கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தண்ணீரும் கண்ணீரும்

Page 1
இந் நூலாசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் 27-6-1927-5 யாழ்ப்பாணம் இரயில்வே ஸ்டேஷன் அருகில் பிறந்தார். இவரது தகப்பனர் பெயர் யோசப், தாயார் பெயர்
rifluuihin IT.
சிறுவயதிலேயே படிப்பு முடிந்து விட்டது. பிறகு யாழ்ப்பாணத்தில் தொழிலாளருடன் தொழிலாளி யாக வாழ்ந்து தனது ஓய்வு நேரத்தில் சிறு கதைகள் எழுதி வருகிருர்,
1946-ம் ஆண்டில் முதன் முதல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை சுமார் அறுபது சிறுகதைகள் எழுதியிருக்கிருர், இலங்கை வானுெலியில் இவரது நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து வெளியாகும் ' சுதந்திரன்' பத்திரிகை நடத்திய சிறு கதைப் போட்டியில் 1956-ம் ஆண்டில் முதல் பரிசு பெற்ருர்,
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ்ப் பாணக் கிளையின் செயலாளராகப் பணியாற்றி வருகிருர்,
வெகு சமீபத்தில்தான் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த இவர் இதற்குள் இலங்கை வாசகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர ஸ்தானத்தைப் பெற்றுவிட்டார்.
q S S SS u S SS
 


Page 2

தண்ணிரும் கண்ணிரும்
டொமினிக் ஜீவா
விற்பனை உரிமை

Page 3
சரஸ்வதி வெளியீடு
முதற் பதிப்பு-ஜுலை 1960
"C) 1960 Saraswathi Karyalayam, Madras-1 .
விலை ரூ. 2-00
TAMIL PUTHAKALAYAM
393, Pycrofts Road Madras-14.
வ. விஜயபாஸ்கரன் அவர்களால், சென்னையில் சரஸ்வதி பிரவில் பதிப்பிக்கப் பெற்றது

பதிப்புரை
நண்பர் டொமினிக் ஜீவர் ஈழத்தின் தலைசிறந்த எழுத் தாளர்களில் ஒருவர். அவர் எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர் அல்ல. ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, தொழிலாளியாகவே வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்துகொண்டிருப்பவர். எழுதுவது அவருக்குப் பொழுது போக்குமல்ல; தமது சிந்தனையின் சாரத்தை வெளியிடும் சாதனம். ܗܝ
இலக்கியம் சூன்யத்திலிருந்து “கற்பனைச் சிறகு'டன் பிறப்பதல்ல. சூழலிலிருந்து, சுற்றுப்புற நிகழ்சிகளிலிருந்து, வாழ்க்கையின் மேடு பள்ளங்களால் ஏற்படும், மனச்சலனத் திலிருந்து தோன்றுவது. எங்கோ நிகழும் ஒரு சிறு சம்பவம்பலருடைய கவனத்தையும் கவராத சிறு சம்பவம் ஒரு சில ருடைய உள்ளத்திலே உணர்ச்சிப் புயலையே உண்டாக்கி விடுகிறது. அந்த உணர்ச்சியின் வேகத்திற்கு உருக் கொடுத்து அதை அவர்கள் கலையம்சத்தோடு வெளியிடும் பொழுது அது-ஒரு நல்ல சிறுகதையாக-இலக்கியமாக உருப் பெற்று விடுகிறது. இவ்வாறு உருப் பெற்றவைகள்தான் இத்தொகுதியில் அடங்கியுள்ள கதைகள்யாவும்.
திரு. டொமினிக் ஜீவாவின் கதைகளில் வரும் பாத்திரங் களெல்லாம் இன்றும் யாழ்ப்பாணம் பகுதியில் உயிருடன் நடமாடும் மனித ஜீவன்களே. தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்ப்ட்ட மன அவசத்திற்கு அவர் உருக்கொடுக்கும்போது அவருக்குப் பிறப்புரிமையாகக் கிடைத்துள்ள கலையுணர்ச்சியும் கலந்து, அவரது கதைகளில் பிரசாரத் தன்மை குறைந்தும் இலக்கிய அம்சம் மேம்பட்டும் நிற்கும்படிசெய்து விடுகின்றன. "முற்றவெளி’ என்ற கதை ஒரு அற்புதமான படைப்பு. மனித உள்ளத்தின் மென்மை யான உணர்ச்சிகளை-உயிரபிமானத்தை மிக அழகாகப்

Page 4
iv
படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குச் சமமான கதைகள், தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளனவென்று கூறலாம்.
தமிழகத்திற்கு வெளியிலிருந்து தமிழில் எழுதும் எழுத் தாளர்களைச் சரியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு த்மிழ் நாட்டு வாசகர்களுக்கு மிகவும் குறைவு. இக்குறையைப் போக்கும் நோக்கத்துடனேயே ஈழத்தின் எழுத்தாளர்கள் பலரை "சரஸ்வதி தமிழ் நாட்டு வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியது. அவர்களில் பலருடைய எழுத்துக்களைத் தமிழ் வாசகர்கள் வரவேற்றுப் போற்றினர்கள். "சரஸ்வதி" வாசகர்களால் மிகுதும் பாராட்டப் பெற்ற ஒரு எழுத்தாள ரின் கதைகளைத் தொகுத்துப் புத்தக வடிவிலே வெளியிடு வதில் மிகுதும் பெருமைப் படுகிருேம். தமிழ்கூறு நல்லுலகம் இத்தொகுதியினை ஆர்வத்தோடு வரவேற்கும் என்றும் நம்புகிருேம்.
சென்னை-14- வ. விஜயபாஸ்கரன்.
சரஸ்வதி }
8-7-1960

எண்ணமும் எழுத்தும்
சிறு கதை எழுதுவதென்பது குப்பை மேட்டுக் கீரை யைப்பிடுங்கிக் கறி சமைக்கும் விவகாரமல்ல!-அது பிரசவ வேதனை 1.
என் மனத்திற்குப் பிடித்தமான பொன் மொழி இது. இத் தொகுதியில் வெளிவரும் அனேக கதைகள்
குப்பை மேட்டிலே மலர்ந்தவை, கூழாங் கற்களுக்கிடையே வளர்ந்தவை. இன்று உங்கள் முன் புத்தக வ்டிவில் கறி யாகப் பரிமாறப் படுகின்றது. ருசித்துப் பாருங்கள்.
எழுதுவது என் தொழிலல்ல. இலக்கியம் செய்து ஒரு சிலரின் போகாத பொழுதையும், அத்துடன் சேர்த்து என் பொழுதையும் ஒரு வழியாகப் போகச் செய்வதும் என் பொழுதுபோக்கல்ல.
தொழில் செய்வது தான் என் தொழில். அதுதான் என் வாழ்க்கை, என் சகலமுமே அதுதான்.
அப்படியானுல் நான் எழுத்தாளனேஇல்லையா ?
வேண்டுமானல் இதைப்கின்னல் நீங்களே தீர்மானித் துக் கொள்ளுங்கள். -
ஈழத்தின்-எனது தாய்த் திரு நாட்டின்-விடுதலைக்குப் பின்பு, சுதந்திரத்துக்குப் பின்னர், தேசத்தில் பல புதிய புதிய பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. இது இயற்கை யும் கூட. "சுதந்திரத்தை யார் அனுபவிப்பது? என்று தொடங்கி இனப் பிரச்சினை, மொழிப் பிரச்சினிை ஈழுகப் பலப்பல கருத்து மோதல்கள், எண்ணச் சிதறல்கள் நாட்டில் ஒரு புதிய விழிப்பை, ஒருவகைப் பரவர்ப்பை, உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அதன் எதி ரொலிகள் காலர்காலத்தில் 'இலக்கியத்திலும் 'பிர்தி பலித்தன. - . , * '% י• - • * . . . . !м :.

Page 5
wi.
ஈழத்து இலக்கியம் தனக்குத்தானே தூண்டு கோலாக அமைந்தது. இலங்கை இலக்கியவட்டம் புதுப் போக்கில் சிந்திக்க ஆரம்பித்தது.
爱 岑 戀
ஆரம்ப காலத்தில் மெத்தப் படித்த ஒரு குறுகிய வட்டாரத்தின் செல்லப் பிள்ளையாக-நோஞ்சான் குழந்தை யாக--இருந்த இலக்கியம் நாளாவட்டத்தில் 'தமிழ்ச் சட்டம்பி’ மார்களின் தோளுக்குத் தாவி, சிறிது காலம் அங்கேயே தூங்கி வழிந்து கொண்டிருந்தது. ஆசியாவிலும், இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும், குறிப்பாக ஈழத்திலும் ஏற்பட்ட புதுப் புதுப் பிரச்சினைகளிலும், போராட்டங் களிலும், தேசியச் சிக்கல்களிலும் தொழிலாளி வர்க்கம் முக்கிய கேந்திர பாத்திரம் வகிக்க வேண்டிய நியதி ஏற் பட்டது. இது தவிர்க்க முடியாததுங் கூட இந்த உந்துதல் கள் உற்சாகமாக இலக்கியத்தைப் பாதித்த போது- ፥
இலக்கியமும் 'தமிழ்ச் சட்டம்பி மார்களின் தோளி, லிருந்து தொழிலாளிகளின் கரங்களுக்கு மாறி புதிய ஊட்டம் பெற்றது; புதிய செழிப்புடன் வளர்ந்தது. அந்த வளர்ச்சிக் கட்டத்தில்- . . . .
நான் எழுத்தாளனுனேன் ! ஆசிரியர் என்ற பெயரை அடைத்துக் கொண்டிருக்கும் நான் என்றுமே கடற்கரை மணலையோ, பூங்காவனத்தின் நிழலையோ, அல்லது மாபெரும் ஹோட்டல் மாடி அறை யையோ தேடிச் சென்று இச் சிறுகதைகளைச் சிருஷ்டித்தது கிடையாது. அதற்குரிய நேரமும் எனக்கில்வே-இருந்த தில்லை ! -n. m s
இருந்தும் நான் எழுதிக்கொண்டே தான் இருக்கிறேன்! பொழுதைப் போக்கத் தெரிந்த ஒரு சிலர், இக் கதை களில் சிலவற்றைப் படித்து விட்டு, மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிருர்கள்; முகத்தைச் சுளித்தும் இருக்கிருர்கள். "சீ! வாசிக்க அருவருப்பாக இருக்கிறது. படிக்கக் கூடச் சகிக்கவில்லை!" என்று வாய் விட்டுச் சொல்லித் தங்கள் மனவெறுப்பை வெளிக் காட்டியவர்களுமுண்டு. “சாதாரண "இது கள்:குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தசுக்கப்பட்ட, க்ரிமை பறிக்கப்பட்ட மக்கள் தமிழ் மரபுப்படி எப்படி இலக்கிய புருஷர்களாகலாம்?' என்பது இவர்களது வாதம். இது,

νii
ஈழத்து இலக்கியப் பண்புக்கு முழுதும் முரணுனதே என்பது இவர்களது குற்றச் சாட்டு.
இவர்களைப் பற்றி-வாழ வக்கற்ற "இதுகளைப் பற்றிஅவர்களது , ஆசாபாசங்களை, விருப்பு வெறுப்புக்களை, உணர்ச்சிகளை, உள்ளக் குமுறல்களை ஏன் அவர்களது பலவீ னங்களை, சின்னத் தனங்களை எல்லாம் பாத்திர உருக் கொடுத்து இலக்கிய மேடையில் நடமாட வைத்ததில் அவர் களுக்கு என்மேல் வெறுப்பேற்படுவதற்குப் பதிலாக, நான் சிருஷ்டித்து உலவவிட்ட இப்பாத்திரங்களின்மேல் அருவருப் :Lu6oi-69(?trafisir.
போகட்டும்!-இவர்களில் ஒருவன்தான் நான் என் பதைப் புரிந்து கொண்டும், என்மேல் அருவருப்படையா மல் என் பாத்திரங்களின்மேல் அருவருப்படைகிருர்களே--
நான் பாக்கியசாலியேதான்!
இவர்களுக்கு இன்றும் மாபெரும் கவலையொன்று மனத்தை வாட்டுவதுண்டு. ஆறுமுக நாவல்ர் “பெருமான்' அவர்களோ அல்லது சேர். பெர்ன்னம்பலம் இராமநாதன் "துரை" அவர்களோ ஒரு சிறு கதை-பெயருக்கென்றலாவது ஒரேயொரு கதை எழுதவில்லையே என்று தாங்க முடியாத மனக்கவலை-நெஞ்சத்தை அரிப்பதுண்டு.
காரணம்-தங்களைத் தாங்களே சுய விளிம்பூரம் பண்ண, தங்கள் இலக்கிய சாம்ராட் தனத்திற்கு அதையொரு விளம்பர சாதனமாகப் பயன்படுத்தி இருக்கலாமல்லவா?
பாவம்-அவர்கள் ஒரு சிறுகன்தகடச் சிருஷ்டிக்க வில்லையே! . Y.x.
நான் ர்கள் மயங்கும் கற்பனை உலகத்தைப் படைப் பவனல்ல. அல்லது கற்பனை உருவம் கற்பித்து 'கலை--கலை என்று கூத்தாடுபவனும்ல்ல. அல்லது வர்க்க முரண்பாடுகள் என்ற அடிப்படை உண்மையைப் போர்த்து மேவி, ஜால வித்தை காட்டி வயிறு வளர்க்கும் சொற்சிலம்பமாடியு மல்ல. எனது கதைகள் பெரிய வீட்டுப் பென்னும் பெரிய மனிதர்களின் வாழ்க்கை ஒவியங்களோ என்று ஐயுறுபவர் கள் கடைசியில் ஏமாறத்தான் செய்வார்கள்.
நான் வாழ்வை, வாழ்வின் உண்மையை நேர் நின்று நோக்கினேன். கண்களைக் கூசிக் குலுக்காமல் பார்த்தேன். கண்களால் கண்டதை, காதுகளால் கேட்டதை, மனத்தால்

Page 6
víti
உணர்ந்து புரிந்து கொண்டவைகளை-அச் சம்பவங்களைகதைகளாக்கி உங்கள் மத்தியில் பாத்திர உருக் கொடுத்து நடமாட விட்டிருக்கிறேன். நான் வாழாத, நான் பார்க் காத உலகத்தைக் கருப் பொருளாக்கி, கதை செய்து உங்கள் முன்னல் உலவவிட்டு வேடிக்கை காட்டவில்லை.
-அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை !
எனது கதைகளில் வரும் பாத்திரங்கள் இன்றைய மனிதர்கள். வாழ்வுக்காக வாழ்வுப் போராட்டம் தடத்து பவர்கள். நல்லெண்ணமும், மனிதப் பண்பும், தன்மான மும் மனிதாபிமானமும் கொண்டவர்கள்; உணர்ச்சி வசப்பட்டவர்கள்; உங்களையும் என்னேயும் போன்றவர்கள். அதே நேரத்தில் குறைபாடுகளை மறைக்காதவர்கள்; வரட் டுக் கெளரவம் பாராதவர்கள்; போலி நாகரிக நடிப்பு நடிக் காதவர்கள். திட்டவட்டமாகச் சொன்னல், நாளைய மனிதர் களை உருவாக்கும் இன்றைய மனிதர்கள்! நாளையப் புதிய சமுதாயத்தின் இன்றையப் பிரதிநிதிகள் !
இவர்களை-இவர்களின் ஆசாபாசங்களை, போராட் டங்களை, உணர்ச்சிக் குமுறல்களைப் புரிந்துகொள்ளாத வர்கள். புரிந்து கொண்டும் புரிந்து கொண்டதை வெளியே காட்டிக் கொள்ளாதவர்கள்-நடிப்பவர்கள், சில இரண்டும் கெட்டான் பேர்வழிகள்-நம்மில் இருக்கவே இருக்கிருர்கள். அவர்களுக்குத் தம்மீதும் நம்பிக்கையில்லை; இந்த உலகத்தின்மீதும் நம்பிக்கையில்லை; தம்முடன் தாமாக வாழும் இந்தப் பாமர மனிதர்கள் மேலும் நம்பிக்கை யில்லை! V
மாருக, அவர்களின் உரிமைக் குரலைக் கேட்டுக் கேலி செய்கிருர்கள்; கிண்டல் பண்ணுகிருர்கள்; சிரித்துச் சிரித்து வேடிக்கை பண்ணி, மற்றவர்களையும் தங்கள் 'முஸ் பாத்தி'யில் கலந்துகொள்ள அழைக்கிறர்கள்.
இவை என் கதைகளல்ல. மாட்டுக்காரன், ஒட்டுக் காரன், ரிக்ஷாக்காரன், தபால்காரன், கார்க்காரன், தமிழ்ச் சட்டம்பி, பத்திரிகை நிருபர், துறைமுகத் தொழிலாளி ஆகி யோரின்-கதைகள்தாம் இவை. இவர்களுடன் இவர்களாக, ஈழ நாட்டில் இவர்களுடன் சமதையாக, இவர்கள் வாழும் காலத்துடன் ஒன்ருக வாழ்ந்தால் உங்கள் இலக்கியப் பெருமை என்னுவது? உங்கள் இலக்கியப் பண்பாடு, மரபு, பாரம்பரியம், வழிவழி வந்த சோம்பேறிச் சுகவாழ்வு,

ix
இன்பப் பொழுது போக்கு எல்லாமே மண்ணுடன் மண்
ணுய்ப் பாழாய்ப் போவதா, என்ன?
-அப்புறம் உங்கள் காலத்திற்குத்தான் என்ன இலக்
கியச் சரித்திர மதிப்பு உண்டு?
கதைகளைப் படைத்து விட்டேன்.
*வெண்புரு?" என்ற கதையைத் தவிர ஏனைய கதைகள் அத்தனையும் இலங்கை மக்களின், குறிப்பாகத் தொழிலாளி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்டவையே. முற்று முழுதாக ஈழத்துப் பாத்திரங்களே. அவர்களது பேச்சுக்களே. அவர்களது உணர்ச்சிக் குமுறல்களே.
ஒரு தேசத்தின் தொன்மையை, நாகரிகத்தை, கலாச் சாரத்தை, பண்பாட்டை பூரணமாகத் தெரிந்து கொள்வ தற்குச் சிலாசாசனங்களையோ செப்பேடுகளையோ தேடித் தோண்டி ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள், புதை பொருள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.
வாழும் மக்களின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வ தற்கு, அறிந்துகொள்வதற்கு உதவி செய்வன இலக்கியங் களே. சிறுகதைகள் இந்த அவசர யுகத்தில் தங்கள் வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் செய்து முடித்து விடுவதில் அசகாய சூரத்தனம் கொண்டு மிளிர்கின்றன.
எனது கதைகளை, ஈழத்துப் பாமர மக்களின்-உழைப் பாளி மக்களின், தொழிலாளிகளின் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்ளக்கூடிய சாளரமாக எண்ணிப் பயன்படுத்த விரும்புபவர்கள் தாராளமாகச் சாளரத்தின் மூலம் நன்முகப் பாருங்கள். பயன் பெற விரும்பாதவர்கள் தயவு செய்து ஜன்னலை மறைக்காதீர்கள். ஏனெனில் வருங்கால உலகம் நான் சிருஷ்டித்து உங்கள் மத்தியில் உலவவிட்ட இவர் களின்-"இது'களின்-உலகமாகத்தான் மிளிரப் போகின்றது. அந்த ஜீவகீதம் அதோ கேட்கின்றதே
கடைசியாக
இக் கதைகளில் தண்ணிரும் கண்ணீரும், வெண்புழு, இவர்களும் அவர்களும், கொச்சிக் கடையும் கறுவாக்காடும் ஆகிய கதைகள் "சுதந்திரன்’ இதழிலும், செய்தி வேட்டை "ஈழகேசரி'யிலும், காலத்தால் சாகாதது, தீர்க்கதரிசி,

Page 7
சிலுவை. முற்றவெளி ஆகிய கதைகள் "சரஸ்வதியிலும், ஞானம் "கலைமதி ஆண்டு மலரிலும் வெளிவந்தவை. அதன் அதன் ஆசிரியர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. சில கதை களில் 赏 று திருத்தங்கள், செய்துள்ளேன்-அவ்வளவு தான்.கரும்பலகை, தொகுதிக்காகவே எழுதிச் சேர்க்கப்பட்ட கதை.
நான் விரும்பும், என்ன நேசிக்கும் நண்பர்களின் ஆக்க பூர்வமான ஊக்கமே இந்த நூல். அவர்கள் ஒவ்வொரு வரையும் தனித் தனியாக இந்தக் கட்டத்தில் நினைத்து, நன்றிப் பெருக்கால் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவர்கள்தான் எனது சர்வகலாசாலே. ஆரம்பத்திலிருந்து பிரதி எழுதி உதவி செய்த மாணவ நண்பன் தgரீஸ்கந்த ராஜா அவர்களுக்கு என் மனமுவந்த நன்றி என்றும் உரியது.
இக் கதைகளைத் தொகுத்து புத்தக உருவத்தில் வெளி யிட ஊக்கமெடுத்து உழைத்து, இன்று அழகிய புத்தக வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கும் சரஸ்வதி ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி யைக் கூறுகிறேன்.
60, கஸ்தூரியார் வீதி ܘܝ ܦܳ ܩܝܐ ܘ ܐ ܢ -܂
யாழ்ப்பாணம் டொமினிக் ஜீவா

சமர்ப்பணம் மறைந்த என் அன்பு மைத்துனர் ச. அல்பிரட்
அவர்களுக்கு

Page 8
le
உள்ளடக்கம்
இவர்களும் அவர்களும்
கொச்சிக்கடையும் கறுவாக்காடும் வெண் புரு தண்ணீரும் கண்ணீரும்
5. செய்தி வேட்டை
காலத்தால் சாகாதது தீர்க்கதரிசி
சிலுவை
முற்றவெளி
ஞானம்
கரும்பலகை
2
2星
47
57
66
74
87
03
12

இவர்களும். அவர்களும்
*சுந்தரம்ஸ் அன்ட் கோ'வின் பிரதம பங்காளியும்" மானேஜிங் டைரக்டருமான பூரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்" உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது அவர்களுடைய அந்தஸ்தைக் குறைப் பதாகும். அவர்களுடைய விஷயங்களில் எதையும் “கோய பல்ஸ்’ பாணியில் பெருக்கிச் சொல்வதுதான் முறை. இரு வருக்கும் சமீப காலத்திலேதான் சிறு மனக்கசப்புக் காரண மாகப் பூசல் ஏற்பட்டிருந்தது. இந்த உண்மையை, அவர் களுடைய அகராதிப்படி-சம்பிரதாய பூர்வமாக--இருவ ரையும்- ஜன்ம விரோதிகள்’ என்று சொல்லவ்ேண்டியிருக் கிறது. -
பணக்காரர்களுக்கும் எழுத்தாளருக்கும் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் நிரம்பிய ஒற்றுமை இருக்கின்றது. எதையுமே மிகைப்படுத்தி விஸ்தாரமாகச் சொல்வதில் இரு சாராருக்குமே அலாதிப் பிரீதி.
மணியம், சுந்தரம்பிள்ளையின் புத்தம் புதிய ஸ்டூடிபேக் கர் காரின் டிரைவர். ஆறுமுகம் பிள்ளையின் புத்தம் புதிய நவீன மாடல் பிளிமவுத் காரின் சாரதி கந்தையா.

Page 9
2 தண்ணிரும் கண்ணீரும்
பட்டினத்துப் பிரபல அந்த நாற்சந்தியில் ஸ்டூடிபேக் கரும், பிளிமவுத்தும் அடிக்கடி சந்தித்தன. சுந்தரம் பிள்ளை யும், ஆறுமுகம் பிள்ளையும் அந்த நாற்சந்தியைத் தாண்டித் தான் தங்கள் தங்கள் கம்பெனிகளுக்குப் போய்வர வேண்டும். ஆகையினல்தான் இருவரும் ஒருவரையொருவர் தினசரி சந் திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
சுந்தரம் பிள்ளையைப் பார்த்து ஆறுமுகம் பிள்ளையும், ஆறுமுகம் பிள்ளையைப் பார்த்துச் சுந்தரம் பிள்ளையும் முகங்" களைக் கோணிக் கொள்வார்கள்; மனதைக் கறுவிக் கொள் வார்கள். கந்தையாவும் மணியமும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பற்களை நெறுமிக் கொள்வார்கள். பிளிமவுத்தும், ஸ்டுடிபேக்கரும் பரஸ்பரம் உறுமிக்கொள்ளும். எப்படியா வது, ஞாயிறு தவிர்த்த ஏனைய நாட்களில், இந்நிகழ்ச்சி நடந்தே தீரும். · ·
சமீப காலத்தில் இரு பிள்ளைகளுக்கும் ஏதேதோ மனக் குறைகள். - ، عه சுந்தரம்பிள்ளை அவர்களின் மனதை ஒரு குறை நசித்துக் கொண்டிருந்தது. அது அப்படியொன்றும் உயிரை விடும் அளவிற்கு முக்கியமானதல்ல. "பெரிய மனிதருடைய ஆசைகளெல்லாம் மிக அற்பமானவை. அதற்காகக் குதி யாய்க் குதித்து, கவலையில் பாகாய் உருகி. அவருடைய கவலையெல்லாம் எப்பொழுதுதான் ஒரு “காடிலொக்' கார் வாங்கி, பட்டணத்து வீதிகளில் ராஜபவனி வந்து ஆறுமுகம் பிள்ளையின் முகத்தில் அசடு வழியச் செய்து திருப்திப் படுவது என்பதே! இந்தக் கவலை அவர் மனதை அரித்துத் தின்ன, பாவம் அந்த மனிதர் துரும்பானர். - - ஆறுமுகம் பிள்ளையை நெஞ்சுப் பாரம் அழுத்தியது. "பிஸினஸ் கொஞ்சம் டல்லாக இருக்கிறது. இப்பொழுதா வது மூன்றவது உலக யுத்தம் வந்து தொலைத்தால் தேவலை, ஒரு தட்டுத் தட்டிவிடலாம். இந்த உலக யுத்தம் மட்டும் வந்துவிட்டால் ஆறுமுகம் பிள்ளை வெறும் ஆறுமுகம் பிள்ளை யாகவா உலாவுவார்? 'ஆறுமுகம் பிள்ளையா? அவரென்ன

இவர்களும் அவர்களும் 3
சாதாரண மனிதரா? கோடீஸ்வரப் பிரபுவாக்கும்" என்று என்னுடைய ஆட்களையே சொல்ல வைத்து, சுந்தரத்தைக் கலங்க அடித்துவிட மாட்டேன, என்ன? இந்த காலத்துப் பொடியர்கள் சிலர் என்னைப் பிளாக்மார்க்கட், கரும்பூதம் என்று கேலி செய்கிருர்கள். செய்யட்டுமே! என் தோலிற் குள் புகுந்து விடுமா என்ன?. அப்புறம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிவிட்டால்?.ஆண்டவனே! அது எப்பொழுதுதான் நிறைவேறப் போகிறதோ?. எதற்கும் இந்த அமெரிக்காக்காரன் கொஞ்சம் மனதுவைத்தால்?..." இப்படியான நினைவுகளில் அவருடைய நெஞ்சுப் பரம் அதிகரிக்கும். 'பிஸினஸ் டெக்னிக்’கிலும், 'டாக்டிக்"ஸிலும் அவர் பலே ஆள்! صبر -
அவர்களுடைய ஆசைகள் ஆசைகளாகவே இருந்தன. காலண்டரின் தின இதழ்கள் கிழிந்து விழுந்துகொண்டிருந் ததுதான் மிச்சம்.
இருவருடைய ஆசைகளும் நினைவுகளும் தூர்த்தூர. விலகிப்போவது போலவே, அவர்களுடைய வெறுப்பும் விரோதமும் நெருங்கி நெருங்கி வளர்ந்தன. இரண்டு பண முதலைகள் பகையை வளர்த்துக் கொள்கின்றன. பராவா யில்லை. இரண்டு எஜமானரின் காசும், ஊற்றும் பெட்ரோ லைக் குடித்து வெறிகொள்ளும் புதுமர்டல் கார்களும், உm(பும் கின்றன. பாதகமில்லை.
-ஆனல், மணியமும் கந்தையாவும்?
பாவம், அவர்கள் எஜமானரின் உப்பைத் தின்று வள ரும் மனிதர்கள்; விசுவாசமுள்ள நாய்கள். ஒரே வயிற்றில் பிறந்த இரண்டு நாய்களே வெவ்வேறு வீட்டுச் சோறுண்டு, வெவ்வேறு குணங்களுடன் வளருகின்றனவே! அவரவர் எஜ மானனின் உப்பைத் தின்பதின்லேதான் கந்தையாவுக்கு மணியத்தின்மீது குரோதம்; அவனுக்கு இவன்மீது பகை!

Page 10
4 தண்ணீரும் கண்ணிரும்
இதற்கிடையில், பட்டணத்து முனிஸிப்பல் தேர்தல்கள் வந்தன. "என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற தத்து வத்தில் அன்ட்கோவிற்கும், "அன்ட் சன்ஸி'ற்கும் திடுதிப் பென்று பந்தம்-ஒரு வகைப் பாசம் ஏற்பட்டுவிட்டது. மக் களுக்குத் தொண்டுசெய்ய வேண்டுமென்ற பற்றும், அவர் களுக்குத் தலைம்ை தாங்கி அவர்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டுமென்ற சேவா உணர்ச்சியும், இருவரின் பிடரிகளையும் குரங்குப்பிடி பிடித்து, ஒரு ஆட்டு ஆட்டி உலுப்பியது. m
நீண்ட காலமாக இருவரிடமும் மறைந்திருந்த பொது ஜனத் தொண்டு என்கின்ற இந்தச் சேவா உணர்ச்சி, மடை திறந்த வெள்ளம்போல,-இந்த உவமை பத்தாம்பசலி யானது என்று ஒதுக்கிவிட்டால்-தேர்தல் காலத்தில் மேடையேறும் மந்திரிமார்களின் பேச்சைப்போல, பெருக் கெடுத்து ஓடியது. இருவரும் தொண்டுணர்ச்சியினலும், சேவைப்பற்றினலும் தங்களேத் தாங்களே மறந்துவிட்டன ரென்முல் பார்த்துக் கொள்ளுங்களேன்!
ஏதாவது கொள்கை-இலட்சியம்-கட்சி என்ற விவகா ரங்களுக்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. இருந்தும் மக்களுக்குத் தொண்டாற்றுவதே அவர்களுடைய பேச்சாய், மூச்சாய், உயிர்த்துடிப்பாய் விஸ்வரூபமெடுத்தது.
சுந்தரம் பிள்ளையும் ஆறுமுகம் பிள்ளையும் மும்முரமாக எலெக்ஷ னில் குதித்தார்கள். -
எல்லாம்வல்ல எம்பிரான் பணநாதன், அவர்கள் பணித்த வேலையைத் தட்டாமற் செய்வதற்குக் கைகட்டிக் காத்துநிற்கும்பொழுது, கேவலம் கொள்கையாவது மண்ணுங் கட்டியாவது! அது இராத்தல் என்ன விலை? எந்தக் கடையில் கிடைக்கும்?
பணத்துடன்கூடப் பலதும் பத்தும் இருக்கும்பொழுது, கொள்கையாம் கொள்கை. அவர்கள் உழைக்கும் வர்க்கத் தைச் சேர்ந்த தொழிலாளர்களா என்ன, வெறும் கொள் கையை அமுங்குப் பிடியாகப் பிடித்துத் தொங்க? அவர்கள்

இவர்களும் அவர்களும் 5
எந்தக் கொள்கையையும் பணத்தட்டில் போட்டு, எடை பார்க்கும் வியாபாரிகள்-இலட்சப்பிரபுக்கள்!
இருப்பினும் இருவரும் சந்தர்ப்பத்தை ஒட்டி ஒவ்வொரு வழியைப் பின்பற்றினர். அவர்களுக்குப் பின்னல், ஆதர வாகக் கூச்சலிட்டுச் செல்வதற்கும் சாராயத்தில் உஷார் பெறும் கும்பலொன்று ஆயத்தமாகவே இருக்கிறது!
ஒருவர் " மாஜி' ஆக்கப்பட்ட மந்திரியின் கட்சியை ஆதரித்தார்; மற்றவர் மந்திரியாகிவிட்டவரின் கட்சிக்குப் பக்கபலமாக நின்றர்.
தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. பிளிமவுத் தும், ஸ்டூடிபேக்கரும் மும்முரமாக எலெக்ஷன் பிரசாரத் திற்கு ஒடித்திரிந்தன. கந்தையாவிற்கும், மணியத்திற்கும் சாப்பிடவே நேரமில்லை. அப்படி இருந்தது இருபக்கத்துக் கார்களின் ஒய்ச்சல் ஒழிவில்லாத உழைப்பு. காரில் இருந்து கொண்டே விழுந்து விழுந்து பொதுமக்களுக்குச் சேவை செய்தனர் எஜமானர்கள். சேவை செய்யும் எஜமானர் களுக்கு இரவு பகலாக உடல் தேய உழைத்தனர் இரண்டு சாரதிகளும்.
தேர்தல் ஜூரம் உச்சக்கட்டம் அடைந்திருந்தபொழுது ஒருநாள் தார் உருகும் நேரம். நகரத்தின் பிரதான வீதி. கந்தையாவும் மணியமும் எதிரும் புதிருமாகச் சந்தித்தனர். இருவருடைய எஜமான பக்தியும், "கிளச்சை ஆவ்ப் பண்ணி, கியரை மாற்றி, அக்ஸிலரேட்டரில் அமுக்கப்படும் காரின் மீட்டர் வேகம் கொண்டது; பகை உணர்ச்சி இருவரையும் ஆட்கொண்டது. கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க, கீழுதட்டை மேல் வரிசைப் பற்களினல் நன்னியபடி, "ஏன்ரா ? என்ர ஐயாவைப்பற்றி உன்ர கொய்யா கூட்டத் திலே தாறுமாருய்ப் பேசாத பேச்செல்லாம் பேசித் திரியிரு. ராம். இது ஞாயமாடா ?” என்று தன் வார்த்தைகளில் ஆத்திரத்தைக் கொட்டிப் பேசினன் மணியம்.

Page 11
6 தண்ணீரும் கண்ணீரும்
கந்தையா எஜமான பக்தியில் மணியத்தைவிட எந்த வகையிலும் குறைந்தவனல்ல. தன்னைப்பற்றி யாராவது குறைவாகப் பேசினல், பொறுத்தார் பூமியாள்வார்’ என்று வாளாயிருப்பவன், அவன். ஆனல் ஏசப்படுவது அவனல்ல; அவனுடைய " ஐயா சந்திக்கிழுக்கப்பட்டு, அவ மதிக்கப்படுகிருர், அதை அவனல் தாங்க முடியவில்லை. அவருடைய உப்பைத் தின்றுகொண்டு.
*" போடா, பேயா! உன்ர கொய்யா மட்டும் பெரிய நேர்மையானவரா? உன்ர ஐயா போன கிழமை, அம்மன் கோயில் வீதியிலை நடந்த கூட்டத்திலே, ஏதோ வெல்லாம் இல்லாததும் பொல்லாததுமாகப் பேசித் திட்டினராம். அதுக்கென்னடா சொல்லுருய் ?"-எதிர்வெட்டுக் கொடுத் தான் கந்தையா.
வாய்த் தர்க்கம் முற்றி, கை பரிமாறுகிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. தோள்கள் தினவெடுத்தன.
மணியம் கையடிப் படலத்தினை ஆரம்பித்து வைத்தான். கந்தையாவின் கண்களில் பிரளயகாலத்து வானத்து மின்ன லெல்ல்ாம் பளிச்சிட்டு மறைந்தன. இருவரும் நடுரோட்டில் கட்டிப் புரண்டனர். தங்களைத் தாராசிங்கிற்கும், கிங்காங் கிற்கும் கற்பித்துக் கொண்டவர்களைப் போல கட்டிப் பிடித்து உருண்டு கொண்டே. ..
தெருவில் இவர்களது திருக்கூத்தைப் பார்த்து நின்றவர் கள், மேற்படி 'குஸ்தி'யைச் சிறிது நேரம் ரஸித்தாலும், சீக்கிரமே இருவரையும் விலக்கி விட்டனர்.
மாட்டுச் சவாரியில் ஒடிக் களைத்த காளை மாடுகளைப் போல, இருவரும் மூசு மூசென்று மூசினர். ஒருவனுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது; மற்றவனுக்கு முரசிலி ருந்து உதிரம் வழிந்தது.
மணியம் இச்சம்பவத்தைச் சுந்தரம்பிள்ளையிடம் முறை யிட்டான். கந்தையாவும் இந்த அவமானத்தை ஆறுமுகம் பிள்ளையிடம் அறிவித்து விட்டான். இருவரும், "அவனை

இவர்களும் அவர்களும்
விட்டேன பார். ஒரு கை பார்த்துக் கொள்ளுகிறேன்"
என்று சூளுரைத்து உறுமிக் கொண்டனர்.
பிளிமவுத்துக்கு ஸ்டூடிபேக்கர்மீது பகை. கந்தையாவுக்கு மணியத்தின்மீது வெறுப்பு. ஆறுமுகம்பிள்ளைக்கு சுந்தரம்பிள்ளைமீது விரோதம். இந்தக் கட்டத்தில் தேர்தல் முடிந்தது. பாவம், இருவரும் கோட்டை விட்டுவிட்டனர். இடை
யில் கேட்ட கார்த்திகேசர் மாஷ்டர் வெற்றியீட்டிவிட் Litri
*எந்தக் கதைக்கும் ஒரு திருப்பம் தேவை 1 என்று எழுத்துப்புலிகள் கருதுகின்றனர். கதைகளில் வரும் திருப் பங்களைப் போல, அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் திசை திருப்பியது. அது இரு பிள்ளைகளினுடைய வாழ்விலும் திடுதிப்பென்று ஏற்பட்டது.
* புதிய பிரதமர் அந்தப் பட்டணத்திற்கு விஜயம் செய் யப் போகிருர்’ என்ற செய்தி, இருவரையும் ஒரே காலத்தில் திக்குமுக்காடச் செய்தது. அகப்பட்டதை அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று இருவரும் அங்கலாய்த் தனர்.
பட்டணத்துப் பெரிய மனிதர்களெல்லாம் இது சம்பந்த மாக ஒன்று கூடினர். அதில் நமது ' ஏழைகளின் தொண் டரும், பாட்டாளிக்ளின் நண்பர்'களுமான திருவாளர்கள் சுந்தரம்பிள்ளையும் ஆறுமுகம்பிள்ளையும் பிரசன்னமா யிருந் தனர். அவர்களில்லாத பெரிய மனிதர் கூட்டம் எப்படித் தான் கூடமுடியும் ?
பிரதமரின் வரவேற்புகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும், அவருடைய செளகரியங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவ னிப்பதற்கும் ஒரு வரவேற்புக்குழு மேற்படி கூட்டத்தில்

Page 12
8 தண்ணிரும் கண்ணிரும்
தெரிவு செய்யப்பட்டது. அக்குழுவிலுள்ளவர்கள் “பசை” உள்ளவர்களாக, கணக்குப், ப்ார்க்காமல் செலவு செய்யக் கூடியவர்களாக இருப்பதுதான் நல்லதென்பது கூட்டத்தின் பொதுவான அபிப்பிராயம். அதன் பிரகாரம், பூஜீமான் சுந்தரம்பிள்ளை வரவேற்புக்குழுத் தலைவராகவும், திருவாளர் ஆறுமுகம்பிள்ளை அதன் காரியதரிசியாகவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். v. அப்பதவிகள் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை யல்ல. காக்கா பிடிப்பதற்குக் கேந்திரமான பதவிகள். மேற்படி பதவிகள் எம்பிரான் அணுக்கிரகம் என்றுதான் கொள்ள வேண்டும். மறு புதுவருடப் பட்டங்களில் முதலி யார் பட்டப் பட்டியலில் இருவரின் பெயர்களும் இடம் பெற்றுவிட்டதாக அப்பொழுதே எண்ணத் தலைப்பட்டனர். விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாது, பலத்த கர கோஷங்களுக்கிடையில், 'நமது கடன் பணி செய்து கிடப் பதே. நாம் தோளாடு தோள் நின்று உழைத்து, பிரதம ருக்குப் பிரமாதமான வரவேற்பொன்றினைக் கொடுத்து, மக்களின் நலன் கருதி பட்டினத்திற்குத் தேவையான செள கரியங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தருவோம்?' என்று இருவருமே நன்றி உரையில் சபதம் கூறினர்.
சுந்தரம்பிள்ளை அகம் மலர ஆறுமுகம்பிள்ளையைப் பார்த்தஈர். இவரும் அவரைப் பார்த்து முறுவல் பூத்தார். நீண்ட நாட்களின் பிரிவுக்குப் பின்னர் சந்திக்கும் அத்தியந்த நண்பர்களைப் போல, இருவரும் கட்டித் தழுவிக் கை குலுக்கிக் கொண்டனர். கூட்டம் இனிது கலைந்தது. சுந்தரம்பிள்ளையும், ஆறுமுகம்பிள்ளையும் கரம் கோர்த்தபடி, ராஜமிடுக்குடன் வெளிவந்தனர்.
" மிஸ்டர் ஆறுமுகம்பிள்ளை ! உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். வித்தியாச மாக நினைக்காதீங்க. உங்களுடைய டிரைவர் என்னைப்பற்றி அன்றைக்கு என்னென்னமோ சொன்னனும். அதைப் பற்றி நீங்க கொஞ்சம் கவனித்தால். ’ என்று இழுத்தார் தலைவர் அவர்கள். -

இவர்களும் அவர்களும் 9.
" அதற்கென்ன ? உங்களிடமும் நான் இதைச் சொல்ல நினைத்திருந்தேன்; சொல்லிவிடுகிறேன். உங்கள் டிரைவர் கூட என்னைக் கடைத் தெருவில் சின்னத்தனமாகத் திட்டினு னம். இந்த வேலைக்கார நாய்களுக்கெல்லாம் நாம் இடங் கொடுக்கக் கூடாது. எதற்கும் நீங்களும் கொஞ்சம் கவுணித் தால்.”-காரியதரிசியும் அதே குரலில், அதே இலயிப்புடன் சொன்னர். XV
அடுத்த நாள் சுந்தரம்பிள்ளை மணியத்திற்குச் சீட்டுக் கிழித்தார். அதேபோல ஆறுமுகம்பிள்ளை கந்தையாவை "டிஸ்மிஸ்" செய்தார்.
எஜமானருக்கு விசுவாசமான ஊழியம் செய்த இரு வரும் காரணமறியாது, பேந்தப் பேந்த விழித்தனர்; பிடரி மயிரைச் சொறிந்தனர்.
இருவரும் வேலை தேடித் தேடி அலுத்துப் போனர்கள். எஸ். எஸ். ஸி. படித்துச் சித்திபெற்று, வேலையின்றி ரோட் டளப்பவர்களுடைய பட்டியலே லகரத்தைப் பிடித்துவிட்ட பொழுது, இவர்களுக்கு வேலைகளைத் தூக்கியா கொடுத்து விடப் போகின்றனர்? கடைசியில், செய்யாத குற்றத்திற் காக மனம் கசிந்துருகி மன்னிப்புக் கேட்டு, பழைய வேலை யையே திரும்பிப் பெறும் நோக்கமாக, இருவரும் எஜமானர் வீடுகளுக்குக் காவடி யெடுத்தனர். அவர்கள் இவர்களு டைய கண்களில் தட்டுப்படவே இல்லை. அவர்களுக்குத் தலைக்குமேல் தலைபுழுத்த வேலையாம்!
அன்று பிரதமருக்கு வரவேற்பு. வேடிக்கை பார்க்கத் தனித்தனியே சென்ற கந்தை யாவும், மணியமும் அங்கு சமீபம் சமீபமாக நிற்க நேரிட் டது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்ட னர். இருவர் முகங்களிலும் எள்ளும் கொள்ளும் வெடித் தன. பழைய எஜமான பக்திதான் இப்பொழுதும் அவர்களை

Page 13
了0 தண்ணீரும் கண்ணீரும்
உடும்புப் பிடியாக ஆட்டுகிறது என்பத்ை முகபாவங்கள் தெளிவாகக் காட்டின.
பொது வரவேற்பு முடிந்ததும், பிரதமருடன் சில குறிப் பிட்ட பிரமுகர்கள் வாடிவீட்டு விருந்திற்குச் செல்வதை அவர்கள் அவதானித்தனர். அந்தப் பிரமுகர்களுடைய பட்டியலில் சுந்தரம்பிள்ளையும், ஆறுமுகம்பிள்ளையும் இடம் பெற்றுச் ச்ெல்வதை அப்பொழுதுதான் இவர்கள் இருவரும் அறிந்தனர். 'இழந்த வேலையை எப்படியும் பெறவேண்டும் என்ற எண்ணம் இருவருடைய மனங்களிலும் ஏககாலத்தில் குதிர்ந்தது. வாடிவீட்டு வாசலுக்கு விரைந்தனர். 'நல்ல மூட்' உள்ள இந்தச் சமயங்களில் தலையைச் சொறிந்து காரி யம் சாதிக்கலாமென்பது அவர்களுடைய அனுபவம்.
இரு எரிமலைகள், தத்தம் ‘மாஜி' எஜமானர்களின் வரு கைக்காக வாடிவீட்டு வாசலில் காத்திருந்தன.
கூட்டம் கலைந்தது. பிரமுகர்கள் ஒவ்வொருவராகக் கலைந்தனர்.
கடைசியாக வரவேற்புக் குழுத் தலைவரும், காரியதரிசி யும்-அதாவது இந்த இருவரின் ஐயாமார்களும்-ஆடி அசைந்து கொண்டு வெளியே வந்தனர். ஒருவருடைய தோளில் மற்றவர் கைபோட்ட வண்ணம், அத்தியந்த நண்பர்களாக இருவரும் வெளியேறுவதை கந்தையா கண் டான்; மணியமும் பார்த்தான்.
இந்த அபூர்வக் காட்சியை முதற் தடவையாகக் கண்ட இருவரும் திகைத்தனர்; திடுக்கிட்டனர். "உண்மைதான ? என மலைத்தனர். அவர்களை நெருங்க இவர்கள் அஞ்சினர்.
அவர்களிருவரும் அப்பொழுது அவர்களாக இல்லை. மேலை நாட்டுச் சரக்கு இந்தக் கீழ்நாட்டவரிடம் தனது வேலை யைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் அவர் களிடம் பேச்சுக் கொடுப்பதே தவறு என்பது இவர்களுக்கு அனுபவத்தில் நன்றகத் தெரியும்.

இவர்களும் அவர்களும் l
கனவான்சள் இருவரும் இவர்களை ஒரு பொருட்டாக மதிக்காதபடி, தள்ளாடித் தள்ளாடி நடந்த வண்ணம் ஒரே காருக்குள் போய் ஏறிக்கொண்டனர். அடடா, அது ஒரு * ரோல்ஸ் ராய்ஸ் " கார் !
பெருமூச்சு விட்டபடி மணியம் கந்தையாவைப் பார்த் தான்; கந்தையா மணியத்தைப் பார்த்தான். இருவருடைய கண்களும் கலங்கியிருந்தன. "
இருவரும் பேசினர்.
a எல்லோருக்கும் தெரிந்த பாஷையில், அவர்கள் வாய்விட்டுப் பேசவில்லை, "காதலர்களின் தனியுடமை என்று கவிஞர்களால் கொண்டாடப்படும் விழிமொழி மூலம் அவர்கள் பேசிக் கொண்டனர். அவர்களுடைய பார்வை யில், இதுவரை பேச்சிலும் எழுத்திலும் தொனிக்காத ஒரு புதிய ஒலி-எழுச்சி-வியாபித்திருந்தது.
பழைய குரோதம் சாம்பராகி, அதன் மேட்டிலே குளுமை தோன்றி.
அவர்கள் அவர்கள்தான்; இவர்கள் இவர்கள்தான்!
I 0-169-1954

Page 14
கொச்சிக் கடையும் கறுவாக்காரும்
*மாத்தயா." டாக்டர் இராஜநாயகம் திரும்பிப் பார்த்தார். . ஹார்பர் தொழிலாளி அப்புஹாமி அங்கு நின்றுகொண். டிருந்தான்.
அப்புஹாமி ஏதோ சொல்ல விரும்பினன். ஆனல் வார்த்தைகள் மட்டும் கோர்வையாக வாயைவிட்டு வெளி வரத் தயங்கின. மீண்டும் “மாத்தப்ா. மாத்தயா. y என்று மட்டும் அழைத்தான்; கூப்பிட்டான். −
“என்னப்பா, என்ன விஷேசம்? என்ன சொல்ல வந் தாய்?" என்று நாற்காலியை அவன் பக்கம் திருப்பியபடியே டாக்டர் கேட்டார்.
தயக்கம். “மாத்தயா.தயவு செஞ்சி நம்ம ஊட்டுக்கு ஒருக்கால் வர்றதா? மவன் சுதுபண்டாக்கு ரெண்டு நாள் சொகமில்லை. அவனுக்கு வவுத்தாலே அடிக்குது. வாயிலே சத்தி வர்றங், மாத்தயா. நமக்கு மிச்சாங் பயங். அதுதான் நாங் வந்து பாத்தது.'-தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் இரந்து நின்றன் அப்புஹாமி.

கொச்சிக் கடையும் கறுவாக்காடும்
டாக்டர் இராஜநாயகம் அலட்சியமாக அவனைப் பார்த் அதார்.
“இந்தாப்பா, உன்னிடம் பத்து ரூபா இருக்கா? பத்து -ரூபாய்! இருந்தால் நீட்டு வருகிறேன்.”
“மாத்தயா, நம்மகிட்ட ஒரு சல்லிகூட இல்லே. வாற கெளமை ஆபரிலே சம்பளங் கிடைப்பாங், நாங் தர்றது, மாத்தயா’-அவலக் குரல். 象
“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிருய்? மனிதனே வீணுக அலட்டாமல் போ. அடுத்த கிழமை சம்பளம் கிடைக்குமானல், அடுத்த கிழமையே பணத்தோடு வா. நான் வருகிறேன்.”
டாக்டரின் வார்த்தைகள் ஹார்பர் தொழிலாளியின் நெஞ்சைச் சம்மட்டியால் அடித்து நொருக்கியது.
இரண்டு நாட்களாக அப்புஹாமி வேலைக்குப் போக வில்லை. சுதுபண்டாவின் உடல்நிலைதான் அதற்கு முக்கிய காரணம். சுதுபண்டா, பாவம், தாயைத் தின்னிப்பிள்ளை. திடுதிப்பென்று சுதுபண்டாவுக்கு உடம்பு சுகமில்லாமல் வருமென்று கனவு கண்டான ? அவனுக்கு "மேல் சுட்ட பொழுது, தந்தை அதைச் சாதாரணக் காய்ச்சலென்றே கருதினன். பக்கத்துத் தெருவிலுள்ள முனிசிபல் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்று காட்டி, மருந்து எடுத்துக் கொடுத்தான். மருந்து குணம் தரவில்லையென்பது மட்டு மல்ல, காழும்புப் பட்டணத்துப் பிரபல டாக்டரிட மல்லவ்ா கொண்டு வந்திருக்கிறது ?
பணக்காரருக்கு நித்திய நோய்கள் வரும். நோயாளி களாக இருப்பதில் அவர்களுக்கு ஒரு சுகம். புதுப் புதுப் பெயரில் அந்தச் சாதாரண நோய்கள் அழைக்கப்படும். அதைப் பற்றிப் பேசுவதிலும், கேட்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், அளவற்ற பெருமை அவர்களுக்கு.
ஆனல் அப்புஹாமியைப் போன்ற அன்ருடம் காய்ச்சி களுக்கு ? அது அவர்களுடைய வாழ்க்கை என்ற ஒற்றை

Page 15
i4 தண்ணீரும் கண்ணீரும்
படிப் பாதையில் நெருஞ்சிக் காட்டை யல்லவா வளர்க் கின்றது. &
டாக்டர் பத்து ரூபாய்கள் சுளையாகக் கேட்கிருர். ஆனல் அவனிடம் தற்சமயம் பத்துச் சதங்கள்கூடக் கிடையாது. மளிகைக் கடைக்காரனிடமும், தேனீர்க் கடைக்காரனிட Gyptib பொருட்களைக் கடன் சொல்லியே வாங்கிவிடுவதைப் போல, டாக்டரிடமும் மருத்து கடனுக்கு வாங்கிவிடலா மென்று மாதச் சம்ப்ளக்கார மனுேபாவத்திலேதான் டாக்ட ரிடம் வந்தான் என்பது உண்மை.
டாக்டர், கையில் பணம், வாயில் மருந்து என்கிருர். பணம் ?--
கடன் வாங்கமுடியுமா ? வழியில்லை, யார் நம்பித் தருவார்கள்? களவு ? ஆபத்துக்குப் பாவமில்லையாம்.சீ. உழைத்து வாழும் இந்தக் கரங்களா?”
அப்புஹாமியின் நெஞ்சம் எண்ணப் சுழலில் சிக்கித் திணறிச் சோர்வடைந்தது. எப்படியாவது டாக்டரை அழைத்துச் சென்று மருந்து வாங்கிவிட வேண்டு மென்ற தந்தையுள்ளம் தவியாய்த் தவித்தது. பணப் பசையே இன்றி உலர்ந்த சருகான அவன், வாய்ச் சாதுர் யத்தின் மூலமாவது.
“மாத்தயா. மாத்தயா !. இரக்கத்தை யாசித்து நிற்கும் பரிதாப முகம். ஆனல் டாக்டர் அவனைப் பார்க்காமலே, 'அட சீ! உங்களுக்கு என்ன கொள்ளை ? உழைக்கிறதில் ஒரு பகுதியைச் சேமித்து வைக்கவேண்டாம்? வருத்தம் துன்பம் வந்தால் மட்டும் "ஐயா, துரை, மாத்தயா' என்று எங்களிடம் வந்து பல்லைக் காட்டத் தெரியும்.சரி, சரி, போ.”-நீரில் அமுங்கிப் போனவனுக்கு, நீந்தக் கற்றுக்கொள்வதைப் பற்றி ஆற்றப்
போராட்டச்
9
படும் பிரசங்கம் !

கொச்சிக் கடையும் கறுவாக்காடும் 望5
அப்புஹாமி மெளனமாக நின்றன். டாக்டரின் பொன் மொழி அவனுடைய காதில் உறைக்கவில்லை. அவனைப் பற்றிச் சட்டை செய்யாது, டாக்டர், "இந்து'ப் பத்திரிகை யில் வெளியான நேருவின் சோஷலிசத் திட்டப் பேச்சுக்களை மிக மிக நுணுக்கமாகப் புடிப்பதில் அப்படியே. மூழ்கி.
*டிரிங்.டிரிங்.டிரிங்.” டெலிபோன் மணி கணகணத்தது. டாக்டர் பேப்பரை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ரிஸிவரைக் காதில் வைத்தார். விரல்கள் "பேப்பர் வெயிட்” டுடன் விளையாடிக் கொண்டிருந்தன.
“ஹலோ.” - “ஹலோ!.யார் பேசுறது? டாக்டர் வீட்டில் இருக் Scogit وو چ f
"யேஸ்.டாக்டர் ஸ்பீக்கிங். நீங்கள் யார்?" "பரந்தாமன்.ஆம், பாரிஸ்டர் பரந்தாமன் பேசுகிறேன். கறுவாக் காட்டில் எனது பங்களாவிலிருந்துதான் பேசுகி றேன். இங்கேயொரு ஸிரியஸ் கேஸ். உடனே புறப்பட்டு வாருங்கள்.”
"யாருக்குச் சுகமில்லை ?” “ரொபினுக்குத்தான். வீடே களையிழந்திருக்கிறது. படுத்த படுக்கை. என் மிஸிஸ் துடியாய்த் துடிக்கிருள். உடனே வர்றிங்களா ? “அட்ரஸ் ?” "மந்திரிசில்வா அவர்களுடைய வீட்டிற்குப் பக்கத்துப் பங்களா ?” M
“சரி. இதோ, புறப்பட்டுவிட்டேன்.” டாக்டர் புறப்பட்டுச் சென்றர். அப்புஹாமியை 'ஏன் நாயே என்று கூடக் கவனிக்கவில்லை. கார் "வீர்' என்ற அலறலுடன் புறப்பட்டு மறைந்தது. ...

Page 16
16 தண்ணீரும் கண்ணீரும்
அவன் டாக்டரின் கேட் தூணுடன் சாய்ந்து சிலையாக நின்றன். செய்வது என்ன என்றே புரியவில்லை. உலகமே நித்தியமான இருள் வெள்ளத்திற்குள் அமிழ்ந்து விட்டதைப் போன்ற மனப்பிராந்தி.
காரிலிருந்து இறங்கி, வைத்தியப் பெட்டி சகிதம் கால் களில் வேகத்தைச் சேர்த்து, பாரிஸ்டர் பரந்தாமனின் பங்க ளாவிற்குள் நுழைந்தார் டாக்டர். டாக்டர் இராஜ நாயகம் மிகவும் திறமைசாலி என்பது வெகு பிரசித்தம். கோப்பாயில் ஒரு புகையிலைக்காரனின் மகனுகப் பிறந்து, கடின வழியில் படித்து முன்னேறி, இப்பொழுது கறுவாக்காட்டுப் பிரதேசத் திலிருந்து, எதற்கும் அவரையே அழைக்கின்றனரென்ருல், அவர் இலேசுப்பட்ட டாக்டரா, என்ன ?
“குட் ஈவினிங்...'-பாரிஸ்டர் வரவேற்றர். “குட் ஈவினிங்! எங்கே ரோபின் இருக்கிருன், காட் டுங்கள்.
*வாருங்கள். மாடியில் இருக்கிருன்.” இருவரும் மாடிக்குச் சென்றனர். அங்கேஒரு அறையில் மெல்லிய துணியால் மறைக்கப்பட் டிருந்த தொட்டிலைச் சுட்டிக் காட்டினர், பரந்தாமன்.
ふ逐さ堂な
t':
மிக அமைதியாக நடந்து சென்று, தொட்டிலை அடைந்தார் தொட்டிலை மறைத்திருந்த படுதாவை நீக்கிப் பார்த்தார்.
தவாலயத்தினுள்ளே நடந்து செல்கிறவரைப்போல,
திகைத்துப்போனர் டாக்டர்.
அவருடைய முகம் கார்காலத்து வானக இருண்டது. கறுத்தது.
ஹாலிவுட் நட்சத்திரங்களின் அந்தஸ்தினைப் பறைசாற் றும் நாகரிகச் சின்னமான குச்சு நாய்க்குட்டியொன்று, தொட்டிலில் படுத்திருந்தது.

கொச்சிக் கடையும் கறுவாக்காடும் 17
"மிஸ்டர் பரந்தாமன், நான் மிருக வைத்தியனல்ல" மனிதர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்யும் டாக்டர்". வார்த்தைகளில், தான் அவமதிக்கப்பட்டுவிட்டதான எண் ணத்தின் சூடு புரையோடி இருந்தது.
அவருடைய வைத்திய அனுபவத்தில் புதிதாக ஏற்படும் நிகழ்ச்சி; அதிர்ச்சி.
"அது தெரியும் டாக்டர். ரொபின் வெறும் மிருக மல்ல; நாயுமல்ல! அது என்னுடைய உயிர்: எப்படியாவது அதன் உயிரைக் காப்பாற்றுங்கள்." என்று கண்ணீரும் v கம்பலையுமாக, நாடகப் போஸ் கொடுத்து, இரந்து நின்முள்
தொட்டிலுக்குப் பக்கத்தில் நின்ற மிஸிஸ் பரந்தாமன்.
பரந்தாமன் தன் திருவாட்டியின் வாசகத்திற்கு ஊமைக் குழல் ஊதினர். அத்துடன் ஒரு பணக்கிட்டைக் கொண்டு வந்து டாக்டரிடம் நீட்டினர்.
டாக்டர் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. மிஸிஸ் பரந்தாமன் விக்கி விக்கி அழுதுகொண்டிருந் தாள்.
பரந்தாமன் பணக்கட்டைப் பலாத்காரமாக டாக்டரின் கோட்டுப் பைக்குள் திணிக்க முயன்ருர். s “தயவு செய்து என்ன மன்னித்துவிடுங்கள், பாரிஸ்டர் பரந்தாமன். இங்கே ஏராளமான மிருக வைத்தியர்கள் இருக்கிறர்கள். அவர்களுள் ஒருவரை அழைத்துக் காட்டுங் கள். நான் வருகிறேன்."-என்று திரும்பினர்.
“டாக்டர் என் ரொபினைக் காப்பாற்றுங்கள்’ என்று அம்மணி கதறியதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
町方 வீதியில் வேகமாக ஒடிக்கொண்டிருந்قیقیl=''; என்ன மனிதர்கள்! ஒரு நாயின் சுகவீனத்தை இப் ւյւգւն : பெரித்சக்குகிருச்களே. அமெரிக்க நாட்டுப் பணம்
படைத்த சீமாட்டிகள் தங்கள் அன்புநர்ய்களுக்கு வைரத்
2

Page 17
தண்ணீரும் கண்ணீரும்
தாலும் இரத்தினத்தாலும் செய்யப்பட்ட விலையேறிய தோடுகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள் என்று வாசித்தபொழுது, நம்பவில்லை. மனிதத் தன்மையைக் கொல்வதற்கு ஏன் அமெரிக்கா? கறுவாக்காடு போதாதா? மனதைக் கிழித்துப் புறப்படும் சில நினைவுச் சிதறல்கள்.
கார் பங்களாவைச் சமீபித்தது. திரும்பும் நோக்கத் துடன், ஸ்டிய்ரிங்கைத் திருப்பும்பொழுது
"வருவார், வருவார்' எனக் காத்திருந்து, கடைசிச், சொட்டு நம்பிக்கையுமிழந்து, இனி ஆண்டவன்மீது பாரத் தைப் போட்டு விடுவோம் என நினைத்து, தள்ளாடித் தள் ளாடி, தனது அங்க இயக்கங்களின் வேகத்தை இழந்த நிலையில் நடந்துகொண்டிருக்கும் அப்புஹாமி அவருடைய கண்களில் படுகிருன்.
அவனுக்கும் அவருக்குமிடையில், சற்று நேரத்திற்கு முன்னர்கூடப் பத்து ரூபா நோட்டு சுவரொன்றை எழுப்பி யிருந்தது. கறுவாக்காட்டுப் பங்களாவில் அந்தச் சுவர் தகர்த்தெறியப்பட்டு, மறைவு விலகி, அப்புஹாமியை அப்பு ஹாமியாக நோக்க முடிந்தது. காரை, அப்புஹாமிக்குச் சமீபமாகச் செலுத்தி நிறுத்தினர் டாக்டர்.கரரின் "பிரேக்" ஓசையைக் கேட்டு, வீதியின் ஓரத்திற்குத் துள்ளிக் குதித்த வன், காரில் டாக்டரைக் கண்டு வாயடைத்து நின்றன்.
டாக்டர் காரின் பின் கதவைத் திறந்தபடி, "இந்தப்பா! காரில் ஏறிக்கொள். உன் வீடு எங்கே இருக்கிறது” என்று கேட்டார்.
அவனல் ஒரு கணம் தன் கண்களையும் காதுகளையுமே நம்ப முடியாமல் இருந்தது. ஒரு வேளைச் சோற்றுக்கே" "லாட்டறி" அடித்துத் திரியும் ஒருவன், தனக்கு ‘சுவீப்பின் முதற்பரிசு கிடைத்துவிட்டதைக் கேட்கும் பொழுது ஏற். படும் ஒரு மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. பின்னர்

கொச்சிக் கடையும் கறுவாக்கடும் 9
நிலையைச் சமாளித்துக்கொண்டு, “கொச்சிக்கடே, , )34 fruם வீரா லேன், மாத்தயா” என்று சொல்லிக்கொண் டே, காரில் ஏறிக்கொண்டான்.
டாக்டர் இராஜநாயகம், சுதுபண்டாவை நன்Uகப் பரிசோதித்து முடித்தார். நோயாளி "கிரிட்டிக்கல் கண்டிஷ’ னில் இருப்பது விளங்கிவிட்டது. இருப்பினும், தனது நீண்ட வைத்திய அனுபவத்தில் அவர் அசைக்க இயலாத நம்பிக்கை பூண்டவர். ஓர் ஊசி மருந்து போட்டார்.
கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு, சற்று யோசித்த பின்னர், அருகில் கிடந்த, ஆசன்ப்பகுதியில் பிரம்புப் பின்னல்களெல்லாம் அறுந்துவிட்ட, ஒரு நாற் காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.
அப்புஹாமி டாக்டரையே, கண் கொட்டாமல் பார்த் துக்கொண்டு நின்றன். "அப்புஹாமி பயமில்லை. இன் னும் சற்று நேரத்தில் இன்னெரு ஊசிபோட வேண்டும். அதுக்காத்தான் காத்திருக்கிறேன். அது கொடுத்ததும் உன் மகன் கண் விழித்து விடுவான். நீ என் டின்ஸ்பென்ஸரிக்கு வந்து மருந்து எடுத்துக்கொண்டு வரலாம்” என்ருர், ராஜ நாயகம்.
சோகம் கவிந்திருந்த அந்த முகத்தில் மகிழ்ச்சி கோடி காட்டுவதை டாக்டர் உணர்ந்தார். உள்ளூர மகிழ்ச்சி. வேலையினலும், அதற்காக உடலைக் கயிருகப் பிழிந்து சிந்தும் வியர்வையினலும், கறுத்த 'முகம். மழையின்றி வெடித்துக் கிடக்கும் வறண்ட நிலத்தைப் போன்ற வரட்சி குடிகொண்ட முகம். ஓர் அசைப்பில், ஊரில், தோட்டத் தில் பகலெல்லாம் கொத்திப் பாடுபட்டுத் தன்னை டாக்ட ராக்கி, ஆளாக்கிவிட்ட தன்தந்தையினுடைய சாயல் இருப் பதை அவதானித்தார். மனிதன், மனிதனை மனிதாபிமானத் துடன் நோக்கும்பொழுது, இனம்தெரியாத அன்புச் சங்கிலி பிணைப்பதை உணரமுடியும். அப்படியான ஒரு பிணை புத் * தன்னை அந்தத்துறைமுகத் தொழிலாளியுடன். : அப்புஹாமி மனத்திருப்தியுடன் உள்ளே சென்றன்..

Page 18
20 தண்ணீரும் கண்ணீரும்
நேரத்தைப் பார்த்து, கறுவாக்காட்டு பங்களாக்களுக்கே விசேட்மாக எடுத்துச் செல்லும், விலையுயர்ந்த ஊசி மருந் தொன்றினைச் சுதுபண்டாவின் உடலுக்குள் செலுத்தினர். அவனுடைய முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்ப ஆரம் பித்தன. அறையை நோட்டமிட்டுப் பார்த்தார். அப்பு ஹாமியைக் காணவில்லை. துவாலையொன்றைத் தேடினர். கிடைக்கவில்லை. உடனே, தனது கைக்குட்டையை எடுத்து, அவனுடைய முகத்தில் அரும்பிக் கொண்டிருந்த வியர்வைத் துளிகளையெல்லாம் துடைத்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுதுசுதுபண்டா கண்விழித்தான். டாக்டர் நம்பிக்கையுடன் முறுவலித்தார். அவருடைய முகத்தில் அரும்பும் முறுவலைப் பார்த்து, அப்பொழுது அங்கு வந்த அப்புஹாமி மகிழ்வுற்றன்.
"மாத்தயா!' 'ஒன்றும் பயமில்லை. உன் மகன் விழித்துக்கொண் டான். சற்றுப் பொறுத்து மருந்து எடுக்க வா!' என்று தன் தோல் பெட்டியை மூடினர். கையில் தூக்கினர்.
“மாத்தயா கொஞ்சங் பொறுங்..” என்று திரும்பவும் உள்ளே சென்றன் அப்புஹாமி.
திரும்பிய அவன், ஒரு கிளாஸ் டம்ளரில் தேனீர் கொண்டு வந்தான்.
“மாத்தயா! நீங்க மிச்சங் களைச்சது. தயவு செஞ்சு, இதைக் குடிங்கோ. " என்றுமிக விநயமாகக் கேட்டபடி, தேனீர்க் கிளாஸைடாக்டரிடம் நீட்டினன். m டாக்டருக்குப் பழக்கமில்லை. சுத்தத்தைக் கடைப் பிடித்து, கொதி தண்ணீரில் கழுவப்படும் பிங்கான்களையே உபயோகிக்கும் அவர், அந்தத் தொழிலாளி வீட்டுக் குவளை யின் பின்புறத்தில் நுதம்பிக் கொண்டிருக்கும் அழுக்கைக் கண்டதும். & い

கொச்சிக் கடையும் கறுவாக்காடும்
ஆனல் மறுகணம் வாங்கிப் பருகினர். இனித்தது; அதில் சுவை இருப்பதை அனுபவித்தார். குவ்ளையும்-தேனீரும்! புறமும்-அகமும்! கறுவாக்காட்டு நாயும்-கொச்சிக் கடைத் தொழிலாளி மகனும்!
அப்புஹாமிகளும், சுதுபண்டாக்களும், தோட்டத்தில் நிலம் கொத்தும் தன் தந்தையைப் போன்றேர்களும் நிறைந்த ஒரு உலகம்-மனிதர் மனிதர்களாக வாழும் ஒரு உலகம் அவர் மனக்கண்முன் எழுந்தது; விரிந்தது. கதிரையி லிருந்து எழுந்தார்.
'டிஸ்பென்ஸரிக்குவா’ என்று புறப்பட்டார். "சரி, மாத்தயா எனக்குப் படி கிடைச்சதுங் மோதல் லிலே உங்க பணங் தர்றது” என்று சொன்னவாறு கும்பிட் lstair. t
"அப்புஹாமி ! பணத்தினுல் சிலவற்றை வாங்க முடி பாது !” என்று சொல்லிக் கொண்டே, மனநிறைவுடன் காரைநோக்கி நடந்தார் டாக்டர் இராஜ நாயகம்.
-இதயம் காற்றைப் போல"இலேசாக இருந்தது.
85-955

Page 19
வெண் LJU
“உங்களுக்கு என்ன வேண்டும்?-பம்பரமாகச் சுற் ச் சுழன்று சேவை செய்து கொண்டிருந்தவள், அந்தச் சீனரைப் பார்த்து ஆங்கிலத்தில் கேட்கிருள். உதட்டில் நெளியும் சிரிப்புடன் குழைந்து வெளிவரும் சொற்களின் ஓசை அந்நியமாக இருப்பினும், அவை மனித குலத்தை இணைக்கும் சங்கிலி அசைவின் துல்லிய நாதத்தினைப் பிரச விப்பதை உணர்கின்றர்.
அவருடையமுகம் முறுவலில் மலர்கிறது. உதடுகளை அசைத்து, "இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிருர். அவரு டைய கண்களில் தேசபக்தியும், சர்வதேசியக் கூட்டுறவு உணர்ச்சியும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.
...வெகு கீழே, கீழே, மேகக் கூட்டங்களுக்கும் கீழே பூமி.
...மேலே, எங்கும் விசும்பின் எல்லையற்ற விரிப்பு.
e O அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானம்.
விமானம் முழுவதையும் நான்கே நான்கு வார்த்தை களில் தொனிக்கும் இனிமையும்-நட்பும் வியாபித்திருக் கிறது.

வெண் புரு 23
அந்த வார்த்தைகள் அவளுடைய உடலைத் துளைக் கின்றன. மயிர் சிலிர்க்கின்றது. மனம் நிறைகிறது. முகம் விரிகிறது. இதழ்கள் மலர்ந்து, புன்னகை பொலி கிறது. பவளச்சாயம் தீட்டப்பெற்ற நகங்களை உடைய விரல்கள் பத்தினையும் நட்பின் அடையாளமாகக் கோர்த் துக்கொண்டு " இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிருள். அதில் மொழிச்சுவர்கள் எழுப்பியிருக்கும் பிரிவினையைக் கிழித்துப் பரந்திருக்கும் மனிதனின் மானசீக உணர்ச்சிகள் மண்டிக் கிடக்கின்றன.
*காஷ்மீர் இளவரசி" என்ற பெயர்தாங்கி, ஏர் இந்தியா இண்டர்நேஷனல் சர்வீஸில் சேவை செய்யும் மேற்படி விமானம் மானஹம்ஸத் தடாகத்தினை நோக்கிப் பறந்து செல்லும் அன்னப்புள்ளின் லாவண்யத்துடன் பதினேராயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது. நேற்றுக் காஷ்மீர் இளவரசி சாண்டாகுரூஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுப் பீக்கிங்கை அடைந்தது, அங்கிருந்து ஹாங்காங் நகரிற்குப் பறந்து வந்து சிறிது நேரம் தங்கிற்று. அங்கிருந்து "ஜிவ் வென ஆகாயப் பாதையில் எழுந்து, புதிதான விழிப்புணர்ச்சியுட்ன் தேசிய சுதந்திரம் பெற்று, அதனைக் கண்ணின் மணியாகக் காப் பாற்ற வேண்டுமென்ற எழுச்சிபெற்ற ஆசிய ஆப்ரிக்க நாடு களின் பிரதிநிதிகள் கூடும் பாண்டுங் மகாநாட்டிற்கு, சமா தானச் செய்தி சுமந்து வெண்புரு ஒப்பப் பறந்துகொண்டி ருக்கிறது.
ஹாங்காங் விமானத் தளத்திலிருந்து காஷ்மீர் இள வரசி புறப்பட்டு முக்கால் மணி நேரமிருக்கும். பிரயாணி களாக இரண்டு போலீஷ் நிருபர்கள், ஒன்பது சீனர்கள் இருக்கிருர்கள். இவர்களுக்கு ஏதாவது சிற்றுண்டி வழங்கும் நோக்கத்துடன்தான் " உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள், அந்த விமானச் சேவகி. .

Page 20
24 தண்ணிரும் கண்ணிரும்
"இந்தி-சீனி பாய்! பாய்!”
.கருநீல ஜால வித்தைக்குள் சங்கமித்துக் கிடக்கும் பஸிபிக் சமுத்திரத்தின் மேலே காஷ்மீர் இளவரசி எழி லுடன் பறந்து கொண்டிருக்கிறது.
அதன் ஏர் ஹோஸ்டஸ்"-விமான சேவகி-மிஸ் குளோரியா பெர்ரி எழில் கக்கும் புன்னகைகளைச் சிந்திக் கொண்டிருக்கிருள். W - - -
மாம்பழத்தில், ஒட்டு மாம்பழந்தான் சுவைமிக்கது என்று சொல்வார்கள். அதைப் போன்று இந்திய மேற் கத்திய அழகுகளின் கலவியல் அறுவடையான-ஆங்கிலோ இந்தியன் மாதான--செல்வி குளோரியா பெர்ரி நல்ல அழகி. சர்வதேச அழகிகள் போட்டியில் கலந்திருந்தால், நிச்சயம் ஒரு பரிசைத் தட்டியிருப்பாள். அவள் பள்ளிக்கூட நாட் களில் படிப்பிலும், விளையாட்டுகளிலும்கெட்டிக்காரி; சதா சிரித்த முகக்காரி,
1951-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் நாள். அவளுக்கு இருபதே வயதாக இருந்தபொழுது, இந்த உத்தியோகத்தில், அமர்த்தப்பட்டாள். அன்றிலிருந்து பறந்து திரிகிருள். விமானம் பறக்கும்; அதில் அவளும் பறப்பாள். உலகின் நாகரிக நகரெங்கும் தொட்டு வாழும் அந்த வாழ்க்கை பிடித்தமாகத்தான் இருந்தது. நிர்வாகிகளுக்கு அவள்மீது விசேஷித்த நன்மதிப்பு. "ஏர் ஹோஸ்டஸ்'களுக்கு இடை யில் அவள் ராணியாக மதிக்கப்பட்டாள்.
..இருப்பினும், பாண்டுங்கிலிருந்து விமானம் இந்தியா வுக்கு மீண்டதும் அவள் இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடுவாள்.
பின் ?- குடும்ப வாழ்க்கை, அதில் ஈடுபட எல்லாம் தயார்.
வாலிபப் பருவத்து எழுச்சியும், துணையுடன் வாழ வேண்டுமென்கின்ற பாதுகாப்பு உணர்ச்சியுந்தான் பெண்

~
வெண் புரு 25。
களின் உள்ளங்களில் காதலை மலர்விக்கின்றது. இந்தக் காதல் விவகாரத்திற்குள் குளோரியாவும் சிக்கிக் கொண் டாள்.
லிஸ்பன் நகரத்து வாலிபன் ஒருவன் 1 ஏர் இந்தியா இண்டர் நேஷனல் சர்வீஸில் அடிக்கடி கோவைக்கு. வந்து" செல்வான். அவன் ஒரு பெரிய வியாபாரி, அவனுடன் விமானத்தில் அவளுக்கு முதற் சந்திப்பு ஏற்பட்டது. இரு வரும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசத் த்லைப்பட்டனர்" காலக் கிரமத்தில் அவர்களுள் அரும்பிய நட்பு காதலாகப் பரிணமித்தது.
மூன்று தினங்களுக்கு முன்னர் அந்த வாலிபனிட மிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. முறுவலின் மத்தி யிலே, இப்பொழுதும்கூட நெஞ்சுச் சட்டைக்குள் இருக்கும் அக்கடிதத்தினைத் தடவிப் பார்க்கிருள்.
அந்தக் கடிதத்தில். * என் அன்பே ! "காதல் என்பது இன்பமயமான கனவு. அது விடித் தால் நிலைப்பதில்லை என்று சொல்வார்கள். காதல் விவ காரத்தில் தோல்வியடைந்தவர்களுடைய வீண்கூச்சல் அது. கண்ணே, உன்னையல்லாத ஓர் இல்லுாழ்வினை என்னல் கற்பனைகடச் செய்து பார்க்க இயலாதே. `.
உண்மையில், நமது திருமணம் அதிகம் காலத் தாழ்த்தப் பட்டுவிட்டதென்றே எனக்குப்படுகிறது. நமது தேன்மதிக் கான நாளை இன்னும் ஒத்திப்போட நான் விரும்பவில்லை; நீயும் விரும்ப மாட்டாயென்பதும் எனக்குத் தெரியும்.
இது கண்டதும் ரோமுக்கு வா. அங்குள்ள வெனிஸ் ஒட்டலில் 10-ம் நம்பர் அறையை எடுத்திருக்கின்றேன். இங்கு நமது திருமணத்தை முடித்துக் கொண்டு, தேன் மதிக்கு நைஸ் அல்லது ஜெனிவா செல்வோம்.
என் இனிய வெண்புருவே! கடிதம் கண்டதும் பறந்து வா! தாமதத்தை என்னுல் தாங்க முடியாது. *

Page 21
26 தண்ணீரும் கண்ணிரும்
கடிதத்தைக் கண்டதும் ரோமுக்குப் புறப்படச் சகல ஆயத்தங்களையும் செய்தாள். ராஜினமாக் கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டு, அந்தக் கனவுலகில் நடத்தப் போகும் தேன்மதியைப் பற்றிய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண் டிருக்கும் பொழுது- ۔۔۔۔۔
டெலிபோன் மணி கணகணத்தது.
ஹலோ..."
Af ஹலோ, }
* மிஸ் குளோரியா பெர்ரியா? முக்கியமான செய்தி. சீனத் தூதுகோஷ்டி ஒன்று பீக்கிங்கிலிருந்து, பாண்டுங் செல் வதற்கு நமது காஷ்மீர் இளவரசியை 'புக் செய்திருக்கிறர் கள். நாளைக்கே சாண்டாகுரூஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும்."
"ஏன் சீனரிடம் விமானங்கள் கிடையாதா?’
இது பாதுகாப்பு விவகாரம். அதனலேதான் அந்த விமானத்திற்கு உன்னையே ஏர் ஹொஸ்டஸாக நிய மித்திருக்கிருேம்."
" மன்னியுங்கள். நான் வேலையை ராஜினுமாச் செய்ய உத்தேசித்திருக்கிறேன். என் கடிதத்தைக் கூடத் தபாலில் சேர்த்துவிட்டேன்."
"குளோரியாவா பேசுவது? இது சர்வதேச அரங்கில் இந்திய மண்ணின் பெருமையினை நிலைநாட்டும் காரியம். பிரதமர் நேருவே தலையிட்டிருக்கிருர். என்னதான் சொந்த விருப்பு வெறுப்புகள் இருப்பினும், நாம் பிறந்த இந்திய மாதாவின் கெளரவத்தினை நிலைநாட்டுவது நமது கடமை. உன்னைத் தவிர இந்தப் பணியினைச் செய்யவல்லவர்கள் கிடையாது என்பது நமது எண்ணம் ”
" அதற்காக ?”

வெண் புரு 27.
"மிஸ் பெர்ரி! விந்தையாக இருக்கிறது. உன் பேச்சு. ? cir உதிரத்தில் சுரந்தோடும் கடமை உண்ர்ச்சி எங்கேع சொன்னசொல்லைக் கர்ப்பாற்றத் தவறுபவன்தான் இந்தி யன்' என்ற அவச்சொல்வினைத்தான் நீ பிறந்த மண் ணிற்குச் சம்பாதித்துத் தரப்போகின்ருயா?”
““ gffi.” "வெரி குட்.வினடிகளுக்குள் புறப்படு.” "நான் பாண்டுங்கிலிருந்து திரும்பியதும் என் ராஜி ஞமா அங்கீகரிக்கப்படுமல்லவா ?”
"நிச்சயம். அத்துடன் உன் திருமணமும் சீக்கிரம் நடைபெறும். விஸ் யூ குட் லக்.”
விமானச் சேவை அதிபருக்கும் அவளுக்குமிடையில் நடந்த சம்பாஷணை.
ரோமாபுரிக்குப் பிரயாணியாகப் பறக்கத் தயாராக இருந்தவள், பீக்கிங்கிற்கு "ஏர் ஹொஸ்டஸ"ாகப் பறந் தாள். -
இதுதான் கடைசி முறையாக, உத்தியோக ரீதியில், பறப்பது.
அப்புறம் 2
தேன்மதி !
இன்பமான நினைவுகள் மனதிலே குதிர்கின்றன
பிரயாணிகளின் சகல செளகரியங்களையும் கவனிக்க வேண்டும் என்ற எழுச்சி மேலோங்குகின்றது.
*ஏதாவது பத்திரிகை '-சில சீனப் பத்திரிகைகளை அந்தச் சீனரிடம் நீட்டுகிருள்.
" தாங்ஸ் "-அவர் பெற்றுக் கொள்ளுகிருர்,
விமானம் மூன்று என்ஜின்கள் கொடுக்கும் வேகத்தில் பறக்கிறது.

Page 22
28 தண்ணீரும் கண்ணீரும்
விமானத்திற்குள் ஆசிய் ஆப்ரிக்க நாடுகளின் சுதந்திரத் தைப் பேணிக் காக்க இச்சை கொண்ட சீனரும், போலிஷ் நிருபரும், அவர்களுக்கு மகிழ்ச்சி யூட்டிக்கொண்டிருக்கும் பெர்ரியும்.
ff உங்களுடைய பெயரை அறியலாமா?'-என்று சீனர் தனக்குத் தெரிந்த இரண்டொரு ஆங்கிலச் சொற்களைக் கோர்த்து, சீன அபிநயத்துடன் உச்சர்த்துக் கேட்கிருர்,
" டுமீல் !”
ஏதோ வெடிச் சப்தம். விமானம் ஒரு குலுங்கு குலுங்கு கின்றது. நின்று கொண்டிருந்த மிஸ் குளோரியா பெர்ரி அந்தச் சீனருடன் முட்டி மோதி, எழுந்து நிற்கிருள்.
தொடர்ந்து நிர்ச்சுவாசப் பேரமைதி நிலவுகிறது.
என்ஜின்கள் மூன்றும் வேலை செய்து விமானம் பறக் கிறது.
ஆனல், இடதுபக்கத்து இறகு தீப்பிடித்து எரிகிறது. அவளுக்குப் புரிகிறது.
சதியைப் பற்றி எச்சரித்தது நினைவில் மிதக்கிறது. எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அதே நடந்துவிட்டது.
சிரிப்பைத் தவிர வேறு எதுவும் பரவியிராத அந்தப் பிர, யாணிகளுடைய முகங்களில், கவலையின் ரேகைகள் விம்மிப் புடைத்து. く
சதிகாரர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றி விட் டார்கள். இவ்வளவு முன்னேற்பாடெல்லாம் பயன்தர வில்லை. ஹாங்காங்கில் எது காரணம்பற்றியும் விமானம் தரித்திருக்கக் கூடாது' என்று சீனத்தில் ஏதோ சொல் கின்ருர். அவர்களுடைய முகங்களில் பீதியின் சாயல் பரவி மூட்டம் போட்ட கறுத்த வானைப்போல, அந்தகாரம்.

வெண் புரு 29
குளோரியா நிலைமையைச் சரிவரப் புரிந்து கொள்ளு கிருள். கடமை உணர்ச்சி அவள் முகத்தில் பேரமைதியை நிலைநாட்டுகிறது.அதே புன்முறுவல்.
* எதற்கும் பயப்படாதீர்கள்” என்று சொல்லிச் சுறு சுறுப்பாக வேலையில் ஈடுபடுகிருள். பிரயாணிகள், விமான ஒட்டிகள் சகலருக்கும் பாதுகாப்புச் சாதனங்களை விநியோ கிக்கிருள். சிலருக்கு அவற்றை அணிய உதவி புரிகிருள். நீரில் நீந்துவதற்கு மிதப்பங்களையும் விநியோகிக்கிருள்.
* ம்..!’-தனது கடமைகளைச் செய்து முடித்து, மனச் சுமை இறக்கும் பெருமூச்சு.
"டுமீல்!” மீண்டும் சப்தம்; விமானம் பயங்கரமாகக் குலுங்கி. வலது பக்கத்து இறகும் தீப்பற்றி எரிகிறது. புகைமயம். தீ நாக்குகளைப் பரப்பி, அக்கினி உள்ளே பரவுகிறது.
விமானம், குண்டுபட்டு நிலத்தில் விழும் பட்சியைப் போல, கீழே, கீழே இறங்குகின்றது. V
தன்னுடைய பாதுகாப்பிற்குள் விடப்பட்ட பிரயாணி *களைப் பார்க்கிருள்.
எல்லோரும், தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான சாதனங்களுடன் தயாராக நிற்கிருர்கள்,
அவள் ?
நேரமில்லை. வீண் முயற்சி. சாதனங்களைத் தேடி எடுத்துக்கொள்வதற் கிடையில் விமானம் நீருக்குள் அமுங்கி விடும். அவள் நிதானத்தை இழக்கவில்லை. இந்திய மண் னில் ஜனித்த தியாகச் சுடர் அவளுடைய முகத்தில் ஒளிர்
அவளை அறியாத உணர்ச்சி வேகத்தில், கரங்களைக் நோர்த்தபடி, "இந்தி-சீனி பாய்! பாய்!” என்கிருள்.

Page 23
30 தண்ணீரும் கண்ணிரும்
சீனர்களும் "இந்தி-சீனி பாய்! பாய்!” என்று கோஷிக் கிருர்கள்,
விமானம் முழுவதும் தீ,
அதைக் கிழித்துக் கிளம்பும் நட்பின் துல்லிய ஒலி.
* இந்தி-சீனி பாய்! பாய்!” திறக்கப்பட்ட விமானக் கதவுகளின் வழியே, பிர யாணிகள் சமுத்திரத்தில் குதிக்கிறர்கள்.
தன்னுல் காப்பாற்றப்பட்டு வெளியேறும் பிரயாணி களைப் பார்த்து முறுவலித்துக் கொண்டே நிம்மதியாக மூச்சு
விடுகின்ருள் மிஸ் குளோரியா பெர்ரி.
O B 0 is விமானம் நீரில் மோதி, நீருக்குள் அமுங்கு கின்றது.
பாண்டுங் மகாநாடு நடைபெறுகிறது. சமாதானவாதிகளின் நெஞ்சைப் போன்ற வெள்ளை உள்ளம் படைத்த வெண்புருவே-கடமையின் திரு உருவே காதலை மனதிலே சுமந்தும், இந்திய மண்ணின் மிக நீண்ட தியாக பாரம்பரியத்தின் அங்கமாக விளங்கும் குளோரி யாவே-இனியவளே-நீ எங்கே?-எங்கே?
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளரின் கொடு நெஞ்சைப்” போன்று பேராசைடிபொங்கும் பஸிபிக் சமுத்திரத்தின் நீர்ப் பரப்பில் உன்னை எப்படித் தேடுவது? எங்கே தேடிப் பிடிப் பது ? - - -
நீரில் நீ அமிழ்ந்த போது, ரோமில் உனக்காகக் காத் திருக்கும் லிஸ்பன் நகரத்து வாலிபனை நெஞ்சில் நினைத் தாயா?-அல்லது "இந்தி-சீனி பாய்! பாய்!” என்று உச் சரித்துக்கொண்டே இருந்தாயா..?
1955-ی-6---19

தண்ணீரும் கண்ணீரும்
யாழ்ப்பாணப் பட்டினத்துக் கடற்கரையோரப் பகுதிகளில் ஒரு நாளாவது குடியிருந்தவர்க்ளுக்குத்தான் அதன் பெருமை சட்டென்று தெரியும்; அதன் அருமை நன் முகப் புரியும். மருந்துக்குக்கூட நல்ல தண்ணீர் குடிப்பதற் குக் கிடைக்காமல் அந்தச் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள்சாதாரண மக்கள்-படும்பாட்டைப் பார்க்கும்பொழுது ந்மக்கே நாவரட்சி ஏற்பட்டு விடுகின்றதென்ருல், அந்தத் தண்ண்ர்ப் பிரச்னையின் பூதாகாரமான உருவை நீங்கள் ஒரு *வாறு ஊகித்துக் கொள்ளலாம்.
" பட்டினத்துக் கடற்கரைப்பகுதி அது: "குருநகர் என்ற திருநாமம் தரித்துத் திகழ்கின்றது. அந்த வட்டாரத்தின் ஒரு பகுதியிற்ருன் கடந்த பத்துப் பதினைந்து வருடகாலமாக வாழ்ந்து வருகிருன் பண்டாரி. அவன் ஒரு ரிக்ஷாக் காரன்.
-அதாவது, இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் மனிதகாடு என்று மாற்றுப் பெயரிட்டு எழுதிவரும், மனிதனை மனிதன் இழுத்து வாழும் தொழிலச்செய்பவன். ஆயினும் சந்தேகப் படத் தேவையில்லை. அவன் மனிதனேதான்! பட்டினத்து நாகரீக வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அவன் திகழ்ந்து வந்தான். ஓர் அம்சமாகிவிட்டான். ' : ...,

Page 24
2 தண்ணீரும் கண்ணீரும்
பண்டாரி பரம்பரைக் குலவித்தையாக இந்த "இழுக்கும்" தொழிலைச் செய்பவனல்ல. பரம்பரையாகக் குலத் தொழில் கள்ளிறக்குவது. இராஜகுமாரன மணந்த செம்படவப் பெண், ‘இருல் எப்படிச் சுருண்டிருக்கும்?' என்று கேட்டா ளாம். அதைப்போன்று அவன் குலத்தொழிலை மறந்த வனல்ல. அல்லது காற்சட்டை அணிந்து, "இங்கிலீஸ்" படிப் பின் துணையுடன் உத்தியோகம் பார்த்து அரிசி காய்ச்சி மரத் தைப்பற்றிப் பேசக்கூடிய நாகரிகவானுமல்ல. சென்ற ஆண்டுவரை, காலில் 'தளைநார்’ பூட்டி, மரம் உரஞ்சி, ஏறி இறங்கிக் கள் சேர்த்தவன்தான். ஆனல் பட்டினத்தில் இருக்கும் மது ஒழிப்பு மகாசபையின் பிரச்சார பலமும், அதைத் தவருகப் புரிந்துகொண்ட சில தீவிரவாதிகளின் திடீர் நடவடிக்கைகளும் ஒன்று சேர்ந்து கள்ளிறக்கும் தொழிலாளரின் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டன; பண்டாரியின் வயிற்றிலும் சேர்த்து மண்ணைத் தூவிவிட்டன. திடீரென்று ஒருநாள் அவனது கள்ளுக்கொட்டில் தீக் கிரையாக்கப்பட்டு எரிந்து சாம்பராகிவிட்டது. அந்த நாள் தொட்டுப் பண்டாரி தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நிமித்தம் பிச்சை எடுப்பவனுகவோ, "பிக்பாக்கட் காரணு கவோ, மூன்று சீட்டுத் திருப்பி "முச்சந்தியில் நடமாடும் சூதாட்டச் சாவடிக்காரனுகவோ மாறிவிடவில்லை.
அவன், நேர்மையான உழைப்பாளி: மனந்தளராத் தொழிலாளி. ஆகவே, அவன் மனிதனகவே மனிதப் பண்பு களுடன் வாழத் தீர்மானித்தான். இப்பொழுது பட்டி
-னத்து ரிக்ஷாக்காரனக நடமாடுகிருன்,
இப்பொழுது, அந்தத் தொழில்-இழுக்கும் தொழில்அவனுக்குப் பழக்கப்பட்ட தொழிலாக அமைத்துவிட்டது. "ஐயா.துரை.ராசா."-இந்த வார்த்தைகளைக் கீறல் விழுந்த கிராமப்போன் ரிக்கார்டைப்போல ஒலித்துக் கொண்டே நடமாடுவான். அவன் இழுத்து வரும் ரிக்ஷா அவனுக்குச் சொந்தமானதல்ல. நாளொன்றுக்கு முக்கால் ரூபாயை வாடகைப் பணமாக வண்டிச் சொந்தக்காரி

தண்ணீரும் கண்ணீரும் 3s
பீடம்-அந்தப் பொக்குவாய்க் கிழவி செல்லத்திடம்செலுத்தினல்தான் அந்த வண்டியை ஒரு நாளைக்குச் சொந்தம் கொண்டாட அவனல் முடியும்.
இப்படியான அவனுடைய வாழ்வு-மனைவியையும் ஒரு குழந்தையையும் கொண்ட அவன் குடும்பத்தின் வாழ்வுஏதோ ஒரு வழியாக ஓடிக்கொண்டிருந்தது. மண் ஒழுங் கையால் பாரத்துடன் ரிக்ஷா வண்டியை இழுத்துச் செல் வதைப்போல, வாழ்க்கையென்ற வண்டியைப் பண்டாரி மிகச் சிரமத்தின் பேரில்.
'ஒரு நாள்
இரவு பத்து மணி இருக்கும். காந்தீயவாதியும், ஜீவ காருண்ய சங்கத் தலைவருமான, பட்டினத்துப் பிரமுகரொரு வரை-பென்னம் பெரிய மனிதரை-பிரச்சாரக்கூட்டம் முடிந்ததும் அவருடைய வீட்டுக்குக் கொண்டு சேர்த்து விட்டு, அப்பொழுதுதான் வீடுவந்து சேர்ந்தான் பண்டாரி.
மதியத்தில் சாப்பிடாததால், வந்ததும் வராததுமாக அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சிறு குடலைப் பெருங்குடல் தின்பதுபோன்ற வேகம் மிக்க பசி. சாப் பாடு என்ற பெயரால் ஆக்கி வைத்திருந்த் அமெரிக்கன் மர்ப் பிட்டையும், சுட்ட கருவாட்டுத் துண்டொன்றையும் அவக் அவக்கென்று விழுங்கித் தீர்த்துவிட்டுத் தண்ணீர் குடத் தைச் சரித்துப் பார்த்தான்.
அதற்குள் ஒரு துளி தண்ணீர்கூட இருக்கவில்லை.
அவனுக்குச் சினம் பொங்கியது. சாப்பிட்டபின் ஒரு சொட்டு நல்ல தண்ணிராவது வாய்க்குள் ஊற்றிக்கொள் ளாதுபோனல், பண்டாரிக்குப் 'பத்தியம்' ஏற்படாது; அன்று சாப்பிட்ட மாதிரியும் இருக்காது. நாக்குத் தாகத் தால் வரண்டது; தண்ணீர் 'விடா'யால் உலர்ந்தது.
3.

Page 25
34 தண்ணீரும் கண்ணீரும்
குட்டிபோட்ட நாயைப்போல கோபத்தினல் அவன் மனைவிமீது ‘வள்ளென்று சீறி விழுந்தான்.
“ஏய், இந்தாடீ குடத்திலே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய நீ என்னடி செய்து கிழித் தாய்?-அவனுடைய குரல் கனத்தது. ஆத்திரம் கொப்ப ளித்தது.
மனைவி அவனுக்கு ஏற்ற ஜோடிதான். பதிலுக்கு 'மீன் கடை இரைச்சலில், "அதுக்கு நான் என்னத்தைப் பண்ண? உன்ரை மோன்தான் ஒரு சதத்தை நட்டு வைச்சுட்டு 'காசுமரம் முளைக்கும்; அது காய்ச்சதும் காசு பிடுங்கலாம்" எண்டு புசத்திக்கொண்டு, நான் அள்ளி வைச்ச தண்ணியெல் லாத்தையும் அள்ளி அள்ளி ஊத்தினன். எல்லாம் நீ உன்ரை மோனுக்குக் குடுக்கிற செல்லம்" என பதிலிறுத்தாள்.
மகன்பால் பண்டாரிக்கிருக்கும் பாசம், அவன் கோபத் தினை ஓரளவு மட்டுப் படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு கொடுத்த அந்த ஒரு சத நாணயத்தை, அவன் மண்ணில் புதைத்து வைத்துத் தினசரி, காசு மரம் முளக்கும்; காசு மரம் முளைக்கும்' என்ற அசாத்திய நம்பிக்கையில், உள்ள தண்ணீரெல்லாம் ஊற்றித் தள்ளுவதை நினைத்தபொழுது அந்த நிலையிலும் அவனல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் வாய் முணுமுணுத்தது. “எடே, பொடியா! காசு மரத்திலை முளைக்கிறதில்லையடா! நல்லாப் பாடுபட்டுத் தான் காசை உழைக்க வேணும்.'
ஐந்து நிமிஷங்கள் மடிந்தன. 'ஈயச் செம்புடன் அடுத்த வீட்டுக்கு நல்ல தண்ணீர் "கடன் கேட்கச் சென்ற அவன் மனைவி வெறும் செம்புடன் திரும்பி வந்தாள். அயலில் வாழ்பவர்கள் எதைக் கேட்டா லும் கொடுத்துவிடுவார்கள். ஒரு செம்பு நல்ல தண்ணீர் இரவல் கேட்டாலோ வந்தது வினை. தண்ணீரை வைத்துக்

தண்ணீரும் கண்ணிரும் ივნ
கொண்டே, "ஐயோ.தண்ணீரெல்லாம் முடிஞ்சு போச்சே!” என்று பல்லிப் பாஷையில் நச்சரித்துப் பதில் சொல்வ்ார்கள்.
அவர்களுக்கல்லவா தண்ணீரின் அருமை தெரியும்? அத்ை எடுப்பதற்கு அவர்கள் பட்டபாடு இருக்கிறதே !
X வெறுங்கையுடன் வந்த மனைவியைக் கண்டதும் அமெரிக் கன் மாப்பிட்டால் பொருமிய குடலில் தண்ணீர் வேட்கை இரட்டித்தது. w
'நல்ல தண்ணி ஒரிடமும் இல்லையாம். இப்ப என்ன செய்யுறது? உப்புத் தண்ணி யெண்டால் வேண்டித் தாறன். ஏதோ குடிச்சிட்டுப் படு. காலமை பாக்கலாம்",
‘உப்புத்தண்ணீர் குடிக்கும் படி' மனையாள் அருளிய உப தேசம் அவன் பொறுமையைச் சோதித்தது. பண்டாரி இயற்கையில் வெகு பொறுமைசாலி. வீட்டு நிலைமையை உணர்ந்து ஒத்துப்போகக் கூடியவன். கள்ளுத் தொழிலாளி யாக இருந்து, இன்று ரிக்ஷாத் தொழிலாளியாக மாறிய இந்தக் காலம்வரை சோர்வுற்ற உடலுக்குத் "தென்பு கொடுக்க' என்ற சாட்டிலாவதுகூட மதுவை அவன் தொட் டுப் பார்த்தது கிடையாது. அப்படிப்பட்டவனுக்கு மனைவி யின் வார்த்தைகள், இன்று ஏனே தெரியாது, பழங்கள்ளின் வேகத்தில் வெறிகொள்ளச் செய்து- !
அவனுடைய குடியிருப்பில் கிணறு கிடையாது. அக்கம் பக்கத்துக் குடிசைகளுக்கும் அந்தப் பாக்கியம்' இல்லை. அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் தொழிலாளர். கடல் தொழிலாளர், “கக்கூஸ்" தொழிலாளர், கள்ளிறக்கும் தொழிலாளர், பஸ் தொழிலாளர், வண்டியிழுப்போர்,- இப்படிப் பல ரகம். ஆனல் தொழிலாளர் என்ற ரீதியில் நகரத்தின் மிகப் பின்தங்கிய அந்தப் பகுதியில் சேரி அமைத் துக் குடியேறியிருந்தனர். ஆகவேதான், அரசாங்கமும், நக ராண்மைக் கழகமும் அந்த 'லேபரேர்ஸ்' பகுதியை அல்ட் சியம் செய்துவிட்டிருந்தன. · · ·

Page 26
36 தண்ணீரும் கண்ணிரும்
மனிதனின் அன்ருடத் தேவையான குடி தண்ணீர் கூடக் கிடைக்க வசதியில்லையென்ருல், அந்த வட்டாரத்தின் மகிமையை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
பண்டாரியின் குடிசையிலிருந்து, பத்துக் குடிசைகளுக் கப்பால், பஸ் தொழிலாளி சாமிநாதனின் "வீடு' இருக்கிறது. அங்குதான் மிகக் கிட்டிய கிணறு உண்டு. பெயருக்குக் கிணறேயொழிய, அது நீர் நீரம்பியுள்ள குழியென்பதே பொருந்தும். அந்தக் கிணற்றுத் தண்ணிர்தான் அவசர்த் தேவைக்குப் பயன்படும். அதுவும், பல மணி நேரம் காவ. லிருந்து வீட்டுக்காரர்களிலொருவர் அள்ளி ஊற்றி அருள் பாலித்தாற்ருன் கண்ணுல் காண் முடியும். அல்லது, அற்றதுதான்!
அந்தக் கிணற்றில் ஊறும் தண்ணிரைத்தான் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் “மருந்துத் தண்ணியாக ஊற்றி வருகிருர் களோ என்ற பெருஞ் சந்தேகம், வெகு நாட்களாக பண்டா ரியின் நெஞ்சத்தில் இருந்து வருகிறது. அந்தச் சந்தேதம் இன்றுகூடத் தீர்ந்தபாடில்லை. அந்தத் தண்ணிர் அப்படிப் பட்ட உவர்ப்பு. குடிக்க முடியாத அளவுக்குக் 'கைச்சல்'! இந்தத் தண்ணீரைத்தான் குடிக்கும்படி அவன் மனைவி அவனுக்கு இதோபதேசம் செய்கிருள். அவனுக்கு எப்படி இருக்கும்?
சற்றுத் தூரத்தில் மாதா கோயிலொன்று இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்கு அதுவே மிகவும் சிறந்த நல்ல தண்ணீர்க் கிணறு; வற்ருத அருள் சுரக்கும். மகாவலி கங்கை 1 வட மாகாண மக்களுக்குப் பயனின்றிக் கடலில் சங்கமமாகும் மகாவலி நதியைப் போலவே, அந்த நல்ல தண்ணீர்க் கிணறு இரவில் பயன்படாது. கோயில் நிர்வாகி கள் இரவில் அதன் படலையைப் பூட்டி விடுவார்கள்.
அதைத் தவிர, இன்னுமொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அப்பகுதியில் இருக்கிறது. அதுதான் அம்மன் கோயில் இணறு. 'அம்மன் கோயில் கிணறு' என்ற விருதை அது

தண்ணீரும் கண்ணீரும் 37.
பெற்றிருப்பினும், உண்மையில் அக் கிணறென்னவோ
பொதுக் கிணறுதான். அம்மன் கோயிலுக்கு அணித்தாக உள்ளதால், நாளாவட்டத்தில் அப்பெயரினைச் சுவீகரித்துக்
கொண்டது. அதில் குறிப்பிட்ட சில சாதியாரைத் தவிர
வேறுயாரும் தண்ணிர் அள்ளக் கூடாது என்ற சட்டம் கல்வெட்டில் ஏருமல் நிலைத்துவிட்டது. அக்கிணறு உபு
யோகக் குறைவினல், ஜாதி வெறியர்களின் நெஞ்சங்களைப்
போலவே இருண்டு பாசி படர்ந்து கிடந்தது.
அப்பகுதி மக்களுக்கு இரண்டு கிணறும் தெய்வங்கள். ஒன்று பகலில் கடாட்சிக்கும் தெய்வம்; மற்றது ஒறுப்பாக, ஒரு சிலருக்கு மட்டும் அருள் சுரக்கும் தெய்வம். எது எவ் வாறு இருப்பினும் தெய்வம் தெய்வந்தானே? . . .
இந்த இரண்டு கிணற்றுத் தண்ணிரும் கிடைக்க வழி யில்லை யென்றல், பண்டாரி போன்ருேர் அந்த ஆஸ்பத்திரி "மருந்துத் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். ஆக, மனைவியின் உபதேசந்தான் சாத்திய விட்டத்திற்குட் பட்டது என்று அவனுக்குப் பட்டது.
. ஒரு நாளைக்குக் குடிச்சா என்ன கெட்டுப் போயிடும்? நல்ல தண்ணிக்குக் கால்மை பாக்கலாம். சொல்லன். உப்புத்
தண்ணி வேண்டி வரட்டா ?”
அவன் பதில் சொல்லவில்லை. அவளுடைய கையிலி ருந்து 'ஈயச் செம்பைப் பறித்தான். எங்கும் கவிந்திருந்த கோர இருளில் “விறு விறு' என்று நடந்தான். அவளுக்கு ஆச்சரியம். அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே, அசை வற்று, முனிசிப்பல் வெளிச்சக் கம்பமாக நின்ருள்.
பண்டாரி எவ்வளவோ சாமர்த்தியமாகத்தான் கிணற் றிலிருந்து தண்ணீர் அள்ளினன். ஆனல் ஓட்டை வாளி, சல சல வென்று நீரைக் கொட்டி, அவனுடைய திருட்டைப் இறைசாற்றிக் கொண்டிருந்தது.

Page 27
38 தண்ணீரும் க்ண்ணீரும்
அவனுடைய நெஞ்சு படபடத்தது. பயம் அவனக் கவ்வியது. புதிதாகத் திருடச் செல்பவன் தனது காலடி யோசையைக் கேட்டே மிரளும் மனேபாவம் அவனைச் சுற்றி நின்றது. தேகம் பதறியது. கைகால்கள் உதறலெடுத்தன. அவனுடைய முதல் முயற்சி வெற்றி பெறவில்லை!
இரண்டாவது முறையும் முயற்சி செய்தான். அவனு டைய புலன் முழுவதும் தண்ணீரள்ளும் வாளியுடன் ஒன்று பட்டிருந்தது. ஒரு தடவை வாளின்ய நன்ருகக் கோலிவிட் டான். வாளி ஒரு தடவை தண்ணீர்ப்பரப்பிற்குள் மூழ்கி எழும்பி
இடது பக்கத்திலிருந்து குரலொன்று கேட்டது.
“ ஆரது கிணத்திலே ? குடிக்கக் கொஞ்சம் தண்ணீ ஊத்துங்க.."-பஸ் கண்டக்டர் சாமிநாதனின் குரலிது.
பண்டாரி வெலவெலத்துப் போனன். முதல் முதலாகச் சத்திர சிகிட்சை செய்து கொண்டிருக்கும் இளம் டாக்டரின் முகத்தில் சுரப்பதைப் போன்று, பண்டாரியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மலிந்தன. அம்மன் கோயில் சிலையைப் போன்று மெளனத்துடன் இணைந்து மெளனியாய் நின்றன். வாளி தண்ணீருக்குள் தாழ்ந்தபடி இருந்தது; அவன் கை கள் துலாக்கொடியைப் பிடித்தது பிடித்தபடி இருந்தன; அவன் சிலையாக நிலைகொண்டு நின்றன்.
அதே குரல் மீண்டும் ஒலித்தது. சற்றுப் பலமான அதட்டல். "ஆரப்பா கிணத்திலை ? காது கேக்கல்லையா ? கொஞ்சம் தண்ணி ஊத்துறதுக்கென்ன ?”
மெளனம்.
என்னமோ4ஏதோ " என்ற பயம்-பயங்கர நிண் வெழுப்பும் பீதி-சாமிநாதனைத் தன்பால் ஈர்த்தது. அதற்குக் காரணமும் உண்டு.
இரவு நேரத்தில், அம்மன் கோயிலுக்கு அருகில் சங்கிலி மாடன் வீதிவலம் வந்து போவான் என்பது வழக்கழியாக்

தண்ணீரும் கண்ணிரும் 39
கதை. இந்தக் கதையைச் சாதாரண காலங்களில் 'சாமி நாதன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஏனெனில், அவனு டைய பஸ்ஸில் பிரயாணம் செய்திருக்கக்கூடிய நீங்கள் அவன் தன்னுடைய வாயிஞலேயே தன் வீர, தீர, பராக் கிரமச் செயல்களை யெல்லாம் விஸ்தரிக்கக் கேட்டிருப்பீர்கள்.
அசட்டுத் துணிச்சல் உந்த, சாமிநாதன், வேலியோரம் சாத்தப்பட்டிருந்த சைக்கிளடிக்குச் சென்று, சைக்கிள் விளக்குடன் திரும்பினன். அப்பொழுதும் பண்டாரி சிலை யாக, துலாக் கொடியைப் பிடித்த வண்ணமே கிணற்றடியில் நின்றன். அவனுடைய முகத்துக்கு நேரே சாமிநாதன் வெளிச்சத்தைப் பிடித்தான். முகம் தெரித்தது. சவக்களை தட்டியிருந்த அந்தமுகம். s
துலாக் கொடியுடன் பண்டாரியைக் கண்ட சாமிநாதன் ஒரு கணம் திடுக்கிட்டான். ‘நான் காண்பது கனவுதானே? என்ற ஐயம் அந்தக் கணம் அவனுடைய மனதை அலைக் கழித்தது. கண்களை மூடித்திறந்து, மறுபடியும் உற்றுப் பார்த்தான். சந்தேகமில்லை. அவனுக்கு முன்னல் பண் டாரியின் உருவந்தான் நின்று கொண்டிருந்தது.
1.நளவன்-நளப் பண்டாரி'-அம்மன் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளிவிட்டான். கிணற்றைத் தீட்டுப் படுத்திவிட்டான். நளப்பயலின் துணிச்சல் என்ன ? மேல் சாதிக்காரர்களின் வீரத்திற்கு எதிராகவிடுக்கிப்பட்ட சவால்; அவர்கள் முகத்தில் பூசப்பட்ட அவமானம் !..எவ்வளவு. எவ்வளவு. A
சாமிநாதனின் உள்ளங்காலிலிருந்து ஒரு கொதிப்பு வெடித்துக் கிளம்பி, அவன் உச்சந் தலையைத் தாக்கியது. 'மனிதன், அடுத்த கணமே மிருகமாக மாறிவிட்டான்.
“நளப்பயல்ே! அவ்வளவு கொழுப்பாடா உனக்கு? இவ் வளவு தூரத்துக்கு வந்துட்டியளாடா ? எங்கட கிணத்திலே தண்ணி அள்ளுறதுக்கு உனக்கு எவ்வளவு முழ நெஞ்சடா ? என்னடா நான் கேக்கிறன்; நீ பேசாமல் நிக்கிருய்?"-

Page 28
40 தண்ணீரும் கண்ணீரும்
கோபக் கொதிப்புடன் கேள்விப் பாணங்களை அள்ளியள்ளி, வீசினன். குருக்ஷேத்திரப் போரில், பார்த்தினின் கணைகள் பீஷ்மரின் உடலைப் பிய்த்தனவாம். அந்த அம்புகளிலும் பார்க்க உள்ளத்தைத் தைக்கும் சொல்லம்புகள் கூரியன வாகும். ஆனல் அச் சொல்லம்புகள் வலியற்றன. பண்டாரி யின் மனம் புண்படவில்லை.அவன் இந்த உலகத்து உணர்ச் சியே அற்றவனுக. . . . . . . .
சாமிநாதன் இரைந்து கத்தினன். கோபக் குரலில் கூப்பாடு போட்டான். அவனுடைய கோபப் பெருங்குரலைக் கேட்டு அயலில் வசிப்பவர்கள், வழிப் போக்கர்கள் ஆகிய அத்தனை பேர்களும் கூடிவிட்டனர்.
கேள்வி மேல் கேள்விகள். கூடியவர்கள் தங்களை மெத்தப் பெரிய வக்கீல்களாகக் கற்பித்துக் கொண்டு பண் டாரியைக் குறுக்கு விசாரணை செய்வதில் முனைந்தார்கள். அவன் வாயே திறக்கவில்லை. -
Փւգ-6յ P "தமிழ்ப் பண்பாட்டினைக் காப்பாற்றும் திருத்தொண்டு பண்டாரிக்கு, எழும்பப் படுக்க முடியாமல் செம்மை யாய் உதை விழுந்தது. முரட்டுப் போலீஸ்காரனிடம் வச மாகச் சிக்கிக் க்ொண்டதுடியான இளைஞனுக்குக் கிடைக்கும், “வரிசையைப் போல மூட்டு மூட்டாக அடிக்கப்பட்டான். இத்துடன் அவர்களுடைய-உயர் ஜாதிமான்களின்-பரம் பரையும், பெருமையும், மேன்மையும் இரவுக்கிரவே காப் பாற்றப்பட்டன. கிணற்றில் ஏற்பட்ட துடக்கு துடைக்கப் பட்டதென்ற நினைவு. ۔ h
பண்டாரிக்கு நஷ்டம் பெரிதல்ல. கொண்டு சென்ற செம்பை யாரோ புண்ணியவாளன் அபகரித்து விட்டான். சில காயங்கள். இரத்தம் சிந்தப்பட்டது. அவ்வளவுதான். உயிருக்கு ஆபத்தில்லை ! s
-பார்க்கப் போனல், இது பண்டாரியின் பூர்வ ஜன்மப் புண்ணிய பலனக இருக்கலாம். அல்லது, அவனுடைய இல்

தண்ணிரும் கண்ணிரும் 4夏
லாளின் மாங்கல்ய பலனுகக்கூட இருக்கலாம். இந்த வெறிக் கூட்டம், இப்படியான சந்தர்ப்பத்தில், உயிருடன் விடுவ தாயின், அது பத்திரிகைகளுக்கே அனுப்பத்தக்க செய்திகூட. நோக்காட்டில் வெந்து, அன்றிரவு படுத்திருந்த பண் டாரி தன் குடிசை நள்ளிரவில் தீப் பற்றி எரிவதைக் கண் டான். மறுநாள் குடிசை இருந்த இடத்தில், வெறும் சாம்பல். ஜாதி அபிமானம் என்ற தீ அவனுடைய குடி சையை ஜீரணித்து ஏப்பமிட்டது. எந்தத் தோஷத்தையும் அக்கினி பகவான் எரித்து, அழித்து, சுத்திகரித்து விடுவா ராம். அக்கினி பகவான் உயர்ஜாதி இந்துக்களின் தீப்பெட் டிக்குள்ளிருந்துதான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமி unri-Gir
இந்தச் சம்பவங்கள் நடந்தேறி ஒரு மாதமாகிவிட்டது. ஒருநாள் மாலை. நல்லூர் மஞ்சத்தைப் போன்று ஆடி அசைந்து நடைபோட்டுக் கொண்டிருந்தான் பண்டாரி. அன்று அவனுக்கு வாடகை எதுவும் கிடைக்கவில்லை. இதுவும் அவனுக்குப் பழக்கம். ஒரு மாதத்திற்குள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மனதை மேயவிட்டுக் கொண்டு, நகரத்தில் பெரிய வீதிகளிலெல்லாம் "வெறும் ரிக் ஷாவை இழுத்துக்கொண்டே நடந்தான். காலையிலிருந்து வாடகை பிடிக்க அலைந்த கள்ைப்பு வேறு.
பறங்கித் தெருவிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தைச் சமீபித்தான்; அங்கே, அலுப்பாந்தி செல்லும் தண்டவாள மும், பெரியே தெருவும் கலவிச் சங்கமிக்கும் திருவிடத்திற்கு, வலது பக்கத்துக் கான் ஓரத்தில், ஜனத்திரள் தழுமியிருப் பது அவனைக் கவர்ந்தது. ஆளை ஆள் எகிறிக் கொண்டு பார்த்து ரஸிக்கும் அந்தக் காட்சிதான் என்ன ?
படித்தவனுக்குப் பின்னலும் பத்துப் பேர்; பைத்தியக் காரனுக்குப் பின்னலும். நகர மக்களின் மந்தை மனப் பான்மை என்ற எண்ணம் அவனை முதலில் ஜனத்திரளை அலட்சியம் பண்ணச் செய்தது. மறுகணம் மனிதனிடம்

Page 29
42 தண்ணிரும் கண்ணிரும்
இயல்பாக அம்ைந்துள்ள புதினம் பார்க்கும் மனுேபாவம் அவனை முன்னேற விடவில்லை.
அதே நேரத்தில், வீதியின் நேரெதிர் பக்கத்திலிருந்து "ஏய், ரிக்ஷா கெதியா வா. படத்துக்குப் போகவேணும், வாரீயா?’ என்று ஒரு குரல் அவசரப்படுத்தியது.
அவனது எண்ணம் சிறிது சலனப்பட்டது. இறுதியில் "அங்கு என்னதான் நடக்கிறது' என்பதைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை வென்றது. “கொஞ்சம் பொறுங்க துரை. இதோ வந்துட்டேன்' என்று குரல் கொடுத்து விட்டு, ரிக்ஷாவை ஒரு பக்கமாக நிறுத்தினன். பின்னர், கூட்டத்தில் ஒருவனுகக் கலந்தான். v
அங்கே
கண்டக்டர் சாமிநாதன் இரத்த வெள்ளத்தில் மல் லாந்து கிடந்தான். உடம்பின் பலபாகங்களிலும் காயங்கள். அந்தக் காயங்களிலிருந்து பாயும் இரத்தம். சூழலிலும் தொட்டம் தொட்டமாக இரத்தக் கறைகள். விகாரமான காட்சி.
பண்டாரி விஷயத்தை ஒருவாறு ஊகித்தான். விசா ரித்து அறிந்தான்.
ரெயிலும் பஸ்ஸும் ஒட்டப்பந்தயம் நடத்தின. பந்தயத்தில் பஸ் தோற்றுவிட்டது. பஸ்ஸுக்கோ பிரயாணி களுக்கோ அதிக சேதமெதுவும் கிடையாது. ஆனல், "புட் போட்டில் நின்ற கண்டக்டர் சாமிநாதனுக்குத்தான் பலமான அடி. அத்துடன் விெகு தூரத்திற்குத் தூக்கி யெறியப்பட்டு, ஸ்மரணை இழந்தான். அந்த நிலையில் கிடந் தவனைச் சுற்றித்தான் அந்த ஜனத்திரள்.
பண்டாரியின் மனதில் ஆரம்பத்தில் ஒருவகை மகிழ் வுணர்ச்சி ஏற்பட்டது. அடிபட்ட அன்றிரவு அவன் மனைவி கொடுத்த சாபங்கள் மனதில் குதிர்ந்தன. “குறுக்கால தெறிப்பான்! நல்லாயிருப்பான? அவன் குடும்பமும் சந்தான மும் நல்லாயிருக்குமா? கொள்ளையில போவான்! எரிஞ்சு

தண்ணிரும் கண்ணிரும் 43°
போவான்! கட்டையிலே போவான். நால்லூர் பெருமர்னே, அவனுக்கு ஒரு அழிவைக் காட்டு.”
ஒரேயொருகணம் அந்த அர்ச்சனைகளின் நினைவு அவன் மனதைக் குளிர்வித்தது. சவாரிக்கு அழைத்த "துரையின் ஞாபகம் வந்தது. திரும்பலாம் என்ற எண்ணம் தளிர்த்தது. திரும்ப நினைத்தான்.
மறுகணம் அவனுடைய மனிதமனம்-அந்தத் தொழி லாளி இதயம்-தன்னில்தானே வெறுப்புக்கொண்டது. தன்னுடைய நினைவுக்காகத்தானே வெட்கப்பட்டான். மன தைச் சுதாரித்துக் கொண்டான்.
கூடிநின்றவர்கள் சும்மா ஆகா.ஊகூ.' என்று சத்தம் போட்டுச் சந்தடி செய்தனரேயொழிய, ஒருவரும் முதலுத வியோ அல்லது வேறு உதவியோ செய்ய முன்வரவில்லை.
பட்டின நாகரிகம்! பண்டாரி, இரண்டொருவர் உதவியுடன் சாமிநாதனை ரிக்ஷாவில் ஏற்றிப் படுக்க வைத்தான். அடுத்த கணம் வேகமாக, தன்னை மறந்த வேகத்தில், ஓட்டமாய் ஓடினன் ரிக்ஷா பட்டிணத்து ஆஸ்பத்திரியை நோக்கிக் காற்ருய்ப் பறந்தது.
ஒரு மணி நேரம் சென்றுவிட்டது. மனைவியின் முதல் பிரசவத்தை எதிபார்த்து, அறைக்கு வெளியே துடிதுடிப்புடன் காவல் நிற்கும் இளம் கணவனைப் போல, பண்டாரியும் ஆஸ்பத்திரியின் விருந்தையில் பரபரப் புடன் காட்சியளித்தான்.
நர்ஸுகள் அங்குமிங்கும் போவதும் வருவதுமாக இருந் தன்ர். பொறுமை எல்லை கடந்தது. கடைசியில் ஒரு நர் ஸைப் பேச்சுக்கு இழுத்துக்கொண்டான். .
"நேசம்மா, இப்ப பஸ்ஸிலே அடிப்பட்டு ஒருவர் வந் தாரே, அவருக்கு எப்படி இருக்குது?" என்று குரலில் ஆவல் தொனிக்கப் பண்டாரி கேட்டான்.

Page 30
44 தண்ணிரும் க்ண்ணிரும்
"ஒ.அந்தக்கேஸா? அவருக்கு உடம்பிலே இரத்தம் இல்லை. இரத்தம் கொடுக்கவேணும். ஆனல் "பிளட் பாங்' கிலே இரத்தம் இல்லையாம். அதுதான் டாக்டர் யோசிக் கிருர்."-செய்தியைச் சொல்லிப் போகத் திரும்பினுள் நர்ஸ்.
“தேசம்மா, ரத்தமில்லாட்டி "என்ர ரத்தத்தைத்
தாறன். குடுக்கிறியளா, அம்மா’ என்று சொன்ன பண்டாரி யின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
நர்ஸ் அந்த ரிக்ஷாக்காரனை விசித்திரமாகப் பார்த் தாள்.
"எதற்கும் டாக்டரிடம் கேட்டுச் சொல்லுகிறேன். அது மட்டும், அந்த வாங்கில் இருந்துகொள்’-ஆதரவாகச் சொல்லி, டாக்டரிடம் விரைந்தாள். R
பண்டாரியின் இரத்தத்தைப் பரிசோதித்த டாக்டர் மகிழ்வுற்ருர், இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப் போகுமாம்-என்ன விசித்திரம்? ஜாதிக்கு ஜாதி
'நளம்' பண்டாரியின் இரத்தம், ஜாதிமான் சாமிநாத னின் உடலில் பாய்ச்சப்படும் வேலை முடிந்தது. டாக்டர் வெளியே வந்தார்.
இரத்ததானம் செய்த பின்பு சற்று ஆய்ாசத்துடன் வாங்கில் அமர்ந்திருந்த பண்ட்ாரியின் முதுகை ஆதரவுடன், தடவிக் கொடுத்து, நீ செய்தது இரத்ததானமல்ல. அந்த நோயாளிக்கு மறுபிறப்பே வழங்கியிருக்கிருய். இந்தா பத்து ரூபா. என் அன்பளிப்பு.உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.' என்று கூறியபடி, அவனிடம் ஒரு பச்சை நோட்டை நீட்டினர். 4. ےي.
பண்டாரி பணத்தை வாங்க மறுத்துவிட்டான். ஆணுல் வேறு ஏதோ கேட்க இச்சை கொண்டவனைப்போல, அவன்

தண்ணீரும் கண்ணீரும் 会5
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதை அவதானித்தார்; அவர் ருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. "உனக்கு என்ன வேணு மப்பா? என்ன வேணும் கேள்; பயப்படாம்ல் கேள்!” என்ருர்,
'டாக்குத்தரய்யா! என்னை ஒரு முறை அவரை-காயம் பட்டவரைப் பாக்க விடுங்க”
டாக்டர் மகிழ்ச்சியுடன், அவனுடைய வேண்டுகோளை ஏற்றர். அவனுடைய நடத்தை விசித்திரமாகப்பட்டது. இந்த விசித்திரமான நடத்தையை மனதிற்குள் வியந்து கொண்டே ஒப்புக்கொண்டார்.
பதினைந்து நிமிடங்களுக்குப்பின் அவனுடைய விருப்பம் நிறைவேறியது. சோர்வினுலும், பலவீனத்தினுலும் வெளிறி யிருந்த சாமிநாதனின் முகத்தை ஆர்வம் பிரதிபலிக்க பண் டாரி பார்த்தான். களைப்புக் கலைந்து, களைகொண்டு, களிப் புடன் அவனை நோக்கினன்.
முழு விபரங்களையும் நர்ஸின்மூலம் அறிந்த சாமிநாதன், தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பண்டாரிதான் என் பதை அறிந்தவுடன், மலைத்தான். ஒரு கணம் வெட்கிக் குறுகினன். மனச்சாட்சியும், நன்றியறிதல் உணர்ச்சியும் அவனைத் துளைத்தன.
“பண்டாரி” என்று அன்பொழுக அழைத்தான், சாமி நாதன். .
அவனும் கட்டிலை நெருங்கினன். உடனே பித்துப் பிடித்தவனைப்போல,
"சொல்லு பண்ட்ாரி, ஏன் எனக்கு உயிர்ப்பிச்சை தந்தாய். நான் கொடியவன், தீயவன். உன்னை மிருகமாக அடித்தேன்; நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயிலும் கடையன். ஏன் இந்த நாய்க்கு உதவினய்?' வார்த்தைகள் முடியவில்லை. -
சாமிநாதனுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெரு கிற்று; கரை புரண்டு வழிந்தது. அவனுடைய கரங்களைப்

Page 31
46 தண்ணீரூம் கண்ணீரும்
பற்றிக்கொண்டு, 'சொல்லு பண்டாரி சொல்லு' என்று கெஞ்சாக் குறையாகக் கேட்டான்.
பண்டாரியிடம் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. மிகவும் தெளிவான குரலில் அவன் அமைதியாகச் சொன்னன் : "நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழி லாளிகள்'
அந்தக் காட்சியைப் பார்த்து நின்ற நர்ஸின் கண்களிலே
dial-. . . . . .
11-9-1955.

செய்தி வேட்டை
காக்காய் பிடிப்பது ஒரு கலையென்றல், கயிறு திரிப் பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட கலை மட்டுமல்ல, தொழிலும்கூட. Ar
நித்தியலிங்கம் ஒரு நிருபர். தினசரிப் பத்திரிகை யொன்றில் விசேஷச் செய்தி நிருபர். பங்குனி மாதத்துத் தாரை நீராக்கும் மதிய வெயிலில் பட்டணத்துத் தெருக் களில் இரண்டே இரண்டு ஜீவன்களைத்தான் பார்த்திருக் கிறேன். ஒன்று தெருசுற்றிப் பொறுக்கும் சொறி நாய். மற்றது, அதையும் வேகத்தில் தோற்கடிக்கும் சாட்சாத் நித்தியலிங்கம்.
பங்குனி மாதத்துக் கொடுவெயிலாக இருந்தாலென்ன, கார்த்திகை மாதத்துக் கொட்டும் மழையாக இருந்தா லென்ன, வீட்டில் அடைப்பட்டுக் கிடக்காது, தெருக்களையே தனது திருவிடமாக்கிய மகாபிரபு அவர், நூற்கட்டை யைத் தையல் இயந்திரத்தில் போட்டுத் தைக்கத் தொடங் கினல் அது ஸ்வ்வளவு வேகமாகச் சுழலத் தொடங்குமோ, அவ்வளவு சுறுச்றுப்புடன் பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி

Page 32
48 தண்ணீரும் கண்ணீரும்
வலம் வருவார், நிருபர் நித்தியலிங்கம். அவரைப் போலத் தம் தொழிலிலே கண்ணும் கருத்துமாக இருப்பவரைக் காண்பது வெகு துர்லபம். செய்தி தம்மைத் தேடி வரட் டுமே என்ற மண்டைக் கனம் பிடித்த மனுேபாவம் அவ ருக்குக் கிடையாது. தனது தொழிலை அங்குலம், காலம் கணக்கிலும், ரூபா சதத்திலும் கணக்கிடுபவரல்ல. વિદ્રો). அபூர்வச் செய்திகளைச் சேகரிக்கும் பொழுது முதற் பிரச வத்தில் வெற்றியீட்டிய இளந்தாயின் பெருமிதம் அவரு டைய முகத்தில் பொங்கும். கிட்டாத இன்பமே தனது ஊற்றுப் பேணுவுக்குள் புகுந்துவிட்டதாக இன்புறுவார். சில ரகமான செய்திகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. அம்மாதிரிச் செய்திகளைச் சேகரிப்பதில் அவர் தன்னையே மறந்து விடுவார். சில செய்திகளைச் சேகரிப்பதற்கு அய ராது சலியாது உழைப்பவர்.
பார்த்தனுக் கென்றே படைக்கப்பட்ட காண்டிபத் தைப் போல, அவருக்கென்றே படைக்கப்பட்டதாகத் தோன்றும் அவருடைய பிரசித்தி பெற்ற உலக்கை ஊற்றுப் பேனவாற் சுடச்சுடச் செய்திகளை விறுவிறு என்று எழுதும்பொழுது, அவருடைய முகத்தின் பாவங்களையும், கோணங்களையும், அசைவுகளையும் வைத்தே அந்தச் செய்தி யினை ஒருவாறு நாம் வாசித்து விடலாம். } ・ぎ- நித்தியலிங்கத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆணுல் இவர்தான் நிருபர் நித்தியலிங்கம் என்பதை நீங்கள் அறியத் தவறியிருக்கலாம். அவரை இன்னும் அடையாளம் கண்டு பிடிக்காதவர்கள், பட்டணத்து வீதியை ஒரு தடவை வலம் வந்து விடுவீர்களேயானல், இவர்தான் நித்தியலிங்கம் என்பதைக் கண்டுவிடுவீர்கள். ·
கையில் தொங்கிக் கொண்டிருக்கும் மான்மார்க் குடை இடது தோளில் ஏகாவடம் விட்டிருக்கும் பரமாஸ் சால்வை; அதே பக்கத்துக் கமக்கட்டில் குந்தியிருக்கும் ஒரு பைல் அதை நிறைமாதப் பிள்ஜளத்தாச்சியாக்கும் காகிதக் கட்டு கள்; நெஞ்சப்பையில் கொலுவீற்றிருக்கும் உலக்கை மாடல்

செய்தி வேட்டை 49
பாக்கர் பேனு; கால்களில் "கிறீச்கிறீச் சென்று ஸ்சையிடும்
செருப்புகள்:-இப்படியான அலங்காரங்களுடன் ஒருவரை நீங்கள் வீதியில் பார்த்து விடுவீர்களேயானல், அவர்தான் நித்தியலிங்கம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். உங்க களுடைய ஊகம் நூற்றுக்கு நூறு சரியாகத்தானிருக்கும்.
அன்று அவருடைய உற்சாகம் குன்றியது. சாதாரண மாக அவர் பொறுமையில் சகாராப் பாலைவனத்தில் பிர யாணம் செய்யும் ஒட்டகத்தைப் போன்றவர். எத்தனை நாட்களென்றலும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்து, விடக் கூடியவர். அத்தகைய பொறுமைசாலி. ஆனல்
இன்று ?--
கிடைக்காமலிருப்பது உணவும் தண்ணிருமல்ல; செய்தி! பல நாட்களாகக் காய்ச்சலில் அடிபட்டவன் ஒரு கவள்ம் சோற்றை எண்ணி யெண்ணி எவ்வளவு ஆவல் படுவானே, அவ்வளவு ஆவல் நிறைந்த வேகத்துடன் ஒரு செய்திக்காக, ஒரேயொரு செய்திக்காக-நிருபர் நித்தியலிங்கம் ஆலாய்ப் பறந்தார்; ஆவலாய்த் துடிதுடித்தார். அவரது காதுகள் ஒரேயொரு செய்தியைக் காதாரக் கேட்டுவிடக் குறுகுறுத் தன; அவரது வலது கைவிரல்களோ அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் உடனே எழுதிவிட வேண்டுமென்று துடிதுடித்தன.
ஆனல், அந்தப் பாழாய்ப் போன செய்தி மட்டும் அவர் முன்னல் தலைகாட்டவே பயப்பட்டது; எங்கோ ஒரு மூலை யிற்போய்ப் பதுங்கிக் கொண்டு கண்ணுமூஞ்சி காட்டியது! விடாக்கண்டர் பரம்பரையைச் சேர்ந்த நமது நிருபர் நித்தியலிங்கம் அவர்கள் அந்தச் செய்தியை எப்படியாவது சுருட்டியே தீரவேண்டுமென்ற வைராக்கியத்துடன் அவசர அவசரமாக ஒரு வீதியில் நடந்து கொ ண்டிருந்தார். எங்கேயோ சிக்கித் தவித்துக் கொண்டிருந்த செய்தியின்மீது மணிம் புதைந்தது. உலகை மறந்தார். பின்னல் "ஹார்ன்" சப்தம்தான் அவரை நிதர்சன உலகிற்குக் கொண்டு வந்தது.

Page 33
- 50 தண்ணீரும் கண்ணீரும்
திரும்பிப் பார்த்தார்; கானுக்குள் பாய்ந்து விலகினர். மயி ரிழையில் அவருக்கு நீண்ட ஆயுளைக் காரண்டி' பண்ணும் ஜாதகத்தின் உண்மை நிலைத்தது! பஸ் டிரைவர் நிருபரை ஒரு தடவை முறைத்துப் பார்த்துவிட்டு, பஸ்ஸைச் செலுத்
அவனுடைய முறைப்பு நிருபரை ஒன்றும் செய்துவிட வில்லை. இந்த முறைப்புகளெல்லாம் அவருடைய தொழிற் துறையில் சகஜம்.
பஸ்ஸைப் பார்த்தது, தான் அதில் பட்டணத்திற்கு வந்தபொழுது நடந்த சம்பவமொன்று மனதில் நிழலாட்ட
பஸ்ஸில் இரு கிழவர்கள் சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
" என்ன காணும் ? உமக்கொரு சங்கதி தெரியுமா ? அந்த முத்துத் தம்பீண்டை மகள்-அவள்தான் சீனியர் சூனியர் பாஸ்பண்ணி வீட்டோடு இருந்த இரண்டாம் பொடிச்சி, ஒண்டும் படிக்காத ஒரு காவாலிப் பொடியனுேடை முந்தநாள் ஒடீட்டாளாம். போலிஸார் தேடுகினம்.”
நிருபர் காதைத் தீட்டிக் கொண்டார். கடலின் மேற் பரப்பைக் கொண்டு, அனுபவம் மிக்க் மாலுமி அதன் ஆழத்தை அறிந்து கொள்வது போல, இந்தச் சிறு செய்தி யைக் கேட்டதும், நிருபரின் கவனம் இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து அவர்கள்பால் திரும்பியது. கட்செவி அவருக்கு !
* இதென்ன காணும் புதினம் ? போன கிழமை ஒரு பதின்மூன்று வயதுப் பொட்டை முளைக்கைக்கு முன்னம்." மற்றவர் கதையை முடிப்பதற்கிடையில், 'காசை எடுங் கோ...' என்ற பஸ் கண்டக்டரின் குரல் கர்ண கடூரமாக ஒலித்தது.
அவர்களுடைய உரையாடல் அத்துடன் தடைப்பட்டது.

செய்தி வேட்டை 51
நிருபரைப் பொறுத்தவரை, " பெட்டிகட்டிப் போடக் கூடிய ஒரு முக்கிய செய்தி மண்ணுய்ப் போய்விட்டது.
GBgr {
நிருபருக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்தக் கண் டக்டர் மாத்திரம் ஒரு மேடைப் பேச்சாளராக இருந்தால் ? பேசாத பேச்செல்லாம் பேசினதாகப் போட்டு அவனுடைய மானத்தை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டியிருக்க மாட்டாரா என்ன ?-கூட்டத்தைச் சுண்டைக்காயாக்கி. ஒரு தடவை ஒரு பிரபலஸ்தருடைய கூட்டத்தை-பத்தா யிரம் பேர் கொண்ட கூட்டத்தை-பத்துப் பேர்கூடிய கூட்டமாகச் செய்தி பிரசுரித்து அவமானப்படுத்தியதையும், பின்னர் அவருடைய கோபக் கொதிப்பை மூன்று பூஜ்யங் களை அச்சரக்கன் விழுங்கியதென்று சாதித்துச் சமாதானப் படுத்தியதையும் நினைத்துப் பார்த்தார்.
அவனுடைய தலை தப்பியது! அவன் பேச்சாளனல்ல, வெறும் கண்டக்டர்.
அவர் நடந்த கொண்டே இருந்தார்.
அவருடைய மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய் தது. கிழங்கள் பேசிக் கொண்ட செய்திக்குச் சிறிது தலையும் வாலும் ஒட்டிக் கயிறு திரித்துவிட்டால் என்ன என்று யோசித்தார். அந்த யோசனையை மறுகணமே உதறித் தள்ளினர். ஏனெனில், இப்படிக் கயிறு திரிப்பதில் பல வகையான சங்கடங்களிருப்பதை அவர் உணருவார். அணு பவரீதியாகவே அந்தச் சங்கடத்தினல், வேலை மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, முதுகிற்கு ஈரச் சாக்குக் கட்டிக் கொண்டு திரியவேண்டியிருந்தது.
இப்படிப் பல நினைவுகளில் மிதந்து நடந்துகொண் டிருந்த நித்தியலிங்கம் ஒரு நாற் சந்திக்கு வந்துவிட் டார். அதன் பக்கத்தில் நின்ற அரசமரத்தைச் சுற்றி லும் ஜனக் கும்பல்; சிறிது ஆரவாரம். அவருடைய மனதில்

Page 34
52 தண்ணிரும் கண்ணிரும்
மகிழ்ச்சி மின்னல் கீற்றென்னப் பளிச்சிட்டது. நம்பிக்கை யுடன் கூட்டத்தை நெருங்கினர். எட்டிப் பார்த்தார். குர லொன்று கணிரென்று ஒலித்தது : . . .
"ஐயா, தருமவான்களே! மந்திர மில்லை; தந்திரமில்லை; மாயமில்லை! ஜாலமில்லை;--எல்லாம் வவுத்துக்காகத்தரன் ஐயா செய்யிறது, எல்லாம் வவுத்துக்காகத்தான்..!"
செப்படி வித்தைக்காரன் வயிற்றைக் காட்டி, வாயைப் பிளந்து, வார்த்தை ஜாலம் செய்து கொண்டு நின்றன். அடுத்த நிமிஷம் நிருபர் நித்தியலிங்கத்தை அங்கு காண வில்லை! செய்தி சேகரம் செய்ய வந்த அவர், இதைக் கேட்டுக் கொண்டு நிற்பதற்கு, அவருக்குப் பைத்திய மொன்றும் பிடித்துவிடவில்லை.
மீண்டும் நடந்துகொண்டே இருந்தார்.
சென்ற வாரம் நடைபெற்ற ஒருசம்பவம், அவருடைய மனதில் குமிழ்விட்டது. .
இவருக்கு வேண்டியவர்களான இரு பகுதியினர் தங்கள் தங்கள் பகுதியில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், கூட்டம் கூடி நிருபருக்கு 'அவசியம் வரவேண்டும்' என்ற குறிப்புடன் அழைப்பும் அனுப்பிவிட்டனர்.
அவர்களுடைய கூட்டத்திற்குப் போனல், இவர் களுக்குக் கோபம்; இவர்களுடைய கூட்டத்திற்குப் போனல் அவர்களுக்குக் கோபம். எந்தக் கோபத்தையும் சம்பாதிக்க விரும்பாமல், இரு கூட்டத்திற்குமே போக வில்லை. பலன் ?
இரு பகுதியினரின் கோபத்தையும் சம்பாதித்து விட் டார்! பாருங்கள் அவருடைய கஷ்டங்களை. செய்திக்குச் செய்தி நட்டம்; நட்பிற்கு நட்பு நட்டம்; காசுக்கு 母fTö......- எதிரே வந்த ஒரு ஹோட்டலின் முகப்பாக வீற்றிருந்த பெரிய கடிகாரமொன்று நான்கு அடித்து ஓய்ந்தது. அதன் ஓசையைக் கேட்ட நிருபரின் நெஞ்சம் துணுக்குற்றது.

செய்தி வேட்டை あg
தபால் கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு நெஞ்சை உறுத்தியது. இருப்பினும், ரெயில்வே தபாலில் அனுப்பி விடலாம் என்ற நினைவு மனதைச் சிறிது சமாதானப் படுத்தியது.
நித்தியலிங்கம் பரபரப்புடன் நடந்தார்; தீவிரமான வேகம் பீஜப்பூர் வட்டக் கோபுரத்தில் சிக்கிக்கொண்ட ஒலியைப் போன்று, ஒரேயொரு செய்தி என்பது எதி ரொலித்துக் கொண்டே இருந்தது. ஆங்கில நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் சிருஷ்டித்த நாடக பாத்திரமொன்று ஒரு குதிரை; ஒரேயொரு குதிரை, ஒரு சாம்ராஜ்யத்திற்காக ஒரேயொரு குதிரை!” என்று கதறியதாமே, அதேபோல நித்தியலிங்கம் நடுத்தெருவில் நடந்தபடி மனக்குரலில் முணு முணுத்தார்."ஒரு செய்தி.ஒரு செய்தி.ஒரேயொரு செய்தி!'. *
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் முட்டி மோதும் எல்லைக் கோட்டின் எல்லையிலே இன்று அவருடைய மனம் சஞ்சலப்பட்டது. இருப்பினும் நிருபருக்குரிய 'அந்தத் தனிப்பெரும் பண்பாடு' அவரை முற்முகக் கைக்கழுவி விடவில்லை; பொறுமையை அவர் கைகழுவி விடவில்லை. பாலைவனத்து ஒட்டகத்தைப்போல, அல்லது குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட குணவதியான மனைவி தன் மன உணர்ச்சிகளை மனதிற்குள்ளேயே புதைத்துப் பொறுமை காட்டுவதுபோல, நிருபரான நமது நித்தியலிங்கமும்
'கணேஷ் சங்கதி தெரியுமா?"
us
“என்ன மலைக்கிருய்? விஷயம் தெரியாதா?”
இரு கல்லூரி மாணவர்கள், நிருபருக்குச் சற்று முன் பாகப் பேசிக்கொண்டே நடந்தார்கள். அவர் தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். வேகமாக நடந்து, பின்னர், வேகத்தைத் தளரவிட்டு, அவர்களுக்குப் பின்னல் அசை நடை போட்டார்.

Page 35
54 தண்ணீரும் கண்ணிரும்
'விஷயத்தைச் சொல்லாமல் என்ன அளக்கிருய்?" 'யாரோ ஒரு சாமியாராம். கட்ற்கரைப் பக்கம் உண்ணுவிரதம் இருக்கிருராம். போய்ப் பார்ப்பமா?"
'உண்ணுவிரதக்காரனைப் பார்ப்பதற்கு, நாம் முதலில் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.”
இருவரும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தனர். நித்தியலிங்கம் துள்ளிக் குதித்தார். பாதையில் கிடந்த கல்லொன்று அவருடைய பெருவிரலைப்பதம்பார்த்துவிட்டது. அதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. மனதிற்குள் “சபாஷ்' போட்டார். ஜய ஸ்தம்பம் ஒரு முழ தூரத்தில் இருப்பதாகப் படுகிறது. பெருமூச்சொன்று அவரிடமிருந்து விடை பெறுகிறது. அப்பாடா, மனப் பாரம் குறைகிறது. கடற்கரையை நோக்கி மிக விரைவாக நடையைக் கட்டினர். 姆
கடற்கரையில், பயபக்தியுடன் அந்தத் தாடி வளர்த்த சாமியாருக்கு முன்னிலையில் நின்றுகொண்டிருந்த நிருபர் நித்தியலிங்கம் அவர்களுக்குத் தேகமெல்லாம் புல்லரிப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மகிழ்ச்சி கரை புரண்டோடியது. அவர், ஆஸ்தீகப் பரம்பரையில் வந்த பக்திமான். ஆயினும், அந்நேரம் பக்தி உணர்ச்சியைக் கடமை உணர்ச்சி விழுங்கி நின்றது. "எவ்வளவு பெரிய செய்தி! நாளைக்கு மறுதினம் நாலு காலம் தலைப்பில் முன்பக்கத்தில் வெளி வரவேண்டிய பிரமாதமான செய்தியல்லவா இது?- இந்த எண்ணம் மனமெனும் புழுதியில் வேரூன்றித் தளைக்க, ஒரு செய்திக்காக அன்றெல்லாம் அவர் பட்டபாடு களெல்லாம் வெறும் துச்சமாகத் தோன்றியது.
சுற்றுமுற்றும் பார்த்தார். காகக் கூட்டத்தைப் போன்று குழுமியிருக்கக்கூடிய சக பத்திரிகை நிருபர் யாரை யுமே காணவில்லை. "மற்றவர்களுக்கு நான் முந்திவிட்டேன்" என்ற பூரிப்பு மனதில் நிறைந்தது.

செய்தி வேட்டை 55
பவ்வியத்துடன் பேட்டியை ஆரம்பித்தார், நிருபர்.
"சாமியார்! தாங்கள் எந்தத் தேசீயச் சிக்கலைத் தீர்ப் பதற்கு உண்ணு நோன்பு இருக்கின்றீர்கள்? அதைத் தயவு செய்து தெரிவிக்க முடியுமா?’ என்ற வினயகர் சுழியுடன் பேட்டியை ஆரம்பித்தார்.
பதிலில்லை. திரும்பவும், அதே கேள்வியைத் தொடுத்தார்.
மெளனம்.
“ஒகோ! ஒருவேளை உண்ணுவிரதத்துடன், மெளன விரத மும் அனுஷ்டிக்கின்றரோ? என்ற நினைவு தலைகாட்டியது.
'பை'லிலுள்ள கடுதாசியொன்றினை உருவி எடுத்து, தன் னுடைய பிரசித்தி பெற்ற பேனவால் ஏதோ கிறுக்கினர். தான் எழுதியதை வாசித்துப் பார்த்தார். "நானெரு பத்தி ரிக்ை நிருபர். தங்களைப் பேட்டிகாண வந்திருக்கிறேன். தாங்கள் எதற்காக உண்ணுவிரதம் இருக்கின்றீர்கள்? எந்தத் தேசீய மொழியை இருபத்திநான்கு மணிநேரத்தில் அரசாங்க மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்பதற்காக உண்ணுவிரத மிருக்கின்றீர்கள்? தமிழா? சிங்களமா? அல்லது எந்த இனத்தின் உரிமையைக் காப்பாற்ற உண்ணுவிரதம் இருக்கின்றீர்கள்? சாகும்வரை உண்ணுவிரதம் இருப்பது தான் தங்கள் இலட்சியமா? அல்லது.தீயவு செய்து இதற் குப் பதில் எழுதித் தாருங்கள். -
அதைச் சாமியாரிடம் மிகவும் விநயமாகச் சேர்த்தார். சாமியார்.அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அலட்சிய மாக மறுபக்கம் திரும்பிக்கொண்டார்.
நிரூபருக்கு அவமானமாக இருந்தது. அவரை அப்படி அலட்சியப்படுத்திய முதல் மனிதர் அந்தச் சாமியார்தான்
நிருபர் போர்த் தந்திரத்தை மாற்றின்ர். உரத்த குரலில் "சாமியாரே! நீங்கள் எதற்காக, எந்த நோக்கத்திற்

Page 36
56 தண்ணீரும் தண்ணீரும்
காக உண்ணுவிரதம் இருக்கின்றீர்கள்? தயவு செய்து பெரிய மனதுடன் அதை எழுதித் தாருங்கள் !”
"அட சரிதான், சும்மா தொந்தரவு செய்யாமல் போங் காணும். இரண்டு நாளாச் சாப்பாடு கிடைக்கவில்லை. பசி காதை அடைக்கிறது. சாப்பாடு கிடைக்கிற வழியையும் காணுேம். சும்மா காலாற இங்கே வந்து உட்காந்தால், யாரோ புரளி விடுருன். உண்ணுவிரதமாம் - உண்ணு விரதம் ?" என்று சீறினர், சாமியார்.
நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. இருப்பினும் சிந்தனை சுறுசுறுப்பாக வேலை செய்தது. 'பசியைப் போக்க உண்ணுவிரதமிருக்கும் விந்தைச் சாமியார்'-தலைப்பு வந்து விட்டது. தலையும் காலும் முளைத்து ஒரு செய்தி அவருடைய மனதிலே கயிறு திரிக்கப் படுகின்றது.
18-9-1955

காலத்தால் சாகாதது
நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நம்மீது-இலங்கை மக்கள்மீது-ஆட்சிசெலுத்தியஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு. இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள்தான் விதானமார்கள். இந்தத் திருக் கூட்டத்தினர், இப்பொழுது பல்லிழந்த பாம்புகளைப்போல தங்கள் அதிகாரங்கள் பலவற்றை இழந்திருப்பினும், இந்த உண்மையை உணராது விதானமார் பரம்பரையில் உதித்து, மமதையுடன் வாழ்பவர்தான் மயில்வாகனம் அவர்கள்.
"அவருடைய விருத்தாந்தங்களையெல்லாம் எழுதிமுடிப். பதற்குள், ஒரு பாரதமே பாடி முடித்துவிடலாம்.அவற்றை நான் விஸ்தரிக்கப் போகும் உத்தேசமில்லையாயினும், அவரை மயில்வாகனம் என்று மொட்டையாக அறி முகப் படுத்தியது தவறென உணருகின்றேன். அவரை நம் மைப் போன்றவர்கள் "ஐயா' என்றழைக்கக் கூடாது. *னிதானையார்’ என்றும் கூப்பிடக்கூடாது. “கமக்காரர்' என்ருல் உச்சி குளிர்ந்து விடுவார். அதிலும் "பெரிய கமக் காரர்' என்று யாராவது அழைத்துவிட்டாலோ. இத்த னைக்கும் அவருக்குக் கமமோ, ஊரில் வயல்களோ இல்லை. அவருடைய இந்த அபிலாஷைக்கு ஒரு அடிப்படைக் காரண

Page 37
58 தண்ணீரும் கண்ணிரும்
முண்டு. மிக உயர்ந்த குடிப்பிறப்புக்கு அவரது வட்டாரத் தில்-அயலில்-பெரியகமக்காரர்' என்ற அடை மொழி யுண்டு.
அவருடைய ஆசையைக் கெடுப்பானேன்? அவர் பெரிய “மனுஷன்"-"பெரிய கமக்காரன்'!
இந்திய நாட்டிலிருந்து, முதன்முதல் வந்து யாழ்ப் பாணக் குடாநாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் கால் வைத்த சிங்க மாப்பாணர் பரம்பரைதான் அவருடைய வம்சம். இப்படி அவர்கூட அடிக்கடி சொல்லிக்கொள்வார். அதைச் சொல்வதில் அவருக்கு வெகு பெருமை. சாயம் போன சரிகை வேஷ்டி, நீண்டு, துடைப்பத்தின் முனையை ஞாபகப்படுத்தும் மீசை, பரந்த நெற்றி, அதன் கரை களுக்கு எல்லையிட்டனவாகத் திகழும் விபூதிப் பூச்சு அதிற்றுலங்கும் குங்குமத் திலகம்; திடகாத்திரமான ஆகி ருதி, நன்ருகப் பழுத்த செம்பாட்டு மாம்பழத்தைப்போன்ற தேகக் காந்தி; உயர்சாதி என்ற இறுமாப்பினை வெளிப்படுத் தும் பார்வை; ஏகவசனத்தில் பேசும் பேச்சு -இவற்றின் மொத்த உருவந்தான் நமது விதானையார் அவர்கள்.
காலைக் கடன்களை முடித்து, சைவாசாரப்படி வயிற்றை நிரப்பிக் கொண்டார். சிவப்பழமாகத் தோன்றி, தொந் தியை இலேசாகத் தடவிக்கொண்டே, தாம்பூலம் தரித்துச் சுவைத்தார். அந்தச் சுவையுடன் ஒன்றி, மதிய போஜனத் திற்கான மரக்கறிப் பட்டியலை, மனைவியிடம் விஸ்தரித்துக் கொண்டிருக்கும்பொழுது "ஐயா.ஐயா...' என்ற குரல் அவர் செவிகளில் விழுந்தது.
“யாரது'-என்று கேட்ட வண்ணம் வெளிவிருந் தைக்கு வந்தார்.
'நான்தான்'-வந்தவனின் பதில்.
'நீ யெண்டார் ஆர்? நீதான் பிரதம மந்திரியா? நானம். நான்! நீ ஆர்?’

காலத்தால் சாகாதது 59
" நான்தானுங்க, பொன்னுத்துரை. y A
“இருக்கிறது?’ “பலாலி ருேட், மதவடி.
p
வந்தவனை, ஊடறுத்து, நோட்டமிட்டுப் பார்க்கிருர், பின்னர், எதையோ நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டவரைப் போன்று திருப்தி அடைந்தார்.
'அம்,நீ மக்கிக்கிடங்கடிப்பொக்கன் கணபதின்ரை மகன் பொன்னனல்ல?-என்னடா செய்யுருய்?"
* メ
"படிக்கிறேனுங்க. Ko
பேச்சு விதானையாருக்கு சுவாரஸ்யப்படவில்லை. "படிக் குதுகளாம், படிக்குதுகள். பள்ளுப் பறையும், நான்கு பதி னெட்டுச் சாதியும் படிச்சா அப்புறம் படிப்புக்கு என்ன மதிப்பு? இந்தக் கட்டலேபோற சாதிகள் படிக்கத் தொடங்கி பல்லோ, நம்ம ஜாதிப் பொடியங்களுக்கும் வேலை கிடைக்கு தில்லை' என்று கல்வி, பொருளாதாரத் தத்துவங்களில் நுனிப் புல் மேய்ந்துவிட்டு, காலம் கலிகாலம். இந்தக் கீழ்சாதிக ளெல்லாம் ராசாவெண்டும், துரையெண்டுமல்லோ பெயர் வைக்கத் தொடங்கீட்டுதுகள். அந்தக் காலத்திலே, இப்படி யெல்லாம் பேர் வைக்க நாம் விட்டோமா? ஆறுமுகம் என்ருல் "ஆறன்" என்றும், செல்வராஜன் என்றல், *செல் லன்' என்றும், பொன்னுத்துரை என்முல் 'பொன்னன்' என்றும்அல்லவா பெயர்கள்கத்திரிப்பு வேலைகள்நடத்தினேம். பிறப்புப் பதிவெல்லாம் அப்ப எங்களோடை.இப்ப?. . ஆயிரம்தான் செய்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக் காரன்தான்! அவன்ரை ஆட்சியிலை எங்களுக்கிருந்த சுதந் திரம் அதிகாரம்இப்ப இருக்குதா?’ என்று சிந்திக்கலானர். வந்தவன், மீண்டு மொருமுறை "ஐயா!' என்று குரல் கொடுத்து அவருடைய மனதைக் அக்கற்பன உலகத்தினின் றும் இறக்கிவைத்தான்.
"சரி. என்னத்துக்கு வந்தனி?”

Page 38
60 தண்ணீரும் கண்ணீரும்
"போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேரலா மென்று நினைக்கிறேன். “இன்டர்வியூக்குப் போய்வந்தனன். அனேகமாக என்னை எடுப்பார்கள். என்னைப் பற்றிப் போலீஸ் பகுதியினர் ஏதாவது நற்சாட்சிப் பத்திரமோ, தகவலோ எடுக்க வந்தால், நாலு நல்ல வார்த்தைகளாகச் சொல்லுங்கள். அவ்வளவும் போதும்.”
போலீஸ் உத்தியோகத்தில் சேருபவனைப் பற்றியும், அவனுடைய மூதாதையர்-இனத்தவர்கள் ஆகியோரின் நடத்தையைப் பற்றியும், போலீஸ் பகுதியினர் விதான மாரிடம் விசாரித்து அறிவது என்ற சம்பிரதாயம் இன்றும் இருக்கின்றது. கடவுள் வரங் கொடுத்தும், அதைப் பெறு வதற்குப் பூசாரியை வணங்கி நிற்பதைப்போன்ற விவகாரம் இது. இருப்பினும், அவனுடைய உத்தியோகம் இந்த விதானையாரின் 'நாலு நல்ல வார்த்தைகளில் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
p
"சரி, சரி. நீ போ. எல்லாம் பார்க்கலாம்"
ஒரு நளவன்-தாழ்ந்த சாதிக்காரன்-சப் இன்ஸ்பெக்ட ராக நாளைக்குத் தன் வீட்டிற்கே வந்து, உள் வீட்டில் நாற் காலியில் அமர்ந்துகொண்டு, அதிகாரம் செலுத்தும் காட்சி அவருடைய மனதில் தோன்றி, அவரை என்னவோ செய்தது. தீயைத் தீண்டிவிட்டவரைப்போன்று அவருடைய உள்ளம் கொதியாய்க் கொதித்தது.
“சரி. ஏன் நிற்கிருய்? எல்லாத்தையும் நான் பாத்துக் கிறன்” என்ருர்,
அவுனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.
நம்பிக்கை பிறக்காததற்குக் காரணமுண்டு. நெருஞ்சி முள்ளான அச்சம்பவம் அவன் உள்ளத்தில் மறுதடவையும் வலம் வந்தது.

காலத்தால் சாகாதது
சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் திடீரென்று அவனுடைய சகோதரியின் குழந்தையொன்றிற்கு வலிப்புக் குணம் ஏற்பட்டது. மணியோ பத்து. . "உடனடியாகக் குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனல்தான் ஏதாவது சுகம் கிடைக்கும்' என்று List St Luiflurrifuntri சொல்லிவிட்டார். குழந்தையையும் தாயையும் காரிலே கொண்டுபோனல்தான் நல்லது. கார் தேடிப் பொன்னுத் துரை அலைந்தான். சமயத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் விதானையார் கள்ளப் பெயரில் கார் ஒன்று வைத்திருந்து வாடகைக்கு விடுவது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவ்ரிடம், அவனுடைய பகுதி மக்கள் கார் கேட்கப் பயம். ஆனல் அந்தக் குழந்தையின் நிலை அவனுக்குத் துணிச்சலை அளித்தது.
விதானையாரிடம் கரை வாடகைக்கு விடும்படி கெஞ்சிக் கேட்டான். அவருடைய மனம் மசியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஏதோவெல்லாம் நொண்டிச் சாக்குகள் சொல்லித் தட்டிக் கழித்தார். அவனுடைய கெஞ்சுதல் அதிகரித்தது. இறுதியாக விதானையார் அழுத்தம் திருத்தமாகச் சொன் னர்: "கண்ட நீண்ட சாதிக்கெல்லாம் என்ரை கார் ஓடாது!” m
அப்புறம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தாயைப் பிடி நடையாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக நேர்ந்தது. குழந்தை எப்படியோ தப்பிப் பிழைத்தது. அன்று ஒரு குழந்தையின் உயிருக்குக் கருணை காட்டாத விதானையார் இன்று தன் உத்தியோகத்திற்குக் கருணை சாட்டுவார் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை.
சிரித்த முகம்; மலர்ந்த மனம்; இனிய சொல்; பணிவன்பு மிக்க நடை இதமான பண்பு. படிப்பில் வெகுசுட்டி; விளை யாட்டில் புலி; நல்ல உடற்கட்டு. உத்தியோகத்திற்குத் தேவையான சகல தகுதிகளும் இருந்தன. இருப்பினும்ஜாதி? M

Page 39
63 தண்ணிரும் கண்ணிரும்
என்ன இருந்தும் என்ன? அவன் தலையைக் குனிந்தபடி நடந்தான். அமெரிக்க நாட்டுப் பிரபல விளையாட்டு வீரர் களான நீக்கிரோ வாலிபர்களின் மனுேபாவத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.
பொன்னுத்துரை பயந்தபடியே நடந்தது.
விதானையார் தனது சகுனித் திறமையைக் காட்டிவிட் டார். போலீஸ் இலாகா பொன்னுத்துரையைப் பற்றிக் கேட்டிருந்த குறிப்பில் பின்வருமாறு எழுதினர்:
‘இவனுடைய குடும்பம் சண்டியர்கள் பரம்பரை. இரண்டு தலைமுறைக்கு முந்தி இவன் குடும்பத்தவர்கள் இருவர் ஒரு கொலிைக் கேஸில் சம்பந்தப்பட்டிருந்தனர். இன்றும் அவனுடைய சொந்தக்காரர் இருவர் ரெளடிகள் என்றே கணக்கிடப் படுகின்றனர். இவனைப்பற்றியும் ஊரில் நல்ல பெயர் கிடையாது. போலீஸ் உத்தியோகத் திற்கு எள்ளளவேனும் தகுதியற்றவன்'
ஒரே கல்லில் இரண்டு பழங்களை வீழ்த்திவிட்டார். ஒன்று தாழ்ந்த சாதிக்காரனுக்குச் சரியான பாடம் படிப் பித்தோம் என்ற நிறைவு; மற்றது, இந்த ‘நள்ளு பள்ளு"களை இப்படிப் பின்னுக்கு வைப்பதினுல், உயர் சாதிப் பொடியன் களுக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்துவிடும் என்ற பெருமை.
வேலை தேடி அலைந்தான் பொன்னுத்துரை. சில வியா பாரக் கடைகளுக்கும் வேலைக்காக ஏறி இறங்கினன். பல இடங்களில் சாதி குறுக்கிட்டது; சில இடங்களில் படிப்பும் குறுக்கிட்டது. அவன், வேலையற்றவணுகி, வேலைதேடுவதே வேலையாகி, அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது.
ஒரு நாள். வீதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது
திடீரென்று பலர் சேர்ந்து கூச்சலிடும் குரல் அவன் காதில் விழுந்தது. கிராமங்களில் வீடுகள் தீப்பற்றிக்

காலத்தால் சாகாதது
கொண்டால் பலர் சேர்ந்து கூக்குரலிடுவார்களே, அதைப் போன்ற அலறல். அதை அவன் உற்றுக் கேட்டான்.
சிலர் சமீபத்திலுள்ள வீட்டை நோக்கி ஓடிக் கொண்டி ருந்தனர். கூர்ந்து நோக்கினன். அது விதானையாரின் வீடு. மனம் துணுக்குற்றது. அவரை நினைத்த பொழுது அவனு டைய மனம் வெறுப்படைந்தது. அவனுடைய மனிதத் தன் மையின் மீதே கீறல் விழச் செய்த பயங்கர ராட்சதப் பிறவி யாக அவர் தோன்றினர். -
‘நமக்கென்ன' என்ற எண்ணத்துடன் நடையைக் கட்ட நினைத்தான். கூக்குரல் வலுவடைந்தது. ஏதோ ஒன்றுகண்ணுக்குத் தெரியாத மனச்சாட்சியின் கரங்கள்-அவனைத் தடுத்து நிறுத்தின. போக மனம் வரவில்லை. அலறல் கேட்ட திசையை நோக்கி விரைந்தான். விதானையார் வீட்டுப் படலையடியில் நின்று கிடுகு வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தான்.
கிணற்றைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருந்தனர். சில பெண்கள் தலையில் கை வைத்த வண்ணம் ஒலமிட்டுக் கொண் டிருந்தனர். விதானையாரின் மகள்-குமர்ப்பிள்ளை-கால் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து விட்டாளாம். பாவம், அடுத்த கிழமைதான் அவளுக்குக் கல்யாணம் நடக்கவும் ஏற்பாடாகி இருந்தது.
கூடிநின்ற ஆண்களில் சில வீரத் தமிழர்கள் அரசியல் வாதிகளைப் போலவே சும்மா 'ஆய் ஊய்' என்ருர்களே தவிர ஒருவரும் கிணற்றுக்குள் இறங்க முயற்சிக்கவுமில்லை; தயாரா கவுமில்லை. உயிர் ஒவ்வொருவனுக்கும் கரும்பாகப் பட்டது. அதனுல் பயப்பட்டார்கள். தந்தையான விதானையார் மயில் வாகனம் மட்டும் என்ன செய்வதென்று அறியாமல், உணர்ச்சிகள் இழந்து, கற்சிலையாக நின்றர். .
பொன்னுத்துரை, வீட்டு வளவிற்குள் நுழைந்தான்; கிணற்றை எட்டிப் பார்த்தான்.
மரணத்தின் கோரப் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்ட் வளைப்போல அந்தப் பெண் கிணற்றுக்குள் தத்தளிக்கிருள்

Page 40
6举 · தண்ணிரும் கண்ணிரும்
இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் அவளைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணருகின்றன். இறுதி முறையாக நீரின் மட்டத்திற்கு வந்து, நீருக்குள் அவளுடைய உடல் அமுங்கிக் கொண்டிருக்கின்றது.
அவன் விளைவைப் பற்றிச் சிந்திக்கவுமில்லை-கவலைப்பட்w மில்லை. அவனுடைய உள்ளத்தில் மின்னலைப் போன்ற ஒரு வேகம் பிறந்தது. துலாக்கொடியைப் பிடித்தபடி அவன் கிணற்றுக்குள் இறங்கிவிட்டான். 'ஆ' என்று வாயைப் பிஷரந் தனர், தங்களுடைய பிரமிப்பு நிலையிலிருந்து விடுபட்டவர் கள். அப்பொழுதுதான் தாங்களும் ஏதாவது செய்ய வேண் டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணை துலாக்கொடியின் நுனியில் கட்டப்பட்டிருந்த பெரிய வாளி யில் ஏற்றினன். அந்தர நிலையில் நீந்தியும், நீந்தாமலும் நின்றுகொண்டு, 'துலாக்கொடியை மூன்றுபேர் சேர்ந்து வெளியில் இழுங்கள்’ என்று சத்தமிட்டான். பின்னர் தானும் ஏறிக்கொண்டு.
வெகு சிரமத்துடன், சோர்ந்து மூர்ச்சை யடைந்திருந்த அந்தப் பெண்ணை, இளமையுடன் திரண்டுகிடந்த தனது கரங்களில் தாங்கியபடி, விதான பாரின் காலடியில் கிடத் தினன். அவன் தண்ணீர் சொட்டும் தனது கேசத்தினை, வலதுகை மணிக்கட்டின் கீழிருந்த உங்ளங்கையினுல் இழுத்து மேலே விட்டு விட்டு விதானையாரைப் பார்த்தான். அவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவரு டைய தேகம் சில்லிட்டது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. அவர் உதட்டில் ஒரு வகைத் துடிதுடிப்பு; உள்ளத்தில் தாங்க் முடியாத தவிப்பு: தேகத்தில் இனங்காண இயலாத பதை பதைப்பு.
இந்திய நாட்டிலிருந்து, முதன் முதல் வந்து யாழ்ப் பாணக் குடா நாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் காலடி வைத்த சிங்கமாப்பாணர் வம்சத்தில்வந்துதித்த விதானையார் மயில்வாகன்ம் அவர்கள், எமன் வாயில் இருந்து மீட்கப்

காலத்தால் சாகாதது 65
tull- மகளையும், அந்த "மக்கிக் கிடங்கடி தளப்பொடிய'னை யும் மாறி மாறிப் பார்த்தார். அவர் வாயே திறக்கவில்லை.
அவன் மெளனமாக நின்றன். பின்னர் குழுமி நின்ற கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு அவன் நடையைக் கட்டினன். அவனே அவர் தடுத்து நிறுத்தவில்லை; கூட்டத் தில் நின்ற எவரும் தடுத்து நிறுத்த வில்லை.
.அடுத்த நாள், விதானையார் வீட்டுக் கிணறு இறைக்கப் பட்டது.
I 0-10-1958

Page 41
தீர்க்கதரிசி
பாரிஸ்டர் பரநிருபசிங்கர் பாமரனுக மதிக்கப்பட்டார்.
நேற்றைக்கு இருந்த கெளரவம் ? அந்தஸ்து ? இராஜ நடை போட்ட மிடுக்கு? எல்லாம் ஒருசேர நொறுங்கி.
தாங்க இயலாத நெஞ்சக்குமுறல். பெரிய மனிதத் தனத்திற்கே எமதுரதுவனக விளங்கும் விழுக்காடு.
"சே ! என்ன வாழ்க்கை ?" நெஞ்சைப் பிளந்து வெளிக்கிளம்பும் வெறுப்பின் எதி ரொலி. இரண்டு பரம்பரை காலமாக, கொழும்பையே தான் பிறந்த திருவிடமாகக் கொண்ட அவருக்கு, அங்கேயே அப கீர்த்தி, அவமதிப்பு என்ருல் ?-
கொழும்பிலே-அல்லது இலங்கையிலே-பாரிஸ்டர் என்ற பட்டத்துடன் பலர்வாழலாம். ஆனல் அந்தக் கெளரவம்பரநிருபருக்கு இருந்த செல்வாக்கு-பாரிஸ்டர் என்றவிருதும் அவரும் இரண்டறக் கலந்த மாண்புமிக்க வாழ்க்கை-வேறு யாருக்கு அமைந்தது ? தொழிலில் அவரைப் போன்று கொடிகட்டிப் பறக்க விட்டவர் யார்? கொழும்பில் வாழ்ந்த ஏனைய அப்புக்காத்தர்களும், புரக்கதாசிகளும் அவருடைய புகழ் என்ற சூரிய வெளிச்சத்திற்கு முன், மின்மினிப் பூச்சிகள்.

தீர்க்கதரிசி 67
இன்று?%
எல்லாம் அஸ்தமித்து-எல்லாமே சுருங்கி-சூனியத்தி லும் சூன்யமான ஒரு நிலையில்.பரநிருபர் நிலைகுலைந்து விட்ார். விரக்தியின் விளிம்பிற்கு உந்தப் பட்டு, அவஸ் தைப்பட்டார். ‘துரை 'மாத்தயா" "ஸேர்" என்றெல்லாம் கெளரவம் கொடுத்த அங்காடிப் பதர்கள்கூட, இன்று “நீ, நான்' என்று பேசும் அளவுக்கு அவருடைய பெருமைகள் இலந்தைப்பழப் பரிமாணமாகிவிட்டது. 'நீர்விழ்ச்சியின் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்த அவர் நெஞ்சைக் கலங்கிய குளமாக்கியது எது?
இனக்கலவரத்தின் தீ நாக்குகள் இன்னமும் அவர் மன தைச் சுட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்களச் சமூகத் திற்கு-அவர் அகராதியில் "மோடையச் சிங்களவருக்கு அடங்கி யொடுங்கி வாழ்வதா? அழகாபுரிவேந்தன் குசேலனி டம் பிச்சையெடுக்கச் செல்வதென்றல்?-
‘இனிக் கொழும்புப் பட்டணத்திலே எப்படி வாழ்வது? பிறந்த ஊரான-அல்ல, முப்பாட்டன்களின் ஊரென்ற காரணத்தினுல் அதீத இனப்பற்று ஞானம் உதயமாகுங்கால் தன் பூர்விக"மண் என்ற அவரால் கற்பிக்கப்பட்ட-யாழ்ப் பாணக்குடா நாட்டிலுள்ள கரவெட்டிக்குச் சென்று விட்டால் ?
கரவெட்டி ? கிளப், டென்னிஸ், குதிரை ரேஸ், பார், எதையுமே ரேடிமேடாக வாங்கும் வசதிகள் ஏதாவது உண்டா? ஏழடுக்கு மாளிகையில் வாழ்ந்தவனல், சுடுகாட்டின் பக்கத் தில் குடிசை கிட்டி வாழமுடியுமா?
இந்த நினைவு தன் நெஞ்சில் தளிர்விட்டதற்கு, தன் மீதே எரிச்சல்.
அவருக்கிருந்த செல்வாக்கு?

Page 42
68 தண்ணீரும் கண்ணீரும்
சாதாரணச்செல்வாக்கா அது? நீாவசைத்தால், நாடசை யுமாமே, அவ்வளவு செல்வாக்கு 1 மத்திரிமார்கள் தொடக் கம், அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் மிதப்பவர்களெல்லாம் அவர் காலடியை அன்று நாடி ஓடிவந்தார்களல்லவா? இன்று "கில்ட் பல்லிழிக்க உண்மைப் பித்தளையின் ச்ொரூபம் தெரி யும் போலியா, அவர்? ろ & ・ ・ ・ く
“இந்நிலை வருமென்று நாம் அன்று பயந்தோம். இன்று வந்துவிட்டது. ஜனநாயகமாம்-வெகு சு ஜனவாக்குரிமை யாம்! பன்றிக் கூட்டத்திற்கு என்ன வாக்கும்-உரிமையும்? அன்று வெகுஜன வாக்குரிமையை ஏற்றுக் கொண்ட படி யாற்ருனே, இன்று இந்நிலை ஏற்பட்டது? பாமர ஜனங் களுக்கு வாக்குரிமை வழங்குவது தப்பு, தப்பு என்று அன்று நான் தொண்டை கிழியக் கத்திச் சொன்னேன். கேட்டார். களா? இன்று அனுபவிக்கிருேம்."
அசைபோடும் மாடு மாதிரி, காலத்தின் அடிவயிற்றுக்குள் அமிழ்ந்த சம்பவத்தீனி, நினைவு வாய்க்கு வந்து கொண்டிருக் கின்றது.
காலையில், வீட்டு வாசலைத்தாண்டி, தலையில் கூடை யுடன் மாட்டீன் சென்றன். கூழைக் கும்பிடுபோடும் அவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு. "அடேட், மாட்டின் !’
மொணவதே ? 'அட' கியாண்டெப்பா?! அடேயென்று அழைக்கப்படாதா !” எவ்வளவு திமிர், கூடை தூக்கித் திரியும் இவனுக்கு ?"
நெஞ்சம் வேதனையால் வேகிறது. நெஞ்சில் புரையோடிய வேதனையைத் தெளிவாக்கசத்திர சிகிச்சை செய்துவிட, வக்கீல் ஞானத்திற்குத் திராணி யில்லையா ? வக்கீல் ஞானம்! அது கூட அவருடைய குழம் பிய நிலையைத் தெளிவாக்க உதவவில்லை.ஆழ வேரூன்றி, நெஞ்சில் ஆணி வேராகி-கிளைபரப்பி நிற்கும் அந்தச்

தீர்க்கதரிசி 69
சகதியையெல்லாம் தூளாக்கி.சின்னஞ் சிறு குளத்தில், சமுத்திரத்தின் ஹஅம்கார ஒலி கக்கும் மலையணைய அலைகள் மேலெழுந்து. விடுதலை? வழி? இங்கிலாந்துக்குப் போய் விட்டால் ?
அந்த நினைவிலேதான் எவ்வளவு "குளிர்ம்ை ! அவரது வதனத்தில் முதுமையின் வடுக்கள் மறைந்து, இளமையின் வாளிப்புப் புகுந்துகொண்டதா? நினைவின் பூரிப்பில், தன்னைத்தானே ஒரு தடவை பார்த்துக் கொண்டார். ஆங்கி லேயனைப் போன்ற நீள் காற்சட்டை, கழுத்துப்பட்டி, கோட், நிமிர்ந்த எடுப்பு.ஆங்கிலேயனின் ஒரு பிரதிமையாகத்தான் தோற்றமளிப்பதாகக் கற்பித்துக் கொண்டார்.
இதிலென்ன விந்தை ? அவரது சிந்தனையில் உருவாகும் அனைத்தும் ஆங்கிலத்தின் மூலதனம் தானே!
பாரிஸ்டர் பரநிருபர் இங்கிலாந்துக்குக் கப்பலேறி விட்டார்.
வழியனுப்ப வந்தவர்களின் உருவங்க்ள்.குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான பொம்மைகளாகச் சிறுத்து. அவர் ஒருகாலத்தில் தனது பெயரைக் கொடிகட்டிப் பறக்க விட்ட கொழும்பு நகரம் பின்னே செல்ல.நீலத்திரைகளைக் கொண்ட ஆழ் சமுத்திரம் முன்னே விரிய.கப்பல் செல் கின்றது.
பஞ்சார்ந்த படுக்கையில் மிஸிஸ் பரநிருபசிங்கம்-அவர் மனைவி. அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் முழுக் கவனத்தையும் புதைத்துவிட்ட மூத்தமகன். ஆசைக் கொரு பெண்ணுக வளர்ந்து விரும் மகள் கோழித் தூக்கத் துடன்.இலங்கை இனி அவருக்குத் தேவையற்ற நாடு.

Page 43
70 தண்ணீரும் கண்ணீரும்
குடும்பத்துடன் செல்கின்ருர், புதிய ஒரு நாட்டில், காணப் போகும் சூரியோதயத்தைப் பார்க்கும் ஆசையில். A
அவருடைய நினைவில் ஊஞ்சலாடுவது முழுவதும் இலண் டன் மாநகரம் தான். இலண்டன் ?-உலகத்தையே ஒரு காலத்தில் ஒரு குடையின் கீழ் கட்டியாண்ட வெள்ளைக்காரர் களின் தனிப் பெரும் தலை நகரம். மாபெரும் பட்டணம்.
இருப்பினும், அதுஅவருக்குக் கனவுலகமல்ல. அவருடைய பெயருக்கு முன்னல் தலை நீட்டிக் கொண்டு, அவரை அந்தத் தனிப் பெயருடன் வாழ வைத்த அந்த “பாரிஸ்டர் பட்டம் அவர் இலண்டன் மாநகரில் சம்பாதித்த சொத்துத் தானே? வாழ்க்கையில் அவரை உச்சாணிக்கொப்பில் தூக்கி வைத்த அந்த நாடு, எதிர் கால வாழ்வில் அவரை மீண்டும் தூக்கி வைக்கப் போகிறது.
பாம்பு தன் தோலை உரிப்பது போல, தினம் தினம் இலங் கையில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்களைச் சமுத்திரத் திற்குள் வீசிக் கொண்டே சென்ருர்,
கடைசியில் கப்பல் இலண்டன் துறைமுகத்தை அடைந்தது.
சுவர்க்கத்தில் நுழைவதைப் போன்ற பிரமை. இல்லை, பூதவுடலுடன், கைலாசம் சேர்ந்து விட்ட பக்தனின் நெஞ்ச நிறைவு.
பிரச்னைகள்-உணர்ச்சிகளின் மோதல்கள்-மொழி வெறிப் பூசல்கள்-நாகரிகமற்ற காட்டுமிராண்டி எண்ணம் படைத்த மக்கள் கூட்டம்-அத்தனையும் கனவுலகாய்..மனி தத் தன்மைகளை மதித்து நடக்க வல்ல புண்ணிய பூமியை அடைந்துவிட்ட மனநிறைவு; மனப் பூரிப்பு.
துறைமுகத்தை விட்டு வெளியே வந்தார்.
அங்கு வாழும், தன் இலங்கை நண்பர்கள் பலருக்குத் தன்னைத் துறைமுகத்தில் சந்திக்கும்படி தந்தி கொடுத்திருந் g5 Tri.

தீர்க்கதரிசி 7 I
"அவர்கள் எங்கே? மூளை குழம்பியது. ஆனல் பரநிருபர் சமாளித்துக்
கொண்டார். என்ன அவசரம்? அவர்களைப்பற்றி ஆறுத லாக விசாரித்துக் கொள்ளலாம்.
குறுக்கும் நெடுக்குமாக டாக்ஸிகள் பல ஒடியவண்ண மிருந்தன. அவற்றுள் ஒன்றை கைகளை நீட்டி நிறுத்த முயன்ருர்,
அது அவருடைய நீட்டிய ۔ கரங்களுக்கு மதிப்புக் கொடுத்து நிற்கவில்லை.
'இந்த டாக்ஸிக்காரருக்கு என்ன வந்துவிட்டது? வாய் முணுமுணுக்க, மனைவியும் மக்களும் சூழ்ந்து @մՄ, கையிற் கொள்ளக்கூடிய பளுவுடன் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தார். அவரால் சுமக்க இயலாத சுமைதான். இதே வீதியில், முன்னர் பாரிஸ்டருக்குப் படித்துக்கொண் டிருந்த காலத்தில், வெள்ளைத்தோல் மங்கையருடன் கரம் கோர்த்து உலாவி மகிழ்ந்த அதே வீதியில், கேவலம் கூலி யைப் போன்று சுமையையும் தூக்கிக்கொண்டு.
பெரிய ஜங்ஷனுக்கு வந்து விட்டார். அதைத் தாண்டி ஞல், அவர் தற்காலிகமாக ஜாகை அமர்த்தக் கருதியிருந்த பெரிய ஹோட்டலை அடைந்து விடுவார்.
சந்தியில் ஜனக்கூட்டம். அழுகிய பண்டத்தை மொய்க் கும் ஈக்களைப்போல...அங்கிருந்து வரும் கோஷம்.?
'கறுத்த நாய்களைக் கொல்லுங்கள்-கறுத்தப் பன்றி களைத் தூக்கிலிடுவோம். மிலேச்சப் பன்றிகளைக் கொன்று குவிப்போம்.'
சூடேறிப் பறக்கும் இக்கோஷங்களை அவர் கற்பனையிலே கூட எதிர்பார்த்தவரல்ல. கால்களிலும் கைகளிலும் நடுக்கம்.
"கறுத்தப் பன்றிகள்!"

Page 44
ፖ2 தண்ணிரும் கண்ணீரும்
தன்னை ஒருமுறை பார்த்தார். அவர் என்னதான் நாக ரிகத்தைக் கையேற்றிருந்தபோதிலும், விடுபடாத அந்தக் கறுத்த நிறம் அப்படியே அவரைப் போர்த்து மூடியிருந்தது. சமீபத்தில், இலங்கையின் வெள்ளவத்தையில் நடந்த வெறி யாட்டத்தைப் பிரத்தியட்சமாகப் பார்த்தவர் அவர். இந்த வெறியாட்டத்திற்கு அது உறைபோடக் காணுது. வெறி யாட்டம் சுடலைப் பேய்களின் முழுவேகத்துடன் நர்த்தன மாடுகிறது. புதிய அனுபவம். வெள்ளைக்காரன் வெள்ளைக் காரன்தான். எதிலும் நிறைவு காண்பவன். வெறியாட்டத் திலும் நிறைவு காண்கின்ருன்.
தயக்கம். * ஆபத்து நெருங்கி வருவதை உணரபானர்.
ட்ாக்ஸி டிரைவர்களின் அலட்சியம்; இலங்கை நண்பர் கள் துறைமுகத்திற்கு வராத காரணம்-எல்லாமே துலாம் பரமாக விளங்குகின்றது. தனது கரிய நிறத்தை நினைத்து, மனச்சுமையை இறக்குமட்டும் அழுது தீர்க்க வேண்டும்
போல இருந்தது. தர்க்கக்கலை, அவரை முற்ருகக் கைவிட வில்லை. wa
"நான் என்ன நீக்ரோவனு? அவர்களைப்போன்று அடிமை யாக ஏலத்தில் விற்கப்பட்டவர்களின் பரம்பரையா? விக்ா ரத்தின் பிண்டங்களான அவர்கள் எங்கே? நான் எங்கே? நான் “ஆக்ஸ்போர்ட் தொனியில், ஆங்கிலேயர்களையும் மிஞ்சும் வகையில், ஆங்கிலம் பேசவல்ல பாரிஸ்டர். கெளரவ மிக்க காமன்வெல்த் பிரஜை. அரசியல் செல்வாக்குள்ளவன். முன்னை நான் ஆங்கிலேயத் தேசாதிபதிகளுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தவன். இங்கே எனக்குச் சொந்தமான தோட்டங்கள் இருக்கின்றன. வெள்ளைக்காரர்களையே என் பணியாட்களாக வைத்து, நரிவேட்டையாடியவன் நான். இந்த நீக்ரோப் பயலுகள் இப்படித்தான். அதுகளுக்கு இது வேணும். இல்லாதுபோனல், அவர்கள் ஒரு காலத்தில் இங்கிலாந்திற்கே சொந்தம் கொண்டாடுவார்கள்.

தீர்க்கதரிசி . 73
"இருப்பினும் எதிரே வரும் ஆவேசம் மிக்கக் கூட்டத் திற்கு நானும் நீக்ரோவனுகப் பட்டுவிட்டால்?"
பாதுகாப்புணர்ச்சி மேலிட்டது. விரைவாக மனைவி, மக்கள் சகிதம் அந்தப் பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்தார். அங்கு, ஒரு வெள்ளைக் காரப் பணியாள் தடுத்து நிறுத்தினன். விஷயம் விளங்காது விழித்தார். அவரை இழுத்துப் பறிக்காத குறையாக ஹோட்டலின் நுழைவாயிலுக்கு இழுத்து வந்து, ஒரு விளம் புரத்தைக் காட்டினுன், அவன்.
கண்களை அகலத் திறந்து, அந்த விளம்பரத்தை வாசித் தார். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இதுதான் : 始
'காய்களும் கறுத்தவர்களும் இந்த ஹோட்டலுக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள்.
10-11-1958

Page 45
சிலுவை
நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம் பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம்-இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் அநுபவ இலக்கி யத்தில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு; மதிப்புண்டு.
ஆளுல், இது நாவலல்ல; சிறு கதையுமல்ல-வெறும் கடிதம், →ቋ
ஆமாம், நண்பா! உனக்கெழுதும் கடிதம்தான் இது. இக்கடிதத்தை எப்படி ஆரம்பித்து எழுதுவேன்? உன்னை-என் இதயத்துக்கு மிகவும் சமீபமாக இருக்கும் உன்னை, எப்படி அழைப்பேன்? நேரடியாகவே எழுதட்டுமா? ஆம், அதுதான் சரி. என் நெஞ்சகத்து நண்பனுகிய உனக்கு வரட்டுச் சம்பிரதாயம் தான் எதற்கு? நீ, நீயேதான்-என் நண்பன்! r
உன்னை எப்படி அழைப்பது என்பதிலும் பார்க்க, கடிதத் தைச் சேர்ப்பிக்கும் முகவரி பிரச்னைதான் என்மனதில் இமாலயப் பிரச்னையாக இடம் பெற்றுள்ளது. இதை எழுதி எங்கே சேர்ப்பிப்பேன்? பாற்கடலில் துயின்று பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் வைகுண்டத்திற்கா அல்லது

சிலுவை ア5
பஞ்சபாணனை ஒரு பிடிசாம்பலாக்கிய நாட்டியத் திருக்கூத் தனின் கைலாசத்திற்கா ?-பார்த்தாயா, என் ஞாபக சக்தியை? நீ கிறிஸ்தவன். அதிலும் கத்தோலிக்கன். ஆசீர் வாதம் என்கிற உனது பெயரில் "சிலுவை" முத்திரை பதிக் கப் பெற்றிருப்பதைக் கூட மறந்து விட்டேனே-என் ஞாபக சத்தியை என்னென்பது? உனது ஆத்மா, கர்த்தரின் பிரதம சீடரான பேதுருவானவரின் கட்டுக் காவலில் இருக்கும் மோட்ச சாம்ராஜ்யமான பரமண்டலத்திற்குத்தான்.
பார் !-சதா உன்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கி றேன். நீ-போஸ்ட்மேன் ஆசீர்வாதமாக-நடமாடித்திரிந்த காலத்தில் தெருத் தெருவாக, வீட்டுக்கு வீடு இலக்கங்களைத் தேடிக் கடிதங்களைச் சுமந்து சென்று கொடுக்கும் ஒரு மனித இயந்திரம் என்றுதான் பலர் உன்னைப் பற்றி எண்ணியிருப் பார்கள். உன் வரவைத் தினசரி ஆவலுடன் எதிர்பார்த்து வீட்டு வாசல்களில் எதிர்நோக்கி இருந்தவர்கள் கூட உன்னைப்பற்றி அதிகம்தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். என்ன விசித்திரமான உலகம்? எட்ட எட்ட இருக்கும் இதயங் களையும் ஒட்டுறவு கொள்ள உதவி செய்தவ்ன் நீ. இருந்தும் உன்னுடைய இதயத்து உணர்ச்சிகளை, ஆசைகளை, விருப்பங் களைத் தான் யாருமே புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. மற்றவர்களைப் பற்றிச் சொல்லுவது இருக்கட்டும். என்னையே எடுத்துக்கொள். நான்கூட அன்றுஉன்னைத் தெரிந்து கொள்ள எவ்வித அக்க றையும் காட்டவில்லையே!
ஆணுல் இன்று
நீ எங்கள் பகுதிக்குத் தபால் விநியோகிக்க வந்த அந்தக் காலம் உன் நினைவிலிருக்கிறதா ? என்னைச் சுற்றிச் சுழன்ற பம்பரங்களில் இது ஒன்று என எனக்கு நன்ருக ஞாபகமிருக் கிறது. இனிமையான, பசுமை நிறைந்த ஞாபகங்களைக் கொண்ட அந்த நாள் உனக்கு ஞாபகமில்லாமல் இருக் கலாம்; உதிர்ந்து விழும். சருகுகளை அலட்சியம் செய்யும் தாய்மர மனேபாவம் உனக்கிருக்கலாம்.

Page 46
· ግ‛6ጽ தண்ணிரும் கண்ணிரும்
எனக்குஎனக்கு நீ முதன் முதலில் கொண்டுவந்த கடிதம் இன்றும் நல்ல ஞாபகத்திலிருக்கிறது. சிறுகதைப் போட்டி யில் முதற் பரிசு பெற்ற செய்தியையும், பரிசுப் பணத்துக் குரிய "செக் கையுமல்லவா நீ முதன் முதலில் சுமந்து வந்தாய்.
நல்ல கைராசிக்காரனப்பா நீ ! எழுத்தாளன் மீனைப் போன்றவனும்; பொதுஜனங்கள் தண்ணீரைப்போன்றவர்கள். பொதுமக்கள் என்கிற தண் -ணிரை விட்டு எழுத்தாளன் பிரிந்தாலோ, பிரிக்கப்பட்டு விட்டாலோ, அவன் இறந்தவனுக்குச் சமானமாகிருன். இந்தத் தத்துவத்தையொட்டி என்னை உயிர்வாழும் எழுத் தாளர் வரிசையில் இடம் பிடிக்கச் செய்ததற்கு மறை முகமாக நீயும் ஒரு காரணமாக இருந்திருக்கிருய். எப்படி என்று திகைக்கிருயா ! என்னைப் போன்ற எழுத்தாளர்கள் புகழ் மாலைகளை, நெருப்பை உண்டு வாழும் தீக்கோழிகளைப் போல உண்டு வாழும் அபூர்வ ஜெந்துக்கள். நீ எனக்கு புகழ் மாலை சூட்டும் ஆயிரமாயிரம் ரசிகர்களின் கடிதங் களைக் கொண்டு வந்திருக்கிழுய். பொது மக்கள் என்கிற தண்ணீரிலிருந்து என்னைப் பிரிக்காமல் செய்திருக்கிருய்.
நான் தீடீரென்று முளைத்து, வளர்ந்து பிரபலமாகிவிட்ட எழுத்தாளனல்ல. வானத்திலிருந்து திடீரென்று பூமியில் குதித்துப் பிரபலமடைந்துவிட்ட இலக்கிய கர்த்தாவு மல்ல. அல்லது என்னுடைய ஆத்மசாந்திக்காக, சுயதிருப்திக்காக எழுதிக் கிழிக்கிறேன் என்று கூறித் திரியும் வரட்டுத் தனி மனித வாதத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டு முன்னுக்கு வந்தவனுமல்ல; உழைத்து உழைத்து எழுதினேன். பல காலம் கஷ்டப்பட்டேன். படித்துப்படித்துச் சிந்தித்தேன். எல்லாவற்றையும்விட மனிதர்களிடமிருந்து, மனிதனின் வாழ்க்கையிலிருந்து, அது தரும் போதனைகளி லிருந்து பாடத்தைப் படித்துக் கொண்டேன். தொடர்ந்து எழுதி முன்னுக்கு வந்தேன். விளம்பரத்தைப் போன்றவது

சிலுவை 77
ஒரு கதை, ஒரே ஒரு கிதை, பிரசுரிக்கப்படக் கூடாதா என்று ஏங்கி இருக்கிறேன். ஒரு காலம் புழுங்கிச் செத்திருக்கிறேன். இருந்தும் திறமையின்மையால் தேங்கி நிற்கவில்லை. தலைக் கனம் என்று இப்பொழுது நீ சொல்லலாம். எனக்கு என் எழுத்தைச் சரியாக எடைபோடும் திராணி இருக்கிறது. எந்தக் காலத்திலும் காக்காய் பிடிக்கும் தணிக் கலை எனக்குத் தெரியாது! ヘッ - . . . . எழுத்தாளன் ஜாதியில் குயவன். பாத்திரங்களைச் சிருஷ் டிக்கிருன். நான் படைத்த பாத்திரங்களோ பல நூறு. என் பாத்திரங்கள் வெறும் மண்பாண்டங்களா? கிடையாது! சதையும், நாரும், எலும்பும், ரத்தமும் கொண்டு உயிருடன் நடமாடியவை, அவை. பாத்திரங்களின் மன உணர்ச்சிகளை ஆசைகளை, விருப்பங்களை, எழுச்சிகளை மக்கள் முன்வைத்து, அவர்களை மக்களுடன் மக்களாக நடமாட விட்டிருக்கிறேன். அன்ருட வாழ்க்கையில் நான் எத்தனையோ பேர்களைச் சந் தித்ததுண்டு. அவர்களில் அனேகரிடம் பேசி இருக்கிறேன்; பழகியிருக்கிறேன்; மனந் திறந்து கதைத்திருக்கிறேன். இவர்களில் சிலரை அடிக்கடி தினசரி சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிர்ப்பந்தமும் இருக்கிறது. இது தவிர்க்க முடியாத் சங்கதிதான். இப்படியான முக்கிய தினசரி சந்திப்பாளர்களில் ஒருவன்தான் நீ என்று அலட்சியமாக நான் இருந்தது என்னமோ உண்மைதான். > >  ̈፡
ஆணுல் நீ-நீ- நீ இன்று சிதையிலே சாம்பலாகி விட்டாய். பார்த் தாயா? மறந்தே விட்டேனே!’எழுத்தாளர்களுக்குக் கற் பனைச் சிறகு முளைக்கிறது என்று சொல்லுகிருர்கள்; சுத்த “ஹம்பக்" அவர்களுடைய மண்டைக்குள் ஞாபக மறதி என்கிற சிலந்திக் கூட்டமல்ல்வா வலை பின்னிக் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. -
"புனிதமான ஞாபகத்திற்காக என்று எழுதப்பட்ட கல்லறையின் கீழே, மண்ணிற்கு அடியில் உன் உடல் அணு அணுவாக, கொஞ்சம் கொஞ்சமாக.

Page 47
78 தண்ணீரும் கண்ணீரும்
நீ போஸ்ட் மேனுத் தபால் கொடுப்பவளுகவருவதற்கு முன்னல், எனக்குக் கடிதங்கள் வரத்தான் செய்தன. நீ இல்லாத இன்றும் கடிதங்கள் வந்துகொண்டுதான் இருக் கின்றன.
இருந்தும் என் மனதில் வெறுமைதான் புரையோடி
இருக்கிறது. நீலவானத்தைப் பார்க்கிறேன். புதுப் பொலி வுடன் பூத்துக் குலுங்கும் தோட்டத்து மல்லிகைப் பந்தலை யும் ஜன்னலால் பார்க்கிறேன். வாசம் செய்யும் சிட்டுக் குருவிகளையும், அவை தங்கள் குஞ்சுகளுக்கு அடிக்கடி இரை கொடுப்பதையும் பார்க்கிறேன்.
முன்பெல்லாம் "இவற்றைப் பார்த்துப் பார்த்தே என் மனம் மகிழ்ச்சி கொள்ளும். உள்ளம் சாந்தமடையும். ஆனல் இன்று-? இவற்றைப் பார்ப்பதில் கூட இனம் காண இய லாத, காரணமில்லாத, வார்த்தைகளுக்கடங்காத வெறுமை யும் விரக்தியும்தான்!
உயிருக்குயிரான ஒரு ஜீவன் நம் கண் முன்ஞல் இருக்கும்பொழுதோ, நடமாடும் பொழுதோ அதன் அருமை பெருமையெல்லாம் நமக்குத் தெரிவதில்லை; தெரிந்து கொள்ள முற்படுவதுமில்லை. பாரதியைக்கூட, வாழும் காலத்தில், கஞ்சாக் கவிஞன் என்று தூற்றிய உலகம்தான் இது - ।
பிரிவு பொல்லாத நோய். மறைந்துவிட்ட பின்புதான்
பிரிவுத் துயரம் நம் இதயத்தைப் பிழிந்து வாட்டுகிறது. அதைப் போலத்தான் நீயும் பிரிந்த பின்பு என் நெஞ் சத்தை.
மலர் எழுத்தாளனுக நான் "புரமோஷன்" பெற். றிருந்த காலத்தில்-அதாவது நான் எழுதுவதெல்லாம் பொன் என்ற பொம்மலாட்ட நினைவுகளைப் பத்திராதி பர்கள் சூத்திரக் கயிற்றில் ஆட்டிக் கொண்டிருந்த காலத் தில்-ஒரு நாள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தாய். ஒரு உந்தல்-ஒரு மிதிப்பு-ஒரு தாண்டல், சைக்கிள் உருண்டுகொண்டே வந்தது.

சிலுவை 79
ஒல்லியானவன் நீ இருபத்தாறு அல்லது இருபத் தெட்டு வயது மதிக்கக்கூடிய வாலிப வயது. காக்கி அரைக்காற் சட்டையும் அதே மாதிரிக்காக்கியில் சட்டை யும் அணிந்து-சட்டையின் கழுத்துப் பக்கமுள்ள காலரில் சிவப்பு நிறப்பட்டி தைக்கப்பட்டிருக்கும்-இதற்குச் ஜோடி யாகத் தலையில் தொப்பி தரித்திருப்பாய்.
அன்றும் இதே கோலத்தில்தான் வந்தாய். ஒரு சிறு மாறுதல், தலையில் தரித்திருக்கும் தொப்பி, அன்று சைக்கி ளுக்கு முன்னல் தொங்கிக் கொண்டிருந்தது. சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ‘மட்காட்டுடைய உன்து சைக்கிளைக் கண்டதும் வீட்டு வாசல்களில் பல முகங்கள் ஆவலுடன் எட்டி, எட்டிப் பார்ப்பதையும் கவனித்தேன்.
தொழில் செய்யும் வேளையில், வேலை செய்யும்போது ஏற்படும் சிரமத்தை எவ்வளவு அலட்சியமாகக் கருதினய்? வாய்க்குள் பீடா வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே, கனவு காண்பவனைப்போல, சோம்பலாக, ஏதோ பழைய நினைவுகள் தேங்கிய சிந்தனையில் ஆழ்ந்தவண்ணம் கடிதங் களைக் கொடுத்துக்கொண்டு வந்தாய். சாணி உருண்டை யில் பிடிக்கப்படும் பிள்ளையார் உருவைப்போல, இனம் தெளிவில்லாத கவலையொன்று உன்னை வாட்டிக்கொண் டிருப்பது உன் முகத்தில் தெரிந்தது.
"என்ன ஆசீர்வாதம், ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம்?" வாசலில் நின்று விசாரித்தேன்.
e
எனக்குரிய கடிதங்களைத் தந்துகொண்டே, சிரித்துக் கொண்டு, "இங்கே பாருங்க என்னை, இந்தச் சுமையைத் தாங்கத் தரப்படும் சம்பளம் பத்தாது. முந்திநான் அலுப் பாந்தியில் மூட்டை சுமக்கப் போவதாக இருந்தேன். இந்த உத்தியோகம் சுகமாக இருக்கும் என்று வந்தேன். ஆனல், இங்கு வந்து பார்த்தபொழுது.இந்தச் சுமையிலும் பார்க்க பெரிய மூட்டையையா அலுப்பாந்தித் தொழிலாளர்கள் தூக்கிக் கிழிக்கிருர்கள்?’

Page 48
SO தண்ணீரும் கண்ணீரும்
வாழ்க்கையில்தான்னத்தன் ஹாஸ்ய்ம்! நான் அன்று உன்னுட்ைய ஹாஸ்யத் துணுக்கை வெகு வாக ரசித்தேன். அதுகூட என்னுடைய உள்ளத்தில் இன்னமும் பசுமையாக இருக்கிறது.ஆனல், நீதான் இன்று. அணில் அரிக்க உதிர்ந்து விழும் முருங்கைப் பூக்களைப் போன்று சிரித்துக் கொட்டுவாயே. நீ ஒரு மேதை ஆமாம், சிரிப்பதில் நீ ஒரு மேதைதான். கடைசியாக அன்றும் சிரித்துக் கொண்டுதான் வந்தாய்.
கடைசி நாள். குறுகிய கடைசி நாள் அன்று. வெளியே சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது. கை கால் நீட்டித் திமிர் விட்டவண்ணம் சாய்வு நாற் காலியில் சோம்பலோடு சாய்ந்து கிடந்த என்னை, மணிச் சத்தம் நிமிர்ந்து எழும்பச் செய்தது.
f f f
ஐயா...! ஐயா!.
வெண்கலப் பாத்திரத்தில் மஞ்சாடிக் கொட்டையை எறியும்பொழுது ஒருவிதச் சத்தம் கேட்குமே, அது உன் குரல்தானே? ஆமாம், அது உன் குரல்தான்.
“ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் பிந்தியது? எனக் குள் நானே கேட்டுக் கொண்டேன். அன்றைய கடிதங்கள் இன்னமும் வரவில்லை என்ற ஞாபகம் அப்பொழுதுதான் வந்தது. . .
நாற்காலியைப் பின்னே நகர்த்திவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
"ஒ ஆசீர்வாதம், நீயா? என்னப்பா இன்றைக்கு இவ் வளவு சுணக்கம்?" என்று கேட்டுக்கொண்டே கடிதங்களை வாங்கினேன். என் கண்கள் வாங்கியவற்றைக் கூர்ந்து பார்த்தன. ஒரு போஸ்ட் கார்ட், இரண்டு கவர், ஒரு மாத சஞ்சிகை, இத்தியாதி மாமூல் சரக்குத்தான். s
நான் கவனித்திருக்கிறேன் சிட்டுக்குருவியைப்போல, விடிந்ததும் விடியாததுமாக பறந்து திரிவாய், நீ! ஆனல்

சிலுவ்ை 8 r.
அன்று உன் செயல்களில் உற்சாகமோ, வழக்கமான துடி துடிப்போ காணப்படவில்லை. குழையக் குழையப் பேசிக் கொட்டிஞய். ஏதோ அர்த்தமற்றவைகளை எல்லாம் பேசிப் பேசியே பொழுது போக்கிஞய். இந்த விசித்திரமான உன் போக்கு, என் மனதில் வேருேர் எண்ணத்தைக் கொண்டு வந்தது. ஒரு சில தபால் சேவகர்களைப்போல நீயும் ஏதாவது கைமாற்றுக் கடன் காசு கேட்பதற்காக அடி போடுகிருயோ, தாஜா' பண்ணுகிருயோ என்று நினைத் தேன்.
உண்மையைச் சொல்லுகிறேன். உன்மீது எனக்குள்ள அன்பு, நம்பிக்கை எல்லாமே இந்த எண்ணத்தால் சிறிது மட்டுப்படத்தான் செய்தது. எல்லோரைப் போன்றவன் தான் நீயும் என்ற நினைப்பு என் அடி மனதில் குறுகுறுத்தது.
“என்ன ஆசீர்வாதம் ஏதாவது பணம் கிணம், தேவையா ? சொல்லு” என்றேன்.
நாக்கு என்பது நாக சர்ப்பம். சம்பந்தா சம்பந்தமில் லாமல் வாய் என்ற பொந்திலிருந்து தலை நீட்டி மனிதனைத் தீண்டி விடுகிறது. இந்தக் கடியின் தனி விசேஷம் என்ன வென்ருல், புறப் புண்ணில்லை, காயமில்லை, விஷமும் சட் டென்று வேலை செய்வதுமில்லை. ஆனல், மனிதனின் அடி மனத்தை, மிக நுண்ணிய உணர்ச்சிகளைக் கொண்ட இது யத்தின் இதயத்தையே.
நீ சிரித்தாய், முல்லை கட்டவிழ்த்து மலரும் இரகசி யத்தை எனக்கு விளக்கும் உன் புன்முறுவல் எங்கே? அன்று அந்தச் சிரிப்பு.பட்ட மரத்திலிருந்து சாரமற்று உதிரும் சருகாகவல்லவா எனக்குத் தென்பட்டது.
என் நெஞ்சத்து நினைப்பை ஒரு நொடியில் களைந்து எறிந்துவிட்டது உன் பேச்சும், அதையொட்டி எழுந்த சிரிப்பும். அலட்சியமான, சோர்வு கலந்த, சலிப்பு நிரம்பிய பேச்சாகவல்லவா இருந்தன உன்னுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள்.
6

Page 49
82 தண்ணீரும் கண்ணீரும்
"பணம் ஒண்ணும்தேவையில்லை. காசைப்பற்றி எந்த விதக் கவலையுமில்லை. சும்மா பறந்து பறந்து வேலை செய்து என்னத்தைக் கண்டது? விடிந்தெழும்பிப் பொழுதுபட் டால், சும்மா வேலை, வேலை சே! என்ன வாழ்க்கை?" வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவனின் பேச்சல்லவா இது.
உன்னை உற்றுக் கவனித்தேன். என் எழுத்தாள மூளைக்கு ஒரு விஷயம் தட்டுப்பட்டது. ‘ஏதாவது காதல் விவகாரமாக இருக்குமோ? காதல் தோல்விகள்-காதல் முறிவுகள் ஏற்பட்டிருக்குமோ?
வாலிபப் பருவம் கன்னிமை அழியாத நிலம். காதல் என்ற பயிர் சீக்கிரமே வளர்ந்து விடுகிறது. நீ மட்டும் விதி விலக்கா என்கிற வெகுளி எண்ணம்.
மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். காதல் நோயின் ஆரம்ப அறிகுறி கோழைத்தனம் என்பது எனக்குத் தெரி யும். எல்லாம் காலப் போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணியபோது, ஒரு புன்சிரிப்பு வெளி வரலாமோ வரக் கூடாதோ என்று ஆலோசிப்பதுபோல, என் உதட்டோரம் தோன்றி மறைந்தது. ۔۔ح۔
உண்மை என் முன்னுல் உன் உருவத்தில் நின்றதை நான் அப்பொழுது கற்பனை செய்து பார்க்கக் கூடவில்லை.
"இன்றைக்கு எல்லா வீட்டுக்கும் காயிதம் கொடுத்து விட்டுக் கடைசியாகத்தான் இங்கே வந்திருக்கிறேன். உங்க ளோடு கொஞ்ச நேரம் ஏதாவது பலதும் பத்தும் கதைச்சால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்றுதான் வந்தேன். அதுதான்.” நீ வார்த்தைகளை வாய்க்குள்ளேயே முடித்துக் கொண்டாய். عبير
"உனக்கென்னப்பா கவலை? நீ இளந்தாரி. வாழும் வளரும் Gius. ஏன் சலிப்பாய் இருக்கிரூய்?”
இருவரும் நெகிழ்ந்த மனதுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

சிலுவை 83
ஏதோ ஒன்றை ஞாபகத்துக்குக் கொண்டு வருவதற் காக நீ தயங்கி நின்ருய். எதையோ மனம் விட்டுச் சொல்லி விட முயற்சித்தாய். வார்த்தைகள் வாயைவிட்டு வெளியே வர மறுத்துவிட்டன. பேச்சு ஒழுங்காக வரவில்லை. திக்கித் திணறினய். எண்ணிப் பேசியவை சிந்திச் சிதறிக் குழறு படியாக வெளிவந்தன.
எனக்கும் இப்படி ஒரு அனுபவும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு உபசாரக் கூட்டத்திற்கு என்ன அழைத்திருந்தனர். இடைநடுவில், ஒலி பெருக்கியில் நானும் பேசுவேன் என்று. அறிவித்து விட்டனர். “மைக்"கிற்கு முன்னல் எழுந்து நின்ற எனக்கு முகம் சிவந்துவிட்டது. வியர்வையைச் சால்வையால் துடைத்துவிட்டுக் கொண்டேன். கால்கள் “ததிகிணதோம் போட்டன. கைகள் தந்தி அடித்தன. ஏதோ பேருக்காகப் பேசித் தொலைத்தேன். பேசி முடித் ததும் அப்பாடா' என்று இருந்தது. நான் அன்று பட்டு விட்ட பாடு?
இதை வைத்துப் பார்க்கும்பொழுது நீ அன்று பேசு வதற்குப் பட்ட சிரமம், வார்த்தைகளைச் சொல்வதற்கு நீ திணறிய திணறல், வெட்கப்படக்கூடியதல்ல, வேடிக்கை யானதுமல்ல.
பார்த்தாயா, என்ன? எங்கேயோ போகிறேன். ஞ்ாப கத்தைக் கோர்வைப் படுத்தி என்னுல் சிந்திக்கவே (மடிய
இதுதான் என் பலவீனம். . “எனக்கு-எனக்கு-" இதைத்தான் நீ திரும்பத் திரும்பச் சொன்னுய். 'உனக்கு?’’ “ஒரு கடிதம் எழுத வேண்டும்?" :கடிதம் சுமக்கும் உனக்குக் கடிதமா?'

Page 50
64 தண்ணிரும் கண்ணிரும்
“தேவ இரக்கத்தை முன்னிட்டு என்மேல் பட்சம் மறவாத" என்று எழுதுவதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. அனதைபோல், ஒரு நண்பனும் இல்லாமல், ஒரு ஆத்மாகூட ஆறுதல் சொல்லிக் காயிதம் எழுத இல்லாமல் இருக்கும் எனக்கு...” &
"யாராவது காதலி.?"
“இத்தப் போஸ்ட் பியூன் சம்பளத்தைப் பார்த்தும் காதலிக்கக் கூடிய யுவதியை நான் பார்க்கவில்லை.
“நெருங்கிய இன சனம்-அல்லது நண்பர்கள்?"
“எல்லாமே நீங்கள்தான்?"
நான் ஒரு மனித உணர்ச்சி பெற்றவனின் நண்பன்ஆயிரம் எழுத்தாளர்கள் ஒன்ருகக் கூடி, எனக்கொரு பிரத்தி யேக விழா எடுத்திருந்தால்கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந் திருக்க மாட்டேன்.
: எதிர்பாராத ஒன்றைக் கேட்டுவிட்ட அதிர்ச்சியுடன், ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தபடி, "ஹா-என்று வாய் விட்டுச் சொன்னேன். என்னல் பல உணர்ச்சிப் பாத் திரங்களைப் படைத்து அவர்களின் உணர்ச்சிக் கோளத்தில் அவர்களையே மோதவிட்டு ஆட்டிப் படைத்து வேடிக்கை காட்டிய இரண்டாவது பிரம்மாவான எழுத்தாளன் என்று கூறப்படும் என்னுல்கூட, உன் விருப்பத்தைப் புரிந்து கொள்ள, கிரகித்துக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. "நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல்லாயிரம்
வாசகர்கள் வாசித்து 'சபாஷ்' என்று சொல்லக்கூடிய ஒரு கதையை எழுதுவதிலும் பார்க்க, உனக்கு ஒரு கடிதம் எழுதி 'என் நண்பன் எனக்குக் கடிதம் எழுதிவிட்டான்” என்று நீ துள்ளிக் குதித்துக் கூத்தாடும் காட்சியைப் பார்ப்பதில் நான் பெருமைப் படுவேன்!"
என் வாக்குறுதி உன் சோர்வைப் போக்கியது. புது முகமலர்ச்சியுடன், புதுத் தெம்புடன் அன்று நீ போஞய்.

சிலுவை 35
ஆறுதலாக, என் மனஉணர்ச்சிகளை, என் விருப்பங்களை, ஸ்ன் நெஞ்சின் அடித்தளத்தில் தேங்கிக் கிடக்கும் சகலவற் றையும் ஒன்று திரட்டி, உனக்கு, என்ஆருயிர் நண்பனுகிய உனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும், எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்-கதை நீண்டு விட்டது என்று 'உஷ்' கொட்டும் பத்திராதிபரல்ல நீ என்பது எனக்கு நன்ருகத் தெரியும்,
ஆனல், அதற்கிடையில் நீஅந்த “ஐந்து முச்சந்தி’, ஐந்து குறுக்குத் தெருக்கள் சந்திக்கும் பொல்லாத சந்தி என்பது பழக்கப்பட்ட உனக்குத் தெரியாதா, என்ன? ராணுவ லாரிகள், பஸ்ஸுகள், கார்கள், மாட்டு வண்டிகள், சைக்கிள்கள்.
என்ன இனிய நினைவுகளுடன் சென்ருயோ ? தீர்க்கதரிசனம் இல்லாத அரசியல் வாதிகளைப் போன்று சென்ற பாதையைச் சரியாகக் கவனித்துப் பார்க்க நீ தவறி விட்டாயா ? அல்லது தங்களைக் கற்பனை உலக இலக்கியக் கலைஞர்கள் என்று காட்டிக் கொள்பவர்களைப் போல, கற்பனை உலகிற்குச் சென்று நட்சத்திரத் தாமரைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் பூவுலக நினைப்பே இல்லாமல், எதிரே வந்த ராணுவ லாரியைப் பார்க்காமலே.அபாய கரமான அந்த விபத்தில் அகப்பட்டு
உன் வாய், பயத்தினுல் அடைத்துப் போயிருக்கும். இதயமோ நடுங்கித் துடிதுடித்திருக்கும். இதயத் துடிப்பே சில வினடிகள் நின்றிருக்கும். அதிர்ச்சியினல், உதவிக்கு ஆளில்லாத அந்தப் பயங்கர நிலையில் எத்தனையோ கொள்ளை ஆசையுடன், கனத்த நெஞ்சுடன்.
உன் கண்களில் நிழலாடிய இனிய கனவுகள் என்று நிறைவேறும், என்றைக்கு நிசமாகும் என்ற நெஞ்சத் தவிப் புடன்தான் நீ. உன் உயிர்.
உன் ஆசைகள், விருப்பங்கள், ஆவல்களால் உருவாக்கப் பட்ட பாரமான சிலுவைன்ய என் தோளின்மேல் சுமத்தி

Page 51
86 தண்ணீரும் கண்ணீரும்
விட்டாய். கல்வாரி மலையில் கிறிஸ்து நாதருக்கு உதவிக் காகச் சிலுவை சுமந்த "சீமோன்’ போன்ற உத்தமன் உன் விஷயத்தில் எனக்குக் கிடைக்கவில்லையே?
நான் பாரமான உனது சிலுவையை என் தோளின் மேல் சுமக்கிறேன். அதன் பாரம் என் தோளை மாத்திர மல்ல, என் இதயத்தைக்கூட.
இதோ கடிதத்தை எழுதிமுடித்துவிட்டேன். இதை உன் கல்லரையுள்ள தோட்டத்துக்கா அனுப்பு வது? அல்லது மோட்ச சாம்ராஜ்யத்தின் பாதுகாவலரான அர்ச்சியசிஸ்ட் பேதுருவானவர் உன்னைப்போல அங்கு ஒரு போஸ்ட்மேனுகக் கடமையாற்றினல்
இதை உனக்கு விநியோகிப்பாரா?
25-4-1959

முற்றவெளி
*ஹை, ஹை!..த்தா!..த்தா! சூ. சூ..!" என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடு களை சின்னக் குட்டியன் வரிசைப் படுத்தித் தனது க்ட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் பகீரத முயற்சி செய்தான். அவனது அதட்டல்களைப் பொருட்படுத்தாது ஒன்றிரண்டு மாடுகள் கட்டுக்கு அடங்காமல் வீதியில் சிதறி ஓடத்தான் செய்தன.
கையிலுள்ள தடியை உயர்த்தி ஓங்கியபடி மீண்டும் கால்களைச் சாய்த்துச் சாய்த்து ஓடினன் அவன். அப்படி ஒடும்போது அவனைப் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். தராசுத் தட்டில் நிறுவைப் பொருட்களைப் போட்டுக்கொண்டு, திடீரெனப் படிக்கல்லை மற்ருெரு தட்டில் தூக்கிப் போட்டால் தராசு நிலை கொள்ளாமல் மேலும் கீழுமாகத் தாழ்ந்து-உயர்ந்து, உயர்ந்து-தாழ்ந்து எப்படி ஒரு நிலையற்றுஆடுமோ அதைநினைவூட்டியது அப்பேர தைய அவனுடைய நடை. பிறப்புவாசியாகவே அவனது இடது காலும் இடது கையும் சூம்பிக் கோணிப் போய், மறு கால் கையைவிடச் சற்றுக் குட்டையாக, ஒரு வகையில் செய லற்றதாகவே இருந்தன. வீதிகளில் அவன் நடக்கும்போது

Page 52
38 தண்ணீரும் கண்ணீரும்
அவனுடைய விசித்திரமான, புராணம் கண்ட அஷ்டவக்கிரக முனிவனைப்போல ஒரு பக்கம் கோணலாகச் சாய்வுற்று, கால் கள் நிலத்தில் பாவாது நடக்கும் அந்த நடை என்னமோ போலிருக்கும். மடிந்து, வளைந்து, சவண்டு உள் பாதம் பக்கவாட்டில் சாய்ந்து, மேல் பாதத்தின் முக்கால் பாகத்தை நிலத்தில் ஊன்றி நடக்கக் கூடியதான, பிறவி ஊனமாக இருந்தன அவனிரு பாதங்களும். மடிந்த மேல் பாதங் களைப் பாதுகாக்க, காதறுந்த பழைய செருப்பிரண்டை எடுத்து சணல் கயிறு கொண்டு ‘ரிப்பேர்" என்கிற பெயரால் சில சீர்திருத்தங்கள் செய்து, காலுக்கு அளவாகப் பாத ரட்சைகளை எப்படியோ உருவாக்கி அணிந்துகொண்டிருந் தான், சின்னக்குட்டியன்.
அவை செய்யும் சேவையின் நாதம்தான் "சர்.சர். என்று இப்பொழுது ஒலிக்கும் அந்த ஓசை.
அவன் மாடுகளுக்குப் பின்னல் மனிதனுக ஓடிக்கொண் டிருக்கிருன்,
சின்னக்குட்டியன் நல்ல கறுவல். நல்லெண்ணெய்க் கறுவல் என்பார்களே அதுமாதிரி. ஒருவித வாளிப்பான தேகம். வெயிலில் அலைவதே அவன்து பிழைப்புமாகிவிட்ட தால், கருமை இன்னும் ஆழ ஊன்றி இருட் கறுப்பாக மாறி விட்டது. வெற்றிலை அடிக்கடி போடுவதால் பற்களில் காவி நிரந்தரமாகக் குடியேறி, பல்லின் சுயத்துவமிழந்து அவை காணப்பட்டன. தாடி வளர்ந்து, சடைத்து முகத்தின் அமைப்பையே மாற்றிவிட்டிருந்தது. நெற்றிமேல் அடிக்கடி விழுந்து கண்ணில் பட்டு, பார்வையை மறைக்கும் தலைமயிர்க் கற்றைகளைத் தடுப்பதற்காகக் கறுப்புக் கைக்குட்டையை மடித்து மயிரின் முன்பாகத்தை அழுத்திக் கட்டியிருந்தான். சிரிக்கும்போது முகத்தில் சுடர்விடும் அசட்டு அப்பாவித் தனம் வேறு அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.
திடீரென்று இளம் கன்றுக்குட்டி ஒன்று “...ம்மா!' என்று குரல் கொடுத்த வண்ணம் துள்ளிக் குதித்தபடி தொலைவில் ஓடியது. அதன் மேலெழுந்து வளைந்த குஞ்சம்

முற்றவெளி 89
போன்ற வாலும், நேர்த்தியான முகமும், மின்னல் ஒட்டமும்.
"ஹேய்!.ஹேய்...!" பார வண்டிக்காரர்கள் வண்டி மாடுகளை முடுக்கி ஒட்டுவதற்காக வாலை முறுக்கி, நாக்கை மடித்து அண்ணத்தில் ஒட்டவைத்து, கொடுப்புப் பற்களைக் கடித்து ஒருவகை ஒலி எழுப்புவார்களே அதைப்போல, வாயால் ஒசையுண்டாக்கி மாடுகளை மீண்டும் வீதியோர மாக ஒழுங்கு படுத்தி ஒட்ட முயற்சிக்கிக்கிறன், சின்னக் குட்டியன்.
y
அந்த மாட்டு மந்தையை மடக்கி, வீதியின் ஒரமாகத் திருப்பி, நேர்வழியில் செலுத்தி விரட்டுவதற்கு அவன் பட்டுவிட்ட பாடு இருக்கிறதே. அப்பப்பா!... . -
மலாயாப் பெஞ்சனியர் மாணிக்கத்தம்பியின் வீடு நாற் சந்தியைக் கடந்ததும் கூப்பிடு தூரந்தானிருக்கும்.
“ஒ.அம்மா..!" என்று குரல் கொடுத்தான் சின்னக் குட்டியன். தொடர்ந்து மீண்டுமொரு முறை குரல் கொடுத்து வைத்தான். ‘நான் வந்துகொண்டிருக்கிறேன் மாடுகளை அவிழ்த்து விடுங்கள்’ என்பதுதான் அவனது சங்கேத பாஷையில் அதற்குரிய உண்மையான அர்த்தம்.
இந்தக் குரல் இருக்கிறதே இது யாழ்ப்பாணப் பட்டி னத்தின் ஒதுக்குப் புறமாகவுள்ள பெருமாள் கோயிலடியில் வாழ்பவர்களுக்கு நன்ருகத் தெரிந்த, புரிந்த, பழகிப்போன குரல்தான்! கொட்டில்களில் கட்டிப்போட்டு இருக்கும் பசு மாடுகளை-அடைபட்டிருக்கும் கன்று குட்டிகளை வெளியே ஒட்டிச் சென்று புல் பரந்துள்ள திறந்த வெளிகளில் மேயவிட் டுத் தண்ணீர் காட்டி சாயங்காலங்களில் திரும்பவும் அதன் வீடுகளுக்கு ஒட்டி வந்து மாட்டுக்குரியவர்களிடம் ஒப்படைப் பதுதான் அவனுடைய தினசரித் தொழில்; நித்தியக் கடமை. மாதாமாதம் மாட்டுக்குரியவர்கள் ஏதோ படியளப்பார்கள். இத்துடன் அவன் திருப்திப்பட்டுவிட வேண்டியதுதான்.

Page 53
90 தண்ணிரும் கண்ணிரும்
அவனது வாழ்க்கை அதுவாக-அதன் நெளிவு சுழிவு களைக் கவனிக்காது "ஏன்? எதற்கு? என்பது பற்றிய சிந்தனைகளுக்கு இடங் கொடுக்காத ஒன்முக ஒடுகிறது. கால மென்ற மணிக்கூண்டின் கம்பிகளில் நின்றுவிடாத சுயத் துவம் அவனது வாழ்க்கையை அப்படியே கப்பிக் கிடக் கிறது.
யாழ்ப்பாண முற்றவெளிப் பக்கமாகவுள்ள பரந்த பசுமையான புல்வெளிதான் அவன் வரைக்கும். அவனது வயிற்றுக்கு வழிகாட்டும் விடிவெள்ளி; மூலதனம்; வேட் டைக்காடு எல்லாமே...எல்லாமே.
அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அவன் மாடு மேய்ப் பவன் என்பதுதான் த்ெரியும். அந்த நினைப்பில் அவன் மிகக் குறைந்த-சமுதாயத்தில் தம்மைவிட மிக மிகப் பின்தங் கிய-ஒருவகைப்பிரகிருதி என்ற இளப்பம் கலந்திருக்கும். மாட்டுச் சொந்தக்காரர்களின் உதட்டில் என்னதான் நடிப்புப் புன்னகை மலர்ந்திருந்தாலும் அவர்களது வீட்டில் அவனுக்கு இரகசியமாக இட்டிருக்கும் பெயர் "நொண்டியன்" முகத்துக்கு முகம் நேராகக் கூப்பிட உபயோகப்படுத்தப் படும் நாமம் குட்டியன்.
பட்டினத்து இதயத்தின் இரத்த நாளங்களாய் பலவா முகப் பிரிந்து கிடக்கின்ற வீதிகளில் அவன் அடிக்கடி தென் படத்தான் செய்தான், காலை மாலைகளில் பிரதான வீதிகள் வழியாக மாடுகளைத் துரத்திக்கொண்டு நடை போட்டு வரும் போது நுனியில் இலையுள்ள பூவரசந்தடி அவன் கையில் செங்கோல் போலக் காட்சி தரும்,
அர்த்தமும் இசையும் புரிந்துகொள்ள முடியாத சினிமாப் பாட்டொன்றைத் தன் போக்கில் சீட்டியடித்தபடி கையிலுள்ள கழியைச் சுழற்றியவாறு நடந்து கொண்டிருந் தான், சின்னக்குட்டியன். ۔۔۔۔
அவன் ஆசையாகச் செல்லப் பெயரிட்டு அழைக்கும் அந்த மலாயாப் பெஞ்சனியர் ஐயா வீட்டு சட்டச்சி என்னு

முற்றவெளி 9 E. மாடு, மிரண்டு, மாட்டு மந்தையை விட்டுப் பின் தங்கிப் பின்தங்கி ஆடி அசைந்து அன்ன நடை பேர்ட்டு நடத்து வந்தது. அதைக் காணச் சின்னக்குட்டியனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து, எட்டிப் பின்னேற வைக்கிறது.
கையைச் சட்டென்று ஓங்கி, கையிலுள்ள கழியால்
தனது அன்பிற்குரிய கட்டச்சி மாடென்றும் பாராமல்
விளாசி விட்டான், ஒரு தடவை. முக்கி, முனகி ஓடவும் முடியாமல் நடக்கவும் இயலாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்த கட்டச்சி என்கிற அந்தக் கறுப்புப் பசு, 'ம்..ம்மா!' என்று குரல் கொடுத்து வெதனையால் அலறியது.
அந்தத் தீன ஒலி...? மனது துணுக்குற்றது. நெஞ்சில் இரத்தம் வடிவது போன்ற மனக் கசிவு. அந்த மாட்டை-அதனது அப் போதைய நிலைமையில் அப்ப்டியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று மனம் வாதாடிப் பார்க்கிறது. தன் வயிற்றி னுள்ளே இன்னெரு ஜீவனைச் சுமந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி வரும் இந்த வாயில்லாத ஜீவனைப் போலத்தான் இன்னெரு வாயுள்ள ஜீவனும்.
தன் மனைவி தையலம்மையின் ஞாபகமும் அவன் மன தில் நிழலாடுகின்றது. அந்தக் காட்சியைப் பற்றிய நினைவும்: குறுக்கிடுகின்றது.
மலாய்க்காரப் பெஞ்சனியர் வீட்டம்மா கட்டச்சியைப் படலையைத் திறந்து வெளியே விரட்டும்போது அந்த மாட்டைச் சுட்டிக் காட்டி, "இதோ பார், குட்டியன். கட்டச்சியைக் கவனமாகப் பாத்துக்கோ. இண்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கிற நிறை கண்டுத்தாச்சி மாடு. அதிலும் இண்டைக்கு அமர்வாசை, கனத்த நாள். காலையி லிருந்து ஒரு மாதிரி இருக்கு.ஒரு வேளை..சரி, சரி. மேய்ச் சலுக்குக் கொண்டு போழுய். ஒரு கண்ணை அதிலை வச்சுக் கொள்-என்ன நான் சொன்னதெல்லாம் விளங்கிச்சா ?” என்று எச்சரிக்கை செய்துதான் கட்டச்சியை வெளியே அனுப்பி வைத்தாள்.

Page 54
三9别 தண்ணீரும் கண்ணீரும்
இரண்டாவது தரம் ஓங்கிய கரம் இறங்கவில்லை. இந்த நினைவுகளுக்குக் கட்டுப்பட்டு செயலிழந்து விட்டது சின்னக் குட்டியனின் வலது கை. ሎ
கட்டச்சியைப் பற்றிய கவனத்தில் அதற்கு உரியவர்களை விட அவனுக்கு அதிக அக்கறையுண்டு. மாடுகள் ஒவ்வொன் றையும் தனது அன்பிற்குரிய நண்பர்களைப் போன்று நேசித் தான்; பாசம் காட்டினன். பெஞ்சனியர் வீட்டு மாட்டுக்குக் கட்டச்சி என்று நாமகரணம் சூட்டிச் செல்லமாக முதல் முதல் கூப்பிட்டதே அவன்தான். அதன் பிறகுதான் அவர்கள் அதைக் கட்டச்சி என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர். கட்டச்சிக்கு மாத்திரமல்ல. அப்புக்காத்து அம்பலவாணர் வீட்டு மாட்டுக்குச் செல்லப் பெயர் கறுப்பு. கிளாக்கர் பொன்னம்பலத்தாரின் மாட்டுக்குச் செல்லி. ஒவசியர் ஏகாம்பரத்தின் மாட்டுக்குப் பூச்சி. அப்போத்திக் கரி சூசைப்பிள்ளையின் மாட்டுக்கு.
எல்லாமே அவனிட்ட செல்லப் பெயர்கள்தான்.
"இன்று கனத்த நாளாம். மிருகங்களுக்கு மட்டும் அப்படியா?-அல்லது மனிதருக்குமா? அப்படியென்றல் எனது தையல்ம்மை."
காலையில் படுக்கையை விட்டு நேரம் கழித்து எழுந் திருந்த தையலம்மை சோர்ந்து வாடிய முகத் தோற்றத் துடன், பழைய சோற்றைப் பிழிந்து, இரவு மிஞ்சியிருந்த கருஷாட்டுக் குழம்பை விட்டுப் பிசைந்து உருண்டை உருண்டையாகத் திரட்டி அவன் கையில் பரிமாறியபோதுஅவளது முகத்தை ஊடுருவிக் கூர்ந்து நோக்கினன் சின்னக் குட்டியன். அந்த முகத்தில் படிந்திருந்த சோர்வு. களைப்புத் தட்டிய கண்கள்.வெளிறிப் போயிருந்த உதடுகள். -
"என்ன தையலம்மா, இண்டைக்கு ஒரு மாதிரி இருக் கிறே? ஏதாவது உடம்பைக் கிடம்பைச் செய்யுதா?”

முற்றவெளி 9.
வரண்ட புன்முறுவல் உதடுகளில் உலர்ந்து நெளியr "சே!-அப்படியெல்லாம் ஒண்டு மில்லை. ஒரே பஞ்சியாய் இருக்கு, வேருெண்டுமில்லை. இதுக்கேன் யோசிக்கிறீங்க?" என்ருள். . . .
“இல்லை. உன்னைப் பாத்தா ஒரு மாதிரி இருக்கு. சும்மா கேட்டன்," ,
கட்டச்சி நிறை கன்றுத்தாச்சி. தையலம்மையும் இன்ருே நாளையோ என்றிருக்கும் தலைப்பிள்ளைத்தாச்சி.
உணர்ச்சியின் வலுவான பிடிக்குள் அகப்பட்ட மனம், காற்று இறங்கிய பலூன் போலச் சுருக்கமடைய, ஆவேசம் தணிந்து மட்டுப்படுகிறது.
“சே! பாவம்! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட அவன், “போ-போடி ஆத்தை போ!' என்று மாட்டுடன் அன்பு மொழி பேசினன். தொடர்ந்து, "உம்.உம்.கெதி யாய்ப் போடி நாட்சியார். எட்டிப் போடி. இப்பிடி நடந் தால் நான் எண்ணத்தைச் செய்யிறது? எனக்குக் கோவம் வந்திடுது. உம்.போணை, போ..” என்று சொல்லிக் கொண்டே கட்ட்ச்சியின் பின்னங்கால் மூட்டில் இலேசாகத் தடவிக் கொடுத்து, அடித்தற்குப் பிராயச் சித்தம் செய்த தாக கற்பனை பண்ணிக் கொண்டான்.
தளர்ந்து நடக்கும் கட்டச்சியும் அன்பும் ஆதுரமும் கலந்த அவனது அன்பு மொழிகளைப் புரிந்துகொண்டது போல் நிர்ச்சலனமாகச் செல்கிறது.
கோபத்தில் அடித்த அடியைப் பொருட் படுத்தாத இந்த மாடு போல அந்தத் தையலம்மா. எவ்வளவு கருணை காட்டி மற்றவர் பேசிவிட்ட போதும் சமயத்துக்கு f சுயரூபம் கோபமாக வெளிப்பட்டே விடுகிறதுதான். அதற்குப்பின் ஏற்படுகின்ற இந்தப் பச்சாத்தாபம் இருக் கிறதே...
தையலம்மையின் அந்தக் கோபம்.அவள் செய்த அந்தச் செய்கை. அதைத் தொடர்ந்து அவனது வாழ்வின் திரும்புமுனையாக ஏற்பட்டுவிட்ட அந்த இன்பம்.

Page 55
多4 தண்ணீரும் கண்ணீரும்
வெறும் வாயை மெல்லும் அவனது நினைவு, என்றும் மறந்துவிட முடியாத அந்தச் சம்பவத்தில் எவ்வளவு ருசி காண்கிறது. தாண்டித் தாண்டி அஷ்ட வக்கிர உருவத் துடன் நடமாடி "நொண்டி' என்கிற பட்டப் பெயருக்கும் உரியவனகி இருக்கும் அவன்கூட ஒரு காலத்தில் காதலித் தான் !
தையலம்மை ராணி தியேட்டர் வாசலில் கடலை விற் பவள். சின்னக்குட்டியன் அடிக்கடி தியேட்டர் வாசலில் தாமதிப்பதையும் எத்தனையோ கடலைக்காரிகள் கடலைக் கொட்டை விற்பனவு செய்யும்போது அவன் தினசரி தன் னிடம் வந்தே கடலைச் சுருளும் பீடியும் வாங்கி வருவதையும் துருதுருத்த அவளின் பார்வை உணர்ந்து கொள்ளாமல் போகவில்லை. ஒருநாள் கடலை வாங்கிக் கொண்ட அவன் வீம்புக்காக விற்பனவுச் சுளகிலிருந்து ஒரு "சிறங்கை' கடலைக் கொட்டையை அள்ளி எடுக்கும்போது கையிலிருந்த பாக்கு வெட்டியால் "பட்டென்று கைமொளியில் அடித்த தையும், அந்த அடியின் வலியால் அவனும், மனவலியால் அவளும் நீண்ட நாள் துடித்த துடிப்பையும், அந்தக் கோபம் தரும் சம்பவத்துக்குப் பின்னே அவளது தூய நெஞ்சு அவ னுக்காகப் பச்சாதாபப் பட்டதையும் எண்ணுகிருன்.
, இதழ்க் கடையில் முறுவல் பூத்து மறைகிறது. காதல், காவியநாயக-நாயகிகளுக்கு மாத்திரம் சொந்தமானதல் லவே. அந்தக் கடலைக்காரிக்கும் அந்த நொண்டிச் சின்னக். குட்டியனுக்கும் ஏன் ஏற்படக்கூடாது?
பரஸ்பரம் அவர்களிடையே ஒன்றிய அந்த அன்புகல்யாணத்தில் முடிந்தது! தூரத்தில் ‘பூம்.பூம்...' என்ற காரின் ஹார்ன் ஒசை. சின்னக்குட்டியனின் கற்பனை உலகச் சிலந்தி வலை, ஓசை கேட்டு அறுபடுகின்றது. குறுக்கு ரோட்டால் திரும்பி
விட்டான்.

முற்றவெளி 95
கட்டச்சியைப் பின்னே விட்டு விட்டு மாடுகள் எல்லாம் முன்னேறி விட்டன. ஒருமாடு வீதியோரமுள்ள ஒரு வீட்டின் கிடுகு வேலியில் காலை வைத்துத் தலையை உயர்த் திக் கதியால்'களில் படர்ந்திருந்த கொவ்வை இலையை நாக்கை நீட்டி, வளைத்து, மடக்கி வாய்க்குள் திணிக்க முயன்றது. w
'..த்தா ! ..த்தா!' என்று மிரட்டிக் குரல் கொடுத் தான், சின்னக்குட்டியன். அவனது அதட்டல் ஒலி ஆஸ் பத்திரிப் புதிய கட்டடத்தில் பட்டு எதிரொலித்தது.
ஆஸ்பத்திரி வீதியைக் கடந்து, கூண்டுக் கோபுர வீதியை மாடுகள் அடைந்து விட்டன. முற்றவெளிக்கு-புல்வெளி மைதானத்திற்கு-இன்னும் கூப்பிடு தூரம் தான் பாக்கி இருக்கும்.
வீதியின் நட்ட நடுவில் நெடிதுயர்ந்து வானத்திற்கும் பூமிக்கும் சேதி சொல்லும் மணிக் கூண்டுக் கோபுரத்தை அண்ணுந்து பார்த்தான். பகைப் புலத்தில் நகரசபை மண்டபம் தெரிகிறது. மணி பார்க்க அவனுக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய படிப்பும் அவன் படிக்க வில்லை. மணி பார்த்து வாழக் கூடிய இன்றைய விஞ்ஞான யுக்த்தில் சும்மா பொழுது போக்கிற்காகவும், “எனக்கும் மணி பார்க்கத் தெரியுமாக்கும்’ என்று தெருவில் போகிற நாலுபேர் நினைக்கட்டுமே என்கிற நப்பாச்ை யுடனுமே அவன் அந்த மணிக் கூண்டுக் கோபுரத்தைச் சிறிது நேரம் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொள்வது-இப்படி நடிப்பதில் ஒரு மனத் திருப்தி :
மனிதனின் மனமும் ஒருவித பாம்புப் புற்றுத்தான், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருந்துவெளிவருமோ, யாருக்' குத் தெரியும் ?
நெருக்கடி மிகுந்து கொண்டு வீதியோரமெல்லாம் புதிய புதிய மாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பட்டினத்திலே மூச்சு விடுவதற்கென்று அமைந்திருக்கும்

Page 56
$6 தண்ணீரும் கணணிரும் இடம் இதாவது இருக்கிறதே. இந்த முற்ற வெளியில் மாடுகள் அனைத்தும் இறங்கி, அங்கொன்றும் இங்கொன்று மாகப் பிரிந்து.
அந்த முற்றவெளிக்கு முன்னேதான் நீதி மன்றம். நீதி மன்றத்தின் முன்னே நின்று கொண்டிருக்கும் குற்றவாளி கோட்டை முனியப்பரை நோக்கித் தனது வழக்கு ஜெய மடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதையும் முற்றவெளி யில் அமைக்கப்படும் மேடையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகின்ற பிரமுகர்கள் தமது பொய்யை மெய்யாக்க அவரைச் சந்திக்கிழுத்துச் சத்தியம் செய்வதையும் முனியப்பர் கண்டு கொண்டுதான் வீற்றி ருக்கிருர். ஆனல் இதனுல் முனியப்பரை விடச் சின்னக் குட்டியனுக்கு அதிகப் பலனுண்டு. கோட்டை முனியப்பர் புண்ணியத்தர்ல்-அருட் செறிவால்-வழக்குகளிலும் அரசிய லிலும் லாபமடைபவர்கள் அடிக்கடி போடும் அவியல் விருந்தை சின்னக்குட்டியன் இடைக்கிடை இரசித்து இரசித்துச் சாப்பிடுவதுண்டு. வாரத்தில் இரண்டொரு தின மாவது "ஒசி"யில் அவன் வயிற்றுக்கு வழி செய்யும் கோட்டை முனியப்பர் கோவிலைச் சரணடைந்தது அவன் வரைக்கும் வியப்படைவதில் ஒன்றுமில்லைத்தானே.
ஆலமரத்துக்குப் பக்கத்தில் நின்ற அவனது கட்புலனில் புத்தம் புதிய மாடல் கார் ஒன்று கோவில் முன்றிலில் நின்றது தெரிந்தது. இன்றைய மதியப் பிரச்சினையும் "ஒசி"தான் என்ற மகிழ்வுணர்ச்சி நெஞ்சில் குதியாட்டம் போட்டது.
மதியப் பிரச்சினை-அதாவது சாண் வயிற்றுச் சாப் பாட்டுப் பிரச்சினையும் ஒரு வழியாகத் தீர்ந்து போய் விட்டது.
'டிங். டிங்.." என்று கழுத்து மணிகள் நாதமிட மாடு கள் மேய்ந்து கொண்டிருந்தன. சில, மரநிழலில் படுத்தவாறு மேய்ந்த புல்லை அசை போட்டுக் கொண்டு.

முற்றவெளி 97
திடிரென இருந்தாற் போலிருந்து "ம்..ம்மா!" என்று அலறியது கட்டச்சி. அவன் கண்கள் படம்பிடித்து இதயத்தில் பதித்துக் கொண்ட அந்தக் காட்சி
கட்டச்சி விழுந்து படுத்து, நாலு கால்களேயும் பரக்கப் போட்டுக் கொண்டு, வலி வந்து விட்டதைப் போன்று புரண்டு புரண்டு தேகமெல்லாம் உதறி நடுங்க அது கிடக்கும் அந்த நிலை இருக்கிறதே. ”
மீண்டும் கட்டச்சி அலறியது. பரபரப்படைந்தாலும் நிதானமிழந்து விடாது சின்னக் குட்டியன் கிட்டே நெருங்கிப் பார்த்தான். மாடு எக்கி எக்கி, முக்கி முனகி மூச்சு விட்டு வலியினல் துடிதுடித்து அலறியது.
ஒன்றின் துன்பத் துடிப்பில்தரன் இன்னென்று உதயமாக வேண்டும் என்கிற இயற்கை நியதியையூொட்டி புதிய உயிர்ச் சிருஷ்டி ஒன்று தோன்றுவதற்கு முன் ஏற்படும் பிரசவ வேதனேதான் அது.
ஒன்றல்ல, இரண்டல்ல பல பசுமாடுகளைப் பேணி அவற்றின் பிரசவத்துக்கு மருத்துவம் செய்து காப்பாற்றிய அநுபவஸ்தன் தானே சின்னக்குட்டியன். இதற்கெல்லாம் அவன் மயங்கவில்லை. தனியொருவனுக-கன்று ஈன்று கொண்டிருக்கும் கட்டச்சிக்கு மருத்துவம் பார்த்துத் தன் காரியங்களைத் திறம்படச் செய்தான். பிறந்த அந்தச் சின்னஞ் சிறு கன்றுக் குட்டியை ஒரு கையால் தூக்கி அதன் மேல் கவிந்திருக்கும் நீரையும் சளியையும் வழித்துத் துடைத்துச் சுத்தம் செய்தான். இடுப்பில் செருகி இருந்த 'வில்லுக் கத்தி'யை எடுத்து, கன்றின் கால் குளம்புகளை அளவாக வெட்டிப் பதமாக்கி விட்டான்.
மருத்துவ வேலை ஒரு வழியாக முடிந்து விட்டது. புல்லுக் குளத்தில் கை இரண்டையும் கழுவித் துடைத் துக் கொண்டு மீண்டும் மர நிழலுக்கு வந்து சேர்ந்தான். சின்னக்குட்டியன். கட்டச்சி தனது புத்திர பாக்கியத்தை நாக்கினுல் நக்கிச் சுத்திகரித்துக்கொண்டிருந்தது.
y

Page 57
98 தண்ணீரும் கண்ணீரும்
காதில் செருகி இருந்த பீடித் துண்டை எடுத்தான். மடியிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுக்கும்போது தான், மடியில் மறைவாக மறைத்து வைத்திருந்த் பத்துச் சத "நெவிகட் சிகரெட்டின் ஞாபகம் அவனுக்கு வந்தது. நீண்ட நாட்களாகச் சிகரெட்டு புகைத்துப் பார்த்து விட வேண்டு மென்று கொள்ளை ஆசை அவனது அடி நெஞ்சில். பீடித் துண்டுடன். அந்தக் கொள்ளை ஆசை ஆரம்பித்த இடத்திலேயே அடங்கி ஒடுங்கி விடும்.
ஆளுல் இன்று ? - காலையிலேயே விவரிக்க வொண்ணுத தனி மகிழ்ச்சி மனதில். மாசக் கடைசி வேறு. கையில் சில்லறை புளங்கக் கூடிய இந்த நேரத்தைவிட்டால் அவனது அந்தரங்க ஆசை பூர்த்தியடையவே முடியாமல் போய் விடலாம். பத்துச் சதம், வாழ்க்கை வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் என்று மனதாரத் தெரிந்தும் கூட அந்தச் சிகரெட்டுக்கு அவன் காசு கொடுத்து வாங்கி விட்டான்.
வேடிக்கைக் கதை கேட்கச் சப்பாணி கொட்டிக் கொண்டிருக்கும் சிறுவனப் போல இருந்து கொண்டான் பீடித் துண்டைக் கசக்கி எறிந்து விட்டு, சிகரெட் டைக் கையில் எடுத்தான். நாகரிக புருஷர்கள் பெருவிரல் நகத்தில் தட்டிக் கொள்வதைப் போல அதைத் தட்டிப் பதப்படுத்திக் கொண்டான். ஒரு தடவை சிகரெட் தவறி நழுவி தரைமீது விழுந்து விட்டது. பீடி வாயில் இருப்பதே தெரியாது. 'அப்படிப்பட்ட நிபுணத்துவப் பழக்கம். ஆனல் இந்தச் சிகரெட் ? ܖ
புகையை இழுத்து அனுபவித்து அதன் சுவையை ஒரு தடவையாவது உணர்ந்துவிட வேண்டுமென்று அவன் நெஞ்சம் தவியாய்த் தவித்த தவிப்பு.
முயற்சித்து மீண்டும் அந்த வெள்ளைச் சுருட்டை உதட் டில் ஒட்ட வைத்துக் கொண்டான். உதடுகள் இரண்டை யும் முற்ருக மடித்து சிக்ரெட் கீழே விழுந்து ப்ோகாவண்

முற்றவெளி .99
னம்கெட்டியாகப் பிடித்தபடி தேனீர்க் கடையொன்றில்
இரவ்ல் வாங்கித் திருப்பிக் கொடுக்காமல் அடித்துக்
கொண்டு இந்த நெருப்புப் பெட்டியைத் திறந்து குச்சியை
எடுத்து உரசி பற்ற வைத்துக் கொண்டான். பீடிப் புகையை
மூக்கால் விடுவதுபோல ஒரு தடவை விட்டுப் பார்த்தான்.
புரைக்கேறியது.
மோகம் தீரவில்லை.
-என்ன இருந்தாலும் விலையேறின சிகரேட்டு அடிக் கடி புகைத்துத் தள்ளுகிற துரைமார் இருக்கிருங்களே அவர்கள் ரொம்ப ரொம்பப் புண்ணியம் செய்தவங்கள் தான்!”
நெஞ்சம் நிச்சயித்துக் கொள்ளுகின்றது. "இந்தப் பிச்சைக்காரப் பயலுகள் குடிக்கிற பீடியை விட சிகரேட் ரொம்ப ஜோராய்த்தான் இருக்கு’ என்று மனம் நினைத்தது. ‘இனிமேல் வக்கில்லாத பயலுகள் குடிக் கிற இந்தப் பீடியைக் கையாலேயே தொடக்கூடாது. பெரிய மனுசங்கள் மாதிரி இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு ஒன்ருவதெண்டாலும்.'
சின்னக் குட்டியன் பெரிய பொருளாதார மேதையல்ல. சாதாரண மனிதன்தான். அந்த அற்ப நேரத்துக் கனவுக் குஷி அவனை இப்படியெல்லாம் கற்பனை பண்ணி தன்னைத் தானே இன்பம் காணும்படியே செய்து.செய்து.
-என்ன இருந்தாலும் மனிதன்தானே அவன்! கஞ்சாக் குடித்து அதன்போதையில் தன்னை மறந்து கனவு உலகில் சஞ்சரிப்பவனைப்போல, கறுத்த விழியைச் செருகி, கண்களைப் போதை உணர்ச்சியில் வைத்த வண்ணம் இன்ம் புரியாத இன்பக் கற்பனையில் மனதை உள்வாங்கி. உள்வாங்கி. そ 6 : ۔ ہر ، .
"மற்ருெரு தம்மையும் இழுத்துப் புகையை வெளியே ஊதினன். ஜோராக-ரொம்ப ஜோராத-புகையை இழுத்து

Page 58
90 தண்ணீரும் கண்ணீரும்
இழுத்துக்காற்றில் கலோவிட்டான். குஷி கிளம்பிவிட்டது: வாயைக்.குவித்து, அண்ணுந்து புகையை வானத்தில் வட்டம் விட்டான். ஒன்று, இரண்டு, மூன்று- .
பெரு விரலுக்கும் மற்ற இரண்டு விரல்களுக்குமிடையே தனது வெள்ளை உடலைப் பூரண சரணுகதியாக்கி இருந்த அந்தச் சிகரெட் எரிந்து எரிந்து சாம்பல் பூத்துப்போய் நீறு பூத்த நெருப்புடன் காட்சி தந்தது.
சிகரெட் புகையில் தன்னை மறந்து இரசித்துக் கொண் டிருத்தவன் கண்களில் கட்டச்சி பெற்ற கன்று ஆடி, அசைந்து எழுந்து நடக்க முற்படுவதுபோலத் தெரிந்தது. மெதுவாக எழுந்து நடந்து அந்த இடத்திற்குச் சென்றன்.
வாளிப்பும் இளமையும் மிருதுத் தமையும் கொண்ட தான அந்தக் கன்றினை மெதுவாக அணைத்துக்கொண்டே நீவிக் கொண்டு சிறிது நேரம் நின்றன். தனது மனைவி தையலம்மையும் அப்படி ஒரு. இனிமையான அந்த நினை வின் இன்பம் ஒரு கணம் தேகத்தைப் புல்லரிக்கச் செய்து விட்டது.
உண்ட மயக்கம் அவனை நின்று சிந்திக்க விடவில்லை. களைப்பும் சோர்வும் அவனுக்கு. அரசமரத்துக்கு அப்பா லுள்ள பூவரச நிழலில் துண்டை உதறித் தரையில் விரித்து விட்டுத் தலையைச் சாய்த்துக் கொண்டான். கண்கள் துரக்க மயக்கத்தில் இமைக்குள் செருகிக் கொண்டன.
மதுரமான மயக்கத்தில் சின்னக்குட்டியன் எப்பொழுது தூங்கிப்போய் விட்டானே தெரியாது. இடது கையைத் தலைக்கு அணை கொடுத்துச் சாய்ந்து படுத்திருந்தான் அவன.
சளி ஒழுகும் மூக்கும், பாண்போலப் பெருத்த வயிறும் கறுத்த உறுவமும் கொண்ட பக்கத்து வீட்டுப் பையன் பரக்கப் பரக்கத் தட்டி எழுப்பியபோதுதான் சின்னக் குட்டியன் விழித்துக்கொண்டான். தன்னுடைய சரீரத் தைச் சொறிந்துகொண்டே படுத்த இடத்தை விட்டு

* முற்றவெளி 10
எழுந்து உட்கார்ந்து கொண்டான். எழுந்து உட்காரும் போழுது அவனது மூட்டுகள் யாரோ சொடுக்கி வீடுவது போன்று ஒலி செய்தன.
“என்னடா-என்னடாது ?" "தையலம்மைக் குஞ்சியாச்சி புள்ளை பெத்து விட்டா வாம். கையோடே கூட்டி வரட்டாம்."
“என்னடா? புள்ளை பிறந்து விட்டதா" அவனது குரலில் கனிவும் குழைவும் ஒன்று கூடி நின்றன. "பொறு, பொறு வாறன்...!" - பாசம் என்று ஒன்று இருக்கிறதே அதுதான் உலகத்தி லுள்ள ஆபத்துகளுக்கெல்லாம் ஆதிகாரணம்; ராமன் மேலுள்ள பாசம்தான் தசரத சக்கரவர்த்தியையே துடிக்கத் துடிக்க.
புத்திர பாசம் சின்னக்குட்டியனை அலைக்கழித்தது. பொழுதும் டச்சுக்காரன் கோட்டைக்குப் பின்புறமாக இறங்கிவிட்டது. கட்டச்சியையும் பச்சிளம் கன்றையும் பத்திரமாக ஒட்டி வந்து பெஞ்சனியர் ஐயா வீட்டுத் தொழு வத்தில் கட்டினன். மாடுகளை அதன் அதன் வீடுகளுக்கு ஒட்டிச்சென்று படல்களைத் திறந்து உள்ளே துரத்தினன். இதற்கெல்லாம் அவனது தேகம் குத்திரப் பாவை போல இயங்கியதே தவிர மனமென்னமோ.
அவன் வீடு வந்து சேரும்போது இரவின் வலுவான பிடிக்குள் உலகம் சுருண்டு விட்டது. வளர்ந்த விஞ்ஞான அறிவில் பரிணமித்த மின்சார விளக்குகள் இரவைப் பகலாக்க முயன்று கொண்டிருக்கும் அந்த நகரத்தில் குருடனின் விழிகள் போன்று இருண்டிருக்கும் ஒழுங்கை களால் அவன் நடந்து வர நேரம் பிடித்து விட்டது.
விருந்தையில் ஒரு கை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரக் கிழவி வெளித் திண்ணையில் காலை நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள்.

Page 59
102 தண்ணீரும் கண்ணிரும்
பிரசவ அறைக்குள் பூனைபோல நுழைந்த சின்னக் குட்டியன் எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்துத் தையலம்மையின் முகத்தைக் குனிந்து பார்த்தான். பிள்ளைப் பேற்றினல் களைப்புற்றுச் சோர்வுற்றுத் துவண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள், அவள். . . .
தையலம்மையைத் தாயாராக்கி அவனைத் தந்தை நிலைக்கு உயர்த்திய சின்னஞ் சிறு சிசு வொன்று சீலைப் பொதிக்குள்ளே வளர்த்தப்பட்டுக் கிடக்கிறது. -
முற்றவெளியில் கட்டச்சிப் பசுவுக்குப் பிறந்த அந்தக் கன்றைத் தடவுகையில் அவன் கண்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த இன்பம் இங்கே. ;
கண்கள் பரபரக்கின்றன; கைகள் துருதுருக்கின்றன. அவனது வாரிசாக, அவனே நினைவூட்டி அவனது குலக் கொழுந்தாய், சந்ததியின் தனித் துளிராய் பிஞ்சுக் கைகளை உயர்த்தி, விரித்து, விரல்களைப் பரப்பி, கால்களை மாறி மாறி உதைத்துக் கொண்டு கிடக்கும் அந்தப் ‘பச்சை டிண்ணைத் தூக்கி ஆவல் நிறைந்த பார்வையால் ஆராய்ந்து பார்க்கிருன். கை வருடி வருடி எதையோ மனதிற்குச் செய்தியாக அறிவிக்கின்றது.
அவனது நெஞ்சை நிறைத்து அதுவரை அவனது நெஞ்சினை அரித்து வந்த மனப் பிராந்தியைப் போக்கி விட்டதா, அந்தச் செய்தி ? Վ.
அதோ அவனது முகத்தில் இழையும் சந்துஷ்டி ரேகை களும் புன்முறுவலும் பின்பு எதைத்தான் புலப்படுத்து கின்றன? ܗܝ .
25-3-1960

ஞானம்
யாழ்ப்பாணம். மூன்றம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புற மாகப் 'பவுண் மார்க் ஒட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியி லிருந்து பத்து கஜ தூரத்தில், தனிமையில்-விரகதாபத் துடன் தவிக்கும் பெண்ணைப் போன்று காட்சி தரும்-முனி சிப்பல் மின்சாரக் கம்பம். அதன் தலைப்பில் மின்மிணிப் பூச்சியின் கைவிளக்கேந்தி மினுக்கிக் காட்டும் "பல்ப்". அதன் ஒளிக்கற்றைகள் சக்தி குறைந்தனவாக, மிக மிக மங்கிய வெளிச்சத்தை நிலத்தில் பாய்ச்சுகின்றன. தன் நிழலைக் கால்களுக்கிடையில் மிதித்துக்கொண்டு, அந்தக் கம்பத்தில் ஒரு கரத்தைத் தாக்குக் கொடுத்த வண்ணம், ஒணுனைப்போல தலையை ஆட்டியபடியே நிற்கின்ருன், "ஷோக்கல்லோ கந்தையா அண்ணன்.
அவனுக்கு இப்பொழுது ஞானம் பிறந்த நிலை என்பதை அவனைப் பார்த்ததும் "சட்டென்று சொல்லிவிடலாம். வைசாக பெளர்ணமியிலேதான், சித்தார்த்தனுக்கு ஞானே தயம் பிறந்ததாம். அதைப்போல கந்தையாவுக்கு இந்தக் காலங்களிலேதான் ஞானம் பிறக்கும். காரணம், பனை கொடியேறிவிட்டது. இருபது சதத்திற்கு ஒரு போத்தல்

Page 60
104 தண்ணிரும் கண்ணிரும்
பனங்கள்ளும், ஒரு சுருட்டும் கிடைக்கும் காலம். கொடி யேறிய காலத்தை எப்பொழுதும் கந்தையா பயன்படுத்திக் கொள்ளுவான். ஒன்பது மணிக்குமேல், வயிற்றில் புளித்துப் போதை கொடுக்கும் சக்தியின் சக்தியில் தன் சக்திகளை இழந்து, ஞான நிலையை அடைந்துவிடுவான். இன்று, இப்பொழுது, மணி ஒன்ப்து. கந்தையாவுக்கு ஞானம் பிறந்துவிட்டது!
கந்தையா அண்ணன் தனிக்கட்டை. வீடு வாசல், குடும்ப பந்தம் எதுவும் அற்றவன். 'பவுண்மார்க் கிட்டங்கி யில் ஒடு சுமக்கும் வேலை. கிட்டங்கிக்குச் சற்றே தெற்கில் - விரிந்து பரந்துகிடக்கும் கடலில், அலுப்பாந்தித் துறையில் கள்ளிக்கோட்டையிலிருந்து வரும் பாய்மரக் கப்பல்கள் நங் கூரம் பாய்ச்சி நிற்கும். அந்தக் கப்பல்களில் வந்த ஒடுகளைத் தலையில் சுமந்துவர இருபது தொழிலாள்ர்கள்-ஆண்களும் பெண்களுமாக-வேலை செய்கிறர்கள். நாள் முழுவதும் ஒடு சுமக்கும் அவர்களுக்கு மாலையில் இரண்டு ரூபாய்கள் சம்பளமாகக் கிடைத்துவிடும். அந்தச் சொற்ப சம்பளத்தில் 'வயிறு இறுக்கிக் குடும்பம் நடத்தும் அந்தத் தொழிலாளர் மத்தியில் தனிக்காட்டு ராஜாதான் கந்தையா. வயதில் இளேயவர்களானலும் சரி, மூத்தவர்களானலும் சரி, சக தொழிலாளர்கள் எல்லோரும் கந்தையாவைக் 'கந்தையா அண்ணன்' என்றுதான் அழைப்பார்கள். பேசும்பொழுது அடிக்கடி "ஷோக்கல்லோ' என்ற வார்த்தையையும் சேர்த் துக் கொள்வதினுல், "ஷோக்கல்லோ" என்ற விருதுப் பெயரும் ஒட்டிக்கொண்டது.
கந்தையா ஞானம் பிறக்காத நிலையில் மிக்க நல்லவன் தான். அந்த நேரங்களில் அவனுடன் வேலை செய்யும் அடைக்கலமுத்து, ரப்பியல், மேரிப்பிள்ளை லூர்த்தம்மா. என்று யாராக இருப்பினும் வெகு சகஜமாகப் பழகுவான். அவர்க்ளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் பழகினுலும், சில
சமயங்களில் ஒட்டியும் ஒட்டியும் பழகுவான்.

ஞ்ானம் 05
பின்னேரங்களில், கிட்டங்கிக்கு முன்ஞல், நிற்கும் மரதிழலில் குந்தி, பக்கத்துக் கடையிலிருந்து டின்பால் பேனியில் வாங்கிக் கொண்டுவரும் "வெறுந் தேத்தண்ணி" யைக் குடித்து, “வெத்திலை’ போட்டு, கலகலப்பாகப் பேசிக் கொள்வார்கள். ஏனைய தொழிலாளர்களுடன் சேர்ந்து கந்தையா தேநீர் பருகுவதில்லையாயினும் அந்தச் ‘சமா’வில் தானும் ஒருவனுகக் கலந்து கொள்ளத் தவறுவது கிடை யாது. கந்தையா, சும்மாடாகப் பயன்படும் செந்நிறக் காவி யேறிய துவாலைத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அவ்விடம் வந்தால் வேடிக்கைக்குக் குறைச்ச லில்லை. அங்கு லூர்த்தம்மாவும் இருந்துவிட்டால், பேச்சுகள் மிக்க ரசமாக இருக்கும். • .
லூர்த்தம்மா, தன்னுடைய வெற்றிலைக் காவியேறிய உதடுகளைக் கோணலாக நெளித்துக்கொண்டு, ‘என்ன கந்தையா அண்ணை? இண்டைக்கு மாப்பிளையாட்டம் சோக்குப் பண்ணுறியளே!' என்று கேட்பாள்.
"ஒமடி, ஓமடி.உன்னை நான் கட்டுவன் எண்டு வளையம் போட்டுப் பாக்கிறியா? ஏன்டீ அப்பிடித் தானே?.ம்.ஷோக்கல்லோ.கொண்டாடி ஒரு நெட்டி பொயிலை" என்பான்.
"ஒமோம், பொயிலை கடன் வாங்கிறதிலே குறைச்ச லில்லை; வாங்கித் தந்து வைச்ச புருஷனுட்டம்” என்று சொல்லிக் கொண்டே, தன் இடுப்பில் சொருகி வைத்திருக் கும் கொட்டப் பெட்டியைத் திறந்து ஒரு நெட்டி புகையிலை யைக் கிள்ளி எடுத்துக் கொடுப்பாள்.
"நெடுக நெடுக லூர்த்தம்மாட்டைத்தான் கற்தையா அண்ணன் பொயிலை வாங்குது. என்ன சங்கதியோ?- என்ன சூதோ’ என்று சொல்லிக்கொண்டே, முன்னல் பரட்டை விட்டிருக்கும் இளநரை கொண்ட மயிரைக் கோதிச் சொருகிவிடுவாள் மேரிப்பிள்ளை.
"அவளுக்கென்னடீ? உன்னைப்போல கிளவியாடீ? அவள் குமரெடி, குமர்” என்று கந்தையா சொல்வான்.

Page 61
106 தண்ணீரும் கண்ணிரும்
இதெல்லாம் காதல் விவகாரமல்ல, லூர்த்தம்மாதான் அங்கு வேலை செய்யும் பெண்களுள் குமரி ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியில் அழகி. அவளைக் காரணமாக வைத்து நகைச்சுவை அனுபவிப்பதில் எல்லோருக்குமே ஒரு தனிப் பிரீதி. இந்தப் பகிடிகளில் கந்தையா கலந்து கொள்ளும்பொழுது, அவனும் அங்கு வேலை செய்யும்-ஒடு சுமக்கும்-சேரி மக்களின் ஒரு அங்க மாகத்தான் காட்சி தருவான். இருப்பினும் தன்னை மறந்த நிலையிலேகூட, கந்தையா தன்னுடைய ஜாதிப் பெருமையை மறந்தது கிடையாது. ". . .
அதை வெளிப்படுத்த அவனுக்கு ஞானம் பிறக்க வேண்டும். அது பிறந்துவிட்டால், தன் பாட்டில், "ஷோக் கல்லோ, என்னை யாரெண்டு நினைச்சுக்கொண்டியள்? நான் ஓடு தூக்கிறதாலை பறையனல்ல. நான் வெள்ளாளனடா, வெள்ளாளன். முந்தி நல்லூரை ஆண்ட சங்கிலியன்ரை பரம்பரையடா. நான் கீழ்சாதி இல்லையடா, எழிய சாதி இல்லையடா...ம்.ஷோக்கல்லோ.என்ர சாதி ஷோக்கான சாதி" என்று விஸ்தரிப்பான்.
காலையில் விழிப்பு ஏற்பட்டுவிட்டால், அவன் ஒடு சுமக்கும் கந்தையாதான். அவனுக்கு அடைக்கலமுத்து அடைக்கமுத்துதான், ரப்பியல் ரப்பியல்தான், மேரிப் பிள்ளை மேரிப்பிள்ளைதான், லூர்த்தம்மா லூர்த்தம்மா தான். -
ஆனல், இப்பொழுது, மின்சாரக் கம்பத்திற்கு முட்டுக் கொடுத்து நிற்கும் கந்தையாவுக்கு ஞானம் பிறந்த நிலை!
நேற்றும் இப்படியான ஞானம் பிறந்த நிலையிலே தான் வந்தான். வந்து, இதே இடத்தில் நின்று கொண்டே, கலைகொண்ட தனது ஞான நிலையைப் பறை சாற்றினன். அன்று கிளாக்கர் ஐயா கூப்பிட்டு, ‘என்ன கந்தையா, நீ இப்ப ஒவ்வொரு நாளும் குடிச்சுப்போட்டு அயல் அண்டைக்குக் கரைச்சல் குடுக்கிறியாம்' என்று

ஞாண்ம் ፲ሇቻ፳ ̆
கண்டித்தும் கண்டிக்காமலும் சொல்லிவிட்டார். அதைக் கந்தையாவால் தாங்க முடியவில்லை. அதஞலேதான்*செப்ப மாகக் கலை ஏற்றிஞன்.
ஞானம் பெற்ற நிலையில், அதே மின்சாரக் கம்பத்தின் கீழே நின்ற வண்ணம் பார்த்தான். எதிரே அந்த ஒலைவீடு. மூன்றும் குறுக்குத் தெரு நாகரிக கனதனவான்கள் வசிக்கும் வீதி. ஒறுப்பாக, ஒன்றே ஒன்று கருவேப்பிலக் கொத்து மாதிரி, ஒரு ஒலைக்குடிசை தனித்து நிற்கின்றது. அதற்குள் தான் அடைக்கலமுத்து குடும்பத்துடன் வசிக்கிறன். அவனும் ஓடு தூக்குபவன்தான் என்ருலும், 'நல்ல பிள்ளை' என்ற பெயரை எப்படியோ அக்கிட்டங்கி நிர்வாகிகளிடம் தட்டிக்கொண்டு, இரவில் 'வாச்சர்' வேலையும் பெற் Աl விட்டான். வாச்சர் வேலையின் பெருமையினல் வாடகை இன்றிக் கிடைத்ததுதான் அந்த ஒலைக்குடிசை. -
ஞானம் பெறும் கந்தையா தினமும் அந்த குடிசைக்குச் சமீபமாக இருக்கும் மின்சாரக் கம்பத்தின் கீழே நின்றுதான் தனக்கு வாலாயமான ஞானப்பாக்களை அர்ச்சனை செய்வது வழக்கம். கிளாக்கரிடம் இந்தச் செய்தியை இந்த அடைக் கலமுத்துதான் சொல்லியிருப்பான் என்று பனங்கள்ளுக் கொண்ட புளாவில் "சொத்தை"யைக் குத்தும்பொழுது எழுந்த சந்தேகம், பனங்கள்ளு ஆண்டவனின் புண்ணிய கைங்கரியத்தினல், உண்மையாக உறுதிப்பெற்றது.
"எனக்குத் தெரியும்-நல்லாத் தெரியும்-ஆர் என்னைக் குடிகாரனெண்டு கிளாக்கர் ஐயாட்டைக் கோள் மூட்டினவ னெண்டு. ஷோக்கல்ல்ோ. நான் குடிக்கிறஞம். ஏண்டா, அடைக்கலமுத்து உன்ரை கொப்பன்ரை வீட்டுக் காசிலை யாடா நான் குடிக்கிறன்? நான் ஒடு தூக்கினலும் வெள்ளா ளனடா, சங்கிலியன்ரை பரம்பரையடா. நீ பறையன்-- கீழ்சாதியடா. உன்ரை சாதிப் புத்தியை காட்டீட்டாய். நான் கடவுளான குடிக்கிறனன்தான். அதுக்கு உனக் கென்னடா? ஷோக்கல்லோ.டேய் பறைப் பயலே வாடா வெளியிலை. உன்ரை மூட்டெல்லாம் முறிச்சுக் காட்டு:

Page 62
彦拿母 தண்ணீரும் கண்ணிரும்
ற்ன்" என்று அங்கிருந்தபடியே சவால் விட்டான் அடைக்கலமுத்துவுக்கு.
“இந்தா, கந்தையாண்ணை இரா இருட்டிலை மனிஷர் மாஞ்சாதி படுக்கிறேல்லையா?. போய் வீட்டுக்கு நேரத் தோடை சாப்பிட்டுப்படன்."
'சடாப்பிய மவுத் எண்டால் வாயைப் பொத்தடா எண்டு அர்த்தம். உன்னைப்போல பறைப்பயலாடா நான். நான் தனி ஆளடா-தனிக்கட்டை. காசை விட்டெறிஞ் சால், ஷோக்கல்லோ, சாப்பாடு. ஆர்ரை திண்ணையிலாவது சரிஞ்சாப் படுக்கை.ஆனல் நீ உன்ரை சாதிப் புத்தியைக் காட்டிட்டாயடா. உன்னைச் சரிக்கட்டீட்டு, அப்பிடியே மறிய லுக்குப் போய் கொழுக்கச் சாப்பிட்டிட்டு வரப்போற G&T! ---[T. . . . . . 始》
அடைக்கலமுத்து, அதற்குமேல் பேச்சை வளர்க்க வில்லை. படலையைச் சாத்திவிட்டான்.
கந்தையா "திரிலோகமும் புகழும் தீரவீர சூர சங்கிலி மன்னன் நானே' என்று கூத்துமெட்டில் பாட்டிழுத்து இடையிடையே தாளக்கட்டிற்காகத் தூஷணச் சொற்களை யும் சேர்த்துக் கொண்டான். "ஆரடா, அவன்? அது அடைக்கலமுத்துவின் குரலல்ல என்பது ஞான நிலையிலும் கந்தையாவுக்கு விளங்கிவிட்டது.
உற்றுப் பார்த்தான். ரோட்டில் ரோந்து வந்த இரண்டு போலீஸ்காரர். "ஆரடா, அது? ரோட்டிலை என்னடா கூத்து? நீதா ளுடா கந்தையா. உன்னைப்பற்றி நிறையக் "கொம்பிளே’ யின் வந்திருக்கு. உன்னலை அக்கம்பக்கத்து ஆக்களெல் லாம் நித்திரை கொள்ளுறதில்லையாம். ஏண்டா தூஷணம் பேசிக்கொண்டு நிற்கிருய்? உன்ரை உடம்புக்கு ஏதாவது கேக்குதா? இரண்டு ஒட்டகப்புலத்துப் 'புக்கை" கட்டத் தான் ஆசையா?” என்று ஒரு போலீஸ்காரன் மிரட்டிஞன்

ஞானம் 99
'தரின் தூஷணம் கொட்டுற்கு?-அட கடிவுளே! தூவு ணம் கொட்டினல் நாக்கு அழுகிப் போகும் எண்டு எனக்குத் தெரியாதா? நீங்கள் என்ன பேய்க் கதை கதைக்கிறியன்?”
'அட, அது கிடக்கட்டும் மென். இதுதான் கடைசி. இனிமேல் நீ குடிச்சிட்டு இப்பிடி ஏதாவது ரோட்டிலை"
சேட்டை கீட்டை விடுருய் எண்டு கொம்பிளேயின் வந்தால்,
அவ்வளவுதான்.”
*கோட்டை முனியப்பராணைச் சொல்லுறன். நான் ஏன் குடிக்கப்டோறன்? நான் ஏன் சத்தம் போடப் போறன் ?". என்று கந்தையா நெளிந்து, வளைந்து, குழைந்து, கூழைக் கும்பிடு போட்டு எப்படியோ நேற்று போலீஸ்காரரை அனுப்பிவிட்டான்.
இன்று நேற்றையைப் பார்க்கிலும் நல்ல "கலை"! முனிசிப்பல் மின்சாரக் கம்பத்திற்கு ஒரு கரத்தை முட்டுக் கொடுத்து ஞானம் பெற்ற நிலையில் சிந்தித்த ஷோக்கல்லோ கந்தையா அண்ணனுக்கு, நேற்றுப் போலீஸ் காரன் மிரட்டியது ஞாபகத்திற்கு வந்தது. ரோஷம் வேறு. “இதுவும் அடைக்கல முத்துவின் வேலையாகத்தான் இருக்கும்" என்ற சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது. உறக்கத்தில் ஆழ்ந்ததாகக் காணப்பட்ட அந்த் ஒலை வீட்டைத் துழைத் துத் தன் சத்தம் பாயவேண்டும் என்ற எண்ணம் கொண்ட வனைப்போலக் கத்தத் தொடங்கினன்.
"ஷோக்கல்லோ! டேய், அடைக்கலமுத்து. கீழ்சாதிப் பறப்பயலே! நீதானடா பொலிசுக்கு என்னைப்பற்றி சொல்லிக் குடுத்தனி.நேற்று வந்த அந்தப் பொலிசு மயிராண்டி என்னைத் திண்டிட்டானே?. Grrrl "pão சேட்டை கீட்டைவிட்டால் திண்டுபோடுவன் எண்டல்ல வெருட்டுருன். அவங்களை வெளுத்திடுவன் வெளுத்து. பாவம் எண்டுதான் விட்டனன். நான் ஆரடா? ஒடு தூக்கி றவன் எண்டாலும், சங்கிலியன்ரை பரம்பரையடா. ஷோக்

Page 63
0 தண்ணீரும் கண்ணீரும்
கல்லோ.டேய், அடைக்கலமுத்து.கூட்டியாடா உன்ரை பொலிசுக்காரங்களை ஒரு கை பாத்திடுறன்" என்று உச்சஸ் தாயியில் முழக்கமிட்டான். '
சொல்லி வைத்தாற்போல, நேற்று வந்த அதே போலீஸ் காசர் இன்றைக்கும் வருகிருர்கள்.
“என்னடா கந்தையா? உடம்பு புளிக்குதா? "உந்த வெருட்டுகளுக்கு நாணு அவியிறது'-'இன்று இந்தப் பொலிசுக்குப் பயப்படுறதில்லை" என்ற சங்கற்பத் துடன்தான் குடித்தான். ஆகையினலேதான் பலாபலன் களை ஆராயாமல் சொல்லுகிருன்.
"நான்.ஆர் தெரியுமா, பொலிசய்யா! வீரதீரச் சங்கிலி
:யன்ரை பரம்பரை பறைப்பயலல்ல." மீண்டும் கந்தையா முறுகுகிருன்.
அந்த அவமானத்தைக் காக்கி உடைகளால் தாங்க இயலவில்லை. அவர்களுக்கு மூக்கு நுனிவரை கோபம் ஏறு கிறது. ஒரே பாய்ச்சல்; கந்தையாவிற்குச் செப்பமான
9. . . . . .
கந்தையா கானிற்குள் அனுங்கிக்கொண்டு கிடக் கிருன். a.
வந்த போலீஸ்காரர் இருவரும் வந்த சுவடுகூடத் தெரியாமல் மறைகிருர்கள். சட்டத்தைப் பாதுக்ாப்பதாகச் சொல்லும் அவர்கள், சட்டத்தை மீறுவதைத்தான் நுண்கலை யாகக் கொண்டிருக்கிருர்கள்.
கந்தையாவுக்கு ‘மண்டகப்படி கிடைத்தது அந்த வீதி வாழ் மக்களுக்கு நன்முகத் தெரியும். ஆனலும் கனதன வான்க்ளுடைய வீட்டுப் படலைகளெல்லாம் சாத்தப்படு கின்றன.
நிசப்தம். அதைக் கிழித்துக்கொண்டு இடையிடையே / அனுங்கல். X

ஞானம் 11. It
பயந்து பயந்து, அரிக்கன்லாந்தரை எடுத்துக்கொண்டு, தன் மகனையும் அழைத்துக்கொண்டு, அடைக்கலமுத்து கந்தையாவைப் பார்க்க வருகிருன். &
பலமான அடி. தலையிலிருந்து இரத்தம் ஊற்றெடுக் கிறது. தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துகொண்டே, மகனை ஒரு கார் பிடித்துவரும்படி சொல்கின்ருன் அடைக்கல முத்து. . . . கார் வருகிறது. அடைக்கலமுத்துவும், மகனும் கந்தையாவைத் தூக்கிக் காருக்குள் ஏற்றுகிறர்கள். கந்தையாவுக்கு இலேசான ஸ்மரணை வருகிறது.
கார் ஆஸ்பத்திரியை நோக்கி விரைகிறது. போதை தெளியாது, இன்னும் ஞான நிலையிலிருக்கும் கந்தையாவின் வாய் பிதற்றிக்கொண்டிருக்கிறது:
“டேய்! நான் ஆரெண்டு தெரியுமா? பொலிசு எண் டால் கொம்பு முளைச்சவன?.டேய், அடைக்கலமுத்து, கீழ்சாதிப் பறைப்பயலே கவனம்! நான் ஒடு தூக்கினலும் பறையனில்லையடா.சங்கிலி மன்னன் பரம்பரையடா..."
I960

Page 64
கரும்பலகை
வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி-வகுப்பெங்கும் ஆழ்ந்த மெளனம் நிலவுகின்றது.
கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் தோன்று கிழுர்: அவர் கண்கள் அக்கினிக் கெந்தகக் குழம்பைக் கக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதயத்தினுள்ளே கொதிப்படைந்த உணர்ச்சிக் குமுறல்கள்.கொந்தளிப்புகள், எண்ணப் போராட்டங்கள்.
“யாரடா இந்தப் படத்தைக் கீறினவன் ? எழுந்து நில்லடா ?"-மயானத்தின் மெளனத்தைக் கிழித்தெறிந்த கோடையிடி கேட்கிறது; கேள்விக்கணை ஒலிக்கிறது.
ஊசி விழவில்லை : சருகு அசையவில்லை. அசைவற்ற, ஒலியற்ற பிராந்தியத்தின் அமைதி-பேரமைதி !
கடைக் கண்ணுல் கரும்பலகையைக் கிாகப் uitřGM ar பார்க்கிருர்,
கரும்பலகையில் கேலிச் சித்திரம் ஒன்று வரையப்பட்டி ருக்கிறது. அதன் அடியில் 'ஆனந்த நடனம் ஆடினர்'

கரும்பலகை 113
ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. urriš பார்க்க அவரது உள்ளத் தீ கொழுந்து விட்டுப் பற்றி எரிகின்றது. அந்தச் சதுர முகம், மூக்கு என்று பெயரிடாக் குறையாகக் கீறப்பட்டிருக்கும் மூக்கு, வாய், கண்கள், பிஞ்சு முருங்கைக் காய்களை யொத்த கைகள், கால்கள்.கண்கள்
நிலை குத்தி நிற்கின்றன.
அவர் நெஞ்சத் தீய்க்கு நெய்வார்க்கும் அந்தக் காட்சி.
மீண்டும் தொடர்ந்து கேட்கிருர், வார்த்தைகளில் என்று மில்லாத சூடு,
“யார் இந்தப் படத்தைப் போட்டது? மரியாதையாகக் கேக்கிறேன், என்னை உங்களுக்குத் தெரியும். சொல்லி விடுங்கள். யார் போட்டது?”
மாணவர்கள் மூச்சு விடும் ஒலியைத் தவிர, எங்கும் அலாதியான மெளனம்.
ஆத்திரம் கந்தவனம் வாத்தியாரை அலைக்கழிக்கிற்து. கட்டு மீறிய சினம் அவர் தேகத்தைப் படபடக்க வைக்கிற்து. வகுப்பறையில் மேற்குச் சுவரிலிருந்து கிழக்குச் சுவர் நோக்கி நடக்கிருர்-நடக்கிருரா? இல்லை; தெத்துகிறர். தெத்தித் தெத்தி நடைபோடுகிருர், இடதுக்ால் பாதம் நடையை இடறி விடுகிறது. அவருடைய அந்தப் பாதம் முற்ருக நிலத்தில் படியவில்லை. பாதத்தில் கெவர் விட்டி ருந்த விரல்கள் மட்டும்தரையில் ஊன்றி, முஃடுக் கொடுத்து, வலது பாதத்தின் அசைவுகளுக்குத் தக்கபடி ஈடு கொடுத்து, செயல் படுகின்றது.
குறைபாடு - s'
தாங்கித் தாங்கி நடந்து கொண்டே ஒரு கணம் கரும் பலகையைப் பார்க்கிருர் வாத்தியார். பார்க்க விருப்ப மில்லாமலிருந்தும்கூட அவர் கண்கள் கரும்பலகையை நோக்குகின்றன.
: . கந்தவனம் வாத்தியாரின் இடது கால் ஊனம்; பிறவிக்

Page 65
14 தண்ணீரும் கண்ணிரும்
இது எந்த மனிதனுடைய உருவம் ன்ன்று. யாராலுமே இனங் கண்டு கொள்ளப்படிாவிட்டாலும், இடது காலில் கெவர் விட்டிருக்கும் விரல்களுக்குச் சற்று அழுத்தம் கொடுத்து, வலது காலுக்கும் இது காலுக்கு முள்ள ஏற்ற இறக்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டி வரையப்பட்டிருந்தது அந்த நையாண்டிப் படம்.
மனதில் தன்னைப் பற்றியே சிறுமை உணர்ச்சி; தாழ்வு எண்ணம். படத்தின் கேலிக்குரியவன் தான் தான் என்கிற கசப்பான உண்மை கந்தவனத்தின் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் வாத்தியார்தான் அவர். அத்துடன் தனது பிறவிக் குறைபாட்டை எண்ணியெண்ணித் துடிதுடிக்கும் ஆத்மாவும்கூட. தாழ்வு மனப்பான்மை என்னும் பயங்கர மான மனநோய் அவரை வாட்டுகிறது.
அவிர் இந்த வியாதியால் துன்புறுகிறர். இந்த நோய்க்குப்புட்டிகளில் அடைத்த மருந்தை இது வரை எந்த விஞ்ஞானியும்கூட. ۔۔۔۔ w
துப்பாக்கிக் குண்டு மனிதனை ஒரேயடியாகச் சாகடித்து விடும் வல்லமை வாய்ந்தது. ஆனல், கேலிக் கருத்து களிஞல், புகுத்தப்படும் தாழ்வு எண்ணம் ஊனக் குறை பாட்டுக்குரியவன் மனதை அணு அணுவாகச் சாகடித்துக் கொண்டிருக்கும். பாவம், கந்தவனம் வாத்தியார் கேலிச் சித்திரத்தைப் பார்த்தது தொடக்கம் சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக, அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கிருர்.
அவருடைய அங்கUனத்தைக் குறியாக வைத்துக் கொண்டு மறைவில் சில மாணவர்கள் ஹாஸ்யம் பண்ணி வம்பளப்பார்கள். அந்த நையாண்டியை இரசித்து:இர சித்துச் சிலர் சிரிப்பாய்ச் சிரிப்பார்கள். இது அவருக்குத் தெரியும். "நொண்டியர்' என்ற பட்டப் பெயரைப் பற்றி இதுவரை அவர் கவலைப்பட்டவருமல்ல. மாணவர்கள் மத்தி

கரும்வகை 115
யில் பிரபலமடைந்துள்ள தனது பட்டப் பெயரின் மகிமை ய்ைப் பற்றிச் சிந்தித்தவரும்ல்ல்.
பருப்பில்லாமல் நடத்தப்பட்ட கலியாணங்களின் எண்ணிக்கையைக் கண்டு பிடித்துவிடலாம். ஆளுல் பிட்டப் பெயர் இல்லாத ஆசிரியர்களைப் பள்ளிக்கூடங்களில் கண்டு பிடிக்கவே முடியாது. இதுவும் அவருக்குத் தெரியும்
ஏனென்ருல், அவர் கூட ஒரு காலத்தில் பள்ளிக்கூடத் தில் படித்த மாணவன்தானே-தன் காலத்தைத் தானே எண்ணிப் பார்த்தால், மட்டச் சொண்டர், சாக்கர், கண்ணுடிப்புடையன், தும்பு முட்டாஸ் இத்தியாதி பெயர் கள் நிச்சயம் அவர் ஞாபகத்துக்கு வரத்தான் செய்யும்.
மறைவில் நடந்த நையாண்டி இன்று அம்புலத்தில் ஏறி, அரங்கத்தில் நடமாடத் தொடங்கி விட்டதே என்ற மனக் குறுகுறுப்பு, மனச் சஞ்சலம் அவர் நெஞ்சத்தைக் குடைகிறது.
பதைபதைக்கும் வெயிலில் நடந்து கால்களுக்கு இதம் தரும் தண்ணீரை நாடும்பொழுது, கால்கள் நெருப்புக் குவியலின் மேல் இடறிக்கொண்டால் ?--
கந்தவனம் வாத்தியார் அப்படித்தான் அவஸ்தைப்
நடந்து கொண்டிருந்தவர் "சட்டென்று நிற்கிருர்; திரும்பிப் பார்க்கிருர்,
“டேய், பாலசிங்கம்! எழுந்திரு. இதைக் கீறினதார்?" செவ்வரி ஓடிய கண்களால் அவனை ஊடுருவிப் 1 Irif&69.gif.
பதிலில்லை. கந்தவனம் கர்ஜிக்கிருர். "யாரடா இதைக் கீறின. தென்று கேட்கிறேன். பேசாமல் நிக்கிமுயே? சொல்லடா யார் கீறினது ?"

Page 66
16 தண்ணீரும் கண்ணீரும் "எனக்குத் தெரியாது, ஒாத்தியார்” “a,b f "-வாத்தியாரின் ஹ"ம்காரம். “முத்தையா, நீ சொல்லடா, உனக்குத் தெரியும் சொல்லு, யார் இதைச் செய்தது?"
|- - se ۔ aws “நான்காணவில்லை, வாத்தியார். நேரஞ் செண்டுதான் இண்டைக்குப் பள்ளிக்கு வந்தனன். எனக்குத் தெரியாது.”
பெயர்களை'உச்சரித்துக் கேள்விகளைக் கேட்கிருர் வாத்தி யார் கந்தவனம். பதில் ஒரே பல்லவிதான். தெரியாதுதெரியாது-தெரியாது!
தெரியாது’ என்கிற பதில் பிஜப்பூர் வட்டக் கோபுரத் தில் ஒலிப்பதுபோல் ஒலிக்கிறது. ஒலியலைகள் அணுக் கதிராக அவரைத் தாக்குகின்றன. - w
இப்பொழுது மனேகரனின் முறை. ,டேய், மனேகரன்! நீ தான் ச்ெய்திருப்பாய்“ ܖ சொல்லடா உண்மையை?’-இவ்வளவு நேரமும் இந்த வாண்டுப் பயலின் பெயர் தனது மனதில் எழவில்லையே என்ற மன்க் குறை. தனது ஞாபக சக்தியின் குறைபாட்டுக் காக அவர் வருத்தப்படுகிருர்.
மனேகரன் என்ற அந்த மாணவ மன்னன், மகா குறும்புக் காரன். ' குறுகுறுத்த கண்கள். துருதுருத்த கைகள்: பொல்லாத துடுக்குத்தனம்; ஒரு நிமிஷமும் சும்மா ஒய்ந் திருக்க மாட்டான். V−
அவன் மீது ஏகப்பட்ட புகார். அவனல் அநீதப் பிரதேசத்து மாமரங்கள் பழுப்பதில்லை; பிஞ்சில் உதிர்ந்து விடும். விளாமரங்கள் நாவல்மரங்களின் பாடு சொல்லவே வேண்டியதில்லை. இளநீர்க் குலைகள் இருந்த இடத்தில் இருக்காது. வாழைக் குலைகளின் திடீர் மறைவுகளுக்கும் அவன் காரணமாக இருந்திருக்கிருன். எத்தனையோ வீடு களின் தெருப் படலைகள் மதகு மழைவுகளுக்குள்ளும்

கரும்பலகை 17.
ஒழுங்கை முடுக்குகளுக்குள்ளும் குப்பை மேடுகளுக்கும் இரவு இரவாக உலாச் சென்றதற்கும் அவன் தான் காரணம் என்று. குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கிருன்.
இதற்காக ஆயிரம் தடவை கந்தவனம் வாத்தியர்ரிடம் மனேகரன் அடியும் வாங்கியிருக்கிருன்.
இருந்தும் மாணவர்கள் செய்யும் குறும்புச் செயல்களுக் குத் தலைமை தாங்கி முதல்வனகச் சென்று ஒத்துழைப்பான்" யாராவது ஒரு மாணவன் குறும்புத்தனம் செய்யும்போது அகப்பட்டுக்கொண்டால் என்ன சாதுரியம் செய்தாவது தனது தோழனைக் காப்பாற்றப் பாடுபடுவான். அதனல் தனக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டான். இந்தத் தனிப்பெருங் குணங், களிஞல் மனேகரன் மாணவர்கள் மத்தியில் குறிப்பிடக் கூடியவனுகவே விளங்கினன். அவன் வயதில் ஒருவன் எப்படி இருக்க முடியுமோ அதைவிடத் துடியாகத் துணிச்சல் மிக்கவனக இருந்தான். நித்தக் குடியனுக்குப் புளித்த கள் வெறிப்பதைப்போல, மனேகரனுக்குக் குறும்பென்ருல் ஒரே குஷி, அது அஷ்னுக்குக் கைவந்த கலை. மஞேகரன் எழுத்து நிற்கிருன். வாத்தியார் வார்த்தைச் சவுக்கைச் சுழற்றுகிருர்: “சொல்லடா உண்மையை, சொல்லு. நீ செய்யாட்டாலும், செய்தது யாரெண்டு சொல்லு : உம் சொல்லடா மனேக ரன் கீறினதார்?"
" எனக்குத் தெரியும், வாத்தியார்!" கந்தவனம் வாத்தியாரின் முகத்தில் ஒளிவாள் பளிச் சிட்டு மறைகிறது. மனதில் ஒருவகைத் திருப்தி, ஒருவித நம்பிக்கை. V
மனேகரன் ஒரு கணம் கரும்பலகையைப் பார்க்கிருன் அது அவன் உள்ளத்தையும் இலேசாகச் சுடுவதைக் கந்த வனம் வாத்தியாரால் அறிய முடியாது. இந்தக் கீழான

Page 67
IIs. தண்ணீரும் கண்ணீரும்
ச்ெயலச் செய்யத் தூண்டும்:மாணவப் பலஹினத்திற்குத் தான் அதிகமாகப் பலியாகி விடுவதில்லை, என்ற உண்மையை அவ்ர் புரிந்துகோள்ளவில்லேயே என்றநெஞ்சத்தவிப்பு:
அலம்ோதுக் கண்கள்,மானிக்கவாசகன் இருந்த் ப்க்கம் திரும்புகின்றன. மனேகரனின்" எத்தனையேர் திருட்டுத் தனங்களையும் திருகுதாளங்களையும் வாத்தியாரின் காதோடு காதாகச் சொல்லி வகுப்பு மாணவர்களின் சகோதரக் கட்டுப்பாட்டைக் காற்றில் பறக்க விட்டவன்தான் அந்த மரணிக்கவாசகன். அவனைப்பற்றி இவனுக்கு எப்பொழுதும் 'கோள்மூட்டி என்ற இழக்கார நினைவு. ஒரு தடவை யேனும் பழிக்குப்பழி வாங்கிவிட்டால்.
குழந்தை நெஞ்சத்தின் சிறு சுழிப்பு. இருள் மேகத்தில் முழக்கமின்றிக் கிளைவிடும் சிறு மின்னல். தானே அவன் செய்தது போன்ற குற்றத்தைச் செய்து அதை 'அவன் காட்டிக் கொடுத்தால்?...இதை நினைத்துப் பார்க்கவும் அவன் உள்ளம் கூசுகிறது:"மாண: வர்கள் தனது முஸ்பாத்தியைக் காட்டிக் கொடுக்கமாட் டார்கள்" என்ற நம்பிக்கையில் அந்தக் கேலிச் சித்திரத்தை வர்ைந்த அந்தக் கோழை தன் "கோபக்காரனக் இருந்தா லும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம். சுயநல. வெப்பத்தினுல் உருகிய நெஞ்சம் திரும்பவும் இறுக்கம் பெறுகிறது.
யாரடா அது? உண்மையைச் சொல்'-வாத்தியார் அந்தப் பெயரைப் பிடுங்கிக்கொள்ள அவதிப்படுகிறர்.
இயற்கையான பருவகால உணர்வுகளும், துணிகரமிக்க், அடக்கமில்லாத, முரட்டுத்தனமான மனப்போக்குமுள்ள மனேகரனிடம் திடீரென மாறுதல் தோன்றுகிறது.
'எனக்குத் தெரியும். ஆனல், சொல்லமாட்டேன்!”- எவ்வளவு துணிவு; எவ்வளவு தைரியம்! வகுப்பில் எவரை யுமே நடுநடுங்கச் செய்யும் முரடனுன் அவனுடைய பதில் அவளுட்ைய காதில் ரீங்கார்மிடுகிறது:

கரும்பலகை 。藏属、
ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவர் தன் உதடுகளைக் கடித்துக் கொள்கிருர், ஆங்கார்.சுபூமறதி என்னும் விசித் திரமான நோயால் பீடிக்கப்பட்ட அவர் நெஞ்சம் பதட்ட மடைகிறது. உண்மையைப் பிரம்பின் மூலம் கறந்தெடுக் கலாம் என்ற நினைவு கொண்டு வாழும் தமிழ்ச் சட்டம்பிமார் பரம்பரையில்-அசல் வழித் தோன்றல்களின்-நேர் வாரிசு தான் கந்தவனம் வாத்தியார். பிரம்பு"தாறுமாறக, மனே: கரனின் தேகமெங்கும் விழுகிறது. கை முஷ்டிகளில் பலத்தை ஏற்றி,அவர் அவனது தலையில் மிருதங்கம்வாசிக்கப்பழகுகிறர். அதற்குமேல் கைவலி எடுக்கிறது: மனம் சோர்
வடைகிறது; அலுப்பினுல் உள்ளம் சலிப்படைகிறது.
கந்தவனம் மற்றைய மாணவர்களை விசாரிக்கிருர்,
அவர் குரல் சூடேறி ஒலிக்கிறது. மாணவர்கள் எல் லோரையும் வழிவாங்கி விடவேண்டுமென்ற குறிக்கோளு டன் வாத்தியார் ஒவ்வொரு மாணவனுகக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிருர். - - - -
ན་ இரண்டாவது வரிசையில், கடைசிக் கோடி வாங்கில உட்கார்ந்திருந்த மாணிக்கவாசகனை அணுகுகிருர்.
.. மாணிக்கவாசகா, நீ சொல்லடா, கரும்பலகையில் யார் படம் கீறினது?" அவ்னிடம் வார்த்தைகளை ள்ப்படி உபயோகிக்க வேண்டும் என்கிற இராஜதந்திரம் தெரிந்தவர் கந்தவனம். அதற்குத் தகுந்த மாதிரி வார்த்தைகளைத் தூண்டிலாக உபயோகிக்கிருர்,
அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்ட மாணிக்கவாசகன் வார்த்தைகளை ஒழுங்காகச் சொல்லத் தெரியாமல் உழறு கிமுன்; பேந்தப் பேந்தப் விழிக்கிருன்.
வர்த்தியாரின் கைப் பிரம்பு உயர்கிறது. பயந்த சுபாவமுள்ள அவன், முயலைப் போலப் பதுங்கி, நெளிந்து, வளைந்தபடி நிராசையோடு கூடிய தன் கண்களால் வாத்தியார்ைப் பார்த்த * வண்ண்ம், அடிக்குத் தப்பிவிட

Page 68
20 தண்ணீரூம் கண்ணீரும்
வேண்டுமே என்கிற அவசரத்தில் அச்சம் நிழலாடும் குரலில், * மனேகரன் கீற்னது, வாத்தியார்" என்று அவசர் அவசர மாகச் சொல்லி முடித்தான். சொல்லிவிட்டுப் பரமசாது வைப்போல் உட்காருகிறன்.
உண்மை தெரிந்த மாணவர்களில் சிலர் இந்தப் படு பொய்யான குற்றச் சாட்டைக் கேட்டு மனதுள் திடுக்கிட் டனர். சிலர் அவன் நின்ற பக்கமே திரும்பிப் பார்க்காமல், வெறுப்பினல்" முகத்தைச் சுழித்தனர். மனேகரனுக்காக மனதார அநுதாபப்பட்டனர்.
கந்தவனம் நம்புகிருர், "தான் ஒரு குற்றத்தைச் செய்து, அதைத் தனது கோபக் காரன் மனேகரன் மீதே சுமத்தி, தான் அடிவாங்குவதிலி ருந்து தப்பிவிட்ட பரமதிருப்தி மாணிக்கவாசகன் மனதில், ஒரு தடவையாவது அவன் முகத்தில் காறித் துப்பி னல் நல்லது என்ற நினைவு மனேகரன் நெஞ்சில், மனதிற்குள் மாணிக்கவாசகனின் முகத்தில் காறி உமிழ்ந்தான்-தூ!
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் கோப்வெறி வாத்தியாரின் கண்களில் நர்த்தனமிடுகிறது. பிரம்பு மூன் ருவது கண்ணுக அவருக்கு உபயோகப்படுகிறது.
வெறி அடங்குகிறது. மனேகரன் ஆடிக் காற்று ஆலிலை போல், துவண்டு போனன். அவன் வாயே திறக்கவில்லை. இரகசியமாகப் பலம்தரும் அநுதாபம் அவனுக்கு ஆறுதலளிக் இடைவேளை வரையும் பாடங்களை நடத்த இயல்வில்லை. தேனீர் அருந்தி, பழைய நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு, மறு படியும், வகுப்பறைக்குள் நுழைகிருர் கந்தவனம் வாத்தி
Luis Tri. Z
மேஜையடியில் கோ ஸ்மூட்டி மாணிக்கவாசகன் சிணுங்கியபடி நிற்கிருன்.
“ என்னடா?" சலித்துக் கொள்ளுகிருர், "இந்தச் சனியன்களுட்ன் மாரடிக்கிறது போதுமெண்ண்ப் போதும்"

கரும்பலகை, 丑2了
என்று தன் தலை எழுத்தை எண்ணி மனம் நொந்து கொள்ளுகிருர், விரக்தி கிளை விடுகிறது.
* யாரோ என் பவுண்டன் பேனயைக் களவெடுத்து விட்டான்கள், வாத்தியார்”
விசாரணை ஆரம்பமாகிறது.
அன்று கந்தவனம் வாத்தியார் எந்தக் குரங்கு முகத்தில் விழித்தாரோ? அடிக்கடி மன எரிச்சல் பட்டார். m
மாணிக்கவாசகனின் சந்தேகம் பூரணமாக, மனேகர
னின்மீது படிகிறது. மனேகரன், தான் மேற்படி பேணுவைக் கண்ணுலேகூடக் காணவில்லையென்று சாதிக்கிருன்.
"உண்மையைச் சொல்லடா. நீ தான் கோவத்திலே அவன்ரை பேனையை எடுத்திருப்பாய், சொல்லு: உண்மை -புைச் சொல்லு" இரக்க உணர்வு அவரை ஆட்கொண் டர்லும், பழைய கோபம் முற்ருக அவரிடமிருந்து மறைய வில்லை. ,
மன அடிவாரத்திலே பம்மிக் கிடந்த உணர்ச்சி அலைகளை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் "நான் பேனையை எடுக்க வில்லை வாத்தியார்: நான் எடுக்கவேயில்லை!" இறுமாப்புக் கலந்த-கர்வத்துடன், மனேகரன் திரும்பத் திரும்ப இதையே சொல்லுகிருன்.
'சும்மா அடிபட்டுச் சோகாதேடா. உண்மையைச் சொல்லு, உண்மையைச் சொன்னல் விட்டுவிடுகிறேன்" ஆசிரியர் மாணவனிடம் பேரம் பேசிப் பார்க்கிருர்: ஆசை காட்டுகிருர், -
மீண்டும் மறுப்பு-மறுப்புக்குமேல் மறுப்பு ! வாத்தியாரின் கைப் பிரம்பு பேசுகிறது. இந்த அடிகளுக்கு அவன் பயப்படுவ தாகத் தெரியவில்லை. இதைப் போன்ற முரட்டுத்தனமான கண்டிப்பு அவனுடைய மனதைக் கெட்டிப் படுத்தி அடிபடுவதற்கே பயப்படாமல்

Page 69
122 தண்ணீரும் கண்ணீரும்
செய்து விட்டது. சாந்தமயமான, விசித்திரமான திருப் தியைப் அனுபவிப்பவனைபி"போன்று ஒரு நிலை. இதைப் போன்ற தண்டனைகளால் மனம் மரத்துப் போய்விட்ட் மனேகர்ன் தாயற்ற்வன் வீட்டில் சிறிய தாயாரின் அன்பில் லாத பராமரிப்பு, திரும்பித் திரும்பப் பட்டினி போட்டுத் தண்டனை கொடுத்தல், எதெற்கெடுத்தாலும் குற்றங் கண்டு பிடித்து மண்ணள்ளித் திட்டும் சூழ்நிலையில் வளர்ந்தவளர்க்கப் பட்ட அவன், பரிவு பாசம் என்பதற்கே அர்த்திம் தெரியாமல் வளர்ந்தவன்; வளர்ந்து வருகிறவன் கந்தவனம் வாத்தியார் மறுபடியும் சோர்வடைகிறர். மனேகரனிடம் உண்மையைக் கறக்கும் சக்தி தன் கைப் பிரம்புக்குக் கிடையாது என்கிற மெய்ஞ்ஞான அறிவைப் பெறுகிருர். :
"வாடா கழுதை இங்கே ! இரடா முழங்காலிலை!"
மனேகரன், முன்னல் செல்கிருன். கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நேரத்தின் போது, மாதா கோயிலில் முழங் காலில் இருந்து வணங்குவது போல, கால் இரண்டையும் மடித்து மடக்கி வாத்தியார் காட்டிய இடத்தில், கரும் பலகைக்குப்பக்கத்தில் முழங்காலில் நிற்கிருன்
பாடம் ஆரம்பமாகிறது. "பயிலுந் தமிழ் புத்தகத்தின் பக்கங்களை,அவசரஅவசரமாக மாணவர் புரட்டுகின்றனர். காகிதங்கள் உரசும் ஒலி. பாடம் நடைபெறுகிறது. *
மனேகரன் பல்லைக் கடித்துக் கொண்டு முழங் காலில் நிற்கிழுன். பொங்கி எழும் வேதனை, அவன் இதயத்தின் மிக நுண்ணியூ உணர்ச்சிகளைத் தாக்குகின்றது. கண்களி லிருந்து வடிந்த க்ண்ண்ர், மின்னுகின்ற் இளம் கன்னர் -களிலே படர்ந்து உலர்ந்திருக்கும் நீர்த்திவலைகள்ைப்புறங்ண்க்
யாற் துட்ைக்கிருன். ·
தன் கண்கள் அலங்குவதை. வரத்தியார்.பார்த்து விடக் கூடாது என்கிற மன வைராக்கியம் !

கரும்பலகை I23
முழங்கால் கடுக்கிறது, தரையில் ஒட்டி யிருக்கும் வுெண் குறுணி மணல் முழங்காலை உறுத்துகிறது. கீழு தட்டைப் பற்களுக் கிடையில் கடித்து வேதனையைச் சப்பு கிருன். அவனை அறியாது நீர் “பொல பொல வென்று வடிகிறது
சற்று நேரத்தில் கண்களில் ஒரு வகைக் கிறக்கம் நிழலாடுகிறது. கால்கள் உணர்ச்சியற்று மரத்துப்போவது போன்ற உணர்வு:தோள்கள். துவழுகின்றன. முதுகெலும்பு ஏற்பு வலியினல் நிமிர்ந்ததைப் போல, மூளை நரம்புகள் விண்விண்ணென்று வலித்து மண்டையைக் குடைகின்றன. நாக்கு உலர்ந்து வறண்டு போகிறது.
*மனேகரன்; வளர்ப்பு நாய் எஜமானனைப் பசிப்பார்வை
பார்ப்பது போல, வாத்தியார் கந்தவனத்தைப் பரிதாப மாகப் பார்க்கிருன். வாத்தியாரை வைத்த கண் வாங்கா மற் கவனித்தவன் திரும்பக் கரும்பலகையைப் பார்க்கிருன். வகுப்பிலுள்ள மாணவர்கள். எல்லோரையுமே. கூர்ந்து பார்க்கிருன். , எல்லாமே - வாத்தியாரின் மேஜையின் மீதுள்ள கைப்பிரம்பு உட்பட-எல்லாமே சுழல்கின்றன. சுற்றுகின்றன.வாலறுந்த பட்டம் வானத்தில் வட்டமிட்டுக் கரணமடிப்பதுபோல, எல்லாமே.எல்லாமே.
*ஐயோ, அம்மா!"-வாய்விட்டு அலருத அனுங்கல் சத்தம் - ;
தடால்-பட்டுப்போன மரம் தானக வீழ்ச்சி அடை. வதுபோல மனேகரன்
நாற்காலியைப் பின்னே தள்ளிவிட்டு, துள்ளியெழுத்து கொள்கிருர் வாத்தியார். மயங்கி விழுந்த மனேகரனை அவசர அவசரமாக அள்ளியெடுக்கிருர், மடிமேல்.கிடத்து 6apř.
சட்டம் என்கிற பிரம்பு ஆசிரியரைப் பயமுறுத்துகிறது. கந்தவனம் வாத்தியார் முகம் பயத்தால் பரபரப்படைகிறது: வேர்க்கிறது. மனப்பதைபதைப்யுடன் காரியத்தில் கண்ணு Scipii.

Page 70
24 கண்ணிரும் கண்ணீரும்
மாணவர் கூட்டம் மனேகரனையும் ஆசிரியரையும் சூழ்ந்து கொள்ளுகிறது.
* தண்ணி கொண்டு வாங்கடா, தண்ணி ! தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. வலது கையைக் குவளையாக்கி, அதில் தண்ணீரை ஏந்தி, மனேகரன் முகத்தில் விசிறி அடிக்கிருர் கந்தவனம். * ஒதுங்கி நில்லுங்கடா-ஒதுங்கி நில்லுங்கடா.காத்துப் படட்டும்!” என்று மாணவர்களுக்குக் கட்டளையிடுகிருர், தனது சால்வையை எடுத்து மனேகரன் முகத்திற் துடைத்து விடுகிருர், அதே சால்வையைக் கொண்டு அவனது முகத் திற்குக் காற்றுப் பிடிக்க விசிறி விட்டவாறு.
மனேகரனுக்குச் சிறிது சிறிதாக உணர்வு வருகிறது. கண் இமைக்ளை வெட்டி வெட்டி விழிக்கிருன், கந்தவனம் வாத்தியாசின் கண்கள் அவனுடைய முகத்தை அனுதாபத் துடன் கவனிக்கின்றன.
பூரணமாக உணர்வு வந்ததும் வாத்தியாரின் மடிழே லுள்ள தலையை நிமிர்த்தி, எழுந்து உட்காருகிருன் மனுே: கரன். கந்தவனம் கைத்தாங்கலாக அவனை நடத்திச் சென்று, அவன் வழக்கமாக அமரும் வாங்குமுனையில் உட் காரவைக்கிறர்.
* வாத்தியார் நான்.நான்.'கட்டுப்படுத்தி வைக்கப் பட்டிருத்த க்ண்ணிர், வார்த்தைகளைத் தடுத்துவிட்டபடி யிஞல் சொற்கள் முற்ருக வெளிவரவில்லை. மீண்டும் "வாத் தியார் நான்.நான்.” என்று உளறுகிருன் மனேகரன். ஆனல் இந்தத் தடவை அவனது பேச்சில் ஓர் அசாதாரண் மான, வினுேதமானதொனி இருந்தது.'
* சொல்லு தம்பி மனேகரன்; உனக்கு என்ன செய் யிது ?"அடிக்கடி உனக்கு இப்படி வாறது என்ன?’ என்று ஆதரவாக விசாரிக்கிருர் ஆசிரியர். . ۔
"இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைக் கிருன் மனுேகரன். "காலமை நான் ஒண்னும் சாப்பிட

கரும்பலகை 五25
வில்ல் வாத்தியார். காலமை சாப்பிடஒண்ணுமே தராமல் பள்ளிக்கு என்னைத்துரத்திப் போட்டாளங்கட்சின்னம்மா, அதர்லைதான் எனக்கு."
மனிதபாசம் இருவரையும் இணைத்துக் கட்டுகிறது. இளமைக் காலப் பசுமை எண்ணங்கள் கந்தவனம்,வாத் தியாரின் இதயத்தில் துளிர்விடுகின்றன. மாணவப் பருவ நினைவுகள் அவரது நெஞ்சக் குளத்தில் குமிழ்ந்தன. -
நெஞ்சம் உணர்ச்சியின் உந்தலால் நெகிழ்ச்சியடை கிறது.
* மனேகரா! சொல்லு! நீ இப்படி யெல்லாம் செய்ய, லாமா? அதாலைதானே வீணய்ப் பட்டினி கிடக்கிருய்?. என்னிடம் மாடு மாதிரி அடியும் வாங்கினய்.உன்னலை எத்தனை பேருக்குக் கஷ்டம் ! உம்.நல்லா யோசிச்சுப் பார். நாளைக்குப் பெரியவனுய் வாறவனல்லை . நீ! இப்படிக் கோணங்கித்தனம் செய்து படம் போடலாமா? சொல்லு மனேகரா-சொல்லு!” நெஞ்சத்து உணர்ச்சிகளே வார்த் தைகளாகக் கந்தவனம் வாத்தியாரின் வாயிலிருந்து உதிர் கின்றன. பரிவு, சொற்களாகப் பரிணமிக்கின்றன.
" வாத்தியாரையா!' மனேகரனின் கண்கள் குள மாகின்றன. "வாத்தியார்ையா என்னை மன்னித்துவிடுங்க, மாணிக்கவாசகனின் பேனையை எடுத்தது நான்தான். கள வெடுக்க வேண்டுமெண்டு நானதைச் செய்யவில்லை, கரும் பலகையிலை நான்தான் படம் போட்டதென்று அவன் சொன்ன அந்தச் சுத்தப் பொய்க்காக."
கந்தவனம் வாத்தியார் சில்ைபோல நிலையாய் நிற்கிருர். அவரது கால் ஊனம், அவர் உள்ளத்தை என்னமோ உறுத்தவேயில்லை.
1960