கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிச்சம் கவிதைகள்

Page 1


Page 2

ބބމއިބި வெளிச்சம் கவிதைகள்
வெளிச்சம் வெளியீடு

Page 3
வெளிச்சம் கவிதைகள்
(வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு 1) வெளிச்சம் வெளியீடு - 2 முதற்பதிப்பு - வைகாசி 1996 ஒவியம் - தயா அச்சு - ம, மரியதாஸ்
வெளியீடு: விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
நடுவப்பணியகம்
தமிழீழம்
விலை: ரூபா 100.00

பதிப்புரை
இதயத்தின் நுண்ணுணர்வுகளுக்கு ஜீவனுள்ள மொழியால் ஆடைபுனைந்து பவனிவரச்செய்யும்போது அவை ஒரு ஆத்மசக்தி யாகப் பரிணமிக்கிறது. கவிதையென்ற வடிவம் பெறுகின்றது. சொற்கூட்டங்கள் சிறகடித்து வாசகனைக் கிளர்ச்சி கொள்ள வைக்க அது மொழியென்ற மட்டத்திற்கு அப்பால் ஓங்கி உயர்ந்து, வளர்ந்து உலகைத் தன்னுடன் அள்ளிச் செல்லும் ஊழிக்காற்றாகப் பலம் பெறுகிறது.
காலங்காலமாக கவிதை, உணர்வுகளைச் சுமக்கும் ஊடகமாக, உலக வரலாற்றை முன்னோக்கி உந்தித் தள்ளும் ஜீவசக்தியாகத் திகழ்ந்து வந்துள்ளது.
அன்பு, அமைதி, ஆணவம், கோபம், வேட்கை, காதல் என்ற எந்த உணர்வுமே கவிதைக்கு விலக்கில்லை. ஓங்கியெழும் அலை யாக இது பொங்கும்; புயலாகச்சிறும்; அணைத்து வரும் தென் றலாகவும் தவழும்.
உணர்வுகள் திரண்டு, புரண்டு, குமைந்து அசுரசக்தியுடன் வெளிவரும் போது கவிதை உருவெடுக்கிறது.
உலக வரலாற்றில் சுதந்திரத்துக்காகவும், விடுதலைக்காகவும், நீதிக்காகவும் எழுந்துநின்ற சக்திகள் ஒரு கையில் வாளை எடுக் கும் போதெல்லாம் மறு கையில் கலை இலக்கியத்தையும் ஏந்திக் கொண்டன. அக்கரத்தில் பிரவகித்த ஜீவசக்தி கவிதைகளாகவும் தனி வீச்சுடன் தகதகத்தது.
விடுதலையை வேண்டி நின்ற தலைவர்கள் வீரர்களாக மட்டு மன்றி, கவிஞர்களாகவும் விளங்கினர். உயர்ந்த மலைகளையும் ஆழ்ந்த சமுத்திரங்களையும் கவிதை வரிகளால் எட்டிக் கடந்து விடுதலை விரும்பும் சக்திகளுக்கு நேசக்கரம் நீட்டினர்.
சிங்களப் பேரினவாதத்திற்கும், இனவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக "நெருப்பாற்றையும் நீந்திக் கடக்க வெடித்த விடுதலை புத்தம் எமது மண்ணில் பெரும் அதிர்வுகளை விதைத்தது. இவ் அதிர்வுகள் எமது படைப்பாளிகளின் இதயச்சுவரை உடைத்து ஒரு பெரும் சூறாவளியாக உட்புகுந்தது.

Page 4
எங்கும் ஜனித்த உணர்வுச் சிதறல்கள் இங்கே தனித்துவமான வீச்சுடன் கவிதை மணிகளாக ஒளிவிடத் தொடங்கின. வேதனைகள், சோதனைகள், வீரவரலாறு எழுதிய வேங்கைகளின் சாதனைகள், இழப்புகளின் தகிப்பிலும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் எமது மக்களின் திடசித்தம் இவையெல்லாவற்றையும் தேடி எமது கவிஞர் களின் பேனாக்கள் எழுந்து நடந்தன. உணர்வும், வளமும் நிறைந்த கவிதை மலர்களை ஆயிரமாயிரமாய்ப்புஸ்பித்தன. அம் மலர்கள் சுமந்து வந்த சுகந்தம் காலத்தின் பதிகையாக, விடுதலை யுணர்வின் உந்துசக்தியாக தன்னைத் தடம் பதித்துக் கொண்டது.
இக்கவிதைப் பூக்களின் சிருஷ்டிகர்த்தாக்கள், வேர்களின்வழி யாக வீரியத்தைக் கொடுத்தவர்கள் . பழைய தலைமுறை முதல் புதிய கவிஞர்கள் வரையிலுமான ஒரு பட்டியலின் பங்குதாரர்கள். மரபுக்கவிதை வழிவந்த பழம்பெரும் படைப்பாளிகளும், புதுக் கவிதை நிழலிலே பூத்த புதிய அரும்புகளும் இக்கவிதா வேள்வி யில் கைகோர்த்து நின்றனர்.
இக்கவிஞர்கள் புகுந்து விளையாடிய களமாக, தம் உள்ளத் துணர்வுகளைப் பதியவைக்கும் வரலாற்றுப் பெட்டகமாக புதிய சிருஷ்டிகர்த்தாக்கள் பிறப்பெடுக்கும் விளைநிலமாக விளங்கி வந் ததில் "வெளிச்சம் பெருமை கொள்கிறது.
இதுவரை நாற்பத்தியாறு இதழ்களை உருவாக்கிய வெளிச்சம்" பிரசவித்த நூற்றுக் கணக்கான கவிதைகளுள் சிலவற்றை தெரிந் தெடுத்து இந்நூலை வெளியிடுகிறோம்.
இராணுவ ஆக்கிரமிப்புகள், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் உள்ளத்தைப் பிழியும் உயிரிழப்புகள் மத்தியிலும் கவிஞர்கள், படைப்பாளிகள் சோர்ந்து போவதில்லை. ஒதுங்கிக் கிடப்பதில்லை என்பதன் வெளிப்பாடே இச்சிறுநூல்.
இம்மண்ணின் மூச்சுக்காற்றாக இந்நூலில் உலாவரும் கவிஞர் களுக்கும், வெளிச்சத்தின் உறவில் பிணைந்து கொண்டிருக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும், வெளிச்சம் வெளியீடுகளின் அத்தி வாரக்கற்களாக விளங்கும் எமது வாசகர்களுக்கும் இவ்வெளியீடு மூலமாக ,வெளிச்சம் தனது நன்றியைச் தெரிவித்துக்கொள்கிறது.
இது வெளிச்சம் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது ஆகும். தொடர்ந்தும் வெளிசச்ம் தன் வெளியீடுகள் மூலம் எமது உறவுப் பாலத்தைத் தொடர்ந்து உறுதியுடன் பேணி வரும்.

வெளிச்சம் கவிதைகள் 01
இன்றைய எங்கள் வீதி ஒவ்வொன்றும் அல்லது புதிய புலிக்குட்டி
L) கல்வயல் வே. குமாரசாமி
எங்கள் நிலத்துக்கு எருத்தேவை ஏனென்றால், இங்கே எருக்கலை, ஈஞ்சு, குருவிச்சை எங்கும் பரவி இருப்பிருந்த சத்தையெல்லாம் தங்களது பாட்டில் சவட்டிக் குடித்தமையால் எங்கள் நிலத்துக்கெருத்தேவை என்றபடி காளைகளை விரட்டி வண்டிலை விட்டபடி காளை ஒருவன் கதைத்தபடியே செல்வான். வீரன் ஒருத்தனே மாவீரன் ஆனான் காளைகளை முன்விட்டுக் கயிற்றைப் பிடித்துத் தன் தோளில் கலப்பை நுகத்தைச் சுமந்தபடி
நாளையும்கூட உழுதுழுது வைச்சாத்தான், வேளை வரும்போது விளைச்சல் கிடைக்கும்" எனக் காளை நடப்பான்! தன் மண்ணையே காதலித்து வேளை தவறாமல் வேர்த்துழைப்போன் வேகமுடன். தோளிலே துப்பாக்கி தொங்கச்

Page 5
02 வெளிச்சம் கவிதைகள்
சிலர் விரைவர்
வானில்
விமானம் ஹெலி இரையும் பேரிரைச்சல் பதுங்கு குழிகள் மனிதரை அங்கே வதவதென விழுங்க, வாய் திறந்தவாறு செண்பகம் ஒன்று குறுக்கே நடக்கும் விான் ஒருக்தனே மாவீரன் ஆனான்? தென்னங்குருத்துத் தெருவெல்லாம் தோரணமாய் பின்னல் முறையால் பிரிவின் பொருள் உணர்த்திச் சொல்லும் சில சேதி துக்கம் அதனாலே கல்லுக்குள் ஈரம் போல் மெல்லக் கசியும் ஒரு சின்னப் பெடியன், மழலை மொழி - கொன்னை அவன் *" கம்பியின் காலத்தில் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் நம்புங்கள் நம்புங்கள்" என்று உரக்கப்பாடி , தன்னுள் ரசித்துத் தலையாட்டி, தாளமிட்டு
கூச்சமில்லாமல் வலு "கூலா" கப் போவான். மூச்சிரைக்கும் மூத்த திரை விழுந்த ஆச்சியோ "படிடா ஒருக்கால் அதை திருப்பி மோனை" என்றோர் வேண்டுகோளை விட்டபடி வேலியிடை நிற்பnள்; இடுப்பைப் பிடித்திருந்த கையை எடுத்துப் பொடிப்பிள்ளை கிட்டப் போய் - பொக்கை வாய் உச்சி தடவி உவந்து.
புரட்டாதி - ஐப்பசி, 1991

வெளிச்சம் கவிதைகள் 03
கைப்பிடி மண்ணில் ஓர் உலகு
( சு. வில்வரெத்தினம்
மண் விளையாடிக் கொண்டிருந்த எனது மகன் ஒடி வந்தென் கையைப் பிடித்து விரித்து மண்ணில் ஒருபிடி அள்ளி வைத்து ஒர் புன்னகையின் பூவெறிந்து போனான்.
ஈரம் குழைந்த மண் சில்லிடச் சிலிர்த்த கை இன்னும் விரிந்தபடியே இருக்க மலர்ந்திருந்த கைப்பிடி மண்ணில்

Page 6
04 வெளிச்சம் கவிதைகள்
ஓர் உலகே விரிந்தது. செட்டை கட்டிப் பறந்த வென் சிறுவம் அதில் நடந்தது.
குட்டி ராஜாங்கம் எம் முன்றலிலே நான் கொடிகட்டி குரலோச்சி அரசாண்ட பீடும் பெருமையும், என் முந்தையோரின் கூடியிருப்பும் குதூகலிப்பும், நல்லிரத்தம் சுவறிய நாகரிகத்து வாழ்வும் கால் கொண்டு நடந்தன கைப்பிடி மண்ணிலே
இன்றோ எம் கண்முன்னே எல்லாம் சிதறி இருந்த நிலம் குழிபெயர அந்தரத்தில் தொங்கும் அவலங்கள் எமதாக தொண்டைக் குழியின் தொடுமுடிச்சிற் போய் இறுகி நிற்கும் வாழ்வும் ஒரு கேடா? கண நினைவின் நெகிழ்விலே கையிலிருந்த பிடிமண் வழுவி விழும்
* கைதவறிப்போமா எல்லாம்?" கவலையுறும் என் பார்வை மண் விளையாடும் எனது மகன் மீது கணிகையிலே என் விழிகள் மீண்டும் சிலிர்க்கும்
புதிது தளிரீன்ற மாவின் கீழ் காதலொடு மண்ணைக் குழைத்து கலை செய்த வாழ்விற்கோர்
கோயில் எடுத்துக் கும்பிடுகள் போட்டு குனிந்து ஒர் பிடி மண்ணள்ளி நெற்றியிலே நீறாய்ப் பூசி நிமிர்ந்த வென் நேசமகன் தேவாரத்திற் சில பதங்கள் தெளித்தான்
ஈரங் குழைய நின்றேன் நான் காலம் அவனுடைக் கைபார்த்து நிற்பதென.
لو
புரட்டாதி - ஐப்பசி, 1991

வெளிச்சம் கவிதைகள் 05
முடிந்த முடிபு
() தா. இராமலிங்கம்
அந்தக் குடும்பம் குடிவாழ்ந்த வீடு முழுக்க முழுக்க எரிந்து போனது.
இப்போது புதிய கப்பு புதிய பாய்ச்சு

Page 7
06 வெளிச்சம் கவிதைகள்
புதிதாய் வீடு கட்டுறார். அன்னை பின்னிக் கொடுக்க தங்கை எடுத்துக் கொடுக்க தம்பி உரலில் நின்று கொண்டு இளைஞன் சொல்லிக் கொடுத்துக் கொடுத்து கிடுகு வைத்துக் கட்டு றார்.
படம் பிடித்த பின் பேட்டியைத் தொடங்கினேன். அன்னையை விளித்து * பிள்ளைகள் வேறு பேர் இல்லையோ" என்றேன் அவளின் விழிகள் கலங்கி வழிந்து அருகே நின்ற வட்டு வதங்கிய வடலியில் பதிந்தன பெருமூச்சு எறிந்து அவள் பேசாதிருந்தாள்.
* ராணுவம் புகுந்து
வீட்டோடு எரித்துக் கொன்று விட்டது" என்றான் இளைஞன்.
பிறகும் ஏன் இங்கே கட்டுகிறீர்?" என்றேன் * எமக்கு உரிமையுள்ள நிலத்துண்டில்தானே எமக்குரிய வீட்டை நாங்கள் கட்டுவோம்"
மீண்டும் எரித்தால் என்ன செய்வீர்கள்?" "மீண்டும் எரித்தால் மீண்டும் கட்டுவோம் கடைசி ஒருவர் உயிர் உள்ளவரை குடியிருக்க வீடு வேணுமே! மீண்டும் எரித்தால் மீண்டும் கட்டுவோம், என்றான் இளைஞன்.
"ஆமாம்; மீண்டும் எரித்தால் மீண்டும் கட்டுவோம்" என்றாள் அச்சிறுமி.
கார்த்திகை - மார்கழி, 1991

வெளிச்சம் கவிதைகள் 07
சாவும் நாமும்
() தா. இராமலிங்கம்
சாவு இப்போது எமது சகதோழன் சொந்தம் பாராட்டி இரவுபகல் எம்மோடு தங்கி நின்று நித்தம் அவனுக்கு கும்மாளம் விளையாட்டு நாம் போகும் பாதை எல்லாம் தட்டுமறித்துத் தடுத்து விளையாடுகிறான் ஆட்டத்தில் வல்ல வீரர் பலர் வீழ்ச்சியுற வெற்றிக்குமேல் வெற்றி ஈட்டிக் குவிக்கின்றான். வெட்டுண்டு வீழ்ந்தவர்கள் வெடிபட்டு வீழ்ந்தவர்கள் எரியும் நெருப்பினிலே சுருண்டு மடிந்தவர்கள் பட்டுவிட்டோர் பட்டியலோ நீண்டுகொண்டு போகிறது. என்றாலும் எம்மோடு அவனுக்குப் பிணைப்போ பெரும் பிணைப்பு. ஒரே இலையில் நாங்கள் ஒன்றாக உண்ணுகிறோம் ஒரே பாயில் நாங்கள் ஒட்டி உறங்குகின்றோம் கைகோர்த்துக் கொண்டு கடைவீதி சுற்றுகிறோம். சாவு நமது சகதோழன் இப்போது நாளை நாம் வெற்றி ஈட்டிக் குவிப்பதற்கு சாவு இப்போது இரவுபகல் பாராது தேர்ச்சி அளிக்கிறான்.
ஐப்பசி, 1994

Page 8
08 வெளிச்சம் கவிதைகள்
எனது பசி
L) வவுனியா திலீபன்
அந்தப் பசி மனதுக்குள் நித்தமும் பொங்கும்
அது தொடரும்! இரவில், தனிமையில்
உறக்கத்திற்கு முன்னர்
ஓராயிரம் கதைகள் சொல்லும்!
அதுதான் என் கிராமத்தை
பார்க்க வேண்டும் என்கிற பசி ராட்சச பசி!
ஒரே நாளில், ஒரே நிமிஷத்தில் நாங்கள்
நாடு கடத்தப்பட்டதை உணரும் பொழுதில் வேதனைகள் விஸ்வரூபமெடுக்கும்
என் அழகிய கிராமமே !
நீ இப்போது எப்படியிருக்கிறாய்?

வெளிச்சம் கவிதைகள் 09
அந்நியனின்
ஆயுதங்களுக்கு அஞ்சியா இருக்கின்றாய்? நான் நடந்து திரியும் அந்த மணல் பாதைகளில் இனவெறியர் இரவு பகலாய் அலைகிறார்களாம் மெய்யா?
என் இருதயத்துள் இளமைப் பாடம்
நடாத்திய அந்தப் பச்சை வயல் வெளிகளில் நெருஞ்சியா பூத்திருக்கிறது?
எனக்குத் தெரியும் மனிதன் விரட்டப்படும் போது மிருகம் சிரிக்குமென்று எனக்குத் தெரியும்
ஒரே நாளில் ஓடி வந்தவர்களெல்லாம் உட்கார்ந்திருக்கவில்லை.
ஒசையெழுப்பத் தொடங்கியுள்ளனர் உள்ளத்தில்
எழுச்சியின் பாஷையை கற்றுக் கொள்கின்றனர்
என் பசி இதுதான்,
மீண்டும்
என் கிராமத்தின்
மடியில்
நான் தலை வைத்து உறங்க வேண்டும்! திசையற்றுத் திரியும் என் தோழர்களைத் தொட்டுக் கொள்ள வேண்டும்!
கார்த்திகை - மார்கழி 1991

Page 9
10 வெளிச்சம் கவிதைகள்
இனி
") கி. பி. அரவிந்தன்
ஒரு நொடி
ஒரு கணம் ஒரிமைப் பொழுது கண் மூடித் திறப்பதற்குள் அது நிகழ்ந்தது
குத்தென சாய்ந்து சரிந்து சட்டென மேலெழ நிமிர்கையில்

வெளிச்சம் கவிதைகள் 11
எச்சமிட்டது * யார் தலையில் விடியுமோ?"
கண்களை உரசும் குரியத் தெறிப்பு.
முகிலுக்குள் மறையும் உயிர் கொத்திப் பருந்து
மனிதம் உறைந்து உயிர்த்தது
""குடிமனைக்குள் போடுறானே கோதாரியில போவான் கடவுளே கண்ணில்லையா?"
மண்ணை வாரி வார்த்தைகளை விசிறி காற்றைச் சபித்து .
எங்கே
என் வீடு
என் முற்றம்? சின்னக் குருவிகள் தம் வியர்வைக் குழையலில் தொட்டிழைத்த கூடு தொப்புள் கொடியில் பூத்த சிறுமலர், தத்தித் தத்தித் தளிர் நடை நடந்து விரித்த கனவுகளின் முற்றம் முற்றத்து விளிம்பில் மாலைக் காற்றுக்கு மணம் சேர்த்த மல்லிகை

Page 10
12 வெளிச்சம் கவிதைகள்
காலை இளம் மலர்வுடன் வணக்கம் சொல்லும் செம்பரத்தை குலை தள்ளிக் கிடந்த பச்சை வாழை
எல்லாமே எல்லாமே எங்குற்றது ...? என்னவாயிற்று . p குண்டு ஸ்
சப்பித் தின் 1) துப்பிய எச்சத்துள் பால் மாப்பேணி, அலுமினியக் கோப்பை, குழந்தையின் சூப்பி எப்படித் தேட ?
இந்தியச் சிப்பாயே உனது நாட்களில் என்னவாய் முனிந்தாய்? **ஆளுக் கொரு வீடு வீட்டுக்கொரு கிணறு கிணத்துக்குள் தண்ணிர் . ...”*
வெந்து அவிந்து பொசுங்கிக் கருகி உடைந்து நொருங்கி சிதைந்து சிதிலமாய்ச் சிதறிக் கிடக்குது
எனக்கென்றொரு
வீடு
இனி அதுவும் இல்லையென்றாயிற்று
தை-மாசி, 1992

வெளிச்சம் கவிதைகள் 13
திமிர்
முருகையன்
சிறு புழு கறை யான் நத்தை செருப்பின் கீழ் நசிவது போல் அறிவுடை மனிதர் நாங்கள் அழிந்திட இணங்குவோமோ? பொறுமைக்கும் வரம்புண்டையா; போட்டிக்கும் எல்லை உண்டே, அறமென்றும் நீதி என்றும் அரும்பொருள் இன்னும் உண்டே,
இருட்டுக்குட் சுருட்டி வைத்தாய்; எங்களை நொறுக்கி வைத்தாய்; கருத்துக்கு மூடி போட்டாய்

Page 11
14 வெளிச்சம் கவிதைகள்
கண் கட்டு வித்தை காட்டிப் பொருட்களைத் தடுத்து வைத்தாய் புழுக்களும் பசியில் வாடச் சுருக்கிட்டாய், தவிக்க வைத்தாய் சுயநலப் பிசாசம் ஆனாய்.
உனக்குப்போல் கழுத்து, கால், கை உனக்குப்டோல் மூக்கு, மூளை, உனக்குப்போல் வயிறு, நெஞ்சம், உண்டை யா எங்களுக்கும்; “எனக்குத்தான் பூமி முற்றும்" என்று நீ செல்லலாமோ? சினத்தை ஓர் மதம்போல் ஆக்கி சிக்கிப்போய்த் திணறலாமோ?
திமிரினால் நம் மேல் ஏறிச் செய்யலாம் சா வாரி என்ற நினைவை நீ விடுதல் வேண்டும் நெற்றியிற் கல்லை வீசிச் சமரிலே கோலியாத்தைத் தாவீது வெற்றி கொண்டான்; எமனாகி முடிவு கண்டான் இதனை நீ நினைக்க வேண்டும்.
கண்ணிரும் வெப்ப மூச்சும் கதறலும் பதைப்பும் சாவும் வெண்ணிற்றுச் சாம்பல் மேடும் வெதும்பலும் விளைவிக்கும்; நீ மண்ணோடு மண்ணாய்ப் போவாய் மமதையின் மதம் பிடித்த கண்ணோட்டம் ஒழியுமட்டும் கட்டாயம் ஒயோம், நாங்கள்.
ஆடி-ஆவணி, 1992

வெளிச்சம் கவிதைகள் 15
அப்புறமாய் வருகிறேன்
0 ) மன்னார் ரூபி மார்க்கிரட்
அம்மா
இன்று நான் உன்னிடம் வந்த போது வீட்டு முற்றத்தில் பதித்த - என் பாதச் சுவடுகளைப் பாதகாத்து  ைவ நாளை நான் வருவேன் என்பது என்ன நிச்சயம் அப்படியிருக்க
அப்பாவிற்கும் வயதாகி விட்ட தென்று திக்கித் திணறி சொல்கிறாய் கன்றுக்கு புல் சேர்த்து வைத்து பசுவொன்று இறந்ததாய் வரலாறு கிடையாது - அதனால் கவலையை விடு.
விழி நீர் வழிந்து விடும் என்றுதானே நீர் கோர்த்த கண்களுடன் - என்னை நிமிர்ந்து பார்க்காமல் குமுறுகிறாய்
"சான்றோன்

Page 12
16 வெளிச்சம் கவிதைகள்
எனக் கேட்ட தாய்" அப்போது அது பழமொழி, உனக்குத் தெரியுமா? மாவீரன் எனக் கேட்டதாய் இது இப்போது நான் விரும்பும் புதுமொழி. sg|Lblbr
வேதனையை குத்தகை எடுத்து குனிந்திருந்த உன் தலை அப்போது ஆனந்தக் கண்ணிரோடு நிமிர்ந்து நிற்கும். கொள்ளி வைக்க பிள்ளை இல்லை என்று அப்பா புலம்புவதாய் - நீயும் சேர்ந்து புலம்புகிறாய். அவரிடம் கூறு சந்தனக் கட்டையில் வேக நாம் ஒன்றும் நேரு பரம்பரை அல்ல. சுதந்திரமாய் எரியக்கூட - நமக்கு உரிமை இல்லை. அம்மா புரிந்து கொள் அந்நியன் மறுத்துள்ள சுதந்திரம் - நம் சுடலைக்கும் சேர்த்துத்தான் எம் மண்ணின் - கடல் கரைகளில் பதிந்துள்ள அந்நியத் தடயங்களை அழித்து விட்டு அப்புறமாய் வருகிறேன் அப்பாவின் அஸ்தியை அள்ளிப் போய் கடலில் கரைப்பதற்கு.
கார்த்திகை, 1992

வெளிச்சம் கவிதைகள் 17
உயிர்ப்பொருள்
கி. சிவஞானம்
கொழும்பிலிருந்து வருகையிலும் இடைமறித்தாய்
"திற
கொட்டு" என அதட்டுகிறது உன் குரல்.
தட்டும்
தேடும்
தூக்கி எறியும் உன் கொலைக் கைத்தடி.
தெருவின் நடுவே குட்டித் தங்கச்சியின் அப்பிளும்

Page 13
18 வெளிச்சம் கவிதைகள்
அம்மாவின் வெள்ளைச் சேலையும்
என் சந்தியாவின் திருக்குறளும் குவியலாய். சிதையலாய் .
நான் விலை கொடுத்து வாங்கியதில் என் அனுமதியின்றி நீ எடுத்தபின் எஞ்சியதை,
*அள்ளு அடை, அவசரமாய்த் தூக்கு ஒடு . ஒடு . .' என்று விரட்டுவாய், வெற்றி வீரனாய் நீ. வேகும் மனதுடன் நான்,
கூனிக் குறுகிக் குட்டுப்பட்டு நிமிர்கையில் அப்பிளும், வெள்ளைச் சேலையும் திருக்குறளும் என்னை எனக்குள் நிறுத்தின.
என்
விதவை அம்மாவும் குட்டித் தங்கச்சியும் சந்தியாவும் என்னுள் தீ மூட்ட ஏளனமாய் உன்னைப் பார்த்தபடி
இனிமேல் என்னையும் தடை செய்யப்பட்ட பொருளாக்கு" என்றபடி என் கால்கள் விரையும் என் தேசத்தை நோக்கி
மார்கழி, 1992

வெளிச்சம் கவிதைகள் 19
மீண்டும் ஒரு காலை
D பிரேமினி சுந்தரலிங்கம்
கொடிய வாகனங்களின் கோரப் பற்கள் கறுப்பு நிலத்தில் சல்லடை போட்டன
குவலயத்தின் சரிவில் மீண்டும் ஓர் குருதியின் கொப்பளிப்பு

Page 14
20 வெளிச்சம் கவிதைகள்
சின்னப்புக் கிழவனின் பெட்டிக் கடை மட்டும் தனித்து அங்கு சரிந்து கிடந்தது
கிணற்று வெடிப்பில் விளைந்த ஆலும் இலையை உதிர்த்து மடிந்து செத்தது
தரிசில் கிடந்த கோரையின் முதுகிலும் கோரப்பதிவின் நினைவுத் தடங்கள்
குலை வாழைகள் குப்புறக் கிடந்தன. முளைவிட்ட குட்டிகள் முனைப்போடு நின்றன.
சிதைந்த மதிலில் சிறுதுண்டு கல்லில் சின்னப் போராளியின் சிரித்த முகம் தெரிந்தது.
சப்தங்கள் அடங்கிய ஒரு காலை மீண்டும் மெல்லப் புலர்ந்தது.
தை, 1993

வெளிச்சம் கவிதைகள் 21
நிமிரும் எங்கள் தேசம்
Gogu, T
நேற்றோர் நீள் இரவில், விழிகனக்க:
கால் கடுக்க; ஆழ்கடலின் நீள் கரைப் பரப்பில், நண்டு வந்து வளை அமைத்து, ஒடுங்குகின்ற மணற்பரப்பில், அரண் அமைத்து எதிரி வரவை எதிர் நோக்கி; நிலையெடுத்து நின்ற வேளை, நடுங்குகின்ற பாதங்கள் நிலம் தொட மறுக்கின்ற நிலைமையையும் பாராது, ஒடுங்குகின்ற நிலைவெறுத்த,

Page 15
22 வெளிச்சம் கவிதைகள்
ஒரு அன்னை
மூதாட்டி:
அவள் அருகில் வந்து
கேட்டாள். 'பிள்ளைக்கு சர்ப்பாடுவேளைக்கு வந்ததுவோ? Gafntly lib;
புளிமாங்காய் போட்ட சிறுமீன் குழம்பும் நான் தரட்டோ? வாங்கோ' என்று நின்றாள். * நாளைக்கு நாணிந்த மண்ணில் நாறிப் போகாமல். என் வீட்டில் தலை சாய என் சுடுகாட்டில் நான் வேக, இன்றைக்கு வாழுகின்ற சித்திரங்கள்; போங்கோ, போய்க் கொஞ்சம் காலாற இருங்கோ: பானையிலை,
சட்டியிலை,
இருக்கிறதெல்லாம் உங்களுக்கே, மீதமில்லாமல் ஒரு வழி பாருங்கோ இமைக்க மறந்திருந்த
விழிமூடி,
கொஞ்சம் படுத்திருங்கோ, பொழுது விடிகின்ற வேளை வரை, நான் பார்ப்பேன், போங்கோ" என்று அவள், தலையைக் கோதி விட்டாள். தேசத்தின் வருடலில் அவள் சிலிர்த்தாள். தேசத்தின் உறவில் நிமிர்ந்தாள்.

வெளிச்சம் கவிதைகள் 23
புரிந்துணர்வே அடித்தளமாய்
() தமிழவள்
பூவோடு பிஞ்சும் போர்க்களம் காணும் தேசத்தின் புத்திரியே! உன்னோடு சில நிமிடம் எங்கள் தாயும், தாயவள் தாயும் அல்லல்கள் சுமந்ததுவும், அடிமையாய் வாழ்ந்ததுவும், அடங்கி ஒதுங்கி நொந்து போனதும் நீ அறிந்ததே. இருபதாம் நூற்றாண்டின் இளைய மகள் நீ.
கூட்டுப் பறவையாய் நீயும் மடிவதா? வேண்டாம்.

Page 16
24 வெளிச்சம் கவிதைகள்
வான் முகட்டினை தொட நிமிர்ந்திடும் வலிமை உன்னிடம். உலகின் உச்சியில் நின்று பாடிடும் திடம் உன்வசம். அடிமைப்படுத்துகிறார்களே என்ற ஆதங்கம் இனி வேண்டாம். அடிமையாய் ஏனுளோம் என்பதை யோசி. அடங்கியிரோம் என்ற கோஷங்கள் வேண்டாம். ஆர்த்தெழுந்து செயலில் காட்டு. புதிய தேசம் உருவாகக் கைகொடு. பெண்மையே பேதமை என்ற வரன் முறை வகுத்தவர் வாழ்ந்திட வழிதரார்.
வழியை நீ செய், மீட்பர் வருவரென காத்திருத்தல் வீண் விடுதலைக்கான பயணத்தைத் தொடங்கு. பாதை கடினம்தான்; தளராதே முன்னே செல். நிச்சயம் இலக்கில் பாதம் பதிப்பாய். தோழி!
இன்னும் சில வார்த்தைகள். சிந்தனையை விரிவாக்கு, சிறகுகளை அகல விரி, விழிப்புணர்வே விவேகம், விரைந்து செயற்படு. ஆணும் பெண்ணும் உலகின் இயக்கம் புரிந்து கொள். புரிந்துணர்வே அடித்தளமாய் புதிய சமுதாயம் விரைவாய் மலரட்டும். இவ்வளவே. இனி வருங்காலம் உன்னிடம்
நன்றி.
univeGofo, 1993

வெளிச்சம் கவிதைகள் 25
ஒத்திகை
() மா. மயிலன்
விளையாட்டுத் துவக்குடனும் வீரத்துடிப்புடனும் எதிரியை அழிப்பதாய் அவர்கள் படை எடுக்கிறார்கள். வானத்தில் - ஏதும் கறுப்புக்களைக் கண்டு விட்டால் GOL Tiburi
வருவதாய் பதுங்கிச் சுடுகிறார்கள்.
ஒ TAW P 88 88 அந்தச் சிறுவர்கள், நாளை
எதிரியைக்
களத்திலாட
இன்று
ஒத்திகை
செய்கிறார்கள். உனக்குத் தெரிகிறதா..? அந்தச் சின்னக் கரங்களால் அடிமை எரிவதை. உனக்குத் தெரிகிறதா. ? அந்தச் சின்னஞ்சிறு விழிகளுக்குள் ஒரு நாடு தெரிவதை.
சித்திரை, 1993

Page 17
26 வெளிச்சம் கவிதைகள்
எரிமலைக் குமுறல்
0 ) உதயலட்சுமி
எத்தனை களங்கள் கண்ட என்கால்கள் செத்த நிலைபோல சவமாகிக் கிடக்கிறதே
கனத்த கருவியை தோளிலே சுமந்து தொலை தூரம் எதிரியை விரட்டிய கரங்கள் துவண்டு துடிப்பின்றி கனமிழந்து நிற்கின்றன
ஏறு நடையாய் வீறுடன் நடந்தேன் விண்ணை முட்டிடும் வேகங் கொண்டேன் ஒரு நொடிப் பொழுதில் நாடியடங்கி கட்டிலே கதியென்று கலங்கித் தவிக்கிறேன்.
வளையாத பாதை முடியாத பயணம் நானே முடியாமல் (up-tonrós. . .

வெளிச்சம் கவிதைகள் 27
மண் மீட்க மடிந்தோர் இல்லத்தில் துயில்கிறார் சா காத பிணமாக தானிங்கு நிலையானேன்.
வல்லுறுகளின் இரைச்சல் செல்களின் கூவல்கள் இருப்புக் கொள்ளாமல் என் இதயம் தவிக்கிறது.
வேட்டுச் சத்தங்கள் கேட்கும் பொழுது வெகுண்டெழ வேண்டும்போல் , ஆனால் முடியவில்லை
என்தோழர் எல்லையில் துயிலாமல் தூணாக நானோ நள்ளிரவில் தனியாக வெம்புகிறேன்.
உரக்த குரலில் கானம் படுதற்கு விருப்புக் கொண்டேன் சத்தம் வரவில்லை.
மடிந்தோனின் முன்னால் மலரெடுத்து மண்டியிட அது கூட முடியவில்லை ஒரு சின்ன ரவையின் தழுவலால் சலனமின்றிக் கிடக்கிறேன்.
ஆனால் . எந்தன் உள்ளக் குமுறல் எரிமலையின் குமுறல்போல் ஆழ்கடலின் கொந்தளிப்பாய். ... مما ساك6 فأنا لانه 6of 5 إلى
ஆனி, 1993

Page 18
28 வெளிச்சம் கவிதைகள்
அடக்குமுறை
( ) கோளாவிலூர் கிங்ஸ்லி
ஊரின் முற்றத்தில் இருக்கின்ற
முருகன் கோயிலும்
இப்போது ஊமை. சங்குகள் ஊதினால் தண்டனை. பொய் சொல்லும் ரேடியோவைக் கேட்கவேணும்; லங்காபுவத்தையும் நம்பவேணும்;
கட்டாயம்.
அ ைசொல்லும் * விடுதலைப்புலி இங்கில்லை; துரத்திவிட்டோம் வடக்கு நோக்கி. இங்கு நடப்பதெல்லாம் சிவில் நிர்வாகம்" என்று
பி. பி. சி. நேரம் ரேடியோ ஊமைகொள்ளும் . உண்மையைக் கேட்டால் உதையும் அடியும் இங்கு அலைகிறது அதிரடிப்படை.
முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட ஒரு தேசம் மூச்சு விடுவதற்காக தனது பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆணி, 1993

வெளிச்சம் கவிதைகள் 29
மெளனம் கலைய.
( ) நெடுந்தீவு மகேஸ்
மெளனமாய் நீ இன்னும் மெளனமாய்த் தூங்குகிறாய்.
ஒலங்கள் ஓயாமல் காலத்தைத் தின்றிருக்க இருள் கலையாக் கோலத்துள் இயமனது ஊர்வலங்கள்.
நீ இன்னும் மெளனமாய்த் தூங்குகின்றாய் துயர் நிறைந்த மெளனத்துள் யெளவனங்கள் மகிழ்வதுண்டா?
அயல்வீட்டார் அழுகுரலைத் தாமடக்க அணிதிரண்டு நிற்கிறார் நீ இன்னும் மெளனமாய்.
புத்தம்புதிய இசைமுழங்க நீ எழுந்து புதுச் சேதி தரநடந்து, சுற்றும் உலகில நம் தேசம் சூரியனின் ஒளிப்பிளம்பாய் நித்தம் நிலைக்க வெற்றி முத்தம் கொடுக்க மெளனம் கலைந்து எழுந்து
விரைந்து நட.
ஆனி, 1993

Page 19
30 வெளிச்சம் கவிதைகள்
என்னுயிர் மண்
( ) அடம்பனூர் செ திருமாறன்
இருள் படர்ந்து
பகையுள் புதையுண்டு போனது என் கிராமம் . நினைக்க. நினைக்க... என்னுள் நெருப்பெரிகிறது மறக்கமுடியவில்லை - அந்த மறந்துபோன நாட்களை வயல் வரம்புகளைக் காணவில்லை எங்கே ? எங்கே?. நான் ஒடிப்பிடித்து விளையாடிய ஒடுக்கமான வயல் வரம்புகள் எங்கே. ஒடுக்குமுறையாளரின். டாங்கிகளுள் சிக்குண்டு சிதறிப்போனதோ . வயலில் நின்ற அப்பாவுக்கு - நான் பழங்கஞ்சி கொண்டு பறந்து போன பாதையெங்கே ? பாழாய்ப் போனவரின் பாசறைக் காவலரண்கள் ஆ ! பார்த்துத் துடிக்கிறேன்
தேர் சுற்றி தேங்காய் உடைத்துண்ட - அந்தச் சிவன் கோயில் எங்கே ?. பறந்து போன - அந்த பசுமையான நாட்களை மீண்டும் பார்ப்பது எப்போது அம்மா அடிக்க நான்
ஒடிய அந்த ஆட்டுப் பட்டியும், ஆலமரமும்தான் எங்கே?
மருத மரமேறி மல்லாந்து
p

வெளிச்சம் கவிதைகள் 31
வீழ்ந்து. நான் துள்ளிக் குதித்து நீந்திய - அந்த நீர்த்தடாகம் தான் எங்கே..? என்னை எனக்குள் இருத்திட முடியவில்லை
குஞ்சிலிருந்து நான் குடியிருந்த என் குடிமனை எங்கே?. தேடின என்கண்கள் தெரியவில்லை அந்த இடம் தெளிவாய்த் தெரியவில்லை கிட்டப் போகிறேன் .
வெற்றிடம் . என்
வீடிருந்த இடம் வெறிச்சோடி வெட்டவெளியாகிக் கிடக்கிறது. திட்டியாய் மணல் குவித்து குட்டித் தங்கையுடன் நான் குலவியிருந்த நாட்கள். எப்போதுவரும் ? எரிகிறது நெஞ்சு .
இருளில் இருந்து நான் எதிரியை நோட்டமிட்டேன் என்னூரையும் பார்த்துவிட்டேன்
ஏ. கே. 47 தோளில் தொங்க பற்றைக் காடுகளால் - என்
சிற்றுருக்குள் நுழைந்துவிட்டேன். முன்னிருட்டு நேரம் . இருள் விலகி நிலா பதுங்கிவரும் பொழுது - என் இடம் சேர வேண்டும்.
பற்றைகளால் - என் சிற்றுாருக்குள் சென்றதையெண்ண வெந்து போகுதுள்ளம் . பட்டப் பகலில் நான் பாதையினால் போகும் காலம் அதோ!. அதோ!. மிக அண்மையில் தெரிகிறது.
ஆடி, 1993

Page 20
32 வெளிச்சம் கவிதைகள்
போராட்டம்
அடேல் ஆன்
பூமியின் இதயத்திலிருந்து ஒரு ஒலம் எழுகிறது. கொடுந்துயரில் விதும்பி எமது தேசம் அழுகிறது. நாட்டின் உடல் சிதைந்த உதிரம் நதியாக கரைபுரண்டு ஓடுகிறது.

வெளிச்சம் கவிதைகள் 33
நிலம் சிவந்து நடுங்க நெருப்பு விதைகள் வாய்பிளந்து வெடிக்கிறது மண்ணின் மடியில் புதுமுளைகள் தளிர்க்க நம்பிக்கை பிறக்கிறது.
வெய்யிலில் வளர்ந்து வெள்ளத்தில் நீராடி புயலில் விளையாடி தலைநிமிர்ந்தன தளிர்கள், தேசத்தின் அடிவானில் உதிக்கும் சூரியனில் இரத்தம் பெருக்கெடுக்க புதிய வரலாறு உதயம் பெற்றது. பெருமைபெற்ற பழமை உறுதிபெற்ற புதுமையாக மறுபிறப்பு எடுத்தது.
சுதந்திர தீ சுவாலையாக எரிகிறது பூமியைச் சுடுகிறது. போராளிகளின் மூச்சு எரிமலையாய் கொதிக்கிறது. சாவின் கரங்களால் தணிக்க முடியாத நெருப்பு அலைகள் வீறுகொண்டு எழுந்து விடுதலை முரசுகொட்ட எமது தேசம் விழித்தது.
you ulat 3, 1993

Page 21
34 வெளிச்சம் கவிதைகள்
எதிர்ப்புச்சக்தி
0 சோ, பத்மநாதன்
துரத்தல் மழையுக்கை நிக்காதை எண்டு
சொன்னாற் கேளாளாம் ! காய்ச்சல் தலையிடி எண்டு வந்தா
கயிட்டப் படுகிறதார் ? தாய் செய்த முறைப்பாட்டைப் பொருட்படுத்தாது தமயந்தி - என் பகள்-பூக்கொய்து கொண்டிருக்கிறாள்! அவள் நிற்கும் திசையில், வேலிக்கப்பால், செல்லி, களையெடுத்தபடி! அவள் நனைவது பற்றி மூக்கால் அழ ஆருமற்று! செல்லிக்கும் என் மகள் வயது தான். தமயந்திக்கு மழைபடக் கூடாது! வெய்யில் சுடக் கூடாது! 'மதன லயைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளும் துன்பம்" - பாடியவன் அநுபவசாலி. மூத்தவன் முகுந்தன் பிறந்தபோது வீடே அமர்க்களப் பட்டது! பக்குவம் சொல்ல துரக்க, “ எடுக்க" பலபேர் 1 எந்தக் குறைபாடும் இருக்கக் கூடாதென்று எத்தனை முன்னேற்பாடு! என்றாலும் காலை வேளைகளில் ஒரு தும் மல்! காற்றுப்பட்டால் ஒரு கணகணப்பு! எங்காவது போய்வந்தால்

வெளிச்சம் கவிதைகள் 35
வயிற்றுக்கோளாறு! ‘'எதிர்ப்புச்சக்தி இருந்தால் அடிக்கடி நோய் பிடிக்காது!" மருத்துவர் கருத்தை மதித்து, ஜேர்மன் தயாரிப்பான Polyviso ஐ. ஊற்றுப் பேனைக்கு மைநிரப்புவது போல, வேளை தவறாமல், அவள் வாய்க்குள் பிரயோகித்தும் கடைசி வரை எதிர்ப்புசக்தி வரமறுத்து விட்டது! முகுந்தன் ஒருவாறு வளர்ந்து ஜேர்மனிக்கே போய்விட்டான்! இப்பொழுது எழுதுகிறான், பிறநாட்டவர்களுக்கு அங்கு பலத்த எதிர்ப்பாம்! இவனுக்கோ இன்னும் எதிர்ப்புச்சக்தி வருவதாயில்லை ! பக்கத்து வீட்டுப் பாலன் - உவள் செல்லியின் தமையன் - பனாட்டுத்தின்று, ஒடியற்கூழ் குடித்து வளர்ந்தவன், நோய் நொடி கிடையாது Polyviso oth g)6606), புட்டிப்பாலும் இல்லை! பனைமரம் போல, ஆறடி இருப்பான்! அண்டைக்குப் பார்க்கிறன்; அளவெட்டியிலை ஒரு பனைக்குப் பின்னால் "கவர்" எடுத்தபடி! ஜேர்மனியில் இருந்து ஊட்டம் பெற்றவன் ஜேர்மனியோடை! பனையில் இருந்து ஊட்டம் பெற்றவன் பனையோடை ,
புரட்டாதி, 1993

Page 22
36 வெளிச்சம் கவிதைகள்
கும்பிட்டு வாழ மாட்டோம்
( ) சோ. பத்மநாதன்
வெள்ளைக் கொக்குகள் காலைப் பொழுதிலே
வீதி ஒரமாய் மெல்ல நடந்தன! கள்ள மற்ற சிரிப்பில் அச் சூழலே
கலகலத்தது; கையை அசைத்துத்தம் பிள்ளைகள் நடை பயிலும் அழகிலே
பெற்றவர்தம் கவலை மறந்தனர்; 'பள்ளி செல்லுகின்றார்கள்தம் பாடங்கள்
படிப்பர், நாளை அவர்கள் உடையது!"
புத்த கப்பை முதுகில் சுமந்தவர்,
போத்தல் தோளில் அசைய நடந்தவர்,
சித்தி ரத்துக் குரியதாள், தூரிகை,
தீட்டும் வண்ணக் கலவை, சிமிழுடன்

வெளிச்சம் கவிதைகள் 37
கொத்துப் பூக்கள்செண் டாகப் பிடித்தபூங்
கொத்துக்கள் வாய் பிளந்தசெம் மாதுளை
முத்தை ஏந்திய பால்மணம் மாறிலா
முறுவலர், அடிபெயர்த்துமுன் போயினர்!
ஊழிக் காற்று அத் திசையினை நோக்கியே
ஒர் நொடிக்குள் நெருங்கிய தாமெனப் பேரிரைச்சல் - வான் முகடிரண் டாகியே பிய்ந்து கீழே வீழ்ந்தது மாதிரி! சூழல் யாவும் புகையும் கரியுமாய்ச்
சுக்கு நூறுபட, நெடும் ஆலொன்று வேரோடும்தரை சாய்ந்தது! பாதகர்
வீசு குண்டுஇத் தனையும் புரிந்தது!
வெள்ளைச் சீருடை செந்நிற மாயது
வீதி எங்கும் குருதி மணத்தது பள்ளிப் பைஒரு பற்றையில் தொங்க, ஒர் பாத ரட்சை தனித்துத் தவித்தது "தள்ளிச் சற்றுக் கிடந்தது மானிடத்
தலை" என்றே யொரு செய்தி பறந்தது பிள்ளைப் பிஞ்சு நடந்த அம் மண்ணிலே
பெரிய தோர்குழி வாயைப் பிளந்தது!
2
பத்து வருஷம் பறந்தோடி விட்டாலும் பெற்ற வயிற்றின் பிரலாபம் ஒய்ந்திடுமா? குஞ்சு சிறகு முளைத்துப் பறந்ததுவோ! கோழி அதைப்போட்டுக் கொத்தித் துரத்தியதோ! எங்கோ தொலைவில் இருந்தே அவன் எழுதும் வானஞ்சல்கூட வழிமாறும் என்கின்ற "ஞானம் தளர்ந்த உடலை நலிவுறுத்தும்! பெற்ற மனதின் ஏக்கம் உணராதோர் கற்பழித்த பின்னர் அனுப்பும் கடிதங்கள் வந்தாலும் வாராதொழிந்தாலும் ஒன்றென்றே நொந்த ஒருதாய் கொழும்பு நகர்நோக்கிப் போகப் புறப்பட்டாள்.

Page 23
38 வெளிச்சம் கவிதைகள்
போய் ஒருகால் போனில் *நான் சாகமுன்னர் உன்"ரை சடங்குக்கு ஒரு முடிவு சொல் ! என்று கேட்கத் துணிந்து!
வெண்ணிலவு வீச, விரிகடலின் அலைஎற்ற தண்ணிர் கிழித்துத் தவழும் படகுகளோ ஒன்றன்பின் ஒன்றாய் கிளாலி இருந்து நல்லூர் சென்றுவரும் பாதை; திசை சரியாய்த் தெரியாது! பாதிவழி கடந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை நேவி வள்ளங்கள் நிலையாய் ஒளிபாய்ச்சி வந்து மறித்து வயதா னவர்என்றோ, குஞ்சு குழந்தை என்றோ பாராமல் குத்திவெட்டி, சுட்டுப் படகோடு எரித்து வெறியாடி எட்டுப் பிணங்கள் அறுவடை செய்தேகினர7ம்!
கோல்" எடுத்துப் பேச. கொழும்புசென்ற பொன்னம்மா நீலக் கடலில் நினைவாகிப் போய்விட்ட கொடுமையினால் நெஞ்சு குமைகிறான் அன்புமகன்!
3
ஒடுகிற ஊர்திகளை நிறுத்தி உள்ளே
இருக்கின்ற தமிழரை ஒவ் வொருவ ராக தேடி, அவர் களுக்குள்ளே புலியைக் கண்டு
சிலிர்த்து, உணவு விடுதிகளைத் தடவி, மற்றும் வீடுகளில் வந்தவிருந் தினரை அள்ளிக்
கொண்டுபோய் விடுவிக்க லஞ்சம் கோரும் கேடுகெட்ட அரசுக்குக் கொடியேன்? ஆல
வட்டமேன்? குடையேன்? செங்கோல்தான் ஏன், ஏன்?
'வடக்கில் ஒரு வரிரிபுலியை ஆளவிட்டோம்!
மலையகத்தைக் கிழப்புலிக்குத் தாரை வார்த்தோம்! கிழக்கு எமது கைக்குள் என்றோம்; ஆனால் காடு
கிடுகிடுக்கும் உறுமல்களைக் கேட்டு நொந்தோம்! இடைக்கிடையே எல்லைகளைத் தாக்கிஎம்மை
ஈடாட வைக்கிறார் என்றே ஓடி கடற்பரப்பில் நின்றாலும் கண்ணிவைக்கக்
கலங்குகிறோம் !" எனப்புலம்பும் கயவர்முன்னே

வெளிச்சம் கவிதைகள் 39
கும்பிட்டா நிற்பான்இத் தமிழன்? தங்கக்
கூட்டுக்குள் அடைபட்டா கிடப்பான்? அல்ல! நம்பிக்கை இழந்தவனாய் நாட்டைவிட்டு
நாலு திசையும் திரிந்து தொழும்பு செய்து கும்பிக்கு வழிதேடும் கூட்ட மாக
குனிந்த தலை நிமிராது கூனிக்கூனி வெம்பிப்போய் நடைப்பிணமாய் வீழ்வா னோடா ?
விடுதலையை விட்டொழிந்து வாழ்வா னோடா ?
செம்பாட்டுக் கைகால்கள் சிதறிப் போக
சிறிசுகளை ஷெல்ஏவிக் கொன்று தீர்த்தும் அம்பிட்ட பேரைநடுக் கடலில், ஆண் பெண்
மூப்பு, இளமை பாராது சுட்டுக் கொன்றும் கும்பிட்ட கைகளையும் வாளால் வெட்டிக்
குவிக்கின்ற கொடியரையும் மனிதர் என்று நம்பிப்போய் அவர்க்கேவல் செய்து, பிச்சை
நச்சுகிற கூட்டமாய் வாழ மாட்டோம்!
சிங்களர்தம் காயகம் இந் நாடு; தந்த
செந்தமிழர்க் கிடமில்லை; பெளத்த மார்க்கம் எங்களது தனி உடமை; மாநா யக்கர்
திருவுள் ளக் குறிப்பறிந்து நடந்து கொள்வோம்! சங்கடங்கள் ஏற்பட்டால் வழிகாண்டற்குத் தம்மபதம் துணையாகும் ! ஐயமில்லை எங்களெழில் ஞாயிறெமக்கு! என்று பேசும்
இவரைப்போய்க் கும்பிட்டா வாழ்வதையா?
மாவில்லை, மருந்தில்லை, சீனி இல்லை,
மண்ணெண்ணெய் இல்லை, காய்கறிகள் எல்லாம் தேவர்தம் உலகுவரை உயர்ந்த போதும்
செயலற்றுத் தமிழர்குலம் இருந்ததில்லை! கோயில்கள், விழாக்கள், கதைநிகழ்ச்சிக் கேதும்
குறைவில்லை! எமதுதலை குனிந்ததில்லை! சேவல்தன் சிறகடித்துக் கூவக் கேட்டோம்;
'திருநாடு மீளும்!" அதுவொன்றே வேட்டோம்!
சித்திரை - வைகாசி, 1994

Page 24
40 வெளிச்சம் கவிதைகள்
இத்தனை இடைவெளி எப்படி வந்தது
( ) பாவரசன்
இத்தனை இடைவெளி
எப்படி வந்தது குட்டக் குட்டக் குனிபவராயே இருந்து நாங்கள்
உரிமைகள் கேட்டோம் நாற்பது, ஐம்பது, அறுபது எனவெல்லாம் குனிந்து நின்றே உரிமைகள் கேட்டோம் அத்தனை இடைவெளி
எமக்கும் அவர்க்கும்.

வெளிச்சம் கவிதைகள் 41
குடுக்க மறுத்தவர்
நாம்
குனிந்து நின்றதால் எங்களின் தோள்களில் குந்தி இருந்தே சவாரி செய்தனர்.
பொறுமை இழந்து நாம்
நிமிர்ந்து கொண்டதால் பொலிஸ் ரோந்துகள், ராணுவ ரோந்துகள் குறையத் தொடங்கின. இன்று பொலிஸ் நிலையங்கள், இராணுவமுகாம்கள் குறைந்து வருகுது.
இவர்கள் அற்ற பிரதேசம்கூட நிறைய இங்கே உருவாகி விட்டது.
எந்தப் படையணி என்றாலென்ன திரும்பிச் செல்வது ? வடக்குக் கிழக்கிற்கு வந்த அளவில் இருப்பதில்லை.
படையை விட்டு ஒடியோரெல்லாம் "பணிஸ்மென்" இன்றித் திரும்பிச் சேரலாம் பதினெட்டுவயது பதினேழாகி . பத்தாம் வகுப்பு ஐந்தாகக் குறைந்தது. லஞ்சம் , களவு, பகற்கொள்ளைக்கெல்லாம் அனுமதி இருந்தும் வேலையின்றி அலைவோர் கூட்டம் மலைபோலிருந்தும் அரசு நன்றாய் அழுது அழைத்தும் ஆளணி சேர்வது அருகிப் போகுது இத்தனை இடைவெளி எப்படி வந்தது?
புரட்டாதி, 1993

Page 25
42 வெளிச்சம் கவிதைகள்
துப்பாக்கி தூங்காது
கஜோ
நான் துரங்கினாலும் என் துப்பாக்கி தூங்காது. எப்பாக்கியம் கிடைத்தாலும் இத்துப்பாக்கி தூங்காது.
என் நண்பன் தந்துபோன துப்பாக்கி அவன் உயிரும் அங்குதானே வாழ்கிறது,

வெளிச்சம் கவிதைகள் 43
நாளை நான் அணைந்து போனாலும் என் உயிரும் அங்குதானே வாழும்.
இத்துப்பாக்கி தூங்காது யார் தூங்கினாலும் இத்துப்பாக்கி தூங்காது.
துப்பாக்கி கைப்பிடியில் நண்பனின் கைச்சுவடுகள் பதிந்ததனால் என் கைவிரல்களுடனேயே துப்பாக்கி இறுகிக்கொள்ளும் நட்பினால் இறுகிக்கொள்ளும். எதிரியைக் கண்டவுடன் என் நெஞ்சம் கனலாகி, துப்பாக்கி அனலாகும்.
என் துப்பாக்கியில் * சிங்கிலில்" நண்பனின் இதயத்துடிப்பை நான் கேட்பேன்.
* ஒட்டோவில்" அவனது குரலோசையை நான் ரசிப்பேன்.
நாளை நான் அணைந்தாலும் இத்துப்பாக்கியை தூக்க என் சகோதரன் வருவான் வருவான்!!
தூங்காது! தூங்காது!! தூங்கவே தூங்காது இத்துப்பாக்கி தூங்காது.
புரட்டாதி, 1993

Page 26
44 வெளிச்சம் கவிதைகள்
தாயக நினைவுகள்
இ. திருமாறன்
அம்மா தாயக மண்ணே! உன் மடியில் பாதம் பதிக்க துடிக்கிறதே என் மனம் அந்நிய நாட்டு வீதிகளில் "றோ போ’க்கள் போல் அலைந்துழைத்து சலித்துப்போனதுவே மனம் நான் எண்ணிவந்த கன வெல்லாம் கானல்நீர் என்றுணர்ந்தேன் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் எப்போதும் நினைவுகளாய் இதயமதை வாட்டிடுதே மண்விட்டு வந்ததற்காய் மனச்சாட்சி வேறு உறுத்துதே

வெளிச்சம் கவிதைகள் 45
எங்கள் தமிழ் மொழி; எம்நாடு; எம்மக்கள் என்ற உணர்வெல்லாம் இங்கு வந்தபின்பே பிறக்கிறதே என் இனிய கிராமம் மரஞ் செடிகள் தோப்புக்கள் மாலை நிலாக் காட்டி மழலைக்கு சோறுாட்டும் அன்னையர்கள்; மனத்திலுள்ள துயர் அறிந்து தோழன்போல் தோள்தட்டும் தென்றல்; அது சுமந்துவரும்
முற்றத்து மல்லிகையின் வாசம்; வானத்திருள் விலகும் முன்பெழுந்து வாசலிடை கோலமிடும் என் தங்கை; காலைப் பணித்திரை மேல் கதிர் தெறிக்கும் வேளையிலே கட்டை வண்டி தனிலேறி கழனி செல்லும் எம்முழவர்; மாலை இருள் வரும் வரைக்கும் மகிழ்வுடனே விளையாடும் பட்டாம் பூச்சிகளாய் சிறார்கள்; எல்லாம் வழமைபோல் நடப்பதற்காய் இவையேதும் அறியாதார் போல் எதிரி முகாம் அருகே எப்போதும் காவல் நிற்கும் என் வயது இளையவர்கள் எவ்லாம் நினைவாக என்மனதை வாட்டிடுதே அம்மா தமிழ்த்தாயே உன்னிலத்தில் கால்பதித்து தரைதொட்டு முத்தமிட நான் விரைவேன் உடன் இன்றே.
gačica 4, 199?

Page 27
46 வெளிச்சம் கவிதைகள்
உப்பு வேணும்
0 தொண்டையூர் துவாரகன்
எனக்குக் கொஞ்சம் உப்பு வேணும். என்றாலும், இப்போது உன்னிடத்தில் நான் இரந்து கேட்கப் போவதில்லை! இல்லை யெனில் பக்கத்து வீட்டிலும் நான் பல்லிளித்து வாங்கப் போவதில்லை! வல்லைவெளியில் என்றாலும் உப்புக்காக நான் அலையப் போவதும் இல்லை! கடை தனில் வாங்குவதா ?
விலை கொடுத்தா, அதுவும் வேண்டாம். நான் கேட்கும் உப்புக்கு விலை மதிக்க முடியாது. காலாகாலமாக எங்கேயிருந்து எமக்குக் கிடைத்ததோ. அங்கேயிருந்துதான் இப்போ உப்பு வேணும். ஆனால், சற்று மாறுபட்ட நிறத்தில் அதுதான் அறுநூற்றி இரண்டு வீரர்களின் குருதியினால் நனைந்த உப்பு! செந்நிற உபபு!! வெப்பக் கனல் வீசும், வெட்டவெளிக் காற்றிடையே வெஞ்சமர் புரிந்து கொண்ட குருதியால் குளிப்பாட்டப்பட்ட உப்பு! அதுதான் எனக்கு இப்போ வேணும். இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாயினும். ! ஏனெனில்,
வீரம் மிகுந்தது;
வரலாறு கொண்டது!! எனக்குக் கொஞ்சம் உப்பு வேணும். வெப்பக் கனல் வீசும், வெஞ்சமரிற் கனன்ற குருதி தோய்ந்த உப்பு!
ஐப்பசி, 1993

வெளிச்சம் கவிதைகள் 47
முகம் முறிக்கும் எதிர்காற்றை
() நாக. சிவசிதம்பரம்
நிலவு எழத் தொடங்கி நீள் பொழுதும் சேர் உறவாய் இளகி வயல் வெளிகளில் - ஏர் இசைகள் எழ சூடடித்து நிமிருகிற விடியல் ஒளி நிறந்தீட்டும் நெற்குவியல் அழகில் களைதீர்ந்த ஆனந்த நினைவுகளை
ஒலையும் தேய்ந்து - ஒழுக்கில் உதிரும் மண் குடிசையாக நோயுறம் தந்தை தாயின் நுரையெழு கவலையாக நினைவுகள் சுமந்த நாளின் நரைவிழு தங்கையாக. .
ஒடுநீர் ஊறிக் - காய்ந்து உடைகின்ற வாய்க்காலாக ஆடலும் பாடலும் - உண்மைத் தேடலும் காதலும் வற்றிப் போகும் என்னுயிரை - காணும் பொழுகில் நான் வெறுமையாக . .
புழுதி படிந்தெனது புத்தகத்து மேசையிலே புகையில் முகம் கறுத்து புதுவிளக்கும் துரங்கையிலே
இருந்து படிக்க எண்ண இல்லைகளின் குரல் துரத்த எழுந்த அறை வெளியே நான். ஏன்.?

Page 28
48 வெளிச்சம் கவிதைகள்
எறிகணையும் கேளாது ஏதோ ஒலி பெருக்கும் ஊரின் சிறு கோயில் இரவுவிழா ஒளி - தாம் வானத்தை கண்டதுவாய் வலியச் சிரித்தழைக்க
தாய் மனை, சொந்தம், ஊரை தன் ஆசை அயலை விட்டு போர் முனைப் பூவாய் - முன்னே போனவர் என் கண் முன்னே.
நீள் குருதிப் பாத நினைவுத் தடங்களென புன்முறுவலோடும். புகைப்படமாய் என்தெருவில்.
என்னை எதிர்பார்ப்பதுவாய் எங்கே பயணம் என என் மனதைக் கேட்பதுவாய் கண்கலங்க ஊரின் கதைகளினைக் கேட்பதுவாய். நெஞ்சினுள் ஆழமாக நினைவு உலைகொதிக்கும்.
அங்கங்களை இழந்தும் அடுத்தகணம் நிமிரும் எங்கள் தலைமுறையின் ஏற்றம் இருள் துரத்தும்.
உழக்கிய அடியில் - மண்ணை உடைத்தெழு பயிராய் - நெஞ்சை நிமிர்த்தெனும் நாளிதாக. நினைவு முன்னேறிப் போகும் .
இலை, கிளை அசைவதாக இடைஅரும் பெழுவதாக
மார்கழி, 1993

வெளிச்சம் கவிதைகள் 49
விளக்குப் புகையில்
நாக, சிவசிதம்பரம்
எனக்குப் படிக்க விளக்கில்லை; விளக்கம் இல்லை வெளியிறங்கி, மூச்செடுக்க முற்றத்தில் வெளிச்சம் இல்லை.
உழைச்சலுடன் . சுற்றிவர நோக்கச் சுடுகிறது உள்மனசு
என்மூச்சுக் காற்றில்லை, எனது கால் ஈரமில்லை என் கோயில் வீதியிலே இலைதெரியா மரநிழலில், பள்ளியிலே . என்றந்தப் பழைய நினைவிடங்கள் .
சுற்றிவர நோக்கச் சுடுகிறது உள்மனசு **வந்தவனின்" பக்கம் வானும் "வெளிச்சுப்" போய். மேகங்களும். மெளன "முட்டில்” திணறுதலாய்.
வயல் வரம்பில் தலைபுதைத்து வதிவிடங்கள் இழந்த - சிறு குழந்தைகளின் வெற்றுடம்பாய் சிறுகுடலின் பெருநெருப்பாய்.
விளக்குப் புகையில் விரித்தபடி புத்தகங்கள் சுற்றிவர. நோக்க..!
ஆடி , 1994

Page 29
50 வெளிச்சம் கவிதைகள்
நெஞ்சம் நிமிர்த்த .
() த. அன்பழகன்
அன்பே !
நீ நிலவாய்த் தேய்வதாயும் வீட்டில் அம்மா மயங்கிச் சரிந்தும் அப்பா மனதுள் வெடித்தும் ஆச்சியோ நேர்த்திகள் தீர்த்தும் தவிப்பதாய் நண்பன் சொன்ன கதைகேட்டு நான் அழவில்லை. அறியாமையை நினைத்துச் சிரித்தேன். அவர்கள்தான் அப்படி புதுப்பூ நீயுமா இப்படி ?
எனக்குள் பெரிதாய் பிரளயம் இல்லை இங்கே எத்தனையோ என் தோழர் கத்திக் குழறாமல் கையிழந்தும், கால்விரலாற் படம் வரைந்தும் கரண்டி பற்றிச் சோறுண்டும் "மினிமினி"க்கு ரவை நிரப்ப கால் தந்தும் உதவுகின்றார்.
பார் இங்கே ! புலரப் போகும் புதுவிடியலுக்குப் புது உணர்வின் பிறப்புக்களை.

வெளிச்சம் கவிதைகள் 51
என்றாலும் எனக்கோ ஒரு குறை வெற்றிலைக் கேணியில்
வெற்றுவெளியில்
பற்றிப்பிடித்த "பிறனோடு" பாய்ந்தோடிப் பொருதியதும் புல்லாவெளித் தரையில்
புயலாகப் புகுந்து R. P G கொண்டு "புல்டோசர் நொருக்கியதும் சங்கத்தார் வயல் வெளியில் சகடையைச் சரிக்க,
குறிபார்த்த தோழருடன் வெடிதீர்த்து வென்றதுபோல்
மனம் நிறைய மீண்டும் பொருகளத்தில் "புலிகளின் தாகமென" புதிதாய்ப் பறித்த துபபாக்கியைத் தூக்கியெழ இரு கரமுமில்லையே!
துயர்தானென்றாலும் உனைப்போல் நிலவாய் நான் தேயவில்லை. மீண்டும் புதுப்பயிற்சி, புதுமுயற்சி கையிழந்தோர் காலிழந்தோர் கரும்புலியாய்க் களம்புகந்து, கவச டாங்கி அத்தனையும் வாய்பற்றி இழுத்து வந்தாரெனும் சேதிவரும் அன்று நான் இரு கண்ணிழந்து நின்றாலும் உன் நெஞ்செழுச்சி நெருப்பெடுக்க நிச்சயமாய் முன்வருவேன்
நீ காத்திரு!
அன்பே இது
நிலாச் காயும் நேரமல்ல, ஈழநிலம் காக்கும் நேரம்; நீயும் விழித்தெழு!
வந்துவிடு!!
மார்கழி , 1993

Page 30
52 வெளிச்சம் கவிதைகள்
விடுதலைக் கோயில்
( ) தமிழ்க்குமரன்
கல்லும் முள்ளும் ஏறினோம் எங்கள் கண்கள் சிவந்தது நித்தம் நித்தம் நீரின்றி வாடினோம் நிதானம் தவறவில்லை "ஷெல்" மழையிலே என்னுடல் சிதறுண்டு போனபோதும்

வெளிச்சம் கவிதைகள் 53
என்னை விட்டுச் செல்லவில்லை வாரி அணைத்தே சென்றனர்.
கைகள் சுழன்றன கால்களும் சுழன்றன உடலும் சிதைந்தது அவர்கள் கண்களும் சிவந்தன கையில் இருந்த சுடுபொறி சிவந்தது கையில் இருந்த சுடுபொறி சிவந்தது.
காட்டுவழியிலே
கால் கடுக்க நடந்தோம்
அழுகை வரவில்லை
இனத்தின் விடுதலையை எண்ணி நடந்தோம்; மகிழ்வாய் இருந்தோம் எதிரிமீது கோபம் எழுந்தது
பாசப் பிணைப்போடு படையெடுத்துச் சென்றோம் அன்பு பெருகியது அறம் நெறி வீரம் தளைத்தது உடல் இளைத்தாலும் எங்கள் உணர்வு களைக்கவில்லை.
நான் கரம் கூப்பவிரும்புவது வேறெதற்குமாகவுமல்ல
என்னோடு போராடி இந்தமண்ணில் விதையாகிப் போன வீரர்களின் கல்லறையைத் தான் வீரவேங்கைகளின் விடுதலைக் கோயிலைத் தான்.
தை , 1994

Page 31
54 வெளிச்சம் கவிதைகள்
புயற் பிரவேசம்
தூயவன்
பூநகரியில் சிங்களம் எம்மக்கள் சிரங்களைச் சீவியதால் சிவந்தது யாழ்நீரேரி மட்டுமல்ல கரும்புலிகள் கண்களுமே.
கொடும் பகை குடல் எடுக்க நெடும் வெற்றி நமதாக்க உடல் உடையிடை கடலூரிமண் உராய்வெடுக்க உதிரம் கசிந்து உறைந்திட நெடுநாளாய்ப் பயின்றனர் புலிகள் அவர்களின் இரவுகள் பகல்களாயின
அவன் மூச்சின் ஒசையும் சிறு அசைவின் காற்றிசைவும் புலன்களால் உணர்ந்திட வேவுப் புலிகள் கடமை தொடர்ந்தனர்
இருளில் புலிகள் நகர்கிறார்கள் தமிழீழம் விடியலைத் தேடுவதால்
புயலுக்கு முந்திய அமைதியாய் பூகம்ப ஆரம்பக்கண அமுக்கமாய்

வெளிச்சம் கவிதைகள் 55
வியூகம் அமைத்த புலிகள் பூநகரியில் புயற்பிரவேசம் செய்கிறார்கள்.
உடல் தாங்க முடியாக் குளிருடன் கடல் கடக்கமுடியா நீரோட்டமுடன் காற்றும் மழையும் பயணத்தைக் கடினமாக்கப் போட்டியிட்டன.
ஆயினும், புலிகளுக்கு
அவை உறைக்கவில்லை
பேயாகி நின்றவர் தமிழரை பிணமாக்கித்தின்றனர்; மன நோயாளியாக மாறத்தொடங்கினர்.
வெடிமருந்தாயினர் புலிகள் விடியுமுன் வானம் ஒளிர்ந்தது ஒருகணம் வேட்டுக்களாக மாறினர்
பகைவன் கேட்டுணருமுன்னரே வீழத்தொடங்கினான்.
ஒராண்டின் உழைப்பால் தான் உருவாக்கிய திட்டமதை கரிகாலன் கையாண்ட திறனால் பார் முழுதும் எமைச் சிலமணியில் நேராக நோக்கி நின்றது பகை விசைப்படககள் எம் வசமாகின "செக்கோசெலவாக்கிய டாங்கிகள் உடன் செல்லப்பிராணிகளாயின "சிசிலின் பதக்கங்கள் சிதை ஏறின ஆம் எங்கள் கால்களைத் தடக்கியவை மரக்கட்டைகளும் கற்களுமல்ல மாறாக
எதிரியின் உடல்களும் ஆயுதங்களுமே.
ወጠrፊ8 , 1994

Page 32
56 வெளிச்சம் கவிதைகள்
நல்லையல்லை நெடுவெண்ணிலவே
LTவீ. பரந்தாமன்
இல்லும் இழந்தனம்; ஊரும் இழந்தனம் எல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றுார் தன்னில் வெயிலுக் கொதுங்கல் போற்றெருவோரம் புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி, ஒலை மறைப்பில் உழலும் வாழ்க்கை

வெளிச்சம் கவிதைகள் 57
ஒழியுநாள் வருமோ? முன்னாள் எம்மூர் - உழுது வித்திய பழனச் செந்நெல் அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே, மூரல் முறுவலார் சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொளிப் பரப்பில் மாலைத் தென்றல் முல்லை நறுமணம் முகந்து வீச மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த எழில் வாழ்வு கழிந்தது மாதோ! இந்நாள் - ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன; வாரி யிடையே வலைஞர் செல்லார்; குயிலும் கோழியும் கூவல் மறந்தன; கிள்ளை மழலையும் கேளா; நல்ஆன் கன்று துள்ளா, கறவை சுரவா எல்லாம் அழுக்கா றுடையான் உள்ளம் போல் புல்லென் றாகிப் போன;
யாமே - கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி கான விறகு கட்டி விற்கும் அல்லல் வாழ்க்கையேம் ஆனோம் இங்ங்ண் - சிறுவர் மகிழார்; இளையோர் நயவார்; பாடுநர் நோக்கார்; பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொளி பரப்பி மெல்ல வானில் வருகுவை நல்லை அல்லை நெடுவெண் நிலவே!
சித்திரை - வைகாசி, 1994

Page 33
58 வெளிச்சம் கவிதைகள்
எம் கடலை விட்டு நீங்கேன்
() சி. அமுதசாகரன்
பின்நிலா சரியும் அதிகாலை சோளகம் தொடங்குமுன்
வீசும் தென்றல்
மாசிப்பணி மூசிப்பெய்கிறது. காலடி கண்டு மணல்வளை புகும் நண்டுகள் துவாரநூல் பிடித்து உரத்த கரம் கட்டியமரத்தை கடலின் மேல் தள்ளும் லாவகம் உன்னி ஏறும் கரியகால்கள் இன்றாவது மீன்படவேணும் .
துடுப்பிசைவால் கடல் மேலே . மேலே. வலைவீசு, இழு, அள்ளு; பறி நிறைய புன்னகை பூக்க என்று மனம் உந்தும் ‘கரிய பெரியதை கவனியாது கிட்டியதும் கண்டு
கடல்மீதே பாய்ந்து கையைவீசி, காலையடித்து . வரவேண்டும் என உன் தாய் ஏங்குவாள் தெப்பமாய் நீ கரையேற உடைந்த உன் மரங்களும் மீண்டும் எடுத்துக்கட்டி வலை பொத்தி .
"நாளையும் செல்வேன், மீண்டும் வருவேன், யார், எவன் எனை தடுக்க? எம் கடலை விட்டு நீக்குவேன்" என உன் வாழ்வு நிகழும் பெரும் ஆவேசயாய்.
சித்திரை - வைகாசி, 1994

வெளிச்சம் கவிதைகள் 59
L வளநாடன்
இறுகப் பூட்டி
கொடு முள் ஏற்றும் உனது சிறையினுள்ளும்
எனது ஆன்மா இசைக்கின்றது விடுதலைப் பாடலை "நான்கு சுவர்களும் கம்பிகளும் தடுத்துள்ளது" என நீ நினைப்பதை விடவும் இச்சிறு வெளியும், முனைப்புறு மனமும் எனது விடுதலை உலகே.
சித்திரை - வைகாசி, 1994

Page 34
60 வெளிச்சம் கவிதைகள்
செல்லும் வழி
( ) இ. யதார்த்தன்
கறுப்புச் சாயக் களிக்குள் பூமிக்கோளம் புதைந்து கொண்டது. நினைவினில் எல்லாம் குளமாய்த் தேங்கின உயிரை இழப்பது வியர்வை துடைப்பதுபோல் இத்தனை உற்சாகமா
சாவென்பது தலைமயிரொன்றுதிர்வதா ?
முத்துச் சிமிழாய் இத்தனை மகிழ்வு முகத்தில்
மணவறை வெளிநாடு . மேற்கல்வி. எல்லாம் மனவெறுப்பில் தொலைந்தன மக்களின் உயர் வாழ்வே நினைவில் பூத்தன
கடிகார முட்கள் காவிய நேரத்தைக் காட்டியாயிற்று "சக்கை வண்டி" யில் ஏறிக்கொண்டான் திக்குத் தெரியாத இருளில் * வண்டி’* கண்ணில் மறைந்தது கைகள் அசைவது போல் நினைவினில் தெரிந்தன கன வேளையின் பின்
ஒளிப்பிளம்பு.
* வெடிமருந்தேற்றிய கரும்புலிகளின் படகு,
ஆடி , 1994

வெளிச்சம் கவிதைகள் 61
சிவப்பு விடியல்கள்
() இத்தாவில் க. சிவராசா
இருள் உதிர்ந்து விடிவவிழ்ந்து பிறை நிலவும் மங்கும் கிணற்றடித் தென்னையில் குரும்பட்டி தெறிக்கும் காவோலைக் குவியலுள் கண்மடல் விரியா நன்றியுள்ள ஜீவன்கள் . மறிக்குட்டிகள் வெளித்திண்ணையில் துள்ளிப்பாயும் வெள்ளைச் சீருடையில் மழலைப்பட்டாளம் சிரிப்பையும் ஏந்தியபடிக்கு எதிர்காலக் கனவுகளோடு
காற்றுக் குருவிகள் சரேலென இரைதேடித் தாழும். ? எங்கும் புகை மூட்டம் வேம்பில் ஒட்டிக்கொண்டன; சதைத் துணுக்குகள் மட்டுமல்ல பேரினவாதத்தின் முத்திரையும்தான். கிணற்றடித் தென்னையில் அணில் குஞ்சு அவலமாய் அநாதையாய் உடுப்புத் துவைக்கும் கல்லுடன் மறிக்குட்டி விறைத்தபடி முற்றத்து நித்தியகல்யாணி சிவந்திருக்க பிரதான வீதிமட்டும் பேச்சு அற்றுப்படுத்திருக்கும் சிதிலமாய் ஆகிவிட்ட வெண்புறாக்களை கூவியபடி அம்புலன்சுகள்
அள்ளிச் செல்லும் எங்கள் மண்ணின் காவல் தெய்வங்களும் கூடவே எப்பவும்தானா இந்தச் சிவப்பு விடியல்கள்.: என்றாலும் பாடசாலையின் ஆரம்பமணி துல்லியமாய், ஓங்காரமாய் ஒலிக்கும்.
ஆடி, 1994

Page 35
62 வெளிச்சம் கவிதைகள்
ஈழ இதயம் பிடித்த புலி வீரனின் புகைப்படம்
0 ச. வே. பஞ்சாட்சரம்
எற்படமாய் ஈழத்தாய் இதயம் உணைப்பிடித்த சொற்படந்தான் இதுபாராய் சோராப் புலிவிரா ஒரு தாய்கொள் பலசேய்க்குள் ஒருசேய் நீ அல்லை; எண்ணி உருகுபல தாய்பெற்ற ஒரு சேய்க்குள் ஒரு சேய் நீ!
குழம்பிடும் உன் மண்மீட்கும் கொள்கையினை என்பதனால் ஒளித்துன்தாய், குடும்பத்தில் ஒட்டாமல் திரியும் நீ.

வெளிச்சம் கவிதைகள் 63
மண்மீட்கும் உன்பற்றை வைரிக்கச் செய்வதனால் தண்ணெனவே ஊர்த்தந்தை தாயரிடம் ஒட்டுகிறாய்!
உந்துவில் ஈர் உருளியிலே உன்கால்கள் தேடீழம் சொந்தக்கால் இல்லையெனில் துதிக்கப்போய்த் துடிக்கிறது! சில்லுடைந்த வண்டியெல்லாம் தெருவோரத் தவமுனிவர்! சில்லுடைந்தும் நீ வானில் திரிந்தடிக்கும் ஏவுகணை! தப்பாத வெற்றிபெறும் தாக்குதலைச் சயினைற்றுக் குப்பிக்குங் கொடுத்த இன்றைக் குமணவள்ளல் மார்நீங்கள்!
அந்நியனை நோக்குதல்போல் ஆசைகளை நோக்குகிறார். தன்னொருவன் ஆட்சிக்காய் சனித்ததிந்த நாடென்ற மன்னவர்தம் மமதைகொல்லும் வரலாற்றுத் தொடர்கதைதன் பின்னிணைப்பு நீ! செயலால் பேசாமற் பேசுபவன்! கொழுத்தவனே வாழுகின்ற குவலயத்தின் வரலாற்றை அழித்தெழுதும் போர்முறையை அகிலத்துக் கீந்தவன் நீ! உன்விஸ்வ ரூபத்தில் ஓங்கு அதர்மச் சாம்பல்மலை தன்னிலெழுந் தழகுமணம் தருங்கொள்கை மலர்வனங்கள்
சமுத்திரப்பே ரலைக்குதிப்பும் தாவாதுன் முழங்கால் மேல் இயமஉச்சியும் உன்றன் இடுப்புக்குங் கீழேதான்! தன்னையே கெடுக்கின்ற ""நான்' கொண்டோம் மலிகாலம் உன்னையே கொடுக்கின்ற நான்மட்டும் உடையவன் நீ! இனிமையெல்லாம் குத்தகையாய் எடுத்துநிற்கும் காய்தான் நீ! கனிகளில்தான் இனிமையென்ற கதைபொய்க்க வைத்தவன் நீ வக்கணையும் வாழ்த்துகளும் வழுக்கிவிழும் வழுக்குமரம்! மக்களுக்காய் மக்களினால் மக்களுக்கென் றானவன் நீ!
qygu'u ar é?, 1994

Page 36
64 வெளிச்சம் கவிதைகள்
இத்தனை துயரம் எத்தனை காலம்
( ) வேலணையூர் சுரேஷ்
பண்டைத் தமிழ்ப் பரம்பரையின் பண்பாட்டுக்கு இலக்கான பூமியில் நண்டைப் பிடித்து வந்து

வெளிச்சம் கவிதைகள் 65
தாலு பணம் உழைக்கும் . . தொண்டைத் தொழிலாக கொண்டவர் நிலமிது. கொண்டைக்குப் பூச்சூடி கோடி யழகு பார்த்திங்கே. இன்றைக்கு வழியின்றி இருப்பவர்போல் அல்லாமல் வண்டைப்போல் தேன்குடித்து வாழ்வு மணம் வீச வாழ்பவர் குலமது! சண்டைக்கு எனச்சொல்லி அயலில் வந்து குந்திய எதிரிகளால் என்றைக்கும் துன்பமென்று தெரிந்திருந்தும் அச்சமின்றி துயின்றுபழகிய ஊரதில் அன்றைக்கும் அப்படித்தான்; அழகான அவ்வூர் அமைதியாய்த் துயின்றது. பாதியிரவின் பயணம் தொடர்கையில்தான் எதிரி ஊதியனுப்பிய எறிகணை மோதி வீழ்ந்து வெடித்தது பீதியுற்ற உயிர்கள் எழுந்து துடித்தன. நீதியற்ற செயலால் இங்கே நின்ற மரங்கள் முறிந்து சரிந்தன மூன்று குழந்தைகள் மூச்சை இழந்தன கன்றை இழந்த கறவை அழுதது அன்றைய கொடுமை அகன்றே சென்றது. இத்தனை துயரம் எத்தனை காலம்? என்று அவ்வூர் எழுந்து நிமிர்ந்தது. ஒன்றல்ல. நூறல்ல. ஒராயிரம் கல்லறைகள் இன்னும் எழுந்தாலும் பறுவாயில்லை! நன்றல்ல என்று தெரிந்திருந்தும் நாட்டிற்கு துயரிழைத்தவரை இன்றல்ல என்றைக்கும் விடமாட்டோம்; என்றதல்வூர்
ஐப்பசி, 1994

Page 37
66 வெளிச்சம் கவிதைகள்
தாத்தாவும் பேரக்குழந்தையும்
இளையவன்
"கிட்டுமாமா பூங்கா பார்க்கப் போவம் எட்டி நட! தாத்தா எட்டி நட!"
பேரக் குழந்தை இழுத்த இழுப்பில் பொக்கை வாயால் சிரித்தபடி தாத்தா போகிறார்.
வாளேந்திய சங்கிலியனின் தாழ் பணிந்துமே தாத்தா நிற்க பேரக் குழந்தை உள்ளே போனது.
மேலும் கீழும் போய்வரும் சீசோ ஆடி மகிழவோ, வீசி ஆடும் ஊஞ்சலில் ஏறி விண்ணைத் தொட்டு வரவோ, மலை முகட்டில் ஏறி நின்று மண்ணைப் பார்த்துச் சிரிக்கவோ, தொங்கு பாலத்தில் மெல்ல ஊர்ந்து சீமெந்து தரையில் சறுக்கிப் பார்க்கவோ குழந்தை போவதாய் எண்ணிய தாத்தா

வெளிச்சம் கவிதைகள் 67
ஏமாந்து தான் போனார். மகிழ்ச்சியை விற்கும் * சதுட்டு உயண' வை மனதில் இருத்திய தாத்தா பூங்காளின் புல்வெளிகளில் பேரனைத் தேடினார் ஊஞ்சலில் பார்த்தார். சறுக்கி விளையாடும் சீமெந்து வளைவுகளில் ஐஸ்கிறீம, சொக்லேட் விற்கும் கடையின் வாசலில் சுற்றிச் சுழலும் மெரிக்கோ ரவுண்டில் மேலும் கீழும் போய் வரும் காரில் ஸ்பிறிங்கில் இயங்கும் குதிரையில் எங்குமே அவன் தலை தென்படவே இல்லை. வருத்தம் மேலிட தாத்தா ஒதுங்கி ஒரமாய் போனார்.
*யாழ்தேவி" என ஓடிவந்த
இரும்புப் பூதம்
அடிபட்ட நாகம் போல் இறந்து போய்க் கிடந்தது. அனலைப் பொழிந்த குழாயின் நுணியில் பேரக் குழந்தை சறுக்கி மகிழ்ந்தது. கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி கொழும்பு வாங்கிய இரும்புப் பூதம் ஒடி ஒடி உழைப்பவர் செயலால் குழந்தைகளுக்கோர் குதூகல பொருளாய்.
"சங்கிலியன் இருக்கும் கற் குதிரையல்ல இது எங்கள் தலைமுறையின் குருதியில் வாங்கிய இரும்புக் குதிரை" குழந்தையின் வார்த்தையில் பூரித்துப் போனார் எங்கள் தாத்தா.
gojua , 1994

Page 38
68 வெளிச்சம் கவிதைகள்
ஊர் வீதி
FLUIT Guy TFIT
எங்களுர்த் திண்ணைகள் அடைமழைக்குப்பின் ஈரமாகிய கனவுகள் சுமக்கும். குத்து விளக்கும் கும்பமும் சூடிய சித்தம் அழகியார்சிறுகை கூப்பினர். ஊதுகுழலும் குரும்பைச் சிறுதேரும் அந்த இளமைக் காலத்து அழகியல்
எங்கள் கிராமத்தில் சூரன்போர் என்றால் சொல்லில் அடங்காச் சிங்காரம் , சூரன் மாவில் ஏறிவருதலும் கோவிலைச் சுற்றிச் சுழல்வதும் அந்த இளமைக்காலத்து அழகியல்
அந்தக்கிராமத்து அழகைத் துறந்து எங்கெங்கோ எல்லாம் ஒடிப்பறந்த காகங்கள்! மெல்ல விரிந்த கிராமத்துப் புல்வெளியில் ஆலமரங்கள் அழகாய் வளர்ந்தன. நீண்ட நெடிய தூண்கள் பரப்பிக் கால ஓட்டத்திற் கால்கள் பரப்பின. மீண்டும் அந்தக் கிராமத்திற் புதிய கனவுப் பூக்கள் மலர்ந்தன.
ஐப்பசி, 1995

வெளிச்சம் கவிதைகள் 69
உயிரைச் சுமத்தல்
() விவேக்
உயிரை சுமந்து திரிதல் எவ்வளவு கடினமானது என்பது இப்போதுதான் தெரிகிறது. உயிர் பாரமாய் அழுத்துகையில் மானமும் வாழ்வும் நசிகிறது.
காற்றென இருந்த உயிர் கடினமானது எங்ங்ணம். ? வெடியோசைகள் உலுப்பிய ஓர் பின்னிரவில் தான் அது நடந்தது. அந்த நொடிப்பொழுதில் பாரமாய் உயிர் அவனைப் பற்றிக்கொண்டது.

Page 39
70 Gosnusfģgo கவிதைகள்
ஊர், சுற்றம், உறவு, வீடு என அனைத்தையும் உதறி உயிர் அவனைத்தள்ளியது. தலைமீது உயிரைச்சுமந்து ஓடிவந்தான்.
பிரதான வீதி உருக்குலைந்த கட்டடம் இன்று அவன் உறைவிடம். அருகேயுள்ள முனியப்பரிடம் தினசரி செல்கிறான். அப்பால் சென்று கடலைப்பார்க்கிறான். எதுவுமே தெரியாதது போல் மெளனமாய் விரிந்து கிடக்கிறது &st -6). கரைமணலில் கால்புதைய கடல் கடந்து விழியெறிந்து அவன் நிற்பான் கலங்கலாய் தெரியும் அவனது மண். கையசைப்பதாய் சில பனைகள். பிரிவின் துயரம் சிறகு கட்டிக்கொள்ளும். தூக்கமின்றி இரவுகள் தொடரும் மூலையில் சுருண்டுபடுக்கையில், மேலே உடைந்து தொங்கும்
கொங்ற்ட்" சுவர் என்றோ ஒர் நாள் அவன் தலையில் விழலாம் அவன் இப்போது அதற்கு கவலைப்படுவதில்லை. அவன் உணர்கிறான் "உயிர் பிரிதல் சாதாரணமானது உயிரோடு ஒன்றைப்பிரிதலே மிகவும் கொடுமையானது.
ஐப்பசி , 1994

வெளிச்சம் கவிதைகள் 71
யார் அனுமதித்தது?
() சத்துருக்கன்
நடுநிசியில் நாய்குரைத்து தூரஒடியது. சடாரென எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தவிழிகளில் பாரம் நிறைந்தது.
எதிரில் நின்ற கருமையைக் கண்டு, உயிர் வரண்டு போயிற்று. புரியாத பாசைகள் அறியாத அந்நிய முகங்கள் சூழவந்த இனிய தென்றலைத்தடுத்து துர்நாற்றம் சூழ்ந்தது. இருளிலும், வன்மம் பூத்த அந்த விழிகள் நெஞ்சைத் துளைத்தன. பேச்சில் தெரிந்தது, வெறிபிடித்தோ ரென்று. சற்று முன்பெல்லாம் இனிய காற்றில் இதமாய்த் தூங்கினேன் ஏன் இந்த திடீர் மாற்றம்? அருகில் நின்ற நாய்க்கு பிடிக்காத நாற்றம் எனக்கு எப்படி இதமாகும்? இதுவரை நான் சுவாசித்த இதந்தரு காற்றில் தூசிபடர்ந்து மாசடைவதா? துர்நாற்றம் வீசுவதா?
8gծւյժ , 1994

Page 40
72 வெளிச்சம் கவிதைகள்
சிலையின் உயிர்
இளந்திரையன்
இராப்பகலாய் மாபெரும் இடர்மலை குடைந்தெம் சிலை மீதான தேடலில் நாம்.
நமக்கெனச் சொந்தமாய் சிலைதனைச் செதுக்குகின்றோம்; நம் இனத்தின் சிதறிக்கிடந்த அடையாள முத்துக்கள் ஜொலிக்கும் படியாய் அதிற் பதித்து நவீனமாய்
பிரமாண்டமாய்.
சொந்த அடையாளத்திற்காய் கெளரவமான பாரம்பரியத்திற்காய் அது தேவை நிச்சயமாய்
நமக்கு!
எம் உயிர் குழைத்த உழைப்பின் நிமித்தம் உயிர்பெறும் நமது சிலை!
எம் உயிர் குழைத்த உழைப்பின் நிமித்தமே உயிர்பெறும் நமது சிலை!
மாசி , 1995

வெளிச்சம் கவிதைகள் 73
ஊருக்குத் திரும்புதல்
0) புதுவை இரத்தினதுரை
கால்களில் வேகம் பூட்டி: காற்றாய் விரைவோம்.
L045(36n !
கால்கள் வலிக்கிறதா ?
கலங்கிாதே, ஊருக்குத் திரும்பும் மகிழ்ச்சியில் தூரம் குறுகிவிடும், இன்னும் சொற்ப தூரம்தான் மகளே எட்டிநட. எம்மைப் பிடித்த பீடையொழிந்தது. இருட்டு அழிந்தது. எங்களுரில் வேர்விட்டிருந்த கள்ளியும், நாகதாளியும் இல்லாதழிந்தனவாம். நெருஞ்சியும், நாயுருவியும் நீறாகிப் போயினவாம். இனித் தென்றல் வந்து தோளிலேறி விளையாடும். மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும் மாடுகளின் மகிழ்ச்சியல்லவா எமக்கு? மகளே! நின்று; விழிகளைத்தூரவீசு. அந்தோ ஊரின் எல்லை தெரிகிறது.

Page 41
74 வெளிச்சம் கவிதைகள்
அந்த வயல்வெளிகளைக் கடந்து விட்டால் அதற்கப்பால் பனைக்கூடல் ஒன்று வரும். அதையும் கடந்து நடந்தால். மணிப்புறாவும், ஆட்காட்டியும், கெளதாரியும் குடியிருக்கும் பரந்த வெளி விரிந்து கிடக்கும். அதையும் கடப்போம்
அதற்கப்பால் வெள்ளைமணல் விரித்த கடற்கரை வரும் ஈரம் சுவறிய கரையின் மீது பாதம் நனைய நடந்து போனால். "பூதவராயர் கோயில் வரும் அந்தக் கோயிலின் பக்கமாகவே முன்னரெம் குடியிருப்புகள் இருந்தன. மகளே! அப்போது உனக்கு இரண்டு வயது திடுமென ஒருநாள் எங்களூருக்கு 'இயமன்' வந்தான் அவனோடு ஆயிரம் " " கிங்கரர்" வந்தனர். ஊர்முழுவதும் தீக்குளித்தது. எண்ணையூற்றி எரித்ததால். ஊரின் முகம் கருகிப் போனது. வீடு - வயல் - தோட்டம் - துரவு கோயில் - பசு - கன்று - மரங்கள் ஆண்கள் - பெண்கள் - சிறுவர் - கிழடுகள் எல்லாமே எரிந்து போயின. கோயிற் கிணற்றில்
தண்ணிாள்ளப்போன
உன்தாயும் நெசவடிக்கப் போன உன் அக்காவும் அன்று வீடு திரும்பவில்லை. மீண்டும் வரவேயில்லை.
அன்று உன்னை வாரியெடுத்து ஓடி வந்தேன். அதன்பிறகு இன்றுதான் வீடு திரும்புகின்றோம். மகளே! எங்கள் வீடு பத்து வருடங்கள் நாங்களிருந்த அகதிமுகாம் போன்றதல்ல .

வெளிச்சம் கவிதைகள் 75
மகளே! அது அழகான வீடு. அத்திவாரத்திலிருந்து "கோப்பிசம்" வரையும் என் வியர்வையில் நனைந்தவீடு முற்றத்தில். . . உன் அக்கா வளர்த்த பூங்கன்றுகளின் முகங்கள் தினசரி சிரிக்கும். விதம், விதமான நிறங்களில் கொள்ளையழகு குடியிருக்கும். கிணற்றடியில் செவ்விளணிர்க் கன்று குலைதள்ளியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு வேப்பமரங்கள் தலையாட்டிச் சுகம் கேட்க ஜில்லென்று காற்று வீசும் குயில்கள் வந்திருந்து கூவும். மைனாக்கள் ஏதேதோ பேசும் . உன் வீடு அழகானதென்பதை பார்த்ததும் ஏற்றுக்கொள்வாய்.
மகளே !
ஐயோ என்மகளே! பூதவராயர் கோவிலைக் காணவில்லையே. என்னயிது? பூமி பிளந்து என்னை விழுங்குகிறதா? LD5C36T இதுதான் எங்கள் வீடிருந்த இடம். இங்கேதான் அந்த வேப்பமரங்கள் நின்றன. அப்போ எங்கள் வீடு எங்கே? என் மனைவி எங்கே? உன் உடன்பிறப்பு எங்கே? பன்னிரண்டு வயதான
என் சின்னமகளே!
விடுதவைக்கு நாங்கள் பெரிய விலை கொடுத்து விட்டோம். வா மகளே!
இந்த இடத்தில் இனியொரு கொட்டில் கட்டிக் குடியிருப்போம்.
பங்குனி , 1995

Page 42
76 வெளிச்சம் கவிதைகள்
இருள் விலகி விடிகிறது; இனி நிலம் வெளிக்கும்
புதுவை இரத்தினதுரை
இரவு முழுவதும் மழை சோனாவாரியான சொரிவு போர்வைக் கணப்பில் தூக்கம் ஆனந்தமானது இரவு. விடிந்து வெளியே வந்தபோது முற்றம் வெள்ளம் நிரம்பி விறைத்துக் கிடந்தது. போர்வையை விலத்தியபோது ஊசிபோல் குத்தியது குளிர், மனைவி மூட்டிய அடுப்பருகே குந்தியிருப்பதில் சுகம் வெளியே இறங்க வெய்யிலுக்குக் காத்திருந்தபோது "ஷெல் 'லொன்றின் கூவல் திடுக்கிட வைத்தது. எவர் வீட்டுக் கூரையில் இது விழும்? யாரைக் கொல்லும் ?
மரங்களின் மேலோ மாடுகள், ஆடுகள் மேலோ வெற்றுத் தரையின் மேலோ விழும்? எங்கோ உயிர்பறிப்பை இதுசெய்யும்.

வெளிச்சம் கவிதைகள் 77
இந்த அடைமழைக்குள்ளே அந்த வீடு எத்தனை வதைபடும். கூடி அழும் எவரையாவது இழந்து தனித்துப் போகும். அடுத்த குண்டு என்பிள்ளை மீதிலும் என் வீட்டின் மீதிலும் விழலாம் ஏன்; நானே அதற்கு இலக்காகலாம். இது என்ன அவலம். இந்த வாழ்வுக்கு என்ன பெயர்? நேற்றுப் பாடசாலைக்கு வந்து "போர்க்கால கருத்தரங்கு" நடத்திய பெடியன் "அடிமை வாழ்வு" என்றானே அது இது தானா? இரவு முழுவதும் நான் தூங்கினேன் ஒரு மழைத்துளிகூட என்னில் விழவில்லை இந்த இரவை அந்தச் சின்னக் குருத்துக்கள் எப்படிக் கழித்திருக்கும்? எதிரின் வரவை எதிர்பார்த்தபடி மழைக்குள்ளும், குளிருக்குள்ளும் காவலரணில் விழித்திருப்பார்கள் எனக்கு முழுதாய் விளங்கவில்லை ஆயினும்
போராடும் வாழ்வு பெரியது. அதில் அழகும், அர்த்தமும் உண்டு. அடுத்தவருக்காக சிலுவை சுமப்பதற்கு எல்லோராலும் இயலாது. காவலரண்களில் கண்விழித்திருந்த சின்னப் பூக்களுக்குச் சிரம்சாய்த்து சைக்கிலேறி வெளியே புறப்பட்டேன். நல்ல மீன் வாங்க வேண்டும். முடியுமானால் இறைச்சி வாங்குவோம். ஒரிரண்டு போராளிகளை வீட்டுக்கழைத்து இன்று விருந்து கொடுக்க வேண்டும். என்னால் முடிந்தது இதுதான்.
வைகாசி, 1995

Page 43
78 வெளிச்சம் கவிதைகள்
ஒற்றைக் குரலின் சப்தம்
( ) கருணாகரன்
இரத்தத்தில் நின்று பல்லிளிக்கிறது கண்ணிரைத் துடைக்கும் வகையாறியாச் சாலை, சதாவெறுமையில் நின்றழுகின்றன விருட்சங்கள் புன்னகையும் கீதமுமில்லை என்ற துக்கம் வேர்களில் வடிந்திறங்க
நின்றழுகின்றன விருட்சங்கள்.
அதன் முதற்காலத்தில்
அது எல்லா உலகங்களையும் தன்னுடன் வைத்திருந்து இறுமாந்த தெருத்தான். பூச்சூடி அலங்கரித்து போதும் போதும் என்ற மயக்கத்தில் அது இராப்பகலென்றில்லாது விருந்தெல்லாம் வைத்தது. பிறகு,
எல்லாம் சுடுகாடாயிற்று. இரத்தச் சிதிலமும் சிறகின் துடிப்பும் விருட்சங்களைக் கதற வைத்தது. மல்லாந்து இறந்து கிடந்தது சாலை. ஒரு குருவி இடம் தேடிவந்து விருட்சமொன்றில் மோதி வீழ்ந்தது. ஷணத்தில் அது எல்லாவற்றையும் பார்க்கும்படியும் ஆனது. ஷணத்திலேயே அதன் கண்கள் உருகி அழிந்தன. இறந்துபோன விருட்சத்தில் மோதியபட்சியின் சிறகுகளும்கருகின. இறந்துபோன சாலையில் இற்றுப் போகும் மரங்களில் பட்சியின் துயரம் எதிரொலிக்கிறது
பங்குனி , 1995

வெளிச்சம் கவிதைகள் 79
தலை தெறித்த மனிதர்கள்
() கருணாகரன்
என்ன நிகழ்ந்தது?
யாரின் கைகால்களை எந்தத் தேவதை வருடியது? வேர்கள் பற்றிய எந்தக் கவலையுமின்றி மரங்கள் பறந்தன வானத்தில்
இலைகளா வேர் பிடித்துக் கிடப்பது?
புராணங்களையும் இதிகாசங்களையும்
கழுகுகள், காகங்கள், நரிகள் பற்றிய கதைகளையும் மறந்துபோன மனிதர்கள்

Page 44
80 வெளிச்சம் கவிதைகள்
புன்னகை பூத்துத்திரிந்தார்கள். *தோண்டிய கண்கள்"
தானமாக வழங்கப்படுமாம்
*பிடுங்கிய பற்கள்"
திருப்பித் தரப்படுமாம்
இனி தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமொன்று நாற்பத்தாறாவதோ ஐம்பத்தாறாவதோ அதிசயமாக தங்கள் ஊர்களுக்கு வந்து விடப் போகிறதென்று கனவு கண்டார்கள் அவர்கள்
கொன்றை மரம் பருவந்தவறியும் பூத்தது புன்னையோ பூவர சோ எதுவோ எல்லாம் பாடத்தொடங்கின
இன்னும் ஏதோ ஆடின.
புறாவின் வருகைபற்றியும்
அதன் மகிமைபற்றியும்
மரத்தோடு மரம் பேசியது விஷ மேறிய புற்களையிட்டு இனிக் கவலையில்லையென்று மாடுகளெல்லாம் கத்தித் திரிந்தன.
மாரியா கோடையா என்றறியாக் காலத்தில் விதைப்புப்பற்றியும் அறுப்புப்பற்றியும் குழம்பிக் குழம்பி தலைதெறித்துக் கிடந்தார்கள் என் மனிதர்கள்.
நெருப்பைத் தின்னும் காலமென்ன தீர்ந்தா போச்சுதென்று மனம் பெருத்த மனிதன் கேட்டான் உண்மைதான்.
சிங்கமென்ன வாளைக் கீழேயா போட்டுவிட்டது?
ஐப்பசி , 1994

வெளிச்சம் கவிதைகள் 81
வேண்டாத புன்னகை
() மயன்/2
பலரை இங்கு காணவில்லை தேர்ந்த கவிஞர்கள் ஆருயிர் நண்பர்கள் சிறிதளவு பழகியவர்கள் நலமுடன் வாழ்க!
பாபம் செய்பவர்களை மோதி மிதித்து விடுதலும் அவர் முகத்தில் உமிழ்ந்து விடுதலுமே எமது தாரக மந்திரம். இதை மறந்தவர்கள் 'அட்ஜஸ்ட்" பண்ணத் தெரியவில்லையே என்பவர்கள் போய்வருக, சேர்ந்தவுடன் பெரிய மேடையாகப் போடுங்கள், ஓங்கி முழங்குங்கள் பாரதி குரலை, பத்து நாட்கள் நடத்துங்கள் விழாவை மின்விளக்குகளின் ஒளியில் .
உங்கள் சரிகை வேட்டிகள் ஒளிரட்டும். இல்லாதவர்கள் வாடகைக்கு எடுங்கள் மன்றத்தில் வழக்கைத் தொடருங்கள் உங்களுக்கா தெரியாது தலையங்கம் அமைக்க பாரதி புரட்சிக் கவிஞனா? ஆன்மீகக் கவிஞனா? பட்டிமன்றத்தில் முடிவெடுக்காதீர்கள் பின்பு அதுவே உங்களுக்கு வசதியாக அமையும். எமக்கும் இந்தச் செய்திகள் கிடைக்கும். சிரித்துக் கொள்வோம். ஒரு நன்மை இருக்கிறது நீங்கள் போனதில். எமக்கு வேண்டாத புன்னகையொன்று உதிர்த்திடத் தேவையில்லை அதற்காக உங்களுக்கு நன்றி.
சித்திரை, 1995

Page 45
82 வெளிச்சம் கவிதைகள்
போருள் நானும் என்னுள் போரும்
() சிவஞானம் ஜெயசங்கர்
Lрат двTLDGg! புத்தபகவானின் பெயரினால் யுத்த சன்னத்தராக உலா வருவோரே!! போர்வெறியர்கள் போதிசத்துவர்களாக உலா வரும் நாட்டின்
ஆதிக்கத்துள் கிளரும் தமிழ்க்கவிஞன் நான்.
மகா நாமரே! நிராயுதபாணியான ஒரு சமூகத்தின் மீது **போரா? சமாதானமா? சூளுரை செய்தோரே !
யதார்த்தம் என் முகத்தில் அறைந்து சொல்லிற்று,
"நீயொரு மனிதனாகு!

வெளிச்சம் கவிதைகள் 83
மனிதனின் கவிஞனாகு!! மனிதத்தை உன் பாடுபொருளாக்கு!!!" என்று.
வல்லமை கொண்டன என் கவிதையின் வரிகள்
புல்லிதழ்களாலும் பூவிதழ்களாலுமான எனது சொற்கள் உலோத்தகடுகளாலும் வெடிமருந்துகளாலும் மாற்றீடு செய்யப்பட்டு விட்டன.
வல்லமை கொண்டன என் கவிதையின் வரிகள்
இருட்டினில் அலையவிடப்பட்டுள்ள எனது மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடிக்கப்பட்டுள்ள எனது மக்களின் குரல் வளையில் உம்கொடுங்கரங்கள் இறுகப் பதியினும் வீறுகொண்டெழும் எனது மக்களின் விடுதலைக் குரல்போல்
வீரியம் கொண்டன என் கவிதையின் வரிகள். சமாதானத்தின் குரலுக்கு செவிடாகிப்போன உமது செவிகளுக்கு வெடிகுண்டுச் சத்தங்களையே கேட்க முடிவதை எமமால் நன்றாகவே உணர முடிகிறது. ஆதலினால் வார்த்தைகளும் சன்னங்களாகின. L Dp G623oTLD
உங்களது முற்றங்களிலும் உதிர்க்கும் பொழுதிலேயே அதன் வாசனையை உங்களால் நுகர முடிவதை எங்களால் நன்றாகவே உணர முடிகிறது.
எங்கள் முற்றங்களில் மரணத்தை வளர்ப்போரே ! துயரம்
எங்களை வீரர்களாக்கிற்று!
போருக்கும் சமாதானத்திற்கும் தயாரான சமூகத்தின் கவிஞனாய் உம்முன் வந்தேன்.
புரட்டாதி, 1995

Page 46
84 வெளிச்சம் கவிாை" "
/ காதலின் புதிய பரிமாணம்
( ) நாமகள்
இப்போதெல்லாம் அவனை அடிக்கடி காண முடிவதில்லை. சற்றுத் தொலைவில் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தான். என் பாதைகளை
மாற்றியும் கூட, அவனை அடிக்கடி காண முடிவதில்லை.

வெளிச்சம் கவிதைகள் 85
முகாமின் வாசலில் அவனது வாகனமோ தோழர்களோ நிற்கக் கூடும். எல்லாவற்றையும் தாண்டிய தேடலாய் W என் பார்வை விரியும்.
அவனுடைய
ஒவ்வொரு அசைவும் என்னுள்ளே மனப்பாடமாகியிருக்கிறது. கடிதங்களோ அவனருகிலாய் உணர்த்தும் ,
கடிதங்களை மீட்டலில் பதிவுகளை வெளிக்கொணர்தலில் காலம் நகர்த்தலாய் கழிவுறும் நாட்கள்.
எப்போதாவது,
தெருவில் அவசர இயக்கத்தில் கண்டுவிட நேர்கையில், சந்திப்பை வரவேற்பதாய் அவன் கண்கள் ஒரு முறை விரியும்; மறுகணம ஆழ்ந்து மூடிக் கொள்ளும் அவனுக்குத் தெரியும் எனக்கும் அது போதுமென்று.
புரட்டாதி, 1995

Page 47
86. வெளிச்சம் கவிதைகள்
யதார்த்தம்
() நாமகள்
ஒரு கணம் தான்
அதிலும் குறைவாகக் கூட இருக்கலாம், யாருமே எதிர்பாராமல் அது நிகழ்ந்தது.
அந்தச் சந்தியை கடந்து கொண்டிருந்தவர்கள், தேநீர்க் கடையினுள்ளே அமர்ந்திருந்தவர்கள், மண்ணெண்ணெய்க்காய் வரிசையில் நின்றவர்கள் எல்லோரையும் தாண்டி அவனுக்கு முன்பாய் நிகழ்ந்த வெடிப்பு. மேலே விமானங்கள் இல்லை; ஷெல்தான்.
அவன் ஒரு முறை மேலெழும்பி கீழே வீழ்ந்தான். எந்தச் சத்தமுமில்லை. கத்த நினைப்பதற்குள் அவன் இறந்திருக்க வேண்டும். வெடிப்பின் அதிர்வில் அவன் கத்தல் கேட்காமலும் போயிருக்கலாம். எதுவும் சொல்வதற்கில்லை சனங்கள் திடீரென ஒதுங்கிப் போனார்கள். தேநீர்க் கடையின் பாட்டுக் கூட நின்று போயிருந்தது. வெறிச்சோடிய வீதியில்

வெளிச்சம் கவிதைகள் 87
அவன் மட்டும் தனியாகக் கிடந்தான். கையொன்று வீதியின் மறுகரையில் விரல்களை நீட்டியபடி யாரையோ குற்றஞ் சாட்டுவதாய்
சில நிமிஷங்கள்தான்.
"அம்புலன்ஸ்" வந்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனது. எஞ்சியதாய் கொஞ்சமாய் அவனது இரத்தம் ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள் ஷெல் துண்டுகள் அவ்வளவு தான்.
வாகனங்கள் அவற்றையும் துடைத்துக் கொண்டே கடந்தன.
வீதியில் இப்போது எதுவுமேயில்லை. எல்லாமே
பழையபடி ,
மண்ணெண்ணெய் வரிசை முன்பை விட நீண்டிருக்கிறது தேநீர்க் கடையிலும்
புதிதாய் ஒரு பாட்டு ஆரம்பமாகிறது சனங்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள் எதுவுமே நிகழாத மாதிரி.
φτά", 1994

Page 48
88 வெளிச்சம் கவிதைகள்
புதுமலர்கள் வாடாது
() வெள்ளை
பூத்து விட்ட புதுமலரே! ஏனம்மா வாடி விட்டாய் இளந்தளிரே! நீ பூத்த மறுநாளே புல்லர்கள் உனை அழித்துப் போட்டாரோ?
தாய் மடியில் நீ உறங்கும் வயதினிலே சாவு வந்து சேர்ந்ததா அத்தெய்வத் திருச்சபையில்
சாவுக்குப் பயந்தோடி இருக்க இடந்தேடி திரிந்தோரை இரக்கமின்றி அழித்தொழித்த பாவி எவன்தானோ? அவனுக்கும் சாவு வந்து சேராதா? எங்கள் துயரம் என்றும் ஆறாதா?
போரென்றால் புலியுடனே போரென்று உலகமெங்கும் கூறிக்கொண்டு ஒரு நொடியில் இருநூறு பேர் தன்னைப் புலியென்றா பலியெடுத்தாய்? தெய்வத் திருச்சபையும் புலிவாழும் குகையென்றா கணக்கெடுத்தாய்? நேற்றோடு எம் தேசம் நெருப்பாகிப் போயாச்சு இனிமேலும் எம்மண்ணில் இளம் பூக்கள் வாடாது.
ayatullars, 1995

வெளிச்சம் கவிதைகள் 89
முழுநிலாவுடன் மூச்சுக் காற்றுமாய்.
செ. பொ. சிவனேக
முற்றம் தேடி வந்ததென்கிறாய் முழு நிலா குளுமையும்
பால் வெளுப்பும் மாசு மறுவற்றும் இருந்ததென்றாய்
பின்னே;
முழி பிதுங்க முழுதாய் நிலாவை விழுங்கியதார்?
எப்போதும் போலவே மூச்சுக் காற்றோ கனன்றது இயல் பின் கலப்பிலும் மேலாய் மூச்சே பொசுங்கிடும் படியாய்?
உள்ளிழுக்கும் காற்றிலோ பிணங்களின் வாடை பச்சைக் குருதியின் காந்தல் கபாலத்துள் அதிர்ந்தது கந்தகம்!
வாய்வு முட்டிய வயிறுகளில் இரைப்பை நிறைய இரைச்சல் மட்டும்!

Page 49
90 வெளிச்சம் கவிதைகள்
உலாத்தலை ஒய்க்கவில்லை உன் கடற் பேய்கள் வலையோடு போவோரே வெறுங்கையராய் வருகின்றார்.
இடிந்த வாழ்வில் கட்டடக் குறியிடுகள் தன்னும் நிமிர்ந்தனவா உன் சொல்லால்?
பள்ளிக் குஞ்சுகள் பாடம் படிக்க மல்லுக் கட்டுவது கூசு விளக்குடன்!
பாலுக்குப் பாலகரோ வேண்டி அழுதபடிபாலாய் நிலவு மட்டும் பொழிகிற கதை பறைந்தாய்.
ஏதேனும் நல்ல மொழி உதிர்ப்பாய் என்றால் பேச்சுப் பெட்டகத்தை மூடிக்கொண்டாய் பற்றுகிற வயிறுகளில் பால்தான் வேண்டாம் நீரேனும் வாரேன் என்றால் தலை சிலுப்பி காளியானாய்!
இவ்வளவுக்குள்ளிருந்தா நிலாக் காட்டும் உனது பேய்க்காட்டை நம்பியிருக்க ?
சொல்,
முழி பிதுங்க முழு நிலவை விழுங்கியதார்?
ya corro, 1995

வெளிச்சம் கவிதைகள் 91
அசைக்க முடியாத ஆணிவேர்
( அலெக்ஸ் பரந்தாமன்
எரிகுண்டு வீச்சால் எங்கள் பயிர்களை நீங்கள் எரித்துக் கொள்ளலாம் .
ஆனாலும்
அதன்
ஆணிவேரை
உங்களால் அசைக்க முடியுமோ.. ... ?
யாரறிவீர்? அதன் இருப்பிடம்!
அது எட்டாத ஆழத்தில் மண்ணுக்குள் வைரமாக இருக்கும் வரை. எமக்கு எத்தனை இடர்வரினும் அதற்கு தாங்கள் எப்பொழுதும் நீர் விட்டுக்கொண்டுதான் இருப்போம்!
ஏனெனில் அந்த ஆணிவேர்தான் எங்கள் வாழ்க்கையின் அடிநாதம்.
ஐப்பசி, 1995

Page 50
92 வெளிச்சம் கவிதைகள்
ரயில் ஒடத்தொடங்குகிறது
மாவேலன்
ஊரோடு சேர்ந்து அவலஞ் சுமந்து ரயிலோடி வந்த பயணம் நெடுநாளாய் ரயில் நிற்கிறது
தரிப்பில்,
பெட்டிகள் எல்லாம் குடில் கட்டி வசிக்கின்றன.

வெளிச்சம் கவிதைகள் 93
இரவில் கூட
அவை விழித்திருக்கும் திரும்பிச் செல்லலாமென்ற வேகத்துடன்
வவுனியா, மட்டக்களப்பில் கடுமையான சூறாவளியாம் மன்னாரில் வெப்பம் மண்டையில் கொதிக்கிறதாம்! திருமலையில் கூட வெள்ளம் பெருகுகிறதாம்! எங்கு செல்வது ? இன்னமும் வந்த பாதையில் சிவப்பு "லைற் எரிகிறது; அங்கெல்லாம் அழிவு ஒயலில்லை. ஆனாலும் குந்தியிருப்பது எத்தனை நாளைக்கு?
பாதை நேராகத் தெரிகிறது உழைத்து ஓடிய ரயிலாச்சே! இனியும் தரிப்பில் துருப்பிடித்து நிற்பது இருப்பிழந்த தாகுமல்லவா?
பெட்டிகள் எல்லாம் ஒருங்கு சேர்கின்றன புதிய இரைச்சலுடன் மின்னலெழ இமயத் துணிச்சலுடன். சொந்த ஊரை நோக்கி ஒடத் தொடங்குகிறது ரயில்,
ஐப்பசி , 1995

Page 51
94 வெளிச்சம் கவிதைகள்
எதிரொலி
பரந்தனுாரான்
வெண் பஞ்சாய் இருந்த எம் நெஞ்சில் பாய்ந்த விஷ அம்புகளால் நாமே கருமுகிலாய்ப் போனோம் பழியுணர்வும்,
சீற்றமும், சூல் கொண்டு விட்டதெம்
FffTub!
இனி - காற்றடிக்கும் வேளை பார்த்து
இடி இடித்து மின்னலாய்
மழை பொழிவோம் எய்தவர் மேல் தாம்.
ஐப்பசி , 1995

வெளிச்சம் கவிதைகள் 95
கவலையும் களிப்பும்
[ ] தில்லைச்சிவன்
கட்டிலிற் கிடந்த நான் கணப்பொழுதில் சின்னச் சிட்டாகிச் "ஷிவ்" வென்று சிறகடித்து என்வளவின் கட்டைப் பனை வடலிக் கங்கிற்போய் இருந்தேனா! கட்ட்ைப் பனை வடலி காவோலைக் கை பரப்பி எட்டித்தன் மார்பிலடித் தெனக் கிழவு சொன்னதுவே!
''LL“ u9 LDSG6or Lumf†, Lumur -tr 9)äGS Luftf குட்டிச் சுவர் நான்கு குடிற்கால்கள் சரிந்தபடி வட்டிற் சோறுாட்டியுனை வளர்த்தவள் வாழ்ந்தமனை சொக்கப் பனையாகிச் சோதியாய் போனதடா.

Page 52
96 வெளிச்சம் கவிதைகள்
முற்றத்து வேப்பமரம் மூளியாய் உறுப்பிளந்து குற்றுயிராய், நாளைக்கு கொண்டு செல்வார் விறகாக ஒக்கல் உறவென்று ஊரில்லை ஒரு சில பேர் செக்கிழுத்த மாடுகள் போல் சென்றார் பின் காணவில்லை.
சந்திகளில் ஒன்றிரண்டு சவம் போகப் பார்த்த துண்டு, பந்தியாய் வெவ்வேறு பட்டாளத் தான் வருவான், முந்திவந்தோர் செய்வதெல்லாம் மோசம் எனக் குறைகூறி சந்திவரை மனைகள் எலாம் தரைப்படுத்திச் சென்றிடுவான்.
காற்றோடக் காவோலை கலகலக்கக் கதிகலங்கி தேற்றாதே தேம்பித் திசையெல்லாம் சுட்டபடி மூச்சிரைக்கும் இலங்கை முண்டர் படை அடவோபோ ஆற்றாதே ஒடும் அவலங்கண் டதிசயிப்பேன்.
வேளை தவறாது விளக்கு வைத்த கோவில் எல்லாம் பாழடைந்து விக்கிரகம் பயணித்த கப்பலிலே மாலை வருவார்கள் மது வருத்திக் கூத்தாடும் சாலை இவையாகத் திகம்பரசாமிகளும். சரிசரிபோ" கோலப் பனை வடலி கொட்டாவி விட்டுரைக்கும்;
தூரத்தே இரண்டு தொடர்ந்த பனந் தோப்பு ஒரத்தே தெரிந்த ஒரு சில வீடுகளில் ஆரிவரோ வென்று அதிசயித்தேன், ராணுவத்தைப் பாரங்கே என்று பனை சொல்லக் காரிருளில் நேரே சிலர் எம்முன்னும் நிலையெடுத்து நின்றார்கள்.
சட்டச் சடசடசட் சட்டென்று திசை முழுதும் வெட்டி மினுக்கி விழுங்குண்டின் ஒலி கேட்டேன் பட்டப் பகலாக்கி ஒளிக்குண்டு மேல் நிற்க "சுட்டுப் படை வீழ்த்திப் புலிவிரர் ஆயுதங்கள் கட்டாக ஏற்றிக் கடல் கடந்தார்" எனப்படித்தேன்.

வெளிச்சம் கவிதைகள் 97
வெண்தாமரைக் காலம்
T) ந. சத்தியபாலன்
நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்து நிலவென்று ஒளிமுகம் காட்டுவது தண்மதியென நம்பியோர் மூடராயினர்

Page 53
98 வெளிச்சம் கவிதைகள்
காலங்காலமாய் இம்மண்ணில் தமிழர் உயிரும் உடமைகளும் விழுங்கிச் சுவாலித்ததீயே இன்று நிலவென்று வானேறிக்கொண்டது. இன அழிப்பு யாகத்துக்கு கொள்ளிகொளுத்த இன்று
உதவுவது இந்த நெருப்புக் கோளம்தான்! அறிவுத் தெய்வம் குடியிருக்கும் கோயிலென என்னம்மா கற்பித்த வெள்ளைத் தாமரையை இன்று ஒரு துர்த்தேவதை கையிற் கிள்ளி வைத்துக் கூத்தாடுகிறாள். விரிந்த அதன் இதழ்களிடை எங்களூர்ப் பாலகரின் சிதறிய உடற் துண்டங்கள்! தடாகம் முழுவதும் இரத்த நொடி!! சேற்றில் விழுந்து முழுகி விழி பிதுங்கித் தவிக்கிறது பெளத்தம்!!!
கார்த்திகை , 1995

வெளிச்சம் கவிதைகள் 99
உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
() பா. அகிலன்
எனக்குத் தெரியாது. ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ அல்லது
வனத்தின் புறமொன்றிலோ உன் கிராமம் இருந்திருக்கும். பெரிய கூழாமரங்கள் நிற்கின்ற செம்மண் தெருக்களை வஸந்தத்தில் வந்தமர்ந்து பாடும் உன் கிராமத்துக் குருவிகளை எனக்குத் தெரியாது.
மாரிகளில் தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை நீள இரவுகளில் உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்
காற்றும் துயர்ப்படுத்தும் இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம். ஒரு சிறிய

Page 54
100 வெளிச்சம் கவிதைகள்
அல்லது பெரிய சுடுகாடு மேடுபோலாயின எமது கிராமங்கள். அலைபாடும் எங்கள் கடலெல்லாம் குருதி படர்ந்து மூடியது. விண்தொட மரமெழுந்த வனமெல்லாம் மனிதக் குரல்கள் அலைவுற சதைகள் தொங்கும் நிலையுமாயிற்று. முற்றுகையிடப்பட்ட இரவுகளில் தனித்து விடப்பட்ட நாய்கள் ஊளையிட * முந்தையர் ஆயிரம்" காலடி பரவிய தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது. நானும், நீயும் இவையறிவோம். இறந்துபோன பூக்களை கைவிடப்பட்ட பாடலடிகளை நினைவு கூரப்படாத கணங்களைக் கூட அறிவோம்.
| | |
ஆனால்
கருகிப்போன புற்களிற்கு இன்னும் வேர்கள் இருப்பதை கைவிடப்பட்ட பாடல் சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை நீ அறிவாயா? குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும் எங்கள் தொன்மைச் சுடர்கள் மோனிந்திருப்பதை அவர்களைப் போல நீயும் அறியாது விடின்
இன்றறிக "ஒராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்" ஒர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.
கார்த்திகை , 1995

வெளிச்சம் கவிதைகள் 101
கைவிடப்பட்ட கிராமம் பற்றிய பாடல்
() பா. அகிலன்
இங்கே தான்
கசப்பானதும், உல்லாசமானதுமான என் பாலியகாலத்து நினைவுகள் கலந்துள்ளன இதோ
இந்த வரிகளை எழுதும் நடு இரவில் சனங்களற்ற உன்னுடைய வீடுகளை தெருக்களை நினைத்து நான் பார்க்கிறேன் சொல்ல முடியாப் பிரிவின் துயரால் மனம் சஞ்சலப்படுகிறது
போற்றுதற்குரிய முன்னோர்களின் சிறிய கிராமமே!
மாயக்கனவுகளை ஊதிஎழுப்பும் உன்னுடைய வயற்கரைகளை

Page 55
102 வெளிச்சம் கவிதைகள்
வைக்கோற் போர்கள் நிறைந்த முற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன்
பனங்கூடல்களின் அருகே
தியானத்துள் அமர்ந்த பாட்டாவின் பழம்பெரும் வீடே உன்னோடு கழித்த விடுமுறை நாட்கள் நினைவுத் தெருவில் நடுகல்லாய் அமர்ந்து இருக்கிறது
ஒரு புதிய பெண் பெருங்குரலில் பழங்கதை சொல்லி அழுகிறாள்
தூர்ந்து போய், ஐதீகங்கள் மண்டிக்கிடக்கும் உன்னுடைய கேணிகளில் நினைவின் ஆழ அடுக்குகளுள் இழுத்துச்செல்கிற பூர்வீகத் தெருக்களில் பித்தாய் மனம் பற்றி அலைகிறது. R
எங்கே நீ. ? தெய்வங்கள் உள்ளுறைந்த உன்னுடைய முதுமரங்கள் எங்கே . ? நொந்த நிலா முகில்களுள் முகம்புதைத்து விம்முகிறது
ஆதியான கிராமமே
விழி திறந்து இரவுக்கடலில் எரிகிற சூள் விளக்குகளை காற்றைப்பிடித்துலுப்பி எழுகிற மூதாதையரின் பாடல்களை விழாநாட் தெருக்களில் ஓயாது முழங்குகின்ற பறைகளின் ஒலிகளை வாள்முனையில் உயிர்துடிக்க இழந்து தான் போனோமா . 1
புரட்டாதி, 1995

வெளிச்சம் கவிதைகள் 103
வலசை போன
( ) கோ. றுஷாங்கன்
'திரும்பிப்பாராதே! கல்லாகிப்போவாய் யாரும் உரைத்தாரா ?
இல்லை! எஞ்சியுள்ள உயிரையேனும் காத்துவிடும் எண்ணம் துரத்தியது
பழுப்புகள் உதிர
பிஞ்சுகள் சுருள
எஞ்சியவை ஊர்ந்தன விழிகள் வழிசொல்லவில்லை திசைகள் எங்கோ தொலைந்தன இருந்தும் தொடர்ந்தது இலக்கற்று - நீண்டபயணம் வந்தாரை வரவேற்று செருக்கெழுந்த யாழ் வளைவு தலைகுனிந்து நின்றது 'போய் - வருக" என
If
முற்றத்து நினைவுகள் முந்தநாள்போல் நெஞ்சையுலுப்ப

Page 56
104 வெளிச்சம் கவிதைகள்
வீதியோரங்களில் கிடந்து புரண்டது மானுடம் திக்கற்று வந்து திசைகெட்டு நின்றவர்க்கு நிழல் தந்து - இதயத்து நீரளத்தார் பலர் ஓய்ந்தமர்ந்தது மானுடம்.
இருந்தும் நீறணியும் எண்ணங்கொண்ட ஒர் பாட்டி, "" தம்பி! எதடா கிழக்கு ?"
அதோ அந்தச் சூரியன் உதிக்கும் திசைபாட்டி, அ. ஆனால்.
நேற்றுத்தான் அதை பீரங்கிப் புகைக்குள் தொலைத்துவிட்டோம். மேற்குக்கெதிரே இனியதைத் தேடாதே. கொஞ்சநாள் பொறு!
இன்றுதானே
நல்லூரின் பேரர்க்கு ஒட்டிசுட்டான் பாட்டியிடம் கதைகேட்க நேரம் கிடைத்திருக்கிறது. கண்டியைப் பார்த்து வியந்திருந்தோம் இன்றுதானே எம்முந்தையர் வாழ்ந்து முதுகெலும்பாக்கிய நிலங்களில் புரள்கிறோம்.
விரைவில் .
வெட்டுண்ட கரம் மெல்ல எழும் ! - ஒரு இராட்சதனைப்போல். வெட்டிய கத்தியை
பிடித்த கரங்களை
முறித்து மீண்டும் இரத்தோட்டம் பெறும் நாள்வரும்! அன்று
கனவுகளும் நினைவுகளும் புதைந்து தனித்துப்போன எம்மூரிலிருந்து மீட்போம்! எம் சூரியனை. தேசத்தின் விடிவில் நீ உன் கிழக்கைக் காண்பாய்!
மார்கழி - தை , 1995

வெளிச்சம் கவிதைகள் 105
புதைக்கப்பட்ட வைரங்கள்
( சந்திரபோஸ் சுதாகர்
பிள்ளையைப் புதைத்தாயிற்று. பெத்தவள் * "சன்னியில்" செத்துப்போனாள். எனது நிலம், எனது சிலுவை, எனது சுடலை, எடுத்துவந்தவை எதுவுமே இல்லை. கடற்கரை மணலை தோண்டிப் புதைத்தவன் நான்தான். முட்களால் போர்த்தி உள்ளிருக்கும் என் வைரங்களை காத்தாயிற்று. நாய்களின் முகத்தை அவை குத்திக் கிழிக்கும் இரத்தம் கசிவிக்கும். எங்கள் இருப்பிழந்து இடம்பெயர்ந்த வேளை நால்வராய் வந்தோம் இப்போது நானும் நம்பிக்கைகளும் மட்டுமே தூரத்தில், என்னில் இருந்து வெகுதொலைவில் கிளாலிக்கும் பூநகரி நல்லூர் நெடுங்கடலுக்கும் பாலம் அமைத்தாயிற்று. நீர் சுமந்து கண்களை ஊரில் விட்டுவிட்டு வந்தவர், மீளப் பிறந்த நம்பிக்கைகளையும் துப்பாக்கிகளையும் அணைத்தபடி. நகர்தலின் முடிவில். . அன்று நான் புதைத்த என் வைரங்களூடே உயிர்த்ததென்றலின் சுகத்தினை நுகர்வோம்.
மார்கழி - தை , 1996

Page 57
106 வெளிச்சம் கவிதைகள்
அழைப்பு
{T} இயல்வாணன்
கதிரறுத்து அம்மணமான வயல் வெளியையும் காய்ந்து வெடித்த நீரற்ற ஏரியையும்
சுற்றிச் சுற்றிக் கத்தியலைகின்றன பறவைகள் ஒரு புழுத்தானுமில்லை சிறு மீனின் முள்ளுமில்லை. காற்று வந்து
அடிக்கடி - தள்ளிவிட்டுச் செல்கிறது தீயின் துண்டுகளை.
பாருங்கள்
அவற்றின் சிறகுகளில் பொத்தல் விழுந்திருப்பதை. ஒரு சுனையோ பசுஞ் சோலையோ அவற்றை வாழ வைக்கும், யாராவது முன் வாருங்கள் பேரிதபம் படைக்தவர்களே! ஒரு சோலை கட்டி சுனை தோண்ட
αρινό , 1996

வெளிச்சம் கவிதைகள் 107
எரித்த நிலத்தில் படரும் என்வேர்
சுதாமதி
எனக்கு நினைவிருக்கிறது. அநாதையாய் இந்த மரநிழலில் உறங்கியிருக்கும் இவர்களுக்கு ஒரு அழகான வீடிருந்தது என்பது. அழகிய நிலாமுற்றத்தில் உறவுகள் யாவும் கதைபேசிக் களித்திருந்த அந்தப் பெளர்ணமி நாட்களை, இன்னும் நினைவிருக்கிறது. செம்பருத்திப்பூக்கள் கண்மலர்த்தி நின்ற ஒரு காலையில் எங்கள் ஊரிற் கூடித்திரிந்த குயில்களோடும் பச்சைவயல் வெளியெங்கும் சிறகடித்த வண்ணத்துப் பூச்கிகளோடும் எங்களுக்கு உறவிருந்தது களங்கப்படாத காற்றுக்குள் கனவு வளர்த்த பூமிக்குள்

Page 58
108 வெளிச்சம் கவிதைகள்
எங்கள் வேர்கள் விரிந்தபடியிருந்தன, நாங்கள் நேசமாயிருந்தோம் எம்டிoமவிட்டுத் தூரவிலகிய
வசந்தமே. வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாத வாழ்வே! ஒரு மயான மாக்கப்பட்ட அமைதியின் பின்னே எனது குரல் ஒற்றையாய் ஓங்கி ஒலிக்கிறத நிம்மதி தந்த நிழல்களும் எனது புகலிடங்களும் தீ நாக்குகளுக்கிரையாயின. எமது பாலிய காலத்து ஞாபகங்களுக்கடியில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தத் தேசத்தின் வனப்பு எவ்வாறு உருக்குலைந்து போனது என்பது இன்னும் இன்னும் நினைவுகளில் ஆறாத ரணங்களாய். எமது குரல்வளையிலிருந்து வெளிப்படும் துயரப்பாடல் இடிந்துபோன நகரத்தின்
சுவர்களில்
எதிரொலிக்கிறது. கதிர்கள் முற்றி எரிக்கப்பட்ட வயல்களில் தவழ்ந்து
செல்கிறது
எமது காற்றடங்கள் பற்றிய செம்மண் தெருக்களிலும் நிழல்படர்ந்த குச்சொழுங்கைகளுக்குள்ளும் ஊடறுத்துச் செல்கிறது நான் பாடுவேன் உரத்தபடி எனது துப்படக்கியை
உயர்த்தியபடி
எனது உதிரத்துடிப்பு
இருக்கும் வரை.
usive Gof. 1996

வெளிச்சம் கவிதைகள் 109
கவிஞர்கள் அறிமுகம்
) கல்வயல் வே. குமாரசாமி: சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்தவர். இதுவரை யில் வெளிவந்த இவரின் நூல்கள்; சிரமம் குறை கிறது, மரண நனவுகள், பாப்பாபாட்டு.
( ) சு. வில்வரெத்தினம் புங்குடுதீவைச் சேர்ந்தவர். அகங்களும் முகங்க ளும், காற்று வழிக்கிராமம் என்ற இரண்டு கவிதைநூல்கள் வெளிவந்திருக்கின்றன.
( ) தா. இராமலிங்கம் சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த இவர் ஈழத் தின் மூத்த புதுக்கவிதையாளர். புதுமெய்க் கவிதை கள், காணிக்கை என இதுவரையில் இரண்டு கவி தைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
() வவுனியா திலீபன்: பத்திரிகையாளராகப் பணிபுரியும் இவர் வவுனி யாவைச் சேர்ந்தவர். கவிதைகளுடன் சிறுகதை களும் கட்டுரைகளும் எழுதுகிறார். வெளிவந்த கவிதைத் தொகுப்பு: எனது தாகம்,
() கி. பி. அரவிந்தன்: யாழ்ப்பாணம் - குருநகரைச் சேர்ந்தவர். இனி யொரு வைகறை, முகங்கொள் என இரண்டு கவி தைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

Page 59
110 வெளிச்சம் கவிதைகள்
( முருகையன்: ஈழத்தின் மூத்த கவிஞர். கவிதை, விமர்சனம் , நாடகம், மொழிபெயர்ப்பு என்ற தளங்களில் செயற்படுபவர். இதுவரையில் பத்துக்கு மேற் பட்ட நூல்சள் வெளிவந்திருக்கின்றன. () மன்னார் ரூபி மாக்கிரெட் மன்னாரைச் சேர்ந்தவர். பெண் கவிஞர். இவரது முதற் கவிதை ‘வெளிச்சம்’ இதழிலேயே பிரசு ரமாகியது.
( ) கி. சிவஞானம் : பளையைச் சேர்ந்தவர். இளங்கவிஞர். சிறுகதை, நாடகம் என்பவற்றிலும் ஈடுபட்டு வருகின்றார்.
() பிரேமினி சுந்தரலிங்கம்: யாழ்ப்பாணம் - அரியாலையைச் சேர்ந்தவர். பெண் கவிஞர். இவருடைய முதற்கவிதை வெளிச்சம் இதழிலேயே பிரசுரமாகியது.
() ஜெயா விடுதலைப் புலிகள் போராளி. பெண்கவிஞர். கவிதைகளுடன் கட்டுரைகள் சிலவும் எழுதியுள் ளார். இசைப்பாடல் முயற்சியிலும் ஈடுபாடுண்டு.
( ) தமிழவள்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. பெண் கவிஞர். இசைப்பாடல்ஞம் எழுதிவருகிறார்.
0 ) மா, மயிலன் : முல்லை - ஒட்டிசுட்டானைச் சேர்ந்தவர் இளங் கவிஞர். இவரது முதல் கவிதை "வெளிச்சம்"
இதழிலேயே பிரசுரமாகியது () உதயலட்சுமி: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. பெண் கவிஞர். இசைப்பாடல் முயற்சியிலும் ஈடுபாடுண்டு.
( ) கோளாவிலூர் கிங்ஸ்லி: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங்
கவிஞர். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

வெளிச்சம் கவிதைகள் 111
U நெடுந்தீவு மகேஸ்: நெடுந்தீவைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதும் இவரது படைப்புகள் இன்னும் நூலுருப் பெற வில்லை.
( ) அடம்பனூர் செ. திருமாறன் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங்
கவிஞர். ( ) அடேல் ஆன்: அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இவர் திருமணபந்தத்தால் எம்மண்ணுக்குரியவராகி தமி ழிழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த வராவர். வெளிவந்த நூல்கள் "உடையாத விலங் குகள்" உட்பட இன்னும்பல.
0 சோ. பத்மநாதன் யாழ்ப்பாணம் - கோண்டாவிலைச் சேர்ந்தவர் கவிதைசளுடன் கட்டுரை மொழிபெயர்ப்பு முயற் சிகளிலும் ஈடுபடுகிறார். பல கவிதைகள் பிரசுர மாகியுள்ள போதிலும் இவரது படைப்புகள் இன் னும் நூலுருப் பெறவில்லை.
() சி. பாவரசன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர். இசைப்பாடல்களும் எழுதிவருகிறார்.
D s6gr: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர்.
() இ. திருமாறன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர். இசைப்பாடல்களும் எழுதிவருகிறார்.
( ) தொண்டையூர் துவாரகன்; யாழ்ப்பாணம் - தொண்டமானாற்றைச் சேர்ந்தவர். இளங்கவிஞர். இவரது முதற் கவிதை வெளிச்சம்" இதழிலேயே பிரசுரமானது.

Page 60
112 வெளிச்சம் கவிதைகள்
( ) நாக. சிவசிதம்பரம்: யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்தவர். இளங் கவிஞர். பல கவிதைகள் வெளிவந்துள்ளபோதும் இவரது படைப்புகள் இன்னும் நூலுருப் பெற வில்லை .
( ) அன்பழகன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இளங் கவிஞர்.
1) தமிழ்க்குமரன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி இளங் கவிஞர். V.
( ) தூயவன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர் இவரது வெளிவந்த கவிதைநூல் *இலக்குத் தெரிகிறது"
) வீ. பரந்தாமன்: வடமராட்சி - புலோலியைச் சேர்ந்தவர், பண்டிதர். தமிழ் நடந்த தடங்கள்" என்ற கவிதைநூல் வெளிவந்திருக்கிறது.
( ) சி. அமுதசாகரன்; விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங்
கவிஞர். (1 வளநாடன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. கவிதை களுடன் நாடக முயற்சிகளிலும் அதிக ஈடுபாடு களுடன் செயற்படுகிறார்.
L இ. யதார்த்தன்:
யாழ்ப்பாணம் - நல்லூரைச் சேர்ந்தவர். இளங் கவிஞர். இவரது முதற்கவிதை " வெளிச்சம்" இத ழிலேயே பிரசுரமாகியது.
() இத்தாவில் க. சிவராசா: பளை - இத்தாவிலைச் சேர்ந்தவர். இளங் கவிஞர். நாடக முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

வெளிச்சம் கவிதைகள் 113
( ) வேலணையூர் சுரேஷ்:
வேலனையைச் சேர்ந்தவர். இளங்கவிஞர். * களத்தீ’ "உலராத மண்" என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
( ) ச. வே. பஞ்சாட்சரம்: யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்தவர். மூத்த கவிஞர் வெளிவந்திருக்கும் கவிதை நூல்கள்: எழிலி, தண்டலை இன்னும்பல.
( ) இளையவன்: யாழ்ப்பாணம் - ஊரெழுவைச் சேர்ந்தவர். கவி தைகளுடன் சிறுகதை, கட்டுரை என்பவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரையில் இரண்டு நூல் கள் வெளிவந்திருக்கின்றன; வீடு, காணிஉறுதி,
n சபா ஜெயராசா:
யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்தவர் கவிதை
களுடன் கட்டுரை, விமர்சனம், என ஈடுபட்டு
வருகிmார் "ஊர்வீதி’ என்ற ஒரு கவிதைநூலும்
பல கல்வியியல் நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
( ) விவேக்: கிளிநொச்சியைச் சேர்ந்தவர் இவரின் இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தடயங் கள், இலையுதிர் வசந்தம். கட்டுரைகளுடன் சிறு கதைகளும் எழுதியுள்ளார்.
D சத்துருக்கன்: யாழ்ப்பாணம் - அளவெட்டியைச் சேர்ந்தவர். இளங்கவிஞர். கவிதையுடன் சிறுகதை, நாடகம், என்பவற்றிலும் ஈடுபட்டுவருகின்றார். வெளிச்சம் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகின்றார்.
() இளந்திரையன்: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர்.

Page 61
114 வெளிச்சம் கவிதைகள்
( ) புதுவை இரத்தினதுரை: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப் பாளர். வெளிவந்த நூல்கள்: வானம் சிவக்கிறது, ஒரு தோழனின் காதல் கடிதம், இரத்த புஸ்பங் கள், நினைவழியா நாட்கள், மற்றும்பல இசைப் பாடல்களும்.
( ) கருணாகரன்: இயக்கச்சியைச் சேர்ந்தவர். கவிதைகளுடன் பிர கலாத ஹேமந்த் என்ற பெயரில் சிறுகதை களும் எழுதிவருகின்றார். வெளிச்சம் சஞ்சிகை யின் ஆசிரியர். 0 ) மயன் / 2: மன்னார் டி பாப்பாமோட்டையைச் சேர்ந்தவர். சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகின்றார்.
( ) சிவஞானம் ஜெயசங்கர்: யாழ்ப்பாணம் - கோண்டாவிலைச் சேர்ந்தவர். நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுடையவர். ( ) நாமகள்: தீவகம் - அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர். பெண் கவிஞர். சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
T வெள்ளை:
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. இளங் கவிஞர். {) செ. பொ. சிவனேசு: யாழ்ப்பாணம் - கோண்டாவிலைச் சேர்ந்தவர். கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
( ) அலெக்ஸ் பரந்தாமன்: முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் . இளங்கவிஞர்.
() பரந்தனூரான்: பரந்தனைச் சேர்ந்தவர். இளங்கவிஞர். சிறுகதை களும் எழுதிவருகிறார்.

வெளிச்சம் கவிதைகள் 115
மாவேலன்:
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி, இளங் கவிஞர்.
1) தில்லைச்சிவன்: தீவகம் - வேலணையைச் சேர்ந்தவர். மூத்த கவிஞர். இதுவரையில் வெளிவந்துள்ள நூல்கள் தாய், நான், இன்னும்பல
() ந. சத்தியபாலன் யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டைச் சேர்ந்தவர். கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
T. 966i: யாழ்ப்பாணம் - அராலியைச் சேர்ந்தவர். இளங் கவிஞர். நாடகத்துறையில் அதிக ஈடுபாடுள்ளவர்
( ) கோ. றுஷாங்கன்; யாழ்ப்பாணத்தைச் சோந்தவர். இளங்கவிஞர். கவிதைகளுடன் நாடகத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.
() சந்திரபோஸ் சுதாகர்: கிளிநொச்சி - அக்கராயன் குளத்தைச் சேர்ந்த வர். கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதிவருகி றார்.
இயல்வாணன்: இவரின் சொந்த ஊர் சுன்னாகம். இளங்கவிஞர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதுகிறார். "சுவடுகள்" என்ற நாவல் வெளிவந்திருக்கிறது.
சுதாமதி: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி. பெண் கவிஞர், சிறுகதைகளும் எழுதிவருகிறார்,

Page 62
J. & \{
சிங்களப் பேரினவாதத்திற் கும். இனவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக "நெருப்பாற்றையும் நீந் திக் கடக்க" வெடித்த விடுதலைப் போராட்டம் எமது மண்ணில் பெரும் அதிர்வுகளை விதைத்தது. இவ் அதிர்வுகள் எமது படைப் பாளிகளின் இதயச்சுவரை உடைத்து ஒரு பெரும் சூறாவளி யாக உட்புகுந்தது. வீரவரலாறு எழுதிய வேங்கைகளின் சாத னைகள், இழப்புக்களின் தகிப்பி லும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் எமது மக்களின் திடசித் தம் இவையெல்லாவற்றையும் தேடி எமது கவிஞர்களின் பேனாக் கள் எழுந்து நடந்தன. அகசிவ உணர்வும் வளமும் நிறைந்த கவிதைகளை ஆயிரமாய்ப் புஸ் பித்துள்ளன.
வெளிச்சம் வெளியீடு
参
z