கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யோகம் இருக்கிறது

Page 1


Page 2

யோகம் இருக்கிறது
குந்தவை
Mithra Arts & Creations சென்னை 0 சிட்னி 9 மட்டக்களப்பு

Page 3
Pitbrea இண்
SBN 17 SS23257
Apart from any fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored ina retrieval system, or transmitted, in any form or any means, electronic mechanical orphotocopying, recording or otherwise without prior written permission from the publishers.
Mithra Publication books are published by Dr Pon Anura
Publication Editor Espo
GO Kundavai YOGAM RRUKIRATHU
(A Collection of Short Stories) By KUN DAVA
Layout & Cover Design M. Sridharan
First Edition 15th August 2002
ح
Mira Ars and Crecios
LLLLSSSLSGSGSLSLSLSLSLSLSL f23 MUNRO STREET 375/8-0ARCOTROAD
30 WANNAHSTREET CHENINA 600 024. NDA EASTWOOD 222 AUSRALIA BATTICALOA (EP) Ph: (044) 372382
Ph: (02) 9868 2567 SRI ANKA e-mail: www.mithrasand.com.in e-mail: www.anuradmatra.com.au Fax. 09-44-472336
மித்ர 64 முதற் பதிப்பு 15 ஆகஸ்ட் 2002 விலை : 60/- பக்கங்கள் : 192
 
 

பல்கலைக் கழகத்தில்
முதலாம் ஆண்டில் நான் சந்திக்க நேர்ந்தவற்றின் பொழுது
எனக்கு உற்ற பலமாய்
நின்ற என் தோழி
சுகுணாவின்
பவித்திரமான நினைவுகளுக்கு.
இந்நூல்
U60LLö

Page 4

என்னுரை
"இலக்கியங்கள் ஆழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் எழுதப்பட முடியாதவை" என்ற இவான் சினிமாவின் கருத்துக்கு ஒத்துப் போகிறவையாக என் கதைகளிருக்கின்றன என நினைக்கின்றேன். எனக்கு மிகத் தெரிந்தவர்களின் அனுபவங்களிலிருந்தும், என் சொந்த மண் பெற்ற அனுபவங்களிலிருந்தும் வந்தவை.
மூச்சைத் திணறவைக்கும் பல இறுக்கங்களி லிருந்து தப்பி இன்னும் எங்கள் யாழ்ப்பாணம் ஜீவ ஓட்டத்தோடுதான் இருக்கிறது. அந்த ஜீவ ஓட்டத் தைப் பேண, அது சகித்த வலிகளை, நேரில் பார்த்த உணர்நோக்குடன், பதிவுகளாக்க முயன்று இருக்கின் றேன் சில கதைகளில்.
இதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளேன் என்பது தெரியவில்லை; வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அறுபதுகளில் எழுதத் தொடங்கியவள் எனப் பெயர் பண்ணிக் கொண்டாலும், இப்பொழுதுதான்
5

Page 5
முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுவது சாத்திய மாயிருக்கிறது.
இதற்கு 'ஒரு தொகுப்பிற்கு வேண்டிய போதிய கதைகளை இன்னும் நான் எழுதவில்லை’ என்பதே என் முன்னைய நொண்டிச் சாக்காக இருந்தது.
இந்நிலையில் இந்தாண்டிற்குள் அடுக்கடுக்காய், நாலைந்து கதைகளெழுதி ஒரு தொகுப்பிற்காக கதைகள் சேர்ந்துவிட்டமை என்னளவில் ஒரு அதிசயமாய்படுகிறது.
இதற்கு, தொகுப்பு என்ற ஒன்று உருவானால் அதற்கு எஸ்.பொ அவர்களிடம் முன்னுரை கேட்க லாமென்ற எண்ணம் தந்த உற்சாகமும், உத்வேக முமே காரணம் என்பேன்.
எஸ்.பொ அவர்கள் அருமையான முன்னுரை எழுதித் தந்தது மட்டுமல்ல இலக்கியம் ஆக்கம் சார்ந்த அவரின் பல்வேறு அலுவல்களுக்கு இடையில் இத்தொகுப்பைச் சிறப்பாக வெளிக்கொணர வேண்டிய எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். இதை நினைக்கையில் மனம் நெகிழ்ந்துதான் போகிறது. அவருக்கு நன்றி கூற ஏற்றச் சொற் களைத் தேடி தடுமாறிப் போய் விடுகின்றேன்.
இதே மாதிரியான உணர்வு எனக்கு திரு. பத்மநாப ஐயரை நினைக்கையிலும் வருவ துண்டு. யாழ்ப்பாணத்தில் இருக்கையில் என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தொகுப்பு வெளியிட
6

வேண்டுமெனச் சொல்லி வந்தவர். தமிழகத்து தரமான இலக்கியங்களை எனக்கெனத் தேடி தந்தவர். எல்லா படைப்பாளிகளின் இலக்கிய நலனிலும் அக்கறை கொண்டவர். அந்த தூய இலக்கிய நெஞ்சத்திற்கு என் தொகுப்பின் முதல் பிரதியை அனுப்ப ஆவலாயுள்ளேன். திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதியது போல "தான் பணிக்கும் எழுத்து தன் கதவடிக்கு இறுதியில் வந்தடையும் என்பது ஐயரின் நம்பிக்கையாக" இருந்ததால், அந்த நம்பிக்கையை நானும் மெய்ப்படுத்த வேண்டும்.
சோர்ந்து, இலக்கிய இயக்கமற்றிருந்த ஒரு காலத்தில்தான், எண்பதுகளின் தொடக்கத்தில் புத்தளத்தில் எனக்கு சுதாராஜ் அவர்களின் பழக்கம் கிடைத்தது. அவரின் நட்பு கிடைக்காவிட்டால் நான் மீள எழுதத் தொடங்கியிருப்பேனோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. இலக்கிய ரீதியாக என்னை மீள செயல்பட வைத்த சக்தி அவருக்கு இருந்தது.
என் மேல் பிரியம் வைத்து என் கதை முயற்சிகளில் அக்கறை காட்டி வரும் குப்பிளான் ஐ. சண்முகன் - புனிதவதி தம்பதியினரையும் நன்றி யோடு நினைக்கின்றேன்.
என் கதைகளை பத்திரப்படுத்தி வைக்கத் தெரியாத எனக்கு, சஞ்சிகைகளில் வெளிவந்த வற்றைத் தேடி தந்த எங்களூர் இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் குணேஸ்வரனுக்கு என் நன்றிகள்.
7

Page 6
கதைகளை வெளியிட்ட கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாம் மனிதன் ஆகிய வற்றின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இத்தொகுப்பை நல்ல முறையில் ஒருங்கமைத்து அச்சிட்ட மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் ஊழியர்களுக்கும், அட்டையை வடிவமைத்த பூரீதரனுக்கும், கதைகளுக்கு சித்திரங்கள் அமைத்துத் தந்த ஓவியர் சிவபாலனுக்கும் நன்றி.
தொண்டைமானாறு இலங்கை

முன்னிடு
இருபதாம் நூற்றாண்டின், இறுதித் தசாப்தத்தின், கடைசிக் கந்தாயத்தில் நடந்த ஒரு நாடக விழா இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரிலே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த விழாவில் ஆங்கில நாடகங்கள் மூலம், தாய் நாட்டின் நாடகக் கலைக்குப் பெரும்பங்காற்றிய மக்இன்டையர் என்ற தளையசிங்கமும், சிங்கப்பூரின் நாடக உலகில் அதிர்வுகள் ஏற்படுத்திய இளங்கோவனும் கலந்து கொண்டார்கள்.
நாடகப்பட்டறை சுவையான விசாரணையாக அமைந்தது. நெறியாளர் ஒருவர் எவ்வாறு காட்சியமைப் பினை உள்வாங்கிக் கொள்ளுகின்றார் என்ற படிமுறை களை அவர்கள் இருவரும் நாடகபாத்திரங்களை வைத்து விளக்கப்படுத்தினார்கள். கலை பற்றிய தேடலிலே இஃது ஒரு புதிய கற்றல் அநுபவமாக இருந்தது. இளங்கோவன் எழுதிய “புத்தர் சிரித்தார்’ என்ற கவிதையே நாடகத்திற்கான மூலப் பிரதியாகக் கொள்ளப்பட்டது.
9

Page 7
கிழக்கிலங்கையில், கோணேஸ்வரி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, மனிதப் பண்புகளுக்கு ஒவ்வாத கொடூர முறையிலே கொலை செய்யப்பட்ட அந்தப் ւսաեi5pr நிகழ்ச்சியின் தாக்கத்தினால் இளங்கோவன் அந்தக் கவிதையை எழுதியிருந்தார். அந்தப் படுகொலைக்குப் புத்தர் சாட்சியாக அமர்ந்தார் என்பதுதான் கவிதையின் பாடுபொருள். இலங்கையில் நடைபெறும் அனைத்து அழிவுகளுக்கும், சோக நிகழ்வுகளுக்கும் புத்தர் மெளனசாட்சியாகச் சிரித்துக் கொண்டு இருக்கின்றார் என்கிற நாடகச் செய்தி ஒரு கணம் எங்களை உறைய வைத்தது.
சிலிர்த்தல் போன்ற ஒர் உணர்வு நிலைதான் உறைதலும். வினை எதிர்; பலிதம் நன்றே! கலை இலக்கியத்தில் உறைநிலை உணர்வு நிலை அடைதல் அபூர்வமானது.
அந்த நாடக விழாவின் பின்னர், இப்பொழுது குந்தவையின் இக்கதைத் தொகுதியினூடாகப் பயணித்த பொழுது அந்த அபூர்வம் நிகழ்ந்தது. இளங்கோ வனுக்கும் குந்தவைக்கும் இடையிலே காட்சிகளை அணுகுவதில் வேறுபாடுகள் இருப்பதையும் உணர முடிகிறது. குந்தவை எந்தக் கட்டத்திலும் தம்மை ஒரு பிரசாரகராய்த் தாழ்த்திக் கொள்ளாமல், தாம் ஒரு கதைஞன் என்கிற பிரக்ஞையை வலியுறுத்திப் புகுத்திக் கொள்ளாமலும், லாவகமாக கதை நிகழ்ச்சிகளின் ஊடாக அழைத்துச் செல்லுதல், உண்மையில், கலை நயத்துடன் தனித்துவமாக அமைகிறது.
இரண்டு தசாப்தங்களாக, நான் ஈழத்தின் கள வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பரதேசியாக 10

வாழ்கின்றேன். என் போன்ற பரதேசிகளுக்கு, நாங்கள் இழந்து விட்ட ஈழத்து வாழ்க்கைக் கோலங்களைத் தரிசிப்பதற்கு உதவும் உண்மையான தமிழ் இலக்கியப் படைப்புகளில் “யோகம் இருக்கிறது’ என்னும் இந்த கதைத் தொகை முக்கியமானது என்று நான் மெய் யாகவே நம்புகின்றேன்.
எழுத்துக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளி களை அகற்றிக் கொண்டு, சமகால ஈழத்து நிகழ்ச்சி களின் ஊடாக, வாசகனைப் பயணிக்க வைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல் குந்தவையின் கலைவெற்றியாகும். ஈழத்தில் நடக்கும் அன்றாட அவல நிகழ்வுகளுக்கூடாக மகா தைரியமாகக் குந்தவை நம்மை அழைத்துச் செல்கிறார். அந்த அவலங்களைப் பூ வேலையும், பூச்சு வேலையும் இன்றி மிக இயல்பாகப் பதிவு செய்கிறார். கைதேர்ந்த ஓவியன் கைத் தூரிகையின் நடனத்தைப் போன்ற அநாயச சித்திரிப்பு. இங்கு குந்தவையின் வெற்றி என்னவென்றால், அந்த எண்ணற்ற பாத்திரங்களுள், அவரும் முகமற்ற பாத்திரமாகச் கலந்து கொள்வதுதான். அந்நியமாகாது ஒன்றித்தல்! பிரசார நெடி கலவாத பக்குவத்தில் அந்த அவலங்களை வாசகனின் மனசிலே நிலைநிறுத்துதலை அவருடைய கலை வெற்றியாகக் கொள்ளலாம்.
இந்த நூலின் ஊடாக பயணிக்கும்போது, குந்தவையின் இலக்கிய நோக்கும் வாழ்க்கை முறையும் வேறுபட்டு அமைந்தனவாக எனக்குத் தோன்றவில்லை. தமிழ்ச் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் அவலங்கள், அவசரங்கள், விசனங்கள், விக்கினங்கள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவற்றிலிருந்து தம்மை அந்நியப் படுத்திக் கொள்ளாமல், அதில் வாழும் ஒரு உயிர்ப்புள்ள 11

Page 8
சாட்சியாகக் கதைகளை நகர்த்துகிறார். தாமரையிலைத் தண்ணிர்! அத்தகைய ஒரு நிதானம். அந்த நிதானந்தான் குந்தவையை மற்றைய சமகால ஈழத்துக் கதைஞர் களிலிருந்து வேறுபடுத்தி, தனித்துவப்படுத்திக் காட்டு வதாக எனக்குப்படுகிறது.
இலக்கியம் உண்மையின் இடையறாத தேடலும், ஆராதனையும் என்ற கொள்கையைப் பிரசித்தப்படுத்தி வாழ்பவன் நான். உண்மையின் ஆராதனை கதைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பாடுபொருளில் மட்டுமின்றி, அதனைச் சொல்லக் கலைஞன் தேர்ந்தெடுக்கும் உருவத்திலும் அந்த உண்மையின் நீட்சியை கொண்டு வருதல் சாத்தியமா? குந்தவை, இத்தொகுதியில் உள்ள கதைகள் பலவற்றிலே அதனைச் சாத்தியம் என்று சாதிக்கிறார். நிகழ்ச்சிகளைக் கதையாகப் பின்னுவதில் இழையோட விடும் பாணியும், அதனை நகர்த்து வதற்குக் கையாளும் மொழி நடையும் அவருக்குக் கை கொடுத்து உதவுகின்றன.
பயமுறுத்தாத வசன நடையைப் பயிலுகின்றார். அந்த வசன நடையில் அவர் கையாளும் சொற்கள் புதிய வீரியத்துடன் காலூன்றி நிற்கின்றன. நேரிலே அவருடன் உரையாடும் பொழுதுகூட நான் கவனித் திருக்கின்றேன். கையாளும் வார்த்தைகளிலே அவர், நம்பிக்கையும் விசுவாசமும் பூண்டவராக வாழ்கிறார். அந்தச் சொற்களை அகற்றி, வேறு சொற்களை அவற்றின் இடத்தில் இருக்கச் செய்தல் தம்முடைய கலா நோன்புக்கு முரணானதென நம்பி வாழ்கிறார்.
உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இடையில், என்ன வேறுபாடு? தசை சார்ந்ததும் அறிவு சார்ந்ததும் என்பது தான் வேறுபாட்டின் அடிப்படையா? சில வேளை
12

களில் கலையின் நுட்பத்தால், உணர்வு உணர்ச்சியாக மாறும்; பரிவு என்ற உணர்வை உணர்ச்சி ஆக்கக்கூடிய வலிமை குந்தவைக்கு உண்டு. இந்தச் சாத்தியம் штағтінд5фр அவரது இயல்பான வாழ்க்கைத் தரிசனத்திலேதான் தகைகின்றது. இதன் காரணமாக இவர் பாத்திரங்களை இராமர்களாகவோ, இராவணர் களாகவோ சித்திரிக்கவில்லை. குந்தவையின் பாத்திரங்கள் மனிதர்கள். குணங்களும் குறைகளும் இணைந்தவர்கள். இதனால், அவர் அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் நேற்று நாம் பார்த்த பாத்திரங்களில் ஒன்றோ என்கிற இயல்புத் தன்மையைப் பெற்று விடுகிறார்கள். நம்மவர்களாகவும் மாறுகிறார்கள்.
சமகால வாழ்க்கை நிகழ்வுகளில் மட்டுமன்றி, சமகால இலக்கியப் படைப்பாளிகளின் பங்களிப்பு களிலும் நம்மைப் பயணிக்க வைக்கின்றார். தாம் விரும்பும் சமகால இலக்கிய ஆசிரியர்களை நயந்து சொல்லும் நேர்மை குந்தவையின் எழுத்துக்கு மகத்தான இயல்புத்தன்மையை பொருத்துகின்றது. அத்துடன், சமகால எழுத்து ஊழியத்திலே, வண்ணநிலவனும், நீலபத்மநாபனும், வ.அ.இராசரத்தினமும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற சகஜத்தினை வேறு எழுத்தாளர்களுடைய எழுத்துக்களிலே நாம் காண முடியாது. இந்த இயல்புத் தன்மையைக் குந்தவையின் அளப்பரிய தன்னம்பிக்கையின் சான்றாகவும், படைப் பிலக்கியத்திலே அவர் பூண்டுள்ள ஈடுபாட்டின் நெருக்கத்தைப் புலப்படுத்துவதாகவும் நான் விளங்கிக் கொள்ளுகின்றேன்.
ஈழத்தின் சமகால அவலங்களை, அவற்றின் குறியீடுகளை அல்ல, அவற்றின் பல்வகைத்தான
13

Page 9
கொடுர அழிபாடுகளை அவர் கதைகள் பதிவு செய்கின்றன.
உலகப் போர்களுக்குப் பின்னர், போர்க்கால அவலங்களும், அழிவுகளும், இடப்பெயர்வுகளும் இந்தக் கதைகளிலேதான் மிகுந்த அவதானிப்புடன் சித்திரிக்கப் பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் இது முதன்மையான முயற்சி என்பதிலே குந்தவை திருப்தி அடையலாம்.
'இறுக்கம்', 'வல்லைவெளி”, “பெயர்வு', 'வீடு நோக்கி’ ஆகிய நான்கு கதைகளிலும் அவருடைய பேனா புகைப்படப் பதிவினைச் சாதித்திருக்கின்றது. இந்த நான்கு கதைகளிலும், ஒரு தொடர்பு, சட்டென்று புலனாகாது, ஊடுபாவாக அமைகின்றது.
உண்மையை நிலைநாட்டும் இன்னொரு உத்தி எள்ளலாகும். "யோகம் இருக்கிறது', 'திருவோடு", Fieldwork ஆகிய மூன்றும் குந்தவையின் எள்ளற் பார்வைக்கு உதாரணங்களாகச் QéFrtaivavcumuont ? எள்ளல் என்பது நையாண்டியோ சிரிப்போ அல்ல. கருணையின் பிறிதொரு, ஸ்திதியாகவே குந்தவையின் எள்ளல் கொள்ளத்தக்கது. மூன்றும் மூன்று வேறு தளங் களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுகின்றன.
இணக்கம், இரக்கம் ஆகிய கதைகள் கொழும்பிலும், புத்தளத்திலும் வாழும் தமிழர் நிலையைச் சித்திரிப்பவை. அரசு பிரசாரஞ் செய்யும் பேரினவாதம், எவ்வாறு சாதாரண பொதுமக்களையும் பாதித்துள்ளது என்பதை இக்கதைகள் இயல்பாகச் சொல்லுகின்றன.
இது பதின்மூன்று கதைகளின் கொத்து. தமிழ்ப் புனைகதை இலக்கியத்திற்குப் புதிதும், வண்ணமும், வளமும் சேர்க்கின்றது.
14

யுத்த பூமியை விட்டு, அலறி அடித்துக் கொண்டு வெளியேறாது, மண்ணின் நேசிப்புடன் மக்கள் துயரங் களை பங்கிடும் ஒருத்தியாய் வாழ்ந்த நேர்மையினால், குந்தவையின் கதைகள் இரண்டு தசாப்த காலத் தமிழ் ஈழத்தின் உண்மையான வரலாறாகப் பதிவாகின்றன. இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கையின் பதிவுதான்! வரலாற்றினை இலக்கியமாகவும் உயர்த்தும் குந்தவையின் “யோகம் இருக்கிறது’ பலராலும் பேசப்பட்டு நின்று நிலவும். உண்மை, வெறும் புகழ்ச்சியல்ல.
Tauaur
/23 Mnamo Shaa Easted 222
Aanhaka
5,082OO2.
15

Page 10
உள்ளிடு. 1. இறுக்கம் 17 2. பெயர்வு 27 3. யோகம் இருக்கிறது 41 4. கனவு 56 5. இணக்கம் 68 .ே குறுக்கீடு 87 7. வல்லைவெளி 92 8. இடமாற்றலுக்காய் 102 9. பயன்படல் 113 10. வீடு நோக்கி 138 11. இரக்கம் 154 12. திருவோடு 162 13. FELD WORK 179
16

வேகத்தைக் குறைத்த \வாறு றோட்டின் நடுப் ra.புகுதியிலிருந்து &Frfoundsg: சென்ற அந்த மோட்டார் f சைக்கிள், ஆமிக்காரர்கள் முன் நின்றது. அது சரிவாக வந்த o விதத்தில் ஒரு லாவகம்
{ / தெரிந்தது. ஆமிக்காரர்கள் அந்த மோட்டார் சைக்கிளைச் சுற்றி சுற்றி வந்தனர். ஒருவன் பின்சிற்றை அமுக்கிப் பார்த்தான். மற்றவன் முன்பகுதியிலிருந்த பிளாஸ்ரிக் கூடையைக் கிண்டினான். இவளுக்குச் சிரிப்பாகக்கூட வந்தது. குண்டு கொண்டு வருபவன் இப்படியா பகிரங்கமாகக் கொண்டுவருவான்?
EU- 17

Page 11
இவள், இப்படி அவர்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்தால் அவர்கள் றோட்டைக் கடந்து அவள ருகிலும் வரக்கூடும். ‘ஏன் இங்கு நிக்கிறது? ‘பாக்’கில் குண்டு இருக்கா?”
கேட்கமாட்டார்களென்றும் தோன்றியது. யாழ் போகும் பஸ், சோதனை செய்யப்பட என இறக்கிய தன் பயணிகளை மீள ஏற்ற, நிற்குமிடம் இது. அத்தோடு தேவன் தன்னை இங்கே கொண்டு வந்து இறக்கியதைப் பார்த்துக் கொண்டு தானே நிற்கின்றார்கள்? இவள் யாழ்ப்பாணம் போகும் பஸ்ஸை எதிர்நோக்கி நிற்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதே இடப்புறத்திலிருந்து, இப்பொழுது ஒரு சைக்கிள் வந்தது. தூரத்தில் பார்க்கையிலே ஒரே பச்சையாகத் தெரிந்தது. இவ்வளவு வாழைக்குலைகளை ஒரு சைக்கிளில் ஏற்றமுடியுமென இவளுக்கு இதுவரை தெரிந்ததில்லை. ஒவ்வொரு பக்கவாட்டிலும் இரண்டிரண்டு வாழைக்குலைகள் தொங்கின. பின்னால் கேரியரிலும் சில வாழைக் குலைகள் தெரிந்தன. எல்லாமாக ஏழெட்டிருக்கும். சீற்றிலிருந்தவர் தொடை வரை மடித்து விட்ட வேட்டி, அரைக்கைச் சட்டை, ஒட்டிய கன்னம் மேலேறிய நெற்றி வியர்வை ஈரம். தொலைவிலிருந்து - நீர்வேலி பக்கமிருந்து - வருபவராக இருக்கலாம். அங்குதான் வாழைக்குலைகள் மலிவாய் கிடைக்கும்.
இந்த ஆளை இறங்கச் சொல்லக்கூடாதென விருப்பம் எழுந்தது. இறங்கினால் மீளச் சீற்றில் ஏறுவதற்கு அவர் கஷ்டப்பட நேரிடும். இவள் விரும்பியது மாதிரி ஆமிக்காரர்கள் இவரை "போ’ என 18

சமிக்ஞை செய்துவிட்டார்கள். இப்பொழுது நெல்லி யடியில் ஒவ்வொரு தேநீர்க் கடையாக இவர் இறங்கி ஒவ்வொரு குலையாக அவிழ்த்து உள்ளே தூக்கிச் சென்று விற்பது மனதில் விரிந்தது. பஸ் ஒன்றும் வரக்காணோம். பின் மண்டையில் வெய்யில் உறைக்கத் தொடங்கிவிட்டது. தொப்பியோ, குடையோ எடுத்துவர வேண்டுமென்ற ஞாபகம் வீட்டைவிட்டுக் கிளம்பும் போது வரவில்லை.
காற்று வேறு. சேலையை உடம்போடு ஒட்டி அலைத்தது.
ஒரு லான்ட் மாஸ்ரர் நிறைய ஆடமிக்காரர்கள் போனார்கள். இப்பொழுது ஆமிக்காரர்களைத் தவிர வேறு ஒருவரையும் காணோம்.
“இப்ப பஸ் வரும்" என்று தான் இவ்விடத்தில் இறக்கிவிடும்பொழுது தேவன் சொல்லிப் போனான். அவன் பேச்சை நம்பி இறங்கியாயிற்று. இறங்கிய உடனேயே வந்த மினிபஸ்ஸைக்கூட கூட்டம் அதிகம் எனப் போகச் சொல்லியாயிற்று.
இதில் இறக்கிவிட்டவனை, அப்படியே இன்னும் கொஞ்ச தூரம் ஓடி, வைரவர் கோவிலடியில் இறக்கி விட்டுப் போகச் சொல்லியிருக்கலாம். அது அப்பொழுது தோன்றவில்லை. இந்த எதிர்காற்றில் தன்னையும் வைத்துக் கொண்டு உழக்குகின்றானே என இரக்கந்தான் அப்போதிருந்தது.
வைரவர் கோவிலடியில் நல்ல மரநிழல் இருக்கும். சனநடமாட்டமிருக்கும். மர இலைகள் வடித்துத் தரும் இதமான காற்று வீசும்.
19

Page 12
இங்கே ஒரு வெற்றுத் தந்திக் கம்பமும், ஒற்றைச் சவுக்குமரப் புதருமே துணை.
இந்த றோட்டில் ஏறியதுமே, இப்படி ஆமிக்காறன் முன் எதிரும்புதிருமாக நிற்கவைத்துவிட்டுப் போனவன் மீது ஆத்திரமாகக் கூட வந்தது. கூடவே "எதிரும் புதிரும்’ எனச் சொல்லமுடியாது என்றும் தோன்றியது. இடைவெளி நாற்பது, ஐம்பது யார் இருக்குமா?
வலப்புறத்தில் இருந்து ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அந்த ஆள் கரியரில் ஏதோ உயரமாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். அந்த ஆள் அவளெதிரே வந்தபொழுது காற்றில் பொருத்தியிருந்த துணி மேலேற உள்ளே பானைகளின் அடுக்குத் தெரிந்தது. அச்சுவேலிச் சந்தைக்குப் போகிறதாயும் இருக்கலாம்.
6Ꮘ0Ꭷ1ᎠᎢᎧ! கோவிலடியில், ஆமிக்காரன் நிற்க மாட்டான் என்றில்லை. நின்றாலும் ஒதுங்கித்தான் நிற்பான். ஒருமுறை வைரவர் கோவிலடியில் பஸ்ஸிற்கு நின்றபோது, பின்னால் தெரிந்த பாழடைந்த கிணற்றை எட்டிப் பார்க்கத் தோன்றியது. கிணற்றருகே போனவளுக்கு கோயிலின் பின்புற வாசலோடு ஒரு ஆமிக்காறன் மடியில் துவக்கோடு சாய்ந்து கொண்டு இருப்பது தெரியவே அப்படியே திரும்பி விட்டாள்.
வைரவர் கோயிலில் ஒட்டுக்கூரை இங்கே நிற்கையிலும் தெரிந்தது. அப்படியே நடந்து போய் விடலாம்.
போகவிரும்பினாலும் ஏதோ ஒன்று - நடுவழியில்
20

நடக்கையில் பஸ் வந்துவிட்டால் மறித்தால் நிற்பானோ, நிறுத்தம்’ இல்லாத இடத்தில் என்ற தயக்கமாகவும் இருக்கலாம். இன்னும் கொஞ்சநேரம், கொஞ்சநேரம்’ எனக் கெஞ்சுவது போலிருந்து.
இடப்புறத்திலிருந்துதான் ஒரு பஸ் வந்தது. யாழ்ப் பாணத்திலிருந்து வரும் பஸ். அது இவளைத் தாண்டி, முதுகு காட்டிக் கொண்டு போய் சோதனைச் சாவடியருகே நின்றது. ஆமிக்காரர்களையும் அது மறைத்து விட்டிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி நடப்பவர்களின் வரிசை, பஸ்ஸின் மறுபுறத்திலிருந்து நீண்டது.
இந்த நேரத்தில் இவள் மறுபுறமாக றோட்டில் விறு விறுவென நடக்கத் தொடங்கினாள். ஒட்டுக்கூரை தெரிந்து கொண்டே வந்தது.
இருபுறமும் பள்ளமாய் வெடிப்பாய் தெரிந்த நிலம், நடுவே றோட் மட்டும் சற்று உயர்ந்திருப்பதுபோலத் தெரிந்தது.
அந்த உயர்ந்த றோட்டில் இவள் தனியே நடந்தாள். நடந்து செல்லும் மனிதர்கள் என்று எவருமே இல்லை. சில நேரங்களில் அப்படியும் இப்படியும் கடந்து செல்லும் சைக்கிள்களைத் தவிர, ஒரு சைக்கிள் போன திலிருந்து, மற்றச் சைக்கிள் சந்திக்கும் வரையிலான இடைவெளி, பெரிதாகையில் தனிமையும் பெரிதாய் தெரிந்தது.
இந்த வெய்யில் இல்லாவிட்டால் நடப்பது இவ்வளவு கஷ்டமாக இராதெனப்பட்டது. அதுவும் அந்தி மயங்கும் வேளையென்றால் அதுவே துணையாக
21

Page 13
இருக்கும். ஒருவித சிநேகிதத்தைக் கொண்டு வந்திருக்கும். எதிரே மாலைச் சூரியனின் வர்ணக் கோலங்களைப் பார்த்தபடி நடப்பதே ஒரு சந்தோஷமாகவும் இருக்கக்கூடும்.
மாலையைத் தொடர்ந்து வருமிரவையும் கற்பனை செய்து கொண்டாள். மனத்தில் இலங்கையர்கோனின் வல்லையைக் கடக்கும் மாட்டுவண்டில் வந்தது.
அரிக்கன் லாம்பு, வண்டிலின் கீழ் 'முணுக் முணுக்’ என அசைந்து அசைந்து எரிய மாட்டுச் சலங்கைகள் “சல் சல்’ என லயத்தோடு தாளமிட, காற்றை எதிர்கொண்டவாறு, உற்சாகமாகப் பாடிக் கொண்டே இவளும் ஐம்பது வருடம் முன்னதாக ஏன் இலங்கையர்கோனின் காலத்திலாவது பிறந்திருந்தால் கூட இந்த மாட்டுவண்டிச் சவாரிச் சுகம், இவளுக்குக் கிடைத்திருக்கும்.
கொள்ளிவால் பிசாசுகளைக்கூடப் பார்த்து இருக்கலாம்.
அதை சதுப்பு நிலத்திலிருந்து எழும் ஒரு வித வாயுவென அறிந்து கொண்டு ஆர்வமாய் பார்த்து இருப்பாளோ! அல்லது அறியாமையினால் பிசாசுதான் என எண்ணிப் பார்த்திருப்பாளோ?
அந்தக்காலப் பிசாசு என்ன பிசாசு? இந்தக் காலத்தில் எத்தனை உண்மையான பிசாசுகளை இந்த வெளியில் மக்கள் பார்த்துவிட்டார்கள்?
திடீரெனத் தாக்கிய எண்ண அதிர்வில் இவள் நினைவு அழிந்து போனாள். சில கணம்.
22

பிறகு, நினைவுகளை முட்டி மோதிக் கொண்டு வந்தன.
"வைரவ கோயிலடியிலை இன்னாரை ஹெலி அடிச்சுப் போட்டுதாம்"
"ஷெல் வருகுதெண்ட உடனேயே நாங்க சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த சீமெந்துக் குழாயுக்கை பதுங்கி விட்டம். ஆனா கந்தசாமி ஓடிவர முன்னமே."
இவை மட்டுமா?
"வல்லை வெளியிலே யாரையோ அடிச்சுப் போட்டு, போட்டுக் கிடக்காம்” விடிகாலையில் வரும் செய்திகள் - இயக்க மோதல்கள்.
உடனேயே இந்த இடத்தைக் கடந்துவிட வேண்டு
மென்ற பரபரப்பு தவிப்பாய் சூழ்ந்து கொண்டது.
வியர்க்க வியர்க்க நடக்கையில் வல்லை வெளியில் தனியே அகப்பட்டு ஹெலி துரத்த தான் ஒடுவதான கற்பனை வந்தது.
உடனே வெட்கமும் வந்தது. ஏன் ஓட வேண்டும் இப்படி இப்பொழுது? அன்றொருநாள் ராணியக்கா விபரித்திருக்கிறாள் இதை வல்லை வெளியில் தாங்கள் பயணித்த வேளை மினிபஸ்ஸை ஹெலி துரத்தி வந்ததை. தாங்கள் அடைந்த பீதியை போட்ட கூக் குரலை எல்லாம். கடைசியில் டிறைவரின் ஒட்டவேகம் ஒன்றே அன்று அவர்களைக் காப்பாற்றியதாம்.
கோவில் ஒட்டுக் கூரை, பக்கத்தில் தெரிந்தது. சனநடமாட்டம் தெரிந்தது. மரநிழல் தெரிந்தது.
23

Page 14
கோவிலடி கலகலப்பாகத்தான் இருந்தது. போவோரும் வருவோரும் தத்தம் வாகனங்களை நிறுத்தி இறங்கி வந்து முதலில் பிள்ளையாரையும் பின் வைரவரையும் கும்பிட்டு, உண்டியலில் காசு போட்டு, திருநீறு, சந்தனமெடுத்து சென்று கொண்டிருந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் தன் ‘கும்பிடலை’ முடித்துக் கொண்டு, தன்னோடு வந்தவர்களுக்காக காத்து நின்றான். பிள்ளையாரின் விழித்த கண்களைப் பார்த்தபடி அந்த இளம் பெண் களும் இன்னும் கும்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒருத்தி அரை பாவாடை சட்டைக்காரி. மற்றவள் சேலைக்காரி. ஆறுதலாக வைரவரிடம் வரம் வேண்டிக்கொண்டு அவர்கள் திரும்புகையில் அவன் சீற்றில் மேலேறிக் காத்திருந்தான். இளையவள், அவன் தோளில் கை வைத்து எம்பி முதலில் பின்சீற்றில் ஏறினாள். பின்னால் மற்றவள். மோட்டார் சைக்கிள் புறப்பட்டது.
இப்பொழுது ஸ்கூட்டரில் வந்த இன்னொரு ஜோடி சற்று வயதான ஜோடி பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டிருந்தது. ஒரு கார் வந்து மறுபுறம் நிற்க ஒரு பெரியவர் இறங்கிக் கொண்டிருந்தார்.
இவள் தானும் சாமி கும்பிட்ட, உண்டியலில் காசு போட்டாள். திருத்தப்பட்டு, புதுப் பொலிவோடு இருந்த கோயிலை ஒருவித சந்தோஷத்துடன் பார்த்தாள். பின்னால் தெரியும் ஆற்றை ரசித்தாள். பஸ்ஸ"க்காக காத்திருந்தாள்.
தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. மஞ்சள் பஸ். இவள் சற்று முன்னே வந்த அதை கைநீட்டி மறிக்கத்
24

தயாரானாள்.
பஸ் நிற்கவில்லை. உள்ளே காக்கி சட்டைக்காரர் களே தெரிந்தனர். பின்புற வாசலில் துவக்கோடு நின்ற ஒருவன் மறிக்க முற்பட்ட இவளை கேலியோடு பார்ப்பதாய் பட்டது.
இவளுக்கு சற்று வெட்கமாக போய்விட்டது. இவர்களெல்லாம் இப்படி பொதுப் போக்குவரத்துக் கான பஸ்களை தமக்கென எடுப்பதினால்தானே இந்த எட்டரை மணி பஸ்கூட இன்னும் வரவில்லை என எரிச்சல்ப்பட்டாள்.
இனி மினி பஸ்ஸில்தான் போக வேண்டும். அதுதான் வரும். அதை இப்படி கைநீட்டி மறிக்கத் தேவையில்லை. எல்லா மினி பஸ்களுமே இந்தக் கோயிலடியில் தாமாகவே நிற்கும். பயணிகளிடம் சேகரித்த சில்லறைகளை உண்டியிலில் போட கொண்டக்ரர் பஸ் நிற்கும் முன்பே கீழே குதித்தோடி வருவான். அந்தநேரம் மினி பஸ்ஸின் வாசலருகே போய் நிற்கலாம். காசை போட்டுவிட்டு வந்தவன் வாசலை அடைத்து நிற்கும் சனத்தை, சிறிது நகரச் செய்து இவள் ஏற இடம் தருவான். w இவள் நினைத்தது மாதிரியே ஒரு மினி பஸ்தான் இப்பொழுது வந்து நின்றது. கொண்டக்டர் கீழே குதித்து இறங்கி வந்தான். இவள் மினிபஸ் வாசலருகே போனாள். பஸ்ஸிற்குள் பலர் நின்றார்கள். ஆனாலும் இவள் கால்வைத்து உள்ளே ஏற இடமிருந்தது. ஏறினாள். உள்ளே றைவரின் சீற்றுக்கும் பயணிகள் சீற்றுக்கும் இடையே சன்னலோடு சிறிது இடைவெளி புலப்பட்டது.
25

Page 15
கால்களை மெதுவாக நகர்த்தி அந்த இடத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு விட்டாள்.
ஆனாலும் மினி பஸ் இன்னும் நகரவில்லை. கொண்டக்டர் இன்னும் வந்தேறவில்லை.
இவள் சன்னல் வழியே வெளியே பார்த்தாள். இதுவரை இவள் நின்ற அந்த கோயிலடியின் சூழல் சற்று வித்தியாசமான கோணத்தில் தெரிந்தது. யாரோ சைக்கிளை ஒட்டிக் கொண்டு றோட்டால் போனார்கள். டிறைவரும் சீற்றில் இல்லை. தன் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு அவனும் வெளியே போயிருக்க வேண்டும். இவள் மறுபக்க சன்னலால் எட்டிச் சனக் கூட்டத்தை விலத்திப் பார்த்தாள். றைவரும் கொண்டக்டரும் வைரவர் கோயிலை சுற்றிவந்து கொண்டிருந்தார்கள். என்ன நேர்த்தியோ?
மினி பஸ்ஸிற்குள் சனங்களெல்லாம் அப்படியே இருப்பது போலத் தெரிந்தது. இவளுக்குத் தானும் அவர்களும் பஸ்ஸோடு மீள தனியே விடப்பட்டு விட்டது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.
26

கில் இருந்தவர்களிடையே ஒரு
மெளனம் இறுகியிருந்தது. எல்லோருமே, அது இது என்று எதேதோ பேசிவந்தவர்கள்தான். சொல்லி வைத்தாற்போல், அவ்வப்பொழுது இப்படி மெளனத்தில் மூழ்கிக் கொண்டனர்.
தங்கள் எல்லோரையும் இம்சைப்படுத்துவது, ஒரே மாதிரியான கவலைதான் என்பது சிவரஞ்சனிக்குத் தெரிந்திருந்தது.
விட்டு விட்டு வந்த வீடு, வாசல், தோட்டம்,
துரவு.
27

Page 16
அவர்களும் கொட்டிலில் கட்டித் தூக்கியிருந்த வெங்காயத்தை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார்கள். அந்த வெங்காயத்தை கிண்டியவுடனேயே விற்றிருக்கலாம். சில வண்டிக்காரர்கள் தோட்டத்திற்கே வந்து கேட்டார்கள். விலை சரியாக அமையவில்லை என்று கொடுக்கவில்லை. அவர்கள் கேட்ட விலைக்கே கொடுத்திருந்தால், இதுவரை செலவழித்த காசிற்கு மட்டும் தான் கண்டிருக்குமென்று மகேந்திரன் சொல்லி விட்டான். பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து காயவைத்து, ஆள் வைத்து குந்து குந்து ஆக கட்டி, கொட்டிலுக்குள் காற்றோட்டமாக தூக்கி கட்டி வைத்து, மாசி முடிய விலை ஏறுமெனக் காத்திருந்தது. ஆனால் மாசி முடியு முன்பாக சண்டை வந்து விட்டது.
எல்லாவற்றையும் அப்படியே போட்டது போட்டபடி விட்டு ஓடி வந்தாகி விட்டது. டிராக்டர் பிடித்து உழுது, அடி உரமிட்டு வெங்காயம் நட்டு மூன்று நாளுக்கொருமுறை மிஷின் பிடித்து நீர் இறைத்து, அடிக்கடி மருந்தடித்து. இருபத்தி ஐந்து தறை வெங்காயம். எல்லாம் வீணாகிப் போய் விட்டன. நினைக்க நினைக்க தாளவில்லை. வண்டிக்காரர்கள் கேட்ட விலைக்குக் கொடுத்திருந்தால், செலவழித்த காசாவது திரும்பக் கிடைத்ததே என்றிருக்கலாம். பட்ட சிரமம் ஒன்றுதான் நஷ்டமாயிருக்கும்.
படகின் மறு மூலையிலிருந்து ஒரு குழந்தை வீரிட்டுக் கத்துவது கேட்டது. தொடர்ந்து தாயின் சமாதானப்படுத்த முயலும் குரலும் கேட்டது.
சிவரஞ்சனி, தன் மடியிலிருந்த அமுதனைத்
28

தடவிக் கொடுத்தாள். அவனின் ஈரம் வழியுமுடலில் நீரை வழித்து விடும் பொழுதெல்லாம் அவனுக்கு காய்ச்சல் கீச்சல் வரக் கூடாதே என்று உள்ளூர அங்கலாய்ப்பாக இருந்தது. அவனுக்கு காய்ச்சல் வந்து விட்டால், போய் இறங்கப் போகும் அந்த வசதிகள் குறைந்த கிளிநொச்சிப் பகுதியில் அவனுக்கு மருந்தெடுக்க எங்கே போவார்கள்? அங்கு இருக்கும் ஒரே அரச ஆஸ்பத்திரியிலும் மருந்துத் தட்டுப்பாடு என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். கடல், தன் உடம்பை, படகு கிழித்துச் செல்வதைப் பொறுக்காதது போல வாரித் தூற்றி இரைந்து கொண்டிருந்தது. படகில் இருந்தவர்கள் ஏதுமறியாதவர்களாய், ஒவ்வொரு வாரியடிப்பிற்கும் உடல் கொடுத்து நனைந்த வண்ண மிருந்தனர்.
முதலில் இந்த அலையடிப்பிற்குள் சிலிர்த்து, சந்தோஷமாகச் சிரித்த அமுதன்கூட இப்பொழுது சோர்ந்து விட்டிருந்தான். பசிக் களை வேறு.
'ஜிப்’ போட்டு மூடிய தோற்பைக்குள் அரை றாத்தலுக்கும் குறைவான பாண் (ப்ரெட்) துண்டமிட்டு இருந்தது. நேற்று சாவகச்சேரி கடை ஒன்றில் அருமையாகக் கிடைத்த பண்டத்தின் பாதி. அவனுக்கு ஊட்ட முயற்சித்த பொழுதெல்லாம் ‘வேண்டாம்” என்று விட்டான். கடைசியாக, கிளாலிக் கடற்கரையில், இந்த படகிற்காகக் காத்துக் கொண்டு, மேற்கு புற வானச் சிவப்பு, கருமைக்குள் மூழ்குவதைப் பார்த்திருந்த வேளை, அவனுக்குக் கொடுக்க முயன்றது. அவனுக்கென எடுத்ததை தாங்களும் சாப்பிட மனமில்லாமல் மீள பத்திரப்படுத்தி வைத்தது.
29

Page 17
அமுதனுக்கும் பசிதான். இருமுறை கரைத்துக் கொடுத்த ‘அங்கர்’ பால் மாவைத் தவிர இன்று முழுக்க வேறு ஒரு சாப்பாடுமில்லை. என்றாலும் பிடிவாதமும் அதிகம். பாண் என்றால் பிடிக்காது. அதுவும் சற்று காய்ந்து விட்டிருந்த பாண். காலையில் இடியப்பமும் சொதியும் என்றால்தான் நாலுவாய் தின்பவன். இப்பொழுது பிஸ்கட் இருந்திருந்தால் தின்றிருப்பான் சிலவேளை.
கொண்டு வந்த பிஸ்கட் பக்கெற்றுகள் தீர்ந்து விட்டன. கடைசிப் பக்கெற்றும், மூன்றாம் நாள் மாலை நடந்தோய்ந்து சாலையோர மரத்தடியில், ஈரமில்லாத இடமாய் பார்த்து, கல் சேர்த்து, காய்ந்த சருகு கூட்டி, தேநீருக்காய் அடுப்பு மூட்டிய வேளை முடிந்து விட்டது.
"ஆமி நெருங்கி விட்டது. எல்லோரும் ஊரை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பைக் கேட்டு நிராசையும் குமைச்சலும் போட்டியிட ‘எப்படி எத்தினை தரமெண்டு ஒடுறது? நான் வரேல்லை. இஞ்சையே இருந்து குண்டு பட்டு சாகிறன். நீங்க பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போங்கோ” என வீம்பு காட்டி உட்கார்ந்து விட்ட பொழுது, மகேந்திரன் அவசரமாய் வெளியே போய் காலியாக்கப்பட்டு, பூட்டப்பட்டுக் கொண்டிருந்த கடைகளிலிருந்து ஏதோ கிடைத்தவற்றை தேயிலை, சீனி, பால்மா என வாங்கி வந்த பொழுது அவற்றோடு இந்த பிஸ்கட் பக்கெற்றுகளுமிருந்தன. வந்தவன் "அக்கம் பக்கமெல்லாம் வீடுகளைப் பூட்டி விட்டு, வீதியில் இறங்கி விட்டார்கள்” என்று சொன்ன பின்தான் அவள் பரபரப்படைந்தாள். பெட்டிகள் அடுக்கி, இடை
30

வெளியில் சோறாக்கி சாம்பார் போல் ஒரு பருப்புக் குழம்பு வைத்தாள். மத்தியானம் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு, மீதியை தூக்குச் சட்டியில் போட்டு எடுத்துக் கொண்டாள்.
அந்த உணவு, அடுத்த நாள் மதியம் வரை வந்தது. ஒரு பூட்டிய கடையின் முன்பாக, தட்டி இறக்கிய கூரையின் கீழிருந்து கடைசி கவளங்களை உண்டனர். அமுதன் அப்பொழுதும் அந்த சோற்றைத் தின்ன வில்லை.
அடுத்த நாள், யாரோ தோசை, சுட்டு விற்கிறார்கள் என அறிந்து முண்டியடித்துப் போய் ஒரு கிடுகு கூரைக்குள் "தோசை’ என்ற பெயரில் ஒரு கிழவி சுட்டு விற்றுக் கொண்டிருந்த கோதுமை மாக் கரைசலை, ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய பொழுதும், அதில் இரண்டு விள்ளல்தான் தின்றான்.
பிஸ்கட் முடிந்த பின் ‘அங்கர்’ பால் மாவைத் தான், பிளாஸ்க் நீரில் கரைத்துக் கொடுத்து வந்தாள். இப்பொழுது அதுவும் முடிந்து விட்டது.
இந்த பாண் ஒன்றுதான் உள்ளது இப்பொழுது. படகில் இருந்தவர்கள் இப்பொழுதும் அமைதியாய் தானிருந்தனர்.
என்ஜினின் உறுமல் சத்தமே பெரிதாய் கேட்பது போலிருந்தது. படகின் இருபுறமும் திரண்டு மோதும் அலை நுரைகளின் கொதிப்பும் தள தளப்பாய் கேட்டுக் கொண்டிருந்தது.
தடையேதுமின்றி கடல்காற்று வந்து வீசிக் கொண்டிருந்தது. அவள் கண்களை ஆயாசத்துடன் மூடிக் கொண்டாள்.
31

Page 18
மூடிய கண் திரைக்குள் மனிதர்கள் ஊர்ந்தனர். தெருவை அடைத்துக் கொண்டு மூட்டை முடிச்சு களோடு, குழந்தை குட்டிகளை இழந்தோ, சுமந்தோ கொண்டு குடும்பம் குடும்பமாக நகரும் மக்கள். மழைக் கம்பிகளுக்கு OG LsT55 மங்கலாகத் தெரிந்தனர். சேற்றையும் சகதியையும் தாண்டி நடந்தனர்.
நடக்கையில் தான்பட்ட அவஸ்தையும் கண் முன் தெரிந்தது. பாளம் பாளமாய் பிளந்து கொண்ட கால் விரல் இடுக்குகளில் சேறும் சகதியும் அப்பி தாங்க முடியாத எரிவைத் தர, ஒரு கையில் அமுதனைத் தூக்கி, மறு கையில் பாரமேத்திய சைக்கிள் ஹாண்டிலைப் பிடித்து நடக்கும் கணவனின் பின்னால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உயிர் போய் வரும் வேதனையைத்தர, தன் உடம்பையே தான் இழுத்துக் கொண்டு நடந்த அவள்.
கண்களைத் திறந்து விரிய வைத்துக் கொண்டாள். இனி கண்களை மூடுவதில்லை என்ற நினைப்போடு, கடல் ஆகாயம் என்று பார்க்கத் தொடங்கினாள். கடல் எதிரே கருமையாய், கெட்டியாய் தெரிந்தது. கடலி லிருந்து எழுந்தது மாதிரியான வானம் மேலே கவிந்து கிடந்தது. தேய் நிலாக் காலத்து லேசான வெளிச்சத்தில் சாம்பல் கலந்த மேகம் நடு வானமெங்கும் பரவித் தெரிந்தது. மேவாயை நிமிர்த்தி அதையே பார்க்கையில் அது தாழத் தொங்கி அசையாது கண்ணை நிறைத்தது.
இந்த வானக் கருமைப் பின்னணியில் ஒரு ஹெலிகாப்டர் சிவப்பும் மஞ்சளுமாய் சீறிக் கொண்டு மேலே வந்தால் எப்படியிருக்குமென கற்பனை ஓடியது.
32

வீட்டை விட்டு வெளியேறிய அன்றிரவு ஒரு பெரிய மரத்தடியின் கீழ் தங்கியிருந்த பொழுது வான இருள்மையில் சிவப்பாய் கோடிட்டு, வடக்குப் புறமாக ஹெலியோ வேறெதுவோ, சிறிக் கொண்டு தீங்கங்குல் களைக் கொட்டித் தீர்த்ததை நினைத்துக் கொண்டாள். சுற்றிச் சுற்றி வந்து அது மீள மீளச் சுட்டது.
அதன் இலக்கு தாங்களில்லை என்று நன்கு தெரிந்திருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக் கையில் ஒருவித அழகுணர்வு கலந்த அச்சம்.
அதுபோன பின்பு மரத்தடியில் இருக்கப் பயந்து, பின்னாலிருந்த காம்பவுண்ட் சுவர் கதவைத் தள்ளிக் கொண்டு ஒரு வீட்டிற்குப் போனார்கள். வீட்டிற்குள் படுக்க இடமிருக்கவில்லை. நிறையச் சனங்கள். வெளி முற்றத்தில் பெட்வீட் விரித்துப் படுத்தார்கள். ஆனாலும் விமானச் சத்தம் நெருங்கிக் கேட்ட ஒவ்வொரு முறையும் எழுந்து, அமுதனைத் தூக்கி, பெட்வீட்டை உருவிக் கொண்டு வீட்டுச் சுவரோடு மறைவாய் ஒண்ட வேண்டியிருந்தது. அன்றிரவு நித்திரை என்பதே இல்லை. அன்று அவர்களைக் கண்டு கொள்ளாமல் போன ஹெலிகாப்டர், இப்பொழுது வந்தால் சும்மா போகாது. கட்டாயம் பதித்தெழுந்து குண்டு வீசி விட்டுத்தான் போகும். அல்லது சாய்வாக நின்று, ஐம்பது “கலிபா’களால் "படபட" என அடிக்கவும் கூடும்.
எல்லோரும், குண்டுபட்டுச் சிதறியவர்கள் போக, மற்றவர்கள், அரண்டு புரண்டுக் கொண்டு கடலிற்குள் விழவேண்டியதுதான்.
ஒரு இரவு மூன்றாம் நாளாயிருக்கலாம். ஒரு
33

Page 19
கோயில் மண்டபத்தில் படுத்திருந்த பொழுது, இப்படித் தான் அரண்ரடித்துக் கொண்டு எழும்பினார்கள்.
கோயில் கிணற்றில் மேல் கால் கழுவி, பித்த வெடிப்பு உபாதையை தைலம் போட்டு இதப்படுத்தி, கோயில் மண்டபத்தில் கால் நீட்டிப் படுக்க இடம் கிடைத்து, கோயில் மேல் குண்டு போட மாட்டார்கள் என்று நினைவு பாதுகாப்புத்தர, படுத்தவள் தான்.
செவிப்பறையில் வந்து ஏதோ மோதியது மாதிரி, திடுக்கிட்டு கண் விழித்த பொழுது சுற்றியிருந்த சனங்களெல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
என்ன எது என்று தெரியாத தூக்க மயக்கத்தில் அமுதனைத் தடவி எடுத்துக் கொண்டு, அவளும் எழுந்தோட முற்பட்டு.
பிறகு தெரிந்தது, பக்கத்து வீடொன்றில் தான் ஷெல் வந்து விழுந்ததென்று.
மீள படுத்திருந்த இடத்திற்கு வந்த பொழுது, அந்த இடம் போய்விட்டிருந்தது. சுற்றி வர நீட்டிக் கொண்டு படுத்து விட்டவர்களோடு சண்டை பிடிக்க முடியுமா என்ன? கிடைத்த கொஞ்ச இடத்தில் அமர்ந்து அமுதனை மடியில் வைத்துக் கொண்டு மீதி இரவைக் கழித்தாள் பக்கத்து வீட்டில் "ஷெல்" விழுந்ததினால் செத்துப் போன குழந்தையை நினைத்துக் கொண்டு.
அடுத்த நாளிரவும் அப்படித்தான். அவர்கள் படுக்க ஒரு பூட்டிய வீட்டின் போர்டிகோ வசதியாகத் தானிருந்தது. ஆனால் நடு இரவில் நல்ல மழை பிடித்துக் கொண்டு விட்டது. தூக்கி தூக்கி அடித்த சாரலில்
34

படுத்திருந்த படுக்கை இடம் தொப்பலாகி விட்டன. பிள்ளையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. - பார்க்கப் போனால் வீட்டைப் விட்டு வெளியே வந்த பின், ஒரு இரவு கூட ஒழுங்காக நித்திரை என்ற ஒன்றில்லை. அதுவும் நேற்றிரவு ஒரு கண் மூடவில்லை.
படுக்கக் கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட மண்டபம், நித்திரை கொண்டிருக்கலாம். முடியவில்லை. வரும் வழியில் கைதடிப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் கீழ் நிறைந்திருந்த நீரில் மிதக்க குழந்தையின் உடல் சிற்றலைகளால் அலைப்புண்டது போல் அவள் நினைவிலும் அலைப்புண்டது. அதோடு, கைப்பிடிச் சுவரோடு, நாலு பேரின் கைத்தாங்கலுக்குள் திமிறிக் கொண்டு அரற்றிய அந்த தாயின் கதறல். பாவி! ஏன் இடுப்புக் குழந்தையைத் தவற விட்டாள்? பாலத்தின் மேல் நடக்கையில் களைத்து விழுந்தாளோ? நெரிசலில் சிக்குண்டு கை தவற விட்டாளா?
இதையே நினைத்து நினைத்து மாய்ந்த வேளையில் தான் விடியப்புறமாக அந்த தீர்மானம் உருவானது.
இத்தனை ஆபத்துக்களிடையே அமுதனை இங்கே வைத்திருக்க முடியாது. இப்பொழுது, வடக்கு கிழக்கு என்று யாழ் குடா நாட்டின் எந்தப் பகுதிக்கு ஓடினாலும் அங்கும் சண்டை தொடர்ந்து பின்னால் 'வரத்தான் போகிறது. அமுதனையும் கொண்டு நெடுக ஓடிக் கொண்டிருக்க முடியாது. அவனுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவனைப் பத்திரமாகப் பார்க்க வேண்டும்.
இதற்கு யாழ்குடா நாட்டை விட்டு, கடல்
35

Page 20
நீரேரியைக் கடந்து போய் விடுவது தான் உசிதமெனப் பட்டது. பெரு நிலப்பரப்பு இப்பொழுது அமைதியாக இருக்கிறது. இப்போதைக்காவது அங்கு சண்டை வராது. இந்த முடிவு, திருப்தி தரவில்லைதான். மனத்தின் ஒரு மூலையில் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இப்படி ஒரேயடியாக குடாநாட்டை விட்டு வெளியேறி விட்டால், பிறகு எப்பொழுது திரும்பி வர முடியுமோ? விடிந்து, பாடசாலை மண்டபத்தை விட்டு வெளியே வந்த பொழுது ஒரு ட்றைக்ரரில் ஆட்கள். திணிய திணிய ஏறிக் கொண்டிருந்தனர் கிளாலிக் கடற்கரைக்குப் போக, அவர்களுக்கும் வேறு ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை. ஏறி விட்டார்கள்.
படகுப் பிரயாணம் மூன்று மணித்தியாலங்கள் எடுக்குமென்றார்கள். இன்னும் மூன்று மணித்தி யாலங்கள் வரவில்லையா?
அதே நேரம் கரையே வரக்கூடாது என்றுமிருந்தது. இப்படியே நீள கடலில் போய் கொண்டிருந்தால் போதுமென்றிருந்தது.
நேரம் ஆக, கரை வரப்போகிறதே என்ற தவிப்பாகவுமிருந்தது. அங்கு போய் என்ன செய்வது என்று நினைக்கவே விருப்பமில்லாதிருந்தது. இப்படி பெருந்தொகையாக அங்கு போய் இறங்கி என்ன செய்வது? கடவுளே!
சொல்லி வைத்தாற் போல். எதிரே ஒரு ஒளி புள்ளியாகத் தோன்றி, வரப் பெரிதாகி வந்தது. சரியான ஒளியின் வழி காட்டலின் பின்னால்தான் படகு செல்கிறதா என்ற ஒரு சந்தேகம் ஒரு கணமெழுந்தது.
36

சில படகுகள், வேறொரு ஒளியைப் பின்பற்றி தவறுதலாக பூநகரி கடற்படை தளத்தருகே கூட போய் விடுவதுண்டு என அவள் கேள்விப்பட்டிருந்தான்.
இப்பொழுது ஒளி பட்டையாக கடலில் விழுந்து தெரிந்தது. அதன் விளிம்போரம், கரையோடு நின்று படகுகள் சில கருமையாய் தெரிந்தன.
படகோட்டி, என்ஜினை நிறுத்தி விட்டு கையில் நீண்ட துடுப்புடன், ஒரு பலகை மேலேறி நின்று கொண்டான். துடுப்பு, நீரை “தடக் தடக்’ என அடிக்கும் ஒலி சீராகக் கேட்க படகு நழுவிக் கொண்டு சென்றது. கரையோரச் சிறு பாறைகளை லாவகமாகக் கடந்தபடி
படகோட்டி கெட்டிக்காரன்” தான் என்ற எண்ணமெழுந்தது. ஆட்களை கரையில் இறக்கிவிட்ட சில படகுகள் அவர்களைக் கடந்து சென்றன.
படகு, கரையை அண்மியதும் நின்று கொண்டு விட்டது. ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். மகேந்திரன் அவள் மடியில் இருந்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டதும் அவளும் எழுந்தாள். தலை கிறுகிறுத்தது. படகு விளிம்பைப் பிடித்துக் கொண்டு சிறிது நின்றாள். பசிக் களைப்புத்தான். நேற்று முழுக்க இரு தேநீர்தான்.
நீருக்குள் இறங்கிய பொழுதும் கால் தடுமாறிக் கொண்டு வந்தது. படகின் வெளிப்புறத்தைப் பற்றிக் கொண்டு கால்களை நீருக்குள் அழுத்த ஊன்றிச் சமாளித்தாள். அவளிடம், படகிலிருந்தபடி பிள்ளையைத் தூக்கித் தந்த மகேந்திரன், "கவனம், கவனம்” என முணு முணுத்தான். மண்ணை அரித்துக் கொண்டோடிய நீர், பித்த வெடிப்புக் கால்களுக்குச் சுகமாகத் தானிருந்தது.
37

Page 21
மெல்ல நடந்து கரைக்கு வந்தாள்.
படகில் இருந்தவர்கள், கரையில் ஒன்றாய் சேர்ந்து கொண்ட்னர். பிய்த்துக் கொண்டு போன கரைக்காற்றில் உப்பு நீரில் கனத்திருந்த ஆடைகள் யாவும் நொடியில் காய்ந்தன. மகேந்திரன், அவர்களின் சாமான்களைக் கரைக்குகொண்டு வந்து சேர்த்த பின் சைக்கிளையும் தூக்கி வந்தான். சாமான்களை மீள சைக்கிளில் ஏற்றினான்.
உள் பகுதிக்கு நடக்கத் தொடங்கினர். சதுப்பு நிலத்தைக் கடந்து, கடற்கரை மணலைக் கடந்து, சைக்கிள் சில்லுகளும் கால்களும் புதைந்து புதைந்து எழ நடந்தனர்.
ஜெனரேட்டர் தந்த ஒளி கடற்கரையோடு நின்று விட்டது. வானம் முழுவதையும் மேக மூட்டம் கப்பி பிடித்திருக்க வேண்டும். எல்லாம் ஒரே இருட்டாக இருந்தது. கண்ணில் தெரிந்த மரங்கள்யாவும் கரும் பூதங்களாகத் தெரிந்தன.
பாதையோரத்தில் ஒவ்வொரு மரமாக இடம் தேடி நடந்தனர். எல்லா மரத்தடியிலும் ஆட்களிருந்தனர். விலகி விலகி நடந்து ஒரு மரத்தடியில் இடம் பிடித்தனர். பெட்வீட் விரித்து அமுதனை கிடத்தி விட்டு தாமும் அருகேபடுத்தனர்.
அவள் கண் விழித்த பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பக்கத்தில் கணவனும் பிள்ளையும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். உடம்பு அயர்ச்சி யாக இருந்தது. எழும்பினால் தலை சுற்றிக் கொண்டு வருமோ என்றும் நினைத்தாள். இனி என்ன செய்யப் போகிறோம் என்பது தான் தெரியாதிருந்தது.
38

வ்ேண்டுமானால் மரத்தை மரக்கிளைகளைக் கூரை யாக்க் கொண்டுவிடலாம். ஆனால் சாப்பாட்டிற்கு யார் வீட்டிற்குப் போவது? இவ்வளவு பெருந்தொகை யான மக்களுக்கு யார் சாப்பாடு போடப் போகிறார்கள்?
மெதுவாக எழுந்து மரத்தின் பின்னாலுள்ள பற்றைக்குள் போய் வந்தாள். மரத்தடிக்குத் திரும்பு கையில் கால்கள் மடிந்து விழுந்தன. அப்படியே உட்கார்ந்து முகத்தை முழந்தாளில் புதைத்த பொழுது ஆற்றாமை பொங்கியது. அழுகை கொப்பளித்து வந்தது. மகேந்திரன் எழுந்து "எல்லோருக்கும் தானே இப்படி" என்று ஏதோ தேற்ற முயன்று தோற்றுப் போனான்.
அவள் தானாக அழுது முடிந்த பொழுது, அமுதன் விழித்துவிட்டிருந்தான். அவளைப் பார்த்து "அம்மா” என்றுகை நீட்டினான். அவனைத் தூக்கி இறுக்கித் தழுவிக் கொண்டாள்.
அவனை மரத்தின் பின்புறம் கொண்டு போய் நிறுத்தி தூக்கி வந்தாள். அமுதன் அவள் தோளில் முகத்தை உராய்ந்துமெல்லச் சிணுங்கினான். "அம்மா! பாண் தாங்கோ"
அவசரமாக அவனைப் பக்கத்திலிருந்தி, தோல் பையைத் திறந்தாள். பாணில் ஒரு துண்டு பிய்த்து அதில் லேசாகச் சீனி தூவி ஒரு விள்ளலை அவன் வாயருகே கொண்டு போனாள். அவன் ஆவலோடு வாய் திறந்து அதை வாங்கிக் கொள்வதைக் காண மீள ஆற்றாமை பொங்கியது. சாதாரணமாக சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பவன், இடியப்பம், சொதி என்றால் மட்டும் நாலு வாய் தின்பவன். இந்த காய்த்துப் போன பாண் துண்டை ஆர்வமாய் சாப்பிடுவதைக் காண, இன்னு
39

Page 22
மொரு முறை அழுது விடுவோமோ எனத் தோன்றியது. கையிலிருந்த துண்டு முடிந்து விட்டது. அவள் குனிந்து இன்னொரு துண்டைப் பிய்த்தெடுத்தாள். urrGJrr பார்ப்பது போலிருந்தது. நிமிர்ந்தாள். அவர்களோடு மரத்தடியைப் பகிர்ந்துள்ள மற்ற குடும்பத்துச் சிறுவன் ஒருவன், சற்று விலகி நின்று அவள் கையிலிருந்த பாணைப் பார்த்து நின்றிருந்தான். அமுதனை ஒத்த வயதுதாணிருக்கும். மூன்றரை மிஞ்சினால் நாலு அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
பாணின் இரு துண்டங்களைப் பிய்த்து நீட்டி, அவனை அருகில் கண்களால் கூப்பிட்டாள். சிறுவன், தயக்கமின்றி வந்து வாங்கிக் கொண்டான். அப்பொழுது தான் அவனின் தாய் அதைப் பார்த்திருக்க வேண்டும் “என்னத்திற்கு இதெல்லாம்?” என அவள் சொல்ல விரும்பியது போலிருந்தது. ஆனாலும் அவள் சொல்லவில்லை. இயலாதவள் போல் நின்றாள்.
கையிலிருந்த மீதி இரண்டு துண்டும் அமுதனுக்குக் காணும் என நினைத்துக் கொண்டாள். கையில் எடுத்த துண்டும் முடிந்து விட்டிருந்தது.
மற்றதையும் அவள் எடுத்துக் கொண்ட பொழுது முதுகில் ஏதோ குறுகுறுப்பது போல இருந்தது. திரும்பினாள்.
பக்கத்து மரத்தடியிலிருந்த வேறொரு குழந்தை, தன் தாயின் முதுகிற்குப் பின்னாலிருந்து அவள் கையிலிருந்த துண்டையே பார்த்துக் கொண்டிருந்தது.
40

3
யோகம் இருக்கிறது
ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
"சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்" என எரிச்ச
விட்டு இவளிக்கிடுவான் நாவைச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி.
41

Page 23
“என்ன தம்பி! கன நாள் லீவோ ? . “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்" "இனி ஊரோடை தான் தங்கிதோ?” இந்த சொடுக்கல்களிடையே, அவன் அடிபட்ட நாயாய் “விர்" ரென்று, தன் ஊரைக் கடந்து வந்திருக்கின்றான்.
சற்று முன் "என்ன தம்பி! பிழைப்பெல்லாம் எப்பிடி?” என் பிழைப்பில் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் போனானே, அந்த சிவராசா! அவனிடம், சைக்கிள் சீற்றின் இரு புறமும் பிதுங்கி வழியும் அந்த சதையைப் பிடித்து உலுக்கி” இது மட்டும் நேர்மையாகச் சம்பாதித்ததா?” என கேட்டிருக்க வேண்டுமென்று ஒரு கணம் கிளர்ந்து மடிந்த ஆவேசத்தில் நினைத்துக் கொண்டான்.
எதடா! தங்கள் ஊர்க்காரனெருவன், நல்ல உத்தியோகத்திலிருக்கிறான், என்று பெருமைப்பட வேண்டாம்! அவன் வந்து நொந்துகிடக்கும் பொழுது இப்படி நக்கல் பேச்சுகளால், குத்திக் காட்டாமலாவது இருக்கத் தெரியாதா? எல்லோருக்கும், தான் உத்தியோகம் பார்த்தபொழுது எரிச்சல். இப்பொழுது பரம சந்தோஷம்.
அகன்று, நீண்டு வந்த கொழும்புத் துறை வீதி, அடிக்கடி அவனின் கவனத்தைக் கோரி நின்றது. அங்கு மிங்குமாய் பறக்கும் ஸ்கூர்ட்டர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடக்கும்கார்கள். வரப்போகும் நகரத்தின் சுறுசுறுப்பினைக் கோடிகாட்டி நின்றன.
ஒரு மினி, மாக்ஸி, மிடிக் கதம்பம், கைகளில்
42

நோட்ஸ் புத்தகங்களுடன் அவனைக் கடந்து சென்றது. யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட்டாலும், இந்த ரியூட்டறிகளுக்கு ஒய்வே இல்லை.
சட்டென்று அவன் கண்கள் தடுக்கப்பட்டு நின்றன. எதிர்ப்புறத்தில், ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மிதந்து வரும் முகம். gGum ! தன்னோடு யூனிவளிற்றியில் படித்தவன்; பின்பு, வவுனியாக் காட்டில் எங்கோ ஒரு பள்ளிக்கூடத்தில் டெம்பரரி டீச்சராகத் தன்னோடு வேலை செய்தவன்; கண்டு விட்டால் ஏதாவது கேட்கப் போகிறான், பாவி! அவன் பயந்தது போலவே ஸ்கூட்டரில் வந்தவன் அவனைக் கண்டுவிட்டான். கையை உயர்த்தி இறக்கிவிட்டு, ஸ்கூட்டரையும் நிறுத்திக் கொண்டான்.
அகப்பட்டாயிற்று! “ஹலோ! கண்டு கன காலம்! இப்போ ஸி.ஏ.எஸ். ஒபிஸரல்லா? எங்கே போஸ்டிங்?" உண்மையாகத்தான் கேட்கிறானா? அல்லது வேண்டு மென்றே தன்னை ஆழம் பார்கிறானா? தான் ஸி.ஏ. ஏஸ் ஒபிஸர் என்பது தெரிந்த இவனுக்கு, மற்றதும் தெரியாமலா இருக்கும்?
எண்ணத்திற்குத் தொடர்பில்லாத ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு பட்டிக் காட்டுப் பகுதியின் பெயரைச் சொன்னான். அங்கு தான் ஏ.ஜி.ஏ ஆக இருப்பதாக, கிழக்கு மாகாணத்தில் முன்பு வேலை பார்த்தது நல்லதாகிப் போய்விட்டது. அதனால் தான் அப்பகுதியிலுள்ள கிராமப் பகுதிகளின் பெயர்களும் தெரிந்திருக்கின்றன. தான், கடைசியாக வேலை பார்த்த இடத்தைச் சொன்னால், நாளைக்குப்
43

Page 24
பேப்பரில் வந்து, ஊர் சிரிக்கும்பொழுது இவன் தெரிந்து கொண்டு விடமாட்டானா?
"ஓ! சந்தோஷம். அப்ப எப்பிடி மற்றப் புதினங்கள்?" சிறிது நேர விசாரிப்பின் பின் "அப்ப வாறன்" என்று சொல்லி, வந்தவன் விடைபெற்றுக் கொண்டான். இவன் படித்தவன்; பட்டினவாசி; தெரிந்திருந்தாலும் தெரியாதது மாதிரிப் பாவனை காட்டி சுகம் விசாரிக்கும் இங்கிதம் அறிந்தவன். எங்கள் ஊர்ச்சனம் போலவா? அன்று வவுனியா, ஆசிக் குளத்தில், தன்னோடு இருந்தபொழுது ஆசிரிய வேலையை நிரந்தரமாக்க யாரைப் பிடிப்பது என்று ஒடித்திரிந்தவன், இவன் ஸ்கூட்டரில் போகிறான். இப்பொழுதும் டீச்சராகத்தான் இருப்பானோ, அல்லது மிடில் ஈஸ்ற் என்று எங்கேயும் போய் உழைத்து வந்திருப்பானோ? அப்பொழுதான், அவனைப் பற்றித் தான் ஒப்புக்குக் கூட ஒன்றும்கேட்காதது தெரிந்தது. இங்கிலிஷ் மீடியத்தில் படித்தவன், வெளிநாடுகளுக்குப் போய் அள்ளிக் கொண்டு வந்திருப்பான்.
எல்லோரும் ஸ்கூட்டரில் போகிறார்கள். தான் ஒரு ஏ.ஜி.ஏ. ஐயாவின் பழைய "லொடக் லொடக்" சைக்கிளில் தானே போகிறேன். லஞ்சம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அப்படி வாங்கியிருந்தால் தான் கோட்டை கட்டியிருப்பேனே!
அவன் தன்னால் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்ட மனைவியின் சீதன வீட்டை நினைத்துக் கொண்டான். கோட்டை மாதிரித்தானா? என்ன செய்வது, நகுலா வீடு பழைய பற்ரன் எனச் சொல்லி, வீட்டைத் திருத்த

வேண்டுமென்று விடாப் பிடியாக நின்றாள். கை வைத்த பொழுது, அது இவ்வளவு காசை விழுங்கும் என்று நினைக்கவில்லை.
முதலில் அவன் ஐயாவின் கடனை அடைக்க வேண்டியிருந்தது. துவக்கத்தில், பயந்து பயந்து கொண்டு லஞ்சம் வாங்கிய காலத்தில், எத்தனையோ "சான்ஸ்’களை வெறும், பயத்தினால் இழந்திருக்கிறான். அதற்காகப் பின்பு அங்கலாய்த்திருகிறான். பிறகு பழகி விட்டது. யார் யாரிடம் இவ்வளவு இவ்வளவு தொகை வாங்க வேண்டுமென்று 'சார்ட் தயாரித்துவைத்தது Lorr£6rfl.
தங்கைக்கு “டொனேஷன்’ கொடுத்து நல்ல உத்தியோக மாப்பிள்ளையாகப் பார்த்தான். வீடு, கட்டிக் கொடுத்தான் காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரண மானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன்; தகழியின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே தகழி’யும் எழுதியிருக்கிறார்.
அவன் கண்முன், அவனால் அத்தாட்சிப்படுத்தப் பட்ட பல கள்ளக் காணி உயில்கள் மிதந்தன. ஒரு நாள், இப்படியான உயில்கள் அறுபதை அவன் அங்கீகரித் திருக்கிறான். அரசாங்கக் காணிகளை தனிப்பட்ட வர்களுக்குச் சொந்தமாக இந்த கள்ள உறுதிப் பத்திரங்கள் காட்டின. இவற்றைக்காட்டி அரசுக்குச் சொந்தமான காடுகளிலுள்ள மரங்களைத் தறித்துக் கொண்டு போனார்கள். லொறி லொறியாக சம்பாதித்
45

Page 25
தார்கள். லட்சம் லட்சமாக இதற்கு அனுமதித்த அவனுக்குக் கிடைத்ததோ ஆயிரம், இரண்டாயிரம்!
இந்த ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டவன், ஐம்பது, இருபத்தைந்துகளுக்கு கூட ஆசைப்பட்டான்; அவனின் ‘சார்ட்’ எல்லோரையும் உள்ளடக்கியிருந்தது.
அந்த சம்பவத்தை - இதுவரை ஆயிரத்தெட்டுத் தரம் நினைத்து அது நடந்திராவிட்டால் என எண்ணி மாய்ந்து கொண்ட சம்பவம், அதை நினைத்துக் கொண்டான்.
அந்தக் கிராமவாசி உண்மையிலே இயலாதவன் போலத்தான் தோற்றமளித்தான். சமூக சேவைத் திணைக்களம் வழங்கும் மானியத் தொகைக்கு விண்ணபிக்க வேண்டிய எல்லாப் பத்திரங்களும் அவனிடம் இருந்தன. அந்தப் பகுதி கிராம சேவகரும், அவ் விண்ணப்பத்தை ஏற்கச் சொல்லி முறையாகச் சிபார்சுக் கையெழுத்திட்டிருந்தார். அவன் ஐயப்பட ஒன்றும் இல்லை.
விண்ணப்பப் பத்திரங்களை நீட்டிய கை வேறு ஒன்றையும் நீட்டாதது, அவனுக்கு எரிச்சலூட்டியது. “என்னப்பா! சும்மாயிருந்து கொண்டு தருமப்பணம் வாங்க ஆசை. அதுக்காக ஒண்டும் குடுக்க மனமில்லை” என்று சிடுசிடுத்தான்.
"கொண்டு வந்திருக்கிறன் ஐயா!” என்று சொல்லி, அந்தக் கிழவன் அவசரமாக மடியை அவிழ்த்து சில கசங்கிய நோட்டுகளை அவனிடம் நீட்ட அவன் வாங்க.
தடாலெனத் தள்ளு கதவைத் தள்ளிக் கொண்டு,
46

உள்ள வந்தவர்கள் - லஞ்சத் தடுப்பு உத்தியோகத்தர் களாம்.
அவன் பிடிபட்டு விட்டான், கையும் மெய்யுமாக, பிறகு என்ன! இரண்டு நாள்களில் மேலிடத்தில் இருந்து செய்தி வந்தது. அவனை பதவியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருப்பதாக
இரவோடு இரவாக, குவார்ட்டாஸ் வீட்டை ஒழித்து, சாமான்களை லொறியில் ஏற்றிவிட்டு, மனைவி, குழந்தைகளோடு, தானும் கிளம்பி விட்டான்.
மனைவியின் ஊராகிய ஆனைக் கோட்டையில் நெடுநாள் தங்கியிருக்க முடியாது. பெண் எடுத்த ஊரில் பரிசுகெட முடியுமா?
அவளை விட்டு விட்டு, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டான். வெளியில் தலைகாட்ட விருப்பமில்லை. *கண் மண் Gog5rfurtLogio வாங்கினான். அம்பிட்டுட்டான்” ஊர்ச்சனம், இவ்வாறு கதைப்பதாகப் பிரமை.
எத்தனை நாள், வீட்டில் முடங்கிக் கிடப்பதென்ற நினைவில், இன்று லைப்ரரிக்கு போய் வர துணிந்தது, பெரிய பிழையாகிவிட்டது.
சுண்டுக்குளி பெண்கள் பாடசாலையைத் தாண்டி, சென். யோன்ஸ் கல்லூரியை நோக்கிச் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. பாடசாலை விடுமுறைக் காலமிது. அவை எல்லாம், மூடப்பட்டு வெறிச் சோடிக் கிடந்தன. இல்லாவிட்டால் பள்ளிக்கூடம், மூடும் நேரமாகிய பின்னேரம் மூன்றரை மணிக்கு தெரு அமளிப்படும்; சுண்டுக்குளி மாணவிகளும் சென். யோன்ஸ் மாணவர்
47

Page 26
களுமாக, அவனும் அப்படித்தான் கவலையற்ற மாணவனாய், எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் சுண்டுக் குளிப் பெட்டைகளோடு, கள்ளமில்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டு இத் தெருவில் திரிந்திருக்கின்றான். அவர்களில் சிலரைக் கொண்டு தன் நோட்ஸ்க்களை எழுதுவித்திருக்கின்றான். பாடசாலையிலும் Frfi, யூனிவஸிற்றியிலும் சரி, அவனிடம் நோட்ஸை வாங்கிப் போய் முத்துமுத்தான கையெழுத்தில், நேர்த்தியாக நோட்ஸ் எழுதிக் கொடுக்க அவனுக்குச் சில பெண்களிருந்தனர். ஒரு சுண்டுக்குளிப் பெட்டையின் ஞாபகம் கூட கமலாசனியோ, என்னவோ, கூர் நாடியும், அழகான மூக்கும் அகன்ற கண்களுமாய்.
அது ஒரு இனிய காலம்! எதிர்படுபவற்றை யெல்லாம் சுவையாக நோக்கும் புத்திளமை. இப்பொழுது, அவை எல்லாம் எங்கே? அருமையானவற்றை எல்லாம் இழந்து விட்ட சோகம் நெஞ்சைக் கப்பி பிடித்தது மாதிரி “ஏன், ஸி.ஏ.எஸ் பரீட்சை எடுத்தேன், பாஸ் பண்ணினேன்” என்றிருந்தது. -
இப்பொழுதோ, படித்தவன், பழகியவன், எங்கே எதிர்ப்படுகிறான் என்று பயந்து செத்துக் கொண்டு.
யாழ் நகரின் அகன்ற பெரும் சாலை, அடர்ந்த சாலை ஒர மரங்கள், சுப்பிரமணியம் பூங்கா. ஒன்றுமே உறைக்கவில்லை.
லைப்ரரி வாசல், வீணையும் கையுமான சரஸ்வதி சிலையும், சுற்றுப் புல்வெளியும் பளிச்சென தெரிந்தன. கேற்றைக் கடந்து உள்ளே நுழையும் பொழுது, லாவகமாக சைக்கிளை ஒடித்துத் திருப்பி “விர்ரென்று”
48

லைப்ரரிக்கு வந்து நடையும் குதியுமாக லைப்ரரி வாசலை மிதித்த பழைய நாட்களின் நினைவு ஓடி வந்தது.
சைக்கிளை ஒரமாக நிறுத்தி, உள்ளே நுழைந்தான். அவ்வளவு சன நடமாட்டமில்லை. ஆனாலும் மகளின் செக்ஷனுக்கு போக விருப்பமில்லை. பள்ளிக்கூட விடுமுறை நாட்கள். தெரிந்தவர்கள் அதற்குள் இருக்கக் கூடும். திருப்பி ரெபரன்ஸ் செக்ஷனுக்குப்போக படி ஏறினான். அங்கு சோதனைக்குப் படிக்கும் மாணவர் களை விட வேறு ஒருவருமிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு.
மேலே இருந்து யாரோ வருவது கண்டு படித்திருப்பத்தில் தயங்கியவன், நிமிர்ந்து பார்த்த கண்கள் மருண்டன. இவன் . யூனிவஸிற்றியில் படித்த காலத்தில் இருவருமே கட்சிக் கட்டிக்கொண்டு எதிரணியில் நின்றவர்கள்; ஏட்டியும் போட்டியும், சொல்லடியும், கூழ்முட்டை -9|ւգ-ԱվԼDIT85
"ஒ" ஒரு இதழ்க் குவிப்பு ஏளனமா? கூடவே ஒரு "ஹலோ”வுடன் அவனைத் தாக்கிய ஒரு நமட்டுச்சிரிப்பு. அவனுக்கு மேல் எல்லாம் ஏதோ ஊர்வதுபோல பதிலுக்கு "ஹலோ"வை முணுமுணுத்தவாறு அவன் நகர்ந்து கொண்டான். இறங்கியவனின் அந்த எல்லாம் அறிந்த சிரிப்பு. "என்னப்பா! மார்க்ஸியவாதியே. லஞ்சமும் ஊழலும் முதாலாளித்துவ அம்சமாயிற்றே" என்று கேட்டுச் சிரிப்பது போல. -
மேலே வந்தவன், உள்ளே போய் ஒரு சீற்றில் அமர்ந்து கொண்டு விட்டான் மனம் படபடத்துக்
un-3
49

Page 27
கொண்டிருந்தது. சொல்லால், பார்வையால், கேட்காமல் வெறும் சிரிப்பால் மட்டும் நையாண்டி பண்ணிவிட்டுப் போய் விட்டான்.
அவன் தலை குனிந்தவாறு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு நினைவு; இந்த பாவனை மிகவும் பழக்கப்பட்டதாக.
ஒபிஸின் தள்ளு கதவின் கீழே வெளியே நிற்கும் கால்களைக் கண்டதும், அவன் இவ்வாறுதான் தன்னை "பிஸி’யாக்கிக் கொள்வான். அவனை, எவ்வாறு, தம்மைக் கவனிக்கச் செய்ய வேண்டும் என்பது வருபவர்களுக்கு அனேகமாகத் தெரிந்திருக்கும். ரெடியாகத் தான் கொண்டு வந்திருப்பார்கள்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. எதை மறந்து சிறிது இருக்கலாமென எண்ணி வெளியில் புறப் பட்டானோ அதுவே அவன் நினைவை உலுக்கி ஆட்டுகிறது.
‘ஏன் வந்தோம்’ என்று எண்ணம் எழுந்தபின்பு அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எழுந்து விட்டான். வெளியே வரும்பொழுது எதிரே கேட்போர் கூட்டத்தில் ஆட்களின் தலைகள். ஏதோ கருத்தரங்கோ பேச்சோ அரக்க பரக்க மேலே ஏறிவந்த பொழுது இதைக் கவனிக்கவில்லை. இப்பொழுது, எந்த நேரத்திலும், பேச்சு முடிந்து, கதவைக் திறந்து கொண்டு மக்கள் வெளியே வரக்கூடும். தாமதிக்க, தாமதிக்க எதிர்ப்படுபவர்களே அதிகமாகும். யாழ்ப்பாணத்தானுக்கு தன் பாட்டுக்கு. தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போகத்தெரியாது.
50

அவன் கீழே இறங்கி விட்டான். கண்ணாடி வாடாகத் தெரிந்த மகளின் செக்ஷனில் அதிக ஆட்களில்லை. ஆனாலும் வேண்டாம். அவன் வெளியே வந்தான். சைக்கிளை எடுப்பதும், தாவி அதில் ஏறுவதும் ஏதோ தன்னியக்கமாக நடைபெறுவது போல,
மீண்டும் வந்த வழியே போக விரும்பவில்லை. கரைப்பாதையாகப்போனால் நல்லது. ஆஸ்பத்திரி விதிக்கும் போகவேண்டும். ஒரு அலுவல்.
கோபுர மணிக்கூடு, எப்பொழுதும் போல் அசையாமல் நின்றது. செல்வாவின் நினைவுத்துTபி பளிச்சென்று வெள்ளைவெளேராய் எழுந்து நின்றது. "சே! மனிதனுக்கு எத்தனையோ பிரச்சனைகள், அவற்றைத்தீர்க்க வழியில்லை. அதற்கு நடுவே இந்த நினைவுச் சின்னங்களும் சிலைகளும் புதிது புதிதாக. புதிதாக முளைத்து விட்டிருந்த அவற்றை ஒருவித வெறுப்புடன் பார்த்தான். இவை அமைக்கச் செலவான காசைக்கொண்டு எத்தனையோ ஏழைகளை உயர்த்த பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம்.
மேலே நினைப்பதற்குள், தனக்குள் இருந்து கொண்டிருந்த தன் ஒரு பகுதியே தன்னை விசித்திரமாக பார்ப்பது போன்று. ஏழைகள் பாட்டாளிகள், திட்டங்கள் என்றும் வெளியில் பேசலாம். எழுதலாம் உன்மனதில் தப்பித்தவறி நினைத்து விட்டால், இப்படி ஒரு வினோத அனுபவம்.
அவன், ரோட்டில் கவனம் செலுத்த முற்பட்டான். சந்தடி குறைந்த முற்றவெளி மறைந்து கொண்டு வந்தது. வீரசிங்கம் மண்டபமும், எதிரே பதினொரு சிறு
51

Page 28
தூண்களும். தூண்கள் விழுந்து கிடக்கவில்லை.
தபால் கந்தோரைக் கடக்கும் நேரம் பெடலைச் சுழற்றி வந்த கால்கள் தடக் என நின்றன. சைக்கிள் சங்கிலி அறுந்து, பாதி ரோட்டிலும், LunTS) சைக்கிளிலுமாகத் தொங்கியது. எதிலும் எரிச்சல் எரிச்சலாக வரும் நேரம். சைக்கிள், வேறு வாங்கிக்கட்டி மொத்தமாகத் தருகிறது.
இதை உருட்டிக்கொண்டு போய், எங்கேயாவது ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில் தள்ளிவிடவேண்டும். சைக்கிளில் கூட ஆத்திரத்தைக் காட்ட முடியாத கையேலாத்தனம்.
தெரிந்த ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில், சைக்கிளைக் கொடுத்துவிட்டு, கடையை விட்டு வெளியே வந்தான்.
அவனைக் கட்ந்து சென்ற ஒரு கார், பின்பு தள்ளிப்போய் நின்றது.
கதவைத் திறந்து கொண்டு இறங்கியவன், நாவுக்கரசன், பிஸினஸ்மன். தருணம் பார்த்து அரசியலிலும் புகுந்திருக்கிறான். ஆளும் கட்சியின் மாவட்டச் செயலர் இப்பொழுது.
தன் முன் எதிர்படுபவர்கள் எல்லாரும் கவலையற்று, திரியும் பொழுது தான் மட்டும் எல்லாவற்றாலும் புறக்கணிக்கப்பட்டு அனாதரவாய் நிற்பது போன்ற சகிக்க முடியாத உணர்ச்சியில் கண்களில் நீர் கசிந்து விடும் போலிருந்தது.
‘எங்கே டி.ஆர்.ஒ.? கிளிநொச்சியிலா? அவன் மறுத்துதான் கடைசியாக வேலை பார்த்த ஊரின்
52

பெயரைச் சொன்னான். "இப்ப. இல்லை . இன்ரடிக்ஸனில் நிற்கிறன்” அடைத்துக்கொண்டு வ்ரும் தன் குரலைக்கேட்க என்னவோ மாதிரி இருந்தது. குரலை சரி செய்து கொண்டான். “ஒருத்தனட்டை இருபத்தைஞ்சு ரூபா வாங்கினதை 'பிறைபறி ஒபிஸேஸ் கண்டு விட்டாங்கள்."
அவனுக்கே விளக்கவில்லை. இதை எல்லாம், ஏன் இவனிடம் சொல்லி அழுதேன் என்று. நண்பனின் குரலில் இருந்த தன் ஈர்ப்பு, இப்படி அவனைப் பேச வைத்ததா?
‘என்னடாப்பா, ஒரு ஸி.ஏ.எஸ். ஒபிஸர், இப்படியா நடுரோட்டிலை நடந்து கொண்டு. அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.
"இல்லை, சைக்கிளிலை வந்தனான். செயின் அறுந்துப்போச்சு, ஒட்டக் குடுத்திட்டு வாறன்"
"நல்லதாப்போச்சு, வா காரிலை ஏறு. உன்னை கொழும்புத்துறையிலே விட்டு விட்டுப்போறன்"
"இல்லை. எனக்கு வேறை வேலையுமிருக்கு. நான்” "ஏறடா காரிலை. அதுகளை எல்லாம் போற வழியிலை பார்த்துக்கொண்டு போகலாம்” வந்தவன் இழுத்தான். அவன் இழுபட்டான். அவனின் கரிசனத்தோடு கூடிய வற்புறுத்தலை ஏற்கவேண்டும் போலிருந்தது.
தனித்தனியாக முன்சிற்றுகள்; புது மொடல் சிறுகார், யாழ்ப்பாணத்துத் தெருக்களிலும் குலுக்கல், நலுங்கலின்றி மெத் என்று சென்றது.
அந்தக்காலத்தில் சென். யோன்ஸ் கல்லூரியில்
53

Page 29
தன்னோடு படிக்கும் பொழுதே இந்த நாவுக்கரசன், ஒரு ஷோக்குப் பேர் வழி! படிப்பை மூளையிலே ஏற இந்த ஷோக்கு தனம் விடவில்லை. ஆனாலும் இவன் நல்லவன் தன், நண்பர்களுக்கு உதவுபவன்.
திரும்பிய நாவுக்கரசன், அவனைப் பார்த்தான். "இதுவா விஷயம்? இதுக்காகவா. ஆள் இப்படிச் சோர்ந்துபோனது மாதிரி இருக்கிறாய்?" என்று சிரித்தான்.
"கண்ணாலை பாத்திட்டாங்கள்" "அட! அதுக்கு என்னப்பா! சாட்சி சொல்ல வரக்கை, இவங்களை கேள்விகள் போட்டு விசாரிக்கிற மாதிரியிலை எல்லாம் இருக்கு அந்த வவனிக்குளத்து அப்போதிகரியை, அந்தக் கட்சி ஒக்கனேஸர் விடுவிக் கேல்லையா? உனக்குத் தெரியாது? எல்லாத்தையும் சரிப்படுத்தி விடலாம்”
"அதோடை, கிண்டினா, வேறையும் எத்தனையோ பிரச்சனைகள் வரும். கிறவுண் லாண்டிலை கள்ள உறுதி காட்டி, மரம் தறிச்சிருக்கிறாங்கள். மீன் பிடி கொப்பரேஷனோடு. எல்லாத்துக்குமா, 'இன்கொயறி’ வைக்கப்போகிறார்களாம்"
"இன்கொயறி பெரிய இன்கொயறி. மினிஸ்டர், சமரசிங்கா தானே. அவன் என்றை பெஸ்ட் பிரறண்டு. பிடிக்கிற மாதிரிப்பிடிச்சா. இதை அமுக்கி விடலாம் இது எல்லாம் சிம்பிளடா மச்சான்; என்னை நம்பு, நான் செய்து தாறன்"
கார் நழுவி ஓடிக்கொண்டிருந்தது அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நாவுக்கரசன்
54

லேசானவன் அல்ல. சக்தி வாய்ந்தவன் என்பது அவனுக்குத் தெரியும்.
மனம், லேசாகிக் கொண்டு வந்தது. இதுவரை எதிர்ப்பட்டு, சிரிப்பால், சொற்களால் தன்னை துருவியவர்களை அவன் மறந்து கொண்டிருந்தான். இன்று, வெளியில் புறப்பட்டது, எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால், இந்த நாவுக்கரசனைச் சந்தித்திருக்க முடியுமா? இவன் நினைவுதான் தனக்கு வந்திருக்குமா? ஏதோ ஒருவித யோகம்தான் இன்று இவனை சந்திக்க வைத்திருக்கிறது.
காரின் கண்ணாடிக் கதவினூடே யாழ்நகர், தன் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக்கொண்டு சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.
55

Page 30
حمي
* 1′′V ~ //
பொழுது படும் நேரம், வெங்காயப் பாத்தி களைப் பார்க்க என வந்தவன், நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தவாறு நின்றான்.
ஆகாயத்தை மூட என தொய்ய தொய்ய ஒரு கறுப்பு மேலேறி வந்து கொண்டிருந்தது. தன்னுள் சிறிதும் பெரிதுமாய் வெவ்வேறு &տյւնւ மேகங்களையும் சுமந்து கொண்டு.
மழை வரப் போகிறது. இந்த மழை நேற்றிரவோ, இன்று விடிகாலையிலோ வந்திருக் கலாம். அப்படி வந்திருந்தால், இன்று காலை
56
 
 
 

Sir இறைப்புக்குச் செலவான மண்ணெணெய் மிச்சமாயிருக்கும். மண்ணெணெய் மட்டுமா, உடல் உழைப்பும்தான்.
என்னவோ, விடிகாலையில் சைக்கிள் கேரியரில் வாட்டர் பம்மோடு, தோட்டத்துக்கு வரும் பொழுது உற்சாகமாகத்தானிருக்கும், தோளில் சுமந்த ஹோஸ் பைப்பை நீட்டி, கிணற்றுக்குள் இறக்கி பம் வாய்க்குள் மண்ணெணெய் ஊற்றி, கழுத்து மடிப்பிற்குள் துண்டுக் கயிற்றைச் சுற்றி இழுத்து “ஸ்ராற் பண்ணினால் ‘குபு குபு' என தண்ணிர் பாயத் துவங்கும். வேகத்துடன் கால் வட்டமாய் வந்து விழுமிடத்தில் நீருக்குள் காலை விட்டுக் கொண்டு நிற்பதே ஒரு தனிச் சுகம். நீர் ஓடி வாய்க்காலை நிறைக்கையில், காலடியில் குறுகுறுக்கும் நீரில் கால் பதித்து, பாத்தி மாற்றி விடும் பொழுது சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் சூரியன் முதுகில் சுள்ளென உறைக்கத் துவங்குகையில், வியர்வைக் கசகசப்பில், பசிக் களைப்பில், நீர் பாய்ச்ச வேண்டிய பாத்திகள் மாளாதவைகளாகத் தோன்றும்.
அனேகமாக, தண்ணிர் பாய்ச்சி முடியும் நேரத்தில் அம்மா வந்து விடுவாள். கிணற்றுக்குள் இருந்து இழுத்துப் போட்ட ஹோஸ் பைப்பை பெரிய வட்ட மாகச் சுற்றி, வட்டம் அவிழாமல் குறுக்கே கட்டு கட்டி, வாட்டர் பம்மை, மீளக் காரியரிலேற்றிக் கட்டி விட்டு சைக்கிளிலேறி, காலூன்றி நிற்பவனருகே, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருவாள். அதை ஒரு கையால் வாங்கி தோளில் தொற்ற வைத்து, மறுகையால்
57

Page 31
ஹாண்டில் பாரைக் கட்டுப்படுத்த முயன்றவாறு, காலை எடுத்து பெடலை மிதிக்க ஹாண்டில் பார் பாலன்ஸ் செய்ய விடாமல், அலைக்கழிக்கும். ஒவ்வொரு முறையும் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயம்தான்.
பதினைந்து நாள்களுக்கொரு முறை, பூச்சி மருந்து அடிக்கும் பொழுது மட்டும் என்ன? உடல் நோதான். மருந்துக் கலவை நிரம்பிய தகரத்தை முதுகில் போட்டு அதன் இரு பக்க வார்களையும் தோளில் மாட்டி, வரம்புகளிடையே நடந்து மருந்து அடிக்கையில் தோள்கள் இற்று விடுவது போல வலி எடுக்கும். சமாளிக்க வேண்டும்.
உழைப்பு மட்டுமல்ல. எவ்வளவு காசும் வேண்டும் இந்த வெங்காயக் செய்கைக்கு? எருப் போட்டு நிலத்தைக் கொத்தி விட, அவன் ஒருவனால் ஆகாது. வேறு சிலரையும் பிடிக்க வேண்டும். அவர்களுக்கு கூலி, சாப்பாடு, தேத்தண்ணிர். பிறகு விதை வெங்காயம் வாங்க நட, நெல்லியடிக்குப் போய் பூச்சி மருந்து வாங்க, களை பிடுங்க - எல்லாம் செலவுதான். நீர் இறைக்கும் நாள்களில் பம்மை வாடகைக்குப் பிடிக்கத் தேவை யில்லை நல்லவேளை. யாரோ ஐந்து விவசாயிகளுக்கு ஒரு வாட்டர் பம்ப் என்று இலவசமாய் தந்திருந்தார்கள். மஞ்சள் நிறத்திலுள்ள அந்த FAO எழுத்துகளைத் தடவிக் கொடுக்கையில் ஒரு வித நன்றி உணர்வு.
வெங்காயம் கிண்டும் நாள்களில் செலவு கை மீறி விட்ட நிலையில் அம்மா, தங்கைகளைக் கூட்டிக் கொண்டு, உதவிக்கு வந்து விடுவாள். பரவாயில்லை.
ஆனால், வெங்காயம் கிண்டி முடியும் காலங்களில்
58

தான், வெங்காய விலை சரேலெனச் சரியும். வெங்காயத்தை ஆய்ந்து, குந்து குந்தாகக் கட்டி கொட்டில் கூரைக் கம்புகளில் தூக்கி, விலை உயருமெனக் காத்திருந்து கடைசியில் அவை காய்ந்து உதிர்ந்து, சருகாகிப் போவதைக் காணச் சகிக்காது, வந்த விலைக்குத் தள்ளி.
ஆனால், இந்த முறை, இப்படி நட்டப்படத் தேவையில்லை என்று தான் எல்லோரும் சொல் கின்றார்கள். யாழ்ப்பாணத்திற்கு தரை வழிப் பாதை திறந்த பின்பு வெளி மாவட்டத்திலிருந்து வரும் ஆட்கள் சொன்ன விலைக்கே வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றார்கள். இந்த முறையாவது அம்மா ஒவ்வொரு வெங்காயப் பயிர் செய்கை துவங்கும் பொழுது சொல்வது போல், “முந்நூறு தறை, ஐம்பதினாயிரம் வரும்” என்பது பலிக்க வேண்டும்.
வானம் தூறலெடுக்கத் துவங்கிவிட்டது, நேராக நிமிர்ந்து நின்ற இளம் வெங்காயப் பயிர்களிடையே மழைத் துளிகள் உள் இறங்கின. அவன் வீட்டை நோக்கி நடக்கலானான். நனைந்து நனைந்து நடக்கையில், இந்த மழை பலத்து, இன்றிரவு பக்கத்தூர் அம்மன் கோயில் திருவிழாவின் பொழுது நடக்கப் போகும் “கோஷ்டி கானத்தைக் குழப்பி விடுமோ என்ற எண்ணம் தவிப்பாய் எழுந்தது. A
அருமையான ‘கோஷ்டி இன்று வரப் போகிறது. “காந்தன் - கந்தர்வன்" கோஷ்டி அவன் கேட்க வேண்டுமென ஆவலாக இருந்த கோஷ்டி
“பொடியன்’ திருவிழா என்றால் தான் இப்படி
59

Page 32
கோஷ்டியை அமர்த்துவார்கள். பத்தாம் திருவிழா. ஊரெல்லாம் காசு சேர்ந்து, இளைஞர்கள் நடாத்தும் திருவிழா.
முதலில் கதாப் பிரசங்கம், நாதஸ்வரக் கச்சேரி என்று ஏதேதோ நடக்கும். கடைசியாகத்தான் “கோஷ்டி’. இரவு பத்து மணிக்குப் பின்தான் தொடங்கும். அவர்கள், பெரிய இசைக் கருவிகளை மேடைக்கு கொண்டு வந்து வைப்பதைப் பார்க்கும் பொழுதே உற்சாகமாகி விடும். இதுவரை தூங்கி விழுந்த கோயில் முன்றல், சட்டென சனக் கூட்டத்தால் நிறைந்து விடும். பாய்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டு குழந்தை குட்டிகளை இழுத்துக் கொண்டும் சிலர் வந்து விடுவர். ஆனாலும் அந்த கூட்டத்தைக் கவர்ச்சியாக்குவது ‘பெட்டைகளின்’ பிரசன்னம் தான். இளைஞர்களைப் போல அத்தனை இளம் பெண்களும் குழுமி விடுவார்கள்.
முதலில் எப்பொழுதும் ஒரு பிள்ளையார் பாட்டுத்தான். இப்பொழுதெல்லாம் 'பிள்ளையார் சுழி போட்டு’ என்ற பாட்டுத்தான். பிறகு சில சமயம், ஒரு முருகன் பாட்டோ அம்மன் பாட்டோ இருக்கும். பிறகெல்லாம் துள்ளல் பாட்டுக்கள்தான். கானாக்கள், புத்தம் புதிய பாடல்கள். அதுவுமிந்த ‘காந்தன் - கந்தர்வன்’ கோஷ்டி பாடினால் பிய்த்துக் கொண்டு போகப் போகிறது.
வீட்டிற்கு அருகில் வரும்பொழுதே அக்காவின் சத்தம் உள்ளிருந்து கேட்டது. ‘கோஷ்டி’ பற்றிய பரவச நினைவுகள் எல்லாம் சட்டென மறைந்து விட்டன. அக்கா, இப்படித்தான், கணவனோடும், மாமியாரோடும்
60

கோபித்துக் கொண்டு வந்ததிலிருந்து, தங்கைமாரோடு ஏகமாய் சண்டை போடுகிறாள். தன் வாழ்க்கை இப்படி முடக்கிக் கிடக்கிறதே என்ற ஆத்திரமாயிருக்கலாம். பேசிய, சீதனக் காசை முழுதாக, தவணை சொல்லாமல், கொடுத்திருந்தால் LorTubu Infit அவளை திட்டி விரட்டியிருக்க LDfT LIrG56tnt அவள் நினைப்பதுண்டு. மச்சான் ஓரளவு நல்லவர். சீதனத் தொகையின் மிச்சத்தையும் கொடுத்து “நீங்கள் பிரிந்து தனிக் கடை வைத்து தனிக் குடித்தனம் பண்ணுங்கள்" என்றால் கேட்கக் கூடியவர். ஆனாலதற்கு காசு வேண்டுமே? அக்காவின் கலியாணத்திற்கென ஊர் முழுக்க வாங்கிய கடனே, இன்னும் அப்படியே இருக்கிறது.
அவின்க் கண்டதும் தங்கைமார் அறைக்குள் போய் விட்டனர். அக்கா மட்டும் முணுமுணுப்பாய் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஒன்றையும் கவனிக் காதவன் போல அவன் கடந்து குசினிப் பக்கமாகப் (360Trei.
அம்மா தட்டில் போட்டுத் தந்த சோற்றையும் பருப்பையும், பிசைந்து கொண்டே அரசாங்கம் தருமிந்த நிவாரணப் பொருள்களுமில்லாவிட்டால் மாதத்தில் பாதி நாள் பட்டினி கிடக்க வேண்டும்’ என்று நினைந்தான்.
**ழுவி வரும் பொழுது அம்மா கேட்டாள், "சந்திரனும் சிதம்பரி அண்ணனின்ரை LDósgith உன்னைத் தேடி வந்தாங்கள். வழியில் அவங்களைக் Авбат — நீயே p
61

Page 33
‘ப்ஸ்’ என அவன் வாயினால் அலுத்துக் கொண்டான். “அவங்களுக்கு இன்னம் களை பிடுக்கின காசு குடுக்கேல்லை. அதுதான் கேட்க வந்திருப்பங்கள்" “கொஞ்ச நாள் தவணை சொல்லிப் பாரன்” அவங்கள் கேட்கிறாங்களில்லையம்மா. நெருக் கிறாங்கள். அவசர தேவையாம்.”
சற்று எரிச்சலோடு, பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்டான்.
இரண்டு பேருக்கு நாலு நாள் களை பிடுக்கின கூலி. நூற்றி இருபத்தைச்சு ரூபாப்படி. ஆயிரம் ரூபா குடுக்க வேணும். காசுக்கு இப்ப எங்க போறது?’
எப்படித்தான் பாடுபட்டாலும், கடன் தீராது போலிருக்கு. அவனும் தான் கிடைக்கும் எல்லாம் வேலைக்குப் போகிறான். கட்டிட வேலை, தோட்ட வேலை. கப்பல் வந்து, பருத்தித்துறைக் கடலில் நிற்கும் பொழுது. தன் முறை வந்து கூப்பிடப்படும் பொழுது, சாமான்கள் இறக்கப் போகிறான். ஒன்றுமில்லாத நாள்களில் வெங்காயத் தோட்டத்தைப் பார்க்கின்றான். இருந்தும் என்ன, எப்பொழுதும் கையை மீறிய செலவுகள். இரண்டு தங்கை, குழந்தையோடு ஒரு அக்கா. இங்கிருந்து உழைத்து, பிழைக்க முடியாது. அவன் நாலைந்து வயதில் பார்த்த இப்பொழுது ஞாபகமே இல்லாத தன் தகப்பனை நினைத்துக் கொண்டான். "அவர் கொஞ்சம் புத்தியா நடந்திருந்தா. இப்ப நாங்க இப்படி கஷ்டப்பட வேண்டி வந்திருக்குமே". இயக்கங்கள் ஆட்சி செய்த அந்தக் காலத்தில் அவர் நிலைமையை அனுசரித்து வாய் மூடி இருந்திருக்கலாம்.
62

யாரையோ விமர்சித்துக் கொண்டு திரிந்தாராம். அவர்கள் வந்து, "விசாரித்துவிட்டு அனுப்புகிறோம்" என வேனில் அழைத்துச் சென்றார்களாம், அவ்வளவுதான். பிறகு அம்மா அவரைப் பற்றிய விபரமறிய நடையாய் நடந்தாளாம். பயனில்லை.
நினைவுத் தீவிரத்தைத் தாங்க முடியாமல் எழுந்து வெளியே வந்தான். மழை நின்றுவிட்டிருந்தது. காய்ந் திருந்த நிலமாகையால் பெய்த மழையை அப்படியே உறிஞ்சி விட்டிருந்தது. அப்படியானால் இன்று கோஷ்டி நடக்கும் இந்த நினைவு வந்ததும், இறுக்கம் தளர்ந்து இதமான காற்று வீசியது போல மனம் சிலிர்த்துக் கொண்டது.
வீட்டிற்குள் போய் கைலியை மாற்றி, வேட்டியை உடுத்திக் கொண்டான். அம்மாவிடம் சொல்லிக் கொண்டு சைக்கிளேறினான். வழியில், படலையருகே நின்று கூப்பிட, தத்தம் வீடுகளிலிருந்து வந்து தன்னோடு இணையப் போகும் நண்பர்களை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். "யோகன், ரகு, சிவம்"
அவர்களெல்லோரும், கோயிலுக்கு வந்தபொழுது, வெளியில் போடப்பட்டிருந்த மேடையில் தவில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அருகே போகாமல் வெளிப்புறச் சுவரோரம் அமர்ந்து கொண்டான். யோகன் ஆளுக்கொரு கடலைச் சுருள் வாங்கி வந்தான். அரட்டைதான்.
தவில் கச்சேரி வெளுத்து வாங்கி விட்டு முடிந்தது. வெள்ளை வேன் ஒன்று மெதுவாக மேடையருகே, சற்று பின்னால் வந்து நின்றது. அதிலிருந்து பெரிய இசைக்
63

Page 34
கருவிகள், ஒவ்வொன்றாக மேடைக்கு தூக்கி வரப்பட்டன.
காந்தனையும், கந்தர்வனையும் அடையாளம் காணும் முயற்சியில் அகல விரிந்த கண்களோடு அவர்கள் பார்த்திருந்தனர்.
எழுந்து மேடைக்கு முன்னால் தரையில் வட்டம் கட்டி அமர்ந்தனர். கூட்டம் ‘கிடு கிடு’ என வரத் துவங்கிவிட்டது.
"எங்கையடா ஆனந்தனைக் காணேல்லை? அவன் ஒரு ‘கோஷ்டி'யையும் தவற விடானே இண்டைக்கு இன்னும் காணேல்லை"
‘உனக்குத் தெரியாதே? அவன் வெளியில போகப் போறான். அவன்றை மாமா கனடாவிலை இருந்து அவனைக் கூப்பிடுறாராம். ஏஜென்ஸிக்கு காசு கட்டிப் போட்டாராம்.”
உற்சாகம் தளர்ந்து விட்டது போலிருந்தது. கேட்டவர்களுக்கும் சொன்னவனுக்கும் தான்’
பாட்டுத் தொடங்கி விட்டது. முதலில் “பிள்ளையார் சுழி போட்டு நீ நினைத்ததை தொடங்கி விடு தான். பிறகு ஒரு பெண் வந்து நின்று பாடினாள். “மாணிக்க மூக்குத்தி மகரத மீனாட்சி”
அடுத்தது, தாடாலடியாக "ஓ போடு” தான். இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வந்து நின்று பக்கத்தில் அதிரும் இசைக் கருவிகளின் நெளிவு சுழிவுகளுக்கு ஈடு கொடுத்தபடி, பாடினர் பிறகு பாடப் பட்டவையும் எல்லாம் கானாப் பாடல்கள். கூட்டமே உற்சாகத்தில் மிதந்தது.

*காஞ்சி வரம் போனேன்” என பாடல் வந்த பொழுது எல்லோருமே அசந்து விட்டார்கள். "புதுப் பாட்டடா" பிரபுத் தேவாவாகத் தாமே மாறி விட்டதாகப் பிரமை எல்லோருக்கும்.
அந்த நேரத்தில் தான் கூட்டத்தினரிடையே வளைந்து நெளிந்து கொண்டு அவர்களை நோக்கி வந்தான் ஆனந்தன்.
“டேய் மச்சான்” பாடல் தந்த ஏக்காளத்தோடு அவனை ஆரவாரமாக வரவேற்றது நண்பர் குழாம்.
அவனை நடுவில் இருத்திக் கொண்டனர். "எப்படா, மச்சான், போறாய் கனடாவுக்கு?”
"நேற்று மாமா போனில் கதைச்சவர். ஏஜென்ஸிக் காரனுக்கு எனக்காக அரைவாசிக் காசு கட்டிப் போட்டாராம். ஆறு லட்சம். மிச்சத்தை என்னை அவங்கள் அங்க கொண்டு போய் சேர்ந்தவுடனே குடுத்திடுவாராம். என்னை உடனை, கொழும்பில வந்து நிக்கட்டாம். இஞ்சையிருக்கிற எஜென்ற் எந்த நேரமும் வருவானாம், என்னைக் கூட்டிக் கொண்டு போக. அப்ப நான் புதன்கிழமையே கொழும்புக்கு போகலா மெண்டிருக்கிறன்”
நண்பர்கள், வலிந்து சிரித்தனர். தம் மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். அவன், கனடா போய் விட்டால், தங்களை மறந்து விடுவானோ என கவலைப்பட்டனர்.
பாட்டு முடிந்ததும், கலையும் கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டனர். தத்தம் வீடு வரும் வழியில் ஆனந்தனிடம் சொல்லிக் கொண்டு பிரிந்தனர்.
இப்பொழுது ஆனந்தனோடு, அவன் தான் சேர்ந்து
யோ.4 65

Page 35
போனான். அவனின் வீட்டைத் தாண்டித்தான் ஆனந்தனின் வீடு இருக்கிறது.
மேற்கே இறங்கிக் கொண்டிருந்த சந்திரன், பாதையோர மரங்களின் இடையே நடுநடுவே புகுந்து கொண்டது.
தன் வீடு வந்த பொழுது, "நானும் a 6irGourntஉன்னர வீடு மட்டும் கொண்டு வந்து விட்டு விடுறன்" எனச் சொல்லி, அவனோடு சைக்கிளை மிதித்தான். ஆனந்தன் தடுக்கவில்லை.
.ஆனந்தனின் வீட்டொழுங்கை வந்து விட்டது ܗ பிறகும் நின்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். சைக்கிள்களிலிருந்து இறங்கி சைக்கிள்களில் சாய்ந்து கொண்டு பலதையும் பத்தையும் "இனி எப்ப இப்பிடி ஆறுதலா கதைக்கப் போறம்?"
"நான் அடிக்கடி போனிலையும் கடிதங்களிலையும், உங்களோட கதைச்சுக் கொண்டு தானை இருப்பன். எனக்கும், எப்பவும் ஊர் நினைவும் உங்கட நினைவுமிருக்கும்."
"அப்ப நீ கனடாவுக்குப் போன பிறகு, என்னையும் அங்க கூப்பிடுறியோ, மச்சான்?" அவன் கேட்டே விட்டான்.
எதிர் புறத்திலிருந்து சற்று நேரம் பதில் வரவில்லை. ஆனந்தனின் முகமும் இருட்டில் &rfuntasë தெரியவில்லை.
“எனக்கு, அது எலுமெண்டு நான் நினைக்கேல்லை மச்சான். நான் நெடுக கேட்டு அலட்டின பிறகு தானே மாமா என்னைக் கூப்பிடுறார். நான் அங்க போன
66

துட்டனை, அவர் ஏஜென்ஸிக்காரனுக்கு எனக்காக பட்டின காசை உழைச்சுகுடுக்கோணும். பிறகு ஊரிலை ால்லாம் கடனிருக்கு அதைத் தீர்க்க வேணும். மூண்டு தங்கச்சியள் இருக்கு. அதுகளுக்கு கலியாணம் செய்து வைக்கோணும். கடைசித் தம்பி இருக்கிறான். அவனுக்கும் ஒரு வழி காட்டோனும். இப்ப பார், கொழும்பில நிக்கக்கை செலவுக்கெண்டு ஒரு நாப்பதினாயிரம் கைமாத்தா வாங்கிக் கொண்டுதான் போறன். எல்லாத்துக்கும், மாமாவைக் கேட்க எலுமே, சொல்லு.
பிறகு, அவன் காதில் ஒன்றும் விழாமல் போனது ஆனந்தன் சொன்னது.
"அப்ப மச்சான்! நேரம் செண்டு போச்சு, நான் வாறன் பிறகு பாப்பம்" அவன் விடை பெற்றுக் கொண்டான். .
வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி அம்மா வந்து கதவைத் திறக்க உள்ளே போனான். உள் மண்டபத்தில், அக்கா, குழந்தையோடு நித்திரையாய் இருந்தாள். அவர்களை மிதிக்காமல் கைலிக்கு மாறி, பாயைச் ருட்டிக் கொண்டு மீண்டும் வெளியில் வந்தான். *விட்டுக்குள்ளை புழுக்கமாயிருக்கம்மா, நான் வெளித் திண்ணையில படுக்கிறன்"
; திண்ணையில் பாய் விரித்துக் கொண்டான். அம்மா உள் கதவைச் சாத்திக் கொண்டாள்.
; வெளியிலும் புழுக்கமாகத் தானிருந்தது. அவனுக்கு நீண்ட நேரம் நித்திரை வரவில்லை.
**/
67

Page 36
Y{ޠީ/ 鼻/ゲ
y مصر .S نتھمبر ܛܕ݂ܺ܂
3 (* அருணா கூடையோடு క్కెళ్ ட துர்க்கா ஸ்ரோறு’க்குள் நுழைந்து விட்டாள். நான் வெளியே நின்று حاکمير', A y கொண்டேன். குடைக்காம்பைத் ༼ ༽༄། >தோளில் சாய்த்துச் சுழற்றியபடி ŶN போவதா வேண்டாமா
N- \ என்று யோசித்தவாறு,
\,
V கடைக்குள் இருந்து ஒரு \ 〜一ーA \த்டித்த பெண் வெளியே வரப்
。二二、*
\ W \, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்
N தீாள்.
ད། ། ། །
Y-- y4. நல்ல வேளை நான் உள்ளே
ートへ 烈>、下へ
~4.ப்ோகவில்லை. போயிருந்தால்
இவஸ்டம் இடை நடுவில்
68
 

அகப்பட்டு, அந்த உருளைக் கிழங்குப் பெட்டியோடு ஒட்டப்பட்டு நசுங்குண்டிருப்பேன். அல்லது இவள் வருவதை கண்டதுமே, இவளுக்கு வழிவிட மீண்டும் வெளியே வந்து நின்றிருப்பேன். யாராவது இவளின் கூடையை, வெளியில் நின்று வாங்கிக் கொண்டு, இவள் சிரமமின்றி, வெளியே 6זעונ உதவியிருக்கலாம் போலிருந்தது.
அதற்குள், அவள் வெளியே வந்து விட்டாள். ஜாக்கெட்டின் கீழ் இடுப்புத் துணிக்குள் இறுகிப் பிதுக்கிய ஒலைப் பர்ஸைப் தொட்டுப் பார்த்தவாறு, அவள் ஹமீட் ஹ"சேன் பக்கமாக நடந்து முடக்கில் மறைத்தாள்.
ஹமீட் ஹ"சேனுக்கு முன்னால், அதன் கண்ணாடிச் சுவர் வழியாக உள்ளே பார்த்தபடி ஒரு சிறு கூட்டம் காணப்பட்டது. எனக்கு முதலில் ஏன் இப்படி நிற்கிறார்கள் என்பது தட்டுப்படவில்லை. பிறகுதான் தெரிந்தது இன்று இந்தியா - பூரீலங்கா ஒருநாள் கிரிக்கெட் மாட்ச், ரூபவாகினியிலும் காட்டுகிறார்கள். டிவி விற்பனையாளர்கள், டிவி ஒன்றைப் போட்டு விட்டிருக்கிறார்கள்.
எனக்கும் ஒரு கணம் நானும் அந்தக் கூட்டத்தோடு போய் நிற்கட்டுமா என்றிருந்தது. பூரீகாந்த் வெளுத்தால் அல்லது வெத்தமுனி, டயஸ், மெண்டிஸ் என்று wickets விழுந்தால். வேண்டாம், “பாத்திமாவிலை படிச்சுக்குடுக்கிற அந்தக் கண்ணாடி போட்ட ரிச்சரும் நின்னு TV பார்த்தா' - என்று நாளை.
நான் கிரிக்கெட்டைப் பார்ப்பதை விட, அதைப்
69

Page 37
பார்த்து நின்ற கூட்டத்தைப் பார்ப்பதில் திருப்திப்பட முயன்றேன். குழந்தையைத் தூக்கிக் கொண்ட கவுன் அணிந்த ஒரு இளம் தாய் நீண்ட கை ஜாக்கேட் அணிந்த தலை நரைத்த கிழவி; பின்னால் கைகளைக் கோர்த்தவாறு தலையை நீட்டி நீட்டிப் பார்க்கும் வழுக்கைத் தலை,
எல்லோரினது முகத்திலும் கிராமியக் களையே தெரிவதாக எனக்குப் பட்டது. சுற்றுப்புற விவசாயக் குடியேற்றங்களிலிருந்து வந்தவர்களாகவே தெரிந்தனர். “லவுட் ஸ்பீக்கர்’ பூட்டி வந்து, கத்தி ஊரைக் கூட்டி, திறந்த வெளியாக ஓரிடத்தில், சாக்குச் சுவர்களின் நடுவில், ஓர் இரவிலேயே, மூன்று, நான்கு என்று சினிமாப் படம் போட்டுக் காட்டும் வீடியோக்காரர் களைப் போல இந்தக் கடைக்காரரும் ஏதோ படம் போட்டுக் காட்டுகிறார், பார்ப்போம் என நின்றிருப் штrѓањ6іт.
“ஹால் கீயதே?" (அரிசி விலை என்ன?) அருகே குரல் கேட்டது. கடையின் வெளிப்புற ஒரமாக, வாய் அகல, உடல் கோண நிறுத்தப்பட்டிருந்த அரிசிச் சாக்குகளின் ஒன்றில் கைவிட்டு அளைந்தவாறு, ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் முழங்கையில் தொங்கிய பையில் “டொனால் டக்’,கை வீசித் துள்ளிக் கொண்டிருந்தது.
மறு ஒரத்தில் எண்ணெய்ப் பீப்பாய்களின் நடுவே நின்று எண்ணெய் மொண்டு போத்தலிற்குள் விட்டுக் கொண்டிருந்த கடைப் பொடியன் ஒருவன் திரும்பிப் பார்த்துவிட்டு அவளுக்குப் பதில் சொன்னான்.
70

நான் கடைக்குள்ளே அருணாவைத் தேடினேன். கடை முதலாளியின் மேசைக்கு கிட்டவாகவே போய்விட்டிருந்தாள். ஏதோ நிறுக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்ன இருந்தாலும் அருணா கெட்டிக்காரி தான்! எந்தக் கூட்டத்திற்குள்ளும் நுழைந்து விடுவாள். அதோடு அடுத்த ஞாயிறு பொல (சந்தை கூடும் வரை - அதாவது ஒரு கிழமைக்கு எங்களிருவரின் சமையல் சாப்பாட்டிற்கு என்னென்ன சாமான்கள், எவ்வள வெவ்வளவு வேண்டும் என்பதெல்லாம் அவளுக்குத் தான் தெரியும்.
நான் திரும்பித் தெருவைப் பார்க்கலானேன். ஒரு பெண், வயிற்றுச் சுமையோடு, கூடைச் சுமையோடும் மெதுவாகத் தெருவில் நடந்து கொண்டிருந்தாள். பார்க்கப் பாவமாக இருந்தது. இந்நிலையிலும் அவளைப் போய் சாமான்கள் வாங்கி வா என விட்ட அந்த முகமறியா கணவன் மீது ஆத்திரமாக வந்தது. அதற்குள் அவளின் கணவன் போலக் காணப்பட்ட ஒருவன் மறுபுறத்திலிருந்து வந்து, அவளோடு சேர்ந்து கொண்டான். பார்வைக்கு அவளை விட மெலிந்தவனாகவும், சிறிது கட்டையனாகவும் தெரிந்தான். வந்தவன், தன் பிளாஸ்டிக் கூடையை அவளிடம் கொடுத்து அவளின் பாரமான மூங்கில் கூடையைத் தான் வாங்கிக் கொள்வான் என பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் முடக்கில் சென்று மறையும்வரை அது நடக்கவில்லை.
மக்கள் எங்கும் பரவலாகத் திரிந்தனர். இரண்டு இரண்டாக, மூன்று மூன்றாக சிறு சிறு கூட்டமாக கடை
71

Page 38
வாசல்களில் ஏறியும் இறங்கியும், சிரித்தும் பேசியும் கொண்டு.
இடப்புறமாக கொழும்பு றோட்டைத் தொட என நீண்ட மன்னார் றோட்டின் நீளவாக்கில் சில துணிக் கடைகள். அவற்றின் ஒன்றிலிருந்து இறங்கிய கவுன்களின் கூட்டமொன்று வண்ணக் குடைகளைப் பட்’ என விரித்து, வாங்கியவற்றை நெஞ்சோடு அணைத்து நடந்து வந்தது.
என்னைத் தாண்டிப் போன கைலி - பனியன் கூட்டம் அவர்களைக் கண்டு சலசலத்தது. ஒருவன் அந்த நீலப் புள்ளிச் சட்டைக்காரியை வழி மறித்து ஏதோ சொல்ல, அவள் அதற்குச் சரியான பதிலடியாய் ஏதோ கொடுத்து விட்டாள் போலிருந்தது. அடுத்தவர் தோளைத் தள்ளிச் சிரிப்பலை எல்லோரிடமும் பரவியது. எனக்கும் இதைப் பார்க்க மனதிற்குள் சந்தோஷமாகத் தானிருந்தது. கிராமிய Innocent என்பது இதுதானோ?
மாம்புரியில் படிப்பிக்கும் அந்த அரியாலை ரீச்சர், தன் வழக்கமான முன்னால் போர்த்திழுத்த சேலைச் செருகலுடன் யாரோடோ சிங்களத்தில் கதைத்துச் சிரித்தபடி நடந்து போனாள். அவள் கூடைக்குள் திணிக்கப்பட்ட கீரைப் பச்சை தெரிந்தது.
ஜாக்கெட்டின் கீழ் சாயம் போன சீத்தை கம்பாயம் அணிந்து சிங்கள நாட்டுப் புறப் பெண்கள் மேலே போர்த்த துவாயும் ஒலைப் பையுமாய் என்னைக் கடந்து சென்றனர். எதிரிலே ஒரு முக்காடிட்ட முஸ்லீம் மூதாட்டியைக் கண்டு சுற்றி நின்று, தொட்டுப் பேசிக்
72

கொண்டனர்.
லங்கா ஜுவலறியின் வாசல் படியோடு யாரோ தொப்பி அணிந்த முஸ்லீம் பெரியவரோடு வினயமாகவும் அதே நேரம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த அதன் உரிமையாளன் செல்வராசா.
எதிரே பிளந்து தொடங்கி பின் இணையும் வீதி அந்தப் பிளப்பின் நடுவே, நெட்டென ஆகாயப் பின்னணியில் எழுந்து நின்ற இஸ்லாமிய பாணித் தூபி; அதன் சுற்றுக் குறுஞ்சுவரில் அலகினுள் அலகு வைத்துக் கரையும் இரு காகங்கள்.
எல்லாமே புதிதாக அழகாகத் தெரிந்தன. வெய்யில் தகிப்பிலும் வேர்வைக் கசகசப்பிலும், இந்த நகரம்தான் இவ்வளவு இயல்பாய், உயிர்த்துச் சிரிக்கிறது. எல்லோரும் கூடி ஒருவரை ஒருவர் கண்டு பேசிச் சிரித்து.
இப்படியான ஒரு தன்னியல்பும் நிம்மதியும், சொந்த ஊரில் இப்பொழுது இருக்குமா என நினைத்துக் கொண்டேன்.
எங்கோ ஒரு வெடி குண்டின் ஒசை கேட்கும். தொடர்ந்து பலி ஆடுகளைப் பலி எடுக்கவென வரும் கனரகங்களின் உறுமல்களுக்கும் "படபடக்கப் போகும் யந்திரத் துப்பாக்கிகளுக்கும் பயந்து, இழுத்து பூட்டப் படும் கடைத் தெருக்கள்; ஒடி மறையும் மக்ககள்.
ஒரு லீவில் அவள் யாழ்ப்பாணம் சென்றபொழுது, யாழ்ப்பாணம் இப்படித்தானிருந்தது. விடிந்தால் ‘அங்கை பிரச்சனையாம், இஞ்சை பிரச்சனையாம். அங்கை அத்தினை பேர் பலியாம்' என்ற செய்திகள் தான். நெடிய காட்டு தீர்த்த மண்டபச் சுவரில் சிதறி
73

Page 39
அடித்துக் காய்ந்து போன இளரத்த கறைகள். யாழ்ப் பாணத்திற்குப் போய் வருகையில் வழியில் சிங்களப் பகுதிகளைத் தாண்டும் பொழுது உயிரைக் கையிலே பிடித்துக் கொள்ளும் பீதி,
ஆனால், இப்பொழுது கொஞ்ச நாளாக யாழ்ப்பாணத்தில் இவை இல்லையாம். அப்பகுதி அமைதியாக இருக்கிறதாம். கடவுளே! இப்படியே இருக்கட்டும். நடந்து முடிந்த அந்தப் பயங்கரமான நாள்கள் மீளத் திரும்பி வரவே வேண்டாம். ஏதாவது இணக்கத்திற்கு வரட்டும். இரு பகுதியும் ஒத்து விட்டுக் கொடுத்தால் கட்டாயம் ஏதாவது ஒரு இணக்கத்திற்கு வரலாம். வரவேண்டும்.
இதோ, இங்கே பேதங்கள் அறியாத, புரியாத இந்த எளிமையுடன், சுற்றி வந்து குடியேறியிருக்கும் விவசாயி களிடையே எமக்கு இருக்கும் இந்த நிம்மதி, இலங்கையில் எல்லாப் பகுதியிலும் எமக்கு கிடைக்கும் நாள் மீள வரட்டும்.
மேலே நினைக்க விடாமல் அருணா கடைக்குள் இருந்து வந்து விட்டாள். அவள் கையில் இருந்த கனத்த சாமான்களை வாங்கி என் கூடைக்குள் வைத்துக் கொண்டேன். “இன்னம் சோயா பீன்ஸும், தேங்காயும் வாங்கோணும்” என்ற அருணா, "கண்டி ஸ்ரோஸ் வழியாப் போவம்” என்றாள்.
என் விரித்த குடையின் கீழ் இருவரும் நடந்தோம். ஒரத்து கடையில் பொறிகள் ஒளியாய் சிதறி அடங்க “வெல்டிங் நடந்து கொண்டிருந்தது. 'முருகன் கபே' யிலிருந்து ஒரு ஆள் சாப்பிட்ட இலைகளை அள்ளிக்
74

கொண்டு வெளியில் வந்தான். ஹமீட் ஹ"சேனின் கடையை கடக்கையில் டிவி திரையில் கிரிக்கெட் அம்பயரின் கறுத்த கால்கள் தெரிந்தன.
கண்டி ஸ்ரோஸுக்குள்ளும் இன்று சனம்தான். எங்களைக் கவனிக்க முதலில் ஆட்களே தென்பட வில்லை. பிறகு அந்த அப்பாவித் தோற்றமுள்ள சேல்ஸ்மன்தான் எங்களைக் கண்டுவிட்டு முன்னுக்கு வந்தார். அருணா அவரிடம், "கோயா பவுடர், லக்ஸ், எலாஸ்ரிக்” என்று ஏதேதோ சொன்னாள். அவர், அவள் கேட்ட சாமான்களை எடுத்து வைக்கத் துவங்கினார்.
எனக்கு, போன முறை இங்கே வந்தபொழுது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போழுதும் இதே சேல்ஸ்மன்தான் இருந்தார். நான் வாங்கிய சாமான்களுக்கு ó5fTፈmሹ எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
றோட்டால் போன Bai, நான் கடைக்குள் நிற்பதைக் கண்டுவிட்டு, படியேறி வந்தான். நேராக சேல்ஸ்மனிடம், "போன் இருக்கா போன் கடயிலே?" என்று அவன் கேட்ட பொழுது, மேற்கொண்டு என்ன சொல்லப்போகின்றான் என்பதை ஊகித்துக் கொண்டு தடுக்கும் முன்பாக, "புலிப்படைத் தலைவி இங்கிட்டு நிக்கிறா என்று போலீசுக்கு போன் பண்ணனும்” என அவன் சொல்லியே விட்டான். அதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூட வாய் எழாமல், அந்த அப்பாவி சேல்ஸ்மன் இதை உண்மை என எடுத்துக் கொள்ளப் போகிறாரே என திடீரென எழுந்துவிட்ட பயத்தில் நான் வெகுண்டு கடையை விட்டு வெளியேறியதும்.
75

Page 40
சிறிது தூரம் செல்வதற்குள், அவன் "ரீச்சர், ரீச்சர்" எனக் கூப்பிட்டுக் கொண்டு பின்னால் வந்தான். “மிச்ச சல்லியை வாங்காமப் போறிங்களாமே.” மீள கடைக்குத் திரும்புகையில், அவன் சொன்னதை அந்தக் கடைக் காரர், உண்மை என எடுக்கவில்லை என்பதே பெரும் நிம்மதியை தந்தது.
கப்பலுக்குப் போய் வந்தும் கை நிறைய உழைத்து வராத தன் தூரத்து உறவினனான இந்த Baiயை, அவன் வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டுக்கார அன்ரி அறிமுகம் செய்து வைத்தாள். அன்று, ‘நான் யாழ்ப்பாணத்தவள்’ என்று அறிந்ததிலிருந்து, அவனுக்கு நான், ‘புலிப்படைத் தலைவி தான். இதை அவன் அன்று வீட்டிற்கு வெளியிலும். அந்த கடைக்காரரிடமும் சொன்ன பொழுது நான் அரண்டு தான் விட்டேன். சீ இந்த மாதிரி வேடிக்கைகள் எல்லாம், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த எங்களுக்கு வினையாகவே மாறிவிடும் என்பது அவனுக்குத் தெரியாதா?
வெளியே வந்தோம். எதிரே கிங்கொங் பேக்கரியின் உட்புறச் சுவரில் பெரிதாக மாட்டியிருந்த கிங்கொங்கின் படம் றோட்டால் போகையிலும் தெரிந்தது.
திருப்பத்துப் பள்ளி வாசலின் முன்னால் பூட்டுப் போட்ட உண்டியல் பெட்டி இருந்தது. அடுத்துள்ள திடலில் சந்தைக்கு வண்டி பூட்டி வந்த சில மாடுகளைக் கட்டியிருந்தார்கள். ஒரு மாட்டை விழுத்தி, லாடம் அடித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த மர நிழலில் நின்று, போன ரம்ஸான் பெரு நாளன்று மாட்டு வண்டி ரேஸ் பார்த்தது நினைவுக்கு வந்தது.
நேராக நடந்து வந்து குருனாகல் றோட்டில்
76

மீண்டும் ஏறினோம். அன்னாசிப்பழத் துண்டுகளை விற்பவன் முன், தந்தையின் கைப்பிடிக்குள் நின்று கொண்டு அன்னாசித் துண்டைக் கடிக்கும் ஒரு சிறுவனே முதலில் கண்ணில் தெரிந்தான்.
றோட்டைக் குறுக்காக வெட்டி, மறு ஒரமாக நடந்தோம் நாங்கள். தேங்காய் வாங்கும் தகரக் கடை எதிரில் நின்றது.
"பாத்தெடுங்க பாத்தெடுங்க” என்றார் கடைக் காரர். தேங்காய் குவியலருகே குனிந்து குலுக்கிப் பார்த்து அருணா பெரிய தேங்காய்களாக தெரிந்தெடுத்து ஒருபுறம் வைக்கலானாள். "அப்ப விலையும் பார்த்துச் சொல்லுவீங்களோ?”
"ஓ! நீங்க ப்ெரிய தேங்காயாப் பாத்தெடுத்தா, நானும் பெரிய விலையா பாத்துச் சொல்றன்" என கடைக்காரர் சிரித்தார். நாங்கள் சிரித்தோம்.
இருந்தாற்போல வாசலைப் பார்த்து வாய் எல்லாம் பல்லாக "என்ட என்ட” (எப்பா வேண்டாம்) என்றார். தாயும் மகளுமாய் இருவர். கண்டிய பாணிச் சேலையும் கவுனுமாய் வாசலில் நின்றனர்.
நாங்கள் காசைக் கொடுத்து விட்டு, தேங்காய்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.
சிறிது தூரம் வந்ததும் ஒரு ஒழுங்கையின் இரு புறமும் இரு வான்கள் தூக்கிவிடப்பட்ட பின்பகுதி றோட்டைப் பார்க்கின்றன. இரு நகரும் கடைகள். ஒரு வானிற்குள் தேங்காய் குவியல் இருந்தது.
"இஞ்சை பாரப்பா, தேங்காய் கொண்டு வந்து விக்கிறாங்கள். இவங்களட்ட்ை வாங்கியிருந்தா மலிவா
77

Page 41
இருந்திருக்கும்" என்றாள் அருணா.
“சரி சரி, இப்ப வாங்கிப்போட்டம், அடுத்த முறை பாப்பம்” என்றேன்.
நடக்க நடக்க சன நெருக்கடி அதிகரித்துத் தெரிந்தது. சந்தைத் திடலுக்கு இட்டுச் செல்லும் வீதி. பாதையோரக் கடைகள் வேறு. வளையல்களால் மினுங்கும் பெட்டிக் கடைகள். கயிற்றில் தொங்கும் ரெடிமெட் ஆடைத் தோரணங்கள்.
கல்விக் கந்தோர். ஜோர்ஜ் ublaiv வீடு. எல்லாவற்றின் முன்பாகவும நிலமெங்கும் மெழுகு துணி விரிப்புகள். அவற்றில் எடுத்துப் பார்த்து குதறப்பட்ட துணிகள் பல்வேறு நிறங்களில், நான் அதையே பார்த்துக் கொண்டு நடப்பதைக் கண்ட ஒரு துணிக்காரன் கூப்பிட்டான். "நோனா, என்ட என்ட" நான் “எப்பர்" என கை காட்டி நடந்தேன்.
வலப்புறக் கடை வரிசையில் ஒன்றைக் காட்டி, அருணா அங்கை சோயா பீன்ஸ் இருக்கும். கேட்டுப் பாப்பம்” என்று றோட்டைக் கடக்க முற்பட்டாள்.
“பொறப்பா பஸ்” என்று தடுத்தேன். இருபுறமாக சனங்களைப் பிரித்துகொண்டு புத்தளம் எனத் தனிச் சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்ட பஸ் ஒன்று நிறை சனத்துடன் ஊர்ந்து வந்தது.
அதைப் போக விட்டு, றோட்டை வெட்டி மறுபுறம் போனோம்.
அருணா சொன்ன மாதிரியே அந்தக் கடையில் சோயா பீன்ஸ் இருந்தது. அரைக்கிலோ கட்டித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டோம்.
78

நீள நடக்கையில் கடை வாசல்களில் ஒவ்வொரு தானியச் சாக்குகளினுள்ளிருந்து எழுந்து நின்ற விலை மட்டைகளைப் படித்தபடி நடந்தேன். ருப்பியள் 9/25, ருப்பியள் 10/15.
கடாபி ரீறுாமையும் தாண்டிவிட்டால் கடை வரிசை முடிந்து, சந்தைத் திடல் துவங்கிவிடும்.
நகரும் மக்களின் கால்களிடையே, நிலத்தில் போடப்பட்ட காசுச் சிதறல்கள் வித்தியாசமாகத் தெரிந்தன. சிலர் காசை எறிந்து விட்டுப் போவதையும் கண்டேன். கர்ண கடூரமான குரலில் யாரோ கத்துவதும் காதில் அறைந்தது. பிறகு தான் அந்தப் பெண் குந்தியிருப்பதைக் கண்டேன். அவள்தான் ஏதோ கத்தி இரந்து கேட்கிறாள் என்பதை உணர்கையில் கண்கள், "சட்’ என்று வெருட்சி கண்டன.
கொதி மணலில் போடப்பட்டுச் சுருண்டு, கையும் காலையும் கோணி, கோணி இழுத்துத் துடிக்கும் ஒரு Ae (E561LD.
அந்தப் பெண்ணின் கத்தலுக்கும், அவளெதிலே எறியப்பட்ட காசுச் சிதறல்களுக்கும் பொருள் விளங்கு கையில் பரிதாபத்தை மீறி எரிச்சலே மேலோங்கியது.
சீச்சி! இந்தப் பாவப்பட்ட சீவனை கொதி மணலில் துடிக்க விட்டு இப்படியும் பிழைக்க வேண்டுமா?. வேறு என்ன செய்வது? பாவம், அவளுக்கும் வேறு எத்தனை கஷ்டங்களோ? என் மனத்தில் ஏதோ ஒரு கதை. அழைக்கின்றவர்கள். அந்தப் பெண்ணை, சில கணம் மறந்து, அதன் தலைப்பைத் தேடிப் பிடித்தேன், வண்ண நிலவனுடையது.
79

Page 42
சந்தைத் திடல் நெருங்க, நெருங்க, ஆளை ஆள் இடிக்காமல் நடக்க முடியாத சன நெருக்கம்.
“பீப்பி’ என ஊதிக்கொண்டே இருக்கும் ஐஸ் பழ வண்டிக்காரன். மூன்று மூன்றாய் லைப்போய்களை அடுக்கிக் கொண்டு "ரூபியள் தகயட்ட துனாய்’ (பத்து ரூபாய்க்கு மூன்று) என வழி மறிக்கும் ‘அடிடாஸ்’ தொப்பிக்காரன். பிரமிட் போல் நாரத்தங்காய்களை அடுக்கி வைத்துக் கொண்டு கூப்பிடும் நரைத்த தலைக்காரன். எல்லோரையும் மீறிக் கொண்டு சந்தைத் திடலுக்குள் இறங்கினோம்.
பிரியும் வழித் தடங்களின் இருபுறமும் காய்கறிக் குவியல்கள்; மற்றவர்களைப் போல, நாங்களும் நின்று பார்த்து வாங்கி.
சுத்தமாக, பெரிதாக, இலைப் பச்சையின்றி இருந்த ‘கரட் குவியலைக் கண்டு, அருணா அரைக் கிலோ நிறுக்கச் சொன்னாள். எனக்கு வீட்டுக்கார அன்ரி தனக்கு கரட்டும் லீக்ஸ"கும் வாங்கி வரச் சொன்னது நினைவுக்கு வந்தது.
"அன்ரி தனக்கும் கரட் வாங்கி வரச் சொன்னவ என்றேன். "அப்ப இன்னமொரு அரைக்கிலோ நிறுக்கச் சொல்லவே?” என்று என்னைத் திரும்பிப் பார்த்தாள் அருணா. "வேண்டாம்! அன்ரி, விலை குறைவு எண்டு மார்க்கெடிங் டிபார்ட்மெண்டில் வாங்கிவரச்சொன்னவ, பிறகு Bil-ம் கேட்ப” என்றேன். மெதுவாகச் சிரித்துக் கொண்டாள்.
Vy
அன்ரி, ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தைக்கு வர மாட்டாள், சனங்கள் கூடும் நாள். அருணாவும் நானும்
80

சந்தைக்கு வெளிக்கிடும் பொழுது தானும் ஏதாவது சாமான்கள் சொல்வாள், வாங்கி வரச்சொல்லி, நாங்களும் எங்களுக்கென சுமக்க வேண்டிய ஒரு கிழமைக்கான சாமான்களோடு இவற்றையும் வாங்கி சுமந்து வந்து விடுவோம்.
மிளகாய் குவியல் எங்கே எனப் பார்க்கையில், கூடை பிடித்த கணவனின் கையை இரு கைகளால் சுற்றிப் பிடித்தபடி, பிரேமா எதிர்ப்பட்டாள். "இது தான் சாந்தா” என்று என்னைத் தன் கணவனுக்குக் காட்டினாள். மரியாதையாகச் சிரித்துக் கொண்டோம்.
யாரோ என்னை விலகி நின்றச் சொல்லி, ஒரு வாழைக் குலையை எதிலும் இடிபடாமல் தூக்கிச் சென்றனர்.
"60l J60)u நீட்டப்பா" என்றாள் அருணா, கடைக்காரர், நிறுத்த மிளகாயைத திராசோடு சேர்த்துப் பிடித்தபடி எதற்குள் கொட்ட என்பது போல நின்றிருந்தார். நான் அவசரமாக கூடையை நீட்டிப் பிடித்தேன். புடலங்காயின் இரு புறத்தாலும் வழிந்து கொண்டு, மிளகாய், கூடையின் அடியில்சென்று கொண்டது.
எனக்கு அன்ரியோடு சந்தைக்கு வருவது நினைவுக்கு வந்தது. கடைக்காரரை நிறுக்கச் சொல்லி விட்டு, "கூடையை நீட்டுங்க தங்கச்சி” என்பாள். நானும் கடைக்காரர் நிறுத்ததைப் போட வசதியாகப் பவ்வியமாக கூடையை நீட்டி வைப்பேன்.
சன நடமாட்டம் அருகியே இருக்கும் கிழமை நாட்களில் மட்டும் அன்ரி, சந்தைக்குப் போக
ur-5 81

Page 43
ஆயத்தமாவாள். என்னையும் வரச் சொல்லிக் கூப்பிடுவாள். தன் கூடையையும் என்னிடமே தருவாள். றோட்டில், சேலைத் தலைப்பை விரித்து தன் கூனல் முதுகையும் தலையையும் போர்த்திப் பிடித்தபடி நடப்பாள். நான் பின்னே போவேன். அப்படி முன்னே நடக்கையில், அவள் தன்னைப் பற்றிய என்ன மாதிரி இமேஜுக்கு உருவம் கொடுக்க முனைகிறாள் என்பதை உணர முடியும். வேலைக்காரி பின் தொடர, சந்தைக்குப் போகும் உயர் முஸ்லிம் குடும்பத் தலைவி.
திரும்பி வரும்பொழுது, அவளின் கூனல் முதுகைப் பார்ப்பதைவிட, கூடையில் திணிக்கப்பட்ட காய்கறி ஏதாவது கீழே விழுந்துவிடப் போகிறதே என்பதிலேயே என் கவனம் போய் விடும். வீட்டு கேற்றுக்குள் வந்த பின்பு, "தாங்க தங்கச்சி! பாவம்" என்று கூறி கூடையை வாங்கிக் கொள்வாள்.
நல்லவேளை, அன்ரி கடைத் தெருவிற்கெல்லாம் வருவதில்லை. எனது வேலைக்காரி பதவியும் கொஞ்ச நீளத்திற்குத்தான். போல்ஸ் வீதியிலிருந்து சந்தைத் திடல் வரை.
"சரி, எல்லாம் வாங்கியாச்சு எண்டு நினைக்கிறேன் போவமா?” என்று முன்னால் அருணா நடக்க, வந்த தடத்தின் வழியாகவே மீள றோட்டிற்கு ஏறினோம்.
றோட்டில் ஏறியதும், எதிரே றோட்டின் மறு கரையில் மார்க்கெடிங் டிபார்ட்மெண்ட் நின்றது. நான் அன்ரி வாங்கி வரச் சொன்னதை மீள நினைப் பூட்டினேன்.
"இந்த சாமானையும் காவிக் கொண்டு, ஏன்
82

ரெண்டு பேரும் மினக்கெடுவான்? நான் இந்த ரெண்டு கூடையும் கொண்டு வீட்டை போறன். உலைவைச்சு அரிசி போடுறன். மீனும் பழுதாப் போயிடும். நீ வாங்கிக் கொண்டு வா" என்று அருணா கூறிய பொழுது, எனக்கும் அவள் சொல்வது சரி எனப்பட்டது.
ஒரு கூடையை மட்டும் எனக்கு விட்டு, இரு கூடைகளோடு அருணா நேராக நடக்க நான் சனக் கூட்டத்தைக் குறுக்கே வெட்டிக் கொண்டு மார்க்கெடிங் டிபார்ட்மெண்ட்டுக்குப் போனேன்.
நீளமான மேசையின் வலது புற முனையின் பின், பில் போடும் குமாஸ்தாவின் முகம் தெரிந்தது. அவன் முன்னே ‘டானா’ வாக போடப்பட்டிருந்த கம்பி வளை வினையும் மீறி, கியூ நின்றது, இன்னொரு ‘டானா’ form பண்ணிக் கொண்டு,
நான் இடப்புறமாகப் போய் கரட்டும் லீக்ஸும் விற்பனைக்கு உள்ளதா எனப் பார்த்தேன். கரட், சற்று வாடியிருந்தது. லீக்ஸ்இலை சிறிது பழுப்பேறி இருந்தது. “எனக்கென்ன? வாங்கி வரச் சொன்னால் வாங்கிக் கொண்டே கொடுத்து விடுவது தானே?”
நான் கியூவோடு போய் நின்று கொண்டேன். சீத்தைத் துண்டு அணிந்த பருத்த பெண் எனக்கு முன்னால் நின்றிருந்தாள். அவளின் ஆழமான கழுத்து கொண்ட ஜக்கெட்டும், அதில் செருகப்பட்டிருந்த ஒலையாலான காசுப் பையும் ஒரு பக்க “view’ ஆக எனக்குத் தெரிந்தன.
“வெலாவ கீ ய தே?” அப்பொழுதான் எனக்குப் பின்னால் வந்து நின்ற பெண் கேட்டாள். சற்றுத்
83

Page 44
தடுமாறி விட்டு, அவள் மணிக்கூட்டைக் காட்டியதும் சற்று உற்சாகமாக பதில் சொன்னேன். “டென் பார்டி பைவ்." அவள் கண்டிய L600חוhuhat( சேலை உடுத்திருந்தாள். நல்ல ஆகாய நீல நிறம். முகம் சிவந்திருந் தாலும் சுருக்கங்கள் விழுந்திருந்தது. பாவம்! என்ன கவலையோ என்றிருந்தது.
பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னால் வேறிரு பெண்கள் வந்து நின்றனர். இள வயசுக்காரிகள், நேர்த்தியாக சேலைத் தலைப்பை அழகாக மடிப்பு பண்ணி, நீளத் தொங்க விட்டு சட்டை தோள் பட்டையோடு சேர்த்து பின் பண்ணியிருந்தார்கள்.
எங்கள் கியூ நகர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு ஆள் போனால், நானும் அந்த கம்பி வளைவிற்குள் வந்து விடுவேன். அந்த நேரம் பார்த்து Bill clerk எழுதுவதை அப்படியே விட்டு, உள்ளே எழுந்து போய்விட்டான். கியூ நகர முடியாமல் நின்றது. தன்னைத் தளர்த்தியும் கொண்டது.
நானும் கூடையைக் கீழே வைத்து விட்டு, சற்று சரிந்து அந்த கம்பி வளைவில் கை வைத்தேன். பின் முழங்கையை கம்பியில் ஊன்றி சாய்ந்து கொண்டேன். சற்று ஆசுவாசமாக இருந்தது.
இப்பொழுது, தொங்கும் கூடைகளும் அவற்றைப் பிடித்துள்ள கைகளும் விதம் விதமாய் வரிசையாய் தெரிந்தன.
வட்டப்பிடி கோர்த்த அழகிய பிளாஸ்டிக் கூடை அழுக்கேறிய மூங்கில் கூடை சிவப்பும் மஞ்சளுமாய் வயர் கொண்டிழைத்த கூடை சிறு இடைவெளியின்
84

பின் அந்த கண்டிய பாணி நீலச் சேலையின் லெதரினாலான பை.
முகத்தைத் திரும்பி, மேசையோடு சாய்ந்து, றோட்டைப் பார்த்த கரும்பலகையில், எனக்கு பரிச்சயமான சிங்கள எழுத்துகளைத் தேடினேன். சிங்களத்து பானாவும் மானாவும், தமிழ் எழுத்துகளைப் போலத்தான்.
கிளார்க் வந்து விட்டான். கியூ உஷாராயிற்று. நானும் ஒரு அடி பின்னெடுத்து என் இடத்துக்காய் நகர்ந்தேன். அதற்குள், அந்த நீலச் சேலைக்காரி, முன் நின்ற சீத்தை துணிக்காரியோடு ஒட்டியபடி வந்து நின்றாள். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. நான் அருகில் வந்து நின்ற பிறகாவது, எனக்குரிய இடைவெளி உருவாகும் என நினைத்து நின்றேன். ஆனாலத உருவாகவில்லை.
எனக்கு எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அவளுக்கு விளங்குமாறு சிங்களத்தில் பேச எனக்கு வராது. "இது என்னிடம் என்று நினைக்கிறேன்" என்று ஆங்கிலத்தில் கூறி, உருவாகப் போகும் இடைவெளிக்குள் என் தோளைப் புகுத்திவிட ஆயத்த மானேன். எப்படியும் என் இடத்தை விட்டுக் கொடுக்க கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த நீலச் சேலைக்காரியின் முகத்தில் கடுமை தெரிந்தது. பெரும் குரலில் சிங்களத்தில், “மே தெமில ஹெல்ட், பொலிமே இன்னே நத்துல மதட்ட என்ர ஹதறுவா” என்று என்னமோ சொல்லிக் கொண்டு போனாள்.
85

Page 45
எனக்குச் சிங்களம் அவ்வளவாக விளங்கா விட்டாலும், fal in என்பதனடியாய் வந்த பொலிமே . ஹதறுவா என்ற இரு சொற்களும் விளங்கின. கியூவில் நில்லாது இடையில் நுழைபவளா நான்?
நான் ஆற்றாமை மேலொங்க என் சார்பில் யாராவது பேசுவார்கள் என்று பின்னால் பார்த்தேன். ஆனால், "இடம் தெண்ட எப்பா, இடம் தெண்ட எப்பா” இடம் கொடுக்க வேண்டாம்) என்று எல்லோரும் முன்னைய முதுகோடு தோள் ஒட்டி நின்றனர்.
நான் தனியே விடப்பட்டவளாய், எனக்கு நானே பரிதாபகரமானவளாக மாறுவதை உணர்ந்தேன்.
கடவுளே! ஏன் இப்படி? அந்த நீலச் சேலைக்காரி அழுத்தி உச்சரித்த சொல் ஒன்று. “தெமில.தெமில.". அது பல்கிப் பெருகுவதாய், என்னைப் பார்த்து உறுத்து, பல்லைக் கடிப்பதாய்.
கடை எல்லாம் சுற்றி அலைந்த சோர்வு திரும்பிப் போய் விடட்டுமா என்றிருந்தது.
பிறகு இந்த சோர்வுடன் வீடு திரும்புகையில் அன்ரியின் குற்றச்சாட்டுகளும் சேர்ந்து கொண்டால் என்னால் சகிக்க முடியாது போய்விடக்கூடும்.
நான் ஏமாளியாய் நிற்பதைக் கண்ட யாரோ சொன்னார்கள். "ரீங்கண்ட (பின்னால் போ)
கூடையைத் தூக்கிக் கொண்டு கியூவின் பின்புறம் நோக்கி நடந்தேன்.

ஓய்வற்ற நெடு நடப்பு அவளின் பயணம்.
உலக மொழிகள் எல்லாம் சேர்ந்து, பெண்மையின் ஒவ் வொரு இலட்சணமாக பார்த்து உருவாக்கிய நிறை அழகுத்துவம் அவளின் மேனி
காலதேவனின் பல்வேறு வகைத் தாக்குதல் களை தாண்டிச் சுடரும் ஒளித் துரிய்ல் அவளின் அறிவு.
6,606 штпиогh ܛܲܛ܌ܠܗܵܘܗ݇
87

Page 46
ஞானச் செருக்கு, இரண்டும் கொண்ட அவள் இலக்கியக் கன்னி.
அவள் இப்பொழுது அடி எடுத்து வைத்த புது யுகப் பாதை - மற்றவர் சிந்தனைக்கு மதிப்பளித்து போற்றும் உன்னத பாதை.
ஆனாலும் என்ன? இப்பாதையில் யாரும் தன்னைக் குறுக்கிடத் துணியார் என்ற நினைப்பு, ஒரு கணத்தில் தீய்ந்து பொய்யாகின்றதே.
தூரத்தே, வழி மடக்கி, குடைக் கவிப்பாய் கப்பும் d5(p560)LD.
அது புயலோ இருளோ அல்ல, இயற்கையின் எவ்வித உற்பாதமுமல்ல.
அது , அவளை மடக்கி, மூச்சை இறுக்கி ஒடுக்கிட வெறியிட்டுப் பாய்ந்து வரும் விஷப்புகை மனித முளைப்பின் ஒரு விளைவு.
நாகரீகத்தின் முதிர்ச்சியைக் கண்டு விட்டதாகக் கூறும் இந்தக் காலத்திலுமா இந்தக் காட்டுமிராண்டித் தனமான, மிலேச்சச் செய்கை? புகைக்கு விளிம்பு கட்டும் செம்மையின் கோர நிறம், அபாயத்தை மட்டும் தானா காட்டுகிறது?
உலகத்தின் எந்த மூலையில் இதன் தோற்றுவாய் உருவாகின்றது? கன்னி, அதைத் தேடி கண்களை ஓடவிடுகின்றாள்.
88

உலகத்தில் ஒரு மூலையில் அல்ல, ஒரு பெரு வல்லரசின் நட்ட நடுப் பகுதியிலே - ஆனால், சுற்றிக் கனக்கும் இரும்புத் திரையின் உள்ளே, அது நடக்கின்றது. தன் நோக்கில் அக்கால நாட்டின் நடப்பை யதார்த்தமாகக், கொண்டு நிறைவான ஒரு இலக்கியத்தைப் படைத்து விட்ட ஒருவன் - கன்னியின் ஒரு ‘மயன்’.
அவன் எதிரே, மனித உணர்வுகள் எல்லாவற் றையும் கட்டுப்படுத்தி வழி நடத்தலாமென நம்பும் ஆட்சியின் அங்கமான இலக்கியக் கழகம், அதன் கையால் அச்சேற்றுமாறு கோரி, அவன் சமர்ப்பித்த அந்தப் படைப்பு.
"சொந்த மூளையோடுதான் இதை எழுதினாயா? பாவம் சொந்த மூளையையே சிந்திக்க வைக்க காட்டித் தருபவர்கள் இவர்கள் தான் என அவனுக்குத் தெரியாதா?
“அரைகுறை நோக்குடன் எழுதப்பட்ட அர்த்தமற்ற நூல் இது. வெறும் குழப்பத்தையே தரும். ஆகவே, இது வெளியானால் ஆட்சியாளர் உன்னை நசுக்கி விடுவர். ஆகவே உன் நன்மைக்கே சொல்லுகின்றோம். இதை நீதான் எழுதியதாக ஒருவருக்கும் தெரியவேண்டாம் மறைந்து வாழ்."
நிறைவையும் ஆவலையும் தேக்கி வந்தவன் இப்பொழுது கிலியுண்டவனாய் திரும்பிச் செல்கின்றான்.
89

Page 47
வேசமாக திரண்டு அமுக்க வரும் அந்த கரிச் சேற்றினையே அவள் பார்த்தபடி நிற்கின்றாள்.
அவளை, என்றுமே, விழிப்புற்று காக்கும் அவளின் அறிவொளி, மாந்தரின் சிந்தனைப்பலம் இப்பொழுது எங்கே? இதன் தீவிரத்தைக் கண்டு செயலிழந்து விட்டதா?
இல்லை! அதோ! அந்த நாட்டு ஆட்சியாளரை குரு பீடமாகக் கொண்ட சிலர் உட்புகுவதற்காக நாட்டின் இரும்புத்திரை தூக்கப்படுகின்றது.
கன்னி, கவனிக்கின்றாள். அவர்களில் ஒருவன் - பயிற்றப்பட்டவனாயின்றி, தானாகவே சிந்திக்கத் தெரிந்தவன். அந்த மயனைச் சந்தித்து விடுகின்றான். நூலின் மறு பிரதி கை மாறுகின்றது.
கன்னி பரபரப்புடன் காத்திருக்கின்றாள், அது பத்திரமாக நாட்டின் எல்லைக்கப்பாலும் வந்து விடுகின்றது.
கன்னி, வெற்றிப் பெருமிதத்துடன் நிமிருகின்றாள். எதிரே சகதிக் குழம்பல், கலைந்து கொண்டிருக்கின்றது, -பனி மலையாக
ஆனாலும், அது கலையும் வேகச் சுழலில் யாரோ -அவனே தான், சிக்கித் திணறுவது போல அவளுக்குத் தெரிவது, வெறும் உருவெளித் தோற்றம் தானா?
கீழே, கீழே நிலைக்கும் அவளின் பார்வையில் தோற்ற ஆட்சி பீடத்தின் அழுக்குப் பிடிக்குள் கசங்கும், அவன்.

ஏன் கொடுத்தாய்? திருப்பி வாங்கு - முடியுமா அது?
'நீ படைப்பாளியே அல்ல மந்திரம் போல இது திரும்பத் திரும்ப ஒலிக்க அவள் மூளையை சுத்தமாக்கும் முயற்சி.
வெளியே, இலக்கிய பரிசும், உலக பாராட்டும் வந்து குவிகின்றன. உள்ளே, இடிபாடுகளுக்கிடையிலும் அவன் முணுமுணுக்கின்றான்.
"இலக்கிய உலகும், வரலாறும் என் படைப்பை ஏற்று என்னைச் சிரஞ்சீவியாக்கி விட்டன. இனி, என்னுடன் என்ன தான் பட்டாலுமென்ன, இது மிருதுவாகி, கன்னியின் காதுக்கு LD6DfT6 அர்ச்சனையாகின்றது’.
அவளின் முன், தெளிவான பாதை நீண்டு கிடக்கின்றது.
91

Page 48
7
வல்லை வெளி
w W ༨༣
W. A ,"ށޔރު.ށ
ஷ்ைரிவர் கோயில்ன் காத்து நின்றாள்
அவள் கொடுத்த இருபது ரூபாயை வாங்கிக் கொண்ட பொழுது கதிர வேலண்ணர் முகம் அவ்வளவு சந்தோஷமாக இருக்கவில்லை என்பது போலத் தோன்றியது. ஒரு வேளை தான் கொடுத்த காசு போதாதோ என எண்ணமிட்டாள்.
தன்னை சைக்கிள் காரியரிலேற்றி, அவர்
92
 
 
 
 
 

இங்கே கொண்டு வந்துவிட்ட தூரத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள். முதலில் வீட்டில் இருந்து ஊர் சந்திக்கு வந்து - அரை கிலோ மீற்றர் கூட இராது, பின் சந்தியோர ஆலமரத்தின் நீண்ட கிளையின் கீழாக, தென்கிழக்காய் பிரியும் ரோட்டில் நீள ஓடி - முதலில் சில கல்வீடுகள், அடுத்தடுத்து வரும். பின் அங்குமிங்குமாய் ஒலை வீடுகள், இடப்புற இலந்தை மரம், ஈச்சம் பற்றைகள், சாலையின் இருபுறமும் நிற்கும் நீண்ட பனை வரிசை, வெய்யிலடித்த உப்பு கலந்த வெளி.
அப்படியே வல்லைச் சந்தி “ வரை வந்தால், சந்தியில் ஆமிசெங்கிங், காவலரண், வலப்புறமாக அப்படியே ஓடினால் சவுக்கு மரங்கள், சதுப்புப் பள்ளங்கள் இடப்புற ஆறு, பிறகு இந்த வைரவர் கோயில்.
எல்லாமாக் எவ்வளவு தூரமிருக்கும்? தூரத்தைக் கணக்கிடத் தொடங்கி விட்டு, வழியில் பார்த்தவற்றை எல்லாம் நினைத்துக் கொண்டது குறித்து சிரிப்பு வந்தது. எப்படிப் பார்த்தாலும் நாலு கிலோ மீற்றாராவதிருக்கும். இந்தளவு தூரத்திற்கு இருபது ரூபாய் போதாதென்றே தோன்றியது. வல்லைச் சந்தியால் திரும்பியதும், வந்து மோதிய எதிர் காற்றில் அவர் சைக்கிள் உழக்க கஷ்டப்பட்டது வேறு நினைவுக்கு வந்து சங்கடப் படுத்தியது.
அவர் தன்னை இங்கே கொண்டு வந்துவிட்டிருக் காவிட்டால் ஊர் சந்தியிலிருந்து கிழக்காய் பிரியும் ரோட்டில் உடுப்பிட்டி வாசிகசாலை சந்தி வரை
93

Page 49
நடந்திருக்க வேண்டும். அங்கு சாலையோரக் கடை வைத்திருக்கும் சைக்கிள் ரிப்பேயர்காரன், அவளை கண்டதும், "இப்ப தானே யாழ் பஸ் போச்சு” என்று கூறி எரிச்சலேற வைப்பான். பின் ஒரு மணித்தியாலத்திற் காவது பின்னால் உள்ள கிடுகு வேலியின் பூவரச இலைகளைப் பறித்து கிள்ளிப் போட்டுக் கொண்டு நிற்க வேண்டும். அடுத்த 75 வரும் வரை. - -
ஆனால் இங்கு வந்து நின்றால் அப்படியில்லை. 75 751 என இரு தட எண் பஸ்களும் இந்த வழியால் வரும். இவை இரண்டும் வெவ்வேறு வழிகளில் புறப்பட்டாலும் வல்லைச்சந்தியில் இணைந்தபின், ஒரு வழித் தடத்தி லேயே வருவதால் எது முதலில் வருமோ அதிலேறிக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் யாழ் நகர் போக இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. அவள் வீட்டு வாசல் வழியாகவே பஸ் போகும். வீட்டு கேற்றடியில் நின்று கை காட்டினாலும் பஸ் நிற்கும். உள்ளே ஏறினால், காலை வேளைகளில் என்றால் இருக்க தாராளமாய் இடம் இருக்கும். அந்த 752 தட எண் பஸ் இப்பொழுதில்லை. ஊர்ப் பாலம் உடைக்கப்பட்டதில் இருந்து அது நின்று விட்டது. கொஞ்சக் காலம், ஊர் சந்திவரை வந்து திரும்பிக் கொண்டு போயிற்று. பிறகு அதுவுமில்லை. அடைக்கப்பட்ட பாதைகள் இன்னமும் திறக்கப்படவில்லை.
அவளுக்கு முன்பாக u unrGurnir வருவது போலிருந்தது. பிறகு தான் கோயில் உண்டியல் பெட்டிக்கும் உண்டியில் காசு போடுபவர்களுக்கு

மிடையே தான் நின்று கொண்டிருப்பது உறைத்தது. தள்ளி, ஒரமாய் போய் நின்றாள்.
இந்த சிறு கோயில், அதன் மரத்தடி, முன்னால் நீண்ட றோட், எல்லாமே சுறுசுறுப்பாகத்தான் இருந்தன. றோட்டால் போகிறவர்கள் வருபவர்கள் பலரும், இந்தக் கோயில் வந்ததும் தம் வாகனங்களை விட்டிறங்கிவந்து, இந்தக் கோயிலைச் சுற்றிவந்து கும்பிட்டு, உண்டியலில் காசு போட்டு, திருநீறு சந்தனமெடுத்துச் சென்று கொண்டு இருந்தனர்.
றோட்டின் மறு ஒரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு தாயும் மகளும் போல் தெரிந்த இரு பெண்கள், றோட்டைக்கடந்து கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். ஒரு பழைய சைக்கிள் பின்னால் கட்டிய மரப்பெட்டியோடு தடதடத்துக் கொண்டு றோட்டால் போனது.
கோயிலைக் கும்பிட்டு முடித்த ஒருவர் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் மோட்டார் சைக்கிளைக் கிளம்ப முயன்று கொண்டிருந்தார். ஒவ்வொரு மிதிக்கும் அது சற்று உறுமிவிட்டு நின்று கொள்ள, அவள் எண்ணினாள். ஆறு. ஏழு. எட்டாம் முறையாக அது நீண்ட நேரம் உறுமி, ஸ்ராட் ஆகிவிட்டது. குப் என முகத்தில் வந்தடித்த புகையில் ஒரு விநோத நெடி அடித்தது.
பலமாக அடித்த காற்றில் மேலே உள்ள மரக்கிளைகள் ஒருமுறை தாழ்ந்து விட்டு ஏறிக் கொண்டன. இந்தப் பொட்டல் வெளியில் அலையும் சோளகக் காற்றின் வெறுமையையும் உக்கிரத்தையும்
95

Page 50
இந்த மரக்கிளைகள் சமப்படுத்தி இலேசாக்குவதாய் தோன்றியது. இந்த மரத்தை விட்டால், இந்த வெளியில் வேறு என்ன மரம் இருக்கிறது? ஒரிரு சவுக்கு செடிகள் தானுண்டு.
மீன் பெட்டியைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒரு சைக்கிள்காரன் போனான். பிறகு கொஞ்ச இடைவெளியில் இன்னுமொருவன் போனான். வல்வெட்டித்துறைக் கடற்கரையில் மீன் வாங்கிக் கொண்டு உள் பகுதிகளுக்குக் கொண்டு போகிறார்கள் விற்க. சொல்லி வைத்தாற் போல் அதே கால இடைவெளியில் வேறுமொரு மீன் பெட்டிச் சைக்கிள் போயிற்று. பிறகு இன்னுமொன்று, கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இப்படிச் சீரான கால இடைவெளி விட்டுப் போக இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
தேடுதலுக்குப் போகும் ஆமிக்காரர்களும், இப்படித்தான் சீரான இடைவெளிவிட்டு நடப்பார்கள். போன முறை, பஸ்ஸில் போகும் பொழுதுதான் இதைக் கண்டு பிடித்தாள். ஒரமாய் நடக்கும் ஒரு ஆமிக்காரனைக் கண்டதும் அவள் மனத்தில், அவள் அடிக்கடி முணுமுணுக்கும் அந்த பாடல் வரி வந்தது "என்றெங்கள் பூமியில் போர்கள் ஒயுமோ நன்மை காண்பதுவும் அன்றுதான்" அவள் ‘அன்றுதான்’ என வரியை முடிக்கையில், பஸ் இன்னுமொரு ஆமிக்காரனைக் கடந்தது. இப்படியே மீள மீள அந்த வரியை மனம் பாட, ஒவ்வொரு ‘அன்றுதான்’ க்கும் ஒவ்வொரு ஆமிக்காரன் போனான்.
96

இந்த லயம், அதிகம் நீளவிடாமல், அடுத்த சோதனைச் சாவடி வந்து விட்டது. எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்க நேரிட்டது.
இந்த மீன் பெட்டிக்காரர்களும், இரண்டு மூன்று சோதனைச் சாவடிகளை இதுவரை கடந்துதான் வந்திருப்பார்கள், சாவடிக்குச் சற்றுத் தூரத்திலேயே சைக்கிள்களை விட்டிறங்கி துவக்கு துப்பாக்கி) வைத்து நிற்கும் ஆமிக்காரர்களின் முன்பாக நடந்து கடைசியாக நிற்பவர்களிடம் மீன் பெட்டிகளைத் திறந்து காட்டி.
அவளும் தான், பஸ் ஏறினால், யாழ் நகர் போகும் வரை எத்தனையோ சோதனைச் சாவடிகளின் அருகாய் இறங்கி, ஆமிக்காரர்களின் முன்னால் நீள நடந்து கடைசியாக நிற்பவனிடம் கைப்பையைப் பரிசோதிக்கக் கொடுத்து. பின் மீள பஸ் ஏறி.
இப்படி, எல்லா இடங்களிலும் நின்று, நின்று, யாழ் கல்வி அலுவலகத்திற்கண்மையாய் ւյ6h) G3urras பன்னிரண்டு மணியாகி விடவும் கூடும். அந்த நேரம் அலுவலகத்தில் ஊழியர்கள், சாப்பாட்டிற்காய் வெளியில் போகும் நேரமாயுமிருக்கக் கூடும்.
அவளுக்கு பஸ் இன்னும் வரவில்லையே என்று தவிப்பாக இருந்தது.
விதியையே பார்த்துக் கொண்டு நின்றாள். கண்களில் சுழலும் சக்கரங்களும், பெடல்களை மிதிக்கும் கால்களுமே விட்டு, விட்டு பட்டுக் கொண்டிருந்தன.
இந்த வல்லை வெளிதான், "பிரச்சனைக்" காலங்களில் மிக ஆபத்தான ஆளரவமதிகமில்லாத பகுதியாக காட்சித் தந்திருக்கிறது.
(BLT-6 97

Page 51
அந்தக் காலத்தில் ஷெல்கள் அடிக்கடி இங்கு தான் விழுந்து சிதறும். இயக்கங்கள், தங்களுக்குள் சண்டை யிட்ட நேரங்களில், இரவோடு இரவாய் சடலங்கள் முளைக்கும். பீரங்கி பூட்டிய ஹெலிகொப்டர்கள் இந்த றோட்டால் போகிறவர்களைக் கண்டுவிட்டால் தாழ இறங்கிவந்து சுடும்.
முன் வீட்டுக் கதிரவனின் மகன் இப்படித்தான் செத்தான். ஒரு கையில் சைக்கிள் ஹான்டிலைப் பிடித்து மறுகையில் சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்மையும் கொண்டு போனானாம். தரையைத் தொடுமளவிற்கு மிகக் கீழிறங்கி வந்தவர்களுக்கு, அவன் கையிலிருந்து வெறும் காற்றடிக்கும் பம் தான், ஏ. கே. 47 அல்ல என்பது தெரியாமலாயிருக்கும்?
மாட்டு வண்டியோட்டி வந்த கந்தசாமியும், இதே இடத்தில் இந்தக் கோயிலின் முன்பாகத் தானே ஹெலி அடித்துச் செத்தான்.
மனிதர்களை மட்டுமல்ல இந்த வெளியில், வாகனங்கள் கண்ணில் பட்டாலும் 'ஹெலிகன்ஷிப்”, அவற்றைத் துரத்தித் துரத்தி வந்து சுடும். ஒருமுறை இப்படி ஒரு ஹெலியிடம் அகப்பட்டு மயிரிழையில் தப்பிய அனுபவம் அவளுக்குமுண்டு. யாழ் நகரிலிருந்து அவர்கள் ஒரு சிறிய மினி பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். முன்னாலிருந்த ஒரு சிறு தோப்பு மறைந்து, இந்த வல்லை வெளி கண்ணில் பட்டதுமே டிறைவர் வண்டியை நிறுத்த கண்டக்டர் வெளியே தலையை நீட்டி வான் பரப்பை அங்குலம் அங்குலமாகத் துழாவி விட்டுத்தான் “போகலாம்’ என்றான். இருந்துமென்ன? மினி பஸ் வல்லைப்
98

பாலத்தருகில் கூட வந்திருக்காது. வண்டியிலிருந்து எல்லோருக்குமே அந்தப் பழக்கமான உறுமல் திடீரெனக் கேட்டது. பீதியுடன் வானைப் பார்த்தவர்களின் கண்களுக்கு ஒரு ஹெலி, அவர்களின் வண்டியை நோக்கி வேகமாய் முன்னேறி வருவது தெரிந்தது.
வண்டிக்குள் ஒரே கூச்சலும் களேபரமும் எல்லோரும் டிறைவரைப் பார்த்து "ஒட்டு ஒட்டு அமத்து அமத்து என்று கத்தினார்கள். "வந்திட்டான். கிட்ட வந்திட்டான்" என்று பீதி கலந்த நேர் முக வர்ணனைகள் வேறு, டிறைவருக்கு கை கால் ஒன்றும் ஓடவில்லைப் போலிருந்தது. அவன் பதிலுக்குக் கத்தினான். "நீங்க எல்லாரும் போடுற கூச்சலிலை எனக்குக் கை கால் எல்லாம் பதறுது கொஞ்சம் பேசாமலிருங்கோ, நான் ஒட்டிக் காட்டுறன்" அவன் போட்ட அதட்டலில் கூச்சல் கட்டுப்பட மினி பஸ் பறக்கத் தொடங்கியது.
இருந்தும், அவளுக்குப் பக்கத்திலிருந்த சற்று வயதான ஒரு பெண், யாரையோ முணுமுணுப்பாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். “வா, வா ஒடிவா, அவள் சுற்றும் முற்றும் பார்த்த பொழுதுதான் அடுத்த சொற்கள் காதில் விழுந்தன. "மயிலேறி ஓடி வா நீல மயிலேறி ஒடிவா"
விண்ணில், ஹெலி முன்னேற, முன்னேற அதே வேகத்தில் கீழே, மினி பஸ் விலகி விலகிச் செல்வது போலிருந்தது. பாசக்கயிற்றோடு, துரத்திவரும் யமன், வண்டியின் வேகம் இம்மியளவு குறைந்தாலும் பாசக்
99

Page 52
கயிற்றை வீசி விடுவான் எனத் தோன்றிய திகிலில், நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி உலர, அவளிருந்தாள்.
வல்லை வெளியின் முடிவிலிருந்த அடர்ந்த மரங்களை வண்டி அண்மிய பொழுது ஹெலி, துரத்துதலைக் கைவிட்டு மறுபுறம் திரும்புவதை, எல்லோரும் கண்டனர். அதன் பின் தான் எல்லோரும் நெஞ்சிலும் தண்ணிர் வந்தது. ሳ.
இது நடந்து பத்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும் ஆனாலும் அதை நினைத்துப் பார்க்கையில் அந்த நேரப் படபடப்பை, பரிதவிப்பை, பிய்த்துக் கொண்டு ஓடிய மினி பஸ்ஸின் வேகத்தை, எல்லாம் நேற்றுத் தான் அனுபவித்தது போலிருந்தது.
றோட்டால், ஒரு லொறி "உடுப்பிட்டி கூட்டுறவுச் சங்கம்” என்று முதுகில் எழுதிக் கொண்டு, போனது. உள்ளே, அடுக்கப்பட்ட கோதுமை மா மூட்டைகள் தெரிந்தன. ஒருமுறை எப்பொழுதோ, இதே இடத்தில் நின்று ஒரு ராணுவ லொறியில், அழகிய பழுப்பு நிற ஆடுகள் கொண்டு போகப்படுவதைப் பார்த்த ஞாபகம் வந்தது.
இந்திய ஆமி, இங்கிருந்த காலத்தில், இதே வீதியால் இருபத்தியெட்டு டாங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் போனதை சன்னதி கோயிலடியிலுள்ள ஒரு மடத்தின் பின்னால் நின்று எண்ணியிருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை ஆமி, ஊர் பகுதிக்கு வந்தபொழுது, அவர்கள் கொண்டு வந்த டாங்கிகளை எண்ணிப் பார்க்க முடியாமல் ஊரிலுள்ள எல்லோ ருடனும் அவளும் இடம் பெயர்ந்து வேறொங்கோ
100

சென்று விட்டாள். கோயிலடி மடத்தில் கூட இருக்காது. இராணுவ லொறிகள், டாங்கிகள் வேறென்ன கனரகங்கள், இந்த வீதியால் சென்றிருக்குமெனச் சிந்தனை ஒடியது. புல்டோஸர்கள், ட்ரங்குகள், இராணுவ ஜீப்புகள்.
சரித்திர நாவல்களில் எழுதுவார்களே. "இது ராஜராஜ சோழனின் படைகள் சென்ற பாதை" ராஜேந்திர சோழனின் படைகள் சென்ற பாதை" என்று அந்த மாதிரி, தானும் நினைப்பதாகத் தோன்றிய பொழுது, கொஞ்சம் சிரிப்பு வந்தது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் சரித்திரத்தில் அப்படி யாரும் பெரிய படையெடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை. நாடு பிடிக்க வந்த போர்த்துக்கீசரை, இப்பகுதியிலிருந்த கரையார்களின் தலைவன் ஒருவன் படை திரட்டி எதிர்க்க முயன்றதாய் சரித்திரப் புத்தகத்தில் ஒருவரி மட்டும் படித்திருக்கிறாள். ஒருவேளை, அந்தக் கரையார் ராசாவின் படை இந்த வழியாகப் போயிருக்கக் கூடும்.
முன்பு கொள்ளி வாய் பிசாசுகளும் இரவில் இந்த உப்பு வெளியில் உலாவித் திரியுமாம்.
இந்தக் கரையார் ராசாவின் படைகள் கொள்ளி வாய் பிசாசுகள் இவற்றை எல்லாம்விட இப்பொழுது இப்பகுதி எவ்வளவற்றையோ பார்த்து விட்டதாகத் தோன்றியது.
750 இலக்கமிட்ட பஸ் ஒன்று வந்து நின்றது.
101

Page 53
s இடமாற்றலுக்காய்
Tெசுகியின் முதுகுச் சட்டைக்குள் வியர்வை உருண்டு குறு குறுத்தது, முதுகை நெளித்து லேசாகக் குலுக்க அது முதுகுத் தண்டுப் பள்ளத்தால் கீழிறங்கியது. ஞானாளின் அக்குள் சட்டை ஈரமும் பெரிதாகி பெரிதாகி தெரிந்தது.
மத்தியானம், அறைக்கு வந்து சாப்பிட்டுத் திரும்புகையில், இந்த நடைப் பாய்ச்சலும் வியர்வை அவஸ்தையும் தவிர்க்க முடியாதவைகளாகத் தான் ஆகிவிட்டிருந்தன.
பின்னாலிருந்து சைக்கிள் மணி தொடர்ந்து கேட்டது. அலுவலகம் பியோன் அவர் களைக் கடந்து சென்றான். சைக்கிள் காரியரிலிருந்து ஸி.ஸி.
102
 

அவர்களைத் திரும்பி பார்த்துக் கொண்டு போனார். பார்வை ஏக்கி "ஒ இப்ப தானா வாlங்கள்?" என அவர்களின் மீது கொக்கி போட்டது.
சைக்கிள் போய் விட்டது. அவர்களின் நடை வேகம் அவர்களையறியாமலே குறைந்து விட்டது. இனி அவசரப்பட்டு நடந்து ஒரு பிரயோசனமுமில்லை. அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைகையில் ஸி.ஸி. தன் சிற்றில் அமர்ந்திருப்பார். இன்று கட்டாயம் டோஸ் தான்.
"சீ இதென்ன வாழ்க்கை" என்று ஞானாள் சலித்துக் கொண்டாள். கொஞ்சம் லேற்ராப் போனாலும் ஸிஸியிட்ட திட்டு வாங்கோனும். ஸ்ரோர் நூமுக்கை நுழைச்சா வெளியில வர முடியாதபடி ஒரே வேலை. இதெல்லாம் வீட்டாருக்கு எங்க தெரியப் போகுது? எப்ப பார்த்தாலும் 'இட மாற்றல் எடு’ ‘ஊருக்கு வா’ எண்டு. எழுதின படி, நான் என்ன மாற்றலுக்கு முயற்சிக்காமலா இருக்கிறன்? எனக்குத் தெரிஞ்ச எல்லா வழியிலையும் பாத்தாச்சு”
கடைசி வரிகளைச் சொல்லுகையில் அவள் குரல் தளுதளுத்தது, எங்கே அழுது விடுவாளோ என்றிருந்தது. வாசுகிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. மத்தியானமும் அவளுக்கு ஊரிலிருந்து கடிதம் வந்து இருந்தது.
அவளின் பெற்றோரும் தான் என்ன செய்வார்கள்? மாப்பிள்ளைகள் கிடைப்பதருமையான, யாழ்ப்பாணத்தில், கிடைத்த வரனும் கை நழுவிப் போய் விடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம். அந்த வரனோ, "ஞானாள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றல்
103

Page 54
எடுத்து வந்தால் தான் கல்யாணம்" என்கிறாராம் பாவம் கலியாணக் கனவுகளின் மூழ்க வேண்டிய ஞானாள், “யாரைப் பிடித்தால் இட மாற்றல் எடுக்கலாமென்ற சதா சிந்தனையால் அலைப்புண்டு கிடக்கிறாள்.
நேற்று LiSoria) சிவபாதம் வீட்டிலிருந்து திரும்புகையில் ஞானாளிடம் சொல்ல வேண்டுமென நினைத்ததை இன்னும் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
"நேற்று மிஸஸ் சிவபாதம் வீட்டை போனனே. அவவின்ரை மருமகளுக்கு கொழும்புக்கு மாற்றல் கிடைச்சிருக்காம். எம்.பியின் ரை பி. ஏ. இருக்கிறாரே. அவர் தான் இதை எடுத்துக் குடுத்தவராம். நீரும் அவரைப் பிடிச்சா என்ன?”
“நான் எம்.பியையே நேரில் போய் பாத்திட்டு வந்தாச்சு. அவர் என்ன சொன்னவரெண்டு தெரியும் தானே?”
ஞானாள் சொல்லியிருந்தாள் தான், எம்.பி. சொன்னதை.
"ஏன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் கேக்கிறீங்க? அங்க பாருங்க ஒரே குண்டு மழை. ஷெல் அடி வெடிச் சத்தம். இங்க எங்கட புற்பிட்டியைப் பாருங்கோ. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்டு எல்லா இனமும் ஒற்றுமையா சந்தோஷமா இருக்கிற அமைதியான இடம், இந்த இடத்தை விட்டுட்டு ஏன் போகணும்?”
அவளோடு போன, எம்.பியோடு கூடப் படித்தவரான அவளின் தூரத்து மாமா அவளுக்கு
104

யாழ்ப்பாணத்தில் கலியாணம் பேசியிருக்கிறதென்று சொன்னாராம்.
"அந்த மாப்பிள்ளையை மாற்றல் எடுத்துகிட்டு இங்க வரச் சொல்லுங்க" என்றாராம் எம்.பி.
வேறென்ன சொல்வது? அந்த மாப்பிள்ளையின் பிடிவாதத்தையோ, அவளின் பெற்றோரின் பயத்தையோ எம்.பியிடம் சொல்லிக் கொண்டா இருக்க முடியும்? எழுந்து வந்து விட்டார்களாம்.
"இப்ப எம்பியை போய் பார்க்க வேண்டாம். அவர்ரை பி.ஏ. மூலமாகத்தானே போகப் போரீர்? அந்த பி.ஏ சொன்னா எம்.பி. கேப்பராம். அந்த பி.ஏ. நினைச்சா மாற்றல் எடுத்து தர முடியுமெண்டு மிஸிஸ் சிவபாதம் சொன்னா" என்றவள் " யாரும் ஏதும் சொன்னா இப்ப யாழ்ப்பாணத்தில சண்டை இல்லை. சமாதானம் வந்திட்டுத்து என்றும் சொல்லாம்” என்று சிரித்தாள்.
ஞானாள் முகமும் கொஞ்சம் தெளிந்திருந்தது. "அப்ப நாளைக்கு லீவு தானே. வாரும், அந்த பி.ஏ. வீட்டை போயிட்டு வருவம். ஒருக்கா என்ன சொல்லுறார் எண்டுதான் கேப்பமே. எனக்கு அவர்ரை வீடும் தெரியும்."
அலுவலகம் வந்து விட்டது. குடைகளை மடக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். ஸி. ஸி. அவர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை றோட்டில் பார்த்த பார்வையே அவர்களுக்குப் போதுமென்று இருந்து விட்டாரோ என்னவோ.
105

Page 55
ஞானாள் ஸ்ரோர் நூமுக்கும் வாசுகி தன் மேசைக்குமாப் பிரிந்தார்கள்.
வாசுகிக்கு முனிஸிபாலிஸ்ரி ரசீதுகளை பைல் பண்ணி வைத்து லெட்ஜரில் பதிய வேண்டியுமிருந்தது.
சிறிது நேரம் கூட ஆகவில்லை. ஸிஸியின் குரல் உரத்துக் கேட்டது.
"இப்ப தானோ ஒவ்வீஸுக்கு வாற நேரம்? இது என்ன உம்மட அப்பர்ரை கடை எண்டு நினைச்சீரோ? ஊர் சுத்திப்போட்டு நினைச்ச நேரம் வந்து எட்டிப் பார்க்க? மாதாமாதம் சம்பளம் வாங்கிறமே கொஞ்ச மாவது வேலை செய்ய வேணுமே எண்டு நினைப்பு இருக்கா உமக்கு?" அர்ச்சனை தொடர்ந்து கொண்டு இருந்தது.
லிஸியின் முன் அழுவான் போல் நின்றிருந்தது வசீகரன். பரிதாபமாகவும் இருந்தது. ஸிஸியின் குணம் தெரிந்தும் இப்படி நேரம் கழித்து வந்து வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறானே என்றுமிருந்தது.
வசீகரன் முகத்தை கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக் கொண்டு இவள் மேசையைக் கடந்து தன் மேசைக்குப் போய்க் கொண்டிருந்தான்.
வேலையில் மூழ்கிய நேரம் மெல்லிய நறுமணம் கமழும் பவுடர் வாசனை நந்தாவதி தான்.
முகமெல்லாம் விகCத்த புன்னகையோடு, இவளின் மேசை அருகே குனிந்து “ஸிஸியைப் பாரும் எவ்வளவு பிஸியாயிருக்கார்” என்றாள்.
இவள் நிமிர்ந்து ஸிஸியைப் பார்த்தாள். அவர் அவசரம் அவசரமாக ஏதோ ஒரு பைல்லைப் புரட்டிக்
106

கொண்டிருந்தார். குனிந்து.
நந்தா இவள் மேசையருகே குனிந்து விட்டுதன் மேசைக்குப் போய் சீற்றில் அமரும் வரை ஸி.ஸி தலை நிமிரவில்லை.
நந்தா நல்லவள். எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவாள். உதவுவாள், ஞானாளையும் பிடிக்கும். ஒரு முறை கொழும்பை அதிகம் தெரியாத ஞானாளை கொழும்பு தலைமையகத்திற்கு கூட்டிச் சென்றது இவள் தான.
கொழும்பிலிருந்து வந்த கனகநாயகம் தான். தலைமையகத்திலுள்ள அந்த தமிழ் சீனியர் அஸிஸ்ரெண்ட் பற்றிச் சொல்லியிருந்தார். கிளை அலுவலகங்களிலிருந்து மாற்றல் கேட்டு வரும் தமிழர்களுக்கு உதவக் கூடியவரென்று. அதைக் கேட்டு விட்டுத்தான் ஞானாள் நந்தாவைக் கூட்டிக் கொண்டு கொழும்பிற்குப் போனாள்.
அந்த ஆள் அவள் சொல்வதை எல்லாம் கேட்டிருக்கிறார். பிறகு டைரக்டரிடம் இவள் நின்லமையை, கோரிக்கையை எடுத்துக் கூறி அவரின் பதிலை சொல்லியனுப்புவதாகக் கூறி, அவளை அனுப்பி வைத்திருக்கிறார்.
அன்றிரவே புற்பிட்டி திரும்பிய ஞானாள், உற்சாகத்துடன் கொழும்பைப் பற்றி அந்த உத்தியோகத்தரை பற்றி இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் தான் இவள் சொன்னாள் "அந்த ஒவவிஸுர் ஆர் தெரியுமே? யோகம் ரீச்சரின் முன்னாள் ஹஸ்பெண்ட்".
அதைக் கேட்டு ஞானாள் அப்படியே, ஏதோ
107.

Page 56
யோசிப்பவள் போல, பின் அரண்டது போல, இருந்தது நினைவில் வந்தது "முகம் ஒரு மாதிரித்தான்" என்று தனக்குள் முணுமுணுப்பது போலவும் இருந்தது.
“என்னப்பா, என்ன?” என இவள் உசும்பினாள். "இல்லை, எனக்கு வாற வரும் இந்த ஆள் மாதிரி இருந்தா. நான் அவர்ரை படத்தைக் கூட இன்னம் பார்கேல்லை”
"இதென்ன விசர் கதை? எங்கையும் ஆயிரத்தில் ஒருத்தன் தான் "இம்பொற்ரண்ட்" ஆக இருப்பான்கள்."
"அப்பிடி இந்த ஆயிரத்தில் ஒராளே எனக்கு வந்து 6 numruiuF "LLIT?”
“உடனை “டைவஸ்" எடுத்துவிடும்" "யோகம் ரிச்சரின்ரை கதை தெரியும் தானே தவிர.
இப்படியாவைங்கள் "FGBTu5ai” ஆகத்தான் இருப்பாங்கள். தங்கட குறையை மறைக்க என்ன வேணுமெண்டாலும் சொல்லுவங்கள். உலகமும்
ஆம்பிளையளிரின்ரை பேச்சைத்தான் நம்பும்"
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று வாசுகிக்குத் தெரியவில்லை. “பெற்றோர் நிச்சயித்த முன்பின் தெரியாத ஒருவனுக்குக் கழுத்து நீட்ட வேண்டிய தவிர்க்கமுடியாத நிலையிலுள்ள பெண் களுக்குத் தான் புது புதிதாக எத்தனை பயங்கள்’ என்று மட்டும் நினைக்கத் தான் முடிந்தது.
ஞானாள் அந்த உத்தியோத்தரை மீள ஒரு முறை பார்க்கத்தான் விரும்பினாள். தனக்கு வருபவன் இப்படி இருக்கமாட்டான் என்று உறுதிச் Gruiu Gaunt என்னவோ? ஆனால் அவரிடமிருந்து டைரக்டர்
108

அவளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தகவல்தான் வந்தது கனகநாயகம் ஊடாக
வேலை முடிந்து நிமிர்ந்த பொழுது, மணி இரண்டரைக்கு மேலாகி விட்டிருந்தது. அப்பொழுது தான் யாரோ உள்ளே வந்தார்கள். லத்தீப். சாவதான மாக தன் சீற்றுக்குப் போய் கொண்டிருந்தான்.
ஸி.ஸி. வழக்கம் போல மேசை இழுப்பறையை இழுத்து வைத்துக் கொண்டு எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.
எம்.பி. சொன்னாரே. மூன்று இனமும் ஒற்றுமையாக அமைதியாக வாழுமிடமிது என்று. அந்த ஒற்றுமையைத் தளும்பவிடாமல் காத்து தன்னையும் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சிறுபான்மைத் தமிழ் தலைமை எழுத்தரின் சேவை, இங்கு யாருக்குப் புரிகிறது?
ஆனாலும் ஸி.ஸி. அடிக்கடி சொல்வாரே "எங்கட தமிழ் ஆக்களுக்கு, நான் குடுக்கிற திட்டைப் பாத்து மற்ற இனத்தவங்களும் பயப்பிடுவாங்கள். நல்லா வேலை செய்வாங்கள்", இந்த லொஜிக்கை நந்தாவதிகளும் லத்தீப்களும் எந்தளவு மெய்ப்பிக்கின்றார்களென்பது தான் தெரியவில்லை.
கிணற்றடியில் குளித்து விட்டு உயர்த்திக் கட்டிய பாவாடையுடன் அறைக்குள் வந்தாள் ஞானாள். பாவாடைக்குள் நெஞ்சுக் கூர்மை தெரிந்தது. படுத்திருந்த வாசுகி எழுந்து கொண்டாள். “என்னப்பா வெளிக்கிடுமன். அந்த பி.ஏ யைப் பார்த்திட்டு வருவம்” என்று சொல்லிவிட்டு அலுமாரியைக் கிளறத்
109

Page 57
தொடங்கினாள். முதுகுப்புறம் தளர்ந்து தொய்ந்திருந்த 6T6) சரேலென கீழிறங்கிய இடுப்பை அரவணைத்திருந்தது. "இருபத்தியெட்டு வயதிலும் என்ன இளமை இந்த உடம்பில்" என வாசுகியால் வியக்காமலிருக்க முடியவில்லை. தன்னையும் நினைத்துக் கொண்டாள். “குட்டையாய் பருத்து பாரல் போல’: உயர்ந்த மதிலுக்குப் பின்னாலிருந்த அழகிய சிறுவீடு அது. முன்னால் பல நிறங்களிலுமுள்ள விதம் விதமான குரோட்டன் செடிகள்.
அவர்கள் போன பொழுது, அந்த பி.ஏ. யே தன் வீட்டு முன் விறாந்தையில் நின்றிருந்தார். வாசுகி முன்னால் போய் தன்னையும் ஞானாளையும் அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாள். முனிஸிப்பாலிற்ரியில் வேலை செய்பவர்கள் என்று கறுத்த, உயரமான முன் வழுக்கை விழுந்த மனிதர் அவர்.
அவர் அவர்களை உள்ளே கூட்டிச் சென்றார். அதிக தளவாஉங்களோ சுவர் அலங்காரங்களோ இல்லாததினால் ஹோல் சற்று விசாலமாகத் தெரிந்தது. மூலையில் மூன்று பீஸ் செற்ரி மட்டும்.
ஞானாள் மெல்லிய குரலில் பவ்வியம் காட்டி, தான் வந்த காரணத்தைச் சொன்னாள். வாசுகி அறை வாசலில் மேல் சுவரின் தொங்கிய எழுத்துகளினால் ஆன சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று, அரை மணித்தியாலமாக பி.ஏ இவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ஜோக்குகளுக்கெல்லாம் அவர்கள் அமரிகையாக சிரித்து வைத்தார்கள். எம்.பி கிழமை முடிவில் புற்பிட்டிக்கு வரும் பொழுது, ஞானாளின் கோரிக்கையை அவரிடம்
110

சொல்லி வைப்பதாகக் கூறி அடுத்த கிழமை வரும்படி சொல்லி அனுப்பி வைத்தார்.
ஒவ்வொரு கிழமை முடிவிலும் எம்.பி. கொழும்பிலிருந்து தன் சொந்த ஊரான புற்பிட்டிக்கு வந்து போய் கொண்டுதாணிருந்தார். ஆனால் பி.ஏ அவரிடம் ஞானாள் பற்றிச் சொன்னதாகத் தெரிய வில்லை. “எம்.பி. பிஸியாக இரிக்கார். பார்லிமெண்டிலே பட்ஜெட் டிபேற் நடக்குதில்லையா? ஒய்வாக இரிக்கையில் உங்கட மாற்றல் பற்றி சொல்லுறேன்" என பி.ஏ யும் ஏதேதோ சொல்லிக் கொண்டு தான் வந்தார். ஆனாலும் பிறகும் பிறகும் வரச் சொல்லத் தயங்கவில்லை.
பிறகு, எம்.பிகளின் தூதுக் குழுவோடு சேர்ந்து இந்த எம்.பியும் வெளிநாடுகளுக்கெல்லாம் சுற்றுலா போய் வந்தார்.
அதன் பிறகு பி.ஏ. யிடமிருந்து சாதகமான பதில் வந்தது. “எம்.பியோடு உங்க ரான்ஸ்பர் விடயமா கதைச்சேன். அவர் அதுபற்றி மினிஸ்ரா கிட்ட கதைக்க வேணுமின்னார். அந்த நேரத்தில் நீங்களும் கூட வந்தா நல்லதென்னார். வாங்களேன் கொழும்புக்கு போவம்.”
ஞானாளும், பி.ஏ. சொன்னபடி கொழும்புக்குப் போக யாரைத் துணைக்கு கூட்டிப் போவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள், வாசுகியின் தாயாருக்கு சுகமில்லை என்று தகவல் வரவே, வாசுகி இரண்டு கிழமை லீவில் ஊருக்குப் போக நேரிட்டது.
தாயாருக்கு சுகமாகி லீவு முடிந்து இவள் மீள வேலைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் ஞானாள் தன்
111

Page 58
மாற்றல் பற்றி வாயையே திறக்காமலிருப்பது இவளுக்கு ஆச்சரியத்தை தந்தது. கொழும்புக்குப் போவாளா? மந்திரியைப் பார்த்தாளா? ஒன்றுமே தெரியவில்லை.
அன்று மாலை அலுவலகம் முடிந்து, இருவரும் அறைக்குத் திரும்பி கொண்டிருந்தனர். ஞானாள் கடலில் "டைனமயிற்’ வைத்துப் பிடித்த ஏராளமான மீன்களைப் பிடித்தவர்களிடமிருந்து பறித்து வந்து முனிவிபாலிற்றி முன்றலில் போட்டு மண்ணெணெய் ஊற்றி எரித்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
பொறுமையிழந்த வாசுகி கேட்டாள். “ஏன்? நீர் கொழும்புக்குப் போன விஷயம் என்னவாச்சு? கொழும்புக்குப் போனீரா? மந்திரியை பார்த்தீரா? என்ன சொன்னார்?"
"இதெல்லாம் விட்டாச்சு எனக்கு இட மாற்றலும் வேண்டாம். ஒரு மண்ணாகட்டியும் வேண்டாம்." வெடுக்கெனப் பதில்.
வாசுகி திகைத்துப் போனாள் "ஏன்? என்ன நடந்தது?" "அந்த பி.ஏ. எம்பியை கொழும்புக்கு காரிலே அனுப்பிப் போட்டு, நாங்கள் இரவு ரெயிலில் போகலா மெண்டார். சரி எண்டுதான் சொன்னன். யோகம் ரிச்சரும் என்னோட வாறன் எண்டு சொன்னா”
திடீரென அவன் குரலில் ஆத்திரம் பீறிட்டது. "அண்டு பின்னேரம் போன் பண்ணிச் சொல்லு கிறார். ஒருத்தரையும் கூட கூட்டிச் கொண்டு வர வேண்டாமாம். நான் மட்டும் தனிய வரவேணுமாம்."
112

g
LIUGŠTLJILấd
صلى؟ ཏིས་ برای گ ""
ン。レグ等*/) * s sچیز کو *Ya f
நோட்டில் இறங்கி மலராள் கேற்றைச்
சாத்தி உள்ளே கைவிட்டு கொழுக்கியைப் போட்டு விட்டு வரும் வரை காத்து நின்றாள்.
"ஐடென்ரிக் காட், ஆஸ்பத்திரியிலே தந்த
துண்டு எல்லாம் மறக்காம கொண்டு வாlங்களோ?" எனக் கேட்டவாறு அருகில் வந்தாள் மலராள். எங்கே இவள்
மறந்திருக்கலாமென்று ஒரு நினைவூட்டல்.
இவள், கைப்பையின் ஜிப்பை இழுத்துத் திறந்து உள்ளே விரல் விட்டுத் தடவிப் பார்த்தாள். அடையாள அட்டைகள் செருகியிருந்த பிளாஸ்ரிக்
113

Page 59
மடிப்பு தட்டுப் பட்டது. அதன் மடிப்புக்குள் மடித்துக் கிடந்த ஆஸ்பத்திரித் துண்டுகளும்தான். வேண்டு மானால் நிச்சயப்படுத்த, அவற்றை எடுத்து ஒருமுறை பிரித்துப் பார்க்கலாம். துண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள அந்தப் பெரிய டொக்டரின் Frank அதன் கத்தரிப்பு நிறம் தான் முதலில் கண்ணில் படும், அப்படியே, மீள மடித்து வைத்து விடலாம். "டொக்டர். பரமநாகம், ஐ கிளினிக், ஜவ்னா ரீச்சிங் ஹொஸ்பிற்றல், என்ற அந்த மூன்று வரிகளையோ மேலேயுள்ள இவள் பெயர், அவர்கள் மீள கேட்கும்படி சொன்ன இன்றைய தேதி, ஒன்றையும் பார்க்கத் தேவையில்லை.
இவள் “ம்.” என்றவாறு ஜிப்பை இழுத்து மூடினாள். நடக்கலானார்கள். மெல்லிய இளம் காற்று, முகத்தில் மிருதுவாகப் படிந்து விலகியது.
இப்படியே நீள சற்றுத் தூரம் நடந்தால் ஆஸ்பத்திரி வந்து விடும்.
அந்தப் பகுதி மக்கள் எல்லோருடனுமாக இப்படி ஆஸ்பத்திரிப் பக்கமாக, ஒரு அந்தி மயங்கிய நேரத்தில் முன்னொருமுறை நடந்திருக்கின்றாள். மலராள் வீட்டாரோடு இரவு தங்க நேரிட்டு விட்ட ஒரு நேரத்தில்,
ஒரு பதினைந்து வருடமிருக்குமா அப்படி நடந்து? கோட்டைக்குள் இராணுவம் இருந்து கொண்டு நினைத்த நேரங்களில் ஷெல்களை ஏவிக் கொண்டிருந்த காலமது. கோட்டைக்கு நேர் இலக்கில் இருக்கும் இந்தக் கொட்டடிப் பகுதி மக்களுக்கு இரவு நேரங்களில் சரமாரியாக வந்து விழும் ஷெல்களிலிருந்து தப்ப இந்த ஒரு வழிதான் தெரிந்திருந்தது. "அந்தியானதும் பாய்
114

படுக்கைகளை சுருட்டி எடுத்துக் கொண்டு இப்படி தெரு வழியே நடப்பது.
ஐ.நா. சபை ஆஸ்பத்திரியையும், அதன் அண்டிய பகுதிகளையும் ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தியிருந்தது. அப்பொழுது றோட்டின் குறுக்கே வெள்ளைக் கோடு இழுத்து "ஸிக்குறிற்ரி ஸோன் - யூஎன்" என எழுதியிருந்தார்கள். அதையும் கடந்து கொண்டு உள்ளே எல்லோரும் நடந்தார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு ஆஸ்பத்திரிக்குக் கிட்டப் போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஆபத்துக் குறையு மென்பது அவர்களின் எண்ணமாகவிருந்தது. ஆனாலும் அவர்களின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் கட்டாயம், ஷெல்களை ஏவும் இராணுவத்தினருக்கு எப்பொழுதும் இருந்ததில்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது.
ஆஸ்பத்திரிக்கு முன்னாலுள்ள ஒரு மருந்துக் கடை விறாந்தையில் பாய் விரித்த மலராள் குடும்பத்தோடு இவளும் படுத்தாள்.
கனத்து, ஊர்ந்த அந்த இரவு நேற்றைக்கு முதல் நாள் இரவு போல அப்படியே நினைவிலிருந்தது. ஒரு துளி கண்ணுறக்கமுமின்றி குருட்டாம் போக்கில் இவள் அன்று நினைத்த நினைவுகளும் தான் வந்து நிழலாடின. பகலில் உள்வாங்கிய வெப்பத்தை இரவில் வெளி யேற்றும் தார் றோட்டின் வெக்கை; ஆஸ்பத்திரிக்கே உரிய மனம் - கழிவு நாற்றம், நுளம்புக்கடி, தூரத்திலும் கிட்டடியிலுமாக விழுந்து வெடிக்கும் ஷெல்களின் ஒலி. சுற்றிவர ஆட்கள் படுத்திருந்தாலும், பரந்த
115

Page 60
வெளியில் தனிமையில் படுத்திருப்பது போன்ற பிரமையில் எங்கோ கேட்கும் ஷெல் ஒலியும் அருகில் கேட்பதாய் பயப்பிராந்தியின் ஊடே இந்த றோட்டில் ஷெல் விழுந்து செத்தவர்கள் வரிசையாக நினைவில் வந்தார்கள். ஷெல்கள் விழும் நேரத்தில் தன் வங்கியின் பாதுகாப்பை உறுதி செய்ய வந்து பார்த்த அந்த வங்கி மனேஜர்; ஜீவாவின் 'மல்லிகை'யை இவளுக்கென தவறாமல் எடுத்து வைத்திருந்து தரும் அந்தப் புத்தகக் கடைக்காரர்; தாயை ஆஸ்பத்திரி வாசலில் இறக்கி விட்டு தனக்கு தீபாவளிக்கு ஷேர்ட் வாங்கப் புறப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன்.
ஏவப்பட்ட ஷெல், "இது ஆஸ்பத்திரி, இங்கு விழக் கூடாது என விலகி விழுமா என்ன?’ மிக அருகிலும் விழலாம், இவளும் நாளை விடிகாலை கை சிதறி, கால் சிதறி மண்டை பிளந்து றோட்டோரம் கிடக்கலாம். ஊரில் தைத்துக் கொண்டிருந்த விமலராணியும், தரையில் விளையாடிக் கொண்டிருந்த அவள் குழந்தையும் பொம்மர்க்குண்டொன்றினால் துண்டம் துண்டமாகச் சிதறப்பட்டதை எண்ணிக் கொண்டாள். இங்கு படுத்திருந்தால் மட்டுமல்ல, ஊரில் தன் வீட்டில் படுத்திருந்தாலும் இது நிகழலாம். எந்த இடத்தில் தான் “பிரச்சினை” வராமல் இல்லை? இப்பொழுது கூட வடமராட்சியில் ஏதோ பிரச்சினை என்று தானே, பருத்தித்துறைக்கான பஸ் ஓட்டம் திடீரென நின்று இவளும் இரவை இப்படிக் கழிக்க நேரிட்டு விட்டது?. "ஒரமா எல்லாம் கொங்கிறிட் தூண்கள் கிடக்கு, இப்படி றோட்டால வாங்கோ" கையைப் பிடித்து றோட்டில் நடக்க விட்டாள் மலராள். றோட்டில்
116

நடமாட்டம் இல்லை. வானம் கூட சாம்பல் படிந்து தான் தெரிந்தது. இன்னும் சரியாக விடியவில்லையோ அல்லது இவள் கண்களில் கோளாறோ தெரியவில்லை. இந்தக் கண் கோளாற்றைக் காட்டத்தான் இவள் போன கிழமை பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். முன் கட்டிடத்தில் இயங்கும் வெளி நோயாளர் பிரிவிலிருந்த அந்த ஹவுஸ் சேர்ஜன் பெண், ஒரு நேர்ஸை சற்றுத் தள்ளி நிறுத்தி, விரல்களை விரித்து மடக்க வைத்து "எத்தனை எத்தனை?” என்று கேட்டாள். இவளும் சளைக்காமல் “தெரியேல்லை தெரியேல்லை” என்றாள். அவள் பேசாமல் அடுத்த கிழமை வந்து பெரிய டொக்டரைப் பார்க்கச் சொல்லி துண்டெழுதித் தந்து விட்டாள்.
அதைப் பார்த்து விட்டுத்தான் மலராள் மாய்ந்து போனாள். "உங்களுக்கு நல்ல லக் மற்றவை எண்டா டொக்டர் பரமநாயகத் தட்டை காட்டுறதற்கு ஒண்டரை மாதம், ரெண்டு மாதம் காத்து இருக்க வேணும், அவரை சனல் பண்ணிக் காட்டுறவையும் அப்படித்தான். உங்களை ஒரு கிழமையிலேயே வந்து அவரட்டைக் காட்டச் சொல்லிப் போட்டினம்."
முதலில் சந்தோசமாக இருந்தாலும் அவள் இதைத் திரும்பத் திரும்பச் சொன்ன பொழுது சற்று எரிச்சலாக வந்தது. யாழ்ப்பாணத்து வைத்தியர்களும் நிபுணர்களும் ரன் வெளியில் பறக்கிறார்கள்? சொந்த வாழ்வில் வளம் சேர்க்கவா? அல்லது உண்மையாகவே இந்த ‘கந்தக பூமி'யில் இருக்கப் பயந்தா? -
வ.அ. இராசரத்தினம் தன் கதை ஒன்றில் திருக்கோணமலையை "கந்தகபூமி” என்று குறிப்பிட்டிருக்
117

Page 61
கின்றார். அதைப் படிக்கையில் இப்பதம் யாழ்ப்பாணத் திற்கும் பொருந்தும் எனத் தோன்றியது. இப்பொழுது கூட வெடிச் சத்தங்கள் ஓய்ந்திருக்கின்றன என்று நிம்மதியாக இருக்க முடிகிறதா, சிறிது காலம்? நாகர்கோயிலில் சண்டை, அரியாலையில் சண்டை.
மீன் வாடை வந்து முகத்தில் அடித்தது. மீன் சந்தையைக் கடந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது கருமை பூசிக் கொண்டு வெறுமனே நிற்கும் இந்தச் சந்தையும் சுற்றுப் புறமும் ஒன்பது மணிவாக்கில் சனநெரிசல் நிறைந்த பகுதியாக மாறிவிடும்.
மலராளோடு சற்று நேரம் கழித்து வந்து அந்த சன நெரிசலுக்குள் சிக்கி வெளியே வருவதாக கற்பனை ஒடியது. தாறுக்கு மாறாய் நிற்கும் சைக்கிள்களிடையே நெளிந்து வளைந்து, மீன் வாங்கி பெட்டியோடு காரியரில் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெட்டி வியாபாரியோடு உரசாமல் விலகி நடக்க, எதிரே ஒருவர் சைக்கிள் ஹாண்டிலில் தொங்கும் வயர் பைக்குள் மீனுடன் மோதுவது போல வருவார். இன்னும் சற்று விலகினால் முன்னால் ஒருவர் சைக்கிளை உருட்டியபடி கூட வருபவரோடு பேசிக் கொண்டு போவார். "இண்டைக்கு மீன் சரியான விலை. ராத்திரி குடாக் கடல்ல மீன்பிடிக்க விடேல்லையாம். கடல்ல சண்டையாம்". அவருக்குப் பின்னால் மெதுவாக நகரும் பொழுது, கூட்டம் சற்று லேசாகும் பொழுது, எதிரே ஒரு ஆமி ட்ரக் வரும். அதற்கு வழி விட்டு பாதையின் மறு ஒரம் ஒதுங்குகையில் “இங்கே சைக்கிள்கள் விடப்படும்” எனக் கட்டித் தொடங்கும் அட்டையுடன் வெறுமையாய் தெரியும் இடம் கண்ணை உறுத்தும்,
118

அதென்னவென்று அங்கே சைக்கிள்கள் விட முடியும்? வாடகை இரண்டு ரூபாய் ஆயிற்றே.
அந்த சிறிய ஆனால் உயர்ந்த மாடிக் கட்டிடம் தெரிந்தது. அதன் மேல் பகுதிகள் ஆங்காங்கே சிதைந்து தொங்கிய நிலையிலிருந்தாலும், கீழ்ப்பகுதியில் ஒரு கடை உண்டு. ஒரு ‘பல் பொருள்அங்காடி இப்பொழு தெல்லாம் பெயர்ப் பலகைகளில் நல்ல நல்ல தமிழ்ப் பதங்கள் சுவையகம் வெதுப்பகம் என்று.
கட்டிடத்து வலப்புற மாடிச் சன்னல்கள் வானத் துண்டுகளைக் காட்டிக் கொண்டு இருந்தன. அதே சாம்பல் பூசிய வானம்.
நேற்று மாலை மயங்கும் நேரத்தில் இவள் ஊரிலிருந்து வந்த பஸ், கஸ்தூரியார் றோட்டிலிருந்து, பஸ் நிலையம் நோக்கித் திருப்ப முனையும் பொழுது எதிரே அடுத்தடுத்திருந்த இரண்டு மாடிச் சன்னல்கள் பொன்னால் கோடு இழுத்த ஒரு நீள் மேகக் கீற்றைக் காட்டின. நடுவே ஒரு துண்டை சன்னல்களைப் பொருத்தி வைத்திருந்த ஒரு பாதிச் சுவர் விழுங்கி விட்டிருந்தது. சுற்றியிருந்த மேல் தளம் எல்லாம் ‘ஓ’, என்றாகி விட்ட பின்பு, இப்படி வானத்தை விதம் விதமாகக் காட்டுவது தான் மாடிச் சன்னல்களின் வேலையாகி விட்டது போல.
குடியிருப்புப் பகுதிகள் போய் கடைப்பகுதி வந்து விட்டது. இனி இரு புறமும் கடைகள் தான். நடுநடுவே சிதைந்தவை சில அப்படியே; சில திருத்தப்பட்டுக் கொண்டு,
எதிரே சத்திரச் சந்தி தெரிந்தது. நடுவே இன்னும்
119

Page 62
ஒரு பல்ப் மங்கலாக எரிந்தபடி, இலேசான ஒரு இருள் வட்டத்தைச் சுற்றிவரப் போர்த்தியபடி
ஊடறுக்கும் கே.கே.எஸ். வீதியை வலப்புறமாக வெட்டி, சந்தியைக் கடக்கப் போகையில் எதிரே ஒரு கரிய "லாண்ட் மாஸ்ரர்" இரு லைட்டுக்களும் எரிய, இவர்களை நோக்கி மிக அருகாமையில் வந்து கே.கே.எஸ். வீதிப் பக்கம் சற்று சாய்ந்து நின்றது. பின்னாலிருந்து தபதப என்று சில ஆIக்காரர்கள் கீழே குதித்தனர்.
இவள் பயந்து போனாள். மலராளின் கையைப் பிடித்த போது, அவள் சிரித்தாள். “பயந்து போனிங்களே. சென்றி மாறுறாங்கள். அவ்வளவு தான் என்றாள்.
அப்பொழுது தான் கே.கே.எஸ். வீதியோரம் மரநிழலில் தார் பீப்பாக்கள் பச்சை மணல் மூட்டைகள் மறைவில் ஒரு சிறு காவலரண் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. வெட்கத்துடன் மலராளின் கையை விட்டாள்.
இடப்புறமாக நகர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு பின்புறமாகச் சந்தியைக் கடந்தனர்.
இப்பொழுது சற்று ஆள் நடமாட்டம் தெரிந்தது. சத்திரத்துக் கிணற்றில் யாரோ தண்ணிர் அள்ளிக் கொண்டிருந்தார்கள். வாளிச் சங்கிலி இரும்புக் கம்பிக்குள் இழுபடும் “கொரகொரவும், நீரைப் பிளாஸ்ரிக் வாளிக்குள் விடும் 'சொள சொள’வும் கேட்டன. கிணற்றுப் பந்தலுக்குள் Lilarmoibrfiák வாளிகளின் நிறங்கள் நீலமும் சிவப்புமாய் தெரிந்தன.
மர நிழலின் அடர்த்திக்குள், இருளுக்குள் இருளாய் மரக்கறி மாக்கெற். றோட்டோரம் ஒரு ரைக்ரர்
120

நின்றிருந்தது. எதையோ இறக்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டப் போகையில் வாழையிலைச் சருகுகளின் சரசரப்புக் கேட்டது. வாழைக் குலைகள் இப்பொழுதே மாக்கெற்றுக்கு காய்கறிகள் வரத் துவங்கி விட்டன.
அந்தக் கீரை வியாபாரி, இன்னும் வந்து கடை விரிப்பானோ என நினைத்துக் கொண்டாள்.
"வலது கையால் தாங்கோ, வலது கையால் தாங்கோ”
நீட்டிய காசு வாங்கப்படாத பொழுது, சிறிது திகைத்து அவனை நிமிர்ந்து பார்த்த பொழுது தான் அவன் இப்படிச் சொன்னான்.
பேர்ஸ் இருந்த கைக்குள்ளேயே காசை எடுத்து வைத்து, அதை அப்படியே இவள் நீட்டியிருக்க வேண்டும்.
அவனின் நம்பிக்கையை அங்கீகரிப்பது போல கொஞ்சம் சிரித்து இவள் காசை மற்றக் கைக்கு மாற்றி நீட்டினாள்.
போகத் திரும்புகையில், அவன் அந்தக் காசைக் கண்ணில் ஒற்றிக் கொள்வது தெரிந்தது. ஒரு வித மன நெகிழ்வுடன் இவள் நடந்தாள். ஒரு ஏழைக் கீரை வியாபாரியின் எளிமையான நம்பிக்கைகள் பொய்த்து விடக் கூடாது என்றும், இப்பொழுது தான் தொடங்கிய இவனின் வியாபாரம் நல்லபடியாக நடந்து எல்லாக் காய்கறிகளையும் அவன் நல்ல விலைக்கு விற்று விட வேண்டும் என்றும் மனம் நிறைய விருப்பத்துடன்.
மலராளின் தகப்பனாரின் திவசம் அன்று. ஜயருக்குக் கொடுக்கக் கீரை வாங்கி வைக்கவில்லை என
121

Page 63
மலராள் சொன்னாள். இவள் செருப்பை மாட்டிக் கொண்டு மாக்கெற்றுக்கு வந்திருந்தாள். வெள்ளனவே வந்தால்தான் அன்று அவனின் முதல் கஸ்ரமர் ஆகிவிட்டாள்.
அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு வந்ததில், மொடல் மாக்கெற் வந்தது கூடத் தெரியவில்லை.
இரண்டாவது கடைத் தொகுப்பும் வந்து விட்டது. சதுரம் சதுரமாய்ப் பிணைக்கப்பட்டு மேலெழுந்த மூங்கில்கள் தான் முன்னே தெரிந்தது. இதிலிருந்த கட்டிடம் எப்பொழுதோ நடந்த பொம்பர் தாக்குதலில் அப்படியே சப்பளித்துப் போய் தரையில் கிடந்ததைப் பல நாட்களாகப் பார்த்த ஞாபகம். பிறகு இடம் துப்பரவு செய்த பிறகும், வெறும் தரையாய்க் கிடந்தது. இன்னுமொரு பலநாள், இப்பொழுது தான் இந்த இடத்திற்கும் விமோசனம் வந்திருக்கின்றது. நகர சபைக்கு எங்கிருந்தோ காசுக் கிடைத்திருக்க வேண்டும்.
பக்கங்களிலிருப்பதைப் போலவே அதே வேலைப்பாடான தூண்கள், அதே சாம்பல் கலந்த நீல நிறத்தில் எழுந்தது நிற்பது தெரிந்தது.
தொடர்ந்து வரும் கடைகளில் பெயர்ப் 665).556)6 எந்தளவிற்குத் தன்னால் ошт8Flфаъ முடியுமெனப் பார்த்தபடி நடந்தாள். Bataவெள்ளையில் சிவப்பு எழுத்துக்கள், அதிலும் எல்லா எழுத்துக்களும் தெரிந்தனவா அல்லது முதல் எழுத்து தெரிந்தவுடன் அனுமானத்தில் வாசித்து விட்டாளா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
பஸ் நிலையம் நெருங்க நெருங்க தெரு விசாலித்துக்
122

கொண்டு வந்தது. றோட்டினை அடைத்துக் கொண்டு சைக்கிள்கள் போயின. வெள்ளைச் சீருடையில் மாணவ மாணவியர் இப்பவே வெளிக்கிட்டால் தான் முதலில் ரியூற்றறி பின்பு பள்ளி என்று போக முடியும்.
‘வலப்புற வாசல் வழியாக பஸ் நிலையத்தினுள் நுழைய என இரு பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. "நைற் பாக்” பஸ்களாக இருக்கலாம், பொழுதுபடும் நேரம் இங்கு வந்து சேர்ந்த பின் இரவு இங்குள்ள டிப்போவில் தங்கி மறுநாள் காலை தத்தம் பகுதிகளுக்குப் புறப்படும் பஸ்கள், பருத்தித் துறையிலிருந்து வந்த நைற் பாக் பஸ்ஸில் தான் நேற்று இவள் இங்கு வந்தாள்.
சற்று நின்று பஸ்களை உள்ளே போகவிட்டு இவர்கள் வாசலைக் கடந்தார்கள். ஏற்கனவே மலராள் முதல் நாளே தன் வீட்டில் வந்து தங்கி அடுத்த நாள் விடிய ஆஸ்பத்திரிக்குப் போகலாமெனச் சொல்லியிருந் தாள். அந்தப் ப்ெரிய டொக்டர் ஒரு நாளைக்கு இருபது பேர்களைத் தான் பரிசோதிப்பராம். ஆகவே வெள்ளனவே போய் நம்பர் துண்டு வாங்க வேண்டும். இதற்கு முதல் நாளே வந்து தன் வீட்டில் தங்கினால் தான் நல்லதென்று சொல்லிவிட்டிருந்தாள்.
மதிய நேரம், இவளின் ஊருக்குள்ளால் யாழ்ப்பாணம் போகும் ஒரே ஒரு பஸ்ஸில் ஏறத் தவறியதால், நாலு மணியளவில் இவள் ஊர்ச் சந்திக்கு வந்து தலை காட்டித் திரும்பும் அந்த நைற் பாக் பஸ்ஸில் தான் ஏற முடிந்தது. ގ:
பஸ்ஸிற்குள் ஒரே சனம். அதோடு யாழ் ரவுனுக்கு வந்து போகும் கடைசி பஸ் என்றதினால் வழி நெடுக
123

Page 64
ஆமி செக்கிங், சில இடங்களில் வயதானவர்கள் என்ற பேதமின்றி எல்லோரையுமே இறக்கி காவலரண்களைக் நடந்து கடக்க வைத்தனர். பஸ் ஊர்ந்து ஊர்ந்து இங்கே வந்து சேர்ந்த பொழுது, மாலை மங்கிக் கொண்டு வந்துவிட்டது.
முன்னால் ஒரு சக்ர வண்டி வெள்ளை நிறத்தில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. அதன் முதுகுப் புறத்தில் கறுப்பில் எழுதியிருந்த எழுத்துக்களைக் கிட்டப் போய்த்தான் படிக்க வேண்டுமென்றில்லை. “Donated by Jaipur Foot Factory, Jaffna" glululy 67,5560607 Gaugirat)6Té சக்கர வண்டிகள் இந்தத் தெருக்களில் ஊர்கின்றன? ஜெயப்பூர் கால்களுக்கும், யாழ்ப்பாணத்துப் புதையுண்ட மிதிவெடிகளுக்கும் அவ்வளவு இறுக்கமான தொடர்பு.
வண்டியைக் கடக்கும் பொழுது வண்டிக்குள் இருக்கும் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் உள்ளே இருட்டாக இருந்தது. வெளிச் சக்கரத்தில் பதிந்திருந்த அந்த விரல்களைத் தான் பார்க்க முடிந்தது.
தரையிலடித்த ஆணியும், அதிலிருந்து இறுக்கமாக மேலெழும் கயிறும் தெரிந்தன. கமஃபிளா நிறத்தில் தீட்டப்பட்டிருந்த ஒரு காவலரண், இருவழிப் பாதையாக இருக்கும் றோட்டின் நடுவே. பச்சை மணல் மூட்டைகளின் மேலாக எட்டிப் பார்ப்பவனின் தலைக் கறுப்பு தெரிந்தது.
பஸ் நிலையத்திற்குள் அதிகம் பஸ்கள் இன்னும் வந்து சேரவில்லை. றோட்டோரமாக ஒரம் கட்டி நிற்கும் பஸ்களும் இப்பொழுதில்லை.
124

இடப்புற வாசலைக் கடக்கும் நேரத்தில், நேர்த்தியாக சேலை உடுத்திய இரு இளம் பெண்கள் தோளில் தோல்ப் பை ஆட இவர்களை குறுக்காகக் கடந்து கொண்டு, பஸ் நிலையத்திற்குள் போனார்கள்.
காலைப் புத்துணர்ச்சியோடு இருந்த அவர்களின் முகத்தைப் பார்ப்பது ஒரு வித சந்தோசத்தைத் தந்தது. லேசாக கமழ்ந்த பவுடர் வாசனை வேறு எங்கோ சற்றுத் தூர இடத்திலுள்ள பள்ளிக்கூடத்திலோ, கந்தோரிலோ வேலை பார்ப்பவர்களாக இருக்கலாம்.
நேற்று இவள் வந்து இறங்கிய பஸ் நிலையம் இப்படி இருக்கவில்லை. இரண்டு, இரண்டரை மணித்தியாலங்கள் பஸ்ஸிற்குள் அடைபட்டு அலுத்துச் சோர்ந்த முகங்கள்: சனங்கள் பஸ் வந்து நின்றதும் இறங்கிய ஒரே நிமிடத்தில் நடந்து மறைந்து போனார்கள். பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. இரவு ஏழு மணிக்குத் தான் ஊரடங்குச் சட்டம் என்றாலும் கூட.
இவளும் விறுவிறு என்று தான் நடந்தாள். கடைகள் அனேகமாக மூடப்பட்டு விட்டன. எஞ்சிய ஒன்றிரெண்டும் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மலராள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டுமென்பதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லை. பஸ் நிலையத்தின் இடது வாசலையும் கடந்து பூபாலசிங்கம் புத்தகக் கடையையும் கடந்து ஆஸ்பத் திரியின் நீண்ட வெளி மதிலோரமாக நடந்தார்கள்.
நடைபாதைக் கடை விரிப்புகள் ஏதும் வராத நிலையில் கடை பாதையில் தாராளமாக கைவீசி -
125

Page 65
இல்லையில்லை, கால் வீசி நடப்பதே ஒரு புது அனுபவமாக இருந்தது.
நடுக்கோடு போலுள்ள நடுவீதி மரங்களின் பின்னால் ஓரிரு ஆட்டோக்கள் வந்து நிற்கத் துவங்கி யிருந்தன. இல்லாவிட்டால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வர்ணம் தீட்டிக் கொண்டு ஒரு பத்துப் பதினைந்து நிற்கும்.
ஆஸ்பத்திரி வாசல், திடீரென சுறுசுறுப்பான நடமாட்டம் உள்ள இடத்திற்கு வந்துவிட்டது, போலத் தோன்றியது.
ஒரு தகப்பனும் மகளும், எதிர்ப்புற நடைபாதை யிலிருந்து இறங்கி இவர்களுக்கு முன்னால் ஆஸ்பத்திரி வாசலுக்கு நுழைந்து கொண்டிருந்தார்கள். தகப்பனாரின் பிளாஸ்ரிக் கூடைக்குள் திணித்திருந்த ஒரு வெள்ளை உறை போட்ட தலையணை. மகளின் கூடைக்குள் நிமிர்த்தித் தெரிந்த சாப்பாட்டுக் கரியரும் பிளாஸ்க்கும். திறந்திருந்த ஆஸ்பத்திரிக் கேற்றை நோக்கி எல்லாப் பக்கத்தாலும் தான் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
முன்னும் பின்னுமாக எதிர்நடைபாதையில் நடந்து வருபவர்கள் மட்டுமல்ல, றோட்டின் மறு ஒரத்தி லிருந்தும் றோட்டைக் குறுக்குமாக வெட்டிக் கொண்டு, ஆஸ்பத்திரி வாசலுக்கு சனங்கள் வந்து கொண்டு இருந்தனர்.
வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தார்கள். ஒரமாக முதுகு காட்டி நின்ற ஒரு மோட்டார் சைக்கிள் தான் முதலில் தெரிந்தது. அதன் மேல் கறுப்புக் கோர்ட்டுடன் ஒருவன் அமர்ந்திருந்தான். அசையாமல்
126

விறைத்தது மாதிரி. இவளுக்குத் திடுக்கிட்டு விட்டது. இப்படிக் கறுப்புக் கோர்டோ, அங்கியோ போட்டிருக்க, அப்படி என்ன குளிரா இந்த இளம் காலையில்? உள்ளே குண்டு கட்டி வைத்திருப்பானோ? யாரை இலக்கு வைத்து? ஆமியிலுள்ள பெரியவன் யாராவது இந்தப் பக்கம் வருகின்றானா? திகில், திகிலாய் எண்ணங்கள் ஓடின.
அவனைக் கடக்கையில் தவிப்பாக இருந்தது. கடந்த பின், ஆஸ்பத்திரிக் கட்டிடத்திற்குள் நுழைய முன்பு, ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவன் தன் கோர்ட்டைக் கழற்றிக் கொண்டிருந்தான். சே! ஒரு நிமிடத்தில் என்னவெல்லாமோ நினைத்து விட்டாளே.
கையில் வைத்திருந்த அந்த பெரிய டொக்டரின் பிராங் குத்திய துண்டு, மந்திரக் கோலாய் செயல் பட்டது. ஆஸ்பத்திரிக் கதவுகள், கொறிடோர்கள் எல்லாம் வழி விட்டு நின்றன.
கட்டிங்கள், மரங்களைக் கடந்து ஏதோ கிளினிக் முன் நீண்டிருந்த கியூவை உடைத்து கொண்டு நடந்தார்கள்.
ஒரு மரத்தருகே ஐ கிளினிக் இருந்தது. முன் விறாந்தைக் கதவு சாத்தியிருந்தது. விறாந்தைக் குந்தில் சிலர் இருந்து கொண்டும். சிலர் நின்று கொண்டும் அவர்களின் அலுத்த முகங்கள், இருள் விலகும் முன்பே இங்கே வந்து விட்டதைச் சொன்னன மலராள். விடியுமுன்னரே தன் கணவரை எழுப்பி அனுப்பி இவளுக்கு நம்பர் துண்டு வாங்கி விட்டது எவ்வளவு நல்லதென்று தோன்றியது.
127

Page 66
தாயும் மகளும் போல் தெரிந்த இருவருக்கருகில் போய் அமர்ந்து கொண்டார்கள். மலராள் அந்தப் பெண்ணோடு பேச்சுக் கொடுப்பது கேட்டது. யாருடனும் விரைவில் சிநேகிதம் பிடித்து விடுவாள் மலராள். V−
அவள் கேட்ட கேள்விகளுக்கு அந்தப் பெண் பன்னி பன்னி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சாவகச்சேரியிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக் கின்றார்கள். இப்பொழுது சுன்னாகத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கின்றார்கள். இதற்குள் தாயாருக்கு கண்ணில் கோளாறு. ஏதோ வந்து மறைக்கிறதாம். காட்ட என்று விடிகாலை ஒட்டோ பிடித்து வந்திருக் கின்றார்கள்.
"இப்போ வீட்டைப் போய்ப் பார்க்கலையோ?” இது மலராள்.
"நாங்கள் போகேல்லை. தெரிஞ்ச ஆக்கள் போய்ப் பார்த்திட்டு வந்து சொன்னவை. வீட்டிற்கு சரியான சேதமாம். பக்கத்து வீடுகளும் எல்லாம் அப்படித் தானாம். அதோட சாமான்களும் ஒண்டுமில்லையாம்." அவளின் குரல் தளுதளுத்திருந்தது.
கொஞ்ச நேரம் பேச்சு இல்லை. இருந்தாற் போல, வானத்தில் ஒரு சத்தம் வந்து விழுந்து வரவர பெரிதாகக் கேட்டது. பழக்கப்பட்ட உறுமல் தான்.
நேராக கிட்ட கிட்ட வந்து, தலைக்கு மேலாக, மிகப் பதிவாக அம்மோவ்! அதே நேரம், பக்கத்தில் யாரோ "வீல்" என்றும் கத்த ஒரு கணம் திக்கென்றாகி விட்டது.
128

விமானம் போய் விட்டது. அந்தப் பெண் சற்று வெட்கத்துடன் தன் தோளைப் கட்டிப் பிடித்திருந்த தாயின் கைகளை விலக்கிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா, பயந்திட்டிங்களோ எங்களைச் சொல்லுங்கோ, நாங்க இந்த சத்தத்தை மூண்டு நாலு மாதமா கேட்டுக் கொண்டு வாறம்” என்று யாரோ ஆறுதல் சொன்னார்கள்.
இந்தச் சத்தம் பற்றிய பேச்சில், கதவு திறக்கப்பட்டதை யாரும் கவனிக்கவில்லை. பிறகு எழுந்து மெதுவாக உள்ளே போனார்கள்.
பெரிய அறை அது. வரிசையாக ஐந்தாறு பெஞ்சுகள், எதிரே தெரிந்த மூடியிருந்த இன்னொரு கதவைப் பார்த்தபடி போடப்பட்டிருந்தன.
இரண்டாவது வரிசையில் போய் இருந்து கொண்டார்கள். இப்பொழுது இவள் அருகில் அந்தப் பெண். பக்கத்தில் தாய், இவர்களுக்கு ஆறுதல் கூறுவது போல ஏதாவது கதைக்க வேண்டும் போலிருந்தது. "அம்மா சரியான பயந்தவ போல கிடக்கு” என்றாள் மெதுவாக,
அந்தப் பெண் லேசாகச் சிரித்தாள்.
“முந்தி இப்படி இல்லை. இப்ப இப்பத்தான். சண்டைக்கை நாங்க ஊரிலேயிருந்து ஓடி வரேக்கை எங்களோடை கூட வந்து பிள்ளை குண்டு பட்டுச் செத்துப் போச்சு. அதிலேயிருந்து அம்மாவுக்கு பிளேன் சத்தம் கேட்டாலே ஒரே பயம்."
லேசாக சோகமாகப் புன்னகைக்கத்தான் முடிந்தது இவளால். “அதோட இப்ப கண்ணும் சரியாத்
(8uT-8
129

Page 67
தெரியுதில்லை. ஒரே பயம் தான்."
உள் கதவு திறக்கப்பட்டு காகிதங்களோடு ஒரு நேர்ஸ் வெளியே வந்தாள். முதல் ஐந்து நபர்களுக்குரிய பெயர்களை வாசித்து விட்டு, உள்ளே சென்று விட்டாள். இவளின் பெயர் நாலாவதாக வந்தது.
மலராளிடம் சைகை மூலம் விடைபெற்ற மற்றவர்களோடு இவள் உள்ளே போனாள். வாசலோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த பெஞ்சில் இருக்கச் சொன்னார்கள்.
அறை மிகச் பெரிதாக இருந்தது. ஆட்களும் நிறையத் தெரிந்தனர். குழுகுழுவாய் நிற்பதும் நடப்பதுமாய், இது டொக்டரின் கொன்ஸல்ரிங் றுரமா என ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை உள்ளே சிறிய அறை இருக்கக் கூடும்.
இவர்கள் மெடிக்கல் ஸ்ருடன்ஸ் போலத்தான் இருந்தது. “ஜாவ்னா ரீச்சிங் ஹொஸ்பிற்றல்” என்பதை ஒருமுறை சொல்லிக் கொண்டாள். நடுவில் போடப் பட்டிருந்த மேசையையும் கதிரையையும் சுற்றிக் கொண்டும் இவர்கள் தான். கதிரையில் யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. siggil டொக்டரின் சீற்றா என்பதும் தெரியவில்லை.
இவர்களில் யாராவதொருவன் சற்று விலகி நின்று ஒரு பெட்டையோடு கதைத்துக் கொண்டிருக்கின்றானா எனப் பார்த்தாள்.
கொஞ்சம் தடியனாகி தன் பரந்த முதுகில் பின்புறம் கோர்ந்த கைகளில் இருந்த ஸ்ரெடஸ்கோப்பை தூக்கி மெதுவாக அடித்தபடி, எதிரில் நின்ற பெண்ணை
130

முக்கால் பகுதி மறைத்துக் கொண்டு கொஞ்சம் பவ்யம் காட்டும் மெதுவான குரலில்.
ஏன் அப்படி எதிர்பார்க்கின்றாள் என நினைத்த பொழுது ஒரு பழைய நினைவு. தலை நீட்டியதை உணர்ந்தாள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு, இப்படித்தான் ஒருவன், கண்டி பெரியாஸ்பத்திரியில் ஒரு சக மாணவி யோடு பேசிக் கொண்டு நின்றிருந்தான். இவள் கையில் யூனிவஸ்ரி டொக்டரின் கடிதத்தோடு பெரியாஸ்பத்திரி இ.என்.ரி. சேர்ஜன் வருகைக்காக இவள் காத்திருந்த பொழுது,
சட்டென்று மாணவர்கள் ஒழுங்காயினர். பக்கத்து மேடைப் பேச்சாளியின் ஸ்ரான் போலிருந்த பலகையின் முன் இருபுறமும் வரிசையில் நின்றனர்.
டொக்டர் வந்துதான் விட்டார். சற்றும் கட்டையாக தூய ஷேர்ட்டும் லோங்ஸ"மாக இன்னும் இளமை மாறாத தோற்றத்துடன் அந்த ஸ்ராண்டின் பக்கத்தில் வந்து நின்றார். -
முதலாம் எண் வாசிக்கப்பட்டு அருகிலிருந்த யாரோ எழுந்து போனார்.
இவளின் வலப்புறத்திலிருந்த ஆளின் கண்ணின் மேல் முக்கோண மடிப்பாக காகித மட்டை பொருத்தியிருந்தது. எப்பொழுது இந்த ஆள் வந்து இப்படி பாண்டேஜ் போட்டுக் கொண்டு போயிருப் பான் என எண்ணமிட்டாள்.
தன் உயரத்திற்கு வரக் கூடிய சேலை உடுத்திய ஒரு இளம் பெண்ணை டொக்டர் நிற்க வைத்து
131

Page 68
பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
ஆயிற்று. பார்த்துக் கொண்டேயிருக்கையில் இவள் முறையும் வந்து விட்டது. இவளின் நம்பரைக் கூப்பிட்டு விட்டார்கள்.
எழுந்து நடக்கையில், சற்று தடக்கியது மாதிரித் தெரிந்தது. மாணவர்களின் வரிசை நடுவே நின்றிருந்த டொக்டர், இவளுக்காக காத்து நிற்பது போலிருந்தது.
"கண்ணில் என்ன?” “வரவர பார்வை குறைஞ்சு கொண்டு போகுது. ஒண்டும் தெளிவாகத் தெரியுதில்லை”
*கண்ணாடியைக் கழட்டுங்கோ unTriti ub, கண்ணாடி மாத்தி எத்தனை காலம்?
“ரெண்டு வருஷமிருக்கும்.” இவள் எழுந்த மானத்தில் பதில் சொன்னாள்.
"இங்கை பாருங்கோ Concave - குழிவில்லைக் கண்ணாடி அருகிலை எல்லாம் நல்ல தடிப்பு நடுவில் மெல்லிய கிளாஸ்.”
கண்ணாடியை முன்னால் நின்ற ஒரு மாணவியிடம் கொடுத்தார். கண்ணாடி கைமாறிக் கொண்டு போனது பின்னால், பிறகு எதிர்வரிசைக்கு என்று, இவள் சற்றுக் கவலையுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஏற்கனவே, சற்று லூசான பிறேம். இவர்கள் பிடிக்கும் விதத்தில் அது உடைந்தாலும் உடைந்து விடும். இப்பொழுதெல்லாம கண்ணாடி பிறேமுக்கே ஆயிரம், இரண்டாயிரம் என்று வேண்டும்.
ஒருவாறு இவள் கைக்கு மீள வந்து சேர்ந்தது.
132

டொக்டர் இவளின் மூடிய இமைகளின் மேல் ப் பார்த்தார். அந்த "டாக் நூமுக்கை போயிருங் கா, வாறன்" அவர் காட்டிய எதிர்த் திசையில் இரு தவுகள் தெரிந்தன.
கறுப்புத் தடித்த திரை தொங்கும் அறை வாசலூடாய் உள்ளே தட்டுத் தடுமாறிச் சென்றாள். ஒன்றுமே தெரியவில்லை. யாரோ இவள் கையைப் பிடித்து ஒரு ஸ்ரூலில் இருக்க வைத்தார்கள். நேர்ஸாக இருக்கலாம்.
பிறகு அவளும் வெளியே போயிருக்க வேண்டும். இருட்டில் தனிமையில் மொட்டு மொட்டென்று உட்கார்ந்திருந்தாள்.
திரை லேசாக விலக்கப்பட்டு சிறு வெளிச்சம் வந்து மறைந்தது. கண்களுக்கெதிராய் ஒரு சிவந்த ஒளிப்பொட்டு "இந்த லயிற்றையே பாருங்கோ" டொக்டரின் குரல் கண்ணைப் பரிசோதிக்கின்றார்.
"நேரா இந்த லயிற்றையே பாருங்கோ. இமைக்க வேண்டாம்” என்றார். மீண்டும்.
மீள கறுப்புத் திரை விலகி மூடியது. டொக்டர் போயிருக்க வேண்டும். நேர்ஸ் இவளும் வெளியே வர
உதவினாள். : டொக்டர், இப்பொழுது மாணவர் புடை சூழ தன் இற்றில் இருந்தார். இவளிடம் ஒரு மருந்துச் சீட்டு நீட்டப்பட்டது. "டிஸ்பென்சரிக்குப் போய் இந்த மருந்தை விட்டுக் கொண்டு வாங்கோ"
இந்த முறை வலது புறத்தைக் காட்டினார். அந்தக் திவால் வெளியே வந்தாள். டிஸ்பென்சரி எங்கே என்று
133

Page 69
விசாரிக்க வேண்டியிருந்தது.
வாசல் கதவோடு போய் நின்று கொண்டு மருந்துச் சீட்டை நீட்டினாள். “வெளியில பெஞ்சில் போயிருங் கோ. மருந்து கொண்டு வாறன்" ஒரு தொக்கை நேர்ஸ் சொன்னாள்.
வெளி பெஞ்சில் ஐந்தாறு பேர் இருந்தார்கள். முகத்தை அண்ணாந்தபடி, தலையை பெஞ்ச் முதுகில் சாய்த்துக் கொண்டு, இப்படி இவர்கள் தலையைச் சாய்ப்பதற்காகத்தான் நுனி சுருண்ட CLAgilgi பெஞ்சுகளை இங்கே போட்டிருக்கிறார்கள்.
இவளும் அவர்களோடு போய் அமர்ந்து கொண்டாள். ஒரு பத்து பதினைந்து நிமிடக் காத்திருப்பின் பின், “கண்ணை மூடு, கண்ணைத் திறக்க வேண்டாம். மருந்து வெளில வரப் போகுது” என யாரையோ அதட்டியவாறு அந்த நேர்ஸ் வெளிப் பட்டாள்.
கையில் மருந்துக் குப்பியுடன் நேராக இவளிடம் வந்தாள். ஒவ்வொரு கண்ணிலும் மும்மூன்று சொட்டுக்கள் "கண்ணை மூடிக் கொண்டு அப்படியே சாய்ந்திருங்கோ" பிறகும் யாரையோ அதட்டி விட்டு உள்ளே போனாள்.
கண்களை மூடிக் கொண்டபடி, ஏன் சில நேர்ஸ்கள் இப்படி வெள்ளையில் கட்டைக் கவுனும், சிலர் சேலையும் உடுத்துகிறார்களென யோசிக் கலானாள். இவர்களிலும் கிறேட் ஒன்று, கிறேட் இரண்டு என்று தரங்களிருக்கலாம். முதல் கிரேட் நேர்ஸ்கள் இப்படிக் கட்டைக் கவுன்தான் போட
134

வேண்டுமாக்கும். இந்த நேர்ஸுக்கு ஐம்பது வயதிருக்கும். தன் பருத்த உடலை இப்படிக் கட்டைக் கவுனுக்குள் திணித்து, கஷ்டப்படுத்திக் கொண்டு.
நேரமாயிற்றே என கண்களைத் திறக்க முயல மீளவும் அதே நேர்ஸின் குரல். சட்டென்று மூடிக்கொண்டாள். "இஞ்சை பாருங்கோ, இவவை. அப்படியே கண்ணை மூடி, தலையைச் சாய்ச்சுக் கொண்டிருக்கிறா, நீங்களும் இவ மாதிரி இருங்கோவன்" நல்ல உதாரணத்திற்கு தான் காட்டப்பட்டிருப்பது தெரிந்தது. g w மறுமுறை, கையில் ரோச் லையிட் கொண்டு வந்திருந்தாள். இவள் கண்களில் ரோச் அடித்துப் பார்த்தாள். கண் கிளியராக இருக்கும். உள்ளை டொக்டரட்டைப் போங்கோ”
உள்ளே போனதும், முதலில் கண்ணில் பட்டது, விரிந்திருந்த “ஸ்ரெச்சர்’ தான். அதைப் பார்த்ததுமே, அது தனக்காகத்தான் அங்கு போடப்பட்டிருக்கிறதெனப் பட்டுவிட்டது.
டொக்டர், யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். மாணவர்கள் குழுக்கள் குழுக்களாக அங்குமிங்கும் நின்றனர். அவர், தன் “கோட்டா’ நோயாளர்களைப் பார்த்து முடித்து விட்டார் போலும். இவள் தயங்கி நிற்பதைப் பார்த்து ஒரு பெண் ஒடலி’ இவளருகே வந்தாள். இதில் ஏறிப் படுங்கோ” என்றாள்.
“சிவனே’ என்று ஏறிப் படுத்தாள். டொக்டர், மாணவர்களோடு கதைத்துக் கொண்டிருந்தார். பலதரப்பட்ட குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
135

Page 70
நிமிடங்கள் ஊர்ந்தன. ஒரு படியாக டொக்டரும், மாணவர்களும் வந்து இவளைச் சூழ்ந்து நின்று கொண்டு விட்டார்கள்.
இவளின் கண்களில் ஒளி பாய்ச்சப்பட்டது. பெரிதுப்படுத்தப்பட்டுத் தெரிந்த இவளின் கண் நரம்புகள் பற்றி டொக்டர் “ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார்” “வரவர மெலிஞ்சு கொண்டு போகுது பார்த்தீங்களா? இது வீக்கான நேர்வ்"
வர வரப் பாயும் ஒளியில் பலதரப்பட்ட நிறங்கள் தெரிந்தன. அவற்றின் உக்கிரம் தாங்காமல் கண்கள் கசித்தன. கூசின. ஒளிப் பாய்ச்சல் நிறுத்தப்பட்டது.
டொக்டர் "கண்ணைத் துடையுங்கோ” என்றார். இடுப்பிலிருந்த கைக்குட்டையை இழுத்துக் கண்ணைத் துடைத்தாள்.
மீளவும் ஒளிப் பாய்ச்சல்கள் கண்கள் தாமாகவே அயர்ந்து கொண்டு வந்தன. மூடியும் கொண்டு விட்டன. இம்முறை டொக்டர் தோளைத் தட்டி "கண்ணைத் திறவுங்கோ திறவுங்கோ” என்றார் அவசரமாக திறக்க மறுத்த இமைகளை வலுக்கட்டாயமாகத் திறந்து வைத்தாள்.
ஒளி வெள்ளத்தைத் தாங்காமல் மீளவும் கண்கள் மூடிக் கொண்டன. மீளவும் "கண்ணைத் திறவுங்கோ" என்ற தோள் தட்டல், மீள, இமைகளை வலுக்கட்டாய மாகப் பிரித்து வைத்தாள். கடவுளே! எப்பொழுது முடியும் இந்த அவஸ்தை?
ஒருவாறு முடிந்தது. டொக்டரும் மாணவர்களும் விலகிப் போனார்கள். ஸ்ரெச்சரிலிருந்து எழுந்து
136

கொண்டாள். கண்கள் இருட்டிக் கொண்டு இருநதன. தடுமாறிக் கொண்டு கீழே இறங்கினாள்.
டொக்டர் தன் சீற்றில் அமர்ந்தபடி இவளை அழைத்தார். "கண் ரெண்டிலையும் ‘கற்றாக்' வந்தருக்கு. கொஞ்ச நாள் போகட்டும். சவ்வு "திக்’ ஆகட்டும். ஒரு ஐஞ்சாறு மாதம் செல்ல வாங்கோ, ‘ஒப்பறேர்' பண்ணி 65L6 ITub".
வெளியே வந்து, காத்து நின்ற மலராளிடம், டொக்டர், சொன்னதைக் கூறினாள்.
“என்னமோ ஏதோ என்டு பயந்தீங்களே வெறும் 'appstós' g5ntair Contract.
“டொக்ரர் சொன்ன மாதிரி ஒப்பறேஷன்’ செய்து, லென்ஸும் போட்டு விட்டாங்கள் எண்டா பார்வை நல்லா தெரிச்சுடும். இந்த டொக்ரர் கெட்டிக்காரன். இவரட்டையே ‘ஒப்பறேர்' பண்ணுவிக்கலாம், என்ன சொல்லுறீயள்?” மலராள் உற்சாகமாகக் கேட்டாள்.
இவள், "சரிதான் இப்ப பேசாம வரப் போறியோ இல்லையோ?” என எரிந்து விழுந்தாள்.
137

Page 71
1Ꭴ
வீடு நோக்கி.
Lஸ், பாலத்தின் மீது ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
ஜன்னலால் எட்டிக் கீழே பார்த்தாள். ஏதோ மண்ணையும் கல்லையும் கொட்டி பாலமென்று ஆக்கியிருந்தார்கள். அழகிய நாவற்குழிப் பாலத்திற்கா
.இக்கதி என்றிருந்தது حہ"حستعم۔۔۔عک·
முன்னைய பாலத்தின் சில சிதைவுகள் நீருக்குள் கிடந்தன. மதகுகள் அடைப் பட்டிருந்ததால் தண்ணிர் ஒட முடியாமல் குழம்பி, குமைத்து கொண்டிருந்தது.
இவை எல்லாம் கொஞ்ச தூரத்திற்குத் தான். பாலத்தின் நடுப்பகுதி வர
a.
138
 

பஸ் சுமுகமாக ஓடத் துவங்கியது. பாலம், திருத்தப்பட்டு, மதகுகள் கூட துப்பரவாக்கப்பட்டிருந்தன. தண்ணிர் ‘விலு விலு’ என்று ஓடியது. பாலத்தின் கைப்பிடிச் சுவர் கூட புதிதாய் கட்டப்பட்டு பஸ்ஸோடு சிறிது தூரம் ஓடி வந்தது.
இவை கொஞ்ச தூரத்திற்குத் தான் நடுப்பகுதியைத் தாண்டியதும், பஸ் மீள ‘கடக் கடக்’ என்று ஊரத் தொடங்கியது.
பஸ், றோட்டுக்கு வந்து ஓடிய பொழுதும், அது பாலத்தில் ஊர்ந்ததற்கும் அப்போதைக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. அவ்வளவு குண்டும் குழியுமாகக் கிடந்தது றோடு.
தன் சொந்த ஊரின் அடையாளங்களையே தொலைத்து விட்டுத் தேடுபவள் போல அவள் ஜன்னலால் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீதிக்கு நெருங்கியும் தள்ளியுமாக எங்கு பார்த்தாலும் புதர்க்காடுகள், அங்காங்கே புதர்களுக் கிடையே பாதி தெரிந்த கட்டிடச் சிதைவுகள்; சிதலங்கள்.
வீதியோரக் காட்டுச் செடிகள் சில வளர்ந்து நின்று, சன்னலால் உள்ளே தலை நீட்டிப் பார்த்து, விருட்டென்று மறைந்தன. பஸ்ஸைப் போக விட்டு அதன் முதுகில் "படபட" எனத் தட்டி வழியனுப்பின.
இருந்தாற் போல் ஒரு நாயூண்ணிப் பூ உள்ளே வந்து ஆடி விட்டு இழுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. பரிச்சயமான ஒன்றைப் பார்த்துவிட்ட சந்தோஷம் அவளுக்கு ஏற்பட்டது.
139

Page 72
நாயூண்ணிப் பூக்களோடு அவளுக்குச் சிறு வயதிலிருந்தே சிநேகிதம், அப்படியே முழுக் கொத்துப் பூவாக இதைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரு வட்டத்தினுள் விரிந்து சிரிக்கும் அந்த இந்தினி இந்தினிப் பூக்களின் நேர்த்தியை, நுட்பத்தை வியப்பது போலப் பார்த்துக் கொண்டிருப்பாள். வெளிர் மஞ்சள், வெளிர் நீலம், வெளிர் சிவப்பு என்று அவை ஒவ்வொன்றின் நிறங்களிலும் கூட ஒரு வித மென்மை தெரியும்.
இந்த நாயூண்ணிப் பூக்களை இப்படி வேறு யாராவது ரசிப்பார்களா என்பது அவளுக்கு இதுநாள் வரை தெரிந்ததில்லை.
இப்பொழுது எங்கேங்கே நாயூண்ணி செடிகள் தெரிகின்றன. அவற்றின் பூக்கள் தெரிகின்றன எனப் பார்க்கத் தொடங்கினாள்.
விதம் விதமான பற்றைகள் ஊசியிலை முட் புதர்கள், கோவை கொடிகள் எல்லாம் தான் கண்ணில் பட்டுக் கொண்டு வந்தன.
ஒரு பெரிய பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியது. கிளேமோர், கண்ணி வெடி எகிறல்களைத் தாங்கிய றோட்;
பனை மரங்கள் கூட அதிகம் தென்படவில்லை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள். பல இடங்களில் வெட்டியெடுத்த மரங்களின் அடிக்குற்றிகள் தான் தெரிந்தன. குண்டுகளும், ஷெல்களும் பட்டு பாதி எரிந்த கரிக்கட்டையாகப் பல.
இடிந்த வீடுகள்; சிதைந்த கட்டிடங்கள் தொடர்ந்து
140

தென்படவே, நாவற்குழி சந்தி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஒரே கற்குவியலாகக் கிடந்த இடத்தில் தான், முன்பு இறால் தொழிற்சாலை இருந்ததென்பதை ஊகித்துக் கொண்டாள். பக்கத்திலிருந்த அரசு கூட்டுத் தாபனத்தின் இடத்தையே கண்டு பிடிக்க முடியவில்லை ஒரே மண் உதிர்வு.
சேதம் அடையாத, இடிபாட்டைத் தாங்காத ஒரு கட்டிடமுமில்லை.
கூடவே ஓடி வந்த நீண்ட பற்றையின் நடுவே ‘கண்ணி வெடி அபாயம்’ என்ற பலகை தெரிந்தது. சிவத்த பலகையில், எழுத்துகளின் மேல் மண்டை ஒடும் அதன் கீழிருந்த பெருக்கல் அடையாளம் போல் இரு எலும்புகளும் கண்ணில் இழுபட்டுக் கொண்டே வந்தன. சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டம் சற்று உற்சாகத்தைத் தந்தது. பக்கத்திலுள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் தான் சண்டையின் பொழுது, வெளியேற இயலாத முதியவர்களை எல்லாம் கொண்டு வந்து வைத்து பராமரித்தார்களெனக் கேள்விப்பட்டது நினைவுக்கு வர, தென்படுபவர்களில் எத்தனை பேர்கள் வயோதியர்கள் எனப் பார்க்கத் தொடங்கினாள் அப்படிக் கணக்கெடுக்க முடியவில்லை. எல்லா வயதுத் தரப்பினரும் தான் கண்ணில்பட்டனர்.
இடித்த கடைகளுக்கருகே ஒலைக் கொட்டில்கள் போட்டு கடைகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு ஒலைக் கடைக்கு முன்னால் வாழைக் குலை தொங்கியது. அதில் கத்தி போட்டு ஒரு சீப்பை வெட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். பக்கத்தில் நின்ற
141

Page 73
சிறுவனிடம் கொடுப்பதற்காயிருக்கலாம்.
அவன் பக்கத்திலிருந்த கணவனைப் பார்த்தாள். இந்த சன நடமாட்டம் அவனுக்கு ஓரளவு தைரியத்தை அளித்திருக்குமென நினைத்தாள். அவனோ முன்புற கண்ணாடி வழியாக, நேராக றோட்டையே பார்த்துக் கொண்டு வந்தான்.
அவனுக்கு ஊருக்கு வந்து வீட்டைப் பார்க்கவோ, மீளக் குடியேறவோ விருப்பமில்லாது தானிருந்தது. அவள் தான் விடாமல் அலட்டினாள். "எத்தினை நாளைக்கு வேறை யார்ரையும் வீட்டில இருக்கிறது? வாங்கோ, வீட்டை ஒருமுறையாவது போய் பாத்திட்டு வருவம். எத்தினையோ சனம், திரும்பப் போய் குடியேறியும் விட்டுதுகள். மிதிவண்டிகளை எடுத்த இடங்களிலை தானை, சனங்களைப் போய் குடியேற விடுறாங்கள். நாங்களும், பத்தையஞக்கை போகம, வெளியில நிண்டு வீட்டை ஒழுக்கா போய் பாத்திட்டு வருவம்" அவள் இப்படி பலவாறு சொன்ன பிறகுதான், இன்றுஅவள் கூட வருகிறான்.
சந்தியைத் தாண்டிக் கொண்டு பஸ் போயிற்று. இப்பொழுது அடுக்கடுக்காய் வீதியோரங்களில் பெரிய பெரிய குழிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. குழித்து குழித்து உள்ளே செல்லும் பாதாளக் குகைகளாய் சேறு பூசிக் கொண்டு: ஒரு வித அச்சம் கலந்த உணர்வுடன் அவற்றைப் பார்த்து வந்தாள். குணசீலனும் எழுந்து சன்னலால் எட்டி அவற்றைப் பார்த்தான். கிபிர் அல்லது சூப்பர் சொனிக் பிளேன்கள் குண்டு போட்டா இப்பிடிக் குழிகள் தான்”
142

இப்படியான குழிகளுக்குள் சீருடை தரித்த சடலங்களைப் பார்த்ததாய், சண்டை ஓய்ந்த கையோடு, தத்தம் வீடுகளைப் பார்க்க என குறுக்கு வழியில், இங்கு வந்து திரும்பியவர்கள் சொன்ன சேதிகள் நினை விலாடின.
போன கிழமை கூட சாவகச்சேரி இந்துக் கல்லூரி அறை ஒன்றில் பாதி எரிந்த சில எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாய் பேப்பரில் செய்தி வந்ததையும் நினைத்துக் கொண்டாள். பதட்டமாயிருந்தது இப்படியே திரும்பிப் போய் விடவேண்டும் என்பது போல. இதிலேயே பஸ்ஸில் இருந்து இறங்கி, எதிர் புறத்திலிருந்து, யாழ்ப்பாண டவுன் செல்லும் பஸ் ஏதாவது வந்தால் அதிலேறி திரும்பிக் கொண்டு போய்விடலாம் போல,
சற்று சிதைந்த ஒரு பெரிய பதுங்கு குழி இப்பொழுது தெரிந்தது. பதட்டமெல்லாம் போய், அதைப் பார்ப்பதில் கவனம் சென்றது. பஸ்ஸிலிருந் தவர்கள், சன்னலால் குனிந்து அதைப் பார்த்தார்கள். மேல் பகுதி திறந்து கிடக்க, உள்ளே சீமேந்தினால் கட்டப்பட்ட இறங்குபடிகள் தெரிந்தன. இது புலிகள் கட்டிய பங்கர்’ என்று யாரோ சொன்னார்கள். குடியிருப்புப் பகுதிகள் போய், காய்ந்து வரண்டு, முள் பற்றியிருந்த வயல் நிலங்கள் நீட்டுக்கு வந்தன. நடுநடுவே தெரிந்த கிணறுகளின் அருகில் கூட புல் பச்சை இல்லை முள் பற்றைதான்.
முன்பெல்லாம் கிணற்றுகளுக்கருகே பம்ப நீர் குழாய் வழியாகப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருக்கும்; வாய்க்கால் வழி, ஒடி தறைகளை நிறைக்கும். அது தரும்
143

Page 74
செழிப்பில், புகையிலைக் கன்றுகள் பெரிய இலை விரித்து மதாளித்துச் சிரிக்கும்.
புகையிலையோ, வெங்காயமோ கிண்டி எடுத்த பின்னும், கிணற்றடிகளைச் சுற்றி ஈரப் பசை இருக்கும் அவற்றை செவலையும் கறுப்புமாய் மாடுகள் வந்து வந்து கூட்டமாய் மேயும். அவை புற்களை இழுக்கையில் வெளிப்படும் பூச்சிகளைப் பிடிக்க என மாடுகளைச் சுற்றி நிற்கும் வெள்ளைக் கொக்குகள் மாடுகளின் நகர்விற்கேற்ப தாமும் நகர்ந்து நகர்ந்து செல்லும். இவை எல்லாம் சேர்ந்து நல்ல வண்ணச் சித்திரமாய் மனதில் பதியும்.
இப்பொழுது அவை ஒன்றுமில்லை. வரம்பு அழித்த வெடித்த வயல் வெளிதான். எங்கும் தூரத்தே வயல்களுக்கு வரம்பு கட்டுவது போல நிற்கும் பனை வடலிகளும் இன்றில்லை. ஒலைத் தலை விரிந்த பனைகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகத் தெரிந்தன. கண்ணில் பட்ட மற்றவையாகவும் எரிந்து முறித்துபோய் பாதியாய் நின்றன.
வயல் வெளிகள் முடியும் தறுவாயில் மீள கட்டிடச் சிதைவுகள். போரின் வடுக்களைத் தாங்கியபடி கட்டிடத் தொகுதிகள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள் எல்லாமே சீரழிந்த நிலையில் கண்ணில்பட்டு, சாவகச்சேரி சந்தி வந்து விட்டதைச் சொல்லின.
சந்திக்கு அருகாமையிலுள்ள மேல் மாடி கொண்ட ஒரு கடைத் தொகுப்பினருகில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். அக்கட்டித்தின் பல பகுதிகளில், மேல் மாடிக் கூரை சிதைந்து கூரைக் கம்புகள் முறிந்து
144

தொங்கின. ஆழமான வெடிப்புகள் கட்டிடமெங்கும்.
அந்த கட்டிடத்தைக் கடக்கையில் மேல் மாடிக் கடை ஒன்று லேசாகக் சரிந்து, குனிந்து அவர்களையே பார்ப்பது போல் நின்றது. கடைக் கதவுகள் நிலைகள், முன்னிருந்த அலங்கார கைப்பிடிச்சுவர் எல்லாமே சரிந்தபடி பார்ப்பது போல: ஒரு வித அவசரத்துடன், அதைக் கடந்து தம் வீடு இருந்த ஒழுங்கையை நோக்கி நடந்தனர்.
‘மிதிவெடி’ அபாயம் பற்றி எச்சரிக்கும் பலகையைக் கடந்து ஒழுங்கைக்குள் நுழைந்தார்கள்.
ஒழுங்கை கூட தாறுமாறாகத் தான் கிடந்தது. இடப்புறத்திலிருந்து இரண்டாவது வீடு அவர்களு 60-lugil.
வீட்டு மதில் சுவர், முற்றாக நொறுங்கிக் கிடந்தது வீட்டின் முன் நிழல் பரப்பி நின்ற வேப்பமரத்தைக் காணவில்லை. யாரோ வெட்டி வீழ்த்தி எடுத்துப் போயிருந்தார்கள். வீடு மட்டும் தனியாக வெல வெலத்தது போல நின்றது.
சுற்றிலும் எதோ, செடி, கொடிகள், பூநாறிச் செடி, வீட்டின் படிகளின் மீதும் படர்ந்திருந்தது. அதை விலக்கிக் கொண்டு, படிகளில் தாவி வீட்டு விறாந்தையில் ஏறினாள், ஒரு வித ஆதுரம் ஏழ,
விறாந்தை முழுக்க தூசியும் செந்தையும் மூடிக் கிடந்தன. உள் கதவைத் தள்ளிக் கொண்டு நடு அறைக்குப் போனாள். அந்த நடு அறையை இவ்வளவு வெளிச்சமாக அவள் ஒருபோதும் கண்டதில்லை.
(UT-9 145

Page 75
முன்னாலும் பின்னாலும் விறாந்தைகள் இருக்க இடம் வலமாய் இரு அறைகளுக்கு நடுவிலிருக்கும் நடு அறை எப்பொழுதும் லேசான இருட்டோடு தானிருக்கும், இப்பொழுது நடுப்பகுதி மேற்கூரை சிதைந்து தொங்க, ஒடுகள் கொட்டுப்பட்டு, ஒரே வெளிச்சமாக இருந்தது.
அறைக்குள் கிடந்த மேசைகள் கதிரைகள் எல்லாம் உடைந்தோ உருமாறியோ சிதறிக் கிடந்தன. சிலவற்றைக் காணவில்லை. முக்கியமாக அந்த இரட்டை வாங்கு.
மழையும் காற்றும் சேர்ந்தடிக்கும் மாரி காலங் களில் ஐயா, பின் விறாந்தையை விட்டு, உள்ளே வந்து அந்த இரட்டை வாங்கில்தான் படுப்பார். படுத்திருந்து கொண்டு "அப்பு, சிவம்” 6T6 உச்சரிப்பது இப்பொழுதும் கேட்பது போலிருந்தது.
வலப்புற படுக்கை அறையில் தான் அவளும் சசியும், அம்மாவோடு படுப்பார்கள். பெரிய அகலமான கட்டில்; அதன் முக்கால் பகுதியை, தலையணைகளால் பிரித்து நீளவாக்காக அம்மாவும் சசியும் படுப்பார்கள் மீதி கால்பகுதியில் அவள் அகலவாக்காகப் படுப்பாள். அம்மா குள்ளம் தான். மூன்று பேருக்கும் தாராளமாய் இடமிருக்கும். அப்படியிருந்தும் சசி, அம்மாவோடு ஒட்டிக் கொண்டு தான் படுப்பாள். கடைக்குட்டி செல்லம்.
அம்மா கதை சொல்லுவாள்; பாட்டுப்படிப்பாள்; வில்லிபுத்தூரரின் ‘கர்னன் போர்’ ‘கிட்டினன் தூது’ பாட்டும் வியாக்கியானமுமாய் அவை வாரியாரின் கதாப் பிரசங்கம் மாதிரி இருக்கும். "அந்த ‘மாயக்
146

கிட்டினன் என்ன செய்தான் தெரியுமே?” அந்த ‘மாய என்ற சொல்லை உச்சரிக்கையில், குரலில் இருக்கும் செல்லம், உரிமை, குழைவு - வேறு ஒருவருக்கும் அப்பதத்தை அப்படி உச்சரிக்க வராது.
அம்மாவிற்கு வேறும் எவ்வளவோ தெரியும். சூடாமணி நிகண்டு, விவேக சிந்தாமணி, கந்தரலங்காரம், திருமுருகாற்றுப்படை
ந7ன் என் செயும் வினை த7னென் செயும்
6760607 A/742 62/22 கே7ள் என் செயும் கொடுங்கற்றெண்செயும்
- குமரேச7ரு” த7ளும் சதங்கையும்." சாவதற்கு முதல் நாள் கூட இதே நடு அறையில் அந்த இரட்டை வாங்கில் படுத்துக் கொண்டு "பின் கதவைத் திறந்து விடு. முற்றத்தில் பூத்திருக்கும் நந்தியா வட்டையைப் பார்க்க வேணும்" என்று சொன்ன JULIOL DIT.
படுக்கையறையின் பெரிய ஜன்னல் வழியாக நிலா வந்து விழும் நாட்களில், படுக்கையில் குடைந்து படுத் திருக்கும் அவர்களை எழுப்பி, தரையில் நிலவிலிருத்தி கவளம் கவளமாக சோறு உருட்டிப் போடும் அம்மா. நிலவொளியும் அம்மாவின் கைப்பட்ட சோறும். அமுதமாயிருக்கும்.
படுக்கை அறையின் கனத்த தேக்கு மரக்கதவுகளையே பார்த்து நின்றவளுக்கு ஏனோ, உள்ளே போக மனம் வரமாட்டேன் என்றது. அவளின் வளரிளமைப் பருவத்தோடு பின்னிப் பிணைந்திருந்த அந்த அறையை, இன்று எந்த நிலையில் பார்க்க
147

Page 76
வேண்டியிருக்குமோ என்ற தயக்கமாக இருக்கலாம். பிறகு, போகுமுன் பார்க்கலாமென நினைத்துக் கொண்டாள்.
பிறகு, இடப்புற அறைக்குப் போனாள். ‘மாமியின்தை அறை. அம்மாவின் கடைசித் தம்பி மணம் முடித்த கையோடு இளம் மனைவியோடு வந்து இந்த அறையில் தங்கியிருந்தாராம் சிலகாலம்; அன்றிலிருந்து அதன் பெயர் ‘மாமியின்தை அறை மாமா-மாமி மட்டுமல்ல, பிறகு அண்ணன்மார் மணம் முடிந்த பொழுதும், அவர்களுக்கு இதுவே ஆகி வந்த அறையாகி விட்டது. அவளுக்கும் குணசீலனுக்கும் கூட இதே அறைதான் முதலிரவு அறையாக இருந்தது. ஆனால், கடைக்குட்டி சசிக்கு மட்டும் - அவளுக்கு எத்தனை ஏமாற்றங்களை இந்த அறை தந்திருக்கும்?
இப்படியான 'ஆண்கள்’ எல்லாருமே நீல பத்மனாபனின் திரவி’ போன்றவர்கள் தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் கூட சே! என்றிருக்கும் தன் இயலாமையை மறைக்க, வந்து அகப்பட்டவள் மீது, முந்திக் கொண்டு அபாண்டம் பேசி.
அறை, முழுக்க தூலாம்படை தொங்கியது. கையால் விலக்கிக் கொண்டாள். கட்டில், பலகைகள் எதுவுமின்றி வெறும் சட்டமாகச் சாய்ந்து கிடந்தது. நிலைக் கண்ணாடி பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது. அந்த காலத்து பெல்ஜியக் கண்ணாடி அலமாரிக்குள் சில பழைய துணிகள் கிடந்தன.
அறையின் பக்கவாட்டுக் கதவால், பின் விறாந்தைக்கு வந்தாள்.
148

சுண்ணாம்பு அடிப்புகள் ஒன்றன் மேல் ஒன்றாய் இறுகி ஒரே தகடு போல் சுவரை மூடிக் கிடந்தவை, சுவரைத் தொட்டதும், பொல பொல என உதிர உள்ளேயிருந்த நிறம் மங்கி சுவர் தெரிந்தது. சில இடங்களில் சிதைந்த, சுவரிடையே செங்கற்கள் பிதுங்கின. மூலைச் சுவரோடு மேலிருந்து கீழாய், வெல்வெட் பச்சை படிந்து இருந்தது. மழைநீர் ஒழுகியிருக்க வேண்டும்.
முற்றத்தில் செடிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் படர்ந்திருந்தன. அம்மாவின் நந்தியாவட்டையும் சிறுக்க வைத்து, மேவிக் கொண்டு
முற்றத்துக்கு இறங்கும்படியில் குணசீலன் அமர்ந்திருந்தான். சீமேந்துப் படிகள் பாதுகாப்பானவை என அவன் நினைத்திருக்கக் கூடும்.
ஒட்டுக் கூரையோடு, ‘விடுக் விடுக்’ என்று தூக்கிய வால் ஒன்று துள்ளி ஓடி வந்தது அணில், அது முற்றத்து வாசல் தூணில் பாய்ந்து இறங்கி நின்று அவளைப் பார்த்தது. "இது எங்கட அணில்போல இருக்கு" அவள் குரலில் தொனித்த சந்தோஷம் குணசீலனையும் முற்றத்துக்கு இறங்கி வரச் செய்தது - "ஆனா எவ்வளவு காலமாச்சு. அது எங்களை மறந்திருக்கும்” என்றவன் கூட ஆர்வமாய் அணிலைப் பார்த்தான்.
குணசீலன் தான், ஒரு அந்திநேரம், வேம்பிலிருந்து கத்திக் கொண்டு கீழே இறங்கி வந்ததாகக் கூறி, அந்த அணில் குஞ்சைப் பிடித்து வந்தான். "தாயை தேடி கீழே இறங்கி வந்திருக்குது. தாயை பூனை என்னவும் பிடிச்சுதோ” என்றவன் "நல்ல வேளை இதைக்
149

Page 77
காகமொண்டும் காணேல்ல" என சந்தோஷப்பட்டான். அவனின் சுட்டு விரலுக்கும் பெருவிரலுக்குமிடையில் அந்த சின்னத் தலை பத்திரமாக இருந்தது. குவிந்திருந்த உள்ளங்கை நிறைய பூசு பூசு என்று அதன் வால்.
அப்பொழுது வீட்டிலிருந்த கிழட்டுப் பசு, இதற்கென்றே இருநேரமும் அரை டம்ளர் பால் தந்தது. அதை குக்கரில் சூடாக்கி கரண்டியில் எடுத்து ஒரு சிறு துணியைத் திரித்து போட்டால், குஞ்சு, அதை உறிஞ்சி உறிஞ்சு பால் குடித்தது, வளர்ந்தது. அவர்களின் தோளிலும் கைகளிலும் ஒடி விளையாடியது.
அது வளர வளர, அதன் கால் ரோமங்கள் உடம்பில் குத்துவதாகக் கூறி, முழங்கை சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு, அதற்கு பால் வைத்தான் குணசீலன்.
ஒரு முறை மிக மிக அண்மையில் கேட்ட வெடிச் சத்தம் அவர்களை வீட்டை விட்டுத் துரத்திய பொழுது எடுத்துச் சென்ற “கிட்’ பாக்கிற்குள், துணியோடு துணியாக அந்த அணில் குஞ்சும் அதன் பாலும் கரண்டியும்.
வேற்றுாரில் ஒடிப் போய் தங்கியிருந்த வீட்டிலுள்ள வர்கள் அந்த அணில் குஞ்சு வெளியே வந்து கரண்டியில் பால் குடித்ததை சுற்றி நின்று பார்த்து வியந்தது கூட நினைவிலுண்டு.
வளர்ந்தும், அதனை வெளியில் விட்டார்கள். முதலில் மற்ற அணில்களைக் கண்டு பயந்தது, பின் பழக்கம் பிடித்துவிட்டது. ஆனாலும் பசியெடுத்தால் எங்கு இருந்தாலுமொடி வரும். வந்து குணசீலனின்
150

கைலியிலோ அவளின் சட்டையிலோ தாவும் அவனும், அதற்கென்று சிலசோற்றுப் பருக்கைகளோ பழத்துண்டோ, எப்பொழுதும் வைத்து இருந்தான். வீட்டை விட்டு ஒடும் வரை.
அணில், அவர்களை நின்று பார்த்துவிட்டு தாவி ஓடி விட்டது "ஒண்டட்டையும் பிடிபடாமை, அது நல்லாயிருக்கோணும்’ என நினைத்து கொண்டு முற்றத்தை 'டா'னாப் படச் சுற்றியிருந்த குசினியையும் சாப்பாட்டறையையும் பார்க்கப் போனாள்.
குசினிக்குள், புகைப்போக்கி அப்படியே பொலபொலத்து சரிந்து கிடந்தது. சாப்பாட்டறைச் சுவரில் ஒரு பெரிய ஒட்டை இருந்தது. கீழே கற்களும் சீமேந்து துண்டுகளும் குவிந்து கிடந்தன.
செடிகொடிகள் பக்கம் போகாமல் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள். படுக்கையறையை இன்னும் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வர அதைப் பார்க்கப் போனாள்.
அறைக்கதவைத் திறந்ததுமே பல நினைவுகள் துரத்திப் பிடித்தபடி ஒடிவந்தன.
முழங்காலுக்கு கீழ் வரத்தக்கதாய் கவுன் போட்டுக் கொண்டு சிறுமியாய் அவள் ஓடிவந்து கட்டிலில் ஏறுகிறாள். முதுகிற்கு நேரே கட்டில் முதுகில் ஒரு தலையணை, குத்திட்டு முழங்கால் மடியில் ஒரு தலையணை போட்டு சாய்ந்து, பாரத கதைப் புத்தகத்தை மடியில் எடுத்து வைக்கிறாள். மத்தியானம் சாப்பிட அம்மா கூப்பிடும் வரை கதைக்குள் மூழ்கி,
“என்ரை மகள், பத்து வயதிலேயே பாரதக்கதை
151

Page 78
முழுக்க படிச்சிட்டாள்" என ஐயா யாரிடமோ பெருமை பேசுவார்.
அப்படி விழுந்து விழுந்து படித்த பாரதக் கதையில் இன்று ஏதாவது நினைவில் இருக்கிறதா என்ன? அப்புத்தகங்களில் இடையிடையே வந்த சிததிரங்கள் தான் இப்பொழுது நினைவில் வந்தன.
பக்கவாட்டில், நெற்றிக்கும் மூக்கிற்குமாய் ஒரு நேர்கோடு நடுவேயிருக்கும் கண்ணைக் கொண்டுதான் நெற்றி முடிந்து, மூக்கு துவங்குகின்றது எனக் கொள்ள (tpւգ-ԱպւD.
வளர்ந்த பிறகு "தஞ்சாவூர் பாணி சித்திரங்களைப் பற்றிப் படித்து அவற்றைப் படத்திலும் பார்த்த பொழுது "அட! இவற்றை எனக்கு முன்பே தெரியுமே” என்ற ஒரு வித சந்தோஷம் தான் வந்தது.
கட்டில், சில பலகைகளைப் பறிகொடுத்திருந்தது. அறையின் கூரையில் பல இடங்களில் வெள்ளைப் பொட்டுகள் தெரிந்தன. பக்கத்தறையில் விழுந்து வெடித்த ஷெல் துண்டுகள் இங்கும் சிதறியிருக்க வேண்டும்.
கூரைப் பனம் சிலாகைகளில் கறையான் பிடித்திருந்தது தெரிந்தது. சில சிலாகைகள் நைந்து தெரிந்தன.
என்றாலும் இந்த அறை அப்படி பெரிதாக சேதமடையவில்லை என எண்ணம் தோன்றிய பொழுது, தரையில் பதித்திருந்த மலையாள ஒடு ஒன்றிலிருந்த வெடிப்பு கண்ணில்பட்டது.
152

குத்து விளக்கு எரிந்த கிழக்கு மூலையில், இப்பொழுது கூட சிறிது எண்ணெய் கறுப்பு இருப்பதாகப்பட்டது. உலகப் போர் காலத்தில் இந்த மூலையில் உள்ள ஒடுகளைக் கிளம்பி, உள்ளே வெள்ளிப் பாத்திரங்களைப் பத்திரப்படுத்தி வைத்தார்களாம்.
பின் அவற்றை வெளியே எடுத்த பின் மீள பொருத்தப்பட்ட ஒடுகளில் சில சுற்றிப் பூசப்பட்ட சீமேந்தோடு சரியாக ஒட்டாமல் லேசாகக் கிளம்பிக் கொண்டிருப்பது மாதிரி தான் தென்பட்டன.
இப்பொழுது பார்க்கையில் அவை இன்னும் சற்றுக் கூடுதலாக தூக்கலாகத் தெரிவது போலப்பட்டது.
அவள் அவற்றின் அருகே போய், ஒருவித யோசனையுமின்றி அவ் ஒடுகளில் ஏறி கால் பதித்து அழுத்தினாள்.
உள்ளேயிருந்து பெரிய சத்தத்துடன் மிதி வெடி வெடித்தது.
153

Page 79
ཐལ།ན།༽
ما ۹۹۶۹ام | శ్న-- கொ ழும்பு மாநகர், தன் 疯 பகல் நேர வேலைக் களைப்பை
e ܘܓܠ
7 உதறிக் கொண்டிருந்த நேரம்.
ン〉。 அந்த உதறலில், காலி வீதியில் - 'வரிசை பிடித்து வாகனங்கள் - தருண்டு கொண்டிருந்தன. அந்த பூ2:ஓரிசையி லிருந்து தன் காரை பாக் பண்ண இடம் ہG;ئی اڈہ (نئی اللہ علم اس سلس۔ /பூரர்த்து, ஒரு ஒழுங்கைக்குள் ད༽། திருப்பி நிறுத்தினான் கேசவன். ༄གས་ 》f டாஷ் போர்டிலிருந்த பைலை S~Uண்டுத்துக் கொண்டு, பக்கத்துச் சீற்றிலிருந்த கீதாவை இருப்பாய் தானே?’ என்பது போலப் பார்த்து, கத்வைத் திறந்து கொண்டு கீழிறங்கினான்.
154
 

கீதாவுக்குச் சற்று கோபமாகவுமிருந்தது. 'குழந்தையா நான்?’ என்பது போல ஆனாலும், புதுக் கணவனின் கரிசனை சற்று சந்தோஷத்தையும் தர, பொய்கோபத்தைத் தான் அவளால் காட்ட முடிந்தது. கேசவன் சிரித்து விட்டு, காலி வீதியில் ஏறுவதற்கு நடந்தான்.
கீதா, தலையைப் பின்னால் திருப்பி, முழங்கையை மடித்து முதுகுச் சீற்றில் போட்டபடி அவன், காலி வீதியில் ஏறி மறையும் வரை பார்த்திருந்தாள்.
பக்கத்து ஒழுங்கையில் தான் இருக்கிறது அவனின் வழக்கறிஞரின் வீடு. யாழ்ப்பாணத்தில் சமாதானச் சூழ்நிலை ஏற்பட்ட பின் எல்லோருக்கும் அங்குள்ள தத்தம் காணிகளில் அக்கறை உண்டாகிவிட்டது. கேசவனும் அங்கு, வில்லங்கத்தில் சிக்கியிருக்கும் தன் காணியை மீட்டெடுக்க முயற்சி எடுக்கிறான் இப்பொழுது,
இந்த ஒழுங்கை, காலி வீதியைப் பார்த்து நிற்கும் இரு உயர்ந்த கட்டிடத் தொகுப்புகளின் நடுவே இருந்தது. அந்த கட்டிடங்களில் ஒரு பக்க உயரங்களே இரு பக்கங்களிலும் ஒழுங்கையின் முகப்பாகத் தெரிந்தன. இடைப்பட்ட பகுதியில் நகரும் திரைப் படமாய் காலிவீதி தெரிந்தது.
வீதியில், வாகனங்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு வருவது போல தோன்றி, தோன்றி மறைவதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நடை பாதைகளிலும் யார் யாரோ நடந்து
155

Page 80
போனார்கள். அப்பொழுதுதான் பஸ்ஸிருந்து இறங்கிய வர்களாக தோல் பை மாட்டிய தோளுடன், களைத்துப் போய், இரு பெண்கள் போனார்கள், சேலை உடுத்தி, தமிழ்ப் பெண்களாக இருக்கலாம்.
ஒரு சிறிய சத்தம் கேட்டு தலையைத் திரும்பியவளுக்கு ‘திக்’ என்றாகி விட்டது. கரடு முரடான தாடி மீசைகளிடையே அந்த வெறித்த விழிகள் தான் கண்ணில் பெரிதாக அச்சுறுத்தின.
ஐயோ! யாரிவன்? மீள ஒருமுறை ஏறிட்டுப் பார்க்கவே பயமாக இருந்தது. ராணுவத்தில் இருந்து, தப்பியோடும் வீரர்கள்தான் முதலில் நினைவுக்கு வந்தனர். வேறு வேடத்தில் கொள்ளையடித்து பிழைத்துக் கொண்டு. இவனும், அப்படியானவர்களில் ஒருவனோ? அப்படி யென்றால் இவனிடம் துவக்கும் இருக்கும். குறைந்தது பிஸ்டலாவது - எங்காவது மறைத்து வைத்திருப்பான்.
மேலெழும் பயம், அவளை அசைவற்றவளாக்கி, இவனை பார்க்கவே விடாமலடித்தது. நேரே பார்த்த வாறிருந்தாள். யாராவது உதவிக்கு தென்படுகிறார்களா என்று. முன்னாலும் ஒரு கார் ‘பாக்” பண்ணுப்பட்டு நின்றது. ஆனால் காருக்குள் யாருமில்லை. அதன் பின்புறக் கண்ணாடியே ‘ஓ’ வென விரிந்து தெரிந்தது.
கேசவனை இப்படி ஒரு ஒழுங்கைக்குள் கொண்டு வந்து, காரை நிறுத்த யார் சொன்னார்கள்? விதி முறைகளைக் கடைப்பிடிக்கிறாராம். இப்பொழு தெல்லாம், இந்த காலி வீதி நடைபாதைகளிலேயே
156

எத்தனை கார்கள் ‘பாக்” பண்ணுப்பட்டு நிற்கின்றன? யார் தட்டிக் கேட்கிறார்கள்? அப்படி நடைபாதையில் ஏற்றி, காரை நிறுத்தி விட்டு கேசவனும் போயிருக்கலாம். அங்குள்ள சன நடமாட்டத்திடையே இப்படி ஒருவன், காரோடு ஒட்டி வந்து நிற்கத் துணிவானா என்ன?
இருப்புக் கொள்ளாப் பதட்டத்துடன் இறுகிப் போய் அமர்ந்திருப்பது என்பது லேசானதாகவில்லை. அப்பொழுது தான் எதிரே, ஒழுங்கை வழியாக, காலி வீதியை நோக்கி வரும் சிலர், கண்ணில் விழுந்தனர். ஆறுதலும் தெம்பும் வந்து சேர்ந்தன. ஆனாலவர்களோ, காருக்குள் அலமலாந்தமர்ந்திருக்கும் அவளையோ, அவளை பயமுறுத்திக் கொண்டு நிற்கும் இவனையோ, வித்தியாசமாகப் பார்க்கவே இல்லை. சாதாரணமாக நடந்து கடந்து சென்றனர்.
அதே நேரம் அருகில் ஏதோ குலுங்கும் சத்தம் கேட்டது. இவன் தான் கையிலிருந்ததைக் குலுக்கினான். அவள் கீழ் ஒரக் கண்ணால் பார்த்தாள். தகரக் குவளை. ஓ! பிச்சைக்காரன். இவன் வெறும் பிச்சைக்காரன் தான். ஆறுதல் வந்த பின்பும் கூட இவனை நேராகப் பார்க்க தயக்கமாக இருந்தது. பார்த்தால் காசு போட்டால் தான் போவேன் என்பது மாதிரி நின்றே விடுவான். அவளிடம் காசு இல்லை. கணவனோடு வெளிக்கிளம்பும் பொழுது, தனக்கெனத் தனியாக காசு எடுத்து வரும் வழக்கமில்லை.
"இவளிடம் காசு இல்லை, இருந்திருந்தால் போட்டிருப்பாள்" என்று தெரிந்து பெருந்தன்மையோடு
157

Page 81
வில்கிப் போகானா இவன், என்றிருந்தது. அதே நேரம் காசு வராது எனத் தெரிந்தும் இப்படி விடாப்பிடியாக நிற்கிறானே என எரிச்சலும் வந்தது.
இப்படி நினைக்கையிலேயே, இவன் மெதுவாகத் திரும்புவது ஒரக்கண்ணில் தெரிந்தது. அப்பாடா! போய் விடப்போகிறான் ஒருபடியாக
கைத் தடியைத் தட்டி தட்டி இவன் நடப்பதை இவனின் முதுகுப் புறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந் தவளுக்கு ஏதோ நெருடியது. ஒரே ஒரு முறைதான், அவள் பார்த்த அந்த வெறித்த, நிலைகுத்திய விழிகளுக் கான காரணம் பட்டென நெஞ்சிலடித்தது.
கைத்தடியிலகப்பட்ட காகிதக்குப்பையை எகிறி போய் விழுந்ததை மீளவும் கைத்தடியால் தேடி தேடி எகிறி விட்டுக் கொண்டு இவன் போனான். தனக்கு காசு கிடைக்காத ஏமாற்றத்தை இந்த காகிதக் குப்பையில் காட்டுகிறானோ என்று இருந்தது. இவனின் ஏமாற்றத் துக்கு அவள் தான் காரணமோ என்றும் நினைத்துக் கொண்டாள். அவள் அசையாமல் ஒரு சத்தமும் காட்டால் காருக்குளிருந்தாளே பின் அவளை எப்படி இவனுக்குத் தெரிந்திருக்கும்? காருக்குள் யாருமில்லை என்று தான் நினைத்திருப்பான். ஏமாற்றமடைந்திருக்க LonTLLITøöIT.
இவன், காகிதக் குப்பையை எங்கோ ஒர் மூலையில் ஒதுக்கி விட்டு திரும்பி, பக்கத்து கட்டிடச் சுவரோடு இணைந்திருந்த ஒரு சிறு திண்ணையை நெருங்கினான். அதுதான் இவனின் வழக்கமான இடம்போலும்.
158

திண்ணையில் கால் நீட்டிக் கொண்டிருந்து விட்டான். இப்பொழுது இவன் முகத்தை ஒரு வித பயமோ சங்கடமோ இன்றிப் பார்க்க முடிந்தது.
தாடி, மீசைகளை எடுத்து விட்டால், இவன் முகம் இப்படிக் கரடுமுரடாக இருக்காதெனத் தோன்றியது. கண்கள் தான் வெளிறி நிலை குத்தி பார்க்க ஒரு மாதிரியாக
இவன், தகரக் குவளையிலிருந்த காசுகளைத் தரையில் கொட்டி எண்ணத் தலைப்பட்டான். எவ்வாறு எண்ணுவான்? ஐம்பது சத குற்றிக்கும் ஐந்து ரூபாய் குற்றிக்கும் வித்தியாசம் காண்பானா? இப்பொழுது பத்து ரூபாய் குற்றி கூட வந்திருக்கிறதே யார் இவனுக்கு பத்து ரூபாயை போடப் போகிறார்கள்?
இவன், ஒரு காசை எடுத்து, தரையில் தட்டிப் பார்த்தான். இப்படித் தான் அசோகமித்திரனின் கதை ஒன்றில் ரெலிபோன் பூத் ஒன்றிற்குப் பொறுப்பாக உள்ள கண் தெரியாத ஆள் வாடிக்கையாளன் கொடுத்த காசை, மேசையில் தட்டிப் பார்த்து வித்தியாசத்தை கண்டு அறிகிறான். இவனுக்கு அந்த வித்தை தெரிந்து இருக்கிறது போலிருக்கிறது.
இவனுக்கும், அப்படி ஏதாவதொரு வேலையை யாராவது கொடுத்தால் நன்றாயிருக்கும். LTrf கொடுக்கப் போகிறார்கள்? ஊனத்தை பொருட் படுத்தாது இவனும் உழைத்துப் பிழைக்க யார் வழி செய்து கொடுக்கப் போகிறார்கள்? மண்டையில் அடித்தது போல “நீ குருடன் பிச்சை எடுக்கத் தான்
159

Page 82
லாயக்கு’ என்று தகரக் குவளையைக் கையில் கொடுத்து விடுகிறார்கள்.
வவுனியாவில் பெற்றோரோடு இருந்தபொழுது கொழும்பில் மாமா வீட்டில் விடுமுறையைக் கழிக்க என ரயிலேறினால் தவறாமல் அந்த தீனக் குரல் ஒரு வித ராகத்தோடு காதில் விழும்.
'ரெண்டு கண்ணும் தெரியாத கறுமம், கறுமம், guint
ரெண்டு கண்ணும் தெரியாத கறுமம், கறுமம் அம்மா’
ஒரு சிறுவனின் தோளில் கை பதித்து, ஒவ்வொரு பெட்டி, பெட்டியாக வருவான் அவன். அழுக்கேறிய உடைகளோடு. பரிதாபமாக இருக்கும்.
இவன், அப்படி இல்லை. கொழும்புக்கு வந்து தனக்கென ஒரு இடத்தையும் தேடிக் கொண்டிருக் கிறான். கார்கள் நிற்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து, நாசூக்காய், வாய் திறவாமல் காசு கேட்கிறான். கொஞ்சம் சுத்தமானவனாகவும் இருப்பான் போலிருந்தது. இவன் போட்டிருந்த அரைக்கை பணியன், பழுப்பேறி, முதுகுப்புறத்தில் சற்றே கிழிந்திருந்தாலும் அழுக்காயில்லை. கைலி ón-L- நைந்து தான் போயிருந்ததே ஒழிய, அழுக்கானதெனச் சொல்ல முடியாது. தன் பகுதிக்குள் வந்துவிட்ட காகிதக் குப்பையைக் கூட எகிறி எகிறி மூலையில் ஒதுக்கி விட்டு வந்தானே!
இவன், இப்பொழுது காசுகளை மீள தன்
160

தகரக்குவளைக்குள் எடுத்துப் போட்டுக் கொண்டி ருந்தான். இங்கிருந்து பார்க்கையில் காசுகள் அதிக மென்று சொல்ல முடியவில்லை. ஒரு பத்து, இருபது ரூபாய் தேறக்கூடும். இதை வைத்துக் கொண்டு இன்றைய பொழுதை இவன் எவ்வாறு சமாளிப்பான்? நகரத்தின் மூலையில் எங்காவதொரு இடத்தில் இவனுக் கென்று ஒரு குடிசையுமிருக்கக்கூடும். இவன் வரவை, இவன் கொண்டு வருவதை எதிர்பார்த்து யாராவது இருக்கவும் கூடும்.
கேசவன், வந்து தன் பக்க கார் கதவைத் திறந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, இவன் அவசரமாய் எழுந்து கொண்டது தெரிந்தது. சத்தம் வந்த திசையை இலக்காகக் கொண்டு இவன் முன்னேறி வருவதும் தெரிந்தது. காரை ஸ்ராட் பண்ணப் போன கேசவன் சட்டைப் பைக்குள், கைவிட்டு ஒரு நாணயத்தை எடுத்து, சன்னல் வழியாக இவனின் தகரக் குவளைக்குள் போட்டான். மஞ்சள் நாணயம். முழு ஐந்து ரூபாய் குற்றி
கீதாவின் மனத்தில் ஒரு வித அமைதி படர்ந்தது. இவ்வளவு நேரமும் கவிந்து கொண்டு, சங்கடத்தைத் தந்து கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து மீண்டு வந்து விட்டதான நிம்மதி அது.
un-10 161

Page 83
கினடாவில் இருந்து பவள மள்ளி தன் கணவரோடு மட்ராஸ்"க்கு வந்து. தன் வீட்டில் தங்கி நிற்பதாக சுமலமக்கா போன் பண்ணியிருந்தாள். கீழ் வீட்டுப் போனில் அவளோடு கதைத்து விட்டு மேலே படியேறு கையிலேயே அன்று பின்னேரமே போய் பவளமன்ரியைப் பார்த்து விட வேண்டுமென்ற ஆவல் கிளர்ந்தது.
அப்படி ஒன்றும் பவளமன்ரி இவளுக்கு கிட்ட்த்து உறவு இல்லைத்தான். ஆனாலும் இவளின் இளையன்மி யின் தமக்கை அவள். இளையய்யாவை முடித்திருந்த,
162
 

இவளின் இளையன்ரி - இவள் காலத்தில், சித்தி என அழைக்கும் தென்னிந்திய நாகரிகம் பரவி இருக்கவில்லை. பள்ளிக்குச் செல்ல எனக் கையைப் பிடித்திருந்த தன் ஒரே மகளுடன் றோட் ஒரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றைக் கடக்கையில் துண்டு துண்டாகச் சிதறிப் போனாள். யாருக்கோ என வைக்கப்பட்ட அந்தக் கார்க்குண்டு இளையன்ரி போன்ற அன்பான ஜீவன்களை, பள்ளி செல்லும் பச்சிளம் பிஞ்சுகளைத் தான் குதறிப் போட்டது.
அதன் பின் இளையன்ரியின் ஆசையில் இவள் பவளமன்ரியோடு நெருங்கிப் பழக விரும்பியதுமுண்டு பவளமன்ரியிடமும் இளையன்ரியின் சாயல் இருந்தது. ஆதரவைச் சிந்தும் அந்த இதம். அப்படியே என்றில்லா விட்டாலும், பவளமன்ரியின் கண்களிலும் இருப்பதாகப் பட்டது. ஆனால், பவளமன்ரியோடு நெருங்கிப்பழக அதிக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்குள் இளை யன்ரியைச் சேர்ந்த எல்லோருமே குடும்பம் குடும்பமாக கனடாவாசிகளாகி விட்டனர்.
பவளமன்ரியைப் பார்க்க அன்று பின்னேரமே கோடம்பாக்கத்திற்கு போனாள். மாடிப்படியேறி, கமலக்காவின் பிளாட்டின் அழைப்பு மணியை அழுத்திய பொழுது கமலக்காவே வந்து கதவைத் திறந்தாள்.
அவளின் பின்னால் ஹோலில் இருந்தவர்களின் முகங்கள் தெரிந்தன. பவளமன்ரியோடு வேறும் சிலர். எல்லோரும் கதவோடு யாரென அறிய இவளையே பார்த்தனர். அவர்களின் கண்கள் அப்பொழுது தான்
163

Page 84
ரீவி திரையிலிருந்து விலகி இருக்கவேண்டும். வடக்குத் தெரு பாக்கியமும் மகளும் திரவியமும் அவள் கூட்டாளியும். வேறுமிருவர் எல்லோரும் இப்பொழுது சென்னைவாசிகள். அன்ரியை பார்க்க வந்திருப்பவர்கள். அனி எழுந்து கைகளை நீட்டியபடி முன்னே வந்தாள், இருவரும் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிக் கொண்டனர்.
ஏழு வருசமிருக்குமன்ரி உங்களைப் பார்த்து இப்பவும் அப்ப பாத்தது மாதிரியே இருக்கிறீங்கள். இப்ப நல்லா வெளுத்து இன்னும் வடிவா” என சந்தோசப் பட்டுக் கொண்டாள் இவள்.
ஹோலில் ஒரமாக மடக்கு நாற்காலியில் சாயந்திருந்த அங்கிளருகே போயும் சுகம் விசாரித்தாள். ‘எப்பிடி இருக்கிறீங்கள் அங்கிள் ? கனடா எல்லாம் பிடிச்சுக்கொண்டுதோ?”
ஸ்ருலில் நீட்டியிருந்த காலைத் தடவியபடி "அதுதான் பாக்கிறியேம்மா கால் எல்லாம் வீங்கி. பிரயாணம் ஒத்துக் கொள்ளுதில்லை" என்றார் அவர்.
அவரை இவ்வளவு தூரத்திற்கு அன்ரி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறாளே என்று தோன்றியது.
அன்ரி, "இரு இரு" என செற்றியில் தன் பக்கத்தில் பிடித்து இருத்திக் கொண்டாள்.
ரீவியில் ஏதோ வீடியோ ரேப் ஒடிக்கொண்டு இருந்தது. ஒரு சிறு பெண்ணை தலையில் முக்காடு போட்டு அழைத்து வந்து கொண்டிருந்தார்கள்.
“என்ரை மூத்த பேத்தியின்ரை சாமத்தியச் சடங்கு”
164

என்றாள் அன்ரி குரலில் சிறிது பெருமிதம் தெரிந்தது.
"ஓ கமலமக்கா எனக்கும் சொன்னவதான். உடனே தபால் போட நினைச்சனான்; பிறகு நேரம் கிடைக் கேல்லை. பெரிசாகி நாலைஞ்சு மாதமிருக்கும் என்ன அன்ரி?” என சமாளித்துப் பேசினாள் இவள்.
“ஓம் போன கார்த்திகையிலை பெரிசானவ. ஆனா, போன மாதம் தான் சபை வச்சனாங்கள்” என்ற அன்ரி அதற்கு விளக்கமுமளித்தாள்.
"மார்கழியிலை நல்ல நாள் இல்லை எண்டு விட்டுட்டம். பிறகு தையிலை நாங்க எல்லோரும் லண்டனுக்குப் போயிட்டம். தம்பியின்ரை மகன்ரை கலியாணத்துக்கு. பிறகு வந்து மாசி மாதமும் கூடாதெண்டுண்டு பங்குனி கடைசியிலை தான் வச்சம்."
இவள் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தாள். “காசு இருக்கிறவை விரும்பின மாதிரி. எப்ப எண்டாலும் நடத்தலாம். போட்டா போட்டிக்கும் நடத்தலாம். எல்லாத்துக்கும் காசு இருக்கு செய்வினம்” என தன் சிநேகிதி புனிதம் ஒரு நாள் சொன்னது நினைவுக்கு வந்தது. ஊரில் திருமணத்தைப் பதிந்து விட்டு விட்டு வந்த பெண்ணை கனடாவிற்கழைத்து நாலு வருஷம் அவளோடு வாழ்ந்த பின், ஆடம்பரமாய் திருமணச் சடங்குகளை ஒன்றுவிடாமல் நடாத்திய ஒரு ஆளைப் பற்றி சொன்ன பொழுது தான் புனிதம் இதைச் சொன்னவள்.
இன்னும் பேசாமலிருந்தால் அன்ரி என்னவும் நினைத்துக் கொள்வாளோ என்று தோன்றவே "அப்ப,
165

Page 85
வடிவா ஆறுதலாச் செய்திருக்கிறீங்கள்" என்றாள்.
"ஒமோம் எல்லாம் வடிவா முறைப்படி செய்தது. மூத்த பேத்தி எண்டு நான் விடேல்லை. எல்லோருக்கும் சொல்லி நல்ல சிறப்பா நடத்தினது"
கமரா நீர் நிறைந்த பெரிய பாத்றும் ரப் ஒன்றைக் காட்டியது. அருகே ஸ்ரூல் போட்டு பெண்ணை இருத்தி விட்டிருந்தார்கள்.
குனிந்திருந்த பெண்ணின் உச்சியில் ஏதேதோ அப்பித் தெரிந்தது. பலர் மருத்து நீர் தப்பியிருக்க வேண்டும்.
முதலில் மாமிக்காரி, முதல் சட்டி நீரை மொண்டு வார்க்க தண்ணிர் வார்ப்பு தொடங்கியது.
தண்ணிரை அள்ளி, பெண்ணின் தலையில் ஊற்றிவிட்டுத் திரும்பும் பெண்கள் திரையில் முழுமையாக விழுந்து மறைந்தனர்.
வீடியோவைப் பார்த்துக் கொண்டிருப்பவர் களிடையே ஆர்வம் மிகுந்திருந்தது.
"இது மார்க்கண்டு பெண் சாதியல்லே. என்ன மாதிரி கொழுத்திட்டா, ஊரிலை இருக்கக்கை பஞ்சை மாதிரி திரிஞ்சவ” என்று பாக்கியம் வியந்தாள்.
பின்னாலை வாற அவவின்றை மகளைப் பாருங்களேம்மா. என்னோடை படிச்சவ இப்ப என்ன ஸ்ரெயில் எண்டு” இது அவளின் மகள்.
இப்படி ஒவ்வொருவரும் முழுதாகத் திரையில் தெரியும் பொழுது அவர்களைப் பற்றிய, அதிசயிப்புகள் விமர்சனங்கள் நடந்து கொண்டிருந்தன.
166

உருவங்கள் மட்டுமல்ல. உடுத்தியிருந்த சேலைகள். அணிந்திருந்த நகைகள் இவைகள் கூட வியப்புகளுக் குள்ளாகின.
*குமுதினி உடுத்தியிருக்கிறது ‘பிரியங்கா’ என்ன?” "ஒம் போலை கிடக்கு இஞ்சை பாருங்கோ, இந்தியாவிலை இருக்கிற எங்களுக்கே வர்ற புதுபுதுச் சீலைகளைப் பற்றித் தெரியாது ஆனா, கனடாவிலை இருக்கிறவைக்கு உடனே தெரிஞ்சிடும் உடனையே எடுப்பிச்சு உடுத்தியும் போடுவினம்"
தன் நெருங்கிய உறவினர்களைப் பற்றி விமர்சனம் வராததினால் திருப்தி உற்றவள் போல் தெரிந்த பவளமன்ரி புதியவர்கள் திரையில் தெரியும் பொழுது அவர்களைப் பற்றி, கனடாவில் தான் தேடிய புதிய உறவுகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாள் "இது என்ரை சம்பந்தி. மூத்த மகன்ரை மாமியார் பின்னாலை அவவின்ரை மூத்த மகள். இரண்டாவது மகளைத் தான் என்ர மகன் முடிச்சிருக்கிறார். சங்கானைச் சனம். நல்ல மாதிரியான ஆக்கள்.
ஒருவாறு தண்ணிர் வார்ப்பு முடிந்து பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள். கமரா வந்திருப்போரை ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டிருந்தது.
கையில் குளிர்பான போத்தல்களோடு பேசிச் சிரிக்கும் பெண்கள். உதட்டுச் சாயம் கலையாமல் உதடு ஒற்றும் நாகுக்கு.
எதிலும் பளபளப்பு தெரிந்தது.
167

Page 86
ஏதோ இசைக்கு கைகளை நீட்டி மடித்து உடம்பை குலுக்கிப் போடும் சில சுடிதார்கள்.
"இது ரஞ்சிதத்தின் மகளோ ?”
"ஒமோம்! மூத்த மகள். அவவிற்கு மூண்டும் பெட்டையள் தானே"
அலங்காரம் முடிந்து விட்டது போலும் நகப்பூச்சுப் பூசிய கால் விரல்களிலிருந்து கமரா அங்குலம் அங்குலமாக மேலேறியது. சேலையில் சாண் அகல வெள்ளிக் கரைச் சரிகையில் முன்புறமாய் விழுந்த மடிப்புகள், அவை மேலெழும் பொழுது பக்கவாட்டு களில் சுருக்கங்கள் விழாத நேர்த்தி. ஒட்டியாண முகப்பு மார்பில் தெரியும் சங்கிலிகள். பதக்கங்கள், கழுத்தை ஒட்டிய அகன்ற அட்டியல், பக்கவாட்டில் தொங்கும் கைகள். கை நிறையக் காப்புகள். விரல் மோதிரங்கள், மோதிரங்களை இணைக்கும் சங்கிலி.
கடைசியாக பெண்ணின் முகம் திரையில் விழுந்தது. சின்னப் பெண்தான். 'விடேன்’ ‘ஸ்கிப்பிங்’ செய்யப் போக வேண்டும் என்பது போன்ற பார்வை. தர்ம சங்கடமான புன்சிரிப்பு. பூச்செண்டுடன் அவளைப் பல்வேறு விதமான போஸ்களில் காட்டினார்கள். இடப்புறம், வலப்புறம், பின்புறம் என்று திரும்ப திரும்ப கமரா காட்டியது.
பின்புறமாக ஒழுங்காக மடித்துப் பின் பண்ணப்பட்டு தோளிலிருந்து சரிய விடப்பட்ட முந்தானையைக் கமரா காட்டிக் கொண்டிருந்த பொழுது அன்ரி கேட்டாள் ‘எப்பிடிக் கூறை?’
168

‘நல்ல வடிவாயிருக்கு அன்ரி எங்கே கனடாவிலையே எடுத்தனிங்கள்?
‘அதையேன் கேட்கிறாய்? இதைவாங்க என்ரை மூத்த மகன் அவன் தானை தாய்மாமன் - வாங்கிக் குடுக்க வேணும் எண்டு பட்டபாடு, அவனும் பெண்சாதியும் இந்த வெளிர் மஞ்சள் நிறத்தைத்தேடி ஏறி இறங்காத கடைகள் இல்லை கனடாவிலை. கடைசியிலை தெரிஞ்ச ஒரு இந்தியாக் கடைக் காறfட்டை சொல்லி வைச்சுத்தான், இந்தச் சீலையை வாங்கினது. அவள் அப்ப பட்ட கஷ்டத்தைக் கண்டுட்டு நான் அப்பவே நினைச்சுப் போட்டன். பாமதியின்றை கலியாணத்துக்கு இந்தியாவுக்குப் போய் தான் பட்டு எடுக்கிறதெண்டு.”
"ஓ அப்ப பாமதிக்கும் கலியாணம் ஒழுங்காப் போச்சு எண்டு. சொல்லுங்கோ" இவள் உற்சாகம் காட்டினாள், பாமதி அன்ரியின் கடைசி மகள்.
அன்ரி முகம்நிறையச் சிரித்தாள். "ஒம்! மாப்பிள்ளையும் கனடாவிலைதான் என்ஜினியர். அவை யார் தெரியுமே. பாலத்தடியிலே கடை வைச்சிருந்தார் தம்பிராசா” அவர்ரை பெண் சாதியின்ரை தங்கையின்ரை மகள்."
"தாய் தகப்பனும் கனடாவிலதான், ஆவணியிலை செய்யப்போறம், இன்னும் நாளெடுக்கெல்லை”
"அப்ப இப்ப வந்தோடை எல்லாப் பட்டையும் எடுத்துக் கொண்டு போகலாம்."
பெண்ணை நிறைகுடத்தின் முன் நிறுத்தி தாய்
169

Page 87
மாமன் தேங்காயை உடைத்துக் கொண்டிருந்தார்.
பிள்ளையாருக்குத் தீபம் காட்டி பெண்ணை மணவறையில் கொண்டு வந்து இருத்தி விட்டார்கள்.
முதலில், ‘கழிப்புக்கள்’ லண்டன் போன்ற பெரு நகரங்களுக்குப் போய் வந்த பெண்ணுக்கு எத்தனை பேர் நாவூறு கண்ணுறு போட்டிருப்பார்களோ வேண்டாமா பின்னே?
"அண்டு காலமை ஐயரைக் கூப்பிட்டு துடக்கு கழிச்சனாங்கள்” என்றாள் அன்ரி எங்கே துடக்கு கழிக்காமல் இதெல்லாம் செய்கிறார்களோ என இவள் நினைத்துவிடக் கூடாதென அவசரமாகச் சொல்லப் பட்டது போலிருந்தது. "அதெல்லாம் ரேப்பிலை முன்னுக்கு ஓடிட்டுத்து, நீ பார்க்ககேல்லை என்ன?”
"அதுக்கென்ன அன்ரி நாளைக்கு வந்து முழுக்க போட்டுப் பார்க்கிறன்."
ஒரு மூதாட்டி மூடிய சிறு உண்டியல் பெட்டி போன்ற ஒன்றைக் குலுக்கி குலுக்கி பெண்ணைச் சுற்றிக் காட்டி வந்தாள். கையில் ஏதோ இலையுமிருந்தது, வேப்பிலையாக இராது.
சட்டென்று சுப்ரபாரதி மணியன் நினைவுக்கு வந்தார். அவரும் இப்படி ஒரு வீடியோ ரேப்பை பார்த்து இருப்பாரென்ற எண்ணம் ஓடி வந்த பொழுது வெட்கமாக இருந்தது. "பெண்களின் பூப்பு போன்ற விடயங்களை விலாவாரியாக படமெடுத்து பகட்டு செய்வது அருவருப்பை தருகிறது." பாவம் இலங்கைத் தமிழர்களில் பழக்கவழக்கங்களை அரிய ஆர்வம்
170

காட்டிய ஒருவரை இப்படி வீடியோ ரேப் முன் இருத்தியிருக்கிறார்கள் என்று நினைக்க கொஞ்சம் சிரிப்பு வந்தது.
"ஆலாத்திகள் எடுக்கத் தொடங்கி விட்டிருந் தார்கள். முதலில் மாமிமார் நிறைகுடத்தால் "ஆலாத்தி” எடுத்தார்கள். பின் இவ்விரண்டு பெண்களாக முன்னால் வந்தார்கள். பெண்ணின் முன்னால் பரவியிருந்த தின்பண்டங்கள், பழங்கள் நிறைந்த தட்டுக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றால் ஆலாத்தினார்கள். ஆலாத்தி முறையும் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. தட்டை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கமென்ற வலமிடமாக மூன்று மூறை இழுத்துவிட்டு தட்டை மேலே தூக்கி பெண்ணின் தலைக்கு மேலாக பின்னால் நின்றவர்களிடம் கொடுத்தனர்.
பெண்ணை மீள உள்ளே அழைத்துச் செல்ல அன்ரி கூறினாள். "இரண்டாம் கூறை உடுத்தப் போகினம், இது மருமகன்னர தங்கையும் புருஷனும் வாங்கிக் குடுத்தது. அவை வாங்கிக் குடுத்ததையும் உடுத்தி காட்டத்தானே வேணும்."
வந்திருப்போரை ஏற்கெனவே காட்டி முடித்துவிட்டதினாலோ என்னவோ கமரா மேலே தொங்கும் சரவிளக்குகளையும் பலூன்களையும் காட்டத் துவங்கியது.
இரண்டாவது பட்டும் அழகாகத்தானிருந்தது. சந்தனக் கவரில் வெள்ளிச் சரிகை போட்ட மணிப்புரி.
171

Page 88
இந்தப் பட்டை எடுக்க, அந்த தங்கையும் புருஷனும் என்ன பாடு பட்டார்களோ, எத்தனை கடைகள் ஏறி இறங்கினார்களோ தெரியவில்லை அன்ரி சொல்லவில்லை.
புதுச் சேலையில் மீள பெண்ணை அங்குலம் அங்குலமாகக் காட்டிவிட்டு மணவறையில் மீள அவளை நிறுத்தினார்கள்.
அன்ரியும் அங்கிளும் தான் முதலில் "கைவிசேஷம்" கொடுத்தார்கள். அன்ரி பேத்தியைக் கட்டிப் பிடித்து மூத்தமும் கொடுத்தாள்.
“ரெண்டு பேரும் ஒவ்வொரு பவுண் குடுத்தனாங்கள்."
பெற்றவர்கள் மற்றவர்கள் எல்லோரும் ‘கைவிசேஷம் கொடுத்தார்கள். பலர் முத்தமும் கொடுத்தார்கள்.
இடையிடையே கமரா சாப்பாட்டு மேசையில் தட்டுகளில் நிறைந்திருந்த உணவுப் பண்டங்களைக் கலர் கலராக காட்டிக் கொண்டிருந்தது.
பெண்ணிடம் காசு குடுத்துவிட்டு வந்தவர்கள் சாப்பாட்டு மேசைக்குப் போனாகள். தட்டுக்களில் எடுத்து வந்து சாப்பிட்டார்கள்.
மற்றவர்களும் விடைபெற்றுக் கொண்டு போன பின்பு அன்ரி இவளோடு இருந்து கதைத்துக் கொண்டிருந்தாள்.
கனடாவிலிருக்கும் நம்மவர்கள் வேறு வெளிநாடு களுக்குப் புலம் பெயர்ந்து விட்ட உறவினர்கள்
172

எல்லோரையும் பற்றி
இவள் அன்ரியின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவை இளையன்ரியின் கண்களைப் போன்றனவா எனச் சந்தேகம் தோன்றியிருந்தது. அவை ¢”፴ዐ! வித்தியாசமானவையாகப்பட்டன. வயது ஆகிவிட்டதினாலோ என்னவோ கண்கள் சற்று ஒடுங்கியும் தெரிந்தன. நிச்சயமாக அவை அன்பையும் ஆதரவையும் சிந்தும் இளையன்ரியின் கண்களைப் போல இல்லை எனப்பட்டது.
"ஏன் நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு வந்திட்டீங்க? அதுவும் சண்டை எல்லாம் முடிச்ச பிறகு?” என்று அன்ரி கேட்பது காதில் விழுகிறது.
“குப்’ என ஒடி வரும் நினவுைகளில் எதை அன்ரிக்குச் சொல்வது? அந்த பீதி கனத்த இரவுகளைச் சொல்வதா? நடு இரவில் கண் விழித்து, எதையோ கண்டு விட்டதாய் கிரீச்சிட்டதைச் சொல்வதா? எதைச் சொன்னாலும் நிச்சயம் தான் அழுவதற்கு அன்ரியின் தோள்கள் கிடைக்காதெனப்பட்டது. இன்று அவளின் உலகம் வேறு சடங்குகள், பட்டுக்கள், கலியாண வீடுகள், குளிர் பணி.
இவள் லேசாகச் சிரித்தாள். "ஒண்டுமில்லை அன்ரி -Dollfr6OD உத்தியோகம் அப்பிடி எல்லாத் தரப்பட்டடையும் கையிலும் துவக்கு இருக்கு. இவருக்கு யாரு சொல்லுறதைக் கேட்கிறதெண்டு தெரியேல்லை. அதுதான் பேசாம பென்ஷக்கு எழுதிக்குடுத்துவிட்டு எங்களையும் கூட்டிக் கொண்டு இஞ்சை வந்திட்டார்."
173

Page 89
விடைபெற்று எழுந்தபொழுது அன்ரி கேட்டாள் "நாளைக்கு வீட்டிலை சும்மாதானே இருப்பாய் சந்திரா? காலமை வர்றியோ? ஷொப்பிங் செய்ய வேணும். கமலத் துக்கும் என்னோடை வர ஏலாது நாரிப்பிடிப்பாம்."
"அதுக்கென்ன அன்ரி, மகளைப் பள்ளிக்கு அனுப்பிப்போட்டு பத்து மணிபோல வாறன், வெளிக்கிட்டு நில்லுங்கோ" என அவள் சொல்லிவிட்டு வந்தாள்.
அடுத்த ஒரு நாள் மட்டுமல்ல, தொடர்ந்து ஏழெட்டு நாட்களுக்கு அன்ரியோடு ஷொப்பிங் போக நேரிட்டது. அவளின் விருப்பப்படியே குமரன் சில்க்ஸ், நல்லி, லலிதா நகை மாளிகை என அலைந்தார்கள்.
கூறைகளை தெரிந்தெடுக்கவே இரண்டு மூன்று நாட்கள் போய்விட்டன. பின்னர் எடுத்த கூறை சரியில்லை என்று அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேறு எடுக்க அன்று பின்னேரமும் போக நேரிட்டது. பிறகு பின்னேரங்களிலும் ஷொப்பிங் போனார்கள். மாப்பிள்ளை வீட்டார் கூறை எடுக்க அறுநூறு டொலர் தந்ததாக அன்ரி அடிக்கடி சொல்லிக் கொண்டாள். இதை பெருமைக்கு சொல்கிறாளா அல்லது அந்தத் தொகை பற்றாது என்ற தொனியில் சொல்கிறாளா என்பது பிடிபடவில்லை.
. கூறை எடுத்து முடிந்ததும் மற்றவர்களுக்கு பட்டு எடுக்கும் வேலை தொடங்கியது. யார் யாருக்கு இன்ன இன்ன பட்டு எடுக்க வேண்டுமென அன்ரி தொகுத்து வைத்திருந்த நேர்த்தியே அலாதிதான். பட்டுப்புடவை
174

களுக்கு முன்னால் போய் நின்றதும் ஹாண்ட் பேக்கைத் திறந்து அதற்குள்ளிருந்த போஸிலிருந்து ஒரு சிறு மடித்த மட்டை போன்ற ஒன்றை கவனமாக வெளியி லெடுப்பாள். முதலில் யாருக்கு சேலைகள் வாங்கப்பட வேண்டுமோ அவர்களின் பெயர்கள், ஒன்றின் கீழ் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு பெயரின் நேரேயும் அவர்கள் விரும்பும் சேலையின் ரகம், டிசையின், வெள்ளி சரிகை, ஒன்றரை சாணுக்கு இருக்கவேண்டுமா, ஒரு இஞ்சி இருக்க வேண்டுமா, உள்ளே மாங்காய் டிசைனா, அன்னம் டிசையினா என்றது போன்ற அறிவுறுத்தல்கள் ஆகியன இருக்கும். அவற்றின் நேரே அவர்கள் விரும்பும் நிறத்தைக் காட்டும் ஒரு மிக சிறிய துண்டுத் துணியும் ஸ்ரைப்லர் பண்ணுப்பட்டு இருக்கும். அன்ரி, அதற்கேற்ப ஒவ்வொரு பட்டாக அலசி அலசி எடுத்தாள். "மகள் மருமகள் எல்லோருக்கும் நான் வாங்கிக் குடுக்கத்தானே வேணும்!”
பிறகு சுடிதார்கள் வாங்க வேண்டுமென்றாள். அவளின் விருப்பப்படியே ஸ்கென்ஸர் பிளாஸாவுக்குப் போனார்கள். பல கடைகள் ஏறி இறங்கியபின், அன்ரிக்கு பிடித்த வகையில் சுடிதார்கள் கிடைத்தன. அவற்றிலும் ஒரே மாதிரியாக, சிறு 2. UT வேறுபாடுகளுடன் ஆறு இருக்கிறதா எனத் தேடினாள். பொறுமையிழந்து “ஏன் அன்ரி ஆறு?" என இவள் கேட்க "ஒரே மாதிரி உடுப்பு போட்டுக் கொண்டு, ஆறு பிளவர் கேள்ஸ் பொம்பிளையோடை வந்தா, வடிவா இருக்குமல்லே" என பதில் கிடைத்தது.
இவள், தான் பார்த்த சில திருமண வீடியோப்
175

Page 90
படங்களை நினைத்துக் கொண்டாள். சில படங்களில் பிளவர் கேள்ஸ் மட்டுமல்ல, தகப்பனார் கூட பெண்ணின் முன்னால், அல்லது பெண்ணோடு வருவார். இன்னும் சில நாட்களில் மணப்பெண், தகப்பனாரின் மடித்த முழங்கைக்குள் கை நுழைத்து மணவறைக்கு வரவும் கூடும்!
வெளி நாடுகளில் எம்மவர்களுக்குத்தான் எத்தனை பொறுப்புகள், சுமைகள் என எண்ணத் தோன்றியது. நம் சடங்குகள் எல்லாவற்றையும் அவற்றின் அர்த்தங்கள் பற்றிக் கவலைப்படாமல் ஒன்றையும் விடாமல் செய்து காட்ட வேண்டும். அதோடு புகுந்த நாடுகளில் கண்ட மேலைத்தேய சடங்கு முறைகளையும் ஆங்காங்கே புகுத்தி சடங்குகளை நவீனப்படுத்தி வசீகரமும் சேர்க்க வேண்டும்.
கனடா திரும்புவதற்கு பவளமன்ரி பெட்டிகளை அடுக்கிக்கொண்டு இருந்தாள். சுற்றிலும் நகைப்பெட்டி, சேலைப் பெட்டிகள், சுடிதார்கள் என்று சிதறிக் கிடந்தன.
பக்கத்தில் போயிருந்த இவள், "இவ்வளவு தூரத்திலை இருந்து வந்திட்டும் ஏன் அன்ரி அவசரப்பட்டு போறிங்கள்? 9C05 மாதத்திற் கெண்டாலும் நிண்டு ஆறுதலா கோயில்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு போகலாம் தானே” என்றாள்.
“எங்களுக்கும் ஆசைதான் шодs6іт ! இப்ப நேரமில்லையடா. வர்ற வழியிலை சிங்கப்பூரிலையும் நிண்டு வந்ததிலை நேரம் பத்தாமைப் போயிட்டுத்து.
176

அடுத்த முறை வந்து பார்ப்பம்"
அடுத்த முறை எண்டா எப்ப வருவீங்கள்?” "ஏன் பாமதிக்கும் கலியாணம் முடிச்சா, இனி யோகனுக்குத்தானை. அவனுக்கு பெட்டை ஊரிலை இருக்கு காத்துக் கொண்டு. இஞ்சை கூப்பிட்டு விச்சு இந்தியாவிலை வைச்சுத்தான் கலியாணம் நடத்தப் போறம். ஆவணியிலை பாமதிக்கு முடிச்சா, இவனுக்கு அடுத்த தையில் செய்திடலாம். அப்ப வந்தா ஆறுதலா நிண்டு எல்லாருமா போய் கோயில்களெல்லாம் பார்ப்பம்” என்றாள்.
அங்கிளையும், அன்ரியையும் மீனம்பாக்கத்தில் விமானமேற்றி அனுப்பி விட்டு கமலமக்காவும் இவளுமாக வாடகைக் கார்களில் திரும்பும் பொழுதும் இதே பேச்சு.
"அவன் யோகன் பாவம். ஊரிலை இருக்கக்கையே காதலிச்ச பெட்டையை இனித்தான் கலியாணம் முடிக்கப் போறான். குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையளை எல்லாம் செய்து போட்டு” என்று சொல்லிக் கொண்டு வந்தாள் கமலமக்கா.
"அப்ப, அவர் கலியாணம் முடிச்சா, இவை பாடு கொஞ்சம் கஷ்டம் தான். அவர் தானே இவைக்கு செலவுக்கெல்லாம் காசு குடுக்கிறார் போலை, நல்லா உழைக்கிறார் போலை".
“ஒரு ரெஸ்ரொறண்றிலை வேலை பார்க்கிறான்” என்ற கமலமக்கா இவளின் முகத்தைப் பார்த்துவிட்டு. "அதிலை என்ன? அங்கை இதெல்லாம் சரிதான்.
Cur-11 177

Page 91
எங்கையெண்டாலும் கஷ்டப்பட்டு உழைச்சா நல்லாச் சம்பாதிக்கலாம்." என்றவள் சற்றுப் பொறுத்து இவைக்கு அகதிக் காசும் வரும் தானே!” என்றாள்.
“அகதிக் காசு ?” "ஒமோம்! கனடா அரசாங்கம் இவைக்கு அகதிகள் எண்டு சொல்லி மாதா மாதம் காசு குடுக்குதுதானே! அதை ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி நேரில போய் கையெழுத்துப் போட்டு வாங்கவேணுமாம். பிந்தினா பெயரை வெட்டிப் போடுவாங்களாம். அதுக்குத்தான் இப்ப அவசரப்பட்டுக் கொண்டு போகினம்.”
178

3 /7&4 (Woré
لار إحسا
கைபில் எடுத்த குண்டயும், தோளில் மாட்டிய தோல் பையுமாக அவள் வெளியே வந்து அறைக் கதவைப் பூட்டினாள். கைக்கடிகாரம், மணி எட்டரை யாகப் போவதைக் காட்டியது.
‘லேற்ராகுது’ என்ற, வரவழைத்துக் கொண்ட ஒரு போலியான அவசரத்துடன் அவள் படியிறங்கி, வெளிக்
கேற்றை நோக்கி நடக்கலானாள்.
தானே
179

Page 92
உள்ளே, வீட்டுக்கார அன்ரி, இரைந்து கொண்டிருப்பது கேட்டது. “எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு. என்னட்டைப் பின்னைக் கேட்க,” அவளிடம் கேட்பதற்கு, அவள் முன் நிற்பது யாரென்று தெரியவில்லை. பிள்ளைகளா? அல்லது அப்பாவிக் கணவனா?
வெளியில், அந்தச் சோடி - நெடுவலும் கட்டையுமான அந்தச் சோடி, றோட்டில் இந்தக் கேற்றைக் கடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
கொழுவியைக் கையிலெடுத்துக் கொண்டு, கிறாதியை இழுத்து, வெளியே வந்து மீள அதைத் தள்ளிச் சாத்தி, உள்ளே கைவிட்டு, கொழுவியை அதன் ஒட்டைக்குள் போட்டு.
எந்த அவசரத்திலும் இதைச் செய்யவேண்டும். இல்லாவிட்டால், வெளியே மேய என அவிழ்த்து விடப்பட்ட மாடு, கதவைத் தள்ளிக் கொண்டு வந்து, கன்றிற்குப் பால் கொடுத்து விட்டதென அன்ரி முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளுவாள். வந்தபுதிதில், பால் எடுத்த பின்பு, மாட்டை வெளியே அவிழ்த்து விடும் பழக்கமில்லாத யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புதிதில், ஒரு நாள், மத்தியானம் சாப்பிட வந்த பொழுது, வீட்டுக்கேற்றுக்கு வெளியே, உள்ளே வரக் காத்திருந்த மாட்டையும் 'பாவம்’ என்று அவள் உள்ளே வர விட்டு விட்டாள். அன்று முழுவதும் சிடுசிடுத்த அந்த முகம் - இன்னும் மறக்கவில்லை.
18O

அவள், றோட்டில் இறங்குகையில், அந்தச் சோடி, வைரவ கோயில் வீதியை முடித்துக் கொண்டு, மன்னார் றோட்டின் முடக்கில் மறைந்து கொண்டிருந்தது.
அவளும் தான் ஏறிவிடுவாள் மன்னார்றோட்டிற்கு. நடையின் கதிக்கேற்ப, தோல் பை உடம்போடு உரசி, உரசி விலகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு உரசலும் காலையில் குளித்த உடம்பை இதமாக ஒத்தி எடுத்தது மாதிரி. இடியப்பப் பார்சல்.
அவளுக்கு, இடியாப்பங்களைப் பார்சலாகக் கட்டி எடுத்து வருவதென்றால் விருப்பம். காலையிலெழுந்து, இடியப்பங்கள் அவித்தால் அவற்றையே, மத்தியானத் துக்குமெனக் கட்டி எடுத்து வந்துவிடுவாள். மத்தியான வேளையில் பார்சலைப் பிரிக்கும்பொழுது, மடித்த வாழையிலையின் வேர்வைகளுக்குள் கீழே, ஒன்றின்மேல் ஒன்றாக, ஒட்டாமல், உலராமல், பிசுபிசுப்பில்லாமல் இருக்கும் இடியாப்பங்கள். எடுத்துப் பிசைந்து கொள்ள ஒரத்தில் சம்பல் அல்லது பொரியல் அவளுக்கு விருப்பம்.
எதிரே, வைரவ கோயில் வீதி, நீளவாக்கில் கிடந்த மன்னார் றோட்டுடன் மோதி, தன்னை முடித்துக் கொள்ளக் காத்திருந்தது.
அப்பொழுது இடதுபுறமாக, மன்னாறோட்டில், நேராக வந்த பஸ் ஒன்று, வேகத்தைக் குறைத்து வந்து அவள் முன்பாக நின்றது ஒரு ஒரமாக,
Foot Boardல் இருந்து தொங்கிய சில கால்கள்,
181

Page 93
நீண்டு, தரையைத் தொடுவது தெரிந்தது. இழுத்தடிக்கும் மணியின் 'கிணுங்கை தொடர்ந்து, பஸ் மீள ஊரத் துவங்குகையில் அவள், பஸ்ஸைப் போகவிடும் தோரணையில் மன்னார் றோட்டில் ஏறாமல் சிறிது தயங்கி நின்றாள், அந்தக் கால்களுக்குரியவர்களைப் பார்த்துவிடவேண்டுமென்ற ஆர்வம்.
இரண்டு மடித்துக் கட்டிய வேட்டிகள்; ஒரு சாரம்; ஒரு நூற்சிலை. இவ்வளவு தான். இதற்காகவோ நின்றோம் என்றிருந்தது. பூவரசங்குளத்திலிருந்தோ, பறயனாலங்குளத்திலிருந்தோ வரும் பஸ். வேறு எப்படியானவர்கள் இருப்பார்கள்?
அவள், மன்னார் றோட்டில் ஏறி, ஒரமாக நடக்கத் தொடங்கினாள்.
-955ő GeFITIg, Telecommunication office gyC5G35 போய்க் கொண்டிருந்தது. அந்த உயரவித்தியாசம், மீள கண்ணைக் கெளவியது. ‘வெடவெட' என்ற அவனின் உயரமும், அவனின் தோள் அளவிற்கும் வராத அவளின் கட்டையும். அந்த வெடவெடப்பு, சற்று குலுங்கி அசைவது தெரிந்தது. ஏதோ “ஜோக்” போலும்.
அவளுக்கு, தன் அவனின் நினைவும் வந்தது. Campus அங்கீகரித்த ஏற்றதொரு காதல் சோடியாக, ஹலகா வீதியில் அவர்கள் உலாவிய நாட்கள். இளமையும் இனிமையும் இழைய ஒவ்வொரு நாளுமே புத்தம் புதிதாகத் தோன்றுவதாய் உணரப்பட்ட காலம்,
182

றெயில்வே லையினைக் கடக்கும் பொழுது, அவள் கண்கள் வலப்பக்கம் நோக்கின. சில சமயங்களில், அனேகமாக இதே நேரத்தில் றெயில்வே லையினுடன் நடந்து வந்து றோட்டில் ஏறும் அந்தப் Price Control Inspector se going 5/T600T65ai60a). 605 'Good Morning Lisdatto.
சில சமயம், அவன், இவள் கூடவே நடந்து வருவதும் உண்டு. தான் போய்ச் சோதித்த கடைகள், ஏறிய நீதிமன்றங்கள், என ஏதாவது பற்றிச் சொல்லிக் கொண்டு. ஒரு நாள் கச்சேரிக்குள் இருவரும் சேர்ந்து நுழைவதைக் கண்டு விட்ட, சாரதா கேட்டாள்: "தார் அந்தப் பொடியன், உம்மோடை கதைச்சுக் கொண்டு வந்தது?" அவளுக்கு எரிச்சலாக, 'சீ' என்றிருந்தது.
அரச அலுவல்கள், நிரம்பிய மன்னார் றோட்டின் காலை நேர அசைவுகள், அவசரமாய் அள்ளித் தெறிக்கப்பட்டிருந்தன.
வவுனியா சிங்களப் பிரிவு AGA office முன் முகப்பில் வாசல் கேற்றடியில், ஊழியர்கள் சிதறிக் காணப்பட்டனர். ஜீப் ஒன்று வெளியே, எங்கோ போவதற்கு ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தது. றைவர், தன் சீற்றில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தபொழுது, அவளுக்கு தான் லேற்ராகி விட்டது போலிருந்தது. இங்கே, எல்லோரும் வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே என்ற எண்ணத்தில் துரிதமாக நடக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்திற்குள்,
183

Page 94
என்ன அவசரம்? என்ற நினைப்பு தோன்றியது.
gaitupi, 976) ellie Field workGarr, Office workGarr என நிச்சயமாகத் தெரியவில்லை. அவளின் மேசையில், கண்ணாடித் துண்டின் கீழிருக்கும், போனமாத முடிவில், அவளே தயாரித்து வைத்த இந்த மாதத்தைய Advance Schedule ஐப் பார்க்க வேண்டும். அனேகமாக, பாவற் குளம், பன்றிக்கெய்த குளம் என ஏதாவது எழுதி, அங்கெல்லாமுள்ள, அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடப் போவதாய் எழுதியிருப்பாள். அப்படியாயிருந்தால், 96.16it gainpi Attendance Registergi) கையெழுத்துப் போடத் தேவையில்லை. இப்படி விழுந்தடித்துக் கொண்டு போகவும் தேவையில்லை.
6TgGg seljög5 6Filasor LSlifia AGA Officeásé5ü போகும் பெண் Clerk வந்துகொண்டிருந்தாள். இன்று Pink and Pink. உப்பியிருந்த வயிற்றை மேவிக் கீழே இறங்கிய அவளின் Sari pleats, நிலத்துக்குமேல், தூக்கலாகத் தொங்கின.
ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் அவள் குனிந்து, தன் சேலையைப் பார்த்துக் கொண்டாள். நிலத்தோடு ஒட்டினாற் போல், காணப்பட்டு, நடையின் கதிக்கேற்ப, பிரிய வேண்டிய இடங்களில், ஒரே சீரில் பிரிவதும் பின் சேருவதுமாக இருந்த அவளின் Sari Pleats அவளுக்குப் பெருமையாக இருந்தது. அந்த அழகையே பார்த்துக் கொண்டு, நடக்க வேண்டும் போலிருந்தது.
நடந்து கொண்டிருந்தவளுக்கு, இந்தப் பெண் Clerk
184

போல், இப்படியான ஒருநிலையில், தானும் ஒரு நாள், Officeக்குப் போக வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும் என்ற எண்ணம் இடறிக் கொண்டு வந்தது. வயிற்றைத் தூக்கிக் கொண்டு Clumsyஆக உடுத்தி கொண்டு, அசைந்து அசைந்து எல்லாரும் பார்க்கத் தக்கதாய் Officeல் வைரவ நாதன் சந்திரமோகன் என்ற எல்லோருக்கும் முன்னால் கிளர்ந்தெழுந்த ஒரு நூதனமான கூச்ச உணர்வு, அவளைச் சங்கடப்படுத்தியது.
கூடவே, பேராதனையில் படித்த காலத்தில், ராமநாதன் ஹோல் முகப்பில், பின்னேரங்களில், தனக்காக காத்து நிற்கும், மனோகரனின் ஆர்வம் ததும்பிய முகம், தோன்றி மறைந்தது.
முதல் வருடம், இருவரும் ஒரு வகுப்பில் சேர்ந்தே படித்தனர். முதல் வருடச் சோதனை முடிவில், அவன் law செய்யப் போய்விட்டான். ஆனால், அதன் பின்புதான், அவன், இவளைத் தேடிக் கொண்டு, ஹோலுக்கு வரத் தொடங்கினான்.
அப்பொழுதிருந்த Ֆlւգ-ւնւյւճ, ஆர்வமும், இப்பொழுது, நினைத்துப் பார்க்கையிலும் 6זעוג மறுப்பவையாக. மங்கியவையாக.
அவனின் தமக்கைக்கு இன்னும் கலியாணமாக வில்லை. அதுவரை, இவளும், அவனுக்காகக் காத்திருக்க வேண்டும். இந்த வருடமே, அவனின் தமக்கைக்கு கலியாணம் முடிந்துவிட்டால். நினைக்க நன்றாகத்தான்
185

Page 95
இருக்கிறது. ஆனால், முடிய வேண்டும். அதன் பின்பு. சாதகம், சீதனம் எனப் பார்த்துப் பேசி. அவளுக்கு ஏனோ அலுத்துக் கொள்ளலாம் போலிருந்தது.
அவளைத் தாண்டிச் சென்ற காரொன்று, சிங்களப் பள்ளிக்கூடத்தருகே, அந்த ரிச்சரை இறக்கி விட்டுச் சென்றது. பள்ளிக்கூடத்தின் இயக்கத்தினைக் காட்டும் அந்த அமைதியை மீறிக்கொண்டு, குதிரை நடையில், அந்த ரீச்சர், உள்ளே நடந்து, ஒரு கட்டிடத்திற்குள் நுழைவது, சுற்றியடித்திருந்த கம்பிகளின் பின்னால் தெரிந்தது.
அவளுக்கு மீளவும், தன்னையும் இவ்வாறு காரில் கொண்டு வந்து விடுபவனாக அவன் இருப்பானா என்ற எண்ணம் ஓடிவந்தது. கொழும்பில் ஏதோ ஒரு திணைக்களத்தில் Legal Draftsman ஆக இருப்பவன். ம். தமக்கையையே இன்னும் கட்டிக் கொடுக்க வகையைக் காணோம்!
பின்னால், சைக்கிள் மணி கிணுகினுத்து வந்தது. திரும்பினாள். Office mate வைரவ நாதன் சிரித்தபடி அவளைக் கடந்து கொண்டிருந்தான்.
“என்ன, இண்டைக்கு, இந்தப் பக்கதாலை?” இவனின் வீடு அனுராதபுர றோட்டில் அல்லவா இருக்கிறது.
“ACLG office யிலை ஒரு அலுவல், அதுதான் இதாலை வந்தனான்" அவன் திரும்பிப் பார்த்துச் சொல்லியபடி போனான்.
186

இவனுக்கு முன்பாகவே தான் office க்கு போய் சீற்றில் இருந்து கொண்டு, பின்னால் வரும் இவனை ‘Greet” பண்ணுவதாக ஒரு கற்பனை.
Office க்குப் போயும் தான் என்னத்தைப் வெட்டிப் பிடுங்குவது? மாதத்தில் ஐந்தாறு நாட்கள் Office work வருவதாக Schedule தயாரிப்பது அவள் வழக்கம். மற்றும்படி, எல்லாம் Field work தான். Field என்றால் உண்மையாக Field க்குப் போவதா என்ன? போனதாக, டயறியில் எழுதுவதுதான்.
அங்கே போயும்தான் என்னத்தைப் பார்கிறது? பெரும்பாலும், வரண்டு, காய்ந்து கிடக்கும் நிலத்தை ஒருதரம் வெறித்துவிட்டு வாடிக்குள் ஒதுக்கி, எத்தனை waterpump 67 gigs60607 Hose pipe gCDjéSpog568Tós (5iSiglés கொண்டு. இத் தகவல்கள், திட்டங்கள் பற்றிய எத்தனையோ Fornight Reportsகளை நிரப்பக் காணும். ஏதோ பறங்கியாற்றுப் பக்கத்தில் தான் சிறிது பச்சை இருக்கும்.
MOH Office Gnuplögg. இப்பொழுது, இங்கு பழகியவர்கள் ஒருவருமில்லை, கனகசபை மாற்றலாகிப் போன பின்பு "எனக்கு கொழும்பிற்கு Transfer வரும் போலிருக்கு, Protest பண்ணலாமெண்டு இருக்கிறன்." "ஏன் கொழும்பு எண்டா நல்லதுதானே family யைக் கூட்டிக் கொண்டே வைச்சிருக்கலாம். ஒவ்வொரு கிழமையும், நீங்க இப்பிடி வந்து போறதைவிட" இது இவள். "ஸ் கொழும்புலையா? அங்கை இருக்கிற 'High cost of living 6760TóGyös is Lng)."
187

Page 96
எல்லோரும்தான், தாங்கள் விரும்பிய இடத்திற்கு மாறிப் போகிறார்கள். இவளுக்குத் தான் கிடைக்காதாம். யாழ்ப்பாணத்தை விட கொழும்பிற்கு, மாற்றல் கிடைத்தால் நல்லதென்று சில நேரம் நினைப்பதுண்டு, g607 Tai, -9||5/605 gCD55p High cost of living
GnuGay Gorffluunt தமிழ் பிரிவு AGA6ir sitti, வெளியிலிருந்து வந்து அவரின் quartersக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
Water works and Drainage Board, 9956ir 6tgirl illpudits இருந்த மதகை ஒட்டி, என்னவோ கிண்டிக் கொண்டிருந்தார்கள். அதை மேற்பார்வை செய்து நின்ற சிவசோதி. இவளைப் பார்த்துச் சிரித்தான். வெறும் பரிச்சயம் தான். நன்கு பழகியிருந்தால், பகிடியாகக் கேட்டிருக்கலாம் 'Drainage Board க்கு முன்னாலையே அடைச்சுப்போட்டுதா? என்று ஏதாவது.
கச்சேரியின் இடதுபுற வாசலால், உள்ளே நுழைந்து, வலதுபுற மூலையில் புதுமெருகு அழியாமல் இருக்கும், திட்டமிடல் பகுதியை நோக்கி, மரங்களின் கீழே நடக்கையில்.
இன்று Voucher நிரபிக் கொடுத்து, காசு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மாதம் பிறந்து, ஐந்தாம் திகதியாகி விட்டது. போன மாதத்தில் செய்ததாகக் காட்டிய Field work க்குரிய பிரயாணப் படிகள் பிரயாணச் செலவுகள் எல்லா வற்றையும் போட்டு பெருக்கி, கூட்டிக் காட்டி. எல்லாமாக குறைந்தது 250 ரூபாயாவது வரவேண்டும். பார்ப்போம்.
188

அந்தக் காசு எடுத்தால், இன்னுமொரு குட்டி pay day அவளுக்கு. s
Office க்கு, இன்னும் எல்லோரும் வந்துசேரவில்லை. சிற்றுகள் நிரம்பவில்லை.
இடப்புறம் திரும்பி, Development Branch க்குள் போனாள்.
fas development officer SF6 issGaoTafair g56iT GLD60&uai) இருந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தபின், மாதமொரு நாவல்கள் வரத் துவங்கிய பின்பு, இவனுக்கு நாளொரு நாவல்’ கிடைக்கிறது.
மேசை லாச்சியைத் திறந்து hand bag உள்ளே வைக்கையில், கண்கள், கண்ணாடித் துண்டின்கீழ் Lugsfög,607. Oct. 5th An inspection Pavatkulam DDc Projectsyahuait கதிரையில் சாய்ந்து கொண்டாள். கையெழுத்துப் போட எழுந்து போகத் தேவையில்லை.
பியோன், செல்லத்துரை, உள்ளே வந்து சன்னல் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தான்.
“செல்லத்துரை! ஒரு voucher fom வாங்கி வந்து தாரும்"
லாச்சியை, டயறிக்காக கிண்டிக்கொண்டிருந்த வேளை இரண்டு இளைஞர்கள் வந்து எதிரில் நின்றனர். நிமிர்ந்தாள்.
அவள் பொறுப்பாக இருக்கும். ஏதொரு விவசாயத் திட்டத்தில் இரண்டுபேரும் அங்கத்தினராக உள்ளனர். “என்ன?
189

Page 97
“உழுந்துச் செய்கைக்கு, மற்ற எல்லாருக்கும் கடன் குடுத்திருக்கு. எங்களுக்கு கிடைக்கேல்லை. நாங்க இந்தத் திட்டத்திலை எப்ப கூடியோ இருக்கிறம். புதிசா சேர்ந்தவைக்கெல்லாம் குடுத்திருக்கு: எங்களுக்கு இல்லை. அது தான், என்னண்டு பாப்பமெண்டு.”
“பழைய கடனைத் திருப்பித் தராதவைக்கு, புதிசா கடன் குடுக்க வேண்டாமெண்டு உத்தரவு வந்திருக்கு. நீங்க, போன முறை எடுத்த கடனை எல்லாம் திரும்பி கட்டீட்டிங்களோ ?”
“கொஞ்சம் கட்டீட்டம். கொஞ்சம் கட்டேல்லை. பயிர் வாய்க்கேல்லை. நட்டமாய் போச்சு”
"முழுக்கக் கட்டினாத்தான், பிறகு மற்றக் கடனைக் கேட்க முடியும். நட்டமெண்டா அதுக்கு நான் என் செய்ய?
"இந்த முறை, கொஞ்சக் காசு எண்டாலும் கிடைச்சா, பிறகு, இரண்டு முறைக் கடனையும் ஏதோ அடைச்சுப் போடலாம். போன முறை மழை தண்ணி இல்லாமத்தான் இந்த கஷ்டமெல்லாம்."
"நீங்க, தம்பிமாரே, அரசாங்கம் சும்மா உங்களுக்கு நெடுக காசு தருமெண்டு நினைக்கிறயள் என்னவோ, எனக்குத் தெரியாது. இதுக்கு எல்லாம் சாரதாதான் Go)LungyüL. sy6)ug5TG3607 Development Co-operative Society Manger. இந்தக் குடுக்கல் வாங்கல் எல்லாம் அவவோடை தான். அவ இப்ப வருவ. அவவைக் கேளுங்கோ எனக் கொண்டும் தெரியாது."
190

அவர்களை அனுப்பியதும், செல்லத்துரை voucher fomமை கொண்டுவந்து தந்தான்.
டயறியைத் தேடி எடுத்து, அதில் ஒக்டோபர் 5ம் திகதி பாவற்குள விவசாய அபிவிருத்தித் திட்டத்தைச் சென்று பார்வையிட்டதாக எழுதிவிட்டு, Sau பக்கங்களை முன்னே தள்ளி செப்டம்பர் முதலாம் திகதியை எடுத்து வைத்துக் கொண்டாள். அந்தப் பக்கம், நொச்சி குளம், பெண்கள் விவசாயத் திட்டத்தையும், கைத்தொழில் நிலையத்தையும் அவள்சென்று பார்வையிட்டதைச் சொன்னது Voucher formgı’ü பின்பக்கமாகப் புரட்டி, முதலாவதாக நொச்சிகுளம் என்று எழுதினாள். பின் இடத்தின் தூரத்தைக் கொண்டு, பிரயாணச் செலவைக் கணக்கிட்டு, அதனோடு பிரயாணப் படியையும் கூட்டி இரண்டாம் நாள், மூன்றாம் நாள், என வரிகள் நிரப்பப்பட்டு வந்தன, 250 ரூபாய் Claim பண்ணக் கூடியதாக
அவள், வேலையில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பொழுது, சாரதா உள்ளே வந்தாள். தொப் என்று hand bagகை தன் மேசையில் போட்டாள்.
“என்னப்பா! வந்ததும் வராததுமா?" இவள் நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
"பின்னை என்னப்பா ! இதுகளுக்கு எத்தனை தரம் சொல்லுறது, L160ptu 95L6)6. அடைக்காட்டா, புதுக்கடன் இல்லை இல்லை எண்டு?”
191

Page 98
வந்தவர்கள், இவளை வழியில் சந்தித்திருக்க வேண்டும்.
"ஓ! என்னட்டையும் வந்தினம். நானும் இதைத்தான் சொன்னன். இப்ப எங்க ஆட்கள்? போட்டினமே?” -
"ஓ! ADPயைக் கண்டு, கடன் தரச் சொல்லிக் கேட்கப் போறம் எண்டு நிண்டுதுகள். நான், அவரும் இதைத்தான் சொல்லுவர். அவராலும் ஒண்டும் செய்ய ஏலாது எண்டு சொல்லி அனுப்பியாச்சு, ஒருபடியா! உழுந்து செய்யிறம் செய்யிறம் எண்டு சொல்லிப் போட்டு, கடனை வாங்கி வேறு எங்கையோ சில வழிச்சுப்போட்டு.”
"அதுதானப்பா அதுதான்! விவசாயம் செய்யிற தெண்டு பேருக்குக் காட்டிக் கொண்டு, சும்மா இருந்திட்டு, அரசாங்கம் காசு குடுக்குது எண்டவுடன் மட்டும் வாங்க வந்திடுவினம்."
அவள், மீண்டும் Voucherg நிரப்புவதில் மும்முரமாக ஈடுபடலானாள்.
192

பக்.
22
24
24
32
37
37
42
42
:
75
75
79
15
122
28
31
42
169
69
170
172
173
175
வரி
2
27
பிழை
கொள்ளி வால் கும்பிட்ட
வந்த
இழந்தோ கடற்படை தளம் கேள்விப்பட்டிருந்தான் தங்கிதோ? ஸ்கூர்ட்டர்கள் படிப்பவன் நின்றான் எதிர்படுபவற்றை முளையிலே மக்ககள் அப்போழுதும் என்று (எப்பா, வேண்டாம்) அவளெதிலே LD60TD
காசுக்
பார்க்கலையோ? ஸ்ரான் மிதிவண்டி
966 வந்தோடை அரிய
போனாகள் பென்ஷக்கு ஸ்கென்ஸர்
திருத்தம்
கொள்ளிவாய்ப் பிசாசு கும்பிட்டு
வந்து
இழுத்தோ கடற்படைத் தளம் கேள்விப்பட்டிருந்தாள் தங்கிறதோ?
sho&nlf
படித்தவன்
நின்றாள் எதிர்ப்படுபவைற்றை மூளையிலே
மக்கள்
அப்பொழுது
என்னு (வாங்க வாங்க) அவளெதிரிலே
LD6-0Tub
s
பாக்கேல்லையோ? ஸ்ரான்ட் அல்லது ஸ்ரான்டு மிதிவெடி
அவன்
வந்ததோடை
அறிய
போனார்கள்
பென்ஷனுக்கு
ஸ்பென்சர்
f

Page 99
யுத்த பூமியை விட்டு, அலறி அடித்துக் கொண்டு வெளியேறாது, மண்ணின் நேசிப்புடன் மக்கள் துயரங்களைப் பங்கிடும் ஒருத்தியாய் வாழ்ந்த நேர்மையினால், குந்தவையின் கதைகள் இரண்டு தசாப்த காலத் தமிழ் ஈழத்தின் ܒ
DET GOLDLIJTE வரலாறாகப் பதிவாகின்றது.(