கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுதாராஜின் சிறுகதைகள்

Page 1


Page 2

சுதாராஜின் சிறுகதைகள்
1970 களில் எழுத்துத் துறைக்கு வந்தவர் சுதாராஜ். முதற்சிறுகதை ‘இனி வருமோ உறக்கம்?
"பலாத்காரம் (1977), “கொடுத்தல்' (1983) ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்’ (1989) ‘தெரியாத பக்கங்கள்’ (1997) என்ற சிறுகதைத் தொகுதிகளும், இளமைக்கோலங்கள்’ (1981) நாவலும் வெளியாகியுள்ள இவரது படைப்புகள். இப்போது குழந்தை இலக்கியத்துறையிலும் வந்துள்ளார்.
பொறியியலாளரான இவர் ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிரிஸ், யெமன், இந்தோனேஷியா, எகிப்து, இலங்கை, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் பணியாற்றிவர்.
இலங்கை சாகித்ய மண்டலம், யாழ், இலக்கிய வட்டம், ஆனந்த விகடன் வைரவிழாப் போட்டி முதல் பரிசு, உட்பட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப் பட்டு ‘காட்ட தொஸ்பல றமுத' (யாரோடுநோவோம்?) என்ற தொகுதியாக வெளியாகியுள்ளன. ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
சுதாராஜின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன.
தேனுகா வெளியீடு

Page 3
தேனுகா வெளியீடு - 2
சுதாராஜின் சிறுகதைகள்
தொகுப்பு: செ.யோகநாதன்
தேனுகா பதிப்பகம்
58/3, அனுராதபுரம் வீதி, புத்தளம்.
தொலைபேசி : 032 88965
தொலைநகல் : 032 86875
முதற்பதிப்பு: 2000
அச்சுப்பதிப்பு: ஏ.ஜே.பிரிண்ட்ஸ், தெகிவலை.
விலை ரூபா இருநூறு
 

சுதாராஜின் சிறுகதைகள்
தொகுத்தவர்: செ.யோகநாதன்

Page 4

பதிப்புரை
தமிழ்ப் பதிப்புத் துறையில் பல உச்சங்களைத் தொட வேண்டுமென்ற பேராசையின் விளைவாகவே தேனுகா பதிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தின் பல்துறைகளிலும், குறிப்பாக குழந்தை இலக்கியத்திலும் தரமான படைப்புகளை உருவாக்கவும், வெளியிடவும் எமது பதிப்பகம் திட்ட மிட்டுள்ளது.
இத்துறைசார்ந்த பேர்பெற்ற படைப்பாளிகளின் ஆக்கங்களோடு, இளந்தலைமுறையின் படைப்புகளையும் உலகின் சிறந்த மொழி பெயர்ப்பு இலக்கியங்களையும் வெளியிட நாம் எண்ணியுள்ளோம்.
எமது முயற்சிகள் பற்றிய வாசகர், படைப்பாளர் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் அறிய நாம் ஆவலோடு உள்ளோம். எழுதுங்கள்.
அன்புடன், சுதாராஜ் பதிப்பாளர் 2000

Page 5
சுதாராஜ் என்ற படைப்பாளி
நான் மிகவும் விரும்பிப் படிக்கின்ற படைப்பாளிகளில் ஒருவராக சுதாராஜூம் இருக்கின்றார். அண்மையில் அவர் எழுதியுள்ள ஆக்கங்களை முழுமையாகப் படிக்க நேர்ந்தது. நூல் வடிவம் பெறாத கதைகளும், நூல் வடிவம் பெற்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளுமாகச் சேர்ந்து ஆயிரத்தி ஐந்நூறு பக்கங்கள் வரும். இந்தப் பக்கங்களை முழுமையாகப் படித்து முடிந்ததும் மிகுந்த பிரமிப்பும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான "இளமைக் கோலங்கள்’ நாவலும் இந்தப் பக்கங்களுடன் அடங்கும்.
சுதாராஜ் வாழ்வினை மிகப் பரிவோடு பார்க்கின்றவர் என்பது முக்கியமான விஷயம். இதனால் அவர் எழுத்தில் வரும் எவருமே இயல்பான, நேசிப்புக்குரிய மனிதராக இருக்கிறார்கள். நம்மோடு பழகிச் செல்கின்ற இயல்புடை யோராக அவர்களை நாம் தரிசிக்கின்றோம். இவர்கள் மிக யதார்த்தமாக எம்மோடு அறிமுகமாகிறார்கள். இயற்கையையும் சூழலையும், உயிரினங்களையும் நேசிக்கின்ற கலைஞனும், சுதாராஜினிடம் செறிந்திருக்கிறான். இந்த விதமான முழுமையையே சுதாராஜ் என்ற படைப்பாளியின் ஆளுமையாக அவரது கதைகள் நமக்கு கம்பீரத்தோடு அறிமுகம் செய்கின்றன. அவரின் அண்மைக்காலக் கதைகள் நமது துயர்களையெல்லாம் பதிவு செய்ததோடு நில்லாமல், ஆதாரமான நம்பிக்கை வெளிச்சத்தையும் கீற்றுச் சுடரொளியாகப் பெருக்குகின்றன.
சுதாராஜின் நடை வசீகரமானது. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானதால் எழுத்திலே இந்த ஒளியும், வசீகரமும் உண்டாயிற்று, சிரித்திரன் சுந்தரே இப்படி வியந்தார் சுதாராஜின் எழுத்துக்குறித்து: “ஒவியத்தில் துடிப்பில்லா இடங்களை'Dead Spots' என்று கூறுவார்கள். சிறுகதை நாவலிலும் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி ஆளப்படாத நிலையில் இந்த மையப் புள்ளி ஏற்படலாம். சுதாராஜின் கதைகள் புழுதிச் சொற்களால்

புனையப்பட்டவை. ‘பாரதியின் கவிதைகள் வாழும் சொற்களால் வடிக்கப்பட்டவை. ஒரு சொல்லை வெட்டினும் குருதி கொப்புளிக்கும்', என்கிறார் மகுடியார். சுதாராஜின் படைப்பிற்கு இந்தப் பெருமை உண்டு” இந்த மதிப்பீடு சத்தியமானது.
சுதாராஜை படித்து வியக் கின்ற போதே பல படைப்பாளிகள் நினைவில் வருவார்கள். இலியா எக்ரன் பேர்க், மேரி ஆன் காதரின் போர்ட்டர், நதீன் கோதிமர், அருந்ததிராய், கு.அழகிரிசாமி, ஆர் . சூடாமணி என்ற தலைசிறந்த படைப்பாளிகள் நினைவில் வருவதற்கு, சுதாராஜின் எழுத்தும் இவர்கள் தொட்ட தளங்களை. கலாபூர்வமாக உணர்வு பூர்வமாக தொட்டு படைப்பாக்கி யுள்ளமையே ஆதார சுருதியான காரணம். இவர்களைப் போன்ற தனித்துவமும் ஆளுமையும் சுதாராஜின் படைப்புலகின் ஆணிவேரென்று உறுதியோடு கூறலாம்.
ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் திறனாய்வுப் போக்கு, வரண்ட பாலை வனம் போலாகிவிட்டது. படிக்காமலும், தேடலின்றியும் எழுதும் திறனாய்வுகள் என்ற மாரீசர்கள், ஆசனங்களில் உட்கார்ந்துள்ள அவல நிலையைப் போக்க வேண்டியுள்ளது.
சுதாராஜ் என்ற சிறந்த கலைஞனின் எனக்குப் பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுதி ஆக்கியுள்ளேன். தமிழ் கூறும் நல்லுலகு முழுவதும் இந்தப் படைப்பாளியை முழுமையாக அறிய வேண்டுமென்ற அவாவே, ஆசையே என்னை இந்த முயற்சியில் இறக்கிற்று. .در ۹ س
இந்தத் தொகுதியை அழகாக வெளியிடுகின்ற தேனுகா பதிப்பகத்திற்கு என் அன்பும் பாராட்டுகளும்.
செ.யோகநாதன் 2000

Page 6
தேனுகா பதிப்பக வெளியீடுகள்
சுதாராஜின் சிறுகதைகள்
ஏழு நண்பர்கள் - செ.யோகநாதன்
காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை - சுதாராஜ்.

கொடுத்தல்
சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விட வேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந்தக் குருவிக்கு என்ன மகிழ்ச்சியோ? இப்படி விடிவதற்கு முன்னர் வந்து பாடத் தொடங்கி விடுகிறது. அதற்குச் சாப்பாட்டைப் பற்றிய கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பறந்து போனால் எங்காவது கொட்டிக் கிடக்கும்.
நேற்றைய இரவும் அவர் வீட்டுக்கு வந்த பொழுது நேரம் கடந்து விட்டது. வெறும் கையோடுதான் வந்தார். "இஞ்சரும்!. ஏதாவது இருக்கே?" ஒ! வயிறும் வெறுமையாகவே இருக்கிறது. அவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளைகள் வெறுவயிற்றோடு கிடந்ததைக் கூடப் பொறுத்துக் கொண்டிருந்தவள்.
'இப்ப இந்த மனிசனும் அலைஞ்சுபோட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் வருகுதே!' - தங்களது இயலாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுகதுக் கங்களில் சமபங்கு கொண்டு அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப் போகிறாரே என்ற வேதனை தொண்டையை உடைத்துக் கொண்டு வந்தது.
ஆறுமுகம் மனவிையைத் தேற்றினார். "சரி சரி. ஏனப்பா இப்ப அழுகிறாய்?. நான் சாப்பிட்டுத்தான் வந்தனான். உங்கடை பாடு எப்பிடி எண்டுதான் கேட்டனான்." அவர்களுடைய பாடு எப்படி இருந்திருக்கும் என்பது அவர் அறியாததல்ல.
பிள்ளைகளின் வயிறு காய்வதைப் பார்த்துக் கொண்டு ஒரு தாயினால் எப்படித்தான் சும்மாயிருக்க முடியும்? வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு - மத்தியானம் ஒரு பேணி அரிசியில் (அதுகூடக் கடன்பட்டு) கஞ்சியாகக் காய்ச்சி ஊற்றினாள். இரண்டு குமர், மூன்று சிறுசுகள், நடுவில் இரண்டு படிக்கிற வயசுப் பெடியள்

Page 7
எத்தனை நாட்களுக்கு இப்படி மற்றவர்களை இரந்து கொண்டு போவது, அவர்களது சொட்டைக் கதைகளைக் கேட்பது? பவளத்திற்கு நெஞ்சு பொறுக்காத கவலை முட்டியது.
"இஞ்சருங்கோ. பிள்ளையஞக்கெல்லாம் நஞ்சைக் குடுத்திட்டு நாங்களும் சாவமே?”
"...உனக்கென்ன விசரே?. இப்ப என்ன குடிமுழுகிப் போச்செண்டே இந்தக் கதை கதைக்கிறாய்?" மனைவியே தனது தன்மானத்துக்குச் சவால் விடுவதாக நினைத்துக் கொண்டு ஆறுமுகம் சீறிப் பாய்ந்தார்.
அவள் அதற்குமேற் பேசவில்லை, 'அந்த மனிசனும் தான் என்ன செய்கிறது?
ஆறுமுகம் பாயைத் தட்டிப் போட்டுக் கொண்டு படுக்கப் போனபொழுது பவளம் ஒரு பேணியிற் சுடுதண்ணிரைக் கொண்டு வந்து கொடுத்தாள். "இந்தாங்கோ. வெறும்வயித்தோடை கிடக்கக் கூடாது." அவர் ஒன்றும் பேசாமல் தண்ணிரை வேண்டி மொடு மொடென்று குடித்து விட்டுப் படுத்தார்.
பவளம் திண்ணையில் சேலைத் தலைப்பை விரித்து 'சிவனே!" எனப்படுத்துக் கொண்டாள்.
பாவம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத்தை கண்டிருக்கிறாள் எனக் கவலை தோன்றியது.
"மெய்யே?. இந்தக் குளிருக்குள்ளை. ஏன் வெறும் திண்ணையிலை படுக்கிறீர். பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு படுமன்!” அடங்காத இரக்கத்தோடு தான் சொன்னார். அவர் சொல்வது கேட்காதது போல பவளம் படுத்திருந்தாள்.
அவரும் பேசவில்லை. இரக்கப்படத்தான் முடிகிறது - அவர்களது தேவைகளையெல்லாம் பூரணமாகக் கொடுக்க முடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தினார். பிறகு சொன்னார், "நாளைக்கு எப்படியாவது ஒரு வழியைப் பாப்பம்," ஒரு ஆறுதலுக்காக வாவது
10 சுதாராஜின் கதைகள்

அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் நாளைக்கு என்ன செய்யப் போகிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நித்திரை வரமறுத்தது. நாளைக்கு என்ன செய்யலாம்? எங்கே போகலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனைவியும், குழந்தைகளும் கூட உறங்காமலிருக்கிற அழுகை தெரிகிறது. என்னவென்று புரியாத வேதனை மனதை அலைத்தது. ஒரு வேலை கிடைத்து விடுமென்ற நம்பிக்கையில் அவரும் அலையாத இடமில்லை. கார்ச் சாரதியாக முப்பது வருடங்களாக்க் காலத்தைக் கடத்தியவர். கடைசியாக ஓடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. பெற்றோல் விலை ஏறியதும், இனிக் கட்டுப்படியாகாது என முதலாளி வாகனத்தை விற்கப் போகிறாராம்.
நன்கு அனுபவமுள்ள கார் டிறைவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறார்கள். நேரில் வரவும்! குழந்தை குட்டிகளையும், பொறுப்புக்களையும் மறந்து கொழும்பிற்கு போக முடியாது. என்னப்பா, யாழ்ப்பாணத்தில் அப்படியொரு பணக்காரன் இல்லாமற் போய்விட்டானா? எனக் காரணமற்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஒரு வேலை கிடைக்கும்வரை என்று சொல்லிக் கொண்டு பெண்சாதி பிள்ளைகளின் காதில், கழுத்தில் தப்பியொட்டிக் கிடந்தவற்றையும் விற்றுச் சுட்டுச் "சரிக்கட்டிய" நாட்களும் போய்விட்டன. பல நினைவு களோடும் விடியப்புறமாகத்தான் உறங்கியிருக்க வேண்டும். மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத்திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந் தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார்.
ஆறுமுகம் வெளியேபோக ஆயத்தமாக வந்த பொழுது பவளம், ஏற்கனவே எழுந்து வீடுவாசலைக் கூட்டிச் சுத்தம் செய்து விட்டு நிற்பதைக் கண்டார். அன்றுதொட்டே அவளிடம் உள்ள ப்ழக்கம் இது. நிலம் விடிவதற்கு முன்னரே எழுந்து பாத்திரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்புரவு செய்து அவளும் தூய்மையாக.
அதற்கு மேல் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (அதற்குப் பிறகு அவள் கைச்சுறுக்காகக் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்பாள்).
உசுதாராஜின் கதைகள் 11

Page 8
வெறும் தேயிலைச் சாயத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள் பவளம். சூடாக இருந்ததால் அவ்வளவு கசப்புத் தெரியவில்லை.
"எப்படியும் பத்துப் பதினொரு மணிக்கு முதல் ஏதாவது பார்த்துக் கொண்டு வாறன்" எனச் சமாதானம் கூறிவிட்டு நடந்தார் ஆறுமுகம். அவள் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய்க் குற்றியை அவிழ்த்து அவரிடம் கொடுத்தாள்!
"இந்தாங்கோ. நேற்று முழுக்கச் சாப்பிட்டிருக்க மாட்டியள். முதல்லை ஏதாவது சாப்பிட்டிட்டு போற இடத்துக்குப் போங்கோ".
அவர் ஏன், ஏது என்று ஒன்றுமே கேட்காமல் காசை வேண்டிக் கொண்டு போனார்.
வேலையொன்று இல்லாமல் கணவன் அலைவதையும் குடும்ப நிலைமையையும் பொறுக்காமல் நேர்த்திக்கடனாக அந்த ஒரு ரூபாயை நினைத்து வைத்திருந்தாள், "அப்பனே! அவருக்கு கெதியிலை ஒரு வேலை கிடைக்க வேணும்." இன்றைக்கு மனது கேளாமல் அதையும் எடுத்துக் கொடுத்து விட்டாள். 'எனக்கு அவர்தான் கடவுள், எல்லாம்!" என மனதுக்குச் சமாதானமும் சொல்லிக் கொண்டாள். :
அவரைப் போக விட்டு அழுவாரைப் போலப் பார்த்துக் கொண்டு நின்றாள் பவளம், "ஏன்தான் இந்தக் கண்கெட்ட கடவுள் இப்பிடி மனிசனைப் போட்டு அலைக்குதோ."
மூத்த பெண் கமலா எழுந்து அம்மாவைத் தேடிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்துவிட்டுத் தாங்களும் சாகிற கதையை இரவு அம்மா சொன்ன பொழுது அவளும் கேட்டுக் கொண்டே படுத்திருந்தாள். அம்மா அப்படி ஏதாவது ஏறுக்குமாறாய் செய்து விடுவாளோ என்ற பயம்.
"ஆரையம்மா பாத்துக் கொண்டு நிக்கிறாய்?"
‘நான் ஆரைப் பாக்கிறது? கொய்யாவைத்தான் அனுப்பிப் போட்டு நிக்கிறன் மோனை."
12 சுதாராஜின் கதைகள்

"இப்ப இதிலை யோசிச்சுக் கொண்டு நின்று என்ன செய்யிறது?. எங்களைப் படைச்ச கடவுள் ஒரு வழியையும் காட்டாமல் விடப் போறாரே. வாணை உள்ளுக்குப் போவம்"
தம்பிமார் பாடசாலைக்குப் போக ஆயத்தமான பொழுது கமலா தாயிடம் சொன்னாள்.
"வீட்டிலை இருக்கிற நாங்கள் சும்மா இருக்கலாம். பள்ளிக்குப் போற பெடியள் எனனெண்டணை பசிகிடக்கேலும்?"
அம்மாதான் என்ன செய்வாள்?
"எடேய், ராசா! சின்னத்தம்பி கடையிலை ஒடிப்போய் ரெண்டு றாத்தல் பாண்கேட்டுப் பாரப்பு!. பின்னேரம் ஐயா வந்தவுடனே காசு தரலாமெண்டு"
"எனக்குத் தெரியாது போ!. இவ்வளவு நாளும் வேண்டின காசு குடுக்கயில்லை. அவன் அங்கை ஆக்களுக்கு முன்னாலை தாறுமாறாய்ப் பேசினான்."
"என்ரை குஞ்செல்லே! போட்டுவாடி. பிறகு அப்புவவைக் குத்தானே பசிக்கும்?"
'பசி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. அவனிட்டைப் போய் உந்தப் பேச்சுக் கேக்கமாட்டன்!"
"இவன் உரிச்சுப் படைச்சுத் தேப்பன்தான். சரியான ரோசக்காறன்" என ஒரு வித பெருமையுணர்வோடு சொன்னாள் அம்மா. அவனுக்கு அடுத்தவனைக் கூப்பிட்டு அனுப்பினாள் கமலா. யார் சொல்லா விட்டாலும் போய்க் கேட்கின்ற நிலையிற்தான் அவன் இருந்தான்.
ஆனால் போனவன் தோல்வியோடு திரும்பி வந்தான்.
"நான் எவ்வளவோ கேட்டுப் பாத்தன். அவன் தரேலாதெண்டிட் டான். குடுக்க வேண்டிய கடனைக் குடுத்துப் போட்டு பிறகு வரட்டாம். ஆக்களுக்கு முன்னாலை பெரிய லோ எல்லாம் பேசினான். இனி
h சுதாராஜின் கதைகள் 13

Page 9
உன்ரை கடைப்பக்கம் வரமாட்டன் எண்டு சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்." அவன் உணர்ச்சி வசப்பட்டுப் போயிருந்தான். 'பாவம், பிள்ளை பசிக்கொடுமையிலை அவனோடை சண்டை பிடிச்சிருக்குப் போலை' என அம்மா நினைத்துக் கொண்டாள்.
"உதுக்குத்தான் அப்பவே சொன்னான். போக வேண்டா மென்று!" என் வெடித்துக் கொண்டு புறப்பட்டுப் போனான் மூத்தவன்.
"போட்டு வாங்கோடி ராசா. மத்தியானம் ஐயா ஏதேன் கொண்டு வந்திடுவார். சமைச்சு வைக்கிறன்."
இனி விடிய எழுந்த நேரம்முதலே சிணுங்கிக் கொண்டிருக்கும் சின்னவனைச் சமாளித்தாக வேண்டும்.
O O
சந்தியில் இன்னும் சனநடமாட்டம் அதிகரிக்கவில்லை. சில கடைகளும் திறக்கப்படவில்லை. தேநீர்க்கடை முருகேசு மாத்திரம் கடையைத் திறந்து தண்ணிர் தெளித்து வாழைக்குலையை எடுத்து வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். வீட்டிலிருந்து வெளியேறி வந்த ஆறுமுகம் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு நின்றார். இதே சந்தியிற் தான் முன்னர் அவர் கார் வைத்து ஓடியவர். இதனால் இவ்விடத்தில் உள்ளவர்கள், கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கம். பழைய ட்றைவர்மார்களில் இன்னும் இரண் டொருவர் கார் வைத்திருக்கிறார்கள். என்றாலும் உழைப்புப் குறைவு தானாம்எப்பொழுதாவது இருந்துவிட்டுத்தான் ஒரு சவாரி கொத்தும்.
கடைதிறக்க வந்த சலூன்காரப் பெடியன் ஆறுமுகத்தின் கோலத்தைக் கண்டு, "என்னண்ணை இந்தப் பக்கம் மறந்து போச்சோ?" என்றான். கஷ்டப்பட்டு அவனுக்கு ஒரு சிரிப்பை வெளிப் படுத்திக் காட்டினார். "எங்கை தம்பி நேரம் கிடைக்குது?" ஆனால் இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவர் எந்த நேரமும் இங்கு வந்து சும்மா நிற்கிறாரே! பல நாட்களாகக் சேவ் எடுக்கப்படாததால் முட்களாகக் குற்றிவளருகிற மயிர்கள்! நாடியைச் சொறிந்தவாறு வீதியை வெறித்தார்.
14 சுதாராஜின் கதைகள்

பாடசாலைக்குப் போகின்ற சிறுவர் சிறுமியர்கள் - அவருக்கு அந்தப் பாக்கியம் கூடக் கிடைக்கவில்லை. பதினேழு வயசாயிருக்கும் பொழுதே அவரோடு சேர்ந்த இரண்டு சகோதரிகளையும் இரு சகோதரர்களையும் தாயையும் அவரது பொறுப்பில் விட்டு தந்தை காலமாகினார். ஆறுமுகம் படிப்பை இடைநிறுத்தி உழைப்பாளியாக மாற வேண்டியிருந்தது. கதிரவேலுவின் லொறியில் கிளினராகச் சேர்ந்து, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஓடிய காலங்களில் சாரத்தியம் பழகி, லொறிச் சாரதியாக இரவு பகல் பாராது உழைத்து உழைத்து, ஓரளவு கடனும் பட்டு ஒரு காருக்குச் சொந்தக்காரனாகி சகோதரிகளை ஒவ்வொருத்தனின் கையில். -அப்பொழுதெல்லாம் அம்மா சொல்லுவாள்.
ᎪᎪ
தம்பி. இந்தக் குடும்பத்துக்காக இந்த வயசிலையே. உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போறாய். கடவுள் உன்னைக் கைவிடமாட்டார். பின்னாடிக்கு நல்லாய் இருப்பாய்!" ஒர் ஆசீர்வாதம் போல தனது மன ஆறுதலுக்காகவோ அல்லது அவரது மன ஆறுதலுக்காகவேதான் அப்படிச் சொன்னாளா என்பதும் தெரியாது. அந்த அம்மாவே அவரைக் கைவிட்டு இறைவனடி சேர்ந்தபின்னர் இறைவனுக்கு அவர்பால் என்ன கவலை?
இப்பொழுது குடும்ப சமேதராகி கொழும்பு வாழ்க்கை நடத்துகிற தம்பிமார்களும் வருவது குறைவு. அரசாங்க உத்தியோககாரர் - பல தொல்லைகள் இருக்கும். ஒரு நல்லநாள் பெருநாளில் அக்கா, தங்கை தம்பிமார் எல்லோரும் வந்து நிற்பார்கள். எவ்வளவு கலகலப் பாயிருக்கும்! அந்த நாட்களின் இனிமையை நினைத்து ஏங்கினார். எவ்வளவு சுமையென்றாலும், மனதை அழுத்தாத சுகம் இருந்தது. இப்பொழுது, "அண்ணை பாவம். கஷ்டப்பட்டுப் போச்சுது. நெடுகலும் நாங்கள் போய்த் தொல்லை குடுக்கக் கூடாது!" என்ற பெரிய மனசு அவர்களுக்கு!
கார்க்காரச் சண்முகம் அவரிடம் கார் பழகியவன். ரெளனுக்குப் போகிறான் போலிருக்கிறது. அவரைக் கண்டதும் ஸிலோ பண்ணி வெளியே தலையை நீட்டி "என்னண்ணை ரெளனுக்கோ?" என்று கேட்டான். குருவுக்குக் கொடுக்கிற மரியாதை அவர் இல்லை எனச்
சுதாராஜின் கதைகள் 15

Page 10
சொல்லிவிட்டு நின்றார். சொந்தமாக இருந்த காரைத் தனது கடைசித் தங்கையின் திருமணத்தின் போது விற்றது எவ்வளவு மடைத்தனம் என எண்ணினார்.
தன்னிடம் இப்பொழுது எதுவுமே இல்லை எனவும் நினைத்துக் கொண்டார். இப்படி ஒரு கஷ்டம் அவருக்கு ஒரு நாளும் வந்ததில்லை. இல்லையென்று சொல்லாமல் எத்தனை பேருக்கு அள்ளிக் கொடுத்த கை வரண்டு போய் விட்டது. எப்பொழுதுமே அவர் தனக்காக எதையும் சேர்த்தவரல்ல. நிறைய இல்லாமலே உழைப்பதையெல்லாம் கொடுத்தவர். அவரிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையென்றதும் விலகி விட்ட உறவுகள்!
விருத்தெரிந்த காலம் முதலே தனக்கு வாழ்க்கை ஒரு சவாலாக அமைந்து விட்டதை நினைத்துப் பார்த்தார். ஒரு போராளியாகவே வாழ்க்கையை எதிர்கொண்ட நெஞ்சுரம் வேறு யாருக்கு வரும் எனத் தன்னை எண்ணிப் பெருமையும் அடைந்தார். இப்பொழுது சோர்ந்து போய் விட்டேனா அல்லது தோல்வியா எனப்பயம் கொண்டு, அடுத்த கணமே, இது தோல்வியல்ல தற்காலிகமான சிறு தடங்கலே என மனதைத் தேற்றிக் கொண்டார்.
வீதியில் நடமாட்டம் அதிகரித்து விட்டது. வாகனங்கள்,
சைக்கிள்காரர், சம்பாதிக்கப்போகின்ற அலுவலர்கள், ஆசிரியர்கள்
இன்னும் கூட்டம் சுட்டமாகப் போகிற பாடசாலைப் பிள்ளைகள் - 'கடவுளே! பிள்ளையஸ் சாப்பிடாமற்தான் போகுதோ என்னவோ"
தான் இப்பொழுது இறைவனைப் பற்றியெல்லாம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது அவருக்கு அதிசயத்தை அளித்தது. நண்பர்களோடு சேர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து திரிந்த நாட்கள்! அந்த இளமைக் காலங்கள் - கோபால், மணி, சுந்தரம், முத்துராசா.
கோபாலும் மணியும் கார் சாரதிகள். கோபால் சொந்தமாகக் கார் வைத்திருந்தான். மணி சம்பளத்துக்கு ஓடியவன். சுந்தரம் தேநீர் கடையில் நின்றவன். நன்றாக ரீ போடுவான். நல்ல பாட்டுக்காரன் (என்று ஒரு நினைவு!) எல்லோருமாகச் சேர்ந்து சினிமா செக்கன்ட்
16 சுதாராஜின் கதைகள்

ஷோவிற்குப் போவார்கள். அதற்குத்தான் நேரம் ஒத்துவரும். அடுத்தநாள் சுந்தரம் பாடிக்காட்டுவான். ஆறுமுகம் "சபாஷ்" போடுவார். அது ஏளனமா அல்லது புகழ்ச்சியா என்று புரியாமல் தன்னை மறந்து பாடுவான் அவன். முத்துராசா விழுந்து விழுந்து சிரிப்பான்.
முத்துராசாவிற்கு அப்பொழுது ஒரு முயற்சியும் இல்லை. வறிய குடும்பத்துப் பொடியன். நோய்க்காரத் தந்தை. அன்றாடம் சாப்பாட்டுக்கே இல்லாத குறைபாடு அவனை அவர்களோடு சேர்த்து வைத்தது. அவனென்றால் அவர்களது புண்ணியத்தில் ஏதாவது போட்டுக் கொள்வான். வீட்டிலே பட்டினிதான் - ஆறுமுகத்திற்கு ஒரு ஐடியா தோன்றியது.
அதன்படி, ஒரு சுப நாளில் யாழ்ப்பாண நகரத்தில் முத்துராசாவிற்கு சொந்தமாக ஒரு "ரீ றுாம்" திறக்கப்பட்டது. பணமாகவும் வேறு வகையிலும் எல்லா உதவிகளையும் நண்பர்களின் ஒத்தாசையோடு ஆறுமுகம் செய்து வைத்தார். இன்றைக்கு அது ஒரு "ரீ றும்" அல்ல! தங்குமிட வசதிகள், அறுசுவை உணவுகள் வழங்கும் பெரிய ஹோட்டலாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
மின்னலைப் போல ஓர் உணர்வு தட்டியது. முத்துராசாவிடம் சென்றால் என்ன?
அந்த நினைவு வந்ததுமே பெரிய சந்தோஷமடைந்தவராய் நடக்கத் தொடங்கினார். பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விட்டது போல மனசு பறந்தது. புதிய உற்சாகம் பிறந்து விட்டது. அவர் ஓடியே போயிருப்பார். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நடக்க வேண்டியிருந்தது.
"என்ரை கெட்டகாலத்துக்கு. முத்துராசா இருக்கிறானோ. இல்லையொ தெரியாது. கடவுளே அவன் இருக்க வேணும்!" என மனது பிரார்த்தனை செய்தது.
ஹோட்டல் வாசலில் முத்துராசாவின் கார் நின்றது - அப்பாடா! ஆள் இருக்கிறான்! வாசல் வரை சென்று சற்றுப் பின்வாங்கி நின்றார் ஆறுமுகம். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது? எப்பவுமே கைநீட்டி அறியாத சுபாவம். −
சுதாராஜின் கதைகள் 17

Page 11
வெறும் கஞ்சித்தண்ணியொடு கிடக்கின்ற குழந்தைகளின் நினைவு குபிரென்று அவரை உந்தித் தள்ளியது.
காசு மேசையில் முத்துராசா இராசாவென இருந்தான். (மன்னிக்கவும். இருந்தார்) ஒருமையிலா பன்மையிலா சம்பாஷிக்கலாம் என்ற சங்கடம் ஏற்பட்டது. முன்பென்றால் ஒருமை - அவன் தனிமையாக இருந்தான். இப்பொழுது பொருள். பண்டம், சொத்து எனப் பெருகிப் பன்மையாக இருக்கிறார்.
வியர்க்க விறுவிறுக்க வந்து நிற்கிற ஆறுமுகத்தைக் கண்டு முத்துராசாவின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. அல்லது, அந்த முகத்தில் இயற்கையாக உள்ள மலர்ச்சியோ தெரியாது.
"என்ன ஆறுமுகம் இந்தப் பக்கம்?"
"ஒன்றுமில்லை. சும்மாதான்."
உணவருந்திவிட்டு வெளியேறுகிற சிலர் பணம் செலுத்துவதற்காக இவர் ஒதுங்கி நின்றார், பிறகு கேட்டார்.
"ஒரு முக்கியமான அலுவலாத்தான். வந்தனான். கடைசி யாய் ஓடின இடத்தாலை. நிண்டும் ஒரு மாதத்துக்கு மேலையாகுது. வேறை இடமும் கிடைச்சபாடில்லை. கையிலையெண்டால் பெரிய கஷ்டம். ஆரிட்டையும் கைநீட்டிப் போகவும் விருப்பமில்லை. ஒண்டுக்கும் வழியில்லாமல்தான் இஞ்சை வந்தனான்."
முத்துராசாவின் முகம் இதைக் கேட்டு இருட்சி அடைந்தது. கவலையோ? ஆறுமுகமே தொடர்ந்து பேசினார்.
"ஒரு நூறு ரூபாயெண்டாலும் தந்தால் பெரிய உதவியா யிருக்கும்!"
முத்துராசா சமாதானமாகச் சிரித்தார்.
'இதுதானே?. நீ முதல்லை உள்ளுக்குப் போய் ஒரு ரீ குடிச்சிட்டு வாவன். களைச்சுப்போய் நிக்கிறாய்." என்றவாறு உட்புறம் திரும்பி ஒரு "ரீ க்கு ஒடர் கொடுத்தார்.
18 சுதாராஜின் கதைகள்

ஆறுமுகத்தின் கண்கள் பனித்தன. அது உதவி என்று கேட்டு வந்தபொழுது மனிதத் தனத்தோடு தன்னைக் கெளரவிக்கின்ற முத்துராசாவின் பெருந்தன்மையை நினைத்தா அல்லது பெண்சாதி பிள்ளைகள் வயிறு குளிர இன்றைக்குச் சாப்பிடப் போகிறார்களென்ற சந்தோஷத்திலா என்று புரியவில்லை.
தேநீரைக் குடித்ததும் அரைவாசி உயிர் வந்தது போலிருந்தது. முத்துராசாவின் முன்னால் போய் வலிந்து சிரிப்பை வெளிப்படுத்தினார்
ஆறுமுகம்.
"என்ன ஆறுமுகம். நிலைமை விளங்காத மாதிரிக் கதைக்கிறாய்?. நூறு ரூபாய்க்கு. இப்ப நினைச்சவுடனே நான் எங்கை போறது. நீ வந்து நின்ற கோலத்தைப் பாத்திட்டுத்தான். என்னென்று சொல்லுறதெண்டு தெரியாமல் ரீயைக் குடிச்சிட்டு வா என்டனான்."
அவர் ஆளாக்கிவிட்ட பழைய முத்துராசாவா பேசுகிறான்? 'இவனிட்டப் போய்த் தேத்தண்ணியை வேண்டிக் குடிச்சன்ே' என்ற தாழ்வுணர்வு மனதை அழுத்திய பொழுது, மனைவி கொடுத்து விட்ட ஒரு ரூபாய் நினைவில் வந்து தலையை நிமிர்த்தியது.
"இந்தா. தேத்தண்ணிக் காசை எடு!" என்று காசைக் கொடுத்தார். காலையில் இரக்கத்தோடு வழியனுப்பி வைத்த அந்தப் புண்ணியவதியின் தோற்றம், அவளது துணை நெஞ்சிற் தைரியத்தைக் கொடுத்தது.
சிரித்திரன் தை 1980
D
சுதாராஜின் கதைகள் 19

Page 12
நன்றியுள்ள மிருகங்கள்
ஒரு நாய்க்காகக் கவலைப்படுகிறவன் யாராவது இந்த உலகத்தில் இருப்பானா? இருப்பான். யார் அந்தப் பெரிய மனிசன்? நான்தான். (பெரிய மனிசன்தான், வயது ஐம்பத்தாறு, ஒய்வுபெற்ற உத்தியோகத்தன்.) எனது கதைக்குப் பிறகு வரலாம். இப்பொழுது இந்த நாயைப் பற்றி! அதாவது இவ்வீட்டில் அடியும் உதையும் பட்டுக் கொண்டு தனது வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக் கிறதே, அந்த அற்ப சீவனைப் பற்றி.
இந்த நாயைக் குட்டியாக வீட்டிற்குக் கொண்டு வந்ததே நான்தான். அதை நான் கொண்டு வந்து சேர்த்தபொழுது பார்க்க வேண்டுமே! வெள்ளையாக நல்ல சடைக்குட்டி, பார்த்தால். அப்படியே தூக்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கும். பிள்ளைகள் (எனது மருமக்கள்) ஒருவர் மாறி ஒருவராக அதைத்தாலாட்டுவார்கள். இரவில் அவர்களின் கட்டிலில் ஏறி அது சொகுசாக உறங்கும். அவ்வளவு செல்லமாக வளர்த்த குட்டி, இப்பொழுது பாவம், உடுக்கத் துணிகூட இல்லாத ஒரு வறிய நோயாளியைப் போலப் படுத்திருக்கிறது.
படுத்திக்கிறதா? ஏதோ சத்தம். ஒ! நாய்தான் குளறுகிறது. நன்றாக வேண்டிக் கட்டியிருக்கும் - அது தான் இந்தக் கத்தல் போடுகிறது.
"உஞ்சு உஞ்சு!" கூப்பிட்டதும் ஒழுங்கான பிள்ளையைப் போல ஓடி வந்து கட்டிலின் கீழ் சுருண்டு படுத்து விடுகிறது.
s
சாப்பாட்டு நேரமென்றால் இப்படித்தான் அவர்களது வாயைப் பார்த்து வீணிர் வடித்துக் கொண்டிருக்கும். பிறகு என்ன? விறகுக் கட்டையால் குடுத்திருப்பார்கள். தொண்டை கிழியக் கத்தல் போட்டு விட்டு தலையைப் பதித்து வாலை ஆட்டி மன்னிப்புக் கோரியவாறு அங்கேயே படுத்திருக்கும். (வெட்கம் கெட்ட ஜென்மம்) ஆனால் அது மன்னிக்க முடியாத குற்றமாயிற்றே? பாத்திரத்தில் தண்ணிரைக்
20 சுதாராஜின் கதைகள்

கொண்டு வந்து முகத்தில் ஊற்றியிருப்பார்கள் அல்லது நெருப்புக் கொள்ளியால் குறிவைத்திருப்பார்கள். இது, காலைத் தூக்கி நொண்டியவாறே எனக்குக்கிட்ட ஓடிவரும்- முறைப்பாடு. நான் அதன் தலையைத் தடவிக் கொடுப்பேன். ஆறுதல் சொன்னதும் அப்படியே கட்டினில் கீழ்படுத்துவிடும். சிலவேளைகளில் அடிபடுமுன்னரே இது காலைத் தூக்கிக் கொண்டு சாலத்துக்கு ஓடி வருவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.
சிறுவயதிலே படித்த "ஒரு நாயின் சுயசரிதை" நினைவிற்கு வருகிறது. (கவனியுங்கள். படித்திருக்கிறேன்!) படிப்பென்றால் ஐயாவுக்குத் தண்ணிபட்டபாடு.அப்பொழுது பள்ளிக்கூடத்தையும் எங்கள் ஊரையுைம் ஒரு கலக்குக் கலக்கியவன் நான். ஆனால் கலக்கத் தெரிந்தவர்களுக்குக் கதியில்லைப் போலும். எனது கல்வியை தொடரும் வாய்ப்பில்லாமல் அப்பு தலையைப் போட்ட சங்கதி அடுத்து வருகிறது.
அப்பு பிள்ளைகளைப் பெற்றுப்போட்டார். பொருள் பண்டத்தைச் சேமித்து வைக்கவில்லை. ஐந்து பெண்கன்)ளப் பெற்றால் அரசனும் ஆண்டியாவானாம். எங்கள் தரவளிக்கு இரண்டு போதாதா? அப்புவுக்கு ஆண்டியாகிற பலன் கிடைக்கவில்லை. ஒருநாள் இருளப்போகின்ற நேரத்தில் கண்களை மூடினார்.
தங்கைகளின் ஒப்பாரி, "எங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போயிட்டீங்களே!" (ஒரு சந்தேகம் 'எங்கள் என்பதிற் சுயநலம் தொனிக்கிறதே?) மூத்தவன் நான் இருக்கிறேன் மலையைப் போல. தவிக்க விடலாமா? என் சகோதர பாக்கியங்களை ஒவ்வொருத்தனின் கையில் பிடித்துக் கொடுத்து விட்டுத்தான் எனது பாட்டைப் பார்ப்பதென்று அன்றைக்கே சபதமெடுத்துக் கொண்டேன். (மகன் தந்தைக்காற்றும் உதவி)
வேலை தேடுவதற்கு ஒரு படலம் தேவையில்லாமற் போய் விட்டது. எங்கள் நிலைக்கு இரங்கிய தந்தையின் நண்பரொருவர் தனது கடையில் கணக்கு எழுதுகிற வேலையைத் தந்தார். பிறகுதான் தெரிந்தது, அது அவரது வருமானத்தைப் பற்றி கணக்கு விடுகிற வேலை என்று! ஆனால் எனது வருமானத்துக்கு அவர் கணக்கு
சுதாராஜின் கதைகள் 21

Page 13
விடத் தொடங்கினார். அவ்வேலையில் இருந்து கொண்டு அரசாங்க வெற்றிடங்கள் பலவற்றிற்கு விண்ணப்பித்து காலப்போக்கில் ஓர் அரசாங்க லிகிதராக மாறிவிட்டேன்.
மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி, செருப்புத் தேய அலைந்து இரண்டு திருமணங்களையும், ஒப்பேற்றிய பொழுது எனது கைகளும், மடியும் வரண்டு விட்டன. சீர்கொடுத்ததில் கடன் பழு வேறு. வாழ்க்கையின் மிகுதி உழைப்பெல்லாம் அதைச் சீர்செய்யத் தான் சரிவரும் போலிருந்தது. எனது திருமணத்தை நிச்சயிக்கப் பெரியோர்கள் இல்லாத புண்ணியத்தினாலும் பருவம் கடந்து விட்ட காரணத்தினாலும் பிரமச்சாரியாகவே வாழ்க்கையைத் தொடரலாம் என முடிவு செய்தேன்.
மீண்டும் நாயின் குளறல். ரோசம் கெட்ட சவம். எப்படி வேண்டிக் கட்டினாலும் புத்திவராது. நான் கூப்பிட்ட பொழுது வந்து கட்டிலின் கீழ் படுத்துவிட்டு எனக்கும் தெரியாமலே நழுவிப் போயிருக்கிறது.
s
மனசு கேட்கவில்லை, "உஞ்சு உஞ்சு!" என்ன இருந்தாலும் அதற்கு நான் தானே துணை? (அல்லது எனக்கு அது துணையோ?)
"மாமாவின்ரை பிறண்ட்தானே? அதுதான் அதுக்கு அடிச்ச வுடனை அவருக்குக் கோபம் வருகுது. ஆவாவென்று கூப்பிடுகிறார்." - குசினியிருந்து வெளிப்படுகின்ற குரலையடுத்த கலகலச் சிரிப்புக்கள். மருமக்களின் கேலிப்பேச்சு நக்கல் எனக்கா அல்லது நாய்க்கா என்று புரியவில்லை.
அது வாழ்ந்த வாழ்வுக்கு இப்படியும் ஒரு நிலை என எழுதப்பட்டிருக்கிறது போலும் ஊருக்கு அது தான் ராஜா சண்டித் தனமாக ஊர்மேயப் போகும். சாப்பாட்டுக்கு நேரத்துக்கே வீட்டுக்கு வருவது அருமை. அதற்கு ஊரெல்லாம் சாப்பாடு இருந்தது. இப்பொழுது பாவம், கிழடு தட்டிவிட்டது. அதனாலோ என்னவோ காதுகேட்பதும் குறைவு எத்தனை தரம் கூப்பிட்டு விட்டேன் - "உஞ்சு உஞ்சு!” அது அசைந்தால் தானே?
அதற்குள்ளே சனியன் பிடித்த இருமல் வந்து பிடித்துக் கொண்டது, இருமல் பிடித்தால் ஒரு முடிவே இல்லை. நெஞ்சும்
22 சுதாராஜின் கதைகள்

தொண்டையும் பச்சை இறைச்சியாக வலியெடுக்கின்றன. படுக்கையிலே எழுந்திருந்து நெஞ்சைப் பலமாக அழுத்திப் பார்த்தாலும் சுகமில்லை. இருமலை நிறுத்தும் முயற்சியாகக் காறல் எடுத்துத் துப்பினேன். அது எனது சகோதர பாக்கியத்துக்குப் பிடிக்கவில்லை.
'அண்ணை உதென்ன வேலை செய்யிறாய்? பிள்ளையஸ் பிளங்கிற இடத்திலை சும்மா சும்மா துப்பாதை" (அண்ணை என
s
அழைத்ததே பெரிய காரியம் எனத் திருப்தியடைந்தேன். ‘அது இது என அறிணையிற் தான் என்னைக்குறிப்பிடுவது வழக்கம்)
தொண்டையைக் கொஞ்சம் நனைத்தால் சரிவரும் போலிருந் தது. சுடுதண்ணிர் குடித்தால் நல்லது. எனக்காக அந்த அளவுக்குக் கரிசனைப்பட யார் இருக்கிறார்கள்? பச்சைத் தண்ணிராவது குடிக்கலா மென்ற நினைவில் விறாந்தையில் விளையாடிக் கொண்டிருந்த தங்கச்சியின் கடைக்குட்டியைக் கேட்டேன்.
"தம்பி ராசா. இஞ்ச வாணை1. உனக்குப் புண்ணியம் கிடைக்கும். இந்தப் பேணியிலை கொஞ்சம் தண்ணி எடுத்தாணை" என ஆதரவாகக் கேட்டவாறே எனது பேணியை நீட்டினேன். (எனக்கென ஒரு மூக்குப் பேணி ஒதுக்கப்பட்டிருக்கிறது) இவ்வளவு பணிவன்போடு கத்ைதாற்றான் எனது கோரிக்கைளுக்குத் தற்செயலான செவிசாய்ப் பாவது இருக்கும். அதை எனது அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஆனால், இப்பொழுது அந்த அதிசயமும் நடக்கவில்லை. அவன் துள்ளிக் கொண்டு எழுந்து தனது உடலை முதுகுப் பக்கமாக எனக்குத் திருப்பி ‘ருவிஸ்ட் ஆடுவது போல ஒரு நெளிப்புக் காட்டிவிட்டு ஓடினான். இனி இப்படித்தான் போவோர் வருவோரை எல்லாம் இரந்து இரந்து வரம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
என்னைக் கண்டதும் மாமா என வாய் நிறைய அழைத்துக் கொண்டு வருகின்ற குழந்தைகளா இவர்கள்? முன்னர் அப்படி ஒரு நடப்பு இருந்தது.
அலுவலகம், நண்பர் குழாம், அறை வாழ்க்கை, சாப்பாட் டுக்கடை என விடுவாசலின்றிச் சுற்றித் திரிந்தாலும் இடைக்கிடை ஒரு மாறுதலுக்காக இங்குதான் வருவேன். எனது மற்றத் தங்கைக்குப் பிள்ளைகள் இல்லை. அதனாலோ அல்லது அந்தக் கவலையைத்
சுதாராஜின் கதைகள் 23

Page 14
தாங்க முடியாமலோ நான் அங்கு செல்வது குறைவு. குழந்தைகள் என்றால் எனக்கு உயிர். எனது சகல பிரச்சனைகளையும் கவலை களையும் மறக்கடித்து மகிழ்விக்கின்ற சக்தி இந்தப் பிள்ளைகளின் சிரிப்புக்கு இருந்தது. வருகின்ற பொழுது விளையாட்டுப் பொருட்கள் தின் பண்டங்கள் என அள்ளிக் கொண்டு வருவேன். அவர்களோடு நானும் ஒரு குழந்தையாகி விடுவேன்.
தங்கச்சிக்கு நான் தேடிவைத்த மாப்பிள்ளையின் உத்தியோகம் பெரிய வருமானம் இல்லாதது. பிள்ளை குட்டிகளோடு அவர்கள் படுகிற கஷ்டத்தைத் காண மனது பொறுக்காமல் அவ்வப்போது பணமாகவும் உதவியிருக்கிறேன். பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை என்மேல் உயிரையே வைத்திருந்த இரகசியங்கள் இவைதானா?
மாப்பிள்ளைக்கு என்மேல் அலாதிப் பற்று இருந்தது. "கொண்ண ருக்குச் சாப்பாடு குடுத்தனியோ?", "கொண்ணரைக் கவனிச்சியோ?", "அந்தாள் பாவம்! பார்க்கவேணும்". இந்தக் கரிசனை வார்த்தை களெல்லாம் என் காதுபடும் பொழுது எப்படி மனசு குளிர்ந்து போகும்! இப்பொழுது, "இந்தாளுக்கு மதியில்லையோ?. சுருட்டைக் குடிச்சுக் குடிச்சு இருந்த இடத்திலேயெ துப்பி வைக்குது. பிள்ளையஸ் பிளங்கிற இடம்."
"யெஸ். டடி. மாமாவாலை பெரிய கரைச்சல் தான். என்னட்டை வாற பிரன்ட்ஸெல்லாம் கேக்கிறாங்க. அந்த மனிசன் ஆர் என்று. எப்படிச் சமாளிக்கிறதென்றே தெரியயில்லை. இப்படிக் கிளின் இல்லாமல் குப்பை மாதிரிக் கிடந்தால் எங்களுக்குத்தானே வெக்கம்?" நான் தூக்கி வளர்த்த குழந்தை - என் நெஞ்சில் கால்களைப் பதித்து வளர்ந்த பெண் - பெற்றோருடைய மூத்த கும(ா)ரி சொல்கிறது! இப்படி வார்த்தைகளால் நெஞ்சில் அடிக்கிற வலி இயற்கையாக நெஞ்சைப் பிய்த்துக் கொண்டு வருகிற இருமலை விட மோசமானது.
குளித்து முழுகி துப்புரவாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இல்லையோ? மாற்றி உடுக்கத் துணிகள் வேண்டுமே? குளிர் நீரிற்கு உடல் இடம் தரமறுக்கிறது. நோய் முற்றினால் மருந்து வேண்டித் தரவும் கவனிக்கவும் மனிசரில்லை. இருமல் வரும்பொழுது
24 சுதாராஜின் கதைகள்

ஒதுக்காகப் போய்த் துப்பலாமென்றால் இருந்த இடத்தை விட்டு எழுந்து நடப்பதே கொல்லக் கொண்டு போவது போலிருக்கிறது.
"போதாக்குறைக்கு அந்தக் குட்டை நாயையும் கூப்பிட்டுத் தன்னோடை வைச்சிருக்குது. எப்பிடிச் சொல்லியும் 'அது'க்குப் புத்தி வருகுதில்லை" என்- சகோதர பாக்கியம்தான்.
"என்ன சவத்துக்கு வந்து இஞ்சை கிடந்து இழுபடுகுது. எங்கையாவது கோயில்லை. மடங்களிலை. போய்க் கிடக்க வேண்டி யதுதானே." இது அவர்.
"டடி. ஒன்று செய்தாலென்ன?. வீட்டுக்குப் பின்பக்கமாய் மாமாவுக்கு ஒரு கொட்டில் போட்டுக் குடுத்தால். நாயும் அவரோடை போயிடும் தானே?"
"அதுகும் நல்ல யோசினைதான்!"
நாயின் அவலமான அலறல் கேட்கிறது.
அப்பிடியும் நடந்து போய்விடுமோ? பிரேரணைக்கு முன்னறி வித்தல் கொடுக்கப்பட்டு விட்டது. இனி, ஏகமானதாக நிறைவேற்றியும் விடுவார்கள் . எனது பிரச்சினையில் கரிசனைப்படாமல் அவர்கள் எல்லோருமே கையை உயர்த்துவதற்குத் தயார்தான். என் மூலம் அவர்களது வாழ்க்கை வளம் பெற்றது என்பதை எங்கே நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்? பெரும்பான்மையான மனித சுபாவம்! இப்பொழுது நான் படுத்திருக்கும் உள் விறாந்தையிலேயே இரவில் பனித்தொல்லை தாங்க முடியாது கஷ்டப்படுகிறேன். கோடியிலே ஒரு கொட்டிலென்றால் எப்படி இருக்கும்? நாலு பக்கமும் அடைப்புக்கள் இல்லாத ஒரு கூடாரமாக இருக்குமோ? எப்படியாவது போகட்டும் அந்தப் பிரச்சனையை இப்போதைக்கு விடுவோம்.
ஒரு விஷயம்! என்னைப் பற்றிய பிரச்சினைகளை ஒரளவுக்கு எனக்கு கேட்கக் கூடியதாக அவர்கள் கதைப்பதிலிருந்து அதைக் கேட்டென்றாலும் எங்கேயாவது போய்த்தொலையட்டும் எனக் கருது கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. அல்லது எல்லாவற்றையுமே இப்படிக் கரவாக நினைப்பது, நான் தனிமனிதன் என்ற தாழ்வு மனப்பான்மையினாலா? எப்படியாயினும் மற்றவர்களுக்குத் தொல்லை
சுதாராஜின் கதைகள் 25

Page 15
கொடுக்காமல் வீட்டைவிட்டுப் போய்விடுவதுதான் சரி என முடிவு கட்டினேன்.
பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றபின்னர் கோயிலுக்குப் போய்வருவதாகத் தங்கச்சியிடம் கூறிவிட்டு எனது கைத்தடியைத் துணைக்கு எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். நாய் வாசல்வரை வந்து ஊழையிட்டு அழுதது. கொஞ்சத் தூரம் பாதையிலும் ஓடிவந்தது. பிறகு அதுவும் போய்விட்டது!
கோயில் வாசலில் இரண்டு நாட்கள் தவம், வயிற்றுப் பாட்டுக்காக மற்றவனிடம் கை நீட்ட வேண்டிய நிலை இங்கும் இருந்தது. ஆனால் இது வீட்டு நிலைமையை விடக் கேவலம். போகிறவனெல்லாம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறான். "இந்த ஆளுக்கு என்ன குறை?. உழைத்துச் சாப்பிட முடியாதா?. கொள்ளையா பிடிச்சிட்டுது?" நியாயமான கேள்வி என் உருப்படியைப் பார்த்தால் யாரும் அப்படித்தான் சொல்லுவான். ஆனால் உடல் நோய் இடம் தராத சங்கதி தெரியவராது. மனதிலே தனிமையின் பயம் படிப்படியாக படபடக்கத் தொடங்கியது. இதற்குள்ளே ஒரு காணக்கிடைக்காத அற்புதக் காட்சியும் கிடைத்தது.
ஒரு வயோதிபத் தம்பதிகள் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் சந்நிதானத்தில் சடுதியாக அந்த ஆளுக்கு மார்புவலி வந்து விட்டது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து விட்டான். அந்த நேரத்தில் உதவிக்கும் யாருமில்லை. கிழவி பட்டுவிட்டபாட்டைப் பார்க்க வேண்டுமே! செய்வதறியாத திகைப்பு, தவிப்பு, கணவனைத் தனது மடியிலே தூக்கி அணைத்து மார்பை வருடத் தொடங்கினாள். அவளது கண்ணிர் அவனது உயிரை மீட்டுக்கொண்டிருந்தது. என்ன அற்புதம்!
எனது நெஞ்சு நிறைந்து விட்டது. ஒரு மனிதனுக்கு இதுதான் வேண்டும். இப்படி ஒரு துணை. நான் விட்ட மாபெரும் தவறு மனதிலே பட்டது. ஒரு துணைவியைத் தேடாமல் விட்டு விட்டேன்! அதற்கு ஈடான ஆதரவு வேறு எங்கே இருக்கிறது? காலம் கடந்துதானே எனக்கும் இந்த ஞானம் பிறந்திருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ்வதற்கு ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இயல்புள்ள இரண்டு உள்ளங்கள் தேவைப்படுகிறது. இப்பொழுது எனது வயது
26 சுதாராஜின் கதைகள்

ஒரு பிரச்சினையல்ல. பெண்ணைத் தரப்போகிறவர்களுக்கு முன்னரா வது இந்த எண்ணம் தோன்றியிருந்தால் எனது உத்தியோகத்தைக் காட்டியே கலியாணச் சந்தையில் ஒரு கலக்குக் கலக்கியிருப்ன்ே! உடல் ஒத்துழைக்காத காரணத்துக்காக அப்பொழுது வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டதுதான் நான் செய்த மடைத்தனம். இனிக் கவலைப்பட்டும் என்ன பயன்.
என்னைப் புறக்கணிப்பது போலத் தோன்றிய தங்கச்சியின் செய்கைகளும் இப்பொழுது அவ்வளவு பாரதூரமானதாகத் தெரிய வில்லை. அவளால் அப்படித்தான் இருக்க முடியும். அவளுக்கு அவள் கணவனும் குழந்தைகளும்தானே உலகம்? இப்படி யாரும் இல்லாத இடத்தில் இருப்பதைவிட வீட்டிலே போய் ஏச்சுப் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது கிடப்பது மேல் எனத் தோன்றியது.
மீண்டும் பழைய குருடனாகக் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். முதலில் வரவேற்றது நாய்தான்! அதன் மகிழ்ச்சி! ஏதோ பல நாட்களுக்குப் பின் தூரப்பயணத்தால் வந்தவனை வரவேற்கிற குதூகலம், வாலை ஆட்டித் துள்ளித்தள்ளி உடலிற் பாய்ந்து கால்களால் தடவி ஊளையிட்டு அழுது விட்டுக்குள் அழைத்து வந்தது. "எங்கையண்ணை ரெண்டு நாட்களாய் போயிருந்தனி", என்று தங்கச்சி கேட்டாள். அதுகூட மாதாமாதம் பென்சனாக எனக்குக் கிடைக்கிற சொற்ப தொகையைக் கருத்திற் கொண்ட கரிசனையோ?
கட்டிலில் விழுந்தேன். நாய் பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொண்டது. சில நாட்களுக்குள்ளேயே பழைய பிரச்சனை தொடங்கி யது. தூது வந்தது. மூத்த மருமகள் ஆதரவான சிரிப்பு, "மாமா ஒன்று சொல்றன் கோபிக்காதையுங்கோ. இந்த நாயை எப்பிடிக்கலைச் சாலும் நிக்குது. நீங்கள் படுத்திருக்கிறபடியாத்தான் நெடுகிலும் விறாந்தைக்கு வருகுது. என்ரை பிரண்ட்ஸ்வாற நேரமெல்லாம். இந்தக் குட்டை நாயைப் பார்த்து பகிடி பண்ணுதுகள். எனக்கு வெக்கமாயிருக்கு. ஆனபடியால் மாமா. கோபிக்காதையுங்கோ, நாளையிலை இருந்து கோடிப்பக்கம் ஒரு கொட்டில் போட்டிருக்கிறம். அதிலை போய்ப் படுங்கோ!"
"சரியம்மா!. என்னாலை உங்களுக்குத் தொல்லை வேண்டாம். நான் பொறன்!" என்று மாத்திரம் சொன்னேன் அழாக்குறையாக.
சுதாராஜின் கதைகள் 27

Page 16
"இல்லை மாமா!. உங்களுக்காக இல்லை. இந்த நாய்க்காகத்தான்." -
இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இந்த இடத்தை விட்டுப் போவது பெரிய கவலையாக இருந்தது. இப்படி விறாந்தையில் கிடந்தால் பிள்ளைகளின் துடியாட்டங்களைப் பார்த்துக் கொண்டே பிராக்காகக் கிடக்கலாம். கோடிக்குப் போய்விட்டால் ஒரே தனிமைதானே? இப்பொழுது இருக்கிற ஓரளவு கவனிப்பாவது அற்றுப் போய்விடுமோ என்னவோ?
காலைச்சாப்பாட்டு நேரம் முடிந்த பின்னர் பிள்ளைகளுக்கும் விடுமுறை நாளாதலால் எல்லோருமாகச் சேர்ந்து எங்களை அப்புறப்படுத்துகிற பணியில் இறங்கினார்கள். முதலில் எனது பழைய கட்டிலைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இதற்குள் "எங்கை நாயின்ரை சிலமனைக் காணவில்லை?" என்ற பேச்சும் அடிபட்டது. உண்மைதான், காலையிலிருந்தே நாயைக் காணவில்லை. எங்கேயாவது ஓடிப்போயிருக்குமோ?
என்னை இறக்கித் திண்ணையில் இருக்கச் சொல்லி விட்டு கட்டிலைத் தூக்கினார்கள். அங்கே, அது பாவம் செத்துப் போய்க் கிடக்கிறது!
அப்பாடா தொல்லை விட்டது போ! இதுதான் மனிசமணம்! நாய் செத்துப் போய் கிடப்பதைக் கண்டதும் தோன்றிய இரகத்தையும் மீறிக்கொண்டு ஒரு நிம்மதி தோன்றியதே. அது இனி என்னை அப்புறப்படுத்த மாட்டார்கள் என்ற சந்தோஷம்தான். இந்தப் புத்தி மனிசனுக்கு இல்லாமல் வேறு எதற்கு வரும்? எப்படியாயினும் கோடிக்குப் போகவேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டதே - அது பெரிய காரியம்தான்! ஆனால் அது கூட தப்புக்கணக்காய்ப் போய் விட்டது. நாயின் சடலத்தை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என நினைத்தேன். அதற்கு முதலே எனது கயிற்றுக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு கோடிப் பக்கமாகப் போகிறார்கள்! அடுத்தது நிச்சயமாக நானாகத்தான் இருக்கும்).
சிரித்திரன் (பங்குனி 1979) O
28 சுதாராஜின் கதைகள்

தயவு செய்து கை போடாதீர்கள்
இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான் சற்று ஒய்வாயிருக்கும்- ஓய்வு எனக்கல்ல, கடைக்கு சாப்பிட வருபவர்கள் தொகை குறைவாயிருக்கும் என்று அர்த்தம். கதிரை மேசைகளை ஈரத்துணியினாற் துடைத்து கடையை கூட்டித் துப்புரவு செய்யத் தொடங்கினேன். காலையில் ஒருமுறை கடை திறப்பதற்கு முன் கூட்டினால் 7 பிறகு இப்பொழுது.
"வயித்தி!. என்னப்பா அனுங்கிக் கொண்டு நிக்கிறாய்?. கெதியாய் அலுவலைச் செய்து போட்டு. வடையை எடுத்தந்து அலுமாரியிலை போடன்!' - இது முதலாளி, அவரது பாணியே அதுதான். அதட்டல். எனக்கு எரிச்சலேற்பட்டது. அவர் 'வயித்தி என்று கூப்பிடுவதிலேயே நக்கல் இருக்கிறது. வயித்தி என்பதில் 'வயிறு' என்ற பதம் அடங்கியிருக்கிதாம். முதலாளிதான் சொல்லு வார், ‘நல்லபேர் வைச்சாங்களடா உனக்கு. வயித்தியெண்டு. நீ சாப்பாட்டைக் குறைச்சுப் பிடிச்சியெண்டால் உந்த வயிறும் குறையும்’ எனக்கு ஊதியமாக நூற்றிமுப்பது ரூபாயும் மூன்று வேளைச்சாப்பாடும் கிடைக்கிறது. தெரியாதா. அந்த வேளைச் சாப்பாட்டுக்காகத்தான் இந்தக் கதையெல்லாம்! ஆனால் இதை ஒரு கதையாகப் பெரிசுபடுத் தக்கூடாது.
வடைகளை எடுத்துவர பின்கட்டிற்கு ஓடினேன். ‘முதலாளி. பெரிய முதலாளி.’ என் மனசு எரிந்தது. எதையும் அவர் சொல்லு முன்னரே செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறவன் நான் தான். ஆனால், அந்த மனுசன். ஏதோ தான் இல்லாவிட்டால் இங்கு வேலையே நடவாது என்பது போலத்தான் கத்தும்.
சமையற்காரன் மணியம், மாவைத்தட்டையாக உருட்டி நடுவிலே துழையிட்டு. அவன் வடை சுடுவதில் வலுவிண்ணன்! நின்ற நிலையில் ஒவ்வொன்றாக மாவை உருட்டி உருட்டி எண்ணெயில்
சுதாராஜின் கதைகள் 29

Page 17
போட்டு நூற்றுக்கணக்கான வடைகளைச் சுட்டுத் தள்ளுவான். எவ்வளவு சுறுக்காகச் செய்தாலும் அளவு பிசகாது. ஒரு கையாற் பொத்திப் பிடிக்கக்கூடிய சைஸ். ஒரு புளுகம் வந்தால். மணியம், ஒவ்வொரு வடையிலும் இம்மியளவு மாவைக் குறைத்து உருட்டி வடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவான். பிறகு முதலாளியிடம் போய், இவ்வளவு மாவில் இத்தனை வடை சுட்டேன்’ எனக் கூறி நல்ல பெயர் சம்பாதிப்பான். பந்தக்காரன்! இது எனக்கு எரிச்சலை யூட்டினாலும் அவனோடு ஒன்றும் பேசுவதில்லை. மணியம் வயதிற் குறைவானவனானாலும் கொஞ்சம் தோற்றமான ஆம்பிளை. மட்டு மரியாதையில்லாமற் கதைப்பான். அவன் கதைப்பதைப் பார்த்தால் சிலவேளைகளில் கையைக் காலை மாறி விடுவானோ என்றும் தோன்றும்.
வடைகளைக் குவியலாகக் கண்டதும் அடிமனதில் அமிழ்ந்து போயிருக்கும் ஆசையொன்று கொதியெண்ணெயிலிட்ட அப்பளமாகப் பொங்கியெழுந்தது - வடைகள். சின்னச் சின்ன.குண்டு குண்டான. குண்டு மணியைப் போன்ற வடைகள்.
ஒரு நாளைக்கெண்டாலும் அதுகளுக்குக் கொண்டு போய்க் குடுக்கவேணும். சுப்புறு நினைவில் வந்தான். (எனது ஒரே மகன், ஐந்து வயது. பதிவுப் பெயர் சுப்புரமணியம். இவள் கனகம் - அவனது அம்மா கூப்பிடுகிற சுகத்திற்காக. ‘சுப்புறு. ஆக்கினாள்).
"என்னப்பா. யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய்?. எடுத்துக் கொண்டு போவன்!" மணியம் அடுப்புவெக்கையை என்னோடு தீர்த்தான். இவங்களுக்கு கொஞ்சமென்றாலும் அன்பு ஆதரவாகப் பேசவராதோ?
வடைகளை கூடையிற் சுமந்து கொண்டு வந்தபொழுது. மீண்டும். ஒரு நாளைக்கொண்டாலும் அஞ்சாறு வடை கொண்டுபோய் அதுகளுக்குக் குடுக்கவேணும். மனசு. மன்றாட்டமாக. பயபக்தியாக" ‘சரி. பார்ப்பம்!” - ஒவ்வொரு நாளும் தான் இந்த 'பார்ப்பம்' என்று பதில் கிடைக்கிறது. எப்பொழுது தான் பார்க்கலாம் - என்கிற மனசு.
நெடுநாளாகத்தான் இந்த ஆசை மனசைப்போட்டு அலைக் கிறது. ஒரு வடைப் பார்சலை கனகமும் சுப்புறுவும் கண்டால் கண்கள்
30 சுதாராஜின் கதைகள்

எப்படி ஆச்சரியத்தால் விரிந்து பிரமிக்கும்! ஆனால் ஐந்தாறு வடை வேண்டுவதென்றால் சாதாரண காரியமா? இப்பொழுது வடை முன்னரை விட விலை இரண்டு மடங்காகி விட்டது - வெளியே பெற்றோலின் விலை ஏறியதால் இங்கு வடைகளின் விலையும் ஏறியது. அதற்குக் கொடுக்கிற காசிற்கு ஒரு நாளையச் சீவியத்தைக் கொண்டு போகலாம். இந்த விசித்திரத்தில் சொட்டைத் தீன்களுக்கு செலவு செய்வதைப் பற்றி நினைக்கத்தான் முடியுமா? "பரவாயில்லை' என நினைத்துக் கொண்டு ஒரே ஒரு நாளைக்கு வேண்டலாம். ஆனால், இதற்குள்ளேயே கிடக்கிறவன். எத்தனை பேருக்கு அந்தக் கையாலேயே வடை பார்சல் கொடுக்கிறவன். காசு கொடுத்து வேண்டுவதென்றால் மனசு பின்வாங்குகிறது.
முதலாளியிடமாவது வாயை விட்டுக் கேட்கலாம். ‘விடிந்தாற் பொழுதறுதியும் அவருக்கென்றே உழைத்துக் கொடுக்கிறேன் - (இது கனகத்தின் குற்றச்சாட்டு) கேட்டால் இல்லையென்றா சொல்லிவிடுவார்? கனகம் அடிக்கடி ஏசுவாள். 'உங்களுக்கு ஒரு நேரகாலம் இல்லையோ' ‘விடுவாசல் இல்லையோ? - பெண்டில் பிள்ளையில்லையோ? இப்படி விடிஞ்சாற் பொழுதனுதியும் அந்தக் கடையே கதியெண்டு கிடக்கிறியள். அந்த மனிசன் உங்களுக்கு என்னத்தை அள்ளிக் கொட்டுது?, அவள் மடைச்சி அவளுக்கு என்ன தெரியும்? முதலாளி எவ்வளவோ நல்லவர். சந்தர்ப்பங்களில் சீறிச்சினந்தாலும் அவருக்கு எவ்வளவோ நல்ல மனசு இருக்கிறது. இல்லாவிட்டால் மூன்று வருடங்களுக்கும் மேலாக என்னை 'நிரந்தரமாக வைத்திருப்பாரா? இந்தச் சாப்பாட்டுக் கடைக்கு வேலைக்கெனவரும் பெடியள் வந்த சுவடு தெரியாமல் திரும்புகிற (அல்லது திருப்பப்படுகிற) சங்கதி யெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும்?
ஆனால் எனக்கென்னவோ அவரிடம் கேட்கவே மனசு வராது. அவரது கண்டிப்பான பேச்சுக்களாலும் அதட்டல்களாலும் அவரிடம் ஒருவித பயம் கலந்த மரியாதையே ஏற்படுகிறது. கையை நீட்டிச் சம்பளம் வேண்டும் மனிசனிடம் எப்படி இதையெல்லாம் போய்க் கேட்டுக் கொண்டு நிற்பது என்ற எண்ணமும்.
ஒரு நாளைக்கு எப்படியும் கேட்கத்தான் வேண்டும். இதிலே கூச்சப்பட என்ன இருக்கிறது? 'இன்றைக்குக் கேட்கலாம், ‘இன்றைக்குக்
சுதாராஜின் கதைகள் 31

Page 18
கேட்கலாம்' என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டாலும் அலுவல் முடிந்து போகும் நேரத்தில் அநேகமாக வடை முடிந்து போயிருக்கும், அல்லது முதலாளியின் ‘மூட்’ குழம்பிப் போயிருக்கும்.
கூடையிற் கொண்டு வந்த வடைகளை கடையின் முன் பக்கத்திலிருந்த கண்ணாடி அலுமாரியிற் கொட்டிய பொழுது, சில வடைகள் கால் முளைத்த கோழிக்குஞ்சுகள் போல "கீர்ர்'ரென மறுபக்கத்திற்கு உருண்டோடின. இதைப் பார்க்கும் பொழுது தப்பிப் பிழைப்பதற்காக அவை ஒடுவதைப் போல சிரிப்பாக இருந்தது. பாவம் அவற்றின் ஒவ்வொருநாட் பிறப்பும், இறப்பும் வருடக்கணக்காக அவற்றோடு உள்ள பரிச்சயம்தான் இப்படி, உயிருள்ள சீவன்களோடு பழகுவதைப் போன்ற உணர்வைத் தருகிறது போலும். அல்லது ஒரு பார்சலை பிள்ளைக்குக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டுமென்ற ஆசைதான் நாளுக்குநாள் வளர்ந்து அப்படி அவற்றின் மேல் ஒரு காதலும் இரக்கமும். பிரமையும் ஏற்படுகிறதோ என்றும் புரியவில்லை.
கண்ணாடி அலுமாரியில் கதவைப் பூட்டி விட்டு வந்து பார்க்கும் பொழுதும், பன்றிக் குட்டிகளை அடைத்து விட்டு வந்தது போல. அவை ஒரு பக்கமாகக் குவிந்து கிடப்பது போல. ஒரு மூலைக்கு வந்து ஒன்றையொன்று இடித்துக் கொண்டு வெளியேறத் துடிப்பதுபோல இரக்கமான தோற்றத்தையே அளிக்கிறது. ஆனால் முதலாளியே அவற்றில் கரிசனைப்படுவது மாதிரி கதவின் மேல் ‘தயவு செய்து கை போடாதீர்கள், என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுப்பாடு எனக்குப் பொருந்தாது என்பதும், கதவைத் திறந்து கைபோடும் உரிமை எனக்கு மாத்திரம் இருப்பதும். நினைக்கையில் ஏதோ கொம்பு முழைத்த மாதிரி உற்சாகம்!
இந்த யோசனைகளில் நின்றபொழுது முதலாளியின் அதட்டற் குரல் கேட்டது, ‘வயித்தி!. எங்கையப்பா ஏமலாந்திக் கொண்டு நிக்கிறாய்?. வந்த ஆக்களைக் கவனியாமல்?”
அப்பொழுதுதான் கவனித்தேன் - வந்திருப்பவர் இராமச்சந்திரன் ஐயா. அவரிடம் ‘என்ன வேண்டும்? என்று கேட்டு நேரத்தைச் சுணக்காமல் ஓடிப்போய் தட்டிலே வடைகளை எடுத்து வந்தேன். எனக்குத் தெரியும். இப்படி ஆட்களையும் அவர்கள் வருகிற
32 சுதாராஜின் கதைகள்

நேரத்தையும் கொண்டே அவர்களது தேவையை அனுமானிக்க. என்றாலும். ஒரு சம்பிரதாயம் போல வருபவர்களிடமெல்லாம் முகத்தை மலர்த்தி. ஐயாவுக்கு? என்று கேட்க வேண்டும்.
ஆட்கள் வருகை ஓரளவு கூடிக் கொண்டிருந்தது. அலுவலகங் கள் முடிகிற நேரமாதலால், இனி சற்று அதிகமாகத்தான் இருக்கும். எல்லோரையும் முகம் கோணாமல் சுழன்று சுழன்று கவனிக்க வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாய்ச்சலை என்னிடத்தில் தீர்த்துவிட்டுப் போகிறவர்களும் உண்டு. அதனால் சற்றும் சுணக்கம் ஏற்படாமல் சுழல வேண்டும். இப்படி, வாடிக்கையாக வருபவர்கள், எப்போதாவது ஒருநாளைக்கு வருபவர்கள். கிராமப் பக்கத்திலிருந்து ரெளனுக்கு அலுவலாக வரும்பொழுது சாப்பாட்டுக்கு வருபவர்கள். எல்லோருக்கும் முகத்தைச் சுளிக்காமல் சேவை செய்ய வேண்டும்.
இதற்குள்ளே ‘ரீமேக்கள் வந்து "சீனி இல்லை’ என முறைப்பாடு செய்தான். முதலாளியிடம் சொல்லி விட்டு பக்கத்திலுள்ள கடைக்குச் சீனி வேண்டுவதற்காக ஓடினேன். இது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிற விஷயம். (இதில் எனக்கு ஏதோ வெட்டு இருப்பதாக மணியம் சந்தேகப்படுவான். ஆனால் பக்கத்துக் கடையில் கடனுக்குத்தான் சாமான் வேண்டுவது. பிறகு முதலாளிதான் கணக்குத் தீர்ப்பது. ஒரு வெட்டுக் கொத்துக்கும் இடம் கிடையாது. சக தொழிலாளர்கள் என்னையே ஒரு பெரியவனாகக் கணித்து முறையிடுவதுதான் சந்தோஷத்தைத் தருகிற விஷயம் என்றேன்) இதனால் குசினிப் பக்கத்தை அடிக்கடி கவனித்து, முதலாளியிடம் கூறி தேவையான வற்றை நேரத்துக்கு நேரம் வேண்டிப்போடுவேன். இப்படிச் செய்வதால் இந்த சாப்பாட்டுக்கடையை நானே நிர்வகிப்பது போன்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஆனால் மணியம் சில வேளைகளில் நேரே முதலாளியிடம் போய் இன்ன சாமான் வேண்டும்’ என்று கூறிவிடுவான். எனது தலைமையைப் பறிப்பதற்குத்தான் அவனுக்கு இந்தக் குறுக்கால் போகிற புத்தி வருகிறது. ஆனால் யார் சொன்னாலும் முதலாளி என்னையே கூப்பிட்டனுப்புவார். இது, அவருக்கு என்மேலேயே நிறைந்த நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது?
சுதாராஜின் கதைகள் 33

Page 19
இதனாற்தான். மறந்தும்கூட. கடையிலிருந்து எதையும் ஒருபோதும் சுருட்டிக் கொண்டு போனதில்லை. அது பெரிய துரோகமான செயல். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல், சில சமயங்களில். 'அஞ்சாறு வடையை தெரியாமல் எடுத்துக் கொண்டு போனால் என்ன என்ற சபலமான எண்ணமும் தோன்றும். அடுத்தகணமே என்னை நினைத்துக் கூசிப் போவேன். "சீ என்ன மனசப்பா இது!’ என்று அடங்கிப் போவேன்.
ஒருவடைப் பார்சலைக் கொண்டு போய் சுப்புறுவிடம் கொடுக்க அவன் காணாததைக் கண்டவன்போல அந்தப் பார்சலைப் பிரித்து, ஆவலோடு ஆசையோடு, சாப்பிடுவதை மனசார நினைத்து. நினைத்து.
‘எப்படியாவது ஒரு நாளைக்குக் கொண்டுபோய்க் குடுக்க வேணும். காசைக் குடுத்தெண்டாலும் வேண்ட வேணும். காசைக் கொடுத்துக் கேட்டால் முதலாளி, ‘என்னடா?. என்னட்டையே காசு நீட்டி வேண்டிற அளவுக்கு நீ பெரிய ஆளாகியிட்டியோ?” என்று நினைக்கவும் கூடும். அதைத் தவறாக, தன்னை அவமதிப்பதாகக் கருதவும் கூடும்.
ஐந்து மணியளவில் கனகேந்திரன் ஐயாவும் சிற்றம்பலம் ஐயாவும் வந்தார்கள். முதலாளியைப் பார்த்து முகஸ்துதிச் சிரிப்புடன் படியேறினார்கள்.
"என்ன?. சம்பளமெல்லாம் கூட்டியிருக்கிறாங்களாம்.!" என முதலாளி அவர்களிடம் கேட்டார். பெரிய மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக்கொண்டு,
"என்னத்தை.எழுபது ரூபாவைத்தானே கூட்டியிருக்கிறாங்கள். அது எந்த மூலைக்குக் காணும்?" எனக் கனகேந்திரம் ஐயா கூறியவாறு உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார்.
என்ன? எழுபது ரூபாய் கூட்டப்படுகிறதா? தட்டிலே வடை எடுத்து வந்து அவர்கள் முன்னால் வைத்துவிட்டு அவர்களது கதைக்குக் காது கொடுத்துக் கொண்டு நின்றேன்.
"வைத்தி.ரெண்டு ரீ கொண்டு வா!" வடைகளைச் சாப்பிட்டுக் கொண்டே சிற்றம்பலம் ஐயா ஒடர் தந்தார்.
34 சுதாராஜின் கதைகள்

"ரெண்டு.கப் ரீ" எனது கத்தலைக் கேட்டதும் கனகேந்திரன் ஐயா காதைப் பொத்தினார். "பயப்பிட வேண்டாம். இனிக் கத்தமாட்டன். ஒருக்கால் கத்தினாலே அவனுக்கு கேட்டிடும்." என்றேன். "என்ன ரீ மேக்கர் பக்கத்துக் கடையிலேயோ நிக்கிறான்?" என சிற்றம்பலம் ஐயா பகிடிவிட்டார். சிரிக்க முயன்றேன்.
fயை அவர்கள் முன்கொண்டு வந்து வைத்து விட்டு மனதுக்குள் குமைந்து கொண்டிருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்டேன்.
"ஐயா!. எல்லோருக்கும்தான் சம்பளம் கூட்டுறாங்களோ. அல்லது உங்களைப் போல பெரிய உத்தியோகத் தருக்கு மட்டுத்தானோ?"
"ஆர் சொன்னது எங்களுக்கு மட்டுமெண்டு?. எல்லோருக்கும் தான்!. சாதாரண ஒரு லேபருக்கும் கிடைக்கும்."
ஒரு சாதாரண லேபரராக என்னை நினைத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அப்பாடி! எனது சம்பளத்தில் சரி அரைவாசியளவு சடுதியாகக் கூடுமானால்..? அதிசயமாக இல்லையா, அதைக் கற்பனை செய்து பார்க்கவே இன்பமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் நினைத்தபடி வடைப்பார்சல் வேண்டலாம். கனகத்துக்கும் சுப்புறு வுக்கும் வயிறு நிறையச் சாப்பிடக் கொடுக்கலாம். உடுதுணிகள் வேண்டிக் குடுக்கலாம். இப்பொழுது கிடைக்கும் நூற்று முப்பது. அதிலும் கழிவுகள் போக நூறு அளவில் கிடைக்கும், இதை வைத்துக் கொண்டு அன்றாடச் சீவியத்தைக் கொண்டு போகிற ரகசியம் என்னைவிட கனகத்திற்குத்தான் தெரியும். இந்த அளவிற்காவது புருஷ லட்சணத்தைக் காப்பாற்ற முடிகிறதென்றால். அது முதலாளியின் புண்ணியந்தானே?
என் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கனகேந்திரன் mயா, என்ன நினைத்தாரோ. 'ஏன் வைத்தி. தனியார் துறைக்கும்: தான் சம்பளம் கூட்டுறாங்களாம். உனக்கும் கிடைக்கும்" என்றார்.
அந்தக் கணத்தில் ஒரு தலைகால் புரியாத சந்தோஷம் தோன்றியது. எனக்கு இது புதுமையாகவும் இருந்தது. உண்மையாக இருக்குமோ? பிறகு நினைத்தேன். கனகேந்திரன் ஐயா என்னோடு
சுதாராஜின் கதைகள் 35

Page 20
பகிடிதான் விடுகிறார். எனக்கு சம்பளம் கூட்டப்படுவதென்றால் அது நம்பக் கூடிய கதையா? ஒரு வேளை அப்படியம் நடந்தால்...? இந்த முறை சம்பளம் எடுக்கும் பொழுது முதலாளி அதையும் சேர்த்து இருநூறு ரூபாயாகக் கணக்குப் போட்டுத் தருவாரோ? ஓ! அப்படி யென்றால் எவ்வளவு அருமை! ஒரு நாளைக்குச் சுடுகிற அவ்வளவு வடைகளையும் வேண்டிக் கொண்டு போய் வீட்டிற் படைக்கலாமே!
ஆனால்.பொய்! அப்படி ஒரு போதும் நடக்காது. அதை நினைத்து வீணே மனக்கோட்டை கட்டுவானேன்? முன்னரும் தான் சம்பள உயர்வு. சம்பள உயர்வு என்ற கடைக்கு வந்து போகிறவர்க ளெல்லாம் கதைத்தார்கள், ஆனால் எனது சம்பளத்தில் ஒரு ’வெள்ளைச் சல்லியும் கூடவில்லையே? நான் இதற்கெல்லாம் லாயக்கானவனில்லை. விடியற்காலை ஐந்து மணிக்கே வேலைக்கு வந்து. இரவு பத்துப் பதினொரு மணிவரை வேலை செய்கிறேனே. நல்லநாள் பெருநாள் என்று கூட இல்லாமல் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் பாராமல். உழைக்கிறேனே. இதைப் பற்றி யார் கவனிக்கிறார்கள்? நினைப்பதோடு சரி. அதற்குமேல் மூச்சு வெளிப்படாது. கடையில் ஒரு வெத்திலை பாக்கு எடுத்தாலே கணக்கில் குறித்து விடுவார் முதலாளி. பிறகு சம்பளத்தில் கழிக்கப்படும். இந்த விசித்திரத்தில் சம்பள உயர்வா?
எனக்குப் பெரிய கவலையாயிருந்தது. பத்து வயதில்ேயே ஆச்சி இறந்து போக அப்பு இன்னொருத்தியை மணந்து கொள்ள. வீட்டை விட்டு வெளியேறியவன் நான். பல கடைகளில் எடுபிடி வேலைக்காரனாக, சைக்கிளில் சென்று கொமிசனுக்கு வியாபாரம் செய்பவனாக, மிட்டாய், ஜஸ்பழம் விற்பவனாக. இப்படிப் பலவிதமான தொழில்கள். எல்லாமே நிரந்தரமற்ற தொழில்கள், நாற்பது வயதுக்குப் பிறகு. இருபது வயது அழகியாக. ஏழ்மையின் பிடியிலிருந்த கனகம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அவளைக் கைப்பிடித்து. இப்பொழுது ஐந்து வயதில் ஒரு சுப்புறு!
இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபொழுது இனம் புரியாத வேதனையொன்று நெஞ்சை அலைக்கத் தொடங்கியது. கனகத்தையும் சுப்புறுவையும் நினைக்கையில் அழுகையே வந்து விடும் போலிருந்தது. அநாதையாக ரோட்டு நாய் போலத் திரிந்த
36 சுதாராஜின் கதைகள்

எனக்கு வந்து சேர்ந்த பந்தங்கள்! பாவம்; அதுகளோடு எப்பொழுது தான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன்?
விடிய, சுப்புறு எழுவதற்கு முன்னரே வெளிக்கிட்டால் பிறகு, அநேகமாக அவன் உறக்கத்திற்குப் போன பின்னரே படுக்கைக்குப் போகிறேன். படுக்கையில் கனகம் குறைநிறைகளைச் சொல்லுவாள். கஷ்ட நஷ்டங்களை சொல்லுவாள். மெளனமாகவே கிடப்பேன். அவளது பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு காண முடிவதில்லை. எனது பிரச்சினைகளுக்கு அவள்தான் தீர்வு காணவேண்டும். நான் கொடுக்கும் சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு எப்படித்தான் சமாளிப்பாளோ?
பொழுது இருட்சியடைந்து கொண்டிருந்தது. கடைக்கு எத்தனையோ பேர் வந்து போகிறார்கள். எல்லோரையும் கவனிக்கிறேன். ஆனால் வேதனைச் சுமையொன்று நெஞ்சை அழுத்திக் கொண்டிருக் கிறது. என்னவென்று தெரியாதவலி. ஏதோ ஒரு பயம். அது பயமா அல்லது கவலையா, எதுவோ இல்லாமற்போய் விட்டமாதிரி. ஏதோ ஒரு தவறு செய்து விட்ட மாதிரி. எதையோ இழந்து விட்டமாதிரி.
எவ்வளவோ முயன்ற பார்த்தும் கவலையை அடைக்க முடியவில்லை. பிறகு, ஒரு முடிவெடுத்துக் கொண்டு முதலாளியிடம் போனேன்.
காசு மேசையில் இருந்த முதலாளிக்கு அண்மையாகச் சென்று கதைக்கத் தோன்றாததால் பேசாது நின்றேன். எனது வித்தியாசமான தோற்றத்தைப் புரிந்து கொண்டு போலும்,
"என்ன வயித்தி?. ஒரு மாதிரி நிக்கிறாய்?" எனக் கேட்டார் முதலாளி.
பதில் பேசமுடியாமல் இருந்தது. தலையையும் நிமிர்த்த முடியாமலிருந்தது துக்கம் முட்டிக் கொண்டு நின்று தொண்டையில் நோவெடுத்தது. கதைப்பதற்காக வாயைத் திறந்தால் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிடுமோ என்றும் தோன்றியது.
"என்ன வேணும்?. சொல்லு'!. பயப்பிடாமல் கேள் வயித்தி"
சுதாராஜின் கதைகள் 37

Page 21
அப்பொழுதுதான் முதலாளியை நிமிர்ந்து பார்த்தேன். கண்ணிர் முந்திக் கொண்டு வந்தது.
6
அவர், பயப்படாமல்’ என்று சொன்னதுதான் கண்ணிரை
வரவழைத்தது. வழக்கத்திற்கு மாறாக நினைத்ததற்கும் மாறாக அவர் ஆதரவாகப் பேசியதுதான் என்னை உருக்கியது)
"என்ன வயித்தி. என்ன நடந்தது?. மணியத்தோடை ஏதாவது புடுங்குப்பாடே?” முதலாளியும் பதட்டப்படத் தொடங்கினார்.
என்னயறியாமலே தலை திரும்பவும் குனிந்து கொண்ட்து. அவரது முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. முகத்தில் குத்திட்டு வளர்ந்து நிற்கிற மயிர்களுடு கைவிரல்களை விட்டுக் கோதினேன். அப்படிச் செய்வதால் நான் உணர்ச்சி வசப்படாமல் நிற்பதற்கு முயன்றேன்.
"வயித்தி! நிமிர்ந்து என்னைப்பார்!. விசயத்தை என்னெண்டு சொல்லடாப்பா!'
நிமிர்ந்து பார்க்காமலே சொன்னேன்: "சரியான நெஞ்சுநோவாய் இருக்குதையா நெஞ்சைக் கையினால் அழுத்தத் தொடங்கினேன்.
"அதென்ன?. இருந்தாப்போலை நெஞ்சுக்குத்து?"
"இல்லை ஐயா. கொஞ்சநாளாக இருந்தது. நீங்கள் பேசுவியளெண்டு நான் சொல்லவில்லை. இப்ப கடுமையாயிருக்குது'
"எனக்கென்ன விசரே. பேசுறதுக்கு?. நெஞ்சுக்குத்தெண்டால் கவனமாயிருக்க வேணும். டொக்டரிட்டைக் காட்டினனியே?"
"இல்ல." தாடியைச் சொறிந்த கையால் தலையைச் சொறிந்து கொண்டு ஏதோ பிழைசெய்தவனைப் போல முதலாளியை அரைகுறை யாகப் பார்த்தேன்.
"வயித்தி. நெஞ்சில வருத்தமெண்டால் சும்மா விட்டுக் கொண்டிருக்கக்கூடாது. டொக்டரிட்டைக் காட்டினால். அவையள் சோதிச்சுப் பார்த்து என்ன வருத்தம் எண்டு சொல்லுவினம்."
38 சுதாராஜின் கதைகள்

"எங்கை ஐயா நேரம் கிடைக்குது?"
"நீ என்னப்பா மடைக்கதை பேசிறாய்?. என்னட்டைக் கேட்டால் விடமாட்டேனே?" அவர் கடிந்து கொண்டதும் அடங்கிப்போய் நின்றேன்.
எனது குடும்பத்தைப் பற்றி முன்னரே ஓரளவு தெரிந்திருந்தும் இப்பொழுது திரும்பவும் கனகத்தைப் பற்றியும் மகனைப் பற்றியும் அக்கறையாக சுகநலன்களை விசாரித்தார். பிறகு,
"நீ இப்ப வீட்டுக்குப் போகப் போறியோ?" என்றார்.
"போனால் கொஞ்சம் ஆறுதல் எடுத்திட்டு நாளைக்கு விடிய suysort b!'
"சரி இப்ப போயிட்டு நாளைக்கு காலமை சுகமாய் இருந்தால் வா!. இல்லாட்டில் டொக்டரிட்டைக் காட்டி மருந்து எடுத்திட்டு. மத்தியானத்துக்குப் பிறகு வா!"
“Fs ஐயா"
முதலாளி என்மேல் இவ்வளவு கரிசனையும் வைத்திருப்பதை நினைக்கப் போகாமல் நிற்கலாமா என்றும் தோன்றியது. நன்றி பெருகியது. அவர் போகச் சொன்ன பின்னரும் போகாமல் நின்றேன். அவரை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தேன்.
If
'பிறகென்ன யோசனை!. போவன்
"இல்லை ஐயா. ஒரு அஞ்சு வடை தந்தியளெண்டால் நல்லது."
"நெஞ்சுக்குத்துக்கு என்னப்பா வடை?”
இதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாம் என்று தெரியாமல் ஒரு புதுமணப் பெண்ணைப்போல நாணினேன். பிறகு சமாளித்துக் கொண்டே, "பிள்ளைக்குக் கொண்டு போய்க் குடுக்கலாமெண்டு." என மென்று விழுங்கினேன்.
முதலாளி மணியத்தைக் கூப்பிட்டார். - ஓடிவந்தான்.
சுதாராஜின் கதைகள் 39

Page 22
"இவனுக்கு ஒரு அஞ்சு வடை பாசல் பண்ணிக்குடு!"
நல்ல போஷாக்கில் வளர்ந்த குழந்தைகளைப் போல குண்டு குண்டாக முழியைப் பிதுக்கிக் கொண்டு கிடக்கும் வடைகளை ஒரு முறை பார்த்தேன்.
மணியம் என்னை விசித்திரமாகப் பார்த்தான். அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடி கூச்சமாயிருந்தது.
எத்தனையோ பேருக்கு. எத்தனையோ வடைகள் பார்சல் பண்ணிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு மணியம் வடை பார்சல் பண்ணுவதைப் பார்க்கையில் அவனிடமே பணிந்து போய் விட்டதைப் போன்ற ஆற்றாமையுணர்வு குற்றியது. அவன் பார்சல் பண்ணிக் கொண்டு வரும்வரையும் யாருக்கோ மெளன அஞ்சலி செலுத்துப வனைப் போல நின்றேன்.
"இந்தா"
மணியத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் பார்சலை வேண்டி னேன். முதலாளியைப் பார்த்து நன்றியோடு, "அப்ப வாறன் ஐயா!" முதலாளி சரி என்பது போலத் தலையை ஆட்டினார். வடைப்பார்சல் கைக்கு வந்துவிட்டது நேரத்தோடு வீட்டிற்குப்
போகவும் கிடைத்திருக்கிறது! சந்தோஷம் பெருகியது வீறுநடைபோடப் போகிறேன்.
எனக்கு நெஞ்சுக்குத்தும் இல்லை. ஒரு மண்ணாங் கட்டியும் இல்லை. தலைகால் புரியாத மகிழ்ச்சியில் நடக்கத் தொடங்கினேன். பிறகு, ஒரு சமயத்தில் முதலாளியைத் திரும்பிப் பார்த்தேன்.
முதலாளி எனது கணக்குக் கொப்பியில் கைபோடுவது தெரிந்தது.
-இப்பொழுது உண்மையிலேயே நெஞ்சுக்குத்து வந்து விடும் போல. ஏதோ எரிவு. ஏதோ அடைப்பு. ஏதோ இழப்பு நேர்வது போன்ற உணர்வு.
சிரித்திரன் செப்டம்பர் 1981
40 சுதாராஜின் கதைகள்

கனிகின்ற பருவத்தில்
"காத்திருத்தல்" என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்க முடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பது போல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டு விடுகின்றன. அப்பொழுதெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கை யோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக் கொள்வான்.
மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிரதம், மழை காரணத்தினாற் போலும் வழக்கத்தை விடத் தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அதுவரை காத்திருந்தவர்கள் சொற்ப நேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக் கொண்டு ஏறினார்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறினான். இருக்க இடமில்லாததால் நின்றான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத் தொடங்கியது. வடக்கிலிருந்த கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். "குறேசிங்"சிற்காக இது காத்திருக்க வேண்டும். வியர்வையையும் சனவெக்கையையும் சகித்துக் கொள்கிற ஆற்றலில்லாதவனாய் இறங்கி மேடைக்கு வந்தான்.
மழையைக் கண்டு சுவரோரமாக ஒதுங்கியிருக்கிற மனிதர்களின் அடக்கத்தையும், ரெயிலிலிருந்து குதித்து தண்ணிர் எடுப்பதற்காக போத்தலோடு ஓடுகிற சிலரையும் பாாத்துக் கொண்டு நின்றான். பின்னர் தற்செயலாகத் திரும்பிய பொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
ஓர் அழகிய ரோசாமலரைப்போல அவளது முகம் தோற்ற மளித்தது. அவன் கவனிப்பதைக் கண்டதும் அவள் பார்வையைத் திருப்பினாள் - அவளது தடுமாற்றத்திலிருந்து, அவள் தன்னைச் சற்று நேரமாகவே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள் என நினைத்தான். எதற்காக அப்படிப் பார்த்திருக்க வேண்டும் என எண்ணிய பொழுது ஒரு வேளை மீண்டும் பார்ப்பாளோ என்ற சபலமும் தோன்றியது.
சுதாராஜின் கதைகள் 41

Page 23
அவள் திரும்பவும் பார்த்தாள். தான் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை அவள் அறியக் கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினான்.
மழையில் நனைந்து கொண்டு நிற்கிற செம்றியாட்டைப்போல புகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற்கிறது. மழைநீர் கூரையிலி ருந்து வழிந்து ரெயிலின் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப் போலத் தெறித்துப் பறக்கிறது. பூட்டப்பட்ட கண்ணாடியில் முத்துமணிகளாக உருள்கிறது. தூரத்தே உரத்துப் பெய்து கொண்டு ஒரே புகை மூட்டமாகத் தெரிகிறது. ஆவியாக மேலே செல்கிற நீர் ஒரு 'ஷவரைத் திறந்து விட விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப்பவன் போல வானத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அப்படி நின்றபோதும் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப் பாள் என அவனது மனது கற்பனை செய்தது, அந்த எதிர்பார்ப்போடு திரும்பினான். ஆனால் அவள் பார்க்காமலே இருந்தாள். தன்னோடு இருப்பவர்களோடு கதைத்து எதற்காகவோ சிரித்தவாறு ஒருமுறை திரும்பினாள். அந்தக் கணமே அவனுக்கு ஏமாற்றத்தை அளித்து மறுபக்கம் திரும்பினாள். தன்னைப் பார்ப்பதற்காகவே திரும்பிய அவள், கூச்சத்தினாற்தான் பார்வையை மீட்டிருக்கக்கூடும் என அவன் நினைத்தான். அதற்குப் பிறகு நெடுநேரமாகவே அவள் பார்க்கவில்லை. ஆனால் நெற்றியில் விழுகிற கேசங்களை ஒதுக்கி, தன்னை அழகு படுத்துகிற முயற்சியில் அவள் கூச்சத்தோடு ஈடுபட்டிருந்தாள். தனது பார்வையைத் தரிசித்த பின்னர்தான் அவளிடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என அவன் திருப்தியடைந்தான். அந்தப் பெட்டி யிலேயே தனது பயணப்பையை வைத்து விட்டு இறங்கிய புண்ணி யத்தை நினைக்க இப்பொழுது மகிழ்ச்சியேற்பட்டது. இனி, யாழ்ப்பாணம் போகும் வரை பார்த்துக் கொண்டே போகலாம்!
அவள் நெடுநேரமாகப் பார்க்காமலிருப்பதால் கர்வக்காரியாக இருப்பாளோ என எண்ணினான். அல்லது, தானே வீணாக எதையாவது கற்பனை செய்து மனதை அலட்டிக் கொள்கிறேனோ என்ற சமசியமும் தோன்றியது. அவசரமாக உள்ளே ஏறி, அவளது முகத்தைப் பார்த்து ஒருபதில் அறிந்து விட வேண்டுமென்ற துடிப்பும் ஏற்பட்டது. அவள் இனிப் பார்ப்பாளோ, அல்லது பார்க்காமலே விட்டுவிடுவாளோ எனக்
42 சுதாராஜின் கதைகள்

குழப்பமடைந்தான். பார்ர்க்கவே மாட்டாள் என்ற இழப்பை மனது ஏற்க மறுத்தது.
காங்கேசன்துறையிலிருந்து வருகிற புகையிரதம் இன்னும் சில நிமிடங்களில் மேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டபொழுது 'அப்பாடா' எனப் பெரிய நிம்மதி தோன்றியது அவனுக்கு. இனி இந்தப் புகையிரதமும் புறப்படும். உள்ளே ஏறி அவளது முகத்துக்கு நேரே நின்றும் கொண்டான்.
அவள் தன்னைக் கள்ளமாகப் பார்ப்பதைக் கவனித்தான். அந்தக் கள்ளமும், அழகும், அவளது நாணமும் அவன் முன்னர் கண்டிராத விஷயங்கள்! தனது மனசை அசைக்கிற மாதிரி அப்படியொரு சக்தி ஒரு சாதாரண பெண்ணிடம் இருக்கிறதே என ஆச்சரியப் பட்டான். மற்றவர்களின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டு அவனும் அடிக்கடி அவளைப் பார்த்தான். சொல்லி வைத்ததுபோல சந்திக்கிற கணங்களில் ஒரு பரவசம் தோன்றியது.
அவளுக்குப் பக்கத்தில் ஓர் இளைஞன் இருந்தான்- அவளது சகோதரனாக இருக்கலாம், முன் இருக்கையில் அவளது பாட்டியும் இரு சிறுவர்களும் இருந்தனர். பாட்டி, எதற்காகவோ அவளை 'சாந்தா!' என அழைத்தாள். அவளது பெயர் அவனை மிகவும் கவர்ந்தது. அவளைப் போலவே அமைதியான பெயர் ‘சாந்தா’ என மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிப் பார்த்தான். ஒரு வீட்டில் அவளோடு வாழ்க்கை நடத்துவது போலவும் அலுவலகம் முடிந்து களைப்பாக வருகிற தனக்கு அவள் அன்பான பணிவிடைகள் செய்வது போலவும், கற்பனை வளர்ந்தது - ‘ஓ’. எனது மனைவி சாந்தா!’ என இதயம் நிறைவு கொள்ள , அவன் விழித்திருந்த நிலையிலேயே அந்த இன்பக் கனவில் மூழ்கிப் போனான். அப்படியே அவளது கையைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குப் போவதாக அந்தக் கனவு சுபமடைந்தது.
சே! இதென்ன விசர்க்கதை? கல்யாணம் என்றால் சும்மாவா? அவனுக்கு இப்பொழுது என்ன வயசாகிறது? இருபத்தைந்து வயசு, ஒரு வயசா? இந்த வயசிலேயே ஒருத்தியை இழுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால் அப்பா பொல்லுத் தூக்கிக் கொண்டு வர LonTLLT UT?
சுதாராஜின் கதைகள் 43

Page 24
அவனுக்கு அக்கா ஒருத்தியும் இருக்கிறாள். இருபத்தொன்பது வயசில் அவளும், உத்தியோகம் பார்க்கிறாள். குடும்ப நிலையைச் சீர்செய்வதற்கு அக்காவும் உழைக்க வேண்டியிருக்கிறது. அப்பாவும் கஷ்டமில்லாமல் உழைத்தவர்தான். தன்குழந்தைகளை கஷ்டமில் லாமல் வளர்த்தெடுப்பதற்கு அவரது கஷடமான உழைப்பும் போத வில்லை. போதாதற்கு கடன், கடன், கடன். பின்னர் அன்றாடச் செலவுகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டே ஈடுவைத்த வீடு வளவை மீட்க முயன்றால். ப்ளஸ் வட்டி, வட்டி, வட்டி. அவரது சக்திக்கு அப்பாலே சென்றது கடன்சுமை. பிள்ளையை உத்தியோகத்துக்கு அனுப்பினார். “பெண் பிள்ளை- பக்குவமாக வீட்டிலிருக்க வேண்டியவள் என வேதனைப்பட்டுக் கொண்டே அனுப்பினார். அவள் குடும்ப பாரத்தை ஓரளவாவது குறைத்து, தனக்கு அடுத்து வருபவளின் கையில் ஒப்படைத்து ஒதுங்குவதானால் இன்னும் ஐந்தாறு வருடங் களாவது செல்ல வேண்டும்.
அதற்குப் பிறகு, ‘அழகும் நற்குணமும், பொருந்திய முப்பத்தைந்து வயது நிரம்பிய அரசாங்க உத்தியோகத்தில் மாதம் எண்ணுாறு ரூபா வருமானம் பெறும் பெண்ணுக்கு மணமகன் தேவை, மணமகன் குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்’ என ஒரு விளம்பரம். சீதன விபரத்தை அறிந்தோ அறியாமலோ குறிப்பிடாமல் விடுவது விரும்பத்தக்கது. பிறகு தொடர்பு கொள்பவர்களோடு பேரம் பேசிப் பார்க்கலாம்.
ஆனால் அவளை மணக்க வரப்போகிறவனுக்கு அவளது சரித்திரத்தில் அக்கறை ஏற்பட்டுவிடும். அவள் பிறந்து வளர்ந்து போய் வந்த இடங்களிலெல்லாம் புலனாய்வு செய்து - அங்கெல்லாம் மற்றவர்களின் வாழ்க்கையில் குழி பறிக்கவென்று நாலுபேர் இருக்காமலா போய் விடுவார்கள்? அற்லீஸ்ட், அவள் தன்னைப் பார்த்து சிரிப்பதில்லை, கதைப்பதில்லை என்ற மனக்குறையோடு ஒருவன் அவளது அலுவலகத்தில் இல்லாமலாபோய் விடுவான்?
ஆக, இந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்வதற்கு வருகிறவன் இப்பொழுது தயாராயில்லை. இவர்களுக்கு ஒருத்தி சொந்தமாகத் தேவைப்படும்பொழுது அழகும் நற்குணமும் நிறைந்தவளாக தேவைப் படுகிறது! தாங்கள் வழியில் கைவிட்டு வந்த ஒருத்தி யாரையோ
44 சுதாராஜின் கதைகள்

கைப்பிடிக்கப் போவதைப்போல தங்களையும் இன்னொருத்தி பற்றிக் கொண்டு விடுவாள் என்ற பயமோ? ஏன், நிர்ணயிக்கிற விலையிலே தீர்க்கப்படுவதை மனது ஒப்புக் கொள்ளவில்லை.
முள்ளில் நடப்பது போல எவ்வளவு அவதானமாகப் பெண்கள் வாழ்கிறார்கள்! ஒருவனைப் பார்த்து வஞ்சகமில்லாமற் சிரித்துப் பழகிய (குற்றத்)திற்றாகவே அவ்வாழ்க்கை பறிபோய்விடுகிறது. அவளது எதிர் பார்ப்புக்களெல்லாம் ஏமாற்றமாகிவிட ‘மணமகன் குடிப்பழக்கம் அற்ற வராக இருத்தல் வேண்டும். என்பதைத் தவிர்த்துவிட்டு ‘தாரமிழந்த வரும் விண்ணப்பிக்கலாம் என்பதைப் புகுத்தி இன்னொரு விளம்பரம்! இது, அவள் தந்தைக்கோ தாய்க்கோ தாங்கள் கண்மூடுதற்கு முன் அவளது (திரு)மணத்தைப் பார்த்துவிட வேண்டுமென ஆசையேற் பட்டதனால் வந்தவினை.
அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவள் இனி யாராவது ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டியாக வேண்டும். அவள் இவ்வளவு காலமும் தன்வாழ்வில் கட்டிக்காத்து வந்த இலட்சியக் கனவுகளைச் சிதைத்து எப்படியாவது இருக்கிற ஒருவனுக்கு இனித் தன் வாழ்வை அடிமைபப்படுத்த வேண்டும். அவள், உழைப்பவள், படித்தவள், அழகி, பண்பானவள் என்ற காரணங்களுக்காகவாது விட்டுக் கொடுப்பானா வரப்போகிற தியாகி?
அவளது இரக்கமான தந்தை ஒன்றுக்கும் வழியில்லாமல் இன்னொரு கடனைப் (அற வட்டியில்) படப்போகிறார். அந்தக் குடும்பத்தில் இந்தக் கதை தொடரும்.
இப்படி ஓர் அப்பாவி அக்காவின் வாழ்க்கை மாத்திரமா பாழாகிப் போகிறது என அவன் நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லை. தனது வாழ்க்கைக் காலத்தில் அவன் சென்றுவந்த இடங்களில், பழகிய குடும்பங்களில், அலுவலகத்தில் எல்லாம் காண நேர்ந்த பெருமூச்சோடு நிச்சயமற்ற வாழ்க்கை வாழும் பெண்களைப் பற்றி தனித்தனியே வெவ்வேறு நேரங்களில் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். பெண்களின் வாழ்க்கைக்கு இப்படி ஒரு சமூக நியதி ஏற்பட்டு விட்டதை எண்ணும் பொழுது மனிதர்கள் மீது பொல்லாத வெறுப்புத் தோன்றும். பிறகு, யார் மீது குறிப்பாகக் கோபப்படுவது என்று தெரியாமற் குழப்பமடைவான். இந்த நியதிகளையெல்லாம் உடைத்
சுதாராஜின் கதைகள் 45

Page 25
தெறிந்து ஒவ்வொரு பெண்களுக்கும் நியாயமான வாழ்க்கையை எப்படி உறுதி செய்து கொள்ளலாம் என நீண்ட நேரங்களாகப் பல நாட்கள் சிந்தித்து ஒரு தீர்வும் புத்திக்கு எட்டாமல் போகவே தன்மீதும் சினங்கொண்டிருக்கிறான். தன்னைச் சார்ந்த ஆண் வர்க்கத்தின் இந்த முறைகேடான செயல் அவர்களுக்குப் பெருமையையல்ல பெரிய தலைக்குனிவையே ஏற்படுத்தியிருக்கிறது எனப் பொருமிக் கொள்வான்.
இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக தானே ஒருத்தியை இலவசமாகக் கையைப் பிடித்துக் கொண்டு போவது ஒரு தீர்வாக இருக்க முடியுமா எனச் சிந்திக்கிறான். அதை ஒரு வழிகாட்டலாகக் கருதிக் கொண்டு எத்தனைபேர் வருவதற்குத் துணிவார்கள்? “ எவளோ ஒருத்தியை கிளப்பிக் கொண்டு ஓடி விட்டான்' என்றுதானே வாய்கிழியக் கதைக்கப் போகிறார்கள். அப்படி ஒருத்திக்கு வாழ்வளிப்பது. (இல்லை. ஒருத்தியிடம் வாழ்வு பெறுவது என்பதே சரி) அவனைப் பொறுத்தவரை தான் சுயநலங்கொண்டு செய்யப்போகிற ஒரு செய்கை யாகவேபட்டது. பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, தன்னை விடுவித்துக் கொண்டு மனதைச் சமாதானப்படுத்தி வாழத்தானா தானும் விரும்பு கிறான்? அப்படியானால் என்னதான் செய்வது? இந்தக் கேள்வியைப் பலமுறை தன்னிடமே கேட்டுப்பார்த்து விட்டான். தன் நண்பர்களிட மெல்லாம் இவ்விஷயத்தை விவாதித்துப் பார்த்தும் இருக்கிறான். சுமாரானவர்களெல்லாம் முகஸ்துதிக்காக எதையாவது சார்பாகக் கதைத்து விட்டு, தான் இல்லாத இடத்தில் 'அவனுக்கு விசர்’ எனச் சொல்லி விட்டுப்போகிற துரோகத்தனத்தையும் எண்ணிப் பலமுறை மனம் வெதும்பியிருக்கிறான்.
ஆனால், தான் ஒரு விசர்த்தனமான முடிவைத் தான் எடுத்திருக் கிறேன் என்பது மனதை ஆக்கிரமிக்கும் பொழுது அவனிடத்தில் ஒரு புன்னகையும் வைராக்கியமும் தோன்றும். தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாகவே இருப்பது என்பது அவனது முடிவு. ஆண் வர்க்கத்தின் சுயநலத்திற்காக, அவன் அப்படித்தன்னை வாட்டுவதற்கு ரெடி!.
O O
வவுனியா புகையிரத நிலையத்தில் ஒருவர் இறங்கியதால் சாந்தா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இருக்கையில் ஓர் இடம்
46 சுதாராஜின் கதைகள்

கிடைத்தது. இனி அவளைப் பார்க்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் அவ்விடத்தில் அமர்ந்து கொண்டான் அவன்.
அவளை மறப்பதற்காக சிறுவர்களின் துடினமான விளையாட் டுக்களில் கவனத்தைச் செலுத்தினான். கண், அவளுக்கு பக்கத்தில் இருக்கின்ற இளைஞனை மேயச் சென்றது.
அந்த இளைஞன் மெளனமாக இருந்தான். புகையிரதத்தின் குலுக்கத்தோடு அவனது உடல் அவளோடு ஸ்பரிசிக்கிறதா? அல்லது அது தற்செயலாகத்தான் சம்பவிக்கிறதா என இவன் தலையைப் போட்டு உடைத்தான். அவனை அவளது சகோதரனாக இருக்கும் என கருதியிருந்த அவனுக்கு அப்படி இருக்க முடியாதோ என்ற சந்தேகமும் தோன்றியது. அவன் வேறு யாரோவாக இருந்தால், அவள் அனுமதிக்கின்ற ஸ்பரிசத்தை இவனது மனது தாங்கிக் கொள்ள முடியாமல் துணுக்குற்றது. அல்லது, அவ(ர்க)ள் அறியாமலே நிகழ்கின்ற ஒரு தற்செயல் நிகழ்வுக்கு ஒன்றுமேயில்லாத ஒரு விஷயத்துக்கு, தானே விரசமாக கற்பனை செய்வதாக எண்ணினான். இதற்காக, அவன் தன்னை நினைத்து வெட்கமுமடைந்தான். ஒரு பெண்ணைச் சந்தேகிக்கிற குறைப்படுகிற வர்க்கத்தைத்தானே தானும் சேர்ந்திருக்கிறேன் என எண்ணிக் குறுகிப் போனான்.
அடுத்த புகையிரத நிலையத்தில் அந்த இளைஞன் ஒன்றுமே பேசாமல் இறங்கிப் போனான். அட, அவன் வேறு யாரோதான்!
இவன் மிகக் கவனமாக அவளோடு தனது கால்கள் தட்டுப் படாமல் ஒதுக்கமாக இருந்தான். ஆரம்பத்திலிருந்தே இவ்விஷயத்தில் கண்ணும் கருத்துமாகத்தான் இருந்தான். ஒரு தற்செயலான நிகழ்வுக்கேனும் அவள் தன்னை மட்டமாகக் கணித்துவிடக் கூடாது என்ற பயம் மனசிலிருந்தது.
ரெயில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது விளையாட்டிற்கு அவள் கவனிக்கும்படியாக அவன் சிரித்தான். அவளைக் கவரவேண்டுமென்பதற்காக தேவையில்லாத நேரங்களிலும் சிரிக்க வேண்டியிருந்தது. அவனுக்கு அவளோடு கதைக்க வேண்டும் (*I IIItà)6)|tổìJbị555l.
சுதாராஜின் கதைகள் 47

Page 26
பாட்டியோடு முதலிற் கதைத்து, சிறுவர்களோடு கதைத்து, அவர்களிடம் ஒரு நட்புரிமையை ஏற்படுத்தினான். ரொபி விற்கிற சிறுவன் வந்தபொழுது வேண்டி சிறுவர்களுக்குக் கொடுத்து அவளிடமும் (வேண்டுவாளோ மாட்டாளோ) நீட்டிய பொழுது அவள் ‘வெடுக்கென மறுபக்கம் திரும்பினாள். ‘என்ன பெண் இவள்? அவளது அலட்சியமான புறக்கணிப்பு இதயத்தைச் சூடாக வருத்தியது. வாழ்க்கையில் பெரிய விரக்தி அடைந்து விட்ட ஒருவனைப் போல அவன் மனது சோர்வடைந்தது. நெடுநேரம் அவளைப் பார்க்காம லிருக்கிற வைராக்கியமும் ஏற்பட்டது. பிறகு அவள் பக்கம் திரும்ப, அப்பொழுதெல்லாம் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். அவளது பார்வை தனது செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்பதாக அவன் கருதிக் கொண்டான். அதையெல்லாம் அலட்சியமாகப் புறக்கணித்துக் கொண்டே மறுபக்கம் மறுபக்கமாகத் திரும்பினான். தனது அலட்சியம் அவளிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்துக் கொண்டு பார்க்கிறபொழுது, ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என அவள் மன்றாட்டமாகக் கேட்பது போலிருந்தது. அந்தப் பார்வை அவன் மனதை அசைத்தது. அவள்பால் அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. அதற்கு மேலும் அவளை வருத்த விரும்பாமல் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தான்.
அவள் சிரிக்காமல் இருந்தாள். ஆனால் கோபப்படாமல் அந்தச் சிரிப்புக்குப் பதிலாகத் தலையைக் குனிந்தாள். அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் திரும்பவும் தன்னைப் பார்க்கும் பொழுது கதைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அவள் நிமிர்ந்தாள். அவனது மனசு படபடப்படைந்தது. கதைக்க வேண்டும் என்று சுலபமாக நினைத்தாயிற்று! என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது "நீங்கள். படிக்.கிறீங்களா? அல்லது படிச்சு முடிஞ்சு வீட்டிலே. அம்மாவுக்கு உதவியாக?.."
"உங்களுக்கேன் அதெல்லாம்?" என்றாள் அவள். அவன் திடுக்குற்றுப் போனான். அவளது தோற்றத்திலும் பெயரிலும் லயித்துப் போயிருந்தவனுக்கு இந்த எதிர்மாறான செய்கை அதிர்ச்சியை அளித்தது. பின்னர் அவளைப் பார்ப்பதையும் பிடிவாதமாய் தவிர்த்துக் கொண்டான்.
48 சுதாராஜின் கதைகள்

இந்த மடைத்தனமான மனசு ஒன்றும் நடக்காதது போல திரும்பவும் அவளையே அசைபோடுகிறதே என அலுத்துக் கொண்டான், சரியான கர்வக்காரியாக இருப்பாளோ? இல்லை, அவள் நடந்து கொண்ட விதம்தான் சரி. பெண்கள் இப்படி இருந்தாற்றான் இந்த உலகத்தில் தப்பிப் பிழைக்கலாம். என்ன இருந்தாலும் அவள் என்னைப் புறக்கணித்ததில் கவலையும், தன்னையும் மட்டமாகக் கருதியிருப்பாளோ என எண்ணியபொழுது வெட்கஉணர்வும் மேலிட்டது.
கொடிகாமம் புகையிரத நிலையத்தில் அவர்கள் இறங்கப் போவதை அறிந்ததும் சிறிது துடிப்படைந்தான். சனநெரிசலோடு பயணப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இறங்குவது சிரமமாகையால் அவர்களை இறங்குமாறும் தான் யன்னலூடு பெட்டியைத் தருவதாகவும் பாட்டியிடம் கூறினான். அதை அவளுக்கும் கேட்கக் கூடியதாகத்தான் சொன்னான். ஆனால் அவள் எதுவுமே கேட்காதவள் போல தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கினாள். தனது கட்டுப்பாட்டை மீறி அவளிடம் மனதைப் பறிகொடுத்த பலவீனத்தை நினைக்க தன்மீது எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
கீழே இறங்கி வந்த அவள், யன்னலின் ஊடாக அவனை அழைத்தாள் உள்ளே இருக்கும் இன்னொரு பெட்டியைக் காட்டி அதை எடுத்துத் தருமாறு கேட்டாள். அவன் அதை நம்பமுடியாத வனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை உண்மையி லேயே புறக்கணித்திருந்தால் அவள் இப்படி வலிந்து கதைத்திருக்க மாட்டாள் என்ற சந்தோஷம் தோன்றியது. அந்தப் பெட்டியை எடுத்து ஆதரவோடு அவளைப் பார்த்தவாறு கொடுத்தான். ஆண்மைக்கேயுரிய பெருமிதம் தோன்றியது. அவளது கண்கள் தன்னிடம் அடங்கிப் போவதை உயர்ந்தான்.
புகையிரதம் கிளம்பியது, புகையிரதம் ஓடத் தொடங்கியதும் அவள் அவனைப் பார்த்தவாறு கையை அசைத்தாள். கண்ணிலிருந்து மறைகின்றவரை அவள் அப்படியே நின்றாள். அவனுக்கு அடக்க முடியாத சோகம் பொங்கிக் கொண்டு வந்தது. இவ்வளவுதானா?
மனது அமைதி குலைந்து தவித்தது. 'சாந்தா' - சற்று நேரம் இயற்கை வசப்பட்டுப்போன குற்றத்திற்காக அன்றைய இரவின் உறக்கம் பறிபோய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
6໓ງ(BBgfi 11-11-1979
சுதாராஜின் கதைகள் 49

Page 27
பருக்கை
‘இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக் கொண்டிருந்தவன் நேரம் கடந்து விட்ட படியாற் தான் நித்திரை கொள்ளலாம் என நினைத்தான். பத்தரை மணி ஒரு பெரிய நேரமில்லைத்தான். ஆனால் அப்படியான குளிர்கால இரவுகளில் நித்திரை சரியாக வருமுன்னரே போர்த்து மூடிக்கொண்டு மெத்தைச் சூட்டில் கிடப்பது நல்ல சுகமாக இருக்கும். மேஜையில் எட்டி புத்தகத்தை வைத்தான். பின்னர் தலையணையைச் சரிசெய்து கொண்டு கையை நீட்டி ‘ரேபிள் லாம்’பை அணைத்தான். படுத்திருந்து வாசிப்பதற்கு விசேடமாக ஒரு மேஜை விளக்கையும் வேண்டி வைத்திருந்தான். அறை முழுவதற்கும் பொதுவாகவும் ஒரு விளக்கு இருக்கிறது. படுக்க ஆயத்தமானதும் மேஜை விளக்கை அணைத்து விட்டு வாசிக்கலாம். பிறகு நித்திரை வரும்பொழுது கையை மெதுவாக உயர்த்தி அதையும் அணைத்து விடலாம். எழுந்துகிழுந்து அசையத் தேவையில்லை. போர்வைக்குள்ளே போய்விட்டால் சுகம், சொகுசு.!
தும்புமெத்தை. அதற்கு மேல் இரண்டு விரிப்புக்கள்! இதமான சூடு, கதவில்லா யன்னலூடு குபுகுபுவென்று வீசுகிற குளிருக்கும் தாக்குப் பிடிக்கும் கணகணப்பு. மாதாமாதம் வாடகையை ஒழுங்காக வேண்டிக் கொள்ளும் ‘போடிங்காரனுக்கு யன்னலுக்குக் கதவுபோடும் சரிகசனையில்லை.
அது ஒரு வசதி போலவும் தோன்றியபடியால் கதவு போட்டுத் தருமாறு இவனும் வற்புறுத்தவில்லை. நிலவுக்காலங்களில் கட்டிலிற் படுத்திருந்தவாறே, நடு இரவில் வெளியே சந்திரனைப் பார்க்கும் பொழுது நல்ல சுதியாக இருக்கும்!
படுக்கையில் கிடந்தவாறே அந்த நிலாவைத் தேடியபொழுது
50 சுதாராஜின் கதைகள்

மனது எதற்காகவோ தவிப்பதையும் உணரமுடிந்தது. என்னகுறை?
முதலில் வாசித்துக் கொண்டிருந்த பொழுதே ஒருவித சஞ்சலம் இருக்கத்தான் செய்தது. நீரில் மிதக்கிற ஏதோ ஒரு பொருள் அலைகளோடு கொஞ்சம் கொஞ்சமாகத் தலையைக் காட்டி மறைவது போல நெஞ்சினுள் அமிழ்ந்து கொண்டிருந்து வெளிப்பட மறுத்தது. வாசிப்பதைக் கூட இடையிடையே நிறுத்திவிட்டு யோசித்துப் பார்த்தான். பிடிபடவில்லை. போய்த் தொலைகிறது என விட்டிருந்தான்.
ஆனால் இப்பொழுது போர்வையுள் நுழைந்து விட்ட இந்த அமைதியான இருளில் அந்தக் கவலை விசுவரூபம் எடுத்துக் கொண்டு வந்து என்னவென்று புரியாத பூதமாக நிற்கிறது. புரண்டு புரண்டு படுத்தான். என்ன? என்ன?
சில இரவுகளில் இப்படி மனது காரணம் புரியாத கவலையில் வருந்துவதுண்டு- வீட்டில் கஷ்டநஷ்டங்கள், குடும்பப் பாரத்தைச் சுமக்க முடியாத அப்பா, நினைக்கிற அளவிற்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற ஆற்றாமை, அவசரஅவசரமாகக் காசு தேவை என்று தம்பி எழுதியிருப்பான் - உடடினடியாகப் பிரட்ட முடியாத சங்கடம், இப்படி ஏதும் கூட இன்றைக்கு இல்லை.
மற்றவர்களிடமிருந்து தான் தனிமைப்பட்டு இருப்பதுதான் மனதை அரிக்கிறதோ என நினைத்துப் பார்த்தான்.
தனியாருக்குச் சொந்தமான இந்த போடிங்'இல் எட்டு அறைகள் இருக்கின்றன. பத்தொன்பதுபேர் குடியிருக்கிறார்கள். இளைஞர்கள், குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு வந்திருக்கும் நடுவயதினர். எல்லோருமே உத்தியோக நிமித்தம் நகருக்கு வந்தவர்கள். மற்ற அறைகளில் இருவர், மூவராகத்தான் குடியிருக்கிறார்கள். அவன் மாத்திரம் தனியான அறை. காசைச் செலுத்த விரும்பாத சிலருக்கு அது நக்கலான விஷயம். தான் என்ன மனிதர்களை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேனா என நினைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலவீனங்கள். கூத்து கும்மாளங்கள், அகத்தில் பகையும் முகத்தில் நகையும் கொண்ட வஞ்சக உள்ளங்கள், தனக்கொரு நீதி பிறர்க்கொரு நியாயம் பேசுற சுயநலமிகள். மனசுக்கு ஒத்துவரவில்லை. அதனால் சற்று ஒதுங்கி இருக்கிறான். இல்லா
சுதாராஜின் கதைகள் 51

Page 28
விட்டால் எல்லோருக்குமே பாவமன்னிப்பு அளிக்கின்ற தேவபிதாவாக அவனால் எப்படி மாற முடியும்?.
- காரணம் அதுதான், இரவு ஏழுமணியைப் போல அறைக்கு வந்தபொழுது, பொது விறாந்தையில் சாராயம் அடித்துக் கொண்டிருந்த சக அறைவாசிகள் இவனையும் அழைத்தார்கள். இவன் மறுத்துவிட்டு வந்தது அவர்களுக்குப் பெரிய கேலியாக இருந்தது. ‘இவர் பெரிய மகாத்மா." என அரைகுறையாகக் காதில் விழுந்தது - பிறகு நாலு அறைகளுக்கு கேட்கக் கூடியதாகச் சிரித்தார்கள். இவனுக்கு நெஞ்சுக்குள் ஏதோ எரிந்தது - தங்களைப் போல விட்டில் பூச்சிகளாக வந்து நெருப்பில் விழச் சொல்கிறார்களா?
அதற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லையென இப்பொழுது தோன்றியது. சஞ்சலத்தைவிட்டு நிம்மதியாகப் படுக்கலாம் என மீண்டும் போர்வைக்குள் நுழைந்தான். ‘இல்லை இது வேறு ஏதோ ஒன்று என அந்தப் பூதம் மீண்டும் விசுவரூபமெடுத்துக் கொண்டு வந்தது. ‘இது என்னடா தொல்லையாகப் போய்விட்டது. கதை சொல்லுகிற வேதாளம் மாதிரி. மனதைக் கலைத்துக் கொண்டு எனச் சலிப்படைந்தவாறே மீண்டும் புரண்டான். எழுந்து யன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்று யோசிக்கலாமா என எண்ணினான். போர்வையை கால்களினால் உதறி விட்டான். குளிர் வந்து உரசியது. திரும்பவும் போர்வையை இழுத்து மூடினான்.
எல்லாவற்றையும் சொகுசாக, விளக்கு ஸ்விட்ச்சைக் கூடக் கையுக்குள்ளே கொண்டு வந்து வைத்திருக்கிற தனது சோம்பல் தனத்துக்கு சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என எண்ணினான். படுக்கையை விட்டு எழுந்து சுவர்வரை போனால் இடுப்பு முறிந்து விடுமென்றா, மேஜை விளக்கு வேணடித் தலைமாட்டில் வைத்திருக்கிறேன் - எனச் சினமும் ஏற்பட்டது. நாளைக்கு இந்த மேஜை விளக்கிற்கு ஒரு பிரியாவிடை கொடுக்க வேண்டும். அதோடு சோம்பலுக்கும் சேர்த்து.
'சீ' என்ன இருந்தாலும் நித்திரை வருகிற பொழுது கையை
உயர்த்தி இருட்டிற்குள் நுழைகிற சுகத்தை அனுபவிக்க முடியாது. வேண்டாம் இந்த சிறிய சலுகையை மன்னித்து விடலாம்.
52 சுதாராஜின் கதைகள்

ஓ! அதுதான் சஞ்சலத்திற்குக் காரணமோ, எல்லோரையும் போல குடித்து வெறித்து, ஆடிப்பாடி துடினமாகத் தெரியாமல் இப்படி இரவு வந்ததும் கதிரைக்கோ அல்லது கட்டிலிற்கோ சுமையாகிப் போகிற சோம்பலா? நோ! பகல் முழுவதும் உழைத்து அலுத்துப் போகிற உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதலாக இரவைப் பயன்படுத் துவது தவறான விஷயமில்லையே!
ஆனபடியால் அந்தக் காரணமும் இல்லை. அப்போ,
அவனுக்குத் தனது மனதைப் பார்க்கப் பெரிய பரிதாபமாக இருந்தது. தலையணையில் நெஞ்சைப் பதித்து அதையே அணைத்த வாறு குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடினான். சரியான காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் தூக்கமே வரப்போவதில்லை. காலைமுதல் இரவு படுக்கைக்கு வரும்வரை எல்லாவற்றையும் நினைக்கத் தொடங்கினான். டிக்.டிக்.டிக். என மேஜை மணிக்கூடு எண்ணிக்கொண்டு வந்தது.
தலையினுள்ளே அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று படாரென உடைந்து வெளிப்பட்டதைப் போன்ற சுகம்
.மாலையில் காண நேர்ந்த அந்தக் காட்சிதான். அவனுடைய அந்தப் பார்வைதான்.
மாலை வாசிகசாலைக்குப் போய்விட்டு திரும்பி வந்து கொண்டி ருந்தபொழுது இருளப்போகின்ற அந்த மைம்மல் பொழுதில் அதைக் கண்டான். - பஸ் நிலையத்திற்கும் அப்பால் பின் வீதியில், ஒதுக்குப் புறமான ஒரு பெரிய பூவரசு மரத்தின் கீழ் அந்தக் குடும்பம் குடியிருக் கிற கோலம்!
தாய் தந்தையரையும் இரண்டு குழந்தைகளையும் கொண்ட அளவான குடும்பம்தான். ஆனாலும் ஆனந்தம் அதிகமில்லாத குடும்பம்! நெடுநாட்களாக அவர்கள் அங்கு வாழ்கிற தடயங்கள் தென்படுகின்றன. ஒரு பக்கத்தில் அவர்களது உடமைகள் பழைய துணிகளில் சிறுசிறு பொதிகளாகக் கட்டுப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய குடைகள், குடைக் கம்பிகள், அறுந்த செருப்புக்கள். கல்லிலே அடுப்பு, அடுப்பில் சிறிய பானையில் ஏதோ அவிகிறது. சமையல்
சுதாராஜின் கதைகள் 53

Page 29
நடக்கிறது. எரிகிற அடுப்பைக் காற்று குழப்பாமல் மறைப்பாக வைத்தி ருக்கிறார்கள். பாத்திரங்களாகப் பயன்படும் தகரப் பேணிகள் பக்கத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் இரண்டும் பசியிற் போலும் சிணுங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தாய் பகல் முழுவதும் உழைத்த அசதியில் ஒரு பொலிதின் தாளின் மேல் தலைக்கு அணைவாகக் கையைக் கொடுத்துப்படுத்திருக்கிறாள். அவன் அடுப்பை எரித்து சமைத்துக் கொண்டிருக்கிறான்.
அவர்களது மரநிழல் வீட்டிற்குள் சென்ற குட்டிநாயொன்று செம்மையாக வேண்டிக் குளறிக் கொண்டு வருகிறது. இன்னுமொரு நாய் அண்மிக்கிற துணிவு இல்லாமல் எச்சரிக்கையாய் தூர நின்றாலும் ஏக்கத்தோடு அவர்களையே பார்த்தவாறு நிற்கிறது. பசி, அவனது அழைப்பை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் பணிவான பார்வை, அவன் "உஞ்சு' என்று அழைத்ததுமே வாலை ஆட்டிக் கொண்டு ஒடிப்போய் தூக்கி எறிவதை சாப்பிடுவதற்குத் தயாரான மரியாதை.
அவர்கள் எப்பொழுது இங்கு வந்து குடியேறினார்களோ தெரியாது. அந்த விதிப்பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இவனுக்கு இருந்ததில்லை. இன்றைக்கு சும்மா ஒரு “நடைக்காகத்தான் போனான்.
இப்படி உழைப்பிற்காகப் போகிற நகரங்களிலெல்லாம் எங்காவது ஓர் ஒதுக்குப் புறத்தில் சீவித்து மாள்கிற பரிதாபம். இங்கிருந்து சற்றுத் தொலைவில் தான் பொது மலசலகூடம் அமைந்திருக்கிறது. அந்த நாற்றம், அருவருப்பை கூடக் கருதாமல் அவர்கள் எப்படியாவது வாழ்ந்து விட்டுப் போகிறார்களா?
அவர்களையே பார்த்துக் கொண்டு இவன் நிற்பதை அந்தக் குடும்பத் தலைவன் கண்டான். அவனது பார்வையிலும் கணப்பொழுதில் ஆவல் கலந்தது - இந்த ஐயா கூப்பிட்டு ஏதாவது தருவாரோ, புண்ணியவான்?
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு கூச்சமாக இருந்தது. அவனோடு கதைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றுதான் மனது சொல்லியது. ஆனால், அந்தப் பள்ளத்தில் இறங்கி அவனோடு கதைத்துக் கொண்டு நின்றால் பார்க்கிற சனம்
54 சுதாராஜின் கதைகள்

என்ன சொல்லும்? இவன் யோசித்துக் கொண்டே நின்றான். இன்னும் கொஞ்சநேரம் நின்றால் அவனே வந்து விடுவான் போலிருந்தது. அதனால் மெதுவாக நடந்து வரத்தொடங்கினான். விட்டுவருகிற போதிலும் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவனும் - இவனையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு. அந்த நாயைப்போல எப்பொழுது அழைப்பானோ என்ற ஆவலுடன் நின்றான். அறைக்கு வந்து வயிறு நிறையச் சாப்பிட்டு படுக்கைக்குப்போன பொழுதுதான் அந்தப் பார்வை யின் தாக்கம் நெஞ்சிலே 'சுருக்கிடுவதை உணர முடிந்தது. அவனுக்கு ஒரு உதவியே செய்யாமல் வந்து விட்டமை பெரிய தவிப்பாக மனதை அலைக்கிறது. இந்த மனச் சாந்திக்காகவேனும் (சுயநலம்) அவனுக்கு இரண்டு ரூபாயை விட்டெறிந்து விட்டு வந்திருக்கலாம் தான்.
பிரச்சினை என்ன என்பதை அறிந்து விட்டால் மனசு அமைதிய. டையும் என்றுதான் நம்பியிருந்தான். ஆனால் அதற்கு ஒரு தீர்வு இன்றி உறங்க முடியாதென்பதை இப்பொழுது உணர்ந்தான்.
சரிதான் போகிறது, உலகத்தில் இப்படி எத்தனை பேர்கள் இருப்பார்கள். தானொருவன் நினைத்து விட்டால் அவர்களுடைய பட்டினிக்கும் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது என மனதுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு உறங்க நினைத்தான்.
போர்வையை இழுத்து சரிசெய்தவாறு மறுபக்கம் புரண்டான். யன்னலூடு குபுகுபுவென வீசிய பனி கட்டிலைக் குளிராக்கியிருப்பதை உணர்த்தியது. "சுருக்' - திரும்பவும் வேதாளம் விசுவரூபமெடுத்துக் கொண்டு வந்து மனதைக் கலைத்தது. இங்கேயே இப்படிக் குளிர்கிறதே. அவர்கள் இப்பொழுது எப்படிப் படுத்திருப்பார்கள்.
பஸ்-நிலையத்தில் வேடிக்கை விளையாட்டுக் காட்டுகிற அந்தப் பிள்ளைகளை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. பால்குடி மாறு முன்னரே தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக தாங்களே உழைக்கிற அந்தக் குழந்தைகளுக்குப் படுப்பதற்குக்கூட ஒரு வசதியான இடம் இல்லை. வீதி ஓரத்தில், வெறும் நிலத்தில், கடும் குளிரில், இருக்கின்ற பழசுகளால் உடலைச் சுற்றிக் கொண்டு படுத்திருப்பார்களோ? பாவம், படுப்பதற்குக் கூட ஒரு இடம் இல்லாவிட்டால் என்ன சீவியமப்பா?
சுதாராஜின் கதைகள் 57

Page 30
தான் அவர்களது படுக்கையைப் பற்றி யோசிக்கிறேன். அவர்கள் தங்கள் வயிற்றைப் பற்றி யோசித்துக் கொண்டு கிடப்பார்களோ எனவும் வயிற்றெரிச்சலாயிருந்தது.
e இரவு சும்மா அமைதியாகக் கிடப்பது போல நடிக்கிறது. இந்த இரவிலேயே எத்தனையோ மனிதர்கள் உறங்குவதற்குக்கூட ஓர் இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மூடிமறைத்துவிட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது இரவு. பொல்லாத இரவு. இவ்வளவு ஒரவஞ்சனையாக நடக்கலாமா?
"இந்த விசித்திரத்தில் எனக்கொரு போர்வை" எனப் போர்வை யைக் கால்களால் உதைத்து விட்டான். குபுகுபுவென்று வருகிற பனி நன்றாக உடலை அள்ளிக் கொண்டு போகட்டும். படுக்கை அருவருப்பைத் தருகிற விஷயமாகத் தோன்றியதும் எழுந்து யன்னற் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான்.
போடிங் சொந்தக்காரனின் மாளிகை -(அந்தப் பெரிய வீட்டை வேறு எப்படிச் சொல்வது?) முன்னே விரிந்து கிடக்கும் பரந்த பூமியில் நிமிர்ந்து நிற்கிறது. அந்த மாளிகைக்கு ஆடம்பரப் பூச்சுக்கள், பூச்செடிகள், நிழல் மரங்கள், இரண்டொரு மனிதர் சீவிப்பதற்கு ஏன்தானோ இந்தப் பெரிய வீடு? உலகத்தில் இப்படி எத்தனை வீடுகள் இருக்கும், வீதி ஓரங்களையே தஞ்சமென்றிருப்பவர்களுக்கு இவை ஒரு பொருட்டாகவே தெரிவதில்லையா? அன்றாடம் காண்கிற மனிதப் பிரபுக்களும், அவர்களது ஆடம்பர வாழ்க்கையும், கப்பல் வாகனங்களும் இவர்களது மனதிலே எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதேயில்லையா?
எத்தனையோ பிரச்சினைகள் தலைக்கு மேல் இருக்கின்றன - இதற்குப்போய் என்ன சவத்துக்குக் கவலைப்பட வேண்டுமென எண்ணியவாறு திரும்பவும் படுக்கைக்குச் சென்றான்.
சும்மா, படுக்க வேண்டும் என நினைத்து விட்டால் போதுமா? பூதம் விடவேண்டுமே - அங்கே அவர்கள் கடும் குளிரிற் கிடந்து விறைக்க நீ மெத்தை தேடிக் கொண்டிருக்கிறாயா? - என்று கேட்டது
58 சுதாராஜின் கதைகள்

இவன் நடுநடுங்கிப் போனான். எழுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு அறையை எடுத்துக் கொண்டு அதில் தான் மட்டும் குடியிருப்பது எவ்வளவு அநியாயம். வருஷக்கணக்காக உழைத்தும் மிகவும் குறைந்த பட்ச தேவைகளைத்தானே தேடியிருக்கிறேன் என நினைத் தான் - ஒரு மேசை, ஒரு கதிரை, ஒரு கட்டில், மெத்தை - தும்பு மெத்தைதான். ‘சியெஸ்ரா? ஒன்று வேண்ட வேண்டுமென்ற எண்ணம் முன்பு இருந்தது. பின்னர் அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஆனால் இப்பொழுது உள்ளதே அதிகம் எனத் தோன்றியது.
அதை நினைத்துக் கொண்டு சிரித்தான். தன் மனதை நினைத்ததும் சிரித்தான்- 'இப்ப இந்த மண்டையைப் போட்டு உடைக் காமல் படுத்துத் தூங்கு!
"நோ இந்த நேரத்தில் அவர்கள் எப்படித் தூங்குகிறார்கள் என்றாவது பார்த்து விட்டு வரவேண்டும் இல்லாவிட்டால் மனசு தூக்கம் கொள்ளாது.
மாலையில் அவனைக் கண்டபொழுதே கதை கொடுத்திருந்தால் சகலத்தையும் அறிந்திருக்கலாம். இரவுகளில், மழை, பனிநாட்களில் எங்கே உறங்குவார்கள் என்பதையாவது கேட்டிருக்கலாம். பேசாமல் வந்தது மடைத்தனம்.
நேரத்தைப் பார்த்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறி நடந்தான்.
சில்லிடுகிற குளிர், கடமையே என விழித்துக் கொண்டு தூங்கி வழிகிற வீதி விளக்குகள், அமைதியான ஒன்றேகால் மணித்தெரு, ஊரைக் கூப்பிடும் சாமக்கோழிகள், எங்கேயோ தூரத்தில் சில நாய்களின் அழுகை - யாரை நினைத்தோ?
பஸ் நிலையத்தையும் தாண்டிச் செல்கிற பொழுது குறிப்பாக பார்த்தான். அவர்களே முதலில் இவனை அடையாளம் கண்டு சைக்கிளிலிருந்து குதித்தனர்.
"ஹலோ. மச்சான்" சக அறைவாசிகளில் இருவர்.
சுதாராஜின் கதைகள் 59

Page 31
"இந்த நேரத்தில். எங்கை போட்டு வாறியள்", இவன் வியப்போடு கேட்டான்.
அவர்களிடமிருந்து கள்ளச் சிரிப்பு வெளிப்பட்டது, "வேறை எங்கை?. நீ போற இடத்துக்குத்தான். கள்ளா, எங்களுக்குப் புத்தி சொல்லிச் சொல்லி இப்ப நீ எங்கை போறாய்,"?
சாராய நெடி குப்பென முகத்திலடித்தது.
‘அட அநியாயமே!’ என இவன் விறைத்துப் போய் நின்றான்.
"சரி. சரி. நாங்கள் ஒருத்தருக்கும் சொல்லமாட்டம். நீ போட்டுவா!' அவர்கள் மீண்டும் சைக்கிளை உளக்கத் தொடங்கினர்.
பெருமூச்செறிந்தவாறு மேற்கொண்டு நடந்தான்.
ஒரு நாய் - ஒரு கடைவாசலில் சாக்குச் குவியலின் மேல் படுத்திருந்தது. இவனது காலடி ஓசையில் நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. சில கட்டாக்காலி மாடுகள் தார் ரோட்டின் சூட்டிற்கு வந்து படுத்திருக்கின்றன.
இவன், அவர்களை நினைத்துக் கொண்டு கால்களை விரைவுபடுத்தினான்.
வீரகேசரி 13.04.1980
ロ
60 சுதாராஜின் கதைகள்

கனிவு
"ஆனை வாழை குலைபோட்டிருக்கு"
வீட்டுக்கு வந்து பயணக் களைப்பு ஆற, அமரமுதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் "அட!அப்படியா" என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினார்.
"கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்"
Af
ஓம்! ஓம்! பாப்பம்" என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
"ஒமடா தம்பி. நல்ல பெரிய குலை' என அம்மா சொன்னாள்.
"ஆனை வாழை பெரிசாத்தான் குலைபோடும்" என முற்றும் தெரிந்தவன் போல அவன் கூறினான். ஆனால் ஆனை வாழை பெரிசாகவா சிறிசாகவா குலைபோடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக, இருப்பதால் ஆனை வாழைக் குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனை வாழை எனப் பெயர் வைத்தார்கள் என்பதும் புரியவில்லை.
சிறுபராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு, கண்டி, போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலாப் போயிருந்த பொழுதுதான் முதலில் ஆனை வாழையைப் பற்றி அறிந்து கொண்டேன். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்த பொழுது, வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஒடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டு வந்து வைத்தான். நான் அதைப் பார்த்து விட்டு, காய் என்றேன்.
சுதாராஜின் கதைகள் 61

Page 32
"இல்லை அது நல்ல பழம்! அமர்த்திப்பார்", என்றார் அப்பா.
அவன் அதன் பச்சைத் தோலில் பிடித்து மெதுமையாக அமர்த்தினான். அது நல்ல பழமாகத்தான் இருந்தது.
"தோல் ஏன் பச்சையாய் இருக்கு?"
"ஆனைவாழை பழுத்தாலும் தோல் பச்சையாகத்தானிருக்கும், ஆனால் நல்ல ருசியான பழம் சாப்பிட்டுப்பார்."
சாப்பிட்டுப்பார்த்தான். பிறகு, அங்கு போகின்ற எல்லாக் கடைகளிலும் ஆனை வாழைப்பழம் இருக்கிறதா எனக் கவனித்தான். பழுத்தாலும் தோல் பச்சையாகவே இருக்கும். வித்தியாசமான குணம் அவனைக் கவர்ந்தது. ஆனை வாழையைக் கொண்டு சென்று வீட்டில் உண்டாக்கினால் அழகாக இருக்கும் என எண்ணி, தனது விருப்பத்தை அப்பாவிடம் சொன்னான்,
"எங்கையாவது பார்த்து ஒரு ஆனைவாழைக் குட்டி கொண்டு போனால் வீட்டில் நடலாம்". w
"அந்த மண்ணுக்கு இது சரிவராது" என அப்பா சொன்னார்.
உண்மையில் ஆனைவாழை அந்த மண்ணுக்குச் சரிவராது தானா? அல்லது வாழைக்குட்டி ஒன்றை எடுப்பதிலுள்ள சிரமத்தினால் அப்பா அப்படிச் சொன்னாரா என்பது புரியவில்லை.
அவன் நினைவுக்கு எட்டியவரையில் யாழ்ப்பாணத்தில் ஆணைவாழை இல்லைத்தான். அவனது வீட்டில் பல வாழைகள் உள்ளன. கதலி இருக்கின்றது. இதரை, கப்பல், மொந்தன் அப்படிப் பல இன வாழைகளைப் பல தோட்டங்களிலும் கண்டிருக்கிறான். சாப்பாட்டுக்கடைகள் அல்லாது வாழைப்பழக் கடைகளில் கூட அவன் ஆனை வாழைக் கண்டதில்லை. அதனால் இது அந்த மண்ணுக்கு ஒத்துவராது என்பதை அவன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.
சுற்றுலா முடிந்து, ஊருக்கு வந்ததும் அவன் ஆனை வாழையின் விசேடம் பற்றி அம்மாவுக்குச் சொன்னான். பிறகு வாழைத் தோட்டங்களுக்கெல்லாம் சென்று ஆனை வாழை இருக்கிறதா எனப் பார்த்தான். தேடியவரை கிடைக்காமலே போனது.
62 சுதாராஜின் கதைகள்

பழைய நினைவுகள் சிலவற்றில் மனதை விட்டிருக்க, அறைக்குள் ஓடிவந்த கடைசித் தம்பி, 'அண்ணை ஆனை வாழைக் குலை போட்டிருக்கு" என்றான்
ஆக, ஆனைவாழை குலைபோட்ட விஷயம் வீட்டில் எல்லோரையுமே ஒருவித ஆச்சரியமான மகிழ்சிக்குள் ஆட்படுத்தியி ருக்கிறது! அல்லது அவர்கள் தன்னிடம் இப்படியொரு ஆச்சரியத்தை எதிர்பார்கிறார்களோ என்னவோ!
"சரி வாங்கோ பாப்பம்" என அவன் அறையை விட்டு வெளியேறினான். அவன், அவனது மனைவி, அம்மா, குட்டித்தம்பி எல்லோருமாக வாழையைப் பார்க்கப்போனார்கள். அறைக்குள் நோட்டம் விட்டவாறு விறாந்தையில் படுத்திருந்த நாய்க்குட்டி, எழுந்து எல்லோருக்கும் முன்னதாகக் கிணற்றடிப் பக்கம் ஓடிப்போய், அவர்களது வருகையைப் பார்த்துக் கொண்டு வாழையடியில் நின்றது.
கிட்ட வந்து குலையை நிமிர்ந்து பார்த்தான். பிறகு மரத்தை உச்சியிலிருந்து அடிவரை நோட்டம் விட்டான்.
வாழை நல்ல நெடுவலாக வளர்திருந்தது. ஆனால் உயரத்திற்குத் தகுந்த பருமன் இல்லாமல் மெலிவாக இருந்தது. ஆள் ஒட்டலென்றாலும் பெரிய குலையாக ஈன்றிருந்தது. குலையைச் சுமக்க முடியாத பாரத்தில் முதுகைக் குனிந்து கொண்டு நின்றது.
குட்டியாக நட்ட வாழை தாயாகி விட்டது. பக்கத்தில் இரண்டு குட்டிகள் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. இன்னொரு தவ்வல் இப்பத்தான் முளைவிட்டு வளர்கிறது. பெற்றுப் பெருகி நின்றாலும் தாய் வாழையைப் பார்க்க அவனுக்கு மனக்குறையாக இருந்தது. நல்ல போஷாக்கு இல்லாமற்தான் அது இப்படி ஒட்டலாக இருக்கிறது போலும்.
"நீங்கள் அதுக்கு நல்ல பசளை போடயில்லைப்போல?" என்று கேட்டான்.
இதனைக் கேட்டதும் குட்டித்தம்பி பொங்கி எழுந்தான். அண்ணன் வெளிநாட்டிலிருந்த, கடந்த ஒரு வருடகாலமாக வாழை யைக் கவனித்து வந்தவன் அவன்.
சுதாராஜின் கதைகள் 63

Page 33
"நல்ல கதை அதோடை பட்டபாடு எனக்கெல்லோ தெரியும்!"
இதைக் கவனித்த அம்மாவும் சொன்னாள்: "அதுக்குப் போடாத பசளையே? அதரெடுத்துச் சாணியெல்லாம் போட்டவன். எந்த நேரமும் அதோடைதான் மாயிறவன், விரத நேரங்களிலை அதிலை ஒரு இலை வெட்டக்கூட விடமாட்டான். பிள்ளைதான் அதிலை வலு கவனம். அங்கையார் வடிவாய்ப் பாத்தி கட்டி தண்ணியும் விட்டிருக்கிறான்."
"நான் வாறனெண்டு தெரிஞ்சவுடனை விட்டிருப்பான், இன்னும் ஈரம் காயமல் கிடக்கு!"
"ஒருத்தரும் கவனியாமல், தண்ணி விடாமல்தான் வாழை இவ்வளவு வளர்ந்து குலைபோட்டது, என்ன? இந்த மனிசருக்கு நல்ல விசயத்தை நல்லதெண்டு சொல்ல மனம் வராது. ஏதாவது ஒரு குறை கண்டு பிடிக்கவேணும்" எனக் குட்டித்தம்பி போட்டபோடு அவனைச் சற்றுத் தடுமாறச் செய்தது.
"சரியடாப்பா, நான் சும்மா ஒரு கதைக்குத்தான் சொன்னனான். வாழை ஏன் இவ்வளவு மெலிவாய் இருக்குதெண்டுதான் தெரிய வில்லை" எனச் சமாளிப்பாகக் கூறினான்.
"அது எனக்கு அப்பவே தெரியும். இது அவ்வளவு செழிப்பாய் வளராதெண்டு. நான் சொல்லயிக்கை கேக்காமல் நட்டியள். இந்த நிழலுக்கை நிண்டால் எப்பிடி நல்லாய் வரும்?"
ஏதோ தவறு செய்து விட்டவன் போல, தம்பியைப் பார்க்க, தம்பி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளிக்கூடத்தில் படித்த விசயங்கைள விளாசினான். சூரிய வெளிச்சம் இலைகளிலே பட்டால்தான் மரம் கெதியா வளரும். வெயில் பிடிக்கிறதுக்காகத்தான் வாழை, மற்ற மரங்களுக்கும் மேலாலை உயரமாய் வளர்ந்திருக்கு சரியாய் வெளிச்சம் பிடிக்காமல்தான் மெலிவாய் இருக்கு."
கிணற்றடி நிழலான இடம்தான். மறைப்பு வேலிக்கு நட்ட பூவரசங்கதியால்கள் மிக உயரமாக வளர்ந்து குழைகளைப் பரப்பி நிற்கின்றன. இரண்டொரு தென்னம் பிள்ளைகள் உயர்ந்து தோகையை விரித்து நிற்கின்றன. வாழையை நடும் பொழுது இதுபற்றி யோசிக்
64 சுதாராஜின் கதைகள்

காமல் விட்டது மடைத்தனம்தான். குட்டிகளையாவது வேறு இடங்களில் கிளப்பி நடவேண்டும் என நினைத்துக் கொண்டான்.
வாழை குலைபோட்ட விஷயத்தைப் பெரியம்மாவிடம் சொல்ல வேண்டும்.இந்த வாழையைக் குட்டியாக அவனுக்குக் கொடுத்ததே பெரியம்மாதான்.
கல்யாணம் செய்த புதிதில் மனைவியுடன் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தான். விருந்துபசாரத்தின்போது சாப்பாட்டு மேசைக்கு வாழைப் பழம் வந்தது. அதைக் கண்டதும் அவன் ‘ஆனை வாழைப்பழம்' என ஆச்சரியப்பட்டான்.
தேடியலைந்து கிடைக்காமல் போனமையினாலும் பின்னர் உத்தியோகம் காரணமாக வீட்டைவிட்டு வெளியூர்களுக்குப் போயிருந் தமையாலும் தன்னை விட்டு மறைந்து போயிருந்த ஆனைவாழை மீண்டும் அவன்முன்னே வந்து நின்றது.
"எங்கடை வாழையிலைதான் காய்ச்சது!"
பெரியம்மா சொன்னதைக் கேட்டு அவன் அதே ஆச்சரியத்தோடு முற்றத்துக்கு ஓடிவந்து வாழைகளைப் பார்த்தான். ஏழெட்டு வாழைகள் குட்டிகள் சகிதமாக நின்றன.
"எல்லாம் ஆனை வாழையளோ?" எனப் பிரமித்தான். பெரியம்மாவுக்கு அவனது பரவசத்தைக் காணப் புதினமாக இருந்தது!
"..எங்காலை எடுத்த நீங்கள்? நான் எவ்வளவோ நாளாய்த்
தேடித் திரியிறன், கிடைக்கவில்லை."
"அவர் ஓரிடத்திலிருந்து குட்டியொண்டு கொண்டு வந்தவர். அதை நட்டு உண்டாக்கி அதின்ரை குட்டியள்தான் எல்லாம். ஏன்? இப்ப கன இடங்களிலை இருக்குது தானே?"
வாழை மரங்களையும் பெரியம்மாவையும் மாறிமாறிப் பார்த்தான். ஆனைவாழை இப்பொழுது இங்கு கன இடங்களுக்கு வந்து விட்ட கதை அவனுக்குத் தெரியாது. "எனக்கொரு குட்டி தாஹிர்களோ?"
சுதாராஜின் கதைகள் 65

Page 34
"அதுக்கென்ன? கிளப்பி வைக்கிறன். பிறகு ஒரு நாளைக்கு வந்து எடுத்துக் கொண்டு போவன்."
பிறகு அவன் ஒவ்வொருநாளும் பெரியம்மா வீட்டுக்கு வந்தான். ஆனால் வாழைக்குட்டிதான் கிடைத்தபாடாக இல்லை.
"கொத்துறவனுக்கு சொல்லியனுப்பினனான். ஆளைக் காணக் கிடைக்கவில்லை. வாழைப்பாத்தியள் ஒருக்கால் கொத்தவேணும். அப்ப கிளப்பி வைக்கிறன். பிறகு வா தம்பி" எனப் பெரியம்மாவிட மிருந்து பதில் கிடைத்தது.
பிறகும் வந்தான். ஆனால் கொத்துறவன் கிழமைக் கணக்காக வரவில்லை. அடுத்த சில நாட்கள் சில முக்கிய அலுவல்கள் காரணமாகப் பெரியம்மா வீட்டுக் வரமுடியவில்லை. அதற்குப் பிறகு ஒருநாள் வந்தபொழுது. . &
"எங்கை இவ்வளவு நாளும் போனனி? அங்கை உனக்கு வாழைக்குட்டியெல்லே கிளப்பி வைச்சிருக்கிறன்!"
வாழைக்குட்டியை வேலியோடு சாத்தி வத்திருந்தார்கள், அதன் இலைகள் வாடிப்போயிருந்தன. பணிய இருந்து வேர்ப்பகுதியைப் பார்த்தான். வெட்டப்பட்ட கிழங்கில் பகுதிகள் பல துளிகள் நீர்க்கசிவு ஏற்பட்டு செந்நிறமாக உறைந்து போயிருந்தது.
"ஐயோ!" என்றான்.
‘என்ன தம்பி’ என்றவாறு பெரியம்மா கிட்ட ஓடிவர, 'ரத்தம் வந்திருக்கு" என்றான். அட! இதுதானே..? அதொண்டும் செய்யாது. கொண்டு போய் நடு."
வாழைக்குட்டியை ஒரு பிள்ளையைப் போலத் தூக்கிக் கொண்டு போனான். வீட்டுக்கு வந்ததும் அவனைப் பிடிக்க முடிய வில்லை. எவ்விடத்தில் நடலாம் என்ற பிரச்சினை முதலில் தோன்றியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களைச் சிபார்சு செய்தார்கள். மற்ற வாழைகளுடன் சேர்த்து நட்டால் அவற்றிற்கு வரும் வருத்தம் இதற்கும் தொற்றிவிடும் என அபிப்பிராயப்பட்டான். ஏற்கெனவே அங்கு சில
66 சுதாராஜின் கதைகள்

கதலி வாழைகள் குருக்கன் அடித்து நிற்கின்றன. கிணற்றடியிலென்றால் அடிக்கடி போகிறவர்கள் கவனித்து தண்ணிரும் விடுவார்கள். தனிமையான இடமாகவும் இருக்குமாதலால் அதுவே தகுந்த இடமெனத் தீர்மானித்தான். அதற்குப் பிறகு மண்வெட்டியைக் கொண்டுவா! அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா! என ஒரே அமர்க்களமாக இருந்தது.
கிணற்றடி மண்ணில் கற்களைக் கிளறி எடுத்துவிட்டு. மாட்டுச் சாணத்தைப் போட்டுக் பாத்திக்கட்டி வாழைக் குட்டியை நட்டுத் தண்ணிர் ஊற்றிவிட்டு வந்தபொழுது அவனுக்கு எதையோ சாதித்து விட்ட திருப்தி தோன்றியது. ஆனால் நாட்கள் பல கடந்தும் வாழை வளர்வதற்குரிய அறிகுறிகளைக் காணோம். இலைகள் இன்னும் வாடின. இது அவனுக்குப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. பெரியம்மாவிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னான்.
"அது.தன்பாட்டில வளரும். விட்டுப்போட்டு போய் பாக்கிற அலுவலைப் பார் தம்பி!"
அதைக் கேட்டதும் அவனுக்கு 'சப்பென்று போனது. இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்து, இன்றைக்கு வளரும், நாளைக்கு வளரும் என்று பார்த்துக் கொண்டிருக்கக் குருத்தும் கருகி வாழைத் தண்டும் நுனிப்பகுதியிலிருந்து கருகத் தொடங்கியது. வெயில் சூடாக இருக்குமென நினைத்து தண்ணிரை அடிக்கடி ஊற்றினான். எனினும் பயனில்லை. மனதில் வைத்திருந்த அற்ப சொற்ப நம்பிக்கைகளும் போய்விடும் போலிருந்தது.
வேலி அடைக்க வரும் கந்தையாண்ணையிடம் விஷயத்தைச் சொன்னான். அவருக்குத்தோட்ட அனுபவங்களும் கொஞ்சம் இருக்கிறது.
கந்தையாண்ணை வந்த வாழைக்குட்டியைப் பார்த்தார். கருகிய பகுதியைத் தொட்டுப் பார்த்தார். வாழைக் குட்டியின் அடிப்பகுதியில் மெதுவாக நகத்தினால் நுள்ளினார். பிறகு விரலால் வாழையடி மண்ணைத் தோண்டிப் பார்த்தார். இப்பேர்ப்பட்ட பரிசோதனைகளின் பின்னர்,
சுதாராஜின் கதைகள் 67

Page 35
"ஏன் இவ்வளவு தண்ணி விட்டனிங்கள்? கிழங்கு அழுகிப் போயிருக்குமே" என அபிப்பிராயப்பட்டார்.
"தண்ணி நெடுக விடயிக்கையே சொன்னனான், கேட்டாத் தானே" என்றான் குட்டித்தம்பி. அவனுக்கு ஒரு குட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
"பரவாயில்லை, இனிக் கொஞ்சநாளைக்குத் தண்ணி விட வேண்டாம். வாழைக்குட்டியைக் குறுக்காய் வெட்டி விடுங்கோ, சரிவரும்," என பரிகாரம் சொல்லி விட்டுப் போனார் கந்தையாண்ணை.
வாழைக்குட்டியைக் குறுக்காக வெட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமாக்கப்பட்டது. கத்தி கொண்டு வெட்டுவதென்பது ஒரு சீவனை அழிப்பதற்குச் சமானமாகுமே? அதுவும் எங்கெல்லாமோ தேடி இவ்வளவு ஆசையோடு கொண்டு வந்த வாழைக்குட்டியை வெட்டுவதாவது? நல்ல கதை கந்தையாண்ணை மடைக்கதை பேசுகிறது!.
"ஆருக்காவது வருத்தமெண்டால் ‘ஒப்பிரேசன் செய்யிற தில்லையா..? கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காமல், அந்தாள் சொன்னமாதிரி வெட்டிவிடுங்கோ சரிவரும்" என மனைவி சொன்னாள்.
"சரி" என அவன் கத்தியை எடுத்து வாழைக்குட்டியின் காய்ந்த பகுதியை வெட்டினான். எனினும் அவனுக்கு ஒரு சந்தேகம்! இனி உருப்படுமோ என்னவோ?
என்ன ஆச்சரியம்! அடுத்தநாட் காலையே ஒரு சின்ன விரல் தடிமனில் குருத்து வெளியே தள்ளியிருந்தது? கந்தையா, உனக்கு நன்றி ஐயா!
பிறகு அதைப்பிடிக்க முடியவில்லை. அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனுக்கு வெளிநாட்டு வேலைக்கு அழைப்பு வந்தது. வெளிநாட்டில் ஒரு வேலைக்காக ஏற்கனவே முயன்று கொண்டிருந்தது உண்மை? அது இப்படித் திடுதிடுப்பென்று வந்து விட்டில் எல்லோரையும் பிரிய வேண்டிய கவலையை ஏற்படுத்தும் என்ற நினைத்திருக்கவில்லை.
68 சுதாராஜின் கதைகள்

அது பழைய கதை. இப்பொழுது அந்த வாழை சுமக்க முடியாத குலையுடன் நிற்கிறது.
அன்று மாலை பெரியம்மா வீட்டுக்குப் போனான். வெளிநாட்டுப் புதினங்களைவிட, ஆனைவாழை குலை போட்டிருக்கும் செய்தியைச் சொல்லி மகிழ்ந்தான். வாழை மெலிவாக இருப்பது பற்றியும், அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா என்றும் விசாரித்தான். பொதுவாக ஆனைவாழைக்கு அதிக கவனம் இன்றி தண்ணிர் ஒழுங்காகக் கிடைத்தாலே வளர்ந்து பயன்தரும். மற்ற வாழைகளுக்குப் பிடிக்கும் நோய்கூட அதை இலகுவில் அண்டுவதில்லை. எனவே ஒன்றுக்கும் கவலைப்படாமல் போகுமாறு பெரியம்மா கூறியது கூட அவ்வளவு திருப்தியளிக்காமலே வந்தான்.
காலையில் எழுந்ததும் கிணற்றடிக்கு வந்து வாழையைப் பார்த்து நிற்பான். அது அவனுக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. காய்கள் எந்த அளவு பெருத்திருக்கின்றன? எத்தனை நாட்களில் முற்றிப்பழுக்கும்?
இப்படியாக இருபது நாட்களளவில் கடந்திருக்கும். ஒரு நாள் மத்தியானம் போலக் கிணற்றடியிலிருந்து குட்டித்தம்பி மூச்சுத் தெறிக்க ஓடிவந்தான். அவனை முந்திக் கொண்டு நாய்க்குட்டியும் ஓடி வந்து நின்றது.
"ஆனை வாழைமுறிஞ்சு போச்சு!"
அவனது மனைவியும் அம்மாவும் கிணற்றடிப் பக்கம் ஓடினார்கள். அவனுக்கு அது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. காலையிலே கூட அவன் பார்த்தபொழுது நல்ல வாட்டசாட்டமாக நின்றது. அதற் குள்ளே என்ன நேர்ந்தது இந்த வாழைக்கு? w
அவன் வந்து வாழையைப் பார்க்க, அவர்கள் அவனது முகத்தைப் பார்த்தார்கள்.
வாழை வேலியின் மேல் முகம்குப்புற விழுந்து கிடந்தது. வேலியின் கதியால்கள் தாங்கிக் கொண்டதால் துண்டுபட்டு முறிந்து போகாமல் இருந்தது. குலையும் அடிபட்டுக் காயப்படாமல் இருந்தது.
சுதாராஜின் கதைகள் 69

Page 36
"குலையை வெட்டிக் கொண்டு வந்து வையுங்க. பழுக்கும்" என அம்மா கூறினாள்.
"இன்னும் முத்தியிராது, எங்கை பழுக்கப் போகுது?" என அவன் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறிவிட்டு.
"ஏன் இருந்தாப்போலை விழுந்தது? காத்துக்கூடப் பெரிசாய் அடிக்கயில்லை" எனக் கவலைப்பட்டான்.
"உண்மையில் காற்றுப் பலமாக வீசவேயில்லை. மற்ற வாழைகள் எல்லாம் கம்புமாதிரி நிற்க இந்த வாழை ஏன் முறிந்து போனது என்பது அவனுக்குப் புதிராகவே இருந்தது.
"அதுக்கொரு ஆன முண்டு கொடுத்திருக்கலாமே, முறிஞ்சி ருக்காது" என மனைவி அபிப்பிராயப்பட்டாள்.
வாழையைத் தாங்கி நிற்கக் கூடியவதாக ஒரு முண்டு கொடுத் திருக்கலாம்தான். ஆனால் அதற்கு அவ்வளவு அளவான உயரமான மரம் கிடைக்காததாலும், இது அவ்வளவு காற்றுக்காலம் அல்ல என்பதனாலும் அந்த எண்ணத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தான்.
இனி அதையெல்லாம் எண்ணிப் பயனில்லை. ‘எப்படியாவது போகட்டும்' என அவள் அந்த விசயத்தை மனதை விட்டே தூக்கி யெறிந்தான். வாழை கவனிப்பாரற்று வேலி மேலேயே கிடந்தது! ஒரு மாத லீவில் வீட்டுக்கு வந்தவனுக்குத் திரும்பப்போக வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டு வர, அது மற்ற விஷயங்கள் எல்லாவற் றையும் விட மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அவனது அம்மா, மனைவி, குட்டித்தம்பி எல்லோரையும் பிரிந்து செல்ல வேண்டிய அந்தநாள் பார்த்துக் கொண்டிருக்க வந்து சேர்ந்தது. அன்று இரவு பிளென், காலை றெயிலில் கொழும்புக்கு புறப்பட வேண்டும்.
அவன் பயணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பொழுது குட்டித்தம்பியும் நாய்க்குட்டியும் போட்டிபோட்டுக் கொண்டு ஓடிவந்தார்
56.
70 சுதாராஜின் கதைகள் ட

t
'வாழைக்குலை பழுத்திட்டுது
"சும்மா!" என்றாள் அவனது மனைவி.
"உண்மைதான் வந்து பாருங்கோ, வாழையிலை கிளிப் பிள்ளையஸ் வந்திருக்கினம்!"
மனைவியும், அம்மாவும் குட்டித்தம்பியோடு கிணற்றடிக்கு ஓடினார்கள். அவன் எதனாலும் பாதிக்கப்படாதவன் போல நின்றான்.
றெயிலுக்கு நேரமாக, இனிமேலும் நிற்க முடியாது எனப் புறப்பட ஆயத்தமானான். மனைவி சாப்பாட்டுப் பார்சலைக் கொண்டு வந்தாள்.
"இந்தாங்கோ! ஏன் வாழை முறிஞ்சது, முறிஞ்சது எண்டு கேட்டியள். உங்கடை வாழை உங்களை மறக்கவில்லை" என்றவாறு பழங்களைப் பார்சலோடு சேர்த்து பைக்குள் வைத்தாள்.
இன்னொரு வாழைப் பழத்தையும் உரித்து அவனிடம் கொடுத்து ‘சாப்பிடுங்கோ’ என்றாள். அப்பொழுது அழுகை முந்திக் கொண்டு வந்தது.
போவதற்கு முதல், வாழை மரத்தைப் பார்க்க வேண்டுமென்ற உந்துதல் பிறக்க அவன் கிணற்றடிப் பக்கம் போனான்.
அதைச் செம்மையாக வெட்டிப் பாட்டத்தில் போட்டிருந்தார்கள்.
அதன் கதை முடிந்து விட்டது.
(மல்லிகை, மார்ச் 1986)
சுதாராஜின் கதைகள் 71

Page 37
கால்கள்
பப்பு, அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு பிறகால் நடந்தான். அரையிலிருந்து நழுவிவிடும் களிசானை இழுத்து, இழுத்துப் பிடித்தான். நடந்து கொண்டே சிணுங்கிச் சிணுங்கி அழுதான். அழுகைச் சத்தம் அம்மாவிற்குக் கேட்கவில்லையோ என நினைத்து இடை யிடையே சுருதியைக் கூட்டி அழுது காட்டினான்.
அம்மா பேசாமல் விறு.விறு என நடந்தாள். அவளது தலையில் ஒரு பெட்டி இருந்தது. ஒருகை பெட்டியைப் பிடித்திருந்தது. மறுகையை அடிக்கடி பின்னே அசைத்து, பப்புவை தன்னொடு சுறுக்காக வருமாறு அழைத்துக் கொண்டே சென்றாள்.
பப்புவுக்குச் சுறுக்காக நடக்க முடியவில்லை. கால்கள் பலமில்லாதவை போலிருந்தன. அம்மாவின் நடையைப் பிடிப்பதற்காக இடையிடையே மெல்ல ஓடினான். ஒடிய பொழுது முழங்கால்களுக்குக் கீழ் தழும்பியது. சிணுக்கமெடுத்து அழுதான்! இன்றைக்கு அழுது அடம்பிடித்தென்றாலும் சோறு சாப்பிட வேண்டுமென்று பப்பு தீர்மானித்து விட்டான்.
சோற்றைக் கண்டு ரொம்ப நாளாயிற்று. பத்து நாட்களுக்கு மேலிருக்கும். தினமும் அவனுக்குச் சோறு சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. அந்திக்கு வந்து சோறு ஆக்கித் தரலாம். என்றுதான் அம்மா எப்போதும் சொல்லுவாள். ஆனால், அம்மாவிற்கு சோலி முடிந்து வீட்டிற்கு வர இருட்டி விடும். அப்புறம் சோறு கிடையாது. சோறு ஆக்க அரிசி இல்லை என்று சொல்லுவாள். அரிசி வாங்கச் சல்லி போதாது. சோற்றுக்கு கறி ஆக்கணும். உப்பு, புளி, கொச்சிக் காய்த் தூள். இவற்றுக்கெல்லாம் கையிலுள்ளதைச் செலவு செய்தால் மறுநாள் வியாபாரத்துக்கு, முதல் கிடையாது. வியாபாரம் முடிந்து வரும்பொழுது அம்மா பாண் வாங்கி வருவாள் பப்புவிற்கு ஒரு துண்டு. அவளுக்கு ஒரு துண்டு, பிளேன் டீ! சரியாக வயிறு
72 சுதாராஜின் கதைகள்

நிறையாமலே தூக்கத்துக்கும் போவான். அப்புறம். தூக்கத்தில் பசிக்கும்.'சோறு சாப்பிடுவது போலக் கனவு வரும். உளத்தி. உளத்திப் படுப்பான், பசி, விடியப்புறமாகவே எழுப்பி விடும். சிணுங்கத் தொடங்குவான். அம்மா தன்னோடு கூடப்போய் பாணோ பணிசோ வேண்டிக் கொடுப்பாள். தினமும் இதே கதைதான் வயிறு நிரம்பாமல் அழுகிறது.
.பசிக்கும் போது சோறு சாப்பிட்டால் எவ்வளவு சோக்காக இருக்கும் மெத்தென அவிந்த சோற்றை அள்ளி வாயில் வைக்கும் பொழுதே பசி ஆறுவது போலிருக்கும். விருப்பமான கறியோடு குழைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். பால் சொதியையும் ஊற்றிப் பிசைந்து அள்ளி வாயில் போட்டு, விரல்களைச் சூப்பிச் சூப்பிச் சாப்பிடலாம்.
ஆனால். இப்பொழுது பாண் கிடைத்தாலும் பப்பு சாப்பிடுவதற் குத் தயாராகத்தான் இருந்தான். என்ன கிடைத்தாலும் சரி; அரை வயிற்றை நிரப்பி விட்டாலும் போதும்.
அம்மா நடந்து சந்தியை அண்மித்தாள். இரண்டு வீதிகள் புள்ளடிபோலக் குறுக்கிட்டுச் செல்லும் சந்தி. வீதிகளிரண்டும் பல நகரங்களைத் தொடுப்பதால். இது வாகனப் போக்குவரத்துக்கள், சன நடமாட்டம் அதிகமான இடம். புள்ளடியின் ஒரு விரிகோணப் பகுதியில் பஸ் நிலையமும், எதிர்த்தாற்போல் மரக்கறிச் சந்தை. மீன்' சந்தை ஆகியன. மூலை முடுக்குகளெல்லாம், கடைகள். சேலைக்கடை, புத்தகக்கடை, தேநீர்க்கடை, சாப்பாட்டுக்கடை, பலசரக்குக் கடை. இப்படி எல்லா விதமான கடைகளுடனும் அவள் தலையில் சுமந்து வந்த பெட்டிக் கடையும் போட்டி போடுகிறது.
பஸ் நிலையத்துக்கு அண்மையாகப் பெட்டியை இறக்கி வைத்தாள். சப்புப் பலகையில் செய்யப்பட்ட சதுரப்பெட்டி. நாலு மூலைகளிலும் நீட்டிக் கொண்டிருந்த ஓரடி நீளமான கால்களில் இப்போது ஒரு குட்டி மேசையைப்போல பெட்டி நின்றது. பெட்டியின் மூடியைத் திறந்து, வெற்றிலைச் சுருள்களையும், ஒரு சட்டியுடன் கச்சான் கடலைப் பெட்டியின் மேல் செய்யப்பட்டுள்ள இடுக்குகளில் அடக்கி விட்டு. கடலையை ஐம்பது சதம், ஒரு ரூபாய்க்குரிய
சுதாராஜின் கதைகள் 73

Page 38
கடுதாசிச் சுருள்களில் நிறைத்து வைத்தாள். பின்னர் சிணுங்கிக் கொண்டிருக்கும் பப்புவைத் திரும்பிப் பார்த்தாள்.
பப்புவின் முகம், கழுவாத மூஞ்சியாட்டம் வாடிப்போயிருந்தது. உயிரியக்கம் இல்லாதவன் போல அனுங்கினான். அவனது கை களிசானைப் பிடித்துக் கொண்டிருந்தது. நல்ல அளவாகத் தைக்கப்பட்ட களிசான் "பெரியசாகிய ரகசியம் அவளறியாததல்ல. இருந்தும் அனைத்து அவன் முதுகைத் தடவினாள்.
"இண்ணைக்கு எப்படியாச்சும். சோறு தின்னலாம்!"
அவன் பறித்து விலகினான்.
"போ! நீ.பொய்யி!
பப்பு அடம்பிடிப்பதைக் கனிவோடு பார்த்தாள். இரக்கத்தைச் சிரிப்பாக வெளிக்காட்டினாள். திரும்பவும் இழுத்து அணைத்தாள்.
பப்பு அம்மாவின் முதுகிலே சாய்ந்து கொண்டு மறுபக்கமாகத் திரும்பி இருந்தான். இரவில் நுளம்பு கடித்துச் சொறிந்ததினால் ஏற்பட்ட நகக்காயங்களில் இலையான் மொய்த்தது. இலையான்களை அடித்த வாறு கடிபட்ட இடங்களைச் சொறிந்தான். இரத்தம் கசியச் சிணுங்கினான்.
அம்மா வழியை வழியைப் பார்த்தாள். ஒரு வழியுமில்லை. ஏதாவது வியாபாரம் நடந்தால்தான் பப்புவுக்குப் பாண் என்றாலும் வாங்கிக் கொடுக்கலாம். காலையில் கடலை விற்பனையாகாது. பத்துப் பதினொரு மணியாக வேண்டும். சந்தை நாட்களில் காலையில் வெற்றிலை விற்பனையாகும். இன்று சந்தை கூடாத நாள். பணப்புழக்கம் இன்னும் இல்லை. என்ன செய்யலாம்?
மாணிக்கம் தனது காரைக் கொண்டு வந்து வழக்கமாக விடும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான். சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, டிக்கியைத் திறந்து வாளியை வெளியே எடுத்தான். கிணற்றடிக்குப்போய் தண்ணீர் கொண்டு வந்து காரைக் கழுவத் தொடங்கினான்.
74 சுதாராஜின் கதைகள்

அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா?
இடைசுகம் அவசரத்துக்கு அவள் மாணிக்கத்திடம் கைமாறியி ருக்கிறாள். அப்படி ஒன்றிரண்டு என வாங்கி, பத்துப் பதினைந்துக்கு மேலாகிவிட்ட கடனையே இன்னும் திருப்பியபாடில்லை. மேலும் மேலும் எப்படிக் கேட்பது எனத் துணுக்குற்றவாறு இருந்துவிட்டு. எழுந்தாள். பப்புவும் எழுந்து அம்மாவுடன் போனான்.
Α'
"மாணிக்கத் தம்பி.!" குரல் கொடுத்தான்.
".சல்லி.ரெண்டு ரூபா கொடுக்கேலுமா?. அந்திக்குத் திருப்பிடுவன்!"
மாணிக்கம் கார் கழுவுவதை விட்டு நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான்,
"என்னணை. பகிடி விடுறியே?."
"இல்லத் தம்பி!. பப்பு பசியில... அழறான். ஒரு வழியும் தோணலை."
"ஆச்சி. நானும் உன்னை மாதிரித்தானணை. நீ அந்தப் பெட்டியைக் கொண்டு வந்து வைச்சிட்டு நிற்கிற மாதிரித்தான். நான் இந்தக் காரைக் கொண்டு வந்து விட்டிட்டு நிக்கிறன். இனி ஏதாவது சவாரி கொத்தினால்தான். என்ர கையிலையும் காசு பிளங்கும். நீ நம்பிறியோ தெரியாது. கையிலை. ஓரி சேமும் இல்லை. காலமை பிள்ளையளின்ரை பாடு என்னவோ தெரியாது. நான் விட்டிட்டு வந்திட்டன்."
"இல்லைத் தம்பி. எனக்குத் தெரியாமலா?. என்ன செய்ய. கடவுள் நம்மளை வருத்தணும்னு நெனைக்கிறார்."
பப்பு ஏமாற்றத்துடன் அம்மாவைப் பார்த்தான். அம்மாவின் கண்கள் கலங்கியிருப்பது போல் தெரிந்தது. அம்மா அதைக் காட்டிக் கொள்ளாமல் மறுபக்கம் திரும்பினாள். பப்பு எட்டி அம்மாவின் முகத்தைப் பார்த்தான். கண்களிலிருந்து கண்ணி சொட்டிட்டு விழுந்தது.
சுதாராஜின் கதைகள் 75

Page 39
அந்தக் கணத்தில் பப்புவுக்கும் நிஜமான அழுகை நெஞ்சிலி ருந்து பொத்துக்கொண்டு வந்தது, ஆனால் அழவில்லை. நெஞ்சி லிருந்து கிளர்ந்து வந்த குமுறலை அடக்கினான்.
"உன்ரை அப்பன் இருந்தார்னா. இந்தக் கொடுமையில்லை". என அம்மா அவனது கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள். அப்பொழுது குபுக்கென கண்ணிர் வழிந்து அம்மாவின் கையை நனைத்தது.
"என்ன அழறியா?"
அவன் பதில் பேசவில்லை. அப்பாவின் நினைவு பப்புவின் நெஞ்சை வந்து அடைத்துக் கொண்டது. அண்ணன்மார் நினைவில் வந்தார்கள்.
Lմւ|...] பப்பநாதா!..." என அப்பா செல்லம்பொழிய அழைப்பது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது. வயல் வேலை ஒழிந்து ராவில் வீட்டுக்கு வரும் பொழுதுகளில் அவர் அவனையே அழைத்துக் கொண்டு வருவார். அவர் நடந்து வருவது கண்களுக்குள் தெரிகிறது. ஆனால் அவர் இனி அப்படி நிஜமாக வரமாட்டார்.
அப்பொழுது ‘பாவற்குள்ம்' என்னும் கிராமத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்பாவும், அம்மாவும், அண்ணன்மார் இருவரும் அங்கு ஒரு வயலில் வேலை செய்தார்கள். குடிசையும் அங்கேயே இருந்தது. மூணு வருடங்களுக்கு முன்னரென. பப்புவுக்கு நினைவிருக்கிறது. அவ்விடத்தைச் சுற்றி வளைத்த ஆமிக்காரர்கள் அண்ணன்மார் இருவரையும். மற்ற இளைஞர்களோடு சேர்த்துக் கொண்டு போனார்கள். அந்த இடியிலிருந்து மீள முதலே. அடுத்த இடி. ஆறே ஏழு மாதங்களுக்கு முன்னர்.வயல் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவையும் சுட்டுப் போட்டார்கள். அம்மா பப்புவையும் இழுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினாள். இரவோடு இரவாக. காடுகளுக்கூடாக ஓடி, பிரதான வீதிக்கு வந்து, காலையில் அவ்வீதியால் வந்த லொறிக்காரரிடம் கையெடுத்துக் கும்பிட்டு.
கிளிநொச்சி வந்து சேர்ந்தார்கள்.
அகதிகள் முகாம்1. சில நாட்களிலேயே சாப்பாட்டுச் சாமான்களுக்காக அகதிகளுக்குக் கொடுத்த கூப்பன் துண்டை
76 சுதாராஜின் கதைகள்

அரசாங்கம் நிறுத்தி. பழைய இடங்களுக்குப் போகும்படி சொன்னது. ஆனால் உயிர் போனாலும் இனி அந்தப் பக்கம் போறதில்லை என அம்மா அவனை யாழ்ப்பாணப் பக்கம் கூட்டி வந்தாள். தொடர்ந்தும் அகதிகள் முகாமில் இருப்பதை விட, நிரந்தரமாக ஏதாவது வழி பார்க்க வேண்டுமென ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினாள். ஏதாவது வேலை தேடலாம். அவ்வப்போதைக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும்; ஆனால் வேலை கிடைக்கவில்லை. இப்படியே வாழ்க்கை பூராவும் சீவிக்கேலுமா. என அம்மா, சவர்க்காரப் பெட்டியில் மேசை செய்து, வெற்றிலை. கடலை வியாபாரத்தை ஆரம்பித்தாள் - சொந்தக் கால்கள்.
"என்ரை குஞ்சை. எப்படியாச்சும் காப்பாற்றுவன்" அம்மா அடிக்கடி இப்படிச் சொல்லுவாள். அது இவனுக்கு ஒரு வித தைரியத்தை. பயம் மறந்து ஆறுதலை ஏற்படுத்துவதைப் பப்பு நினைத்துப் பார்த்தான். நல்லகாலம், அன்றைக்கு அம்மா வயலுக்குப் போகவில்லை. போயிருந்தால் கால்களைப் போல இன்று தன்னைச் சுமந்து கொண்டிருக்கும் அம்மாவையும் இழந்திருப்பான்.
அம்மா இரண்டு கடலைச் சுருளை எடுத்து பப்புவிடம் கொடுத்தாள். அதைக் கையிலெடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
ff
"கடலை. கடலை.
காலை இயங்கத் தொடங்கி விட்டது. மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளுக்கு ஆயத்தமாகி விட்டார்கள். றோட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகரித்தது. சைக்கிள்கள் இங்குமங்குமாகப் பறந்தன. பெற்றோல் விற்பவர்கள் வீதியோரத்தில் மேசையை வைத்துப் போத்தல்களில் பெற்றோலை நிரப்பி அடுக்கினார்கள். கார்கள் ஒடத் தொடங்கின.
AA
85-6)...... &El-6)......
O. O. பஸ்ஸிற்காக காத்து நிற்கும் பயணிகள். வேலைக்குப் போகும் உத்தியோகத்தர்கள், பாடசாலைப் பிள்ளைகள்!
சுதாராஜின் கதைகள் 77

Page 40
பப்புவின் கண்கள் அசையாது நிலைத்தன. அவ்விடத்திலேயே நின்றான், பாடசாலைப் பிள்ளைகளின் பளிச்செனும் உடைகள்! அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். புத்தகப் பைகள்! நல்ல கறுப்பு, வெள்ளைச் சப்பாத்துக்கள்!.
ஸ்கூலுக்குப் போன நாட்கள் பப்புவுக்கு நினைவில் வந்தன. அப்பொழுது அவனது கால்களுக்கு ஒரு செருப்பத்தானும் இருக்க வில்லை. தொலைவிலுள்ள பாடசாலைக்கு ஏனைய சிறுவர்களுடன் காட்டுப் பாதைகளுக்கு நடந்து செல்வான். அவர்கள் ஏறிச்செல்ல பஸ் வராது. திரும்ப வரும்போது நடு வெய்யில் ரோட்டுச் சூடு உள்ளங்கால்களில் அள்ளும். ரோட்டு ஓரமாக உள்ள புற்களின்மேல் கால்களை வைத்து நிற்பான். எரிவு ஆறியதும் நடப்பான். அப்பொழு தெல்லாம் இப்படி, அவனுக்கும் சப்பாத்து இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!
ஆனால் அது, பரவாயில்லைப்போலிருந்தது, பப்புவுக்கு அப்போது சாப்பாட்டுப் பிரச்சினை என ஒன்றிருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை காலையில் எழுந்தால் சாப்பாடு கிடைத்தது. ஸ்கூலுக்குப் போய் வந்தால் சாப்பாடு கிடைத்தது. விளையாடித் திரிந்து விட்டு வந்தால் சாப்பாடு கிடைத்தது.
பள்ளிப் பிள்ளைகள் பப்புவைப் பார்த்துச் சிரித்தார்கள். அவன் குனிந்து பார்த்து விட்டு, களிசானை இழுத்துப் பிடித்துக் கொண்டு அப்பால் நடந்தான்.
AfA
85-6).... El-6)....
பஸ்நிலையத்திலிருந்து இறங்கி, கார்கள் விடப்பட்டிருக்கும் பக்கமாக நடந்தான். மாணிக்கம் மறுபடியும் தனது காரைத் துடைத்துக் கொண்டு நின்றான். பழனி பக்கத்தில் நின்றான். முருகேசுவும், கிளியும் தங்கள் கார்களுக்குள் படுத்திருந்தார்கள். நாலு கார்களும் வரிசையாக அடுக்கிவிடப்பட்டிருந்தன. “ஹயரிங் கிடைக்கும் பொழுது போய்விட்டு வந்து அதே மாதிரி காரைப் பார்க் பண்ணுவார்கள். ஒரு முறை போனாலே நிறையக் காசு கிடைக்கும் போலிருக்கிறது இப்படிக் கடலை விற்றுக் கொண்டு திரியத் தேவையில்லை. பழனியைப்
78 சுதாராஜின் கதைகள்

பார்த்தால் மூத்த அண்ணனைப் பார்க்குமாப்போலிருக்கு. அண்ணன் இருந்தால் இப்போ சில சமயம் கார் ஓடப் பழுகியிருப்பான். தனக்கு ஒரு தொல்லையுமிருக்காது. பப்பு நினைத்தான். அம்மாவுக்குக் கஷ்டமிருக்காது. வளர்ந்த பிறகு தானும் ஒரு கார் வேண்ட வேண்டு மென பப்பு நினைத்தான். அம்மாவுக்குக் கஷ்டமிருக்காது. இவர்களைப் போல உழைக்கலாம். அம்மா ஆக்கித்தருவா, நிரம்பச் சாப்பிடலாம். ஆனால் வளர்வதற்கு இன்னம் எவ்வவு காலங்கள் ஆகுமோ..!
பப்புவுக்கு அலுப்படித்தது. கடலைச் சுருள்களைக் கொண்டு வந்து பெட்டியின் மேற்போட்டு விட்டு அம்மாவின் பக்கத்தில் சுருண்டு படுத்தான். அவனை உறக்கம் தழுவிக் கொண்டது.
"பப்பு. பப்பநாதா!." அம்மா அவனை எழுப்பினாள். "எந்திரு' பப்பு எழுந்து சோம்பல் முறித்தான்.
"இந்தா!. போயி பாணு வாங்கிக்கிணுவா."
மறுகதை பேசாமல் அம்மா கொடுத்த காசை வேண்டிக் கொண்டு நடந்தான்.
சாப்பாட்டுக் கடைக்குள் பப்பு நுழைந்துபொழுது உள்ளே ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனது கால்கள் சற்றும் தாமதியாது விறுக்கென உள்ளே சென்றன.
மேஜையின் முன் மூன்று நான்கு பேர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் முன்னால் வாழை இலையில் போடப்பட்டிருக்கும் சோற்றை தங்களுடைய பெரிய கைளால் குழைத்து. நல்ல பிடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நிமிர்ந்து கிமிர்ந்து பார்க்காமல், மூச்சைப் பிடித்துக் கொண்டு தள்ளினார்கள். வாளியில் சாம்பறைக் கொண்டு வந்து, கரண்டியால் துளாவி ஊற்றியதும், இலையை வளைத்துப் பிடித்து சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டார்கள்.
"டேய்!. உந்தப் பொடியன் உதிலை. நிண்டு என்ன செய்யிறான்," காசு மேசையில் இருப்பவர் உள்ளே குரல் கொடுத்தார். உள்ளேயிருந்து ஒருவன் வந்து. பப்புவைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கொண்டு போனான்.
சுதாராஜின் கதைகள் 79

Page 41
"பாணு!. பாணு" பப்பு அவனை நிமிர்ந்து பார்த்து காசை நீட்டினான். வெளியே தள்ளிவிட்டுப் போக, திரும்பவும் வந்து மேஜையில் காசை வைத்தான். சாப்பிட்ட பின்னர் உள்ளேயிருந்து காசு மேஜைக்கு வந்தவர்களின் வண்டி (வயிறு) அவனது தலையில் முட்டியது. திரும்பிப் பார்த்தான் பப்பு. ‘சிலரின் வண்டியைத் தூக்க இன்னொரு ஆள் தேவைப்படும் போலிருந்தது!"
பிளேன் டீயையும், பாணையும் எடுத்துக் கொண்டு அம்மாவிடம் நடந்தான். இரண்டாகப் பிரித்து ஒரு துண்டை அம்மாவிடம் கொடுத்தான்.
சாப்பாடு ஆகியதும், கடலைச் சுருள்களை எடுத்தக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
Af Av
85.6).... 85-6).....
கால்கள் போன போக்கில் நடந்தன. நிறையச் சனங்கள் அங்குமிங்குமாக நடந்து திரிந்தார்கள். பப்புவுக்கு ஒருவரையுமே தெரியவில்லை. நல்ல உன்னிப்பாக ஒவ்வொரு முகங்களையும் பார்த்தான். தான் தனியாக விடப்பட்டதைப் போல கவலை மேலிட்டது. தனது அக்கம் பக்கத்துச் சனங்கள். சினேகிதச் சிறுவர்களையெல்லம் நினைத்துப் பார்த்தான். அவர்கள் இப்போ எங்கேயோ தெரியாது. விம்மல் பொங்கிப் பொங்கி வந்து நெஞ்சுக்குள்ளேயே அடங்கிக் கொண்டிருந்தது. இடம் வலம் தெரியாத இடத்தில் தான் நடப்பதைப் போல உணர்ந்தான்.
கார்களுக்கு அண்மையாக வந்தபொழுது கார் வேண்டுவதாக எண்ணியது நினைவில் வந்தது. கிட்டச் சென்று ஒவ்வொரு கார்களாகப் பார்த்தான். பெரிய பெரிய முழிகளைப்போன்று அவற்றின் முகங்களிலி ருக்கும் லைட்டுக்களைத் தடவினான். மாணிக்கத்தின் கார் மற்றவற்றை விடப் பழசாக இருந்தது. பல இடங்களில் பெயின்ற் பொருக்கு வெடித்தது போலக் கொண்டிருக்கிறது. மெல்லிய தோலைப் போல உரிந்திருக்கும் பெயின்ற் துகள்களை நகத்தைக் கொடுத்துப் பிய்த்தான்.
"டே டேய். போ..!" என மாணிக்கம் பப்புவைப் பார்த்துச் சீறினான். பப்பு போகாமல் நின்றான். பெரிய திறம் கார். உக்கல்.
80 சுதாராஜின் கதைகள்

அப்பொழுது மாணிக்கத்தின் மகன் போலிருக்கிறது, வீட்டிலி ருந்து வந்தான்.
"அம்மா காசு வேண்டியரட்டாம்!" என மாணிக்கத்திடம் கேட்டான். மாணிக்கம் மற்ற ட்ரைவர்களிடம் கேட்டும் பார்த்தான், கிடைக்கவில்லை.
"ராவைக்குக் கொண்டு வாறன். போ!" என மகனிடம் சொன்னான் மாணிக்கம், -
பப்புவுக்கு மாணிக்கத்தைப் பார்க்கக் கவலையாக இருந்தது. மாணிக்கத்திடம் காசு இல்லைப்போலிருக்கு, "ஏதாவது சவாரி கொத்தினால் தான் கையில் காசு பிளங்கும்" என மாணிக்கம் காலையில் சொன்னது நினைவில் வந்தது. அது உண்மைதான். காசு இல்லாதபடியால்தான் அவனது கார் கூட உக்கலாக இருக்கிறது. இன்ற முழுக்கக் கார் இவ்விடத்திலேயே நிற்கிறது. தான் தூக்கமாக இருந்தபொழுது ஒருவேளை போயிருக்க மாட்டானோ என்ற நினைத் தான். இருக்காது. கார் ஓடியிருந்தால் அவனிடம் காசு இருந்திருக்கும். ‘அப்படியென்றால். மாணிக்கம் சாப்பிட்டதோ தெரியாது?, மூன்று நாலு மணியாகிறது. காலையிலும் சாப்பிடாமல் எப்படி இவ்வளவு நேரமும் இருப்பது.
"ஏன்? மாணிக்கண்ணே நீங்க இன்னும் சாப்பிடல்லியா?"
மாணிக்கத்தின் முகம் திரும்பி. ஒருவித கோணலாக மாறிக் கொண்டு வந்தது.
"போடா!. போ!. இவர் பெரிய ஆள்! கேக்க வந்திட்டார்!"
அடடே இரக்கப்படுவதற்குக்கூட ஒருவித தகுதி வேண்டும் போலிருக்கே!.
பப்பு விலகிச் சென்றான். கடலைச் சுருள்களை விற்று விற்று வந்த சல்லியை அம்மாவிடம் கொடுத்தான்.
கால்கள் ஓய்வின்றி நடந்தன.
சுதாராஜின் கதைகள் 81

Page 42
அந்திப்பொழுது வந்தது.
மாணிக்கம் ஆறாவது தடவையாக தனது காரைத் துடைத்துக் கொண்டிருந்தான். பப்புவுக்குச் சிரிப்பாக இருந்தது. இந்த ஆளுக்கு விசர்!’
"மாணிக்கண்ணனைப் பார்த்தியா?. எத்தனை தடவ காரைத் தொடைக்கிறது! என அம்மாவிடம் காட்டினான். அவனுக்கு வேற வேலையில்லை" என்ற அம்மா பப்புவுக்குச் சொன்னாள். இவ்வாறு இடையிடையே காரைத் துடைத்துத் தனது சோம்பலைத் தீர்க்கிறானோ, அல்லது பொழுதைப் போக்கிறானோ என்பது தெரியாது.
பொழுது போய்விட்டதுதான்.
பஸ் நிலையத்தில் சன நடமாட்டம் குறையத் தொடங்கியது. அம்மாவின் முதுகில் சாய்ந்திருந்தான்.
“ւյնւյ!"
அவன் இந்த உலகத்தில் இல்லை - தனது கார் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து கொண்டிருந்தான்.
"இந்தா! கடையில போயி, சோறு வாங்கிக்கிணு வா!"
"நெஜம்மாவா!"
ஸ்விச் போட்டது போலப் பப்புவின் முகம் டக்கென ஒளிர்ந்து பிரகாசித்தது. மலர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான். இல்லை. அம்மா தன்னோடு விளையாடுகிறாளா!
அம்மா அவனிடம் காசைக் கொடுத்தாள். கடலையைப் பெட்டியுள் கொட்டிவிட்டுச் சட்டியையும் கொடுத்தாள்.
பப்பு எய்த அம்புபோலப் பறந்தான்.
சட்டியை இரு கைகளாலும் பிடித்து ஸ்ரெயரிங் போலத்திருப்பித் திருப்பி. ர்.ர்ர்ர்.ர்ர். அவனது கார் ஓடியது.
82 சுதாராஜின் கதைகள்

கார் நேராகச் சாப்பாட்டுக் கடைக்குள் போய் நின்றது. போம்போம்! ஹோன் அடித்தது!
ஹோன் சத்தத்தில் கடைக்காரன் அவனை விசித்திரமாக பார்த்தார்.
அவரது பார்வையை அலட்சியம் செய்தவாறே மேஜையில் காசை வைத்தான்.
"சோறு"
"இவனுக்கு ஒரு பார்சல் சோறு கொடு"
அவர் உள்ளே குரல் கொடுத்தார்.
பப்பு உள்ளே போய் சட்டியைக் கொடுத்தான். சட்டியில் சோற்றையும், கறியையும் நிரப்பிக் கொடுத்ததும் பக்குவமாகத் தன் இரு கைகளாலும் தூக்கி வந்தான்.
வெளியே வந்ததும் தனது காரை ஸ்டார்ட் செய்தான்.
ή.....ήήή...ή.
நல்ல அழகாகச் சுழட்டி வெட்டினான். திருப்பிக் கொண்டு மாணிக்கத்தின் காருக்கு அண்மையில் போனால் நிறுத்தி. றிவேஸ் எடுத்தான் ஒரு கார் மட்டும் போகக் கூடிய இடைவெளியில்! அவனது கால்கள் காரின் ரயரைப் போல உருண்டன.
"டே. டேய்.1 அங்காலை போ!" காருக்குள்ளிருந்தவாறே மாணிக்கம் கத்தினான். பப்பு எதையும் கேட்கத் தயாராயில்லை. ஒரு பிறேக் போட்டுக் குலுக்கி நின்று. பின்னர் மெல்ல மெல்ல றிவேஸ். எடுத்தான்.
-Ligsil
பெற்றோல் - போத்தலுடன் வெளியே வைத்துவிட்டு காருள் ஏதோ செய்து கொண்டிருந்த மாணிக்கம் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான். போத்தல் பப்புவின் காலிற் தட்டுப்பட்டு. பெற்றோல்
சுதாராஜின் கதைகள் 83

Page 43
முழுவதும் நிலத்தில் சிந்தியிருந்தது
ஒரே பாய்ச்சல்.
-பப்பு ஒடுவதற்கு எத்தனிக்க மாணிக்கம் கையைச் சோரவிட்டு விளாசினான்.
நல்ல அறை. பப்பு நிலைகுலைந்து விழுந்தான்.
சோறு முழுவதும் நிலத்தில் சிதறி. மண்ணோடு கலந்தது.
"DubDT!"
பப்பு மூச்சடங்கி அலறினான்.
ரோட்டில் படுத்திருந்த ஒரு அகதி நாய் சோற்றைக் கண்டதும் எழுந்து ஓடி வந்தது.
பப்பு அதற்கு முந்திக் கொண்டு எழுந்து சோற்றைக் கூட்டி அள்ளிச் சட்டியில் போடத் தொடங்கினான். அழுது. அழுது. சோறு முழுவதையும் அவன் அள்ளும்வரை அந்த நாய் அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றது.
(சிரித்திரன், மாசி 1986) O
84 சுதாராஜின் கதைகள்

கனத்த நாள்
மயிலண்ணையைக் காணவில்லை!.
இதிலேதான் படுத்திருந்தார். விறாந்தையில் படுத்த பாய் விரித்தபடி இருக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார். இந்த இரவு நேரத்தில்?
விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துழாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவது போலத் தெரிகிறது. அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார். மயிலண்ணை? நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை. மரம்! மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள். யாரோ அசைவதைப் ப்ோலத்தான் தோற்றமளிக்கிறது!
வாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்பவந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது?
அம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி ஒரு பக்கம் சரிந்த வாக்கில் நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட் கெட்ட உறக்கமோ?
"தம்பி உன்னை நினைச்சு நினைச்சு, ராவு ராவாய் நித்திரையில் 6006DuLn!"
"சும்மா. கனக்க யோசிச்ச மண்டையைப் போட்டு உடைக்காதை யுங்கோ. நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்க மாட்டாங்கள்."
சுதாராஜின் கதைகள் 85

Page 44
அம்மாவுக்கு ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சி யிலேயே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.
"நல்ல கதை பேசுறாய். உன்ரை வயசில எத்தனை பெடியளை. அவங்களும் அரசாங்க உத்தியோககாரர்தானே. பிடிச்சுக் கொண்டு போனவங்கள். பிறகு என்ன கதி எண்டு இன்னம் தெரியாது!"
நடுச்சாமங்களிலும், இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. எனது வயசு நல்ல பதமான வயசு அம்மா எனக்காக கண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.
இதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம். மயிலண்ணையின் கதி என்னவென்று.
மயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓர் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் நாட்சம்பள அடிப்படையில் சேர்ந்து சில நாட்கள் வேலை செய்தவர். அந்த சில நாட்களில் அவர் ஒரு சிறந்த தொழிலாளி என்பதைக் கவனித்தேன். எனது தோட்டத்தில் சில வேலைகள் இருந்தன. அதற்கு இவர்தான் ஆமான ஆள் எனத் தோன்றியது, விசாரித்தேன்.
"மயிலண்ணை எப்பிடிச் சுகசேமங்கள்?. வேலைகள் எப்படிப் போகுது?"
"நல்லமுங்க!"
"இந்த வேலை. இந்தக் கிழமையோட முடிஞ்சிடுமே, அதுக்குப் பிறகு என்ன செய்யப் போறிங்கள்?"
86 சுதாராஜின் கதைகள்

"ஏதாச்சும் செய்யணுங்க, சும்மா இருக்க முடியுங்களா?"
"அது சரி. நீங்கள் எவ்விடம். ፵6mñ?”
'ഖഖങ്ങിurഖങ്ക
"சொந்த இடமா?"
"நாங்க. மலைநாட்டிலிருந்து. கலவரத்தோட வந்து வவுனியால குடியேறினவங்க!"
"பிறகு ஏன் இந்தப் பக்கம்?. பெண்சாதி, பிள்ளைகள் எல்லா இருக்கா?"
AA ஒண்ணுங்க!"
"என்னப்பா இது மற்றாக்களுக்கு ரெண்டா, எல்லாருக்கும் ஒரு பொம்பிளைதானே?"
AA
அட. நீங்க ஒண்ணு! நான் புள்ளையைச் சொல்லுறேங்க பய அம்மாக்காரியோட அங்கிட்டுத்தான் இருக்கான். நாட்டு நெலமை களால் அங்கிட்டுப் புழைப்புக் கெட்டுப்போச்சுங்க. அதுகள பட்டினி போடேலுமா..? ஏதாச்சும் பார்க்கலாமென்னுதான் இந்தப் பக்கமா."
"என்ன செய்யிறது கடவுள் எங்களையெல்லாம் இப்படிப் போட்டுச் சோதிக்கிறார்" எனப் பெருமூச்செறிந்து மெளனம் அனுஷ்டித் தேன். பிறகு எனது விசயத்திற்கு வந்தேன்.
"என்ரை தோட்டத்திலை கொஞ்ச வேலை இருக்கும். செய்யுங் கோவன், என்ரை வேலையும் முடிஞ்சமாதிரி, உங்களுக்கும் ஏதாவது கிடைச்சமாதிரி அது முடிய வேறை எங்கையாவது வேலை சந்தித்தால் எடுத்துத் தாறன்!"
"நல்லமுங்க"
மயிலண்ணை என்னோடு வீட்டுக்கு வந்தார். மூன்று வேளைச் சாப்பாடும் கொடுத்து, வீட்டிலேயே தங்கியிருக்க ஒழுங்கு செய்தேன். ஐந்து நாட்களாக கொத்து வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
சுதாராஜின் கதைகள் 87

Page 45
வீட்டுக்கு வந்த அன்றே நன்றாக ஒட்டிவிட்டார். பிறத்தி ஆள்மாதிரி இல்லாமல் தன் வீடு போலப் பழகுவார். ஏதாவது ஒரு பிரச்சினையை நானும் அம்மாவும் அலசிக் கொண்டால் தானும் அதற்குள் நுழைந்து கொண்டு அபிப்பிராயம் தெரிவிப்பார். எனது அறைக்குள் நான் நுழைந்து விட்டால் அவரும் வந்து இன்னொரு கதிரையில் அமர்ந்து ஏதாவது புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கி விடுவார். கதிரையில் அட்டணக் காலிட்டு அமர்ந்தவாறே. ‘அம்மா. ரீ கொண்டு வாங்க!” என ஒடர் கொடுப்பார்.
"இவனுக்கென்ன மூளைப் பிசகோடா தம்பி. வேலைக்கார னெண்டால். வேலைக்காரன் மாதிரியெல்லோ இருக்க வேணும்?" என மெல்லிய அதிர்ச்சியுடன் அம்மா சில வேளைகளில் என்னிடம் குறைபட்டுக் கொள்வான். மயிலண்ணையின் இன்னும் சில இயல்பான செய்கைகள் அவர் மேல் அம்மாவுக்குச் சற்று எரிச்சலையூட்டின என்பதையும் கவனித்தேன்.
சாப்பிட அமர்ந்து விட்டால் மூக்கு முட்டப்பிடிப்பார். "அம்மா இந்தக் கறி சரியில்லை. அதுக்கு உப்புக் காணாது. இதுக்குப் புளி இல்லை. நெடுகிலும் ஒரே கறியைச் சாப்பிடேலாது. நாளைக்கு இறைச்சி சமையுங்கோ" என இப்படி ஏதாவது சாப்பாட்டைப் பற்றி மிக உரிமையோடு விமர்சிப்பார். சாப்பிட அமர்ந்து விட்டால் வாயைப் பொத்திக் கொண்டு அம்மா போடுவதைச் சாப்பிட்டுவிட்டு எழுகிற பழக்கம் எனது வழக்கம். என்னோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்ததில் அம்மாவுக்குத் தாங்காமல் இருந்திருக்கும்.
"நீ கொடுக்கிற இடம்தான். அவனவனை அவனவன்ரை இடத்திலை வைக்கவேணும். இவன் ஆள் ஒரு பேயன் போல இருக்கு மனிசரோடை என்னமாதிரிக் கதைக்கிறதெண்டு தெரியாதவன் என்னத் தைக் கொண்டு துலைவானோ தெரியாது!"
இதையெல்லாம் கேட்டு மெல்லிய சிரிப்போடு போய்விடுவேன். அம்மா சொல்வதற்கு எதிர் நியாயம் பேச எனக்கு விருப்பமில்லை. அதை ஒத்துக் கொள்ளவும் சம்மதமில்லை. மயிலண்ணை கொஞ்சம் வித்தியாசமான குணசித்திரம்தான். சொல்லப்போனால், அந்தக் குணசித்திரம்தான். நான் அவரிடத்தில் கூடிய ஈடுபாடு கொள்ளக்
88 சுதாராஜின் கதைகள்

காரணமாயுமிருந்தது. வேலையென்று இறங்கிவிட்டால் முரட்டுத் தனமான வேகத்தில் செய்வார். நூல் பிசகாத வேலை. பொய் களவில் லாத தொழிலாளி என்பதால் அவரிடத்தில் ஒரு வித மரியாதையும் இருந்தது.
இப்பொழுது இந்த மனுசன் எங்கே போய்த் தொலைந்திருக்கும் எனக் குழம்பினேன். அம்மா சொல்வது போல அவர் முளை பிசகியவர் தானோ?, அல்லது அவரது முகத்தை முறித்து அம்மா ஏதாவது சொல்ல, அதனால் அவர் என்னிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போயே விட்டிருப்பாரோ?
எனக்கு அம்மாமேற்தான் கோபம் வந்தது. மயிலண்ணையை வீட்டுக்குக் கூட்டி வந்த அன்றே அவரது முன்னிலையிலேயே தம்பி இந்தக் காலத்தில் ஊர் பேர் தெரியாதவங்களை.வீட்டுக்குள்ளை கொண்டு வந்து வைக்கிறது நல்லதோ? என ஆட்சேபித்தாள். அப்பொழுது நான் அம்மா மேற் சினங்கொண்டேன்.
இப்பொழுது
சற்றும் எதிர்பாராத விதமாக மயிலண்ணை. எனது அறைக் குள்ளிருந்து வெளிப்பட்டார். விறாந்தைக்கு வந்து என்னையும் அம்மாவையும் திரும்பிப் பார்த்துவிட்டு தனது படுக்கையில் படுத்துக் கொண்டார்.
தேடுதல் வேட்டைக்கெனப் பட்டாளம் வரும் அசுகை தெரிந்தால், பின்பக்கமாக ஓடி வில்லங்கங்ளில் மாட்டிக் கொள்ளாமல் மறைந்து விடலாம் என்பதற்காகத்தான் அறைகளுக்கு உள்ளே படுக்காமல் வெளியே விறாந்தையில் படுத்திருந்தோம். மயிலண்ணை யும் எங்களோடு படுத்திருந்தவருக்கு அறைக்குள்ளே என்ன வேலை?
அவரது சிறிய பணப்பையும், சில உடுதுண்டுகளும் எனது அறையிலேதான் இருந்தன. அதற்காகவும் அவ்வறைக்குள் அடிக்கடி போய்வரும் பரிச்சயம் அவருக்கு உண்டு. அறையில் எப்போதும் ஒரு அரிக்கன் லாம்பு ராவிளக்காக எரிந்து கொண்டிருக்கும். மனைவிக்குக் கடிதம் எழுதுவது போன்ற காரணங்களுக்காக அறைக் குள் போயிருக்கலாம் என என் மனதை ஆறுதலடைய முயற்சித்தேன்.
சுதாராஜின் கதைகள் 89

Page 46
ஆனால் கடிதம் எழுத ஒரு நேரமில்லாமல் இந்த நேரத்திலா?
அப்படியானால்.
இம்மாதத்துக்குரிய எனது சம்பளத்தை இன்று எடுத்திருந்தேன். இரவு ஏழு மணியைப்போல மயிலண்ணையும் அறையில் இருந்த பொழுதுதான். பணத்தைக் கொண்டு வந்து எண்ணி மேசை லாச்சியில் வைத்தேன்.
"இண்ணைக்கு சம்பளம் போட்டாங்களா?" என்று கேட்டார்.
"ஒமோம். சம்பளம் எடுத்தனான்தான். இப்ப பிரச்சினைகள் எண்டு சம்பளக் காசையும் செக் ஆகத்தான் தாறாங்கள். அதை மாத்திறதுக்கும் ஒவ்வொரு கடையாய்த்திரிஞ்சு. அதுக்கொரு கொமிசன் குடுத்து எத்தனை பிரச்சினைகள்."
"உங்களுக்கு சம்பளம் சுமாரா. எவ்வளவுங்க கெடைக்கும்?"
சொன்னேன். மயிலண்ணை அதைக்கேட்டு பெருமூச்செறிந்தது போலிருந்தது. பிறகு தனது பணமுடை பற்றியெல்லாம் சொன்னார். தனக்கு இவ்வளவு பணம் கிடைக்குமென்றால் ஒரு பிரச்சினையுமே இருக்காது என்றார்.
"திருட்டு ராஸ்கல் உன்னை நான் நம்பியது எவ்வளவு தப்பாகப் போய்விட்டது. பணத்தை நான் எண்ணிய பொழுதும் லாச்சியிலே வைத்தபொழுதும் ஓர் அப்பாவியைப் போலப் பார்த்துக் கொண்டிருந் தாயே? அதை இப்பொழுது தனது பையிலே போட்டிருப்பார். விடிந்ததும் விடியாததுமாக எழுந்து போய் அந்தப் பையைக் கைப்பற்ற வேண்டும்.
இதற்குப் பிறகு எனக்கு நித்திரை வராமல் இருந்தது. ஒரு கள்வன் வீட்டுக்குள் இருக்கும் உணர்வு ஒரு விதப் பயத்தையும் நெஞ்சில் ஏற்படுத்தியது. இந்த இரா நேரத்திலே எழுந்து எதையும் விசாரிக்கும் துணிவும் வரமறுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவுக்கு இது தெரியவந்தால் இப்பொழுது நாலு வீடுகளுக்குக் கேட்குமளவுக்குக் குழறத் தொடங்கினால். என்ற எண்ணமும் என்னைக் கட்டுப்படுத்தியது.
90 சுதாராஜின் கதைகள் .

இரவொடு இரவாக ஆள் மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என் எண்ணிக்கொண்டு, மயிலண்ணையை நோட்டம் விட்டவாறே உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.
ஆனால். சற்று நேரத்தில் உண்மையிலேயே கண்கள் சொருகி உறங்கி விட்டேன் போலிருக்கிறது.
எனது இடது காலில் யாரோ பிடித்து இழுப்பது போல உள்ளுணர்வு தட்டியது. கால்களை அவுக்கென இழுத்தேன். ஆனால் பிடி விடாமல் மீண்டும் இழுக்கப்பட எனது உறக்கம் கலைந்தது. உடனே கால்களை உதறியவாறு துடித்துப் பதைத்துக் கொண்டு எழுந்தேன். எனது கால்மாட்டிற்கு, தனது படுக்கையிலிருந்து தவழ்ந்து வந்து. எனது காலைப் பிடித்து இழுத்தது. அம்மா! t
"சத்தம் போடாமல் இரு!" என அம்மா சைகையால் தெரிவித்தாள். இரவு படுக்கும்வரை அம்மா நல்லாத்தானே இருந்தாள். அதற்குள்ளே என்ன நேர்ந்தது? பதட்டம் அடங்காமலே அம்மாவின் பக்கமாக அமர்ந்தேன்.
மிக இரகசியமான குரலில் 'தம்பி!. இவன் மயிலு." என அம்மா ஏதோ கூறுவதற்கு வாயெடுக்க நான் மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன்.
மயிலண்ணையைக் காணவில்லை!
"கள்ள ராஸ்கல்!" என உறுமிக் கொண்டு எழுந்தேன். எக்கவுண்ட் கடைப்பணம், கைமாறிய சில்லறைக் கடன்கள் அது, இது எல்லாம் எளது சம்பளப்பணத்தில் நாளைக்குத்தான் தீர்க்க எண்ணியிருந்தேன். ‘இவன் கொண்டு தொலைஞ்சிருப்பானோ!' எனது கையைப் பிடித்து அம்மா அமர்த்தினாள்.
"உவன் மூளைப் பிசகுகாரன் எண்டு சொன்னால் நம்புறா யில்லை. இப்ப நடக்கிற கூத்தைப்பாரன். அப்போதைய பன்ரெண்டு மணிபோலை வெளியிலை இறங்கிப் போனான். ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறானாக்கும் எண்டு நினைச்சால். முத்தத்திலை நிண்டு மேகத்தை. மேகத்தைப் பாத்துக் கொண்டு நிக்கிறான்.
சுதாராஜின் கதைகள் 91

Page 47
விசரர் பைத்தியக்காரர் மாதிரி அங்காலையும் இஞ்சாலையும் நடக்கிறான். பிறகு இருந்தாப்போலை. அறைக்குள்ளை நுழைஞ்சான்!"
'அறைக்கை இருந்து வந்ததை நானும் கண்டனான்"
"கேளன்!. நித்திரை மாதிரிப் பார்த்துக் கொண்டே கிடந்தன். இவன் அறைக்குள்ளாலை வந்து உருண்டு பிரண்டு கொண்டு கிடந்தான். இருந்தாப்போலை பிறகும் முத்தத்துக்கு இறங்கிப் போனான். பழைய மாதிரி மணித்தியாலக் கணக்காய். வானத்தைப் பார்த்துக் கொண்டு நிண்டிட்டு. பிறகும் விறு விறு எண்டு அந்த அறைக்குள்ளை நுழைஞ்சான். ஆள் இப்ப உள்ளுக்குத்தான்!"
"இஞ்சை விடுங்கோ" என நான் எழுந்தேன். மயிலண்ணையை இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத்தான் மறுவேலை- அம்மா என்கையைப் பிடித்து இழுக்க, எழும்பிய வேகத்திலேயே விழுந்தேன்.
"கொஞ்சம் பொறுமையாய் இரடா தம்பி. அவனைப் பார்த்தால் பேய் பிடிச்சவன் மாதிரியும் இருக்கு. கையிலை ஆப்பிற தாலை மாட்டிப்போடுவான். போகாதை"
"கள்ளனெண்டால். பிறகு அதே அறைக்குளை மினக்கெட மாட்டான். முத்தத்திலை வெள்ளி பார்த்துக் கொண்டு நிக்கமாட்டான். இண்டைக்குப் பறுவமெல்லே!. கனத்த நாள். அதுதான் ஆளுக்கு உச்சத்திலை நிண்டு ஆட்டுது. பேசாமல் படு!.விடிஞ்சதும் ஆளை அனுப்பிவிடுவம்!"
இதைக் கேட்க எனக்கு உச்சத்தில் ஆட்டுவது போலிருந்தது, அம்மா சொல்வது கூடச் சரியாக இருக்கலாம். மேஜை லாச்சியில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமானால் இவ்வளவு நேரம் மினைக்கெடத் தேவையில்லைத்தான். அப்படியானால். அம்மா சொல்வது சரியானால் மயிலண்ணை அறையுள்ளிருந்து எந்த நேரமும் வெளிப்பட்டு வரலாம். வந்து முன்னே இருக்கும் கதிரையைத் தூக்கி என் தலையில் விளாசலாம்.
"அப்ப.படுப்பம். என்ன?" என அம்மாவிடம் சொன்னேன்.
92 சுதாராஜின் கதைகள்

படுக்கையை வியர்வை நனைத்தது. பேய் என உண்மையான ஒரு சாமான் இருக்குமோ என்று மனம் ஆட்டம் கொண்டது. நல்ல உறக்கத்திலிருந்த சில நாய்கள் எங்கோ பேய் பிசாசுகளைக் கண்டவை போலக் குரைக்கத் தொடங்கின. பின்னர் இராகமெடுத்து ஊளை யிட்டன. பேய்களைக் கண்டால்தான் நாய்கள் ஊளையிடும் எனப் பாட்டி சிறுவயதில் சொல்லித் தந்த கதைகள் விசுவரூபம் எடுத்துக் கொண்டு வந்தன.
அந்த நேரமாகப் பார்த்து மயிலண்ணை மீண்டும் அறையிலி ருந்து வெளிப்பட்டார். வந்த வீச்சிலேயே படுத்துக் கொண்டார். ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்னிடம் வெளிப்படுமுன்னரே. திரும்ப எழுந்து அமர்ந்து. எனது படுக்கையை நோட்டம் விட்டார். நான் கண்களை இறுக்கமாக மூடினேன்.
பின்னர் சொல்லி வைத்ததுபோல திடுக்கிட்டு விழித்தேன். விழித்ததுமே மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன். மயிலண் ணையைக் காணவில்லை!
அந்த வேகத்திலே அம்மாவின் படுக்கைப் பக்கம் பார்த்தேன். "அம்மா!. அம்மா!.." நெஞ்சு படபடக்க எழுப்பினேன்.
"மயிலண்ணையைக் காணவில்லை. இதுக்கு ஒரு முடிவு
காணாமல் விடமாட்டேன். ஒண்டில் அவர் அல்லது நான்!" என ஆக்ரோஷம் கொண்டு எழுந்தேன்
"தம்பி நில்லடா. நில்லடா"
அம்மா பின்னால் ஓடிவர நான் அறைப்பக்கமாக (வீர) ஆவேசத்துடன் சென்று, வாசலில் சட்டென நின்றேன்.
'எதுக்கும் ஒருக்கால் எட்டிப் பாப்பம்!"
ஆள் இல்லை. அறையில் நுழைந்து எனது சம்பளப் பணத்தைப் பார்த்தேன். அது அப்படியே இருக்கிறது. ரோச் லைட்டைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அறைகளாக ஒருவரை ஒருவர் பிடித்தவாறு மயிலண்ணையைத் தேடினோம். ஆனால் ஆளைக் காணக்
சுதாராஜின் கதைகள் 93

Page 48
கிடைக்கவில்லை. காசும் களவு போகாதபடியால். அம்மா சொல்வது போல அவருக்கு ஏதாவது பிசகு இருக்கும் என நம்பினேன்.
பிறகுதான் கவனித்தேன். வாசற்படியில் நாயையும் காணோம். "நாயையும் காணவில்லை. ஆள் வெளியிலை தான் போயிட்டார்” என்றவாறு படியால் இறங்கினேன். ஆட்டக் காவடிக்குக் கயிறு பிடிப்பது போல அம்மா எனது கையைப் பிடித்து இழுத்தவாறு பின்னால் வந்தாள். "கையிலை. ஆப்பிடுறதாலை மாட்டிப்போடுவான். கவனம்"
ஒரு கொட்டன் பொல்லையும் கையிலெடுத்துக் கொண்டு ‘அவர் என் தலையில் போடுவதற்கு முன்னர் நான் அவர் தலையில் போட்டு விடலாம் - தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம்.
எங்காவது மயிலண்ணை தென்பட்டால். கொட்டனையும், ரோச் லைட்டையும் போட்டுவிட்டு. வந்த திசையில் திரும்ப ஓடுகிற பயம், கால்களை ஆட்டிக் கொண்டிருக்க. தேடுதல் வேட்டை நடந்தது.
முதலில் கேற் பக்கமாகப் போய்ப் பார்ப்போம். பூட்டப்பட்ட படலை அப்படியே இருந்தது.
பின்னர் பின்பக்கமாக வள்வுக்குள்ளால் நடந்தோம். ஒவ்வொரு ஆட்கள் குந்திக் கொண்டிருப்பது போல. வெட்டி எரிக்கப்பட்ட காட்டு மரங்களின் குற்றிகள் தோற்றமளித்தன, எனது கையில் இருப்பது கொட்டனாக அல்லாமல் ஒரு துவக்காக இருந்தால். குந்திக் கொண்டிருக்கும் அந்த மரங்களின் கதி என்னவாயிருக்கும் என்று சொல்லத் தேலையில்லை, ரோர்ச் ஒளியை முன்னே பாய்ச்சியபடி மெல்ல. மெல்ல முன்னேறினோம்.
"ஸ்றச்ச். ஸ்றச்ச்."
'தம்பி!. தம்பி!. நில்லடா.ஏதோ சத்தம்!"
அம்மா சொல்லுமுன்னரே நான் நின்று விட்டேன். காதுகளைக் கூர்ந்து கேட்டேன்.
"ஸ்றச்ச. ஸ்றச்ச். ஸ்றச்ச்."
94 சுதாராஜின் கதைகள்

மேற்கொண்டு நடக்க முடியாமல் கால்கள் பின்னின. எனினும் ஒரு நிர்ப்பந்தத்துக்குட்பட்டது போல கால்களை முன்னோக்கி இயக்கினேன்.
அதோ!. தோட்ட வரம்பில் நாய் படுத்திருக்கிறது. நிலா வெளிச்சத்தில். கத்தரிக் கன்றுகளுக்குப் பாத்தி கட்டும் வேலையில் மயிலண்ணை ஈடுபட்டிருக்கிறார்! மண்வெட்டி மண்ணைக் கோலக். கோலக். கோல, ஸ்றச்ச். ஸ்றச்ச்!
எனது குழம்பிய மூளையை ஒரு நிலைப்படுத்தி "மயிலண்ணோய்!" என்று கூப்பிட்டேன்.
ரோச் ஒளியை அவர் மீது பாய்ச்சினேன்.
குனிந்து மண்வெட்டியைப் பிடித்து நின்ற நிலையிலேயே தலையை மட்டும் நிமிர்த்தி, ஒரு பார்வை பார்த்தார். அட்டகாசமான ஒரு சிரிப்பில் பற்கள் தெரிந்தன. நான் ஓடுவதற்குத்தயார்! எனக்கு முன்னே அம்மாவும் தயாராக நிற்பது தெரிந்தது!
| ۶
"கையிலை மண்வெட்டியோடை நிக்கிறான். கவனம்
கால்களை உசார்ப்படுத்திக் கொண்டே "மயிலண்ணை. உதென்ன வேலை" என்றேன்.
"நல்ல நிலவுதானுங்களே?"
"என் னப் பா ... வேலை செய்யிறதுக்கு ஒரு நேரகாலமில்லையா,"
"எங்கட ஊரிலை. நிலா வெளிச்சத்திலயெல்லாம். வேலை செஞ்சு நல்ல பழக்கமுங்க!"
எனக்கு எரிச்சலேற்பட்டது.
"அது உங்கடை ஊரிலை!. இஞ்சை என்னைச் சுட்டுப் போட்டிடுவாங்களே. வாங்கோ வந்து படுங்கோ, விடிஞ்சாப் பிறகு செய்யலாம்.!"
மண் வெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர் எங்களை நோக்கி
சுதாராஜின் கதைகள் 95

Page 49
நடக்கத் தொடங்க நாங்கள் விரைவாக வீட்டை நோக்கி நடந்தோம். மயிலண்ணை நாயுடன் விளையாட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தார்.
அவரைப் பார்த்து. "என்ன வேலையண்ணை. இந்த நேரத்திலை?" என்றேன்.
அம்மா அவர் பற்றிச் சொன்ன விசயமாக எனக்கு இன்னும் சந்தேகம் இருந்தது.
"தூக்கம் வரவில்லீங்களே!"
"நல்ல புதினமப்பா!. பகல் முழுவதும் வேலை செய்யிற நீங்கள் உடம்பு அசதியாயிருக்கும். வடிவாய் நித்திரை வருமே?”
அவர் சுய உணர்வோடுதான் இருக்கிறாரா அல்லது ஏதாவது ஆட்டுகிறதா என அறியும் ஆர்வம் எனக்கு
"உடம்பு அசதிதானுங்க.. ஆனா நம்ப சம்சாரத்துக்கு இது பெறுமாசமுங்க, இண்ணைக்குப் பறுவம். கனத்தநாள் தானுங்களே?. வயித்து நோ எடுத்திருக்குமெண்ணு ஒன்ணு உள்ளுக்கை சொல்லிச்சு. தனிய இருக்கிறவா ஒரு அவசரம் எண்ணா என்ன செய்வா?."
'பாவம். எப்படியாச்சும் போய்ப் பாக்கணும் எண்ணு தோணிச்சு. உங்ககிட்ட வேலையையும் ஒத்துக்கிட்டன். முடிக்காம போறதும் சரியில்லை. இதயெல்லாம் நெனைச்சுத்தானுங்க தூக்கம் வரல்ல, நிண்ணு- நிண்ணு யோசிச்சுப் பார்த்தன்!. அப்புறம் உங்கட அறையில் போய் பொஸ்தகங்க வாசிச்சன். ரெண்ணு - மூணு தடவ இப்படியே செஞ்சும் தூக்கம் தான் வந்தபாடில்லை."
".அதுக்கப்பபுறம்தான் தீர்மானமாத் தோட்டத்தில் இறங்கினேன். இப்ப புடிச்சேண்ணா. காலை பத்துக்கிடேல பாத்தி கட்டி முடிச்சிடுவன். அப்புறம் ஊருக்குப் போகலாமெண்ணுதான்."
மயலண்ணைக்கு முன்னால் நான் சுருங்கிப் போக, எனக்கு முன்னால் அம்மா சுருங்கிப் போக, அவரை எங்களால் அளக்க
முடியாதிருந்தது!
(சிரித்திரன், ஆவணி 1986)
O
96 சுதாராஜின் கதைகள்

சைக்கிள்
சைக்கிள்.
சாதாரண. இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும் - செலவில்லாத பிரயாணம் - பாரமில்லாத வாகனம், ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வேக் கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக் கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம்.
அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்ல முடியாது. நோக்கம் - ஒரு விருப்பம் அல்லது ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ, அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கைகூடாமலே இழுபட்டுக் கொண்டிருந்தாலும். அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.
அவன் வேலைக்கு பஸ்சிலேதான் போவான் - எட்டு வருடங்களுக்கு முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. இப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழ வேண்டியிருந்ததால். ஒரு சைக்கிள் வேண்டி விட்டால் ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய் விடலாம் என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கி விடலாம்.
ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.
சுதாராஜின் கதைகள் 97

Page 50
அவனுக்கு நடந்து திரிவது அலுத்துப் போய் விட்டது என்று சொல்ல முடியாது. நடப்பதில் அவனுக்கு எவ்வித வெறுப்பும் ஏற்பட்டதில்லை. காலையில் எழுந்து பஸ்சுக்காக குடல் தெறிக்க நடப்பது, வீதிகளில் விடுப்புப் பார்த்துக் கொண்டு ஒய்வாக நடப்பது, கடைகளில் நல்ல பிடி, பிடித்து விட்டு வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற. இப்படிப் பலவித நடைகளுக்கும் பழக்கப்பட்டுப் போயிருந்தான். நடை அவனுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரிந்த தில்லை. நடப்பதை அவன் விரும்பியிருந்தான்.
ஆனாலும் ‘ஒரு சைக்கிள் வேண்டினால் கொஞ்சம் சுகமாகவும் இருக்கும். பஸ் செலவுகளும் மிச்சமாகும், உடலுக்கும் அப்பியாசமாக இருக்கும் என்றெல்லாம் தோன்றியது. சைக்கிள் ஓடுவது நல்ல தேகாப்பியாசம் என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தொழிற் சாலைக்கு சைக்கிளிலே போய்வருவது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்த மாதிரி. காசும் மிச்சமாகும். உடலும் இறுகும் என அடிக்கடி நினைத்துக் கொண்டான்.
படிப்பு முடிந்து, வேலை கிடைப்பதற்கு இடையில் மூன்று வருடங்கள் வீட்டிலே 'சும்மா’ இருந்த பொழுது அவன் சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லாமலேயே இருந்தான். அப்பொழுதுகூட ஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது என்றுதான் அவனுக்குத் தோன்றும். சும்மா வீட்டிலே நெடுகலும் அடைந்து கிடக்க முடியுமா என்ன, நண்பர்களிடம் போனால் எதையாவது அலட்டி நேரத்தைப் போக்கலாம். எங்காவது அவர்களோடு சைக்கிளில் ரவுண்ட்” அடிக்கலாம். அநேகமாக நண்பர்களிடமெல்லாம் ஒவ்வொரு சைக்கிள் இருந்தது. அவர்களில் ஒருவரோடு டபிளில் போகலாம். அவர்களைச் சைக்கிள் பாரில் இருந்தி அவன் மூச்சு வாங்க உளக்குவான். அப்பொழுதே தினமும் ‘லைபிரரிக்குப் போகும் பழக்கமும் இருந்தது. லைபிரரி வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்திலிருந்தது. நண்பர்களுக்கு அவனைப் போல் லைபிரரிக்குப் போகும் பழக்கம் பிடிக்காது. அதனால் அவன் நடந்தே போய் வருவான். சில நாட்களில் அவர்கள் கொண்டு போய் விட்டுப் போவார்கள். பிறகு நடந்து வந்தே சேருவான்.
வீட்டிலே 'சும்மா’ இருந்தபடியால் கடைகளுக்குச் சாமான் வாங்கிப் போவது முதற்கொண்டு சகலவிதமான வெளியிலே செய்ய
98 சுதாராஜின் கதைகள்

வேண்டிய வீட்டு அலுவல்களை அவனே கவனிக்க வேண்டியிருந்தது. நடந்தே போய் சாமான்களைச் சுமந்து கொண்டு வரும்போதெல்லாம் ‘ஒரு சைக்கிள் இருந்தால் எவ்வளவு நல்லது என நினைத்துக் கொள்வான்.
ஒரு நாள் சனிக்கிழமை. அப்பா மத்தியானம் சாப்பிட்ட பிறகு நல்ல உறக்கத்திலிருந்தார். அவர் இனி எங்காவது போவதா னாலும் மாலை ஐந்து மணிக்குப் பிறகுதான் கிளம்புவார். இரண்டு மணியைப் போல. சும்மா நிற்கிற சைக்கிளைக் கண்டதும் லைபிரரிக்குப் போனாலென்ன. என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான்.
"அப்பா. எழும்பிறதுக்கிடையிலை வந்திடுவன். அஞ்சு மணிக்குப் பிறகுதானே போவார்?"
"சுணங்காமல் வந்திடு ராசா. பிறகு எப்பணெண்டாலும் அந்த மனிசன் துள்ளியடிக்கும்!" என்று சொல்லி அனுப்பினாள் அம்மா. அவன் இப்படி வேலை வெட்டி இல்லாமலும், வேலைக்கு விண்ணப் பங்களை போடுவதற்காகத் தபாற் கந்தோருக்கும், வீட்டு வேலைக ளுக்குமாக அலைந்து திரிவதையும் பார்க்க அம்மாவுக்கு மனவருத்தம் தான். 'பிள்ளை பாவம். கவலையிலையாக்கும். வயக்கெட்டுப் போகுது" என அடிக்கடி சொல்லிக் கொள்வாள். அம்மாவுக்கு இப்படி அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
அன்றைக்கு அவனது கெட்ட காலமோ என்னவோ. சைக்கிளுக் குக் காற்றுப் போய்விட்டது. அது, அவனுக்கு மூச்சுப்போன மாதிரி இருந்தது. அப்பாவின் சைக்கிள் இருபது வருஷத்துக்கு மேலாக நின்ற அவருக்குச் சேவை செய்கிறது. கறல் பிடித்த நிறம். ஆனாலும், உறுதியான சைக்கிள். பின்னே ஒரு பெரிய ‘கரியர்’ அதில் அகலமான பலகையைக் கட்டியிருப்பார். அந்தக் கரியரில் இரு பக்கமுமாக மூன்று, மூன்று வாழைக்குலைகளைக் கொளுவுவார். கரியரின் நடுவில் இரண்டு குலைகளைக் கட்டுவார். முன் ஹான்டிலில் இரண்டு குலைகளைக் கொழுவி, நடுவிலே ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்துப் பன்னிரண்டு வாழைக்குலைகளை அந்தச் சைக்கிளில் கொண்டு போகும் திறமை அப்பாவுக்கு இருந்ததோ. அல்லது அந்தச்
சுதாராஜின் கதைகள் 99

Page 51
சைக்கிளுக்கு இருந்ததோ தெரியாது. எவ்வளவு பாரமேற்றினாலும் அசையாத சைக்கிள். அப்பாவின் பக்குவமான பாவிப்பும் அதற்குக் காரணமாயிருக்கலாம். இலகுவில் "பிறேக் பிடிக்க மாட்டார். பிறேக் பிடித்தால் ரயரும் தேய்ந்துபோகும், பிறேக் கட்டையும் தேய்ந்து போகும் என்பதுதான் காரணம். அப்படி ஒரு தேவையாக - அவசரமாக நிறுத்த வேண்டி வந்தால். இருக்கையிலிருந்து ஒரே தள்ளலில் காலை முன்பக்கமாகத் தூக்கிக் குதித்துச் சைக்கிளைக் கைளினால் இழுத்துப் பிடித்து நிறத்தி விடுவார் - இது ஒரு உதாரணத்துக்குத்தான். இதுபோல வலு கவனமாகவே சைக்கிளை உபயோகிப்பார்.
சைக்கிளை ஒட்டுவதற்கு முதல் ஒரு காலை பெடல் அச்சில் வைத்துத் தெத்திக் கெந்தி கொஞ்சத் தூரம் தள்ளிக் கொண்டு ஒடி. பிறகு முன்பக்கமாக ஒரு காலைச் சடாரென, பாரின் மேலாக மறுபக்கம் போட்டு சீற்றில் அமர்ந்து உட்கார்ந்து உளக்கத் தொடங்கு வார். இதைப் பார்க்கும் போது சைக்கிள் ஓடுவதற்கு முதல் ஒரு உந்துவிசை கொடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது ஓடாது என்பது போல இருக்கும். சீற்றிலே ஏறி அமர்ந்து கொண்டு சும்மா சும்மா நிக்கிற சைக்கிளை உளக்கத் தொடங்கினால், செயின் மற்றும் வில்கள் தேய்வதற்கும் உடைவதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பது அவரது வாதம். இதனால் தானோ என்னவோ அந்தச் சைக்கிள் இருபது வருஷத்துக்கு மேலாக நின்று சேவை செய்கிறது.
ஆனால் அன்றைக்கு என்ன நேர்ந்ததோ அந்தச் சைக்கிளுக்கு. அவன் கொண்டுபோய் லைபிரரியில் விடும்வரை ஒரு தொல்லையு மில்லாமலிருந்தது. நாலு ஐம்பது போல வந்து வீட்டுக்குப் போகலாம் என சைக்கிளை எடுத்தால். காற்றுப் போய்க் கிடக்கிறது.
அவனிடம் காற்று அடிக்கக்கூடக் காசு இல்லை. அப்பாவை நினைத்துப் பார்க்கையில் பயமாக இருந்தது. சைக்கிளுக்குக் காற்றுப் போன சங்கதியே அவருக்குப் பாரதூரமான விஷயமாயிருக்கும். இந்த நிலையில் ரியூப்தான் ஒட்டையாயிருக்கிறதோ, என்னவோ? “கடவுளே, அப்படி ஒரு அசம்பாவிதமும் நடந்திருக்கக்கூடாது.’ என வேண்டிக் கொண்டே சைக்கிளைக் கடைக்கு உருட்டிக் கொண்டு போனான்.
காற்று அடிக்க பத்து சதம்' என கடைக்காரன் போட்
100 சுதாராஜின் கதைகள்

போட்டிருந்தான்! இவனிடம் ஒருசதத்திற்கும் வழியில்லை. தலையைச் சொறிந்து கொண்டு வெகுநேரம் நின்றான். ஆட்கள் குறைந்த பிறகு கடைக்காரனிடம் விஷயத்தை மெதுவாக அவிட்டான்.
"சரி, சரி. அடியும். நாளைக்குக் காசு கொண்டு வந்து தாரும்!" என்றான் கடைக்காரன். ஆனால் அடிக்க, அடிக்கக் காற்றுப் போய்க் கொண்டே இருந்தது. நெஞ்சு ஒரு பக்கம் இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. வால்வைக் கழட்டிப்பார்த்தால் அதிலும் பழுதில்லை. ரியூப்தான் ஓட்டையாகி விட்டது.
காற்றில்லாத ரயருடன் உருட்டினால் ரியூப் வேறு இடங்களிலும் ஒட்டையாகக் கூடும் என நினைத்து சைக்கிளைப் பின்பக்கமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டே வீடுவரை உருட்டினான். வியர்க்க விறுவிறுக்க வீட்டையடைந்த பொழுது அப்பா எதிர்பார்த்தது போலவே சன்னதங் கொண்டு நின்றார்.
அவருக்கு அன்றைக்கு நேரத்தோடு போக வேண்டியிருந்தது. தோட்டங்களில் போய் வாழைக்குலை வேண்டிக் காலையில் சந்தைக் குக் கொண்டு சென்று விற்பது அவர் வேலை. அன்றைய பிழைப்புக் கெட்டுப் போய்விட்ட கோபம் ஒரு பக்கம் ஏற்கனவே சுணக்கம், அதிலும், சைக்கிள் ஓட்ட முடியாத நிலையிலும் வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, சைக்கிளுக்க இந்தக் கதி நேர்ந்ததைத்தான் அவரால் தாங்க முடியவில்லை. என்னமாதிரி வசனங்களை அள்ளி வீசினார்.
"வேலை வெட்டியில்லாத பரதேசிக்கு. சைக்கிள் தேவைப் படுகுதோ?. “காவலி கடப்புளியளோடை ஊர் சுத்தித் திரியிறத்துக்கு என்ர சைக்கிள்தான் தேவையோ?."
"நான் விடிஞ்சால் பொழுதணுதியும் மாடு மாதிரி உழைக்கிறன். ஓரிடத்திலையிலிருந்து திண்டு திண்டு, இவங்களுக்குக் கொழுப்பு வைச்சிட்டுது. இவங்களுக்குச் சோறு போடுறதே தண்டம். ஒரு நாளைக்கெண்டாலும், காய வைச்சால்தான் உழைப்பின்ர அருமை தெரியும்."
தண்டம்? தண்டச்சோறு? இதை அவனால் தாங்கிக் கொள்ள
சுதாராஜின் கதைகள் 101

Page 52
முடியாமலிருந்தது. ஒரு நாளும் அப்பாவுக்குத் தலை நிமிர்ந்து கதைக்காதவன் அன்றைக்குக் கதைத்து விட்டான்.
"தண்டச் சோறு எண்டு மாத்திரம் சொல்லாதையுங்கோ. நான் என்ன வேணுமெண்டோ சும்மா இருக்கிறன்?"
அப்பாவின் சன்னதம் தலைக்கேறியது.
"என்னடா? வாய்மெத்திப்போச்சுது. கழுதைக்கு எவ்வளவு காசைக் கொட்டிப் படிப்பிச்சன் என்ன பிரயோசனம்?. படிக்கிறன், படிக்கிறனெண்டு. எல்லாரையும் பேய்க்காட்டிப் போட்டு. இப்ப சும்மா இருந்து தின்னுறாயோ?."
"நீங்களெல்லாம் இருக்கிறதை விட செத்துத் துலையலாம்." என்றவாறு வந்து அவனது கன்னம் கன்னமாக விளாசினார்
அவன் வீம்பு கொண்டவனைப்போலப் பேசினான்,
"நான் சாகத்தயார். நீங்கதானே பெத்தனிங்கள்? நஞ்சை வேண்டித்தாங்கோ சாகிறன்"
"என்னடா சொன்னனி. நாயே! உனக்கு இஞ்சை சாப்பிடில்லை. போடா வெளியிலை."
"இண்டைக்குத் தொடக்கம் இவனுக்குத் தண்ணி வென்னி கூட குடுக்கக்கூடாது. குடுத்தால் நான் இஞ்சை இருக்க மாட்டன்."
அதைக்கேட்டுக் கொண்டு அவன் விறுமகட்டை மாதிரி நின்றான்.
"போடா!" என அவனது கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். அவன் விறுக்கென வெளியே போனான். அம்மா வாசல் வரை குளறிக் கொண்டு ஓடி வந்தாள்.
அவன் தனது நண்பன் வீட்டுக்குப் போனான். அந்த "சும்மா இருந்து தின்னுகிற விஷயம்தான் அவன் நெஞ்சைக் கடுமையாக வருத்தியது. அவன் ‘அட்வான்ஸ் லெவல் படித்த பொழுது, ரியூசன் போன்ற செலவுகளுக்கு அப்பா காசைக் கொட்டியது உண்மைதான், ஆனால் பரீட்சையில் நல்ல றிசல்ட் கிடைத்தும் ஒரு தரமும் பல்கலைக்
102 சுதாராஜின் கதைகள்

கழக அனுமதி கிடைக்காமல் போனது அவன் குற்றமா? தரப்படுத்தல் முறை வந்த பிறகு ஏற்பட்டுப்போன இந்த நிலைமைகள் அப்பாவுக்குத் தெரியாதா, என்ன? திரும்ப வீட்டுக்கே போகக் கூடாது என நினைத் தான். ஆனால் நண்பன் நல்ல புத்தி சொன்னான்.
"கொப்பர் கோபத்தில பேசியிருப்பார். அவற்றை நிலையிலே அப்படித்தான் கதைத்தாலும். நீ வீட்டைபோ! அம்மா எவ்வளவு கவலைப்படுவா?"
அம்மாவை நினைத்ததும் உண்மையிலேயே அவனுக்குத் தாங்க முடியாமல்தான் இருந்தது. ‘கோபத்தில் யாரும் பொறுப்பில், லாமல் வார்த்தைகளை உதிர்த்து விடலாம். ஆனால் நாங்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது' என நினைத்துக் கொண்டு இரவு திரும்பவும் வீட்டுக்குப் போனான். ஆனால் சாப்பிட வில்லை. நாலு நாளைக்கு காய்ந்தால்தான் மனது சரிப்படும் போலிருந்தது. அம்மா அவனைச் சமாதானப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.
இரவு வெகுநேரம் கடந்த பிறகுதான் அப்பாவும் வந்தார். அம்மாவுடன் கதைப்பது கேட்டது.
Aff
தம்பி. still LITGOTIT?'
அம்மா, அப்பொழுது கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாய் சீறுவதும் கேட்டது.
"இந்த வெயிலுக்குள்ளாலை. ஒரு நாளைக்கு எத்தனை தரம் பிள்ளை நடந்து திரியது, இருந்த சைக்கிளையும் கொண்டுபோய் வித்துத் திண்டிட்டியள்."
"
"...நீ வா அப்பு சாப்பிடு
சைக்கிளை வித்துத் தின்ற கதையை அம்மா சொன்னதும் அவனுக்கும் ஒரு சைக்கிள் சொந்தமாக இருந்தது நினைவில் வந்தது.
பாடசாலையில் படித்த காலத்திலும் அவன் நடந்தே போய் வருவான். வீட்டுக் காணியில் அப்பா சிறியதாகச் செய்த தோட்டத்திற்கு
சுதாராஜின் கதைகள் 103

Page 53
ஒத்தாசை செய்து கொடுத்துவிட்டுப் போக பாடசாலை தொடங்கிவிடும். ஓ-எல்- படித்த அந்தக் காலத்தில், பின்னேரங்களில் ரியூசனுக்குப் போகவேண்டி இருந்தது. அப்பொழுதெல்லாம் ‘ஒரு சைக்கிள் இருந்தால் நல்லது' என நினைப்பான். அப்பாவுடன் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, மனநிலை அவருக்கு நல்லாயிருக்கும் நேரங்களில் கேட்டுப் பார்ப்பான். ‘பிறகு வேண்டலாம்' என அவர் சமாளித்து விடுவார். ஆனால் ஓ-எல்-படித்து பாஸாகிற வரை அவனுக்கு சைக்கிள் கிடைக்கவில்லை. பரீட்சையில் ஒரே தடவையில் சிறந்த முறையிலே பாஸாகியிருந்தான். ஒரு நாள் அப்பா அவனை ‘ரெளனுக்கு’ போக அழைத்தார். அவரது சைக்கிளின் பின் கரியரில் உட்கார்த்திக் கொண்டு போனார். போகிற பொழுது சொன்னார்.
"உனக்கு ஒரு சைக்கிள் வேண்டப்போறன்."
அவனுக்குக் குழறலெடுத்தது. எவ்வளவு அருமை! சைக்கிள் பழசோ அல்லது புதிசோ தெரியாது. எப்படியிருந்தாலும் அடுத்தநாள் பள்ளிக்கூடம் போகிறபொழுது சக பெடியன்கள் அசந்து விடுவார்கள்.
ஒரு பெரிய கடைக்கு கூட்டிச் சென்று சில பத்திரங்களைப் பதிந்து கொடுத்து. சைக்கிளை வேண்டி அவனிடம் கொடுத்தார் அப்பா. புத்தம் புதிய சைக்கிள். கறுத்த நிறம். சில்லுக் கம்பிகளும் றிம்மும் பளிச்சென மினுங்கின.
கட்டுக்காசுக்கு எடுத்த சைக்கிள், முதலில் நூற்று இருபத்தைந்து ரூபா கட்டியது. பிறகு ஆறு மாதங்களுக்கு முப்பது ரூபா வீதம் கட்ட வேண்டும். மடியில் இருந்து காசை எடுத்துக் கொடுத்து ஒரு லைட்டும், பூட்டும் வேண்டித் தந்தார் அப்பா.
இரவில் லைட்டில்லாமல் ஓடக் கூடாது. எப்பவும் பூட்டித்தான் வைக்க வேண்டும்.
அப்பாவுக்கு முதலே வீட்டுக்குப் பறந்து வந்தான். தம்பியர்கள் அதிசயித்துப் போனார்கள்.
அந்தச் சைக்கிளை அவன் பிள்ளையைப் போல் பாவித்தான். ஒவ்வொரு நாளும் துடைத்து மினுக்குவான். இரவல் கொடுக்க
104 சுதாராஜின் கதைகள்

மாட்டான். டபிள் ஏற்றமாட்டான். கடைகளுக்குப் போகிற சமயங்களில் அம்மாவிடம் வெட்டுகிற காசில் ‘ஹிற்பாய்க், ஸ்டான்ட் போன்றவற்றைச் சைக்கிளுக்கு எடுத்துப் பூட்டினான். சைக்கிள் எடுப்பாகத் தோற்றமளித்தது.
ஆனால் சைக்கிள் வேண்டி இரண்டு மாதங்கள் (ԼՔ(Լք&T85 முடியமுதலே ஓர் அசம்பாவிதம் நடந்தது. ஒரு நாள் லைபிரரிக்குப் போய் வரும் வழியில் - அவனுக்கு முன்னே நண்பன் சங்கரன் இன்னொரு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். புதிதாகச் சைக்கிள் பழகியவன், கை நடுங்கற்காரன் மாதிரி ஓடினான். ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு தளும்பித் தளும்பி அவன் ஓடுவதைப் பார்க்க விழுந்து விடுவான் போலிருக்கு என நினைக்கையிலேயே படாரென வீதியில் சரிந்தான்.
அவன் மேல் அடிபட்டு இவனும் விழுந்தான். பின்னால் ஏதோ வாகனம் வருவது போன்ற அசுகையில் அவசரமாக உருண்டு கரைக்குப் போனான். பெரிய லொறியொன்று அவனது புதிய சைக்கிளின் மேலாக ஏறி அப்பால் போனது. புத்தம் புதிய சைக்கிளின் கதை முடிந்தது.
'அருந்தப்பு: சைக்கிளுக்கு மேலை ஏறினமாதிரிக்கு லொறி உம்மை அடிச்சிருந்தால் என்ன கெதி. போய் முனியப்பருக்கு ஒரு தேங்காய் அடிச்சிட்டுப் போம்!"
அவ்வளவு சனங்களுக்கு முன்னிலையிலும் கொஞ்சம் விம்மல் எடுத்து அழுதான். அந்த லொறி அவனையே நெரித்திருந்தாலும் தாங்கியிருக்கலாம். அருமந்த சைக்கிள்! ஒரு ட்ரக்சி பிடித்து அதன் கரியரில் சைக்கிளைப் போட்டுக் கொண்டு வந்து வீடு சேர்ந்தான். பிறகு பழைய எடுப்பான சைக்கிளாக வரவில்லை. லொட-லொடாச் சத்ததத்துடன் ஒரு வருடமளவில் தாக்குப்பிடித்தது.
அப்பா ஏதோ மாதச் சீட்டுக் கட்டிக் கொண்டிருந்தவர், ஒரு மாதத் தவணைச் சீட்டுக்காசு கொடுக்கும் வசதியல்லாமற்போக இந்தச் சைக்கிளை விற்று விட்டார், "அது அடிபட்ட சைக்கிள். சரியில்லை. பிறகு வேறை சைக்கிள் வேண்டலாம்!"
சுதாராஜின் கதைகள் 105

Page 54
ஆனால் பள்ளிக்கூடப் படிப்பு முடியும் வரை அப்பா வேறு சைக்கிள் வேண்டாமலே கடத்தி விட்டார்.
...வேலை இல்லாமல் இருந்த நாட்களில் ‘ஒரு சைக்கிள் தேவையாக இருந்தும் அவன் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வேலை கிடைத்த சைக்கள்தானே உழைத்துத் தான் சைக்கிள் வேண்ட வேண்டும். இனிச் சொந்தமாக சைக்கிள் எடுக்கிறவரை இரவல் ஓடுவதில்லை என்றுகூட எண்ணியிருந்தான்.
O O
ஆனால் ஆசை யாரை விட்டது? கூட வேலை செய்யும் நண்பன் சாந்தன் தனது ‘திருமணத்திற்காக நீண்ட நாள் விடுமுறையில் போகும் பொழுது தனது சைக்கிளை அவனிடம் ஒப்படைத்தான். ‘நான் வர்ற வரைக்கும், இதை வைத்திரு’ அந்த வார்த்தையைக் கேட்டதும் பல வருடங்களாக இவன் கட்டிக்காத்த ரோஷமெல்லாம் உடைந்து போனது.
றேசிங் சைக்கிள். சிவப்பு நிறம், செயின்கவர் இல்லாதது. கேபிள் பிறேக். கொஞ்சம் பழைய சைக்கிள் என்றாலும் ஸ்போர்ட் மொடல் என்றபடியால் ஒடும்பொழுது ஸ்டைலாக இருக்கும்.
அவனுக்கு அது இரவல் சைக்கிள் போலவே தெரியவில்லை. சைக்கிள் தன்னிடம் நின்றது பெருமையாக இருந்தது. இரவில் அறையில் சைக்கிளையும் வைத்துப் பூட்டி விட்டுப் படுக்கும்பொழுது இன்பமாக இருக்கும். விடிய எழுந்ததும் பஸ்சிற்காக அவசரப்பட்டு ஒடத் தேவையில்லை. அவன், அந்தச் சைக்கிளிலேயே வேலைக்குப் போவான். “இந்த மாத பஸ் காசை. மிச்சம் பிடிக்கலாம்!”
சாப்பாட்டுக் கடையிலும், மற்ற இடங்களிலும் அறிந்தவர்கள் கேட்டபொழுது தானே அந்தச் சைக்கிளை வேண்டியிருப்பதாகப் புளுகினான்.
"இது சாந்தன்ரை சைக்கிளல்லோ? என்ற சிலர் சொன்னார்கள்,
t
"ஓம்!. அவனிட்ட இருந்துதான் வேண்டியிருக்கிறேன்!" என
அசடு வழிந்தான்.
106 சுதாராஜின் கதைகள்

சாந்தனிடம் காசைக் கொடுத்து ‘இந்தச் சைக்கிளை வேண்டியே விட்டாலென்ன என்ற யோசனையும் தோன்றியது. அந்த யோசனை வந்ததும் இரவு நித்திரை பறிபோனது. சில கனவுகள் தோன்றின. நாற்பது ரூபா செலவு செய்து சைக்கிளைச் சேவிஸ் செய்து எடுத்தான். அதன் பிறகு சைக்கிள் நல்ல ஓட்டம் ஓடியது.
ஒருநாள் மெய்மறந்து ஓடிக் கொண்டிருக்கையில் அவனது "பெல்பொட்டம் கவரில்லாத செயினுக்குள் மாட்டுப்பட, தலை கரணமாக நிலத்தில் விழுந்தான். சைக்கிள் செயினும் அறுந்து போனது. வேறு சில திருத்த வேலைகளும் ஏற்பட்டன. இதனால் திரும்பவும் எழுபது ரூபாயளவில் செலவு செய்ய வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் அது தனது சைக்கிள்தானே என நினைத்துக் கொண்டு ஆறுதலடைந்தான். சாந்தன் வந்ததும் எப்படியும் அதைத் தனக்குத் தந்துவிடுமாறு கேட்க வேண்டுமென நினைத்தான். அதுதான் தனக்கு ஏற்ற சைக்கிள் என்று தோன்றியது. புதிய சைக்கிள் வேண்டவும் வக்கில்லை. சாந்தனுக்குக் காசை ஒரேயடியாகக் கொடுக்காமல் தவணை முறையிலும் கொடுக்கலாம். செலவழித்து. சைக்கிள் முன்னரை விடக் கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதால், திரும்ப எடுக்கச் சாந்தனுக்கும் மனம் வராது. எனவே கட்டாயமாக 'சைக்கிள் தனது கைக்கு வந்து விடும்’ என நினைத்தான்.
-சைக்கிளுக்குப் பூட்டில்லை. ஒரு நல்ல பூட்டு வேண்டிப்போட
வேண்டுமென நினைத்தான். இருபது ரூபாயளவில் வரும். ஏற்கனவே கையிலிருந்த காசுகள் திருத்த வேலைகளோடு போயிற்று. இனிச் சம்பளத்தோடு தான் வேண்டலாம். ஆனால்! பூட்டு வேண்ட வேண்டிய அவசியம் விரைவிலேயே இல்லாமற் போய்விட்டது, ஒரு நாள் லைபிரரிச் சுவரோடு சாய்ந்து விட்டு உள்ளே புத்தகங்களோடு மூழ்கி. இரண்டு மணித்தியாலயங்களின் பின் வந்து பார்க்க சைக்கிளைக் காணவில்லை! பிறகு என்ன? சாந்தனுக்கு சைக்கிளுக்குரிய தொகை யைக் கட்டவேண்டியதாயிற்று. தவணை முறையில் கட்டுவதாக ஒப்புக் கொண்டான்.
உத்தியோகம் கிடைத்து ஐந்தாறு வருடமாகியும் 'ஒரு சைக்கிள் வேண்டுவதற்கு சக்தியில்லாமற் போனதுதான், இரவல் சைக்கிள்
சுதாராஜின் கதைகள் 107

Page 55
பாவிப்பதில்லை என்ற தன் வைராக்கியம் உடைந்ததற்கும் சாந்தனின் சைக்கிளைச் சொந்தம் கொண்டாட வேண்டி வந்ததற்கும் காரணம் என எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.
வேலை கிடைத்த முதல் மாதமே சைக்கிள் வேண்டவேண்டு மென்றுதான் முதலில் நினைத்திருந்தான்.
தொழிற்சாலையில் அவனுக்கு கிடைத்த வேலைக்கு ஒரு வருடம் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐந்து ரூபா முப்பத்தைந்து சதம் படி முதல் மாதம் நூற்றைம்பது சொச்சம் கையில் சிடைத்தது. அது சாப்பாட்டிற்கே போதாது - பஸ் செலவு வேறு. அதைச் சரிக்கட்ட அப்பா வீட்டிலிருந்து கொஞ்சம் அனுப்பி வைத்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஓ.ரி.யும் செய்து கூட உழைக்கக்கூடியதாக இருந்தது. சொந்தமாக உழைத்துச் சாப்பாட் டிற்குச் செலவு செய்கிற பொழுதுதான் பணத்தின் அருமையும் பொறுப்பும் தெரிய வருகின்றன. -
அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்! ஒரு நாளைக்குப் பத்து வாழைக்குலை விற்றாலும் இருபத்தைந்து ரூபா லாபம் கிடைக்குமோ?
அவன் உழைக்கிற பணத்தில் சாப்பாட்டுச் செலவுகள் போக, வீட்டுக்கும் அனுப்பினான். அதனால் சைக்கிள் வேண்டும் எண்ணத்தை ஒரு வருடத்திற்கு ஒத்திப்போட்டான். நிரந்தர வேலை கிடைத்து விட்டால் சைக்கிள் கடன்கூட எடுக்கலாம். அப்ப சைக்கிள் எடுக்கலாம் என நினைத்துக் கொண்டான்.
மூன்று வருடங்கள் நிரந்தரமாக்காமலே ஐந்து முப்பத்தைந்து இழுத்தடித்தார்கள். ஆனாலும் வீட்டில் சும்மா இருந்த மூன்று வருடங்களை விட இந்த மூன்று வருடங்கள் பரவாயில்லை என்று தோன்றியது. மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருப்பதை விட, இதில் கஷ்டங்களை தானே சுமந்து கொள்ளலாம். மற்றவர்களின் கஷ்டங் களையும் கொஞ்சம் சுமக்கலாம். 'உத்தியோகமானதும் தனது சொந்தப் பணத்தில் சைக்கிள் வேண்டவேண்டும்’ என்ற எண்ணம் உள் மனதில் ஆசையாக இருந்தாலும், வெளிப்படையாக இது தன்னைத் தீவிரப்படுத்தியது இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் உணர முடிந்தது.
108 சுதாராஜின் கதைகள்

வேலை நிரந்தரமானதும் சம்பளம் எழுநூறாக அதிகரித்தது. மேலதிக நேரமும் உழைத்தால் ஆயிரத்துச் சொச்சம் கையிலெடுக் கலாம். ‘இனி எப்படியாவது சைக்கிள் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
வேலை நிரந்தரமாகியது சந்தோஷம்! அப்பா கடிதம் போட்டிருந்தார். கூடவே அவரது கடன் சுமைகளையம் எழுதியிருந்தார். அவன் அதிர்ந்து போனான். அப்பா அவ்வளவு கடன்களையும் சுமந்து கொண்டுதானா சாதாரணமாக இருந்திருக்கிறார்! அம்மாவுக்குக்கூடத் தெரியாமல் தான் மட்டுமே அந்தப் பளுவைத் தாங்கியிருக்கிறார்! தனது உத்தியோகம் நிரந்தரமாகும்வரை தனக்குககூட அதைத் தெரிவிக்கவில்லை. அந்தக் கவலை யாரையும் பாதிக்க அவர் விடவில்லை. அந்தக் கடனைத் தீர்க்கத் தன் பிள்ளையால் முடியும் என்ற நிலை வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிவித்திருக்கிறார்!. இந்தக் கடனை நினைச்சுத்தான் இரவு பகலாக நித்திரையில்லை!
அப்பாவை நிம்மதியாக இருக்கவிட்டு, சுமையை எல்லாம் இனித் தானே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மானசீகமாக எண்ணினான். அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. சைக்கிள் வேண்டும் யோசனையை இன்னும் கொஞ்சக் காலத்துக்குத் தள்ளிப்போட வேண்டியிருந்ததுதான்.
சைக்கிள்.!
குடும்ப இயக்கமே ஒரு சைக்கிளைப் போலத்தான். ஒருவரின் உழைப்பு - பெடலை மிதித்து ஒரு சில்லை இயக்கினால் தான் மற்றதும் நகரும். இரண்டும் சேர்ந்து உருளும்போதுதான் சைக்கிளே ஒடுகிறது. அந்தச் சில்லு சும்மா இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? அது கூட சைக்கிளுக்கு எவ்வளவு இன்றியமையாதது?
இவ்வளவு காலமும் பெடலை மிதித்தவர் அப்பா. இனி மிதிக்க வேண்டியவன் தானே என எண்ணிக் கொண்டான். அப்பாவுக்கு ஓய்வு.
வேலை நிரந்தரமாகி மூன்று மாதங்கள் முடிந்ததும் அலுவலகத் திலிருந்து 'டிஸ்ற்றாஸ் லோன் சைக்கிள் கடன் போன்ற சகல
சுதாராஜின் கதைகள் 109

Page 56
விதமான கடன்களையும் எடுத்தான். சைக்கிள் லோன் எடுப்பதானால், "சைக்கிள் வேண்டியதற்குரிய ரசீது சமர்ப்பிக்க வேண்டும். இருபது ரூபா கொடுத்து ஒரு கடையில் சைக்கிள் வேண்டியதாக பொய் ரசீது எடுத்துக் கொடுத்தான். வங்கியிலும் பத்தாயிரம் ரூபா கடன் எடுத்து அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தான்.
எடுத்த கடன்களுக்குரிய வெட்டுத் தொகை, அவற்றின் வட்டி வெட்டு ஆகியன சம்பளத்தில் விழுந்தபொழுது மாதத்தில் கையில் வரும் தொகை இன்னும் நியாயமான அளவு குறைந்தது. சாப்பாட்டுச் செலவு, அறை வாடகை, பஸ் செலவுகள், வீட்டுக்கு வழமையாக அனுப்ப வேண்டிய தொகை, சில வேளைகளில் பஸ்ஸிற்குக்கூட அறை நண்பர்களிடம் தலையைச் சொறிய வேண்டியிருக்கும்.
சைக்கிள்.!
ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென எட்டு வருடங்களுக்கு மேலாக இருந்த ஆசை இப்ப நிறைவேறப்போகிறது! தொழிற் சாலையின் நலன்புரிச் சங்கம் மூலம் தொழிலாளர்களுக்கு சைக்கிள் எடுத்துக் கொடுக்கப்போகிறார்களாம். சம்பளத்தில் முதலில் ஒரு தொகையும், பிறகு தவணை முறையிலும் பணம் வெட்டப்படும். இது நல்ல ஐடியாதான். சைக்கிளுக்குப் பணமாகக் கடனிைக் கொடுத்தாலும் அது வேறு தேவைகளுக்குப் பாவிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்பொழுது சைக்கிளாகவே கிடைக்கப் போகிறது. சைக்கிளுக்காகத் தனது பெயரையும் பதிந்து கொண்டான்.
சைக்கிள்!.
அவனது மனதில் நிறையக் கனவுகளை விரித்த சைக்கிள் நனவாகப் போகிறது! இனி, அவன் ஒரு சைக்கிளுக்குச் சொந்தக் காரனாகப் போவது சர்வ நிச்சயம்!
மாத விடுமுறையில், அவன் வீட்டுக்குப் போயிருந்தான். ‘சைக்கிள் எடுக்கும் விஷயத்தை அப்பாவுக்குச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அம்மாவுக்குப் பழைய சம்பவம் கூட நினைவுக்கு வரலாம். அன்றுபட்ட வேதனைக்குச் சந்தோஷப்படுவாள், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்!
110 சுதாராஜின் கதைகள்,

இரவு எல்லோரும் ஆறுதலாக இருக்கிற நேரத்தில் புதிய சைக்கிள் எடுக்கிற விடயத்தை அவிட்டு விடலாமென பெரிய திட்டமே போட்டிருந்தான்.
இரவு மழை பெய்து கொண்டிருந்தது. எட்டு மணியாகியும் தம்பியைக் காணவில்லை என அம்மா முணுமுணுத்துக் கொண்டி ருந்தாள். “இந்தக் காலத்திலை. ஆம்பிளைப் பிள்ளையளை வெளியிலை விட்டிட்டு வயித்திலை நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கு...!
"தம்பி எங்கை போனவன்?" என அவன் அம்மாவிடம் விசாரித்தான்.
"பாவம் பிள்ளைக்கு ஒரே அலைச்சல். விடியப்புறத்திலை எழும்பி. எங்கையோ இங்லிஷ் ரியூசனுக்காம் போறவன். பிறகு வந்து ஆவறி போவறி எண்டு; சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஒடுவான். பின்னேரம் வந்து அந்தக் கையோட பிறகும் ரியூஷனுக்குப் போறது. இஞ்சையிருந்து யாழ்ப்பாணத்துக்கு..மூண்டு மைல் நடக்கிறதெண்டால் சும்மாவே..? சில நாளையிலை மழையிலை நனைஞ்சு - நனைஞ்சு தான் ஓடிவருவான். பிள்ளை ஒரு சைக்கிள் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகுது!"
அம்மா பெருமூச்சோடு அவனை நோக்கினாள்.
சைக்கிள்.
பின்னே உள்ள சில்லு உந்து விசை கொடுத்தால்தானே முன்னே உள்ள சில்லு நகரும்? சைக்கிளும் ஓடும்!
"தம்பிக்காக நான் ஒரு சைக்கிளுக்கு ஓடர் குடுத்திருக்கிறன். இன்னும் இரண்டொரு கிழமையிலை வந்திடும்!" என்றான் அவன்
(சிரித்திரன், டிசெம்பர் 1983)
சுதாராஜின் கதைகள் 111

Page 57
தொங்கல்
விடியக் காலமை கோச்சியிலே அண்ணன் ஊருக்கு வந்திருந்தான். போன மாசம்தான் வந்தவன். நேற்றுப் போலிருக்கு திரும்பவும் வந்து விட்டான். இந்தப் பக்கம் சீனவெடிச் சத்தம் கேட்டாலே அங்கெல்லாம் கலகம் வெடிக்கிறதாம்!
"என்னடா தம்பி சொல்லாமல் பறையாமல் வந்து நிக்கிறாய். அங்காலை ஏதாவது வில்லங்கமோ?"
"ஒண்டுமில்லை. சும்மதான் வந்தனான்!' - சும்மா என்று சொன்னாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு ஓடிவர வேண்டிய சங்கதியை அம்மாவுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை.
எப்படியோ அண்ணன் வருகிறான் என்றாலே சந்தோஷம்தான். தம்பிக்கு நிறையப் பொருட்கள் வாங்கி வருவான். தம்பி வீட்டிலே கடைக்குட்டி. மூத்தவன் - அண்ணன், கொழும்பிலே உத்தியோகம் பாாக்கிறவன். லீவில் வரும்பொழுது தம்பியை மறக்க்மாட்டான். விளையாட்டுப் பொருட்கள். தீன் பண்டங்கள். இப்படி, இப்படி. அன்றைக்குக் குட்டித் தம்பியைப் பிடிக்கவே ஏலாது. பக்கத்து வீட்டுப் பாலகருக்கெல்லாம் . அவன்தான் மன்னன்!
"இஞ்சற்றா. அண்ணன் வந்திருக்கிறான்!" மகனைக் கண்ட சந்தோஷம் தாளாமல் குட்டித் தம்பியை எழுப்பினா அம்மா.
காலையில் தம்பியை எழுப்புவது ரொம்பக் கஷ்டம். பள்ளிக்கூட நாட்களென்றால் அம்மா படாதபாடு பட்டு விடுவாள். சனி ஞாயிறுகளில் "கிடந்து எழுப்பட்டும்" என்று விட்டு விடலாம். (ஆனால் அந்த நாட்களில் அவன் எல்லோருக்கும் முதலே உற்சாகமாக எழுந்து விடுவான்).
112 சுதாராஜின் கதைகள்

வழக்கமான சிணுக்கத்துடன் எழுந்த குட்டியன் அண்ணனைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கூடவே செல்லம் கொட்டினான். ஆனாலும் அவனுக்கு மனதுக்குள்ளே இரட்டிப்புச் சந்தோஷம். சனிக்கிழமை. பள்ளிக்கூடமும் இல்லை. அண்ணனும் வந்திருக்கிறான். கொண்டாட்டம்தான்!.
அண்ணா ஊருக்கு வந்திருப்பதால் கோழிக்கறி காய்ச்சுவ தென்று தீர்மானமாயிற்று.
அண்ணா வயக்கெட்டுப்போய் இருக்கிறானாம். "கொழும்பிலை கடையிலை சாப்பிடுறது. பாவம்! வந்து நிற்கிற நாட்களிலை எண்டாலும் வாய்க்கு ருசியாச் சாப்பிட வேண்டாமே? எலும்புத் தோலுமாய்ப் போனான்" என்று சொன்னாள் அம்மா. அதனால் அப்பா சொன்னார். "அந்த வெள்ளைச் சாவலைப் பிடியுங்கோ" என்று. நல்ல கறி என்றால் வீட்டிலே சாவலைப் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்பாவுக்கு எந்நேரமும் கையிலே காசு இருக்காது. அதனால் ஒவ்வொரு முறையும் அண்ணா ஊருக்கு வருகிற பொழுது ஒரு கோழிக்குப் பிழை(யில்லை)
"அப்ப இண்டைக்குத் தொங்கல்தான்!" என்றான் குட்டித்தம்பி. தூரத்திலே வெள்ளைச்சேவல் ஒரு பாவமும் அறியாமல் இரண்டு பேடுகளுடன் தீன் பொறுக்கிக் கொண்டு நின்றது. "மச்சான் இண்டைக் குத் துலைஞ்சார்!" என நினைத்தான் குட்டித்தம்பி. இந்தச் சேவலைத் துலைக்கத்தான் வேணும். பெரிய ராசா மாதிரி எந்த நேரமும் கலைச்சுக் கலைச்சுக் கொத்தும். எத்தனையோ முறை அதன் சேட்டைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கல்லால் கலைத் திருக்கிறான் குட்டியன்.
சேவல் செட்டையை இரண்டு முறை அடித்தது. பிறகு கூவியது. அதற்குப் பிறகு பெரிய ஆளைப்போல அங்குமிங்கும் பார்த்து நிமிர்ந்து நடைபோட்டது. இப்படித்தான் இந்தச் சேவலுக்கு எப்போதுமே பெரிய எண்ணம். தானே தான் தலைவன் என்று! இங்கு எல்லாக் கோழிகளையும் தான்தான் மேய்க்கிற மாதிரி. வேறு சேவல்கள் வந்தாலும் கொண்டையை விரித்துக் கொண்டு சண்டைக்குப் போகும். பாவம், ஒரு நாள் பக்கத்து வீட்டு ஆச்சியின் காப்பிலிச் சேவல்
சுதாராஜின் கதைகள் 113

Page 58
பெரிய சண்டியனைப்போல வந்து நல்லா வாங்கிக் கட்டிக்கொண்டு போனது. அப்பொழுது தம்பிக்குப் பெருமை பிடிபடவில்லை. 'எங்கடை ஆளை அசைக்கேலாது' என்று. ஆனால் கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டு ஆச்சியே கொண்டையை விரித்துக் கொண்டு வந்தாள். சண்டைக்கு. அம்மா பாவம், அப்பிராணி; வாய்திறக்கவில்லை. ஆச்சியிடம் வேண்டிக் கட்டினாள். ஆச்சி போன பிறகு சொன்னாள். 'உந்தச் சாவலைத் துலைச்சு விடுங்கோடா. அப்பதான் எனக்கு நிம்மதி!' என்று. (அம்மா குறிப்பிட்டது வெள்ளைச் சேவலைத்தான்). அம்மா அப்படி முன்னர் சில சந்தர்ப்பங்களிலும் சொல்வதற்குக் காரணம் இருந்தது. சதா இந்தச் சேவல் முற்றத்திலும் முன் விறாந்தையிலும் சுற்றிச் சுற்றி வந்து அசிங்கம் பண்ணி வைப்பது அம்மாவுக்கு வேலைக்கு மேல் வேலை.
"அம்மா! இதோ உனது சத்திராதி இன்றைக்குச் துலையப் போறான்."
"பெடியள். ஆரெண்டாலும் அந்தச் சாவலைப் புடியுங்கோடா." என்றாள் அம்மா, 'பிள்ளை எங்காலும் வெளிக்கிட முந்தி நேரத்தோடை சமைச்சுப் போட வேணும்."
குட்டித்தம்பி துள்ளிக்கொண்டு எழுந்தான் - எங்கடா சாவல்? எப்படிப் பிடிக்கலாம்? அரிசியைத் தூவிக் கொண்டே "பா.பா.பா." என்று கூப்பிடலாம். கிட்ட வந்ததுமே பாய்ந்து அமத்தலாம்.
"குட்டியா! கொஞ்சம் அரிசி எடுத்துக் கொண்டுவா!" என்றான் அண்ணன். இந்த அண்ணன் கொழும்பிலிருந்து வந்த மூத்த அண்ணனல்ல- இரண்டாவது குட்டியனுக்கு கொட்டாவி வந்தது - இவன் ஏன்தானோ இதுக்குள்ளே வருகிறான்?" இனி யார் இந்தச் "சேவலைப் பிடித்தாலும் பெயரெடுக்கப் போகிறவன் அவன்தானே? "பரவாயில்லை. அவனோடு சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்" என நினைத்தவாறு உள்ளங்கை நிறைய அரிசியை எடுத்து அண்ணனி டம் வந்தான் குட்டியன். பிறகு ஒரு நைப்பாசையில் கேட்டான். 'அண்ணை. நான் சாவலைப் பிடிக்கிறன். நீ போய் வேறை அலுவல் இருந்தால் பாரன்!"
114 சுதாராஜின் கதைகள்

"இஞ்சை கொண்டுவாடா! நீ பெரிய ஆள்மாதிரி இதுக்குள்ளை வராமல் போ!'
அடே! கோழி பிடிப்பதற்குக் கூட பெரிய ஆள்தான் தேவைப்படு கிறது. கடைக்குட்டியாக பிறப்பதில் உள்ள சங்கடம் இதுதான் - வீட்டிலே எந்த வேலைக்கும். எவராயினும் அவனை ஒரு மனிசனாகக் கணிக்கத் தயாரில்லை. "சரி இவர் எப்படிப் பிடிக்கிறாரெண்டு பார்ப்பம்"
அண்ணன் எல்லோரையும் அழைத்து கோழி பிடிப்பது பற்றிய தனது திட்டத்தை விபரித்தான். (தாய் - தந்தையரும், பெரிய அண்ணனும், குட்டித் தம்பியும் இதில் சேர்மதி இல்லை) இந்த இரண்டாவது அண்ணனுக்கு இடையில் இரண்டு அக்காவும், இரண்டு அண்ணனுமாக நாலுபேர் இருந்தார்கள். எனவே கோழி பிடிப்பது போன்ற அலுவல்களுக்கு வேறு ஆள் தேடிப்போக வேண்டிய அவசியம் இந்த வீட்டில் இருக்கவில்லை.
திட்டம் இதுதான். ‘சாவலைத் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும் அவன் முற்றத்திலே அரிசியைத் தூவி, கோழிகளை அழைப்பானாம். மற்றவர்கள் ஒரு பக்கத்தில் சாதுவாக நிற்க வேண்டியது. சேவல் தீன் பொறுக்க வரும். அவர்கள் மெதுவாகச் சுற்றி வளைத்து வந்து. பிறகு அப்படியே வட்டத்தைச் சுருக்கிக் கொண்டு நெருங்கி. வந்து உள்ளே நிற்கும் சாவலை அண்மையில் நிற்கும் ஒருவர் பிடித்து விட வேண்டியது!
திட்டம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் அதிலே தானும் சேர்ந்து கொள்ளாததுதான் குட்டியனுக்கு மனக்குறை.
AlAs J'y
Llli. LlfI. Lill. LiII.....
அண்ணன் அரிசியைத் துTவிக் கொண்டே கத்தத் தொடங்கினான். கோழிகளெல்லாம் ஓடி வந்தன. குடுகுடுவென ஓடிவந்தன. சேலை உடுத்திய பெண்கள் தடுக்கி விழாமல் இரு கைகளாலும் சேலையைச் சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஓடிவருவதுபோல. தங்கள் இறக்கைகளைச் சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தன.
சுதாராஜின் கதைகள் 115

Page 59
AfA A
LJT.... UT..... Is ... Llift....
மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் ஓடி வந்தன. பக்கத்து வீட்டுக் கோழிகளும். தங்கள் சின்னக் கால்களை அவசர அவசரமாக எடுத்து வைத்து ஓடி வந்தன.
.அவை ஓடி வரும் அழகைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
ᏰᎵ
"பா. பா. பா." என்றால் என்ன? 'பா. பா...' என்பது கோழிகளின் பாஷையா? அல்லது நாங்கள் கதைப்பது எல்லாமே கோழிகளுக்கு விளங்குமோ, என்னவோ! 'பா. பா...' என அழைக்கிற நேரத்தில் சாப்பாடும் போடுவதால் அந்தச் சாப்பாட்டை நினைத்துக் கொண்டு ஓடி வருகின்றன போலும், பா.பா. வுக்கும் சாப்பாட்டுக்கு மிடையில் அவை எதையோ புரிந்து வைத்திருக்கின்றன! ஆ! இந்தக் கோழிகளையெல்லாம் எவ்வளவு அழகாகப் பழக்கி எடுத்து நாங்கள் சொன்னபடி ஆட வைக்கலாம். அவைகளுக்குப் புரியகிற விஷயங் களும் இருக்கின்றன. இந்தச் சனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவற்றின் முட்டையை எடுத்து விழுங்குதோடு சரி. கோழியை முட்டைக்கும், இறைச்சிக்கும்தான் பயன்படுத்துகின்றார்கள். அதை ஓர் அழகான பிராணியாக, புத்தியுள்ள சென்மமாக ஒருவருமே கருதுவது இல்லை “சேவல் காலையில் கூவும், கோழி முட்டை இடும் என்றுதான் பாடப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள். இதைவிட வேறு எதையுமே இவர்கள் இந்தக் கோழிகளில் கண்டுபிடிக்கவில்லை.
ᎪᏪ
UT... UT.... UT...."
இப்பொழுதுதான் எங்கிருந்தோ சேவல் வந்து சேர்ந்து தூரத்தில் நின்றவாறு பார்த்தது.
"வர்ராற்றா. ஆள் வர்ராற்றா!" இது குட்டியன்.
"சூய்!.சூய்." கோழிகளை முந்திக் கொண்டு காகங்கள் பறந்து வர, காகங்களைக் கலைக்க கோழிகளும் மிரண்டு போயின. (குட்டியனுக்குச் சிரிப்பாக இருந்தது)
116 சுதாராஜின் கதைகள்

t fy
. . . . . . பா. பா." என அண்ணன் வாய் கிழியக் கத்திக் கொண்டு நின்றான். "ஒராள் காகங்களை வர விடாமல் கலையுங்கோடா' எனச் சினந்து விழுந்தான்.
வெள்ளைச் சேவலும் ஓடி வந்தது. பிறகு ஒரு 'சடின் பிறேக் போட்டது. நின்று கொண்டே ஒரு விதமாகப் பார்த்தது. எல்லோருமே தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கவனித்து விட்டதோ? போனமாதம் பெரிய அண்ணன் லீவில் வந்து நின்றபொழுது, சிவப்பு வரியன் சேவலுக்கு நடந்த கதிதான் தனக்கும் என்று நினைத்து விட்டதோ? இல்லாவிட்டால், எந்த நேரமும் முற்றத்திலை கிடக்கிற சேவலுக்கு இப்பமட்டும் என்ன வந்தது?.
"டேய்!. அதுக்கு விளங்கிட்டுது. அதுதான் வருகுதில்லை" எனக் கத்தினான் குட்டியன்.
அண்ணனுக்குக் கொதி ஏறியது, - "நீ இரடா வாயைப் பொத்திக் கொண்டு. ஆரெண்டாலும் இன்னும் கொஞ்சம் அரிசி எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கோ!" இந்தமுறை குட்டியன் பேசாமலே இருந்தான். ஆரெண்டாலும் பிடிக்கிறவையள் போய் எடுக்கட்டும்!
வெள்ளைச் சேவல் யோசித்துக் கொண்டு நின்றது. பிறகு மெல்ல மெல்ல அண்மித்துக் கொண்டு வந்தது. மற்றக் கோழிக ளெல்லாம் வலுகுசாலாக அரிசி பொறுக்கும் அவசரத்தைக் கான அதற்கு மனம் கேட்கவில்லைப் போலும். ஏதோ நினைத்துக் கொண்டது போல ‘வீர்ர்’ ரென ஒடி வந்தது. வந்த வீச்சில் பக்கத்து வீட்டு இளம் பருவக் குஞ்சு ஒன்றுக்கு ஒரு கொத்து (குட்டு) பொட்டது. பிறகு தானும் ட்டக்கு டக்னெ தீன் பொறுக்கத் தொடங்கியது.
"இன்னும் கொஞ்ச அரிசி கொண்டு வாங்கோ." அண்ணன் உற்சாகமடைந்து விட்டான். அரிசியைத் தூவிக் கொண்டே சொன்னான். "இப்ப எல்லாரும் மெல்ல மெல்ல கிட்ட வாருங்கோ" அக்காமாரும், அண்ணன்மாரும் கைகளை அகட்டி விரித்துக் கொண்டு கிட்டப்போக, குட்டியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"டேய். நானும் வரட்டேடா?"
சுதாராஜின் கதைகள் 117

Page 60
அவனை யாரும் கவனிக்கவில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியெனக் கருதிக் கொண்டு குட்டியனும் களத்தில் இறங்கினான். இன்னும் ஆட்கள் கிட்டப் போகப்போக கோழிகள் மிரட்சியடைந்தன. வெள்ளைச் சேவல் சுளியன். இமைக்கும் நேரத்தில் கண்களை உருட்டி நாலு பக்கமும் பார்த்தது.
இதைக் குட்டியன் கவனித்து விட்டான் "டேய்!. பறக்கப் போறான்றா. பிடியுங்கோ! பிடியுங்கோ!'
சொன்னது போலவே சேவலும் ஜம்மெனப் பறக்க. அண்ணன் பாய்ந்து பிடிக்க. ஓர் இறகு மட்டுமே கையில் அகப்பட்டது. சேவல் நூறு மைல் வேகத்தில் ஓடியது. அண்ணன் மண்ணிலே குப்புற விழுந்தான். என்றாலும் மீசையிலே மண்படவில்லை. கையில்தான் சிறிது காயம்- கல்லுக் கீறிவிட்டது. அதைப் பார்த்து விட்டு குட்டியனுக்குத்தான் உதைக்கலாம் என்று பாய்ந்தான் அண்ணன்.
"இவன் கொஞ்ச நேரம் வாயை வைச்சுக் கொண்டு நிக்க LDTLT6..... சும்மா சும்மா கத்திக்கொண்டு நிண்டால் எப்படிப் பிடிக்கிறது?"
"உனக்குப் பிடிக்கத் தெரியாவிட்டால், ஏன் என்னோடை பாயிறாய்?" ஆள் குட்டியன் என்றாலும் வாய்பெரிசு. அம்மா குடுத்த செல்லம். அண்ணன் இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாமல் கையை ஓங்கிக் கொண்டு வந்தான். ஆனால் குட்டியனோ சேவலைவிட வேகமாகப் பறந்தான்.
"இன்னும் கொஞ்ச அரிசி கொண்டுவாங்கோ" - தன் முயற்சியின் சற்றும் மனம் தளராத விக்கிரமனைப்போல’ மீண்டும் காரியத்தில் இறங்கினான் அண்ணன்.
ff ff
T. ... UT... UT......
இனி இந்த வித்தை பலிக்காது. வெள்ளைச் சேவலை என்ன முட்டாள் கோழி என நினைத்து விட்டீர்களா? அது இனி வராது - குட்டியன் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையில் கோழிகளுக்கும் ஏதோ விளங்கத்தான் செய்கிறது. இவ்வளவு கூத்துக்குப் பிறகும்
118 சுதாராஜின் கதைகள்

மற்றக் கோழிகள் வந்து சாதாரணமாகத் தீன் பொறுக்க, சேவல் மட்டும் வேலியோரமாக நின்று கொண்டிருக்கிறதே, வரமனமில்லாமல்!
அண்ணனுக்கு அலுப்புத் தட்டியது.
"கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்பம்" என்றவாறு திண்ணை யில் அமர்ந்தான். ‘இனி என்னடா செய்யலாம்’ என்பதுபோல மற்றவர்களும் அமர்ந்தார்கள்.
ஆட்களெல்லாம் போனபிறகு சேவல் மீண்டும் மெல்ல மெல்ல
முற்றத்திற்கு வந்து மற்றக் கோழிகளோடு தீன் பொறுக்கத் தொடங்கியது.
இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டு தனது படைப் பலத்தைக் கூட்டினான் அண்ணன். முன்போலவே சுற்றி வளைத்து. ஆனால் மீண்டும் மண் கவ்வ வேண்டியதாயிற்று.
இனி அது வரவே வராது.
"அதைக் கலைச்சு. கல்லாலை எறிஞ்சு விழுத்தித்தான் பிடிக்க
வேணும்" எனத் தனது அடுத்த திட்டத்தை வெளியிட்டான் அண்ணன்.
அக்காமாரும், மற்றைய அண்ணன்மாரும், கற்களையும், தடிகளையும்
கைகளிலே எடுத்துக் கொண்டு வீரமாக எழுந்தனர். மனிதன் மிருகங்களை வேட்டையாடுவதற்கு கற்களையும், கூரிய ஆயுதங்
களையும் பாவித்த ஓர் காலம் இருந்தது என்றும், அது கற்காலம்
என்றும் பெரிய படங்களுடன் பாடப்புத்தகத்தில் பார்த்த ஞாபகம்
வந்தது குட்டியனுக்கு அப்படியானால் இந்தக் காலத்தை எப்படிக்
குறிப்பிடுவது?
"ஓடு ஒடு!."
"கல்லாலை எறி.!"
"விடாதை. பிடி!"
சேவலுக்குக் கலக்கத் தொடங்கி விட்டது! கல்லுகளோடும், பொல்லுகளோடும் துரத்திக் கொண்டிருக்கும் இவ்வளவு பேரையும்
சுத்ாராஜின் கதைகள் 119

Page 61
எப்படிச் சமாளிப்பது? இயன்றவரையும் சேவல் ஓடியது. வேலிக்குக் கீழாக மறு வளவுக்கு ஒட, இவர்கள் வேலி பாய்ந்து ஒட, அது திரும்பி ஓடிவர. இந்தப் பக்கத்திற்கு எறிவிழ. பிறகு மற்றப் பக்கத்திலிருந்து எறி. 'சாய். ஒரு கல்லாவது இலக்காகப் பிடிக்காமல் போய்விட்டதே!
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய அண்ணன், தனக்கு ஒரு கதை நினைவுக்கு வருவதாகச் சொன்னான் அம்மாவுக்கு. "அது என்னடா கதை?" என்பது போல. அண்ணனைப் பாத்தான் குட்டித்தம்பி.
"கலவர நேரத்திலை. உப்பிடித்தானே எங்களை. கலைச்சுக் கலைச்சு அடிச்சவங்கள்.!"
"மெய்யோடா தம்பி. அப்படி ஒரு ஈவிரக்கமில்லாத சனமோடா."
'பத்துப் பதினைஞ்சு காடையங்களாக சேர்ந்து கொண்டு கல்லுகள், பொல்லுகளோடை கலைச்சுத் திரிஞ்சவங்கள்."
இதைக் கேட்டுக் கொண்டிருந்த குட்டியனுக்கு கற்காலத்திற்கும் இக்காலத்திற்கும் கொஞ்சமும் வித்தியாசம் தெரிவது போல் இருந்தது. அப்பொழுது மிருகங்களை மட்டும்தானே வேட்டையாடினார்கள்.
"எங்கேயோ ஒளிச்சுட்டுதடா. காணயில்லை." என்ற கத்தினான் சிறிய அண்ணன்.
"எல்லா இடமும் தேடிப்பாருங்கோ!"
சேவல் எங்கேயோ ஒழித்து விட்டதாம்.
மணித்தியாலக் கணக்காக எப்படியெல்லாம் ஒட்டம் காட்டிக் கொண்டிருந்தது! ஒடித்திரிந்த களைப்பு அக்காவுக்கு "அதை
என்னாலை பிடிக்கேலாது. நீங்கள் என்னவாலும் செய்யுங்கோ" எனப் பின்வாங்கித் திண்ணையில் அமர்ந்தாள்.
"நீ பெட்டை எண்ட குணத்தைக் காட்டிப்போட்டாய்" என்று சீறினான் கோழி பிடிக்கிற அண்ணன்.
120 சுதாராஜின் கதைகள்

"நீங்கள் பெடியன்!. பெரிய கெட்டிக்காரனென்டால் பிடியுங்கோ பாப்பம்" எனச் சவால் விட்டாள் அக்கா. இந்த வாக்குவாதத்துக்குப் பிறகு பெண்கள் பக்கம் ஆதரவைத் தெரிவிக்குமுகPT8 மற்ற அக்காவும் வந்து பெரிய அக்காவோடு அமர்ந்து கொண்டாள்.
அண்ணன் செய்வதறியாது மற்றைய தம்பிமாரை விரட்டினான். "எங்கையாவது தேடிப்பாருங்ககோ. எங்கை போயிருக்கும்.? இங்கைதான் எங்கையாவது நிற்கும்."
"எங்கையாவது ஒடித் துலைஞ்சுட்டுதோ தெரியாது!"
"எங்கையாவது தேடிப்பாருங்கோ. எனக்கு ஒரு கதையும் சொல்ல வேண்டாம்" தன்னை அம்போ என்று இவர்களும் கைவிட்டு விடுவார்களோ என்ற பயம் அண்ணனுக்கு.
இனி மேற்கொண்டும் கதைத்தால் அவன் கையைக் காலை மாறினாலும் மாறிவிடுவானோ என்ற பயம் தொட்டது தம்பிமார்களுக்கு வேலை வெட்டி இல்லாத காரணத்தால் அவன் "கராட்டிக் கிளாசுக்கும் போய் வருபவன். (இடையிடையே வீட்டில் அந்த 'அக்சன்களைப் போட்டும் காட்டியிருக்கிறான்). நரம்பு வலி வந்தவன் மாதிரி அவன் சத்தம் போடுவதற்குள் வெள்ளைச் சேவலைத் தேடிச் செல்வதே மேல் என இவர்கள் அக்கம் பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்றனர்.
güITLIT!
மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது.
கொஞ்சம் நேரம் எவ்வளவு அமர்க்களமாக இருந்தது. சேவலை இவர்க்ள் கலைக்க. நாய்க்குட்டியும் அவர்களோடு செர்ந்து குரைக்க. இப்ப நாயும் ஓய்ந்து போய் முற்றத்தில் வாலைச்சுருட்டிக் கொண்டது.
குட்டியனுக்கு (ஒண்ணுக்கு)ப் போக வேண்டியிருந்தது. இவ்வளவு நேரமாக அடக்கிக் கொண்டு அண்ணன்மாரின் கூத்துக் களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ‘இனி இவங்கள் எங்கை பிடிக்கப் போறாங்கள்? என்ற நினைவோடு கோடிப்பக்கமாகப் போனான்.
சுதாராஜின் கதைகள் 121

Page 62
ஒண்ணுக்கு இருக்கத் தொடங்கியதும் பக்கத்தில் அடுக்கியிருந்த ஒலைக்கிடுகுகளுள் ஏதோ சரசரப்புக் கேட்டது. ஒண்ணுக்கிருப்பதை இடையில் நிறுத்தி விட்டு ஒரு சந்தேகத்தில் இரண்டு கிடுகுகளை விலக்கிப் பார்த்தான்.
"அண்ணோய்!. இஞ்சற்றா இருக்கிறார் மச்சான்!"
குட்டியின் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். அப்படியே அமத்திப் பிடித்து நெஞ்சோடு அனைத்துத் தூக்கினான்.
வெள்ளைச் சேவல் அழுவாரைப் போல் அவனைப் பார்த்தது.
பட்டன் கழட்டிய கழிசானை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறுகையால் சேவலை இறுக்கமாகப் பிடித்தவாறு ஓடி வந்தான் குட்டியன்.
சேவல் ‘இறுதி முயற்சியாகத் திமிறிப் பார்த்து. தப்ப முடியாது என்பதை உணர்ந்து, நாலு வீட்டுக்குக் கேட்குமாப்போலக் கத்தியது.
சேவல் கத்திய சத்தத்தில் அண்ணன்மார் ஓடி வந்தனர்.
"எப்படியடா பிடிச்சனி' என்றாள் அக்கா. அவளுக்குப் புதின மாக இருந்தது. எல்லோருக்கும் நடுவில் ‘ராசா மாதிரி நின்றான் குட்டியன்.
".கிடுகுக்குள்ளை ஏதோ சத்தம் கேட்டது. விலக்கிப் பார்த்தால். மச்சான் பதுங்கிக் கொண்டிருக்கிறார்."
"நான் அப்பவே சொன்னனா தானே. அது ஒரு இடமும் போய் இராது. இஞ்சதான் எங்கையாவது இருக்கும் எண்டு" எனச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயன்றான் கராட்டி அண்ணன்.
"குட்டியன் ஆள் வீரன்தான்!" என்றாள் அம்மா.
"இஞ்சை கொண்டு வா. அது திமிறிச்சுதெண்டால் கையை விட்டிடுவாய்" எனக் கையை நீட்டினான் சின்ன அண்ணன்.
"நீ விடடா!. அது எனக்குத் தெரியும்" - இனிக் குட்டியனைப் பிடிக்கேலாது.
122 சுதாராஜின் கதைகள்

அக்கா கயிறு எடுத்து வந்து சேவலின் கால்களைக் கட்டி ஒரு பெட்டியில் அடைத்து வைத்தாள்.
ஒரு ரூபா கூலியில் கோழி வெட்டுவதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டு வந்தான் அண்ணன். “கொலை செய்வது பாவம். அதிலும் படிக்கிற பிள்ளைகள் கொலை செய்தால் பாடமே வராது!’ என்பாள் அம்மா.
கோழி வெட்டுபவன் கத்தியை இன்னொருமுறை நன்றாகத் தீட்டினான். கூர்மையை சரி பாாத்துக் கொண்டான். கோழியைக் காலிற் பிடித்துத் தூக்கிகொண்டு கோடிப் பக்கமாகப் பேனான்.
குட்டியனுக்கு மனம் கேட்கவில்லை. கோழியைப் பிடித்த நேரமுதலே அவனுக்குக் கொஞ்சம் பெரிய மனித தோரணையும் வந்து விட்டது. எப்படித்தான் அந்தச் சேவலை வெட்டிக் கொலை செய்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அம்மாவுக்கோ, அண்ணன், அக்காமாருக்கோ தெரிந்தால் பார்க்க விடமாட்டார்கள்.
அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறுபக்கமாகக் கோடிக்கு வந்து சேர்ந்தான் குட்டியன். A.
'தம்பி, அங்காலை போ. இதெல்லாம் பாக்கக்கூடாது." என்றான் கோழி வெட்டுபவன். குட்டியன் போக மறுத்தான். "நான் போகமாட்டன்."
"பாத்தால். படிப்பு வராது:- போ தம்பி!"
"அப்ப உனக்கு படிப்பு வர்ரதில்லையா?"
"நான் படிக்கவில்லை!"
"ஏன் கோழி வெட்டுறதுக்காகவா?"
அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. இவனோடு கதைத்து மினைக்கெடவும் முடியாது. நாலு இடத்தில் போய் உழைப்பைப் பார்க்க வேண்டும்.
சுதாராஜின் கதைகள் 123

Page 63
சேவலின் கால்கள் இரண்டையும் சேர்த்து தனது கால்களுக்குள் அழுத்தியவாறு அமர்ந்தான். ஒரு கையால் சேவலின் கழுத்தை உருவி இழுத்து, தலையிலே இறுகப் பிடித்தான். சேவல் இறகுகளை அடித்து எத்தனித்தும் முடியாமலிருந்தது. - நல்ல பிடி.
கத்தியை எடுத்து சேவலின் கழுத்தை அரிந்தான். சேவலின் “கொக்' என்றொரு சத்தம். இரத்தம் சீறியது. வெள்ளை இறகுகளி லெல்லாம் இரத்தம் சீறியது. சேவலை மண்ணிலே போட்டுவிட்டு எழுந்தான். வெட்டப்பட்ட கழுத்துடன் சேவல் நிலத்தில் சில நிமிடங்கள் துடிதுடித்தது.
குட்டியன் சற்றுநேரம் மூச்சு விட மறந்தவன் போல் நின்று பிறகு பெரிதாக மூச்சை இழுத்து வெளிவிட்டான்.
-வெள்ளைச் சேவலின் கதை முடிந்தது. பெரிய ஆட்டமெல்லாம் ஆடித்திரிந்த சேவல். வீட்டுக் கோழிகளுக்கெல்லாம் ராசா. சண்டியன். இரத்தத்தை மண்ணோடு கலந்து செத்துப்போய்க் கிடந்தது.
கோழி வெட்டுபவன் சேவலின் கழுத்திலே ஒரு கயிற்றைக் கட்டினான். பின்னர் கையெட்டும் உயரத்திலுள்ள மரக்கிளையொன்றில் தொங்கவிட்டான்.
சேவல் கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முதல் அண்ணன்மாரை எவ்வளவு ஆட்டம் ஆட்டியது. இனி அவர்கள் வந்து இதை என்னவும் செய்யலாம்.
கோழி வெட்டுபவன் தனது காரியத்தைச் செய்து கொண்டிருந் தான். முன்னே நின்று கொண்டு அதன் இறகுகளைக் கழுத்துப் பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக 'வாழைப்பழத் தோலை உரிப்பதுபோல இழுத்தான்.
இறகுகள் எல்லாம் உரிக்கப்பட்ட பின்னர் சேவல் ‘போலியோ' நோய் வந்த குழந்தைப் பிள்ளைபோல் கைகளையும், கால்களையும் குறட்டிக் கொண்டு கிடந்தது.
அட! எவ்ளவு பூப்போல. பஞ்சுபோல. சிங்கம் போல. இருந்த சேவலா இது?
124 சுதாராஜின் கதைகள்

பாவம் அவனைப் பார்த்து அழுததே ஒலைக்கிடுகுகளை விலக்கியபொழுது. ஒன்றுமே செய்ய முடியாமல் என்னை விட்டுடு! என்பது போல ஈனமாக முனகியதே பேசாமல் விட்டிருக்கலாம். அதைத் தப்ப விட்டு ஒன்றுமே தெரியாதது போல, போன விசயத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கலாம். தனது உயிரைப் பிடித்துக் கொண்டு எப்படியெல்லாம் ஒடித்திரிந்து, இயலாத கட்டத்தில்தானே அப்படிப்போய் பதுங்கி ஒழிந்து கிடந்தது.
போகட்டும்! இனி என்ன செய்வது? எல்லாமே முடிந்து விட்டது. சட்டியிலே இருக்கும் எலும்பையும் சதையையும் எடுத்துப் பொருத்தி இறக்கைகளையும் ஒட்டி அதைப் பழைய சேவலாக.கொக்கரக்கோ என்கிற கம்பீரமான வெள்ளைச் சேவலாகப் பறக்க விட முடியுமா?
குட்டியனுக்கு என்னவோ செய்தது. தொண்டைக்குள் நின்று என்னவோ வருத்தியது. உள்ளே போகாமலும். வெளியே வரமாட்டாமலும். ஒரு தொங்கல். மனவேதனை - அழலாமா?
இது அழுதால் தீரக் கூடிய நோவா? கோழி செத்ததுக்கு யாராவது அழுவார்களா? இந்தச் சேவலுக்காகவா மனது வேதனைப் படுகிறது? இல்லையென்றால் எதற்கு?
அறையினுட் சென்று கட்டிலில் குப்புற விழுந்தான் குட்டியன். அழவில்லை. அழமுடியாது. உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் நோவின் காரணம் புரியும்வரை அழுகை வெளிப்படாது.
கண்கள் அயர்ந்து உறக்கமேற்பட்டது. நீண்ட நேரமாக அப்படிப் படுத்துக் கிடந்தானோ என்னவோ?. நித்திரைக்கும் விழிப்புக்கு மிடையில் சில கனவுகளும் நினைவுகளும் கலந்து வந்து மனதைக் கலக்கின. அவனுக்குப் பயமாக இருப்பது போலவும் இருந்தது. விழிப்பிலும் உறக்கத்திலும் அந்தக் கனவு தொடர்ந்து கொண்டே இருந்தது.
a - எல்லோருமாகச் சேர்ந்து. சின்ன அண்ணன், மற்ற அண்ணன், அக்கா, அம்மா எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு கற்களையும் பொல்லுகளையும் ஏந்திக் கொண்டு பெரிய அண்ணனைத்
சுதாராஜின் கதைகள் 125

Page 64
துரத்துகிறார்கள். பெரிய அண்ணன் குடல் தெறிக்க ஓடுகிறான்.
திடுக்கிட்டு விழித்தால். ‘அப்பாடா! இது கனவு’ என்றொரு நிம்மதி. அந்தக் கணத்திலேயே இன்னொரு நினைவு தோன்றி மனதைக் கலக்குகிறது. கண்கள் அயர்ந்து போனால் அந்தக் கனவின் தொடர்ச்சியின் பயம்!
அம்மா வந்து குட்டியனை எழுப்பினாள்.
"உன்னை எங்கையெல்லாம் தேடுறது?. எழும்பு சாப்பிட வேணுமெல்ல?." படுக்கையை விட்டு எழுந்தவன், அம்மாவைப் புதினமாகப் பார்த்தான். அதிர்ச்சியடைந்தவனைப் போல எதுவுமே கதைக்க முடியாமலிருந்தான்.
A.
6..... ராசா.வா! பிள்ளைதானே சாவலைப் பிடிச்சது" கோழிக் கறியை நினைவுபடுத்திக் குட்டியனை உற்சாகப்படுத்த நினைத்தாள் அம்மா.
அடக்கி வைத்திருந்த வேதனை. அவனது உணர்வு களையும் மீறி அழுகையாக வெடித்தது. மூச்சடக்கி. பெரிதாக அழுதான். விக்கலெடுத்து அழுதான்.
அம்மா புரியாதவளாய். "ஏன் ராசா.ஏன் அழுகிறாய்..? ஏதாவது கனவு கண்டனியோ?" என்றாள். அவன் மேலும் மேலும், விம்மி விம்மி அழதான். அழுது தீர்த்து விட்டவன் போல நிமிர்ந்து அம்மாவைப் பார்த்துச் சொன்னான்:
"அண்ணனை இனிக் கொழும்புக்குப் போக வேண்டாமெண்டு சொல்லுங்கோ!"
(1989)
Γ
126 சுதாராஜின் கதைகள்

தெரியாத பக்கங்கள்
அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை நிறத்தி 'இதுதான் வீடு, இறங்கு!" என மாமன் சொன்னபோதுான் நினைவு திரும்பியவள் போலானாள் பிரேமா.
சைக்களில் அமர்ந்த படியே வீட்டைப் பார்த்தாள். பெரிய வீடு. முன்பின் தெரியாத இடம். மிரட்சியடைந்து முகம் மாறினாள்.
"பயப்பிடாமல் இறங்கம்மா!' சைக்கிளை ஒரு பக்கமாக மதிலிற் சாத்தினான். வா போகலாம்! பயமும் குழப்பமும் போகவிடாது தடுத்தன. பிரேமா சிணுங்கி மறுத்தாள். மாமன் சற்று அதட்டலாகப் பேசினான். "இந்தா. சொல்லிப் போட்டன். உள்ளுக்குள்ளை வந்து அழுது கொண்டு நிக்கக்கூடாது."
நிர்ப்பந்தத்துக்குட்பட்டவைபோல கால்கள் தயங்கித் தயங்கி அவன் பின்னே அடியெடுத்து வைத்தன.
மூன்று நாட்களுக்கு முன் மாமன் இதுபற்றி விட்டில் கேட்டபோது கூட கடைசியில் இப்படி வந்து முடியும் என்று பிரேமா நினைத்திருக்க வில்லை. அப்போது மாமனோடு அம்மா சன்னதம் கொண்டு எழுந்தாள். "அதுகள் இஞ்சை சாப்பிடாமல் கிடந்து செத்தாலும் பரவா யில்லை. இன்னொருத்தர் வீட்டிலை வேலை செய்ய விடமாட்டன்." vn மாமன் விடவில்லை. எத்தனையோ சமாதானங்களைச்
சொன்னான்.
"அக்கா. கொஞ்சமெண்டாலும் யோசிச்சுப் பார். அத்தானும் வருத்தக்காரறன். நாலு குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு. எத்தினை நாளைக்குத்தான் அரிசி இடிச்சும். பாத்திரங்கள் தேச்சும் அதுகளைக் காப்பாத்துவாய்..?" /
சுதாராஜின் கதைகள் 127

Page 65
"நான் சொல்றது நல்ல இடம். அங்கை விட்டால் இவளெண் டாலும் மூன்று வேளையும் சாப்பிடுவாள். அதை விட்டிட்டு உன்னோடை வைச்சு எல்லாத்தையும் பட்டினி போட்டு பலி குடுக்கப் போறியோ?."
"மாசா மாசம் முன்னுாறு நானுாறு ரூபா சம்பளம் போட்டுத் தருவினம். மறுக்காமல் ஒமெண்டு சொல்லக்கா!"
இரண்டு நாட்களாக இப்படிப் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்து விட்டான் மாமன். பிரேமாவுக்கும் புத்தி சொன்னான்.
"நீ போய் வேலை செய்தாத்தானம்மா. தம்பி தங்கச்சி யவையும் சாப்பிடலாம்!
அந்த வார்த்தைதான் பிரேமாவின் மனதைக் கொஞ்சம் மசிய வைத்தது. எனினும் முழுமூச்சுடன் வரவில்லை - தன்னியல்பில்லாமல் ஏதோ ஒரு கட்டளைக்கு உட்பட்டு இயங்குவது போல. பிரமை பிடித்தது போலத்தான் பிரேமாவின் மனநிலை இருந்தது.
"வா மணியம். சொன்னபடி கரெக்டாய் வந்திட்டாய்."
வீட்டுக்காரரின் பேச்சில் மாமன் உச்சி குளிர்ந்தவன் போல அடக்கமாகச் சிரித்தான். பிரேமாவுக்கு எல்லாம் நெஞ்சுக்குள்ளே புகைச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. மலைப்புடன் வீட்டைப் பார்த்தபடி நின்றாள்.
அண்டை அயற் சிறுவர்களுடன் புளுதி அளைந்து ஓடி ஆடிய விளையாட்டுக்கள் இனி இல்லை. ஒலைக் குடிசையின் மண்குந்தில் நினைத்தபோது உருண்டு எழும் சுகம் இனி இல்லை. பசித்தால் அம்மாவிடம் கேட்கலாம். போட்டால் சாப்பிடலாம். இல்லாவிட்டால் அழலாம். அந்தச் சுதந்திரமும் இனி இல்லை. இவர்கள் இட்ட வேலையைச் செய்து கொண்டு இவர்கள் போட்ட சாப்பாட்டைத் தின்று கொண்டு கிடக்க வேண்டியதுதான். தன் வீடு, தான் என்ற உரிமை இனி இல்லை.
வீட்டுக்கார அம்மா பிரேமாவை ஏற இறங்கப் பார்த்தாள். "பெரிய பிள்ளையெண்டு சொன்னீர். இவவுக்கு பன்ரெண்டு
128 சுதாராஜின் கதைகள்

பதின்மூண்டு வயசும் வராதுபோல. எங்கட பிள்ளையளை விட ரெண்டொரு வயசுதான் கூட இருக்கும்" என அபிப்பிராயப்பட்டாள்.
மாமன் பிரேமாவின் தகுதி பற்றிக் கதையளக்கத் தொடங்கினான்.
"அவ ஆள் சின்னனெண்டாலும் எல்லா வேலையும் நல்லாய் செய்வா. வலு சுட்டி!. இதுக்கு முதலும் ரெண்டு வீட்டிலை வேலைக்கு நிண்ட அனுபவமும் இருக்கு."
பிரேமாவுக்கு எரிச்சல் மூக்கு நுனிக்கு வந்தது. கோபத்தைப் பற்களுக்குள் கடித்து அடக்கினாள். "இந்த ஆளுக்கு வாய் திறந்தால் பொய்தான்!"
"பிரேமா என்ர மருமகள்தான். ஒரு குழப்படி கரைச்சலு மில்லாமல் நிப்பா!' என மாமன் வீட்டுக்காரருக்கு உறுதி மொழியும் வழங்கினான். "என்டாலும். நீங்கள் என்ர கொமிசனைத் தந்திட வேணும்!"
தன்னுடன் சேர்ந்து விளையாடிய அயலிலுள்ள வயது கூடியதும் குறைந்ததுமான பிள்ளைகள் சித்திரா, சுந்தரி, மல்லிகா போன்றோரின் நினைவு வந்தது. அவர்களையும் மாமன் வேலைக்கென பல வீடுகளிலும் கொண்டுபோய் சேர்த்து விட்டிருக்கிறான். கஷ்டப்பட்ட சனங்களுக்கு உதவி செய்வதாக அவனுக்கு அங்கு நல்ல பெயரு முண்டு! அந்தப் பொறியில் தானும் அகப்பட்டுப்போன கதிக்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டு நின்றாள் பிரேமா.
வீதியில் ஒடும் செஞ்சிலுவைச் சங்க முதலுதவி வாகன மொன்றின் அவலமான சைரன் அலறல் கேட்டு,
"எங்கையோ குண்டு போட்டிட்டாங்கள் போல. ஆரார் செத்தினமோ!" என வீட்டுக்காரர் பெருமூச்செறிந்தார்
பிரேமாவுக்கு அப்பாவின் நினைவு வந்தது. அப்பாவுக்கும் குண்டுதான் பட்டது. ஷெல் வெடித்துப் பறந்த துண்டு வயிற்றை வெட்டிக் கிழித்ததாம். ஆஸ்பத்திரியிற் கொண்டு போய்ப் போட்டார்கள். ஒரு மாதம் வரை கிடந்தார். தையல் போட்டு சுகப்படுத்தி அனுப்பி
சுதாராஜின் கதைகள் 129

Page 66
வைத்தார்கள். ஆனால் தொட்ட (பட்ட) சனியன் விடவில்லை. அடிக்கடி படுக்கையில் விழுந்தார். அவர் சுகதேகியாக இருந்து உழைத்துப் போட்டவரை பிரேமாவும் எல்லா வீட்டுப் பிள்ளைகளையும் போல உண்டு உடுத்து இருந்தாள்.
அம்மா பாவம் - பிள்ளைகளுக்கு சாப்பாடு போடவேண்டும். அப்பாவை படுக்கையிலிருந்து எழுப்ப வேண்டும். மாடாக உழைக் கிறாள். ஆனால் அப்பாவாற் தான் எழ முடியவில்லை. அவரை ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமென்று கொண்டு திரியவும் முடியவில்லை. வாகன வசதியில்லை. ஊர்ப்பரியாரி ஏதோ கஷாயங்களெல்லாம் செய்து கொடுக்கிறார். அதற்கு ஏதாவது பலன் தெரிவதாகவும் இல்லை. நல்ல மருந்து வேண்டுமாம். இங்கே கிடையாதாம். கொழும்புக்குத் தான் கொண்டு போக வேண்டுமாம். பரியாரி சொல்கிறார். கொழும்பு எந்த உலகத்தில் இருக்கிறது என யாருக்குத் தெரியும் என அம்மா புலம்புகிறாள். ‘அப்பா! எங்களை எல்லாம் இந்தக் கதிக்கு ஆளாக்கி பேசாமற் படுத்திருக்க உங்களால் எப்படி முடிகிறது? நீங்கள் எழுந்து வரவேண்டும். அப்பா! உங்கள் செல்ல மகள் தன் வயிற்றுப்பாட்டுக் காகத்தானே உழைக்கப் புறப்பட்டிருக்கிறாள். தன் சின்னஞ்சிறு கால்களுடன். அது உங்களுக்குத் தெரியுமா?
அழுகை உடைந்து வந்தது. பிரேமா வாய்விட்டு அழுதாள். "என்ன இது மணியம்?. விருப்பமில்லாத பிள்ளையை வற்புறுத்திக் கொண்டுவந்த மாதிரி இருக்கு."
"என்னம்மா. அழக்கூடாதென்றெல்லே சொன்னனான்'-மாமன் அதட்டினான்.
பிரேமா விம்மல்களுக்கிடையே "அப்பா. அப்பா!" என்று மட்டும் சொன்னாள். அதைக் கேட்டு மாமன் வீட்டுக்காரருக்கு மொழி பெயர்த்தான்.
"தகப்பன் கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறார். பிள்ளை அதை நினைச்சுத்தான் அழுறா!"
பிரேமா முயன்று குரலை வெளிப்படுத்தினாள் "அப்பாவைப் பார்த்திட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு வாறன்!"
130 சுதாராஜின் கதைகள்

வீட்டுக்கார ஐயா யோசிப்பது போலிருந்தது. பிறகு மாமனிடம் சொன்னார்.
"உன்ரை கொமிசனைத் தாறன்!. நீ அவளைக் கூட்டிக் கொண்டு போ. மனம் ஆறின பிறகு கொண்டு வந்து விடு!"
மாமன் கடத்தினான்.
"இப்ப வேறை அலுவலாய்ப் போறனுங்கோ. பின்னேரம் திரும்ப வந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போறன்!"
தனது கொமிசன் ஐநூறு ரூபாவைப் பெற்றுக்கொண்டு மாமன் புறப்பட்டான். பிரேமா குசினிக்குள் கூட்டிப் போகப்பட்டாள்.
வீட்டுக்கார அம்மா சமையலில் ஈடுபட்டாள். பிரேமா ஒரு பக்கமாக அடக்க ஒடுக்கமாக நின்றாள். வீட்டிலென்றால் அம்மாவுடன் சண்டை பிடிக்கலாம். அது சரியில்லை இது சரியில்லை என அடம் பிடிக்கலாம். இங்கே அவர்கள் சொன்ன சொற் கேட்கவேண்டும்.
"இந்தா!. இந்த வெங்காயத்தைக் கொஞ்சம் உரிச்சுத் தாரும் பிள்ளை!"
-அம்மா சமைக்கும் போது வெண்காயம் உரிப்பது. காய்கறி வெட்டுவது, தேங்காய் துருவுவது போன்ற வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும் போலிருக்கும். அது ஒரு விளையாட்டுப்போல. செய்ய வேண்டும் போல ஆசையாக இருக்கும். அம்மா அதற்கு விடமாட்டாள்.
"ஆய்க்கினைப் படுத்தாமல் போ பிள்ளை! நான் கைச்சசுறுக் காய்ச் சமைச்சுப்போட்டு மா இடிக்கப்போகணும்!"
அம்மா ஓரிடத்தில் இருக்க மாட்டாள். ஒரே ஒட்டம்தான். காலையில் ஒரு விட்டுக்கு வேலைக்குப் போவாள். பிறகு வந்து சமையல், மாலையில் இன்னொரு வீட்டுக்கு ஓடுவாள். அவள் ஒரு மெஷின்.
அம்மா! எனக்கு நீ அதையெல்லாம் பழக்கியிருக்கலாம். என்னை நீ இப்படி இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாயி ருந்தால் ஏன் அவற்றைக் கற்றுத் தரவில்லை? நான் இப்போது
_T~ டசுதாராஜின் கதைகள் 131

Page 67
என்ன செய்வேன்? ஏதாவது தவறு விட்டு இவர்களிடம் திட்டு வாங்குவதா?
பிரேமாவின் கண்களில் நீர் முட்டியது. அசுகையின்றினக் கண்களைத் துடைத்தாள். கட்டுப்படவில்லை. சட்டென குனிந்து சட்டையிற் கண்ணிரை ஒற்றி எடுத்தாள்.
"என்ன பிள்ளை வெங்காயம் உரிச்சுப் பழக்கிமில்லையா?. கண் எரியுது போல?” வீட்டுக்கார அம்மாவின் அதட்டல்.
பிரேமாவுக்கு வீட்டுக்குப் போகவேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும். வெண்காயத்தைக் கையிலெடுத்தால் கை நடுங்குகிறது. அது பயத்தினாலா பரிச்சயம் இல்லாததனாலா என்று புரியவில்லை. வேலையில் இப்படி இப்படி யெல்லாம் பிரச்சினை வருகிறது. எப்படிச் சமாளிப்பது என்ற அம்மா விடம் கேட்க வேண்டும். அம்மாவுடன் கூடச் சேர்ந்து வேலைக்குப் போய் வந்தால் நல்லது. சில நாட்கள் போனாலே பழகிவிடலாம். எப்படியாவது வீட்டுக்குப் போகத்தான் வேண்டும்.
"சரி. சரி. அதை வைச்சிட்டு எழும்பிக் கண்ணக் கழுவும்.!"
வீட்டுக்கார அம்மா ஒரு பக்கட் நிறைய உடுதுணிகளைக் கொடுத்துக் கழுவிவரச் சொன்னாள்.
அந்தப் பக்கட்டைக் காவிக் கொண்டு கிணற்றடிக்குப் போனாள் 5 (3JuDT.
இதை வைத்து விட்டு தலையிற் கைவைத்துக் கொண்டு அமரலாம் போலிருந்தது. அவளது உடுதுணிகளையெல்லாம் அப்பா தேய்ச்சுக் கழுவுவது நேற்றுப்போல கண்களிற் தெரிகிறது. அவர் பேசிய செல்லக் கதைகள் இப்போதும் காதுகளில் ஒலிக்கின்றன. ‘என்ர குஞ்சுகளுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டன் - அப்பா! இதோ உங்கள் குஞ்சு சிறகு முளைக்க முதலே இரை தேடிப் பறக்கிறது. சம்மதம்தானே?
துணியை எடுத்த போது கைகள் நடுங்கின. சோப் எந்தப் பக்கமாகப் பிடித்து எப்படித் தேய்ப்பது என்றுகூடப் புரியவில்லை.
132 சுதாராஜின் கதைகள்

கைக்குள் அடங்காது சோப் உயிர் மீனைப்போல நழுவி விழுந்தது. ஆண்டவனே வேலைக்காகச் சிறுமிகளைப் படைக்கும்போது அவர்களின் கைகளையாவது நீ பெரிதாகப் படைத்திருக்கலாம்.
அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் இவற்றையெல்லாம் எப்படிச் செய்து முடிக்கிறாள் எனப் பிரமிப்புத் தோன்றியது. அந்தக் கணமே பிரேமாவின் கைகள் ஓர் இயந்திரத்தைப்போலத் தொழிற்படத் தொடங்கின. கண்கள் பக்கட்டினுள் நீரை உகுத்துக் கொண்டிருந்தன.
வீட்டுக்கார அம்மா வந்து பார்த்தாள்.
"என்ன பிரேமா. அழுது கொண்டிருக்கிறீரோ. வேலை செய்யிறீரோ?. அதை வைச்சிட்டு எழும்பும். நான் செய்யிறன்!"
அவள் ஏசுகிறாளா அல்லது இரங்குகிறாளா என்று பிரேமாவுக் குப் புரியாமலிருந்தது. குற்ற மனப்பான்மை உறுத்த பிரேமா சுருங்கிப் போய் நின்றாள்.
"முகத்தைக் கழுவிப் போட்டு வாரும். சாப்பிட"
வீட்டு அம்மா ஒரு கோப்பையிற் சோற்றைப் போட்டுக் கொடுத் தாள். பிரேமா ஒரு பக்கமாக அமர்ந்து சோற்றைக் கையிலெடுத்தாள்.
.தம்பி தங்கைகள் இன்றைக்குச் சாப்பிட்டிருப்பார்களா? அம்மா சமைத்திருப்பாளா? சில வேளைகளில் அம்மா சமைப்பதில்லை. அரிசி கிடைக்காமற் போகும். மரவள்ளிக் கிழங்கு அல்லது பனங்கிழங்கு அவித்துத் தின்னத் தருவாள். ஆனால் சோறு. அதற்கு உவப்பான கறிகளுடன் சாப்பிடும்போது எவ்வளவு சோக்காய் இருக்கும்! இன்றைக் குச் சோறுதான் வேண்டுமென்று தம்பி அடம்பிடித்துக் கொண்டு கிடப்பானோ என்னவோ! பிரேமாவுக்குச்சோறு இறங்கவில்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டது போல நோவெடுத்தது.
"இதென்ன பிள்ளை. அப்படியே வைச்சுக் கொண்டிருக்கிறீர். சாப்பிடும்..!"
சாப்பிட வேண்டியிருந்தது.
வீட்டுக்கார அம்மா நனையவைத்த அரிசியைக் கொடுத்தாள். "இதை இடிச்சுக் கொண்டு வாரும்!"
சுதாராஜின் கதைகள் 133

Page 68
பிரேமா சீவியத்தில் உலக்கை பிடித்து அறிவாளா? இனி இதெல்லாம் பழகத்தான் வேண்டும். இனிச் சிறுபிள்ளையல்ல. தம்பி தங்கைகளை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு இடியாக இடித்தாள். அவர்களும் என்னைப் போல் இன்னொரு வீட்டுக்குப் போய் இடிபடக்கூடாது.
வெளியே பிள்ளைகள் விளையாடினார்கள். ஒருவரை ஒருவர் அடித்து கூக்குரலிட்டு ஓடி. ஆ..! எவ்வளவு முஸ்பாத்தி! தம்பியோடு விளையாடும்போது சிறுசிறு தகராறுக்கெல்லாம் அடிபட்டிருக்கிறாள். அம்மாவிடம் கோள் சொல்லி அடி வேண்டிக் கொடுத்திருக்கிறான் தம்பி! நான் இனி இந்த வேலைகளையெல்லாம் உங்களுக்காகச் செய்யப் போகிறேன். நீங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும். சந்தோஷமாய் இருக்க வேண்டும். அம்மா எப்போதும் சொல்வாள் என்னைப் பாாத்தால் அப்பாவைப் போல என்று. அந்த முகம் உன்னிடம் இருக்கிறது. நீ எங்களுக்கு அப்பாவைப்போல இருப்பாயா?
பதிலாக கண்ணிர் பொங்கி வந்தது. இடிப்பதை நிறுத்தி ஒரு கையால் முகத்தைப் பொத்தினாள் பிரேமா.
"என்ன பிரேமா..? எந்த நேரமும் அழுதுகொண்டு?. விட்டிட்டுப்போ..! நான் செய்யிறன்!"
பிரேமா அழுதாள். தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று அழுது தீர்க்க முயன்றாள். முடியாமல் அழுகை நீண்டு கொண்டிருந்தது. வீட்டுப் பிள்ளைகள் வந்து பார்த்தார்கள்.
"ஏன் அழுறிங்க?" பதில் பேசாத பிரேமான்வக் கண்டு கலவரத்துடன் அம்மாவிடம் ஓடினார்கள். "அந்த அக்கா. அழுறா!' "அது தலைவிதி. ஊரிலையுள்ள தொல்லைகளை எல்லாம் என்ர தலையில கொண்டுவந்து சுமத்திறதுதானே அப்பாவுக்கு வேலை!" என அம்மா சொல்வது கேட்டது.
ஐயா வந்தார். "என்னம்மா . ஏன் நெடுகலும் அழுகிறாய்?" பதிலாக பிரேமாவின் நெஞ்சு விம்மி விம்மி வெடித்தது. அப்பா!
இயலாமல் கிடக்கும் அப்பாவுக்கு வேண்டிய கருமங்களில் எதையாவது செய்து கொடுக்கும்படி எப்போதாவது அம்மா கேட்ப
134 சுதாராஜின் கதைகள்

துண்டு. பிரேமா மறுத்து ஓடி விடுவாள். விளையாட்டுப் புத்தி. இப்போது. அப்பாவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவருக்கு உணவூட்டிவிட வேண்டும். வெந்நீர் வைத்து குளிப்பாட்ட வேண்டும். இரண்டு நாட்களுக்கேனும் கூட இருந்து கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டும். எப்படியும் வீட்டுக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.
"அழாமல் சொல்லம்மா . அப்பாவுக்கு என்ன?"
"இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கிறதே. பெரிய காரியமாம். பரியாரியார் சொன்னவர்!"
"சரி. அழாதை. உன்ர மாமன் மணியம் வாறனெண்டவன் தானே. கூட்டிக் கொண்டுபோக?"
"அவர் வரமாட்டார். நீங்கள் குடுத்த காசுக்குக் குடிச்சுப் போட்டுக் கிடப்பார்!"
அம்மா சத்தம் போட்டாள். "பாத்தீங்களே. அவளே சொல்லு றாள் அவன் வரமாட்டானென்று!. இதுகள் திட்டம் போட்டே கிளம்பியி ருக்குதுகள். முந்தி ரெண்டு வீட்டிலை நிண்டவள் எண்டு சொன்னவன் தானே. இப்படித்தான் ஒவ்வொரு இடமாய் விட்டு விட்டு நாடகம் ஆடி அவன் காசை வேண்டிக் கொண்டு போறான். நீங்கள் ஏமாந்து போய்க் கிடவுங்கோ."
ஐயா அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்பால் போனார். அம்மா தொடர்ந்து சொல்வது கேட்டது.
"அவளைப் பார்த்தால் வேலை செய்யிறவள் மாதிரித் தெரிய வில்லை. எனக்கு உதவியும் வேண்டாம். உயத்திரவமும் வேண்டாம். கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ!'
சற்று நேரத்தில் ஐயா வந்து சொன்னார். "வெளிக்கிடம்மா!. நான் கொண்டு போய் விடுறன்."
அப்போது அவர் வெகு ஆதரவாகவும் மென்மையாகவும் பேசியது பிரேமாவுக்கு கவலையளித்தது.
சுதாராஜின் கதைகள் 135

Page 69
சைக்கிள் கரியரில் ஏறி அமர்ந்தபோது வீட்டு அம்மா வந்து இருபத்தைந்து ரூபா காசை பிரேமாவின் கையில் கொடுத்தாள். ஐயா கேள்விக்குறியுடன் பார்க்க.
'அவளைக் கொண்டு கொஞ்ச வேலை செய்விச்சனான். திரும்ப வருவாளோ. மாட்டாளோ தெரியாது. இதைக் கொண்டு போகட்டும்."
"சில்லுக்கை காலைக் குடுத்திடாமல் கவனமாய் இரு பிள்ளை!" என அவதானம் சொன்னவாறு ஐயா சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். மாமனைப் போல கனதுாரம் சைக்கிள் ஓடிப் பழக்க மில்லைப்போலிருக்கிறது. அவருக்கு இழைக்கிறது.
பொழுது பட்டுக் கொண்டிருக்கிறது. பாதை தெரியவில்லை. மறைத்துக் கொண்டிருக்கும் அவரது முதுகுக்கு அப்பால் எட்டி எட்டிப் பார்த்து கிராமம் வந்ததும் வீட்டுக்குப் போகும் வழியைக் காட்டினாள் பிரேமா. தார் ரோட்டிலிருந்து மண் வீதியில் சைக்கிள் இறங்கி ஓடியது. ஒழுங்கையின் திருப்பத்தில் கண்ட சொர்ணம் மாமி 'எடி பிரேமா!' என ஆச்சரியப்பட்டாள். பிரேமா ஒரு புன்னகையை உதிர்த்த படியே போனாள். மாமி பிறகால் வந்து கொண்டிருந்தாள்.
சொந்த மண்ணும் பழகிய முகங்களும் மென்மையான குதூகலத்தை பிரேமாவின் மனதில் ஏற்படுத்தியது.
பூவரசங்கதியால்களில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட பனையோலை வேலி நீண்டு கொண்டிருந்தது. வேலி உள்வளைந்த வாசல்.
'இதுதான் வீடு!" என, சைக்கிளை நிறுத்தச் சொல்லி இறங்கிய போதுதான் பிரேமாவின் கண்களுக்குத் தென்பட்டது- வாசலில் இரண்டு வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. காய்க்குலையுடன். சின்னம்மா, பெரியம்மா, மாமி, மச்சாள் என உறவினரும் அயலவரும் வீட்டில் கூடியிருந்தனர். அப்பா எல்லோரையும் விட்டு தன்னையும் விட்டு போய்விட்டார் என்பது மட்டும் பிரேமாவுக்குத் தெரிந்தது.
(மல்லிகை 1994)
O 136 சுதாராஜின் கதைகள்

நேயம்
அரைத் தூக்கத்திலிருந்து விழித்து கதிரையிற் சாய்ந்திருந்த தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்தான். அவர்கள் இப்போது சற்று நெருக்கமாக அமர்ந்தார்கள். அந்த இளைஞர்கள் இருவரும் பேசத் தொடங்கியிருந்தார்கள். பேசுவது கேட்கக்கூடியதும் ஆனால் பேசுவது இன்னதென்று புரியாததுமான தூரத்திற்தான் அவன் அமர்ந்தி ருந்தான். எனினும் அவர்களது பேச்சில் அவனுக்கு எவ்வித ஆர்வமுமில்லை.
கராச்சி விமான நிலையம் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து வந்த விமானம் கராச்சியில் தரை இறங்கிய போது இருள் விடியாத அதிகாலைப் பொழுதாயிருந்தது. விமான நிலைய அலுவலர்கள்கூட தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். இந்த விமானம் இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்து எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது என்பது போன்ற கோபத்தைப் பயணிகளிடம் காட்டினர். பயணிகள் ஏதாவது விபரம் கேட்டால் சினப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று மணியத்தியாலங் கள் தாமதமாகத்தான் கொழும்பிலிருந்து விமானம் கிளம்பியது. அதனால் கராச்சியிலிருந்து கிரீசுக்கு பயணிக்க வேண்டிய அடுத்த விமானத்தைத் தவறவிட்டு விடுவோமோ என்ற பதட்டத்துடன்தான் வந்தான். கராச்சியில் இறங்கியதும் அவசரமாக வந்து அதுபற்றி விசாரித்தான். அலுவலர் (வேண்டா) வெறுப்புடன் பார்த்து, கொஞ்சம் பொறும் என்றார். அவன் பொறுமையைக் கடைப்பிடித்து நின்றான். விமானப் பயண விபரங்களைக் காட்டும் இலத்திரன் திரையை கண்கள் தேடின. திரையும் கண்களை மூடிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அது கூட உறங்கி விட்டதோ?
கிரீஸ் விமானத்தில் பயணிக்க வேண்டிய ஏனையோரையும் அவனுடன் நிறுத்தினார் அலுவலர். வந்தவர்கள் இன்னும் மூன்று பேர். ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தபடி நின்றானர். அடுத்த விமானத்தைப் பற்றிய கவலைதான் அவர்களுக்கும். கோட், டை
சுதாராஜின் கதைகள் 137

Page 70
சகிதம் இரு இளைஞர்கள் தோற்றமளித்தனர். அரச மட்டத்தில் ஏதாவது மாநாட்டுக்காக ஐரோப்பிய நாடுகளுக்குப் போகிறவர்களாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டான். மற்றவள் ஒரு பெண், சற்று விலகியே நின்றாள்.
இப்படியே எவ்வளவு நேரம் நிற்க வேண்டி வருமோ என்ற கவலை அவனுக்குள் முளை விட்டது. ஒரு மணித்தியாலமளவிற் காத்திருந்த பின் அலுவலர் ஒருவன் வந்தான். "என்னோடு வாருங்கள்" எனக் கூறியவாறு முன்னே நடந்தான். அப்படிக் கூட்டி வந்துதான் இங்கே அமர்த்தினான். நீங்கள் கிரிசுக்கு பயணிக்க வேண்டிய விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கே போய் விட்டது. அடுத்த பயண ஒழுங்கு செய்யும் வரை காத்திருங்கள்' என்ற துப்பையும் துலக்கிவிட்டுச் சென்றான்.
நீண்ட நேரம் கதிரையிற் சாய்ந்திருந்ததில் முதுகு உளைந்தது. நிமிர்ந்து எழுந்தான். எதேச்சையாக கண்கள் அவர்கள் பக்கம் திரும்பியது. புதிதாக அறிமுகமான நண்பர்களைப் போல அவர்கள் மிக அன்னியோன்னியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் தங்களைப் பார்ப்பதைக் கண்டதும், அவனோடு அறிமுகமாவதற்கு அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பது போலப்பட்டது. ஆனால் யாருடனும் நட்புக் கொள்ளும் மனோநிலையில் அவன் இல்லை. அவனது நினைவு களும் இங்கு இல்லை.
யாழ்ப்பாணத்தில் விட்டு வந்த மனைவியையும் பிள்ளை களையும் எண்ணி ஒரு வித சோக நிலைக்குட்பட்டிருந்தது மனம். இந்த நடு இரவில் அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்களா அல்லது தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் குண்டுச் சத்தங்களில் உறக்கம் கலைந்து கலங்கிக் கொண்டிருப்பார்களா எனக் கவலையாயிருந்தது. இன்று தான் பயணித்த செய்திகூட மனைவியைச் சென்றடைந்திருக் குமோ தெரியாது என்ற கவலையில் மனம் தவித்தான். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தான். முன்னர் வேலை செய்த வெளிநாட்டு நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு முயற்சிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் வந்திருந்தான். யுத்த நிலைமைகளால் ஏற்பட்ட கஷ்ட நிலைமை அவனை அங்கிருந்து உந்தித் தள்ளியது.
138 சுதாராஜின் கதைகள்

வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தபோது மனைவியின் ஆற்றாமை வெளிப்பட்டது. "போறத்துக்கு முதல் வந்திட்டுப்போங்கோ".
"வேலையை ஒழுங்கு செய்திட்டு திரும்பி வந்திட்டுதான் போவன். பிள்ளையளைக் கவனமாய்ப் பாத்துக் கொள்ளுங்கோ." மனைவியைத் தேற்றுவதற்காகத்தான் அப்படிக் கூறினான். திரும்ப வந்துபோகும் விருப்பம் அவனுக்கும் இருந்தது.
கொழும்புக்கு வந்து ஒரு கிழமைக்குள்ளேயே வேலைக்குரிய சகல ஒழுங்குகளும் செய்தாகிவிட்ட நிலையில் பயணப்படும் நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். அந்த இடைவெளியில் ஒருமுறை வீட்டுக்குப் போய்வரலாம் என்ற ஆசைதான் காரணம். ஆனால் ஓர் அற்புதம் நடந்தாலொழிய யாழ்ப்பாணத்துக்குப் போய்வருவது சரிப்பட்டு வராது போலிருந்தது. இனியும் காலம்தாமதிக்க முடியாது எனக் கம்பன் நெருக்குதல் கொடுக்க பயணமாகிவிட்டான்.
கடிதத்தில் செய்தியை எழுதி மனைவிக்கு போஸ்ட் பண்ணியிருந்தான். இன்னும் அக்கடிதம் கிடைக்காதிருந்தால், வருவார் அவர் வருவார் எனும் எதிர்பார்ப்புடனேயே அவளுக்கு ஒவ்வொரு பொழுதும் கழியும்.
ஆனால் அவன், இப்போது அவளுக்குப் பக்கத்தில் வரும் தூரத்தில் இல்லை. கடல் கடந்து வந்தாயிற்று. கொழும்பில் நின்ற நாட்களில் நடந்து திரியும்போதெல்லாம் மனைவியின் நினைவுகளை மனம் அசை போட்டுக் கொடிண்டிருக்கும். நிலத்தூடு உள்ள தொடர்பு தன்னைத் தன் மனைவியுடன் இணைத்து வைத்திருக்கிறது எனும் பிரமை ஏற்பட்டவன் போல், சில சமயங்களில் செருப்புக்களைக் கழற்றிவிட்டு நிலத்தில் கால் பதித்து நிற்பான். இப்போது பிரிவு நேர்ந்து விட்டது. கடிதம் அவளது கையிற் கிடைத்ததும் துடித்துப் போவாள். பிள்ளைளுக்கு முன்னால் அவளால் குமுறிக் குமுறி அழ முடியாது. அவனுடனான நீண்ட பிரிவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள அவளுக்கு பல நாட்களாகும் அல்லது அவன் திரும்ப வரும்வரை அந்தப் பிரிவு அவளுக்கு ஆற்றாததாகவே இருக்கும். இராணுவ நகர்வு, குண்டுவீச்சு என யுத்தம் உக்கிரமடையும் போதெல்லாம் அவள் தனியாகவே பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு ஓடவேண்டி வரும். நிமிடத்துக்க நாற்பது
சுதாராஜின் கதைகள் 139

Page 71
ஐம்பது குண்டுகளை ஏவும் கொல் கருவிகளெல்லாம் வந்து விட்டதாம் - ஏவப்படும் அந்தக் கணத்திலேயே அந்த சுற்ற வட்டாரத்திலுள்ள வீடு வாசல்களையெல்லாம் துவம்சம் செய்கின்றனவாம். அதற்குள்ளே தப்பி ஓட முடியாது கொல்லப்படும் உயிர்கள் எத்தனை?
அதற்குமேல் அவனால் சிந்திக்க முடியவில்லை. கைகளால் கண்களைப் பொத்தி அழுகையை மறைத்தான். வெளிச்சம் உறக்கத் தைத் தடை செய்வது போலவும் அதனால் கண்களை மறைத்துக் கொண்டிருப்பது போலவும் மற்றவர்கள் கருதும்படி பாசாங்கு செய்தான். அந்த நேரத்தில் பிள்ளைகளின் நினைவும் வந்தது. புறப்பட்டு வந்தபோது, கண்கள் கலங்கி பேச்சற்று. பயத்துடனும் ஏக்கத்துடனும் நின்ற பிள்ளைகளின் முகங்கள் கண்திரையில் மீண்டு வந்தன. அழுகை விம்மலாக வெடித்துவிடும் அபாயத்தை உணர்ந்து சட்டென எழுந்து பக்கத்திலிருந்தவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமலே ரொய்லெட் பக்கம் போனான்.
மனைவியும் இப்போது அழுது கொண்டிருக்கலாம். பிள்ளைகள் உறங்கிய பின் யாருமற்ற தனிமைதான் அவளுக்கு அழுவதற்கு உகந்த நேரமாயிருக்கும். பகல் முழுதும் அடக்கி வைத்திருந்த அழுகை இப்போது உடைந்து வந்து தலையணையை நனைக்கும்.
தண்ணிராற் கண்ணிரைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்தான். அவன் வருவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் ஏதாவது தங்களுடன் பேசுவானா என அவர்கள் எதிர்பார்ப்பது போலிருந்தது. ஒரு முகஸ்த் துதிக்காகவேனும் அவர்களுக்குப் புன்னகைக்காது இருக்கையில் அமர்ந்தான்.
சற்றுநேரத்தில் அந்தப் பெண் எழுந்து அவனுக்கு அண்மையில் வந்தாள். இளவயதுச் செழிப்பு அவள் முகத்திற் தெரிந்தது. ரைற் ஸ்கேர்ட், கை நீளமற்ற சட்டை. இந்த அதிகாலைக் குளிரைக் கூட மிக அநாயசமாகத் தாங்கிக் கொண்டிருந்தாள்.
"ஒயாத் லங்காவெத." (நீங்களும் இலங்கையா?)
இதென்ன கேள்வி என்று அவனுக்குத் தோன்றியது. இலங்கையி லிருந்துதான் வருகிறோம். முகங்களில் வேறு அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
140 சுதாராஜின் கதைகள்

ஒரு சம்பிரதாயத்துக்கு அறிமுகமாகும் கேள்வியாயிருக்கலாம்.
"ஒவ்.(ஒம்)"
"யன்னே. கொஹேத? (எங்கே போறிங்கள்?)"
கிரீஸ் நாட்டுக்குப் போவதாகப் பதிலளித்தான். மேலும் அவள் அவனை விசாரித்தாள். ஒரு கப்பற் கம்பனியில் பணிபுரிவதாகக் கூறினான். அவன் கேட்காமலே அவள் தன்னை அறிமுகம் செய்தாள். ‘சுவர்ணா” எனத் தன் பெயரைக் குறிப்பிட்டாள். கிரிஸில் "ஹெளவ்ஸ் மெயிட்டாக வேலை பார்ப்பதாகக் கூறினாள். மற்ற இரு இளைஞர் களும் எழுந்து அண்மையாக வந்தனர். "இவன் சுசந்த. அவன். ஜானக." என அவர்களை அறிமுகம் செய்தாள் சுவர்ணா. "இவர்களும் கிரீசுக்குத்தான் போகிறார்கள்" எனக் கூறினாள். ஏதாவது கேட்க வேண்டுமென்பதற்காக, 'அரச அலுவல்களாகப் போகிறீர்களா?” எனக் கேட்டான்.
"ஒவ்.ஒவ்" அரைகுறையாகத் தலையசைத்தார்கள்.
பேச்சுக்கள் வளர்ந்தன. சுவர்ணா கேட்டாள் - "இலங்கையில் நீங்கள் எந்த இடம்?"
"யாப்பனய.(யாழ்ப்பாணம்)"
அதைக் கேட்டதும் அவர்களுக்குள் ஒரு பின்வாங்கல் ஏற்பட்டது போல் உணர்ந்தான். தொடர்ந்து பேசுவதற்கு தயங்குவது தெரிந்தது. மீண்டும் பேசினார்கள்.
“உங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்திலா? ‘அங்கே சீவிப்பது பயமில்லையா? யுத்த நிலைமைகள் எப்படி?’ போன்ற கேள்விகளைக் கேட்டார்கள். இராணுவ நகர்வுகள் குண்டு வீச்சுக்களின் போது பட்ட அவஸ்தைகளை விபரித்தான்.
"அப்பே. மஹத்தயாத்.எஹேத் தமயி.வட கறன்னெ. (எனது கணவரும் அங்குதான் வேலை செய்கிறார்)" குறுக்கிட்டுக் கூறினாள் சுவர்ணா.
அவன் பார்வை கேள்விக் குறியானது.
சுதாராஜின் கதைகள் 141

Page 72
'ஹமுதாவென். (இராணுவத்தில்)"
அவள் அதைச் சற்றும் தாமதிக்காமல் தெரிவிக்க விரும்பியது போலிருந்தது. அவன் சிலவேளை இராணுவ நடவடிக்கைகளை இன்னும் தாக்கி விமர்சிக்கக்கூடும். அப்படி ஒரு தர்மசங்கட நிலைக்கு முகம் கொடுக்க அவள் விரும்பவில்லையோ அல்லது தனது கணவனும் யாழ்ப்பாணத்தில் பணிபுரிவதாகத் தெரிவிப்பதன் மூலம் எங்களுக்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது என நட்புணர்வைக் காட்ட விரும்புகிறாளோ?
"யுத்த முனையில் இருக்கிறார். இனி நாங்கள் மீண்டும் சந்திப்போமோ என்னவோ?" - ஒரு பெருமூச்சுடன் கூறினாள். அவனுக்கு அது வெறும் மாயமோ என்று தோன்றியது. கணவனைப் பிரிந்து வரும் எந்தச் சோகமுமின்றி கலகலத்துப் பேசினாளே? யாழ்ப்பாண நிலைமைகளை விடுத்து விடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒருவேளை கணவன் அங்கிருப்பதால் உண்மை நிலவரத்தை அறிய விரும்புகிறாளோ?
"நீங்கள். அங்கே இருக்காமல் குடும்பத்தை இந்தப் பக்கம் கூட்டி வந்து விடலாம்தானே..? பயமில்லாமல் சீவிக்கலாம். இப்ப அநேகம்பேர் இடம்பெயர்ந்து வந்து விட்டார்கள்தானே?"
சுவர்ணா ‘இந்தப் பக்கம்' எனக் குறிப்பிட்டது, வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளைத்தான் என்பது புரிந்தது.
விரக்தியின் ஒருவித வெளிப்பாடாக பதிலை அவன் கேள்வி யாகவே கேட்டான், "எல்லாரும் அங்கிருந்து வெளியேறுவதை விட.
அந்தப் பக்கங்களில் யுத்தத்தை நிறுத்தி அமைதி நிலவச் செய்வது சுலபம்தானே."
விடிந்து எட்டுமணிபோல் ஓர் அலுவலர் வந்து அழைத்தார். "நாளைக்கு மாலைதான் உங்களுக்கு அடுத்த பிளைட். அதுவரை நீங்கள் தங்குவதற்கு ஹொட்டல் ஒழங்கு செய்யப்பட்டுள்ளது. வாருங்கள்."
142 சுதாராஜின் கதைகள்

ஹோட்டலில் அறை ஒழுங்கு செய்யப்படும்வரை முன் மண்டபத்தில் காத்திருந்தபோது சுசந்தவும், ஜானகவும் அவனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.
"சேர், நாங்கள் உங்களுக்கு முதலில் ஒரு பொய் சொல்லி விட்டோம். உண்மையில் நாங்கள் அரசாங்க அதிகாரிகளல்ல. வடக்கில் பணிபுரிந்த இராணுவத்தினர். வீட்டுக்கு லீவில் வந்தபின்னர் திரும்ப முகாமுக்குப் போகவிரும்பவில்லை. இப்போது கிரீசுக்குப் போகிறோம்." சற்று ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தான். இராணுவத்திலிருந்து பலர் தப்பிப் போவது பற்றி ஏற்கனவே பத்திரிகைகளில் வாசித்தி ருக்கிறான். அப்படி விட்டு விலகும் காரணமென்ன என இவர்களிடம் கேட்கலாமோ என்று தோன்றியது. எனினும் ஓர் உள்ளுணர்வு தடுத்தது. ஏதும் பேசாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஒரு ஏஜன்ட்டுக்கு நிறையக் காசு கட்டியிருக்கிறோம். அவர்களுடைய பிரதிநிதி கிரீஸ் விமான நிலையத்தில் வந்து கூட்டிச் செல்வாராம். அது சரிவருமோ அல்லது மாட்டுப்பட்டுவிடுவோமோ என்று பயமாயுமிருக்கிறது. கடவுளேயென்று பிரச்சனை ஏதுமின்றிப் போய்விட்டால் அங்கேயே ஏதாவது தொழில் செய்து கொண்டி ருக்கலாம்."
சுசந்தவும் ஜானகவும் ஓரறையை ஒதுக்கிப் பெற்றுக் கொண்டனர். அவனுக்கு ஒரு தனி அறையும் சுவர்ணாவுக்கு இன்னொரறையும் ஒதுக்கப்பட்டது.
பூட்டிய அறைக்குள் வந்தததும் மீண்டும் வீட்டு நினைவுகள் தலைதூக்கியது அவனுக்கு. நேரத்தைப் பார்த்தான் - இப்போது பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போயிருப்பார்கள் வீட்டில் நின்றபோது, பிள்ளைகளை ஸ்கூலுக்குக் கூட்டிப்போவான். பிள்ளைகள் தனியப் போகப் பயப்படுவார்கள். வீதிகளில் சாதாரண மக்களை விட துவக்கு களுடன் ரோந்து வருபவர்கள்தான் அதிகம். சோதனைத் தடை நிலையங்கள். விசாரிப்புகள், இப்போது யார் துணையுடன் போகிறார்களோ தெரியாது. பள்ளி மாணவிகள் .பச்சைப் பாலகர்கள் கூட கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழிகளுக்குள் போடப்பட்ட செய்திகள் சம்பந்தமில்லாமல் அந்த நேரத்தில் நினைவில் வந்து
சுதாராஜின் கதைகள் 143

Page 73
கலக்கத்தை ஏற்படுத்தின. கொழும்புக்கு வந்தபோது யோகர் மாமாவை பிள்ளைகளைக் கூட்டிப் போவதற்கு ஒழுங்கு செய்திருந்தான். இப்போது அவரும் வருவதில்லை என (கொழும்பில் அவன் நின்றபோது) மனைவி குறிப்பிட்டு எழுதியிருந்தாள். என்ன செய்கிறார்களோ?
கட்டிலிற் சாய்ந்தான். அறைக்கு வரும்போது குளிக்க வேண்டும் போல அசதியாயிருந்தது. குளிப்புத்தான் அன்றைய நாள் விடிந்த புத்துணர்ச்சியைத் தரும். ஆனால் இப்போது அப்படியொரு புத்துணர்ச்சி வேண்டாம் போலுமிருந்தது. அசதியும் சோகமும் அடித்துப் போட்டது போல உறங்கிப் போனான்.
O D
.கதவு தட்டப்படும் சத்தம் உறக்கத்தில் கேட்டது. அது கனவில் ஒலிக்கிற மாதிரியுமிருந்தது. எழுந்து விட முயன்றான். முடியவில்லை. தலையை யாரோ அழுத்திப்பிடிப்பது போலிருந்தது. முயன்று முயன்று தலையை மிகவும் சிரமப்பட்டு நிமிர்த்தினான். தான் எங்கிருக்கிறேன் என அனுமானிக்க முயன்றான், வீட்டிலா, கொழும்பிலா அல்லது பிளேனுக்குள்ளா..? தலை சுற்றியது. சுய இயல்பு நிலைக்கு வர நேரம் பிடித்தது. எழுந்து கதவைத் திறந்தான்.
சுசந்தவும் ஜானகவும் வாசலில் நின்றார்கள். ஒரு திடுக்குறல் ஏற்பட்டது. இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அவர்கள். இராணுவ நடவடிக் கைகளை அவர்களுக்கு ஏற்கனவே குறை கூறியிருக்கிறான். இப்போது ஏன் அறையைத் தேடி வந்திருக்கிறார்கள்?.
கதவைப் பூட்டும் எச்சரிக்கையுணர்வுடன் கேட்டான், "மொனவத...? (என்ன..?)"
"சேர் காவெ நெத்த.? என்ட யம கண்ட.(சாப்பிடவில்லையா..? வாங்க சாப்பிடப் போவோம்.)"
"ஒகொல்லொங்.யன்ட.மம பஸ்ஸ கன்னங். (நீங்க போங்க. நான் பிறகு சாப்பிடுகிறேன்)"
அவர்கள் போகவில்லை, அவனை வெளிக்கிட்டு வருமாறு வற்புறுத்தினர்கள்.
144 சுதாராஜின் கதைகள்

"என்னைக் கரைச்சற் படுத்தாமல் போங்க. நான் இன்னும் குளிக்கவுமில்லை."
கதவை படாரென அவர்களது முகத்திற் சாத்தினான். உள்வந்து படுக்கையில் விழுந்தான்.
தனக்குள்ளே முணுமுணுத்தான்.
சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது, எழுந்து திறக்காமல் படுத்திருந்தான். விடாமல் விட்டு விட்டுத் தட்டப்பட்டது. இவங்களுக்கு உதைக்க வேணும் -சீற்றத்துடன் எழுந்து கதவைத் திறந்தான்.
சுவர்ணா வாசலில் நின்றாள். கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
"என்ன குளிக்கவில்லையா..? முகம் அப்படி வீங்கியிருக்கே. அழுதீங்களா..?"
"இந்த அறையில் முடங்கிக் கிடப்பதற்கு. குளிப்பு முக்கியந்தானா..?"
"அப்படிச் சொல்ல வேண்டாம் சேர். உற்சாகமாயிருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும். கவலைப்படாமல் குளிச்சிட்டு வாங்க சாப்பிடப்போகலாம்."
"இப்படிச் சொல்வது உங்களுக்கு இலகுவாயிருக்கும் சுவர்ணா. யுத்தப் பிரதேசத்தில் மனைவியுைம் பிள்ளைகளையும் விட்டு வந்தவனின் மனிநிலை உங்களுக்குப் புரியாது". சுவர்ணாவின் முகம் மாறியது. அதுவரையிருந்த உற்சாகம் இழந்தவள் போல் தனிந்த குரலிற் சொன்னாள்.
"நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை சேர். எனக்கும் கவலைகள் இருக்கு. என் கணவர் யுத்த முனையில் இருக்கிறார். இப்போது நான் லீவில் சென்று வீட்டில் நின்றபோது கூட அவருக்கு வந்து என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்குப் பெரிய ஏமாற்றம், நாங்கள் இனி எப்போதாவது சந்திப்போமா என்றுகூட
சுதாராஜின் கதைகள் 145

Page 74
சந்தேகம் தோன்றுவதுண்டு. எனது இரண்டு குழந்தைகளையும் என் தாயாருடன் விட்டுவிட்டு நான் வெளிநாட்டுக்குப் போய் உழைக்கிறேன்.
அவன் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
"உங்களுடன் காலையில் பேசியபின். எனது உள்ளுணர்வுகள் தூண்டப்பட்ட மாதிரி.ஏதோ ஒரு கவலை கணவனை நினைத்தா. யாழ்ப்பாணத்தில் இருக்கிற ஆட்களை நினைத்தா. அல்லது உங்கட சோகமான மனநிலையை நினைத்தா. என்று தெரியவில்லை. ஐயோ கடவுளே. எங்கட பிள்ளையளின்ர காலமாவது நல்ல மாதிரி வரவேணும்."
அவளது தொண்டை அடைத்துக் கொண்டது. சற்று நேரம் மெளனமாயிருந்து, பின்னர் பேசினாள்.
"நீங்க குளிச்சிட்டு வாங்க சேர். சாப்பிடப் போகலாம். நீங்கள் வராவிட்டால் நான் இங்கிருந்து போகமாட்டேன்."
அவன் ஆச்சரியம் மேலிட சுவர்ணா என்ற அந்தப் பெண்ணை உற்று நோக்கினான். பின்னர் எழுந்து குளியலறைக்குள் சென்றான்
குளித்து ரெடியாகி அங்கிருந்து வெளியேறியபொது சுசந்தவும் ஜானகவும் முன் மண்டபத்தில் காத்திருப்பார்கள் எனக் கூறினாள் சுவர்ணா.
D
சாப்பாட்டு மண்டபத்துள் நுழைந்ததும் மெஸ் மனேஜர் அவர்களது ரோக்கினைப் பெற்றுக் கொண்டு சொன்னான். "செல்ப் சேவிஸ்தான் உள்ளே போய் விரும்பியதைச் சாப்பிடுங்கள்"
பல நாடுகளையும் சேர்ந்த பயணிகள் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தனர். அவன் எவ்வித லயிப்புமின்றி நிற்க, சுவர்ணா அவனது கோப்பைக்கும் உணவைப் பரிமாறினாள். சாப்பாட்டுக் கோப்பைகளுடன் தனிப்பட்ட ஒரு மேசைக்குப்போய் அவர்கள் அமர்ந்தனர். உணவருந்திக் கொண்டிருந்த போது சுசந்த சொன்னான்.
146 சுதாராஜின் கதைகள்

"பார்த்தீங்களா. நாங்களெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக சேர்ந்திருக்கிறம். இதுபோல இலங்கையிலும் நாங்கள் சேர்ந்திருக் கலாம் தானே.?"
அவர்கள் மூவரும் சொல்லிவைத்ததுபோல நிமிர்ந்து பதிலுக்கு அவனது முகத்தைப் பார்த்தனர்.
"இருக்கலாம்தான். அது உங்களுடைய கையிற்தான் இருக்கு. இலங்கையிலிருக்கும்போது நீங்கள் இப்பிடியெல்லாம் சிந்திப்பீங்களோ தெரியாது. அங்கென்றால் நிலமை வேறமாதிரியிருக்கு. ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறன். இந்த மண்டபத்தையே பாருங்கோ. பயணிகளாய் வந்த பல நாட்டு மக்கள் இருக்கினம். ஆனால் வெள்ளைக்காரார்கள் ஒருபக்கமாயும், அரபியர்கள் இன்னொரு பக்கமாயும் நாங்கள் இந்த மேசையிலும் அவரவர் நாடு அல்லது இனம் என்ற அடிப்படையில் சேர்ந்திருக்கிறம். புதிதாக ஆராவது வந்தாலும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தங்கட ஆட்கள் இருக்கிற பக்கமாய்த்தான் போய் இருக்கிறான். அது இயல்பான பாதுகாப்புணர்வு. அதிலை பிழையில்லை. அதற்காக இவர்களெல்லாம் எதிரிகளோ விரோதிகளோ என்று அர்த்தமில்லை. ஆனால் அதுக்குள்ளை அதிகமானோராய் இருக்கிற வெள்ளைக்காரர். இதுவும் ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்லுறன். எங்களைப் பார்த்து. ‘நீங்கள் என்ன, கறுப்புத் தோல்க்காரர். எங்களுக்குச் சமனாய் இருந்து சாப்பிடுறீங்கள்?, என்று கேட்டால் அதுதான் பிரச்சனை. சிறுபான்மை . யானவர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காததால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் இப்ப எங்கட நாட்டில் எதிர்கொள்ளுறம்."
அவனுக்குள் படபடப்பு ஏற்பட்டிருந்தது. சுவாச இயக்கம் மூசி முசி வெளிப்பட்டது.
"சாதாரண மக்களுக்கு ஒரு துவேசமுமில்லை. அரசியல் வாதிகள்தான் தங்கட லாபத்துக்காக மக்களையும் தூண்டிவிடுவினம். எல்லாத்தையும் போட்டுக் குழப்புகினம்."
சுவர்ணா அவனது கோபாவேசத்தைத் தணிவிக்க முயல்வது போலிருந்தது.
சுதாராஜின் கதைகள் 147

Page 75
"அவையள் மட்டும் காரணமில்ல. மக்களின்ர செயல்பாட்டில் தான் மாற்றம் தங்கியிருக்குது. சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறதை விட்டு, யுத்தம் வேண்டாம் என்று நீங்கள் உரத்துக் குரல் கொடுக்க யில்லைத்தானே.?"
அவன் அவர்களை முகத்துக்கு முகம் நோக்கவும் விரும்பாமலிருந்தான்.
"சரி..சரி. அந்தப் பேச்சுக்களை விட்டுச் சாப்பிடுவோம். நல்ல அருமையான சாப்பாடு." சுவர்ணா கதையை திசை மாற்றினாள்.
அவன் தலையைக் குனிந்து சாப்பிடத் தொடங்கினான். ஒரு வேகத்தில் கை அள்ளி அள்ளிக் கொடுக்க வாய் சாப்பிடும் அலுவலைச் செய்து கொண்டிருந்தது. வயிறு நிறைந்தது. மனம் உடைந்து விட்டது. அவனுக்கு அவ்விடத்தில் இருக்க முடியவில்லை. எழுந்து தன் அறைக்குச் சென்றான்.
கட்டிலில் விழுந்தான். புரண்டு புரண்டு படுத்தான். நாட்டு நிலைமைகள் அதனால் ஏற்பட்டுப்போன சீரழிவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடின. பிள்ளைகளின் காலங்களிலாவது, அதுகள் நிம்மதியாக வாழக்கூடியதாக இருக்குமா என மனம் குழம்பிக் கொண்டி ருந்தது. மகன் நினைவில் வந்தான். ஐந்து வயதுப் பாலகன் துடினமான பிள்ளை. ஓரிடத்தில் இருக்க மாட்டான். ஓடி விளையாடுவான். ஏதாவது குறும்புகள் செய்வான்.
யுத்தம் உக்கிரமடைந்திருந்த ஒருநாளில் கோர இரைச்சலுடன் வந்த விமானங்கள் வீசிய குண்டுகள், வீட்டுக்கு மிக அண்மையில் முழங்கி விழுந்தன. பதுங்கு குழிக்குள் இறங்கிய பிள்ளை வெளியே வர மறுத்து விட்டான். வற்புறுத்திக் கூட்டிவர, எல்லோரையும் மிரட்சியுடன் பார்த்தான். சிறு சத்தம் கேட்டாலே பயந்தான். ஏதாவது கேட்டாலும், பேசாது யோசனையில் ஆழ்ந்திருந்தான். ஏனைய பிள்ளை களுடன் விளையாடவும் போகாமல் ஒதுங்கி ஒதுங்கியிருந்தான். எப்போதும் பதுங்கு குழிக்குள் போயிருக்க வேண்டுமென அடம் பிடித்தான். பொழுது படுகையில், ‘கதவைப் பூட்டுங்கோ. ஜன்னலைப் பூட்டுங்கோ. என அழத் தொடங்கிவிடுவான்.
148 சுதாராஜின் கதைகள்

பிள்ளையோடு தானும் ஒரு பிள்ளையாகப் பழகி ஒரு தோழனைப்போல அவனது கைகளைப் பிடித்து மெல்ல மெல்ல விளையாட்டுக்காட்டி பிள்ளையின் மனநிலையை மீட்டெடுக்கும் தவிப்புடன் கழித்த நாட்கள் நினைவில் வந்தன. இனி, பிள்ளைகளை விட்டு எங்கும் போவதில்லை என அப்போது எண்ணியிருந்தான். ஆனால் இப்போது.
கண்கள் கலங்கின.
D
கதவு தட்டப்பட்ட பின்னர் தள்ளித் திறக்கப்பட்டது. உள்ளே வந்தது சுவர்ணாதான். கட்டில் விழிம்பில் அமர்ந்தாள். அவன் கால்களை ஒதுக்கி எழுந்தான்.
"என்ன சேர் அழுதீங்களா..?
"இல்லை. இல்லை." சமாளித்தான்.
"உங்களுக்கு மத்தியானம் சரி கோபம்தானே.? சுசந்தவும் ஜானகவும் வருத்தப்பட்டார்கள். எங்களில் கோபப்படுகிறீர்களா..?"
"இல்லை. இல்லை."
"நீங்கள் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளியில வாங்க. எனக்கு உங்களைப் பார்க்கக் கவலையா யிருக்கு."
அவன் மெளனமாயிருந்தான்.
"வாங்க சேர். வெளியே போய் வரலாம்"
"எங்கையும் நான் வரல்ல. வற்புறுத்தாமல் தயவு செய்து இங்கயிருந்து போங்க..?"
"ஏன்.நான் இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கயில்லையா..?"
"நான் அந்த அர்த்தத்தில் சொல்லயில்ல. பிளிஸ். எனக்குத் தலையிடியாயிருக்கு. கொஞ்சம் தனிய இருக்க விடுங்க."
சுதாராஜின் கதைகள் 149

Page 76
சுவர்ணா அறையிலிருந்து வெளியேறினாள்.
இரவு சாப்பாட்டு வேளையிலும் அவர்கள் அறைக்கு வந்து அவனை அழைத்தனர்.
"நான் வருவேன்தானே. ஏன் இப்படி..?"
"எங்களுக்குத் தெரியாதா. நாங்கள் வராவிட்டால் நீங்கள் இங்கையே படுத்துக் கிடப்பீங்கள்."
இதற்குப் பிறகு அவன் ஏதும் பேசவில்லை.
அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு அவர்களுக்கு ஃபிளைட் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது துபாயில் இடைத் தங்கல் - ஆறு மணித்தியாலங்களின் பின்னர்தான் அவர்கள் கிரீசுக்குப் போக வேண்டிய விமானம் புறப்படும்.
கராச்சியிலிருந்து வந்த விமானத்தில் வேறுவேறு இருக்கைக ளிற்தான் இடம் கொடுத்தார்கள். துபாயில் இறங்கியபோது அவன், அவர்களுக்காகப் பார்த்திராமல் இடைத் தங்கல் பயணிகளின் பகுதிக்கு வந்தான். இந்த நேரத்திலும் விமான நிலையம் கலகலத்துக் கொண்டிருந்தது. பயணிகள் பளிச்சிடும் வெளிச்சத்தில் "டியூட்டி '. பிறீ கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தார்கள் அவன் தனது டியூட்டி இருதான் என்பதுபோல கதிரையிற் சாய்ந்தான். மனச் சோர்வு அந்த அளவுக்கு அவனை ஆட்கொண்டிருந்தது.
அவர்கள் தேடிக் கொண்டு வந்து முன் இருக்கையில் அமர்வது தெரிந்தது. அவன் கண்டும் காணாதவன் போல் கண்களை epiņu Juņu5bģ5T6ī.
கலகலச் சத்தங்களும் ஆரவாரங்களும் அவனைக் குழப்ப வில்லை. பிள்ளைகளின் பாதுகாப்பற்ற தனிமையும், பிரிவுத் துயரும், அசதியும் அவனை ஒருவித மயக்க நிலைக்குட்படுத்தியிருந்தது. அதனால் எந்த இடத்தில் அமர்ந்தாலும் தூக்கத்திலாழ்ந்தான்.
150 சுதாராஜின் கதைகள்

யாரோ அவனைத் தட்டி, தூக்கத்தைக் கலைத்தார்கள். கண் விழித்தபோது முன்னே சுசந்த நின்றான்.
"சேர் எழும்புங்க. பிளைட்டுக்கு நேரமாச்சு. வாங்க போய் கன்டீனில் ரீ குடிச்சிட்டு வரலாம்."
தூக்கத்தைக் குழப்பிய சீற்றத்தில் வெடித்தான்.
'யனவா.யன்ட, மட்ட ஒனநே. (போங்க, போங்க. எனக்கு வேண்டாம்)"
வெளிச்சத்தை மறைப்பது போல கையினாற் கண்களை மறைத்து அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி இருக்கையிற் சாய்ந்தான். சற்று நேரத்தில் விரலிடுக்கினுாடாகப் பார்த்தபோது அவர்கள் தூரத்திற் போவது தெரிந்தது. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் கண் அயர்ந்தான். நேரம் கடந்திருக்க வேண்டும். அவனது முதுகை யாரோ தொட்டார்கள். கொஞ்சம் அசைத்தார்கள்.
"சேர்.சேர்."
விழித்தான். முன்னே அவர்கள் மூவரும் நின்றனர். சுசந்த கையில் ஒரு தட்டிற் தேநீர்க் கோப்பையுடன். ஜானக அவனைப் பார்த்து ஆறுதல் சொன்னான். −
"கணகாட்டு வென்ட எப்பா சேர். தெய்யோ இன்னவா.
சேரும பலாகண்ணவா.(கவலைப்படவேண்டாம் சேர். கடவுள் இருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.)
சந்தேகமாயிருக்கிறது. ஜானகவை உற்று நோக்கினான்.
அவனுக்கு கோபம் ஏறிவிடுமோ என்ற தயக்கத்தில், சுவர்ணா வேறு எதையாவது பேச விரும்புவது போலிருந்தது,
"சேர் உங்களுக்கு ஒரு முசுப்பாத்தி தெரியமா? கன்டீனில் உள்ளவனுக்கு சிங்களப் பாஷை தெரியாது. ‘எங்கள் நண்பனுக்கு ஒரு தேநீர் கொண்டுபோய் கொடுத்துவிட்டு இந்தக் கோப்பையைத் திரும்பக் கொண்டு வந்து தருவோம். அனுமதிப்பீர்களா?.’ என்ற
சுதாராஜின் கதைகள் 151

Page 77
நீண்ட வாக்கியத்தைச் சொல்கிற தெரியாது. அதைப் புரிய வைப்ப கடைசியில் கைப்பாஷைதான் ை நிலுவையில் வைத்துக்கொண்டு தி சுசந்த இந்தக் கோப்பையைக் ெ
இதைக்கூறிவிட்டு பெரிய ( தானே சிரித்தாள்.
அப்போதுதான் அதைப் புரிர் ஜானகவும் அவளுடன் சிரிக்கத் (
"யேஸ்.யேஸ்.லாங்க்விச்.
சுசந்த தனது ஆங்கிலப் புல படுத்தினான்
சுசந்த அபிநயத்துக் காட்டி மத்தாப்பு வெடிப்பது போல அவன்
152 சுதாராஜின் கதைகள் .

அளவுக்கு எங்களுக்கு இங்கிலீஷ் தற்குள் பெரிய பாடுபட்டுவிட்டோம். ககொடுத்தது. மிகுதிப் பணத்தை ந்திருக்கிறான். நீங்கள் குடித்ததும் காண்டுபோய்க்கொடுப்பான்."
ஜாக் சொன்னது போல சுவர்ணா
து கொண்டவர்கள்போல சுசந்தவும் தொடங்கினர்.
.பிக் புறொப்ளம்."
மையை நகைச்சுவையாக வெளிப்
ய விதம் சிரிப்பை மூட்டியது. ஒரு ரிடத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
2001
O

Page 78

AJ Prints, Dehiwali,
H