கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்

Page 1
(பிராமிக் கல்வெட்டுக்களை அடிப்
 

வாழ்வும் வகிபாகமும
டையாகக் கொண்ட ஆய்வு)

Page 2

பரமு புஷ்பரட்ணம் : வரலாற்றுத் துறையில் தனது இள, முதுமாணிப்பட்டங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும். தமிழ்நாட்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் (Archaeology) கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர் தற்போது யாழ்ப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.
தொல்லியலில் பல கள ஆய்வுகளையும், முப்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பூநகரி - தொல்பொருளாய்வு (1993) வட இலங்கையில் சிங்கை நகர் (1991) தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு (2000), இலங்கைத் தமிழரின் பண்டையகால நாணயங்கள் (2001) ஆகிய நூல்களையும் எழுதியுள்ள snuáîsi Ancient Coins of Sri Lankan Tamils 6Tg Lň IT só 6î6oog 6îsů வெளிவரவுள்ளது.

Page 3

இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்
பண்டைய இலங்கையில் தமிழும், தமிழரும்
(பிராமிக் கல்வெட்டுக்களை அடிப்படையாகக்
ിക/ഞ്ഞ/ 

Page 4
சித்திரை 2001 பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும் கலாநிதி பரமு புஷ்பரட்ணம் )ே வெளியீடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம் விலை: ரூபா 250.00
ISBN 955 - 8564 - 00 - 1
April 2001 Pantaya ilnkaiyil Tamilum Tamilarum Dr. Paramu Pushparatnam (C) Published by Colombo Tamil Sangam Price : Rs. 250.00
தமிழ்ச் சங்க வெளியீடுகளிலுள்ள கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை. அவை சங்கத்தின் கருத்துகளல்ல.

ஈழத்து வளர்ப்பு/மகன் என அன்புடன் என்னை உறவு பார7ட்டி, எழுபது வயது த7ண்டிய நிலையிலும் இருபது வயது இ6ை7ஞன7க காடு மலை கடந்து கல்வெட்டுக்களை7 ஆய்வு செய்து வரும் தமிழ்ப் பிர7மியின்தந்தை என எல்லோராலும் போற்றப்படும் முன்ன7ள் இந்திய மத்திய, மாநில அரசுகளின் செயல7ரிரும் தினமணி தேசிய நாளிதழின் பிரதம ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் அவர் களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 5

நன்றி உரை
பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது எனது ஆசிரியர் பேராசிரியர் கா.இந்திரபாலா அவர்கள் இறுதியாண்டுப் பரீட்சைக்கு இலங்கை-தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் ஓர் ஒப்பாய்வு என்ற தலைப்பில் ஒர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்குமாறு வேண்டியிருந்தார். ஆனால் அப்போதைய யாழ்ப்பாணத்து தழ்கிலையில் இலங்கை-தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களை நேரில் பார்வையிட்டு ஆராயக்கூடிய சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் இவை தொடர்பாகப் பிறர் எழுதிய கட்டுரைகளையே எனது ஆய்வுக்கு அடிப்படைச் சான்றுகளாகப் பயன்படுத்திக் கொண்டேன். கடந்த மூன்றாண்டுகளாகத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த கல்வெட்டறிஞர் பேராசிரியர் சுப்பராயலு அவர்களின் கீழ் எனது கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பு, தமிழ்ப் பிராமியின் தந்தை எனப் போற்றப்படும் ஐராவதம் மகாதேவனுடன் ஏற்பட்ட நெருக்கமான ஆசிரிய மாணவ உறவு, தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றை கேரில் பார்வையிட்டு ஆராயக்கூடிய சூழ்நிலை, தமிழகத் தொல்லியல் அறிஞர்கள் பலருடன் ஏற்பட்ட கெருக்கமான உறவு என்பன மாணவனாக இருந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையின் பல தவறுகளை உணர்த்தியது. அதன் விளைவே இந்நூலாகும். ஆயினும் இது எனது ஆய்வின் ஆரம்ப முயற்சியாகும்.
இந்நூலில் இதுவரை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பிறர் கண்டுபிடித்துக் கூறிய சிலவற்றை முடிந்தளவுக்கு சுருக்கமாகவும், பலவற்றைத் தவிர்த்து நாம் புதிதாக வாசித்து கண்டறிந்த செய்திகளையே முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியும் உள்ளேன். அவற்றுள் பெரும்பாலான வாசிப்புக்கள் எனது தொல்லியல் பேராசிரியர் சுப்பராயலு, கல்வெட்டறிர் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் உறுதிப்படுத்தியதன்
VII

Page 6
அடிப்படையில் எழுதப்பட்டவை என்பதை இங்கு சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். இந்நூலை எழுதிய போது அவ்வப்போது ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துவைக்கக் காரணமாக இருந்தவர்களுள் எனது தொல்லியல் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி இராசன், முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் கலாநிதி சு. இராசகோபால் மற்றும் நாணயவியலாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகியோராவர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தமிழ் நாட்டில் கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக எனக்கு வழங்கப்பட்ட கால எல்லை முடிந்து பல மன அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் எனது ஆய்வைத் தொடர வேண்டியிருந்தது. அப்போது பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தமது அதிகாரம் முடிந்த அளவுக்கு சாதகமாகவே என்றும் இருந்ததை நினைவுபடுத்தி எனக்கு மனத்தெம்பை ஏற்படுத்தியவர் எமது துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
எனது முன்னைய படைப்புக்களின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிவு நேர்மையுடன் விமர்சித்துவரும் இன்றைய தலைசிறந்த அடக்கமுள்ள வரலாற்றுப் புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் இந்நூலுக்கு வாழ்த்துறை வழங்கியிருப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகப் பார்க்கிறேன். பேராசிரியருக்கு என் நன்றிகள்.
இந்நூல் வெளிவரும் நிலையில் எனக்கு கல்வெட்டுப் பற்றிக் கற்பித்து அதில் ஈடுபாடு கொள்ளச் செய்த எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர். வி. சிவசாமி, திரு. கிருஷ்ணராஜா, தற்போது இங்திய ஒரிசா மாநில உத்கல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் கலாநிதி இரகுபதி ஆகியோரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இந்நூல் குமரன் அவர்களின் வேண்டுதலின் பேரில் குறுகிய காலத்தில் எழுதப்பட்டதாகும். இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றைக் கொழும்பில் நடத்தவும், நூலை வெளியிடவும் முன்வந்த கொழும்பு தமிழ்ச் சங்கத்திற்கும் எனது நன்றிகள்.
VIII

வாழ்த்துரை
அசோகன் காலம் முதலாகத் துணைக்கண்டத்தில் பிராமி எழுத்தில் சாசனங்கள் எழுதப்பட்டன. ஏறக்குறைய கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவிலும், இலங்கையிலும் இவ்வழக்கம் நிலை பெற்றிருந்தது. ஆரம்பத்திலிருந்து அண்மைக் காலம் வரை அசோக வரிவடிவங்களே பிற்கால எழுத்துக்களின் தோற்ற வளர்ச்சிக்கு மூலகாரணம் என ஆய்வாளர் பலரும் கருதிவந்தனர். ஆயினும் மிக அண்மைக்காலத்தில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் இவ்விடயம் தொடர்பாகப் புதிய சிந்தனை ஏற்பட ஏதுவாக உள்ளன. தமிழகத்திலும், இலங்கையிலும் கல ஒடுகளில் பிராமி எழுத்தில் சொற்கள், பெயர்கள் எழுதப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் இலங்கையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த பெருந்தொகையான பிராமிச் சாசனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பிராகிருத மொழியில் எழுதப்பட்டன. தமிழகத்தில் பிராகிருதமொழி ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்ற போதிலும் சாசனங்கள் தமிழில் எழுதப்பட்டன. இரு நாடுகளிலும் வழங்கிய பிராமி எழுத்து முறை பல பொது அம்சங்களைக் கொண்டுள்ளன. தமிழகத்தில் தமிழ் மொழிக்கே சிறப்பாக "ற", "ன", "ள", "ழ" போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தினர். இலங்கையில் உள்ள சாசனங்கள் பலவற்றைப் பேராசிரியர் பரணவிதானா படித்து, மொழி பெயர்த்து விளக்கக் குறிப்புகளுடன் இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். ஆயினும் பரணவிதானாவின் அணுகுமுறையில் சில பிரத்தியோகமான அம்சங்கள் காணப்பட்டன. இலங்கையில் உள்ள பிராமிச் சாசனங்கள் எல்லாம் சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்டன என்பது அவரின் கருத்தாகும். அது காட்டிலே பேச்சு வழக்கிலுள்ள மொழியில் எழுதப்பட்டன என்பது அவரின் கருதுகோளாகும். பிராமி எழுத்தைப் பொறுத்தவரை வடஇந்தியத் தொடர்பானவை எனக் கருதினார்.
ΙΣΚ

Page 7
சத்தமங்கலகருணாரத்தினா, பெர்னான்டோ ஆகிய இருவரும் பிராமிச் சாசனங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். அவற்றில் தமிழ்ச் சாசனங்களின் செல்வாக்கு இருப்பதாக அவர்கள் சில உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் இக்கருத்து இலங்கை அறிஞரிடையே அதிகம் செல்வாக்குப் பெறவில்லை. பொதுவாக வரலாற்றறிஞர்கள் எல்லாரும் பரணவிதானாவின் வாசகங்களைப் பரிசீலனை செய்யாது ஒப்புக் கொண்டு அவற்றைத் தமது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இங்நூலாசிரியர் முதன் முதலாக இலங்கைப் பிராமிச் சாசனர்களைத் தமிழகப் பிராமிச் சாசனங்களுடன் ஒப்பிட்டு நன்றாகப் பரிசீலனைசெய்து, நல்ல பிரயோசனமான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். தமிழக பிராமிச் சாசனங்களில் காணப்படும் வரிவடிவங்கள் இலங்கைப் பிராமிச் சாசனங்கள் பலவற்றில் இருக்கின்றன என்பதை அழுத்தமாக முன்வைத்துள்ளதுடன் இதுவரை யாரும் சொல்லாத தமிழ்ப் பிராமிக்கேயுரிய னகரம், றகரம் போன்ற எழுத்துக்கள் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் சொற்தொடரின் நடுவிலும், ஈற்றிலும் காணப்படுகின்றன என்பதைப் பொருத்தமான சான்றாதாரங்களுடன் விபரிக்கிறார். தமிழகத்து தொல்லியல் மூதறிஞர் ஐராவதம் மகாதேவன், சாசனவியல் முதுபெரும் அறிஞர் சுப்பராயலு ஆகியோரின் ஆலோசனை பெற்றுக் கருத்துக்களைக் குறிப்பிடுகிறார்.
இலங்கைப் பிராமிச் சாசனங்கள் பலவற்றில் தமிழ்ச் சொற்கள், பெயர்கள், இடப்பெயர்கள் இருக்கின்றமையை அவர் அடையாளம் கண்டுள்ளமை தொன்மைக்கால இலங்கை வரலாறு பற்றிய ஆய்வு மறுபரிசீலனைக்குரியவை என்பதை அழுத்தமாக உணர்த்துகின்றன. இவர் கூறுகின்ற இலங்கையின் ஆதியான அரச வம்சத்தின் உற்பத்தி, குடிகளின் உற்பத்தி, அரச உருவாக்கம் என்பவை தொடர்பான கருத்துக்கள் மகாவம்சம் கூறுவதை விளக்குபவையாக உள்ளன. பாண்டிநாட்டு இளவரசி இலங்கையின் பட்டத்தரசி எனக் கூறுகிறது. அதுமட்டுமன்றிப் பதினெட்டுத் தொழில் தெரிந்த ஆயிரம் குடிகள் பாண்டி நாட்டிலிருந்து வந்து அநுராதபுரத்தில் வாழ்ந்த குடிகளோடு சங்கமமாயின என அந்நூல் கூறும்.
இந்நூலாசிரியர் இலங்கைத் தமிழரின் பண்டைய கால காணயங்கள் என்ற தனது முன்னைய நூலில் இலங்கையின் பல பாகங்களில்
Χ

அண்மைக்காலத்தில் சேகரித்த நாணயங்களில் தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன என்பதை ஆணித்தரமாக விளக்கியுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முன்பொரு காலத்தில் சிலர் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையில் பரவலாகத் தமிழரின் குடியிருப்புக்கள் அமைந்திருக்கவில்லை எனக் கட்டியம் கூறியதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆதிகால இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இனக்குழுக்கள் வாழ்ந்தன என்பதும் அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பதும், தேசத்தில் பல பகுதிகளிலும் குடியிருந்தனர் என்பதும், ஆங்காங்கே அதிகாரம் செலுத்தினர் என்பதும் இப்போது இவரது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பிராமிச் சாசனங்கள் முறையாகவும் கிரமமாகவும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சாசனங்களில் உள்ள எழுத்துக்களை ஆராய்வதன் மூலம் இந்நூலில் உள்ள கருத்து மேலும் தெளிவாக்கம் பெறும்.
இலங்கையின் ஆதிகால சமுதாயம் பன்முகப்பட்டதென்பதும், பல்வேறு பண்பாட்டுக் கோலங்கள் இலங்கையில் காணப்பட்டன என்பதும் பிராமிச் சாசனங்கள் வாயிலாக உறுதியாகின்றது. பழைய சிந்தனைகள் வலுவற்றுப் போகின்றன. வரலாற்றாராய்ச்சியிலும் புதிய பார்வையும், புதிய சிந்தனையும், புதிய உத்தியும் அழுத்தம் பெறப்போகின்றன என்பதை எண்ணுமிடத்து இந்த நூற்றாண்டு ஒரு மங்களகரமான முன்னேற்றத்தை நாடிச் செல்வதாக அமைதி கொள்ளலாம்.
அன்புடன் வாழ்த்தி மகிழும்
பேராசிரியர் சி. பத்மநாதன்
தலைவர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
ΧΙ

Page 8
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
அகம்
lao
தொல் நற் பட்டினப் பதிற் புறம் பெரும்பாண் மணிமே
மதுரை
மலைபடு C.V.
D.E.D.
D.V.
E.I.
E.Z.
.C.
M.
К.
M.V.
S.S..
Skt.
Te.
TL
அகநானூறு சிலப்பதிகாரம் தொல்காப்பியம் நற்றிணை பட்டினப்பாலை பதிற்றுப்பத்து
புறநானூறு பெரும்பாணாற்றுப்படை மணிமேகலை
மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் Culavamsa Dravidian Etymological Dictionary Dipavamsa Epigraphia Indica Epigraphia Zeylanica Inscriptions of Ceylon Malayalam
Kananada
Mahavamsa South Indian inscriptions Sanskrit
Tami
Telunku
Tamil Lexicon
XI

பொருளடக்கம்
நன்றியுரை
வாழ்த்துரை
இயல் 1
கல்வெட்டுக்களின் எழுத்தும், மொழியும்
இயல் 2
கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், தமிழர் பெயர்களும் 16
இயல் 3
கல்வெட்டுக்களில் தமிழ் இடப்பெயர்களும், தமிழர் இடப்பெயர்களும் 49
இயல் 4
பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், முத்திரைகள் 85
முடிவுரை 98
உசாத்துணை நூல்கள் 109
XI

Page 9

பரமு புஷ்பரட்ணம்
இயல் ஒன்று
கல்வெட்டுக்களின் எழுத்தும் மொழியும்
அறிமுகம்
தென்னிங்தியத் தமிழரைப் போல் இலங்கைத் தமிழருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான வரலாறு உண்டெனக் கூறும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆயினும் ஒப்பீட்டளவில் இலங்கைத் தமிழரின் பண்டைய கால எழுத்து, மொழி, பண்பாடு என வரலாற்றின் பல பரிகாமங்கள் இன்றுவரை ஒரு தெளிவற்ற பாத்திரமாகவே இருந்து வருகின்றன. இலங்கைத் தமிழரைப் போல் தமிழ் நாட்டிற்கு கி.பி.14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடர்ச்சியான ஒரு இலக்கிய வரலாற்று மரபு இருங்ததென உறுதியாகக் கூறமுடியவில்லை. இதனால் இந்தியா சுதந்திரம் அடையும் முன்னர் வெளிவந்த இந்திய வரலாற்று நூல்கள் பலவற்றில் தமிழக வரலாறு ஒருசில பக்கங்களையே ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் காலப்போக்கில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகள், களஆய்வுகள் மூலம் பெறப்பட்ட ஆதிக்குடியிருப்புக்களுக்குரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள், கட்டிடங்கள்,
1.

Page 10
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
சிற்பங்கள் போன்றவை தமிழகத்தின் எழுத்து, மொழி, இலக்கியம், கலை போன்றவற்றின் பழமையையும், பெருமையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இது போன்ற ஆய்வுகள் இலங்கைத் தமிழரை மையமாக வைத்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பெருமைப்பட வாய்ப்பில்லை. ஆனால் தமிழக ஆய்வுகள் இலங்கைத் தமிழரது பழமையையும், பாரம்பரிய வரலாற்றுத் தொடர்பையும், தனித்துவத்தையும் அடையாளம் காணப் பல நிலையில் உதவி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அச்சான்றாதாரங்களைப் பயன்படுத்துவதிலும், அவற்றை இலங்கையின் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையில் இருந்து விடுபட்டு நடுநிலையோடு பார்க்கும் அறிவு நேர்மையிலும் வராற்றறிஞர்களிடையே வேறுபாடுகள் இருப்பதைக் கடந்த கால ஆய்வுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன.
தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இல்க்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்குண்டு. அதேவேளை அவை இலங்கைத் தமிழரின் வரலாற்றை அறிய அதிகம் உதவவில்லை என்ற மனக்குறையுமுண்டு. இதனால் பாளி இலக்கியங்களை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு எழுந்த பிற்கால வரலாற்று நூல்களில் தமிழரின் பண்டைய கால வரலாறு ஒப்பீட்டளவில் மிகத் தொய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. பெளத்த சமயத்தை முதன்மைப்படுத்தும் நோக்கில் எழுந்த இப்பாளி நூல்களில் சில வரலாற்று உண்மைகளோடு, பல கட்டுக்கதைகள், ஐதீகங்கள், பக்கச்சார்பு போன்ற குறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் தொல்லியல் ஆய்வு வளர்ந்த நிலை யிலும் இலங்கையின் பண்டையகால வரலாற்றை அறிய அவற்றையே ஒரு முக்கிய மூலாதாரமாகப் பயன்படுத்தத் தவறுவதில்லை. அவற்றைக்கூட சிங்கள மக்களுக்குச் சார்பாகப் பார்க்கப்படும் அள விற்கு தமிழருக்குச் சார்பானதாகப் பார்ப்பதில்லை. கி.மு.6ஆம் நூற்றாண்டு விஜயன் தலைமையில் 700 பேர் வடஇந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் கூடியேறியதாகப் பாளி நூல்கள் கூறுவதைச் சிங்கள மக்களின் புலப்பெயர்வுக்குரிய முக்கிய சான்றாகக் காட்டப்படுகிறது. ஆனால் அதே பாளி நுால்கள் இவ்வாறு குடியேறியவர்களுக்காக 700 மணப்பெண்களும், 18 தொழில் தெரிந்த 1000 குடும்பங்களும் தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறியதாகக் கூறுவதைத் தமிழர் புலப்பெயர்வு நடந்ததற்குரிய சான்றாக எடுத்துக் கொள்வதில்லை. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நீண்ட காலம் (44ஆண்டுகள்) நீதிதவறாது ஆட்சி புரிந்த மன்னன் என்ற

பரமு புஷ்பரட்ணம்
பெருமைக்குரிய எல்லாளன் என்ற தமிழ் மன்னன் தமிழ் நாட்டிலிருந்து வந்த படையெடுப்பாளன் எனப் பாளி இலக்கியங்கள் கூறுவதை அப்படியே உண்மையான சான்றாக ஏற்கப்படுகிறது. ஆனால் அதே பாளி நூல்கள் எல்லாளனுக்குப் பின் தமிழர்கள் படையெடுப்பின்றி கி. மு 1ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளர்களாக வந்ததை இங்காட்டுக்குரிய தமிழ் மன்னர்கள் எனக் கூறத் தயக்கம் காட்டப்படுகிறது. கிறிஸ்தவ சகாப்தத்தின் முதலிருனுாறு ஆண்டுகள் 22 மன்னர்களால் ஆளப்பட்டது. அதில் பத்து தமிழ் மன்னர் கள் எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்துள்ளனர். அதில் எல்லாளன் மட்டும் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான். ஆனால் அவர்கள் இங்காட்டுக்கு ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பு பற்றி பாளி இலக்கியங்கள் ஒன்றைத்தானும் கூறாததைப் பக்கச்சார்புடைய வரலாற்றுச் செய்தியாக யாரும் பார்ப்பதில்லை. அதே வேளை ஏனைய மன்னர்கள் ஆற்றியதாகப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றுப் பங்களிப்பை உண்மையே என நியாயப்படுத்த சமகாலத் தொல்லியல் சின்னங்கள் சான்றாகக் காட்டப்படுகிறது. இவ்வரலாற்றுப் பார்வை பாளி இலக்கியங்களின் வரலாற்றுத் திரிபை நியாயப்படுத்துவதாகவே இன்றும் இருந்து வருகின்றது.
இங்கிலையில் இலங்கைத் தமிழரின் உண்மையான பூர்வீக வரலாறு இலங்கையிலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளால் தெளிவுபெற வேண்டியுள்ளது. இதில் இலங்கைத் தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் ஆராய்ங் து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற குறைபாடு நியாயமானதாக இருப்பினும், கிடைத்த சான்றுகள் கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் நியாயமானதாகப்படுகிறது. அவற்றுள் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள், நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. ஒரு நாட்டின் பண்டைய கால வரலாற்றை அறிவதில் இவையிரண்டும் முக்கிய மூலாதாரம் என்பது வரலாற்றுப் புலமையாளர் பலரது ஏகோபித்த கருத்தாகும். இலக்கியங்களைப் போல் கற்பனை வளம் கொண்ட நீண்ட வரலாற்றுக் கதைகளை இவை சுமந்து செல்லாவிட்டாலும், இவற்றால் அறியப்படும் சிறு செய்தி கூட அந்த நாட்டின் சமகால எழுத்து, மொழி, பண்பாடு என்பவற்றை அறிய உதவும் நம்பகரமான சான்றுகளாக விளங்குகின்றன. அவற்றுள் இலங்கையின் தற்காலத் தமிழ், சிங்கள எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்த பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றாய்வில் பெறும் முக்கியத்துவத்தை எடுத்து ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

Page 11
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
வரலாற்றாய்வில் கல்வெட்டுக்கள்
வரலாற்றாய்வில் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய மூலாதாரங்களில் கல்வெட்டுக்களுக்கு தனிச் சிறப்புண்டு. ஒரு வட்டாரத்தில் கிடைக்கும் அல்லது குறிப்பிட்டகால எல்லைக்குள் எழுதப்பட்ட கல்வெட்டுக்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி தென்னாசியாவின் தலைசிறந்த கல்வெட்டறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சுப்பராயலு (1991: 46) கூறிய கருத்து நோக்கத்தக்கது.
"கல்வெட்டுக்களைப் பொறித்தவர்கள் அவற்றை வரலாற்று மூலாதாரமாகக் கொள்ளவில்லை. பழைய செய்திகளைக் காலமுறைப் படுத்திச் சொல்வதோ, பொருளாதார, சமுதாயச் செய்திகளை முறையாக விவரிப்பதோ அவர்களின் முக்கிய நோக்கமல்ல. இக்கால வரலாற்றாய்வாளர்களே இவற்றை வரலாற்று மூலங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. . கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலும் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. இலக்கியப்களில் ஏடு பெயர்த்து எழுதுபவரால் பல மாற்றங்களும், இடைச்செருகலும் புகுத்தப்பட வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு கல்வெட்டுக்களில் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். மெய்க்கீர்த்திப் பகுதியில் வரும் உயர்வு நவிற்ச்சிகளையும், கற்பனைகளையும் விலக்கிவிட்டால் பெரும்பாலான கல்வெட்டுக்கள் அன்றாடச் செய்திகளைக் கூறும். கல்வெட்டுக்களில் இன்னொரு சிறப்புத்தன்மை அவற்றின் உலகியல் சார்பான மிகைப்படாத நடையாகும். கற்பனை வளம் எதையும் ஏற்றிச் செல்லும் தன்மை கொண்ட இலக்கியகடைக்கு இது மாறானதாகும். வரலாற்றாய்வில் காலம் இன்றியமையாத ஒரு தேவையாகும். காலத்தைக் கண்டறிவதில் கல்வெட்டுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் கல்வெட்டுக்கள் ஒவ்வொரு காலத்திலும் நிலவி வங்த அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றைப் பிரதிபலிக்கும் சான்றாகக் கொள்ளப்படுகின்றன".
தமிழகக் கல்வெட்டுக்களை மையமாகக் கொண்டு பேராசிரியர் கூறிய இக்கருத்து இலங்கைக்கும் பொருந்துமென்பதை அண்மைக் காலத்தில் வெளிவந்த ஈழத்து இந்து சமய வரலாறு (சிற்றம்பலம் 1996), glavnløMasufløf aflau gavumálas6ř (Siva Temples of Sri Lanka, (ed). Pathmanathan 1999), இலங்கையில் இந்து கலாசாரம் (பத்மநாதன்
4.

பரமு புஷ்பரட்ணம்
2000) போன்ற நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுள் ஈழத்து இந்து சமய வரலாறு பற்றிய நூல் வரையறுத்துக் கொண்ட காலத்திற்கு ஏற்ப சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களை சமகால இந்திய, தமிழக வரலாற்றுப் பின்னணியில் நோக்கியிருப்பது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உடையது. இலங்கை இந்துக் கலாசாரம் பற்றிய நூல் பண்டைய காலம் தொட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரையிலான கால வரலாற்றிற்குப் பெரும்பாலும் கல்வெட்டுக்களை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் சமஸ்கிருதத்திலும், பண்டைய தமிழ் எழுத்துக்களை வாசித்து அறிவதிலும் புலமைமிக்க பேராசிரியர் பத்மநாதன் கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுக்கு அர்த்த புஷ்டியான புதிய விளக்கம் கொடுத்து இலங்கையின் பண்டைய கால ஆலயங்கள், அவற்றை அமைப்பதில் அரசர்கள், வணிகர்கள் ஆற்றிய பணிகள், கோயில் நிர்வாகம், சமயவிழாக்கள், திருப்பணிகள், தருமங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள அண்மைக் காலத்தில் கிடைத்த கல்வெட்டுக்களையும் அடிப்படை மூலாதாரமாகப் பயன்படுத்தியிருப்பது இலங்கைத் தமிழர் வரலாற்றிற்கு அறிமுகம் செய்திருக்கும் புதிய சான்றுகளாகும்.
பிராமிக் கல்வெட்டுக்கள்
இலங்கையில் கல்மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் அண்மைக்காலம் வரை காணப்படுகிறது. இவற்றுள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எண்ணிக்கையில் அதிகமாகும். இதன்பின் கிடைக்கப் பெற்ற ஒருசில தமிழ், சிங்கள, சமஸ்கிருத கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கி.பி.8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழ், சிங்கள மன்னர்கள், வணிககணங்கள் என்பவற்றின் ஆதிக்கம் வளர்ந்த நிலையில் கல்வெட்டுக்கள் வகையிலும், தொகையிலும் அதிகரித்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பின்னர் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்தன.
கி.பி.5ஆம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திற்குரிய கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டவையாகும். இதனால் இவை பிராமிக் கல்வெட்டுக்கள் எனவும், குகைப் பிராமிக் கல் வெட்டுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் இவை கற்களில் மட்டுமன்றி பொன், செம்பு, செங்கல், மட்பாண்டம் போன்ற

Page 12
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பொருட்களிலும் எழுதப்பட்டுள்ளன (இந்திரபாலா 1972. Veluppilai 1981, புஷ்பரட்ணம் 1999). ஆயினும் எண்ணிக்கையில் அதிகமானவை பெளத்த துறவிகளுக்குரிய குகை, கற்படுக்கை, கற்துாண் என்பவற்றிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 1500க்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் இலங்கையின் பல பாகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையுடைய கல்வெட்டுக்கள் தென்னாசியாவில் இலங்கையைத் தவிர ஏனைய வட்டாரங்களில் இதுவரை கிடைக்கவில்லை. இக்கல் வெட்டுக்களில் பெரும்பாலானவை ஒரிரு வரிகளில் பெளத்த குருமாருக்கு, பெளத்த சங்கத்திற்கு அக்காலச் சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன (Paranavithana 1970, 1983, Karunaratne 1984). இதனால் இக்கல்வெட்டுக்கள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்து கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.
σTΦΦΦι
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்தவர்களுள் பேராசிரியர் பரணவிதானாவுக்கு முக்கிய பங்குண்டு. குறுகிய காலத்தில் அவர் மேற்கொண்டது போன்ற பலதுறை சார்ந்த ஆய்வைப் பிற்காலத்தில் இலங்கையில் யாரும் செய்ததாகத் தெரியவில்லை. பல மொழிகளில் அவருக்கிருந்த புலமை காரணமாக அவர் பிராகிருதம், சிங்களம், தமிழ் போன்ற பல மொழிக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்துள்ளார். ஆயினும் ஆரம்ப காலங்களில் வரலாற்றுச் சான்றுகளை நிதானமாகப் பயன்படுத்திய அளவுக்கு அவர் பிற்காலத்தில் பயன்படுத்தவில்லை என்ற கருத்தும் காணப்படுகிறது. இன்று அவர் பதிப்பில் வெளியான இரு கல்வெட்டுத் தொகுதிகளே பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன (1970, 1983). இக்கல் வெட்டுக்களை அவர் ஆராய்ந்த போது தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றியும், தமிழ்ப் பிராமியின் தனித்தன்மை பற்றியும் நன்கு அறிந்திருந்தார் என்பதை
6

பரமு புஷ்பரட்ணம்
அவர் பயன்படுத்தியுள்ள அடிக்குறிப்பு நூல்களில் இருந்து நன்கு அறிய முடிகிறது. ஆயினும் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பாரம்பரிய வரலாற்றுத் தொடர்பை மறந்த நிலையில் இலங்கைப் பிராமிக்கு வடபிராமி, அசோகன் பிராமி எனப்பெயரிட்டு சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்ததற்கு இக்கல்வெட்டு எழுத்தை ஒரு சான்றாகக் காட்டியுள்ளார். அத்துடன் கல்வெட்டுகளுக்குரிய பிராகிருத மொழியை சிங்கள மொழியின் பழைய வடிவம் எனவும், இவை காணப்படும் இடங்களில் எல்லாம் சிங்கள மக்களே வாழ்ந்தனர் எனவும் நியாயப்படுத்தினார் (I.C.1970:XVI). இதன் மூலம் இலகை முழுவதிலும் முன்பொருகாலத்தில் சிங்கள மக்களே வாழ்ந்தனர் என்ற கருத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
பண்டு தொட்டு இந்தியப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உட்பட்ட இலங்கையில் பிராமி எழுத்து அறிமுகமாக இந்தியத் தொடர்பு காரணம் என்பதில் சங்தேகம் இல்லை. ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வடபிராமி எழுத்துக்கள் மட்டுமன்றி தமிழ்ப் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இங்கிலையில் இந்தியாவின் குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் இருந்து மட்டும் இவை பரவியதெனக் கூறி இதன் மூலம் இலங்கையின் பண்பாட்டை வடஇந்தியாவுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை. பிராமி எழுத்தின் தோற்ற காலத்தையிட்டுப் பல தரப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னாசியாவில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றுகள் உண்டு. இவ்வெழுத்து வட்டார அடிப்படையில் அவற்றின் மொழி, பண்பாடு என்பதற்கு ஏற்ப சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து தமிழி, திராவிடி, தமிழ்ப்பிராமி எனத் தனித்து இனங்காணும் அளவிற்கு சில சிறப்பியல்புகளைப் பெற்றிருந்தது (Mahadevan 1966).
இலங்கையில் பெளத்தமதம் அரசமதமாக ஏற்றுக்கொள்ளப்பட வடஇந்தியத் தொடர்பு ஒரு காரணமாக இருப்பினும், இதன் வளர்ச்சியில் ஆந்திர, தமிழ்நாட்டுச் செல்வாக்கு முக்கிய காரணம் என்பதைத் தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இப்பெளத்த பண்பாட்டிற்கு முந்திய இலங்கையின் நுண்கற்கால (Mesolithic Culture), பெருங்கற்கால (Megalithic) பண்பாடு தென்னிந்தியாவின் பிற பிராந்தியங்களைவிட தமிழகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற கருத்து அண்மைக் காலத்தில் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டு வருகிறது.
7

Page 13
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இலங்கையின் பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுக்கள் கூட பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய மையங்களில் காணப்படுகின்றன. இவையிரண்டுக்கும் இடையிலான தொடர்பு பண்பாட்டுப் பரவலைத் தொடர்ந்து பிராமி எழுத்தின் அறிமுகமும் முதலில் தமிழ்நாட்டிலிருங் து ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு நாடுகளிலும் வழக்கில் இருந்த பிராமி எழுத்துக்களில் அடிப்படையான சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :
1.
பிராமி எழுத்துப் பொறித்த பெளத்த சமண, துறவிகள் வாழ்ந்த குகையின் தோற்ற அமைப்பு ஒரே பிராந்தியத்திற்குரியதெனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை உடையன.
வடபிராமியில் பயன்படுத்தப்பட்ட கூட்டெழுத்து இரு
நாடுகளிலும் பயன்படுத்தப்படவில்லை.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் காணப்படும் "அ ", "Ag)", "உ", "த ", "F ", "த ", "n" ", "Լյ ", "Այ g போன்ற எழுத்துக்கள் வடபிராமியில் காணப்பட்டாலும், இவற்றின் வடிவமைப்பு (Shape) தமிழகப் பிராமி கல்வெட்டு எழுத்துக்களுடன் ஒத்துள்ளன(Fernando 1969:19-24).
தமிழ்ப் பிராமியில் "ம" என்ற ஒலிப் பெறுமானத்திற்குரிய தனித்துவமான வரிவடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு வடபிராமி எழுத்தில் இருந்து வேறுபட்டது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வடபிராமிக்குரிய "ம" வரிவடிவம் அரிதாகவும், தமிழ்ப் பிராமிக்குரிய "ம" வரிவடிவம் பரவலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கிலிருந்த பிராமி, தமிழ்ப் பிராமி எனத் தனித்து அழைக்கப்பட அங்குள்ள கல்வெட்டுக்கள் பெரும்பாலும் தமிழ் மொழியில் எழுதப்பட்டதுடன், அவற்றில் தமிழ் மொழிக்கே சிறப்பான "இ", "ஈ ", "ழ ", "ள ", "ற ", "ன " போன்ற எழுத்துக்களும் பயன்படுத் தப்பட்டுள்ளன. இவ்வகை எழுத்துக்கள் அசோக பிராமி அல்லது வடபிராமியில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சமகாலத்தில் இவை இலங்கைப் பிராமியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் "இ" என்ற ஒலிப்

பரமு புஷ்பரட்ணம்
பெறுமானமுடைய எழுத்து இலங்கைப் பிராமிக்கல்வெட்டுக்களில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வெழுத்து தமிழகத்தில் இருங்து நேரடியாகப் பரவாது வடஇந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து இலங்கைக்கு வந்ததாக ஒரு கருத்துண்டு. ஆனால் வட பிராமியில் கிறிஸ்துவுக்கு முன் இவை பயன்படுத்தப்படவில்லை. பிற்பட்ட சாதவாகன, குப்தர்காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டாலும் இது " F " என்ற ஒலிப் பெறுமானத்தையே பெற்றிருங்தது. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் தான் இது "இ" "ஈ" என்ற ஒலிப்பெறுமானம் பெற்றிருந்தது. "ழ" என்ற எழுத்து வடஇலங்கையில் பெரியபுளியங்குளக் கல்வெட்டு உட்பட ஒரு சில கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன (E,ZVII:32-35). "ள" என்ற எழுத்து நாற்பதுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டோர் அவற்றில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட "ன", "ற" போன்ற சிறப்பெழுத்துக்கள் இல் லையென்றே இதுவரை காலமும் கூறிவந்துள்ளனர். ஆனால் பரணவிதானா கல்வெட்டுக்களுக்கு கொடுத்த வாசகங்களுடன் அவர் கொடுத்திருக்கும் கல்வெட்டுகளுக்குரிய மைப்படியை ஒப்பிட்டு ஆராய்ந்தால் பல இடங்களில் இவ்வெழுத்துக்கள் பயன்பாட்டிலிருந்ததையும், அவற்றைப் பரணவிதானா அசோக பிராமியாக கருதி வாசித்திருப்பதையும் இலகுவாக அடையாளம் காணமுடிகிறது (புஷ்பரட்ணம் 2000). அவற்றுள் "ன" என்ற எழுத்து மருமகன், மருமான், சுமன், மல்லன், குவின் (I.C.1970.No.538. 1161) போன்ற பெயர்களிலும், "ற" என்ற எழுத்து மறுமகன், மஹாறாஜா, பறுமக போன்ற பெயர்களிலும் 3m60OruGbestipso (Paranavithana 1970:Nos.4, 642, 1161). இவ்வெழுத்துக்கள் சமகாலத்தில் மேலும் புழக்கத்திலிருந்ததைப் பூநகரி, கந்தரோடை பெருங்கற்கால மட்பாண்டங்களிலும் (புஷபரட்ணம் 1993, 2000 கிருஷ்ணராஜா 1998), தென்னிலங்கையில் கிடைத்த கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புழக்கத்திலிருந்த நாணயங்களிலும் காணமுடிகிறது (Bopearachchi 1999, புஷ்பரட்ணம் 1993, 2000). தமிழகக் கல்வெட்டுக்கள் தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் ஏனைய எழுத்துக்கள்

Page 14
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
வடபிராமியில் இருந்து வேறுபட்டவையல்ல. அத்துடன் அங்கும் வடபிரா மிக்கேயுரிய எழுத்துக்கள் பயன்பாட்டிலிருந்ததை மாங்குளம், கீழவளவு ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம் (Mahadevan 1966:10). சமகாலத்திற்குரிய சங்க கால நாணயங்கள் தமிழகத்தில் தமிழ்ப் பிராமியில் வெளியிடப்பட்டாலும் மன்னனாலும் மற்றைய தலைவர்களாலும் வெளியிடப்பட்ட முத்திரைகளில் தமிழ்ப் பிராமியுடன் வடபிராமி எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காணமுடிகிறது (ஆறுமுக சீதாராமன் 1994). அண்மைக் காலத்தில் அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம், கோவலன்பொட்டல், உறையூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் "ஹ", "ட", "ப", "ஸ" போன்ற வடபிராமி எழுத்துக்கள் மட்பாண்டங்களில் பெறப்பட்டுள்ளன (Rajan 1994, Kasinathan 1996:27:35). இவை வர்த்தகத் தொடர்பாலும் வந்திருக்க இடமுண்டு. அதேவேளை இலங்கைப் பிராமியில் வடபிராமி எழுத்தின் செல்வாக்கு கூடுதலாக இருந்தாலும் வடபிராமிக்கு உரிய அனைத்து எழுத்துக்களும் இருப்பதாகக் கூறமுடியாது. சில எழுத்துக்கள் அரிதாகவும், சில எழுத்துக்கள் பயன்பாட்டில் இல்லாமலிருந்ததையும் காணமுடிகிறது (இராசகோபால் 1991, Karunaratne 1960). இந்த வேறுபட்ட சான்றாதாரங்கள் இலங்கையில் தமிழ்ப் பிராமியும், அசோக பிராமியும் புழக்கத்திலிருந்ததைத் தெளிவுபடுத்துகின்றன.
அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்களால் வடபிராமிக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் உண்டு என்ற கருத்து QJGITirġiéla Guġbgp QuobdSpgi (Ramesh1990:179-184, Sampat 1999). தென்பகுதியிலிருங் திே வடபகுதிக்கு எழுத்துச் சென்றிருக்க வேண்டுமென்ற கருத்து சில ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. குறியீடுகளுக்கும், பிராமி எழுத்துக்கும் இடையிலான உறவு ஆனைக்கோட்டை முத்திரை, கீழ்வாலை, மாங்குளம், மகாராஜகடை ஆகிய இடங்களில் கிடைத்த ஓவிய எழுத்துக்கள் மூலமும், கொடுமணல் பானை ஒடுகள் மூலமும் தெரியவருகிறது. இவ்வித கருத்துச் சூழலில் இலங்கையின் ஆரம்பகால பிராமி எழுத்துக்கள் முதலில் தமிழகத்தில் இருந்து பரவியதெனக் கூற இடமுண்டு. ஆனால் பெளத்த மதம் அரச மதமாக ஏற்கப்பட்டு பிராகிருதம் கல்வெட்டு மொழியாக மாறியபோது வடபிராமி எழுத்துக்கள் செல்வாக்குப் பெறத்தொடங்கியது. இதற்கு வடஇந்திய நேரடித் தொடர்பு மட்டுமல்ல, பெளத்தமதம் செல்வாக்குப் பெற்றிருந்த தென்னிந்தியாவின் மேற்குப் பிராந்திய நாடுகளின் தொடர்பும் காரணம் எனக் கூறலாம். இதனால் தமிழ்ப் பிராமியின் பயன்பாடு
1O

பரமு புஷ்பரட்ணம்
சமகாலத்தில் மக்களிடம் இருந்து மறைந்து விட்டதெனக் கூறமுடியாது. இலங்கையில் தமிழ், சிங்கள மொழிக் கல்வெட்டுக்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டின் பின்னரே தோற்றம் பெறுகிறது. இங்கிலையே தமிழகத்திலும் காணப்படுகிறது. எவ்வாறு இந்திய எழுத்துக்கள் பலவும் பிராமியில் இருந்து தோன்றியதோ அதேபோல் இலங்கையில் தமிழ், சிங்கள எழுத்துக்கள் தோன்ற இங்கு வழக்கிலிருந்த தமிழ்ப் பிராமியும், அசோக பிராமியும் காரணம் என்பதை கி.பி.8ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.
மொழி
இலங்கையின் ஆதிகால மொழி பற்றிய ஆய்வில் பிராமிக் கல்வெட்டுக்கள் முக்கிய சான்றாதாரமாகக் கொள்ளப்படுகின்றன. இக்கல்வெட்டு மொழி பற்றி காலத்திற்கு காலம் ஆராய்ந்த பலரும் இதன் மொழியை சமகாலத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பிராகிருதம் என ஏற்றுக் கொண்டுள்ளனர் (Karunaratne 1984:3947). வில்லியம் கைகர் இம்மொழியைச் சிங்கள பிராகிருதம் எனவும், பரணவிதான ஆதிச் சிங்கள மொழியெனவும் பெயரிட்டு இது வடஇந்தியாவின் மேற்குப் பிராந்தியத்திலிருந்து அல்லது கிழக்குப் பிராங்தியத்திலிருங்து பரவியிருக்க வேண்டும் என விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கு மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை மட்டுமன்றி சிங்கள மக்களின் மூதாதையினர் வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்ற பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையும் ஆதாரம் காட்டப்பட்டுள்ளன (I.C. 1970 XVI). இலங்கையின் கல்வெட்டு மொழியாக பிராகிருதம் இருப்பதற்கு பெளத்த மதத்தோடு அம்மத மொழியான பிராகிருதமும் அறிமுகமானது காரணமாக இருக்கலாம். இங்கிலையைப் பெளத்த மதம் பரவிய ஏனைய தென்னாசிய வட்டாரங்களிலும் காணலாம். இலங்கையில் பெளத்தம் அரசமதமாக ஏற்றுக்கொள்ளப்பட வடஇந்தியத் தொடர்பு காரணமாக இருந்தாலும், இம்மதம் வளர்ச்சியடைய தென்னிந்தியச் செல்வாக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதனால் பிராகிருத மொழி இங்கிருந்தும் பரவியிருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் பெளத்தத்திற்கு முன் பிராகிருத மொழிச் செல்வாக்கு ஏற்பட்டதென்ற கருத்து ஆதாரங்களுடன் வலியுறுத்தப்படுகிறது. இங்கு காணப்படும் பெரும்பாலான குகைக் கல்வெட்டுக்கள் சமண மதத்தோடு தொடர்புடையதால் இம்மதத்தோடு இம்மொழி அறிமுகமாகி இருக்க வாய்ப்புண்டு. அக்கல்வெட்டுக்களில் வரும்
11

Page 15
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இருபதுக்கு மேற்பட்ட சொற்கள் ஏறத்தாழ அதே வடிவத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் வருகின்றன (புஷபரட்ணம் 2000:16-24). இலங்கையில் பெளத்தத்திற்கு முன் சமணமதம் இருந்ததற்கு பாளி இலக்கியங்களில் சில சான்றுகள் உண்டு. இங்குள்ள காலத்தால் முங்திய பெரியபுளியங்குளம், மிகிங் தலை, வெசகிரி பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமியின் செல்வாக்கைக் காணமுடிகிறது. இவை தமிழ்நாட்டில் இருந்து சமண மதத்தோடு அறிமுகமானவை என்பது அபயசிங்காவின் கருத்தாகும் (Abayasinha 1965:29). இவற்றை நோக்கும் போது இலங்கையின் பிராகிருத மொழி பெளத்த மதத்துடன் மட்டுமன்றி சமணமதத்தோடும் ஓரளவுக்கு பரவியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோதும் அதுவே மக்களின் தொடர்பு மொழியாக இருந்ததெனக் கூற ஆதாரம் இல்லை. இதுவரை கிடைத்த அனைத்துக் கல்வெட்டுக்களும் பெளத்தமதம் சார்ந்த செய்திகளை மட்டும் கூறுகின்றன. வடஇங்தியாவில் பெளத்த கோட்பாட்டை விளக்கும் விரிவான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவ்வகையான கல்வெட்டுக்கள் எவையும் இதுவரை இலங்கையில் கிடைக்கவில்லை. மாறாக தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களைப் போல் இங்கும் ஒரிரு வரிகளில் தானம் கொடுத்தோர், டெற்றோர் பற்றிய விபரம் மட்டும் காணப்படுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுக்களில் குறிப்பிட்ட சில பெயர்கள், பட்டங்கள், சொற்கள் என்பன மாறிமாறி வருகின்றன. பிராகிருதம் அல்லாத பல சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நோக்கும் போது கல்வெட்டில் போதுமான அளவுக்கு பிராகிருத மொழிச் சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிகிறது (Ragupathy 1991). அத்துடன் பெரும்பாலான கல்வெட்டுக்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களோடு தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1234 கல்வெட்டில் 200 கல்வெட்டுக்களைத் தவிர ஏனைய கல்வெட்டுக்கள் அரசவம்சம், சமூகத் தலைவர்கள், பிராமணர்கள், பெளத்த துறவிகள், பிக்குணிகள் ஆகியோருடன் தொடர்புடைய செய்திகளை மட்டும் கூறுகின்றன. இச்சான்றாதாரங்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்த குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரால் பிராகிருதம் கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனக் கருத இடமளிக்கிறது.
12

பரமு புஷ்பரட்ணம்
கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம் இருந்த போதிலும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், பெயர்கள் அனைத்தும் வடமொழிக்குரியவை எனக் கொள்ளமுடியாது. மொழியியல் ஆய்வாளர்கள் ஆரிய, திராவிட மொழிபேசிய மக்கள் தமக்கு முன் வாழ்ந்த மக்களது பேச்சு வழக்கில் இருந்த பல சொற்களைக் கடன் வாங்கியிருப்பதைச் சான்றாதாரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளனர். காலப்போக்கில் ஆரிய மொழியில் இருந்து திராவிடமொழிகளும், திராவிட மொழியில் இருந்து ஆரிய மொழியும் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன (Chetteri 1952, Burrow 1968, Caldwel1981). இலங்கையில் இன்று சிங்கள மக்களது பேச்சுவழக்கில் உள்ள 200க்கும் மேற்பட்ட சொற்கள் ஆதிஒஸ்ரலோயிட் மக்கள் பேசிய மொழி என அடையாளம் காணப்பட்டுள்ளன (Gunawar dhana 1973). இம்மக்கள் இலங்கையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கருதப்படும் கி.மு.6ஆம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியா குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து கி.மு.28000 ஆண்டளவில் புலம்பெயர்ந்து வந்த நுண்கற்கால மக்கள் எனக் கருதப்படுகிறது (Allchin 1960, Deraniyagala 1984). இதன் பின்னர் கிமு.800 அளவில் திராவிட மக்கள் குடியேறியதற்கான சான்றுகள் இலங்கையின் பல வட்டாரங்களில் 560oi GòLfliq655 lul Gò Gri GT SOT (Goonatilake 1981, Sitrampalam 1980, Seneviratne 1984, Ragupathy 1987). (3)'iLu60öTLUTi'G5 60)LOulu Tralö560GT அண்டியே பெரும்பாலும் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் அவர்கள் பேசிய மொழிகள் பிராகிருதத்தில் கலந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பரணவிதானா இக்கல்வெட்டுகளின் எழுத்தையும், மொழியையும் சிங்கள மக்களின் மூதாதையினர் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு சான்றாகக் கொண்டதால் அவற்றில் வரும் சொற்கள் வடமொழி சார்ங் தவை என்பதற்கு வடமொழிக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் ஆதாரம் காட்டியுள்ளார். சில சொற்கள் திராவிடமொழிக்கு உரியவை என இவர் ஏற்றுக் கொண்டாலும் அவை பிற்காலத்தில் கடன் வாங்கப்பட்ட சொற்கள் என விளக்கம் கொடுக்கிறார். வேறு பல சொற்களை "எலு" மொழி சார்ந்தவை எனக் கூறிப் பழைய சிங்களம் என கியாயப்படுத்துகிறார்.
ஆனால் தமிழ் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் பிற்காலத்தில் கடன் வாங்கப்பட்டதெனக் கூறுவது இலங்கையில் தமிழ் மொழியினதும், அம்மொழி பேசிய மக்களினதும் பூர்வீக வரலாற்றை மறைப்பதாக உள்ளது. ஏனெனில் திராவிடமொழிப் பிராந்தியமான ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சுதேச மொழிகள் இருந்தும் அங்கு கி.பி.6-ஆம்
13

Page 16
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. அவற்றில் அரிதாக சில சுதேச மொழிச் சொற்கள் கலந்துள்ளன (Somasekhara Sarma 1974:1-3). (2) S60 meó 9)augssop& SLSör வாங்கப்பட்ட சொற்களாகவோ, அல்லது அங்கு சுதேச மொழிகள் இருக்கவில்லை என்றோ யாரும் கூறுவதில்லை. இது இலங்கைக்கும் பொருங் தும் . பரணவிதானா கூறும் "எலு" மொழியென்பது கல்வெட்டுக்களில் வரும் சொற்கள், பெயர்களை வடமொழியோடு தொடர்புபடுத்த முடியாத நிலையில் அவற்றைத் தமிழ் மற்றும் திராவிட மொழிகளுக்கு உரியவை என்பதை ஏற்க விரும்பாத காரணத்திற்காக அவர் பயன்படுத்திய ஒரு சொற்பதமாகவே எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் "எலு" மொழிக்குரிய பெயர்களை, சொற்களை தனியொரு மொழியாகப் பார்ப்பதற்கு அவை எந்த வகையில் சமகாலத் தென்னாசிய மொழிகளில் இருந்து வேறுபட்டதென்பதற்கு அவரால் பொருத்தமான விளக்கம் கொடுக்கமுடியவில்லை. ஆரிய, திராவிட மொழிகள் பற்றி ஆராய்ந்த மொழியியல் அறிஞர்கள் பலரும் தென்னாசிய, மேற்காசிய நாடுகளில் வாழ்ந்த பல வகை இனக் குழுக்கள் பேசிய மொழிகள் பற்றியும், அவை பிற்கால ஆரிய, திராவிட மொழிகளில் ஏற்படுத்திய செல்வாக்குப் பற்றியும், காலப்போக்கில் ஆரிய, திராவிட மொழிக் குடும் பங்களிடையே ஏற்பட்ட மொழி இணைப்பப் பற்றியம் சான்றாதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளனர் (Chetteri 1952, Burrow 1968, caldwell 1981, Zvelebil 1981). 3,60T TGS 6Trë 56 Guitab இடத்திலும் இலங்கையில் புழக்கத்திலிருந்த "எலு" என்ற ஒரு மொழி பற்றி அவர்கள் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. அதிலும் ஈழம் என்ற சொல்லைத் தமிழ்மொழிக்குரியதெனக் கூறும் பரோ கூட "ஈழம்" என்ற சொல்லுக்கும் "எலு" மொழிக்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. இது பற்றி ஈழத்து மொழியியல், வரலாற்று அறிஞர்கள்தான் ஆராயவேண்டும்.
கல்வெட்டுக்களில் வரும் சொற்செறிவு ஒரு மொழியைத் தீர்மானிக்க உதவுமா என்ற கேள்வி மொழியியல், கல்வெட்டு அறிஞர்களிடையே இருப்பினும் அவை அக்காலத்தில் வாழ்ந்த மக்களை, மொழியை இனங்காண உதவும் என்பதில் ஐயமில்லை. தென்னாசியாவின் பல வட்டாரங்களில் தொடக்க காலக் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம் இருந்த போது சமகாலத்தில் தமிழைக் கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்திய பெருமை தமிழகத்திற்குத்தான் உண்டு. அக்காலத்தில் ஆரிய மொழியான சமஸ்கிருதம், திராவிட மொழிகளான கன்னடம்,
14

பரமு புஷ்பரட்ணம்
தெலுங்கு என்பவை பயன்பாட்டிலிருந்தும் அவை கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் கல்வெட்டு மொழியாக மட்டுமன்றி வளமான சங்க இலக்கியத்தை முதலில் படைத்த மொழியாகவும் இருந்துள்ளது. அப்போது இலங்கைத் தமிழர்கள் புலவர்களாகவும், வணிகர்களாகவும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் (அக. 88, 231, 307. குறு.189, 343, 360, நற் 366) மட்டுமன்றி, தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன (Mahadevan 1966:NOS.51,52). சமகாலத்தில் தமிழகத்தை அடுத்து தமிழரோடு தொடர்புடைய ஒரு நாடாக இலங்கை இருங்ததை இலங்கைப் பாளி நூல்களும் (M.V.XXI:10-11, 15-34,XXXIl:37-41), îJT6láš ascóGaučGBěš5gh (I.C.1970. Nos. 94, 356-357, E.Z.Il; 111114) கூறுகின்றன. இச்சான்றுகளைப் பண்டு தொட்டு இலங்கை மண்ணோடு தமிழருக்குள்ள உரிமையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். அதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன.
15

Page 17
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இயல் இரண்டு
கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், தமிழர் பெயர்களும்
பாளி இலக்கியங்களோடு தொல்லியல்ச் சின்னங்களையும் வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்தும் மரபு இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியோடு ஏற்பட்டதெனக் கூறலாம். இதற்கு அக்கால நிர்வாகத்தில் உயர்பதவி வகித்த பெல், கோகாட், முல்லர், கோல்சிமித், பாக்கர் போன்றோர் புராதன இராசதானிகள், நகரங்கள், வர்த்தக மையங்கள், துறைமுகங்கள் என்பவற்றில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆயினும் இவர்கள் கண்டுபிடித்த தொல்லியல் சின்னங்கள் பெரும்பாலும் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளை உண்மையென நியாயப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய வரலாற்றுப் பார்வையே பிராமிக் கல்வெட்டுக்கள் பொறுத்தும் தொடக்க காலத்தில் பின்பற்றப்பட்டன.
கி.பி. 1855ஆம் ஆண்டு புரோடி என்பவரால் வடமேற்கிலங்கையில் தோணிக்கல் என்ற இடத்தில் பிராமிக் கல்வெட்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இவற்றை வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. கி.பி. 1880 அளவில் ஆங்கிலேயரது நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த பாக்கர் என்பவர் வடஇலங்கையில்
16

பரமு புஷ்பரட்ணம்
பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில் வரும் "வேள்" என்ற சொல்லைச் சுட்டிக்காட்டி அதில் வரும் "ள" என்ற தமிழ்ப்பிராமி எழுத்து பண்டைய காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றென எடுத்துக் கூறினார். ஆனால் இவர் கருத்தைப் பிற்காலத்தில் கோல்சிமித், முல்லர், பெல், பரணவிதானா போன்றோர் மறுத்து அதில் வரும் "ள" என்ற எழுத்தை வடபிராமிக்குரிய "லு" எனக் குறிப்பிட்டு அப்பெயரை வேலு என வாசித்தனர் (I.C. 1970:XXV). 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் டி.வி மகாலிங்கம் (Mahalingam 1967:158160) தமிழகத்தைக் காட்டிலும் கூடுதலான கல்வெட்டுக்கள் காணப்படும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்கள் இருப்பதைச் சான்றாதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். ஆயினும் இது பற்றிய ஆய்வு 1970இன் பின்னரே ஒரளவுக்கு ஏற்பட்டதெனக் கூறலாம். அவ்வாறு ஆராந்த அறிஞர்களுள் இந்திரபாலா (சிங்கள மொழியில் பருமக பற்றி எழுதிய கட்டுரை), கருணாரத்தினா(Karunaratne1960,1984) வேலுப்பிள்ளை (1980, 1980a, 1980b, 1981), சுதர்சன் செனிவிரட்ணா (Seneviratne 1985), சிற்றம்பலம் (1980,1986/87,1993), அண்மையில் இரகுபதி (1991) போன்றோரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் 1980-81 அளவில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடான தமிழியியல் ஆய்விதழில் (Journal of Tamil Studies) தொடராக வெளிவந்த பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் கட்டுரைகளிலும், அங்கிறுவனம் வெளியிட்ட அவரது நூலிலும் அவர் சுட்டிக்காட்டிய பல தமிழ்ப் பெயர்களே பிற்காலத்தில் அவை பற்றி விரிவாக ஆராயப்படக் காரணம் எனலாம்.
தமிழ் நாட்டு அறிஞர்களும், தென்னிலங்கை அறிஞர்களும் கல்வெட்டுக்களை நேரில் பார்வையிட்டு, படியெடுத்து வாசிக்க இருந்த வாய்ப்பு இலங்கைத் தமிழ் அறிஞர்கள் எல்லோருக்கும், எல்லாக் காலத்திலும் இருந்ததெனக் கூறமுடியாது. அவ்வாறு இருந்திருந்தால் மேலும் பல தமிழ்ப் பெயர்களை அடையாளம் கண்டிருக்க முடியும். கல்வெட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட வாசகங்களை மட்டும் வைத்து ஆராயும் போது பல தப்பான முடிவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. இங்கிலையில் பரணவிதானாவின் பதிப்பில் வெளியான இரு தொகுதியில் உள்ள கல்வெட்டுப் படிகளை தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களை நேரில் பார்த்து ஒப்பிடும் போது அவரது வாசிப்புக்களில் சில மாறுதல்களையும், புதிய தமிழ்ப் பெயர்களையும் அடையாளம் காண
17

Page 18
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
முடிவதோடு, அவற்றிற்குப் புதிய விளக்கமும் கொடுக்க முடிகிறது. அவற்றை மட்டும் எடுத்து ஆராய்வதே எமது நோக்காகும்.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ் மொழியின் செல்வாக்கை ஆறு வகையில் நோக்கலாம். 1) தமிழ் மொழிக்குரிய தனிநபர் பெயர்கள், பட்டப்பெயர்கள் பிராகிருதமயப்படுத்தப்பட்டிருப்பது. இதற்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தோர் பெளத்த மதத்தைத் தழுவிய போது அல்லது அதற்கு ஆதரவு கொடுத்த போது அம்மத மொழியான பிராகிருதத்தில் தமது பெயரைப், பட்டங்களை எழுத முற்பட்டமை காரணம் எனக் கூறலாம். அல்லது பேராசிரியர் பத்மநாதன் (2000:47-48) கூறுவது போல் இலக்கியம் மூலமாக அறியப்படும் தமிழ்மொழிச் சொற்கள் வடிவம் பெறுவதற்கு முன் வழங்கிய சொற்களாக இருக்கலாம். 2) இலக்கிய வழக்கிலுள்ள தமிழ் மொழிக்குரிய தனிநபர் பெயர்கள், பட்டங்கள் கல்வெட்டுக்களிலும் அப்படியே எழுதப்பட்டுள்ளமை. 3) சில பிராகிருதப்பெயர்கள், பட்டங்கள் தமிழ் மயப்படுத்தப்பட்டிருத்தல். 4)தமிழகக் கல்வெட்டுக்களில் சில பிராகிருதப் பெயர்கள் அப்படியே எழுதப்பட்டிருக்கும் போது அதே பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ் மயப்படுத்தப்பட்டுள்ளமை. 5) தமிழக வரலாற்று மூலங்களில் பிற்காலத்திற்குரியதாக வரும் சில தமிழ் உறவுப் பெயர்கள் இலங்கையில் பண்டு தொட்டு இருந்தமைக்கான சான்றுகள் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படுவது. 6) தமிழகத்தின் சமகால இடப்பெயர்களுக்கான தொடக்ககாலச் சான்றாகச் சங்க இலக்கியத்தைப் பார்ப்பது போல் இலங்கைத் தமிழர்களது இடப்பெயர்களில் தொடக்க காலச் சான்றாகப் பிராமிக்கல்வெட்டுக்களைப் பார்ப்பது. அவற்றின் அடிப்படையில் சில பெயர்களை நோக்கலாம்.
பெருமகன் குடி
கல்வெட்டுக்களில் வரும் முக்கிய பட்டப்பெயர்களுள் பருமக என்ற சொல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 374 கல்வெட்டுக்களில் பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை அக்காலச் சமூகத்தில் பலதரப்பட்ட வகுப்பினரும் இப்பட்டத்தைப் பயன் படுத்தியிருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும் கல்வெட்டுக்களில் வரும் பல பெயர்களைக் குறிப்பிடும் சமகாலப் பாளி இலக்கியங்களில் ஒரு இடத்தில் கூட இப்பெயர் காணப்படாமை ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பட்டப் பெயர் தமிழில் பெருமகன்
18

பரமு புஷ்பரட்ணம்
என்ற பட்டத்தின் பிராகிருத வடிவம் என்பது அறிஞர்கள் பலரது 6(35ml 555 ascissisteb (Wickremasiinghe 1912:17, Gunawardana 1985:7, Karunaratne, 1984:33-35, 58,71, Veluppillai 1980b;10-11, Sitrampalam1991:19-28). இதன் பெண்பால் வடிவம் பருமகள் எனக் கல்வெட்டுக்களில் எழுதப்பட்டுள்ளமை இக்கருத்தை மேலும் வலுவூட்டுகிறது. ஆனால் எல்லாக் கல்வெட்டுக்களிலும் பருமக என்றே எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக இல்லை. ஏனெனில் சில கல்வெட்டுக்களில் இது பருமகன் என்ற கருத்தில் தமிழ்ப்பெயராகவே எழுதப்பட்டுள்ளது. அதற்குச் சான்றாக சில பெயர்களின் இறுதி "ன்" எனவும், "ங்" எனவும் முடிவதைக் காணலாம். அவ்வாறு முடிவது தமிழ்ப் பெயராகிவிடும் என்ற அர்த்தத்திலோ தெரியாது பரணவிதான அவ்விடங்களில் வழக்கத்திற்கு மாறான வாசிப்பு முறையைக் கையாண்டுள்ளார். பருமக என்ற பட்டத்துடன் இணைந்து வரும் பெயர்களில் மலி, மலிய, மார(ற) என்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன. இப்பெயர்கள் வேறு சில கல்வெட்டுக்களில் தனித்தும், பட்டப்பெயர்களுடனும் வரும் பொழுது சரியாகவே வாசித்துள்ளார். அதே போல பருமக-மலி, பருமக-மலிய, பருமக-மாற என்பதையும் சரியாக வாசித்துள்ளார் (I.C.1970.Nos. 58, 674, 187). ஆனால் பரும்கன்மலிய, பருமகன்(ங்)-மலி, பருமகன்(க்)-மாற என வரும் போது பருமகன் இறுதியில் வரும் "ன்", "ங்" என்ற எழுத்தை அடுத்து வரும் பெயருக்குரியதாக எடுத்து பருமக-கமலி, பருமக-நமலிய, பரும-கமற sTGOT QITéaġgjcir GITITii (I.C.1970. Nos. 19, 318, 492, 928, 250, 812). மருமகன் என்ற தமிழ்ப் பெயரை மருமகங் என்று வாசித்த பரணவிதானா பருமகன் என்ற பெயரை பருமகக என்றாவது வாசித்திருக்கலாம். இது அவரது தவறான வேறுபட்ட வாசிப்பு முறையைத் தெளிவாகக் காட்டுகிறது. பருமகன் என்ற பெயருக்குப் பதிலாக பருமகங் என எழுதப்பட்டிருப்பதையும் பருமகன் என்று எழுதப்பட்ட தமிழ்ப் பெயராக எடுக்கலாம். ஏனெனில் ஆரம்ப காலப் பிராமிக் கல்வெட்டுக்களில் "ன்" என்ற எழுத்திற்குப் பதிலாக "ங்" என்ற எழுத்துப் பயன்படுத்தப்பட்டதையும் அதை "ன்" என வாசித்ததற்கும் தமிழகத்தில் சான்றுகள் உண்டு. உதாரணமாக சங்க இலக்கியத்தில் அதியன் என வரும் பெயர் ஜம்பைக் கல்வெட்டில் அதியங் என எழுதப்பட்டுள்ளதையும் அதை அதியன் என எடுத்துக் கொண்டதையும் இங்கு குறிப்பிடலாம்.
தமிழில் பருமகன், பெருமகன் என்ற சொல் தலைவன், உயர்ந்தவன், அரசன், பெரியமகன், மூத்தமகன், அண்ணன் என்ற
19

Page 19
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
கருத்தைக் கொண்டுள்ளது. இதே கருத்தையே மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் காணமுடிகிறது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் பருமக பருமகன் என்ற பட்டத்தை உடைய பலர் இதே கருத்தில் மதிக்கப்பட்டதை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து அறிய முடிகிறது. சில கல்வெட்டுக்களில் இப்பட்டபெயரில் இடப்பெயர்கள் இருந்ததைக் காணமுடிகிறது. இதற்குப் பருமகபுர என்ற இடப்பெயரை உதாரணமாகக் குறிப்பிடலாம் (I.C.1970.No25). இது சக காலத் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களது பட்டப் பெயரில் சில இடப்பெயர்கள் தோன்றியதை நினைவு படுத்துவதாக உள்ளது. இதனால் இப்பட்டத்தை உடைய அனைவரும் சமூகத்தில் உயர்வான நிலையில் இருந்தார்கள் எனக் கூறமுடியாது. பல கல்வெட்டுக்களில் இப்பட்டத்திற்குரியவர்களின் தொழில் நடவடிக்கைகளை நோக்கும் போது சாதாரண மக்களும் இப்பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளமை தெரிகிறது. இதற்கு ஆரம்ப காலங்களில் ஆளும் வர்க்கமான உயர்பதவி வகித்தோர் பயன்படுத்திய பட்டத்தை காலப் போக்கில் அவர்களின் வழிவந்தோரும் பயன்படுத்தியமை காரணமாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் சில கல்வெட்டுக்களில் பருமக குடி என்ற சொல் காணப்படுகிறது (I.C.1970.NOS1138, 1140). பரணவிதானா இச்சொல்லை பருமக-குட என வாசித்து "குட" என்பதன் மூல மொழி சமஸ்கிருதம் எனவும், அப்பெயர் ஸ்கங்தனைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (I.C.1970.134, Nos1138, 1140:107). ஆனால் அவர் காட்டியுள்ள கல்வெட்டு மைப்படியை ஆராய்ந்தால் அதில் பருமக-குடி எனத் தெளிவாக எழுதியிருப்பதைக் காணலாம். இதில் குடி என்ற சொல்லின் இறுதி வரும் எழுத்தைப் பல கல்வெட்டுக்களில் "டி" என்றே வாசித்த பரணவிதானா இதில் மட்டும் "ட" என வாசித்திருப்பது எந்த வகையிலும் பொருத்தமானதாகத் தெரியவில்லை(படம்-1).
 

பரமு புஷ்பரட்ணம்
குடி என்பது ஒரு திராவிடச் சொல். இது தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் குடி எனவும், தெலுங்கில் குடிகா எனவும் பெயர் Qugyib (D.E.D. No. 1374, Ta. Ma. kuți, Ka. guợi „Te. guợdika). தமிழில் இது குடும்பம், வம்சம், வீடு, இருப்பிடம், நகரம் எனப் பல பொருள்களைக் குறித்து நிற்கிறது (D.E.D. No.1374). சங்க இலக்கியத்தில் இடப்பெயர்களின் பொதுவிகுதியாக மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட மக்கள் ஒன்று சேர்ந்து வாழும் இடங்களைக் குறிப்பிடுவதாகவும் வருகின்றது. காலப் போக்கில் இது சாதியைக் குறித்ததாகவும் கருதப்படுகிறது (Sivathamby1971:25-46). கல்வெட்டில் "Laboas gqug/SODLuu (3560)&s" (Parumaka-Abaya putaha Parumaka Guthalene) என்ற கருத்தோடு இச்சொல் வருவதால் இது பருமக என்ற பட்டத்தைப் பெற்றவர்களின் வம்சத்தில் வந்தவர்களைக் குறிப்பதாக எடுக்கலாம்.
மருமகன். மருமான்
கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுள் மருமகன், மருமான் என்ற உறவுப்பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இப்பெயர்களின் இறுதியில் வரும் "ன்" என்ற எழுத்து தமிழ்ப் பிராமிக்கேயுரிய சிறப்பெழுத்தாகும். இது தமிழில் "அன்" என்ற விகுதியுடன் முடிவடையும் ஆண்மகனின் பெயரைக் குறித்து நிற்கிறது. மருமகன் என்பதற்கு ஒருவனுடைய சகோதரியின் மகன், ஒருத்தியின் சகோதரன் மகன், வழித்தோன்றல் எனப் பல கருத்துண்டு. பரணவிதானா கல்வெட்டுக்களில் வரும் உறவுப் பெயர்களுக்கு இக்கருத்தைக் கொடுத்திருந்தாலும், இப்பெயர்களை வடமொழிக் கண்ணோட்டத்தில் மருமகந (Marumakana), மருமக5ெ (Marumakane), Loloa55aMpamo (Marumakanahasa), Loloa5f5GạMO (Maruma kanahe), Locoasr5ạAMD (Marumakanaha) 6TGOTŮ LIGAoQITTg aurréağšgair GITTử (I.C.1970 Nos 289, 83, 487, 774, 142, 1202, 643, 1161,487). பிற்காலத்தில் இப்பெயர்களை பலவாறு ஆராய்தோர் பரணவிதானாவின் வாசிப்பை ஏற்ற நிலையில் தமிழ்ப் பருமகன் எப்படி கல்வெட்டுக்களில் பருமக என இடம்பெற்றதோ அவ்வாறே மருமகன் என்ற வடிவமும் மருமக என இடம்பெற்றதாக விளக்கம் கொடுத்துள்ளனர் (சிற்றம்பலம் 1993:543). ஆனால் எல்லாக் கல்வெட்டுக்களிலும் பிராகிருத மொழிக்குரிய வடிவில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. பல கல்வெட்டுக்களில் தமிழில், தமிழ்ப்
21.

Page 20
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பிராமி எழுத்தில் மருக, மருமகன், மருமான் என எழுதப்பட்டிருப்பதை இவற்றின் கல்வெட்டு மைப்படியை அடிப்படையாகக் கொண்டு உறுதிப்ப டுத்த முடிகிறது.
இவற்றை முதலில் ஆராய்ந்து அடையாளம் கண்ட போது எமது வாசிப்பைச் சரியென உறுதிப்படுத்திய கல்வெட்டறிஞர் சுப்பராயலு அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி அதைத் தமிழகத் தொல்லியல் கருத்தரங்கில் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் 22.8.2000 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த தொல்லியல் கருத்தரங்கில் இது கட்டுரையாகச் சமர்ப்பிக்கப்பட்டதுடன்(2000), அக்கருத்தரங்கில் வெளியிடப்பட்ட தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு என்ற எமது நூலிலும் (2000அ) அதன் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பின்னர் ஆராய்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்களைப் படித்தறிவதில் தலைசிறந்த புலமையாளரான ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ்ப் பிராமிக்கே உரிய "ன" "ற" போன்ற எழுத்துக்கள் இலங்கையில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தான் எழுதி வரும் தமிழ்பிராமி பற்றிய விரிவான நூலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிட்டு மருமகன் என்பதற்குப் பதிலாகச் சில கல்வெட்டுக்களில் மருமகங் என வருவதை மருமகன் என எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு தமிழகத்தில் உள்ள சான்றுகளை எடுத்துக் கூறினார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையில் முன்னையோரது வாசிப்பில் உள்ள தவறையும், எமது வாசிப்பில் உள்ள உண்மைத் தன்மையையும் கல்வெட்டறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டதால் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய வாசகங்களை இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்தமாகும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் மருக அல்லது மருகன் என வாசிக்கக் கூடிய பெயர் காணப்படுகிறது (I.C.1970:No679).ஆனால் கல்வெட்டுக்குரிய புகைப்படம் நூலில் பிரசுரிக்கப்படாததால் இதில் எங்த வாசிப்பு சரியென்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை. ஆனால் பரணவிதானா இவற்றை மருமகனைக் குறிக்கும் வேமருகாs என வாசித்து இதன் முல மொழி சமஸ்கிருதம் எனவும் (Bhaima-Vrknam), இது வடஇந்தியாவிலிருந்து வந்து குடியேறிய இனக் குழுவைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (1970:XCI). ஆனால் கல்வெட்டில் இப்பெயருக்குரிய நிலையை கோக்கும் போது மருக அல்லது மருகன் என்ற பெயருக்கு முன்னால் உள்ள பெயரின் இறுதியில் வரும் "வே" என்ற எழுத்தை மருக அல்லது
22

பரமு புஷ்பரட்ணம்
மருகன் என்ற பெயருடன் சேர்த்து வேமருமகந என வாசித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் நாட்டில் பிற்கால இலக்கி யங்களிலும், கல்வெட்டுக்களிலும் இடம்பெறும் மருமகன் என்ற உறவுப் பெயர் சங்க காலத்தில் மருக, மருகன், மருகு, மருகி என்ற பெயரால் அழைக்கப்பட்டது (T.L.V:309). இதற்கு பதிற்றுப்பத்தில் வரும் (63,16) "சேரலர் மருக" என்ற சொற்தொடரைச் சான்றாகக் காட்டலாம். மேற்கூறப்பட்ட பிராமிக் கல்வெட்டில் வரும் பெயரை மருக என வாசித்தாலும், மருகன் என வாசித்தாலும் அவையிரண்டும் மருமகனைக் குறிப்பவையாகும்.
அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டில் மருமகனைக் குறிக்க மருமன் அல்லது மருமான் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது (I.C.1970:No 1161) (படம்-2). இவ்வழக்கம் சங்க காலத்தில் இருந்ததற்கு சிறுபாணாற்றுப்படையில் (47) வரும் "குடலி காவலர் மருமான்" என்ற சொற்றொடரைச் சான்றாகக் காட்டலாம். இதன் பெண் பால் வடிவம் மருமாட்டி என்பதாகும் (TL V:309).
Sä
|-
E.
阙隔娜 S
(படம் - 2)
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த இன்னொரு கல்வெட்டில் மருமகன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது (I.C. 1970:NO 643)(படம்3). சமகாலத்தில் இப்பெயர் தமிழ் நாட்டில் வழக்கிலிருந்ததற்கு சங்க இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுக்களிலோ எந்தவித சான்றும் இதுவரை காணப்படவில்லை. தமிழ் நாட்டில் முதன் முறையாக இப்பெயர் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரனது கி.பி.669க்குரிய கல்வெட்டில்தான் காணப்படுகிறது (Magalingam 1988:NO44). பிற்காலத்தில் செங்கம் நடுகற்களில் இதன் பன்மை வடிவமான மருமக்கள் என்ற பெயர் காணப்படுகின்றது (பூங்குன்றன் 1989). இங்கிலையில்
23

Page 21
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இப்பெயர் காணப்படுவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
s R r KK.
محه'A' 酸滚慈
* R * A 2. V” YA NG g STS リシ SS
R. “ * Za
.T A.
Y S -
(படம் - 3)
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்வெட்டொன்றில் மருமகன்(5) என எழுதப்படவேண்டிய பெயர் மறு(ற)மகன்(5) என எழுதப்பட்டுள்ளது (I.C. 1970:No487) இதில் "ர" என்ற எழுத்திற்குப் பதிலாக தமிழ்ப்பிராமிக்கே சிறப்பாகவுள்ள "ற" என்ற எழுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எழுதியவரின் தவறாக இருக்கலாம். இவ்வாறான தவறுகள் மேலும் சில கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இதற்கு மஹாராஜா என்ற பெயர் மஹாறஜா என எழுதியுள்ளதை உதாரணமாகக் குறிப்பிடலாம் (I.C. 1970:No4).
பருமகன், மருமகன், மருமான் ஆகிய பெயர்களில் வரும் மகன், மான் என்ற அடை மொழிகள் இலங்கைத் தமிழரின் பண்டைய கால அரச உருவாக்கம் பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடைய சான்றுகளாகக் கொள்ளத்தக்கன. பண்டைய கால அரசியலில் ஏற்பட்ட அதிகார அடுக்கு நிலையைக் காட்டும் இவ்வடைமொழிகள் வேள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னர் உருவான இனக்குழுத் தலைவர்களைக் குறித்ததாகக் கூறப்படுகிறது (பூங்குன்றன் 1999:90). அரசு ஏற்படுவதற்கு முற்பட்ட நிலையிலிருந்து அரசுசமூகத்திற்கு மாறும் தமிழகத்தை (Prestate to state Society) ஆய்வுசெய்த பேராசிரியர் சுதர்சன் செனிவரட்னா ஒருநிலைக்கு உட்பட்ட இடத்தில் தங்கும் குடும்பக் குழுக்களில் அக்குழுவின் தலைவன் வழிவரும் மகன் பெருமகன் என்ற சிறப்புப் பெறுவதும், அதனடிப்படையில் தலைவன் பெருமகன என
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரமு புஷ்பரட்ணம்
அழைக்கப்படுவதும் இயல்பு என்றார் (Seneviratne1993:68°69). சங்க இலக்கியங்களில் பெருமான், பெருமகன் என்ற சொற்கள் ஓரி, கொற்றன் ஏரை, பேகன், எருமை ஆகியோரின் பெயர்களின் பின்னொட்டுச் சொல்லாக வருகிறது. இதில் வரும் பெருமகன் என்ற சொல் பெருமான் ஆக மாறுகிறது. இச்சொல் அண்மை விளியாக பெருமக எனப்பட்டது. அதியன் மகன் அதியமான் ஆனதும், மலையன் மகன் மலையமான் ஆனதும் இது போன்றதாகும் (இராசு 1995:22-28). இக்கருத்துக்கள் தமிழகத்தின் பண்டைய கால அரச உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கூறப்பட்டாலும், அவை இலங்கைக்கும் பொருந்தும் என்பதையே மேற்கூறப்பட்ட பெயர்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதை மேலும் உறுதிப்படுத்தும் இன்னொரு சொல்லே கல்வெட்டுக்களில் வரும் வேள் என்ற பட்டப் பெயராகும்.
வேள்
தமிழகத்தைப் போல் இலங்கையிலும் பலரது கவனத்தை ஈத்த ஒரு சொல்லாக வேள் காணப்படுகிறது. இது கல்வெட்டுக்களில் மட்டுமன்றி பாளி இலக்கியங்களிலும், மட்பாண்ட ஒடுகளிலும் காணப்படுகின்றது (புஷ்பரட்ணம் 1993:43). இச் சொல்லை முதன் முதலில் தமிழுக்குரியதென எடுத்துக் காட்டிய பெருமை பாக்கர் என்ற ஆங்கில நாட்டவருக்குரியது (Parkar 1981:436). இதையொத்த பெயர் சமகாலத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் (Mahadevan 1966:61). சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றது. வேள் என்பதன் பன்மை வடிவமே சங்க இலக்கியம் கூறும் வேளிராகும். இலங்கையில் 21 பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் என்ற சொல் காணப்படுகிறது. இது ஒரு தமிழ்ச் சொல் என்பதைப் பலரும் ஆராய்ந்து நிறுவியுள்ளனர் (Veluppilai1980:12, Seneviratne 1985:54, Sitrampalam1980:5786. Ragupathy 1991). ஆனால் வேள் பற்றிய முன்னைய கருத்துக்களுக்கும் தற்போதைய கருத்துக்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் வரும் தொன்முதிர் வேளிர் (புறம் 201:1112), தொன்று முதிர் வேளிர் (புறம் 24:21) பற்றிய சான்றுகள் தமிழகத்தின் மிகத் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்றாக வேளிரைக் கருத இடமளிக்கிறது. இதனால் வேள், வேளிர் என்பது ஒரு இனக்குழு வுக்குரிய பெயராகவே பண்டு தொட்டு இருந்து வருகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இப்பின்னணியிலேயே இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பெயரும் நோக்கப்பட்டது. ஆனால் தற்கால
25.

Page 22
பண்டைய இலங்கையில் தமிழும். த
ஆய்வுகள் இச் சொல் தொடக்க காலத்தில் குலம் குறித்து வந்த பெயர்கள் அல்ல, ஒரு பட்டப் பெயர் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. இதற்கு சங்க இலக்கியத்தில வேள் என்ற சொல் குறிப்பிட்ட ஒரு குலத்தைக் குறிக்காது ஆய், மலையமான், போசானியர் குலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சான்றாகக் காட்டப்படுகிறது (பூங்குன்றன் 1989:220). உலகில் ஆகிரை கவர்தல் மக்களிடையே ஏற்பட்ட போட்டி, பூசல்களிடையே தலைமை தாங்கி நடத்திய தலைவன் காலப்போக்கில் குலத்தலைவனாக நிலைபெற்றான். இதில் தெளிந்த சிந்தனையும், வலிமையும், வீரமும் உள்ள தலைவன் பெற்ற பெயர்களில் ஒன்றே வேள் எனக் கருதப்படுகிறது. காலகதியில் வேள் என்பது சமூகத்தில் உயர்ந்து நிற்போருக்கு அளிக்கப்பெற்ற விருதாகிவிட்டது.
மூல திராவிடமொழியில் வேள் என்பதற்கு விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. ஏறத்தாழ இதே கருத்தை வடமொழி ராஜாவும் கொண்டிருப்பதால் இரண்டும் தலைவன் என்ற கருத்தைக் கொண்டதாகக் கருதலாம். இவர்கள் பிற மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் வகையில் உருவான சொற்களில் ஒன்றே வேள் என்பதாகும். யாழ்ப்பாணப் பேரகராதியில் வேள் என்பதற்கு மண், தலைவன் என்ற கருத்துண்டு. இதில் மண் என்பது மண்ணை ஆள்பவன் (நாட்டை) என்ற கருத்தில் ஏற்பட்டிருக்கலாம். எல்மன் என்பவர் இனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசு உருவாகும்போது இடைக்கட்டமாக வேள் இருந்ததென்றார் (Elman1975:37). ஆனால் காலப் போக்கில் வேள் பட்டம் பெற்றவர்களின் வழிவந்தவர்களும் தம்மை வேள் என அழைத்திருக்கலாம். அது காலப்போக்கில் குலப்பெயராக மாறியிருக்கலாம். இது பிற்காலத்தில் முதலியார் பட்டம் பெற்றவர்களின் வழிவந்தவர்கள் தம்மை முதலியார் குலம் என அழைத்துக் கொண்டதற்கு ஒப்பாகும். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டொன்று வேள் பட்டம் பெற்றவரின் மகனும் வேள் என்ற பட்டம் பெற்றதைக் கூறுகிறது (I.C.No.647) (படம்-4).
 

பரமு புஷ்பரட்ணம்
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் என்பது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்துடன் தொடர்புடைய பட்டப் பெயராக வருவதை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து அறியமுடிகிறது. அவற்றுள் 13 கல்வெட்டில் தலைவன் என்ற பொருளிலும், இரண்டில் கிராமஅதிகாரி, 96trfbos (556OU (SofurfroqJurtGTSir (Superintendent of Horse), இரண்டில் பெளத்தமத விசுவாசி (Lay-devotee), ஒன்றில் குடும்பத்தலைவன் (Householder), இன்னொன்றில் வரிசேகரிப்பாளன் (Revenue oficer) என்ற நிலையில் இப்பட்டப் பெயர் காணப்படுகிறது. அண்மையில் பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம் பற்றி ஆய்வை மேற்கொண்ட தமிழ் நாடு தொல்பொருள் துறையின் முதுநிலை ஆய்வாளர் திரு. பூங்குன்றன் அரச உருவாக்கத்தில் வேள், வேளிருக்குரிய பங்களிப்பை பொருத்தமான சான்றுகளுடன் புதிய கண்ணோட்டத்தில் நோக்கியிருப்பதோடு, இதையொத்த அரச உருவாக்கம் சமகாலத்தில் இலங்கையிலும் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களோடு, அண்மைக்காலத்தில் ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்லியல் சின்னங்களையும் சான்றாகக் காட்டியுள்ளார் (1999). இது இலங்கைத் தமிழரிடையே அரச உருவாக்கம் ஏற்பட்டதையும், அதன் தோற்ற காலத்தை தமிழகத்தின் சமகாலத்திலிருந்து தொடங்கவேண்டும் என்பதையும் சுட்டிநிற்பதாக உள்ளது.
பூதன்
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுள் பூதன் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது (I.C.1970 Nos:123, 169, 353, 540, 978). ஆனால் இதைப் புதல்வனைக் குறிக்கும் "புத" என்ற சொல்லின் பன்மை வடிவம் எனக் கூறும் பரணவிதானா இது வடமொழி "புத்" (Bhut) என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததென்கிறார். ஆனால் கல்வெட்டுக்களில் இச் சொல் வரும் சந்தர்ப்பங்களை நோக்கும் போது இது ஆட்பெயராகப் பயன்படுத்தப்பட்டமை தெரிகிறது. இது பூத வழிபாட்டை அடியொற்றித் தோன்றியிருக்கலாம் (Ragupathy 1991). இதை உறுதிப்படுத்தும் வகையில் இதன் பெண்பால் வடிவம் பல கல்வெட்டுக்களில பூதி, பூதிய, ஹோபூதி, சிவபூதி, சமணபூதி, திஸ்பூதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளன (I.C.1970:443,608, 1012, 1054, 1099). இப்பெயரில் காணக்கூடிய முக்கிய அம்சம் அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் வேள்பூதன் என்ற பெயர் தமிழ்ப் பிராமியில்
27

Page 23
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
எழுதப்பட்டிருப்பதாகும் ( I.C.1970. No.169) (படம்-5). அதில் பூதன் என்ற பெயர் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் "அன்" என்ற விகுதியுடன் முடிவடைகிறது.
(படம் - 5)
அண்மையில் சேரநாட்டில் (கேரளம்) கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 2-3ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்றிலி கோபூதி வீரன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது. இப்பெயர் சேரமன்னனைக் குறிப்பதாக கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார் (மகாதேவன் 1998: 22-24). இதில் வரும் கோபூதி என்ற பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் வரும் ஹோபூதி என்ற பெயரை ஒத்துள்ளது. பரணவிதானா கூறுவது போல் கல்வெட்டுக்களில் வரும் பூத, பூதி என்ற பெயர் வடமொழிக்குரியதாக இருப்பினும் இதன் தமிழ் வடிவங்களான பூதன், பூதி பண்டு தொட்டு தமிழகத்தில் ஆட்பெயராக பெரிதும் வழக்கில் இருந்துள்ளன. இதற்குச் சங்க இலக்கியத்தில் வரும் பூதனார், வெண்பூதன், பூதப்பாண்டியன், பூதகண்ணனார் போன்ற பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். சமகாலத்தில் இப்பெயர் இலங்கையிலும் புழக்கத்தில் இருந்ததை மேற்கூறப்பட்ட கல்வெட்டுக்கள் மட்டுமன்றி சங்க இலக்கியத்தில் வரும் ஈழத்துப் பூதங்தேவனார், மதுரை ஈழத்துப் பூதங்தேவனார் போன்ற பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. கல்வெட்டுக்களில் வரும் தமிழ் எழுத்து, மொழி பற்றிய சான்றுகள், கல்வெட்டுக்களில் வரும், பூதி, பூதன், சங்க இலக்கியத்தில் வரும் ஈழத்துப் பூதன் தேவனார் என்பவை ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சான்றுகளாக இருப்பதை தற்செயலான சான்றுகளாகக் கொள்ள முடியாது. இன்றும் இலங்கைத் தமிழரிடையே புழக்கத்தில் உள்ள பெயர்களில் ஒன்றாகப் பூதன், பூதி காணப்படுகின்றன. இப்பெயர்கள் மத்திய காலத்திலும், யாழ்ப்பாண அரசு காலத்திலும் பயன்பாட்டில் இருந்ததற்கு
28
 

பரமு புஷ்பரட்ணம்
ஆதாரங்கள் உள்ளன. இச்சான்றாதாரங்கள் தற்போது தமிழரிடையே பயன்பாட்டிலுள்ள இப்பெயர்களின் தோற்றத்தைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பயன்பாட்டிலிருங் த காலத்தோடு தொடர்புபடுத்தத் துாண்டுகின்றன.
மல்லன்
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ்ப்பெயர்களில் மல்லன் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மல்லன் என்ற சொல்லைத் திராவிட மொழிக்குரியது எனக் கூறும் பரோ இது தைைவவன், வீரன் என்ற கருத்தில் தமிழில் மல்லன், மலையாளத்தில் மல்லு, கன்னடத்தில் மல்லாடு, தெலுங்கில் மல்லாடி எனவும், இத்ே கருத்தில் சமஸ்கிருதத்தில் மல்ல எனவும் அழைக்கப்பட்டதென்றார் (D.E.D.No.3871). ஆனால் இதைப் பாளி, சமஸ்கிருத மொழிக்குரிய சொல் எனக் கூறும் பரணவிதானா கல்வெட்டுக்களில் வரும் பெயர்களை அதன் மொழிக்கு ஏற்ப மல, மலஹ, மலஸ், மல்லாக என வாசித்துள்ளார் (I.C. 1970. Nos.318, 340, 16b, 1148, 1183, 202:118). SOTTGö அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் தமிழ்ப் பிராமியில் மலன் என்று எழுதப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. பரணவிதானா இப்பெயரின் இறுதியில் வரும் தமிழ்ப் பிராமிக்குரிய "ன்" என்ற எழுத்தை வழக்கம் போல "க" எனக் கொண்டு மல5 என்றே வாசித்துள்ளார் (I.C. 1970.No.202). ஆனால் கல்வெட்டு மைப்படியில் பெயரின் இறுதியில் னகரம் தெளிவாக இருப்பதால் இதை மலன் என்றே வாசிக்கவேண்டும் (படம்-6).
இலக்கிய நடையில் இரட்டிக்கும் ஒற்றுக்கள் பிராமி வாசகங்களில் ஒன்றாக வருவதால் மலன் என எழுதப்பட்டிருப்பதை மல்லன் என்றே வாசிக்கவேண்டும். அவ்வாறு வாசிக்கப்பட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு தமிழ் காட்டில் அழகர்மலைக் கல்வெட்டில் வரும்
29

Page 24
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
மலன் என்ற பெயர் மல்லன் என வாசித்ததையும் (Mahadevan 2000), தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்தில் வரும் மலக என்ற பெயர் மல்லக என வாசிக்கப்பட்டதையும் (Bopearachchi 1999:53) உதாரணமாகக் கொள்ளலாம். எனவே தமிழில் மல்லன் என வரும் பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப "மல" என எழுதப்பட்டாலும் சில கல்வெட்டுக்களில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் எழுதப்பட்டது போல் மல்லன் என எழுதப்பட்டதென்பதற்கு மேற்குறிப்பிட்ட கல்வெட்டு சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்பெயர் சமகாலத்தில் இலங்கைத் தமிழரிடையே பெரிதும் பயன்பாட்டிலிருந்ததென்பதற்கு தென்னிலங்கையில் கிடைத்த கி.மு. 2ஆம், 1 ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயத்தில் வரும் மல்லக என்ற பெயரும் சான்றாகும் (புஷ்பரட்ணம் 2000: 45-46) (படம்-7).
(படம் - 7)
ಶೌQತ್ತ್ ன்
கல்வெட்டுக்களில் வரும் தனிநபர் பெயர்களில் திஸ என்ற பெயர் எண்ணிக்கையில் அதிகமாகும். இப்பெயரில் சமூகத்தின் பல தரபட்ட மக்கள், மன்னர்கள், சிற்றரசர்கள், குறுகிலத் தலைவர்கள் எனப் பலர் இருந்ததைக் கல்வெட்டுக்கள் மட்டுமன்றிச் சமகாலப் பாளி இலக்கியங்களும் கூறுகின்றன. இப்பெயர் ஐம்பதுக்கு மேற்பட்டி கல்வெட்டுக்களில் திஸ, திச, திஸ்ஸ, திஸஹ, திசதிஸய, திஸயஸ, திசஸ, திஸிய, திஸிஹ எண் எழுதப்பிட்டுள்ளது (6.1970-Nos,14,128, 275,424, 1027). ஆனால் கண்டி மாவட்டத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டில் இப்பெயர் திசெ, ன்(5) என எழுதப்பட்டுள்ளது (I.C.1970. No.813) (படம்-8).
30
 

பரமு புஷ்பரட்ணம்
இதன் கல்வெட்டு மைப்படி சற்றுத் தெளிவு குறைவாக இருப்பதால் இப்பெயரின் இறுதி எழுத்து "ன" என்ற எழுத்தா அல்லது "க" என்ற எழுத்தா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் வழக்கமாக கல்வெட்டுக்களில் வரும் பிராகிருத மொழிப் பெயர்களில் இருந்து இது வேறுபடுவதை உணரமுடிந்தது. இதன் முக்கியத்துவம் தொடர்பாக கல்வெட்டறிஞர் மகாதேவன் அவர்களுடன் உரையாடிய போது பெயரின் இறுதி "அன்" என்ற பொருளில் முடிவதால் அதன் இறுதி எழுத்து னகரமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அப்பெயரைத் திசென் என வாசிக்கலாம் என்றார். இலக்கிய வழக்கிலுள்ள பெயர்கள் கல்வெட்டுக்களில் மாறி எழுதப்பட்டதற்குத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் சான்றுகள் இருப்பதால் இதைத் திசென் என்று வாசிப்பதே பொருத்தமாகும்.
இது வடமொழி சார்ந்த பெயராக இருப்பினும் பண்டைய காலத்தில் இப்பெயரில் தமிழர்களும் இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு தமிழ் நாட்டில் அழகன்குளத்தில் கிடைத்த மட்பாண்டத்தில் வரும் திசஅன் என்ற பெயர் ஒரு எடுத்துக்காட்டாகும் (இராசகோபால் 1991). இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திச, என்ற தமிழன் பற்றிக் கூறுகிறது (Paranavithana 1970 :No 480. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று தமிழர்கள் ஒன்றுகூடி வணிகம் தொடர்பான ஆலோசனை நடத்த மண்டபம் ஒன்றை அமைத்ததாகவும், அவ்வணிக
31

Page 25
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
குழுவில் திச என்ற பெயருக்குரிய தமிழனும் ஈடுபட்டதாகவும் Gif-gpjá$pg ( Parana vithana 1970: 94). S. 2b BrTibgpTGOuriq,6ð அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த இளநாகனின் பட்டத்தரசியாக இருந்த தமிழதேவியின் (தமிழ்த் தேவி) புதல்வன் பிற்காலத்தில் திஸ என்ற பெயருடன் அநுராதபுரத்தில் ஏழு வருடம் எட்டு மாதம் ஆட்சிபுரிந்ததாகப் பாளி நூல்கள் கூறுகின்றன (M.V.XXXV:48-50). இச்சான்றுகள் இலங்கைத் தமிழருக்கும் திசf என்ற பெயருக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகின்றன.
ID6r
கல்வெட்டுக்களில் வரும் கணிசமான தனிநபர் பெயர்களில் சும5(ன) என்பது குறிப்பிடத்தக்கது (I.C.1970.Nos.38. 173.370.810. 1104). இது பெரும்பாலான கல்வெட்டுக்களில் பருமக-சம(5)ன என வருகின்றது. இது கல்வெட்டுக்களில் பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் அக்காலத் தமிழர்களும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதை சில கல்வெட்டுக்களில் வரும் சமன் என்ற பெயர் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் பத-சமன் என்ற பெயர் காணப்படுகிறது (படம்-9).
(படம் - 9)
அதில் பெயரின் இறுதி தமிழ் பிராமி எழுத்தில் "அன்" என்ற விகுதியுடன் முடிவதைக் காணமுடிகிறது (I.C.1970.No.159). இதில்
32
 

பரமு புஷ்பரட்ணம்
வரும் "பத" என்ற முன்னொட்டுச் சொல் பரத சமூகத்தைக் குறிக்கிறது (Malony, Seneviratne 1985:49-54). இதனால் கல்வெட்டில் வரும் பத-சுமன் என்பதை பரதவ சமூகத்தைச் சேர்ந்த சுமன் என எடுத்துக் கொள்ளலாம். இப்பெயரின் இன்னொருவடிவமே கல்வெட்டுக்களில் வரும் குமந(ன) எனப் பரணவிதானா கூறுகிறார் (1970:126, Nos.16. 1146, 910, 1196, 1127), குமணன் என்ற பெயரில் சங்க காலத்தில் புலவர்களும் இருந்துள்ளனர். புறநானுாறு சங்க காலத்தில் பெரும் வள்ளலாக இருந்த குமணன் முதிரமலையை ஆண்டதாகக் கூறுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
உதியன் - உதிரன்?
அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டொன்று இங்கு சிறப்பாக ஆராயத்தக்கது. இக்கல்வெட்டு பெருமளவுக்கு சிதைவடைந்த நிலையில் காணப்பட்டாலும் அதில் வரும் தனிநபர் பெயர் தமிழில் "அன்" என்ற விகுதியுடன் முடிவடைவதைத் தெளிவாகக் காணலாம். பரணவிதானா (1970:41.No538) இக்கல்வெட்டு உதிநகரத்தைச் சேர்ந்த அட்டக்குலத்திற்குரிய குகை பற்றிக் (Uti-nagariyana attakulaha lene) கூறுகிறது என விளக்கம் கொடுத்துள்ளார் (படம்-10).
(ULib - 10)
இதில் உதி என வாசிப்பட்ட பெயரிலுள்ள "உ" என்ற எழுத்து
கல்வெட்டு மைப்படியில் தெளிவாக உள்ளது. அடுத்துவரும் எழுத்தை "தி" அல்லது "வி" என வாசிக்க இடமுண்டு. ஆனால் மூன்றாவது
33

Page 26
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
எழுத்தை அடுத்துவரும் சொல்லுக்குரிய வடபிராமிக்குரிய "க" என எடுத்திருப்பது பொருத்தமற்ற ஒன்றாகும். எனெனில் அவ்வெழுத்து தமிழ்ப் பிராமிக்குரிய "ன்" என்பது கல்வெட்டு மைப்படியில் மிகத் தெளிவாகவே தெரிகிறது. இதை வடபிராமிக்குரிய "க" எனக் கொண்டாலும் நகரியன என வாசித்திருப்பதும் பொருத்தமாக இல்லை. ஏனெனில் "க" எழுத்தை அடுத்து "க" என்ற எழுத்துக் காணப்படவில்லை மாறக "த" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து "ன, ய, ந" போன்ற எழுத்துக்களுமே உள்ளன(தனயன்?). இதனால் கல்வெட்டு மைப்படியில் உள்ளபடி அதிலுள்ள முதல்ப் பெயரைத் தமிழுக்குரிய உதின் அல்லது உவின் என வாசிக்கலாம். இது உதியன் அல்லது உதிரன் என்ற பெயரின் தவறுதலான வடிவமாக இருக்கலாம். இவ்வாறு தப்பாக எழுதப்பட்டதற்கு இலங்கை தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பல சான்றுகள் உண்டு.
அபயன்
பண்டைய காலத்தில் பெரிதும் புழக்கத்தில் இருந்துள்ள தனிநபர் பெயர்களுள் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் வரும் அபய என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்பெயருக்குரியவர்களுள் சிலர் சிற்றரசர்களாகவும் (I.C.1970.Nos.18, 396, 620, 813, 994), கிராமத்தலைவர்களாகவும் (I.C.1970.No.165), வேறு பலர் தலைவர்களாகவும் ( I.C.1970.Nos. 669, 890, 1051) இருந்ததைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இப்பெயர் சற்றுப் பிற்பட்ட காலப் பிராமிக் கல்வெட்டில் குறிப்பாக தம்புள்ளை என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் அபயன் என்று எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை முதலில் வாசித்த பாக்கர் அதில் உள்ள சில எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் ஏனைய கல்வெட்டுக்களில் வரும் வாசகங்களின் அடிப்படையில் புலித-அபய LDSör6OTSör 6TSOT QITéflägloirGITITir (e.g. Sidha Raja Pulida Abaya-nakare Sidahata kapa gala, Parkar 1981:99). ga amašīc 2 Giro தவறைச் சுட்டிக்காட்டிய பரணவிதானா புலித-அபய என்பதை புட9 us LosorsOTsor 6T60T airTafssTir (e.g. Sidha Raja Puda Abaya-naraiseraha terasa paga, Paranavithana 1983:6) (l JLab-11).
34

பரமு புஷ்பரட்ணம்
(படம் - 11)
இதில் வரும் மன்னன் பெயரை இருவரும் அபய என வாசித்திருந்தாலும் பாக்கர் நூலில் வரைபடமாகக் காட்டப்பட்டுள்ள அபய என்ற பெயரை அடுத்துவரும் "E" என்ற வடபிராமி எழுத்து (Parkar 1981:447.Fig.153) பரணவிதானாவின் கல்வெட்டு மைப்படியில் தமிழ்ப் பிராமிக்குரிய "ன்" என்று எழுதப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது (Paramavithana 1983.Fig.4). ஆயினும் அபயன் என வாசிக்க வேண்டிய தமிழ்ப் பெயரை இருவரும் அபய என்றே வாசித்துள்ளனர். இதற்கு தமிழ்ப் பிராமிக்குரிய "ன்" என்ற எழுத்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படவில்லை எனக் கருதியமையும், ஏனைய கல்வெட்டுக்களில் பொதுவாக அபய, அபயக என வருவதும் காரண மாக இருக்கலாம். அவ்வாறு கருதியமை"பொருத்தமற்றதென்பதை இருவரது வாசிப்பில் உள்ள வேறுபாடே எடுத்துக் காட்டுகின்றன.
குடும்பிகன்
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் வரும் பெயர்களுள் கஹபதி என்ற சொல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது குடும்பத் தலைவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கிருகபதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். இதே கருத்துடைய இன்னொருவடிவம்தான் அநுராதபுரமாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டில் வரும் குடும்பிகன் என்ற சொல்லாகும். இது கஹபதி என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழில் குடும்பிகன் எனப் பயன்ப டுத்தப்பட்ட சொல்லாக எடுக்கலாம். ஆனால் கல்வெட்டில் வரும்
35

Page 27
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பெயரைக் குடும்பிகன் என வாசிக்க விரும்பாத பரணவிதானா அதைக் குரும்பிக-15பதிக என வாசித்துள்ளார் (I.C.1970. NO.233). இதில் குடும்பிகன் என்ற பெயரின் இறுதியில் வரும் "ன்(ங்) என்ற எழுத்தைப் பதிக என்ற சொல்லோடு சேர்த்து நபதிக என வாசித்துள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பதிக என்ற பெயரைப் பரணவிதானா தனிநபர் பெயராகவே எல்லாக் கல்வெட்டுக்களிலும் வாசித்துள்ளார் (I.C.NOS.123, 173, 294, 392, 540, 808,792, 931, 978,1150). இது சகோதரனைக் குறிக்கும் உறவப் பெயராகும். இதன் பெண் பால் வடிவம் பதிய என இடம்பெற்றுள்ளது (I.C.1970:116). ஆனால் Bபதிக என்ற பெயர் வேறு எந்தக் கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. எனவே பரணவிதானா குடும்பிக-நபதிய என வாசித்ததை குடும்பிகன்பதிய என வாசிப்பதே பொருத்தமாகும். இது குடும்பத்தலைவனின் சகோதரன் என்ற கருத்தைக் கொடுக்கிறது. குடும்பிக என்ற சொல் தமிழில் குடும்பிகன் என எழுதப்பட்டதற்கு தமிழகப் பிராமிக் கல்வெட்டில் சான்றுண்டு. குறிப்பாக திருப்பரங்குன்றப் பிராமிக் கல்வெட்டு ஈழக்குடும்பிகன் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை பற்றிக் கூறுவது இங்கு சிறப்பாகச் சுட்டிக்காட்டத்தக்கது(Mahadevan 1966.No.51).
ஹஹபதிகன்
பல கல்வெட்டுக்களில் ஹபதி (gapatit.C.1970.NOs. 5,370, 828, 1032))ậAmpug5(gapata I.C. 1970. No. 1005) ampạAMOLIS (gahapati I.C.1970.Nos.346,540, 643,764,844) என்ற சொல் பட்டப்பெயராக வருகின்றன. இவை குடும்பத்தலைவனைக் குறிக்கும் கிருஹபதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். ஆனால் அநுராதபுத்தில் கிடைத்த தமிழ் வணிகள் பற்றிய கல்வெட்டில் இப்பெயர் சற்று மாறுதலாக ஹஹபதிகன் (ங் ) என எழுதப்பட்டுள்ளது (gahapa tikan(na) I.C.1970.Nos,94). இதில் பெயரின் இறுதி "அன்" அல்லது "ங்" என முடிவதால் இப்பெயரைத் தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும் (படம்-13). அத்துடன் இக்கல்வெட்டு தமிழ் வணிகர் பற்றிக் கூறுவது இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
36

பரமு புஷ்பரட்ணம்
(படம் - 13)
கல்வெட்டுக்கள். நாணயங்களில் வரும் பெயர் - களுக்கிடையிலான ஒற்றுமை
கல்வெட்டுக்களைப் போல் நாணயங்களும் பண்டைய கால எழுத்து, மொழி, பண்பாடு என்பவற்றை அறிந்து கொள்ள முக்கிய சான்றாதாரமாக விளங்குகின்றன. இலங்கைத் தமிழர் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பின்னரே அதுவும் யாழ்ப்பாண அரசு காலத்திலேயே முதன்முறையாக நாணயங்கள் வெளியிட்டனர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் வடஇலங்கையில் எமது கள ஆய்வின் போது எழுத்துக்கள் அற்ற நிலையில் கிடைத்த பலவகை நாணயங்களின் தனித்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டைய காலத்தில் இலங்கைத் தமிழ் மன்னர்களும், தமிழ் வணிகர்களும் நாணயங்கள் வெளியிட்டிருந்தனர் என்ற கருத்து ஆதாரங்களுடன் முதன் முறையாக முன்வைக்கப்பட்டது (புஷபரட்ணம் 1998:1-12, 1998அ:114119,1999:51-59). இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக் காலத்தில் பிராமி எழுத்துப் பொறித்த பல நாணயங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன (புஷபரட்ணம் 2000, 2000அ, 2001). இவையனைத்தும் கி.மு.2ஆம் நுாற்றாண்டுக்கும் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட ஈய நாணயங்களாகும். இவற்றில் வரும் 90வீதமான பெயர்கள் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பெயர்களை ஒத்துள்ளன.
முதன் முதலில் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் கந்தரோடையில் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றைக் கண்டுபிடித்த பெருமை சேயோன் என்ற நாணயவியலாளரைச் சேரும். இருப்பினும் நாணயங்களில் இருப்பவை எழுத்துக்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவற்றைச் சங்ககால நாணயங்களாக இருக்கலாம் என எடுத்துக் கொண்டார் (Seyone 1998:84). அண்மையில் எமது துறைச் சார்ந்த ஆசிரியர்களில் ஒருவரான திரு.கிருஷ்ணராஜா (198:51-52) சிவ என்ற பெயர் பொறித்த நாணயம்
37

Page 28
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால் எண்ணிக்கையில் அதிகமான நாணயங்கள் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை முதலில் ஆய்வுக்கு உட்படுத்திய பிரான்ஸ் காட்டில் கடமையாற்றும் இலங்கை நாட்டவரான பொப்பியாராச்சி அவற்றில் இரு நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்திருப்பதாகக் குறிப்பிட்டு தமிழில் பயிற்சி இல்லாத காரணத்தினால் உதிரன், தஸபிஜன் என வாசிக்கப்பட வேண்டிய நாணயங்களில் வரும் பெயர்களை (புஷ்பரட்ணம் 1999:55-70), ஊதிரன, (த)ஸபிஜன என வாசித்துள்ளார் (Bopearachchi 1999:56, 59). இங்கிலையில் அண்மையில் வெளிவந்த நூல் ஒன்றில் உதிரன், சபிஜன் (த)ஸபிஜன் என்ற பெயர் நூலில் தவறாக சபிஜன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற வாசகம் பொப்பியாராச்சியால் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது (சிற்றம்பலம் 2000:26).
பொப்பியாராச்சியின் நூல் வெளிவந்த போது கொழும்பில் நடந்த நாணயவியல் கருத்தரங்கில் கலங்து கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல்துறை இணைப்பேராசிரியர் கா.இராசன் அவர்கள் அந்நூலை வாங்கி வந்து அதில் உள்ள நாணயங்களை ஆராயுமாறு என்னிடம் கேட்டதன் பேரில் பேராசிரியர் சுப்பராயலு தலைமையில் இரு கருத்தரங்கு கடத்தப்பட்டது. அதில் தமிழ்ப் பெயர்கள் எப்படி இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் பிராகிருதமயப்படுத்தப்பட்டன என்பதற்கு கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் ஒப்பிட்டு பொப்பியாராச்சி ஊதிரன, தஸபிஜன என வாசித்ததற்கு உதிரன், தஸஜபிஜன் என்ற வாசகம் கொடுக்கப்பட்டதுடன் மேலும் பல நாணயங்கள் தமிழருக்கு உரியதென்பதைச் சமகாலக் கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்திருந்தோம். பின்னர் நடந்த கருத்தரங்கில் நாணயவியலாளர் ஆறுமுக சீதாராமனுடன் இணைந்து கந்தரோடையில் கிடைத்த நாணயங்களுடன் மேலும் மூன்று நாணயங்கள் "அன்" என்ற விகுதியில் முடிவதை அடையாளம் கண்டிருந்தோம். இவ்வாசகங்களைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அவை கட்டுரைகளாகவம், நுாலிகளாகவும் வெளியிடப்பட்டன (புஷ்பரட்ணம் 1999:55-70, 2000, 2001.Pushparatna 2000:1-12). இவற்றில் "அன்" என்ற விகுதியில் முடியும் நாணயங்களை மட்டும் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்திய தமிழ் நாட்டின் முதன்மைச் சாசனவியலாளர் ஐராவதம் மகாதேவன் அவற்றைச் சமகாலத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு அவை பற்றி இரு கட்டுரைகள்
38

பரமு புஷ்பரட்ணம்
எழுதியிருந்தார் (2000, 200). அதில் எமது வாசகங்களைப் பெருமளவுக்கு ஏற்ற நிலையில் சிலவற்றிற்குப் புதிய விளக்கம் கொடுத்திருந்தார். குறிப்பாக நாம் மகாசாத்தன் என வாசித்ததை அவர் மல்லசாத்தன் என வாசிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பின்னர் எமது வாசிப்பே பொருத்தமாக இருக்கும் என்பதற்குச் சில சான்றுகளை எடுத்துக் கூறியுள்ளார்.
இங்காணயங்கள் பிராமிக் கல்வெட்டுக்கள் புழக்கத்திலிருந்த காலகட்டத்தில் இலங்கையில் தமிழ்ப் பிராமியும், தமிழ் மொழியும் பயன்பாட்டிலிருந்ததற்கு மேலும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங் நாணயங்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வெட்டுக்களில் வரும் சில பெயர்களை அடையாளம் காணமுடிகிறது. கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுள் உதிஹ, உதி, உதிய, (I.C. Nos 24, 179, 488, 279) போன்ற பெயர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் உதிர என்ற பெயர் சிறப்பாக நோக்கத்தக்கது (I.C.1970.No.407) (படம்-14).
(படம் - 14)
இவற்றுள் காலத்தால் முந்திய பெயர் வடஇலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள 5 கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவற்றில் நான்கு கல்வெட்டுக்கள் உதி அரசன் பற்றியும் (Rajaut) ஒரு கல்வெட்டு உதி என்ற தலைவன் பற்றியும் (Parumaka uti) கூறுகின்றன (I.C.1970.NoS.338–41,343). சற்றுப் பிற்பட்ட கால அநுராதபுரக் கல்வெட்டுக்கள் மகாராஜ என்ற பட்டத்துடன் உதி மன்னன் (Maharaja uti) á yfirbg56Mg5ės Singléfssögp6OT (I.C. 1970:No.34). FLOGEITaolů பாளி இலக்கியங்களில் இதேபெயரில் சில மன்னர்கள் ஆட்சி புரிந்ததற்கு சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்தில் சேர நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்களாக உதியன் போன்ற மன்னர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்
39

Page 29
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(நற் 13, அகம் 655, 1687). இப் பெயர்களுக்கும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள், பாளி இலக்கியங்களில் வரும் உதி, உதிய போன்ற பெயர்களுக்குமிடையே மொழி அடிப்படையில் நெருங்கிய ஒற்றுமை asTGOOTijuced sirpg (Utian=Uti=an, an=singular masculine Suffix). அத்துடன் இரு நாடுகளிலும் இப்பெயருக்குரிய பலர் ஆளும்வம்சமாக கூறப்பட்டுள்ளன. இங்கிலையில் தென்னிலங்கையில் இருந்து உதிரன் பெயர் பொறித்த நாணயமும், வடஇலங்கையில் கந்தரோடையில் இருந்து உதிஹபன் பெயர் பொறித்த நாணயமும் கிடைத்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கன(புஷ்பரட்ணம் 2001:37-59) (படம்-15).
(படம் - 15)
பண்டைய காலத்தில் அநுராதபுரம் பலம்மிக்க அரசாக இருந்த போது அதற்கு எதிராகத் தென்னிலங்கையில் இருந்தும், வடஇலங்கையில் இருந்தும் பல எதிர்ப்புக்கள் ஏற்பட்டதாகப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. இரகுபதி (1987:180-183) வடஇலங்கையின் குறிப்பாக யாழ்பாணத்தின் பண்டைய காலக் குடியிருப்பின் தலமைக்குடியிருப்பாக கந்தரோடை விளங்கியதற்கு தொல்லியல் சின்னங்களைச் சான்றாகச் காட்டுகிறார். புராதன காலத்தில் தமிழர் தொடர்பான கல்வெட்டுக்கள் காணப்பட்ட இடங்களில் தென்னிலங்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மகாவம்சம் என்ற பாளி நூல் துட்டகாமினி எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றி கொள்ள முன்னர் தென்னிலங்கையில் 32 தமிழ் மன்னர்களை வெற்றி கொள்ள நேரிட்டதாகக் கூறுகிறது (M.VXXV:75), இங்கு சிற்றரசர்களாக இருந்தவர்களே பெரும்பாலும் பின்னர் அநுராதபுர மன்னர்களாக வங்ததைப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றில் இருங்து அறியமுடிகிறது. இச்சான்றாதாரங்கள் இங்கு கிடைத்த நாணயங்களின் பின்னணியில் மேலும் விரிவுபடுத்தி ஆராயத்தக்கன.
40
 

பரமு புஷ்பரட்ணம்
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுள் ஸத்தாக(ன்), டிெத்தாக(ன்), சாத்தாக போன்ற பெயர்கள் சிறப்பாகக் essb’Lill-ġ5g5&ša56or (I.C.1970. Nos.360.579,713, 396-7, 690,896b) (படம்-16).
(படம் -16)
இதே பெயர் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமியில் சாத்தன் என்று எழுதப்பட்டுள்ளது (Mahadevan1966.No69). இப்பெயர் பெரும்பாலும் வணிகனை, வணிகக் குழுத்தலைவனைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் வணிகர்களோடு புலவர்களையும் இப்பெயர் குறித்ததற்கு சாத்தன், பெரும்சாத்தன், சாத்தனார் சீத்தலைச்சாத்தனார் (அக. 53, 134, குறு.154, நற். 27, 42, புறம்.42) போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன. சமகாலத்தில் இலங்கையில் சாத்தன் என்பது தமிழ் மன்னனுக்குரிய பெயராகப் பாளி இலக்கியங்களில் வருகிறது (M.VXXV:7). சாத்தன் என்றே பெயரே கல்வெட்டுக்களில் அதன் மொழிக்கு ஏற்ப மாற்றமடைங் திருக்கலாம் என்பதற்கு தென்னிலங்கையில் கிடைத்த நாணயம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் முன்புறத்தில் மயில் சின்னமும் பின்புறத்தில் மஹாசாத்தஅன் என்ற பெயரும் காணப்படுகிறது (படம்-17). இதில் "மகா" என்ற முன்னொட்டுச் சொல் பெரிய, உயர்ந்த என்ற கருத்தில் அமைந்துள்ளது. மகாவம்சம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் மகாகொத்தன் என்ற பெயரில் தமிழ் மன்னன் தென்னிலங்கையில் இருந்ததாகக் கூறுவது இங்கு நினைவு கொள்ளத்தக்கது (M.V.XXV).
41

Page 30
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(படம் - 17)
கி.மு.3,2-ஆம் நூற்றாண்டுக்குரிய 21 கல்வெட்டுக்களில் பரத என்ற சமூகப் பெயர் காணப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் வட, வடமேற்கு இலங்கையில் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2000:65-66). திராவிட சொல்லகராதியில் பரத என்ற சொல்லுக்கு சமமாக பரதர், பரதவர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது (D.E.D.No.3262). மலோனி (Maloney 1969:224-240) GF6 faul'sOTIT (Seneviratne 1985:49-50) போன்றோர் தென் தமிழ் நாட்டிலும், வட, வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியத்தில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்புபடுத்தி சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரும் ஒன்றெனக் கூறுகின்றனர். சங்ககாலத்தில் கடலும், கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழிலாக சங்கு, முத்துக் குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. இலங்கைப் பிராமிக் கல்வெட் டுக்களிலும் பரத என்ற பெயரோடு வருபவர்கள் வணிகன், அரசதுாதுவன், கப்பலோட்டி, குடும்பத் தலைவன் என்ற சமூக அந்தஸ்துக்கு உரியவனாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் (I.C.1970. Nos.270,368, 643,1049, 1049b. புஷ்பரட்ணம் 2000) (படம்-18).
42

பரமு புஷ்பரட்ணம்
(ULub - 1 8)
தென்னிலங்கையில் கிடைத்த நாணயமொன்றில் பரத-திஷஹ என்ற பெயர் காணப்படுகிறது (Bopearachchi 1999.No.12). பரத பற்றி வரும் 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்களில் பரத-திடிெ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திஷ என்ற தனிநபர் பெயர் அவன் பரதவ சமூகத்திலிருந்து வந்தவன் என்பதைக் குறிப்பதாக உள்ளது. இப்பெயர் பண்டைய காலத்தில் தமிழருக்குரிய பெயராகவும் இருந்ததற்கு கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் உள்ள சான்றுகள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இங்காணயத்தில் காணக்கூடிய சிறப்பான அம்சம் பரத என்ற பெயருடன் நாணயத்தின் முன்புறத்தில் இரு மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இது சங்க இலக்கியம் கூறும் பரதவருக்கும் மீன்பிடித்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பை நினைவுபடுத்துவதாக உள்ளது (படம்-19).
: ԿՀ
3 خ> حیح
(படம் - 19)
43

Page 31
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
கல்வெட்டுக்களில் வரும் பெயர்களுள் வடமொழிக்குரிய கசப என்ற தனிநபர் பெயர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப கஸ்ப, கஷப, கஷபஸ் என எழுதப்பட்டுள்ளன (I.C.1970.Nos. 406, 93c, 671, 983, 144) (படம்-20).
(படம் - 20)
இப்பெயர் சமகாலத்தில் மன்னன் தொட்டுப் பலதரப்பட்ட மக்கள் பெயராக இலங்கையில் இருங்ததற்குக் கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் பல சான்றுகள் உண்டு. இது தமிழருக்குரிய பெயரா கவும் சமகாலத்தில் இருந்ததற்கு தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் கசபன், காசிபன் போன்ற பெயர்களை எடுத்துக்காட்டலாம் (Mahadevan 1966. Nos.40,29, Veluppillai 1890:16). gLogrroggscú இலங்கைத் தமிழரிடையேயும் இப்பெயர் புழக்கத்திலிருந்ததற்கு தென்னிலங்கையில் கிடைத்த நாணயம் சிறங் த சான்றாகும். இந்நாணயத்தின் முன்புறத்தில் மலர் போன்ற வடிவமும், பின்புறத்தில் கபதி-கஜபஅன் என்ற பெயரும் காணப்படுகிறது(படம்-21).
44
 
 

பரமு புஷ்பரட்ணம்
இதில் கபதி என்பது குடும்பத்தலைவனைக் குறிக்கும் பட்டப்பெயராகும். இவற்றில் காணக் கூடிய சிறப்பம்சம் பட்டப்பெயரும், தனிநபர் பெயரும் தமிழ் மயப்படுத்தப்பட்டிருப்பதாகும். கல்வெட்டுக்களில் ஹஹபதி என வரும் பெயர் இதில் தமிழ்ப் பிராமியில் கபதி எனவும், கஸப அல்லது கடிெப என வரும் பெயர் "அன்" விகுதியுடன் கஜபஅன் எனவும் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையில் 40க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் சட, சள போன்ற சொற்கள் காணப்படுகின்றன. பரணவிதானா இச்சொற்களை வடமொழி க்ஸட்ர (KSudra), பாளி சுலு (Cula), எலு சுலு (Sulu) ஆகிய மொழிகளுடன் தொடர்புபடுத்தி இதையொரு வடமொழிச் சொல்லாகப் பார்க்கிறார் (I.C.1970:108). தமிழில் 'ழ' வுக்குப் பதிலாக "ட" பயன்படுத்தும் மரபு பெளத்த நூலாகிய வீரசோழியத்திலே காணப்படுவதால் இச்சொல் தமிழில் சோழரைக் குறித்ததென்ற கருத்து பல ஆய்வாளரிடையே நிலவுகின்றது(Ragupathy 1991), அசோகனது 2-வது ஆட்சிக்கால கல்வெட்டில் அவன் ஆட்சிக்கு வெளியேயுள்ள நாடுகளாக சோட, பாட அரசுகளைக் குறிப்பிட்டுள்ளான். இவை சோழ, பாண்டிய அரசுகளைக் குறிக்கிறது (Hultzsch 1969:XXXIXX). அண்மையில் செருவல என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு தமிடசுட என்பவன் பெளத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது (Senevirane 1985:52). இதனால் சுட, சுள என்ற பெயருக்குரிய அனைவரும் தமிழர்கள் என எடுக்கலாமா என்பது தெரியவில்லை. ஆனால் பல கல்வெட்டுக்களில் இச்சொல் உதிய, ஆய், மாற போன்ற தமிழ்ப் பெயர்களும் இணைந்து வருவதனால் (I.C.1970:No.968). பண் டைய காலத்தில் இலங்கைத் தமிழரிடையே இப்பெயர்கள் பெரிதும் புழக்கத்திலிருந்தன எனக் கூறலாம் (படம்-22).
(படம் - 22)
45

Page 32
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பண்டைய காலத்தில் சோட, சோழ போன்ற பெயர்கள் சோழ நாட்டை, சோழ வம்சத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்திலும் இதே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சில கல்வெட்டுக்களில் குடும்பத் தலைவனாகவும் (Gapathy Cula), தனிப்பட்ட பெயராகவும் (Personal.Name) பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில கல்வெட்டுக்களில் அம்சப்பெயராகவும், பட்டப்பெயராகவும் வருகின்றன (I.C.1970:Nos.44, 98,376,968). வடஇலங்கையில் பெரிய புளியங்குளம், வெடிகினார்மலை ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் சுட என்ற சொல்லின் பின்னொட்டுப் பெயராக நாக (Cuda Naga), திஸ்ஸ் (Cuda Tissa) போன்றோர் குறிப்பிடப்பட்டுள்ளனர் (I.C.1970:NOS. 338-341, 374). இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் 15ாக என்ற பெயர் பயன்பாட்டில் இருந்ததற்கு போதிய ஆதாரங்கள் உண்டு. இப்பெயரில் குறுகில மன்னர்களும், தலைவர்களும் இருந்துள்ளனர். பெரிய புளியங்குளத்திலுள்ள நான்கு கல்வெட்டுக்கள் நாக அரசவம்சம் பற்றிக் கூறுகின்றன. திஸ்ஸ், திஸ் என்ற பெயரில் குறுநில மன்னர்களும் அரசர்களும் இலங்கையில் ஆட்சிபுரிந்ததைப் பாளி இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் திஸயன் என்ற பெயரும் (Ragupathy), அழகன்குளம் அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டத்தில் திஸ் என்ற பெயரும் பெறப்பட்டுள்ளன (இராஜகோபால் 1991:1-12). இதனால் கல்வெட்டுக்களில் வரும் சுடகாக, சுடதிஸ் போன்ற பெயர்கள் சோழ நாட்டிலிருந்து அல்லது சோழ வம்சத்திலிருந்து வந்தவர்களைக் குறிக்கலாம்.
தென்னிலங்கையில் கிடைத்த நாணயமொன்றில் திஷபுரத்தைச் சேர்ந்த சடணாகராசன் வெளியிட்ட நாணயம் ஒன்று கிடைத்துள்ளது (புஜ்ெபரட்ணம் 2001:56-57). இதில் வரும் சட என்ற முன்னொட்டுப் பெயர் கல்வெட்டுக்களில் சோழரைக் குறிக்கும் சுட என்ற பெயருடன் தொடர்புபடுத்தக்கூடியது. வழக்கமாக கல்வெட்டுக்களில் வரும் 15ாஹ என்ற பெயர் இதில் "ணக" எனத் தமிழ்ப் பிராமியில் வருகிறது ( படம்-23).
46

பரமு புஷ்பரட்ணம்
(படம் - 23)
இவ்வாறு எழுதும் மரபு தமிழகப் பிராமியில் காணப்படுவது (Mahadevan 1966.No.33) போல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் காணப்படுகின்றன(I.C. 1970.No.991) (படம்-24).
(படம் - 24)
இதை மேலும் வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனத்தில் வரும் ணாக என்ற பெயர் உறுதிப்படுத்துகிறது (Veluppilai 19811-14). இங்ங்ாணயத்தில் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் ராசன் என்ற பெயராகும் (படம்-25). இது அரசனைக்குறிக்கும் தமிழ்ப் பெயராகும். சங்க இலக்கியத்தில் இப்பெயர் காணப்பட்டாலும் (ஆரிய அரசன்.புறம்.227), சமகாலத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களில் இதுவரை காணப்படவில்லை. ஆனால் சமகாலத்தில் சாதவாகனர் தாம் வெளியிட்ட நாணயங்களில் பிராகிருதத்தில் ராஞோ என்ற பெயரையும், தமிழில் அரசன் என்ற பெயரையும் பயன்படுத்தியுள்ளனர் (Pannner selvam1969:286).
47

Page 33
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(ULub — 25)
இந்த இடத்தில் நாணயத்தில் வரும் பெயருக்கும் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களுக்கும் இடையில் ஒருவித ஒற்றுமையிருப்பதைக் காணமுடிகிறது. பெரும்பாலான இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் அரசனைக் குறிக்க ராஜா என்ற வடமொழிச் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சற்றுப் பிற்பட்ட கல்வெட்டுக்களில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் தம்ம றாசா, தம்மராசே போன்ற பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தம்மராஜா என வரும் சொற்றொடருக்கு தர்மத்தின் அரசன் எனப் பொருள் கொடுத்த பரணவிதானா (1970:110) தம்ம-றாசா, தம்மராசே என வரும்போது அதைத் தம்மருசி என வாசித்து தர்மத்தை இரசிப்பவன் என விளக்கம் கொடுக்கிறார். ஆனால் கல்வெட்டுக்களில் தம்ம-றாசா, தம்மராசே என எழுதப்பட்டுள்ளமை மிகத் தெளிவாகத் தெரிகிறது (I.C.1970. No.438, 996) (ULib-26).
(LJLib-26)
இங்த மாற்றம் இலங்கைத் தமிழரிடையே அரச உருவாக்கம் தோன்றியதைக் காட்டுகிறது. இதை நாணயத்தில் வரும் சடணாகராசன் என்ற பெயர் மேலும் உறுதிப்படுத்துகிறது.
48
 

பரமு புஷ்பரட்ணம்
இயல் மூன்று
கல்வெட்டுக்களில் தமிழ் இடய்பெயர்களும், தமிழர் இடப்பெயர்களும்
ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றையோ, பண்பாட்டையோ அறிந்து கொள்ள இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், பிற தொல்லியல் சின்னங்கள் துணைபுரிகின்ற அளவிற்கு இடப்பெயர்களும் துணைபுரிகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவை ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு வட்டாரத்தின் வரலாற்றையும், அதன் தனித்துவத்தையும் அடையாளம் காண்பதற்கு முக்கிய வரலாற்று மூலாதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆய்வில் காணப்படாததும், வரலாற்று சான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியல் செய்திகளை இடப்பெயராய்வு முழுமையாகத் தருகின்றது. அத்துடன் இவ்வாய்வு புவியியல், பண்பாட்டு, மனநிலை பற்றிய கருத்துகளைக் கண்டறியப் பெரிதும் துணைபுரிகின்றது. மேலும் இன வரலாற்றில் பழங்காலத்தில் எவ்வெப்பகுதியில் எங்தெந்த இனங்கள் வாழ்ந்தன என்பதை இடப்பெயர் கொண்டு அறியமுடியும். வாழ்ந்து எந்தவித சுவடும் இல்லாமல் மறைந்துபோன இனங்களைப் பற்றி அறியவும் இடப்பெயர்கள் துணைபுரிகின்றன (பகவதி 1983).
49

Page 34
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
குறிப்பிட்டதொரு இடத்தை உணர்த்தியும் அதே இடத்தைப் பிற இடத்தினின்றும் தனிமைப்படுத்தியும் மக்களுக்கு அவ்விடத்தைப் பற்றிய உணர்வை அளிப்பன இடப்பெயர்கள். ஆதிகால மனிதன் என்று இடம்விட்டு இடம்பெயரத் தொடங்கினானோ அப்போதே இரு இடங்களையும் வேறுபடுத்தி எண்ணும் சிந்தனை வளரப் பிறரிடம் அதனை விளக்கும் நிலையில் இடம் பற்றிய விளக்கம் பிறக்கிறது. இடப்பெயர் தோற்றம் பெறுகிறது. இப்பெயர்கள் அந்தந்த மக்களின் வாழ்விடம், வாழ்க்கை முறை போன்ற பண்பாட்டுக் கூறுகளைப் பொறுத்து அமையும். ஆரம்பகாலத்தில் மனித வாழ்வுக்குத் தேவையான வசதிகளைத் தரக்கூடிய பொருளாதார வளமுள்ள இடங்களில் இடப்பெயர்கள் தோன்றின.
இன்று உலகின் பல நாடுகளில் இடப்பெயர் பற்றிய ஆய்வு தனியொரு துறையாக வளர்ந்துள்ளது. அங்கிலையை இலங்கை இன்னும் அடையாவிட்டாலும் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் ஏனைய சான்றாதாரங்களுடன் இடப்பெயர்க ளையும் ஒரு மூலாதாரமாகப் பயன்படுத்த சிலர் தவறவில்லை. அவ்வாறு பயன்படுத்தியவர்களில் தென:இனற் (Tennanet 1860), லுயிஸ் (Lewis 1895), பாக்கர் (Parkar 1909), வேலுப்பிள்ளை (1918) சாமுல் (Samuel), 65 mSOTieSTerr (Gnanaprakasar 1952), Qu(3JUT (Perera 1965), SlėšQAoQ (Nicholas1962), LUGOOTSTGOTT (Paranavithana 1970), 56ốrGoTrESU (Kannangara 1984), LuTGAostgöUrib (1988), gugu (Ragupathy1987), பகவதி (1991), அண்மையில் தேவராஜன் (Theva Rajan 1998) போன்றோரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. தற்கால இலங்கை இடப்பெயர்கள் பெரும்பாலும் வட்டார அடிப்படையில் அங்கு வாழும் மக்களின் மொழி, மதம், பண்பாடு, புவியியல் தன்மை என்பவற்றிற்கு ஏற்ப தமிழ், சிங்கள மொழி இடப்பெயர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் மொழியடிப்படையில் அப்பெயர்கள் பலவற்றிடையே பொதுவான ஒற்றுமைத்தன்மை காணப்படுகிறது. இவ்வொற்றுமையை ஆதாரமாகக் காட்டி ஒருசில ஆய்வாளர் முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களில் பிற்காலத்தில் தமிழர்கள் குடியேறியதைத் தமிழ்மயப்படுத்தப்பட்ட சிங்கள இடப்பெயர்கள் காட்டுவதாகவும் (Kannangara1984:32-33, வேலுப்பிள்ளை 1918), இன்னொருசாரர் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் பிற்காலத்தில் சிங்களவர் வசிப்பிடங்களாக மாறியதைச் சிங்கள மயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் காட்டுவதாகவும் வாதிடுகின்றனர் (Gnana prakasar 1952:27-35).
50

பரமு புஷ்பரட்ணம்
இதற்கு பெளத்த இலக்கியங்கள் கூறும் தமிழ், சிங்கள மக்களின் பூர்வீக வரலாறு, பெளத்த மத எச்சங்கள், தமிழ் மொழியின் தொன்மை, இலங்கை தமிழக இடப்பெயர்களிடையே காணப்படும் ஒற்றுமை போன்ற அம்சங்கள் சான்றாகக் காட்டப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ், சிங்கள மக்களின் நீண்டகால வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இனம், மொழி, மதம், பண்பாடு, கலை என்பவற்றில் ஒரு வித உறவும், ஒன்றன் மீது ஒன்றன் செல்வாக்கும் பண்டு தொட்டு இருந்து வருவதைக் காணமுடிகிறது. அது இடப்பெயர்களிலும் இருந்திருக்கும் என்பதில் சங் தேகமில்லை. ஆனால் இன்று தமிழரிடையே பெரிதும் பயன்பாட்டிலுள்ள இடப்பெயர்கள் சிலவற்றை சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களின் எச்சங்களாகக் கூறும் போது அவ்விடப்பெயர்கள் பலவற்றின் தோற்ற கால வரலாற்றையும் பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சிங்கள மொழியின் தோற்றத்திற்குப் பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் புழக்கத்திலிருந்த பல இடப்பெயர்கள் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுவதுடன், பல இடப்பெயர்களில் வரும் பொதுவிகுதிக்கும், சிறப்புவிகுதிக்கும் பிற்கால தமிழ், சிங்கள இடப்பெயர்களுக்கும் இடையே ஒருவித தொடர்பையும், தொடர்ச்சியையும் காணமுடிகிறது. அவற்றுள் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு தற்காலத் தமிழர் இடப்பெயர்கள் சிலவற்றின் தோற்றத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதாக இந்த ஆய்வு அமைகிறது.
பிராமிக் கல்வெட்டுக்கள் கூறும் இடப்பெயர்களில் 33 விழுக்காடு கிராமம், 14 விழுக்காடு தனிநபர், 13 விழுக்காடு நகரம், 16விழுக்காடு நீர்நிலை, 4 விழுக்காடு தாவரம், இயற்கை அமைப்பு, 3 விழுக்காடு மதம் (ஏனையவை பொருள் விளங்கவில்லை) சார்ந்த இடப்பெயர்களாக உள்ளன. இப்பெயர்கள் அதேவடிவில் பிற்காலத்தில் தொடர்ந்தன எனக் கூறுவதற்கில்லை. அவை மொழிவழக்காலும் பண்பாடு, அரசியல் மாறுதலாலும் திரிபடைந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் பெரும்பாலான இடப்பெயர்களின் பொதுவிகுதியையும், சில இடப்பெயர்களின் சிறப்பு விகுதிகளையும் பிற்கால இடப்பெயர்களில் தொடர்ந்ததற்கு சான்றுகள் உண்டு. சங்க இலக்கியத்தில் தமிழகத்திலிருந்த முன்னூறுக்கு மேற்பட்ட இடப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்பெயர்கள் அனைத்தும் அதே மொழி வழக்கில் பிற்காலத்திலும் தொடர்ந்தன எனக் கூறுவதற்கில்லை. ஆனால் இடப் பெயரில் வரும் பொதுவிகுதி, சிறப்புவிகுதி பிற்கால
5.

Page 35
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இடப்பெயர்களுடன் தொடர்பு, தொடர்ச்சி கொண்டுள்ளன. கல்வெட்டாய்வாளர்களான சுப்பராயலு, வேதாசலம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் சங்க இலக்கியத்தில் வரும் இடப் பெயர்களுக்கும் பிற்காலத்தில் பாண்டியக் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை சுட்டிக்காட்டப்பட்டு சில இடப்பெயர்கள், பல இடப்பெயர்களின் பொது விகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு épůLIITa5 (85Těša5ģg5ėšasg (Subbarayalu and vedachalam 1996: 137142). இத்தகைய வரலாற்றுப் பார்வை இலங்கைக்கும் பொருத்தமாக உள்ளது. ஆயினும் இவ்வாறான ஆய்வு அதிலும் குறிப்பாக தமிழ் இடப்பெயர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இரகுபதி கலாநிதி.கருணரட்னா பதிப்பில் EpigraphiaZWylanica என்ற சஞ்சிகையில் வெளியான 87 கல்வெட்டுக்களில் உள்ள தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வில் சில தமிழ் இடப்பெயர்கள் பற்றியும் முதன்முறையாக எடுத்து ஆராய்ந்துள்ளார். இக்கட்டுரையில் 1384 கல்வெட்டுக்களில் வரும் 100க்கு மேற்பட்ட இடப்பெயர்களில் முக்கிய தமிழர் இடப்பெயர்களின் பொது, சிறப்பு விகுதிகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. W
9Lp (ati)
பிராமிக்கல்வெட்டுக்களில் அடி என்பது இடப்பெயர்களின் பொது cilećuтав 2-ero Tg(e.g. Aba-adi, Nacadaka-adi). 95lob 99 6Top சொல் வடமொழியெனக் கொண்டு கால்வாய் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது (I.C.1970:1215). அடி என்பது ஒரு தமிழ்ச் GlassFmtað (Ta. Ma. ați, Tu. Ka. aợi „Te. aợdugu). Bb5 Liib, இருப்பிடம், குகை, பாதச்சுவடு, அடித்தளம் எனப் பல கருத்துண்டு (D.E.D.No.61, T.L.1: 46). கலி வெட்டுக்களில் இச்சொல் இடப்பெயர்களின் பொது விகுதியாக வருவதனால் இது பெளத்த சங்கத்திற்கு தானம் கொடுத்தவரின் ஊர்ப்பட்டப் பெயரைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். இச்சொல் பிற்கால சிங்கள இடப்பெயர்களில் இடம் பெற்றி ருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத் தமிழ் இடப்பெயர்கள் பலவற்றில் பொதுவிகுதியாக உள்ளது (Teble, No.1).
52

பரமு புஷ்பரட்ணம்
(ΦΙΡ (Kudi)
இலங்கையின் பல்வேறு காலகட்டத்திற்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் குடி என்ற சொல் இடப் பெயராக, குறிப்பிட்ட மக்கள் வாழும் இடத்தைக் குறிப்பதாக வருகின்றது (I.C.1970.501,663,1017, 1031,1175 No, 1983No.44). ஆயினும் அறிஞர்கள் யாரும் இவற்றைச் சரிவர வாசித்து பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. சில இட்களில் தவறாகவும் வாசிக்கப்பட்டுள்ளது (I.C.1970 No.1017). அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டு சரிவர வாசிக்கப்பட்ட போதிலும் அதில் வரும் குடி என்ற சொல்லுக்கு வடமொழியில் பெளத்த கட்டிடம் என விளக்கம் கூறப்பட்டுள்ளது (I.C.1970 No.1175). அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று பருமக வழிவந்தோர் பருமக குடி என அழைக்கப்பட்டதைக் கூறுகிறது (Parumaka Abayahaputa Parumaka guțiha , l.C. 1970: No. 1175). glað uploa5 6TGðrug பெருமகன் என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். ஆரம்ப காலங்களில் சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவனைக் குறித்த இப்பட்டப் பெயர் காலப்போக்கில் அப்பட்டத்திற்குரியவனின் வழிவந்தவர்களும் பயன்படுத்திக் கொண்டதையே மேற்கூறப்பட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது எனலாம். இங்கே குடி என்பது வம்சம் என்ற பொருளிலும், இடம் என்ற பொருளிலும் வருவதைக் காணமுடிகிறது. தமிழகத்தைப் போல் இலங்கையில் மட்டக்களப்பு, புத்தளம் மாவட்ட்களில் குறிப்பிட்ட தமிழ்ச் சமூகம் வாழும் இடங்களோடு குடி என்ற சொல் தொடர்பு டையதாக இருப்பதைத் தற்காலத்தில் வழக்கில் உள்ள காரைக்குடி, காத்தான்குடி போன்ற இடப் பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன (Table No.2).
கோட்டை (Kota)
பிராமிக் கல்வெட்டில் வரும் இடப்பெயரில் கோட்டை என்ற சொல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது கோடு என்ற வேர்ச் சொல்லினடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் (Ka. Kotte Ma, Kotta, Te. Kota. D.E.D.1831). இதற்கு மதிரண், அளவை, காடு (fort, Castle, measument of capacity, abundance, plenty) 6TGOT LIG) 5(555Sotirob. இப்பெயர் கேகாலை மாவட்டத்தில் உள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டில் காணப்படுகிறது. பரணவிதானா(1970:No.778) இப் பெயரை கொடயவேலு என வாசித்து கோட்டையின் தளபதி வேலு
53

Page 36
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
என விளக்கம் கொடுத்து கொடய என்பதன் மூலமொழி வடமொழி கொஸ்டிகா என்றார். கொடய என்ற பிராகிருதச் சொல் தமிழில் கோட்டையைக் குறிப்பதாகக் கூறும் வேலுப்பிள்ளை "வேலு" என்பதை "வேள்" என வாசித்து கோட்டைவேள் என விளக்கம் கொடுத்துள்ளார் (1980:13). இலக்கிய நடையில் இரட்டிக்கும் ஒற்றுக்கள் கல்வெட்டுக்களில் பெரும்பாலும் ஒற்றையாகவே வரும் (Mahadevan 2000 :149). இதனால் கொடையவேள் என வாசிக்கப்பட்டதைக் கோட்டைவேள் என வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். கோட்டை என்பதற்கு அரசன் வாழும், ஆட்சி செய்யும் இடம் என்ற கருத்தும் உண்டு (Chetteri 1952:159). பண்டைய தமிழகத்தில் குறிப்பிட்ட இனக்குழுவுக்கு தலைமை வகித்தவன் பெற்ற பட்டங்களில் ஒன்று வேள் என்பதாகும். இது வடமொழியில் வரும் ராஜா என்ற பட்டத்திற்குச் சமமான கருத்துடையது (Thapar 1995). இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் வேள் என்ற பட்டத்திற்குரியவன் பெரும்பாலும் ஆளும் வர்க்கமாகக் காட்டப்பட்டுள்ளான் (புஷ்பரட்ணம் 2000:49). மகாவம்சத்தில் வேள்நாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது (M.VXIl:69, Paramavithana 1970:XXIV). யாழ்ப்பாணப் பேரகராதியில் வேள் என்பதற்கு மண்ணை ஆள்பவன் எனப் பொருள் கொள்ளப் பட்டுள்ளது(TLVI:3842). இதனால் கோட்டைவேள் என்பதை வேள் ஆட்சிக்குட்பட்டிருந்த இடத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் கோட்டை என்பது பெரும்பாலும் இனம், வம்சம், தனிநபர் சார்ந்த பொது, சிறப்புவிகுதியாக இடப்பெயர்களில் வருகின்றது(Table3).
DoL (Maça)
இலங்கையில் உள்ள கி.மு.2-1 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் &56ðQari’GDěša56 áfaoQugblað LoL, LOIq, Lou Gas (Mați, Maçda. Maçdake) என்ற சொல் இடப்பெயரின் பொது, சிறப்பு விகுதியாக வருகின்றன (I.C.1970.Nos1174,663,873). இவை தமிழில் மடை என்ற சொல்லுக்கு சமமான கருத்துடையது. ஆனால் பரணவிதான இதைப் பாளி மொழியில் வரும் மாளகா (Malaka) என்ற சொல்லுக்கு சமமானதெனக் கூறி இதற்கு உயரமான நிலப்பகுதி என விளக்கம் கொடுத்துள்ளார் (1970:117). 356llað LOGODL (mațai) LOL (mața), BALT (mița), Gg5?grálóflað LOL (mada), மலையாளத்தில் மிடுவ (mituva), கன்னடத்தில் மடகே (madake) என்பன பெரும்பாலும் ஒரு பொருள் குறித்த சொல்லாகப்
54

பரமு புஷ்பரட்ணம்
புழக்கத்தில் உள்ளன. பரோ இவற்றைத் திராவிடச் சொல் என்பதற்குப் பல சான்றுகள் காட்டுகிறார் (D.E.D. NoS. 3801, 3810). இவை 65TGöGaurTuiu, g66Tib, GaurTGoño (Small Sluice of channel or stream, hole, aperture, shutters of a sluice, dam by which the flow of water in a channel is obstructed, channel) 6T60T ua) Guit(self gp555 நிற்கின்றன. ஆந்திராவில் கிடைத்த 10-11 ஆம் நூற்றாண்டுக்குரிய சில கல்வெட்டுக்கள் அங்கிருந்த இடப்பெயர்கள் மட என்ற பொதுவிகுதியுடன் முடிவடைவதைக் காட்டுகின்றன (Ramachandramurthy 1985:277), இலங்கையில் தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள நீர், நிலைகளை அண்டிய இடப்பெயர்களில் சில "மடை" என்ற பொதுவிகுதியுடன் முடிவடைகிறது (Table, No4).
LITıp (pâdi)
கி.மு 3-2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் சிலவற்றில் பாடி என்ற சொல் இடப்பெயராக வருகின்றது (e.g. Patibanakula, I.C.1970.Nos.501,663,340,1031)(படம்-1). பரணவிதான இச் சொல் சமஸ்கிருதத்தில் பிரதி (prai), பாளியில் படி (Pali) எலு மொழியில் பிளி (pi) எனக் கூறி இதை வடமொழிசார்ந்த சொல்லாகப் பார்க்கிறார் (1970:113). ஆனால் பண்டு தொட்டு இது திராவிட மொழிக்குரிய QafiTGSabitas Scibits alcápg (Ma. Pati; part of village, Ka. Padi; settle -ment, village, hamlet, Te. Paợdu; village, at the ent of names of places) தமிழில் பாடி என்பதற்கு நகரம், கிராமம், சிற்றுார், சேரி (town, city, hamlet, pastoral village) 6T60T u0) is obgigssoci Gb (D.E.D.No.3347).
55

Page 37
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
யாழ்ப்பாணப் பேரகராதியில் இதற்கு நாடு என்ற கருத்துண்டு (TLV:2593). தமிழ் நாட்டில் சங்ககாலம் தொட்டு புழக்கத்திலிருந்த இப்பெயர் சோழர் காலத்தில் நாடு என்ற பெயருக்கு சமனான நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன(e.g. Mala-nadu, Vanakõ-Padi, Subbarayalu 1973:77, 1982:272).
Sựlıp (Diți) sı’lıp (Piți)
இலங்கையில் காணப்படும் பல்வேறு காலப்பகுதிக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் இடப்பெயர்களின் பொதுவிகுதியாக திட்டி என்ற QSFITGö 9ISODLorbgGrGMTg (e.g. Supadiți. I.C. 1970. Nos. 252, 443, 713, 973 ). இது சமகால இல கைப் பாளி இலக்கியர்கள் கூறும் இடப் பெயர்களிலும் காணப்படுகின்றது (M.V. XXV:34). திட்டி என்ற Garros Surtail Gongguóleo (Ta. titti; raised ground, bank, elevation, window, Ka., didde, jie, wicket, a hole expressly made for egress or ingress, Te. diddl; a Small door, wicket, posterm or back door. D.E.D. 2631-2633) உயர் நிலம், மேடு எனப் பல பொருள் குறித்து நிற்கிறது. சமகால இலங்கைத் தமிழ் இடப்பெயர்களில் இது மலை, உயர்ந்த இடம், மணல்மேடு என்பவற்றைக் குறித்து நிற்பதைப்போல் (Table.5), பிராமிக் கல்வெட்டுக்களில் பெளத்த குகை அமைந்திருந்த உயர்ந்த இடத்தின் பெயராக வருவது சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. இலங்கைத் தமிழரிடையே திட்டி, பிட்டி, புட்டி என்பன ஒரே கருத்துடைய சொல்லாகப் பெரிதும் கையாளப்படுகின்றன. பிராமிக் கல்வெட்டுக்களில் திட்டி என்ற சொல்லோடு பிட்டி, புட்டி என்ற இடப்பெயரும் தமிழுக்குரிய அதேபொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (e.g. Punapiti, I.C. 1970.Nos. 115,1217, 1218). இப்பெயர் பிற்காலத்திலும் தொடர்ந்திருந்ததற்கு கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியத்திலும் சான்றுகள் உண்டு(E.ZVII:7 :). கி.பி.7-8 ஆம் நூற்றாண்டுக்குரிய சிகிரியக் கல்வெட்டு கல்பி(ட்)டி என்ற இடம் பற்றிக் கூறுகிறது. இவ்விடம் தற்போது வடமேற்கிலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி என நிக்க லஜ்ெ (1962:90)அடையாளம் காட்டுகிறார். இதனால் சமகால சிங்கள இடப்பெயர்களில் வரும் பிட்டிய, தமிழ் இடப்பெயர்களில் வரும் பிட்டி, புட்டி, திட்டி என்பவற்றின் தோற்றத்தைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பிட்டி என முடியும் இடப்பெயர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் (Table.6).
56.

பரமு புஷ்பரட்ணம்
&GITQo (Katu)
பிராமிக் கல்வெட்டுகள் சிலவற்றில் காடு, கடே, கடி (I.C.1970:107.Nos. 1142,67, 1118) போன்ற சொற்கள் இடப்பெயரோடு தொடர்புடைய பொது, சிறப்புவிகுதியாக வருகின்றன(படம்2). பரணவிதானா (I.C.1970; 107) இவற்றின் மூலமொழி சமஸ்கிருதம் எனக் கூறிக் காடு என்ற பெயருக்கு செய் (having done, having made) என்ற பொருளும், கடே, கடி என்பவற்றிற்கு கடவுள், தனிநபர் சார்ந்த பெயர்கள் எனவும் விளக்கம் கொடுக்கிறார். ஆனால் காடு என்பது தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன் இச்சொல் கடி, கடே என்ற வேர்ச் சொல்லினடியாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது (D.E.D.102. No. 1206. Ta, Ma... Katu, Ka, Te...kaqdu). eSITGb 6TgirLug5ġbeg5 QuGTb, L5eg55, நெருக்கம், இடம், சிற்றுார் எனப் பல கருத்துண்டு.
(படம்- 2)
இச்சொல் தொல்காப்பியர் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது. நால்வகை கிலங்கள் பற்றிக் கூறுமிடத்து மாயோன் மேய காடுறை உலகமும் என்று முல்லை நிலத்தைப் பற்றிக் கூறுகிறார் (தொல். அகத்தினை 5). சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இடப்பெயர்கள் சில காடு என்னும் பொது விகுதியைப் பெற்றுள்ளன (அகம் 139, நற் 142, 221). இடைக் கால இலங்கையில் காடு என முடியும் பெயர்கள் இருந்ததற்கு இரமுக்காடு (Ramukkadu). என்ற இடப்பெயரை உதாரணமாகக் குறிப்பிடலாம் (Nicholas 1962:197, 217). இலங்கையில் காடு என முடியும் இடப்பெயர் கள் தனிநபர், சமூகம், மதம், தாவரம், இயற்கையமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டு உள்ளன (Table.No.7). இன்று காடுகள் என்ற பெயர் கொண்ட
57

Page 38
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இட்களில் சில மக்கள் குடியிருப்புக்கள் செறிந்த இடங்களாக உள்ளன. ஒருகாலத்தில் காடுகளாக இருந்த இவ்விடங்கள் புதிய குடியேற்றத்தால் இங்கிலையை அடைந்திருக்கலாம். ஆனால் சில இடங்களில் மக்கள் குடியிருப்பின் ஆரம்பகாலச் சான்றாகப் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுவதினால் இங்கெல்லாம் காடுகள் என முடியும் இடப்பெயர்களுக்குத் தொன்மையான வரலாறு இருந்திருக்கலாம.
BITQb (näu)
பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களுள் நாடு என்ற சொல் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கது. புத்தளம் மாவட்டத்தில் கிடைத்த கி.மு1-ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் பத-ஷூெம-நாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது (I.C.1970.No.1075)(படம்-3). ஆனால் பரணவிதானா இச்சொற்றொடருக்குரிய கல்வெட்டு எழுத்துக்கள் தெளிவாக இருந்தும் இவற்றை பத-ஷெமஹ லெணே என்று வாசித்து பிரபு ஷெமநனுக்கு உரிய குகை என விளக்கம் கொடுத்துள்ளார் (BataSumanaha lene). இதற்கு கல்வெட்டில் சரியாக எழுதப்பட்ட "டு" என்ற எழுத்தை தவறாக எழுதப்பட்ட "ஹ" என அவர் எடுத்துக் கொண்டதே காரணமாகும். ஆனால் இந்த வாசிப்பில் இருவகையான தவறுகளைக் காணமுடிகிறது. சில கல்வெட்டுக்களில் ஷமாகஹ என்ற தனிநபர் பெயர் காணப்பட்டாலும் இன்னும் சில கல்வெட்டுக் களில் ஷெம, ஷெமய, ஷெமஹ எனவும் எழுதப்பட்டுள்ளன(I.C.1970.Nos.632, 260, 775, 104, 190, 680). ஆகவே கல்வெட்டில் உள்ள எழுத்தின் அடிப்படையில் ஷம5ஹ என வாசித்ததை ஷம என வாசிப்பதே பொருத்தமாகும். ஷெமகஹ என வாசித்தாலும் இறுதியில் உள்ள எழுத்தை "ஹ" என வாசிப்பது அவரது முந்தைய வாசிப்புக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனேனில் பெயரின் இறுதியில் வரும் "டு" என்ற எழுத்து சமகால இலங்கை தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் வருவது போல் சரியாகவே எழுதப்பட்டுள்ளது. எல்லாக் கல்வெட்டுக்களிலும் இவ்வடிவத்தை "டு" என வாசித்த பரணவிதானா இக்கல்வெட்டில் மட்டும் மாறி எழுதப்பட்ட வடபிராமிக்குரிய "ஹ" என எடுப்பது பொருத்தமாக இல்லை. எனவே இப்பெயரை பத-ஷம-நாடு என வாசிப்பதே பொருத் தமாகும். இதற்கு சு(ஷ)ம நாட்டுப் பரதவருடைய குகை எனப் பொருள் கொளளலாம்.
58

பரமு புஷ்பரட்ணம்
(படம் - 3)
வேறு சில கல்வெட்டுக்களில் "கட" (nata, nada) என்ற சொல் காணப்படுகிறது. இச் சொல்லை பரணவிதானா (1970:113) வட மொழி எனக் குறிப்பிட்டு இதற்கு நடிகன், நடனகாரன் என விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் நட், நட(nag, nada) என்ற வேர்ச் சொல்லிலிருந்தே நாடு என்ற சொல் தோன்றியதாகக் கூறப்படுகிறது (Seneviretne1193-74). கல்வெட்டுக்களில் நட் என்ற சொல் பெரும்பாலும் தலைவனைக் குறிக்கும் கபதி, மகன் என்ற பட்டப்பெயர்களுடன் சேர்ந்து வந்திருப்பது சிறப்பாகக் கவனிக்கத்தக்கது (e.g. Gapati-naçda, Gapati-naçda, Gapati-nața, Marumakan(n)-nața. I.C.1970.Nos.376,642, 1005, 1010). கபதி என்ற பட்டம் குடும்பிகன் என்ற பட்டத்திற்குச் சமமான கருத்துடையது. தமிழ் நாட்டில் திருப்பரங்குன்றத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டு ஈழக் குடும்பிகன் பற்றிக் கூறுகிறது (Mahadevan 1966). இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் வணிகர்கள் பெரும்பாலும் கஹபதி என்ற பட்டத்தை உடையவர்களாகவே கூறிப்பிடப்பட்டுள்ளனர் (I.C. 1970.Nos, 94, 356-57). மகன் என்ற மற்றைய பின்னொட்டுச் சொல் அரச உருவாக்கத்தில் ஏற்படும் அதிகார அடுக்கு நிலையைக் காட்டுகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட இனக்குழுத் தலைவனது ஆட்சிக்குட்பட்ட சிறிய நிலப்பரப்பு நாடு என அழைக்கப்பட்டதற்கு சான்றுகள் உண்டு (உ+ம். வேள்நாடு. Subbarayalu1978). இப்பின்னணியில் கபதி -Bட என்ற பெயரை கபதி என்ற பட்டத்திற்கு உரியவனின் நாடு (கபதிநாடு)என எடுத்துக்கொள்ள இடமுண்டு.
g55còr5TGB 6Tgiãip Gas ITGò (Ta, Ma... natu, naqdu. D. E. D. No.3012) காலத்திற்கு காலம் பல பொருள் குறித்து நின்றது. சங்க காலத்தில் சிறிய வாழ்விடம் நாடு என அழைக்கப்பட்டது. புறநானூற்றில் (49) காடழித்து நாடாக்கிய செய்தி காணப்படுகிறது. பல்லவர் காலத்தில்
59

Page 39
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இது சபையையும், சோழர் காலத்தில் வெள்ளான் வகை ஊர்கள் நிறைந்த பகுதியையும் குறிப்பதாக உள்ளது (Subbarayalu 1973:3435). சோழர் காலச் சாசனம் ஒன்று இலகையில் இருந்த கோட்டுர் நாடு பற்றிக் கூறுகிறது (பத்மநாதன் 1973). வடஇலிகையில் கல்லூர் இராசதானிகாலத்தில் (கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பின்) அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி வட்டாரங்கள் வெளிநாடு என அழைக்கப்பட்டது (கைலாயமாலை 1983:31) (Table.No.8). தற்காலத்தில் நாடு என்ற சொல் பெரும்பாலும் மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறித்து நின்றாலும் கேரளத்திலும், தமிழ்நாட்டில் கொல்லிமலையிலும், வடஇலங்கையிலும் (உ+ம். மட்டுவில் நாடு) இது சிற்றுாரையும் குறித்து நிற்கிறது (பூங்குன்றன் 1989:168. புஷ்பரட்ணம் 1993).
Gö6ITob (Kötu)
பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களில் கொட என்ற சொல் உச்சி, மேட்டுநிலம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது (e.g. gotakabojhiyane paçuvasagota, I.C. 1970:Nos 990,1215). g5 தமிழில் கோடு என்ற சொல்லுக்கு சமமான கருத்துடையது (SamuelLivinstone 5-6,Ta. Kõțu, Te, Ma, Ka. Kõợu). SFIrias இலக்கியத்தில் கோடு என வரும் சொல்லிற்கு மலைச்சிகரம் (புறம் 12-24), மலை (சிலப் 11,20), மேட்டுநிலம் (மதுரை 286), முனை (பதிற்று 31-12), பக்கம் (புறம் 164) என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. குறுந்தொகையில் (குறுங் 24,3-5) அதி கோடு என்ற இடப்பெயர் காணப்படுகிறது. கி.பி.4-ஆம் நூற்றாண்டுக்குரிய பல்லவ செப்பேட்டில் செல்லிரெககொடு என்ற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்வெட்டுக்களில் கொட என வரும் சொல் தமிழில் கோடு என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பிராகிருதவடிவமாகக் கொள்ளலாம். இடைக்கால இலங்கை இடப்பெயர்களின் பொதுவிகுதியாக "கொட" என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் கல்வெட்டுகள், பாளி இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது (Nicholas 1962). ஆயினும் தற்காலச் சிங்கள இடப்பெயர்களின் பொது விகுதியாக "கொட" என்ற சொல் வருவது போல் தமிழ் இடப்பெயர்களில் "கோடு" என்ற பொதுவிகுதியிருப்பதாகத் தெரியவில்லை.
60

பரமு புஷ்பரட்னம்
வாவி, eba (āvi Vāvi)
கல்வெட்டுக்களில் பதினான்கு விழுக்காட்டிற்கு அதிகமான இடப்பெயர்கள் அவி, வடபி, வாட்ரி என்ற பொதுவிகுதிகளைக் GassmrsorODGGTGOT (e.g. Upal-avi, Punapitikav-avi, kalavavi, Kumpavavi. Kubil-avi. I.C. 1970.Nos. 1132,1151,1217, 1218. I.C.1982.14). சமகாலப் பாளி இலக்கியங்களிலும் இவை இடம்பெற்றுள்ளன(M.V. XXVII:39). ஆவி, வாவி, வேலி என்பன நீர்நிலைகளைக் குறிக்கும் ஒரு பொருளுடைய பல சொற்களாகும். இவை தமிழில் ஆவி என்ற GFTGogšg FDDTGT asošgSOLLIGoa (Ta. Ma.Te.āvi kaāvāvi āvari. D.E.D.Nos.333-336) . Fiasas Taošo egalī7 6Tsip Gara பயன்பாட்டில் இருந்துள்ளது (புறம் 105:8). ஆவி என்ற சொல் இலங்கையின் இடைக்கால இடப்பெயர்களிலும் தொடர்ந்ததற்கு கல்வெட்டு, இலக்கியங்களில் சான்றுகளுண்டு. இது சிங்களத்தில் ஆவி (avi). ஆவிய (aviya) எனவும், தமிழில் ஆவி எனவும் இடம்பெற்றுள்ளன. நாயன்மார் பாடல்களில் மாதோட்டத்தில் உள்ள பாலாவி பற்றி வரும் செய்தி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தற்காலத்தில் ஆவி என்ற இடப்பெயரின் பொதுவிகுதியை தமிழர்களது இடப்பெயரில் குறிப்பாக வன்னிப்பிராந்திய இடப்பெயர் களில் சிறப்பாகக் காணலாம் (Table.10). இதற்கு மல்லாவி (மல்+ஆவி), நீராவி (நீர்+ஆவி), பாலாவி (பால்+ஆவி), கல்லாவி (கல்ல+ஆவி) போன்ற இடங்கள் சிலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
35id, BITIDrid (kam, kamam)
இலங்கையில் தற்காலத்தில் பழக்கத்திலுள்ள தமிழர் இடப்பெயர்களில் வரும் பொதுவிகுதியில் கம், காமம் என்ற சொற்கள் சிறப்பாக நோக்கத்தக்கன. திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்த கி.பி.1-ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று வேள்கம(Velkama) என்ற இடம்பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டில் சில பிராகிருதச் சொற்கள் தமிழ் மயப்படுத்தப் பட்டிருப்பதால் இக்கல்வெட்டைத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் பொறித்திருக்க வேண்டும் எனப் பரணவிதானா (1983:112-13) கூறுகிறார். இதில் தலைவனைக் குறிக்கும் வேள் என்ற பட்டம் சங்ககாலத் தமிழகத்தைப்போல் (e.9. வேள் நாடு, வேளுர்) இலங்கையின் பண்டைய காலச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களின் பெயரில் இடப்பெயர்கள்
61

Page 40
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
தோன்றியதைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதில் வரும் "கம" என்ற பொதுவிகுதி காலப் போத்கில் தமிழில் கம், காமம் எனவும், சிங்களத்தில் கமு, கமுவ எனத் திரிபடைந்து தொடர்ந்தும் தமிழ், சிங்கள இடப்பெயர்களின் பொது விகுதியாக இருந்து வருகிறது. கி.பி.7- 8ஆம் நூற்றாண்டுக்குரிய சிகிரியக் கல்வெட்டில் வரும் இடப்பெயர்களில் கமுவ என்ற சொல்லோடு "கம்" (உ-ம். தமன் கம்) என்பது பொதுவிகுதியாக வருவது குறிப்பிடத்தக்கது. அக்கல்வெட்டு ஒன்றில் அக்காலத்தில் வழக்கிலிருந்த வாலிகம் என்ற இடம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிக்கிலவு இவ்விடத்தைத் தற்போது யாழ்ப்பாணத்தில் புழக்கத்திலுள்ள வலிகாமம் என அடையாளம் கண்டுள்ளார். இப்பெயரே கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள இலக்கியங்களில் வலிகோமு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (Nicholas 1962:84-85). ஆனால் இதே இடப்பெயர் 12 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக்கல்வெட்டில் வலிலிக்காமம் எனவும், கி.பி.16-17ஆம் நூற்றாண்டுக்குரிய போர்த்துக்கேய, டச் ஆவணங்களில் வலிகாமம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது (e.g.vallikāmam. Panankāmam. Nilakanda Sastri 1958:368-369). இப்பொதுவிகுதி பிற்கால இடப்பெயர்களிலும் தொடர்ந்ததைத் தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள சுண்ணாகம், மல்லாகம், பண்ணாகம், பனங்காமம், கொடிகாமம், வலிகாமம், வீமன்காமம், தம்பலகாமம் போன்ற இடப்பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழில் கம், காமம் என்ற பொதுவிகுதி சிங்களத்தில் கம, கமுவ es ப்பதால் இவ்விடப்பெயர்களின் தோற்றத்தையிட்டு இருவகையான கருத்துக்கள் உண்டு. ஒருசாரார் சிங்கள இடப்பெயரில் கம, கமுவ என்ற பொதுவிகுதி வருவதால் முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களில் பிற்காலத்தில் தமிழர் குடியேறியதால் அவை தமிழ் இட்ப்பெயர்களாக மாறியது எனக் கூறுகின்றனர் (Kannangara 1984:32-33). இன்னொரு சாரார் கமம் என்ற தமிழ்சொல்லிலிருந்தே கம, கமுவ என்ற சொல்லும், கம், காமம் என்ற சொல்லும் தோன்றியதாக வாதிடுகின்றனர் (Same u Livingstone 6). இதற்குத் தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்தில் வரும் குறிப்பைச் சான்றாகக் காட்டுகின்றனர் (தொல்-சொல் 355).
ஆனால் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இடப்பெயர்களின் பொதுவிகுதியாக இச்சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதால் இவற்றின் தோற்றத்தைச் சிங்கள
62

பரமு புஷ்பரட்ணம்
மொழிக்கு முற்பட்டதென உறுதிபடக் கூறலாம். இச்சொற்கள் கிராம் என்ற சமஸ்கிருத சொல்லின் அடியாகப் பிறந்தது எனவும், இதிலிருந்தே தமிழில் கிராமம் என்ற சொல் வந்தது எனவும் கூறப்படுகிறது. (Ramachandramurthy 1985:243-245). Shoal garrisoa5uico Lo Gமன்றி பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்த தென்னிந்தியாவிலும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆந்திராவில் பிற்கால இடப்பெயர்களிலும் இது தொடர்ந்ததைப் கி.பி. 10, 11-ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்களில் வரும்பிட்டுகமம், புன்னகாமம், நந்திகம் (pitugamam, Ponnagamam, Nandigam ) (BLITSắp SLIČIGLJurasaíflað EST GOOTaonrib (e.g. Ramachandramurthy 1985: 245). SaljöölcSq5šg Saisoss தமிழர் இடப்பெயர்களில் இவை பண்டு தொட்டு இருந்து வந்தன எனக் anpaorrib(Table. No11).
366ooT (karai)
கர என்பது பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களின் Loyib@gprT, GALIITěšGH-gpsregið (e.g. Kubakara, Tabakara, Citakara. I.C. 1970.NoS.74, 350). இது கரை என்ற தமிழ்சொல்லின் பிராகிருத Qjqea jib esebib.. 356leò a56oT 6Tgirl uġ5ibeg5 (Ta...karai, Ma.Te... kara, Tu.kare, D.E.D. 91:1087) கடற்கரை, நீர்க்கரை, எல்லை, சீலை, விளிம்பு, இடம், குடா எனப் பல கருத்துண்டு (T.L.l:767). இடப்பெயரில் இது பொதுவாக கடற்கரையை அண்டிய ஊர்களைக் குறிக்கும். 1936இல் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குரிய வல்லிபுர பொற்சாசனம் வடஇலங்கையில் உள்ள ஓரிடத்தைப் பதகர எனக் கூறுகிறது (I.C.1983:53)(படம்-4). இச்சாசனத்தைப் பிற்காலத்தில் ஆராய்ந்தோர் அதில் உள்ள இடப்பெயரைப் படகர என வாசித்து தமிழில் "ப" என்ற எழுத்து "வ" வாக மாறும் விதியிருப்பதால் பட-கர என்பதைப் வட-கர என எடுத்து இவ்விடம் தற்கால வல்லிபுரத்தின் முன்னோடிவடிவமாக இருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
63

Page 41
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(படம் - 4)
ஆனால் சாசனத்தில் "ட" என்ற எழுத்துக் காணப்படவில்லை. மாறாக "த" என்ற எழுத்தே காணப்படுகிறது. அதை "த" அல்லது "தி" என எடுத்து பதிகர அல்லது பதகர என வாசிப்பதே பொருத்தமாகும். இப்பெயரைப் பரணவிதானா (Paranavithana 1983:81) பதகர என வாசித்திருப்பது ஒருவகையில் பொருத்தமாகவே உள்ளது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் "பத" என்ற சொல் பரதவரைக் குறிக்கும் இன்னொரு வடிவமாகவே பலரும் எடுத்து ஆராய்ந்துள்ளனர் (Seneviratne 1985:49-54, சிற்றம்பலம் 1993:112, 520). அப்படியானால் பதகர என்பதற்குப் பரதவர் வாழ்ந்த கரை என எடுக்கலாம். பரதவர் பற்றிக் கூறும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் கடற்கரை சார்ந்த வட, வடமேற்கிலங்கையில் கிடைத்திருப்பதைச் செனிவரட்னா தனது ஆய்வில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் (Seneviratne 1985:49-54). இதற்கு கடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட பரதவர் கடற்கரையை அண்டி வாழ்ந்தது காரணமாக இருக்கலாம். இங்கே சாசனம் கண்டெந்க்கப்பட்ட வல்லிபுரம் கடற்கரை சார்ந்த வட்டாரமாக இருப்பதால் சாசனத்தில் வரும் பதகர என்ற இடம் பரதவர் வாழ்ந்த கரை என்பதைக் குறிப்பதாக எடுப்பது பொருத்தமாக இருக்கும். பண்டைய கடல்சார் நடவடிக்கைகளில் பரதவ சமூகமே பெரிதும் ஈடுபட்டதாகக் கூறும் செனிவரட்னா இவர்களின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறார். வல்லிபுர வட்டாரம் மிகத் தொன்மையான குடியிருப்புக்களைக் கொண்ட இடம் என்பதை அண்மைக்காலத்தில் இரகுபதி மேற்கொண்ட கள ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது (Ragupathy 198783-84). மன்னார் மாவட்டத்தில் கிடைத்த கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்களக் கல்வெட்டு உதுருகர என்ற இடம் பற்றிக் கூறுகிறது (Nicholas 1963:71). இது தமிழில் வடகரை என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. பண்டு தொட்டு முத்துக் குளித்தலுக்குப்
64
 

பரமு புஷ்பரட்ணம்
பெயர் போன வடமேற்கிலங்கையில் உள்ள முத்துச்சிலாபம் கி.பி.12ஆம் நூற் றாண்டில் முத்தாகரா என அழைக்கப்பட்டுள்ளது (Nicholas 196371-72). தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள கடற்கரையை அண்டிய சில தமிழர் கிராமங்கள் அவர்களின் தொழிலோடும், வாழும் இடத்தின் தன்மையோடும் தொடர்புடைய வகையில் அவ்விடப்பெயர்கள் கரை என்ற பொது விகுதியுடன் முடிவதைக் காணலாம். அக்கிராமங்கள் சிலவற்றிற்கு தொன்மையான வரலாறு இருப்பதை அங்கு பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன (Table.No.12).
கல் (kal)
கல் என்பது திராவிட மொழிக்குரிய சொல் (Ta, Ma, Ka. kal,Te.kala, kallu D.E. 92:109192: 1091). SUT LOITrSlaoğGongů போல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் வரும் பத்து விழுக்காட்டிற்கு அதிகமான இடப்பெயர்கள் கல், கல, கல்ல என்ற பொதுக்கூற்றைக் கொண்டுள்ளன (e.g.Kalyani, Karajikagala, Mayahala. 1.C. 1970.Nos.577, 472,1203) SSS es6ö, பாறை, குகை, மலை, தூரம் எனப் பல கருத்துக்கள் உண்டு (T.L.l:1092). சங்க இலக்கியத்தில் இச்சொல் சில இடங்களில் பாறை (மலைபடுஹ 191), மலை (பதிற் 8423) என்பவற்றைக் குறிப்பதாக இடம்பெற்றுள்ளது. ஆதிகால மனிதன் குகைகளில் வாழ்ந்ததினாலும், அவனது அன்றாட வாழ்க்கையில் கல் ஆயுதங்கள் முக்கியம் பெற்றதினாலும் புராதன இடப்பெயர்கள் கல் என்ற பொதுவிகுதியோடு qypiqa uSONLa ig5rra5 ? 55556ovTGD (Rama chandramurthy 1985:256). இலங்கையின் பண்டைய கால இடப்பெயர்களின் பொதுவிகுதியான "கல்" "கல" என்ற சொல் பிற்கால சிங்கள இடப்பெயர்களில் கல, கலா, கலு என முடிவதைப் போல், தமிழில் கல் என முடிவதைக் காணமுடிகிறது. இதற்கு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுக்குரிய சிகிரியக் கல்வெட்டில் வரும் மதரகல் என்ற இடத்தையும் (Nicholas 1962:190), பாளி இலக்கியத்தில் வரும் 12-13ஆம் நூற்றாண்டிற்குரிய எளுகலி என்ற இடத்தையும் உதாரணமாகக் கூறலாம் (CV, 47:46). இது பிற்கால் இடப்பெயர்களில் தொடர்ந்ததற்கு சமகாலத்தில் வழக்கில் உள்ள இடப்பெயர்கள் சான்றாகும் (Table.No.13).
65

Page 42
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
af (kiri)
Jš5imagi (Vēlagiri, Dhanagiri, Ramachandramurthy 1985:242,), gaomi 60) suflgð (Acagiri, Kadagiri, Girivaje I.C.1970. NoS.406, 91, 1233) alsoL55 பிராமிக் கல்வெட்டுக்கள் கிரி என்ற வடமொழிச்சொல் இடப்பெயர்களின் பொது, சிறப்பு விகுதியாக இருங்ததை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்திலும் இதன் செல்வாக்கைப் பிற்கால இடப்பெயர்களில் காணலாம் (e.g. Kalacagiri, Pushpagiri, Civagiri, Puvanagiri). Sí6)Flcó gáGIsrrcó looa), e6ög, பன்றி, பிணையாளி என்ற கருத்தைக் கொண்டுள்ளது (T.L. II. 927). இடைக்கால இலங்கை இடப்பெயர்களில் இச்சொல் பொதுவிகுதியாக மட்டுமன்றி சிறப்பவிகுதியாகவம் பயன்படுத்தப்பட்டதற்கு கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் பல சான்றுகள் உண்டு (Nicholas 1962:209-223). திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளியில் கிடைத்த தமிழ், கிரந்த மொழியில் அமைந்த முற்காலச் சோழக் கல்வெட்டொன்று இங்குள்ள சிவாலயம் ஒன்றுக்கு உராகிரிகம, கிரிகண்ட கிரிகம ஆகிய இடங்க ளில் இருந்து வழங்கப்பெற்ற நிவேதனம் பற்றிக் கூறுவதை இங்கு குறிப்பிடலாம் (பத்மநாதன் 1998 :17-18). தற்காலத்திலும் வழக்கிலுள்ள தமிழ் (குலதிகிரி, கப்பங்கிரி, கிரிமுனை), சிங்கள (இராஜகிரி, கிரிபத்து) இடப்பெயர்களின் பொது, சிறப்பு விகுதியாக கிரி என்ற சொல் காணப்படுகிறது (Table.No.14). இது வடமொழிச் செல்வாக்கால் சிங்கள இடப்பெயர்களைப் போல் சில தமிழ் இடப்பெயர்கள் தோன்றியதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
öLIT (kudä)
கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களின் இன்னொரு பொதுக்கூறாக திராவிட மொழிக்குரிய குடா என்ற சொல் இடம் Gujpg|GirGirgi (e.g. Marukuta, Patibanakuta I.C. 1970: 656, 1031. 501). gagbi ġbi5iġleò (Ta, kuta, Ka...kuqdu, kuda, kuqdi, Te...kuqduvali.D.E.D.No.1709) மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்த தரைப்பகுதி, குடைவு, மூலை, வளைவு போன்றவற்றைக் குறிப்பதாக உள்ளது (TLI:967) (படம்-5). சங்க இலக்கியத்திலும் இச்சொல் இடப்பெயருடன் தொடர்புடையதாகவும் வருகிறது (மலைபடு 501).
66

பரமு புஷ்பரட்ணம்
(படம் - 5)
தற்காலத் தமிழ் இடப்பெயர்களில் குடா என்ற பொதுவிகுதி பெரும்பாலும் கடற்கரையை அண்டிய இடப்பெயர்களாக இருப்பதை &iqigitshë6 gpiq&pgi (Table.No.15).
ФLE (kuli)
இடப்பெயரின் இன்னொரு பொதுவிகுதியாக குலி என்ற சொல் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அதில் பகிதிகுலி என்ற இடப்பெயர் சிறப்பாக குறிப்பிடத்தக்கது (e.g. Pakinikui. 1.C.1970:276). இதில் இடப்பெயரின் பொதுவிகுதியாக வரும் குலி என்பது குழி, குளி என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். குழி (Ta. Ma, Ka.Kul, Te. goyyi. D.E.D.1522,TLI:1032) என்பதற்கு பள்ளம், நீர்நிலை, கிணறு, பாத்தி, நிலஅளவை எனப் பல பொருள் கொள்ளலாம் (TLI:1032). இச்சொல் பிற்கால இடப்பெயர்களில் தொடர்ந்ததற்கு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுக்குரிய சிகிரியக் கல்வெட்டில் வரும் கலபிட்டிகுளி என்ற இடப்பெயரையும், இடைக் காலத்தில் புழக்கத்திலிருந்த எலெ5ெளகுளி என்ற இடப்பெயரையும் சான்றாகக் காட்டலாம் (Nicholas 1962:90). சமகாலச் சிங்கள இடப்பெயர்களில் குளிய எனவும், தமிழ் இடப்பெயர்களில் குழி எனவும் இடப்பெயரின் பொதுவிகுதியாக இவை இடம்பெற்றுள்ளமை பழமையின் தொடர்ச்சியைக் காட்டுவதாக உள்ளன (Table.No.16).
67

Page 43
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
62u6io (vayal)
கேகாலை மாவட்டத்தில் யட்டகலன என்ற இடத்தில் கிடைத்த கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு சாலிவய என்ற இடம் பற்றிக் கூறுகிறது (I.C.1970:794). இதில் வய என்பது இடப்பெயரின் பொதுவிகுதியாகும். இச்சொல் தமிழில் வயல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பிராகிருத வடிவம் எனக் கூறலாம். சாலி என்பது நெல்லைக் குறிக்கும் தமிழ்ப் பதமாகும். இதன் மூலம் சாலிவய என்பதற்கு நெல்வயல் எனப் பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் சாலிகெல்லின் என்ற தொடர் காணப்படுகிறது (மதுரை 8). இதை அடிப்படையாகக் கொண்டு சாலியூர் அல்லது கெல்லூர் என்ற இடம் சங்க காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விடம் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள கெல்லூர் என்ற இடத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது (ஆளவந்தார் 1984:134). இவற்றிலிருந்து நெல்வயல் என்ற தமிழ்ப்பதமே இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் சலிவய எனக் குறிப்பிடப்பட்டதெனக் கூறலாம். நெல்வயல் என்ற சொல் கெற்செய்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலப்பரப்பைச் சுட்டி நின்றாலும் இடத்தின் பெயராக இலங்கைத் தமிழரிடையே பண்டு தொட்டுப் புழக்கத்திலிருப்பதைக் காணமுடிகிறது (Table.No.17).
LDQb (maqdu)
கல்வெட்டுக்களில் மடு என்ற திராவிடச் சொல் (Ta, Ma, Ka. matu , Te... matuku. D. E. D. 307:3869) g2L'GuuuUnress QJG5essigDġbi (e.g. matugama. I.C.1970. No.837). giốlộlcò gì9ị)é5ö (56ITử, rểft நிலை, ஆற்றிடைப்பள்ளம் என்ற கருத்துக்கள் உண்டு (TLV3024) (படம்-6).
 

பரமு புஷ்பரட்ணம்
தற்காலத்தில் இடப்பெயரில் வரும் குடா என்ற பொதுவிகுதி தமிழ்நாட்டு இடப்பெயர்களில் அரிதாகவும் (பகவதி 1991113), இலங்கையில் தமிழர் வாழும் வட்டார இடப்பெயர்களில் பரவலாகவும் 2) GirgiT60T (Table. No. 18).
ID6oo6oo (malai)
Lo6ONGAo 6TGăgp g56&F GASFITGð (Ta.malai, Te, Ma.mala, Ka.male. D.E.D. 314 3882) பிராமிக் கல்வெட்டுக்களிலும், சமகாலப் பாளி இலக்கியங்களிலும் அவற்றின் மொழிக்கு ஏற்ப மல, மலய, ( I.C.19 70. No.1113a, MVVII:68,XXIV:7,XXIll:21, XXIII:62) 6Tsor SLibபெற்றுள்ளன. அவற்றுள் சில மலை, குன்று என்ற பொருளில் இடப்பெயர்களுடனும், தனிநபர் பெயர்களுடனும் இணைந்து வருகின்றன. மலை என்பதற்கு தமிழில் குன்று, மலை என்ற கருத்தும், பிற திராவிட மொழிகளில் மலை, குன்று, மேட்டுநிலம், பீடபூமி, காடு என்ற பொருளும் உள்ளன. தமிழகத்தில் இன்று வழக்கிலுள்ள கொல்லிமலை என்ற இடப்பெயர் நற்றிணை (நற்.265; 7-9), குறுந்தொகையில் (குறும்.34) வரும் கொல்லி என்ற இடப்பெயருடன் தொடர்புபடுத்தப்படுகிறது (ஆளவந்தார்1984; 126-128).சங்ககாலத்தில் இடப்பெயராக இருந்ததற்குப் பிராமிக் கல்வெட்டில் சான்றுண்டு.
பரணவிதானா அநுராதபுரக் கல்வெட்டில் உள்ள எழுத்தை வடபிராமி எனக் கொண்டு அதில் வரும் பெயரை "வளமலய" என QIméléScircTrfi (e.g. Vala-malaya. I.C.1970. No.1113a). Sbsomeó அதில் தமிழ்பிராமிக்கேயுரிய "ள" என்ற எழுத்து இருப்பதனால் அதை வாள்மலை (Val-malai) என வாசிப்பதே பொருத்தமாகும்.
இதே பெயர் கி.பி.7-8ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்திருந்ததை சிகிரியாக் கல்வெட்டில் வரும் வாளமலை (வாள்மலை) என்ற பெயர் உறுதிப்படுத்துகிறது (Nicholas 1962:111). கிழக்கிலங்கையில் மானாங்கேணியில் கிடைத்த கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டில் வரும் இடப்பெயரில் (முன்னால் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லை) மலை என்பது பொதுவிகுதியாக வருகிறது. இது திருகோணமலை என்ற இடத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது (பத்மநாதன் 2000: 66). தற்கால்த்தில் தமிழகத்தைப் போல் இலங்கையின் இடப்பெயர்கள் சில மலை என்ற பொதுவிகுதியைக் கொண்டுள்ளமை அவதானிக்கத்தக்கது (Table.No.19).
69

Page 44
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
5GoGo (Talai)
Surbids asGöGlacidssosingyb (e.g.Talacadi.I.C.1970.No.113) aFLoastadů UTGif (360ášálu nález56ífayů (eg. Ambathala. M.VXIll:20) தலா என்ற சொல் நீர், நிலம், மலை சார்ந்த இடப்பெயராக வருகிறது. பரணவிதானா (1970:109) இச்சொல்லை சமஸ்கிருத ஸ்தலா(sthala), பாளி தலா (thala), எலு தல (tala) ஆகிய சொற்களுடன் தொடர்புபடுத்துகிறார். ஆனால் பரோ என்பவர் (1968:320) திராவிட மொழியிலிருந்து ஆரிய மொழி கடன் வாங்கிய சொற்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பிடுகிறார். இது தமிழில் தலை, தெலுங்கு, மலையாளத்தில் தலா, கன்னடத்தில் தலே என்ற சொல்லுக்கு சமமான கருத்துடையது. இதற்கு சிகரம், சிறந்தது, உயர்ந்தோர், தலைவன், உச்சி, நுனி, முடி போன்ற கருத்துக்கள் உண்டு (D.E.D. 2529 T.L.l:1774). பிற்கால இலங்கை தமிழக இடப்பெயர்கள் தலை என்ற பொதுவிகுதியுடன் முடிவதைக் காணலாம் (Table.No.20). இச்சொல் பிற்கால இடப்பெயர்களிலும் பொதுவிகுதியாகத் தொடர்ந்ததற்குச் சான்றுகள் உண்டு. சிகிரியக் கல்வெட்டு கி.பி.7-8ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்த பரத்தாலா (Baratala)என்ற இடம்பற்றிக் கூறுகிறது (Nicholas 1962:197). கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள கல்வெட்டுக்களில் மண்ணித்தலா, மண்ணித்தலே போன்ற இடப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன (E.Z. I:5, 185). இவை இலங்கையில் எவ்விடத்தைக் குறித்தது என்பது அடையாளம் காணப்படவில்லை. இது வடஇலங்கையில் தற்போதும் புழக்கத்தில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த மண்ணித்தலை என்ற இடத்தைக் குறிக்கலாம் (புஜ்ெபரட்ணம்
1993).
Gģprob6ITu (totuvāi)
கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் தொட என்ற சொல் நதி, கடல், துறைமுகம் சார்ந்த இடப்பெயர்களின் பொதுக்கூறாக இடம் பெற்றுள்ளது (I.C.1970:86). இது தமிழில் தொடு என்ற சொல்லுக்கு Suotor'sor SGSSISOLUS. SlbgcÓ GlgirC (Ta.tofu, Ma. totuka, Ka. toợdu,Te.toțu. D.E.D. 2865) 6T6ói ugi Gg5 TGDg56ó, 60) SOOTg5að, ஒன்றுசேரல் என்ற பொருடையது. இச்சொல்லின் அடியாகவே தமிழில் தொடுவாய் (தொடு - அடைதல், தொடுதல்), என்ற இடப்பெயரும், சிங்களத்தில் துறைமுகத்தைக் குறிக்கும் தொட என்ற சொல்லும் பிறந்தன
70

பரமு புஷ்பரட்ணம்
எனக் கூறலாம் (Ragupathy 1991). இலங்கையில் தொடுவாய் என்ற இடப்பெயரின் பொதுவிகுதி பெரும்பாலும் கடல் போக்குவரத்திற்கு பயன்படும் ஒடுங்கிய நிலப்பரப்பைக் குறிக்கும் முக்கிய இடப்பெயர்களாக 2_ctorsor (Tale.No.21).
bisip (nakar),
புராதன இலங்கையில் பத்து விழுக்காட்டிற்கு மேற்பட்ட இடப்பெயர்கள் நகர், நகர என்ற பொதுவிகுதியைக் கொண்டுள்ளன. இச்சொல் இலங்கையில் ம்ட்டுமின்றி தென்னாசியாவில் பரந்த அளவில் UuuGðřLurriq,6ð SQG5iš56ử6TGOT. 356llað (Ta, Ma. nakar, Te. nagaru, Skt. nagara. D.E.D.No.2943) : PE5a5f 6TGrp GISFITGð f5aBJTió, lorefløMas, கோயில், அரண்மனை, சடங்கு செய்யும் மண்டபம், மனைவி எனப் பல பொருள்படும் (TLV:2124, D.E.D.No.2943) சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு நெடுங்கர் பற்றிக் கூறுகிறது (புறம் 23). நகர் என்பது திராவிடச்சொல் என்றும், இந்தோ ஆரியமொழிச் சொல் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் நகர் என்பது திராவிடமொழியிலும், இந்தோ ஆரியமொழியிலும் காணப்படும் சொல் எனவும், நகரம் என்ற பொருளுடைய நகர் இந்தோ ஆரிய மூலமுடையதென்றும், வீடு என்ற பொருளுடைய நகர் திராவிட மூலமுடையதென்றும் இதிலிருந்து சமஸ்கிருத அகாரதி தோன்றி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது (நாச்சிமுத்து 1984:169-187), இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் நகர என்ற பெயருடன் தமிழில் நகர், நகரி என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இதற்கு நாக-நகர், சிவ-நகர், அங்கன-நகரி போன்ற QLČIGLuiraser (e.g. Naka-nakar. I.C. 1970, No. Siva-nakar, Angananakary. I.C.1983.No.21) சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் நாஹ-கஹர என்ற பெயரில் வடமொழிக் 'ga பயன்படுத்தப்பட்டிருக்கும் போது இதில் தமிழ் 'ka’பயன்படுத்தப்பட்டு தமிழில் நாக-நகர் என எழுதப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைச் சமகால தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணமுடிகிறது. பிற்காலப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், இடைக்கால தமிழ், சிங்கள கல்வெட்டுக்களில் பெரும்பாலும் நாக, நகர் போன்ற பெயர்கள் பெரும்பாலும் தமிழுக்குரிய "க" பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. நாக என்ற பெயர் பண்டைய காலத்தில் இலங்கையில் பல இன மக்களுடன் தொடர்புடையதாக இருந்திருப்பினும்,
71.

Page 45
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இன்று அப்பெயர் பெரும்பாலும் ஆட்பெயராகவும், இடப்பெயராகவும் தமிழ் மக்களிடம் நிலைத்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது (Table.No.22).
LIř IpG3TúD (pattinam)
பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பட, படன என்ற சொல் gů GALjuuTT as Quabeśl6ör gp6OT (e.g. Maca paițana. I.C. No. 1174) (படம்-8). இவை சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் பட்டின என முடியும் இடப்பெயரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இது தமிழகத்தில் பட்டினம் என அழைக்கப்பட்டதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுண்டு. இப்பெயரே தற்காலத்தில் பட்டணம் என அழைக்கப்படுகிறது. தமிழில் Ly’ışøTió (Te.pațiu, Ma, Ka.pați. Skt.pațna. D.E.D. 3199) 6Tsiruugi கடற்கரை சார்ந்த நகர், சிறுநகர், கிராமம் எனப் பல பொருள் கொண்டுள்ளது. இதை ஒரு திராவிட மொழிக்குரிய சொல் எனக் கூறும் பரோ (1968:211) இது பட், பட்டி போன்ற சொல்லின் அடியாகப் பிறந்ததெனக் கருதுகிறார்.
(படம் - 7)
இலங்கையில் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பட்டின என்ற சொல் பண்டைய காலத்தில் பெரும்பாலும் வடஇலங்கையில் தமிழர் வாழ்ந்த இடங்களைக் குறிக்கிறது. இதற்கு மகாதீர்த்தபட்டின, ஜம்புகோளபட்டின, முசோலிபட்டின முதலான இடங்களைக் குறிப்பிடலாம் (Table.No.23). இச்சொல் பிற்காலத்திலும் வடஇலங்கையில் உள்ள இடங்களைக் குறித்ததற்கு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளுண்டு. எனவே பட்டினம் என தமிழில் அழைக்கப்பட்ட இடப்பெயரே பிராமிக் கல்வெட்டு, பாளி இலக்கிய மொழிகளுக்கு ஏற்ப படன, பட்டின என அழைக்கப்பட்டதெனக் கூறலாம்.
72
 

பரமு புஷ்பரட்ணம்
LUTID (puram)
இலங்கையில் தற்காலத்தில் புழக்கத்திலுள்ள சிங்கள இடப்பெயர்களில் புர என்ற சொல்லும், தமிழ் இடப்பெயர்களில் புரம் என்ற சொல்லும் பொதுவிகுதியாக இடம்பெற்றுள்ளன. புரம் என்பதற்கு தமிழில் சிறந்த ஊர், நகரம், இராசதானி, வீடு, மேல்மாடம் எனப் பல கருத்துண்டு (TLV:2270). இது புரி எனவும் வழங்கப்படும் (சேதுப்பிள்ளை 1956:49-50). இப்பெயர் பெரும்பாலும் கடற்கரையிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஊர்களையே குறிக்கிறது. இலங்கையில் "புர" என்ற சொல் பண்டு தொட்டு சிங்கள இடப்பெயர்களில் பெரிதும் பயன்பாட்டில் இருப்பதால் முன்னொருகாலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களே பிற்காலத்தில் தமிழ்மயப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுவருகிறது (Kannankara1980). ஆனால் இடப்பெயரில் வரும் இச்சொல்லின் வரலாற்றைப் பின்னோக்கிப்பார்த்தால் இலங்கையில் அதன் தொடக்கம் சிங்கள மொழியின் தோற்றத்திற்கு முன்னர் கல்வெட்டுக்களில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டாகவும், பாளி இலக்கியங்களில் இதற்கு முற்பட்டதாகவும் உள்ளது. சமகால ஆந்திர மாநிலப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் இப்பெயர் காணப்படுகிறது. இது பிற்கால ஆந்திரநாட்டு இடப்பெயர்களில் புரமு என அழைக்கப்பட்டது (Ramachandramurthy 1985:323). சங்ககாலத் தமிழகத்திலும் "புரம்" என முடியும் சில இடங்கள் இருந்துள்ளன. கபாடபுரத்தில் இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்ததாகக் கூறப்படுவதை ஆதாரமாகக் கொண்டு அங்கு மேலும் பல ஊர்கள் இப்பெயரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இப்பெயர் குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்குள் இல்லாமல் பண்டு தொட்டு தென்னாசியாவில் பரந்துபட்ட வட்டாரங்களில் புழக்கத்திலிருந்து வருகிறது. இதன் மூலமொழியைச் சிலர் வடமொழி எனவும், வேறு சிலர் திராவிடம் எனவும் கூறுவர். இன்னும் சிலர் ஆரிய, திராவிட மொழிகளுக்கு முற்பட்டதென்றும் கூறுவர். எவ்வாறாயினும் இலங்கைத் தமிழரின் இடப்பெயர்களில் இச்சொல் பண்டு தொட்டு இருந்து வருகிறது எனக் கூறலாம். தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழர் நாணயம் ஒன்று திஸபுரத்தைச் சேர்ந்த சடங்ாக அரசன் பற்றிக் கூறுகிறது (புஷபரட்ணம் 2001:56-57). இடைக்காலத்தில் "புர" என்ற பொது விகுதி பெரும்பாலும் சிங்கள இடப்பெயர்களையும், "புரம்" என்ற பொதுவிகுதி தமிழ் இடப்பெயர்களையும் குறித்தது எனலாம். இதில் புரம் என்ற பொதுவிகுதி சமகாலத்தில்
73

Page 46
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
தமிழக இடப்பெயர்களிலும் காணப்படுகின்றது. இதற்கு முதலாம் பராந்தகன்காலத் தலைநகர் இரண்டு சிங்கபுரம் என அழைக்கப்பட்டதையும், "இள்ஜராஜ சோழன் காலத் தலை நகர் ஒன்று கொங்கு நாட்டில் இராஜராஜபுரம் எனவும் அழைக்கப்பட்டதையும் உதாரணமாக எடுத்துக்காட்ட்லாம். கி.பி.7-8ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்த பூரீபுர என்ற இடம் பற்றிச் சிகிரியக் கல்வெட்டுக் கூறுகிறது (Nicholas 1962:104). மாதோட்டத்தில் கிடைத்த கி.பி.11 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டு இங்கிருந்த இராஜபுரம் என்ற தலைநகர் பற்றிக் கூறுகிறது (Indrapala 1971:10-18). வடஇலங்கையின் வரலாற்றுப்பழமை வாய்ந்த தமிழ் இடப்பெயர்களில் சில தற்காலத்தில் அரசபுரம், சுளிபுரம், மாவிட்டபுரம், வல்லிபுரம் என அழைக்கப்பட்டு வருகின்றன. இச்சான்றுகள் புரம் என்ற சொல் இலங்கைத் தமிழர்களின் இடப்பெயர்களில் நீண்ட காலமாக நீடித்து நிலைத்திருப்பதைக் காட்டுகின்றன எனலாம் (Table.No.24).
பள்ளி (palli)
பள்ளி என்ற சொல் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், சங்க இலக்கியத்திலும் பெரும்பாலும் பெளத்த, சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்களைக் குறிக்கின்றது (Mahadevan 1968, மலைபடு 45), ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் பள்ளி என்ற சொல்லுக்குப் பதிலாகப் பெரும்பாலும் லெணே (lena) என்ற பிராகிருதச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விதிவிலக்காக குருநாகல் மாவட்டத்தில் கிடைத்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டில் பள்ளி என்ற சொல் இடம்பெற்றுள்ளது (படம்-8).
74
 

பரமு புஷ்பரட்ணம்
பரணவிதானா (1970; 97, 115.No.1202) இச்சொல் பெளத்த குருமாரின் இருப்பிடத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்ட போதும் இதைப் பாளி மொழிக்குரிய சொல்லாகப் பார்க்கிறார். ஆனால் பள்ளி (Ta., Ma..., Ka...,Te... palli D. E. D. No.3309) 6TGórLg5i @C5 55ġ GeFITGò. இது ஆதி காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யத் தோண்டிய பள்ளம் என்ற சொல்லின் அடியாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது (Ragupathy 1987:211). பிற்காலத்தில் சிற்றுர், இடைச்சேரி நகரம், பெளத்த சமணக் கோயில், அரசருக்குரிய அரண்மனை, வேலைக்களம், விலங்கு துயிலும் இடம், பள்ளிக்கூடம், சாலை போன்றவற்றைக் குறிப்பதாக உள்ளது (TL IV:2552). தற்காலத்தில் பள்ளி என்ற சொல் இலங்கை, தமிழக இடப்பெயர்களின் பொது, சிறப்புக்கூறாக இடம் GILög|GirostSI (Table.No.25).
இளர் (ur)
பண்டைய கால இடப்பெயர்களில் ஊர் (Ta,Ka, Ma, urTe. uru D.E.D. 57643) என்ற சொல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இது திராவிடமொழி பேசிய தென்னிந்தியாவில் மட்டுமின்றி சுமத்திரா போன்ற நாடுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. ஊர் என்பதற்கு கிராமம், நகர், இடம், வசிக்கும் ஊர் எனப் பல பொருள் உண்டு. பண்டைய காலத்தில் மக்கள் வாழும் இடம் ஊர் என அழைக்கப்பட்டதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுண்டு. சமகாலத்தில் இலங்கையிலும் இச்சொல் வழக்கில் இருந்ததற்குப் பிராமிக் கல்வெட்டில் வரும் குபுரெ (குபூ+ஊரெ, Jabukubura, Kubure.I.C.1983. No.8), FLoassmrQOČI LIITaff gaošéfuluğSció alGib Sag2/U (S-6ó+2GI'm=&6ó9TUT) (Sallura.M.V. XXXVII:47). முற்பட்டகாலச் சிங்களக் காலக் கல்வெட்டில் வரும் கும்பூர் (கும்+ஊர், Kumbur, Malini Dias 1983:10) 6TsiuagõGop 2 -5TU60Torress குறிப்பிடலாம். சமகாலத்தில் தென்னிந்தியாவில் ஆந்திராவில் ஊரா 676örg Glersrcó9ö (Ramachandramurthy 1985:347), Shg BiTi 196ó உார், ஊரு என்ற சொல்லும் (Pannersevam 1972:178) இடப்பெயர்களின் பொதுவிகுதியாக பிராமிக் கல்வெட்டுக்களில் வருகின்றன. இவற்றில் வரும் ஊரா, ஊரெ என்ற சொற்கள் ஊர் என்ற தமிழ்சொல்லின் பாளி, பிராகிருத வடிவங்களாகும்.
கி.பி.7-8ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தனதுாரா என்ற பெயரில் இருந்த ஊர் பற்றி சிகிரியாக் கல்வெட்டுக் கூறுகிறது
75

Page 47
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(Nicholas 1962:197). அநுராதபுரத்தில் கிடைத்த கி.பி.9ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டு குமாரகணத்து பேருள் பற்றியும் (பத்மநாதன் 2000:47), யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய இன்னொரு தமிழ்க் கல்வெட்டு (5ல்?)லுார் என்ற இடம்பற்றியும் (Indrapala 1971:52-56) கூறுகின்றன. கி.பி. 1200க்குரிய இரு சிங்களக் கல்வெட்டுக்கள் பிலிகம்புஉர (pikambura) என்ற இடம்பற்றிக் கூறுகின்றன. கி.பி.13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடஇலங்கையில் கலிங்கமாகன் கோட்டையிருந்த இடங்களில் ஒன்றாக குருந்தி என்ற இடம்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவ்விடம்பற்றிப் பாளி இலக்கியங்களில் மேலும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விடத்தை நிக்லஷ(1962:87) தமிழ் மாவட்டமான முல்லைத்தீவிலுள்ள குருங்தன்-ஊர் என அடையாளம் கண்டுள்ளார். தற்காலத்தில் இலங்கையில் புழக்கத்தில் உள்ள பல இடப்பெயர்கள் ஊர் என (pseu605ás smooroonh (Table. No.26).
öL606)I(kadavai)
பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமான இடப்பெயர்களின் GLUTSIGASõSu Ta5 5L, 5LQJuu 6TGörp GlassFmrciò Qué66örp (e.g.Aņikața, Uparikaợda, Kați. I.C. Nos. 77, 1099, 841, 867, 830, I.C.1983. No.14). இச்சொல் சமகால தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் இடப்பெயரின் பொதுவிகுதியாக வருகிறது (Pannerselvam1972:178). இச்சொல்லுக்கு பரணவிதானா (1983:37) காடுஎனப் பொருள் கொள்கிறார்(பட்ம்-9). மலையாளத்தில் இச்சொல் சங்தையைக் GfléépS (D.E:D.No.958).
 

பரமு புஷ்பரட்ணம்
சற்றுப் பிற்பட்ட காலப் பிராமிக் கல்வெட்டொன்றில் கடவய என்ற இடப்பெயர் காணப்படுகிறது(I.C.1983.No.14). இச்சொல்லைத் தமிழில் கடவை எனவும் வாசிக்கலாம். கடவை என்ற சொல் "கட" என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு வழி, வாயில், ஏணி, தாண்டிச் செல்லக் கூடிய தடைமரம் எனப் பல கருத்துண்டு (T.L.l:662). இடைக்காலத்திலும், தற்காலத்தில் இலங்கையில் புழக்கத்தில் உள்ள சிங்கள இடப்பெயர்களில் கடுவ, கட என்ற சொல்லும் (உ-ம். கிக்கடுவ, வாகல்கட), தமிழில் கடவை (உ-ம். பறையகடவை, கட்டுவகடவை) என்ற சொல்லும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதில் கலிங்க மாகன் கோட்டைகள் இருந்ததாகப் பாளி இலக்கியங்கள் கூறும் வடஇலங்கை இடப்பெயர்களில் ஒன்றை நிக்லத்ெ(1962:81-82) பெயரடிப்படையில் தற்போது புழக்கத்தில் உள்ள இலுப்பக்கடவை என அடையாளம் கண்டுள்ளார். யாழ்பாணத்தில் கடவை என்பது குடியிருப்புக்களோடு தொடர்புடைய இடப்பெயராக வந்ததற்கு பல &TSörgæeir sirsoorún G&lsörpsor (Ragupathy 1987:211) (Table.No.27).
Gaio (Vil)
தமிழில் வில், சிங்களத்தில் வில என்ற சொல் தற்காலத் தமிழ், சிங்கள இடப்பெயர்களின் முக்கிய பொது, சிறப்புவிகுதியாக உள்ளன(Table.No.). இதில் "வில" என்ற சிங்கள சொல்லே காலப்போக்கில் "வில்" எனத் தமிழ் மயப்படுத்தப்பட்டதென்பது நீண்ட காலக் கருத்தாகும்(Kannankara 1980). ஆனால் இது சிங்கள இடப்பெயர்களில் இடம்பெறுவதற்கு முன்னரே இலங்கையின் பண்டைய கால இடப்பெயர்களாகப் பிராமிக் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன.
இக்கல்வெட்டுக்கள் பலவற்றைப் பதிப்பித்த பரணவிதானா இவற்றில் வரும் பெயர்கள், சொற்கள் அனைத்தும் வடமொழிக்குரியவை என்ற கருத்தைக் கொண்டிருந்ததனால் அவற்றில் வரும் பெயர்கள்ை "Gao" (e.g. Vilagama, H.C. 1970. No.406, Rakavila. Badivila. I.C.1983. 52- 53, No.38) என வாசித்துள்ளார். ஆனால் இக்கல்வெட்டுக்களில் பல தமிழ் மற்றும் திராவிடச் சொற்கள் Aasbólotugssormcö 9)śGerreÓ60að "cőleó" (e.g. Vil-gama, , Rakavil.
divila. ) 6TsoTaqib Q Imrédš5Qortib (LILüb-i 0).
77

Page 48
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(படம் - 10)
வில் என்பது பெரும்பாலும் அம்பைக் குறிக்கும் திராவிட GALOITylėš5fluu QFTGöQomregib (Ta. vil, Ma.vil, villu,Te.vilu, villu, Ka.bil. D.E.D.No.4449). தமிழில் "வில்" என்ற சொல்லடியாகவே வில்லன், வில்லி, வில்லவன், வில்லோர் போன்ற பெயர்கள் தோன்றின. கிழக்கிலங்கையில் பதவியாவில் கிடைத்த கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டொன்று கோனாவில் என்ற இடத்தில் வசித்த வெண்காடான் என்பவன் அங்குள்ள சிவாலயம் ஒன்றுக்கு எறிமணியொன்றைக் கொடுத்ததாகக் கூறுகிறது (பத்மநாதன் 2000:64-65). இதில் வரும் கோனாவில் என்ற இடம் வடஇலங்கையில் பூநகரி வட்டாரத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள கோணாவில் என்ற இடமாக இருக்கலாம் (புஷ்பரட்ணம் 199376). இரண்டாம் இராசாதிராஜா சோழன் காலத்திற்குரிய பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு வடஇலங்கையில் சோழப்படைகள் வெற்றி கொண்ட இடங்களாக வல்லிக்காமம், மாதோட்டம், புலச்சேரி, மட்டிவால்(வில்) ஆகிய இடங்களைக் கூறுகிறது (Nilakanda Sastri 1958368-369). இதில் கூறப்பட்ட மட்டிவால்(வில்) தற்போது பூநகரி வட்டாரத்தில் புழக்கத்திலுள்ள மட்டுவில்-நாடு என்ற இடத்தைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள இடமுண்டு. இவ்விடத்திற்கு தெற்காக மிகக் கிட்டிய துாரத்தில் சோழக்கல்வெட்டில் வருவது போல் புலச்சேரி என்ற இடப்பெயரும் இருப்பது இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது (புஷ்பரட்ணம் 1993:76-77). இதற்கு தெற்காகவே மாதோட்டமும் உள்ளது.
கல்வெட்டுகளில் வில(ல்) என்ற சொல் பெரும்பாலும் குளத்தைக் குறிக்கும் இடப்பெயராக வருகிறது (Paramavithana 1983:53). இரகுபதி (1987-212) பண்டைய காலத்தில் இயற்கையாகத் தோன்றிய குளங்கள்
78
 

பரமு புஷ்பரட்ணம்
"வில்" போன்ற வடிவில் அமைந்ததால் இதை அடியொற்றியே வில் என்ற இடப்பெயர் தோன்றியதாகவும், காலப்போக்கில் சிங்களத்தில் அது வில என மாறியதாகவும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதற்குக் தற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள "வில்" என முடியும் இடப்பெயர்கள் குளத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டிருப்பதைச் சான்றாகக் காட்டுகிறார் (Table.No.28). யாழ்ப்பாணப் பேரகராதியில் "வில்" என்ற சொல்லுக்கு குகை என்ற கருத்தும் கொடுக்கப்பட்டுள்ளது (TLVI:3708). ஆதிகால மக்கள் வசித்த குகைகளும், இருப்பிடங்களும் "வில்" போன்ற வடிவில் அமைந்திருந்ததினால் அம்மக்கள் வாழ்ந்த இருப்பிடங்கள் "வில்" என்ற பொது, சிறப்பு விகுதிகள் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இயற்கையாகக் குளங்கள் தோன்ற முடியாத வட்டாரங்களின் இடப்பெயர்களும் "வில்" என முடிவது அவ்வாறு சிந்திக்க வைக்கிறது. இடப்பெயர்கள் அதன் அமைப்பையும், பயன்பாட்டையும் பொறுத்து பெயர் பெறுவதுண்டு (உ-ம் வில்லரண், வில்மாடம், வில்லடி, வில்லு வண்டி). கோயில் என்ற இடம் கோவில் என அழைக்கப்படுவது இறைவன் இருக்கும் இடம் என்ற கருத்திலாகும்.
ஏனைய இடப்பெயர்கள்
கல்வெட்டுக்கரில் மேலும் சில இடப்பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றின் பொதுசிறப்புவிகுதிகள் பிற்கால இலங்கைத் தமிழ் இடப்பெயர்களுடன்”தொடர்புபடுத்தி ஆராயக்கூடியவை. அவற்றுள் சில வருமாறு. (1)பாய் (paya I.C.1970.No.455,199). இச்சொல் யாழ்பாணத்து இடப்பெயர்கள் பலவற்றின் பொதுவிகுதியாக உள்ளது (Table.No.29). இச்சொல் தற்காலப் பேச்சு வழக்கில் படுக்கை விரிப்பைக் குறித்தாலும் பண்டைய காலத்தில் இடம் என்ற பொருளில் வருகிறது உ-ம் கோப்பாய் (கோ=அரசன், பாய் = இடம். அரசனின் இருப்பிடம். Ragupathy 1987:212). நல்லுார் இராசதானி கால மன்னனின் இருப்பிடம் இங்கிருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுவது (3rs Téasģš5ēšasg. (2) esotas, ģ6T (kuļa. 1970. No.538, 1983. No.34). இது குளம் என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். வன்னிப்பிராந்தியத்தில் உள்ள பண்டைய இடப்பெயர்கள் பெரும்பாலும் குளத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டிருப்பது சிறப்பாகக் 56'N 5ģg5ěšESGOT (Table.No.30). (3) églia (Kumi.l.C. 1970. Nos.318, 712, 1228). இது தமிழில்கும்பி, தெலுங்கில் கும்மி என்பதற்குச் சமமான
79

Page 49
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
a55ğg|Tas 6TGDėšasŮNUGDá$pg (Ragupathy 1991, Ramachanramurthy 1984:247). தமிழில் கும்பி என்ற சொல் குவியல், யானை, நகரம் 6TstuQj6opuqb(Ta.kumpi, Te.gummi. D.E.D.No.1456, T.L.II.1000), கும்மி என்ற சொல் ஒரு வகை நடனத்தையும் குறிக்கிறது (T.VI.1002). ஆனால் கல்வெட்டுக்களில் இது குகையின் பெயராக வருவதால் இது தமிழில் கும்பி என்ற சொல்லுக்கு சமமான கருத்தில் பெயரிடப்பட்டதெனலாம். இச்சொல் ஆங் திர மாநில இடப்பெயர்களிலும் Gungaigslum as Q105&lpg) (Ramachanramurthy 1984:247). (4)அரகெ. இது குகையின் பெயராக வருகிறது (I.C.1970.No.75). இது அறை என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமாகக் கருதப் படுகிறது (Ragupathy 1991). சமகாலத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் அறை என்ற சொல் இருப்பிடம், அறை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வேள்-அறை, வேள்அறைய என்பவற்றை உதாரணமாகக் கூறலாம் (Pannerselvam 1972:178). (5) "356sor" (I.C. 1970. Nos. 42,1149, 1134, 1137, 1174). வடமொழிக்குரிய இச்சொல் கல்வெட்டில் மேச்சூல் நிலத்தைக் (tanabum) குறிக்கும் இடப்பெயராக வருகிறது (Paramavithana1970-100). வடஇலங்கை இடப்பெயர்களில் "தனை" (உ-ம். இந்தனை, குடத்தனை, நாரந்தனை)என்ற பொது விகுதி சிங்கள மொழிச் சொல்லாகப் பார்க்கப்படுகிறது (Table.No.31). இதைக் கல்வெட்டுக்களில் வரும் "தண" என்ற இடப்பெயருடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு. (6) "புகரணி" என்ற சொல் குளத்தைக்குறிக்கும் இடப்பெயராக கல்வெட்டில் வருகிறது (I.C. 1970.N0.703). இதைத் தமிழில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள பொக்கை, பொக்கணை என்னும் நீர் நிலை சார்ந்த இடப்பெயர்களுக்கு சமமானதாக எடுக்கலாம்(Table.32).
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் ஆட்பெயர்களும், இடப்பெயர்களும் பெருமளவுக்கு சமகால சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை ஒத்திருப்பதைக் காணலாம். ஆயினும் விதிவிலக்காகச் சில அம்சங்களில் இலங்கை சில தனித்துவமான இயல்புகளையும் கொண்டதெனக் கூறலாம். குறிப்பாகத் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டின் பின்னர் அறியப்படும் மருமகன் என்ற உறவு முறை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே காணப்படுகிறது. அதேபோல் சங்க காலத்தில் சற்றுப் பிந்திய காலத்தில் அறியப்படும் மகள் என்ற உறவுமுறை இலங்கையில் தொடக்க காலத்திலேயே காணப்படுகிறது. இப்பெயர் குருநாகல் மாவட்டத்தில்
80

பரமு புஷ்பரட்ணம்
கிடைத்த கல்வெட்டில் முகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (I.C. 1970.No.925). இது தற்காலத்தில் இலங்கைக்கே உரியதாகக் கருதப்படும் "மோள்" என்ற உறவு முறையின் முன்னோடிவடிவமா எனச் சிந்திக்கத் துாண்டுகிறது. பண்டைய காலத்தில் இரு நாடுகளுக்கும் பொதுவாக இருந்த இடப்பெயர்களின் பொதுவிகுதி தமிழகத்தில் மறைந்து போக அல்லது பயன்பாடு குறைவடைந்து செல்ல இலங்கையில் அவை தொடர்ந்து புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக குடா, கடவை, தொடுவாய் போன்ற இடப்பெயர்களின் பொதுவிகுதியைக் குறிப்பிடலாம். அதேவேளை தமிழகத்தில் இன்றும் பயன்பாட்டிலுள்ள "பாடி" போன்ற இடப்பெயரின் பொதுவிகுதி இலங்கையில் பயன்பாட்டிலிருங்து படிப்படியாக மறைந்துவிட்டன. இதற்கான காரணங்கள் விரிவாக ஆராயத்தக்கன.

Page 50
மிழரும்
ல் தமிழும். த
இலங்கையி
L6SO6)
{
|ųɔɖɔoussex!}\!ddnosựeo(såsd}\!\!\!d | 91Z, ooMoO46|| '0') { } }!deund Uųēļeųnd'\\?\.\d|ex|(lỏ|d) 1þÞịdļģþədeủex{ (g子寸 ĮựQųɔỌư|Kox.{\ \!ddeu ļa'zszosoN'OZ6|| '.țepew spủnę) | (seł ew) epew osłew | 99ơN'OZ63 (Oos) į sąnqe6 |iew |eååçXXnåßeA(W) seåågxekeĪy 'seûłọp Ieuy(L) ses} \ç>{x}\,e^(92/'oN'0/8}'O's) eugerpełłç×>{eųɔpełłQxxaụo(o ekseło») pełłgx!jęå eĀesqx (o L) !pn6euaesox(wooN'ɛ96|| 944 || (əL)|pnĝeulox|(L)\ånxnusɔ‘Oos įsoN'OĻ6Ļ’o’s) ndde|e}{\s?\\ewįj nosūgų gòisånxụerg* ļårdsguq y \led uỊBỊeụna*į4 nxþņeĪgxi|ịnxụnJn×|łnГ įłn»* Ļłnsaxeuunued ļųɔųəou||ex(1)}1eaļaejo NȚåeĀŋɛA(1)! \eqągo(soN'6/6 L'O'í) spę ox{opeo,N 'eugs'įįɛɔeuw}} eÍÞļewsspw osłyțå eủaxļļus, -(>{'W'e L'ID(8’ə)(c&6\'0/61'ori) (6:3) (Boa) exsuen i elpuļųnosu!XŲojejsuoņdụɔɔu! LLLJL LL LLLL LLLLLLL0YLLLLL LLLL LLLLLK LLLL LLLL LLL LLLS00 LL LLL LLLL
epuI q.nos pue uexue“I IIS us səueN əɔeld suɔsɔUV
82

8
பரமு புஷ்பரட்ணம்
シひぶひひに必Ysłu, oặūūsew*ļajwysinxa【感i婚Q“照图_L))『ひ愛ひ*g園」坚 (1){函海亡 '.iguusewįạjsou jeuņn>)ț¢ț¢uuə ŋnyų *びひougy‘ț¢[eųųæửç>{{ə_L) esæųưļuỷ(exejew) sejev, s i l’ono’ozešlo ool)}(s)keseuuelea% (Zsco' 与雨UUBAn \æuueīļęą{ s.) Than å saxisse å sãoxz9ĝo N° 0,5 Ļooo1), uueốn åbưu e^{urvae anių euręyn Jeyaeo ri? euuụeuwnțeum“gAlgs鶴まnは電には哆k seksa się>ęuuUergo{J_Y(soátæ ax seusųop '&usges | 'tự Ảeauț¢ueń ủo į.12.^*^ox>sy ’tekeasuçLe&a{ợ6ZooN~Ozası’ o’I)okeaļļosÅł æųğerșịnxțūę^ęnę{4!} syn>łęgno 'usęuueựN*ļīrix}x{ļļąựsÌrŵxļejo_1.(ųn>|} }{nx}(94 zoonoozessroos) sraesusbeg% nɑdɔŋɔxɔɲɛ sɩɣ ɛyųgŵn>llex(VÉO , ‘999 suue|sorsyne)gån>}ựęsựĉefur, gŵnx!* # Ogos,»NoO2 és Loko’s)ķis n×naeyụぬ 露笋瓜fに**Utdd朝gy( t)}usedųsna 'n ddefæx|xuełłęyų‘43xxEA罚之(əų)ļaļ5ęış ^J海风(wgž‘oħN Q2.5 įoo's)ļuỊsepe»等和 【的_L}{圆Xs办ed身($ hd众感感xx同枕梦露之sɛŋ nuuļɛ>4(L)\exp{suỊAŹzą "zaeoscowodze !, -oo sɔŋɛðscłącą ɛųşer也>34师之(2)g*愛」v(•ț¢eoossex) swoiwoł感})x&4员J图x哆啦 《如_L}如4感xfpped{ sựJĄŁęIJnţa;侧JBMXL( 1 ) seuaxałçosoɛoozooN~ozisyo o'i) erexenyɔ gに 「但愿望网4斑A鶴』顧どgせgA(aussex) sauex; i “eressqe_L“eu expedn>I以英 (u) uue $>#e3ue-Inqę soseuuekugxorsusu.uuelue:Igołęsequue 1.‘LUE)》 eugaerosuus??!!!!esa,uueųjëðnąļļg(鶴に母Q、ug)鶴に (ozoos Jocees! '94&&Areo に網にこ優とEgugy」を徳LQはeųưęßņųę NĮgu』 NQ43 、Qt』シA”gtにシQシ CJ_X(92$‘O 16'0 pos ‘gooļoz eųụeronågugầraxnågưe 4 nx!·すggこgに3 Q )gogこ gdge “ įųɔŋɔɔųsex,* någu įlan Ååey,『せ鶴UmyxgsgÇeßen‘es seu) nåęu*林觸仁匈立湖的的錢r總 (L) uu oțeșąnanåg>{x \ e^\\ n\ęxplná sønrą łę>{x\le \ I《鶴 やめ戦 切にこゆう ゆ」ndgtgnuy『は鶴xugg> nはgyY『はは愛ACool o no extDno est i zw i toscow.sı • D • != {愉
83

Page 51
is
மிழரு
இலங்கையில் தமிழும். த
66
(soN'OZ'6Ļoo's) sựɔųoou||ex|seủexp|odueĀŋnd(sửelesno)(exeuunued 'eugennaeţeAļex|Xog|eủexp|odjo puod) sửeuexind&_
eugerseủeļue.JPN(eủIL ‘eủej)(6v , !'ZgosoN euges'seủeņeĥnolseủų. Įeủel'0/61'o's)eủaļļuungĻo
uueịnx!(七(9€'oNog619€goN
ekļunaeĄueseunxụoxuḥeṛṛmue|nx!‘OZ6|'o') bugðe|n» ’nagyes|nw'uueịnys ūelpủgd(a1)nuelosoɛlga(eịny) uue|nx!'eųeļnxĮįw念
(gɛou
'subųɔoussey!||Aeủůnɔ'c961'90ỳ’oN'0261'o's) saņeg 'uJesɛŋnd'įįAeỨQX mụed||A.(eỊA) ||A || '||Aex{e}}'eue6e||A.G议
(」)(soos '560
}|eaeħed,eảeex!ņeed!'//'soN'026 soo’s)ɛpɛA|Jedn eugereuehựw'seaeẠex essemed(ə 1) epexețex(senede») essex oețex|'ețex|ùyŁŁ
-uņisyununx!(1) QseĀeA(Zy:||AXXX 'A'W
na!!!se||nW eugerJQ||eN | eunẠåeexinus ‘JQaeảid -'goN''c96 soo’s)eunlles ‘ļųɔųoou||ex|JQūeaĚÎn(ə1)euņ-pnx(eus) 'JQ’əus)uq'unquunx!'eunqny.9冷
(iz'ɛɛsoN'ɛ86]
-(6, \ y'oN'OŁ64’0’s)
sựɔųoou||ex|AuenseundKu exseueue6ụy
seleuueuỌsnu]]Jexseung(1), exeunus I.ựeßeu'Je6eu'dexeueAsS 'euger"Jesseuleugx|(əu)eueßau-efiụ||ex|Áuexeu'exeu'uexseues eNaz
nagųɛŋnwsganisoqnopso),(sganļos)- (O99 “Zy9 Buges'igando) Iúůese||eNeå01 || '60€'eoN'0161'o']) eịoļeqwZ
seseque|ex|
|eỊesnilo
('c', ,'oN'0/61'o'])e|eļļūūaw
84

பரமு புஷ்பரட்ணம்
இயல் நான்கு
TITI எழுத்துய் பொறித்த
மட்பாண்டங்கள். முத்திரைகள்
மட்பாண்டங்கள்
கல்லில் எழுதப்பட்டதுபோல் மட்பாண்டங்களில் எழுத்துப் பொறிக்கும் மரபு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்தமை அரிக்கமேடு, உறையூர், காரைக்காடு, காவிரிப்பூம்பட்டினம், வல்லம், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது (Mahadevan 1995:17). இம்மரபு இலங்கையிலும் பின்பற்றப்பட்டதை அநுராதபுரத்திலும் (Seneviratna 1994: 16-18), வடஇலங்கையில் பூநகரி, (புஷ்பரட்ணம் 1993:36-42), கந்தரோடை, (Indrapala 1973 18-19. கிருஷ்ணராஜா 1998), ஆனைக்கோட்டை (Ragupathy 1987:78) போன்ற இடங்களிலும் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இம்மட்பாண்ட சாசனங்கள் பெரும்பாலும் பெருங்கற்கால ஊரிருக்கை, ஈமச்சின்னப்பகுதிகளிலிருங்து ஈண்டுபிடிக்கப்பட்டவையாகும். இவை கல்வெட்டுக்களைப்போல் விரிவான தகவல்களைத் தராவிட்டாலும் அக்கால எழுத்து, மொழி, பண்பாடு
85

Page 52
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
என்பவற்றை அறிந்துகொள்ள ஓரளவிற்கு உதவுகின்றன. வடஇலங்கையில் எண்ணிக்கையில் கூடுதலான எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் பூநகரி வட்டாரத்தில் உள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஈழஊர், வீரபாண்டியன்முனை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவற்றுள் மண்ணித்தலையில் மட்டும் 16-க்கும் மேற்பட்ட எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் கிடைத்துள்ளன. கந்தரோடையில் கிடைத்த ஒரேயொரு மட்பாண்ட சாசனத்தைத் தவிர ஏனையவை எழுத்து, எழுத்து வடிவம், மொழி என்பவற்றால் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களையும், தமிழகத்தில் கிடைத்த மட்பாண்ட சாசனங்களையும் பெருமளவு ஒத்துள்ளன.
பூநகரியில் கிடைத்த பிராமி எழுத்துக்கள் பெரும்பாலும் மட்பாண்டங்கள் சுட்ட பின் சிறுபானைகள், தட்டுக்கள் என்பவற்றின் கழுத்து, வயிற்றுப் பகுதியில் எழுதப்பட்டவையாகும். உடைந்த நிலையில் காணப்படும் இம்மட்பாண்டத் துண்டுகள் பலவற்றில் ஒரு எழுத்தும், சிலவற்றில் இரண்டு மூன்று எழுத்துக்களும், அரிதாக நான்கிற்கு மேற்பட்ட எழுத்துக்களும் காணப்படுகின்றன. சில எழுத்துக்கள் மட்பாண்டத்தின் உட்பகுதியில் விளிம்போடு எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலான எழுத்துக்கள் தனிச்சிவப்பு நிற மட்பாண்டங்களிலும், ஒரு சில எழுத்துக்கள் கறுப்பு-சிவப்பு, தனிக்கறுப்பு, கரை மட்பாண்டங்களிலும் எழுதப்பட்டுள்ளன. சில எழுத்துக்கள் குறியீடுகளுடன் காணப்படுகின்றன. இவை எழுதப்பட்டதன் முக்கிய நோக்கம் மட்பாண்ட உரிமையாளரின் பெயரையும், இடத்தையும் அடையாளம் காண்பதற்காக இருக்கலாமென்பதை சில சாசனங்களில் காணப்படும் வாசகங்களிலிருந்து ஊகிக்கமுடிகிறது.
எழுத்துப் பொறித்த பெரும்பாலான மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் காணப்படுவதனால் இவற்றை முழுச்சாசனமாகக் கொண்டு அதன் வரலாற்று முக்கியத்துவத்தை மதிப்பிட முடியாதிருக்கிறது. ஆனால் எழுத்துக்கள், வாசிக்கக் கூடிய சில பெயர்கள் என்பவற்றைக் கொண்டு அக்கால மொழி, பண்பாட்டை ஓரளவிற்குத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அந்த வகையில் பூநகரியில் கிடைத்த மட்பாண்ட எழுத்துக்கள் 3 வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. இங்கு கிடைத்த மட்பாண்டங்களில் தமிழ் மொழிக்கேயுரிய ள, ழ, ற, ன போன்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. அத்துடன் தமிழ்ப் பிராமிக்கே உரிய ஈ, ம போன்ற
86

பரமு புஷ்பரட்ணம்
சிறப்பெழுத்துக்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன (Pushparatnam 2000). இவை தனி எழுத்துக்களாகவும், பிற எழுத்துக்களுடன் சேர்ந்தும் கிடைத்துள்ளன. இவை வடிவ அமைப்பில் தமிழகத்தில் கிடைத்த மட்பாண்ட சாசனங்களையும், குகைக் கல்வெட்டுக்களையும் பெருமளவு ஒத்துள்ளன. இவ்வொற்றுமை வடபிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமானதற்கு முன்னர், தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன எனக் கூறப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்கலாம் அல்லது தமிழகத்திற்கு அண்மையில் உள்ள வட இலங்கை மொழி, பண்பாட்டால் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரமாக இருந்தமை காரணமாக இருக்கலாம். Y>
பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழுக்குரிய பெயர்கள், சொற்கள் காணப்பட்டாலும் பிராகிருதம் கல்வெட்டு மொழியாக உள்ளது. ஆனால் மட்பாண்டங்களில் தமிழ்மொழியின் பயன்பாட்டைப் பெருமளவு காணமுடிகின்றது. இரண்டு, மூன்று எழுத்துக்களுடன் கூடிய ஒருசில சாசனத்தின் வாசகம் "ன்" என முடிகிறது. இது ஆட்பெயராக வருவதனால் ஆண்மகனைக் குறிக்க "அன்" என்ற விகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைத் தமிழகத்தில் கிடைத்த மட்பாண்ட சாசனங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாகக் கொடுமணலில் கிடைத்த மட்பாண்டங்களில் கண்ணன், ஆதன், பண்ணன் போன்ற பெயர்கள் பெறப்பட்டுள்ளன (Rajan 1994:82). இவை சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களாகக் காட்சி அளிக்கின்றன. இது பூநகரியில் கிடைத்த மட்பாண்ட சாசனங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.
இங்கு உயிர், உயிர் மெய் எழுத்துக்களுடன் "ஹ" , "ஹ", "டிெ ", "ப" போன்ற சில வர்க்க எழுத்துக்களும் கிடைத்துள்ளன (புஜ்ெபரட்ணம் 1993:29). இவ்வகை எழுத்துக்கள் கொடுமணல், அழகன்குளம், உறையூர் போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன (Mahadevan 1994:1-19). இதற்கு தமிழ்நாடு வடஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு காரணம் எனக்கூறப்படுகிறது. வடஇலங்கையில் இவ்வகை
87

Page 53
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
எழுத்துக்கள் பிராமிக் குகைக்கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இங்கு தமிழ்ப்பிராமி எழுத்துக்களைப் போல் வடபிராமி எழுத்துக்களும் புழக்கத்தில் இருந்ததெனக் கூறலாம்.
பரமன்கிராயில் மூன்று எழுத்துக்களுடன் கூடிய சாசனமொன்று கிடைத்து உள்ளது. இது உடைந்த நிலையில் காணப்படுவதனால் இதை ஒரு முழுச் சாசனமாகக் கொள்ள முடியவில்லை. ஏனைய எழுத்துக்களைக் கொண்டு இச்சாசனத்தை வேள் அல்லது வேளா என வாசிக்க முடிகிறது (புஷபரட்ணம் 1993; 41)(படம்-1). மகாதேவன் இதை வேளான் என வாசித்து சங்ககாலத்தை ஒத்த வேளிர் அல்லது வேளார் சமகாலத்தில் பூநகரியில் வாழ்ந்ததை இச்சாசனம் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார் (Mahadevan 1995:25). ஆனால் சங்ககாலத்தில் வேளாண் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததற்குச் சான்றில்லை. வேளாண் என்ற சொல்லின் முன்னோடி வடிவமாக வேளி என்ற சொல் இருங் திருக்கலாம். ஆனால் முதன் முதலாகப் பராந்தகசோழன் காலத்தில்தான் வேளான் என்ற பட்டப்பெயர் புழக்கத்திற்கு வந்ததற்கு சான்றுண்டு (சுப்பராயலு 1989 : 26.5). இங்கிலையில் மட்பாண்டத்தில் வரும் சொல்லை வேளான் என வாசிப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.
(படம் -1)
88
 

பரமு புஷ்பரட்ணம்
மண்ணித்தலையில் கிடைத்த இரு மட்பாண்ட சாசனங்கள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இதில் இரு எழுத்துக்கள் மட்டும் கொண்ட முதலாவது சாசனத்தில் இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் எழுத்துக்கள் அற்ற நீண்ட இடைவெளி காணப்படுகிறது. இதனால் இதை ஒரு முழுச்சாசனமாகக் கொள்ளலாம் . இதை ஈல அல்லது ஈலா என வாசிக்கலாம் (படம்-2).
(படம் - 2)
மூன்றெழுத்துக்களைக் கொண்ட இரண்டாவது சாசனம் முழுமையான சாசனத்தின் உடைந்த பாகமாகும். இதன் முதலிரு எழுத்துக்களையும் ஈழ என வாசிக்க முடியும். இவ்விரு சொற்களும் ஈழம் என்ற ஒரு வட்டாரப் பெயரைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். அக்கால உள்காட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் பொருட்களின் கொள்கலன்களாக மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டதால் அதில் உரிமையாளரின் இடத்தை அல்லது நாட்டைச் சுட்டிக்காட்ட ஈல, ஈழ என்ற இடப்பெயர் எழுதப்பட்டதாகக் கொள்ளமுடியும். இச்சாசன கள் கண்டுபிடிக்கப்பட்ட பூநகரியில் ஈழஊர் என்ற இடப்பெயர் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து புழக்கத்தில் இருப்பதற்கு சான்றுண்டு (Trinidade 1972:240). இதனால் இவ்விடப்பெயருக்கும் மட்பாண்டங்களில் வரும் பெயர்களுக்கும் இடையே தொடர்பும், தொடர்ச்சியும் இருக்கலாம்.
மேற்கூறப்பட்டவற்றிலிருந்து இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போல் கல்வெட்டுக்கள் வடஇலங்கையில் காணப்படாததற்கு எழுத்துப் பொறிப்பதற்கு ஏற்ற கல்வகைள் இல்லாமை ஒரு காரணமாக
89

Page 54
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இருப்பினும் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு பூநகரியில் பெறப்பட்ட மட்பாண்ட எழுத்துக்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு கிடைத்த அனைத்து மட்பாண்ட எழுத்துக்களும் தொல்லியல் மேலாய்வின் போது கிடைத்தவை. இதனால் இவற்றோடு இணைந்திருங்திருக்கக்கூடிய பிற ஆதாரங்களை அடையாளம் கண்டு காலத்தைக் கணிப்பது கடினமாகும். ஆயினும் எழுத்தமைதி கொண்டு இவற்றின் காலம் கி.மு.3-2-ஆம் நூற்றாண்டு எனக் கணிப்பிடப்பட்டுள்ளது (Mahadevan 1975:25). இவை கால அடிப்படையில் மட்டுமன்றி மொழி அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைத்த மட்பாண்ட சாசனங்களோடு ஒத்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இவை கண்டெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து அச்சுக்குத்தப்பட்ட நாணயங்களும், சங்ககால, உரோமக்கால நாணயங்களும் பெறப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம் 1993:47-57). இவற்றின்மூலம் இப்பிராந்தியம் ஒர் வர்த்தகமையமாக இருந்ததென ஊகிக்கமுடிகிறது. இதன் தென்எல்லையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த மாதோட்டத் துறைமுகம் அமைந்திருப்பது இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துவதாக உள்ளது. ஆயினும் மாதோட்டத்தில் பல தடவைகள் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அங்கு கிடைக்கப் பெறாத மட்பாண்ட சாசனங்கள் பூநகரிப் பிராந்தியத்தில் கிடைத்திருப்பது இதன் பழமையை மேலும் ஆராயத் துாண்டுகிறது.
பிராமிக் கல்வெட்டுக்களுக்கும், மட்பாண்டசாசனங்களுக்கும் இடையே ஒரு பிரதான வேறுபாட்டைக் காணமுடிகிறது. கல்வெட்டுக்கள் பெருமளவிற்குப் பிராகிருத மொழியில் பெளத்தமதம் பற்றிக் கூறுகின்றன. மட்பாண்ட சாசனங்கள் பெருமளவிற்கு தமிழ்மொழியில் மட்பாண்ட உரிமையாளரின் பெயரை, இடத்தைச் சுட்டுவனவாக உள்ளன. இவற்றில் ஒரிரு பிராகிருத எழுத்துக்கள் காணப்பட்டாலும் பெரும்பாலான எழுத்துக்கள் தமிழ்நாட்டில் அரிக்கமேடு, உறையூர், அழகன்குளம், கருவூர், காவிரிப்பூம்பட்டினம், கொடுமணல் போன்ற இடங்களில் அகழ்வாய்வு மூலம் மட்பாண்டங்களில் பெறப்பட்ட தமிழ்ப்-பிராமி எழுத்துக்களை ஒத்துள்ளன. அங்கும் சில பிராகிருத எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவை வர்த்தகத் தொடர்பால் வட இங்தியாவிலிருங் தும் , இலங்கையிலிருந்தும் சென்றிருக்கலாமெனக் கூறப்படுகின்றது. பூநகரியில் கிடைத்த 3 மட்பாண்டங்களில் அன் என்ற விகுதி பெயரின் இறுதியில் வருகிறது. இது தமிழ்நாட்டில் கிடைத்த மட்பாண்டங்களிலும், சங்க இலக்கியத்திலும் வரும் பெயர்களை ஒத்தனவாக உள்ளன.
90

பரமு புஷ்பரட்ணம்
இவற்றிலிருந்து இலங்கையில் பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது தமிழ் வடஇலங்கை மக்களின் தொடர்பு மொழியாக இருந்ததெனக் கூறலாம். அநுராதபுரத்தில் பெறப்பட்ட மட்பாண்டங்களில் தமிழைக் காட்டிலும் பிராகிருதச் சொற்கள் கூடுதலாக உள்ளன (Coningham, Allchin, Batt and Lucy 1996:85). gigs (3augurt. Iqbg வடஇலங்கை தமிழ்நாட்டிற்கு அண்மையிலிருப்பதும், பண்பாட்டில் நெருக்கமான தொடர்பு இருந்தமையும் காரணம் எனக்கூறலாம்.
பிராமி எழுத்து முதலில் வடஇந்தியாவில் தோன்றியது என்ற பாரம்பரியக் கருத்து உண்டு. ஆயினும், இதுவரை எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் வடஇந்தியாவில் கிடைத்ததாகத் தெரியவில்லை. இங்கிலையில் தென்னிந்தியா குறிப்பாக தமிழ் நாடு, இலங்கை போன்ற நாடுகளில் இவை கிடைத்திருப்பது பிராமி எழுத்தின் தோற்றம், பரவல் என்பன பொறுத்துப் புதிய கருத்துக்கள எழக்காரணமாகின்றன. தென் இங்தியாவில் இதுவரை பெறப்பட்ட பெரும்பாலான மட்பாண்ட எழுத்துக்கள் சி14 காலக்கணிப்பின் மூலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அநுராதபுரப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது கிடைத்த மட்பாண்ட எழுத்துக்கள் பல்வேறு காலக்கணிப்புக்கள் மூலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டிற்குச் சில நூற்றாண்டுகள் முற்பட்டவை எனக் assor's illu'GbcircITSOT (Coningham, Allchin, Batt and Lucy 1996:85, Seneviratna 1994:16). இக்காலக் கணிப்பையிட்டு மாறுபட்ட பல கருத்துக்கள் கல்வெட்டாய்வாளர்களிடையே உண்டு. ஆயினும், இவை தென்னிந்தியாவை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கநிலை மட்பாண்டங்களில் பெறப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வெழுத்துக்களுக்கும், வடஇலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெறப்பட்ட எழுத்துக்களுக்கும் இடையே வரிவடிவ அமைப்பில் அதிக மாறுதலைக் காண முடியவில்லை. இதன் மொழி இதுவரை வெளியிடப்பட்ட ஒருசில மட்பாண்ட சாசனங்களில் பிராகிருதமாக இருப்பினும் அதில் தமிழ்மொழியின் செல்வாக்கு உண்டு என்பதற்கு அவற்றில் உள்ள தமிழ்ப்பிராமி எழுத்துக்களை எடுத்துக் காட்டலாம். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அநுராதபுர மட்பாண்ட சாசனங்களின் காலத்திற்கும், அதன் மொழிக்கும் புதிய விளக்கத்தைக் கொடுக்கலாம். இதன்மூலம் வடஇலங்கையில் பெறப்பட்ட மட்பாண்ட சாசனங்கள் புதிய விளக்கத்தைப் பெறலாம்.
91.

Page 55
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
எழுத்துய் பொறித்த செங்கல்
வடஇலங்கையில் மேலும் சில இடங்களில் பிராமி எழுத்தின் பயன்பாடு இருங்துள்ளது என்பதற்கு கட்டுரை ஆசிரியர் இயற்றாலைக்கோட்டைப் பகுதியில் 1993-94 காலப்பகுதியில் கண்டெடுத்த பிராமி எழுத்துப் பொறித்த செங்கற்கள் சான்றாகும். இவை கண்டு எடுக்கப்பட்ட இடம் மேலும் இதன் முக்கியத்துவத்தை ஆராயத் தூண்டுகிறது. இவ்விடம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தென்மராட்சிப் பிரிவில் உள்ள வரணிப் பிரதேசத்தின் மேற்கெல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் தென்மேற்கு எல்லையில் கடற்கரைப் பக்கமாகப் புராதன கட்டிடங்கள் இருந்ததற்கான செங்கற்கள் பரந்த அளவில் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்றன. இச்செங்கற்கள் ஒரு கோட்டையின் அழிபாடாக இருக்கலாம் எனக்கருதி இவ்விடம் இயற்றாலைக்கோட்டை எனவும், இங்குள்ள ஆலயம் கோட்டைவாசல் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் இதன் அமைவிடம், இதுவரை இவ்விடத்தில் பெறப்பட்ட தொல்லியல் சான்றுகள் என்பனவற்றை வைத்து நோக்கும்போது இங்கிருக்கும் கட்டிட அழிபாடுகள் கடல்சார்ந்த வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துறைமுக மேடையாக இருக்கலாம் எனக்கருத இடமளிக்கிறது. இவ்விடம் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த மேடையாக உள்ளது. இதன் ஒரு பகுதி காடாகவும், இன்னொரு பகுதி பயிர்ச்செய்கை நிலமாகவும் உள்ளது. பயிர்ச் செய்கைக்காக இவ்விடம் திருத்தப்பட்டபோது பரந்த அளவில் செங்கற்கள், பொழிந்த முருகைக்கற்கள், மட்பாண்ட ஒடுகள் ஒரு சில உரோம, சோழ, பாண்டிய நாணயங்கள் என்பன வெளிவந்ததைக் காணமுடிகிறது. அத்துடன் இங்குள்ள செங்கல் அத்திவாரத்தில் மண்குடம் ஒன்றிலிருங்து கண்டெடுக்கப்பட்ட எழுநூறு உரோம நாணயங்கள் கட்டுரை ஆசிரியரால் சேகரிக்கப்பட்டுள்ளது.
காடாக உள்ள பகுதியில் சிறிய நாச்சிமார் ஆலயமொன்று காணப்படுகிறது. கட்டிடம் எதுவுமின்றி மரநிழலின் கீழ் பதினான்கு தெய்வங்களைக் குறிக்கும் கற்கள் காட்டப்பட்டு வழிபடப்படுகிறது. கற்களின் அடியில் சிறிய செங்கல்மேடை காணப்படுகிறது. இம்மேடை கற்கள் நாட்டப்பட்டபோது போடப்பட்டதா அல்லது அயலில் உள்ள செங்கற்களைக் கொண்டு பிற்காலத்தில் போடப்பட்டதா என்பதில் தெளிவில்லை. ஆனால் இங்குள்ள மூன்று செங்கற்களில் பிராமி எழுத்துக்கள் உள்ளன. 9 x 12 அங்குல நீள அகல செங்கற்கள்
92

பரமு புஷ்பரட்ணம்
இரண்டில் முறையே இரு எழுத்துக்களும், 4 ‘x 4 நீள அகல செங்கல்லில் ஒரு எழுத்தும் உள்ளன. முதலாவது செங்கல்லில் உள்ள எழுத்துக்களை மய அல்லது மாய எனவும், இரண்டாவது செங்கல்லில் உள்ள எழுத்தை தறா எனவும் வாசிக்க முடிகிறது. இச்சொற்கள் முழுச் சாசனத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இதில் காணக்கூடிய சிறப்பம்சம் செங்கல்லில் தமிழ்ப் பிராமிக்கேயுரிய "ற" என்ற எழுத்து இடம்பெற்றிருப்பதாகும். மேற்படி இடத்திலிருந்து மேலும் பிராமி எழுத்துப் பொறித்த செங்கல் ஒன்று எமது துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் திருமதி. கிருஷ்ணகுமார் அவர்களால் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் அமைப்பையும், சுற்றாடலில் பெறப்பட்ட சான்றுகளையும் வைத்து கோக்கும்போது இங்கு பெறப்பட்ட பிராமி எழுத்துக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இவ்வெழுத்துக்கள் இங்குள்ள ஆலயத்தோடு தொடர்புடையதாக இருப்பின் இங்குள்ள கற்கள் சங்ககால நடுகல் வழிபாட்டு மரபிருந்ததற்கு சிறந்த சான்றாகும். இருப்பினும் பிராமி எழுத்தும், உரோம நாணயங்களும், புராதன மட்பாண்டங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவ்விடம் பண்டைய காலத்தில் இந்திய, உரோம நாடுகளுடன் தொடர்புடைய வர்த்தகத் துறைமுகமாக இருந்ததெனக் கூறலாம். எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மேலும் பல புதிய தகவல்களைத் தரலாம்.
முத்திரைகள்
பண்டைய காலத்தில் பிராமி எழுத்து பொறித்த முத்திரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் தென்னாசியாவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களிலும் அரிதாக கற்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலா னவை தமிழ் நாட்டில் அதிலும் சங்க காலச் சேரரின் தலைநகரான கரூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அவற்றுள் கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும் பிராமியில் எழுதப்பட்ட ஊடாசஅண், வெள்இ சாம்பன், தித்தன், குறவன் போன்றோரது பெயர்களைக் குறிப்பிடலாம் (சீதாராமன் 1994:1-11). இவை சங்க காலத்தில் சிறப்புப் பெற்ற குறுகில மன்னர்கள், சிற்றரசர்கள், தலைவர்கள் போன்றோரது பெயர்களாகக் கருதப்படுகிறது. இதில் காணக்கூடிய முக்கிய அம்சம் இதுவரை கிடைத்த சங்ககால நாணயங்கள் அனைத்தும் தமிழ்ப் பிராமியில் வெளியிடப்பட்டிருக்கும் போது
93

Page 56
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இம்முத்திரைகள் தமிழ்ப் பிராமியுடன் வடபிராமி எழுத்தும் கலந்து வெளியிடப்பட்டிருப்பதாகும். இவ்வகையான முத்திரைகளை வெளியிடும் மரபு ஏறத்தாழ சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப்பட்டதை வடஇலங்கையில் பூநகரி, ஆனைக்கோட்டை, ஆகிய இடங்களில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
பூநகரி
பூநகரியில் பரமன்கிராய் என்ற இடத்தில் கி.பி.1991-இல் பிராமி எழுத்துப் பொறித்த செப்புத்தகட்டின் பாகமொன்று கிடைத்தது. இது 1.6 x 1.4 நீள அகலம் உடையது. இதன் எடை 3.3 கிராம் ஆகும். இது ஒரு முத்திரையாக இருக்கலாம் என்பதை அவற்றின் வடிவமைப்பபிலிருங்து ஊகிக்க முடிகிறது. ஆயினும் இதைக் கண்டெடுத்து என்னிடம் தந்த பரமன்கிராயைச் சேர்ந்த திரு. வடிவேலு இதன் உலோகம் பொன்னாக இருக்கும் எனக் கருதி அதை வெட்டிப் பார்த்திருப்பதால் இதை ஒரு முத்திரையின் ஒருபாகமாகவே கொள்ளவேண்டியுள்ளது. இதில் இரு எழுத்துக்கள் உள்ளன . இவற்றை "தெப" என வாசிக்க முடிகிறது. "ப" எழுத்தின் வலப்பக்கக்கோடு சற்றுக் கீழ்நோக்கி வளைந்து உள்ளது. இவ்வகை எழுத்து கி.பி.2- ஆம் நூற்றாண்டிற்குரிய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. இதனால் இம்முத்திரையை கி.பி.2-3-ஆம் நூற்றாண்டிற்குரியது எனக் கூறலாம். வல்லிபுரப் பொற்சாசனத்தில் வரும் "திவ" என்ற சொல்லிற்கும், இச்சொல்லிற்கும் இடையே வரிவடிவத்தில், மொழியில் நெருங்கிய ஒற்றுமைத்தன்மை காணப்படுகிறது. "திவ" என்ற சொல் நாகதீப என்ற நாட்டுப் பெயரில் பின்னொட்டுச் சொல்லாக வருகின்றது. இதனால் தெப என்ற சொல் /5ாகதெய (நாகதீப) என்ற நாட்டுப் பெயரைக் குறிக்கலாம். ஆயினும் இவற்றோடு சேர்ந்திருந்த எழுத்துக்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் தான் இம்முத்திரையின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிய ՓլԳպմ0
ஆனைக்கோட்டை
கி.பி. 1980-இல் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது பெருங்கற்காலப் புதைகுழியிலிருந்து ஒருவகைக் கல்லில் ஈர் எழுத்துப் பொறித்த சாசன முத்திரை ஒன்று பெறப்பட்டது.
94.

பரமு புஷ்பரட்ணம்
இதன் காலம் கி.மு.3, 2-ஆம் நூற்றாண்டு எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இது 1.7 x 1,5 செ. மீ. நீள அகலம் உடையது. இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும், கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன (படம்-26) (Indrapala 1981). இது வடஇலங்கையின் புராதன மொழி பொறுத்தும் குறியீடுகளுக்கும் பிராமி எழுத்துக்களிற்கும் இடையிலான தொடர்பு குறித்தும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்திரபாலா குறியீடுகளும் பிராமி எழுத்துக்களும் ஒத்த நிலையில் இருப்பதனால் குறியீடு ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் பெறுகின்றன என்றார். பிராமி எழுத்துக்களுக்கு கோ+வே+த என்ற உச்சரிப்பைக் கொடுத்து மேலே உள்ள இருதுலக் குறியீடுகளும் கோவே என்ற ஒலிப் பெறுமானமும், மூன்றாவது குறியீடு 'த' என்ற ஒலிப்பெறுமானமும் பெறுவதாக ஊகிக்கிறார். த' என்ற பிராமி எழுத்திற்கு மேலே உள்ள புள்ளியை குறியீடுகளுடன் தொடர்பற்ற அன் என்ற அனு ஸ்வரமாகக் கருதும் இவர் கீழேயுள்ள பிராமி எழுத்துக்களை கோவேந்த அல்லது கோவேந்தன் என வாசிக்கலாம் என்றார். இதில் கோ, வேந்து ஆகிய இரு சொற்களும் தமிழ், மலையாள மொழிகளில் மன்னனைக் குறிப்பதாகவும், இறுதியில் வரும் "அன்" என்ற விகுதி ஆண்பால் ஒருமையைக் குறிப்பதாகவும் விளக்கம் கொடுத்தார். இதற்கு ஆதாரங்கள் தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுக்களில் உண்டு என்பது இவர் கருத்தாகும்.
95

Page 57
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இவ்வாசகத்திற்கு இரகுபதி மற்றுமொரு விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். இதில் கோ, வே, தா ஆகிய 3 எழுத்துக்கள் இருப்பதாகக் கூறும் இவர் இவை முறையே கோ+வேத்+அ எனப் பிரிக்கலாம் என்றார். இதில் வரும் 'அ' என்ற விகுதியை பிராமிக் கல்வெட்டில் வரும் 6-ஆம் வேற்றுமை எனக் கூறும் இவர் இவ்வாசகத்தைக் கோவேந்தனுடைய என்ற பொருளில் கோவேத என வாசிக்கலாம் என்றார். 'த' எழுத்திற்கு மேலே உள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொள்ள முடியாது எனக் கூறும் இவர், அப்படிக் கொண்டால் அம் எனக் கொள்ளலாமே தவிர அன் எனக் கொள்ளமுடியாது என்றார். அப்படி அனுஸ்வரமாகக் கொண்டால் இவ்வாசகத்தைக் கோவேதம் என வாசிக்கலாம். இதில் அன், அம் ஆகிய இரண்டும் ஒரே பொருள் தரும் விகுதிகள் என்பது இவர் கருத்து. இது மகன், அரசன் ஆகிய சொற்கள் முறையே மகம், அரசம் என வருவது போல் கோ + வே + அம் என்பதும் கோவேதம் என வந்துள்ளது என்பது இவர் விளக்கமாகும் (Ragupathy 1987:202-203).
தமிழ்நாட்டில் மெய் எழுத்தின் மேல் புள்ளியிடும் மரபு தொல்காப்பியர் காலம்தொட்டு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பிராமி எழுத்தின் மேல் புள்ளியிடப்பட்ட எழுத்துகள், தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. தமிழில் ஒருமை ஆண்பாலைக் குறிக்க அன் என்ற விகுதி பயன்படுத்தப்பட்டதைச் சங்க இலக்கியம், பிராமிக் கல்வெட்டுக்கள், மட்பாண்ட சாசனங்கள், முத்திரைகள், நாணயங்கள் என்பனவற்றில் வரும் பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த அன் விகுதி சித்தன்னவாசல், நெகநூர்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழிற்குரிய சிறப்பெழுத்தான "ன்" என்ற எழுத்தின்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (இராசவேலு 1995: 7-12). பல கல்வெட்டுக்களில் ஒருமை ஆண்பால் பெயர் "அன", "ன" என முடிகிறது. இவை சந்தர்பத்திற்கேற்ப "அன்", "ன்" என வாசிக்கப்பட்டுள்ளது. உதாரணமாகத் திருச்சாதவூர்க் கல்வெட்டில் வரும் உபாசஅன (ன்) என்ற பெயர் கொங்கற்புளியங்குளக் கல்வெட்டில் உபாசன (ன்) என வருகிறது (Mahadevan 196661). ஆனால் மெய்யெழுத்தின் மேல் உள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டு அன் என வாசிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. தமிழில் புள்ளியிடப்பட்ட மெய்யெழுத்து தனி மெய்யெழுத்தையே குறிக்கும். வடமொழியில் இது 'ம்' என்பதுபோல உச்சரிக்கப்படும் அனுஸ்வரத்தைக் குறிக்கும். உதாரணமாக "த" என்ற எழுத்தின் மேல் புள்ளியிட்டால்
96

பரமு புஷ்பரட்ணம்
தமிழில் "த்" என்றும், வடமொழியில் "தம்" என்றும் ஒலிக்கும். ஆனைக்கோட்டை முத்திரையிலிருந்த எழுத்திற்கு மேல் உள்ள புள்ளியை இவ்வெழுத்தோடு தொடர்புடையதெனக் கொண்டால் இதன் வாசகம் கோவேதம் அல்லது கோவேத் என வாசிப்பதே பொருத்தமாகும். ஆனால் "த" எழுத்திற்கு மேல் உள்ள புள்ளியை குறியீடுகளிலிருந்து வேறுபட்டதாகக் கூறப்படுவது பெருமளவிற்கு பொருத்தமாகத் தெரியவில்லை. ஏனெனில் புள்ளியும் அதனுடன் இணைந்த அரைவட்டமும் அச்சுக்குத்தப்பட்ட நாணயங்களிலும், சங்ககால நாணயங்களிலும் ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இம்முத்திரையில் வரும் பெயரை கோவேத எனப் படிப்பதே பெருமளவு பொருத்தமாக உள்ளது.
முத்திரையில் இடம்பெற்றுள்ள கோவேத(கோ =அரசன், வே= வேந்தன்) என்ற சொற்தொடர் அரசன், வேந்தன் போன்றவர்களைக் குறிப்பதாக உள்ளன. தென்னிந்தியாவை போல் இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டில் ஏற்பட்ட நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், சிறுதொழில் நுட்ப அறிவு, அயல்நாட்டு வர்த்தகத் தொடர்பு எழுத்தின் அறிமுகம் என்பனவற்றிற்குரிய சான்றுகள் நகரமயமாக்கத்துடன் அரச உருவாக்கம் ஏற்பட்டதைக் காட்டுகின்றன. இச்சான்றுகள் ஆனைக்கோட்டையில் மட்டுமன்றி வடஇலங்கையில் கந்தரோடை, பூநகரி போன்ற இடங்களிலும், பெருநிலப்பரப்பில் அநுராதபுரம், திசமாறகம போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன. இப்பண்பாட்டு மக்களோடு தொடர்பான கல்வெட்டுக்களில் வரும் வேள், பருமக போன்ற பட்டங்கள் தமிழ் அரசமரபின் தோற்றத்தைக் காட்டுகின்றன. இப்பின்னணியில் ஆனைக்கோட்டை பெருங்கற்கால ஈமச்சின்னங்களுடன் கிடைத்த முத்திரையில் வரும் கோவேத என்ற பெயரை யாழ்ப்பாணத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழ் அரச மரபு தோன்றியதை எடுத்துக்காட்டும்
முக்கிய சான்றாகக் காட்டலாம்.
97

Page 58
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
(LрЦ26. IGOT
மேற்கூறப்பட்ட கல்வெட்டாதாரங்களில் இருந்து இலங்கையில் தமிழ்மொழி பயன்பாட்டில் இருந்ததற்கான தொடக்ககாலச் சான்றாக தமிழகத்தைப் போல் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுக்களைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட ஒரு மொழிக்கென எழுத்துக்கள் தோன்றுவதற்கு அல்லது குறிப்பிட்ட ஒரு மொழி கல்வெட்டுக்களில் எழுதப்படுவதற்கு எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்னரே அம்மொழி பயன்பாட்டிலிருந்திருக்கவேண்டும். இதனால் பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொழியின் படிமுறையான வளர்ச்சிக்கு குறிப்பிட்ட ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து அதன் தோற்றகாலத்தை வரையறுப்பதில் பல தவறுகள் ஏற்பட இடமுண்டு. இருப்பினும் இலங்கையில் நாகரிகம் தோன்றி வளர்ந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழ் மொழியின் பயன்பாடு வந்ததற்கான காரணத்தையும், காலத்தை ஒரளவுக்கு விளங்கிக் கொள்ள முடிகிறது.
இலங்கையில் மனிதபரிணாமம் நிகழ்ந்தற்கான மனிதச் சுவடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்குமானால் ஆதிகால மக்கள், பண்பாடு பற்றிய கருத்தில் பல மாறுதல்கள் ஏற்பட இடமுண்டு. இதுவரை கிடைத்த தொல்லியல், மானிடவியல், மொழியியல் சான்றுகள் இலங்கைக்குரிய மக்களும், பண்பாடும் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட நிலையில் வளர்ச்சியடைந்து வந்ததையே காட்டுகின்றன. முன்னொரு காலத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்த நிலப்பரப்பே பின்னர் அதிலிருந்து பிரிந்து பெளதீக அடிப்படையில்
98

பரமு புஷ்பரட்ணம்
இலங்கைத் தீவு என்ற பெயர் பெற்றதென்ற கருத்து புவியியலாளரிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் இங்கிலப் பிரிவோடு ஆதிகால மக்களும், பண்பாடும் வந்திருக்கலாம் எனப்பார்க்கவும் இடமுண்டு. ஆனால் இதுவரை கிடைத்த குடியிருப்புக்கள், பண்பாட்டுப் பரவல் என்பவற்றிற்குரிய சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது நிலப்பிரிவு ஏற்பட்டது உண்மையானால் அதற்குப் பின்னரே மக்கள் புலப்பெயர்வும், பண்பாடும் வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
இலங்கையில் இதுவரை கிடைத்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கி.மு.28000 இல் இருந்து நுண்கற்காலப் பண்பாட்டைப் (Mesolithic Culture) பின்பற்றிய மக்கள் வாழ்நதிருக்கலாம் எனக் 3, pop|q&lpg (Zeuner, F.E., and Allchin 1956:4-20, Deraniyagala 1984:105-108). இம்மக்கள் தாழ்நிலம் தொட்டு மலைநாடு வரை வாழ்ந்திருக்கலாம் என்பதை மாதோட்டம், பூநகரி, மாங்குளம், பொம்பரிப்பு அநுராதபுரம், இரத்தினபுரி, பலாங்கொடை போன்ற இடங்களில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன (Alchin 1968, Deraniyagala 1972:48–162, 1984:105-108, Carswel 1984:1-84, Ragupathy 1987:181,புஷ்பரட்ணம் 1993:12-14). இம்மக்களை ஆதிஒஸ்ரலோயிட் வாக்கத்தினர் எனவும், இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் எனவும் கூறப்படுகிறது. வடஇந்தியக் குடியேற்றம் நடைபெற முன் இகு வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும் இயக்கர், நாகர் என்ற மக்கள் இவர்களாக இருக்கலாம் என்ற கருத்துண்டு. மொழியியல், மானிடவியல் அடிப்படையில் இவர்களும் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களும் ஒரே வர்கத்தினர் எனக் கூறப்படுகிறது. அதிலும் தமிழ் நாடு தேரி கலாசார மக்களது தனித்தன்மை கொண்ட கல்லாயுதங்கள் தமிழகத்தை அடுத்து இலங்கையில் மட்டும் காணப்படுவதால் (Zeuner, F.E., and Allchin 1956:4-20) தமிழ் நாட்டிலிருந்தே இம்மக்கள் புலம் பெயர்ந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து கி.மு.800இல் இருந்து பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய (Megalithic Culture) திராவிட மக்கள் இலங்கையின் பல வட்டாரங்களில் வாழ்ந்ததற்கான சான்றுகள் assoL5giGircTSOT (Goonatilake 1981, Sitrampalam 1980, Seneviratne 1984, Ragupathy 1987). பெருங்கற்காலப் பண்பாடென்பது ஆதி காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்வதில் பின்பற்றிய ஒரு பண்பாட்டு அம்சத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆயினும் இது பற்றிய ஆய்வு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களது பண்பாட்டின் பல
99

Page 59
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பரிணாம்களை விளங்கிக் கொள்ள உதவுவதாக உள்ளன. இப்பண்பாடு தொடர்பான சான்றுகள் ஆசியாவின் பல்வேறு வட்டாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் திராவிட மொழி பேசும் பிராங்தியமான தென்னிந்தியாவுக்கென சில தனித்துவமான அம்சங்கள் உண்டு என்பதைத் தொல்லியலாளர் சான்றாதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர் (Ramachandran 1969:59-65), இலங்கையைப் பொறுத்தவரை இப்பண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் தென்னிந்தியாவுடன் அதிலும் சிறப்பாக தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் நெருங்கிய ஒற்றுSOLouiso Lusot (Begley 1973: 190-196, Goonatilake 1981). -95gh தமிழ் நாட்டிலுள்ள அரிக்கமேட்டிற்கு எதிரே வடமேற்கிலங்கையில் அமைந்துள்ள மாதோட்டமும், ஆதிச்சநல்லுருக்கு நேரெதிரே உள்ள பொம்பரிப்பும் இப்பண்பாட்டில் ஒரே பிராந்தியம் எனக் கருதுமளவுக்கு நெருங்கிய ஒற்றுமையுடையன (Strampalam 1980). யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடியேற்றத்தின் தொடக்கம் பெருங்கற்காலப்பண்பாட்டு மக்களாக உள்ளனர் (Ragupathy 1987). அநுராதபுரம், பொம்பரிப்பு போன்ற இடங்களில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக பெருகற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. மாதோட்டத்தில் நுண்கற்காலப்பண்பாடு முடிந்து சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன(Carswell 1984:3-80). இச்சான்றாதாரங்கள் மக்கள் புலப்பெயர்வுடன் பண்பாடும் பரவியதைக் காட்டுகின்றன. இதை மானிடவியல், தொல்லியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. தொல்லியலாளர் இப்பண்பாட்டை முன்பு இங்கு வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பின்பற்றியிருக்கலாம் அல்லது இப்பண்பாட்டுடன் கலந்திருக்கலாம் சில இடங்களில் தனித்து வாழ்ந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். இப்பண்பாடு தொடர்பான சான்றுகள் சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரியரின் வழித்தோன்றல்கள் என்ற பாரம்பரிய கருத்தை நிராகரிக்கும் அதேவேளை, இப்பண்பாட்டுடனேயே நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்புச்-சிவப்பு நிற மட்பாண்டத்தின் பயன்பாடு, சிறுதொழில்நுட்ப வளர்ச்சி, நகரமயமாக்கம், அரச உருவாக்கம் போன்றவையும் ஏற்பட்டன என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.
இப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பலவகையான குறியீடுகள் காணப்படுகின்றன. இவற்றின் தோற்றம் சிந்துவெளி நாகரிக காலத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இலங்கைப் பெருங்கற்கால மட்பாண்டக்
1OO

பரமு புஷ்பரட்ணம்
குறியீடுகள் பெரும்பாலும் தென்னிந்தியா அதிலும் சிறப்பாகத் தமிழக மட்பாண்டங்களுடன் ஒற்றுமை கொண்டு காணப்படுகிறது. தமிழக மட்பாண்டக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்த இராசன் (1998:6) பெருங்கற்கால ஈமைச்சின்ன மட்பாண்டங்களில் வரும் குறியீடுகள் ஒரு குடும்பத்தின் அல்லது அதைவிட ஒரு கூட்டத்தின் குறியீடுகளாக இருக்கலாம் என்பதற்குப் பொருத்தமான சான்றாதாரங்கள் காட்டுகிறார். இலங்கைப் பெருங்கற்கால மட்பாண்டக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து வரும் இரகுபதியும் (உரையாடலின் போது கூறியது) இக்கருத்தையே கொண்டுள்ளார்.
மட்பாண்டங்களில் வரும் பல குறியீடுகளின் தொடர்ச்சியைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும் காணமுடிகிறது. அவற்றுள் தமிழ் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட தென்னிலங்கையில் கிடைத்த கல்வெட்டுக்களில் வரும் குறியீடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (Seneviratne 1984:23-307). அக்குறியீடுகளில் சுவத்ெதிகா, பீடத்துடன் கூடிய சுவத்ெதிகா சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அதில் அவதானிக்கப்படவேண்டிய முக்கிய அம்சம் பீடத்துடன் கூடிய சுவத்ெதிகா பல கல்வெட்டுக்களில் மீன் சின்னத்தையும் அருகில் கொண்டிருப்பதோடு சில கல்வெட்டுக்களில் மீனைக் குறிக்கும் மஜிம என்ற பெயரும் காணப்படுகின்றது (I.C. 1970.Nos.835, 557, 562, 564,569, 556, 561,558, 565,549, 550,567, 551). இக்குறியீடுகளுடன் கூடிய கல்வெட்டுக்களில் வருபவர்கள் முன்பொருகாலத்தில் இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழர்கள் எனவும், இவர்கள் சிங்கள மன்னர்களுக்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்த தமிழர்கள் எனவும் இலங்கையின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான மென்டிஷ் குறிப்பிட்டுள்ளார் (பார்க்க: வேங்கடசாமி 1983:610). இக்கல்வெட்டுக்களில் வரும் சில குறியீடுகளுக்கும் பாண்டி காட்டிலுள்ள அழகர்மலை, கொங்கர் புளியங்குளப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் குறியீடுகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை பற்றி தமிழ் நாடு முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் கலாநிதி இராசகோபால் (1991: 1-8) தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் சுட, சுள, பட, மாற போன்ற பெயர்கள் காணப்படுகின்றன (I.C. 1970.NoS.58, 159, 712, 270, 968). 9)S0)QI (33Fmtyg, lurT6oöriq,uLu வம்சங்களைக் குறிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். சமகாலப் பாளி இலக்கியங்களிலும் சோழர், பாண்டியர் பற்றிய செய்திகளோடு இலங்கையில் ஆட்சிபுரிந்த பழையமாறன், பிளைய மாறன் போன்ற
101.

Page 60
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
தமிழ் மன்னர்கள் பற்றியும் கூறுகின்றன. இப்பெயருக்குரியவர்களை வரலாற்றாய்வாளர்கள் அவ்வக் காலகட்டங்களில் தமிழகத்திலிருந்து வர்த்தகராக, படையெடுப்பாளராக வந்து போன சோழ, பாண்டி வம்சத்தவர் அல்லது நாட்டவர் எனக் கூறுகின்றனர். ஆனால் பெருங்கற்காலக் குறியீடுகளிடையே காணப்படும் ஒற்றுமைகளை நோக்கும் போது இவர்களை அப்பண்பாட்டுடன் இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறிய தமிழராகக் கூறுவதே பொருத்தமாக உள்ளது.
இப்பணி பாடு தென்னிங் திய்ாவிலிருங்து பரவினாலும் காலப்போக்கில் இலங்கைக்கேயுரிய சில தனித்துவமான அம்சங்களும் அப்பண்பாட்டில் ஏற்பட்டதெனக் கூறலாம். இதை உறுதிப்படுத்துவதிலும் அப்பண்பாட்டு மட்பாண்டங்களில் வரும் குறியீடுகளே சிறந்த சான்றாக விளங்குகின்றன. அவற்றுள் பீடத்துடன் கூடிய சுவத்ெதிகா சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சுவத்ெதிகா குறியீட்டை சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து இந்திய மட்பாண்டங்களிலும், நாணயங்களிலும் காணமுடிகிறது. இச்சின்னத்தை இலங்கைப் பெருங்கற்கால மட்பாண்டங்களில் காணமுடிந்தாலும், இவற்றோடு பீடத்துடன் கூடிய சுவஇெதிகா சின்னமும் காணப்படுகிறது. இது பிற்காலத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும் காணப்படுகிறது. இவை இரண்டும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை இவையிரண்டும் ஒரே கல்வெட்டில் வருவதைக் கொண்டு அறிய முடிகிறது (I.C.1970.No.34). இதில் பீடத்துடன் கூடிய சுவஷதிகாவை இலங்கையைத் தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இதுவரை காணமுடியவில்லை. இது இலங்கைக்கேயுரிய தனித்துவமான அம்சம் என உறுதிபடக் கூறலாம். இக்குறியீடு பெருங்கற்கால மட்பாண்டங்கள், கல்வெட்டுக்களில் மட்டுமன்றி தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட பண்டைய நாணயங்களில் முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வின்போது கிடைத்த பெருங்கற்கால மட்பாண்டங்களில் பல குறியீடுகள் பெறப்பட்டன. அவற்றுள் சில இலங்கைக்கேயுரிய தனித்துவமான அம்சம் என்பதை இரகுபதி தனது ஆய்விலிருந்து இனங்கண்டுள்ளார். ஆயினும் அெை இன்னும் பிரசுரிக்கப்படாது இருப்பதினால் அவற்றை இவ்விடத்தில் கூறுவதைத் தவிர்த்துள்ளேன்.
பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களிலும், அதன் சுற்று வட்டாரங்களிலுமே பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இப்பண்பாட்டு
O2

பரமு புஷ்பரட்ணம்
வழிவந்த மக்களே பெளத்த மதத்தைப் பின்பற்றினர் மற்றும் ஆதரவு கொடுத்தனர் என்பதைக் காட்டுகின்றன. இக்கல்வெட்டுக்களில் பிராகிருதம் குறிப்பாக வடமொழி, திராவிட, ஒஸ்ரிக் மொழிக்குரிய சொற்களோடு தமிழ் மொழிக்குரிய பிராமி எழுத்தும், சங்க இலக்கியத்துடன் தொடர்புபடுத்தக் கூடிய பல தமிழ்ச் சொற்களும் கலந்து காணப்படுகின்றன. இவற்றிலிருந்து பிராமிக் கல்வெட்டுக்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களில் ஒருபிரிவினர் தமிழ் மொழியினை அறிந்திருந்தினர் எனக் கூறலாம். பிராமிக் குகைக் கல்வெட்டுக்கள் காணப்படாத வடஇலங்கையில் அதிலும் குறிப்பாக பூநகரி வட்டாரத்தில் தமிழ்ப் பிராமிக்கே உரிய எழுத்துக்களுடன் கூடிய பெருங்கற்கால மட்பாண்ட ஒடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Pushparatnam 2000:57-62). இவ்வாறான மட்பாண்ட எழுத்துக்கள் தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், உறையூர், கொற்கை, காவேரிபூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற இட்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Rajan 1994, Kasinathan, Mahadevan). Q60Qu gorrigoságió giblg55திற்கும் உரிய தனித்துவமான அம்சம் எனலாம். இச்சான்றாதாரங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தமிழ் பேச்சுவழக்கிலிருந்ததைக் காட்டுகிறது எனலாம். பிராமிக் கல்வெட்டுக்களில் ஒஸ்ரிக், திராவிட மற்றும் தமிழ்ச் சொற்களைப் பிராகிருதம் கடன்வாங்கி வடமொழிக்குரிய சொல்லாக மாற்றம் பெறுவதைக் காணமுடிகிறது. அதேபோல் பிராகிருதத்திலிருந்தும் தமிழ் பல சொற்களைக் கடன்வாங்கி தமிழருக்குரிய பெயராக மாற்றம் பெறுவதையும் காணமுடிகிறது. இச்சான்றுகள் சிங்கள மொழி தனியொரு மொழியாகத் தோன்றுவதற்கு முன்னரே தமிழ் வடமொழிக் கலப்பு தொடங்கிவிட்டதைக் காட்டுகின்றன. இவ்வகை மாற்றங்களைச் சங்ககாலத் தமிழகத்திலும் காணமுடிகிறது (Pilai 1968:271-279).
பெளத்த மத மொழியான பிராகிருதம் இங்கு ஏற்கனவே புழக்கத்திலிருந்த மொழிகளுடன் படிப்படியாகக் கலந்ததன் விளைவே காலப்போக்கில் சிங்களம் என்ற தனியொரு மொழி தோன்றக் காரணம் எனலாம். இதில் சிங்கள மொழிக்கும் வடமொழிக்கும் இடையே காட்டப்படும் ஒற்றுமை என்பது சொற்செறிவை அடிப்படையாகக் கொண்டது. அச்சிங்கள மொழியில் தமிழ் மயப்படுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள், வடமொழிமயப்படுத்தப்பட்ட தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளதையும், பல இடங்களில் சில சொற்கள் இரு மொழிகளுக்கும்
103

Page 61
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
பொதுவாக இருந்ததையும் பிற்கால தமிழ், சிங்களக் கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் ஊடாக அறியமுடிகிறது. இதில் தமிழில் இருந்து சிங்கள மொழி பல சொற்களைக் கடன் வாங்கியிருக்க கூடிய வரலாற்றுச் தழ்நிலை தமிழுக்கு இருக்கவில்லை என்பதைத் தமிழ்மொழியின் தொன்மை பற்றிய கல்வெட்டுச் சான்றுகளில் இருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்று தமிழுக்கும் சிங்களத்திற்கும் இடையே மொழியடிப்படையில் அதிலும் குறிப்பாக ஆட்பெயர், இடப்பெயரில் காணப்படும் ஒற்றுமைகளை தமிழ் சிங்கள மக்களது பூர்வீக வரலாறு பற்றிப் பாளி இலக்கியங்கள் கூறும் கட்டுக்கதையின் அடிப்படையில் பிற்காலத்தில் குடியேறிய தமிழருக்கு சிங்கள மொழியால் ஏற்பட்ட விளைவு என நியாயப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் சமகால மொழியியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சுசீந்திரராசா (1999:153-156) தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையிலான உறவு பற்றிக் கூறிய கருத்து ஆழ்ந்து கவனிக்கத்தக்கது:
"இலங்கையில் தமிழ் மொழி பல நூற்றாண்டுகள் வழக்கில் இருந்து வந்த காரணத்தினாலே தமிழ் மொழி அறிவும் சிங்கள மொழி அறிவும் கொண்ட மக்கள் சமுதாயம் ஒன்று பண்டைய காலத்தில் உருவாகி இருந்தது. இச்சமுதாயத்தில் இருந்த இருமொழி அறிவு பெற்ற மக்கள் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆயின் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் ஏற்பட்ட தொடர்பையும் இத்தொடர்பால் சிங்கள மொழியில் தோன்றிய விளைவையும் நோக்கும் போது இருமொழி அறிவு கொண்ட மக்கள் சமுதாயம் ஒன்று இருந்ததென்பதையும் அச்சமுதாயம் மூலம் தமிழ் மொழியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குச் சிங்கள மொழியில் பரவியதென்பதும் புலனாகிறது. தமிழ்ச் சொற்கள் பலவற்றையும் தமிழ் மொழி(திராவிட மொழி) அமைப்புகளையும் சிங்கள மொழியில் காண்கிறோம். தமிழையும் சிங்கள மொழியையும் ஒப்பு நோக்கி ஆராய்வோர் சிங்கள மொழியையும் ஹிந்தி போன்ற வடஇந்தோ ஆரிய மொழிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்தால், தமிழ் மொழித் தொடர்பால் சிங்கள மொழியில் தோன்றிய மொழி விளைவுகளை எளிதில் உணர்வர். இத்தனைக்கும் இலங்கைத் தமிழ் மொழியில் சிங்கள மொழியின் செல்வாக்கு என்றோ, தொடர்பு என்றோ எதையும் விதந்து கூறுவதற்கு இல்லை எனலாம். முருங்கை என்னும் சொல்லைச் சிங்களச் சொல் என்று காட்டப்பட்டு வந்தது. ஆயின் அதுவும்
104

பரமு புஷ்பரட்ணம்
திராவிடமொழிச் சொல் என்று அண்மையில் சான்றுகளுடன் நிலைநாட்டப்பட்டது. இலங்கையில் சிங்களவர் மத்தியில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பேச்சுத்தமிழில் மட்டும் ஒரு சில சிங்களச் சொற்கள் புகுந்துள்ளன".
பேராசிரியர் பெரும்பாலும் சமகாலத்தில் வழக்கிலுள்ள தமிழ், சிங்கள மொழிச் சொற்களுக்கிடையிலான தொடர்பின் அடிப்படையிலேயே இக்கருத்தைக் கூறியுள்ளார். இத்தொடர்பின் வரலாறு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கிப் பார்க்கப்படுமானால் அதற்கான வரலாற்று காரணங்கள் தெரியவரும் என்பதையே மேற்கூறப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களில் இருந்து அறியமுடிகிறது.
இங்கிலையில் இக்கல்வெட்டு மொழிக்கும், பிற்கால சிங்கள மொழிக்கும் இடையிலான ஒருவகை ஒற்றுமையின் அடிப்படையில் இலங்கைப் பிராமியை சிங்களப் பிராமி எனவும், வடபிராமியின் செல்வாக்கால் ஏற்கனவே புழக்கத்திலிருங்த தமிழ்ப் பிராமி வழக்கொழிந்ததெனவும் வரலாற்றறிஞர்களில் ஒருசாரார் கூறிவரும் கருத்து எந்த அளவுக்குப் பொருந்தும் என்பதும் முக்கிய கேள்வியாக எழுகிறது. ஏனெனில் இக்காலத்தில் பிராகிருதம் இலங்கையில் மட்டுமன்றி பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் புழக்கத்திலிருந்தும் பிராகிருதமே கி.பி.5-6ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. விதிவிலக்காக தமிழ் காட்டில் தமிழ் கல்வெட்டு மொழியாக இருந்தாலும் அவற்றில் கூடப் பிராகிருத மொழிச் சொற்களின் செல்வாக்கைக் காணமுடிகிறது. தமிழகப் பிராமி தமிழ்ப் பிராமி என அழைக்கப்பட தமிழ் கல்வெட்டு மொழியாக இருந்ததுடன், தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்துக்களையும் அது கொண்டிருந்தது. ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் சிங்கள மொழியோ அல்லது அம்மொழிக்குரிய சொற்களோ அல்லது சிங்கள மொழிக்கெனத் தனித்துவமான எழுத்துக்களோ பயன்படுத்தப்படவில்லை. கி.பி.8ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுக்களிலும், கி.பி.13ஆம் நூற்றாண்டிலிருந்து இலக்கியங்களிலும் அறியப்படும் சிங்கள மொழி பல சொற்களை பிராகிருதம் உட்பட வடமொழியில் இருந்து பெற்றதைப் போல், தமிழ், திராவிட மற்றும் ஆதிஒஸ்ரிக் மொழிகளில் இருந்தும் பெற்றுத் தனியொரு மொழியாகத் தோன்றியதை அறியமுடிகிறது. அதே போல் வடமொழி மற்றும் ஆதிஒஸ்ரிக் மொழிகளில் இருந்தும் தமிழ் மொழி பல சொற்களைக் கடன்வாங்கியுள்ளன. இங்கிலையில் பண்டைய காலத்தில்
105

Page 62
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
புழக்கத்திலிருந்த பிராமிக் கல்வெட்டுக்களைச் சிங்களப் பிராமி என அழைப்பது எந்த நிலையிலும் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாறாகத் தமிழகப் பிராமி போல் தமிழுக்கே சிறப்பான எழுத்துக்களையும், சங்க இலக்கியத்திலிருந்து அறியப்படும் பல தமிழ்ச் சொற்களையும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் கொண்டிருப்பதனால் இவற்றைத் தமிழ், பிராகிருத மொழிக்குரிய பிராமிக் கல்வெட்டுக்கள் அல்லது இலங்கைக்கேயுரிய பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
இலங்கையில் வடபிராமி அல்லது அசோக பிராமி பயன்படுத்தப்பட்டமைக்கு பெளத்த மததத்தின் பரவலும் அதன் குறுகிய கால வளர்ச்சியும் முக்கிய காரணங்களாகும். பிராகிருதம் பெளத்த மதத்தின் மொழியாக இருந்ததால் அம்மொழிச் சொற்களை எழுத வடபிராமியே தேவைப்பட்டன. இதைத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் கூடக் காணமுடிகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் பிராகிருத மொழியை எழுத தமிழ்ப் பிராமி முக்கிய தேவையாக இருந்திருக்காது. அப்படியிருந்தும் பிராமியின் தோற்ற காலத்திலிருந்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் வடபிராமியும், தமிழ்ப் பிராமியும் கலந்து எழுதப்பட்டமை வடபிராமிக்கு முன்பாகவே தமிழ்ப் பிராமி பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் காலப்போக்கில் வடபிராமியின் செல்வாக்கால் தமிழ்ப் பிராமி படிப்படியாக மறைந்ததெனக் கூறுவது கல்வெட்டு மொழிக்கும், எழுத்துக்கும் இடையேயுள்ள தொடர்பின் பின்னணியில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலங்கையில் இதுவரை கிடைத்த அனைத்துக் குகைப்பிராமிக் கல்வெட்டுக்களும் பெளத்த மதம் சம்பந்தமான செய்திகளையே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இதனால் அம்மத மொழியான பிராகிருதத்தை எழுத வடபிராமியையே பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் பிராகிருத மொழியோடு தமிழும் கலக்க நேரிட்டதால் வடபிராமியுடன் தமிழ் பிராமியும் பயன்படுத்த நேரிட்டது. காலப்போக்கில் வடபிராமிக்குப் பழக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பிராமியின் தேவை குறைந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் இலங்கையில் பிராமிக் கல்வெட்டுக்கள் பயன்பாட்டிலிருந்த கி.மு.3க்கும் கி.பி. 5-6ஆம் நுாற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டக் கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் எல்லாத் தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் முக்கியத்துவமும் குறைந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக
106

பரமு புஷ்பரட்ணம்
தமிழுக்கேயுரிய "ள" என்ற எழுத்து பிராமிக் கல்வெட்டுக்கள் பயன்பாட்டிலிருந்த காலம் வரை தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டதைக் sm 600Taomið (Karunaratne 1984:Fig.43). 9)gleó sms001&& lau இன்னொரு சிறப்பு தொடக்க காலத்தில் வடபிராமி கொண்டு எழுதப்பட்ட சில சொற்கள் பிற்காலக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமி கொண்டு எழுதப்பட்டதாகும். இதற்கு உதாரணமாக ஆரம்ப காலத்தில் அடி, கடி என எழுதப்பட்ட சொற்கள் பிற்காலத்தில் தமிழ்ப் பிராமியில் அளி, களி என எழுதப்பட்டதைக் குறிப்பிடலாம் (Paramavithana1970XXV). அதே வேளை பெளத்த மதத்துடன் அறிமுகமான வடபிராமி எழுத்துக்கள் அனைத்தும் தொடர்ந்தும் அதே முக்கியத்துவத்தை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பெற்றதாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தொடக்க asmradéš ascòGNaJŮGB&šasaíflað QJ5b "Lumt" (pha), L(dha), "gör" (tha),"eFrr" (cha),"கா" (gha) போன்ற எழுத்துக்கள் பிற்காலக் கல்வெட்டுக்களில் மறைந்து போவதைக் காணலாம் (Karunaratne 1984:Fig.1-23). இதற்கு இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழியின் கால மாற்றத்திற்கு ஏற்ப சில எழுத்துக்கள் முக்கியத்துவம் பெற்றும், பெறாமலும் போனமை காரணமாக இருக்கலாம்.
தமிழ்ப் பிராமியில் வடபிராமிக்குப் பொதுவான பல எழுத்துக்கள் காணப்பட்டாலும் அவற்றுள் பல எழுத்துக்களின் வடிவமைப்பு அசோக பிராமியில் இருந்து வேறுபபட்டதாக உள்ளன. இலங்கைப்பிராமிக் கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை அவற்றின் வடிவமைப்பு வடபிராமியைவிட தமிழ்ப் பிராமி எழுத்துக்களையே பெரிதும் ஒத்திருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவ்வொற்றுமை பிராமிக் கல்வெட்டுக்கள் புழக்கத்திலிருந்த காலம் வரை தொடர்ந்திருந்ததைக் காணமுடிகிறது. குறிப்பாகத் தமிழில் "மா" என்ற ஒலிப்பெறுமானத்தைக் கொடுக்கும் எழுத்து தமிழ்ப்பிராமியில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருந்தது. இதே ஒலிப்பெறுமானத்திற்குரிய வடபிராமி வடிவம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பிராமிக்குரிய வடிவமே பெரும்பாலும் பயன்பாட்டிலிருந்ததை அவதானிக்க முடிகிறது. அதே போல கெடில், குறில் என்பவற்றைக் குறிக்கும் கோடுகளின் வடிவமைப்பு இலங்கை தமிழகப் பிராமியில் ஒரே தன்மை கொண்டதாக தொடர்ந்தும் இருந்ததை அவதானிக்கமுடிகிறது.
தமிழ்ப் பிராமி தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்ததென்பதற்கு காட்டக்கூடிய இன்னொரு முக்கிய சான்று தொடக்ககாலக் கல்வெட்டுக்களில் வடபிராமியில் எழுதப்பட்ட சொற்கள், பெயர்கள் பிற்காலக்
107

Page 63
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டிருப்பதாகும். இதற்கு நாஹ, நஹர, விஹார, ஸிவ, பூஜா, ராஜா போன்ற பெயர்கள் பிற்காலக் கல்வெட்டுக்களில் நாக, நகர், விகார(ரை), சிவ, பூசா ராசன், றாசா என எழுதப்பட்டுள்ளதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவற்றில் வடமொழிக் "ஹ" "ஸி", "ஜா" போன்ற எழுத்துக்களுக்குப் பதிலாக தமிழ்க் "க" "சி", "ற" "ச" போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கன. பெளத்த துறவிகள் வாழ்ந்த குகைகள் பொதுவாக லெனே என்ற பிராகிருதச் சொல்லாலேயே அழைக்கப்பட்டன. ஆனால் பிற்காலப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் வருவது போல் பள்ளி என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் தமிழ் கல்வெட்டு மொழியாக இருந்த போதும் சில வடமொழிப் பெயர்களை எழுத வடபிராமி எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாங்குளக் கல்வெட்டில் வரும் ஆஸிரிய என்ற பெயரை உதாரணமாக எடுத்துக்காட்டலாம் (Mahadevan 1966:No.i). ஆனால் இதே பெயர் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் ஆசிரிய என தமிழ் மயப்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது (I.C.1970.Nos.991, 925). தொடக்ககாலத்தில் பிராகிருத மொழிக்குரிய சொற்களை எழுத வடபிராமியைப் பயன்படுத்தியவர்கள் அவ்வெழுத்து சமகாலத்தில் பயன்பாட்டிலிருந்தும் காலப்போக்கில் வடபிராமிக்குப் பதிலாக தமிழ்ப் பிராமிக்கு பொதுவான எழுத்துக்களால் அச்சொற்களை எழுதியுள்ளமை மக்களிடையே தமிழ் மொழியும், தமிழ் எழுத்தும் பயன்பாட்டிலிருந்ததே காரணம் எனலாம். இதற்குத் திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்த வெல்கம் விகாரைக் கல்வெட்டும், வடஇலங்கையில் கிடைத்த கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குரிய வல்லிபுர பொற்சாகனமும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழியைப் பழைய சிங்களம் எனக்கூறிய பரணவிதானா (1983:112) பிற்காலப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமிக்குரிய எழுத்துக்கள் கொண்டு வடமொழிச் சொற்கள் எழுதப்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு அக்கல்வெட்டுக்களை தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் எழுதியதே காரணம் என விளக்கம் கொடுத்துள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இச்சான்றுகள் வடபிராமியின் செல்வாக்கால் தமிழ்ப் பிராமி படிப்படியாக மறைந்ததெனக் கூறும் கருத்துக்கு ஏற்புடையதாக இல்லை.
108

பரமு புஷ்பரட்ணம்
உசாத்துணை நூல்கள்
அகநானூறு, 1974, பெருமழைப்புலவர் உரை, கழகப்பதிப்பு, சென்னை, மூன்றாம் பதிப்பு.
சங்கஇலக்கியம்,1967, (இரண்டுதொகுதிகள்), வையாபுரிப் பிள்ளை,எஸ். (ப.ஆ), பாரிகிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு.
பல்லவ செப்பேடுகள் முப்பது, 1999, உலகத் தமிழாராச்சி நிறுவன
ിഖിu്.
இந்திரபாலா, கா., 1972, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் கண்டி,
இந்திரபாலா, கா., 1969, யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை, தொகுதி.2, இதழ்.4. பேராதனை.
இராசகோபால், சு. 1991, இலங்கை, தமிழக பிராமி எழுத்துக்கள்ஒர் ஒப்பாய்வு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த சாசனவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை:1-12.
இராசகோபால், சு. 1991, தமிழ்-பிராமி கல்வெட்டுக்களில் குறியீடுகள்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த சாசனவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை :1-8.
இராசவேலு, சு., 1995, நெகனூர்பட்டி தமிழ் பிராமிக் கல்வெட்டு, சித்தன்னவாசல் களஆய்வு, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 67-12.
இராசவேலு, சு. 1999, பூம்புகாரில் சிங்களப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டத்துண்டு, ஆவணம், 9:154.
109

Page 64
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
இராசு, செ. 1995, வெளிநாட்டில் புதிய தமிழ்க் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பண்பாடு, சென்னை:22-28.
இராஜன், கா., 1994, கொடுமணலி அகழாய்வு ஒர் அறிமுகம், மனோபதிப்பகம், தஞ்சாவூர்.
இராஜன், கா., 1998, குறியீடுகளும் எழுத்துக்களும், வரலாற்றுக் கலம்பகம், பேராசிரியர் இராசு அவர்களின் மணிவிழா ஆய்வுக்கோவை: 1-11.
கிருஷ்ணராசா, செ., 1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொண்மையும், பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம்.
சிவசாமி, வி., 1998, தமிழும் தமிழரும், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
சிற்றம்பலம், சி.க., 1993, யாழ்ப்பாணம் தொண்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
சிற்றம்பலம், சி.க., 1996, ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம் 1, கி. பி. 500 வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, கொழும்பு.
சிற்றம்பலம், சி.க. 2000. பண்டைய ஈழத்தில் தமிழர்-ஒரு பன்முகப் பார்வை, பேராசிரியர் சுவித்தியானந்தன் நினைவுப் பேருரை 16.10. 2000, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
சீதாராமன், ஆறுமுக, 1994,தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக் காலக் கண்டு பிடிப்புகள், தொகுதி-1. தனலஜ்ெமி பதிப்பகம், தஞ்சாவூர்.
சீதாராமன், ஆறுமுக, 1996அ, தென்னிந்தியக் காசுகள் புதிய கண்டுபிடிப்புகள், வரலாறு ஆய்விதழ் 6:89-8, சுசீந்திரராஜா, சு. 1999, தமிழ் மொழியியற் சிந்தனைகள், (ப.ஆ), இராசாராம், சு. சுபதினி, ஆர், ரிசுடிபம் பதிப்பகம், சென்னை.
சுப்பராயலு, எ. 1983, பொருளியலும் வணிகமும், தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம் - வாழ்வியல், தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை:146-156. சுப்பராயலு, எ., 1991, கல்வெட்டுக்களும் வரலாறும், தமிழ்கலிவெட்டியலும், வரலாறும்,(ப.ஆ),சுப்பராயலு, எ. இராசு, செ. கல்வெட்டியல்துறை தமிழ்ப் பல்கலைக் கழகம், தட்டச்சுப் பிரதி. 41-48.
110

பரமு புஷ்பரட்ணம்
சுப்பராயலு, எ. சண்முகம், ப, 1998, இல கையில் ஐந்நூற்றுவர் கல்வெட்டுகள், ஆவணம், 9:32-34.
சுப்பராயலு, எ. சண்முகம், ப, 1999, அநுராதபுரத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு, ஆவணம், 10:11-13.
நாச்சிமுத்து, கி., 1983, தமிழ் இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில்.
பகவதி, கு, 1991, தமிழகம்-இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
பத்மநாதன், சி. 1972, தமிழ்ச் சாசனங்களும் ஈழ வரலாற்றாராய்ச்சியும், இளங்தென்றல் கொழும்பு.
பத்மநாதன், சி. 1984, இலங்கையில் தமிழ் வணிக கண்களும் நகரங்களும் (கி.பி.1000.1200), சிந்தனை, தொகுதி. 2. யாழ்ப்பாணம்.
பத்மநாதன், சி. 1998, (ப.ஆ), தக்கூடிணகைலாச புராணம், இலங்கை இந்து கலாசாரத் திணைக்கள வெளியீடு. கொழும்பு.
பத்மநாதன், சி. 2000, இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி-1, இந்து சமய பண்பாட்ட அலுவல்கள் திணைக்களம், கொழும்பு. பாலசுந்தரம், சி. 1988, இலங்கை இடப்பெயர் ஆய்வு காங்கேசன்
கல்வி வட்டாரம், அப்புத்துரை மணிவிழா வெளியீடு, யாழ்ப்பாணம்.
புஷ்பரட்ணம், ப. 1993, பூநகரி-தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
புஷபரட்ணம், ப. 1998, பூநகரியில் கிடைத்த அரிய சங்ககால நாணயங்கள், ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 9:114-119.
புஷ்பரட்ணம், ப. 1998, அண்மையில் வடஇலங்கையில் கிடைத்த லசுஷ்மி நாணய்கள் ஒரு மீள் பரிசீலனை, ஒன்பதாவது தமிழக தொல்லியல்கழக ஆய்வரங்கு புதுக்கோட்டை. 1-12.
புஷபரட்ணம், ப. 1999, தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ்
நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி, நாவாவின் ஆராய்ச்சி, ஜூலை 49 55-70,
111

Page 65
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
புவிபரட்ணம், ப. 1999அ, வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள்மீள்பரிசீலனை, தொல்லியல் நோக்கில் தமிழகம், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, சென்னை:51-60.
புஷபரட்ணம், ப., 2000, இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் மருமகனைக் குறிக்கும் உறவுப் பெயர்கள்- கல்வெட்டு மொழி பற்றிய ஒரு பார்வை, பதினோராவது தமிழகத் தொல்லியல் கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. புஷபரட்ணம், ப. 2000அ, தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன்பப்ளிஷர்ஸ், சென்னை.
புஷ்பரட்ணம், ப, 2001, இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம், புத்துார், யாழ்ப்பாணம்.
பூங்குன்றன், ஆர்., 1999, பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம், முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
மகாதேவன், ஐ., 1998, எடக்கல் குகைக் கல்வெட்டுக்கள், ஆவணம், தமிழக் தொல்லியல் கழகம், தஞ்சாவூர். 9: 20-29.
மகாதேவன், ஐ., 2000, தென்னிலகையில் பழந்தமிழ் நாணயங்கள், ஆவணம், 11:16-120.
வேங்கடசாமி, மயிலை. சீனி, 1983, இலங்கையில் தமிழர், தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் அரசியல் தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை: 592 -639.
வேலுப்பிள்ளை, ஆ, 1986, தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம். YA
Begley, Vimala., 1973, Proto historic Material from Sri Lanka Ceylon) and Indian Contacts in Ecological Background of South Asian Prehistory, E.dll, Kennedy, A.R. and Possehl, L., South Asian Occasional Papers and Thesis, South Asian Program, Cornell University: 190-196.
112

பரமு புஷ்பரட்ணம்
Begley, Vimala., 1996, The Ancient Port of Arikamedu, I New Excavation and Researches 1989-1992), De Ecole Francaise D'extreme - Orient, Pondicherry, 1. Co-Cooperation in Sri Lanka
Bopearachchi, O., 1998, Archaeological Evidence on Changing Patterns of International Trade Relation of Ancient Sri Lankain Origin and Circulation of Foreign Coins in the Indian Ocean, e.d), Bopearachchi, O. and Weerakkody, D.P.M., Sri Lanka Society for Numismatic Studies and French Mission of Archaeological Cooperation in Sri Lanka, New Delhi.
Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhuna an Ancient Civilization Revisited, Nugegoda.
Burrow, T. and Emeneau, M.B., 1961, Dravidian Etymological Dictionary, Oxford.
Burrow, T. 1968, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, Annamalai Nagar.
Caldwell, R. 1981, A Comparative Grammar of the Dravidian Languages, Gian Publicalion, Delhi.
Carswell, John. and Martha, Prickett., 1984, Mantai 1980: A Preliminary Investigation in Ancient Ceylon, Journal of the Archaeological Survey Department of Sri Lanka, 5:3-68.
Champakalakshmi, R., 1975, Archaeology and Tamil Literary Tradition in Puratattva,8:110-122.
Conningham,R.A.E., 1999, Passage to India-Anuradhapura and the Early Use of the Brahmi Script in Cambridge Archaeological journal, 61):73-97.
Culavamsa, 1953, Geiger. W. e.d), Ceylon Government Information Department, Colombo.
Deraniyagala, P.E.P., 1979, Some Features of Especial Interestin the Skeleton and Culture of Ceylon's Extinct Stone Age Human Homo-Sapiens Balangodensis in Ancient Ceylon, Journal of the 'Archaeological Survey Department of Sri Lanka,3:45-66.
113

Page 66
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
Deraniyagala, S.U., 1971, Pre Historic Ceylon A Summary in 1965 in Ancient Ceylon Journal of the Archaeological Survey of Ceylon, 1:3-47.
Deraniyagala, S.U., 1972, The Citadel of Anuradhapura 1965:
Excavation in Gedige Anuradhapura in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Ceylon, 2:48-169.
Deraniyagala, S.U., 1972, Bellan-Bandi Palassa 1970: A Mesolithic Burial Site in Ceylon in Ancient Ceylon, Journal of the Achaeological Survey of Ceylon: 18-47.
Deraniyagala, S.U., 1984, Sri Lanka 28000 B.C. in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 5:105-108.
Deraniyagala, S.U., 1985, The Pre History of Sri Lanka An Outline in Festschrift1985 James Thevathasan Ratnam Felicitation Volume, E.d), Amarasinghe, A.R.B. and Sumanasegara Banda, S.J., Ratmalana: 14-12.
Deraniyagala, S.U., 1990a, The Pre History Chronology of Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Ceylon, 612:211-250.
Deraniyagala, S.U., 1990b, The Proto and Early Historic Radio Carbon Chronology of Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 612:251-292.
Dipavamsa, 1959, Bimala Churn Law.e.d), The Ceylon Historical Journal Vol. III No. 1-4.
Fernando, P.E.E., 1949, Paleographical Development of the Brahmi Scriptin Ceylon from 3rd Century B.C. to 7th Century A.D. in University of Ceylon Review, Colombo, III: 282-301.
Goonetilleke, S.1980, Sinhalisation-The Origin in Lanka Guardian,3(1):22-29.
Ellawala.H., 1969, Social History of Early Ceylon, The Department of Cultural Affairs, Ceylon, Colombo.
114

பரமு புஷ்பரட்ணம்
Elman, R., 1975, Origins of the State and Civilization, W.W.Northern and Company, New York.
George, K.M., 1986, Place Names of Southern India, Dravidian Linguistics Association, Trivandrum. N
Gnanaprakasar, Rev. S., 1952, Ceylon Originally a Land of Dravidians in Tamil Culture, 11:27-35.
Gunawardhana,W.F., 1973, Sinhalaya Vaguidya Muladharma, Colombo.
Kennedy, K.A.R., 1980. Antiquity of Human Settlement in Sri Lanka in P.E.P. Deraniyagala Felicitation Volume, E.d), Thelma Gunawardane, Colombo.
Hultzsch, F., 1969, Inscriptions of Asoka in Corpus Inscriptionum Indicarum, Delhi,1.
Indrapala, K., 1969, Early Tapril Settlements in Ceylon in Journal of Royal Asiatic Society of Ceylon Branch, XIII: 43-61.
Indrapala, K., 1971, A Cola Inscription from the Jaffna Fortin Epigraphia Tamilica, Jaffna Archaeological Society, Jaffna,11): 52-56.
Kasinathan, Natana., 1996, Archaic Tamil Inscription from Excavation in Kalvettu, Tamil Nadu Archaeological Department, 48: 27-35.
Kannangara, K.T., 1984, Jaffna and the Sinha Heritage, Colombo.
Karunaratne, S.M., 1960, Brahmi Inscriptions of Ceylon in Unpublished Ph.D Thesis, University of Cambridge, Cambridge.
Kennedy, K.A.R., 1980. Antiquity of Human Settlement in Sri Lanka in P.E.P. Deraniyagala Felicitation Volume, E.d), Thelma Gunawardane, Colombo.
Krishnamurthy, R., 1997, Sangam Age Tamil Coins, Garnet Publications, Madras.
115

Page 67
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
Kularatnam, K. 1968, Tamil place names in Ceylon outside the Northern and Eastern Provinces in First World Tamil conference: 485-508.
Lewis, J. R., 1917, Manual of Place Names of Vanni, Colombo
Mahadevan, I., 1966, Corpus of the Tamil-Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology Government of Tamil Nadu, Madras.
Mahadevan, I., 1994, Recent Epigraphical Evidence for Ancient Tamil Contacts Abroad in Rev, Fr. Thaninayagam Memorial Lecture, Thaninayagam Foundation Trust, Colombo, :1-26.
Mahadevan, I., 1994a, Old Sinhalese Inscriptions from Indian Ports: New Evidence for Ancient India- Sri Lanka Contacts, Paper Presented at the Post-Graduate Institute of Archaeology, Colombo,:1-19.
Mahadevan, I., 1995, Recent Trends in Early Tamil Epigraphy: An Overviewin Journal of the Institute of Asian Studies, XIII.1):1- 31.
Mahadevan, I., 1996 Pottery Inscriptions in Brahmi and Tamil Brahmiin The Ancient Port of Arikamedu,(e.d.) Begley, Vimala., New Excavation and Researches1989-1992), De Ecole Francaise D'extreme -Orient, Pondicherry, 1. Co-Cooperation in Sri Lanka:287-315.
Mahadevan, I., 2000, Ancient Tamil CoinsFrom Sri Lanka in the Journal of the Institute of Asian Studies, Madras,XVII(2):147-156.
Mahalingam, T.V., 1967, Early South Indian Paleography, University of Madras.
Mahalingam, T.V., 1988, Inscriptions of Pallava, Indians Council of Historical Research New Delhi.
Mahavamsa, 1950, (e.d)Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.
116

பரமு புஷ்பரட்ணம்
Maloney,C., 1969, The Paratavar:2000 Years of Culture Dynam..ics of a Tamil Castin Man in India, 49:1:224-240.
Malini Dias. 1983, Epigraphical Notes-19, DepartmentofArchaeological, Colombo.
Nedumaran, S.D. and Ramachandran, S., 1999, The Velirs: Were the Velalas in journal of the Epigraphical Society, The Epigraphical Society of India, Mysore,XXV:139-152.
Nicholas, C.W., 1963, Historical Topography of Ancient and Medieval Ceylon in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo,VI.
Panneerselvam, R. 1969, Further Light on the Bilingual Coin of the SATAVAHANA in Indo Dravidian Journal, 11(4):281-288.
Panneerselvam, R. 1972, Critical Stuudy of the Tamil Brahmi Inscriptions in Actaoriantalic,XXXIV:163-1971.
Paranavitana, S., 1928, Anuradhapura: Slab-Inscription of Khudda Parinda in Epigraphia Zeylanica, The Archaeological Department of Ceylon, III: 111 -114.
Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo,
Paranavitana, S., 1983, Inscription of Ceylon : Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa, II[1].
Parkar, H., 1981, Ancient Ceylon, Asian Educational Services, New Delhi.
Pathmanathan, S., 1978, The Kingdom of Jaffna, Arul M.Rajendran, Colombo.
Pathmanathan, S., 1999,(e.d), Temples of Siva in Sri Lanka, (A collections of research articles on the History of 12 ancient Siva Temples of Sri Lanka) Chinmaya Mission of Srilanka.
117

Page 68
பண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
Pillai, K.K., 1968, Ariyan influence in Tamilaham during the Sangam epoch. First World Tamil conference: 271-279.
Pushparatnam, P. 2000, Tamil Brahmi Graffiti from Northern Sri Lanka in Studies in Indian Epigraphy. XXVI:57-62.
Pushparatnam, P. 2000a, Tamil Coins from Southern Sri LankaA Historical perspective in Madras Coin X, Madras.VII:1-12.
Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna: An Archaeological Survey, Mrs.Thillimalar Ragupathy, Madras.
Ragupathy, P., 1991, The Language of the Early Brahmi Inscription in Sri Lanka, Unpublished).
Rajan, K., 1994, Archaeology of Tamil Nadu:(Kongu Country), Book India Publishing Co,Delhi.
Rajan, K., 1997, Archaeological Gazetteer of Tamil Nadu, Manoo Pathippakam, Thanjavur.
Ramchandramurthy, S.S., 1985, A Study of the Telungu Place Names, Agamkala Prakasan, Delhi.
Ramachandran, K.S., 1969, Megalithic Rock Cut Caves and Their Parallels Outside India in Seminar Paper on the Problem of Megalithic in India, Memoirs of the Department of Ancient Indian History Culture and Archaeology, Banaras Hindu University Varanasi, 3:59-65.
Ramesh, K.V., 1990, India and Sri Lanka Epigraphy-AComparative Study in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, I[7]:179-84.
Samuel Livingstone,. (N.d.) The Sinhalese of Ceylon and The Aryan Theory: Letters of A Tamil Father to His Son.
Seneviratne, S., 1984, The Archaeology of the Megalithic-Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 5:237-307.
\
118

பரமு புஷ்பரட்ணம்
Seneviratne, S., 1985, The Baratas: A Case of Community Integration in Early Historic Sri Lanka in Festschrift 1985 James Thevathasan Ratnam, e.d), Amerasinghe, A.R.B., Colombo: 49-56.
Seneviratne, S., 1993, From Kudi to Nadu: A Suggested Framework for Study pre State political Formations in Early Iron Age South India in The Sri Lanka Journal of the Humanities, XIX [1&2]:57-77,
Seyon, K.N.V. 1998, Some Old Coins Found in Early Ceylon, Nawala. Sri Lanka.
Sivasamy, V., 1985, Some Aspects of Early South Asian Epigraphy, Thirunelvely.
Somasekhara Sarma, M. 1974, Some Prakrit Inscriptions From Ghantasala in Epigraphia Andhrica, III: 1-3.
Srinivasan, K.R., 1946, The Megalithic Burial and Urn Field of South India in the Light of Tamil Literature and Tradition in Ancient India, 2:9-6.
Sitrampalam, S.K., 1980, The Megalithic Culture of Sri Lanka in Unpublished Ph.D. Thesis Deccan College, University of Poona, POona.
Sitrampalam, S.K., 1993, The Parumakas of the Sri Lankan Brahmi Inscriptions in Kalvettu Tamil Nadu Archaeological Department, 29:19-28.
Sivathamby, K., 1998, Studies in Ancient Tamil Society, New Century Book House, Chennai.
South Indian Inscription, 1986, Vol.-261 Archaeological Survey of India, New Delhi.
Subbarayalu,Y., 1973, Political Geography of the Chola Country, Published by the State Department of Archaeology, Government of Tamil Nadu.
119

Page 69
Subbarayalu.Y., 1982, The Cola 265-3O6.
Subbarayalu, Y. and Vethasalar Place-Names in Early Pandya In ceedings of the Thirteenth All In guists, E.d), Rangan, K., Tamil
Subbarayalu,Y., 1991, Koduman lished Interim Report),Tamil U.
Subbarayalu, Y., Brahmi Graffiti Excavation (unpublished article
Thapar, Romila..., 1984, From Li Press, New Delhi.
Thapar, Romila., 1995, e.dll, F dian History, Popular Prakasha
Theva Rajan, A. 1996, Sri Lar Toponymy. To be plblished in Mysore.
Veluppillai, A., 1980, Tamil Infl Special Reference to Early Brahm Studies, 17:63-77.
Veluppillai, A., 198Oa, Tamil Inf Special Reference to Early Brahm Studies, 18:6 -19.
Veluppillai, A., 198Ob, Epigrap ies, Publisher International Inst
Veluppillai, A., 1981, Tamil in Al Studies, 19:1-14.
Zeuner, F.E., and fn, E. Tinnavelly Distri,Madras Stat
Zvelebil,V.Kamsi, 1397, Dravid Pondicherry Iristiateiddiffith guys
1.

1ண்டைய இலங்கையில் தமிழும். தமிழரும்
State in Studies in History. IV(2):
l, V., 1986, A Historical Study of criptions[C.A.700 to 950), in Prodia Conference of Dravidian LinUniversity, Thanjavur:137-142.
l, Excavation 1985-1990 unpubhiversity, Thanjavur.
Ol Potsherds From Kodumanal
).
neage to State, Oxford University
Recent Perspectives af Early Inn, Bombay.
ka and South- A Comparative Studies in Indian place names,
uence in Ancient Sri Lanka with i Inscriptions in Journal of Tamil
luence in Ancient Sri Lanka with iInscriptions in Journal of Tamil
hical Evidences for Tamil Studtute of Tamil Studies Madras.
ncient Jaffna in Journal of Tamil
The Microlithic Sites of 2 invent India, 12:4-20.
an Ingstics An Introduction, S Dulture, Pondicherry.
O

Page 70
:பணர்டைய இல
வரலாற்றுப் பின்புலத் இருபதாம் நூற்றார்டின 5. இலங்கையில்
屿 இலங்கை 5ነiûዝ
இலக்கிய தேட்ட 2 இலக்கிய தேட்டம் 16
இயக்கிய தே பத்திரி 25 தமிழக இலக்கிய
 

தமிழர் யார்? எவர்? கையில் தமிழும் தமிழரும் தில் ஆங்கில ஆட்சிக்காலம் வரை ஒருமுகப்பாட்டு அரசினி ஒர் gaania, தமிழரும் முஸ்லிம்களும்
சு ஒழுங்கமைப்பு
தமிழரின் அரசியலை
சட்ட மரபுகள் வாழ்வியல் E SIDS
தியும் வழக்குக்கு
மங்களுடனான ஊடாட்டம்
5. SSG சைவசித்தந்த விளக்க மரபு னந்த் வழிபாடுகள் மன் கத்தோலிக்கம்
தந்து திருச்சபை கிறிஸ்தவ இயக்கங்கள்
18ம் நூற்றாண்டுக்கு முன் நூற்றாண்டின் மரபுவழி இலக்கியங்கள் ட நவீன இலக்கியங்கள்
TISTINI YA 854 - D -