கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அந்நியம்

Page 1


Page 2

அந்நீயம்
சிறுகதைத் தொகுப்பு
காகேசு தர்மலிங்கம்
வெளியீடு :
மல்லிகைப் பந்தல்
234B, காங்கேசன் துறை வீதி
யாழ்ப்பாணம்

Page 3
அக்கியம்
முதற்பதிப்பு : மார்ச்சு 1996 உரிமை பதிவு
விலை: (5. 20
இலங்கையில் விலை ரூபா 50/=
தமிழ் நாட்டில்
கிடைக்குமிடம் : குமரன் பப்பிளிஷர்ஸ் 79, முதல் சிதரு, குமரன் காலனி வடபழனி, சென்னை-600 026.
அச்சிட்டோர் :
கடலோசை அச்சகம் சென்னை-24.

இஃது
எனது துணைவியான இராசலெட்சுமிக்கும்
எனது குழந்தைச் செல்வங்களான சசிதரன்
குகாதரன்
ஆகியோருக்கும்
Jořůu Gorb

Page 4
மல்லிகைப் பந்தலின் சமீபத்திய வெளியீடுகள்
tfSar e55eresdir
ச. முருகானந்தன்
பித்தன் கதைகள்
கே. எம். எம். ஷா
மல்லிகை முகங்கள்
மல்லிகையின் முகப்பை அலங்கரித்த 65 பேகு மக்களின் அட்டைப்படக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு. தொகுப்பாசிரியர் : டொமினிக் ஜீவா
மாத்து வேட்டி
தெணியான்
தலைப்பூக்கள்
மல்லிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கங் களின் தொகுப்பு நூல்

பதிப்புரை
இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு அதிகமான காலத்தில் பல இலக்கிய புஷ்பங்கள் மல்லிகைக் கொடி யில் பூத்துக் குலுங்கி, மலர்ந்துள்ளன. ஈழத்து இலக்கிய உலகில் நறுமணம் பரப்பி வந்துள்ளன.
இப்படியாக மல்லிகையில் பூத்த தனது நறுமணத் தால் இலக்கிய உலகில் சுகந்த வாசனையைப் பரப்பி வந்துள்ள இளந் தலைமுறைப் படைப்பாளிகளில் ஒருவர் தான் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த திரு நாகேசு தர்மலிங்கம் அவர்கள்-இவர் புங்குடுதீவைப் பிறப் பிடமாகக் கொண்டவர்,
இளமை காலந் தொட்டே - மாணவ பருவத்திலி ருந்தே இவர் இலக்கிய ஆர்வமும் அக்கறையும் கொண்டு உழைத்து வந்துள்ளார், இலக்கியமும் கலையும் மனுக்குல வாழ்க்கையைச் செப்பம் செய்யஉந்து சக்தியாகத் திகழவேண்டும் எனும் மானுட நேசத்தின் உயர் நோக்க மாகக் கொண்டு உழைத்து வந்துள்ளார். இந்த நோக்கமே அவரது இலக்கிய ஆதர்ஸமாகத் திகழ்ந்து வந்திருக்கின்றது. அந்த நோக்கை அடி ஆதாரமாகக் கொண்ட தனது படைப்புக்களுக்குச் சிருஷ்டி உருவம் கொடுத்து வந்துள்ளார்.
இவர் வெறும் சிறுகதை எழுத்தாளன் மாத்திரமல்ல; சிறந்த ரேடியோ நாடக நடிகன்; நாடகப் படைப்பான னும் கூட. மானுட நேசம் மிக்கவரான இவர் ஈழத்து இலக்கிய உலகிற்குத் தன்னாலியன்ற அனைத்தை

Page 5
பும் செய்துவிட வேண்டும் என்ற பேரவாக் கொண்டி குந்தார். அதிகமாக எழுதாது போனாலும், ஏராளமாகச் சிந்தித்தவர் இவர்.
ஈழத்து இலக்கியம் சரியான திசைவழியில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, பெருமைப்பட்டு நேர்ச் சம்பாஷனைகளில் நண்பர்களிடம் வியந்து பாராட்டி நின்றவர் நண்பர் நாகேசு தர்மலிங்கம்.
எல்லாவற்றையும் விட, கலைஞர்களை, எழுத்தாளர் களை-மொத்தமாகச் சொன்னால் சகல மனிதர்களை யுமே-நேசிக்கத் தெரிந்தவர் பல ரால் அதே போல, நேசிப் புக் கு உரியவராகத் திகழ்ந்து வந்தவர்.
கொழும்பில் தபாலதிபராகக் கடமையாற்றிக் கொண்டே. கலை, இலக்கிய விழாக்களுக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளவரான இவர், கலைஞர் களை நேரில் சென்று பாராட்டுவதிலும் ஆத்மதிருப்தி அடைந்து வந்துள்ளார்.
இவரது சிறுகதைகளில் அநேகமானவை மல்லிகை இதழ்களில்தான் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கையின் பிரபல தமிழ்த் தினசரிகளான வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் வாராந்தர வெளி யீடுகளிலும் வெளிவந்துள்ளன. இவரது படைப்புக்கள் பலராலும் பேசப்படடு வந்ததும் குறிப்பிடத்தக்க தாகும்,
பழகுவதற்கு இனியவரான இவர், ககுத்து வடிவத்தில் ஆழமான இறுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தவர். சமரசத்திற்கே இடமற்ற இலக்கிய கோட்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் கூட, மாற்றுக் கருத்துக்களை

9
மதிக்கத் தெரிந்த நாகரிகமான மனப் பக்குவத்தை. 2.GoodLugu aurif.
மல்லிகைப் பந்தலின் வெளியீடாகத் தனது நூல் வெளிவர வேண்டும் என்ற உள் மன ஆசை கொண்ட இவர் கொழும்பில் என்னைச் சந்திக்கும் வேளைகளில் மனந்திறந்து வெளிப்படுத்துவார்.
இவரது மறைவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவரை இவர் உத்தியோகம் பார்க்கும் புறக்கோட்டை தபால் கந்தோரில் சந்தித்து உரையாடினேன். 'படைப் பது ஒரு பக்கம் இருக்கட்டும். இளந் தலைமுறைப் படைப் பாளிகளின் சிருஷ்டிகள் நூலுருவில் வெளிவர லேண்டும். அப்போதுதான் அப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றி ஒரு மதிப்பீட்டுக்கு வர இயலும்!" என்ற ஆசையை வற்புறுத்தினேன், மல்லிகைக் களத்தில் விளைந்த இளம் படைப்பாளிகளின் முன்னேற்றத்தில் நான் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைச் சரிவரப் புரிந்து கொண்ட நாகேசு தர்மலிங்கம்: "ஒரு கிழமை பொறுத் துக் கொள்ளுங்கோ. எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தித் தயார் நிலையில்தான் வைச்சிருக்கிறன், அடுத்த கிழமை அப்பிடியே உங்கட கையில ஒப்படைச்சு விடுகிறன். நீங்களே எல்லாத்தையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ!'
இதைச் சொல்லிச் சென்ற மூன்றாவது நாள் மரணச் செய்திதான் எனது காதுகளுக்கு எட்டியது. அப்படியே அதிர்ந்து போய்விட்டேன்!
இந்தச் செய்தி கேட்டதும் முதன் முதலில் அவரது வீட்டுக்குப் போன எழுத்தாளன் நான்தான்!

Page 6
10
அந்தப் பாரிய இறப்பினுாடேயும், சோகத்தின் உச்சி யிலும் என்னைக் கண்டதும் தர்மலிங்கத்தின் பாரியார் இராசலெட்சுமி சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சைத் தொட்டன.
உடுத்திக் கொண்டு கந்தோருக்கு வெளிக்கிட்டவர் சொன்ன கடைசி வார்த்தைகள் இவைதாம்: "கதை களை எல்லாம் டைப் பண்ணி ஒழுங்குபடுத்தி வைச்சிருக் கிறன். ரெண்டொரு நாளைக்குள்ளை ஜீவாவிடம் கொண்டு போய்க் குடுத்துப் போட வேணும், சொல்லி விட்டுப் படியிறங்கிப் போனவர் நெஞ்சுக்குள்ளை என்னமோ செய்யிது எண்டு சொல்லி விட்டுக் கதிரையில் சாய்ந்தவர்தான். அத்தோடை."
இறுதிச் சடங்கில் கொழும்புக் கணத்தை மயானத்தில் இரங்கலுரை நிகழ்ந்தது.அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினேன்.
**பிரிந்து விட்ட நண்பரின் ஆத்ம ஆசையை கூடிய சீக்கிரம் நிறைவேற்றி வைப்பேன். அவரது சிறுகதைத் தொகுதியை விரைவில் இலக்கிய நெஞ்சங்களுக்கு அர்ப்பணிப்புச் செய்வேன்!" என்று சபதக் குரலில் வாக்களிப்புச் செய்தேன்.
வைராக்கியங்களில் இரண்டு குறிப்பிடத் தக்கவை. ஒன்று பிரசவ வைராக்கியம்; அடுத்தது மயான வைராக்கி யம். இவை இரண்டுமே அந்த அந்த நேரத்துக்குரியவை. தான். பின்னர் காற்றிலே கரைந்து விடும். சுலையில் பலரறிய நான் கூறிய வைராக்கிய வாசகங்களுக்கு இன்று செயல் வடிவம் கொடுத்து விட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,

11
நண்பர் நாகேசு தர்மலிங்கம் தொகுத்து வைத்துள்ள படியே இந்த நூல் புத்தக வடிவம் பெற்றுள்ளது. இந்த நூலை வெளிக்கொணர, ஒத்துழைத்த அவரது மைத்துனர் என். ஞானசேகரம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் எனது நன்றிகள். மற்றும் பல வகைகளிலும் ஒத்தாசை புரிந்த மேமன்கவி, அந்தணி ஜீவா, தம்பி ஐயா தேவதாஸ் ஆகியோருக்கும் எனது நன்றிகள் உரியவை. இந்தப் படைப்பாளனைப் பற்றிய நோக்குடன் ஈழத்து இலக்கியப் பரப்பின் தாக்கத்தைப் பற்றி ஆழமாக எழுதிய என்னுடைய பல கால நண்பர் செ. யோகநாதன் அவர்களுக்கும் இந்த நூலை விரைவாக அச்சிட்டு முடிக்க உதவிய க. குமரன் அவர்களுக்கும் படைப்புக் குரிய அட்டையைச் சிரிஷடித்துத் தந்துதவிய பூரீதர் பிச்சை யப்பா அவர்களுக்கும் மற்றும் அச்சகத் தோழர் களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உரியன.
டொமினிக் ஜீவா
234 B, காங்கேசன் துறை வீதி யாழ்ப்பாணம்
7-2-1996.

Page 7
முன்னுரை மறைந்ததின் பிறகு
இன்றைய படைப்பிலக்கியத்தை நுணுகிப்பார்க்கின்ற போது வினோதமும் வேதனையும் நிறைந்த பல கண் னோட்டங்கள் நிலவுவதைக் காணமுடிகிறது. குறிப்பாக சொற்சிலம்பம், உருவமயக்கம் என்பன புதிய எழுத்தா னர்களை குழப்பம் அடையவைத்திருப்பதை அறிய முடி கின்றது. தத்துவ வறுமை, ஆழ்ந்தபடிப்பின்மை, வெற்று வேட்டுத்தன்மை என்பனவற்றில் இளந்தலைமுறையினர் பலர் மூழ்கியிருக்கின்றனர், மேற்கில் தேய்ந்து இறந்து போன இலக்கிய சித்தாந்தங்களை அரைகுறையாக விளங் குக்கொண்டு அவற்றைப் புத்தம் புதிய சிந்தனையாய் தமிழிலே வடிவம் கொடுக்க முயலும் பரிதாபநிலை இன் னொரு அவலம். மேலோட்டமாக தமிழ்ப்படைப்பிலக்கி யத்தின் கடந்த பத்தாண்டு காலத்தைப் பார்த்தால்குறிப்பாக சிறுகதை-இந்த ஆண்டுகளில் எழுத வந்த பல எழுத்தாளர்களிடம் இந்த நிலையையே எய்தியிருக்கிறது. பின்-நவீனத்துவம், அமைபியல் வாதம் என்ற கருதுகோள் களுடன்அரைகுறைப்படைப்புகள் இவர்களால் வெளியிடப் படுவதும், பிரமையூட்டப்படுவதும் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் இப்போது விமர்சனத்துக்குட் படுத்தப்பட்டு வருகிறது.இது லேசாக வேறிடங்களுக்கும் சிறு கற்றைக் காற்றாக கசிவதும் உண்மையே,
ஈழத்துப்படைப்பிலக்கியத்தில் 1960 ஆண்டுகாலப் பகுதியிலிருந்து முற்போக்குப் படைப்பாக்கங்கள் செம்மை யும் செழுமையும் பெறத்தொடங்கின. ஒருவிதத்தில்

13
தமிழக எழுத்துக்குக்கூட ஈழ எழுத்தாளர்கள் முன்னுதார ணம் வழங்கினர். இதுவரலாறு. இந்த நிலைமையே 1970 களில்வேறு பரிணாமம் பெற்றது. அரசபயங்கரவாதத் திற்குஎதிரான குரலாய் இந்த எழுத்துகள் பாய்ச்சல் அடைந்தன. வார்த்தைமயக்கங்களால் இவற்றை சித்திரித்து அவற்றை எதிர்ப்பிலக்கியமாய் d57 L. முயன்ற - சிலராலும் அர்த்தம் அறியமுடியாத தனித் திருந்து வாழ்ந்ததவமணிகள், தம்மைத்தாமே முடிசூடிக் இகாண்ட எழுத்தாளரிடையே-மக்கள் நேயமும், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போர்க்குணமும் கென் யதார்த்தவாத எழுத்தாளர்கள் தனியாகத் தெரிந்தனர். இவர்கள் பலம் தமது எழுத்தின் எளிமைதான். அன்றாட வாழ்வின் அவலங்களை இவர்கள் மக்களுக்கு விளங்கும் விதத்தில் எழுதி தமது எழுத்தை காலத்தின் பதிவ. மாற்றினார்கள்.
எழுத்தாளர் நாகேசு தர்மலிங்கத்தை இந்த மரபில் ஒருவராக நான் அடையாளம் காண்கிறேன். இவரது எழுத்தின் சத்தியத்தை நான் போற்றுகிறேன். Jn7T fir 69 வதில் நிறைவடைகின்றேன்.
நாகேசு தர்மலிங்கம் தன் எதிரே, தான் கண்டு, பாதிப்படைந்த நிகழ்வுகளையெல்லாம் கலையாக்கமாக மாற்றியிருக்கிறார். மெய்யாய், மனதைக் தொட்டதாய், சிந்தனையாய் வெளிப்பட்டவற்றை tugs strissoit. எளிமையாய், உணர்வு பூர்வமாய் படைத்திருக்கிறார் இவர், இவர்கள் மனச்சிக்கலுள்ள உதிரிகளாய், மொழிப்
புலம்பலுடன் வாசகர்களை குழப்பமும் எரிச்சலும்

Page 8
14
உண்டாக்குகிற மனிதர்களாய் இல்லாமலிருப்பதற்கான அடிப்படைக் காரணம் நாகேசு தர்மலிங்கத்தின் தெளிவான இலக்கியக் கண்ணோட்டம்தான் என்பதில்
இரண்டாவது அபிப்பிராயத்துக்கு இடமில்லை.
வடபகுதியிலேயே யாழ்ப்பாணப்பகுதி, தீவுப்பற்று என்பனவற்றின் பேச்சு வழக்கில் வித்தியாசங்கள் உள்ளன, இதை ஆசிரியர் கவித்துவமும் உண்மையும் செறிய தமது எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். பிரதேசத்தின் புதிய மணமும் வாழ்வு நிகழ்வும் சரளமாக நம்முன்னே தோன்றி நமது உணர்வைத் தொட்டு சிந்தனையில் ஏக்கத்தையும் அவலங்களையும் விளைவிக் கின்றன. மெல்லப் பெருமூச்சை உதிர்க்க வைக்கின்றன. ஏக்கத்தை படர விடுகின்றன. இவற்றிடையே நம்பிக்கை ஒளியும் கீற்றாக தெரிகின்றன.
கதைகளைப் படித்து முடித்ததும் மனதில் தங்கும் வாழ்வும் செய்தியும் சிலவேளை மங்கித் தெரிவதையும். இங்கே குறிப்பிடலாம். இவரின் எழுத்துக் காலம் இன்னும் நீண்டிருந்தால் இந்தக் குறை முற்றிலுமாக அடிபட்டுப் போயிருக்கலாம். இவ் விதத்தில் சிறந்த படைப்பாளி ஒருவரை முளையிலேயே இழந்துபோய் விட்டோமே என்ற வருத்தம் நெஞ்சை அழுத்து கிறது.
நான் நேரில் அறிந்திராத போதும், நாகேசு தர்மலிங் கத்தின் எழுத்து அவரை என் அருகே வாழ்ந்தவராக

15
அறிமுகம் செய்கிறது. அதற்குக் காரணம் நாம் இருவரும் எழுத்து, வாழ்வு என்பனவற்றைப் பற்றி ஒரே கண்ணோட் டம் கொண்டிருந்ததுதான்.
*மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா, இளம் எழுத்தாளர்களின் பெருமதிப்புக்கும் வாத்ஸல்யத்துக்கு முரிய நண்பராக அன்றிலிருந்து எல்லா நாளிலும் இருப்ப வர். இப்போது வீடு வாசல் யாவும் இழந்து அகதியாய் வாழும் நிலையிலும் இலக்கியத்தை மூச்சாக்கி, பிடிமான மாக்கி, வடிகாலாக்கி தானும் பிறருமாய் வாழ முனைப வர். நாகேசு தர்மலிங்கத்தின் மறைவை மனதுள்தாங்கி, இவருடைய எழுத்தை நூலாக்கியுள்ள டொமினிக் ஜீவாவை என்ன வார்த்தை சொல்லிக் கெளரவிப்ப
தென்று எனக்குத் தெரியவில்லை.
- செ. யோகநாதன்
சென்னை-93
9-3.66

Page 9
10.
1.
12.
உள்ளடக்கம்
குங்குமப் பொட்டு
வரண்ட உள்ளங்கள்
மன்னிப்பு
அந்நியம்
பிரயத்தனம்
ஊன்றுகோல்
ஞாயிற்றுக்கிழமை
உண்டியல்
பென்சன்
விதவை
உள்ளும் புறமும்
ஆடி அமாவாசை
7
28
37
42
5
57
68
76
87,
95
04
3

குங்குமப் பொட்டு
நான்கு திசைகளிலும் இருந்து வரும் பிரதான வீதிகள் சந்திக்கும் நாற்சந்தி. அந்தச்சந்தியில் சடைத்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் ஆலமரம். ஆதனால் அந்தச் சந்திக்கு ஆலடிச்சந்தியென்றே பெயர் வழங்கப் படுகிறது அந்தச் சந்தியில் ஒரு பிள்ளையார் கோயில்? சங்கக்கடை, வாசிகசாலை, ரீசன் சென்ரர். சிறிய பஸ் தரிப்பு நிலையம், நாகமுத்தாச்சியின் தேத்தண்ணிக்கடை, இன்னும் வேறு கடைகள் என்று அமைந்திருப்பதனால் அந்தக்கிராமத்தில் ஒரு சிறிய நகர்த்தன்மையை அந்த ஆலடிச் சந்தியே காட்டுகிறது. கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் பொழுது போக்கு இடமே அந்தச் சந்திதான். வெய்யில் வெக்கை தாங்கமுடியாத கோடை காலம் என்றாலும் மழைகொட்டும் மாரிகாலம் என்றா லும் அங்கு வருவோருக்கு அந்த ஆலமரம் குடை விரித்து பாதுகாப்பு வழங்கும்.
இன்றும் வழமைபோல் அந்தக்கிராமத்தின் பொழுது போக்குக்கூட்டம் அந்த ஆலநிழலின் கீழ் நின்று சுகம் காணுகிறது. கிராமத்தின் புதினங்கள், இலங்கை, உலக அரசியல் என்று அவர்கள் வாதப் பிரதிவாதங்களைச் செய்வார்கள். அந்தக்கிராமத்தின் பெரும்பாலான ஆண்கள், கொழும்பு, வெளிநாடு, என்றே தங்கள் ஜீவனோ பாயத் தொழிலைச் செய்து வருகிறார்கள். இவர்கள் விடுமுறையில் அந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டால்
sy-2

Page 10
அந்தியம் O 18
அந்தச் சந்திக்கு வராமல் இருக்கமாட்டார்கள். அந்தச் சந்திக்கு வந்து அங்குகூடும், நாலுபேரோ வாதப் பிரதி வாதங்கள் செய்தால் முழுக்கிராமத்திற்கும் இன்னார் கொழும்பில் இருந்தோ, வெளிநாட்டில் இருந்தோ வந்து விட்டார் என்று தெரிய வந்து விடும்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து விடுமுறையில் தனது கிராமத்துக்கு வந்த சிவா தன்னுடைய சயிக்கிளைத் துடைத்துக் காற்றடித்து ஆலடிச்சந்தியை நோக்கி மிதிக் கிறான். தான் ஊருக்கு வந்த செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற ஆவலைவிட இன்னுமோர் ஆவலே அவனுடைய மனத்தில் கனத்தது. ஒரு கிழமைக்கு முன் கிடைத்த நளாயினியின் கடிதமே அந்தக் கனத்தில் சந்திக்குப் போய் நண்பர்களைப் பார்த்துவிட்டு அப்படியே நளாயினி வீட்டு ஒழுங்கைப் பக்கமாகச் சயிக்கிளைத் திருப்புவதே அவனுடைய நோக்கம். நாளாயினியின் வீடு சற்று தூரத்தே கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்துக்கு முன்னால் செல்லும் சிறிய ஒழுங்கைக்குள் அமைந்திருக்கிறது.
* ஹலோ சிவா வாரும், வாரும் எப்ப கொழும்பில் இருந்து வந்தனிர்?"
சந்தியில் நின்ற அவனது வயதொத்த நண்பர்களும் வேறு பெரியவர்களும் வரவேற்றார்கள்.
• நான் ராத்திரி வந்தனான். எப்படி நீங்கள் எல்லாரும் சுகமாக இருக்கிறீங்களா?"
சிவாவும் அவர்களுக்குப் பதில் கூறி விட்டு நண்பர்கள் வழமையாக எதிர்பார்க்கின்ற நாகமுத்தாச்சியின் தேத் தண்ணிக் கடைக்குபோய் பிளேன்ரியும் சிகரட்டும் அடிக் கின்ற அடுத்த திகழ்ச்சிக்கு ஆயத்தமானான்.

19 ロ நாகேசு தர்மலிங்கம்
* அதுசரி சிவா உன்ர உத்தியோகச்சம்பளத்தை விட ரேடியோ, ரூபவாஹினியில இருந்து கூடக்காசு வருகுது போல ரேடியோவைத் திறந்தா உன்ர பேர்தான் போகும். போன சனிக்கிழமைகூட நீ எழுதின நாடகம் தானே ரேடியோவில போச்சுது."
சிகரெட் புகையை வெளியே தள்ளியவாறு ஈசன்
கூறினான். அதை ஆமோதிப்பது போல சுந்தரனும் தலையை அசைத்துப் பிளேன் ரீயைப் பருகினான்.
ரேடியோ ரீவியில என்னமச்சான் வருமானம். நாலு பேருக்கு என்னைத் தெரியவரும். அதில் ஒரு சின்னச் சந்தோஷம். அவ்வளவுதான்,'
சிவா கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்று அம்மன் கோவிலடிப்பக்கம் புறப்படுவதற்கு பஸ் தரிப்புக் குப்பக்கத்தில் உள்ள வேலியில் சாத்திய தனது சயிக்கிளை எடுக்கச் சென்ற சிவாவுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நீல நிற பூப்போட்ட கவுன் அணிந்து கையில் புத்தகம் கொப்பி குடையுடன் நளாயினி அந்த பஸ்தரிப்பில் நிற்கிறாள். நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த அந்தமுக இதழ்மூடிச் சிவாவுக்குச் சிறு புன்னகையை உதிர்த்தது. ஈசனும் சுந்தரனும் அதை அவதானிக்கத் தவறவில்லை. சிவாவின் இரண்டு தோள்களிலும் தங்கள் முழங்கைகளால் இடித்துவிட்டு அவர்களும் நின்று விட்டார்கள்.
"ஹலோ நளா எப்படி? நான் உங்கட வீட்டுபக்கம் வர த் தா ன் இருந்தனான். தெரியாதா? கூட்டாளிகள் சந்திச்சிற்றாங்கள் அதுதான் கொஞ்சம் கணங்கீற்றுது. எங்க ரீயூசனுக்கா? எப்ப எக்சாம்?*
கைதந்தியடிக்க சயிக்கிள் பூட்டைத்திறந்து கொண்டு சிவா கேட்டான்,

Page 11
அந்நியம் ロ 20
"ஐயோ சிவா அங்க ஆக்கள் எல்லாரும் எங்களைத் தான் பாக்கீனம். உங்கட பிறெண்ட்ஸ்மாரும் இங்கபாத்து ஏதோ கதைக்கீனம் நான் இண்டைக்கு கிளாசைக் கட் பண்ணிப் போட்டு ரவுணில் பஸ்ராண்டில நிற்கிறன் அடுத்த பஸ்ஸில் நீங்க ரவுணுக்கு வாங்கோ. கட்டாயம் வாங்க எதிர்பாத்தெண்டு நிற்பன்'
உடல் நடுங் க பஸ்தரிப்பின் இரும்புத்தூணை அழுத்திப் பிடித்தபடியே நளாயினி கூறினாள். அந்தக் இராமத்தில் இருந்து பட்டிணத்திற்குச் செல்ல பஸ் ஆடி, ஆடி, பெரிய ஒசையை எழுப்பிக் கொண்டு கரிப் புகையைக் க்திக் கொண்டும் வந்து அந்த பஸ்தரிப்பு நிலையத்தில் பிறேக் போட்டது.
சரி நளா ரவுண் பஸ்ராண்டில நில், நான் அடுத்த பஸ்ஸில வாறன் ."
கையசைத்துக் கூறிய சிவா அதிவேகமா கதனது சயிக்கிளை வீட்டை நோக்கி மிதித்தான்.
நேற்று ராத்தித்தான் கொழும்பில் இருந்து வந்த களைப்போடு இன்று அவசர அவசரமாக ரவுணுக்குச் ல் வெளிக்கிட்டது அவனுடைய அம்மாவுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெளிக்கிட்ட சிவா ரவுணுக்குப் போவதற்காக மீண்டும் ஆலடி சந்தி பஸ் தரிப்புக்கு வந்தான் : அவன் வரவும் மற்றுமோர் பஸ் அவனுடைய அவசரத்திற்கு ஏற்ப வந்த போதிலும் மெல்ல மெல்ல ஊர்ந்து ரவுணை நோக்கிச் சென்றது. அந்த பஸ்ளின் வேகத்தைவிட பண்ணைப் பாலத்தினூ டாக அவனுடை மனத்தின் வேகம் பல தடவைகள் பட்டி ணத்தின் பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று திரும்பியது. இறுதியாகக் கொழும்பில் ஒவ்வீசுக்கு வந்த நளாயினி யின் கடிதம் பற்றிய சிந்தனை&தோன்றியது.

21 | நாகேசு தர்மலிங்கம்
"உங்கள் வீட்டில் உங்களுக்குப் பெண் பார்த்து விட்டார்கள். வெகுவிரைவில் அப்பெண்ணுக்கு உங்களுக் கும் பதிவுத் திருமணம் நடைபெற உள்ளது. இச்' செய்தியை நான் உங்கள் எதிர்கால மனைவி கெளரி மூலமே அறிந்தேன். அவள் எனது முன்னைய நாள் பள்ளித் தோழி..."
நீண்ட அந்தக் கடிதத்தின் இந்தளவே அவன் தினைவில் செக்கு மாடாகச் சுழன்றது.
தன்னை அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது, தனது தனிமையிலான சிரிப்பை பஸ்ஸிக்குள் உள்ள மற்றவர்கள் பார்க்காத விதத்தில் சுதாகரித்துக் கொண்டான்.
மாப்பிள்ளைக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம். யாரந்தக் கெளரி? என்று அம்மா, அப்பா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
பஸ்ஸின் கடைசிச் சீற்றில் இருந்த சிலருக்கு ஒருவித ஆத்திர உணர்வும் ஏற்பட்டது.
'சொறி நளா நான் வந்த பஸ் ஊர்ந்து வந்தது. அது தான் லேட்டாப் போச்சுது.'
பஸ்ஸை விட்டிறங்கிய சிவா கூறினான், *இல்லைச் சிவா பஸ் மட்டும் லேட் இல்லை. நானும் உங்களுக்கு லேட் ஆகியிற்றன். அப்பிடியில்லை. நீங்க முந்தி; என்னை லேட் ஆக்கியிற்றீங்க."
'நளா நீ என்ன கதைக்கிறாய் இதுக்கா என்னைக் கொழும்பில் இருந்து வரச் சொன்னாய்?"
'நளா! ஆரந்தக் கெளரி? எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதுவரை எங்கட வீட்டில என்

Page 12
அந்தியம் 22
கல்யாணத்தைப் பற்றி யாருமே ஒண்டும் கதைக்கலே. இதில நிண்டு கதைச்சா நம்ம ஊர் ஆக்கள் ஆராவது பாப்பினம் வாரும் அந்த ஹோட்டலில் ஏதாவது குடிச்சென்டு கதைப்பம்,' M
**இல்லைச் சிவா! வேணாம் கெளரி என்ர சினேகிதி அவளுக்கு...”*
'வாயை மூடு நளா; என்னை நீ புரிஞ்சுகொண்டது இவ்வளவுந்தானா?*
"நான் புரிஞ்சு கொண்டது இல்லைச் சிவா, நீங்கள் என்னைப் புரிஞ்சு கொண்டதுதான் இவ்வளவு. அவ கெளரி அது தான் எங்கட மகாவித்தியாலயத்தில் என்னோட படிச்சவள். என்னைவிட வடிவான பெட்டை இதற்கு மேல நான் என்னத்தைச் சொல்ல?"
*நளா! நீ ஏன் இப்படிக் கதைக்கிற? உனக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு? இப்ப எனக்கு வாற ஆத்திரத்தித்கு அங்க பக்கத்து மேசையில இருந்து சாப்பிடுகிற ஆக்கள் பாக்கீனம் , **
** எனக்கு விசர் பிடிக்கயில்லை. என்னை விசர் ஆக்கினது நீங்க. என்ர வாயை மூடச் சொன்னாச் சரியா - 66r?''
கோப்பியை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு நளாயினி கூறினாள்.
ஏன் கோப்பியைத் தள்ளி வைக்கிற? நான் வாய மூடச் சொன்னது யாரோ உன்ர சினேகிதி கெளரிக்குத் துரோகமோ என்னவோ எண்ட. இப்ப உன்னை விட வவளை அழகி எண்ட இதுக்கும் சேர்த்துத்

23 நாகேசு தர்மலிங்கம்
நீண்ட நேர மெளனத்தின்பின் இருவரும் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே வந்தார்கள்.
நள யினி தன்னை ஊருக்கு அழைப்பதற்குப் போட்ட நாடகமே அந்தத் கடிதம் என்று எண்ணிய சிவாவுக்கு அவளை நேரில் சந்தித்து உரையாடிய பின்பே வீட்டாரின் இந்தச் செய்கைகள் வெளிச்சம் காட்டியது. வீட்டிற்கு வந்து ஹரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அன்றய தினசரியை வாசித்து கொண்டிருந்த சிவாவிடம் தந்தையார் மெல்லக் கதை கொடுக்க ஆரம்பிக்க அம்மா வின் காதும் யன்னல் ஒரமாக நின்று இவர்களுடைய உரையாடலைக் கேட்கத் தவறவில்லை.
'தம்பி தானே உன்னை ஊருக்கு வரச் சொல்லிக் கடிதம் போட நினைச்சனான். நல்ல காலம் நீயே வந்திற்ற. எல்லாம் தெங்கந்திடல் பிள்ளையாற்ற வேலை தான்."" t
* 'இப்ப ஏன் பிள்ளையாரை இழுக்கிறீங்க? ஏன் என்னை ஊருக்கு வரச் சொல்ல நினைச்ச நீங்க? அதை முதல்ல சொல்லுங்க."
வெளிக்காட்ட முடியாத ஆத்திர உணர்வுடன் சிவா கேட்டான்.
**உனக்கு மேற் கூடிய ஒரு நல்ல சம்பந்தம் பாத்திருக் கிறம், பெட்டை வடிவான பெட்டை, நல்ல சீதனம் தாய் தகப்பனும் நல்ல குடும்பம் ஆவணி பிறக்கச் செய்யலாம் னண்டு யோசிக்கிறம்."
"எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேணாம். கல்யாணம் கட்டிற நேரத்தை சொல்லுவன். புறமோஷன் GTš5Frub எடுக்கவேணும். அதுக்குப் பிறகு தான் கல்யாணம்.""

Page 13
அந்நியம் 24
அப்பா சொல்லி முடிப்பதற்குள் சிவா குறுக்கிட்டுக் கூறினான்.
** எனக்கு எல்லாம் தெரியும். உனக்கு இப்ப கல்யாணம் வேணாம் எண்டில்லை. ஆனால் நாங்க பேசிற அந்தப் பெட்டை வேணாம். அவ்வளவு தான்."
**விஷயம் விளங்கினாச் சரி. இனி யொண்டும் இதைப் பற்றிக் கதைக்காதீங்க."
*அப்ப அவன் சண்முகத்தின்ர மகளைத்தான் நீ முடிக்கப்போறயா?*
ஜன்னல் ஓரத்தில் இதுவரை நின்ற அம்மாவே வந்து பொறுமை இழந்து கேட்டா.
*"ஓம் நான் கலியாணம் கட்டினா அவள் நளாயினி யைத் தான் கலியாணம் கட்டுவன். இல்லாட்டி இப்டியே பிரமச்சாரியா இங்க ஊருக்கு வராம அங்க கொழும்பில இருந்திடுவன், சில வேளை உங்கடகண்ணில் முளிக்காமல் எங்கயாவது வெளிநாடு எண்டு போயிடுவன்.""
பெற்றோரின் பதிலை எதிர்பார்க்காமல் சிவா சிறிய தாயாரின் வீட்டை நோக்கி நடந்தான்.
இப்போ சிவா முன்பைப் போல் ஊருக்கு அதிகமாக வருவதில்லை. சம்பளம் எடுத்த மறுநாள் மணியோட ருடன் வீட்டிற்கு ஒரு கடிதம் வரும். அவ்வளவுதான் அதே வேளை நளாயினியுடன் உள்ள தொடர்பும் வெறும் கடிதங்களாகவே குவிந்தன. இன்று வந்த கடிதம் சிவாவுக்கு அளவிலாத சந்தோஷத்தை ஏற்படுத்தின. ஓர் ஏக்கத்தையும் தந்தது. அந்தக் கடிதத்தில். என்

25 நாகேசு தர்மலிங்கம்
சோதனை முடிந்து விட்டதென்றும் இனிக்கொழும் பில் வெள்ள வத்தையில் அக்கா வீட்டில் வந்து தங்கி ஏதாவது படிக்கப் போகிறேன்" என்ற செய்தியும் இருந்தது. w
அன்று வெள்ளவத்தை மாணிக்கப் பிள்ளையார் G3&srt u lov திருவிழாவில் நளாயினியின் அக்காவும் அத்தானும் சிவாவுடன் மணிக் கணக்கில் நின்று வழிந்து வழிந்து கதைத்ததும் அ வ ன் மனத் திரையில். நிழலாடியது.
**நளா! நம்ம ஊரவிடக் கொழும்பு எங்களை போன்ற காதலர்களுக்கு எவ்வளவு வசதியான இடம் பார்த்தியா?*
உண்மைதான் சிவா கோல் பேசையும், விக்ரோ ரியாப்பார்க்கையும், வெள்ளவத்தை பீச்சையும் பார்க் கேக்க விளங்குது.'
'நளா!நான் ஒரு விஷயம் கேட்கப்போறன் நீ என்
னோடகொழும்பில,திருயிறதெண்டாபொட்டுவைச்செண்டு வரவேணும், அப்பத்தான் பாக்கிற எங்களை வெறும் காதலர் கள்எண்டு நினைக்காம புருஷன் பெண்சாதி எண்டு நினைப்பினம்.”*
*ஏன் நான் இப்ப பொட்டு வைச்சுத்தானே இருக் கிறன்.
"'நான் இந்த ஒட்டுப் பொட்டைச் சொல்லயில்லை. இனிமேல் குங்குமப் பொட்டு வைக்கவேணும்.”*
* "சரி நீங்க சொன்னா வைக்கிறன் ஆனா...'
**சொல்லு, சொல்லு கலியாணம் கட்டாயம்."

Page 14
அந்நியம் ロ 26
* 'இல்லை இல்லை. . . " நான் நாளைக்கு வைச்சிண்டு வாறேனே"
காலிமுகத்திடல் கல்லில் இருந்து சிவாவின் மார்பில் சாய்ந்தபடியே நளாயினி கூறினாள்.
இன்று சிவா தனது அலுவலகத்திற்கு லீவு போட்டு
விட்டு வெள்ளவத்தை பஸ்தரிப்பு நிலயத்தில் நளாயினிக் காகக் காத்து நிற்கின்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவள் அவன் போன மாதச் சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த பச்சை நிற பூனம் சாரியை உடுத்து நெற்றியில் குங்குமப் பொட்டு, சிலை ஒன்று அசைவது போல் நடந்து வருகிறாள். நூறு மீட்டர் தொலைவில் அவள் வந்தபோதிலும் அவனுடைய இதய ரய்டரி அதன் அதிர்வுகள் பலமான சைகைகளைக் காட்டியது,
ஒட்டமும் நடையுமாக நளாயினிக்கு அருகில் சிவா செல்வதற்குள் அந்த ஜீப் உறுமிக் கொண்டு சென்று விட்டது. நளாயினியைப் போல் இன்னும் சில இளம் தமிழ் பெண்களும் அந்த ஜீப்பிற்குள் ஏற்றப்பட்டிருந் தார்கள்.
'ஐயா என்ன நடந்தது? இதில பச்சைச் சாறியேடே வந்த பிள்ளையை ஏனையா ஏத்திக் கொண்டு போறாங்க"
*வேட்டிகட்டியிருந்த வயது முதிர்த்த ஒருவரிடம் சிவா பதற்றத்துடன் கேட்டான். 'தம்பி அந்தப் பிள்ளை உங்களுக்குத் தெரிஞ்ச L 76ir6p6rtul urT” ”?
‘ஓமய்யா என்ன நடந்தது விஷயத்தைச் சொல் லுங்க"
**தம்பி அந்தப்பிள்ளை குங்குமப் பொட்டோடே அம்மன் சிலை மாதிரி வந்தது. பொட்டோட வந்தது*

27 O நாகேசு தர்மலிங்கம்
அவங்களுக்குப் பொறுக்கயில்லை. ஐடென்ரிக் காட்டக் கேட்டுபாத்தினம். வேற கதையில்லாம ஏத்திக் கொண்டு CurrSay lib' "
அந்த முதியவர் அப்படிக் கூறியதும் சிவாவுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
"ஐயோ ஏன்ர நளாயினி! என்னால தானே உனக்கு இந்தக்கதி, நான்தானே உன்னைப் பொட்டு வைக்கச் ଦଗଣFntଇଁrତ୪Tରormtଉଁt ' '
தலையில் அடியாக் குறையாய் புலம்பியபடி நளாயினி யின் அக்கா வீட்டை நோக்கி ஓடினான்.
இரண்டு நாட்களுக்குள் சிவா அரைவாசிக்கு மெலிந்து விட்டான். அலுவலகம், சாப்பாடு, நித்திரை, குளிப்பு என்று ஒன்றுமேயில்லை.
நளாயினியை வைத்திருக்கும் இடத்தை பல சிரமத் துக்கு மத்தியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஒரு நாளில் வைத்திருக்கும் ஒரிரு வார்த்தைகள் மட்டுமே கதைப் பதற்கு சிவா அனுமதிக்கப்பட்டான்.
நளாயினி வருவதற்கு எல்லாவிதமான முயற்சிகள் செய்தபோதிலும் அவன் மனம் சந்தேகப் புயலில் ஊசலாடியது. அவள் ஊரில் சயிக்கிள் பழகிய காலத்தில் விழுந்து எழும்பிய போது ஏற்பட்ட காயத்தின் உராய்வு களின் தளும்புகள் இப்போது ஆராயப்படுகின்றனவாம்.

Page 15
வரண்ட உள்ளங்கள்
வழமைக்கு மாறாக அந்தக் தெங்கந்திடல் சிறிய ஒழுங்கைக்குள் அந்தப் பெரிய, அதிக பணம் பெறுமதி வாய்ந்த "டற்சன்" கார் வந்து நிற்கிறது. குசினிப் பக்கமாக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பூரணம் தனது வீட்டு வாசலில் கார் வந்து நின்றதால் அப்படியே அடுப்படி வேலையை விட்டுவிட்டு காரைக் கூர்ந்து நோக்கினாள். இப்படியான கார்கள் இப்போ அந்தக் கிராமத்திற்குப் புதியதில்லை, என்றாலும் இந்தச் சிறிய ஒழுங்கைக்குள் வருவது புதிய தொன்றுதான்.
ஒருவேளை பொடியன் வாறாங்களோ..? சீ. இந்த ஏழைக் குடிசைக்கு அவங்கள் ஏன் வாறாங்கள்?"
தட்டியைப் பிடித்துக் கொண்டு காரைப் பார்த்துக் கொண்டு நின்ற பூரணத்தின் உள்மனம் ஒருவித பய உணர்வுடன் உதடுவரை வார்த்தையைத் தள்ளியது.
* தம்பி நீ காருக்குள் இரும். நான் ஒருக்கா இந்த வீட்டுக்குப் போயிற்று வாறன்.""
தோளில் சால்வையைச் சரி செய்துகொண்டு காரை விட்டிறங்கிய மாணிக்கத்தார் பூரணத்தின் வீட்டை நோக்கி நடந்தார்.
"ஆரு அண்ணனா? நான் "ஆரோ எண்டு பயந்திட் டன். இப்படிக் கார் ஒருநாளும் எங்கடபடலயிக்க வந்து நிண்டதுகிடையாது. வாங்க உள்ளுக்க. வந்து இப்படி இந்தத் தடுக்கில இருங்க”

29 O நாகேசு தர்மலிங்கம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு வந்த உடன்பிறப்பைக் கண்டதும் செய்வதறியாது உளம் பதை பதைக்க பனை ஓலைத் தடுக்குப் பாயை எடுத்துக் குந்தில் போட்டவாறு பூரணம் கூறினாள்.
கார்ச் சத்தம். வீட்டிற்குள் ஆம்பிளைக் குரல் என்பவற்றைச் செவிமடுத்த பூரணத்தின் மகள் சரசுவும் வீட்டின் பின்புறத்தில் இருந்து இழைத்த பாயையும் ஒலையையும் அப்படியே விட்டு விடடு வீட்டின் முன் புறத்துக்கு வந்து தடுக்கில் அமர்ந்திருந்த மாணிக்கத் தாரைக் கண்டதும் அம்மாவின் அண்ணன் என்பதை மிகவும் கஷ்டப்பட்டுக் கற்பனை செய்து அறிந்து கொண்டாள்.
* என்ன சரசு அப்பிடிப் பாக்கிற? இவர் என்ர அண்ணன். உனக்கு மாமா. கொழும்பில பல கடை யளுக்கு முதலாளி. யாழ்ப்பாணத்தில் நாவலர் றோட்டில பெரிய வீடும் இருக்கு"
* உடன் பிறந்த அண்ணனைப் பற்றி பூரணம் மகள் சரசுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நிலையே இந்த இரண்டு குடும்பங்களின் ஒட்டுறவை வெளிப் படுத்தியது.
"ஒமம்மா, அப்புவட செத்த வீட்டில சின்னவயதில் இவரைக் கண்டன் எண்டாலும் எனக்கு ஞாபகம் இருக்கு வீட்டின் முற்றத்தில் நின்றவாறு சரசு கூறினாள்.
**சரசு போய் மாமாவுக் குத் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாம்மா"
அண்ணன் தனது வீட்டிற்கு வந்துவிட்டார் என்ற அளவிலாத சந்தோஷத்தில் பூரணம் கூறினாள்.

Page 16
அந்நியம் 30 ם
**இல்லைத் தங்கச்சி, எனக்தொரு தண்ணியும் வேணாம். இந்த ஊர் உப்புத் தண்ணியை வாயிலும் வைக்க ஏலாது. சீ. இது என்ன ஊரப்பா? சரியான வெய்யில். குடிக்கத் தண்ணியில்லை. முகம் கழுவினா முகம் எரியுது. என்னெண்டுதான் நீங்க இந்த ஊரில இருந்து சீவிக்கிறீங்களோ கடவுளுக்குத் தான் தெரியும்.'
மாணிக்கத்தார் தேநீர் வேண்டாம் என்று கூறியதுடன் தான் பிறந்த அந்தக் கிராமத்தைப் பற்றியும் விமர்சிக்கத் தொடங்கினார்.
**அண்ணி, பிள்ளையஸ் ஒருவரும் வரவில்லையா? நீங்க மட்டும்தான் வந்தனிங்களா? கார்தானே, அவர்களை யும் எங்கடவீட்ட கூட்டிக்கொண்டு வந்திருக்க லாமே.”* ܫ
'அண்ணியும், பிள்ளையஞம்,நானுந்தான் வந்தனாங் கள், அவை அங்க பக்கத்து வீட்டுச் சின்னக் குட்டியைப் பிடிச்சு எங்கட வீட்டைத் தூசிதட்டிக் கட்டிக் கழுவி வளவையும் துப்புரவாக்கிக் கொண்டு நிக்கினம். அதால நான் தனிய வந்தனான். இந்த ஊர்ச் சனங்களும் சரியான மோசம். ஒரு குடி இல்லாத வளவுக்க இருக்கிற தேங்காய் மாங்காய்க் கொண்டு போறதோடை வேலியை யும் பிச்சுக் கொண்டு போகுதுகள். நல்லகாலம் நாங்க அந்த யாழ்ப்பாண ரவுனோட இருக்கிறது. இல்லாட்டி எங்களையும் பிச்சுத் திண்டிடுவாங்கள். '
ஏதோ புதிய இடத்திற்கு வந்தவர்போல் மாணிக்கத் தார் கூறினார்.
**நீங்க விட்ட பிழைக்கு ஏன் ஊரப் பேசுறிங்க. அந்தப் பென்னம் பெரிய வீட்ட றோட்டுக் கரையில கட்டிப்

31 நாகேசு தர்மலிங்கம்
போட்டு ஒரு குடியையும் இருக்தாம வெறு வீடா விட்டா சனங்கள் அப்பிடித்தானே செய்யும்'
* நீ என்ன பூரணம் சொல்லுற? ஆரயேன் அந்த வீட்டில இருத்தினால் பிறகு அதுகள் எழும்பமாட்டான் எண்டு அடம் பிடிச்சா அது வேற வழக்கு வம்பு எண்டு திரியவேணும். ஏனிந்தக் கரைச்சல் எண்டுதான் வெறும் வீடா விட்டிருக்கிறேன்.”*
படலையைத் திறந்துகொண்டு தனது கீச்சிடும் பழைய சயிக்கிளை உருட்டிக் கொண்டு பூரணத்தின் மகன் சந்திரன் வந்தான். ஒழுங்கைக்குள் நிற்கும் "டற்சன் சனி கார் பற்றியும், "இப்படிக் கார் வைத்திருப்பவர்கள் யார் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்’ என்ற எண்ணத்தில் வீட்டிற்கு நுழைந்த அவனுக்குத் தாய் மாமன் மாணிக்கத் தாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான். பல இடல் களில் அவரைக் கண்டிருந்தான், ஆயினும் இந்த வீட்டிற்கு எட்டு வருடங்களுக்கு முன் அப்புவின் செத்து வீட்டிற்கு மட்டுமிே அவர் வந்திருந்தார்.
**ஆரு பூரணம் இவன் உன்ர மகனா? ஆள் வளர்ந்து நல்ல இளந்தாரியாயிட்டான். என்ர இரண்டாவது மகள் லதாவுக்கு மூண்டு வயதுக்கு மூப்பு. அவள் மூத்தவள் செல்விக்கு உன்ர மகள் இரண்டுவயதுக்கு இளமை. ஆள் என்ன செய்யிறான்.
வீட்டிற்குள் வந்த சந்திரனைப் பார்த்துக்கொண்டு மாணிக்கத்தார் கேட்டபோது, தனது பிள்ளைகளுடன் சந்திரனின் வயதை ஒப்பிட்டுக் கூறியது பூரணத்தின் அடிமனதில் உறைந்திருந்த நப்பாசையின் நரம்பைச் சுண்டிவிட்டது போன்ற உணர்வை அவளுக்கு ஏற்படுத் தியது.

Page 17
அந்நியம் D 32
தம்பி எஸ். எஸ். ஸி. சோதனை எடுத்திட்டு சும்மா இருக்கிறார். உங்கட லதா என்ன மாதிரி அண்ணா? லேடீஸ் கொலிச்சில பிள்ளை படிச்சுது சோதனை பாசா?"
"அவள் இப்பதானே எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். சரி நீ இப்ப உன் புருஷன் ஆறுமுகம் செத்த பிறகு எவ்வளவு கஷ்டப்பட்டு உருக்குலைஞ்சுபோய் இருக்கிறாய் அங்க கொழும்பில என்ர கடைக்கு ஒரு நல்ல ஆள் வேணும். உன்ர மகனை அனுப்பினா எனக்கும் நம்பிக்கை யான ஒரு ஆள் கிடைச்சமாதிரி. உங்களுக்கும் மாதம் மாதம் சம்பளம் அனுப்புவான்தானே'
மாணிக்கத்தாரின் முதலாளிக் கண்ணின் பார்வை வார்த்தையாக வெளி வந்தது.
"அவன் வெளிநாடு போறன் எண்டு சொல்லுறான் அண்ண. பாப்பம் நான் கேட்டு சொல்லுறன் .
அண்ணனின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லத் தைரியமற்ற பூரணம் சொன்னாள்.
*நாளைக்கு அம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு வருவீங்களா?*
"அதுக்குதானே நாங்கள் இண்டைக்கு வந்தனாங்க. நாளைக்குத் தேர்த்திருவிழாவை முடித்துக் கொண்டு பின்னேரமே யாழ்ப்பாணம் திரும்பிவிடுவான். அங்க வீடு பூட்டிக்கிடக்கிறத்தோட நாய், கோழி எல்லாம் பட்டினி யால செத்துப் போயிடும். அதோடே பிள்ளையஞக்கும் இந்த ஊர் வெய்யில், உப்புத்தண்ணி பழக்கமில்லை . ஏதாவது வருத்தங்கள் வந்திடும். சரி தங்கச்சி நேரமும் போயிட்டுது நான் போயிற்று வாறன். அண்ணி பிள்ளை

33 நாகேசு தர்மவிங்கம்
யளைப் பாக்கிறதெண்றால் நாளைக்குக் கோயிலுக்கு வாங்க * எழுந்து மாணிக்கத்தார் காரை நோக்கி நடத் தார்.
எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சரசுவும், சந்திரனும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே உரையாடினாலும், தாய் மீது சீறிப்பாய்ந்து கதைத் தார்கள்.
என் அம்மா, உன்ர அண்ணன் சிங்கப்பூரிலேயா பிறந்தவர்? இந்த வரண்ட தீவில்தான் பிறந்தவர். இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்து அங்க யாழ்ப்பாண டவுனில் சீவிச்ச உடன இந்த ஊர எவ்வளவு இழக்கமாகக் கதைக்கிறார் பார்த்தயாடா சந்திரன்'
இவ்வளவு நேரமும் பொறுத்திருந்து ஆத்திரத்தைக் கொட்டுவது போல் சரசு கூறினாள்.
"இவங்கட உறவே எங்கட குடும்பத்துக்கு இருக்கக் கூடாது, எங்கட குடும்பத்துக்கு மட்டுமில்லை இந்தக் கிராமத்துக்குக் கூட இவங்கட காத்துக்கூடப் படக் கூடாது. ’’
அக்காவுடன் சந்திரனும் சேர்ந்து ஆக்ரோஷமாகக் கூறினான்.
"நீங்க என்ன சொன்னாலும் என்ர ஒரேயொரு உடன் பிறப்பு நான் விடமாட்டான்."
ஒருவித பரிதாப உணர்வுடன் பூரணம் கூறினாள்.
3--س y•و

Page 18
அந்நியம் 34
"பார்த்தாயக்கா அவற்ற கடைக்கு என்னை வரட்டாம். நான் எங்கயாவது போய் மூட்டைசுமந்தாலும் இவரட்டப் போகமாட்டான். அடுத்தது அண்ணி, பிள்ளையளைப் பார்க்க வேணுமெண்டால் நாளைக்கு அங்க கோயிலிற்கு வரட்டாம். அவை ‘றொக்வெல்லர்” பரம்பரை, இங்க எங்கட மண் வீட்டுக்கு வந்தாத்தேய்ஞ்சு போயிடுவினம். ஆருநம் நாளைக்குக் கோயிலிற்குப் போனா அங்க அவை யாரோடையும் கதைக்கக் கூடாது' vn
"இதை எனக்குச் சொல்லாத சந்திரன், உன்ர அம்மாவுக்குச் சொல்லு, எவ்வளவுகாலத்துக்குப் பிறகு வந்து தேத்தண்ணி கூடக் குடிக்காமப்போனவற்ற பெண்சாதி பிள்ளையளைக் கண்டவுடன் வலியப்போய் தானாக் கதைத்து உறவு கொண்டாடுவா’
அக்காவும், தம்பியும் இப்படி மாறி மாறிக் கூறியது பூரணத்தின் ரோஷ நரம்புகளை தட்டி எழுப்பியது. என்றாலும் சகோதர பாசமும் இடையிடையே தலையை நீட்டியது.
அந்தக் கிராமத்தின் தெற்கு கரையில் குடி கொண்டி ருக்கும் கண்ணகை அம்மன்கோவில் தேர்த்திருவிழா முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டன. முன்பைப் போல இப்போ யாழ் பட்டினத்திற்கு இந்தக் கிராமத்தில் இருந்து நேராக நொடிப் பொழுதில் வாகனத்தில் சென்று வர முடியாது. பழைய கடல், தரை மார்ககமான பிரயாணங்களையே அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது பழைய அராலித்துறை முகத்தில் இருந்து தோணியிலும் ஏனைய பகுதிகளை வாகனங்கள் மூலமும் பிரயாணம் செய்யலாம். யாழ் கோட்டைக்கு அண்மையில் பண்ணைவீதி இருபப்தும் அதனால் அங்கு ஏற்படும் மனிதர் கொலைகளை தடுப் பதற்குமே இந்தப் பழைய பாதை இன்று செயல்படத் தொடங்கியது.

35 நாகேசு தர்மலிங்கம்
"பூரணம், பூரணம் நான் இங்க படலையிக்க நிண்டு தோண்டைகிழியக் கத்திறன். நீ இங்க வீட்டுக்க இருந்து என்ன செய்யிற?" படலையைத் திறந்துகொண்டு ஆலடிச் சந்திச் செல்லாச்சி அக்கா குரல் கொடுத்தாள்.
*-ՉԱՓ செல்லாச்சி அக்காவா? அப்படி என்ன அவசரம்? எனக்கு சரியான காய்ச்சல், அதுதான் உள்ளுக்க படுத்துக் கிடந்தனான்."
பழைய சீலையால் உடலைப் போர்த்திக் கொண்டு முற்றத்துக்கு இறங்கியவாறு பூரணம் கூறினாள்,
"அங்க உன்ர அண்ணன்ர வீட்டில ஒரே கண்ணிரும் கவலையுமாக இருக்கினம் இது உனக்குத் தெரியாதா?
'நீ என்னக்கா சொல்லுற? யாழ்ப்பாணம் அவை வீட்டைபோயிற்றாவாறாய்?
** எடி பூரணம், அங்க யாழ்ப்பாணத்திலை உன்ர அண்ணன்ர வீட்டுக்கு மேல ஷெல் விழுந்து அப்பிடியே வீடு தரைமட்டமாயிற்றுதாம், நல்ல காலம் உன்ர அண்ணன், பெண்சாதி, பிள்ளையன் நல்லூர்த் திருவிழா வுக்குப் போயிருந்ததால உயிர் தப்பி இந்த அராலிக் கடலுக்குள்ளாலை விழுந்தெழும்பு இஞ்ச வந்து தங்கட வீட்டில இருக்கினம்’
'அய்யோ என்ர நல்லு ரானே, அதுகளட உயிர் தப்பினது உன்ர கருணைதானே, எடி சரசு அந்தச் சீலையை எடு நான் ஒருக்கா அண்ணன் வீட்டைபோயிற்று வாறன்!"
அவசர அவசரமாகப் பூரணம் வெளிக்கிட்டாள்.

Page 19
அந்நியம் 36
'அக்கா உணக்கொரு விஷயம் தெரியுமே? தாக்குப் பட்டது நம்மட இனம் எண்டாலும் தெய்வம் ஊரை நிந்திச்சவைக்கு ஒரு தண்டனை குடுத்துத்தான் இருக்கு!
அந்தக் கீச்சிடும் பழைய சயிக்கிளை உருட்டியவாறு வந்து கொண்டே சந்திரன் சரசுவிடம் கூறினான்.
**ஒமடாதம்பி இப்ப அந்தக் குடும்பம் ஊரோட இந்த வெய்யில், உப்புத் தண்ணி ஒண்டும் வந்திற்றிடன Lonrip அவைக்கு ஒத்துவராதே. என்ன T செய்யப் GBurr 967 b?” ”
மாமாவின் பழைய கதையை மறக்காதவளாய் சரசு கூறின்ாள்.
"எங்கட ஊர் வரண்டுபோனத்துக்கு இப்பதானக்கா எனக்குக் காரணம் விளங்குது. இவங்களைப் போல வரண்டுபோன மனம் படைச்சவங்களாலதான் எங்கட ஊர் வரண்டது'
சந்திரன் கூறியதை சரசுவும் ஏற்றுக் கொண்டாள்.

மன்னிப்பு
இன்று அந்த முற்றவெளி விழாக்கோலம் பூண்டி ருக்கிறது. மின் விளக்குகளின் பளிச்சென்ற வெளிச்சம். மாவிலை, குருத்தோலைத் தோரணங்கள்; இடைக்கிடை பட் டு க் க ட த ரா சி ச் சோடனைகள், ஒலிபெருக்கியில் சினிமாச் சோகதேங்கள், இப்படிப் பல. அந்த ஊரின் நாலுபக்கத்திலும் இருந்து மக்கள் எறும்புக்கூட்டம்போல் அந்த முற்றவெளியை நோக்கி வந்து கொண்டிருக்கி றார்கள். அங்கு கூட்டம் ஒன்று நடைபெறப் போகிறது. அதுவும் ஒரு அஞ்சலிக்கூட்டம். ஈழத்தின் பிரபல எழுத் தாளரும் சமூகத் தொண்டருமான பரமானந்தம் மாஸ்டரின் மறைவைஒட்டி அப்பகுதி மக்கள் அந்த அஞ்சலிக்கூட்டத்தை நடத்துகிறார்கள் முற்றவெளியின் நடுப்பகுதியில் மேடைஒன்று அமைக்கப்பட்டு பரமானந்தம் மாஸ்டரின் திரு உருவப்படத்துக்கு மாலை ஒன்றும் போட்டுவைத்து அதன் முன்பாக இரண்டு குத்துவிளக்கு களும் ஏற்றப்பட்டிருக்கின்றன. கூட்ட அமைப்பாளர் பேரின்பநாதன் அங்குமிங்குமாக ஒடித்திரிந்து கூட்டத் தைத் தொடங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார்.
வித்துவான் சண்முகம் தலைமையில் அஞ்சலிக்கூட்டம் ஆரம்பமாகிறது. மாரிக்காலத்தில் நீர் நீரம்பி நீச்சல் தடாகம் போல் காட்சியளிக்கும் அந்த முற்றவெளி, இப்போ கோடைகாலமாதலால் இடைக்கிடை காற்றின் வேகத்தால் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டு இருந்தது. தலைவரின் தலைமை உரையைத்தொடர்ந்து

Page 20
அந்நியம் O 38
சிவகுருநாதன், மலர்வேந்தன், காசிலிங்கம் Grairro உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்கள், பிரமுகர்கள் பலர் அந்த மறைந்த எழுத்தாளனின் எழுத்துப் பணிகளையும் சமூகத் தொண்டையும் வியந்து கூறி விளாசிக்கொண்டிருந் தார்கள். எழுத்தாளர் சிவானந்தன் அந்த மறைந்த எழுத்தாளனைப் பற்றி மற்றவர்களுக்கு கண்ணிர் வரும் விதத்தில் பேசினார். தனக்கே உரிய பாணியில் கனத்த தொனியில் பேசிய சிவானந்தன்.
* ஒரு எழுத்தாளன் எதை எதை எழுத்தில் வடித் தானோ அதன்படி இம்மியளவும் பிசகாது வாழ்ந்து காட்டினான்'
பரமானந்தம் மாஸ்டரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார். பரமானந்தம் மாஸ்டரின் மாணவர் களாகிய எங்களுக்கு இது புதியது இல்லை என்றும் பல புதியவர்களுக்கு அவை முக்கியமான தகவல்கள்தான். அத்த முற்ற வெளிக்கு அருகில் அமைந்திருக்கும் தாழ்த்தப் பட்டவர்களின் குடிசைகளைச் சுட்டிக்காட்டி.
"பரமானந்தம் மாஸ்டர் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மேம்பாட்டுக்காகவும் Lunt(6) பட்டுழைத்தார்’ என்று அவரின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். இதைச் செவிமடுத்த மக்களுக்கு அந்த முற்றவெளியில் சிவானந்தன் உ ரு வில் பரமானந்தம் மாஸ்டர் நிற்பதுபோன்ற உணர்வே ஏற்பட்டது. சிவனாந்தன் அமர்ந்தவுடன் கூட்டத்தில் உள்ளவர்களின் கர கரகோஷம் வானைப் பிளந்தது. தலைவர் எழுந்து.
'அடுத்ததாக திரு. புண்ணியமூர்த்தி அவர்கள் பேசுவார்கள்.""

39 நாகேசு தர்மலிங்கம்
என்று கூறி அமர்ந்தார். எங்கோ ஒரு மூலையில் நின்ற புண்ணியமூர்த்தி மேடைக்கு வந்து ஒலிவாங்கியின் முன் நின்று செருமத்தொடங்கவே என் இதயம் அதிகம் அடிக்கத்தொடங்கி ஆத்திரஉணர்வு மேலிட்டது. மற்றைங் பேச்சாளர்களைப்போல் அவரும் சோகக்குரலில்,
*சமுகத்தொண்டன் பரமானந்தன் மாஸ்டரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்'
என்று பேசத்தொடங்கினார். அவரது பேச்சு, மேடைநளினம் என்பனவெல்லாம் என்மனத்தில் மேலும் மேலும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இந்த மறைந்த எழுத்தாளனின் மரணத்துக்கு காரண மாக இருந்தவர்களில் இந்த புண்ணியமூர்த்தியும் ஒருவர். பரமானந்தம் மாஸ்டரின் "தாழ்த்தப்பட்ட மக்களின் குடி தண்ணிர்ப் பிரச்சியைச் சத்தியாக்கிரகப் போராட் டம்" என் நினைவில் வந்தது.
"சாதிப்பாகுபாடு குல அடிப்படையில் இல்லை. குண அடிப்படையிலேயே எழுகிறது. என்று எழுதிய அந்த எழுத்தாளன் அந்தக் கிராமத்தில் உள்ள நன்னீர்க் கிணற்றில் தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக தண்ணிர் அள்ள வேண்டும் என்று சத்தியாக்கிரகப்போராட்டம் தடத்தினான். அந்தக் கிராமத்துப் பழையதுகள் எதிர்த்து எழத் தொடங்கினார்கள். இதற்குத் தலைமை தாங்கிவர் திரு. புண்ணியமூர்த்தி எழுதுவினைஞர் அவர் கள். புண்ணியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி ஏவலாளர்களால் பரமானந்தம் ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு மரணமானார். ஆறுமாதங்களுக்கு முந்திய நிகழ்ச்சியை மறந்து எப்படித்தான் இந்த

Page 21
அந்நியம் 40
மனிதர் இந்த மேடைப்பக்கம் வந்தாரோ தெரிய வில்லை.
** என்ன ஏமாற்று வித்தை? ஒன்றையும் அறியாத மக்கள் பலர் அவரின் நீலிக் கண்ணிர் வடிப்பை கவலை պւer பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. ஒரு விசில் அடிப்போமா, என்று எண்ணியபோது பக்கத்தில் உள்ள வர்களின் ஞாபகம் வந்தது. என்னும் உண்வைம தெரிந்த வர்கள் இரண்டொரு பேர் அந்த கூட்டத்தில் இருக்கிறார் கள் என்பதைக் காட்ட இடைக்கிடை இரண்டொரு விசில் சத்தமும் கேட்டது.
கூட்டம் முடிந்து மேடையருகில் கீழே இறங்கி அத்தனை வெளியூர் உள்ளூர் பிரமுகர்களிடம் கை குலுக்கி புண்ணியமூர்த்தி வெளிப்படும்போது என் உடலில் ஈட்டி பாய்வது போல் உணர்ந்தேன்
நேரே சைக்கிளை வீட்டுக்குத் திருப்பி அன்றைய இரவு உணவைக் கூட சாப்பிடாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்தேன். அந்தப் புண்ணியமூர்த்தியின் நினைவிலிருந்து விடுபடாத எனக்கு என் மனைவி மணியின் ,
* சாப்பிடவாருங்களேன்."" என்ற குழைவான சொல்லும் அதிக எரிச்சலையே ஏற்படுத்தியது.
*" எனக்குச் சாப்பாடு வேணாம் மணி நீர் சாப்பிட்டு விட்டு நித்திரை கொள்ளும்."
என் நினைவலைகள் ஆத்திரத்துடன் புண்ணியமூர்த்தி யில் நிலை குத்தி நின்றது.

நாகேசு தர்மலிங்கம் ם 41
பழைய டையறிக்குள் இருக்கும் பரமானந்தம் மாஸ்டர் எனக்கு எழுதிய கடிதத்தின் ஞாபகம் வரவே அதை எடுத்துப் பிரிக்கிறேன்.
'தம்பி, யார் என்ன துன்பம் செய்தாலும் அவருக்கு
அதை திருப்பி செய்ய நினைக்காதே."
அவர் கைப்பட எழுதிய அவ்வரிகள் மனச்சுமையை மெள்ள மெள்ள, இறங்கியது.

Page 22
அந்நியம்
லேவரம், அகதிமுகாம், கப்பல் என்ற வாழ்நாள் சந்திப்புக்களில் மூன்று மாதங்கள் யாழப்பாணத்தில் நின்றுவிட்டு மீண்டும் தொழிலிற்காகக் கொழும்புக்குப் போகிறேன், கொலைக்களத்திற்குக் கூட்டிச் செல்லும் பலிக்கடாவின் நிலையில் அந்தப்பஸ் பிரயாணம் இருந்தது
வவுனியாவை பஸ் தாண்டியதும் பழைய கலவரக் காலப் பயவுணர்வு என்னில் மீளாய்வு யெய்யத் தொடங் கியது. பஸ், புகையிரதப் பிரயாணங்களில் திடீரென நித்திரை கொள்ளும் பழக்கமுடைய எனக்கு அன்றைய்ப் பிரயாணத்தில் நித்திரைகூட வரவில்லை. கொழும்பு செட்டித் தெரு வில் ւյ6ն) GBunruiu நின்றது. நண்பன் திருவுடன் நேராக எனது அறையை நோக்கி நடந்தேன்.
இக் கலவர காலத்தில் எனது அறை அமைந்திருந்த பகுதி தாக்கப்படவில்லை என்ற போதிலும் பய உணர்வால் எல்லோரும் அகதி முகாமுக்குப் போனதால் நாங்களும் போனோம். அப்படியே அங்கிருந்து கப்பல் ஏறி யாழ்ப்பாணத்தை அடைந்தேன், அன்று பூட்டிய அறை இன்றும் பூட்டியே கிடந்தது, பக்கத்து அறை நண்பர்கள்; அவர்கள் கொ மு ம் பு த் தமிழர்கள்.

43 O நகேசு தர்மலிங்கம்
"அடே யாழ்ப்பாணத்தவங்கள் கப்பலில் போய் பஸ்ஸில் வந்திற்றிங்க போல வழமையான நட்புற வுடன் அந்தக் கோழும்பு நண்பன் மோகன் கூறினான்.
'ஒமோம், வயிற்றுக்குக் கஞ்சி வார்க்கிற தொழிலை இங்கதானே பார்க்க வேண்டியிருக்கு"
கலவர காலத்தில் அவனும் எங்களுடன் சேர்ந்து நடுங்கியதையும் பின் எங்களுடன் அகதிமுகாமில் தங்கி யிருந்ததையும் உள்ளூர நினனத்து சிறு புன்னகையுடன் நானும் பதிலுரைத்தேன்.
‘எப்படியோ பொம்பிளையளைக் கொண்டுபோய் உங்கட ஊரில விட்டிட்டு வந்திற்றிங்கள். இனி ஏதாவது பிரச்சினையெண்டால் நீங்க ஆம்பிளையஸ் எப்படியாவது
ஒடித் தப்பிவிடுவீங்க"
தாங்கள் கொழும்பை விட்டால் வேறேங்கும் போக முடியாது என்ற உணர்வுடன் மோகன் கூறினான்.
'அப்பிடியில்லை, , இனியொன்றென்றால் நீங்கள் எல்லோரும் தான் வரவேண்டும்' என்று ஒரு தேசிய உணர்வுடன் நான் கூறினேன்,
பல மாதங்களின் பின் எனது அலுவலகத்துக்குப் போ கிறேன். அலுவலக நண்பர்களின் ஒரு மாதிரியான பார்வையும், வரவேற்பும் எனக்குக் கூச்சத்தையும் ஒரு ஆத்திர உணர்வையும் ஏற்படுத்தியது. அவர்களின் பிறவிக் குணமோ என்னவோ நான் அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்ததும் எனக்குக் கோபத்தை ஏற்படுத் தும் விதத்தில் வரவேற்பை நடத்திவிட்டுச் சில நிமிஷங்

Page 23
அந்நியம் O 44
களின் பின் வழமையான நட்புரிமையுடன் உறவாடி எனது கலவரகால அனுபவங்களைக் கேட்டறிந்து வருத்தப்பட்டார்கள். பொதுமக்களுடன் தொடர்புடைய கருமபீட உத்தியோகத்தர்களில் நானும் ஒருவன், கலவரத் தின் பின் என்னை அலுவலகத்தின் உள்ளே எழுதுவினை ஞர் பதவியில் அமர்த்தி எனது மேலதிகாரி பொதுமக்களு டனான உறவை நிறுத்திவைத்தார்.
வன்செயல் கொடுமையின் எச்சங்களாக எரிந்த உடைக்கப்பட்ட கடை, வீட்டுக் கட்டிடங்கள் இப்போதும் காட்சியளிக்கின்றன. துவக்குச் சூட்டின் துளைகளும், மனித ரணத்தின் சிதறல்களும் சில பூட்டிய கடைகளின் கதவுகளில் தென்பட்டன. எனது அறையில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நான். கலவரகால உணர்வில் எதுவித மாற்றமும் இன்றியே கொழும்பு வீதிகளில் நடந்தேன். தொடர்ந்து மூன்று மாதங்கள் எனது சம்பளமும் யாழ்ப்பாணத்திற்கு மணிஓடர் மூலம் வந்தது, வேலை செய்யாமல் சம்பளம் பெறுவதில் ஒருவித மனவேதனை இருந்தபோதிலும் எமக்குக் கிடைக்கும் சம்பள அளவுத் தொகை கலவரகால இன ரீதியான தாக்குதல்கள் அக்கால அவஸ்தைகள் எல்லாம் என்னுக்குள் எதிர்ப்புணர்வை கிளப்பியது. நாலாவது மாதச் சம்பளம் அனுப்பப்பட மாட்டாது. ஊழியர்கள் வேலை செய்யும் அனுவலகங்களிலேயே வந்து பெற வேண்டும் என்ற கெடுபிடியாலேயே என்னைப் போல் பலர் கொழும்புக்குத் திரும்பினார்கள்.
மீண்டும் கொழும்பு சகஜ நிலைக்கு வந்துவிட்டது. சகலரும் தங்கள் பழைய இடங்களுக்குப் பயம் இன்றித் திரும்பலாம். வானொலி, டிவி, பத்திரிகைகள் இப்படி முழங்கியது. நான் கொழும்புக்குச் சென்ற காலத்தில்

45 D நாகேசு தர்மலிங்கம்
இது வெறும் முழக்கம் தான், மாறாக எங்கள் எல்லோரை யும் அழைப்பதற்கான வழியாகவே அப்போது இருந்தது. அவர்கள் இப்படி அழைக்காவிட்டாலும் எங்களைப் போன்றவர்கள் அழையா விருந்தாளியாக எப்படியும் தொழிலிற்காக வந்து விடுவோம்.
பணம், சொத்து என்று அந்தஸ்தில் உயர்ந்தவர்களை இந்தக் கலவரம் கீழ் மட்டத்துக்குக் கொண்டு வந்து விட்டது, இதேபோல் இப்படிக் கீழ்மட்டத்தில் இருந்த சிலரை மேல்மட்டத்துக்குக் கொண்டு வந்து விட்டி ருக்கிறது. இவர்களைப் போலவே உயர்ந்த கட்டிடங் களும் இடிந்து எரிந்து தரை மட்டமாகியுள்ளது. இதே போல் பலவகைச் சேரி வீடுகள் உயர்ந்த கட்டிடங்களாக மாறி இருக்கிறது. இவைகளையெல்லாம் அந்த மூன்று torrs இடைவெளிக்குப் பின் கொழும்பில் ஓரிரு வீதிகளால் நடந்து சென்றபோது என்னால் அவதானிக்க முடிந்தது.
இப்பொழுதெல்லாம் முன் பைப் போல் கொழும்பில் சினிமா, காலிமுகக் கடற்கரை, இலக்கியக் கூட்டம் என்றும் வெளிப்படுவதில்லை. பயம். இது எனக்கு மட்டு மில்லை. என்னைப் போன்ற எல்லோரையும் பற்றிப் படர்ந்த கொடி. வீடும் அலுவலகமும்தான் எனது Ꮏ Ꭿnr # 600Ᏸ0 .
* * goff) தைப்பொங்கல் வருகுதே ஊருக்குப் போகவில்லையா?* எனது அறை ந ண் பன் திரு. கேட்டான்.
"என்னடாப்பா வந்தும் இப்ப இரண்டு மாதம் ஆகியிற்றுதுதான். உனக்குப் போற ஐடியா இருக்கா? நீயும் வெளிக்கிட்டா நானும் வருவன், இல்லாட்டி சித்திரை வருஷத்தோட போவம்.”*

Page 24
அந்நியம் D 46
போக்குவரத்துக் கஷ்டத்தில் ஏற்படும் பயப்பீதி உணர்வுடன் கூறினேன்.
‘நான் எப்படியும் பொங்கலுக்குப் போக வேணும். ஏனேண்டா இது எனக்குத் தலை பொங்கல், ஒண்டுக்கும் யோசிக்காம நீயும் வா மச்சான்.""
கலவரகால விவோடு திருமணம் செய்து கொண்ட நண்பன் திரு கூறினான்.
**éF fl ! Dji of T6ör நாளைக்கே பஸ்ஸுக்கு புக் பண்ணுவம்'
யாழ்பாணத்திற்குப் புகையிரத சேவை நிற்பாட்டப் பட்டுவிட்டது. கொழும்பில் இருந்து பொங்கலுக்கு யாழ்ப்பாணம் செல்பவர்கள் முண்டியடித்துக் கொண்டு எல்லா பஸ்களையும் புக் பண்ணிவிட்டார்கள் எங்களுக்குப் பஸ் கிடைக்கவில்லை.
** சரியடாப்பா திரு, நாங்கள் பொங்கல் பயணத்தை நிற்பாட்டிவிடுவம்' அரை மனத்தோடு பயணத்தை ஆரம்பித்த நான் கூறுனேன்.
* நீ வராவிட்டால் நில்லும். நான் எப்படியும் போய்த் தான் தீருவன்'"
பிடிவாதமாகக் கூறிய திரு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகச் சென்றால் சீற் புக் பண்ணா மலேயே பஸ் எடுக்கலாம் எ ன் ற உத்தியையும், கூறினான்.
* யாப்பாணம், யாப்பாணம். ஒரு ஆலுக்கு துரத்தி நூரத்தி அம்பது ரூபாய்'

47 நாகேசு தர்மலிங்மம்
சிறுய பஸ் ஒன்றிள் வாசலின் நின்று கொண்டு ஒருவன் அரைகுறைத் தமிழில் கூறினான்.
நூற்றி ஐம்பது இல்லை இருநூறு ரூபாய் என்றா லும் பரவாயில்லை என்றி கூறு இருவரும் அந்த மினிபஸ் வில் ஏறி அமர்ந்து கொண்டோம். எங்களோடு பலர் முண்டியடித்துக் கொண்டு ஏறியதும் அவன்
'இடம் இல்லாதவங்க நில்லுங்க. கிருலப்பனையில ாங்கட வீட்டில ஆறு பேபிசீற் இருக்கு அதையும் பூட்டினா இருந்து போகலாம்.'
இப்படி அவன் கூறியதும் எனக்கு தலையைச் சுற்றக் தொடங்கியது. நண்பன் திருவின் மூகத்தைப் பார்த் தேன் . எங்களைப் போல் அந்த பஸ்ஸுக்குள் இருந்த எல்லோரும் செய்வதறியாது திகைத்தார்கள். பூலைக் கலவர காலப் பீதி எல்லோரையும் கவிந்து கொண்டது. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே முணுமுணுக்கத்
தொடங்கி விட்டார்கள் இதற்கிடையில் எங்களி டம் இருந்து பிரயாணப் பணம் அறவிடப் பட்டு விட்டது.
* காசையும் வாங்கியிருக்கிறாங்கள். இனி கிருலப் பனக்குக் கொண்டு போய் கையில மடியில இருக்கிறதைப் பறிக்க வேண்டியதுதான்.""
'கையில மடியில இருக்கிறத்த மட்டும் பறிச்சாப் போதாதா? ஆக்களையும் சரிக்கட்டியிடுவாங்கள் போல இருக்கு.'
அந்த பஸ்ஸ"க்குள் இருக்கும் எல்லோருடைய இதயள். களும் பட படவென அடிக்கத் தொடங்கியது.

Page 25
அந்நியம் O 48
பேபி சீற் கொண்டு வந்து பூட்டப்பட்டபோது தான் அத்தனை பேருக்கும் உயிர் மீண்டும் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
கிருலப்பனையில் பஸ் வந்து நின்றதும் எல்லோருடைய இதயங்களும் பட படவென அடிக்கத் தொடங்கியது.
பஸ் யாழ்ப்பாணத்தை நோக்கி ஒடுகிறது. ஒருவிதச் சந்தோஷம் எல்லோர் முகத்திலும் நிழல் ஆடிய போதிலும் பஸ் ஊடறுத்துப் போகும் இடங்களை நினைத்துப் பயப்
ஒவ்வொருவரையும் உலக்கியது.
அனுராதபுரம் வரை பஸ் வந்த வே கத் தி ல் யாழ்ப்பாணப் பாதையை விட்டு வேறோர் பாதைக்குத் திரும்பியது. என்னைப் போன்றவர்களுக்கு அப்போது ஒருவித உணர்வு மாற்றமும் ஏற்படவில்லை, காரணம் அந்த பஸ் சரியான பாதையில் போகிறது என்ற
Tsoter f).
இதென்ன இது, பஸ் வேற பாதையில் போகுது" வழமையான பாதை தெரிந்தவர்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். அப்போதுதான் தலையை நீட்டி எட்டிப் பார்த்த நான், வெள்ளரச மரப்பகுதியை நோக்கி பஸ் வருவதைக் கண்டேன்.
‘இதென்ன இந்த றுாட்டில பஸ்ஸைக் கொண்டு வருகிறீர்கள்" பஸ் ஒட்டிய வரை முன் ஆசனத்தில் அமர்ந் திருந்திவர் சிங்களத்தில் கேட்டார்.
* "பயப்படாதீர்கள், டீசல் அடிக்கப் பணம் இல்லை. எங்கள் உறவினர் ஒருவருடைய வீடு இந்த வீதியில் இருக் கிறது. அவர்களிடம் காசுவாங்கி டீசல் அடித்தால்தான் தொடர்ந்தும் பிரயாணம் செய்யலாம்’ என்று அந்த டிரைவர் கூறினான்.

49 நாகேசு தர்மலிங்கம்
* சரி இன்று இந்த பஸ்ஸோடு எல்லாரும் சமாதிதான் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் எங்கள் எல்லோருக்கும் தகனக் கிரியை நடக்கப் போகுது"
பக்கத்துச் சீற்றில் இருந்த திரு பயத்துடன் கூறினான்" எண்பத்தி மூன்று ஜூலைக் கலவரகால வெட்டுக் கொத்துக் கொலை, உயிருடன் எண்ணை ஊத்தித் தகனம் எல்லாம் என் நினைவில் வந்தது. "சரி இன்றுடன் எனது வாழ்க்கை அஸ்தமனமாகிறது’
இப்படியே எல்லோரும் கடவுளைப் பிரார்த்தனை செய்தார்கள்.
பஸ் சிறிய கை ஒழுங்கைக்குள் நிற்பாட்டப்பட்டு, பஸ்ஸைக் கொண்டு வந்த மூன்று இளைஞர்களும் ஒரு வீட்டிற்குள் சென்று அவர்களைத் தட்டி எழுப்பி தேநீர் பருகுவதை பஸ்ஸ"க்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந் தேன்.
மீண்டும் பஸ்ஸுக்குள் வந்து ஏறிய மூன்று இளைஞர் களும் பஸ்ஸை உரிய பாதையில் செலுத்தினார்கள் • அப்போதுதான் அந்த பஸ்ஸுக்குள் இருந்த அத்தனை பேருக்கும் மறுபிறப்பெடுத்த உணர்வு ஏற்பட்டது. கரடு முரடான அந்த வீதியில் ஏற்கனவே வெளிப்பட்ட பஸ்கள் அத்தனையையும் முந்திக் கொண்டு முறிகண்டியில் பஸ் வந்துநின்றது.
'அப்பாடா, இனிச் செத்தாலும் பரவாயில்லை" என்று கூறிக்கொண்டு எல்லோரும் கை கால்களை நிமிர்த்துவதற்காகத் துள்ளிக் கொண்டு இறங்கினார்கள்.
▪ወዘ–4

Page 26
அந்நியம் 50
முன்பின் யாழ்ப்பாணம் போயிருக்காத அவ்விளைஞர்கள் யாழ்ப்பாணத்தைப் பற்றி பலவாறு நினைக்கத் தொடங்கி விட்டார்கள். முன்னைய எங்களது பயம் இப்போது அவர்களை வாட்டத் தொடங்கியது. பஸ்ஸும் யாழ்ப் பாணத்தை நோக்கி விரைந்தது.
"யாழ்பாணத்தில் நாங்கள் நின்றால் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களா?' ஒருவித பயத்துடன் அவ்விளைஞர்கள் கேட்டார்கள்.
**தம்பிமார்களே நீங்கள் பயப்படாதீர்கள். அங்கு அப்படி ஒன்றும் நடக்காது’’
பஸ்ஸுக்குள் முணுமுணுத்த குரல்கள் முழங்கத் தொடங்கியது. யாழ்ப்பாணம் பஸ்ராண்டில் வந்து இறங்கிவிட்டோம்.
"நாங்கள் இந்த பஸ்ராண்டில் நிற்கப் பயமாக இருக்கும், பொலிஸ் ஸ்டேஷனில் பஸ்ஸை நிற்பாட்டியிற்று பின்னேரம் வாறவங்களோட கொழும்புக்குத் திரும்பப் போறம். ’’
*" தேவையில்லைத் தம்பி. நீங்கள் பயப்படாதீங்கள், பின்னேரம் மூன்று மணிக்கு இதில் திண்டு கொழும்பு. கொழும்பு எண்டு குரல் கொடுங்க. பிரயாணிகள் வருக வார்கள் ஏத்திக்கொண்டு போங்க', நானும் திருவும் கூறினோம்.
* 'இல்லை மாத்தயா எங்களுக்குப் பயமாயிருக்கு' என்று கூறிய அம்மூவரும் யாழ் பொலில் ஸ்டேஷனை நோக்கி பஸ்ஸைத் திருப்பினார்கள்.
'கடவுளே அந்நியமும் பயமும் எல்லோருக்கும் பொது வானதுதான்' எ ன் று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு சுதந்திரமாக வீட்டை நோக்கி நடந்தேன்.
-z

பிரயததனம்
இன்று வழமைக்கு மாறாக அவன் அலுவலகத்துக் கும் பிந்தியே வந்தான். ஆனால் கையெழுத்துப் புத்தகத் தில் சிவப்புக்கோடு விழவில்வை. அவசர அவசரமாக வந்து அலுவலகத்துக்குள் புகுந்து கையெழுத்துப் புத்தகத் தைப் பார்த்தபோது களைப்பும், பயமும் நிறைந்த அவன் நெஞ்சத்தில் இருந்து நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வெளி வந்தது. தனது கைக் கடிகாரத்தையும் அலுவலகக் கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த அவனுக்கு இரண்டும் ஒன்பதே காலைக் காட்டியது. சிறிது நேரச் சிறிய சந்தோ ஷத்துடன் எட்டேகால் என்று கையெழுத்தோடு நேரத் தையும் போட்டுவிட்டு தனது இருக்கையை நோக்கி நடந் தான். அப்போதுதான் ஏதோ நித்திரையில் இருந்து விழித்தவராக அவன் வேலை செய்யும் அந்தப் பகுதிக் குரிய பிரதம எழுதுவினைஞர் தனது மேசை மீது இருந்த மணியை அழுத்தி ஊழியர்களின் கையெழுத்துப் புத்த கத்தைத் தனது மேசைக்கு நகர்த்தினார்.
** என்ன சந்திரன் லேற்? அதுமட்டுமில்லை. ஒன்பதே காலுக்கு வந்திற்று இங்க புத்தகத்தில எட்டேகாலுக்கு வந்த்தெண்டு போட்டிருக்கிறீர்"
ஆத்திரம் கலந்த தொனியில் பிரதம எழுதுவினைஞர் சிறிசேன அவருடைய மொழியில் கேட்டார்.
* மன்னிக்க வேணும் சேர். பஸ் லேற், அதுதான் 19ந்தியிற்றன்"

Page 27
அந்நியம் 52
தாழ்ந்து குழைந்த குரலில் சத்திரன் அவருடைய மொழியிலேயே கூறினான்.
'இப்படிப் பிந்திவந்தால் அரை நேரம் லீவுபோட வேண்டியதுதானே”*
அவர் இப்படிக் கூறியதும் சந்திரன் வெள்ளைப் பேப்பர் ஒன்றை எடுத்து அரை நாள் லீவு எழுதுவதற்கு ஆயத்தமாகிய போது மீண்டும் பிரதம எழுதுவினைஞர் சிறிது சாந்தமாசு -
**சரி இன்று மட்டும் போ, இனிமேல் பிந்தக் கூடாது" என்று கூறினார். மற்றைய எழுதுவினைஞர்கள், கீழ்மட்ட ஊழியர்களின் ஒருவித பரிதாபமான பார்வை சந்திரன் மேல் பதிந்தது. தனது மேசைக்குச் சென்ற சந்திரன் கதிரையில் அமர்ந்த போதிலும் பிரதம எழுதுவினைஞர் கடிந்து கூறியது, மற்றவர்களின் ஒரு விதமான பார்வை எல்லாம் துக்கந்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்தியது. எழுந்து கன்ரீனுக்கு போய் ஒரு பிளேன்ரியும் சிகரெட்டும் அடிக்கலாம் என்று எண்ணிய போதிலும் வந்தவுடனேயே அவனுடைய கதிரையில் வெறுமை. மேலும் பிரதம எழுது வினைஞருக்குக் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதையும் அவன் நிராகரித்தான். பைல்களை நோட்டம் விட்ட அவனுக்கு ஒரு றக்கிற்குள் கிடந்த அம்மாவின் கடிதம்தென்படவே அதைப் பிரித்து ஒரு பைலிற்குள் மறைத்துப் படிக்கத் தொடங்கினான். சீட்டுக் காசு கடைக்காசு என்று தொடங்கி தம்பிக்கு இம்முறை வாசிற் றிக்கு இடம் வரவில்லை என்று கடிதம் தொடர்ந்தது? தம்பியின் அட்வான்ஸ் லெவல் நாலு பாடங்களிலும் உள்ள நல்ல பெறுபேறு; அதைப் பெறுவதற்காக அவன் இரவு பகல் என்று கண் துஞ்சாது பட்ட கஷ்டம்; இதில் தனது பங்களிப்பு எல்லாம் அவனுடைய மனதில் துக்கமயமான படமாக நீண்டது.

53 நாகேசு தர்மலிங்கம்
"என்ன சந்திரன் கடுமையாக யோசிக்கிறீக? ஸி. ஸி. பட்ட நாங்க வாங்காத பேச்சா. இதுகளைப் பெரிசா அலட்டிக்காம வேைையப் பாருங்க" என்று கூறியபடி ரேணுகா சந்திரனுடைய மேசையருகே வந்து நின்றாள்.
அந்த அலுவலகத்தில் என்ன, அவன் வாழும் சமூகத்தி அம் உள்ள நல்ல உள்ளங்களில் ரேணுகாவும் ஒருத்தி. சமூக- இனப் பிரச்சினைகளை இவளுடனேயே சந்திரனும் மனம் விட்டுப் பேசுவான். இதனால் நியாயமான கருத்துக் களை இருவரும் பரிமாறிக் கொண்ட போதிலும், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளிலும் இருவருக்கும் பயிற்சி வந்தது. -
பதினொருமணி, பிரதம எழுதுவினைஞர் மதிய வேளை உணவுக்காக வெளியே போய்விட்டார். ரேணுகா சந்திரன் அருகில் ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கதைப்பது மற்றைய கழுகுக் கண்களுக்கு விருந் தாக அமைந்தது. மற்றவர்களுடைய கிசு கிசுப்புக்கள் இடைக்கிடை சிரிப்பொலியையும் ஏற்படுத்தியது.
"நான் ஸ்ரீ. ஸியைப் பற்றி இப்ப யோசிக்கவில்லை அதை எப்பவோ மறந்திற்றன், என் குடும்பத்தைப் பற்றி யோசிக்கிறன்'
அவள் தாழ்ந்த குரலில் அவனிடம் கூறினாள்.
** என்ன சந்திரன் எல்லோருடனும் சிரித்துக் கதைத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்துகிற நீங்கள் இன்று மட்டும் உங்கட குடும்பத்தைப் பற்றிக் கடுமையாக யோசித்துத் தலையைப் போட்டுடைக்கிறீங்க. அதை நான் தெரிந்து கொள்ளக் கூடாதா?’ விடாப்பிடியாக அவள் கேட்டாள்.
"எனக்கு இப்ப ஒன்றுமே பேச ஏலாமல் இருக்கு நீர் பிறகு வந்து கதையும்"

Page 28
அந்நியம் 54
வாசிகசாலைப் பக்கம் சென்று மீண்டும் அம்மாவின் கடிதத்தைப் படித்தான்.
அவனும் ஒரு பட்டதாரி. ஆனால் அந்தப் பட்டப் படிப்பிற்குரிய உத்தியோகம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அட்வான்ஸ் லெவல் றிசல்ட் கிடைத்த உடனேயே இந்த சாதாரண எழுதுவினைஞர் தொழில் கிடைத்தது. இதுவே இன்று அவனுடைய வாழ்க்கையை ஒட்டுகிறது. அவன் பட்டதாரியானது அது ஒரு பெரிய கதை. இவனு டைய காலத்திலேயே இந்தத் தரப்படுத்தல் முறை அறி முகப்படுத்தப்பட்டது. அட்வான்ஸ் லெவல் வகுப்பில் அவன் தனது உயிரைப் பயணம் வைத்து எடுத்த முயற் சியே அவனைப் பேராதனைப் பல்கலைக் கழகம் கொண்டு சென்றது. இங்கு வாசிற்றியிலும் அவன் ஒரு சிறப்புப் பட்டதாரியாகச் சித்தி எய்தினான். இத்தனை பட்டம், படிப்பு எல்லாம் அவனிடம் வெறும் பத்திரங்களாக உறங்குகின்றது. அவன் சாதாரண கிளார்க் வேலை தானே செய்ய வேண்டி இருக்கிறது.
இவைகள் அம்மாவின் கடிதத்தை மடித்து வைத்த போது அவன் முன் வந்து நின்றன.
மீண்டும் மதிய இடைவேளை முடிந்து தனது இருக்கை யில் சந்திரன் அமர்ந்தான், வழமையான அந்தக் கேஸ் இன்றும் வந்து நிற்கிறது.
"ஹலோ மச்சான் சந்திரன் மேக்க பொட்டக்
சிங்ஹலட்ட பரிவர்த்தன கரல தெண்ட்"
விமல் ஒரு ஆங்கிலக் கடிதத்தைச் சந்திரனிடம் நீட்டி 6Trreir.

55 நாகேசு தர்மலிங்கம்
விமலும் ஒரு பட்டதாரி. ஆனால் அந்த அலுவலகத் தில் கடமை பரியும் புள்ளி விபரவியல் உதவியாளன். சம்பளமும் சந்திரனை விட அதிகம்தான், அவன் பிறந்த சமூகத்தினதும் பயின்ற மொழியினதும் கொடுத்து வைப்போ என்னவோ, காற்றில் ஏற்றுண்டது போல். பல்கலைக் கழகம் புகுந்து வெளியாகி புள்ளி விபரவியலாள னாகவும் மாறிவிட்டான், இந்த அலுவலகத்தில் மூன்று மொழியிலும் கடமை புரிபவன் சந்திரன் ஒருவனே" ஸி.ஸிக்கும் இது நன்றாகத் தெரியும். இப்படி அவனு டைய வாழ்க்கையின் பொருத்தமில்லாமல் ஒடிக்கொண்டி ருக்கும் போது தம்பி ரஞ்சனின் வாழ்க்கையின் தாக்கங் கள் எல்லாம் அந்த குடும்பத்தின் மூத்தவனான அவனை யே தாக்கியது.
தம்பி ரஞ்சன் ஒரு தனி மனிதன் அல்ல, சந்திரன் பிறந்து வாழுகின்ற பேசுகின்ற மொழியின் பிரதிநிதி" தம்பி ரஞ்சனுக்கு மட்டுமல்ல அவனைப் போல அவனு டைய சமூகத்தில் ஆயிரம் ரஞ்சன்களுக்கு விழுந்த இடி இது என்று அவன் மனம் எண்ணிய போதும், இந்த இடி யின் உள் தாக்கம் சந்திரனின் நெஞ்சையே வலிக்கச் செய்தது.
‘இனித் தம்பியின் முயற்சியை எந்தத் திசைக்கு மாற்றுவது?" எனக்குக் கிடைத்த கிளார்க் வேலையாவது அவனுக்கும்."
இப்போ தனது குடும்பத்தின் நினைவுச் சுருள் அதிக மாக நீண்டது.

Page 29
அந்நியம் O 56
தேரம் நாலு மணி பதினைத்து நிமிடம். எல்லா ஊழியர்களும் அலுவலகந்தை விட்டுப் புறப்படுகிறார்கள். ரேணுகாவும் சிரிப்பொன்றை அவன் முன் உதிர்த்துவிட்டு அவசரமாக பஸ்ராண்டை நோக்கி நடக்கிறாள். சத்திர இதும் தனது அறைக்குச் சென்று இந்தச் சமூகத்தையும் அதன் அமைப்பையும் தன் மனதுக்குள் திட்டிக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான்.
O

ஊன்று கோல்
இராமசாமி நாட்டாமைக்குத் தன் உயிருக்கும் அஞ்சாத தியாகி என்ற பெயர். அவன் வேலை செய்த குறுக்குத்தெரு பாசருக்குள் மட்டுமே தெரியும். தன்னு டைய முதலாளியின் உயிரைக் காத்த உத்தமன் இராமசாமி. நான்கு பெண் குழந்தைகளுக்குத் தந்திை யான அவனின் இந்த தியாகம் இன்றைய அவனுடைய வாழ்க்கை சீர்குலைந்து கையாலாகாதவன் ஆக்கிவிட்டது. இந்தத் தியாகம் நாட்பட்டு நாட்பட்டு இப்போ நொண்டி என்ற பெயரை அவனுக்கு நிரந்தரமாக பொறித்து விட்டது. காலை 5 மணிக்கெல்லாம் முன்பு வீராவேசத் துடன் மூடைகளைத் தோளில் சுமந்து ஏற்றி இறக்குவதில் கை வண்டியை இழுத்துச் செல்வதில் சளையாது ஈடுபட்டு உழைத்துச் சம்பாதித்த அவன் இப்போதும் அதே ஐந்து மணிக்கெல்லாம் அந்த பசாருக்கு வந்துவிடுவான், இரண்டு கான்று கோல்களையும் தனது கமக் கட்டுக்குள் இடுக்கிக் கொண்டும் தோளில் ஒரு சாக்குப் பையைப் போட்டுக் கொண்டும் ஒற்றை காலில் கெந்திக அவன் அந்தக் தொழில் நண்பர்களின் பலவிதமான பார்வைகள் அவனைச் சுற்றி மொய்க்கும் எல்லோருக்கும் தன்னுடைய வெற்றிலைக் கறை படிந்த இதழைக் குவித்துச் சிரித்து விட்டு வீதிகளில் கொட்டுண்டு சிதறிக் கிடக்கும் மிளகாய், வெங்காயம், கிழங்கு போன்ற பொருட்களைப் பொறுக்கு வதிலேயே ஈடுபடுவான்.

Page 30
அந்நியம் 58
இன்று வெள்ளிக்கிழமை அந்த பசாருக்குள் கொட் இண்ட பொருட்களைப் பொறுக்குவதோடு ஒவ்வொரு கடைகளில் ஏறிக் கையேந்தினால் சில்லரைகளும் சேரும். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என்று இன்றைய தினம் பெரும்படையே தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கு வதற்கு ஒவ்வொரு கடைகளாக ஏறி கையேந்துவார்கள். கடை முதலாளிமார்களும் வாரத்தின் 7 நாட்களும் தங்கள் கடைகளைத் திறந்த போதிலும் வெள்ளிதவிர களில் மட்டும் சில்லறைகளை மாற்றி வைத்து கையேந்தும் இவர்களுக்கு தர்மம் செய்வார்கள். வெள்ளிக்கிழமை ஏனைய நாட்களில் யாராவது "பசிக்குது பிச்சை தாருங் கள்” என்று சொல்லி விடுவார்கள். இந்த வெள்ளிக் கிழமை வாங்க என்று சொல்லி விடுவார்கள். இந்த வெள்ளிக்கிழமை தருமம் அந்த பசாருக்குள் எல்லாக் கடைக்காரர்களும் ஒருமித்தபடி செய்வார்கள். இப்போ வெள்ளிக்கிழமைகளில் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இராமசாமியும் சேர்ந்து கொணடான்.
**சீசனியங்கள் எல்லோரும் ஒண்ணாத்தான் வருவீங் களா? அதுவும் உங்களுக்கொரு நேரகாலம் தெரியாதா இந்த வியாபாரம் நடக்கிற நேரத்திலதான் எல்லோரும் வரவேணுமா? இந்தாங்க 50 சதம் இதைப் பத்துப் பேரும் ஐவஞ்சு சதமா மாத்தி எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க”*
ஓ.ஆர்.கே. பிரதர்ஸ் தலைமை நாட்டாமை இராமசாமி கடை வாசலில் நின்று தனது மூட்டை களைத் தூக்கும் ஊக்கை இடுப்பில் சொருவிய படி கேட்டான்.
*"நாட்டாமை நாட்டாமை அங்கே இராமசாமி இல்லையா?*

59 நாகேசு தர்மலிங்கம்
பின் அறையில் இருந்து ஒ. ஆர். கே. பிரதர்ஸ் முதலாளி விஸ்வநாதச் செட்டியாரின் கனத்த குரல் வாசல் வரை வருகிறது.
**ஆம் ஐயா! இந்தா வந்துட்டன்' என்று பதைக்கக் கூறி ஓட்டமாக இராமசாமி உள்ளே நுழைத் தான்.
*ஆ.ராமசாமியா..? இங்க கிட்ட வா.நம்ப கணக் கப்புள்ள மாணிக்கம் அமெரிக்கன் பாங்கிற்கு சல்வி போடக் கொண்டு போறாப்போல இருக்கு, இன்னைக்கு தொகை கொஞ்சம் அதிகம். அவரோட தொணைக்கு அவங்க ரெண்டு பேரும் போனாப்புறம் அவங்களை அவங்களுக்குத் தெரியாம வாச் பண்ணிட்டுப் போக வேணும். அவங்க பாங்கில சல்லியப் போட்ட உடனே ராக்சி எடுத்திட்டு வந்திடனும். இந்தா செலவுக்கு 100 ரூபா கையில வைச்சுக்கோ...'
100 ரூபா நோட்டை நீட்டியவாறு முதலாளி விஸ்வநாதச் செட்டியார் கூறினார்.
'இதென்ன முதலாளி. இதுதான் எனக்குக் கைவந்த கலையாச்சே."
முதலாளியின் பிரித்தாளும் தந்திரப்படி நிர்வாகம் செய்யும் திறனை அறியாத இராமசாமி நாட்டாமை கணக்கப்பிள்ளையில் வைக்காத நம்பிக்கையைவிட அதிகம் தன்மீது வைத்துள்ளார் என்ற பெருமையுடனும் மனத் திருப்தியுடனும் கணக்கப் பிள்ளையையும் வேறு நாட்டா மையையும் பின் தொடர்ந்தான்.
முதலாளியின் இப்படியான அன்பொழுகும் வார்த் தைகளும் ரகசியத் திட்டங்களுக்கான கட்டளைகளும்

Page 31
அந்நியம் w ロ 60
கிடைத்தால் கட்டாயம் பின்னேரம் வீட்டுக்குப் போகும் போது 200 ரூபா அதிகப் பற்றாகக் கேட்கலாம், அப்படி அவர் தருவதை மனைவிக்குத் தெரியாமல் கொச்சிக்க்டை 'பாரை*’ ஒரு கலக்குக் கலக்கி விடலாமென்ற எண்ண மும் இராமசாமியின் வேகத்தைக் கூட்டியது.
*" என்ன இன்னைக்கு நல்லாக் கூடியிற்றுதோ. தீ இப்பிடியே நாளாந்தம் உழைச்சு நல்லாக் குடி. நானும் இந்த நாலு பிள்ளைகளும் பட்டினி கிடந்து சாகிறம்.. ?
கணவன் இராமசாமி தள்ளாடித் தள்ளாடி வீட்டுக்து வந்த போது மனைவி கேட்டாள்; இப்படியே வழமை 4ாகத் தந்தை வரும்போது இனி அம்மாவுக்கு நடைபெறும் அடியையும் உதையையும் முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளைகள் அந்தச் சிறிய சேரி வீட்டிற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதுங்கினார்கள்.
‘என்னடி வாய் காட்டிற..? வர வர ரொம்ப மிஞ்சிற' என்று கூறிய இராமசாமியின் உழைத்து முறுக் சேறிய கையும், காலும் மனைவியின் மெல்லிய உடலைப் தம் பார்த்தது. தாயோடு பிள்ளைகளும் சேர்ந்து ஒல மிடத் தொடங்கினார்கள். பக்கத்து வீடுகளில் உள்ளவர் களுக்கு இந்நிகழ்ச்சி புதுமையானதல்ல என்றாலும் ஒரு பொழுது போக்குக் காட்சியாக மாறிவிடுவதுண்டு.
ஆயிரத்தில் ஒருநாள் மனுஷன் குடிக்காமலும் வீட்டுக்கு
வந்து விடுவான். அன்று அந்தச் சிறிய வீடு நன்றாகக் களை கட்டும். மனைவி பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது. உடைகள், உணவுப் பொருட்கள் என்று வீடு நிறைந்துவிடும். சினிமா, கோல்பேஸ் என் றெல்லாம் எல்லோரையும் அழைத்துச் செல்வான்.

61 நாகேசு தர்மலிங்கம்
"பெரிய முதலாளியாம் முதலாளி. முதலாளிக்காக உயிரைக் கொடுக்கப் போய் இப்ப ஐஞ்சு சீவன்ர உயிர்
போகப் போகுது - எத்தினை நாளைக்கு இப்பிடிப் பட்டினி கிடக்கிறது? எத்தினை நாள் உனக்குச் சொல்லு றன் ...! எனக்காகவாவது இல்லாவிட்டாலும் சாகப் போற பிள்ளைகளுக்ககாவாவது போய்க் கேட்டுப் ципттөйт. . . * *
தன் இயலாமையாலும் இல்லாமையாலும் கண்ணிர் சிந்தியவாறு ஒருவித ஆத்திர உணர்வுடன் இராமசாமியின் மனைவி கணவனைத் தூண்டினாள்.
எடி. நான் ஒனக்குச் சொல்லுறது விளங்குது இல்லை. அவன் மனுசனைப் பல தடவை ஏதாவது உதவி செய்யச் சொல்லி மண்டாடிக் கேட்டுப் பார்த்தன். போடா வெளியே எண்டு கழுத்துல பிடிச்சுத் தள்ளி யிற்றான். , .'
முன்னைய வேகமும் ஆக்ரோஷமும் குறைந்து பரிதாப மாக இராமசாமி கூறினான்.
* அது தானே நான் திரும்பத் திரும்பச் சொல்லுறன்" இப்படிப்பட்ட முதலாளிக்கு இவ்வளவு காலமும் விசுவாசமாக நடந்து மாடாய் உழைச்சு கடைசியில உன்னையே ஊனமாக்கிற்று. அங்க பார் பாப்பம் இவன் நம்ம மூத்தவன் மூணு நாளா அன்னம் தண்ணியில் லாமப் படுத்த Lunt G3u urru காய்ச்சலாக் கிடக்கிறான். பிள்ளைக்கு ஒரு பாண் துண்டு வாங்கக் கூட வழியில்லாம இருக்கிறன்.""
அவன் அந்த பசாரில் பொறுக்கிக் கொண்டு வந்த கொட்டுண்டு கிடந்த பொருட்களை சுளகில் பரப்பி நல்லது களைத் தெரிந்து துப்பரவு செய்து கொண்டு மனைவி 385 - Lir sir.

Page 32
அந்நியம் O 62
"இண்ணைக்கு வெள்ளிக்கிழமை. இந்தா 16 ரூபா சில்லறை சேந்ர்தது. அவள் பிள்ளைக்கு டிஸ்பிரிலும், சோடாவும் வாங்கியிற்று, மிஞ்சிறதுக்கு அரிசியை வாங்கி கஞ்சி காச்சு. எல்லோரும் குடிப்பம்.அவளுக்கும் தண்ணி யை தெளிச்சுக் கொடுப்பம்."
இறுகக் கட்டிய தனது சரத்தின் மடியை அவிட்டு சில்லறை பொதியை மனைவியிடம் நீட்டியவாறு கூறினான்.
முன்பெல்லாம் இராமசாமி குடித்துவிட்டு வந்து அடி, என்று உபத்திரவம் செய்தாலும் வயிறாற எல்லோரும் சாப்பிட்டு உறங்கியதை நினைத்து அவள் கண்ணிர் விட்டாள். இந்தப் பொலு பொலுவென்ற கண்ணிருக்கு ஏற்ப அந்த உடைத்தி சீமெந்து நிலத்தில் சில்லறைகளும் பொலு பொலுவென்று கொட்டுண்டது.
".ஆம் . நானும் இந்தக் கையால் எவ்வளவு சில்லறைகளை எத்தனையோ பேருக்கு அள்ளிப் போட்டி ருப்பன். இப்ப என்னென்ணா அந்தக் கையாலேயே பல பேட்ட ஏந்திச் சில்லறை வாங்கிக்கொண்டு வந்திருக்கின் றன். என்ன செய்யிறது. எல்லாம் இறைவன்ர GIF un uøão””
பெருமூச்சுடன் இராமசாமி கூறினான்.
"இஞ்சா இப்பிடி எத்தனை நாளுக்குத்தான் நாங்க அன்னம் தண்ணி இல்லாமச் சாகிறது . இப்பிடி நீ கையேந்திக் கொண்டு வந்த சில்லறையை வைத்தும் அங்க கொட்டிக் கிடக்கிற வெங்காயம், கிழங்கு, மிளகாயை பொறுக்கிக் கொண்டு வந்தும் நம்ம சீவியத்தை ஒட்ட ஏலாது. நான் எங்காவது வேலைக்குப் போகப் போறன். அவள் பார்வதி அவளடை புருஷன் முனுசாமி

63 நாகேசு தர்மலிங்கம்
செத்துப் போன அப்புறம் அவள் வேலைக்குப் போய்ச் சம்பாரிச்சு குடும்பத்தைக் காப்பாத்திறாள்; அவள் வேலை செய்யிற காமென்சில என்னையும் சேத்து விடுகிறாளாம். நானும் போகப் போறன்’
**அதுவும் சரிதானம்மா, நீ சொல்லுறதிலும் உண்மை இருக்கு. அவள் முனுசாமி செத்தப்புறம்தான் அவ பார்வதி விதவை. நீ என்னன்னா கையாலாகாத புருஷன் ான் உயிரோட இருந்தாலும் விதவைதான். நமக்காக இல்லாவிட்டாலும் இந்த புள்ளைகளுக்காவது ஒன்ன வேலைக்கு அனுப்பலாம் எண்டுதான் நெனைச்சன். அதைச் சொல்றதுக்கு என்ர கேக்கல ஆனா.நீயாச் சொல்லுற. அப்பிடீன்னா போயிற்று
...
'ஒன்னைக் கேக்க முதலே நான் அவள் பார்வதி கிட்டச் சொல்லியிட்டன் அப்பிடின்னா வாற ஒண்ணாந் தேதியில இருந்து நானும் அவளோட சேர்ந்து வேலைக் குப் போறன்"
நானும் கடேசியா முதலாளி, கிட்டப் போய் ஒரு மூணு சில்லு சயிக்கிள் வாங்கித் தரச் சொல்லிக் கேக்க போறேன். அப்பிடி அவர் அதை வாங்கித் தந்தா அதை வைச்சு நான் இந்த சுவிப் டிக்கட் ஏதாவது வித்து சாப் பாட்டுக்காவது சம்பாரிக்கலாம் எண்டு நினைக்கிறன்..”*
"நீயும் ஒண்ட முதலாளியும் ரெண்டு பேரும் போய் ஏதாவது செய்யுங்கோ. நான் அவ பார்வதியோட வேலைக்குப் போறது போறதுதான்'
* 'இன்னைக்குப் பசாரில சரியான சன நெருக்கம். தூசும், சேறும் எல்லாம் என்ர மேல தான் பட்டிருக்கு.

Page 33
அந்நியம் 64
பிள்ளை என்ர ஊண்டுற தடிய எடம்மா,மேலக் கழுவிற்று வாறன்.'
பலகையில் பிடித்து எழுப்பியவாறு இராமசாமி கூறினான்,
இன்று இறுதியாக மூன்று சில்லுச் சயிக்கிளுக்கு உதவும்படி கேட்பதற்கு ஒ. ஆர். கே. முதலாளி விஸ்வ நாநச் செட்டியாரின் வரவை எதிர்பார்த்து அந்தக்கடை வாசவின் ஒரத்தில் இராமசாமி ஒதுங்கி நிற்கிறான். முன்பின் தெரியாத புதுமுகங்கள் பல மூடைகளை ஏற்றி இறக்குவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. தலைமை நாட்டாமை வேலுவும் இராமசாமிக்கும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்குமிங்குமாக அலைந்து எல்லா நாட் டாமைமாரையும் இயக்கிக் கொண்டிருக்கிறான்.
முதலாளி விஸ்வநாதச் செட்டியார் அவரது காரை விட்டு இறங்கிச் சென்று இரண்டு மணித்தியாலங்கள் கழிந்தபின் உள்ளே தனது ஊன்று கோலுடன் சென்ற இராமசாமி .
""egur...... முதலாளி. 2tuff. . . ... முதலாளி.
"என்ன ராமசாமியா.** நீ என்னையும் இந்தக் கடையையும் என்னப்பா நெனைச்சுக்கிட்டு இருக்கிற ஒங்கப்பன் வீட்டுப் பணத்தைப் போட்டா வியாபாரம் செய்யிறன் எண்டு நினைக்கிற? எந்த நேரமும் வந்து இங்க கரைச்சல் கொடுக்காத போ வெளியில. '
** முதலாளி.ஐயா. அப்படிச் சொல்லாதீங்க நான்
ஒங்களைக் கேக்கிறது எனக்கொரு மூனுசில்லுச் சயிக்கிள்
வாங்கிறதுக்கு உதவி பண்ணுங்க அதை வைச்சு நான் பொளைச்சிடுவன்.”*

65 நாகேசு தர்மலிங்கம்
‘'நீ என்ன சொல்லிற.?மூணுசில்லுச் சயிக்சிளுக்கு உதவி செய்யட்டோ? இப்ப நீ என்னட்ட வாங்கினதுக்கு கணக்குப் போட்டா ஒரு இசூசு லொறியே வாங்கியிருக்க வாம். இங்க எங்கிட்ட ரொம்பக் காலத்துக்கு இந்தப் பகுப்பு அவிக்கேலாது. முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியபோ’’
ஆக்ரோசமாக மேசை மீது ஓங்கி அறைந்தபடி முதலாளி கூறினார். ܚrܫܝܚܝܚܫ*
* முதலாளி.இனிமேல் உங்ககிட்ட வந்து இந்தக் கரைச்சல் ஒண்ணும் தரமாட்டான். இந்த உதவியை மட்டும் செய்திடுங்க"
'ஒனக்கு நான் சொல்லுறது விளங்குவது இல்லை வேணுமென்னா இதுதான் கடைசி. இந்தக் கடைப் பக்கமே நீ வரக்கூடாது. அங்க ஆரு கெஸ்சியர்? இவன் ராமசாமிக்கு ஒரு நூறு ரூபா கொடுத்திட்டு கடைச் செலவில எழுதிவிடு. நீ போ.போ. இனி இங்க
வராதே’’.?
முதலாளி இறுதி வார்த்தையாகக் கூறிவிட்டு தனது காரை நோச்கி நடக்கத் தொடங்கினார்.
நூறு ரூபாவை வாங்கி மடியில் சொருகிக் கொண்டு தெருவுக்கு ஊன்றுகோலோடு இறங்கிய இராமசாமி, முதலாளியின் கார் போவதையும் தனது ஊனமுற்ற காலையும் மாறி மாறிப் பார்த்தான்.
"ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்து மூணாம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தைந்தாம் தேதி அந்தத்
uy-5

Page 34
அந்நியம் 66
தெரு அல்லோல கல்லோலப்பட்டது. அந்தத் தெரு மட்டுமல்ல. இந்த நாட்டின் பெரும் பகுதி கலவரப் பேயால ஆட்கொள்ளப்பட்டது.
அந்தக் குறுக்குத் தெருவுக்குள் பெரிய கூட்டமே உட் புகுந்து பணம் பொருடகள் என்று கொள்ளை அடித்த தோடு, கடைகளுக்குத் தீ மூட்டி எரித்ததோடு ஆட்களுக் கும் அடித்துக் காயப்படுத்தியும் சிலரைக் கொலையும் செய்தார்கள்.
அன்று ஓ. ஆர். கே. பிரதர்ஸ் கடைக்குள்ளும் பெரிய தோரு கூட்டம் நுழைந்து பணம், பொருட்களைக் கொள்ளையடித்ததோடு அங்குள்ளவர்களையும் தாக்கி னார்கள். வந்த கூட்டத்தினரின் கைகளில் கத்தி, வான், பொல்லு முதலிய ஆயுதங்கள் இருந்தன.
‘இவன் தான் முதலாளி வெட்டடா அவனை" ஒருவன் கட்டளையைப் பிறப்பிக்க மற்றவன் வாளை ஓங்கினான்.
**ஐயோ அவரை ஒண்ணும் செய்யாதீங்க * குறுக்கே பாய்ந்து இராமசாமி தடுத்தபோது ஓங்கிய அந்த வாள் அவனின் காலைத் துண்டித்தது.
முதலாளியும் மற்றைய ஊழியர்களும் தட்டுத் தடுமா றிபின் கதவால் ஓடி அகதிமுகாம் போய்ச் சேர்ந்தார்கள்.
மயங்கி இரத்த வெள்ளத்தில் கிடந்த இராமசாமி ஒருவருடைய தயவினால் அன்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று ஊன்றுகோலின் உதவியுடன் ஒற்றைக் காலுடன் நடமாடும் நிரந்தர நொண்டியாக்கப் பட்டுவிட்டான்.

67 நாகேசு தர்மலிங்கம்
இராமசாமியின் கண்களில் கண்ணிர் ஆறாகப் பெருக் கெடுத்தது.
* 'இனி எப்படியும் அவளையும் வேலைக்கு அனுப்ப
வேண்டியதுதான்'
சகதியும். தூசியும் நிறைந்த அந்த வீதியால் ஊன்று கோலின் உதவியுடன் வீட்டை நோக்கி நொண்டியவாறு நடக்கத் தொடங்கினான்.

Page 35
ஞாயிற்றுக்கிழமை
கொழும்பு தபால் நிலையத்திற்கு மாற்றம் செய்து வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தபோது அவனுக்கு அளவிலாத சந்தோஷம் ஏற்பட்டது. பல தடவைகள் கொழும்புக்கு மாற்றம் கேட்டெழுதிய பலன் இப்போது தான் கிட்டியது. எனினும் அவனுடைய வாழ்க்கையில் அந்த நான்கு வருடக் கிராம வாழ்க்கையை அவனால் மறக்கவே முடியாது. அது அவனுக்கொரு புதிய அனுபவ மும் கூட. கலப்பை, எருமைகளோடு சேற்று நிலத்தில் நின்று போராடும் சிங்கள விவசாயிகள், மாணிக்ககல், கடைகள் என்று தொழில் பார்க்கும் இஸ்லாமிய, தமிழ் மக்கள் இவர்களின் ஓர் அங்கமாய் அவன் - கிராமிய அமைதி நிறைந்த சூழலுக்கேற்ப இன மத, மொழி பேத மற்ற முறையில் ஒடிய சீரான வாழ்க்கை. இவைகளை விட்டு இப்போது கொழும்புப் பட்டிணத்திற்குள் செல் வதில் ஒரு சிறிய துக்கம் இருந்தபோதிலும் அவனுக்குப் பட்டிண வாழ்க்கையிலும் ஒரு முதிர்ந்த அனுபவம் பெற வேண்டும் என்பதனாலேயே கொழும்பு அலுவலகத்துக்கு மாறுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தான்.
கொழும்புப் பட்டின வாழ்க்கையும் அவனுக்குப் புதிய ஒன்றல்ல. ஒன்பது மாதங்கள் கொழும்பில் வாழ்ந்திருக் இறான். அது பெரிய கதை. அந்த ஒன்பது மாத வாழ்க்கையும் அவனுக்கு சிறைச்சாலை வாழ்க்கைதான். க. பொ. த. ப. வகுப்புப் பரீட்சையில் ஐந்து "சி"யுடன் சித்தியெய்திய அவனைத் தொழில் தேடும் படலம் எதிர்

69 நாகேசு தர்மலிங்கம்
நோக்கியிருந்தது. அவனோடு அந்தக் கிராமப் பாடசாலை பில் அவ்வருடமே சித்தியெய்திய மீதி ஆறு பேரும் உயர்தர வகுப்பில் படிப்பதற்காகப் பட்டிணத்திற்கு வர அவனது போருளாதார நிலைமை இடம்கொடுக்கவில்லை. தந்தை யின் சிறிய வருமானத்தைக் கொண்டு அவனது பெரிய குடும்பம் வாழ்க்கைப் போராட்டம் நடத்திய காலமது.
'தம்பி! மற்றப் பெடியன்கள் மாதிரி பட்டணம் போப்ப் பெரிய வகுப்பு நம்மால படிக்கேலாது. நீ எங்கை யேன் கொழும்பில போய்க் கடைகண்ணியப் பார்த்து
நில்,"
சோதனைப் பெறுபேறு வந்து, அவன் எடுத்த மூடிவையே அவனது அம்மாவும் கூறினாள்.
எஸ், எல். சி. பாஸ் வரும்; அதன் பின் ஏதாவது கிளார்க் அல்லது ஆசிரியர் வேலை என்றெல்லாம் அவன் கற்பனை செய்திருந்தான். மாறாக கொழும்பில் ஒரு மூலையில் உள்ள ஒதுக்குப்புறக் கடையில் சிப்பந்தியாகச் சேர்ந்தான். அவனை விட அதிகம் படித்தவர்கள் அக் கடையில் இல்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் கூடிய சம்பளம் பெறும் மேல்மட்ட ஊழியர்களாக வேலை பார்த் தார்கள்.
காலை ஏழு மணிக்குத் திறக்கும் அக்கடை இரவு ஏழு மணிக்குத்தான் பூட்டப்படும். கிழமையின் ஏழு நாளும் ஓயாத வேலை. கால்கடுக்க நின்று, நாரி வலி எடுக்க வளைந்து நிமிர்ந்து அவனும் அவனோடு ஒத்த மற்றைய சிப்பந்திகள் நால்வரும் வேலை செய்வார்கள். சாப்புச் சட்ட அதிகாரியோ அல்லது விலைக்கட்டுப்பாட்டதி காரியோ அந்தக் கடைப்பக்சம் தலை வைத்துக்கூடப் படுப் கதில்லை. அப்படி அக்கலையில் அதிகாரிகள் கண் வைத்து விட்டால் வெகு கச்சிதமாக முதலாளி அதைச் சமாளித்து

Page 36
அந்நியம் 70
விடுவார். பாடசாலை அனுபவம் முடிந்து. அவன் புகுந்த புதிய களம் வியாபாரம். இந்தக் கரடுமுரடான புதிய களத்துக்குள் இருக்க அவன் மனம் மறுத்தது. கடூழியச் சிறைக் கைதிக்குக் கூட அவனைவிடச் சிறிதளவாவது சுதந்திரம் இருக்கும்.
முதலாளி - இந்த வார்த்தையிலிருந்தே உலகப் பெருந் தத்துவங்கள் பிறந்திருக்கின்றன. அந்தக் கடையில் மனிதனை மனிதனாக மதிக்காமல் மிருகமாக நடத்தி, இரக்கமின்றி இரவு பகலாக வேலை வாங்கும் முதலாளி யின் நச்சரிப்புக்கள்தான் எத்தனை தடவை நாளாந்தம் அவனை வாட்டி இருக்கின்றன. வேலை செய்யும் போது ஒருவிதப் ஏச்சும் பார்வையும், க. உ. குலம் கட்டில் கால், தட்டு என்று மற்றவர்களை ஏமாற்றுவதற் காக உபயோகிக்கும் குறியீட்டுக் கணக்கு முறைகள் நிறுவையில் தராசுக்குள் புளி வைத்து நிறையைக் குறைத்து மார்பு தடடும் கெட்டித்தனங்கள். மிளகோடு பப்பாளிக் கொட்டை , அரிசியோடு கல் என்று செய்யும் கலப்பட உத்திகள், இப்படி எத்தனை அனுபவங்களை அந்த ஒன்பது மாதங்களும் அந்தக் கடையிலிருந்து அவன் பெற்றிருக்கிறான். அந்தக் கடையில் ஒரு குண்டூசியை வளைத்தாலும் அது முதலாளியின் இலாப நோக்கோடு தான் செல்யப்படும்.
சிறிய ஒடுக்கமான வீதியாக அது இருந்தாலும் அந்த வீதி வழியாக எத்தனை விதமான வாகனங்கள், கைவண்டிகள் என்பன நடமாடும். இலங்கையின் பல பாகங்களிலிருந்து உற்பத்திப் பொருள்களை ஏற்றிவரும் லொறிகள், ஒவ்வொரு முதலாளியின் ஒவ்வொரு இனக் கார், வாழ்க்கையோடு போராடுவதற்காக மூடைகளைக் கைவண்டியில் ஏற்றிப் போராடும் வகுப்பினர், கொட்டுண் டது பொறுக்கும் சிறிசுகள், விலை விசாரித்து கொள்

71 D நாகேசு தர்மலிங்கம்
முதல் செய்யும் வியாபாரிகள், கடைச் சிப்பந்திகள், கைக்குட்டையுடன் திரியும் தரகர்கள், தர்மம் கேட்கும் ாலும்புக் கூடுகள். இப்படிப் பலர் வேலை நாட்களில் அந்த வீதியை நிறைந்திருப்பார்கள். நித்தம் வாகனப் போக்குவரத்தில் அந்த வீதி அகப்படுவதால் குண்டும் குழி பும், குப்பையும் கூளமும் நிறைந்தே காணப்படும். அந்த வீதியில் உழைக்கும் முதலாளிமார் சரி, வேறுயாராவது சரி, வீதியைச் செப்பனிடுவதற்கு முயற்சி எடுக்க மாட் டார்கள், மாறாக தங்கள் தங்கள் ஊர்களில் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து கோயில் சொந்தக்காரர் ஆவார்கள்.
கொழும்பில் அவன் ஒன்பது மாதங்கள் வாழ்ந்தாலும் அது கிணற்றுத் தவளை வாழ்க்கைத்தான். அவனுக்கு அந்த வீதியையும் கடையையும் இரண்டொரு வங்கிகளை யும் தவிர வேறொன்றையும் தெரியாது. காலை ஏழு மணிக்குக் கடை. பின் இரவு பத்து மணிக்குப் படுக்கை. இதற்கு இடைப்பட்ட நித்திரைக் காலம் நிமிடக் கணக்கில் ஓடிவருவது போன்ற உணர்வை அவன் ஒவ்வொரு நாளும் பேறுவான்.
அந்தக் கடையில் பல பேர் வேவல பார்த்தாலும் அவனுக்கும் முருகவேளுக்கும் இடையில் இறுக்கமான சிநேகிதம் வளர்ந்தது. முருகவேளும் இவனைப்போல் ஒரு சிம்பந்திதான். கடை முதலாளி, முகாமையாளர், நிர்வாகம் எல்லோரையும் பற்றிய குறை நிறைகளை இருவரும் தங்களுக்குள் தாங்களே இரகசியமாக விமர்சிப் Lurrrissir.
" "டேய் மாணிக்கம்! நான் தான் எட்டாம் வகுப்புப் படிச்சுப்போட்டு இங்க வந்து மட்டை அடிக்கிறன். நீ எஸ்.எஸ்.சி. பாஸ் பண்ணிப் போட்டுக் கஷ்டப்படு கிறாயே"

Page 37
அந்நியம் O 72
முருகவேள் பால் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு தின்ற வேளை இப்படி சொன்னது அவனுக்கு நெருப்பு நெஞ்சை வருடியது போலச் சுட, அம்மா கூறிய வசனங்கன் நெஞ்சில் நீரை ஊற்றி ஆறவைத்தன.
*டேய் முருகவேள்! கொஞ்சம் பொறு. எங்களுக்கு இந்தச் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக் கும். பயப்படாதே."
* மச்சான் மாணிக்கம்! மற்றக் கடையெல்லாம் ஞாயிற்றுகிக்கிழமையில் பூட்டுறாங்களப்பா. எங்கட முதலாளிதான் ஏதோ புடுங்கி அடுக்கிறது மாதிரி திறந்து வைச்செண்டு இலையான் கலைக்கிறார். இந்தச் சாப்புச் சட்டக்காரர்கள் இங் கா லுப் பக்கம் வாறாங்கள் இல்லையே, '
**அதெடா நம்மட தலையெழுத்து. பார் மற்றக் கடைப் பொடியங்களை அவங்கள் குடுத்துவைச்சவங்கள். ஞாயிற்றுக்கிழமை கடை பூட்டு. ஒரே படமும் கோல் பேஸ் எண்டு உலாத்தலும் தான். சரி நமக்கு வீவில்லலை யெண்டாச் சம்பள மாவது கூடக் கிடைக்குதா.”*
அது கடையில்லை, சிறைச்சாலை என்ற தோரணை யிலேயே இருவரும் உரையாடுவார்கள். கிராமத்துக்குச் செல்வதற்கு முதலாளியிடம் லீவு கேட்டு ஏச்சும் வாங்கிய அனுபவம் அவனுக்கு நிறைய உண்டு. பொங்கல், தீபாளி, வருடப் பிறப்பு தினங்களில் அரை நேரம் கடை பூட்டிய பின் லீவு கொடுப்பார்கள். ஒன்பது மாதங்களில் அப்படி இரண்டு தினங்களில் படம் பார்த்தான்.
அவன் முன்பு கடைச் சிப்பந்தியாக வேலைபார்த்த கடைக்கு அண்மையில உள்ள தபால் நிலையத்திற்கே இப்

73 நாகேசு தர்மலிங்கம்
போது மாற்றம் கிடைத்துள்ளது. நான்கு வருடங்களின்
பின் மீண்டும் கொழும்பில் அதுவும் முன்பு வாழ்ந்த குழலில். ஆனால் கரடு முரடான வியாபாரக் களம் அல்ல. எட்டு மணித்தியாலம் கடமையைக் கடமையாகச்
செய்யும் ஓர் அரச உத்தியோகம். எட்டு மணித்தியாலம்
கடமையைக் கடமையாகச் செய்கிற அரச உத்தியோகம் தான் எது? அப்படி எங்காவது நடைபெறுகிறதா? யார்
தான் அப்படிக் கடமையுணர்வுள்ளவர்கள்? அவனைப்
பொறுத்தமட்டில் எட்டு மணித்தியாலக் கடமையென்றால் கடமைதான். நாலு வருடத்திற்கு முந்திய ஒன்பது மாதக்
கடை வாழ்க்கை அவனைக் கடமை வீரனாக மாற்றியது.
சிந்தத் தபால் நிலையத்திற்கு முன்னால் கால் கடுக்க, வரிசையில் தங்கள் காரியத்தை முடிப்பதற்காக நிற்கும்
கடைச்சிப்பந்திகளைப் பார்க்கும்போது அவனுக்கு நான்கு
வருடத்திற்கு முந்திய கால நினைவு வந்தது. மணியோ டர், முத்திரை, தந்தி என்று அவனும் முன்பு அந்தத்
தபால் நிலையத்திற்கு முன்னால் தவம் கிடந்திருக்கிறான்.
ஏதும் எழுத்துப் பிழை விட்டால் தபால் அதிபரின் நச்சரிப் புக்கு ஆளாவதோடு நேரம் சென்றால் முதலாளியின் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கிறான். இந்த அனுபவம் இப்யோது இருப்பதால் எவ்வளவு அன்பாக அவர்களோடு பழகி விரைவாகக் காரியத்தை முடித்துக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, வழமையான தபால் விடு முறை தினம். காலை ஒரு மணித்தியாலத் தந்தி வேலையை முடித்து விட்டு அவனது அறையை நோக்கி நடந்தான். விடுமுறை ஓய்வு என்பது அந்த வீதியிய் பளிச்சென்று தெரியும். ஆள் நடமாட்டம் குறைவு, வாகனப் போக்குவரத்துக்குறைவு. இதனால் அந்தக் முறுக்கு வீதி வெறிச்சோடிக் கிடந்தது,
"டக்.டக்." - கைதட்டல் சத்தம்.

Page 38
அந்நியம் 74
அங்குமிங்கும் பார்த்த அவன் முருகவேள் லிமிடெட் டிற்குள் புகுந்தான்.
"ஹலோ முருகவேள் எப்படிச் சுசும்? நாலு வருஷத்
திற்குப் பிறகு ஆளைக் காணுறன். என்ன உடம்பெல்லாம் வைச்சு, ஆளே மாறிப் போனாய்."
** எப்பிடி மாணிக்கம்! போஸ்ராபீஸ் வேலை கிடைக்க பிறகு இங்கால எட்டிக்கூடப் பார்க்கயில்லை,*"
*"எனக்கு, இது உன்ர கடைநீ இங்கதான் இருக்கிறாய் எண்டு தெரியாது மச்சான். எப்ப கடை எடுத்தனி?”*
* "நான் எடுத்து இரண்டு வருஷ மாச்சு. இப்ப பிழை யில்லை. நீ இப்ப எந்தக் கந்தோர்?*
நா இந்த ஜனவரியில இருந்து கொழும்புதான்.""
** டேய் நாட்டாமை! f ஒண்டு வாங்கியெண்டு வா, பீ. எம். ஐயாவுக்கு நல்லதாப் போடச் சொல்லு.”*
இப்படி முருகவேள் கூறியபோது குரலிலும் ஒரு வித்தியாசம் இருந்தது.
** கலியாணம் முடிஞ்சுதா?’’
முருகவேள் கேட்ட இந்தக் கேள்விக்கு "இல்லை” என்று கூறிய அவன் "உனக்கு’ எனத்தொடர்ந்தான்.
* 'இல்லை"
"இண்டைக்கென்ன ஞாயிற்றுக்கிமை எல்லாக் கை பும் பூட்டிக் கிடக்கு. நீ மட்டும் திறந்து வைச்சிருக்கிறாய்.

நாகேசு தர்மலிங்கம் ם 75
"நாங்க ஞாயிற்றுக்கிழமையில பூட்டுறது இல்லை" இண்டைக்குத்தான் எங்களுக்குச் சரியான வியாபாரம்."
முருகவேள் இப்படிக் கூறியதும் அந்த லிமிடெட்டின் மூடைக்கு மூடை சாய்ந்து நின்ற சிப்பந்திகளைப் பார்த்த போது ஒவ்வொருவருடைய முகத்திலும் பழைய முருக வேளுடைய முகம் பளிச்சிட்டது.
"என்ன வியாபாரம்? கிழமைக்கு ஒரு நாளைக்குப் பூட்டிப் பெடியங்களுக்கு ஒரு றெஸ்ட்டைக் கொடுக்க amr Guo””
* "சீ! நீ என்ன விழல்கதை கதைக்கிறாய் மாணிக்கம், இண்டைக்குப் பூட்டினா எத்தனை ரூபாயை இழக்க வேண்டும் தெரியுமா"
‘இவன் பழைய முருகவேள் இல்லை. புதிய முதலாளி முருகவேள். சுயநலக்கார முருகவேள்' முருகவேளைத் தன் மனத்திற்குள் வைது கொண்டு அவனிடமிருந்து விடைபெற்றுத் தனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான் மாணிக்கம்.

Page 39
உண்டியல்
திருமணமாகி மூன்று வருடத்திற்குள்ளேயே குழந்தை இல்லை என்ற குறை அவர்களை வாட்டத் தொடங்கி யது, இவர்களோடு, திருமணம் நடைபெற்ற அவர் களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு வருடத்திற்குள்ளேயே குழந்தையும் குடித்தனமும் ஆகி விட்டார்கள். இந்தப் புறச்சூழலும், இவர்களுடைய இந்த வாட்டத்தை பல மடங்காக்கியது.
*"ஹலோ ஆனந்தம் எப்படி? கன நாளைக்குப் பிறகு, காணுறன். இப்ப எந்த ஒவ்வீஸ்?"
என்று கேட்டுக் கொண்டே மனைவி சகிதம் தோளில்
ஒரு பிள்ளையை சுமந்து கொண்டும் கையில் ஒரு பிள்ளை
யைப் பிடித்து நடத்திக் கூட்டிக் கொண்டும் சிரித்தவாறு. நண்பன் கணேஷ் கேட்டான்.
'ஹாய் கணேஷ் இரண்டு வருஷத்துக்குப் பிறகு இப்பதான் சந்திக்கிறம், நான் இப்ப * பெற்றா’’ போஸ்ரவிஸ்ஸில், வாற வருஷம் யாழ்ப்பாணம் கிடைக் கும்போலத் தெரியுது. ஒ. சரியான வெய்யிலா இருக்கு வாருங்க அந்த ஆல் நிழலில் நிண்டு கதைப்பம்.
வெய்யில் காலத்தில் மட்டுமல்லாமல் மழை காலத்தி லும் பலருக்கு குடைபிடிக்கும் அந்த ஆலடிச் சந்தியின் சடைச்சு நிற்கும் ஆலமரத்தின் கீழ் தனது மனைவி கெளரி யையும் குடும்பத்தையும் ஆனந்தன் அழைத்துச் சென்றான்.

77 தகேசு தர்மலிங்கம்
"என்ன கணேஷ் என்னோட தான் கலியாணம் கட்டினது போல அதுக்கிடையில, இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகியிற்றிர்'
தனது மனதிற்குள் உள்ள வேதனையைச் சிறிதும் வெளிக்காட்டாதவாறு சிரித்தவாறு ஆனந்தன் ஐகட்டான்.
** என்ன இரண்டு குழந்தையா மூன்றாவதும் ஒன் த வேய்”*
என்று கணேஷ் கூறியதும் அவன் மனைவியும் நாணம் கலத்த சிரிப்பை உதிர்த்தாள். ஆனந்தனும் சாடையாக தனது மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவள் முகத்தில் ஒருவித வெக்கமும் பிள்ளை இல்லை என்ற ஏக்கமும் மின்னி மறைந்தது.
'அது சரி ஆனந் எப்பிடி உங்க பாடு ஏதும் பிள்ளை குட்யைள்...?
கணேஷ் விடாது இந்தப் பெரிய கேள்வியைப் போட்டது ஆனந்தனுக்கு ரன் இவனிடம் இந்தக் குழந்தைக் கதையைத் தொடக்கினேன் என்று ஆகி விட்டது. அதிலும் மனைவியின் முன்னிலையில் கேட்டது, சங்கடத்தையே ஏற்படுத்தியது,
**இதுவரை ஒன்றுமில்லை. இனிமேல் பார்ப் GurTub” ’
தன்னை ஒரளவு சுதாதரித்துக் கொண்டு கடைக்கண் ணால் தனது மனைவியைப் பார்த்துக் கொண்டு ஆனந்தன் கூறினான். பலரால் ஏற்கனவே கேட்டுப் பழக்கப்பட்ட கெளரி அந்தச் சந்தியை விட்டு நகரும் நோக்குடன் ஆனந்தனின் முகத்தைப் பார்த்தாள்.

Page 40
அந்நியம் 78
"அப்டிடு எண்டா ஒன்று செய்யுங்கோ. கெளரி, இரண்டு பேரும் கந்த சஷ்டி விரதம் பிடியுங்கோ கட்டாயம் பலன் கிட்டும்.""
என்று கூறிவிட்டு கணேஷின் மனைவி கணேஷின் மூகத்தைப் பார்த்தாள்.
* ஒ. இவா பெரிய விரதகாரி, கந்தசஷ்டி விரதம் பிடிச்சுத்தான் இப்ப மூன்றாவது பிறக்கப் போகுது. உங்களைப்போலை எண்டால் எவ்வளவு சந்தோஷமாத் திரியலாம் எண்டு இப்பதான் யோசிக்கிறன்"
இப்படிக் கணேஷ் கூறியதும் அந்த நாலு பேருடைய சிரிப்பொலி அந்தச் சந்தியில்நிற்கும் ஆலமரத்தையே அதிர வைத்தது போலிருந்தது.
பிள்ளைகளின் சிணுங்கலும் நீண்டநேர உரையாட லும் ஆனந்தனை தெங்கந்திடல் நோக்கி விடைபெறத் தூண்டியது.
வீட்டுக்கு வந்து உடைமாற்றியதும் மாற்றாததுமாக ஆனந்தனின் மனைவி தனது வழமையான பல்லவியைப் பாடத் தொடங்கினாள். பல்லவியோடு முகமும் சிவந்து கண்ணிரும் சிந்தினாள்.
* இப்ப ஏன் கெளரி அழுகிற? எத்தனை பேர் ஐஞ்சு பத்து வருஷமாகக் குழந்தை இல்லாம இருந்து கடைசியில பெத்திருக்கிறாங்க. நீ என்ன..? நாங்க கலியானம் கட்டி மூன்று வருஷங்கூட ஆகேயில்லை அதுக்குள்ள சின்னப்பிள்ளை மாதிரி சிணுங்கிற, நான் தானே சொல்வி இருக்கிறன். கொழும்புக்குப் போனபிறகு எனக்குத் தெரிஞ்ச நல்ல டொக்ரரிட்டக் காட்டுவம்எல்லாம் சரியாப் போயிடும் எண்டு”*

79 நாகேசு தர்மலிங்கம்
多
வழமையான சமாளிப்பையே இன்றும் Gcyffredir னான்.
* உங்களுக்கென்ன? என்னை எல்லோரும் கேக்கினம். பார்த்தீங்களா உங்கட “பிறெண்ட்' கணேசும், மனுஷி பும் கதைச்ச கதையை. எனக்கு அந்தச் சந்தியில நிக்கேலாமப் போச்சுது.'
கணவனின் மார்பு மேல் சாய்ந்து மீண்டும் விம்மத் தொடங்கினாள்.
"அந்த மனுஷி சொன்னதிலும் உண்மை இருக்குத் தானப்பா, நாங்க இரண்டு பேரும் கந்தசஷ்டி விரதம் பிடிப்பம். அந்த விரதம் பிடிச்சால் கட்டாயம் குழந்தை கிடைக்கும். எங்கட ஒண்டவிட்ட அக்காவும் அத்தானும் இப்பிடித்தான் குழந்தை இல்லாமல் இருந்து கந்தசஷ்டி வி ர த பம் படிச்சுத்தான் குழந்தைகிடைச்சுது’’
இப்படி மனைவி கூறியது ஆனந்தனுக்குப் பாவமாக வும் பரிதாபமாகவும் இருந்தன.
"இந்த கெளரி இந்த விரதம், அது, இது எண்டு உடம்பை பட்டினி போடாது, டொக்டரைக்" கொன்சல்' பண்ணினா எல்லாம் சரியாப் போகும். இதை விட்டிட்டு விரதம், அது, இது எண்டு என்னையுமெல்லோ பிடிக்கச் சொல்லிறா?*
சற்றுக் கோபப்பட்டவனாக ஆனந்தன் கூறி னான்.
"எனக்குத் தெரியுமே இந்தக் கோயில், பூசை, விரதம்
ாண்டு நம்பிக்கை இல்லாத உங்கட குணத்தாலே தானே ாங்களுக்கு குழந்தை இல்லை. எப்பதான் உங்களுக்குக்

Page 41
அந்நியம் O 80
இதுகளில நம்பிக்கை வருகுதோ அப்பதான் எங்களுக்குக் குழந்தை கிடைக்கும்"
**இந்தா கெளரி இந்தக் கடவுள் நம்பிக்கை எனக்கும் இருக்கு. அதுவும் உம்மை விட அதிகமாக இருக்கெண்டு நினைக்கிறன். ஆனால் இந்ந மோட்டுத்தனமான விரதம், பூசை எண்டு உடலை வருத்தவும் நேரத்தைச் செலவழிக் கவும் நான் விரும்பயில்லை. ஒரு மனிதன், தன்ர மனத்தில எந்தவிதமான அழுக்கும் இல்லாம சமூகத்துக் குப் பிரயோசனமா வாழ்ந்தாலே போதும், அதுதான் கடவுள் வழிபாடெண்டு நான் நினைக்கிறன்'
"'உங்கட இந்தப் பழைய பிரசங்கத்தை விடுங்க, கொழும்புக்கு எப்ப போறது?வீடெடுக்கிற விஷயம் என்ன மாதிரி இருக்கு?’’
* 'இப்படிக்கேளன் இதுதான் புத்திசாலியின் கேள்வி. நாரஹேன்பிட்டியில ஒரு வீடொண்டு பாத்திருக்கிறன். வாடகை கொஞ்சம் அதிகம்தான் பரவாயில்லை. நல்ல வீடு. ஒவ்வீசுக்குக் கொஞ்சம் தூரம் தான் ஆனால் அடிக்கடி பஸ் இருக்கிறதால அதுவும் அவ்வளவு கரைச்சல் இல்லை, வாற மாதம் போவம். எல்லாத்தையும் ஆயத்தப் படுத்து. நான் கொழும்புக்குப் போயிற்று வந்து கூட்டிக் கொண்டு போறன்.
கொழும்பில் தனிக்குடித்தனம் அவர்கள் இகுவருக்கும் சந்தோஷமாகக் கழிந்தது. காலையில் அவன் அலுவலகத்துக்குப் போனால் மதிய உணவுக்கு தான் வீட்டிற்கு வந்து போவதற்கு நேர அவகாசம் கிடையாது. அந்த அளவிற்கு வீட்டிற்கும் அவனுடைய அலுவலகத்திற்கும் உள்ள இடைத் தூரம் பெரியது. இதனரல் கெளரி அதிகாலையில் "எலாம்' வைத்து

81 நாகேசு தர்மலிங்கம்
எழும்பி காலை, மதிய உணவுகளைத் Sum flégt unties செய்து விடுவாள்.
**கெளரி மருந்து குடிச்சிற்றியா?*
வந்ததும் வராததுமாக அலுவலகம் முடிந்து நுழைந்த ஆனந்தன் கேட்டான்.
* 'இல்லை. இந்த மருந்து குடிக்கேலாது. ஒரே கச்ச
லாக இருக்கு. குடிச்ச உடன வயித்தக் குமட்டிக்கொண்டு வருகுது’’
வாயைச் சுழித்துக் கொண்டு கூறினாள்.
கெளரி இதென்ன நீ குழந்தைப் பிள்ளை மாதிரிக் கதைக்கிற, டொக்டர் உன்னைச் செக் பண்ணி பெரிய அளவில் உனக்கு ஒண்டுமில்லை. இந்தப் பில்சைக் குடிச்சா அதெல்லாம் சரியாப் போகும் எண்டெல்லா GoIFT 6ör Goranu ti ” ’
"ஐயோ எனக்கு இது குடிக்கேலாது. இப்படி ஒரு கச்சலை என்ர வாழ்நாளில் குடித்தது கிடையாது. நீங்க இந்தாங்க கோப்பி குடியுங்க"
கோப்பியும் கையுமாக வந்து கெளரி கெஞ்சி னாள்,
**இந்தா கெளரி எனக்கு இந்தக் கோப்பியும் வேணாம். ஒண்ணும் வேணாம். நீ முதல்லே டொக்டர் தந்த மருந்தக்குடி. அப்பத்தான் நான் கோப்பி குடிப்பன், ’’
6 حس- {9ی

Page 42
அந்நியம் 82
"ப்ளிஸ் நான் குடுக்கேலுமெண்டால் குடிப்பன் தானே. நீங்க களைச்சுப்போய் வந்திருக்கிறீங்க. முதல்ல கோப்பியைக் குடியுங்க"
ஆனந்தனின் அருகே அமர்ந்தபடி மனைவி கூறி னாள்.
**இஞ்ச என்ர குஞ்சு அடம்பிடியாத, இந்த மருந்தைக் குடிச்சாதான் நீ கவலைப் பட்டு அழுகிற குழந்தை கிடைக்கும். அந்த ஆசை நிறைவேற வேணுமெண்டால் சிலருடைய ஒரு மாதிரியான பார்வையில இருந்து விடுபட்டு உன்னாலும் தாய்மையடைய முடியும் எண்டு நிரூபிச்சுக் காட்ட வேணும் எண்டால் ஒழுங்காக இந்த மருந்தைக்குடி'
கோப்பியை உறிஞ்சிக்கொண்டு நாலு பில்லை மனைவி யிடம் நீட்டினான், அவளும் பல்லைக் கடித்துக் கொண்டு அவற்றை விழுங்கினாள்.
"இப்பத்தான் நீ என்ர குஞ்சு. இப்பிடியே நாளாந்தம் குடி, ஒண்டும் கன நாளைக்கு இல்லை; இரண்டு கிழமைக் குள்ள மருந்து முடிஞ்சிடும்."
இன்றைக்கு ஆடிவேல் கடைசி நாளாம். வெள்ள வத்தைக் கோயிலுக்குப் போவமா, ஆறு மணிக்குப் போனா ஒன்பது மணிக்கிடையில் வந்திாலாம்."
"சரி கெளரி போவம் வெளிக்கிடு. ஆனா, அங்க வந்து கோயில்லை குழந்தைப் பிள்ளையளைப் பாத்திற்று சிணுங்கல் கதை கதைக்கப்படாது. அதோட அந்த நேத்தி, கீத்தி எண்டும் வைக்கப்படாது. சரியா?"
"'உங்களுக்கு எந்த நேரமும் பகிடிதான். கோயிலைக் கும்பிடக் கூடாதெண்டும் சொல்வீங்க போல.”*

நாகேசு தர்மலிங்கம் הן 83
* "நான் அப்பிடிச் சொல்லயில்லை. உன்ர குணம் தெரிஞ்சுதான் சொன்னான். கோவிக்காதயப்பா."
"இதென்ன கிறவுட் , இப்பிடி இருக்கு. கால் எடுத்து நடக்க ஏலாம இருக்கு"
"ஒ இன்றைக்கு வேல் விழா கடைசி நாள் தானே. கிறவுட் இப்பிடித்தான் இருக்கும்'
என்று சொல்லி ஆனந்தன் கலகலவெனச் சிரித்தான்,
** என்ன இந்தச் சன நெரிசலுக்கு மனுசர் படுகிற பாட்டுக்க நீங்க கலகலவென்று சிரிக்கிறீங்க?"
* "நான் இந்தக் கிறவுட்டைப் பார்த்துச் சிரிக்கயில்லை. என்ர இளந்தாரிக் கால நினைவு வந்தது. அதுதான் சிரிப்பு வந்திற்றுது’’
மனைவியை அணைத்தபடியே காதுக்குள் ஆனந்தன் கூறினான்.
"என்ன..?இளந்தாரிக் காலத்தில் என்ன நடந்தது?"
* 'இளந்தாரிக் காலத்தில இப்பிடிக் கிறவுட்டெண்டா அதுவும் பெண் பிரசுக்கிறவுட்டெண்டா நாங்களும் இடிச் செண்டு நிற்பம். அதை நினைச்ச உடன இப்ப சிரிப்பு மட்டுமில்லை வெட்கமாகவும் இருக்கு"
** ஏதாவது சாமான் வாங்கப் போநீரா கெளரி?”*
வெள்ளவத்தை நடை பாதையில் கடை விரித்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நோட்டம் விட் டு க் கொண்டு ஆனந்தன் கேட்டான்.

Page 43
அந்நியம் O 84
'எனக்கு ஒன்றும் வேணாம். நமக்கொரு குழந்தை கிடைக்க வேண்டுமென்டு முருகனைக் கும்பிடுங்க. அந்தக் முட்டியை எடுங்க. என்ன விலை எண்டு கேளுங்க?"
KO "இதென்ன கெளரி இவ்வளவு சாமானுக்கை உமக்கு இந்த பானைக் காசு முட்டிதான் விருப்பமாயிருக்கா?*
"இஞ்சேருங்க இந்த முட்டியிலசேருற எல்லாக் காசை யும் குழந்தையட கையால நல்லூர் முருகன் கோயில் உண்டியல்ல போடுறது எண்டு நான் விரதம் இருக்கப் போறன்'
இப்படி மனைவி கேட்டதும் அந்த விரதத்தோடு அவனுக்கு ஈடுபாடு இல்லா விட்டாலும் அவள் கேட்ட பொருளை வாங்கிக் கொடுத்துவிட்டான்.
இஞ்சேருங்க எனக்கு ஒரே வாந்திவாறத்தோட தலைச்சுத்துமாயிருக்கு நாளைக்கு ஒவ்வீசுக்கு லீவு போட்டிட்டு என்னோட வீட்டில இருங்க"
கட்டிலில் சாய்ந்தபடியே மனைவி கூறியது ஆனந்த னுக்குப் பயப்பீதியை ஏற்படுத்திய போதும் தான் ஒரு குழந்தைக்கு அப்பாவாகப் போகிறேன் என்ற சந்தோஷத் தில் சிறகடிக்கத் தொடங்கினான்.
"கெளரி இந்தா ஒண்டுக்கும் பயப்படாதைஉம்முடைய ஆசை நிறைவேறப்போகுது. அதாவது நீர் அம்மாவாகப் போறிர்*
** எனக்கும் அப்பிடித்தான் தெரியுது. எனக்கு இங்க இருக்க ஏலாது. நான் அம்மாவிட்ட ஊருக்குப் போறன். அதோட அண்ணன்ர கலியாண வீட்டுக்கும் ஒரு மாதம் கிடக்கு. இந்த நேரத்தில நான் போனன் எண்டா அம்மாவுக்கு உதவியா யிருக்கும்"

85 நாகேசு தர்மலிங்கம்
மனைவி இப்படிக் கூறியதும் அவளுடைய எண்ணங் களுக்கு குறுக்கே நிற்காத ஆனந்தன் காலை யாழ்தேவி யில் ஊர் போவதற்கான ஆயத்தங்களைச் செய்தான்.
ஒருநாள் அவனுடைய அலுவலகத் தொலைபேசியில் அவனுக்கு யாழ் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்தான். இப்போது கெளரியின் காசு முட்டி உண்டியல் சில்லறையால் நிறைந்தது போல் அவனுடைய உள்ளமும் நிறைந்தது.
அன்று அந்த வேல் விழாவின் போது மட்பாண்டக் கடைகளில் வாங்கிய உண்டியலுக்கு உடைப்பு விழா. ஆனந்தனின் மகன் ‘*சசி' பிறந்த நாற்பத்தைந்து நாட்கள் ஆகிவிட்டது.
* "இஞ்சேருங்கோ வெளிக்கிடுங்கோ? நல்லூருக்குப் பிள்ளையைக் கொண்டு போகவேணும் பத்து மணிப் பூசையைப் பாத்திற்று கெதியில திரும்ப வேணும். பிறகெண்டா வெய்யில் வந்திடும். காசு முட்டி உண்டியல் சில்லறைக் காசுகளை ஒரு துணியில் கட்டுங்கோ. பிள்ளை, யட்ட கையால கோயில் உண்டியலுக்கு போட வேணும்'
மனைவியின் பழைய கொழும்பு விரதம் றிறைவேறப் போவதில் அவனுக்கும் திருப்தி ஏற்பட்டது.
**சரி கெளரி அந்த ரக்ஸிவந்திற்றுதுவாரும் போவம்'
*ஒரு நாளும் இல்லாத கிறவுட் இண்டைக்கு கோபி லிற்குள் பிள்ளைக்கு மூச்சுவிடேலாமப் போச்சு. சரி இந்தச் சில்லறைக் காசுகளைப் பிள்ளையட கையால எடுத்து இந்த உண்டியலுக்க போடுங்க"
மகன் சசியின் கையைப் பிடிச்சு நல்லூர் உண்டியலுக் குள் சில்லறைகளை போட்டுக் கொண்டு கெளரி கூறினாள்.

Page 44
அந்நியம் 86
* எல்லாத்தையும் உண்டியலுக்க போடாத கெளரி'
ஓடி வந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த அத்தி முடிச்சோடு சில்லறையை வாங்கிய ஆனந்தன், தனது மகனின் கையால் நல்லூர் கோயிலிற்கு முன்பாக அமர்த் திருந்த அத்தனை ஏழைகளுக்கும் கொடுத்தான்.
*"ஐயோ இதென்ன செய்யிறீங்க கோயில் உண்டி யலுக்கு போட வைச்சிருந்த காசை ஏன் இவையஞக்கு குடுக்கிறீங்கள்.'"
கெளரி ஒரு வித ஆத்திரத்துடன் கணவனுக்குக் குறுக்கே வந்து கேட்டாள்.
**கெளரி, சும்மா இரும். இந்தா நீ அந்த மூலஸ்தானத் துக்காக காணுற முருகனையும். வேலையும் நான் இந்தச் சகோதரங்கடை முகத்தில காணுறன்"
மகனை மனைவியிடம் நீட்டியவாறு ஆனந்தன் கூறி னான்.
கெளரியும் மகனை வாங்கிக் கொண்டு கணவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். ஆலய மணியும் ஆமோதிப் பது போல் அதிர்ந்தது.

பென்சன்
* மிஸ்டர் தயா, உங்களுக்கொரு வெளிநாட்டுக் கடிதம் ஒன்று வந்திருக்கு. "'
அட்வான்ஸ் லெவல் வகுப்பில் பொருளியல் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த தயாநிதி மாஸ்ரரிடம் எயர்மெயில் க டி த த்  ைத நீட்டியவாறு அந்த மகாவித்தியாலய அதிபர் செல்லத்துரை மாஸ்டர் கூறினார்.
"ஒம் தாங்க சேர். இது தம்பியிட்ட இருந்து வந்திருக்கு. அவன் தான் சுவிஸில இருந்து போட்டி ருக்கிறான்.
கடிதத்தை வாங்கி தனது டயறிக்குள் வைத்துவிட்டு தான் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பாடத்தைத் தொடங்கினார் தயாநிதி மாஸ்டர்.
பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று தான் பிறந்த கிராமத்திலேயே படிப்பிக்கும் தயாவுக்கு சிறிய இடை வேளைக்கு மணி அடிக்கும்வரை ஏதோ வார்த்தை கள் பொருளியல் பாடத்தைப் பற்றிக் கூறினாலும், மனம் தம்பி அனுப்பிய அந்த வெளிநாட்டுக் கடிதத்தைப் பற்றியே சுற்றிச் சுழன்றது.
எல்லா ஆசிரியர்களும் இந்தச் சிறிய இடைவேளையின் போது கன்ரீன் பக்கமாகக் கிளம்பினார்கள். தயா

Page 45
அந்நியம் O 88
மாஸ்டர் தனிமையாக ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைக்குச் சென்று தம்பியின் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
அண்ணன், அண்ணி, மகன் முரளி ஆகியோருடைய சுகம் விசாரிக்கப்பட்டுப் பதிலுக்குத் தனது சுகத்தையும் கூறி.
‘அண்ணா உனது உத்தியோகத்தையும் அந்தப் பள்ளிக்கூடத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டு, உனதும் உனது குடும்பத்தினதும் எதிர்கால வாழ்க்கையை வீணடிக் காமல் எல்லாவற்றையும் உதறித் தள்ளிப்போட்டு உடனே இங்கே வரவும். உனக்குத் தனியே வர விருப்ப மில்லாவிட்டால் அண்ணியையும் மகனையும் இங்கு அழைத்து வரவும். அங்கே நீ எடுக்கும் சம்பளத்தை விட இங்கு பலமடங்கு எடுக்கலாம். அத்தோடு அகதி என்று கோரி அங்கை விட இங்கே ஆடம்பரமாகவும் வாழ்க் go so) நடத்தலாம். உன்னைப் போன்ற JG) பட்டதாரிகள் இங்கு மிகவும் திறமான வாழ்க்கை வாழ் கிறார்கன்.""
நீங்கள் அனைவரும் இங்கு வருவதற்கான செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஆயத்தம் என்றால் அவைகளை உடனடியாக நான் அனுப்பிவிடு கிறேன். உங்களுடைய தேசம், மொழி, பிறந்த மண் என்ற இலட்சியங்களும் எனக்குத் தெரியும், இவை எல்லா வற்றையும் உதறிவிட்டு நமது முன்னேற்றத்தையே நாம் பார்க்கவேண்டும். நாட்டு முன்னேற்றத்தைப் பலர் பார்ப்பார்கள். ஒரு காலத்தில் அப்படி நாடு முன்னேறி னால் மீண்டும் நாங்களும் எங்கள் முன்னேற்றத்துடன் நாடு திரும்பலாம் தானே.”*

89 நாகேசு தர்மலிங்கம்
கடிதத்தைப் படித்துவிட்டு மடித்து சேர்ட் பொக் கட்டுக்குள் வைத்துவிட்டு தனது கண்ணாடியைக் கழட்டி கூட்டிற்குள் வைத்துக் கொண்டு தயா மாஸ்டர் தனக்குள் ளேயே சிரித்தார்.
*' என்ன சேர் உங்களுக்குள்ளேயே சிரிக்கிறீங்க" வந்து கொண்டே மிஸ் அன்னசோதி ரீச்சர் கேட்டார்.
**ஒண்டுமில்லை மிஸ். என்னுடைய தம்பி எனக்கும் புத்தி சொல்லுற மாதிரிக் கடிதம் எழுதியிருக்கிறான், அது தான் எனக்கும் சிரிப்பு வந்தது'
“உங்கட தம்பி எண்டா. சுவிஸிலயோ எங்கேயோ இருக்கிறார் எண்டு சொன்னனிங்க அவரைப் பற்றியா சொல்லுறிங்க?"
* “ஓம் ரீச்சர் அவன்தான். அவன் சொல்லுறதும் ஒருவிதத்தில் சரிதான் இஞ்சயுள்ள இந்தப் பொருளா தாரச் சிக்கலுக்க வாழ்க்கை நடத்திறதை விட்டிட்டு அங்க போயிட்டாலும் பரவாயில்லைத்தான்'
அடுத்த Lunt L-lib தொடங்குவதற்கான LDGOosi அடிக்கவே இருவரும் எழுந்து வகுப்பறைகளுக்குச் சென் றார்கள்.
தான் தம்பியின் கடிதத்தைப் படித்தவுடன் ஏற்பட்ட உணர்ச்சியில் அன்னசோதி ரீச்சரிடம் கூறிய வார்த்தை களை நினைத்துத் தயா மாஸ்டர் : தன்னையே நொந்து கொண்டார், வெளிநாடு போபவர்களுக்கு இந்த மண், மொழி. கலாச்சாரப் பற்று எதுவும் கிடையாது என்று கூறிய வாதம் நினைவு வரவே மேலும் அவருக்கு வெட்கம் தலைதூக்கியது.

Page 46
அந்நியம் 90
இந்தக் கடிதத்தை எப்படி என் மனைவிக்குக் காட்டு வது? சும்மாவே பக்கத்து வீட்டு ரீவி, டெக், ரேடியோ, குசன் செற்றுகளைக் காட்டி, என்னையும் வெளிநாட்டுக் குப் போகும்படி தூண்டுபவள். ஏதாவது எனக்கும் அவளுக்கும் சண்டை என்று வந்துவிட்டால் அது இந்த வெளிநாட்டுச் சண்டையாகத்தான் இருக்கும். என்னு டைய அம்மாவுக்கு மட்டும் நான் வெளிநாடு போறது விருப்பமில்லை. ஏண்டா இரண்டு ஆம்பிளைப் பிள்ளையில ஒண்டெண்டாவது தன்ர கடைசிக் காலத்தில் தனக்குப் பக்கத்தில் இருக்க வேணும் என்கிறது அவாவிடை ஆசை! என்று யோசித்தவாறு தயா மாஸ்டர் பாட சாலை முடித்து தனது சயிக்கிளை வீட்டை நோக்கி மிதித்தார்.
**கெளரி, இண்டைக்கு ஸ்கூலுக்குப் போட்ட சேட்டுக்க தம்பியின்ர கடிதம் இருக்கு எடுத்துப்
Ttf
சாய்வு நாற்காலியில் இருந்து தேனீரை அருந்திய வாறு மனைவியிடம் தயா மாஸ்டர் கூறினார். மகன் முரளி பும் குப்பிப் போத்தலில் தேனீருடன் வந்து தந்தையின் மடியில் ஏறினான்.
"'உங்கட தம்பி உண்மையைத்தானே எழுதி இருக்கி நிார். அந்த சின்னப் பெடியனுக்கு இருக்கிற புத்திகூட உங்களுக்கு இல்லை. அதுவும் நீங்க வெளிக்கிடுகிற தெண்டால், தான் காசு அனுப்புகிறாராம். சும்மா இஞ்ச ஆயிரத்தைஞ்நூறு ரூபாவுக்கு வீணா ஏன் மட்டை அடிக்கிறீங்க? அங்க பாருங்க அவள் வசந்தாவின்ர புருஷன் ஜேர்மன் போய் ஒரு வருஷம் கூட ஆகவில்லை. அதுக்கிடையில அவளட வீட்டப் பாருங்க, கோடீஸ்வரன் வீடு மாதிரி இருக்கு. இந்த வேலையையும்

91 நாகேசு தர்மலிங்கம்
- அரையும் வி ட் டு ட் டு எங்கயாவது வெளியில
போங்கப்பா"
மனைவியின் வழமையான பல்லவிக்கு இந்தக் கடிதம் தாளம் சேர்ந்ததுபோல் அமைந்துவிட்டது.
'எனக்கு நீ இந்தக் கடிதத்தைப் படிக்கேக்கையே இப்படி ஒரு பெரிய புராணம் பாடுவாய் எண்டு தெரியும், இந்தா கெளரி நீ சொல்லுறதும் சரிதான் ஆனால் அதுக்குக் காலம் பிந்தியிற்றுது. நான் போறதெண் டால் யூனிவேர்சிற்றியால் வெளியில வந்த உடன போயிருக்கவேண்டும், இனிமேல் வேலையில்லை. அப்பிடிப் போனா எங்காவது அகதிக் காம்பில போய் சாப்பிட்டுக் கொண்டு இருக்கவேண்டியதுதான். அதை விட இஞ்ச இருக்கிறது இப்ப பரவாயில்லை, சரி வெளி நாடு போயாச்சு, போயிற்று வந்து இங்க என்ன சேய்யிறது? பிறகு உத்தியோகம் எடுக்க ஏலுமா? எனக்குத் தெரிஞ்ச எத்தினை உத்தியோகக்காரர்கள் வேலையை விட்டுட்டுப் போய் அங்கையும் சரிவராமல் பிறகு இங்கையும் வந்து வேலை வெட்டி இல்லாததையும் நான் பார்த்திருக்கிறன். என்னையும் அப்பிடியா நிக்கச் சொல் கிறாய்?"
உள்ளூர ஆத்திரத்துடனும் சற்று நிதானமாகவும் தயா மாஸ்டர் கூறினார்.
"நான் இப்ப எங்களுக்கு இருக்கிற கஸ்டத்துக்கும், மற்றாக்கள் இருக்கிறதையும் பார்த்துத்தான் இப்பிடிச் சொன்னனான், அதுக்கேன் இப்ப கோபிக்கிற மாதிரிக் கதைக்கிறீங்க?"
அழாக் குறையாக மனைவி கூறினா ள்,

Page 47
அந்நியம் 92
"இப்ப நீ ஏன் கெளரி அழுகிற? இப்ப நான் சொல்லி யிற்றன்! ஏதோ சாப்பாட்டுக்கு நமக்குக் குறைவில்லைத் தானே. அதிலயாவது நாம திருப்திப்படுவம். இன்னு மோரு முக்கிய விஷயத்தை உனக்குச் சொல்லுறன். நீ சும்மா ஆயிரத்தைஞ்நூறு ரூபா வாத்தியார் வேலை யெண்டு மட்டும் சொல்லுறாய். அதுக்குப் பிற்காலத்தில சாகும் வரைக்கும் பென்சன் கிடைக்குமல்லவா? நான் இல்லாத காலத்திலும் கூட உனக்கும் அது கிடைக்கும்.”*
** எனக்கும் அது தெரியும், பின்னர் என்னத்துக்கு இத்த உத்தியோகத்தை நம்பிறது? இது ஒண்டுதானே இதில உள்ள லாபம். எங்கட வள்ளியம்மை மாமியைப் Linrič3fijsqTr? LDrLDr  ெச த் த பிறகும் ஆற்ற உதவியும் இல்லாமல் மாமாட பென்சனை எடுத்துக் காலை நீட்டிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக் கிறா.”*
இவருடை சூடான விவாதங்களும் மெல்ல மெல்லத் தணியத் தொடங்கியது.
* "நான் ஒருக்கா அம்மன் கோயிலடிப்பக்கம் போயிட்டு வாறன்’’
அந்தத் தீவின் தெற்குக் கரையில் அமர்ந்திருக்கும் கண்ணகை அம்மன் ஆலயத்தை நோக்கி தயாநிதி மாஸ்டர் சயிக்கிளில் சென்றார்.
**கெளரி அக்கா; கெளரி அக்கா இண்டைக்கு யாழ்ப் பாணத்தில சரியான குழப்பமாம். ஆமி வெளியில வந்து கனபேரைச் கட்டுப் போட்டுதாம், எங்கட அப்பு யாழ்ப்பாணம் வெளிக்கிட்டு போக ஏலாமல் வங்களாவடி

93 O நாகேசு தர்மலிங்கம்
மட்டும் போயிற்று திரும்பி வந்திட்டார்." பக்கத்து வீட்டுச் சாந்தி பதைபதைப்புடன் வந்து கூறினாள்.
"ஐயோ சாந்தி காலையில இவர் போபிற்றார், என்ன நடந்துதோ எனக்குப் பயமாயிருக்கு. "" என்று கூறிய கெளரிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஒட வில்லை. கணவனின் சிந்தனையிலேயே ஆழ்ந்து இருந் தாள.
அன்று மாலையாகியும் தயாநிதி மாஸ்டர் வீட்டுக்கு வரவில்லை. இருள் வரவே, கெளரியின் இருதயத்திலும் இருள் கவ்வத் தொடங்கியது.
இரவு ஒன்பது மணி வானொலிச் செய்தியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். நால்வரும் இயக் கத்தின் முக்கியஸ்தர்கள் என்று கூறியது.
"ஐயோ என்ரை இவரும் இதுக்க அம்பிட்டாரோ. அவரை யும் பயங்கரவாதி எண்டுதான் சொல்வீனம் Сита
கெளரி தலையில் அடித்துக் கூக்குரல் இட்டுக் குளறத் தொடங்கினாள்.
யாழ் பொது வைத்தியசாலையில் பிரேதம் கிடக்கு தாம் என்ற செய்தியையும் தொடர்ந்து அந்த வானொலி கூறியது.
மறுநாள் காலை அழுகைக் குரலோடு அந்த வைத்திய சாலைக்குக் கெளரி போனாள். பிரேத அறையில் கிடத்தப் பட்டிருந்த இறந்த உடல்களில் தயாநிதி மாஸ்டருடைய தும்"ஒன்று, இதைப் பார்த்த கெளரி அப்படியே மயங்கி அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.

Page 48
அந்நியம் O 94
"பொடியை நீங்கள் கொண்டுபோய்த் தகனம் செய்வ தென்றால், இவர் பயங்கரவாதி என்று ஒப்புக்கொண்டு கையொப்பம் இட்டுத்தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தகனக்கிரிகைகளைச் செய்வோம். இதுதான் எங்கடை சட்டம்.”*
அந்த வைத்தியசாலை வளவுக்குள் பொறுப்பாக நின்ற படையினரில் ஒருவன் கூறினான்.
* சரி, பயங்கரவாதிதான்’ என்று கூறிக் கையெழுத் திட்டு தயாநிதி மாஸ்டரின் உடலை வெளியில் எடுத்தார் கள். அவருடைய படிப்பு, உத்தியோகம், சேவைக்காலம், பென்சன் எல்லாம் மறைந்து மறைந்து அவரும் பயங்கர வாதி என்ற முத்திரை ருத்தப்பட்டு நாட்டின் பொதுசனத் தொடர்பு சாதனங்களில் தயாநிதி மாஸ்டர் இடம் பெற்றார்.

விதவை
இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்பு குவைத்தில் இருந்து கணவன் தாய் நாட்டுக்கு வரப் போகிறான் என்று காலையில் வந்த எயர்மெயில் கடிதச் செய்தியை படித்த தும் மங்களத்துக்குக் கையும் ஓடவில்லை காலும் ஒட வில்லை. அ வ ள் ம ன ம் குதூகலத்தில் குதித்தது. மகிழ்ச்சி மிகுதியால் இடைக்கிடை தனிமையில் சிரித்தாள். மூன்று வருடங்களாகக் கணவனைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்த அவளுக்கு இந்த இரண்டு வாரங்களும் இரண்டு வருஷங்களாக நீண்டு செல்வது போன்ற உணர்வு ஏற்பட் டது. மாலைவேளைகளில் த ன்  ைன அலங்கரித்து கண்ணாடி முன் நின்று கணவன் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து விடுவாள். மகன் பிரகாஷ"ம் அப்பாவின் வரவை அறிந்தவன் போல.
‘அப்பா எப்ப அம்மா வருவேர்? எனக்கென்னம்மா கொண்டு வருவேர்? என்று எந்நேரமும் தாயைக் கேட்கத் தொடங்கி விட்டான்.""
கணவன் குவைத் போனபின்பு அவர்களுடைய வீடு பல நவீன பொருட்களால் நிறையத் தொடங்கியது. Qu'u Gunr கணவன் வரப்போகிறார். ரி. வி. டெக், றேடியோ முதலிய பொருள்களைத் தகுந்த இடங்களில் வைத்து வீட்டை மேலும் அலங்கரிப்பதற்கு மூளையைப் போட்டுக் குழப்பிய அவள், வங்கிப் புத்தகத்தில் உள்ள வைப்புக்கணக்கையும் பார்த்துக் கணக்கிட்டாள்.

Page 49
அந்நியம் 96
அட.ட.இண்டைக்கு கொழும்புக்கும் அண்ண ணுக்கு ஒரு கடிதம் போடவேணும். பதிணாலாம் திகதி பின்னேரம் ஐஞ்சு மணிக்கு அவற்ற பிளையிட் வரும். அங்க கட்டுநாயக்காவுக்குப் போய் அவரைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி இப்பவே அண்ணனுக்கு கடிதம் போட்டாத்தான் கொழும்புக்கு இரண்டு கிழமைக்கிடை யில் போய்ச்சேரும். எங்கட உள்ளூர்த் தபால் சேவை நல்லாச் சீர்கெட்டுப் போயிட்டுது.
அவர்களுடைய வீட்டில் இருந்து அரைமைல் தூரத், தில் துவக்கு குண்டுகளின் வெடிச் சத்தம் சரமாரியாகக் கேட்கிறது. மகனையும் வயதான தாயையும் வீட்டிற்குள் விட்டுப் பூட்டிவைத்து வெளிலையிட்டுகளை அணைத்து விட்டு அவர்களோடு அவளும் ஏக்கமும் நடுக்கமுமாக இருந்தாள்.
இந்தப் பிரதேசத்தில் இந்நிகழ்ச்சிகள் நாளாந்தம் நடைபெறுபவை. சிறிது நேரத்தின் பின் பதற்றம் நிலவிய அப்பகுதிகளில் மயான அமைதி நிலவும். வெடிச் சத்தம் கேட்கும் அப்பகுதிக்கு யாரும் போய்ப் பார்க்க மாட்டார்கள். இரவிரவாகக் கேட்கும் அச் சத்தத்தோ டையே உறங்கிவிடுவார்கள். காலையில் வரும் நாளிதழ் கள் மூலமே என்ன நடந்தது என்பது தெரியாதது போல் சன நடமாட்டம் வழமைக்குத் திரும்பி விடும்.
மகனும், பாட்டியும் நன்றாகத் தூங்கி விட்டார்கள். மங்களம் தூங்கவில்லை. காலையில் கணவனின் கடிதத் தைப் பிரித்த போது இருந்த சந்தோஷமிம் கலகலப்பும்இப் போது இல்லை. பதிலுக்குக் கவலையே வீடெங்கும் தேங்கியிருந்தது.
இந்த இளம் வயதில் இந்தக் காசுக்காகவும் சொத்துக் காகவும் மூண்டு வருஷம் அவரைப் பிரிஞ்சி இருந்தது பெரிய வேதனைதான். இப்ப உள்ள இந்தச் சூழலில்

97 நாகேசு தர்மலிங்கம்
மனுசன் இங்க வாறது பெரிய வேதனையாக இருக்குது. அவருக்கு முப்பத்து மூணு வயது. ஆனா ஆளைப்பார்த்தா இருபத்துமூணு வயசுப் பெடியன் மாதிரி. அவற்ற அழகுக்கு இஞ்ச ஒருவரும் கிட்ட நிக்க ஏலாது. இது இஞ்ச இருக்கிற ஆட்களுக்குக் கண்ணுக்க குத்துறது மாதிரி. ஐடென்ரிக் காட் கேட்டுவாற ஆக்களுக்கும் குத்தும். அதால பெடியன் எண்டு கொண்டு போயிருக் கினம்.
இளைஞர்களையும் யுவதிகளையும் கைது செய்து கொண்டு போகும் பிரதேசத்திற்குத் தனது கணவன் வரப் போகிறார் என்ற செய்தி அவளுடைய சந்தோஷ உணர் வைச் சோகமாக மாற்றி வாட்டத்தை ஏற்படுத்தியது. நித்திரையின்றிக் கட்டிலில் உருண்டு உருண்டு படுத்தாள்.
விடிய விடியெனப் பால்காரனைத் தொடர்ந்து அப் பிரதேச நாளிதழ்கள் வந்தன.
இரவு நடைபெற்ற தாக்குதலில் மூன்று வீடுகள் முற்றாகச் சேதமுற்றதுடன் ஆறுபேர் கொல்லப்பட்டார் கள். அவர்களுடைய பெயர்களுடன் வயதுகளும் அப்பத் திரிகையில் இடம்பெற்றிருந்தனர் அதில் இருவர் நான்கு வயதுக் குழந்தையும் ஆறு வயதுக் குழந்தையுமாகும். எஞ்சியோரின் வயது அறுபதுக்கு மேற்பட்டதாக இருந் தது. ஆனால் காலை வானொலிச் செய்தியில் இறந்த ஆறு பேரையும் வேறு வித மாணவர்கள் என்று எதையோ மேற்கோள் காட்டி கூறப்பட்டது.
இப்படியான செய்திகள் அங்கு வசிப்பவர்களுக்குப் புதியதல்ல. என்றாலும் அவர்களுடைய வாழ்வில் நித்திய பதற்ற நிலைக்கு வழிவகுத்து விட்டன.
7-س-eyی

Page 50
அந்நியம் O 98
மங்களம் உன்ர புருசன் வெளிதாட்டில் இருந்து வாறேராம், உண்மையர்?"
மல்லிகைப் பூப்பிடுங்குவதற்காக வந்த கனகம் கேட் 4-fresir.
* “ஓம் கனகமக்கா. வாறகிழமை வாறோம். ? ?
அதற்கேன் பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டிய நீ துக்கப்படுகிற மாதிரி இருக்கிற?.”*
** அப்பிடி ஒண்டுமில்லையக்கா. ஐயோ. மனுசன் கனகாலத்துக்குப் பிறகு வருகுது. அது எனக்குச் சரியான சந்தோஷம். இப்ப இஞ்ச உள்ள சூழலை நினைக்கத்தான் பயமிாயிருக்கு.
'அதுவும் உண்மைதான் பிள்ளை. பெடியன் வந்தா வேளியில வெளிக்கிடாம வீட்டுக்க இருக்கச் சொல்லு.”*
அவர் எங்கயக்கா வீட்டுக்க இருக்கப் போறார்? மற்றது நோப் பே லீவும் முடியுது. பிறகு கச்சேரிக்கு வேலைக்குப் போகத்தானேவேணும்."
@
நமக்கு மட்டுமா மங்களம் இது? நம்மட ஊர்ச்சனம் எல்லோருக்கும் தானே.இந்த நல்லுரான்ர மணியுங் கேக் து. நான் கோயிலுக்குப் போகவேணும். போயிற்று வாறன் .'
மங்களம் என்ர சயிக்கிள் எங்க? அந்தப் பின்
அறையிக்க எல்லா வைச்சிற்றுப் போனான்?*
அவசர அவசரமாக எங்கோ வெளிய புறப்பட்டுக் கொண்டு கணவன் கேட்டான்.

99 நாகேசு தர்மலிங்கம்
எனக்குத் தெரியும் இங்க ஊருக்கு வந்தா இனி உலாத்தல்தான். இப்ப நம்மட ஊர் முந்தின மாதிரி இல்லை. கண்டபடி ஒருத்தரும் வெளியில போறதில்லை. நீங்க எங்க போநீங்க?"
நீ என்ன மங்களம் சொல்லிற? சும்மா இப்படி உள் ைேடயே வீட்டுக்க அடைபட்டுக் கிடந்தாச் சரியா? நான் அங்க குவைத்தில றேடியோ, பேப்பர், ரீவியில தம்மட குைேரப்பற்றிக் கேட்டா, பார்த்த நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை நேரில பாக்கவேணும்.”*
ஏன் உங்களுக்கு என்னோட இந்த வீட்டுக்க இருக் கிறது பிடிக்குதில்லையோ?”
என்ர குஞ்சு.அப்பிடிச் சொல்லாத. உன்னையும் மகனையும் பிரிஞ்சு மூண்டு வருஷம் நான்பட்ட வேதனை உனக்கெங்க விளங்கப் போகுது?"
குசினி அறைக்குள் மனைவியை அணைத்தவாறு கணவன் கூறினான்.
சும்மா விடுங்கப்பா...அங்கால அம்மாவல்லே. அம்மா கண்டபடி ரவுணுக்க தேவையில்லாம நிக்காதீங்க. அதோட அங்கால கோட்டைப் பக்கம் போகாதீங்க**
அது சரி என்ர சயிக்கிள் எங்கயப்பா? கறல்பிடிச்சு எங்கயாவது தூக்கி எறிஞ்சிட்டியா?"
உங்கட சயிக்கிள் இவ்வளவு நாளும் அக்காட மகன் முரளிதான் பாவிச்சவன். நீங்க வந்தாப் போல நேற்றுக் கொண்டு வந்து தந்தவன். அது ஸ்ரோர்நூமிலே இருக்குது'

Page 51
அந்நியம் 100
**சரி நான் போய்ச் சுத்தியடிச்சு பாத்திட்டு வாறன். அப்பன்.பிரகாஷ்.டாடா.அப்பா போயிட்டு வாறன்.”*
பல நாட்களின் பின்தான், பிறந்து வளர்ந்து நடமாடிய தனது மண்ணில இடம் பெற்ற அனர்த்தனங்களின் எச்ச சொச்சங்களைப் பார்ப்பதற்காக அவன் சையிக்கினை வேகமாக மிதித்தான்.
'இந்த மனுசனை இன்னும் காணயில்லை மாலை கழிந்து இரவாகியும் கணவன் வீடு திரும்பாமையால் மனசுக்குள் சங்கடப்பட்ட மங்களம், மணிக்கூட்டையும் வீட்டுக்கேற்றயும் பார்த்தவண்ணம் வெளி விறாந்தையில் உட்கார்ந்து இருக்க சுவர்க்கடிகாரமும் எட்டு அடித்து ஒப்ந்துவிட்டு இருக்க -
*சீ, இது என்னப்பா உலகம்? நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணைக்கெடுத்துப் போட்டாங்கள். இந்த நகரின் அழகு. கலை, கலாசாரம், வாழ்க்கைமுறை, பொருளா தாரம்.எல்லாத்தையும் சீரழிச்சுப் போட்டாங்கள்.'" என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தவாறு கேற்றைத் இறந்து சயிக்கிளை உருட்டிக்கொண்டு கணவன் வருகிறான்.
'நீங்க இப்பவும் பழைய ஊர் எண்டுதான் நினைச் செண்டு இருக்கிறீங்க. இப்ப இங்க ஏழு மணியோட லைட் டையும் அணைச்சுக்கேற்றையும் பூட்டிச்சனங்கள் வீட்டுக்க முடங்கியிருங்கள். இவ்வளவு நேரமும் எங்க போயிட்டு வாறிங்க? நான் ஏங்கித் தவிச்சுக்கேற்றையே பாத்தெண்டு இருக்கிறன்.'
*ஓம் மங்களம் ஊரே அடங்கியிட்டுது. றோட்டில
ஒரு சனங்கூட இல்லை. நானும் பயந்து பயத்து தான் வந்தன் .'

101 நாகேசு தர்மலிங்கம்
இப்படி அவன் கூறியபோது தூரத்தே வெடிச்சத்தம் ஒன்று கேட்கிறது. அத்தோடு ஹெலிகொப்டர் பறக்கும் ஓசையும் லேசாகக் கேட்கிறது.
* "மங்களம், இந்த அழகான சின்ன நகர் சோபையெல் லாம் இழந்து ஒரு விதவையைப் போல காட்சியளிக்குது. கடவுளே.லைப்ரரி, மாநகர சபை, சுப்பிரமணியம் பாக், ஒப்பின் எயர்த் தியேட்டர், விரசிங்கம் ஹோல் ரீகல் தியேட்டர், எத்தனையோ வீடுகள், அநாதரவாகக்கிடக் கும் முனியப்பர்கோயில், முண்டமாகத் தெரியும் பெரியார் களின் சிலைகள், எரியுண்ட கடைகள் குண்டும் குழியுமான வீதிகள். எல்லாம் அப்படியே விதவைக் கோலத்தையே கண்முன் நிறுத்தியது.'
கணவன் இப்படிக் கூறியபோது குறுக்கிட்ட மங்களம் **நீங்க நகரம் தன்ர சோபையை இழந்து விதவை மாதிரித் தெரியுது எண்டுநீங்க. அதைவிட இங்க இருக்கிற எத்த னையோ பெண்கள் கணவன் மாரை இழந்து விதவை களாக இருக்கிறதைப் பாக்கயில்லைப்போல எத்தனைபேர் சகோதரர்களையும் பிள்ளைகளையும் இழந்து."
**தெரியும்.இது எனக்கு எப்பவோ தெரியும் மங்களம். இதுகளை நினைச்சா ஹாட் நிக்கும் போல இருக்கு. இது களுக்கு நாங்க என்ன செய்யலாம்.கடவுள்தான் ஒருவழி விட வேணும்.’’
இப்படி அவன் கூறியபோது அவனுடைய இரண்டு கண்களிலும் இருந்து சிந்திய கண்ணிர் மடியில் இருந்த பத்திரியையை நனைத்தது.
* 'இதென்ன. நீங்க அழகுறிங்க 'சரி..சரி. முகத்தைக் கழுவிப் போட்டு வந்து சாப்பிடுங்க. ' கணவனின் கண்ணிரைத் தன் சேலைத்தலைப்பால் துடைத்தவாறு மங்களம் கூறினாள்.

Page 52
அந்நியம் O 102
இன்று அந்த நகரம் அல்லோலகல்லோலப்படுகிறது. நகரில் இருந்து நாலாபக்கமும் மக்கள் சிதறி ஓடத் தொடங் கினார்கள். அங்கு தரித்து நின்ற கார், மினிபஸ், லொறி முதலான வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிராமப் பகுதிகளை நோக்கி விரைந்தன. துவக்கு குண்டுகளின் சத்தம் வானைப் பிளந்தது. கடைகள் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு எல்லோரும் அகப்பட்ட திசையை நோக்கி ஓடினார்கள். புதிய போர் விமானங்கள், ஹெலி கொப்டர்கள் வானில உறுமிக்கொண்டு குண்டு களைச் சரமாரியாகப் பொழிகின்றன. இறந்தவர்களும் காயமுற்றவர்களும் நகரில் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள். மொத்தத்தில் பெரிய யுத் த ப் பிரதேசமாக அந்த நகரம் காட்சியளிக்கிறது.
‘இந்த மனுசன் தேவையில்லாமத்தானே இப்ப ரவுணுக் குப் போயிருக்கு. ’’
கணவன் இன்னும் வீடு திரும்பாமையால் ஏற்பட்ட ஏக்கத்தினாலும் குண்டு சத்தங்களின் பயத்தினாலும் மங்களம் சமையல் வேலையில் ஈடுபடாமல் கேற்றை நோக்கியவண்ணம் கவலையோடு இருந்தாள்.
'சித்தி. சித்தி.அங்க ரவுணுக்க சித்தப்பாவுக்குத் தொண்டையில் குண்டுபட்டு பெரியாஸ்பத்திரியில போட்டி ருக்காம். மாமா எங்கட வீட்டுக்கு வந்து சொல்லிப் போட்டு ஆஸ்பத்திரிக்குப் போறார்' பதைபதைக்க ஓடி வந்து முரளி கூறினான்.
"ஐயோ. கடவுளே...நல்லூ ரானே. கண்ணகைத் தாயே. எனக்கு இந்த விதியா? என்ர ராசா மூணு
வருஷத்துக்குப் பிறகு வந்து இன்னும் ஒரு மாசம் ஆக, வில்லையே. அதுக்கிடையில...'

103 நாகேசு தர்மலிங்கம்
மங்களம் தலையில் தனது கையால் அடித்துக் குளறி கூக்குரலிட்டாள்.
** மங்களம் என்ன தலையில அடிச்சுக் குளறிற. என்ர இவரும் காலயில பெரிய கடைக்குப் போனார் இன்னும் காணயில்லை. நூற்றுக்கு மேல செத்துப் பெரியாஸ்பத்திரி பிலகிடக்கிதாம்.”*
அடுத்த வீட்டுக் கனகமும் கண்ணிருடன் கூறிக் கொண்டே வந்தாள்.
வெடிச் சத்தம் ஓய்ந்தவேளையில் அபகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலுமிருந்து எழுந்த கூக்குரலோசை வானில் பரவியது.
*மங்களம். மங்களம். ஐயோ குடி அழிஞ்சு போச்சுது. உன்ர.உன்ர. புருஷன். 'என்று கூறிக்கொண்டு வந்த அக்கா மாரடித்து அழத் தொடங்கினாள்.
* "ஐயோ...அக்கா..இனி நான் இந்த உலகத்தில..."
மங்களம் மூர்ச்சித்து வீட்டுப் படியில் விழுந்தாள்.
விபரம் அறியாதபிரகாஷ"ம் தாயின் சேலைத்தலைப்பைப் பிடித்துக்கொண்டு அழத்தொடங்கினான்

Page 53
உள்ளும் புறமும்
இன்று சரியான வெயில், இன்று மட்டுமா எப்போ தும் இந்த வெயில் இப்பிடித்தான். வெயில் எப்பிடிக் கொளுத்தினாலும் இந்தப் பட்டின பஸ் நிலையம் அது தான் தனித்தகரக் கொட்டகை எங்கோ எறிக்கின்ற வெயில்களை எல்லாம் ஒன்று திரட்டி, தான் உட் கொண்டு வெக்கையை பஸ்ஸிற்காகக் கால் கடுக்கக் காத்து நீற்கும் எல்லோர்மீதும் படியவிடும். பஸ் வண்டி கள் உறுமிக்கொண்டு கக்கும்போது கருகிய டீசல் புகை வேறு. அத்தோடு அந்த பஸ் வண்டிகள் பிறேக் போடும் போதும் வெளிக்கிளம்பும்போதும் எழுந்புகின்ற தூசிகள். இதுவும் வெயில் வெக்கையில் வேகும் மனித உடல்களின் வேர்வையோடு சங்கமிக்கும்.
அம்மாவுக்கு என்ன தெரியும்? தற்செயலாக பஸ்ஸப் பிந்தவிட்டு ரியூசனால சுணங்கி வந்தா வீட்டில அவாவின் தச்சரிப்பு.
அப்பப்பா.அம்மா எந்த நாளும் எரிஞ்சு விழுகிற மாதிரியைப் பாத்தா இந்த உலகத்தை விட்டே போயிட லாம் போலத் தோன்றும்.
மனம் கொஞ்சம் கூடுதலாக உறுத்தத் தொடங் கியது.
"யாரோ ஊர் தெரியாத சந்திரனோட பழகிறது.
அவரோட கதைத்துக் கொண்டு நிண்டு போட்டு பஸ்ஸப் பிந்தவிடுகிறது. அல்லாட்டி பிள்ளை அட்வான்ஸ் லெவல்

105 O நாகேசு தர்மலிங்கம்
யடிச்சு வாசிற்றி போய் பட்டதாரியாக வேணும் என்று வீட்டுக் கஷ்டத்தைக் கூடப் பார்க்காமல் அம்மா என்னை ரவுனுச்கு ரியூசனுக்கு அனுப்புறாவோ.அந்த ஆசையை நான் நிறைவேற்றுவேனா.
எல்லாம் என்ர தப்புத்தான்.சீ சீ சந்திரன் தன்ல பிள்ளை. அது மாந்திரமில்லை. ஆணழகனும் கூட. படிப்பதிலும் நல்ல கெட்டிக்காரன். என்னோட படிக்கிற பிள்ளைகளில் என்னவோ தெரியாது. உண்மையில சந்திரன் ஒரு எக்ஸ்றா ஓடினறிக் கேஸ்தான்.
சில வேளை அவர் என்ர காதலன் எண்டு இப்பிடிப் புளுகிறேனா? சீ. அவருக்கு உண்மையில இந்தத் தகுதி எல்லாம் இருக்கு. என்னோட படிக்கிற பேபி கூட எனக்கு இதைச் சொன்னவள். ஏன் அவர் குறைவா? அவரும் என்னை இப்பிடித்தான் புளுகுவர். நான் என்னைக் கண்ணாடியில பாக்கிறபோதெல்லாம் அவர் சொல்லிறது பொய் போலத் தோன்றும். சிலவேளை நான் அவரட்டை இதைச் சொல்லுவன். அதுக்கவர்.
“உங்கட வீட்டுக் கண்ணாடியில இது தெரியாது. என்ர நெஞ்சுக்க ஒரு கண்ணாடி இருக்கு அதில உன்ர மூகத்தைப் ப்ார். . அழகா இல்லையா எண்டு தெரியும்." எ ன் று சொல்லிக் கல கல எ ன் று
Friulunarrio.
நான் எங்கட ஊர் மகா வித்தியாலயத்தில படிக்கிற போது, இந்தக் காதல், கீதல் எல்லாம் எனக்கு தெரியாது. என்னோட படிச்ச ராதா, ரஞ்சனி, சுமதி எல்லாம் அப்படியே தொடங்கியிட்டாளவ.
இப்ப சந்திரனுக்கும் எனக்கும் எப்பிடி இந்தத் தொடர்பு ஏற்பட்டுது அதை நினைச்சா இப்ப

Page 54
அந்நியம் 106
சிரிப்புத்தான் வருது. முந்தி ஊரில படிக்கேக்க என்ர பள்ளித் தோழிகளை நீங்க படிக்க வந்தீங்களா?அல்லாட்டி
காதல் கடிதம் எழுத வந்த நீங்களா? என்று கேட்பேன்.
அதை இப்ப நினைக்க எனக்கு வெட்கமாக இகுக்கு.
அதால நான் இப்ப அவளவயச் சந்திக்கிறதில்லை. தற்செய லாக ஆராவது ஒருத்தியைச் சந்திச்சா அவளவை இதைத்
தான் கிண்டிக் கிண்டிக் கேட்பாளவை.
என்னவோ நானும் >9/6תע (60ונ உயிருக்குயிராக் காதலிக்கிறன். ஏன் அ வரும் அப்பிடித்தான். இது நிறைவேறுமா எண்டு நினைக்கத்தான் பயமா இருக்கு.
நேரத்தைப் பார்க்கிGறன். பதினொரு மணி முப்பது திமிடம். மனது கைக்கடிகார டிக்.டிக், ஓசையும் ஒன் றோடு ஒன்று போட்டி போடுவது போல் இயங்கு கின்றன.
இது என்ன?
எத்தின மணித்தியாலம்தான் வாற பஸ்களை எல்லாம் விட்டிட்டு இதுல நிக்கிறது? ஆராவது எங்கட ஆணர்ச் சனங்கள் தெரிந்தவர்கள் வந்தா என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்.
இந்தச் சந்திரன் எப்பவும் இப்படித்தான். என்னை இந்த பஸ் ராண்டில காக்கவைக்கிறத்தில அவருக்கு என்ன இன்பமோ தெரியவில்லை.
எங்கள் ஊர் பஸ் தனக்கே உரிய ஆட்டங்கள் சத்தங் கள் என்பவற்றோடு எனக்கு முன்னால் வந்து பிறேக் போடுகிறது.
இப்போது எனக்குத் தலை சுற்ற ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து மாமா மாமி, மச்சான் தட்டு முட்டுச்

107 நாகேசு தர்மலிங்கம்
சாமான்கள் முதல் சாக்கு மூட்டைகளுடன் இறங்கு கிறார்கள்.
இவா மாமா.அம்மாவுடன் பிறந்த ஒரேயொரு ஆண் சகோதரன். அவ்வளவுதான். எங்கள் குடும்பத்துக் கும் அவர்களுக்கும் என்ன உறவு, சங்கக்கடை மனேச்ச ரான மாமா பணம், பதவி என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தைத் தாழ்வாகக் கருதி, எங்கள் குடும்ப உறவைத் தானாக முறித்துக் கொண்டுவிட்டார். தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அதுவும் மாமாவிடம் இல்லை. மாமி ஒரு சாதுவானவ, சில வேளைகளில் அவாவும் பத்தாவுக்குரற்ற பத்தினியாக மாறிவிடுவா. அப்பிடி இல்லாவிட்டால் மாமாவோட வாழ்க்கை நடத்திறது மிகவும் கஷ்டம்.
** என்ன தயா, ரியூஷன் முடிஞ்சிது போல?’’
கையில் ஒரு பார்சலை வைத்துக் கொண்டு மாமி
கேட்டா.
'ஓம் மாமி ரியூஷன் முடிஞ்சிது. வீட்ட போக பஸ் ஸுக்கு நிக்கிறன். அநியாயப்பட்ட பஸ் இப்பதாள் வந்திருக்கு. வார்த்தைகளை விழுங்கி விழுங்கிப் பதில் கூறினேன்,'
மாமி குடும்பம் வந்து இறங்கிய பஸ்ஸில் சீற் பிடிப்பு தற்காக என்னுடன் நின்றவர்கள், எல்லோரும் முண்டி யடித்குக் கொண்டு ஏறுகிறார்கள்.
*" என்ன மாமி. தட்டு முட்டுச் சாமான்கள் மூடை களோட குடும்பமே ரவுணுக்கு வெளிக்கிட்டு இருக்கி நீங்க???

Page 55
அந்நியம் 108 ם
மாமியைக் கதைக்க விடாது கேள்வியைத் தொடுத் தேன்.
"அது இவற்ற தாய். அதுதான் உங்கட அம்மாச்சி பட துவஷம் இண்டைக்கு அங்க சாமி மடத்தில் குடுக்கிறம். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யிறம்."
ஒரு வித பெருமிதத்துடன் மாமி கூறினா.
**ஏன் மாமிநம்மட ஊரில இந்தத் துவஷத்ர்ை உங்கட சொந்தக்காரர்களுக்குச் சொல்லி, உங்கட வீட்டில் இபரிசாச் சேய்யலாமே.”*
பஸ் டிரைவருடைய சீற்றை எட்டிப் பார்த்துக் கொண்டு கேட்டேன். எனக்சாகவோ பஸ் டிரைவர் சோமண்னன் இன்னும் ஆசனத்திற்கு வரவில்லை.
"சீ.ஊரில பெரிசாச் செய்து என்ன பிரயோசனம்? இங்க சாமி மடத்தில எண்டா மாமாவும் ஒரு உறுப்பினர். மற்றப் பெரியவங்களுக்கும் கச்சேரி கோப்பிறட்டில வேலை செங்யிற ஆக்களுக்கும் சொல்லிச் சொல்லிச் சிறப் பாகச் செய்யலாம் இப்படிச் செய்தா மாமாவுக்கும் ஒரு மதிப்பு வரும். நம்ம ஊரையும் மதிப்பாங்கள். நம்ம ஊரில எண்டா எனக்குச் சொல்லயில்லை உனக்குச் சொல்ல வில்லை என்ற குறைதான் வரும்."
சிறிது யோசித்த மாமி.
*" தயா, இப்ப நீங்க வீட்டதானே போறிங்க? அப்பிடி எண்டா வாங்களன் சாமி மடத்தில துவஷத்தை முடிச் செண்டு எங்களோட ஐஞ்சு மணிக்குத் திரும்பிவரலாம்" என்று என்னையும் அழைத்தா,

109 O நாகேசு தர்மலிங்கம்
1.இல்லை மாமி அம்மாவுக்கு இண்டைக்குப் பின்னே ரம் பாடமில்லை எண்டு தெரியும். பிறகு சுணங்கினாத் தேடுவா, **
என்ன நெடுக அவளோட கதை என்பது போல மாமா மாமியைப் பார்த்தார்.
'சரி நான் அப்பவாறன் பிள்ளை."
என்று கூறி ரக்சி ஸ்ராண்டை நோக்கி மாமி மாமா வின் பின்சென்றா.
எங்கள் ஊருக்கான பஸ் உறுமிக் கொண்டு புறப் lu -gil -
இன்னும் இந்தச் சந்திரனைக் காணவில்லையே? ஒரு வேளை இண்டைக்கு வரமாட்டாரோ? சீ.அவர் கட்டா யம் வருவார். சொன்ன சொல்லுத் தவறமாட்டரர்.
மாமாவும் மாமியும் என்ன்ைத் திரும்பிப் பார்த்துக் கதைத்துக் கொண்டு போகிறார்கள்.
இன்று சாமி மடத்தில ஆயிரம் பேருக்கு அன்னதானம். எல்லாம் பெரிய உத்தியோகத்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொள்வார்கள். அதனால மாமாவுக்கும் எங்கட ஊருக்கும் பெருமையாம்.
மாமாவைப் பற்றி எங்கட ஊரில கேட்டாலெல்லோ தெரியும். அவற்ற பக்திக்கோலத்தையும் அவர் செய்யிற அநியாயத்தையும், சங்கக்கடை மனேச்சராக இருந்து அவர் செய்யிற அநியாயத்துக்கு ஊரே அவரைத் திட்டுது. இவரால ஊர் மரியாதையே போகுது. இப்ப மாமி என் ண்ண்டா மாமாவால எங்கட ஊருக்குப் பெருமைபாம்.
விபூதிப்பூச்சு, சந்தன, குங்குமப் பொட்டுக் கோள்ை கள். ஒரு சங்கக்கடை, பெரிய வீடு, மகன் மகவின்

Page 56
அந்நியம் 110
பல்கலைக் கழகப் படிப்புகள் முதலான வசதி வாய்ப் புக்கள், சாமி மட ஆயுட்கால உறுப்புரிமை எல்லாம் அவரை ஒரு பக்தராக இனங்காட்டுகிற போதிலும் ஏழை களின் மனத்தில் அவர் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதே நிலைத்து நிற்கும். அவர் முகாமையாளராக இருக்கும் சங்கக்கடை குறிப்பிட்ட நேரத்துக்கு திறக்கப்படுவ தில்லை. தி ற ந் தாலும் மக்களுக்கு உண்மையான சேவையை அவரால் செய்ய முடிவதில்லை, மாறாக ஊழல் புரிவதிலையே முனைந்து நிற்பார். அரிசி, சீனி மா, மண்ணெணெய் என்று இன்னும் எத்தனை விதமான அத்தியாவசியப் பொருட்களை உரிய நிறுவை அளவு களோடு அவர் வழங்க மாட்ார், ஏழை எளியதுகள் என்று பார்க்காமல் எல்லோருடைய பங்கீட்டிலும் வெட்டும் கிகாத்தும்தான். அப்பப்பா. அந்த ஆள் இரக்கமில்லாத மனிதன். வெளித்தோற்றத்திற்கேற்ப உள் வாழ்க்கை யில்லை. எங்கள் கிராமத்தில் வேறு தங்களை உத்தமர் கள் என்று இனம் காட்டிக் கொள்கிற வர்த்தகர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மட்டும் மாமாவுக்கு மிகுந்த வர வேற்பு உண்டு.
பங்கீட்டுப் பொருட்களின் பாதி நிறுவை அளவு
முறைகள் மாமாவை பொருளாதாரம் முதல் சகல துறை களிலும் பெரியவராக் வெளிக்காட்ட உதவியிருக்கின்றன.
ஏன் நான் மாமாவை இன்று இப்பிடி விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறேன்.
என்னை நானே கேட்கிறேன்,
உண்மையில் இது எங்கள் குடும்பத்தோடு மாமா குடும்பப் பகையை கொண்டிருந்ததால் ஏற்பட்ட ஒருபாற்
கோடல் விமர்சனமா? அல்லது சமன் செய்து சீர் தூக்கும் -aori'r SGT ofr?

111 口 நகேசு தர்மலிங்கம்
மாமாவைப் பொறுத்த மட்டில் நான் நினைக்கிற தெல்லாம் நியாயமானது. இதில் எங்கள் குடும்பத் தகராறுக் கோபங்களே இல்லை.
எத்தனை ஏழைகளுடைய பங்கீட்டரிசியை வெட்டி யிருப்பார். ஐந்து கொத்துக்காரர்களுக்கு நாலு கொத்து: நாலு கொத்துக்காரர்களுக்கு மூன்று கொத்து அரிசி என்றே அந்தச் சங்கக்கடைத் தராசு தன்னியத்துக்காக அளந்து கொட்டும். இப்பிடி வெட்டப்பட்ட அரிசி மாதத் துக்கு ஒரு மூடை மாமாவுக்குச் சேரும். இதற்குள் மாமா -வுக்குத் தெரியாமல் மாமியின் பிரத்யேக அரிசி வியாபார
மும் நடைபெறும்.
இந்த ஏழைகளின் பங்கீட்டரிசியிலேயே இன்று சாமி மடத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப் படுகிறது.
உண்மைதான், மாமி சொன்னது முற்றிலும் உண்மை
தான். இந்த அன்னதானத்தால எங்கள் ஊருக்குப் பெருமைதான். எங்கள் ஊரில் உள்ள ஏழை எளியது
களுக்குப் பெருமைதான். அவர்களுடைய பங்கீட் டரிசியிலதான் LDT LDT Jøy 6ör 6:or g5nT ser Lib செய்யப் போகிறார்.
மாமாவை நினைக்க என் நெஞ்சில் கோபம் பொங்கி வந்தது.
"என்ன தயா? இன்னும் பஸ் வரவில்லையா?*
பேபி கேட்டுக் கொண்டே வந்தாள்.
"நான் பஸ்"க்கு நிற்கவில்லை. சந்திரன் சந்திக்க வேணும் எண்டு சொன்னவர். அதுதான் அவரைப் பார்த் தெண்டு நிற்கிறன்,'

Page 57
அந்நியம் O 112
**ஆரு தயா? சந்திரனா? நான் ஒண்டு சொல்லுறன்.நீ கோபிக்கக் கூடாது."
* "நான் ஏன் கோபிக்கிறன் பேபி சொல்லுமன்.'"
"அது, சந்திரன் நீ நினைக்கிறமாதிரி இல்லை. அது தான் முந்திச் சொன்னனே சயன்ஸ் வகுப்பு ஜெயாவோட சாடையாத் தொடர்பிருக்கெண்டு.”*
'இது என்ன பேபி பழையபடி அநியாயக் கதை, கதைக்கிற.""
**தயா, என்ர கண்ணால கண்டன். சந்திரனும் Golegiunt வும் இப்பத்தான் ராஜாத் தியேட்டருக்குப் போகினம். நீ இதை நம்பாவிட்டால் ஏன்னோட வா இப்ப படம் தொடங்கியிருக்காது. போய்ப் பார்ப்போம் .”*
**«Ffi GLu9 Quir Gust uül’i Luntu Julb.’’
இருவரும் புறப்பட்டோம். பேபி சொன்னது உண்மை தான். இப்போது நான் பூமியில்தானா நிற்கிறேன் என்ற உணர்வு இல்லாத அளவுக்குத் தலை சுற்ற ஆரம்பிக்கிறது. என்னுடன் வந்த பேபியைச் கூடச் சட்டை செய்யாமல் பஸ் ராண்டை நோக்க வேகமாக நடக்கிறேன். விபூதிப் பூச்சு மாமா ரியூஷன் படிக்க வந்த நான். காதல் மன்னன் சந்திரன் எல்லோருடைய நினைவுகளும் என்னைத் துரத்தி வருவது போல் உணர்கிறேன்.

ஆடி அமாவாசை
**ஜெயா! நாளைக்கு விரதம் இண்டைக்குப் பின்னே ரம் இந்த வீட்டைக் கழுவீற்றா ஒரு பெரிய வேலை முடிஞ் சது மாதிரி. இல்லாட்டி நாளைக்கு இந்த அறையயைக் கழுவிறதெண்டா விரதத்துக்குச் சமைக்க நேரம் போயி டும். காலம் பிறயும் ஒண்டுமில்லாம நீங்க வெறும் வயித் தோட கிடக்கேக்க சமயலும் சுணங்கிற்றது எண்டா உங்களால தாங்கேலாது!"
அடுத்த நாள் ஆடி அமாவாசை விரதத்திற்கு மரக் கறிச் சாமான் வாங்குவதற்காக கடைக்கு வெளிப்பட்டுக் கொண்டே பூரணம் மகளிடம் கூறினாள்.
"அம்மா இந்த விரதம் அப்பு இல்லாத ஆக்கள் அவ ருக்காகப் பிடிக்கிறதல்லா அப்பிடி எண்டஅண்ணன் என்ன மாதிரி! அவரும் பிடிக்கத்தானே வேணும்'
*ஒமடி பிள்ளை அவனையும் பிடிக்கச் சொல்லத்தான் வேணும். இப்ப மத்தியானம் சாப்பிட வந்தானெண்டா உள்ள மரக்கறியோட சாப்பாட்டக்குடு. முட்டை ஏதாவது பொரிச்சுத்தா எண்டு கேப்பான். முட்டை இல்லை எண்டு சொல்லிப்போடு"
"ஒமோம் உன்ர மகன்ந |ாளைக்கு விரதம் பிடிப்பேர் தான் பாத்தெண்டு இரு. ஒவ்வொரு நாளையும் போல
8-س-eyی

Page 58
அந்நியம் 114
மூக்கு முட்டக் குடிச்சிற்று வந்து படுக்காட்டி நீ இருந்து
urriño” ” .
வீட்டு விறாந்தையில் உள்ள கதிரை, மேசை முதலான தளபாடங்களை முற்றத்துக்கு இறக்கி வைத்துக் கொண்டு ஜெயா கூறினாள்.
* 'இல்லை; இல்லை நீ அப்படிச் சொல்லாத. அவ னுக்கு அப்பு எண்டா உயிர். இந்த விரதம் சொன்னா அவன் பிடிப்பான். எல்லாத்துக்கும் நான் கடைக்குப் போய் சாமான்களை வாங்கியெண்டு வாறன்' சொல்லிக் கொண்டே கையில் கூடையுடன் பூரணம் அந்த ஒழுங்கை யில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
*ஜெயா.ஜெயா.அம்மா.அம்மா.எணேய் அம்மா என்ன இந்த வீட்டுல ஒரு சனமும் இல்லையா? எடி ஜெயா எங்கடி போயிற்றீங்க?"
சண்முகம் தனது சயிக்கிளில் கொண்டு வந்து இறக்கி விட்டதும் சுந்தரம் வீட்டின் கேற்றைத் திறந்து படிகளில் தட்டுத் தடுமாறி, ஏறியவாறு உரக்கக் கத்தினான்.
"இஞ்சே. குடிச்சிற்று வந்தா இப்ப ஏன் கத்திற? அம்மா கடைக்குச் சாமான் வாங்கப் போயிற்றா அங்கால அயலட்டம் சிரிக்கப் போகுது. சும்மா சத்தம் போடாம இரண்ண பாப்பம்"
சுந்தரம் இப்படிக் காட்சியளிப்பது ஜெயாவுக்குப் பழக்கப்பட்டு விட்டநிகழ்ச்சி என்றாலும் அயலவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறைகொண்டு அவள் கூறினாள்.
* 'இந்தா ஜெயா, இப்ப நானா நீயா சத்தம் போடு கிறது? எனக்குப் பசிக்குது. சாப்பாட்டத்தா பாப்பம்.

115 நாகேசு தர்மலிங்கம்
கறி என்ன? மீன் வாங்கினனிங்களா ? மீன் இல்லாட்டி முட்டை ஏதாவது அவிச்சுத்தா'
'இண்டைக்கு மரக்கறிதான் கறி. நாளைக்கு இஞ்ச எல்லாருக்கும் விரதம் இந்த முட்டைக் கதையளை விட் டிட்டு உள்ள கறியோட சாப்பிட்டுப் போய்ப்படுபாப்பம்'
சாப்பாட்டு மேசையில் அண்ணனுக்குச்சாப்பாட்டைப் பரிமாறியவாறு ஜெயா கூறினாள்.
* 'இதென்ன சாப்பாடு? உப்புமில்லைப் புளியுமில்லை. இதையும் மனுஷன் சாப்பிடுவானா? உனக்கும் அம்மாவுக் கும் வருஷம் பன்னிரெண்டு மாசமும் விரதம் தானே. கூண்டோட முத்தியடையப்போற ஆக்கள் இரண்டுபேரும்"
சிறு அளவாகச் சாப்பிட்டுவிட்டு சுந்தரம் எழுந்தான்.
""நாளைக்கு விரதம் எண்டாக்கும் கடையில சரியான சனம். அதோட மரக்கறியளும் நெருப்புவிலை, இஞ்ச பாரன் இவ்வளவும் ஐம்பது ரூபாச்சாமான். அதுசரி. உங்கண்ணன் வந்திற்றானா? நீ சாப்பாடு குடுத்தனியா? எங்கயவன்?"
மரக்கறிச் சாமான்களை குசினி அறைக்குள் கொட்டிய வாறு பூரணம் கூறினாள்.
* "ஓம் உன்ர மகன் அங்க அறையிக்க கிடக்கிறார். இன் டைக்கும் வழமையைப்போல மூக்கு முட்டக் குடிச்சிற்றுத் தான் வந்திருக்கிறார். நான் மரக்கறியோட சாப்பாட்டக் குடுத் தன். இரண்டு பிடியைச் சாப்பிட்டிட்டு வேணா மெண்டு போயிற்றார்."
"ஐயோ தெய்வமே இப்பிடியே, இந்தப் பெடியன் சாப்பிடாமக் குடிச்சுச் சாகப் போகுதே. எங்கயாவது

Page 59
அந்நியம் 116 ום
ஆற்றயேன் தலையிலாவது கட்டி விடுவம் எண்டா அதுக்கும் குறுக்க இருக்கிற."நீ உன்னை எங்கயும் கட்டிக் குடுத்திற்றன் எண்டா சுண்டச் சுண்ட அவன்ர அலுவல நான் முடிச்சிருவன், "'
சாப்பாட்டுக்குத் தயாராகிக் கொண்டு பூரணம் கூறினாள்,
"ஒ உன்ர மகன்ர பழக்க வழக்கத்துக்கு இந்த ஊரில ஆரு பொம்பிளை தருவினம்? அப்பிடி ஆரும் ஒருத்தி அம்பிட்டா அவளட தலைவிதி அவ்வளவுதான். அண்ணன்ர கல்யாணத்துக்கு என்னை ஏன் குறுக்கே நிக்கிற எண்டு சொல்லுற? வேணுமென்டாக்கெதியில பார்த்து எங்கயாவது கட்டிக்குடன்." Vn
தாயின் அருகில் இருந்து சாப்பிட்டுக்கொண்டே ஜெயா கூறினாள்.
*" என்ர பிள்ளையில என்ன குறை? இந்தக் குடி ஒண்டத் தவிர வேற கெட்ட பழக்கங்கள் ஒண்டும் கிடை யாது. ஊரார் சொல்லுறது மாதிரியே நீயும் சொல்லுறாய் என்ன?**
*"நான் அண்ணனை அப்பிடிக் கணக்குப் போட்டுச் சொல்ல இல்லை, அவற்ற கல்யாண வாழ்க்கைக்கு நான் குறுக்க நிக்கிறன் எண்டிறத்தால தான் சொன்னன். சரி இந்தக் கதையை விடணை எல்லா அறையும் கழுவிற் றன். அண்ணன் படுத்துக்கிடக்கிற அறை ம ட் டு ம் கழுவயில்லை. அவர் எழும்பினதுக்கும் பிற கு கழுவுவம்'
நேரம் ஆறு மணி, படுக்கை விட்டெழுந்த சுந்தரம் வீட்டின் பின் புறமாகப் போனான்.

117 நாகேசு தர்மலிங்கம்
**எட தம்பி இப்பிடி வா, இந்தக் கதிரையில இரு .ւյունւսւն. ՞ ՞
அன்பாகவும் ஆறுதலாகவும் மகனிடம் பூரணம் கூறினாள். w
**என்னனை? எனக்குத் தலையிடிக்குது என்ன விஷயம்?"
""ஜெயா. கெதியிலே தேத்தண்ணியக் கொண் டாம்மா" கதிரையில் அமர்ந்தவாறு சுந்தரம் கூறினான்.
""நாளைக்கு ஆடி அமாவாசை விரதம். அப்பு இல் லாத பிள்ளையஸ் பிடிக்கிற விரதம். இஞ்ச நானும் ஜெயாவும் நாளைக்கு விரதம். நீயும் விரதத்தை எங்க ளோடு சேர்ந்து பிடி. நீ பிடிச்சயெண்டால் உன்னைப் பிடிச்சிருக்கிற தோஷமூம் விலகிறதோட அப்புவட ஆத் மாவும் சாந்தியடையும்,'
அம்மா கூறியதைக் கேட்டுச் சுந்தரம் கல. கலவெனச் சிரித்தான்.
“ ‘அம்மா உனக்கும் ஜெயாவுக்கும் வருடம் பன்னி கிரண்டு மாதமும் இந்த விரதப் பைத்தியம் எண்டா என்னையும் ஏன் அதுக்க சேர்க்கிறீங்க?"
‘'நீ இந்த விசர்க் கதை கதைக்காதை நீ உனக்காக இந்த விரதத்தைப் பிடிக்கா விட்டாலும் உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கின அந்த இறந்து போன மனுசனுக்கா கவாவது பிடியடா மகனே"
* 'அம்மா சும்மா இந்த விரதம் எண்டு என்னைக்
கஷ்டப் படுத்தாம நீங்க பிடியுங்க”*
தேனீரைப் பருகிக் கொண்டு சுந்தரம் கூறினான்.

Page 60
அந்நியம் 118
‘'நீ என்னடாமகனே சொல்லுற? அந்த மனுஷன் எவ்வளவு கஷ்டத்திலையும் உன்னை சென்ரல் கொலிஜில விட்டுப் படிப்பிச்சவர். அதெல்லாத்தையும் மறந்துவிரதம் பிடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிற,"
ஒருவித ஆத்திரத்துடனும் கெஞ்சாக் குறையாகவும் பூரணம் கூறினாள்.
**சரி அம்மா விரதம் பிடிக்கிறன். இதுக்கு என்ன செய்ய வேணும்?
** என்ர ராசா இப்பதான் நீ அப்புடபிள்ளை. நீ நாளைக்கு வெள்ளன எழும்பி குடிக்காமக் கொள்ளாமல் அம்மன் கோயில் கடற்கரைக்குப் போய் ஆழி வயிரவர் கோயிலடியில தீர்த்தமாடிற்று வயிரவருக்கு அர்ச்சனையும் செய்து போட்டு வந்து எங்களைப் போல ஒரு நேரச்சாப் பாடு சாப்பிட்டாச் சரி.""
**இது சின்ன விஷயம். ஜெயா எடி ஜெயா நானும் நாளைக்கு ஆடி அமாவாசை விரதம் பிடிக்கிறன். ஆனா ஒண்டு இந்த அர்ச்சனை எண்டு செலவெல்லாம் வரும். அதுக்கு நீ ஐம்பது ரூபா தரவேணும்.'
**நான் ஐம்பது இல்லை நூறுதாறன் நீ விரதத்தை, ஒழுங்காப் பிடிக்க வேணும்.'
சந்தோஷ மிகுதியால் பூரணம் கூறினாள்.
அன்று ஆடி அமாவாசை விரதநாள். அந்தத் தீவின் தெற்குக் கடற் கரையில் அமைத்திருக்கும் அம்மன் ஆல யத்தைத் தாண்டி நடுக் கடலில் ஒரு சிறிய தீவு போன்ற திட்டியில் அமைக்கப்பட்ட கோயில் தான் ஆழி வைரவர் கோயில். அந்தத் திட்டுக்கு எல்லோரும் கடலுக்குள்ளால் நடந்து செல்லலாம். இப்பிடி நடந்து செல்லும் போதே,

119 நாகேசு தர்மலிங்கம்
விரதகாரர்கள் தங்கள் தீர்த்த மாடலை முடிப்பார்கள். அங்கு தீர்த்தமாடும் நூற்றுக்கணக்கானவர்களுடன் சுந்தர மும் கடலில் தர்ப்பையுடன் இறங்கினான். அவனுடைய கண்களை தம்ம முடியவில்லை. கண்ணை வெட்டி வெட்டி பார்த்தான். அவள் தான். அந்த மரகதம் தான். மரகதம் கடற் கரையில் நின்று கொண்டு தனதுஒரேயொரு பத்து வயது மகன் குமரனுக்கு தர்ப்பை அணிவித்துகடலில் தீர்த்தமாட அனுப்பினாள்.
சுந்தரத்திற்கு தலையைச் சற்றிக்கொண்டு வந்தது. காலையில் ஒன்றும் சாப்பிடாமையால் வயிற்றைக் குமட்டி வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்பட்டது. மீண்டும் கடலை விட்டுக்கரைக்குத் திரும்பியசுந்தரம் அங்கு அமைத் துள்ள கதிர்காமர் மடத்தில் அமர்ந்தான். மரகதம்..மகன் குமரன் இவர்களுடைய நினைவு அவன் மனத்திரையில் நிழலாடியது.
பத்துப் பதினொரு வருடங்களுக்கு முன்பு ஒரு சிவராத் திரி நாள். இரவு நித்திரை முழிப்புக்காக பெண்கள் ஆண் கள் என்று அன்ன ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள். அன்ன ஊஞ்சலில் ஏறி ஆடுவது சுந்தரத்திற்கு பயம் என்றாலும் அதில் ஏறி ஆடும் பெண்களைப் பார்ப்பதற்காக அவனும் போயிருந்தான். அன்று அவன் மேல் பட்ட மரகதத்தின் பார்வை அவளுடன் வீடு வரை அழைத்துச் சென்றது. நோய்வாய்ப் பட்ட கணவனும் தோட்டம் செய்து முறுக் கேறிய தந்தையும் உள் அறையில் தூங்குகிறார்கள் என்ற பய உணர்வு மேலீட்டால் மரகதம் கெஞ்சியபோதும் சுத் தரத்தின் அழுங்குப் பிடியில் இருந்து அவளால் விடுபட முடியவில்லை.
இப்போதும் அந்தத்தனது பசுமையான இளமைக்கால நினைவை நினைத்து ஒரு இறுமாப்புச் சிரிப்பு அவனுக்கு ஏற்பட்ட போதிலும்அதன் பலாபலன் பெரும்வேதனையை தந்தது.

Page 61
அந்நியம் 120 ם
சுந்தரத்திற்கும் மரகதத்திற்கும் சிவராத்திரிக் கண் முழிப்பு மரகதத்தின் வீட்டுப் பின் விறாந்தையில் கழிந்தது அதன் பின் சுந்தரத்திற்கு ஆறுவருடங்கள் கொழும்பில் உத்தியோகம் என்று காலம் கழிந்தது; இக் காலத்திலேயே அவன் அளவுக்கதிகமாகக்குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி பெரும் குடிமகன் என்னும் பட்டத்தையும் பெற்றான் அளவுக் கதிகமாகக் குடித்து விட்டு ஒரு நாள் அலுவலகம் சென்று ஏற்படுத்திய ரகளையாலேயே சுந்தரம் அந்த அரச கூட்டுத்தாபன உத்தியோகத்திலும் இருந்து விலக்கப்பட் டான். அதன் பின் ஊருக்குத் திரும்பிய அவன் தாயின் பென்ஷன் பணத்திலேயே தங்கி வாழ்ந்து வருகிறான்.
மரகதம், கணவன் இறந்த பின் தந்தையின் கிளிநொச் சிக் கமப் பகுதியில் சிறிது காலம் இருந்து விட்டு மீண்டும் தனது மகனுடனுடனும் தந்தையுடனும் கிராமத்துக்குத் திரும்பியிருந்தாள்.
கையில், தர்ப்பை, பூ, அர்ச்சனைச் சாமான்களுடன் அந்த மடத்தை விட்டெழுந்த சுந்தரம்.
'மரகதம் என்னை மன்னிக்க வேணும்' நாணிக் குறுகி நின்று கூறினான்,
ஏன் இப்ப மன்னிப்புக் கேக்கிறீங்க. நீங்க என்ன பிழை செய்தீங்க'
சுந்தரம் கேட்டான். "ஒம் உன்ர மகன் மட்டுமல்ல உங்க' மரகதத்தின் வாய் சொல்வதற்கே தடுமாறியது.
நான் உயிரோடு இருக்க ஆடியமாவாசை
விரதமா?'
சுத்தரம் குடித்து விட்டு வெறியோடு வீடு சென்றான்.
முற்றும்


Page 62
94JF
திரு. நாகேசு தர்மலிங்கம் யாழ். புங்குடுதீவு வாழ் மு.நாகேசு சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வர். பூநீகணேச வித்தி யாலயம், அரசினர் வித்தி யாலயம் ஆகியவற்றின் மானவர். 2-வது வயதில் உதவித் தபாலதிபராக நிய மனம் பெற்றார். கடந்த பத்து கோட்டை தபாலகத்தில் தட தார்.
மல்லினக மாசிகையின் தார். பல சிறுகதைகளை எழு னக் கட்டுரைகள், வானொன இவர் சிறந்த வானொலி, ெ மேடை நாடகங்களிலும் நடி
இவர் சமூகப் பணிகள் பூரீகணேச வித்தியாலய பழை கிளையின் செயலாளராகப் புரிந்து வந்துள்ளார்.
தனது கீவேது வயதில் குகாதரன் என்ற இரு குழந்ை வெட்சுமி, தன் படைப்புக்க பெரிதும் விரும்பியிருந்தார். பின்னரே நிறைவேறியுள்ளது

நியம்
வருடங்களுக்கு மேலாக புறக் ாலதிபராகக் கடமையாற்றி வந்
மூலம் இலக்கிய உலகில் புகுந் திப் பெயர் பதித்த இவர், விமர்ச பி நாடகங்களை எழுதியுள்ளார். தாலைக்காட்சி நாடகங்களிலும் த்துள்ளார்.
ரிலும் ஈடுபட்டு கொண்டவர். pய மாணவர் சங்கக் கொழும்புக்
பல ஆண்டுகளாகக் கடமை
காலமான இவருக்குச் சசிதரன், தைகள் உண்டு. மனைவி இராச ளை நூலுருவில் பார்க்க அவர்
அந்த ஆவல் அவர் அமரரான
f
- தம்பிஐயா தேவதாஸ்
الله