டி பாதிப் பேரும் கெடையாது பழனியம்மா வேகம்பண்ணு
பெண்
தொழிலாளி
கூட மேல கூட வச்சி கொழுந்தெடுத்து, கொண்டாந்தா பாவி கணக்கப்புள்ள பத்து ராத்த சொன்னானே மலையேறி மலையேறி மாடு போல் ஒழைச்சாலும் மாசக் கடசியில மாவுக்குந்தான் வழியுமில்ல.
60

கர்ப்பிணி உழைப்பாளி :
வயித்துப் புள்ளகாரி யெல்லாம் மலையேறி கஸ்டப்பட்டு எள்ளளவும் தப்பி விட்டா இல்ல வேல என்றிடுவான்.
வயதான தொழிலாளி :
கூட தூக்கி கூட தூக்கி கூனும் விழுந்து போச்சி குனிந்துழைக்கும் எங்களுக்குக் குலை நடுங்கும் வாழ்வாச்சி
வன்செயலில் பாதிப்படைந்த
தொழிலாளி :
தெரணியகல தோட்டத்துல அருணாசலம் உயிர்போச்சி வாழ்ந்துவந்த லயங்களெல்லாம் வன்செயலால் தீயாச்சி
இளம் பெண் தொழிலாளி :
கட்சியினு சாதியினு பிரிந்து நாம் கெடக்கலாச்சி கட்டாயம் ஒன்று சேரும் காலந்தான் நெருங்கலாச்சி
உரிமைக்காய் போராடும் ஒரு பாதை தெரியலாச்சி உழைப்போரை ஒன்று சேர்க்கும் உறுதிதான் அதிக மாச்சி
1985 செப்டம்பர்
62

Page 32
மீட்சியை நோக்கி.
மீட்கப்பட வேண்டியவை நிறைய இருப்பதால் அதற்கான பயணமும் நீண்டு கிடக்கின்றது.
இனவெறிக் கழுகுகளும் காலைக் குறிபார்த்துக் காத்துக் கிடக்கும் கரு நாகங்களும் மேவிப்பாய்ந்து மிதிக்க நினைக்கும் மிருகங்களும் ஏராளம் ஏராளம்
உலகம் தலைகீழாகக் கிடக்கின்றது ஆழக் கிடங்கில் மானுடம் நெம்பு கோல்களை உருவாக்க வேண்டியவர்கள் வம்புப் பேய்களை
62

விதைத்துக் கொண்டிருக்கின்றனர்குனிந்துழைக்கும் தோட்டத்
தொழிலாளர்கள் குள்ள நரிகளால் குதறப்பட்டுக் குலை நடுங்கி நிற்கின்றார்கள்
வெறி நாய்களை நோக்கி விரல்களை நீட்டிய போதெல்லாம் கொலைகளுக்காக குதிரைகள் தட்டப்பட்டது-எனினும் டெவனில் தேயிலைகளை மறைத்து நின்ற மக்கள் கூட்டம் அட்டன் வீதிகளில் ஹைலன்ஸ் மாணவர்களால் சிந்தப்பட்ட புதிய இரத்தம் மலையகமெங்கும் உயர்த்தப்பட்ட மனித முஸ்டிகள் மாபெரும் விருட்சமாய், மலைகளாய் மலையக மக்கள் முன்னோக்கிப் போய்
கொண்டிருக்கிறார்கள்.
தோழர் மணியம் நினைவாக1989-12-30
63

Page 33
மாவலியை மாற்றிடாதீர்
மாவலி எத்தனை வனப்பு மிக்கது அதன் உடல் உயிர் ஊரெல்லாம் பரவியுள்ளது மலையக மக்களின் குருதி
இந்த உலகின் எல்லா மூலைக்கும் பரவியிருப்பது போல
மலைகள் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக-இம் மக்களின் கண்ணிரை அள்ளிச் செல்கின்றது: மாவலி
எத்தனை வனப்பு மிக்கது
குடிநீர், குளிப்பு கோயில் திருவிழா "குடி விடுதல்’-என இந்த மக்களோடு இணைந்துள்ள மாவலி எத்தனை வனப்பு மிக்கது
64

முனைப்புடன் முன் செல் சேர்ப்பதால் பலம் கொள் தொடர்ந்து குமுறிடு பள்ளத்தில் பதுங்கு எதிர்ப்பவை அழித்தொழி இவை
மாவலியின் பாடங்கள் விவசாயிகளின் உடலோடும் உயிரோடும் உறவாடும் மாவலி கதிர்களோடு கள்ளமாய் காதல் செய்யும் மூங்கிலின் காதலை மறந்திடும் முத்தமிடும்.
A
ஓ! மானுடரே 90களில் செய்தது போல் மீண்டும் மாவலியை பிணம் சுமக்க விட்டுவிடாதீர் உடலில்லா தலைகளையும் தலையில்லா உடல்களையும் எரிந்த, எரிகின்ற, எரியும் உடல்களையும் , கைகளையும் கால்களையும் சுமந்து செல்லும்-பிணந்திண்ணியாக மாவலியை மாற்றிடாதீர்.
65

Page 34
அரியது கேட்கின்.
ஆடிக் காற்று சுழண்றடிக்கும் ஆறுகள் பெருகும் இடைவிடாது ஒலிக்கும் இடியோசை-மனம் இயற்கையைக் கூட வெறுக்கும்
மழை
சோவென பொழியும்
GTGSTL கருமுகில் சூழ்ந்ததால் கறுத்திருக்கும் மரப் பட்டையை உரித்திடும் பனிக்கட்டி
மரங்கள் முறிந்திடும் மாரியம்மன் கோயில் தகரங்கள்கூட மடங்கி கீழ் விழும் பாதைகள் மறையும் பாறைகள் உருளும்
66

கண்ணைப் பறித்திடும் மின்னல் காலத்தின் கோலமோ வென கதைகளும் வெளிவரும் பச்சை விறகினால் சோத்துப் பானையும் கருத்திடும்
ஓட்டை லயங்கள் ஒழுகும் ஒட்டடை விழுந்து உலைத்தண்ணி கறுத்திடும் வீசும் வேகக் காற்றாலே-உடல் விசம் கொண்டது போல் நடுங்கும்
அட்டைகள் பெருகிடும் அனுதினம் தின்றிடும் கால் விரல் எல்லாம் கடித்துத் தின்றிடும் “சேத்துப்புண்” குளிரும் காய்ச்சலும் கூடியே கொல்லும்
உயரும் காண் தண்ணியாலே ஓரிரு லயங்கள் அழியும் மண்ணைத் தோண்டி மனிதரை தேடிடும் மாபெரும் பணியும் தொடரும் இடி விழுந்து இறந்தோரை எண்ணிய மனமோ
இளகியே உரத்துக் கதறும்
நீதி, நிவாரணம் வேலையில் விடுமுறை
67

Page 35
ஆறிட ஆறுதல் காத்திட காப்பு உறுதி உண்ண உலர் உணவு இறந்தோரைப் புதைத்திடப் பெட்டி ஏதும் இன்றியே தோட்டத் தொழிலாளர் தொடர்ந்து உழைத்திட துணிந்து மலையில் ஏறுவர்.
6.

ஜேம்ஸ் டெயிலருக்கு
கலகாவுக்கு அப்பா லிருந்த காட்டு நிலங்களையே அழித்து தோட்டமாக்கி அழகாக தேயிலை நட்டு பல நூறு தொழிலாளரைப் பசளையாய் போட்டு அங்கே விலை போகும் தேயிலையை வித விதமாய் ஆக்கித் தந்து ஊன் உடல் உயிரையெல்லாம் உங்களுக்காய் வாரித் தந்து இங்கிலாந்து சீமையினை எவ்வளவோ உயர்த்தித் தந்து உலகமே போற்றுகின்ற ஒரு நாடாய் இலங்கை மாற்றி தொடர்ந்து உழைப்பதற்காய் தொழிலாளர் ஆக்கித் தந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் உரமாகி போய்விட்ட உலக நாதனின் வணக்கங்கள்
69

Page 36
நாங்கள் ஆக்கித்தர உங்களுக்காய் மாற்றிக்கொண்ட நூல் கந்தலா தோட்டம்-இப்போ நூல் நூலாய் போயிடிச்சி
எங்கள் உடல்களை அடுக்கி உருவாக்கிய தெல்லாம் உருமாறி போயிடிச்சி
குழி குத்தியே மாண்டுபோன குழந்த வேல புதைச்ச இடம் இடி விழுந்து செத்துப் போன எட்டுப் பேர புதைச்ச இடம் பஞ்சத்துல செத்துப் போன பல பேர புதைச்ச இடம் முடிஞ்ச கொலப்பத்துல-மிஞ்சின முண்டங்க புதைச்ச இடம் எல்லா இடங்களுமே எப்படியெல்லாம் மாறிடிச்சி
குளவிக் கூடு நிறைஞ்சிருக்கும் குப்பன் பள்ளங்கூட-இப்ப கொலனியா போச்சுதுங்க கருப்பன நசுக்கிக் கொன்ன கருங்கல்லு மேல கூட *கம' யின்னு எழுந்து போங்க
பேர் பதிவுமில்ல பிச்சைக்கும் வழியுமில்ல
70

வேற தோட்டங்களிலயும் வேல வெட்டி ஒண்ணுமில்ல போற போக்கப் பாத்தா-நமக்கு புதைக்குழிக்கும் இடமே யில்ல இருக்கிறத காப்பாத்தனும் இருப்பவன எழுப்ப வேணும் சீம தொரைகளே இலட்சுமணன கூட்டிவந்து செம்பாதை காட்டப்போறேன் கோவிந்தன அழைத்து வந்து குனிஞ்ச தலை நிமித்தப் போறேன்
அதுவரைக்கும்
அமைதியாக ஒய்வெடுங்க.
71

Page 37
இதயவெட்டு-1948
இவர்களுக்கு இதயம் இருப்பதே பிடிக்கவில்லை
எனவே இழுத்துப் பிடித்து அறுத்து எரித்திட நினைத்தார்கள்
நரமாமிசப் பிரியர்கள் நாய்களென வாலையாட்ட திடீரென சட்டம் பிறந்தது இந்த இதயம் தாயின் கருவறையில் இருந்ததா ? தாயின் உடலில்
எங்கிருந்தது இதயம் ? எக்ஸ்ரே கேட்டார்கள்
guit! இவன் கருக்கொண்டதே காட்டிலும், மேட்டிலும் பிறந்தது
72

பெரிய சாமியின் காம்பிராவில் இவன் பிறந்த காம்பிராவுக்கு கதவே இல்லை பதிவு எங்கிருக்கப் போகின்றது ? பதிவு இல்லையா ? இதயத்தை வெட்டு இவர்களை வெட்டுவதாக நினைத்து அவர்களையே வெட்டிக் கொண்டார்கள் பிறந்தது சட்டம்
இனி உனக்கு குடியுரிமை இல்லை.
@ー5

Page 38
சூரியப்பிரியனுக்கு
நண்பனே
நீ நினைப்பது போல
சூரிய உதயத்தைப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல
ஆஹா,
சூரிய உதயம் எவ்வளவு புதுமையானது தங்கத்தட்டு மின்னுவது போல செந்நிறத்தில் குளிப்பது போல இருளெல்லாம் விலகி அழிவது Gusta) நண்பனே
நீ நினைப்பது போல சூரிய உதயத்தைப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல
இரவில்
கடுங்குளிரில் இளைக்க இளைக்க ஏறிச் செல்ல வேண்டும் உயரே செல்ல
74.

உடற்பலமும் வேண்டும் முனைப்புடன் செல்வோரில் முன் நிற்கவும் வேண்டும்.
காலமறிய வேண்டும், காரணம் காலைச் சூரியனின் கதிர்களை கார் முகில் தின்றுவிடும் கவனம் வேண்டும்
காரணம் கற்பாறைகள் வழுக்கிவிடும் இரு புறமும் உள்ள இரும்போடு இருகரமும் சேரவேண்டும்
அடியெடுத்து மேல் ஏற அமுக்கம் கூடும்
நெஞ்சையடைக்கும்
நெடுமூச்சு தொடர்ந்துவரும் இடுப்புடையும்
இடையிலே திரும்பச் சொல்லி-மனம் இடித்துரைக்கும்
இதையெல்லாம் கருதாது மாறும்புக் கூட்டமென இளசுகள் முன்னோடும் வயசுகள் வழி காட்டும் சூரியன் உதயமாக அனைத்துமே மகிழும்
u75

Page 39
நண்பனே நீ நினைப்பது போல சூரிய உதயத்தைப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல காரணம் கடல் மட்டத்திலிருந்து சிவனொலிபாத மலை 7360 ஆடி உயரத்தில் உள்ளது.

ஒரு மரணம் பல ஜனனம்
ஒ.லட்சுமணனே உன்னை புதைத்த புதை குழியையே மீண்டும் ஒரு முறை புதைக்க நினைக்கின்றார்கள்
அன்று
ஆறாய்ப் பெருகிய
20
குருதியின் ஒவ்வொரு துளிகளிலுமிருந்து ஆயிரமாயிரம் இலட்சுமணர்கள் புறப்பட்டுப் போனார்கள்
உன் இறுதி ஊர்வலத்தில் குமுறும் நெஞ்சத்துடன் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் முள்ளுகள்
77

Page 40
குத்திய முருங்கை மரத்திலேறி உன் முகத்தினைப் பார்ப்பதற்காய் முண்டியடித்த
நானும்
நண்பர்களும் அட்டன் வீதிகளில் அடியுதைப்பட்டு வடுக்களைப் பெற்ற வாலிபரும் இன்றும் உயிரோடு
சென்கிளயர்
டெவன் தொடர்ந்து குமுறுவதைப் போல் அன்றைய உறுதிகள்
நான்
என் பிள்ளை அவன் பிள்ளையென
தொடரும்.
78

பொடிமெனிக்கேயும் இராமானுஜமும்
மண்ணைப் புதுக்கி மானுடர் வாழுதற்காய் மரணத்தில் போராடி மலையகம் ஆக்கித்தந்த
மா மனிதரை
கூறுபோடும்
மந்தை வியாபாரிகள் பொடிமெனிக்கேயும் இராமானுஜமும்
தாயைப் பிரித்து தந்தையைப் பிரித்து தன் னுயிரென போற்றிய தோட்டத்தைப் பிரித்து ஊரினைப் பிரித்து உறவினைப் பிரித்து ஒலமிடும் மனிதரின் உழைப்பினை மிதித்து “ஊருக்கு" அனுப்பிட ஒடி வருகுது
79

Page 41
பொடிமெனிக்கா சிக்குப் புக்கு சிக்குப் புக்கு *ஏறுடா சுருக்கா இனியென்ன அழுகை" சிக்குப் புக்கு சிக்குப் புக்கு
மன்னாரின் நின்று வந்தவர் கதறிட வாழ்க்கைச் சுமையினை தலையிலே சுமந்து கண்ணிர் வற்றிட கால்களும் சோர்ந்திட போய் வரார் என்றாலும் போய் வாரேன் என்றிட அழுகுரல் கேட்டு ஆழியே அடங்கும் இருண்டதாய் நிற்கும் இராமானுஜம்
ஏறிடு
உன்னையும் இந்தியப் பிச்சையில்-சேர்க்க இழுத்துத் தள்ளுவேன்
.பூம் وطاليا وDالی!
8U

சர்வதேச வாழிடத்தினமா? 26... 26... Us. . . .
ஒன்றே முக்கால் நூற்றாண்டு ஒட்டடைகள் மூடிக் கிடக்கின்றன தகரமென்ற பெயரில்,
"ஸ்தோப்பு இடிந்து கிடக்கின்றது இரவில் படுத்திருக்கும் நாய் கூட
எழுந்து போய்விட்டது.
“கோடிப்பக்க" சாக்கடை நீர் குசினி வழியே ஒடுகுது லயத்து வாசல்
கான்களெல்லாம் திசை மாறி கிடக்கின்றன.
A மாட்டுக்கு
பட்டிக்கட்டி
81

Page 42
அதை வீடென நினைத்தாயா?
மாரிமுத்துக்கு
பங்களாவில் விசாரணை.
A
குச்சிகளாலான
குசினியை இடிக்கச் சொல்லி
குழந்தை வேலுக்கு எச்சரிக்கை
பணிய லயத்து பழனிவேலு மகன் அட்ரஸ் இல்லாத மனிதனாக அலைகின்றான் உறவினர் யாரும் தோட்டத்தில் வேலையில்லை.
A நாட்டில் கூறுகிறார்கள் சர்வதேச வாழிடத்தினமாம்! 26...9G... 11.
(சர்வதேச வாழிடத்தினம் ஒக்டோபர் -5 நினைவாக
82

எழுச்சி வேள்வி உறங்கும் எரிமலை சுதந்திர குழந்தை மானுடம் எங்கே ? ஆண்டவனுக்கு மனு தேசம் அழுகிறது லயத்து ஒப்பாரி மலையகத் தாய் அருமை அம்மா அஞ்சலைக்கு அஞ்சலி தடுக்காதே!. அமெரிக்க கழுகை விரட்டு! மே தினம் சுதந்திரன் வருகிறான்
எஸ். பன்னீர் செல்வம்

Page 43
எழுச்சி வேள்வி
மனிதா-நீ
தேயிலை
வேர்களுக்கு உதிரத்தினை ஊட்டும்-போதே பச்சைக் கொழுந்து சிவப்புச் சாயத்தினை உமிழ்கிறது.
வியர்வை மணிகளை வித்திடும் போதே காசு மணிகளும் கரை புரள்கிறது.
தாயகத் தவப் புதல்வா-நீ தங்கத் தொட்டிலை தாரை வார்த்து குப்பை மேட்டிலே குடியிருக்கிறாய்.
84

பணக் கூடையை முதிகிலே சுமந்து பவனி வரும் குறிஞ்சிக் கதிரவன் நீ. இன்னும்
ஒட்டிய
உடலுடன் ஊசலாடுவது-உன் அறிவுக்கண்களை கட்டிப் போட்டதனாலா ?
நிரந்தர அமாவாசையில் அர்ச்சிக்கப்பட்ட மலையகம் பெளர்ணமி சந்திரனால் மூழ்கடிக்கும் போது சிவப்புச் சாயங்கள் சீறிப்பாய-உன் நிரந்தர தோல்விகள் எழுச்சி
வேள்வியில் எரியாதா ?
85

Page 44
உறங்கும் எரிமலை
எங்கள்
tD GOGvuusto அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது *உறங்கும் எரிமலையாக"
உழைத்து உழைத்து ஒடாகி நொடிந்து போன வாழ்க்கையில் ஏழை வயிறுகள் ஏராளமாகவே எரிகின்றன!
சிலருக்குத் தெரியாது பலருக்குப் புரியாது இது தொட்டி
Ultg
8 (ij

காடுகலெல்லாம் தொட்டுப் பரவினால்
சுட்டறிக்கும் தணல்களால் பலர்
கிழித்தெறியப்படுவார்கள்.
எங்கள்
மலையகம் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது “உறங்கும் எரிமலையாக”
87

Page 45
சுதந்திர குழந்தை
நான் வறுமையின் வளர்ப்பு மகன் ஏழ்மையின் சிவப்பு தேசத்தில் சிந்தியது போல என் தேகத்திலும் சிதறியது!
இயலாமை என்பதல்ல எமக்கு எல்லாமே இல்லாமை!
ஒரு பொழுது போக்கிய பின் மறு பொழுது எதிர்பார்ப்பு!

விரதங்கள் அனுஷ்டிப்பதில்லை தவறாது அன்றாடம் சிருஷ்டிப்பதால்!
அடுக்கடுக்காய் எடுத்து வைத்த நினைவுகள் காலம் பூராவும் கானலாகவே!
இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தில் நீளுகிறேன் !
நாடு காகித நோட்டுக்களால் களவாடப்பட்டது தெரிகிறது!
புறப்படுகிறேன் குப்பை
மேட்டிலே குடியிருக்கும்-என் சுதந்திர குழந்தையை மீட்டு வர!
色一6

Page 46
மானுடம் எங்கே ?
மானுடமே மானுடமே
மாண்டு போன மானுடமே மீண்டு வர மாட்டாயோ
மீண்டும் வர மாட்டாயோ !
மீண்டுமிந்த
நாட்டினிலே
மானுடமும்
ஒளிராதோ மரணிப்பில் மீளாதோ !
இரத்தப் பிசாசுகளின் ஏவல்கள்
எங்கேயும் உரத்து ஊளையிடும் ஒலி தெறித்து ஒலிக்குதையோ காட்டேறிச் சாக்காடு
90

காவலதை காக்குதையோ !
வீதியெங்கும் ரத்தோட்டம் ரத்தத்தில் பிண வாட்டம் பின மேலே நரிக் கூட்டம் பிய்த்தெறியும்
போராட்டம்
உண்மையெலாம் ஓரங் கட்டி பொய்மைகளை பொருத்தியதால்
புழுக்களுண்ணும் பிணங்களுக்கு முகவரியே இல்லை யிங்கே !
மானுடமே மானுடமே மாண்டு போன
மானுடமே மீண்டு வர மாட்டாயோ மீண்டும் வர மாட்டாயோ !
9.

Page 47
ஆண்டவனுக்கு மனு
g s 0 ஐயனே
தட்டிப் பேசுகிறோம் என்ற
தடுமாற்றமா ?
f
சொர்க்கத்தில் சுகங் காணும் போது
நாம் சோறின்றி
கிடக்கலாமா !
அப்பனே
சற்று முன் சமூகமளித்திருந்தால் துயிலுரியப்பட்ட
aG) 5 திரெளபதைகள் மகிழ்ந்திருப்பார்கள்
-92

g. . . . . . ஒட்டுக்களை பெற்றுக் கொண்டா உரிமைகளை வழங்குவாய்
அடுத்த
தேர்தலில் நீயும் போட்டியிடு எங்கள் எலும்புகளையாவது பொறுக்கிக் கொள்ளலாம் !
93

Page 48
தேசம் அழுகிறது
பாரதத்தாய் மார்பகங்கள் இரத்தப்பால் ஊட்டியதால் சுதந்திரப் புதல்வர்கள்இங்கேயும் பிறந்தார்கள் !
வெள்ளைப் புறாக்களை விடிய விடிய பறக்க விட்டோம் சிங்கக் கொடிதனையும் இம்மாசனத்தில்
ஏற்றி விட்டோம் !
அன்னியரின் கொடுங் கரங்கள் அகன்றதாய் முழக்க மிட்டோம் !
94

சுதந்திரத்தாய் முத்தமிட
சூரியனாய் சிவந்து போனோம் !
சிலந்து போன கணத்திலேயே சிதைந்து GLITig
மனக் கனவு !
சுதந்திரனும் சுகந் தேடி மாளிகையில் மடிந்ததானால்
தேசிய புதல்வன் தேம்புகிறான் த்ேசம் இருட்டாகவே இருக்கிறது !

Page 49
லயத்து ஒப்பாரி
சோதரனே பாடு-இன்னும் நன்றாகவே புதிது புதிதாய் எங்களுக்காக !
நாடு-நம்
நாடு கண்ணிராலேயே கவி பாடச் சொன்னது !
சோதரனே பாடு-இன்னும் நன்றாகவே புதிது புதிதாய் எங்களுக்காக !

ஏழ்மைக்
கிழிசல்கள் மலை முகடுகளில் முட்டி மோதுவதைப்பாடு !
ஒட்டை
லயங்களுக்குள் ஒப்பாரி வைக்கும் ஒடடாணடி கூட்டத்துக்காய் பாடு !
சோதரனே பாடு-இன்னும் நன்றாகவே
புதிது புதிதாய் எங்களுக்காக !
நவ கால நாஜிகளின் ராஜியங்கள் அழிந்து போக !
அடிமைக் கயிறறுந்து அமாவாசை வாழ்வொழிந்து கிழக்கு வான் சிவந்து நிற்க
g7

Page 50
பாட்டாளி படையெடுக்கும் தினத்துக்காய் !
சோதரனே பாடு-இன்னும் நன்றாகவே புதிது புதிதாய் எங்களுக்காக !
98

மலையகத் தாய்
பெருமழை பொழியும் காற்று
பெரிதாய் சுழன்றடிக்கும் பணி
காலை கடிதாய் பொழிய அட்டை
கடித்திட கசியும் குருதி பசி
வயிற்றினை வருத்தி வாட்டும் உடல்
வாடியே மயங்கி வீழும்.
கரங்கள் கொய்யும் தளிர்
கூடையில் நிறைந்து நெழியும் சுமை
தலையினை சுழத்தும் வீட்டின்
நினைவுகள் நெடிதாய் விரிய பேதை
கவலையில் தொய்ந்தெழுந்து மெல்ல
மலையினை விட்டிறங்க
பசியினால் கதறும் குழந்தை-மார்பு
பாலின்றி வரண்ட நிலையில் தாயின்
நெஞ்சமோ நெகிழ்ந்து போகும் கண்கள்
கண்ணிரை கரைத்து வீழ்த்த
புணபட்ட இதயம் மேலும்
புண்ணாகி போகுமாமே
99

Page 51
சோற்றுக்கு வழியைத் தேட நாளும்
சோகமாய் கழியும் பிச்சை
தட்டுடன் பேதை நிற்பாள் உலகம்
திட்டிடும் தினமும் அவளை, உறவு
ஒட்டாது ஓடி ஒழியுமானால்
ஒட்டாது அவளின் கவலை !
Ꮨ 0 0

அருமை அம்மா
S/Loldt. ஆசையோடு ஈன்றெடுத்த அம்மா !
வா நாம்
தொலைந்து போவோம்
வறுமைப்பட்டு வறுமைப்பட்டு வதைபடுவதைவிட அதோ அந்த புதைக்குழியில் புதைந்துபோவோம் !
-9 budT............ கண்ணே என்று கட்டிய விரல்களோடு-நான் கல்லறைக்குப்போகிறேன் !
வா நாம் தொலைந்து போவோம் !
10.

Page 52
நீ ஏறிய ஏழாம் நம்பர் மலைகளோ-உன் ஏக்கத்தைச் சொல்லும் ஆறாம் நம்பர் மலைகளோ-உன் அவஸ்தையைச் சொல்லும் !
-9) to Drt. . . . . . . . . . . .
உன்
அழகிய கரம் தேயிலைக் கறையால் சேத மாக்கப்பட்டது.
ഉ@് அழகிய முகம் அசிங்கமானது !
அந்த பணித் துளிகளை
எதிர்த்து-உன் பாதம் பணியாத போது பித்தவெடிப்பென்ற புத்தும் உருவானது !
நீ மனக் கண்ணெங்கும் வெளிச்சத்தை கணக்கிட்டாய்
இன்னும்
O2

இருளாக இருப்பதால் ஏமாந்துபோனாய் !
s9.tbu DIT அந்த பெண்கள் காரில் பயணிக்கும் போது-உன் கால்களுக்கு செருப்புக் கூட இல்லையே !
பட்டாக பலர் உடுத்தையில் உனக்கு-அதை தொட்டுப்பார்க்க கூட எட்டவில்லை !
அந்த கந்தையை மாற்றி கசக்க நினைத்தாய் மாற்றிக் கட்ட மறுதுணியின்றி தவித்தாய் !
இதோ. உன் மைந்தனும் உன்னைப்
போலவே ஒராயிரங் கனவுகளை மனதுலே சுமந்து
103

Page 53
உன்னைப் போலவே ஒதுங்கி போனான் !
பிஞ்சு வயதிலே கொஞ்சி கொஞ்சி தாலாட்டி வளர்த்த அருமை அம்மா வா நாம் தொலைந்து போவோம் !
வறுமைப் பட்டு வறுமைப் பட்டு வதைபடுவதைவிட அதோ அந்த புதைகுழியில் புதைந்துபோவோம் !
போராடி போராடி தோற்றுப் போனால் வெறுமனே புதையோம் எச்சங்களை வளர்த்து அச்சங்களைத் தவிர்த்து விடிவு
உச்சியினை அடைவதற்காய் உயிரோடு புதைவோம்..!
Of

அஞ்சலைக்கு அஞ்சலி
அஞ்சலையே கண்ணிரை கரைத்தெடுத்து கவியாக்கி-உன்
கல்லறை
அரண்மனைக்கு அஞ்சலி செலுத்துகிறேன்!
காடைத் தனத்தின் கடைசியெல்லை என்பத்தி மூன்றிலே எரியுண்டபோது உன் உடலும் பலாத்கார பிடியிலே பல மிழந்து போனது!
நீ திரெளபதைதான் ஆனால்
கண்ணனே துயிலுரியக் கட்டளை இட்ட போது கலங்கிப் போனாய்!
@ー7

Page 54
தெய்வமாயிருந்திருந்தால் மார்பை அறுத்தெறிந்து மானிலத்தை எரித்திருப்பாய்
மாத்தளை மாரியே தீயின் வெம்மைக்கு தீக் கிறை யானாளே தன்னையே காப்பாற்ற தடுமாறி போனாளே!
என் கைகளைக் கட்டிவிட்டு உன் கற்பை பிடுங்கியதால் வெறித்து எழுந்தபின்னே வீரியம் இழந்து
போனேன்!
சொறி பிடித்த நாய்களெல்லாம் வெறிபிடித்து உன்னுடலை ஊளையிட்டு நின்ற போது மதிகெட்ட மைந்தனாக மண்ணிலே யிருந்தேனே!
தங்கையே. தீயின் வெம்மையில் அம்மாவும் அப்பாவும் அவிந்து போனாலும்-நீ
O6

சாம வெப்பத்தில் அல்லவா-கரைந்து போனாய்!
அம்மா டி. வீரபத்திர தாண்டவம் வின்னெங்கும் அதரியெழ உன்னிழப்பை உணர்ந்தபின்னே மனிதம் எழகுமம்மா!
நாடு எங்கும் உனைப் போலே ஆயிரம் சோதரிகள் அவமானப்பட்டுபட்டு அழுது வடித்த நீர் கங்கையாய் பெருக்கெடுக்கும்!
தீயோரின் ஊனுடலை தின்று பசி தீர்க்கும்!
அஞ்சலையே கண்ணிரைக் கரைத்தெடுத்து கவியாக்கி-உன் கல்லறை அரண்மனைக்கு அஞ்சலி செலுத்துகிறேன் “அமைதியாய் உறங்கு”
(7

Page 55
தடுக்காதே!
6Taist ஆத்மா அலறலுக்கு எந்த ஆதவனும் ஆதிக்கம் செலுத்த முடியாது!
என் ஆத்மா அலறும் போது தான் பேனாவும் பேசும்!
கோளவதத்தில் கொதிக்கும் குழம்பைவிட என் தேக வகத்தில் எரியும் எரிமலை பெரிது!
ஆதலினால்
T
ஆத்மா
அலறலுக்கு
if 8

எந்த ஆதவனும் ஆதிக்கம் செலுத்த முடியாது!
நெஞ்சம் முழுதும் எரியும் போது நிலவைபாட
(Մ)ւգսյւDn !
சூரியனாக சுற்றித் திரிந்தவனை சும்மா யிரு என்றால் அர்த்தப்படுமா!
அடியும் உதையும் அடிக்கடிபட்டதனால் கூடுதலாகவே குறுகிப்போனோம்! சிங்கமாக இருக்க விரும்புகிறோம் சிறுப்பதை வெறுக்கிறோம்!
ஆதலினால் என் ஆத்மா அலறலுக்கு எந்த ஆதவனும் ஆதிக்கம் செலுத்த முடியாது !
109

Page 56
அமெரிக்க கழுகை விரட்டு
உழைக்கும் வர்க்கமே உயர்ந்து எழ உலகை நிமிர்த்துவோம்!
மேற்கு உலகின் மேதாவித் தனம்-நம் மேகங்களிலும் மேவியிருக்கிறது!
சிக்காக்கோவில் சீறினோம் ரூஸ்யாவில் பற்றினோம் சீனாவில் எரிகிறோம்!
தெலுங்கானாவில்
பூத்தோம்-உதிர்த்தோம் மீண்டும் பூக்கிறோம்!
வியட்நாமில்-நம் வீரத்தின் முன்னே சோரம் போனது!
110

கியுபாவில் பல்லுடைபட்டு பாதாளம் சாய்ந்தது
66PfTg)......... நம்
வீரத்திற்கு வணக்கம் செலுத்தியது!
மீண்டும்
இன்னொரு வியட்நாமியனாய் பிறப்போம்
உலகின் அசிங்கங்களை அகற்றுவோம்!
உழைக்கும் வர்க்கமே
உயர்ந்து எழ உலகை நிமிர்த்துவோம்!

Page 57
மே தினம்
உலகத் தொழிலாளர் தினம் உன்னதமாய் வருகுதென்று ஊமைத் தொழிலாளியிங்கும் ஒரமாக பார்க்கிறான்.
சிக்காக்கோ நகரத்திலே சிவந்திட்ட மேதினியாள் இங்கேயும் வருவாளா என்றேதான் கேட்கிறான்
கவ்வாத்து கத்தியினை தூவுகின்ற கரங்களிலே சொப்பனங்கள் கொப்பளிக்கும் கொடுமைதனை பார்ப்பாளா
நாட்டுக்கே சோறுபோடும் நம்மினத்துப் பெண்கள் நிலை கூட்டுக் குருவிபோலே என்பதனை நோற்பாளா
12

பாரில் படு பாவிகளால் பாட்டாளி படும் கொடுமை தீதில் ஒழியாதா மே தினத்தில் அழியாதா
வாக்குறுதிக் காரர்களின் வார்த்தை ஜாலத்தினை போக்குகின்ற மேதினியும் பொங்கி வர மாட்டாளா
தொழிலாளி வர்க்கமதை தோலுரிக்க பார்க்குமிந்த கலியுகப் புருஷர்களின் கடை நிலை யொழிப்பாளா!
113

Page 58
சுதந்திரன் வருகிறான்
கிழக்குச் சூரியன் வெளுக்கட்டும் சுதந்திர மைந்தன் பிறக்கட்டும் விதேசிய எலிகள் வெகுண்டோட சுதேசியன் மீண்டும் வந்திடுவான்
(கிழக்குச்)
நாற்பத் தெட்டில் தொட்டிலிலே நலமாய் பிறந்த சுதந்திரனும் ஊனம் முற்று ஒடுங்கியதால் ஈழம் இன்னும் இருட்டறையில்
வீதிக்கு வீதி சிந்தியிலே வீழ்ந்த உடலின் குருதியினால் நாட்டின் நெற்றியில் பொட்டிட்டு ஞாயம் போர்த்த ஞானியினால்
தேசிய மாதா கண்களிலே தேம்பிய நீரும் தெறிக்கிறது துன்ப தழும்பு முதுகினிலே துயராய் தடித்து தெளிகிறது
.، 1:{4

ஜனங்களின் மனங்கள் எரியுதடா ஜனத்தின் நாயகம் கருகுதடா பணங்களின் பொய்மை புரியுதடா பாதாளக் கயமை தெரியுத-ா
கிழக்குச் சூரியன் வெளுக்கட்டும் சுதந்திர மைந்தன் பிறக்கட்டும் விதேசிய எலிகள் வெகுண்டோட சுதேசியன் மீண்டும் வந்திடுவான்
(கிழக்குச்)
s