கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மௌனகுருவின் மூன்று நாடகங்கள்

Page 1

ઉો سم) ======

Page 2

மெளனகுருவின் மூன்று
நாடகங்கள்
கலாநிதி சி. மெளனகுரு
நாடக அரங்கக் கல்லூரி வெளியீடு - 2
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

Page 3
MAUNAGURUVIN MUNRU NADAKANKAL
Author: S., MAUNAGURU
M. A. Dip. in Ed., Ph.D.
bublishor: School of Drama and Theatre
Thirunelvely, dafna.
First Edition; August 1987
printer; Catholic Press, Jaffna.
Coህeዥ; Cheran
Prize; Rs... 10

ஈழத்துத் தமிழ் நாடக மரபின் மூலவேர்களை எமக்குணர்த்திய
பேராசிரியர். சு. வித்தியானந்தன்
அவர்கட்கு

Page 4
வெளியீட்டுரை
மனித வரலாற்றை அறிவதற்கு உதவுவன பல்வேறுபட்ட சுவடு களாகும். கலை இலக்கியங்களை அறிவதற்கு அவை சார்ந்த எழுத்து ருக்களும் நிர்மாணங்களுமே உதவுகின்றன. நாடக வரலாற்றை அறி யத் துணை புரிவன நாடக எழுத்துருக்களும் அரங்கக் கட்டடங்களு மேயாகும். இவ்விரண்டினதும் கட்டமைப்பு வடிவம், ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பர். பண்டைத் தமிழர் வரலாற்றில் இவ்விரண்டின தும் சுவடுகளையோ சுவடிகளையோ காண்பதரிது. இந்த வகையில் பண் டைய கிறீஸ்தேசம் இரண்டு வகையான சான்றுகளையும் பாதுகாத்துப் பெருமளவில் வழங்கிவிட்டு உலக நாடக அரங்க வரலாற்றில்தலைநிமிர்ந்து நிற்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிறீஸ் செய்ததில் ஒரு பகு தியையேனும் இந்த 20ம் ஆம் நூற்றண்டின் இறுதிக் கட்டத்திலே னும் ஈழத்தமிழர், நாடகத்துக்குச் செய்வது நல்லது.
நாடக, அரங்கக் கல்லூரி கலாநிதி சி. மெளனகுருவின் இந்த மூன்று நாடகங்களையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. 23-01-1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி, நாடகம், அரங்கம் சார்ந்த பயிற்சி, அறிவு அனுபவம் ஆகியவற்றை நாடக ஆர்வலர் மத்தியிலும், பாடசாலை ஆசிரியர், மாணவர் மத்தியிலும் பல்கலைக் கழ கத்திலும் பரப்பிச் செறியச் செய்து வரும் பணியில் ஈடுபட்டு வரு கிறது. இக்கல்லூரியின் உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளிலும் பல் வேறு மட்டங்களிலும் செயற்பட்டு வருவதன் பெறுபேருக இன்று காத்திரமான நாடகச் சிந்தனையும், நடவடிக்கைகளும் பரவலாகியுள் GITT 6606)fTD.
நாடக, அரங்கக்கல்லூரி “அரங்கம்” என்ற ஒரு சஞ்சிகையை ஒரு சில மாதங்கள் மட்டுமே வெளியிடக் கூடியதாக இருந்தது. இன்று வட இலங்கைச் சங்கீத சபை, க. பொ. த. ப. உயர்தரம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நாடகமும் அரங்கியலும் பரீட் சைக்குரிய பாடமாக இருந்து வருவதால், தமிழில் நாடக எழுத்து ருக்களும் மொழிபெயர்ப்புக்களும், நாடகம் அரங்கம் சார்ந்த கட்டு ரைகளும் நூல்களும் நிறையவே வெளிவருவது விரும்பத்தக்கது. இந்த வகையில் இந்நூலினை எமது இரண்டாவது வெளியீடாக நாடக உல குக்கு வழங்குகிருேம்.
நாடக, அரங்கக்கல்லூரி ம. சண்முகலிங்கம்
"தாயகம்” செயலாளர் திருநெல்வேலி வடக்கு 06 - O 887
யாழ்ப்பாணம்

முன்னுரை
கலாநிதி சி. மெளனகுருவின் மூன்று நாடகங்கள் இந்தப் புத்த கத்தில் உள்ளன. இவை மூன்றும் பாடசாலை நாடகங்கள். யாழ்ப் பாணம் கண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் அக்கல்லூரி மாணவிகளால் அரங்கேற்றப் பட்டவை. சுவைஞர்களின் பாராட்டையும் பெற்றவை.
நாடகம் ஒர் அரங்கக் கலை என்ற முறையிலே, அதனை நிகழ்த்திக்காட்டும் ஒவ்வொரு மேடையேற்றமும் சுவைப்புக்கும் நயப் புக்கும் விமரிசனத்துக்கும் உரிய கலைப்படையல்களே. அவ்வித நிகழ்ச்சி கள் நடந்தேறியவுடன் அவை பற்றிய மதிப்புரைகளும் விமர்சனங்களும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவருவதுண்டு. மெளனகுரு வின் நாடக மேடையேற்றங்கள்பற்றியும் அவ்வித விமரிசனங்கள் வந்துள்ளன. விமர்சகர்களின் நோக்கு நிலைக்கு ஏற்பவும், அவர்களுடைய கலைக் கொள்கை, விமரிசனக் கோட்பாடு என்பனவற்றுக்கு இசையவும் அந்த விமர்சனங்கள் தம்மளவிலே "நியாயமானவையாய்" அமைந்திருக் கும் என எதிர்பார்க்கலாம். மேடையேற்றத்தின்போது நடிகர்களும் இசைஞர்களும் பிற அரங்கக் கலைஞர்களும் வழங்கிய பங்களிப்பின் தன்மைகளைப் பொறுத்து வெற்றி - தோல்வி ஏணிப்படியிலே" அந்த மேடையேற்றங்களும் வெவ்வேறு படித்தரங்களை அடைந்திருத்தல் கூடும். அவற்றுக்கு மதிப்புரையாளர்கள் வெவ்வேறு புள்ளிகளை அல்லது மதிப்பெண்களே வழங்கியிருக்கலாம்.
ஆஞல், ஒரு நாடகப் பிரதி நூலுருவம் பெற்று வரும்பொழுது அந்த நாடகத்தின் எந்த அம்சத்தை நாம் மதிப்பிடவேண்டும்? P என்ற நாடகத்துக்கு 1, 2, 3, 4 . முதலிய பல மேடையேற்றங்கள் இருக்கு மாஞல், 1, 2, 3, 4 . முதலிய யாவற்றையும் மதிப்பிடுவதா, இவற் றுள் மிகச் சிறந்த மேடையேற்றத்தை மதிப்பிடுவதா அல்லது இவற் றின் ஏதோ ஒரு சராசரியை மதிப்பிடுவதா? நாடகம் ஓர் அரங்கக் கலையாக ( அதாவது ஒரு நிகழ்த்திக் காட்டும் கலையாக ) இருப்பத ஞல், இவ்வாருண் கேள்விகள் எழுகின்றன.
"நாடக எழுத்தாக்கத்தை - அதாவது நாடக இலக்கியத்தை படைத்துத் தந்துள்ள ஒரு நாடகாசிரியனை மதிப்பிடுவதாயின். ஒரு குறிப்பிட்ட மேடையேற்றத்தை மாத்திரம் வைத்து அவனை மதிப்பிடுதல் போதியதன்று. நடைபெற்ற மேடையேற்றங்களுட் சிறப்பான எல்லாவற்றையுமோ, அல்லது மிகச் சிறந்த சிலவற் றையோ மாத்திரம் அடிப்படையாக்கி அவனை விமரிசனஞ் செய்வது
Vy

Page 5
கூடப் போதியதன்று. இதுவரை நடைபெற்ற மேடையேற்றங்களுக்கு மட்டுமன்றி, இனிமேல் நடைபெறவுள்ள எத்தனையோ மேடையேற் றங்களுக்கும் ஓர் அடிப்படைத் திட்டமாக அவனுடைய படைப்பு உள்ளது. அந்த வகையிலே கலை நிகழ்வுகள் பலவற்றின் சாத்தியப் பாடுகளை உள்ளடக்கிய ஒரு வித்தாக அந்த எழுத்தாக்கம் அமைந்து விடுகிறது.
நாடக நூலொன்றை விமரிசனஞ் செய்யும்போது, இந்த உண் மையை மணங் கொள்வது அவசியமாகும். குறிப்பிட்ட நாடக எழுத் தாக்கத்தின் மேடையேற்றங்கள் அனைத்துக்கும் - இது வரை நிகழ்ந்த வையும் இனிமேல் நிகழக் கூடியவையுமான மேடையேற்றங்கள் அனைத் துக்கும் - இந்த நாடகாசிரியனின் பங்களிப்பு யாது? என்பதே கேள்வி. நாடகாசிரியனை இந்தவகையிலேதான் நாங்கள் பார்த்தல் வேண்டும். மெளனகுருவையும் அந்தவகையிலேதான் அணுகுதல் வேண்டும்.
2
மெளனகுருவின் இப்போதைய நூலில், "மழை", "சரிபாதி” "நம்மைப் பிடித்த பிசாசுகள்" என்னும் மூன்று நாடகங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்று பற்றியும், இவற்றின் ஒற்றுமை வேற்றுமை பற்றியும், இவற்றின் பண்புகள் சிலவற்றையும் எடுத்து நோக்குவது, இவற்றை வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்வதற்கும், இவற்றின்பால் வாசகர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் உதவும்.
‘மழை, நிருத்திய நாடகம் என்று நாடகாசிரியராலே குறிப்பி டப்படுகிறது. வழமையாக நாட்டிய நாடகம் என்னுமொரு பிரயோ கம் எமது கலையுலகில் அடிபடுவதுண்டு. இவை அநேகமாக பிற்பாட் டுக்கு பரத நாட்டிய பாணியிலோ கதகளிப் பாணியிலோ அபிநயம் பிடிக்கும் நிகழ்ச்சிகளாகவே உள்ளன. ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அண்மைக் காலங்களிலே இணுவில் ந. வீரமணி ஐயரும் வேல் ஆனந்தன் அவர்களும் இத்தகைய நிகழ்ச்சிகளைச் செம்மைப் படுத்திப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனல் மெளன! குருவின் முயற்சிகள் வேறுவிதமானவை. அவை, நாட்டுக் கூத்துக்களைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டவை. மேடையும் காட்சிப்படுத்தும் அக்கறையும் கருத்துக் கோலங்களையும் உணர்வுக் கோலங்களையும் தகுந் வாறு ஊடாட விட்டு, கலைமயமான அழுத்தங்களையும் அநுபவங் களையும் விளக்கங்களையும் வழங்க முனையும் செயல் விழிப்பும் இந்த நாடகங்களில் உள்ளன.
vi

மழை நாடகத்தில், மனிதர் கூட்டமொன்று வரட்சியினும் பாதிக்கப்பட்டு வருந்துகிறது. "மழை இல்லை மழை இல்லை / பயிர் எதுவும் விண்யவில்லை. ஒரு துளியும் காணுமல் / உலர்ந்து நிலம் கிடக் கிறதே ... எங்கும் இருளே தெரிகிறது / எந்த ஓர் ஒளியும் காணுேமே. தலைமுறைகள் வாடுகிருர் / எதிர்காலம் புரியவில்லை . தாகம் அம்மா பெரும் தாகம் அம்மா / தண்ணிரின்றித் தவிக்கிருேம் ..தண்ணீரிருள்ள இடம் தேடி / தனியே தாம் நடக்கிருேம்" என்பன, மெளனகுருவின் பாட்டு வரிகள்,
மழை இன்மையால் வருந்திய மக்கள், மழையை வருவிக்கும் மார்க்கங்கள் பலவற்றையையும் சிந்திக்கின்றனர். எல்லாரும் ஒன்று கூடி அழைத்தால் மழை பெய்யுமோ என்று முதலில் யோசிக்கிருர்கள், இது குழந்தைத்தனமான பூர்விக சிந்தனைப் போக்கைச் சுட்டுகிறது.
பின்னர், மந்திர உச்சாடனங்களாலும் தோத்திரங்களாலும் பூசனைகளாலும் மழையை வருவிக்கும் முயற்சி தொடர்கிறது. மாந்திரி கத்தின்மூலம் சாதனைகளை ஈட்டுதல் முடியும் என்னும் நம்பிக்கைக் கட்டம் இங்கு சித்திரிக்கப்படுகிறது எனலாம்.
அடுத்ததொரு கட்டத்தில், மனிதர்களின் உடல் முயற்சிகள் அத் தனையும் ஒருங்கு சேர்ந்து செயற்படுகின்றன. இந்த முயற்சிகள் மேடை யில் நடிகர்களாலே செய்து காட்டப்படுவன. இவற்றின் முழு அர்த் தத்தையும் தாக்கத்தையும் உணர்ந்து கொள்வதற்கு அந்த மேடைக் காட்சி முழுவதையும் நேரே பார்ப்பதுதான் சரியான வழியாகும் ஆணுல் அதனை நேரிற் பார்க்கும் பேறு கிடைக்காதவர்களாகிய நாம், நாடகாசிரியர் தந்துள்ள மேடைக் குறிப்புகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்து ஓரளவுக்கு நமது மனக்கண்களால் அந்தக் காட்சியின் தாக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யலாம். நாட காசிரியர் தரும் குறிப்பு இப்படிச் சொல்கிறது. --
*மழையே மழையே வருவாய்? என்று பாடியபடி மனிதர் கூட்டம் பல செயல்களில் ஈடுபடுகிறது. ஒருவர் கம்பியூட்டர் இயக்குபவர் ஆகிருர், ஒருவர் ஆகாயவிமானமாக அபிநயிக்க, இன்னெருவர் அதை இயக்குபவராக அபிநயிக்கிருர், இன் னெருவர் மண்ணை வெட்டிக் கிளறுகிருர். இன்ஞெருவர் வீரன் போல் அணிநடை புரிகிருர், இன்னும் சிலர் ஏதோ மாபெரும் மரத்தை வீழ்த்துவது போல அபிநயிக்கிருர்கள்.
vii

Page 6
இறுதியில் மழை பெய்கிறது. பாரதியாரின் 6திக்குகள் எட்டும் சிதறி..” என்று தொடங்கும் பாட்டு இங்கு மிகவும் பொருத்தமாக இடமறிந்து கையாளப்படுகிறது. நாடகத்தின் உச்சகட்டத்து உற்சா கத்தையும் ஆனந்தக் களிப்பையும் இந்தப் பாட்டு உரியவாறு உணர்த்தி வைக்கிறது.
மனித முயற்சியினை ஆற்றுப்படுத்தி, புத்திக்குப் பொருத்தமாக பிரயோகஞ் செய்தால் நற்பயன் விளையும். இயற்கை வசமாகும் என்னும் செய்தி நாடகத்தின் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. அதே வேளை சிறுவர்கள் பாடியும் ஆடியும் ஒரு கட்டொழுங்குக்கு உட்பட அழகாக இயங்கித் தாங்களும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் ஒரு வாய்ப்பை யும் இந்நாடகம் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
நமது நாடகாசிரியரிற் பலர் தமது மன அரங்கில் நடைபெறும் கற்பனையான சில செயற்பாடுகளையும் உரையாடல்களையுமே நாடகம் என்ற பெயரில் எழுதித்தருகின்றனர். ஆனல் மெளனகுருவின் மேடை பெளதிகமானது. அவரது அரங்கச் செயல்கள் உருப்படியான அநுப வத்தின் ஆவணப் பதிவுகள். அந்தவகையில், அவரது நாடகங்களில் மேடையுணர்வு மேம்பட்டு நிற்பது சிறப்பாகும்.
மேற்சொன்ன நாடகத்தில் மழையை வருவித்த மெளனகுரு சரி பாதி" என்னும் நாடகத்தில் மலையைத் தகர்த்துவிடுகிருர், முதலில் ஆண்கள் தனியே மலையை அகற்ற முயலுகிருர்கள். எவ்வளவு தான் முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. பின்னர் மனித குலத்தின் சரிபாதி பெண்களே என்னும் ஞானுேதயம் அவர்களுக்கு உண்டாகிறது, பெண்களையும் தமது முயற்சியிலே சேர்த்துக் கொள் கிருர்கள். வெற்றி கிடைக்கிறது. பெண்ணுரிமையை மட்டுமல்லாமல், பெண் வலிமையையும் நாடகப் பொருளாக்கி விடுகிருர் மெளனகுரு. அதனையும் கவிதாரீதியிலே செய்துள்ளார் என்பதற்குத் தடையில்லை.
பெண்ணுலகத்தையிட்டு முற்போக்கான கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்துள்ள தமிழ்க்கவிஞர்கள் பாரதியாரும், பாரதிதாசனும் ஆவர். "காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் / காதல் மாதர் கடைக்கண் பணியிலே' என்றும், "நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்/ நுண்ணிடைப் பெண் ஒருத்தி பணியிலே’ என்றும் பாடியவர் பாரதி யார். 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் | மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்" என்று பாடினர் பாரதிதாசனர். இவர்கள் இருவரும் மாதருக்குப் பணிசெய்தல் என்ற கருத்தின் எல்லை வரைக்கும் வந்துள்ளனர். பெண்கள் மெல்லியலார்
viii

ஆதலால் அவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற மனுேபாவமே மேற் படி கவிஞர்களின் எண்ணப் போக்கிலே மேலோங்கி நிற்கிறது. ஆனல் மெளனகுருவோ இன்றும் ஒருபடி மேலே போய்விடுகிருர், அவர் படைத்த பெண்ணின் குரல் பின்வருமாறு பேசுகிறது. -
*இல்லை என் நண்பரே கேட்பீர் / நாமும் தான் / இங்கே ஒரி சக்தி அறிவீர் / எம்மையும் சேர்த்தால் / தான் எதையும் நீர் சாதிப்பீர்கள் / இல்லாவிடில் தனியே / எதனையும் செய்ய மாட்டீர் தோல்வியே அடைவீர்கள்"
பெண்ணின் வலிமையையும் ஆற்றலையும் உணர்த்துவதில் நாட காசிரியர் கணிசமான வெற்றியைக் கண்டுள்ளார் என்பது மிகையாகாது.
இப்புத்தகத்தில் வரும் மற்றுமொரு நாடகம் stbao D பிடித்த பிசாசுகள்’ இதனை மோடி நாடகம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிருர், அந்நிய நாட்டு மோகம், பிரதேச பேதங்கள், உத்தி யோக மோகம், சீதனம் என்னும் சின்னத்தனம் ஆகிய சமூகக் குறை பாடுகள் எல்லாவற்றையும் இந்த நாடகத்திலே பிசாசுகளாக உருவகஞ் செய்கிருர், இவையே நம்மைப் பிடித்த பிசாசுகள். இவற்றினல் மக்கள் பலர் உருவேறி ஆடுகிறர்கள். ஆனல் இந்தப் பிசாசுகளின் பிடியி லிருந்து விடுபடுவதற்குப் பாரதியார் வழங்கும் ஒரு மந்திரம் உதவு கிறது. அந்த மந்திரம் ஒரு பாட்டு.
"அச்சமில்லை அழுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை பாவம் இல்லை பதுங்குதல் இல்லை ஏது நேரினும் இடர்பட மாட்டோம் கண்டம் சிதறினும் அஞ்ச மாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்"
இன்னும் மந்திரங்கள் பல ஒதப்படுகின்றன. அவைகளுமெல் லாம் பாரதியின் பாட்டுகளே. மந்திர உச்சாடனங்களாலே பிசாசுகள் விரட்டப்படுகின்றன.
கழிப்புக் கழித்தல், பேயோட்டுதல் என்பன நாட்டார் வழக் கியலில் அடிக்கடி இடம்பெறும் சடங்குகள். இவற்றுக்கு, பயன்மிக்க

Page 7
தொரு நோக்கத்தின் பொருட்டு கலையுருவம் வழங்க எண்ணியது மெச் சத் தக்கதொரு நுண்ணயம் வாய்ந்த உத்தியே ஆகும்.
"நம்மைப் பிடித்த பிசாசுகளில் பாரதியார் சொற்களும் கருத் துக்களும் உணர்வோட்டங்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன, பொதுவாகவே மெளனகுருவின் ஆக்கங்களில் பாரதியாரின் செல் வாக்குக் கணிசமாக மேலோங்கி நிற்பதனைக் காண்கிருேம். பாரதியின் ஆளுமையின் ஆட்சித் திறம் என்று இதனை விபரிக்கலாம் போலும். இந்த ஆட்சித் திறம்பற்றி மேலும் சிலவற்றைக் கூறுதல் வேண்டும்.
3 பாரதியார் கவிஞர், 'எல்லை இன்மை எனும் பொருள் தன் னைக் கம்பன் குறிகளாற்’ காட்டினன் என்பது பாரதியார் கருத்து. பாரதியாரும் அப்படிப்பட்டவர்தான். காதலியின் "பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம், நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்கள்’ என்று பாடும் போக்குடையவர். அண்டம் முழுவதையும் தழுவி நிற்பன அவருடைய எண்ணங்கள்.
மெளனகுருவின் போக்கும் அப்படிப்பட்டதுதான். சின்னஞ் சிறு வேடிக்கை மாந்தர்களின் அன்ருடச் சில்லறைச் சேட்டைகளைப் பற்றி அவருக்கு அதிக அக்கறை இல்லை. "அண்டம் முழுவதும் அளந்து அறிவை எடுத்து ஊட்டுவதும், அந்திச் சுடர்வான அப்படியே தீட்டு வதும், மிண்டும் கொடுமைகளை மாய்த்து அறத்தை நாட்டுவதும், மாசற்ற இன்பவெறி மக்களிடையே மூட்டுவதும் தமது நோக்கங்கள் என்று நமது 'மஹாகவி' கருதியதுபோல "ஆகாசம் அளாவு மொரு காதல் கொண்டவர் மெளனகுரு. அதனலே தான் போலும் அவரது படைப்புகளிலே பிரமாண்டமான கற்பனைகளை நாம் காணு கிருேம். இவருடைய தலைசிறந்த ஆக்கமான "சங்காரம் இந்த இடத் திலே நினைவுகூரத் தக்கது.
அங்கு சாதி அரக்கனும், இனபேத அரக்கனும் வர்க்க அரக்க னும் சங்காரஞ் செய்யப்பட்டனர். இங்கு நம்மைப் பிடித்த பிசாசுகள் ஒட்டப்படுகின்றன, மலை தகர்க்கப்படுகிறது. மழை பெய்விக்கப்படுகிறது. எல்லாம் அரிய பெரிய சாதனைகளே; மனிதகுலம் செய்யவேண்டிய, செய்யக் கூடிய சாதனைகள். இச்சாதனைகளை நோக்கிய ஏக்கம், ஒர் இலட்சிய நாட்டம். அந்த நாட்டம் இருப்பதஞலேதான், பாரதியார் மெளனகுருவைப் பிடித்து ஆட்டுகிறர். பிசாசுபோல அல்ல; தெய்வப் போல,
Χ

4.
இவை ஒரு புறமாக, மெளனகுரு கலையுத்திகளிலும், ஆட்ட முறைமையின் செம்மைப்பாட்டிலும் இசையின் இசைவிலும் காட்டும் அக்கறையை நாம் மறந்துவிடலாகாது. பாட்டு வரிகளில் இடம்பெறும் சொற்களிலே சிற்சில வேளைகளில் சோர்வு காணப்பட்டாலும், இசையும் ஆட்டமுஞ் சேரும்போது அதெல்லாம் அடித்துச் செல்லப்பட்டு உன் னதமான அநுபவம் ஊட்டப்படுவதனை நாம் உணருகின்ருேம்.
ஈழத்துத் தமிழர்களுக்கென்று தனியானதொரு தேசிய நாடிக வடிவத்தையும் மரபையும் தேடிக் காணும் முயற்சியிலே புத்திபூர்வமாக ஈடுபட்டிருக்கும் ஒருவர் மெளனகுரு என்பதையும் இத்தருணத்தில் மனத்தில் இருத்துதல் பொருத்தமாகும்.
நாடக உலகில் இன்னும் பல உயரிய சாதனைகள் நிறைவேறு வதற்கு இந்தப் புத்தகம் உதவியாகும் என்பதில் ஐயமில்லை.
இ. முருகையன்
நீர்வேலி தெற்கு, நீர்வேலி,
23-06-87
xi

Page 8
என்னுரை
இந்நூலில் இடம் பெறும் மூன்று நாடகங்களும் ஏற்கனவே ஒரு நூலில் வேறு பல நாடகங்களுடன் சேர்ந்து வெளியானவை. இவற்றைத் தனியாக வெளியிடுவதற்குக் காரணங்களுண்டு.
ஒன்று, இவற்றை ஒன்றுசேர்த்துப் படித்து, இவற்றின் பொருள், தன்மை, வடிவம் என்பன பற்றிய திரட்சியான ஒரு கருத்தைச் சுவை ஞர் பெறலாம்.
இன்னென்று. இந்த நாடகங்கள் பற்றியும், அவை தயாரிக்கப் பட்டபோது நான் பெற்ற அநுபவங்கள் பற்றியும் உங்களுடன் உரை யாட நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம்.
சங்கீதம், நடனம் என்பன சாஸ்திர ரீதியாக வளர்ந்த அளவு, ஈழத்துத் தமிழரிடையே நாடகம் வளர்ந்துள்ளது என்று கூற முடி யாதுள்ளது. ஆனல் சங்கீதம் நடனத் துறைகளிறீ காணமுடியாத வகையில் புதிய ஆக்கங்களை உருவாக்கும் முயற்சி, அல்லது ஒரு தேடல் நாடகம், ஒவியம், இலக்கியம் ஆசிய கலைத் துறைகளிற்ருன் ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நாடகக் கலைஞனும் ஒவிய, சிற்பக் கலைஞனைப்போலவே, தன் கலைப் படைப்பு சுவைஞரின் பார்வைக்குச் செல்லும் வரையும் - சென்ற பின்பும் தன் கலைப்படைப்பு பற்றிச் சிந்தனை செய்துகொண்டேயிருக் கிருன்.
ஒவியத்தில் ஒரு கோடு, ஒரு வர்ணச் சேர்க்கை ஒவியத்திற்கு அற்புதமான உயிரைத் தந்து விடுவது போல, கட்புலக் கலையான நாடகத்திலும் ஓர் அசைவு, ஒரு மேடை உருவாக்கம் (stage formation) நடிகர்களின் மேடை நிலை என்பன நாடகத்திற்கு பிரமாதமான உயிர்ப்பினைத் தந்து விடுகின்றன. இவை பற்றி ஒவ்வொரு ஒத்திகை யின் பின்பும் நாடக நெறியாளன் மணிக்கணக்கிற் சிந்திக்கின்றன்.
அவனுடைய படைப்பாக்க நடைமுறை (creative process) பற் றியோ, அவன் கலை உருவாக்க முயற்சி பற்றியோ எமது சுவைஞர் களோ விமர்சகர்களோ அத்துணை கவனத்திற் கொள்வதில்லை, "நாட கம் தானே வெகு சுலபமாக அதனைச் செய்து விடலாம்" என்று எண்ணுகிற ஒரு குழந்தை மனுேபாவம் நம்மத்தியில் தொடர்ந்து
kíi

இருந்து வந்திருப்பதும், நாடகம் பற்றிய காத்திரமான சிந்தனைகள் நம் மத்தியில் இல்லாதிருப்பதும் இதற்கான காரணங்களாயிருப்பது டன் நாடக விமர்சனம் நம்மிடையே வளராமையும் இதற்கான கார ணங்களாகும்.
அண்மைக் காலமாக இந்நிலை, ஒரு சிலர் மத்தியிலாவது மாறி வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் நாடகம் பற்றிக் காத்திரமாகச் சிந்திப்பதும், பயிற்சி நெறியாக அதனைப் பயில நினைப்பதுமான சூழல் உருவாகியுள்ளது. உயர்தர வகுப்புக்கு நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாக இருப்பதுடன், பல்கலைக் கழக மட்டத்திலும் அது பயிற்றுவிக்கவும்படுகிறது. இவை யெல்லாம் நாடகத்தில் தீவிர ஈடுபாடு மிக்க கலைஞர்கட்கு மகிழ்ச்சியும், நம்பிச்கையும் தருவனவாம்.
ஒரு கலைஞன்- சிறப்பாக நாடகக்கலைஞன் தன் படைப்பு பற்றி நல்லது, கூடாது என்ற அபிப்பிராயங்களைப் பொதுவாக எதிர்பார்ப் பதில்லை, மாமுக, தன் படைப்புநுட்பங்களை, கலையாக்க முறைமையினை சுவைஞர்கள், விமர்சகர்கள் கண்டு பிடிக்கிருர்களா? என்பதிலும் அப்ப டைப்பு தான் எதிர்பார்த்ததை விட வேறும் பல புதிய எல்லைகளுக் குச் சுவைஞர்களை இட்டுச் செல்லுகிறதா என்பதை அறிவதிலுமே மிக ஆவலாயிருப்பான். எனக்கும் இத்தகைய ஆவல்களுண்டு. எனவே தான் என்னுரையில்,
(அ) இந் நாடகங்கள் பற்றியும்
(ஆ) எழுந்த சூழ்நிலைகள் பற்றியும்
(இ) இவற்றின் மேடையாக்கம் பற்றியும்
உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.
பெரும்பாலும் பாடசாலை நாடகப் போட்டிகளிலும், விழாக் களிலும், சில வேளைகளில் அருந்தலாகப் பெரு முயற்சியுடன் தனிப்பட்ட ரீதியிலும் "நாட்டிய நாடகம்" என்ற மகுடத்துடன் மேடையிடப்படும் மேடை நிகழ்வுகளைக் கண்ணுற்ற போது அவற்றுட் பெரும்பாலானவை ஒரே தன்மையானவையாக அமைந்து, சலிப்பையே தந்தன. இவற்றை வேறு வகையாகவும் செய்யலாகாதா? என்று நான் சிந்தனை செய்ததுண்டு. பிரபல்யம் பெற்ற "நாட்டிய நாடகப்" பெரியவர்களை அணுகி, என் அபிலாசையைக் கறிய போது "மரபு அப்படித்தான் அதை மாற்றுதல் கூடாது" என்று மறுத்து விட்டார்
χή

Page 9
கள். பலருக்குப் புதுமை காணும் ஆவல் இருந்தும், அப்படிச் செய்ய நேரின் சமூகத்தின் பெரு மட்டங்களில் தமக்கு அங்கீகாரம் கிடைக் காது போய்விடும் எனக்கூறி ஒதுங்கியும் விட்டனர்.
தமது பாடசாலைகளில் தாட்டியநாடகங்களை மேடையிட வேண் டும் என யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க மகளிர் கல்லூரிகள் என்னை நாடிய போது, என் மனதுள் நெருப்பாகக் கனிந்து கிடந்த அபிலா சைகளை ஜூவாலையாக வெளிப்படுத்தும் வாய்ப்புச் சித்தித்தது. அப் பாடசாலைகளின் நடன ஆசிரியைகளின் ஒத்துழைப்பும் எனக்குக் கிடைத் தது"
1988 இல் "சக்தி பிறக்குது" என்ற ஓர் புதிய மேடை நிகழ்வை சர்வதேசப் பெண்கள் நினைவு நாளையொட்டி நான் செய்தபோது, அதில் பரதத்தை ஓர் ஆக்க நடனமாக அமைத்துத்தந்து எனக்கு உதவி புரிந்தார், யாழ்/ பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடன விரி வுரையாளரான செல்வி. சாந்தா பொன்னுத்துரையவர்கள். அடக்கப் பட்ட பெண்குலத்தின் எழுச்சியை அற்புதமான ஆட்ட அசைவுகளில் அமைத்தார். மரபுகளிற் காலூன்றி புதிய மரபுகளைத் தோற்றுவிக்க முன் வந்தார் அவர். அத்தகைய துணிவும், உழைப்பும், சாஸ்திர ரீதியாக நடனம் பயிலும் நம் இளம் தலைமுறையினர் பலர் பெற வேண்டியவை.
புதிது புனைதல் என்ற ஆவலில், புதிய எல்லைகளைத் தேடுதல் என்ற உந்துதலில் எழுந்தவையே இந் நாடகங்கள். நாட்டிய நாடகம் என்ற சொல்லை விட நிருத்திய நாடகம் என்ற சொல் பொருத்த மானது என்பதஞல் இந் நாடகங்கள் இரண்டிற்கு அப்பெயரை இட் டுள்ளேன். நாட்டியம் என்பது வட மொழியில் நாடகம் என்ற அர்த்தமே தருவது. எனவே நாட்டிய நாடகம் என்கையில் 'நாடகம் நாடகம்" எனப் பொருள் தருமாதலாலும் நிருத்தியம் மூலம் இந் நாடகம் நிகழ்த்தப்படுவதனலும் அதனை நிருத்திய நாடகம் என அழைத் தலே பொருத்தமென நினைத்து இப் பெயரை இவற்றிற்கு இங்கு இட்டுள்ளேன். நிருத்திய நாடகங்கள் இரண்டும் பெரும்பாலும் பர தத்தையும், மோடி நாடகம் ஈழத்துத் தமிழரின் தனித்துவமிக்க ஆடல் முறையான கூத்தையும் தமது அடித்தளமாகக் கொண்டவை. இவை அடித்தளமேயொழிய மேற்கட்டுமானத்தில் பல கலவைகள் இணைந்துமுள்ளன.
மேற் குறிப்பிட்ட மூன்று நாடகங்களும் பரிசோதனை முறை யில் எழுதப்பட்டுத் தயாரிக்கப்பட்ட நாடகங்களாகும். ஒரு வகையில்
Χίν

இவை பரிசோதனை நாடகங்களே. பரிசோதனைகள் மூலமே புதிய நெறி களை உருவாக்கலாம். புதிய நெறிகள் சூனியத்தில் உருவாவணவல்ல. இவற்றிக்கு அடித்தளமும் தேவை. நம்மிடம் செழுமையான அடித் தளமுண்டு. ஆனல் புதுமை தேடும் வேட்கைதான் இல்லை. நமது சமூக அமைப்பே அதற்கான காரணம்.
இத்தகைய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என்ற ழைப்பதை விட அரங்க நிகழ்வுகள் என்றே குறிப்பிடுவேன். அரங்கு (theatre) என்பதன் அர்த்தம் விசாலமானது. எம்மத்தியில் அரங்கு பற்றிய அறிவு (theatre Study) வளராமையும் இப் பரிசோதனை முயற்சிக் குறைவுக்கு ஒரு காரணமாகும்.
பரிசோதனைச் சாலையொன்றினுள் ஒரு விஞ்ஞானி பல இர சாயன மூலகங்களையும் கலந்து புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பது போல நாடகக் கலைஞர்களும் பல்வேறு கற்பனைகளையும் கலந்து புதுப் புது வடிவங்களைக் கண்டு பிடிக்க, ஒரு நாடக பரிசோதனைச் சாலை அவசியம், மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள்(Theatre groups) ஆய்வு அறிவு ரீதியாக இதனை ஆற்றுகின்றன. நம்மத்தியில் இதற்கான வாய்ப்பும் குறைவு; புதுமைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற தைரியமும் குன்றவு.
மரபுகளினின்று மீற விரும்பாத, மீற முடியாத ஒரு இறுகிப் போன சமூக அமைப்பினுள் நாம் வாழுவதே அதற்கான காரணமா கும்.
எனினும் காலம் என்பது கறங்கு போற் சுழல்வது. அதன் சுழற் சியில் மாற்றமும் தவிர்க்க முடியாதது. இன்று மாற்றத்திற்கான குரல்களை சமூகத்தின் பல மட்டங்களிலும் கேட்கிருேம். கலையும் அதற்கு விதிவிலக்கன்று.
நாடகத்தில் பரிசோதனைகளைச் செய்து பார்க்க, நம்மத்தியில் குழல் இல்லாதிருப்பதுடன் அதற்கான பயிற்சி பெற்ற நிரந்தர குழுவோ, இடமோ, வசதிகளோ இல்லாதிருப்பதும் மிகப் பெரும் குறையாகும். இவ்வகையில் எமக்கு நம்பிக்கை தருவன பாடசாஜலகள் மாத்திரமே. சிறப்பாக உயர்தரப் பாடசாலைகளில் கர்னடகஇசை, நடனம் ஆகியவற்றில் ஓரளவு பயிற்சி பெற்ற மாணுக்கர் இருப்பது டன் பாடசாலை ஒரு ஒழுங்கமைப்புள்ள நிறுவனமாக இருப்பதனுலும் எமது பரிசோதனைச் சாலைகளாக அவையே இப்போது அமைகின்றன. பெரும் தொகையாக நடிப்பதற்கு - நாடக ஆர்வத்துடன் பலர் ஈடுபடு வதற்குப் பாடசாலைகளை விட வேறிடம் இல்லை.
XV

Page 10
பரிசோதனை முயற்சிகளுக்கு இவ்விதம் ஒரு வகையில் பாடசாலை கள் உதவிய போதும் ஒரு சுதந்திரமான பரிசோதனை முயற்சிகளுக்கு அவை இடம் தரா. பாடசாலைகளின் விதி முறைகள், நேர ஒழுங்குகள், பங்கு கொள்ளும் மாணுக்கரின் மனேவளர்ச்சி. அதிபர்மாரின் எண் ணப் பாங்கு என்பன கட்டுப்படுத்தும் சில காரணிகளாகும். இந் நாடகங்கள் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள் இயைந்து உருவான வையே. இடைநிலைப் பாடசாலை மாணுக்கரை மனத்திற் கொண்டும் அவர்களின் விழாநேர அளவை மனத்திற் கொண்டும் எழுதப்பட்ட வையே. இந் நாடகங்களை கட்புலப்படுத்த யாழ்/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரியும், யாழ்/ இந்து மகளிர் கல்லூரியும் எமக்கு ஆய்வு கூடங்க ளாயின. இரண்டும் இருவேறு மரபில் உருவான பாடசாலைகள். யாழ்/ சுண்டிக்குவி அதிபர் திருமதி L.P. ஜெயவீரசிங்கமும், யாழ்-இந்து மக ளிர் கல்லூரி அதிபர் மறைந்த செல்வி ப. இராமனுதன் அவர்களும் எனக்குப் பெரிதும் உதவினர்கள். என் இயல்பறிந்த அவர்கள் வழ:ை யான அதிபர்கட்குரிவ இயல்போடு என்னைக் கட்டுப்படுத்தவில்ல்ை இதற்கு அவர்கட்கென் நன்றி.
நாடகம் ஒரு கட்புலக்கலையானமையினுல் அங்கு காட்சிப்படு. தலே பெரும் இடத்தைப் பிடிக்கின்றது. இக் காட்சிப்படுத்தலுக்குக் தேவையான அசைவுகளை - விசேடமாக நிருத்திய நாடகங்களில். நா: எமது பாரம்யரிய நடன வடிவங்களிலிருந்தே தெரிந்தெடுக்கிறேன். பலவடிவங்களையும் அளவோடு கலந்து ஒரு புதிய பொருளைத் தோற் விக்க முயல்கின்றேன். ஈழத்துத் தமிழருக்கென்ற ஒரு தேசிய நாடக வடிவைத் தேடும் அல்லது உருவாக்கும் முயற்சி அது. இதில் இன்னும் பல நாடகக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் என் நண்பர்களாயிருப்பது என் அதிஷ்டம். எமது பாரம்பரியக் கலைக மீதும் - அதன் வீரியத்தின் மீதும் நான் வைத்துள்ள அறிவு ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான நம்பிக்கையே இம் முயற்சிகளுக்கெல்லாம் ஆதார சுருதி. இவற்றின் மூலம் ஈழத்துத் தமிழரின் தனித்துவமான கலாசாரங்கள் வெளிக்கொணரப்படவேண்டும். ஒரு உயர் நிலையில் அவை கற்றேராலும், மற்றேராலும், வெளியிலும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ஒரு காரணமாகும்.
r
பாடசாலை மாணக்கருடன் அதிலும் இடைநிலைப் பாடசாலை, மாணுக்கருடன் இணைந்து நாடகம் உருவாக்குவது நல்ல அனுபவம். ஆரம்பப் பாடசாலை மானக்கருடனிணைந்து சிறுவர் நாடகங்களை உரு வாக்கிய என் அனுபவங்கள் பற்றி தப்பி வந்த தாடி ஆடு - சிறு
Xνί

வர் நாடக என்னுரையிற் குறிப்பிட்டுள்ளேன். ஆனுல் இவ்விடை நிலைப் பாடசாலை அனுபவங்கள் வேருனவை. நாடகம் பழக ஆரம்பிக்கு முன் அதற்கான சில பயிற்சிகளில் ஆரம்ப நாட்கள் கழிந்தன. நாடகத்திற் குப்பயிற்சியோ? என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியத்துடன் கேட் டனர். எனினும் இயல்பான கீழ்ப்படிவுடனும், ஒழுங்குடனும் சொன் னதைச் செய்தனர். பயிற்சிகள் மெல்லமெல்ல அவர்களின் இயல்பான திறன்களை அகலித்தன. அவர்களின் உள் திறன்கள் பலவற்றை தயக்க மயக்கமின்றி வெளிக்கொணரவும் உதவின. பயிற்சிகள் நல்ல அனுப வங்களாகவும் அமைந்தன,
அம்மாளுக்கரை ஓர் ஒழுங்கமைவுக்குள் வைத்து, சுலபமாக ஒரு மேடை நிகழ்வை உருவாக்கிவிட முடிந்தது. அப்போதெல்லாம் பயிற்சி பெற்ற ஒரு நாடகக் குழு நிரந்தரமாக எம்மிடம் இல்லையே என்ற குறை மனதை அரிக்கும்.
நாடகம், மேடையிலே தான் தன் முழுமையை அடைகிறது. எழுத்துருவில் அதன் முழுப் பரிமாணத்தையும் காண முடியாது. எனினும் கூறமான வரையில் மேடைக் குறிப்புகளும், மேடை பற்றிய விளக்கங்களும் இங்கு தரப்பட்டுள்ளன. கற்பனை ஆற்றலுள்ள வாசகர் தம் மனமாகிய மேடையில், வாசிப்பினூடாக அதனைக் காண முயல AvnTub.
இந் நாடகங்கள் மேடையேறிய போது பத்திரிகைகளில் இந் நாடகங்கள் பற்றிப் பல அபிப்பிராயங்கள் எழுதப்பட்டன. நாடகத் நின் பின்னல் இந் நூலில் அவை தரப்படுகின்றன. இந்நாடகங்களின் மேடையேற்றம் பற்றியும், அவை ரசிகரிடம் ஏற்படுத்திய தாக்கம் lubaduyub அறிந்து கொள்ள அவை உங்களுக்கு உதவக் கூடும்.
பெரும் உழைப்பின் மத்தியில் மேடையிடப்படும் இந் நாடகங் களப் பரவலாக மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதிற் பத்திரிகை கட்குப் பெரும் பங்குண்டு. எமது பத்திரிகைகள் சில அதனைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்வது எமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரு கிறது. இக்கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும். கட்டுரைகளை ாழுதியோருக்கும் எம் மனமார்ந்த நன்றி.
இறுதியாக நான் இங்கு சிலருக்கு நன்றி கூறக் கடமைப்பட் டுள்ளேன். பரதத்தை முறையாகப் பயின்ற செல்வி மாலதி சண்முக விங்கம், செல்வி கலாமதி கந்தமூர்த்தி ஆகியோர் முறையே மழை, சரிபாதி ஆகிய நாடகங்களைத் தயாரித்தார்கள். பின்ஞளில் இவர்க
XVii

Page 11
ளின் உதவியும் எனக்குக் கிடைத்தது. முதல் நாடகமான மழையை ‘விடிவு என்ற பெயரில் விரிவாக நான் தயாரித்தபோது, அடையாறு லஷ்மணனின் மாணவியான வசந்தி குஞ்சிதபாதம் பரத அசைவுகளை யும் திருமதி சாந்தினி சிவநேசன், கலைஞர் வேல் ஆனந்தன் ஆகியோர் கதகளி அசைவுகளையும் இணைக்க உதவினர். பின்னணி இசையை திரு மதிகள் ஞான குமாரி சிவநேசனும், அம்பிகை பாலகுமாரும் ‘விடி வுக்கு" வழங்கினர். ஞானம்பிகை பத்மசிகாமணி வயலினிசை வழங் கிஞர். மரபை நன்கு அறிந்து கொண்டு மரபை மேலும் புதிய திசைகளுக்கு இட்டுச்செல்லத் துணிந்து முன்வந்த இவர்களின் உதவிகட்கு என் நன்றி.
கற்பனை வளமும் ஆற்றலும் மிக்க இசை அமைப்பாளர் கண் ணனும், மிருதங்கத்துடன் ஏனைய தோற்கருவிகளையும் இலாவகமாகக் கையாளும் கற்பண் வளம் வாய்ந்த கிருபாகரனும் நமக்கு வாய்த்த சொத்துக்கள். அவர்களின் உதவிகட்கும் என் நன்றி.
இந் நாடகங்களை எழுதச் சொல்லி என்னை அடிக்கடி தூண்டி உற்சாகம் தந்தவர்கள் திருமதி பத்மினி சிதம்பரநாதனும் நண்பர் குழந்தை ம. சண்முகலிங்கமும். பத்மினிக்கு உதவியாக இருந்து எமக்கு உதவி புரிந்தவர் திருமதி அம்மன்கிளி முருகதாஸ். இவர்கள் அனை வர்க்கும் என் நன்றிகள். இறுதியாக முன்னுரை எழுதிய மதிப்பிற்கு ரிய மூத்த கவிஞர் முருகையனுக்கும் என் நன்றி.
சி.மெளனகுரு
நுண்கலத்துறை பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் 1 - 8-87
χνίίί

மேடைப்பிரிவு
மேடையைப் பற்றிய பொதுவான ஓர் அடிப்படை அறிவு நெறி யாளர்கட்கும், நடிகர்கட்கும், ஏன் பார்வையாளர்கட்கும் கூட அவசி யம். இதனை அறிவதன் மூலம் நெறியாளர், நடிகரின் இயக்கத்தை நெறிப்படுத்தலாம். நடிகர், சிறப்பாக இயங்கலாம். பார்வையாளர், நெறி யாளரின் கற்பனைத்திறனை, நாடக இயக்கத்தின் கருத்தை இரசிக்கலாம்.
நாடகத்தில் நடிகனே பிரதானமானவன். நடிகன் பார்வையாளர் இணைப்பே நாடகத்தை உயிர்த்துவமுள்ள கலையாக்குகிறது. நடிகன், பார்வையாளரை மேடையிலிருந்து பார்க்கும் போது உள்ள நிலையைக் கொண்டு நடிகனின் இடது கைப்புறம் மேடையின் இடப்புறமாகவும், வலது கைப்புறம் வலப்புறமாகவும் கணிக்கப்படுகிறது. அதே போல் பார்வையாளரை அண்மித்த மேடையின் முன்பகுதி கீழ்ப்புறம் எனவும், சேய்மித்த பின்பகுதி மேற்புறம் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றின் இடையேயுள்ள பகுதி மேடையின் நடுப்புறமாகும். இவ்வ கையில் மேடை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இப்பகுதிகளில் சில பகுதிகள் அதி முதன்மையானவை, சில முதன்மையானவை. சில முதன்மை குறைந்தவை சில முதன்மையற்றவை. நாடகம் ஒரு கட்புலக் கலையாகும். பார்வையாளரின் நோக்கிலேயே இம் முதன்மை முதன் மையின்மை கணிக்கப்படுகிறது. முக்கியமான காட்சிகளையும், பார்வை யாளர் மனதில் அழுத்த வேண்டிய காட்சிகளையும் முதன்மையான தும், மிக முக்கியமானதுமான பகுதிகளில் அமைக்க வேண்டும். இத் நூலிலுள்ள மூன்று நாடகங்களினதும் மேடை இயக்கம் பிரதியில் கோடி காட்டப்பட்டுள்ளது. நெறியாளர்கள் அதனைப் பற்றுக் கோடா கக் கொண்டு மேலும் கற்பனை நயம் பொருத்தியதாக மேடை இயக் கத்தைச் செய்யலாம்.
- P R. G. K. T7 a cer 7 is A far L. R is C եմ • Ար ഥേറ്റ് &v4zus Guంచి மத்தி ഛേട് &ી-ટ્ર పల్లి*లాం (p grgnLం موجه نهج عق ẽ cơ g2 35 $4. அந்த து( ہیpوڑی ہوئے LLLLLL LLLLL S0tELSL S LSLS SS LG LLL LL S LL S LLLL SLSLLLLLS SSL S SLLLL L S0LLL LL LLGLLLLSLLS
S. R C. C. - • ܚܐ மத்தி வவது மத்தி மத்தி மத்தி கிட து (ూత్తి బ్బారా ఒం QUP a rot ola utara, ം ♔ 'ഥ 竺°2哆感竺 குறைந்தது I 7 Cob-M/^W R7 a L 4 T | D o W M C er a - R S Od Wnt ser
| R D. C. L. ழ 2வது கீழ் மத்தி கீழ் இடது
(Brrഞ്ഞ മധrang திே முதனமையானது G9 sarono ras74

Page 12

மழை
(நிருத்திய நாடகம்)

Page 13
எழுதியது 1985
முதல் மேடையேற்றம் 12-07-1985
நாடக மாந்தர்
எடுத்துரைஞர் நால்வர் மனிதர் சிலர் மழையாகச் Gorf
முகிலாகப் பலர்

பின்னணி:
எடுத் துரைஞர் 1:
காடுத்
துரைஞர் 2:
எடுத் துரைஞர் 2:
(திரை விலகு முன்னரேயே "தன்னுன' என்ற சொற் கட்டு கள் வாத்தியங்களில் இசைக்கப்படுகின்றன. திரை மெல்லத் திறக்கப்படுகிறது. முழுமையாகத் திரை திறக்கப்பட்டதும், பின்னணிப் பாடகர்கள் சொற்கட்டுக்களைக் கூற ஆரம்பிக்கின் றனர். அதற்கேற்ப அசைந்தபடி நான்கு எடுத்துரைஞர்கள் GuDaNLkG abg GuosmLuflebt DR, DC, DL ஆகிய பகுதி களில் நிற்கின்றர்கள். கீழ்வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர் கள். பாடலைக் காட்சிப் படுத்தல் நெறியாளரின் கற்பனைக்கு விடப்படுகிறது.)
(சொற்கட்டு)
தன்னுளு தன தன்னணு தன்னணு தன தன்னுணு தன்கு தத்தின னுதின னதின தன்னை தன தன்ஞஞ.
பார்க்க வந்துள்ள சபையோரே நிருத்திய நாடகம் காட்டப் போருேம். பழைய கதைகள் கூறவில்லை புதிய ஆக்கம் நாம் செய்யப்போருேம்.
மழைத்துளி காணுமற் துன்பப்பட்ட மக்கள் எல்லாம்கூடி ஒன்றுபட்டு மழையையே மண்ணுக்குக் கொண்டுவந்து மகிழ்ந்த கதை இங்கு காட்டப்போமுேம், (எடுத்துரைஞருள் ஒருவர் கீழ்வரும் பாடல்களை இசைக்க, ஏனைய இருவரும் அபிநயிக்கலாம்.)
(இராகத்துடன்)
எங்கும் இருட்டாய் இருக்கிறது, வானத்தில் பொங்கும் மதியில்லை; புள்ளிகள் போல் வெகு தொலைவில் மங்கித் தெரிகின்ற வெள்ளிகளின் மத்தியிலே, இந்த உலகு இருட்டிற் குளிக்கிறது.

Page 14
எடுத்
(இராகத்துடன்)
துரைஞர் 3: இருட்டோடு பெரு வரட்சி; இந்த மண் மழை கண்டு
எடுத் துரைஞர் 1:
எடுத் துரைஞர் 2:
எடுத்
எத்தனையோ ஆண்டுகள் ஆனதினுல், மண்மீது சின்னஞ் சிறிய செடிகூட எழவில்லை. இந்த உலகை வரட்சி வறுக்கிறது.
(இராகத்துடன்) வரட்சி; பெரும் வரட்சி
வாழ்வெல்லாம் கடும் வரட்சி
தாகம் பெரும் தாகம் தண்ணிர் காணுத் தாகம், (எடுத்துரைஞர் திடீரென மேடையின் இடது புற மூலையை நோக்குகிறர். புதினமான எதையோ-கண்ட உணர்வு. DLக்கு வந்து, கையை நீட்டி அதனைச் சபையோருக்ருக் காட்டி)
(இராகத்துடன்)
வரட்சி; பெரும் வரட்சி மழை இல்லை; பெரும் இருட்டில் மக்களின் கூட்டமொன்று
வருந்தி அதோ வருகிறது. (எடுத்துரைஞர் 2 ஓடிவந்து பார்த்த பின்னர்)
(இராகத்துடன்) எல்லா முகங்களிலும் ஏக்கப் பெருமூச்ச,
எல்லோரின் கண்களிலும் ஏதோ ஒரு துயரம்.
(தொடர்ந்து வந்து பார்த்து)
துரைஞர் 2: எல்லோர் இதயமும் ஏங்கி விம்மிச் சாம்பியழ,
எடுத்
எல்லாரும் தள்ளாடி நடந்து வருகிருர்,
(வந்து பார்த்து)
துரைஞர் 4: போகும் வழி புதிது; பாதையோ தெரியாது.
பூரான் சிலந்தி மற்றும் பொல்லாத பாம்புகளும் தாராளமாகத் தவழ்ந்து விளையாடுகிற சீரற்ற இவ்வழியாற் சிறு கூட்டம் வருகிறது.
(பின்னணியில், வயலினில் கோரஸ் தொடர்ந்து பாடப் போகின்ற பாடலின் பின்னணி இசை சோகமாக ஒலிக்க

எடுத் துரைஞர் :
கோரஸ்:-
எடுத் துரைஞர் ே
ST(5 துரைஞர்
Gangaho :
அதைத் தொடர்ந்து கோரஸ் ஒலி மெதுவாக வருகிறது. எடுத்துரைஞர் 4 அதை உற்றுக் கேட்டபின்னர் சபையோரைப்
பார்த்து )
(இராகத்துடன் ) கேட்கிறதா? மனிதனின் துயரக் குரல் கேட்கிறதா?
(எடுத்துரைஞர் 1, மேடையில் DR இல் அமர்ந்து கொள்ள ஏனையவர்கள் மேடைக்குக் கீழ் பின்னணியிருடன் சென்று அமர்கிறர்கள். இதைத் தொடர்ந்து கீழ் வரும் கோரஸ் இசைக்கு ஏற்ப ஒரு கூட்டத்தினர் மேடையில் DL இலிருந்து UR வரை ஒருவர் பின் ஒருவராக வரிசையில் மெல்ல மெல்ல அசைகின்றனர் . துயரம் தோய்ந்த முகபாவம், துன்பத்தையும் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் அசைவுகள். DL இலிருந்து UR வரை வரிசை நிரம்பியதும் நின்ற இடத்தில் நின்றபடியே அசைகின்றனர். )
܀ ܃ ܃ ܦܳܐ. . . ܐܸܣܛܣ.. .. %ܟ݂ ܀ ܀ ܀ ܛܳܣܛܐ. . ܀ 2ܦܳܐ ܀ - •ܛܐܸܣܛܔ
( மக்கள் கூட்டத்தினர் நின்று அசைய ஆரம்பித்ததும் DR இலிருந்து எடுத்துரைஞர் 1 எழுகின்றர். மக்கள் கூட்டத் தைப் பார்க்கின்றர். ஆட்களைத் தனித்தனியாகப் பார்க் கிறர். அவர் முகத்தில் வியப்பு, பின் சபையைப் பார்த்துக் கேட்கிருர். )
( வசனத்தில் ) யார் இவர்கள்? யார் இவர்கள்? என்ன குறை? என்ன குறை?
(மீண்டும் அவர்கள் அருகிற் சென்று உற்றுப் பார்த்து பின்னர் சபையிடம் வந்து கூறுகிருர். )
( வசனத்தில் ) அநியாயம் அநியாயம்! தாங்கொண்ணு அநியாயம்.
(பாடல்) யார் இவர்கள் யார் இவர்கள் என்ன குறை? என்ன குறை? அநியாயம் அநியாயம்

Page 15
எடுத் துரைஞர் :
மனிதர் 1 :
மனிதர் 2:
மனிதர் 3 :
மனிதர் 4 :
மனிதர் 5 :
மனிதர் 6 :
e4. . . egg-use . . . e. s... e. se 呜...呜...<器...<器·<器·<毯··
(எடுத்துரைஞர் அசைந்தபடி நிற்கும் மக்கட் கூட்டத்தி னரைச் சுற்றி வந்து பின்வரும் பாடலைப் பாடுகிறர் )
( Lursio )
யார் நீங்கள் யார் நீங்கள் என்ன குறை? என்ன குறை? உடலிற் துயரம் வழிகிறதே உள்ளம் சோர்ந்து கிடக்கிறதே. பயணக் களைப்புத் தெரிகிறதே பாதை மயக்கம் புரிகிறதே. என்ன குறை என்ன குறை என்ன குறை என்ன குறை?
(மேடையில் நின்ற மனிதக் கூட்டத்தினர் கீழ்வரும் பாடல் களுக்கு அபிநயிக்கிறர்கள். பாடலைக் காட்சிப் படுத்துவது நெறியாளரின் கற்பனைக்கு விடப்படுகிறது. )
(பாடல்) மழையில்லை மழையில்லை பயிர் எதுவும் விளையவில்லை.
ஒரு துளியும் காணுமல்
உலர்ந்து நிலம் கிடக்கிறதே.
எங்கும் இருளே தெரிகிறது எந்த ஓர் ஒளியும் காணுேமே.
தலைமுறைகள் வாடுகிருர் எதிர் காலம் புரியவில்லை.
தாகம் அம்மா பெரும் தாகம் அம்மா தண்ணீரின்றித் தவிக்கிருேம்.
தண்ணீருள்ள இடம் தேடி தனியே நாம் நடக்கிருேம்.
(ஒவ்வொருவரும் பாடியபடி சோர்ந்து சேர்ந்து அமர் கின்றனர். )

எடுத் துரைஞர் ே
கோரஸ் :
மனிதர் 1 :
மனிதர் 2 :
எடுத் துரைஞர்1
மனிதர் 2 :
(பாடல்) (இருந்த மனிதக் கூட்டத்தைச் சுற்றி வந்து ) கை கால்கள் சோருகுதே களை மெத்தத் தோன்றுகுதே என்ன செய்வார்? இவர் என்ன செய்வார்? இது இவர்கள் தலை விதியோ?
呜...<鹦···勃...<器...<器...<器... tood. . . . . .s.. . . v . . . . . .
(எடுத்துரைஞர் 1உம், 2உம் DR க்கு வந்து இருந்து விடுகின் றர்கள். எல்லோரும் சோர்ந்து போயிருக்கிருர்கள், எல் லோர் முகங்களிலும் சோகம். அவர்களுள் ஒருவர் எழுந்து மேடையில் DC க்கு வந்து கூறுகிறர். )
(விருத்தம்) பல நூறு வருறைங்கள் மழை இங்கு வருமென்று வானத்தைப் பார்த்திருந்தோம். மழை இங்கு வரவில்லை மழை இங்கு வரவில்லை மார்க்கமும் தெரியவில்லை.
( இன்ஞெருவர் எழும்பி மேடையின் DLக்கு வந்து பாடுகிறர். )
(விருத்தம்) மழை வேண்டும் மழை வேண்டும் என்றென்று எண்ணியே வாழ்க்கையைப் போக்கி வந்தோம். மழையையே மண்ணுக்குக் கொண்டுவர நாம் என்ன மார்க்கங்கள் செய்து வைத்தோம்?
( எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர், சிந்திக் கின்றனர்; இல்லை என்று தலையை அசைக்கின்றனர். )
( விருத்தம் ) எல்லோரும் ஒன்ருகி மழையே நீ வா என்று எழுப்பினுல் குரலை ஒன்ருய்
எமது மழை வாராதோ? எமது மண் நிறையாதோ எம் வாழ்வு பொலிவு பெருதோ?
(விருத்தம்) எல்லோரும் ஒன்ருதல் எங்ங்ணம்? அன்றியும் இணைந்தொன்று சேர்ந்த பின்னர்

Page 16
எடுத் துரைஞர்1:
வா என்ருல் வந்திட மழை என்ன எங்களின் வார்த்தைக்குள் அடங்கும் ஆளா?
( விருத்தம் ) எல்லோர்க்கும் பொது இங்கு மழை எனும் பிரச்சனை என்பதால் ஒன்று படலாம். எல்லோர்க்கும் பொது இங்கு தாகம் எனும் பிரச்சனை என்பதால் ஒன்று படலாம்.
( சோர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து)
(விருத்தம்) எல்லோரும் ஒன்ருக இணைந்துமே உறுதியுடன் எழுப்புங்கள் உங்கள் குரலை எமது மழை ஓடிவரும், எமது மண் பொலிவு பெறும் எம் வாழ்வு நிறைந்து விடுமே.
(சோர்ந்திருந்த மனிதக் கூட்டம் தன்னம்பிக்கையுடன் ஒரு வரை ஒருவர் பார்க்கிறர்கள். ஒருவன் ரகசியமாக மழையே நீ வா’ என்று முணுமுணுக்கிறன். மற்றவனும் அவ்விதமே முணுமுணுக்கிறன். இரகசிய முணுமுணுப்பு மெல்ல மெல்ல உயர்ந்து "மழையே நீ வா" என்ற ஒற்றுமைக் குரலாக மாறி மக்களின் பெரும் குரலாக ஒலிக்கிறது. இவ் வண் ணம் ஒலித்தபடி மனிதக் கூட்டம் மேடையின் UR தொடக் கம் DL வரை சபையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி முழந்தாளில் மழை வேண்டிய பாவனையில் நிற்கிறர்கள். பின்னர் குரல் மெல்ல மெல்லச் சோர்கிறது. மெல்ல மெல்ல கைகளை கீழே போடுகிறர்கள். எடுத்துரைஞர் அவர்களை உற்சாகப்படுத்துகிறர். )
(வசனத்தில்)
சோர்வை
(உற்சாகம் பெற்று கைகளை உயர்த்தி) அகற்றுவோம்
சோர்வை

ιραή, δή
டுத் துரைஞர்
மனிதர்
T(S5 துரைஞர்
மனிதர்
T(65 துரைஞர்:
ιοανήέδή:
UTGAs துரைஞர்:
மனிதர்:
of Cls துரைஞர்
மனிதர்
அகற்றுவோம்
siðbmru GeoLu
மறப்போம்
அவநம்பிக்கையை
விலக்குவோம்
துயரங்களை
வெல்லுவோம்
uunresh
செய்வோம்.
durrasub
Gorui Gaunruh
(மக்கள் உற்சாகம் பெறுகிறர்கள். உற்சாக இசை ஒலிக்கி றது, மனிதர் கூடிக் கூடிக் கதைக்கிறர்கள். ஏதோ ஒரு காரியத்திற்கு அடுக்குப் பண்ணப் போவது போலப் பாவனை. யாகம் ஒன்றுக்கான அடுக்கு நடக்கிறது. மிகப் பெரும் முயற்சி ஒன்று செய்கிறர்கள் என்ற உணர்வை ஏற்படுத் தும் விதத்தில் இவ்வபிநயங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.)
[ மேடையில் CCயில் யாக மேடை அமைக்கப்பட்டு 4 பேர் சதுரமான அமைப்பைத் தோற்றுவிக்கும் விதத்தில் அமர்ந்திருந்து யாகம் புரிய, 4 பேர் அவர்களுக்கருகில் அபிநய பாணியில் நிற்க, ஏனையோர் DL இல் ஒருவர், UL இல் ஒருவர், UR இல் ஒருவர், DR இல் ஒருவராக நிற்க, ஏனையோர் CR இலும் CL இலும் இருக்க, யாகம்
7

Page 17
மனிதர் :
நடக்கிறது. நிற்பவர்கள் எல்லோரும் கை கூப்பியபடி தியானத்தில் ஆழ, யாகமேடைக்கு அருகில் நிற்போர் இரு வரும் அபிநயிக்கலாம். 1
(மந்திர உச்சாடன பாணியில்)
விருத்த சாயல் அடிப்படை ஸ்வரங்கள் ஸ ரி2 க ம ப த2 நி2 ஸ் ஸ் நி2 த2 ப ம க ரி2 ஸ )
வானத்தில் மேகம் மீது வாழ்ந்திடும் மழையே போற்றி. ஞாலத்தில் உயிர்கள் வாழ பெய்திடும் மழையே போற்றி.
/, ஸாரிகா / ரிகா / ரிகா / /;, 6MorTífsir / ffff / ffawnt / /, ஸாரிகா / ரீகா / ரிகா / /, நீஸ்ரீ / ஸாரி / காரி /
வானத்தில் நின்றிறங்கி மண்ணுக்கு ஓடி வாராய். ஞாலத்தில் உயிர்கள் வாழ நம்பினுேம் ஓடி வாராய்,
/; ஸரீஸந் / நீஸா / நீ ஸா / /, நீஸாரிஸர்ரி / ரிகள்/ 13. ஸ்ாரிகா / ffasst / ffasst / /. நிஸாரி/ ஸாரி/ காரீ)
ஆண்டாண்டு காலமாக அடிமையாய் இங்கு வாழ்ந்தோம் மாண்டனர் மக்கள் இங்கு மழைவரும் என்று நம்பி.
/, ஸாரிகா / ரிகா / ரீகா / /, ஸாரிகா / ரீரி / ரிஸா / /, ஸாரிகா / ரீகா / ரீகா / /. நீஸரீ / ஸ்ாரீ/ காரி !

எடுத் துரைஞர்1:
துரைஞர்1
அப்புவே ஜலமே வா! வா! அழகுடை நீரே வா வா இப்புவி மகிழ நீயும் இக்கணம் இறங்கி வா வா!
/;, 6montfesnt / Lort 2 lort? / urt lurti / /;, Luitruo2 sir / ffff /asrrestr / /, ஸாரிகா ரீகா / ரிகா / f;, ff6wf / 6montrf / smt f /
மழையே மழையே
வருவாய் வருவாய்.
(கடைசி இரண்டு வரிகளையும் பஜனை பாணியிற் கூறிப் பஜனை பண்ணுகிறர்கள். அச்சமயம் பின்வரும் பாடல் ஒலிக்கிறது, இப் பாடல் பாடும் சமயத்தில் யாக குண்டத்துக்குப்பின்னுல் UL இல் நின்றவரும். UR இல் நின்றவரும் சிவன் பார்வதி அபிநயத்தில் நிற்க, DR இலும் DL இலும் நின்றவர்கள் அவர்களை நோக்கி பின்வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள்.)
முன்னிக் கடலச் சுருக்கி எழுந்துடையாள் என்னக் திகழ்ந் தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந் தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொலியாய் மழை ஏலோ ரெம்பாவாய்.
(தொடர்ந்தும் 'மழையே மழையே வருவாய் வருவாய்" என்ற பஜனைக் குரலை எழுப்புகின்றனர்
மழை வரா ஏக்கம் -
மக்களின் சோர்வு - எடுத்துரைஞர் அங்கும் இங்கும் ஓடி உற்சாகமூட்டுகிறர். மனிதரில் ஓரிருவர் எடுத்துரைஞருடன் இணைகின்றனர்.)
வசனத்தில்) இயற்கையை வென்றவர் நீர்
ஏன் சோர்ந்து நிற்கிறீர்கள்?

Page 18
10
கடலைக் கடந்தவர் நீர் கண்டங்கள் கொண்டவர் நீர்
அண்டகோள் வென்றவர் நீர் அணுவைத் துனேத்தவர் தீர்
எண்டிசையும் சென்றவர் நீர் ஏன் சோர்ந்து நிற்கிறீர்கள்?
சோர்வை அகற்றுங்கள் துணிவு உடலில் ஏற்றுங்கள்.
பார்வை பெரிதாக்குங்கள் பலதடவை முயலுங்கள்
சோராமல் முயலுங்கள் தொடர்ந்து முயலுங்கள்
( 'மழையே மழையே வருவாய் வருவாய்" என்று பாடியபடி மனிதக்கூட்டம் பல செயல்களில் ஈடுபடுகின்றது. ஒருவர் கம்பியூட்டர் இயக்குபவராகின்றர். ஒருவர் ஆகாய விமானமாக அபிநயிக்க, இன்னுெருவர் அதனை இயக்குப வராக அபிநயிக்கிறர். இன்னெருவர் மண்ணை வெட்டிக் கிளறுகிருர், இன்னுெருவர் வீரன்போல அணி நடை புரிகின்றர். இன்னும் சிலர் ஏதோ மாபெரும் மரத்தை வீழ்த்துவதுபோல அபிநயிக்கிறர்கள். மனிதனின் உடல் முயற்சி, அறிவியல்சார் முயற்சி அத்தனையும் நிகழ்வது போல காட்டப்படுகிறது. இம்முயற்சிகள் வேகமாக நடைபெறு கின்றன. இம்முயற்சி நடைபெறுகையில் மேகங்களுக்கு வேட மிட்டவர்கள் மேடையில் எல்லாப் பக்கங்களிலுமிருந்து மேடையின் நடுவில் இருந்த யாக மேடையைச் சூழ நின்று மழை பொழிவது போல அபிநயிக்கிறர்கள்.)
(தகிட தகிட தகிட தகிடதாம் என்ற தாளக்கட்டொலிக்கு மழைக்கு அபிநயிக்கும் நால்வரும் முறையே மேடையில் நாற்புறங்களிலுமிருந்து வேக நடையுடன் வந்து DR DC DL பகுதிகளில் நிற்கிறர்கள். பின்னர் தத்தகிட தத்தகிட தத்தகிடதத்தாம் என்ற தாளக் கட்டுக்கு ஏற்ப மேடையைச் சுற்றி ஆடி வந்து மீண்டும் பழைய இடத்தில் நிற்கிறர்கள்.

vLas :
Qasiryah» :
JT tas :
farw ryddh) :
t stof:
artu :
if Las
fast yen)
பின்கீழ்வரும் பாடலுக்கு அபிநயித்து ஆடுகிறர்கள், மேடை யில் நின்றவர்கள் இருபகுதியினராகப் பிரிந்து ஆடுகிறர்கள். ஒரு பகுதியினர் ஆடுகையில் மறுபகுதியினர் உறை நிலையில் நிற்கிருர்கள். ஆட்டத்தை மிக உக்கிரமானதாக அமைத்தல் Jeau9lub.)
(நாட்டை ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது)
திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்தீம் தரிகிடதீம் தரிகிடதீம் தரிகிடதீம்
e el 3 o o <器<毁,<器 /arts67 6its6rm/
S e el • • • • • • ... <鹦<器,<器 /ஸகமகஸ/ ஸநிப்நிஸ !
பக்க மலைகள் உடைத்து வெள்ளம் Lumrug. U inre Jnrug
/ஸ் கம் கஸ/ ஸ் கம சுஸ/
/ஸகம் கஸ்/ ஸநி Luff Gnorr/
தக்க ததிங்கி தித்தோம் - அண்டம் சாயுது சாயுது சாயுது
e3 -3 -3 . . . . . . . . . <器<器<级 /ஸாகஸா ஸாகஸா/
v3 eè4, u, • • • • • • • • • <鹦<驾<鹦 /ஸகம்கஸ/ ஸநி பநி ஸ/
தக்கையடிக்குது காற்று, தக்கத்தாம் தரிகிட தாம் தரிகிடதாம் தரிகிடதாம்
/ஸகம கஸ/ ஸ கம கஸ/ |ஸ கம் கஸ/ ஸநி பநி ஸா/
ተዣ

Page 19
LuffL&ử ở
கோரஸ் :
Dry Lass :
கோரஸ் :
U Tlass :
கோரஸ் :
Li fr_a5fr :
கோரஸ் 3
TLs fir
2.
வெட்டியடிக்குது மின்னல் - கடல் வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது
es e. e. ... . . . was s. s. s. /ஸாகஸா/ ஸாகஸா/
|ஸகம்கஸ/ /ஸ்நிபநி ஸ/
கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூ வென்று விண்ணைக் குடையுது காற்று
/ஸ கம கஸ/ ஸ கம் கஸ/ for sld 560/ ஸ்தி பநி ஸ/
Fu L-ř s L&F - FLT -- Sresörgy தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
el CB . . . . . . . . . . 呜<氢,<器, fantagon/ antasount /
e2, si e o ose a so 3 st
/ஸ் கம கஸ/ ஸ்நிபநி ஸ/
எட்டுத் திசையும் இடிய - மழை எங்கனம் வந்தடா தம்பி வீரா
/ஸகம் கஸ/ ஸ க்ம் கஸ/ /ஸ கம கஸ/ ஸநி பதி GYv/
(தக்கதீம் தரிகிடதீம் என்ற
படிமங்களை ஏற்படுத்துகிறர்கள். )
சட்டச் சட சட சட்டச் சட வெனக் கொட்டித் தீர்க்குதுபார் மழைத் துளி கொட்டித் தீர்க்குதுபார்.
தாளக்கட்டுடன் அனைவரும் மேடையைச் சுற்றி வலம் வந்து DL இல் திரள்கிறர்கள். பின்னர் பின்வரும் கவிதை, உச்சரிப்புத் தொனியிற் சொல்லப்பட அதற்குத்தக மேடையிற் காட்சி

தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிகிட தக்கிட கிடதக தாம்
எட்டுத் திசைகள் முட்டிச் சிதறிட இடிபல கேட்குது கேள் - விசும்பில் இடிபல கேட்குது கேள்
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிசிட தக்கிட கிடதக தாம்
குறைக் காற்று சழன்றடித்து வீரம் புரியுதுபார் - விண்ணில் வீரம் புரியுதுபார்!
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிப. கிட தக தாம் - தரிகிட தக்கிட கிடதக தாம்
பாறைகள் சிதறிட மோதிடு வெள்ளம் பாய்ந்து ஓடுதுபார் - மண்ணிற் பாய்ந்து ஓடுதுபார்!
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிகிட தக்கிட கிடதக தாம்
(ஒவ்வோர் பாடலும் சொல்லும்போது உறை நிலையில் நிற்பவர்கள் பாடலின் பின் வரும் தாள ஒலிக்கு அபி நயிக்கலாம். அபிநயப்பின் போது மழைக்கு ஆடுபவர்கள் மழையாக, மின்னலாக, புயலாக ஆட, ஏனையோர் மக்களாக அபிநயிக்கலாம். ஓர் உச்சவேகத்திற்குப்பின் அமைதி மெல்லவர, மழைக்கு ஆடியவர்கள் வெள்ளமாக மாறி மேடையை விட்டு அகல்கின்றனர். மேடையில் அமைதி நிலவுகிறது. )
( எடுத்துரைஞன் 1 மேடையைச்சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி யுடன் பாடுகிறன். அதற்குத்தக மேடையில் நிற்போர் அபி நயிக்கிருர்கள் பாடலை மிக விரிவாக்க் காட்சிப்படுத்த வேண்
1

Page 20
டும். மக்களின் மனப்பூரிப்பை. மகிழ்ச்சியை, நிறைவைக் காட்டுவதாகக் காட்சி அமையவேண்டும். )
எடுத் துரைஞர்1: மாரி பெய்தது: மாரிபெங்தது
பூமி தேவியின் உடல் புதுமைபெற்றது.
மாரி பெய்தது, மாரி பெய்தது பூமி தேவி புதுமை பெற்றது. ஆறு குளங்கள் அனைத்தும் நிறைய அகனத்து உயிரும் களித்து மகிழ
மாரி பெய்தது மாரி பெய்தது
பூமிதேவியின் உடல் புதுமைபெற்றது.
மாரி பெய்தது, மாரி பெய்தது பூமி தேவி புதுமை பெற்றது. வெம்மை நீங்க தண்மை நிலவ வெறுமை போக அருமை பெருக,
மாரி பெய்தது மாரி பெங்தது
பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
உழவர் கலப்பை தோளில் எடுத்து
உழுது மண்ணைப் பண்படுத்திட எருது இழுக்க உழவர் அடிக்க எங்கும் உள்ள மண் பொன்னுய் மாறிட
மாரி பெய்தது, மாரி பெய்தது
பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
விதைகள் வீசி உழவர் தாங்கள் விரும்பியபடி விதை விதைத்திட அவைகள் வளர்ந்து அகு Gurr657u u ஆடிப்பாடி மனமே மகிழ.
மாரி பெய்தது. மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
14

கதிரை உழவர் அறுத்துக் குவித்து கட்டித் தலையில் எடுத்துச் சென்று அடித்துப் பிரித்து நெல்லைச் குவித்து அளந்து மூட்டை மூட்டை ஆக்க, மாரி பெய்தது மாரி பெய்தது, பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
சோர்வு அகன்று துயரமகன்று துணிவு பெற்று மக்கள் யாரும் ஆற அமர இருந்து உண்டு அகமும் முகமும் மகிழ மகிழ. மாரி பெய்தது மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமைபெற்றது.
லாலலாலலா .. லாலலtrலலா
லாலலாலலா .. லாலலாலவr
(பாடியபடி அனைவரும் அரைவட்டமாகிறர்கள். நாடகத்திற் பங்கு கொண்டவர்கள் அனைவரும் மேடைக்கு வந்து வட்டத் துடன் இணைகிறர்கள். சபைக்கு வணக்கமுரைத்து அனைவரும் வரிசையாகச் செல்கிறர்கள்.)
திரை
இந்நாடகத்தில் இடம் பெறும் "முன்னிக் கடஅல" எனத் தொடங்கும் பாடல் மாணிக்கவாசகரு டையது. 'திக்குகள் எட்டும் சிதறி" எனத் தொடங்கும் பாடல் சுப்பிரமணிய பாரதியாரு டையது. பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம். கண்ணன்.
15

Page 21

சரிபாதி
(நிருத்திய நாடகம்)

Page 22
எழுதியது 1985
முதல் மேடையேற்றம் 05-07-1986
நாடக மாந்தர் ஆண்கள் 7 (tj. பெண்கள் 7 Guiř எடுத்துரைஞர் 2 GB uit

ாத் துரைளுர்ே
(பின்னணி இசை ஆரம்பத்தில் இசைக்கப் படுகிறது. அதற்கு ஏற்ப மெல்ல மெல்லத் திரை திறக்கப்படுகிறது. மேடையில் தென்மேற்கே பார்த்தபடி UR லிருந்து DL வரை பெண்கள் வரிசையாக நிற்கிறர்கள், UR இல் நிற்கும் பெண் மிக உய ரமான பீடத்தில் நிற்கிருள். DL இல் உள்ள பெண் கீழே இருக்கிருள். இடையில் உள்ளவர்களின் நிற்கும் உயரம் படிப் படியாக DL வரை குறைக்கப்படுதல் வேண்டும். துயர பாவனையில் பல்வேறு நிலைகளில் அவர்கள் நிற்கிறர்கள்.)
(DR இலிருந்து CC வரை ஆண்கள் வரிசையாக நிற்கிறர் கள். அவர்கள் வீரமுடன் நெஞ்சை நிமிர்த்தி முன்ணேறும் பாவனையில் நிற்கிறர்கள். அனைவரும் உறை நிலையில் நிற்க மேடையின் இருபக்கங்களிலுமிருந்து மேடையின் DC க்கு வந்த இரண்டு எடுத்துரைஞர்கள், பின்வரும் பாடலைப் பாடி அபிநயிக்கிருர்கள்.)
(பாடல்) கதை ஒன்று சொல்ல நாம் வந்தோம் - இங்கு
கதை ஒன்று சொல்ல நாம் வந்தோம்.
உலகத்தில் பெண்கள் சரிபாதி - இந்த ஒருபாதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. உண்மை இதைக் கூறத்தானே - அந்த உமையாளைச் சிவன் ஒருபாகமாய்க் கொண்டான்.
a w a கதை ஒன்று . . .
ஆண்களொடு பெண்கள் சரிசமமாய் - நின்று அவர்களொடு சேர்ந்து கடமைகளைச் செய்தால்
சமூகத்தில் மலைபோல நின்று - நம்மை தடுக்கின்ற சகலதையும் தவிடுபொடி செய்வார்.
* * * * r ) { கதை ஒன்று .
ஆண்கள் அனைவரும் சேர்ந்தே - தனியே அரும்பாடு பட்டுமே முடியாத செயலை பெண்களின் துணைகொண்டு செய்த - அந்த பெரியதோர் செயலொன்றைக் குறியீடாய்க் கொண்டு
. கதை ஒன்று .
19

Page 23
துரைஞர்
எடுத் துரைஞர்
ஆண் 1:
20
நீண்டதோர் பயணத்தை மக்கள் - அன்று நிகழ்த்தினர் நீண்ட நெடும் பாதையில் ஓர் நாள்
(இம் மேல்வரும் பாடலுக்கு எடுத்துரைஞர் DL இல் நின்ற படி அபிநயிக்கிறர்கள். *ஓர் நாள்’ என்று உரக்கக் கூறி முடிந்ததும், அசையாது உறை நிலையில் நின்ற ஆண்களும் பெண்களும் முன்னும் பின்னும் அசையத் தொடங்குகிறர் கள். பாட்டு தொடர்கிறது. மேடையில் அசைந்துகொண் டிருந்த மக்கள் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள்.)
(வசனத்தில்) பாதையின் நடுவிலே நின்று - அங்கு பயணத்தைத் தடுத்ததே நீண்டதோர் மலைதான்.
(மக்கள் மலையைப் பார்த்துப் பயந்த பாவனை; அச்சம். பின் னர், சோர்வுடன் பழையபடி உறை நிலையில் நிற்கிறர்கள்.)
(UTLs))
மலைதனை அகற்றவே - இந்த மக்கள் எல்லாம் சேர்ந்த செயல் ஒன்றன் மூலம் ஆண்களொடு பெண்கள் இணைந்தால் - இந்த அகிலத்தை மாற்றலாம் என்பதனைத்தானே
கதையாகக் கூற நாம் வந்தோம் - இங்கு கதையாகக் கூற நாம் வந்தோம். (எடுத்துரைஞர் மேடையை விட்டு நீங்குகிறர்கள். எடுத்துரை ஞர் சென்றதும், மேடையில் நின்ற ஆண்களுள் CC யில் றவர் மெல்ல அசைந்து தாளத்துக்கு ஏற்ப DC க்கு வரு கிறர். DL பக்கம் திரும்பிப் பார்க்கிருர். நீண்ட தொரு பாதை என்று அவரது முகபாவமும், அபிநயங்களும் சபை யோருக்கு உணர்த்த வேண்டும்.) (பாடல்) நீண்ட பாதை - மிக i66 foru Lut7605 நீண்ட பாதையில் - தனியே பயணம் செய்கிறேன்.
ஆண்மகன் நானே - எனக்கு ஆரும் வேண்டாமே தனியே செல்வதால் சரியான இன்பமே.

(DL பக்கம் நடந்து சென்ற ஆண்மகன். இடையில் ஏதோ வழி மறைத்திருப்பதை உணருகிருர். அதனை ஸ்பரிசித்துப் பார்க்கிறர். அதனைச் சுற்றிவந்து பார்க்கிறர். அசைத்துப் பார்க்கிறர். மிகப் பலம்கொண்டமட்டும் அசைத்துப் பார்க் கிருர், முகத்திலே முடியவில்லையே என்ற ஏக்கமும் சோர் வும். பின் DC க்கு வந்து நின்று சபையைப்பார்த்துப் பாடுகிறர்.)
ஆண் 1: (விருத்தம்)
வழியிலே நிற்குமந்த மலைஒன்று பாதைதன்னை வழி மறைத்திருப்பதாலே பயணத்தைத் தொடர ஏலா. தனியணுய் மலை அகற்றும் சக்தியே எனக்கு இல்லை. ஆண்களைத் துணைக் கழைத்து அகற்றுவேன் மலையை நானே.
(ஆண்களிடம் வருகிறர். வரிசையாக நிற்கும் ஆண்களைத் தொட்டு உசுப்பி விடுகிறர். பின் CC யில் நின்றபடி ஆண் களை நோக்கிப் பாடுகிறர்.)
ஆண் 1: (விருத்தம்)
என்னரும் நண்பர் மாரே இச்செய்தி செவியிற் கொள்வீர் பாதையை அடைத்துக் கொண்டு பர்வதம் நிற்குதங்கே, ஆதலால் நீங்கள் இங்கு ஆண்மக்கள் திரண்டு வந்து அகற்றுவீர் மலையை நாங்கள் அரும் பெரும் பயணம் செய்ய,
(ஆண்கள் நிமிர்கிருர்கள், தங்களுக்குள் கதைக்கிறர்கள் ஒரு முடிவுக்கு வந்த முகபாவம். பின், மேடையின் DR க்கு வந்து பிக்கான், மண்வெட்டி, அலவாங்கு, கயிறு, கம்பு
முதலியவற்றைத் தூக்குவதுபோல பாவனை செய்கிறர்கள். பின் ஒன்றுதிரள்கிறர்கள். பின்வரும் பாடலுக்கு அணி வகுத்து மலையைநோக்கி ஆண்கள் மாத்திரம் வருவதை நெறியாளர் தம் கற்பனைக்கியையக் காட்சிப்படுத்தலாம்.)
2

Page 24
ஆண்கள்
22
(u (TLs))
(காபிராக ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது.) வலிமை மிக்க ஆண்கள் நாங்கள் ஒன்று சேர்ந்தனம் வழியடைத்த மலை தகர்க்க வழி நடந்தனம்.
2 2 2 2 /கக க கஸ / கமதப/
1
கக க ரீஸ / ரீ; /
2 2. 2 2 /கக க கஸ / கமதப|
11, 2
/கக க ரிநீ / ஸா, /
வழிதடுக்கும் மலை எமக்கு துரசுஅல்லவோ - அதன் வலி அடக்கி வெற்றி கொள்ளல் லேசு அல்லவோ?
--area -س-- " /ககமபப / பப நிபப /
22 |ւյւյքիյի / Gion; /
/ஸ்ஸ் ப்ரி நிஸ் / தநி பம /
1 7கம நி பம க ரிஸா /
கல்லுடைக்கும் ஆயுதங்கள் கரத்தில் ஏந்தினம் கன உயர்ந்த மலை தகர்க்க வழி நடந்தனம்,
2 2 2
கக க கஸ / கமதப / 1 : 1. . . -
|கக க ரீஸ / ரீ /
2 2 2
/கக க கஸ/ கமதப / 1 1 2 -
/கக க ரி நீ 7 ஸா

III (GA துரைஞர் 13
ஆண்கள் ஒன்று சேருவோம் அந்தமலை தூளாக்குவோம் வழியடைத்த மலை தகர்த்து வழி சமைத்துக் காட்டுவோம்.
2 2 /நிஸ் ரிநி / ஸ்ஸ்ஸ்ா /
2 2 /நிஸ்ரிரீ / ஸ்ஸ்ஸ்ா /
2 /ஸ்ஸ்ரி நிஸ் / தநிபம/
1
/கம் நிபம/ கரிஸா
(அணிவகுத்துச் சென்றவர்க்கு முன்னுற் தலைமைதாங்கிச் சென்ற ஆண் 1 மற்றவர்களை நிறுத்தி மேடையில் DL இல் நின்ற மலையைக் காட்டுகிறன். அந்நேரம் DLஇன் ஓரத் திற்கு வந்து எடுத்துரைஞர் ஆண்களைக் காட்டிப் பாடுகின் றர். அப்பாடலுக்குத் தக மேடையில் அபிநயம் நடை பெறுகிறது.)
(விருத்தம்) வழியினை அடைத்து நிற்கும் மலையினைக் கண்டார் கண்டு மயங்கினர்; எனினும் தங்கள் வலிமையின் துணிவிஞலே பல படத் திரண்டு, தாங்கள்
பற்றிய கருவி கொண்டு
மலையினைத் தகர்க்கலானுர் மாபெரும் ஆண்கள் கூட்டம்,
(மலையைத் தகர்த்து எறிவதற்காண பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறர்கள்.
- சிலர் மலையை அசைப்பதுபோல பாவனை புரிகிறர்கள்.
- சிலர் பிக்கானுற் குத்தித் தகர்ப்பதுபோல பாவனை
புரிகிறர்கள்.
- சிலர் மலையை நெம்புகோல் கொடுத்து நெம்புவது
போல அபிநயிக்கிறர்கள்.
23

Page 25
- நெறியாளரின் கற்பனை இங்கு விரியலாம், LDŽIsusomuu அகற்ற முழுமுயற்சி பண்ணுகிறர்கள் என்பது காட்சிப் படுத்தப்படவேண்டும். இறுதியிற் சோர்வடைந்து மெல்ல மெல்ல அசைந்து வந்து மேடையில் DR இல் ஆண்கள் அனைவரும் குழுமி அமர்கிறர்கள். ஆண் 1 மாத்திரம் மலையின் அருகில் யோசித்தபடி நிற்கிறன். வயலினில் சிந்தனையை வெளிப்படுத்தும் உணர்வு நிரம் பிய இசை, இசைக்கப்படுகிறது. இசையின் இடையில் உட்கார்ந்திருக்கும் ஆண்களுள் ஒருவன் எழுகிருன் பின்னுல் வரிசையாகச் சோர்ந்தபடி நிற்கும் பெண்களைப் பார்க்கின்றன். யோசிக்கின்றன். பின் மீண்டும் DRக் குத் தன் நண்பர்கள் மத்தியில் வந்து கூறுகிறன்)
ஆண் 2 (பாடல்) இராகம் : ஆனந்தபைவி
ஆண் 3:
பெண் 1:
நான் ஓர் உபாயம் சொல்லுவேன் நண்பரே கேட்பீர் நானுேர் உபாயம் சொல்லுவேன். அதோ பார் தனியாய் நிற்கும் அந்த எம் பெண்கள் தம்மை எம்மோடு சேர்த்துக் கொண்டு இந்த மலைகள் தமைத் தகர்க்க முன்வருவோம்.
(இருந்தபடியே பாடத் தொடங்கி, பின் எழுந்து பாடுகிறன்.) என்ன கதை நீர் பேசுகிறீர்
எனது நண்பா
என்ன கதை நீர் பேசுகிறீர்?
பெண்கள் எங்காகிலும் ஒன்ருய் திரண்டு பெரும் காரியம் செய்து உள்ளாரா? வலிமை குறைந்தோர் பாவம் வாயில்லாச் சிவன் அவர் எதுவும் செய்யமாட்டார்
இக்கதை விட்டு நீர் வேறுகதை கூறுவீர்.
(இத்தனையையும் ஆரம்பத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தன் இடத்தில் நின்றபடி ஆண்களை நோக்கிப் பாடுகிறள்.)
இல்லை என் நண்பரே கேட்பீர்
நாமும் தான் இங்கே ஓர் சக்தி அறிவீர்.

GLT 3
ஆண்கள் அன வரு
எம்மையும் சேர்த்தாற் தான் எதையும் நீர் சாதிப்பீர்கள்
இல்லாவிடில் தனியே எதனையும் செய்யமாட்டீர் தோல்வியே அடைவீர்கள்.
(பெண் 2 நின்ற இடத்திலிருந்து ஆண்களுக்கருகில் வந்து பாடுகிருள்.)
உண்மைதான் எம் நண்பர்களே
இதை உணர்வீர் உண்மைதான் எம் நண்பர்களே.
உலகில் பெண்கள் இனம் சாதித்த காரியங்கள் ஒன்ரு இரண்டா உரைக்க மாபெரும் சக்தியான மாதரை நீக்கிவைத்து மலையை வெல்ல ஏலாது வாருங்கள் அனைவரும் இணைந்துடன் செல்லுவோம்
(ஆண்கள் அனைவரும் தமக்குள் கதைக்கிறர்கள். - யோசிக்கின்றர்கள்
- தீர்மானிக்கிறர்கள்)
உண்மைதான் எம் நண்பர்களே
நீங்கள் உரைத்தது உண்மைதான் எம் நண்பர்களே
அனைவரும் ஒன்ருகுவோம் ஆண் பெண் பேதம் தகர்ப்போம். பாதை தடுத்து நிற்கும் பாழும் மலையினை வெற்றியே கொள்ளும்,
ஆண் பெண் அனைவரும்: எல்லோரும் ஒன்ருய்த் திரள்வோம்
பமலைதகர்க்க எல்லோரும் ஒன்ருய்த் திரள்வோம்
( ஆண்கள் பெண்கள் அனைவரும் பேதமின்றி ஒருவர் பின் ஒருவராய் அணிவகுக்கிறர்கள். மக்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது. மேடை முழுவதும் அணிவகுக்கிறர்கள்)
25

Page 26
கோரஸ் ( அணிநடைப் பாடல்)
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அ?னவரும் ஆண்களோடு பெண்கள் இங்கு ஒன்று சேர்ந்தனம். அதி உயர்ந்த மலை தகர்க்க வழி நடந்தனம்.
கோரஸ் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும்: வழி தடுக்கும் மலை எமக்கு
தூசு அல்லவோ - அதன் வலி அடக்கி வெற்றி கொள்ளல் லேசு அல்லவோ?
கோரஸ் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தாம் - Glasiti தகிட தகிட, தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும் புதிய சக்தி பெற்ற நாங்கள் புறப்படுகின்ருேம். இந்த இணைப்பில் எதிர்க்கும் எதையும் தகர்த்து விடுகிருேம்
கோரஸ் : தகிட தகிட தகி- தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும் கல்லுடைக்கும் ஆயுதங்கள்
கரத்தில் ஏந்தினேம் கன உயர்ந்த மல் தடுக்க வழி நடந்தனம்

கோரஸ் :
எடுத் துரைஞர்
தகி, தகிட தகிட தகிட தகிட தகிப. தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
(மலைக்கு அருகில் ஏற்கனவே யோசித்துக் கொண்டு நின்ற ஆண் 1 அணி வகுப்பைக் காண்கிறர். )
- மகிழ்ச்சியடைகிறர் - மலையைப் பெண்களும் ஆண்களும் சூழ்கின்றனர். - திட்டமிடுகின்றனர். - மலை அகற்றும் முயற்சிகள் நடைபெறுகிறது.
உக்கிரமான ஆட்டம் நடைபெறுகிறது.
(இதற்கான ஆட்டக் கோலங்களை நெறியாளர் தம் கற் பனைக்கு ஏற்ப ஆக்கலாம்.)
- மலை தகர்க்கப் படுகிறது
வெற்றிக் களிப்பில் ஆண்களும் பெண்களும் கைகோர்த்து ஆடுகின்றனர்.
திரை மெல்ல மெல்ல மூடப்பட மூடிய திரைக்குமுன்ஞல் எடுத்துரைஞர் இருவரும் தோன்றிப் பின்வரும் us L2s) பாடி அபிநயிக்கின்றனர்.)
ஆண்களோடு பெண்கள் இங்கு ஒன்று சேர்ந்துமே அற்புதங்கள் செய்த கதை மேடையிட்டனம். இந்த நிலை நமது நாட்டில் ஏற்படுத்தவே இங்கிருக்கும் இளைஞர்களே நீங்கள் வருவீர்.
(திரை மீண்டு திறபடுகிறது. மேடையில் நடிகர் அனைவரும் அரை வட்டவடிவில் நிற்கிறர்கள். எடுத்துரைஞர்களும் அவர்களுடன் இனைகிறர்கள். மீண்டும் திரை மெல்ல மெல்ல மூடுகிறது)
திரை
27

Page 27

நம்மைப் பிடித்த பிசாசுகள்
(மோடி நாடகம்)

Page 28
எழுதியது - மாசி, 1987 மேடையேற்றம் 09-03-1987 நெறியாள்கை : சி. மெளனகுரு:
நாடக மாந்தர்
பாரதி இருவர் மாந்தர் பதின்மர் பிசாசுகள் எழுவர் பூசாரி ஒருவர்

மக்கள்
(வயலினில் பூபாள ராகத்தின் இசை மீட்டப்பட, திரை மெல்ல மெல்லத் திறக்கிறது. மேடையில் UC யில் உயர்ந்த பீடத்தின்மீது வலது கையை மேலே உயர்த்தி, மறுகையில் ஒரு நூலைப் பிடித்தபடி கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் பாரதியார் போலச் சிலையாக நிற்கின்றர். அவரின் காலடி யில் உள்ள சிறு பீடத்தில் ஒரு கால்மீது மறுகாலைப் போட்ட படி எங்கோ வெறித்துப் பார்த்த பாவனையில் இன்னுெரு வர் பாரதியார்போல் சிலையாக இருக்கிறர். DL இலிருந்து UC வரை நால்வரும் DR இலிருந்து UC வரை நால்வரும் பாரதியாரைப் பார்த்தபடி கையை உயர்த்தியவண்ணம் வேண்டுதல் பாவனையில் உறைநிலையில் நிற்கிருர்கள். இன் னும் இருவர் DR இலும், DL இலும் வரிசையாக நிற்பவர் கட்கு எதிரே சபையைப் பார்த்தபடி வேண்டுதல் பாவனை யில் உறைநிலையில் நிற்கிறர்கள். பூபாள இசைக்கு திரை திறந்து முடிந்ததும் அனைவரும் பாடலைப்பாடி அபிநயிக்கி ருர்கள். பாடலுக்குத்தக அழகாணமுறையில் மேடைக் கோலங்கள் ஆக்கப்படவேண்டும். அது நெறியாளரின் கற் பனையைப் பொறுத்தது. ஒவ்வொருபாடலையும் ஆறுதலாக வும் விரைவாகவும் பாடுவதன்மூலம், ஆட்டக்கோலங்களை அழகாக உருவாக்குவதன் மூலம் கருத்துக்கும் அழுத்தம் தரலாம்.)
(பாடல்)
பாரதியே எங்கள் பாரதியே பாரத நாட்டின் கவிக்குயிலே பாருக்குள் யாரும் சமம் எனக்கூவிய பாரத நாட்டின் எரிமலையே (மேலுள்ள பாடலை விரைவாகப் பாடியபடி இடம் மாறுகிறர் கள்)
பாரதியே இங்கு வாருமையா - எங்கள் பாரின் நிலை நீயும் பாருமையா நாறிக் கிடக்குது நாடு ஐயா - இங்கு நாளும் நடக்குது கேடு ஐயா.
(விரைவாகப் பாடியபடி இடம் மாறுகிறர்கள். மேடையின் வலது புறம் நின்றேர் UL இல் நின்று பாட இடதுபுறம் நின்றேர் மேடையின் DR இல் வரிசையாக நின்று கீழ் வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள், டிஸ்கோ நடனம் ஆடலாம்)
31

Page 29
32
அந்நிய நாட்டு மோகம் கடிந்தாய் அன்று நீ பேதங்கள் வேண்டாமென்ருய் இந்நிலை இன்று சென்றதையா - எம்மை என்றும் பழமையே வென்றதையா.
அந்நிய நாட்டு மோகம் எமைப் பிடித்து
ஆட்டுதையா மனம் வாட்டுதையே சின்னத் தனமான பேதங்கள் எம்மிடை வாழுதையா இருள் சூழுதையா.
(DR இல் நின்ருேர் வரிசை கலைந்து குழம்பித் தமக்குள் பிரிந்து நின்று சண்டையிடுவதுபோலப் பின்வரும் பாட லுக்கு அபிநயிக்கிறர்கள்)
யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் மன்னுரான் வன்னியான் மலைநாட்டான் என்னும் பிரதேச பேதங்கள் எம்மிடை உள்ளதையா ஆம் உள்ளதையா.
(DR இல் நின்றேர் ரியூட்டரி ஒன்றில் படிப்பதுபோல பின் வரும் பாடலுக்குப் பாவனைபுரிகிறர்கள். UL இல் நின்றேர் DL க்கு ஓடிவந்து சிலர் அடிப்பவர்கள்போல் அபிநயிக்க சிலர் அடிபடுபவர்போல அபிநயிக்கிருர்கள், அவர்களை எட் டிப் பார்த்துவிட்டு DR இல் நின்றேர் எவ்வித கவலையு மின்றிப் படிக்கிறர்கள்.) உத்தியோக மோகம் உள்ளதையா - நாம் ஒடி ஒடிக் கல்வி வாங்குகிருேம் மற்றவர்கள் துயர் என்றும் அறியாத மாக்களாய் நாம் இங்கு வாழுகிருேம். (பழையபடி DL இல் நின்றேர் UL க்குச் சென்று நிற்க DR இல் நின்றேர் ஒருவர் மாப்பிளையாகிப் பின்வரும் பாட லுக்கு அபிநயிக்க இன்ஞெருவர் பெண்ணுக மாறிச் சோக மாக அமர்ந்திருக்க ஏ. யோர் மாப்பிளை விட்டாராகவும் பெண்வீட்டாராகவும் அபிநயிக்கிருர்கள்)
சீதனம் என்னும் சின்னத்தனம் - இன்னும் செல்லவில்லை அதை வெல்லவில்லை, சோதனைக் காலத்தில் வாழுகிருேம்- ஐயா வேதனையோடு நாம் கூவுகிருேம்.

பாரதி:
மக்கள்:
-5
(விரைவாகப் பாடியபடி ஆரம்பத்தில் பாரதிமுன் இருந்த நிலையில் இருக்கிறர்கள். சிலையாக கால்மடித்து கீழே
அமர்ந்திருந்த மக்களைப் பார்க்கிறன். பின் கீழே வருவன வற்றைக் கூறுகிறன்)
(உரத்த வசனத்தில்)
கும்மியடி
கும்மியடி!! கும்மியடி தமிழ் தாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின தன்மை கண்டோமென்று கும்மியடி.
(திடீரெனச் சிலையாகிய மக்கள் பயத்துடன் நம்மைப் பிடித்த பிசாசுகள், நம்மைப் பிடித்த பிசாசுகள் என்று மெல்ல மெல்ல, கலவரத்துடன் DL பகுதியைப்பார்த்து உச்சரிக்கிறர் கள். அச்சமயம் ஒரு பூசாரி தலைகுலைய உருவேறியபடி கையில் உடுக்குடன் DL க்குப் பாய்கிறன். உடுக்கை ஒரு தடவை உரத்து அடிக்கிறன், கையை நீட்டி "ஹாம்.வா? என்று ஆணையிடுகிறன். மேடையின் உட்புறம் நின்று பிசா ககள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்ருக வருகின்றன. கீழ் வரும் தாளக் கட்டுக்களையும் பாடலையும் பிசாசுகளும் மக்க ளும் மாறிமாறிப் பாடிப் பிசாசுகள் மேடையிற் பல ஆட் டக் கோலங்கள் புரிகின்றன. ஆட்டமுறைகளை அமைப்பது நெறியாளரின் கற்பனையைப் பொறுத்தது.)
தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி கூட்டம் வருகுதே - பிசாசு கூட்டம் வருகுதே
நாட்டில் இன்று தமிழர் தம்மை வாட்டி வாட்டி ஆட்டம் போடும்
கட்டம் வருகுதே - பிசாசு கூட்டம் வருகுதே. நாட்டில் இன்று தமிழர் தம்மை வாட்டி வாட்டி ஆட்டம் போடும்
32-A

Page 30
பிசாசுகள்
மக்கள்
assassit:
மக்கள்
பிசாசுகள்:
மக்கள்
பிசாக 1:
32Es
கூடடம் வருகுதே பிசாசு
கூட்டம் வருகுதே. தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி. மனுசரைப் பிடிப்போம் - அவரை விலங்கு ஆக்குவோம் மனிசப் பண்பைத் தோண்டி எறிந்து மிருகக் குணத்தைத் தலைக்குள் வைப்போம். கூட்டம் வருகுதே - பிசாசுக் கூட்டம் வருகுதே தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி பெரியவனைக்கூட - வெறும் பேயன் ஆக்குவோம் பேயன் மொக்கன் முட்டாள் மாரை பெரியவராய் மாற்றி வைப்போம்.
கூட்டம் வருகுதே - பிசாசுக்
கூட்டம் வருகுதே
தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி. மனதுக்குள் புகுவோம் - மக்கள் மனதையே கெடுப்போம் கலகம் மூட்டி விலக்கி வைத்து கொலைகள் செய்யும் படியும் செய்யும் கூட்டம் வருகுதே - பிசாக
கூட்டம் வருகுதே
தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி (பிசாசுகள் மேடையில் DR இலிருந்து DL ல் வரை வரிசை யாக முழங்காலில் நிற்கின்றனர், பூசாரி பின்னுல் உடுக் குடன் நிற்கிறன். ஒவ்வொரு பிசாசும் எழுந்து ஒரு தாள லயத்துடன் தம்மை அறிமுகம் செய்கின்றன)
இங்கு வாழுகிற தமிழர் தம்மையே என்றுமே பிடித் தாட்டிடும் பழமைமோகம் எனும் மிகவும் பேர்பெறும் பயங்கரமான பிசாசுதான்

பிசாசு 2 :
ஏனைய பிசாசுகள்
sns. 3 3
62 u. பிசாககள்:
ügmg后4:
62 Tu பிசாசுகள்
Gastrasi 5:
BrasoTu பிசாசுகள்:
ஏனைய பிசாசுகள்: (பிசாசு 1 ஐக் காட்டி)
பழமை மோகம் எனும் மிகவும் பேர்பெறும் பயங்கரமான பிசாசு இது.
(t)பாரின் (t)பாரின் (f)பாரின் என்றுதினம்
தமிழர் தம்மையே தம்முடை - சொந்த மண்ணை விட்டுமே என்றும் ஒட்டிடும் அந்நியமோகப் பிசாசு நான்.
(பிசாசு 2 ஐக்காட்டி) சொந்த மண்ணை விட்டுமே
என்றும் ஒட்டிடும் அந்நிய மோகப் பிசாசு இது.
என்ரவன் அவன் என்ரவன் மற்றவன் அவன் பிறத்தியான் பிறத்தியான் என்று பிரித்துப் பார்த்திடும் பிரதேச மோகப் பிசாசுநீான்.
பிறத்தியான் என்று பிரித்துப் பார்த்திடும் பிரதேச மோகப் பிசாசு
உலகில் மனிதனை உயர்த்திவைப்பது உண்மையில் உத்தியோகமே உத்தியோகமே பெரியதன அலையும் உத்தியோக மோகப் பிசாசுதான்.
(பிசாசு 4 ஐக் காட்டி) உத்தியோகமே பெரிதென அலையும் உத்தியோக மோகப் பிசாசு இது.
அயலவன் படும் துயர்கள் கண்டுமே அசைந்திடாதவன் நானடா மற்றவன் துயர் என்றுமே காளு சுயநலமோகப் பிசாசு இது.
(பிசாசு 5ஐக் காட்டி) மற்றவர்துயர் என்றுமே காணு சுயநல மோகப் பிசாசு நான்
32-C

Page 31
ušlarпат 6:
sy2ru
பிசாசுகள்:
பூசாரிே
32-D
கொண்டுவா பணம் கொண்டுவா வீடு கொண்டுவா, காரு கொண்டுவா நகைகள் கொண்டுவா, டொனேசன் கொண்டுவா சீதனம் அதிகம் கொண்டுவா சீதன மோகம் தன்னை ஊட்டிடும் சீதனமோகப் பிசாசு நான்.
(பிசாசு 6ஐக்காட்டி) சீதன மோகம் தன்னை ஊட்டிடும்
தன மோகப் பிசாசு இது,
(பிசாசுகள் கூறிவிட்டு மெல்ல மெல்ல அமைதியடைந்துபின் பூரண அமைதி நிலையில் நிற்கின்றன. பின்னுல் நின்ற பூசாரி உடுக்கடித்து அனைத்துப் பிசாசுகட்கும் உருவேற்று கிறன். அவன் சொல்லச்சொல்ல பிசாசுகள் மெல்ல மெல்ல உருப்பெற்று கடைசி வரிகளைப் பூசாரி கூறியதும் 'ஹா" என்று எழுகின்றன.) (உடுக்கை அடித்தபடி மந்திர உச்சாடனத் தொனியில்) ஓம்! நீம் ரீம் கிறீம்
எழுக எழுக பிசாசுகள் எழுக! அழித்து மக்களைக் குழப்ப எழுக!
பழமை, அந்நிய மோகப் பிசாசே! பார்த்துப் பார்த்து மெல்ல எழுக! உத்தியோகமே ஒங்கி நீ எழுக! பிரதேச மோகமே பெரிதாய் எழுக! சுயநலமே நீ சுறுக்காய் எழுக! சீதன மோகமே சிறக்க நீ எழுக! எழுக எழுக உயர்ந்து எழுக! இந்த மக்களைப் பிடிக்க எழுக! ஒடிவா ஓடிவா கெதியாய் ஒடிவா! உலுப்ப மக்களைக் கெதியாய் ஓடிவா! ஒடிவா! ஒடிவா சீக்கிரம் ஒடிவா ஒடி வந்திந்த உடலில் ஏறு ஏறு ஏறு சீக்கிரம் ஏறு எல்லாரையும் இங்கு கெடுக்க ஏறு எழுக எழுக சீக்கிரம் எழுக! எழுக எழுக சீங்கிரம் எழுக! எழுக எழுக சீக்கிரம் எழுக!!!

(பிசாசுகள் உருவேறி எழுந்து மக்களை மேடைமுழுதும் கலைக் கின்றன. மக்கள் சிதறி ஓடுகிறர்கள். பிசாசுகள் சலைத்துப் பிடிக்கின்றன. மக்களைத் தம் கட்டுப் பாட்டுக்குள் கொணர் இன்றன. மக்களைப் பிடித்த பிசாசுகள் மேடையில் அவர்களை DR இலிருந்து DL வரை வரிசையாக வைக்கின்றன. பின் அவர்களுக்குப் பின்னுல் நின்று தம்மிஷ்டத்திற்கு ஆட்டுகின் றன.
பிசாசுகள் இரண்டுகைகளாலும் டயருக்குக் காற்றடிப்பது போல அடிக்க, மக்கள் ஊதிப் பெருத்துக் கஷ்டப்படுவது போல அபிநயிக்கிறர்கள்.
- பின்னர் பிசாசுகள் தமது கைகளால் மக்களின் தலையைத்
திருப்புவது போல பாவனை செய்ய மக்களின் தலைகள் பிசாசுகள் சுழற்றும் பக்கமெல்லாம் சுழல்கின்றன.
- பிசாசுகள் கையைச் சுழற்ற மக்களும் சுழல்கிறர்கள் -
- பிசாசுகள் தாளம்போட மக்களும் அவற்றின் பின்ல்ை கை
பிசாசுகள்:
மக்கள்
பிசாககள்:
ஏந்தியபடி எழுந்து ஆடிக்கொண்டு சென்று மேடையின் CCயில் பிசாசுகள் மக்களைப் பார்த்தபடி வட்டமாய் நிற்க பிசாசுகளைச் சூழ பிசாசுகளைப் பார்ர் தபடி மக்கள்நிற்க பின்
வரும் உரையாடல் பாடலில் நடைபெறுகிறது
இங்கிருக்கும் மக்களை நாங்கள் எல்லாம் - பிசாசுகள் நாங்கள் எல்லாம் - எங்கள் இஷ்டப்படி போட்டு ஆட்டிடுவோம் - ஆமாம் ஆட்டிடுவோம்
எம்மை ஆட்டும் பிசாசுக் கூட்டங்களே - பிசாசு கூட்டங்களே - நீங்கள் எம்மை விட்டுத் தூர ஒடுங்களேன் - ஆமாம் ஒடுங்களேன்.
ஒட நாங்கள் இங்கு
வரவில்லையே - பேயர்காள் வரவில்லையே - உம்மைப்பிடித்து உலுப்பவல்லோ நாங்கள் வந்திருக்கோம் - ஆமாம் வந்திருக்கோம்.
32-E

Page 32
Lpä35dhi:
பிசாசுகள்
(பாரதியைப்பார்த்து)
பாருமையா பாரதி
பாருமையா - பாரதி
Lunroj68) Lourt - Larrs படுத்தும் பாட்டை நீயும் பாருமையா - ஆமாம் LJrr(56olounr.
(பாரதியைப்பார்த்து கேலியான பாவனையில்) வாருமையா பாரதி
வாருமையா - நீயும்
வாருமையா - என்ன வழி இவர்க்குச் சொல்லப் போறிர் ஐயா - நீயும் போறிர் ஐயா,
(மக்கள் சோர்ந்து கீழே அமர்கிறர்கள். அவர்களைப்பார்த்து பிசாசு 1 பாடுகிறது.)
பிசாசு:1 ஒஹோஹோ மக்கள்மாரே
32-F
உங்களைப் பிடித்து விட்டோம் என்னதான் முயன்ருலும் நீர்
எம்மிடம் தப்ப ஏலாது இப்போது நாங்கள் செல்வோம் இன்னும் பலரை நாம் பிடிக்கவேண்டும் மீண்டும் நாம் வருவோம் - வந்து மிகமிகப் பிடித்துக் கொள்வோம்.
(தாந்திமி திமி தெய்யக தத்துமி என்ற தாளக் கட்டுக்கு ஏற்ப ஆடியபடி மேடையைவிட்டு பூசாரியும் பிசாசுகளும் செல் கின்றனர்.) (பிசாசுகள் சென்றதும் சோகபாவத்துடன் விரக்திநிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். அவர்களுள் ஒரு வன் மெல்ல மெல்ல எழுகிறன். பாரதி சிலையைப் பார்க் கிறன்- உருக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடுகிறன்.)
(விருத்தம்) பாரதி எங்கள் வாழ்வைப் பார்த்தாயா, பிசாசுக் கூட்டம் ஏறியே எமை மிதித்து இப்படி யாக்குதையா.

இந்நிலை தொடர்ந்து சென்ருல் எம்நிலை என்ன ஐயா?
மீளவும் இங்கு வந்து மீட்பொன்று தாரும் ஐயா.
(விருத்தம் முடிய பாரதி சிலையைச் சூழநின்று மக்கள் அனைவரும் பஜனை பாணியில் பின்வருமாறு கூறித் தம்மை மறந்து பஜனை புரிகின்றனர்.)
மக்கள்: பாரதியே வருவாய் - மீண்டும்
பாரதியே வருவாய்
(பஜனை மெல்ல மெல்ல உச்சநிலைக்குச் செல்கிறது. பாரதி யின் நின்ற நிலையில் நின்ற சிலை மெல்ல அசைகிறது. அதன் கண்கள் திறக்கின்றன. மக்களை வீரத்துடன் அது பார்க்கிறது. பின் பாடுகிறது.)
பாரதி 1: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
D由卒6T 、...<秘邻呜...·<器<器寺丛·<钴=毯=器 பாரதி 1: உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
Dä5ár 呜<鹦马·<器凯<器... °<器名...·<毯器号, பாரதி 1: இச்சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்றபோதிலும்
D由乐air <弘°<器...·<烈等器... °鸟=器·<器、苓 பாரதி 1: அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பதில்லையே
D站乐ár;、...呜...呜勃...<塾名母 பாரதி 1 : நச்சை வாயிலே கொணர்ந்து
நண்பர் ஊட்டும் போதிலும் மக்கள்: அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே பாரதி 1: துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும் மக்கள்: அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே பாரதி 1: பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும் மக்கள்: அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்வையே
32-G

Page 33
பாரதி 1 3
(வசனத்தில்)
ஜெய் பராசக்தி
மாகாளி பராசக்தி வையமெல்லாம் காத்திடுக வல்லமை தாராயோ " இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
(பிடத்தினின்று கீழே இறங்கி வருகிறர். மக்களைப் பரிவுடன் பார்க்கிறர். மக்கள் வியப்புடனும் பக்தியுடனும் அவரைப் பார்க்கிறர்கள். பாரதி பாடுகிறர்.)
பாரதி 1 : (விருத்தம்)
32-H
என்றும் நான் விரும்புகின்ற என்னரும் மக்காள் உந்தன் ஏக்கத்தின் குரல் கேட்டெந்தன் உயிர் இங்கு வந்ததப்பா உங்களுக்காக என்றும் உருகி நான்பாடி வைத்த
urTTS) unTLáv 2 iš Fair பயம் தீர்க்கும் மருத்தே ஆகும்.
மாண்டவர் மீளார். உங்கள் துயர் தீர்க்க மற்ருேர் வாரார்.
ஈண்டு நீர் உணர்ந்து உங்கள் இறுகிய பிணைப்பினுலே உங்களைப் பிடித்து ஆட்டும் உயர் தரு பிசாசார் தம்மை ஒட்டவே ஒவ்வோர் வ ரும் பாரதி ஆகுவீர்கள்
(தோளிற் கிடந்த பைக்குள் இருந்து புத்தகங்களை எடுத்து வழங்குகிறர்)
(பாடல்)
பாரதி பாடல் தந்தேன் - அதில் பலபல கருத்துச் சொன்னேன் சிந்தனை செய்க மக்காள் - சிந்தித்தால் வழிகள் பல நீர் காண்பீர் இந்திக்கத் தெரியாவிட்டால்

(பாரதியார் பாடலை நிறுத்தி மக்களை உற்றுப்பார்த்து வச னத்தில் உரத்துக் கூறுகிற .) செத்துப்போ அதுவே நன்று.
(கூறியபின் விடுவிடென பீடத்தில் ஏறிப் பழையபடி சிலை யாகி விடுகிறர்.) (மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பாரதி பாடலைப் படிக்கி
ருர்கள்.)
upansas 1. DRagb sa isg,
(பின்வரும் பாடலைக்கூற சிலர் அவனை சூழநின்று ரசிக்கிறர் கள்.) அச்சமில்லை அழுங்குதல் இல்லை நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை பாவம் இல்லை பதுங்குதல் இல்லை ஏதுநேரினும் இடர்ப்பட மாட்டோம் கண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம் கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
மனிதன் 2: DC க்கு வந்து பின்வரும் பாடலைக் கூற மக்கள் அவனைச்
சூழ நின்று ரசிக்கிறர்கள்.)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணி இருப்பவர் பித்த மனிதரவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்றிங் கூதடா சங்கே. (மனிதன் 1. தான் முன்னர் கூறிய பாடலில் கண்டம் சிதறினும் அஞ்ச மாட்டோம் என்ற அடியிலிருந்து கடைசி அடிவ்ரை மீண்டும் கூறுகிறன்.)
மனிதன் 3 : (DL க்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைக்
சூழநின்று ரசிக்கிறர்கள்.) ஒன்று பட்டால் உண்டுவாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும். (மனிதன் 1 பழைய வரிகளை மீண்டும் உச்சாடனம் செய் கிறன்)
-0 33

Page 34
மனிதன் 4: (CCக்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைச்
மனிதன் 5:
vodkastir:
சூழ நின்று ரசிக்கிறர்கள்) மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ
(மனிதன் 1 பழைய வரிகளை மீண்டும் உச்சாடனம் செய்கிறன்)
(DCக்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைச் சூழ நின்று ரசிக்கிறர்கள்)
இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம் )א தனி ஒருவனுக்குணவில்லை எனில் - இந்த ஜகத்தினை எதிர்த்திடுவோம். (மனிதன் 1 பழைய வரிகளை மீண்டும் உச்சாடனம் செய்கிறன்) (மக்கள் அனைவரும் DR தொடக்கம் DCவரை வரிசையில்
அமர்ந்து கீழேவரும் சுலோகங்களை உச்சரித்த வண்ணம் தியானத்தில் இருக்கின்றனர்.)
அச்சம் இல்லை அச்சம் இல்லை ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அந்நிய மோகம் எதிர்த்திடுவோம் சுயநலப் பேயை வென்றிடுவோம் பிரதேச மோகம் போக்கிடுவோம் உத்தியோக மோகம் ஒட்டிடுவோம் சீதனப் பேயை விரட்டிடுவோம்,
(மக்கள் தியாணத்தில் இருக்கையில் பிசாசுகள் மெல்ல மெல்ல தமது பழைய ஆட்ட நடையில் வருகின்றன. மக்களின் பின்ஞல் வந்து நின்று முன்பு செய்த செயல்களை மீண்டும் செய்கின்றன.)
காற்றடிக்கின்றன க கை சுழற்றுகின்றன ை
தலையைத் திருப்புகின்றன - தாளம் போடுகின்றன.

- ஆனல் மக்களின் சுலோக உச்சரிப்பு மிகப்பெரிதாக எழுந்து
ஒலிக்கிறது
- பிசாசுகள் கலவரமடைகின்றன, மக்களுள் ஒருவன் எழுந்து பாடுகிறன். பிசாசுகள் பின்வாங்கி DL க்கு வந்து நிற்ன்ே
றன ை -
ஒமனிதன் 1 (பாடல்)
ஜயபேரிகை கொட்டடா - கொட்டடா ஜயபேரிகை கொட்டடா
(ஒருவன் எழுந்துநின்று பேரிகை முழக்குவதுபோல માpિ யிக்கிறன். இருந்த முக்கள் உற்சாகத்துடன் எழுகின்றர்கள். பாடிக்கொண்டு ஆடுகிறர்கள். பிசாசுகள் தமக்குள் கலவரத் துடன் கதைப்பதுபோல அபிநயிக்கின்றன)
பயமெனும் பேய்தனை அடித்தோம் - பொய்ம்மை பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் இயபேரிகை கொட்டடா - கொட்டடா
(மக்கள் ஆடியபடி பிசாசுகளை நோக்கி முன்னேறுகிறர்கள்.
பிசாசுகளும் தயாராகின்றன.
இருசாரருக்குமிடையே சண்டை நடைபெறுவதுபோல ஆட்டக் கோலங்களும், அசைவுகளும், அபிநயங்களும் அமைய வேண்டும்.
இறுதியில் மக்கள் திரண்டு பிசாசுகளைக் கலைக்கிறர்கள் பூசாரி எஞ்சுகிறர். பூசாரியும் கலைக்கப்படுகிறர். அனைத்தை யும் கலத்த மகிழ்ச்சியில் மக்கள் கைகோத்தபடி களிநடம்
புரிறேர்கள்)
தாக்கை குருவி எங்கள் இாதி - மீள் கடலும் மல்யும் எங்கள் கூட்டம் நோக்கும் நிசையெல்லாம் ராமன்றி வேறில்ை Cgrds Ggräsä 8Gdaurub.
gau Gudanas Garrul-L -IT -- கொட்டடா ஜயபேரிகை கொட்டவா,

Page 35
(ஆடிக்கொண்டிருக்க திரை மெல்ல மெல்ல மூடுகிறது. மூடியதிரை ஒருநிமிடம் தாமதித்து மீண்டும் திறக்கிறது. மேடை வெறுமையாகக் காட்சி தருகிறது. நாடகத்திற் பங்கு கொண்டோர் வரிசையாகக் கைதட்டியபடி ஜயபேரிகை கொட்டடா பாட்டைப் பாடியபடி வந்து அரைவட்ட வடிவில் நின்று சபைக்கு வணக்க முரைத்தபின்னர் வரிசையாகக் கை தட்டியபடி செல்கிறர்கள். திரை மெல்ல மெல்ல மூடுகிறது)
(பின்குறிப்பு: இந்நாடகத்தில் வரும் பாடல்களில் கும்மி யடி அச்சமில்லை அச்சமில்லை, அச்சமில்லை அழுங்குதல் இல்லை செத்தபிறகு, ஒன்றுபட்டால், மனிதர்உணவை, இனி ஒரு விதி ஜயபேரிகை கொட்டடா ஆகியவை மகாகவி பாரதியா
ரின் பாடல்களாகும்.)

மழை - நிருத்திய நாடகம் மேடையேற்றம் பற்றிய அபிப்பிராயங்கள்
மழை - நிருத்திய நாடகம் "விடிவு" என்ற பெயரில் 21. 10. 85 அன்று மேடையிடப் பட்டபோது பத்திரிகை கள் மூலமாகத் தெரிவிக்கப்பட்ட அபிப்பிராயங்கள்.
நாட்டிய நாடகம் விடிவு
யாழ். இந்து மகளிர் கல்லூரி அண்மையில் மேடையிட்ட விடிவு" என்ற நாட்டிய நாடகம் ஒரு புதுமைப் படையல்; பரீட்சார்த்த கலை ஆக்கம்,
இதனை ஆக்கி நெறியாள்கை செய்தவர், கலாநிதி சி. மெளனகுரு அவர்கள், நடன அமைப்பு பொறுப்பை அடையாறு லகீழ்மணன் மாணவி திருமதி வசந்தி குஞ்சிதபாதம் ஏற்றிருந்தார். சங்கீதரத்தி னம் திருமதி ஞானகுமாரி சிவநேசன், சங்கீதரத்தினம் திருமதி அம் பிகை பாலகுமார் என்போர் அமைத்த இசையமைப்பை மெருகூட்டினர். வயலின் இசை வல்லுநர் ஞானம்பிகை பத்தமசிகாமணி அவர்கள். தோற்கருவிகள் உட்பட புதிய பல வாத்தியங்களைக் கையாண்டு இசைக்கு ஊட்டம் கொடுத்தனர் கண்ணன் குழுவினர், இசை, நடனம் என்பவற்றில் துறைபோகிய ஐவர். நாடகம் வல்லான் ஒருவனின் வழி நடத்தவில் சங்கமித்து ஒத்துழைத்த பண்பிருக்கிறதே. மிகப் போற் றப்படவேண்டிய அம்சம்.
நாடகக்காரருக்கு பின்னே நாம் தொழிற்படுவதா? என்ற நோய் அன்று பல இசை நடனகாரரைத் தொற்றியிருந்தது. காத்திரமான கலைப்படைப்புகள் உருவாகுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சிங்களக் கல்ஞர்கள் பெரிது சிறிது பாராது கூட்டுமுயற்சியாய் இயங்கி இருபது
37

Page 36
வருடங்களுக்கு முன்னரேயே நல்ல பல அறுவடையை கரத்துறையில் ப்ெறத்தொடங்கிவிட்டனர். இத்தகைய கூட்டுமுயற்சி நம் மத்தியிலும் அண்மைக்காலத்தில் தலதூக்கியுள்ளமை, ஆரோக்கிய்மான சூழ்நில் யைச் சுட்டுகிறது. பலதுறை வல்லுனரின் சங்கமம், வலுவான் கல்ே LLLLLLLLSTL 0LMLMLTT LLTLLTLTT LLTTLTTTTL LLTL LEzLLLLLLL TTTTLG "விடிவு". பொருத்தமான கலைஞர் குழுவைக் கண்டுபிடித்து இவ்வாக் கத்துக்கு ஊக்கம் ஊட்டிய யாழ் இந்து மகளிர் கல்லூரி அதிபரை எவ்வளவும் பாராட்டலாம்
நிகழ்வு நிலையில் கலைவடிவம்
கதை சொல்பவர் கட்டியம் கூறுவோர் உட்பட நால்வர் மெல் லிய பரதநாட்டிய அசைவில் அரங்கில் தோன்றி, புதிய ஆக்கம் காட் டுவதாகப் பாடுகின்றனர். மழைத்துளி காணுது வாடும் மக்களைத் தொல் வில் பார்ப்பதாக ஊமம் செய்கின்றனர். துன்புறும் மக்கள் குழுவில் பதின்மர் பங்குகொண்டு, தவிப்பு நிலையைப் பரவவிட்டு, பாடி ஆடி மேடைக்கு நகருகின்றனர். பரதம், நாடக ஆட்ட அசைவுகள் இணை கின்றன. இந்தக் கட்டத்தில், தவிப்பு நிலையை உச்சத்துக்கு எடுத்துச் செல்ல இயக்குநர். மேடையிலேயே இருவரை சகானு, மோகனம் இரா கங்களில் உரையாடுவது போல இசைநாடக பாணியில் பாடவைக் கிருர், நாட்டிய நாடகத்தில் மேடையில் நிற்போர் ஆடுவதே அன்றி வாப் திறந்து பாட, பேச அனுமதிக்கப்படுவதில்லை. இது பண்டைய மரபு. இந்த மரபை இயக்குநர் இவ்விடத்தில் உடைக்கிருர். தவிப்பு உணர்வை சுவைஞர் உள்ளத்தில் பதித்திடவே இந்த உடைப்பு. இந்த நாட்டிய நாடகத்தில் இடம்பெற்ற ஒரு பொருத்தமான புதுமை இது வாகும்.
மழையை வருவிப்பதற்காக பல தொழிற்பாடுகள் நிகழ்கின்றன. யாகம் செய்தல், விஞ்ஞான முயற்சிகள், நிலம் தோண்டுதல் என்பன நடைபெறுகின்றன. ஊமம் முறையில் விமான ஓட்டம், கொம்பியூட் டர் தொழிற்பாடு என்பன காட்டப்படுகின்றன, அனைவரும் கூடி ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைவரை ஒன்ருக முயற்சிக்கும் கட்டம் நாடக பாணியில் எடுப்பாய் அமைகிறது.
தொடர்ந்து முகில்களாக ஆறுபேர் அசைந்து வந்தமை, மழை யாக நால்வர் உக்கிர நடையில் வந்து கதகளி ஆட்டத்தில் பல் வேறு பாவங்களைக் காட்டியமை உச்சக்கட்டமாய் அமைகிறது. и бар வேண்டி பாடி ஆடும்போது திருவெம்பாப் பாவும், மழை கொட்டும் கட்
38

டத்தில் பாரதியின் வேகம் மிகு பாடிலும் இசைக்கப்படுகின்றன. н வலாக நாட்டார் பாடல்களும் இடம் பேறுகின்றன. வெள்ளவிரிச் கம் கதகளி மூலமும் ஹாமமூலமும் காட்டப்படுகின்றது.
பரதம், கதகளி நாடகநடை, நாட்டுக்கத்து ஆட்டம், திருவாச கம், பாரதி பாடல். நாட்டார் பாடல் என பழைது புதிது எல்லாம் கலந்த வடிவில் வளர்க்கப்பட்ட நாட்டிய நாடகமே "விடிவு". பழை மைக்கு,ாடாக புதிது காணுதலை இந்நாட்டிய நாடகத்தில் காண்கி ருேம். பெரிய கதை இல்லை. சிறு நிகழ்வே படம்பிடிக்கப்படுகிறது. முடிவில் 32 மாணவ மலர்கள் வணங்கிய காட்சி புளதிக்கச் செய்தது. 32 மாணவிகளுக்கு புதிய பாணியில் கலப்பயிற்சி அளிக்கும் வாய்ப்பை நல்கிய கல்லூரி அதிபரின் கலைநோக்கை என் உள்ளம் வாழ்த்தியது. கலைஞர்கள் கூட்டுறவு புதுப்புனல் பாய்ச்சி நின்றது, நாட்டிய நாட கத்தில்,
ஏ. ரி. பொன்னுத்துரை “மேடை என்னும் பகுதியில்
ஈழமுரசு
39

Page 37
திக்குகள் எட்டும் சிதறி தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட - குறியீட்டுமுறையில் ஒரு நாட்டிய நாடகம்
மழைத்துளி காணுமல் துன்பப்பட்ட மக்களெல்லாம் கூடி முயன்று மழையையே கொண்டு வந்த கதை "விடிவு” நாட்டிய நாடகமாக யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் அண்மையில் நடித்துக் än Alilull-St.
நல்லூர் வட்டாரக் கல்வி வள நிலையமும், யாழ் இத்து மகளிர் கல்லுரியும் இணைந்து நடத்திய 'பாலர் பா அமுதம்" வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற கலைவிழாவிலே "விடிவு" இடம் பெற்றது.
இருபதாம் நூற்ருண்டுத் தமிழிலக்கியச் செயற்றிட்ட மாணவ ரிடையே நடத்திய குழந்தைக் கவிதைப் போட்டியில் முதன்மை பெற்ற ஏழு குழந்தைக் கவிஞரின் இருபத்தொரு பாடல்களைத் தொகுத்த “பாலர் பா அமுதம்” வெளியீட்டு விழாவும் அவ் விளம் குழந்தைக் கவிஞருக்கு பரிசளிப்பு விழாவும், பாராட்டுரைகளும் நிறைவெய்த அந் நூலின் சில கவிதைகளை இந்து மகளிர் ஆரம்ப பாட சாலை மாணவியர் அபிநயத்துக் காட்டினர். அவ்விளங் கவிஞர்களும், சிருர்களும் பாராட்டிற்குரியவர்கள்.
இவற்றின் முடிவில் “விடிவு” நாடகம். நாட்டியம், நாட்டிய நாடகம் என்பன மிளிர்வதற்கு அவற்ருேடு தொடர்புடைய எல்லோ ருக்கும் ஓரளவு கற்பனை வளம் அவசியமாகும், நாடகாசிரியர் நெறிப்ப டுத்துவோர் பாத்திரங்களை ஏற்போர் யாவரும் கற்பனை வளமுடையோ ராய் இருத்தலின் அவசியம் பற்றி விபரிக்க வேண்டியதில்லை. குறித்த கலா நிகழ்ச்சிகள் சம்பவங்களை வெறுமனே மேடையில் நிகழ்த்திக் காட்டுவனவல்ல. அவை மனித குலத்தின் இன்பதுன்பங்களையும், சிக் கல்களையும், பொருத்தமான பரிகாரங்களையும் குறியீடுகளால் உணர்த்தி நிற்பன. குறியீடுகளின் அர்த்தங்களை அடையாளங்காணக் கற்பனை வளம் அவற்றைப் பார்ப்போருக்கும் அவசியமாகும்.
இவ்வாருன கருத்தினை நிகழ்ச்சித் தொடக்கத்தில் “விடிவு" நாட் டிய நாடகத்தை எழுதி நெறிப்படுத்திய கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் குறிப்பிட்டமை பொருத்தமானது.
40

நிகழ்ச்சி தொடங்குகிறது. கட்டியங் கூறலோடு முன்னெழுந்த உலகப் பெருமகன், பல்லாண்டு வானம் பொய்த்தமையால் மழைத்துவி காணுது வாடி வதங்கி வேதனையே உருவான மக்கள் தொகுதி கள் எங்கிருந்தோ இடம்பெயர்ந்து வருவதைக் காண்கிருன், வரட்சி யின் குரூரம் மக்களின் அசைவுகளில் துருத்தி நிற்கிறது. பசியும், பட் டினியும் அங்கங்களின் சோர்வில் தெரிகின்றன. காணி - நிலம் - வீடு மன. உயிரைக் காக்க உதவா என்று புறப்பட்டுவிட்ட வெறுக் கைகள். என்ன செய்வோம்? என்ற ஏக்கம் முகங்களில் தேங்கி நிற்கிறது.
உலகப் பெருமகன் உள்ளம் துடிக்க உடல் பதைபதைக்க என்ன குறை என ஏங்குகிருன்.
"வானம் பொய்த்தது; வரட்சி மிகுந்தது; பயிர் பச்சை கருகி மாண்டன”*
“ “Grešnaar GsFui Gauntibi?””
'ஒன்றுபடுவோம்’ என்ற கோஷம்
"மந்திரஞ் சொல்வோம்" என்ற நம்பிக்கை
“வேள்விகள் செய்வோம்" என்று பல யாகங்கள்; வழிபாடுகள்.
"புரட்சி செய்வோம்' என்ற பேராசை,
பகீரதப் பிரயத்தனங்கள், மணிவாசகரின் திருவெம்பாவை ஒலிக்கச் சிவதரிசனம், மக்கள் யாகத்தால் அண்டமே புரண்டு விடுமோ? தனித்துளி முகில்கள் முகிற் கூட்டங்கள் வந்து சூழ்கின்றன: சூழ்ந்தவை கணிகின்றன.
"திக்குகள் எட்டும் சிதறி -தக்கத்
தீம்திரிகிட தீம் தரிகிட தீம் shall.........
“எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ங்ணம் வந்ததடா?, என நாலா பக்கத்திலிருந்தும் தாளங் கள் கொட்டி வீராவேசமாய் மழை பொழிந்து வெள்ளம் பாய்கிறது.
இப்படி, இப்படி.
இந்த நிகழ்வெல்லாம் பரதம், கதகளி, கூத்து என்ற நாட்டிய
நடனங்களோடும், கர்நாடக இசை, நாட்டாரிசை போன்ற இசை வடிவங்களோடும் எம் கண் முன் தோன்றின. இத் தோற்ற வெளி,
41

Page 38
பாடி குரலிசை, பின்னிணி இசை என்பவற்றின் அனுசரணையில் முழுமை பெற்றது. திருவெம்பாவையும் பாரதியாரின் “மழை" யும் நாட்டிஷ் நாடகத்தின் தரத்தையும் விறுவிறுப்பையும் மேம்படுத்திய இரு
Ur-bakir.
நாடகத்தில் பங்குபற்றிய எல்லோருமே தத்தமது பங்கினைச் செவ்வனே செய்து சண்பயோரின் பாராட்டுத்த்ப் பெற்றனர்.
நாடக முடிவில் தரமான ஒரு கலாநிகழ்ச்சியை கண்டு அனுபவித்த மனதிறைவோடு மண்டபத்தை விட்டு வெளியேற முடித்தது. தாடிக உலகில் புதிய தேடலுக்குக் கட்டியம் கூறுவதாக "விடிவு" அமைத் தது. எதிர்காலத்தில் இவ்வழியில் பல புதிய ஆக்கங்கள் தோன்றுமென எதிர்பார்க்கலாம். - W.
சு. இராசநாயகன்
surprLoeurt வீரகேசரி 1-1 2-85
42

கலாநிதி சி. மெளனகுருவின்
sfia - ஒரு கண்ளுேட்டம்
மனித வாழ்வின் தேடல மையப்படுத்தி, மனிதப்பிரச்சனைகள் பொதுமைப்படுத்தி அவற்றுக்கான வழிவகைகளை விளக்க முற்படுகி றது ‘விடிவு". நாட்டிய நாடகம் என்னும் வடிவை இந் நாடகம் பெற் றுள்ள போதும் நாட்டுக்கூத்து, ரஷ்யன்பலே, பரதநாட்டியம், கதகனி போன்ற பல வடிவங்களின் மொத்தமான கலப்பில் உருவானது விேடிவு". பல வகைகளிலும் குறியீடு, உருவகஉத்திமூலம் மனித வாழ் வின் சோகம், அவலம் போன்றவற்றுக்கு விடிவு” காண விழைகிருர் கதை, வசனம், நெறியாழ்கை என்பவற்றைக் கையாளும் ஆசிரியர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உயர்தர மாணவர்களின் நடிப்பில் நல்லூர் மூலவள வெளிக்கள நிலையப் படைப்பாக இத் நாட்டியநாடகம் மேடையேற்றப்பட்டது. 35 நிமிட நேரம் வேத காலம் தொட்டு கொம்பியூட்டர் யுகம் வரையிலான நிகழ்வுகள் வெளிப் படுத்தப்பட்டன.
கலாநிதி. சி. மெளனகுரு அவர்களின் ‘சங்காரம்’ எனும் நாட் டுக்கூத்து பாணியிலமைந்த நாடகம் மனிதனுடைய வாழ்வியலை பொது மைப்படுத்திக் காண விளைந்தது. அதேபோல் இன்னெரு வகையில் *விடிவு மனிதனுடைய பிரச்சனைகள், சோகங்கள் அவலங்கள் என் பவற்றை முன்வைத்து அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து, தீர்வை முன்வைத்து விடியலை ஏற்படுத்துகிறது.
நாட்டிய நாடகம் ஆரம்பத்தில் கதை சொல்லுவோரின் நாட் டுக்கூத்துப் பாணியில் அமைந்த வெளிப்பாடாக சபை வணக்கம் கூறு கிறது. "பழைய கதைகள் சொல்லவில்லை புதிய கதைகள் கூற வந் தோம்" என ஆரம்பத்திலேயே முத்திரை குத்தப்படும்போது சபையி லுள்ளோர் நிமிர்ந்து உட்காருகிறர்கள். நான்கு கதை சொல்வோரும் குறவன் குறத்தி பாணியில் உடையலங்காரம் செய்யப்பட்டிருந்தார் இவர்களுடன் சேர்ந்து மேடையின் முற்புற ஓரத்தில் இசையமைப்பா ளர்களும் பாடகர்களும் அமர்ந்து பின்னணி வழங்கிக் கொண்டிருந் தார்கள். நாட்டுப்பாடல் மெட்டு, பரதநாட்டிய நட்டுவாங்கம், கர் நாடகஇசை, நவீனஇசை என்பன தேவைப்படும்போது நாடகத்தில் சேர்ப்பது ஒரு சிறப்பான உத்தியாகக் கொள்ளப்பட வேண்டியதே. இசை, நாடகவடிவம், நாட்டியபாணி, எல்லாம் பல மதங்களின் கூட்டு
43

Page 39
என்ற போதும் கரு குறிப்பிட்ட ஒரு நிலையில் காணப்பட்டதால் கதை இலகு நடையில் நடந்தும் ஒடியும் பாய்ந்தும் சென்றது.
குறியீட்டு வடிவில் மனித வாழ்வின் அவலங்களை பின்ன முற்ப டும், ஆசிரியர் மழையில்லாது வரண்டிருக்கும் பாலைவனத்திலிருத்து வருகின்ற மனிதர்களை மேடையில் கதை சொல்பவன் மூலம் அறிமு கப்படுத்துகிருர்.
"யார் இவர்கள் என்ன குறை" என்று கதை சொல்பவள் எடுத்த எடுப்பிலேயே சோக ரசனையை கொட்டிய உடன் நாடகம் விறுவிறுப் புடன் செல்லுகின்ற மனேநிலையை பார்வையாளர்கள் மத்தியில் ஏற் படுத்தியது. ரஷ்ய, பலே நடன பாணியில் பாலைவனத்திலிருந்து வரும் மனிதர்கள் மேடைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றர்கள். இம் முறை அவர்களின் சோகத்தை வெளிப்படுத்தும் கருவியும் ஆகிறது. கிழவர் கிழவி முதல் இளைஞர் யுவதி என ஒரு சமூகமே நம்முன் நிற் கும் பிரேமையை உண்டாக்கி விடுகிறது.
'மழை இல்லை பயிர் விளையவில்லை" எனும் விடை அச சமூகத்தின் யுவதி ஒருத்தி மூலமாக கூறப்படுகிறது. கதை சொல்பவன் பார்வை யாளர்களுக்கு கதையையும் நாடகத்தையும் அறிமுகப்படுத்தும் அதே நேரம் பார்வையாளர் கேட்கும் பாணியில் அநுதாபத்துடன் "என்ன குறை” என்று கேட்டு என்ன மார்க்கம்" எனவும் கேட்டு உதவி செய் பத் தலைப்படுகிருன், கதை சொல்பவனின் இன்னெரு பணி நடிகர்க ளுடன் தானும் சேர்ந்து நடிப்பது. இவ்வகையாக 3 நிலையில் தன் பணியைச் செய்கின்ருன்.
மக்களின் சோகத்துக்கு, நீரின்மையால் வருந்தும் சோகத்துக்கு மார்க்கம் அடுத்து நிகழ்த்தப்படுகிறது. நடைமுறை வாழ்க்கையில் மணி தன் எவ்வாறு யதார்த்தமாக சிந்திப்பாலே அதே பாணியில் ‘மழையை’ வேண்டிப் பிரார்த்திக்கிறது அம்மனித கூட்டம். "கோரஸ்" பாணியில் கோஷம் எழுப்பப்படுகிறது. மழையே நீ வா" "மழையே நீ வா’ என பிரார்த்தித்து சோர்வடையும் மக்களுக்கு, "சோர்வை அகற்று" என்றும், அந்நிலையிலும் மழை வராதது கண்டு யோகம் செய் வோம்’ என அடுத்த மார்க்கம் கூறியும், வழிப்படுத்துகிருன் கதை சொல்வோன். உண்மையில் “யாகம் செய்வோம்" என்ற கோசம் தியா கம் செய்வோம் எனமண்டபததில் எதிரொலித்தது. அதுவும் நாடகக் கரு வுக்கு உரமளிப்பதாகவே தோன்றியது. அடுத்துயாகம் செய்யும் காட்சி. இக் காட்சிநிலை பிரச்சனைக்கான பரிகாரம் என்ன என சிந்திப்பது போன்ற உண்மை நிலையை குறிப்பிடுகிறது எனலாம். பின்னணியில்
44

*மழையே மழையே வருவாய் வருவாய்” எனும் பாடல் இசைக்கப்படு கிறது. உண்மையாக யாகம் நடைபெறும் ஒரு பிரக்ஞையை அக் காட்சி உருவாக்கிற்று என்ருல் மிகையாகாது.
தொடர்ந்து சிவனும் பார்வதியுமாக இருவர் நிலை மாறி காட்சி கொடுக்க, ஒரு பகுதியினர் யாகம் செய்ய, மற்றும் நால்வர் பரதம் மூலம் மழை வேண்டும் காட்சியை அளித்தனர். இந்நிலையில் பின்ன ணியில் மாணிக்கவாசகரின் 'முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையார்" எனும் திருவெம்பாவைப் பாடல் இசைக்கப்படுகிறது. நெறியாளர் பரதம் ஆடும் நிலையில் முற்புற பிற்புற காட்சிகளை மிகவும் நுட்பமாக பார்வையாளர்களுககு வழங்குவது அவரது கலையின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இந் நாடகம் "வட்டக்களரி அமைப்பில் மேடை யேற்றுவதற்குப மிகப் பொருத்தமானது என இப் பரத நாட்டியக் காட்சி சான்று பகாகிறது. மீண்டும் மேடையில் 'மழையே மழையே வருவாய் வருவாய்’ எனும் யாகக்காட்சி தொடர்கிறது. அந்நிலையிலும் அம் மனிதக் கூட்டத்தின் பிரச்சினைக்கு தீர்வு - மழை பொழியவில்லை. ஆனல் அச்சமூகம் சோர்வடையவில்லை; தளர்ச்சியடையவில்லை. காட்சி யின் தன்மை மாறி வேகப்படுகிறது. "முயற்சி செய்வோம்’ எனும் சிந்தனை வலுப்படுகிறது. "முயற்சி செய்தால் பலன் கிடைக்கும், "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" எனும் உண்மையை முன்வைக் கிருர் கதை ஆசிரியர். மேடையில் பலவித நிகழ்வுகள் இக்கட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது. தொழிலாளர்கள் தொழில் புரிகின்ற காட்கி பல விதத்திலும் வெளிப்படுத்தப்படுகிறது. கொம்பியூட்டர் இயக்கும் காட்சி முதல், விறகு வெட்டும் காட்சி வரையும் மனித முயற்சி விளங்கப் படுத்தப்படுகிறது.
இம் முயற்சியின் பலன் தொடர்ந்து கிடைக்கிறது. எனும் பாவ னையில் தேவதைகள் வடிவில் மேகங்கள் கருக்கொள்கிறது. அதாவது தேவதைகள் பாணியில் ஒப்பனை செய்யப்பட்ட பெண்கள் கூட்டம் மேடையை சுற்றி அணி வகுக்கிறது. காற்று அடிக்கிறது; மழை பொழி கிறது. மழையாக நன்கு அலங்காரமிடப்பட்ட பெண்கள் மேடையில் சுழன்று ஆடி கதகளி நடனம் புரிஇன்றர்கள். பின்னணியில் பாரதி யாரின் 'திக்குகள் எட்டும் சிதறி" எனும் பாடலைப்பாட கதகளி நடனம் மழை பொழியும் காட்சியை தத்துரூபப்படுத்துகிறது. அத் துடன் மேகம், மழை ஆக நடித்தவர்கள் மேடையை விட்டு அகல, மககள் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. மனிதக் கூட்டத்தின் முயற்சி மழை" எனும் தீர்வாகியது. அம்மகிழ்ச்சி நீலாவணனின் கவி தையில் பாடலாக பின்னணியில் ஒலிக்கிறது.
45s

Page 40
மழை பொழிந்தவுடன் மக்கள் சும்மா இருக்கவில்லை. நிலத்தை உழுகிருர்கள். நெல் விதைக்கிறர்கள்; களைபிடுங்கி பசளை இடுகிருர்கள்; அறுவடை செய்கிருர்கள்; மூட்டை கட்டி வீடு எடுத்துச்செல்கிருர் கள்; பொங்கல் செய்து மகிழ்கிருர்கள். இவ்வளவும் மேடையில் நிகழ் வுகளாகக் காட்டப்படுகின்றன. பின்னணியில் பாடகர்களும் இசைக் குழுவும் நிகழ்வுகளை விளக்குகிறர்கள். இந் நிகழ்வுகளில் கதை சொல் பவனும் பங்கு கொள்கிமுன். மற்றைய மூவரும் மேடை ஓரத்தில் நின்று பாடகர்களுடன் பாடுகிருர்கள். அவர்கள் பணி சிறிது குறைவு போலத் தென்படுகிறது. இறுதியில் பாடகர்கள் நடிகர்கள் கதை சொல்வோர் சகலரும் மேடையில் கூடி வணக்கம் சொன்னதுடன் நாடகம் இனிதே நிறைவேறியது.
கண்கவர் ஆடையலங்காரங்களுடனும், நுட்பமான காட்சி அமைப் புகளுடன் கனிவான இசையுடனும், கருத்தும் பொருத்தமும் நிறைந்த கவிதைகளுடன், காத்திரமான மேடை நடிப்பு, நிகழ்வுகளுடனும், பலே, நாட்டுக் கூத்து, கதகளி, பரதம் ஆகிய பல்வகைப்பட்ட ஆட்ட முறைகளுடன் சிறந்து விளங்கும் இந்நாடகம் 'விடிவு”, கருத்தாழமுள்ள நடைமுறையும் நிரந்தரமும் பொதிந்த கருவுடனும் கதையுடனும் ஒரு சிறப்பான மதிப்பீட்டை பெற்று பார்வையாளர்களிடமிருந்து இந்நாடகம் காலம் காலமாக நின்று பிடிக்கக்கூடிய கருவைக் கொண் டிருப்பதால் போலும் நிகழ்காலப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் கோடி காட்டுகிறது. இந்நாடகத்தைப்பரவலாகப் பாடசாலைகளிலாவது மேடை யேற்றுதல், மக்களின் கலையார்வத்தையும், ரசனையையும் மேலும் வளப் படுத்த வழி கோலும்.
suasy Gissis
Garrur Dario
PipCapga 9, le. 85
46

THE QUEST POR NOOTS NEW ARTIsTic TRENDS IN THE NORTH
Of) te gas From January this year, the new trend in the Arts and theatre scene has emerged. Several street plays embodying traditional folk styles, and several dramas and poem recitals to the accompaniment of music are on the increase. “Returning to folk style' is just not a recent phenomenon as far as the Tamil literary and arts scene is concerned. But the momentum it has gained at present is somewhat unique. This is partly due to the prevailing political situation......
Highlight of the festival was the ballet titled “The Dawn directed by Dr. S. Maunaguru, The Department of Fine Arts, University of Jaffna. Dr. S. Maunaguru who is considered one of the masters in the Eastern Folk Dance Mode and rituals conbines Bharatha Natyam, Kathakali and Folk dance in this ballet. I use the word 'ballet' but I am not sure whether to: classify it a "ballet' or an 'opera' or a blend of both. This is the first attempt in this kind of combination.
As the title depicts, the core of the ballet which put some 20 odd girls on the stage is all about an attempt of a group of people inhabiting an arid land to bring rain. The rain clouds and the rain all were beautifully symbolised and matched with suitable dance form. Though I am not an authority to speak about the degree of cohesion that the varied dance forms like Kathakali and Bharatham achieve through this ballet one thing could be said: the total effect is everpleasing.
The Twentieth Century Tamil Literature study group of the Hindu Ladies College, deserves congratulations not because that they have produced this ballet but for the vision of future cultural dimensions they have adumbrated to a wide audience.
R. C. Saturday Review
2-1-85
47

Page 41
நம்மைப் பிடித்த பிசாசுகள் - மோடி நாடகம் மேடையேற்றம் பற்றிய அபிப்பிராயங்கள்
நம்மைப் பிடித்த பிசாசுகள் 09. 03, 87 அன்று மேடையிடப் பட்டபோது பத்திரிகைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட அபிப் பிராயங்கள்
கோலங்கள் மத்தியிலே கொந்தளிக்கும் உணர்வோட்டம்
“மெளனகுரு பேராசிரியர் வித்தியானந்தனின் மீட்புப்பணி வழி யாகக் கிடைத்தவர். மெளனகுரு ஆடற்கலைஞன். கூத்தின் ஆடற் கலைஞனுக்குரிய பண்பு அவன் சித்தரிப்புக்கள். அவை குறியீடுகளாயி னும் துலாம்பரமாகத் தெரிபவை" என யாழ் பல்கலைக்கழக நுண் கலைத் துறைத்தலைவர், பேராசிரியர், கா. சிவத்தம்பி அவர்கள் சுண் டிக்குளி மகளிர் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட ‘ஏழு நாடகங் கள்” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இக் கூற்று மிகையானதல்ல என்பதை அண்மையில் மேடையேறிய கலாநிதி G. மெளனகுருவின் "நம்மைப் பிடித்த பிசாசுகள்" நாடகம் நிரூபிக்கி ADġi.
பாரதியின் சிலை முன்னே மக்கள் கூட்டம் திரண்டபடி, "பாரதியே எங்கள் ப்ாரதியே, பாரத நாட்டின் கவிக்குயிலே' என்ற எழுச்சி மிகு பாடலைப் பாடுகிறது. "யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான், மன்னரான், வன்னிமலைநாடான் என்னும் பிரதேச பேதங்கள் எம். மிடை, உள்ளதையா ஆம் உள்ளதையா' என்ற அடிகள் விரைவாக உச்சர்க்கப்படும்போது, எம்மிடை இழையோடிய பிழை, ஆக்கியோன் நோக்கு இரண்டினையும் உணர முடிகிறது. உத்தியோக மோகம், சீதனம் என்பவற்றையும் சாடுகிறது கீதம். மக்கள் பாடிய இவ் வேண்டுதல் பா முடிவடைதற்கிடையில் ஆறு வித அழகுக் கோலங்
48

களே (Formation) மேடையில் காண்கின்ருேம். பாரதியின் வசனத்தைத் தொடர்ந்து, உடுக்கு நாதத்துடன் உருவேறிய பூசாரி நடு மேடைக் குப் பாப்ருெள். பிசாசுகள் ஒன்றன்பின் ஒன்ருக வருவதில் தனி அழகு தெரிகிறது மக்களும் பிசாசுகளும் மாறி மாறிப் பாடும் வேளை பல வித ஆட்டக் கோலங்கள் போடுகிறர்கள். பூசாரியின் உடுக்க டிக்கு ஆறு பிசாசுகள் தம்மைத் தாமே அறிமுகம் செய்யும் கட்ட மும் ரசிகர்களை ஈர்க்கிறது.
தொடர்ந்து அமைதி. பூரண அமைதியிலும் இயக்குனர் அழகு தெறிக்க வைக்கிருர், பிசாசுகளை உருவேற்றும் வேளை, மந்திர உச்சா டன வரிகள் மந்திரவாதி பாணியில் கேட்கிறது. கிராமியச் சூழலை மேடை முழுவதும் சிந்துகிருர் இயக்குனர். பிசாசுகள் கலைந்து ஓடி மக்களைப் பிடிக்கின்றன. இந்த இடத்தில் ஒரு அசல் உத்தி புகுத்தப் படுகிறது டயருக்கு காற்று அடிப்பது போல பிசாசுகள் மைம்’ (Mime) செய்ய மக்கள் விகாரமடைந்து பெருக்கிருர்கள். இதனைத் தொடரும் மக்கள் பிசாசுகளின் சம்வாதம், தாந் திமிதிமி தெய்யக்க தத்துமி” என்ற தாளக் கட்டுக்கு ஆடி பிசாசுகள் மிறையும் கட்டம் நயமான இடங்கள். பாரதியை வேண்டி மக்கள் பாடும் விருத்தம், இசைக்கும் பஜனைப் பாணியிலான பா மேலும் அழகூட்டுகிறது. "உங்க ளைப் பிடித்து ஆட்டும் உயர்திரு பிசாசார் தம்மை ஓட்டவே ஒவ்வொ ருவரும் பாரதி ஆகுவீர்கள்" என்று பாடி பாரதிபாடல் நூல்களைப் பாரதி மக்களுக்கு அளிக்கிருர். ‘அச்சமில்லை அச்சமில்லை", "ஒன்று பட் டால் உண்டு வாழ்வு’ என மக்கள் பாடிப் புத்துணர்வு பெறுகின்றனர். திரும்ப மேடைக்கு வந்த பிசாசுகளின் முயற்சி அட்டகாசம் தோல்வி யடைகிறது. ஜெயபேரிகை கொட்டடா என மக்கள் கூட்டம் கொந் தளிக்கிறது. இரு கோஷ்டிக்கும் சண்டை. சண்டைக்காட்சியில் ஆட் டக் கோலங்கள், அசைவுகள், அபிநயங்கள் பூசாரியும் பிசாசுகளும் கலைக்கப்படுகின்றன,
(1) "பயமெனும் பேய்தன அடித்தோம் - பொய்ம்மை பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’ என்ற கோஷத்தின் அடிநாதக் கருத்து கலை வடிவில் காட்சி தந்தது.
(2) நல்ல கருத்து மட்டும் கலைவடிவமல்ல, நாடகத்தைப் பொறுத்த மட்டில் சுவைளுன் நல்ல வடிவத்தையும் கான விரும்புகிறன். அவற்றின் ஊடாகப் போதனையை எதிர்பார்க்கிமுன். இதனை Dßs st-säSo QlgSGyb.
49

Page 42
(3) பலவேறு கட்டங்களில் அழகுக் கோலங்களாக மாறிவரும் நிலை யும், அதனை அடித்தளமாக்கி நிகழ்ந்து கொண்டிருக்கும் உணர் வுகள் அபிநயங்களும் உண்மையில் உயர்ந்தவை: சுத்தமானவை"
(4) ஆடல், பாடல், நுட்பமான கோலங்கள் மிக்க இந்த ஆக்கத்தில் கலந்து கொண்ட மாணவிகள் நடிப்பு அற்புதம். 8 முதல் 11 ஆம் வகுப்பு மாணவிகள் பிசாசுகளாக கூட வீரதீரத்துடன் ஆடிய ஆட்டங்கள் வியப்பைத் தந்தன. வளர்ந்த நடிகர்கள் நடித்த "சங்காரம்’ நாடகத்துக்குக் கிட்ட நின்றது இந்தப் பாட சாலே நாடகம்,
ஏ. ரி. பொன்னுத்துரை *அரங்கு என்னும் பகுதியில் முரசொலி 5- 0-87

மாணவர் ஆளுமையை வெளிக்கொணர்ந்த கலைப்படைப்பு
தமிழ்த்தின விழாவின் இறுதி நிகழ்ச்சியாக கலாநிதி சி. மெளன குரு அவர்கள் எழுதி நெறிப்படுத்திய நம்மைப் பிடித்த பிசாசுகள்" எனும் மோடி நாடகம் இடம் பெற்றது. எமது சமூகத்தின் சீத்து வக் கேடுகளைப் பிசாசுகளாக உருவகப்படுத்தி, அப்பிசாசுகளின் பிடி யில் சிக்குண்டு வதைபடும் மக்கள், பாரதியின் படைப்புக்களை உள் வாங்கிக் கொண்டமையிஞல் பெற்ற உறுதியுடன் பிசாசுகளுடன் மோதி பிசாசுகளை வெற்றி கொள்கின்றமை நாடகத்தின் உள்ளடக் கமாக அமைந்தது. பழமைமோகம், அந்நியமோகம், பிரதேச மோகம், உத்தியோகமோகம், சுயநலமோகம், சீதனமோகம் ஆகிய சமூகச் சீரழிவுகள் பிசாசுகளாக உருவாக்கப்பட்டிருந்தன. இந்நாடகத் தைப் பொறுத்தவரையில் நாடக எழுத்தாளர் மெளனகுருவை விட நெறியாளர் மெளனகுரு பாராட்டிற்குரியவர். நாடகப் பிரதி தொடர் பாக இரு விடயங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது. முதலாவது எமது சமூகத்தின் முக்கிய சீத்துவக்கேடான சாதிப் பாகுபாட்டினை பிசாசுகளில் ஒன்முக உருவகப்படுத்தாமை. மற்றையது, சமூகத்தின் சீத்துவக்கேடுகள் ஒரு சமூக மாற்றமின்றி நீக்கப்படாதவை. சமூக மாற்றம் என்பது அமைப்பு ரீதியான போராட்டத்தினூடாக முன்னெ டுத்துச் செல்லப்பட்டு அடையப்படவேண்டிய அடிப்படை மாற்ற மாகும். பாரதி வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் வகித்த கவிஞர் ஆயினும் ஒரு புரட்சியை வழி நடத்துவதற்கு போதிய கருத்துக் கண் கொண்டதாக அவரது படைப்புக்கள் அமைந்தாகக் கூறமுடி யாது. எனவே பாரதியின் படைப்புக்கள் மூலம் மக்கள் கூட்டம் சமூ கச் சித்துவக்கேடுகளை அழிப்பதாய் சித்தரிப்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
"நம்மைப் பிடித்த பிசாசுகள்’ நாடகத் தயாரிப்பானது அழகாக அமைந்திருந்தது. நெறியாளர் மெளனகுரு பாடசாலை மாணவிகளைக் கொண்டு தொழில்முறை நடிகர்களை மேவக்கூடிய விதத்தில் நாடகத் தினை தயாரித்திருந்தமை அவரது திறமையினையும் மாணவிகளின் திற மையினையும் வெளிப்படுத்தியது. எமது பாரம்பரியமான கூத்து முறை ஆட்டங்களையும், (முக்கியமாக வடமோடி) இடையிடையே பரதத்தினை யும் கலந்து அமைக்கப்பட்டிருந்த ஆட்டங்கள். நாடகத்திற்கு மெரு கூட்டின. பூசாரி, பிசாசுகள் வேடமேற்ற மாணவிகள் தமது பாத்தி ரங்களை தன்கு வளர்த்தெடுத்திருந்தனர். பாடல்களும் இசையும் நாட
- 6 51

Page 43
கத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. இந்த வகையில் இசையமைப் பாளர்கள் கண்ணன் - கிருபா பாராட்டிற்குரியவர்கள். மெளனகுருவின் தயாரிப்புகளில் காணப்படும் ஒழுங்கு (Neatness) இந்நாடகத்திலும் மிளிர்ந்தது. எனினும் நாடகத் தயாரிப்பு குறித்து சில விடயங்கள வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. முக்கியமாக பிசாசுகள் வளர்த் தெடுக்கப்பட்ட அளவிற்கு அவற்றை வெற்றி கொள்ளும் மக்கள் கூட் டம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இதஞல் பாத்திரப்படைப்பில் சம மின்மை காணப்பட்டது. பிசாசுகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பொய்முக ஒப்பனையால் (Mask Make- up)முகபாவங்கள் பார்வை யாளரைச் சென்றடையவில்லை. பாரதி மக்கள் கூட்டத்தின் மத்தி யில் தோன்றி பாரதி பாடல் தந்தேன்' என பாடல் புத்தகங்களை மக்களுக்கு வழங்குவதாக காட்சிப்படுத்தியிருந்தமை 67ւնւյւգպւb ւյ5 தகம் விற்று விடுவேன் என்று கூறும் எமது இலக்கிய காரரை நினை நினைவு படுத்தியதுடன், பாரதியின் ஆளுமையினையும் பலவீனப்படுத்தி யது. மற்றும் நாடகத்தில் இரண்டு பாரதியினை பயன்படுத்தியமைக் கான போதிய விளக்கம் நாடக தயாரிப்பினூடாக வெளிக்கொண ரப்படவில்லை. ஒட்டு மொத்தமாக நோக்கின் நம்மைப் பிடித்த பிசா சுகள் ஒரு தரமுள்ள நாடகமாக (சங்காரத்தை நினைவு படுத்தின லும் கூட) அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
இக்கலைப் படைப்புக்கள் மாணவர் ஆளுமையினை வெளிப்படுத்து பவையாக அமைந்ததோடு தமிழ் நாடக உலகிற்கு முக்கியமாக ஈழத் தமிழருக்கான ஒரு தேசிய நாடக வடிவத்தினை உருவாக்குவதற்கு பங்களிப்பு வழங்கும் என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அம்சங்களா கும். எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் பலரது முயற்சியாலும் உருவாக்கப்பட்ட இக்கலைப் படைப்புக்கள் கல்லூரிச் சுவர்களுக்குள்ளும் பல்கலைக் கழகச் சுவர்களுக்குள்ளும் அடங்கி விடாது இயலுமானவரை ஏனைய பாடசாலைகளிலாவது மேடையேற்றப்பட வேண்டும் என்பதே மாணவர் ஆளுமை வளர்ச்சியிலும் நாடகவளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களின் அவாவாகும்.
அம்மான் கலைக்கூடம் என்னும் பகுதியில்
ஈழமுரசு
13 04, 87
52

LIVELY SCHOOL THEATRE
Great strides have been made in the field of Drama. Particularly within the last three years. The Jaffna University has been instrumental in breaking new ground. Of late Maunaguru and Shanmugalingham have stated exploiting talents at the school level,
Maunaguru's Nammai Piditha Pishasukal ( the ghosts that possessed us) is a morality play, a personificatio in of blind devotion to everything foreign. Regionalism, yearning for white-collar jobs, selfishness and dowry-seeking.
Roused by the poosari, the ghosts possess the people and render them powerless and subservient. They invoke Bharathi. He has no ready - made remedies. His teaching are already there. Bharthi's lyrics take the form of incantations and the, ghosts are driven away.
Nammai Piditha Pishasukal' is proof enough - if proof be needed - of the fact that when a playwright directs the play, it is a definite advantage.
All the resources of the Vadamodi form are summoned by Maunaguru. The actress displayed a grace of rhythmic movement that is very close to professional standards. Teehnique Wisc 'Nammai Piditha Pishasukal' is a drama of a very high order. The tempo gradually mounts and the grand finale is the fight between the ghosts and the people (shades of Sankaram Maunaguru's another play.
Special mention should be made of the formations on the stage which were a treat to watch, a variety of creations.
Kannan's musical score added lustre to the plays. The versatile Kirupakaran on Mirildangam could be an asset to
any troupe.
S. Pathmanathan
Saturday Review
05-04.87
53

Page 44
முன்னுரையில்.
மாகாது. அவரது அரங்கர் ெ த்தின் ஆவணப் பதிவுகள். கவிங் மேடையுளவு மேம்
தர்களின் அன்ருடக் சில்வா அதிக அக்கறையில்லே. "+1 டவர் மொாளருரு அதனூே களிலே பிரமாண்டமான கற்
ஆட்ட முறையின் li ii iiiLLLL காட்டும் அக்கறைஈய நாம் பு
தவியானதொரு தேசிய ந தேடிக் காணும் முயற்சியிலே ஒருவர் மேளனருரு.
பாடசாலே

மெளனகுருவிங் மேட பொதி சயல்கள் உருப்படியான அநுபவ அந்த வளகயில் அவரது நாடகங் பட்டு நிற்பழத பிறப்பாகும்.
.விெளஞ்சிறு வேடிக்ாக வாந் றச் சேட்ாடகளேப் பற்றி அவருக்கு ாசம் அளாவுமொரு காதல்" கொங் தான் போலும் அவரது lää:Lili. பனேகளே நாம் காஜருேம்.
.மேளனகுரு கூபுேத்திகளிலும், பாட்டிலும், இஎசபிங் இசைவிலும் Pறந்துவிடாகாது.
.ஈழத்துத் தமிழர்களுக்கென்று வடிவத்தையும், ரோயபும்,
புத்தி பூர்வமாக ஈடுபட்டிருக்கும்
முருங்கள்
நாடகம் மூன்று
SLLSLSMSSS SS SS SSLSLSLS