கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரபு

Page 1

So,
--S.
R
s||

Page 2

M1
இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான்
A
மித்ர வெளியீடு
சிட்னி - சென்னை - மட்டக்களப்பு

Page 3
முதற் பதிப்பு ; 19 மே 1996
மித்ர : 11 65686) eb.30.OO
IMARAPUÍ
Allegories
in Tarni:
oy
Ilampirai M.A. RAHMAN First Edition 19th May, 1996
Price Rupees Thirty only
Pages 120
illustrations Veera Santhanann 47 Thiruvailuvar Salai, Eldams Teynampet, Madras
Printers
MTHRA Book Makers
Published by Dr. PON ANURA
MITIRA PUBLICATIONS
1/23, Munro Street, Eastwood-2122,
Australia
375-10, Arcot Road, 39, Vanniahs Street, KodambakKam, Batticaloa, Srilanka Madras-600 024

arIDifriúIJamilib
இன்று
அன்பிற்கு
அர்த்தம்
அருளுபவனுமான
அன்று
தன்னுடைய
சின்னஞ் சிறு செயல்களால்
என்னைக் கவர்ந்து,
பென்னம்பெரிய
உருவகத் தத்துவங்களை
என் மனசிலே
பதிய வைத்தவனும்
பொன். அநுராவுக்கு

Page 4

பதிப்புரை
புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுடைய சம ”ால இலக்கிய முயற்சிகளையும், அவற்றிலே அவர்கள் < டையும் வெற்றிகளையும் சங்கை செய்வதற்கான பிரசுர நிறுவணமாக மித்ர விளங்குவதை, ஏற்கத் துவங்கியுள்ளார் கள். இந்த அங்கீகாரம் நமது பணிகளை மேலும் விரிவுபடுத்து
வதற்கான ஊட்ட சக்தியாக அமைகின்றது.
புதிய படைப்புகளின் இலக்கியப் பண்ணையாக மித்ர வளருகின்றது. புதிதுகளின் பரம்பல் மட்டுமே நமது நோக்க
d696).
வேர்களைத் துறக்காது- மறக்காது, அவற்றை உரிய - உயரிய முறையிலே பேணி, அவற்றின் சடைப்பாகப் புதியன படைத்துச் சாதித்தல் அவசியம். நமது தனித்துவத்தையும், அதன் சாங்கங்களையும் புதிய நாடுகளிலும், புதிய நூற் றாண்டிலும் பதித்து முன்னேறுவதற்கு இஃது ஆரோக்கிய மான வழி. இதனை மீள வலியுறுத்துவது போலவும் மரபு வெளிவருகின்றது.
மரபு' என்னும் உருவகக் கதைத் தொகுதி, கொழும்புஅரசு வெளியீடாக 1964இல் வெளிவந்தது. தமிழில், மூல நூலாக வெளிவந்த, முதலாவது உருவகக் கதைத் தொகுதி இதுதானென்று தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கப்படுகின் றது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 'மரபு'வில் இடம் பெற்ற அதே மகுடங்களிலே புனையப்பட்ட கதைகள் அடங்கிய தீபன்' என்கிற இரண்டாவது தொகுதியை வெளியிடும் பணி மேற்கொள்ளப்பட்டதாயினும், ஏது காரணம் பற்றியோ அந்
5

Page 5
நூல் வாசகரைச் சென்றடையவில்லை. மரபு', 'தீபன்' ஆகிய இரண்டு தொகுதிகளுக்காகவும் எழுதப்பட்ட முப்பது உரு வகக் கதைகளும், முழுமையாக ஒரே தொகுதியாக, இந்நூல் வடிவில் தமிழ்ச் சுவைஞரைச் சேருகின்றது.
இதனை வெளியிடுவதற்கு உணர்ச்சி பூர்வமான ஒரு காரணமும் உண்டு. நான் நான்கு வயசுச் சிறுவனாய் இருந்த பொழுது, 'மரபு' என் அன்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. முப்பத் திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது ரகு மாமா' மலேசிய நாட்டிலே ஓர் இலக்கியப் பயணத்தினை மேற்கொள் ளுகின்றார். அதன் நினைவாகவும் இந்நூலினை வெளியிடு வதில் மகிழ்கின்றேன்.
கதைக் கலையிலே செம்மையான நுட்பம் கொண்டது உருவகக் கதைத் துறை. இந்நூல், புலம் பெயர்ந்த நாடு களிலே வாழும் புதிய படைப்பாளிகள் மத்தியிலே உருவகக் கதைகள் எழுதும் ஆர்வத்தினைத் தூண்டி ஆற்றலை வளர்க்கத்
துணையாய் நிற்குமென நம்புகின்றேன்.
டாக்டர் பொன்.அதுர
19.05.96
MA CUP, OA (ANS
7/23, /ീrg ീeed Arീ00 - 272 fraർ
/02/ à-267
6
 
 

என்னுரை
ஆற்றலிலக்கியத்திற் கிளை பிரிந்துள்ள எந்த இலக்கியத் துறைக்கும் தனித்துவமான இலக்கணமுண்டு. இந்த இலக்கணந்தான் ஒரு துறையினைப் பிறிதினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. சிறுகதை-நாவல்-நாடகம் போன்ற துறைகளிலே பொருள் இலக்கணம் விரிந்து கொடுக்கின்றது. செய்யுள், உருவகக் கதையாகிய இரண்டும் மரபுவழி பேணியே வளர்ந்துள்ளன. இவ்விருதுறைகளும் இலக்கணத்தின் கட்டுப்பாட்டிற்குள் இசைந் தொழுக ஒப்புக்கொண்ட சீர்மையினாலேதான், இவை உயர்ந்த இலக்கியத் துறைகளாக நிமிர்ந்து நிற்கின்றன.
சங்க காலத்திலே, செம்மை சார்ந்த இலக்கியங்களை ஆக்கித் தந்த சங்கச் சான்றோர்களும் உருவகத்தின் சிறப் பினை நன்குனர்ந்திருந்தார்கள். அணிகள் செய்யுள்களுக்கு அழகு சேர்க்கின்றன. அணிகளைப் பெரும் பிரிவுகளாகச் சொல்லணி, பொருளணியென இரு வகைப்படுத்துவர். இவ் விரண்டிலும் பொருளணியே சிறப்புடைத்து. இதன் உட்பிரிவுகள் நூறு. வரிசையில், ஐந்தாவது இடத்திலே வைத்துப் போற்றப்படுவது உருவக அணியாகும். உருவ கவணியென்பது உவமான ஒற்றுமையினாலாவது, அதன் செய்கையினாலாவது ஏற்றுவித்தலாகும். எனவேதான், அஃது ஒற்றுமை யுருவகம், செய்கை உருவகமென இரு வகைத்து, வட நூலார் உருவகவணியை ரூபக அலங்காரமென்றும், ஒற்றுமை யுருவகத்தையும், செய்கை யுருவகத்தையும் முறையே அபேதரூபகமென்று தாத்ரூபகமென்றுங் கூறுவர். சங்கச் செய்யுள்களிலே வரும் அகத்துறைப் பாக்களில்
7

Page 6
இறைச்சிப்பொருள், உள்ளுறையுவமம் என்பன உருவகக் கதைகளுக்கான மூலக்கணிப் பொருள்களைக் கொண்டவை யாக மிளிர்கின்றன. இருப்பினும், உருவகத்தையே கதை யாக்கும் இலக்கிய முயற்சிகள் அன்று நடைபெறவில்லை. அக்காலத்திலே, பாச்செய்யுள் உருவமே இலக்கிய உருவமாக இருந்தமையினால், அஃதே உருவகச் சிறப்பினையுங் கையாண்டு மேன்மை பெற்றது.
ஈஸாப் என்னும் கிரேக்க அடிமை பல உருவகக் கதைகளைச் சொல்லி வந்தார். பிற்காலத்தில் அவை தொகுக் கப்பட்டன. அவருடைய உருவகக் கதைகள் பலவற்றை நாம் பாலர் வகுப்புத் தொடக்கம் படித்து வந்திருக்கின்றோம். தற்காலத்து இலக்கியக் குணமாய்வாளர் ஈஸாப் கதைகளிலே நீதிப் போதனைகள் வெளிப்படையாக இடம்பெற்ற அளவுக்குக் கலையம்சம் இடம் பெறவில்லையெனக் கருது கின்றார்கள். அவருடைய உருவகக் கதைகள், தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கதைகளின் முடிவுகளிலே தூலமாகக் கொண்டிருப்பதுதான் இக்குறைப்பாட்டிற்குக் காரணமாகும்.
ஏசுநாதர் தமது தத்துவங்களையும், கருத்துக்களையும் விளக்குவதற்கு உவமைகளையும், உருவகங்களையும் ஏராள மாகக் கையாண்டுள்ளார். நற்செய்தி' (Gospe)யில் ஏசு நாதர் கற்பித்த உருவகங்கள் விரவிக் கிடக்கின்றன. விதை விதைப்பவனின் உருவகம் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
. கேளுங்கள். விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில் சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைப் பட்சித்துப் போட்டன. சில விதைகள் அதிக மண்ணில் லாத கற்பாறையிடங்களில் விழுந்தன. மண் ஆழமாய்
8

இராததினாலே அவை சீக்கிரமாய் முளைத்தன. வெய் யில் ஏறினபோதோ, காய்ந்துபோய் வேரில்லாமையால் உலர்ந்து போயின. சில விதைகள் முள்ளுள்ள இடங் களில் விழுந்தன; முள்வளர்ந்து சிலது அவற்றை நெருக் கிப் போட்டது. சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து நூறாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தன.
ஏசுநாதரின் போதனைகளைப் பலருங் கேட்டனர். கேட்பவர்களுடைய உள்ளங்களிலே தம்முடைய போதனை கள் பல்வேறு இடங்களிலே விழுந்த விதைகளைப் போன்று தான் வளருகின்றன என்பதை உணர்ந்து, அதனை வெகு
அழகாக விளக்கியுள்ளார்.
முதன் முதலில் புத்தி பூர்வமாக உருவகக் கதைகளை எழுதியவர் கலீல் கிப்ரான் அவர்களேயாம். உருவகக் கதை என்னும் இலக்கியத் துறைக்கு, முழுமை பொருந்திய கலைத்துவந் ததும்பும் உருவகக் கதைகள் பலவற்றைப் படைத்து அணி செய்துள்ளமையால், அவரை உருவகக் கதைத் துறையின் பிதா மகரெனக் கொள்ளுதல் பொருந்தும். அவர் கருப் பொருள்களை மட்டுமல்ல, பிரகரன நாதத் தினையும் செம்மையாகத் தேர்ந்தெடுத்தார். ஒரு கருத்தினை, அல்லது ஒன்றேயெனத் தோன்றும் பல கருத்துக்களைத் தன்னுள் தாங்கியிருக்கும் ஒரு பாரிய தத்துவத்தினை அவரது உருவகக் கதைகள் கொண்டிருக்கின்றன.
சாகாவரம் பெற்ற ஒர் உருவகக் கதையினை எழுதிப் புகழ் பெற்றவர் ருசிய எழுத்தாளரான சொலோக்கோவ் ஆவர். அந்த உருவகக் கதையை இங்கு ஞாபகப்படுத்திக் கொள் ளுதல் நன்று. −

Page 7
ஒரு பெரிய மீன் சிறிய மீனைக் கண்டதும் அதை விழுங்க வாயைத் திறந்தது. "இதுபெரிய அநீதியாக இருக்கின்றதே! எனக்கும் வாழும் உரிமையுண்டு. சட்டப்படி எல்லா மீன்களும் சமமானவை” என்று சிறுமீன் கத்தியது. பெரிய மீன் அமைதியாக "சட்டத் தைப் பற்றி ஏன் சும்மா அளக்கின்றாய்? நான் உன்னை விழுங்கக்கூடாது என்பதுதானே உன் எண்ணம்? சரி, இதோ என்னையே நீ விழுங்கி விடேன். விழுங்கு அப்பனே, விழுங்கு. எதற்காக இப்படிப் பயப்படுகின் றாய்? நான் உன்மேல் பாய்ந்துவிடமாட்டேன்’ என்று பதில் சொல்லிற்று. சிறுமீன் துணிவுகொண்டு வாயைத் திறந்து அந்தப் பெரிய மீனை விழுங்க ஆனமட்டும் முயன்றது. கடைசியிலே பெருமூச்சு விட்டு, நம்பிக் கையை இழந்து, "நீ சொல்வதுதான் ஐயா உண்மை, என்னை விழுங்கிவிடு' என்றது.
'யானைத் தந்தத்தினைக் கடைந்து சிறிய தாஜ் மஹால் ஆக்குவதற்குச் சமம் உருவகக் கதைகள் சமைப்பது' என்று மராத்திய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் உருவகக்கதைகள் பற்றிக் கூறிய இலட்சணம் சொலோக்கோவின் உருவகக் கதைக்கு மிக நேர்த்தியாகப் பொருந்துகின்றது.
பாரத நாட்டின் இலக்கிய முயற்சிகளுக்கு உலகப் புகழ் சம்பாதித்துக் கொடுத்த கவி தாகூர் அவர்கள், புராதன பாத்திரங்களை வைத்துப் பல அழகான உருவகக் கதைகளை எழுதியுள்ளார்கள். வி.ஸ். காண்டேகரும் பல அருமையான
உருவகக் கதைகளை எழுதியுள்ளார்.
எழுத்தாளர்கள் பலர் உருவகக் கதையன் இலக்கணத் தைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும் உரு
10

வகக் கதைகள் எழுதுவதற்குக் கற்பனை வளமும், சிந்தனை யாற்றலுந் தேவை. பிரத்தியட்சமாகப் பார்ப்பவற்றிற்குக் கதை உருவங் கொடுத்தல் என்று உருவகக் கதைத் துறை யிலே வித்தாரஞ் செய்ய இயலாது. உருவகக் கதை ஆசிரியன், தனது செளகரியத்திற்கேற்ப மரங்களைக் கூடப் பேச வைத்து விடுவான். அஃது அவனது சிந்தனைத் தேவையினையும், கற்பனை வளத்தினையும் பொறுத்தது. அஃறினைப் பொருள் களை மட்டுமே வைத்து சிருட்டிக்கப்படுவதுதான் உருவகக் கதையென அநேகர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இத னாற்றான், அஃறிணைப் பொருள்களைப் பாத்திரங்களாக வைத்து எழுதும் ஒரே ஒரு பான்மையினை வைத்துக்கொண்டு, குட்டிக் கதைகளையும் சிறுவர் கதைகளையும் உருவகக் கதை களென்று இடர்ப்படும் எழுத்தாளர்கள் நம் மத்தியிலே இருக் கின்றார்கள்.
ஓர் உருவகக் கதை நேர்த்தியான ஒரு கருத்தினைப் பரிவர்த்தனை செய்ய முயல்கின்றது. அந்தக் கருத்து ஒர் இனத்திற்கோ, ஒரு குழுவினருக்கோ மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமன்று. அனைத்துலக உண்மை; உண்மையின் உண்மை கருத்திற்கு இவ்வளவு அழுத்தங் கொடுப்பதினால் ஒரு கருத்தோ, போதனையோ மட்டும் உருவகக் கதை யாகிவிடுமென யாரும் பிழைபடக் கருதிவிடக்கூடாது. ஒரு கருத்தினை, பல கருத்துக்களோ என்கிற மலைப்பினைத் தரும் ஒரு பாரிய தத்துவக் கருத்தினை கதைப் பாணியிலே சொல்ல முற்படுகையிலேதான் ஓர் உருவகக் கதை உதயமாகின்றது.
சிறு கதையில் இடம்பெறுவதைப் போன்று, உருவகக் கதையிலேயும் பாத்திர அமைப்பும் நிலைக்களச் சித்திரிப்பும் இடம் பெறலாம். ஆனாலும், இவற்றிலே, தேசியப்
11

Page 8
போக்கு-பிராந்திய மணம்- எதார்த்தப் பாங்கு என்பனவற் றிற்கு அறவே இடமில்லை. அவை தமது தனித்துவமான தூலவடிவங்களை இழந்து, ஒரே ஒருமைப்பாட்டில் இழை கின்றன. சிறு கதையில், ஆறுமுகன் என்கிற ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்பொழுது, எவ்வளவு வார்த்தைகளையுஞ் செலவு செய்து படம் பிடிக்கும் முறையில், முழு உருவத்தை யும் மனத்திரையிலே விழச் செய்யலாம். இத்தகைய சொல் விரயத்திலே உருவகக்கதை ஆசிரியனால் ஈடுபட முடியாது. பாத்திரத்தின் பெயர் அறிமுகமே மேற்படி பாத்திரத்தின் குண இயல்புகளைப் புலப்படுத்தி விடக்கூடியதாக அமைவது நன்று. உருவகக் கதை பரிமாறுங் கருத்தினைப் பொறுத்தே பாத்திரம் தனித்துவம் பெறுகின்றது.
உருவகக் கதைக்குச் செய்யுள் வழக்கிலே தோய்த் தெடுத்த வன்ன நடையே உகந்தது. இதற்குக் காரணம், உருவகக் கதைகளிலே இடம்பெற்றுள்ள சொற் சிக்கனந்தான்! நல்ல பாட்டிலே ஒரு சொல்லை மாற்றவோ, வெட்டவோ இயலாது. பாடலிற் கையாளப்படுவதைப் போன்று, சொற் கள் உருவகக் கதையிற் கையாளப்படுதல்வேண்டும். சொற் களை அவற்றின் பெறுமதியை உணர்ந்து பூரண அர்த்தங்கள் தொனிக்கக் கச்சிதமாக உபயோகித்தல் அவசியமாகும்.
உருவகக் கதை, பரிவர்த்தனை செய்ய வந்த கருத்து அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் படர்ந்து கிடக்கின்றது. உருவகக் கதை, சிந்தனையைத் தூண்டும் மிக உச்சமான சூழலில், போதனையை வெளிப்படையாகச் சொல்லாது முடிவடைந்து, நிறைவினைத் தரும்.
நல்லதோர் உருவகக் கதையை ஒரு காவியத்திற்குச் சமமானதென்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். அது சிறந்த
12

சிந்தனையினதும், தேர்ந்த கலையினதும் உன்னதமான ஒர் இலக்கிய உருவாகும்.
உருவகக் கதைகள் எழுதுவதில், ஈழத்தில் எனக்கு முன்னோடிகளாய் விளங்கிய சு.வே.எஸ்.பொ. ஆகியோரின் நோக்குகள் இதில் இணைந்துள்ளன. இதனை மலேசியாவில் வெளியிடுதல் வேண்டும் என்று சதாதுரண்டி உளக்கந் தந்தவர் நண்பர் - பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்கள். இத்தொகு திக்கு அழகும் ஆழமும் சேர்க்கும் சித்திரங்களை ஒவியர் வீர சந்தானம் அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் வரைந்து உதவினார். இவர்கள் அனைவருக்கும், மித்ர வெளியீட்டாள ருக்கும் என் மனசு நிறைந்த நன்றிகள்.
சென்னை-600 024
19.05.96
13

Page 9
ஒரு நோக்கு
சு.வே.
உணர்ச்சி நிலையிலே, ஆணில் பெண்மையும் பெண்ணில் ஆண்மையும் இணைந்து, இருவரும் இலட்சிய பூர்த்திக்கான முயற்சியில் முயன்று, அதன் முடிவை எய்தும் அந்நிலையே அவர்களது முழுமை; அமுதநிலை; உயரிய கலை. இத்தத்துவத்தின் உருவக விளக்கம் அர்த்த நாரீசுவர வடிவம். மொழி கருவியாகவன்றி, உணர்வு கருவியாகக் காணும் காட்சியே அவ்வடிவின் தரிசன பயன். உருவகப் பண்பு, நுண்கலைப் பண்புகளின் தாய்; கலையின் தாய்; கலையின் ஏனைய பண்புகள் அதன் நன் மக்கள். உருவகப் பண்பின் முத்திரை பதியாத கலைகள் அவ்வவற் றின் தனித்துவத்தைப் பெறாது, வேறெவையெவையோ ஆகிப்பாழாகும்; நல்லுணர்வுகளின் நாதத்தை மீட்டி, மனத்தை ஒருமைப்படுத்தி, பரவசப்படுத்தும் வன்மையை இழந்து வீணாகும். தனித்தவ எழிலும் மணமுங்கொண்ட நாண் மலர்களே தெய்வத்திருவடிகளுக்கேற்றன; சூட இனியன. கடதாசிப் பூக்களல்ல. சிறியதும் பெரியதுமான நாண்மலர்களின் மாலை மரபு. எனவே, அது இலக்கிய அதிதேவதையின் திருக்கழுத்திலே அணிதற் கேற்றது; இலக்கிய வேகமுள்ள மனங்கள் குட இனியது.
அகங்காரத்தின் அஸ்தமனம் ஞானத்தின் உதயம், இது உள்ளத் தின் உண்மை; சமயங்களின் தத்துவம். இராசத குணத்தின் பெரும்பாகம் கர்வம்; அது வலியது. அது பங்கப்பட்டு வலியழிந்த மனநிலத்திலே ஞானப்பயிர் வளரத் தொடங்கும். அதன் காட்சியாகச் சூரபதுமனுஞ் சுப் பிரமணியனுந் தோன்றுகிறார்கள்; இராவணனும் இராமனும் தோன்று கிறார்கள்; மரபில் வரும் கதாபாத்திரங்களும் தோன்றுகின்றன.
14

மறு நோக்கு
எஸ்.பொ.
மண்ணின் செழிப்புச் சினைப்பில், அநுபவ வேர் இறக்கி, ஆனாலும், அவாந்தர வெளியிலே எண்ண இலைகளைப் பரப்பி, கற்பனைச் சுகத்திலே திளைத்து-தளிர்த்தவிப்பில் விண்ணோக்கிப்புதிய கற்பனைகள், காலச் சுழற்சியிலே பழுத்து, பூட்டறுந்து புழுதியிலே உலர. மீண்டும் புதிய துளிர்களும் புதிய கற்பனைகளும், கற்பனை இலைகளும், இலைக் கற்பனைகளும். ஒன்றின் ஒன்றிற்கு மற்றதின் இணைப்புக்கூடக் கற்பனைதான். கற்பனையின் காம்பீரியத்தில் மதர்க்கும் உருவகங்கள். ஒரு நோக்கின் தூல வடிவத்தினைக் காட்டும் பான்மை, சோப்பு நுரை துமிக்கும் ஒரு குமிழியைப்போல அந்திநேரச் சந்திச் சாலங்களை, அஞ்ஞான அகங்காரம் யதார்த்த எயறுகற்கிடையிற் பிய்த்தெடுக்க, எஞ்சுபவை பாக்காவது கமுகம்பழம் என்கிற விவகாரங்கள். விரய வாழ்க்கையும், நேர விரயமும், யதார்த்தத்தின் அசுரத் திணிப்பு கற்பனை யையும், அதனை அணி செய்யும் பல அணிகளையும் மசுவாதப்படுத்தும். பூவிலை பெற்று மகிழுஞ் குறையர், பூச்சூடி மகிழுங் குடும்ப விளக்குகள். ஒருத்தியின் வேட்டைப்பொறிக் கிடங்கும், அவளது காம வேட்டை
களும். மற்றவளின் அடக்கமும், அவளது காமியமற்ற பணியும். அதை யதை நாடுவது மனோ இயல்புகளைப் பொறுத்தது. இலக்கிய விபசாரிகள் பத்தினித்தனம் பேசட்டும்; அதேசமயம் தசை ஆக்கினைகளுக்கு வடி
கால்கள் அமைக்கட்டும். மரபின் படைப்பு. கலையின் கற்பு.
'மரபு கதைகள் கதைகளே. கதைகளென்றாலும் உருவகக் கதைகள்தாம். விந்தின் இசைப்பும், பிரகரணப் பிரசவமும் ஒரே மூலத்தில் இணைந்திருக்கும் மேன்மையின் நுணுக்கம்.
15

Page 10
உள்ளே
தீபன் 18 ஆதாரம் . 22 ஆதாரம் -1. 23 தத்துவம் . 26 தத்துவம் -1. 3O உழைப்பு . 33 உழைப்பு -1. 37 தாய்மை . 43 தாய்மை -1. 47 சின்னம் . SO சின்னம் -1. 52 பயன் . 55 Luudit -ll..... 58 ஞானம் . 61. ஞானம் -1. 64 நிறம் . 67 நிறம் -1. 69 பலம் . 73 பலம் -1. 77 8O ..... بالاسا 605 لا படைப்பு -1. 86 தியாகம் . 89 தியாகம் -1. 91. வினா . 94. வினா -l. 95
LOJL-1 • • • • • 98 மரபு -I. 1 O5 நிறைவு . 112 நிறைவு -1. 114 கியதி . 18


Page 11
சேவலின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்.
உழவன் துயில் துறந்து விழித்தனன், மூலையிலே பதுங்கி, ஊமை ஒளி பரப்பிக் கொண்டிருந்த விளக்கினை அவித்தான்.
நீ நன்றி கொல்பவன்!' - தன் மனத்திலே நீண்ட காலமாக நெடிதுயர்ந்து கட்டித்திருந்த கோபத்தினை விளக்குக் கக்கியது.
'ஆதவனை வணங்கி, நீர்த் தாயின் கருணையுடன், நில மடந்தையை வளப்படுத்தும் நான் எவ்வாறு நன்றி கொன்றவனாக இருக்க முடியும்? - இவ்வினா உந்தி மூளையைக் கடிக்க உழவன் கேட்டான்.
இரவு முழுவதும் நீ உறக்கக் கன்னியின் மென் மார்பிலே உன் உடல் புதைத்துச் சயன சுகம் புசிக்கின்றாய். ஆனால் நான்? இரவு முழுவதும் உறங்கா நோன்பியற்றி இக் குடிசைக்குள் நுழைய எத்தனிக்கும் இருளைப் புறமுதுகு காட்டச் செய்யும் சமரிலே ஈடுபட்டிருக்கின்றேன். காவல் செய்யும் என் வீரப்பணிக்கு நீ செய்யும் கைமாறு என்ன? என்னை அவித்து விட்டு, சூரியனை வணங்க ஓடுகின்றாய்.

தீபன் உன் அஞ்சலிகள் என் பாத சமர்ப்பணத்திற்கே உகந்தன - விளக்கு சினத்தின் காங்கையைக் கக்கியது.
தீபச்சுடரை ஏந்தியதால், ஞானச் சுடரைத் தாங்கிய தான ஏமாப்பிற் பேசுதல் அஞ்ஞானஞ் சார்ந்தது. அஞ்சலி என்பது அதனதன் பாவனையைப் பொறுத்ததே. உன்னைத் துடைத்தும், மினுக்கியும் சுத்தமாக வைத்திருக்கின்றேன். தேவைக்குத் திரியும், உண்ண நெய்யும் நியமஞ் தவறாது தருகின்றேன். உன் திரியின் சுடரிலே தீப்பூவைப் பொருத்து பவனும் நானே. என் பணியின் தொடர்ச்சியாக உன் பணி படருகின்றது. செளகரியத்திற்கான இணக்கமும் ஏற்பாடும். அஞ்சலி என்ற வார்த்தைக்கே இடமில்லை!"
'நெய் - திரி - தீப்பூ என எதுவுமே நீ சூரியனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் அவன் அஞ்சலிக்குரிய பொரு ளாகி விட்டான்! அப்படித்தானே? - விளக்கின் குரலிலே சக்களத்தியின் மனப் புழுக்கம் மண்டிக் கிடந்தது.
‘விளக்கே உன்னை நான் சூரியனின் ஒளியிலேயும் பார்க்க முடிகின்றது; உன் ஒளியிலேயும் பார்க்க முடிகின்றது; தூர்ந்து போகும் மங்கியகங்கிலேகூட உன்னைப் பார்க்கலாம். சூரியனை அவன் ஒளியிலே தவிர, பிற ஒளிகளின் துணை கொண்டு பார்க்க முடிகின்றதா? சூரியனின் ஒளியிலிருந்து தான் அனைத்துலக சக்திகளும் பெறப்படுகின்றன.
"நீயும் நானும் அவனுடைய சக்தியினதும் அருளி னதும் தயவே.
'சூரியன் ஒளிமயமான கர்த்தா, நான் ஒளியை ஏந்தி நிற்கும் கருவி என்றது விளக்கு உண்மையை தரிசித்த
பாவத்துடன்.

Page 12
Ա) Մվ
இரவு பிறந்தது.
நிறைநிலா வானிற் பவனி வந்தது. வானத்தில், வெகு வெகு தூரத்தில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. இவை நிலவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டின.
'என் மீது ஏனிந்த ஏளனம்?-நிலா மனத் தாங்கலுடன் கேட்டது.
நீ உல்லாசமாக பவனி வரும் ஒயிலிலே வழியும் அகந்தையையும் அஞ்ஞானத்தையும் பார்த்தோம். சங்கேத மொழியிற் கண்சிமிட்டி இதனைப் பாராட்டுகின்றோம் எனக் கூறியது தன்னை ஏனையவற்றிற்கும் வாயாக நியமித்துக் கொண்ட ஒரு நட்சத்திரம்.
நீங்கள் மட்டும்? என வெகுண்டது நிலா. நாங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூரியன்’
களங்கம் ஒன்று நிலாவிலே கவிந்தது.
குடிசைக்குள் ஒளிபரப்பிய விளக்கின் மீது வீட்டில் ஒன்று மோதியது.
சுடர் அழிந்தது; விளக்கு அவிந்தது.
"ஐயா! உலகம் இருண்டு விட்டதே! என விளக்கு அலறியது.
'பயப்படாதே நான் இருக்கிறேன்!” என்றது முற்றத்திலே கிடந்த மின்மினிப் பூச்சி ஒன்று.
அப்பொழுது சாமக் கோழி கூவிற்று. 0


Page 13
ஆதாரம்
பழம் பெருமையுடன், பல நூற்றாண்டு காலமாக அந்த ஆலமரம் வாழ்கின்றது.
அதன் வாழ்வுக்குத் தாமே ஆதாரமென்று இலைகள் நினைத்தன.
இல்லை, தாமே ஆதாரமென்று விழுதுகள் நினைத்தன.
இவை இரண்டும் பைத்தியங்கள் என்றும், தாமே மரத்திற்கு ஆதாரமென்றும் மணலுக்குள் மறைந்து கிடக்கும் வேர்கள் நினைத்தன. -
இவற்றின் எண்ணங்களை உணர்ந்த அம்முது மரஞ் சிரித்தது.
"ஏன் சிரிக்கின்றாய்?" என மூன்றும் ஏககாலத்திற் கேட்டன.
'இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்களையும் என்னையும் தன்னுள் அடக்கி வைத்திருந்த ஒரு சின்னஞ் சிறு விதையை நினைத்துப் பார்க்கின்றேன். பாவம், நாங்கள் தோன்றுவதற்காக அது தன்னைத் தானே அழித்துக்கொண்டது."
அப்போது.
பேச்சுக்குத் தடையாக ஒரு காகம் ஓர் ஆலம் பழத்தைக் கொத்திச் செல்கின்றது. ெ
22)

ஆதாரம் - I
தலைமுறைகள் பலவற்றின் முதுசொமாம் பெட் டகம். பழைமையின் தவக்கோலம். அதற்குள்ளிருந்த எழுத்தாணிக்கும் சுவடிக்கும் தோது பொருந்தவில்லை. அவற்றிற்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் மலிந்தன.
நான் என்னையே அழுத்தித் தேய்த்து எழுதியிருக்கா விட்டால் ஏடு உருவாகியிருக்க மாட்டாது' - இஃது எழுத்தானியின் கட்சி.
பனங்குருத்தின் சார்போலையாக இருந்து பசுமையின் குமர்க் கோலங்கூடப் பெறவில்லை. அத்தகைய பிஞ்சுப் பருவத்தில் என்னையே பலிப் பொருளாக அர்ப்பணித்தேன். உந்நத தியாகத்தின் புனர் ஜென்மமாக ஏடு சமைந்தது!- இதுவே சுவடியின் கட்சி,
இந்தப் பிணக்கினைத் தீர்க்க கறையான் சிந்தையிற் சிரத்தை பூண்டது. சுவடியை அரித்துத் துளைக்கும் தினக் கடமையில் அஃது ஈடுபடலாயிற்று.
அவ்வேளையில் பெட்டகத்தின் கிழானுக்கும் தமிழ றிஞர் ஒருவருக்கும் நட்பு விளைந்து கனிந்தது. செல்லரித்துச் சிதைந்து போகும் நிலையிலிருந்த ஏட்டிற்குச் சிறை வாழ்க் கையிலிருந்து மீட்சி சித்தித்தது. அந்த ஏட்டினை அச்சு வாகனம் ஏற்றத் தமிழறிஞர் அக்கறை கொண்டார். அக்கறை வினையாகக் கட்டித்தது.

Page 14
տՄվ
தமது உழைப்பினையும், புலமையினையும் விளம் பரப்படுத்தும் வகையில் தமது பெயரைப் பதிப்பாசிரியராகப் பொறித்து அந்நூலினை வெளியிட்டார்.
ஏட்டின் ஆக்கத்திற்கு பனையின் சார்போலையோ, எழுத்தாணியோ இன்றியமையாத ஆதாரங்களல்ல என்பதை வழக் குரைத்தன, உணர்ந்தன.
பதிப்பாசிரியரின் தமிழ்ச் சேவையைப் பாராட்டும் முகமாகத் தமிழறிஞர்கள் விழாக்கள் எடுத்து மகிழ்ந்தார்கள். அந்நூலினை வாசித்தின்புற்ற இலக்கியச் சுவைஞன் ஒருவன் 'இந்த நூலினை இயற்றியவனின் புலமை மிக அற்புதமானது. அப்புலவனின் பெயரென்ன? அவனின்றித் தமிழிற்கு, இத்தகைய தரமுயர்ந்த இலக்கியச் செல்வம். கிடைத்திருக்குமா? எனக் கேட்டான்.
நூலாசிரியனின் பெயரை நிறுவுவதில் புதிய வித்துவச் சண்டை ஒன்று நுகும்பு கண்டது.

纷s
忍
4.
Z
S S.
AV 72ܢܠܲܐܗܹ ̄ ŘSSA S SS
NING S 620)
AM
初のS/%**る半 终戮
}) 姦。
S
MJ2名分ーう
KSYS
2NDS କୁଁ

Page 15
தத்துவம்
விழுதுகள் ஊன்றி, செழுங்கிளைகள் பரப்பி, பல நூற்றாண்டு காலம் வாழ்ந்துவிட்ட ஆலமரம். அது விரித் துள்ள நிழலிற் சுகிக்கும் மான் தோலாசனத்தில், பல தலை முறைகளைச் சேர்ந்த சீடர்களைக் கண்ட குருநாதர் அமர்ந் திருக்கின்றார். அவரிடம் ஆய கலைகளனைத்துங் கற்றுத் தேறிய சீடர்கள் மூவர் அஞ்சலி செய்து நிற்கின்றார்கள்.
குருநாதர் பேசத் தொடங்கினார்:
“சீடர்காள்! விண்ணிலே பறக்கவும், மண்ணைக் குடைந்து அதன் மத்திய கோளம்வரை செல்லவும், அற்ப ஜீவராசிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ளவும், வேண்டிய நேரத்தில் மனத்தில் நினைத்த உருவங்களிலே தோன்றவும் பல அரிய விநோத வித்தைகளைக் கற்பித்திருக்கின்றேன். சாமானிய மானிடன் அறியவே முடியாத,அற்புதவித்தைகள். இவற்றினை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினால், ஞானாபி விருத்தியின் சுகங் கிட்டுகின்றது. வினாவும் அதற்கான விடையும். இவற்றின் நித்திய சுழற்சியிலேதான் தத்துவத் தின் உண்மைகள் கல்லியெடுக்கப்படுகின்றன. இவ்வளவு காலமும் கிளிப்பிள்ளை மனப்பாங்குடன் பாடங்களை ஒப்பு வித்து வந்தீர்கள். இன்று உங்களுடைய சுய ஆற்றல்களைப் பரீட்சித்துப் பார்க்கப் போகின்றேன்."
குருநாதர் பேசுவதை நிறுத்திச் சீடர்களைப் பார்க் கின்றார். மூவரது இரு மூன்று விழிகளையும் அவரது தீட்சண்யம் துழாவுகின்றது.

தத்துவம்
"தங்களுடைய சித்தம்.” "இந்தப் பரீட்சையிலே முன்பெவருந்தேறவில்லை." "நாங்கள் வெற்றி பெறுவோம்," என மூவரும் ஒரே குரலிற் பதிலிறுக்கின்றனர்.
குருநாதர் குஞ்சிரிப்பு ஒன்றினை உகுக்கின்றார். "நம்பிக்கைதான் வெற்றியின் அடித்தளம்.' "சொல்லுங்கள்; செய்யக் காத்திருக்கின்றோம்," என ஒருவன் துரிதப்படுத்துகின்றான்.
"அவசரம் அஞ்ஞானப் பாதை, நிதானம் தெளிவுப் பாதை. ஒரு வினாவுக்கு உங்களுடைய விடை தேவை."
“வினாவா?
"ஆம். இது மனிதனின் தன்மயமான சுய விசாரணை. நாம் எப்படித் தோன்றினோம்? ஏன் தோன்றினோம்? புதிய சந்ததிகள் ஏன் தோன்றுகின்றன?- இப்படிச் சங்கிலிக் கோவையான பல வினாக்களைத் தன்னகத்தே கொண் டுள்ளது வாழ்க்கை. வாழ்க்கை சிருஷ்டிச் சக்கரத்திலே சுழல் கின்றது. வாழ்க்கையென்னும் சக்கரத்தினைச் சுழற்றும் அந்தச் சிருஷ்டித் தத்துவம் என்ன என்பதுதான் கேள்வி.”
“சிருஷ்டித்தத்துவம் என்றால் என்ன? என மூவருங் கேட்கின்றனர்.
"ஆம். இந்த வினாவுக்கு அறுபது நாழிகைகளுக் கிடையில் விடை தர வேண்டும்.”
27

Page 16
աpվ
மூவருங் குருதேவரை வணங்குகின்றார்கள்.
"இந்தச் சிருஷ்டித்தத்துவ முடிச்சினை எவன் அவிழ்க் கின்றானோ, அவனே என் வாரிசு. அவனே நான் அமர்ந் திருக்கும் மான்தோலாசனத்தில் அமருவான். ஞாபகமிருக் கட்டும். வினாவும் அதற்கான விடையும். அஃது அறிவுப்பாதை."
மூன்று சீடர்களுடைய உள்ளங்களிலேயுஞ் சிருஷ்டித் தத்துவத்தினை அறியும் ஆவல் விஸ்வரூபங் கொள்ளு கின்றது.
ஒருவன் விண்ணிலே பறக்கின்றான்.
இன்னொருவன் மண்ணைக் குடைந்து வெகு வெகு உள்ளே நுழைகின்றான்.
மற்றவன் குருநாதர் முன்னால் கைகட்டி நின்று யோசிக்கின்றான்.
குருதேவர் தமது நேத்திரங்களை இமைக் கபாடத்திற் குள் பூட்டி, நிஷ்டையில் ஆழ்கின்றார்.
அறுபது நாழிகைகள் கழிகின்றன. குருநாதரின் விழிகள் திறக்கின்றன. விண்ணிலே பறந்தவன் திரும்பவில்லை. மண்ணைக்குடைந்து சென்றவனும் திரும்பவில்லை. கைகட்டி நின்றவன் மட்டும், எதிரிலெ நிற்கின்றான். அவன் மருங்கில் ஒரு பெண்.

தத்துவம்
சீடன் குருதேவரை வணங்கி எழுகின்றான்.
'விடை கிடைத்ததா?”
"ஆம், சுவாமி.”
'யாது?’
விடையா? இதோ!...” எனப் பெண்ணைக் காட்டு கின்றான்.
குருநாதர் ஏளனமாகச் சிரிக்கின்றார்.
'இவள் ஒரு பெண். பலவீனங்களின் உருவம்.”
"ஆனாலும், என் அன்னை."
'அன்னை என்கிற வார்த்தை குருநாதரின் உள்ளத் திலே பல தடவைகள் எதிரொலிக்கின்றது. ஒரு கணஞ் சிந்தனைத் திரிகையில் மூளை அரைக்கப்படுகின்றது.
பேச்சு எதுவும் வரவில்லை.
ஆலமரத்தின் கீழிருந்து எழுந்து நடக்கத் தொடங்கு கின்றார்.
மான்தோலாசனம் வெறுமையாகக் கிடக்கின்றது.
அன்னை அவனைப் பார்த்து முறுவலிக்கின்றாள்.
சீடன் மான்தோலாசனத்தில் அமர்கின்றான். ெ

Page 17
தத்துவம் - I
ஒரு சமயம் எல்லோரும் பிரமனின் முன்னிலையிற் கூடினார்கள்.
தேவர் - ராக்கதர் - மானிடர் ஆகிய சகலருமே.
விழி திறந்த பிரமன் எல்லோருக்கும் 'அ' என்ற அட்சரத்தை அருளினான்.
"தேவர்களாகிய நாம் அளவுக்கு மீறிய சுகபோகங் களில் ஈடுபாடுடையவர்களாக வாழ்கிறோம். "அடக்குக; காமத்தை அடக்குக' என்ற உபதேசத்தைத்தான் பிரமன் தந்திருக்கிறான்' எனத் தேவர்கள் விளக்கினார்கள்.
"ராக்கதர்களாகிய நாங்கள் அதிகமாகவே கோபத்தின் வசப்படுகின்றோம். இதன் காரணமாகத் தயை-தாட்சண்ய மற்று மற்றைய உயிர்களுக்கும் அதிகம் இம்சை விளை விக்கின்றோம். எனவே, ‘அன்பாக இரு; சினத்தைத் தவிர்த்து அன்பாக இரு' என்றுதான் பிரமன் உபதேசித்திருக்கின்றான்” என ராக்கதர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
“மானிடர்களாகிய நாங்கள் தற்பற்று மிக்கவர்களாகப் பணமே சகலதும் எனக் கொண்டாடித் திரிகின்றோம். எனவே, ‘அறஞ் செய விரும்பு; அறத்தையே இயற்று' என்றுதான் பிரமன் போதித்திருக்கின்றான்’ என மானிடர்
U TAJTL Lq6oTTire56T.

தத்துவம்
பிரமன் மூன்று பகுதியினர் கற்பித்த விளக்கங்களை யும் சரியென ஏற்றுக் கொண்டான்.
'பிரமா! ஒரே அட்சரததிற்கு மூன்று வேறுபட்ட விலக்கங்கள் எவ்வாறு பொருந்தும்?' என நாரதர் கேட்டார்.
“ஒவ்வொரு சாராரும் தத்தமது அநுபவத்திற்கும் பக்குவத்திற்கும் ஏற்பவே பொருள் விரித்துக் கூறியிருக் கிறார்கள். பக்குவத்தின் தளத்திற்குப் பொருந்துவதுதான் அர்த்தமும்’ என்றான் பிரமன். ெ
(ஆச்சாரிய வினோபாஜி கையாண்ட கதையின் கூறு ஒன்று இக்கதைக்கு அருட்டுணர்வாக அமைந்தது.)

Page 18

4. S)-60)|JI II
அவன் உயிர் வாழ்ந்த காலத்தில்.
உலகை மறந்த, சுயத்தை மறந்த, நீண்டநேர உழைப்பு.
கைகள் ஓய்ந்தன; தூரிகை நின்றது.
ஒவியம் பூர்த்தியாயிற்று.
அற்புதமான சிருஷ்டி கலையின் நிறைவு. போதின் புன்னகையில் மலர்ந்த ரோஜா மலரை இரண்டு இலை களுடன் கிள்ளியெடுத்து, அப்படுதாவிலே செருகி வைத் ததைப் போல. அவ்வளவு அசல்.
'கலையென்பது பிரதியெடுக்கும் விவகாரந் தான். இயற்கை அன்னை தந்துள்ள ரோஜா அநித்தியமானது. இன்று மலர்ந்து, நாளை
வாடி, மறுநாள் அது வாழ்ந்த சுவடுந்தூர்ந்து. நான் இப்படுதாவிலே படைத்துள்ள ரோஜா, கலா சிருஷ்டியாக நித்தியத்துவ மெய்தி வாழப் போகின்றது.
நிறைவிலே துளிர்த்த எண்ண அலைகளைப் பசி யுணர்வு விழுங்கத் தொடங்கிற்று. மூன்று நாள்கள் முழுப் பட்டினி. அதன் உக்கிரத்தின் நீள்கரம் அடிவயிற்றைத்
துழாவிற்று.

Page 19
տՄԿ
'எனது ஆற்றலைப் பிழிந்து உருவாக்கிய ஓவி யங்கள். ஓரிரண்டை விற்றால், ஒரு மாதத் திற்குப் பணக் கவலையே இருக்க மாட்டாது. அற்புதமான ஒவியங்கள்; நல்ல விலைக்குப் போகும்."
முதன் முதலாகத் தனது படங்களை விற்கப் புறப் பட்டான். தன்னம்பிக்கை நிழல் விரிக்க நீள்நடை
கலாரசனை மிக்க தனவந்தர்களென்று மக்களால் ஏததப்பட்டோர் ஒவ்வொருவருடைய வீட்டுப்படியாக ஏறி இறங்கியாகிவிட்டது. ஒவ்வொரு படியாக இறங்கிய பொழு தெல்லாம் நிதர்சனத்தின் வெயிற்காங்கை ‘அவனைச் சுட்டது.
‘பைத்தியக்காரா! இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் ஒவியங்களை யார் விரும்பப் போகின்றார்கள்?. உனது ரோஜாப் பூ ஓவி யத்தை மாட்டி வைப்பதிலும் பார்க்க, தினந் தினம் நூறு அசல் ரோஜாப் பூக்க சினால் பள்ளி யறையை அலங்கரிக்கலாமே! வாலைக்குமரி களின் நிர்வாணக் கோலங்களைப் பல கோணங்களிலே வரைந்துகொண்டு வா. நமது பள்ளியறைகளை அலங்கரிக்க அவையே பொருத்தமானவையாக இருக்கும்." தனவந்தர் சிந்திய ஒவ்வொரு வார்த்தையும் அவனது பிடரியை உதைத்துத் தள்ளியது.
‘என் கலையும், கற்பனையும். தனவந்தர் களுடைய பாலுணர்ச்சியைக் கிளறவல்ல

உழைப்பு போதைப் பொருளாகக் கலையை அமைக்க வல்ல கலைஞனே உயிர் வாழ்கின்றான்."
வீட்டிற்கு வந்தும் மனம் அமைதி கொள்ளவில்லை. அம்மண உண்மையின் சுமை மனத்தை அமுக்கத் தொடங் கிற்று.
பசியை மறந்த ஓர் ஆவேசம்.
தூரிகையை எடுத்தான். கைகள் சுறுசுறுப்புப் பெற்றன.
ரோஜா மலரின் பின்னணியாக இருந்த வெற்றிடத்தில், வாலைக் குமரி ஒருத்தியின் நிர்வாணக் கோலத்தை வரைந்து பார்த்தான்.
ரோஜாவைக் கொத்துக் கொத்தாகப் பள்ளியறையிலே அடுக்கி வைக்கக்கூடிய தனவந்தர்கள், இந்த மாமிசக் கூடுகளையும் உயிருள்ளவையாக அமர்த்தி வைக்கலாமே! இதில் மட்டும் ஏன் அசலற்ற நகல் தேவைப் படுகின்றது?
பசிக் களையிலே தலை சுற்றியது. ஒவியத்தின் மீது மயங்கி வீழ்ந்தான். வண்ணங்களைக் கலப்பதற்காகப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த நீர், கைகளால் தட்டுப்பட்டுக் கவிழ்ந்தது. நீர் ஒவியத்தின் ஒரு பகுதியிற் சிதறியது. படுதாவின் சில பகுதிகளிலிருந்த நூற் பிரிவுகளில் நீர் உப்பி, ஒவியனின் கற்பிதத்தின் பிரகாரம் இடம் பெற்றிருந்த நிறங்களுடைய இடங்களையும் அமைப்பையும் மாற்றிச் சிதைத்தது.

Page 20
ա:ՄՎ
ஒவியத்தில், அழிவு கற்பிக்கும் புதுக்கோலம் அதனை அழிக்கவோ, திருத்தி எழுதவோ அவன் வாழவில்லை.
அவன் செத்துப்போனான்.
இன்று, அவன் புகழுடம்பெய்தி வாழ்கின்றான். அன்று விலை போகாத படங்களுக்கெல்லாம் இப்பொழுது புதிய மதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. தனவந்தரின் கைக்கு மட்டும் எட்டக் கூடிய உச்ச விலை.
படத்தின் மதிப்போ? சாவின் விலையோ?
இறுதி ஒவியம் உலகின் சிறந்த ஓவியமென்று பலராலும் பாராட்டப்படுகின்றது. ஒரு தனவந்தர், அதனை கோடி ரூபாவுக்கு வாங்கித் தனது அறையை அலங்கரித் திருக்கின்றார்.
“இத்தகைய ஒவியத்தை வரையத்தக்க ஒவியன் ஒரு யுகத்திற்கு ஒருதடவைதான் தோன்றுகின்றான்.ரோஜாவின் அழகுப் பொலிவு அப்படியே தெரிகின்றது. அதன் பின்னணி யில், ஒரு பெண்ணின் நிர்வாண ஒவியம். அது, கால ஓட்டம் என்னும் வெள்ளத்தில் அழிந்து போவதாக எவ்வளவு நேர்த்தியாக அமைந்துள்ளது.”
புதிய விளக்கங்களும், பாராட்டுரைகளும் விளக்கமோ? சிந்தியதண்ணிர் கற்பிக்கும் மயக்கமோ?
ஒவியன் செத்துப் போனான். 0

உழைப்பு - I
தர்மவான் என்னும் அரசன் செங்கோல் கோடாது அரசு இயற்றினான். அறிவன் அமைச்சனாகவும் மறவன் தளபதியாகவும் அமர்ந்து தர்மஞ் சடைத்து வளர உதவி
6856.
செல்வத்தாள், பருவத்தாள், இன்பத்தாள், கல்வியாள், தைரியத்தாள் ஆகிய பஞ்ச கன்னியர் தாங்கள் வளமுடன் வாழ்வதற்கு உகந்த இடம் தர்மவானின் அரண்மனையே என உன்னி அவனிடம் அடைக்கலமாயினர்.
நாட்டில் சகல வளங்களும் போகங்களும் குதிர்ந்து பொலிந்தன.
நாடுகள் பலவற்றிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தரித் திரத்தாள் என்னும் கன்னி தர்மவானின் அரண்மனையை அடைந்தாள். அரசன் முன் நீலிக் கண்ணிர் மல்கி நின்றாள். ‘என்னைத் தங்களின் அடைக்கலமாக ஏற்று, தங்களின் அரண்மனையில் வாழ அனுமதித்தல் வேண்டும்’ எனத் தன் ஊனை உருக்கி மன்றாடினாள்.
நத்திய பிச்சையைத் தந்தோம் என அரசன் அவளுக்கு அபயமளித்தான்.
இவளோ தரித்திரத்தாள்! இங்கு இவள் வாழ்வதற்கு வசதி செய்தால் செல்வம் தேயும், பருவம் பொய்க்கும், இன்பம் சிதையும், கல்வி கெடும், தைரியம்படும். மிச்சில் துன்பமே! இவளை இக் கணமே அரண்மனையிலிருந்து

Page 21
ա9վ மட்டுமல்ல, நமது நாட்டிலிருந்தே விரட்டியடியுங்கள் என அமைச்சன் அறிவன் இடித்துரைத்தான்.
'அடைக்கலமென வந்தவள். அதனை அளித்தல் என் கடன். அபயமளித்தல் என் சுதர்மம். அத்தளத்தில் நின்று என் யோகத்தைச் சுகித்தல் முறைமை" என்றான் அரசன்.
'என் ஆலோசனை விலை போகாத இடத்திலே என் சேவையினாற் பயனில்லை" என அறிவன் தனது அமைச்சர் பதவியைத் துறந்து வேறு நாடு சென்றனன்.
அரண்மனையிலே வசதியாக வாழ்ந்து வந்த பஞ்ச கன்னியருக்குத்தரித்திரத்தாளின் வருகை சற்றேனும் பிடிக்க வில்லை. அவளை அங்கிருந்து விரட்டப் பல வழிகளிலும் முயன்றார்கள். அரசன் அளித்த அபய அரண் தரித்திரத் தாளைப் பாதுகாத்ததினால் எதுவுமே பலிக்கவில்லை.
பஞ்சகன்னியரின் மனங்களிலே விரக்தி நெடிதுயர்ந்து வளரலாயிற்று.
முதலில் செல்வத்தாள் அந்நாட்டை விட்டு வெல்சி யேறினாள். திறைச்சேரி வற்றி வரண்டது. தரித்திரத்தாள் மனத்திற்குள் சிரித்தாள்!
அடுத்து, பருவத்தாள் வெளியேறினாள். பருவ மழை பொய்த்தது. பசுமை கருகியது. தரித்திரத்தாள் மனத்திற்குள் சிரித்தாள்.
இன்பத்தாளும் வெளியேறினாள். எங்கும் துயரும், சோகமும் மண்டலாயின. தரித்திரத்தாள் மனத்திற்குள் சிரித்
தாள்!

உழைப்பு
இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் என் வீரத்திற்கு என்ன வேலை" என்று தளபதி மறவன் தலை கவிழ்ந்து நின்றான்.
"வீரம், சத்தியம் என்ற உலையிலே புடம் போட்டு எடுக்கப்படல் வேண்டும்’ என்று தன் தர்மம் உரைத்தான் தர்மவான்.
‘என் வீரத்திற்குக் கற்பிக்கப்படும் மாசு!" எனக்குமுறிய தளபதி மறவன் அரச சேவையிலிருந்து விலகினான். தரித்திரத்தாள் மனத்திற்குள் சிரித்தாள்.
கல்வியாள் அரசன் முன் தோன்றினாள், ‘அரசே! அன்று அமைச்சர் அறிவரின் அறிவுரைக்குச் செவி மடுக்க மறுத்தீர்கள். இன்று தளபதியையும் துறந்தீர்கள். இந்நாட்டின் பாழ்நிலையைப் பார்த்தும் அந்தகமாக இருக்கிறீர்கள். கல்விக்குச் சமமான கண்ணில்லை, என்கிறது வேதம். என்னைத் துணைப்பற்றி தீர்க்கத்தின் தரிசனத்தைப் பெறுங்கள். தரித்திரத்தாளை இங்கிருந்து உடனடியாக விரட்டுங்கள். அப்பொழுதுதான் பழைய சுபீட்சம் மீளும்’ என விநயமுடன் கூறினாள்.
'கல்வியாளே! அன்று அமைச்சர் அறிவன் கூறிய பொழுதே அனைத்திையும் அறிவேன். சத்தியத்திலிருந்து - அது தரித்திரத்தாளுக்குக் கொடுக்கப்பட்ட சத்திய வாக்காக இருப்பினுங் கூட - நான் தவறவே மாட்டேன்’ என்றான் தர்மவான்.
நானும் அரண்மனையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு to
39

Page 22
աpվ
'எனக்கு மிகவும் இனியரான ஐவர் என்னைப் பிரிந்து சென்றார்கள். அவற்றையும் தாங்கி உயிர் வாழ்கிறேன். அவர் களுடைய வழியைத் தேர்ந்தெடுக்க நீயும் விரும்பினால், எனக்கு ஆட்சேபிக்கும் உரிமை கிடையாது."
கல்வியாள் அக்கணமே அரண்மனையை விட்டு வெளியேறினாள். தரித்திரத்தாள் மனத்திற்குள் சிரித்தாள்
தைரியத்தாள் அரசன் முன் தோன்றினாள். நானும் வருகிறேன்’ எனக் கூறி அரண்மனையை விட்டு வெளியேற ஆயத்தமானாள்.
நில்!” என அரசன் கத்தினான். தைரியத்தாள் திரும்பிப் பார்த்தாள். அரசன் உருவிய வாளும் கத்தியுமாக நின்றான். "தைரியத்தாளே! அறுவர் என்னை விட்டுப்பிரிந்தனர்; அவர்களை நான் தடுத்தேனல்லன். நாடு இடுகாடாகியது; கலங்கினேனல்லன். ஆனால், உன் ஒருத்தியை மட்டும் இந்த அரண்மனையிலிருந்துபோக அனுமதிக்க மாட்டேன்! போக முயன்றால் உன்னைக் கொன்று,நானும் இவ்வாளுக்கு இரை யாவது திண்ணம்' என்றான்.
தைரியத்தாள் சிலையாக நின்றாள். தரித்திரத்தாள் துணுக்குற்றாள். உடலெல்லாம் தீப்பற்றிக் கொண்டதுபோல் அவதிப்பட்டாள். அவள் மரணாவஸ்தை பட்டுக் கொண்டு தர்மவானின் முன் தோன்றினாள். ‘அரசே, இக்கணமே இந் நாட்டை வீட்டோட அநுமதி தாருங்கள் என தரித்திரத்தாள்
மன்றாடினாள்.

alayÜu
தரித்திரத்தாளே! உனக்கு அடைக்கலம் தந்ததினால் யான் அடைந்த துயர்களை நீ அறிவாய். இருப்பினும், நான் உன்னைச் சினந்தேனல்லேன்; புறக்கணித்தேனல்லேன்; நீ ஏன் இப்பொழுது போக விரும்புகின்றாய்?
"தைரியத்தாளைப் போக நீங்கள் அனுமதித்திருந்தால், நான் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்திருப்பேன். ஆனால் தைரியத்தாள் மீது பூரண பக்தி செலுத்தும் ஒருவனுடைய நாட்டிலே மூன்றாண்டுகளுக்கு மேல் என்னால் வாழ முடியாது. மூன்றாண்டு காலக் கெடு முடிந்தது என்று கூறி ஒட்டம் பிடித்தாள்.
தைரியத்தாள் சிரித்தாள்!
தர்மவான் சிரித்தான்!
செல்வத்தாள் - பருவத்தாள் - இன்பத்தாள் கல்வியாள் ஆகிய நான்கு கன்னியரும் அரண்மனைக்கு மீண்டார்கள்.
அமைச்சர் அறிவனும், தளபதி மறவனும் தர்மவானின் சேவையிலே வளங்களைச் சேர்த்தார்கள். ெ

Page 23
のA

jömi JODID
குயில் அழகாகப் பாடிக் கொண்டிருந்தது. அந்தக் கோலக் குரலில் ஓர் இளங் காகம் தன்னுடைய மனத்தினைப் பறிகொடுத்தது. கீதத்தின் ரஸனை. வேலையை மறந்தது; சுயத்தை இழந்தது.
“என்ன, இப்படி ஒரேயடியாக உட்கார்ந்து விட்டாய்? கூடு கட்டுவதற்கு அழகான சுள்ளிகள் கிடைக்கின்றன. குடும்பச் சுமையைத் தாங்குவதற்கு உழைப்பு, வா, வா." என்று அதனை அதன் சுற்றங்களான காகங்கள் அழைத்தன.
அவற்றின் அழைப்பு அதற்குச் சினத்தை மூட்டியது.
“உங்களுடைய உழைப்பும், வாழ்க்கையும். நான்காக மாகப் பிறந்ததற்காக ஏங்கி ஏங்கிச் சாகின்றேன். அதோ, பாருங்கள். அந்தக் குயிலும் நானும் ஒரே நிறந்தான். நான் கரைகின்றேன்; அது கூவுகின்றது. அதன் குரலைப் பிரதி பண்ணிப் பாடமனிதன் ஆண்டாண்டு காலமாகப் பாடுபட்டு வருகின்றான்.”
'அதற்குக் குடும்பமா? பொறுப்பா? தனக்காக மட்டுமே வாழுஞ் சுயநலச் சிறுக்கி."
“உங்களுடைய விளக்கம் எனக்குத் தேவையில்லை. நான் அந்தக் குயிலிடஞ் சங்கீதங் கற்று வரப் போகின்றேன்.
கரைந்து, எத்தித் திரியும் நமது இனத்திற்கு ஏற்பட்டுள்ள கறையை எனது இசை வெள்ளத்தாற் போக்குவேன்.”

Page 24
աpվ
"பைத்தியக்காரத்தனம்."
சுற்றத்தவரின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்காது அஃது எங்கேயோ பறந்து சென்றது.
எவ்வளவோ முயன்றும் காகத்திற்குச் சங்கீதம் வரவில்லை.
அதைக் கண்டவுடனேயே குயில்கள் தமது குரல் இனிமையின் இரகசியத்தைச் சொல்லாது பறந்து சென்றன.
ஏகலைவன் பாணியில் வித்தை கற்றும் பயனில்லை.
முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கை பாழாகியது.
தனது சொந்த ஊருக்கே திரும்ப வந்தது.
வழியில், ஒரு வேப்பமரத்தின் கீழ் ஒரு குயிற் குஞ்சு குற்று யிராக இருப்பதைக் கண்டது.
அதற்குச் சமீபமாகச் சென்றது.
"உன்னைக் கும்பிட்டேன். என்னை ஒன்றுஞ் செய்யாதே. என் தாய் செய்த குற்றத்திற்காக என்னைப் பழி வாங்க வேண்டாம்” என்று அழாக் குறையாகச் சொல்லிற்று.
"நீ ஏன் அழ வேண்டும்; என்னைக் கும்பிட வேண் டும்? நான் ஒரு தீங்குஞ் செய்ய மாட்டேன். நாங்களிரு வருஞ்சகோதரர்களாக வாழ்வோம். நீஅழகாகப் பாடுவாயே. அந்தக் கலையை எனக்குங் கற்றுத் தா" என விநயமுடன்
கேட்டது. 44 44.

தாய்மை
"நாங்கள் பாடுகின்றோமா? நாங்கள் பாடுகின்றோம் என்பது சிலருடைய வீங்கு கற்பனை."
“நீ குஞ்சாக இருப்பதனால் விஷயந் தெரியாது சொல்லுகின்றாய் போலும். நீ சங்கீதங் கற்பதற்கு யாரிடஞ் சிட்சை பெறுவதாக இருக்கின்றாய்?"
"குஞ்சாக இருப்பதனாலேதான் உண்மையைச் சொல்லுகின்றேன். நான் ஏன் குயிலாகப் பிறந்தேன் என்று வாழ் நாளெல்லாம் அழுது கொண்டேயிருப்பேன். எங்கள் வர்க்கத்தாருக்குக் கூடு கட்டத் தெரியாது. திருட்டுத்தனமாக உங்கள் வர்க்கத்தாருடைய கூடுகளில் முட்டை இடு கின்றனர். ஆகையினால், குயிற் குஞ்சுகளில் பல செத்து ஒரு சிலவே தப்புகின்றன. தப்புங் குஞ்சுகளும் என்னைப் போல கொத்து வாங்கி, என்னைப் போல குற்றுயிராகவே பிழைக்கின்றன. இந்நிகழ்ச்சியினால் ஏற்படுந் தாழ்வுச் சிக்கலிலிருந்து நாங்கள் என்றுமே மீளுவதில்லை. இதனை நினைத்து நினைத்து வாழ்நாள் பூராகவும் அழுது கொண்டேயிருக்கிறோம். தனிமையின் அழுகுரலைச் சங்கீதம் - இனிமை என்று மற்றவர்கள் நினைத்து விடு கின்றார்கள். உண்மையைச் சொன்னால், உங்கள் வர்க்கத் தாரைப் போன்று இனம் பெருக்கி வாழத் தெரியாத பாவி நான்.”
வேதனைப் பொருமல்.
இதனைச் ச்ொல்லிக்கொண்டிருப்பதற்கிடையில் ஒரு காகம் பறந்து வந்து அந்தக் குயிலைக் கொத்தத் தொடங்
கிற்று.

Page 25
ա9վ
"அது குஞ்சு. அதன் உயிரை ஏன் பறிக்கின்றாய்?. தாய் செய்த குற்றத்திற்கு இதற்கா தண்டனை?”
"ஒகோ, நீதான் சங்கீதப் பைத்தியங்கொண்டலையுங் காகமா? எனது கூட்டில் வாழ்ந்து என் கணப்பினை இது சுகித்துள்ளது. நான் அரும்பாடுபட்டு என் குஞ்சுகளுக்காகச் சேகரித்த உணவுகளை இது பகிர்ந்துள்ளது. இஃது உயிர் வாழ்வதால், என் சந்ததியின் வருங்காலத்தாய்மார்கள் ஏமாறு வார்கள்; மேலும், வருங்காலக் குஞ்சுகளின் உணவு வஞ்சிக் கப்படும்." என்று ஆவேசமாகக் கூறி, ஆத்திரந்தீரும் வரை அக்குயிற் குஞ்சைக் கொத்திச் சென்றது.
தூரத்தில் ஒரு குயில் அழகாகப் பாடிக் கொண்டி ருந்தது.
"அதோ, அதுகூட எனது அம்மாவாக இருக்கலாம். பெற்ற தாயையே அறியாது வாழும் அநாதைகள் நாங்கள்’ என்று ஈனக் குரலில், உயிர் பிரிந்தும் பிரியாத நிலையிற் குஞ்சு சொல்லிற்று.
"நீ இங்கே உயிருக்குப் போராடிக் கொண்டிருக் கின்றாய். உன் அம்மா, எங்கேயோ இருந்து பாடிக் கொண் டிருக்கின்றாளா?. என் வர்க்கம் எவ்வளவோ மேல்."
"கா.கா.கா." என்று கரைந்தபடிதனது சுற்றத்தைத் தேடி அந்தக் காகம் பறந்தது. O

தாய்மை - I
*அமேரிக்காவிலே விநோதமான பரிசோதனை ஒன்றினை நடத்தினார்களாம். மனிதனுக்கு அடுத்ததாகக் குரங்கிற்கு அறிவுண்டு எனத் தெளிந்து, அதனையே பரிசோதனைக்குரிய மிருகமாகத் தேர்ந்தெடுத்தார்கள். வழு வழுப்பான கண்ணாடிச் சுவருள்ள நெடிய ஜாடியிலே அக்குரங்கையும் அதன் குட்டியையும் வைத்து, ஜாடிக்குள் நீர் மட்டம் படிப்படியாக உயர ஏற்பாடு செய்திருந்தார்கள். நீர் மட்டம் நிதானமாக உயரத் தொடங்கியது. குரங்கு தன் குட்டியை எடுத்து ஒக்கலையில் வைத்து அன்புடன் அணைத்துக் கொண்டது. நீர் மட்டம் படிப்படியாகக் குரங்கின் ஒக்கலைக்கு மேலாலும் உயரத் தொடங்கியது. தாய்க் குரங்கு குட்டியைத் தன் தோளிலே வைத்துக் கொண் டது. தோளுக்கு மேலால் நீர் மட்டம் உயர்ந்த பொழுது, குரங்கு தன் குட்டியைத் தலைக்கு மேலாக ஏந்தியது. நீர் மட்டம் மேலும் உயர்ந்தபொழுது, தாய்க் குரங்கு மூச்சு விடுவதற்குக் கஷ்டப்பட்டது. மறுகணம். குட்டியைத் தண் ணிருக்குக் கீழே அமுக்கி, அதன்மீது ஏறி, அதன் உயரத் தையும் பயன்படுத்தி, தன் உயிரை மட்டும் காப்பாற்ற விழைந்தது தாய்க் குரங்கு!"
விஞ்ஞான ஆசிரியர் கூறிய கதையைச் சிறுவன் தன் தாத்தாவுக்குச் சுவாரஸ்யமாகச் சொன்னான்.
"ஏன் இந்தப் பரிசோதனையை நடத்தினார்கள்?" எனத் தாத்தா கேட்டார்.
47

Page 26
աpվ
"மனிதன் உள்பட மிருகங்களுக்குத் தற்பற்றே
அமோகம்’ என்றார்கள் சிலர். இல்லை; தாய்மை என்னும்
உந்நத உணர்ச்சி தற்பற்றை அழிக்க வல்லது' எனச் சாதித்
தார்கள் வேறு சிலர். எச்சாராரின் கூற்று உண்மையானது
என்பதை நிறுவுவதற்காக இந்தப் புரிசோதனையை நடத்தி னார்களாம்!"
"இதனை நிறுவுவதற்கு ஏன் இவ்வளவு விரிவான பரி சோதனை? நேற்று அடுத்த வீட்டுப் பூனை நம்முடைய கொல்லையிலே குட்டி போட்டது. பின்னர், அது தன் குட்டி களுள் ஒன்றைச் சாப்பிட்டு விட்டது” என்றார் தாத்தா.
'கண்ணே!” என்று அடுக்களையிலிருந்து அவனைத் தாய் அழைத்தாள்.
'வருகிறேன் அம்மா." எனச் சிறுவன் தாயிடம் போவதற்கு அவசரங் காட்டினான்.
"அம்மா சும்மாதானே அழைக்கின்றாள். ஆறுதலாகப் போகலாம் கண்ணு. இன்னொரு கதை சொல்லேன்."
"ஆ. அம்மாவுக்கு என்மீது உயிர் என்னை ஒரு கணம் பார்க்காவிட்டாலும் பைத்தியம் பிடித்ததுபோலாகிவிடும்." எனக் கூறிய சிறுவன் அடுக்களைப் பக்கம் ஓடினான்.
தாத்தா சிரித்தார் ெ


Page 27
4. சின்னம்
பூலோகத்திலிருந்து வரும் மனிதக் குரல்களைக் கேட்பதற்காகக் கர்த்தர் தமது காதைக் கூர்மையாக வைத்திருந்தார்.
அப்பொழுது, அவருக்குச் சினம் ஊட்டும் வகையிலே சாத்தான் சிரித்தான். ஊழி இரைச்சலாக அட்டதிக்கும் ஒலித்தது.
கர்த்தர் முறுவலித்தார்.
சாத்தான் அவர் முன் தோன்றினான். “கர்த்தரே! நீர் ஏன் உமது சாயலில் மனிதரைப் படைத்தீர்?"
"எம்மைச் சேவிக்க."
"கீழே குனிந்து பாருங்கள். நீங்கள் படைத்த மனிதப் புழுக்கள் பசியுடன் துடிப்பதை. ஞானப்பழத்தைச் சாப்பிட்ட
தினாலே அவனுக்குப் பசியுணர்வு ஏற்பட்டதாக யான் அறி யேன்."
"மனிதனுக்கு என்னுடைய ஞாபக சக்தியை யாம்
படைக்கவில்லை."
"அதற்காக..?

சின்னம் 'பசி வேளையிலாவது கர்த்தரின் ஞாபகம் ஏற்படு மல்லவா?”
மீண்டுஞ் சாத்தான் சிரிக்கத் தொடங்கினான். “சாத்தானே! என் பின்னாலே போ!' எனக் கண்டித்தார். சாத்தான் பின்னால் மறைந்தான்.
மெளனம் நிலவியது. அதனை ஊடுருவிக்கொண்டு, மனிதனின் மெல்லிய குரல் அவர் செவிகளில் விழுந்தது. 'பரமண்டலங்களிலேயுள்ள எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. அன்றன்றுள்ள எங்களப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். ெ

Page 28
சின்னம் - I
மொட்டு. பருவத்தின் கன்னித்தவம். தவப்பலிதம். பலவிதப் பூரிப்பில் இதழ்களின் மதர்ப்பு விந்தை. விந்தை யின் பூரணம். பூரணத்துவத்தை ஒற்றிப் படரும் நாணச் சிலிர்ப்பு. சிலிர்ப்பின் முறுவல். மலரின் மலர்ச்சி!
இல்வாழ்கிழத்தி, அன்பின் திணை பயில இருத்தல் நோன்பியற்றும் கோலம். மலரின் மலர்ச்சி! 'கார் வந்தது. காலம் விடிந்தது. நோன்பு அறுத்திடத் தலைவன் வருவான். சிலிர்ப்பின் முனைப்பு. மடை திறந்தது. பூட்டிய இதழ்கள் வெடித்தன. பாங்கியிடம் வேட்கை கக்கும் பேச்சுகள். அவள் உளம் கற்பனையிற் புணர மலர்ந்தாள்!
மண்ணைக் கீறி வித்தை பயிலும் உழவன். மண் ணின் வளத்தையும், உழைப்பின் சிறப்பையும் கலையாக இணைக்கும் தவக்கோலம். மலரின் மலர்ச்சி! இது பெண் பூ, காய்க்கும்; கனி தரும் விளைச்சல் பற்றிய நினைவில் மலர்ந்தான்!
மனத்திலே கற்பனையின் சடைப்பு. இயற்கையின் அழகை மென்று சுவைக்கவும், சுவைத்ததை ஒவியத்திலே சமைக்கவும் நாடல். நாடலின் நளினம். மலரின் மலர்ச்சி! நிறைவின் நுகும்பு. 'மலரின் தரிசனம் கலையின் தரிசனமே!’ என்ற கற்பிதம் ஊட்டும் மலர்ச்சி.
சொற்களின் வண்ணக் கலவியிலே காவியம் ஒம்பும் கவிஞன். கற்பனையின் யோனியை அம்மணமாக்கிக் கருச் சூலுறும் முகூர்த்தத்தை எதிர்நோக்கும் தவம். மலரின்

élérani
மலர்ச்சி அதைத் தொற்றிப் புதிய உவமை ஒன்றின் திரட்சி. சொற்களிலே கலை மனைகோலும் மலர்ச்சி.
மொட்டு மலரான மலர்ச்சி. அதன் சலனத்தில் பூக்கும் மலர்ச்சிகள். தேவி பூரித்துப் போனாள். தெய்வீக வதனம் அலர்த்தும் அபிநயத்தில் குமிழும் முறுவல், முறுவல் சிந்தும் மலர்ச்சி!
அந்த மலர்ச்சியிலே ஈசன் சொக்கிப் போனான். சொக்கனின் 'சொக்கிப்பு விழிக்கோடியிலே வித்தும் ஆயிரம் அர்த்தங்களின் மலர்ச்சிக் கா.
'ஒரு மலரின் மலர்ச்சி! பல மலர்ச்சிகளை ஒரு
சின்னஞ்சிறு பூவிலே எவ்வாறு ஒளித்து வைத்தீர்கள்? படைப்புப் கலையின் மூல விக்ரஹம் இதுவோ?’ கயல் விழிகளிலே புரளும் மலர்ச்சியை மறைக்கும் மயல் மொழிகள்.
‘பூவின் மலர்ச்சியிலேதான் சாவின் நித்திய தத்துவத்தை பிணைத்து வைத்திருக்கின்றேன். ஈசன் கற்பிதம் ஒன்று; மானிடக் கற்பனை பல ஈசனின் நெஞ்சிலே மொட்டின் முனை குத்திய சுளுக்கு.
'கற்பிதத் தளமும்; கற்பனை நிலையும் இந்தச் சுருதி பேதத்தினால் பக்தன் தரிசனம் இழந்தான், ஈசன் என்ன வானான்? சொல்லிலே கீச்சமூட்டிய தேவி, ஈசனின் உடம் பிலே தனக்கு ஒதுக்கப்பட்ட அர்த்த பாகத்தில் பொருந்தி
60TT6T.
இன்னொரு மொட்டு. அதன் தவக் கோலம் ட

Page 29

LJшJбr
அந்த நெற்பயிரின் கதிர் நிறைவாக முற்றியது. கதிரை நந்நெல் முத்துகள் பூஷிதஞ் செய்தன. பொன் நிறங் கூட்டித் துவண்டது. நிறைமாதக் கர்ப்பவதியின் மடிச்சுமை. பெண்மையின் பூரிப்பு. தனக்கு உயிரூட்டிய பூமித்தாயை வாஞ்சையுடன் குனிந்து முத்தமிட்டது. பாசம் இணைத்தது. கவிழ்ந்த தலை நிமிரவேயில்லை.
அந்தப் பயிருக்குப் பக்கத்தில் இன்னொரு நெற்பயிர். அதன் கதிரிலே, நெல்மணி உருவங்கொண்ட நாலைந்து பதர்கள். கனமுமில்லை; பயனுமில்லை. அஞ்ஞானத்திலே விளைந்த ஏமாப்புடன், அவற்றை ஏந்தி, வானை நிமிர்ந்து பார்த்தது. பெண்ம்ைக்குப்பொருந்தாத ஆண்மைச் சிலிர்ப்பு. அந்தக் கழனியின் அல்லி ராணியெனத் தன்னைத் தானே கற்பித்துக் கொண்டது.
தலை கவிழ்ந்து, நிலத்தினைத் தொடும் பயிரைக் கண்டதும் அதற்கு ஏளனந் துளிர்ந்தது.
'மண்ணைக் கல்லவா கீழே பார்க்கின்றாய்? நிமிர்ந்து நின்று விண்ணைப் பார்; வானத்துப் புதுமைகளைப் பார்!"
பூரண விளைச்சல் எய்திய பயிரினால் தலையைத் தூக்க முடியவில்லை.
"பூமாதேவி தன்நெஞ்சைப் பிளந்து, பசளை மண்டிய தனது மண்மஞ்சத்திலே என்னைக் கிடத்தி வளர்த்தாள். அவள் தந்த உணவில் நான் வளர்ந்தேன்; விளைந்தேன். அதற்காக நான் அவளை அஞ்சலி செய்கின்றேன்.”

Page 30
աpվ "கூனிக் குறுகி நிற்பதற்குப் பெயர் அஞ்சலியா? அடிமைப் புத்தி நான் சுதந்திரப் பிரியை."
செந்நெற் கொத்துடன் சாய்ந்து விட்ட பயிர் பதிலெது வும் பேசவில்லை.
“மகளே! உன்னால் நான் பெருமை அடைந்தேன்' என்று பூமித்தாய், தன்னை அஞ்சலி செய்யும் பயிரின் செவிகளிலே கொஞ்சினாள்.
செருக்குடன் விண்ணைப் பார்த்துப் புதுமை பேசிய பதருக்குப் பூமித்தாயின் பேச்சுக் கேட்டது. அழுக்காறு மூண்டது. சினம் சென்னிவரை ஏறிற்று.
"பூமியே, நீ ஒரவஞ்சகி" எனக் கத்திற்று. ஆத்திரத் தில் அதன் உடம்பு ஆடிற்று.
"இளைய மகளே! நீ என்னை மறந்து பேசாதே. இப் பொழுதும் நான்தான் உன்னையுந் தாங்கிக் கொண்டிருக் கிறேன்.” என்று பூமித்தாய் மிகவும் அமைதியாகப் பதில் சொன்னாள்.
“என்னைத் தாங்குவது உன்னுடைய கடமை. அதற்காக நான் உனது சிற்றடிமையாக வாழவேண்டுமா? நான் சுதந்திரப் பிரியை.”
“விளைவும்-பயனும் அதுதான் சுதந்திரம்.”
'நீசுத்தக் கர்நாடகம். நீபேசுவது ஒருவருக்கும் விளங் காது.”
பொறுமையை அணிகலனாகப் பூண்ட பூமித்தாயின் நெஞ்சில் இந்த ஏளனச் சொற்கள் சுருக்கென்று ஏறின. ஒரு கணம் நிதானந் தவறியது.

սածր
"நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு, நீ உன்னையே நீ புரிந்துகொள்ள வேண்டும்.”
"நான், நானே தான்."
“ம். ஆனால், பதர்!"
"உன்னை நான் என் காலால் மிதிப்பேன்’ என்று அகம்பாவச் செருக்குடன் முனிந்து, மீண்டும் வானையே பார்த்தது.
முற்றி விளைந்த நெல்மணிக்கொத்து பூமித்தாயின் வயிற்றைத் தழுவியது.
அவளுடைய சினந்தணிந்தது. பெருமையிலே சீதளச் சுகம் பருகுகின்றாள்.
பதரைச் சுமக்கும் பயிருக்குப் பதில் உத்தரம் எதுவுஞ் சொல்லவில்லை. 0

Page 31
LJUJốr - II
சுதந்திர தினம்.
மைதானத்தின் மையத்திலே கம்பம் ஒன்று, மான மறவனின் காம்பீரியத்துடன் செங்குத்து நிலையில் உடல் நிமிர்த்தி நிற்கின்றது. ஆனாலும், வானோக்கித்தவமியற்றும் பாவமும் அதன் காம்பீரியத்திற் சங்கமித்தது.
அதன் உச்சியின்மீது தேசியக் கொடி. இறைபக்தியில் ஒன்றி, கடற்கரையில் அமர்ந்து, தெய்வாஞ்சலி இயற்றும் அளக பாரம் தென்றலில் அலையுமே! அத்தகைய ஒரு லாவண்யஞ் சிந்த அக்கொடிச் சீலை பறந்தது.
அந்தக் கம்பத்தைச் சூழ்ந்து, அரசின் தலைவர்கள் - ராஜ தந்திரிகள் - ராணுவ வீரர்கள் அவர்களுடன் இன - மத - பால் - வயது - வர்க்க பேதங்கள் இற்றுவிட்ட மக்கள் மொய்; ஜன சமுத்திரம் கடலிலே கரை நோக்கித் தவழும் அலைகளைப் போன்று மனிதத் தலைகள் அசைகின்றன. அந்தச் சென்னிகளின் சிந்தை யாவும் கம்பத்தின் உச்சியில் ஒன்றிய பரவசம்.
கம்பத்தின் உள்ளத்திலே திரண்ட கர்வம் சென்னி வரை ஏறிற்று.
கர்வத்தின் காங்கையை உணர்ந்த கொடிச்சீலை இலேசாக முறுவலித்தது.
அந்த முறுவலின் மோஹனம் கம்பத்தின் அறிவுக்குள் சிக்குப்படவில்லை.

பயன்
நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பு என்ற நினைப்பா உனக்கு? ஏதோ வண்ணம் பூசி அழகாக இருக்கின்றாயே என்று என் தலையிலே பறக்கத் தஞ்சம் தந்தால். உன்னை ஊதித்தள்ளிநிலத்திலே போட்டேன் என்றால், இந்த மக்கள் கூட்டத்தின் கால்களிலே மிதிபட்டுக் கிழிந்த கந்தலாக உருமாறி விடுவாய். உன் சேமம் என் தயவிலே செழிக் கின்றது. என்று முனிவின் முறுக்கேறிய வார்த்தைகளைக் கம்பம் கக்கியது.
அப்பொழுது கொடிச் சீலை லேசாக முறுவலித்தது.
"அற்பத்தின் அற்ப புத்தி. இந்த மைதானத்திலே மிகவும் நெடி துயர்ந்து, ஈசனை நேரிலே தரிசிக்கும் உயரத்தில் நிற்பவன் நானே. இதனாலன்றோ, இங்கு கூடியுள்ளவர்கள் என்னைச் சூழ நின்று, தமது அஞ்சலிகளை எனக்கே செலுத்துகின்றனர்" என்று கம்பம் உதிர்த்த ஏமாப்பு விளக்கங்களைத் தேசிய கீதத்தின் ஓங்காரம் கபளிகரம் செய்தது.
தேசியகீதம் முற்றியது. கம்பத்திலிருந்து கொடிச்சீலை இறக்கப்பட்டது. அப்பொழுதுகூட அஃது இலேசாக முறு வலித்தது.
சற்று நேரத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மொய் கலைந்தது. மயானத்தின் ஏகாந்தமும் மோனமும் அந்த மைதானத்திலே குடியேறின.
மைதானத்தின் மையத்திலே கம்பம் மட்டும் நிற் கின்றது. கொடிச்சீலையின் அந்த இலேசான முறுவலை மீண்டும் ஒரு தடவை பார்க்கும் விரகத் தவிப்பு கம்பத்தின் நெஞ்சமெல்லாம் வியாபிக்கலாயிற்று. ெ

Page 32

ஞானம்
பீடமாக அமைந்திருந்த கருங்கல்லின்மீது மோதித் தேங்காய் உடைந்தது.
ஈசனின் விளையாட்டு நேரம். சிலை ஈசனாகியது.
இளநீர் பன்னிர் தெளித்தது. உச்சிக்குடுமிக்குள் ஒரு கண் பிதுங்க, வெடித்து அகன்ற ஒட்டினை ஒட்டிய தேங்காய்த் தசை வணங்கியது. அந்த ஈசனின் பாதங் களுக்குச் சமீபமாக இருந்த மலரொன்று, அந்தக் காட்சியைப் பார்த்துக் குஞ்சிரிப்பினை உதிர்த்தது.
"மலரே, ஏன் சிரிக்கின்றாய்?’ என ஈசன் கேட்டார்.
'அஞ்சலிக்கு ஏற்ற மிருதுப் பொருளாக நானே தங்க ளாற் படைக்கப் பட்டிருக்க, இந்தத் தேங்காயைக் கொண்டு வந்து உடைக்கின்றார்களே! அறியாமையைப் பார்த்துச் சிரிக் கின்றேன்’ என்று மலர் பெருமையுடன் சொல்லிற்று.
"ஞானம், அஞ்ஞானம்; அஞ்ஞானம், ஞானம்' என்று உன்மத்தமாக உச்சரித்துக் கொண்டு, ஈசன் சிரிக்கலானார்.
சிரிப்பினை நிறுத்தி, "மலரே! நீ இறை வணக்கத்திற் காகவா படைக்கப்பட்டாய்? அப்படியானால், விலைமகளின் ஈர்வழியும் அழுக்குக் கூந்தலிலேகூட உன்னைச் சூட்டி ஏன் மனித குலம் மகிழவேண்டும்?"
மலரின் கர்வம் பங்கமுற்றது. ஈனக் குரலிலே, 'பக்தர் கள் என்னைத்தானே விரும்பி அஞ்சலிக்குக் கொண்டு வருகின்றார்கள்” என்றது.

Page 33
տցվ
"உன்னைப் பணங் கொடுக்காமல் எங்கும் மலிவாகப் பெறலாம் என்பதனால் கொண்டுவந்து இங்கே கொட்டு கின்றார்கள். மனிதன் எதனை வருத்தஞ் சிறிதுமின்றி இழக்கத் தயாராக இருக்கின்றானோ, அதனால் அஞ்சலி செய்து என்னைத் திருப்திப்படுத்த முயலுகின்றான். அவ்வளவுதான்.”
மலர் கண்ணிர் உகுத்துக் கொண்டே “ரூபாயின் மதிப்பு தேங்காயை என்னிலும் பார்க்க உயர்ந்த அஞ்சலிப் பொருளாக்கி விட்டது. ஈசனும் விலையை வைத்துத்தான் அஞ்சலிப் பொருள்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றாரா?” என்று கேட்டது. அதன் பட்டுக் கன்னங்கள் சோகத்தில் 6) μπις 607.
"அப்படியே வைத்துக் கொள்.”
மலர் வாய்விட்டுக் குலுங்கி அழுதது.
மலரின் அழுகுரல் ஈசனுடைய மனத்தைத் துழாவியது.
"நீ ஏன் என் முன்னால் உடைக்கப்படுகின்றாய்? என்று தேங்காயைக் கேட்டார்.
“என்னை இங்கு உடைக்காவிட்டால், வீட்டிலே உடைத்து உணவுப் பதார்த்தங்களிலே சேர்ப்பார்கள். இல்லாவிட்டால், செக்கிலே போட்டு நெய் எடுப்பார்கள். எப்படியோ, எங்கேயோ உடைக்கப்பட வேண்டியது எனது сапф."
"அஞ்ஞானம்-ஞானம்; ஞானம்-அஞ்ஞானம்" என்று
ஈசன் சிரித்தார்.

ஞானம்
தாம் அதிக நேரம் விளையாடி விட்டதை ஈசன் உணர லானார்.
"மனிதன் பைத்தியக்காரத்தனமாக எதையாவது செய்து கொண்டேயிருப்பான். அவற்றிற்கு அர்த்தங் கற்பித் துக் கொள்ளும் பித்தன் நானே. என் முன்னிலையில், மனிதன் தேங்காயை உடைக்கும் பொழுது, அவன் தனது ஆணவத்தை உடைக்கின்றான் என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன்.”
தேங்காய் பெருமிதங் கொண்டது.
"மலரே மானிடன் உன்னை எனக்குச் சமர்ப்பிக்கும் பொழுது, அவன் தனது உள்ளத்தை என்னிடம் அர்ப்பணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வேன்.”
மலர் மகிழ்வெய்தியது.
“மனிதனுடைய அபிநயங்களுக்குத்தான் நான் அர்த் தம் கற்பிக்கின்றேன். ஆனால், மனிதனோ என்னைப் பற்றிய தத்துவ விசாரத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகளைக் கழித்து விட்டான்."
தேங்காயும், மலரும் ஈசனை வணங்கின.
ஈசனைக் காணவில்லை.
சிலை சிலையாகவே இருந்தது. ெ

Page 34
ஞானம் - I
தோற்றத்திற்குப் பாழ் மண்டபம். அதன் அகத்தே கவின் மண்டிய கலைக் கோயில். ரிஷி அதனைத்தன்தியான நிலையமாகத் தேர்ந்தெடுத்தார். மழைக்காக அந்த மண்ட பத்தில் ஒதுங்கிய சிலர் அந்த ரிஷியைக் கண்டனர். "நாங்கள் உங்கள் சீடர்கள் என அவரை வணங்கி அங்கேயே தங்க லானார்கள். ரிஷி அவர்கள்மீது இரக்கங் கொண்டார். அவ் வப்போது கலாபோதகம் அருளலானார்.
ரிஷியிடம் கனிந்திருந்த கலா ஞானத்தின் சிறிய பகுதி யைத் தெளிந்த சீடர்கள், வெளி உலகிலே நடமாடத்தொடங் கினார்கள். மக்கள் மத்தியிலே தங்களை கலாவிற்பன்ன ராகக் கற்பித்துக் கொண்டார்கள். மதிப்பு உயர்ந்தது; வருவாய் விளைந்தது; சுய நலம் கனிந்தது. இதனையொற்றி, அந்தக் கலைக் கோயிலுக்குட் சென்று வேறு யாரும் கலா போதம் பெறக் கூடாது என்ற அக்கறை செழித்தது.
கலையார்வம் பெற்ற பலருக்கு, இந்த 'சீடர்கள் தரிசித்து மீளும் மண்டபத்தின் உட்பிரகாரத்தைத் தரிசிக்கும் ஆவல் மிகுந்தது. தமது வேஷம் கலைக்கப்படலாம் என்ற அச்சம் சீடர்களுக்கு வலுத்தது. எனவே, ரிஷி தியானம் இயற்றும் அறையின் வெளிச்சத்தை ஒரு கோணத்தில் வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இந்த ஏற்பாட்டினால், ரிஷியின் ஜடாமுடி உருவத்தின் பூதாகரமான நிழல் சுவரிலே விழுந்தது. உள்ளே நுழைய

ஞானம் ஆசைப்பட்ட கலாபிமானிகளை அழைத்து வந்து, ஒரு துவாரத்தின் ஊடாக அந்த நிழலைப் பார்க்கச் செய்தார்கள்.
'பார்த்தீர்களா? உள்ளே ரிஷியுமில்லை; மகத்துவமு மில்லை. அங்கே ஒரு பயங்கரப் பூதம் உறைகின்றது. நமது கலா சக்தியினால் அதனைக் கட்டுப்படுத்தி வைத்திருக் கிறோம். என்று சாதுர்யமாகப் புளுகினார்கள். மருண்ட வர்கள் ஓடினார்கள்.
பூதம் வாழ்கின்ற இடத்தில் ஏன் இந்தக் கலா விற் பன்னர் வசிக்க வேண்டும்? என்ற ஐயம் சிலருக்கு எழுந்தது. ஆகவே, உள்ளே வசிக்கும் 'அதை' - அது பூதமாக இருந் தாலும், ரிஷியாக இருந்தாலும் - பார்த்திடல் வேண்டும் என்று அதிற் சிலர் தீர்மானித்தனர்.
அந்த மண்டபத்திற்கு முன்னால் ஒரு கலை விழா விற்கு ஏற்பாடு செய்தார்கள். அவ்விழா கோலாகலமாக நடை பெறலாயிற்று. 'சீடர்கள் வித்துவச் செருக்குடன் கும்மாளம் அடித்தார்கள். வெளியே நடக்கும் 'கூத்து' என்ன என்பதை அறிய ரிஷி மண்டபத்திற்கு வெளியே வந்தார்.
குழுமியிருந்தவர்களுக்கு அற்புதக் காட்சி. ஈற்றிலே ரிஷியின் தரிசனம் எல்லோருக்கும் வாய்க்கின்றது.
'சீடர்கள் எங்கே?
ஞான ஒளியிலே உருகி, அற்பங்களாகிவிட்டார்களா?
அவர்களைக் காணவில்லை.

Page 35
་་་་་་་་་་་་་་་་་
ܓܬ يجN 8ܨ 妮 KASKA) 全ど空 ్యూఫ్రణ>షా W
=} 2S
Ņ
 
 
 
 
 

நிறம்
ஈசனின் விசித்திர நினைவுகள். குறும்புங் கலவிய திருவிளையாடல்கள். தலையை அரியமாகக் (Prism) கற்பித்தார். தினகரனின் வெள்ளை ஒளியை அதனூடாகப் பாய்ச்சினார்.
ஒளியின் நிறப் பிரிகை. ஏழு நிறங்கள். நிறமாலை!
ஊதா.
கருநீலம்.
நீலம்.
பச்சை,
மஞ்சள்.
இளஞ்சிவப்பு.
சிவப்பு.
ஒவ்வொன்றுந் தனித்துவப்பெருமை பாராட்டிக் குதிக் கின்றன. -
ஊதா: தமிழ் பிராட்டி ஒளவையை முருகன் ஏமாற்றினான். சுட்ட பழமும், சுடாத பழமும். அந்த நாவற் பழ நிறத்தின் பெருமை எதற்கு உண்டு?
கருநீலம்: ஊதாவுக்கும் நீலத்திற்குமிடையில் ஒளிந்து விளையாடுவேன். என்னைக் காண்பதும் கடினம். கத்தரிப் பூவிலே நான் சயனிப்பேன்.

Page 36
աpվ
நீலம்: நிறமும் அதன் பெருமையும். காத்தற் கடவு ளாம் திருமால் எனது நிறத்தைத்தான் விரும்பி ஏற்றுள்ளான்.
பச்சை; நான் வளத்தின் நிறம். பூமித்தாயின் வளத் தினைப் பறைசாற்றி நிற்கின்றேன்.
மஞ்சள் மங்களமே இன்பம்; இன்பம் மங்களமானது. நான் மங்களத்தில் ஒன்றியுள்ளேன்.
இளஞ்சிவப்பு: மலர்களிலே அழகு ரோஜா. அதன் மிருது இதழ்களிலே கொலுவீற்றிருக்கும் என்னை ரோஜா நிறமென்றுஞ் சொல்வார்கள்.
சிவப்பு: மனிதனின் உதிரமுஞ் சிவப்பு; தியாக சிந்தையும் சிவப்பு; வாலைக் குமரியின் வனப்பு இதழ்களுஞ் சிவப்பு.
நினைவுகள் வெளவாலாக, அரியம் தலைகீழாக. நிறமாலை அதனுட் புகுந்து வெளியே வருவது வெள்ளை
வெள்ளையின் பிரிகையே நிறங்கள்; நிறங்களின் கலவையே வெள்ளை. அதற்குள் நிற பேதங்களும், அவற்றின் பெருமைகளும்."
ஈசன் சிரிக்கின்றான்.
நிறங்கள் சிரிக்கின்றன. ெ

நிறம் - I
கடலழகியின் நித்திய பிரசவச் சக்கரத்தின் தொடர்ச்சி. இரட்டைக் குழந்தைகளின் ஜனனம். ஒத்த சாயல் கோலிய இருவரும் வளர்ந்து, கரங்கோர்த்து வானவெளி யிலே பவனிவர ஆரம்பித்தனர். காலப்போக்கில் இருவருக்கு மிடையிலே கோலப் பிறழ்வு. வேக வேறுபாடும் புகுந்து கொண்டது. இவை தொற்றியும் அழுக்காறு திரண்டது.
ஒருத்திக்குக் கறுப்புக் கோலம் பொருந்தியது. எனவே, அவளைக் கருமுகில் என்று அழைத்தார்கள். விண்வெளி நீச்சலிலே விரைவு காட்டியவளுக்கு வெண்மைக் கோலம் பொருந்திற்று. அவளை வெண்முகில் என அழைத்தார்கள். "வெண்முகிலே, நீஇவ்வளவு வேகமாக ஏன் - எங்கே ஒடுகின்றாய்? குஞ்சரக்குறுநடையே பெண்மைக்கு ஏற்றது. உன் விரைவிலே உன் நிறம் வெளிறி, உன் அழகு பங்கப்படு வதை நீ அறிய மாட்டாயா? உன் தலையைச் சற்றே கவிழ்த்திக் கீழே பார். நமது தாயின் நிறத்தை அபிநயித்து நான் அழகில் மதர்ப்பதை நீ உணர்வாய்.” என்றது கருமுகில்.
வெண்முகில் தனது சர்வாங்கத்தையும் ஒரு தடவை தானே அநுபவித்துப் பூரிப்பிலே பொங்கியது. ‘நானா வெளிறி இருக்கின்றேன்? நீதான் சியாமளமாகி விட்டாய்; சுத்தக் கறுப்பி அந்த அலங்கோலத்தை மறைக்க இப்படியும்

Page 37
տpվ ஒரு வியாக்கியானமா? உன் சாதுர்யத்தைப் பாராட்டினாலும், உன்னுடைய அழுக்காற்றினை நான் வெறுக்கின்றேன். நிலவின் நிறம்; நிர்மலத்தின் நிறம். தபஸ்வியின் துறவற உள்ளத்தைப் போன்று அழகு சிந்துபவள் நான். என வெண்முகில் தன் அழகின் பெருமையைக் கற்பித்தது.
இருவருக்குமிடையிலே குரோதம் நஞ்சுண்டு மதாளித்தது.
அங்கயற் கண்களை ஈசனில் அப்பிய தேவி, குமிண் நகை ஒன்றினை அலர்த்தினாள்.
'ஏனிந்தக் கொல் நகை? என ஈசன் குழைந்தான். முன்னொரு காலத்தில் மூதேவிக்கும், சீதேவிக்கும் தத்தமது அழகு குறித்துப் பிணக்கு ஒன்று ஏற்பட்டதல்லவா? அப்பிணக்குப் பற்றிய தீர்ப்பினை என் மனம் அசை போடு கின்றது!"
'மூதேவி போகும்பொழுது அழகாக இருக்கின்றாள். சீதேவி வரும் பொழுது அழகாக இருக்கின்றாள். இதனை நானிலத்தார் நன்கறிவர். அதனை அசை போடும் தேவை எது தொற்றியோ தேவிக்கு ஏற்பட்டது? என ஈசன் கொஞ் சுதல் சிந்தினான்.
"அதோ பாருங்கள்! அந்த வெண்முகிலும் கருமுகிலும் இரட்டையர். இருப்பினும், அவர்களுக்கிடையிலே தத்தமது கோலங்களில் ஊன்றிய பிணக்கு ஒன்று கட்டித்து விளை கின்றது. நிலத்திற்கு வரும்பொழுது கருமுகிலும்.?

நிறம்
தேவியின் அப்பாவித்தனமான பேச்சு மேலும் நீளு முன்னரே, ஈசன் அண்ட சராசரங்களும் நடுங்கும் வண்ணம் கடகடத்துச் சிரித்தான். அச்சிரிப்பிலே நடுங்கிய வாயு பகவான் வான வெளியிலே அரங்கப் பிரதட்சிணம் செய் தான். பிரளய மழை பொழியலாயிற்று. வெண்முகிலும் கரு முகிலும் தத்தமது ஸ்திதிகளை இழந்து, நீராகக் கரைந்து, கடலழகியின் அணைப்பினை நாடி ஒடத் துவங்கின.
கடலழகியின் நித்திய பிரசவச் சக்கரம் தொடரும்.
‘மாயையும், மாயைத் தோற்றங்களும்!" என்று தேவியின் செவிகளிலே கூறிய ஈசன், எதுவுமே நடவாதது போல, தனது தியானத்தில் ஒன்றலானான். 0

Page 38
AW
AWA s
W
W
 

IJ6ob
மெழுகுவர்த்தி சமைத்துள்ள வேள்விக் குண்டத் திலே ஜனித்து, இருட்பாளத்தைப் பிளந்து, சென்னியிலே ஈஸ்பர நாமத்தைத் தாங்கி, தியானப் பொலிவுடன், சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
மறுகோடியில் அகண்டாகாரமாகப் பரம்பியிருந்த இருள் விளிம்பிலிருந்து ஒரு விட்டிற்பூச்சி தத்தித் தத்தி வந்தது.
சுடரின் அழகில் மனம் ஒன்றியது. அதனையே பார்த்துக் கொண்டிருந்தது.
சுடர் தியானத்தின் ஐக்கியத்திலே மோனத்தை வளர்த்தது.
“சுடர்க் கன்னியே, செளக்கியமா?’ என விட்டில் பேச்சை ஆரம்பித்தது.
சுடர் மோனத்தைக் கலைக்கவில்லை. "நான் பேசுகின்றேன்; நீ வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றாய். அழகும் அகம்பாவமும் இரட்டைப் பிறவிகள்.”
"நெஞ்சை பக்தியினால் நிறைத்து வைத்திருப்ப வர்கள், வெட்டிப் பேச்சுகளிற் காலத்தைப் பலியிடுவது கிடையாது.” தலையை நிமிர்த்திக் கொண்டு, உதடுகளை அசைக்காத வாக்கில், சுடர் பதில் சொல்லிற்று.

Page 39
மரபு
"உன் தலை கழுத்துடன் அறுந்து, நிலத்திலே விழுந்து விடப் போவது கிடையாது. என்னைப் பார்த்துத் தான் பேசேன். உன்மீது எனக்குள்ள காதலை நீ அறியமாட் Luur?”
"நான் நித்திய கன்னி. இறை வணக்கமே என் கர்மம்; என் ஞானம்; என் பக்தி."
விட்டில், ஏளனத்துடன் எக்காளமிட்டுச் சிரித்தது. சுடர் மோனத்திற் கலந்தது. 'நீ உலகத்தை மறந்து உனக்கே விளங்காத தத்துவம் பேசுகின்றாய். ஒளிபரப்புவதான மமதை உனக்கு. விண்ணு லகத் தத்துவம் பேசும் நீ, தன் உடலை நெய்யாக உருக்கி வளர்க்கும் தாய், மண்ணுலகின் இருளிலே மறைந்து கிடப் பதைக் குனிந்து பார்.”
சுடர் குனியவில்லை. நிமிர்ந்தே நின்றது. "என் அன்னையின் கர்மமும் யோகமும் அவ்வாறு அமைந்துள்ளது.”
“சுடர்க் கன்னியே, கர்வங் கொள்ளாதே. இவ்வளவு நேரமும் நீ உயிர் வாழ்வது என்னுடைய தயவினாலேதான். எனது காதலை ஏற்றுக் கொள். என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள்வதாகத் தலை குனிந்து வணங்கு."
'சிற்றின்ப விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்னுடைய நெஞ்சம். வணக்கம் அபிநயமன்று. தியாகமே வணக்கம்; பக்தியே வணக்கம்."
விட்டிலின் நெஞ்சிலே சினங் கனன்றது. வெயர்ப்பு சிரசு மட்டும் ஏறிற்று.
74

asasasah
"நீ என்னை வணங்காது போனால் நான் உன்னை அடி பணியச் செய்வேன். நான் உன்னை அநுபவிப்பேன்; இல்லையேல் அழிப்பேன்."
விட்டில் அந்தரத்தில் எழுந்து, தனது இறக்கைகளிலே காற்றினை இறைத்துக்கொண்டு, சுடரை ஒரு கணந்தழுவி, அப்பாற் சென்று விழுந்தது. ஒரு கணப்பொழுது சுடரின் மூச்சுத் திணறியது; உயிர் ஊசலாடியது.
விட்டில், உயிர்க்கொட்டை உடைக்கும் வகையிற் கோரமாகச் சிரித்தது.
"அற்பச் சுடரே! பார்த்தாயா உன் பலத்தையும் என் பலத்தையும். என் தயவு உனக்குத் தேவை. இப்பொழுதே என்னை வணங்கி, உயிர் பிழைத்து வாழ்."
சுடர் மீண்டுந் தலை நிமிர்ந்து நின்றது. "பலாத்காரத்திற்குப் பயப்படுங் கோழைகள் அபி நயிக்கின்றார்கள். வணக்கம் ஞானத்திலே மலர்கின்றது; பக்தியிலே மலர்கின்றது."
"புத்திகெட்டவளே! என் மண்டையிலே புகமுடியாத தத்துவம் பேசாதே. மகா கள்வியான உன்னை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்."
சுடர் பதிலெதுவுஞ் சொல்லவில்லை. பக்தியின் நிறைவிலே பிரகாசித்தது.
விட்டில், தனது மூர்க்கப் பலம் முழுதையும் ஒன்று திரட்டி அதனைத் தழுவிற்று. விரல் நொடிப்பு நேரம்.

Page 40
աpվ
விட்டில் தரையிலே விழுந்தது. மரணாவஸ்தையுடன் முணங்கியது.
“என் இறகு பொசுங்கிவிட்டது. என்னால் வாழ முடியாது. என்னை நீ அழித்துவிட்டாய்.”
"இல்லை. நீ உன்னையே அழித்துக் கொண்டாய்.”
"மென் காற்றிலேகூட அசைந்தாடும் உன் துரும்பு உடலிலே எப்படி அந்தப் பலம் வந்தது?. என் பலம் எங்கே?
"உன் பலம், உன்னுடைய பலமே அஃது உன்னுடன் வாழும்; உன்னுடன் மாழும்.”
“o 6o usob?"
'என் பலம் ஈசனின் பலம்.”
"அதை எப்படிப் பெற்றாய்?" "அதுவே என் யோகமும், பக்தியும்.”
சென்னியிலே ஈஸ்பர நாமத்தைத் தாங்கி, தியானப் பொலிவுடன், சுடர் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. 0

Jood - II
பல்லாயிரக் கணக்கான நூல்களைக் கொண்ட தனி நபர் நூல் நிலையம் ஒன்றை அவர் சேமித்திருந்தார். அதனைப் பற்றி அவருக்குத் தாங்கொண்ணா மகிழ்ச்சி. நண்பர்களும் அறிஞர்களும் தமது இல்லத்திற்கு வந்தால், அந்த நூல் நிலையத்தைப் பெருமையுடன் காட்டுவார்.
தூர இடத்திலிருந்து வந்திருந்த தமிழ் அறிஞர் ஒருவ ருக்கு வழக்கம் போல தமது நூல் நிலையத்தைக் காட்டினார். நூல் நிலையத்திலிருந்த நூல்களின் எண்ணிக்கையைப் பார்த்ததும் வந்தவர் திகைத்துப் போனார்.
இவ்வளவு நூல்களையும் நீங்கள் படித்திருக்கின் றிர்களா? எனப் புதியவர் கேட்டார்.
"ஆம், நான் படிக்காத எந்த நூலும் இந்நூல் நிலையத் திற் கிடையாது!’ என அவர் பெருமிதத்துடன் கூறினார்.
'அப்படியானால் உண்மையிலேயே நீங்கள் ஒரு பேரறிஞர்தான்’ என்றார் புதியவர்.
அப்பொழுது, அலுமாரி மூலையிலிருந்து அட்டகாச மான சிரிப்பொலி ஒன்று எழுந்து வருவதைக் கேட்டு, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

Page 41
ա9վ
அங்கே ஒரு கறையான் அகம்பாவத்துடன் எழுந்து நின்றது.
'நீ ஏன் சிரிக்கின்றாய்? எனப் புதியவர் கேட்டார்.
'இல்லை. இவ்வளவு நூல்களைப் படித்ததாகக் கூறும் ஒருவரைப் பார்த்து பேரறிஞர் என்று புகழ்கின்றாயே! நான் கூடச் சில ஆயிரக்கணக்கான நூல்களைத் துளைத்துத் தின்று, கரைத்துக் குடித்து ஜீரணித்திருக்கின்றேன். என்னை எவ்வாறு கொண்டாடப் போகின்றாய்? எனக் கேட்ட கறையான், பதிலுக்குக் காத்திராமல், ஒரு நூலின் பக்கங் களுக்கிடையிற் புகுந்து மறைந்தது. ெ


Page 42
LJolů
அவன் ஒரு தேர்ந்த கலைஞன். நயமான கற்பனை, நுட்பமான கைவண்ணம். கற்கள் அவனுடைய கலையின் நேர்த்தியினாற் சிலைகளென உயிர்பெறும்.
கல்லினை உளிசெதுக்கிக் 'கலிர்கலிர் என்னும் நாதத் தினைப் பிழியும். அஃது ஒய்ந்த நேரத்தில், தன் படைப்பில் மெய்மறந்து நிற்பான்; வித்துவச் செருக்கில் அவன் தன் னையே மறப்பான்.
இன்னொருவன்மறை ஒதிய வேதியன். நான்கு மறை யுங் கற்றுத் தேர்ந்தவன். சற்றுச் சோம்பேறி. கோயிலுக்குச் சென்று பூஜையைக் கிரமமாகச் செய்து, எல்லாவற்றையும் ஆண்டவனின் தலையிலே சுமத்திவிட்டு, சயனச் சுகம் அநுபவிப்பதிற் பிரிதி.
கலைஞனின் தொழிலை வேதியன் விரும்பவில்லை. வேதியனின்நம்பிக்கையைக் கலைஞன் இகழ்ந்தான்.
கலைஞன் பல நாள்களாக அரும்பாடுபட்டு, சல வைக் கல்லில் அழகிய ரதிச் சிலையொன்றினைப் படைத் தான். மதியின் தன்மையையும், இசையின் அமைதியையும் அதிற்குழைத்தான். கமலவதனம்; கயல் விழி: செவ்விளநீர்க் கொங்கைகள்; மூங்கில் தோள்கள்; மின்னல் இடை;- இத்தனை மனோரதிய உருவங்களையும் அச்சிலையிலே
தேக்கினான்.

ueDLÚų
அச்சிலையைப் பார்த்துப் பார்த்துப் பசியை மறந்தான். செருக்கு உச்சந்தலை வரை ஏறிற்று! தன்னுடைய கற்பனை வளம் நான்முகனிடங்கூடக் கிடையாது என்கிற பெருமிதம்.
வேதியனைத் தன் அறைக்கு இழுத்து வந்தான். "இந்தச் சிலையைப் பார்த்தாயா? ஆண்டவனுக்குப் போட்டி போட்டு நான் சிருஷ்டித் தொழில் செய்கின்றேன். இதனைப் படைக்குஞ் சக்தி நீ சேவிக்கும் இறைவனுக்கும் ஏற்படாது.”
"இஃது ஒரு துகள்; ஒரு நகல்! இறைவன் கடல்.” "புரியாதன பேசிப் பாமரனை ஏமாற்றி வயிறு வளர்க் கும் பிராமணியே! நீங்கள் பிரதிஷ்டை செய்து வணங்குந் தெய்வங்கள் என் போன்ற கலைஞனின் படைப்புகளே! கடவுளர்களையே படைக்கும் பிரமாக்கள் நாங்கள்.”
'இறைவனை உன் உளிக்குள்ளே சிறைப்பிடிக்கும் அகம் பாவமா? உன் கலைஞானம் முழுவதும், இறைபணி யில் ஈடுபட்டிருக்கும் என் மதியூகத்தின் முன் தோற்றுப் போம்.”
'கலைதான் தெய்வம்.” "நம்பிக்கைதான் தெய்வம்.” 'இல்லை. கலைதான் தெய்வம்.” 'அஃது உன் எண்ணம்.” 'பரீட்சித்து விடுவோம்."
'உன் விருப்பம்."

Page 43
աpվ "பந்தயம்?. நான் வென்றால், கடவுள் கலைஞனின் கற்பனையே என்கிற நிரீஸ்வரவாதத்தை நீ நிலைநாட்டு curuiu!”
"நான் வென்றால், உன் கலை இறைவனின் திருப் பணிக்கு அர்ப்பணிக்கப்படும்.”
"சம்மதம்”
சாலையோரத்து அரசமரத்தின்கீழ் நிழல் சுகித்துக் கொண்டிருந்த வேதியன் அயர்ந்து தூங்கி விட்டான்.
விசித்திரமான கனவுகள் மூட்டமிட்டன.
விழித்தபொழுது கனவின் எழுச்சியில் அங்கும் இங்கும் பார்த்தான். சற்றுத் தூரத்தில், காளியின் உருவ அமைப்பினைக் கொண்ட கல்லொன்றைக் கண்டான். அகமும் முகமும் அலர்ந்தது.
அதனை எடுத்துச் சென்று அயற்கிராமத்தின் குளக்கரையில் பிரதிஷ்டை செய்யத் தொடங்கினான்.
அவனுடைய செயலில் ஆச்சரியங்கொண்டு, ஒரு கூட்டம் கூடியது.
"என்ன விசேடம்?’ என்று அவர்களுள் ஒரு முதியவர் கேட்டார்.
"நான் அடுத்த கிராமத்தில் ஆலயப்பணி செய்து கொண்டிருந்த புரோகிதன். தேவி பிரசன்னமானாள்.' பேசும்பொழுது பயபக்தியுடன் கண்களை மூடினான். அவன் முகத்தில் நம்பிக்கையின் சுடர். அவனுடைய சொற்கள்

Uedly ஒவ்வொன்றும் பாமர மக்களுடைய உள்ளங்களை அளைந்தது.
'மகனே! அடுத்த கிராமத்திலுள்ள மக்கள் அஞ்ஞானத்திலே துன்புறுகின்றார்கள். அவர்களுக்கு விமோசன காலம் நெருங்கி விட்டது. உன்னையே என் கருவியாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். நீ சாலையோரத்தில் காணும் ஒரு கல்லில் எனது உருவத்தைப் பார்ப்பாய். அதனை உன்னுடன் எடுத்துச் சென்று குளக்கரையிலுள்ள பன்னிச்சை மரத்தின் மருங்கில், பிரதிஷ்டை செய்து மூன்று வேளைகளும் ஒழுங்காகப் பூஜை செய்!” எனப் பணித்து மறைந்தாள். நான் தேவியின் ஊழியன். அம்பாளின் கட்டளையை நிறைவேற்றுகின்றேன்.” - பக்தியைப் பிழிந் தெடுக்கும் குரலில் விழிகளைத் திறக்காமலே பேசினான்.
கிராமத்தில் புத்துயிர் பிறந்தது. செல்வப் பெருக்கு மக்களைக் குளிர்வித்தது. ஆராதனை மணி மக்களுடைய மனங்களில் நிறைவினை ஊட்டியது. தேவியின் அருளிலே பின்னமற்ற பக்தி மக்களுக்குத் தோன்றியது.
மழையும், வெயிலுந் தேவியைத் துன்புறுத்தாத வண்ணம் ஒரு பெரிய கோயிலைக் கட்டத் தொடங் கினார்கள். பல தேசத்துச் சிற்பிகள் ஒன்றுகூடி, இரவு பகலாக, பெரிய கோபுரங்களுடன் கூடிய அற்புத ஆலயம் ஒன்றினை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
வேதியன், கலைஞனை இந்தக் கிராமத்திற்கு
அழைத்து வந்தான்.

Page 44
աpվ
கலைஞன் ஆலயத்தின் பிரமாண்டத்தையும், சிற்ப
வேலைப்பாடுகளையுங் கண்டு திகைத்துப் போனான்.
அவற்றினை நிருமாணிக்கும் சிற்பிகளைக் காணவேண்டும் என்னும் ஆசை அவனுள் எழுந்தது.
சிற்பிகள் தங்கியிருந்த அறைப் பக்கஞ் சென்றார்கன்.
ஒரு கிழச் சிற்பி பேசுவது இவர்களுடைய காதுகளிலே தெளிவாக விழுந்தது.
"நேற்று நான் அடுத்த கிராமத்திற்குச் சென்றிருந் தேன். அங்கு ஒரு ரதிச் சிலையைக் கண்டேன். தேர்ந்த கை நுணுக்கத்தின் படைப்பு. ஆனால், அதில் அருளில்லை. நம்பிக்கையில் வேரூன்றாத அதீதக் கற்பனை அதன் குறைபாடு. இருபது வருடங்களுக்கிடையில் மார்பக பாரத்தைத் தாங்க மாட்டாது அச்சிலை இடுப்புடன் உடைந்து போகலாம்."
கலைஞனுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை.
கள்வ பங்கம்!
இருவரும் மூலஸ்தானத்திற்குச் சென்றார்கள்.
தீபாலங்காரத்தின் மத்தியில் ஒரு 'கல்’.
“இஃது அரசமரத்தடியிற் கிடந்த கருங்கல். சிலை செய்ய உதவாத கல்லென்று இதனை ஒரு தடவை நான் ஒதுக்கிவிட்டதாக ஞாபகம்’- இரகசியமாகப் புரோகி தனின் செவிகளில் மட்டும் விழும் வண்ணஞ் சொன்னான்.

Ս«Dւ-մվ
"இது கல்லல்ல. நம்பிக்கையுடன் பார்! தேவி பிரசன்னமாகியிருக்கிறாள்."
பிரமாண்டமான கருங்கல்லில் கலைஞன், காளி சிலை ஒன்றினைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றான். 'கலிர் கலிர்!’ என்னும் நாதம் கோயிற் பிரகாரம் முழுவதும் எதி ரொலித்துக் கொண்டிருக்கின்றது. ெ

Page 45
LIJEDLŮL - II
‘நான் சொல்லுவதுதான் சரி என்றான் குண்டன்.
'இல்லை; நான் சொல்லுவதுதான் சரி என்றான் முரடன்.
நான் சொல்வதற்குக் காரணிகள் இவை என்று தர்க்க ரீதியான நியாயங்களைக் கற்பிக்க இருவருக்கும் தோது பொருந்த வில்லை. இருப்பினும், தன் கட்சியே சரியென்பதை நிறுவும் ஆணவ ஆர்வம் இருவர் மாட்டுஞ் சடைத்து வளர்ந்தது.
ஆர்வம் வெறியாக முற்றியது. சரீர பலத்தைக் கைப்பற்றிப் பொருதினார்கள். ஈற்றிலே குண்டன் வென்றான்; முரடன் தோற்றான் என்பது முடிவாயிற்று.
‘நான் சொல்லுவதுதான் சரி என்றான் நூல்கள் பல கற்றுத்தேறிய பண்டிதன்.
'நான் சொல்லுவதுதான் சரி என்றான் பழுத்த அநுபவஸ்தன்.
'என் கூற்றுக்கு இவைகளே நியாயங்கள்’ என்று நூல் களிலிருந்து எடுத்துக் காட்டுகள் பலவற்றை முன்வைத்தான் பண்டிதன்.
'என் கூற்றுக்கு இவைகளே காரணங்கள் என்று அநுப வத்திலிருந்து பலவற்றை எடுத்தியம்பினான் அநுபவஸ்தன்.

படைப்பு
நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், பண் டிதன் கூறியவற்றுட் சிலவும், அநுபவஸ்தன் கூறியவற்றுட் சிலவும் சரியென்பதை இருசாராரும் ஏற்றுக்கொண்டார்கள்.
"நான் சொல்லுவதுதான் சரி என்றான் பக்தன். "நான் சொல்லுவதுதான் சரி என்றான் விஞ்ஞானி. நான் சொல்லுவதற்கு ஆதாரம் பக்தி. பக்தி என்பது பகுத்தறிவுக்குக்கூடச் சிக்குப்படாத ஒன்றிலே கொண்டி ருக்கும் நம்பிக்கை" என்றான் பக்தன்.
நான் சொல்லுவதற்கு ஆதாரம் நிரூபணம். நான் கூறியவற்றை ஆய்வுக் கூடத்தில் வைத்து நிரூபித்து எண்பிப்பேன்’ என்றான் விஞ்ஞானி.
நிரூபணம் அவரவர் அறிவுத் தளத்திற்கு ஏற்றது. என் நம்பிக்கை உன் அறிவுத் தளத்தில் நிரூபணமாகவில்லை என்பதற்காகப் பிழையென்று ஆகிவிடுமா? என்றான் பக்தன்.
விவாதம் தொடர்ந்தது.
இருவரும் தோற்கவும் இல்லை; வெல்லவும் இல்லை.
யாருடைய கட்சி சரியானது என்பது இன்னமும் ஒரு வருக்கும் புரியவுமில்லை. ெ

Page 46
幫 婉邀 忽%
% 必
红丝
 
 
 
 
 
 

தியாகம்
ஒழுங்கான வடிவம். மையப் புள்ளியிலிருந்து கோணங்களில் அமைதி அமைய இழுக்கப்பட்ட வரைகள். வடிவொத்த பல கோணிகளாக ஒன்றில் ஒன்றாக அடங்கும் பல உருவங்கள். சிறு ஓட்டையினால் உட்புகும் கதிரவனின் ஒளிக்கீற்று ஒன்றில், அச்சிலந்தி வலையின் ஒரு பகுதி மின்னுகின்றது.
தன் உடலைப் பிழிந்தெடுத்துச் சமைத்த வீட்டினைப் பார்த்துச் சிலந்தி பூரிப்பெய்துகின்றது. "யாம் பெரிதும் வல் லோமே என்கிற நிறைவு.
அந்தரத்திற் சாகஸங் காட்டும் வித்தைக்காரனுக்குத் தெம்பு கொடுக்கக் கீழே சர்க்கஸ்காரர் விரித்திருக்கும் வலையோ? புள்ளினத்தைச் சிறைப்பிடிக்கத்தானியந்தூவி விரிக்கப்பட்டிருக்கும் வேட்டுவன் வலையோ?
சிலந்தி வலை! அதனை இறுமாப்புடன் பார்க்கின்றது அதன் கர்த்தா வாகிய சிலந்தி.
நாள் முழுவதும் உழைத்த அலுப்பு அலுப்பும் களிப் பும் கொடுக்கும்போதையில், மையப் புள்ளியின் மருங்கிற் பொய்யுறக்கங் கொள்ளுகின்றது.
வலையின் ஒரு கோடியிற் சிறு சலனம் ஏற்படுவதைச் சிலந்தி உணருகின்றது. அந்தரத்திற் சாகஸம் புரிந்த ஈ ஒன்று அந்த வலையில் விழுந்து விட்டது. ஈயின் அரும் பாடு. சிக்கலிலிருந்து விடுபட எடுத்துக்கொள்ளும்

Page 47
մ09վ
முயற்சிகள் சிக்கலை அதிகரிக்கின்றன. ஈ தானாகவே இறகுகளைப் பசை இழைகளிலே தோய்க்கின்றது.
கலையும் அதன் மாண்பும். உழைப்பும் அதன் பயனும், ஈக்கு விடுதலை கிடையாது. உரலிலிடப்பட்டது, உலக்கைக்குத் தப்புமா? சிலந்திக்கு இரை நிச்சயம். அவசரம் ஏதுங்கொள்ளாது தனது இரைப் பொருளைச் சிலந்தி பார்க்கின்றது.
வலையினது ஒரு முனையின் இணைப்பு இழைகள் அறுகின்றன. அந்தப் பகுதி பல்லியின் பாரத்தைத் தாங்கமுடியாது அறுந்து விழுகின்றது.
ஈ, பல்லியின் அரிசிப் பற்களுக்கிடையில் அகப்பட்டு நசிகின்றது.
சிலந்தி மறுபுறந்திரும்பி இலேசாக நகருகின்றது. ெ

தியாகம் - I
துருத்தியும் அதன் கர்மயோகமும். அந்த யோகம் அதற்குத் தோதுப்படவில்லை. மா ஆக்கினை என்ற அவதியின் உறைப்பு.
'கொல்லா, நீ-மா-கொடியன்! - துருத்தியின் அவதி முட்டி வெடித்தது.
'எது? -- அவதி கொல்லனையும் பீடித்தது.
'கொலை பஞ்சமா பாவங்களுட் தலையானது. அக் கொலைத் தொழிலுக்கு நீ பூரண உடந்தையன்!
'உன் குற்றச்சாட்டு முளை கொள்ளும் ஏதுப் பிரமேயம் எதுவோ?
இந்த உலைக்களத்திலே நீகத்திகளையும், வாள்களை யும், வேல்களையும் வடித்தெடுக்கின்றாய். இவற்றைப் பற்றும் மானிட மனங்களிலே கொலை உணர்ச்சி மூண்டெழு கின்றது. கர்த்தாவின் கற்பிதங்களைக் கருவிகள் இயற்றக் கொலைகள் மலிகின்றன.
"கருவிகள் கருவிகளே! அவற்றை வடிக்கும் கருவிகளா கவே நானும் நீயும் இணைந்தோம்.
நீயும் கருவியா?
'அப்படித்தான். இன்ன்ொரு வழியிலே, என்னைக் காத்தா என்றும் வைத்துக்கொள்ளலாம். காடுகளை அழித்துக் கழனி நிலமாக்குவதற்கும், சிரமத் தளர்த்திப் பணிதனை

Page 48
աpվ
இலகுவாக்கி வாழ்வதற்கும், வேண்டிய வேட்டையை இயற்றுவதற்கும், தன்மானத்தையும் சுதந்திரத்தையும் நிலை நிறுத்துவதற்கும் இந்த ஆயுதங்கள் பயன்படுவன என்பன என் கற்பிதம். இருப்பினும் ஈசன் என்ற கர்த்தாவின் கருவி யாகவே நான் உழைக்கின்றேன் என்பதுதான் உண்மை."
"அப்படியாயின் கருவிகளின் பயனை நீ கற்பித்தா லென்ன?
'அஃது என் யோகமல்ல. அழுக்காறு - பேராசை - தற் பற்று ஆகிய இழிகுணங்ளை மனிதர்கள் தமது யோகங்களாக அநுபவிக்க முந்துகின்றார்கள். விளைவுகொலைகள். யோக நிலை பற்றிய யோகம் ஈசனின் யோகமே!’
蛇?
'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்பது வழக்கு. என் கர்மமே என் யோகமும் தவமுமாக நிலைத்தது."
மறுகணம் துருத்தி காற்றினை மூசி ஊதத்துவங்கிற்று. தான் தனது கர்மயோகத்தைச் சுகிப்பதான மனநிறைவும் அதற்குச் சித்திக்கலாயிற்று ெ


Page 49
6 form
கோழி சொன்னதுஞ் சரியே. முட்டையை இட்டது கோழிதான்.
முட்டை சொன்னதிலும் பிழையில்லை. முட்டை யிலிருந்துதான் கோழி வெளிவந்தது.
எது முதலிலே தோன்றிற்று?
இந்தக் கேள்விக்கு ஆத்திகர்களும் நாத்திகர்களும் இற்றைவரை விடை காணும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக் கின்றார்கள். 0

6 form - II
“நிலத்தின் பொறுமையும்,நீரின்தண்மையும், தீயின் தீவிரமும், காற்றின் உயிரூட்டமும், வானின் அமலமும் ஒருங் கிணைந்து செவ்வையாகவும் செப்பமாகவும் சமைந்த காயத்தைத் தாங்கிய கிருதாசி மைந்தர் சுகர், வியாச முனிவர் முன்பாக வந்து நின்று வணங்கினார்.
வியாசர், சுகரின் தந்தையும் ஆவர்.
"வேதத்தை உபதேசியுங்கள்!"
'உனக்குத் தெரியாத வேதமா?
தெரிந்ததும் தெரியாததும்.
வேத சாரத்தின் நுகர்ச்சி’
'துக்கத்தின் ஏது?
‘ஆசை!”
'சுகத்தின் விளை நிலம்?
தியாகம்’
"பலத்தின் சாதனை?
"பொறுமை!’
“எது மேலான ஞானம்?
தன்னைத் தானே அறிந்து கொள்வது!"
'மேலான தவம்?
'சத்தியமே?
"மேலான தர்மம்?
'அஹிம்சை!”

Page 50
աpվ
'தர்மத்தின் எதிர்?
அதர்மம்"
அதனைத் தவிர்க்கும் வழி?
'பயனில் பற்று வையாமை"
"என் வழி?
இனிய சுகா தர்மத்தையும் அதர்மத்தையும் தவிர். அதே போல சத்தியத்தையும், அசத்தியத்தையும் தவிர். இவற்றைத் தவிர்ப்பதற்காம் ஏதுக்களையும் தவிர்."
“ւն]6նI?"
வினாவிற்கான விடை செவிதனில் ஏறவில்லை.
சுகர் இற்றுச் சுகமானார்.
பரமேஸ்வரன் உபதேசித்த காயத்ரி உறைகின்ற சூரிய மண்டலத்தை நோக்கி சுகம் பிறந்தது * பரம சுகமாக, பரமஹம்ஸமாக ெ


Page 51
ЦрUILI
கங்கை அற்புத எழிலரசி. மழலையின் குதலைக் குர
லெழுப்பி, கன்னித் தமிழின் நித்திய யெளவனப் பொலி வுடன், குழலவிழ, இடைதுவள, நீராடும் கன்னியின் உடற் கவர்ச்சி காட்டி, பரதக்கூத்திடும் நர்த்தகியின் காம்பீரியத் துடன், வற்றாது காலங் காலமாக வளநீர் நிதியைச் சகல ருக்கும் அளித்த வண்ணம், ஒடிக் கொண்டிருந்தாள். கழி முகத்திலே, களிப்பின் ஒதையெழுப்புங் கடல்ராஜன் தனது கருநீலக் கரங்களுக்குள் அணைக்க, அவள் சங்கமித்தாள். தினந்தினம்-நிதம் நிதம் ஒடிப்பாடிச் சங்கமித்துக்கொண்டு, நித்திய செளபாக்கியவதியாக வாழ்ந்த அவள் உள்ளத்தில், தற்பெருமையில் முளைகொண்ட துராசையொன்று விளைந்து கொழுத்தது.
மலைத்தாயின் நிமிர்ந்த மார்பிற் புரளும் சீதள நீரை யும், மேகநங்கை துறவறத் தூய்மையைப் பறைசாற்றி விண்ணிற் பறந்து, பருவ ஈர்ப்பில் அலைக்கழிந்து, போராட் டப் புயலிற் சிக்கிக் கனத்துச் சொரியும் நித்திலத்துளிகளாம் மழைத்துளிகளையுஞ் சேமித்து வளம் பெற்றதனால், கர்வம் மிகக் கொண்டாள்.
‘வளநீர் வீணே உப்பு நீரிற் கலந்து விரயமாகின்றதே; கடல் ராஜனின் கோரப் பசிக்கு இலக்காகி, உடல் மெலிந்து உருக் குலைகின்றதே. என்ற எண்ணப் பொறிகள் தெறித் தன.
அழுக்காறுங் குரோதமும் நெய்யுண்டு, ஜுவாலை கக்கி வளர்ந்தன. அவள் மகா அகம்பாவியானாள்.

աpվ
மாச்சரியத்தில் மதர்த்த வைராக்கியத்துடன், இறை வனின் தரிசனம் வேண்டி நோன்பு நோற்றாள்.
தவம் பலித்தது. கடவுள் தோன்றினார். "கங்கையே! உன் மனக்குறை யாதோ?” “மலையிலே தவழ்ந்தேன்; நிலத்திற் களிநடம் புரிந்தேன். கழனிகளில் உலவினேன். ஆடலும் பாடலுமே எனது பொழுதுபோக்கு. கடல்ராஜனின் அதிகாரம் எனக்குப் பிடிக்கவில்லை. என் வளநீர் எல்லாவற்றையுந் தனது உப்பு நீர் வயிற்றுக்குள் நிறைத்துக் கொள்ளுகின்றான். அவனு டைய உறவே தேவை யில்லை.”
"நித்தியன் நிருமித்த நியமம். இஃது உனது ஊழ். ஒன்றுள் ஒன்றடங்கி, அந்த ஐக்கியத்தில் மறுபடியும் ஜனிப்பதே மரபு. நித்தியமான கடலுடன் சங்கமித்து, உன்னை இழந்து, மீண்டும் நீயாவதே மரபு.”
"கிழட்டுக் கடல் ராஜனை மெத்தப் புகழ்கின்றீர். நீர் அசல் வைதீகம். எனது வழி, புதிய வழி; புதுமை வழி; புரட்சி வழி.”
"குருட்டுத்தனமான புதிய மோகத்திற்கு இடமளித்து விட்டாய். மயக்கத்தில் மருளுகின்றாய். நியாயம் உன் செவியில் ஏறாது. உன் தவ வலிமையினால் நீ விரும்பி யதைப் பெற்றுக் கொள்ளலாம். கேள்.”
"கடலரக்கன் என்னை விழுங்குங் கழிமுகந் தூர்ந்து போக வேண்டும். என்னில் ஒரு துமிதந்தானும் கடலுக்குள் செல்லலாகாது.”
தமது பக்தையின் மனோவிகாரத்தை உணர்ந்த பரமன் குஞ்சிரிப்பு உகுத்தார்.
வேண்டப்பட்டது, நிறைவேறியது.
sg9)

Page 52
տՄվ
கங்கையில் உபரி நீர் சேர்ந்தது. உண்டி கொழுத்த பருமன், கரைகளை மறைத்து, நீர் மட்டம் உயர்ந்தது. கரை மரபு மறைந்தது! மருங்கெல்லாம் நீர்ப்பரப்பு விரிந்தது; மரங்கள் வேர்பாறிச் சரிந்தன; வீடுகள் அழிந்தன; கழனி களெல்லாம் ஆற்றுப்படுக்கையாயின. அவளைத் தெய்வ மென அஞ்சலி செய்து வந்த மக்கள், நிந்திக்கத் தொடங் கினர். அவள் நடமாடுஞ்சுவடுகளை அரவக் கிடங்குகளாக அவர்கள் வெறுத்தார்கள்.
கங்கையை மனோ விசாரம் பிடித்தது.
மலைத்தாயை நோக்கி, "என் அவஸ்தை உனக்குத் தெரியாதா? பெற்ற மனம் கல்லோ? உன்மீது புரளும் அருவிகளை என்னிடம் அனுப்பாதே!” எனக் கெஞ்சினாள்.
"நீ ஓர் உன்மத்தை. மேகமகள் என் மீது பொழிவதை நான் உன்னிடம் அனுப்புவது மரபு. இதுதான் ஜீவிதச் சுழல். உன் புதிய போக்கு எனக்குப் புயவில்லை."
கங்கை, மேகமகளிடம் முறையிட்டாள்.
"என்ன இருந்தாலும் இந்தக் குரூர மனோ பாவம் ஆகாது. என் தந்தை கடல் ராஜன், நித்திய கல்யாணப்பேறு பெற்றவர். அவருக்காக நான் இல்லறந் துறந்து கன்னி நோன்பிருந்து, அந்தரத்தில் அலைகின்றேன். பலவீன நினைவுகளென்னுங் காற்று என்னைத் தழுவும் பொழுது, என்னை அழித்துத் தூய்மை பெறுவது என் மரபு. உனது புதிய போக்கு எனக்குப் புரிய வில்லை” என்று விநயமாகச் சொல்லி நகர்ந்தாள்.
'இவள் மேகத்துக்கு எவ்வளவு அகந்தை? கன்னியாம்; விரதமாம். இவள் துய்யளா? குறளி; கணிகை வெட்க

աpվ
மற்றவள். தன் தந்தையின் காமக்களியாட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். என்னைப் பழி வாங்கிக் கொண்டு, ஒன்றும் அறியாதவளைப்போல பசப்புகிறாள். உன் செருக்கை அடக்குகிறேன், பார்!’ என்று பொருமிக் கொண்டு, அமலனின் அருள்வேண்டிக் கடுந்தவத்தில் மூழ்கினாள்.
பிரமனின் தரிசனம் மீண்டுங் கிட்டிற்று.
"என்ன வேண்டும் கங்கையே?’- அவருடைய கேள்வியில் ஏளனம் புரையோடிக்கிடந்தது. அவள் வெகுண் டாள்.
"ஈஸ்வரா! தாங்களறியாததா? எனது அழகிய கரைகள் எங்கே? ஆண்டாண்டாக, காலங் காலமாக என் மருங்கிற் சடைத்து வளர்ந்து, எனக்கு ஆலவட்டம் விரிக்கும் தோழி களம் மரங்களெங்கே? என்னைச் சம்பாவனை செய்த மக்கள் எங்கே? என் எழில் குலைந்தது; பெருமை குன்றியது."
“நியதியைச் சாடினாய். நமது மரபில் வேரூன்றாத புதுமையை நாடினாய். அதனால், வந்த வினையல்லவா? உனது பழைய உருவத்தையே மீண்டுந் தரட்டுமா?
“வேண்டாம். புதுவெள்ளத்தைப் பிரசவிக்கும் மேகக் கள்ளியின் சாகசத்தை நான் அறிவேன். அவள் என் கண் ணுக்கு எட்டாத தொலை தூரத்திற்குச் சென்றுவிட்டாற் போதும். என்னிடமுள்ளதே போதும். புதிதாக ஒரு துமி தானும் என் மேனியிற்படலாகாது."
"கங்கையே! நிதானமாக யோசித்துக் கேள்."
"ஆலோசித்து, உறுதியாகத்தான் கேட்கின்றேன்."
101

Page 53
մ09Վ
சிருஷ்டி கர்த்தா எக்காளமிட்டுச் சிரித்தபடி, வரமருளி மறைந்தார்.
அடுத்த கணம், தனது மாசின்மையைப் பறைசாற்றிய மேக மகள், வெண்மையிலும் வெண்மையாகி, மேலே மேலே சென்று, கண்ணுக்கெட்டாத தூரத்திலே போய் மறைந் தாள்.
கங்காதேவியின் குருத்துக் குறுமணல் மேனி கறுத்தது; ஒளியிழந்தது. அதன் அங்கத்தில் சேற்றின் துர் நாற்றம் மண்டியது.
மலைத்தாய், கங்கையின் அடங்காப்பிடாரித்தனத்தை இகழ்ந்தாள். இருவருக்குமிடையிற் பேச்சு நின்றது.
பிறந்த வீடும், புகுந்த வீடும் நிராகரித்த அநாதை யானாள் கங்கை. மனம் வரண்டு புழுங்கினாள்.
கதிரவன் தினந் தினம் எழுவானில் உதித்துத் தன் வரி களைக் கிரமமாக வசூலித்து வந்தான்.
“தாமரைநாயகா! நான் ஏழை வரி செலுத்த வகை யற்றவள்’ என்று கங்கை, ஆதவனிடம் முறையிட்டுக் கெஞ்சியழுதாள்.
கங்கை பங்கத்திற் சாம்பினாள். "சட்டத்திடம் பாவம்- புண்ணியம் என்ற வாதத்திற்கு இடமில்லை. நான் இறைமாட்சி தர்மத்தின் பிரதிநிதி. காலத்தை உருட்டிக் கொண்டே, கணமுந்தரிக்காது, கடமை யைப் பார்க்கும் எனக்கு, உன் பேச்சைக் கேட்க நேரமில்லை. உனது அவலத்தை இறைவனிடம் முறையிடு" என்று
102

աpՎ
சொல்லி, கதிர் பரப்பி, வரி கொய்யும் நித்திய கடமையிலே
தினகரன் ஈடுபட்டான்.
கங்காதேவியின் உருவமே மாறியது. படுக்கை பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது. அயலெல்லாந் தாவர உயிர்கள் கருகிக் கிடந்தன. கன்னக் கதுப்புகள் வற்றி, வதங்கி, முதுமைக் கீறல்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. கார்குழல் கொக்கிறகாக வெண்மை பெற்றுவிட்டது. கங்கை யின் வறுத்தெடுக்கப்பட்ட பாழ்வெளி. வறுமையின் கோரத் தாண்டவம்.
அவளை எல்லோரும் மறக்கத் தொடங்கினார்கள்.
ஏகாந்தம்-ஏமாற்றம்-ஏழ்மை!
கர்வமும் அகங்காரமும் பொசுங்க, கடுந்தவம் இயற் றினாள்.
நீண்ட பல ஆண்டுகள் தவத்திற் கழிந்தன.
'56)50'
'தோன்றினீர்களா இறைவா? எனக்குச் சாப விமோசனம் தாருங்கள்.
“யாரும் உன்னைச் சபித்ததேயில்லை. ஊழினால் விளைந்த விளைவு. உனக்கு என்ன வேண்டும்?
“என் பழைய உருவம்-வழக்கமான உருவம்.”
"D60T60LDufresour?'

Page 54
աpԿ
"நிச்சயமாக, நித்தியன் நிருமித்த நியமப்படி நடப் Cuct.'
கடவுள் கடகடவென்று சிரித்தார்.
அவ்விடியோசையில் ஈர்க்கப்பட்ட மேகங்கள் வெண் கேசத்தில் முக்காடிட்டுக் குவிந்தன.
"கருணாமூர்த்தி ஏளனம் வேண்டாம். எனது அறி யாமைக்காக வெட்கப்படுகின்றேன்."
"கவலைப்படாதே, கங்கை, நீ ஏன் வெட்கப்பட வேண்டும்? எதற்குங் கர்த்தா நானே. எனது கருத்துகளை விளக்க நானே கருவிகளையும் தேர்ந்தெடுக்கின்றேன். நீ என் கையில் கருவியானாய். உன்னிடமுள்ள பழைய நீர் கடலிற் சென்று கழிதலும், புதிய நீர் உன்னிடம் வந்து புகு தலும் மரபு. அதன் தத்துவமாக நீ சிரஞ்சீவியாக ஒடிக் கொண்டிருப்பாய்.”
கங்கை மழலையின் குதலைக் குரலெழுப்பி, கன் னித் தமிழின் நித்தியயெளவனப் பொலிவுடன், குழலவிழ, இடை துவள, நீராடுங் கன்னியின் உடற் கவர்ச்சி காட்டி, பரதக் கூத்திடும் நர்த்தகியின் காம்பீரியத்துடன், வற்றாது, காலங்காலமாக வளநீர் நிதியைச் சகலருக்கும் அளித்த வண்ணம் ஓடி, கடல் ராஜனுடன் சங்கமித்துக் கொண்டே யிருக்கின்றாள். ெ

JDL - II
வித்துவச் செருக்கு மூளையிலே துள்ளிக் குதித்து, பஞ்சணையில் அணைப்பு மிருதுவாக இல்லை என்ற விமர்சன நோக்கிலே குத்த, முத்தமிழ் வித்தகக் கலாநிதி நடுநிசியைக் கிழித்து நடக்கலானார்.
சகல கலைகளையும் பயின்று பாண்டித்தியம் அடைய வேண்டும் என்ற நினைவு கல்லிய கலைத்தாகம் துயிலைக் கலைக்க, நாகணவாய்ப் புள்ளொன்று இருள் பரம்பிய விசும்பில் அலைந்து திரிந்தது.
ஆல மரத்திலிருந்து கிழ ஆந்தை ஒன்று அலறியது. அந்த அலறலைக் கேட்ட நாகணவாய்ப்புள் அந்த ஆலமரத் திற்கு வந்தது. ஆந்தையைப் பார்த்தது. தூக்கமின்றி, நள்ளிர விலும் ஞானமொழி பேசும் ஆந்தையின் தவக்கோலம் நாகணவாய்ப்புள்ளை ஆகர்ஷித்தது. அக்கணமே அதனைத் தன் குருவென வரித்து, அதனிடம் ஞானோபதேசங் கேட்கும் காமத்தின் வசப்பட்டது.
"தங்களைக் கண்டதுமே தாங்கள் ஒரு கலாமேதை என்பதை உணர்ந்தேன். ஆதலால், தங்களையே குருவாக வரித்தேன்' என்று நாகணவாய்ப்புள் சீட அடக்கத்துடன் சொல்லிற்று.
"நீ யார்? நீ பயில விரும்பும் கலையென்ன?’ என்று ஆந்தை குருத்துவ ஏமாப்புடன் கேட்டது.
"என்னை நாகணவாய் புள்ளென்று அழைப்பர். பல கலைகளைப் பயின்று தேறும் ஆவல். கிளி ஒன்றைக்
105

Page 55
աpվ
கண்டேன். அஃது அழகாகக் கதை சொல்லுவதைக் கேட் டேன். அதைப்போன்று வண்ணமாகக் கதை சொல்லப் பழகும் இச்சை பிறந்தது” என்று முதல் உள்ளக் கிடக்கையை நாகணவாய்ப்புள் வெளியிட்டது.
"கிளியா? கதை சொல்லுங் கலையா? அஃது உல் லாசபுரிச் சீமான்களினதும் சீமாட்டிகளினதும் பொழுதுபோக் கிற்காக ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதைக் கலை என்று பெரிதாகச் சொல்ல வந்து விட்டாயே." என்று ஆந்தை குறுக்கிட்டது."
நாம்தான் சரியான கலாரசனை இல்லாது மருண்டு விட்டோமா? என்ற எண்ண அலையொன்று நாகணவாய்ப் புள்ளின் உள்ளத்திலே புரண்டது. இருப்பினும், அதை வெளியிற் காட்டிக் கொள்ளாது "மாஞ்சோலைக்குயில் ஒன்று அழகாகப் பாடுவதைக் கேட்டேன். மெய்மறந்தேன். அதைப் போன்று பாடல் பயிலல் வேண்டுமென்ற அவா வசப்பட்டேன்" என்று நாகணவாய்ப்புள் பவ்யமாகச் சொல்லிற்று.
"குயில் அழகாகப் பாடுகின்றதா? பாட்டு என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதற்கான இலட்சணங்களை நீ அறிவாயா? இவைதாம் போகட்டும். குயில் சார்ந்துள்ள அணியாவது தெரியுமா? சொந்தத்திலே கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு, சொந்தத்திலே பாடவருமென்று சொல் வது மகா அபத்தம். பாட்டாளியாம் காகத்தின் உழைப்பைச் சுரண்டி வாழும் குயிலுக்குப் பாட்டு வருமா? உண்மையில், காகம் போன்ற பாட்டாளி வர்க்கப் பறவைகள்தான் அழகாகப் பாடுகின்றன” என்று ஆந்தை தத்துவார்த்தமாக விளக்கங்
கூறியது.

աpվ
'அணி', 'பாட்டாளி", "வர்க்கம்' என்ற சொற்களுக்கும் குரலின் இனிமைக்கும் என்ன சம்பந்தம் என்பது நாகண வாய்ப்புள்ளுக்கு விளங்கவில்லை. 'ஒருவேளை இந்த ஆந்தை வக்கிர புத்தியுடன் பேசுகின்றதோ? என்ற சந்தேகம் அதன் உள்ளத்தில் இலேசாக மின்னல் சொடுக்கி மறைந்தது. இதனால் அது மெளனஞ் சாதித்தது.
"நாகணவாய்ப்புள்ளே! என்ன மெளனம்? நான் சொல் வது உனக்குப் புரியவில்லையா? பாதகமில்லை, திரும்பத் திரும்ப இவற்றைச் சொல்லச் சொல்ல, எல்லாமே விளங்கி யன போன்று தோன்றும். இதோ பார்! இங்கிலாந்தின் ஆந்தையார் கலையைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்? ரஷ்ய ஆந்தையார் கூறியுள்ள யதார்த்தக் கலை என்பதின் தத்துவம் என்ன? இவற்றையெல்லாம் விளக்கப் பின்னர் வகுப்புகள் எடுப்பேன்’ என்று ஆந்தை மீண்டும் விளக்கி யது. இந்த விளக்கம் நாகணவரிப்ப்புள்ளின் கலங்கிய உள் ளத்தை மீண்டும் குழப்பியது. என்ன பேசுவது என்று அறி யாது அது தடுமாறியது. அதன் மெளனம் நீண்டது.
'தயங்காதே! என்ன சந்தேகமோ கேள்!” தன் மேதை மையைக் காட்டக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்ற அக்கறையுடன் ஆந்தை பேசிற்று.
"கிளியையும், குயிலையும் விடுவோம். அழகிய பூம் பொழிலிலே மயில் ஒன்று கோலத் தோகை விரித்து ஆடக் கண்டேன். அத்தகைய ஆட்டத்திலே தேர்ச்சி பெறும் மோகம் விஞ்சியது.” பிறிதொரு விருப்பத்தை நாகண வாப்ப்புள் தெரிவித்தது.

Page 56
ա9վ
ஆந்தை கடகடவென நகைத்தது. அந்த இடியோசை அட்ட திக்குகளிலும் எதிரொலித்தது. நாகணவாய்ப்புள் பயத்தால் நடுங்கிற்று.
'மயில் ஆடுகின்றதா? குளிருக்கு நடுங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து, அதனை ஆடல் என்று கற்பித்து விட் டாய். உழைப்பாளர்களின் ஆட்டம்தான் உந்நதமான ஆட்டம். உழைப்பாளியாம் வான்கோழி ஆடியதை நீ கண் டிருக்கின்றாயா? அதுதான் தேர்ந்த ஆடற்கலை” என்று கூறிய ஆந்தை மீண்டும் சிரிக்கத் தொடங்கியது.
பயத்தை விலக்கிக் கொண்டு, நாகணவாய்ப் புள்ளின் உள்ளத்திலே தெளிவின் ஒளிப் பிழம்பு ஒன்று ஜனித்தது.
"குருவே! நான் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்வீர்களா?’ என்று நாகணவாய்ப்புள் விநயமுடன் கேட்டது.
"தாராளமாக, அதுவே என் பணி."
"உங்களுக்குக் கிளியைப் போன்று வண்ணக் கதை சொல்லத் தெரியுமா?
"முயன்றேன்; முடியவில்லை’
"குயிலைப் போன்று பாட வருமா?
“முயன்றேன்; முடியவில்லை’
"மயிலைப் போன்று ஆடவாவது, குளிரிலே நடுங்க வாவது வருமா?"
“முயன்றேன்; முடியவில்லை”
108

Ա) Մվ
நாகணவாய்ப்புள் மெளஞ் சாதித்தது.
"நாகணவாய்ப்புள்ளே! உன் உள்ளத்திலே எழும் அடுத்த கேள்வி என்ன என்பது எனக்குத் தெரியும். என்னால் முடியாதவற்றைப் பற்றி அபிப்பிராயஞ் சொல்ல நான் யாரென்பதே. பல கலைகளிலே ஈடுபட்டு, அவற்றில் ஏற்படும் தோல்வியே, இன்னொரு கலையின் பாதுகாவலர் என்ற தகைமையைத் தருகின்றது. அறியாத சிறு நாகண வாய்ப்புள்ளே! நீ அறிந்து கொள்ளக் கடவாய். நான் கூறியவை வெறும் அபிப்பிராயங்கள் என்று நினைத்து விடாதே. ஆழமான, தத்துவார்த்தம் நிறைந்த விமர்சனக் கருத்துகள் எல்லாக் கலைகளிலும் அதுவே உந்நதக் கலை. அதன் பாதுகாவலன் யானே! இரவெல்லாம் இந்த உண்மை யையே பறைசாற்றுகின்றேன். என் அலறலின் தத்துவ தரிசனம் அதுவே. உற்றுக் கேள். இந்த நடுநிசியிலே என் குரல் மட்டுந்தானே ஒலிக்கின்றது."
F856) கலைகளையும் பயின்று, பாண்டித்தியம். அடைய வேண்டும் என்ற நினைவு கல்லிய கலைத் தாகம் உள்ளத்தை அலைக்க, நாகணவாய்ப்புள், ஆந்தையிடம்
விடைகூடப் பெற்றுக் கொள்ளாது பறந்தோடிப் போயிற்று.
நாகணவாய்ப்புள், தன் குருத்துவத்தை நிராகரித்துப் பறந்து போன மை ஆந்தையின் உள்ளத்தில் மானபங்க
உணர்வை ஊட்டிது.
109

Page 57
Ա99վ
“ஏ ஆந்தையே! நீ நாகணவாய்ப்புள்ளுக்கு உப தேசித்தவற்றை எல்லாம் கேட்டேன்.” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டது.
"மானிடனே நீ யார்."
"என்னைத் தெரியவில்லையா? நான் முத்தமிழ் வித்தகக் கலாநிதி; நாடறிந்த இலக்கிய விமர்சனச் செம்மல் சிறுகதை-கவிதை-நாடகம் பற்றி அண்மையில் நடைபெற்ற கருத்தரங்குகளிளெல்லாம் என் நித்திலக் கருத்துகள் ஒலித்தனவே."
"கேட்டேன். அதை வைத்துத்தானே நாகண வாய்ப்புள்ளிற்கு உபதேசித்தேன். ஆனால்.”
"அது உன் குருத்துவத்தை ஏற்றுக் கொள்ளாது போய் விட்டது. ஆனால், எனக்கு ஒரு பட்டாளம் சீடர்களே இருக் கின்றார்கள்."
"குருவின் குருவே! உங்களைச் சேவிக்கின்றேன். உங்களுக்கு மட்டம் எப்படிச் சீடர்கள் கிடைத்தார்கள்?’ என்று ஆந்தை குழைந்து கேட்டது.
'ஏனென்றால், என் சீடர்கள் மனிதர்கள். விளங் காததையும் விளங்கிக் கொண்டதாக நடிக்க மனிதர்களுக்கு மட்டுந்தானே தெரியும்’ என்று கூறிய கலாநிதி நடு நிசியையும் தாண்டிய இருளைக் கிழித்துக் கொண்டு நடக்க 6) GTri. O

Z汤闷
ZY/
@ S

Page 58
நிறைவு
இன்பத்தின் இலக்கணத்தை அறிய ஒரு மகான் புறப்பட்டார்.
இன்பத்தைப் பற்றிப் பலரிடம் விசாரணை நடத் தினார்.
'இறைவனுடன் இரண்டறக் கலப்பதே இன்பம்" என்றார் ஒரு சமயத் துறவி.
'ஓயாத தத்துவக் கடைசலே இன்பம்’ என்றான் தத்துவ ஞானி.
'கலைகளும் அவற்றின் ரசனையுமே இன்பம்’ என்றான் கலாரசிகன்.
"பணம்; மேலும் பணம்; மேன் மேலும் பணம். அதுதான் இன்பம்’ என்றான் லேவாதேவிக்காரன்.
'மதுவும், விதம் விதமான மங்கையரும். இவற்றை விட்டால் இப்பூலோகத்தில் இன்பமே கிடையாது' என்றான் சிற்றின்பப் பிரியன்.
'சுகமான தூக்கத்திலேயுள்ள இன்பம் பிறிதொன்றிலு மில்லை" என்றான் சோம்பேறி.
'சிரங்கைச் சொறிவதிலும் பார்க்க மூன்று லோகங் களிலும் வேறு இன்பத்தைத் காண முடியாது’ என்றான் சருமரோகி.
112

நிறைவு
மனங்களின் போக்குகளும் அவை நாடும் இன்பங் களும்
இவற்றுள் உண்மையான இன்பம் எது? இதன் உள்முடிச்சை அறிய முடியாத மகான் அலைத் தார்.
அப்பொழுது, ஒரு குடியானவன் நிலத்தைப் பண் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவனைப் பார்த்து 'இன்பம் எதிலே இருக்கின்றது? என்று கேட்டார்.
‘உழைப்பும் அதன் பயனுந்தான் இன்பம். உங்களுக் கும் ஒரு மண் வெட்டி தரட்டுமா?’ என்றான்.
மகான் சிந்தித்தார். குடியானவன் தன்னுடைய வேலையில் மூழ்கி விட்டான். ெ

Page 59
நிறைவு-I
விமானங்களின் உறுமல்; டாங்கிகளின் அலறல்; குண்டுமாரிகளின் இரைச்சல்; துப்பாக்கிகளின் வேட்டு; ராணுவ வீரர்களின் ஜெயகோஷம்; செருக்களத்தில் வீழ்ந்து பட்டோரின் மரண ஒலம்; எல்லாமே கரைய, நள்ளிரவின் மகாமசானப் பெரு மோனத்திலே போர்க்களம் தவநிலை பூண்டது.
ஜெட் விமானம் ஒன்று, நொறுங்கிய இறக்கையை அசைக்க முடியாது, சத்தம் - பரிசம் - ரூபம் - ரசம் - கந்தம் ஆகியன இற்றுவிட்டனவோ என்ற வியாகூலத் தெறிப்பில் "கிறீச்” என மூச்சு விடுகின்றது. காலையில், சக்கரவாகப் புள்ளின் லாவண்யத்துடனும், கிதோபதேசம் பெற்ற சரமென வானத்தைத் துளைத்துச்சென்ற செருக்கும், அதன் பங்கமும்!
அதன் பெருமூச்சு, பலனையே விரும்பி, வெற்றியின் ஈடேற்ற முனைப்பில் தாக்குண்டு தாழ்ந்த டாங்கிக்குக் கேட்கின்றது.
தோழரே! உன் ஜனன நாடு எது?
'யார் நீ? என்னைத் தோழர் என்றா அழைக்கின்றாய்?
"தோழர் என்று அழைப்பது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் ஐயா என்று அழைக்கின்றேன். அதற்காக ஏன் கோபித்துக் கொள்ளுகின்றாய்? என்று டாங்கி 'பஞ்சீலத் தேன் வார்த்தைகள் குழைத்துப் பேசிற்று.
114

நிறைவு
'பழக்கத்தினால் ஏற்பட்ட முனிவு, அவ்வளவுதான். ஆசிய நாடுகளிலே ஜனநாயகத்திற்குப் பேராபத்து விளை விக்க எத்தனஞ் செய்யும் கம்யூனிஸ சீனாவின் அகந்தையை ஒழிக்கப் படைக்கப்பட்டவன் நான். நடந்தேறியதை இன்ன மும் என்னால் சுதாரித்துக் கொள்ள முடியவில்லை. பெங் களுரிற் பிறந்த ஒரு சின்ன நாட் விமானம் என்னைச் சுட்டுத் தள்ளிவிட்டதே:
டாங்கி மெளனம் சாதித்தது. 'உன் பேச்சு மூச்சைக் காணோம்; உனக்கு என்ன நேர்ந்து விட்டது? "ஜெட் விமானம் பரிவைக் குழைத்து உசாவிற்று.
'உன்னுடன் என்கென்ன பேச்சு? நீ ஓர் அமேரிக்கன். 'ஜாங்கி முதாலாளித்துவ - ஏகாதிபத்திய ஏஜண்ட். நீ புல்லியன். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றித் துவ ஜத்துடன் பீடுநடை போடுவதற்காக, நான் மகத்தான கம்யூனிஸ சீனாவிலே படைக்கப்பட்டவன். நான் புண்ணி யன்.
தொடர்ந்து, இரண்டும் சரமாரியான தூஷணங்களை உக்கிரமாகக் கக்கிக் களைத்து மெளனமாகின.
யோகியின் அடக்கத்துடன் மென்சிரிப்பொன்று அந்த மெளனத்தில் மிதந்தது.
போர்க்களத்திலே சிரிக்கும் அந்தச் சேதனப்பித்தன் யார்? என டாங்கி உறுமியது.
'உன் பொருந்தாச் சகாவான ஜெட் விமானத்தை வீழ்த்தியதிற் கர்வமடையாது, உன்னால் வீழ்த்தப்பட்ட
115

Page 60
տpվ
தினால் வியாகூலம் கொள்ளாதிருக்கும் நாட் விமானம் நான். யோகத்தில் நிலை பெற்று, வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்து, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிக் கும் பக்குவம் பெற்றவன். உயர்வு, தாழ்வு கற்பிக்குஞ் சித்தத்துடன் இயற்றப்படும் கர்மம் புன்மையது. என் பிறப்பும், அதன் யோகமும், அதன் கருமமும். அது கர்மயோகம்! கர்மமே கிரியை. கர்மம் காமியமாகவும், நிஷ் காமியமாகவும் இருக்கலாம். காமிய கர்மத்தின் பயன், செய்வோன் வசத்தில் இல்லை. அஃது ஊட்டுவோன் வயத்து. நிஷ்காமியம் பணியிற் பற்றின்றியே செய்யாமலிருக்க மாட்டாது செய்து கொண்டிருப்பது. நாட்டுப் பற்று அவ்வகைத்து. பக்தி - விசுவாசம் - தியானம் முயற்சி என்பவற்றாற் கர்மம் நிறைவுறுகின்றது. நாமும் ஆயுதம்; எங்களைச் சிருஷ்டித்ததாக நினைக்கும் மனிதனும் ஆயுதம். இந்த.
இந்த இந்துக்கள் பேசும் தத்துவம் நமக்குப் புரிவதே இல்லை" - ஜெட் விமானம் முணுமுணுத்தது.
இதைப் பற்றிக் கம்யூனிஸத்தின் கர்த்தாவும் தத்துவ மேதையுமான மார்க்ஸும் ஒன்றுஞ்சொல்லவில்லை என்றது 'டாங்கி’.
பாகிஸ்தான் இந்திய எல்லைப் போரிற் கடமை வீர னாகக் கலந்து, சுட்டு வீழ்த்தப்பட்ட நாட் விமானம் கர்ம யோகத்தை இயற்றி, ஞானயோகத்திற் கலக்கலாயிற்று ெ


Page 61
நியதி
அது வேதியன் வீட்டு ஆட்டுக்குட்டி, கழுத்திலே கட்டியிருந்த மணி கிலுங்க, அந்த இன்பப் போதையிலே மயங்கி, வழி தப்பிவிட்டது.
நீண்ட நேரம் அலைக்கழிந்த அதை ஒரு புலி சந்தித்தது. இளந் தசையின் சுவை மனதிலெழ, புலியின் நாக்கில் நீரூறிற்று.
"நான் வழி தப்பி வந்துவிட்டேன். வேதியன் வீட் டைக் காட்டுகின்றாயா?" என ஆட்டுக்குட்டி விநயமுடன் கேட்டது.
"நீ ஏன் வீட்டிற்குப் போகவேண்டும்?. உன்னை ஆண்டவன் எனது இன்றைய உணவாக அனுப்பியிருக் கின்றான்."
'நீ முரட்டு மிருகமாக இருக்கின்றாயே. அன்புதான் வாழ்க்கையின் அடித்தளம். கொலை, ஆண்டவனால் வெறுக்கப்படும் பாவங்களுள் ஒன்று.”
புலி சிரித்தது; ஆட்டுக்குட்டி தொடர்ந்து பேசிற்று. "புலால் உண்பதை மறுத்தலால் வரும் நன்மை களைச் சொல்லுகின்றேன் கேள். புல்லுங் குளகுஞ் சாப் பிட்டு வந்தால், சாந்த குணம் மேலோங்கும். சாந்தகுண முள்ள மிருகங்களை மனிதர் பிரியமுடன் வளர்க்கின்றார்கள். உண்டிக் கவலையேயில்லை. அவர்களே வேளா வேளைக் குத் தருவார்கள். சாப்பிடுதலும், உறங்குதலும் என இம்மை
118

நியதி
யிற் சுகமாக வாழலாம். மறுமையில், நித்திய இன்ப வாழ் வாம் சொர்க்கமும் கிடைக்கும்.’
புலி, முழக்கமாகச் சிரித்தது.
"குட்டி ஆடே வேதியன் வீட்டு வாசம் உன்னைக் கெடுத்திருக்கின்றது. தன்னைப் பிறருக்காக அழித்துக் கொள்வது உத்தம தியாகம். அதனால் சொர்க்கத்தின் கதவு திறக்கும். உனக்குச் சொர்க்க போகத்தைத் தரவல்லவன் நான்தான். தாவர பட்சிணியாக இருப்பதினால் நீசோம்பேறி யாகிவிட்டாய்; அடிமையாகிவிட்டாய். உன் கழுத்திலே தொங்கும் மணி உனது அடிமைச் சின்னம். அடிமையான உன்னிடம் அஞ்ஞானம் குடிகொண்டிருத்தல் வியப்பன்று. என்னை ஞானாசிரியனாக ஏற்றுக்கொண்டு, என் பின்னால் வா. உலக உண்மைகளைப் போதிக்கின்றேன்.”
"நீ என்னை ஏமாற்றப் பார்க்கின்றாய்.”
"அப்படியல்ல. நான் சத்தியஞ் செய்து தருகின்றேன். மிருகங்களுக்குப் பொய் பேசத் தெரியாது.”
புலி நடந்தது; ஆட்டுக்குட்டி பின்னாற் சென்றது.
"எங்கே செல்கின்றோம்?
"அறிவுக் களத்திற்கு."
சற்றுத் தூரம் நடந்ததும், புலி ஒரு மரத்தடியைக் காட் டிற்று.
மரத்தின் கிளையில், தலை கொய்யப்பட்ட ஆடொன்றுதலைகீழாகத் தொங்கிற்று. இரண்டு மனிதர்கள் அதன் தோலை உரித்துக் கொண்டிருந்தார்கள்.
19

Page 62
աpվ
அக்காட்சியைக் கண்ட ஆட்டுக்குட்டி கதறி அழுதது.
"ஏன் அழுகின்றாய்? "அந்த ஆடு என் அண்ணன். நேற்றுத்தான் வேதி யன் இவர்களிடம் விற்றான்."
ஆட்டுக்குட்டி தன்னைத் தானே தேற்றிக் கொள் வதற்கு நீண்ட நேரம் பிடித்தது.
"ஏன் அவர்கள் தலையை வெட்டித் தோலை உரித்து எங்களை ஆக்கினைக் குள்ளாக்குகின்றார்கள்?
“மனிதர்கள் தங்களுக்காகவே வாழும் சுயநலமிகள். தேவையில்லாத பகுதிகளைக் கழித்துவிட்டுச் சுவையான பகுதிகளை மட்டும் எடுத்து வேகவைத்துச் சாப்பிடுவார்கள்." "இந்தச் சித்திரவதைகளுக்குப் பின்னர் நெருப்பிலே வேக வேண்டுமா?"
நீண்ட நேரம் மெளனம் நிலவியது. "குட்டி ஆடே என்ன யோசனை?”
"இந்த ஆக்கினைகளுக்குள்ளாகாமல் மறுமை இன் பம் பெறுவதே மேல். நீ என் ஞானாசிரியன்’ என்று ஆட்டுக் குட்டி புலியை வணங்கி நின்றது. ெ


Page 63
"கதை இலக்கியத் துறையில் கதைகள்' என்னும் பகுதியும் உலக களில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ள கிப்ரான், கொகோல், தாகூர், காண்ே பேரறிஞர்கள் உருவகக் கதைகள் மூல புகழ் பெற்றுள்ளார்கள். தமிழில் உழு முயற்சிகள் மிகமிகக் குறைவு. பல பத்திரிகைகளில் அவ்வப்போது சி கதை முயற்சிகள் நடைபெற்று வந்த முழு வெற்றி பெற்றவர்களாக யாரைய இயலவில்லை. இந்தத் துறையில் கத்தை ஈழத் தமிழகம் மிஞ்சி விட்டெ வேண்டும், எம்.ஏ.ரஹ்மானின் பதின் வகக் கதைகளைக் கொண்ட 'மா தொகுதி 1964-இல் வெளி வந்துள்ள வந்த உருவகக் கதைத் தொகுதிகளி முதலாவது என்று தெரிகின்றது.
-பேராசிரியர் சாலை இ 'தமிழில் சிறுகதை என்
இலங்கை ரஹ்மானும், மே வானந்தனும் தங்கள் உருவகக் க தனித்துவமான பாணியில் - தத்துவார் னரியில் - படைத்திருப்பதைச் சிறப்பு பிடலாம், 'மரபு' என்று ஒரே நூல ரஹ்மானின் உருவகக் கதைகள் டெ மரபு வழியில் அமைந்த தத்துவ உரு பேராசிரியர் இர.ந.

ல் "உருவகக் * இலக்கியங் ாது. கலீல் டகள் போன்ற முெம் பெரும் நவகக் கதை காலமாகவே ல உருவகக் ாலும் அதில் பும் குறிப்பிட தாய்த் தமிழ தென்றே கூற னைந்து உரு பு" என்னும் து. தமிழில் லே இதுவே
எாந்திரையன் ானும் நூலில்
லசிய அறி தைகளைத் த்தப் பின்ன பாகக் குறிப் ாக உள்ள பரும்பாலும் வகமாகும்.
வீரப்பன்
மலேசியா