கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குழந்தை ஒரு தெய்வம்

Page 1


Page 2
சரஸ்வதி வெளியீடு-4 முதற்பதிப்பு-செப்டம்பர் 1961
(C) SARASWATHI KARYALAYAM,
393, Pycrofts Road, Madras -14.
ഷെ8 , 1 -50
பொருளடக்கம்
முன்னுரை. கா. சிவத்தம்பி
தேவ கிருபையை முன்னிட்டு வாழும் .
பிள்ளையார் பிடிக்க நாயிலும் கடையர் தொட்டாற் சுருங்கி குழந்தை ஒரு தெய்வம் பேடி !
வீழ்ச்சி
கல்வி
மோதிரம் பிரிய தத்தத்தினலே.
17
... 25 ... 33 ... 38 . 48 、54 ... 57 72 ... 78
83
TAM, PUTHAKALAYAM
393, Pycrofts Road, MADRAS-14.
வ. விஜயபாஸ்கரன் அவர்களால்
சரஸ்வதி பிரஸ் சென்னை-14-ல் பதிப்பிக்கப்பட்டது.

நன்றியுரை
இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில்
"பேடி தவிர "பிள்ளையார் பிடிக்க', 'நாயினும் கடையர், 'குழந்தை ஒரு தெய்வம்', "மோதிரம்" ஆகிய நான்கு கதைகள் வீரகேசரி பத்திரிகையிலும், "கல்வி உதயம் பத்திரிகையிலும் "தேவ கிருபையை முன்னிட்டு வாழும்.', 'தொட்டாற் சுருங்கி', “வீழ்ச்சி', 'பிரிய தத்தத்தினலே...' ஆகிய நான்கு கதைகள் தினகரன் பத்திரிகையிலும் வெளி வந்தவை. இவற்றின் ஆசிரியர்களுக்கு என் நன்றி.
இச்சிறுகதைகளைப் புத்தக உருவில் வெளியிட வேண்டுமென என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னிலும் பார்க்க அதிக சிரத்தை காண்பித்து இவ்வளவு சிறப்பான வகையில் அவற்றைப் பதிப் பித்து உதவிய "சரஸ்வதி ஆசிரியர் திரு. வ. விஜய பாஸ்கரன் அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப் பட்டவன். முன்னுரையில் நட்பின் தாக்கம் பிரதி பலிக்கக் கூடாதென்ற வரைமுறைக்குக் கட்டுப் பட்டவரான நண்பர் கா. சிவத்தம்பிக்கு நன்றி தெரிவித்து, அவருடைய போலிக் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
51/9, ஹட்சன் வீதி
காவலூர் ராசதுரை
கொழும்பு-3.

Page 3
சமர்ப்பணம்
திரு. க. கைலாசபதி திரு. சில்லையூர் செல்வராசன்
ஆகிய என் இரு நண்பர்களுக்கும்

முன்னுரை
நூலுக்கு முன்னுரை முக்கியம்; முன்னுரைக்கு முகவுரை என்பது முற்றிலும் ஆச்சரியத்தை ஏற் படுத்துவதாக இருக்கலாம்.
நுண் பொருட்டாகிய நூலினிது விளங்குவதற் கான பருப்பொருட்டான பாயிரமாக முன்னுரை அமைய வேண்டுமென்பது, நூலாசிரியர், முன்னுரை யாசிரியர் ஆகிய எம்மிருவரது அவா. அதில் கட்புத் தொடர்பினை நினைவுறுத்தி எழுதுவதானுல் இலக்கிய விமர்சனத்திற்கு வேண்டிய, "காய்தல் உவத்தல் இலாப் பண்பு' அற்றுப் போய் விடும்.:
இலக்கிய ரசனையுணர்வின் அடிப்படையில் தோன்றியது எமது நட்பானமையால், கதாசிரிய ரைப் பற்றியும் அவரது கதைகளைப் பற்றியும் கூறப் பட்டுள்ள கருத்துக்கள் நட்பின் தாக்கத்தால் தோன்றியவையல்ல.
张 整
零
இலக்கியம், ஆறு போன்றது. பாயும் இடத்தின் தன்மைக்கேற்பவும், ஒடும் வேகத்தின் வீச்சுக்கேற்பவும், எவ்வாறு ஆற்று நீர் கலங்கலாகவும், தெளிவாகவும், பேரிரைச்சலுடனும், ஆழ அமைதியுடனும் பாய்ந்து செல் கின்றதோ, அவ்வாறே காலத்திற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் வடிவமும் தெளிவாகவும், மங்கலாகவும் செல் கின்றது. புதிய அருவிகள் ஆற்றில் வந்து விழுவது, ஆறு இன்னெரு ஆற்றுடன் சங்கமிப்பது, கூட்டாறு சமுத்திரத் துடன் ஐக்கியப்படுவது, காலத்திற்குக் காலம் ஆறு திசை

Page 4
ii
மாறி ஓடுவது ஆகிய ஆற்றினது பண்புகள், இலக்கியத்திற் குரிய பண்புகளுடன், தன்மையால் ஒன்றுபட்டு நிற்கின்றது. இலக்கியப் பண்புகளான புதிய சக்திகள் பர்வுதல், அரசியல் பொருளாதாரத் தேவைகள் வெளிப்பட நிற்றல், பிற கலாச் சாரங்களுடன் ஐக்கியப்படல், நாட்டின் பொதுப் பண்பை உணர்த்தல், உலகப் பொதுமையை உணர்த்தலாகியவை, இவ்வுவமையை முற்றுரு அடையச் செய்கின்றன. எத்துணை வேறுபாடுகளிருப்பினும், ஆதி முதல் அந்தம் வரை பாய்ந் தோடுவது நீர் என்பது போலவே, இலக்கியத்திலும், எல்லா மாற்றங்களுக்கிடையேயும் அடிச்சரடாக நிற்பது, மனிதனது உணர்ச்சி வெளிப்பாடும், கருத்து வெளிப்பாடுமே.
இக் கண்ணுேட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது இலக் கியத்தின் உ ரு வத் தி ற் கும், உள்ளடக்கத்திற்குமுள்ள, நெருங்கிய, ஒன்றையொன்று தீர்மானிக்கும் தொடர்பினை, எம்மால் அறிய முடிகின்றது. இலக்கியத்தில் ஒவ்வொரு காலப் பிரிவிலும், அவ்வக்கால இலக்கியகாரர் சொல்ல விரும்புவதற்கு வாய்ப்பாக அமைகின்ற, "சொல்லுகின்ற முறைமை' தான், உருவம் என்பதாகும். “சொல்லுகின்ற முறைமை" என்பது சொல்லப்படுவதைக் கொண்டு தீர் மானிக்கப்பட வேண்டுவது என்பதை, எல்லோரும் ஒப்புக் கொள்வர். சொல்லப்படுவது மாறுகின்ற பொழுது, சொல்லுகின்ற முறைமையும் மாற வேண்டுவது, அவசிய மாகின்றது. அப்படி அது மாருமலிருக்குமானல், சொல்ல விரும்புவது முழுவதையும் சொல்லிவிட முடியாதும் போய் விடலாம்: அல்லது சொல்ல விரும்புவதைத் தெளிவுறச் சொல்லிவிட முடியாதும் போய் விடலாம்.
சொல்வதிலும், சொல்லப்படும் முறையிலுமான இம் மாற்றம், திடீரென ஏற்படுவதல்ல. ஏனெனில், இவற்றிற் கெல்லாம் ஆதார சுருதியாக அமையும் மனிதன், திடீரென மாறும் தன்மையனல்லன். இம் மாற்றம் படிப்படியாக ஏற்படுவதாகும். காலத்தின் பின்னணியில் நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் வரலாற்று மாணவனுக்கு, இவ்வ ை3

iii
யான மாற்றங்கள் நன்கு புலப்படுமென்ருலும், அக் காலத் தில் வாழ்பவர்களுக்கு மாற்ற்ம் நடந்தேறி விட்டது என்ற உணர்வு தோன்ருத அளவிற்கு, இலக்கிய ஒட்டம் அமைந்து விடுவது வழக்கம். மாற்றம் பற்றிய உணர்வு தோன்றுங் காலத்திலும், அம் மாற்றம் தவிர்க்கப்பட முடியாத, தர்க்க ரீதியான தேவையாக அமைவதையும், அவர்கள் உணர் வார்கள்.
மக்களது வாழ்விலுள்ள ஒரு சில சம்பவங்களை, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையுடன் தொடர்புறுத்திச் சொன்ன சங்க காலப் பாடல்களுக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற் ருேன்றிய ஒருவனது வாழ்க்கையை, நாட்டின் பொது வாழ்க்கை மரபுடன் தொடர்புறுத்தி, ஒழுக்கமுறைமை நெறிதவறிய அவனது வாழ்க்கையால், அவனும், அவனுடன் சம்பந்தப்பட்டோரும், சமூகமும், சமூக நீதியும், எவ்வாறு பாதிக்கப் படுகின்றன என்பதை விளக்கும் சிலப்பதிகாரத் திற்குமுள்ள வேறுபாட்டையும், ஆனல், இவையிரண்டுக் குமே ஆதார சுருதியாக அமைகின்ற மனித வாழ்வு என்ற ஒற்றுமையையும், நாம் பார்க்கும் பொழுது, உருவமும் உள்ளடக்கமும் பற்றிய இப்பிரச்னையை, நாம் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.
கலிப்பாட்டாலோ, குறுகிய ஆசிரியத்தாலோ, அல்லது அவற்ருல் அமைவுறும் சிறு பாடல்களில் வரும் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் என்பனவற்ருலோ, அல்லது அவற்றைச் சொல்கின்ற தோழி கூற்று, தலைவி கூற்று, என்ற துறைகளாலோ, கோவலனது முழு வாழ்க்கையையும், வாழ்க்கை கிளப்பிவிட்ட எல்லாப் பிரச்னைகளையும் எடுத்து காட்டிவிட முடியாது. எனவே, இவையெல்லாவற்றையும் நன்கு எடுத்துக் கூறுவதற்குப் பொருத்தமான தொடர் நிலைச் செய்யுள் என்ற புதிய யாப்பு மரபு தோன்ற வேண்டிய தாகின்றது. ஆனல், இந்தத் தோற்றம் திடீரென உண்டானதில்லை. புறநானுற்றுச் செய்யுளுக்கு அடுத்தாக தொடர் நிலைச்செய்யுள் தோன்றிவிடவில்லை. புறநானுற்

Page 5
iv
றிற்கும், சிலப்பதிகாரத்திற்கும் இடைப்பட்ட பட்டினப் பாலை போன்ற நூல்களில், ஒரு சிறு மாற்றத்தினை-அடுத்து வரும் மாற்றத்திற்கு அடிப்படையான மாற்றத்தினைநாம் காண்கிருேம். புறத்திணையில் வைத்துச் சொல்லப்பட வேண்டிய அரசன் புகழும், வீரமும், பட்டினப் பாலையில் மிகவும் நுண்ணிய முறையில், அகத்திணை மூலமே சொல்லப் படுவது மாத்திரமல்லாது, அதில், பாட்டின் நீளமும் அதிகப் படுவதைக் காண்கிருேம், போர் தரும் அவலத்தினைக் குறிக்கும் நெடுநல் வாடையும், வளர்ந்து வரும் இம் மரபினை பயன்படுத்திக் கொள்கின்றது. எந்த ஒருவனும் ஒருத்தியும் என்ற நிலையிலிருந்து, “தம்மில் ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவனும் தலைவியும் என்ற இலக்கிய நாயகர் பற்றிய கருத்து மாற்றமும் ஏற்பட்டு விடுகின்றது. கால ஓட்டத்தில், இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் எவ்வாறு மாறு கின்றன அல்லது வளருகின்றன என்பதை, இதனுல் நாம் நன்கு அறிய முடியும். ஆனல், இந்த வளர்ச்சியோ அல்லது படிப்படியான மாற்றமோ முறைமையின் அடிப்படை யிற்ருேன்றுவதுதான் என்பது முக்கியமானதாகும்.
இந்த மாற்ற நியதியின் அடிப்படையிற்ருன், சிறுகதை யெனப்படும் இலக்கிய வகையும், தமிழில் வந்து சேர்ந்தது. சிறு கதையென்று நாம் இங்கு குறிப்பிடும் பொழுது, இன்று இலக்கிய வழக்கிலிருக்கும் தனிப்பட்ட இலக்கிய வகை யொன்றினைக் குறிக்கிருேமேயொழிய, பாட்டி கதை, செவி வழிக்கதை என்ற சம்பிரதாய வழிமுறைக் கதைகள் பற்றிக் குறிப்பிடவில்லை. தன்னைத்தானே குறிக்கத்தக்க அளவிற்குச் சிறுகதை எனும் இலக்கிய வகை உருவத்திலும் உள்ளடக் கத்திலும் வளர்ந்து விட்டதென்பது முடிந்த முடிபாகும்.
கதை சொல்கின்ற மரபு, மொழி வழக்குத் தோன்றிய காலந்தொட்டு இருந்தாலுங்கூட, புனைகதைகளான சிறு கதை, நாவல் என்பன, உலகில் தனி மனித வாதம் என்கின்ற வாழ்வியற் சித்தாந்த வளர்ச்சியுடன்தான் தோன்றுகின்றன. கைத்தொழிற் புரட்சி எனப்படும்

V
இயந்திரப் புரட்சியின் பலனுக, ஐரோப்பாவின் தொன்று தொட்டு இருந்து வந்த கூட்டு வாழ்க்கை முறை அற்றுப் போய், ஒவ்வ்ொருவரும் தமது சொந்த உழைப்பின் அடிப் படையில் வாழ வேண்டுமென்ற முறையில், மாற்றங்கள் ஏற்பட்டன. கூட்டு வாழ்க்கை முறைப்படி தொடர்ந்து வாழ் வதற்கான சூழ்நிலை முற்றிலும் தகர்க்கப்பட்டது மாத்திர மல்லாது, தனி மனிதனையடிப்படையாகக் கொண்ட புதிய தொரு பொருளாதார அமைப்பும் தோன்றிற்று. இப்புதிய அமைப்பின் தோற்றத்தினுல் தோன்றிய பிரச்னைகள் பலவாழ்க்கை அறம், வாழ்க்கை முறை, ஒழுக்க நெறி சம்பந்தப் பட்ட அடிப்படைப்.பிரச்னைகள் மாத்திரமல்லாது, புதிய சூழ் நிலையுடன் ஒன்ற விடாது மனிதனை அல்லலுறச் செய்யும் பல பிரச்னைகளும் தோன்றின. முன்னெப்பொழுது மில்லாத இந்தச் சமூகப் பிரச்னைகளை எடுத்துக் காட்டுவதற்கோ, அலசி ஆராய்வதற்கோ, முன்பிருந்த இலக்கிய வெளிப் பாட்டு முறைகள் போதாதவையாக இருந்தன. எனவே தான் முன்பே மரபிலிருந்த கதை மரபை ஆதார சுருதியாக வைத்துக் கொண்டு, நாவல், சிறு கதையென்ற இலக்கிய வகைகளைக் கையாண்டனர். ஐரோப்பிய மொழிகளிற் சிறு கதை வளர்ந்த வரலாற்றினைப் பார்க்கும் பொழுது இந்த உண்மை நன்கு புலப்படும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற் பகுதியிலேதான் சிறுகதையென்பது தனிப்பட்ட இலக்கியவகையாக வளர ஆரம்பித்தது என்பது, ஐரோப்பிய, அமெரிக்க இலக்கிய வரலாறு. சிறு கதை வரலாற்றினை ஆராய்ந்தவர்கள், அது பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பகுதியில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ருஷ்யா ஆகிய நாடுகளில் பதினைந்து வருட கால எல்லைக்குள் தோன்றிய எழுத்தாளர்களாலேயே தோற்றுவிக்கப் பெற்று பூரணப்படுத்தப்பட்டது என்று கூறியுள்னனர்.
சமூகவியல் சம்பந்தப்பட்ட இந்த அடிப்படைக் காரணத் துடன், சிறுகதை வளர்ச்சிக்கு உதவியாக இருந்த இன்னுெரு சாதனம், சஞ்சிகைகளாகும். பத்திரிகைகளதும்

Page 6
vi
சஞ்சிகைகளதும் தொகை கூடக் கூட, அவற்றில் பிரசுரிக்கப் படுவதற்கான சிறு புனைகதைகளும் அதிகம் தேவைப்படுவ தாயின. இலக்கிய நோக்குக் கொண்டோ அல்லது இலக்கிய ஆர்வத்திற்காகவோ அல்லது வெறும் பொழுது போக்குக் காகவோ கதைகள் பிரசுரிக்கப்படலாயின. மேலும், இதன் காரணமாக அவ்வாறு பிரசுரிக்கப்படுகின்றவைகள் சஞ்சி கையிலும் ஓர் இதழிற்குள் அடங்குவனவாக இருக்க வேண்டு மென்ற அவசிய மேற்பட்டது. எனவே, சிறு கதையின் அளவு மட்டுப்படுத்தப்பட வேண்டிதாயிற்று. குறுகிய அளவுள்ள பல சிறு கதைகள் பிரசுரிக்கப் படலாயின. தமிழ் நாட்டில், இன்று சிறுகதைப் பெருக் கத்திற்குக் காரணமாக இருக்கும் இதே நிலைதான், ஐரோப்பிய, அமெரிக்க இலக்கிய வரலாற்றிலும் சிறுகதைப் பெருக்கம் சம்பந்தமாக, அக்காலத்திலே தொழிற் பட்டது. எனவே, ஒரே தடவையில் பிரசுரித்து விடத்தக்க அளவுடைய கதைகள் பல எழுதப்படலாயின. சிறுகதை என்ற இலக்கிய வகை, ஆரம்பத்திலேயே இவ்வுருவம் பெற்ற காரணத்தினை நாம் இப்போழுது நன்கு விளங்க முடிகின்றது.
சிறுகதைக்கும் சஞ்சிகைக்கு முள்ள இந்தத் தொடர் பினைக் கொண்டு, நாம் சிறு கதையின் பண்புகள் யாவற் றையும் தீர்மானித்து விடக்கூடாது. கூடாதென்பது மாத்திரமல்ல; அவ்வாருன ஒரு மதிப்பீடு, மிகவும் தவருனதாகவும் அமைந்துவிடும்
சிறுகதை எனும் இலக்கிய வகையின் பண்புகளைச் சொல்லோடு பொருள் வழியாகக் கொள்ளும் பொழுது, கதையின் அளவு-அதாவது சிறிதாக இருக்கவேண்டும் என்னும் பண்பு-தான் முக்கியமாகத் தோன்றும் ஆணுல், இந்த "அளவு' என்பதை நாம் எவ்வாறு தீர்மானிப்பது என்பது பெரும் பிரச்னையாகிவிடும். உதாரணமாக புதுமைப் பித்தனின் 'பொன்னகரத் தை, நல்ல அளவான சிறுகதை, யென்று கொண்டால், அவரது "துன்பக் கேணி"யை விவரிப்

vii
பதற்கு 'நீண்ட சிறுகதை' யென்ற புதிய பெயரைத் தோற்றுவிக்க வேண்டும். அல்லது "சாபவிமோசனம்" "அன்று இரவு' போன்றவைதான் தரமான அளவுடையனவென்முல், “பொன்னகரம்’ ‘மிஷின் யுகம்" முதலிய கதைகளை விவரிப் பதற்குச் "சின்னஞ் சிறு கதை' என்ற சொற்ருெடரைத் தான் கையாள வேண்டி வரும். எனவே, அளவு என்கின்ற உரைகல்லை மாத்திரம் கொண்டு நாம் சிறு கதையைத் தீர்மானித்துவிட முடியாது. ஆனல், பெரும்படியாகச் சொல்கின்ற பொழுது நாவலிலும் பார்க்கச் சிறியது என்று கொள்ளலாமே தவிர, வேறெந்த வழியாலும் அதன் அளவை நாம் வரையறுத்துக் கூற முடியாது. அளவு என்கின்ற ஒரே உரைகல்லைக் கொண்டு சிறுகதையைத் தீர்மானிக்கலாமென்று வரைவிலக்கணம் வகுக்கப் புகுந்த மேனுட்டு இலக்கிய விமரிசகர் பலர், தமது கருத்தைப் பல தடவைகளில் மாற்றிக்கொள்ள வேண்டி வந்ததை நாம் நன்கு அறிவோம். எனினும், "அளவு', தோன்றப் பண்பாக நின்று, சிறுகதையாசிரியர் ஒவ்வொருவரையும் கட்டுப் படுத்துவதையும், நாம் அறிய முடிகிறது.
எனவே அளவைவிட, அதனுள் உள்ள இன்னுெரு முக்கியமான பண்பை நாம் காண வேண்டுவது அவசிய மாகின்றது. சிறுகதையின் முக்கிய பண்பினை ஆராய முனையும்பொழுது, சிறுகதை போன்றிருக்கும் ஒரு சில இலக்கிய வகைகளிலிருந்து அதனை வேறுபடுத்திப்பார்த்தல் அவசியமாகின்றது. அப்படிப் புார்க்கும்பொழுது, சிறுகதை யின் பண்புகள் நன்கு விளங்கும். நாவலைப் போன்ற முழு வாழ்க்கையையோ, அல்லது ஒரு வாழ்க்கைப் பிரச்னையின் எல்லிா அம்சங்களையுமோ சிறுகதை ஆராயாது. வாழ்க் கையின் அடியாகவோ, அல்லது பிரச்னையின் அடியாகவோ தோன்றும் ஒரு மனித நிலை அல்லது உணர்வுநிலை முக்கிய மாகும். சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவ தில்லை; வார்க்கப்படுகின்றன. அதாவது, வார்த்த பாத் திரங்களின் இயக்கநிலையில் தோன்றும் ஓர் உண்மைதான், சிறுகதையின் கருவாக அமையும். மேலும் பாத்திரங்களின்

Page 7
viii
இயக்கம், வாழ்க்கையிலுள்ள ஒரு முக்கிய பண்பினைக் காட்ட வேண்டும்.
பாத்திரமே முக்கியமென்றல், அது நடைச் சித்திரமாக அமைந்துவிடும். பாத்திரத்தைக் காட்டுவதல்ல முக்கியம் பாத்திரத்தின் அல்லது ப்ாத்திரங்களின் இயக்கத்தால் ஏற் படும் உணர்வு நிலையைக் காட்டுவதுதான் முக்கியமாகும். சிறுகதைக்கும் நாவலுக்குமுள்ள தொடர்பை, சங்கப் பாடல்களுக்கும், சிலப்பதிகாரத்திற்குமுள்ள தொடர்புட னும் ஓரங்க நாடகத்திற்கும் நாடகத்திற்குமுள்ள தொடர் புடனும் ஒப்பிடலாம்.
将 岑
சிறுகதை, ஒரு குறிப்பிட்ட மனேநிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுவதாக அமைதல் அவசியம். இந்த மனேநிலையை வார்த்தைகளாற் சுட்டிக் காட்டாது, கதை யினை வாசிக்கும் வாசகனின் மனதில் அவனையறியாது அவ் வுணர்வுநிலை தோன்றும்படி செய்ய முடியுமானல், அவ்வா முன சிறுகதை ஒரு தலைசிறந்த சிறுகதையாக அமையும் தாகூரின் 'காபூலிவாலா', செக்காவின் ‘முத்தம்', புதுமைப் பித்தனின் ‘சாபவிமோசனம்', "வழி", "பொன்னகரம்", கு. ப. ரா.வின் ‘விடியுமா, ரகுநாதனின் "வென்றிலன் என்ற போதும்', அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிருர்", லா. ச. ராவின் "பாற்கடல், கஸ்தூரி', பி. எஸ். ராமை யாவின் 'அடிச்சாரைச் சொல்லியழு', ரா. பூரீ. தேசிகனின் 'மழையிருட்டு' எனப் பல உதாரணங்கள் காட்டலாம்.
இந்த வெற்றியைப் பெறுவதற்கு, எத்தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன. கதாபாத்திரம் தானே சொல்வது பிரக்ஞையோட்ட முறையாகக் கதையை எழுதுவது, கதாசிரியன் தானே சொல்லுவது, என, எத் தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனல், குறிப் பிட்ட அந்த மனுேநிலையையோ, உணர்வு நிலையையோ தோற்றுவிப்பதற்குத் தேவையற்ற எவையும், சிறுகதையி லிருந்து அகற்றப்படல் வேண்டும். 1842-ல் சிறுகதைக்கு

ix
இலக்கண்ம் வகுத்த எட்கார் அலன் போ, இதனை மிக முக்கியமானதொரு அம்சமாகக் கொண்டுள்ளார். குறி யீடுகள் சம்பந்தப்பட்டவரைகூட, நன்கு கவனஞ் செலுத்தப் பட வேண்டுமென்பது அவர் கருத்து. இந்த இலக்கண அடிப்படை வழி தொடர்ந்து செல்வோமேயானல், சிறு கதையின் அளவு பற்றிய பிரச்னைக்கும், நாம் வழி கண்டு விடலாம். குறிப்பிட்ட அந்த உணர்வு நிலையை எத்துணைச் சுருக்கமாகத் தோற்றுவிக்க முடியுமோ, அத்துணைச் சுருக்க மாக சிறுகதை அமைய வேண்டும். எனவே, ஒவ்வொரு சிறுகதையின் நீளத்திற்கும் அவ்வச் சிறுகதையே உரை கல்லாக அமையும்.
பூரணப்புட்ட ஒர் இலக்கிய வகையாகவே சிறுகதை தமிழ் நாட்டிற்கு வந்தது. ஆனல், அது தமிழ் மண்ணில் சுவற, சிறிது காலம் பிடித்தது. சிறு பிரபந்தங்கள் போன்று இந்தியப் பண்பாட்டில் தோன்றி வளர்ந்த ஒர் இலக்கிய வகையாக இது அமைந்திருந்தால், பிரச்னை அத்துணைப் பெரியதாகவோ, அல்லது இலக்கிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கும் விஷயமாகவோ அமைந்திருக்காது. முற்றிலும் வேறுபட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் வளர்க்கப்பட்ட ஒர் வகையாதலால் வசன இலக்கிய வளர்ச்சி, இலக்கண அமைவு, பேச்சு மொழியைக் கையாளுதல், தமிழ் இலக்கிய மரபின்படி ஒவ்வாதவர்களை இலக்கிய நாயகர்களாகக் கொள்ளுதல் போன்ற பல பிரச்னைகளைச் சிறுகதை தனக்குள் அடக்கி நின்றது. இதனல் மரபு வழி படித்தவர்களுக்கிடையிலேயே கருத்து வேறுபாடுகள் பல தோன்றலாயின.
விளங்காப் பொருளை விளங்கச் சொல்வதற்கும், தர்க்க ரீதியான விஷயங்களை எடுத்துச் சொல்வதற்குமே, வசனம் தமிழில் கையாளப்பட்டு வந்தது. அது, ஆக்க இலக்கிய வெளிப்பாட்டுச் சாதனமாகக் கொள்ளப்படவில்லை. மேஞட்டினர் தொடர்பால் வசன இலக்கியம் என்ற புதுத் துறை தோன்றிற்று. அறிவு நிலையைப் புலப்படுத்த, கையாளப்பட்ட வசனம், உணர்வு நிலையைப் புலப்படுத்தப்

Page 8
x
பிரயோகிக்கப்படும் பொழுது, வசனம் பற்றி நடைமுறையி லிருந்த இலக்கணக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லவேண்டி யிருந்தது. கவிதை மூலமே ஆக்க இலக்கியம் வளர்ந்த எமது நாட்டில், கவிதையில் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்து வதற்கும், அல்லது எப்படி எழுதப்பட்ட கவிதைக்கும் இலக்கண அமைதி கொடுப்பதற்கும், தயாராகவிருந்த மரபு வழி அறிஞர்கள், வசனம், இலக்கண அமைப்பிற்கு மீறி நிற்பதை வெறுத்தது மாத்திரமல்லாது அவ்வாரு ன இலக்கி யங்கள் இலக்கியங்களாக மாட்டா என்றும் வாதித்தனர். இதுகாறும் கவிதை மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒர் உணர்வு நிலையை வசனம் மூலம் புலப்படுத்தத் தொடங்கியதும் அந் நோக்கம் நன்கு நிறைவேற வசன நடையில் பலவகை உத்திகள் தோன்றின. இதனைத் தொடர்ந்து காவிய இலக்கிய மரபிற்கு முற்றிலும் மாருக, சமூகத்தின் அடிநிலையிலிருக்கும் சாதாரண ஏழையே பெரும்பாலும் சிறு கதையின் கதாநாயகனனன். அத்துடன் இலக்கிய யதார்த் தத்திற்காக அவன் வாய் மொழியையே சிறு கதைகளிலும் பிரயோகிக்கத் தொடங்கினர்கள். விசய நகர காலப் பிற் பகுதியிலிருந்து தோன்றி வளர்ந்துவரும் பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்களுடனும், அவற்றுள் காணப்படும் "ஆண்டை யிகழ்வு' முதலிய பண்புகளுடனும் இம்மாற்றங் களைத் தொடர்புறுத்திப் பார்க்க முடியாது போகவே, பண்டிதர்கள் வசன இலக்கியத்தை ‘இலக்கியப் பிரஷ்டம்" செய்தனர். அவர்களது இந்த மனுேபாவம் கவிதைத் துறையிலும் தோன்றத் தொடங்கவே, அவர்கள் குரல், பெற வேண்டிய இலக்கியத் தாக்கத்தினைப் பெறவில்லை.
தமிழ் நாட்டிற்கு வரும்பொழுதே, சிறுகதை பூரணப் படுத்தப்பட்டவொரு இலக்கிய வகையாக இருந்தமையால், அதிற் கையாளப்படும் வசன நடை, உத்திகள் பற்றிய பல பிரச்னைகளும், தோன்றின. இது சம்பந்தமாகச் சிறு கதை, யாசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் பல காணப் படலாயின.

Χί
ஆனல், இப்பிரச்னைகள் எவையும் தமிழ் நாட்டிற் சிறுகதையின் வளர்ச்சியைத் தடை செய்யவில்லை. இந்திய விடுதலை இயக்கமும் அதனற் ருேன்றிய புதிய விழிப்புணர்ச் யும், இலக்கியத்தின் சமூகப் பணியினை வளர்த்தன. வங்காளத்தில் தோன்றிய புதிய இலக்கிய மறுமலர்ச்சி, தமிழ் நாட்டிலும் பரவத் தொடங்கிற்று. சுதந்திர இயக்கத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திர இயக்கத்தின் ஒரு. முக்கிய பகுதியாக விளங்கிய சமூகப்புனருத்தாரண நிறை, விற்கும், அரசியலுணர்வு வளர்ச்சிக்கும், இலக்கியம் பயன் படுத்தப் பெறவே, அவற்றை யொட்டிச் சிறுகதைகளும் வளரத் தொடங்கின. இந்த அரசியற் சூழ்நிலையை ஆதாரமாகக் கொண்டு தோன்றிய பல சஞ்சிகைகள், அதிக சிறுகதைகள் எழுதப்படுவதற்குக் காரணமாயிருந்தன. இந்த வளர்ச்சியில், நாவல் அதிக இடம்பெறவில்லையென்றே கூறவேண்டும். தொடர் கதை என்ற முறையில் நாவல்கள் ஜனரஞ்சகமாக்கப் பெற்ருலும், தமிழ் நாட்டின் பல பிரச்னைகளை ஆராயச் சிறந்த சாதனமாக அமைந்தது, சிறு கதையே. தீண்டாதாரைக் கோயிலுக்குள் விடுவது, ஆங்கில நாகரிக மோகத்தை வெறுப்பது, பண்பாட்டு வழி நடப்பது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டனவும், வாசகர் தொகையை அதிகரிப்பதிலே கவனங் கொண்டு முற்றிலும் பொழுது போக்கிற்காக எழுதப் பட்டனவுமாக, பல தரப்பட்டனவாகச் சிறு கதைகள் வளர லாயின.
இந்த வளர்ச்சிக் காலத்திற்ருன், சிறுகதை, முற்றிலும் தமிழுருவம் பெற்று தமிழ் நாட்டிற்குள்ள எந்தப் பிரச்னை யைப்பற்றியும் ஆராய்வதற்கான ஓர் இலக்கிய சாதனமாக அமைந்தது. புதுமைப்பித்தனின் கதைகளில், சிறு கதைகள், தமிழுருவம் பெற்றுள்ளதை நாம் காணலாம். அவரது 'அன்று இரவு', 'சாபவிமோசனம்", முதலியன, தமிழிலக்கிய வழிவரும் சில சம்பவங்களைப் புதுக்கண்ணுேட் டத்தில் பார்ப்பவையாக அமைந்தன. இதுமத்திரமல்லாது சிறுகதையாசிரியர் ஒவ்வொருவரும் தாந்தாம் வாழுகின்ற

Page 9
xii
பகுதிகளின் பிரச்னைகளைச் சிறுகதைகள்மூலம் காட்டத் தொடங்கினர். இதனல் அவ்வப்பகுதிகளில் உள்ள சிறப்பான பிரச்னைகளும், பேச்சுவழக்குமுறையும் சிறு கதைகளில் இடம் பெற்றன. இதனல், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதியதொரு சகாப்தம் தோன்றிற்று திருநெல் வேலிப் பகுதியின் வாழ்வைக் காட்டிய புதுமைப்பித்தன், ரகுநாதன் கதைகள், சென்னை வாழ்க்கையைக் காட்டும் ஜெயகாந்தன் கதைகள், தஞ்சாவூர்ப்பகுதி வாழ்க்கையைக் காட்டும் க. நா. சுப்பிரமண்யம் கதைகள், தமிழ்நாட்டுப் பிராமணர் வாழ்க்கையைக் காட்டும் எஸ். வி. வி. கதைகள், இதற்கு நல்ல உதாரணங்களாகும். அமெரிக்காவிலுங்கூட இவ்வாறே, சிறுகதையின் தோற்றத்தினைத் தொடர்ந்து, கதாசிரியர்கள் வாழ்ந்த அவ்வப்பகுதிகளது சிறப்பான பிரச்னைகளை ஆராயும்பொழுது 'பிரதேசக் கதைகள்' தோன்றின என்பதை இங்கு நினைவுறுத்திக் கொள்ளுதல் நலம்.
ஆனல், இன்று இலங்கையிற்ருேன்றியிருக்கும் தமிழிலக் கிய விழிப்புணர்ச்சியை 'தமிழிலக்கியத்தின் பிரதேச இலக் கிய வளர்ச்சியே' என்று கூறிவிட முடியாது. அவ்வாறு நாம் கொள்வோமேயானல், இலங்கையிலுள்ள தமிழிலக்கிய முயற்சிகள்பற்றித் தற்போது நிலவி வரும் பல தப்பபிராயங் களை நாமும் அங்கீகரிக்கின்றவர்களாகிவிடுவோம். ஆங்கில மொழி இரு நாடுகளுக்கும் பொதுவானுலும், அமெரிக்க இலக்கியத்திற்கும், இங்கிலாந்து தேச இலக்கியத்திற்கும் எத்தனை வேறுபாடுகள் உளவோ, அதேமுறையில் தோன்றி வளருகின்ற மாற்றமாகவே, இலங்கையின் இன்றைய இலக்கிய வளர்ச்சி அமைகின்றது.
இலங்கைத் தமிழர் வாழ்வில், அவர்கள். (சிறப்பாக யாழ்ப்பாணத்தவர்) தென்னிந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கின்றவர்கள் என்பதனுலும் இலங்கை வரலாற்றில் பலகாலமாக தமிழர் என்ற ஒரே காரணத்தினுல் அவர்கள் வாழ்வு அதிகம் பாதிக்கப்படாமலிருந்ததாலும், தென்னிந் தியப் பண்பாட்டு அடிப்படையிலேயே தமது அன்ருட

xiii
வாழ்க்கையை நடத்துவதனலும், அவர்கள் தமது வாழ்க்கை முறையையும் தம்மை எதிர் நோக்கியுள்ள பிரச்னைகளையும் பற்றிய இலக்கியங்கள் ஆக்கவேண்டிய தேவையில்லாதிருந்தது. பண்பாட்டொருமைப்பாடு தென் னிந்தியத் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் இறுகப் பிணைத்தது; இலங்கைத் தமிழ் மக்கள் ஒவ்வொரு வரும் தம்மைப் பண்டைத் தமிழ்ப் பாரம்பரியத்தின் வாரிசு என்றே மானசிகமாக நம்பி வந்தனர். இது மாத்திர மல்லாது, தமிழ் பேசும் மக்களுக்குரிய மொழியுணர்வு, இவர்களையும் பீடித்திருந்ததால், தமிழ்கூறும் நல்லுல கத்தின் ஒரு பகுதியினராகவே தங்களைக் கருதி வந்தனர். இதனல், இங்கு தோன்றிய இலக்கியங்கள் தென்னிந்தியாவில் தோன்றும் தமிழிலக்கியங்களிலிருந்து வேறுபட்டவையாக அமையவில்லை மேலும், இலக்கிய ஆர்வ வளர்ச்சிக்கான சூழ்நிலை முதலியனவும் இலங்கையிற் குறைவாக இருந்தன. இவற்ருல் இலங்கைத் தமிழரது இலக்கிய வெளிப்பாடு, தொகைக் கணக்கிலும் கணிக்கப்படத்தக்கதாக அமைய வில்லை.ஆனல், இந்தியத் தமிழருடன் ஆத்மார்த்தத்தால் பிணைக்கப்பட்டிருந்தஇந்நிலைநிரந்தரமானதாகஇருக்கவில்லை. இலங்கைத் தமிழரின் வாழ்வில், அவர்கள், தாம் இலங்கையில் வாழ்கின்றவர்கள் என்ற முறையில், சிறப்பான பிரச்னைகளை -தென்னிந்தியத் தமிழர்களுடன் சற்றும் சம்பந்தப்படாத சில பிரச்னைகளை - எதிர்நோக்க வேண்டிய இரு காலப் பகுதிகள் வந்தன. அதாவது, தென்னிந்தியத் தமிழர் வாழ்வில் தோன்ருத சில பிரச்னைகள் - இலங்கையில் வாழ்வதனல் மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் - இரு, தடவைகள் தோன்றின. அவ்வாறன நிலைமை தோன்றிய இரு காலப் பிரிவுகளிலும், இலங்கைத் தமிழர் வாழ்வை முற்றிலும் பிரதிபலிக்கின்ற அளவிற்கு, இலக்கியங்கள், அவ்வக்கால முறைமைக்கும், தேவைக்குமேற்ற வகையில் தோன்றலாயின.
இவற்றுள் முதலாவது, பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் (ஆறுமுக நாவலர் காலத்தில்) தோன்றிய

Page 10
xiv.
நிலைமையாகும். ஆட்சிக்குத் தேவையான ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதன்மூலம் கிறிஸ்தவப் பாதிரிகள் தமிழர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிய பொழுதும், அடிப்படைப் பொருளாதார அமைப்பை மாற்றி அதன் காரணமாக மக்களை ஆட்சியாளரின் அடிமைகளாக்க ஆங்கிலக் கல்வியைத் திணித்தபொழுதும், தமது இனத்தை யும், பண்பாட்டையும் தனித்துவத்தையும் பேணுவதற்கு மக்கள் முனைந்தனர். இது அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த எல்லாச் சாகியத்தாரையும் பாதித்த ஒரு பிரச்னை யாகும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தோன்றிய இந்து, பெளத்த, இஸ்லாமியக் கல்வி ஸ்தாப னங்கள் இதனை விளக்கி நிற்கின்றன. இனத்தையும் பண் பாட்டையும் பேணவேண்டிய அவசியமேற்பட்டதைத் தொடர்ந்து, சமூக நிலையைப் பற்றிய கவனமும் ஏற்படவே அதுபற்றிய கட்டுரைகளும் விவாதங்களும் தோன்றின. நாவலர் பிரபந்தத்திரட்டில், இவை பற்றி நாம் காணலாம். இலங்கைத் தமிழர்களது தமிழ்த் தொண்டு பற்றி, தென் னிந்தியத் தமிழர் ஒருவருடன் வாக்குவாதம் நடத்தும் அளவிற்கு, இலங்கைத் தமிழரது சொந்தநாட்டபிமானம் அப்பொழுது வளர்ந்திருந்தது. r
அதற்குப் பின்னர், 1956ம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் தோன்றிய அரசியற் சூழ்நிலையால் தோன்றிய நிலைமையாகும், 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றது. என்ருலும், 1956-ம் ஆண்டு தொடக்கம்தான் இலங்கைத் தமிழர் பற்றிய பிரச்னை தோன்றிற்று. தாமும் இலங்கையர், தமக்கும் இந்நாட்டிலுரிமை வேண்டும் என்று தமிழர் வாதாடத் தொடங்கினர். அது மாத்திரமல்லாது தாம் தமிழராயிருப்பதால் தமக்கு இந் நாட்டில் எந்தச் சலுகையும், உரிமையும் மறுக்கப்படக்கூடாது என்று வாதாடவும் அதனைப் பெறுவதற்குப் போராடவும் தொடங் கினர். தமக்கும் பிற நாட்டுத் தமிழருக்கும், மொழி கலாசாரத் தொடர்புகளைத் தவிர வேறு தொடர்புகள் கிடையாது என்பதை ஐயந்திரிபறச் சொல்லத் தலைப்

文琴
பட்டனர். இந்த இயக்கத்தை யொட்டி இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி அவர்கள் தமது கவனத்தைச் செலுத்தினர். இந்தப் புது விழிப்பின் காரணமாகத் தான், இன்று இலங்கையில், இலங்கையைப் பிரதிபலிக்கும் தமிழிலக்கியம் தோன்றுகின்றது. இக் காலத் திற்கும். இப் பிரச்னைகளை நன்கு எடுத்துக் காட்டுவதற்கும் தக்கதாயமைகின்ற ஓர் இலக்கிய வகை மூலம், மக்கள் வாழ்வும் இலட்சியமும் புலப்படுத்தபடுகின்றது. இன்று சிறுகதை மிக்க ஜனரஞ்சகமான இலக்கிய வகை. இலங்கைத் தமிழர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஆக்க இலக்கிய எழுத்தாளர் பலர். அவர்களுள் காவலூர் இராசதுரை முக்கியமான ஒருவர்.
காவலூர் இராசதுரையின் சிறு கதைகள், இயக்க நோக்குடன் சமுதாயப் பணி புரிகின்றவையென்று சொல்லி விட முடியாது. ஆனல் யாழ்ப்பாணத்து வாழ்க்கைப் பிரச்னை களைக் கருவாகக் கொண்டு சிறுகதை படைக்கும் இன்றைய ஈழத்து இலக்கிய விழிப்புணர்ச்சியியக்கத்தில் இராசதுரைக்கு முக்கிய இடமொன்று உண்டு. "தேவ கிருபையை முன்னிட்டு வாழும்’ என்னும் அவரது சிறுகதை இன்று வெளிவரும் யாழ்ப்பு:ாணத்துப் பிரதேசச் சிறுகதைகளுக்கு முன்னுேடி யாக அமைந்தது.
அநுபவ முதிர்ச்சி பெற்ற கலைஞன் ஒருவன், வாழ்க் கையில் ஏற்படும் பிரச்னைகளின் முனைப்பினை எவ்வாறு காண் கின்ருன் என்பதற்கு, இராசதுரையின் சிறு கதைகள் நல்ல உதாரணம். கதையைச் சொல்வது மாத்திரமல்லாது, அக் கதையினைச் சொல்லும் பொழுதே, அக்கதைப் பொருள் எவ்வாறு தனது மனதில் படுகின்றது என்பதனை, தன்மை நிலையில் நின்று சொல்லாமலே சொல்லக்கூடிய திறமை, இராசதுரையிடம் உண்டு என்பதற்கு, “தொட்டாற் சுருங்கி', 'வீழ்ச்சி', 'பிரிய தத்தத்தினலே. ’ ‘தேவ கிருபையை முன்னிட்டு வாழும் முதலிய கதைகள் நல்ல உதாரணங்கள். முன்னுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட

Page 11
χνι
சிறந்த சிறுகதையின் பண்புகளை, இக்கதைகளில் நாம் காண லாம். இராசதுரையின் கதைகள் "உணர்வுக் குமுறல்கள்"
நமது கண்முன்னே நமது வாழ்க்கையில் நடைபெரும் விஷயங்களை எடுத்துச் சொல்லும் பொழுது, சம்பவத் திற்கோ, அந்தச் சம்பவத்தால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பலாபலனுக்கோ, முக்கியத்வம் கொடாது, அவற்ருல் பாதிக் கப்படும் மனிதர்கள் நைந்து நலிவதைக் காட்டி, ஓர் அற்புத மாண உணர்வு நிலையை உண்டாக்கி விடுகிறர். அவரது கதைகளை வாசிக்கும் பொழுது நாமெல்லாம் ஊமைக்கவிஞர் களாகத் திக்குமுக்காடுகின்ருேம்; அதாவது, உணர்கிருேம்: ஆனல் எடுத்துச் சொல்ல முடியவில்லை. தனி மனிதப் பிரச் னைகளையுஞ் சரி, சமுதாயப் பிரச்னைகளையுஞ் சரி, இம்முறை யிலே அவர் காட்டி விடுகிறர். இராசதுரையின் கதையில், சம்பவங்களை மீறி மனிதனும், மனிதனை மீறி உணர்வும், அந்த உணர்வினையும் மீறி ஒரு நிரந்தர சோகமும் தவழ்ந்து நிற்கும்.
சிறுகதையாக்கத்தில் இவ்வுத்தியைக் கையாளுவது, கயிற்றில் நடப்பது போன்றதாகும். ஏனெனில் ஒரு சிறி தாவது கட்டுக்கோப்புக் குலைந்தால், அல்லது கட்டுக் கோப்புச் சரியாக அமையாவிட்டால், நடைச்சித்திரம் என்ற இலக்கிய வகைக்குள் அது விழுந்துவிடும். "பிரிய தத்தத்தினலே. "வீழ்ச்சி யென்கின்ற இரு சிறுகதைகளை யும் வாசித்துக் கொண்டு போகின்ற பொழுது, அப்படியான நிலைமையேற்பட்டு விட்டதோ என்றுகூட ஐயுறுகிருேம். ஆனல், முடிவில் வருகின்ற அச்சிறு பந்திகள் இராசதுரையின் சிறுகதையாக்கத் திறமைக்கு வணக்கஞ் செலுத்தி நிற் கின்றன.
வசனங்கொண்டு கவிதா உணர்வை ஏற்படுத்துவது சிறு கதை என்ருல், இராசதுரை, எமது தலை முறையின் உணர் வுக்கவிஞர்களில் ஒருவர்.
es. சிவத்தம்பி

தேவ கிருபையை முன்னிட்டு வாழும்.
கிழவி செத்தது விசேஷமில்லை; சாகு முன்னர் நடந்த சிறு சம்பவம்தான் விசேஷம். . . செத்த வீட்டுக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றியே பேசுகிருர்கள்.
சவத்துக்குத் தலைமாட்டில், கால் நீட்டியிருந்து, சிற்றுரலில் வெற்றிலே துவைத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டு, மாணிக்கம் பாட்டி, அப்பொழுதுதான் வந்த செல்லம்மாவுக்கு, அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லு கிருள்.
கிழவியின் தூரத்துப் பேர்த்தி புஷ்பம். அந்தச் சம்ப வத்தை நினைக்க நினைக்க அவளுக்கு மனசு ஆறவில்லை. பந்தலுக்குள் உட்கார்ந்திருக்கும் செல்லம்மாவின் புருஷனும் அந்தக் கதையைத்தான் கேட்டுக் கொண்டி ருக்கிருன்.
* எப்பவும் இப்படித்தான்; ஆரு செத்தாலும் சாகு முந்தி விசேஷமான காரியம் ஏதும் நடக்கும்.?
சட்டம்பியார் தத்துவம் பேசுகிருர்,
关 * e கரம்பன் செவத்தியார் கோயிலடி வாசிகளுக்கு அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம்-கோயில், சிற்றமார், மடம், கூப்பன் கடை மாதிரி.
ஏரம்பு பரம்பரை, யார் கூட்டம் ? ஞானப்பிரகாசம் வீட்டுக்காரர் எந்தப் பகுதி ?

Page 12
8 குழந்தை ஓர் தெய்வம்
அந்தோக் கிழவியைக் கேட்க வேணும்.
கரம்பனில் எந்த வங்கிசம் 'உசத்தி? சபை சந்திக்கு அடுக்காத சாதி எது?
அந்தோக் கிழவியைக் கேட்க வேணும். கரம்பனில் முதற் குடியேறிய கூட்டம்? அந்தோக் கிழவியைக் கேட்க வேணும். அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம்தான் ! அந்தோக் கிழவி தரும் தகவல்களுக்கு ஆதாரம் கிடையாது ; அதேபோல அதுக்கு வயசு என்ன என்ப தற்கும் ஆதாரம் இல்லை.
எப்பொழுதோ ஒருகால் ஊர்காவற்றுறையில் பெரும் புயல் அடித்து வெள்ளம் பனையளவுக்கு உயர்ந்ததாம் : அப்போது கிழவிக்கு ஒரு வயசாம்!
ஆணுலும் நேற்று வரை கரம்பனில் பழுத்த பழமாக
இருந்த ஒரேயொரு ஆத்மா அந்தோக் கிழவிதான்.
ஆறு குழந்தைகளுக்குத் தாயாகும் பேறு கிடைத்தா லும் கடைசிக் காலத்தில் அதைக் கவனிக்க ஒருவரும் இல்லை. பிறந்த குழந்தைகளில் ஐந்தையும் எமன் தடுக் கோடு தூக்கிப் போய்விட்டான். ஆருவது ஒரு பையன். சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டான் !
மூன்று நாலு வருஷங்களுக்கு முந்தி அவன் திடீ ரென்று வீடு தேடி வந்தான். “ ஆச்சி எப்படிச் சுகம் ??? என்று விசர்ரித்தான். இரண்டு நாள் கிழவியோடு தங்கினன். * அது. செய்வேன், இது செய்வேன் ?? என்று புழுகினன். மூன்றம் நாள் சொல்லாமல் கொள் ளாமல் போய்விட்டான் !
* புட்டு அவிச்சாச்சட்ா மோனே ? போய் மூஞ்சியைக் கழுவிற்று வா !! *
1 எனக்குப் பழங்கறிச் சட்டிக்குள்ள் போட்டு வைச் சிற்று நீ சாப்பிடு நான் ஒரு ஆளைப் பாத்திற்று வரவேணும்.’ -

தேவ கிருபையை முன்னிட்டு வாழும். l9,
கிழவிக்கும் மகனுக்கும் கடந்த கடைசிச் சம்பாஷணை இதுதான்.
வந்தான்-போனன் ; மின்னிவிட்ட மாதிரி.
கறிச்சட்டியும் பிட்டும் இரண்டு நாளாகக் கிடந்து காறின. w
மூன்றம் நாள் தபாற்காரச் சங்கரப் பிள்ளை சொல்
லித்தான் கிழவிக்கு விஷயம் தெரியும்.
“அவசரமாகத் தந்தி வந்து போறதாக உன்ர மகன் உன்னட்டச் சொல்லச் சொன்னுர் ஆச்சி. போய்க் காயி தம் போடுவாராம்.?? م
* காயிதமா போடுவாராம். அவன்ர ஆள்ப்பேருக் குப் போடச் சொல்லு, புழுக்கைப் பயலுக்கு வந்து சொல்லிற்றுப் போக நேரமில்லை. அது சரி, அவன்ர அப்பனும் இப்படித்தானே ஒடிப்போனவன்.?
ஏமாற்றம், ஆத்திரம், விரக்தி, தனிமை உணர்வு அத்தனையும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கண்டத் தைப் பிணிக்க, கிழவி வேப்ப மரத்து நிழலில் இருந்து தன்னுள் முனகுகிறது.
ஆனலும், மறுநாள் முதல் தினமும் அந்த வேப்ப மரத்தின் கீழ் தபாற்காரனைக் காத்திருக்கும்.
* காயிதம் போடுறன் என்று சங்கரப்பிள்ளையட்டச் சொல்லீற்றுப் போனணுமே.”*
வேப்ப மர நிழல் கிழவியின் பேச்சுக்குத் தலைய சைக்கும். g -
* எனக்குக் காயிதம் இருக்கா தம்பி ??
KK இல்லையாக்சி.?? ... *
ஒரு நாள் !
*காயிதம் இல்லையா தம்பி ???
* இல்லையாச்சி.*
ஒரு வாரம் !

Page 13
20 குழந்தை ஓர் தெய்வம்
காயிதம் இல்லையா தம்பி ??? * 'இல்லையாச்சி.??
ஒரு மாதம் ! *ஒண்ணுமில்லையாடா மோனே ???
கொஞ்சம் சொந்தம் கொண்டாடி, பணிவாகக் கேட் டால் சங்கரப் பிள்ளை கொடுத்து விடுவான் என்ற நப்பாசை.
* இல்லையாச்சி.??
மேலும் சில மாதங்கள் !
* இல்லையா மோனே???
** இருந்தா தராமல் விடுவமா ? சும்மா அலட்டு * دهلG8uژل
காலம் போகிறது ? * ஆரு? சங்கரப்பிள்ளையா? காயிதம் இல்லையா GDITG360T p’’ M
கிழவிக்குப் பார்வை மங்கிவிட்டது. சைக்கிளில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரிடமும் * காயிதம் இல்லையாடா மோனே ???
சங்கரப் பிள்ளைக்கும் அலுத்துவிட்டது. கிழவியின் கேள்விக்கு அவன் பதில் சொல்வதில்லை.
வேப்ப மர நிழல்தான் கிழவிக்குத் தஞ்சம்.
ஒரு நாள் மர நிழலிற் கிழவியைக் காணுேம். அன் ருடம் தரிசித்த கோயில் காணுமல் போய்விட்ட மாதிரி இருந்தது சங்கரப் பிள்ளைக்கு. பழக்கத்துக்கு மனிதன் எப்படி அடிமைப் பட்டு விடுகிறன் !
ஒரு நாள்-இரண்டு நாள்-மூன்ரும் நாள்.
சங்கரப் பிள்ளைக்கு என்னவோ போலிருந்தது. சந்திக் கடைச் சூசைப் பிள்ளையிடம் விசாரித்தான்.
* சுகமில்லையாம்? என்று பதில் கிடைத்தது.

தேவ கிருபையை முன்னிட்டு வாழும். 2
கிழவியின் கொட்டில், கடைக்குப் பின்புறம். படலை, யைத் திறந்து, உள்ளே சென்று சைக்கிள் மணியை ஒலித் தான். பதில் இல்லை.
தொப்பியைக் கழற்றிச் சைக்கிள் கைப்பிடியில் மாட்டி விட்டுக் குனிந்து நுழைந்தான்.
வெறுக் தரையில் விரித்த சேலைத் தலைப்பில் கிழவி கிடக்கிறது. பக்கத்தில் மண்டிக் காப்பியுடன் சிரட்டை யொன்று. மோப்பம் பிடித்து வந்த எறும்புப் பட்டாளம், முதலில் சிரட்டையைச் சுற்றி முகாம் அடிக்கத் தொடங்கு கிறது. -
* ஆச்சி ?? என்று பலமாகக் கூப்பிட்டான் சங்கரப்
பிள்ளை. பதில் இல்லை.
தொட்டு அசைத்தான்.
* ஆரது? என்ற முனகல். * நான்தான். சங்கரப்பிள்ளை.?? கண்விளக்கு, எப்படித் திடீரெனப் பிரகாசித்ததோ
* காயிதமா?” என்ருள் கிழவி, எழுந்து உட்கார முயன்றபடி,
சங்கரப்பிள்ளை, குரல் வளைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது போன்ற உணர்வுடன் கிழவியை எழும்ப விடாமல் படுக்கவைத்து விட்டுப் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்ருன், கடைக்காரச் சூசைப் பிள்ளையிடம், கிழவியை யார் பராமரிக்கிருர்கள் என்று விசாரித்தான்.
அடிக்கடி கிழவியைப் போய்ப் பார்த்தான்.
* எடி புள்ள, காயிதக்காரன் போவான் பாரடி ** என்று கிழவி அடிக்கடி பிதற்றிக் கொண்டிருந்தது.
இரண்டு மூன்று நாட்களாகக் கிழவியின் பிதற்றல் அதிகரித்து விட்டது. குலைப்பலும் உதறலும் ; சன்னி auTub !! 1

Page 14
22 குழந்தை ஓர் தெய்வம்
சூசைப்பிள்ளையின் மனைவி செவத்தியார் கோயில் உபதேசியாரிடம் போய்ச் சொன்னுள். சுவாமி வந்து *அவஸ்தை கொடுத்தார்.
“காயிதக்காரன் பாரடி" சங்கரப்பிள்ளை தினமும் வெறுங் கையாக வந்து போகிறன். . .
* காயிதக்காரன் போவான் பாரடி.?? அயல் வீட்டுக்காரர்கள் எல்லோரும் கிழவியைச் சுற்றியிருந்தனர்.
* கிழவி இரண்டு நாளாய் இழுத்துக் கொண்டு கிடக்குது. சீவன் போக இவ்வளவு தேரம் பிடிச்சிதை நான் எங்கேயும் காணேல்ல.??
* என்ன பேச்சடி செல்லம்மா ? போற நேரம் வரமுந்தி உயிர்போக முடியுமா? மகன்ர காயிதம் கண்டு தான் கிழவிக்குச் சீவன் போகும்போல இருக்கு.??
சங்கரப் பிள்ளை, பெண்டுகள் பேச்சைக் கேட்டுக் கெர்ண்டிருந்து விட்டுப் போகிருன்.
மறுநாள் விடிந்து விட்டது. ‘காயிதம் வரும் பாரடி’ என்று பாதாளத்தில் இருந்து அடிக்கடி கேட்கிறது. -
சங்கரப்பிள்ளை, காயிதம் விநியோகிக்கும் நேரம், பர பரப்போடு கிழவியின் குடிசைக்கு வருகிருன். தன் காயிதக் கட்டிலிருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கிழவியின் கைக் குள் வைக்கிருன் ! −
* மகன்ர காயிதம் ஆச்சி’ கைகால்கள் பதற, கண்கள் நீரைச் சொரிய, முகம் ஆனந்தத்தால் பிரகாசிக்க, கிழவி, நீரில் மூழ்கித் தத்த ளிப்பவன் தும்பைப் பிடிப்பது போலக் கடிதத்தைப் பற்றினள். கண்ணில் ஒன்றிக் கொண்டாள்.
ஒரு சில நிமிஷங்கள், சகிக்க முடியாத அமைதி:

தேவ கிருபையை முன்னிட்டு வாழும். 23
கடிதம் கிழவியின் கையில் இருந்து குழுவிக் கீழே விழுகிறது. -
மாணிக்கம் பாட்டி கிழவியின் கண்களேயும் வாயை பும் பொத்துகிருள். V
மற்றப் பெண்கள் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை மாட்டி, சக்கர வியூகம் போட்டுக் குந்துகிருர்கள். * என்னைப் ப்ெந்த பாக்கியமே..? முதலில் ஒரு தனிக்குரல். கண்டியில காத்தடிக்க
என்ர ராசாத்தி இஞ்சைகைவிளக்கு நூந்ததண* பிலாக்கணம் தொடங்கிவிட்டது. சூசைப்பிள்ளையின் மனைவி மெல்ல எழுந்து புருஷ னின் கடையிலிருந்து வெற்றிலை பாக்குக் கொண்டுவரப் போகிருள்.
கோயில் மணிக்குச் சொல்ல செல்லம்மாவின் புருஷன் விரைகிருன் !
சூசைப்பிள்ளை கிழவியின் மகனுக்குத் தந்தியடிக்கப் போகிருர்,
*ஆர் செத்தது??? * உந்த அந்தோக் கிழவி ??
制 警
மகன் வரவைப் பார்த்து, சவம் எடுப்பது தாமத மாகிறது.
சூசைப்பிள்ளை அடித்த தந்திக்கு ப் பதிலுமில்லை மகனையுங் காணுேம்.
* சன்னியாய்க் கிடந்த கிழவி சுறுக்கு எடுக்க வேணும்.?

Page 15
24 குழந்தை ஓர் தெய்வம்
வந்திருப்பவர்கள் அலுத்து விட்டார்கள். அவர்க ளின் பொறுமை சோதனைக்குள்ளாகிறது. - .
பந்தலின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கும் சங்கரப் பிள்ளையை நோக்கிச் சூசைப்பிள்ளை வருகிருர், ஒதுக் குப் புறமாக அழைத்துப் போகிருர்.
** கிழவியட மகன்ர விலாசமென்ன? அந்தக் காயி தத்தைக் காணயில்ல. நான் சும்மா தந்தியடிச்சன் எண்டு சொல்லீற்றன்."
* எனக்குத் தெரியாது குசைப்பிள்ளை. மகன் காயி தம் அனுப்பயில்ல. அது என்ர வேலை.”
சூசைப் பிள்ளை ஒரு கணம் திகைப்படைந்து நிற் கிருர். பிறகு சமாளித்துக் கொள்கிருர்.
ஆமோ???
சூசைப் பிள்ளை உள்ளே போகிருர். “அவன் இனி எங்கே வரப் போருன். சவத்தை எடுப்பம்.?? என்று உரத்துச் சொல்கிருர்,
பறை முழங்குகிறது.
சவம் புறப்படுகிறது.
; ()58

பிள்ளையார் பிடிக்க.
வின் நண்பன் தயாளன் ஓர் உளவியல் கிபுணன். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அவன் தீர்ப்புக் கூறி னல் அது நிச்சயமாகச் சரியாகவிருக்கும். எனக்கு அவன் திறமையில் துளிகூடச் சந்தேகம் கிடையாது.
அற்ப சம்பவங்கள், தவறுகள் முதலியவற்றிற்கெல் லாம் அவன் காரணங்கள் கூறுவான். பேசும்போது உண்டாகும் காத்தடுமாற்றம், எழுதும்போது ஏற்படும் பேனத்தடுமாற்றம், பொருள்களைத் தவறுதலாக நழுவ விடுதல், இவைகளுக்கெல்லாம் காரணங்கள் உண்டு என்று அவன் வாதிப்பான். மனிதனின் அகத்தில் இருப்பதைப் புறத்தில் காண்பது சுலபம் என்பான்.
ஆரம்பத்தில் நான் அவன் கூற்றுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனல், என் சொந்தக் காதல் விவகாரத்தில் அவனது உளவியல் அறிவு செய்த தொண்டுக்குப்பின் அவன்மேல் எனக்கு அளவு கடந்த பக்தி.
கமலாவை நான் கலியாணம் செய்து கொள்வதற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுதுதான் எனக்கும் கமலாவுக்கும் இடையில் கெருக்கம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் அவள் சினேகிதி சுசீலா குடியிருந்தாள். அவர்கள் இருவரது வீட்டையும் ஒரு சுவர் இணைத்திருந்தது. சுசீலா வீட்டிற்கு எதிர் வீடு என் வீடு.
மாலே நேரங்களில் நான் என் வீட்டு வாசலில் நின்று கொண்டு, தன் வீட்டு வாசலில் நிற்கும் கமலாவோடு,

Page 16
26 குழந்தை ஓர் தெய்வம்
“ஊமைப் பாஷை? பேசிக் கொள்ளுவது வழக்கம். சில சமயங்களில் அவள் சுசீலாவின் வீட்டு வாசலிலும் வந்து நிற்பாள். அப்படியான சந்தர்ப்பங்களில் நான் அவளைத் தெரிந்தவனுகவே காட்டிக் கொள்வதில்லை. சுசீலாவுக்கு எங்கள் “ரகசிய நடவடிக்கைகள்? தெரிந்தால் அவள் பள் ளிக்கூடத்தில் “பற்றவைத்து விடுவாள்? என்று கமலா சொல்லியிருந்தாள். நான் ஏன் அவளைப் பிடித்துக் கொடுக்கவேண்டும்?! Y
வழக்கம் போல ஒரு நாள் மாலை கமலா தன் வீட்டு வாசலில் வந்து நின்ருள்; நான் என் வீட்டு வாசலில் கின்றேன். ஆனல், சுசீலா தன் வீட்டு வாசலில் வந்து நின்று என்னை நோக்கிச் சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. முகத்தை உர்? என்று வைத்துக்கொண்டு கமலா வீட்டுப் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். “எனக்கு எல்லாம் தெரியும்? என்ருள் உரத்த குரலில் சுசீலா. ‘என்ன??? என்றேன் நான். *கமல்ாவும் நீங்க, ளும்...? அவள் வசனத்தை முடிக்கு முன்னர் நான் சிரித்துவிட்டேன்; அவளும் சிரித்தாள். “எப்படித் தெரிந்தது? என்று ஆரம்பித்து நெடு நேரம் வெளி உலகையே மறந்து பேசிக்கொண்டு நின்றுவிட்டோம். இவ்வளவுக்கும் நான் அவள் கூடப் பேசியது முழுவதும் கமலாவைப் பற்றித்தான்.
பேச்சு முடிவில் கமலா வீட்டுப் பக்கம் நோக்கி னேன். அவள் சுட்டு விரலை அசைத்துக் காட்டி என் னைப் பயமுறுத்தி விட்டு உள்ளே போய்விட்டாள். .
மறுநாள் தொடக்கம் கமலா தன் வீட்டு வாசலில் கிற்பதில்லை. என்னைக் கண்டால் காணுதவள் மாதிரிப் போய்விடுவாள். நான்கு நாட்களாக இந்த நாடகம்! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. . . . . என் நண்பன் தியாளன் என் அறையில் தான் ‘கூட் ட்ாகச் சீவித்து வந்தான். அவனுக்கு ஏற்கனவ்ே கல் யாணமாகியிருந்ததால் எப்பொழுதும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வான். மனேவியின் நினைவு வந்தால் திடீ ரென ஊருக்குப் போய்விட்டு வருவான். கொழும்பில்

பிள்ள்ையார் பிடிக்க. 穹7...
வீடு கிட்ைப்பது மிகவும் கஷ்டமானதால் அவன் மனைவி யைத் தன் கூட வைத்துக்கொள்ள முடியவில்லை. மற்ற வர்களெல்லோரும்-எதிர்வீட்டுப் பெண் சுசீலா உட்படஅவனும் என்னைப்போல ஒண்டிக் கட்டை” என்று எண்ணியிருந்தார்கள். அவனிடம்தான் நான் என்" குறையை முறையிட்டேன்.
எடுத்த எடுப்பில் அவன் “மீ அந்த எதிர் வீட்டுப் பெண்ணேடு கமலா பார்க்கத்தக்கதாகப் பேசிக்கொண் டிருந்திருக்கிருயே??? என்ருன்.
*ஆமாம் அதிலென்ன தவறு? அவளுக்கு எங்கள் இரண்டு பேருடையவும் “குட்டு? தெரிந்துவிட்டது?’ என் றேன் நான். அவன் நான் பேகியதையே கவனியாதவன் போல, “கமலாவுக்கு உன் மேல் சந்தேகம்? என்ருன். எனக்கு அவன் சொன்ன காரணம் சரியாகப்படவில்லை. “ஒஹோ!?? என்று சொல்லிக்கொண்டே என் பாட்டுக், குப் போய்விட்டேன்.
ஐந்தாம் நான் நான் எப்படியோ கமலா பள்ளிக்கூடத் திற்குப் போகும்போது “ஏன் கமலர், என்மேல் கோபமா??? என்று கேட்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. “சீ! எல்லாப் பெண்களோடும் சிரித்துப் பேசுவதா?” என்று சொல்லிக்கொண்டே போனுள்.
நண்பன் சொன்னது சரி என்பது எனக்குத் தெரிக், தது. நோயைச் சொன்னவனிடம்தானே மருந்தும் கேட்கவேண்டும்? அவனிடம் போய் “நீ சொன்னது சரி தான். இப்போ அவளுடைய சந்தேகத்தைத் தீர்க்க என்ன செய்யலாம்? அவளைப்பற்றித்தான் அந்தப் பெண் ணுேடு பேசினேன் என்று சொல்லிவிடட்டுமா??? என்று கேட்டேன். “நீ அப்படிச் சொன்னுல் நீ குற்றத்தை மறைக்கப் பார்க்கிருய் என்ற சந்தேகம் அவளுக்கு அதிக மாகும்? என்ருன். பின்னர் “அது சரி, நீ என்னைப் பற்றி அவளிடம் சொல்லி வைத்திருக்கிருயா? என்று வினவினன்.
**ஆமாம்! ஏன்?

Page 17
28 குழந்தை ஓர் தெய்வம்
*நான் கல்யாணம் செய்துவிட்டேன் என்பது அவ ளுக்குத் தெரியுமா?
*தெரியாது?
“அப்போ சரி. நான் பார்த்துக்கொள்ளுகிறேன்.?
**67ւնւյլգ?**
*உன் பெண்ணுேடு நான் பேசுவதில் உனக்கு ஒரு *வித ஆட்சேபமும் கிடையாதே?
*கிடையாது. ஏன் ???
*நான் உன் கமலாவிடம் போய் அந்த எதிர் வீட்டுப் பெண்ணைப் பற்றி விசாரிக்கிறேன். ஏதோ எனக்கு அந்தப் பெண் மேல் காதல் உண்டாகிவிட்டதாகவும் உன் மூலம் அவளுக்குத் தூது சொல்லிவிட்டதாகவும், பின்னர் உன் மேல் எனக்குப் பூரண கம்பிக்கையில்லாமல் போய் விட்டதாகவும் சொல்லிவிடுகிறேன். நீ அவளிடம் நேரில் போய் “நான் என் நண்பனுக்காக அவளோடு பேசினேன்? என்ருல் “ஏன் உங்கள் நண்பருக்கு வாயில்லையோ?? என்று கேட்பாள். ஆனபடியால் நீ பேசாமல் இரு. அவள் தானுக உன்னிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து விடுகிறேன். சரிதானே???
وو (grif ، ، அவன் கூறியபடியே எல்லாம் செய்து எங்கள் இரு வரையும் பழையபடி சேர்த்து வைத்தான். “உளவிய
லின் சக்தியைப் பார்த்தாயா?’ என்று பெருமையாக என்னிடம் பீத்திக் கொண்டான். ஒருமுறை நானும் கமலா வும் ரகசியமாக சினிமா பார்க்கப் போனுேம். ஆணுல், இரண்டாம் நாள் செய்தி அவள் தகப்பன் செவிக்கு எட்டிவிட்டது. அன்று பின்னேரம் அவன் தங்கை அவ சரமாக என் வீட்டுக்கு வந்தாள். என்கூட நண்பன் இருப்பதைக் கண்டதும் அந்தச் சிறுமி சிறிது தயங்கினுள். 15ான் “பயப்பட வேண்டாம். அவர் இருந்தால் பரவா -யில்லை. என்ன வேண்டும்??? என்றேன். அவள் நான் காக மடித்த கடித உறை ஒன்றை என் கைக்குள் வைத்து *நீங்கள் அக்காவைக் படத்திற்குக் கூட்டிப்போனது

பிள்ளையார் பிடிக்க. 29
அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது. அக்கா இதை உங்க, ளிடம் கொடுக்கச் சொல்லி விட்டா" என்று சொல்வி" விட்டு ஓடிப் போனுள். நான் கடிதத்தைப் பிரிக்கு முன் *படம் பார்த்த செலவு யாருடையது? என்று நண்பன்கேட்டான். . .
*முட்டாள்தனமான கேள்வி கேட்கிருயே. யாரா வது பெண்ணுடைய செலவில் படத்துக்குப் போவார் களா??? என்றேன்.
*அப்படியானுல் அந்த உறைக்குள் படத்துக்குச் செல: வான காசு இருக்கும்? என்ருன்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு “இருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே உறையைப் பிரித்தேன். உள்ளே காசு இருக்கவில்லை. கடிதம் இருந்தது. நான் அவனைக் கிண்டலாகப் பார்த்தேன். அப்போது “காசு இல்லாவிட் டால் அவள் உன்கூடப் படத்திற்குப் போகவில்லை என்று பொய் சொல்லியிருப்பாள்?’ என்று அவன் பதில் சொன்னன். அவன் பேச்சைக் கவனியாமல் நான் கடிதத்தைப் படித்தேன், அதில் “நாங்கள் இருவரும் படத்திற்குப் போனது அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது. என்னைக் கேட்டதற்கு நான் உங்கள் கூடப் போகவில்லை என்று சொல்லிவிட்டேன். உங்களிடம் யாரும் கேட்டால் தயவு செய்து நீங்கள் என்னேடு வரவில்லை என்று சொல்லிவிடுங்கள்?’ என்று எழுதியிருந்தது.
*நீ ஏன் காசு இருக்க வேண்டுமென்று நினைத் தாய்??? என்று நண்பனைப் பார்த்துக் கேட்டேன்.
*அந்தச் சின்னப் பெண் கதை சொன்னவிதத்தில் உன் கமலா உண்மையை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். உண்மையை ஒப்புக் கொண்டிருந் தால் அவள் தகப்பனுர் காசு கொடுத்து அனுப்பியிருப் பாரோ இல்லையோ??? .
“இருப்பார்?

Page 18
39 குழந்தை ஓர் தெய்வம்
இதற்குப் பின்னர் தயாளனின் உளவியல் திறமை பற்றி-புறச் சான்றுகளைக் கொண்டு அகத்தை அளவிடும் சாதனை பற்றி எனக்குச் சந்தேகமே இருக்கவில்லை. சில சமயங்களில் நான் கூட உளவியல் படிக்க வேண்டும் என்று எண்ணியது உண்டு. திடீரென ஒருநாள் தயா ளன் என்னிடம் வந்து “நான் இனிமேல் ஊருக்குப் போக மாட்டேன். என் மனைவியின் முகத்தில் இனி விழிப்ப தில்லை. துரோகி? என்ருன். நான் திடுக்கிட்டு “என்ன விசேஷம்??? என்றேன்.
“இந்தக் கடிதத்தைப் பார்’ என்று ஒரு கசங்கிய கடதாசித் துண்டை என் கைக்குள் திணித்தான்-கடிதத் தில் சம்பிரதாயமான 'வாசகத்திற்குப் பின், பின்வருமாறு எழுதியிருந்தது : .
"எங்கள் அடுத்த வீட்டுக்காரர் எல்லோரும் கொழும் பில் இருந்து வந்து விட்டார்கள். நேற்றைக்கு எல்லோ ரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்..?? . . . . **இதில் என்ன இருக்கிறது முட்டாள்?' என்றேன் நான்.
*நீ கடிதத்தைச் சரியாகப் பார்த்தாயா??? 'ஆட்சேபகரமாக எதுவும் இல்லையே!??
*அதில் எழுதிவிட்டு அடித்திருக்கும் வார்த்தையைப் :படித்துப் பார்த்தாயா?
நான் பார்த்தேன். மேலே குறிப்பிட்ட வசனத்திற் குக் கீழே ‘ராமுவும்” என்ற ஒரு சொல் எழுதப்பட்டு பின்னர் பேணுவால் அடித்து விடப்பட்டிருந்தது. W
8 ராமுவும்" என்று எழுதியிருக்கிறது” என்றேன் நான்.
*ராமு யார் தெரியுமா ???
*தெரியாதே?
*அவனுக்கும் என் வயதுதான்*
*அதற்காக??

பிள்ளையார் பிடிக்க. зt
“அவனும் என் வீட்டுக்குப் போய் இருக்கிறன்."
‘அதில் ஏதோ தவறு இருப்பதால்தான் அவள் அதை மறைக்கிருள்?? . . . . '', ' ' : ' : ' : '...': ২ :
அவன் தன் மனைவி மீது சந்தேகப்படுகிருன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். '
அவன் சொன்னன். ܐ ܘ ܢ *எழுதும் போது ஏற்படும் தவறுதல்களுக்குக் கார ணங்கள் உண்டு என்று நான் உன்னிடம் எத்தனையோ தடவைகளில் சொல்லியிருக்கிறேன். எழுத்தில் உள்ள சிறு தவறை வைத்துக் கொண்டே பெரிய பெரிய கொலை காரரையெல்லாம் பிடித்திருக்கிருர்கள் உளவியல் நிபுணர் கள். ஒரு கொலைகாரன் தான் பெரிய ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளன் என்று சொல்லி பக்டீரியாக்கள், போன்ற ஆபத்தான கிருமிகளின் பாலே எடுத்து அதை ஊசி மூலம் தனக்கு வேண்டாதவர்களுக்கு ஏற்றி அவர்க ளைக் கொலை செய்து வந்தான். சில கிருமிகளின் ‘பால்”, எதிர்பார்த்த அளவு பலன் கொடுக்காததைப்பற்றி அவன் உயர்தர அதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்று எழுதி னன். அதில் “மனிதரில்” என்ற ஒரு வார்த்தை தவிறுத லாக எழுதப்பட்டுப் பின்னர் வெட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தின் மேல் துப்பறிந்ததில் உண்மை புலனுயிற்று. அதே போல. s
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உளவியல் படித்திருந்தாலாவது, அதிலுள்ள நெளிவு சுளிவுகளை அறிந்திருக்கலாம். தெரியாததைப் பற்றி எப்படி அவனேடு பேசுவது? தவிரவும் எத்தனையோ முறைகளில் அவன் சொன்னவை சரியாகியிருக்கின்றன. நான் என்ன செய்ய முடியும்?
எவ்வளவோ கஷ்டப்பட்டு அவனிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கினேன். ராமுவும்” என்ற அந்த அவ்ர்ர்த்தையை அவன் மனைவி எழுதியதன் காரணத்தை

Page 19
32 குழந்தை ஓர் தெய்வம்
தான் அறிய விரும்பினேன். ஒரு முறை தயாளனிடமே *உன் தீர்ப்புக்களில் நீ இதுவரை ஒரு தவறும் செய்ய வில்லையா? உளவியலின் படி எல்லாத் தவறுகளுக்கும் ஒரே காரணம் இருக்க முடியுமா?’ என்றேன். “இப்ப டியான விஷயங்களில் அவரவர் மனத்தூண்டுதலைத் தவிர வேருென்றும் உடனடியான அத்தாட்சிகள் கண்டு பிடிக்க முடியாது. அவளிடம் நேரிலேயே கேட்பதானுல் அவள் நிச்சயமாக மறுப்பாள். அதெல்லாம் எதற்கு ? நான் இவ்வளவு காலமாக உளவியல் படித்திருக்கிறேன். என் ஊகம் சரியானது?’ என்று அவன் அடித்துக் கூறினன். -
நான் தயாளனுக்குத் தெரியாமல் அவன் மனைவிக்கு கிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினேன். அதில் நான் அவளுக்குக் கடிதம் எழுதியதைத் தயாளனுக்குச் சொல்லவேண்டா மென்றும் ராமுவும்? என்ற வார்த் தையை எழுதிய பின் வெட்டியதற்குக் காரணம் என்ன? வென்றும் விசாரித்தேன்.
மூன்ரும் நாள் அவளிடமிருந்து கடிதம் வந்தது. *ராமுவும் (அவன்தான் எங்கள் அடுத்த வீட்டுக் கார அம்மாவுடைய மகன்)-தாயோடு ஊருக்கு வர இருந்தானும். பிறகு வரவில்லையாம். வராதவனைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்பதற்காக நான் தொடங் கிய வசனத்தைப் பூர்த்தி செய்யாமல் அந்த வார்த்தையை' வெட்டிவிட்டேன்? என்று அதில் எழுதியிருந்தது !
1954.

நாயிலும் கடையர்
நரின் கொழும்புக்கு உத்தியோகம் பார்க்க வந்த நாள் தொடங்கி என் மனதுக்குப் பிடித்தமான அறை ஒன்றைத் தேடி அலைந்தேன். சுமார் ஒன்றரை வருடங் களுக்குக் பிறகு ஓர் அறை கிடைத்தது. ஆனுலும், இரண்டு காரணங்களுக்காக அந்த அறை என் “இலட்சிய அறையாக வாய்க்கவில்லே. ஒன்று, அலுவலகத்துக்குத் தொலைவில் அறை யிருந்தது. மற்ருென்று, வீட்டுக்கார அம்மையார் திருமதி ராஜேந்திரத்தை எனக்குப் பிடிக்கா மற் போனது.
திருமதி ராஜேந்திரம் ஒரு தமிழரைத் திருமணஞ் செய்துகொண்ட பரங்கிப் பெண்மணி. அவருக்குச் சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். வீட்டுக்கு அவர் தான் அதிபதி.
அவரது வீட்டில் கூலிக் குடியிருப்பாளனுக என் நண்பன் ஒருவனும் இருந்தான். எங்கள் இருவரையும் திருமதி ராஜேந்திரத்தையும் தவிர மனித வர்க்கத்தைச் சேர்ந்த இன்னும் இருவர் அந்த வீட்டில் இருந்தார்கள். அவர்கள், திருவாளர் ராஜேந்திரமும் அவர் மகன் செல் வன் ராஜேந்திரமும். இன்னும் ' எங்கள் ? வீட்டில் நான்கு பூனைகளும், மூன்று காய்களும் இருந்தன. எனக் "குத் திருமதி ராஜேந்திரத்தைப் பிடிக்காமற் போனதற்கு
இந்த நாய்-பூனைகள் தான் முக்கிய காரணம்.
திருவாளர் ராஜேந்திரம் அவர் மனைவியிலும் பார்க்க வயதில் குறைந்தவராகக் காணப்பட்டார். ஒவ்வொரு
2 حزg)

Page 20
34 குழந்தை ஒரு தெய்வம்
நாளும் இரவு பதினெரு மணியளவில் வீட்டுக்கு வருவார். காலை ஆறேகால் மணிக்கு எழுந்து ஸ்நானம் செய்வார். அவர் குளிக்கும் சப்தம்தான் எங்களை எழுப்பும் * அலாரம். ஏழு மணிக்கு மின்சார இஸ்திரிப் பெட்டி யால் உடைகளை அழுத்தி மடிப்பார். ஏழரை மணிக்கு அழகாக உடுத்து ஒரு ஆர்கிட் சிகரட் ° டின் சகிதமாக வாசலில் நிற்பார். அப்பொழுது அவரைப் பார்ப்பவர் களுக்கு அவர் முப்பது வயது ஆண்பிள்ளையாகக் காட்சி யளிப்பார். ܝ. . . . . " ༣ རྩ་བ -༤༥, . .
ஒரு சில நிமிஷங்களுக்கு வாசலில் கின்று விட்டு அப் புறம் போய் விடுவார். பகல் நேரங்களில் ஒரு நாளும் அவரை வீட்டிற் காணமுடியாது. காலையில் வீட்டில் யாருடனவது அவர் பேசியதை நான் பார்க்கவில்லை.
செல்வன் ராஜேந்திரத்துக்கு இருபது இருபத்தொரு வயதிருக்கும். தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந் தான். அவன், தகப்பன் வீடு வந்து சேர்ந்த அரை அல் லது முக்கால் மணித்தியாலத்துக்குப் பின்னர் வருவான். அவருக்கு முன்னர் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவான். பகல் வேளைகளில் வெகு அபூர்வமாக ஆசாமியை வீட்டிற் காணலாம். எனவே, வீட்டின் பிரதான குடியிருப்பாளர் கள் திருமதி ராஜேந்திரமும் அவருடைய நாய்களும் பூனை, களுமே. பூனைகளால் ஒரு தொல்லையும் கிடையாது. ஆனல், நாய்களோ!
திருமதி ராஜேந்திரம் நாள் முழுவதும் குதிரைப் பந்தய ஜோஸ்யப் பத்திரிகைகளுடன் இருப்பார். மூன்று நாய்களும் அவரைப் ‘புடை சூழ்ந்து கிடக்கும், வீட்டின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிருர் என்பதை நாய்களின் துர்வாடை வீசுவதைக் கொண்டு நான் அறிந்துகொள்வேன். அவ்வப்போது திருமதி ராஜேந் திரம் நாய்களைக் குளிப்பாட்டி வந்தார். ஆனலும் துர்நாற் றம் இல்லாமற் போன பாடாயில்லை. துர்வாடை நாய்க ளோடு உடன் பிறந்தது போலும்.
நாற்றம் மட்டும்தான் தொல்லை கொடுப்பதாய் இருக்.
தால் ஒரு மாதிரியாகச் சகித்துக் கொள்ளலாம். அவை

காயிலும் கடையர் 35
கள் சில சமயம் போடும். கூக்குரல்! அப்பப்பா சகிக்க முடியாது. . . . . . . . . .
சனிக்கிழமைகளில் அரை நாளும் ஞாயிற்றுக்கிழடிை களில் முழு நாளும் பொதுவாக எல்லோருக்கும் ஒய்வு நாட்கள். ஆனல், எனக்கும் என் கூட அறையில் வசித்த நண்பனுக்கும் அவை உபத்திரவ நாட்கள்.
சனிக்கிழமைகளில் மாலை இரண்டு மணிக்கு நாங்கள் இருவரும் கொஞ்சம் நித்திரை செய்யலாமென்று படுத் தூக்கொள்வோம். ஆனல், நித்திரையாகி அரை மணித் தியாலத்துள் மூன்று நாய்களும் ஊளையிட்டு எங்கள் தூக்கத்தைப் போக்கடித்து விடும். ஆத்திரத்தோடு அறைக்கு வெளியே சென்று பார்த்தால் திருமதி ராஜேந் திரம் நாய்களை வீட்டுக்குள் விட்டுப் பூட்டிவிட்டு எங்கா வது போய் விட்டிருப்பார். அதற்குப் பிறகு தூக்கம் எங் கிருந்து வரும்?
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பது என்று திட்டமிட்டுக்கொண்டு முதல் நாள் படுக்கைக்குச் செல்வோம். ஆனல், திருமதி ராஜேக் திரத்தின் நாய்கள் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் ஊளையிட்டு எங்களை எழுப்பிவிடும். நாய்களை உள்ளே அடைத்துவிட்டு அவர் கோயிலுக்குப் போவார். நாய் களின் உதய கீதம் அவர் திரும்பி வரும் வரை ஓயாது.
அந்த வீட்டில் குடியேறி ஒரு மாதமாகியும் நண்பனே கானே திருமதி ராஜேந்திரத்தோடு கன்ருகப் பழக ஆரம் பிக்கவில்லை, காலையில் எழுந்து முகங்கழுவப் போகும் போது கண்ணில் பட்டால் அவர் “குட் மோணிங் ?? என் பார். பதிலுக்கு நாங்களும் * குட் மோனிங் ?? போடு வோம். அவ்வளவுதான். கொஞ்சமாவது தாராளமாக அவரோடு பழகினல் நாய்களின் தொல்லையைப் பற்றிப் பட்டும் படாமலும் சொல்லலாம். ஆனல் நாய்களின் மேலுள்ள வெறுப்பு அவரோடு பழகுவதற்கு இடை யூருக இருந்தது.
திருமதி ராஜேந்திரம் நாய்களை வீட்டை விட்டு வெளியே போக விடுவதில்லை. எனவே, வீட்டுக்கு

Page 21
36 குழந்தை ஒரு தெய்வழ்
வெளியே வைத்து அவைகளிடம் வஞ்சம் தீர்த்துக் கொள் ளவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
செலாவணிக் கட்டுப் பாட்டுக் காரியாலயத்தில் என் கூட முன்பு வேலை செய்த கமலா ஒரு நாள் திருமதி ராஜேந்திராவைக் காணத் தன் கணவன் கூட வந்தாள். என்னைக் கண்டதும், “ஹலோ! நீர் இங்கேயா இருப்பு? எனக்குத் தெரியாதே! இவர்களோடு நான் ந்ெடுநாள் பழக்கமாயிற்றே. கொஞ்சம் மன்னித்துக் கொள்ளும். அவளோடு பேசிவிட்டு வருகிறேன் ? என்று சொல்லி விட்டு உள்ளே சென்ருள்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு அவளும் கணவ னும் வெளியே வந்தார்கள். திருமதி ராஜேந்திரமும் அவர்களை வழியனுப்ப வந்தார். கமலா அவரிடம் என் னைக் காட்டி ** இவர் இங்கே இருப்பது எனக்கு இவ் வளவு நாளும் தெரியாதே! நான் கல்யாணம் செய்யுமுன் இவர் வேலை செய்யும் கந்தோரில்தான் வேலை பார்த்து வந்தேன். எப்படி ஆசாமி?’ என்ருர்,
* நல்ல பிள்ளை. ஒரு தொல்லையும் இல்லை.?? என் ருர் திருமதி ராஜேந்திரம். அந்த மூன்று நாய்களும் அவ ருக்குப் பின்னுல் கிற்கின்றன என்பதை, பின்புறம் பார்க் காமலே, துர்நாற்றம் சமீபத்திலிருந்து வந்ததைக்கொண்டு நான் அறிந்து கொண்டேன். நாற்றத்தைச் சகிக்க முடி யாமல் எனக்கு அருவருப்பு உண்டாயிற்று. அறைக் குள்ளே ஒடிச்சென்று கதவை அடித்துச் சாத்திக்கொள்ள வேண்டும்போல இருந்தது. எப்படித்தான் கமலாவும் கணவனும் சகித்துக் கொள்கிருர்களோ என்று எண்ணி னேன்.
கமலா, “அறை எப்படி? நன்ருகப் பிடித்திருக் கிறதா?? என்ருள் என்னை நோக்கி. இருந்த எரிச்சலில் முன்பின் யோசியாமல்' எல்லாம் சரிதான்; நாய்கள்தான் பெரிய சனியன்கள்; இனிமேல் அறை பார்க்கும்போது நாய்கள் இல்லாத வீடாகப் பார்க்க உத்தேசம் ?? என் றேன். . கமலாவின் கணவன் திகைத்துப் போய் என்னைப் பூார்த்தான். கமலா, திருமதி ராஜேந்திரத்தை அசடு

காயிலும் கடையர் 37
வழியப் பார்த்தாள். அப்பொழுதுதான் நான் இங்கிதம் தெரியாமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். ‘நல்ல பிள்ளை ? என்று சொன்ன அம்மையாருக்குக் கைமாறு இதுதானு என்ற வருத்தமும் ஏற்பட்டது. ஆணுல் என் வார்த்தை களைக் கேட்டுத் திருமதி ராஜேந்திரம் எவ்வித மாறுபாடும் கொள்ளவில்லை.
பக்கத்தில் நின்ற நாய்களில் ஒன்றை வாரி எடுத்து, * டார்லிங் இந்த அங்கிள் பிள்ளையைச் சனியன் என்று சொல்லிவிட்டார். நீ அதை மன்னிச்சு விடு? என்ருர், மற்ற இரண்டு நாய்களையும், குனிந்து நெற்றியில் ? முத்தமிட்டார். பின்னர் தொண்டையை ஒருவாறு கனத்துக்கொண்டு, “ என்ன செய்வது? யாரிடமாவது நாம் அன்பு செலுத்த வேண்டி யிருக்கிறது. மனிதரிடம் அன்பு செலுத்துவதை விட வாயில்லாத நாய்களிடம் அன்பு காட்டுவது மேல் என்று எனக்குத் தோன்று கிறது" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நடந்தார். நாய்கள் அவரைப் பின் தொடர்ந்தன்.
* பாவம்! புருஷனும் அப்படி, பிள்ளேயும் அப்படி வந்து வாய்த்தார்கள்ே! இரண்டும் என்ன பிறவி க்ளோ??? என்ருள் என் அருகே நின்ற கமலா.
நான் சொல்வதறியாது வாய்மூடி மெள்னரியாக் கின்றேன்.
195ぎ労

Page 22
தொட்டாற் சுருங்கி
ஜீவமலரின் ‘ராசா இன்று, வழக்கத்திற்கு மாருக, தாய்க்ாயுடன் ஒட்டிக்கொண்டு கிடக்கிறது.
ராசாவின் போர்வை, சாப்பாட்டுப் பாத்திரம் காலை யிற் செய்த அழுக்கு, எல்லாம் வழக்கத்திற்கு மாருக அப்படி அப்படியே கிடக்கின்றன. .
ராசா குளிப்பு என்ற பெயரால், இன்று தண்ணீருக் குள் தத்தளிக்கவில்லை. : , " ,
தடிமன் பிடித்து விடாமல் போர்வை என்ற ஒரு கந்தைத் துணிக்குள் கிடந்து மூச்சுத் திணறவில்லை.
சின்ன எஜமானியை எப்பொழுதும் சுற்றித் திரியப் பழகவேண்டும் என்பதற்காக, கழுத்திற் கயிறு மாட்டி, நாயாக இழுபடவில்லை. * .4 م.م ,، ":" , .
ராசா இன்று நாயாகாத நாய்; தன் சொந்தத் தாயின் செல்வக் குழந்தை.
நாய்க்குட்டிக்கு அதன் பிறப்புரிமையை, பெரிய மனசு பண்ணி வழங்கிய சின்ன எஜமானி ஜீவமலர் வாச லுக்கும் சமையலறைக்குமாகப் பறந்துகொண்டு கிற்கிருர், நாலு நாளைக்குள் தங்கச்சிக்கு ஒரு பாப்பா கொண்டு வந்து தருவதாகச் சொல்லிப் போன ஜிவமலரின் அக்கா, நாற்பது நாளாகியும் வரவில்லை.
ஜீவமலருக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்திருந் தால் மருத்துவ விடுதியில் அக்காவையும் குட்டித் தம்பி யையும் பார்த்து விட்டு வந்து விடுவாள். பதினுெரு

தொட்டாற் சுருங்கி 39
வயதென்ருல் கூட ஒரு வயதுக்குப் பொய் சொல்லி விடலாம்.
பொய் சொல்லலாமா கூடாதா என்ற பெரிய தத்துவ விசாரமெல்லாம் ஜிவமலருக்குத்தான். அம்மாவென்ருல், முடியுமென்று கண்டால், அலுங்காமல் நலுங்காமல் பொய்யைச் சொல்லிக் கூட்டிப்போய் விடுவாள்."
ஆனல், ஜீவமலருக்கு இப்போது ஏழு வயதுதானே! கடைசியாக, இன்றைக்காவது அக்கா ஆஸ்பத்திரியி லிருந்து துண்டு வெட்டிக் கொண்டு வருகிருளே.-- பெரிய மன ஆறுதல்தான்.
காலையில் வேளைக்கே அம்மா ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டாள். இப்பொழுது மணி பத்தாகிறது, இன்னும் அம்மாவையோ அக்காவையோ காணுேம்.
அக்காவும் குட்டித் தம்பியும் வரப்போகிருர்கள் என்ற பரபரப்பில் ஜீவா இன்னும் முகங் கழுவவில்லை; காப்பி சாப்பிடவில்லை ; ராசாவுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்யவில்லை.
முகங் கழுவப் போய்க் கிணற்றடியில் நிற்க, அக்கர் வந்து விட்டால் ? அல்லது காப்பி குடித்துக்கொண்டி ருக்கும் போது வந்து விட்டால்?
ஊஹ"ம். போகக் கூடாது. அக்காவும் குட்டித் தம்பியும் வருவதை வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு' முன்புதானே ’பார்க்க வேண்டும். தானே தான் மற்றவர்களுக்கு அந்த அதிச யத்தைச் சொல்லவேண்டும். . . .
வாசற்படியில் உட்கார்ந்து தெரு வளைவையே பார்த் க் கொண்டிருக்கும் ஜீவாவின் மனுேராஜ்யத்தில் தயா E. அமுலாகக் காத்திருக்கும் திட்டங்க்ள் எத்தனையோ, -"ராசாவை இனிமேல் ‘ராசா?.என்று கூப்பிடுவ தில்லை. அதுக்கு வேறெதும் பேர் வைக்க வேணும். குட்டித் தம்பிக்குத்தான் ராசா? பொருத்தம்.? '

Page 23
40 குழந்தை ஒரு தெய்வம்
-“இனிமேல் குட்டித் தம்பியைத்தான் ராசா..? எண்டு கூப்பிடுவன்.?
-“நான்தான் குட்டித் தம்பிக்கு விளையாட்டுக் காட்டு வன்.?
-“குட்டித் தம்பி படுத்தா நான் நான் பார்த்துக் கொள்ளுவன்."
赛 குட்டித் தம்பியைக் கொண்டு அக்கா வந்த சமயம் -பாவம் ஜீவா ! - ஒன்றுக்குப் போயிருந்தாள்.
கழுத்தை நீட்டித் தெரு வளைவைப் பார்த்துவிட்டு, அப் பொழுதுதான் அந்த உபாதைக்குத் தற்காலிக பரிகாரம் செய்துவிட்டு ஓடிவரப் போனுள். அதற்கிடையில் இந்தச் சனியன் பிடித்த கார் வந்துவிட்டது.
கார்ச் சத்தம் கேட்ட புல்லரிப்பில், சட்டையையும் காலையும் நனைத்துக்கொண்டு பறந்து வந்தாள்.
அக்காவுக்கென்று ஒதுக்கிவைத்த அறை வாசலை மறைத்துக்கொண்டு, அம்மா, சின்னக்கா, அண்ணன் எல்லோரும் நின்றர்கள். எல்லோரையும் இடித்துக் கொண்டு தலையை உள்ளே நீட்டி, எட்டிப் பார்த்தாள்.
-கட்டிலில் அக்கா. -தொட்டிலை மறைத்துக்கொண்டு அத்தான். -குட்டித் தம்பி எங்கே? -TITFITIT'...... எங்கே? ஜீவா அறை வாசலைத் தாண்டிச் சிறிது முன்னேறிச் சென்று கண்ணுல் தொட்டிலைத் துழாவினுள்.
தொட்டில் வெறிசாயிருக்கிறது. அக்காவின் மடி யைப் பார்க்கிருள். அங்கும் இல்லை. ஆர்வம் அவளைப் பிடுங்கித் தின்கிறது.
ஒடிப் போய் அக்காவின் மடியில் முகத்தைப் புதைத்து,

தொட்டாற் சுருங்கி 教
--மீ பொய்தானே சொன்னுய்? குட்டித் தம்பி எங்கே? v .. ' '
-என்று சண்டை பிடிக்க வேண்டும்போல இருந் தது. அத்தான் நிற்கிருன். அவன் இருக்கும்போது அக்காவுடைய அறைக்குள் நுழையக் கூடாது. அம்மா "ஏசுவாள். சில சமயம் அடித்தாலும் அடிப்பாள்.
ஆசைக்கும் நிராசைக்குமிடையிற் சிக்கி அவள் மூச் சுத் திணறும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அக்காவுக்குப் பக்கத்திற் கிடந்த நீலக் கம்பிளிப் போர்வைக்குள்ளிருந்து ஏதோ ஒன்று நெளிகிறது; ஒரு “இத்துனி? ; சீனத்துப் பொம்மை ஒன்றின் ரோஜா நிறக் கால், தலை? நீட்டிப் பார்க்கிறது. -*கூப்ய் ; குட்டித் தம்பி’ சந்தோஷம் அவள் நெஞ்சில் ஓங்கி அறைந்தது. அந்தப் பளுவைத் தாங்க முடியாமல், -*அம்மா, தம்பீ!?? -என்று வாய்விட்டுக் குளறி, அதைத் தொடர்ந்து வந்த மெளனத்தில் திணறி, சுதாரித்துக் கொண்டாள்.
一颂 H உதட்டுக்கு மேற் சுட்டு விரலைப் பொருத்தி, அத்தான் எச்சரிக்கை செய்தான்.
-நடுத்தெருவில் சீலேடை உரிந்துவிட்ட மாதிரி. வெட்கத்தால் அவள் முகத்தில் அக்கினி பழுத்தது. தீக்கோழிபோல, நிலத்துக்குள் முகத்தைப் புதைத்து ஆதனிடமிருந்து தப்பி ஓடிவிட வேண்டும் போல இருந்தது.
அக்காவால் அந்தக் கண்டம் தப்பியது. -*ஜீவாவா? எங்கே போனிங்க இவ்வளவு நேரமும்? இங்க வாங்கடா ?
செல்லமாய்க் கிட்ட அழைத்து,

Page 24
42 குழங்தை ஒரு தெய்வம்
-*தம்பி தூங்கிருன். சத்தம் போட்க் கூடாது. பிள்ள தம்பியை இன்னம் பாக்கயில்லை என்ன ???
-என்ருள் அக்கா. ஆமை உள்ளிழுத்த தலையை மறுபடியும் வெளியே மீட்டியது. பேராச்சரியத்தைக் காண ஜீவா தன்னைத் தயாராக்கிக் கொண்டாள். ஒங்கி வளர்ந்த கர்வத்தால்: அத்தானைக் கூட நிமிர்ந்து பார்த்தாள்,
-எங்கட அக்கா, எங்கட தம்பி. இவருரு கந்தர்? -என்பதைப் போல -ஈங்ங். க்வாஆ.க்வாஆ ! குழந்தை பேசியது. ரோஜாவிலும் பார்க்க ரேர்ஜா நிறத்தை எப்படிச் சொல்வது? ரோஜாப் பூக்களை அழுத்தி அழுத்தித் தேய்த்தது போல இதழ்கள். கண்கள், மூக்கு, நெற்றி, மயிர், காது, ஒவ்வொன்றுமே ஒரு கொள்ளை அதிசயம்.
-*சின்னனப் பாப்பா !? . . . . அவளுக்கு வேறென்றும் சொல்லத் தெரியவில்லை. *சின்னன? என்று அழுத்தம் கொடுத்து, மன்சுக்குள் இருந்துகொண்டு, வாயில், வார்த்தை உருவில் வர மறுத்த ஏதோ ஒரு அர்த்தத்தை, அவள் கசக்கிப் பிழிந்து எடுக்கப் பார்த்தாள். . ༢ སྣ་ -*நீயும் ஒரு காலத்தில் இப்பிடித்தானே வந்தாய்? -“உண்மையாகவா? 一 。
வார்த்தை செயலாகி, செயல் மாமிசமாகி, வார்த். தையே மாமிசமாகும் விந்தையைப் பற்றிய சிந்தனையே கிடையாத அவளின் பருவத்திற்கு, இது பெரும் புதுமை யாயிருந்தது. ' .. .٦ : '. د بت ، ...' .. ; ، له ده ・ ・ 。マ '
அத்தான் கிற்கிருன் ஆனதால், அதைப்பற்றி உரத்துச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யவோ, அபிப்பிராயம் சொல்லவோ அவளுக்கு வெட்கம். அவள் வெறுமனே நின்ருள். . . . . . . . . . . . . . .

தொட்டாற் சுருங்கி 43.
-'அறையை விட்டு அத்தான் போகவே மாட் டானே ? அடைக் கோழி மாதிரி.? -
-போனல் தானே, --குட்டித் தம்பியை நான் தூக்கலாம் ; -கொஞ்சலாம் ; -விளையாட்டுக் காட்டலாம் ; -நித்திரையாக்கலாம்.? குட்டித் தம்பியைக் காண்பித்த அக்கா, அதைத் தூக்கித் தன் கையிற் தருவாள் என்று எதிர்பார்த்துப் பெற்ற ஏமாற்றம் அத்தான் மேற் கோபமாக ஜனித்தது. அவன் புற்றுப் பாம்பு மாதிரி அந்த அறைக்குள்ளேயே பதுங்கியிராவிட்டால், ஜீவா அக்காவுடன் மல்லுக் கட்டிக் குட்டித் தம்பியைத் தூக்க மாட்டாளா?
அத்தான் இப்போது அறையை விட்டு வெளியேறு கிற சாடையைக் காணுேம். குட்டித் தம்பியையும் பார்த் தாயிற்று. வயிறும் கிள்ளுகிறது. முகம் கழுவிச் சாப்பிட்டு விட்டு, " . . . .
-"அத்தான் சாப்பிடுவான் தானே, நான் முன் னமே சாப்பிட்டு விட்டால், அத்தான் சாப்பிடும்.
சாப்பிட்டுவிட்டு வந்தபோது அத்தான் அறைக்குள் இல்லை. தற்பாதுகாப்பாக அக்காவிடம்,
*அத்தான் எங்கே? -என்ருள். -*எப்போ வருவார் ??? -என்றும், தனக்கு எட்டிய வளையத்தில் சுற்றி" வளைத்த ஒரு கேள்வி.
-பதில் சாதகம்தான். -இனி, அவள் அணு ஆராய்ச்சியை ஆரம்பிக்க.
--குட்டித் தம்பியில்தான்.

Page 25
-4针 குழந்தை ஒரு தெய்வம்
கொத்துக் கொத்தாக அடர்த்தியாக சிலிர்த்துக் கிடக் கும் ரோஜா கிற அலரிப்பூவில் அவளுக்கு வெகு பிரியம். ஒற்றை மலரை மெல்லப் பறித்து காசித் துவாரத்தில் பட்டும் படாமலும் வைத்து முகர்வாள். அப்படி உறிஞ் சும் சுகந்தம் போதாமற் போகவே, சிறிது சிறிதாக அதை நாசியோடு அழுத்தி, ஈற்றில், வாய்குட் போட்ட இனிப் பைக் கரைய விட்டு உமிழ்ந்து சுவைக்காமல் கடித்துத் தின்று சுவைப்பது போல, கசக்கி எடுத்து விடுவாள்.
போர்வையை நீக்கிக் குட்டித் தம்பியைப் பார்த்த போது அவளுக்கு அலரிப்பூவின் நினைவு வந்தது.
-ஜீவமலர் மெல்லக் குனிந்து அலரிமலரில் முத்த மிட்டது.
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான், கள் வெறி கொள்ளுதடி.
தாயாகாத தாய் குழந்தையை முத்தமிட்ட வேளையில், -தன்னை மறந்தாள் ; -உலகை மறந்தாள் ; -உன்மத்தமானுள். *வீர்” என்று குழந்தை அலறியது. தீயை மிதித்தவள் போல, அதன் பக்கத்தில் அயர்ந்து தூங்கிவிட்ட அக்கா துள்ளி எழுந்தாள், துயில் தோய்ந்த அவள் கண்களுக்கு, அறை வாசலில் செளகரிய மாகச் சாய்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டு நின்ற கண வன் மழையில் நனைந்து கொண்டு நிற்பது போலத் தெரிந்தது.
--குழந்தை அலறிக் கேட்டதே! கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். ‘ஓ’வென்று அழுவதற்குத் தயாராகக் குழந்தை வாயைப் பிளந்து கொண்டிருந்தது, இடியோசைக்கு முன்னர் மின்னல் தோன்றுவதைப் போல.
-வாய் திறந்தபடியே இருந்தது.

தொட்டாற் சுருங்கி 45:
மூச்சு கின்றுவிட்டதோ என்று பதட்டப்படுமளவுக் குத் திறந்தபடியே இருக்தது. s
-ஜீவா பேயறைந்தவள் போல மிரண்டு நின்ருள். -“மூதேசி! பிள்ளையை என்ன செய்தனி??? -அக்காவா பேசுகிருள்? ஒருவித சிரத்தையுமில்லாதவன் போல சிகரட்டைப் பிடித்துக் கொண்டு நின்ற அத்தானை ஜீவா முகத்தால் கெஞ்சினுள். அவன் அவளைப் பார்க்காதவன் போல நின்றன்.
-°க்வாஆ.? இப்பொழுதுதான் ஒலி பிறந்தது. ஒரே கணத்தில் ஜனித்தும், முன் பின்னக வரும், மின்னலுக்கும் இடியோசைக்கும் இடையில், பிடிபட்டுத் தத்தளித்த, அந்த மெளன வெளிஅழிய,
-அப்பாடா! என்ன கிம்மதி ! -ஊ! ஊ! ராசா அழாதேடா! தாயின் மார்புக்குள் ஒடுங்கியது அழுகை. -*நான் ஒண்ணுஞ் செய்யல்லே அக்கா. சும்மா ஒருக்காக் கொஞ்சினன் ??
-ஜீவா பேசாமல் இருந்திருக்கக் கூடாதா? அக்கா அத்தானைப் பார்த்தாள். -இன்னும் உதட்டில் அந்தக் கண்டறியாத சிகரட், -மரக்கட்டை போல நிற்கிருனே! -அசாதாரணமான கோபத்தின் தோற்றம் அது. பழுதையும் பாம்புமான அவனில், சர்ப்பாம்சம் இப்படி விகர்சித்துப் படமெடுக்கிற போதெல்லாம், அந்த அரவத் தின் உடலை இருளில் மிதித்தவள் போல அவள் திணறிப் போவாள்.
-அட, கோபமென்ருல் அடியன். திட்டன். -அப்படிச் சும்மா கின்றுவிட்டு, கணக்காக ஐந்து கிமிஷத்திற்குப் பிறகு, ஒரே ஒரு சொல் விழும்.

Page 26
-46 குழந்தை ஒரு தெய்வம்
-நெருப்பு என்றதும் வாய் வேகும் சொல், -"மூஞ்சியைப் பாரு மூக்கால ஒழுகுது. அதோட பிள்ளையைக் கொஞ்சினியா? 'பிள்ளைக்குத் தடிமல் வந்தா என்ன செய்கிறது???
-கழுத்தைச் சுற்றிவிட்ட கேர்டாலிப் பாம்பைப் பிடுங்கி எறிவதைப் போல, அக்கா தன் பயத்தை ஜீவா மேல் எறிந்தாள். . . . .
தலையைக் கவிழ்த்தபடி ஜீவா பேசாமலிருந்தாள். கண்ணிர்க் குளங்களிரண்டு அணையை உடைத்துக் கொண்டு மெளனமாய்ப் பிரவகித்துக் கொண்டு பாய்ந்தன.
பருந்து வழியை மறைத்துக்கொண்டு நிற்காவிட்டால், அவள் எழுந்தோடிப்போய் அம்மாவிடம் புகலிடம் தேடிக் கொள்வாள். . . . . -யுக யுகாந்தரமான காலத்துக்குப் பிறகு ஜீவா தலையை நிமிர்த்திப் பார்த்தபோது, வாசலில் அத்தான் நிற்கவில்லை.
-ஜீவாக் குஞ்சுக்குக் கோவமா? வற்றியிருந்த குளங்கள் இரண்டும் மறுபடியும் மடை திறந்துகொண்டன. இப்பொழுது அந்த மெளனம் இல்லை.
ஒ?வென்று அலறிக்கொண்டு எழுந்து வெளியே ஓடினள்.
வீடு முழுவதும் தேடினுள். அம்மாவைக் காண வில்லே - அவளறியாமல் அவளைப் பின் தொடர்ந்து திரிந்து கொண்டிருந்த ராசா காலை இடறியது.
வாலைக் கால்களுக்குக் கிடையில் ஒளித்து, முதுகுப் புறமாகப் புரண்டு கிடந்து ‘வாள், வாள்? என்று, தன் சின்ன எஜமானியின் “பெரிய துன்பத்தில் பங்கு கொள் வது போல முனகியது.

தொட்டாற் சுருங்கி 4Τ
அவளுக்குக் கொழுகொம்பு கிடைத்துவிட்டது. உயரே ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தி லிருந்து விழுந்தவள், தாபரமாக முகிலைப் பிடித்துக் கொண்டாள்.
-ராசாவைத் தூக்கி மார்போடணைத்து முத்தமிடு கிருள்;
-சாப்பாட்டுப் பாத்திரத்தை அலம்பி அலம்பிக் கழுவுகிருள்;
-ராசா காலையிற் செய்த அழுக்கைக் கூட, அசப்பிய மில்லாமல், தன் கையாலேயே சுத்தம் செய்கிருள்.
-ராசா குளிக்கிறது; -தன் சின்ன எஜமானியின் துவாலையால் உடம் பைத் துவட்டிக் கொள்கிறது;
-அந்தத் தாயின் மடிக்குள் இழைந்து கிடந்து குளிர் காய்கிறது. . .
ஜீவா தன் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டு தன் அன்பை யெல்லாம் பொழிந்து, அதனேடு கொஞ்சு கிருள். · ·
-*ராசாவுக்கு என்னேட் கோவமா? -“நான் இனிமேல் ஒரு நாளும் ராசாவை விட்டிட்டுப்
போகமாட்டன்.?
-ராசாவுக்குத் தடிமல் வருமா? -*மூக்கைச் சிறு பாப்பம் .??
வாய்விடாச் சாதியான அந்த நாய்க்குத் தன் சின்ன
எஜமானி சொல்வதெல்லாம் புரிகிறது.
அவளின் ஏகாந்தப் பேச்சைக் கேட்டு அது, -குழைகிறது; -வாலை ஆட்டுகிறது; --தாயின் முகத்தை நக்குகிறது.
1959

Page 27
குழந்தை ஒரு தெய்வம்
மத்தியானம் இரண்டு மணி. சுசீலாவின் அரை நாள் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. தன் நான்கு வயது மகனுக்குச் சோறு ‘தீத்தித் தானும் சாப்பிட்டு விட்டு, வீட்டு வராக்தாவுக்கு வந்தாள் சுசீலா. வரrந்தா வில் அங்கும் இங்கும் நடந்தாள். புழுக்கம் ஒருவாறு குறைந்தது, ஒரு கண் கித்திரை செய்யலாம் போல இருந்தது. “தம்பி, வாடா, நித்திரை கொள்? என்று பொம்மைகள் புடை சூழ இருந்த மகனைக் கூப்பிட்டாள். *ஹ7ம்’ என்று அவன் சிணுங்கினன். “ஆமாம் இப் பொழுது கித்திரை செய்தால் இரவெல்லாம் விழித் திருந்து தொல்லை கொடுப்பாய்!” என்று தன்னுள் சமா தானம் செய்து கொண்டாள்.
எதிரே வீதியில் வண்டிப் போக்கு வரத்துக் குறைந்து அமைதி சிலவியது. சுசீலா தெருவைப் பார்க் கத்தக்கதாக நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டு உட் கார்ந்தாள். அவளுடைய மகனும் பொம்மைகள் எல்லா வற்றையும் அள்ளிக்கொண்டு தெரு ஓரமாக இருந்த வாசலில் குந்தினன். “தெருவுக்குப் போகக்கூடாது? என்று சுசீலா எச்சரித்தாள். “உம்? என்று கொண்டே கடைசிப் படியில் உட்கார்ந்தான் அவன்.
மழை வருவதற்கு அறிகுறியாகக் குளிர் காறறு வீசி யது. வானம் இருண்டது. சுசீலாவுக்குத் தன் கணவ னின் நினைவு வந்தது. ஆறு மாதமாக அவர் அவளிடம் வரவில்லை. அவளிடம் அவனுக்குக் கோபம் ஒன்றும் இல்லை. எல்லாம் பொருளாதார விஷயம். அவனுக்குக்

குழந்தை ஒரு தெய்வம் 49
கொழும்பில் உத்தியோகம். குடும்பம் யாழ்ப்பாணத்தில், வருஷத்தின் முதல் ஆறு மாதத்திலும் அடிக்கடி அவளைப் பார்க்க வந்து லீவெல்லாம் முடிந்துவிட்டது. இந்நாட் களில் அவனுக்கு வேலையும் கொஞ்சம் அதிகம், லீவு இருந்தாலும் எடுக்க முடியாத நிலை. மனைவியைக் கொழும்புக்கு அழைத்து வைத்துக்கொள்ள அவனுக்குக் கொள்ளை ஆசை. ஆனல், இந்தக் காலத்திலெல்லாம் ஒரு சாதாரண 'கிளார்க் பட்டினத்தில் மனைவியோடு வாழ்வதென்பது இலேசுப்பட்ட சங்கதியா?
சுசீலாவுக்குத் திடீரென்று தன் கணவன் மீது கோபம்
வந்தது. அப்படி என்ன ஓயாத வேலை? லீவெடுக்க முடி யாத வேலையில் ஏன் போய்ச் சேர்ந்தார்? அவரோடு படித்த சுந்தரமூர்த்தி எப்பொழுது பார்த்தாலும் ஊரி லேயே நிற்கிருன். அவனுக்கு எப்படி லீவு கிடைக் கிறது? அவள் சுந்தரமூர்த்தியைக் கட்டியிருந்தால் எவ் வளவு நன்ருக இருந்திருக்கும்!
சிறு வயதிலிருந்தே சுந்தரமூர்த்தியும் சுசீலாவும் ஒன்ருகப் பழகிவந்தார்கள். இரண்டு பேரும் ஒரே அக் தஸ்து உடைய குடும்பத்தில் பிறந்தவர்களானதால் அந் நாட்களிலிருந்தே பெரியவர்கள், தங்களுக்குள் அவர்கள் இருவருக்கும் முடிச்சுப்போட்டு வைத்திருந்தார்கள். ஆணுல், சுசீலா பெரிய மனுவியான காலத்தில் சுந்தர மூர்த்தியின் தகப்பனர் கண்ணே முடிவிட்டார். பிறகு சுந்தரமூர்த்தி சுசீலாவின் அந்தஸ்துக்குக் குறைந்தவனகி விட்டான். இங்கிலீஷ் எஸ். எஸ். சி. படித்துக்கொண் டிருந்தவன் சோதனை எழுதாமலே ஏதோ ஒரு கம்பனியில் சேர்ந்து கொண்டான். சுசீலாவுக்குக் கல்யாணமான போது அவன் ஒரளவு முன்னுக்கு வந்திருந்தான். இருந் தாலும் அவனுடைய தாய் சுசீலாவுக்குத் தன் மகனைக் கட்டிக் கொடுத்தாலென்னவென்று சாடையாகப் பேச் செடுத்தபோது “அவன் என்ன கவுண்மேந்து உத்தி யோகமா பார்க்கிருன்??? என்ற பதில் கிடைத்தது. கடை வியில் ஒரு கிளறிக்கல்-உத்தியோக மாப்பிள்ளைக்குச் சுசீலாவைச் செய்து வைத்தார்கள்.
8--jت

Page 28
குழந்தை ஒரு தெய்வம்
சுந்தரமூர்த்தி வேலை பார்க்கும் கம்பனியின் கிளைக் காரியாலயம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்தது. எனவே அவனே அடிக்கடி யாழ்ப்பாணத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அநேகமாக ஒவ்வொரு கிழமையும் அவன் கையில் ஏதாவதொரு பொட்டலத்துடன் சுசீலா வீட்டைத் தாண்டிப் போவான். சில சமயங்களில் சுசீலாவைக் கண்டால் மரியாதையாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டுப் போவான். அப்பொழுதெல்லாம் சுசீலாவுக்கு அவன் கஷ்டப்பட்டுச் சிரிப்பதாகத் தோன்றும். அவள் மனதில் ஒருவித வேதனை உண்டாகும்.
குளிர்காற்று "ஜில்லென்று அடித்தது. சுசீலாவின் உடம்பு புல்லரித்தது. மகனைத் தூக்கிக்கொண்டு உள்ளே போக முனைந்தாள். ஆனல், அந்தச் சின்னப் பயல் தாயின் பிடியிலிருந்து திமிறினன். “மழை வரப்போகு தடா, வா? என்ருள். யாரையாவது அனைத்துக் கொண்டு தூங்கவேண்டும் போல அவளுக்கு இருந்தது. *நான் மாட்டன்’ என்று பிடிவாதம் பிடித்தது குழந்தை. *அப்போ வாசலில் உட்காராமல் உள்ளேவந்து உட்கார்? என்று சொல்லிவிட்டுப் பழையபடி நாற்காலியில் உட் கார்ந்தாள் சுசீலா.
பொட்’ ‘பொட்" என்று கல்லெறிவது போல பெரிய மழை பொழிந்தது. தெருவிற் போய்க் கொண்டிருந்த இரண்டொருவர் பக்கத்து வீடுகளில் ஒதுங்கிக்கொண் டார்கள். அவள் வீட்டுக்குள்ளும் ஒருவன் நுழைந்தான். அவன் சுந்தரமூர்த்தி.
சுசீலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறுமியாயிருந்த போது ஒரு நாள் நடந்த சம்பவமொன்று அவளுக்கு நினைவு வந்தது. பள்ளிக்கூடமிருந்து சுசீலா வும் சுந்தரமூர்த்தியும் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார் கள். இடையில் மழை பிடித்துக் கொண்டது. பூட்டிக் கிடந்த கராஜ் ஒன்றின் தாழ்வாரத்தில் இரண்டு பேரும் போய் ஒதுங்கிக்கொண்டார்கள். கால் மணி, அரை மணி,முக்கால் மணி-மழைபெய்துகொண்டே இருந்தது. நன்றக இருட்டியும் விட்டது. சுசீலாவுக்குப் பயமாக இருந்தது. மழையில் நனைந்தாவது வீட்டுக்குப் போய்

குழந்தை ஒரு தெய்வம் 5.
விடத் துடித்தாள். சுந்தரமூர்த்தி, 'இவ்வளவு நேரமும் நின்ருேம். இன்னும் கொஞ்ச நேரம் நின்று பார்ப்போம். யாராவது நம்மைத் தேடிக்கொண்டு குடையோடு வருவார்கள்.? என்று சொன்னன். “இங்கு வந்த நேரந் துவங்கி இப்படித்தான் சொல்கிருய். எவ்வளவு நேரம் ? நான் போகிறேன்?? என்று சொல்லி மழைக்குள் இறங்கி விட்டாள் சுசீலா, “கில்லு, கில்லு, நானும் வருகிறேன்.’’ என்று அவன் அவள் கையைப் பற்றி இழுத்து கிறுத்தினன். பிறகு தன் புத்தகங்களையும் அவள் புத்தகங்களையும் ஒன்ருகக் கட்டி அவன் மார்புச் சட்டைக்குள் திணரித்தான். தன் ஷர்ட்டைக் கழற்றி அவள் தலையை மூடிவிட்டான். மழையில் நனைந்தால் சுசீலாவுக்குத் தடிமன் வந்து விடும். “சோ? வென்ற மழையில் இருவரும் கடந்து வீட்டை அடைந்தார்கள்.
நினைவைக் கலைத்து விட்டு உள்ளே சென்று வெளுத்து வைத்திருந்த துவாலேகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சுந்தரமூர்த்தியிடம் கொடுத்தாள் சுசீலர. அதற்கப்புறம் என்ன பேசுவதென்று ஒன்றும் தோன்ற வில்லை. மகனின் நினைவு வந்தது. °தம்பி’ எனறு கூப்பிட்டாள். பதில் இல்லே. வாசல் பக்கம் போய்ப் பார்த்தாள். தாவாரத்தால் வழிந்தோடும் மழைத் தண் ணிரில் பொம்மை ஒன்றைக் குளிப்பாட்டிக் கொண்டிருந் தான் அவன். “தற்செயலாக வழுக்கி விழுந்தால் என்ன செய்வாய்? தெருவிற் போகும் கார் அடித்துச் சாகவா பார்க்கிருய்? என்று சொள்ளுறள். ஏனே அவள் குரலில் சிறிது அதிகாரம் தொனித்தது. கித்திரைக்குப் போக அழைத்தபோது மாட்டேன் என்ற குழந்தை இப் பொழுது கொஞ்சம் நகர்ந்து மேலே, வராந்தாவில் ஏறி உட்கார்ந்தது. மறுபடியும் 15ாற்காலியில் உட்கார்ந்தாள் "சுசீலா காரணமின்றி அவள் கெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. - ' : ه
*டவல் இந்தாருங்கள். தாங்க்யூ.’ என்ருன் சுந்தர முர்த்தி. --
“ஏணிப்படி அங்கியரோடு பேசுவது போலப் பேசுகி றிர்கள்??

Page 29
52 குழந்தை ஒரு தெய்வம்
“வேறெப்படிப் பேசுவது ??? சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. *நிற்கிறீர்களே. இதில் இருங்கள்’ என்று நாற். காலியைக் காட்டினுள் சுசீலா. சுந்தரமூர்த்தி அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
மீண்டும் இருவரும் மெளனமாக இருந்தனர். வெளியே மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இடையிடையே இடி இடித்தது.
'முன்பு ஒரு முறை நாம் பள்ளிக்குப் போய்த் திரும் பும் வழியில் இப்படி மழை பெய்து ஒரு கராஜ" க்குள் போய் ஒதுங்கிக்கொண்டது கினை விருக்கிறதா ??? சுசீலா சுந்தரமூர்த்தியைக் கேட்டாள்.
*நீயும் அதைப்பற்றி நினைத்துக்கொண்டாயா? *ஏன் ? நீங்களும் அதைத்தான் நினைத்துக்கொண்டி ருந்தீர்களா?
**ஆமாம்??
*சின்ன வயசில் நமக்கு எவ்வளவு சுதந்திரம்.? சுசீலா வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள். மெது வாகப் பெருமூச்சு விட்டாள்.
சுந்தரமூர்த்தி நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான். சுசீலாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கினன். அவள் கண்களைப் பாதி முடியும் பாதி மூடாமலும் கனவு காண்ப வள் போல இருந்தாள். சுந்தரமூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியானல் சுசீலா..? அவனுல் கம்பவே முடியவில்லை.
நாற்காலியைச் சுசீலாவுக்குக் கிட்ட இழுத்து உட் கார்ந்து கொண்டு மெதுவாக அவளது கரத்தைப் பற்றி 6 சுசீலா? என்ருன்.
*உம்?? என்ருள் சுசீலா.
"உனக்குக் கல்யாணமாகுமுன் இதை ஏன் சொல்ல
* ..

குழந்தை ஒரு தெய்வம் 53
"நான் எப்படிச் சொல்வது? நீங்கள் கேட்க வில்லேயே??
*நீ எட்டாத கனி என்று எனக்குத் தெரிந்திருந்தது?
*நீங்கள் மட்டும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி யிருந்தால்...? சுசீலாவின் கண்கள் முழுசாக மூடிக் கொண்டன. இரண்டு கைகளாலும் சுந்தரமூர்த்தியின் கரத்தைப்பற்றி உதட்டருகே கொண்டு போனுள்.
வெளியே “கிறீச்” என்ற கார் "பிறேக்’ சத்தத்தைத் தொடர்ந்து, அலறல் குரல் ஒன்று கேட்டது.
*தம்பி’ என்று பதைத்துக் கொண்டு எழுந்தாள் சுசீலா. சிறிது நேரத்தில் அவள் வீட்டில் ஒரே களே பரம். மகனைக் கார் அடித்துவிட்டது.
சுமார் கால் மணி நேரத்துக்குப் பிறகு சுந்தரமூர்த்தி டாக்டருடன் வந்தான்.
டாக்டர் குழந்தையைப் பரிசோதித்து “ஆபத்து ஒன்றுமில்லை? என்ருர், மருந்து போட்டுக் கட்டிவிட்டுப் போனுர்,
குழந்தையின் தலைமாட்டில் சுசீலாவும் சுந்தரமூர்த்தி யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கின்றனர். இருவருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
I 956

Page 30
பேடி ! ஆதியிலே ஆண்டவன் இருந்தான். தன்னைப்பற்றி அவனுக்குப் பெரும் நினைப்பு. முகஸ் துதியில் அவனுக்குப் பிரியம் அதிகம். அனைத்தும் எப்
பொழுதும் தன்னையே நினைக்க வேண்டும் என்பது அவன் அவT.
உலகையும் ஜீவராசிகளையும் படைத்தான்.
உலகம் சுழன்றது; இறைவன் பெருமிதத்தாற்
சுழன்றன்.
ஜீவராசிகள் குரவையிட்டன; தன் புகழை அவை
பாடுவதாக நினைத்து அமலன் அகமகிழ்ந்தான்.
வெறும் ஒலம் அவனுக்குச் சலித்துப் போனதும், மனிதனைப் படைத்தான்.
உலகம் உருண்டுகொண்டே இருந்தது ; ஜீவராசிகள் குரவையிட்டன.
கரனுக்கு இவையெல்லாம் பயத்தைக் கொடுத்தன Tமனிதனும், குரவையிட்டான்-பயத்தால்.
பிரபஞ்சத்தில் அவன் தனியன்.
பஞ்சபூதங்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் அவன் அஞ்சி நடுங்கினன்.
ஆண்டவன் அவனுக்கு உதவவில்லை. ஒளிந்திருந்து வேவு பார்த்தான். h

பேடி ! 55. \ மானிடன் பயந்து பயந்து பயத்துக்குப் பழக்கப் பட்டான் ; பயத்தை வென்றன். - . . . . . . . . . .
பயம் பரமனைப் பிடித்தது. பிறகு கடவுள் பெண்ணேப் படைத்தார். பெண் மனிதனைத் தெய்வமாக்கினுள். மனிதனும், *நானே தெய்வம்? என்ருன். அசல் தெய்வத்திற்குக் கிலி. பரமண்டலத்திலிருந்து இறங்கி வந்து, *நானே கடவுள்’ என்ருன் அவன். தான் படைத்த ஒன்றிடம் வாய்விட்டு, “நானே கடவுள்' என்ருன் !
எதிர்பாராத தாக்குதலால் மனிதன் முதலில் விதிர் விதிர்த்துப் போனன், பிறகு, அச்சந் தெளிந்து பார்த் தான் மனிதன். கடவுளைக் காணுேம். அவன் ஒளிந்து கொண்டான். V
மனிதன் தொடர்ந்து கடவுளைத் தேடினன். காண வில்லை.
பெண், மனிதனிடம், *நீயே கடவுள் என்று மீண்டும் சொன்னுள். அவனுக்கும் தானே ஈசன் என்ற நினைப்பு மறுபடி யும். ஆனலும் சந்தேகம்.
தன் வல்லமையைப் பரீட்சித்தான். பூவுலகம் முழு வதும் அவன் ஆளுகைக்குள் வந்தது. ஆக்ஞைக்குள் வந்தது.
தெய்வம் சுதாரித்துக் கொண்டது. மனிதனுக்கு ஊறு பல விளைவித்துப் பார்த்தது.
மனிதன் ஒவ்வொன்ருக வெற்றி பெற்றன். அவனுல் முடியாதது ஒன்றே ; கடவுளை வெல்வது. கண்டால் வென்று விடுவான்.

Page 31
56 குழந்தை ஒரு தெய்வம்'
“நானே தெய்வம்? என்று சொல்ல கடவுள் இட் பொழுது பூவுலகத்துக்கு வருவதில்லை. வந்தால் மனிதன் கண்டுவிடுவான். கண்டால் அவனை வென்று விடுவான்.
தெய்வம் ஒழிய விரும்பவில்லை. ஆதலால் ஒளிய ஆரம்பித்தது.
மனிதன் விடாது தேட ஆரம்பித்தான்.
பிரம்மாவோ,
மனிதனுக்கு எட்டாத இடத்தைத் தேடி,
குடி பெயர்ந்து சென்று,
அடி பெயர்ந்து அலைகிருன்.
மேலே,
மேலே,
மானிடனின் இயந்திரங்களுக்குத் தப்பி,
ஒளிந்து ஒளிந்து,
ஒடிக் கொண்டிருக்கிருன் !
1959

வீழ்ச்சி
பாலாவின் திருமணத்திற்கு வந்திருப்பவர்களில், அவனை வாழ்த்துபவர்களிலும் பார்க்க அவன் மீது அனு தாபம் காட்டுபவர்களே அதிகம்.
கல்யாணச் சந்தை நிலவரங்கள், மாப்பிள்ளையின் தோற்றம், உத்தியோகம், பரம்பரை இத்தியாதி லோகாயத ரீதியான சிறப்பியல்புகளைப் பொறுத்தவரை,
-“பெண் அவனுக்குத் தோதில்லை.” அதை, பாலாவும் உணராமல் இல்லை.
இல்லாவிட்டால், “என்ன மச்சான் ; காதலோ ??? என்று அறிந்தும் அறியாதவர்கள் போல நாக்கு வளைத்த வர்களுக்கு, “அதுக்குத்தான்? என்று அதே தொனியில் அவன் இழுத்திருப்பான?
ஆத்மார்த்த ரீதியாக, பெண்ணின் குணத்தில், ஒழுக் கத்தில், மனதைப் பறி க்ொடுத்து, அவளைக் கல்யாணம் செய்தான் என்ருல், ‘எப்படிச் சரக்கு? செக்ஸி. ல்லையா ? ஒரு நாளைக்கு வாவன் வீட்ட. நானில்லாத 15ரமெண்டா உன்பாடு வேட்டையாயிருக்கும்.?? என் றெல்லாம், மணமண்டபத்திலேயே, மற்றவர்களுக்குக் கேட்டுவிடப் போகிறதே என்ற கூச்சமின்றி, வம்பு தும்பு பேசி, அவளை அவமானப்படுத்தியிருப்பான?
-"அவனில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையோ?*
-‘மண்ணுங்கட்டி ?

Page 32
58 குழந்தை ஒரு தெய்வம்
அவன் இந்த யுகத்து வாலிபன் ; கடவுள் உட்பட. எதிலுமே அவனுக்கு நம்பிக்கை கிடையாது; நம்பிக்கை யின் பயணுக ஒரோர் வேளையிற் கிடைக்கும் ஏமாற்றப் பளுவைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் அற்ற கோழை அவன்.
அவன் நம்பிக்கையில் நம்பிக்கை அற்றவன் ; அவ நம்பிக்கையே அவன் நம்பிக்கை.
兴 풍
கொட்டாஞ்சேனை ஜம்பெட்டா வீதியில், கல்பொத்தை வீதி கிளைவிடும் சந்திக்கு எதிராக இருக்கும், வாடகைக் கல்யாண வீட்டில், ஒலிபெருக்கியின் விரசமான அலறல் ஒய்ந்து, பெண்ணும் மாப்பிள்ளையும் அந்த ‘வஸந்த மண்டபத்தை விட்டு வெளிப்போந்த சமயம்.
*ஹணிமூனுக்கு எங்கையடாப்பா போருய் ??
*ஹணிமுன் போதல்’ தங்களுக்கு எப்பொழுது என்று சித்திக்கும் என்று ஏங்கிய சில வாலிபர்கள் ஒரு கூட்டு முன்னணி அமைத்து, தமது சந்தேகத்தை மாப்பிள்ளே யிடமே கேட்டு நிவர்த்தி செய்ய முன்வந்தனர்.
“எங்களுக்கு இண்டைக்குச் சட்டப்படி கலியாணம். அவ்வளவுதான்?
உண்மை ஹாஸ்யமாகப் பிறப்பெடுத்தது.
அந்த ஹாஸ்யமே பிறகு வேருெரு உருவத்தில் உண்மையாக மறுபிறப்படைந்தது. r
ஏதாவதொரு “ரெஸ்ட் ஹவுஸுக்கு இன்றைக்கும போவதென்று தான் பாலா திட்டமிட்டிருந்தான். ஆனல், விருந்துபசார வைபவத்தில் தம்பதிகளுக்குக் கிடைத்த பரிசுப் பணத்தை எண்ணிப் பார்த்தபோது, மண மண்டப வாடகை, தளபாட வாடகை, ஒலி பெருக்கி வாடகை, சிற்றுண்டி வகையருக்களுக்கான செலவு, குளிர்பானச் செலவு, 'தண்ணிச் செலவு, இவைகளுக்குரிய பாக்கித் தொகையை அடைக்கவே அது தேருது போல இருந்தது. “ரெஸ்ட் ஹவுஸ்" க்குப் போறியனே ??? என்று பெரியவர் ஒருவர் மாப்பிள்ளையின் காதுக்குள்ளே ரகசியமாகக்,

குழந்தை ஒரு தெய்வம் 5g
கேட்ட கேள்விக்கு, “எங்களுக்கென்ன ரெஸ்ட் ஹவுஸ்? நாங்கள் பழைய கப்பிள்? ?? என்று சொல்லித் தன் வயிற்: றெரிச்சலைச் சிரிப்பாக்கினன்.
இன்றைய கலியாண வைபவம், அவனுக்கு வெறும் சட்டபூர்வமான சம்பிரதாயம்தானென்ற உண்மைக்கு, அழிவேது ?
泰 兴 彝 பெண்ணும் மாப்பிள்ளையும் வஸந்த மண்டபத்தை ”
விட்டு வெளிப்போந்து, நெல் வீதி முடுக்கொழுங்கையி லுள்ள மணமகள் இல்லம் ? என்ற பொந்துக்குள் புகுந்து வெகு நேரமாகி விட்டது.
* மணமக்கள் இல்லத்தை வர்ணிக்கக் கவிஞர்கள் தேவையில்லை. ஒரு சொல் போதும்.
- புருக்கூடு.
ஆனல் அந்த வீட்டுக்காரர்கள், தமது மூத்த குமாரி, திருவளர் செல்வி புஷ்பம் ருேசலின் சின்னையாவிற்கும் திரு. நிறைச் செல்வன் ஏகாம்பரம் பாலசந்திரன் கிறிஸ்தோப் பருக்கும் நடைபெறவிருந்த மெய்விவாகத் திருச்சடங்கிற். குச் சமுகந்தரும்படி தமது உற்ருர் உறவினர் பந்துமித்திரர் களைக் கேட்டு, அனுப்பிய திருமண அழைப்பிதழில் ” * புஷ்ட வாசா ??, 51-9 நெல் வீதி, கொட்டாஞ்சேனை, என்று தமது விலாசத்தைக் கொடுத்திருந்தார்கள்.
* புஷ்பவாசா ?
- புருக்கூட்டுக்குப் பெயர் வேறு !
வீட்டிலுள்ள ஒரேயொரு அறையைத் தம்பதிகளுக் கென ஒதுக்கி, மூன்று மாதம் ஒரு கம்பனியில் டைப்பிஸ்ட் டாக வேலை செய்து புஷ்பம் பெற்ற சம்பளப் பணத்தைச் சேர்த்து வாங்கியதும், அந்த வீட்டிலுள்ள ஒரேயொரு விலை: யுயர்ந்த பொருளுமான, ஸ்பிறிங் கட்டிலில், குழந்தைகள் துள்ளி விளையாடியதால் ஏற்பட்ட குழிக்கு, வண்ணுனுக் குப் போட வைத்திருந்த அழுக்குத் துணிகளே இட்டு நிரப்பி, மேலே அழகான விரிப்பொன்றைப் போட்டு அதைச் சயனமஞ்ச மாக்கி, அந்த ஒழுங்குகள் முடிய,

Page 33
€60 குழந்தை ஒரு தெய்வம்
- ஆண்களின் படுக்கை வசதிக்காக முன் வராந்தா வில் கிடந்த நாற்காலிகள், செற்றி ?, மேசை, இவற்றை யெல்லாம் எடுத்து மணமக்களின் அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டுப் பாய்போட்டு, அதற்குப் பிறகு,
- பெண்கள் படுப்பதற்கென, சமையலறையாகவும், சாப்பாட்டறையாகவும் உபயோகிக்கப்பட்ட பின்வராந்தா வில் இருந்த சட்டி, பானைகள், பீங்கான் கோப்பைகள் ஆதியாம் பொருட்களைக் கற்பணுசக்திபைப் பலமாக உப யோகித்து ஒதுக்கி, பதுக்கி, அடுக்கிவைத்து ஒரேயொரு பாய் விரிக்கக்கூடிய இடங் கண்டு பிடித்து,
- * குமரியள் போய்ப் பின் விருந்தையில படுங்கடி ? என்று சொல்லி அனுப்பிவிட்டு,
- முன் வராந்தாவில், அறை வாசற் படியில் குந்தி யிருந்தபடியே கண் வளர்கிருர் மணப் பெண்ணின் தாயார்.
அதே வராந்தாவில் காணப்படும் பத்தோ பன்னி ரண்டு கேள்வி அடையாளங்களிடையே, விதிவிலக்காக நீட்டி நிமிர்ந்து, மூன்று கேள்வியடையாளங்களின் இடத் தைப் பிடித்துக் கொண்டு கிடப்பவர்தான் பெண்ணின் தகப்பனுர்,
தூக்கத்திலும் அவருடைய சுயநலம் அவரைவிட்டுப் பிரியாது.
உள்ளே, மணமக்களின் அறையில். * டார்ளோ ! கை காலெல்லாம் ஒரே உழைச்சலா யிருக்கு. ஒரு அஞ்சு நிமிஷம் டேட்டி நிமிந்து படுத்துக் கிடக்கிறன். நீங்க உடுப்பை மாத்திற்று ரெடி எண்ட வுடன் என்னே எழுப்புங்கோ ’.
அறைக்குள் நுழைந்த உடனேயே புஷ்பம் கட்டிலில் தொப்பென்று விழுந்து விட்டாள்.
பாலாவுக்கு அவள் சொன்னது கேட்டதோ கேட்க வில்லையோ !
கட்டில் விளிம்பில் உட்கார்ந்து கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்த 'டை ' யை உருவிக் கழற்றினுன்.

குழந்தை ஒரு தெய்வம் 6.
நாடாவை அவிழ்க்காமலே சாப்பாத்துக்களைக் காலி: லிருந்து பிடுங்கினன். w
காலுறைகளையும் அகற்றி, கோட்டையும் கழற்றிச் கொண்ட பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக மூச்சு விட (plib gig.
மீதி ஆடைகளைக் களையாமல், சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு கட்டிலிற் சரிந்தான். ..' .
தலையணியில் சிரசு பதிந்த அந்தக் கணத்திலே, மண் மண்டபத்தில் வந்து சேர்ந்த தந்திகளோடு ஒரு கடிதம், அதுவும் அவனுக்கு வெகு பழக்கமான கையெழுத்தைத் தாங்கிய கடிதம், கிடைத்த நினைவு மனதில் பதிந்தது. தந்திகளோடேயே அதையும் சுருட்டிக் கோட்டுப் பைக்குள் வைத்திருந்தான்.
புஷ்பத்திற்குப் போல அவனுக்கும் உடம்பெல்லாம் அசதியாகத் தான் இருந்தது.
கட்டிலே விட்டெழுந்திருக்க முடியாத அசதி. ஆனல் அந்தக் கடிதத்தை அவன் புறக்கணிக்க முடி lil i Tiġb.
அவனுடைய சின்னக்கா எழுதிய கடிதம். கட்டிலிற் கிடந்தபடியே எட்டி, கோட்டுக்குள் கிடந்த, காகிதக் கட்டை எடுத்து, அந்தக் கடிதத்தைத் தேடிப் பிடித்தான்.
* தம்பி, * உனக்குக் கலியாணம் எனறு கேள்விப்ப்ட்டேன். சந்தோஷம். ஆண்பிள்ளை நீ. தப்பிவிட்டாய். வாயில் லாப் பூச்சிகளான நாங்கள்?
சரோ 22
பாலாவுக்கு வீட்டு நினைவு வந்தது.
அம்மா அப்புவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டது தப்பு என்று அவன் மனம் அவனே அரித்தது. கல்யாணமாகாமல் வீட்டுக்குள்ளே இருந்து பெருமூச்சு

Page 34
(62 குழந்தை ஒரு தெய்வம்
விடும் குமர்களான அவனுடைய மூன்று சகோதரிகளும், அவர்களில் இளேயவளான சரோ எழுதியிருந்ததைப் போல, “ ஆண்பிள்ளை நீ தப்பிவிட்டாய். வாயில்லாப் பூச்சிகளான நாங்கள் ? என்று அவனிடம் பரிதாபமாகக் கேட்பதைப் போன்ற ஒரு பிரமை.
மூன்று பெண்களுக்குப் பிறகு நேர்த்திக் கடன் ? வைத்துப் பெற்றெடுத்த ஒரேயொரு ஆண்பிள்ளை அவன். அதனல் அவனுக்குக் கிடைத்த ராஜோபசாரம் !
அந்த ராஜோபசாரத்தின் விபரீத விளைவினுல்தான் அவன் கொழும்பில் எங்கோ ஒரு மூலேயிற் கிடக்கும் அரசாங்கக் காரியாலயம் ஒன்றில் காகிதம் உழுகிருன்.
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வழித்தோன்றலான ஏகாம்பரத்தாருக்கு தமது மூதாதையர்களின் கெளரவத் தைக் காப்பாற்றுவதற்காகக் கூட பாலச்சந்திரனைப் படிக்க வைக்க முடியாத நிலை.
அம்மாவும் அக்காமாரும் செய்த கித்திய தியாகம் தான் பாலாவுக்கு எஸ். எஸ். சி. செர்டிபிக்கெட் பெற்றுக் கொடுத்தது. •
யாழ்ப்பாணத்துப் பெண்களின் சிறப்பு பட்டினி கிடப் பதில் அவர்களுக்கு உள்ள வல்லமையில் தங்கியிருக் கிறது ; பழஞ்சோற்றுப் பானையைக் கழுவிய ஈரக் கை யால், தம் வாயைத் துடைத்துக் கொண்டு ஒரு முழு நாளைக் கழித்து விடுவார்கள். இத்தகைய கித்திய தியாகத் தின் பயணுக அரசாங்க ஊழியனுகும் பேறு பெற்ற பாலச் சந்திரனுக்கு, உத்தியோகமான மறு மாதமே தனது உத்தி யோகத்தின் பொட்டுக்கேடும் அதற்கு யாழ்ப்பாணத்தவர் கள் அளிக்கும் கெளரவத்தின் அர்த்தமற்ற தன்மையும் வெட்ட வெளிச்சமாயின.
சும்மாயிருந்து சாப்பிடக்கூடிய வசதி படைத்தவர்கள் * நானும் வேலைக்குப் போறன் ? என்று மதிப்பாகச் சொல்லவும் காலத்தைக் கடத்தவும் வெகு வாய்ப்பான இடம் அரசாங்க அலுவலகம் என்ற உண்மை புலப்பட்ட தும், ‘நாலு காசு சம்பாரிச்சு முன்னுக்கு வரவேணு ?

குழந்தை ஒரு தெய்வம் 63
மென்ற ஆர்வம் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டது.
இதற்குப் பிறகு பாலச்சந்திரன் என்ற தனி மனிதன் "செத்துப் போனன் ; அவன் வெறும் மனிதன் ஆனன்.
关 ※ சிகரட் எரிந்து கைவிரலைச் சுட்டது. பாலச்சந்திரன் கொட்டுச் சிகரட்டைக் கீழே வீசிக் காலால் மிதித்தான்.
நினைவுச் சுடரும் கூடவே மிதிபட்டு அவிந்து போ
பாலச்சந்திரனின் சர்வாங்கமும் அசதியால் புண்ணுக நொந்தது. அவன் கண்கள் துயில் கொள்ளக் கெஞ்சின. ஆணுல், தூக்கமோ வரமாட்டேனென்றது.
புரண்டு படுத்து புஷ்பத்தை அரவணைத்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்திச் சவம்போலக் கிடந்தாள்.
அவள் கேட்டுக்கொண்டபடி அவளை எழுப்புவதா வேண்டாமா என்ற எண்ணத்தின் வேரிலிருந்து அவளைப் பற்றிய சிந்தனை முளைத்துக் கிளை விட்டுப் படர்ந்தது.
w 彝 米
மூன்று வருடகாலமாக அவள் அயலில் அவன் சீவித்த போதிலும் கடந்த ஆறு மாதத்திற்கு முன் வரை புஷ்பம் என்ற ஒரு பெண் ஜன்மம் இந்த உலகத்தில் இருக் கிறது என்பது அவனுக்குத் தெரியாது.
உத்தியோகத்திற் சேர்ந்த புதிதில் புதுத் துடிப்பு. பொறுப்புணர்ச்சி.
இரண்டும் சேர்ந்து வேறெதிலும் அவன் கவனம் திரும்பவிடவில்லை . . . .
ஒரு வாரத்தில் பாலச்சந்திரன் தன் வேலையைப் பரி பூரணமாகக் கற்றுக் கொண்டான்.
இரண்டாம் வாரம் அவன் தனது தலைமைக் கிளாக் கரி போய்க் குறைப்பட்டுக் கொண்டான்.
'எனக்கு வேலை போதாது ?

Page 35
64 குழந்தை ஒரு தெய்வம்
தலைமைக் கிளாக்கர் ஒரு தமிழர். அவர் பாலச்சந். திரனை, நிமிர்ந்து பார்த்து,
* தம்பி ; வேலையில்லாட்டா இருக்கிற மாதிரிக் காட் டிக் கொள்ளும். உமக்கு வேலை போதாதெண்டு சொல் ல்ாதேயும். பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக் கேட்டா அவங்க தங்கட வேலையை மெல்ல உம்மட்டத் தள்ளி விடு வாங்க... ?? என்ற அனுபவ இரகசியத்தை வெளி u L Tii.
பாலச்சந்திரனுக்கோ ஒரே ஆத்திரம். நேர்மை, ஒழுங்கு, உழைப்பின் மகிமை இவற்றிலெல்லாம் அசைக்க முடியாத கம்பிக்கையுடன் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து வெளியேறிய அவனுக்கு வேலை செய்யாமல் சம்பளம் பெறுவதென்பது ஒரு பெருந்துரோகமாகப் பட்டது. தலை மைக் கிளாக்கரை வெறுப்போடு பார்த்தான்.
கிளாக்கருக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிக். ததோ என்னவோ, “வரண்ட யாழ்ப்பாணத்தில் 20 அடி ஆழத்தில் இருந்து ஒரு வாளி தண்ணி இழுத்து மாஞ்சும், ஏழெட்டுக் கட்டை தூரம் பள்ளிக்கு கடந்து போய் வந்தும் நாள் முழுக்க உச்சி வெய்யிலில் கிண்டு உழைச்சும் பழக்கப் பட்ட எங்களுக்கு இஞ்ச இருக்கிற வேலை, தும்பை எடுத் துத் தூரப்போடுகிற மாதிரித்தான் இருக்கும். ஆன உமக் குக் குடுத்திருக்கிற வேலே இஞ்ச இருக்கிறவை எல் லாற்றை வேலையிலும் பார்க்கக்கூட. புதுச7 ஒருத்தன் வேலைக்கு வாருன் என்ருல் எல்லாரும் தங்கள் தங்கள் வேலையை அவன்ரை தலையிலே போட்டிட்டுச் சும்மா இருப்பாங்கள். அவங்களையும் குறை சொல்ல ஏலாது. மாடா உழச்சுதான் என்ன பிரயோசனம்.’’,என்ருர் அவர்.
இவ்வாருகச் சிந்திக்கத் தெரிந்த தனி மனிதனும் சமு தாயமும் இடையருது புரியும் சமரின் முதல் நாள் போரில், பாலசந்திரன் தோல்வி கண்டான்.
உத்தியோகம் அப்படிப் போச்சு.
ஓய்வு நேரம்?

வீழ்ச்சி 65
பாலச்சந்திரனுக்கு மாதச் சம்பளமாக சுமார் ரூபாய் 165/-கிடைக்கும்.
சம்பளம் கிடைப்பதற்கு முதல்நாள் அவன் தயா ரிக்கும் வரவு செலவுத் திட்டம் இதோ :
வீட்டுக்கு ...e5.75-00 போர்டிங்" . 75-00 பஸ் - 5-OO லாண்டரி 1 O-OO சீட்டு ... 1 O-OO
இவ்வளவும் காகிதத் திட்டம் ; காரியத்தில் திட்டம் அமுலாவதில்லை. முடிவில் வீட்டுக்கு ரூபாய் 50/- அல்லது ரூபாய் 40/- அனுப்பிவைக்கப்படும். போர்டிங் பணம், சீட்டுப் பணம், லாண்டரிப் பணம் இவ்வளவும் கிரமமாகச் செலுத்தப்படும். , , :8 نہ ::: بڑ : ,
மிகுதியாக இருக்கும் பத்து பதினைந்து ரூபாயில் ஐந்து ரூபாய்க்குக் கண்டிப்பாக ஒரு கல்யாணமோ, பிரியாவிடை வைபவமோ, அல்லது வேறேதும் ‘நிதியோ காத்திருக்கும்.
ஐந்தாந் தேதியில் தம்பி பஸ் காசுக்குக் கடன் வாங்கத் தொடங்குவார்.
இந்த நிலைமையில் செம்புச் சல்லிக்கும் செலவில்லா மல் ஒரு நாளேக்கு சுமார் ஐக்து மணித்தியால நேரத்தைக் கழிக்கவேண்டிய கிர்ப்பந்தம். " ۔۔
புத்தகம், பத்திரிகை, படிப்பதில், அவனுக்கு ஆர்வம் இல்லை. “குண்டூசி, பேசும்படம் இவற்றையென்ருல் சக்தர்ப்பமும் இரவலும் கிடைக்கும்போது பார்த்து வைப்பான்.
அவன் கைநிறையக் காலம் இருந்தது ; அதைக் கொண்டு என்னசெய்வதென்று அவனுக்குத் தெரிய வில்லை. ܫ . . .
இது அவனுக்குமட்டும் பிரத்தியேகமான பிரச்னை அல்ல. அவன் தங்கியிருந்த விடுதியில், வேல்ை "செய்த
@ー4

Page 36
66 குழந்தை ஒரு தெய்வம்
காரியாலயத்தில், ஏனைய அலுவலகங்களில் உள்ளவர்கள் எல்லோருக்கும் இது பொதுப் பிரச்னை.
அவர்கள் எப்படிப் பச்சைத் தண்ணிரில் பலகாரம் சுடுகிருர்கள் என்று கண்டுபிடிக்க பாலச்சந்திரனுக்கு வெகுநாட்கள் வேண்டியிருக்கவில்லை.
304 ன் மகாத்மியம் அவனுக்கு விளங்கிவிட்டது. இதன் பின்னர்- ሥ' மூன்று வருஷத்தை அவன் 304ல் கழித்தான். மூன்று வருஷமென்ன, வாழ்நாள் முழுதையுமே சீட்டாடிக் கழித்திருப்பான், இடையில் அந்தச் சம்பவம் நடந்திராவிட்டால். .
அன்றிரவு சீட்டாட்டம் ஒன்பது மணிக்கே முடி வடைந்து விட்டது.
ஆட்ட வீரர்களில் இருவர் சினிமா பார்க்கத் திட்ட மிட்டிருந்தார்கள். அவர்கள், கையில் ஒரு சதம் இருந்தால் இன்னும் நாற்பத்தொன்பது சதம் கடன் வாங்கிக் கொண்டு, சாரம் அணிந்து, காலரியிலிருந்து செக் கண்ட் ஷோ பார்க்கும் மாறுவேட நிபுணர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.
மூன்ருவது ஆசாமியும் எங்கோ போய்விட்டார். பாலச்சந்திரன் விடுதியிற் தனியனுக விடப்பட்டான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. எவ்வளவோ முயன்றும் வரவில்லை.
காலரியில் இருந்து படம்பார்க்கக்கூட ‘வக்’கில்லாமற் போனதையிட்டு மனதிற் கசப்பு.
* பேருக்குத்தான் கவுண்மேந்து உத்தியோகம் ?? என்று அவன் உள்ளம் முனகியது.
பள்ளிக்கூட நாட்களில் எத்தனை படங்களை அவன் பார்த்திருக்கிறன்.

வீழ்ச்சி - 67
பள்ளி நினைவில் தொற்றிக்கொண்டு அம்மாவின் நினைவு.
எத்தனை தடவைகள் அம்மாவின் மடியில் கிடந்து செல்லங் கொஞ்சி கூப்பனுக்கென்று அவள் முடிச்சில் வைத்திருந்த பணத்தை அவிழ்த்தெடுத்துக் கொண்டு போய்ப் படம் பார்த்திருக்கிருன்.
இப்பொழுது முடிச்சுப் பணம் வேண்டாம், அந்த அன்பு மடி மட்டும் இருந்தாற் போதுமென்ற, அநாதர வாகி விட்ட குழந்தையைப் பீடிக்கும் உணர்வில், அவன் மூழ்கித் தினறினன்.
அவனுக்கு அழுகை வந்தது; காரணமற்ற அழுகை வந்தது.
தலையனேக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு
அவன் கேவிக் கேவி அழுதான்.
வாடகைக் கார் ஒன்று வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து ஒருவன் இறங்கி வந்து தெருவோரத் திலிருந்த பாலச்சந்திரனின் அறைக் கதவைத் தட்டினன். கடன் பட்டுப் படத்திற்குப் போனவர்கள் காரில் வந்தி றங்குகிருர்களே என்ற வியப்போடு பாலச்சந்திரன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
கதவைத் தட்டியது வேறு எங்கோ போயிருந்த” அந்த மூன்றவது ஆசாமி!
அவன் பின்னே ஒரு பெண். − *அத்துல யண்ட” என்று சொல்லிப் பெண்ணை உள்ளே அனுப்பிக் கதவைச் சாத்திவிட்டு, பாலச்சந்திர னேத் தெருப்படலே வரை அழைத்துப் போனன் அவன்.
தூக்கத்தில் நடப்பவனைப் போன்று தன்னுணர் விழந்து அவனைப் பின் சென்ற பாலச்சந்திரனிடம்,
*உனக்கும் வேணுமா?? என்ருன் அவன். "என்ன? என்றன் பாலச்சந்திரன் வெகுளித் &6ծrւնII ծն.

Page 37
68 குழந்தை ஒரு தெய்வம்
'சரக்குத்தான்"
*அவை படவே நீட்டோலே வாசியா நின்றன் குறிப் பறிய மாட்டாதவன் கன் மரம்’ என்றதற்கு இலக்கணமாக பாலச்சந்திரன் நின்றன்.
பாலா, அன்றிரவு ‘கெட்டுப் போகவில்லை; அதிர்ச் சியால் இடிந்து போய் வாசற்படியில் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான்.
*உனக்கு வேணுமெண்டா வந்து சுவரைப் பார்த்த படி தூங்கு. அல்ல்ாட்டா கொஞ்ச யேரம் ஒரு வாக்” போயிற்று வா’ என்று அந்த 'அறை நண்பன்' சொன்ன தோ,
அலுவல் முடிந்து பெண்ணும் அவனும் அறையை விட்டு வெளியேறியதோ பாலாவுக்குத் தெரியாது.
படத்துக்குப் போயிருந்த மற்றிரு நண்பர்களும் வந்த போது அவன் வாசற்படியில் இருந்தபடியே “கிறுப்பதைக் கண்டு கட்டிலிற் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் முதல் பாலா ஆமையானன்; தன்னுள்தானுக
ஒடுங்கிக் கொண்டான்.
சீட்டாட்டத்திற்கு முழுக்குப் போட்டான். *தீயோரைக் காண்பதுவும். த 9
என்ற வெண்பா உரமேற்றிய கெஞ்சல்லவா அவன் நெஞ்சு,
விளைவு? தனிமை இரட்டிப்பு உத்வேகத்துடன் அவனை உபத் திரவப் படுத்தியது.
கல்யாணத்தைப் பற்றிய எண்ணம் மனதில் ஒரு மூலையிற் திடீரென ஒரு நாள் கோடு காட்டியது. − மூன்று அககாமார் வீட்டில் இருந்து பெருமூச்சு விட வைத்து விட்டு அவன் கல்யாணம் செய்வதானல். சமுதாயத்தின் நியதிகளுக்கும் அவனுக்கும் பலத்த போராட்டம்.

வீழ்ச்சி W 69
வேலைக்குப் போவது, வீட்டிற்குத் திரும்பி வருவது, கட்டிலிற் கிடந்து கவலேகளோடு கட்டிப் புரளுவது.
அவன் உடலும் உள்ளமும் மெலிவடைந்தன.
மானிடன் என்ற காட்டில் நன்மை தீமை என்ற கீரியும் பாம்பும் வசிக்கின்றன. இரண்டும் ஒன்றை யொன்று எதிர்படாதவரை எல்லாமே சுமுகமாக நை பெறும். நேருக்கு நேர் எதிர்ப்பட்டாலோ .
பெரும்பாலும் கீரியே பாம்பை வெல்லும். ஆனற் சில சந்தர்ப்பங்களில் பாம்பைக் கொன்றபின் கிரி தானும் இறந்துவிடுவதுண்டு.
பாலச்சந்திரனேப் பொறுத்தவரைகீரி பாம்பைக் கொன்று விட்டுத் தானும் செத்துப் போனது.
அவனுக்கு நல்லது கெட்டது என்பன பற்றிய அக்கறையே படிப்படியாக அற்று விட்டது.
புலன்களின் இச்சைக்கு அவன் அடிமையாகி வந்தான். சேறு கண்ட இடத்திற் காலை வைத்து நீர் கண்ட இடத்திற் கழுவி வரத் தொடங்கினன்.
இந்தக் கட்டத்திற்ருன் புஷ்பம் அவன் வ்ாழ்வில் வலிய வந்து உறவு தேடினுள்.
அயல் வீட்டில் வசித்து வந்த புஷ்பம் எப்படியோ அவன் பெயரை அறிந்து கொண்டு அவனுடைய கந்தோர் விலாசம் என்னவென்று விசாரித்துத் தூதனுப்பினுள்.
பிறகென்ன ? புஷ்பம், பாலா என்ற “அஞ்சிறைத்தும்பி’யின் 'கொங்கு தேர் வாழ்வில் மற்றுமொரு புஷ்பமானுள்.
அவளில் அவனுக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அதற்காக வலிய வருவதைத் தள்ளவும் மனமில்லை. ஆகவே, அவளை ‘ரிசேர்வாக வைத்திருக்க முடிவு செய் திருந்தான்.
ஆனல்

Page 38
TO குழந்தை ஒரு தெய்வம் வண்டையே சிறைப் பிடிக்கும் மாமிச பக்ஷணிப் புஷ்பத்தை இனம் காணுமளவுக்கு அனுபவ முதிர்ச்சி பெருத அவன் -
ஆறு மாதத்திற்குப் பிறகு, அவள் கழுத்திற் சுருக்கிட்டு,. தற்கொலை செய்து கொண்டான்.
புஷ்பத்தின் மீது போட்ட கை போட்டபடியே கிடக் கிறது. அவளை உசுப்பி எழுப்பவேண்டும் போல மனசுக்குத் தோன்றவில்லை. உடலுக்குத் தோன்றியது.
அவனுடைய கை விரல் அசைந்தன. அந்த ஊரல் உணர்ச்சியில், அருகில் கிடந்த உடல் சிலிர்த்து, அசைந்து, திரும்பி, அணேத்தது.
-அவள் தூக்கமா ? விழிப்பா ?
-அவளை எழுப்புவதா? வேண்டாமா ?
தூக்கமும் விழிப்பு மற்றுக் கலைவுற்ற கமப்புச் சிந்தனை
கள் நெஞ்சில் சுழல, உதடுகளும் அடித்தொண்டையும் உலர்ந்து கெஞ்சின. கட்டிலிற் கிடந்தபடியே ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
உதடுகள் இழுத்து ஊதிய புகை, தனக்குத் தானே வசப்படாத அவனது நினைவுகள் போலப் பின்னிக் கலேய.
அவன் கண்கள் இமை முகட்டிற் சொருகிக் கொள் கின்றன .
முதலிரவு, சட்டபூர்வமான முதலிரவு, தேய்கிறது.
மூன்று நாட்கள் கழித்து கரம்பன் தெற்கு வயிரவ கோயிலடி ஏகாம்பரம் வீட்டில் தனி ஆவர்த்தமாக அழும் குரல் கேட்கிறது.
ஏகாம்பரத்தாரின் மூன்று புதல்விகளும் ஒரு மூலை யிலிருந்து குசுகுசுக்கிருர்கள்.

வீழ்ச்சி
ஏகாம்பரத்தின் மனைவி மாத்திரம் தலைவிரி கோல
மாக முற்றத்திலிருந்து 'ஒப்புச் சொல்கிருள்.
அயல் அட்டத்தில் உள்ளவர்கள் * ஆரு செத்ததாம் ?? என்று கேட்டுக் கொண்டு அங்கு போகிருர்கள். அங்கு யாரும் செத்துப் போய்விடவில்லை, பாலச்சந்திரனுக்குக் கல்யாணமான தகவல், தாய்க்கு
இப்பொழுதுதான் தெரியும்.
1960

Page 39
கல்வி
பள்ளிக்கூடத்திலிருந்து அன்று வீட்டுக்கு வருக போது அவன் மனதில் பெரிய பாரம் ஒன்று அழுத்திம் கொண்டிருந்தது. அவனது பத்து வயது மூளை பலமாக் வேலே செய்தது,
* ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் பள்ளிக் கூடத்தைத் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருதவேண்டும். ஊரிலே உள்ள சிறுவர்கள் எல்லோருமே படிக்க வேண்டும். பள்ளிக்கூடம் பெரிதாக இருந்தால்தான் ஒருவனவது இடமில்லையே என்று ஏங்கி வீட்டுக்குப் போகும் நிலை மை மாறும். ராமபிரான் இலங் கையை அடைவதற்குப் பாலம் அமைத்தபோது ஒரு அணில்கூட உதவி செய்ததாம். நீங்களும் அப்படி சிறு அளவில் உதவி செய்யலாம்.சிறு துளி பெருவெள்ளம்.
* நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார்ட் தரப்படும். அந்தக் கார்ட்டில் பத்துச் சதுரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கார்ட்டும் ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கம்டப்பட்டிருக்கிறது. ஒரு சதுரத்தின் விலே பத்துச் சதம். உங்களில் அநேகம் பேருக்குப் பெரிய பெரிய உறவினர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கார்ட்டையும் ஒரு ஊசியையும் கொடுத்து கார்ட்டில் உள்ள சதுரங் களில்-ஒரு சதுரத்திலோ அல்லது இரண்டிலோ அல்லது பத்திலும் ஒரேயடியாகவே-ஓட்டைகள் துளேக்கும்படி கேளுங்கள். ஒவ்வொரு துளைக்கும் பத்துச் சதம் வாங்குங்கள். ஒருவர் எத்தனை கார்டுகள் வேண்டு மானுலும் கொண்டு போகலாம். ஒரு கிழமை அவகாசம் கொடுபடும். நீங்கள் எல்லோரும் நல்ல பிள்ளைகள். இல்லையா ? ஒருவராவது மாட்டேன் ள்ன்று சொல்லக் 35).டது. . . . . 3.
அந்த வினேதான் அவனே அன்று சூழ்ந்து கொண்டது.

sidea − "78
பத்துச் சதுரங்களையும் எப்படிக் காசாக்குவது ? ஒரு சதுரம், பத்துச் சதம். பத்துச் சதமா? பத்துச் சதங்கள்! பயிற்றுப் பத்து நூறு ! நூறு சதங்கள்! பென்சில் வாங்கு வதற்கு இரண்டு சதம் இல்லையென்று காலேயில் அம்மா சொல்லி விட்டாள்.
யார் யாரிடம் கேட்கலாம் ?
அம்மாவிடம் கேட்க முடியாது. அவள் பாவம்! எனக் காக எவ்வளவு பாடுபடுகிருள். காலையில் சிலேட் பென்சி லுக்குக் காசில்லை என்று சொன்ன போது அவள் கண் னில் கண்ணிர் வந்தது. நான் விளையாட்டுக்காகவா கேட்கப் போகிறேன். நல்ல காரியத்துக்குத்தானே! பள்ளியில் இடமில்லையென்று சொல்லிவிட்டதால் அடுத்த வீட்டுச் சுப்பையா சும்மா திரிகிருன். எல்லோரும் தங்கள் தங்கள் கார்டுகளை விற்றுக் கொடுத்தால் நிரம்பக் காசு சேரும்.சுப்பையாவையெல்லாம் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள்.
அம்மா ஏன் எப்பொழுதும் காசில்லை என்கிருள் ? காலையில் இரண்டு சதம் இல்லையென்று சொல்லி விட் டாளே!
எனக்கொரு அப்பா இருந்தால் எவ்வளவு நல்லது?
வீட்டையடைந்ததும் புத்தகங்களை மூலையில் வைத் தான். உடுப்பை மாற்றிக் கொண்டான். அம்மாவின் சட்டையிலிருந்து ஊசியொன்றைக் கழற்றிக்கொண்டு கார்டுடன் வாசலில் வந்து உட்கார்க் தான். ஏத துை ஒரு 'புக்தி கண்டுபிடிக்க வேண்டுமென்பது அன் தீர்மானம்.
முழங்காலில் முழங்கையை ஊன்றி, உள்ளங்கையில் கன்னத்தை ஏந்திப் பலமாக யோசனை செய்தான்.
அம்மாவிடம் கேட்கக் கூடாது. அவள் உ. னே அழ ஆரம்பித்து விடுவாள்,
எதிரே இருந்த பஸ் ஸ்டாண்டில் அவன் பார்வை விழுந்தது. நீண்ட கியூ பஸ்ஸுக்காகக் காத்து நின்றது.

Page 40
74 குழந்தை ஒரு தெய்வம்
அவர்களிடம் போய்க் கேட்டால் ? சே! பிச்சை எடுப்பதுபோல. இது பிச்சையா ? பள்ளிக்கூடத்துக் காகத்தானே. அன்றைக்கு அம்மா, “நெற்றிக் கண்ணைக் காட்டினுலும் குற்றம் குற்றமே’ என்று யாரோ சொன்ன தாகச் சொன்னுள்.கார்டைக் கையில் ஏந்திக்கொண்டு ஒவ்வொருவரிடமும் பல்லைக்காட்ட வேண்டும். ஏதுக்குக் காசு என்று ஒவ்வொருவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். யாரும் முடியாது என்று சொன்னுல்...? சுப்பையா வீட்டில் அம்மா சொன்னதாக ஒரு குப்பி மண் ணெண்ணெய் கடன் கேட்டபோது இல்லை? என்று சொன்னுர்கள். அதற்கப்புறம் ஒரு வீட்டுக்கு நான் இரவல் வாங்கப் போவதில்லை. அம்மாதான் போகிருள்.
“ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத் தைத் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருத வேண்டும்??
அம்மாவிடம் கேட்டுக்கொண்டு, பஸ் ஸ்டாண்டில் நிற்பவர்களிடம் கேட்கலாம்.
அம்மா என்ன சொல்வாளோ! இன்றைக்குக் கூடாது. நாளைக்கு, பள்ளியில் எத்தனை பேர், எத்தனை
சதுரங்கள் விற்றிருக்கிறர்கள் என்று பார்த்துவிட்டு வந்து கேட்கலாம்.
* 兴
மறுநாள்.
பள்ளிக்கூடத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் அரைவாசிக்கு மேற்பட்ட கார்டுகள் விற்றிருந்தார்கள். அவன் மட்டும்.
வகுப்பில் மற்றவர்களுடன் பேச அவனுக்கு வெட்க மாய் இருந்தது. ஏதோ படிப்பவன்போல, புத்தகம் ஒன்றை விரித்து வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமி ராமல் இருந்தான். மற்ற மாணவர்கள் தாம் கார்ட் விற்ற சாமர்த்தியம்பற்றி ஒருவரோடொருவர் அளந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சொலி அவன் காதில் விழுந்தது. ஆனல் அவன் மனது வகுப்பறையில் இல்லாததால் பேச்சின் அர்த்தத்தை மூளை கிரகிக்க வில்லை.

கல்வி 75 ــــــ
அவர்களுக்கு எப்படிக் காசு கிடைத்தது? அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், மாமா என்று இப்படி எத் தனையோ பேர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருப் பார்கள். எனக்கு மட்டும் ஒருவருமில்லை.அம்மாவும் காக தரமாட்டாள்.அவள் ஏன் எப்பொழுதும் காசில்லே 6 ன் கிருள்? பொய் சொல்கிருளோ? இரண்டு சதம் ஒரு *சின்னக் காசு’. அதுகூட இல்லையென்று நேற்றுச் சொல்லி விட்டாள். அம்மா பொய் சொல்லுவாளா? சே1.“பொய் சொல்லக் கூடாது பாப்பா? என்ற பாரதி யார் பாடல் சொல்லிக் கொடுப்பாளே !
ஒரு சதுரம் மட்டுமே விற்ற சுந்தரம் அவன் பக்கத் தில் இருந்தான். மெதுவாக அவனைச் சுரண்டி இரகசிய மாக ‘உனக்கு எப்படிப் பணம் கிடைத்தது??? என்ரு?ன். “பாட்டி கொடுத்தாள்’ என்ருன் சுந்தரம் உரத்த குரலில். அந்தக் கூச்சல் வகுப்பறையைக் கிடுகிடுக்கச் செய்தது. அதுவரை சத்தம் போட்டுப் பேசிக்கொண் டிருந்த பையன்களெல்லாம் ஒரு கணம் மூச்சு விடாமல் இருந்தார்கள். அவன் கூனிக் குறுகித் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். அதற்குப் பிறகு அவன் ஒருவ ரிடமும் ‘உனக்கு எப்படிப் பணம் கிடைத்தது??? என்று கேட்கவில்லை.
அன்று பின்னேரமும் அவன் வீட்டு வாசலில் கையில் கன்னத்தைத் தாங்கி உட்கார்ந்து கொண்டு யோசனை செய்தான்.
நாளைக்கு எத்தனையோ மாணவர்கள் முழுக் கார் டும் விற்று விடுவார்கள்; வேறு கார்டுகள் வாங்கி விற்க ஆரம்பித்து விடுவார்கள்.
நேற்றுப்போல இன்றும் பஸ்ஸுக்காக எவ்வளவோ பேர் காத்துக்கொண்டு நிற்கிறர்கள். அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்களிடம் கேட்போம்.அம்மா கூடாது என்று சொல்லுவாள். எப்பொழுதாவது “யாரும் சாப் பிட்டாயா ??? என்று கேட்டால், சாப்பிடாமலிருந்தாலும் * ஓ ! சாப்பிட்டு விட்டேன்? என்று சொல்ல வேண்டு மென்று அம்மா சொல்லுவாள். அப்படிச் சொன்னல் அது பொய் இல்லையாம். * நாம் பட்டினி கிடக்கலாம்.

Page 41
76 குழந்தை ஒரு தெய்வம்
ஆனல் அது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. நம்மிடம் பணமில்லாமலிருக்கலாம்; அதற்காக மற்றவர் களிடம் கை ஏந்தக் கூடாது.” என்று ஒரு நாள் சொன்னுளே ! இன்னுமொரு நாள் “ஏற்பது இகழ்ச்சி?? என்ருள். -
அம்மா விடமாட்டாள். அம்மாவிற்குத் தெரியாமல். பள்ளிக்கூடத்திற்காகத்தானே. சுப்பையாவைப் பள்ளி யிற் சேர்ப்பார்கள். . ராமனுக்கு உதவி செய்த அணில்.
திடீரென்று வாசற்படியை விட்டெழுந்று பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். வரிசையின் கடைசியில் கின்றவரைத் தொட்டு, கையிலிருந்த கார்டைக் காண் பித்தான். என்னவென்று விளங்கப்படுத்துவதற்கு அவன் வாயிலிருந்து வார்த்தைகள், வெளிவரவில்லை. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வரிசையில் கார்டைக் கையில் வாங்கிப் பார்த்தார். “-கலாசாலைக் கட்டிட நிதிக்காக” என்று அவன் முணுமுணுத்தான்.
'இதென்ன இது ? என்ன வேணும் ???
அவன் உடம்பு ஆட்டங் கண்டது. கையில் இருந்து ஊசி கழு விக் கிழே விழுந்தது. ஒரு மாதிரியாக, மிகுந்த சிரமத்தின் பிறகு, 'பத்துச் சதம்’ என்ருன்.
அவருக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சட்டைப் பைக்குட் கையை விட்டு இருபத்தி ஐந்து சதக் "குத்தி? ஒன்றை எடுத்து அவன் கையில் வைத்தார்.
போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது அவனுக்கு. ஆனலும், காரியம் முழுவதையும் அவன் மறக்கவில்லை. காசு கொடுத்தவர் சதுரத்தில் ஊசியால் ஒட்டை துளைக்க வேண்டுமல்லவர்? ஊசி? அதைக் காண வில்லை. அவரிடம் கார்டையும் காசையும் கொடுத்து ** இதிலே இருக்கிற ஒவ்வொரு சதுரமும் பத்துச் சதம். உங்கள் இருபத்தைந்து சதத்திற்கும் இரண்டு சதுரமும் ஐந்து சதம் மிச்சம் இருக்கு...உங்களிடம் ஊசி இருக் கிறதா ? இரண்டு ஒட்டைகள் துளைத்துவிட்டு இருபது சதம் கொடுங்கோ’ என்றன்.

கல்வி 7ף
“பரவாயில்லை. நீ வீட்டிலே போய் இரண்டு சதுரங் களில் துளைத்துவிடு’ என்று சொல்லிவிட்டார் அவர்.
பஸ் ஒன்று அதற்கிடையில் அங்கு வந்து நின்றது. அவன் பார்த்தான்.
சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் எல்லோரும் போய் விடுவார்கள். அவர் சொல்லுவதுபோல வீட்டிலே துளைத்துக் கொள்ளலாம். முதலில் காசைச் சேர்த்துக் கொள்ளுவோம்.
பஸ் அந்த இடத்தை விட்டுப் போய், ஸ்டாண்டில் ஒருவரும் இல்லாமற் போனபின் அவன் வீட்டு வாசலிற் போய் உட்கார்த்து கணக்குப் பார்த்தான். ஒரு ரூபாய் இருபத்தைந்து சதம் சேர்ந்திருந்தது
இருபத்தி ஐந்து சதம் மேலதிகமாய்க் கிடைத்து விட்டது!
உபாத்தியாயர் கொடுத்த கெடு முடிவதற்குள் அவன் எத்தனையோ கார்டுகள் விற்றுவிட்டான். அம்மா வுக்குத் தெரியாது.
இப்பொழுது அவன் அம்மாவிடம் இரண்டு சதம், ஐந்து சதம் “சின்னக் காசுகள்’ கேட்பதில்லை.
1954

Page 42
மோதிரம்
காலை நேரத்தில் கொஞ்சம் தேக அப்பியாசம் செய்ய வேண்டும் என்று வெகு காலமாகச் செய்திருந்த தீர் மானத்தைச் செயலாக்கும் நோக்கத்தோடு அன்று அதிகாலை கால்பேஸ் மைதானத்துக்கு உலாவச் சென் றேன். உலாவுவதைத் தவிர வேறு தேகாப்பியாசம் எதுவும் செய்ய என் உடம்பு இடங்கொடுக்காது. கால் பேஸில் அந்தப் புலரிப் பொழுதில் நகரசபைத் தொழி லாளிகள் குப்பை கஞ்சல்கள் பொறுக்கித் துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள. வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் நாயுடன் உலாவிக் கொண்டிருந்தார். வேறு இரண்டொருவர் புற்றரையில் உட்கார்ந்திருந்தனர்.
நகரம் இன்னும் முற்ருக விழித்துக் கொள்ளவில்லை; பஸ் போக்குவரத்து ஆரம்பமாகவில்லே. இரவு முழுவதும் அலறி ஓய்ந்தது போலும் சமுத்திரம் உறங்கிக் கொண் டிருந்தது. எங்கும் அமைதி. எனக்கு இவை எல்லாம் புது அனுபவம். இந்த அனுபவத்தைச் சுவைத்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன்.
கால்பேஸ் ஹோட்டல் பக்கத்துத் தெருவில் இருந்து ஒரு வாலிபன் வெகு வேகமாக மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். மைதானத்துப் புல்லிற் கால் பட்டதும் குனிந்து தரையைப் பார்த்தபடி மெல்ல நடந் தான். முதல் நாளிரவு எதையோ தொலைத்திருக்க வேண்டும். அவன் நடந்த பாதையைப் பார்த்தபோது பொருள் எங்கே விழுந்திருக்குமென்று நிச்சயமாகத் தெரியவில்லை என்று தெரிந்தது.
நெடு நேரமாக அவன் தேடிக்கொண்டிருந்தான். நகரசபைத் தொழிலாளர் எதிர்ப்பட்டபோது அவர்களிடம் ஒன்றும் விசாரிக்கவில்லை. விஷயத்தைச் சொன்னல் அவர்கள் எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயமோ என்னவோ !

மோதிரம் * × 79.
நான் அந்த வாலிபனுக்குச் சமீபமாகச் சென்று அவனைக் கவனித்தேன். படுக்கையில் இருந்து எழும்பி யதும் கால்சட்டையையும் ஷர்ட்டையும் மாட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும். தலே வாரிவிடப்படாமற் கலைந்து கிடந்தது. கண்ணில் இன்னும் கித்திரை இருந்தது. அவனுக்கு 24, 25 வயதிருக்கலாம். சிங்களவனு, தமிழனு, முஸ்லிமா, அல்லது பறங்கியா என்று சொல்ல முடியாத தோற்றம்.
அருகில் சென்றதும் ‘எதையோ தொலைத்து விட்டீர் களாக்கும்? என்றேன். அவன் கலவரத்தோடு தலையை நிமிர்த்தி "ஆமாம், ஒரு மோதிரம்? என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து தரையை நோக்கியபடி மேலே சென்றன். நான் பின்னே சென்று “எங்கே விழுந்திருக்கு மென்று தெரியாது போல இருக்கு’ என்றேன். கேட்டும் கேளாதவன் போல அவன் போய்க் கொண்டிருந்தான். நெருங்கிச் சென்று “மோதிரம் ரொம்பப் பெறுமதி யானதோ ??? என்று கேட்டேன். “உம்? என்று உறுமி விட்டு அவன் நடந்து கொண்டிருந்தான். என் மான உணர்வு விழித்துக் கொண்டது. பேச விரும்பாதவனுேடு 6) ன் வலியப் பேச வேண்டும் ? பக்கத்திற் கிடந்த ஆசனம் ஒன்றில் உட்கார்க்தேன். அவனுக்கு ஒத்தாசை யாக நாமும் தேடலாமே என்று எழுந்த எண்ணத்தை 6 ன் ரோசம் அமுக்கிய்து.
சிறிது நேரத்தில் மைதானத்தில் வெய்யில் அடிக்கத் தொடங்கியது. எழுந்து வீடு நோக்கி நடந்தேன். என் 61ண்ணம் அந்த வாலிபனைச் சுற்றி வட்டமிட்டது. வயதுக்கு மூத்த மனிதர் கேட்கிருரே என்று பணிவாகப் பேசுவோமே என்று நினைக்கவில்லை. கிறுக்குப் பிடித் தவனுக்கு அப்படித்தான் வேண்டும். பாவம்; ஆசை யோடு போட்டிருந்த மோதிரமாயிருக்கலாம். அதனுற்றன் அவ்வளவு அக்கைற. அல்லது. யாராவது பெண். இருக்கலாம். வயது அப்படியான வயது. . பாவம்... , .
மாறு நாட்காலே எனக்கு முன்பே அவன் கால் பேஸுக்கு வந்து விட்டான். நேற்றுக் கிடைக்கா

Page 43
80 குழந்தை ஒரு தெய்வம்
பொருள் இன்றைக்குக் கிடைக்கப் போகிறதா ? வெறும் நப்பாசை.
மூன்ரும், நாலாம், ஐந்தாம் நாட்களும் அவன் தேடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கு அவன் தலை பழுதாகிவிட்டதோ என்று சந்தேகம் எழுந்தது. ஆணுல், இந்த எண்ணம் வலுவடையு முன்னர் அவனுக என்னிடம் வந்து பேசினன். அவன் ஏன் என்னிடம் வந்து பேச வேண்டும் ?
“அன்றைக்குக் கொஞ்சம் மரியாதைக் குறைவாக கடந்து விட்டேன். என் மனதிலே சரியாக இருக்கவில்லை. அதுதான்’ என்று பேச்சை ஆரம்பித்தான்.
நான் சம்பிரதாயப்படி * பரவாயில்லை ? என்றேன். அவன் வெகு நேரம் மெளனமாக இருந்தான். * அது சரி; ஒவ்வொரு நாளும் தேடுகிறீர்களே தொலைந்த மோதிரம் கிடைக்கவா போகிறது ? எவ்வளவு பேர் ஒவ்வொரு நாளும் வந்து போகிருர்கள் ? முனிசிபா லிட்டி ஆட்கள் வேறு ?? என்று நான் ஆரம்பித்தேன்.
* அந்த மோதிரத்தை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என்று ஆசை. நீங்கள் இப்பொழுது புகைக் கிறீர்களே சுருட்டு. நான் ஒன்றும் புகைப்பதில்லை. அந்த மோதிரம் எனக்கு சுருட்டு, சிகரெட், தேநீர் மாதிரி. அதைப் பார்த்தால் என் அயர்வு எல்லாம் போய்விடும். உம். *.அவன் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து
நீண்டபெருமூச்சுக் கிளம்பியது.
“யாருடையவோ நினைவாக வைத்திருந்தீர்களாக்கும்?? * அது ஒரு பெரிய கதை ’’ நான் கதை கேட்கத் தயாராக உட்கார்ந்து கொண் டேன். அவனுே யோசனையில் ஆழ்ந்து மெளனியாக இருந்தான்.
* கதையைச் சொல்லுங்களேன். * * மன்னித்துக் கொள்ளுங்கள். நான் வருகிறேன் ?? என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து நடந்தான்

மோதிரம் 8.
அப்பொழுதும் அவன் பார்வை நிலத்திற் பதிந் திருந்தது.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட பையன். நாளே அல்லது மறுநாள் கதை சொல்லுவான்.
மறுநாள், அதற்கும் மறுநாள், ஏன் ஒவ்வொரு நாளுமே அவன் மைதானத்தைச் சல்லடை போட்டான். ஆனல், என்னிடம் பேசவோ என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவோ இல்லை. நானகப் போய்ப் பேசுவோமென்ருல் மனநிலை இன்னும் சரியாகாமல் இருக்கலாம்; பிறகு பார்ப்போம்” என்று உள்ளுணர்வு சொல்லியது.
இப்படியிருக்கும் போதுதான், வெளியூருக்கு மாற்ற லாகியிருந்த என் மகன் மீண்டும் கொழும்புக்கு உத்தி யோகம் பார்க்க வந்தான். வந்த மறுநாள் அவனுக்கு லீவு. எனவே, அன்று அவனும் என்னேடு கால் பேஸுக்கு வந்தான். எங்கள் கண்ணுக்கு முதலில் தென் பட்டவன் அந்த வாலிபன்தான். நான் மகனிடம் அவனைப் பற்றிச் சொன்னேன்.
அவன் மெல்லச் சிரித்துவிட்டு ** தினமும் கால் பேஸுக்கு எவ்வளவு பேர் வருகிருர்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒருவராவது எதையாவது தொலைக்க மாட் .ார்களா? நீங்கள் வேண்டுமானல் ஒரு நாளைக்கு முனிசி பாலிட்டி ஆட்களுக்கு முன்னர் வந்து தேடிப் பாருங்கள்? என்ருன் என்னிடம்.
என் மகன் கொழும்பிலே பிறந்து கொழும்பிலே வளர்ந்தவன். மெல்லிய உணர்வுகளைப்பற்றி அவனுக்குத் தரியாது. எதையும் கோணல் பார்வை பார்க்கும் பழக்கம்; எதற்கும் கிண்டல்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் உலவி பிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். புற்றரையை ரிட்டு நீங்கி வீதியை அடையும்பொழுது அந்த வாலிபன் கையில் எதையோ வைத்துப் பார்த்துக் கொண்டிருந் தான். தான் நெருங்கிச் சென்று பார்த்தேன். ஒரு மோதிரம்! (5--;)

Page 44
82 குழந்தை ஒரு தெய்வம்
*மோதிரம் கிடைத்துவிட்டதா? இவ்வளவு நாட் களுக்கு ஒருவர் கண்ணிலும் படாமல் கிடந்தது ஆச்சரியப் படத்தக்க விஷயம்.?
அவன் பதட்டத்தோடு மோதிரத்தைப் பாக்கட்டுக் குள் திணித்துக்கொண்டு “என்ன சொன்னிர்கள்? என்ரூன், Ο *இல்லை, இந்த மோதிரம் தொலேந்து எவ்வளவு நாட்கள்? இவ்வளவு நாட்களும் ஒருவர் கண்ணிலும் அகப்படாமல் கிடந்திருக்கிறதே !??
*நான் மோதிரம் ஒன்றும் தொலேக்கவில்லை. இது யாருடையதோ தெரியாது. ஒரு பத்து நாட்களுக்கு எனக்கு வயிற்றுக் கவலை இராது’ என்ருன் அந்த வாலிபன்.
#956

பிரிய தத்தத்தினுலே.
"அடே ராசா?
* காதல், கலியாணம் பற்றி என் யோசனையைக் கேட்டிருக்கிருய். காதல் வேறு கலியாணம் வேறு. கலிபாணம் ஒரு சர்வ சாதாரணமான காரியம்; உலகத்திலே Ա | or: wir எந்த முட்டாளும் செய்யக்கூடியது. காதல் அப்படி இல்லையடா. சின்ன வயசிலே சிரங்கு வந்து உடம்பி லுள்ள கெட்ட நீரெல்லாம் வடிந்து விட்டால், பிறகு சாத்திலே நோய் அணுகாது என்று சொல்வார்கள். போல காதல் உள்ளத்தைப் பிடிக்கும் சிரங்கு. ஆகையால் முதலில் காதல் செய். கல்யாணம் செய்யாதே அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.??
கொழும்பிலுள்ள தன் ஒரே நண்பன் எழுதிய கடி தத்திற்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கும் மரியாம் பிள்ளைக்கு, கடிதத்தை முடிப்பதற்கிடையில் முக்கியமான விஷயம் ஒன்று நினைவுக்கு வந்துவிட்டது. கதிரையின் குச் சட்டத்திற் கிடந்த சால்வைத்துண்டை எடுத்துத் (விற் போட்டுக்கொண்டு, வெளியே நடந்து படலை பருவிற் சாத்தியிருந்த சைக்கிளில் ஏறி செவேத்தியார் கோயிலடிப் பக்கமாகப் புறப்பட்டான்.
• 景 翰
யாழ்ப்பாணத்தில், எஸ். எஸ். சி. தராதரப் பத்திரம் ன்ற மிதப்புக் கட்டையைப் பிடித்துக்கொண்டு கொழும்பு மாநகரத்திற் கரைசேரும் வாலிபப்பட்டாளம் (ாக, எஞ்சி ஊரோடேயே இருந்துவிடும் செளகரியம்  ைத்த இளைஞரில், கரம்பன் செவேத்தியார் கோயில் வட்டாரத்தைச் சேர்ந்த மரியாம்பிள்ளையும் ஒருவன். ஸ். எஸ். சி.யில் அவன் தேறவில்லை என்பது உண்மை தான். ஆனல், அவன் படிப்பில் மொக்கன் என்று சொல்ல முடியாது. அவன் தகப்பனைத் தின்னி; தாய்க்கு ஒரே மகன்.

Page 45
84 குழந்தை ஒரு தெய்வம்
கரம்பனில், கல் வீடு இல்லாதவர்களும், தெற்குப் பக்கமாகஉள்ள கடற்கரை ஓரத்தில் அரசினர் அமைத்துக் கொடுத்த சிறு வீடுகளில் வாழும் திமிலரும்தான் ஏழைகள் என்று கருதப்படுபவர்கள். இதனல், கரம்பன்வாசிகள் தங்கள் கிராமத்தை ஊர்காவற்றுறையின் கறுவாக்காடு என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுவார்கள். இப்பேர்ப் பட்டகரம்பனூரில், மரியாம்பிள்ளைக்கு முதிசச் சொத்தாக ஐந்து பரப்புக் காணியில் ஒரு கல் விடும், இன்னுமொரு ஐந்து பரப்புப் புகையிலேத் தோட்டமும் உண்டு. வீட்டு வளவில் கட்டியிருந்த சிறிய கடையை உப - தபாற் கந் தோராக்கும் சந்தர்ப்பமும், மரியாம்பிள்ளை எஸ். எஸ். சி. சோதனை எழுதிவிட்டு பெறுபேறு வரும் தேதியை எதிர்பார்த்திருந்த நேரமும் ஒருங்கே நிகழ்ந் தாலும், மகன் தன்னைப் பிரிந்து வெளியூர் போய் உத்தி யோகம் பார்ப்பதைத் தாய் விரும்பாததாலும், அவன் அந்த உப - தபாற் கந்தோரின் அதிபர் வேலையை ஏற்றுக் கொண்டு, ஊரோடேயே தங்கி விட்டான். '
பட்டணத்தில் சிவில் சேவை உத்தியோகத்தருக்கு இருக்கும் கெளரவம், கிராமப்புறத்தில் உப - தபாற் கத்தோர். அதிகாரிக்கு அளிக்கப்படுகிறது என்று மரியாம்
பிள்ளை அறிந்திருந்த போதிலும், கொழும்பிலிருந்து, நத்தார், புதுவருடப் பிறப்பு முதலிய பண்டிகைக் காலங் களில் ஊருக்கு வரும் கிளறிக்கல் சேவகர்களைக் காணும் வேளையில், தானும் கொழும்பில் உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற முனைப்பு ஆரம்பத்திற் கொஞ்சம் இருந்து வந்தது. இந்த முனைப்பு வலுப்பெற்றதன் விளைவாக ஒரு சமயம் கொழும்பு சென்று, மூன்று மாதங்கள் அங்கு தங்கி வந்த பிறகு, அவனுக்குச் சொந்த ஊரே சொர்க்கம். * கொழும்பில தேத்தண்ணி முதல் தெருவால போற பொம்பிள வரை எல்லாம் செக்கண்ட் ஹாண்ட் குட்ஸ். சைனிஸ் ஹோட்டல், கைட் கிளப், ரேஸ் கோர்ஸ் இது கள் விட வேறெயென்ன இஞ்ச எங்கட ஊரில் இல்லை??? என்பது அவனுடைய அபிப்பிராயம். இந்த அபிப்பிராயம் தன் சொந்த அனுபவ ரீதியானது என்று அவன் அடித் துச் சொல்ல வேண்டிய தேவை ஏற்படுவதில்லை; அவன்

பிரிய'தத்தத்தினலே 35
என்ன சொன்னுலும் அதில் முக்காற் பங்கு உண்ண்ம் இருக்குமென்பது கரம்பனில் பிரசித்தம்.
சந்தடியும் பரபரப்பும் மிகுந்த கொழும்பு நகரிலேயே அரசாங்க அலுவலகங்கள் ஆமை வேகக் கிரியாம்சைக்குப் பெயர் பெற்று விளங்குகின்றன; கிராமப்புறத்தில், அரசாங்க சேவகர்கள் சோம்பற் கலைப் பயிற்சியில் ஈடு படாவிட்டாலும் அவர்களுக்கு வேலை குறைவு. இதனல், மரியாம்பிள்ளைக்கு காலையில் தபால் கட்டு வந்து சேரும் வேளையில் ஒரு மணி நேரமும், மாலையில் தபால் அனுப்பி வைக்கும் வேளையில் ஒருமனி நேரமும்தான் வேலை என்ற சொல்லின் இலக்கணத்துக்குட்பட்ட அளவுவேலை. ஆனதாலும், அயல் அட்டத்தில் ஒரு நல்ல சில்லறைக் கடை இல்லாததாலும், உப - தபாற் கத்தோரின் ஒரு பகுதியைப் பலசரக்கு மாளிகை” யாக்கி வியாபாரத் துறையிலும் காலடி எடுத்து வைத்தான்.
இவ்வாருக, கரம்பனில் போஸ்ட்மாஸ்டர்-முதலாளி ஆகிய இரு பட்டங்களும் பெற்ற மரியாம்பிள்ளைக்கு இருபத்தி மூன்று வயதிலேயே அவனுடைய தாயார் ஒரு கல்யாணத்தையும் செய்து வைத்தார். ‘என்னத்தை யாவது செய்ய டா மகனே; கைம்பெண்டாட்டி வளத்த கழுதை என்ற பேரை மட்டும் எனக்கு வாங்கித் தராதை’ என்ற தாயின் ஓயாத வேண்டுகோளுக்கு மரியாம்பிள்ளை அடங்கி வளர்ந்து வந்தாலும், தனது பல சரக்குக் கடையில் புத்தகம், பத்திரிகை வியாபாரமும் ஆரம்பித்து, கிராமத்து இளவட்டங்களிலேயே புத்தக நியாபாரம் பெரும்பாலும் தங்கியிருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து அவர்களின் சுவைக்கு ஏற்றபடி தி. மு. க. பின் நாலணு, எட்டணுப் பிரசுரங்களையும ஏனைய சிரஞ் 'வி’யான நூல்களையும் வாங்கி வைத்து, ஒய்வாக இருக்க ர்ேந்த வேளைகளில் அவற்றைப் படிக்கவும் ஆரம்பித்த பிறகு, அவன் புதிய மனிதனுகியிருக்கிருன்; தன்னுடைய சபலத்தின் விளைவாக ஏற்படும் தவறுகளுக்கு சமூக அமைப்பிலுள்ள குறைபாடுகள் காரணமென்று வாதிக்க அவ னுக்குத் தெரிந்திருக்கிறது. அவனுடைய இந்த வாய் m: லத்தைக் கவனித்த ஊரவர்கள், குறிப்பாக எளிய தியினர், தங்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள், பிணக்கு

Page 46
86 குழந்தை ஒரு தெய்வம்
களேத் தீர்த்துவைக்க போஸ்ட்மாஸ்டர் தம்பி யிடம் வர ஆரம்பிக்கவே, மரியாம்பிள்ளை நாளடைவில் கரம்பனில் *மத்திச்சக்கார ணுகவும் பின்னர், அடுத்த கட்டமாக தரகளுகவும் பரிணமித்தான். இவ்வளவிற்கும் அவனுக்கு இன்னும் முப்பது வயது முடியவில்லை.
செவேத்தியார் கோயிலடிப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கும் மரியாம்பிள்ளை, ஒரு தரகு விஷயமாகத் தான் இப்பொழுது போகிருன்.
ஞானமுத்து வீட்டுப் படலையருகில் இறங்கி, சைக்கிளை வேலியருகில் நிறுத்தி விட்டு, சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத்த மரியாம்பிள்ளைக்கு “எப்பிடி ஞான முத்தாவட முகத்தில முழிக்கிறது? என்று கூச்சமாக இருக்தது. இதே காரணத்திற்காகத்தான், நேற்றுக் காலே பூசை முடிந்த உடனேயே ஞானமுத்துவைக் கண்டு “ஏதோ தப்பு கடந்து போச்சு; எல்லாம் நான் விசாரிச்சுச் சொல்றன்? என்று தேறுதலாக நாலு வார்த்தை சொல்ல வேண்டியவன் இன்றைக்கு, பகல் இரண்டு மணி வரைக் கும் அந்த வீட்டுப் பக்கமே தலை காட்டாமல் இருந்து விட்டான். வழக்கமாக, ஒரு நாளைக்கு நாலுதரமாவது கோயிலடிப் பக்கமாக, ஞானமுத்து வீட்டைத் தாண்டிப் போகிறவன், இந்த ஒன்றரை நாட்களும் அந்தப் பக்கமே போகவில்லை.
st
கரம்பனில், குறிப்பாகஅங்குள்ள கத்தோலிக்ககிறிஸ் தவர்கள் மத்தியில், அல்லி ராஜ்யம் நடைபெறுகிறது என்று சொன்னுல் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆணுலும், அவ்வூருக்குப் புதியவர் ஒருவர், சந்தியாப்பிள் ளையின் வீட்டைத் தேடிப்பிடிக்க வேண்டுமானுல் அவரு டைய மனைவியின் பெயரைச் சொல்லிக் கேட்டால்தான் வீட்டைக் கண்டு பிடிக்கலாம். செவேத்தியார் கோயிலடி யில் வசிக்கும் திருமதி ஞானமுத்து சந்தியாப்பிள்ளை இத் தகைய அல்லி ராணிகளில் ஒருவர்.
ஞானமுத்துவின் கணவர் சந்தியாப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தர்; தற்சமயம் அனுராதபுரத்தில் வேலை.

பிரிய தத்தத்திருலே 87
இருபத்தைந்து வருட அரசாங்க சேவகம் புரிந்ததில் அவர் சம்பாதித்தவை: கரம்பனில் ஒரு கல் வீடு, வாழ்க் கையில் விரக்தி, தொய்வு நோய், தங்கமான மனிதர் என்ற பெயர் ஆகியன. யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகிப் போகக் கடந்த பத்து வருடமாக முயன்று, வேறெங்கோ வெல்லாம் மாற்றலாகி கடைசியாக அனுராதபுரத்திற்கு வந்து சேர்ந்த சந்தியாப்பிள்ளை, “பாதித்தூரம் வந்தாச்சு; இனியென்ன பென்சன் எடுத்துக் கொண்டு ஒரேயடியாய் ஊரோடைபோவம்’ என்று மனதைத் தேற்றிக் கொண் டிருக்கிருர். .
இந்த கிலையில் ஊரில் குடும்ப விவகாரங்கள் எல்லா வற்றையும் ஞானமுத்தாவே கவனிக்க வேண்டும். (“இப் படித்தான் கரம்பனில் பெண்ணரசு முளைச்சது? என்று ம1 யாம்பிள்ளை தன்னுடைய சொந்த ஆராய்ச்சியுரைகளின் போது வேமுெரு பெண்ணின் குடும்ப விவகாரத்தை உதாரணங்காட்டிச் சொல்வான்.)
சக்தியாப்பிள்ளை-ஞானமுத்து தம்பதிகளின் குலத் தைத் துலங்க வைக்கவென்று மூன்று பெண்கள்: மேரி திரேசா, பிலோமினு, லோரு. கரம்பன் குமர்களின் விவாக வயதை மனதிற் கொண்டு பார்ப்பதானுல் காலங் கடந்தும் போர்டிங்கில் படித்துக் கொண்டிருக்கும் லோரு வுக்கே இரண்டு வருடத்திற்கு முன்னர் கல்யாணம் முடிந்திருக்க வேண்டும். ஆனல், திரேசாவுக்கே இத்தா அந்தார் என்றிருக்கிறதல்லாமல் இன்னும் ஒப்பேறுகிறபாடாய்க் காணுேம்.
சந்தியாப்பிள்ளையரின் வாழ்க்கைக்குக் குத்தகமாக அமைந்த அரசாங்க உத்தியோகந்தான் அவருடைய மக்க ளரின் கல்யாணத்திற்கும் குறுக்கே நிற்கிறது. அவரோ கவுண்மேக்து உத்தியோகக்காரர், ஆனதால், அவருடைய மருமக்களும் கவுண்மேந்து உத்தியோகரராக இருந்தால் தான் அவருக்குக் கவுரவம். “கொழும்பிலே பிளவினஸ் செய்கிருேம்?? என்று சொல்லிக் கொண்டு நடைபாதையில் அங்காடி வியாபாரம் செய்வோரையோ, சுருட்டுக் காவித் திரிவோரையோ அவர் மருமகனக எடுக்க முடியுமா?

Page 47
88 குழந்தை ஒரு தெய்வம்
கரம்பனில், கடவுளே என்று கவுண்மேந்து உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்குப் பஞ்சமில்லை; அவர்கள் கேட்” கும் சீதனம்தான் சந்தியாப்பிள்ளையாரின் நிலவரத்துக்கு ஒத்து வராமலிருக்கிறது. ... .
இந்தக் கட்டத்திலேதான், எல்லோரும் ஏறி விழுந்த குதிரையிலே சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தாராம்* என்ற கதையாக மரியாம்பிள்ளையும் ஒரு ஒழுங்கு செய்ய முனேந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு இரண்டாம் மணி அடித்துப் பத்து நிமிஷத்திற்குப் பிறகு, கோயில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகில் தான் மாப் பிள்ளை சகிதம் காத்து நிற்பதாகவும், ஞானமுத்தா திரே சாவைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்கு வந்து, தன்னுே', ஒரு நிமிஷம் கதைக்க வேண்டுமெனவும் மரியாம்பிள்ளை ஒழுங்கு செய்திருந்தான். மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள இது செளகரிய, மான நடை முறை; மூன்ரும் பேருக்குத் தெரியாமல் இதைச் செய்து விட்டால் மற்ற விஷயங்களைப் பிறகு சரிக் கட்டலாம் என்பது மரியாம்பிள்ளையின் தரகுத் தத்துவம்; கரம்பனில் அவன் புகுத்திய புதிய உத்தி. . . . . .
பூசைக்கு இரண்டாம் மணி அடித்துப் பத்து நிமிஷம் கழிந்த பிறகு, சொல்லி வைத்தபடி ஞானமுத்தாவும் திரேசாவும் மணிக்கூட்டுக் கோபுரத்தடிக்குப் போன போது, அங்கே மரியாம்பிள்ளை மட்டுமே நின்றன். மூன்ரும் மணி அடித்து, பூசை துவங்குவதற்கு முன்னர் நடைபெறும் "ஆசிநீர் தெளித்தல் ஆராதனை துவங்கு மட்டும் அவர்கள் மூவரும் மாப்பிள்ளையை எதிர்பார்த்து கின்ருர்கள்.
“அவன்? வரவேயில்லை.
,为 米
படலையைத் திறந்து, “ஆரு வீட்டுக்காறர்?’ என்று சம்பிரதாயப்படி குரல் கொடுத்தான் மரியாம்பிள்ளை, பதிலில்லை. விருந்தையிலேறி, ஐ ன் ன லே ர ர மா கச் சென்று கம்பிகளுக்கூடாக மூன்று முறை கூப்பிட்ட பிறகுதான் உள்ளேயிருந்து “ஆரது? ? என்ற பதில்

பிரிய தத்தத்தினுலே: ჭ9.
கேட்டது. *நான்தான்? என்று சொல்லிவிட்டு, விருந் தையிற் கிடந்த சாய்மானக் கதிரையில் அமர்ந்தான்.'
உள்ளே கெல்லுக் குற்றிக் கொண்டு நின்ற திரேசா வந்து, கதவைத் திறக்காமல், ஜன்னலால் எட்டிப் பார்த் தாள். மரியாம்பிள்ளையைக் கண்டதும், நேற்றைய சம்பவம் பற்றிய நினைவையும் மீறி, அவள் நெஞ்சு பட படத்தது. அந்தப் படபடப்பை வெளிக்காட்டுவது போல ‘அம்மா இல்லை? என்ற வழக்கமான பாடத்தை மரியாம்பிள்ளைக்கு ஒப்புவித்தாள்.
திரேசாவுக்குத் தன்மீது நல்ல அபிப்பிராயம் இல்லை யென்பது மரியாம்பிள்ளைக்குத் தெரிந்த விஷயம். அதே போல, மரியாம்பிள்ளை மீது தனக்கு நல்ல அபிப்பிராயம். இல்லையென்பதை மரியாம்பிள்ளை அறிவான் என்றும் திரேசா அறிந்திருந்தாள். இதனுல், இருவரும் ஒருவருக். கொருவர் அச்சம். கரம்பனிலுள்ள தன் வயதுப் பெண் களில் தன்னிடம் மட்டுமே அவன் ‘சேட்டை விட முனைய வில்லை என்பதையிட்டு திரேசாவுக்கு ஒருவித கர்வம். *நல்லவர்களுக்கு நான் எப்பவும் நல்லவன்’ என்று மரியாம்பிள்ளை பெருமிதம் கொள்ள ஒரு வாய்ப்பு.
செபமாலையும், செபப்புத்தகமும் ஏந்தியபடி பூசை பிரார்த்தனை என்று திரிவதால் உலக விவகார்ங்கள் ஒன்றும் தெரியாத “பால் குடிகள்? தங்கள் பெண்கள் என்று கரம்பன் தாய்மார்கள் பொதுவாக நம்புவதைப் போல ஞானமுத்தாவும் நம்பியிருந்தாள். இந்த நம்பிக், கையைச் சிதறடிக்காமல், ஏனைய இளம் பெண்கள் பக்கு வமாக நடந்து, ‘ஒன்று மறியாததுகள்’ என்ற கட்டுக் கதையைச் சந்ததி சந்ததியாகக் காப்பாற்றி வருவதைப் போல திரேசாவும் நடந்து கொண்டாள். தவிரவும், தன் வயதுப் பெண்களின் விவகாரங்களை திரேசா தானுகத். துருவி விசாரித்தறிவதில்லை. அவர்கள் மத்தியில் தான் ஒருத்திதான் கல்யாணமாகாதவள் என்ற தாழ்வு மனப் பிராந்தியும், இயல்பாகவே அவளிடம் குடிகொண்டிருந்த, தானுந் தன் பாடும்’ என்ற சுபாவமும் அவளைக் கட்டுப் படுத்தி வந்தன. ஆனலும் அவளை இழுத்து வைத்துக்,

Page 48
90 குழந்தை ஒரு தெய்வம் கொண்டே அவள் வயதுப் பெண்கள் அவ்வப்போது, “பெண்டுகள் கதை' பேசுவார்கள். ஆகவே, தன் தோழி கள் மூலமாக நிறைய அறிந்திருந்த மரியாம்பிள்ளை தனக்குக் கல்யாணம் பேச ஒழுங்கு செய்யப்பட்ட போது, மரியாம்பிள்ளையிடம் தனக்குத் தலை குனிவு நேர்ந்ததை, தன்னுடைய ஏனைய கவலைகளுக்குள் புதைத்து மறைத்து விட்டாள்.
மரியாம்பிள்ளைக்கு இந்தச் சந்தர்ப்ப பேதச் சங்கடம் தெரிந்ததுதான். வேறு கருமமாக இருந்திருந்தால் அவன் திரேசா சம்மந்தபட்ட மட்டில் ஒதுங்கியிருந்திருப்பான். ஆணுல், ஞானமுத்தா அவனைக் கண்டு "என்ன தம்பி எங்களைக் கவனிக்க மாட்டியாம்?? என்று சொன்னதற்கு முன்ருே நான்கோ நாட்களுக்குப் பிறகு, அவனுடைய மனேவியும் “எங்கட திரேசாவுக்கும் எங்கேயாவது பார்த் துச் செய்து வையுங்களன். அவளுக்கும் எனக்கும் ஒரு வயசல்லவா??? என்று கதையோடு கதையாகக் குறிப் -பிட்டதனுலேயே அவன் இந்தக் காரியத்தில் இறங் கினன்.
兴 关 te
*அம்மா இல்லை?? என்ற பதில் மரியாம்பிள்ளைக்குப் புதியதன்று. 'அம்மா வை, வீட்டில் இல்லாவிட்டால் எங்கே தேடிப் பிடிக்கலாம் என்பதையும் அவன் அறிக் திருந்தான். ஏனைய வேளைகளில், ‘அம்மா இல்லை’ என்ற மறுமொழி கேட்டதும் ‘அப்ப நான் வாறன்’ என்று சொல்லி விட்டு புறப்பட்டு, நேராகச் சங்கக் கடை யடிக்குப் போவான். அங்கே, ‘ஆட்டுக்குட்டியப் பார்க்க வந்தனன்; இதில இவ்வக் கண்டாப் போல நிண்டுட்டன். என்று விளக்கம் சொல்லும் ஞானமுத்தாவைக் காண்பது, இந்தத் தரகு விஷயத்தில் ஈடுபட்ட பிறகு, அவன் வழகக!!.
இன்றைக்கு, அவனுடைய உள்ளத்தின் அடித்தளத் இல் அவனை அறியாமற் பதுங்கிக்கிடந்த விபரீத ஆசை, அவனே அறியாமலேயே அவனை உசார்ப்படுத்தி விட்டத லுைம், அவன் அறிந்த அவனுடைய உள்ளுணர்வு, 5ேற்றைய ஏமாற்றம் எவ்வளவுக்குத் திரேசாவைட்

பிரிய தத்தத்திருலே 9
பாதித்து வதைத்திருக்குமென்பதை ஊகித்து வருந்தியத ஞலும், தாயில்லாத இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆறுதலாக நாலு வார்த்தை அவளுக்குச் சொல்ல விரும் பினுன் மரியாம்பிள்ளை. இதற்கிடையில், அவள் மீது அவனுக்கிருந்த அச்ச உணர்வு, தான் அவளுக்கு ஆறுதல் சொல்லப்போக அவள் ஏதாவது ஏறுமா ருகச் சொல்லித் தன்னே மட்டத்தட்டி விடுவாளோ என்ற சந்தேகத்தை எழுப்பியதனல், ‘அம்மா ஆட்டுக் குட்டியைத் தேடிப் போட்டாவாக்கும்’ என்று நகைச்சுவை அஸ்திரத்தைப் பரீட்சார்த்தமாக திரேசா மீது எய்து பார்த்தான்.
“ஓ! அவவுக்கு வேறெயென்ன வேலை’ என்ருள் திரேசா.
மரியாம்பிள்ளை தன் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள, மற்றுமோர் அஸ்திரத்தைப் பிரயோகித்தான்.
“தேடிப் போறதுக்காகதான் அதை அவிட்டு விடுகிறவவாக்கும்.”
திரேசா அவனை ஆச்சரியத்தோடு நோக்கினுள். தான் ஒரு நாளைக்கு அம்மாவிடம் சொல்ல வேண்டு மென்று முடிவு செய்து வைத்திருந்த எண்ணத்தை அவனும் வெளியிட்டதைக் காண அ வ ளு க் கும் ஆச்சரியம்,
“சரியாய் சொன்னியள்.” அவளுடைய உள்ளக் கதவில் நீக்கல் இருப்பதைக் கண்டு பிடித்த மரியாம்பிள்ளைக்கு, வீட்டுக் கதவைத்
/ . செய்ய அதிக பிரயாசை வேண்டியிருக்கவில்லை.
வாயிலிருந்த சுருட்டை துர வீசி விட்டு, “குடிக்கக் கொ தேசம் தண்ணி தந்தா ...”*என்ருன். ஜன்னல் கம்'. யப் பிடித்துக் கொண்டு நின்ற திரேசா உள்ளே பேயர் செம்பில் தண்ணிர் எடுத்துக் கொண்டு வந்து
பூட்டியிருக் நடுக்கதவைத் திறந்து அவருைகிற் சென்று
கொடுத்தாள். w
வேறிடங்களிளென்ருல், இப்படியான சக்தர்ப்பங்
களில் தேத்தண்ணீரோ, கோப்பியோ பரிமாறப்பட்டிருக்

Page 49
92 குழந்தை ஒரு தெய்வம்
கும் என்று மரியாம்பிள்ளை எண்ணியபோதிலும், திர்ேசா விட்ம் பச்சைத்தண்ணிர் வாங்கிக் குடிப்பதே அவனைப் பொறுத்தவரை ஒரு சாதனை எனக் கருதியதால், தண் ணிர் கேட்டதற்குத் தண்ணிரையே கொடுத்ததையிட்டு அவன் .ஏமாற்றமடையவில்லை. செம்பை எடுத்து, எழுந்து விருந்தை விளிம்பிற்குச் சென்று வாயைக் கொப் ப்ளித்துவிட்டு, கதவருகில் நின்ற திரேசாவிடம் அதைக் கொடுத்தான். அதை அவள் வாங்கி உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பி வந்து கதவு நிலையில் சாய்ந்து நின்ருள். .ܙ  ̄ :
‘நேற்று என்ன நடந்தது என்று அறியவிரும்புகிருள். அவளாகவே அதைப் பற்றிக் கேட்கமாட்டாளா? என்று எதிர்பார்த்து எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான் மரியாம்பிள்ளை.
திரேசாவுக்கு அதை அறிய வேண்டுமென்ற ஆசையைமீறி நேற்று வரை இருந்த ‘இவனுடைய தயவில் நான் தங்கியிருப்பதா? என்ற கர்வம் ஒருகணம் மின்னிட் டது. ஆனல், நேற்றைய ஏமாற்றம், இன்று காலே அதை வியாக்கியானம் செய்ய முற்பட்ட அம்மா, ‘விடிவத்த மூதேவி என்று திட்டியது, இவ்வளவும் போதாதென்று யாழ்ப்பாணத்திற் படிப்பித்துக் கொண்டிருக்கும் அவ. ளுடைய தங்கை பிலோமினுவிடமிருந்து இன்று வந்து சேர்ந்த கடிதம் எல்லாமாகச் சேர்ந்து அவளை விரக்தியின் பிரதிபிம்பமாக, தாழ்மையின் பலியாடாக மாற்றிவிட்டிருக் கின்றன. . - -
பிலோமினுவுக்கு ஒரு காதலன். கல்யாணம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிருன். பிலோ மினவுக்கும் அப் படித்தான். அக்காவுக்குக் கல்யாணம் முடிந்த அடுத்த மாதமே தன் கல்யாணத்தை முடித்துக்கொள்ள வென்று கடந்த இரண்டு வருடங்களாகக் காத்துக்கொண்டிருக் கிருள். ...
கதவு நிலையிற் சாய்ந்து நின்று காற் பெருவிரலால் தரையில் சக்கரம் வரைந்துகொண்டிருந்த திரேசா, நினைவுச் சுமை மனத்தை நெரிக்க, அந்நியன் முன் நிற்

பிரியதத்தத்தினுலே s 93
கிருேமென்ற நினைவற்று, அழத்தொடங்கிவிட்டாள். மரியாம்பிள்ளை இதை எதிர்பாக்கவில்லை. அவனுக்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாகவும், இவளா தனக்கு ஒரு வித ஆதர்சமாக விளங்கியவள் என்பதை எண்ண வியப்பாகவும் இருந்தது. - , , , , ༤: , ༣.
இன்பத்தைச் சரி, துன்பத்தைச் சரி பரிபூரணமாக அனுபவிப்பவர்கள் பெண்களே என்பதும் குறுகிய கால எல்ல்ேக்குள் இந்த இரண்டு உணர்வுகளுக்குள்ளும் அடுத்தடுத்து மூழ்கித் திளைக்கும் தன்மை அவர்களுக்கு உண்டென்பதும் மரியாம்பிள்ளையின் அனுபவம். அவ இனுக்குப் பதினுலு வயது நடத்தபோது கண்ட ஒரு காட்சி பிற்காலத்தில் இந்த அனுபவ உண்மையை அறிய ஏதுவாக அமைந்தது.
மரியாம்பிள்ளைக்குப் பதினுலு கடந்துகொண்டிருந்த போது அடுத்த வீட்டில், செல்லாச்சி மாமியின் தகப்பனர் செத்துப் போனர். கிராமப்புறத்துச் சம்பிரதாயத்தை அனுச்ரித்து, மரியாம்பிள்ளையும் தாயும் மூன்று நாட்களாக செல்லாச்சி மாமி வீட்டோடேயே இருந்துவிட்டார்கள். சவம் எடுத்த அன்றிரவுதான் அந்த வினேதத்தை அவன் கண்டான். சவக்காலேக்குப் போனவர்கள் திரும்பி, வந்து, வீடுவாசலெல்லாம் கழுவித் துப்புரவாக்கி, சாணம் தெளித்து, அதற்குப் பிறகு ‘எச்சி மயங்குதல்’ என்ற விருந்து நடைபெற இரவு பத்து மணிக்கு மேல்ாகிவிடும் என்பதை அறிந்த மரியாம்பிள்ளை அம்மாவைப் பிடித்து ரகசியமாக நேரத்தோடேயே சாப்பிட்டுவிட்டு வீட்டுக் க்ோடிப் புறத்திற்கிடந்த பாய்ச் சுருள்களுள் போய்ப் படுத்து உறங்கிவிட்டான். நடுநிசியளவில் சம்மனசுகள் கலகலவெனச் சிரிக்கும் ஒலிகேட்டு விழித்தான். (அந்த நாட்களில், மரியாம்பிள்ளையின் கனவில் தேவ தூதர்கள் யேசுநாதர், கன்னிமேரி ஆகியோர்தான் காட்சியளிப்பார் கள்.) கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோதும் சிரிப் பொலி கேட்டபடியே இருந்தது; அதுவும் அவனுக்கு மிக அண்மையில். கூர்ந்து கவனித்த அவன் பார்வையில், செல்லாச்சி மாமியும், கொழும்பிலிருந்து செத்தவீட்டுக் கென்று வந்த அவள் கணவனும் சரச சல்லாபங்களில்

Page 50
94 குழங்தை'ஒரு'தெய்வம்
ஈடுபட்டிருந்தது தரிசனமாயிற்று. ஆடாமல் அசையாமல் அப்படியே கிடந்து முழுவதையும் கவனித்த அவன் மன சில் புதியதோர் காட்சியை விடுப்புக்காணும்? வியப்பு ஒருபுறமிருக்க, செல்லாச்சி மாமியின் ஆனந்தக் களிப்பு ஆச்சரியத்தை அளித்தது. பின்னேரம் தகப்பனரின் பிரே தத்தை இறுதியாத்திரைக்கு கொண்டுசென்றபோது செல் லாச்சி மாமி கதறியழுது பிரலாபித்த காட்சிக்கும் இப் பொழுது சல்லாபிக்கும் காட்சிக்கும் உள்ள தாத்பரியத்தை அறியும் பிராயம் அவனுக்கு இல்லாதபோதிலும், அவன் மனதில் இந்நிகழ்ச்சி ஆழமாக வேரூன்றிவிட்டது.
கண்ணிச் உகுத்தபடி கின்ற திரேசாவைக்கண்ட மாரி யாம்பிள்ளைக்கு அவளுடைய சோகத்தின் தாத்பரியம் எத் தகையது என்பதை உணரமுடிந்தபோதும் அவனுடைய சபல சித்தம் அதை மறைத்து உடம்பில்முருக்கேற்றியது. மெல்ல எழுந்து அவளருகில்சென்று காதோரமாக *திரேசா ஏன் அழுகிருய்? என்று ரகசியமாகக் கேட்டான். மெளனமாகப் பிரவகித்த கண்ணீருடன் ஒ? வென்ற பொருமலும் சேர்ந்துகொண்டது.
. அவிழ்த்துவிட்ட ஆட்டுக் குட்டியைப் பிடித்துக் கொண்டு அம்மா வீடு திரும்பியபோது, வீட்டுக்குள் கட்டிப்போட்டிருந்த ஆட்டுக்குட்டியை ஓநாய் குதறிவிட் டுப்போய் வெகு நேரமாகிவிட்டது.
拳 *
மனச்சாட்சியின் கச்சரிப்புத் தாங்காமல் எங்கெல் லாமோ சுற்றியலைந்துவிட்டு வீடுதிரும்பிய மரியாம்பிள்ளை யின் உள்ளத்தில்,
*மாரியாம்பிள்ளையண்ண எப்பிடியாவது எனக் கொரு கல்யாணம் செய்துவைத்துவிடு ’ என்று திரேசா பலிபீடத்திற் கெஞ்சிய குரல் ரிங்காரமிட்டபடி இருந்தது.
தனது சமீபகால சுபாவத்திற்கு ஏற்ப ‘நாசமாய் , போற சமூகம்’ என்று முணுமுணுத்தபடி அறைக்குள் நுழைந்தான.
மேசையில் எழுதி முடிக்காமல் விட்டிருந்த கடிதம் அவன் கண்ணில் பட்டது. தன் ஆத்திரத்தை அந்தக்

பிரியத்த்தத்திஞ்லே "ys:
கடதாசி மீது பிரயோகித்து ஆயிரந்துகள்களாக அதைக், கிழித்து வீசினன்.
அந்த நேரம் அவனுக்கு ஒரு யோசனை உதயமானது. கொழும்பிலுள்ள தன் நண்பனுடைய கடிதத்திற்கு அவன் மற்ருெரு பதில் எழுதினன்.
சீதனக் கொடுமையைப் பற்றி வெகு விஸ்தாரமாக, விளக்கிவிட்டு
**இந்த நிலைமையிலே யாழ்ப்பாணத்தானுக்கு என் னடா காதல் வேண்டியிருக்கு? மூலைக்கு மூலை பெரு, மூச்சு விட்டுக் கொண்டிருக்கிற ஒரு ஏழையைக் கல்யா ணம் செய். இந்தக் கிழமை முடிவில் இங்கு வந்தால் நான் உனக்கொரு தங்கமான பெண்ணைக் காண்பிப்பேன். அவளை நீ கல்யாணம் செய்தால் பிறகு காதல் என்ன வென்று அனுபவத்திலேயே அறிந்து கொள்வாய்? என்று முடித்து, உடனேயே அந்தக் கடிதத்தைக் கொண்டு போய்த் தபால் பெட்டியில் போட்டான்.
岑 #
ஒரு மாதத்திற்குப் பிறகு திரேசாவுக்கு மெய்விவாகத் திருச்சடங்கு நிறைவேறிய போது, புதுமணத் தம்பதி களுக்கு இராஜோபசாரம் நடைபெற்றுக் கொண்டிருக் கையில், வீட்டுக் கோடிப் புறத்தில் போத்தல் உடைத்து மரியாம்பிள்ளைக்குத் தனியாக விசேஷ உபசாரம் செய்து காண்டிருந்த மணப் பெண்ணின் தந்தை சந்தியாப் 'rள்ளே, “முதல் கடவுள் புண்ணியமும், இரண்டாவது 1.யாம்பிள்ளையண்ணையின்ர புண்ணியமும் இருக்க, i ) குமர்களைப் பற்றி எனக்கு ஒரு கவலையில்லை?
உளவாயாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
1960.

Page 51
பிரசாரப் பிரிவில் பணிபுரியும் 靈 மூன்று ஆண் குழந்தைகளுக்குத்த
1950-ஆம் ஆண்டு தொடக்க துத் துறையில் பயிற்சி பெற்று
ஆண்டில்தான் ஆழமான கண்ே கதையாசிரியராக இவர் பரினப
ஈழத்தின் மிகச்சி களில், முக்கியமான ஒருவராகக் இவர் முதிர்ச்சி பெற்று விட்டார்.
விமரிசனத் துறையிலும், வசன இவர் ஈடுபாடு காட்டியபோதிலும் டைய "மூச்சு". பெரும்பாலும், த' நிலுேக்களனுகக் கொண்டும் அங் பாத்திரங்களே வைத்தும், சுய சரி கள்ேப் பின்னியும், இலேசான ை தத்துவ ஆழம் புலப்படும் உணர் கள்ேப் படைப்பதில் இவர் வஸ்வே
இவருடைய ஆறு வருட இலக் அறுவடை இந்த நூல் SSSLLLLLSSSSSLSSL
சரஸ்வதி கார்யாலய
Fire புங் பூட்டபூர்
Jack: "Ti Tited Cirilmier ei til "I ILI ILI El Publili u
的
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முப்பதாவது வயதில் * முதலாவது சிறுகதைத் ாகுதியாக இந்த நூலே 醬 காவலூர் ராச III. 1931ஆம் ஆண்டு பசி மாதம் 13-ஆம் தி பிறந்தார். ஈழத்தின் பகுதியிலுள்ள நார் வற்றுறையில், கரம்பன் ன்ற சிற்றுார் இவரது பகம், ஊர்காவற்றுறை ர்ச்சியசிஷ்ட அந்தோ யார் கல்லூரியில் கல்வி 1று சிரேஷ்ட தராதரப் த்திர ப் Luff"GEOFIL த் தி யெய் தி ய பிள் , ஐங்கை மந்திய வங்கி லும், அரசாங்க உET பத்தி இலாகாவிலும் கிதராகக் கடமையாற் ஒர். தற்போது இவ கை ஷெல் கம்பெனி தாபனத்தின் தமிழ்ப் வர் திருமணமானவர் if # !! !!.
ம் இவரது பேரு எழுத்
g" ஐட்டங் கொண்ட சிறு வித்தார். கடந்த ஆறு நந்த சிறுகதைச் சிற்பி கணிக்கப்படுமளவுக்கு
கவிண்தத் துறையிலும், சிறுகதையே இவரு él flist prinsit gljúL1ðar து தான் கண்டு பழகிய தப் பாங்கான சம்பவங் நயாண்டி இழையோட வோட்டமான சிறுகதை
கிய விளேச்சலின் முதல்
SSSS
பம், சென்னை-14
ALAMMMMMM MMMLMMSMMLSLLLSLSLeeeLLLLLS LLLLLSLLLSLLSLLSLLALSqSqLSLAL SLLqqSATA SMS
nzHcuEE Madri F.I.