கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிஞ்சிப்பூ

Page 1
॥ welfaststreet, Gilberg
திரு. is. பாலச்சந்திரன், டைம்ஸ் ஒப வோன் நிறுவனத்திற் கடமையாற்றுபவர் தேர்ந்த நாடகத் தயாரிப்பாளர்
தாரித்தவர் ஈழமெங்கனும் ॥ 壹r一 கத்தை முதன் முதலில் மேடை நாடகமா
கதி தயாரித்து பல । யேற்றியேற்றியிட்டியுள்ளார். இவர் தயாரித்து மேடையேத் ய பதிவுத திருமண்ம் என்னும்
ਜi
இல் இவர் நடாத்திய நாடகவிழாவாற் புலப்
படும் இதுவரையில் ஈழத்தில் தனி ஒருவர்.
ਗਧਾ।
படுத்தாது இத்தகைய ஒரு விழாவின் நடாத்
氨 蚤轟 莘- Q 韋鳴-萼
ਜੋ
ப்ெபதற்கு முன்னின்று
ਡ ॥ LL
th
பருவத்திலே ஆசிய நாங்களக் கொழும்பு
நகரில் புது முறையில் வெளியிட்டு வைக் கார்
ார் இலக்கியத்தையும் நேசிக்கும் இாள்
= ਘ துறைகளிலே தள சுய ஆர்வங்காட்டும் இவருடைய 霹f山 ஒத்துழைப்பிருள் FIF:1LLIHi விஞர்களுடைய
ਜ
ਜੇ அாரரின் உறழப்பையுஞ் சுமந்து வெளிவரும்
குறிஞ்சிப்பூ திமிழ் கூறும்
கியத்திற்கு மணமூட்டும்
15 ܒ17 .
3
al இவக்கிய ਘ "இளம் பிறை'ஆசி ஆகுப் எம் எ ரஹ்மான் அவர்களின் மரபு தான்மப்
 
 


Page 2

குறிஞ்சிப்பூ
- கவிதைகள் -
தொகுப்பாசிரியர்
- ஈழக்குமார் -
கவிதா நிலையம் 293, பேராதனை வீதி
கண்டி

Page 3
முதற்பதிப்பு: 1-5-65 உரிமை: தொகுப்பாசிரியருக்கே
* Κίμοίηαβίρσο’ ήέη ήέrιέβιοβοgμ οί λειδεο
3y, tse ξίίβέ Θομnέιμ Tamil poets
அச்சிட்டோர்: செய்தி அச்சகம் கண்டி

(j) TT600TD
னெக்கொரு கவிஞன் இல்லை என ஏங்கிய இலங்கை அன் னைக்கு, "என் குரல் உன் புகழ் பாடிட ஏற்றிடுதாயே உன்ன ரும் மைந்தர்கள் உணர்ந்துனைப் போற்றிடும் வரை" என்று டப்ளியூ. எஸ். சீனியர் பாடிச்சென் ருர். இன்று அவர் வாய் மொழிபலித்துள்ளது. இலங்கையன்னையின் கூந்தலில் இன்று குறிஞ்சிப்பூ சூடு கிருேம். பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மலர்ந்து மறைவது குறிஞ்சிப்பூ மலைநாட்டில் நம்மவர் குடியேறி ஏறக்குறைய 130 வருடங்களாகின்றன. இப்பொ ழுது தான் ஒரு குறிஞ்சிப்பூ மலர்ந்திருக்கின்றது. இனி இதன் மணம் நிறைந்து பல மலர்கள் மலையகத்தில் பரிம ளிக்கும் என நாம் நம்புவதற்கு முன்னேடியாக முகிழ்த் திருப் பது குறிஞ்சிப்பூ அதன் அழகில் இனிமையில் நாம் மயங்கி விடாமல் சிறிது சிந்தித்தோமானல், ஏன் மலர்ந்தது இந் தப்பூ என்ற வினவிற்கு விடை காணலாம். ".
பெருமூச்சில், கண்ணிரில் தங்கள் காவியத்தைப்படை த்து வந்த நம் மலைநாட்டு மக்களிடையே இன்றுகண்ணீரை, கலக்கத்தை, கவியாக்கும் காளையர்கள் பலர் தோன்றியுள் ளார்கள் . இன் சுவைத் தமிழில் எம்மவர் ஏக்கத்தை எடுத்து ரைக்கும் ஏந்தல்கள் தமது உள்ளக்குமுறல்களை ஏட்டில் தவழவிட்டதால் இன்று மலர்ந்தது குறிஞ்சிப்பூ. போருக்கு செல்வோருக்கு புத்துணர்வூட்டுவன போன்ற கவிதைகள், இளைஞர்கள் ஆனதால் அவர்களின் இன்ப அனுபவங்களில் தோய்ந்தெடுத்த கவிதைகள், நம்மவர் சோக வாழ்விலும் கவிஞர்கள் கண்ட எழிலினைக் காட்டும் கவிதைகள், தமி ழினை, எமது இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றிடும் கவிதை கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் அனைத்தையும் தன்னி தழ்களாகக் கொண்டு மலர்ந்திருக்கின்றது குறிஞ்சிப்பூ: மலைநாட்டு மக்கள். "கத்திபட்ட ரப்பர் மரச் சுரப்பைப் போல கருத்தினிலே புத்துணர்வு கனல் பிறக்க, நித்திரை க்கு விடை கொடுத்து’ நிமிர்ந்து விட்டார் என்ற இனிய செய்தியை எடுத்துரைக்க மலர்ந்தது தான் குறிஞ்சிப்பூ. கவிஞர்கள் வாழ்த் தொலி கூறிவிட்டார்கள். இனி மலைநாட்

Page 4
டின் எதிர்காலம் சிறப்பும், சீரும் மிக்கதாய்த் திகழும். இளை ஞர் இயக்கத்திற்கு இக் கவிதைகள் இலட்சிய கீதங்கள். இன்று சமுதாயத் துறையிலே மட்டுமல்ல இலக்கிய உலகி லும் எம்மவர் மாற்றம் காணவிழைந்தனர் என்பதற்கோர் இலக்கணமாய் இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. இந்நூ லினைக் காணும் போதே நெஞ்செல்லாம் கொள்ளை இன்பம் குலவிடுகின்றது. மலை மகளே! உன் மக்கள் உன் மத்தர் அல்லர் ; கேள் அவர்கள் சங்கநாதத்தை.
மகிழ்ச்சிப்பெருக்கில் இன்னுமொன்றை மறந்திடக் கூடாது. உள்ளே காணும் கவிதைகள் அனைத்திலும் சொற் களை மீறி அழகும் இனிமையும் வழிந்தோடுகின்றனவென்று கூறமுடியாவிட்டாலும், எங்கள் நெஞ்சின் சூட்டினைப் பார் க்கலாம்! ஆசை அலைகளின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்க லாம்! இப்பொழுதெல்லாம் மலைநாட்டு எழுத்தாளர்கள் இலங்கைப் பத்திரிகைகளிலெல்லாவற்றிலும், இந்தியப் பத்திரிகைகள் சிலவற்றிலும் பல பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்ளுகிருர்கள். இனிய, அழகிய தமிழ் ஏடுகளின் வரி சையிலே மலைநாட்டு எழுத்தாளர்களின் ஏடுகளும் இடம் பெற்று இறுமாந்திருக்கும் என்ற எக்களிப்பில் இச்சுவை சோலை சென்று, கவித்தேன் ஆர்ந்து, நாமுந்தான் பெரு மிதப் படுவோமே!
எமது இளங்கவிஞர் ஈழக்குமார் அவர்களின் இந்த வெளியீட்டு முயற்சி நமது முதல் "குறிஞ்ப்பூ". அவருக்கு மலையக எழுத்தாளர்களின் வாழ்த்து முத்திரை என்று மிருக்கும். ஈழக் குமார் நமது பெருமைப்பூ:
இரா. சிவலிங்கம்.
ஹைலண்ஸ், ஹட்டன். 29-4-65.

என்னுரை
காலத்தின் ஜீவ ஒலியாகப் பரிணமிக்கும் இலக்கியம், சமூகத்தின்-மனித வாழ்க்கையின்-திருப்பு முனையாகவும் அமையும் போதுதான் பூரணத்துவம் பெறுகின்றது.
இவ்வகையில், கவிதை இலக்கியமே உள்ளக்குமுறலின் ஊற்றுக்கண் திறந்து பீறிட்டெழும் உணர்ச்சிப் பேரொளி மின்னித் தெறித்து உறக்கத்தைக் கலைக்கும் விரிகதிரின் சுட ரொளியாய் விசையெடுத்து நிற்கும்.
இத்தகைய விசையெடுத்த விரிகதிரின் சுடரொளிக் கவிதைகளடங்கிய "குறிஞ்சிப்பூ வினை மலைத்தாய்க்கு முதன் முதல் சூட்டும் பாக்கியம் கிட்டியமை எனக்குப் பெருமகிழ் வளிக்கின்றது. - . .
மலையகத்தின் விழிப்புணர்ச்சிக்கு மட்டுமல்ல; மலையக இலக்கியத் திறனுக்கும் இந்நூல் எடுத்துக் காட்டாக அமை யுமென்றே நம்புகிறேன். » . . . . .اص دهد
இந்நூல் வெளிவருவதற்குத் தூண்டு கோ ளா யிருந்த திரு. தோப்பூர் பேதுருப்பிள்ளை , அவ்வப்போது உதவி வந்த நண்பர்கள் அமரன், ஜமாலியா, கு.இராமச்சந்திரன், ஐ.வரத ராசன் ஆகியோருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி.
மற்றும் இந்நூலுக்கு அட்டைப் படம் வரைந்து தந்த கலைஞர் சான அவர்கட்கும், அதனை அச்சிட்டுத் தந்த நண் பர்கள் திரு. கே. பாலச்சந்திரன், திரு வி. என். பெரியசாமி ஆகியோருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத் தோடு மலைநாட்டு நல்வாழ்வு வாலி பர் சங்கத் தலைவர் திருவி.வேலாயுதம் அவர்கள் நல்கிய ஆதரவுக்கும் அறிவுரை களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
செய்தி அச்சக உரிமையாளர் திரு. ரா. மு. நாகலிங்கம், மற்றும் அங்கு பணியாற்றும் நண்பர்களும்; குறிப்பாக ஜனுப் ஏ. ஆர். ஏ. கபூர் அவர்களும் என் நன்றிக்குரியவர்களே.
மலையக எழில் கூறும் இக்கவிதைக் காவின் த லை வாசலில்
முத்தமிழ் தோரணமிட்டுத் தந்துள்ள சொல்லின் செல்வர் திரு. இரா. சிவலிங்கம் அவர்கட்கு என் உளமார்ந்த அன்பு.
இது என் முதல் பணி-தனி முயற்சி; எனவே குறை கள் தென்படலாம். பொறுத்தருள வேண்டி ஆதரவு நல்கக்
கோருகிறேன்.
- ஈழக்குமார் -

Page 5
சமர்ப்பணம்.
காத்து வளர்த்து கண்ணில் ஒளிபதித்த
GG மூத்தோன் சுப்பிரமணியன்
உளம்நிறைய.

தேயிலைத்தோட்டத்திலே
காலம் பூக்கும் கருவாம் புதுமைக் கருத்திலமையும் களங்கமில் நேர்வழி ஞா லத் தெனது மென் நாதமாம் சீவியம் நவிலிசை வீணையில் நான் பண்ணிசைப்பேன்.
L0LLLL 0LLL LLL LLSLLLLL LSL LL LLS 0L0 LL LSL LLLLL LLL S0L 0L LLL DLL LLLL Y LLL 0SLL LL LLL LLL LL0L LLL LLL LL LL SL LL LS LS LS0S LLLL 0 0 LLLL LLLL LSL LLL LL
முந்தையோர் செய்த முயற்சியும் அவர்தம் மூச்சும் உணர்வும் முழுமையாய் இங்கே சிந்திய ரத்தமும் வியர்வையும் தாங்கிய சீற்றமும், துன்பமும், சிறுமையும், நோவினல் நொந்து குமுறி அழுத கண் ணிருடன் நித்தம் தம்முடல் நிலம் புதைத்துழன்ற எந்தையோர் தம்மின் எலும்புக் குவியல்கள் எத்தனை எத்தனை எத்தனையாமோ ?
LSL L S S S S L L S L L 0 LL L0L 0LLLLL S S0LLLLL 0L LLL 0LLL 0LLL LL 0 0 00 LLLLL 0L LLLLL LLL LLL 0L LLLLLLLL0L LLL LL LLL LL
புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப போற்றும் இரங்கற்புகல் மொழி இல்லை; பழுதி லா அவர்க்கோர் கல்லறை இல்லை பரிந்தவர் நினைவுநாள் பகருவாரில்லை;
LL LLL LLL LLL 0 YLLLLLL LL0LL LLLYLLLSYL L LYLLLLLL0 S LLLLLL YLLLL LY LLL LLL Q Q R & v ë a e e e e o g e
சி. வி. வேலுப்பிள்ளை

Page 6
ஊணையும், உடலையும் ஊட்டி இம்மண்ணை உயிர்த்தவர்க் கிங்கே உளங்கனிந் தன்பு பூணு வாரில்லை (அவர்) புதை மேட்டிலோர் O
Sig 3 பூவைப் பறித்தும் போடுவார் இல்லையே.
ஆழப் புதைந்த தேயிலைச்செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல் ஏழை மகனும் ஏறி மிதித்து இங்கெ வர் வாழவோ தன்னுயிர் தருவன்
LLLLLLLL0 0LL 0LL LL LLL LLL L0L LLL SLLLL 0L LLLLL LLLL LL LL0 LLLLLL LLLLL LLLL LL LLLL LLLL LLLL LLL LLLL LL LLL LLL LLSL A e s is 8 s p.
என்னே மனிதர் இவரே! இறந்தார்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர்: வெட்கம் தன்னை மறைக்கத் தானே அவ்விறைவனும் தளிர்ப் பசும் புல்லால் தரை மறைத்தானே!
சக்தி அ. பாலையா

இதயமா தேவியே!
சிதறுண்டு கிடக்கின்ற மலைநாட்டுத் தமிழ் மக்கள் திரண் டொன்று படவேண்டும் தேவியே! --கொள்கை இதங்கண்டு பிணைக்கின்ற இயல் தங்கும் தலைவர்கள் எம்மிடை வர வேண்டும் தேவியே!
பிளவுக்கு வித்தூன்றிப் பெருக்கத்தைக் குறைக்கின்ற ' பேதமைப் பேச்சாளர் குறையவும் -வாழ்க்கைக் களவுக்குத் தமிழ்நாவை வளைக்கின்ற இழிந்தோரைக் காணுமற் செய்குக தேவியே!
பிடி வாதம் தளர்ந்துண்மை அடிகோலும் மனப்பான்
மைப்
பேரூற்றைச் சுரக்கச் செய் தேவியே! -தமிழர் அடியோ டு அழியுமுன் சிறிதேனும் விழிப்பெய்த அருள் செய்து காராயோ தேவியே!
தனிப்பட்ட மனத்தாபம் பொதுமக்கள் இடைதூண்டி சமூகத்தை இரண்டாக்கும் கீழ்மையை -நீக்கி நனிப்பட்ட கொள்கைகள் நாட்டிடை பரவச்செய் நல்லோரைத் தோன்றச் செய் தேவியே!
- அ. சிதம்பரநாத பாவலர் -

Page 7
மனம் விட்டுத் தமிழ்பேசி மதி சொட்டும் நிலை ஆய்ந்த மலைநாட்டார் குரல் ஒன்று கூட்டுவாய் -தத்தம் இனம் சுட்டி அகம்பேசி இழிவுக்கு வழிகோலும் இதயத்தார் திருந்திடச் செய்குவாய்!
கலை சொட்டும் தமிழ்ச்சாதி என மற்ருேர் புகழ்கூறும் கனிசொட்டும் மதுரச் சொல் கேட்கவே -எங்கள் மலைநாட்டார் நிலை எய்த வரம் நல்கி ஆட்கொள்ள வரவேண்டும் இதயமா தேவியே!

தாழ்ந்ததேன், தமிழினமே?
உன்னை நினைக்கையி லே - எந்தன் உள்ளத்தில் வேதனை வெள்ளம் பெருகுதே, வன்னத் தமிழின மே! - பண்டை மாட்சி இழந்து நீ, தாழ்ச்சி யடைந்ததேன்? சின்னஞ் சிறுமிய ரும், - உன்னைச் சீயென் றிகழ்ந்து, சினந்து மிதிப்பதேன்? எண்ணி நீ பார்த்ததுண் டோ? - உன்னல், ஈன்றவள் எய்தும் இழிவை உணர்வையோ?
(உன்னை)
வள்ளுவன் வந்த குலம், - ஒளவை வாக்கிற் செழித்து வளர்ந்த குலம், -அருட் செல்வர் பொலிந்த குலம், - 'ஒன்று தெய்வம், ஒரே குலம் மக்கள்’ என் றே கண்ட நல்ல சமத்வ குலம், - பாணர் நந்தன் எனும் தெய்வ மைந்தரைப் போற்றிடும் தெள்ளு தமிழ்க்குலம் நீ, - இன்று, திக்கற் றணுதையாய்ச் சீர்குலைந் திட்டதேன்?
(உன்னை)
சிந்தனை செய்திடு வாய்! - உடன் செந்தமிழ் அன்னை வயிற்றிற் பிறந்த, உன் சொந்தச் சகோதர ரை, - எந்தத் துன்பத்தை யும் பகிர்ந் துண்டு மகிழ்ந்திட வந்த உறவின ரைப், - பொல்லா வன் பகை யஞ்சி வணங்கிடத் தோள்வலி தந்திடும் தோழர் த மைக் - கொடுஞ் சண்டாள ரென்று நீ தள்ளிவைத் தாயன்ருே?
(உன்னை)
- பரமஹம்சதாசன் -

Page 8
ஆயிரம் சாதிவைத் தாய், - வெறும் ஆணவத்தால், அன்புச் சோதரர் ஆண்டவன் கோயில், குளங்களி லே - பொதுக் கொண்டாட்டம் தன்னிற் குல வாது, தீண்டாமைப் பேயைப் படைத்துவிட் டாய். - அந்தப் பேரரக் கன் செய்த தீமைக் களவுண்டோ? தூயவர், காலமெல் லாம், - கொடும் துன்பக் கனவில் துடிக்கக்கண் டாயன் ருே?
(உன்னை)
"ஏழை அழுத கண் ணிர் - கொடுங் கூரிய வாளொக்கும்’ என்பதன் உண்மை, இக் காலம்நீ கண்டில்லை யோ? - இன்னும் காலம்தாழ்த் தா (து) அத்தீன் டாமையைக்
கொன்று பா தாளத்தில் ஆழ்த் தி விடு - தமிழ் அன்னை மகிழ்வள்; பே ரன்புச் சகோதரர் வாழ்வு மலர்ந்துவி டும்! -பின்பு வையத் துனக்கிணை யார்? தமிழ்ச் சாதியே!
(d. 6, 207)

LIITf J6)ogi?
மக்களெலாம் பொதுவாக அனுபவிக்கும்
வகையினிலே சொத்துதனை பகிர்ந்தளிக்கும் எக்களிப்பு நடைபோட்டு வாரோ மென்று
எமதருமை பிரதமரும் அமைச்சர் மாரும் பக்குவமாய்ச் சொல்லுகின் ருர் வீதி தன்னில் படுத்திருக்கும் ஏழைகளும் பாதை ஒரம் குக்கலடை கூண்டதுபோல் கொட்டில் போட்டு
குடியிருப்போர் பிரஜைகளா? சொல் வீரையா?"
விலைமாதர் கொழும்புநகர் வீதிநின்று
விதியற்று தமதுடலை விற்கின் ருர்கள் நிலையற்ற மனிதர்களும் தெருக்கள் தோறும்
நிதம் சோறு எனக்கேட்டு நெளிகின்றர்கள் பல நாளும் வேலைக்கு அலைந் தலைந்து
பார்க்கின் ருேம் கிடைக்க வில்லை என்றே சொல்லி மலை போன்ற கொடுமைக்கு ஆளாய் நிற்கும்
மக்களெலாம் பிரஜைகளா? சொல் வீரையா
நிரந்தர பிரஜை என வாழ்ந்த பேர்கள்
நீணிலத்தில் எங்கணுமே கண்டதில்லை பிறந்தவர்கள் தற்கால வாசம் செய்தார்
பின் பவரும் உலகைவிட்டு இறந்து போனுர் இருந்த அந்த இடைக்கால மனிதர் தங்கள்
இஷ்டம்போல் ஏதேதோ சட்டம் செய்தார் நிரந்தரமாய் அவரேனும் இருக்கக் காணுேம் நிஜப்பிரஜை யாரென்று சொல் வீரையா?
பி. ஆர். பெரியசாமி

Page 9
மலைபோன்ற பொருள் குவித்தும்; வாழ்க்கை
நொந்து மடுப்போன்ற பள்ளத்தில் வீழ்ந்திருப்போர் உலைவாயில் கசிந்துருகும் இரும்பைப் போலே
உளம் நொந்து வாழ்வற்ருேர் பிரஜைகளா? நிலையான வாழ்வு பெற்று கவலையின்றி
நிம்மதியாய் வாழவொரு வழிவகுத்த கலைஞான "தொழிலரசில் வாழும் மக்கள்!
காணியின் பிரஜைகளா? சொல்வீரையா?

LITJTGJIL 5lfp T6) LITG !
மலைநாட்டுத், தமிழினமே! ஒன்று சொல்வேன்!
மாசற்றநின் உளத்தில், அதனைக்கொண்டால் பலி ஆடாய், மாருமல், பார்த்தோரெல்லாம்
பண்புமிகு தமிழினத்தைப் பாராட்டுவர் கலியறுந்தே, ஒடு மிது, காலத்தாலே, வெறும்
கட்டுக்கதை, யல்லவெனக் கருதுவாய் நீ புலிபோன்று சீறி எழு! புல்லர் கூட்டம், பொடிப் பொடியாய்த் தூசாகிப் போகும் பாரே!
வளநாடாய் மலைநாடு ஆகவேண்டும், ஆனல்
வாக்குரிமை, மொழியுரிமை வரவே வேண்டும் கலை வீடாய் மலைநாடு ஆகவேண்டும் - இளம்
காளையர்கள் தன் மானம் கொள்ளவேண்டும் சிலை போன் ருர் சமுதாயத் தொழியவேண்டும், நல்
சேவை மிகு தொண்டர் பணி உயர வேண்டும் வலை போட்டுத் தரகர்களால் ஆளைச் சேர்க்கும்
வல்லாள, கண்டர் சங்கம், இங்குவேண்டாம்
சாதியால், சங்கத்தால், உன்னை ஏய்க்கும்
சண்டாளர் கூட்டம், கால் நூற்றண்டாக மோதியே, உள் வீட்டில், மூட்டும் சண்டை
மூவிரண்டு, தவணையால், பொலீஸ்கோர்ட்டில் பாதியாய்ப்போனவுடன், ஆஸ்தியெல்லாம்
பறித்திடுவார், தெண்டம் என, கொடுத்துத்
தாலி மீதியாய் வந்த காதை போதும், போதுமிந்த, மேதைகளை வெளியேற்று, மயங்காதே நீ
- எஸ். எஸ். நாதன் -

Page 10
மனிதனென்ற உரிமை நமக்கிங்கே இல்லை இதனை
மாநாட்டில் தீர்மானித்திடுவோ மென்பர் கனிந்த செந்தமிழா லே சொல்லும் போது அவர்
கண்களிலே நீர் சொட்டும் நாமே மாந்து வனிதையரின் நகை பலவும் விற்று வட்டி
வாங்குவோர் கடைகளிலும் தொலைத்து
அந்தோ புனிதமுள மாநாட்டு மேடைமீது மனம்
பொங்கிநிற்கப், போட்டஒரு மாலை மிச்சம்
தலைவரென்ற, சொல்லின் இலக்கணத்தை, இந்த தற்குறிகள் அறிவரோ? கேட்டுப்பாராய்; மலைநாட்டு நன் மகனே! மகளே! உங்கள்
மான மதைக்காப்பதற்கு உண்டோ சக்தி? உலை மெழுகாய் நாமுருகி, ஊனைக்கொட்டி ஒய்யார உல்லாசப்பான மான, தே யிலையதையும், ரப்பரையும் உண்டுபண்ணி
இவர்க்கீந்தும் என்ன பயன், மேலும் கேண்மீன்
இலங்கை இந்திய பிரச்னை யென ஒன்றைச் சொல்லி
இரு தேசப் பிரதமர்களும் கூடிக்கூடி கலங்கவைத்த காதை, பதினெட்டாண்டாகக்
காரசாரமாகப் பேசி தீர்ந்ததாடா? துலங்கவை உனது வாழ்வை, தூ! தள்ளு
தூங்காதே இது தீராப் பிரச்னையில்லை பலங்குன்றி நிற்கும். நீ ஒன்றுகூடிப், போர் பரணியினை பாராண்ட தமிழால் பாடு

தமிழ் கலையே!
குழவியின் மழல்யும்
குலவிடும் நிலையதும் குறும்பும் தளிர்நடையும் களிகொளும் தாய்மையும்
கவிதைத்தா லாட்டதும்
கையள்ளி யணைப்பதுவும் மொழிசொலும் வகையின்றி
மோனமாய் நோக்கிடும்
regstaff off னவன்நிலையும் எழிலொடு உறவாடும்
எம்தமிழர் 567
ஏற்புடைத் தமிழ்க்கலையே!
கொத்தோடு மலராட
கொடியிடை தானுட கொஞ்சுநற் கன்னியரும்
முத்தான மொழிபேசி
முந்தானை எழில்காட்ட முகஞ்சி வப்பதுவும் அத்தான் என்றிசைக்கேட்டு
அருகிலே சென்ருேடி அள்ளிய ணைப்பதுவும்
- ஜெயம் -
- 0 -

Page 11
சத்தான
விஞ்ஞான
மெஞ்ஞான
அஞ்ஞான
எஞ்ஞான்றும்
எங்கெங்கு
தங்குமித்
மங்காது
பொங்காத
தமிழ்பேசி சங்கீதம் சாருகும்
வல்லுநர்கள் G3murrGib விரிந்தாடும் போதகர்கள் மேலுலகம் மெய்யாகக் வாழ்வதிலே அறிவாலே அன்பொளியை முலகிலே எழில்காட்டி
ஏற்றமிகு
மெந்தமிழர் எப்பொழுதும் ஏற்றிடும் தரணியில் தார்வேந்தர் தரித்திரர் ஒளிவீசி மான்போல மகிழ்ச்சித் மனதையும் பொங்கியே பொன்ருத
கலந்தூறும் தமிழ்க்கலையே!
லோகமதில் அணுவதுவும்
போகவழி
காண்பதுவும்
விளக்கேற்றி ஏற்றிவிடும்
வாழ்கின்ற தமிழ்க்கலையே!
எழிற்கூட்டி ஒருவிளக்காம்
மடியிலும் தாமிடமும்
69žтштцgதருமதுவே
எழச்செயும் தமிழ்க்கலையே!
مس۔ 11 سس۔

காவரின் மூச்சு..?
காடுகளைச் சமமாக வெட்டி இங்கு
கவின்மிக்க தேயிலையாம் தோட்ட மாக்கி மாடுகளைப் போலாக உழைத்து நின்று மடிந்திட்ட உயிர்கள் தொகை எத்தனையோ?
நாட்டினது வளத்தினை ஓங்கச் செய்து நல்லபெரு வருவாயைத் தேடித் தந்து தேட்டமது சிறிதேனும் இன்றி இங்கு
தேய்ந்திட்ட தோளெல்லாம் எவரின் தோள்கள?
வளர்த்திடும் தளிர்களைக் கிள்ளிக் கிள்ளி வாட்டமென ஒருசிறிதும் கொண்டி டாமல் அளறுறும் கொடுவாழ்வில் உழன்று இங்கு அழிந்திட்ட கையெல்லாம் எவரின் கைகள்?
பள்ளமென மேடுமலை பார்த்தி டாமல், பரிதவித்து உடல்வாட்டும் கடுங் குளிரில் எள்ளுமுரை பலகேட்டு இழிந்த வாழ்வில் ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு?
- சி. நடேசன் -

Page 12
களம் காண்போம் வாரீர்!
ஊர்களத்தில் போர்க்களம்
பழங்கதைபோல் புளித்திட்ட உரிமையில்லாக் கறையைப்
பாடாதப், பேசாத வாயில்லை: நாட்டில் (!) முழங்கால் நீரளவில் தடைபோடா மூடர்,
முடிவற்றத் தன்னலத்தால் மூண்டஇக் கேடால்; அழுகின்ற மலைத்தமிழர் படுகின்ற துயரை
அளவிட்டுக் காட்டுதற்கு எண்ணிக்கை இல்லை! விழுகின்ற அடியுதைக்கும் வேற்றுமைக்கும் அன்றே;
வித்திட்ட செயலதுதான்! மறுப்பாரோ தமிழர்?
படித்துவிட்ட இளைஞர்களும் கூட்டங் கூடிப் பகலிரவு அலைகின்ருர் வேலை தேடி! வடித்துவிடாச் சிலையழகு கவிதை மாதர்
வளர்ந்தொரு தாயாகும் காலம் மட்டும்; அடித்துவிடாச் சித்திரமாய் ‘லயத்து’ வீட்டில்
அடங்கி நிலையழிகின்ருர் வேலையின்றி! பிடித்துவிட்ட இப் பிணிக்கு மருந்து ஊட்டப்
பெரும்படையே போராட்டக் களங் காண்போம் வாரீர்!
- தமிழோவியன் -
- 13 -

"போர்க்களமே வாழ்க்கையடா! வெற்றி தோல்விப், போராட்டச் சேறுண்ட மனிதன் பாட்டைப் பார்க்காமல் பிதற்றுகிறீர்! பலம்பெறுவீர்!" என்னும்
பழங்காலத் தத்துவத்தின் களத்தின்பய னறிவோம்! ஊர்க்களத்தில் கிளம்புகின்ற வகைபோட்டித் தடையை உடைத்தெறிய உரமில்லை உளறுகிருன் பொடியன்! போர்க்களமாம் வெங்காயம்! போடாபோ.." வென்று புலம்புகின்ற மேதைகளே. இன்றென்ன கண்டீர்?
துப்பாக்கிக் கரமேந்தித் தோட்டாத் தோளேந்தித் துணிவேந்தி உயிர்மறந்து சமர்புரியுந் தீர இப்போக்கில் களப்போக்கு இயங்குவதை அறிந்தும்
இதைச்சொல்லி அதைக்காட்டி என்னபய னுண்டு?
என்றுத் தொடைநடுங்கிக் கதவடைப்போர் மேடையிலேநின்று; ஒப்புக்கு முழக்கமிடும் "வாய்வீரம்" விடுத்தே,
உளமோடு களங்கான வளமோடு எழுவீர்!
துப்பாக்கி கண்டாலே “அடேயப்பா.”
ஊர்க்களத்தில் போர்க்களம்
வாளெடுத்தல், வேலெடுத்தல் வெல்லும் வழியல்ல!
வானூர்தி நின்று ஒரு குண்டெடுத்துப் போட்டால்; ஆளில்லை; ஊரில்லை; அனைத்துங் கனலாகும்!
அள்ளுகின்ற சாம்பலாக அரைநாளில் மாறும்! நாள்பிடித்து, வால்பிடித்துத், தன்மானங் கெட்டுத்,
தனவானுய்(ப்) பறக்கின்ற தமிழர்களே! தாங்கள்; ஆள்பிடித்து அறக்களத்தில் அணிவகுக்க வேண்டாம்! அறிவுள்ள மனிதனுய் இனங்காத்தால் போதும்.
- 14

Page 13
மங்குகிறத் தமிழ்த்தாயின் மானங் காத்து
மனம்நிறைந்து சுதந்திரமாய்(த்) தமிழர் வாழச்; *சிங்களஞ்சேர் தென்னுட்டார் தீரர்!” என்னும்
செழுங்கவிஞன் வாக்கினையும் காப்பதற்கு நீங்கள், சிங்கம்போல் புலிபோலும் மாற வேண்டாம்!
சீறுகின்ற இனவெறியைத் தீய்த்துமாய்க்கப் ப்ொங்குகிற சிந்தனையில் புடம்போட்டுக் கண்ட,
its first execure
னி ລ. ໑ வமியில் களங்காண்போம் வாரீர்! புனித வழி அற
ح۔ج۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ . *صحیرہ ۔
معبس۔ 15 سم، مست

ஊரே சிரிக்குது
தேயிலை பச்சை வளர்ந்திருக்கு - அத்தை வாயிலே வெத்தலை சிவந்திருக்கு போயிலை பையிலே காத்திருக்கு - அந்தி சாபிற வேளையும் வந்திருக்கு!
மாமான் மகளங்கு வந்திருக்காள் - ஏனே காமன கணையினை தொடுத்திருக்காள்! சாமம் பூராவும் நினைச்சிருக்கேன் - அவள் சாயலை எண்ணியே வாழ்ந்திருக்கேன்!
சாயத் தண்ணியைக் கொண்டுவந்தாள் - அதை பாயசம் என்றவள் வார்க்க வந்தாள்! தாயோடு சேர்ந்தே குடித்து நின்ருள் - எந்தன் வாயோடு சேர்ந்து குடிப்பாளோ?
காயிற வாயில் சருகைப் போட்ட்ாள் - எந்தன் காயிற நெஞ்சுக் கெதனைப் போட்டாள்? ஏவியே அத்தை சமைக்கச் சொன்னுள் - எந்தன் ஆவியைப் போட்டோ பொசுக்கச் சொன்னுள்?
சீமைத் துரைமகள் போலக் கண்ணுல்+ என்னைத்
தீர்த்துக் கட்டவோ வந்த பொண்ணு?
ஊமை மொழியவள் பாடும் பாட்டு-டி இந்த * ஊரே சிரிக்குது ஆட்டம் பார்த்து
-பொ. பூபாலன்.-.
م-3 تنقید۔-سفذ
- 16 -

Page 14
மல்குக வாணுள்
மறைந்த பாரதப் பிரதமர் யூனி ஜவஹர்லால் நேருவின் 70 வது பிறந்ததின விழாவில் பாடப்பட்ட வாழ்த்துப் பா.
வாழிய! பெரும! வாழிய! பெரும! மாசறு பாரதம் மாண்புயர் தவத் தான் திருமறை யொளிரும் சீரிய மரபில் வழிவழி வந்த மாபெருங் குடியில் நண்ணிய விளக்கே நானிலம் வியப்ப கோதின் ஞானங் குறைவற நிறைந்து பொற்புறத் திகழும் புண்ணிய சொரூப: அன்பே யுருவாய் அஹிம்சைத் திருவாய் உதித்தொரு கதிரோன் உத்தம காந்தியின் மண்விண் களிக்கும் மாசிலா நெறியைப் பெற்ருெளிர் பெரும! பிறங்குமா பாரதக் கதிபதி யாய கதிரொளிக் கன்றே! பூமிசா தனமே பொருளெனக் கொண்டு நீதிநன் முறைகள் நிறைவுற உணர்த்தி இடர்களை யொழித்து இனியநல் வாழ்வை ஏற்றெங் கெவரும் இதயங் களிக்க ஆற்றிடுந் திலக அருந்துணை மகிப தனியுயர் பண்ப! ஜவஹர் லால்நேரு பேரினப் பெற்ற பெற்புரு தியாக! மங்காப் பெருஞ்சுடர் மாரு நறுமலர் புகழினை மென் மல் புவியினி லோங்கி வாழ்க! வாழ்க! வளர்தலை மயங்குநின் பூங்குடை மதியென பொலிந்து தளிர்க! செழுமிய பெருங்கிளை செறிவிண் மீனினும் மல்குக வாணுள்! வாழியூ பூழியரோ!
- வR. சுப்பிரமணியம் -
- 17 -

வாழ்க என்றும்!
தடுக்கிடும் சேலை யென்று
தகுவதாய் மடித்துக் கட்டி படங்கினை இடையில் சுற்றி
படர்தலை முக்காடிட்டு அடைமழை தவிர்க்க வேண்டி
அணிசேர் கம்பளியை அடுக்கியே மலையி லேறும்
அஞ்சுக பாவாய் கேள்!
கொழுந்தினை விரல் தழுவிக்
கூடையை நிறைக்கும் நேரம் கொழுந்தினில் பயின் றிருக்கும்
குளிர்பனி சேர்க்கையினல் பொழுதோடி இரவு வந்தால்
புள்ளிட அத்தான் மார்பை முழுதாவல் போடு மெண்ணம்
முளைத்திட செய்யும் தானே!
குறைந்திடும் கூடைதனைக்
கொழுந்தினல் நிறைக்க வேண்டி
நிறையினை முடிக்க எண்ணி
நீவேகம் காட்டும் போது
அறையினுள் அகத்தா னுன்னை
- சாரல் நாடன்(-
- 18 -

Page 15
அணைத்திட உரசுமாப் போல் குறையற செய்யும் தானே
குறும்புடபன் க்கவாது!
உடையவன் கண்ணில் பட்டால்
உளத்தினில் பொங்கு மின்பம் உடைபட்டு வெளியில் வந்து
உதட்டினில் மலர்வதைப் போல் சடையிளங் கொழுந்து கணம்
சாய்த்திடும் வாதை கண்டால் மடைதிற வெள்ளம் போல
மகிழ்வினை முகமே காட்டும்!
புவியினில் பெண் ணனங்கே
புகழ்தரு பேறு பெற்ருய் கவியுனைக் கண்டா ரென்ருல் கவியினல் ஆரம் சூடி நவின்றிடச் செய் வாருந்தன்
நாதனைக் கொழுந்தில் காணும் கவித்துவப் பார்வை காட்டிக்
கனிமொழி வாழ்க என்றும்

சூன்யம்!
அணுவில் சுழற்சி; அண்ட இயக்கம்
அகத்தில் சுழற்சி; பிறக்கு மெண்ணம் எண்ணில் சுழற்சி; வாழ்வு தாழ்வு
எங்கும் சுழற்சி; தோற்றம் மறைவு கண்ணில் சுழற்சி; காட்சி தேக்கம்
கருத்தில் சுழற்சி அறிதல் உணர்தல் தண்ணீர் சுழற்சி; நிலையா குமிழி
தரணி சுழற்சி; கால வோட்டம்
கருவில் சுழற்சி; வளர்வு பிறப்பு
காலச் சுழற்சி; பருவ மாற்றம் பருவச் சுழற்சி; உருவ மாற்றம்
பழமைச் சுழற்சி; புதிய தோற்றம் கருமச் சுழற்சி; வினைகள் தீர்வு
கடமை சுழற்சி; தெளிவு ஞானம் பொறிகள் சுழற்சி; ஜீவித நினைவு
மரணச் சுழற்சி; எண்ணச் சூன்யம்!
- வி. எஸ். காந்தி --
- 20

Page 16
செந்தமிழ்த் தாய்!
முப்பொருளாய் வள்ளுவனுர் முதலுமாய்
முடிவுமாகி காப்பியத்தில் கவிக்கரசர் கனியுதாட்டைச்
சுவைப்பவளாய் சுப்பிரமணிய கனகசுப்பு இரத்தினத்தின்
கலசமதாய் எப்படித்தான் உலகெல்லாம் எழுந்திளமை
அளித்தாளோ?. .
இன்னிசையின் அணியெடுத்து இனியவுரு
தனியமைத்து மின்னசைவின் இடையமைத்து மிதந்துவரு
முகிலெனவே கண்ணசைவு கயலடைந்து கரியமலர்
f விரிந்ததுவாய்
எண்ணசைவு அகன்றவெளி எழுச்சிகொள
இருந்தாளோ. .
செங்கதிரின் இழையோடிச் செழுந்தேனின்
குழைவோடு கொங்கையெணு வெறியேற்றுக் குடம்நிறைய
அமுதொழுக அங்கமெலாம் தெளிவுறவே அருங்கவிதை
மழையாகி சங்கமெனும் மனையினிலே சமையலறை
இருந்தாளோ.
- “சிந்தாகோ” -
ب- 21 --

அன்பொழுகப் பழகியவள் அருங்குணத்தல
ஒருமித்த இன்பொழுக இதழமுதம் இழைத்துவிட
இளங்கோவின் பின்பயந்து சிலம் பாகிப் பிறந்துவிடத்
துறவூண்டு கண்ணிமையாக் கருத்தினிலே கருவாகி
இருந்தாளோ
a 92 m

Page 17
பரதவிக்கச் செய்தாரடி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்ற மிகு மாத்தலைவன் ஏன் பிரிந்து சென்ரு ரடி. ஏனே இவ்வுலகை நீத்தாரடி?
பாட்டாளி வைரத் தங்கம் பைந்தமிழன் ராஜலிங்கம்
பரமனடி சேர்ந்தாரடி. நம்மை
பரத விக்கச் செய்தாரடி
தொன்று தொட்டு அன்று முதல் தொழிலாளர் வாழ்வுயர தூய உள்ளங் கவர்ந்தாரடி. நாளும் தொடர்ந்துழைத்து வந்தாரடி
மலைநாட்டு மக்களையே மறுமலர்ச்சிப் பாதையிலே வழிநடத்திச் சென் ருரடி. அந்தோ மாரடைப் பால் மாண்டாரடி
தொண்டமான் தலைவ ரொடு தொழிலாளப் பிரமுகர்கள் துயர முற்று நொந்தார டி. உற்ற துணைவனை யிழந்தாரடி
- வி. எஸ். கோவிந்தசாமி தேவர் -

நாடற்ற பிரஜையென்று நம்மவர்க்குப் பட்ட மென நாண முற்று வந்தாரடி. இந்த நாட்டை விட்டே சென்ருரடி
கடமை வீரன் "மோத்தாஜி" கருத்தாளி நாயரொடு கண்டு பேசச் சென் ருரடி. ஈற்றில் கைநழுவ விட்டாரடி
மண்ணு சை பொன்னசை மற்றும் பல பெண்ணுசை எண்ணு திருந்தார டி. இன்ருே இறைவனடி சேர்ந்தாரடி
ــــــسے 224 ایسے

Page 18
96) G35TGif QITtil...!
தொண்டாற்றத் துணிகின்ரு ய் வாழி தோழா ! தொடங்குக நின் திருப்பணியைத் துறைகள் தோறும் கண்டாய்ந்து நலஞ் செய்க நன்றே செய்க: கதி யாரும் புதுவாழ்வைக் கண் முன் செய்க! உண்டாடும் நினைவொன்றே உயிராய் வைத்து உழன்ருடும் குண்டூசித் தலைப்பு நெஞ்சர் : தொண்டென்றும் பணியென்றும் துணப்பித் தம்மை துரையாக்கித் துருவானுர் ! ஒன்று கொள்வாய்
விரைவூர்தி ஒன்றிருத்தல் வேண்டும் தேர்தல் வேட்பாளராயிருத்தல் வேண்டும்; யார்க்கும் வரையாது பொய்யுரைத் தல் வேண்டும் ஊரை வகை நூறு பகைப்படுத்தல் வேண்டும்; பின்னர் நரியாக வேடமிட்டு வெற்றி சூழ்ந்து நாளைக்குத் தொண்டரென மேளங் கொட்டி மரியாதை - வரவேற்பைச் செய்வித்தாடும் மாய் மாலர், பாய் சுருட்டத் தொண்டு செய்வாய்
புதர் வாழும் பெருச்சாளி போல் வார், செல்வப் பூதங்கள் ஒரு சிலர் க்குப் பாதம் தாங்கும் மிதியடிகள் சிலருண்டே சமுதாயத்தின் மீகாமர் தாமென்றே மீசை நீவிப் புதிராடி ப் பிழைக்கின்ற புலையாட்டத்தின் புதுக் கணக்கைத் தொண்டென்றே விதிக்கின்ருர், நீ குதித்தோடு விரைந்தோடு, அதுவே தொண்டு குசமசக்கர்க் கெட்டாமை பெரிய தொண்டு!!
- புரட்சிக்கமால் -
- 25 -

தொண்டென்ருல் : மிகு தொலைவில்-தொலையளந்த ககாரினுக்கும் எட்டாத தொலை யாய், லட்சம் கொண்டாற்றும் காரியமாய், ஜாலங்காட்டிக் குசாலித்தே ஆடுகிருர், ஆட்டுகின் ருர்! தண் டாடும் வாழ்வுக்குத் தகுதி காட்டார், தவிப் பார்க்குத் தாமுத வார், வறுமை நோயில் திண் டாடும் உயிரோம் பார்-இன்னுரெல்லாம் திமிங்கிலத்தைத் தின்ற மையும் திமிலர், தோழா!
தொண்டாற்றத் துணிகின் ருய், வாழி தோழா ! தொடங்குக, உன் இல் லத்தே! இல் லஞ் சூழ்ந்த அண்டை, தெரு , சந்தை, பொது மனைகள், மக்கள் ஆடுதுறை, கலைக்கூடம், பள்ளி, மற்றும் சண்டை தரும் தொல்லைகள், சமுகக் கோப்பைச் சா டவரும் சகசண்டி நோய்கள்-எல்லாம் தொண்டாலே நலந்திகழச் செய்வாய், மக்கள் துயர கற்ற உயிர் சுமந்த தொண்டனவாய்!
-- 26 -سس

Page 19
முந்துதமிழுக்கு ஈழத்து முஸ்லிம்களின் பங்கு
கண்டி ஞானதீபம் அஸ்ருறுல் ஆலம் கண்டனத் துச் கிடை விண்ட மேதை தொண்டன் முஹம்மது காசிம்சித்தி லெவ்வை தொண்டுகள் என்றுமே வாழியவே
தேன்டமிழில் உயர் தீன் மாலை தீட்டிய தீரர் கசாவத்தை ஆலிம் அப்பா மீன்பாடும் காத்தான் அஹமது நெய்னு மெய்ப் பாவலரும் நீடுவாழியவே.
கண்டி நகர் கண்ட காந்தக் கவிராயர் கவிராஜசேகரம் அப்துல் காதிர் தண்டமிழின் உயர் சந்தத் திருப்புகழ் தந்த அருட்கவி வாழியவே
நாவல் நகர் ஈன்ற நாவலர்ற குமானின் நாச்சியார் பதிகமும் பாடல்களும் ஆவலைத் தூண்டின ஆத்மீகம் வேண்டின அன்னவர் நாமமும் வாழியவே.
புலவர் மலை நூர்
-- 27 س--

பல வண்ணக் கீர்த்தனம் திரு மணி மாலையும் பகர்ந்தார் உரைநடை மார்க்க விஞவிடை கலகெதஞர தந்த கவிஞன் நூர்முகமத் கன்னித் தமிழ் மனம் வாழியவே
மலைநாடு வாழ்ந்தவர் கலையார்வம் கொண்டவர் மது விலக்கு மணி கீதங்கள் விண்டவர் கலைமேடு ராகலை கவிவாணர் ஜப்பாரு கன்னித் தமிழ் வாணர் வாழியவே.
கோட்டார் ஊர் பிறந்து காவெல்லாம் சிறந்து கண்டியூர் உள்பத்துப் பிட்டி வந்து பாட்டாலே வேதாந்த விளக்கம் மெய்நூல் தந்த பாவா சுலைமான் ஞானி வாழி.
நல்ல தமிழிலே நாச்சியார் பாமாலை நாதர் நபிமீது நாயக ற சூல் நாமா சொல்லிய கல்விமான் ரல் லிமங்கொடை தந்த சொர்ண கவி ஆம் லெப்பை வாழி,
- 28 -

Page 20
கவித்தொகை
ஆழ்கடல் திரையது கிடந்த தடா-அதில்
அலையெனும் கவிவரி எழுந்தடா
சூழ்வளி எழுதுகோல் நீண்டதடா-சோகத்
துயரறும் காவியம் படைத்த தடா
வீழ்ந்திடும் கதிரவன் மறைந்து பின்னும்-அங்கு மின் மினி ஒளிச்செல நிலவெழுந் தும்
சூழ்மணற் கரை விழி அலைக் கவியைப்-படித்துச் சுவைத்தது கவியெலாங் கரைந்தன வே
எழுதிய கவியெலாம் நிலைக்க விலை-கடல் ஏட்டுடன் சங்கம மாகின வே
மழுங்கிய காற்றெழுத் தாணி யதோ-இன்னும்
வளர் கவி தீட்டிட மறக்கவில்லை.
விழுங்கின கவிகளைக் கரை விழிகள்-உடன்
விட்டன ஏப்பம் ஆயினும் அங்கு
குழுமிய மணல் விழி கவித் தொகையை-எண்ணிக்
கூட்டிப் பார்க்கவும் மறந்தது வே
m கு ம ர ன் an
- 29 -

நம் திருநாள்
உழைப்பவன் கைகள் ஓங்கிடும் நாள்!-அவன் உள்ளம் மகிழ்வுற வேங்கை யெனத் தழைப் பெனும் சக்தி தேங்கிடும் நாள்!-மலைத் தாயவள் எண்ணி மகிழ்வுறும் நாள்!
நிலைபெற வந்த வேற்றுமைகள்-நல்ல நினைவுகள் கண்டு தோற்றிடும் நாள்! மலைப்பணுவின்றி மணித் திரு நாட்டில்-அவன் மாநிலங்கூற வாழ்ந்திடும் நாள்
மங்கிய மணிகள் மாண்புடனே-நல்ல மாசறு பொன்னெளி வீசிடும் நாள்! சங்கெடுத் தெங்கும் முழங்கிடும் நாள்-மனச் சாந்தியும் வாழ்வும் துலங்கிடும் நாள்!
செந்தமிழ் வெள்ளம் பாய்ந்திடும் நாள்-அச் சீரினில் உள்ளம் தோய்ந்திடும் நாள்! நொந்தவர் கொண்ட நோய்ப்பிணிகள்-ஒரு நொடியினில் வெந்து சாய்ந்திடும் நாள்!
* அ ம ர ன் " ww.

Page 21
வந்தவரென்ற தாழ்நிலைபோய்-இதை வளர்த்தவரென்று வாழ்த் திடும் நாள்! சிந்தையில் தீபம் ஏற்றிடும் நாள் 1-இச் செகமது ஆணை கேட்டிடும் நாள்!
பொங்கிட உள்ளம் புதுப்புனலாய்!-அதில் பூத்திட க் கலைகள் மதுக்குடமாய்! தங்கிடும் நாளே நம் திருநாள்!--மலைத் தமிழனின் வாழ்வில் தனிப்பெரும் நாள்!
un 31 -ur

கம்பளிக் காரிகையர்
கறுப்புக்கம் பளிக்குள் ளே--தோட்டத்துக் காரிகை யர் கூடி பொறுப்புட னே புகுந் து-தினமும் போதல றபோ வர்.
கொட்டும்ம ழையினி லும்-தலை வெட்டும் வெ யிலினி லும் கட்டுக்கு லையா மல்-தேயிலைக் கொழுந்துப றித்திடு வர்.
நிரைநிரை யாகநின் று-தம்பின்னல் நெடுங் கூடை தொங்கவிட் டு குறையறக் கொழுந்தெடுப் பர்-அவரவர் கூடைநி ரப்பிடு வர்.
கங்காணி மார்கள து-கடுஞ்சொல் கண்ணிய மாய்ப்பொறுத் து பங்கம றபறிப் பர்-கொழுந்தைப் பக்குவ மாய்பறிப் பர்.
- 'ugbg56it' -
س 2 3 ـضـ

Page 22
நாடுஉ யிர்வா ழ-தோட்டத்து நாரியர் செய்யும் நன் மை ஈடுஇ ஆணயற்ற து-சரித்திர ஏட்டில்இ டம்பெற்ற து >.
ஒந்தனை செய்ய வேண்டும்-அரசிவர் சேவை யு ணரவேண் டும் வந்தனை செய்ய வேண்டும்-இவர்தம் வாழ்வையு யர்த்தவே ண்டும்.

தாழ்வு தகர்த்தெறிவாய்!
ஆய் எமைப் பார் இவண் மாய்வதைப் பார் வெறும்
ஆடுகள் மாடுகள் போல் ஓய்வுப்பொ ருள் அறி யோ மத ஞல் இடும்
ஒலம் ஒழித்திடுநீ!
மேய்வதைப் பார் வெயில் காய்வதைப் பார் உடல்
மெலிவதை நலிவதை நாம் நாய்களைப் போல் மழை தோய்கிற மே துயர்
நம்மவர்க் கென்றுளதோ?
சேய்களைப் பார் கொடும் பேய்களின் சூழ்ச்சியில்
செத்தவர் வாழ்க்கையம்மா தாய்நில மேதென வாய் வயி றேதெனத்
தாழ்த்துவ தேனருள்வாய்!
nnnnn வி. கந்தவனம் wx
- 34 -

Page 23
காடுக ளும் மலை மேடுக ளுங்கவின்
காட்சிக ளாக்கினமே கூடிவ ரும் வளம் தேடின மே துயர்
கூடிட வாடிடவோ?
மானமி லாப்பெரும் ஈன நி லை இதை
மாற்றிட வேண்டு மம்மா ஆனபு கழ்நிலை ஏனெ மக் கிங் நிலை
ஆட்சியின் சூழ்ச்சியைத் தீர்!
மாத்தளை வந்துணை பார்த்தும கிழ்ந்து கண்
மாரிம ழைபொழிய சாத்தின மே மலர் தாழ்த் தின மே தலை
தாழ்வுத கர்த்தெறிவாய்!
- 35 as

பேதம்
பிறக்கும் மழலைப் பேச்சினிலே-சிறு பேதம் இருப்ப தில்லை; உறங்கும் அழகுக் கண்களிலே-வெறும் உயர்வு தாழ்வு மில்லை, சிறகடித் தோடித் திரிகையிலே-வெகு சின்னஞ் சிறு வயதில், உறவைக் கொன்று காட்டியே-பெற்றேர் உண்மையை மறைத் திடுவார்!
சாதிகள் மிக்க மேலென வே-மனச் சமத்துவ மும் த கர்த்து, நீதிகள் அணைத்தும் மறந்தே-இளமை நெஞ்சில் நெருப் பூட்டி , ஆதி முதல் என்றும் நாமே-உலகின் ஆண்டவன் சாதி யென , தீ திடுவார் சிறு பருவத்திலே-பிஞ்சு உள்ளத் தில் வேற்மையை,
பண மெனும் வல்லப் பாசறையில்-நாம் பண் பற்று வாழ்ந் திடினும், குணம் நிறை எளிய ஏழைகள்-நட்பு கூடவே கூடா து! உணர்வின்றி இங்கு இருந்தாலும்-நாம் உயர்ந்த நல் சாதியப்பா. மனதினில் நன்கு பதித்திடுவாய்-ஏழை மக்களையே வெறுப்பாய்-என,
- ஆர். வரதராஜன் -
- 36 -

Page 24
ஒப்பற்றுக் கிடைத்த மக்களிடை-பல உண்மை தனை மறைத் து செப்பிடும் தீண்டா கருத்துக்களை-நன்றே சிந்தித்துப் " பார்த் திடுங்கள்! இப்புவி யில் முன்பு சாதி, கீதி-என்று எதுவு மிருந்த துண்டோ? தப்புடை இந்த எண்ணத்தை-விட்டால் தரணி விழிக்கும் மன்றே!
முத்தமிழ் காத்திடும் காவலனுய்-தமிழ் மூத்தக் குடி மகன ய் வித்த கனய் பெரு விண் கவியாய்-பெரும் வீரணுய் இப் புவியில் உத்தம மக்களை உண்மையிலே-பெற்ருேர் உருவாக்கி தந்து விடின் இத்தரை யில் அவர் இணையிலா-நாமம் என்றும் நிலைத்திடுமே!
-- 37 -

நான் செய்த குற்றம்!
மீனம் விழி சுழற்றி தேனும் இதழ்குவித்து ஊனும் உருக்குநிலை நின்றேனும்!-அவர் தானுய் மனங் கிறங்கி வீணுய்ப் புலம்பி கெட நாணைத் தொடுத்தபடி சென்றேனும்!
கூட்டும் சுவை யமுதம் ஊட்டும் முக நில வைக் காட்டி வெறி வளர்த்து வந்தேனும்!-அவர் நாட்டம் செயல் அனைத்தும் மூட்டும் மயல் விதைத் து வாட்டங் கொடுத்தபடி சென்றேனும்!
ஆகம் பறிக்க சதி தேகம் அசைத்து விஷ நாகம் நெளிப்பதென வந்தேனும்!- அவர் மோக உயிர்ப் பினிலே வேக, கரிந்து, கெட போகக் கலை விதைத்துச் சென்றேனும்!
வாதைத் தொடுத்து நறை போதைத் தலை சுழற்ற நாதக் குழலிசைத்து நின்றேனும்!-அவர் கோதை என அணைக்க பாதை நெறி யிழந்து மாதக் கணக்கிலேங்கச் சென்றேனும்!
- வழுத்தூர் ஒளிஏந்தி --
س 8 3 - حبيبي

Page 25
கன்னக் கதுப்பினிலே கன்னல் ரசத் துளிகள் மின்னு மிளநகைப்பில் நின்றேனும் !-அவர் உண்ண மறந்து செயல் எண்ணம் திரிந்து: எந்த ன் பின்னர் சுழலசதி தந்தேனும்!
காதல் கரை யுடைத்து மோதும் வெறி சுழிப்பில் சூது வளர்த்தபடி நின்றேனம்!-அவர் வேத நெறி யொழுக்கப் பாதை விடுத்து ஒரே சாதல் முனை நடக்க, சென்றேனும்!
தங்கக் கலச தனம்
வங்கக் கடல் எனவே பொங்கு வெறி அலைக்க நின்றேனும்!-அவர் அங்க முழுது மதில் முங்கி உயிர்த் துடிக்க எங்கோ நினைத்த படி சென்றேனும்!
a 39 as

மந்தநிலை போகவில்லை!
நம்மவர்கள் நலிவுற்று
இருக்கின் ருர்கள்;
நாமெல்லாம் அதுபோக்க
என்ன செய்தோம்?
என்று மனம் புண்பட்டு
விட்டதாலே ஏனவர்கள் குறைபோக்க
முயலலாமேஎன்றுணர்ந்தேன் அதனுலே
ஒன்று சொல்வேன்; ஏன் நாமே சங்க மொன்று
ஏற்படுத்திக் காட்டுவோம் புதுப்பாதை
புரட்சிப்பாதை! வேட்டைக்குச் செல்லுங்கள்
காசுசேர்க்க! என்றிடுவார் சென்றிடுவார் GổSF ri u u rf sint s; வென்றிடுவார் ஆட்கூட்டித்
தலைமைப்பீடம் பதவியெனும் பூச்சாண்டி
காட்டிக்காட்டி
உதவி சில பெறுவார்தன்
உடல் வளர்க்க
இந்நிலையே அதிகரித்துப்
போனதாலே
மந்தநிலை போகவில்லை-எம்
மலைநாட்டார்க்கு!
- கண்டி, எம். ராமச்சந்திரன் -
سے 40 سے

Page 26
கண்ணனும் ராதையும்
ஆயர். பாடியில் .
அந்திக். கருக்கலில்
மாயன் வேய்ங்குழல்
மதுர. இசையினில்.
தோயும். உளத்தினள்.
தோதாய். கண்ணனில். பாயும். விழிகளைப்.
பாய்ச்சி. நின்றனஸ்.
"என் னேடி. ராதை.
இப்படி. பார்க்கிருய். உண்ணவோ. நானும்.
உன் றன். கச்சுக்குள். வெண்ணெய். உருண்டைகள்.
வைத்துக். கொணர்ந்தனை!" என்றதும். குறும்பன்.
எடுத்தன ள். ஓட்டம்!
- முத்துராசன் -
- 41 -

ଗTରjTର0]Ti))
உண்ண உணவளிக்கும்-உழைப்பு உலகிடை தோன்றுதற்கு எண்ணம் முதல த டா-மனிதா
எல்லாம் அதன் வழிதான் ! அண்ணல் அறிஞரெனத்-திகழும்
அத்தனைப் பேர்களும் இவ் எண்ணத்தின் பிள்ளைகளே-அதனல்
எண்ணந்தான் தெய்வமடா!
மூத்தப் பெருநிலவை-விண்ணிலே
முண்டிடுங் கோளங்களை பூத்துக் குலுங்குகிற-வனப்பை
புள்ளு; விலங்குகளை கோத்துக் கிடக்குகிற-இவைகள்
கொண்டிட்ட திறமைகளை யாத்து எமக்களித்த-உலகின்
நாயகம் எண்ண மடா!
உன்னில் உறங்குகிற-இந்த
உன்னத எண்ண மதை இன்னமும் காண்கிலையேல்-மனிதா
இவ்வுல கேனு னக்கு? முன்னம் வதிந்தவர்கள்-வைத்த
முடக்கப் பொருள்களினைச் சின்னமாய் வைத்திருப்பின்-உனது
சிந்தனை போலிய டா!
- "மலைத்தம்பி’ -
- 42 -

Page 27
வாழ்க்கையை மாற்றிவிடு-இழையும்
வன் செயல் போக்கிவிடு தாழ்வினைத் தூக்கி எறி-தவிக்கும்
தன் மொழி காக்க, விழி ஏழ்மையை வென்று விடு-எல்லாம்
எல்லவர்க் கென்று நினை ஊழ்வினை கொன்றுவிடு-எண்ண
ஊதியம் கொண்டுவிடு!
தனிமைத் திறமைகளே-உலகை
தழைத் திடச் செய்த தடா இனிமையுட னிதனைப்-பலரும்
இரைந்துத் தொலைத்தாரடா முனிவர் பலர் தமிழில்-செய்த
முத்து இலக்கியங்கள் கணிவை யளித்ததுடன்-இணைப்புக்
கடமையும் செய்த த டா!
எண்ண வழி நடக்கும்-மனிதன்
எத்தித் திரிவதில்லை எண்ணில் பிரிவினைகள்-கண்டு
எங்கும் அலைவதில்லை புண்கள் நிறைந்தவனே-மடமைப்
புற்றி லுழல்பவனே எண்ணித் துணிந்துவிடு-வாழ்வில்
ஏற்றமும் கண்டுவிடு!
43 -

காதல் யாத்திரை
பொன்னை உருக்கிய மின்னுெயி லாளொளி
புன்னகை சிந்திவந்தாள்-இள அன்ன நடை பயின் ருள்-பழக கன்னச் சுழிப்பினில் பின்னிப் பிணைத்தெனைக்
காதலில் மாட்டி விட்டாள்-குடில் கோ திடச் செய்துவிட்டாள்!
காலமெனும் நெடுஞ்
சாலையிலே இரு
கைகளைக் கோத்து சென்ருேம்-கவிக் காற்றில் மிதந்து சென்ருேம்-இந்த
ஞாலத் துயர்களின்
ஒலமிலாத் தொலை
தூரத்தை நாடிச் சென்ருேம்-இன்ப தீரத்தை தேடிச் சென்ருேம்!
காற்றினிலே தென்னங்
கீற்றுக் குலுங்கிடும்
மாலை மறைகை யிலே-அங்கு சோலைப் புறத் திடையே-பிற
- தோப்பூரான்" -
------ 4 4

Page 28
வேற்று நினைப்பின்றி
ஊற்று நிலாவினில்
உள்ளம் பறிகொடுத் தோம்-புது வெள்ளம் தனை மடுத்தோம்!
மின்னுஞ் சுடரது விருந்துக் கழைத்திடும்
வானிருள் மேடையிலே-பல மீன விளக் கிடையே-புது விண்ணின் மதியெனும் கிண்ணியி லே மதுக்
கள்ளினை உண்ட யர்ந்தோம்-இன்பக் கொள்ளை யிலே மிதந்தோம்!
a 45 -

(If I
உயர்ந்த மலையில் பணி பெய்யும்!
உரோமக் கால்களைக் குளிர் கிள்ளும்
பயந்து பயந்து கீழ் வானில்
பகலவன் தோன்ற நாள் பிறக்கும்!
தேயிலைத் தோட்டத் தொழிற் பெண்ணுள்
செல்ல மகவை மடத்தி லிட்டு
பாய்ந்து மலை மீ தேறிடுவாள்; தன்
பாலகன் நினைவே மனம் நிறைப்பாள்!
செடியில் ஒளிரும் பணி முத்தம்
செல்வனின் கண்ணிர் திரை காட்டும்!
வடிவுச் சிலையைத் தனித்து விட்டு
வந்ததை எண்ணி மனம் நோவாள்!
செழித்து வளர்ந்த இளந் தண்டில்
சின்னவள் செங்கை விரல் காண்பாள்!
தளிர்கள் காற்றில் அசைந் தாடும்;
தனையனை மனதில் நினைத் தணைப்பாள்!
குருத்து இலையின் நிழற் கோட்டில்
குழந்தையின் புருவ எழில் காண்பாள் !
விரிந்த இலையின் பள பளப்பில்
விஞ்சும் அழகுக் கண் காண்பாள்!
- பூண்டுலோயா "தர்மு
- 46 -

Page 29
மாலைப் பொழுதின் தூர மெண்ணி
மயங்கிச் சோர் வாள் தேறிடு வாள்!
வேலை முடிந்து மடம் நோக்கி
விரைவாள்; நடப்பாள் பறப்பாளே!
தொல்லை ஒருநாள் கடந்த தென்று
துயரம் மறப்பாள் மக வெடுத்து
அள்ளி அணைப்பாள்; முத்திடு வாள்
அதுவே அவளின் பேரின் பம்!
- 47 in

ஏன் பிறந்தாய்?
பாயும் பல கந்தல், பஞ்சணையா இங்கிருக்கும்? நோயும், நொடிப்பும், நூறு வரும் நொந்த உளத் தாயின் மடியேறித் தாவுதற்கு நேர மெங்கே? காயும் குளிரதனில் கண்துயில வோ, பிறந்தாய்!
பெற்றே(ன்) உனையடா, பிரியமுட னே அணைத்து உற்றேவல் செய்யுதற்கு ஒய்வேது? உன்னை யந்தப் பிள்ளை மடுவத்தில் புரண்டுருளப் போட்டு விட்டே கல்லாய் மனதாக்கிக் கண் மணியே போய் விடுவேன்!
மாதம் முழுவதுமே, மலையேறிக் கஃள யெடுத்தும் ஏதும் சில காசு இங்கிருக்கா இவ் வுலகில், எத்தனையோ தாய்மடிகள் இங்கிருக்க என் மடியில் முத்தாய், பவள மதாய், முழுமதியே ஏன் பிறந்தாய்?
- ஈழவாணன் -
س- 8 4 -س-

Page 30
“aT651a)TajIDI GTáaa TGIDI'
வெள்ளையன் அன்று செய்த
வஞ்சனை மயத்தால் வந்தோம்; கொள்ளை யாய் அள்ளச் சொன்ன
கதையினைக் கேட்டு நின் ருேம்: பள்ளத்தில் இன்று வீழ்ந்து
பெற்றதாய் இல் லார் போன்று, உள்ளத்தில் கவலை தோய்த்து
உழல் கின்ருேம் பார்ப்பா ரில்லை.
வானத்தை முட்டி நின்ற
வரையினை உடைத்துத் தந்தோம்; கானத்தைப் பட்டி யாக்கும்
கடும் புலி கொன்ற பூழித்தோம்; சாணத்தை அள்ளி மந்தைக்
கூட்டத்தை மேய்த்த லங்கை மானத்தைக் காப்ப தற்காய்,
மாடுபோல் வேலை செய்தோம்:
காடுகள் கழனி யாச்சு,
கதிர் விளை நிலங்க ளாச்சு : மேடுகள் தோட்ட மாச்சு
மேன் மைக்கோர் செல்வ மாச் சு. நிலத்திற்குப் பெயராய் ஆச்சு:
நிலைக்கின்ற புகழாய் , ஆச்சு வளத்திற்கு வன்மை செய்தோம், வெளியேறும் உரிமை யாச்சு.
- நவாலியூர் நா. செல்லத்துரை பீ. ஏ. --
49 -

நரிகளும் பேய்க ளும் இந்
நாட்டிலே வீட மைக்க, அரியதோர் தொண்டு செய்து அரும்புகழ் ஆக்கித் தந்த, உத்தமர்க் கில்லை வீடு
உறுமுகிருர் ஆட்சி யாளர் செத்தவர் தலையி லோங்கிச் சாடவும் செய்வ ரின்று;
குட்டிடக் குட்டிட நாம்
குணிவதும் மடமை யன்ருே: குனிந்திடக் குனிந்திட நாம்
குட்டுதல் மடமை யன் ருே ஞாலத்தில் உண்மை கண்டோம்
யாமினிப் பொறுக்க மாட்டோம்; காலத்தில் மாறிவிட் டோம் ;
கருத்துக்கள் கற்றுவிட் டோம்.
விழித் திட்டோம் துயிலி னின்று
விடுபட்டோம் விலங்கை வென்று; பழித் திட்டோம் பழமை தன்னைப்
பண்புடன் புதுமை காண்போம்; உயிருடன் ஒன்றி நின்ற
உணர்ச்சியைக் காட்டி இன்று நெறியுடன் செயலைச் செய்வீர்,
நல்குவீர் நலங்கள் என்ருேம்.
கார்மேகம் திரண்டு விட்டால்
காட்டாறு வெள்ளம் மீறும்; மத வேழம் கட்ட லுத்தால்,
மட்டிலா உயிரைக் கீறும்; எரிமலை குமுறிவிட் டால்,
எல்லையின் வரையில் ஏறும்; எரிகின்ற உளங்கொ தித்தால்,
என்னென்று சொல்ல லா மோ!
سم 0 5 ---

Page 31
இன்று நீ சுடுவதேனுே?
கட்டி அணைத்திடவே-எனது
கரம் நீண்ட போதிலெலாம் எட்டி நகர்ந்துவிட்டாய்-என்னை
எவனே என்றெண்ணிவிட்டாய். ஒட்டிவிட்ட மனம்-உனவிட்டு
ஒட மறுக்குதடி சுட்டித் தனம் போதும்-இடைவெளியை
சுருக்கு; சுருக்கெனவே!
எண்ணி இருந்ததெலாம்-கணவாய்
என்வரையி லானதடி
தண்ணென் றிருக்குமந்த-நிலவும்
தகிக்கிறதை நீ யறியாய். கண்ணுக்குள் தெரிவதெலாம்-நீயாம்
கதை வெறுங்கனவு எண்ணத்தை ஏற்றுக்கொள்-முன்னைப்போல்
இருந்திடு என்னகத்தே.
ஊரை அணைத்தோடும்-ஆறென உன்னிடையில் கரமோட சாரையும் நாகமுமாய்-நாமிருவர்
சாய்ந்திருந்த கோலமெலாம் யாரறிவார்? சுவர் அறியும்-நன்மை
நீரில்லா பாலையாக -எனை நீசுடுவ தேனே இன்று?
- ஜோரு ”
51 ـكـ

bis6Dyji STTÖLIITILÎ
விழிதிறந்து உணவென்று, உறக்க மென்ருேம்
வேறென்ன உலகமதில் தமிழா, கண்டோம்?
பழுத்தமரம் நோக்கியங்கு வெளவால் சென்று
பகையின்றி அவையினமாய் வாழும் போது
அழிந்தொழியும் சதையோடு ஆண்மை பேசி அறையினிலே உணர்வற்று வாடுகின்ரு ய்;
சுழிக்கின்ற குணமதனின் சுருதி சேர்த்து
சூனியமாய் வாழ்கின்ற வாழ்வெ தற்கோ?
மொழிஉணர்வை இரத்தத்தின் முறுக்கி லேற்றி முடிபுனைந்து உன்ஆட்சி மலரச் செய்ய வழியென்ன கண்டாய் நீ, தமிழா இன்றே வாழ்வாங்கு எம்மொழியை வாழவைக்க வழிபெற்று நீயெழுக, வியன் உலகில்
வீரநடை போட்டமொழி வாழவைப்பாய் பழியுனக்கு வேண்டாமிப் பிறமொழியை
படிக்காதே, பதவிக்காய். தமிழைக்காப்பாய்.
- வெண்சங்குவேள் -
سے 2 5 -محے

Page 32
II6)6IL ÎLI 600f
படைத்தழிக்கும் பரமனுக்கு கோயிலுண்டு பரமன் புகழ் பாடுதற்கு பக்தரில்லை. மடமையிருள் அகற்றுதற்கு கட்டிவைத்த மாபெரிய நூலகத்தில் யாருமில்லை. உடையின்றி நடமாடும் யாசகர்க்கு ஒருசதமும் வழங்குவோரைக் காணவில்லை. படைபெருக்க செலவளிக்கும் அரசரின்றி பஞ்சப்பேய் ஒட்டுதற்கு எவருமில்லை.
கடைக்கண்ணுல் மொழிபேசும் கணிகையரின் கனிமொழிக்கு வரிசையிலே கால்கடுக்க கடையர்கள் காத்திருக்கும் காலமப்பா! கெளரவமாய் வாழுவோரைக் காண்பதெப்போ? தொடைதெரிய உடையணிந்து காட்சிதரும் தையலர்கள் ஆடுகின்ற கொட்டகையை மடைதிறந்த வெள்ளமென நெருங்கிச்சென்று மகிழ்ச்சியாய்ப் பார்த்துவரும் ஞாலமடா!
பாலுணர்ச்சி தூண்டுகின்ற நூல்களேந்தி பள்ளிசெலும் பாலகர்கள் பெருகிவிட்டார்! கோலூன்றிக் கூன் பிறைபோல் காட்சிதரும் கிழவிகளும் வெங்காயச் சருகுசேலை சோளிகளை அணிகின்ற காலமாச்சு! சோதரிகள் திருந்திவாழும் காலமெப்போ? தோழியரே! வீடெல்லாம் சிறந்துவிடின் தேசமெலாம் சிறந்துவிடும் உண்மையுண்மை!
- உடுதெனிய ஒளிவண்டு -
- ? -

S9|126)IDIIItil II6)fuUIDIĽ(:LIĎ!
பேயோடும் புலியோடும் பொருதி நின்று
பொல்லாத அடவியிலே வளத்தைக் கண்டு நாயோடும் நன்றியுடன் இந்நாட்டுக் குழைத்து
நலிவிடையில் வாழ்வதற்கா நாமிங்கு வந்தோம்? கூனேடும் துயரோடும் உழைக்கும் நம்மோரை
குறியற்ற இந்நாட்டார் விரட்டிடவும், இன்று ஊணுேடும் உடையின்றி உழலும் நம் நிலையும்
எப்போது நமைநீங்கி உயர்வாழ்வு தோன்றும்?
எப்போது இழிவாழ்வில் இடர்காண வோநாம்
இந்நாட்டை வளஞ்செய்தோம்? வெட்கமோ
வெட்கம்!! சப்பில்லா ஆட்சிக்கு அடிபணிந் திடவா
செந்தமிழ் மரபினில் வந்துநாம் உதித்தோம்? எப்போதும் இதுபோன்று இழிவான வாழ்வு
எந்தமிழ் இனத்திற்கு இருந்ததே இல்லை! செப்பவும் பெரும்வெட்கம் என்ன நாம் செய்தோம்
சீழ்கொண்ட இவ்வாழ்வு என்றுதான் நீங்கும்?
பாட்டனது பாட்டிவழி நாம்மறந்து விட்டோம்
பைந்தமிழர் வழியினிலே வந்த நாங்கள் கூட்டத்தில் மிக்கோராய் இங்கி ருந்தும் குடியுரிமை அற்றேராய் பிறந்த ஈழ நாட்டினிலே உழன்றிடும் கொடுமை தன்னை
நாமின்னும் உணராமல் நலிவிடையில் காட்டினிலே பட்டமரம் நிற்பதைப் போல்
கதியற்று காய்கின்ருேம் வெட்கம், வெட்கம்!!
- தமிழ்ப்பித்தன் -
س- 54 --

Page 33
ஊரறிய உழைத்தோரை எல்லா மிந்த
உலுத்தர்கள் பழிக்கின்ருர் இந்த நாளில் சீரறிவு கொண்டோர்கள் இவர்க ளென்று
சிறியோன்யான் இங்குரைக்க எண்ண வில்லை! பேரறியும் மலையெல்லாம்! நம்மு ழைப்பின்
பெருமைஇம் மண்ணறியும் அறிவி லிகள் தீரர்போல் திட்டியெமைத் தீய்த்திட் டாலும்
திரும்பிநாம் உரிமையின்றி செல்ல மாட்டோம்!
என்னென்ன கொடுமைகளைச் செய்ய லாகுமோ
எல்லாமே செய்திட்டார்! எமை விரட்ட என்னென்ன கேடெல்லாம் பெறுத லாகுமோ
எல்லாமே பெற்றிட்டோம்! எனினும் நாங்கள் பொன்னக வளம்செய்த இந்த நாட்டில்
தன்மானம் இல்லாது கையைக் கட்டி எந்நாளும் இல்லாத கொடுமைக் காக
இந்நாட்டில் அடிமையாய் பணிய மாட்டோம்
.س- 5 5

விந்தை..!
கொல்லும் விலங்கும் கொட்டும் நச் சரவமதும் மெல்ல உடல் தீண்டுகின்ற அட்டையதும், பள்ளி கொண் டிலங்கும் மலைநாடு!
குன்றும், குனிந்து நிமிர்ந்த கரும் பாறைகளும் நின்று இருண்ட பெருங் காடுகளும் நிறைந்து மறைந்து இடம்
மலைநாடு!
மக்கள் வதியும்
மாண்பு அற்று மாடுகள் வாழும் வகையு மின்றி கேடுகள் நிறைந்த கீழ்மை மிகுந்த
மலைநாடு!
இன்று, இன்னல் தீர்ந்த கலைநாடாய் கன்னல் உகுக்கும் கணி நாடாய்
காணுதிந்த
மலைநாடு!
- நூரளை இரா. மலைச்செல்வன் -
- 56 -

Page 34
- 57 --
பாடிப் பறந்து பறவைகள் கொஞ்ச ஆடி மகிழ்ந்து வாரீரென்னும் அழகுப் பசுமிை
மலைநாடு!
வாட்டிக் கொன்ற பசி போக்கி நீட்டிய வறுமைப் பிணி நீக்கி-வளம் நிறைந்து பொங்கும் மலைநாடு!
அன்று உற்ற காட்சியும் என்ன? இன்று பெற்ற மாட்சியும் என்ன? நின்ற எழிலின் விந்தையும் என்ன?
மந்திர மாயமும் மாண்புறு விஞ்ஞான தந்திரம் இல்லை; செந்தமிழ் தோழர்கள் சிந்திய வியர்வை, தேய்ந்த அவர்கள் முந்தையர் தந்த மூச்சு, உழைப்பெனும் மூல உரமன்றி வேறிலையே!

புல்லரினைப் பொசுக்கிடாதோ?
மலைநாடே எங்களுயர் மணிநாடே மாவலியின் நீரெல்லாம் "பீதுறுவின் நிலைகொண்ட சுனையல்ல அறிவாய்மேலும். “ ‘நிதம்மேதி யாயுழைத்த நீவீர் அலைகடலில் வீழ்ந்தேனும் ஈழம்விட்டு அகன்றிடுவீ’’ ரென்கின்ற பேரிடியால் குலைநடுங்கு முழைப்பாளர் வியர்வையொன்றே குருதிபுன லாப் பாய்ந் தோடுதங்கே!
அடைமாரி தான் பொழிவ தென்றல் அதிலேதும் புதுமையே காணுேம் தடையேற்றுக் கொடும்பிணிக ளுற்றே திறங்காட்டி நலிந்தோர் களெல்லாம், ** அடைக்கலமா யிங்குவந்த அபலையாவர் அணுவுமே உரிமையில்லை" என்றுதீய்க்கும் கொடுங்கனலின் பிழம்பாலே உருகியோடும் கண்ணிர்தான் மழையென்று அறிவாயன்ருே!
புற்றரவம் சீறிடவில்லை யஃதென்ன பெரும்புயல் அறிந்தாயோ? திருநாடே பெற்றதாயே தன்னெழிலின் செல்வப்பேற்றை பேணிநன்றே வளர்த்திடும் பேருமேயில்லை, ‘‘வெற்றிடத்தைப் பொற்களமாய் பொலிவித்தோரே வெற்றிடத்தே ஏகிடுவீரென்' " ருரைத்தால் பற்றியெழும் சுடுகன லாய் நெஞ்சஞ்சீறி பயனறியாப் புல்லரினைப் பொசுக்கிடாதோ?
- கல்ஹின்னே, எம். எச். எம். ஹலீம்தீன் -
- 58 -

Page 35
துஞ்சுகின்ற உன்மக்க ளின்னுமின்னும்
துயரணைத்தே வாழ்ந்திடார் என்றஉண்மை இஞ்சியுண்ட குரங்கதாய் இழிந்தியங்கும் இழிஞர்களுக் கிக்கணமே உணரச்செய்வாய்! வஞ்சமர்செய் தேனுமிக் கொடுமைநிக்க வகையெண்ணுர்; எனினுமன தெரிந்துநிற்கும் வெஞ்சினப்பூ கம்பமதும் வெடித்துவிட! விரைவினிலே நீள்விடிவும் பிறக்குமிங்கு!
X
then 9 am dead, Mly deatheat
When I am dead, my dearest, Sing no sad songs for me; Plant thou no roses at my head, Nor Shady cypress tree: Be the green grass above me
With showers and dewdrops wet; And if thou wilt, remember,
And if thou wilt, forget.
shall not see the shadows,
shall not feel the rain; shall not hear the nightingale
Sing on, as if in pain; And dreaming through the twilight
That doth not rise nor set, Haply may remember,
And haply may forget.
CHRISTINA GEORG NA ROSSETT
- 59 -

சாவணைத்த போதினிலே, என்னன்பே, .
சாவணைத்த போதினிலே, என்னன்பே
சர மகவி பாடாதே எனக்காக பாவாதே தலை மாட்டில் ரோஜாக்கள், பாவாதே நிழலாடும் மரந்தன்னை; மழைத்தூவல் பனித்துளிகள் ஈரலிப்பில்,
மரகதப்புல் என் மீது பரம்பட்டும்; விழைவுண்டேல் நீயென்னை நினைவுறுக,
விழைவுண்டேல் நீயென்றன் நினைவறுக.
கண்ணுறவே போவதில்லை நிழற்படுகை,
கார் மழையைத் தானுணரப் போவதில்லை. புண்பட்டி ருக்கையில்நத் தம்பாடி
பண்ணிசைப் பின் செவியேறப் போவதில்லை; சந்தியொளி மங்கலுTடுக் கனவாகி
புலர் வற்ற மறைவற்ற ஒன்றிப்பில், சிந்தையது தற்செயலாய் நினைந்திடலாம்,
சிந்தையது தற்செயலாய் மறந்திடலாம்.
- தமிழாக்கம்: கு. இராமச்சந்திரன் -
سے 60 -۔

Page 36
6)|III()
பூட்டு, கதவு
இல்லா கிளிக் கூண்டு.
பறந்த கிளி மீளவில்லை பார்க்க வந்தோர்
யாருமில்லை, உருவமில்லா கோயில்; கதவு இல்லா வாயில்;
உள்நுழையத் தடை
யில்லை; நுழைவதற்கு மனப்
I LOசத்திரத்துப் பேய்ப்
it. It D. சாத்தான் குடிப்பயம்நுழையத் தடையில்லை நுழைவதற்கு யாருமில்லை.
பழம் அழுகும் பால் புளிக்கும்தினக்காற்றை அழுக்காக்கும் அர்ச்சனை. சுவடு இல்லை: அர்ச்சனை. . அருவ வழிபாடு! இதய வடுக் கீறும் , ஆனந்த விளையாட்டு.
பண்ணுமத்துக் கவிராயர் -
- 6 -

அன்னையின் ஆசி
கடந்ததை எண்ணி வருந்தும் தமிழா, நடந்ததை எண்ணித் திருந்தி விடு! கண்ணின் மணியும் இமை போன்று கலாச் சாரமும் ஒன்றென் ருய் உயர்ந்த மலையிலும் உயர் பணி மேட்டிலும் சிறந்த தேயிலை உருவாக் கினைநீ வியந்து உலகம் போற்றும் பானமாய் உலகச் சந்தைக் களித்தனை நீயே! உழைத் தாய் உலகம் உன்னைப் போற்ற செழித்தோம் உனது சேவையின் திறத்தால்! வகுத் தாய் உனக்கொரு பகுதியும் கேட்டு, விழித்தோம் பலப்பல உரிமைகள் பறித்தார். பிறர் துணை உனக்கு உறுதுணை யாகா! இறைவனின் துணையே இறுதியின் துணை தான் துன்பச் சேற்றில் துவைந்து எங்கள் இன்ப ஏட்டினை இயற்றித் தந்தாய்! உலகத் தலைவராய் ஒளிர்ந்து பாபு உற்ற நண்பராய் சுற்றம் காத்த நேர்மை த வருத நேருஜி போன்ற நிலையுயர் தலைவர் உனக்கே துலகில்! தேர்தல் கேளித் தேரினில் நீயும் தேர் வட மாகத் தொங்கினை ஏணுே , தொடர்ந்து இழுக்கத் தவறியதால் நீ
- பி. எஸ். ராகவன் -
- 62

Page 37
துயரில் பட்டு துடிதுடித் துழன் ரு ய்! கோரிய வாழ்வு குடியுரி மையினை குழியில் என்ருே புதைத்த கதை சாஸ்திரி ஒப்பந்த சாயலைக் கேட்டு சரிந்தது வாழ்வெனத் தெரிந்தி ருப்பாய்! திக்கெட்டப் பெற்ற திறமையை வெற்றியை திரிகாலத் தமிழா பலியாக்கி விட்டாய்! வேடிக்கைப் பேச்சுக்கும் வேதாந்த கொள்கைக்கும் சாடிக்கு மூடியாய் சாஸ்திரி யானுர், பஞ்சசீலமாம் பயங்கர போர்வையுள் பரதவித்திடும் தமிழனே வாழ்க!
- 63 -

9 6TT56) JJ T?
பண்டைய நற் கலைமிகுந்த தென்னகத்தில் பழம் பதி லிருந்து வந்தார் தமிழரினம் கண்டவனும் வெள்ளையனே களிப்பு மிஞ்சக்
கொண்டவனும் அவனே தான் திட்டங்களும் கொண்டவுடன் திட்டத்துடன் குடிசையுள்ளும் குறிப்பாகச் சேரியுள்ளும் உட்புகுந்தே கண்டவரைச் சேர்க்கலுற்ருன் கடல் கடந்து இங்கு வந்து காடழித்து நாடாக்க.
மடித்த கடை வாயிதழில் அகங்காரத்தை
வண்ண முற விட்டு விட்ட வதன மீது துடித்த இதழ் குறிப்பறிந்தான் வறுமை நெஞ்சம் துடிதுடிக்கும் நிலையதனைப் பார்த்துவிட்டான் வடித தகண்ணிர் மாலைதனை வினய மாக
வைத்துபல வார்த்தைகளைப் பேசலுற்றன் பிடித்து வைத்த பேச்சோ டு கொண்டு வந்தான்
இன்று பேய் பிடித்து ஆடுகிறர் வறுமையொடு.
ஆறுமுதல் ஆறு வரைவே லை செய்து
அருமந்த நேரந்தனை அமைதியின்றி ஏறுநடை இழந்துவிட்டு இலவதனைக்
காத்துவந்த பச்சையிளங் கிளியைப்போல் பேருமின்றிப் பிணிபிடித்துப் பீதியுடன்
பித்தனைப் போல் உலகிருன் பேதை யாக மேரு வண்ணத் துன்பந்தனை மிகவடைந்து
நேரலன்போல் வாழுகின்றன் நெஞ்சம் விம்ம.
- பி. கே. செல்லையா -
- 64 -

Page 38
இத்தனைக்கும் இவனர் நின்று இலங்கைதனில்
ஏற்ற மின்றிக் கிடைக்கு நாமம் என்னவெனில் "சொத்ததனை இழந்து விட்டோ ன் தோட்டக்காட்டான் நாடற்ரு?ன் நாணில் லாக் கள்ளத்தோணி ' செத்தணைந்து சீவன் முத்த ரா கிஞேர்கள்
எத்தர்கள் முன் இன்று வரை எண்ணிக்கையில் எத்தனையோ எத்தனையோ எமனிடம்
சென்ற வரும் எத்தனையோ யாரறிவார்..?.
பித்தர்களின் வாய்ப்புலம்பல் பேச்சாகி பின்னரது செயலாகி நஞ்சான எத்தர்களின் ஏச்சதற்கு ஆளாகி
எதிரிகளின் துச்சத்திற்குத் தூணுகி செத்தவர்கள் எத்தனை பேர் இன்னும் எம்
எதிர்வாழ்வில் செல்பவர்கள்
எத்தனையோ யாரறிவார். இத்தகைய நிலைமையினை இன்றிருக்கும்
ஈழத்துத் தமிழருமே உணருவாரா!.
- 65 -

JigGIDGCL Til
ஒளிமுத்தக் கதகதப்பில் அருவி நங்கை ஒய்யாரமாய் நாணி ஓடி ஓடி கலகலக்க நழுவிவிழும் கானம் ஏகி கைவளைகள் ஒலி யெழுப்பக் கவலையோடு இலை பறிக்கும் நங்கையரின் நிலையைக் கண்டு இனிக்குமக் காட்சியெலாம் மறந்துவிட்டு தலைகவிழ்ந்தேன்; தாங்காத இதயத்தோடு தனியிடத்தும் அமைதியின்றி அப்பாற் சென்றேன்.
இரவிமுக மினு மினுப்பில் கண் விழித்து இனிய மண மூச்சுவிடும் கோலமலர், குறுநகையால் மதுவளிக்கும் செயலைக்கொண்ட குமரியரின் மெல்லிடைக்குப்பார மென்று குரலெழுப்பும் இலக்கியத்தில் காணும் பெண்கள் குளிர்பணியை நோக்காது கூடை தூக்கி இர வினிலே மலையேகும் குறிஞ்சி நாட்டில் இயற்கை யன்னை சிரிப்பினிலே துயரேமிக்கும்
குன்றினிலே நிமிர்ந்து நிற்கும் மரங்களெல்லாம் கும் மிருட்டில் விளையாடி அயர்வு ஓங்க, மின்னியெழும் பரிதியினைக் கண்டு நாணி மீறி வரும் குறுவியர்வைப் பணியாய்க் கொட்டும்; கண்வியக்கும் எழிலையெல்லாம் காண வெண்ணி கங்குலிலே எழுந் தோடி வெளியில் வந்தால் மண்விழிக்கு முன்னெழுந்து கொழுந் தெடுக்கும் மங்கையரின் வரிசைதான் கண்ணில் முட்டும்!
- மரியதாசன் -
- 66 -

Page 39
பசுங்குன்று உருட்டி விடும் ஓடைத் தண்ணீர் பார்வையற்ற மலை யுகுக்கும் துன்பக் கண்ணிர்! விசும் பலினைக் கேட்டதனல் நதியும் நொந்து விரைவாகப் பாய்கிறது பள்ளம் நோக்கி! குசுகுசுக்கும் மரங்களெல்லாம் குன்றில் ஏறும் குமரியரின் மெல்லிடையின் நலிவைப் பார்த்து கிசுகிசுக்கும்! கிரீச் சென்று சத்தமிட்டு கிளர்ந்து வரும் துன்பத்தை வெளியில் கொட்டும்!
என்னருமை மலைநாட்டின் திசைகள் எல்லாம் எழிற் கன்னி அரவணைப்பில் சிரிப்புதிர்க்கும்! தன்னிலையை ஓராத குறையால் இங்கு தவிக்கின் ருர் என் மக்கள் ! ஐயோ இந்த துன்பம் நிறை மக்கள் மட்டும் துயிலுணர்ந்தால் தூரத்தில் ஓடாதோ இன்னல் யாவும்? என்னருமைத் தோழர்காள் எழில் முகத்தீர் எடுத்திடுவோம் சபதமிந்தத் துயிலைப் போக்க!
سم- 67 سے

QIT6ò III il(III GIDT
நினைப்பதற்கு வலிமையில்லை நீள்துயிலை எண்ணிவிட்டால் வினைப் பயன் என்று வீணே வீழ்ந்து விடத் தான் வேண்டும் நினைவதனை மீட்டுவிட நில மீது எவருமிலர் தனையன்றி துணை கொள்ள தரணியில் யார்வருவர்?
இளமையே வாழ்வு மல்ல; இளமையும் நிலைப்பதில்லை. வளமை பும் மங்கிவிடும் வலிமையும் குன்றிவிடும் வளர்ச்சியுறும் விருட்ச மெலாம் வடிவிழந்து
நிற்கும் விந்தை தளர்ச்சியுறும் வாழ்வதனைச் சாற்றிடுமோ ரரிய உண்மை
ஏழ்கடலைக் கடந்திடினும் மாள்வதுதான் ஒழிந்திடுமோ வாழ்வின் பின் தாழ்வுண்டு வளத்தின் பின் வரட்சியுண்டு ஆழ்ந்தறிந்த அறிஞர்களின் அமுதவுரை இதுதான் கேள்
வாழ்வினிலே வாழ்வு பொய்யாம் வாழ்வினிலே
சாவு மெய்யாம்.
நீரின் மேற் குமிழியென நிலைத் திடுமிவ் வுலக வாழ்வை பாரினில் மாந்த ரெல்லாம் பாங்குற உணர்ந்தாரென்றல் ஊரினிற் பேதமில்லை, உற்ற ரில் பகைமையில்லை
சீரின் மேல் சீர்மை பெற்று சிறப்புற வாழ்ந்திடலாம்!
ட ராம, சுப்ரமணியம் -
- 68 -

Page 40
அடியே
தேனடி தேனடி வானடி வான டி
பாரடி Luff put lg. énsD't- dmይDህፃ
Gt uirg q. போரடி List ligLUNT --
என்அடி என்னடி கண்ணடி கண்ணடி
மாற்றடி மாற்றடி ஆற்றடி
ஆற்ற டி.
நின்னிதழ் நித்தம் நிலவே நீயென்
என் நெஞ்சம் எமக்கொரு எனக்கொரு என்னுளம்
என்னுளப் எமக்கொரு தமிழிசைப் Gô) Lu (o5 tib LunT
நீவந்து மனக் குறை வேலடி காயத்தை
தாமத பெற்றவர் நம் கதை ஈந்தொரு
ஊற்றமுதம் - செத் அதை எண்ணி நின்னுருவம் - எட்டா ருகிவிட்டாய்
மகிழ்வுறவே - இப் களியரங்கம்
சொல்லமுதம் -- Ꮣ 1 ᎧᎧ ஆகிடாமல்
போர்க்களத்தில் - எதிர் தூசியடி பாட்டெடுத்து -என்
L-m SLnt LD6)
சேர்ந்துவிட்டால்-எனக்கு உண்டிங்கு பட்டதடி - என்
ஆற்றிவிடு
எண்ணமடி - ஏ. நோக்கமதை வளர்ந்த தடி - நெஞ்சை முத்த மடி
- ப. வடிவழகன் -

."ஒரு மருந்து'
வானத்தைப் பாரங்கு கானம் பொழிந்திடும்
மோனச் சிறு பறவை-எழில் மோனச் சிறு பறவை-அதன்
ஊனை உருக்கிடும் தேனமு தக் குரல் வானைக் கிழிக்கு தடா-நெடு வானைக் கிழிக்குதடா.
நீலம் படர்ந்திட்ட கோல எழிற் கடற் சாலையில் மீன்களுமே-வண்ணச் சாலையில் மீன்களுமே-துள்ளி
வேலை மறந்தங்கு காலை பகல் இளம்
மாலையில் ஆடிடுதே-என்றும் மாலையில் ஆடிடுதே
கூட்டமாய் வாழ்ந்திடும் காட்டு மிருகங்கள் வாட்டமே கொள்வதில்லை-என்றும் வாட்டமே கொள்வதில்லை-இந்த
நாட்டில் வசித்திடும் வீட்டு மனிதர்கள்
போட்டியே போடுகின்ருர்-துயருடன் போட்டியே போடுகின்ருர்,
- சாந்தன் -
- 70 -

Page 41
வண்ணம் பல சிந்த எண்ணற்ற பூக்களும்
கண்ணைப் பறிக்கு த டா-அங்கு கண்ணைப் பறிக்குதடா-இங்கு
எண்ணம் பலகோடி மண்டி-இயற்கையின் உண்மையை மாய்க்குதடா-உயர் உண்மையை மாய்க்கு தடா.
பொன்னை யுதிர்த்திடும் அன்ன வியற்கையே
துன்பத்தைப் போக்கிடுமே-மனத் துன்பத்தைப் போக்கிடுமே- என்றும்
இன்பம் பெருக்கிடும் அன்புச் சுரங்கத்தில்
உன்னை அமிழ்த்திவிடு-தம்பி உன்னை அமிழ்த்திவிடு
ܗܗ 77 ܡܗܝ

b
D
பெற இணைந்தே வாரீர்!
கல்லினை உடைத்து நாங்கள்
கன பயிர் வளர்த்து இங்கே சொல்லிடாச் செல்வம் கூட்டிச்
சோர்விலா துழைத்து வந்தோம். நல்லியல் கொண்டு மேலோர்
நாடிடும் உரிமை நல்கா வில்லினிற் செலுத்தும் அம்பாய் வேறிடம் தள் கிருர் அந்தோ!
காலையில் எழுந்து நாளும் கடுமழை கதிரில் மூழ்கி வேலையிற் சலியா வாழ்ந்து
வியர்வையாய் உதிரம் கக்கிப் பாலையாய்க் கிடந்த ஈழம் பாலொடு தேனும் பாய, சோலையாய் அமைத்தோம் நாங்கள் துரத்திடல் நியாயமா? சொல்வீர்!
புத் தெனும் நரகம் மாய்க்கும்
புதல்வரின் மழலை கேளோம்; சித்திரப் பதுமை ஆகும்
சிற்றிடை மகளிர் இன்பம் நித்திரைக் காலத் தேனும்
நிரம்பிடப் பெற்றே அறியோம். முத்தொளி வியர்வைப் போக்கால்
மோகனத் துயிலில் ஆழ்வோம்!
அன்பன்
- 72 -

Page 42
எங்களின் வாழ்வை உயர்த்த
ஏற்றன செய்வோம் என்றே சிங்கமாய் முழங்கி எங்கும்
சீறிடும் அறிஞர் யாரும் தங்களின் வலிமை நாட்டத் தந்திரம் புரிவ தல்லால் எங்களின் சிறுவர் கற்க
என்னதான் செய்தார் சொல்வீர்!
மலையகச் சிறுவர் தம் மின்
மடமையை அகற்றித் தள்ள நிலை பெறச் சிறந்த கல்வி
நிலையம் ஏதும் உண்டா? கலையினை வளர்ப்போம் என்றே
கத்திடும் பெரியோர் யார்தான்? நிலைபெறு கலைதனுக் காய்
நிதியினை அளித்தார் சொல்வீர்!
உரிமையை இழந்தோம்; எங்கள்
உடலினைக் கெடுதோம் நல்ல தெரிவன எடுத்துக் காட்டும்
சீருறு கல்வி அற்ருேம்; பரிபவம் நிறைந்த வாழ்வை
பரிவுடன் அணைத்துக் கொண்டோம் நரிதனின் போக்கை மாற்றி
நலம் பெற இணைந்தே வாரீர்!
- 73 -

"வெட்கமேன்? அருகில் வாடி!"
தேனுாறும் இதழில் இதழ்
சேர்த்தொரு முத்தமீந்து வானூர்ந்த மதி வதன
வடிவினை, மேயுங் கலை மாணிந்த விழிகள் காட்டும்
மருட்சியை, மாந்தளிரின் மேனியின் அழகை, யுண்ண
விழைகின்றேன்! அருகில் வாடி!
பெற்றவர் அறிந்திடாமல்
பூனைபோல் பதுங்கி வந்து உற்றவர் ஊரார் அவர்
உரைப்பதற் கஞ்சி, முல்லைப் பற்றையின் மறைவில் ஒன்றிப்
பழகிய நாட்கள் சென்று விட்டன, தடைக ளில்லை!
வெட்கமேன்? அருகில் வாடி!
கூரிய வேலி னேடு
குன்றுகள் இரண்டும் வந்து
போரிடத் தாங்கு தில்லை
பூவையே! எனது நெஞ்சம்;
*தென்னவன்’
- 74 -

Page 43
வாரியின் அலைபோ லெந்தன்
மனதினில் ஆசை பொங்கி
மீறிடும் போதிலிந்த
வெட்கமேன்? அருகில்வாடி!
இரவினி நமக்குச் சொந்தம், ஈருடல் இணையும் இன்ப உறவினில் வளரும், இந்த
உலகிற்கோர் புதிய ஜீவன்! கரும்பென சுவைக்க காதல்
கடலிலே திளைக்க உள்ளம் விரும்பிடும் போதிலிந்த
வெட்கமேன்? அருகில்வாடி!
سے 75 سے

இரக்கம் தோன்றுமா?
ஊருமில்லையா உலகு மில்லையா உறவுமில்லையா உரிமையில்லையா
பாலைவனம் போல் கிடந்த லங்கையல்லவா
- நாங்கள் பட்டினியாய் பாடுபட்ட ஏழையல்லவா?
காலை முதல் மாலை வரை மாடுகள் போலே -பட்ட கஷ்ட மெல்லாந் தெரியுதுபார் லங்கையின் மேலே கண்டிப்பகுதி மலையகத்தைக் காணவில்லையா
- இல்லை கண்டிருந்தும் சண்டித்தனம் செய்யலா குமா?
நேரமில்லையா அல்ல; கோரமானதா - பாரில் நேர்மையோடு வாழ எண்ணும் ஏழையல்லவா?
அணிமிகுந்த பச்சை மயில் அணங்கினைப்போலே
- pā
அழகு வளம் பொங்கு தய்யா லங்கையின் மேலே தேயிலையும் மரத்துப்பாலும் தேவையில்லையா
- எமக்கு தீம் பிழைத்து தேம்பவைத்து சரிக்கலாகுமா?
இரக்கம் தோன்றுமா, காலம்போகுமா-இல்லை இறக்கும்வரை இருண்ட வீட்டில் உறங்க
வேண்டுமா?
- ப. வை. கண்ணையா -
سسس 76 سے

Page 44
5T Gir
உள்ள முடைந்து உணர்வுக் குடம் ததும்பும் வேளை தெள்ளிய ஞானம் தெவிட்டும் வேளை உள்ளிடும் அறிவும் உறைக்கும் வேளை என்னையும் உன்னையும் இறுகப் பிணைத்த பாசமோ நேச மோ பகட்டுப் பிரலாபப் பஞ்சமோ? கொஞ்சமோ? ககனப் பெருவழி கதவிடும் இருவழி முடிவிலாப் பெருவெளி முடித்திடத் துடிக்கும் பகீரதப் பிரயத்னம் பிரக்ஞை என்னே!
அண்டம் அணு வாய் புழு வாய், பெருத்து பருத்து ப், ז60 ע\L} L(o (a வெடிக்கும் , ஒருநாள் ,
ஒரே நாள், பெருநாள் கருநாள் , வெறுநாள்.
அது அழுது வடித்து அலர்ந்து துடித்து புரண்டு நெகிழ்ந்து உணர்வுக் கு ைமந்து ஐயோ என அலறித் துடித்திட து வளும் நாளா? அன்றி, கூட்டைக் கழற்றிப் பூட்டைப் பிரித்து பறந் திட்ட ஜீவன் காற்றுப் பெருவெளி அண்டம் பல நிலை சேற்றில் துடிக்கும் சிறு புழு வெனவே மாற்றி வதை பல மண்டிப் புது உயிர் சேர்ந்து, சிறந்திட்ட சொல்லையும், எல்லையும் சொந்தமும், பந்தமும் மிஞ்சிய, துஞ்சிய தேவன் திருவடி திளைக்கும் போதிலே நேற்றுக்கு முந்திய நாளை க்குப் பிந்திய வெடிப்பில் துடிக்கும் 6S tf? u u u Drr
நாள்.
எஸ். யூரீகாந்தன் -

96%). If
பச்சை இழை மரகதத்தால் பட்டு நெய்து பணிபோர்த்த கொடியுடலில் அதையணிந்து இச் சையெழ மனத்துடிப்பில் காந்த மூட்டும் எழிலார்ந்த கலை வடிவில், முகிலனிந்த உச்சிவான் முழுமதிதான் துயில்வதுபோல் ஒளிர்ந்திருக்கும் மலையகத்தின் மாட்சியெல்லாம் நிச்சயமாய் கலை உருக்கும் சிலைவடிவே! நெஞ்சமதைச் சுண்டிவிடும் புத்துணர்வே!
செங்குருத்துக் கலச மென "பீதுருவின்’ திருமுடியில் எழுந்து வரும் கதிர்ச்சுடரும் பொங்கிவரும் ரப்பர் மரச் சுரப்பைப்போல் பூவழியத் தவழ்ந்தோடும் மா வலியும் மங்கையரின் செங்காந்தள் விரல் நுனிக்கு வயப்பட்டு வசமிழந்த தேக்கொழுந்தும், பொங்கலிட்டு செந்தமிழர் உழைப்பதனல், பூரித்த மலையகத்திற் கிணையுமுண்டோ?
வரிசையாய் துளிர்த்துள்ள தேயிலை போல் மங்கையரின் எழிற் கூட்டம் கூடையோடு! வரிசையாய் வளர்ந்துயர்ந்த ரப்பரைப்போல் மலைத்தோளர் ஒரு கூட்டம் அதனிடையில் அரிசிப்பல் காட்டிவிட்ட காதலியர் அழகினிலே குளிர் மறந்த காளை சில்லோர்! விரி கதிரின் ஒளிவிசையாய் மலையிலேறி விரைவதோ இணையில் லாக் கடமையோட்டம்!
- ஈழக்குமார் -
- 78 -

Page 45
உழைப்புக்கே உயிர் பெற்றுப் பிறந்திருக்கும் உயர் தமிழர் பண்பதனை இந்த நாட்டில் தழைத்துள்ள தேயிலையும் ரப்பர் கொக்கோ தம்முரு வால் காட்டிநிற்க, இங்குபொருள் தழைப்பதற்கு உழைப்போடு உயிர் உடலைத் தந்து தினம் வளர்க்கின்ற மலையகத்தோர் வழிப்போக்கர் போலிந்த நாட்டவரால் மதிக்கபடு கின்றநிலை! என்ன சொல்ல?
மண்ணுக்கு உயிரூட்டித் தம்மிரத்த மணிவியர்வை யதனலே செந்நிறத்தை மண்ணு க்குத் தந்தவர்கள் ; தேயிலையின் வாழ்வுயிராம் ஆணிவேர் போன்றவர்கள் கண்ணீரில் மிதக்கின்ரு ர் ; உரிமையற்று கனல் வாட்டும் தேக்கொழுந்தாய்; வாழ்க்கையதில் எண்ணுத துயர்ப்பளுவால் உருளையிடை ரப்பரைப்போல் வாடி நிதம் நலிகின் ருரே!
முறையான ஒரு தலைமை அற்றதாலே முள் குத்து நிலம்போல பிளவுபட்டார்! நிரை காக்கும் கல்விநயம் அற்ற தனல், நோய்கண்ட ரப்பர் மரம் போலான ர்கள்! கறைமிக்க குடி வழியில் சென்ற தனல் கவ் வாத்து தேச்செடியாய் ஆகிவிட்டார்! உறைக்கின்ற தன்னுனர்வு அற்றதனல், உரிமையற்ற இழிசனராய் தவிக்கின்ற ரே! கத்திபட்ட ரப்பர் மரச் சுரப்பைப்போல கருத்தினிலே புத்துணர்வு கனல் பிறக்க நித் திரைக்கு விடை கொடுத்து இந்த நாடே நிலையான நாடென்ற உணர்வு கொண்டார்! முத்திரையைப் பதித்து விடும் உறுதியோடு மூண்டிட்ட உரிமை மின் சுடர்த் துடிப்பால் எத்தர்களின் வலையறு ந்து ஈழ மன்ன எம் அன்னை பூமியென வாழ்த்திநிற்பர்!
ܚ 79