கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்த மண்ணும் எங்கள் நாட்களும்

Page 1
*),
 


Page 2

இந்த மண்ணும் எங்கள்
நாட்களும்
* கவிதைத் தொகுதி *
தர்க்கீகம். இவளியீடு.1.

Page 3
முதற் பதிப்பு
1982 636 Errigt -
GesuiG 1
தொடர்பு முகவரி ;-
* தர்க்கீகம் **
த. பெ. இ. 103
யாழ்ப்பாணம்.
G3l3a) e5 Lurr S5 = fn )
புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

முனனுரை
1. vn
"எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்' இந் நூற்றண்டில் நம் மொழியில் இருந்து ஒருகுரல் ஓங்கி ஒலித் தது. அரண்மனையிலும், மாளிகையிலும் சீராட்டப்பட்ட தமிழ், உண்ட களப்பில் ஏப்பமானதமிழ், பண்டிதர்களின் நாவில் மட்டும் தூங்கிக் கிடந்த தமிழ், தன் சோம்பலை முறித்து மக்களை நாடியது. புதிய இரத்தம் பாய்ச்சியது. இந்தக்குரலை ஓங்கி ஒலித்தவன், புதிய இரத்தம் பாச்சியவன் பாரதி. М V
இன்று தமிழில் கவிதை வாழ்வையே கருப்பொருளாக்கி புதிய வேகம், பரந்த நோக்கு ஆகியவற்றுடன் தன் நடையை மாற்றிக்கொண்டுவிட்டது. இவ்வேளையிலேயே நாம் இக் கவிதைத்தொகுப்பினை உங்கள் முன் கொண்டு வருகின்ருேம். இக் கவிதைகள் அனைத்தும் நம் சமகால கூர்மையடைந்த பிரச்சனைகள் பற்றிப் பேசுகின்றன. அதே வுேளையில் கவிதையின் புதிய வடிவங்களில் புதிய "பரிசோதனைகளும் இவற்றில் நிகழ்ந்தப்பட்டுள்ளன. -
ஆணுலும் இதற்கு முன்பான நமது ஈழத்து இலக்கியமானது இக் கூர்மையடைந்து கொண்டிருந்த பிரச்சனைகளில் தளத்தை அமைக்க மறுத்தே வந்துள்ளது. அதிலும் “இலக்கியம் என்பது சமுதாயத்தின் வெளிப்பாடு' என்னும் இலட்சியப்பதாகையினை தூக்கிப்பிடித்த முற்போக் காளர் (?) கூட தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வேரோடியிருந்த பிரச் சனைகளை உள்வாங்கிய இலக்கியத்தினைப் படைத்தளிக்கத் தவறிவிட்டனர். அல்லது மூடிமறைத்தனர். •
எழுபதுகளுக்குப் பின்னல் ஈழத்து இலக்கியப்பரப்பின புதுப் புன லென வெள்ளம் நிரவத் தொடங்கியது. ஈழத்து மக்களின் ஒவ்வொரு நாடித்துடிப்பும் கவிதைகளாகப் பிரசவம் ஆயின, வளரும் இளங் கவிஞர் கள் இவற்றைப் பிரசவித்தனர். ஆணுல் இன்னும் நாவல், சிறுகதை களில் இக் கருப் பொருட்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளப்படவில்லை. ஆஞலும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் ஆங்காங்கே ஒளிரவே செய்கின்றன.
அதே வேளையில் இலக்கியத்திற்கும், சமுதாயத்திற்குமான தொடர்பு என்ன? இலக்கியம் தேவைதானு? என்னும் கேள்விகள் விடுதலைப்

Page 4
ii
போராளிகளிடமிருந்தும், பரவலாகவும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மக்களிடம் இருந்தே இலக்கியம் படைக்கப்படுகிறது. இல்லாதவற்றில் இலக்கியம் எழமுடியாது. இதுவே இலக்கியத்திற்கு அடிப்படையானது. ஏடறியா இலக்கியமாயினும் ஏடு ஏறிய இலக்கியமாயினும் மக்களின் வாழ்வையும், அவர்தம் அவலத்தையும் மக்களைத் திசைதிருப்ப போதை யாக்கப்பட்ட வர்க்கத்தன்மையையும், அவை சுட்டி நின்றன. தாலாட் டும், ஒப்பாரியும், களத்து மேட்டுப்பாடல்களும், காப்பியங்களும், குரவை, யும் கூத்தும், கும்மியும், ஒயிலாட்டமும் இன்னும் பிறவும் அவர்களின் உள்ளத்து உணர்ச்சிகளை, எழுச்சிகளை, அங்கலாய்ப்புகளை கேலியை கிண் டலை தத்துவத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றன - புரியவைக்கின்றன. கலை இலக்கிய வடிவங்களே சமுதாயத்தில் பழமையை - நாகரீகவளர்ச் சியை - உன்னதத்தை, குறித்து நிற்கின்றன. ஆணுல் நமது இலக்கியங் கள் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போனதனுலேயே மேற்கண்ட கேள் விகளை நாம் எதிர்முகம் கொள்ள வேண்டியவர்களாயினுேம். ஆகவே அவர்கள் மொழியில் அவர்களைப்பற்றியதான இலக்கியம் படைக்கப்படும் போது அவர்களைச் சென்றடையும் போது அவர்களை உலுப்பி விடுகின்றது அவர்கள் நிலையை உணர வைக்கிறது. ஆகவே நாம் இலக்கியத்தை அந்நியப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
இக்கவிதைத் தொகுதியின எழுபதுகளிற்குப் பின்ஞன எம் இலக் கிய ஏடுகளில் இருந்து தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட கவிஞர் களிடமிருந்து பிரசுரமான - பிரசுரமாகாத கவிதை மலர்களைத் தொடுத் துள்ளோம். இங்கே நிகழ்கால ஈழத்துப் பிரச்சனைகள் மிகத் துல்லிய மாகவே வெளிப்பாடாகியுள்ளன.
இவற்றை நீங்கள் படிக்கும்போது உங்களது உணர்வுகளில் தாக்கத் தை உணருவீர்களானுல் இத்தொகுப்பின் கவிஞர்கள் வெற்றி பெற்ற வர்களாவர்.
'தர்க்கீகம்"
வெளியீட்டுக் குழு.

"கவிதைச் சுவை யுணந்தேன்'
அ குறிஞ்சி-தென்னவன் (
குளிர்ந்த புனலின் சுகத்தினிலும்
குயிலின் இனிமைப் பாட்டினிலும் மலர்ந்த பூங்கா மணத்தினிலும்
வசந்தத் தென்றல் தழுவலிலும் குழந்தைச் செவ்வாய் இதழினிலும்
கொஞ்சிப் பிறக்கும் மழலையிலும் தெளிந்த ஞானத் தமிழினிலே
சொல்லும் கவிதைச் சுவையுணர்ந்தேன் !
大
முகில்கள் தங்கும் மலைப்பெண்ணுள் மேனி தழுவும் பசுமையிலும் நகைசிந் திவரும் வெள்ளருவி
நாதமனியின் ஒசையிலும் பகையற் றுலக மக்களெலாம்
பழகும் அன்பின் உறவினிலும் நெகிழும் உள்ளந் தோய்தமிழில்
நிகழ்த்தும் கவிதைச் சுவையுணர்ந்தேன் !
大
மழைக்கும் புயற்கும் அஞ்சாத
வன்மை மிகுந்த மனங்களிலும் உழைக்கும் மக்கள் முகங்களிலும்
ஒழுகும் வியர்வைத் துளிகளிலும் தழைக்கும் பயிரின் செழுமையிலே
தழுவும் இளமைச் சிரிப்பினிலும் கழையின் குழல்தோய் இசைத்தமிழின்
கவிஞர் கவிதைச் சுவையுணர்த்தேன் !

Page 5
பிணிவாய் பட்டோர் தம் வருத்தம் பெரிதும் தமது வருத்தமதாய் உணர்வார் உள்ளம் உருகிடுவார்
உயர்ந்த மனிதப் பண்பினிலும் மணிவாய் கிள்ளைப் பேச்சினிலும் வறியோர் துயர மூச்சினிலும் பணியாய் குளிர்ந்த தமிழினிலே
பாடுங் கவிதைச் சுவையுணர்ந்தேன் !
大 அந்திச் செவ்வான் முகட்டினிலும்
அமரும் பரிதி எழிலினிலே சிந்திச் சிதறும் ஒளிவண்ணச்
சேர்க்கை தனிலும், தேயிலைச் செடிகள் இந்து முகத்தார் வளைக்கரங்கள்
இயங்கும் சுழற்சிப் பான்மையிலும் சிந்துப் பூக்கள் தூவிவரும்
தேனர் கவிதைச் சுவையுணர்ந்தேன் !
大 போர்க்குச் செல்லும் வீரநடை
போட்டுச் செல்லும் இளையோர்கள் பார்க்கும் விழிகள் கடையோரம்
பயிலும் கூர்மை வடிவினிலும் பூத்தேர் அசைந்து வருவதைப்போல் பெண்கள் கூடை அசைய, தலை சாய்த்து ஒயிலாய் வரும்பாங்கில்
தமிழ்த்தேன் கவிதைச் சுவையுணர்ந்தேன் !
女
இளமை பூத்த முகங்களிலே
ஏழ்மை சிரிக்கும், தேயிலையின் வளமை சிரிக்கும் மலைகளிலே;
வறுமை சிரிக்கும், வாழ்வினி, லின் நிலைமை கண்டு பொங்கியெழும்
நெஞ்சம் உடையோர் உணர்வினிலே ; வலிமை மிகுந்த செந்தமிழில் -
வாழும் கவிதைச் சுவையுணர்ந்தேன் !

*4’Y 474v 4v ov 4v 4v 4w 4’Y 4v 4P 47 4Y 4o
அன்னை மொழிச் சிறப்பை ஆராதிக்க வந்தோர்கள் குண்டாந் தடிபட்டுக் குப்பறக் கிடந்ததுபோல் நினைவுச் சின்னமும் (9G5IT......! நிலைகுலைந்து கிடக்கிறது.
இமயத்தின் உச்சியிலே ஏறித் தடம் பதித்தவர்கள் கனக-விஜயர்களாய் கல்சுமந்த கதையிங்கு.
சொந்த மண்ணில் இவர்களுக்கோ சோகம் காக்க உரிமையில்லை இந்த மண்ணில் இப்படியே அந்நியராய் ஆனதென்ன?
சூழ்ந்து நிற்போர் முகமெல்லாம் சோகமது தழும்பி நிற்க காவலென்று வந்தவர்கள் கதிரறுத்த கதையுமுண்டு.
மு. புஷ்பராஜன்,
தை-1976
10-1-74இல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின்போது பொலிசாரால் கொல் லப்பட்டவர்களது நினைவுச் சின்னங்கள் தொடர்ந்து 75-ம், 76-ம் ஆண்டுகளில் உடைக்கப்பட்டபொழுது. h−

Page 6
அவன் ஒரு சாதாரண
இலங்கைத் தமிழன்
வ. ஐ. ச. ஜெயபாலன்
தென்றல் படுத்துறங்கும் துறை கடற் போர்வை சரிய தேன்நிலவு தலைதூக்கும் தலைதூக்கும் நிலாவுக்கு மடல் எழுதும் தாழம் பூ நான் நீ எனழுந்திக் கோடி அலை தொட்டோடும் தென்இந்தியக் கரை தொடுவான்வரை நீண்ட வெறுமைக்கும் அப்பாலே ஈழமாம் தாய்மண்ணில் இதே அலைகள் தொடுகிறதும், பின்னே கறுத்த பனந்தோப்பில் காக்கிச் சட்டைப் பிசாசுகள் உலாவுவதும் ஒடுக்கப்பட்ட ஓரினத்தின் சடக்குரலும் " மனக்கண்ணில் நிழலாட என்ன தவமோ இருக்கின்ருன் இளமாலை . . . பூமி வெடித்து பெருமூச்செறியும் கொடிய வறட்சிக் கோடை நாட்களிலும், விரக்தியடையாது வரம்புகள் கட்டி வாய்க்கால் அமைப்பவன் அவ்னது அப்ப ை
புல்லைத் தின்ற பஞ்சநாட்களிலும் விதை நெல்லைப் பேணிய உழத்தியின் மகன் அவன் மனத்திடன் என்பது வம்ச உரித்து. இவனுமோர் இளைய உழவனவான்.

காண்டீபத்தைக் கால்களில் வைத்து சரணுகதியடைந்த விசயர்களாலே அம்புகள் காட்டிக் கொடுக்கப்பட்டதால் இவனது நண்பர் பலரது மனைவியர் அந்தக் கொடிய இரவுவேளைகளில் தாலி இழந்தார். கரணம் தப்பி இருப்பினும் இவனையும் காகமும் நாய்களும் பசியாறி இருக்கலாம் எனினும் இவனைப் புகழ்ந்து பாட சிறப்பேதுமில்லை. பாலஸ்தீன எல்லைகள் தாண்டி பாலை மணலிலும் ஆயிரம் இவன்போல்.
1980, அக்டோபர்.
(பொதிகை)

Page 7
எழுக தோழியரே எழுக!
ஆதாமும் ஏவாளும்
உலகின் ஆரம்பம் என்று சொன்னல் அந்த ஆரம்பத்தின் ஒரு பாதியின்று அடிமையாய் வாழ்வது ஏன் ?
அகிலம் படைத்த சிவனின் ஒரு பாதி பெண்ணென்ருல் அந்த
பார்வதிகள் இன்று பண்டங்களாய் மாறியதேன் ?
பிள்ளைகளைப் பெறுவதற்காய். புருஷனைச் சுமக்கும் வள்ளல்களாய் வாழ்வதுதான் பெண்ணின் வரலாற்றுச் சித்தரிப்பா ?
காவியங்களிலும் கடைகளின் காட்சி அறைகளிலும் கேவலமாக்கப்படும்
பெண்ணின்
ஜீவியங்களுக்கு விடிவு கிடையாதா?

மனித குலத்தின் ஒரு பாதியை இருளில் கிடத்திவிட்டு எந்த நாடாவது உதயத்தைக் காணமுடியுமா ?
சொத்துடைமை வர்க்கங்களின் சித்தாந்தங்களினல் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்ணினத்தின் சிந்தனைகள் எப்பொழுது சுதந்திரத்தைத் தரிசிக்கும் ?
வளையல்களினதும் கொலுசுகளினதும் வடிவில் மதி மயங்கி
வாழ்வின் துயரங்களைப் புதைக்க முயன்ற தொழியரே
எழுக ! இனி எழுக !!
நவீன உலகின் நாலா திசைகளிலும் திரண்டெழும் உங்களின் உரிமைப் பிரகடனங்களை மனித குலத்தின் விடுதலைக் கீதமாக்கி.
எழுக தோழியரே ! எழுக !! பெண்ணினத்தின் அடிமை வாழ்வு அழிய எழுக !
- சாருமதி - 1981-01-05.

Page 8
இது அஞ்சலியல்ல ஆத்திரம்
சிவனு லெட்சுமனு நீ செத்தாயா..?
காக்கிச் சணு தானிகளின் துப்பாக்கிக் குண்டுகள் உன் உயிரைத் துடைத்துச் சென்றனவா ?
லெட்சுமணு என் வர்க்கத்தின் ரெத்தமே வெட்டிய மரமாய் நீ வீழ்ந்தனையா ?
வீர புருஷனய் இறந்தனையா ?
பதினெட்டு வருட பாரமிகு வாழ்க்கையின் சோகம் தாங்கியே சாகும்போது உன் உணர்வின் கடைசி ராகங்கள் தான் ஏதோ ?
பச்சைக் குழந்தை நீ வளர பாதம் நிமிர்த்தி தெத்தித் தெத்தி நடந்த மலையின் திடலொன்றில்
உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்ததா ?
அப்பனும் அம்மையுமாய் அள்ளிச் சொரிந்த வெயர்வையின் சத்தில் வளர்ந்த மலையைச் சதியிட்டுப் பறிப்பதற்கு எத்தனித்தோர்க்கு நீ உன் ரத்தத்தை விலையாய்க் கொடுத்தனையா ?

என் வர்க்கத்தின் ரெத்தமே லெட்சுமனு டெவென் தோட்டத்தில் நீயொரு வரலாறு படைத்தனையா?
கண்ணிரே கவிதையாய்
உணர்வுத் தழையோட நான் என்ன எழுதுவேன்?
பாட்டாளி வர்க்கத்தின் பட்டினி மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் பரிதாப மரணங்கள் கூட அரசியல் பண்டங்களாகிவிட்ட நன்றி இல்லாச் சமூகத்தில் நான் உன் இறப்பை என்ன சொல்லிப் பாட ?
தமிழன் எனச் சொல்லி உன் இறப்பைத் தாழ்த்திவிட * கூட்டணியாகி ' நான் குரலிடவா?
தாளாதா உன் மரணச் சோகத்தாலே கண்ணிர்த் தூறல் இடச் சேர்ந்தோரை துரத்தி அடித்தாரே - அவரைத் தூாற்றிடவா
டெவனில் நீ இறக்க
டெல்டாவில் லயன்களை எரித்தாரே - அவரை வைது ஆறிடவா?

Page 9
O
* முடிக்குரிய இளவரசனின் ' நுவரெலிய மஸ்கெலிய அரசியல் பட்டாபிஷேக வெற்றிக்காய் Y. உன் இறப்பு நரபலி ஆனதைச் சொல்லி ஆத்திரம் கொண்டிடவா ?
'சங்கத்து' முட்டியில் சல்லி நிறைக்க கொடுமை வெயிலில் கருகிய உன் பெயர் சொல்லி மலை நாட்டில் எத்தனை வகைக் கூட்டம்
அவரை துரோகிகளின் கூட்டமென்று தூசித்திடவா?
லெட்சுமன என் வர்க்கத்தின் ரெத்தமே முல்லேரியா தொட்டு டெவன்வரை எம் வர்க்கத்தின் கதை மலை நாட்டில் ரெத்தக் கண்ணிர் அன்ருே ?
எப்போது இதற்கு முடிவுரை ? எப்போது புரட்சிக்கு முகவுரை ?
அற்புதமான என் வர்க்கத்தின் ரெத்தங்களே !
செத்துப்போன சிவனுவின் சொந்தங்களே !

It'
எத்தனை நாட்களுக்கு நாம் முட்டுக்காலில் வாழ்வது? நாம் நிமிர்வோம் ! நாம் நிமிர்வோம் !!
துப்பாக்கிக் குழாய்கள் எம் நெஞ்சை
துருத்தி நிற்கும்
சரித்திரங்களை திருப்பிவிட நாம் துணிவோம் !
செத்தாலும் விடுதலைக்காய் செத்த பெருமை பெறுவோம் இனி அப்பாவித்தன இறப்புகளை அரசியலில் நாம் துறப்போம் !
சாருமதி
1977-08-30
அடிக்குறிப்பு: 1976-ல் டெல்வி தோட்டம் சுவீகரிக்கப் பட்டு, கிராமத்தவர்களுக்குப் பங்கீடுசெய்ய முற்பட்ட சமயம் தடுத்து நிறுத்தப் புறப்பட்ட சிவனு லட்சுமணன் பொலிசா ரால் துப்பாக்கிக்குப் பலியாக்கப்பட்டான். அப்போது எழுந்த கவிதை.

Page 10
வறட்சி
நீர் வற்றிய வறண்ட குளம் செத்துப்போன அறுகம் புற்கள்நரை விழுந்த பெண் முடிபோல் Linrarlb LATGTLDTul பல்லிழந்த தாத்தா வாய்போல் ஓவென பிளவுபட்ட நிலம், மேலே - எப்போதெனினும் இவ்வழி வருகின்ற விழிசிறுத்த வெண்பறவை சிறகசைத்துக் களைக்கும் சொகம்.
t
வயல்வெளிப் பரப்பின் வரப்பில் ஏகணுய் எதையோ தேடும் இந்த யாழ்நகர் மனிதக்குஞ்சு புயல் அடித்து ஒய்ந்ததென மூச்செறியும். மீண்டும் - மழை வந்தபோது விதைக்கும். குளம் வற்றும்போது மூச்செறியும். காலம், கெட்டதெனப் பஞ்சாங்கநாள் பார்க்கும் புரட்சிக்கு.
செத்துப்போன புற்கள் மீண்டும் முளைக்க பல்லிழந்த தாத்தாவிற்குப் புதுப் பற்கள் முளைக்கப் பல்லிளித்த காலம் புயலோடு போயிற்று மீண்டும் விதைப்பதற்கு வரப்பில் நின்றபடி மழையைத் தேடும் மனிதக்குஞ்சு நான் மட்டுமா ? ۔۔۔۔۔۔
க. ஆதவன், 15-07-1981.

1981 Bit 31 3ro மனைவிக்கு
ருணி !
இன்னும் வரவில்லையென அச்சம் சூழ வாசலைப் பார்த்தபடி எனக்காகக் காத்திருப்டாய்.
ஆதரவிற்கு உன்னருகில் யாருண்டு ... ? வீட்டினுள்ளே ...! சின்னஞ் சிறிசுகள் மூலைக் கொன்ருய் விழுந்து படுத்திருக்கும்.
வெறிச் சோடிய வீதியில் நாய்கள் குரைக்க விரைந் தோடிய ஒருவனல் செய்திகள் பரவ இன்னும் கலங்குவாய்.
W
தொலைவில் உறுமும் ஜீப்பின் ஒலியில் விளக்கை அ%ணத்து
இருளில் நின்றிருப்பாய்.
உயிரைக் கையில் பிடித்தபடி குண்டாந் தடிக்கும் துப்பாக்கி வெடிக்கும் தப்பியோடிய மக்களில் ஒருவனுய் என்னை நினைத்திருப்பாய்.

Page 11
A
15TGG) ........! நம்பிக்கையின் கடைசித் துளியும் வடிந்து மரணத்தருகே.
குழவும் உடைபடும் கடைகளின் ஒலியும்
வெறிக் கூச்சலும் வேற்று மொழியும் விண்ணுயர்ந்த தீச் சுவாலையும்.
மு, புஷ்பராஜன்,
Ol-06-81.
Y ★ 大
அடிக்குறிப்பு: 1981 மே 31 அன்று மாவட்ட
சபைத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்பு யாழ் நகர் விஷமிகளினல் சின்னபின்னமாக்கப்பட்டது.

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்
எம். ஏ. நுஃமான்
நாளையக் கனவுகள் இன்று கலைந்தன நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவமாடினர் ; ஒரு பெரும் நகரம் மரணம் அடைந்தது.
வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம் ஆயின் எமக்கோ மரணமே எமது வாழ்வாய் உள்ளது.
திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில் படம் பார்க்கச் செல்லும் பாதிவழியில் வஸ் நிலையத்தின் வரிசையில் நிற்கையில் சந்தையில் இருந்து திரும்பி வருகையில் எங்களில் யாரும் சுடப்பட்டிறக்கலாம்
எங்களில் யாரும்
அடிபட்டு விழலாம்.
உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே மனிதனின் விதியா ? அடக்கு முறைக்கு அடிபணிவதே அரசியல் அறமா ? அதை நாம் எதிர்ப்போம் அதை நாம் எதிர்ப்போம்.

Page 12
盟台
தனிநாடு அல்ல எங்களின் தேவை மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள் மனிதனுக்குரிய கெளரவம் வாழ்க்கைக்கான உத்தரவாதம்
யார்இதை எமக்கு மறுத்தல் கூடும் மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர் தாண்டவ மாடுக !
போராடுவதே மனிதனின் விதியெனில்
போராட்டத்தில் மரணமடைவதும் மகத்துவம் உடையதே.
大 大 ★
அடிக்குறிப்பு : 1977-ம் ஆண்டு ஆவணிமாதம் நடந்த கலவரத்தின்போது எழுதப்பட்ட கவிதை.

துன்பமும் இன்பமும்
"நேற்றும் இப்படித்தான் வானம் இருண்டுகொண்டு போனது. பிறகு, யாருமற்ற வெளியில் விழி நிமிர்த்தி . நீ" சடமாய் . சல்லடையாய்க் கிடந்தாய்.
★ சுதந்திர மூச்சுகள் உள்ளடங்கிய இந்த இருட்டில் யாரையோ யாரோ தட்டுத் தடுமாறித் தேடும் அவலங்கள்.
大 எய்தவர்கள் " போகமாய் போக அம்புகள் வேகமாய் நோக எங்கோ ஒரு குடிசையில் அழுகுரல் ஒலிக்கும்.
மாங்காய் புடுங்க கல்லெடுத்த சிறுவன் *சப்பாத்துக் கால் கண்டு கலங்கி விறைத்து *அண்ணு இல்லை’ என்பான்.
大 நந்தவனங்களில் மலராத இந்தச் சுதந்திரப் பூக்கள் ஒவ்வொன்ருய். ஒவ்வொரு இருட்டிலும் . * உன்னை"ப்போல் ரகசியமாய் ...!
女 இன்னும் சில பூக்களைக் கனவில்லையாம். நேற்றுப்போல இன்றும்,
வானம் இருண்டுகொண்டு போகிறது.
க. ஆதவன்

Page 13
தொலைந்துபோன நாட்கள்
AW 47 at:7 W 43° 44' aat 4-2 4-2 47 (----------------- தெருவிலே எமது தலைவிதி உள்ளது உன்னையும் பிடிக்கலாம் என்னையும் பிடிக்கலாம்
அப்புறம்,
நீ எங்கு போனய் என்பது தெரியாது நான் எங்கு போவேன் என்பதும் புதிர்தான் ! இதோ மறுபடியும் காலம். காக்கி உடைகளில் மிருகம் திரிகிற காலம் மறுபடி இங்கு வந்துள்ளது -
அந்த இரவுகள் அதற்குள் மறக்குமா ? அதற்குள் மறக்காது அடிமனதில் அலையெறியும்
24-04-1981
காலை நேரம் முகில்களும் எழுந்து திரியத் துவங்கிய காலை நேரம்.
காகமும், குயிலும், குக்குறுவானும் கொல்லையின் திராட்சைத் தோட்டத்திலிருந்து கூக்குரல் போட எழுந்து வருகிருர்,
வெய்யில் இன்னும் நிலத்தில் இல்லை ஆயிரம் குருவிகள் ஆயிரம் ஆயிரம் திராட்சைக் குலைகள்.

19
எழுந்து வந்தவர்
மனிதர். அவரது பரந்த மார்பின் ரோமக் காடு பெனியனை மீறி எட்டிப் பார்த்தது -
கொழுத்திப் போட்டார் சீன வெடிகளை பறந்து போயிற்றுப் பறவைக் கூட்டம். பிறகு வந்தது மிருகக் கூட்டம் ,
அறைந்தன மார்பில்
அதிர்ந்தது இதயம் மாண்டு போனுர் மனிதர்.
அடிக்குறிப்பு: 1980 இறுதியில் திராட்சைத் தோட்டத்தில் குருவி களைக் கலைக்க வெடி கொழுத்திப் போட்டபோது, அந்த வெடிகேட்டு விரைந்த காவல் படையினரால் தாக்குண்டு அதனுல் மாரடைப்பு ஏற்பட்டு இளைப்பாறிய தபால் அத்தியட்சகர் திரு, நவரத்தினம் என்பவர் மரணமடைந்தார். -

Page 14
20
25-04-198
இரவு முழுவதும் புகையிலை நிறைகிற குடிலுள் வேலை. கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று பாயை விரித்துச் சரிந்தாள்
"ஈஸ்வரி.*
வெளியில் விருந்தையில் அண்ணன் துயில்கிருன் காற்று மெல்லென வேம்பினை வருடும். இன்னெரு காலை விடிந்து கொள்கிற இரவு மீண்டும் தோற்றுப் போகிற நேரம்.
திடீரென
மூன்று ஜீப்புகள்
றக்குகள் மூன்று
வாசலில் அதிர, சடாரென உடைந்தது ‘சங்கடப் படலை" வாயைப் பிளந்து வீரிட்டபடி கோடியுள் மறைந்தது
கறுப்பு நாய்.
உள்ளே வந்தனர் அண்ணனை ஒருவன் உதைத்து எழுப்பி ஜீப்பினுள் உருட்டினன் ஈஸ்வரி துயின்ற பாயை இழுத்து அவளது கூந்தலைப் பிடித்து உலுப்பி *போடி வெளியே”
போனள் துவண்டு
போளுள். அன்று போனவன் அண்ணன் இன்னும் இல்லை.
வேலியில் உலர்த்திய வேட்டி காய்கிறது
வெய்யிலில்
இன்னும்,

இறந்த காலங்களும் நிகழ்காலமும் - ஹம்சத்வனி -
சேற்றில் வீழ்ந்தன பொன் மணி முடிகள். எங்கே எமது அம்பும், வில்லும் ?
மீண்டும் சங்க இலக்கியம் படிப்போம்.
வீர யுகத்தை எண்ணி மகிழ்வோம் பதுங்கி இருந்து அழிந்த கோட்டையில் சில்லறை தேடி தீக்குளிப்போம் காக்கிகள் துரத்த.
கோபுர நிழல்களில் கல்லாய்ச் சமைந்தவைக்கு பாலாபிடேகம் செய்வோம்
வீதிகளில் ஓடிய இரத்தக் கறைகளை போக்க.
கதவிடுக்குகளில் கிழிபட்ட கற்புத் திரைகளை எண்ணி கண்ணிர் வடிப்பதா ?
மீண்டும் அவற்றை மறந்துவிடலாம். சாம்பல் மேட்டில் மறைந்து விட்டன பொன் மணி முடிகள்தான். அம்பும் வில்லும் கூடவா ?

Page 15
ஒரு தோழனுக்கு. (26-1 0-1981 υ
சுற்றியுள்ள இருளை வெறித்தபடி - "அவன்’! நெற்றிப் பொட்டிலும் திறந்த மேனியின்- முதுகு, தோள், மார்பு எங்கும் . எங்கும் வழிந்து கசியும் குருதி - செங்குருதி !
குப்புற விழுந்தவனை முத்தமிடும் பூட்ஸ் கால்கள் எங்கோ உதிக்கும் சூரியன் முகட்டுத் துவாரம் வழியாக ஒரே ஒரு கதிரை . ஒரு கீற்றை சிறு வெண் பொட்டாக உள்ளே . அவன்முன் அனுப்புகிறது. தெம்புடன், தீரத்துடன் தலை நிமிர்த்தும் அவன்முன் - ஒன்று . இரண்டு . மூன்று பன்னிரண்டு பூட்ஸ்கள் அவன் மேனியைச் சிதைக்கும் உலோ பெல்ற் முனைகள் ...!
கை விரல்களை இறுக்கப்
பொத்துகிருன்.
பூட்ஸ் நசித்த விரல்கள்
முஷ்டியாக மடங்குகின்றன.
உச்சஸ்தாயியில் - ** எனக்கொன்றும் தெரியாது எனக்கொன்றும் தெரியாது ?? சூரியக் கதிரின் வெண்பொட்டுமேல் தலை குப்புறச் சரிந்தது.
*உனக்கு -
நிறைய . நிறைய . எல்லாமே முழுமையாகத் தெரியும் என எனக்குத் தெரிகிறது தோழா !”
க. ஆதவன்

as/r3076) Gov/f?
அலைகடலில்
ஆதவன் மறைவு இருளின் ஆட்சி.
இனி நாம் பிரிந்து செல்வோம்.
கடந்துபோன - காலங்களில் "மாவலி"யின் கரையெல்லாம் கை கோர்த்து உன்னேடு நடந்துவர நானிருந்தேன்.
போதிமாதவ மலர்கள் சூடி முட்களை அங்கேன் மறைத்தாய் ..? எத்தனை கீறல்கள்,
இரத்தக் கசிவுகள். இத்தனைக்கும் மேலான ஈனச் செயலை மும்முறை செய்தாய் இன்னமும் தொடர்வாய்.
சத்தியம்தான் பேசுகின்ருய் சட்டம் நீதி பாதுகாப்பு அத்தனையும் உன்னருகால் உன்மத்தம் கொண்டாய்.
உன்னில் விளைந்த தவறிற்கு காரணத்தை யேன் என்னில் கண்டாய் ..? மண்ணி லெனை மனித னென
மதிக்கா ဈဂေါ်r வாழ்வின் குறி என்னை வதைப்பதா.. ?

Page 16
感á
இருளினூடே இணைந்து நாம் நடந்தபோது சிந்திய வார்த்தை பசப்பில் பட்ட துயரினிப் போதும்.
இனி நாம் பிரிந்தே செல்வோம்.
எனது பிரிவோ கணு ஒடிந்த மல்ராய் உதிரவல்ல
தாயகத்தின் - உழுது புரட்டும் செம்மண்ணில் மகிமையாய் மலரவே.
மு. புஷ்பராஜன்,
81-06-06.
அடிக்குறிப்பு: 58-ம், 77-ம், 81-ம் ஆண்டுகளில் நடந்த
இனக் கலவரங்களையே ** மும்முறை செய்தாய்' எனக் கவினகர் குறிப்பிட்டுள்ளார்.

கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்
நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக
மீண்டும் ஒருதரம் ஆதி மனிதனை நெஞ்சில் நினைத்திட நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக .
கவனியுங்கள் . நேற்று மாலை என்ன நடந்தது ! கைதடிக் கிராமத் தெருக்கள் முழுவதும் மனித, விழுமியம், நாகரிகங்கள் காற்றில் பறந்தன.
வரம்பு நிறைய இலைகள் பரப்பிய மிளகாய்ச் செடிகள் கொலையுண்டழிந்தன. செம்மண் தரையில் சிறு குடிசைகள் மேலே நெருப்பு மூண்டது.
தமிழர்களது மான நரம்புகள் மீண்டும் ஒருதரம் 1ன்ெனுல் அதிர்ந்தும், வழமை போலவே
காலம் நடந்தது !
கவனியுங்கள்,
பனைமர உச்சியும் கோபுரக் கலசமும் உயரவே உள்ளன. அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும் அனைவரும் உணர்க.
உங்கள் முதுகு நாண் கலங்கள் மீதும் பூஞ்சண வலைகள்.

Page 17
26
கங்கை கொண்டு, கடாரம் வென்று இமய உச்சியில் விற்கொடி பொறித்துத் தலைநிமிர்வுற்ற தமிழர் ஆளுமை அம்மணமாகக் குனிந்த தலையுடன் தெருக்களில் திரிக.
ஆலயக் கதவுகள் எவருக்காவது மூடுமேயானுல் கோபுரக் கலசங்கள் சிதறி நொருங்குக, மானுட ஆண்மையின் நெற்றிக் கண்ணே இமைதிற இமைதிற !! சிவபெருமானும், பால முருகனும் இன்னும் எஞ்சிய எல்லாக் கடவுளும் மன்மதன் உடலாய்த் தீயிலே எரிக. கவனியுங்கள், அஃனவரும் ஒன்ருய், பனைமர உச்சியும் கோபுரக் கலசமும் உயரே உள்ளன,
உயரவே உள்ளன. யாழ்ப்பாணத்துச் சராசரி இதயமே யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே ஆயிரம் ஆயிரம் கோவில் கதவுகள் உன்னை உள்ளே இழுத்து மூடின. உனது உலகம் மிகவும் சிறியது. கிடுகு வேலி,
வேலியின் கிளுவை எப்போதாவது வேலியின் மீது அழகாய்ப் பூக்கும் சிவப்பு முள் முருக்கு, உன்னே அடைத்த கதவுகள் உடையும், உனது வேலிகள் தீயில் எரியும். அதுவரை, நிர்வாணமாக உயர்த்திய கையுடன் தெருக்களில் திரிக
தமிழர்கள்
தமிழர்கள் ! தவிழரகன்

--ry --།, , ───, , , vr-TNT -- -ܗܝ ܐ ܐ ܫܐ
புசல்லாவ - குறிஞ்சிளவன்
காடு வெட்டி மேடு வெட்டி
காலமெல்லாம் பாடுபட்டோம்
நாடு விட்டு நாங்களின்று போருேம் - ஐயா நாதியற்று நாங்களின்று போருேம்.
கோடி பொன்னைத் தேடித் தந்தோம்
கொடுமைகளை ஏற்றுக் கொண்டோம்
தேடி வைத்த தேட்டமின்றிப் போருேம் - ஐயா தென்னகத்தை நோக்கி நாங்கள் போருேம்.
கள்ளத்தோணி யாகப் பட்டம்
கயவர்களால் சூட்டப் பட்டோம்
உள்ளமதும் உதிரம் சிந்தப் போருேம் -ஐயா ஊமைகளாய் வாயடைத்துப் போருேம்.
மானமுடன் நாம் உழைத்தோம்
மனமொடியக் கஷ்டப்பட்டோம்
ஊனமுற்று நாங்களின்று போருேம் - ஐயா ஊர்விரட்ட நீதியற்றுப் போருேம்.
மண்ணுக்கிரை யாக்கிவிட்டு
மைத்தர் பிதா மாதாக்களை
கண்ணிருடன் காலும்பின்னப் போருேம்-ஐயா
கப்பலேறி காணுத் தேசம் போருேம்.

Page 18
உப்பு வாடைக் காற்று இழுத்து வந்த முகில்த்தேரில் வானத்தமரன் மழை மன்னன் புல் பூண்டு மலர் வளையம் சாத்தவோ மண் வந்தான். வயல் வரப்பில் தெருவோரம் காட்டுப் பூவரசுகள் ஆவி உயிர்த்து உயிர்த்து அழுகிறதோ ...! வானத்தில் இனி எல்லாம் வரும் காட்டுத் தாராக்கள் எவனே ஒரு இளைஞன் இரங்கி இரங்கி அழும் அவலத்தை இந்த செம்மணியின் வயல் வெளியை தாண்டுகையில் செவிமடுக்கும்.
ஒப்புகையில் மங்கி முதலிரவின்
கலவி ஆவேச இன்ப அந்தரங்களிலே இளை நெக்கி, வட்டிக் கடைகளிலே மெலிந்து கிழடாகாமல் அறுந்ததோ தோழா உன்னை அகத்துடையாள் பொற்தாலி.
வானத்துப் பந்தலால் வழுவும் நட்சத்திரப் பூவாய் காற்றில் சறுக்கி நிலண்டும் புள்ளினங்காள்...! இங்கேதான் எங்கோ ஆழுகின்ற வர்க்க ஆண்டைகளின் காவல் நாய்கள்

29
நீதியின் புத்திரனை துடிக்கப் பதைக்க சுட்டு விழுத்தியது.
சுரண்டல் இன ஒடுக்கல் அரக்கரை விட உங்கள் ஏழை மனதில்
இரக்கம் இருக்குமன்றே !
நிலமீது பன்னும் நகப்பாதம் பதிகையிலே மண்களின் புண்போல செந்நீர் கிடந்து அழும் தொட்டத்தில் மதிக்காதீர்
சொல்லவா வேண்டும் தெற்கிருந்து வந்தவர்க்கு குற்றமற்ற பாலகரின் செங்குருதிச் சுவடுகளை ஆயிரமாய்க் கண்டு அனுபவங்கள் பெற்றிருப்பீர்.
உலகெங்கும் நாடுகளைப் புரட்டி
நவயுகத்தை ஆக்கியது மண்ணில் படிந்த வாலிபத்து இரத்தத்தால் கண்பீழை கழுவுண்டு விழிப்படைந்த மக்கள் வேளை வருகிறது.
வ. ஐ. ச. ஜெயபாலன்

Page 19
சோலையும் கூவலும்
ar ar av SP
நண்பா !
SL LSSL LSST SSL LLSSL LLSSL LLSSSL SSL SSS S LLLSS LLLLS SLSLS SqLS S LSL LSLSSL LS SATkSSS SS SSL S S SLS LS LSLSS LMS S SLS0L S SCLSHS TESSMSzSS
எனது நாடும் சோலையும் எரிந்த புகைக்காடு − இன்னும் அடங்கவில்லை. சாம்பல் மேட்டில் நின்றபடி எந்தக் கடலிலோ நிற்ாகம் உனக்கு எழுதுகின்றேன்.
நீயும் அறிந்திருப்பாய் கலங்கியும் இருப்பாய். வானத்தை வெறித்துப் பார்ப்பதைத் தவிர
வேறு என்ன ? செய்யப்போகிருய்.
திரும்பி வரும்போது நாடும் சோலையும் இருக்குமென்டஇல்லை. உனககு
இது எல்லாம் சாதாரணம் என்கிருயா ? என்னுல் அப்படி இருக்க முடியாது. எனது சோலை எனக்கு வேண்டும் , எனது கூவல் நிறையவேண்டும்.
4_wжана ஹம்சத்வனி

அகங்களும் முகங்களும்
இடிந்து கிடந்த நினைவுத் தூண்களே! எழுப்பி வைத்தீர், இடித்தவரை நினைவூட்ட
எழுபத்தேழு ஓகஸ்ட்டில் தெற்கில் இழந்த உயிர்களுக்கு நினைவுத் தூண்கள் நிறுவுவீரா; உங்கள்
இழிமையை நினைவூட்ட ?
மலர் வளையங்கள் மாலைகள் சாத்தல் இவை உதவப் போவதில்லை, எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க. மலர் வளையங்களும் மாலைகளும் உதிர்ந்து விழும் உங்கள் சொல்லலங்காரங்கள் போல.
மாலை சாத்திய கைகள் மறுநாளே வாளெடுக்கும். நிகழ்ச்சிகள் பல நடப்பிலே கண்டோம்.
மலர் தூவிய கைகளாலேயே துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர்.
வகுப்புவாத மேகங்கள் இருண்டு குருதி மழை பொழிய இரத்தச் சுவடுகள் பதிய ஒழிந்தோடி ஓர் மூலையில் பதுங்கி உடை மாற்றிவந்து ஒப்புக்கழுவீர்.
உடை மாற்றலேன் ? உங்களை மாற்றுங்கள்.

Page 20
32
இனவாத மணம் அழுதவாயால் இன்னமுத மொழிகள் ** இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச் செல்கிறேன் ?? இப்படிப் பலப்பல.
எடுத்துச் செல்லுங்கள் உங்கள் இதயத்தை உங்களுடனேயே எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்குமுன் உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்
காலங் காலமாய் இரத்தக்கறை படிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள். போலித் தார்மீகப் போர்வையைக் களைந்து உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.
மஞ்சள் அங்கிகளுக்கும் மழித்த தலைகளுக்கும்
புலப்படாது. புதைக்கப்பட்டுள்ள புத்தரின் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள், உங்கள் இதயத்தை செதுக்குங்கள்.
எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிதே.
சு. வில்வரத்தினம் X . 女܂
செய்தி : 1981-ம் ஆண்டு தைமாதம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஆர். பிரேமதாசா தமிழாராய்ச்சி மாநாட் டின்போது உயிரிழந்த தியாகிகளின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டு, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை நீண்டும் கட்டுவித்ததுடன், நகரில் இருந்த சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியதுடன், புறப்படும்போது ‘என் இதயத்தை உங் களிடமே விட்டுச் செல்கிறேன்’ என உரையாற்றினுர்.

புத்தரின் படுகொலை
--சுந்தரன் -
நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டு இறந்தார் சிவில் உடை அணிந்த அரசகாவலர் அவரைக் கொன்றனர் யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியிற் கிடந்தது இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர் ‘எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்', என்று சினந்தனர் * 'இல்லை ஐயா தவறுகள் எதுவும் நிகழவேயில்லை இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச் சுடமுடியாது போயிற்று எம்பால் ஆகையினுல்தான்’’. என்றனர்.
"gigf உடனே மறையுங்கள் பிணத்தை' என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர் தொன்னுாருயிரம் புத்தகங்களினல் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் சிகாலோக வாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர் : புத்தரின் சடலம் அஸ்தியானது தம்மபதமும் தான் சாம்பர் ஆனது
(சிகாலோக வாத சூத்திரம், தம்மபதம் ஆகியவு பெளத்தம அறநூல்கள்)
நன்றி:- அலை - 18

Page 21
'இதோ மனிதர்களைப் பாருங்கள்
- அ. யோசுராசா -
கண்டி நகரின் வீதிக ளெங்கும் அலைந்து திரிகிற தமிழ்த் தொழிலாளர்; தேயிலைத் தூரில் மாசி தேங்காய் காய்த்துக் கிடக்கு தென - நம்பி ஏமாந்து, வந்தவரின் பின்னுேர், நாதியற்று சோற்றுப் பிடிக்காய் இங்கும் அங்கும், அலைந்து திரிகிருர்,
அட்டைகள் ஒருபுறம் இரத்தம் குடிக்கவும் கறுப்பு வெள்ளைத் துரைகள் சுரண்டவும் எஞ்சிய் உயிரொடும் இருள்படி லயங்களில் புதிய அடிமைகளாய்ச் செத்தபடி வாழ்ந்தார்; ‘தேசிய மயமாய்ப் போச் சமதர்மக் காற்று வீசியது; ஏற்றுண்ட சருகாய் வீதியில் ஒதுங்கினர். சுரண்டலின் கொடிய நகங்கள் பதிய அரைகுறை உயிரொடும் துடிக்கிற மனிதர். இவர் எல்லோர் முகங்களிலும் துயரை
விதைத்தவர்கள் மலையுச்சி பங்களாவில்; கடல் கடந்த நாடுகளில் சுகித்துக் கொழத்திருக்க உழைத்துக் கொடுத்தவர்கள் நலிந்து மெலிகிருர்; நாய்களைப் போல், வீதிகளோரம் செத்துக் கிடக்கிருர்! கண்டி நகரின் வீதிகளெங்கும் வீசி எரியப் பட்ட தேயிலைச்
சக்கையாக, மலைத் தொழிலாளர்
12-3-1975
நன்றி: களனி

qSSSSSSSSSSSSSSS
**கன்னடர்கள் தமிழர்களை வெளியேறச் சொல்கிருராம்: சிங்களரும் சொன்னல் என்ன செய்வதாம்'
தர்மிஷ்டர் கேட்கிருர்!
தமிழர்களை மட்டுமா மலையாளி களையும்தான் போகச் சொல்லுகிருர், கன்னடர்கள்! கன்னடத்துக்குத் தமிழர்கள் போனவர்கள்: மலையாளிகளும், அப்படித்தான்,
ஆனல், எங்கிருந்து நாம் வந்தோம்? விஜயனுக்கும் முன்னிருந்தே இங்கே இருக்கிறேம் தர்மிஷ்டர் வரலாறு படிக்கவேணும்.
ஆனைமடுவில் ஜனதிபதியின் பேச்சு,
25ー3ー& I ச. ரவீந்திரன் நன்றி: அலை.

Page 22
சென்று வருகின்றேன் ஜென்ம பூமியே.
நக்கிள்ஸின் தொடர்களைநான் நாளெல்லாம் பார்க்கின்றேன்; * நீ பார்த்து சலிக்காத பொருளென்ன என்று நீர் எனைக் கேட்டால், நான் சொல்லும் பதிலிதுதான் - *குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள்தான் நான் பார்த்துச் சலிக்காத நல்ல பொருள்” என்பேன் நான்
மக்களெனும் ச்முத்திரத்தில் நானுமோர் துளி; மனம் விட்டு நேசிக்கும் பழக்கம் எனக்குண்டு. தாம் பிறந்த நாடுகளை நேசிக்காத மக்களில்லை இயற்கையெனும் பெரும் கலைஞன் செதுக்குகிற சிற்பங்களை. ரசிக்காத கவிஞனில்லை.
நக்கிள்ஸின் தொடர்களை நான் நாளெல்லாம் பார்க்கின்றேன், வயது ஐந்திருக்கும்; இத்தொடரில் - வந்து குடியேறினேன்! அன்றிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை நாளெல்லாம் ஆயிரம் தடவைகள்
அழகுறக் காணுமே!

37
இருபது வருடங்கள், இன்ருேடு ஓடிமறைந்தன; என்ருலும் - இன்றைக்கும் இத்தொடர்கள் இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும்!
இந்நாட்டு மக்களை நான் இதயத்தில் நேசித்து, நக்கிள்ஸின் தொடர்களிலே சிலகாலம்,
நாளெல்லாம் ஏறி இறங்கியுள்ளேன் இன்றைக்கும் அந்நாட்கள் இதயத்தில் குறுகுறுக்கும்!
நாட்கள் கழிகின்றன; நாடு கடக்கும் வேளை நெருங்குகின்றது; பிரிவு என் வாசலைத் தட்டுகின்றது. பிரிவு வேதனையின் பிரதிநிதி S. விழி வாசலை முட்டுகிறன். அழுது விடுவனே என்ற מוושנ_ו என்னை அமுக்குகிறது.
நம்மிணைப்பு, நம்நேசம் நம் இயக்க விளைபொருளே, நம்இயக்கம், நம்வர்க்க செயல்பாட்டின் விளைபொருளே! நாமெல்லாம் - எங்கெங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த லட்சியத்தால் உலக இயக்க மெனும் அணியினிலே ஒளி மயமாய் தானிருப்போம்! என்ருலும் -
நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை; என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை. என்றக்கால் - வேதனைகள் முட்டாதோ?

Page 23
38
சொல்லுங்கள் தோழர்களே! உங்களுக்கும் ஒருநாள் உங்களது நாட்டை பிரிகின்ற நிலைவந்தால் உங்களது மனநிலையில் உவப்பா மேலோங்கும்? இல்லை, இல்லை, ஓர் துயர் அலை நெஞ்சில்
மேவி வருமன்முே?
ஓ !
என்னருமைத் தோழர்களே!
இறுதியாக --
கப்பலிலே நான் நின்று கையசைத்து விடைசொல்லும் போதினிலே -
என் கண்கள் மாத்திரமா? உங்கள் கண்களும் தான் உணர்ச்சி மிக்க ஒரு பாறையினை வெளிப்படுத்தும் நானறிவேன்! - ஏனெனில்
என் கவிதைப் பொருள்களை நான் இன்று பிரிகின்றேன் இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கின்றேன்;
சென்று வருகின்றேன்; மலைத் தொடர்களே: திரும்பவும் நான் உன்னை என்று காண்கு வேனே?
சென்று வருகின்றேன் மலைத் தொடர்களே; திரும்பவும் நாம் ஒன்ருய் என்று மலையேறுவோமா?

39
சென்று வருகின்றேன் கொற்ற கங்கையே; திரும்பவும் உன் மேனியில் என்று நீராடுவேனு?
சென்று வருகின்றேன் வெகு ஜனங்காள்; திரும்பவும் நாம் இதயமகிழ்வோடு என்று கரம் குலுக்கு வோமோ?
சென்று வருகின்றேன்
ஜென்ம பூமியே;
திரும்பவும் உன்வெளிகளில்
என்று ஓடி மகிழ்வேனே?
அரு. சிவானந்தன்
நன்றி- நதி-6
அடிக்குறிப்பு:- இரு நாட்டுத் தலைவர்களின் ஒப்பந்தத்தால் அகதிகளான ஒரு சமூகத்தின் இளம் கவிஞனின் இதய தாபங்கள். இக் கவிதை வரிகளில் கசியும் கண்ணிர்த்துளிகள் ஒரு தனி மனிதனது மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் தாபங்கள் தரிசனங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

Page 24
சுதந்திரமாகிய பறவைகள்.
இதோ. . இங்கு சின்ன பின்னமாகிக் கிடக்கின்றன
இரண்டு பறவைகள்!
அவை நேர்த்தியாகத்தானே . . . ? நேர்த்தியாகத்தான். ! ஆனல் உயிர் அற்றவை. அவைகளின் மூளைகள்
தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன
இவைகளில்.இளையதுதானே பசிக்கொடுமையினல் அரக்கனின் களஞ்சியத்துள் அத்துமீறிப் பிரவேசித்தது..?
அப்படியானல்..? எதற்காக இரண்டு பறவைகளும் வேட்டையாடப்பட்டன?
நாளை ?
அந்தத்துணைப்பறவை
உயிரோடிருந்தால் அதற்கும் பசிவரலாம் என்பதற்காகவா?
ஓ ! இவைகளின் மூளைகள் கூட அந்த அரக்கர்களின் விஞ்ஞானிகள் நிறைந்த பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பட்டிருக்குமோ?

41
எங்கோ தூரத்தில். ஐரோப்பாவிலாம் ༔
அலெக்ஸாண்டர் மரணத்தினல், தம் பிலெனின் விழிப்படைந்தாராம் அதன் பிரதிபலன்தான். இன்றைய சோவியத்தாம்!
ஓ ! . . அப்படியானல் இந்த அரக்க மனிதர்களும் தம்மை வேள்வித்தீயில் இடுவதற்கு எந்த உருவில் முயற்சிகள் நடக்கலாம் என்பதை இரகசியமாகக் கூட அறிந்து வைத்திருப்பார்களோ?
இதை அறிந்துதான் இந்தத் துணைப்பறவையும் வேட்டை யாடப்பட்டதா?
அப்படியானல்...! பசிக் கொடுமையினுல் இந்தப் பதுக்கல் களஞ்சியத்துள் அத்து மீறும் ஒவ்வொரு பறவைகளும் சுட்டு வீழ்த்தப் படுமா?
இந்தப் பறவை இனங்களின் அலகுகள் நெருப்பு தணலாகக் கதகதத்துக் கொண்டிருக்கின்றன
இவைகள் ஒன்று சேர்ந்தால்?

Page 25
42
இன்று இந்த அரக்கர்களுக்குப் பதிலாக இவர்களது சாம்பல் குவியல் தான் இந்தப் பூமியில் குவிக்கப்பட்டிருக்கும்
ஏனென்ருல்..? அந்த இலட்சக்கணக்கான பறவைகளின் நெருப்பு அலகுகளால் இவர்கள் பொசுக்கப்பட்டிருப்பார்கள்
அடிக்குறிப்பு:- 1979 ஆம் ஆண்டு ஆவணி மாதம் * மரணப்படை” என்று பல அரசியல் வாதிகளாலும் பத்திரிகைகளாலும் வர்ணிக்கப் பட்ட "அரசபடை' களினல் படுகொலை செய்யப்பட்ட இன்பம் ஒன்று மறியாத அவரது மைத்துனர் ஆகியோருக்காக,
- யோகராணி

43
புதிய சப்பாத்தின் கீழ்
சமாந்தரமாய்ச் செல்லும் கரிய தார் ருேட்டில், நடந்து செல்கிறேன். கண்களில், பிரமாண்டமாய் நிலைகொண்டு கறுத் திருண்ட டச்சுக் கற்கோட்டை: மூலையில்" முன்னுேரைப் பயமுறுத்திய தூக்குமரமும் தெளிவாய் பரந்த புற்றரை வெளியில் துவக்குகள் தாங்கிய காக்கி வீரர்கள் அரசு யந்திரத்தின் காவற் கருவி என்றும் தயாராய் வினைத்திறன் பேண அவர் அணிநடை பயின்றனர் சூழ்ந்த காற்றிலும் அச்சம பரவும் முன்னுாறு ஆண்டுகள் கழிந்தன வாயினும் நிறந்தான் மாறியது: மொழிதான் மாறியது: நாங்கள் இன்னும், அடக்கு முறையின் கீழ்.
நன்றி அலை 13 (80- பங்குனி}
事 ரவீந்திரன்

Page 26
துரோகங்கள் தூக்கி வீசப்படும் - சாருமதி -
மூடிய மேகங்கள் கலைய வேண்டின் வானத்தில் ஒரு புயல்
வீசியே தீரும் இன்றைய பின்னடைவுகளின் இடிபாடுகளே
நாளைய வெற்றியின் கர்ப்பக் கூடங்கள் இழப்பிலும் எழுச்சியிலும் மக்கள் இணையற்ற சாதனைகளை ஈடேற்றியே உள்ளனர் இன்றென்பது நித்தியமானது மல்ல நாளையென்பது அசாத்திய மானதுமல்ல புதிய வழியொன்றின் திறவு கோல் ஒலிக்கிறது துரோகங்கள் . தூக்கி வீசப்படும் துயர் சுமக்கும் தமிழ் இனத்தின் சுதந்திரக் கீதம் கண்ணிரால் அல்ல செந்நீரால் எழுதப்படும் பழைய இலேகள் உதிர புதிய இலைகள் துளிர்க்கும் வருங்காலம் வசந்தமானது புதிய வழியொன்றின் திறவு கோல் ஒலிக்கிறது துரோகங்கள் தூக்கி வீசப்படும்
21 سے 12 حے 1980