கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 1

ளங்கீரன்
இ

Page 2

@ഖബ്രസ്ത്ര രൂ ഖേ ഖങ്ങb
சுபைர் இளங்கீரன்
o ottina
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தலைப்பு
ஆசிரியர் முதற்பதிப்பு
அச்சுப்பதிப்பு ബ്ലെ
விநியோகம்
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்
சுபைர் இளங்கீரன்
ஆனி 2000 டெக்னோ பிரின்ட், தெஹிவளை தேசிய கலை இலக்கியப் பேரவை சவுத் ஏசியன் புக்ஸ் வசந்தம் (பிறைவேற்) லிமிற்றெட் எஸ். 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, கொழும்பு 11. தொலைபேசி :335844 தொலைநகல் : 075-524358
eublur 250.00

முன்னுரை
இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றியவர். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரைப் புறக்கணித்து எழுத இயலாதளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப்பட்டுள்ளது. எனினும் அவர் படைப்பிலக்கியத்தில் மும்முரமாகச் செயற்பட்ட காலம் 1950 முதல் 1970கள் வரையில் எனலாம். இக்காலக் கட்டத்தில் அவருடைய எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியைக் காட்டுகின்றன.
தொடர்கதைகளாகவே பெருவாரியான தமிழ் நாவல்கள் முதலில் வெளிவந்துள்ளன. இதற்கான காரணங்களில் வாசிப்புப் பழக்கமும் நூல்
இந்த இரண்டு தசாப்தங்களில் எழுதியவற்றின் தொகையை வைத்து நோக்கும் போது இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்பட்டுள்ள சரிவும் நமக்குப் புலனாகிறது.
இளங்கீரன் ஒரு சிறுகதையாளராக, நாடகத் துறையிற் தடம் பதித்தவராக, கட்டுரையாளராக, திறனாய்வாளராக என்றெல்லாம் அறியப்பட்டாலும் அவர் நாவல் ஆசிரியராகவே அதிகம் அறியப்பட்டுள்ளார். என் மதிப்பீட்டில் அது நியாயமானதுங் கூட. அவருடைய இருபதுக்கும் அதிகமான நாவல்களிற் பல நூலுருப் பெற்றுள்ளன. அவற்றுள் அவரது சமூக உணர்வின் வளர்ச்சியையும் சமூக மாற்றத்துக்கான விளைவையும் அடையாளம் காட்டுகிற படைப்புக்களே அதிகம் பாராட்டப்பெற்றன எனலாம். அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற். கான காரணமாகும்.
இவ்வகையில், "அவளுக்கு ஒரு வேலை வேண்டும்" இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங்காட்டும் ஒரு காலத்திற்கு உரியது. மிகவும் ஆபாசமாகவும் பாலியற் கிளுகிளுப்புக்காகவும் ஆண் பெண் உறவைச்

Page 4
சித்தரித்துவிட்டு இறுதியில் இறுகிப் போன ஆணாதிக்க மரபு வழிச் சமுதாய விழுமியங்களை வலியுறுத்துகின்ற எழுத்துலகப் பிரபலங்கள் பலருடன் ஒப்பிடும் போது இளங்கீரனின் பார்வை வேறுபட்டு நிற்பதை நாம் உணரலாம். மனித உறவுகள் மீது சமுதாய ஏற்றத் தாழ்வுகள் செலுத்தும் தாக்கத்தையும் சமுதாயச் சூழலையும் புறக்கணித்து நாம் ஒழுக்கங்கள் பற்றியும் அறம் பற்றியும் விதிகளை வகுக்க இயலாது. காதல், கற்பு போன்ற விடயங்களில் நம் மீது ஒருபுறம் மரபின் வழியில் ஏற்றப்பட்டுள்ள சுமைகளையும் மறுபுறம் வணிகக் கலை இலக்கியங்கள் ஏற்படுத்தி வருகிற மயக்கங்களையும் நாம் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இளங்கீரனின் நாவல்களில் இவ்வாறான கவனிப்புப் பொதுவாகவே உள்ளது போன்று இந்நாவலிலும் உள்ளது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்து உண்ணும் தேவையில் உள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக்கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய, இன்றைய நவகொலனியச் சூழலிலும் இன்னும் யதார்த்தபூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. ஆயினும் இன்றைய சமூக நெருக்கடி அன்றையதிலும் மேலாக உக்கிரமானது.
தேசிய இனப்பிரச்சினை திட்டமிட்டே உக்கிரமாக்கப்பட்டதன் காரணமாக இன்று ஈழத்தின் தேசிய இனங்களிடையில் உள்ள நல்லுறவு குறைந்துள்ளது. இப் பின்னணியில் இளங்கீரனுடைய நாவலில் நாம் காணுகிற சமூக உறவுநம் இளைய பரம்பரையினருக்குச் சிறிது திகைப்பளிக்கலாம். நம்பவும் கடினமாயிருக்கலாம். ஆயினும் தென்னிலங்கையில் இருபது ஆண்டுகட்கும் முன்னர் வரை இருந்து வந்த தேசிய இன உறவு அத்தகையதுதான். இவ்வகையில் இந்நாவல் இன்று வெளிவருவது ஒரு பயனுள்ள நினைவூட்டல் எனவும் கொள்ளலாம்.
இளங்கீரன் நாவல்களில் இன்னும் நூலுருப் பெறாத சிலவற்றுள் முக்கியமான இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையிலும் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடையது என்பதாலும் நூல் வடிவில் அதன் வரவு முக்கியம் பெறுகிறது.
சி. சிவசேகரம்
பேராதனைப் பல்கலைக்கழகம்,
O3.06.2000

பதிப்புரை
இலங்கைத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் முதன்மை ஸ்தானத்தில் வைத்துக் கணிக்கப்படுவர்களுள் ஒருவரான இளங்கீரனின் "அவளுக்கு ஒரு வேலை வேண்டும்" என்னும் நாவலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இளங்கீரன் அவர்கள் உயிருடன் வாழுங்காலத்திலேயே இந்நூலை வெளியிட வேண்டுமென்ற எமது விருப்பம் இயலாது போயிற்று.
இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகள் நூலாக வெளிவருவதற்குத் தவங்கிடக்க வேண்டியேற்பட்டுள்ளமை இலங்கையில் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையின் தேக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
இத்தேக்க நிலையைத் தகர்த்து தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யுமாறு வீடுதோறும் நூலகம் அமைத்து நூல் வெளியீட்டுத்துறைக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்குவது தமிழ் பேசும் மக்களின் தலையாய கடமையாகும்.
இளங்கீரனின் இந்நாவலையும் "நீதியே நீ கேள்" நாவலின் மறுபிரசுரத்தையும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் மூலம் வெளியிட வேண்டுமென்பதில் இளங்கீரன் பெருவிருப்புடையவராயிருந்தார்.
இளங்கீரனின் "தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்", "பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்" ஆகிய இரு நூல்களையும் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.
தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து பகை முரண்பாடாக யுத்த சூழலைத் தோற்றுவித்திருக்கும் இன்றைய சூழலில், கடந்த தசாப்தங்களில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும் உறவையும் இந்நாவலினுடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.

Page 5
'நவ காலனித்துவத்தின் பூகோளமயமாதல் உலகக் கிராமம் ஆகிய சதிகளின் பின்னேயிருக்கும் உலகின் தொழிலாளர் சக்தியின் வர்க்க உணர்வை சமகாலத்தில் புரிந்து கொள்வதுடன் எதிர்காலம் பற்றிய தீட்சண்ய பார்வையை இந்நாவல் வழங்குவதாயிருக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் ஒடுக்கு முறை எந்த வடிவில் வரினும் அதற்கெதிராக போராடும் வர்க்க பலத்தினை ஊட்டும் மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி என்ற சமுதாயத்தை மாற்றும் சிந்தனையை விருத்தி செய்யும் என்ற நம்பிக்கையுடனும் இந்நாவலை தமிழ் பேசும் வாசகர்கள் மத்தியில் சமர்ப்பிக்கின்றோம்.
நூறு மலர்கள் மலரட்டும்
நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்
தேசிய கலை-இலக்கியப் பேரவை
எஸ்.33, மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத்தொகுதி கொழும்பு - 11
05-06-2000

முதலாவது அத்தியாயம்
ழமை போல் கொழும்பு அதிகாலையில் விழித்துக் கொண் டது. தக்காளி நிறம்போல் தக தக என்று எழுந்த கதிரவனின் பொன் கீற்றுக்கள் சிதறச் சிதற நகரத்தின் பரபரப்புக் ಆLiq-U5. குறுக்கும் நெடுக்குமாக ஒடும் வாகனங்கள் Wi* : வீறிட்டுக் கொண்டு சந்தடியைக் கிளப்பின. பாடசாலைப் பிள்ளைகளையும், அலுவலகங்கள், வேலைத்தலங்கள், வியாபார ஸ்தலங் களுக்குப் போவோரையும் அள்ளித் திணித்துக் கொண்டு வரும் பஸ்கள் அந் தந்தத் தரிப்புகளில் தள்ளி விட்டும் ஏற்றிக் கொண்டும் சென்றன. கரையோர ரயில்களும் நெருக்கியடித்துக் கொண்டு பிரயாணம் செய்யும் சனங்களை உண்ட இரையை கக்குவது போல் அந்தந்த ரயில் நிலையங்களில் கக்கி விட்டு ஓடின.
வீதிகளில், வாகனங்களில் எங்கும் எதிலும், ஓர் அவசரம். அதற்குப் போட்டியாக சனங்களிடமும் அவசரம். எதையோ பிடிக்கப்போகும் ஒரு விரைவு; விழுந்தடித்து ஓடும் பாவனை.
கொம்பனித் தெரு ஸ்டேஷனில் வந்து நின்ற ரயிலிலிருந்து வேலைக்குச் செல்லும் சனங்கள் - ஆண்களும் பெண்களுமாக அவசர அவசரமாக இறங்கினார்கள்.
முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, நைலோன், றெர்லின் சேட்கள், வேட்டி நெஷனல், சாறன், சப்பாத்து, செருப்பு, இப்படிப் பலப் பல வகைகளில் ஆண்கள் - பல வயதினர். பல நிறத்தினர், பல உருவத்தினர்.
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 6
முழங்கால் அளவு கேட்ஸ், துடை தெரியும் மினி, உடம்பின் வனப்பையும் வரட்சியையும் எடுத்துக்காட்டும் பல தினுசான, சேலைகள், பாதங்களில் பல ரகமான காலணிகள் - இப்படிப் பல விதங்களில் பெண்கள் - பல பருவத்தினர். பல நிறத்தினர், பல உருவத்தினர்.
அவர்கள் அணிவகுத்துச் செல்வது போல் சாரி சாரியாக வீதியின் ஒரமாக விரைந்தனர். பஸ்கள், கார்கள், லொறிகள், ஜீப்கள், வேன்கள் எல்லாம் வழக்கம் போல் தெருக்களை ஆர்ப்பாட்டம் செய்தன.
அந்தச் சனக் கும்பலில் சுபத்திராவும் வந்தாள். இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க அவள், நீல நிறச் சேலையும், வெள்ளைச் சட்டையும் கால்களில் பாட்டாவுமாக விரைந்து நடந்தாள்.
சேர்ச் வீதிக்குள் வந்தவள், சட்டென்று திரும்பி ஒரு சந்துக்குள் புகுந்தாள். பெரும் பெரும் கட்டிடங்கள், மாளிகைகள், உல்லாச வீடுகள், அகன்ற வீதிகள், கடைத் தெருக்களையெல்லாம் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு தேசத்தின் தலைப்பட்டினம் என்று பெருமையையும், கர்வத்தையும், பகட்டை யும், படாடோபத்தையும் காட்டும் கொழும்பு மாநகரம் தனது சிறுமையையும், கேவலத்தையும், இழிவையும், வக்கிரத்தையும் பறை சாற்றும் சேரிகளிலும் சந்துகளிலும் ஒன்று அது.
அந்தச் சந்துக்குள் வரிசை வரிசையாக பொந்துகள் போன்ற குடியிருப்பு கள். நகரவாசிகளால் தோட்டங்கள் என்று அழைக்கப்படும் இடங்களிலுள்ள இந்த மூன்று தட்டு வீடுகள் கொழும்பில் பிரசித்தம், தமக்கென சொந்தத்தில் வீடு வாசல் இல்லாத ஏழைச் சனங்களை வாடகைக்கு வைத்து காசு பறிப்பதற் காக பெரும் பெரும் காணிச் சொந்தக்காரர்களால் கட்டப்பட்டுள்ளன. இந்த மூன்று தட்டுள்ள வீடுகள் அவர்களின் உள்ளத்தையும் பிரதிபலிப்பது போல் குறுகலாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றன. புறக்கோட்டை, மருதானை, பண்டாரநாயக்கா மாவத்தை, பார்பர்வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, முட்டுவால், கிராண்ட் பாஸ், தெமட்டக் கொட, கம்பனித் தெரு என்று கொழும்பின் பிரபலமான இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் சந்துகளில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள தோட்டங்களின் இந்த மூன்று தட்டு வீடுகள் தான் கொழும்பில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வாசஸ்தலம்!
சேர்ச் வீதிச் சந்தில் உள்ள மூன்று தட்டு வீடுகளின் எதிரே கொடிகளில் கழுவிக் காயப் போட்டிருந்த உடுப்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பிள்ளைகள் பாடசாலைக்கும், பெரியவர்கள் வேலைக்கும் தத்தம் காரியங் களுக்கும் சென்றிருந்ததால், பின்னேரத்திலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை இருக்கும் "சள சள' என்ற சந்தை இரைச்சலும், சந்தின் குறுகலான நடைபாதையில் இருக்கும் சன நெரிசலும் குறைந்திருந்தன.
காற்றுப் போல் விர்ரென சந்துக்குள் வந்த சுபத்திரா அங்கிருந்த மூன்று
சுபைர் இளங்கீரன் 2

தட்டு வீடொன்றுக்குள் நுழைந்தாள்.
அந்த மூன்று தட்டு வீட்டின் ஐந்தடி அகலமுள்ள முன்தட்டில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் அருமை நாயகம் படுத்திருந்தார். கட்டிலுக்கு மறுபக்கம் இரண்டு கதிரைகள், வெள்ளை காணாமல் பழுப்பேறிப் போன சுவரில் வேல்முருகனின் 10x12 சைஸ் படம். அதற்கு இடது பக்கம் 8x10 சைஸ் அளவுள்ள புத்தரும், வலது பக்கம் இயேசுவும் இருக்கிறார்கள். படங்களுக்குக் கீழே ஒரு மரத்தட்டு, அதில் நூந்து போன ஊதுபத்தி, நாலைந்து வாடிய பூக்கள், சின்னஞ் சிறிய பித்தளைத்தீபம், திருநீறுள்ள ஒரு வெத்துப் பால்ப்பேணி.
சுபத்திரா அருமை நாயகத்தையும் கவனிக்காமல் முன் தட்டையும் கடந்து இரண்டாவது தட்டுக்குள் சென்றாள். ஒரு கட்டில், ஒரு பழைய அலுமாரி, அதற்கு மேல் டிரங்குப் பெட்டி, குட்கேஸ்கள், ஒரு மேசை கதிரை, சுவரில் உடுப்புக்களைக் கொழுவும் ஸ்டான்ட்.
அடுத்தது மூன்றாவது தட்டு -அடுப்படி, பதினேழு வயதான வசந்தி துவைப்பதற்கான அழுக்குத்துணிகளை கொடியிலிருந்து எடுத்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தவள் சந்தடி கேட்டுத் திரும்பினாள்.
மாநிறம் போட்டுள்ள சற்றுப் பருமனான சுபத்திரா, நீண்டு சதைப் பிடிப்பா யுள்ள தனது முகத்தை, இரண்டே இரண்டு மெல்லிய தங்க வளையல்களைத் தாங்கிய தன் உருண்டு திரண்ட கையால் மார்புக் குவடுக்குள் புதைந்திருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தை ஒத்தித்துடைத்து விட்டு. 'அக்கா எங்கே?" என்று கேட்டாள்.
வசந்தி பதில் சொல்வதற்குள் 'யாரது. ?' என்று கேட்டவாறு உள்ளே யிருந்து வந்த ஆனந்தி 'ஒ.சுபத்திராவா..?"
'முதலில் முகத்தைத் துடை, கரி' என்று சொன்ன சுபத்திரா "இன்றைக்கு ஆறுமணிக்கு உன்னைக் கூட்டி வரச் சொல்லியிருக்கிறார். நேற்று ஸ்கூல் விட்டதும் அவசரமாக வீட்டுக்குப் போக வேண்டியிருந்ததால் இங்கே வர முடியேல்லை. ஐந்து மணிக்கெல்லாம் நான் வருவேன். ரெடியாய் இரு. இதைச் சொல்லத்தான் வந்தேன்' என்றாள்.
சுபத்திரா சொல்லி முடிப்பதற்குள் தன் முகத்தில் பதிந்திருந்த கரியைத் துடைத்துக் கொண்டு விட்ட ஆனந்தி "நிக்கிறியே, இரு' என்று மேசையின் முன்னால் கிடந்த கதிரையை நகர்த்தினாள்.
'இல்லை, நான் ஸ்கூலுக்குப் போக வேணும்' 'ஒரு நிமிஷம் டீ குடித்து விட்டுப் போ" -ஆனந்தி உள்ளே திரும்பினாள். "வேண்டர்ம், குடித்து விட்டுத்தான் வந்தேன். எனக்கு நேரமாச்சுது' என்று சொல்லிவிட்டு முன்தட்டுக்கு வந்த சுபத்திரா, "ஐந்துக்கெல்லாம் ரெடியாய்
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 7
இருக்க வேணும்' என்று மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டு பொந்துக்குள்ளி லிருந்து சந்துக்குள் இறங்கினாள்.
படுத்திருந்த அருமை நாயகம் மெல்ல எழுந்து உட்கார்ந்தார். அறுபது வயதைத் தாண்டி சற்று மெலிந்திருந்தது போல் காணப்பட்டாலும், ஒரு திட காத்திரமான தோற்றம். ஒரு மயிர் கூட உதிராமல் கலைந்து போய்க் கிடந்த தனது வெளுத்த தலைமயிரைக் கையால் கோதிவிட்டு, நரைத்துப் போன முகத்தையும் கையால் தேய்த்து விட்டுக் கொண்டார். 'ஆறு மணிக்கு எங்கேயாம்? ஏதாவது கிடைச்சிருக்குதா?' என்று உள்ளே நின்றிருந்த மகளிடம் கேட்டார், அவர்
ஆனந்தியின் காதில் அது விழுந்தாலும் பதில் சொல்லாமல் வசந்தியைப் பார்த்தாள். அவள் துவைக்க எடுத்த துணிகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு மூன்றாம் தட்டையும் தாண்டி பைப்புக்குப் போனாள்.
'நான் கேட்கிறது காதில் விழாது, என்ன? அவள் சொல்லி விட்டுப் போனாளே, எந்த இடத்தில் வரச் சொல்லியிருக்கிறாங்களாம் ? நிச்சயம் கிடைக்குமா? அதைக் கேட்கேல்லையே?'
ஆனந்தி உதட்டைத் திறக்காமல் முன்தட்டுக்கும் நடுத்தட்டுக்குமிடையில் உள்ள ஜன்னலால் பெற்றவரைப் பார்த்தாள். ஒரு மகள் தகப்பனைப் பார்க்கும் பார்வையல்ல அது. அந்தளவு வெறுப்பு அந்தப் பார்வையில் மலிந்திருந்தது. அருமைநாயகத்திற்கு அது பழக்கப்பட்ட பார்வை. வழக்கம் போல் அந்தப் பார்வையைச் சந்திக்க விரும்பாமல் முகத்தைக் குனிந்து கொண்டார். 'நான் கேட்டால் பதில் வராது. இது தெரிஞ்சும் நான் ஏன் கேட்கவேணும். பதில் வராவிட்டாலும் பரவாயில்லே, எனக்குப் பணம் வந்தால் போதும், மற்ற தெல்லாம் எனக் கெதுக்கு?" என்று வாய் முணுமுணுத்தது.
இதுவும் ஆனந்தியின் காதில் விழத்தான் செய்தது. பார்வையில் தெரிந்த வெறுப்பு மெளனமாக நகைக்கும் உதடுகளில் நெளிந்தது. விருட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு பின் தட்டுக்குப் போனாள். அடுப்பில் தேனிர் கெட்டில் இருந்தது. அணைந்திருந்த அடுப்பைத் திரும்பவும் மூட்டினாள். அது எரிந்தது. ஆனந்தி எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுடைய மனமும் எரிந்தது.
-கிழவனின் ஆட்டம் எப்பதான் நிற்கப் போகுதோ. அருமை நாயகம் கட்டிலை விட்டு எழுந்தார். வழக்கம் போல் தலையணை, விரிப்பு, பாய் எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே கிடக்க, பின்பக்கம் போய் காலைக்கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு திரும்பியவர், நடுத்தட்டுக்கு வந்தார். மேசையில் டீ இருந்தது. அதை அப்படியே வாயில் ஊற்றி விழுங்கினார். சட்டையை மாட்டியவர், மேசையில் அவருக்காக ஆனந்தி வைத்திருந்த ஒரு ரூபாய் காசையும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார்.
சுபைர் இளங்கீரன் 4

சந்துக்குள்ளிருந்து சேர்ச் வீதிக்குள் வந்தவர், குறுகலான ஒரு சிறு ஓடைக்குள் புகுந்தார். சிகரட் வாயில் தொங்க சாறனும் சேட்டும் அணிந்த ஒரு வாலிபன், கிழிந்து தையல் போட்ட லோங்ஸோடும் அழுக்கேறிய சேட் டோடும் நடுத்தர வயதோடும் உள்ள ஒருவர், குளித்துச் சீவிச் சிங்காரித்து வெகுஸ்டைலாய் கந்தோருக்குப் போக வந்த ஒருவனை -மூவரும் அன்றைய ரேஸ் பேப்பரின் நம்பரை மிகவும் உண்ணிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர். அருமைநாயகமும் சரிவு மேசையில் கிடந்த மற்றொரு ரேஸ் பேப்பரை எடுத்து நம்பரை விழிகளால் துளாவினார். அரை மணித்தியாலம் வரை ரேஸ் பேப்பரோடு மாரடித்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். 'இந்த டைகரே இப்படித்தான். பெயரைப் பார், டைகராம்' என்று ஒரு ஏமாற்றத்தோடும் வெறுப்போடும் முணுமுணுத்துவிட்டு ஓடைக்குள்ளிருந்து தெருவுக்கு வந்தார்.
வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. -மழை தூறுமோ..? தூறினால் தான் என்ன, பெரிசாப் பெய்ஞ்சால்தான் என்ன, நனைய வேண்டியதுதான். என்னிட்டே, குடையா இருக்குது. எந்தக் காலத்தில்தான் இருந்துது, இப்ப இருக்க.
மலாய் வீதி, தவளகிரி ஹோட்டலுக்கு முன்னால் உள்ள பஸ்தரிப்பில் வந்து நின்றார். சனங்கள் கியூவிலும் அதை விலகியும் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் பேப்பரை பார்த்தவாறு நின்றார். அரை மணித்தியாலமாய் விட்டது. பஸ் வரவில்லை.
சே, இது பெரிய கரைச்சல், இன்னும் காணோம். நிப்பனுக்கு முன்னால் நின்றால் அடிக்கடி வரும். சில நேரம் அங்கேயும் அப்படித்தான். இன்றைக்கு பஜார் எப்படியோ. வர வர நம்ம பாடும் மோசமாகிக் கொண்டு வருகுது. கள்ளுக்குக் கூட காசு கிடைக்க மாட்டேங்குது. இந்தா வருகுதுபஸ், அடுத்ததும் வருகுது. பின்னாலே மற்றதும் வருகுது. எப்போதும் இந்த மாதிரித்தான். வந்தால் எல்லாம் ஒன்றாய் வரும். இல்லையோ. மணித்தியாலக் கணக்காய் கால் கடுக்க நிற்க வேண்டியதுதான்.
பஸ் வந்து நின்றது. நெரிசல், முட்டி மோதியபடி எல்லாரும் தாவினர். பாதிப்பேரை வழிய வழிய ஏற்றிக் கொண்டு, மிஞ்சி நின்ற சனக் கும்பலி. மிருந்து பலாத்காரமாய் பிய்த்துக் கொண்டு கிளம்பியது பஸ், அருமை நாயகமும் ஏறி விட்டார். மிதிபலகையில் நெரிந்தார்.
புறக்கோட்டையில் வந்து இறங்கிய அருமைநாயகம் நாலாம் குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தார். கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டன. லொறிகள், மூட்டை சுமக்கும் தள்ளு வண்டிகள், நாட்டின் நாலாதிசைகளி லிருந்தும் வந்துள்ள வியாபாரிகள், கூடை தூக்கும் கூலிகள், சாமான்களையும் மூட்டைகளையும் லொறிகளிலும் வண்டிகளிலும் ஏற்றிப் பறிக்கும் நாட்டாண் மைகள் -எல்லாமாகச் சேர்ந்து ஒரே நெரிசல், பரபரப்பு, ஒடுங்கிய அந்தத் தெரு, இதையெல்லாம் தாங்க முடியாமல் மூச்சுத் திணறியது.
s அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 8
வழக்கம் போல் வியாபாரம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. மொத்த வியாபாரந்தான்.
அருமைநாயகம் நாலாம் குறுக்குத் தெரு, மலிபன் வீதி என்று மத்தியானம் வரை ஓடித்திரிந்தார். கடை கடையாய் ஏறி இறங்கினார். கமிசன் ஒன்றும் கொத்தவில்லை. முன்பெல்லாம் இப்படியா. மத்தியானத்துக்குள் பத்து இருபது என்று கைக்கு வந்து விடும்.
பணிஸ், டீ, பீடி என்று கொண்டு வந்த ஒரு ரூபாயும் கரைந்து விட்டது.
அருமை நாயகத்துக்கு ஒரு சோர்வு. கொட்டாஞ்சேனையை நினைத்துக் கொண்டார். "பின்னேரம் அங்கு போகிறதுக்கு முன்னாலே ஏதாவது கையிலை பிடித்துப் போட வேணும் ' என்று மனசுக்குள் அசைபோட்ட வண்ணம் திரும்பவும் நாலாம் குறுக்குத் தெருவுக்குள் இறங்கினார்.
நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஏதோ நினைத்தவராய் ஒரு கடைக் குள் புகுந்தார். மேசையில் இருந்த முதலாளியை நெருங்கினார். 'ஒன்னும்
இல்லையா? இதுவரை சுத்திச்சுத்திக் காலும் அலுத்துப் போச்சுது. ஒன்றும்
கிடைக்கேல்லே. ? உங்களிட்டே இருக்காமே, விடாது பார்த்துச் செய்யுங்க"- அருமை நாயகத்தின் குரல் கெஞ்சியது. r
மேசையில் இருந்த முதலாளி சற்று யோசித்தவாறு அருமைநாயகத்தைப்
பார்த்தார். பிறகு அவரை நெருக்கமாக அருகில் வைத்துக் கொண்டு காதுக்குள் கிசுகிசுத்தார். "நீர் இதோட ஐந்தாவது முறை இன்றைக்கு வந்து விட்டீர் சரி, மல்லி இருபது . இருக்குது. விஷயம் பிளாக் என்கிறதை மனதில் வைத்துக் கொண்டு காரியத்தை முடியும். உம்ம தொழிலிலே நீர் இறுக்கமாய் இல்லாமே தண்ணியைப் போட்டுக் கொண்டு பிசத்தித் திரியிறகினாலேதான் உம்மை யாரும் விரும்புகிறதில் லே. மனசில் வைத்திருக்க வேண்டியதை வாயில் வைத்திருக்காமே- அதாவது நமது வட்டாரத்துக்கு வெளியிலை வைத்துக் கொண்டு திரியாமே விஷயத்தை முடிக்கப் பாரும்' என்று சொல்லி அவரு டைய கையைப் பிடித்து தன் கையையும் அதனுடன் சேர்த்து கைலேஞ்சியால் மூடி விரல் பாசையினால் விலையைக் கூறிவிட்டு கைலேஞ்சியை எடுத்தார்.
அருமைநாயகம் வேகமாகவே தலையை ஆட்டி விட்டு கடையிலிருந்து வெளியேறினார். பின்னேரம் வரை -வியாபாரம் ஓய்ந்து கடைகள் எல்லாம் பூட்டப்படும் வரை நாயாய் அலைந்தார். விலை சந்திக்கவில்லை. இந்தக் கொமிஷன் தொழிலில் அவருக்குள்ள முப்பது வருஷ அனுபவம் கூட அன்று கைகொடுக்கவில்லை. பலத்த ஏமாற்றத்துடன் தளர்ந்த அவர் கடைசியாக அந்த முதலாளியிடமே கெஞ்சி மன்றாடி இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு கொட்டாஞ்சேனையை நோக்கி விரைந்தார்.
இடையில் சில தாமதங்கள். அதையும் பார்த்துக் கொண்டு செட்டித்தெரு வுக்குள் புகுந்து கொச்சிக்கடைக்கு ஏறி கொட்டாஞ்சேனைக்கு வர, கதிரவன் கடலுக்குள் விழுந்து விட்டிருந்தான்.
சுபைர் இளங்கீரன் 6

கள்ளுத் தவறணைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரே சனக் கும்பல் தெரு ஓரத்திலுள்ள டேஸ்ட் கடைகளுக்குள்ளும் வெளியேயும் கூட சனம். ஆண்களும் பெண்களும் கருவாடு, இறால் வடை, சுண்டல், கிழங்கு றோஸ்ரர், மீன் பொரியல் வாசனையும் கள் நெடியும் தெரு முழுக்கச் சூழ்ந்திருந்தன. வாகனங்களின் இரைச்சலும் கள் வெறியின் இரைச்சலும் ஒன்றாய்ச் சேர்ந்து றோட்டை அமர்க்களமாக்கிக் கொண்டிருந்தன. தெரு ஒரத்திலும், பஸ் வந்து நின்று திரும்பும், டெர்மினஸ்ஸுக்கு முன்னால் புல் பரவியிருந்த இடங்களிலும் உச்சிக்கு ஏறிய போதையின் ஆட்டந் தாங்காது பலர் கும்பல் கும்பலாய் படுத்துக் கிடந்தனர். பெண்கள் கூட.
அவர்களுக்குள் எத்தனையோ கதைகள், எத்தனையோ ரசமான உரை யாடல்கள், குடும்பச் சச்சரவுகள், ஏமாற்றங்கள், முனிசிப்பல் அதிகாரிகளின் ஆர்ப்பாட்டங்கள், முறைப்புக்கள், சீட்டுக் காசு, சினிமாப்பாட்டு, கலந்து அடிபட்டன.
பெரும்பாலும், நகர சுத்தித் தொழிலாளர்களான அவர்களின் கிளப் அதுதான். கொழும்பு நகரத்தின் புரையோடிப் போன புண்ணை மூடாமல், மறைக்காமல் காட்டும் கிளப் அதுதான். தினமும் நகரைச் சுத்தமாக்கி, பங்களாக்களைச் சுத்தமாக்கி; பெரும் பெரும் கட்டிடங்களையும், கந்தோர் களையும், வர்த்தக ஸ்தாபனங்களையும் சுத்தமாக்கி, இன்னும் எதை எதையோ சுத்தமாக்கி உழைத்துக் களைத்த அவர்கள் மாலையிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணி வரை இந்தச் சாக்கடையில் தான் வந்து விழுந்து ஓய்வு கொள்கிறார்கள். எத்தனையோ பேர் விடியும் வரை ஓய்வு கொள்கிறார்கள் -அவர்களுக்கு வீடுதான் ஏது!
கள்ளுத் தவறனை ஒன்றுக்குள் கும்பலோடு கும்பலாக நின்றிருந்த அருமை நாயகமும் ஒரு போத்தல் கள்ளுடன் வெளியே வந்தார். தரையில் நான்கு கம்புகளை நாட்டி, அதற்குமேல் ஒரு பலகைத் தட்டை வைத்து டேஸ்ட் பலகாரங்களைப் பரப்பி வைத்திருந்தாள் ஒருத்தி. தட்டின் ஓரத்தில்இருந்த குழாய் விளக்கு புகையை கக்கிய வண்ணம் பதார்த்தங்களுக்கு வெளிச்சம் போட்டது. அருமைநாயகம் தன் வாடிக்கைக்காரியான அவளிடம் போய் ஓர் இறால் வடையும் கருவாட்டுத் துண்டும் கேட்டார்.
'முதலில் காசைப் போடப்யா. நேத்தும் முந்தா நாளும் வாங்கினதுக்கு இன்னும் காசு தரல்லியே. இன்னைக்குத் தாரேன்னியே. அதை வைச்சுட்டு வடையை எடு" என்று கத்தினாள் கடைக்காரி
"நாய் மாதிரி ஏன் குலைக்கிறாய்?" நான் கொழும்பை விட்டுப் போயிடு வேன் என்று நினைச்சா குலைக்கிறாய்? நான் போக மாட்டன். நான் போக என்டை ஊர் யாழ்ப்பாணம் இருக்குது. என் தகப்பனார் இங்கே வந்த காலந் தொட்டு நான் இங்கேதான். கொழும்பில் தான் சீவியம். கல்யாணம் முடிச்சது, பிள்ளை குட்டிகள் பெற்றது எல்லாம் இந்தக் கொழும்பில் தான். வீடு கூட
7 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 9
கொம்பனித் தெருதர்ன், பயப்படாதே, காசைக் கொண்டு போகமாட்டன்' என்று கூறி விட்டு நிலத்தில் அமர்ந்தார்.
'சரிதான்யா. உன்னோட சரித்திரம் எனக் கெதுக்கு? எனக்குத் தேவை காசு. இந்தா. காசை எடு' என்று வடையை நீட்டினாள்.
'நீ இந்தியப் பொண்ணில்லே. கொஞ்சம் யோசிச்சுப் பேசு. நானும் ஒரு இந்தியப் பெண்ணைத்தான் - அதுதான் நீங்களெல்லாம் இந்திய வம்சா வளிதானே. உங்களைப் போல ஒருத்தியைத்தான் நானும் கல்யாணம் முடிச்சேன். சும்மா அல்ல, காதலிச்சு, அவ போய்ச் "சேர்ந்துட்டா, ஊருக் கல்ல- சுடுகாட்டுக்கு. ம். இன்னொரு வடை தா. அந்த வகையிலே நீயும் எனக்கு உறவுதான். நீ எனக்குத் தரலாம்.
'சரிதான்யா. இப்ப என்னிலே கண்ணைப் போடுறியா..? இந்த வய சிலை.?' என்று சிரித்துக் கொண்டே இன்னொரு வடையைக் கொடுத்தாள்.
அருமை நாயகமும் போதைக் கிறுக்கில் சிரித்தார். 'நான் கண்ணைப் போடேல்லே. என்னை உனக்குச் சரியாய் விளங்காது. போடுறதாய் இருந்தால் அவ போய்ச் சேர்ந்த உடனேயே போட்டிருப்பேன். அவ போனதோடு சரி, ஒருத்தியையும் நான் தொடேல்லே. கொஞ்சம் சுண்டல் எடு'
அருமை நாயகம் வடையையும் கடித்து முடித்து விட்டு கையிலிருந்த போத்தல் கள்ளைக் கொஞ்சம் காலியாக்கினார். ஏற்கனவே இரண்டு போத்தல் உள்ளுக்கு இறங்கியிருப்பது மனுஷனுக்கு நல்ல உஷார், டேஸ் டுக்குச் சுண்டலை எடுத்து வாயில் போட்டார்.
'எனக்கு எத்தனை பிள்ளைகள் தெரியுமோ..? ஆனந்தி, ராஜநாயகம், வசந்தி, காந்தி, செல்வம் என்று ஆணும் பெண்ணுமாய் தப்பாமே பெற்றுத் தந்து போட்டுப் போய்ட்டா. எனக்கு இனி பெண்ணாசை, பிள்ளையாசை யெல்லாம் எதுக்கு?'
மிஞ்சியிருந்த கள்ளையும் காலியாக்கிவிட்டு ஒரு நீண்ட ஏப்பத்தை விட்டார். தலைக்குள் ஊறத் தொடங்கிவிட்டது. "இன்னும் ஒரு போத்தலுக்கு இடமிருக்குது. ஆனா காசுதான் இல்லே. ' கடைக்காரி கொஞ்சம் விழித்துக் கொண்டாள். 'இன்னும் ஊத்தக் காசு இல் லேங்கிறே. அப்ப எனக்கும் இல்லைத்தானா?' இரைந்தாள்.
'கூச்சல் போடாதே. நான் தருவேன். இன்னைக்கு இல்லாட்டியும், நாளைக்கு, மற்ற நாளைக்கு இங்கே கேட்டுப்பாரு. நான் யாருக்கும் கடன்கார னில்ல. நீ நேத்து வந்தவள். உனக்குத் தெரியாது. எனக்கு இங்கே நாப்பது வருஷம் சேவிஸ் இருக்குது. டேஸ்ட் கடைக்காரங்கள் எத்தனை பேரை நான் கண்டு விட்டேன். ஒருவனுக்காவது ஒருத்திக்காவது நான் கொடுக்குமதி யில்லே. ஒரு மிளகாதா.
சுபைர் இளங்கீரன் 8

முகத்தைச் சுளித்துக் கொண்டு ஒரு பொரித்த மிளகாயைக் கொடுத்தாள். அருமை நாயகம் அதை வாய் ஊற கடித்து நாக்கை மேலண்ணத்தினாலும், கீழண்ணத்தினாலும் தட்டி சப்பு கொட்டினார். உறைப்பு அவருக்கு வலுத்த டேஸ்டாயிருந்தது.
'நாற்பது வருஷம் சேவிஸ் என்று சொன்னேனே. கமிஷன் பிஸ்னஸ் ஸிலே நான் எவ்வளவு சம்பாதிச்சேன் தெரியுமா?. எல்லாத்தையும் இங்கேதான் கொட்டினேன். குதிரையிலும் போட்டன்தான். இல்லேன்னு சொல்லேல்லே, ரேஸ் என்ன. குது என்றால் எத்தனை இருக்குது உனக்குத் தெரியுமா..? நான் சம்பாதிச்சதெல்லாம் இப்படிப் போய்ட்டுது, என் பெண்சாதி என்னிடம் ஒரு சுகத்தையும் அனுபவிக்கேல்லை என்று அடிக்கடி சொல்லுவா, என்காசையெல்லாம் இப்படி கள்ளு, டேஸ்டு, ரேஸ் என்று செலவழிச்சுப் போட்டதாகத்துவா. ஆனாநான் கவலைப்படுகிறதில்லே. இப்ப நம்ம பாடு டல். சில நேரத்திலே கள்ளுக்கும் காசு கிடைக்கிறதில்லை. ரேஸ0க்கும் கூடத்தான். வீட்டிலே என் மூத்த மகளிட்டேதான் அடிச்சுப் பிடிச்சுப் பறிக்கிறது. மகன் இருக்கிறான் ராசநாயகம். ஒரு வேலையுமில்லாமே சும்மாதான் சுற்றித்திரிகிறான். ஆனா சில நேரத்திலே காசு புழங்கத்தான் செய்யுது. எனக்குத் தரமாட்டான். அக்காவுக்கு அதுதான் என் மூத்த மகளுக்கு மட்டுந்தான் கொடுப்பான். என்றாலும் நீ பயப்படாதே. நான் தருவேன்.'
"போதுமய்யா, உன் சுய புராணத்தை நிறுத்து. உன்னிட்டே. நான் இதைக் கேட்கேல்லே. காசுதான் கேட்கிறேன். கணக்கு எத்தனை தெரியுமா உனக்கு.?' எரிச்சலோடு கேட்டாள். -
'எனக் கென்ன தெரியும். நீ சொல்கிறதுதான் கணக்கு. கையிலே கிடைச்சதும் கரெக்டா கொண்டு வந்து தருவேன். பயப்பிடாதே. கந்தசாமி அங்காலே நிப்பான். போனா. அவனிட்டேயும் ஒரு போத்தல் கிடைக்கும். காசு தந்தா உனக்கும் தருவேன்.' என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.
அவர் இப்படித்தான் இனி வீட்டுக்குப் போக மணி எட்டும் செல்லும்;
* * * * *
குளித்து விட்டு வந்த ஆனந்திக்கு சுபத்திரா வந்து விடப் போகிறாளே என்ற பரபரப்பு, அவசர அவசரமாகத் தலையைத் துடைத்து வாரிப் பின்னி விட்டு உடைகளை அணிவதற்காக அலுமாரியைத் திறந்து துளாவத் தொடங்கினாள். எல்லாப் புடவைகளையும் ஒதுக்கி விட்டுக் கடைசியில் ஒரு றோஸ் சேலையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு ஒரு நீண்ட பெருமூச்சுதான் சோகத்துடன் வந்தது. அந்தச் சோகத்தை உள்ளுக்குள் அமுக்கி விட்டு அந்தச் சேலையையும் ஏதோ ஒரு சட்டையையும் அணிந்து கொண்டு முகத்திற்கு சிறிது பவுடர் போடுவதற்காக
9 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 10
டின்னை எடுத்துக் கையில் சரித்தாள். பவுடர் கொட்டவில்லை. டின்னைக் கையில் தட்டு தட்டென்று தட்டினாள். தூசியை போல் பவுடர் உள்ளங்கையில் படர்ந்தது. சலிப்புடன் டின்னைக் கீழே போட்டு விட்டு கண்ணாடிக்கு முன்னால் நின்று பவுடர்த் தூசி படர்ந்த கையால் முகத்தை தடவி விட்டு நெற்றிக்குத் திலகமிட்டாள்.
மணி ஐந்தல்ல. ஐந்தேகால். அப்போதுதான் 'ஆனந்தி ரெடியா' என்று கேட்டவாறு சுபத்திரா வந்தாள்.
'ஒரு நிமிஷம். ' என்று சொல்லிவிட்டு உடையையும் நெற்றியையும் இறுதியாக ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு 'மணி ஐந்தாகிவிட்டதா?’ என்று கேட்டபடி முன் தட்டுக்குள் வந்தாள் ஆனந்தி.
'ஐந்தேகால், பஸ் லேட்'
“ஆறு மணிக்குத்தானே..?'இன்னும் முக்கால் மணித்தியாலம்இருக்குதே?" 'சரிதான் போ. உனக்கே பஸ் பிரச்சினை தெரியாத மாதிரிக் கேட்குகிறியே! ஆறு மணிக்கென்றால் ஒரு மணித்தியாலம் முந்திபஸ் ஹோல்டில் நிற்க வேணும். பஸ் நமக்காக ஓடவில்லை. பஸ்ஸுக்காக நாம் ஓடுகிறோம். சி.டி.பி. அந்த லட்சணத்தில் இருக்குது" என்று கூறியபடி சுபத்திரா ஆனந்தியை மேலும் கீழும் பார்த்தாள். 'உன்நிறத்துக்கு இந்த றோஸ் சாரி அவ்வளவு மாட்சாக இல்லையே, ஆனந்தி, பச்சை, டார்க் புளு ஏதாவது உடுத்தேன்?" என்றாள்.
ஆனந்தி விரக்தியோடு மெல்லச் சிரித்தாள், 'என்ன மாட்ச் வேண்டி யிருக்குது அலங்கோலமாக இல்லாமல் ஏதாவது உடுத்திக் கொண்டால் சரி." 'உனக்கு எப்போதும் எதிலும், ஓர் அலட்சியம் தான். இந்தக் காலத்தில் அவலட்சணங்கள் கூட மாட்சாக உடுத்திக் கொண்டு தங்களை எடுப்பாகக் காட்டித்திரியுதுகள். ஆனால் நீ. உன் நிறத்துக்கும் அழகுக்கும் இப்படித்தான் டிரஸ் பண்றதா?”
'நான் ஏன் எடுப்பாக காட்ட வேணும்? மற்றவர் கண்ணுக்கு விகாரமாக இல்லாமல் உடுத்திக் கொண்டால் போதாதா?"
"கரக்ட், விகாரமாக இல்லாமல் பார்க்கிறதுக்கு குளுமையாக இருக்க வேணும். அதுக்குத்தான் சொல்றேன். கொஞ்சம் மாட்சாக இருந்தால் நல்லது இல்லையா? அதுவும் இண்டர்வியூவுக்குப் போகும் போது இது அவசியம். அதுக்காகத்தான் பச்சை, டார்க் புளு ஏதாவது உடுத்தேன் என்றேன்."
ஆனந்தியின் முகம் சற்று வாடியது. "சுபத்திரா. ?' என்றாள் குரல் கரகரக்க. அவள் விழிகளில் வினாவை ஏற்றிப் பார்த்தாள்.
"உனக்குச் சொன்னால் என்ன, உருப்படியாக என்னிடம் இருக்கிறது இந்த றோஸ் சாரி மட்டும்தான். வெளியே எங்கு போனாலும் இதையேதான் உடுத்த வேண்டியிருக்குது. அலுமாரியைத் திறந்து வேறு ஏதாவது ஒரு சேலை
சுபைர் இளங்கீரன் 10

இருக்கக்கூடாதா என்று துளாவினேன். இல்லை என்று தெரிஞ்சும் அப்படி ஒரு ஏக்கம். இந்த றோஸ்தான் திரும்பத் திரும்ப வந்தது. இதை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போது மனசுக்கு வேதனை தாங்க முடியேல்லே. அழுகைதான் வந்தது. அழவில்லை' சொல்லிவிட்டுச் சில நிமிடங்கள் மெளனமானாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் 'இது எனக்கு மாட்சாக இல்லை யென்றால் நான் வரவில்லை. என்னை மன்னிச்சுடு' ஆனந்தியின் தொண்டை துக்கத்தால் அடைத்தது, கண்கள் கலங்கின.
சுபத்திரா அவளைப் பரிதாபத்துடன் பார்த்தாள். 'சே. என்ன இது? உனக்கு விசர். இதுக்காக உனக்கு இவ்வளவு கவலை வேணாம். மாட்சாக இல்லாவிட்டால் பரவாயில்லே. இது அப்படி ஒன்றும் மோசமாயில்லை. சரி, சரி கிளம்பு' என்றாள்.
பஸ்ஸுக்கு நடந்து வரும் போது ஆனந்தி சொன்னாள், "எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை சுபத்திரா. வாழ்க்கையே கசந்த மாதிரி எதுக்காக உசிரோடு இருக்க வேணும் என்று தோன்றுது. சகோதரங்களை நினைச்சுத்தான் உடம்பில் மூச்சு நிக்குது."
'உனக்கு இந்த விரக்தி ஏன் என்று எனக்குத் தெரியும். ஆனால் உன்னுடன் பிறந்தவர்கள் இல்லாவிட்டால் இந்த விரக்தி உனக்கு வந்திருக்காது. அப்பாவைப் பற்றிக் கூடக் கவலை இருக்காது. நீ தனி ஆளாய் இருப்பாய். உனக்கு ஏதாவது ஒரு வழி செய்து கொண்டு வாழத்தான் செய்வாய். அதுவும் வாழ வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வாய், ' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்து லேசாய் சிரித்தாள் சுபத்திரா.
"நீ சொல்லுவது தப்பு. அப்படித் தனியா வாழ்ந்தாலும் இந்தக் கிழடு தேடி வந்து என்னுடன் ஒட்டிக் கொள்ளும். எப்போதும் கரைச்சல்தான். மனசுக்கு நிம்மதி இருக்காது."
'இல்லை அவருக்கு நீ இருக்கும் இடம் தெரியாமலே வாழ்வாய். அவருடைய தொல்லை தொடராமலிருக்க வெகுதூரம் போகவேண்டி இருந்தாலும் போவாய்."
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?" 'பொதுவாக மனுஷ இயல்பே அதுதான். வாழ்க்கையில் துன்பமும் துயரமும் தொடர்ந்து இருக்கும் போது தான் விரக்தி உண்டாகுது. அது இல்லாவிட்டால், அது சற்றுக் குறைந்திருந்தாலும் கூட விரக்தி வராது. வாழத்தான் மனசு சொல்லும்."
'எதுக்கெடுத்தாலும் நீதத்துவம் பேசுவாய் என்று தெரியும். ஆனால் என் கஷ்டங்களும் கவலையும் உனக்குத் தத்துவமாக இருக்க வேண்டாம். புண்பட்டுப் போய்க் கிடக்கும் என் மனசுக்கு உன் தத்துவங்கள் மருந்தாக இருந்தால் இப்போதென்ன, எப்போதும் எனக்காக நீ சொல்லும் தத்துவங்
11 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 11
களை யெல்லாம் விழுங்கி இருப்பேன்."
ஆனந்தி இப்படிச் சொன்னாலும், உள்ளுர அவள் அப்படி நினைக்க வில்லை. துயரத்தால் ஆழப்பதிந்த மனப்புண்ணைக் காலமென்னும் மருந்து தான் மாற்ற முடியும். இது தேறுதலுக்காகச் சொல்லும் வார்த்தைகளோ, தத்துவங்களோ அல்ல, என்பது அவளுக்குத் தெரியாத விஷயம். ஆனாலும் உண்மையில், சுபத்திரா இவ்வாறு ஏதாவது கூறினால், அவை தத்துவங்களோ இல்லையோ - அவற்றை விழுங்கி சற்று ஆறுதலுண்டாவது வழக்கம். இருந்தும், வேண்டுமென்றே இப்படிச் சொன்னாள்.
சுபத்திரா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை.
பஸ் தரிப்பில் இருவரும் வந்து நின்றார்கள். சுபத்திரா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.
'மணி என்ன?" என்றாள் ஆனந்தி.
'ஐந்தே முக்கால்'
"லேட்டாகி விடுமோ?" 'ம். என்று சில வினாடிகள் யோசித்த சுபத்திரா போய்க் கொண்டிருந்த டாக்ஸி ஒன்றை சட்டென்று மறித்தாள்.
"டாக்ஸியா..?' இன்னும் ஐந்து நிமிஷம் பஸ்ஸைப் பார்க்கலாமே?' 'முதலில் ஏறு சொல்கிறேன்" என்று கூறியவாறு கதவைத் திறந்தாள். இருவரும் ஏறி அமர்ந்ததும் 'கொள்பிட்டி' என்று டிரைவரிடம் கூறிவிட்டு ஆனந்தியின் பக்கம் திரும்பினாள். "ஆறுக்கு நிற்க வேணும். சி.டி.பி. காலை வாரி விட்டால் என்ன செய்கிறது? காலை வாரி விடுவதில் அதுக்கு இணை அதுதான்."
'சி.டி.பி. என்றால் உனக்கு எப்போதுமே இப்படியான அபிப்பிராயம் தான். 'எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தான். இது பொதுவான அபிப்பிரா யம், பொது அனுபவம். ஒரு இடத்துக்கு குறித்த நேரத்துக்குப் போவதாயிருந் தால் சி.டி.பி. யை நம்ம முடியுமா சொல்லு? அநேகமாக காலை வாரி விடுவது தானே அதன் வழக்கம்?"
'நீ பெரிய விமர்சனக்காரி என்று எனக்குத் தெரியும். போதும் நிறுத்து.' என்று சொல்லி லேசாய்ச் சிரித்தாள் ஆனந்தி.
கொள்பிட்டியில் இறங்க வேண்டிய இடத்தில் டாக்ஸியை நிறுத்தி அதை அனுப்பி விட்டு மணியைப் பார்த்தாள் சுபத்திரா. ஆறுக்கு ஐந்து நிமிஷம் இருந்தது. "கிட்டத்தட்ட கரெக்டா வந்து விட்டோம்' என்று சொல்லிக் கொண்டே தாங்கள் வரவேண்டிய விலாசம் சரிதானா என்று நிச்சயிப்பதற்காக
சுபைர் இளங்கீரன் 12

எதிரே இருந்த பங்களாவின் நம்பரைப் பார்த்தாள்.
'சரி இதுதான் வீடு, வா." என்று கேட்டைத் திறந்தாள். இருவரும் அந்த பங்களாவுக்குள் சென்றதும் கோலிங் பெல்லை அழுத்தி னாள் சுபத்திரா. சில வினாடிகளில் ஒரு வேலைக்காரப் பெட்டை வந்து 'யாரைப் பார்க்க வேணும்?' என்று கேட்டாள். 'ஐயா இருக்கிறாரா?' சுபத்திரா கேட்டாள். "இருக்கிறார்" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவள், சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து 'உள்ளே இருங்கள், ஐயா கூப்பிட்டதும் போகலாம்' என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
இருவரும் அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார்கள். "சுபத்திரா. ஒன்று கேட்க மறந்து விட்டேன். மனம் சரியாக இல்லாததால் மறதியும் கூட. வேன்ல விஷயமாக இண்டர்வியூவுக்கு போக வேண்டு மென்றால் ஒஃபிஸ்ஸ0க் கல்லவா போக வேணும் ? நாம் இப்ப, வீட்டுக் கல்லவா வந்திருக்கிறோம்?"
"அரசாங்க உத்தியோகமாயிருந்தாலும் சரி, அல்லது கம்பனி வேலையாக இருந்தாலும் சரி, இண்டர் வியூக்கள் பெரும்பாலும் முதலில் சம்பந்தப் பட்டவர்களின் வீட்டில்தான் நடக்குது. அப்போது தான் சம்திங் வாங்க வசதி. அவர்களை வீட்டில் கண்டு எல்லாம் பேசி முடித்துக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு ஒஃபிசில் இண்டர் வியூவுக்குப் போவது வெறும் சம்பிர தாயத்துக்குத்தான். இதுதானே இப்போது நடை முறை?"
'நாமும் அந்த நடைமுறைப்படிதான் இங்கு வந்திருக்கிறோமோ?' "கொஞ்சம் மாற்றம். என்னுடைய நண்பர் இந்தக் கம்பனி மனேஜரைக் கண்டு கதைத்த போது உன்னை வீட்டில் வந்து பார்க்கும் படி சொன்னாராம். ஆனால் சம்திங்குக்காக அல்ல'
'உனக்கு எப்படித் தெரியும்?" நானும் இதை அவரிடம் கேட்டேன். 'கொடுக்கத் தேவையில்லை. அவர் கேட்க மாட்டார். ஆனால் வீட்டுக்கு வந்து பார்க்கும்படி சொன்ன போது அதைச் செய்ய வேண்டியதுதானே, அதில் என்ன கஷ்டம்' என்றார். அதுக்குமேல் நான் ஒன்றும் கேட்கவில்லை."
ஆனந்தி சிறிது நேரம் மெளனமாயிருந்து விட்டு திடீரென்று "நிச்சயம் கிடைக்குமா?" என்றாள்.
'ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். ஆனால் ஏமாற்றத்துக்கும் சித்த மாயிருக்க வேணும்' என்று ஆனந்தியைப் பார்த்து புன்னகை பூத்தாள்.
ஆனந்தி அவளை விநோதமாகப் பார்த்தாள், 'என் சுபத்திரா விசித்திர
13 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 12
மானவள்" என்று தனக்குள் சொல்லியவாறு விழிகளைச் சுழற்றி பங்களாவை சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அது நவீன முறையில் கட்டப்பட்ட பங்களா. முன்னால் பச்சைப் பசேலென்று புல் பரவப்பட்ட முற்றம். ஆர்ச் வளைவில் கருங்கல் பரவிய நடைபாதை. கம்ப வுண்ட் மதில் ஒரம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் செடிகள் ஒரே மட்டத் துக்கு நறுக்கி விடப்பட்டிருக்கின்றன. உள்ளே சுவர் மெல்லிய மேக வர்ணத்தில் டிஸ்டம்பர் அடிக்கப்பட்டு சுத்தமாக பளிச்சென்றிருக்கிறது. விறாந்தையில் நவீனமான நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ஜன்னலுக்கும் கதவுக்கும் பூவேலை செய்யப்பட்ட வடிவான திரைச் சேலைகள் தொங்குகின்றன. உள்ளே ஹோல் லேசாய்த் தெரிந்ததை விட வேறொன்றும் தெரியவில்லை. பெரிய ஹோல், விசாலமான நாலைந்து அறைகள், பாத்ளும் இதர வசதிகள் எல்லாம் கொண்ட ஒரு பெரிய பங்களாதான் இது என்று எண்ணினாள் ஆனந்தி.
இந்த எண்ணத்துடன் தனது மூன்று தட்டு வீட்டை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளுக்குச் சிரிப்புதான் வந்தது. தன்னையுமறியாமல் சிரித்து விட்டாள்.
'என்ன சிரிக்கிறாய்?" -சுபத்திரா கேட்டாள். 'இல்லை, இந்தப் பங்களாவோடு என்னுடைய மூன்று தட்டு வீட்டை ஒப்பிட்டுப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது.
'நீ ஒரு மடைச்சி. இது என்ன கம்பனித் தெருவா, கொள்பிட்டி. நம்மைப்போல் நெருக்கப்பட்டவர்கள் வாழும் இடமா, வசதி படைத்தவர்கள் தமக்காக ஒதுக்கிக் கொண்ட இடமல்லவா? பங்களாக்கள் தான் இருக்கும். இதைப் போய் உங்கள் வீட்டோடு ஒப்பிடுவானேன்.'
"மடத்தனந்தான். மனசு இப்படி எத்தனை மடத்தனங்களை எண்ணுகிறது' என்று சொன்ன ஆனந்தி, "எங்கள் மூன்று தட்டு நரகத்தை நினைக்கும் போது இந்த பங்களா தேவலோகம் போல் இல்லையா?' என்றாள்.
'உண்மைதான் ஆனால், இந்தத் தேவலோகங்களில் பெரும்பாலும், அசுரர்கள்தான் வாழ்கிறார்கள்."
ஆனந்தி ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு "க்ளுக்' என்று சிரித்தாள். இதேசமயம் உள்ளே இருந்து வந்த வேலைக்காரப் பெட்டை 'ஐயா வரட் டாம்' என்றாள்.
இருவரும் உள்ளே போனார்கள்.
* * 等 * *
மூக்குக் கண்ணாடி, நடுத்தரமான உயரம், மங்கலான நிறம், அகன்ற முகம், சேட், சாறன், மேவி வாரி விடப்பட்ட தலை, ஐம்பது வயது மதிப்புஇப்படியாக ஹோலுக்குள் அமர்ந்திருந்த மனிதரைக் கண்டதும் சுபத்திரா
சுபைர் இளங்கீரன் 14

கம்பனி மனேஜர் இவர்தான் என்று நிச்சயித்துக் கொண்டாள். ஆனந்தியும் அப்படித்தான் நினைத்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்த மனேஜர் "நவரட்ணம் சொன்ன பெண் நீதானா?" என்று சுபத்திராவிடம் கேட்டாள்.
'இல்லை நான் சுபத்திரா. இவளுடைய சிநேகிதி. இவள்தான் அவர் சொன்ன ஆனந்தி' என்றாள் அவள்.
'ஓ..!" என்று ஆனந்தியை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்து விட்டு 'இருங்கள்' என்று சோபாவைக் காட்டினார், மனேஜர்.
மனேஜரின் விழிகள் ஆனந்தியின் மேல் பதிந்து மேலும் கீழும் மேய்ந்தன. சிலை போன்ற மேனி, பொன்னான நிறம், எழில் சிந்தும் முகம், ஆபரணங்கள் எதுவுமில்லாதிருந்தாலும் அழகான கழுத்து, மெழுகு போன்ற வழுவழுப்பான கரங்கள். மொத்தத்தில் இன்றைய நாகரிக அலங்காரம் ஒன்று கூட இல்லாமல் சிறிது வாடி மெருகு குலைந்தது போல் காணப்பட்டாலும் சற்று நின்று நிதானித்து பார்த்தால் ஒரு மோகனமான வடிவு.
தூசி படர்ந்த குத்து விளக்கு, துடைத்து துலக்கி வைத்து விட்டால்,
மனேஜரின் விழிகள் ஆனந்தியை விழுங்கிக் கொண்டிருந்தன.
இவர் என்ன ஆனந்தியை ரசிக்கிறாரா? - சுபத்திராவுக்கு எரிச்சலாயு மிருந்தது, சிரிப்பாயுமிருந்தது. அந்த மனேஜரின் ரசிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனேஜரின் பார்வை தன்னை மேய்வதைக் கண்டு ஆனந்திக்கு என்னவோ போலிருந்தது. என்ன செய்வது -வெட்கத்தால் வெதும்பிய வண்ணம் இருந்தாள்.
'lib..... உனக்கு என்ன வயது?" மெளனத்தைக் கலைத்து ஆனந்தியிடம் கேள்வியைப் போட்டார் மனேஜர்.
'இருபத்தியொன்று'
'எதுவரை படித்திருக்கிறாய்?"
'ஜீஸி.ஈ.முடித்து விட்டேன்'
'மீடியம் எது?"
"இங்கிலிஷ்'
'குட், கணக்கு எப்படி?"
'd
'வெரிகுட், எத்தனை 'சி'?
ஆறு'
A
15 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 13
'ம். வேறு என்ன தெரியும்?"
"டைப்பிங்'
"நீயாகக் கற்றுக் கொண்டதா? எங்கேயாவது படித்ததா?” 'படித்தது' 'ஸ்பீட் எப்படி?" "நூற்றி நாற்பது வரை' 'ம். ஷோட் ஹாண்ட் தெரியுமா?" "படிக்க ஆசை வசதியில்லை' 'வசதி ஏற்படுத்தித் தந்தால் படிக்கலாம், இல்லையா?" ஆனந்தி 'ஓம்' என தலையை ஆட்டினாள். 'உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?" 'இல்லை'
"ஏன்?"
"அப்பா அம்மா இருக்கிறார்களா?' 'அம்மா இல்லை; அப்பா இருக்கிறார்கள்?" "அவர் என்ன செய்கிறார்?' 'வயசாகி விட்டது, வீட்டில் இருக்கிறார்' "எத்தனை வயது?" 'அறுபதுக்கு மேலிருக்கும்' 'அறுபது ஒரு வயதா?". இதுக்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்?" 'கமிஷன் ஏஜன்ட்” 'உனக்கு அண்ணன், தம்பி, சகோதரிகள், இருக்கிறார்களா?" 'இரண்டு தம்பிமார், இரண்டு சகோதரிகள்' "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" 'மூத்த தம்பியும் தங்கச்சியும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். மற்றவர்கள் படிக்கிறார்கள்'
"இதுக்கு முன் எங்கே வேலை செய்தாய்' 'பெட்டாவிலிருந்த ஏ.டி.ஆரில்' 'ஒ. குட், எத்தனை வருஷம்?" 'இரண்டரை வருஷம்"
சுபைர் இளங்கீரன் 16

அவர் கேள்விகளை இத்துடன்நிறுத்திக் கொண்டு சுபத்திரா பக்கம் திரும்பி அவளை ஒருகணம் ஊடுருவிப் பார்த்தார். அவள் ஆனந்தியைப் போல் இல்லாவிட்டாலும் அவளிடம் ஒரு வசீகரம் இருந்தது. அந்த வசீகரத்தை சுபத்திராவின் அகன்ற பெரிய அழகான விழிகள் பெரிதுபடுத்தின. அந்த விழிகள் ஆனந்திக்குக் கூட இல்லை தான்.
'நீ என்ன செய்கிறாய்?" - அவரிடமிருந்து கேள்வி வந்தது. "என்னை விசாரிக்கிறது உங்களுக்கு நாகரிகமாய் இருக்குதா?' என்று வெடுக்கென கேட்க வேண்டும் போலிருந்தது சுபத்திராவுக்கு. ஆனந்திக்காக வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, "நான் டீச்சர்' என்றாள்.
"குட். உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா" சுபத்திரா பதில் சொல்லாமல் விழிகளில் அனல் பறக்க அவரைப் பார்த் தாள். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, அசட்டுச் சிரிப்புடன் 'ஒல்ரைட்.. நான் நவரட்ணத்திடம் சொல்லி அனுப்பு கிறேன். நீங்கள் போகலாம்' என்று கூறிவிட்டு எழுந்தார்.
சிநேகிதிகள் இருவரும் பங்களாவை விட்டு வெளியே வந்து கோல் றோட்டை நோக்கி மெளனமாக நடந்தார்கள். அந்த மெளனத்தைக் கலைத்தாள் சுபத்திரா. "உனக்கு எரிச்சலாய் இருந்திருக்கும் இல்லையா?"
'எரிச்சலா..? எழுந்து ஓடவேண்டாமா என்றிருந்தது. இது என்ன கேள்வி, என்ன விசாரணை சம்பந்தமில்லாத கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டு. இது என்ன இண்டர்வியூவோ?' ஆனந்தி சலித்துக் கொண்டாள்.
'இதுவும் ஓர் இண்டர்வியூதான்' என்று சிரித்துக் கொண்டே சொன்ன சுபத்திரா 'கேள்விகள் இருக்கட்டும், அதுக்குமுன் உன்னை மேலும் கீழும் கண்ணால் அளந்தானே மனுஷன். அதுதான் எனக்கு எரிச்சலாயிருந்தது; வேடிக்கையாயுமிருந்தது'
'எனக்கு அவமானமாயும் அருவருப்பாயுமிருந்தது. என்ன செய்யிறது. இதையெல்லாம் காட்டிக் கொள்ள முடியுமா என்று அடக்கிக் கொண்டேன்.' "பெண்களை ரசிப்பதில் ஆண்களுக்கு ஒரு வெறி சமய சந்தர்ப்பங்களைக் கூட கவனிக்கமாட்டார்கள். என்னைக்கூட விட்டு வைக்கவில்லை அந்த மனுஷன்"
"நானும் கவனிச்சேன். நீயும் கண்ணை வெட்டாமல் பார்த்தியே? ‘'வேணுமென்றுதான் அப்படிப் பார்த்தேன். எதுக்காகத் தலையைக் குனிந்து கொள்ள வேணும்? நாமும் விட்டுக் கொடுக்காமல் நேருக்கு நேர் பார்க்க வேணும். முகத்தைக் குனிவதும் வெட்கப்படுவதும் அசட்டுத்தனம். இப்படி நமது பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறதால்தான் இந்த ஆண்களுக்கு
17 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 14
நம் மீது எத்தனையோ விதமான அநாகரிகமான, அருவருப்பான துணிச்ச லெல்லாம் வருகுது'
'என்னைக் கேட்டால் ஆண்களை விட உனக்குத்தான் துணிச்சல் கூட என்பேன். இல்லாவிட்டால் அப்படிப் பார்த்திருப்பியா?' ஆச்சரியத்தோடு கேட்டாள் ஆனந்தி. சுபத்திரா சிரித்தாள்.
உரையாடிக் கொண்டே கோல் றோட்டுக்கு வந்து பஸ்ஸுக்காக நின்றார் கள். அகன்று நீண்டு கிடந்த கோல் றோட் எப்போதும் போல் கலகலப் பாயிருந்தது. பஸ்கள், லொறிகள், கார்கள், வித விதமாய் வரிசை வரிசையாய் ஊர்ந்து கொண்டிருந்தன. கோல் பேஸ் வரை வீதியின் மத்தியில் போடப் பட்டிருந்த மின் வெளிச்சம் உதாரணம் காட்டியது போலிருந்தது.
ஆனந்தி தெருக்காட்சியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், "இந்த மனுஷனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டாள்.
'இப்படிக் கேட்டதையும், பார்த்ததையும் வைத்துக் கொண்டு முடிவு கட்ட ஏலாது. இப்படியான கேஸ்கள் எத்தனையோ உண்டு. தாங்கள் பெரிய புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள் என்று கருதிக் கொண்டு அசட்டுத் தனமாக நாகரிகமில்லாமல் நடந்து கொள்வார்கள். என்னைக் கூட இண்டர்வியூ பண்ணப் பார்த்தார் பார். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? கண்ணில் நெருப்பை வைச்சு அந்த மனுஷனைப் பார்க்காதிருந்தா என்னையும் கேள்விகள் போட்டு துளைத்திருப்பார். இது எந்த விதமான கேஸ் என்கிறது போகப் போகத்தான் தெரியும்.' s
"எப்படியாவது இருந்து தொலைக்கட்டும். ஆனால் எனக்கு ஒரு வேலை தந்தால் போதும்' என்று சொல்லி நிறுத்தியவள் சில வினாடிகள் கழித்து, 'ஏன் சுபத்திரா முடிவை நேரில் சொல்லியிருக்கலாமே, நவரட்ணம் எதுக்கு?' என்று கேட்டாள்.
"பெரிய மனுஷத்தனம் என்று இருக்குது பார். அதிலே இதுவும் ஒன்று. வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்றது, சொல்லி அனுப்புகிறேன் என்கிறது. இன்னொரு சமயம் வந்து சந்திக்கச் சொல்றது இதெல்லாம் அதிலே அடங்கும். தங்கள் அந்தஸ்து, கெளரவத்துக்கெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்ள வேணும், பேசவேணும் என்கிறது தாங்களாய் எடுத்துக் கொண்ட இலக்கணம். இவரும் பெரிய மனுஷனல்லவா லோறன்ஸின் மனேஜராயிற்றே"
'உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?' என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் ஆனந்தி. 'அனுபவம்' "உனக்கு இந்த மாதிரி அனுபவமெல்லாம் கிடைச்சுதா?"
"எத்தனையோ..?"
சுபைர் இளங்கீரன் 18

"இதையெல்லாம் எனக்கு நீ சொல்லவில்லையே?"
"எல்லாத்தையும் உடனே சொல்ல முடிகிறதா? சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதுதான் அதையெல்லாம் அவிழ்க்க வேணும்.'
"எப்படியோ. ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொண்டு உன் அனுபவங்களையெல்லாம் எனக்கு அவிழ்த்துக் கொட்டு. அப்பதான் என் மனசு அடங்கும். அவ்வளவு ஆவலாயிருக்குது' என்று கூறிவிட்டு மீண்டும் றோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிது நேரம், பிறகு திடீரென்று 'மனேஜர் நவரட்ணத்திடம் என்ன சொல்லுவார்?' என்று கேட்டாள்.
'வருகிற முதலாந் தேதியிலிருந்து உன்னை வேலைக்கு அனுப்பும்படி சொல்லுவார்."
'அவ்வளவு நம்பிக்கையா உனக்கு?"
'நம்பிக்கை தான் இருந்து பாரேன். உனக்கு பஸ் வருகுது'
'நீ என்ன செய்யப் போகிறாய்?"
'நான் வீட்டுக்குப் போகிறேன்."
பஸ் வந்தது. ஆனந்தி ஏறிக் கொண்டே "நாளைக்கு நீ வீட்டுக்கு வருவாய் தானே?’ என்றாள்.
சுபத்திரா ஓம் என்று தலையை ஆட்டினாள்.
பஸ் நகர்ந்தது. ஆனந்தியை அனுப்பிவிட்டு தான் போகும் பஸ்தரிப்பை நோக்கி நடந்தாள் சுபத்திரா.
* 静、娜 鲁。静
வறுமையும் அதனால் எழுந்துள்ள விசாரமும் வாட்டி வறுக்கும் ஆனந்திக்கு சுபத்திராவின் ஆதரவும் அன்பும் இல்லாவிட்டால் அவளுக்கு உண்மையி லேயே பைத்தியம் பிடித்திருக்கும். முன்பு சுபத்திரா வீட்டார் சேர்ச் வீதியில் இருந்த போது இருவருக்கும் சிநேகம் உண்டாயிற்று.
இரத்த உறவை விட நட்பினால் வளர்ந்த உறவுதான் நெருக்கமானது, வலிமையானது என்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கிய அவர்கள் உயிருக் குயிராய்ப் பழகினர். சுபத்திரா வீட்டார் சேர்ச் வீதியை விட்டு தெஹிவளைக் குப் போன பிறகும் வாரத்தில் இரண்டு மூன்று தடவையாவது ஆனந்தியின் வீட்டுக்கு வந்து போவது தவறாது.
முன்பும் சுபத்திரா பெரும் முயற்சி செய்து இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு வியாபார நிறுவனத்தில் வேலை எடுத்துக் கொடுத்தாள். இடையில் அந்த வியாபார நிறுவனத்தை மூடி விட்டு அதன் முதலாளிகள் தமது தாயகம் போய் விட்டார்கள். ஆனந்தியின் வேலையும் அத்துடன் போய்விட்டது. அதன் பிறகு இப்போதும் இரண்டாவது தடவையாக பெரு முயற்சி செய்து கொண்டிருந்
19 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 15
தாள். பலிப்பதாயில்லை. கடைசியில் தனக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைக் கூட செய்ய வேண்டியிருந்தது.
தன் தோழிக்காக சுபத்திரா அதைச் செய்தாள். அது சம்பந்தமாகத் தான் ஒரு கம்பனி மனேஜரைப் போய்ப் பார்த்தார்கள். ஆனால் தான் செய்த அந்தப் பிடிக்காத காரியத்தை சுபத்திரா ஆனந்திக்குச் சொல்லவில்லை.
* * * * 第
கபைர் இளங்கீரன் 2)

இரண்டாவது அத்தியாயம்
பத்திரா வேலையைப்பற்றி நம்பிக்கையுடன் சொன்னாலும் *ஆனந்திக்கு மனம் நிம்மதிப்படவில்லை. அந்த மனேஜர், 獸 தொடுத்த கேள்விகள் எதையுமே சிந்தையில் போட்டுக் தி கொள்ளவில்லை. அவர் நவரட்ணத்திடம் என்ன சொல்லு E. வாரோ என்று மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சுபத்திராவையும் நாலைந்து நாட்களாகக் காணவில்லை. அவள் ஏன் வரவில்லை என்ற மனசு வேறு தவித்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் சுபத்திரா வந்தாள். அவள் சும்மா வரவில்லை. முகத்தில் புன்னகையும் கையில் பார்சலுமாக வந்தாள்.
'என்னடி இது. ? மறுநாள் வருவதாய்ச் சொல்லிவிட்டுப் போனவள், நாலைந்து நாளாய் உன் தலையை இந்தப் பக்கமே காணோமே! எங்கே போனாய்? என்ன நடந்தது? உன் நண்பரிடம் மனேஜர் என்ன சொன்னா ராம்?' என்று பரபரத்தாள்.
'அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு நீ எப்ப பார்ட்டி வைக்கப் போறாய்? அதைச் சொல் முதலில்?"
ஆனந்திக்கு அப்போது தான் மனம் அடங்கியது. 'ஓ. அப்ப நல்ல சேதிதான், போலிருக்குது?" என்று முகம் மலரக் கேட்டாள்.
'நான் உனக்கு என்ன சொன்னேன். முதலாந் திகதி வேலைக்கு வரச் சொல்லுவார் என்றேன். ஞாபகமிருக்குமே?"
21 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 16
'நீ சாத்திரம் சொல்றதிலே கெட்டிக்காரிதான். சும்மாவிடு' "உன்னைவிட்டிட்டு நான் என்ன செய்யிறது, சரி, சரி இந்தா" பார்சலை கொடுத்தாள் சுபத்திரா. ‘என்னது?" 'பிரித்துப் பாரேன்?" பார்சலைப் பிரித்தாள் ஆனந்தி. மூன்று புதுச் சேலைகளும் சட்டைப் புடவைகளும் இருந்தன.
'இதெல்லாம் என்ன?" ‘தெரியேல்லியா?" "தெரியுது, தெரியுது. அதுதான் கேட்கிறேன்." 'உன்னிடம் உருப்படியாய் ஒரு றோஸ் சாரிதானே, இருக்குது? வேலைக்குப் போக இது வேண்டாமா?"
'அதுக்காக' "அதுதான் எடுத்தேன். நீ வேலைக்குப் போவதாயிருந்தால் உனக்கு இரண்டு மூணு சாரியாவது இருக்க வேணுமே என்று யோசித்துக் கொண் டிருந்தேன். நல்லவேளை நேற்று எனக்குச் சம்பளம். அது கையில் கிடைச் சுதோ இல்லையோ. முதல்லே ஷொப்பிங்குக்குத்தான் போனேன். உனக்கு மாட்சான கலராகப் பார்த்து எடுத்தேன்."
ஆனந்தி சுபத்திராவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில்தான் எத்தனை உணர்ச்சிகள், அர்த்தங்கள் சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தியின் விழிகளில் பொலபொல என கண்ணீர் வழிந்தது.
"ஏன் அழுகிறாய்?" என்று சிறிது திகைப்புடன் கேட்டாள் சுபத்திரா. 'நீ எனக்குச் செய்யிறதையெல்லாம் பார்க்கும் போது. எனக்கு என்ன சொல்கிறதென்றே தெரியேல்லே, மனசெல்லாம் கரைந்து அழுகைதான் வருகுது. தரித்திரம் பிடித்த என்னிடம் இப்படி அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொட்டி ஏன் என்னைத் திணறடிக்கிறியோ..?"
சுபத்திரா கலகல எனச் சிரித்தாள். 'போடி பைத்தியம். இதுக்காக யாரும் அழுவார்களா? சரி, சரி எனக்கு "டீ" வேணும் கொண்டுவா?' என்று ஆனந்தியை திசை திருப்பினாள்.
ஆனால், ஆனந்தி 'நீசெய்யும் இந்த உதவிக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ.." என்று சொல்லி, கண்களைத் துடைத்தாள்.
"பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி சுயநலம் நிறைஞ்சது. அது உதவியல்ல. ஒருவகைப் பண்டமாற்று வியாபாரம் என்னைச் சுயநலக் காரியாகவோ, பண்டமாற்றுக் காரியாகவோ, வியாபாரியாகவோ ஆக்கி
சுபைர் இளங்கீரன் 22

விடாதே கண்ணு.! போ. போய் டீயைக் கொண்டு வா."
'போதுமடி உன் தத்துவம்" என்று சொல்லிவிட்டு தேனிருக்காக உள்ளே திரும்பும் போது வசந்தி தேனிருடன் அங்கு வந்து விட்டாள்.
"ஒ. நீயே கொண்டு வந்திட்டியா? தாங்க்ஸ் என்று சொல்லி அதை வாங்கியவள் "இனி வீட்டு வேலையெல்லாம் உன் தலையிலேதான். அக்கா வுக்கு வேலை, வெளியே' என்றாள் சிரித்தபடி,
"இங்கே அப்படி ஒன்றும் கிழிக்கிற வேலை இல்லே. ஒருநேரம் சமையல், ஒரு நேரம் பட்டினி, ஒரு நேரச் சமையலிலும் ஒரு கறிதான். அதுவும் சில நாளில் சம்பல்' என்று ஒரு வெறுப்புடன் கூறிவிட்டு கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று தலையை வாரினாள் வசந்தி.
அவளை இரக்கத்துடன் பார்த்தாள் சுபத்திரா. வசந்தி, ஆனந்திக்கு இளையவளாயிருந்தாலும் அக்காவைப் போலவே கிட்டத்தட்ட வளர்ந்திருந் தாள். அவள் ஆனந்தியைப் போல சிவப்பல்ல. சுபத்திராவைப் போல மாநிறம். ஆனால் கவர்ச்சியான தோற்றம். அதில் அவளுக்கு லேசான பெருமையும் கூட. அதனால் தன்னை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். அதைப் போலவே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற தாகமும் அவளுக்கு மிகுதியாக இருந்தது. அந்தத் தாகத்தை தீர்க்க முடியவில்லை. இது அவளை உறுத்திக் கொண்டே இருந்ததால் யார் எதைக் கேட்டாலும் எரிச்சலோடும் வெறுப்போடும் தான் பதில் சொல்லுவாள். இதையெல்லாம் சுபத்திரா நன்கு அறிவாள். வசந்தியிடம் உள்ள இந்தச் சுபாவத்தை அவள் ஒருகுறையாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போதும் அவள் வெறுப்போடு சொன்னதை பொருட்படுத்தாமல் "இனி அந்தளவுக்கு இருக்காது வசந்தி அக்காவுக்கு வேலை கிடைத்து விட்டது. மூன்று நேரமும் வயிறு நிறைய தடை இருக்காது என்றாள்.
ஆனந்திக்கு வேலை கிடைத்தாலும் அதனால் தன் ஆசைகள் நிறைவேறப் போவதில்லை என்று அவள் நினைத்தாளோ, என்னவோ அவள் அந்தச் செய்தியில் உற்சாகமோ மகிழ்ச்சியோ கொள்ளாமல் 'அக்கா முந்தி வேலை யிலிருந்த போதும் மூன்று நேரமும் வயிறு நிறையேல்லியே!" என்று திரும்பிப் பார்க்காமல் போனாள்.
சுபத்திரா ஆனந்தியை கேள்விக்குறியுடன் பார்த்தாள். "அவள் அப்படித்தான் மூன்று நேரமும் வயிறு நிறையத் தின்ன வேணும். நாக்குக்கு ருசியானதையெல்லாம், மனசுக்குப் விருப்பமானதையெல்லாம் வாங்கி வாயில் போட்டுக் கொள்ள வேணும் என்ற துடிப்பு. அவளுக்கு மற்றவர்களைப் பற்றியோ, நமது இல்லாமையைப் பற்றியோ துளிகூடக் கவலை இல்லை. இவளுடைய இந்த ஆசைக்கெல்லாம் ஈடுகொடுக்க இங்கே என்ன வசதி இருக்குது, சுபத்திரா சொல்லேன்?' என்றாள் ஆனந்தி.
23 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 17
வசந்தி சட்டெனத் திரும்பி அக்காவைப் பார்த்தாள். 'என்னைப் பற்றித் தான் உனக்குக் குறை. எனக்கு வயிறு என்று ஒண்னு இல்லாட்டி ஒருநேர மென்ன, மூணு நேரமும் சும்மா இருப்பேன்; நாக்கு ஒண்ணு இல்லாட்டி ருசி யாக் கேட்க மாட்டேன்; மனசு ஒண்ணு இல்லாட்டி ஆசையும் இருக்காது. இதை யெல்லாம் ஒப்பரேஷன் பண்ணி எடுத்துவிடு, உனக்கு ஒரு தொல்லையும் இருக்காது' என்று வெடுக்கெனக் கூறிவிட்டு அங்கு நிற்கப் பிடிக்காதவள் போல் சரேலென வீட்டு முன்வாசலில் வந்து நின்றாள்.
அவள். அப்படிச் சொன்னதைக் கேட்டு சுபத்திராவுக்கு மட்டுமல்ல, ஆனந்திக்குக் கூடச் சிரிப்பு வந்துவிட்டது. "அவள் பேசுகிறதைப் பார்த் தியா?" என்றாள் ஆனந்தி சிரித்துக் கொண்டே.
'பாவம் அவளைக் குறை சொல்ல என்ன இருக்குது ஆனந்தி. நல்லாய் உண்டு உடுத்தி சுகமாய், கலகலப்பாய் வாழவேணும்; வாழ்க்கையை எல்லா வகையிலும் ரசித்து அனுபவிக்க வேணும் என்கிற ஆசை வசந்தியின் நெஞ்சில் நிறைஞ்சிருக்குது. இந்த வயசுக்கு இப்படியான ஆசை இருக்கிறது இயல்பு தானே. அவளுக்கு இப்ப வாழ முடியல்லியே என்ற ஏக்கம். உனக்கு வேலை கிடைத்த செய்தி கூட அவளுக்கு சந்தோசத்தைத் தரவில்லை பார்த்தியா? இதுதான் காரணம்'
'எனக்கு இது விளங்காமல் இல்லே. மற்றதெல்லாம் இருக்கட்டும். வேலையிலிருந்த போது கூட மூன்று நேரமும் தின்னக் கிடைக்கேல்லே என்று அவள் சொன்னதிலும் பொய்யில்லை. வாங்கின சம்பளத்துக்குள்ளே வீட்டுக்கும் இவர்களுக்கும் தேவையான அத்தனையையும் பார்க்க முடியே ல்லே. போதாக்குறைக்கு தகப்பனாய் ஒண்ணு வந்து வாய்த்திருக்குது பார். அதுக்குக் கொடுத்துத் தொலைக்கிறது வேறே. இதையெல்லாம் இவ யோசிக்க வேணாமா? ஒன்றுமில்லாத இந்த நேரத்திலேயே இந்தக்கிழடு விடமாட் டேங்குது. வேலை கிடைச்சு சம்பளமும் கையிலே வருகுதென்றால் சும்மா இருக்குமா? ஆர்ப்பாட்டம் இன்னும் அதிகமாய் விடும். பிராண்டு பிராண்டு என்று பிராண்டும். இம்சை பொறுக்க முடியாது. கொடுத்துத் தொலைக்கிறதை விட வேறு வழியில்லை. இதை நினைக்கும் போது என்நிலைமையை நினைச்சு ஆத்திரமும் விரக்தியும் தான் வருகுது. எனக்கு ஒரு சாவு வரக்கூடாதா' என்று கூட எண்ணத் தோன்றுது.'
'இப்படியெல்லாம் மனசைப் பிழிகிற மாதிரிப் பேசாதே ஆனந்தி. உன் நிலைமையை இவ்வளவுதூரம் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லே. எனக்குத் தெரியாதா? உன் அப்பாவை நினைச்சா எனக்குக் கூட ஆத்திரம் தான் வரும். இந்த உபத்திரவம் சாகும் வரை இருக்கத்தான் செய்யும். அதுக்காக அவருடைய கழுத்தை நெரித்துக் கொன்னிட முடியுமா? இருக்கிற வரை இருந்து போகிற போது போகட்டும். அது வரைக்கும் சகித்துக் கொள்ள வேண்டியதுதான். நீ சாகிறதாலே பிரச்சினை தீர்ந்து விடுமா? இந்த மாதிரி
சுபைர் இளங்கீரன் 24

எத்தனையோ பிரச்சினைகளும் நிலைமைகளும் மனித உருவத்திலும் வேறு உருவத்திலும் ஒரு சவாலாக வந்து கொண்டுதான் இருக்கும். அதைத் தைரியமாகச் சமாளிக்க வேணும். எந்த நிலைமையிலும் மனசை இழந்து விடக்கூடாது' என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.
'என்ன அவசரம்?"
'நான் ஒரு இடத்துக்கு அவசரமாய்ப் போக வேணும். இந்தா, இதை இப்போதைக்கு வைத்துக் கொள் செலவுக்கு' என்று சொல்லி விட்டு மூன்று பத்துரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் சுபத்திரா.
'வேணாம் சுபத்திரா, இருக்கட்டும் நான் எப்படியோ சமாளிக்கிறேன்'
'நீ எப்படி சமாளிப்பாய் என்று எனக்குத் தெரியும். வட்டிக்கு வாங்கித் தானே. அது வேறு உன்னை விழுங்கிக் கொண்டிருக்குது. இதை வாங்கிக் கொள். நாளைக்கு மூன்று நேரமும் வசந்திக்கு சாப்பாடு கொடுக்கவாவது உதவும்' என்று சிரித்தவாறே ஆனந்தியின் கைக்குள் காசைத் திணித்து விட்டு வெளியே வந்தாள்.
ஆனந்தி கையில் காசுடன் அப்படியே நின்றாள். 'உனக்கு அர்ப்பணிக்க என்னிடம் ஒண்ணுமே இல்லையே சுபத்திரா, உசிருதான் இருக்குது' என்று அவளுடைய உள்ளம் கூவியது.
* * 译 * *
லோறன்ஸ் கம்பனி பிரபலமான ஒரு வர்த்தக ஸ்தாபனம் மட்டுமல்ல, புடவைகள், பிரிண்டட்துணிகள், உடுப்புகள் தயாரித்தல், புடவைகளுக்கு சாயம் போடுதல் போன்ற தொழிலையும் செய்து வரும் ஒரு நிறுவனமும் கூட. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதில் வேலை செய்து வந்தார்கள்.
ஆனந்தி லோறன்ஸில் வேலைக்குச் சேர்ந்ததும் துன்பத்தின் வெறுமையால் வரண்டு போயிருந்த அவளுடைய உள்ளத்தில் ஒரு நம்பிக்கை மழைத்துளி போல் விழுந்தது. இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கும் துயருக்கும் ஒரு விமோசனம் பிறக்கும் என்ற நம்பிக்கை அவளை சற்று உற்சாகம் கொள்ளச் செய்தது. அது மாத்திரமல்ல, வீட்டுத் தொல்லைகளையும், பிரச்சினைகளை யும் மறந்து ஒஃபிஸ் வேலையில் மூழ்கியிருப்பதும் அவளுக்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
ஆனந்தி வேலைக்குப் போனமுதல் நாள் கம்பெனி மனேஜர் மாசிலாமணி அவளுடன் ஆதரவாக நடந்து கொண்டார். வீட்டில் இண்டர்வியூவுக்கு வந்த போது நடந்து கொண்டது போல் இல்லை. கண்ணியமாக நடந்து கொண்டார். அவளுடைய வேலையைச் சுருக்கமாக விளக்கிவிட்டு 'இந்தக் காலத்தில் உன்னைப் போல படித்த பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு. லஞ்சம் கொடுத்தாலும் கிடைக்கிறது கஷ்டம்.
25 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 18
எங்கள் கம்பெனிக்குக் கூட ஆள் தேவையில்லை. ஆனாலும் நவரத்தினத்தின் தெண்டிமையால்தான் உன்னை வேலைக்கு எடுத்திருக்கிறேன். ஒழுங்காகவும், விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேணும். இங்கே பலதரப்பட்ட ஆட்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கம்பெனியைப் பற்றியும், ஏன் என்னைப் பற்றியும் கூட ஒவ்வொரு அபிப்பிராயம். அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்குத்தக்கபடி உன்னுடன் பேசுவார்கள்; உன்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவும் பார்ப்பார்கள். அதிலெல்லாம் நீ கவனமா யிருக்க வேணும். நீ கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். நல்ல பெண்ணா யும் தெரியுது. உன்னிலை எனக்கு அனுதாபம் இருக்குது. அதனால் சொல்கி றேன். என்ன காரணத்தாலும் உன் வேலையை இழந்து போகும்படி நடந்து கொள்ளாதே. 'விஸ் யூ லக்' என்று ஒருசிறு உபதேசம் செய்து விட்டு "உனக் காக உள்ள இடம் இதுதான்' என்று தனது பக்கத்திலிருந்த அறையைக் காட்டி 'சரி நீ போகலாம்' என்றார்.
மனேஜர் இப்படி நடந்து கொண்டது ஆனந்திக்கு ஆச்சரியத்தை மட்டு மல்ல, மனசுக்கு நிம்மதியையும் அளித்தது. அன்றைய தினம் பின்னேரம் அவள் வீட்டுக்கு சுபத்திரா வந்த போது கூட ‘சுபத்திரா, நாம் நினைச்சமாதிரி எங்க மனேஜர் ஒரு கேஸ் அல்ல; நல்ல தெளிவான ஆள்தான். முதல் சந்திப்பிலேயே ஒருவர் பார்க்கிறதையும் பேசுகிறதையும் வைத்துக்கொண்டு முடிவு கட்ட ஏலாது என்று சொன்னியே, அது கரக்ட்' என்று மனேஜர் தன்னுடன் நடந்து கொண்ட விதத்தையும் அவர் சொன்னதையும் சற்று உற்சாகத்துடன் கூறினாள்.
எதுவித சலனமுமின்றி ஆனந்தி கூறியதையெல்லாம் கேட்ட சுபத்திரா, இப்ப கூட முடிவு கட்டப்படாது, ஆனந்தி. எத்தனையோ பேருடைய மனம் ஒரு குகை போல. அதுக்குள்ளே என்ன இருக்குது என்று தெரிஞ்சுகொள்வது கஸ்டம். அது காலப் போக்கில் கண்டறிய வேண்டிய விஷயம் என்றாலும் உன் வேலையில் கவனமாயிருந்தால் சரி' என்றாள்.
'நீ சொல்கிற மாதிரியும் இருக்கலாம். ஆனால் எங்க மனேஜரின் மனக் குகைக்குள் அப்படி ஏதும் இருக்கு மென்று எனக்குப்படேல்லே. சரி இது போகட்டும். உன் சிநேகிதர் நவரட்ணத்தைப் பார்க்க வேணும். அவரால் தான் எனக்கு வேலை கிடைச்சுது. அவருக்கு நான் தாங்க்ஸ் சொல்ல வேணும்.' அப்ப எனக்குத் தாங்க்ஸ் இல்லையா?' என்று சிரித்தாள் சுபத்திரா. "உனக்கெதுக்கு?" என்று ஆனந்தியும் சிரித்தாள். மறுகணம் 'நெஞ்சமெல் லாம் நீ இருக்கும் போது, உனக்கு நான் நன்றி சொல்லத் தேவைப்படாது என்றாள். சுபத்திரா அவளைக் கனிவோடு பார்த்துப் புன்னகை செய்தாள், "அப்ப இனி யாராவது ஒரு காதலன் உன் நெஞ்சில் குடியிருக்க வந்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா? விரட்டியடித்து விடுவேன்.'
சுபைர் இளங்கீரன் 26

'போடி நீ பெரிய வாயாடி. இந்த விளையாட்டுப் பேச்செல்லாம் இருக்கட் டும். உன் சிநேகிதரை எப்ப பார்க்கலாம்?"
"அவருக்கு தாங்க்ஸ் தேவையில்லே. இதையெல்லாம் அவர் பெரிய விஷயமாய் நினைக்கிறதில்லே."
'என்றாலும் நான் நன்றி சொல்லத்தான் வேணும்.' 'ஒரு நாள் அவரைக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்துகிறேன். நீ தாங்க்ஸ் சொன்னாலும் சரி, தடவிக் கொடுத்தாலும் சரி, எனக்கு ஆட்சேபனை யில்லை' என்று சிரித்தாள்.
ஆனந்தி அவளைப் பொய்க் கோபத்துடன் பார்த்தாள். "அப்பாடி. நீ பார்க்கிற பார்வையில் நான் இங்கே இன்னும் இருந்தால் என்னைச் சும்மா விட்டு வைக்கமாட்டாய். சுட்டுச் சாம்பலாக்கி விடுவாய், நான் வாறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் சுபத்திரா,
* 菁 * * *
நகரத்தின் ஒரு கோடியான பிரின்ஸ் ஒஃப் வேல்ஸில்தான் லோறன்ஸ் கம்பெனி இருந்தது. மத்தியானச் சாப்பாட்டுக்காக காலையில் ஏதாவது சாப்பாடு கட்டிக் கொண்டு வருவாள். சில நாட்களில் அதற்கும் வசதியிருக்காது. கம்பெனி கன்டீனில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா வந்து விடுவாள்.
அன்று கையில் காசு இல்லாததால் காலை உணவுக்கென்று கடையப்பமும் வாங்கவில்லை; பலகாரமும் செய்யவில்லை. காந்திக்கும் செல்வத்திற்கும் அன்று ஸ்கூல் இல்லாததால் காலை உணவு உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. இப்படி எத்தனையோ தடவை வயிற்றைக் காயப் போட்டுப் பழக்கப்பட்டிருந்த அவர்கள் "பசிக்குது' என்று ஒரு சினுக்கம் சிணுங்கி விட்டு ஒய்ந்து விடுவார்கள். சில சமயம் தொடர்ந்து அரற்றித் தொல்லை கொடுப்பதுண்டு.
அன்றும் அப்படித்தான் நடந்தது. காந்தியும் செல்வமும் "பசிக்குது' என்று கண்ணைக் கசக்கி விட்டு ஓய்ந்து விட்டார்கள். ஆனால் வசந்தி சும்மா இருக்கவில்லை. 'நீபோய் விடுவாய். இங்கே இதுகள் என்னைப் பிய்த்து பிடுங்குங்கள். நான் என்ன செய்ய?' என்று கேட்டாள்.
"கூப்பன் அரிசி கிடக்குது தானே? பார்த்துச் சமாளி' என்றாள் ஆனந்தி.
"அதை ஆக்க அடுப்புக்கு ஒரு துண்டு விறகு கூட இல்லை. அப்படித்தான் ஆக்கினாலும் கறியில்லாமல் வெறும் சோற்றை விழுங்க ஏலாது" என்று எரிந்து விழுந்தாள் வசந்தி.
'அப்ப அரிசியை விற்று இப்போதைக்கும் மத்தியானத்துக்குமாக எதையாவது வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள்.' そ
27 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 19
இப்படிச் சொல்லிவிட்டு ஆனந்தியும் வெறும் வயிற்றுடன் வந்துவிட்டாள். இலவசமாகக் கிடைக்கும் கூப்பன் அரிசியைக் கூடச் சமைத்துச் சாப்பிட வழியில்லாமல் அதனை விற்று பானும் பலகாரமும் வாங்கி காலத்தை ஒட்டும் கதியற்ற எத்தனையோ குடும்பங்களில் ஆனந்தியின் குடும்பமும் ஒன்றுதானே - வறுமை எவ்வளவு தூரம் பரந்து ஆழமாயுமிருக்கிறது!
மத்தியானம் ஆனந்தி கன்டீனுக்கு வந்தாள். அங்கே கூட்டமும், சப்தமும், சாப்பாடுமாக ஒரே அமர்க்களமாக இருந்தது. பெரும்பாலும் ஆண்கள் கன்டீன் சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். பெண்களில் பலர் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பார்சலைக் காலி செய்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பார்சலில் இரண்டு மூன்று துண்டுப்பாண், ஒரு சிறிய சரையில் சீனி, ஒரு வாழைப்பழம் மட்டுமே இருக்கும். அந்தப் பாண் துண்டுகளுக்கு அந்தச் சீனியும் வாழைப்பழமும் தான் கறி! இவை அவர்களின் வயிற்றுக்குப் போதுமோ, இல்லையோ இந்தப் பார்சல் தான் அவர்களின் மதியபோசனம். இது முடிந்ததும் சட்டைக்குள் வைத்திருக்கும் இன்னொரு சிறிய சரையை எடுத்து அதில் இருக்கும் பவுடரை முகத்தில் தேய்த்து விட்டு லஞ்ச் இண்டர்வல் முடியும் வரை அரட்டையில் இறங்கி விடுவார்கள்.
மத்தியானம் கன்டினில் சாப்பிட நேரும் போதெல்லாம் ஆனந்தி சோறு தின்பதில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைத்ததும் அவளுக்கு சோறு தின்ன மனம் வராது. அவளும் பாண், பழம், டீ என்று மத்தியானத்தை முடித்துக் கொள்வாள். ஆனால் அன்று காலையில் அவள் ஒன்றும் சாப்பிடாததால் அவளுக்கு நல்ல பசி வயிறு நிறைய சோறு தின்ன வேண்டும் போலிருந்தது. வேலைக்கு வந்ததிலிருந்து இதுவரை கன்டின் சாப்பாட்டை அவள் சுவைத்த தில்லை. அதற்கான ஓர் ஆவலும் எழுந்தது. பரபரவென்று அதை எடுத்துக் கொண்டு தன் வழக்கமான இடத்துக்கு வந்து உட்கார்ந்து சாப்பிடத் தொடங் கினாள். வீட்டு நினைவு வந்து விட்டது; காலையில் நடந்த சம்பவங்கள் கண்களில் நிழலாடின, இமைகள் ஈரமாயின. தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது. சோற்றைப் பிசைந்து கொண்டு அப்படியே இருந்தாள்.
சில நிமிடங்கள் இப்படி இருந்தவள் அத்துயரத்திலே தொடர்ந்து லயிக்க விரும்பாமல் கண்களைத் துடைத்து விட்டு கன்டீனைப் பார்த்தவாறு சோற்றை மெல்ல மெல்ல மென்று கொண்டிருந்தாள். அவளுக்கு பசியும் தெரியவில்லை; ருசியும் தெரியவில்லை.
கன்டினில் சாப்பிட்டுக் கொண்டும் அது முடிந்து அரட்டை அடித்துக் கொண்டுமிருந்த பெண்களில் அநேகர் பதினைந்துக்கும் இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட பாவையர். ஆண்களை விட, வறுமைப்பட்ட குடும்பங்களில் உள்ள பெண்களைக் குறைந்த சம்பளத்திற்குப் பிடிக்க முடியும் என்று தெரிந்து கொண்டு கம்பெனியில் வேலைக்கமர்த்தப்பட்ட இவர்களில் சிங்கள, தமிழ்,
கபைர் இளங்கீரன் 28

பறங்கிய பெண்களெல்லாம் கலந்திருந்தனர். கொழும்பு நாகரீகமான அரைக்கால் சட்டை, சேலை, கேட்ஸ், மினிகள் அவர்களை அலங்கரித்தன. வெள்ளை, இளஞ்சிவப்பு, மங்கல், கறுப்பு, இப்படிப்பல உடல் வண்ணத் துடன் இருந்த அவர்கள் கண்ணுக்கு கதம்ப மலர்கள் போல் காட்சியளித்தனர்.
ஒருத்தி பாண்துண்டை எடுத்து சீனியில் தொட்டுக் கடித்தாள். அவளைப் பார்த்த ஆனந்தி இவர்கள் ஏன் இந்தப் பாண்துண்டைக் கடிக்கிறார்கள்? உழைக்கிறவர்கள்தானே, நல்லாய்ச் சாப்பிட்டால் என்னவாம்? என்று எண் ணினாள். மறுகணம் இவர்களென்ன, நானும் இங்கே சாப்பிட என்று வந்தால் பாணைக் கடிப்பவள் தானே. இன்றைக்கு என்னவோ சோறு எடுத்தேன். என்னைப் போலவே இவர்களுக்கும் குடும்பக் கஷ்டங்கள் இருக்கலாம். அதுதான் இப்படி வயிற்றில் பானைப் புதைக்கிறார்களோ என்னவோ. இல்லை, எல்லாருக்கும் அப்படி இருக்காது. அப்படி இருந்தாலும் நிச்சயமாக என்னைப் போல் குடும்ப பாரம் உள்ளவர்களாய் துர்ப்பாக்கியம் உள்ளவர் களாய் இருக்க மாட்டார்கள். எனக்கு வாய்த்த தகப்பனைப் போல் இவர் களுக்கு இருக்காது.
இப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போது ரோஸிகன்டீனுக்குள் நுழைவது தெரிந்தது.
* * * * *
ஆனந்திலோறன்ஸ0க்கு வந்து இரு வாரங்கள் கூட ஆகவில்லை. இதற்குள் அறிமுகமானவள் கம்பெனியில் தையல் பிரிவைச் சேர்ந்த றோஸிதான். எல்லோரோடும் சரளமாகவும், கலகலப்பாகவும் பழகும் சுபாவம் அவளுக்கு. அதேபோல இரண்டொரு சந்திப்பிலேயே யாருடனும் ஒட்டிக் கொள்வாள். மனசுக்குள் எதையும் வைத்திருக்கத் தெரியாது. இதெல்லாம் சேர்ந்து அவளை ஆனந்திக்குப் பிடித்து விட்டது.
ஒற்றை நாடிச் சரீரம், சிவப்புக்கும் மங்கலுக்கும் இடைப்பட்ட நிறம், சற்றுக் குட்டையான உருவம், தோளில் புரளும் பொப் செய்யப்பட்ட கூந்தல், குழந்தை போன்ற முகமுமாக கன்டீனுக்குள் வந்த றோஸி ஆனந்தியைக் கண்டதும் நேராக அவளிடம் வந்து எதிரில் அமர்ந்தாள்.
'லஞ்ச் முடிஞ்சுதா?' என்றாள் ஆனந்தி சோற்றைப் பிசைந்து கொண்டே, 'என்ன லஞ்ச். பாண்துண்டும் வாழைப்பழமும் ' என்று றோஸி அலுத்துக் கொண்டாள்.
'ஏன் சோறு தின்றால் என்ன? உழைக்கிறதுக்குச் சம்பளம், வாங்கு கிறீங்கள்தானே, எதுக்கு கருமித்தனம்?"
றோஸி இதழ்களில் ஒரு விதச் சலிப்பு நெளிய லேசாய்ச் சிரித்தாள். 'உழைப்புக்குத் தக்கபடியா சம்பளம் தருகிறார்கள்? உயிரை வைத்து
29 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 20
கொண்டிருக்க, அரை வயிறு கால் வயிறாவது சாப்பிட வேண்டுமல்லவா? அதுக்குப் போதுமான சம்பளம் கொடுத்தால் போதுமென்று நினைக்கிறாங் களோ என்னவோ, அவ்வளவுதான் தருகிறாங்கள். நியாயப்படி தரவேண்டி யதைத் தந்தால் இப்படிப்பாணைத்தின்று வயிற்றை ஒறுக்கத் தேவையில்லை." ஆனந்தி வாயில் சோற்றைக் கொண்டு போனவள் றோஸியை ஆச்சரி யத்துடன் பார்த்தாள். 'உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் சாப்பாட்டுக்குக் கூடக் காணாதா?"
'இது என்ன கேள்வி. இருநூறும் இருநூற்றியம்பதும் வருகுது. நாங்கள் ஒரு ஆள் மட்டும் சாப்பிட்டால் போதுமா? வீட்டில் உள்ளவங்களையும் கவனிக்க வேணாமா? எங்களுக்கு வயிறு மட்டும்தானா இருக்குது? பஸ்ஸுக்கும் டிரஸ்ஸுக்கும் வீட்டுச் செலவுக்கும் வேணாமா? இந்தச் சம்பளத்திலே, அதுவும் வாழ்க்கைச் செலவு ஒண்ணுக்கு பத்தாய் ஏறி அமுக்கிற போது இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் திணறுகிறோம். அதனால்தான் வயிற்றுக்கு கருமித்தனம் செய்ய வேண்டியிருக்குது. இன்னும் சொன்னால் கருமித்தனம் செய்யிறது நாங்கள் அல்ல -எங்கள் சம்பளம்.
சுபத்திரா பேசுவாளே அதேபோன்ற ஒரு தொனி றோஸி பேசுகிறதிலும் இருப்பது போல்பட்டது ஆனந்திக்கு. அவளுக்கு மேலும் ஆச்சரியம். இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
றோஸி மேலும் தொடர்ந்தாள். 'நான் மாத்திரமல்ல, இங்கே பாரு, இந்தப் பெண்களையெல்லாம் பார்த்தா கவலையில்லாதவங்க மாதிரித்தான் தோன் றும். இது முகத்திலை பவுடர் போட்டு மினுக்கி வைத்திருக்கிறது போல. வெளிக்குக் தான் இப்படி உள்ளே பார்க்க வேணும். ஒரே ஒட்டை ஒடிசல் தான். '
‘சுபத்திராதான் பேசுகிறாள்' -ஆனந்திக்கு அப்படித்தான் இருந்தது.
றோஸி மேலும் சொன்னாள். 'நான் மாத்திரமல்ல, இவங்களெல்லாம் தொழிலாளிகள். கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஏழெட்டு மணித்தியாலங்கள் வேலை செய்தாலும் விடிவைக் காணோம். மாதம் முடிஞ்சு சம்பளத்தை எடுத்துக் கொடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் பிரித்துக் கொடுத்து விட்டுப் பார்த்தால் மறுநாள் பஸ்ஸுக்குக் காசு இருக்காது. நிலைமை இப்படி இருக்கிற போது கடைகளிலும் கன்டீனிலும் சோறு கறி என்று நல்லாய்ச் சாப்பிட்டால் கட்டுபடியாகுமா?"
ஆனந்தி உண்மையில் சற்றுத்திகைத்து விட்டாள். அவள் வேலைக்கு வந்து இரண்டு வாரங்களானாலும் மனேஜர் உபதேசப்படி கம்பெனி விவகாரங் களையோ அதில் உள்ளவர்களையோ அறிந்து கொள்வதில் அக்கறை காட்டவில்லை. றோஸியைத் தவிர வேறு யாரோடும் அதிகம் பழகிக் கொள்ளவுமில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விடுவாள்.
சுபைர் இளங்கீரன் 30

அதனால் கம்பெனியில் வேலை செய்வோரின் சம்பளம், அவர்களின் பிரச்சினைகள் ஒன்றும் அவளுக்குத் தெரியாது. இப்போது றோஸி இதைச் சொன்னதும் அவளுக்கு மனம் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. தன்னையு மறியாமல் அந்தப் பெண் தொழிலாளிகளையெல்லாம் இரக்கத்துடன் பார்த்தாள். அவர்கள் உழைக்கிற போதிலும் தன்னைப் போல் கஷ்டப்படு கிறவர்கள் தான் என்று நினைக்கும் போது பச்சாதாபம் கூட எழுந்தது. அதற்கு மேல் அவளுக்குச் சாப்பாடு இறங்கவில்லை. பாதியோடு நிறுத்திவிட்டு கோப்பையில் கையைக் கழுவிக் கொண்டே 'என்னை மன்னிச்சுடு றோஸி. நீங்களெல்லாம் வேணுமென்றே வயிற்றுக்குத் துரோகம் செய்கிறீங்க என்று எண்ணிவிட்டேன் -விபரம் விளங்காமல் என்றாள். 'இதுக்காக நீ ஏன் சாப்பாட்டை நிறுத்தினாய்?" 'போதும். ஏன் றோஸி நீங்கள் சம்பளத்தைக் கூட்டிக் கேட்டால் என்ன?" "எத்தனையோ முறை கேட்டாச்சு. ஸ்டிரைக் கூடச் செய்தோம். நிர்வாகம் அசையேல்லே. அதிலும் இந்த மனேஜர் இருக்கிறானே, எமன். நெஞ்சில் இம்மியும் இரக்கமில்லாதவன். ஒன்றும் விட்டுக் கொடுக்க மாட்டான்."
'மனேஜரைப் பார்த்தால் நீ சொல் கிறதைப் போல் தெரியேல் லியே. ஒருவேளை சம்பளத்தைக் கூட்டித்தர கம்பெனிக்குக் கட்டாதோ?"
"ஏன் கட்டாது? ஒவ்வொரு வருஷமும் லட்சம் லட்சமாக லாபம் கிடைக் குது. எங்களுக்குப் பத்து இருபது கூட்டித் தாறதாலே கம்பெனிக்கு அப்படி ஒன்றும் பாதிப்பு ஏற்படாது."
இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது "றோஸி உன்னை இரண்டு நாளாய்க் காணோமே. என்ன விஷயம்?' என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து நின்றான் ஒருவன்.
'வீட்டில் அம்மாவுக்குச் சுகமில்லே. இரண்டு நாள் லீவு போட வேண் டியிருந்தது' என்று சொல்லிவிட்டு ஆனந்தியிடம் 'இவர் டேவிட். எங்க டிப்பாட்மெண்டில் கட்டிங் மாஸ்டர். இவ ஆனந்தி. மனேஜரின் புதிய டைப்பிஸ்ட்" என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
டேவிட் ஆனந்தியை ஒரு கணம் உற்றுக் கவனித்தான். 'நான் இப்போது தான் பார்க்கிறேன்' -சொல்லி விட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
"ஏன் இப்படி காசைக் கரியாக்கிறியோ டேவிட் டுபாக்கோ கம்பெனிக்கு கொடுக்கத்தான் உன் சம்பளம் போதும்."
டேவிட் சிரித்தான். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஆனந்தி டேவிட்டை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒல்லியான தோற்றம், மங்கலான நிறம், நடுத்தரமான உயரம், தேங்காய்ப் பூவைப் போன்ற வெள்ளை வெளேரென்ற
31 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 21
பற்கள், பளபளக்கும் விழிகள், இருபத்தியேழு இருபத்தியெட்டு வயது இருக்கும். இப்படியாக இருந்த அவன் றோஸியைப் போலவே கலகலப்பாக இருந்தான். அவனிடம் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருப்பது போலப்பட்டது ஆனந்திக்கு.
றோஸியுடன் பேசிக் கொண்டிருந்த டேவிட் சரேலென்று ஆனந்தியின் பக்கம் திரும்பினான். அவனுடைய ஜொலிக்கும் விழிகள் தன்னுள் பாய்வது போன்ற ஒரு உணர்வு ஆனந்திக்கு உண்டாயிற்று. மேனி ஏனோ கிறுகிறுத்தது. அதற்கு மேல் அவளுக்கு இருப்பே கொள்ளவில்லை சட்டென்று எழுந்து விட்டாள்.
'லஞ்ச் இண்டர்வல் முடிஞ்சுதாக்கும்' என்று றோஸியும் எழுந்தாள். மூவரும் கன்டீனுக்கு வெளியே வந்தார்கள்.
* * * * *
ஆனந்திக்கு டைப்ரைட்டரில் விரல்கள் ஓடிக் கொண்டிருந்தனவே தவிர, மனசு அதில் ஓடவில்லை. டேவிட்டின் உருவம் தான் அதில் நிழலாடியது. அவனுடைய ஜொலிக்கும் விழிகள் தான் பளிச்சிட்டன. அதை அகற்றவும் மறக்கவும் விரும்பி றோளமி மனேஜரைப் பற்றிச் சொன்னதைச் சிந்தித்தாள்.
றோஸி சொன்னது உண்மையாய் இருக்குமோ. மனேஜரை அப்படி எனக்குத் தெரியேல்லியே. கம்பெனியைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூட இங்கே உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் என்று சொன்னாரே. தமது விருப்பு வெறுப்புக்குத் தக்கபடி பேசுவார்கள் என்றாரே றோஸியும் அப்படித்தானா. அவள் பொப் சொல் கிறவளாய்த் தெரி யேல் லியே.
டேவிட்டின் முகம் திரும்பவும் வந்தது.
டேவிட்டுக்கும் இப்படித்தான் ஒரு அபிப்பிராயம் இருக்குமோ..?
டேவிட் சிரிப்பது போலிருந்தது. அவனைத் திரும்பவும் அகற்ற முயன்றாள்.
மனேஜர் இரக்கமில்லாதவராமே, விட்டுக் கொடுக்காதவராமே. றோஸி சொன்னது பொய்யானால் அவர்களின் சம்பளமும் பொய்யாய் இருக்க வேணும். ஆனால் அவர்களின் சம்பள விஷயம் உண்மைதான். அதில் சந்தேகமில்லை. கம்பெனி லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறதாம். அது ஏன் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்கப்படாது. பார்க்கப் போனா எனக்குக் கூடச் சம்பளம் காணாது. அவர்கள் பாவம். தங்களைப் பற்றி றோஸி சொன் னதையெல்லாம் நினைக்கும் போது மனசெல்லாம் கரையுது. கஷ்டப்பட்டு இப்படி வேலை செய்கிறவர்களுக்கு கைக்கும் வாய்க்கும் காணாத சம்பளத் தைக் கொடுத்துச் சிரமப்பட வைக்கிறது நியாயமில்லை. கம்பெனிக்கு ஈரமில்லை. மனேஜருக்கும் இரக்கமில்லையா? என் மேல் மனேஜருக்கு
சுபைர் இளங்கீரன் 32

இரக்கம் இருக்குதே. கம்பெனிக்கு ஆள் தேவையில்லாதிருந்தும் என்னை வேலைக்கு எடுத்தது அவரது இரக்க சுபாவத்தைக் காட்டவில்லையா? றோஸி சொல்கிறது பொய்யா, மனேஜர் சொல்கிறது பொய்யா? எது பொய், எது உண்மை?
டேவிட்டின் உருவம் திரும்பவும் மனக்கண் முன்னால் ஆடியது. கன்டீனில் றோஸியும் அவனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தது சட்டென்று காட்சியாக வந்து நின்றது.
அந்நியச் சுரண்டலைப் பற்றிப் பேசியபோது தேச பக்தியாலா, அல்லது தன்மீதுள்ள பக்தியாலா என்று கேட்டானே டேவிட், ஒருவேளை றோஸிக்கும் அவருக்கும். எப்படி இருந்தால் தான் என்ன. அதை நான் ஏன் நினைக்க வேணும் ? எனக்கு என்ன உரிமையிருக்குது அப்படி நினைக்க? இது என்ன புதுசா மனக்குழப்பம்.
டேவிட் புன்னகை செய்தான். அதில் ஒரு லாவகம்; மயக்குவது போல் ஒரு பிரமை,
என்ன கூத்து இது. டேவிட் ஏன் நினைவில் வருகிறான்? அவருடைய பளபளக்கும் அந்தக் கண்கள் என்னை ஏன் ஆட்டிப் படைக்க வேணும்? டேவிட், வேணாம். என் மனசைக் குழப்பாதீர். பிளிஸ் உமக்கு றோஸி இருக்கிறாள்.
டேவிட் மீண்டும் சிரித்த்ான். அந்தச் சிரிப்பு எனக்கு றோஸி இல்லை என்று சொல்வது போலிருந்தது.
-உமக்கு ரோஸி இருக்கிறாளோ இல்லையோ. நான் இல்லை. நிச்சயமாக நான் இருக்க முடியாது.
அவளுடைய மனம் வெதும்பி அலறியது. இமைகள் ஈரமாயின. தலைக்குள் ஏதோ குடைவது போலிருந்தது. டைப்ரைட்டரின் சத்தம் நின்றுவிட்டது.
ஆனந்திக்கு மனம் நிதானத்துக்குவர மறுத்தது. அது உறுதிப்படவில்லை. அலை கடலில் அல்லி முளைக்குமா?அலை பாயும் மனதிலும் நிதானமும் உறுதியும் பிறக்காது தான்.
ஆனந்தி சற்று நேரம் அசந்து போய் சிலையாக இருந்தவள் 'சே. விசர்த்தனமான நினைவுகளெல்லாம் எனக்கு எதுக்கு?" என்று முணுமுணுத்து விட்டு நனைந்திருந்த தனது இமைகளைத் துடைத்தாள். டேவிட், றோஸி, மனேஜர் ஆகியோரைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த மனசை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு எழுத்துக்களைத் தட்டினாள்.
வேலை ஒடவில்லை. ஒடமாட்டேன் என்றது. தலை கடுமையாக வலித்தது. கட்டிலில் உடலைச் சாய்த்து கண்ணையும் மனசையும் இறுக மூடிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. கேட்டுக்
33 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 22
கொண்டு வீட்டுக்குப் போனால் என்ன என்று நினைத்தாள். வந்து இரு வாரங்கள்தான். அதற்குள் லீவா. மனேஜர் என்ன சொல்லுவாரோ.
* * * * 娜
மனேஜரின் அறையிலிருந்து கோலிங் பெல் அடித்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. ஆனந்தி நித்திரையிலிருந்து விழித்தவள் போல் திடுக்கிட்டு எழுந்தாள். பரபரப்புடன் ஆடுகதவையும் தள்ளிக் கொண்டு மனேஜரின் அறைக்குள் வந்து 'யெஸ் சேர்' என்று சொல்லியவாறு அவர் முன்னால் நின்றாள்.
ஏதோ ஒரு ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்த மனேஜர் எத்தனை முறை பெல் அடிக்கிறது. காதில் விழ ஏன் நேரமாச்சுது?' என்று கேட்டார், தலை நிமிராமல்,
f
ம். அந்த ஃபொரின் லெட்டர் அடிச்சு முடிஞ்சுதா?” 'இன்னும் முடியேல்லே' ஆனந்திக்கு லேசாய் நடுங்கியது.
'ஏன் லேட்?" ஆனந்திக்குப் பதில் சொல்ல முடியவில்லை. நடுக்கம் இன்னும் கூடியது. "கெதியாய் முடிக்க வேணும். அது மாத்திரமல்ல, ஒஃபிஸ் விட்டதும் என்னை வந்து பார்க்க வேணும்' என்று ஃபைலை மூடி மேசையில் போட்டு விட்டு நிமிர்ந்தார்.
'ஏன்?' ஆனந்தி கேட்கவில்லை. அந்தக் கேள்வி நடுக்கத் தோடு மனசுக்குள் எழுந்தது.
மனேஜர் ஆனந்தியைக் கூர்ந்து பார்த்தார். 'ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாய் இருக்குது? கண்கள் சிவந்திருக்குதே.?'
'தலைவலியா' 'ஒ. ச்கு. ச்கு...' என்று மேலும் ஒரு கணம் அவளைப் பார்த்தவர் சட்டென்று லாச்சியைத் திறந்து ஒரு சிறிய போத்தலிலிருந்த வில்லைகளை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்து விட்டு 'இதைப் போட்டுவிழுங்கு. தலைவலி நிற்கும். அந்த ஃபொரின் லெட்டரை முடிக்கா விட்டாலும் பரவாயில்லை. போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்'
ஆனந்திநகர்ந்தாள். "வன் மினிட்' மனேஜரின் குரல் காதில் விழுந்தது. திரும்பினாள். 'ஒஃபிஸ் விட்டதும் என்னை வந்து பார்க்கத் தவறாதே" என்று திரும்பவும் ஞாபகப்படுத்தினார் மனேஜர்.
ஆனந்தி தலையை ஆட்டிவிட்டுத் தன் இடத்துக்கு வந்தாள். அவளுக்கு
சுபைர் இளங்கீரன் 34

இருந்த நடுக்கம் இப்போது இல்லை. கையிலிருந்த வில்லைகளைப் பார்த்தாள். றோஸி, மனேஜரைப் பற்றி நீ சொன்னதை நம்பச் சொல்றியா? அவருக்கு நான் ஒரு சேவண்ட். அவருக்குக் கீழே வேலை செய்யும் ஒரு சாதாரண டைப்பிஸ்ட். இருந்தும் என்மேல் எவ்வளவு இரக்கம், எவ்வளவு அனுதாபம்! உங்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியேல்லை றோஸி.
நமக்கெல்லாம் குறைஞ்ச சம்பளந்தான். அதுக்கு மனேஜர் பொறுப்பில்லை. குறை சொல்வதாயிருந்தால் கம்பெனியைத்தான் சொல்ல வேணும்.
அதற்குமேல் எண்ணங்கள் ஓடவில்லை. கையில் உள்ள வில்லைகளை வாயில் போட்டு கூஜாவிலிருந்து இரண்டு கிளாஸ் தண்ணிரைக் குடித்து விட்டு கதிரையில் வந்து அமர்ந்தாள். சோர்வும், களைப்பும் நீங்கி தெம்பு பிறந்தது போலிருந்தது. தலையிடியும் மெல்ல மெல்ல மறைவது தெரிந்தது. மனசை நிலைப்படுத்திக் கொண்டு மனேஜர் குறிப்பிட்ட கடிதத்தை டைப் அடிக்கத் தொடங்கினாள்.
அந்தக் கடிதத்தை மட்டுமல்ல, அன்று டைப் அடித்து முடிக்க வேண்டியதை யெல்லாம் எப்படித்தான் முடித்தாளோ. ஒரு அசுர வேகம். நேரம் போவதே தெரியாமல் ஒரே மூச்சில் முடித்து விட்டு எல்லாவற்றையும் அடுக்கினாள்.
இதே சமயம் அறையிலிருந்து திரும்பவும் கோலிங் பெல் அலறியது. ஆனந்தி கடிதங்களுடன் மனேஜரின் அறைக்குள் வந்தாள்.
'ஒஃபிஸ் விட்டு அரை மணித்தியாலம். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய்? தலைவலி எப்படி இருக்குது?"
'இப்ப இல்லே. ' என்று டைப் அடித்ததையெல்லாம் மேசையில் வைத்தாள்.
'எல்லாம் முடிஞ்சுதா?'
‘யெஸ்'
'ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இதையெல்லாம் நாளைக்கு முடித்திருக் கலாமே..?' என்று கடிதங்களையெல்லாம் எடுத்து ஃபைலில் போட்டு லாச்சியில் வைத்துப் பூட்டிவிட்டு 'ஒல்ரைட் . உட்கார்' என்றார். ஆனந்தி உட்கார்ந்தாள்.
'இன்று மத்தியானம் கன்டீனில் றோஸி, டேவிட் நீ எல்லாரும் என்ன கதைத்துக் கொண்டிருந்தீர்கள்?' திடீரென்று கேட்டார் மனேஜர்
ஆனந்தி திடுக்கிட்டாள்- நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தது இவருக்கு எப்படித் தெரியும்? யார் சொல்லியிருப்பார்கள்? இவர் ஏன் இதைக் கேட்கிறார்? நாங்கள் பேசிக் கொண்டதை அப்படியே சொல்கிறதா அல்லது சொல்லாமல் விடுகிறதா. ?
35 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 23
'ஏன் மெளனமாயிருக்கிறாய்?" "சும்மா கதைத்துக் கொண்டிருந்தோம்' 'கம்பெனியைப் பற்றி, என்னைப் பற்றி ஏதாவது. ?"
'இல்லே' 'மறைக்காமல் சொல்லு?நான் ஒன்றும் வித்தியாசமாய் எடுத்துக் கொள்ள மாட்டேன். '
'அப்படி ஒன்றும் கதைக்கேல்லே. கன்டீன் சாப்பாட்டையும் வாழ்க்கைச் செலவைப் பற்றியும் தான் கதைத்துக் கொண்டிருந்தோம்.'
'வாழ்க்கைச் செலவு என்றால், அதோடு சம்பளப் பிரச்சினையும் அடி பட்டிருக்குமே. அந்த டேவிட்டும் றோஸியும் அதைப்பற்றிப் பேசினாலும் அதோடு சம்பளப் பிரச்சினையையும், கம்பெனியையும் கலக்காமல் இருக்க மாட்டார்களே'
"அதைப்பற்றியெல்லாம் கதைக்கேல்லே' 'குட். ஆனாலும் அவர்கள் இருவரும் சுத்த மோசம். கம்பெனியின் சொந்த விஷயங்களை விமர்சிப்பது, நிர்வாகத்தைக் கண்டிப்பது இதெல்லாம் அவர்களின் நித்திய வேலை. நீ கம்பெனிக்குப் புதுசு, உனக்கு இவர்களின் குணம் தெரியாது. உனக்குக் கூட இதையெல்லாம் சொல்லி மற்றவர்களைக் கெடுத்தது போல் உன்னையும் கெடுத்து விடுவார்கள். இந்த ஜோடியைப் பற்றி நீ கவனமாயிருக்க வேணும்.'
வெயிட்டர் தட்டில் கோப்பி டிக்காஷன், பால், சீனி, கப் - சோஸர் எல்லா வற்றையும் தனித்தனியாகக் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான். மனேஜர் கோப்பியைக் கலக்கத் தொடங்கினார்.
'கன்டீனிலோ, மற்ற இடங்களிலோ உன்னோடு அவர்கள் இந்த விஷ யங்களைப் பற்றி பேசினால், எனக்குச் சொல்ல வேணும், என்ன?”
மனேஜர் இப்படிக் கூஜியதும் ஆனந்திக்கு ஆச்சரியமாகவும் திகைப் பாகவும் இருந்தது. அருவருப்புக்கூட ஏற்பட்டது. வெளியிலிருந்து வீசும் அசுத்தக் காற்று எவ்வாறு உடம்பைக் கெடுத்து விடுகிறதோ அதேபோல பிறரிடமிருந்து வரும் அருவருப்பான பேச்சும் உள்ளத்தைக் கெடுத்து விடுகிறது. டேவிட்டும் றோஸியும் தங்கள் பேச்சால் மற்றவர்களைக் கெடுக்கிறார்கள் என்று இவர் சொன்னாரே, அவர்கள் கெடுக்க முந்தி இப்ப இவர் கெடுத்துவிட்டாரே...!
அவளுக்குள் உயரத்தில் இருந்தவர் சரேலென்று சறுக்கி கீழே விழுந்து விட்டார். அவளுக்கு ଗtଗାଁ ରୀ சொல்வதென்றே தெரியவில்லை. மனேஜர் கலக்கிக் கொடுத்த கோப்பியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் குடிக்கக் கூடமனமில்லை.
சுபைர் இளங்கீரன் 36

"என்ன யோசனை?"
'ஒன்றுமில்லே'
'அவர்கள் கதைப்பதை என்னிடம் சொல்வது உனக்குக் கஷ்டமாக இருக்காதே?"
-கஷ்டமாகத்தான் இருக்கும். எப்படிச் சொல்லுகிறது? கோள் சொல்கிறதும் ஒரு வேலையா?. - அவள் மனம் கேட்டது.
'கம்பெனிக்கும் எனக்கும் நீ விசுவாசமாய் இருக்கிறதென்றால் நீ சொல்ல வேணும். இதில் பிழை ஒன்றுமில்லை."
நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் எனக்கு அது சரியாப்படேல்லே. நாங்கள் கதைப்பதையெல்லாம் வந்து சொல்ல வேணும் என்று கேட்கிறது. உங்களைப் போல கனவான்களுக்கு நாகரிகமாயில்லே. எனக்கு விசுவாசம் இருக்குதுதான். அதைக் கோள் சொல்கிறது மூலம் தான் காட்டிக் கொள்ள வேணுமா? என்னதான் இருந்தாலும் நாங்களெல்லாம் ஒரே தட்டில் உள்ள வர்கள். நீங்கள் எங்களுக்கு மேலே இருக்கிறவர், நாங்கள் பலதும் பத்தும் கதைப்போம்; பேசுவோம்; அதையெல்லாம் வந்து உங்களுக்குச் சொல்கிறது என்றால் அது எனக்குச் சரியாப் படல்லே. அது எனக்குப் பிடிக்கவுமில்லே. - இத்தனையையும் சொல்லிவிட வேணும் என்ற துடிப்பு எழுந்தது.
ஆனால் சொல்லவில்லை. பெண் என்பவளே இப்படித்தான். மனதிலுள்ள தைச் சொல் லத்துடிப்பாள் சொல்லமாட்டாள், மெல்லவும் மாட்டாள், விழுங்கவுமாட்டாள். அவளுக்கு எப்போது துணிச்சல் பிறக்கிறதோ அப் போதுதான் அவளுக்கு விமோசனம் பிறக்கும்!
'என்ன கடுமையாக யோசிக்கிறாய்?"
"மனசு எங்கேயோ போய்ட்டுதே'
'நான் சொன்ன விஷயத்துக்கா?"
'இல்லே, வீட்டுக்கு"
சரி, நீ போகலாம், நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும்.
ஞாபகமிருக்கும். ஆனால் நான் சொல்லமாட்டேன்; நான் கோள் சொல்லி யல்ல - என்று மனம் சப்தமிட ஆனந்தியும் எழுந்தாள்.
* * * * *
37 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 24
மூன்றாவது அத்தியாயம்
றன்ஸின் டைரக்டர்கள் மூன்று பேர். ஒருவர் அப்பாவி. இன்னொருவர் தண்ணிச்சாமி, மற்றொருவர் விதவைச் சீமாட்டி. மூவரும் மனேஜர் மாசிலாமணியின் கைக்குள் அடக்கம். அவர்களுக்கும் அவர்மீது அதிக நம்பிக்கை. நிர்வாக விஷயத்தில் அவர் ஒரு புலி என்று சொல்லலாம். டைரக்டர்களின் சொந்த விவகாரங்களிலிருந்து கம்பெனி விவகாரம் வரை அவருக்குத் தலை கீழ் பாடம், நெளிவு, சுளிவு, நுணுக்கம் எல்லாவற்றிலும் பழுத்த ஆசாமி. அவரால் தான் கம்பெனி இந்த அளவுக்கு வளர்ந்து பிரபல்யமாயிற்று என்பது டைரக்டர்களின் அபிப்பிராயம். ஆதலால் கம் பெனியின் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடுவது கிடையாது. இந்த வகையில் மாசிலாமணி மனேஜராயிருந்தாலும் மனேஜரின் டைரக்டரைப் போல் நடந்து கொண்டார். கம்பெனியில் அவர் நிர்ணயித்ததுதான் கொள்கை; அவர் வைத்தது தான் சட்டம். சுருங்கச் சொன்னால் கம்பெனி அவருடைய சுண்டுவிரலுக்குள் சுழன்றது. h
இப்படியெல்லாம் அவர் இருந்தாலும், டைரக்டர்களை நிர்வாக விஷ யத்தில் மட்டுமல்ல, வேறு பலவகையிலும் திருப்திப்படுத்தித் தன் கைக்குள் வைத்துக் கொண்டார். கம்பெனியை தனக்கும் ஒரு கறவை மாடாக ஆக்கிக் கொண்டார். அந்தரங்கத்தில் அவர் அசுத்தமானவர் என்றெல்லாம் அவரைப் பற்றி வதந்திகள் கம்பனிக்குள்ளும் ஏன் வெளியிலும் கூடப் பரவியிருந்தது.
இவை மட்டுமல்ல, மாசிலாமணி மிகவும் இறுக்கமான பேர்வழி. கம்பெனி ஆட்கள் யாராவது தங்களையும் அறியாமல் ஒரு சிறுதவறைச் செய்து விட்டால்
சுபைர் இளங்கீரன் 38
 

கூட அவர்களை மன்னிக்கவே மாட்டார். ஈவிரக்கமின்றித்தண்டித்து விடுவார். தொழிலாளர்களுக்கு ஏதாவது வசதியைச் செய்து கொடுக்கவோ, சலுகைகள் வழங்கவோ மனம் பொறுக்க மாட்டார். எனவே மனேஜரின் மீது கம்பெனித் தொழிலாளர்களுக்கு வெறுப்பு. ஆனால் டேவிட்டும் றோஸியும் இதைச் சகித்துக் கொண்டிருப்பதில்லை. காரசாரமாக அவரை விமர்சிப்பார்கள். கம் பெனித் தொழிலாளர்களின் யூனியனுக்கு டேவிட் தலைவர், றோஸி காரிய தரிசி என்ற முறையில் அவர்களின் சார்பில் மனேஜருடன் வாதாடுவார்கள்.
எனவே, கம்பெனியில் தன் இஷ்டத்துக்கு மாறாக-தன்னையும் மீறி எதுவும் நடக்கக்கூடாது என்ற உறுதியான மனோபாவம் உள்ள மனேஜர் மாசிலா மணிக்கு டேவிட்டையும் றோஸியையும் பிடிக்காததில் ஆச்சரியமில்லை. அவர்களுக்கு கம்பெனி ஆட்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதும், கம் பெனியின் வர்த்தகம், லாபம், தொழிலாளரின் பிரச்சினைகள் ஆகியவற்றை யெல்லாம் உடைத்து வைத்து விவாதிப்பதும் தன்னையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதும் அவருக்கு வெறுப்பாகவும் கசப்பாகவும் இருந்தது. அதே சமயம், டேவிட் - றோஸி உட்பட கம்பெனி ஆட்கள் தன்னைப் பற்றியும் கம்பெனியைப் பற்றியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிவதில் ஒரு வேட்கையும் இருந்தது. அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பப் போகிறார்கள் என்று முன்கூட்டியே அறிந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு அனுகூலமாக இருக்கவேணுமல்லவா. இதற்காக ஒரு கையா ளையும் வைத்திருந்தார். அவன் கம்பெனியில் ஆட்கள் பேசுவதையெல்லாம் உடனுக்குடன் அவருக்கு அறிவிப்பான். இப்போது டேவிட் - றோஸியோடு ஆனந்தி கதைத்துக் கொண்டிருந்ததையும் அவன்தான் மனேஜருக்குச் சொல்லிவைத்தான். இவையெல்லாம் ஆனந்திக்குத் தெரியாது.
* * * 舒 *
மின் வெளிச்சம் இரவைப் பகலாக்க சேர்ச் வீதி ஒரே சனமும் சந்தடியுமாக இருந்தது.
LHL-FITSO60, உத்தியோகம், வேலை, வியாபாரம், தொழில், ஆஸ்பத்திரி, மெட்னிஷோ, குது, பிக்பொக்கட், கோடு, கச்சேரி என்று எதுக்கெல்லாமோ பகலெல்லாம் போய்விட்டு மாலையானதும் இல்லம் திருப்புகிறவர்கள் தமது மூன்று தட்டு வீட்டுக்குள் இருப்பதில்லை. அந்தப் பொந்துக்குள் குடும்பத் திலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. இருட்டும், நெரிசலும், இரைச்சலும் மூச்சைத் திணற வ்ைக்கும். மனித வெக்கையும் காற்றில்லாத புழுக்கமும் வேறு அவர்களை அங்கே தங்க வைக்காது. அதனால் அவர்கள் பெரும்பாலும் வீதிக்கு வந்து கூடிவிடுவார்கள். பொடியன்களும் வாலி பர்களும், பெரியவர்களும் ஆங்காங்கே கும்பல் கும் பலாகவும், தனித் தனியாகவும் கூடி நின்று கொண்டு அன்றைய பகல் பொழுது வாழ்க்கைச்
39 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 25
சம்பவங்களை, அனுபவங்களையெல்லாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு நிற்பர். வாலிபர் சிலர் றோட்டை மைதானமாக்கிக் கொண்டு கால் பந்தாடுவர். வேறு சிலர் றோட்டோரமுள்ள வீட்டுத்திண்ணைகளில் குந்தி யிருந்து கொண்டு ஊர் வம்பு அளப்பர். இன்னும் சிலர் தமது முட்டுப் பாடுகளையும் கஷ்டங்களையும் விபரித்தபடி இருப்பர். ஒருசிலர் அங்குள்ள சின்னஞ்சிறிய தேனிர்க்கடைக்குள்ளிருந்து கஞ்சா அடித்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் தெருவிலும் சந்துக்குள்ளும் காரசாரமான வாய்த்தர்க்கமும் தூஷணைப் பேச்சுக்களும் அடி பிடி சண்டைகளும் நடப்பதுண்டு.
இது நித்திய காட்சி. அன்றும் இந்தக் காட்சிதான். தெருவைக் கலகலப் பாக்கிக் கொண்டிருந்தது.
ஆனந்தி இருக்கும் சந்தில் ஒரே கூச்சலும் இரைச்சலுமாயிருந்தது. பெரும்பாலும் முஸ்லிம்களும், தமிழர்களும், மலாய்காரர்களும் ஒருசில சிங்களக் குடும் பங்களும் குடியிருக்கும். அந்தச் சந்துக்குள் கிமோனா, பாவாடை சீத்தைச் சாறன் சட்டை அணிந்த பல வயதுக் குமரிகளும் பெண்களும் வீட்டுக்கும் றோட்டுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தனர். சிலர் வீட்டுக்கு முன்னால் நின்றபடி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சந்து முனையில் நின்றபடி தெருக்காட்சியை ரசித்த வண்ணம் இருந்தனர்.
சந்துக்குள் ஒருத்திதன்னுடைய மூத்த பெண் யாருடனோ ஓடி விட்டதற்காக மகளைத் தாறுமாறாய் திட்டிக் கொண்டிருந்தான். இன்னொரு பெண் தன் குடிகாரக் கணவரோடு வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருந்தாள். வேறொருத்தி தன்மகளுக்கு அவள் புருஷன் பிள்ளையைக் கொடுத்து விட்டுப் பராமுகமாய் போய்விட்டதை மற்றவளுக்கு முறையிட்டுக் கொண்டிருந்தாள். இன் னொருத்தி முதல் நாளிரவு நடந்த தெருச் சண்டையில் தன் தம்பியைப் பொலிசார் ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு போன விதத்தை வர்ணித்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தெருவும் அதற்குரிய சந்துக்களும் ஒரு தனி உலகம். ஆனந்தியின் வீட்டில் - முன்தட்டில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அருமைநாயகம் நிறை போதையில், 'கண்ணிருந்தாலென்ன, கடவுளுக்கும் என்ன' என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தவர். அடுத்த வரி ஞாபகத்துக்கு வராமல் போகவே 'கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் -புல்லுணவே தந்து காக்கும் நம் நாதன். சத்வகுணபோதன் என்று சுருதி பேதத்துடன் தியாராஜ பாகவதரின் பாட்டை ஒலிபெருக்கிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் பொடியன் ஒருவன் எதற்கோ இரைந்து கொண்டிருந்தான். முன்வீட்டிலும் ஏதோ சந்தடி கேட்டுக் கொண்டிருந்தது.
சுபைர் இளங்கீரன் 40

அருமை நாயகம் படுத்திருந்த முன்தட்டில் விளக்கில்லை. ஒரே இருட்டாக இருந்தது. நடுத்தட்டில் ஒரு சிமினி விளக்கில் காந்தி பாடம் படித்துக் கொண்டிருந்தாள், செல்வம் கொப்பியில் தனக்குத் தெரிந்தபடி சித்திரம் வரைந்து அதைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். வசந்தி வாசலில் நின்றிருந்தாள்.
ஆனந்திக்கு எதிலும் மனம் செல்லவில்லை. ஒன்றுமே பிடிக்கவில்லை. வேலையிலிருந்து வந்த போதே மனமும் தலையும் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு தெருக்கூச்சலும் சந்தின் இரைச்சலும் சந்தடியும் தகப்பனாரின் போதைப் பாட்டும், பக்கத்துவீட்டு சத்தங்களும் எல்லாமாகச் சேர்ந்து எரிச்சலையும் சலிப்பையும் மூட்டின. சே இவர்களும் மனுசர்களா. இந்த நரகத்திலிருந்து எப்பதான் விடுதலை கிடைக்குமோ? -என்று பொருமியவாறு பின்தட்டுக்குப் போய் ஒரு பாயை எடுத்துப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.
சேர்ச் வீதியில் நிற்பவர்களும் சந்துக்குள்ளிருந்தவர்களும் மனிதர்கள் தான். ஆனால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட இந்த வாழ்க்கையும் சூழலும் தான் அவர்களை அப்படி ஆக்கி விட்டிருக்கிறது என்ற விஷயம் ஆனந்திக்கு எப்படித் தெரியப் போகிறது! இவர்கள் இப்படி ஆக்கப்பட்டதற்கு எது காரணம் ? என்பதை அவள் எப்படி அறிவாள்? இங்குள்ளவர்களும் மனி தர்கள் தான். ஆனால் இவர்களைப் பற்றியும் இந்த நரகத்தைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை என்ற விஷயம் அவளுக்கு எப்படி விளங்கும்? இந்த நரகத்திலிருந்து தான் மட்டுமல்ல இந்தச் சந்துக்குள்ளும் பொந் துக்குள்ளும் இருக்கும் அத்தனை பேரும் விடுதலையடைய வேண்டும் என்று உணர அவளுக்குச் சக்திதான் ஏது?
ஆனந்தி கண்ணை மூடியவாறு படுத்திருந்தாலும் மனம் விழித்துக் கொண்டுதானிருந்தது. அன்று நடந்த சம்பவங்கள் எல்லாம் மன அரங்கில் ஆடிக் கொண்டிருந்தன. மனேஜர் கடைசியாகக் கூறிய விஷயம் வேறு மனசை உதைத்துக் கொண்டிருந்தது. மனேஜரைப் பற்றி அவளுக்கிருந்த அபிப்பிரா யத்தில் றோஸி சொன்னதைக் கூடநம்ப மறுத்தாள். இப்போது அவர்தன்னைக் கோள் சொல்லியாக்க முனைந்ததையும். அவர் அதைச் சொன்ன விதத்தையும் நினைத்த போது, றோஸி சொன்னது உண்மை தானோ என்று எண்ணத் தோன்றியது. அவர் மனேஜர், கம்பனியின் முழுப் பொறுப்பையும் சுமக்கிற வர், தன்னைப் பற்றியும், கம்பெனியைப் பற்றியும் மற்றவர்கள் என்ன கதைக் கிறார்கள், நிர்வாகத்துக்கெதிராக என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவதில் பிழையென்ன? இந்த ஒரு விஷயத்துக்காக அவர் மோசமான ஓர் ஆள் என்று கருதிவிடலாமா? என்றும் ஒரு மனசு கேட்டது.
அப்படியானால் டேவிட்டும் றோஸியும் மற்றவர்களும் கதைப்பதை நான் மனேஜருக்குச் சொல்ல வேணுமா? சே. அது கூடாது. அது என்னால்
41 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 26
முடியாது. சொல்லாவிட்டால் கோபிப்பாரோ. வேலையிலிருந்து தள்ளி விடுவாரோ. அல்லது இரக்கமில்லாமல் நடந்து கொள்வாரோ?
மனேஜரை விட்டு டேவிட்டைப் பற்றி எண்ணியதும் அவள் மனம் திரும்பவும் மயங்கியது. அவனுடைய பளபளக்கும் அந்தக் கண்களும் அந்தப் புன்னகையும் கிளர்ச்சியை ஊட்டுவது போல் இருந்தன. எத்தனையோ இனிமைகளெல்லாம் உணர்வில் பூச் சொரிவது போல் சொரிந்தன.
இது வெறும் கற்பனை மயக்கம் தான். இது அவளுடைய நிஜ வாழ்க்கையில் நிகழமுடியாது. டேவிட் றோஸிக்குரியவள் - மனேஜர் கூட அவர்களை 'ஜோடி' என்றுதான் குறிப்பிட்டார். அப்படி இல்லாவிட்டாலும் டேவிட்டை மறக்கத்தான் வேண்டும்.
இதை எண்ணியதும் ஆனந்தியின் மனம் அழுதது.
* * * * 壹
ஆனந்தியின் அம்மா இறப்பதற்கு முன்பு அவளும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ கனவுகள் கண்டு கொண்டிருந்தாள். வறுமையோ, குடும்பக் கஷ்டங்களோ இளம் பருவத்துக் கனவுகளுக்கு குறுக்கே நிற்பதில்லையே. வசந்தமான எண்ணங்கள் இனிமையான கனவுகள் எல்லாம் வண்ணம் பூத்த மலர்கள் போல் எத்தனை எத்தனை நெஞ்சில் குவிந்தன வயது வந்து பருவத்தில் பழுத்து நிற்கும் ஒரு பெண்ணின் மனம் எதை எதையெல்லாம் எண்ணுமோ, கற்பனை பண்ணுமோ அப்படித் தான் ஆனந்தியின் மனசும் எண்ணியது. கற்பனை செய்தது. காதலைப்பற்றி எண்ணியது. அது நிகழா விட்டாலும் தனக்குக் கணவனாக வர இருக்கும் யாரையாவது பற்றிக் கற்பனை செய்தது.
அவனுடன் உறவாடிக் கூடிக் களித்து இன்பத்தை பரிமாறிக்கொள்வது போல் நினைத்தது. அவனுடன் கைகோர்த்து நடக்கவும் பல இடங்களுக்கும் உல்லாச மாய்ச் சென்று மகிழவும் செய்தது. இருவரும் கெஞ்சுவதும், கொஞ்சுவதும் ஊடல் செய்வதும் கூடுவதும் இப்படியெல்லாம் நிகழும் ஒரு வாழ்க்கை - ஜோடிப் பறவைகளை போல் தம்பதிகளாய் நண்பர்கள், உறவினர்கள் வீடெல்லாம் சென்று சந்தோஷத்தை அனுபவிக்கும் ஒரு வாழ்க்கை - குழந்தை கிடைத்தால் அதைக் கொஞ்சி மகிழ்ந்து வாழும் ஒரு வாழ்க்கை இப்படியான ஒரு வாழ்க்கையை ஒரு சித்திரமாக அவள் நெஞ்சத்திரையில் தீட்டியிருந்தாள்.
இளமைப்பருவம் என்பது வாழ்க்கையின் வசந்த காலம். அதை வரட்சி தரும் கோடைக் காலமாகவோ, பனிமூடும் குளிர்காலமாகவோ மாற்றிக் கொள்ள எவரும் விரும்பமாட்டார்கள். இந்த இயல்புக்கு ஆனந்தி விதி விலக்கல்லவே!
ஆனால் தாய் காலஞ் சென்று குடும்பப் பாரம் தலையில் விழுந்த
சுபைர் இளங்கீரன் 42

நாளிலிருந்து அந்தச் சித்திரம் மெல்ல அழிந்து கடைசியில் வெறுமையாகி விட்டது. கற்பனை செய்வதையும், கனவுகள் காண்பதையும் நெஞ்சோடு இனிமையாக உறவாடுவதையும் விட்டே விட்டாள். தனக்கு அப்படியான ஒரு வாழ்க்கை அமையப் போவதில்லை. தனக்கு இளையவர்களாய் உள்ளவர்களை அனாதரவாய் விட்டுவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும் அந்த வாழ்க்கையைத் தேடித்தான் ஓடப்போவதில்லை என்று அவள் தனக்குள் தீர்மானித்து நெடுநாட்களாகி விட்டன.
ஆனால் டேவிட் வந்து குழப்பி விட்டானோ?
அப்படித்தான் குழப்பினாலும் றோஸிக்கு அவன் இல்லாமலிருந்தாலும் கூட நிச்சயமாக -அவன் தனக்காக இருக்க முடியாது என்றுதானிருந்தது. இதனால்தான் அன்று ஒஃபிசில் இருந்த போதும் அவனை மறக்க முயன்றாள். மறக்க முயல்வதற்காக அவள் மனசுக்குள் அழுதாள். இங்கே வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் போதும் அழுகிறாள்.
பெண்ணே உனக்காக நாங்கள் இரங்குகின்றோம், கண்ணீர் சிந்து கின்றோம் என்று யாரும் சொல்ல வேண்டாம். உன்மேல் சுமத்தப்பட்ட இந்த வாழ்க்கை உன்னை இப்படித் தண்டித்து விட்டதே அந்த வாழ்க்கையை உடைத்தெறித்துவிட்டு உன்னைப் போன்றவர்கள் கண்ணீர் சிந்தாத வாழ்க் கையை அமைக்க வேண்டும்-இப்படி யாராவது அவளுக்குச் சொல்லு வார்களா?
* 鲁 鲁 霹 *
ஆனந்தி, காலையில் எழுந்து காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது வசந்தி கேட்டாள். காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்குப் போகவேனும் கடையப்பத்துக்கு என்ன செய்கிறது?
ஆனந்தியிடம் காசில்லை. பதில் என்ன சொல்கிறது என்று ஒரு நிமிஷம் யோசித்து விட்டு "ராசு எழும்பி விட்டானா பார்?' என்றாள்.
'இல்லே' என்றாள் வசந்தி.
விடிந்து இவ்வளவு நேரமாகியும், ராசு என்று வீட்டில் செல்லமாக
அழைக்கப்படும் ராஜநாயகத்துக்கு இன்னும் விடியவில்லை. அவனை யாரும் இழுப்பவும் கூடாது. எழுப்பினால் பிடித்தது சனியன்.
'அவன் சேட் பொக்கட்டைப்பார். ஏதாவது கிடக்கும்' என்றாள் ஆனந்தி.
வசந்தி ஸ்டாண்டில் மாட்டியிருந்த சேட்டைப் பார்த்தாள். இல்லை, லோங்க்ஸ் பிக்பொக்கட்டில் கையை விட்டாள். ஒரு பத்து ரூபாய் நோட்டு விரலில் சிக்கியது.
'இருக்குது அக்கா'
43 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 27
'எவ்வளவு?"
'பத்து ரூபாய்' 'சரி, காந்தியை விட்டு கடையப்பம் வாங்கி, அவர்களை ஸ்கூலுக்கு அனுப்பு. மத்தியானத்துக்கு ஏதும் பார்' என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனாள்.
அவள் திரும்பி வருவதற்குள் காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்குப் போய் விட்டார்கள். ராசு இன்னும் தூக்கம் கலையவில்லை. வசந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனந்தியும் இரண்டு அப்பத்தைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு டீயைக் குடித்தாள்.
'காசைக் காணாமல் ராசு கத்துவானே?' வசந்தி கேட்டாள். 'நான் எடுத்ததாகச் சொல். கிழவனின் கையில் காசைக் காட்டி விடாதே!' அக்காவைத் தவிர வீட்டில் யாரும் ராசுவின் பொக்கெட்டை ஆராயக் கூடாது. அப்படி ஏதும் நடந்தால் அனர்த்தந்தான். அதற்காகத் தான் ஆனந்தி அப்படிச் சொன்னாள்.
ஆனந்தி ஒஃபிசுக்குக் கிளம்பும் போது கட்டிலில் இருந்த அருமை நாயகம் குறுக்கிட்டார். 'எனக்குக் காசு வேணும், தந்து விட்டுப்போ!'
'என்னிடம் இல்லே' 'ஏன் இல்லே? பத்தாந் தேதி அட்வான்ஸ் போட்டிருப்பாங்களே' 'இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைக்கேல்லே' 'ஏன் தரேல்லியா?" 'அவர்கள் தரவுமில்லே, நான் கேட்கவுமில்லே' சொல்லிவிட்டு விருட் டென்று படியிறங்கினாள். கிழவன் ஏதோ சொன்னது காதில் விழுந்தது.
அன்று மத்தியானம் ஆனந்தி கன்டீனுக்கு வந்த போது றோஸியைக் காணவில்லை. அவள் சாப்பாட்டையும் மறந்து அன்று காலை அப்பாவுடன் நடந்த சம்பாஷணையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
பத்தாந் தேதி அட்வான்ஸ் என்கிறது எனக்கு நினைவு வரேல் லயே. செலவுக்கென்று ஒரு சதம் கூட இல்லே. நாலா பக்கமும் கடன் வாங்கி அதுவும் நிரம்பிப் போச்சுது. சுபத்திராவையும் இரண்டு மூன்று நாளாய்க் காணோம். அவளிடம் இருக்குதோ என்னவோ. இன்றைக்கு ராசுவின் பொக்கெட் டிலிருந்தது ஒரு தெம்பாய் போச்சுது. நாளைக்கும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? மாதம் முடிஞ்சு சம்பளம் வாங்கும் வரை இத்தனை நாட்களையும் எப்படிக் கழிப்பது? யாரிடம் வாங்குவது? பந்தாந் தேதி அட்வான்ஸாக இருந்தால் எனக்குக் கிடைத்திருக்குமே. எனக்கு ஏன் தரேல்லே? ஒருவேளை அட்வான்ஸ் கொடுக்கேல்லியோ..? 'மனேஜரிடம் கேட்டால்
சுபைர் இளங்கீரன் 44

என்ன? எப்படிக் கேட்கிறது. அவர் என்ன நினைப்பாரோ. என்ன சொல்லுவாரோ..? 'ஹலோ...' ஆனந்தியின் சிந்தனை அறுந்தது. திரும்பிப் பார்த்தாள். டேவிட் புன்னகை தவழ நின்று கொண்டிருந்தான்.
'நானும் இருக்கலாமா?" 'ஓ.. யெஸ். ' என்று வாயில் வந்துவிட்டது. சொல்லிவிட்டாள். ஆனால் மனம் கூச்சப்பட்டது. டேவிட்டை முதல்நாள் றோஸியுடன் சந்தித்தது தான். அப்போதும் அவனிடம் பேசிக் கொண்டதுமில்லை. இன்று பழகிய வர்கள் போல் அவனுடன் பேசுவதென்றால். அவளுக்கு நாணமாக இருந் தது. ஆனாலும் அவளுக்குள் எழுந்த ஓர் ஆர்வம் அதைத் தகர்த்து விட்டது. டேவிட் ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். 'எங்கே றோஸியைக் காணோம்?' - உரையாடலை ஆனந்திதான் ஆரம்பித்தாள்.
'அம்மாவுக்கு சுகமில்லையென்று நேற்றுச் சொன்னாளே, அதனால் வராமல் இருந்திருக்கலாம். உங்களுக்கு லஞ்ச் முடிஞ்சுதா?' என்றான் டேவிட்.
'இல்லே இனித்தான்' 'வீட்டிலிருந்து கொண்டு வரேல்லியா?" 'இல்லே கன்டீனில் தான் பாண், டீ எடுக்க வேணும்' 'சரி இருங்கள், வாறேன்' என்று சரேலென்று எழுந்து போனான் டேவிட். சிறிது நேரம் சென்றிருக்கும். பாண், பருப்பு, டீ, வாழைப்பழம் என்று தனக்கும் சேர்த்து வாங்கி வந்து மேசையில் வைத்துவிட்டு 'எனக்கும் பாண் தான். சாப்பிடுங்கள்' என்று சொல்லி கதிரையில் அமர்ந்தான்.
இதுக்குள் இவ்வளவு நெருக்கமா..? என்று வியப் போடு எண்ணிய ஆனந்தி 'நானே எடுத்திருப்பேனே, உங்களுக்கு எதுக்குச் சிரமம்' என்றாள் சற்று நாணத்துடன்,
'பரவாயில் லே. இதெல்லாம் சிரமமில் லே, பார்க்கப் போனா தேவையில்லாத வரட்டுக் கெளரவத்தை ஒருவருக்கொருவர் காட்டுகிறது இருக்குதே அதுதான் சிரமமான காரியம்' என்று மெல்லச் சிரித்தான்.
'எனக்கு அப்படி ஒன்றும் வரட்டுக் கெளரவமில் லே' தலையைக் குனிந்தவாறு சொன்னாள் ஆனந்தி.
'நான் உங்களைச் சொல்லேல்லே. உங்களிடம் அது இல்லை என்று
45 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 28
தெரியுது. நான் சும்மா சொல்லி வைத்தேன். சரி, பாணை எடுங்கள்' என்று கூறி அவனும் ஒரு துண்டுப் பாணை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தான்.
'பாணை ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?" 'இந்தப் பாணை வெளிநாட்டான் கொண்டு வந்து பழக்கியது. ஆனால் இது நமது சாப்பாட்டில் எவ்வளவு முக்கிய பாத்திரம் வகிக்குது! சிங்களக் கலாசாரம், தமிழ் கலாச்சாரம், முஸ்லிம் கலாச்சாரம் எதுவா இருந்தாலென்ன, மொத்தத்தில் நமது தேசிய கலாச்சாரங்களோடு இந்தப் பாணும் கலந்து விட்டது. இனி இதைப் பிரிக்க முடியுமென்று நினைக்கிறீங்களா?' என்று மீண்டும் லேசாய்ச் சிரித்தபடி கேட்டான்.
'எனக்கென்ன தெரியும்? இந்தக் கலாச்சாரம் நாகரீகம் என்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்கு இந்தப் பாண் ஒரு ஜீவநாடி. இது மட்டும் தெரியும்.'
'என்னை விடச் சுருக்கமாக விளக்கி விட்டீங்களே..! இதுமட்டும் நீங்கள் நேராகவும் பேசுகிறீங்க. எனக்கு இது பிடித்திருக்குது' என்று அவளைப் பார்த்துச் சிரித்த டேவிட் 'உங்களுக்கு மட்டும் என்ன, பொதுவாக இந்தக் கொழும்பை எடுத்துக் கொண்டால் இதுக்கு இந்தப் பாணும் பருப்பும் இல்லாட்டி பொழுதும் ஓடாது, உசிரும் நிற்காது. நான் சொல்கிறது சரிதானே என்று அவளைப் பார்த்தபடி கேட்டான்.
டேவிட்டின் பேச்சு காய்ந்து போன ஆனந்தியின் உள்ளத்துக்கு இதமா யிருந்தது. அதேபோல அவனுடைய அந்தப் பளபளக்கும் விழிகளும் மயக்கும் புன்னகையும் அவளை என்னவோ செய்தன. முகத்தைச் சட்டென்று குனிந்து கொண்டாள். மனம் கிறுகிறுத்து ஏதோ சொல்லியது. அதை மாற்றிக் கொண்டு 'பத்தாம் தேதி கம்பெனியில் அட்வான்ஸ் போட்டார்களா? என்று கேட்டாள்.
A. A
ஓ.. யெஸ். ஏன் உங்களுக்குக் கிடைக்கேல்லியா?" 'இல்லே' 'ஆச்சரியமாயிருக்குது!" என்று சொல்லிவிட்டுப் பாணையும் வாழைப் பழத்தையும் எடுத்துக் கடித்தான். 'ஒரு வேளை பேமெண்ட் ஸிட்டில் உங்களுடைய பெயரில்லையோ. மனேஜர் பதியாமல் இருந்திருக்கலாம்.'
'ஏன் பதியாமல் விட்டிருக்கலாம்?"
"அவருக்குத்தான் தெரியும். அந்த மனுஷனின் போக்கே ஒரு மாதிரி..! பாணை எடுங்களேன். ஏன் சும்மா வைத்துக் கொண்டிருக்கிறீங்கள்?"
'ஆனந்தி பாண்துண்டை எடுத்து பருப்பில் தோய்த்து மென்றாள். கூச்சமும் நாணமும் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தது.
சுபைர் இளங்கீரன் 46

'மனேஜரைப் பற்றி நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீங்கள்?' ஆனந்தி கேட்டாள்.
'நரியை நரியாகத்தானே நினைக்க வேணும். வேறு மாதிரி நினைக்க முடியுமா?"
ஆனந்தி வியப்பால் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள். 'நீங்கள் அவரை அப்படிச் சொல்கிறது எனக்கு சரியாய்த் தெரியேல்லே!"
''areăT?'' 'எனக்கு அவரை அப்படிப்படேல்லே' 'நீங்கள் புதுசு. போகப் போகத்தான் அவரைப் பற்றித் தெரியும்.'
டேவிட் இவ்வாறு கூறியதும் சுபத்திராவும் ஒரு நாள் இதே போலச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் 'நீங்கள் றோஸி எல்லாரும் இப்படிப் பேசுகிறதாலே மனேஜருக்கு உங்கள் மேல் சரியான காய்ச்சல்' என்றாள்.
V
என்று சொல்லி விட்டு தட்டில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து ஒன்றை ஆனந்தியிடம் கொடுத்துவிட்டு மற்றதை உரித்தான்.
அவளிடம் மிஞ்சியிருந்த அற்ப சொற்ப நாணமும் கூச்சமும் இப்போது முற்றாக மறைந்து விட்டன. வாழைப்பழத்தை வாங்கி அவளும் உரித்தாள். 'நீங்கள் கம்பெனியின் சொந்த விஷயங்களையும் மனேஜரைப் பற்றியும்
'தெரியும்
பேசுகிறதாலேதான் உங்களை அவருக்குப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்' என்று கூறி விட்டு பழத்தைத் தின்னத் தொடங்கினாள்.
'சொந்த விஷயங்கள் என்று எதைச் சொல்லுறீங்கள்?" ஆனந்திக்குப் பதில் சொல்ல முடியவில்லை. டேவிட் மெல்லச் சிரித்தான். 'கம்பெனியைப் பொறுத்தவரையிலே சொந்த விஷயமென்று தனியாக ஒன்று இல்லே. நீங்க உட்பட இங்கே நூற்றுக் கணக்கான ஆட்கள் வேலை செய்கிறோம். எங்கள் உழைப்பில் செய்யப் படுகிற சாமான்கள், துணிகள், உடுபிடவைகள் இதுக்காக நடத்தப்படுகின்ற வியாபார விஷயங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் கம்பெனி டைரக்டர்களும், மனேஜரும் மட்டுமே இதையெல்லாம் செய்ய ஏலாது. இந்த நாலு பேர் மாத்திரம் இருந்தாலும் அது கம்பெனியாகி விடாது. நீங்கள் உட்பட இங்கே வேலை செய்கிற அத்தனை பேரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். நாமெல்லாம் இல்லாவிட்டால் கம்பெனி என்று ஒன்னு இருக்காது. கம்பெனி என்கிறதுநாங்களும் தான். பிரித்துப் பார்க்கப்படாது. அதோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்மோடும் சம்பந்தப்பட்டுத்தான் இருக்குது. அதனால்தான் கம்பெனிக்கென்று சொந்த விஷயம் ஒன்று இல்லை என்கிறேன். சில சமயங்களில் தங்கள் நன்மைக்காக உற்பத்தியைக் குறைக்கிறது, அதுக்காக
47 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 29
ஆட்களைக் குறைக்கிறது, மிஞ்சிப் போனால் கம்பெனியை இழுத்து மூடுகிறது இதெல்லாம் சொந்த விஷயம் என்று சொன்னால் அதை எப்படி ஒப்புக் கொள்கிறது? இதெல்லாம் நம்மைப் பாதிக்கிற விஷயமல்லவா? அதனால் தான் கம்பெனி விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம்; விமர்சிக்கிறோம், கம்பெனியோடு நாங்களும் இருக்கும் வரை இது தவிர்க்க ஏலாது. நாங்கள் மட்டுமா, வெளியே உள்ள சனங்களுக்கும் கூட அதோடு சம்பந்தமிருக்குது தான். சாமானின் விலையைக் கூட்டுகிறது. தனது தனிப்பட்ட விஷயம் அதைப்பற்றிப் பேசப்படாது என்று சொல்ல முடியுமோ? இது சனங்களைப் பாதிக்கிற விஷயமல்லவா? அவர்கள் பேசாமலிருக்க முடியுமா?"
டேவிட்டின் இந்த விளக்கத்தைக் கேட்டு ஆனந்தி அசந்து விட்டாள். அவனுடைய கண்கள் மட்டுமல்ல, அவன் பேசுகிறது கூட அப்படி இருப்பது போலத் தென்பட்டது அவளுக்கு இடையில் ஏதும் கேட்கவோ, சொல்லவோ தெரியவில்லை. ஆவல் பொங்கியெழ டேவிட் பேசுவதைக் கேட்டுக் கொண் டிருந்தாள்.
டேவிட் மேலும் தொடர்ந்தான். 'மனேஜர் விஷயமும் அப்படித்தான். மாசிலாமணி என்கிற ஆளைப் பற்றி நமக்கு அக்கறையில்லே, ஆனால் மனேஜர் என்கிறவரைப் பற்றி அக்கறைப்படத்தான் செய்வோம். கம்பெனி சம்பந்தமாய் அவர் எடுக்கிற நடவடிக்கைகள், எங்களோடு அவர் நடந்து கொள்கிற விதம் எல்லாம் எங்களையும் பாதிக்கத்தான் செய்யும். அதனால் தான் அவரையும் விமர்சிக்கிறோம்"
இத்தனையையும் கூறி நிறுத்திவிட்டு சிறிது நேரம் மெளனமாயிருந்த டேவிட் 'உங்களோடு கொஞ்சம் அனுதாபத்தோடும் தாராள மனசோடும் நடந்து கொள்கிறார் போலிருக்குது. அதனால்தான் உங்கள் மனசிலே அவரைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் விழுந்திருக்குது. உங்கள் பேச்சே அதைக் காட்டி விட்டுது. நான் சொல்கிறது சரிதானே?' என்று கேட்டான்.
டேவிட்டுக்கு சாத்திரம் தெரியுமோ. 'என்ன யோசிக்கிறீங்கள்?" 'நீங்கள் சொல்கிறது சரிதான்’ என்று சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லாமல் மெல்லச் சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவன் போல் அவனும் லேசாய்ச் சிரித்து விட்டு மேலும் சொல்லத் தொடங்கினான். 'உங்களிடம் அவர் பிரியமாகவும் அனுதாபத்தோடும் நடந்து கொள்ளலாம். ஆனால் இது மேலுக்குக் காட்டிக் கொள்கிற ஷோ. அவ்வளவுதான். உண்மை என்ன தெரியுமோ..? அவர் மனேஜர், நீங்கள் அவருக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு டைப்பிஸ்ட் மனேஜர் - டைப்பிஸ்ட் என்கிற உறவு வெறும் முதலாளி - தொழிலாளி உறவுதான். அது போலத்தான் எங்களுக்கும்
சுபைர் இளங்கீரன் M 48

அவருக்கும். உழைப்பு - கூலி இந்த இரண்டும் தான் இந்த உறவிலே இருக்குது. அனுதாபம், இரக்கம், மனிதாபிமானம் என்கிறதெல்லாம் இந்த உறவிலே இருக்கிறதில்லே. இருக்கிறதாகச் சொன்னால் அது வெறும் டூப். இந்த உறவு அடிப்படையிலே முரண்பட்டது. அதனாலேதான் நிர்வாகத்துக்கும் எங்க ளுக்குமிடையிலே அடிக்கடி தகராறு, பிரச்சினைகள், ஸ்ட்ரைக்குகள், போராட் டங்கள் எல்லாம் நடக்குது. இப்ப இருக்கிற சமுதாயத்திலே இதையெல்லாம் தவிர்க்க ஏலாது. இந்த உறவு இருக்கும் வரையிலே நாங்களும் நிர்வாகத்தை -அதுக்குப் பொறுப்பான மனேஜரை விமர்சித்துக் கொண்டுதான் இருப்போம். அவரும் எங்கள் மேல் காய்ச்சலாய்த் தான் இருப்பார்.'
தங்கு தடையின்றி விறுவிறு என்று வந்த டேவிட்டின் பேச்சிலேயே தன்னையுமறியாமல் லயித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
லஞ்ச் இண்டர்வல் முடிந்து விட்டது போல் தெரிந்தது. கன்டீனில் இருந்தவர்கள் திரும்பத் தொடங்கினார்கள். டேவிட்டும் இத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு 'டைமாச்சுது..' என்று சொல்லி எழுந்தான். 'உங்களோடு இன்றைக்குப் பேசக் கிடைச்சது பற்றிச் சந்தோஷம். உங்கள் வேலை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னோட வந்து கதைக்கலாம்.'
ஆனந்தியும் எழுந்தாள். டேவிட் போவதற்கு முன் "அதோட இன்னொரு விஷயம். நீங்கள் இங்கே றோஸியோடு தான் பழகுறீங்களாம். மற்றவங் களோடு அப்படி இல்லையாம். உங்களைப்பற்றி இந்தப் பெண்களெல்லாம் என்னிடம் ரிப்போர்ட் செய்கிறார்கள்' என்றான் சிரித்தக் கொண்டே
ஆனந்தி அவனை வியப்போடு பார்த்தான் டேவிட் மேலும் சொன்னான். இவங்களோடெல்லாம் நீங்கள் பேசவேணும் பழக வேணும். இவர்க ளெல்லாம் நம்மவர்கள். கள்ளம் கபடமில்லாதவர்கள். நாமெல்லாம் ஒரே ஆட்கள். ஒரே வர்க்கம். இவர்களெல்லாம் நம்ம சகோதரங்கமாதிரி. நமக்குள் நெருக்கம் அதிகமாயிருக்க வேணும்' என்று சொல்லிக் கொண்டே நடந்தான். ஆனந்தியும் கேட்டுக் கொண்டே வந்தாள்.
இடையில் டேவிட் பிரிந்து தன் இடத்துக்குச் சென்று விட்டான். ஆனந்தி சிந்தித்தபடி ஒஃபிஸ் அறையை நோக்கி நடந்தாள். டேவிட் கம்பெனியைப் பற்றியும் மனேஜரைப் பற்றியும் கூறிய விஷயங்கள் புதுமையாகவும் நியாய மாகவும் பட்டன. அவன் மீது காணப்பட்ட ஒரு கவர்ச்சிக்கு அவன் கூறிய கருத்துக்களும் அவன் சொன்ன விதமும் கூட ஒரு காரணமோ என்று நினைத்தாள். அவனுடைய பளபளக்கும் கண்கள், மயக்கும் புன்னகை மாத்திரமல்ல, அவனுடைய பேச்சும் கூட யாரையும் வசீகரிக்கத்தான் செய்யும் என்று அவளுக்குத் தோன்றியது. மனேஜரைப் பற்றி அவளுக்கிருந்த அபிப்பிராயத்தில் டேவிட் சொன்ன கருத்துக்கள் மேலும் ஒரு சரிவை
49 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 30
உண்டாக்கி விட்டன. டேவிட்டோடு பேசக்கூடாது, பழகக் கூடாது கவன மாயிருக்க வேண்டும்' என்று மனேஜர் சொன்னது இதுக்குத்தானோ என்று எண்ணினாள். ஆனால் அவனோடு இன்னும் பேசவும் பழகவும் வேணும் போலிருந்தது. டேவிட்டோடு மட்டுமல்லாமல் அவன் கூறியது போல் மற்றவர்களோடும் பழகவேணும் என்ற தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். இதுவரை அவர்களோடு பழகாமல், பேசாமல் இருந்தது தவறு என்றும் உணர்ந்தாள். டேவிட் இதைத் தெரிவித்ததற்காக தனக்குள் அவனுக்கு நன்றியும் சொல்லிக் கொண்டாள்.
இந்தச் சிந்தனையுடன் அவள் ஒஃபிஸ் அறைக்குள் போகும் போது, தானும் டேவிட்டும் கதைத்துக் கொண்டிருந்தது மனேஜரின் காதுக்கு இதுவரை எட்டியிருக்குமோ என்ற எண்ணம் உதயமாயிற்று. இனம் தெரியாத ஒரு பயம் மனசைக் கவ் விக் கொண்டது. தயக்கத்துடன் தன் அறைக்குள் வந்து டைப்ரைட்டருக்கு முன்னால் இருந்தவள், மன்ேஜர் கூப்பிட்டுக் கேட்டால் என்ன சொல்கிறது என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அன்று மனேஜர் அவளைக் கூப்பிடவுமில்லை; விசாரிக்கவு மில்லை; ஆனந்திக்கு இது பெரிய ஆறுதலாயிருந்தாலும் மனசில் இருந்த பயம் நீங்கவில்லை.
நான் ஏன் இப்படிப் பயந்து சாகவேனும் ? நான் என்ன தப்புச் செய்து விட்டேன். மனேஜருக்குப் பிடிக்காதவங்களெல்லாம் எனக்கும் பிடிக்காத வங்களாய் இருக்க வேணும் என்கிறதில்லையே..? டேவிட் சொல்கிற மாதிரி நாங்களெல்லாம் ஒரே ஆட்கள். பேசாமல் பழகாமல் எப்படி இருக்கிறது? டேவிட்டோடும் றோஸியோடும் நான் பேசக்கூடாது, பழகக் கூடாது என்று சொல்ல இவருக்கு என்ன உரிமையிருக்குது? நாங்கள் கதைக்கிறதையெல்லாம் இவருக்கு வந்து சொல்ல வேணும் என்று இவர் என்னிடம் எதிர்பார்க்கிறதிலே என்ன நியாயம் இருக்குது? இதுக்கா இவர்கள் சம்பளம் தருகிறார்கள்? என்னுடைய வேலை இதுதானா..? நான் ஒரு டைப்பிஸ்ட். அந்த வேலைக் குத் தான் சம்பளம் தருகிறார்கள். மனேஜர் டைப்பிஸ்ட் என்கிற உறவைத் தவிர வேறு எந்த உறவும் எங்களுக்கிடையே இல் லே. வேறு எந்த உறவைக் கொண்டு இவர் என்னிடம் எதிர்பார்க்கிறார். அவர் இதை விசாரிக்கிறது கேட்கிறது சரியில்லே. நான் சொல்லவும் தேவையில்லை.
- அப்ப நான் ஏன் நடுங்க வேணும்?. எனக்கு விளங்குது. வேலைக்காக, வேலையைக் காப்பாற்றிக் கொள்கிறதுக்காகத்தான் இந்த நடுக்கம். இந்த வேலை அவர் தந்த பிச்சை மனேஜர் அப்படித்தான் சொன்னார். இந்தப் பிச்சைதான் எனக்கு நியாயமாகப்படாததையெல்லாம் செய்ய வேணும் என்று அவரைக் கேட்கவைக்குது. இப்படித்தான் என்மனசுக்குச் சரி என்று படாததையெல்லாம் செய்யச் சொல்லுவாரோ..?
சுபைர் இளங்கீரன் 50,

ஒஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் வரை ஆனந்தியின் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மனேஜரைப் பற்றிய கசப்பு உள்ளத்தில் ஊறத் தொடங்கியது. இந்த மனக் கொந்தளிப்போடும் கசப்போடும் வீட்டுக்குள் புகுந்த ஆனந்தி அங்கு கண்ட காட்சியால் திகைப்புற்று நின்று விட்டாள்.
* * * * *
திகைப்போடு உள்ளே நுழைந்தாள் ஆனந்தி. மக்களை வாயில் வந்தபடி வைது கொண்டிருந்தார் அருமைநாயகம். வசந்தி நடுத்தட்டில் மேசையில் தலையைக் கவிழ்ந்தபடி விசுக்கி விசுக்கி அழுதவண்ணம் இருந்தாள். காந்தியின் ஒலம் காதைத் துளைத்தது.
இதைக் கண்டு சற்று திகைத்து நின்ற ஆனந்தி 'என்னடி அழுகையும் ஒலமும்? என்ன நடந்தது?" என்று காந்தியிடம் கேட்டாள்.
"அப்பா அக்காவுக்கும் எனக்கும் அடிச்சுப் போட்டார்!" என்று ஒலத்தை நிறுத்தி தேம்பினாள் காந்தி.
'ஒ.இதுதானா. இதுக்கு ஏன் அழுகையும் ஒப்பாரியும்? ஏய் வசந்தி. என்ன இது? அழுதது போதும் எழும்பு?'
வசந்தி கண்ணீர் பொங்கி வழிந்த விழிகளுடன் தலையைத் தூக்கி அக்காவைப் பார்த்தாள். 'ஒன்று இந்தக் கிழவன் இருக்க வேணும் அல்லது நாம இருக்க வேணும். இல்லாட்டி ஒரு நாளைக்கு இந்த வீட்டில் கொலைதான் விழும்' அழுகையும் சினமுமாகச் சொன்னாள் வசந்தி.
"அழுகையை விட்டுப் போட்டு நடந்ததைச் சொல்லேன். அவருடைய குணந்தான் தெரியுமே. நீ ஏதாவது அவருடன் வாயாடியிருப்பாய். அந்த ஜென் மத்துக்கு பிஞ்சென்றும் தெரியாது, பிள்ளையென்றும் தெரியாது. மொத்தியிருக்கும் அப்படித்தானே. ?"
'இல்லே அக்கா. நான் ஒன்றும் வாய் குடுக்கேல்லே. காசு கேட்டார் கொடுக்கேல்லே. வாயில் வந்தபடி ஏசினார். திட்டும் ஏச்சும் தாங்க முடி யேல்லே. அடுத்த வீட்டுக்காவது போய் இருந்து விட்டு வருவோம் என்று வெளியே வந்தேன். இடையில் மறிச்சு முகத்திலும் முதுகிலும் அடி அடியென்று அடிச்சுப் போட்டார். காந்தி ஓ. என்று கத்தினாள். அவளுக்கும் நாலைஞ்சு அறை' என்று விசும்பினாள் வசந்தி.
இது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றாலும், ஆனந்திக்குப் பொறுக்க முடியவில்லை. விருட்டென்று எழுந்து முன்தட்டுக்கு வந்தாள். "நீங்கள் என்ன மனுஷனா, மிருகமா. இப்படிச் சித்திரவதை செய்வதை விட ஒரேயடியாய் கொன்று போடுங்களேன்' என்று சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.
51 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 31
அவள் எப்போதும் அப்படித்தான். அப்பாவின் மீது ஆத்திரம் வரும் போதெல்லாம் காரசாரமாய் ஏதாவது சொல்ல வேணும் என்று தோன்றும். ஆனால் வாய் வராது. ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் உள்ளுக்குள்ளாகவே புதைத்துக் கொண்டு பொருமிக் கொள்வாள். இப்போதும் அதையேதான் செய்தாள். என்றாலும், நீங்கள் ஏன் இப்படி வெறிபிடிச்சு நடக்கிறீங்கள்? உங்களுக்கு கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமில்லையா!' என்று கேட்டாள்.
'நீ ஏன் பொய் சொன்னாய்?" என்று பதிலுக்குக் கத்தினார் அருமைநாயகம். 'நான் என்ன பொய் சொன்னேன்?'
'காலத்தாலே காசு கேட்டதுக்கு இல்லேன்னு சொன்னியே?'
'இல்லைத்தான்' 'பொய் மத்தியானம். சோறு, அறுக்குளா மீன், பட்டா பூஞ்சி, பொரியல் சொதி என்று அமர்க்களமாய் எல்லாம் நடந்தது. பின்னேரம் காந்தியிட்டே சொல்லி வடை, மிக்சர், வாழைப்பழம் என்று வாங்கி சின்னதுகளும் பெரிசுமாய் கொறிச்சதுகள். இப்ப வேறே இரவுக்கும் எல்லாம் திறமாய் ஆக்கி வைத்திருக்குது. நான் இரண்டு ரூவா கேட்டேன். எனக்கு மட்டும் இல்லே. ஆனால் இதுக்கெல்லாம் உன் தங்கச்சிட்டே எங்கேயிருந்து வந்தது? நீ கொடுக்காமே அவளுக்கு எப்படி வந்தது என்று கேட்கிறேன்?"
ஆனந்தியின் உள்ளம் எரிந்தது. கிழவன் நிறுத்தவில்லை. 'உனக்கு அட்வான்ஸ் கிடைத்திருக்குது. உன்கையில் காசு இருந்திருக்குது. அவளிடம் கொடுத்திருக்கிறாய். நான் கேட்டபோது இல்லேன்னு பொய் சொல்லிட்டுப் போய்ட்டாய். மத்தியானம் நானும் நல்லாய்ச் சாப்பிட்டேன்தான், சோறு கறியெல்லாம் நல்லாய்த் தானிருந்தது. அப்படிச் சாப்பிட்டுக் கன நாள். இப்ப நாக்குக்குத் தண்ணி ஊத்த இளையவளிடம் இரண்டு ரூவா கேட்டேன். இல்லேன்னு சொல்லி விட்டாள். திங்கிறதுக்குக் காசு இருக்குதா. அதுக்கு எங்கேயிருந்து காசு என்று கேட்டேன். உனக்குச் சொல்லவேணுமோ. எப்படியும் வரும், எங்கேயிருந் தும் வரும், நீ யார் கேட்க என்று வீம்பு காட்டினாள். அதனால் தான் நாலைஞ்சு வைச்சேன். இன்னும் வைப் பேன்; உதைப் பேன்; முறிப்பேன். நீ என்ன கேட்கிறது. கேட்கிறதாயிருந்தால் கள்ளுக்கு காசு தந்து போட்டுக் கேள்.'
அருமைநாயகம் இப்போது தண்ணியில் இல்லாவிட்டாலும் வெறி உச்சிக்கு ஏறியிருந்தது. அன்றைக்கென்று குடிக்கக் காசு இல்லாத விசாரமும் ஆக்ரோஷ மும் அவரை தன்நிலை புரியாதவராய் ஆக்கி விட்டிருந்தன.
இதே சமயம் 'என்ன வீட்டுச் சத்தம் றோட்டில்ே கேட்குதே...?' என்று சொல்லியவாறு அங்கு திடீரென்று தரிசனமானாள் சுபத்திரா,
கிழவனின் வார்த்தைகளால் உள்ளம் மட்டுமல்லாமல் உடம்பெல்லாம்
5
2
சுபைர் இளங்கீரன்

பற்றி எரிய நின்றிருந்த ஆனந்திக்கு, நாலைந்து நாட்களாய் காணர்த சுபத்திராவைக் காண வேண்டுமே என்றிருந்த ஆவல் கூடத் தெரியவில்லை. சட்டென்று திரும்பிப் பார்த்தாள். "இங்கே தகப்பனாய் வந்து வாய்த்த பிசாசு எங்களோட சண்டை போட்டுக் கொண்டிருக்குது. அதுதான் இந்தச் சத்தம்' என்றாள் உக்கிரமாக,
ஆத்திரமும் ஆவேசமும் வருகிற பொழுதுநாவுக்கு வரம்பு இருப்பதில்லை. அது சிலம்பமாடி மற்றவரின் உள்ளத்தைத் துளைத்து விடுகிறது. அருமைநாய கத்தின் மரத்துப்போன உள்ளத்தைக் கூட ஆனந்தியின் வார்த்தை குத்தி விட் டது. 'என்னைப் பிசாசென்றா சொல்கிறாய்? நான் பிசாசென்றால் நீங்க ளெல்லாம் பிசாசுக்குட்டிகள்' என்று அருமைநாயகம் கத்தினார்.
"அப்படிப் பிறந்தாலும் கூட இப்படி அவஸ்தைப்பட வேண்டியிருக்காது' ஆனந்தியும் கத்தினாள்.
W தந்தைக்கும் மகளுக்கும் சொற்போர் மூளுவதைப் பார்த்த சுபத்திராவுக்கு அருவருப்பாயும், சங்கடமாயுமிருந்தது. " ஏன் வீண் தர்க்கம் ஆனந்தி? நீ இப்படி வா...' என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
'இப்படிப்பட்ட தகப்பனைப் பார்த்துக் கொண்டு எப்படிப் பேசாமல் இருக்கிறது சுபத்திரா.?' ஒன்றா இரண்டா இவர் செய்யும் அநியாயங்கள் தகப்பன் என்ற முறையில் எங்களுக்கு உண்ண உடுக்கக் கொடுத்து வாழ வைக்க வக்கில்லை. சரிபோகட்டும், எங்களுக்கு இம்சையாவது தராமல் இருக்கப்படாதா? காசு தரட்டாம் குடித்துத் தொலைக்க. இல்லேன்னு சொன்னால் அடியும் உதையும் தான். இப்படியும் ஒரு தகப்பன் எங்கேயாவது இருக்கிறானா?'
"எங்க அம்மாவுக்கு இவர் புருஷனா இருந்ததுமில்லே, எங்களுக்கு இவர் தகப்பனாய் இருந்ததுமில்லே. எங்களைப் பிள்ளைகளாய் பெற்று விட்டு கொஞ்சமும் பொறுப்பில்லாமே குடியும் ரேஸoமாய்த் திரியும் ஒரு தகப்பனை நீ பார்த்திருக்கிறியா?"
'பெற்ற பிள்ளைகள் வயிற்றுக்கு இல்லாமல் வாட அதைக் கண்டும் மனசைக் கல்லாக்கிக் கொண்டு, பெண்ணாய்ப் பிறந்தவளிடம் காசு பறிக்கும் ஒரு அப்பனை நீ கண்டிருக்கிறியா?"
'பிள்ளைகளிடம் ஒரு தகப்பனுக்கு இருக்கும் பாசம் துளியும் இல்லாமல் அவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று எண்ணுகிற ஒரு தகப்பனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறீயா, சுபத்திரா. இந்தப் பிறவியை பிசாசு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்கிறது. சொல்லேன் சுபத்திரா..?'
ஆனந்திக்கு இத்தனை நாட்களாய் இல்லாத ஒரு வேகம், ஆவேசம். மனசுக்குள் குமைந்து குமைந்து அனலாகிக் கிடந்த எண்ணங்களும் உணர்ச்சி
53 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 32
களும் வார்த்தைகளாகி பட்டாசு போல் வெடித்துச் சிதறின.
'போதும் வாயை மூடு' முன் தட்டுக்குள்ளிருந்து உறுமினார் அருமைநாயகம்.
'நான் ஏன் வாயை மூட வேணும் ? மூடுகிற விதத்திலேயா எங்களோட நடந்து கொள்கிறீங்கள்?"
சுபத்திரா இடைமறித்து 'ஆனந்தி கொஞ்சம் பேசாமலிரேன்' என்று கெஞ்சுவது போல் சொன்னாள். ஆனால் அவள் அடங்கவில்லை.
'பேரைப் பாரு அருமைநாயகமாம். பிள்ளைகள் மேல் உள்ள எந்த அருமைக்காக இந்தப் பெயரோ. ?"
'அருமைநாயகம் அல்ல அக்கா, இது எருமை நாயகம்' அழுது ஓய்ந் திருந்த வசந்தி இடையில் குறுக்கிட்டுச் சொன்னாள்.
சுபத்திரா சிரித்தாள். ஆனந்தியின் சீறி வெடித்த சினம் பட்டென்று நின்று அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 'நீ சொல்கிற மாதிரித்தான் இருக்குது. பார்க்கப் போனா அவருக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் பேரு வைத்திருக் கிறார் பாரு! மகனுக்குப் பெயர் ராஜநாயகம். அவன் எந்த நாட்டை ஆளா விட்டாலும் இந்த வீட்டையாவது ஆள வேண்டாமா? அவன் ஊரை அளந்து கொண்டு திரிகிறான். இவளுக்கு வசந்தி என்று வைத்திருக்குது. இவள் என்ன வசந்தமாகவா இருக்கிறாள்? நான் தான் தலையிலே பாரத்தைச் சுமந்து கிடக்கிறவள். எனக்கொன்றும் முடியேல்லே. முடியவும் வேணாம். ஆனா வயது வந்த இவளுக்கு ஒரு தாலி, ஒரு கல்யாணம் என்று ஒரு வசந்தம் வீசவேணாமா? அடுத்ததைப் பாரு. பெயர் காந்தி. என்ன பிரயோசனம் இந்தப் பெயராலே இவளுக்காவது வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்குமோ இல் லையோ, கடைசியாகப் பிறந்ததுக்குப் பெயர் செல்வமாம். அது தரித்திரத்திலே நிற்குது. எங்கள் குடும்பம், எங்கள் பெயர் எல்லாம் எப்படி இருக்குது பார்த்தியா? ஆனந்தம், வசந்தம், புகழ், செல்வம் எல்லாம் எங்கள் வாழ்க் கையில் இல்லாவிட்டாலும் பெயரிலாவது இருக்கட்டும் என்று நினைச்சு இவர் இப்படி வைத்திருக்கிறாரோ என்னவோ...' படபட என்று வெடித்து விட்டு உள்ளே சென்றாள் ஆனந்தி. சுபத்திராவுக்கும் வசந்திக்கும் உண்மையாகவே சிரிப்பு வந்து விட்டது. 'தன்னை மட்டும் விட்டு விட்டாள்" என்றாள் வசந்தி சிரித்துக் கொண்டே.
குடும்பத்தில் நடக்கும் சச்சரவுக்கெல்லாம், மனம் உடைந்த பேச்சுக் கெல்லாம் அடிப்படைக் காரணம் வறுமையும் இல்லாமையும் தான் என்று சுபத்திராவும் உணர்ந்திருந்தாள். தகப்பன் என்னதான் குடிகாரனாயிருந்தாலும் வீட்டில் செழிப்பு இருந்தால் தங்கள் பெயரில் கூட சலிப்பு ஏற்பட்டிருக்குமா? இப்படியெல்லாம் ஆனந்தி பேசுவாளா. சுபத்திராவுக்கு பரிதாபமாயிருந் ჭნტl.
சுபைர் இளங்கீரன் 54

உள்ளே சென்ற ஆனந்தி மனசை ஆற்றிக் கொண்டாள் போலும், சற்று நேரம் சென்று திரும்பி வந்தாள்.
'என்ன ஆனந்தி.?' ஏதோ கேட்க வாய் எடுத்தாள் சுபத்திரா. 'இனி என்னை ஆனந்தி என்று கூப்பிடாதே. துக்கந்தி என்று கூப்பிடு' சுபத்திரா இப்போது சிரிக்கவில்லை. ஆனால் வசந்தி 'அக்கா தன்னையும் விட்டு விடேல்லே...' என்று சிரித்தாள்.
'உங்களுக் கெல்லாம் சிரிப்பும் கும் மாளமும்தான். எனக்கு நாக்கு விடாய்க்குது. காசைத் தந்து போட்டுச் சிரியுங்கோ. எனக்கு ஆட்சேபணை யில்லே' என்று அருமைநாயகத்தின் குரல் ஒலித்தது.
"உன்னிடம் எவ்வளவு இருக்குது' தங்கையிடம் கேட்டாள் ஆனந்தி. வசந்தி மேசை லாச்சியைத் திறந்து "இது தான் இருக்குது' என்று சொல்லி ஒரு ரூபாயைக் கொடுத்தாள்.
அதை வாங்கிய ஆனந்தி கிழவனிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, "இதைத் தவிர ஒருசதமும் இல்லே. கொண்டு போய்த் தொலையுங்கள். ஆனா நான் பொய் சொல்லேல்லே. எனக்கு அட்வான்ஸ் கிடைக்கேல்லே. ' என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள்.
ஒரு ரூபாய்க் குத்தியை கையில் உருட்டிப் பார்த்துக் கொண்ட, கிழவனுக்கு கள்ளுத்தாகம் மேலும் அதிகமாகி விட்டது. அதற்கு மேல் அவர் அங்கு நிற்கவில்லை.
'என்னடி இது. பெரிசா பொரிந்து கொட்டிவிட்டு, இப்ப பூனையைப் போல, காசைக் கொடுக்கிறீயே, குடிக்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சுபத்திரா,
'கொடுக்காட்டி அந்த எருமை கத்திக் கொண்டே இருக்கும். நாம இங்கேயிருந்து கதைக்கேலாது. அதுதான் கொடுத்தேன்.
'என்றாலும் நாம இங்கே கதைக்கேலாது. சும்மா ஒரு வாஷ் எடுத்துக் கொண்டு வா. இப்படியே கோல் பேஸ் பக்கம் சற்றுப் போய் விட்டு வரலாம். '
"அதுவும் சரிதான்'
55 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 33
நான்காவது அத்தியாயம்
னதில் பாரமிருந்தால் அது கனத்துக் கொண்டு தான் இருக் கும். தனக்கு அந்நியோன்னியமான எவரிடமாவது தன் மனச்சுமையை இறக்கிவைக்காத வரை ஆறுதல் இருக்காது. இந்தநிலைதான் ஆனந்திக்கும். மனேஜர், டேவிட் -றோஸி, தனக்கு ஒஃபிசில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அது சம்பந்தம்ாக மனதில் ஒடும் எண்ணங்கள் எல்லாம் பெரும் சுமையாகக் குவிந்து ஆனந்தியை அழுத்திக் கொண்டிருந்தன. சுபத்திராவிடமாவது இவற்றைச் சொல்லி மனப் பாரத்தைக் குறைக்க வேணும், அவள் ஏதாவது ஆலோசனை சொல்லக்கூடும் என்று அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சுபத்திரா வந்தது அவளுக்கு பெரிய ஆறுதலாயிருந்தது. சற்று முன் வீட்டில் நடந்த சம்பவங்கள் அவை பழக்கப்பட்டுக் காய்ந்து போன விஷயமாதலால் - அவை
கூட மனதை அலட்டாமல் அதன் ஒரு மூலையில் புதையுண்டு விட்டன. ஆகவே வீட்டிலிருந்து புறப்பட்டு கோல் பேஸ0க்கு வரும்போதே "உனக்கு எத்தனையோ விஷயங்கள் சொல்ல வேணும் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஆனால் உன்னை நாலைஞ்சு நாளாய்க் காணோம். நீ எங்கே போயிருந்தாய்?' என்று கேட்டாள்.
'நரகத்துக்கு" என்று சிரித்தாள் சுபத்திரா. 'நரகத்துக்கா...? அதுக்காக எங்கேயும் ஏன் ஓட வேணும்? எங்க சந்துக்கு வந்தால் போதுமே..?' என்று ஆனந்தியும் சிரித்து விட்டு "பகிடி இருக்கட்
டும். நீஇப்படித்தான் அடிக்கடி காணாமல் போய்விடுகிறாய். ஒருநாள் இரண்டு நாளாய் இருந்தால் பரவாயில்லே. ஆனால் நாலைஞ்சு நாளாகி விட்டால்
சுபைர் இளங்கீரன் 56
 

உன்னைக் காணாமல் மனசு ஏங்குது. நீ ஏன் என்னை இப்படி ஏங்க வைக் கிறியோ..?' என்றாள் ஒருவித வேதனையுடன்.
'இது காதலி, காதலனிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்கிறியே?' என்று திரும்பவும் சிரித்தாள் சுபத்திரா.
அவள் இவ்வாறு சொன்னதும் ஆனந்தியின் முன்னால் டேவிட் திடீரெனத் தோன்றி பளபளக்கும் கண்களோடு, அந்த மயக்கும் புன்னகையைச் சிந்தி விட்டுச் சரேலென மறைந்து விட்டான். அதில் தன்னையுமறியாமல் சிறிது நேரம் சொக்கிவிட்டாள், அவள்.
வானத்து நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை. ஆனால் நட்சத்திரங்களே இல்லையென்று சொல்லிவிட முடியுமா? அதே போல கவலைநிறைந்த மனதில் காதல் தெரிவதில்லை. ஆனால் காதலே இல்லை யென்று சொல்லிவிட (1ՔlգայԼDո ?
சிறிது நேரம் அப்படியே லயித்திருந்தவள், ‘என் அதிர்ஷ்டத்துக்கு ஒரு காதலன் தான் குறைச்சல்' என்று ஒரு சலிப்புடன் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் மனம் மட்டுமல்லாமல் முகமும் வாடி விட்டது. ஒன்றும் பேசாமல் நடந்து வந்தாள்.
'ஏன் ஆனந்தி, மெளனமாகி விட்டாய்? நான் சொன்னது உனக்குப் பிடிக்கேல்லியா?"
'என்னை ஆனந்தி என்று கூப்பிடாதே. துக்கந்தி என்று கூப்பிடு என்று சொன்னதை இதுக்குள்ளே மறந்து போனியாக்கும்?"
சுபத்திராவின் முகம் வாடியது. ஆனந்தி அப்படிச் சொன்னது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்ததோ என்னவோ - அவளும் ஒன்றும் பேசாமல் நடந்தாள். கோல் ஃபேஸ0க்கு வந்து லைட் ஹவுசை நோக்கி நடக்கும் போதுதான் வாயைத் திறந்தாள்.
'நீ சொல்கிற மாதிரி உன்னைக் கூப்பிடுவேன் என்று நினைக் கிறியா உனக்கு எத்தனையோ கவலைகளும், துயரங்களும் இருக்கத்தான் செய்யுது என்கிறது எனக்குத் தெரியாமல் இல்லே. ஆனா உன்னை நினைக்கிறதிலே, உன்னோடு பேசுகிறதிலே, உன்னோடு பழகுகிறதிலே எனக்கு ஒரு ஆனந்தம். எனக்குள்ளே நீ ஆனந்தமானவளாய்த் தான் இருக்கிறாய், நீ எனக்கு ஆனந்தமானவள் தான். எனக்கு மனச் சஞ்சலம் ஏற்படுகிற போதெல்லாம் 'ஆனந்தி. ' என்று எனக்குள் சொல்லிக் கொள்ளுவேன். எனக்கு இது ஒரு சுகம்போல. உன் அப்பாவைப் பற்றி எனக்குக் கூட நல்லபிப்பிராயமில்லே என்கிறது உனக்குத் தெரியும். ஆனாலும் உனக்கு இந்த அழகான பெயரை அருமையான பெயரை வைத்ததுக்காக அவரை ஆயிரம்முறை மன்னிப்பேன்; மன்னித்திருக்கிறேன். ' என்று நிறுத்தி ஒருகணம் மெளனமாயிருந்தவள், 'கோயா செண்டுதான் மணக்கும் என்கிறதில்லே, ஊதுபத்தியும் மணக்கும். நீ
57 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 34
சொல்கிற மாதிரி உன்னைக் கூப்பிடவே மாட்டேன்' என்றாள்.
சுபத்திராவின் இந்த வார்த்தைகள் ஆனந்தியின் மேனியைப் புல்லரிக்கச்
செய்து விட்டன~ என்மேல் இவளுக்கு இவ்வளவு அன்பா..! இவ்வளவு
பிரியமும் பாசமுமா..! இதை எப்படிச் சொல்லி விட்டாள்!
இதைவிட வேறு விதமாய் எப்படிச் சொல்ல முடியும்?.
இதய ஆழத்திலிருந்து விழிக்கடல் எத்தனையோ உணர்ச்சி அலைகளை வீச சுபத்திராவைப் பார்த்தாள் ஆனந்தி. அவளை அப்படியே கட்டித் தழுவ வேண்டும் போலிருந்தது. ஆனாலும் 'நீ எந்த மாதிரியாவது நினைத்துக் கொள், எப்படியாவது கூப்பிட்டுக் கொள். ஆனால் நான் துக்கந்திதான். உனக்கு நான் ஆனந்தமயமானவளாய் இருந்தாலும் எனக்கு நான் துக்கந்தி தான். எனக்கு ஏது ஆனந்தம்? என் வாழ்க்கையில் அது இருக்கப் போவதே இல்லே. நான் துரதிஷ்டம் பிடித்த ஜென்மம்' என்றாள். V
துரதிஷ்டக்காரி என்று நினைத்து இவள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்கிறாளே என்று வருந்திய சுபத்திரா, முகத்தைத் திருப்பி கோபிப்பதைப் போல் ஆனந்தியைப் பார்த்தாள். 'இனிமே எனக்கு முன்னாலே இப்படிப் பேசப்படாது. என்னாலே தாங்கிக் கொள்ள ஏலாது' என்று கூறிச் சில நிமிஷங்கள் மெளனமாக நடந்தாள். பிறகு 'உன்னைப் பற்றி உனக்கு எப்போதும் தாழ்வான எண்ணந்தான். வாழ்க்கை ஒரு பாரமாக, நெருக்கமாக இருக்கிற போது துக்கமும் கவலையும் இருக்கத்தான் செய்யும். அதற்காக மனசை இப்படி ஒரேயடியாக விட்டுடப்படாது. வாழ்க்கையிலே நமக்கு ஒன்னுமே இல்லை -ஆனந்தமோ சுகமோ கிடைக்காது என்றெல்லாம் ஏன்
தீர்மானத்துக்கு வரவேணும்?' என்று கேட்டாள்.
'வராமே இருக்கிறதுக்கு எனக்கு என்ன நம்பிக்கை இருக்குது? என் னையோ வீட்டில் உள்ளவர்களையோ நினைச்சுப் பார்த்தால், நீ சொல்கிற மாதிரி அப்படித் தீர்மானிக்காமல் எப்படித் தீர்மானிக்கிறது? என்னைவிடு. வசந்தி இருக்கிறாள். வாழையாட் டம் வளர்ந்து பச்சைப் பசேலென்று நிற்கிறாள். இந்த வயசிலே, ஒரு பெண்ணுக்கு என்ன ஆசைகளும் கனவுகளும் இருக்கும் என்கிறது உனக்கோ, எனக் கோ தெரியாத விஷயமா? அவ ளுக்கென்று ஓர் எதிர்காலம் வேணாமா? அவளுக்கான ஒரு வாழ்க்கையை நான் தேடிக் கொடுக்க வேணாமா? ஆனா எனக்கு என்ன வழிவகை இருக்குது சொல்லேன்? யாராவது ஒரு ஆண்பிள்ளை, எனக்கு காசு-பணம் -சீதனம் ஒன்றும் வேணாம். பெண்ணை மட்டும் தாருங்க, தாலியைக் கட்டி அழைத்துப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரப் போகிறானா..? ராசுவை எடுத்துக் கொள். அவன் ஆண்பிள்ளை. அவனைப்பற்றி என்ன கவலை என்று கேட்கலாம். ஆனால் அவனுக்கும் கல்யாணம், குடும்பம் என்று ஒரு வாழ்க்கை தேவைதானே. அவனே அதைத் தேடிக் கொள்வான் என்று நாம விட்டு விடுகிறதா? அதுசரியா, நியாயமா, சொல்லு? இதை யோசிக்கிற போது இதைச்
சுபைர் இளங்கீரன் 58

செய்து வைக்கக் கூடிய நிலைமை இருக்குதா? அடுத்தது காந்தி. இன்னும் கொஞ்ச நாள் போனால் அவளும் குமராகி விடுவாள். அவளுக்கு என்ன செய்கிறது? சின்னவன் செல்வம் இருக்கிறான். அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகுதோ..?
'எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறதாலே மட்டும் இவர்களைப் பற்றிச் சிந்திக்கிறதாய் நினைக்காதே. சகோதரங்களிடத்திலே எனக்குப் பாசமும் இருக்கிறதாலேயுந்தான் இப்படிச் சிந்திக்கிறேன். சிந்திக்கிறபோது எனக்கு ஒன்றுமே புரியேல்லே. அதோ பாரு சுபத்திரா, கப்பல்களெல்லாம் சமுத் திரத்திலே வந்து கொண்டிருக்குது. அந்தக் கப்பல்களுக்கு லைட் ஹவுஸ் கூட கரையை அடையாளம் காட்டுது. அந்தக் கப்பல்களுக்கு கரையும் தெரியுது, கரை சேர்ந்து விடலாம் என்று நம்பிக்கையும் இருக்கும். ஆனா என்னையும் என் சகோதரங்களையும் சிந்திக்கிற போது எனக்குத் திசையும் தெரியேல்லே, கரையும் தெரியேல்லே. அந்த லைட் ஹவுஸைப் போல ஒரு அடையாளம் தூரத்தில் தெரிந்தாலாவது சுகம் கிடைக்கும், ஆனந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அதை நினைச்சு மனசுக்கு நிம்மதியும் பிறக்கும். ஆனா எனக்கு அந்த அடையாளம் கூடத் தெரியேல்லே. இந்த நிலைமையில் நீ சொல்கிற மாதிரி அப்படி ஒரு தீர்மானத்துக்கு வராமல் இருக்க முடியுமா, சொல்லேன் சுபத்திரா.'
மத்தியானம் காய்ந்து எரிக்கிற வெயிலிலும் கோல்பேஸில் நின்றால், அந்த வெம்மை தெரியாமல் காற்றின் ஜிலு ஜிலுப்பில் ஒரு இதம் தெரியுமே அது போல இருந்தது சுபத்திராவுக்கு. ஆனந்தி தன் துக்கத்தையெல்லாம் கொட்டினாலும் அவள் பேசுகிறது சோகத்தினூடே இழையும் ஓர் இன்னிசை போல் இருந்தது அவளுக்கு. அப்படியே லயித்து விட்டாள்.
ஆனந்தி பேசிக் கொண்டே வர - சுபத்திரா ஒரு குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வர இருவரும் லைட் ஹவுஸ0க்கு வந்து விட்டார்கள். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் -மனதில் சஞ்சலமோ கவலையோ உண்டாகி விட்டால் - அதை ஆற்றிக் கொள்ள சுபத்திரா லைற் ஹவுஸ0க்குத்தான் வருவாள். வந்து ஒரு ஏகாந்தமான இடத்தில் அமர்ந்து விடுவாள். அவளுக்கு இப்போது சஞ்சலமும் கவலையும் வந்துவிட்டது என்று சொல்லி விட முடியாது. ஆனந்தியின்நிலைமையும், அவள் படும் துயரமும் சுபத்திராவுக்குத் தெரிந்த விஷயம். அதற்காக அவளைப் போல் வருந்துகிறவர்களோ, மனம் துடிப்பவர்களோ வேறு யாருமில்லை. இப்போது புதுசாக வருந்த வேண்டிய ஒரு விஷயத்தை ஆனந்தி கூறி விடவும் இல்லை. ஆகவே ஆனந்தி சொன் னவையெல்லாம் சுபத்திராவின் மனதைப் பெரிதாகக் கிளறி விடவுமில்லை. ஆனால் தன் துக்கத்தையும், கவலையையும் கூட ஜலதரங்க வாத்தியம் போல கூறிய அந்த இனிமைதான் சுபத்திராவை வெகுவாகக் கவர்ந்தது. அவளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, அவள் அப்படிப் பேசுகிறதையே கேட்டுக்
S9 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 35
கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அவள் மனதில் -உணர்வில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
சுபத்திரா விடுவிடு என்று படிகளில் ஏறினாள். ஆனந்தி பின் தொடர்ந்தாள். உச்சிக்கு வந்ததும் தனியான ஓர் இடத்தில் போய் அமர்ந்துகொண்டு 'இங்கே வா..!" என்று ஆனந்தியின் கையை பிடித்து இழுத்துத் தன் பக்கத்தில் அவளை இருத்தி விட்டு, சிறிது நேரம் வைத்தவிழி வாங்காது ஆனந்தியைப் பார்த்தாள்.
எவ்வளவு குளுமையான முகம் நேரான தோற்றம்! இந்த அழகும் தோற்றமும் தான் இவள் கூறிய அத்தனை துக்கத்தையும், வருத்துகின்ற சிந்தனையையும் இப்படி இசையாகப் பொழியச் செய்கிறதோ.
'என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறியே. என் முகத்தில் அப்படி என்னதான் எழுதி-ஒட்டியிருக்கிறது?"
'ஒ. அதுவா. என்னாலே சொல்ல முடியாத எத்தனையோ. ஆயிரம் ஆயிரமாக எழுதி ஒட்டியிருக்குது. அதிருக்கட்டும், புலம்பிக் கொண்டு வந்தியே. ம். தொடர்ந்து புலம்பித் தொலை. அதையாவது கேட்டு விட்டுப் போகிறேன்" என்று புன்முறுவல் பூத்தாள்.
'உண்மையாகவே புலம்பல்தான். என்மனசு புலம்பிக் கொண்டுதான் இருக் குது. என் வீட்டு நிலைமையை மட்டும் எண்ணியல்ல - எனக்கு ஒருவேலை தேடித்தந்தியே அந்த வேலையையும் எண்ணிப் புலம்பத்தான் தோன்றுது,
'ஏன், ஒஃபிசில் ஏதும் பிரச்சினையோ..?" 'பிரச்சினை என்றால் அது எப்படிப்பட்ட பிரச்சினை தெரியுமா? அதைக் கேட்டால் உனக்கு வினோதமாயும், வேடிக்கையாயும் இருக்குமோ அல்லது சீரியஸாகத்தான் நினைப் பாயோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு சீரியஸான பிரச்சினை.'
ஆனந்தியை ஆச்சரியத்தோடும், கேள்விக்குறியோடும் பார்த்த சுபத்திரா விடம் "கெதியாய்ச் சொல்லு' என்ற பாவமும் அதில் தொக்கி நின்றது.
菁 静 蔷 舒 *
மனேஜர், டேவிட் -றோளமி, நடந்த சம்பவங்கள், தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை எல்லாவற்றையும் கூறினாள் ஆனந்தி! ஆனால் டேவிட்டைப் பற்றித் தனக்குள் எழுந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அப்போதே கூறிவிட ஏனோ அவள் மனம் கூசினாள். அதனால் அவள் அதைச் சொல்லவில்லை. கடைசியாக 'இப்படியான ஒரு நிலைமை வரும் என்று நினைக்கேல்லே சுபத்திரா. இதிலிருந்து தப்ப ஒரு வழியும் தெரியேல்லே. நீயாவது ஒரு யோசனை சொல்லேன்?' என்றாள்.
சுபைர் இளங்கீரன் 60

சுபத்திரா உடனே பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் யோசிப்பதுபோல் இருந்து விட்டு "உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பெரிய மனுஷர்கள் எத்தனையோ பேரிடம் இப்படியான சின்னக்குணங்கள் இருக்கத்தான் செய்யுது -அத்த ருக்குக் கீழே அழுக்கு இருக்கிறது போல உன் மனேஜர் எப்பேர்ப்பட்டவர் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனா அவரும் ஒரு பெரிய மனுஷர் தானே. அவருக்கும் இந்தக்குணங்கள் இருக்கிறதிலே ஆச்சரியமில்லே. உன் மனேஜர் கம்பெனி சம்பந்தமாய் தன்னுடைய காரியங்களுக்கு உன்னை ஒரு கருவியாக்க இருக்கிறார் போலப் படுகுது' என்றாள். 'சில காரியங்கள் என்று நீ எதைச் சொல்கிறாய்?" 'எனக்குத் திட்டமாய்ச் சொல்லத் தெரியேல்லே. அப்படி ஊகிக்கிறேன். டேவிட் - றோஸி இருவரும் தனக்கு முன்னாக இருக்கிறார்கள் என்று அவர் நினைத்தால் அவர்களைக் கம்பெனியிலிருந்து நீக்க உன்னையும் ஒரு கருவியாக்க நினைக்கலாம் என்று படுகுது.'
'அந்த மனுஷன் அப்படி நினைத்துக் கொண்டே இருக்கட்டும். நான் நிச்சயமாக அதுக்கு உடந்தையாக இருக்க மாட்டன்.'
'உயர் பதவியில் இருக்கிற ஒருவன், தனக்குப் பயன்பட மறுக்கும் எவரையும் தன் அருகில் வைத்துக் கொண்டிருப்பதைச் சகிக்க மாட்டான்.'
'நீ சொல் கிறதைப் பார்த்தால் மனேஜர் எனக்குச் சீட்டுக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார் இல்லையா?"
சுபத்திரா மெல்லச் சிரித்தாள். அதில் வேதனையும் கலந்திருந்தது. ஆனந்தி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் போல் 'அது நடந்தாலும் பரவாயில்லே, டேவிட் - றோஸிக்காக நிற்கிறதா மனேஜருக்காக நிற்கிறதா என்று வந்தால் நான் நிச்சயமாக மனேஜரின் பக்கம் நிற்கமாட்டேன். என் மனசாட்சி அதைத்தான் சொல்லுது. அதுக்குப் பிறகு வேலை போகிறதும், மேலும் கஷ்டம் வருகிறதும் இரண் 1 வது விஷயம். என் தேவைகளையும் வீட்டுப் பிரச்சினைகளையும் இந்த சம்பளம் தீர்க்கப் போகிறதில்லே. இருந்தும், இந்தச் சம்பளத்திலே கூட ஒருவேலை கிடைக்கிறது லேசான காரியமல்ல என்கிறதை நான் அனுபவித்து உணர்ந்தவள். இதை உணர்ந்திருந்தும், நான் ஒரு நல்ல காரியத்துக்காக வேலையை இழக்க வேண்டியிருந்ததென்றால் பரவாயில்லே வேலை போனாலும் மனசுக்கு நிம்மதியாவது இருக்கும். நான் உன்னிடம் ஒரு யோசனை சொல்லும்படி கேட்டேன். நீ என்ன சொல்லு வாயோ. ஆனா நான் சிந்திச்சு சிந்திச்சு வந்த முடிவு இதுதான்' என்றாள்.
சுபத்திரா மெளனமாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அமைதியாக இருந்தது. மேற்கில் மாலைச் சூரியன் வானத்தைச் சிவப்பாக்கி வர்ண ஜாலம் செய்து கொண்டிருந்தான். அந்த அழகை அவள் எத்தனையோ தடவை பார்த்து வியந்து ரசித்திருக்கிறாள். ஆனால் இன்று இதை ரசிக்காமல்
61 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 36
யோசனையில் மூழ்கியிருந்த அவள், சட்டென்று திரும்பி "கரக்ட்' என்று சொல்லி ஆனந்தியின் முதுகில் கொஞ்சம் பலமாகவே தட்டினாள்.
'என்னடி இது! கரக்ட் என்று உற்சாகத் தோட என் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாய்? என்நிலைமை உனக்குச் சந்தோஷமாகவா இருக்குது?’ என்று சற்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஆனந்தி.
'உனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. இப்படி ஒரு முடிவுக்கு வர உனக்கு தைரியம் வந்திருக்குதே, அதைச் சொல்லு. அதுக்காக உற்சாகப் படத்தானே வேணும்?"
சுபத்திரா தன்னை பகிடி பண்ணுகிறாள் என்று எண்ணிய ஆனந்தி, 'போடி, உனக்கு எதிலும் விளையாட்டுத்தான். நான் விசர்த்தனமாய் உளறுகிறதாய் நினைக்கிறாயாக்கும். என் முடிவு சரியில் லாட்டி உன் யோசனையைச் சொல்லேன், கேட்போம்' என்றாள்.
'நீ விசர்த்தனமாய் உளறவுமில்லே, நான் விளையாட்டுக்காகச் சொல்லவு மில்லே. உண்மையாகவே சொல்கிறேன். உன் பிரச்சினை சிக்கலானதுதான். எத்தனையோ பிரச்சினைகள் இப்படி வருகிற போது அதுக்கு முடிவு அவர வர்களே காண வேண்டிய நிர்ப்பந்தம் வந்து விடுகுது. மற்றவர்களின் யோசனையை விட இந்த நிர்ப்பந்தந்தான் முந்தி விடுகிறது. இப்படி நேருகிற போது, எடுக்கிற முடிவு சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். இதுதான் உனக்கும் நடந்திருக்குது. நீ மனேஜரின் கையாளாக இருக்க ஏலாது. அதுவும் உன்னைப் போலவே கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கு விரோதமாய் கோள் சொல்கிறது, இழிவு மாத்திரமல்ல, துரோகம், இந்த வகையில் நீ எடுத்த முடிவு, சரிதான். இது உன்வேலையைப் பறித்து உனக்கு மேலும் கஷ்டத்தை உண்ட்ாக்கப் போகுதே என்று கவலைப்படுகிற அதே சமயத்திலே இப்படி ஒரு துணிச்சல் உனக்கு உண்டாகியிருக்கிறதைப் பார்த்துச் சந்தோஷப்படவும் வேண்டியிருக்குது. உனக்கு ஒரு வேலையை எடுத்துத்தர நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். வேலை கிடைத்ததும் எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஆனா நீ நினைக்கிற மாதிரி இப்படியான ஒரு நிலைமை உனக்கு வருமென்று நானும் நினைக்கேல்லே. அது வந்து விட்டது. நாம ஒன்று நினைக்க வேறொன்று நடக்கிறது சகஜந்தான். அதை நினைக்கும் போது கவலை இருக்கத்தான் செய்யும். ஆனா கவலையிலேயே மூழ்கிப் போகாமல் மனசைத் திடப்படுத்திக் கொள்ள வேணும். நமக்கு இப்படி எதிர்பாராத சோதனைகள் வரும் போதெல்லாம் மனம் தளராமல் உறுதியான முடிவுக்கு வரவேணும். வாழ்க்கை நம்மோடு போராடுகிற போது நாமும் வாழ்க்கையுடன் போராடத்தான் வேணும்.
'உண்மையாகச் சொன்னால் உனக்குத் தைரியம் காணாது. கஷ்டம், துன்பம், பிரச்சினைகள் வரும்போதெல்லாம் அதைக்கண்டு கவலைப்படு கிறதும் மனம் ஒடிஞ்சு பேசுகிறதும், உன்னைத் தாழ்வாக எண்ணிக் கொள்
சுபைர் இளங்கீரன் 62

கிறதும் தான் உன்சுபாவமாய்ப் போச்சுது. இப்படியான நீ ஒரு தைரியம் வந்து இந்த முடிவை எடுத்திருக்கிறதை நினைக்கிற போது எனக்கும் சந்தோஷ மாய்த்தான் இருக்குது.'
இதுவரை சுபத்திரா கூறியதைப் பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி 'உன்னைப் பார்க்க எனக்குப் பொறாமையாய் இருக்குது' என்றாள்.
'ஏன்?" 'நீஇப்படியெல்லாம் பேசுகிறாய், எத்தனை விஷயங்களைச் சொல்கிறாய், இதையெல்லாம் பார்க்கிறபோது உன்னைப் போல இருக்க முடியேல்லியே என்று எனக்குப் பொறாமையாய் இருக்குது.'
"என்னைப் போல் இரேன், என்ன தடை?' 'உன்னைப் போல இருக்க நானும் ஒரு வாத்தியாராக மாற வேணும்' 'வாத்தியாரெல்லாம் என்னைப் போலத் தான் இருக்கிறார்களா? அவர்களில் எத்தனையோ விதம், அதிலும் வாத்தியாராய் இருக்கிறவர்கள் எல்லாரும் தைரியசாலிகள் என்று நினைக்காதே. பார்க்கப் போனால் அவர்கள் பெரும்பாலும் பயந்தவர்கள்."
'ஏன் அப்படிச் சொல்கிறாய்" 'வேறு எப்படிச் சொல்கிறது? அவர்களின் உத்தியோகம் அவர்களை அப்படி ஆக்கிப் போட்டுது. பெற்றோருக்குப் பயப்பட வேண்டியிருக்குது; ஹெட் மாஸ்டருக்கும் பிரின்ஸிபலுக்கும் அஞ்சவேண்டியிருக்குது. அதிகாரி கள், எம்.பிமார், டைரக்டர், மந்திரி என்று எல்லாரையும் கண்டு நடுங்க வேண்டியிருக்குது. கீழே இருந்து மேலே வரைக்கும் எல்லாருக்கும் பயந்து கடமை பார்க்கிறதாலே அவர்களுக்கு இயற்கையாய் இருக்க வேண்டிய தைரியம் கூட அற்றுப் போச்சுது.'
'நீ பயப்படுகிறதில்லையா?" 'ஏன் பயப்பட வேணும்? நம்ம கடமையைச் சரிவரச் செய்கிற வரைக்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லே. நான் இப்படிச் சொல்கிறதாலே வாத்திமார் எல்லாரும் சரிவரக் கடமையைச் செய்யேல்லே என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதே. இது எஜமான் - அடிமை மனோபாவம். நம்ம சமு தாயத்திலே மேலே இருக்கிறவங்கள் எஜமானர்கள், கீழே இருக்கிறவர்கள் அடிமைகள் என்ற எண்ணம். அவரவர்க்குரிய வேலையை அவரவர்கள் பார்க்கிறார்கள். இதிலே என்ன எஜமான்-அடிமை எண்ணம்? உத்தியோகமும் வேலையும் வெவ்வேறு விதமாய் இருக்கிறதாலே மனிதர்களுக்குள்ளும் வித்தியாசமும் அந்தஸ்து பேதமும் இருக்க வேணும் என்கிற நியதி சரி யானதா? மேலே உள்ள மந்திரியிலிருந்து கீழே உள்ள சாதாரண கிளார்க், வாத்தியார் வரை தாங்கள் எல்லாரும் சனங்களின் ஊழியர்கள் என்று
63 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 37
சொல்கிறார்கள். அப்படியானால் ஊழியர்களுக்குள்ளே எஜமான் -அடிமை, பெரியவன் -சின்னவன் என்ற வித்தியாசம் ஏன் இருக்க வேணும்? ஆனாஇந்த நிலைமைதான் இருக்குது. இது மாறி வேலை, உத்தியோகம் இவையெல்லாம் வித்தியாசமாய் இருந்தாலும் தங்களுக்குள் வித்தியாசமில்லாமே சகோதரர் களாய், சமத்துவமாய் பழகுற ஒரு நிலைமை வந்தால் இந்த எஜமான்-அடிமை எண்ணம் இல்லாமல் போகும். தைரியமும் இருக்கும். கீழ்ப்படிதல் என்கிறதை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டதால் வந்த வினை இது. கீழ்ப்படிதல் என் கிறது ஒரு மரியாதையே தவிர, அடிமைத்தனமுமல்ல, பயந்து சாகிறதுமல்ல." 'போதுமடி, உன் லெக்ஸரை நிறுத்து. இங்கே நான் ஒரு டைப்பிஸ்ட் மட்டும்தான் இருக்கிறேன். வாத்தியார்களும் உங்க டிப்பாட்மெண்டைச் சேர்ந்தவங்களுமில் லே' என்று கூறிய ஆனந்தி, 'நீ ஓர் ஆச்சரியமான பெண்ணடி, உன்னிடம் எதைக் கேட்டாலும் இப்படித்தான் ஒருதத்துவமாய், பிரசங்கம் போலச் சொல்லி விடுகிறாய். இதையெல்லாம் எங்கே தான் கற்றுக் கொண்டியோ?' என்று வியப்புடன் கூறினாள்.
ஏதோ ஒரு உணர்ச்சி வாக்கில் தன்னையுமறியாமல் பேசிக் கொண்டே இரு ந்த சுபத்திரா அத்துடன் நிறுத்திக் கொண்டு 'நீ என்னவோ கேட்க நான் எதை எதையோ பேசிக் கொண்டிருந்து விட்டேன். எங்க வாத்தியார் சங்கதிகள் இருக்கட்டும். உனக்கு நிறைய தைரியம் வேணும். ஒஃபிசில் மனேஜர் ஏதாவது கேட்டால் கோள் சொல்கிற வேலையை நான் செய்யமாட்டேன் என்று பளிச் சென்று சொல்லிவிடு. அதுக்குப் பிறகு நடக்கிறதைப் பற்றிக் கவலைப்படாதே." "அதுசரி, வேலை போனால் திரும்பவும் எனக்கு ஒரு வேலை எடுத்துத்தர நீ கஷ்டப்பட வேண்டியிருக்குமே?”
'கஷ்டப்படுகிறவங்களுக்காக கஷ்டப்படுகிறதிலே ஒரு சந்தோஷமும் திருப்தியும் இருக்குது. அதுவும் உனக்காக நான் கஷ்டப்படுகிறது எனக்கு ஒரு தனி இன்பம்.'
'நீ இப்படித்தான் சொல்லுவாய். இது இருக்கட்டும், உன் சிநேகிதர் நவரத்தினத்துக்கு நன்றி சொல்லுகிறதுக்காக அவரை என் முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறதாய்ச் சொன்னியே, அதைச் செய்யக் காணோமே..?"
"அவர் எடுத்துத்தந்த வேலைதான் நிச்சயமில்லாமல் இருக்குதே. நன்றி வேறு வேணுமா?" என்று சிரித்தாள்.
"என்றாலும் அவர் செய்ததுக்கு நன்றி சொல்லத்தான் வேணும். அவரை எப்ப பார்க்கலாம்?"
"அவர் இந்தியாவுக்கு டூர் போய்ட்டார். வந்ததும் பார்க்கலாம். என்னைக்கூடக் கூப்பிட்டார், நான் போகேல்லே.
"ஏன் போயிருக்கலாமே?"
சுபைர் இளங்கீரன் 64

'உன்னை விட்டிட்டு எப்படிப் போகிறது? நீதான் சொன்னியே நாலைஞ்சு நாளைக்கு என்னைக் காணாட்டி ஒரே ஏக்கமாய் இருக்குதென்று'
'உன்னோடு பேசி நான் வெல்ல ஏலாது. எப்போதும் தோல்விதான். பேசுகிறதிலே மாத்திரமல்ல, உன்னிட்டே எல்லாத்திலும் தோற்கிறதிலே எனக்கும் ஒரு தனி இன்பந்தான்."
'சரி தோற்றுக் கொண்டேயிரு. இப்ப கிளம்பு. போகலாம்' என்று கூறியவண்ணம் எழுந்தாள் சுபத்திரா.
"கிளம்புறத்துக்கு முன்னே ஒரு விஷயம். செலவுக்கு கையிலே காசில்லே. உன்னிட்டே இருக்குதா?"
சுபத்திரா சட்டைக்குள் இருந்த கைலேஞ்சியை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்தாள், "பஸ்ஸுக்கு மட்டும் தந்து போட்டு மிச்சத்தையெல்லாம் எடு.' ஆனந்தி கைலேஞ்சியை வாங்கி அதன் முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். பதின்மூன்று ரூபாயும் சில்லறைகளும் இருந்தன. 'உனக்குச் செலவுக்கு இருக்குதா?" w
"என்னிட்டே இவ்வளவு தான் இருக்குது. ஆனா வீட்டில் அம்மா வைத் திருப்பா இல்லாவிட்டாலும் பரவாயில்லே. நான் சமாளித்துக் கொள்வேன்." ஆனந்தி ஒரு ரூபாயை மட்டும் விட்டு விட்டு மீதியையெல்லாம் எடுத்துக் கொண்டு, 'ஏன் சுபத்திரா, கைலேஞ்சியிலே காசை முடிந்தா வைத்திருக் கிறாய்? மற்றவங்களைப் போல நீயும் ஒரு சின்ன பேர்சை வைத்திருக்கலாமே' என்று கேட்டவாறே கைலேஞ்சியைத் திருப்பிக் கொடுத்தாள்.
'என் ஞாபக சக்தியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே. அதை மறந்து எங்கேயாவது தொலைச்சுப் போடுவேன். இது இருக்க, பிற் பொக்கட் காரர்களின் அநியாயம் கூடிப் போச்சுது. கையில் இருக்கிற ஹாண்ட் பேக்கைக் கூட பறித்துக் கொண்டு பறந்து விடுகிறாங்கள். கைலேஞ்சியிலே முடிஞ்சு சட்டைக்குள்ளே வைத்திருக்கிறது பாதுகாப்புக் கூட" என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.
"அதுவும் சரிதான்' என்று ஆனந்தியும் எழுந்து நடந்தாள்.
壹 好 好 * 鲁
65 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 38
ஐந்தாவது அத்தியாயம்
பத்திராவுக்கு ஆனந்தியைப் போல் பொறுப்புக்களோ கஷ்டங்களோ அதிகம் இல்லாவிட்டாலும் அவளை விட நல்ல வசதியான நிலையில் உள்ளவள் அல்ல. உத்தி யோகத்திலிருந்த போதே காலஞ் சென்றுபோன, சுபத்திரா 'வின் தந்தை கை ஒறுக்கத் தெரியாத ஒரு பெருஞ் செலவாளி. வீட்டுக்குத் தாராளமாய்ச் செலவு செய்ததோடு நண்பர்களின் கஷ்டங் களுக்கும், வறுமைப்பட்ட உறவினர்களுக்கும் கொடுத்து உதவும் இரக்க சிந்தை உள்ளவர். பணம் என்பது நமது தேவைகளுக்கு மட்டுமல்லாமல் பிறருடைய கஷ்டங்களுக்கும் கொடுத்து உதவ வேண்டிய ஒரு பரிவர்த்தனைக் கருவி. இதை மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் என்கருத்து இதுதான் என்று அடிக்கடி கூறுவார். ஆகவே சீதனமாய்க் கிடைத்த சேர்ச் வீதி வீட்டைத் தவிர, பொருள், பண்டம் என்று அவர் வேறு எதையும் சேர்த்து வைக்கவில்லை. அவர் போனபிறகு சுபத்திரா, அவளுடைய அக்கா, அம்மா மூவரையும் அவருடைய பென்ஷன் மட்டும்தான் ஓரளவு போஷித்து வந்தது. என்றாலும் கணவனை இழந்தது சுபத்திராவின் அம்மாவுக்கு ஒரு பாதிப்பு தான். ஒரு ஆண்துணை கூட இல்லாதநிலையில் பெற்றது இரண்டையும் பெண் களாய் நிற்கவைத்து விட்டுப் போய்விட்டாரே, இந்தக் குமர்கள் இரண்டையும் கட்டிக்காத்து எப்படிக் கரை சேர்க்கப் போகிறேனோ என்று கலங்குவாள்.
அப்பாவை நினைக்கிற போதும் அவரை எண்ணி எண்ணி வருந்தும் அம்மாவை நினைக்கிற போதும் சுபத்திராவுக்கும் சஞ்சலமாய்த்தான் இருக்கும். ஆனால் எந்தத் துயரத்தையும் கஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக்
சுபைர் இளங்கீரன் ს 66 ·
 
 

கொண்டு கலங்கித் துடிக்கும் சுபாவம் இல்லாத அவள் அதைச் சமாளித்துக் கொள்வாள். கடலுக்கு இருகரைகள் இருப்பது போல வாழ்க்கைக்கும் இருகரைகள் உண்டு. ஒன்று பிறப்பு, மற்றது இறப்பு என்று தனக்குள் சொல்லிக் கொள்வாள்.
சுபத்திராவுக்கு உறுதியும் தைரியமும் அதிகம். அதோடு இளகிய மனமும், உபகார சிந்தையும் கொண்டவள். கலாரசனையும் இலக்கிய வேட்கையும் கூட அவளுக்கு இருந்தன. இந்தப் பண்புகளெல்லாம் தந்தையிடமிருந்து சுபத்திரா பெற்றுக் கொண்டவை என்று சொல்லலாம்.
பத்தாவது வரை படித்திருந்த சுபத்திரா அக்காவைப் போல் வீட்டில் சும்மா இருக்க விரும்பவில்லை. 'அக்காவுக்கு வயசு ஏறிக்கொண்டு போகுது; நீ வேறே இருக்கிறாய். என்னதான் நடக்கப் போகுதோ தெரியேல்லே' என்று அம்மா வேறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே, பென்ஷன் பணத்தை மட்டும் நம்பிக் கொண்டிராமல் தானும் ஒரு வேலை தேட வேண்டும் என்று கருதினாள். அதற்காக அலைந்தாள். செல்வாக்குள்ள எத்தனையோ பேரை அலுக்காமல் சலிக்காமல் போய்ப் பார்த்தாள். அவர்கள் எல்லோரும் உதட்டோடு ஏதோ கூறி வைத்தார்களே தவிர, அவர்களால் காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அரசாங்கக் கடலுக்குள் உப்பிப் பெருத்திருந்த லஞ்சச் சுறாக்களுக்கு இரை போடாமல் காரியத்தை சாதிக்க முடியாது என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்டதும் கடைசியில் இரை போட்டுத்தான் ஆசிரியராக முடிந்தது. மூத்த மகளின் கல்யாணத்துக்கு நகை நட்டென்று வேண்டுமே என்று அவள் அம்மா சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயைத்தான் அதற்குப் பலியாக்கினாள். ஆனந்திக்கு அந்த வசதியில்லை. சுபத்திராவுக்கு முடிந்திருந்தால் அதைச் செய்தே இருப்பாள். ஆனால் அவளுக்கும் முடியவில்லையே!
என்றாலும் சுபத்திரா சும்மா இருந்து விடவில்லை. தன் தோழிக்காக அவளும் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். நண்பர்களிடமும் தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருந்தாள்; அவர்களை அடிக்கடி கண்டும் வந்தாள்.
அன்றும் அப்படித்தான். பின்னேரம் போல் யாரையோ பார்ப்பதாகச் சென்றவள் இரவு ஏழு மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்பினாள். அவள் வரும்போது அம்மாவுடன் கல்யாணத்தரகர் கதைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்குத் தங்கள் மகளைக் கட்டிக் கொள்ள நீ நான் என்று வசதியுடன் எத்தனையோ பேர் போட்டி போடுகினம். என்னிட்டே கூட நல்ல சீதன பாதனத்தோட உள்ளவர்கள் இந்தச் சம்பந்தத்தை ஒழுங்கு செய்து தரும்படி கரைச்சல் தந்து கொண்டிருக்கினம். நீங்களும் இதுவிஷயமாய் என்னிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறியள். அதுக்காகத்தான் நான் தெண்டிக்கிறன். நல்லா யோசித்து இந்தக் கிழமைக்குள் எனக்கு முற்றுச்
67 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 39
சொல்ல வேணும். இழுத்துக் கொண்டிருக்க வேண்டாம். நான் வேறு இடத்தை ஒழுங்கு செய்ய வேணும்.'
இவ்வாறு தரகர் அம்மாவுக்குச் சொல்லி விட்டுச் சென்றதை கேட்டவாறே தன் அறைக்குள் ஆடைகளை மாற்றிக் கொண்டு பாத்ரூமுக்கு போனாள் சுபத்திரா.
உத்தியோகம் பார்க்கும் ஒருவன் தான் தனக்கு மருமகனாக வேண்டும் என்ற வைராக்கியம் சுபத்திராவின் அம்மாவுக்கு. அம்மா தேடிப் போன மாப்பிள்ளைகள் கேட்ட சீதனம் தலையைச் சுற்றுவதாயிருந்தது. கடைசியாக தரகர் கொண்டு வந்த சம்பந்தத்தில் நாட்டம் சென்று கொண்டிருந்தது.
சுபத்திரா பாத்ரூமுக்குள்ளிருந்து திரும்பும் போது ' என்னவாம், கல்யா ணக் கதை?' என்று கேட்டவாறே தலையைத் துடைத்தாள்.
'முந்தா நாள் உனக்குச் சொன்னேனே, ஒரு பெரிய இடத்துச் சம்பந் தத்தைப் பற்றி. அதுதான் இப்பவும் இந்த மனுஷன் வந்து கதைத்து விட்டுப் போகிறார்.
'ஒ. அதுவா. நாற்பத்தைந்து வயதுக் கனவானைப் பற்றித்தானே? அதுவும் இரண்டாம் தாரம்'
'நாற்பத்தஞ்சு வயது என்றால் என்ன, உன் அக்காவுக்கே வயது இருபத்தி ஏழாய்ப் போகுது. அவ்வளவு வித்தியாசமில்லே. இரண்டாந் தாரமா யிருந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகுட்டி பிய்ச்சுப் பிடுங்கல் என்று ஒன்னுமில்லாத மனுஷன். எனக்குச் சம்மதிக்கத்தான் விருப்பம் தரகரும் ஒற்றைக்காலில் நிற்கிறார்.'
'அவருக்கென்ன, காசுக்காக எதையும் சொல்லுவார்?' "அப்படிச் சொல்லாதே. காசு மட்டும் தான் என்றால் நம்மையும் விட்டு வேறு இடத்திலும் அவர் சம்பந்தம் பேசி செய்து வைக்க முடியும், ஆனா, நான்தான் அவரைப் பிடித்து அலட்டிக் கொண்டிருந்தேன். காசுக்குத்தான் சொன்னாலும் நமக்கும் நல்லது பொல்லாதது தெரியாதா?"
'எனக்கு என்னவோ இது பிடிக்கேல்லே' 'பிடிக்கேல்லே என்று சொன்னா..? இதை விட்டுப் போட்டு இன்னும் எத்தனை வருஷத்துக்கு அலைகிறது. வயசையும் இரண்டாந் தாரத்தையும் பற்றித்தான் நீ யோசிக்கிறாய் போலிருக்குது?"
"அதையும் விட இது நம்ம தகுதிக்கு மீறிய சம்பந்தம். அதுதான் எனக்குப் பிடிக்கேல்லே'
'நீ இப்படி நினைக்கிறாய். ஆனா இத்தனை நாள் காத்திருந்ததுக்கு அந்த முருகன் தான் இந்த சம்பந்தத்தைக் கொண்டு வந்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.'
கபைர் இளங்கீரன் 68

சுபத்திராவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ' உனக்கு எல்லாம் இந்த மாதிரித் தான் தெரியும். வயசு, இரண்டாந்தாரம், பெரிய இடம், இதையெல்லாம் யோசித்துப் பார்த்தா, இது நமக்குச் சரிப்பட்டு வராது. அக்காவுக்குக் கூடச் சம்மதம் இருக்குமென்று நான் நினைக்கேல்லே'
"அவள் ஒன்றும் மறுப்புச் சொல்லேல்லே. நீதான் சொல்கிறாய். ஆனா நான் சம்மதிக்கத் தான் போறன்.'
அம்மா ஒற்றைக் கால் பிடிவாதம் உள்ளவள். ஒன்றை நினைத்தால் அதை மாற்றமுடியாது என்று சுபத்திராவுக்குத் தெரியும். ஆகவே அதற்குமேல் அவள் ஒன்றும் சொல்லாமல், கூடத்துத் தூணோடு சாய்ந்து நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்ற அக்காவைப் பார்த்தாள். ஆனால் அவளிடம் ஒன்றும் கதைக்காமல் தன் அறைக்குள் சென்று விட்டாள்.
அக்காவுக்கு அடங்கிய சுபாவம். அம்மாவின் விருப்பத்துக்கோ, கருத் துக்கோ மாறாக ஒன்றும் கூறமாட்டாள். அவரவர் விதிப்படிதான் ஒவ் வொன்றும் நடக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு. அதனால் மறுப்போ மனவாட்டமோ இல்லாமல் மாப்பிள்ளையாக வருகிறவன் கட்டும் தாலிக்குக் கழுத்தைக் கொடுத்துவிடுவாள்.
அக்காவைப் பற்றி நினைக்கிற போது சுபத்திராவுக்குச் சஞ்சலமாய்த்தான் இருந்தது.
சுபத்திராவின் அக்கா சந்திராவுக்கு கல்யாணம் முடிவாகி விட்டது. சீதனமாக அவர்களின் வீட்டையும் ஐயாயிரம் ரூபாய்நகையையும் மகளுக்குக் கொடுத்தாள் அம்மா. இருந்தது அவ்வளவுதானே!
கனவான் நவரட்ணத்தின் அந்தஸ்தில் உள்ளவர்கள் தமது பெண்ணை அவருடைய வயது காரணமாகவும், இரண்டாந்தாரமாயிருந்ததாலும் கொடுக்க முன்வரவில்லை. அதனால் தான் தரகரைக் கொண்டு சுபத்திரா வீட்டுச் சம்பந்தத்தை தேடிப்பிடித்தார் என்கிற விஷயம் அவருக்கும் தரகருக்கும் மட்டுமே தெரியும்.
இந்தச் சம்பந்தத்தைப் பேசி முடித்த தரகருக்கு நவரட்ணம் என்ன சன்மானம் வழங்கினாரோ தெரியாது. ஆனால் சுபத்திராவின் அம்மாவிடம் ரூபா ஆயிரத்தைக் கறந்து விட்டார்.
மாப்பிள்ளையின் விருப்பப்படி கல்யாணம் சுருக்கமாக முடிந்து விட்டது. கனவான் நவரட்ணம் கோயிலில் தாலியைக் கட்டி மனைவியை தன் வெள்ள வத்தை பங்களாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
கையில் வைத்திருந்த காசு போதவில்லை. தரகருக்குக் காசு, கல்யாண செலவுக்கெல்லாம் கடன்தான் வாங்கவேண்டியிருந்தது வட்டியுடன்.
இதைப்பற்றி சுபத்திராவின் அம்மா பெரிதாகக் கவலைப்படவில்லை.
69 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 40
இரண்டாந்தாரமாயிருந்தாலும், வயசு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் தான் நினைத்தபடி ஒரு உத்தியோக மாப்பிள்ளை -அதுவும் பெரிய பதவியும் காசு பணமும் உள்ள மாப்பிள்ளை -கிடைத்ததைப் பற்றி அவளுக்கு நல்ல திருப்தி. அதுவும் அந்தப் பெரிய பங்களாவில் தன் மகள் ராணிபோல் வாழப் போவதையும், தாங்களும் அங்கு வந்து கொண்டாடிப் போகலாம் என்பதை யும் எண்ணிய போது அவளுக்கு பெருமைபிடிபட வில்லை. தாங்களும் அந்தஸ்தில் மதிப்பில் ஒருபடி உயர்ந்து விட்டது போன்ற உணர்வு கூட அவளுக்கு உண்டாகிவிட்டது.
சுபத்திரா கல்யாணத்தன்றுதான் மாப்பிள்ளையைப் பார்த்தாள். ஆள் சிவப்புத்தான். தலைமயிர் கூட கறுத்துத்தான் இருந்தது. பரந்து மேவிய முகம், கண்களில் ஒரு அலட்சிய பாவம், சற்றுப் பருத்த உடம்பு, தெரிந்தும் தெரியாமல் இருக்கும் தொந்தி - நாற்பத்தைந்து வயது என்று சொல்லப்பட் டாலும் சுபத்திராவின் கண்களுக்கு அதற்கும் கூடிய தோற்றமாய்த்தான் தெரிந்தது.
சுபத்திராவுக்கு அம்மாவைப் போல் திருப்திப்பட முடியவில்லை. கல்யாணத்துக்காக மூன்று நாட்கள் வெள்ளவத்தைப் பங்களாவில் தங்கிவிட்டு புறப்படும் போது மாப்பிள்ளையிடம் அம்மா சொன்னாள் 'அவர் போனதிலிருந்து எங்க வீட்டுக்குத் தலைமையோ ஆண்துணையோ இல்லாமே இருந்தது. அனாதைகள் போலிருந்தோம். இப்ப அந்தக்குறை தீர்ந்து போச்சுது. இனிமே எல்லாத்துக்கும் நீங்கதான் எங்களை வழிநடத்தவேணும்' இதைக் கூறும் போது அவளுடைய கண்கள் லேசாய்க் கலங்கின.
அம்மா இதைச் சொன்னதும் அருவருப்பும் ஆத்திரமும் உண்டாயிற்று சுபத்திராவுக்கு.
நவரட்ணம் ஒன்றும் சொல்லாமல் அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்ததும் அம்மா சொன்னாள்; நீ என்னவோ சொன்னியே, நமக்கு இந்தச் சம்பந்தம் கிடைச்சது நம்ம அதிர்ஷ்டந்தான். வீட்டையும் அங்கே கிடக்கிற சாமான்களையும் பார்த்தியா. இத்தனையையும் உன் அக்காதான் அனுபவிக்கப் போறா. இருந்து பார், உனக்கும் இப்படி ஓர் அதிர்ஷ்டம் வராமல் போகாது.
அம்மாவின் இந்தக் குருட்டு நம்பிக்கையை எண்ணி சுபத்திரா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதே சமயம் மனசுக்குள் குடைந்து கொண்டிருந்ததும் வெளியே வந்தது. "உனக்கு ஏன் இப்படிப் புத்தி போகுதோ?' என்று நொந்தபடி கேட்டாள்.
'ஏன், என் புத்திக்கு என்ன?" "சரியாய்தான் இருக்குது போ..!' என்று சலித்துக் கொண்டவள்,
சுபைர் இளங்கீரன் 70

'அவரிடம் போய் அனாதைகள், தலைமை, துணை, வழிநடத்துகிறது என்றெல்லாம் ஏன் சொல்ல வேணும்? கெஞ்சுகிற மாதிரி, பிச்சை கேட்கிற மாதிரி. அப்படி என்னதான் தலைமை வேண்டியிருக்குது? சே, எனக்கு நீ சொன்னது கொஞ்சம் கூடப் பிடிக்கேல்லே' எரிச்சலுடன் கூறினாள்.
'நீ பேசுகிறதைப் பார்த்தால் உனக்குத்தான் மூளை குழம்பிக் கிடக்குது போலத் தெரியுது. நமக்கு இனிமே எல்லாத்துக்கும் அவர்தான் என்கிறதிலே என்ன தப்பு? ஒரு யோசனைக்கு, ஒரு ஆறுதலுக்கு, ஒரு உதவிக்கு ஆண் துணை நமக்கு இருந்ததா, இல்லையே! நல்லதுக்கோ கெட்டதுக்கோ பெண் ணாய்ப் பிறந்த நாம மூணு பேருந்தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்தோம். இனி அந்த நிலைமை இல்லே. வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை, அதுவும் நாலு பேர் மதிக்கிற தகுதியில் இருக்கிற மனுஷன் -அவருடைய தலைமை நமக்கு இருக்க வேணும் என்று சொன்னதிலே என்னபிழை. அக்கா விஷயம் நல்ல மாதிரி நடந்து போச்சுது. ஆனா உன் காரியம் இருக்குது. அதையும் கூட அவர்தானே முன்னுக்கு நின்று நடத்த வேணும்.'
சுபத்திராவுக்கு எரிச்சல் முற்றி ஆத்திரமும் அனுதாபமுமாக வந்தது. அம்மா ஏன் இவ்வளவு தாழ்ந்து போனாள்?.
தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டே சொன்னாள்: 'எனக்குத் தான் அதிர்ஷ்டம் இருக்குது என்று சொன்னியே, மற்றவர் எதுக்கு? அதிர்ஷ்டந்தான் வழிநடத்துமே. அக்காவின் விஷயத்தில் கூட யாரும் வழி நட்த்தியா நடந்தது?"
"ஒம், ஆண்துணை இருந்ததுதான்'
'யார், தரகரா?' 'போடி, உனக்குப் பகிடியாய் இருக்குது. நான் அந்த முருகனைச் சொல்லுகிறேன்.'
"அப்ப நீ சொல்லுகிற மாதிரி அந்த முருகன் வழிநடத்துவான்தானே, உன் மாப்பிள்ளை எதுக்கு?"
'உங்களுக்கு நல்ல தகுதியான ஒரு ஆளைத் தந்திருக்கிறன், இனி அவர்துணையாய் இருப்பார் என்று முருகன் காட்டிவிட்டான்'.
'உன் கருத்துப் படி துணைக்கு தகுதியான ஆளைத் தந்திருக்கிறேன், என்னைத் தொந்தரவுபடுத்தாதே, ஆளை விடு என்று முருகன் ஒதுங்கிக் கொண்டான். இனிமே நமக்கு அவன் துணை தேவைப்படாது, இல்லையா?" 'உன்னோடு கதைக்க என்னால் ஏலாது. நீ எதையாவது சொல்லி விட்டுப் போ...'
71 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 41
"சரி, ஆனா ஒன்று சொல்கிறேன். அத்தான் அத்தானாகவே இருக்கட்டும். நல்லதோ கெட்டதோ இத்தனை நாளாய் சமாளித்தது போல நாமதான் சமாளிக்க வேணும். அவரிடம் போய் உதவி, ஒத்தாசை என்று கேட்கப்படாது; எதிர்பார்க்கவும்படாது. நம்ம தகுதி நம்மோடு இருக்கட்டும். அவருடைய தகுதியுடன் கலந்துக்க வேணாம்.'
அம்மா ஆச்சரியத்தோடும் திகைப்போடும் சுபத்திராவைப் பார்த்தான். "உனக்கு அத்தான் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு?"
'எனக்குநீநினைக்கிற மாதிரி வெறுப்பு இல்லே. ஒருவருடைய நிலையைப் புரிந்து கொண்டு நடக்க வேணும் என்று சொல்கிறேன்."
"உனக்கு இந்தச் சம்பந்தத்திலே ஏற்கனவே சம்மதமில்லே. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்?"
'இப்பவும் அதே கருத்துத்தான். நான் மறைக்கேல்லே. ஆனா நடந்தது நடந்து போச்சுது. அக்காவை நாம வெறுக்க முடியுமா, அதனாலே அத்தானை யும் வெறுக்கமுடியாது. இருந்தும் நாம் அளவாய் நடந்து கொள்ள வேணும். காரணமில்லாமே நான் சொல்லமாட்டேன்."
"அப்படி என்ன புதுசா காரணத்தைக் கண்டுபிடிச்சுப் போட்டாய்?" 'உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லுகிறேன். நாம மூணு நாளாய் அங்கே தங்கியிருந்தோம். நம் மோடு முகம் கொடுத்துப் பேசினாரா? சரி அது போகட்டும், புறப்பட்டு வருகிற போது கடைசியாய் ஏதோ கெஞ்சுகிற மாதிரி எதையோ எல்லாம் உளறிக் கொட்டினியே, அப்பகூட ஒரு வார்த்தை வாய் திறந்து சொன்னாரா. சம்பிரதாயத்துக்காவது, 'சரி போய்ட்டு வாங்கோ' என்றாவது சொன்னாரா. எனக்கு இது முள்ளாய் உறுத்திக் கொண்டே இருக்குது.'
அம்மா சிரித்தாள். 'இதை மனசில் வைத்துக் கொண்டுதானா இத்தனையையும் சொன்னாய்? நானும் என்னவோ என்று பயந்து போனேன். உனக்கென்ன தெரியும்? மாப்பிள்ளை மிடுக்கு, கூச்சம், நாமும் புதுசு. அதனால் தான் அவர் சரியாகப் பேசேல்லே. பழகப்பழக எல்லாம் சரியாய் விடும். கூச்சமும், வெட்கமும் கலைஞ்சதும் அவர் நம்மோடு எப்படி நடந்து கொள்வார், இருந்து பாரேன்.'
'உன் மனசை நான் கலைக்க விரும்பேல்லே. ஆனா அவரைப் பார்க்கிற போது அக்காவின் வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதோ..? என்று மனசைக் குடைந்து கொண்டு தான் இருக்குது. இதைச் சொல்லாமலும் இருக்க முடியேல்லே. இதுக்காக உன் மனசைக் குழப்பிக் கொள்ளாதே'
'நீ தான் மனசைக் குழப்பிக் கொண்டு பிதற்றுகிறாய். எனக்கு அப்படி ஒன்னும் குழம்பேல்லே. அக்காவை அவர் தங்கம் போல் வைத்திருப்பார்.
சுபைர் இளங்கீரன் 72

அவளுடைய வாழ்க்கையிலே எந்தக் குறையும் இருக்காது. எனக்கு நல்ல் நம்பிக்கை இருக்குது."
'அம்மா பாவம்' என்று சுபத்திரா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
好 好 好 好 *
கல்யாணம் நடந்து ஒரு வாரம். மாப்பிள்ளையையும் மகளையும் கூட்டி வந்து, இரண்டு மூன்று நாள் தங்கள் வீட்டில் தங்கவைத்து, உபசரித்துக் கொண்டாடி விட்டு அனுப்ப வேண்டும் என்ற வேட்கையுடன் சுபத்திராவையும் கூட்டிக் கொண்டு வெள்ளவத்தைக்குப் போனாள் அம்மா.
போகும் போது 'உன் வெறுப்பையெல்லாம் அத்தானிடம் காட்டிக் கொள்ளாதே. கனிவாய் நடந்து கொள். அன்பாய்ப் பேசு. நம்மைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் விழ வேணும்' என்று மகளுக்கு ஆலோசனை கூறினாள்.
'சரி, ஆகட்டும். வேண்டுமானால் பார் உன் மனசு, குளிரும்படி - ஏன், அக்கா, உன் மாப்பிள்ளை எல்லோருடைய மனசும் குளிரும்படி நான் பேசுகிறேனா, இல்லையா என்று'
'அந்த மாதிரி நீ பேசுகிறதுக்கு உனக்குக் கற்றுத்தரத் தேவையில்லை என்கிறது எனக்குத் தெரியும்.'
இருவரும் பங்களாவுக்குள் போன போது நவரட்ணம் அவர்களை வரவேற்பவர் போல் தெரியவில்லை. முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு அப்போதும் அலட்சியமாய் நடந்து கொண்டார்.
அம்மா இதைக் கவனித்தாளோ என்னவோ, ஆனால் சுபத்திரா இதைக் கவனிக்கத் தவறவில்லை.
-அக்காவோடும் இப்படித்தான் நடந்து கொள்ளுவாரோ. அக்கா அவர்களை பாசம் மறவாமல் வரவேற்றாள். சுபத்திரா அவளுடைய
முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். சந்தோஷத்தையோ, துக்கத்தையோ அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் வீட்டில் இருந்தது போலவே இருந்தாள்.
"ஏன் அக்கா அத்தான் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கிறார். எங்களோடு கலந்து கதைக்க மாட்டேங்கிறாரே. உன்னோடும் அப்படித்தானா?' என்று கேட்டாள் சுபத்திரா.
சந்திரா லேசாய் புன்னகை செய்தாள். 'ஏன் அவரிடமே கேளேன்'
'அதுசரி, நீ தான் ஒன்னும் சொல்லமாட்டியே, சமுத்திரத்தின் அடியிலே, எத்தனையோ கிடக்குது, அதெல்லாம் வெளிக்குத் தெரிகிறதில்லே உன் மனசும்
73 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 42
ஒரு சமுத்திரமடி. உன்னிடம் வந்து கேட்டேனே நான்' என்று சிரித்தாள். "ஆனாநான் உன் மாப்பிள்ளையிடம் கேட்காமே இருக்கப் போகிறதில்லே."
மாலைப் பொழுது முடிந்து இரவு பிறந்த நேரம். ஹோலில் அம்மா, சந்திரா, சுபத்திரா மூவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்,
வெளியே போயிருந்த நவரட்ணம், காரை கரேஜ் பண்ணிவிட்டு உள்ளே வந்தவர், அம்மாவையும் சுபத்திராவையும் ஒருமாதிரிப் பார்த்து விட்டு விர்ரென்று உள்ளே போனார். சற்று நேரத்துக்குள் உடைகளை மாற்றிக் கொண்டு ஹோலுக்கு வந்தவர் அங்கு இருக்காமல் வெளி விறாந்தையை நோக்கி நடந்தார்.
'அத்தான்.' என்றாள் சுபத்திரா. சட்டென்று திரும்பிப் பார்த்தார் நவரட்ணம்.
'கல்யாணத்துக்காக இங்கே மூன்று நாள் தங்கியிருந்த போதும் சரி, இன்றைக்கு காலையிலே நாங்கள் வந்ததிலிருந்து இதுவரைக்கும் சரி, எங்களோடு ஒன்னும் கதைக்கக் காணோமே, ஏன்? எங்களோடு கலந்து பேசுகிறீங்கள் இல்லையே..! உங்களோடு கதைக்க எங்களுக்கு எவ்வளவு ஆசையாயிருக்குது. அதுவும் எனக்கிருக்கிற ஆசை கடல் போல. இரவு முழுதும் அக்காவோட கதைக்கிற நீங்கள் எங்களோடும் நாலு வார்த்தை பேசினால் என்னவாம்? அக்கா ஏதாவது கொழுக்கட்டையை வாயில் திணித்து வைத்திருக்கிறாவா..? அல்லது வாய் முத்து உதிர்ந்து போகுமென்று பயமா? அதுவுமில்லாட்டி மாப்பிள்ளைக் கூச்சம் இன்னும் போகேல் லியா? ஏன் அத்தான் சொல்லுங்களேன்' ஒரே மூச்சில் இத்தனையையும் பகிடியாகக் கேட்டாள், சுபத்திரா,
அக்காவும் அம்மாவும் சிரித்தார்கள். ஆனால் நவரட்ணம் சுபத்திராவை முறைத்துப் பார்த்தார். பிறகு 'உங்களோடு நான் எதைப் பற்றிப் பேச வேண்டும்? உங்களோடு நானோ, என்னோடு நீங்களோ பேசுவதற்கு என்ன இருக்கிறது?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுபத்திராவுக்கு சுருக்கென்றது; வாய் அடைத்துவிட்டது. மலர்ந்த முகம் இருண்டு விட்டது; இதழ்களில் பூத்திருந்த சிரிப்பு செத்து விட்டது. அவள் சிலையாகி விட்டாள்.
சந்திரா உடனே தலையைக் குனிந்து கொண்டாள். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாததால் மருமகன் சொன்னது விளங்கவில்லை. சுபத்திராவைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள் -ஏதாவது குடாய்ச் சொல்லி விட்டாரோ.
ஒரு கண நேரத்துக்குள் அம்மாவின் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகள் அலைபாய்ந்தன. என்றாலும் அடக்கிக் கொண்டு சொன்னாள். 'சந்திராவுக்குத் தாலியைக் கட்டிய கையோடு அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்துட்டீர்கள். ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இன்னும் இருக்குது. மாப்பிள்ளையையும் பெண்ணையும் எங்கள்
சுபைர் இளங்கீரன் 74

வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் நாலைந்து நாள் வைத்திருந்து உபசரித்து அனுப்ப வேணும் என்று எண்ணித்தான் இன்றைக்கு வந்தோம். நீங்கள் என்ன சொல்லுகிறீங்கள்?"
நவரட்ணம் ஹோலில் இருக்கவில்லை. நின்று கொண்டே சொன்னார்; "அதெல்லாம் வேணாம். நாங்கள் வாறதுக்கு வசதிப்படாது.'
'நீங்கள் அப்படிச் சொல்லப்படாது. எங்களுக்கு ஆசையாய் இருக்காதா?’ 'உங்கள் ஆசைப்படியெல்லாம் நாங்கள் நடக்க ஏலாது.' நறுக்கென்று கூறிவிட்டு விறாந்தைக்கு விரைந்தார் நவரட்ணம்.
மருமகனின் இந்த வார்த்தைகள் அம்மாவுக்குச் சுரீரென்று தைத்தன. முகம் தொங்கிவிட்டது. கோபுரத்தில் நின்றவள், மின்னல் நேரத்துக்குள் கீழே விழுந்து விட்டாள். விழுந்தவள் மூத்தமகளை ஏக்கத்துடன் பார்த்தாள். அவள் தலையைக் குனிந்து கொண்டே இருந்தாள். அவளைக் கண்டு கொள்ள முடியவில்லை.
சுபத்திரா அம்மாவைப் பரிதாபத்துடன் பார்த்தாள். அம்மா அப்போது கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
'போகலாமா அம்மா?" சுபத்திரா கேட்டாள். அம்மா சந்திராவைத் திரும்பவும் பார்த்தாள். அவள் தலையை நிமிர வில்லை. அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல அவளுடைய உதடுகள் துடித்தனவோ என்னவோ - அது தெரியவில்லை.
'காலையிலே நான் ஸ்கூலுக்குப் போகவேணும். இப்பவே கிளம்பினால் தான் பஸ்ஸையும் பிடிக்கலாம். நமக்கு என்ன. காரா இருக்குது, எந்த நேரத் திலும் வீட்டுக்குப் போய்ச்சேர?' என்று சொல்லிவிட்டு எழுந்தாள் சுபத்திரா.
'ம். ' ஒரு பெருமூச்சுடன் அம்மாவும் எழுந்தாள். பங்களாவை விட்டு வெளியே வரும்போது, சுபத்திராவை நினைத்துப் பயந்தாள் அம்மா.
-வீட்டுக்குப் போனதும் என்னை இவள் என்ன வாட்டு வாட்டப் போகி றாளோ.
* * 菁 * *
வீட்டுக்கு வந்ததும் அம்மா பயந்தது போல் சுபத்திரா ஒன்றும் சூடாக சொல்லவில்லை. வலு அமைதியாக இருந்தாள். அம்மாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
'இங்கிலீஸில் அவர் உனக்கு என்ன சொன்னார்?'நீண்ட மெளனத்துக்குப் பிறகு கேட்டாள் அம்மா.
75 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 43
'பெண்ணாய் இருக்கிற உனக்கே கூச்சமில்லாதபோது எனக்கு என்ன கூச்சம் பேச என்று சொன்னார். எனக்கு ஒரு மாதிரியாய்ப் போச்சுது. அதனால்தான் நான் வாயை மூடிக் கொண்டேன்.'
-எவ்வளவு அமைதியாகச் சொல்கிறாள். அம்மாவுக்கு ஆச்சரியம் மேலும் கூடியது.
அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் சொன்னாள்: "சரிதான் உன் நாக்கு கொஞ்சம் வளர்ந்து தான் போச்சுது. யாரோடும் துணிச்சலாய்ப் பேசிப் போடுவாய். நீ கேட்டது அவருக்குப் பிடிக்கேல் லியோ என்னவோ..! பகிடிக்கு கேட்டாலும் அது கொஞ்சம் கூடித்தான் போச்சுது. இனி அவரோட அப்படிக் கதைக்காதே. கொஞ்சம் அடங்கி மரியாதையாய் நட' -மனதில் எழுந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டே சொன்னாள்.
சுபத்திரா மெளனமாக அறைக்குள் படுத்துவிட்டாள். அம்மா திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவள் அறை வாசலில் நின்றபடி 'ஒன்னும் சாப்பிடாம படுத்துட்டியே?' என்று கேட்டாள்.
'எனக்குப் பசிக்கேல்லே' -அத்தான் சொன்னது வருத்தத்தைக் கொடுத்து விட்டதாக்கும். அதுதான் பசிக்கேல்லே என்கிறாள்; எனக்கும் பசிக்கேல் லத்தான்.
சமையல் அறைக்குள் அவளுடைய கால்கள் தாமாகச் சென்றன. அடுப்பைப் பற்ற வைத்து, தண்ணீரைக் கொதிக்க வைத்து, லக்ஸ்பிரேயை அடித்து தானும் குடித்து விட்டு மகளுக்கும் கொண்டு வருவதற்குள் அம்மா வுக்கு எத்தனையோ சிந்தனைகள், எத்தனையோ உணர்ச்சிகள்.
அறை இருட்டாய் இருந்தது. லைட்டைப் போட்டாள். சுபத்திரா படுத்தவாறே திரும்பினாள். "வெறும் வயிற்றோடு படுக்காதே. இதையாவது குடிச்சுப் போட்டுப் படு." சுபத்திரா வாங்கினாள். V, "அவருடைய அறிவுக்கும் அந்தஸ்துக்கும் இந்தச் சடங்கு சம்பிரதாய மெல்லாம் பெரிசாகவோ, பொருத்தமானதாகவோ தெரியவில்லையாக்கும். பெண்ணாய்ப்பிறந்த நமக்குத்தான் இதிலெல்லாம் ஆசையும் பற்றுதலும், நம்ம இந்த ஆசைப்படியெல்லாம் அந்தப் பெரிய மனுஷன் நடக்க வேணும் என்று எதிர்பார்க்கிறது சரியில்லைத்தான்."
'எனக்கு நித்திரை வருகுது. பேசிக் கொண்டிருக்காமல் லைட்டை ஒஃப் பண்ணிப் போட்டு போய்ப்படு. நாளைக்கு ஸ்கூல் விடிய எழும்ப வேணும்'- சொல்லிக் கொண்டே சுபத்திரா படுத்தாள்.
* * * * *
சுபைர் இளங்கீரன் 76

அன்றைய சம்பவத்தைப் பற்றி சுபத்திரா அம்மாவுக்கு ஒரு அபிப்பிராய மும் சொல்லவில்லை. இது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. ஆறுதலாயு மிருந்தது. சுபத்திரா அதைப்பற்றித் தன்னிடம் ஒன்றும் கதைக்கப்படாது என்று கூட விரும்பினாள். அதேசமயம் மகளைப் பார்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் வெள்ளவத்தை பங்களாவுக்கு போய் வந்து கொண்டுதான் இருந்தாள். மகளின் மனப்போக்கை அறியவும் ஆவலாயிருந்தது. ‘எங்க ளோடுதான் அவர் சரியாய் பழகிறதில் லே; கதைக்கிறதில்லே. உன்னோடு எப்படி? நல்ல மாதிரியாய் நடந்து கொள்கிறாரா? சுபத்திராவைப் பற்றியோ என்னைப் பற்றியோ ஏதாவது கேட் பாரா, சொல்லுவாரா? நீயும் நம்ம வீட்டுக்கு வாரதில் லே போக வேணாம் என்று மறிச்சுப் போட்டாரா?' என்றெல்லாம் துளைத்துத் துளைத்துக் கேட்பாள்.
'அவர் என்னோட பிழையாய் நடந்து கொள்ளேல்லே. உங்க இரண்டு பேரைப் பற்றியும் அதிகமாய் ஒன்னும் கேட்கிறதோ பேசுகிறதோ இல்லைத்தான். வீட்டுக்கு நான் வராதது பற்றிப் பெரிசாய் நினைச்சு மனசை அலட்டிக் கொள்ளாதே.
இதுதான் சந்திராவின் பதில். அவளுடைய மனதில் உள்ளதை பேச்சிலும் கண்டு கொள்ளமுடியவில்லை, முகத்திலும் கண்டு கொள்ள முடியவில்லை.
அடுத்ததைக் காட்டும் பளிங்குபோல - கடுத்தது காட்டுமாமே முகம்? வள்ளுவன் தோற்றான் சந்திராவிடம்!
அன்றைய சம்பவத்துக்குப் பிறகு சுபத்திராவும் போகாமல் இருந்து விடவில்லை. அக்காவைப் பார்க்க வேண்டும் என்று தாகம் ஏற்படும் போதெல்லாம் அவள் போகத்தான் செய்தாள். ஆனால் அம்மாவைப் போல் சந்திராவின் மனதில் உள்ளதை அறிய அவள் முயற்சிக்கவில்லை. அவள் பல விஷயங்களையும் பற்றிப் பேசிச் சிரித்துப் பொழுதைப் போக்கிவிட்டு வந்து விடுவாள்.
ஆனால் நவரட்ணம் அவர்களுடன் பேசுவதே இல்லை. அவர்களை அவர் உதாசீனப்படுத்தினார். அலட்சியப்படுத்தினார். அவர்கள் வருவதையும் மனைவியுடன் கொண்டாடுவதையும் கூட தான் விரும்பவில்லை என்பதைக் காட்டிக் கொண்டார்.
சுபத்திரா அவருடைய புறக்கணிப்பைப் புரிந்து கொண்டாள். இது அவளுடைய மனதை ஆழமாய்க் குத்திக் காயப்படுத்தி விட்டது. அங்கு போவதைக் குறைத்துக் கொண்டாள்.
அம்மாவுக்கும் இது பிடிக்கவில்லைதான். ஆனால் பாசம் தாங்காது போய் வந்து கொண்டிருந்தாள்.
77 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 44
ஒருநாள்;
வெள்ளவத்தைப் பங்களாவுக்கு வந்த அம்மா, ஹோலைத் தாண்டி உள்ளே போவதற்குள் அங்கே இருந்த நவரட்ணம் 'ஒரு விஷயம்' என்றார்.
ஆவலோடு திரும்பினாள் அம்மா.
'நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறது சரியில்லே. இது நாலு பெரிய மனிதர்கள் வந்து போகிற இடம் இதை அறிந்து நீங்கள் ஒதுங்கிக் கொள்ள வேணும்' என்று முகத்தில் அறைந்தாற் போல கூறிவிட்டு கையிலிருந்த பேப்பரைப் படிக்கத் தொடங்கினார்.
இன்றைய நமது சமுதாயத்தில் பணத்தின் ஸ்தானம் மிகப்பெரிது. அதுதான் உறவுமுறைகளை நிர்ணயிக்கிறது, பந்துவைப் பகைவனாக்குகிறது, பகை வனைப் பந்துவாக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்ளாத அவள் அதிர்ந்து விட்டாள். சில நிமிஷங்கள் அப்படியே மரமாய் நின்றவளுக்கு அதற்கு மேல் ஒருகணம் கூட அங்கு தரிக்க முடியவில்லை. உள்ளே இருக்கும் மகளிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல், நீர் முட்டிய கண்களோடும், கனக்கும் நெஞ்சோடும் வீட்டுக்கு வந்தவள், ஓ. என்று அழுதாள். இந்தச் சம்பந்தத்தை நினைத்து என்ன என்ன மனக் கோட்டைகளையெல்லாம் கட்டியிருந்தாளோ அவைகளெல்லாம் தரைமட்டமாகி விட்டதை எண்ணி குமுறிக் குமுறி அழுதாள். மகள் ஸ்கூல் விட்டு வரும் வரைக்கும் அழுது கொண்டே இருந்தாள்.
சுபத்திரா வீட்டுக்கு வந்ததும் அம்மாவின் கண்ணீர் வெள்ளத்தைக் கண்டு திகைத்து விட்டாள். பதற்றத்துடன் விஷயத்தை விசாரித்தாள். அம்மா கண்ணிரும் விம்மலுமாய் நடந்ததைக் கூறினாள்.
சுபத்திராவுக்கு தாங்கமுடியவில்லை. எத்தனையோ உணர்ச்சிகள் கரை புரண்டெழுந்தன. மனம் குமுறி வெடித்தது. அவளுக்குப் பேச வரவில்லை. சற்று நேரம் கல்லாய்ச் சமைந்து நின்றவள் உடைகளைக் கூட மாற்றாமல் விர்ரென்று வெளியே வந்தாள்.
"எங்கே அவசரமாய் போறாய்?"
'வந்து சொல்கிறேன்'
"ஒருவித ஆவேசத்துடன் தெருவுக்கு வந்தவள் டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு நேரே உள்ள வெள்ளவத்தைப் பங்களாவுக்கு பறந்தாள்- பஸ்ஸில் போகக் கூடப் பொறுமையில்லை.
பங்களாவுக்குள் ஏறினாள். விறாந்தையில் கால்கள் நின்றன.
-உள்ளுக்கு ஏன் போக வேணும்? இங்கே நின்ற படியே நாலு பெரிய மனுஷர்களிலே ஒருவராய் இருக்கிற அந்தப் பெரிய மனுஷனைக் கூப்பிட்டால் என்ன?.
சுபைர் இளங்கீரன் 78

உள்ளே ஆள்அரவத்தைக் காணோம். அவளால் நிற்க முடியவில்லை. உணர்ச்சிகள் அவளை ஹோலுக்குள் தள்ளின. அங்கே அந்தப் பெரிய மனுஷனைக் காணவில்லை. தனது அறையில் ஏதோ வேலையாய் இருப்பது தெரிந்தது. அங்கே சென்று இருமிச் சந்தடி காட்டினாள்.
தலையை உயர்த்திப் பார்த்த நவரட்ணம் 'என்ன விஷயம் ?' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
'நீங்கள் எங்களை இங்கே வந்து போக வேணாம் என்று சொன்னீங் களாமே ஏன்? உங்கள் பணம் காசுக்கு நஷ்டம் வந்து விடும் என்ற பயமா? இந்த பங்களாவையும் உங்கள் சொத்து சுகங்களையும் அனுபவிக்கத் தான் மகளைப் பார்க்கிற சாட்டில் அம்மாவும், அக்காவைப் பார்க்கிற சாட்டில் தங்கையும் வருகிறார்கள் என்ற எண்ணமா? நாங்கள் வந்து போகிறது மேலே இருக்கிற உங்களை கீழே இழுத்து விடும் என்ற அச்சமா? அந்தவிதமான எந்த எண்ணத்தோடேயும் நாங்க வரேல்லே. பெற்ற பாசம் தாங்காமல் மகளைப் பார்க்க ஒருதாய் வருகிறாள். சகோதரியின் மேல் வைத்திருக்கிற அன்புக்காக அவளுடைய தங்கை வருகிறாள். வேறு எதுக்கும் வரேல்லே. நாலு பெரிய மனுஷர் வந்து போகிற இந்த இடத்துக்கு நாங்கள் வரப்படாது தான். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கிற சின்ன உள்ளம் எங்களுக்கு இல்லை யல்லவா? நாங்க வாறது சரியில்லைத்தான். கவலைப்படாதீர்கள். இனி நாங்கள் வரமாட்டோம். உங்க தகுதிக்கும் எங்களுக்கும் ஒத்துப் போகாது." - படபடவென்று வெடித்து விட்டுத் திரும்பினாள் சுபத்திரா.
சந்திரா கண்கலங்க ஹோலுக்குள் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் சுபத்திராவுக்கு மனம் கலங்கியது; கரைந்தது.
இதற்குள் 'ஏய். ' என்று கூப்பிட்டுக் கொண்டே ஆத்திரத்துடன் வெளியே வந்தார் நவரட்ணம்.
'நான் போன பிறகு பேசுங்கள், என்னை எப்படியும் பேசுங்கள்' என்று சொல்லிவிட்டு, விர்ரென்று விறாந்தைக்கு வந்தாள். மறு வினாடி தெருவுக்கு வந்து விட்டாள்.
மகள் போன வேகத்தைப் பார்த்து மேலும் குழம்பிய மனதுடன் அவ ளையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்மா, அவள் வீட்டுக்கு வந்து ஏறும் போதே "எங்கே அவ்வளவு அவசரமாக விழுந்தடித்துக் கொண்டு ஓடினாய்?" அக்கா வீட்டுக்கா?' என்று கேட்டாள் பரபரப்பு மேலிட,
'இல்லே. அந்தப் பெரிய மனுஷன் பங்களாவுக்கு. கடைசித் தடவை யாய்க் கண்டு போட்டு வாறன்.'
'அவர் ஏதாவது சொன்னாரா?' ஏதோ ஓர் ஆவலுடன் கேட்டாள்.
'சொல்ல வேண்டியதைத் தான் சுருக்கமாக நாலுவார்த்தையில் ஆணி
79 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 45
அடித்த மாதிரி உனக்குச் சொல்லிவிட்டாரே, இதை விட எனக்குச் சொல்ல என்ன இருக்குது. அன்றைக்கு இங்கிலிஸில் கூடச் சொன்னாரே, நம்மோட அவர் கதைக்கிறதுக்கும் அவரோட நாம கதைக்கிறதுக்கும் என்ன இருக்குது என்று கேட்டார், செருக்காக. மன ஒடிஞ்சு கலங்கிப் போயிருந்த உனக்கு இதையும் சொன்னால் உன்மனம் தாங்காது என்று எண்ணித்தான் பொய்யைச் சொன்னேன். '
அம்மா விறைத்துப் போயிருந்தவள் 'இப்படியெல்லாம் நடக்குமென்று நான் நினைக்கேல்லே' என்று உடைந்து நொறுங்கிய குரலில் கூறினாள்.
'நான் ஓரளவு எதிர்பார்த்தேன். அதனால்தான் தகுதிக்கு மீறிய இந்தச் சம்பந்தம் வேணாம் என்று மறுப்புத் தெரிவித்தேன். நீ கேட்கேல்லே. இருக்கிற வீட்டையும் அக்காவையும் அந்தப் பண மூட்டைக்குத் தாரை வார்த்ததுதான் மிச்சம். நம்மைப்போல ஏழைகள், தகுதியற்றவர்கள், தரங்கெட்டவர்கள் என்பது பணமும் பதவியும் உள்ளவர்களின் அழுத்தமான அபிப்பிராயம். ஏழைகள் அவர்களோடு ஒட்டியிருப்பதையும் உறவாடுவதையும் ஒருபோதும் விரும்புகிறதில் லே. இதை நீ உணர்ந்திருந்தா இந்தச் சம்பந்தம் நடந் திருக்காது.'
'என்னவோ நடந்தது நடந்து விட்டது. அவளாவது கஷ்டமில்லாமல் செல்வச் செழிப்போடு சந்தோஷமாய் இருந்தால் சரி' கூறிவிட்டு கண்களைத் துடைத்தாள் அம்மா.
'அக்கா சந்தோஷமாய் இருப்பாள்ென்றா நினைக்கிறாய், நான் அப்படி நினைக்கேல்லே. செல்வமும் செழிப்பும் வயிற்றை நல்ல சாப்பாட்டாலும், உடம்பை நகை நட்டுகளாலும் நிறைக்கலாம். ஆனால் அவளுடைய மனசை ஒரு இணக்கமான கணவனால்தான் நிறைக்க முடியும். அக்காவைப் பொறுத்தவரை நீ தேடிக் கொடுத்த மாப்பிள்ளை இணக்கமானவன் என்று நான் கருதேல்லே. அவள் சந்தோஷமாய் இருக்கிறாள் என்பது வீண் கற்பனை.'
இவ்வாறு சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அம்மாவின் மனம் மேலும் துயரப்பட்டு நொந்து புண்ணாகும் என்று எண்ணிச் சொல்லாமல் உள்ளே போய் விட்டாள்.
உண்மையிலேயே சந்திராவுக்கு மனம் நிறையவில்லைதான். அவளுக்குப் பொன் கூண்டுக்குள் சிக்கிவிட்டது போலிருந்தது. தாய் சகோதரத்தோடு உள்ள உறவுக்கு கணவன் தடைச்சுவராய் நிற்கிறாரே என்று வருந்தினாள். செல்வம் ஒரு கோடரி. அது ஒரே மரத்தை வெட்டி இரண்டாய் பிளந்து விடுவது போல ஒரே குடும்பத்தையும் பிளந்து விடும் என்று தெரியாத அந்தப் பேதை எல்லாம் அவரவர் விதிப்படிதான் அமையும் என்ற தனக்குள்ள நம்பிக்கையிடம் தஞ்சமானாள்.
* * * * *
சுபைர் இளங்கீரன் 80

". . . . . . நானோ அம்மாவோ இனி அங்கே வரமாட்டோம். இதற்காக நீ ஒன்றும் பெரிதாய் கவலைப்பட்டு மனதை அரித்துக் கொள்ளாதே. இப்படி நடந்து போய் விட்டதே என்று எண்ணி நொந்து புண்ணாகாதே. தைரியமாய் இரு. இன்றைய வாழ்க்கையில் இதெல்லாம் சகஜந்தான்.'
மறுநாள் இப்படி ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதி அக்காவுக்கு போஸ்ட் பண்ணிவிட்டுத்தான் ஸ்கூலுக்குப் போனாள் சுபத்திரா.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்மாவும் சுபத்திராவும் வெள்ளவத்தைப் பங்களாவுக்குப் போவதை நிறுத்தியே விட்டார்கள் என்றாலும் அம்மாவின் நெஞ்சம் மகளை நினைத்து உருகிக் கரையும். கல்யாணத்தின் போது இருந்த பூரிப்பும் முகத்திலிருந்த பொலிவும் மங்கி மறைந்துவிட்டன. அவள் பாதி யாகிவிட்டாள்.
மகளுக்காக மாயும் தாயைப் பார்த்ததும் அக்காவை நினைத்தும் சுபத்திரா வருந்தினாள். அவளுக்கு அக்கா மீது ஆழ்ந்த அன்பிருந்தது. சேர்ந்திருந்த தங்களை பலாப்பழத்தை வெட்டிப் பிளப்பது போல் கனவானின் சம்பந்தம் செய்து விட்டதை எண்ணித் துயர்படத்தான் செய்தாள். என்றாலும் தன் சுபாவப்படி மாய்ந்து போகவில்லை.
திடீரென்று ஒருநாள் அவர்களின் வீட்டுக்கு காரில் இன்னொருவருடன் வந்து இறங்கினார் கனவான் நவரட்ணம். அவரைக் கண்டதும் அம்மாவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. உறவுக்காகத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து விட்டாள். அவளையும் அறியாமல் விழிகள் மருமகனின் பின்னால் பாய்ந்தன -சந்திராவும் வந்திருக்கிறாளோ.
வெளிதான் இருந்தது - சந்திரா இல்லை. அதே விழிகளில் ஏமாற்றம் புகுந்தது. என்றாலும் மருமகனைக் கண்ட திடீர் மகிழ்ச்சி மறைந்து விட வில்லை. வரவேற்க வாய் தடுமாறியது. 'இருங்.க.ளேன்! சந்திரா.வும் வந்திருக்கலாமே..?'
நவரட்ணம் பதில் சொல்லாமல் வந்தவரை வீட்டைப் பார்க்கச் சொன்னார். அவர் வீட்டைப் பார்த்து விட்டு ஒகே' என்றார்.
'இந்த வீட்டை நான் இவருக்கு விற்றுப் போட்டன் முதலாந் தேதி இவருக்கு இதைப் பாரம் கொடுக்க வேணும். அதுக்குள் நீங்கள் ஓர் இடம் பார்த்துக் கொள்ளுங்கள். இதை அறிவிக்கத்தான் வந்தேன்.'
இவ்வாறு கூறிவிட்டுச் சட்டென்று திரும்பிய நவரட்ணம், ஒரு கணம் நின்று, 'முதலாந் தேதி, வாங்கியவருக்கு வீட்டை கட்டாயம் கொடுக்க வேணும். மறுமொழி சொல்ல முடியாது. முப்பதாந் தேதி ஆள் அனுப்புவன். திறப்பைக் கொடுத்து விடவேணும் 'திரும்பவும் ஒரு தடவை வலியுறுத்திவிட்டு வாசலை நோக்கி விரைந்தார்.
81 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 46
ஆக மொத்தம் நாலைந்து நிமிடங்கள் இருக்கும். அவர் வந்தார்சொன்னார்-போய்விட்டார்.
அவர் போன திக்கையே வெறித்துப் பார்த்தபடி விக்கித்து நின்றாள் அம்மா. எவ்வளவு நேரம் அப்படி நின்றாள் என்று அவளுக்கே தெரியாது.
சுபத்திரா வருகிறபோது அம்மா அறைக்குள் படுத்திருந்தாள். தண்ணிருக்குள் அமுக்கி எடுத்தது போலிருந்தது. சுபத்திரா வந்து கதவைத் தட்டினாள். அம்மா வந்து திறந்ததும் ஒரே இருட்டாய் இருந்தது.
“என்ன அம்மா இது, லைட்டைக் கூடப் போடாமல். என்ன செய்து கொண்டிருந்தாய்?' என்று கேட்டுக் கொண்டே சுவிட்சைத் தட்டினாள். ஒளி வெள்ளம் பரவியது. அம்மாவின் முகம் இருண்டு உறங்கிக் கிடந்தது.
"ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? சுகமில்லையா..? மகளை நினைச்சு நினைச்சு இப்படிச் செத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா. இவ்வளவு பலவீனமான மனசா உனக்கு.?' என்று வேதனையுடன் கூறிக் கொண்டே அறைக்குள் சென்று உடை மாற்றிவிட்டு நடுக்கூடத்துக்கு வந்தாள்.
'அத்தான் இங்கே வந்துவிட்டுப் போனார்' சுபத்திரா ஆச்சரியத்தால் விழிகள் விரிய அம்மாவைப் பார்த்தாள். அவள் விஷயத்தைச் சொன்னாள். சொல்லும் போது குரல் இடறியது. சற்றுநேரம் மெளனமாக இருந்த சுபத்திரா லேசாய்ச்சிரித்தாள்-சில நிமிடங்கள் விடாமல் சிரித்தாள்.'
-இவள் சிரிக்கிறாளே. ஏன்?. ஒருவித திகிலோடும் வியப்போடும் மகளைப் பார்த்தாள் அம்மா. 'நீ இதை எதிர்பார்க்கேல்லே, இல்லையா? நானும்தான். ஆனால் நாம் எதிர்பார்த்திருக்க வேணும். இவரென்ன, இவரைப் போன்றவங்களெல்லாம் வீடுகள், காணிகள், தோட்டங்கள் என்று வாங்குகிறவர்களும் விற்கிறவர் களும் தானே. உன் மருமகனும் இதை விற்றுவிட்டார். இதில் வியப்பென்ன?"
அம்மா அவளைப் பார்த்தபடியே நின்றாள். வாய் அசையவில்லை. 'இந்த வீட்டை அக்காவுக்கு சீதனமாகக் கொடுத்த அன்றே நமக்கு வீடு இல்லே. அவருடைய தோளில்தான் இருந்தோம். அவருக்கு அது பாரமாய் இருந்திருக்குது. இப்ப நம்மை இறக்கி விட்டு விட்டார்.
'உனக்குக் கவலையாய் இருக்கும். எனக்கும்தான். ஆனா கவலைப்படக் கூடாது. வீட்டுக்குரியவர்கள் தங்களுக்கு விருப்பமான படி செய்து கொள்வார் களே தவிர, நமக்கு விருப்பமானபடி செய்வார்களா? அதுதான் அன்றைக்கே சொல்லி விட்டாரே உங்கள் ஆசைப்படி எல்லாம் நாங்கள் நடக்க மாட்டோம்
சுபைர் இளங்கீரன் 82

என்று. நாங்கள் என்கிற போது அக்காவையும் சேர்த்துத்தான் சொல்லி யிருக்கிறார். விற்கிறதுக்கு முடிவு செய்து விட்டு அக்காவிடம் கையெழுத்தைக் கேட்டிருப்பார். அவ கொடுத்திருப்பா. அவளைக் குறை சொல்ல முடியுமா? புருஷனுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்க வேணும். நல்லதுக்கு மட்டுமா கெட்டதுக்கும் கூட. இந்த மாதிரித்தானே நீ மகளுக்குக் கூட புத்தி சொல்லி யிருப்பாய்?நீ என்ன சமூகமே அப்படித்தானே புத்தி சொல்லி வைத்திருக்குது. மனைவியும் ஒரு மனிதப்பிறவிதான். அவளுக்கும் விருப்பு, வெறுப்பு, ஆசை, பாசம் எல்லாம் இருக்குது. அவளுடைய அபிப் பிராயப்படியும் நடக்க அவளுக்கும் ஓரளவு சுதந்திரமுண்டு என்று கருதுகிற சமுகமா..? புருஷனுக்குப் போகப் பொருளாயும், சமையல் யந்திரமாயும், பிள்ளைகளைப் பார்த்து வளர்க்கும் வேலைக்காரியுமாக இருக்கிறவளுக்குப் பெயர் மனைவி. அவள் புருஷனை மீறக்கூடாது. அக்காவும் நம்ம சமூகத்து மனைவிதானே. அதுவும் அடங்கி ஒடுங்கிப் போகிறவ. அவளைச் சொல்லி என்ன-பாவம்." - சுபத்திரா பேசிக்கொண்டே இருந்தாள். அம்மா அங்கு நிற்காமல் போய் விட்டாள்.
பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அம்மாதிரும்பி வந்தாள். சுபத்திரா மெளனமாக கன்னத்தில் கையை ஊன்றிய வண்ணம் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி யிருப்பதைப் பார்த்ததும் பாரம் தாங்காமல் மனம் வளைந்தது. 'என் விதிதான் உங்களையும் சேர்த்து ஆட்டுகிறது. சந்தோஷத்தைத் தந்து விட்டு திடீரென அதைத் தட்டிப் பறித்து விளையாடுது. எவ்வளவு கவலையைத்தான் நீ கூட தாங்கிக்க வேண்டியிருக்குது. ' -இமைகள் ஈரத்தால் கனத்தன. அதைத் துடைத்தன.
யோசனையில் இருந்த சுபத்திரா முகத்தை நிமிர்த்தினாள். விதி என்பது தோல்வியடைந்த மனத்தின் ஒலம். தன்னம்பிக்கையில்லாதவர்களுக்கு அடைக்கலம் தரும் மூடபக்தி. தோல்வியையும் ஏமாற்றத்தையும் கண்டு சஞ்சலப்படும் மனிதர்களுக்கு ஆறுதல் கூறும் வரட்டுத் தத்துவம் என்று உரத்துக் கூவ வேண்டும் போலிருந்தது. ஆனால் வாயைத் திறக்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'நான் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு விட்டன். நம்மைக் கொஞ்சம் நினைச்சுப் பார்க்காமே பொய்க் கனவெல்லாம் கண்டு, வீண் மனக்கோட்டை யெல்லாம் கட்டி விட்டன். இது முருகனுக்குப் பொறுக்கேல்லே.'
சுபத்திராவின் இதழ்களில் ஒரு சோக நகை நெளிந்தது.
"இப்ப இருக்கிற வீட்டுக்கும் விதி வந்து போச்தது. இன்னொரு வீட்டை எங்கே தேடுகிறது. திடீரென்று வீட்டை விட்டுப் போகிறதென்றால்..'
சுபத்திரா தன் மெளனத்தைக் கலைத்தாள். 'போகத்தான் வேணும்.
83 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 47
போவோம்."முதலாந் திகதி நிச்சயமாய் இந்த வீட்டில் இருக்க மாட்டோம்.'
கூறிவிட்டு எழுந்தவள் அறைக்குள் சென்றாள். அன்றிரவு வெகுநேரம் வரை தாய்க்கும் மகளுக்கும் நித்திரை வரவில்லை.
* * * * *
உணர்ச்சிவாக்கில் அம்மாவோடு எதையோ பேசி, எதையோ எண்ணி, முப்பதாந் தேதி வீட்டை விடுவதாகச் சொல்லியும் விட்டாள், சுபத்திரா. ஆனால் பிறந்து வளர்ந்து, இத்தனை நாட்கள் இருந்து வாழ்ந்த வீட்டைவிட்டு போக வேண்டுமே என்ற கவலையை விட, முப்பதாந் தேதிக்குள் வீடு தேட வேண்டுமே என்ற கவலைதான் மிஞ்சி நின்றது.
-முப்பதாந் தேதிக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. இதுக்குள் வீடு கிடைத்து விடுமா..? என்ன ஆனாலும் சரி, முதலாந் தேதி இந்த வீட்டில் இருக்கப்படாது.
நவரட்ணம் அறிவித்து விட்டுச் சென்றதிலிருந்து வீடு தேடும் படலத்தில் இறங்கினாள் சுபத்திரா. இந்த விஸ்வரூப பிரச்சினைதான் அவளை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தினமும் ஸ்கூலை விட்டதும் தன் வீட்டில் கூடத் தங்காமல் இன்னொரு வீட்டைத் தேடி அலைந்தாள். நகரைச் சல்லடை போட்டு அரித்தாள். ஒவ்வொரு நாளும், அலைந்த களைப்போடும் அலுப்போடும் வீடு திரும்பினாள்.
வீட்டுக்காக மகள் அலையும் அலைச்சலைப் பார்த்து அம்மா பொங்கிப் பொங்கி அழுதாள்.
அன்று ஸ்கூலில் தன் சக ஆசிரியர் ரகுநாதனுடன் கதைத்துக் கொண்டி ருந்தாள் சுபத்திரா.
'என்ன டிஸ்கவுன்.. ?' என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சிவகாமி. அவளைத் தொடர்ந்து, பார்வதி, சல்மா, சுலைமான் எல்லாரும் கூடிவிட்டார்கள் இடைவேளை நேரம்.
சுபத்திராவின் வீட்டுப் பிரச்சினை அவர்கள் எல்லோருக்கும் தெரியும். 'வீட்டு விஷயம் எந்த இடத்தில் நிற்குது?' சுலைமான் கேட்டான். 'அதே இடத்தில் தான் நிற்குது. மூன்று தட்டு வீடாயிருந்தாலும் பரவா யில்லே. கொழும்பின் எந்தப் பகுதியிலிருந்தாலும் சரி, எடுத்துத் தாருங்கள் -கெஞ்சுவது போல் சொன்னாள் சுபத்திரா.
'மூன்று தட்டு வீடு என்ன மூங்கில் தட்டு வீடு கூடக் கிடைக்காது கொழும்பில்' என்றான் சுலைமான்.
'எவரெஸ் டைப் பிடிக்கிறது, தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும்
சுபைர் இளங்கீரன் 84

நீந்துவது, காங்கேசன்துறைக்கும் அம்பாந்தோட்டைக்கும் நிற்காமல் சைக்கிள் ஓடுவது, படித்துவிட்டு எம்.பியின் வாலைப்பிடித்து உத்தியோகம் தேடுவது -இதெல்லாம் கொழும்பில் ஒரு வீடு தேடி எடுக்கிற சாதனையை விடப் பெரிய சாதனையா?"
சுலைமான் இவ்வாறு கூறியதும் எல்லோரும் 'கொல்' என்று சிரித்தார்கள். அதேசமயம் இடைவேளை முடிந்து பெல் அடித்தது. கூட்டம் கலைந்தது.
கடைசியாக எவ்வளவோ அலைச்சலுக்கும் சிரமத்துக்கும் பிறகு தெஹிவலையில் ஒரு வீட்டில் இரண்டு அறைகளும், சிறுதாழ்வாரம் போட்ட அடுப்படியும் உள்ள ஒரு அனெக்ஸ்-பகுதி கிடைத்தது.
முப்பதாந் தேதி, நவரட்ணம் அனுப்பிய ஆளிடம் திறப்பை விட்டெறிந்து விட்டு அம்மாவோடு தெஹிவலைக்குக் குடியேறிவிட்டாள் சுபத்திரா. அங்கு வந்த பிறகுதான் பெரும் சுமை இறங்கியது போல் ஆறுதலாய் மூச்சுவிட்டாள். அலைந்த அலைச்சலும் பட்ட சிரமத்தையும் கூட மறந்து விட்டாள். ஆனால் மறக்க முடியாத ஆனந்தியை நினைத்து மட்டும் வருந்தினாள்.
சேர்ச் வீதியில் இருந்த போது ஆனந்தி தினமும் சுபத்திரா வீட்டுக்கு வருவாள். சுபத்திராவும் அங்கு போவாள். இப்போது அந்த வசதி இல்லையே! ஆனந்திக்கு சுபத்திரா வீட்டாரின் இந்தச் சரித்திரம் முழுதும் தெரியும். அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்காக அவள் கூட மனம் தாங்காது கண்ணிர் விட்டிருக்கிறாள். அவளுக்குச் சுபத்திராவின் அத்தான் மீது தீராத வெறுப்பு வேர் விட்டது. "உன்னுடைய மனசுக்கும் போக்குக்கும் அந்த ஆள். உனக்கு அத்தானாக வந்திருக்கவே படாது' என்று ஒருநாள் சுபத்திராவுக்குச் சொன்னாள்.
சேர்ச் வீதியை விட்டு சுபத்திரா வீட்டார் போன அன்று ஆனந்தி அவளுடைய வீட்டுக்கு வந்து கண்ணிராய்க் கொட்டினாள். "உங்களிடமிருந்து சந்திராவைப் பிரித்தது போல என்னையும் உன்னிடமிருந்து பிரித்துவிட்டார்' என்று அழுதுகொண்டே கூறினாள்.
'உன்பக்கத்திலிருந்து இந்த வீட்டைத்தான் பிரிக்க முடிஞ்சுதே தவிர, நம்ம மனசை அவராலே பிரிக்க முடியாது ஆனந்தி. அத்தான் என்ன அவரைப் போல் ஆயிரம் அத்தான்கள் வந்தாலும் என் உள்ளத்திலிருந்து உன்னை அகற்றவே முடியாது. இந்த வீட்டை விட்டுப் போனால் என்ன, தெஹிவலைக்கும், கம்பனித் தெருவுக்கும் நூறு இருநூறு மைலா தூரம் ? இல்லைத்தானே, நினைக்கிற போது உடனே வந்து போகலாந்தானே? அழுகையை நிறுத்தி விட்டு உற்சாகமாய், சந்தோஷமாய் வழியனுப்பு.'
உண்மையிலேயே சுபத்திராவுக்கும் துக்கமாய்த்தான் இருந்தது. காட்டிக்
கொள்ளாமல் இதைக் கூறினாள்.
አ8
5
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 48
'வழியனுப்புகிறதென்ன நானும் கூட வந்து விட்டுத் திரும்புகிறேன்'
"அதுதான் சரி, வா."
* * * * *
ஒருநாள் சுபத்திரா ஆனந்தியின் வீட்டுக்கு வந்து அவளுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, 'என்ன சங்கதி’ என்று கேட்டுக் கொண்டே வந்து முன் விறாந்தையில் இருந்தான் வட்டி வைரலிங்கம்.
அவனைக் கண்டதும் ஆனந்திக்கு நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது.
'மூதேசி வந்து விட்டுது. இனிஇது எழும்ப மணித்தியாலம் நாலு செல்லும். அதுவரைக்கும் கத்திக் கொண்டிருக்கும், சகிக்க ஏலாது' என்று முணு முணுத்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்விட்டாள், வசந்தி.
ஆளை என்ன சொல்லிக் கடத்துகிறது என்று யோசிக்கத் தொடங்கி விட்டாள் ஆனந்தி.
"என்ன மெளனம், காசு தரலாந்தானே. ?" ஆனந்தியிடமிருந்து பதில் வரவில்லை. 'எனக்குத் தெரியும், என்னைக் கண்டால் வாய் திறக்காது, பிறகுதான் திறக்கும். தவணையும் சாட்டும் சொல்ல. ஆனா இன்னைக்கு ரெண்டிலே ஒன்னு, ஒரு முடிவு எடுத்துக் கொண்டுதான் இடத்தை விட்டுக் கிளம்புறது என்ற தீர்மானத்தோட வந்திருக்கிறேன்.'
வைரலிங்கத்தின் குரல் மெல்ல மெல்ல கீழ் ஸ்தாயிலிருந்து மேல் ஸ்தாயிக்கு உயர்ந்தது.
'கையிலே காசு இருந்தால் யார்தான் தவணையோ சாட்டோ சொல்லப் போகிறார்கள்' என்று லேசாய் காதில் பட்டதும் படாததுமாய் சொன்னாள் ஆனந்தி.
ஆனால் வைரலிங்கத்துக்குக் கேட்டது. "இப்பவே தவணை சொல்கிறதுக்கு ஆரம்பமா?'
'தவணை சொல்ல எனக்கு ஆசையா? வேலையிலிருந்த சமயத்திலே கூட இரண்டொரு தடவை உங்களிடம் வாங்கித் திரும்பத் தரேல் லியா? இப்ப வேலையில்லே. முயற்சி செய்து கொண்டே இருக்கிறன். கிடைச்சதும் தருவன்தானே. இப்ப சரியான கஷ்டம். தரமுடியேல்லே. அதுதான் தவணை சொல்லுகிறேன்."
"தெரியும். நீ முந்தி வாங்கினாய், தந்தாய். அதை நம்பித்தானே, நானும் பிறகு தந்தேன். எத்தனை மாசமாச்சுது. கடனை வாங்கிப் போட்டு இப்படி
சுபைர் இளங்கீரன் 86

எத்தனை தடவை அலைக்கழிக்கிறது. வேலையில்லே; கஷ்டமாயிருக்குது என்று நான் வருகிற போதெல்லாம் சொன்னால் என் காசுக்குத்தான் என்ன முடிவு? உனக்கு மாசக் கணக்கிலே வேலை வருகுது. எனக்கும் மாசக் கணக்காய் காசு வருகுது. இனியும் ஒரு தடவை என்னால் அலைக்கழிய ஏலாது. வட்டியோட சேர்த்து முழுக்காசும் இப்ப வேணும்'-குரல் எழும்பியது. மேலும் என்ன பதில் சொல்கிறது என்று ஆனந்திக்குத் தெரியவில்லை. விழித்தாள்.
அதுவரை பூனைமுகமும், தட்டையான உடம்பும், வளைந்து செருகிய காதும் கொண்ட வைரலிங்கத்தின் உருவத்தையும், அவன் கதைக்கிற விதத்தையும் ரசித்துக் கொண்டிருந்த சுபத்திராவுக்கு அவனுடைய சத்தத்தை அதற்கு மேல் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, "இங்கே நின்று ஏன் கத்திக் கொண்டிருக்கிறீங்கள்? உங்கள் காசை அவ எடுத்துக் கொண்டு ஒடிட மாட்டா. கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள்." என்று சமாதானம் கூறினாள்.
"சரிதான் நியாயம். இங்கே இருந்து கத்தாமல் வேறே எங்கே இருந்து கத்தச் சொல்கிறாய் நீ? காசை விட்டெறி என்வாயும் தானாய் மூடும்; காலும் இங்கே ஒரு நிமிஷமும் தரிக்காது.'
'இருந்தால் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம். தயவாய்ச் சொன்னால் கேட்க வேணும்; போக வேணும். கத்திக் கொண்டு நிற்கிறது சரியில்லே."
'நீ சொல்லி நான் என்ன கேட்கிறது? நீ யாரு சொல்ல?" 'நான் யாரா..? அவதான் நான்' 'அப்ப உன் யோக்கியமும் கோணலாய்த்தான் இருக்கும்.' சுபத்திராவுக்கு மேனி படபடத்தது. "என்னுடைய யோக்கியத்தை தெரிஞ்சு கொண்டது போதும். மாசம் முடிய வா. உன் காசை முகத்திலே விட்டெறி கிறோம். இதுக்கு மேலே ஒரு நிமிஷமும் இங்கே நிற்காமல் நடையைக் கட்டு.'
'நீ என்ன நடையைக் கட்டச் சொல்கிறது? கை நீட்டிக் காசு வாங்கினவ நடையைக் கட்டச் சொல்லேல்லே, நீயாரு, இடையிலே வந்தவ சொல்கிறது?" அதற்கு மேல் ஆனந்தியால் மெளனமாய் இருக்க முடியவில்லை. சுபத்திரா பதில் சொல்ல வாய் எடுப்பதற்குள் 'நீசும்மாஇரு' என்று இடைமறித்து விட்டு "அவ ஒன்னும் உங்களைப் போல இடையிலே வந்தவ அல்ல, அவயாரு என்று கேட்க நீங்க யாரு? வாயைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்க. ' என்றாள் சற்றுக் காரமான தொனியில்.
'ஒ. அப்ப காசை வை. நான் கேட்கேல்லே'
87 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 49
'இருந்தால் தானே தாறதுக்கு?" 'இருக்கிறதுக்கு வழியைப் பார்க்கிறதுதான்' 'அந்த வழிதான் தெரியேல்லே' "ஏன் ஹோட்டல் புக்கிங் பண்ணுறது. கண்ணுக்குத் திகட்டாமல் இருக்கிற உனக்கென்ன கஷ்டமாகவா இருக்கப் போகுது? எத்தனையோ பேர் செய் கிறார்கள், குடியா முழுகிப் போச்சுது.'
வைரலிங்கம் சொல்லி முடிப்பதற்குள் சுபத்திராவின் காலில் கிடந்த செருப்பு எப்படித்தான் கைக்கு வந்ததோ, செருப்பால் பளிர் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.
வைரலிங்கம் அதிர்ந்து விட்டான். 'போடா வெளியே, ராஸ்கல். மறுகதை கதைத்தியோ செருப்பு அடுத்த கன்னத்துக்கு வரும்'-எரிமலையாகி வெடித்தாள். சுபத்திரா.
வைரலிங்கம் ஒரு முறைப்போடு அவளைப் பார்த்தான். மறுகணம் அவன் அங்கே நிற்கவில்லை.
ஏழை எளியவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வட்டிக்குக் கடன் கொடுத்துச் சம்பாதிக்கும் வைரலிங்கம் சேர்ச் வீதிச் சந்துக்கும் பிரசித்த மானவன். அவனிடம் கடன் வாங்காதவர்களே அந்தச் சந்துக்குள் இல்லை எனலாம். கறாராக வட்டியையும் முதலையும் வசூலிப்பதில் கைதேர்ந்த பேர்வழி, தவணை சொல்லி யாராவது காசைக் கடத்தினால் வைத்துப் பார்க்கமாட்டான். நாக்கை நரகலில் துவைத்துக் கொண்டு கொட்டென்று கொட்டி விடுவான். இப்படி வீசினால்தான் அவர்களும் காசை வீசுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. தன் நாக்கால் அவன் காசையும் வாங்கி யிருக்கிறான்; அடியையும் வாங்கியிருக்கிறான்.
அடுத்த வீட்டுக்குப் போயிருந்த வசந்தி ஓடி வந்து இந்தக் காட்சியைக் கண்டு "க்ளுக்" கென்று சிரித்துவிட்டு சந்துக்குள்ளிருந்து விரைந்து தெருவுக்கு நடக்கும் வைரலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தலை மறைந்ததும் உள்ளே வந்து 'சரியான பாடம் இன்னைக்கு.. ' என்று சுபத்திராவைப் பார்த்துச் சொன்னாள்.
அவள் பதில் ஏதும் கூறாமல், மனதில் அலைபாயும் எத்தனையோ உணர்ச்சிகளோடு ஆனந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுபத்திராவின் முகத்தில் ஒருநாளும் இல்லாதவாறு விபரிக்க முடியாத வேதனை ததும்பிக் கொண்டிருந்தது.
ஆனந்தியோ சிலையாகி சுவரை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். நிமிஷங்கள் கரைந்து மறைந்தன.
சுபைர் இளங்கீரன் 88

'ஆனந்தி." -சுபத்திரா மெல்லக் கூப்பிட்டாள். அவளுக்கு அது கேட்கவில்லை.
சுபத்திரா எழுந்து போய் அவளுடைய தோளை அசைத்து 'ஆனந்தி." என்றாள் திரும்பவும்.
நித்திரையிலிருந்து விழித்தவள் போல் "ஆ.' என்று திரும்பி சுபத்திரா வைப் பார்த்தாள். கண்ணிர் பொல பொல என்று கொட்டியது. அந்தக் கண்ணிருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் சுபத்திரா -அந்தக் கண்ணிருக்கு என்னதான் தேறுதல் சொல்கிறது, என்னதான் ஆறுதல் சொல்கிறது.
சுபத்திராவின் கலங்காத கண்களும் கலங்கி விட்டன. வசந்திக்குக் கூடத் தாங்க முடியவில்லை. அவள் கண்களைத் துடைத்து விட்டு வாசலுக்கு வந்து விட்டாள்.
நீண்ட நேரம் அங்கே மெளனம் அரசோச்சியது. இடையில் அந்த மெளனத்தைக் கலைத்து சுபத்திரா கூறினாள்: 'உன் உள்ளத்தில் தணல் விழுந்துட்டுது. அதுவும் பெருந்தணல். உன் உள்ளம் எரிந்து துடிக்கிறதை என் கண் முன்னால் பார்க்கிறேன் ஆனந்தி. இதற்கு மேல் என்னால் எதுவுமே பேச முடியேல்லே...' -கூறி விட்டுத் தன் விழிகளைத் துடைத்தாள்.
'ஓம். அந்தத் தணலில் எரிந்து செத்துக் கொண்டிருக்கிறேன் சுபத்திரா. நீ எதுவும் சொல்லாமல் என்னை விட்டு விடு' நெடுநேரத்துக்குப் பிறகு, ஆனந்தியின் வாய் லேசாய் அசைந்தது.
சுபத்திரா சிந்தித்தபடி, நடுத்தட்டுக்குள் உலாத்திக் கொண்டிருந்தாள். - வறுமையை, பேய் என்று சொல்கிறார்கள். பேய்க்கு அழிக்கத்தான் தெரியுமாம். வறுமைப் பேயும் உள்ளத்தை, உணர்ச்சியை, ஏன் ஆளையும் கூட அழித்து விடும் போலிருக்குது. ஆனந்தியும் இப்போது அழிந்து கொண்டு தான் இருக்கிறாளோ. முற்றாய் அழிந்து விடுவாளோ.
- வறுமைதான் வைரலிங்கத்திடம் கடன் வாங்க வைத்தது. அவன் கடனுக்காக ஆனந்தியின் இதயத்தில் தணலைக் கொட்டிவிட்டுப் போய் விட்டான். அவள் எரிகிறாள். எரிந்து சாம்பலாய்த்தான் போய் விடுவாளோ.
"சுபத்திரா. 2・ ୧୭ ରuଗୀt சட்டென்று திரும்பி ஆனந்தியைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள். "இதுக்குப் பிறகும் நான் உசிரோடு இருக்கிறதை நீ விரும்புரியா?" 'நிச்சயமாக' - சில நிமிஷங்கள் மெளனமாக நின்றுவிட்டு இதைச்
89 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 50
சொன்னாள் சுபத்திரா.
'உனக்கு மூளைக் கோளாறு இல்லையே..?"
சுபத்திரா சிரித்தாள். 'அந்தக் கடன்கார ராஸ்கல் தணலைக் கொட்டினான். ஆனால் உன் இதயத்தை நெருப்பாக்கிக் கொண்டால் அது உன்னை எரிக்காது. எரிந்து சாக வேண்டியதுமில்லை. அவன் தணலைக் கொட்டினானே என்கிறதுக்காக மட்டுமல்ல, வறுமைக்கும் துன்பத்துக்கும் எது காரணமோ அதைச் சுட்டெரிக்கநமது இதயத்தை நெருப்பாக்கிக் கொள்ள வேணும்' என்று தன்னையுமறியாமல் ஒரு ஆவேசத்தோடு கூறினாள்.
ஆனந்தி பேசாமல் நின்றாள்.
சற்று நேரத்துக்குப் பிறகு 'இதைத்தவிர இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியேல்லே. நான் போய்ட்டு வாரேன்.' -கூறிவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்.
அன்றிரவு சுபத்திராவுக்கு வெகுநேரம் நித்திரை வரவே இல்லை. எவரை மறக்க எண்ணினாளோ, மறக்க வேண்டிய அந்த அத்தானைச் சுற்றியே எண்ணம் சுழன்றது. அவளுடைய உள்ளம் போர்க்களமாகி விட்டது.
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவள் போல் சட்டென்று கட்டிலை விட்டு ள்முந்து லைட்டைப் போட்டுவிட்டு மேசைக்கு வந்திருந்து விறுவிறு என்று எழுதத் தொடங்கினாள்.
அக்காவுக்கு,
நமது ஆனந்திக்கு வேலை இல்லையென்றும், விவரிக்க முடியாத துன்பத்துக்குள் அவளும், அவளது குடும்பமும் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் உனக்குத் தெரியும். அவள் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டது. துன்பம் உள்ளத்தை சூன்யமாக்கு கிறது; ஜீவ சக்தியை உறிஞ்சுகிறது. ஆனந்திக்கு இப்போது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவள் இப்போது அழிந்து கொண்டிருக் கிறாள். முற்றாக அழிந்து போவதிலிருந்து அவளைத் தடுக்க வேண்டும். அதற்கு இப்போது அவசர, அவசியமாகத் தேவைப்படுவது அவளுக்கு ஒரு வேலை. அத்தான் நினைத்தால் ஒரு நொடிக்குள் இதைச் செய்ய முடியும். அவரை அதற்கு இணங்க வைக்க வேண்டும். இதற்கு அவரை எந்த வகையில் சம்மதிக்கச் செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் இதை நீ செய்தே ஆக வேண்டும். ஆனந்திக்காக மாத்திரமல்ல உனக் காகவும் எனக்காகவும் கூடச் செய்ய வேண்டும். இன்றோ, நாளையோ, மறுநாளோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும். சுணங்கும் ஒவ் வொரு நிமிஷமும் அவளை அழித்துக் கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இதற்கானதைச் செய்.
சுபத்திரா.
சுபைர் இளங்கீரன் 90

இந்தக் கடிதத்தை எழுதிக் கவருக்குள் ஒட்டி விலாசமும் குறித்து வைத்த பிறகுதான் அவளுக்கு நித்திரை வந்தது. புயலுக்குப் பின் அமைதி என்பார்களே, அந்த அமைதியுடன் அவள் உறங்கினாள்.
வைரலிங்கம் வந்து போன அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவமானத்தால் கூசிக் குன்றிப்போன ஆனந்தி மேலும் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்றே அடிக்கடி நினைத்தாள். சுபத்திரா அன்று என்ன என்ன சொன்னாளோ அதெல்லாம் அவள் மனதில் தங்கவில்லை.
ஆனால் சுபத்திரா அவள் போக்கில் சிந்திக்க விடவில்லை. சில நாட்கள் தினமும் அவளை வந்து பார்த்து, தீயினால் வெந்த புண்ணின் நோவை விசிறியால் வீசி ஆற்றுவது போல ஆற்றிக் கொண்டிருந்தாள். உண்மையில் எப்போதும் போலவே சுபத்திராதான் அவள் புண்ணுக்கும் மருந்தானாள். நாளுக்கு நாள் ஆனந்தியும் அதை நினைப்பதைக் குறைத்து வந்தாள்.
* * * * *
91
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 51
ஆறாவது அத்தியாயம்
விட் - றோஸிசம்பந்தமாக மனேஜர் ஆனந்தியிடம் ஒன்றும் விசாரிக்கவில்லை. சுபத்திரா சொன்னது போலவோ, ஆனந்தி பயந்தது போலவோ வேலைக்கு ஆபத்து வந்து விடவில்லை. இது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் அவள் டேவிட் -றோஸியோடு மட்டுமல்லாமல்
மற்றவர்களோடும் சரளமாகப் பழகினாள். அவர்களும் வழக்கம் போல் கம்பெனி விஷயங்களையும் மனேஜரையும் பற்றி ஆனந்தியுடன் கதைத் தார்கள்; விமர்சித்தார்கள். இதெல்லாம் மனேஜருக்குத் தெரியாமல் இருக்காது. என்றாலும் அவர் இதைப்பற்றித் தன்னிடம் ஒன்றும் கேட்காதது அவளுக்கு புதிராகவும் இருந்தது.
மனேஜரின் இந்தப் புதிர் ஆனந்திக்கு விளங்காவிட்டாலும் மனதை முன்னையைப் போல் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. கோல்பேஸ் லைட் ஹவுஸில் அவளும் சுபத்திராவும் பேசியதிலிருந்து ஆனந்திக்கு ஒரு தெம்பு பிறந்துவிட்டது. சுபத்திரா மாத்திரமல்ல, றோஸி கூட மனத் தைரியமும் துணிச்சலும் உள்ளவள் என்பதைப் போகப் போகத் தெரிந்து கொண்டாள். சுபத்திராவைப் போல, றோஸியைப் போல இருக்க முடியுமோ என்னவோ அவர்களைப் போலத் தானும் தைரியமாக இருக்க வேண்டும், எதையும் நினைத்துக் கலங்கவோ, பேதலிக்கவோ கூடாது என்று சபதம் போல தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். தன்னைப் போலவே வறுமைப்பட்டவர்களும், துன்பத்தை அனுபவிப்பவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தாலும் தன்னையும் தன் குடும்பத்தையும் மிகைப்பட எண்ணி
சுபைர் இளங்கீரன் 92
 

வருந்திக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது கம்பெனித் தொழிலாளர் களுடன் பேசிப்பழகியதிலிருந்தும், அவர்கள் வித்தியாசம் பாராட்டாது மனம் திறந்து தங்கள் நிலைமையை விவரித்துச் சொல்லியதிலிருந்தும் அவர்களும் தன்னைப் போல் துன்பத்தையும் வறுமையையும் அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். கம்பெனித் தொழிலாளர்களான றோஸி, குஸ0மா, ராசம்மா வீடுகளுக்கெல்லாம் அவர்களின் அழைப்பின் பேரில் போயிருக் கிறாள்.
றோஸிக்கும் மட்டக்குளித் தோட்டத்தில் இருக்கும் மூன்று தட்டு வீடுதான். இடத்தையும் தோட்டத்துக்குள் இருக்கும் நெரிசலையும், இரைச்சல் கூச்சலையும் பார்த்த ஆனந்தி "உனக்கு இது நரகமாய் இல்லையா?" என்று றோஸியிடம் கேட்டாள்.
'நரகத்தையும் சொர்க்கத்தையும் நினைக்க எனக்கு நேரமேது? இதுதான் எங்கள் இடம், வாழ்க்கை எல்லாம், இதை அனுபவிச்சு அனுபவிச்சுப் பழகிப் போய்ட்டுது' என்று சிறிதும் கவலையில்லாமல் சொன்ன றோஸி, 'ஏன் நீகூட இந்தமாதிரி இடத்தில்தானே இருக்கிறாய்?' என்று கேட்டாள். ஆனந்தி மெல்லச் சிரித்தாள் -மெய்தான். விரும்பாமலே அது பழகிப் போப்ட்டுது. ஆனால் றோஸி எவ்வளவு அலட்சியமாகச் சொல்கிறாள்.
றோஸிக்குச் சுபத்திராவைப் போல் அம்மா மட்டும்தான் இருந்தாள். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவள் போல் வயதுக்கு முன்பே முகத்தில் நல்லாய்ச் சுருக்கம் விழுந்து, கண்ணும் மங்கி, தலையும் நரைத்துப் போய் இரட்டை நாடித் தேகத்துடன் காணப்பட்டாள் அவள். றோஸிக்கு அண்ணன் ஒருவன், மனைவி கனத்தை மயானத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டாள். மின்சாரத் தொழிலாளியான அவன் வேலை செய்து கொண்டிருந்த போதே விபத்தில் ஒரு காலையும் கூடவே வேலையையும் இழந்து இருபிள்ளை களோடு தங்கையின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தான். இரண்டு தம்பிமாரில் மூத்தவன் படித்துவிட்டு வேலையில்லாமல், தன்னைப் போலவேதிக்குத் திசை தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் வாலிபர்களுடன் காலத்தைக் கரியாக்கிக் கொண்டு திரிந்தான். இளையவனின் படிப்பும் தட்டுதடுமாறிக் கொண் டிருந்தது.
இவர்களையெல்லாம் றோஸிதான் பார்க்க வேண்டும். இருநூற்றியம்பது ரூபா சம்பளத்தில் இந்தச் சுமையைச் சமாளிக்க முடியாமல் கடன் தனிசு என்று திணறிக் கொண்டிருந்தாள்.
'இந்தப் பாரத்தைச் சுமந்து கொண்டு உன்னால் எப்படித் தைரியமாய் இருக்கமுடியுது? இதை எப்படித் தாங்குகிறாய்?' என்று வியப்புடன் கேட்டாள்.
"தாங்கித்தான் ஆகவேணும். தைரியமாய் இருந்தால் தானே தாங்கலாம்?
93 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 52
இதுக்குப் பயந்து இவங்களையெல்லாம் விட்டுட்டு ஓடிட முடியுமா? நம்ம பாரத்தைக் கீழே போட்டுட்டு ஓடுகிறது மூலம் நம்மைச் சேர்ந்தவங்க எங்கே ஓடினாலும் ஒன்னுதான். கஷ்டம் கஷ்டம்தான். சுமை சுமைதான். ஆனா இதுக்காக அழுது கொண்டிருக்கவும் முடியாது. அழுகை நம்ம வாழ்க்கையிலே மாற்றத்தைக் கொண்டு வராது. தைரியமும் துணிச்சலும் தான் கொண்டு வரும். "அவளுடைய கருத்தைப் போலவே அவளுடைய தொனியிலும் உறுதி இருந்தது.
ஆனந்தி பிரமித்துவிட்டாள் - இவளைப் போல் சிந்திக்கவும் பேசவும் என்னால் முடியுமா?.
தாயையும் தந்தையையும் இழந்த குஸ0மாவுக்கு தாத்தா இருந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவளுடைய அக்காவின் புருஷன் வேலை யில்லாமல் விரக்தியடைந்து அது மூளையைப் பாதித்து அங்கொடையில் இருக்கிறான். இதை நினைத்து நினைத்து அக்கா நோயாளியாகி விட்டாள். குஸDமாக்காவின் தங்கை ஒருத்தி சிறு வயதில் இளம்பிள்ளை வாதம் வந்து நடக்க முடியாதவளாகி வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள். பொறளையில் ஒரு பொந்துக்குள் குடியிருக்கும் குஸுமாவுக்கு எத்தனையோ சிரமங்கள். கைக்கும் வாய்க்கும் போதாத சம்பளத்தில் இவர்கள் எல்லோரையும் போஷிக்க வேண்டியது ஒரு புறமிருக்க, வீட்டு வேலைகளையும் வெளி வேலைகளையும் அவள்தான் பார்க்கிறாள். சமையல் கூட பெரும்பாலும் அவள்தான். அதோடு வேலைக்கும் போக வேண்டும்.
இதைக் கண்டு ஆனந்தி மலைத்து விட்டாள். தான்தான் பரிதாபத்துக் குரியவள் என்றால், குஸoமாவைப் பார்த்து தான் பரிதாபப்பட வேண்டியிருக் குதே என்று எண்ணினாள். ஆனால் குஸுமாவின் அற்புதமான இதழ்களில் ஒரு அழகிய புன்னகை எப்போதும் மிளிர்ந்து கொண்டே இருக்கும்.
இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் இவளால் எப்படி சதாசிரித்தபடி இருக்க முடியுது!.
ஆனந்திக்கு ஒரே ஆச்சரியம். ராசம்மாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஹாபர் தொழிலாளியான தந்தையும் தாயும் அவளுக்கு இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பெருத்த குடும்பம், நாலைந்து பெண்கள், பொடியன்கள், கண் தெரியாத பிரம்மச் சாரியான மாமா. இப்படி எல்லோரும் பண்டாரநாயக்கா மாவத்தையிலுள்ள தோட்டத்தில் - மூன்று தட்டு வீட்டுக்குள் நெரிந்து கொண்டிருந்தார்கள். தந்தையின் வருவாயும், ராசம்மாவின் சம்பளமும் கூடப் போதாமல் வீடு எப்போதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ராசம்மாவையும் விட பெண் களில் இரண்டு குமர்கள், தாங்கள் வீட்டில் கிடக்க ராசம்மாவுக்குச் சம்பளம் வருகுதே என்ற அர்த்தமற்ற பொறாமை வேறு. இவையெல்லாம் சேர்ந்து
சுபைர் இளங்கீரன் 94

சண்டைகள், சச்சரவுகள், பெருமூச்சுக்கள், ஊத்தைப் பேச்சுக்கள், கண்ணீர் என்று வீட்டை நரகமாக்கி விட்டிருந்தன. இந்த நரகத்துக்குள்ளும் ராசம்மா இருந்து, விடிந்ததும் வேலைக்கு வந்து, மாலையில் திரும்பி, இரவில் தூங்கவும் செய்கிறாள். ..: '...
ஆனந்திக்கு இது திகைப்பாய் இருந்தது. "இதையெல்லாம் சகித்துக் கொண்டு உன்னாலே எப்படி நிம்மதியாய் இருக்க முடியுது?' என்று கேட்டாள்.
'கஷ்டந்தான். ஆனா இதை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்க முடியுமா? நம்மைப் போல உள்ளவர்களுக்கு வாழ்க்கை இந்த மாதிரித் தானே? என்றாலும் ஒரு விடிவு வராமலா இருக்கப் போகுது?"
எவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாள்.
இவர்களையெல்லாம் பார்த்ததும் இவர்களைப் போலவே இன்னும் எத்தனையோ பேர் தன்னையும் விட அதிக பிரச்சினைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சுமையை யும் கஷ்டங்களையும், அனுபவித்தாலும் தன்னைப் போல் தைரியமிழந்து மனமொடிந்து ஓலமிடவில்லை; வருந்தி வருந்திச் சாகவில்லை; தங்களைத் தாழ்வாக எண்ணிக் கொள்ளவில்லை. வாழ்க்கையோடு தைரியமாகப் போராடுகிறார்கள் என்பதைக் கண்டு கொண்டாள்.
அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவளுக்கே வெட்கமாயிருந்தது. தானும் அவர்களைப் போல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதேசமயம் அவர்கள் மீது அனு தாபமும் இரக்கமும் பெருகியது. அவர்களோடு இன்னும் நெருக்கமாகப் பழகினாள். அவர்களும் இவளுடன் ஒட்டிக் கொண்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சுரண்டப்பட்ட வர்களுக்கும் மத்தியில் நேசமும் உறவும் விரைவில் உண்டாகி விடுகிறது.
* * * * *
அன்று சம்பள நாள்.
ஆனந்தி மத்தியானம் ஒஃபிசுக்குள்ளிருந்து கன்டீனுக்கு வரும் போதே வழியில் குஸoமா கேட்டாள்: 'இன்றைக்கு உனக்கு முதல் சம்பளம். எங்களுக்கு பார்ட்டி வைக்க வேணும்."
புன்னகையுடன் தலை அசைத்துக் கொண்டே நடந்தாள் ஆனந்தி. குஸoமா வும் அவளுடைய கையோடு தன் கையையும் பிணைத்துக் கொண்டு நடந்தாள்.
'இந்த மாசம் உன் பட்ஜட் எப்படி?” ஆனந்தி கேட்டாள்.
'அரசாங்க பட்ஜட்தான்.'
95 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 53
"அப்ப, துண்டு விழுகுது, இல்லையா?"
துண்டு விழாத மாசமே இல்லையே!”
“虎 எப்படித்தான் சமாளிக்கிறியோ..?"
'சமாளிக்கிறதாய் யார் சொன்னது?"
"அப்ப இந்தச் சம்பளத்துக்குள் என்னதான் செய்கிறாய்?"
'நீ என்ன செய்வாயோ நானும் அதைத்தான் செய்வேன்.
இருவரும் சிங்களத்தில் உரையாடிக் கொண்டே கன்டீனுக்கு வந்தார்கள்.
'எதிர்பார்க்கப்பட்டவர் வந்து விட்டார்' ராசம்மா சற்று உரத்துச் சொன்னாள்.
'நான் பார்ட்டியைப் பற்றிச் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன். ' என்றாள் குஸoமா.
ஆனந்தியைச் சுற்றி எல்லோரும் கூடி விட்டார்கள்.
"எங்கே டேவிட்டைக் காணோம்?"
'வருவார்' இது சிறிசேனா.
"அவர் வரும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்க முடியாது' இது ஜமீல்.
'சரி, சரி விஷயத்துக்கு வருவோம். என்ன பார்ட்டி, எங்கே? கோல்ஃ பேஸா, தப்ரபேனா, சமுத்திராவா, நிப்பனா, பார்க் வியூவா..?' அவசரப் பட்டான் செல்லையா.
"ஐயோ பாவம்! அங்கெல்லாம் நமக்குப் பார்ட்டி வைக்கிறதாயிருந்தால் ஒரு மாசச் சம்பளமல்ல, ஒரு வருஷச் சம்பளம் வேணும், ஆனந்திக்கு. இந்தப் பார்ட்டி எல்லாம் வேணாம். படத்துக்குக் கூட்டிப் போகட்டும்' என்றாள் ராசம்மா,
"என்ன றோஸி, நீ வாய்க்கு லொக் போட்டிருக்கிறாய்? திறப்பு டேவிட் டிடமா?' என்று கிண்டினான் சிறிசேனா.
கன்டீன் எங்கும் சிரிப்பொலி கேட்டது. அதில் றோஸியும் கலந்து கொண்டாள்.
'இப்படிச் சொல்கிறது சரியா?" என்று கேட்டாள் குஸுமா.
'இவ காரியதரிசி. திறப்பு தலைவரிடமா என்று கேட்டேன். நீங்கள் வித்தியாசமாய் நினைக்கப்படாது' என்று விளக்கம் தந்தான் சிறிசேனா.
'டேவிட் வருகிறான்" -ஜமீல் கூறினாள்.
'என்ன ஒரே கும்மாளம் ?' என்று கேட்டுக்கொண்டே டேவிட்டும் வந்தான்.
சுபைர் இளங்கீரன் 96

'இன்றைக்கு ஆனந்திக்கு முதல் சம்பளம். பார்ட்டி வைக்க வேணும் என்று பிடிக்கிறார்கள்’ என்றாள் றோஸி.
'ஆனந்தி என்ன சொல்கிறா?' என்று கேட்டான் டேவிட் எல்லோரும் ஆனந்தியைப் பார்த்தார்கள். அவள் டேவிட்டைப் பார்த்து புன்னகை செய்தாள்.
'இந்தா, நீ அவரைப் பார்த்துச் சிரித்து மயக்கி உன் பக்கம் இழுத்துக் கொண்டு அவர் மூலம் லேசாய் விஷயத்தை முடிக்கலாம் என்று நினைக்காதே" ராசம்மா சிரித்துக் கொண்டே கூறினாள்.
'நான் மயக்கவுமில்லே, இழுக்கவுமில்லே. என்னுடைய சம்பளத்துக்குத் தக்கமாதிரி நீங்க என்ன சொல்கிறீங்களோ அதன்படி செய்கிறேன்' என்று ஆனந்தி அதே புன்னகையோடு சொன்னாள்.
றோஸி தன் தீர்மானத்தைப் பிரேரித்தாள். 'ஆனந்தியின் நிலைமை நம் எல்லாருக்கும் தெரியும். நம்மைப் போலத்தான் அவளும். நம்ம பட்ஜட்டைப் போலவே அவளுடைய பட்ஜட்டும் பற்றாக்குறையாக இருக்கும். ஆதலால், டீயோடு மட்டும் நிறுத்திக் கொள்வோம்.'
'நான் ஆமோதிக்கிறேன்' டேவிட் கையை உயர்த்தினான். 'ஒல் ரைட்" ஐமீலும் கையை உயர்த்தினான். 'எதிர்க்கிறவங்க கையை உயர்த்த வேணாம்' என்றும் சொன்னான்.
ஆனால் எல்லோரும் கையை உயர்த்தினார்கள். ராசம்மா ஆனந்தியின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு "பயந்து போனியா? நாங்க சும்மா திட்டம் போட்டு மிரட்டிப் பார்த்தோம். இது லஞ்ச் டைம். டீ குடிக்கிறவங்கள் கூட குறைவாய்த்தான் இருப்பாங்கள்' என்று கூறியவள் 'டீ குடிக்க விரும்புகிறவங்களெல்லாம் குடிக்கலாம்' என்றும் சொல்லி வைத்தாள்.
எல்லாரும் லேசாய்ச்சிரித்துக் கொண்டே கலைந்து மதிய உணவிலும் தமது சம்பளம் -பட்ஜட்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். ராசம்மாவும் கூடவே சென்றாள். ஆனந்தி மட்டும் இருந்தாள்.
பார்ட்டிக்கு ஆனந்தி விரும்பினாலும் தனக்குள்ள பணமுடையை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள், வீட்டுத் தேவைக்கே இந்த ரூபாய் போதாது. அதிலும் ஐம்பது அறுபது போனால்.
இப்போது அந்தப் பயம் தீர்ந்து விட்டது. அவளையும் அறியாமல் அவளுடைய கண்கள் பனித்தன.
இவர்களின் அன்பு எப்படிப்பட்டது? இவர்கள் என்னிடம் எவ்வளவுதூரம் கருணையாக நடந்து கொள்கிறார்கள்!.
97 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 54
ஆனந்தி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
டேவிட் ஆனந்திக்கும் சேர்த்து இரண்டு பிளேட் சோறு எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் அமர்ந்தான். s
"சாப்பிடுங்க. ' ஒரு பிளேட்டை அவள் பக்கம் நகர்த்தினான்.
ஆனந்தி அதை விருப்போடு சாப்பிடத் தொடங்கினாள். 'நியாயப்படி பார்த்தால் இன்றைக்கு நான்தான் ஏதாவது வாங்கித் தந்திருக்க வேணும். ஆனா நீங்கள் வாங்கித் தந்திருக்கிறீங்களே?' என்று கேட்டாள்.
"பரவாயில்லே இன்றைக்கு எனக்கும் சம்பளம் தானே?' என்று அவனும் சாப்பிடத் தொடங்கினான்.
சில நிமிடங்கள் மெளனமாயிருந்து விட்டு 'இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறீங்கள்?' என்று கேட்டான் டேவிட்.
'பிரச்சினைதான்."
'சம்பளம் - கூலி இதுதான்நம்ம சமுதாயத்தின் பொருளாதார அடிப்படை.
இந்த ஏற்பாடு இருக்கிறவரை சமாளிக்க முடியாமே திணறுகிறதும் ஒழியாது."
ஆனந்தி விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். "நீங்கள் சொல்கிறது விளங்கேல்லியே.?' என்று அவளுடைய விழிகள் கேட்டன.
'அதாவது, நம்ம உழைப்பை விற்கிறோம். விலைக்குப் பெயர் சம்பளம் கூலி. விலை என்று வருகிற போது வியாபாரமாகிறது. வியாபாரத்தில் இரண்டுதான் உண்டு. ஒன்று லாபம். ஒன்று நஷ்டம், லாபம் உழைப்பை வாங்குகிறவர்களுக்கு நஷ்டம் விற்கிறவர்களுக்கு நஷ்டம் நம்மைப் பாதிச்சு வறுமையையும் கஷ்டத்தையும் கொண்டு வந்துவிட்டது. நம்ம நிலைமைக்கு இதுதான் காரணம்."
'நம்ம உழைப்பை விற்காமல் எப்படி சீவிக்கிறது?"
'நாம் வாழத்தான் உழைக்கிறோம். அந்த உழைப்பு நம்ம வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற வேணும். நம்ம உழைப்பை சமுதாயம் பூரணமாகப் பெற்றுக் கொண்டு நம்முடைய தேவைக்கு வேண்டியதைக் கொடுக்கிற நிலை வந்தால், இந்த விற்கிற வாங்கிற பிரச்சினையும் இருக்காது. போதாத சம்பளத்தை வைத்துக் கொண்டு கடனுக்குள் புதைந்து திணற வேண்டியு மிருக்காது.'
ஆனந்திசாப்பிடுவதை நிறுத்திவிட்டு டேவிட்டை வியப்போடு பார்த்தாள். 'நீங்க பேசுகிறது புதுமையாய் இருக்குதே. இப்படி ஒரு நிலைமை இருந்தா உண்மையிலேயே எவ்வளவு சந்தோசமாய் இருக்கும். ஆனா இந்த நிலைமை வருமா?"
சுபைர் இளங்கீரன் 98

'நிச்சயம் வரும். அதிருக்கட்டும். ஒலிம்பியாவிலே த ட்ரெயின்’ என்ற படம் ஓடுது. நானும் றோஸியும் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். உங்களையும் கூட்டிப் போறதாய் தீர்மானம்.'
'மன்னிக்க வேணும். நான் வரேல்லே!" 'அருமையான படம். நீங்கள் கட்டாயம் பார்க்க வேணும்." டேவிட் சொல்லி முடிப்பதற்குள் றோஸி அங்கு வந்தாள். 'லஞ்ச் இண்டவல் முடியப் போகுது, நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீங்களே?"
'இன்றைக்கு நம்ம புரோகிறாமைச் சொல்லிக் கொண்டிருந்தேன்." கூறிக் கொண்டே டேவிட் எழுந்தான். ஆனந்தியும் கூட எழுந்தாள்.
'ஆனந்தி நீ என்ன சொல்கிறாய்?" 'தயவு செய்து என்னை விட்டுவிடு. வீட்டு வேலை இருக்குது.'
'முடியாது. வீட்டில் எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். இந்தச் சாட்டையெல்லாம் விட்டுப் போட்டுநீகட்டாயம் வரத்தான் வேணும்."
பேசிக் கொண்டே கன்டீனை விட்டு நடந்தார்கள்.
* * * # *
படத்துக்குப் போவதைத் தவிர்த்துக் கொள்ள ஆனந்தி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் டேவிட்டும் றோஸியும் விடவில்லை. ஒரே பிடியாய் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்.
வழியில் டேவிட் சொன்னான். 'றோஸி, உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். கார்கில்ஸில் வேலை. என்ன சொல்கிறாய்?"
ஆனந்தியின் இதயத்தில் ஏதோ ஒன்று திடீரென்று விழுந்தது போலிருந்தது. ஆவலும் வியப்பும் ஓங்க டேவிட்டைப் பார்த்தாள்.
அப்ப றோஸிக்கு டேவிட் இல்லையா?. 'கல்யாணத்தைப் பற்றி யோசிக்க எனக்கு நேரமில்லே' என்றாள் றோஸி. 'அதெல்லாம் சொல்ல முடியாது. அவன் என் ஃபிரண்ட், நல்லவன். உனக்குப் பொருத்தமான ஜோடி.'
அப்ப இவர்கள் ஜோடி இல்லையா..? இவர்களின் ஜோடிக்கு என்ன அர்த்தம்?.
ஆனந்தியின் மனதில் பரபரப்பும் அவளை அறியாத நெகிழ்ச்சியும் ஏற்பட்டன.
றோஸி சொன்னாள்: "எனக்கு கல்யாணம் வேணும்தான் என்று தீர்மானிக் கிற போது நீ யாரைச் சொல்றியோ அந்த ஆளைக் கண்ணை மூடிக் கொண்டு
90 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 55
செய்வேன், அதுவரைக்கும் சும்மா இரு.'
'நீ எப்ப தீர்மானிக்கப் போகிறாய்?" "முதலில் உனக்குக் கல்யாணம் ஆகட்டும். உனக்கு ஒரு நல்ல பெண்ணா ய்க் கிடைக்க வேணும்- ஆனந்தியைப் போல.'
சிரித்துக் கொண்டே சொன்ன றோளமி, ஆனந்தியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள். டேவிட் ஆனந்தியைப் புன்னகையுடன் பார்த்தான்.
ஆனந்தியின் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. அதேசமயம் ஒரே திகைப்பாயும் குழப்பமாயும் இருந்தது.
இவர்கள் கதைப்பதைப் பார்த்தால் மனேஜர் சொன்னது, நான் நினைத்தது எல்லாமே வெறும் கற்பனையா. உண்மையிலேயே இவர்களுக்குள் ஒன்னுமில்லையா..?
தியேட்டருக்கு வந்து விட்டார்கள். டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே போய் அமர்ந்ததும் 'ஏன் பேசாமல் இருக்கிறாய்? வீட்டு நினைவா?' என்று கேட்டாள் றோஸி.
'இல்லே உங்கள் இரண்டு பேரையும் நினைத்துக் கொண்டிருந்தேன்." 'நினைத்ததைச் சொல்லேன்?" 'சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டியே?" 'இல்லே சொல்லு' "உனக்கும் இவருக்கும் வேறொரு மாப்பிள்ளையும் பெண்ணும் எதுக்கு? நீங்களே ஜோடியாக இருக்கிறீங்களே என்று நினைத்தேன். '
றோஸி மெல்லச் சிரித்து விட்டு டேவிட்டைப் பார்த்தாள். 'ஆனந்தி நினைக்கிற விதத்தைப் பார்த்தியா?"
அவன் புன்னகையுடன் ஆனந்தியின் பக்கம் திரும்பி "நாங்கள் ஜோடி போலத் தெரிந்தாலும், நீங்கள் நினைக்கிற மாதிரி ஜோடி இல் லே. அந்த உணர்விலே நாங்கள் பழகேல்லே. றோஸி எனக்குச் சகோதரி போல. அவளுக்கும் அப்படித்தான் நான் ஓர் அண்ணன்' சொல்லிவிட்டு சிகரட்டைப் பற்றினான்.
ஆனந்திக்கு மனமெல்லாம் குளிர்ந்தது போல் இருந்தது. அவளை
அறியாமலே உள்ளுக்குள் ஒரு ஆனந்தம் கிளு கிளுத்தது. அதை இழக்க . விரும்பாதவள் போல அதில் மிதந்தாள்.
விளக்கும் அணைந்து, முன்திரை விலகியது. வெண் திரையில் விளம் பரங்கள் விழுந்தது.
சுபைர் இளங்கீரன் 100

ஆனந்தியின் பார்வை திரையில் தைத்தது. ஆனால் மனமோ எத்தனையோ விதமான கற்பனைகளைப் பின்னிக் கொண்டிருந்தன. படம் தொடங்கிய பின்புதான் அந்தக் கற்பனைகள் நின்றன. கவனம் திரையில் ஓடிய கதையில் லயித்தது.
படம் இரண்டாவது உலக யுத்தத்தின் போது நடந்த கதை. ஹிட்லரின் நாஜிப்படைகள் பிரான்ஸைக் கைப்பற்றி, மிகவும் கொடூரமான இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் -மிகவும் பயங்கரமான அடக்குமுறையினால் மக்களை நசுக்கி வைத்திருந்த காலம்.
நாஜித்தளபதி ஒருவன் பிரான்ஸின் 'விலை மதிக்க முடியாத ஒவியங்களை -கலைப் பொக்கிஷங்களை' கலைக்கூடத்திலிருந்து அகற்றித் தன் நாட்டுக்கு கொண்டு செல்லத் தீர்மானித்தான். பிரெஞ்சு மக்களுக்குத் தமது ஆத்மா வையே கழற்றிக் கொண்டு போவது போலிருந்தது.
இதை எப்படித் தடுக்கிறது? நாஜி வெறியர்களின் இயந்திரத் துப்பாக்கி களும் பீரங்கிகளும் சும்மா இருக்குமா?
'கலைப் பொக்கிஷங்களை' ஏற்றிக் கொண்டு ஒரு ஸ்பெஷல் ரயில் புறப்படத் தயாராகிறது. நாஜித் தளபதியே தன் நேரடியான பொறுப்பில் ரயிலைக் கொண்டு செல்கிறான்.
ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே என்ஜினியரிலிருந்து ரயில் வேத் தொழி லாளர் வரை - பிரெஞ்சு மக்கள் அனைவரும் ரயிலைப் போக விடாது தடுத் தேயாக வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். தீர்மானத்தை செயலாக்கினார்கள்.
அவர்கள் அதைச் செயலாக்கும் விதம், கையாளும் உபாயங்கள், நாஜி இராணுவ வெறியர்களின் துப்பாக்கிக்கும், பீரங்கிக்கும் அஞ்சாது அவர்கள் காட்டும் தீரம், தமது உயிர்களைக் கூட் அர்ப்பணிக்கும் மகத்தான தியாகம், சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து இதில் பங்கெடுக்கும் ஆர்வம், மக்களின் ஒத்துழைப்பு - இத்தனையும் ஆனந்தியை மெய்சிலிர்க்கச் செய்தன. பிரமிக்க வைத்தன. எத்தனையோ நெருக்கடிகளும் அபாயங்களும் எதிர்கொள்ளும் போது சிறிதும் கலங்காமல் காட்டிடும் உறுதி அவளைப் பெரிதும் கவர்ந்தது. இறுதியில் ரயிலைத் தடுத்தே விட்டார்கள். நிலைகுலையாத உறுதியோடு அவர்கள் நடத்திய வீரஞ் செறிந்த போராட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியடைந்த நாஜித் தளபதி தற்கொலை செய்து கொள்கிறான். அவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்து விட்டார்கள். ஆனந்திக்குத் தானே வெற்றியடைந்தது போன்ற உணர்வு உண்டாயிற்று.
படம் முடிந்து வரும் போது 'படம் எப்படி?' என்று அபிப்பிராயம் கேட்டான் டேவிட்.
101 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 56
"நீங்கள் சொன்னது போல் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். உங்க ளோடு வந்ததில் பல விஷயங்கள் தெளிவாகி விட்டுது' என்று அர்த்தத்தோடு சொன்னாள்.
அவர்கள் பஸ் ஏறிச் சென்றதும், ஆனந்தியும் புதிய உற்சாகத் தோடு வீட்டுக்கு வந்தாள்.
அன்றிரவு அவளுக்கு நித்திரையே வரவில்லை. டேவிட்டும் றோஸியும் காதலர்கள் அல்ல என்று தெரிந்ததும் செத்துப் போன உணர்ச்சிகள் உயிர் பெற்றெழுந்தன. பழைய எண்ணங்கள், இனிய கனவுகள் இதயப் பூங்காவில் பூத்து நின்ற ஆசைகள் அத்தனையையும் மனதின் ஒரு மூலையில் மூட்டை கட்டிப் போட்டிருந்த ஆனந்தி, தன்னையும் மீறி அந்த மூட்டையைத் திறந்து பார்ப்பதில் ஆர்வத்தோடு முனைந்தாள்.
நித்திரை எப்படி வரும்?
* * * * *
மறுநாள் தெஹிவலைக்குச் சென்றாள் ஆனந்தி. அவள் போன சமயம், சுபத்திரா வெளியே புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
"எங்கே பயணம்?' ஆனந்தி கேட்டாள்.
'உன்னைப் பார்க்கத்தான் வெளிக்கிட்டேன். நேற்று உன் வீட்டுக்கு வந்து எட்டு மணி வரை காத்திருந்தேன். உன்னைக் காணேல்லே.'
'வசந்தி சொன்னாள், அதுதான் ஒஃபிஸ் விட்டதும் வீட்டுக்குக் கூடப் போகாமல் நேரே இங்கு வாறேன்.
'நேற்று எங்கு போயிருந்தாய்?"
"படத்துக்கு'
"என்னடி அதிசயம்! நானல்லவா உன்னை வற்புறுத்திச் சில சமயங்களில் கூட்டிக் கொண்டு போவேன்? நீயாகப் போக மாட்டியே.?'
'நேற்றும் அப்படித்தான். நானாகப் போகேல்லே' என்று கூறிய ஆனந்தி, சம்பளம் கிடைத்தது, பார்ட்டி விஷயம், டேவிட்டும் றோஸியும் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனது எல்லாவற்றையும் கூறினாள்.
'சரிதான். நீ செய்ய வேண்டியதை அவர்கள் செய்தார்களாக்கும்?"
ஓரிரு வினாடிகள் மெளனமாயிருந்து விட்டு சொன்னாள். அம்மாவைப் பார்த்து எத்தனையோ நாளாச்சுது. அவவோடும் கதைக்க வேணும். உனக்கும் சில விஷயங்கள் சொல்ல வேணும்' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து அம்மா வந்துவிட்டாள்.
சுபைர் இளங்கீரன் 102

'ஆனந்தி, சுகமா..? உனக்கு வேலை வந்ததிலிருந்து இந்தப்பக்கமே வரேல்லியே..! உன்னைப் பார்க்க வேணும் என்கிற ஆசையாலே கண்களும் பூத்துப் போச்சுது. உன்னைக் கூட்டி வரும்படி சுபத்திராவிடம் ஆயிரம் முறை சொல்லிப் போட்டன். அவவுக்கு நான் சொல்கிறதிலே என்னதான் அக்கறை இருக்குது' சொல்லிவிட்டு இருந்தாள்.
"எனக்கும் தாகமாய்த்தான் இருந்தது மாமி. உங்களையும் பார்க்க வேணும் என்றுதான் இப்ப வந்தேன். நீங்கள் நல்லாய்ப் பழுதாய்ப் போய்ட்டீங்களே?" 'இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து மனசு அடியோடு சரியில்லே. எங்க வீட்டிலே எல்லாம் கொஞ்சம் வசதியாய் இருந்தது. காலம் காலமாய் அங்கே இருந்து பழகிப் போட்டு இங்கே இருக்கிறது என்னவோ போலிருக்குது. சுபத்திராவும் ஸ்கூலுக்குப் போன பிறகு தன்னந்தனிய குரங்குமாதிரி குந்திக் கொண்டிருக்க வேண்டியிருக்குது. சமயத்துக்கு உதவி ஒத்தாசை என்று பக்கத்திலே யாருமில்லே. இந்தவீட்டுக்காரர்கள் நம்ம தமிழ் ஆட்கள் தான். இருந்தும் அண்டிப் பழகிறதில்லே. வாடகையை வாங்கிறதோடு சரி. உத்தி யோகச் செருக்கு. தாங்கள் உசந்த ஆட்கள் என்கிற எண்ணம். மற்றவையோடு பழகலாம் பேசலாம் என்றால் வீடுகள் தள்ளித் தள்ளி இருக்குது. அவர்களும் எந்த மாதிரியான மனுஷரோ. கம்பனித் தெரு வென்றால் அப்படியா? படிதாண்டினாசனம். இரண்டு பக்கத்திலும் சுவரோடு சுவராய் வீடுகள். பழகிய அயல். அதுவும் நம்மைப் போலச் சனங்கள். உதவி ஒத்தாசைக்கென்று எந்த நேரத்திலும் ஓடி வருவாங்கள். உங்கவீடும் கிட்ட நீயும் நினைக்கிற போதெல் லாம் வந்து போவாய். இதையெல்லாம் நினைச்சுத்தான் அரைவாசி பழுதாப் போனன். '
அம்மா மனதில் உழன்று கொண்டிருந்ததையெல்லாம் கொட்டிக் கொண் டிருந்தாள். s
சுபத்திரா இடையில் குறுக்கிட்டாள். 'இது மாத்திரமல்ல ஆனந்தி, அக்காவை நினைச்சும் மற்ற அரைவாசி பழுதாய்ப் போனா.'
"மெய்தான், நான் மறுக்கேல்லே. நம்மவிதி இப்படியாய்ப் போட்டுது' ஆனந்தி சொன்னாள். 'நான் கூட நினைக்கிறதுண்டு, சந்திராவையும் வீட்டையும் விட்டுட்டு எப்படி இருக்கிறீங்கள் என்று. எனக்கு உங்களை நினைச்சுப் பெரிய கவலை."
'நம்ம விதி இப்படித்தான் என்று இருந்தா, அதை அனுபவிக்கத்தானே வேணும்?"
அம்மாவின் இந்த விதிப் பல்லவி சுபத்திராவுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
'மனித சக்திக்குப் புறம்பாக விதி என்று ஒன்னு இருந்து கொண்டு அது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கேல்லே, சமுதாய நிலைமை தான் அதை நிர்ணயிக்கிறது என்று அம்மாவுக்குச் சொல்ல வேணும். ஆனால்
103 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 57
அம்மாவுக்கு இது விளங்காதே." என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சுபத்திரா இப்படிச் சொல்லிக் கொண்டதை தெரிந்து கொள்ளாத அம்மா ஆனந்திக்குச் சொன்னாள் என்ர புலம்பல் இருக்கட்டும். உன்பாடு என்ன மாதிரிப் போகுது? வேலையில் சேர்ந்ததாலே கொஞ்சம் ஆறுதலா இருக்கும் இல்லையா? ஆனா கிழவனின் தொல்லைதான் உனக்குப் பெரும் கரைச்சலாய் இருக்கும்.'
"அவருக்கு கொஞ்ச நாளாய் சுகமில்லே. ஆஸ்பத்திரியும் வீடுமாய்த் திரிகிறார். அதனாலே கரைச்சல் கொஞ்சம் குறைவு. எங்களுக்கு அவர் மேலே ஆத்திரமும் வெறுப்பும் இருந்தாலும் அவர் வருத்தமாய்க் கிடக்கிறதைப் பார்க்கிற போது மனசு கேட்க மாட்டேங்குது.'
'கதைத்துக் கொண்டிருக்கிறியே அம்மா. நானும் காத்துக் கொண்டிருக் கிறேன். ஆனந்தி வந்தும் வெகுநேரம், டீயைக் கொண்டுவந்து தாவேன். நாங்கள் வெளியே போகவேனும்.'
'அடுப்பிலே தண்ணி கொதித்த படிதான் கிடக்குது. ஒரு நிமிஷத்திலே கொண்டு வாறன்' என்று சொல்லியபடியே கதிரையை விட்டு எழுந்தவள். "நீங்கள் போன பிறகு நான் தனியே இருந்து முழுசிக் கொண்டிருக்க வேணும்' என்று சொல்லியவாறே அடுப்படியை நோக்கி நடந்தாள்.
'அம்மாவைப் பார்க்க இரக்கமாய் இருக்குது. நாம் ஏன் வெளியே போக வேணும்? இங்கேயிருந்து பேசுவோம்.'
'அம்மாவைப் போல் எத்தனையோ அம்மாக்கள் இருக்கிறார்கள் இரக்கப்பட. அதைவிடு, கும்பனித்தெருவையும் தெஹிவலையையும் பற்றி அம்மாவின் விமர்சனத்தைப் பார்த்தியா? இரண்டு இடத்தைப் பற்றியும் இரண்டு இடத்திலேயும் இருக்கிற மனுஷ ரைப் பற்றியும் எவ்வளவு விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லிப்போட்டா'
அம்மா டீ கொண்டு வந்தாள். அதை இருவருக்கும் கொடுத்துவிட்டு 'நீங்க ரெண்டு பேரும் ஏதும் கதைக்கிறதாய் இருந்தா இங்கேயிருந்து கதையுங்கள். நீங்க வெளியே போகவேணாம். நான் குறுக்கே வராமே இருக்கிறன் என்று கெஞ்சுவது போல் கூறினாள். பிறகு 'ஆனந்தி நீ இங்கே நின்று இரவைக்குச் சாப்பிட்டு விட்டுப் போ. நான் உனக்கும் சேர்த்துச் சமைக்கிறதாய் இருந்தால் எனக்கும் பொழுது போனது போலிருக்கும்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கூடையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். 'நான் மார்க்கட் பக்கம் போய்ட்டு வாறன்.' 'றால் வாங்கி வாருங்க மாமி. உங்கள் றால் குழம்பு சாப்பிட்டு எத்தனையோ நாள்.'
சுபைர் இளங்கீரன் 104

'உன் வாய்க்கு ருசியாய் செய்து தாறன். சுபத்திராவுக்கும் றால் குழம்பு என்றால் போதும்.'
அம்மா வாசலைத் தாண்டினாள்.
'எனக்குப் பல விஷயங்கள் சொல்ல வேணும் என்றாயே, சொல்லேன்?" என்று கூறிக் கொண்டே உடைகளைக் களைந்து மாற்றினாள்.
* 菁 # * *
ஆனந்திக்கும் சுபத்திராவுக்குமிடையில் ரகசியம் இருந்ததேயில்லை. எதையும் மனசில் மறைத்து வைக்காமல் பேசித் தீர்த்து விடுவார்கள். ஆனால் டேவிட் சம்பந்தமாய் தன் மனதுக்குள் இருந்ததை ஆனந்தி ஆரம்பத்தில் கூறவில்லை. ஓர் ஆடவனைப் பற்றிய இந்த உணர்வு அவளுக்குப் புது அனுபவம். அதனால் எழுந்த இனந் தெரியாத ஒரு கூச்சமும், அவளையும் அறியாத ஒரு தயக்கமும் நாவுக்குத் தடைபோட்டு விட்டன. அதேசமயத்தில் தன்னைப் பொறுத்தவரை மனதில் எழுந்தவையெல்லாம் அர்த்தமற்றவை, இதைச் சுபத்திராவுக்குச் சொல்லித்தான் என்ன பிரயோசனம், டேவிட்டைப் பற்றிய எண்ணங்களையே மறைக்க விரும்பும் தான் அவற்றை அவளுக்குத் தெரிவிப்பதன் மூலம் மீண்டும் ஏன் நினைவுக்குத் தூண்ட வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் டேவிட்டும் றோஸியும் காதலர்கள் அல்ல என்று தெரிந்ததிலிருந்து அவளால் அடக்கிக் கொள்ளமுடியவில்லை. மனக்குதிரை கடிவாளம் இல்லாமல் அங்குமிங்கும் ஒடித்திரிந்தது. தான் அதைப்பிடித்துக் கட்டி வைக்க முடியாவிட்டாலும், சுபத்திரா அதைச் செய்வாள், அவளுக்குச் சொல்லவே வேண்டும் என்று பிறகு முடிவுக்கு வந்தாள்.
திரும்பவும் வெட்கம் வந்துவிட்டது. சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
"என்ன கடுமையான யோசனை?"
'மனசிலே இப்ப ஒருகூத்து நடக்குது. உனக்கு அதைச் சொல்ல வேணும் என்று துடிப்பாயிருக்குது. சொல்ல வெட்கமாயும் இருக்குது. நீ சும்மா விடமாட்டாய். அதுதான் யோசிக்கிறேன். ஆனாநான் சொல்லுகிறதை பெரிசா நினைக்கர்மே அப்படியே விட்டுவிட வேணும்.
"என்னடி இது, அஸ்திவாரம் பலமாயிருக்குதே.! உன் இதய அரங்கிலே அப்படி என்னதான் கூத்து நடக்குது? வாயிலிருக்கிற திரையைத் திறந்து காட்டேன். நானும் பார்த்துக் கொஞ்சம் ரசிக்கிறேன். வெட்கப்படாமே சொல்லு. நான் பெரிசா எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறேன்' என்று கூறியவாறே கட்டிலில் சாய்ந்தபடி ஆனந்தியை ஆவலோடு பார்த்தாள்.
105 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 58
ஆனந்தி கூறத் தொடங்கினாள். '
டேவிட்டை முதன்முதலில் பார்த்ததிலிருந்து இப்போது இந்த நிமிஷம் வரை மனதில் எழுந்த எண்ணங்களை, உணர்ச்சிகளை, கற்பனைகளை எல்லாம் விவரித்துக் கொண்டே போனாள். போகப் போகத் தன்னையு மறியாமல் ஒரு லயிப்பில் மூழ்கியவளாய் - சித்திரமான ஒரு கனவில் சொக்கிய வளாய் சொல்லிக் கொண்டே போனாள். மனதில் ஒரு குளுகுளுப்பும் ஒரு ஆனந்தமும் ததும்பி நிற்க முகம் சிவந்து வியர்க்க, தன்னையும் மறந்து ஒரு மோகனமான உணர்வில் மயங்கியவளாய் கூறிக்கொண்டே போனாள்.
ஆனந்தியின் மீது வைத்த விழியை வாங்காது மனம் சிலுசிலுக்க கேட்டுக் கொண்டிருந்தாள் சுபத்திரா.
'இதுதான் இப்பு மனசில் நடக்கிற கூத்து'இவ்வாறு கடைசியாகச் சொல்லி நிறுத்தியவள் சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டு மேலும் சொன்னாள்: 'மிச்சம் எதையும் மனதில் வைக்காமல் திறந்து கொட்டி விட்டேன். நீ என்ன நினைப்பாயோ. என்னைப் பகிடிதான் பண்ணுவாயே.. டேவிட்டுக்கும் றோஸிக்கும் காதல் இல்லை தான். அதேசமயம் என்மேலே அந்த மாதிரி ஓர் எண்ணம் அவருக்கு இருக்குது என்று எப்படிக் கருதமுடியும்? இதையெல்லாம் டேவிட்டுக்குச் சொன்னால் அவர் என்ன நினைப்பாரோ. தவறாகவும் நினைக்கலாம். அப்படி நினைக்காவிட்டாலும் நான் ஏன் அவருக்குச் சொல்ல வேணும், சொல்லித்தான் என்ன பிரயோசனம் ? என் நிலைமையிலே அவரைப்பற்றி நினைக்கிறதே தப்பு என்று சொல்லிவிட்டேனோ. என்னை அடக்கிக் கொள்ள வேணும். ஆனா அடக்கிக் கொள்ளவும் முடியேல்லே. பெண் மனசைப் பற்றி எது எதுவோ சொல்லுவாங்க. அந்தப் பெண் மனசு எப்படிப்பட்டது என்கிறது இப்பத்தான் புரியுது. இப்படியெல்லாம் ஏன் அங்கலாய்க்க வேணும் என்றும் எனக்குத் தெரியேல்லே. சும்மா கிட என்று மனசை ஒரு தட்டுத் தட்டி இருக்க வைக்கவும் எனக்கு வலிமை இல்லே. '
'ஏன் நிறுத்தி விட்டாய்?. நீ சொல்லச் சொல்ல நான் கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்லுது. விஷயம் ரசமானது. உன்னைப் பற்றி சொல்கிறதுக்கு ஒரு பாணி வைத்திருக்கிறியே அதுவும் எனக்கு ரசமாய் இருக்குது, சொல்லு"
'போடி நீ பகிடி பண்ணுகிறாய்? எனக்கு இதுக்கு மேலே சொல்லத் தெரிய்ேல்லே'-ஆனந்தி நிறுத்திக் கொண்டாள்.
அவளையும் அவள் சொன்னதையும் ரசித்துக் கொண்டிருந்த சுபத்திரா மெல்லச் சிரித்தாள்.
'என்னடி சிரிக்கிறாய்?'
'அழவேணும். ஆனால் சிரிக்கிறேன்.'
'புதிர் போடாமச் சொல்லு.'
சுபைர் இளங்கீரன் 106

'எனக்குத்தான் இப்ப ஆபத்து வந்திருக்குது'
'ஆபத்தா?'
'ஓம். இத்தனை நாள் உன் இதயத்திலே நான் மட்டும்தான் இருந்தேன். இப்ப டேவிட் வந்து என்னைத் துரத்தி விட்டார். அப்ப அழத்தானே வேண்டும்" என்றாள் சிரித்துக் கொண்டே
'இந்த மாதிரித்தான் எதையாவது சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். ஆனா நான் டேவிட்டைத் துரத்தியே ஆகவேணும். இதுக்கு என்ன வழி? அதைச் சொல்லு'
'வழி இருக்கட்டும். நீ என்னைவிட அதிர்ஷ்டசாலியடி’
'எனக்கு அதுதான் சுற்றிக் கொண்டிருக்குதாக்கும். எனக்கு அதிர்ஷ்டமும் ஒரு கேடுதான். அதுசரி உனக்குத்தான் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லையே. அதை ஏன் இப்ப இழுக்கிறாய்?"
'உனக்காகச் சொன்னேன். அதுக்குள்ளே ஏன் சலித்துக் கொள்கிறாய் என்று கேட்ட சுபத்திரா "என் மனசிலும் இப்படி ஒரு கூத்து நடக்க எனக்கு ஒரு ட்ேவிட் இல்லையே." என்றாள்.
'ஏன், உன் சிநேகிதர் நவரட்ணம் இருக்கிறாரே..?"
சுபத்திரா கலகல எனச் சிரித்தாள். 'எனக்கு விருப்பம்தான். ஆனா அவ ருக்கு டேவிட்டைப் போல பளபளக்கும் கண்களும், மயக்கும் புன்னகையும், மற்றவரை வசீகரிக்கும் தன்மையும் இல்லையே. நான் என்னடி செய் கிறது. ?"
'போடி, உனக்கு ஒரே பகிடிதான். இதுக்காகத்தான் உனக்குச் சொல்லத் தயங்கினேன். '
"சும்மா பகிடி பகிடி என்று சொல்லித் தொலைக்காதே' என்று எரிச்சல் படுவது போல் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு மேலே பார்த்த வண்ணம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் முகத்தைத் திருப்பாமலே சொன்னாள்: 'நீ உன் மனசில் உள்ளதைக்கூறும் போது உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன் ஆனந்தி. சொன்ன விஷயமும் அதைக்கூறிய விதமும் ரசமாயிருந்தது ஒருபுறமிருக்க உன்னுடைய முகமும் கண்ணும் எப்படி இருந்தது தெரியுமா? மனிதன் பலரகமான உணர்ச்சிகளைக் கொண்ட விசித்திரமான ஒரு கலவை. ஒவ்வொரு உணர்ச்சியும் அவனை ஆளுகிற போது அவனுடைய சொல்லும் செயலும் அவனுடைய மனோநிலை யைப் பிரதிபலித்துக் காட்டும் என்கிறது உன் விஷயத்திலே கூடத் தெளிவாய்த் தெரியுது. நீஇதைக் கூறிய போது உன்முகத்திலே இருந்த பாவம், கண்ணிலே தேங்கியிருந்த உணர்ச்சி எல்லாமே, இதுவரை நீ அனுமதித்திருக்காத ஒரு புதிய இன்பத்தை, மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய் என்று பளிச்செனக்
107 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 59
காட்டியது. எனக்கும் ஒரு டேவிட் இல்லாததால் இந்த அனுபவம் எனக்கும் இல்லையே என்று பொறாமையாகவும் இருக்குது' என்று கூறிவிட்டு முகத் தைச் சரேலென்று திருப்பி ஆனந்தியைப் பார்த்து இளநகை பூத்தாள்.
"நான் இதை உனக்குச் சொல்லியிருக்கவே படாது' என்று முகத்தைச் சுளித்தாள் ஆனந்தி.
'சொன்னதாலே உனக்கு இப்ப என்ன நஷ்டம் வந்துட்டுதாம்?" 'என் மன அலட்டலுக்கு உன்னிடம் ஒரு யோசனை கேட்க வந்தால் நீ எதை எதையோ பேசி என் மடத்தனத்தைப் பகிடி பண்ணுகிறியே. தப்பு, குத்திக் காட்டுகிறியே' என்று சிணுங்கினாள் ஆனந்தி.
'நான் குத்தவுமில்லை, நீ ஒன்னும் மடத்தனமாய் எண்ணவுமில்லே. இதுக்கு நான் என்ன யோசனை சொல்கிறது? இது சின்ன விஷயமா. பெரிய விஷயம். திடீரென்று யோசனை சொல்ல முடியுமா?"
"பெரிசாய் எடுத்துக் கொள்ளாதே என்றேனே, அதுக்காகத்தான் இப்படிச் சொல்கிறாயாக்கும். இதுவும் பகிடிதானே. பகிடி என்று சொன்னால்தான் உனக்குக் கோபம் வருகுதே.
'என் கோபம்தான் உனக்கு ஐஸ்கிரீமாச்சே, இது கிடக்கட்டும். பெரிசாய் எடுக்காமே விட்டுவிடு என்று நீதானே சொன்னாய்? திரும்ப எதுக்கு வழியும் யோசனையும்? நீயும் இதைப் பெரிசாய் நினைக்காம விட்டுவிடு'
'உன்னிடம் வந்து யோசனை கேட்டேனே. என்புத்திக்குச் சொல்ல வேணும்' என்று இன்னொரு தடவையும் சிணுங்கினாள் ஆனந்தி.
'அப்ப விட்டுவிட மனமில்லையா? சரி, அதிலேயே மிதந்து கொண்டிரு' 'இந்தா நீ ஒன்னும் சொல்லவேணாம். பேசாமல் இரு. இது சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர எனக்குத் தெரியும்' என்று சொல்லிவிட்டு 'மாமி சமையல் முடிஞ்சுதா?' என்று கேட்டுக் கொண்டே அடுப்படிப்பக்கம் போனாள் ஆனந்தி.
இவ்வளவு நேரமும் அவளைப் பகிடி பண்ணி ரசித்துக் கொண்டிருந்த சுபத்திரா சிந்தனையில் மூழ்கினாள்.
ஆனந்திக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் இதுவரை அவளுக்கு ஏற்படவே இல்லை. பருவம் காரணமாக சில சமயங்களில் எழுச்சியும் உணர்ச்சியும் கிளுகிளுக்கும் பல எண்ணங்களும் வண்ணம் வண்ணமாகப் பின்னிக் கொண்டு எழும். ஆனால் எந்த ஆடவனிடமும் அவள் மனம் வசப்பட்ட தில்லை. அதற்காக அவள் விசாரப்பட்டதுமில்லை. இப்போது ஆனந்தியின் அனுபவத்தைக் கேட்டதும் சுபத்திராவுக்கே உண்மையில் புதுமையாகவும், கிளர்ச்சி ஊட்டுவதாயிருந்த்து. இது போல தனக்கும் நிகழ்ந்தால் எப்படி
சுபைர் இளங்கீரன் 108

இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். ஏனோ அவளுக்கே சிரிப்பாய் இருந்தது. அதை விட்டுவிட்டு ஆனந்தியைப் பற்றித் திரும்பவும் சிந்தித்தாள். - டேவிட்டிடம் இவள் மனசைப் பறி கொடுத்து விட்டாள் என்று தெளிவாய்த் தெரியுது. அவள் தடுமாறுகிறாள். அவளுடைய நிலைமைக்கும் முளைவிட்டுள்ள காதலுக்குமிடையே மனதில் ஒரு போராட்டம் நடக்குது. ஆசை ஒருபக்கம், அந்த ஆசையை நிறைவேற்ற முடியாத குடும்ப நிலைமை ஒரு பக்கம். இதில் நான் எந்த யோசனையைச் சொல்லி அவளுடைய மனப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்? டேவிட்டையே மறந்து விடு என்று சொன்னாலும் அவளுக்குப் பாதகம் தான், மறக்காமல் கல்யாணம் வரை இழுத்துப்பிடி என்று சொன்னாலும் அவளுக்குப் பாதகம் தான். பாவம், ஆனந்திக்குத் தர்மசங்கடமான நிலைமை - ஏன் எனக்கும் தான். என்ன யோசனை சொல்கிறதென்று தெரியாம நானும் தர்மசங்கடமான நிலைமையில் தானே இருக்கிறேன்.
எத்தனையோ விஷயங்களுக்கு யோசனை சொல்கிறோம். வெட்டொன்று துண்டு இரண்டாக அபிப்பிராயமும் கூறி விடுகிறோம். ஆனால் சில விஷயங் களில் அப்படிச் சொல்ல முடிகிறதில்லே. இந்தக் காதல் விஷயமும் இப்படித் தானோ. எனக்கு அதில் அனுபவம் இருந்தாலாவது ஏதாவது கூறி வைக்க லாம். அந்த அனுபவம் தான் இல்லையே. சரிதான், ஆனந்திக்கு ஆலோ சனை சொல்கிறதுக்காக நானும் யாரையாவது காதலிக்க வேண்டும் போலிருக் குதே. அப்பதானே அனுபவம் கிடைக்கும். நல்ல வேடிக்கைதான். காதலிக்கிறதாவது அனுபவப் படுகிறதாவது.
- என்ன பைத்தியக்காரத்தனம்! ஆனந்தியைப் போல டேவிட்டும் இவள்மீது காதல் பொழிகிறான் என்ற மாதிரியல்லவா என் சிந்தனை ஓடுது...! அவனுக்கு அப்படி இல்லாவிட்டால் ஆனந்தியின் காதல் புறக்குடத்தில் ஊற்றிய தண்ணிதானே. ஆனா ஒன்னு, ஆனந்தி சொல்கிற மாதிரி டேவிட் டின் அந்த பளபளக்கும் கண்களும் மயக்கும் புன்னகையும் எந்தப் பெண்ணை யும் கவரத்தான் செய்யும் என்று வைத்துக் கொண்டாலும் என் ஆனந்தியும் என்ன குறைந்தவளா? அவளுடைய உருவமும் அமைப்பும் எவனையும் கவரக்கூடியதுதானே? டேவிட் அப்படிக் கவரப்பட்டால்.
ஆனந்தி அடுப்படிக்குள்ளிருந்து அறைக்குள் வந்தாள். 'அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறா. நானும் வந்து நேரமாச்து. போக வேணும். வசந்தி என்னைக் காணாம கவலைப்பட்டுக் கொண்டிருப்பா. நான் சொல்லிக் கொண்டு வரேல்லே. எழும்பு"
சுபத்திரா மணியைப் பார்த்தாள். 'மணி எட்டுத்தானே. எட்டு மணிக் குள்ளே உன் காதலெல்லாம் முடிஞ்சுதா?”
கோபம் வந்தவளைப் போல் சுபத்திராவைப் பார்த்தாள் ஆனந்தி. 'நீ
சும்மாய் இருக்கமாட்டாய்?"
109 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 60
"உன்னாலேயே இருக்க முடியேல்லியே, நான் எப்படி இருக்கிறது'நீதான் உன் காதலை என்னிடம் வந்து தள்ளிப் போட்டியே!”
ஆனந்தி சட்டென்று அறைக்குள்ளிருந்து திரும்பினாள். சுபத்திரா விறுக்கென்று எழுந்து அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு 'ஆனந்தி உனக்குக் கோபம் ஆகாதடி, மாதரசே, பிழையேது செய்தேன் சுகுணா ஆனந்தி உனக்குக் கோபம் ஆகாதடி. '' என்று அவளுடைய காதுக்குள் பாடினாள்.
ஆனந்தி சிரித்தாள். 'நீ சாப்பிட வாறியா? அல்லது நான் சாப்பிட்டு விட்டுப் போகட்டுமா..?' என்றாள்.
'ஒ.யெஸ்' என்று பிடித்த கையை விடாதபடி ஆனந்தியை இழுத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள் சுபத்திரா-சாப்பிட
110 சுபைர் இளங்கீரன்

ஏழாவது அத்தியாயம்
பத்திரா ஆலோசனை கூறாவிட்டாலும் டேவிட் சம்பந்த மாக தன் சிந்தையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆனந்தி தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் டேவிட்டைக் காணும் போதும் கதைக்கும் போதும் உள்ளம்
கிளர்ச்சியும், உணர்ச்சிகள் அலைபாயும்; மனம் கட்டறுந்து ஒடும். அதை எவ்வளவோ தடுக்க முயன்றாலும் தண்ணீருக்குள் அமுக்க மறுக்கும் பந்துபோல் உருண்டு கொண்டும் டேவிட்டிடம் இழுபட்டுக் கொண்டும் இருந்தது. இதை எண்ணி அவள் கிலேசப்பட்டாள். தன்னையும் மீறி ஏதாவது இசக்குப் பிசகாக நடந்து கொள்ள நேரிடுமோ என்று பயந்தாள். இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி தான் டேவிட்டைக் காணாமல் கூடியவரை தவிர்த்துக் கொள்ளுவதுதான் என்று அவளுக்குப்பட்டது. இது சாத்தியமோ இல்லையோ இதைச் செய்யவே வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். இதற்காக முன்பு இரண்டு தடவைகள் அழுததுபோல் அழவில்லை. பெண்கள் தமது காதலர்களை இழப்பது அவர்களின் தேக வலிமையை விட மனோ வலிமை குறைந்து இருப்பதால்தான் என்பது உண்மைதான். ஆனால் ஆனந்தி இப்போது தனக்குள் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் மன வலிமையால்தான் டேவிட்டை இழக்க முன்வந்தாள். எவ்வளவு எதிர்மறை
இந்த முடிவுக்கு வந்ததும் டேவிட்டோடு பழகுவதை கூடியவரை குறைத் துக் கொண்டும் அவனைக் காணும் சந்தர்ப்பங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொண்டும் வந்தாள். டேவிட் அவளுடன் பேசவந்தால் உரையாடலைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு போய் விடுவாள்.
111 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 61
இப்படி நடந்து கொள்வது அவளுக்குப் பெரும் வேதனையாகத்தான் இருந்தது. ஆயினும் சகித்துக் கொண்டாள். இது அவளுடைய மனவுறுதியைக் குலைக்காவிட்டாலும் இந்தச் சகிப்புக்கு அந்த மனவுறுதிதான் காரணமாக இருந்தும் புதிதாக எழுந்த உற்சாகத்தையும், அற்பசொற்பமாய் இருந்த மகிழ்ச்சியையும் போக்கிவிட்டன. முகத்தில் ஒரு உறக்கமும் மனதில் ஓர் ஏக்கமும் குடிகொண்டு விட்டன.
ஒருநாள் வேலை முடிந்து பஸ்ஸுக்காக வந்து கொண்டிருக்கும் போது டேவிட்டும் பின்னால் வருவது தெரிந்தது. ஆனந்தி வேகமாக நடந்தாள்.
"எங்கே அவசரமாக ஒடுறீங்க?' என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் அவளோடு வந்து விட்டான் அவன்.
ஆனந்திக்கு ஒருகணம் மனம் கிளுகிளுத்தது. முகத்தைத் திருப்பி அவ னைப் பார்க்கவும் மனம் தூண்டியது. ஆனால் அதை அடக்கிக் கொண்டே 'வீட்டில் அவசர வேலை, அதுதான்.' என்றாள் நடையின் வேகத்தைக் குறைக்காமல்,
"கொஞ்ச நாளாய் உங்களுக்கு அவசர வேலைகள் அதிகம்தான் என்று தெரியுது" கூறிவிட்டு குறும்பாகச் சிரித்தான்.
'சில சமயங்களில் தொடர்ந்தாற் போல அப்படி வந்து விடுகுது' அதற்குமேல் இருவரும் ஒன்றும் பேசாமல் பஸ்தரிப்புக்கு வந்து விட் டார்கள்.
பஸ் இன்னும் வரவில்லை. "உங்கள் அவசர வேலைகளில் நான் ஏதும் உதவி செய்யலாமா?' என்று கேட்டான் டேவிட்.
தன்னையும் மீறி அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆனந்தி. பளபளக்கும் கண்களோடு அந்த மயக்கும் புன்னகை உதட்டில் நெளிய அவளை அவனும் பார்த்துக் கொண்டிருந்தான். அவளால் அதைத் தாங்க முடியவில்லை. விழிகளை எடுத்து எதிர்த்திசையில் ஓடவிட்டாள்.
எனக்கு உதவியாக இருந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். எனக்கு அந்தப் பாக்கியம் இல்லையோ.
இப்படிச் சொல்ல அவளுக்கு மனம் துடித்தது. ஆனால் அதைக் கூடச் சொல்வதற்குப் பாக்கியமில்லையே!
பஸ் வந்தது.
'நான் வாறேன்' என்று சொல்லிக் கொண்டு ஏறினாள் ஆனந்தி.
'நானும் தான்' என்று டேவிட்டும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு கம்பனிவீதிக்கு இரண்டு டிக்கட்டும் எடுத்து விட்டான்.
சுபைர் இளங்கீரன் 112

நீங்களுமா..? கம்பனித் தெருவுக்காக..? என்வீட்டுக்காக..? ஏன்?. ஆனந்தியின் மனதில் குழப்பமும் கேள்விகளும் எழுந்தன.
சே. இவர் கம்பனித் தெருவுக்கு வேறு ஏதும் வேலைக்காக, யாரையும் பார்க்கிறதுக்காக வாறார்.
ஏதும் கேட்கவோ, பேசவோ விரும்பினாலும் பேசமுடியாத அளவுக்கு பஸ்ஸுக்குள் நெரிசலும் அவஸ்தையும் இருந்து தடுத்தன.
இடிபட்டு, நெருக்கப்பட்டு ஒரு மாதிரியாய் வந்து இறங்கியதும், 'நான் வாறேன்" என்று சொல்லியவாறு நடந்தாள் ஆனந்தி.
'நானும் தான்' அதே சிரிப்போடு ஆனந்தியின் பக்கம் வந்தான் டேவிட்.
ஆனந்தி சற்றுத் திகைத்தாள். திரும்பிப் பார்த்து "எங்கள் வீட்டுக்கா..?" என்று ஆவல் மீறக் கேட்டாள்.
'ஏன் வரக்கூடாதா?"
இதுக்கு என்ன பதில் சொல்கிறது. ஆனந்திக்கு தர்மசங்கடமாகி விட்டது.
டேவிட் தொடர்ந்தான்: 'உங்கள் வீட்டுக்கு நான் வந்ததில்லே. நீங்கள் கூப்பிடாவிட்டாலும் நானாக இப்ப வாறேன். ஏதும் ஆட்சேபனை இல் லையே. ?'
- இருக்குது என்று எப்படிச் சொல்கிறது?.
"உங்களை ஒருநாள் கூட்டி வந்து விருந்து போடவேணும் என்று எனக்கும் எண்ணந்தான்' இப்படித்தான் அவளால் சொல்ல முடிந்தது.
'இன்றைக்கே அந்த விருந்தைப் போடுங்களேன்'
'இன்றைக்கென்ன, எப்போதுமே. ஆனா அந்த அதிர்ஷ்டந்தான் இல்லையே.
'என்ன பேசாமல் வாரீங்கள்?'
'வீட்டில் பேசிக் கொள்ளலாமே'
இருவரும் சந்துக்குள் திரும்பினார்கள். காலையிலிருந்து ஓய்ந்து கிடந்த சந்தில் மாலைச் சந்தடிகள் ஆரம்பமாகியிருந்தன. சந்துமுனையிலும், நடைபாதையிலும், வீட்டு வாசலிலும் ஆண்கள்- பெண்கள், குமரிகள், வாலிபர்கள், பொடியன்கள், வயதுவந்தவர்கள்.
'இந்தச் சந்து, சனங்கள், மூன்று தட்டு வீடு -இதெல்லாம் உங்களுக்கு எப்படி இருக்குது?' திடீரென்று கேட்டாள் அவள்.
'எனக்கு இது ஒன்றும் புதுசல்ல, நாங்கள் இப்ப ஹெந்தலையில் இருந் தாலும் முந்தி இந்த மாதிரிச் சந்துக்குள் மூன்று தட்டு வீட்டுக்குள், சந்தடி சனத்தோடு வாழ்ந்து பழகியவன்தான். இதெல்லாம் அற்புதமான காட்சியல்ல.
13 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 62
கொழும்பு என்றால் ஹெந்தலையும், வெள்ளவத்தையும், சினிமன் கார்டனு மல்ல. இந்த மாதிரிச் சந்துகளும், சனங்களும், மூன்று தட்டு வீடுகளும் சேர்ந்துதான் கொழும்பு. இதன் உயிர்த்துடிப்புக்கூட இங்கே தான் இருக்குது என்று சொல்லலாம்.
'உங்களுக்குப் புதுசில்லைத்தான். ஆனா நீங்கள் சொல்கிறது ஒவ் வொன்றும் எனக்குப் புதுசாகத்தான் இருக்குது' என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள் ஆனந்தி.
வீட்டு வாசலில் வசந்தி நின்றிருந்தாள். 'இவ என் சிஸ்டர்' என்று அறிமுகப்படுத்தி விட்டு 'வாங்க' என்று அழைத்துக் கொண்டே உள்ளே போனவள், கதிரையை முன் தட்டுக்குள் கொண்டு வந்து போட்டு விட்டு 'இருங்கள்' என்றாள். வசந்தியிடம் டீ போடச் சொல்லிவிட்டு உடையை மாற்றிக் கொண்டு உடம்பு கழுவ பைப்புக்குப் போனாள்.
திரும்பி வரும் போது 'அது யார் அக்கா?' என்று கேட்டாள் வசந்தி. 'டேவிட். எங்கள் கம்பெனியில் வேலை செய்கிறார்'- கூறிவிட்டுக் கண்ணாடிக்கு முன்னால் நின்று முகத்தைத் துடைத்தாள்.
இத்தனையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மனதில் மகிழ்ச்சியும் துக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு அவளைக் குழப்பிக் கொண்டி ருந்தன. யாரிடமிருந்து தூர விலக வேண்டும் என்று நினைத்தாளோ -சம்மத மில்லாமல் பலாத்காரமாக அதை நினைத்தாளோ - அவன் பக்கத்தில் கூட வந்து, பக்கத்திலேயே வந்து உட்கார்ந்திருக்கிறான்! எவனை அதிகம் மனசு விரும்பி வரவேற்கிறதோ அதே மனசுக்கு அவன் அங்கு இருப்பதும் சங்கட மாக இருக்கிறது!
என்னைச் சோதிக்கிறீங்களே டேவிட். ஆனந்தி கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டே இருந்தாள். டேவிட் சுவரைப் பார்த்தான். முருகன், யேசு, புத்தர் படங்கள், தீபம், நூந்து போன ஊதுபத்தி, காய்ந்த பூக்கள்.
கயிற்றுக் கட்டிலைப் பார்த்தான். அது வெறுமனே கிடந்தது. அருமை நாயகம் தனது அந்தப்புரத்துக்குப் போயிருக்கும் நேரம், கள்ளுக் கொட்டிலும், சாராயத் தவறணையும், பாரும் குடிகாரருக்கு அந்தப்புரம் தானே!
முன்தட்டுக்கும் நடுத்தட்டுக்குமிடையில் இருக்கும் ஜன்னலால் உள்ளேயும் பார்த்தான்.
டேவிட்டுக்கு ஆனந்தியின் குடும்ப விஷயங்கள் முழுமையாகத் தெரியாது. அவள் சில சந்தர்ப்பங்களில் பட்டும் படாததுமாய் ஏதோ சொல்லியிருக் கிறாள். அதிலிருந்து ஆனந்தியின் குடும்ப நிலைமையை அவன் ஊகித்திருந் தான். இப்போது அவன் கண்ணில் பட்டவை அதை ஊர்ஜிதப்படுத்துவது
சுபைர் இளங்கீரன் 114

போல் இருந்தன.
கண்ணாடிக்கு முன்னால் நின்ற ஆனந்திக்கு டேவிட் தன்னைக் கவனிப்பது போல் தெரிந்தது. அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை. முன்தட்டுக்கு வந்தாள்.
'உங்கள் அவசர வேலைகளுக்கு நான் தடையாக வந்திட்டேன்' என்று கிண்டலாகக் கூறினான் டேவிட்.
'அதெல்லாம் ஒன்னுமில்லே. வேலைகள் கிடக்கட்டும். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீங்களே, அது எவ்வளவு சந்தோஷம்' என்று கூறியவள். "ஆனால் எங்கள் வீட்டிலே உங்களுக்குப் பார்க்கிறதுக்கும் சந்தோஷப் படுகிறதுக்கும் விசேஷமாய் ஒன்னுமில்லே' என்று தன் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் மாற்றுவதற்காகப் பகிடியாகச் சொன்னாள்.
"ஏன் நீங்கள் இருக்கிறீங்களே..?" என்றான் டேவிட் சிரித்துக் கொண்டே ஆனந்தியின் முகம் றோஜாவைப் போல் சிவந்து விட்டது. "நான் இப்படிச் சொன்னதுக்காக வித்தியாசமாய் நினைக்காதீங்கள்' உண்மையைச் சொன்னால் உங்களைப் பார்க்கிறதிலே, பேசுகிறதிலே எனக்குச் சந்தோஷம். ஆனால் நீங்க கொஞ்ச நாளாய் ஒரு மாதிரியாய் இருக்கிறீங்கள். முகத்திலே முந்திய பொலிவு, கலகலப்பு இல்லே. என்னோடு அதிகமாய்ப் பேசுகிறதுமில்லே. என்னைக் கண்டால் ஒதுங்கி ஒதுங்கிப் போரீங்கள். இப்ப கூட கம்பெனியிலிருந்து வாற போதும் அவசர வேலை என்று என்னோடு பேசுவதை தவிர்த்துக் கொள்ளப் பார்த்தீங்கள். ஒருவேளை என்னையும் அறியாமல் உங்களிடம் ஏதும் தவறாக பேசியிருந்தால் அதைப் பெரிசா எடுத்துக் கொள்ள வேணாம். நான் பேசுகிறதிலே, பழகிறதிலே குறையிருந்தால் மனம் விட்டுக் கூறுங்கள். அதைக் கேட்கிறதிலே எனக்கு நன்மைதான். உங்களுக்கும் பாரம் இறங்கியது மாதிரி இருக்கும்."
繁 * * * *
ஆனந்தியின் மனம் கலங்கியது. கண்கள் கூடக் கலங்கத் தயாராயின. அதை
அடக்கிக் கொண்டே 'உங்களைச் சமாதானப்படுத்துகிறதுக்காகச் சொல் லேல்லே. உண்மையில் நீங்கள் அப்படியெல்லாம் நடந்து கொள்ளேல்லே.'
'அப்ப உங்கள் போக்குக்கு என்ன அர்த்தம்?" இதுக்கு என்ன பதில் சொல்கிறது?.
நல்லவேளை வசந்தி டீ கொண்டு வந்தாள். ஆனந்தி அதை வாங்கி டேவிட்டிடம் கொடுத்துவிட்டு "செல்வத்திடம் கொப்பியைக் கொடுத்து சிகரட் வாங்க விடு' என்றாள்.
115 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 63
'வேணாம். என்னிட்டே இருக்குது' என்று கூறிவிட்டு டீயைக் குடித்தான் டேவிட்.
"பரவாயில்லே. வசந்தி நீ செல்வத்தைக் கூப்பிடு'
'எனக்குச் சிகரட் வாங்கித்தர உங்களுக்குக் கட்டாது' என்று சிரித்துக் கொண்டே சிகரெட் பைக்கட்டை எடுத்தான். ஒன்றுதான் இருந்தது. "வாங்கத் தான் வேணும், நான் போய்ட்டுவாறேன்' என்று எழுந்தான்.
'நீங்கள் போக வேணாம். கட்டினாலும் கட்டாவிட்டாலும் நீங்கள் எங்கள் விருந்தாளி. நாங்கள் தான் வாங்கித் தர வேணும் ' என்று சிரித்தவாறே கூறிவிட்டு வசந்தியின் பக்கம் திரும்பி 'ஒரு பைக்கட் திறீறோஸ். ஏன் நிற்கிறாய் போயேன்" என்று வசந்தியை அனுப்பி விட்டு தானும் டீயைக் குடித்தாள்.
* * * * *
டேவிட் தன்னிடமிருந்த சிகரட்டைப் பற்றி விட்டுச் சொன்னான்: 'உங்க ளிடம் புதுசா ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு காரணத்தை அறிந்து கொள்ள வேணும் என்றுதான் இப்ப உங்களோடு வந்தேன். மனம் திறந்து சொல்கிறேன். உங்களை நான் அந்நியமாக நினைக்கேல்லே. என்னிடம் எதையும் சொல்ல லாம். இதில் ஒரு தவறுமில்லே. நான் வித்தியாசமாய் நினைக்கப் போகிறது மில்லே. நாமெல்லாம் ஒரே ஆட்கள். ஒருவருடைய கஷ்டத்தை மற்றவர் புரிந்து கொள்கிறதிலேயும், முடிந்தால் அதை நிவர்த்திக்கிறதுக்கு உதவியாயும் இருக்க வேணும்.'
'நானும் உங்களை அந்நியமாய் நினைக்கேல்லே' என்று சொல்ல வாய் துடித்தது. சொல்ல முடியவில்லை.
- டேவிட் சொன்னதுக்கு அர்த்தம் இருக்குது. கம்பெனி ஆட்களோடு பேசுகிற போது நமக்குள்ளே நெருக்கம் இருக்க வேணும். ஐக்கியம் இருக்க வேணும். யாரும் யாரையும் அந்நியமாகக் கருதக்கூடாது என்று அடிக்கடி சொல்கிறவர்தானே. ஆனால் நான் எந்த அர்த்தத்தில் சொல்கிறது.?
'உங்கள் மெளனத்தைப் பார்க்கிற போது, எனக்கும் சொல்லக்கூடாத அந்தரங்க விஷயங்கள் உங்கள் மனசிலே இருக்குது என்று தெரியுது. நீங்கள் சொல்ல வேணாம். ஆனால் இதுதான் காரணமாயிருந்தால் அதுக்காக என்னோடு பேசாமல் இருக்க வேண்டியதில்லே. நீங்கள் இப்படி நடந்து கொள்கிறதைப் பார்க்கிற போது எனக்கு ரொம்பவும் வருத்தமாயிருக்குது.'
'நாம வேறு ஏதாவது பேசலாமா?" டேவிட்டுக்குச் சுருக்கென்றது. முகம் லேசாய் வாடியது. மனதில் ததும்பிய ஆவல் சட்டென்று வடிந்துவிட்டது. சிறிது திகைப்போடும் ஏமாற்றத்தோடும்
சுபைர் இளங்கீரன் 116

ஆனந்தியைப் பார்த்தான். சற்றுநேரம் அவளையே பார்த்துக் கொண் டிருந்தவன் 'நான் இதையெல்லாம் கேட்கிறது உங்களுக்கு விருப்பமில்லை போலிருக்குது. நான் வந்தது இதைக் கேட்கத்தான். வேறு என்ன விஷயங்கள் இப்ப இருக்குது பேச' என்று கூறிவிட்டு எழுந்தான்.
ஆனந்திக்கு மனம் பதறியது. 'டேவிட்' என்றாள் குரல் தழுதழுக்க. 'என்னைத் தவறாக நினைக்காதீங்க. உங்க மேலே எனக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கு. அதோடு அந்தரங்கமும் இருக்கத்தான் செய்யுது. ஆனால் என்னால் சொல்ல முடியேல்லே. உங்கள் மனசை வருத்திவிட்டேன். என்னை மன்னியுங்கள்-இதைக் கூறும் போது ஆனந்தியின் விழிகளில் கண்ணிர் தளும்பியது.
அவளுடைய வார்த்தைகளும், கண்ணிரும் அவனுடைய மனதைத் தொட் டன. இரக்கத்தோடு ஆனந்தியைப் பார்த்தான். 'அந்தரங்கம் புனிதமானது, அதைச் சொல்லக்கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாநான் அப்படிக் கருதேல்லே. கம்பெனி மனேஜர் கூட நம்மைப் பற்றி அந்தரங்கங்களை வைத்திருக்கிறார். இன்னும் பலருக்கு அந்தரங்கத்தில் எத்தனையோ அசுத்தங்கள் இருக்கும். அதையெல்லாம் புனிதமானது என்று கருத முடியுமா? உங்கள் அந்தரங்கமும் அப்படிப்பட்டது என்று நான் நிச்சயமாய் நினைக் கேல்லே. அந்தரங்கத்தைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனா அது நம்மை அந்நியமாக நினைக்காதவங்களுக்குக் கூடச் சொல்லாமல் பாதுகாக்க வேண்டிய அளவுக்குப் புனிதமானது என்று மட்டும் கருதாதீங்க. '
"எனக்கு இதெல்லாம் தெரியாது. இந்த மாதிரியெல்லாம் நான் சிந்திக்கவு மில்லே. ஆனா இப்ப என்னை வற்புறுத்த வேணாம். சந்தர்ப்பம் வரும்போது சொல்லுவேன். என்னைத் தவறாக மட்டும் நினைக்காதீங்க.
'நான் அப்படி நினைக்கவே மாட்டேன். வற்புறுத்திக் கேட்கவும் மாட் டேன். உங்களோடு இவ்வளவு நேரமும் நான் பேசினதில் ஏதாவது உங்கள் மனசைப் புண்ணாக்கி இருந்தால் அதுக்காக வருந்துகிறேன். ஆனா ஒன்னு மட்டும் கேட்டுக் கொள்கிறேன். என்னோடு பேசாமல் இருக்கவும் வேணாம்; ஒதுங்கிப் போகவும் வேணாம்.'
சிகரட் பைக்கட்டோடு வசந்தியும் செல்வமும் வந்தார்கள், "இவன் தான் என் கடைசித்தம்பி செல்வம்' என்று கூறி விட்டு சிகரட் பைக்கட்டை வாங்கி டேவிட்டிடம் கொடுத்தாள்.
டேவிட் செல்வத்தின் கையைப் பிடித்துக் கொண்டு அவனுடைய ஸ்கூல், படிப்பு, விளையாட்டு எல்லாவற்றையும் கேட்டான். செல்வம் தன் பாஷையில் ஏதேதோ அளந்தான். "நீ கெட்டிக்காரன்தான்' என்று சொல்லி இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் கைக்குள் திணித்தான். செல்வத்துக்கு பெருமையும் மகிழ்ச்சியும் தாங்கமுடியவில்லை. மறுகணம் அவன் அங்கே
17 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 64
நிற்கவில்லை. பறந்து விட்டான்.
'நான் வரட்டுமா?"
"ஏன் அவசரம்? இருந்து சாப்பிட்டுட்டுப் போகலாம்'
'இப்பதான் நினைவுக்கு வருகுது. கிறிஸ்மஸ்ஸ0க்கு நீங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட வேணும். அதுக்குப்பிறகுதான் எனக்கு உங்கள் வீட்டுச் சாப்பாடு'
'வற்புறுத்தாதீங்க. அன்றைக்கு எனக்கு முக்கிய வேலை இருக்குது' -தவிர்க்க முயன்றாள் ஆனந்தி.
'அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் எனக்காக கட்டாயம் வர வேண்டும். வராமலிருந்தால் எனக்கு ரொம்பவும் வேதனையாய் இருக்கும். நான் வந்து கூட்டிப் போவேன். ரெடியாய் இருங்கள்' என்று சொல்லி விட்டு ஆனந்தி பதில் சொல்வதற்குள் வாசலைத்தாண்டி விட்டான்.
ஆனந்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் ஒன்று நினைக்க நிகழ்ச்சிகள் அதற்கு எதிராக உருவாகுவதை எண்ணி அவளுக்குச் சிரிப் பாயும், மனசுக்கு மேலும் சஞ்சலமாயுமிருந்தது.
* * * * *
அன்று மத்தியானம் ஆனந்தி கன்டீனுக்குள் போகும் போது கூடியிருந் தவர்கள் கிறிஸ்மஸ்ஸைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். டேவிட்டை காணவில்லை.
றோஸி உரத்துக் கத்திக் கொண்டிருந்தாள்' 'நேற்று லீவைப் போட்டு விட்டு பெட்டாவில் சி.டபிள்யூவில் காத்துக் கிடந்ததுதான் மிச்சம். சரியான கியூ. கால் கடுக்க மணித்தியாலக் கணக்கில் நின்றுவிட்டு உள்ளே போனால் விறாக் கையெல்லாம் பெரும்பாலும் காலி. கிடந்த துணியும் மனசுக்குப் பிடிக்கேல்லே. பெரும் ஏமாற்றமாய் போச்சுது. ஆனா எல்லாம் பேமெண்டிலே வந்து குவிந்து கிடக்குது. எப்படித்தான் வருகுதோ. இரண்டு ரூபா பனி ரெண்டு சதத்துக்கு வாங்க வேண்டிய புடவையை மூனு ரூபா ஐம்பது சதத்துக்கு வாங்க வேண்டியிருக்குது.'
சிறிசேனா சொன்னான்: 'சூட்டிங்கெல்லாம் பிளக்கில்தான். வெள்ளை யிலிருந்து கறுப்புக்கு எப்படி வருகுதோ'
'பெருச்சாளிகளின் வேலை" ஐமீல் குறுக்கிட்டுச் சொன்னாள்.
'அரசாங்கம் ஊழலை ஒழிக்கிறதாய் சொல்லுது. மலேரியாக் கிருமியை வைத்துக் கொண்டு மலேரியாவை ஒழிக்கிற கதைதான். பெருச்சாளிகளை வைத்துக்கொண்டு ஊழலை எப்படி ஒழிக்கிறது' செல்லையா ஆத்திரத்தோடு கூறினான்.
சுபைர் இளங்கீரன் 18

இந்தப் பேச்சு இருக்கட்டும். 'விஷயத்துக்கு வாங்க" என்றான் சிறிசேனா, 'உன் விஷயம் என்ன?" ஜமீல் கேட்டான். 'கம்பெனி எங்களுக்கு ஒரு லோங்ஸ0க்கு குட்டிங் கொடுத்தால் என்ன வாம்?' சிறிசேனாவுக்கு குட்டிங்தான் பிரச்சினை.
'ஒவ்வொரு வருஷமும் இதைக் கேட்கத்தான் செய்கிறோம். தந்தால் தானே? கோட்டாவுக்கு கிடைக்கிறதையெல்லாம் பதுக்கி வைத்துக் கொண்டு பிளாக்கிலே தள்ளுது. நமக்கு எங்கே தரப் போகுது. கேட்டா உங்களுக் கெல்லாம் தாரதாயிருந்தா டபுள் கோட்டா என்ன டிரிபிள் கோட்டா கூடக் காணாது. கம்பெனியை மூடி விட்டுப் போக வேண்டியதுதான் என்றுமனேஜர் சொல்கிறான்' என்றான் செல்லையா.
'அதுதான் தெரிந்த விஷயமாச்சே. அதை விடுங்க' என்று கூறிய ஜமீல் "கிறிஸ்மஸ்ஸுக்கு நான் யார் வீட்டுக்கு வாறது. என்னை இன்னும் ஒருவரும் கூப்பிடேல்லியே. றோஸி நான் உன் வீட்டுக்கு வரட்டா?"
றோஸி பதில் சொல்வதற்குள் வாட்சன் 'நான் உன்னைக் கூப்பிட இருந்தேன். நீ என் வீட்டுக்கு வா."
'அப்ப எனக்கு யாரு.. ?' செல்லையா கேட்டான். 'ஏன் என் வீட்டுக்கு வாயேன்!' என்று சொன்ன றோஸி ஆனந்தியின் பக்கம் திரும்பி, 'வந்ததிலிருந்து நீ ஒன்னும் பேசாமல் இருக்கிறியே. என்ன சங்கதி?" என்று கேட்டாள். ܀
'உங்கள் விமர்சனங்களையும் விவாதங்களையும் ரசித்துக் கொண்டிருக் கிறேன்'
'நீயும் வாறியா?" -றோஸி கேட்டாள்.
'ஆனந்தி மட்டும்தானா றோஸி? நாங்களெல்லாம் இல்லையா? குஸoமா கேட்டாள்.
'வாறவங்களெல்லாம் வாங்க"
'றோஸி பாவம். எல்லாரும் போய் அவ வீட்டிலே குவிய வேணாம். டேவிட் வீட்டையும் முற்றுகையிடுங்க" என்றான் ஜமீல்.
'அவன் சொல்கிறது சரிதான். ஆனா டேவிட்டைக் காணேல்லியே' இது செல்லையா.
'அவனுக்கு இன்றைக்கு லீவு" 'டயமாச்சுது, கிளம்புங்க" என்று சொல்லிக் கொண்டு ஜமீல் எழுந்தான்.
'டேவிட் இன்றைக்கு வந்திருந்தால் கட்டாயம் யாரையும் கூப்பிட்டிருப்
119 w அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 65
பான். என்றாலும் அவன் வீட்டுக்குப் போறவங்கள் போகலாம்' என்று கூறிவிட்டு கடைசியாக செல்லையாவும் எழுந்தான்.
கன்டீனை விட்டு வெளியே வரும்போது 'ஆனந்தி நீ வருவாய் தானே?" என்றாள் றோஸி.
'நிச்சயமாய் சொல்ல முடியாது. வந்தால் சரி, வராவிட்டால் குறை நினைக்காதே."
睿 * * * *
கிறிஸ்மஸ் தினத்தன்று டேவிட் வந்துவிட்டான். அவனை ஏமாற்றவோ, வருந்தச் செய்யவோ ஆனந்தி விரும்பவில்லை. அவனோடு புறப்பட்டு விட்டாள். கொழும்பிலிருந்து ஆறு மைலுக்கு அப்பால் உள்ள ஹெந்தலையில் இருக்கும் தன் வீட்டுக்கு டேவிட் ஆனந்தியை அழைத்துச் சென்றதும் அவனுடைய அம்மா அவளை எதிர்பார்த்திருந்தவள் போல் "உன்னைப் பற்றி டேவிட் சொன்னான். இன்றைக்கு நீ விருந்தாளியாய் வந்ததில் எங்களுக்குச் சந்தோஷம்' என்று வரவேற்றாள்.
டேவிட்டைப் போலவே அம்மாவும் ஒல்லி. ஐம்பது வயதுக்கு மேலிருக் கும். டேவிட்டைப் போலவே சாயல்.
ஆனந்தி அவளைப் பார்த்து புன்னகை செய்தபடி "எனக்கும் சந்தோஷம் தான்' என்றாள்.
'நீங்க ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருங்க. எனக்கு வேலை கிடக்கு. ரீட்டாவும் போய்ட்டா. நான் தனியத்தான்' என்று சொன்னவள் 'டேவிட் நீதான் எல்லாம் கவனிக்க வேணும். ரூமுக்கு கூட்டிப் போ' என்று கூறிவிட்டு குசினிப்பக்கம் சென்றாள், அம்மா.
"ரைட் முதலில் அதைமுடிப்போம் வாங்க" என்று ஆனந்தியை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
மேசையில் ஒரு வெள்ளை விரிப்பு போடப்பட்டு கிறிஸ்மஸ் பலகாரங்கள் எல்லாம் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிய டேவிட்டின் தந்தையும் அவர் வயதை ஒத்த இன்னொரு நண்பரும் சாராயப் போத்தல் மேசையிலிருக்க, சாராயம் ஊற்றப்பட்ட கிளாஸ் கையிலிருக்க சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
டேவிட்டோடு அறைக்குள் வந்த ஆனந்தியைக் கண்டதும் "கம்மோன்' என்று வரவேற்றார் அப்பா.
அவரையும் சாராயத்தையும் பார்த்ததும் ஆனந்திக்குத் தந்தையின் நினைவு மின்னலாகத் தோன்றி மறைந்தது. தன்னையும் அறியாமல் முகத்தைச் சுளித்தாள். அறைக்குள் போகாமலே கூடத்தில் வந்து அமர்ந்தாள்.
சுபைர் இளங்கீரன் 120

டேவிட் அவளைப் பார்த்தான். 'ஏன் ஒன்றும் சாப்பிடாமல் திரும்பி விட்டீர்கள்?"
'அவர்கள் எழும்பட்டும், அவசரமில்லே' "அவர்கள் இப்போது எழும்ப மாட்டார்கள். போத்தல் முடிந்தாலும் எப்ப எழும்புவார்கள் என்று சொல்லமுடியாது' என்று கூறிக்கொண்டே அறைக்குள் போய் ஒரு பிளேட்டில் பலகாரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து ஆனந்திக்கு முன்னால் இருந்த டீ போயில் வைத்து விட்டு அவனும் இருந்தான். ஒரு பதார்த்தத்தை எடுத்துக் கடித்துக் கொண்டு 'சாப்பிடுங்க” என்றான்.
ஆனந்தியும் ஒன்றை எடுத்துக் கொண்டு மெளனமாக இருந்தாள். 'என்ன யோசிக்கிறீங்கள்; சாப்பிடுங்களேன்?" 'ஒன்னுமில்லே, என் அப்பாவை நினைத்துக் கொண்டேன்.' "அவருக்கு என்ன?" 'அவருக்கும் கள்ளு சாராயம் என்றால் தேன்போல.' 'ஓ. என்று மெல்லச் சிரித்தான் டேவிட் ரூமுக்குள்ளே என் அப்பாவைப் பார்த்து விட்டுத்தான் அப்படிச் சொல்றீங்கள், இல்லையா?"
ஆனந்தியும் மெல்லச் சிரித்தாள்: 'எனக்கு இதைக் கண்டால் சொல்ல முடியாத கசப்பும் வெறுப்பும். எங்க வீட்டிலே இவ்வளவு வறுமையும், கஷ்டமும் வந்ததுக்கு காரணம் அப்பாவின் குடிதான்' என்று சொல்லி விட்டுக் கையில் வைத்திருந்ததை தின்னத் தொடங்கினாள்.
'இவர்கள் கள்ளும் சாராயமும் தான் குடிக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய பணக்காரர்களும் முதலாளிகளும் விலை கூடிய வெளிநாட்டுச் சரக் கையெல்லாம் உள்ளே தள்ளுகிறாங்க. அவங்களுக்கு வறுமையோ கஷ்டமோ வந்து விடேல்லே. நல்ல சுகமாய் சந்தோஷமாய் இருக்கிறாங்க. ஆக குடிதான் வறுமைக்கு காரணம் என்று எப்படிச் சொல்கிறது?"
"பணக்காரங்களுக்கு எதுவும் தாங்கும். ஆனா ஏழைகளுக்கு சரிப்பட்டு வருமா?"
'ஏழைகள் என்று நீங்களே சொல்றீங்க' இதிலிருந்து குடிக்கு முந்தியே வறுமை இருக்குதென்று தெரியேல்லியா?"
"அப்ப வறுமைக்கு என்ன காரணம்?" 'உங்களுக்கு அதை முந்தியே சொல்லி விட்டேனே. சம்பளம் -கூலி, விற்கிறது - வாங்கிறது, லாபம் - சுரண்டல் என்றெல்லாம். ஞாபகமிருக் குமே?”
"ஞாபகம் இருக்கு"
121 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 66
டேவிட் பிளேட்டைப் பார்த்தான். 'நீங்கள் பலகாரத்தையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறீங்கள். இதில் சம்பிரதாயம், கெளரவம், கூச்சம் ஒன்னும் இருக்கக் கூடாது. நாமெல்லாம் ஒரே ஆட்கள். மனம் திறந்து பேச வேணும், பழக வேணும். நம்ம சொந்தவீட்டில் சாப்பிடுகிறது போல சாப்பிட வேணும்' என்று கூறிக்கொண்டே பெட்டீஸையும் கட்லீஸையும் எடுத்து நீட்டினான்.
டேவிட்டின் இந்த வார்த்தைகள் ஆனந்தியின் நொந்த உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது. எத்தனையோ சஞ்சலத்துக்கு இடையே யும் அவன் சொன்னது இனித்தது.
'நான் அதெல்லாம் பார்க்கிறதாய் நினைக்காதீங்க' என்று கட்லீஸையும் பெட்டீஸையும் தின்று விட்டு எழுந்தாள்.
இதேசமயம் அம்மா டீ கொண்டு வந்தாள். ஆனந்தி அதையும் குடித்து விட்டு 'உங்கள் வீட்டைப் பார்க்கலாமா?' என்றாள்.
'சுற்றிப் பார்க்க இது என்ன மாளிகையா? சின்ன வீடு இரண்டு ரூம், இந்த ஹோல், ஒரு கிச்சன், கிணறு- இதுதான். பார்க்கிறதுக்கு ரீட்டாவின் கோழிகள் தான் இருக்குது" என்றான் சிரித்துக் கொண்டே.
'அந்த விசேஷமாவது இருக்குதே.1 வாங்க பார்க்கலாம்' டேவிட் அவளை அழைத்துக் கொண்டு பின்னால் உள்ள முற்றத்துக்குப் போனான், அங்கு நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தள்ளித் தள்ளி வீடு. அவ்வளவு நெருக்கமோ இரைச்சலோ இல்லை. மரங்கள் பசுமையை ஊட்டின. டேவிட்டின் வீட்டில் கூட தென்னையும், கமுகும், பப்பாளியும் நின்றன. அலாதியான ஒரு அமைதி சூழ்ந்திருந்தது.
ஆனந்தியின் மனக்கண்முன் கம்பனித்தெரு, வீடு எல்லாம் வந்து நின்றன. -இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்!. சில நிமிஷங்களுக்குப் பிறகு அவள் கேட்டாள். 'இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை?" 'எண்பது ரூபாய்' 'எண்பது ரூபாயா? இந்தச் சின்ன வீட்டுக்கா. என்று வியப் போடு கேட்டவள் இரண்டுக்கும் வாடகையும் வித்தியாசம் தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
'இந்தப் பக்கத்தில் இந்தச் சின்ன வீடு கூட இப்ப எண்பது ரூபாய்க்குக் கிடைக்காது. நாங்கள் மாசக் கணக்காய் அலைஞ்சுதான் இதை எடுத்தோம்.'
சுபத்திரா வீடு தேடி அலைந்ததை ஆனந்தி நினைத்துக் கொண்டாள்.
சுபைர் இளங்கீரன் 122

'வேலை, வீடு -இது இரண்டும் விரதம் இருந்தால் கூடக் கிடைக்காது. சாதாரண சனங்களுக்கு இது இரண்டும் பெரும் பிரச்சினை. வேலையில்லா மலும் திரிய வேண்டியிருக்குது, வீடில்லாமலும் திரிய வேண்டியிருக்குது. கிடைத்தால் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி வாடகைக்குப் போகுது. வீட்டுக்காரன் சும்மா இருக்க அவன் கட்டிய வீடு -அவன் பணம் நம்ம உழைப்பில் மூன்றில் ஒரு பங்கைச் சுரண்டி அவனிடம் சேர்த்து விடுகுது. அவன் மேலும் பணக்காரனாகிறான், நாம் மேலும் ஏழையாகிறோம்.'
இதைக் கேட்டுக் கொண்டே ஆனந்தி மெல்ல நடந்தாள். முற்றத்துக்குள் ரீட்டாவின் கோழிகள் பத்துப் பனிரெண்டு கூட்டுக்குள் இரை தின்று கொண் டிருந்தன. ஆனந்தி அவற்றைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
-நம்ம வீட்டில் இப்படி ஆறு கோழிகளை வாங்கி விட்டாலாவது பிரயோசனமாய் இருக்கும். முட்டையால் ஒன்னு ஒன்னரை ரூபாயாவது கிடைக்கும். காலை கடையப்பச் செலவுக்கு உதவும்.
டேவிட் ஒரு பொருளாதாரம் சொல்ல, ரீட்டாவின் கோழிகள் ஆனந்திக்கு ஒரு பொருளாதாரத்தை கூறின.
- ம்.இதுவும் ஒரு எண்ணந்தான். ஆட்கள் இருக்கவே நம்ம வீட்டில் இடமில்லே, கோழிக்கு எங்கே இடம்?.
"ரீட்டாவுக்கு கோழிகளென்றால் போதும். பொழுது அவளுக்கு அதோடு போயிடும்' என்றான் டேவிட், சிரித்தபடி,
'ரீட்டா..?' என்று கேள்வியை முடிக்காமல் டேவிட்டைப் பார்த்தாள் ஆனந்தி.
'என் சிஸ்டர்'
'அவ மட்டும்தானா?"
'நாலு பேர், ஒரு தம்பி"
'அவங்களையெல்லாம் காணேல்லியே?"
'இரண்டு பேருக்கு கல்யாணமாகி விட்டது. மூத்த சிஸ்டர் கொழும்பில் நாங்கள் முந்தியிருந்த மூன்று தட்டு வீட்டில் இருக்கிறா. மற்றவ பெலிய கொடையில், நாலாவது சிஸ்டர் மூத்த அக்கா வீட்டுக்குப் போய்ட்டா. அவக்கு அங்கேதான் கிறிஸ்மஸ். ரீட்டாவும் பெலியகொடைக்குப் போய்ட்டா. தம்பி வில்பர்ட் பத்துமணி ஷோவுக்காக கொழும்பில் ஏதாவது ஒரு தியேட்டருக்கு முன்னால் நிற்கும் நீண்ட கியூவில் வெயில் காய்ந்து கொண்டு நிற்பான்."
ஆனந்தி மெல்லச் சிரித்தாள். 'தம்பி, சரியான படப்பைத்தியம் போல "
'அவன் மாத்திரமென்ன, நானும் தான்- அரைப்பைத்தியம். சிகரட்டைப் போல இதுவும் என்னிட்ட இருக்கிற குறைபாடு -பலவீனம்"
123 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 67
சிறிது நேரம் மெளனமாக இருந்த ஆனந்தி 'நீங்கள் ஏன் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறீங்கள்?' என்று திடீரெனக் கேட்டாள்.
'இத்தனை நாளும் நான் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்காமல்தான் இருந்தேன். ஆனா இப்ப அதைப்பற்றிய நினைவு அடிக்கடி வருகுது'
'யாரையாவது பார்த்து விட்டீங்க போலிருக்குது' என்று சொல்லிச் சிரித்தாள்.
டேவிட்டும் மெல்லச் சிரித்தான். ஆனந்தியின் மனம் படபட என்று அடித்துக் கொண்டது. "அப்ப இன்னும் பார்த்துக் கொண்டிருக்காமே கல்யாணத்தை முடிக்கலாமே?' என்று கேட்டுவிட்டு உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் உதட்டைக் கடித்தாள்.
'அதுக்கு அந்தப் பெண்ணின் சம்மதத்தை அறிய வேணும்' 'ஒ. அப்ப நீங்க மட்டும்தான் அவவைப் பார்த்திருக்கிறீங்க, அவ உங்களைப் பார்க்கேல்லே. பார்க்க வையுங்களேன்?"
'இல்லே. இருவரும் ஓரளவு பழகிறவர்கள் தான். என்றாலும் என் மனசில் உள்ளதை இன்னும் வெளிப்படுத்தேல்லே.'
'ஏன் சொல்லலாமே?" 'சொல்லத்தான் நினைக்கிறேன். சொல்ல வேணும். இன்றைக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்குது.'
ஆனந்திக்கு அவளையறியாமலே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உள்ளக் கடலில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அலை பாய்ந்தன. மனதில் குடி கொண்டிருந்த ஏக்கம் விழித்தெழுந்தது. சிறிது நேரம் இந்தச் சூழலில் சிக்கியிருந்து விட்டு 'சரிதான் இன்றைக்கு கிறிஸ்மஸ். உங்களைக் கூப்பிட் டிருப்பா. நீங்க மனசில் உள்ளதை கட்டாயம் சொல்லுங்க"
"அவ கூப்பிடேல்லே. அவவை நான்தான் கூப்பிட்டிருக்கின்றேன்' ஆனந்தியின் மனம் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. 'ஓ. அப்ப நான் உங்க இரண்டு பேருக்கும் குறுக்கே நிற்கப்படாது, நான் கெதியிலே போயிட வேணும்.'
டேவிட் சில வினாடிகள் மலர்ந்த புன்னகையுடன் அவளை உற்றுப் பார்த்தான். 'நீங்களே அந்தப் பெண்ணாக இருக்கிறபோது எப்படி கெதி யாய்ப் போறது.'
ஆனந்திக்கு பூக்கள் நிரம்பிய நிலத்தில் விழுந்தது போலிருந்தது. முகம்
சிவந்து வியர்த்தது. மனம் சிலிர்த்தது. ஒரு நிமிஷத்துக்குள் எத்தனையோ விதமான உணர்ச்சிகள் எழும்பிக் குதித்தன. உடம்பெல்லாம் புல்லரிக்க
சுபைர் இளங்கீரன் 124

கோழிகளைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.
டேவிட்டும் கோழிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்: 'நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்கள் தான். உங்களுக்கு மனசிலே என்ன படுகிறதோ தெரியாது. ஆனா, நான் உங்களைப் பார்த்ததிலிருந்து, உங்க ளோடு பழகியதிலிருந்து உங்களைப் பற்றிய ஒரு எண்ணம், அப்படியான ஒரு உணர்வு மனதில் புகுந்து விட்டது. தனியாக இருக்கிற போதெல்லாம் மனசுக்குள்ளே உங்க முகம் தான் தெரியுது. மனசில் இருக்கிறதை உங்களுக்குச் சொல்ல வேணும் என்கிற துடிப்பும் ஆவலும் கூடிக் கொண்டே இருந்தது. ஆனா நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ என்ற தயக்கம் தடுத்து வந்தது. இன்றைக்குச் சொல்லியே விடுகிறது என்ற முடிவுக்கு வந்தேன். உங்களை வீட்டுக்கு அழைத்து வந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். உங்களுக்கு இது விருப்பமில்லையென்றால் மறைக்காமே, ஒரு தயக்கமும் இல்லாமே சொல்லி விடுங்கள். இதிலே ஒரு குறையுமில்லே, உங்களைக் கசப்பாக நினைக்கவும் மாட்டேன். நீங்களும் அப்படி என்னை நினைக்காதீங்க'
ஆனந்திக்கு அந்த வார்த்தைகளும், அந்த நிமிஷமும்சுகந்தம் புஷ்பத்துக்கு மட்டும்தானா உண்டு? சில சமயங்களில் வார்த்தை களுக்கும் உண்டு. வசந்தம் ஒரு காலத்தில் மட்டுமல்ல, ஒரு நிமிஷத்திலும் நிகழ்வதுண்டு.
ஆனந்தி அப்போது ஆனந்தியாக இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். எத்தனையோ விதமான உணர்ச்சிகளுக்குள் மிதந்து கொண்டிருந்த அவளால் மனதில் எழுவதையெல்லாம் சொல்ல நா வரவில்லை.
அவளுடைய மெளனத்துக்கு டேவிட் என்ன அர்த்தம் கொண்டானோ, அவளை அப்படியே விட்டு விட்டு உள்ளே வந்து விட்டான்.
அவன் போனதும் ஆனந்தி யோசித்தபடி முற்றத்தையே சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள். வெகு நேரம் வரை உள்ளே வரவில்லை. டேவிட் திரும்பவும் இடையில் வருவதைப் பார்த்தாள். அதற்குமேல் அவள் அங்கு நிற்க விரும்பாதவளாய், டேவிட்டைப் பார்க்காமல் உள்ளே வந்தவள் குசினிப் பக்கம் சென்று டேவிட்டின் அம்மாவோடு ஒட்டி ஒட்டிக் கதைத்தாள். ' தனியாக கஷ்டப்படுகிறீங்க. நானும் உதவி செய்கிறேனே" என்று அம்மா தடுத்த போதிலும் தானாகவே ஒரு வேலையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு
ங்க
செய்தாள்.
மத்தியானம் டேவிட், அம்மா, அப்பா, ஆனந்தி எல்லோரும் ஒன்றாய் இருந்து சாப்பிடும் போதும் டேவிட்டுடன் ஆனந்தி பேசவேயில்லை. அவன் அதை எப்படிக் கருதினானோ, தன் விஷயத்தை விட்டு விட்டான். முகத்தில் எந்தக் குறியையும் காட்டிக் கொள்ளாமல் வேறு விஷயங்களைப் பற்றி முஸ்பாத்தியாக அவளோடு கதைத்தான். ஆனால் ஆனந்தி லேசாகச் சிரித்து
125 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 68
மழுப்பிக் கொண்டிருந்தாளே தவிர பேசவில்லை. சாப்பாடு முடிந்து பின் னேரம் வீடு திரும்பும் வரை அவள் அம்மாவோடுதான் நேரத்தைக் கழித்தாள். ஆனால் அவளுடைய சிவந்த முகம் அப்படியேதான் இருந்தது. மங்கை யரின் முகம் கோபத்தால் சிவப்பதையும் டேவிட் பார்த்திருக்கிறான். நாணத்தால் சிவப்பதையும் பார்த்திருக்கிறான். ஆனந்தியின் முகம் எதற்காகச் சிவந்திருக்கிறது?
அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை, சற்றுத் தடுமாறினான். ஆனால் தன் விஷயத்தை அவன் திரும்பவும் எடுக்கவே இல்லை. கடைசியாக பஸ்ஸுக்கு வந்து அவளை வழியனுப்பும் போது "நான் சொன்னது உங்களுக் குப் பிடிக்காவிட்டால் இந்த இடத்திலேயே அதை மறந்து விடுங்கள். இதுக்காக என்னோடு பேசாமலோ, பழகாமலோ இருந்து விடாதீங்க' என்றாள்.
ஆனந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. அதரங்களில் புன்னகை நெளிய தலையை மட்டும் ஆட்டி விட்டு பஸ்ஸில் ஏறினாள்.
* * * * *
ஆனந்தி வீட்டுக்கு வரும்போது மாலை மங்கிவிட்டது. லீவாக இருந்ததால் தெருக்களெல்லாம் ஓய்ந்து வெறிச்சோடிக் கிடந்தன. நகரத்தின் பரபரப்பும் சந்தடியும் எங்குதான் ஒடி ஒளிந்து கொண்டனவோ
ஆனந்தி வீட்டுக்குள் ஏறியதும், கட்டிலில் கிடந்தபடி தனது போதை இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்தாள். ஆனால் முந்திய வெறுப்பு அந்தப் பார்வையில் தெறிக்கவில்லை. 'வசந்தி, அப்பா மத்தியானம் சாப்பிட்டாரா..?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனாள். அவள் இல்லை. இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தாள். சத்தத்தைக் காணவில்லை.
அக்காவின் குரலைக்கேட்டு, அடுத்த வீட்டில் ரெடிஃபியுஷனில் வர்த்தக ஒலிபரப்பை ரசித்துக் கொண்டிருந்த காந்திதான் வந்தாள்.
"எங்கேடி அவ?' என்று கேட்டாள் ஆனந்தி. 'பின்னேரம் வெளிக்கிட்டுப் போனா. எங்கேயென்று எங்களுக்குக் கூடச் சொல்லேல்லே' என்றாள் காந்தி.
சந்துக் கோடியில் உள்ள மலாய்ப் பெண் றகீமாவோடுதான் வசந்தி கூட்டாளி. சில சமயங்களில் அவளுடன் படத்துக்கோ, கோல்பேஸுக்கோ போவாள். இன்றும் அப்படித்தான் அவளோடு தான் போயிருப்பாள் என்று எண்ணினாள் ஆனந்தி. அதற்குமேல் அவளைப்பற்றி நினைக்கவில்லை. நினைவில் தான் டேவிட் நிற்கிறானே அவன் கொஞ்சம் விட்டுக் கொடுத்தான். பழையபடி நினைவில் ஒன்றி விட்டாள்.
சுபைர் இளங்கீரன் 126

எண்ணெயை ஊற்றி விளக்கை ஏற்றி விட்டு உடுப்பை மாற்றினாள். குசினிக்குப் போய்ப் பார்த்தாள். மத்தியானம் சமைத்த உணவில் சாப்பிட்டது போக மிச்சம் இருந்தது. இரவுக்கு அவளுக்கு சாப்பாடு வேண்டியிருக்க வில்லை. இருப்பதை மற்றவர்களுக்குச் சமாளிக்கலாம்.
இவற்றையெல்லாம் செய்யும் போதும், எண்ணும் போதும் டேவிட்டும் கூடவே இருந்தான்.
எங்கேயாவது உடம்பைச் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிய வண்ணம் கிடக்க வேணும் என்று மனம் அரற்றியது. காந்தியிடம் 'அப்பாவும் நீங்களும் சாப்பிடுங்க, என்னை எழுப்ப வேணாம்' என்று சொல்லி விட்டுப் பாயை விரித்துப் படுத்துவிட்டாள்.
இரவுபத்து மணியாகி விட்டது. கிழவனின் போதைக் கிறுக்கும் ஓய்ந்து வயிறும் நிரம்பி உறக்கத்தில் ஒன்றிவிட்டார். காந்தியும் செல்வமும் கூட சாப்பிட்டு விட்டுப்படுத்து விட்டார்கள். ஆனால் வசந்திஇன்னும் வரவில்லை.
ஆனந்தி விழிகளை மூடிக் கொண்டிருந்தாளே தவிர நித்திரை கொள்ள வில்லை. ஆனால் வசந்தியைப் பற்றிய நினைவில்லாமல் அவள் டேவிட் டோடு பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசிக்கொண்டிருந்தாளோ
செல்வம் நித்திரையில் வாய் புலம்பியவன் 'அக்கா...' என்று கத்தினான். ஆனந்தி திடுக்கிட்டுத் திரும்பினாள். செல்வம் புரண்டு படுத்தான்.
ஆனந்திக்கு அப்போதுதான் வசந்தியின் நினைவு வந்தது. சரேலென்று எழுந்து அவளைக் கூப்பிட்டாள். பதில் இல்லை.
இன்னும் வரேல்லியா. படமும் முடிந்திருக்கும். இப்ப மணி என்ன இருக்கும்?.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து சந்தில் நின்றாள்.
விமல் தெருவிலிருந்து சந்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தம்பி ராசநாயகத்தின் நினைவு ஆனந்திக்கு வந்தது. ராசுவின் கூட்டாளிகளில் விமலும் ஒருவன்.
அவன் நெருங்கியதும் 'ராசுவைக் கண்டியா?" என்று கேட்டாள் ஆனந்தி.
'காலைக்குப் பிறகு காணல்ல'
'மணி என்ன?"
"பதினொன்று சொச்சம்' -கூறிக் கொண்டே போனான் விமல்.
-இன்றைக்கு கிறிஸ்மஸ். வழக்கமாகச் சுற்றுகிறவன் இன்றைக்கு விடு வானா. கூட்டாளிகளோடு எங்கெங்கே கிடக்கிறானோ. யாராவது சிநேகிதன் வீட்டில் படுத்துக் கிடந்து விட்டு காலையில் வருவான். அவன் போக்கே இப்படியாய்ப் போய்ட்டுது. அவன் தலைவிதியை யாராவது திருத்த
27 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 69
முடியாதா. வயதுக்கு வந்த இவனை என்னால் கட்டுப்படுத்தவும் முடியேல் லேயே.
இவனாவது ஆண்பிள்ளை. இரவானாலும் சாமமானாலும் ராசுவை யாரும் ஒன்னும் செய்ய ஏலாது. அவன் குணம்தான் தெரியுமே. ஆனாஇந்தக் கழுதை எங்கே போய்ட்டுது?. இன்னும் காணேல்லியே!.
ஆனந்தியின் மனதில் திகில் மெல்ல நுழைய ஆரம்பித்தது. சந்தின் கடைசித் தொங்கலுக்கு விரைந்தாள். றகீமாவின் வீடு பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டினான். றகீமாவின் உம்மா வந்தாள்.
வசந்தியையும் றகீமாவையும் பற்றி விசாரித்த போது றகீமா படுத்து அவளுக்குப் பாதிச் சாமமும் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் திகில் இன்னும் வளர்ந்தது. பதைபதைப்புடன் சந்து முனைக்கு வந்து தெருவைப் பார்த்தாள். மெர்க்குரி விளக்கின் ஒளியில் தெருக்கள் பளிச் சென்றிருந்தாலும் சன நாடமாட்டமில்லை. சந்து முனைக்குச் சற்றுத் தள்ளி இருந்த தெரு பைப்பில் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள்.
வீதி ஓரமாக உள்ள முனிஸிபல் தரையில் பெட்டிப் பலகையால் வீடாக ஒன்றை அடைத்துக் கொண்டு குடித்தனம் நடத்தும் வீடில்லாத நகர மாந்த ருக்கும், ஒரு அறை, ஒன்னரை அரையில் வசிக்கும் குடும்பத்தவருக்கும் இந்த தெரு பைப்தான் கதி. வாளிக் கிணற்றில் காசு கொடுத்துக் குளிக்கக் கூட வசதியில்லாதவர்கள். இந்தப் பைப்பைத்தான் தஞ்சமடைவார்கள். பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்குமாதலால் பெண்கள் அப்போது குளிக்க வசதியிருக்காது. அவர்கள் பதினொரு மணிக்குமேல் நடமாட்டம் எல்லாம் ஒயும் வரை விழித்திருந்து, ஓய்ந்ததும் பைப்பில் குளிப்பார்கள். சிலநேரம் விடிய நான்கு மணிக்கு எழுந்து குளிப்பார்கள் -சர்வ சுதந்திரமாய் நீராடு வார்கள். யாரும் தெருப் போக்கர்கள் அவ்வழியால் வந்தாலும் அவர்கள் கூச்சப்படுவதில்லை. வருகிறவர்களும் திறந்தும் திறவாமலும் இருக்கும் அவர்கள் உடம்பை நின்று பார்த்து ரஸிப்பதுமில்லை.
அவர்களில் ஒருத்திதான் அப்போது குளித்துக் கொண்டிருந்தாள். பக்கத்துச் சாக்கடைக்கு முன்னால் கொட்டப்பட்டிருந்த குப்பையை தெருநாய் ஒன்று கிளறிக் கொண்டிருந்தது.
ஆனந்தியின் பார்வை நேர்த்திசையாக மலேவிதிக்கு ஓடியது. தவளகிரி ஹோட்டல், ஒன்பது மணி ஷோ படம் பார்த்துவிட்டு வருகிறவர்களுக்கு வியாபாரம் நடத்துவதற்காக வழக்கம் போல் திறந்திருந்தது. ஹோட்டலுக்கு முன்னால் நாலைந்து பேர் நிற்பது தெரிந்தது.
யூனியன் பிளேஸால் வந்த பொலிஸ் ஜீப் ஒன்று உறுமிய வண்ணம் கோல்பேஸ் பக்கம் விரைந்தது.
சுபைர் இளங்கீரன் 128

வசந்தியைக் காணவில்லை.
எங்கே போயிருப்பாள்?. இப்படி ஒருநாளும் போனதில்லையே!. ஆனந்தியின் இருதயம் அச்சத்தால் படபட என்று அடித்துக் கொண்டது. பதை பதைப்புக் கூடியது.
பைப்பில் குளித்துக் கொண்டிருந்தவள் திரும்பினாள். ஆனந்தியைப் பார்த்தாள். இருவருக்கும் பேச்சுப் பழக்கம் இல்லாவிட்டாலும் முகப் பழக்கம் இருந்தது. ஆனந்தி தன்னந் தனியாக அந்த நேரத்தில் அங்கு நிற்பது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
'இந்த நேரத்தில், இங்கே யாரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?" என்று சிங்களத்தில் கேட்டாள் அவள்.
ஆனந்தி அப்போதுதான் சற்றுத் திடுக்கிட்டாள். அந்த நேரத்தில் -சனநடமாட்டமே இல்லாத சூழ்நிலையில் அந்த மாதிரி அவள் இதற்குமுன் நின்றதேயில்லை. ஒருவித அவமானம் புகுந்து மனதைப் பதறச் செய்தது. திரும்பி வீட்டுக்கு ஓடி விடலாமா என்று எண்ணினாள். ஆனால் கால்கள் ஏவவில்லை. பதில் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
'தம்பியை' என்றாள் அவளும் சிங்களத்தில். 'இந்தப் பொடியன்களே இப்படித்தான். பகலென்றுமில்லை; இரவென்று மில்லை. சுற்றித் திரிவான்கள், வீடு நினைவிருக்காது. நேரத்தோடு படுத்து விடிய எழும்ப வேணுமே என்று நினைத்து வீடுகளுக்கு நேரத்தோடு வாறதுக்கு இவங்களுக்கு உத்தியோகமா இருக்குது? அல்லது வேறு வேலை ஏதாவது இருக்குதா, இல்லைத்தானே. அதுதான் திரிகிறாங்கள். கிறிஸ்மஸ். எங்கே கிடக்கிறாங்களோ. படத்துக்குப் போயிருப்பாங்கள்' என்று ஆனந்திக்குச் சொல்வது போல் தனக்குத்தானே சொல்லிவிட்டு தண்ணீர் நிறைந்திருந்த வாளியை எடுத்துத் தலையில் சரித்தாள்.
இவளுக்கும் ஒரு ராசு இருக்கிறானோ. ஆனந்திக்குச் சில நிமிடங்களுக்கு முன் தோன்றிய உணர்ச்சி சட்டென்று மறைந்து விட்டது. ஒரு பெருமூச்சுடன் திரும்பவும் மலே வீதியைப் பார்த்தாள்.
ஆங்கிலப் படம் முடித்து ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். வசந்தியை காணவில்லை. மனம் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது.
குளித்துக் கொண்டிருந்தவளும் போய்விட்டாள். ஆங்கிலப்படம் முடிந்து வந்தவர்களின் தலையும் மறைந்து விட்டது.
நேரம் மேலும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனந்தியும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
ஒரு டாக்ஸி வேகமாக வந்து நின்றது. வசந்தியை இறக்கி விட்டு அது பறந்தது. அவளைக் கண்ட பிறகுதான் ஆனந்திக்கு மனதில் ஏறியிருந்ததிகிலும்
129 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 70
கனமும் இறங்கின.
அக்காவை அந்த நேரத்தில் தன்னந்தனியாக அங்கே கண்டதும் வசந்தியும் ஒருகணம் திடுக்கிட்டாள். மறுகணம் சமாளித்துக் கொண்டு சந்துக்குள் நடந்தாள். ஆனந்தியும் ஒன்றும் கேட்காமல் பின்னால் சென்றாள்.
வீட்டுக்கு வந்ததும் தங்கையை பார்த்தாள். பிரமாதமான அலங்காரத்தோடு தான் போயிருக்கிறாள் என்று தெரிந்தது. அவளையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டு நின்றாள். வசந்தி உடைகளைக் களைந்து மாற்றினாள்.
'இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?"
A
'நான் கேட்கிறது காதில் விழேல்லியா?"
'விழுகுது'
"அப்ப கேட்கிறதுக்குப் பதில் சொல்லேன்'
'அத்தான் வந்தார். அவரோடு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்."
"அத்தானா..! அது யாரடி புதுசா ஒரு அத்தான்?"
'முத்து
'ஒ. அவனைச் சொல்றியா? அந்த முத்தோ பவளமோ நம்ம வீட்டுக்கு வராதே. கோபமாச்சே. அம்மா இருக்கிற போதே அந்தப் பந்தங்கள் எல்லாம் அறுந்து போச்சே.?"
霹 *
'திடீரென்று அவனுக்கு நம்ம ஞாபகம் ஏன் வந்தது? சரி, வந்தான், பார்த்தான், கதைத்தான். அதோடு போக வேண்டியது தானே? தன் வீட்டுக்கு உன்னை எதுக்காகக் கூட்டிப் போனான்? அவன்தான் கூப்பிட்டாலும் நீ ஏன் போக வேணும்? போனநீஇவ்வளவு நேரம் ஏன் அங்கே நிற்க வேணும்?நின்ற நீ இந்த நேரத்தில் தன்னந்தனியாக ஏன் வரவேணும்? அழைத்துக் கொண்டு போனமாதிரி கொண்டு வந்து விடலாமே? ஒரு பொறுப்புமில்லாமே டாக்ஸியிலே ஏற்றி உன்னைத் தனியாக அனுப்பினானே சாமம் ஒரு மணிக்கு, ஏண்டி அவன் அத்தானா?"
வசந்தி ஒன்றும் பேசவில்லை. உடையை மாற்றியவள் குசினிக்குள் சென்றாள். இரண்டு கிளாஸ் தண்ணீரைக் குடித்தாள். பாயுடன் மீண்டும் பின் தட்டுக்குப் போய் பாயைப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்.
'நீ சாப்பிட்டியா?"
சுபைர் இளங்கீரன் 130

ஓ.. . . . p :
'ஒரு நாளுமில்லாத திருநாளாய் முத்து வந்து உன்னைக் கொத்திக் கொண்டு போனது எனக்குப் புதினமாய்த்தான் இருக்குது. போன நீகாந்தி யிடம் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, இத்தனை நேரம் உன்னைக் காணாமே என்மனம் பட்டபாடு, பயந்த பயம்! நடு நிசி என்றும் பாராமே நானும் தெருவுக்கு வந்து மனம் பதற, கால் விறைக்க உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்குதே! இனி ஒரு நாளும் என்னை இப்படித் தவிக்க வைக்காதே, வைக்கக்கூடாது. அத்தானோ கொத்தானோ அவன் முகத்தையும் பார்க்கக் கூடாது. சொல்லிவிட்டேன்."
இத்தனையையும் கூறிவிட்டு, விளக்கையும் அனைத்துவிட்டு அவளும் படுத்துவிட்டாள்.
ஆனந்தியின் தாய் மாமன் இறந்து விட்டார். மகன் முத்து மட்டும் தான். தாய் இருக்கிறாள். புருஷன் இறந்ததும் அவள் முத்துவை நம்பி இருக்க முடியாமல் இன்னொருவனை வைத்துக் கொண்டு வாழ்ந்தாள். நமது சமுதாயத்தில் பெண் எப்போதும் ஆண்துணையை நாடுகிறவள்தான். அவளுடைய சீவியத்துக்கு ஒரு உத்தரவாதம் தேவைதானே. அவள் ஒருவ னைச் சேர்த்து வைத்துக் கொண்டதில் தவறு ஏதுமில்லை. இதனால் அவள் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால் ஆனந்தியின் அம்மா இதைப் பெரிய அவமானமாக கருதி உறவை முறித்துக் கொண்டாள். அதோடு முத்துவும் அவன் அம்மாவும் அவர்களுடன் கொண்டாடுவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.
இப்போது அவன் உறவு கொண்டாட வந்தது ஆனந்திக்குப் பிடிக்கவே இல்லை- இவனை யார் கூப்பிட்டாங்க?இவன் ஏன் வர வேணும்?
உண்மையிலேயே அவன் வந்தானா, வசந்தி அவனுடன் போனாளா? வசந்தியின் கதையை ஆனந்தி நம்பிவிட்டாள்.
# # # 督好
131 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 71
எட்டாவது அத்தியாயம்
றிஸ்மஸ் முடிந்து மூன்று நாட்களாகியும் டேவிட் கம்பெ னிக்கு வரவில்ல்ை. ஆனந்தி கன்டீனுக்கு வரும் போதெல் லாம் அவளுடைய விழிகள் தாமாகவே அவனைத் தேடும். அவன் வராததற்கு காரணம் விளங்காமல் குழம்பும்.
அன்று பின்னேரம் வேலை முடிந்து பஸ்ஸுக்காக வரும் போதும் மனம் குழம்பிக் கொண்டுதான் இருந்தது. அதேசமயம் சுபத்திராவின் நினைவும் வந்தது. டேவிட் தன் மனதில் உள்ளதைச் சொல்லிய திலிருந்து தன்னை மட்டுமல்ல, சுபத்திராவையும் மறந்திருந்தாள். அவளும் ஒரு கிழமையாக ஆனந்தியைப் பார்க்க வரவில்லை. இன்று எப்படியாவது சுபத்திராவைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் உண்டாயிற்று. வீட்டுக்குப் போகாமல் நேராக தெஹிவலைக்குச் சென்றாள்.
சுபத்திரா எங்கும் போகவில்லை. கையில் புத்தகத்துடன் அங்குதான் இருந் தாள். ஆனந்தியைக் கண்டதும் 'இன்று மத்தியானமெல்லாம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்' என்று புத்தகத்தை 'டக்'கென்று மூடினாள்.
'சும்மா சொல்லாதே, இது உண்மையாய் இருந்தால் ஒரு கிழமையாக என்னைப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டியே' என்று கூறிக் கொண்டே கதிரையில் அமர்ந்தாள்.
A. A
உஷ். ' என்று கண்டு விரலை தன் உதட்டில் வைத்துக் காட்டி விட்டு, "மெல்லப் பேசு, அம்மா படுத்திருக்கிறா' என்றாள் சுபத்திரா.
சுபைர் இளங்கீரன் 132
 

'இந்த நேரம் அவ படுக்க மாட்டாவே!"
'அவவுக்குச் சுகமில்லே. நெஞ்சுவலி, பிரஷர், காய்ச்சல் எல்லாம் ஒன்றாய் வந்து பெரும் பிரச்சினையாய்ப் போய்ட்டுது. ஒரு கிழமையாவது நான் ஸ்கூலுக்குக் கூட போகேல்லே. டொக்டர், மருந்து, அம்மா, வீடு என்று இருக்கிறபோது உன்னைப் பார்க்க எப்படி வாரது?"
சுபத்திரா இதைக் கூறிய மறுவினாடி ஆனந்தி சரேலென எழுந்து அடுத்த அறைக்குள் ஓடினாள்.
கட்டிலில் படுத்திருந்த அம்மாவின் இமைகள் மூடியிருந்தன. அவள் நித்திரை தான் கொள்கிறாளா, அசதியில் கண்ணை மூடிக் கொண்டு கிடக் கிறாளா என்று தெரியவில்லை. முகம் வாடிச் சுருங்கியிருந்தது. போர்வைக்கு வெளியே கிடந்த கைகள் மெலிந்து போயிருந்தன.
சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுதுக்கம் தாளாமல் வெளியே வந்தவர் ஈரம் கசிந்த தனது விழிகளைத் துடைத்தவாறு சுபத்திரா வின் அறைக்குள் சென்றாள்.
'நிலைமையைத் தெரிவித்து எனக்கு ஒரு போஸ்காட்டாவது போட்டி ருக்கப்படாதா, பறந்து வந்திருப்பேனே...' என்று படபடப்புடன் கேட்டாள் ஆனந்தி'
'நீ வந்து என்ன செய்கிறது? கண்ணைக் குளமாக்கிக் கொண்டு மூக்கைச் சிந்தியடி இருப்பாய். அம்மாவை விட உன்னைத் தேற்றுகிறதே எனக்குப் பெரும் பிரச்சினையாக இருந்திருக்கும்" என்று லேசாய்ச் சிரித்தாள்.
'உன்மனசும் ஒரு மனசுதான். நான் அழுதுகொண்டு கேட்கிறேன். நீ சிரித்துக் கொண்டு சொல்றியே..!" என்று சிணுங்கினாள்.
'நீ இப்படிச் சிணுங்கிறதைப் பார்த்து எத்தனைநாளாச்சுது" என்று மேலும் சிரித்தாள் சுபத்திரா.
'போடி பகிடிஇருக்கட்டும். எனக்குத்தான் அறிவிக்கலே, அம்மா இப்படிக் கிடக்கிறா என்று சந்திராவுக்காவது அறிவித்திருக்கலாமே, உடனே வந் திருப்பாளே, உன் அத்தான் இதுக்குக் கூட அவளை விடமாட்டாரா?'
"அவர் விடுகிறது இருக்கட்டும். சந்திரா ஓடி வருகிறதுக்கு முந்தி அவநின்ற நிலையைப் பார்த்துத்தான் அம்மாவுக்கு ஷொக்கடிச்சு இந்த நிலைமை வந்தது.' ஆனந்தி ஒன்றும் விளங்காமல் கேள்விக்குறியுடன் சுபத்திராவைப் பார்த்தாள்.
அவள் நடந்ததைச் சொன்னாள்.
好 * 静 * *
33 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 72
வெள்ளிக்கிழமை. அம்மா வெள்ளவத்தைக் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது காய்கறிகள் வாங்கிப் போகலாம் என்று மார்க்கட்டுக்கு வந்தாள். அதே சமயம் சந்திராவும், பின்னால் கூடை நிறைய காய்கறிகளோடு வேலைக்காரப் பெட்டையும் உள்ளேயிருந்து வந்தார்கள்.
மகளைப் பார்த்ததும் அம்மா அப்படியே மலைத்து விட்டாள். அவள் முந்திய சந்திராவாக இல்லாமல் கனவான் வீட்டுப் பெண்ணைப் போலவே லிப்ஸ்டிக்கும், நவநாகரிகக் கொண்டையும், மினி ஸ்க்கேட்டுமாக -வெகு ஸ்டைலாக -வெகு எடுப்பாக கண்ணைக் குத்துகிற விதமாகக் காட்சி தந்தாள்.
அம்மாவுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. இது நம்ம சந்திரா இல்லே. அவளைப் போலவே வேறு யாரோ. என்று நினைப்பதற்குள் ளாகவே, 'அம்மா எப்படிச் சுகம்?' என்று கேட்டாள் சந்திரா.
அம்மா திடுக்கிட்டாள். அவள் சந்திராதான் என்று நிச்சயமாய்த் தெரிந்த தும் மலைப்போடு அதிர்ச்சியாகவும் இருந்தது. மாற்றத்தைக் கண்டு மட்டுமல் லாமல், தொனியில் ஒரு வித ஆவலுமில்லாமல் சர்வசாதாரணமாய் -பிறத்தி யாரைப் போல் விசாரித்தது மனசில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. அதை யும் தாங்கிக் கொண்டு மகளின் முகத்தையாவது சற்றுநேரம் -தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவாவது பார்க்க மனம் தூண்டினாலும் மகளின் உடையும் தோற்றமும் அவளுக்கு உடம்பெல்லாம் கூசச் செய்ததால் முகத்தைக் குனிந்து கொண்டாள். மகளின் கேள்விக்குப் பதில் சொல்ல நா எழவில்லை.
"கதைக்க விருப்பமில்லை யென்றால் பரவாயில்லே. எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை' என்று விகாரமாய்க் கூறிவிட்டு விடு விடு என்று நடந்தாள். அம்மா மேலும் அதிர்ச்சியோடு முகத்தை நிமிர்த்தினாள்.
சந்திரா பளபளக்கும் ஒரு பெரிய காரில் ஏறி அமர்ந்து அதை ஸ்டாட் செய்வதும் வேலைக்காரப் பெட்டை காரின் பின் சீட்டில் இருப்பதும் மறுகணம் அது நகர்ந்து ஓடுவதும் கண்ணில் பட்டன.
அம்மா இடிந்து போய் அந்த இடத்தில் எவ்வளவு நேரம் நின்றாளோ, காய்கறியும், வாங்க மறந்து எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ தெரியாது. வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு தலை சுற்றியது. இருதயம் வேகமாக அடித்தது. உடம்பு வியர்த்தது. தள்ளாடிய வண்ணம் கட்டிலில் போய் விழுந்தாள்.
சுபத்திரா எங்கேயோ போய்விட்டு வந்தவள் அம்மாவை அப்போதுதான் பார்த்தாள். அவள் குளிர்ந்து விறைத்துப் போய்க் கிடந்தாள். பற்களெல்லாம் கிட்டியிருந்தன. கூப்பிட்டுப் பார்த்தாள், அசைத்துப் பார்த்தாள், பேச்சு மூச்சொன்றுமில்லை.
சுபத்திரா திடுக்கிட்டு விட்டாள். திடுக்கிட்டவள் அவளும் மரத்துப் போய் நின்று விடவில்லை. உடனே டொக்டரை அழைத்து வந்தாள். மருத்துவம்
சுபைர் இளங்கீரன் 134

துரிதமாய் நடந்தது. அதிர்ச்சி, பிரஷர், ஆனால் பயமில்லை. கவலைப்பட வேண்டாம் என்று டொக்டர் சொன்ன பிறகுதான் சுபத்திரா சற்று ஆறுத லடைந்தாள்.
அம்மா மறுநாள் காலையில்தான் கண் திறந்தாள். பிரக்ஞையோடு பேசினாள். சந்திராவைப் பற்றிச் சொன்னாள். அம்மாவின் இத்திடீர் நோய்க்கு காரணம் சுபத்திராவுக்கு அப்போதுதான் தெரிந்தது. ஆனால் அம்மாவிடம் அவள் இதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை.
அம்மா நாலைந்து நாள் நல்ல நிலையில் இல்லை. முந்தியைப் போல் மகளைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. மனதில் மூண்டிருந்த திக் பிரமையால் அவளும் அதிகம் பேசாமலிருந்தாள்.
சுபத்திரா இந்த விபரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆனந்தியும் திகைப்பால் வாயடைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். சுபத்திரா தொடர்ந்து சொன்னாள்: 'அம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்குக்கூட அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆச்சரியமாகக் கூட இருந்தது. பொருத்தமில்லாத புருஷன். வாழ்க்கை சந்தோஷமாய் இருக்காது. ஆனாலும் எல்லாம் அவரவர் விதிப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கையில் தன் வாழ்க்கையைச் சகித்துக் கொண்டிருப்பாள். மீறிப் போனால் அழுது அழுது தன்னை தேய்த்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்தேன். இப்படிநினைக்கும் போது எனக்குக் கூட மனம் கலங்கும். கவலையாக இருக்கும்.
"ஆனால் நான் எவ்வளவு தவறாக நினைத்துவிட்டேன் என்று இப்பதான் தெரியுது. அம்மா சொன்னதிலிருந்து பார்த்தால் அவளுடைய அடக்கமும் தாழ்மையும் விதியின் மேல் உள்ள நம்பிக்கையும் எங்குதான் போச்சுதோ. கனவானுக்கு மனைவியாகி, பங்களாவுக்குச் சொந்தக்காரியாகி பணக்காரச் சூழலுக்குள் வாழத் தொடங்கியதும் சந்திரா தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் கூட மாறிப் போய்விட்டாள். ஆனால் சிந்திக்கிற போது, மனுஷனின் வாழ்க்கையைப் பார்க்கிற போது ஆச்சரியப்படுகிறதுக்கு ஒன்றுமில்லே.
"அத்தான் தான் இப்படியென்றால் சந்திராவும் அவரைப் போல் ஆகிவிட் டாள். அவளையும் இனி நினைக்கிறதில் அர்த்தமில்லே. அவ மேலே போய் ட்டா. இனி இறங்க மாட்டா. மேலே போனவர்கள் யார்தான் கீழே இறங்கப் போகிறார்கள். தரையில் நிற்கும் தாய் சகோதரத்தை கொஞ்சம் விசாரித்து வருவோம் என்று கீழே இறங்க நினைத்தாலும் கீழேயே நின்று விடுவோமோ என்று பயம் தடுக்கும். அதோடு அது சிரமமான காரியமும் கூடஅவர்களுக்கு. இந்தக் கஷ்டம் எதுக்கு என்று மேலேயே இருந்து விடுவார்கள். மேலே இருந்து 'அம்மா எப்படிச் சுகம்?" என்று கேட்டால் அந்தச் சத்தம் கீழே நிற்கிறவங்க காதிலே விழுந்தானே என்று நினைக்கிறார்கள். தாய், சகோதரம் என்ற பந்த
135 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 73
பாசங்களெல்லாம் ஒரு எல்லைக்குள் அடங்கியதுதான். அதைத் தாண்டினால் தாண்டியதுதான்.
'கொள்கை, லட்சியம் என்று முழக்கியவர்கள் கூட பழையநிலையிலிருந்து மேலே போய்ட்டா கீழே தங்களோடு நின்றவர்களை மறந்து விடுகிறார்கள். கீழே நிற்கிறவர்கள் ஞாபகப் படுத்தினாலும் செருக்கோடு அலட்சியமாகப் பார்க்கிறார்கள், சந்திரா என்ன, எனக்கும் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் நானும் இப்ப உள்ள சந்திராவாகத்தான் இருப்பேன். மனம், குணம், குறி, நினைப்பு எல்லாமே அவரவரின்நிலைக்குத்தக்க படிதான் இருக்கும் என்கிறது எவ்வளவு உண்மை!
"தெருவிலே நடக்கும் போது காரையும் பஸ்ஸையும் கண்டு பயத்துடன் ஒரத்தோடு ஓரமாக அளவுக்கு மீறி ஒதுங்கி நடந்தவ கார் டிரைவ் பண்ணுகிற அளவுக்கு வந்துவிட்டா. உள்ளுக்கு நல்ல தடித்த சீத்தைத் துணியில் பாவாடை யிருந்தாலும் மெல்லிய நைலோன் சாரியை உடுத்த வெட்கப்பட்டவ மினி ஸ்கேட்ஸ் நாகரிகத்துக்கு உயர்ந்திட்டா என்றால் மேல் மட்ட கொழிப்பு வாழ்க்கை முறையும் அதன் நாகரிகச் சூழலும் எந்த அளவுக்கு அவளைப் பாதித்திருக்குது என்கிறதைப் புரிந்து கொள்ள முடியுது. ஆனா அம்மா டாவம், அவவுக்குப் புரிந்து கொள்ள முடியேல்லே, திக்கு முக்காடுகிறா. எதை நினைக்கிறது, எதைக் கேட்கிறது, எதைச் சொல்கிறது என்று தெரியாமல் முழிக்கிறா. தன்மகள், தன்கைக்குள் அடங்கி வளர்ந்தவ, தான் நினைக்கிற தையும் சொல்கிறதையும் செய்து பழகியவள் இப்படிப் போய்ட்டாளே என்று நினைக்கிற போது அவவுக்கு யாரையுமே, ஒன்றையுமே நம்ப முடியேல்லே. சந்திராவைப் பற்றிச் சொல்லிவிட்டு 'உன்னைக்கூட நம்பமாட்டேன்' என்று முத்தாய்ப்பு வைத்தா. ஆனா நான் ஒரு அபிப்பிராயமும் சொல்லேல்லே. சொல்லி அவவுக்கு விளக்கப் போறதுமில்லே.
இடையில் அம்மா தானாகவே கேட்டாள். 'நீ என்ன நினைக்கிறாய்?" என்று.
'நான் எதை நினைக்கச் சொல்கிறாய்? அவ இப்ப நல்ல சந்தோஷமாய், திருப்தியாய், குதூகலமாய் இருக்கிறா. உனக்கு எதுக்கு கவலை? நீயும் சந்தோஷமாய், திருப்தியாய், குதூகலமாய் இரு என்று சொன்னேன். அம்மா என்ன கூறினா தெரியுமோ..?
'உனக்கு அவளிடம் இரக்கமோ, பாசமோ இல்லே. ஏன் என்னிடமும் கூட இல்லைத்தான். இருந்தா இந்த மாதிரிச் சொல்லமாட்டாய்' என்று நான் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல், தான் புரிந்து கொண்டதைச் சொன்னா. நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். அம்மாவை நினைக்கப்
பரிதாபமாயிருக்குது.
'அத்தான் வீட்டோடு தொடர்பு முறிந்து போனதிலிருந்து அம்மா
சுபைர் இளங்கீரன் 136

சந்திராவை நினைச்சு நினைச்சு உருகிக் கொண்டிருந்தா. இப்ப அந்த மகள் உதாசீனப் படுத்திவிட்டுப் போன பிறகும் கூட அவ தவிப்பு அடங்கேல்லே. தாய்ப்பாசம் என்கிறது கோடையிலே வற்றிப் போகிற குளமல்ல, அது மகாவலி கங்கையைப் போல என்று இதிலிருந்து நல்லாய்த் தெரியுது. அதுக்கு கீழே மேலே என்ற பேதங்கள் தெரிகிறதில் லே சந்திராவுக்குத் தெரியுது. எனக்கும் தெரியுது. ஆனா எனக்கும் சந்திராவுக்கும் உள்ள வித்தியாசம், நான் அம்மாவோட கீழேயே நிற்கிறது தான். அம்மா மேலே எனக்கு இருக்கிற பாசத்தை வெட்டிப் பிரிக்க சந்திராவுக்கு வந்தது போல எனக்கும் ஒரு கனவானோ கனவான் வட்டாரத்து வாழ்க்கையோ கிடைக்கேல்லே. அதே சமயத்திலே எனக்குச் சந்திரா மேலே பாசமோ இரக்கமோ இல்லே என்றும் அர்த்தமில்லே. அவ இருக்கிற நிலை பாசத்தைக் கொன்றாலும் நான் இருக்கிற நிலை பாசத்தைச் சாகடிக்கேல்லே.
சந்திரா விஷயத்தை அம்மா கூறியதைக் கேட்டதிலிருந்து தன் மனதில் உருவான எண்ணங்களை -சிந்தனையில் பட்டதையெல்லாம் ஒரே மூச்சில் ஆனந்திக்குச் சொல்லி முடித்து விட்டு எழுந்து குசினிக்குச் சென்றாள் சுபத்திரா.
* * * * 壹
சற்று நேரத்துக்குள் டீயைப் போட்டு இரண்டு கிளாஸில் எடுத்துக் கொண்டு வந்த சுபத்திரா, ஒன்றை ஆனந்தியிடம் கொடுத்து விட்டு 'இப்ப முடிவு என்ன தெரியுமா? அம்மாவுக்கு ஒரு மூத்த மகள், எனக்கு ஒரு அக்கா இருக்கிறது உண்மையாக இருந்தாலும் நடைமுறையில் இல்லே என்கிறதுதான்' என்று கூறிவிட்டு டீயைக் குடித்தாள்.
ஆனந்திக்கு திகைப்பும் வியப்பும் கூடிவிட்டன. அதுவரை குறுக்கே விழாமல் சுபத்திரா கூறியதையெல்லாம் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந் தவள் திடீரெனச் சொன்னாள்: "இதை எவ்வளவு சர்வசாதாரணமாய்ச் சொல்லிவிட்டாய். சந்திரா என்ன, நீயே எனக்குப் புதிர்தாண்டி!'
"புதிருமல்ல, புடலங்காயுமில்லே. இப்ப இருக்கிற வாழ்க்கையைச் சரிவரப் புரிந்து கொண்டால் நான் சொல்கிற மாதிரி நீ சொல்லாவிட்டாலும் நான் சொல்கிறதைத்தான் நீயும் சொல்லுவாய். சரி இதை விடு.'
"விடுகிறது என்னடி சந்திராவாஇப்படிப் போய்ட்டா என்று நினைக்காமே இருக்க முடியாதே' - ፵፬፻ 'போய்ட்டாவே. அதுக்கு காரணத்தையும் சொல்லி விட்டேனே. இனி அப்படி நினைக்கிறதிலே என்ன அர்த்தம் இருக்குது?"
'அம்மா சொன்னது சரிதான்."
137 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 74
'எதைச் சொல்கிறாய்?" 'யாரையும் நம்ப முடியாது என்கிறதை' 'இது தவறு ஆனந்தி. நீ என்னை நம் பேல் லியா? உன் டேவிட்டை நம்பேல்லியா?"
'இந்தா உன்னைநான்நம்புகிறது இருக்கட்டும். இதுக்குள்ளே உன் டேவிட் என்று ஏன் இழுத்துப் போடுகிறாய்?' என்று முகம் சிவக்கக் கூறினாள் ஆனந்தி.
'சரி இழுக்கேல்லே. நீ றோஸியை நம்பேல்லியா? உங்க கம்பெனியிலே வேலை செய்கிற ஆட்களின் சுபாவத்தை வியந்து வியந்து வர்ணித்து வர்ணித்துச் சொல்லுவியே அவர்களையெல்லாம் நம்பேல்லியா? மனுஷரை நம்புகிறதிலேயும் நம்மை நம்புகிறதிலேயும் வாழ்க்கையின் பிடிப்பே தங்கியிருக்குது. இந்த நம்பிக்கைக்கு மாறாக சிலர் விலகிப் போகலாம். சில விஷயங்கள் மாறிப் போகலாம். அதுக்காக ஒன்றையும் நம்பக் கூடாது, யாரையும் நம்பக்கூடாது என்று சொல்கிறது சரியா? இது ஏமாற்றத்தின் அறிவிப்பு. விரக்தியின் தீர்ப்பு. அம்மாவுக்கு இப்ப இது இரண்டும் இருக்குது. அதனால் அவநம்ப மாட்டேன் என்று சொல்கிறா. நீ அதைக் கிளிப்பிள்ளை மாதிரி எனக்குச் சொல்கிறாய்'
'நீ நிறையப் படிக்கிறவ. இப்படியெல்லாம் பேச உனக்கு வருகுது." "படிக்கிறது மட்டுமில்லே ஆனந்தி, எனக்கும் இந்தச் சின்ன வயசுக்குள்ளே பல அனுபவங்கள் இருக்குது. புத்தகத்தில் இருக்கிறதை ஒப்புவிக்கேல்லே. நம்மைச் சுற்றி நடக்கிற வாழ்க்கையைப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.'
"நீ சொல்கிறதிலே உண்மை இருக்கலாம், அர்த்தமும் இருக்கலாம். ஆனா எனக்கென்னவோ சந்திராவை நினைக்கிற போது ஒரேதிகைப்பாய் இருக்குது. உண்மையைச் சொல்லு, உனக்கு திகைப்பாய் இல்லையா?"
'திகைப் பென்ன, அதிர்ச்சியாய் இருந்தது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே. இப்ப இல்லே. ஆனா சந்திராவை மினிஸ்கேட்டோட ஒரு தடவை பார்த்து ரசிக்க ஆவலாயிருக்குது' என்று சிரித்தாள்.
'போடி, இந்தச் சோகமே உனக்கு கிண்டலும் கேலியுமாய் இருக்குது. ஆனா அம்மாவுக்கு இது பெரிய இடி. இதை நினைச்சு அம்மாவுக்கு இன்னும்
ஏதாவது.
'எனக்கு அதுதான் கவலை. அதனால்தான் அவ பக்கத்திலேயே இருக் கிறேன். இது இருக்கட்டும். உன் டேவிட் விவகாரம் எந்த இடத்திலே நிற்குது?" "இப்ப அதை நான் சொல்லிநீ ரசிக்க வேணுமாக்கும். அம்மாவைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்க, நான் -டேவிட் என்று ஏன் சிந்திக்க வேணும். இப்ப அம்மாவுக்கு எப்படி இருக்குது. அதைச் சொல்லு?"
சுபைர் இளங்கீரன் V 138

'ஒரளவுக்கு சுகம்'
'நீதன்னந்தனியாக இருந்து இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக் கிறியோ.. ஸ்கூல் வேறே. பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லே. நான் வசந்தியை அனுப்பிவைக்கிறேன். உனக்கு உதவியாகவும் இருக்கும், மொட்டு மொட்டென்று இருக்காமே பேச்சுத்துணையாகவும் இருக்கும்.'
'வேணாம். நான் இன்னும் ஒரு கிழமைக்கு லீவு போட்டு விட்டேன். அதுக்குள்ளே அம்மாவுக்கு நல்ல சுகமாயிடும். அப்படி இங்கே தலைக்கு மேலே வேலை ஒன்றுமில்லே. துணைக்கு இது இருக்குது' என்று சொல்லி புத்தகத்தைக் காட்டினாள். ... ان، ہین؟
'இத்தனை சோகத்துக்குள்ளேயும் உன்னாலே படிக்க முடியுது. ஆனா என்னாலே புத்தகம் பத்திரிகை என்று திறக்கவே முடியேல்லே. இதுக்கு கூட ஒரு வைராக்கியம் வேண்டும் போலிருக்குது.'
'வைராக்கியம் என்று சொல்கிறதை விட பழக்கம் என்று சொல்கிறதுதான் பொருத்தம்'
பேசிக் கொண்டிருந்த சுபத்திரா மேசையிலிருந்த மணியைப் பார்த்து விட்டுச் சரேலென்று எழுந்தாள். 'அம்மாவுக்கு மருந்து கொடுக்க வேணும்' என்று கூறி விட்டு அடுத்த அறைக்குச் சென்றாள். ஆனந்தியும் போனாள்.
சுபத்திரா மருந்தை எடுத்துக் கொண்டு கட்டிலுக்கு வந்து 'அம்மா...' என்று மெல்லக் கூப்பிட்டாள். w
A
ம்.' என்று கண்களைத் திறந்தாள் அம்மா. 'மருந்து.' என்று சொல்லியவள் தொடர்ந்து 'ஆனந்தியும் வந்திருக் கிறா அம்மா' என்றாள்.
'ஆ.ங்' என்று முனகியவாறு விழிகளை அசத்திப் பார்த்த அம்மா, 'ஆனந்தி. '' என்று கம்மிய குரலில் கூறிவிட்டு, எழுந்து சாய்மானமாக இருந்து மருந்தைக் குடித்து விட்டு, பக்கத்தில் வந்து அமரும்படி ஆனந்திக்குச் சைகை காட்டினாள்.
ஆனந்தி அருகில் போய் அமர்ந்ததும் அவளுடைய கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு 'நீ இப்பதான் வந்தியா?" என்றாள்.
'இல்லே மாமி. வேலை முடிந்து நேரே இங்கேதான் வந்தேன். வந்த பிறகுதான் உங்க நிலைமை தெரிஞ்சுது. சுபத்திரா எல்லாம் சொன்னா'
'முருகன் என்னை நல்லாய்ச் சோதிக்கிறான். சோதிக்கட்டும். அவனுக்கு என்மேலே அவ்வளவு கருணை!' என்று ஒரு வரண்ட சிரிப்பைச் சிந்தினாள் அம்மா.
ஆனந்திக்கு ஆறுதல் சொல்லத் தோன்றவில்லை. ஆனால், 'உங்களுக்கு இப்ப எப்படி இருக்குது?’ என்று கவலையோடு கேட்டாள்.
139 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 75
"எப்படி இருந்தால்தான் என்ன? இனி இந்தக் கட்டைக்குச் சுகமுமில்லே, துக்கமுமில்லே' என்று வேதாந்தம் கதைத்து விட்டு சிறிது நேரம் மெளனமானாள். பிறகு “என் கதை முடிகிற தறுவாயிலே இருக்குது. எனக்கு இப்ப இருக்கிற கவலை சுபத்திரா தனித்துப் போவாளே என்கிறதுதான். ஆனா சந்திரா இல்லேன்னு போய்ட்டாலும் அவளுக்கு நீ இருக்கிறாய். உனக்கு எந்த நிலைமை வந்தாலும் சுபத்திராவை விட்டுப் போக மாட்டாய் என்ற ஒரு நம்பிக்கை. அதுதான் எனக்கு ஒரு ஆறுதல். '
இத்தனையையும் சொல்லி முடித்ததும் அம்மாவுக்குகளைப்பாய் இருந்தது. கொஞ்ச நேரம் இடைநிறுத்தி இளைப்பாறினாள்.
உணர்ச்சிவசப்பட்டு தன்னை இழந்து போன ஆனந்திக்குப் பேச முடியவில்லை. அம்மாவின் கையை அவளும் பிடித்தாள். விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் அம்மாவின் போர்வையில் விழுந்தன.
'என்னைப் பார்த்து, நான் சொல் கிறதைக் கேட்டு உனக்கு கண்ணிர் வருகுது. ஆனா நான் பெற்ற மகள் சந்திராவுக்கு வரேல்லே' -அம்மாவின் குரல் இடறியது.
சுபத்திராவுக்கு பெரும் சங்கடமாக இருந்தது. 'என்னம்மா இது. அதிகமாக கதைக்கக்கூடாது என்று டொக்டர் சொல்லியிருக்கிறார். ஆனந்தியோடு ஆறுதலாய்க் கதைக்கலாம். இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் அமைதியாக இரேன்'
அம்மா முகத்தைத் திருப்பி மகளைப் பார்த்தாள். 'அன்புக்கு, காலத்தைப் போல அவசரம் அதிகம் என்கிறது புத்தகம் புத்தகமாய் படிக்கிற உனக்குத் தெரியேல்லே'
சுபத்திராவுக்கு வியப் பாய் இருந்தது- அம்மா உவமானத் தோடு மிக அழகாய்ச் சொல்கிறாளே!.
அம்மா தொடர்ந்தாள்: "டொக்டர் உடம்பைப் பற்றிச் சொல்லுவார். மனசைப் பற்றி சொல்ல அவருக்குத் தெரியாது. ஆனா நான் சொல்ல வேண்டியதை இப்பவே சொல்லி வைக்க வேணும்' என்று முகத்தைத் திருப்பி 'பார்த்தியா ஆனந்தி ஆறுதலாய்க் கதைக்கலாமாம். முருகனே அந்த ஆறுதலைப் பற்றி யோசிக்கேல்லே என்கிறது எனக்கு நல்லாய்த் தெரியுது. இவவுக்குத் தெரியேல்லே' என்றாள்.
'இப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமி, உங்களுக்குத் திடீரென அப்படி ஒன்னும் வந்திடாது" என்றாள் ஆனந்தி, துக்கம் தொண்டையை அடைக்க.
அம்மாவின் பேச்சை எப்படி நிறுத்துகிறது என்று யோசித்தாள் சுபத்திரா, 'ஆனந்தி நீ இப்ப வீட்டுக்குப் போக வேணுமா?"
ஆனந்தி கண்களைத் துடைத்து விட்டு "எனக்கு ஒன்னும் அவசரமில்லே. நான் இன்னும் அம்மாவின் பக்கத்திலே இருந்து போட்டு ஆறுதலாய்ப்
சுபைர் இளங்கீரன் 140

போவேன்' என்றாள்.
அம்மாவுக்கு சிறிது எரிச்சலாய் இருந்தது. 'நீ ஏன் இவளைத் துரத்து கிறாய்? ஆனந்தி சொல்கிறது போல இவ என் பக்கத்திலேயே இருந்து போட்டு ஆறுதலாய்ப் போகட்டும்'
'நான் துரத்தேல் லே. ஆனந்தி சாப்பிட்டுப் போட்டு போகலாமே என்கிறதுக்காகத் தான் கேட்டேன். ஆனந்திநீவா. நாம கதைத்துக் கொண்டே ஏதாவது சமைக்கலாம். அம்மாவுக்கும் ஏதாவது லைட்டாய்ச் செய்ய வேணும்.'
'எனக்குப் பசிக்கேல்லே, எனக்கு ஒன்னும் வேணாம்' என்றாள் அம்மா. 'எனக்கும் தான். இப்ப என்னாலே சாப்பிடவே முடியாது' என்று ஆனந்தியும் பக்க வாத்தியம் வாசித்தாள்.
'இல்லே ஆனந்தி. எனக்காக யாரும் பட்டினி கிடக்கக் கூடாது. நீஇருந்தா நானும் ஏதாவது உழட்டிக் கொண்டிருப்பேன். உன் மனசு கேட்காது. எழும்பு, போய் ஏதாவது சமைச்சு சாப்பிடுங்க"
சுபத்திரா உடனே எழும்பி வரும்படி ஆனந்திக்குக் கண்ணைக் காட்டி விட்டு வெளியே வந்தாள். ஆனந்தியும் அம்மாவைப் பிரிய மனமில்லாத வளாய் எழுந்தாள்.
லைட்டைப் போட்டு விட்டு சுபத்திரா சொன்னாள் "உனக்கு ஒன்றுமே விளங்கிறதில்லே. நீ பக்கத்தில் இருந்தால் அம்மாவின் வாய் சும்மா இருக் குமா? அவ அதிகமாய் கதைக்காமல் ரெஸ்டாய் இருக்க வேணும். இது உனக்குத் தெரியேல்லியே' என்று கூறிக் கொண்டே அடுப்படிக்கு நடந்தாள். 'எனக்குத் தெரியாமல் இல்லே சுபத்திரா. ஆனா மனசு கேட்கேல்லே. என்மேலே அம்மாவுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பார்த்தியா..?"
'அதைத்தான் நானும் சொல்ல எண்ணினேன். யாரையும் நம்பப்படாது என்று சொன்னவ, உன்னை நம்புகிறா. தனக்குச் சுகதுக்கம் இல்லேன்று சொன்னவ, என்னைப் பற்றிக் கவலைப்படுகிறா. விரக்தியடைந்த மன சுக்குக்கூட ஏதாவது ஒரு பிடிப்புத் தேவைப்படுது. தனக்குத்தானே முரண் படுகிற மனித இயல்புகளில் இதுவும் ஒன்று' என்று சொல்லிக் கொண்டே டின்னில் இருந்த மாவை பேசினில் கொட்டினாள்.
'இப்ப என்ன செய்யப் போகிறாய்?" 'இடியப்பம்'
'அம்மாவுக்கு?' 'அம்மாவுக்கும் இடியப்பம்தான் நல்லது"
* * * * *
141 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 76
தெஹிவளையிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. அவளுடைய சிந்தனை சந்திராவையும், அம்மா வையும் சுபத்திரா சொன்ன விஷயங்களையும் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. சுபத்திரா கூறிய கருத்துக்களை அவள் ஓரளவு கிரகித்துக் கொண்டாலும் சந்திரா இப்படி மாறியதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கணவனோடு சேர்ந்து கொண்டு அம்மாவையும் சுபத்திராவையும் புறக்கணித்திருக்கப்படாது என்று கருதினாள். சந்திரா இப்படி மாறினது அவளுக்குச் சொல்லொணா வருத்தத்தைக் கொடுத்தது. இதற்காக அவள் மீது தனக்குள்ள அன்பையோ, அபிமானத்தையோ குறைத்துக் கொள்ளவுமில்லை. ஆனால் சந்திரா இப்போது சேர்ந்துள்ள வர்க்கத்திடம் பணக்காரத் தன்மையிடம் ஆனந்திக்குத்'தீராத வெறுப்பு மூண்டது. வறுமை யையும் இல்லாமையையும் கண்டு ஆத்திரப்பட்டு மனம் நொந்து கொண் டிருந்தவள் இப்போது செல்வத்தின் மீது ஆத்திரப்பட்டாள். சந்திராவைப் பிரித்ததும் அம்மாவை இந்தப்பாடு படுத்துவதும் இதன் வேலைதானே. இதுக்கு அரக்ககுணம் அதிகம் என்று தனக்குள்ளேயே வெறுத்துக் கொண் டாள்.
அம்மாவை நினைத்தும் கவலைப்பட்டாள். அவள் மகளின் துயரால் விரைவில் போய் விடுவாளோ என்று பயந்தாள். அம்மா இறந்து விட்டால் சுபத்திரா தனிமையாகி விடுவாளே என்ற எண்ணம் வரவில்லை. "சந்திரா இல்லேன்று போய்ட்டாலும் அவளுக்கு நீ இருக்கிறாய். உனக்கு எந்த நிலைமை வந்தாலும் சுபத்திராவை விட்டு நீ போகமாட்டாய் என்ற நம் பிக்கைதான் எனக்கு ஆறுதல்' என்று அம்மா சொன்னதைத் திரும்ப திரும்ப நினைத்து மனம் நெகிழ்ந்தாள். அந்த வார்த்தை அவளுக்கு ஆறுதலா யிருந்தது.
மாமி சந்திராவின் நிலைமை எனக்கு வரவேண்டாம். என்னோடும் என்னைச் சுற்றியிருக்கிற யாரையும் விட்டு நான் போக மாட்டேன். எந்தக் கனவானும் என்னைப் பிரித்துக் கொண்டு போய் என் சுபத்திராவை நெருங்காதபடி மேலே உயரத்தில் வைத்துவிட நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என்னை நீங்க சரியாக உணர்ந்து வைத்திருக்கிறீங்க. நான் சாம்பலானாலும் என் உயிர் சுபத்திராவோடுதான் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமி. என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
* * * 娜 *
அன்று மத்தியானம் ஆனந்தி கன்டீனுக்குப் போனபோது டேவிட் அங்கு இருப்பதைக் கண்டதும் தன்னையும் அறியாமல் ஒரு நாணத்துடன் வழக்கமான இடத்தில் போய் அமர்ந்தாள்.
தன் இதயத்தில் டேவிட் இருப்பதைப் போலவே தனக்கும் அவனுடைய
சுபைர் இளங்கீரன் 142

இதயத்தில் ஒருதனி இடம் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன் உள்ளம்தான் அவனிடம் நழுவி ஓடிவிட்டது என்று இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தாள். தன் சிந்தையில் அவன் உருவம் பதிந்து விட்டாலும் அவனை விட்டு விலகியிருப்பதே நல்லது என்று எண்ணி அதன்படியே நடந்தாள். ஆனால் டேவிட் தெரிவித்த விஷயம் அவளின் மன உறுதியைச் சற்று அசைத்துவிட்டது. அவன் அப்போது கூறிய வார்த்தை களினால் மனமெல்லாம் இனிக்க, உள்ளமெல்லாம் மணக்க உணர்ச்சிமயமாகி விட்டாள். வாழ்க்கையில் என்றுமே அனுபவித்தறியாத இன்ப போதையில் அவள் லயித்து விட்டாள். டேவிட்டைப் பார்க்கவோ, அவனுடன் பேசவோ வெட்கமாயிருந்தது. அதனால்தான் அன்றைய தினம் மெளனமாக வந்து விட்டாள்.
என்றாலும் ஆனந்தியின் மனம் மீண்டும் போராடத் தொடங்கி விட்டது. டேவிட்டிடம் தன்னைப் பூரணமாக ஒப்புவிக்க இசைந்தாலும் - அந்தச் சமர்ப்பணத்திலேயே வாழ்வின் முழு நிறைவையும் அனுபவிக்கத் துடித்தாலும் தன்னுடைய நிலைமையை எண்ணி அத்துடிப்பை அடக்கவே விரும்பினாள். ஆனால் தன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டாம் என்று டேவிட் கேட்டுக் கொண்டதை அவளால் மறுக்க முடியவில்லை. தனக்காக இரங்க வேண்டியவள் அவனுக்காக இரங்கினாள். அவனுடைய இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யாவிட்டால் தனக்கே அது பெரும் பாரமாக இருக்கும் என்று கருதினாள். அவனுடன் பழகுவது தன் மன உறுதியை மேலும் குலைத்து விடலாம் என்று பயந்த போதிலும் 'என்னதான் நடக்கப் போகுது அதையும் பார்ப்போமே" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
இத்திடத்தோடு தான் அவள் கன்டீனுக்கு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய விழிகள் டேவிட்டைத் தேடின. அவனைக் காணவில்லை. இப்போது இருக்கிறான்.
வேறொரு பக்கத்தில் மற்றவர்களோடு கதைத்துக் கொண்டிருந்த டேவிட் ஆனந்தியைக் காணவில்லை. ஆனால் அவளோ நாணத்தையும் மீறி அவனை அடிக்கடி பார்த்தாள்.
இடையில் ராசம்மா அங்கு வந்தாள். 'என்ன கடுமையான யோசனை' என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.
'ஒ.ஒன்றுமில்லை. எங்கே றோளமியைக் காணேல்லே?"
"அவ இன்றைக்கு வரேல்லே. நேற்றே எனக்குச் சொன்னா. அவ அம்மாவுக்குச் சுகமில்லையாம்.'
"பாவம். அவ அம்மாவுக்கு இப்ப அடிக்கடி சுகமில்லாமல் வருகுது." 'நல்ல சாப்பாடும் பராமரிப்பும் இல்லாட்டி வயசாகிக் கொண்டு வருகிற இந்த நேரத்திலே இப்படித்தான் எல்லாருக்கும் வரும். வீட்டிலே எங்க
143 அவளுக்கு ஒரு வேலை வேண்டும் ,

Page 77
மாமாவுக்கும் இப்படித்தான். றோஸி என்ன செய்வா. கையில் காசு கூட இல்லே. நான்தான் ஒரு ஆளிடம் நூறு ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். வட்டி எவ்வளவு தெரியுமா?" பதினைந்து ரூபா.'
ஆனந்தியின் மனத்திரையில் வட்டி வைரலிங்கம் திடீரென மின்னலாய்த் தோன்றி மறைந்தான். அன்று செருப்படி வாங்கிக் கொண்டு போனவன்தான் அதற்குப் பிறகு அவன் வரவே இல்லை. செருப்படியை மறந்தாலும் காசை மறக்கறவன் அல்ல. அவன் காசுக்கு வராதது ஆனந்திக்குப் பெரும் ஆச்சரிய மாக இருந்தது. ஏன்வரவில்லை என்று இடை இடையே தன்னையே கேட்டுக் கொள்வாள். எந்த நேரத்தில் எப்படி வந்து நிற்பானோ- ஒருவேளை கம்பெனிக்கே வந்து மானத்தை வாங்குவானோ என்ற திகிலும் உள்ளத்தின் ஒரு மூலையில் பதுங்கியிருந்தது.
றோஸிக்கும் ஒரு வைரலிங்கம் தான் கடன் கொடுத்தானோ. ஆனா றோளமி, என்னைப்போல் அவன் பேசுகிறதையெல்லாம் கேட்டுக் கொண் டிருக்க மாட்டாள். செம்மையாகக் கொடுத்தனுப்புவாள்.
இடையில் வேகமாக வந்த குஸoமா, "ஒரு முக்கிய விஷயம் வா...' என்று ராசம்மாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
'உனக்கு முக்கியமில்லாதது எது? சும்மா கூப்பிட்டு வைத்துக் கொண்டு, ஒரே டல்லாய் இருக்குது என்று சொல்கிறது கூட உனக்கு முக்கியந்தான். கொஞ்ச நேரம் ஆனந்தியோடு பேசலாம் என்றால் நீ குறுக்கே வந்திட்டாய்." 'உண்மையிலேயே முக்கியமான விஷயந்தான்' என்று ராசம்மாவை இழுத்துக் கொண்டு போனாள் குஸoமா.
அவள் போனதும் ஆனந்தியின் பார்வை திரும்பவும் டேவிட்டிடம் சென்றது. அதே சமயம் அவனும் திரும்பியவன் அவளைப் பார்த்து விட்டான். தனக்கே உரித்தான அந்தப் புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு இன்னும் சிறிது நேரம் தன் சகாக்களுடன் கதைத்துக் கொண்டிருந்தவன் எழுந்து ஆனந்தியின் முன்னால் வந்து இருந்தான்.
மேசையில் ஆனந்தி வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுப் பார்சல் பிரிக்காமல் இருந்தது. அதைப் பார்த்ததும் "நீங்கள் சாப்பிடேல்லியா?" என்று கேட்டான் டேவிட்.
'இன்னும் இல்லே' என்று சொன்ன ஆனந்தி 'உங்களை நாலைஞ்சு நாளாய்க் காணோமே, எங்கே போயிருந்தீங்க?' என்று கேட்டாள்.
"ரீட்டாவின் கல்யாண விஷயமாய் நீர் கொழும்புக்குப் போயிருந்தேன்."
"அப்ப எனக்கு உங்கள் வீட்டில் இன்னொரு விருந்து இருக்குது என்று சொல்லுங்கள்' என்று கூறியவாறே பார்சலைப் பிரித்து 'இடியப்பம் இருக்குது, நீங்களும் சாப்பிடுங்கள்' என்றாள்.
சுபைர் இளங்கீரன் 144

'உங்களுக்கே இது போதாது, இதில் எனக்கு வேறு பங்கா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டான் டேவிட்.
'இது போதுமோ போதாதோ, வாழ்க்கையிலே பங்கு கேட்ட நீங்கள் இதைப் பங்காகச் சாப்பிட்டால் என்ன?"
இப்படிக் கேட்க வேண்டும் என்று ஆனந்திநினைக்கவே இல்லை. ஆனால் தன்னையும் மறந்து கேட்டுவிட்டாள். எப்படி இதைக் கேட்டேன் என்று தனக்குத் தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டு வெட்கத்தால் முகத்தைக் குனிந்து கொண்டாள்.
டேவிட் மெல்லச் சிரித்தான். 'நான் கேட்டது உண்மைதான். ஆனாநிங்கள் ஒரு பதிலும் சொல்லாமல் போய்ட்டீங்களே”
ஆனந்தியும் மெளனமாய் சிரித்தபடி இடியப்பத்தை எடுத்து அவனுக்கும் கொடுத்து "சாப்பிடுங்கள்' என்றாள்.
'இருக்கட்டும் ' என்று கூறிவிட்டு எழுந்த டேவிட் தானும் இடியப்பம், பருப்பு, சம்பல் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து மேசையில் வைத்தான்.
'உங்க இடியப்பம் நம்ம இரண்டு பேருக்கும் போதாது. இதையும் சேர்த்துச் சாப்பிடுவோம்' என்று ஆனந்தியின் இடியப்பத்தில் இரண்டு மூன்றை தன் பிளேட்டில் வைத்துவிட்டு வாங்கி வந்த இடியப்பத்தை அவள் பக்கம் நகர்த்தினான்.
"நான் ஒன்றுமே சொல்லாமல் வந்தது உங்க மனசை வாட்டியிருக்கும். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீங்களோ..?' என்று கூறிவிட்டு கவலையோடு அவனைப் பார்த்தாள்.
'அப்படி ஒன்றுமில்லே. எனக்கு குழப்பமாயிருந்தது. உங்களை நான் வித்தியாசமாய் நினைக்கேல்லே. நான்தான் உங்களுக்குப் பிடிக்காததைக் கேட்டுவிட்டோமோ என்று மனம் அடித்துக் கொண்டது' என்று கூறிவிட்டு டேவிட்டும் சாப்பிடத் தொடங்கினான்.
'நான் சொல்லித்தான் இருக்க வேணும். ஆனால் சொல்கிற மனநிலையில் அப்ப நான் இல்லை."
'இப்ப சொல்ல முடியுமோ..?" 'ஓம்' என்று தலையை அசைத்தாள் ஆனந்தி. 'ஆனா நான் இங்கே சொல்லமாட்டேன்' என்றாள்.
'atait?” "இங்கே ஆட்கள் இடையிலே வந்து குழப்புவார்கள். நேரமும் காணாது. அவசரமாய்ச் சொல்லவேணும் என்கிறதுமில்லே. ஆறுதலாய்ச் சொல்லலாம். இதுக்காக வருத்தப்பட்டுக் கொள்ளாதீங்க, '
145 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 78
"சாப்பிடாமல் பேசிக் கொண்டிருக்கிறீங்களே.'
'ஒ. "இடியப்பத்தைப் பிய்த்து வாயில் வைத்தாள் ஆனந்தி. இருவரும் மெளனமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சிறி சேனாவும் ஜமீலும் அங்கே வந்து விட்டார்கள்.
'நான் சொன்னது சரியாகிவிட்டது, பார்த்தீங்களா?" என்றாள் ஆனந்தி. டேவிட் சிரித்தான்.
உரையாடல் வேறு திசைக்குத் திரும்பியது.
* * * * 壹
அம்மாவின் சுகயினம் காரணமாக ஆனந்தி இப்போது சில நாட்களாக வேலை முடிந்ததும் தெஹிவலைக்குப் போய் விட்டு இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் திரும்புவாள். அன்றும் அப்படித்தான் வேலை முடிந்ததும் அங்குதான் சென்றாள்.
ஆனந்தியைப் பார்த்ததும், 'வாம்மா. நீ வர நேரமாச்சே என்று உன்னைத்தான் நினைச்சுக் கொண்டிருந்தேன். சுபத்திரா மார்க்கட்டுக்குப் போய்ட்டா. அவளுக்கும் உனக்கும் லக்ஸ்பிறே கலக்கி வைத்திருக்கிறேன் எடுத்துக் குடி' என்றாள்.
அம்மாவுக்கு இப்போது நல்ல சுகம். எழுந்து நடமாடவும் தொடங்கி யிருந்தாள். ஆனந்தி தினமும் பின்னேரம் வந்து இருந்து விட்டுப் போவது அம்மாவுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. இல்லாவிட்டால் சுபத்திரா புத்தகத்தில் மூழ்கியிருக்க, அம்மா பேச்சுத் துணையில்லாமல் சந்திராவைப் பற்றித்தான் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனதை மேலும் புண் ணாக்கிய வண்ணம் இருப்பாள்.
ஆனந்தி குசினிக்குச் சென்று லக்ஸ்பிறேயுடன் வந்து அம்மாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டே பலதும் பத்துமாகக் கதைத்துக் கொண்டி ருந்தாள்.
பின்னேரம் வந்ததும் இரவு சமையல் உட்பட எல்லா வேலைகளையும் ஆனந்திதான் செய்வாள். சிறிது நேரம் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் 'இரவைக்கு என்ன சமைக்கிறது மாமி?' என்று கேட்டு விட்டு உடையை மாற்றிக் கொள்வதற்காக சுபத்திராவின் அறைக்குள் போனாள்.
"சுபத்திரா வரட்டும். அதுக்குள்ளே என்ன அவசரம்' என்று அம்மா சொன்னது காதில் விழுந்தது.
அறைக்குள் போன ஆனந்தி உடையை மாற்றிக் கொண்டு திரும்பும் போது சுபத்திராவின் மேசையில் ஏதோ எழுதப்பட்டிருந்த பேப்பர் கண்ணில் பட்டது. என்ன எழுதியிருக்கிறாள் என்று பார்த்தாள்.
சுபைர் இளங்கீரன் 146

ஆங்கிலப் பேராசிரியர் பெர்னாட்ஷா சொல்கிறார்: 'நமது காலத்தில் கனவானாயிருப்பவன் யார் என்றால், எந்த முட்டாளும் செய்யக்கூடிய காரியத்தைச் செய்வதற்கு போதிய பணமுள்ளவன் தான். அதாவது பொருட்களை உற்பத்தி செய்யாமலே அழிப்பவன்.'
பிரபல தத்துவஞானி ஸி.எம். ஜோட் சொல்கிறார்: 'கனவான் என்ற ஆசாமி இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிருஷ்டி செய்யப்பட்டான். கெளரவமான வாழ்க்கைக்குள்ள ஒரே வழி, பிறரது உழைப்பால் விளைந்த பொருள்களைக் கொண்டு தான் வாழ்வதேயாகும் என்று நினைக்கும் மனிதனே அந்த ஆசாமியாகும். அவன் இப்போது பெரும்பாலும் மறைந்து வருகிறான்."
இதைப் படித்ததும் ஆனந்தி கலகல எனச் சிரித்து விட்டாள். "என்னடி சிரிக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சுபத்திரா.
'நீ எழுதி வைத்திருக்கிறியே. இதைப் படித்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. கனவான் யார் என்கிற விஷயம் இப்பதான் எனக்கும் நல்ல தெளிவாய்த் தெரியுது. அதுசரி, இதை நீ ஏன் எழுதி வைத்திருக்கிறாய்?"
'ஒரு கனவான் நமக்கு அத்தானாய் வந்திருக்கிறாரே, அதுக்காக, கனவான்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இப்ப ஆராய்ச்சி செய்கிறேன். கனவான்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத்தான் இப்ப புரட்டிக் கொண் டிருக்கிறேன்' என்று வேடிக்கையாகக் கூறிய சுபத்திரா தொடர்ந்து சொன் னாள்: "இந்தக் கன்வான்கள் பொருள்களை மட்டுமல்ல, பந்தம் பாசம், உறவு, நட்பு எல்லாத்தையுமே அழித்து விடும் முட்டாள்கள்.'
'நீ சொல்கிறது, நூற்றுக்கு நூறு உண்மை. இதுக்கு அத்தான் ஒரு நல்ல அத்தாட்சி" என்று ஆனந்தி சிரித்தாள்.
“என்ன இரண்டு பேரும் ஒரே சிரிப்பாய் கும்மாளம் போடுறீங்க?" என்று அம்மாவும் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
"அது ஒரு பகிடி அம்மா. சரி ஆனந்தி வா. இன்றைக்கு நூடில்ஸ் பிரியாணி போடுவோம்’ என்று கூறிக் கொண்டே வெளியே வந்தாள்.
'அம்மாவுக்கு?’ என்று ஆனந்தியும் கேட்டவாறு பின் தொடர்ந்தாள். "உங்களுக்கு விருப்பமானதை செய்து சாப்பிடுங்க. என்னைப்பற்றிக் கவலை வேணாம்' என்று அம்மாவும் அவர்களுடன் அடுப்படிக்கு நடந்தாள். 'அம்மாவுக்கு தேங்காயெண்ணையில் செய்கிறது ஆகாது. அவவுக்கு இன்றைக்குப் பாண்தான்' என்றாள் சுபத்திரா.
* 菁 * 好 好、
147 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 79
ஒன்பதாவது அத்தியாயம்
த்துப் பனிரெண்டு நாட்களாக பெருமழை அடித்துப் பொழிந்தது. கொழும்பிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தால் மிதந்தன. குச்சு வீடுகளும் குடிசை வீடுகளும் அந்த வெள்ளத்தில் சங்கமமாயின.
களனி ஆறு பெருக்கெடுத்து அக்கம் பக்கத்திலெல்லாம் புகுந்து ஆற்றுப் பாலத்தின் அருகே பள்ளத்தில் முளைத்திருந்த குடிசைகளையெல்லாம் விழுங்கி அங்கு வசிக்கும் சனங்களை அல்லோல கல்லோலப்படுத்தியது. வெள்ளத்தில் மூழ்கியது போக மிஞ்சிய தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளிக் கொண்டு பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் தஞ்சம் புகுந்தார்கள்.
சிறிசேனாவின் குடிசையும் களனி ஆற்றுப்பள்ளத்தில் தான் இருந்தது. பழைய தார்ப்பீப்பாத் தகடு, பலகை, உடைந்த அஸ்பெஸ் டாஸ் சீட் ஆகியவற்றின் கலவையாக உருவெடுத்திருந்த அந்தக் குடிசைக்குள்தான் சிறிசேனாவின் குடும்பம் குடித்தனம் நடத்தியது. அவனுடைய குடிசையும் களனி ஆற்றின் கருணைக்கு இலக்காகி விட்டது. அவன் மனைவி மக்களோடு சமீபத்தில் உள்ள பாடசாலையில் மற்றவர்களோடு போய்ச் சேர்ந்தான்.
வெள்ளம் வடிந்ததும் சனங்கள் திரும்பவும் தங்கள் இடத்துக்குப் போய் குடிசைகளைச் செப்பனிடத் தொடங்கினார்கள். சிறிசேனாவின் குடிசை கிட்டத்தட்ட அழிந்து விட்டது. தங்கள் சக தொழிலாளியான அவனுடைய நிலையைக் கண்டு கம்பனித் தொழிலாளர் அனுதாபப்பட்டார்கள்.
சுபைர் இளங்கீரன் 148
 

அதைத்திரும்பவும் கட்டிக் கொள்வதற்காக அவர்கள் யூனியன் சார்பில் காசு சேர்த்துக் கொடுத்தார்கள்.
சிறிசேனாவின் குடிசையைப் புனரமைப்பதில் தாங்களும் பங்கு பற்ற வேண்டும் என்று றோஸி, இராசம்மா, குஸுமா, ஆனந்தி, ஜமீல், செல்லையா, வாட்சன் எல்லோரும் ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு போயாவுக்கு சிறிசேனாவின் பள்ளத்துக்குப் போனார்கள்.
அவர்கள் அங்கு போவதற்கு முன்பே சிறிசேனாவும் டேவிட்டும் குடிசை யைப் போடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். தனது சகாக்களைக் கண்டதும் சிறிசேனாவுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. 'ஆயுடவன்’ என்று உரத்த குரலில் கையை ஆட்டிய வண்ணம் அவர்களை வரவேற்றான். தனது கைக்குழந்தையோடு நின்ற அவனது மனைவியும் பல்லெல்லாம் வெளியே தெரிய பரவசத்துடன் அவர்களை வரவேற்றாள். சிறிசேனாவின் மற்ற இரண்டு பையன்களும் கூட அவர்களை குதூகலத்துடன் பார்த்தார்கள்.
தமது இல்லங்களைச் செப்பனிடுவதில் மும்முரமாய் இருந்த ஏனைய குடிசைவாசிகளும் தங்கள் கவனத்தை ஒரு நிமிஷம் திருப்பி அவர்களை வரவேற்கும் பாவனையில் பார்த்தார்கள்.
வந்தவர்கள் தாங்கள் வாங்கி வந்த தின்பண்டங்களையும் பிஸ் கெட் பெட்டிகளையும் சிறிசேனாவின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கொடுத்து விட்டு அந்த இடத்தையெல்லாம் பார்த்தார்கள்.
ஆனந்தி இதற்குமுன் அந்த இடத்திற்கோ, சிறிசேனாவின் வீட்டுக்கோ வராவிட்டாலும் அந்தப் பள்ளமும் குடிசைகளும் அவளுக்குப் புதியவை அல்ல. ஆயினும் இப்போதுதான் அங்கு வசிப்போரின் அல்லல்களையும் அவளால் நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.
அந்தப் பகுதி முழுவதும் தண்ணிரும் சேறும் சகதியுமாக இருந்தது. அவர்களின் குடிசைகள் அழிந்தும் சேதமுற்றுமிருந்தன. பல தட்டு முட்டுச் சாமான்கள் - உடுப்புகள் கூட சேற்றில் சிதறிக் கிடந்தன. பானை ஒன்று சோற்றோடு உருண்டு கிடந்தது. குடிசைக்கு முன்னால் அவர்கள் போட்டிருந்த கீரைப் பாத்திகள் முழுவதும் சீரழிந்து சேறு மண்டிக்கிடந்தன.
சிலருக்குத் தமது குடிசைகளைச் செப்பனிடவோ, கட்டவோ புதிதாக ஒன்றுமேயில்லை. கிழிந்தும், உடைந்தும், நலிந்தும் கிடந்த குடிசையின் உதிரிப் பாகங்களை எடுத்துத் துடைத்து, அடித்து, நிமிர்த்தி அடைத்துக் கொண் டிருந்தனர். எல்லோருடைய கால்களிலும் உடம்பிலும் சேறு அப்பியிருந்தது. இதையெல்லாம் பார்த்த ஆனந்தி, வறுமையின் ஆழமும் அதன் கோரமும் எந்தளவுக்கு அவர்களைப் பீடித்திருக்கிறது என்று உணர்ந்து திகைத்தாள். நம்மையும் விட இவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். நமக்காவது மழைக்கும் வெள்ளத்துக்கும் அழிந்து போகாத மூன்று தட்டு
149 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 80
வீடாவது இருக்கிறது. இவர்களுக்கு இது கூட இல்லையே என்று எண்ணும்போது ஆனந்திக்குத் திடீரென்று ஒரு நினைவு வந்தது.
ஒருநாள் வசந்தி றகீமாவிடமிருந்து ஒரு இஸ்லாமியப் பத்திரிகையைப் படிப்பதற்காக வாங்கி வந்தாள். பத்திரிகை புத்தகம் என்று சிந்தனையே இல்லாத ஆனந்தி தற்செயலாக ஒரு எண்ணத்தில் அதைத் தட்டிப் பார்த்தாள். ஒரு இடத்தில் பின்வருமாறு இருந்தது. 婚姻
"காலுக்கு செருப்பு இல்லையே என்று நான் கவலைப்பட்டேன் - காலே இல்லாத மனிதனைப் பார்க்கும் வரை' - அலி (ரலி) இதன் பொருளை ஆனந்தி விளங்கிக் கொண்டாலும் அதைப் பற்றிக் கடுமையாகச் சிந்திக்கவில்லை. இப்போது இந்த வசனம் தனக்கு மிகவும் பொருத்தமானது என்று கருதினாள். இதே சிந்தனையோடு இவர்கள் வெள்ளம் வந்து பாயும் இந்தப் பள்ளத்தில் இப்படியெல்லாம் துன்பப்படுகிறார்களே என்று பட்சாபத்துடன் மனம் உருகினாள்.
"அங்கெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கிறீங்களே, அவங்களுக்கும் நம்ம கதைதான்' என்று கூறிக் கொண்டே அவளிடம் வந்தான் சிறிசேனா.
அப்போதுதான் தன் கவனத்தை திருப்பினாள் ஆனந்தி. 'இந்த இடத் தையும் சனங்களையும் பார்க்கிற போது, சோகமாயிருக்குது'
"எங்களுக்கு இது நடக்கிற சங்கதிதான்' 'ஏன் இந்தப் பள்ளத்தில் இருக்க வேணும்? வெள்ளம் சீரழிக்காத ஒரு பாதுகாப்பான இடத்தில் குடிசை போடலாமே?”
'இது நல்ல கேள்விதான். நீங்கள் சொல்கிற மாதிரி ஒருஇடம் கிடைத்தால் மனுஷன் ஏன் இங்கே வாறான்?'
'சரிதான் நான் இதை யோசிக்கேல்லே' இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அரைக்கால்சட்டை, முண்டா பெனியன், கையில் சுத்தியல்- இந்தக் கோலத்தோடு அங்கு வந்த டேவிட் 'இரண்டு பேரும் என்ன வாதம் பண்ணுகிறீங்க?' என்று கேட்டான். 'வாதமல்ல, இவங்களையும் அழிந்து போன குடிசைகளையும் இந்தப்பள் ளத்தையும் பார்க்கிற போது மனசு கலங்குது. அதைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
டேவிட் விழிகளைச் சுழற்றி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆனந்தியின் பக்கம் திரும்பினான். 'இவங்கள் வீடு என்னநம்ம வாழ்க்கையும் பள்ளத்தில்தான் கிடக்குது. ஆனாஇதை நம்புங்க, சுரண்டப்பட்டும் பள்ளத்தில் தூக்கி எறியப்பட்டும், பாதிக்கப்பட்டும் உள்ள நமக்குத்தான் எதிர்காலம் சொந்தம். நீங்கள் மனம் கலங்காமே வந்த காரியத்தைப் பாருங்க"
சுபைர் இளங்கீரன் 150

இதைக்கூறும் போது டேவிட்டின் குரலில் அசாதாரணமான ஒரு உறுதி தொனித்தது.
ஆனந்தி திரும்பிப் பார்த்தாள். குஸDமாவும் றோஸியும் சிறிசேனாவின் மனைவியிடம் வெள்ளக் கதைகளைக் கேட்டுக் கொண்டும், இராசம்மா மற்றொரு குடிசைக்காரியோடு பேசிக் கொண்டும் இருந்தார்கள். ஜமீல் ஒரு பலகையைப் பிடித்திருக்க வாட்சன் அதை வாளால் அறுத்துக் கொண்டிந்தான். செல்லையா மிண்வெட்டியால் சேற்றை ஒதுக்கிக் கொண்டிருந்தான்.
'எல்லாரும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். நான்தான் இங்கே சும்மா நிற்கிறேன்' என்று கூறிக் கொண்டே நடந்தாள் ஆனந்தி.
'நீங்கள் மட்டுமா, அங்கே பாருங்க. எல்லாரும் கதைத்துக் கொண்டுதான் நிற்கிறாங்க. பெண்களே இப்படித்தான். நாலு பேர் கூடினால் போதும், கதையைத் தவிர வேறு எதுவுமே அவங்களுக்கு ஞாபகம் இருக்காது" என்று சொல்லிக் கொண்டு டேவிட்டும் நடந்தான்.
'இவங்களெல்லாம் ஏன்? நாலு பலகையை அடைத்து ஒரு கூரையைப் போட நாம இரண்டு பேரும் போதுமே..?' என்று ஒரு கேள்வியைப் போட்டான் சிறிசேனா.
'ஒ. அதுவும் சரிதான்' என்று ஒரு நிமிஷம் யோசித்தான் டேவிட். மறுநிமிஷம் எல்லோரையும் கூப்பிட்டு 'சிறிசேனா, நான், ஜமீல், குஸுமா இங்கே பார்த்துக் கொள்கிறோம். வாட்சன், செல்லையா, ஆனந்தி, ராசம்மா எல்லாரும் மற்றவங்களுக்கும் உதவி செய்யுங்க. அவங்களும் நம்மைப் போலத்தான்."
டேவிட் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். பேச்சோடு பேச்சாய் வேலைகள் துரிதமாய் நடந்தன. காலநிலையும் அவர்களுக்கு ஒத்தாசையாய் இருந்தது.
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். வந்தவர்களுக்குச் சோறும் கறியும் சமைத்துக் கொடுக்க சிறிசேனாவின் மனைவிக்கு கொள்ளை ஆசையாய் இருந்தது. ஆனால் இடமுமில்லை; வசதியுமில்லை. நிலமெல்லாம் ஈரமும் சேறுமாய். நெருப்பும் பற்றாது; விறகும் எரியாது. அவளுக்கு வருத்தமாய் இருந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்காக சிறிசேனா எல்லோருக்கும் பாணும் பருப்பும், டீயும் கொண்டு வந்தான். தகரத்தையும் பலகையையும் கீழே போட்டு அதிலிருந்து கொண்டு சாப்பிட்டார்கள். பேச்சும் வேடிக்கையுமாக ஒரே கலகலப்பாக இருந்தது.
இவங்களுக்கு வெள்ள நிவாரணக்காசு கிடைத்திருக்குமே?" என்று ஜமீல் கேட்டான்.
151 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 81
'என்னத்தை அள்ளிக் கொடுக்கப் போறாங்க, யானைப் பசிக்கு சோளப் பொரிக் கதைதான். அதிலும் இரண்டு மூன்று பொரிதான் கிடைத்திருக்கும். மற்றதெல்லாம் இடையிலுள்ள அதிகார தேவதைகளின் பொக்கட்டுக்குள் பதுங்கியிருக்கும்' என்றான் செல்லையா.
சிறிசேனா சொன்னான்: "அப்புஹாமிக்கு நூறு ரூபாய்க்கு இருபத்தைந்து ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது'
'இதிலே என்ன புதினம் இருக்குது. நடக்கிற சங்கதிதான். ஈவிரக்கமில்லாத மிருகங்கள். வீடு எரிகிற போது பிடுங்கினது ஆதாயமென்று நினைக்கிறவங்க” என்று கூறிவிட்டு நிலத்தில் காறித்துப்பினான் செல்லையா. வாய்க்குள் இருந்த பாண் துண்டும் அதோடு வந்தது.
'இந்தப் பள்ளத்துக்கும் வெள்ளத்துக்கும் ஒரு முடிவு இல்லையா?" என்றான் ஜமீல்.
'இருக்குது மக்கள் எப்போதுமே துன்பத்தைச் சகித்துக் கொண்டிருக்கிற தில்லே. சரி எழும்புங்க பின்னேரத்துக்குள்ளே முடித்து விடவேணும்' என்று எழுந்தான் டேவிட்.
நான்கு மணிக்கெல்லாம் சிறிசேனாவின் குடிசை உருவாகி விட்டது. மற்றவர்களின் குடிசைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டன.
வேலை முடிந்ததும் எல்லோரும் களனி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு தமது வீடுகளுக்குப் புறப்பட்டார்கள்.
ஆனந்தியும் டேவிட்டும் உரையாடிய வண்ணம் பஸ்ஸுக்காக பாலத் தடியில் வந்து நின்றார்கள்.
'நம்மாலும் மற்றவங்களுக்கு உதவி செய்ய முடியுதே என்று நினைக்கிற போது மனசுக்குத் திருப்தியாயும் சந்தோஷமாயுமிருக்குது' என்றாள் ஆனந்தி. 'ஏன் அப்படிச் சொல்றீங்க? உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியா தென்று இத்தனை நாளும் நினைத்திருந்தீங்களா?" என்று கேட்டான் டேவிட்.
'உண்மையைச் சொன்னால் அப்படித்தான் நினைத்திருந்தேன். மற்றவங்க நமக்கு உதவி செய்ய வேண்டிய அளவுக்கு நாம கஷ்டத்திலே இருக்கிறபோது நாம மற்றவங்களுக்கு உதவி செய்யிறதைப் பற்றிச் சிந்திக்க முடியுமா?"
'நீங்க பணத்தைக் கருதித்தான் இப்படி நினைத்திருப்பீங்க. ஆனா பணமில்லாதவங்களும் கஷ்டப்பட்டவங்களும் மற்ற வங்களுக்கு உதவி செய்யமுடியும் என்று இன்றைய அனுபவம் உங்களுக்குச் சொல்லியிருக்குது' என்று ஒரு நிமிஷம் நிறுத்திய டேவிட் மேலும் சொன்னான்.
"நம்ம குடும்பத்தில் உள்ளவங்களை மட்டுமல்ல, மற்றவங்களை நேசிப்ப தும் அவங்களுக்கு உதவியாக இருக்கிறதும் மனுஷனின் கடமைதான். இந்தக்
சுபைர் இளங்கீரன் 152

கடமை சமுதாய உணர்ச்சியின் ஒரு அம்சம். மக்களுக்கான சேவையில் ஒரு அங்கம். அதனால் தான் மனசுக்குச் சந்தோஷமாய் இருக்குது. நமக்காக நாம வாழ்கிறது போல மற்றவங்களுக்காகவும் வாழ்கிறதிலே ஒரு இன்பம் இருக்குது'
டேவிட் இவ்வாறு சொன்னதும் ஆனந்திக்கு உணர்ச்சி பெருக்கெடுத்தது. 'உங்களுக்கு நிறைஞ்ச மனசு' என்று சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை. 'இது எனக்கு நல்லாப் விளங்குது' என்று கூறி விட்டு டேவிட்டைப் பார்த்தாள். அவன் முகம் களைத்திருந்தது. 'உங்களுக்கு இன்றைக்கு நல்ல வேலை. களைப்பும் கூட. மற்றவங்களுக்காக தியாகம் செய்கிறபோது இன்பத்தோடு களைப்பும் ஏற்படுகுது' என்று சிரித்தாள்.
டேவிட் மெல்லச் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் களைப்பாய்தான் இருக்குது. நான் விடிய ஆறு மணிக்கே வந்து, சிறிசேனாவும் நானும் வேலையைத் தொடங்கி விட்டோம்' என்றவன், 'ஆனா நானோ நீங்களோ இன்றைக்குச் செய்ததை ஒரு தியாகமாய் நினைக்கப்படாது. தட்ரெயின் படம் பார்த்தோமே அதிலே மக்கள் செய்கிற தியாகத்தை எண்ணிப் பாருங்க. அதோடு இதைச் சிறிய அளவிலாவது ஒப்பிடமுடியுமா? தேசத்தின் விடுதலைக்காக, மக்களின் விமோசனத்துக்காக முழுவாழ்வையும் அர்ப்பணிக்கிறதுதான் தியாகம், நாம இன்றைக்குச் செய்தது உதவிதான்."
ஆனந்திக்குப் பிரமிப்பாயிருந்தது. டேவிட்டுடன் உரையாடும் போதெல் லாம் அவன் எத்தனையோ விஷயங்களை ஆனந்திக்குச் சொல்லியிருக் கிறான். அவனுடைய கருத்துக்களும் விளக்கங்களும் அவளுக்குப் புதுமை யாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். இப்போது அவனே ஆச்சரியமாகப் பட்டான். - கம்பெனியில் வேலை செய்கிற ஒரு கட்டிங்காரர் சொல்கிறார்! இப்படியெல்லாம் என் சுபத்திராவுக்குத்தான் முடியும் என்று நினைத்தேன். இவருக்கும் பேச வருகுதே!. என்று வியந்தாள்.
'என்ன யோசிக்கிறீங்க?" 'நீங்க கத்திரியும் கையுமாய் துணிகளை வெட்டித் தள்ளிக் கொண்டிருக்க வேண்டியவரல்ல. யூனிவர்ஸிட்டியிலே லெக்ஸரரா இருக்க வேண்டிய ஆள்' என்று சிரித்தாள்.
'ஏன் அப்படிச் சொல்றீங்க' 'நாம பேசும் போதெல்லாம் எனக்குப் பாடம் நடத்துகிறீங்களே...!" 'நான் பாடம் நடத்த வேணும் என்று கருதி எதுவும் சொல்கிறதில் லே. நம் மோடு சம்பந்தப்படுகிற விஷயங்களைப் பேசுகிற போது எனக்குத் தோன்றுகிறதைச் சொல்கிறே. இது உங்களுக்குப் பிடிக்கேல்லே போலிருக் குது' என்று ஒரு கணம் மெளனமாய் இருந்தவன், 'உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைத்தான் நான் சொல்கிறேனோ என்னவோ...' என்றான்.
153 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 82
அவன் இவ்வாறு சொல்லி முடிப்பதற்குள் ஆனந்திக்குப் பஸ் வந்துவிட்டது.
好 好 好 好 好
பஸ் போய்விட்டது. ஆனந்தி நின்றாள். 'நீங்கள் போயிருக்கலாமே?' என்று கேட்டான் டேவிட். ஆனந்தி பதில் சொல்லவில்லை. டேவிட் தெருவைப் பார்த்தான். பொழுது மடிந்து மின் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. எதிர்ப்பக்கம் சற்றுத்தள்ளிவத்தளை போகிற பஸ்தரிப்பில் இரண்டு மூன்று ஆட்கள் நின்றிருந்தார்கள். லொறிகளும் பஸ்களும் கார்களும் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால் சனநடமாட்டம் குறைந்து விட்டது.
ஆனந்தியை அனுப்பி விட்டுத்தான் டேவிட் தன் வீட்டுக்குப் போக இருந்தான் பஸ் வந்ததும் ஆனந்தி போகாமல் நின்றது அவனுக்கு வியப்பாக இருந்தது.
'டேவிட்...' என்றாள் ஆனந்தி. அவளுடைய குரல் கம்மிக் கரகரத்தது. இருவருக்குமிடையில் நிலவிய இறுக்கமான மெளனம் மறைந்தது. டேவிட் கேள்விக்குறியுடன் ஆனந்தியைப் பார்த்தான்.
தாழ்ந்த குரலில், உணர்ச்சி பொங்க அவள் கூறினாள். 'எனக்குப் பிடிக்காத விஷயங்களைத்தான்நீங்க பேசுகிறதாய்ச் சொன்னிங் களே. கிறிஸ்மஸ்ஸின் போது நீங்க தெரிவித்த விஷயத்துக்கு என்னிட மிருந்து பதில் வராததையும் மனதில் வைத்துத்தான் இதைச் சொன்னிங்க என்கிறது எனக்குப் புரியுது. ஆனா நீங்க சொன்னதெல்லாம் எனக்குப் பிடித்துத்தான் இருக்குது. என்னைப் பற்றி உங்க மனசில் இருக்கிறதைக் கூறியதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
'என்னைப் பற்றி உங்க மனசிலே என்ன இருக்குதோ அதேதான் என் மனசிலும் உங்களைப் பற்றியும் இருக்குது. ஆனா இதைச் சொல்லாம இருந்ததுக்கு காரணமும் இருக்குது. இனியும் இதை மறைத்து உங்களைச் சங்கடப்படுத்த நான் விரும்பேல்லே'
டேவிட் ஆவல் தெறிக்க அவளைப் பார்த்தான். ஆனந்திதன்குடும்ப நிலைமை முழுவதையும் கூறிவிட்டு 'இந்த நிலைமை யிலே என் சொந்த ஆசாபாசங்களைப் பற்றிச் சிந்திக்க முடியுமா? கல்யாண மென்றும் குடும்பமென்றும் எனக்கென்று ஒரு வாழ்க்கை வந்தபிறகு என் சகோதரங்களை எப்படிக் கவனிக்க முடியும்? அவர்களின் வாழ்க்கைக்கும் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் காண வசதி இருக்குமா? ஏதோ அற்ப சொற்ப உதவிகள் செய்யலாம். இப்ப சுமந்து கொண்டிருக்கிற மாதிரி குடும்பம்
சுபைர் இளங்கீரன் 154

முழுவதையும் சுமந்து கொண்டிருக்க முடியுமா? இதையெல்லாம் யோசித் துத்தான் எனக்கு கல்யாணம் வேணாம் என்று தீர்மானித்தேன்.
'அதனால்தான் உங்களை என் இதயத்தில் வைத்துக் கொண்டாலும் உங்களை விட்டு விலகிக் கொள்ளவும் விரும்பினேன். மன உறுதி குலைந்து விடுமோ என்ற பயம். இந்த முடிவுக்கு வர நான் பட்டபாடு, எனக்குள் நடத்திய போராட்டம். நீங்கள் புரிந்து கொள்ளுவீங்களோ என்னவோ அதை என்னாலே விவரிக்க முடியாது.'
'உங்க மனசை திறந்து காட்டிய போது எனக்கு என்ன சொல்கிற தென்றே தெரியேல்லே. ஒரே தடுமாற்றம்; தவிப்பு. உடனே இதைச் சொல்லி உங்களை வேதனைப்படுத்த விரும்பேல்லே. வேதனைப்படுத்தவும் ஒரு அவசரம் வேண் டுமா. உங்களுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் இருந்ததுக்கு இதுதான் காரணம். 'என் மனசிலே இப்போ ஒன்றுமில்லே. முழுவதையும் உங்களிடம் கொட்டிவிட்டேன். கடைசியாக உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறது இதுதான். கிளைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற மரத்தைப் போல நான் இருக்கிறேன். இப்படியே இருக்க என்னை விட்டிடுங்க"
இதைச் சொல்லும் போது ஆனந்தியின் கண்கள் பனித்தன. டேவிட் உருகிப் போனான். தனக்குள் எழுந்த உணர்ச்சிகளை வெளிக்காட் டிக் கொள்ளாமல் சோபை இழந்திருந்த ஆனந்தியின் முகத்தையும் கண்ணிர் முத்துக்கள் திரண்டிருந்த விழிகளையும் கனிவோடு சிறிது நேரம் பார்த்து விட்டு, முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
'உங்க மனசை வேதனைப்படுத்த வேண்டி வந்து விட்டதே என்று நினைக்கும் போது என்னாலேயே அந்த வேதனையைத் தாங்க முடியேல்லே. என்னை மன்னித்துவிடுங்க டேவிட்'
'உங்களுக்கு பஸ் வருகுது. காலையில் வந்த நீங்க. நேரமாச்சுது. வீட்டிலே உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாங்க" என்றான் டேவிட்.
பஸ் வந்து நின்றது. "வாழ்க்கையிலே விரும்புகிறதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்கிறதில்லே. நமக்கும் கிடைக்கேல்லே' என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறினாள் ஆனந்தி.
* * * 斧 *
இரண்டு மூன்று நாட்களாக டேவிட் வேலைக்கு வரவில்லை. அவனைக் காணாதது ஆனந்திக்கு கவலையாக இருந்தது. ஏமாற்றத்தால் மனமொடிந்து வீட்டிலேயே இருந்து விட்டாரோ என்று எண்ணினாள். அவள் மனம் நெகிழ்ந்தது. துயரத்தால் உள்ளம் வெதும்பியது. மனம் ஒன்றிலும் செல்ல வில்லை. இந்த இரண்டு மூன்று நாட்களும் சுபத்திராவின் வீட்டுக்குக் கூடப் போகவில்லை.
155 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 83
அன்று மத்தியானம் ஆனந்தி கன்டீனுக்குப் போனபோது எல்லாரும் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனந்தியிடம் றோஸி வந்து 'விஷயம் தெரியுமா? டேவிட்டின் அப்பா இறந்து விட்டார், நாங்கள் வேலை முடிந்ததும் ஹெந்தலைக்குப் போகிறோம்' என்று கூறிவிட்டு வேறு ஏதோ ஒருவேலையாக கன்டீனை விட்டு வெளியே போனாள்.
ஆனந்தி ஒருகணம் திகைத்து நின்றாள். துக்கத்தால் முகம் இருண்டது. இதுக்காகத்தான் அவர் வேலைக்கு வரேல்லியோ.. என்னாலே ஏற்பட்ட கவலையோட இப்ப இந்தக் கவலையும் சேர்ந்திட்டுதே.
பின்னேரம் எல்லோரும் டேவிட்டின் வீட்டுக்குச் சென்றார்கள். அவனைச் சூழ்ந்து கொண்டு துக்கம் விசாரித்தார்கள். ஆனந்தி மட்டும் ஒரு பக்கத்தில் சோகமே உருவாக அமர்ந்தபடி டேவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகம் லேசாய் வாடியிருந்தது. வாயில் எப்போதும் நெகிழ்ந்து கொண்டிருக்கும் அந்த வசீகரமான புன்னகையைக் காணவில்லை. அவனு டைய விழிகள் கூட சற்று மங்கியிருப்பது போல் தெரிந்தது.
டேவிட் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவள் அருகில் வந்து மெளனமாக இருந்தான்.
'டேவிட்.
அவன் திரும்பினான். ஆனந்தி சில வினாடிகள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவளுடைய உள்ளத்து உணர்ச்சிகள் முழுவதும் தெரிந்தனவோ
'நான் உசிரோடு இருந்து கொண்டு உங்களை வேதனைப்படுத்துகிறேன். அப்பா உசிரை விட்டுட்டு வேதனைப்படுத்துகிறார்' என்று அந்தப் பார்வை சொல்லியதோ!
'வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்' என்று டேவிட் அமைதியாகச் சொன்னான்.
இவர் எதைச் சொல்கிறார்? அப்பாவின் மரணத்தையா, அல்லது என்னால் ஏற்பட்ட ஏமாற்றத்தையா?.
好 * * * 好
ஆனந்தி கடைசியாக தெஹிவலைக்குப் போய் ஒரு கிழமை இருக்கும். அன்றுதான் அங்கு போனாள். வெளிமுற்றத்தில் வீட்டுக்காரப் பொடியன்கள் கிரிக்கட் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சுபத்திரா ஆனந்தியைக் கண்டதும் 'என்னடியம்மா உன் முகதரிசனத்தைக் காணுவது அபூர்வ மாயிருக்குதே...?' என்றாள்.
'வரமுடியேல்லே, அம்மா எங்கே?'
சுபைர் இளங்கீரன் 156

'அவவுக்கு இப்ப புதுச்சிநேகிதம் கிடைத்திருக்குது, போய்ட்டா' "அது யாரு புதுச் சிநேகிதம்?" 'முன்னாலே அங்கே பாரு. மூணாவது வீடு. அதிலே ஒரு அனெக்ஸ். ஒரு புதுத் தம்பதிகள். வந்து நாலைஞ்சு நாட்கள். யாழ்ப்பாணத்துக்காரர்கள். எங்களுக்குத் தூரத்து உறவாம். அம்மாவின் கண்டுபிடிப்பு இது. நம்மைப் போல சாதாரண ஆட்கள்தான். அந்தப் பெண் கொழும்புக்குப் புதுசு. வீட்டுக்காரர் ஒஃபிசுக்குப் போனதும் அவதன்னந்தனியாக ஊரும் விளங்காம, சனமும் தெரியாம முழிசிக் கொண்டிருப்பா, அம்மா எப்படியோ இனம் கண்டு உறவு கொண்டாடத் தொடங்கினாவோ இல்லையோ ஒன்று அவ இங்கே இருப்பா, அல்லது அம்மா அங்கே இருப்பா. சந்திராவினால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டிருக்க அம்மாவுக்கு இது உதவியாயிருக்குது. எனக்கும் ஒரு ஆறுதல் என்று சொல்லேன். அம்மாவுக்குச் சுகமில்லாம வந்ததிலிருந்து இந்த இரண்டு அறைக்குள்ளும் ஒரே சிறை வாசந்தான். இனி கொஞ்சம் வெளியே உலாத்தப் போகலாம்' என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு, ஆனந்தியை அழைத்துக் கொண்டு போனாள்.
உள்ளே போனதும் 'நீ வந்ததும் நல்லதாய்ப் போச்சுது. அல்லது உன்னைப் க்க நானே வந்திருப்பேன். இங்க இருக்க ஒர்ே டல்லாயிருக்குது. பின்னாலே ரயில் பாலத்தாலே காலாற மவுண்ட் வரை நடந்து விட்டு வரலாம்" என்று உடையை மாற்றத் தொடங்கினாள்.
ஆனந்தி ஒன்றுமே பேசாமல் குசினிக்குச் சென்று ஸ்ட்ரோங்கான கோப்பி போட்டுக் குடித்து விட்டு சுபத்திராவுக்கும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
'என்ன ஆனந்தி வந்ததிலிருந்து ஒன்னுமே கதைக்காம இருக்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே ஆனந்தியின் முகத்தைப் பார்த்த சுபத்திரா ஒருகணம் திகைத்து விட்டாள். V
'என்னடி முகமெல்லாம் உறங்கிக் கிடக்குது; கண்ணெல் லாம் ஒரு மாதிரியாயிருக்கு. உடம்பு கூட மெலிந்த மாதிரித் தெரியுது. என்ன நடந்தது? உனக்குச் சுகமில்லையா..?' என்று சற்றுப் பரபரப்புடன் கேட்டாள் சுபத்திரா. 'நான் அப்படியா இருக்கிறேன்' என்று கண்ணாடிக்கு முன்னால் நின்று பார்த்தாள் ஆனந்தி. 'உண்மைதான் சுபத்திரா, எனக்கே இத்தனை நாளாய்த் தெரியேலியே எனக்குச் சுகயினம் ஒன்னுமில்லே. ஆனாலும். இது புதினந் தான்' என்றாள் ஆனந்தி.
'புதினம் என்ன புதினம். உடம்புக்கு ஒன்னுமில்லாவிட்டால், மனசை ஏதோ தாக்கியிருக்குது. வீட்டில் ஏதும் பிரச்சினையா, அல்லது டேவிட் உன்னைக் குடைந்து கொண்டிருக்கிறானா?" என்று கேட்டுவிட்டுக் கோப்பி யைக் குடித்தாள், சுபத்திரா.
157 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 84
'வீட்டில் எப்போதும் உள்ள பிரச்சினைதான். புதுசா ஒன்னுமில்லை என்று கூறி முடிப்பதற்குள் அம்மா வந்துவிட்டாள்.
"நாங்க கொஞ்சம் வெளியே போய்ட்டு வாறோம்' என்று அம்மாவிடம் கூறிவிட்டு ஆனந்தியிடம் "கிளம்பு' என்றாள்.
'ஆனந்தியைப் பார்த்து எத்தனையோ நாளாச்சு. இவவோட நாலு வார்த்தை கதைக்கிறதுக்குள்ளே இழுத்துக் கொண்டு போறியே." என்று அம்மா அங்கலாய்த்தாள்.
'வந்து கதைக்கலாம்" என்று சொல்லியவாறே ஆனந்தியுடன் வெளியே வந்தாள் சுபத்திரா.
கடலை ஒட்டியுள்ள ரயில் பாதையின் அருகே இருவரும் நடக்கத் தொடங் கினார்கள். வானம் சிறிது மந்தாரமாயிருந்தது. கடல்காற்று 'சில்' என்று வீசியது. ''-9|ւնւմ..... டேவிட் பிரச்சினைதான் என்று சொல்லு' - மெளனத்தைக் கலைத்துப் பேச்சைத் தொடங்கினாள் சுபத்திரா.
'அதுதான் இந்தப்பிரச்சினையாலே மனசும் சரியில்லைத்தான். அதுக்காக நான் இப்படி..!"
"இளைத்துப் போய்ட்டா. ஒருநாள் டேவிட்டைப் பற்றிச் சொன்னியே, அதுக்குப் பிறகு அந்தப் பேச்சையே காணோம். நான் இரண்டொரு தடவை கேட்டதுக்கு அம்மாவைப் பற்றிய கவலை காணாதென்று இந்தக் கவலையும் உனக்கு வேண்டுமாக்கும்" என்று சொல்லிவிட்டாய். இப்ப உன் கோலமே உன் மனசைக் காட்டுது. என்ன நடந்தது என்கிறதை இப்பவாவது சொல்லேன்?" "உனக்குச் சொல்லாதது என்னிடம் எதுதான் இருக்குது?' என்று கூறிய ஆனந்தி "நான் இது சம்பந்தமாய் என்மனசில் இருந்ததையெல்லாம் உனக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். சொன்னதோடு, உன்னிடம் யோசனையும் கேட்டேன். நீ அதைப் பகிடியாக்கி விட்டாய். அதுக்காக நான் வருந்தேல்லே என்றாலும் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் -இனி டேவிட்டைப் பற்றி நினைக்கவே கூடாது; இனி இந்தச் சலனங்களுக்கு இடம் கொடுக்காம மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேணும் என்று. ஆனா என் மன உறுதிக்கு அவரே ஒரு சோதனையை உண்டாக்கி விட்டார்' என்றாள்.
ஆச்சரியமும் கேள்வியும் ஒன்று சேர ஆனந்தியைப் பார்த்த சுபத்திரா 'ஏன் நிறுத்தி விட்டாய் சொல்லு." என்று ஆவலுடன் தூண்டினாள்.
'உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்?' என்று லேசாய்ச் சிரித்து விட்டு டேவிட் தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து நடந்த அத்தனையையும் விபரமாய்க் கூறினாள். கடைசியாக, "இப்படியெல்லாம் நடக்குமென்று நான் எதிர்பார்க் கேல்லே. எனக்குள்ளே எத்தனை போராட்டம் நடந்தாலும் என்னை இப்ப டியே இருக்க விட்டிடுங்க என்று சொல்கிறதுக்கு எனக்கு எப்படித்தான் மனசு
சுபைர் இளங்கீரன் 158

வந்ததோ. சொல்லி விட்டேன். எனக்கு ஒரு பாரத்தை இறக்கியது போலிருந்
தது. ஆனாநான் இப்படிச் சொன்னதால் அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும்
என்று நினைக்கிற போது இன்னொரு பாரம் வந்து ஏறிக்கொண்டது. எனக்காக
நான் கவலைப்படுகிறதை விட்டு இப்ப டேவிட்டுக்காக கவலைப்பட வேண்டி
யிருக்குது. இப்படி ஒரு சோதனையும் வேதனையும் எனக்கு வந்திருக்க வேண்டாம். இதை நினைச்சு நினைச்சு சங்கடப்படவேண்டியிருக்குது.
சாப்பாட்டிலேயும் சரி, வேறு எந்த வேலையிலும் சரி மனம் தரிக்க மாட்
டேங்குது. இரவில் நித்திரை கூட இல்லை. அதனால்தான் என்னவோ இப்படி
இளைத்து விட்டேன் போலிருக்குது' என்றாள்.
斧 * * * 壹
ஆனந்தி கூறியதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டு வந்த சுபத்திரா ரயில் பாதையும் தாண்டி மறுபக்கம் குவிந்து கிடக்கும் கற்பாறைகளில் தாவித்தாவி நடந்து ஒரு பாறையில் நின்றபடி "இங்கே கொஞ்சம் இருப் போமே..?' என்று கேட்டுவிட்டு அதில் உட்கார்ந்தாள்.
அவளைத் தொடர்ந்து பாறையில் ஏறிய ஆனந்தியும் "சரி'என்று தலையை ஆட்டி விட்டு ஒருகல்லில் அமர்ந்தாள்.
தூரத்தில் கடலுக்கு முன்னால் அலைகளை வரவேற்க காத்துநிற்பது போல் வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள் சோபையை ஊட்டின. கரையில் இரண்டு மூன்று தோணிகள் கிடப்பதும் தெரிந்தது. தெற்கே இருந்து வந்த ரயில்வண்டி மின்னலாக ஓடி மறைந்தது.
இந்தக் காட்சிகளில் விழிகளை ஓட விட்ட வண்ணம் "இதைத்தவிர நான் என்னதான் செய்ய முடியும், சொல்லேன்?' என்றாள் ஆனந்தி- துயரத்தில் தோய்ந்தெழுந்த குரலில்.
கடலையே பார்த்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த சுபத்திரா திரும்பி ஆனந்தியை அனுதாபத்தோடு பார்த்தாள்.
'நீ முதலில் இதைத் தெரிவித்த போது உன்னைப் பகிடி பண்ணியது உண்மைதான். என்றாலும் இதைப் பகிடிக்குரிய விஷயமாக நான் கருதேல்லே. உன்னைப் பற்றியும் உன் மனசில் உள்ளதைப் பற்றியும் நான் சிந்தித்தேன். ஆனா யோசனை சொல்கிறதுக்கு எனக்கு ஒன்னும் புலப்படேல்லே. அதற்குப் பிறகு நடந்ததை இப்ப சொன்னியே, இதைக் கேட்ட பிறகும் எனக்கு என்ன சொல்கிறதென்றே தெரியேல்லே...'
'ஒவ்வொன்றைப் பற்றியம் நீயும் ஒரு அபிப்பிராயம் சொல்லிவியே, இதிலே மட்டும் ஏன் ஒன்னும் புலப்படேல்லே?"
"அது ஏதோ ஒரு வகையில் என் வாழ்க்கையிலே சம்பந்தப்படுகிறதினாலே ஒரு அனுபவத்தைச் சொல்கிறதினாலே அது சம்பந்தமாக ஒரு அபிப்பிரா
159 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 85
யத்தைக் கூற முடியாது. ஆனா இப்ப உனக்கு ஏற்பட்டுள்ள இந்த அனுபவம் எனக்கு ஏற்படேல்லே. அதனால் தான் ஒரு யோசனையும் புலப்படேல்லே. எனக்கும் இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டா நான் எப்படி நடந்து கொள்வேன் என்று கூட ஊகிக்க முடியேல்லே...'
'நீ தான் புத்தகங்கள் கதைகள் என்று உறிஞ்சி உறிஞ்சிப் படிக்கிறியே அதிலே எனக்கு ஏற்பட்டதைப் போல யாருக்காவது ஏற்பட்டிருக்குமே, அவர்கள் என்ன செய்தார்கள், இந்த மாதிரியான சிக்கலை எப்படித் தீர்த்தார்கள் என்கிறதைச் சொல்லேன்' என்றாள் ஆனந்தி வேடிக்கையாக.
சுபத்திரா சிரித்தாள். 'நான் படித்த நாவல்களிலே, கதைகளிலே உன்னைப் போல ஒரு கதாநாயகியை நான் பார்க்கேல்லே'
'என்னைக் கதாநாயகியாக்கி விட்டாய். இனிச் சினிமாவிலே நடிக்க வேண்டியது தான் பாக்கி."
"சினிமாவை இங்கே ஏன் இழுக்கிறாய்? அதுவும் நம்ம தமிழ்ச் சினிமா விலே உனக்கு மட்டுமென்ன, உன்னைப் போன்ற ஒரு பாத்திரத்துக்கே இட மில்லை."
'ஏண்டி நான் அவ்வளவு மோசமானவளா?" 'நான் சொன்னதைப் புரிஞ்சு கொள்ளாம நீ ஏன் தலையில் அள்ளிப் போட்டுக் கொள்கிறாய்?" "அப்ப புரியவை' 'தமிழ்ச் சினிமாவிலே வருகிற பாத்திரங்கள், கதை, காதல் இதுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமுமில்லே. வாழ்க்கையிலே உன்னைப் பார்க்க லாம். சினிமாவிலே பார்க்க முடியுமா? நிதர்சனமாக உள்ள எதுவுமே அதில் இல்லையே. அதைத்தான் சொன்னேன்.'
"சரி, சரி போதும் நிறுத்து. என் மனச் சஞ்சலத்துக்கு மருந்து கேட்கப் போய் அது இப்ப சினிமாவிலே வந்து நிற்குது'
'உனக்கு மருந்து சொல்ல இந்த டொக்டருக்கு ஒன்னும் புலப்படேல்லே என்று சொல்லி விட்டேனே. நீ கம்பெனி டொக்டரிடம் போகவேணும்'
"கம்பெனி டொக்டரா அது யாரு?"
''GL65).
ஆனந்தி சட்டென்று சுபத்திராவின் கன்னத்தைக் கிள்ளினாள். 'டேவிட்டின் கன்னத்தைக் கிள்ளுகிறதை விட்டு என் கன்னத்தை ஏண்டி கிள்ளுகிறாய்? என்று ஆனந்தியின் கையைப் பிடித்தாள்.
இதைச் சுபத்திரா சொன்னதும் "உனக்குப் பகிடி கூடிப் போச்சுது' என்று இன்னும் அழுத்தமாகக் கிள்ளிவிட்டு கையை எடுத்தாள்.
சுபைர் இளங்கீரன் 160

கிள்ளப்பட்ட சுபத்திராவின் கன்னத்தை விட ஆனந்தியின் கன்னங்கள் அப்போது அதிகமாகச் சிவந்திருந்தன. "உன்னோடு கதைத்துக் கொண்டிருக்க என்னாலே ஏலாது. உனக்குப் பகிடியாய் இருக்குது. எனக்கோ மனசு துடித்துக் கொண்டிருக்குது' என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று எழுந்தாள்.
'நான் பகிடி பண்ணேல்லே இரு' என்று ஆனந்தியின் கையைப் பிடித்து உட்கார வைத்துவிட்டு 'நான் என்ன சொல்ல வேணும். அதைச் சொல்லு."
'நான் டேவிட்டுக்குச் சொன்ன முடிவு சரியா பிழையா? உன் அபிப் பிராயம் என்ன -அதைச் சொல்லு'
"சரியா பிழையா என்று என்னாலே தீர்மானிக்க முடியேல்லே. ஆனா உன் முடிவுதான் இறுதியானதென்று நினைக்காதே. மாற்றமும் ஏற்படலாம். இப்ப சரியானது என்று நினைக்கிறதுநாளைக்குப் பிழையாகிவிடலாம். நாளைக்குப்
பிழையாக இருக்கிறது மறுநாளைக்குச் சரியாக இருக்கலாம். ஏனென்றால்
எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதில்லே. மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு நடக்கிறது நாளைக்கு வேறு மாதிரி நடக்கும்."
'என் வாழ்க்கையிலே அப்படி என்னதான் மாற்றம் ஏற்படும் என்று நீ நினைக்கிறாய்?"
"அதை இருந்துதான் பார்க்க வேணும். ஆனா உன்னுடைய முடிவு உன் பிரச்சினையைத் தீர்க்கேல்லே. முடிவுக்கு வந்து விட்டதாக நீதான் நினைத்துக் கொண்டிருக்கிறாயே தவிர சிக்கல் தொடர்ந்து இருக்குது. விஷயம் முடி யேல்லே. டேவிட் கூட தன்னுடைய அபிப்பிராயத்தை இன்னும் சொல் லேல்லே. பார்க்கப் போனா என்னையும் விட ஒரு அபிப்பிராயம் ஒரு யோசனை என்று சொல்கிறதுக்கு அவருக்குத்தான் தகுதியிருக்கிறது. அவர் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டவர். அதனால் தான் உன் நோய்க்கான மருந்துக்கு கம்பெனி டொக்டரிடம் போ என்றேன். அதை நீ பகிடி என்று எடுத்துக் கொண்டாய். அது போகட்டும். டேவிட் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். உன் முடிவு அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் டேவிட்டைப் பற்றி நீ சொன்னதையெல்லாம் வைத்துக் கொண்டு பார்த்தால் நீ நினைக்கிறது போல மனமொடிந்திருப்பார் என்று நான் நினைக்கேல்லே. நீயும் இதுக்காக மனசைக் கண்டபடி குழப்பிக் கொண்டிருக்காம அமைதியாக இரு' என்று சொல்லிவிட்டு எழுந்தவள் 'அம்மா நம்ம இரண்டு பேரையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பா, வா போகலாம்' என்று நடந்தாள்.
好 * * * 絮
16 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 86
பத்தாவது அத்தியாயம்
ம்பெனியில் ஆட்குறைப்பு நடத்தப் போவதாகச் செய்தி வந்தது. அதைப்பற்றி விவாதிப்பதற்காக ஒருநாள் பின்னே ரம் யூனியனின் அவசரக்கூட்டம் நடந்தது. ஆனந்தியும் போயிருந்தாள்.
கூட்டத்தில் வந்திருந்தவர்களில் பலர் ஆட்குறைப்பு சம்பந்தமாகக் காரசாரமாக விவாதித்தார்கள்.
'இது மனேஜரின் மூளையில் உருவான ஒரு திட்டம். சோம்பேறிகளின் மூளை பிசாசுகளின் தொழிற்சாலை என்று யாரோ ஒருவன் சொன்னான். மனேஜரைச் சோம்பேறி என்று சொல்லமாட்டேன். ஆனா அவருடைய மூளை பிசாசுகளின் தொழிற்சாலை என்று சொல்லுவேன்' என்று செல்லையா கிண்டலாகக் கூறினான்.
எல்லோரும் 'கொல்’ என்று சிரித்தார்கள்.
'இது உண்மையாக இருந்தால் இதை எதிர்த்துப் போராட வேண்டும். இம்மியும் விட்டுக் கொடுக்கக்கூடாது' என்று மேசையில் ஒரு குத்து விட்டான் ஜமீல்.
சிறிசேனா சினத்துடன் கேட்டான்: "மனேஜர்இந்த வேலையை ஏன் செய்யப் போறானாம்?" -
'கம்பெனிக்கு நஷ்டம் வரப் பார்க்குதாம்' என்றாள் இராசம்மா.
றோஸிக்கு முகமெல்லாம் வெந்து கொண்டிருந்தது. "இது பொய். எங்க
சுபைர் இளங்கீரன் 162
 

கொஞ்சப் பேரிலே மனேஜருக்கு வெறுப்பு. அவன் எங்களை வெளியே போட வழி பார்க்கிறான். முந்தியும் இப்படித்தான். ஒரு தடவை திட்டம் போட்டான். நடக்க விடேல்லே'
அதுவரை எல்லோருடைய அபிப்பிராயத்தையும் கேட்டுக் கொண்டிருந்த டேவிட் சொன்னான். றோஸி கூறியது மட்டுமல்ல, ஆட்குறைப்பு நடத்த வேணும் என்று நிர்வாகம் இடையிடையே நினைக்குது. வெளியிலே லட்சக் கணக்கானவங்க வேலையில்லாம அலைகிறாங்க. அவங்களை குறைஞ்ச சம்பளத்துக்குப் பிடிக்கலாம். அதுக்கு நம்மை வெளியே போட வேணும். இதுதான் நிர்வாகத்தின் உள்நோக்கம். போன வருஷம் வேண்டுமென்றே நஷ்டக் கணக்குக் காட்டி ஆட்குறைப்புச் செய்ய நினைத்தது நிர்வாகம், அதை நாம முறியடித்தோம். இப்பவும் அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது."
'கம்பெனியில் வேலை செய்கிற ஒரு பியோனைக் கூட வெளியே போட அனுமதிக்கப்படாது. இதிலே என்ன வந்தாலும் சரி, எல்லாரும் உருக்கு மாதிரி நிற்க வேணும்' என்று திரும்பவும் தன் கருத்தை வலியுறுத்தினான் ஜமீல்.
'இதுக்கு யார் மறுப்புச் சொல்லப் போறாங்க?' என்றான் செல்லையா. தொடர்ந்து அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்று ஒரு பழ மொழியையும் சொல்லி வைத்தான்.
இப்படி விவாதமும் பேச்சுமாக நேரம் கழிந்தது. கடைசியாக, ஜமீலின் கருத்தையே தீர்மானமாக எடுத்துக் கொண்டு கூட்டம் கலைந்தது.
எல்லோரும் வெளியே வரும்போது ஆனந்தி மட்டும் பேசாமல் வந்தாள். 'என்ன யோசனை? உங்க வேலைக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீங்களா?' என்று கேட்டான் டேவிட்.
'என் மனசில் உள்ளதைத்தான் நீங்க கேட்கிறீங்க. ஆனா நான் பயப்படே ல்லை. ஆனா இப்படி நடந்து விடுமோ என்று யோசிக்கத்தான் செய்கிறேன்"
'அப்படி ஒன்னும் நடக்காது. மனேஜர் இந்த மாதிரி ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்டுக் கொண்டுதான் இருப்பார். ஆனா ஆட்குறைப்பு நடத்தினா கம்பெனியை மூடவைப்போமே தவிர நடத்த விடமாட்டோம் என்றுமனேஜருக் குத் தெரியும். அதனாலே இது நடக்காது. நீங்க ஒன்னுக்கும் யோசிக்காதீங்க." 'நான் இதைப்பற்றி யோசிக்காவிட்டாலும் உங்களைப் பற்றி யோசிக் கிறேன்."
"அது என்ன யோசனை?"
"என்னாலே உங்க மனசு ஒடிஞ்சு போயிருக்குமே என்ற யோசனைதான் எனக்கு அதை நினைத்து ஒரே கவலை"
'ஒ. அதைச் சொல்றீங்களா..? அப்படி ஒன்னுமில்லே'
163 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 87
'நீங்க எனக்காக மறைக்கிறீங்க"
"நான் உங்களை அந்நியமாய் நினைக்காத போதுநான் ஏன் மறைத்துப் பேச வேணும்?"
O69 ஒடிஞ்சு போகவில்லை என்று டேவிட் சொன்னது ஆனந்திக்கு ஆச்சரியமாயிருந்தது. சுபத்திராவும் இதைத்தானே சொன்னாள்...? டேவிட்டை அவள் பார்த்ததுமில்லே. பேசியதுமில்லே. நான் சொன்னதை எனக்கு ஏன் முடியேல்லே.
இருவரும் பஸ் தரிப்புக்கு வந்துவிட்டார்கள்.
"கொளு ஹதவத படம் ஓடுது. நீங்க பார்த்தீங்களா?"
'இல்லே'
'பார்க்கலாம் வாரீங்களா?'
'பார்க்க வேண்டிய படம். y v
ஆனந்திக்கு த ட்ரெயின் படம் ஞாபகத்துக்கு வந்தது. டேவிட் பார்க்க வேண்டிய படம் என்று சொன்னால், அது நல்ல படமாகத்தான் இருக்கும் என்று அவளும் தனக்குள் ஒப்புக் கொண்டாள். ஆனால் அவளிடம் காசில்லை. டேவிட்டையே செலவழிக்க வைக்கிறதா..?
"என்ன யோசனை?"
'சொல்லி விடுகிறேனே. என்னிடம் காசில்லை’
'உங்களிடம் வரட்டுக் கெளரவம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்குது'
'இல்லே, இருந்தா பச்சையாக காசில்லை என்று சொல்லாமல் வேறே ஏதும் சாட்டுச் சொல்லி கடத்தியிருப்பேன்"
'நின்று பேச நேரமில்லே. பக்கத்தில் எம்பயரில் தான் ஓடுது. பத்து நிமிஷத்தில் நடந்தே போயிடலாம். வாங்க."
அவன் நடக்க ஆனந்தியும் நடந்தாள்.
* * 菁 * *
சிறிது தூரம் போனதும் டேவிட் சொன்னான்: "நீங்க அன்றைக்கு உங்க குடும்ப நிலைமையைச் சொல்லி, அதனாலே இப்படியே இருக்க விட்டிடுங்க என்று கூறினீங்க. இதைத்தவிர வித்தியாசமாய் ஒன்னும் சொல்லேல்லியே, மனம் ஒடிஞ்சு போறதுக்கு. என் உள்ளத்திலே நீங்க இருக்கிறது போல உங்களிடம் நான் இருக்கிறேன். இது எவ்வளவு சந்தோஷமான விஷயம். நாம
சுபைர் இளங்கீரன் 164

சேர்ந்து வாழ உங்களுக்குள்ள குடும்பப் பொறுப்புகள் தடையாக இருக்குது. இது ஒன்றுதானே பிரச்சினை. இதுக்காக ஏமாற்றமடையவோ வாழ்க்கையே பறிபோனது போல மனமொடியவோ தேவையில்ல்ே.'
'உங்களுக்கு இருக்கிறது போக சாதாரணமாக நம்மைப் போல இருக்கிற வங்களுக்கு வெவ்வேறு விதத்திலே பொறுப்புக்களும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யுது. இதுக்காக வாழ்க்கையே இல்லையென்று போயி டேல்லே. வாழ்க்கையை எப்படி எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு வாழ்ந் தாலும் வாழ்க்கை இருக்கிறது என்ற அர்த்தத்திலே -அதிலே நம்பிக்கை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதனால்தான் வறுமை, கஷ்டம், பிரச்சினைகள், குடும்பப் பொறுப்புகள் எல்லாம் இருக்க இத்தனைக்கும் மத்தியிலும் காதல், கல்யாணம், பிள்ளைகள், குடும்பம் என்று எல்லாமே நடக்குது. அவங்க அழுது கொண்டே இருக்கேல்லே. சிரிக்கவும் செய்யிறாங்க. கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டே இருக்கேல்லே. அதை எதிர்த்து இல்லாமச் செய்ய போராடவும் செய்கிறாங்க.
"வாழ்க்கையில் விரும்புகிறதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்கிறதில்லே. நமக்கு கிடைக்கேல்லே என்று அன்றைக்குச் சொன்னீங்க. வறுமைதான் இதுக்கு அடிப்படைக் காரணம். ஆனா வறுமை ஒரு தீராத நோயல்ல. அது ஒரு நாள் முற்று முழுதாக ஒழிக்கப்படுவது நிச்சயம்.
"இப்படி நான் சொல்கிறதினாலே இப்ப உங்க சகோதரங்களை விட்டிட்டு பிரச்சினைகளை அப்படி அப்படியே போட்டிட்டு என்னோட வந்திடுங்க என்று அர்த்தமில்லே. ஆனா நீங்க இப்படியே இருக்கிறதினாலே உங்ககுடும்ப கஷ்டங்கள் தீர்ந்து போகும். பொறுப்புக்களையும் நிறைவேற்றி விடலாம் என்று நினைக்காதீங்க. உங்களுக்குள்ள நிலை இன்றைய சமூக நிலைமையின் அதன் பொருளாதார ஏற்பாட்டின் தாக்கந்தான். நல்லாகச் சிந்தித்துப் பாருங்க. உங்க சம்பளத்தை வைத்துக் கொண்டு உங்க குடும்பப் பிரச்சினைகளை நீஜ்க நினைக்கிற மாதிரி தீர்க்க முடியுமா? இந்த நிலைமை மாறும் வரைக்கும் உங்க நிலைமையும் மாறப் போறதில்லே. ஆனால் சமூக நிலைமைகள் நிச்சயம் மாறும் என்கிறதை மட்டும் நம்புங்க.
'நீங்க என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க. உங்க நிலைமையை எண்ணி யும் மனம் தளர்ந்து போகாதீங்க' w
டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே போகும் போது படமும் ஆரம்பமாகிவிட் டது. அதுவரை டேவிட் கூறிய அத்தனையும் அவளுடைய மனதில் அச்சுப் போல் பதிந்துவிட்டது. ஆனால் அதைப்பற்றிச் சிந்திக்காம படத்தில் கவனம் சென்றுவிட்டது. '
ஒரு பாடசாலை மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே உருவாகி வளரும் காதலைச் சித்தரிப்பதுதான் கதை. ஒருவிதமான போலித்தனமோ, பொய்யோ இல்லாமல் -வாழ்க்கையில் சர்வசாதாரணமாக நடக்கும் சம்பவங்களை
165 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 88
வைத்துக் கொண்டு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் படத்தை எடுத்திருந்தார்கள். அதில் வரும் அந்த இளம் காதலர்கள் மென்மையான மெளனத்துடன் பார்வையிலும் முக பாவத்திலும் தமது உள்ளத்தை, உணர்ச்சிகளைச் சித்திரித்தார்கள். கொளு ஹதவத -ஊமை உள்ளம் என்ற அந்தப்படத்தின் பெயர் கூட எவ்வளவு பொருத்தம்!
படம் ஆனந்தியைக் கவர்ந்து விட்டது. கதை உள்ளத்தைத் தொட்டு விட்டது. தன்னைக் கூட அது பிரதிபலித்துக் காட்டுவதாக தோன்றியது. அதில் வரும் மாணவியின் காதல் உள்ளத்தைப் போலவே தன்னுடைய உள்ளமும் ஒரு வகையில் ஊமையாக இருக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
காட்சி முடிந்து வெளியே வரும் போது "படம் எப்படி?" என்று கேட்டான் டேவிட்.
"இயற்கையாய் இருக்குது. உண்மையை சுத்தமாக எடுத்துக் காட்டுது' 'இதுதான் சிங்களப் படத்துக்கும் தமிழ்ப் படத்துக்கும் உள்ள வித்தியாசம். வரட்டுத்தனமான -ஒரே மாதிரியான கற்பனைகளைச் சோடித்து போரடிக் காமல், நீங்க சொன்னமாதிரி இயற்கையாக நடக்கிறதை அப்படியே எடுத் திருக்கிறாங்க, தமிழ்ப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சிங்களப் படங்கள் தரமாயிருக்குது. இதைப்போல ஒரு படத்தை தமிழில் பார்க்க முடியாது.'
டேவிட் இதைச் சொன்னதும் சுபத்திரா தமிழ்ப் படங்களை விமர்சித்தது ஞாபகத்துக்கு வந்தது.
"மெய்தான். ஆனா இந்தப் படத்திலே அவர்களின் காதல் நிறைவேறாதது தான் வருத்தமாயிருக்குது."
'இது சகஜந்தான். அதேபோல காதல் நிறைவேறுவதும் சகஜந்தான். அதனாலே இந்தக் கதையின் முடிவையே வாழ்க்கையின் முடிவாக கருதாம இருந்தா வருத்தப்பட வேண்டியதில் லே ரூபா நாணயத்திலே இரண்டு பக்கங்கள் இருக்கிறது போல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஆனா அநேகமாக நாம எல்லாரும் ஒரு பக்கத்தைப் பார்த்துவிட்டு முடிவையும் எடுத்து விடுகிறோம்.'
பேச்சுப் பராக்கில் 'சல்வேசன் ஆமி கட்டிடத்தையும் தாண்டி விட்டது. அப்போதுதான் ஆனந்திக்குத் தெரிந்தது.
'நீங்களும் கதைத்துக் கொண்டு வந்துவிட்டீங்களே, வீட்டுக்குப் போகேல் லியா?" என்று கேட்டாள் ஆனந்தி.
'தவளகிரிக்கு முன்னாலே பஸ் எடுக்கலாம். அதுவரைக்கும் உங்களோடு வரலாந்தானே."
சேர்ச் வீதிச் சந்தியில் டேவிட் பிரிந்து சென்றதும் அவன் தியேட்டர் வரை சொல்லி வந்த விஷயங்களைச் சிந்தித்தபடி தன் வீட்டுக்கு நடந்தாள் ஆனந்தி.
சுபைர் இளங்கீரன் 166

டேவிட் கூறியவற்றை அவளால் ஓரளவு கிரகிக்க முடிந்தது.
அவர் சொன்னதைப் பார்த்தால் நான் அவருக்கு தெரிவித்த முடிவு பிழைபோலத் தெரியுதே. அப்ப என் முடிவை மாற்றிக் கொள்ள வேணுமா. சுபத்திராவும் அன்றைக்கு இதைத்தானே சொன்னாள். டேவிட்டின் அபிப் பிராயங்கள் சரியாக இருந்தாலும் இப்ப உள்ள நிலைமையிலே இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்கிறது சாத்தியமா?. அவர் அப்படிச் சொல்லேல் லியே. என் தீர்மானத்தைப் பற்றி ஒரு அபிப்பிராயந்தானே சொன்னார். சாத்தியமோ, சாத்தியமில்லையோ ஆனா அவர் எவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியோடும் பேசினார்.
இப்படி எண்ணும் போது அவளுக்கே ஒரு தென்பு பிறந்தது போலிருந்தது. தான் நினைத்தது போல -கவலைப்பட்டது போல டேவிட்டுக்கு அப்படி ஒன்றுமில்லை என்று மனதுக்கு ஆறுதலாயுமிருந்தது.
好 好 好 好 好
டைப் ரைட்டருக்கு முன்னால், அமர்ந்திருந்த ஆனந்திகையிலிருந்த சம்பளக் காசை பார்த்தபடி பட்ஜட் போட்டுக் கொண்டிருந்தாள். வழக்கம் போல் சம்பளத்தையும் விட பிரச்சினைகள் மீறிக் கொண்டு நின்றன. வாங்கிய கடன்களை எப்படிக் கொடுக்கிறது. அந்த மாதச் செலவை எப்படிச் சமாளிக் கிறது. ஆறுமாத வீட்டு வாடகை வேறு பாக்கி நிற்கிறது. வீட்டு முதலாளி யிடமிருந்து கடைசி எச்சரிக்கையும் வந்து விட்டது.
இதுக்கெல்லாம் இந்தச் சம்பளம் போதுமா..?
ஆனந்தி திணறிக் கொண்டிருந்தாள்.
மனேஜரின் அறையிலிருந்து கோலிங் பெல் அலறியது. திடீரென விழித் தெழுந்தவள் போல் மனேஜரிடம் விரைந்தாள்.
'யெஸ் சேர்’
முன்னால் விரிந்து கிடந்த ஃபைலில் விழிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர் உடனே நிமிர்ந்தார். அவருடைய முகம் வெடு வெடு என்றிருந்தது. ஒருகணம் ஆனந்தியைப் பார்த்துவிட்டு ஃபைலிலிருந்த ஒரு கடிதத்தை விருக்கென்று எடுத்து ஆனந்தியின் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார்.
ஆனந்தி திடுக்கிட்டாள்.
"எடுத்துப் பார்...!"
நடுங்கும் விரல்களால் அதை எடுத்தாள். தான் டைப் அடித்த அந்தப் பத்திரத்தில் இரண்டு மூன்று வசனங்கள் விடுபட்டிருந்ததைப் பார்த்ததும் நெஞ்சு திக்' என்றது.
167 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 89
'ம். என்ன தெரியுது?" 'மி.ஸ்.டே.க்.'
"ஏன் இப்படி வந்தது?"
p.
"கவனமில்லே. நீவந்து திரீமந்த்ஸ். வேலையில் இன்னும் கவனமில்லே. கவனம் வேறே எங்கேயோ இருக்குது. யூ ஆர் ஏ ஃபூல். ' உறுமினார் மனேஜர் மாசிலாமணி.
ஆனந்திக்கு வியர்த்துவிட்டது. "ஃபிப்டீன் மினிட்ஸிலே, கரைக்டா தரவேணும் கொண்டு போ. நெஞ்சு "படபட" என்று அடிக்க உறைந்து போய் நின்றவள் பத்திரத்துடன் வேகமாக தன் இடத்துக்குப் போனாள்.
இந்த மூன்று மாதங்களாக ஒரு தடவையாவது அவள் இப்படி பிழை விட்டதே இல்லை. மனம் குழம்பிநிதானமில்லாமல் இருந்த வேளைகளில் கூட தன் கடமையைச் சரியாகத்தான் செய்தாள். வேலைகளில் அவ்வளவு கவனம். அப்படி இருந்தும் இந்தப் பிழை நேர்ந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க இப்ப நேரமில்லே. கால்மணித்தி யாலத்துக்குள்ளே இதை முடித்துவிட வேணும் என்று பதைபதைப்புடன் டைப் பண்ணத் தொடங்கினாள்.
இரண்டு தட்டுத் தட்டியதும் விரல்கள் ஓடாமல் நின்றன. இந்த் ஒரு சிறு தவறுக்காக முகத்தில் அறைந்திருக்க வேண்டாம். இனிமேல் இப்படித் தவறுகள் ஏற்படாம வேலையைக் கவனமாகச் செய்யவேணும் என்று தன்மையாகச் சொல்லியிருக்கலாம். ஒரு வானிங்காவது செய்திருக்கலாம். இப்படி. w
ஆனந்தியின் மனம் வேதனையால் துடித்தது; ஆத்திரமாயுமிருந்தது. சே. இதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தா இது முடியாது. விரல்கள் திரும்பவும் வேகமாக இயங்கத் தொடங்கின. ツ சொன்னபடி கால்மணித்தியாலத்துக்குள் அடித்து முடித்து ஒரு தடவை சரிபார்த்து விட்டு மனேஜரின் அறைக்குள் சென்றாள்.
மனேஜர் ஆனந்தி டைப் பண்ணிக் கொண்டு வந்த பத்திரத்தை வாங்கி மேசையில் வைத்து விட்டு கதிரையில் சாய்ந்தபடி அவளை ஒரு தடிவை ஏற. இறங்கப் பார்த்தார்.
'நீ வேலைக்கு வந்து மூன்று மாசமாய் விட்டது, இல்லையா?”
'ஓம்'
சுபைர் இளங்கீரன் 168

'வேலையில் கவனமில்லாதது இருக்கட்டும். உனக்கு இந்த வேலை பிடித்திருக்குதா?"
தலையை ஆட்டினாள். 'கம்பெனி ஆட்களையும் பிடித்திருக்கும்."
A. A
'அதிலும் டேவிட்டை நல்லாய்ப் பிடித்திருக்குது'
இது என்ன, இப்படிக் கேட்கிறார்! இக்கேள்வியின் அர்த்தமென்ன?
'நீ இங்கே வந்த முதல் நாள் கம்பெனி ஆட்களைப் பற்றிச் சொன்னேன். ஞாபகமிருக்குதா?"
'இருக்குது.' -
'இல்லையென்று நான் சொல்கிறேன்." என்று மனேஜர் மேசையில் அடிததாா.
ஆனந்திக்கு அவளையுமறியாமல் ஒருகணம் உடம்பு நடுங்கியது." 'ஞாபகமிருந்தாநான் சொன்னபடி நடந்திருப்பாய்; ஆனாநடக்கேல்லே."
Ᏸ ?
'நீ சொல்லுவாய் என்று எதிர்பார்த்தேன். சொல்லவில்லை. ஆனால் உன்னை அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒரு போயா அன்று களனிப் பாலத்தடியில் நீயும் டேவிட்டும் தனியாக இருட்டிய பிறகும் கதைத்துக் கொண்டிருந்ததும் தெரியும் -காரில் வரும் போது பார்த்தேன்'
ஆனந்தியின் முகம் சிவந்தது -வெட்கத்தால் அல்ல, கோபத்தால். சீ. என்னது. இவர் ஏன் இதையெல்லாம் உளவு பார்க்கிறார். ? இதிலே இவருக்கு என்ன அக்கறை?.
'என்னையும் விட உனக்கு டேவிட் முக்கியமாக இருக்கிறான், இல் 606)u Jit?'
- நிச்சயமாக. உங்களை நான் ஏன் முக்கியமாகக் கருத வேணும்? எனக்கு ஜொப் தந்ததுக்கா.
'உனக்கு என்மேலே - கம்பெனி மேலே விசுவாசமாய் இருக்கத் தெரி யேல்லே. ஆனால் டேவிட்டுக்கு விசுவாசமாய் இருக்கத் தெரியுது"
- நான் வேலைக்கு வந்த போது விசுவாசமாய் நடந்து கொள்ள வேணும் என்று சொன்னிங்க. அது நியாயமாகத்தான் பட்டுது. ஆனா கம்பெனியையும்
169 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 90
உங்களையும் இப்ப நீங்க கேட்கிற கேள்விகளையும் பார்க்கிற போது விசு வாசத்துக்கு அர்த்தம் புரியேல்லே'
"யூனியனிலே நீசேர்ந்தது கூட எனக்குப் பிடிக்காத விஷயம். ஆனால் அந்த டேவிட்டும் றோஸியும் உன்னைச் சேர்த்துக் கொண்டாங்க. நான் உனக்குச் சொன்ன அட்வைஸ் எல்லாம் மறந்து போச்சுது. சுருக்கமாய்ச் சொன்னால் நான் சொன்னபடி நடக்காதது மாத்திரமல்ல, எனக்குப் பிடிக்காததையும் நீ செய் கிறாய். இப்படிச் செய்யும்படி உனக்கு யார் சொல்லித் தந்தது?"
எனக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லே. நான் பபா அல்ல. "நாங்கள் ஆட்குறைப்பு நடத்த இருக்கிறோம். விசுவாசமானவர்களை வைத்துக் கொண்டு மற்றவங்களை வெளியே அனுப்பப் போகிறோம்.'
- விஷயம் எல்லைக்கு வந்திட்டுது. அவங்களில் நானும் ஒருத்தி என்கிறது நிச்சயமாய்விட்டுது.
'இந்த விஷயமாக யூனியனிலே கூட விவாதம் நடந்தது, இல்லையா?"
'என்னைப் பற்றிக் கூட காரசாரமாய் நடந்திருக்குமே. என்ன விவா தித்தீங்க, என்னைப் பற்றி என்ன பேசினீங்க..?'
'ஏன் மெளனமாய் இருக்கிறாய்? கேட்கிறதுக்குப் பதில் சொல்!' 'நாளையிலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன் -மை ரிப்ளை இஸ் வெறி கிளியர்'
பட்டென்று தன் பதிலைக் கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து நடந்தாள் ஆனந்தி
மனேஜர் மாசிலாமணி சிலையாகி விட்டார்.
鲁 * * * 菁
தான் விட்ட பிழைக்காக மனேஜர் முகத்தில் அறைந்தது போல் நடந்து கொண்டது கூட ஆனந்திக்கு இப்போது உறைக்கவில்லை. ஆனால் குற்ற வாளியைக் குறுக்கு விசாரணை செய்வது போல் கேள்விகளால் தன் மானத் தைக் குத்திக் காயப்படுத்தியதும் தன்னைக் கோள் சொல்லும்படி வற்புறுத்தி யதும் தான் அவளுடைய மனதைக் கொதிக்கச் செய்தது. அவளால் பொறுக்க முடியவில்லை. முன்பின் யோசியாமல் -ஒரு வேகத்தில் 'நாளையிலிருந்து வேலைக்கு வரமாட்டேன்' என்று சொல்லி விட்டாள்.
தன் இட்த்துக்கு வந்த பிறகும் அவள் உள்ளம் வேகமாக படபடத்தது. இவன் பெரிய மனுஷன், அல்ல, சின்ன மனுஷன், மிக மிக சின்ன மனுஷன். ஒரு வேலையைத் தந்துவிட்டு என்னை என்ன பாடுபடுத்துகிறார். எவ்வளவு
சுபைர் இளங்கீரன் 17()

திமிராக விசாரணை செய்கிறார். எவ்வளவு அற்பத்தனமாக கேளவ களையெல்லாம் கேட்கிறார். எல்லாம் இந்த ஜொப்புக்குத்தானே. எனக் காகவா வேலை தந்தார்? சுபத்திராவின் சிநேகிதர் நவரட்ணத்துக்காகத் தந்தார். தன் வாயாலேயே இதைச் சொல்லிவிட்டு இப்படி எனக்காக ஏதோ தர்மம் பண்ணியமாதிரி பேசுகிறார். இந்த வேலைக்காக இதுக்கெல்லாம் குனிந்து கொண்டிருக்க முடியுமா? இவர் தாளத்துக்கு நான் ஆடவேணுமா?
மனேஜர் கேட்ட கேள்விகளை நினைக்க நினைக்க ஆனந்திக்கு ஆத்திரத் தால் உள்ளம் குமுறியது. அற்பத்தனமான கேள்விகள், அற்பத்தனமான மனுஷன் என்று மனம் திரும்பவும் சீறியது. ஆட்குறைப்பு நடத்தப் போவதாகச் சொன்னதையும் நினைத்து மனம் வெகுண்டது.
இது சம்பந்தமாக யூனியன் கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளும் டேவிட் கூறிய அபிப்பிராயமும் கோர்வையாக நினைவுக்கு வந்தன.
இவருடைய வீம்புக்கு அவர்கள் மசிய மாட்டார்கள். இவர் வெளியே அனுப்புகிறதையும் பார்ப்போம். ஆனாநான் ஒரு நிமிஷமும் இவருக்குக் கீழே இருக்க முடியாது.
நினைக்க நினைக்க அவளுக்குச் சிந்தையெல்லாம் சிவந்தது. உடம் பெல்லாம் வியர்த்தது.
மனேஜர் கூப்பிட்டதும் மேசையில் போட்டுவிட்டுச் சென்ற சம்பளக்காசு அப்படியே கிடந்தது. அதில் பார்வை விழுந்ததும் அவளுடைய சிந்தனை திரும்பியது.
சற்று நேரத்துக்கு முன்புதான் அந்தச் சம்பளத்தையும் வைத்துக் கொண்டு பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறது என்று திணறியது நினைவுக்கு வந்தது இதுதான் கடைசிச் சம்பளம். இனிமேல் இந்தக் காசையும் காணமுடியாது என்று எண்ணியதும் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கண்முன் வந்து நின்றார்கள். வேலையில்லாமல் இருந்த போது பட்ட கஷ்டங்களும் பசிபட்டினிகளும் நினைவுக்கு வந்தன். உணர்ச்சிவசத்தால் வேலையை உதறித் தள்ளியது தவறோ என்று ஒருகணம் எண்ணினாள். மறுகணம் விசுவாசமில்லாதவங்களை வெளியே அனுப்பப் போவதாக மனேஜர் கூறியது காதில் இரைந்தது. அவருடைய அகராதிப்படி தானும் விசுவாசமில்லாதவள்தானே..! தான் அப்படிச் சொல்லியிருக்கா விட்டாலும் அவர் தன்னையும் வெளியே அனுப்பத்தான் செய்வார். அதற்கு முந்தி தானாக விலகிக் கொண்டது ஒரு வகையில் நல்லதாங் பட்டது. ஆனால் இனிமேல் என்ன செய்வது?
திரும்பவும் மனேஜரின் கோலிங் பெல் அடித்தது, இப்ப எதுக்காகக் கூப்பிடுகிறார்? நான் போகத்தான் வேண்டுமா? நான் வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டேனே. இனி எதுக்கு இந்த அற்ப நாய்க்கு முன்னால் போய் நின்று சேர் போடவேணும்?.
171 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 91
மணி அடித்துக் கொண்டே இருந்தது. ஆனந்தி சரேலென்று எழுந்தாள். ஆனால் நிதானமாக நடந்து மனேஜரின் முன்னால் போய் நின்றாள். 'சேர்' போடவில்லை. V
மாசில்ாமணி அவளைச் சில நிமிஷங்கள் உற்றுப் பார்த்துவிட்டு கதிரையை விட்டு எழுந்தார்: டையை அவிழ்த்து விட்டுக் கொண்டு மின் விசிறியை கொஞ்சம் வேகமாக முடுக்கியவர் ஆனந்தியின் பக்கம் திரும்பி 'இரு' என்றார். அவருடைய முகத்தில் சிறிது நேரத்துக்கு முன்பு இருந்த வெடுவெடுப்பு இப்போது இல்லை.
ஆனந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இது வரைக்கும் அவளை இருக்க
வைத்துக் கதைத்ததில்லை. அவளும் மரியாதையைக் கருதி அதை ஒரு குறையாக எண்ணியதுமில்லை. இப்போது குடாகப் பேசி, வெறுப்பாக நடந்து கொண்ட பிறகு- அதுவும் விசுவாசமற்றவள் என்றுதான் கருதும், தனக்குக் கீழே ஊழியம் பார்க்கும் ஒருத்திக்கு இந்த மரியாதை தருவதென்றால் ஆனந்திக்கு விநோதமாக இருந்தது. A
இவருக்கு ஏன் இந்தக் கனிவு?.
ஆனந்தி இருக்கவில்லை.
"சொன்னதைக் கேட்க வேண்டும்' -ஆணையிடும் தொனியில் கூறினார் மாசிலாமணி.
திரும்பவும் அதிகாரமா?.
"பரவாயில்லே...'
'உன்னோடு கொஞ்சம் கதைக்க வேணும். இரு'
-இன்றைக்கு மட்டும் தானே இந்த அதிகாரம். என்று எண்ணியவளாய் கதிரையில் அமர்ந்தாள் ஆனந்தி.
* 斧 好 壹 *
மாசிலாமணி நடந்து கொண்டே பேசத் தொடங்கினார். "எந்தக் கார ணத்தாலும் உன் வேலையை இழந்து போகும்படி நடந்து கொள்ளாதே என்று உனக்குக் கூறியது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் அப்படிச் சொன்னேன் தெரியுமா? உன்மேலே எனக்கு நிறைய அனுதாபம் இருப்பதால் தான். இந்த அனுதாபத்தால்தான் உனக்கு அட்வைஸ் பண்ணினேன். இங்கே வேலைக்கு வந்த யாருக்கும் நான் இதுபோல அட்வைஸ் பண்ணியது கிடையாது.
'இந்தக் காலத்திலே, அதுவும் உன்னைப் போல கஷ்டப்பட்ட நிலையில் உள்ள ஒருபெண் என்னைப் போல ஒரு ஸ்டேட்டஸ்ஸில் இருக்கிற ஒருவரின் அனுதாபத்தையும் அபிமானத்தையும் பெறுகிறது அதிர்ஷ்டம் என்பதை அவளுடைய வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் அவசியம் என்பதை நான் உனக்குச் சொல்லித் தர வேண்டியிருக்குது. புத்திசாலியான பெண்ணாக
சுபைர் இளங்கீரன் 172

இருந்தால் இதை உணர்ந்து நடந்து கொள்வாள்'
மனேஜர் மாசிலாமணி இத்தனையையும் நிதானமாகக் கூறிவிட்டு நடையை நிறுத்தி, ஆனந்தியைப் பார்த்துக் கொண்டே மேலும் தொடர்ந்து கூறினார்;
'உன்மேல் எனக்கு எந்தளவு அனுதாபம் இருக்குது என்று உனக்குத் தெரியாவிட்டாலும் நான் சொல்கிறேன். உன்னை முன்நூறு ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு சாதாரணடைப்பிஸ்டாகவே வைத்திருக்க வேணும் என்று நான் நினைக்கவில்லை. சுருக்கமாய்ச் சொன்னால் உன்னை ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் என் பெர்சனல் செக்ரட்டரியாக -அந்தரங்கக் காரியதரிசியாக -வைத்திருக்க வேணும் என்று தீர்மானித்தேன். உன்னையும் விட எனக்கு நல்ல விசுவாசமாய் இருக்கக்கூடிய-அதுவும் பட்டதாரியான ஒரு பெண்ணைஇதுக்கு எடுக்க முடியும். இருந்தும் இந்தத் தீர்மானத்துக்கு நான் வரக் காரணம் உன்மேல் உள்ள அனுதாபம் தான்."
நின்றவர் திரும்பவும் நடந்து கொண்டே பேசினார்;
'பெர்சனல் செக்ரட்டரியாக வருகிறவர், விசுவாசமுள்ளவராய் இருக்க வேண்டும். உன் விசுவாசத்தை -உன் நடத்தையைச் சோதிக்கத்தான் கம்பெனி ஆட்களைப் பற்றியும் டேவிட், றோளமியைப் பற்றியும் உனக்குக் கூறினேன். எனக்கு நீ விசுவாசமாய் இருக்க வேண்டும் என்று உனக்கு வலியுறுத்திச் சொன்னேன். இந்தச் சோதனையில் நீ பாஸாவாய் என்றும் எண்ணினேன். ஆனால் நீ பாஸாகவில்லை. அதுமாத்திரமல்ல, நீ அவர்களுடன் சேர்ந்து கொண்டாய். எனக்கு பிடிக்காததைச் செய்கிறாய். இதைத் தெரிந்து கொள்ள எனக்கு மூன்று மாதம் வேண்டியிருக்கவில்லை. உடனேயே தெரிந்து விட்டது. நான் அப்போதே உனக்கு நோட்டீஸ் தந்திருக்க முடியும். தரவில்லை. ஏன் தெரியுமா? உன்மேல் உள்ள அனுதாபத்தால் தான். அதனால் தான் இத்தனை நாளும் உன்னை அவதானித்து விட்டு இன்றைக்கு உன்னை விசாரித்தேன். ஒரு பதிலும் சொல்லாமல் மெளனமாய் இருந்த நீ நாளையிலிருந்து வேலைக்கு வரமாட்டேன் என்று மட்டும் கூறிவிட்டுப் போய் விட்டாய். இது அவசரத் தனமான -மடத்தனமான முடிவு என்பதை இப்போதாவது உணர்ந்து கொள் வாய் என்று நினைக்கிறேன்.
'உன் முடிவைத் தெரிவித்த பிறகும் கூட உன்மேல் உள்ள அனுதாபமும் நம்பிக்கையும் இன்னும் போய்விடவில்லை. அதனால்தான் உனக்கு இவ்வளவு தூரம் இதை விளக்கிச் சொல்கிறேன். உன் நன்மையைக் கருதிநான் கூறிய இந்த விஷயங்களை அமைதியாகச் சிந்தித்து உன் முடிவை மாற்றிக் கொள்வாய் என்றும் நம்புகிறேன்"
மளமளவென்று இத்தனையையும் கூறிவிட்டு கைக் கடிகாரத்தைப் பார்த்த மனேஜர் மாசிலாமணி த்ரீ தெர்ட்டி. நீ ரெஸ்ட் எடுத்துக் கொள். வீட்டுக்குப் போவதாயிருந்தாலும் போகலாம்' என்று சொல்லிவிட்டு கதிரையில் அமர்ந்தார்.
173 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 92
மனேஜரிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கிஞ்சித்தும் எதிர்பார்க்காத ஆனந்தி வியப்பினால் மலைத்து விட்டாள். சற்று முன்புவரை எண்ணிய தெல்லாம் அப்போது தவிடு பொடியாகி விட்டன. இறுகியிருந்த ஆத்திரமும், வெறுப்பும், மனக்கொதிப்பும் கூட அடங்கிவிட்டன.
'போகலாம்' என்று மனேஜர் கூறிய பிறகும் சிறிது நேரம் அப்படியே இருந்தவள் ஒன்றும் பேசாமல் மெல்ல எழுந்து நடந்தாள். மனேஜர் அர்த்தம் நிறைந்த ஒரு சிரிப்பு உதட்டில் நெளிய அவள் போவதைப் பார்த்தார்.
தன் இடத்துக்கு வந்தபிறகும் ஆனந்தியின் மலைப்பு நீங்கவில்லை. வீட் டுக்குப் போக மனேஜர் அனுமதித்தாலும் அவள் போகாமல் அவர் கூறிய விஷ யங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். மனேஜரைப் பற்றி மூன்று மாத காலமாக உருவாகியிருந்த அபிப்பிராயம் தவறோ என்று சந்தேகம் எழத் தொடங்கியது.
'எங்க உழைப்பு கம்பெனியையே வளர்க்கிறது. லாபத்தைத் திரட்டிக் கொடுக்கிறது. ஆனா எங்க மேலே ஒரு சிறு அனுதாபமோ அக்கறையோ நிர்வாகத்துக்கு இந்த மனேஜருக்கு கிடையாது. அப்படி இருக்கிறதுதான் அதன் குணமும் கூட. ஆகையினால் அதை எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்' என்று டேவிட் கூறியது நினைவுக்கு வந்தது.
பொதுவாகப் பார்க்கப் போனால் டேவிட் கூறியது சரியாக இருக்கலாம் என்று அவள் கருதினாலும், வேலைக்கு வந்த போது மனேஜர் கூறிய ஆலோ சனை, பத்திரத்தில் விட்ட பிழைக்காக அன்று நடந்த சம்பவம் ஒன்றைத் தவிர இத்தனை நாளும் அவர் தன்னோடு நடந்து கொண்ட விதம், இப்போது அவர் கூறிய விஷயங்கள், எல்லாவற்றையும் சிந்திக்கும் போது தன்மீது மனேஜருக் குள்ள அனுதாபத்தைப் பொய் என்று அவளால் கருதமுடியவில்லை. அன்று தான் விட்ட பிழைக்காக காரமாக நடந்து கொண்டது கூட தன்மீது அவர் காட்டும் அனுதாபத்துக்கு தக்கபடி தான் நடந்து கொள்ளாததன் விளைவுதான் என்று எண்ணினாள். மற்றவர்களுடன் அவர் எப்படி நடந்து கொண்டாலும் தன்னள வில் அவருக்கு நிறைய அனுதாபம் இருக்கிறது என்று தான் அவள் நினைக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் தன் மேல் எதற்காக இவ்வளவு அனுதாபத் துடன் இருக்கிறார் என்றுதான். அவளுக்கு விளங்கவில்லை.
'ஒரு வேளை சுபத்திரா என் நிலைமையை சிநேகிதர் நவரட்ணத்துக்குச் சொல்லியிருப்பாள். அவர் அதை மனேஜருக்கு எடுத்துக் கூறி என்னில் அனுதாபம் கொள்ளச் செய்திருப்பார். இதுதான் விஷயம்' என்று தனக்குத் தானே காரணத்தையும் சொல்லிக் கொண்டாள்.
ஆனந்தியின் சிந்தனை இந்த ரீதியில் சுழன்றாலும், கம்பெனியில் வேலை செய்கிற மற்றவர்களும் தன்னைப் போல் கஷ்டப்பட்டவர்கள்தான். வருஷக் கணக்காய் கம்பெனிக்கு உழைத்துக் கொடுக்கும் அவர்களை விட்டு விட்டு இடையில் மூன்று மாதங்கள் வேலை செய்த தனக்கு மட்டும் என்ன அனுதாபம்
சுபைர் இளங்கீரன் 174

வேண்டியிருக்கிறது. மற்றவங்களுக்குக் காட்டப்படாத அனுதாபம் தனக்குத் தேவையில்லை என்றும் கருதினாள்.
ஐந்நூறு ரூபா சம்பளத்தில் தன்னைக் காரியதரிசியாக்க மனேஜர் தீர்மானித் திருப்பதை எண்ணியதும், அவளுடைய மனம் ஒருகணம் ஊசலாடியது. கடன்களையெல்லாம் விரைவில் அடைத்து ஓரளவு அமைதியாக இருக்கலாம். இப்போதுள்ள கஷ்டம் இருக்காது. சகோதரங்களை ஒருநிலைமைக்குக் கொண்டு வரலாம் என்று ஒரு எண்ணம் மனதில் தொட்டுப் பார்த்தது. ஒரு கவர்ச்சி தூண்டி இழுத்தது.
உடனே டேவிட் உட்பட எல்லோரும் தன்னை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பது போலிருந்தது. அவர்களும் தானும் பழகிய விதத்தையும், ஒட்டியிருந்த முறையையும், நடந்த சம்பவங்களையும் எண்ணிப் பார்த்தாள். இந்த மூன்று மாதகால கூட்டுறவும், ஒருமைப்பாடும், நட்பும் அவளை அவர்களோடு இறுகப் பிணைத்திருந்தது. அது ஆழ்ந்த வர்க்க உணர்வின் ஒரு பிணைப்பு. இதிலிருந்து விடுபட அவள் விரும்பவில்லை. விலகுவது துரோகம் என்று பட்டது. இந்த ஐந்நூறு ரூபாய்க்காக டேவிட் உட்பட கம்பெனி ஆட்கள் எல்லோரிடமிருந்தும் பிரிந்து தனியாக நிற்க வேண்டி வரும். அவர்கள் மனேஜரை வெறுப்பது போல் தன்னையும் வெறுப்பார்கள் என்றும் தெரிந்தது. டேவிட் கூட அவள்முன்னால் நின்று 'உங்கள் வாழ்வும், உங்கள் முன்னேற்றமும்தான் முக்கியம்' என்று போய் விட்டீங்க. பரவாயில்லே உங்களையும் எங்களோடு சேர்த்து நம்ம ஆளு என்று எண்ணியிருந்தோம். என் இதயத்திலே கூட உங்களுக்கு ஒரு தனிஇடம் தந்ததற்குக் கூட இதுவும் ஒரு காரணம். மனேஜரின் அந்தரங்கக் காரியதரிசியாகி விடுவீங்க என்று தெரிந்திருந்தால் உங்களை எண்ணிப் பார்க்கவும் முடிந்திருக் காது. நாங்கள் உங்கள் மேல் வைத்த விசுவாசத்தை உதறித் தள்ளிவிட்டு மனேஜருக்கு விசுவாசமானவராய் விட்டீங்க. இது எங்களுக்குச் செய்த துரோகம்' என்று கூறுவது போலிருந்தது.
இதேசமயம், தான் இப்படி உயர உயரதன் சகோதரங்கள், சுபத்திரா ஆகியோரைக் கூட இழக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்றும் எண்ணினாள்.
இவற்றையெல்லாம் நினைக்கும்போது உள்ளம் நடுங்கியது. -எனக்கு ஐந்நூறு ரூபாயும் வேணாம், காரியதரிசியாகவும் வேணாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
மனேஜர் கேட்டால் என்ன சொல்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது. 'உங்கள் அனுதாபத்திற்கு நன்றி. ஆனால் என்னை இப்படியே இருக்கவிட்டு விடுங்கள். கம்பெனிஆட்களைப் பற்றியும் என்தனிப்பட்ட விஷயங்களையும் கேட்காம இருங்க. நான் ஒரு டைப்பிஸ்ட். எனக்குரிய இந்த வேலையை மட்டும் நான் கண்ணும் கருத்துமாகச் செய்து வருவேன். உங்களுக்கு இது சம்மதமில்லாவிட்டால் நான் விலகிக் கொள்கிறேன்' என்று திட்டவட்டமாய்
175 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 93
கூறிவிட வேண்டியதுதான் இப்படித் தீர்மானித்துக் கொண்டாள்.
ஒஃபிசிலிருந்து வரும் போது இதையே திரும்பத் திரும்பச் சிந்தித்துக் கொண்டு வந்த ஆனந்தி வீட்டுக்கு வந்ததும் திடுக்கிட்டுப் போனாள்.
* * 责 * *
வட்டி வைரலிங்கம் அப்போது அங்கு இருப்பான் என்று ஆனந்தி எதிர்பார்க்கவே இல்லை. அவனைக் கண்டு ஒருகணம் திடுக்கிட்டு நின்றவள் என்ன நினைத்தாளோ, வைரலிங்கம் வாய் திறப்பதற்குள் கையிலிருந்த சம்பளக்காசில் நூறு ரூபாயைக் கொடுத்து 'அதிகமாகப் பேசி வாயைப் பழுதாக்காமல் இதை வாங்கிக் கொண்டு போங்க. மீதியைப் பிறகு தருவேன். இந்தக் காசும் தேவையில் லேயென்றால் விட்டிட்டுப் போகலாம். ஆனா இங்கேயிருந்து கத்திக் கொண்டிருக்க விடமாட்டேன்' என்று தீர்மானமாகக் கூறிவிட்டு உள்ளே போனாள்.
வைரலிங்கம் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் முகம் சரியில்லை. கடுகடுத்துக் கொண்டிருந்தது.
மீதிக் காசை அலுமாரிக்குள் வைத்துவிட்டு உடுப்பை மாற்றியவண்ணம் சினிமாப் பத்திரிகை ஒன்றைப்பார்த்து கொண்டிருந்த வசந்தியிடம் 'அக்கா வர நேரமாகும் என்று சொல்லி இவனைக் கடத்தியிருக்கலாமே. நீ பேசாமல் இருந்தாயாக்கும்?' என்று கேட்டாள்.
'நான் அப்படித்தான் சொன்னேன். ஆனா அவன் அதைக் கேட்காமே கல்லுப் போல இருந்துவிட்டான். நான் என்ன செய்யிறது' என்று பத்திரிகை யிலிருந்து பார்வையை எடுக்காமலே கூறினாள் வசந்தி.
'மத்தியானம் என்ன சாப்பிட்டீங்க?' என்று கேட்டவாறு பைப்புக்குப் போக ஆயத்தமானாள் ஆனந்தி.
'நீதான் ஒருசதமும் தரேல் லியே. எல்லாரும் பட்டினிதான்' என்று வெறுப்பான குரலில் கூறிவிட்டு சஞ்சிகையில் திரும்பவும் விழிகளைப் பதித்தாள், அவள்.
அன்று வேலைக்குப் போகும் போது ஆனந்தியிடம் காசு இருக்கவில்லை. மாதக் கடைசி நாள். ஒன்றும் கொடுக்காமல் போய்விட்டாள். இப்போது எல்லாரும் பட்டினி என்று அறிந்ததும் உள்ளம் வெதும்பிக் கசிந்தது. பசியையும் மறந்து இதிலே மூழ்கிக் கிடக்கிறியே. சமையலுக்கு வேண்டியதைப் பாரு. அவள் காந்தி எங்கே. செல்வத்தைக் கூப்பிடு. கொப்பியைக் கொடுத்து சாமான்களை வாங்கு' என்று அவசர அவசரமாய் உத்தரவு போட்டுவிட்டு பைப்புக்குப் போனாள்.
திரும்பி வரும்போது வசந்தி எழுந்திருக்கவில்லை. ஆனந்திக்கு எரிச்சலாக
சுபைர் இளங்கீரன் 176

இருந்தது. "என்னடி இது. இதைத் தூக்கி எறிந்து போட்டு காரியத்தைப் பார்க்காம.." என்று படபடத்தாள்.
"காசில்லாமல் என்னத்தைப் பார்க்கிறது? மாசம் முடிஞ்சுது. காசு தராடிே. கொப்பியை அனுப்ப வேண்டாம் என்று கடைக்காரர் சொல்லிவிட்டார்' என்று பத்திரிகையைப் போட்டுவிட்டு எழுந்த வசந்தி, 'கடைக்காரர் மாத்திரமா, மரக்கறிக்காரன் வந்துவிட்டுப் போனான். நோமிஸ் அக்காவும் கடன் காசுக்கு வந்தா, றகீமா வீட்டிலிருந்தும் ஆள் அனுப்பியிருந்தாங்க. தங்களுக்குத் தரவேண்டியதோடு இன்னும் பத்து ரூபா கூடப் போட்டுத்தரட்டாம்" என்றாள்.
'பட்டியல் வாசித்தது போதும். செல்வத்தைக் கூப்பிடு' என்று கூறி விட்டு அலுமாரியைத் திறந்து காசை எடுத்தாள்.
சாமான்கள் வாங்கப்பட்டு சமையல் ஒருவாறு முடிந்தது. சாப்பாடும் ஆகிவிட்டது. இடையில் ராசு வந்து சாப்பிட்டுவிட்டு ஐந்து ரூபாயைப் பறித்துக் கொண்டு போனான். மகள் சம்பளத்தோடு வரும் போதெல்லாம் ஒருபாட்டம் அழுது, சலித்து, கெஞ்சி, முறைத்துநாலு ஐந்து என்று பறிக்கும் அருமைநாயகம் நேரஞ் சென்றுதான் வந்தார். அவருக்கு அன்று என்ன நடந்ததோ. அன்றைக்கென்று காசைப் பற்றிக் கேட்காமல் போதை பாதி சாப்பாடு பாதியாக படுத்துவிட்டார்.
இரவு ஓடிக்கொண்டிருக்க அதனுடன் போட்டியாக தனது சிந்தனையும் ஓட நித்திரையை மறந்து பாயில் புரண்டு கொண்டிருந்தாள், ஆனந்தி, ஒஃபிசில் நடந்த சம்பவங்கள் மட்டுமல்ல, வசந்தி வாசித்த கடன் பட்டியலும் திரும்பவும் விரிந்து நின்றது. அது பாதி கூட இல்லை. இதையும் விட கொடுக்க வேண்டிய பட்டியல் நீளம்.
றகீமா வீட்டாருக்கும் நோமிஸ் அக்காவுக்கும் கிட்டத்தட்ட ஆனந்தியின் நிலைமைதான். அவர்களுக்கு உடனே காசைக் கொடுத்து அனுப்பிவிட்டாள். எல்லாம் போக ஐம்பது ரூபாய்தான் மிச்சமிருந்தது. இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது. முன்பு வேலையில்லாத சாட்டைக் கூறி கடன்காரருக்கு தவணை சொல்ல முடிந்தது. வேலை கிடைத்த பிறகு அவர்கள் அரிக்கத் தொடங்கி விட்டார்கள். தவணை சொல்வது பெரும் பிரச்சினையாக இருந்தது. நாளையும் மறுநாளும் தந்தவர்கள் வந்து நிற்பார்கள். இந்த ஐம்பது ரூபாயும் போதுமா?
யாரோ வந்து கதவைத் தட்டுவது போல் காரியதரிசிச் சம்பளம் ஐந்நூறு ரூபாயும் அவளுடைய சிந்தனையைத் தட்டிக் கொண்டே இருந்தது.
நீண்ட சிந்தனைக்குப் பிறகு 'ஐந்நூறு என்ன ஆயிரம் வந்தாலும் வேணாம் இதுக்காக என்னோடு உள்ளவங்களை விட்டிட்டு நான் தனியாகப் பிரிந்து போகமாட்டேன். இப்ப தலைக்கு மேல்தானே வெள்ளம் போகுது. சாண் போனால் தான் என்ன, முழம் போனால் தான் என்ன. என்ன வந்தாலும் சரி,
177 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 94
நான் ஒருக்காலும் காரியதரிசியாக மாட்டேன்' என்று தன் முடிவை திரும்பவும் உறுதியாக்கிக் கொண்டாள்.
* * * * 壹
மனேஜர் என்னதான் அனுதாபத்தோடு பேசினாலும் 'நாளையிலிருந்து வேலைக்கு வரமாட்டேன்' என்று கூறி விட்டு மறுநாள் வேலைக்குப் போவது ஆனந்திக்கு தயக்கமாகத்தான் இருந்தது. என்றாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு போனாள்.
மனேஜர் அவளைப் பார்த்து புன்னகை செய்தாரே தவிர ஒன்றும் கேட்க வில்லை. ஆனந்தியும் தன் தீர்மானத்தைச் சொல்லவில்லை. அவர் கேட்கும் போது சொல்லலாம் என்று தன்வேலையில் கவனம் செலுத்தினாள்.
வேலை முடிந்து டேவிட்டும் ஆனந்தியும் ஒன்றாகவே வெளியே வந்தார் கள். பின்னாலே வேகமாக வந்த சிறிசேனா 'டேவிட்' என்று கூப்பிட்டவாறு பக்கத்தில் வந்தான். பொக்கட்டிலிருந்து எழுபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து 'நான் நாவலைக்குப் போக வேண்டும்' என்று கூறிவிட்டு எதிர்த்திசையில் திரும்பி நடந்தான்.
'வெள்ளம் வந்தபோது வாங்கிய கடன். நேற்றுக் கிடைத்த சம்பளத்தில் இப்ப பாதியைத் தந்துவிட்டான். மீதிப் பிரச்சினைக்கு என்ன செய்வானோ...' என்று சொல்லியபடி பிற்பொக்கட்டில் காசை வைத்தான்.
'நானும் தான். பாதியைக் கடன்காரனுக்குக் கொடுத்துவிட்டுத் திணறிக் கொண்டிருக்கிறேன். நேற்று வாங்கிய சம்பளத்திலே இப்ப ஐம்பது ரூபா கூட முழுசா இல்லே. பிரச்சினைகளோ தலைக்கு மேலே. வீட்டுக்குப் போகக் கூட பயமாயிருக்குது' என்று கவலையோடு கூறினாள்.
டேவிட் பிற்பொக்கட்டில் வைத்த காசை திரும்பவும் எடுத்தான். 'இப்ப இதை நீங்க வைத்துக் கொள்ளுங்க" என்று நீட்டினான். 'வேணாம் உங்களுக் கும் பிரச்சினைகள் இருக்கும். எனக்குத் தந்துவிட்டு நீங்க திணறுவீங்க”
'என் விஷயம் இருக்கட்டும். நீங்க வீட்டுக்குப் போகக்கூட பயமாய் இருக்குது என்று சொல்கிறீங்களே. இதை வாங்குங்க"
'இதை வாங்கினா நான் எப்ப தாரது? எப்படித் தாரது? ஒரு கடன் போனாலும் மற்றொரு கடனாய் வந்து நிற்கும் தானே..?"
"அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று காசைஆனந்தியின் கையில் திணித்தான் டேவிட்.
இருவரும் தர்மபால மாவத்தையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தால் அகலமான அந்த வீதி பிரகாசமாக இருந்தது. வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. விகாரமதேவி பூங்காவுக்குள் ஒரு
சுபைர் இளங்கீரன் 178

இளஞ்சோடி புகுந்தது. உள்ளேயிருந்தும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள்.
'எனக்கு காசைத் தந்திட்டீங்க. உங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்' என்று மெளனத்தைக் கலைத்தாள் ஆனந்தி.
'இப்ப என்ன கஷ்டம் இல்லாமலா இருக்குது? எங்க வீட்டை எடுத்துக் கொண்டா உங்களுக்கு இருக்கிறமாதிரித்தான். இந்தக் கஷ்டத்தால் தான் நான் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு டெயிலரானேன். இருபது வயசிலே பிடித்த கத்திரி. இன்னும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். கஷ்டம் தீரேல்லே. அப்பா கார்கில்ஸிலே டெயிலராக இருந்த போதும் அப்படித்தான். அவர் வேலையை விட்ட பிறகு அப்பா, அம்மா, நான், நாலு சிஸ்டர், தம்பி எல்லாருக்கும் சாப்பாடு, உடுப்பு, வாடகை, மற்றச் செலவுகள் என்று என் தலையில்தான். இதுக்கெல்லாம் நான் எடுக்கிற சம்பளம் போதுமா..? அம்மாவும் சிஸ்டர்ஸ0ம் சேர்ந்து பலகாரங்கள் செய்து டீ கடைகளுக்கு கொடுக்கிறாங்க. இருந்தும் கடன்தான். ரீட்டாவின் கோழிகளை நீங்க பார்த்தீங் களே. அது தார முட்டைகள் கூட பற்றாக்குறையைப் போக்கேல்லே' என்று கூறிச் சிரித்தவன் 'பிரச்சினைகளும் கஷ்டங்களும் இந்தச் சமுதாயத்திலே தவிர்க்க முடியாத ஒரு வியாதியாய்ப் போச்சுது' என்றான்.
'இந்த நிலைமையில் இருந்து கொண்டு தானா கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதாக அன்றைக்கு எனக்குச் சொன்னிங்க' என்று சிரித்தாள் ஆனந்தி. 'ஏன் சொல்லக்கூடாதா..? இந்த நிலைமையிலேதான் மூத்த இரண்டு சிஸ்டருக்கும் கல்யாணம் நடந்தது. ரீட்டாவுக்குக் கூட பேச்சுவார்த்தைநடக்குது. நான் மட்டும் ஏன் செய்ய முடியாது. ?"
ஒரு கணம் திணறிவிட்டாள் ஆனந்தி. 'எவ்வளவு லேசாய்ச் சொல்லிப் போட்டீங்க..?'
'கல்யாணத்தை ஏதோ கத்தரிக்காய் விஷயமாய் நினைத்துச் சொல்லேல்லே. கஷ்டங்கள், பிரச்சினைகள் மத்தியில் கல்யாணமும் நடக்கத்தான் செய்யுது என்று சொல்ல வந்தேன். கொளு ஹதவத படம் பார்க்கப் போனோமே, அன்றைக்குக் கூட இதைச் சொன்னேன். நீங்க நினைக்கிறது போலிருந்தால் கஷ்டப்பட்டவங்க எல்லாரும் கல்யாணம் செய்யாம இருந்து விடுவாங்க. சனப் பெருக்கமும் இந்தளவுக்கு வந்திருக்காது' என்று கூறிவிட்டு திரும்பவும் சிரித்தான் டேவிட்.
ஆனந்தியும் சிரித்துவிட்டு "அப்ப கஷ்டங்கள், பிரச்சினைகள், நமக்குள்ள சுமைகள் எல்லாத்தையும் பொருட்படுத்தாம நாமும் கல்யாணம் செய்யலாம் என்று சொல்றீங்களா?' என்று கேட்டாள்.
"நான் அந்த அர்த்தத்தில் சொல்லேல்லே. இத்தனைக்கும் மத்தியில் நடக்குது என்று சொன்னேன். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கிறது ஒரு இயற்கை நியதி. கஷ்டங்களும், பிரச்சினைகளும் குறுக்கே நின்றாலும் இந்த நியதியை
179 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 95
ஒரேயடியாக தடுத்து நிறுத்த முடிகிறதில்லே."
"என்றாலும் உங்களுக்கு கல்யாணத்திலே ஆசை இருக்கத்தான் செய்யுது. ரீட்டாவுக்கும் கல்யாணமாகிவிட்டால் அடுத்தது ஒரு சிஸ்டர்தானே, தம்பியும் ஏதோ உழைக்கத் தொடங்கினா பொறுப்புகள் ஓரளவு தீர்ந்து போகும் என்று நினைக்கிறீங்க, இல்லையா?"
"நான் அந்தமாதிரியெல்லாம் நினைக்கவே இல்லை. நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழவேணும் என்று ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான்'
எனக்கும் தான். ஆனால் உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்குது. எனக்கு அது இன்னும் ஏற்படேல்லே. என்று டேவிட்டுக்குச் சொல்லாமல் தனக்குள் கூறிக் கொண்டாள்.
இருவரும் பேசிக்கொண்டே டவுண்ஹோல் பஸ்தரிப்புக்கு வந்து விட்டார்கள். 'நீங்கள் வீட்டுக்குப் போகேல்லியா?" என்றாள் ஆனந்தி. 'நீங்க போனபிறகு பஸ் எடுக்கிறேன், என்ன அவசரம்' என்று டேவிட் கூறி முடிப்பதற்குள் 138 பஸ் வந்துவிட்டது. ஆனந்தி ஏறினாள்.
* * 好 好,好
தபைர் இளங்கீரன் 180

பதினோராவது அத்தியாயம்
ன்று அரைநாள். வேலை நேரம் முடிய இன்னும் கால் மணித்தியாலம் இருந்தது.
இன்றைக்குச் சுபத்திராவின் வீட்டுக்குப் போக வேணும், மனேஜரின் விஷயத்தைச் சொல்ல வேணும். அவள் என்ன அபிப்பிராயம் கூறுவாள், பார்ப்போம் என்று எண்ணிய வளாய் டைப் பண்ணி முடித்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு மனேஜரின் அறைக்குள் சென்றாள் ஆனந்தி.
ஃபானில் பேசிக் கொண்டிருந்த மாசிலாமணி ரிஸிவரை வைத்து விட்டு திரும்பி ஆனந்தியை மேலும் கீழும் அளந்தார். 'நானும் தான் பார்க்கிறேன், இந்த மூன்று மாசமாய் மூன்று சாரிகளைத்தான் மாறி மாறி உடுத்திக் கொண்டு வருகிறாய், உனக்கு வேறே டிரஸ் இல்லையா?"
மனேஜரின் இந்தக் கேள்வி மானத்தை வாங்கியது போல் இருந்தது ஆனந்திக்கு. வெட்கத்தால் தலைகுனிய இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் நின்றாள்.
'ம். விளங்குது...' என்று சொல்லிவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தார். உடனே எழுந்து கோட்டை மாட்டிக் கொண்டு "சரி, வா." என்று கூறியவாறு வெளியே வந்தார்.
-எதுக்கு கூப்பிடுகிறார், டிரஸ் வாங்கித் தரப் போகிறாரா.. என்று எண்ணியவளாய் பின் தொடர்ந்தாள் ஆனந்தி. இவருக்கு என்மேல் எவ்வளவு அனுதாபம். என்றாலும் இவர் டிரஸ் வாங்கித் தந்து நான் உடுத்துகிறது.
181 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 96
மனேஜர் காருக்கு வந்ததும் ஏறி உட்கார்ந்து கொண்டு கதவைத் திறந்தார். "வேணாம் சேர். உங்க அனுதாபத்துக்கு நன்றி. எனக்காக நீங்க சிரமப்பட வேண்டாம். '
மாசிலாமணி புன்னகையுடன் அவளைப் பார்த்தார். அப்பார்வையில் ஒரு கேள்விக்குறி நின்றது.
"வந்து. நீங்க டிரஸ் வாங்கித் தாரது." 'ஓ. என்று தலையை ஆட்டினார் மனேஜர். 'இப்போ ஷொப்பிங் போகேல்லே. '
Ꮄ Ꮷ
அப்ப. ?'
'ஏறு சொல்கிறேன், குயிக்' எங்கே என்ற கேள்வி எழ ஆனந்தி காரில் ஏறினாள். வேகமாக பறந்து வந்த கார், கொள்பிட்டியில் மனேஜரின் பங்களாவுக்குள் நுழைந்தது. மாசிலாமணி காரை நிறுத்தி விட்டு 'கம்' என்று கூறிக்கொண்டு விறுவிறு என்று உள்ளே போனார்.
ஆனந்திக்கு நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது. ஆயிரம் கேள்விகள் மனதை உருட்ட காரை விட்டு இறங்கினாள். உள்ளே ஹோலுக்குள் வந்து நின்றதும், முதலில் அங்கு நடந்த இண்டர் வியூவை நினைத்துக் கொண்டாள். மாசிலாமணி அவளை இருக்கச் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றவர் உடுப்புக்களை மாற்றிக் கொண்டு கீழே வந்து "வேணி.' என்று கூப்பிட்டார்.
'ஐயா... ' என்று கூறியவாறு வேணி வந்தாள். ஆனந்தி அவளைப் பார்த்தாள். இண்டர்வியூவுக்கு வந்த போது கண்ட அதே வேலைக்காரப் பெட்டைதான். மலைநாட்டுப் பெண் என்று தெரிந்தது.
'ரெடியா..?' என்று கேட்டார் மாசிலாமணி வேணியிடம், அவள் தலையை ஆட்டினாள். 'ஒல்ரைட்' என்று ஆனந்தியின் பக்கம் திரும்பி "சாப்பிடலாம் வா." என்றார்.
அவள் தயங்கினாள். 'வேணாம் சேர். நான் வீட்டிலே சாப்பிடுவேன்.' 'பரவாயில்லே. இன்றைக்கு இங்கே சாப்பிடலாம் குயிக்...' என்று கூறியவாறு அறைக்குள் போனார்.
ஆனந்திக்குப் பெரும் பிரச்சினையாகி விட்டது. மறுத்தாலும் அவர் விடமாட்டார் என்று தெரிந்தது. தயங்கித் தயங்கி நடந்தாள்.
சுபைர் இளங்கீரன் 182

மாசிலாமணி அவளை இருக்கும்படி சைகை காட்டிவிட்டு தானும் உட்கார்ந் தார். அங்கே அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமில்லே. வேலைக்காரப் பெட்டையையும் காணோம். ஆனந்திக்கு என்னவோ போலிருந்தது. ஒரு வரையும் காணோமே. இவருக்குப் பெண் சாதி பிள்ளைகள் ஒருவரும் இல்லையா..?
மாசிலாமணி பிளேட்டில் உணவை எடுத்துக் கொண்டு, ம். என்று ஆனந்தியைத் தூண்டினார்.
அவள் மேசையைப் பார்த்தாள். சோறு, மீன், பொரியல், முட்டை, நாலைந்து மரக்கறிகள், குப், அன்னாசிப்பழம்.
இதைப் பார்த்ததும் ஆனந்திக்குப் பசி வயிற்றைக் கிண்டியது. திடீரென்று அவள் மனதில் வசந்தி வந்துநின்றுவிட்டு மறைந்தாள். ஆனந்திக்குக் கூச்சமாக இருந்தது. மனமும் குழம்பிக் கொண்டிருந்தது. சாப்பாடு ஏறவில்லை. வயிறும் சரியாக நிறையவில்லை.
சாப்பாடு முடிந்ததும் மாசிலாமணி ஒரு அறைக்குள் சென்று ஒரு பார்ச லோடு வந்தார். "இன்றைக்கு எங்க டைரக்டர் ஒருவருக்குப் பிறந்த நாள். நாம போகவேணும். மேலே டிரஸ்ஸிங் ரூம் இருக்குது. இங்கே யாருமில்லை. கூச்சப்படாமே நீற்றாய் டிரஸ் பண்ணிக் கொண்டு வரவேணும்' என்று பார்சலை நீட்டினார்.
ஆனந்திக்கு ஆச்சரியமாயிருந்தது. டைரக்டர் வீட்டுக்கு என்னையும் கூப்பிடுகிறாரே. எனக்காக முன் ஏற்பாடாய் டிரஸ் ஸும் வாங்கி வைத்திருக்கிறாரே!. என்றாலும்.
ஆனந்தி பார்சலை வாங்கத் தயங்கினாள்.
'இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் நான் எதுக்கு சேர், என்னை விட்டிடுங்க”
மாசிலாமணி அர்த்தத்தோடு சிரித்தார். 'பெரிய இடங்களுக்கு வாரதுக்கும் அதிர்ஷ்டம் வேணும். உனக்கு அந்த அதிர்ஷ்டம் வந்தால் அதை தள்ளி விடப்படாது. அப்படித்தள்ளி விடுகிறது முட்டாள்தனம். வாழத் தெரியா தவங்கள் செய்கிற வேலை. நான் சொன்னால் கேட்க வேணும். கம்பெனி டைரக்டரின் பிறந்த நாள். நாம் அவரைக் கெளரவிக்க வேணும்' என்று கூறியவர் சட்டென்று குரலில் கடுமை தொனிக்க "நீயும் வரவேணும் என்று நான் விரும்புகிறேன்' என்று சொல்லி பார்சலை அவள் கையில் போட்டு விட்டு அறைக்குள் போனார்.
ஆனந்திதிகைத்தாள். - இது என்ன. அனுதாபம் ஒருபக்கம், அதிகாரம் ஒரு பக்கம்.
அவளுக்கு குழப்பமாயிருந்தது.
183 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 97
டைரக்டருக்குப் பிறந்த நாள் என்றால், இவர் போகலாம். இவர் கெளரவிக் கலாம். இவருக்கு தகுதியிருக்குது. கடமையும் இருக்குது. நான் எதுக்கு. எனக்கு என்ன தகுதியிருக்குது. அவசியமும் இருக்குது. எனக்கு இந்த டிரஸ்ஸெல்லாம் வாங்கித் தந்து டைரக்டர் வீட்டுக்கு கூட்டிப் போவதென் றால். என்னைக் காரியதரிசியாக்கத்தான் இந்த ஏற்பாடோ. டைரக்டருக்கு என்னை அறிமுகப்படுத்தி அனுமதி வாங்கவோ. இவரைப் பொறுத்தவரை என்மேல் உள்ள அனுதாபம் நியாயமானதாக இருக்கலாம். ஆனா இந்த அனு தாபம் எனக்குத் தேவையில்லே என்றுதானே நான் முடிவு செய்திருக்கிறேன். இந்த முடிவை இவர் தகர்க்கப் போகிறாரோ. என் முடிவைச் சொல்ல வேண்டியதுதான்.
மாசிலாமணி திரும்பி வந்தார். 'என்ன யோசனை?" 'நான் வந்து செக்ரட்டரி.' 'அதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போ நேரத்தைச் சுணக்க வேணாம், ம். குயிக்...' என்று துரிதப்படுத்தினார் மாசிலாமணி.
'என்னை மன்னிச்சிடுங்க நீங்க நினைக்கிற மாதிரி நான்.' அவள் சொல்லி முடிப்பதற்குள் மாசிலாமணி இடைமறித்தார். 'புத்தி சாலியான பெண் என்று எனக்குத் தெரியும். நான் சொல்கிறபடி நீநடப்பாய்' என்று கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தார்.
ஆனந்திக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. அதே சமயம் அங்குள்ள தனிமை யையும் எண்ணிப் பார்த்தாள்.
வீட்டில் ஒருவருமில்லே. வேலைக்காரப் பெட்டையையும் காணோம். ஒருவேளை இவர் என்னை. இதுக்குத்தான் இவர் என்மேல் அனுதாபத்தைச் சொரிகிறாரோ. இதுக்குத்தான் ஒருவருமில்லாத இந்த நேரத்தில் என்னைக் கூட்டி வந்து சாப்பாடும் டிரஸ் ஸ0ம் தந்து, தன் பங்களாவிலே, மேலே டிரஸ்ஸிங் ரூமுக்கு சுதந்திரமாய் போய் டிரஸ் பண்ணு என்று சொல்கிறாரோ . நான் மேலே போனதும் இவர் பின்னால் வந்து.
ஆனந்திக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. 'நான் வரேல்லே சேர், என்னை விட்டிடுங்க. நான் வீட்டுக்குப் போக வேணும்.'
'போகலாம். நீ ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை. இப்போநீநீற்றாய் டிரஸ் பண்ணிக் கொண்டு வா. வேறே ஒன்றும் இப்ப பேசப்படாது' என்று கூறிவிட்டு மணியைப் பார்த்தார். "ம். நேரமாகுது. இடையிலே இன்னொரு புரோகிறாம் இருக்குது."
அவர் தன்னை விடமாட்டார் என்று எண்ணினாள் ஆனந்தி திடீரென்று அவளுக்கு ஒரு அசாதாரண துணிச்சல் வந்தது. தன்னையும் மீறி என்னதான் நடக்கப் போகுது பார்ப்போம் என்று எண்ணியவளாய் பார்சலையும் எடுத்துக்
சுபைர் இளங்கீரன் 184

கொண்டு மாடியில் ஏறினாள். மேலே போனதும் டிரஸ்ஸிங் ரூம் எது என்று தெரியாமல் ஒருகணம் நின்றாள். மறுகணம் முன் அறையைத் திறந்தாள். அதுதான் டிரஸ்ஸிங் ரூம் என்று தெரிந்தது. அலுமாரி, ஸ்டாண்டில் உடுப்புகள், விதம் விதமான செருப்புகள், நிலைக்கண்ணாடி, பொன்ஸ் பவுடர், கிறீம், ஓடிக்கலன், சென்ற், லிப்ஸ்டிக், இன்னும் எத்தனையே இருந்தன. அறை முழுவதும் 'கம்' என்ற வாசனை மிதந்து கொண்டிருந்தது.
ஒரு வீச்சில் இவற்றையெல்லாம் பார்த்தாளே தவிர, நின்று நிதானித்து ரஸித்து நேரத்தைப் போக்க விரும்பவில்லை. மனேஜர் மேலே வந்து விடுவாரோ என்ற பதை பதைப்பு. பார்சலை அவசர அவசரமாக அவிழ்த்துப் பார்த்தாள். கண்ணைப் பறிக்கும் இரண்டு மூன்று பட்டுச் சேலைகளும் அவற்றுக்குப் பொருத்தமான சட்டைகளும் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் சில விநாடிகள் அசந்து நின்றவள் எதிர்த் திசையில் விழிகளை ஓட விட்டாள். ஒரு கதவு தெரிந்தது. சட்டென்று அதைத் திறந்தாள் அந்த அறைக்குள்ளி ருந்தும் மணம் 'கம்' என்று மூக்கில் வந்து அடித்தது. அது டொய்லட்ரூம், பேசின், கண்ணாடி, சோப், பிரஸ், பேஸ்ட் இன்னும் என்னென்னவோ இருந்தன. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் முகத்தைக் கழுவிக் கொண்டு திரும்பினாள். மளமளவென்று டிரஸ் பண்ணிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். தன்னையே அவளால் நம்பமுடியவில்லை. அவ்வளவு எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. தன்னை மறந்து சில விநாடிகள் அப்படியே லயித்துநின்றவள், சரேலென்று டிரஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்து கீழே இறங்கினாள்.
மாசிலாமணி அவளைப் பார்த்ததும் பிரமித்துவிட்டார். அவளுடைய பிர காசமான அழகும், பாங்கான தோற்றமும் அவரைக் கிளுகிளுக்கச் செய்து விட் டன. வைத்த விழி வாங்காமல் ஓரிரு நிமிஷங்கள் அவளையே பார்த்துக் கொண் டிருந்தவர், 'குட்." என்று கூறிவிட்டு விறுவிறு என்று மாடியில் ஏறினார்.
சே இந்த மனுஷனைப் போய் நான் அநியாயமாய் நினைச்சேனே. இவர் மனசில் அசடு இருந்திருந்தால் இவர் விரும்பி இருந்தா மேலே வந்து என்னோடு இசக்குப் பிசகாக நடந்திருக்கலாம் தானே?. சே நான் அவ சரத்தனமாய் இவரைப் பிழையாகக் கருதி விட்டேன். என்று தன்னையே கடிந்து கொண்டாள்.
சற்று நேரத்திற்குள் மாசிலாமணி "டிப்டொப்"பாக உடுத்திக் கொண்டு மேலேயிருந்து இறங்கியவர் ஆனந்தியையும் அழைத்துக் கொண்டு காரில் வந்து ஏறினார்.
கார் சவோய் தியேட்டரில் வந்து நின்றது.
'டைரக்டர் வீட்டுக்குப் போக வேணும் என்று சொன்னீங்களே, இதுதான்
அவர் பங்களாவா?' என்று சிரித்தாள் ஆனந்தி.
185. அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 98
"ஷோ பார்த்துவிட்டுப் போனால் நேரம் சரியாக இருக்கும். இரவு டின்னர் அங்கேதான்' என்று கூறிக்கொண்டே காரை விட்டு இறங்கினார் மாசிலாமணி.
பல்கனியில் போய் இருந்ததும் ஆனந்திக்கு மனம் பரபரத்தது. இப்போது மாசிலாமணியை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவளுக்கு அவர் ஒரு விநோதமான மனிதராய்ப்பட்டார். அதேசமயம் தன்னையும் அவள் சற்று எண்ணிப் பார்த்தாள். ஒஃபிசில் இருந்த ஆனந்தி வேறு, மனேஜரோடு காரில் புறப்பட்டதிலிருந்து இப்போது பல்கனியிலிருந்து படம் பார்க்கும் வரையுள்ள ஆனந்தி வேறு என்று தெரிந்தது அவளுக்கு.
கார்ச் சவாரி, பங்களாச் சாப்பாடு, கண்ணைப் பறிக்கும் பகட்டான விலை உயர்ந்த டிரஸ், பல்கனியிலிருந்து ஷோ.
ஆனந்தி ஒரு தடவையாவது இத்தனையையும் அனுபவித்ததில்லை. ஒரு புது உலகத்துக்குள் புகுந்திருப்பது போல இருந்தது. இதில் ஒரு தனி ரகமான மகிழ்ச்சியும், சுகமும், இன்பமும் இருப்பது போலப்பட்டது. இந்த மயக்கம், லயிப்பு நீடிக்கவில்லை. மனம் விழித்துக் கொண்டது.
என்னைச் சேர்ந்தவங்களையெல்லாம் விட்டுப்பிரிந்து இந்த சுகத்தை அனுபவிக்க நான் துணிந்து விட்டேனோ. என்னுடைய முடிவிலிருந்து அசைந்து, இவர் -இந்த மனேஜர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறேனோ.
இதை நினைத்ததும் அவள் மனம் திடுக்கிட்டது. - சே, இது சரிப்பட்டு வராது. இந்த நாடகம் இன்றையோடு சரி. என்மன உறுதியை இழந்தது இதுதான் கடைசி. இந்த டிரஸ்ஸைக் கூடத் திருப்பிக் கொடுத்து விட வேணும்.
"படம் திரையில் விழுந்த பிறகுதான் ஆனந்தியின் சிந்தனை நின்றது.
அது ஒரு ஆங்கில செக்ஸ் படம். ஆனந்தி அது வரை அப்படியான செக்ஸ், கிரிமினல் படங்கள் பார்த்தில்லை. இந்தப் படத்தைப் பார்த்ததும் - அதுவும் மனேஜர் பக்கத்திலிருக்க பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கே மனம் கூசியது. சில காட்சிகளைப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டாள். இவர் ஏன் இந்தப் படத்துக்கு கூட்டி வந்தார் என்று எண்ணியவள் எப்போது படம் முடியும் என்று பரபரத்துக் கொண்டிருந்தாள்.
* * * * *
படம் முடிந்து காரில் ஏறும் போது ஆனந்தி கேட்டாள்: "டைரக்டரின் வீட்டுக்கு நான் கட்டாயம் வரத்தான் வேணுமா சேர்?"
'நான் ஒரு தடவையல்ல, இரண்டு தடவை சொல்லிவிட்டேன்' என்று காரை ஸ்டாட் செய்தார் மனேஜர்.
சுபைர் இளங்கீரன் 186

"டின்னர் முடிய நேரமாகுமோ. ?”
'இல்லை. '
'காலையில் ஒஃபிசுக்கு வந்த நான் இன்னும் வீட்டுக்குப் போகேல்லே என்னைத் தேடிக் கொண்டிருப்பாங்க.
"அவசியமாயிருந்தால் சொல்லிவிட்டுப் போகலாம். அது நல்லது தான்." மனேஜர் இப்படிச் சொல்லுவார் என்று ஆனந்தி எதிர்பார்க்கவில்லை. வாயடைத்துப் போனாள். ஒஃபிஸ் முடிந்து தன்னைக் காணா விட்டால் சுபத்திரா வீட்டுக்குப் போயிருப்பாள் என்று வசந்தியோ, காந்தியோ நினைப்பார்கள். அங்கே போய் நேரஞ்சென்று திரும்புவதும் புதிய விஷயமும் அல்ல. இருந்தும் டைரக்டரின் வீட்டுக்குப் போகாமல் தவிர்த்துக் கொள்ளவே இதைச் சொன்னாள். ஆனால் மனேஜர் தன்மேல் அனுதாபத்தோடு மட்டு மல்லாமல், பொறுப்போடும் நடந்து கொள்கிறாரே என்று வியந்தாள்.
எனக்காக இவர் தேவனாக மாறிக் கொண்டிருக்கிறாரோ. இவ்வாறு எண்ணியதும் இண்டர்வியூவுக்காக முதலில் அவரைப் பார்க்க வந்த போது, அந்தப் பங்களாவை பார்த்துவிட்டு 'தேவலோகங்களில் பெரும்பாலும் அசுரர்கள்தான் வாழ்கிறார்கள்' என்று சுபத்திரா கூறியதும் நினைவுக்கு வந்தது.
சுபத்திரா இவரை அசுரர் என்று சொன்னால் ஒப்புக் கொள்ள வேணுமா. என்று தன்னையே கேட்டுக் கொள்ளும் போது, "இந்தத் தேவலோகங்களில் பெரும்பாலும் அசுரர்கள் வாழ்கிறார்கள் என்று நான் சொன்னேன் அல்லவா, அதுக்கு அசைக்கமுடியாத ஒரு உதாரணம் எங்க அத்தான்' என்று ஒருநாள் சுபத்திரா கூறியதும் பளிரென ஞாபகத்துக்கு வந்தது.
அத்தானோடு இவரை ஒப்பிட முடியுமா?. ஆனந்தியைக் கேட்காமலே சேர்ச் வீதிக்கு காரைத் திருப்பிய மாசிலாமணி 'வீடு எங்கே?' என்று கேட்டார்.
அவள் பிரமிப்போடு சந்து முனையைக் காட்டி, "இதில் நிற்பாட்டினால் போதும்' என்றாள்.
காரைநிறுத்திய மாசிலாமணி "குயிக்காய் வரவேணும்' என்று கூறியவாறு கதவைத் திறந்தார்.
காரை விட்டு விரைந்த ஆனந்தி சில நிமிஷங்களுக்குள் திரும்பி வந்து விட்டாள்.
'இப்போ திருப்திதானே?" என்று காரை ஸ்டாட் செய்தார் மாசிலாமணி. ஆனந்தி ஒன்றும் சொல்லவில்லை. அவள் வீட்டுக்கு போனபோது காந்தி மட்டும்தான் இருந்தாள். அவள் ஆனந்தியைப் பார்த்ததும் வியப்பால் விழிகள்
187 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 99
விரிய "ஏது அக்காஇதெல்லாம்.? உன்னைப் பார்க்க இப்ப எப்படியிருக்குது தெரியுமா..? என்றாள்.
"எல்லாம் வந்து சொல்கிறேன். இரவைக்கு எனக்குச் சாப்பாடு வேணாம். நீங்க ஏதாவது சமைச்சுச் சாப்பிடுங்க. நான் வர கொஞ்சம் நேரமாகும்' என்று கூறி விட்டு வந்துவிட்டாள்.
நல்லவேளை, வசந்தி இருந்தா ஆயிரம் கேள்விகள் கேட்டிருப்பா. பதில் சொல்லிச் சமாளிக்கிறதுக்குள்ளே பொழுது போயிருக்கும்.
கார் பம்பலப்பிட்டியில் உள்ள நாகரிகமான ஒரு பங்களாவுக்கு முன்னால் வந்து நின்றது. மாசிலாமணி ஆனந்தியையும் அழைத்துக் கொண்டு மிடுக்காக உள்ளே சென்றார்.
லோறன்ஸ் கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவரான தண்ணிச்சாமிக் குத்தான் அன்றைக்குப் பிறந்தநாள். அவர் தனது நெருங்கிய சகாக்களுக்கு பார்ட்டியும் டின்னரும் வைத்து தன் பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். மாசிலாமணி அவருடைய மனேஜராயிருந்தாலும் தண்ணிச்சாமிக்கு அவர் நெருங்கிய சகாதான்.
டைரக்டர்களில் ஒருவரான விதவைச் சீமாட்டி உட்பட இன்னும் ஏழெட்டுக் கனவான்கள் கையில் மதுநிறைந்த கிளாஸோடும், டோஸ்டோடும் கலகலப் பாக உரையாடிக் கொண்டிருந்தனர். -
மனேஜர் தண்ணிச்சாமியிடம் சென்று புன்னகையோடு கை குலுக்கி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, ஆனந்தியை அறிமுகப்படுத்தினார்.
பிறந்த நாள் உடுப் போடும், கையில் மதுபானத் தோடும் நின்றிருந்த தண்ணிச்சாமி பிரகாசமான அழகோடும் ஒயிலான தோற்றத்தோடும் தனக்கு முன்னால் பிரசன்னமாகி நிற்கும் ஆனந்தியை சில விநாடிகள் விழுங்கி விடுவது போல் பார்த்துவிட்டு கையிலிருந்த மதுவை வாயில் ஊற்றினார். மனேஜருக்கு மேசையைக் காட்டிவிட்டு, ஆனந்தியைப் பார்த்து வெறிச் சிரிப்புடன், கையிலிருந்த மதுக் கிளாசைக் காட்டி 'இதைப் போல நீயும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறாய்' என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு மேலும் லேசாய் சிரித்தார்.
ஊதிப்பருத்த உடம்பு, சின்னவிழிகள், பரந்த மெழுகு போன்ற முகம், கன்னப்பொட்டில் நரையோடி மற்றப் பகுதியெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை காட்டும் தலைமயிர், சற்று அகன்ற மூக்கு, பொதுநிறம், உண்மையான வயது என்னவோ, ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். இப்படிக் காட்சியளித்த தண்ணிச்சாமியை ஒருகணம் பார்த்துவிட்டு விழிகளைத் தாழ்த்திக் கொண்ட ஆனந்தி மெளன மாக நின்றாள்.
சுபைர் இளங்கீரன் 188

டைரக்டர் மேசையைக் சுட்டிக்காட்டி 'அங்கே போகலாம் என்று கூறினார். ஆனந்தி மெல்லத் தலையை ஆட்டி மறுத்துவிட்டு தனியாக ஒரு இடத்தில் போய் அமர்ந்தாள்.
மேசையில் மதுப் போத்தல்களும் டேஸ்டும் குவிந்திருந்தன. மனேஜர் அவற்றில் கவனத்தைச் செலுத்தியிருந்தார். டைரக்டர் அங்கு வந்து கையி லிருந்த வெற்றுக் கிளாஸில் மதுவை நிரப்பிக் கொண்டு மனேஜருடன் ஏதோ கதைத்தார். அவரும் ஏதோ சொன்னார். இருவரும் ஆனந்தியை ஒருதடவை பார்த்துச் சிரித்தனர். S.
அவள் இதைக் கவனிக்கவில்லை. அவளுடைய பார்வை அங்குமிங்கும் சுழன்று கொண்டிருந்தது. ஹோலில் நவீன, மேல்நாட்டுப் பொருட்கள், நாற்காலிகள், பெரிய ரேடியோகிராம் எல்லாம் கண்ணுக்கு கவர்ச்சியாக அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஐஸ் நிறத்தில் குளுமையான வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. ஆங்கில உரையாடல்கள், கிளாஸ்கள், போத்தல்களின் கலகலப்பு, சிரிப்பு இவற்றின் மத்தியில் காதில் லேசாய் விழும் வானொலியின் ஐரோப்பிய இசை.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு பெரிய இடத்து விவகாரங்கள் எல்லாம் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றியது. ஒருநாள் டேவிட் சொன்ன வசனம் காதில் வந்து மோதியது.
'பணக்காரங்களுக்கு வாழ்க்கை ஒரு கலை; ஏழைகளுக்கு அது ஒரு போர்க்களம்'
ஆனந்தி இதைத் திரும்பவும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். டைரக்டர் ஒரு கிளாஸ் நிறைய பியரை ஊற்றிக் கொண்டு வந்து ஆனந்தி யிடம் நீட்டினார். அவள் மரியாதையாக மறுத்தாள். இதற்கிடையில் மனேஜர் நெக்டோவைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மற்றவர்களுடன் போய் கலந்து கொண்டார். டைரக்டர் திரும்பவும் சில நிமிஷங்கள் அவளை வெறியோடு ரசித்து விட்டு தன் சகாக்களை நோக்கி நடந்தார்.
கையிலிருந்த நெக்டோவுடன் விதவைச் சீமாட்டியைப் பார்த்தாள் ஆனந்தி. அவள் விதவையைப் ப்ோல் தெரியவில்லை. நல்ல சிவந்த நிறத் தோடு கொஞ்சம் அழகாயிருந்த அவள் தன் வயதை மறைக்கும் விதத்தில் எடுப்பாக மேல்நாட்டுப் பாணியில் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த விதவை தொடை தெரிய மினிஸ் கேட் அணிந்திருந்தது ஆனந்திக்கு அருவருப்பாயிருந்தது. அவள் மதுவை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்ததும் என்னவோ போலிருந்தது.
அந்தக் கனவான்கள் மத்தியில் அவள் மட்டும் இருப்பதை எண்ணிப் பார்த்தாள். தன்னையும் அவளையும் தவிர வேறு பெண்கள் யாரும் அங்கு காணப்படாதது ஆச்சரியமாக இருந்தது. டைரக்டரின் பெண் சாதி கூட
189 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 100
இல்லையே. இவர் கல்யாணம் முடிக்காதவரோ. அல்லது மனைவி இறந்து விட்டாளோ. பிள்ளைகள் இல்லாத மலடரோ. இவ்வளவு காசு பணத்தை யும் இவர் மட்டும் தான் அனுபவிக்கிறாரோ.
கேள்விச்சரங்க்ளாக எண்ணங்கள் சுழன்றன. நேரம் ஆக ஆக குடியும் கும்மாளமும், மதுவாடையும் டோஸ்டுகளின் மணமும், சில விரசமான உரையாடல்களும் அதிகரித்தன.
ஆனந்தி தன் தந்தையை நினைத்துக் கொண்டாள்- அவரை விட இவர்கள் எந்த வகையில் சிறந்தவர்கள் என்று எண்ணினாள்.
விதவைச் சீமாட்டி உட்பட எல்லோரும் தன்னை அடிக்கடி பார்த்துச் சிரிப்பதும் தெரிந்தது. ஆனந்திக்கு வெட்கம் தாளமுடியவில்லை. எதுக்காக இவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்க வேணும்?. டைரக்டரும் அவருடைய சகாக்களும் குடி வெறியோடும் சதை வெறி யோடும் அவளைப் பார்த்தார்கள்.
இவர்கள் ஏன் இப்படி என்னைத்தின்று விடுவது போல் பார்க்கிறார்கள்.? ஆனந்திக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. டின்னர் எப்போது முடியும். எப்போது அந்த இடத்தை விட்டுப் போகலாம் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.
எட்டுமணி இருக்கும். எல்லோரும் டின்னருக்கு கூடினார்கள். மேசை நிறைய இருந்த உணவு வகைகளைக் கண்டு ஆனந்தி பிரமித்து விட்டாள். இறைச்சி எத்தனை வகை காய்கறி எத்தனை விதம்! இனிப்புப் பண்டங்களும் பழங்களும் எத்தனை ரகம்!
ஆனந்தியின் காதில் அந்த வசனங்கள் திரும்பவும் வந்து மோதின. "பணக்காரர்களுக்கு வாழ்க்கை ஒரு கலை; ஏழைகளுக்கு அது ஒரு போர்க்களம்."
டைரக்டர் ஆனந்தியைப் பார்த்தார், "இன்றைக்கு எனது பிரதம விருந்தாளி நீதான். என்பக்கத்தில் வந்து இரு' என்று ஆங்கிலத்தில் கூறி ஆசனத்தைக் காட்டினார்.
அதை ஆமோதிப்பது போல எல்லோரும் கைதட்டினார்கள். மனேஜர் "ம்.' என்று முனகி விழிகளால் ஜாடை காட்டினார்.
ஆனந்திக்கு வெட்கத்தால் உடம்பெல்லாம் கூனிக்குறுகியது. இதுவரை அந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருக்குப் பக்கத்திலிருந்து அவள் சாப்பிட்டதில்லை. டைரக்டருக்குப் பக்கத்தில் எப்படி இருக்கிறது என்று எண்ணித் தயங்கினாள்.
சுபைர் இளங்கீரன் 190

தண்ணிச்சாமி விடவில்லை. அவருடைய வற்புறுத்தல் கூடியது. மற்ற வர்களும் உற்சாக மூட்டினார்கள். இனியும் தயங்கினால் டைரக்டர் தன் கையைப் பிடித்து பலாத்காரமாக உட்கார வைத்து விடுவார் என்று தெரிந்தது. வேறு வழியில்லாமல் கதிரையில் ஒடுங்கியவாறு இருந்தாள்.
எல்லோரும் சிரித்து, மகிழ்ந்து உரையாடிச் சாப்பிடத் தொடங்கினார்கள். பங்களா வேலைக்காரர் இருவர் பரிமாறினார்கள். கனவான்களின் வயிறு அப்போது எப்படி இருந்ததோ, அவர்கள் ஒரு பிடி பிடித்தார்கள். ஆனால், தண்ணிச்சாமி பக்கத்தில் இருக்க, ஆனந்தியால் சாப்பிட முடியவில்லை. அருவருப்பும் கூச்சமும் ஒன்று சேர கொஞ்சம் கொஞ்சமாய் கொரித்துக் கொண்டிருந்தாள்.
டின்னர் முடிந்தது. ஏராளமான உணவு மிஞ்சியது. கனவான்களின் பிளேட்டிலும் சோறும் கறியும் சேதமாகிக் கிடந்தன.
-இது எவ்வளவு அநியாயம். மத்தியானம் பாண்தின்னும் கம்பெனிஆட்கள், தன்வீட்டில் உள்ளவர்கள், சந்தியில் இருப்பவர்கள் எல்லோரையும் எண்ணிப் பார்த்தாள், ஆனந்தி.
நாங்கள் எல்லோரும் தின்ன வழியில்லாமல் தவிக்கும் போது இங்கே இப்படி எவ்வளவு வீணாகுது. இது எவ்வளவு அநியாயம்.
ஆனந்தியின் வயிறு எரிந்தது. குடி மயக்கமும், வயிறு புடைக்கத் தின்ற மயக்கமும் ஒன்று சேர்ந்ததால் கனவான்களும் சீமாட்டியும் சற்று நேரத்துகெல்லாம் பங்களாவை விட்டு தங்கள் கார்களில் பறந்து விட்டார்கள்.
ஆனந்தியும் புறப்படுவதற்காக மனேஜரைப் பார்த்தாள். அவரைக் காணவில்லை. டைரக்டர் கூட அங்கு இல்லை. சிறிது நேரத்துக்கு முன்னால் சிரிப்பும், கும்மாளமும் சந்தடியுமாய் இருந்த அந்தப் பங்களா, மழை பெய்து ஓய்ந்தது போல் அமைதியாக இருந்தது. பக்கத்தில் டின்னர் நடந்த அறையில் வேலைக்காரர் பிங்கான் கோப்பைகள் கிளாஸ்கள் அடுக்கும் ஓசை மட்டும் காதில் லேசாய் விழுந்தது. சற்று நேரத்துக்குள் அதுவும் நின்றது. வேலைக் காரர்களும் அந்த அறையைப் பூட்டி விட்டு பின்பக்கம் போய்விட்டார்கள்.
ஒரே நிசப்தமாக, ஏகாந்தமாக வெறிச்சென்று இருக்கும் அந்தப் பங் களாவில் இப்போது தான் மட்டும் இருப்பதை எண்ணியதும் ஆனந்தியின் மனம் திக்' என்றது. பீதியால் நெஞ்சு படபட என்று அடித்தது. அங்கு இருக்க முடியாதவளாய் வெளியே முற்றத்துக்குள் வந்தாள். ஒருவரையும் காண வில்லை. ஆட்டுக்கடாய் மாதிரி வளர்ந்திருந்த அல்சேஷன் நாய் ஒன்று அங்கு உலாத்திக் கொண்டிருந்தது. கேட்டைப் போய்ப் பார்த்தாள். அது பூட்டிக் கிடந்தது.
191 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 101
நெஞ்சில் திகிலடிக்க கேட்டின் அருகிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டாள் ஆனந்தி. ஒரு நொடிக்குள் எத்தனையோ எண்ணங்கள் மனதில் சூழ சற்றுநேரம் சிலையாக நின்றவள், பங்களாவின் ஒரு அறைக்குள் மனேஜரும் டைரக்டரும் ஏதாவது கம்பெனி விஷயமாய் கதைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணியவளாய், திரும்பவும் ஹோலுக்குள் வந்தாள். அறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதயம் இன்னும் வேகமாக அடிக்கச் செய்வதறியாது அப்படியே நின்றாள், அவள்.
* * * * *
நேரம் ஒடிக் கொண்டேயிருந்தது. சிலையாக நின்றிருந்த ஆனந்தியின், இதயத்துடிப்பும் அதிகரித்தது.
பின்னால் திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று திரும்பினாள் ஆனந்தி.
தன்னுடைய பிறந்தநாள் உடுப்பையெல்லாம் மாற்றிக் கொண்டு படுக்கை அறை உடுப்புடன் அறை வாசலில் நின்றிருந்தார் தண்ணிச்சாமி. அவருடைய முகத்தில் ஒரு வெறித்தனம் பரவியிருந்தது. விழிகள் செக்கச் செவேலென்று சிவந்திருந்தன. பார்வையில் சதை வெறி தெறித்தது. வாயில் நெளிந்த புன்னகை கோரமாயிருந்தது.
அவருடைய நிலையைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு அதிக நேரம் ஆகவில்லை. அதேபோல அப்போதுள்ள தனது நிலையையும் அவள் சட்டென உணர்ந்து கொண்டாள். அந்த எக்கச்சக்கம்ான நிலைமையிலிருந்து தப்புவதற்கு அந்த நிமிஷத்தில் ஒரு யோசனையும் அவளுக்குத் தோன்றாமல் உறைந்து போய் நின்றாள்.
சில நிமிஷங்களுள் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு "மனேஜர் எங்கே? நான் வீட்டுக்குப் போகவேணும்' என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
விழுங்கி விடுவதுபோல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் "ஒரு வேலையாக அவர் வெளியே போய்விட்டார். அவர் வரும் வரை நீ ஓய்வு எடுக்கலாம், அதோ அந்த அறையில்' என்று எதிரே உள்ள மற்றொரு அறையைச் சுட்டிக் காட்டினார்.
"பரவாயில்லை. நான் இங்கேயே இருக்கிறேன்' என்று சொல்லி நாற்காலி யில் 'தொப்' என்று இருந்தாள் ஆனந்தி.
டைரக்டர் மெல்ல நடந்து வந்து பக்கத்திலிருந்த மற்றொரு கதிரையில் இருந்து கொண்டு 'நீ மிகவும் நேர்த்தியான பெண்' என்று ஆனந்தியின் கையைப் பிடித்தார்.
நாகம் தீண்டியது போலிருந்தது. கையை உதறித் தள்ளிவிட்டு பதறித்
சுபைர் இளங்கீரன் 192

துடித்துக் கொண்டு சரெலென எழுந்தாள் ஆனந்தி. உடம் பெல்லாம் படபடத்தது. W
"நொன் சன்ஸ்' என்று சொல்லியவாறு டைரக்டரும் இருக்கையை விட்டெழுந்து ஆனந்தியை முறைத்துப் பார்த்தார். "நீ என் கம்பெனியிலே வேலை செய்கிற ஒரு சாதாரணடைப்பிஸ்ட் என் கையை நீஎன்ன உதறுகிறது. இன்றைக்கு என் பிறந்தநாள். என்னைக் கெளரவிக்கிறதை விட்டுவிட்டு, என்னை உதாசீனப்படுத்துவதென்றால் அதை நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா?" என்றுஆங்கிலத்தில் ஆத்திரத்துடன் கூறியவாறு திரும்பவும் அவளுடைய கையைப் பிடிக்கப் போனார்.
ஆனந்தி வெகுண்டு நகர்ந்தாள்.
'இடியட்' என்று உறுமிக் கொண்டே மூர்க்காவேசத்துடன் பாய்ந்து ஆனந்தியைப் பலாத்காரமாகப் பற்றி அணைத்து. 'பளிர்' என்று டைரக்டரின் கன்னத்தில் வேகமாக ஒன்று விழுந்தது. அவர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்.
உணர்ச்சிகள் எரிசரமாக ஆனந்தி தணலாகிச் சிவந்து நின்றாள். ஒருகணம் தான் அவரைப் பார்த்தாள். மறுகணம் 'தூ.' என்று முகத்தில் துப்பி விட்டு வேகமாக வெளியே ஓடினாள்.
'ஈகிள்...!" என்று கத்தினார் டைரக்டர்.
முற்றத்தில் நின்ற அல்சேஷன் உறுமிக் கொண்டு ஆனந்தியின் முன்னால் பயங்கரமாய் வந்து நின்றது. அதைக் கண்டதும் வீறிட்டவாறு மூர்ச்சித்து விழுந்தாள் ஆனந்தி.
* * * 壹 *
ஆனந்தி கண்விழித்துப் பார்த்த போது பங்களா அறையொன்றில் ஸ்பிரிங் மெத்தை போட்ட கட்டிலில் தான் படுத்திருப்பது தெரிந்தது. குளுமையான வெளிச்சம் பரவியிருந்த அந்த அறையில் நாலைந்து அழகான நாற்காலிகள், விலை உயர்ந்த ஒரு அலுமாரி, புத்தக செல்ஃப், மின்விசிறி எல்லாம் கண்ணில் பட்டன.
நான் ஏன் இங்கே படுத்திருக்கிற்ேன். என்று திகைப்புடன் எண்ணிய போது, நடந்த சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அந்த மிருகத்தின் பங்களா போலிருக்குதே என்று தனக்குள் சொல்லிக் கொண்டே வாரிச் சுருட்டிக் கொண்டு பதை பதைப்புடன் எழுந்தாள்.
இதே சமயம் மாசிலாமணியும், ஒரு பெண்ணும் அங்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பதைபதைப்பு நீங்கி, பீதியும் சற்றுக் குறைந்தது. ஆனால் நெஞ்சில் மூண்டிருந்த கனல் விழிகளில் தெறிக்க மனேஜரைப் பார்த்தாள்.
193 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 102
அவர் அதைப் பொருட்படுத்தாதவர்போல் "உனக்கு இப்படி நேர்ந்ததைப் பற்றி வருந்துகிறேன்' என்று ஆங்கிலத்தில் கூறியவர் பக்கத்தில் நின்றவளைத் தன் மனைவி என்று அறிமுகப்படுத்தி விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்து சொன்னார்.
"எங்கள் பங்களாவில் தான் நீ படுத்திருக்கிறாய். இப்போது ஒரு மணி. இங்கே நீ பத்திரமாய் இருப்பதாகவும், காலையில் வருவதாகவும் உன் வீட்டுக்குத் தகவல் அனுப்பி விட்டேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாமல், பயப்பிடாமல் அமைதியாகத் தூங்கலாம். மீதியை நாளைக்குப் பேசிக் கொள்ளலாம். உனக்கு ஏதாவது தேவையாக இருந்தால் படுக்கையில் கோலிங் பெல் இருக்கிறது. இவள் அல்லது நான் வருவோம். இப்போது உனக்குத் தேவை ஓய்வு' இத்தனையையும் ஒரே மூச்சில் கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினார் மாசிலாமணி.
அங்கு நின்ற அவர் மனைவி 'உனக்கு இப்போது எல்லாம் சரி, இல் லையா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
ஆனந்தி அவளைச் சந்தேகத்துடன் பார்த்தாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவளாய் "கொஞ்சம் தண்ணி தருவீங்களா?' என்று கேட்டாள்.
'ஒ. யெஸ்' என்றவள் 'தண்ணீர் எதுக்கு? பிளாஸ்கில் ஹோர்லிக்ஸ் இருக்கிறது' என்று கூறியவாறு செல்ஃபின் மேலிருந்த பிளாஸ்கை எடுக்கப் போனாள்.
'வேணாம். தண்ணிதான் தாங்க. நாக்கு வரட்சியாய் இருக்குது' என்றாள் ஆனந்தி,
'சரி.' என்று கூறிய அவள் அங்கு இருந்த கண்ணாடிக் கூஜாவிலிருந்து தண்ணிர் வார்த்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதைக்குடித்து விட்டு 'ஒரு மணியாக இருந்தாலும், வீட்டுக்குப் போகிறது நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கொண்டுபோய் விடும்படி சொல் நீங்களா?' என்று கேட்டாள்.
'நீ களைப்பாய் இருக்கிறாய். இந்த நேரத்தில் அவசரமாய்ப் போக வேண்டியதில்லை. நீ கவலைப்படாமல் தூங்கு. காலையில் போகலாம்' என்று கூறி ஒரு புன்னகையைக் காட்டிவிட்டு அவளும் வெளியே சென்றாள்.
ஆனந்தி அசந்து போனாள். உண்மையில் இது மனேஜரின் பங்களாதானா. அல்லது அந்த டைரக்டரின் பங்களாவா. இந்தப் பாவி யாரோ ஒருத்தியைக் கூட்டி வந்து மனைவி என்றும், தன் பங்களா என்றும் இப்போதும் ஒரு நாடகம் போடுகிறானோ.
இதை எண்ணியதும் ஆத்திரம் பொங்கியது. தான் இந்த அயோக்கியர் களிடம் எக்கச்சக்கமாய் வந்து மாட்டிக் கொண்டதை நினைத்து வருந்திய
சுபைர் இளங்கீரன் 94

வளாய் மெல்ல நடந்து சாத்தியிருந்த கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். மங்கிய மின் வெளிச்சத்தில் ஹோல் தெரிந்தது. சற்றுத் தைரியத்துடன் அங்கு வந்து தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டாள். அது மாசிலாமணியின் பங்களாதான்.
ஆறுதலாக ஒரு பெருமூச்சுடன் அவளுக்கு ஒரு பயம் தீர்ந்தது. திரும்பவும் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள். அன்று நடந்த சம்பவங்கள் முழுவதும் கோர்வையாக வந்து நின்றன. தன்னை டைரக்டரருக்கு இரை யாக்கத்தான் மனேஜர் அனுதாப நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்று விளங்கியது. ஆனால் டைரக்டரின் பங்களாவிலிருந்து தான் இங்கே எப்படி வந்தேன் என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை. நாயைக் கண்டு தான் மூர்ச்சித்து விழுந்தது வரை ஞாபகத்திலிருந்தது. அதற்குப் பிறகு என்ன நடத்திருக்குமென்று எண்ணிப் பார்த்தாள். எதையும் ஊகிக்க முடியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற ஆவல் துடித்தது. மனேஜருடன் ஆத்திரப்படாமல் சாந்தமாய்ப் பேசினால்தான் இதை தெரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தாள். ஆனால் அவர் ஒளிக்காமல் நடந்ததைச் சொல்லுவாரா அல்லது ஏதாவது கதையளப்பாரா என்றும் சந்தேகப்பட்டாள்.
சிந்தித்துச் சிந்தித்து மூளை சோர்ந்தது. மனமும் களைத்தது. அசதியுடன் கண்ணை மூடினாள்.
விடிந்து கண் விழித்த போது முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் திரும்பவும் நினைவுக்கு ஓடி வந்தன. அந்த நினைவைக் கலைப்பது போல் அமைதியாக இருந்த பங்களாவில் ஆள் நடமாட்டமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. வானொலியின் காலை நிகழ்ச்சிகளும் காதில் லேசாய் விழுந்தன.
ஆனந்தி சரேலென்று எழுந்தாள். இதேசமயம் வேலைக்காரப் பெட்டை கப்
-சோஸரில் தேனீரைக் கொண்டு வந்து அங்கிருந்த டீபோயில் வைத்து விட்டு திரும்பிச் சென்றாள். பல் விளக்காமல் தேனீர் குடித்துப் பழக்கமில்லாத அவள் அதைச் சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இரவு நல்லாய்த் தூங்கினாயா?" என்று ஆங்கிலத்தில் கேட்டவாறு அங்கு வந்து நின்றாள் மிஸிஸ் மாசிலாமணி.
சிவ்ந்த நிறமும், பொலிவான முகமும், நடுத்தரமான உயரமும் உள்ள அவளைப் பார்த்த ஆனந்தி தலையை அசைத்து விட்டு, 'நான் இப்ப வீட்டுக்குப் போக வேணும்?' என்றாள்.
'ஓ.. யெஸ்' என்று கூறிவிட்டு வெளியே வந்தாள் மாசிலாமணியின் மனைவி.
அவளைப் பின் தொடர்ந்து வந்த ஆனந்தி "பாத்ரூம் எங்கே?' என்று கேட்டாள். அவள் அதைக் காட்டிவிட்டு மற்றொரு அறைக்குள் புகுந்தாள்.
195 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 103
பாத்ரூமுக்குள்ளிருந்து நேரே ஹோலுக்குள் வந்தாள் ஆனந்தி. அங்கு மாசிலாமணியின் சாயலை ஒத்த இரண்டு குமர்ப் பெண்கள் மினிஸ்கேட்டுடன் இருப்பதைப் பார்த்ததும் இந்த இரண்டு குமர்ப் பெண்களுக்கு தகப்பனாய் இருந்து கொண்டு எனக்கு இப்படி அநியாயம் செய்து விட்டானே பாவி’ என்று மனேஜரைமனதுக்குள் கடிந்து கொண்டாள். அவளுக்கு ஒருநிமிஷமும் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. வெளியே போய் விடவேண்டுமென்ற துடிப்பில் அடியெடுத்து வைத்தாள்.
''61 ፭1Gä;?””
குரல் கேட்டதும் திரும்பினாள். மனேஜர் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க ஆனந்திக்கு ஆத்திரமாகவும் வெறுப் பாகவும் இருந்தது. தலையைக் குனிந்து கொண்டு 'வீட்டுக்கு. ' என்று கூறியவாறு நடந்தாள்.
'நில்லு. நான் கொண்டு போய் விடுகிறேன். "எங்கே, டைரக்டரின் வீட்டுக்கா...?’ என்று கேட்டவள் விர்ரென்று பங்களாவை விட்டு இறங்கினாள்.
பஸ்ஸை விட்டு இறங்கி சந்தில் புகுந்து நடக்கும் போது அவளுக்கே ஒரு தயக்கமும் அவளை அறியாத ஒரு நடுக்கமும் ஏற்பட்டது. செய்யத் தகாத ஒரு காரியத்தை செய்துவிட்டது போன்று உள்ளம் கூசியது.
தயக்கத்தோடு வீட்டுக்குள் ஏறியதும் நடுக்கத்தையும் கூச்சத்தையும் மறந்து "இரவு யாராவது வந்து என்னைப் பற்றி ஏதாவது செய்தி சொன்னார்களா?" என்று வசந்தியிடம் கேட்டாள்.
'ஓம். நீ மனேஜரின் பங்களாவில் இருப்பதாகவும், காலையில் வருவதாக வும் சொன்னான். வந்தவன் டிரைவர் போலத் தெரியுது" என்று கூறியவள் சகோதரியை மேலும் கீழும் விநோதமாகப் பார்த்தாள். 'காந்தி சொன்னது சரிதான். அக்கா பட்டுப்புடவையும் அலங்காரமுமாய் பளபள என்று கண்ணைப் பறிக்கிற மாதிரி இருந்தா. நீ பார்த்தா அசந்துபோயிருப்பாய் என்று ஆச்சரியம் ஆச்சரியமாய்ச் சொன்னாள். அதுசரிதான்' என்று அவளும் வியப்போடு கூறிவிட்டு 'இது மனேஜரின் பிரசண்டா..?' என்று குத்தலாய்க் கேட்டாள்.
ஆனந்திக்குச் 'சுருக் கென்றது. "சீ. மூதேசி. மூடு வாயை' என்று சீறிக் கொண்டே உடுத்தியிருந்த பட்டுச் சாரியை அருவருப்போடு அவசர அவசர மாய்க் கன்லந்து மேசையில் வீசி எறிந்து விட்டு கொடியில் கிடந்த தன்னுடைய சேலையை உடுத்தினாள்.
"உனக்கு ஏன் கோபம் வருகுது? மனேஜர் வாங்கித் தந்த பரிசா என்று கேட்டது தப்பா..?"
“எனக்கு ஏண்டி அவர் வாங்கித் தர வேணும்?"
சுபைர் இளங்கீரன் 196

"எனக்கென்ன தெரியும். உனக்கும் அவருக்குமல்லவா அது தெரியும்'
வசந்தி இதைச் சொல்லி முடித்தாளோ, இல்லையோ பளிர் என்று அவ ளுடைய கன்னத்தில் அறைந்தாள் ஆனந்தி.
வசந்தி பொறி கலங்கியவளாய் அக்காவைப் பார்த்தாள். அவள் விழிகளில் நெருப்பெரிய நின்று கொண்டிருந்தவள் 'என்னை என்னதான் நினைச்சுக் கொண்டிருக்கிறாய். போய், வாயை அலம்பிட்டு வாடி.." என்று கத்தினாள்.
வசந்தி ஒன்றுமே சொல்லாமல் முகம் சிவக்க விருட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள்.
ஆனந்தியின் விழிகளிலிருந்து கண்ணீர் பொல பொல எனக் கொட்டத் தொடங்கியது. - ஒரு பட்டுச் சேலையைப் பார்த்துவிட்டு என்னை இப்படி எண்ணி விட்டியேடி. பிறந்ததிலேயிருந்து இத்தனை வருஷங்களாய் இந்த வீட்டிலே என்னோடு ஒன்றாய் வளர்ந்து உன் அக்காவைப் புரிஞ்சு கொண் டிருந்தும் ஒரு நொடிக்குள்ளே, ஒரே வார்த்தையில் என்னைக் கொன்று போட்டியேடி.
மனம் பிழிந்து நோக, அதிலிருந்து பெருகிய ரத்தம் கண்ணீராய்க் கொட்ட அப்படியே தரையில் சுவரோடு சுவராய் இருந்து விட்டாள்.
蔷 斧 蔷 好 好
மறுநாள் வழக்கம் போலவே மனேஜர் பரிசளித்த சாரியையும் எடுத்துக் கொண்டு ஒஃபிசுக்குப் புறப்பட்ட ஆனந்தி, தன் அறைக்குப் போகாமல் நேராக மனேஜரின் அறைக்குச் சென்றாள்.
மனம் குமுற, முகம் சிவக்க தன் முன்னால் நிற்கும் ஆனந்தியைப் பார்த்தார் மனேஜர் ஆனால் அவர் தன்முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் உட்காரும் படி அமைதியாக ஆசனத்தைக் காட்டினார். ஆனந்தி இருக்கவில்லை. கையிலிருந்த பார்சலை அவருடைய மேசையில் 'பொத் தென்று போட்டுவிட்டு படபடத்தபடி நின்றாள்.
'இது என்ன?"
'எனக்கு பிரசண்ட் பண்ணிய சாரி'
'இதை ஏன் திருப்பித் தருகிறாய்?"
'நீங்க நடத்துகிற நாடகத்திலே என்னை நடிக்க வைக்கிறத்துக்காக எனக்கு டிரஸ் வாங்கித் தந்தீங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் நடிகையல்ல. இந்த டிரஸ் எனக்குத் தேவையுமில்லே' -ஆத்திரத்தை அடக்கிக் கொண்டே கூறினாள் ஆனந்தி.
'நாடகமா..! என்ன சொல்கிறாய்? கொஞ்சம் கவனமாய்ப் பேசு'
197 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 104
கடுமையான தொனியில் அவரும் படபடத்தார்.
ஆனந்திக்கு ஆத்திரத்தை அதற்குமேல் அடக்கிக் கொள்ள முடியவில்லை. "ஓம். நீங்க என்மேல் காட்டுகிற அனுதாப நாடகத்தைத் தான் சொல்கிறேன்" என்றாள் ஆனந்தி.
'ஒ. அப்போ, உன்மேல் எனக்குள்ள அனுதாபத்தை நடிப்பு என்கிறாய்?" "ஓம். நடிப்பு என்று ஆயிரம் முறை சொல்லுவேன். நீங்க கைதேர்ந்த ஒரு நடிகர், டைரக்டருக்கு என்னைப் பலியாக்க திட்டமிட்டு ஒருநாடகத்தை நடத்தி கடைசியாக எனக்கு டிரஸ் வாங்கித் தந்து சோடிச்சு அந்த மிருகத்தின் முன்னாலே கொண்டுபோய் நிறுத்தி விட்டு நீங்க நழுவி விட்டீங்க"
'சட் அப். ' என்று மேசையில் குத்திவிட்டு இருக்கையை விட்டு ஆவேசமாய் எழுந்து நின்று 'நீ என்னைப் பிழையாக கருதிக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேச வேணாம்' என்று கடுகடுத்தார் மனேஜர்.
'இவ்வளவு நாளும் உங்களைப் பிழையாகத்தான் நான் கருதிக் கொண் டிருந்தேன். இப்ப உங்க சுயரூபம் தெரிந்த பிறகு சரியாக விளங்கிக் கொண் டேன். இப்ப கூட நீங்க நடிக்கிறீங்க என்று எனக்கு நல்லாய்த் தெரியுது. நான் இனியும் ஏமாறுகிறதுக்கு பபா இல்லை. உங்க அதிகார மிரட்டலுக்கும், அட்வைஸ0க்கும் அடங்கிப் போகவும் மாட்டேன்.'
"உனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலே மூளை இன்னும் தெளிவடையவில்லை. அதுதான் இப்படி உளறுகிறாய். '
'எனக்குத் தெளிவு. உங்க அனுதாபத்தைப் பற்றி எனக்கு இனிச் சொல்ல வேணாம். முந்த நாள் நடந்ததையெல்லாம் சிந்திக்கிற போது எனக்குப் பகட்டைக் காட்டி என்னைப் பாழ்படுத்த முயற்சித்திருக்கிறீங்க என்கிறது எனக்குத் தெளிவாய்த் தெரியுது."
'அதனாலே எனக்கு என்ன லாபம்?" "அது உங்களுக்குத்தான் தெரியும்' மனேஜர் மெளனமாக நின்றார். அவருடைய முகத்தில் இருந்த ஆவேசம் மறைந்தது. கோபம் மாறி லேசாய்ச் சிரித்தார். பிறகு தணிவான குரலில் சொன்னார்: 'உன்னைப் பாழாக்கிறதிலே எனக்கு ஒரு லாபமும் இல்லை. உன்னைக் கொண்டு லாபம் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமும் எனக்கு இல்லை. டைரக்டருக்கும் அப்படித்தான். அவருக்குப் பெண் தேவை என்றால் அந்தக் காரியத்தை நான் செய்யத் தேவையில்லை. அவரே ஒரு கஷ்டமும் இல்லாமல் தேடிக் கொள்ள முடியும். அந்த வசதியும் தகுதியும் அவருக்கு இருக்குது. ஆகையினாலே என்னைப் பற்றி பிழையாக நினைக் கிறது தவறு. என்னுடைய ஸ்டேட்டஸ்ஸைப் பற்றி நீ கொஞ்சம் யோசிக்க வேண்டும்'
சுபைர் இளங்கீரன் 198

"அப்படியானால் என்னை ஏன் வற்புறுத்தி அங்கே அழைத்துக் கொண்டு போனீங்க?"
"எனக்குப் பெர்சனல் செக்ரட்டரியாக இருப்பவரை டைரக்டர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் இந்த டைரக்டரின் பிறந்தநாள் நல்ல சந்தர்ப்பமாய் இருந்தது. அதனால்தான் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனேன். நாலு கனவான்கள் வருகிற இடத்திலே நீயும் நீற்றாய் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் உனக்கு டிரஸ் வாங்கித் தந்தேன்."
'ஏன் என்னை இடையிலே விட்டிட்டுப் போனீங்க?"
'டின்னர் முடிந்ததும் ஒரு அவசரமாய் வெளியே போக வேண்டியிருந்தது. கால் மணித்தியாலத்துக்குள் திரும்பி வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போகலாம் என்று எண்ணித்தான் போனேன். திரும்பி வரும் போது நீ ஒரு அறைக்குள் மயக்கமாய்க் கிடந்தாய். எனக்கு திகைப்பாயிருந்தது. டைரக்ட ரிடம் விசாரித்தேன். அவர் கொஞ்சம் தயங்கிவிட்டு நடந்ததைச் சொன்னார். எனக்கும் ஆத்திரமாய்த்தான் இருந்தாலும் அதையும் விட உன் விஷயம் தான் எனக்குப் பெரிசாய்த் தெரிந்தது. உடனே டொக்டருக்கு ஃபோன் பண்ணி னேன். அவர் வந்து பார்த்துவிட்டு அதிர்ச்சியினால் உண்டான மயக்கம், கவலைப்படத் தேவையில்லை. சரியாகிவிடும் என்று சொல்லி இன்ஜெக்ஸன் போட்டுவிட்டுப் போனார். அந்த நிலையில் உன்னை அங்கே வைத்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு என் பங்களாவுக்கு வந்தேன். மயக்கம் தெளிந்த பிறகு தான் உன்னை வீட்டில் கொண்டு போய் விடவேண்டும் என்று நினைத்தேன். உனக்குச் சுயநினைவு வரும்போது நடுச்சாமம். அந்த நேரத்தில் உன்னைக் கொண்டுபோய்விடநான் விரும்பவில்லை. நேற்றுக்காலை நான் சொல்லியும் கேளாமல் நீ என்னைப் பற்றிப் பிழையாக எண்ணிக் கொண்டு அவசரப்பட்டுப் போய்விட்டாய்."
வெகு நிதானமாக, அமைதியாக இத்தனையையும் சொல்லி நிறுத்தியவர், சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு மேலும் தொடர்ந்தார்:
'டைரக்டர் நடந்து கொண்டவிதம் எனக்கும் பிடிக்கவில்லைத்தான். ஆனால் அவர் மோசமானவரல்ல. கொஞ்சம் ஒவராய் குடித்து விட்டதால் சுயஉணர்வில்லாமல் நிதானம் தவறி நடந்து விட்டார். அதற்காக என்னிடம் வருந்தினார். அவர் பிசகான ஆளாயிருந்தால் நடந்ததை மறைத்துவிட்டு வேறுகதை சொல்லியிருப்பார். அதை நம்புவது கஷ்டமாயும் இருக்காது. சில சந்தர்ப்பங்களிலே ஆண்கள் இப்படி நடந்து கொள்கிறது புதிய விஷயமல்ல. இதை நினைத்துக் கண்டபடி உளறுகிறது சரியுமல்ல.
'நான் உள்ளதைச் சொல்லிவிட்டேன். இவ்வளவு சொல்லியபிறகும் என்னையும் டைரக்டரையும் பற்றி நீதவறாக நினைத்தால், பரவாயில்லே. நீ அப்படி நினைத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் கூறி
199 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 105
வைக்கிறேன். இந்த விஷயம் நம் மோடு இருக்கட்டும். நீ யாருக்காவது சொன்னால் உனக்குத்தான் நஷ்டமே தவிர, எங்களுக்கு ஒன்றும் ஏற்படப் போவதில்லை."
இதைக்கூறி விட்டு சரேலென்று மேசை லாச்சியைத் திறந்து ஒரு பார்சலை எடுத்து மேசையில் வைத்தார். "இது எங்க டிரஸ்ஸிங் ரூமிலே நீவிட்டுச் சென்ற உடுப்பு. நான் நல்லெண்ணத்தில் வாங்கித் தந்ததைத் திருப்பித்தராமல் இதை எடுத்துக் கொண்டு போ. அடுத்த மாசத்திலேயிருந்து நீ பெர்சனல் செக்ரட்டரி" என்று கூறியவர் பர்ஸை எடுத்து ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை கவரில் போட்டு 'இந்த மாதச் சம்பளத்தை அட்வான்ஸாகத் தருகிறேன். பிறகு கழித்துக் கொள்ளலாம். உன் நிலைமை எனக்கு விளங்கும்' என்று கூறிக் கொண்டே பார்சல்கள்ையும் காசையும் நீட்டினார்.
ஆனந்தி அசந்து போய் பதுமையாகி விட்டாள். அவளையும் அறியாமல் அவளுடைய கரங்கள் அவற்றை வாங்கின.
அவளுடைய உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை மாசிலாமணி தன் திறமையால் அணைத்து விட்டாரோ?.
'சரி நீ போகலாம்"
ஆனந்தி இயந்திரம் போல் தன் அறைக்கு நடந்தாள். மனேஜரின் உதட்டில்
ஒரு முறுவல் ஓடி மறைந்தது.
தன் இடத்துக்கு வந்த ஆனந்தி பார்சல்களையும் காசையும் ம்ேசையில்
வைத்து விட்டு சற்றுநேரம் அவற்றையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஆனந்திக்கு அவர் கூறியதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்க வும் முடியவில்லை திணறினாள். ஆரம்பத்திலிருந்து மனேஜர் காட்டி வரும் அனுதாபத்தையும் நேற்றுவரை நடந்த சம்பவங்களையும் திரும்பவும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். சந்தேகந்தான் வலுத்தது.
என்னைச் சமாதானப்படுத்தத்தான் கதை திரிக்கிறார் இவர். இப்ப கூட தன் நாடகத்தை தொடர்ந்து நடத்தத்தான் காரியதரிசி, காசு என்றெல்லாம் தூண்டிலைப் போட்டு என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறார். நேற்றுத் தவறினாலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் என்னை அந்த மிருகத்துக்கு இரையாக்கி விடவே செய்வார்.
சிந்தித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று பார்சலையும் காசையும் எடுத்துக் கொண்டு வேகமாக மனேஜரின் அறைக்குள் புகுந்து அவற்றை மேசையில் போட்டாள்.
மனேஜர் திடுக்கிட்டு அவளைப் பார்த்தவர், 'என்ன சங்கதி?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
சுபைர் இளங்கீரன் 200

'எனக்கு உங்க அனுதாபம் வேணாம், டிரஸ்ஸும் வேணாம், காசும் வேணாம், செக்ரட்டரி வேணாம், உங்க கம்பெனியே வேணாம்' என்று வெஞ்சினத்துடன் கூறிவிட்டு வேகமாகத் திரும்பினாள்.
"யூ ஆர் ஏ ஃபூல்'
மனேஜரின் குரல் பின்னாலிருந்து ஒலித்ததும் ஆனந்தி வெகுண்டு அவரை ஒரு பார்வை பார்த்தாள்.
மனேஜர் அதை லட்சியம் செய்யாமல் அவளை ஒருகணம் ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சொன்னார்: "நீ ஒரு முட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏதோ பாரதூரமான விஷயம் நடந்துவிட்டது போல நீ இவ்வளவு குழம்பிப் போகத் தேவையில்லை. ஆண் - பெண் சம்பந்தப்பட்ட விஷயத்திலே இந்த மாதிரி நடக்கிறதை சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாது. உன் நிலையில் உள்ள ஒரு புத்திசாலியான பெண் டைரக்டர் தொட்டதும் மூர்ச்சித்து விழுந்திருக்க மாட்டாள். என்னிடம் உளறியதுபோல, இப்ப இதையெல்லாம் உதறிவிட்டு ஓடுகிறது போல ஓடவும் மாட்டாள். தகுந்த படி நடந்து கொள் வாள். காசு, நிலையான ஒரு உத்தியோகம், அதோடு மேலும் வருகிற அந் தஸ்து. நாலு பெரிய மனுஷரின் சகவாசம், அதனால் வரக்கூடிய லாபங்கள் இதெல்லாம் கிடைக்கிற சந்தர்ப்பம் வந்தால் அதை விடவும் மாட்டாள். இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காக இந்த கொழும்பிலே எத்தனை பெண்கள் அலைகிறார்கள் தெரியுமா? வாழ்க்கையில் சுகத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறதுக்காக எதை எதையெல்லாமோ செய்கிறார்கள். நீ மட்டும் வீறாப்புடன்.
A
து.!” மனேஜரின் முகத்தில் துப்புவது போல நிலத்தில் துப்பினாள் ஆனந்தி மறுவினாடி கதவை வேகமாகத் திறந்து படீரென்று சாத்திக் கொண்டு வெளியேறினாள்.
மனேஜரின் முகத்தில் அறைந்தது போலிருந்தது அது.
அருவருப்பும் ஆத்திரமும் ஒன்று சேர கன்டீனை நோக்கி நடந்தாள் ஆனந்தி உள்ளே நுழைந்ததும் டேவிட்டின் நினைவு வந்தது. நடந்ததை யெல்லாம் அவனிடம் கொட்டித் தீர்த்து விட்டுப் போனால் என்ன என்று ஒருகணம் எண்ணினாள் பிறகு என்ன நினைத்தாளோ கன்டீனிலும் இருக்கா மல் கம்பெனியை விட்டு பஸ்தரிப்புக்கு நடந்தாள். தெஹிவலைக்குப் போகும் பஸ் வந்தது. அதில் ஏறினாள்.
சுபத்திராவின் வீட்டுக்கு வந்ததும் அவள் இல்லை. ஸ்கூலுக்குப் போய் விட்டாள். அம்மா தான் இருந்தாள். அவள் ஆனந்தியைக் கண்டதும் சிறிது வியப்புடன் "என்ன இந்த நேரத்திலே. நீ ஒஃபிசுக்குப் போகேல்லியா?" என்று கேட்டாள்.
201 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 106
'இல்லே மாமி. உடம் பெல்லாம் என்னவோ போலிருக்குது. ஒரே தலையிடி, வீட்டிலே இருக்க முடியேல்லே. இங்கே கொஞ்சம் ஆறுதலாய் படுத்துக் கிடக்கலாம் என்று வந்து விட்டேன்."
இவ்வாறு கூறிவிட்டு சுபத்திராவின் அறைக்குச் சென்று அவளுடைய கட்டிலில் உடம்பைச் சாய்த்தாள்.
அறை வாசலில் வந்து நின்ற அம்மா "உனக்கு வேர்க்கொம்பு போட்ட கோப்பி வைச்சுத் தரட்டா..?' என்றார்.
'எனக்கு ஒன்னும் வேணாம் மாமி. கொஞ்ச நேரம் நிம்மதியாய் நித்திரை கொண்டால் போதும்.'
அம்மா அருகில் வந்து ஆனந்தியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியே போனாள். சற்றுநேரத்துக்குள் கையில் கோப்பியும் ஒரு சரை மருந்துமாக திரும்பி வந்து 'இது தலையிடிக்குப் போடுகிற தூள். இதைப் போட்டு கோப்பியையும் குடித்துவிட்டுப் படு' என்று கூறியவாறு இரண்டையும் கொடுத்தாள்.
ஆனந்தி அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கோப்பியையும் குடித்தாள்.
'நீநிம்மதியாய்ப் படு. நான் வந்து குழப்பேல்லே. உனக்கு காய்ச்சல் குணம் போல இருக்குது. சோறு வேணாம், நல்ல கஞ்சி காய்ச்சி வைக்கிறன். எழும்பியதும் குடி' என்று கூறி விட்டு வெளியே வந்தாள் அம்மா.
இன்றைக்குக் கஞ்சி, இனி இது கூடக் கிடைக்குமோ என்னவோ. இவ்வாறு எண்ணியதும். வீட்டில் உள்ளவர்கள் அவளை ஏக்கத் தோடு பார்ப்பது போலிருந்தது. மனம் கசங்கியது. அதைப் பொறுக்க முடியாமல் சிந்தனையை மனேஜரின் பக்கம் திருப்பினாள்.
அவர் கடைசியாகச் சொன்ன விஷயங்கள் அவருடைய சுய உருவத்தைப் பளிச்சென்று காட்டுவது போல் இருந்தன.
இவனைப் பற்றி ந்ான் வந்த முடிவு சரிதான். இந்தப் பிழைப்பு பிழைக் கிறதை விட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். சுகமாம். சந்தோஷ மாம். எனக்குப் புத்தியில்லையாம். தன்னை விற்று வாழ்கிறதுக்கு புத்தி வேறு வேணுமாக்கும். எத்தனையோ பெண்கள் அலைகிறார்களாம். இவன் கண்டானாக்கும். வேலையில் சேர்ந்த அன்று இந்தப்பாவி சொன்ன அட் வைஸை நம்பி இவனைப் பற்றிச் சுபத்திராவிடம் சிலாகித்துப் பேசினேன். உடனே அவள் மனிதமனம் ஒரு குகை போல, அதுக்குள்ளே என்னென்னவோ இருக்கும் என்று சொன்னாள். ஆனா எங்க மனேஜரின் மனக்குகைக்குள்ளே அப்படியெல்லாம் இருக்கிறதாய்த் தெரியேல்லே என்றேன். இப்ப தெரிஞ்சு போச்சுது. இவனுடைய மனக்குகைக்குள்ளே பாம்பு, நட்டுவக்காலி, பூரான்,
சுபைர் இளங்கீரன் 202

புழு எல்லாம் கிடக்குது என்று. அந்தக் குகைக்குள்ளே இருந்து நான் தப்பி வந்திட்டேன். அந்தக் கம்பெனி வாடையே எனக்கு இனி வேணாம்.
இதை எண்ணியதும் டேவிட், றோஸி, ராசம்மா, குஸoமா, ஜமீல், செல்லையா, வாட்சன், சிறிசேனா மற்றும் கம்பெனி ஆட்கள் எல்லாரும் வந்து நின்றார்கள். கன்டீன், மத்தியானச் சாப்பாடு, அந்தரங்க சுத்தமான உரையாடல் கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவற்றையெல்லாம் நினைக்கும் போது, கடந்த மூன்று மாதங்களும் அவர்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததை எண்ணும் போது.
விழிகளிலிருந்து கண்ணீர் பெருகியது. கண்ணிரும் நினைவுமாகவே படுத்துக் கிடந்தவள் அப்படியே நித்திரையாகி விட்டாள்.
好 好 好 斧 *
ஆனந்திநித்திரை கலைந்து எழுந்த போது மணி மூன்றாகிவிட்டது. பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுபத்திரா அதை மடித்துப் போட்டுவிட்டு, 'இப்ப உனக்கு எப்படி இருக்குது?' என்று கேட்டாள்.
'தலையிடி போய்ட்டுது. உடம்புதான் மாய்ச்சலாயிருக்குது. உனக்கு அம்மா சொன்னாவாக்கும்?"
'ஓம்' என்று தலையசைத்த சுபத்திரா 'அதனால் தான் ஸ்கூல்லே இருந்து வந்து ஒரு மணித்தியாலமாகியும் உன்னை எழுப் பேல்லே. உன்னோடு சாப்பிடலாம் என்று பேப்பரில் மூழ்கி விட்டேன். சரி, வா. முதல் லே வயிற்றை நிரப்புவோம்' என்று எழுந்தாள், சுபத்திரா.
கட்டிலை விட்டெழுந்து அவளோடு வந்த ஆனந்தி 'அம்மாவைக் காணேல்லியே?' என்றாள்.
'முன்னாலே புதுச் சிநேகம் என்று சொன்னேனே அங்கே போய்ட்டா. நான் ஸ்கூல்லேயிருந்து வந்தேனோஇல்லையோ, உடனே அங்கே கிளம்பிடுவா." 'அம்மா எனக்குக் கஞ்சி வைத்திருப்பா' என்று கூறிக் கொண்டே மேசைக்கு முன்னால் உட்கார்ந்தாள் ஆனந்தி.
'தெரியும், சொல்லிவிட்டுத்தான் போனா. அவ அப்படித்தான். உடம்பு லேசாய்ச்சிணுங்கினாலே போதும். சாப்பிட ஒன்னும் தராமே பட்டினி போட்டு விடுவா, அல்லது கஞ்சி தான். அவட கஞ்சி கிடக் கட்டும். நீ நல்லாய்ச் சாப்பிடு' என்று சொல்லி விட்டு உட்கார்ந்தவள் 'முந்தாநாள் பின்னேரம் உங்க வீட்டுக்கு வந்தேன். நீ இல்லை. எங்கே போனாய்?" என்று சோற்றைப் பிளேட்டில் வைத்தாள்.
"சவோயில் மனேஜரோடு பல்கனியிலிருந்து இங்கிலீஸ் செக்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்'
203 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 107
இதைக் கேட்டதும் சோற்றைப் பிசைந்து வாயில் கொண்டு போனவள் அதையும் மறந்து திகைப்போடும் ஆச்சரியத்தோடும் ஆனந்தியைப் பார்த்தாள் 'என்னடி குண்டை எறிகிறாய்?" w
"உனக்கு ஷொக்காய்த்தான் இருக்கும். அன்றைக்கு நடந்ததை முழுவதும் கேட்டால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி கட்டையாய்ப் போயிடுவாய்' என்று கஞ்சியை கோப்பையில் ஊற்றினாள். -
'என்னடி சொல்கிறாய். அப்படி என்ன நடந்தது? ரொம்பவும் ஆறுத லாய்ச் சொல்றியே. மளமளவென்று சொல்லடி. அதைக் கேட்காமே எனக்குச் சோறு இறங்காது' என்று ஆவலும் பரபரப்புமாய்க் கேட்டாள் சுபத்திரா.
'நான் என்னத்தைச் சொல்ல, மானமே போகப் பார்த்துதடி நானோ வேலையே நீ போ என்று சொல்லி விட்டு ஓடி வந்திட்டேன்.'
'சுருக்காய் சொல்லு எனக்கு என்னவோ எல்லாம் வருகுது' -சுபத்திரா துடித்தாள். ه
ஆனந்தி அவசரப்படவில்லை. காலையிலிருந்து வயிறு வெறுமையாக இருந்ததால் அது இரைந்து கொண்டிருந்தது. கோப்பையில் ஊற்றிய கஞ்சியை மூன்று மடக்கு குடித்துவிட்டு, 'அம்மாவின் கஞ்சி ருசியாய்த்தான் இருக்குது. இதைக் குடிக்காம சோற்றைத் தின்றால் அவ செய்ததுக்கு மதிப்பில்லாமல் போயிடும். அதுதான் கஞ்சியைக் குடிக்கிறேன்' என்று கூறிவிட்டு திரும்பவும் குடித்தாள்.
's எதையாவது குடித்துத் தொலை. இப்ப விஷயத்தைச் சொல்லு, துப்பறியும் கதை மாதிரி சஸ்பென்ஸிலே விடாம விறுவிறு என்று சொல்லு"
'உனக்கு ஏன் இவ்வளவு பரபரப்பு. ?' என்று கேட்டுவிட்டு நடந்ததை யெல்லாம் ஒன்று விடாமல் கூறினாள். கடைசியாக, 'முதலில் மனேஜர் வீட்டுக்குப் போன போது அந்த பங்களாவைப் பார்த்து விட்டு தேவலோகம் போல இருக்குது என்று சொன்னேன். அதுக்கு நீ சொன்னது ஞாபகமிருக் குதா. இங்கெல்லாம் அசுரர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொன்னாய். உன் வாயிலே சர்க்கரை போட வேணுமடி' என்று முத்தாய்ப்பு வைத்தாள் ஆனந்தி. சுபத்திரா சாப்பாட்டையும் மறந்து மலைத்துப் போயிருந்தவள் 'மனேஜ ருடன் இன்னொரு இண்டர்வியூ நடத்த வேணும்' என்றாள்.
'இண்டர்வியூவா?' 'ஓம், அவனுக்கு முன்னால் போய் நின்று நான் கேள்விகளாய்க் கேட்டு நீ கடைசியாக அரைகுறையாகச் செய்து விட்டு வந்ததை நான் முழுசா செய்து போட்டு வரவேணும்'
"அது என்ன முழுசா.?"
சுபைர் இளங்கீரன் 204

'நீ நிலத்தில் துப்பிவிட்டு வந்தாய். நான் அவன் மூஞ்சியிலே துப்பிவிட்டு வரவேணும்' என்று கூறிவிட்டு எழுந்தாள்.
'ஏன் நீ சாப்பிடேல்லியா?"
"உனக்கு இத்தனையும் நடந்தபிறகு எனக்கு சாப்பாடு என்ன வேண்டி யிருக்குது' என்று வெளியே வந்தாள்.
மீதிக் கஞ்சியையும் குடித்து விட்டு பின்னால் வந்த ஆனந்தி 'உன் சிநேகிதர் நவரட்ணத்துக்கு இது தெரிஞ்சால் என்ன நினைப் பாரோ. மனேஜர் இப்படியான ஒரு ஆசாமி என்று அவருக்குத் தெரிந்திருந்தால் அவருக்கு என்னைச் சிபார்சு செய்திருக்கவே மாட்டார் என்று நினைக்கிறேன். அவருக்கு இதைச் சொல்கிறது நல்லதென்று படுகுது. அந்தப் பெரிய மனுஷனின் யோக்கியத்தை அவரும் தெரிந்து கொள்ளட்டும்' என்றாள்.
சுபத்திரா திரும்பி அவளைச் சோகத் தோடு பார்த்தாள். 'என்னை மன்னிச்சிடு ஆனந்தி' என்றாள். அவளுடைய இமைகள் நனைந்தன.
ஆனந்தி துடித்துவிட்டாள் 'என்னடி இப்படிச் சொல்கிறாய்?' என்று அவளை அப்படியே கட்டிக் கொண்டு 'நான் செத்தாலும் என்னைப்பற்றி நீ நினைக்கிற நினைவிலே கூட நான் மன்னிக்கும்படி ஒன்னும் இருக்காதே. நான் மன்னிக்கிறதுக்கும் நீ மன்னிக்கிறதுக்கும் மாதிரி நமக்குள் ஒன்னுமே நடக் காதே சுபத்திரா. நீ என்னை மன்னிக்கும்படி சொல்லிட்டியே. எதுக்காக இப்படிச் சொன்னாய்? எனக்கு நடந்ததை எண்ணி மனம் வெந்து வேதனைப் பட்டு கசங்கி கசங்கி அழுதேன். ஆனா கலங்கிப் போகேல்லே. எதுக்குமே கலங்காத நீ, இப்ப கலங் கிறியே. கண்ணைக் கூட ஈரமாக்கிப் போட் டியே..!' என்றுதன் அழுகையை அடக்கிக் கொண்டு சுபத்திராவின் கண்ணைத் துடைத்தாள்.
'இல்லே ஆனந்தி. நான்தான் இதுக்கெல்லாம் காரணம். உனக்கு வேலை எடுத்துத் தரவேணும் என்ற துடிப்பிலே இந்த அயோக்கியனிடம் நீ சிக்கிக் கொள்ள நானே தூண்டு கோலாயிருந்தேன். இதை நினைக்கிற போது."
'எவனோ, எதையோ செய்ய உன் தலையிலே போட்டுக் கொண்டு வருத்தப்படுகிறியே! நீயோ, உன் சிநேகிதர் நவரட்ணமோ மனேஜர் இப் படிப்பட்ட ஆள் என்று தெரிந்து கொண்டா கம்பெனியிலே வேலை எடுத்துத் தந்தீங்க?" s
'உனக்குத் தெரியாது ஆனந்தி. நீ மனேஜர் நடத்திய நாடகத்தைச் சொன்னியே, நான் கூட உன்னிடம் ஒரு நாடகம் தான் ஆடிக் கொண்டிருந் தேன். இத்தனை நாளாய் என் சினேகிதர் என்று சொல்லி உன்னை நம்ப வைத்துக் கொண்டிருந்தேனே, இந்தச் சிநேகிதர் என் கற்பனையிலே நான் சிருஷ்டித்த நவரட்ணம். நிஜமான நவரட்ணம் என் அத்தான் ஆனந்தி. அவர்தான் உனக்கு வேலை எடுத்துத் தந்தவர்'
205 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 108
ஆனந்தி திகைப் போடு சுபத்திராவைப் பார்த்தாள். 'என்னடி இது புதுக்குழப்பம்?'
"உனக்குக் குழப்பமாய்த்தான் இருக்கும்' என்று கூறிய சுபத்திரா, வட்டி வைரலிங்கத்துக்கு தான் செருப்பால் அடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அத்தானைக் கொண்டு வ்ேலை எடுக்கத் தீர்மானித்ததையும், அதற்காக தனக்குள் எழுந்த போராட்டத்தையும், இறுதியில் சந்திராவுக்கு கடிதம் எழுதி அத்தான் மூலம் வேலை எடுத்ததையும் விபரமாகக் கூறினாள் கூறிவிட்டு, 'நீ இதை விரும்ப மாட்டாய் என்றுதான் உனக்கு இதைக் கூறவில்லை. இது இத்தகைய தீங்கை உண்டாக்கி விட்டதே என்று எண்ணித்தான் என்னை மன்னிச்சிடு என்றேன். போகக் கூடாதவரிடம் என் வைராக்கியத்தையும் விட்டுப் போய் இந்த வேலையையும் எடுத்தும், அதுகூட உனக்குத் தங் கேல்லியே என்று எண்ணும் போது கலங்காம இருக்க முடியுமா?" என்றாள். இத்தனையையும் கேட்ட பிறகு ஆனந்தியே கலங்கிப் போனாள். கண்கள் பொங்கி விட்டன. 'எனக்காக இவ்வளவு தூரம் போய்ட்டியே என்று திரும்பவும் அவளைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள் அவள். 'உனக்காக நான் எத்தனை பிறவி எடுத்தாலும் நீ செய்ததுக் கெல்லாம் நான் கடன் தீர்க்க முடியாதேடி' என்று உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து அழுதாள்.
"புலம்பியது போதும். அம்மாதிடீரென்று வந்து இப்ப பார்த்தா அவ்வளவு தான். அவட ஒப்பாரியை நிறுத்துகிறதுக்கு நம்மாலே ஏலாது. இந்த விஷயம் எதுவும் அவக்குத் தெரியவேண்ாம். அழுதது போதும். முகத்தைப் போய் கழுவிக் கொண்டு வா...' என்று ஆனந்தியை விலக்கினாள்.
கண்ணைத் துடைத்துக் கொண்டு சற்று நேரம் நின்றவள் பாத்ரூமுக்குப் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள். சுபத்திரா ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், 'எனக்குத் தைரியம் சொல்ல வேண்டிய நீ இப்படி அசந்து போய் இருக்கிறியே?' என்றாள் ஆனந்தி.
'உனக்கு நான் என்ன தைரியம் சொல்கிறது. நீ அந்த டைரக்டரின் பங்களாவிலே தன்னந்தனியாக அந்த மிருகத்திடம் அகப்பட்டுக் கொண்டு நிற்கிறதை கற்பனை பண்ணிப் பார்க்கிறபோது எனக்குப் புல்லரிக்குதடி நான் வாயாலே என்னவோ தத்துவம் பேசினாலும் அப்படி ஒரு நிலைமையிலே நான் கூட தவித்துப் போவேன்டி. கவிஞர்கள் சொல்கிறது போல பெண்களின் மேனி புஷ்பம் போல இருக்கட்டும். ஆனா சில சமயங்களில் அவர்களுடைய உள்ளம் புலியாக இருக்கவேணும் என்று நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு. அதை நீ டைரக்டரின் கன்னத்திலே அறைந்து காட்டிட்டியே. நீ ரொம்ப தைரியசாலியடி. இத்தனை நடந்த பிறகும் என்னைக் கண்ட உடனே கட்டிக் கொண்டு புலம்பாமே, ஆறுதலாய் எதை எதையோ கதைத்துவிட்டு விஷ யத்தைச் சொன்னியே, சொல்லிவிட்டு அதைப் பற்றி அரற்றிக் கொண்டி ருக்காம சர்வசாதாரணமாய் இருக்கிறியே, உனக்கு எவ்வளவு துணிச்சல்
சுபைர் இளங்கீரன் 206

வந்திருக்குது. உன்னை நான் என்னவோ நினைச்சேன். காசு, செக்ரட்டரி, இருந்த வேலை எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு வந்தாய்பாரு, உனக்கு இந்த தெம்பும் திராணியும் இருக்கிறதை நினைக்கிற போது எனக்கு பிரமிப் பாய் இருக்குது. இந்த உள்ளம், இந்த உறுதி, இந்த உணர்வு உனக்கு எப்படித்தான் வந்ததோ..!"
'அதெல்லாம் வரவேண்டிய சந்தர்ப்பத்திலே வரும். அதுவும் கம்பெனி ஆட்களோட சேர்ந்து பழகியதிலிருந்துதான் இப்படியெல்லாம் செய்யத் துணிச்சல் வந்தது என்று சொல்லலாம். அவர்களிடமிருந்து என்னைப் பிரிக்க மனேஜர் முயற்சி செய்தான். நான் அவனை விட்டுப் பிரிந்து வ்ந்து விட்டேன். ஆனா கம்பெனி ஆட்க்ளையும் விட்டுப் பிரிய வேண்டி வந்துவிட்டதே என்று நினைக்கும் போதுதான் வருத்தமாய் இருக்குது.' 'டேவிட்டுக்கு இதைச் சொல்லப் போறியா?" 'சொல்லலாம் என்று தான் எண்ணினேன். ஆனா அது நல்லதென்று படேல்லே. சொன்னால் டேவிட் மட்டுமென்ன, கம்பெனி ஆட்கள் அத்தனை பேரும் கொதிச்சு எழும்புவாங்க, பெரும் தகராறாய்ப் போகும். இப்பவே ஆட்குறைப்புச் செய்யப் போவதாக மிரட்டுகிறான். தகராறு வந்தால் அவனுக்கு வசதியாய்ப் போய்விடும். தனக்குப்பிடிக்காத அத்தனை பேரையும் வெளியே போட்டு விடுவான். என்னாலே அவங்களுக்கும் வேலை பறிபோய் மேலும் கஷ்டப்படுகிறதை நான் விரும்பேல்லே'
"நீ சொல்கிறதும் சரிதான். ஆனா நீ கம்பெனியை விட்டு விலகியது தெரியாமல் விடாதே. டேவிட் உன் வீட்டுக்கு வந்து கேட்பாரே. என்ன சொல்லுவாய்?"
'அப்ப எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். இப்ப எனக்குப் பசிக்குது, நீயும் சாப்பிடேல்லே, பட்டினியாய் இருக்காதே வா...' என்று சுபத்திராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் ஆனந்தி.
பின்னேரப் பொழுதாயிருந்தாலும் இருவருக்கும் நல்ல பசி இருந்ததால் இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.
"டைரக்டரின் நாயைக் கண்டு நீமூர்ச்சித்து விழுந்ததாலே உன் மானத்துக்கு தீங்கொன்றும் ஏற்படேல்லே என்று சொன்னாய். ஆனா நீ மூர்ச்சிக்காம இருந்து, அந்த மிருகம் உன்னை பலாத்காரமாய்ப் பிடிச்சு மானத்தை குத்திக்குதறியிருந்தா என்னடி செய்வாய்?' என்று திடீரெனக் கேட்டாள் சுபத்திரா.
'தெரியாது' சுபத்திரா ஆனந்தியை வியப் போடு பார்த்தாள்' என்னடி தெரியா தென்கிறாய்?" . .
207 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 109
‘எப்படித் தெரியும் சொல்லேன். அந்த நிலைமையில் நான் என்ன செய்திருப்பேன் என்கிறது அப்படி நடந்திருந்தால் தான் தெரியும். அந்த நேரத்தில் எனக்கு என்ன தோன்றியிருக்குமோ அதைத்தான் செய்திருப்பேன். அதை எப்படி இப்ப தீர்மானமாய்ச் சொல்கிறது?"
'அதுவும் சரிதான்' என்று ஒரு நிமிஷம் மெளனமாய் சோற்றைப் பிசைந்தவள் "அப்படி ஒரு விபத்து நடந்து போனா என்ன செய்கிறது என்ற ஒரு தீர்மானம் பெண்ணாய்ப் பிறந்த நமக்கு இருக்க வேணாமா?' என்று கேட்டாள்.
'நான் அதைப்பற்றிச் சிந்திக்கேல்லே. நீ என்ன செய்வாய்? அதைச் சொல்லு'
'நானும் உன்னைப் போலத்தான். இதைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஆனா இப்ப சிந்திக்க வேண்டியிருக்குது'
'உன் சிந்தனை என்ன சொல்லுது?" "அப்படி ஒரு விபத்து நடந்துவிட்டால் அதை ஒரு விபத்தாகவே கருத வேணும். மானம் போய்ட்டுதே என்று விபரீதமான முடிவுக்கு வந்திடக்கூடாது'
'அப்படியென்றால்.. ?' 'மொத்தமாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் எத்தனையோ பெண் களுட்ைய வாழ்க்கையிலே இந்த விபத்து நேர்ந்திருக்குது. ஒரு சிலர் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் சமூகத்தின் ஏச்சுக்கும் இழிவுக்கும், புறக்கணிப்புக்கும் பயந்தும் உயிரை மாய்த்திருக்கிறார்கள். ஆனா பெரும் பாலும் அப்படியில்லே. இந்தக் காயத்தை ஆற்றிக்கொண்டு மற்றவர்களின் குத்தலையும் பொருட்படுத்தாம வாழவும் செய்கிறாங்க, வாழவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது வாழ்வின் மேல் உள்ளபிடிப்பு அவர்களை வாழச் செய்யுது. இன்னும் பலர் இந்த அசம்பாவிதங்களை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு நிர்ப்பந்தந்தான். உதாரணத்துக்கு உன் நிலைமையில் உள்ள ஒரு சிலர் சுமையைக் குறைத்துக் கொள்கிறதுக்காக மனேஜருக்கு ஒத்துப் போய், டைரக்டரின் பலவீனத்தையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் பலர் வாழ்க்கையை நல்லாய் அனுபவிக்க வேணும் என்ற துடிப்பிலே இந்த மாதிரி விபத்துக்களைத் தேடி ஓடுகிறார்கள். இவர்கள் எல்லாரும் எங்கே இருந்தும் வந்தவர்கள் அல்ல. இந்தச் சமுதாயத்திலே உள்ளவர்கள்தான். இவர்களாலே தனது மானம் போய்ட்டுது என்று சமுதாயம் ஒப்பாரி வைக்கிறதாயும் தெரியேல்லே. தற்கொலை செய்து கொள்ளவுமில்லே. இதையெல்லாம் பார்க்கிற போது நாம விரும்பாமலே இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டால் அதுக்காக சாகிறது அர்த்தமில்லையல்லவா? இந்த விபத்தை உண்டாக்குகிறவர்களே மான உணர்ச்சியைப் பற்றிச் சிந்திக்காத போது, அவர்களே வெட்கி தலைகுனிந்து
சுபைர் இளங்கீரன் 208

தற்கொலை செய்யாத போது விபத்துக்காளான பெண்கள் மட்டும் சாகிறது அர்த்தமில்லையல்லவா?"
'நீ என்னடி இப்படிச் சொல்கிறாய்? அப்ப நானும் இவர்களைப் போல நடந்து கொள்கிறதிலே தப்பு இல்லை என்கிறியா?"
'நான் அப்படிச் சொல்லேல்லே. உன்னைப் பொறுத்தவரை நீ செய்தது சரி. அதைத்தான் செய்ய வேணும். செய்தாய். ஆனா நான் சொல்ல வந்தது அது அல்ல. அப்படி ஒரு விபத்து நடந்தால் அதுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்றதைத்தான் சொன்னேன்."
சிறிது நேரம் மெளனமாயிருந்த ஆனந்தி சொன்னாள்; "நீ சிந்திக்கிற மாதிரியெல்லாம் எனக்கு சிந்திக்கத் தெரியாது. ஆனா இப்ப ஒன்னு தெரியுது, நான் சாகமாட்டேன்.'
'அந்த எண்ணம் வராதா?” 'வந்தாலும் சாகமாட்டேன் போலத் தெரியுது"
'ஏன்?"
'சகோதரங்களின் ஞாபகம், உன்னைப் பற்றிய நினைவு எல்லாம் வரும். அவர்களை காப்பாற்றுகிறது யாரு, உன்னுடைய துயரத்தைத் தேற்றுகிறது யாரு என்று எண்ணி உசிரை விட்டிடமாட்டேன் என்று இப்ப தோன்றுது."
சுபத்திரா பாசத்தோடு ஆனந்தியைப் பார்த்து மெல்லச் சிரித்துவிட்டு கையை அலம்பிக் கொண்டு எழுந்தாள். ஆனந்தியும் எழுந்தாள்.
'அது சரி, வேலையை விட்டிட்டு வந்திட்டாய். இனி எப்படி சகோ தரங்களைக் காப்பாற்றப் போகிறாய்?" என்று கேட்டாள் சுபத்திரா. 'அது ஒரு பிரச்சினைதான். எனக்கு ஒரு வேலை வேணும்' 'ஓம். திரும்பவும் நாம் முந்திய இடத்துக்கே வந்து நிற்கிறோம். வேலைக் காக இன்னொரு நவரட்ணத்தைத் தேடவேணும்'
'ஆனா உன் அத்தானிடம் போயிடாதே அவர் மூலம் எனக்கு வேலை எடுத்துத் தந்தால் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். உன் சுய மரியாதையை விட்டுக் கொடுத்து அவரிடம் உதவி கேட்கிறதை விட பட்டினி கிடந்து நாங்க சாகிறது மேல்"
'என் விஷயம் இருக்கட்டும். ஆனா அவர் உன்னை இன்னொரு மாசிலா மணியிடம் சேர்த்தாலும் சேர்த்து விடுவார். அவரிடம் நான் போக மாட்டேன்.
* * * * *
209 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 110
பனிரெண்டாவது அத்தியாயம்
ஹிவலையிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு வரும்போது மணி பத்தாகிவிட்டது. வீட்டில் எல்லோரும் படுத்துவிட்டார்கள். ராசு கூட படுத்திருந்தான். ஆனால் வசந்தியைக் காண வில்லை. மனசில் கேள்வி எழ பின்பக்கம் போய்ப் பார்த் தாள். இல்லை.
இவள் எங்கே போனாள்?. இடையிலே வந்து முளைத்திருக்கிறானே ஒரு அத்தான். அவனோடு போயிருப்பாளோ. அவனுடன்தான் போயிருக்க வேணும். வரட்டும் கழுதை.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் என்ன நடந்தது என்றே அவளுக்குத் தெரியாது. வீட்டில் சமையல் நடந்ததா, சாப்பிட்டார்களா, காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்குப் போனார்களா, அப்பா கள்ளு வெறியோடு கத்திக் கொண்டிருந்தாரா - ஒன்றுமே தெரியாது. கடந்த மூன்று நாட்களும் வெளியே எங்கேயோ பயணம் போய்விட்டு வந்தது போலிருந்தது.
திரும்பவும் வந்து காந்தி, செல்வம், ராசு, அப்பா எல்லோரையும் பாசத்தோடும் பரிவோடும் பார்த்தாள். அவர்கள் நல்ல தூக்கம். ரயில் என்ஜின் பெட்டிகளை இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இத்தனைநாளும் இவர்களை இழுத்துக் கொண்டு வந்து இப்போது ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றாயிற்று. இனியும் எப்படி இழுத்துக் கொண்டு போவது, வேலைதான் இனி இல்லையே? அவர்களையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு பெருமூச் சுடன் வந்து பாயைத் தட்டி விரித்து அசதியோடு சாய்ந்தாள்.
சுபைர் இளங்கீரன் 210
 

சில நிமிஷங்கள் சென்றிருக்கும். கசமுச என்று புடவையின் ஓசையும், அதன் புதுமணமும் வந்தது. மங்கியிருந்த விளக்குத் தூண்டப்பட்டது.
வசந்தி வந்து விட்டாள். 'இவ்வளவு நேரமும் எங்கே போனாய்?' - படுத்திருந்த வாறே கேட்டாள் ஆனந்தி.
வசந்தி பதில் சொல்லவில்லை. ஆனந்தி விருட்டென்று எழுந்து பார்த்தாள். புதிய நைலக்ஸ் சேலை, பட்டுச் சட்டை, அலங்காரமுமாய் மினுங்கிக் கொண்டிருந்த வசந்தி உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். ஆனந்திக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சந்தேகங்களும் கேள்விகளும் அலை அலையாகக் கிளம்பின. 'வாழ்க்கையை நல்லாய் அனுபவிக்க வேணும் என்ற துடிப்பிலே சிலர் விபத்துக்களைத் தேடி ஒடுகிறார்கள்' என்று சுபத்திரா சொன்னது ஏனோ திடீரென்று காதில் வந்து இரைந்தது. மனம் பரபரக்க ஒருவித ஏக்கத்தோடு தன் தங்கையைப் பார்த்தாள் ஆனந்தி.
வசந்தியின் அதரங்களில் மெல்லிய மந்தகாசம் பரவியிருந்தது. முகத்தில் என்றுமில்லாத ஒரு பொலிவு சுடரிட்டது. களைந்த உடுப்புக்களை அமைதியாக மடித்து அலுமாரிக்குள் வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை என்னென்னவோ கேட்க ஆனந்திக்கு வாய்துடித்தது. அந்த நேரத்தில் அவற்றையெல்லாம் கேட்டு சந்தடியை உண்டாக்கி மற்றவர்களின் நித்திரையைக் கெடுக்க அவள் விரும்பவில்லை. விடியட்டும், விசாரித்துக் கொள்வோம் என்று பேசாமல் படுத்து விட்டாள். ஆனால் விழிகள் மூட வெகு நேரம் சென்றது.
விடிந்து மற்றவர்களுக்கெல்லாம் பிந்தித்தான் படுக்கையை விட்டு எழுந்தாள் ஆனந்தி, காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்குப் போய்விட்டார்கள். ராசுவையும் காணவில்லை. அருமைநாயகம் மட்டும் வசந்தியிடம் ஏதோ புறுபுறுத்துக் கொண்டிருந்தார்.
ஆனந்திபைப்புக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து தேனீரைக் கலக்கினாள். வசந்தி பின் தட்டுக்கு வந்தாள். வழக்கமாக ஒஃபிசுக்குப் போகும் பரபரப்பில் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டி ருக்கும் அக்கா, நேரஞ் சென்று எழும்பி, ஆறுதலாய்க் காரியங்களைச் செய்வதைக் கவனித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வசந்தி 'இன்றைக்கு நீ ஒஃபிசுக்குப் போகேல்லியா?" என்று கேட்டாள்.
ஆனந்தி அவளை மேலும் கீழும் நன்றாய் அவதானித்துப் பார்த்தாள். இரவு இருந்ததையும் விட அலாதியான ஒரு அழகு பிரகாசிப்பது போலிருந்தது. தோற்றத்திலும் இத்தனை நாளும் இல்லாத ஒரு மாற்றம் தெரிந்தது.
211 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 111
மொத்தத்தில் அவள் குளுகுளுப்பாக இருந்தாள். இத்தனையையும் ஒரு நொடிக்குள் கவனித்த ஆனந்தி "நான் ஒஃபிசுக்குப் போகிறது இருக்கட்டும். ராத்திரி வெகு நேரஞ் சென்று வந்தியே, எங்கே போயிருந்தாய்?' என்று அமைதியாகக் கேட்டாள்.
வசந்தி ஒன்றும் பதில் கூறாமல் தானும் கிளாஸில் தேனீரைக் கலக்கிக் குடித்து விட்டு நடுத்தட்டுக்கு வந்தவள், அலுமாரியைத் திறந்து இரண்டு ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுத்தாள். அதை வாங்கிய அருமைநாயகம் சேட்டையும் மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார்.
குசினிக்குள்ளிருந்து வசந்தியின் பின்னால் வந்த ஆனந்தி இதையும் கவனித்து விட்டு ‘ஏண்டி நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம ஊமையாய் இருக்கிறாய், ராத்திரி எங்கே போனாய் சொல்லேன்?' என்று திரும்பவும் கேட்டாள்.
மூடியவாயைத் திறந்தாள் வசந்தி. "எங்கேயோ போனேன்'
ஆனந்தி ஒருகணம் திடுக்கிட்டாள். 'என்னடி நான் கேட்கிறேன். நீ இவ்வளவு அலட்சியமாய்ச் சொல்கிறாய்? ஏன் நான் கேட்கிறது உனக்குப் பிடிக்கேல் லியா?"
'கம்மா கோல்பேஸ் பக்கம் போனேன்'
'என்னடி உளறுகிறாய்? பத்தரை மணிவரை கோல்பேஸில் உனக்கென்னடி வேலை?"
'நீ பொய் சொல்கிறாய். இடையில் சொந்தம் கொண்டு வந்தானே ஒரு அத்தான். அவனோட சுத்தப் போனியாக்கும். அவனோட ஒரு சகவாசமும் வைக்கப்படாது என்று கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தேனே, அதை மறந்து விட்டு அவனோட காலம் நேரமென்று பாராம சுற்றிக் கொண்டு திரிகிறியே இது உனக்கே நல்லாதாய்த் தெரியுதா?"
'நான் அவனோட சுற்றித் திரியேல்லே'
'கிறிஸ்மஸ் அன்றைக்கும் நீ அவனோடதானே சுற்றித்திரிந்து விட்டு சாமத்திலே வந்தாய்?"
'அன்றைக்கும் அவனோட போகேல்லே. அவனைப் பற்றிச் சும்மாதான் சொன்னேன். '
'ஒ. அந்த வகையிலே சந்தோஷந்தான்.அப்ப எங்கே போனாய்?'
"வேறொரு ஃபிரண்ட் வீட்டுக்குப் போனேன்"
"அது யாரு புதுசா ஒரு ஃபிரண்டு?"
'உனக்குத் தெரியாது'
சுபைர் இளங்கீரன் 212

"தெரியாததால் தானே கேட்கிறேன். சொல்லேன். அது யாரு ஃபிரண்டு?" 'நீ என்ன குறுக்கு விசாரணை செய்கிறது இப்ப?" வசந்தி கேள்வியைத் திருப்பிப் போட்டதும் ஆனந்தி திகைத்து விட்டாள். ஆத்திரம் சீறிட்டெழுந்தது. "நான் குறுக்கு விசாரணை செய்யாம வேறு யார் செய்யிறது? உன் ஃபிரண்டு, நீ நேரஞ்சென்று வந்தது, புது நைலக்ஸ் சாரி, பட்டுச்சட்டை, அப்பாவோட முண்டிக் கொள்ளாம காசு கொடுத்தது -எல் லாத்துக்கும் எனக்கு விளக்கம் வேணும்'
வசந்தியும் சினத்தோடு வெகுண்டு அக்காவைப் பார்த்தாள். 'எனக்கு ஒரு ஃபிரண்டு. அவரோடதான் ராத்திரி படம் பார்க்கப் போனேன். அவர்தான் சாரியும் சட்டையும் வாங்கித் தந்தார். ஐம்பது ரூபா காசும் தந்தார். காசு இருந்தது, அதுதான் அப்பாவுக்கும் கொடுத்தேன். விளக்கம் போதுமா?" விறுவிறு என்று சொல்லிவிட்டு சீப்பை எடுத்துக் கொண்டு கண்ணாடிக்கு முன்னால் நின்று தலையை வாரத் தொடங்கினாள். ஆனந்தி மலைத்து விட்டாள். சுபத்திரா சொன்னது திரும்பவும் காதில் ஒலித்தது. ஒருவிதத் திகிலோடு வசந்தியைப் பார்த்தாள்.
இவள் பொய் சொல்லுகிறாளா அல்லது உண்மையைத்தான் சொல்லுகி றாளா?. இவள் இப்ப சொன்ன அத்தனையும் பொய்யாக இருக்கக் கூடாதா?. சில நிமிஷங்கள் அப்படியே இருந்த ஆனந்தி 'நீ இப்ப சொன்னது உண்மையா?' என்று விக்கித்த குரலில் கேட்டாள்.
'நான் பொய் சொல்லேல்லே' ஆனந்தியின் முகம் கோபத்தால் குப் பென்று சிவந்தது. 'நீ இவ்வளவு தூரத்துக்குப் போய்ட்டியா..! உனக்கு எவ்வளவு துணிச்சல்! இத்தனையையும் செய்து விட்டு எனக்கு முன்னாலே நின்று கொண்டு ஒரு தயக்கமும் பயமுமில் லாம பச்சையாய் பகிரங்கமாக எனக்குச் சொல்றியே, ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்குதா..? நீ இப்படிச் செய்யிறது.
ஆத்திரத்தால் ஆனந்தியின் உடம்பெல்லாம் படபடத்ததே தவிர, அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.
வசந்தி விருட்டென்று திரும்பினாள். "நீ செய்யாததை நான் ஒன்னும் புதுசா செய்யேல்லே. நீயும் உன் கம்பெனி மனேஜருடன் சொகுசாய்த் தானே திரிகிறாய்? அவரோட காரில் போகிறது, அவர் டிரஸ் வாங்கித் தந்தது, சவோய் தியேட்டரில் படம் பார்த்தது, மனேஜருடன் முந்தாநாள் ராத்திரி தங்கி காலையில் வந்தது இதுக்கெல்லாம் நான் விளக்கம் கேட்கேல்லே. உனக்குத் தேவையானதை நீ பார்த்துக் கொள்கிற போது எனக்குத் தேவையானதை நான் பார்த்துக் கொள்கிறதிலே என்ன தப்பு? அறிவிருக்குதா என்று கேட்டியே, உன் அறிவுக்கு என் அறிவு ஒன்னும் மட்டமில்லே'
213 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 112
தலையில் ஓங்கி அடித்தது போலிருந்தது ஆனந்திக்கு. தலை சுற்றியது. நிலை கலங்கிப் போய் வசந்தியை வெறித்துப் பார்த்தாள். அவள் கொடியில் கிடந்த துணிகளை அள்ளி எடுத்துக் கொண்டு பைப்புக்கு விரைந்தாள்.
விக்கித்து விறைத்துப் போயிருந்த ஆனந்திக்கு நேரம் போகப் போக உணர்ச்சிகள் வெடித்துச் சிதறின. உள்ளம் உடைந்து நொறுங்கியது. அவளால் அங்கு இருக்கவே முடியவில்லை. வேகமாக எழுந்து உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள் பஸ்ஸை நோக்கி விரைந்தாள்.
சுபத்திராவின் ஸ்கூலுக்கு மனம் பதற வந்த ஆனந்தி உடனே அவளைப் பார்க்க அவசரப்பட்டாள். சுபத்திரா வகுப்பில் இருப்பதை அறிந்ததும் அவள் எப்போது வருவாள் என்று பரபரத்த வண்ணம் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்துக்குள் இடைவேளைக்காக மணி அடித்தது. வகுப்பறைக் குள்ளேயிருந்து சுபத்திரா வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் ஆனந்தி அவளிடம் ஓடினாள்.
'என்ன ஆனந்தி இந்த நேரத்திலே?" என்று சற்று வியப்புடன் கேட்ட சுபத்திரா வெளுத்துப் போன முகத்துடன் கண்கலங்க நிற்கும் ஆனந்தியைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போய் 'என்னடி இது? என்ன நடந்தது? கெதியாய் சொல்லு' என்று பதறினாள். ム
'நடக்கக் கூடாதது நடந்து போச்சுது சுபத்திரா. இங்கே நின்று கொண்டு பேசுகிற விஷயமல்ல. இப்ப என்னோட நீ வரவேணும்'
"ஒரு நிமிஷம் நில்லு' என்று கூறி விட்டு பிரின்ஸிபலின் அறைக்குள் ஓடினாள் சுபத்திரா. சிறிது நேரத்துக்குள் திரும்பி வந்து 'எங்கே போக வேணும்?' என்று கேட்டாள்.
'உனக்கு அவசரமா, அவசியமா சில விஷயங்கள் சொல்ல வேணும், பேச வேணும். உன்வீட்டுக்கே போகலாம்' என்று நடந்தாள் ஆனந்தி.
இருவரும் பஸ்ஸுக்கு வந்து ஏறினார்கள். ஆனால் தெஹிவலைக்குப் போகாமல் விகாரமாதேவிப் பூங்காவுக்கு முன்னால் வந்திறங்கினாள் சுபத்திரா. "இங்கே வந்து இறங்கிட்டியே?’ என்று வியப்புடன் கேட்டாள் ஆனந்தி. 'வீட்டிலே அம்மா இருப்பா. இப்ப உனக்கு நடக்கிற விஷயம், நாம பேசுகிற விஷயம் ஒன்னும் அவவுக்குத் தெரியப்படாது. அவ இப்ப இருக்கிற நிலைமையிலே உன்னைப் பற்றிய கவலையும் சேர்ந்துவிட்டா அவ்வளவு தான். நாம தனியாக இருந்து அமைதியாகப் பேசுகிறதுக்கு இதுதான் தக்க இடம்' என்று கூறியவாறு உள்ளே நடந்தாள் சுபத்திரா,
好 好,好,* *
சுபைர் இளங்கீரன் 214

பூங்காவுக்குள் இரண்டொரு ஜோடிகள் அங்குமிங்கும் காணப்பட்டார்கள் மாணவர் சிலர் தனித்தனியே புத்தகமும் கையுமாக உலாத்திக் கொண்டிருந் தார்கள். இரண்டொருவர் உட்கார்ந்து படித்துக் கொண்டும் இருந்தார்கள்.
ஆனந்தியும் சுபத்திராவும் உள்ளே சற்றுத் தூரம் சென்று ஒரு தனி இடத்தில் அமர்ந்ததும் 'முன்னுரை வாசிக்காம விஷயத்துக்கு வா. என்ன நடந்தது?" என்று கேட்டாள் சுபத்திரா.
ஆனந்தி தனக்கும் வசந்திக்கும் நடந்ததைக் கூறிவிட்டு "என்னாலே தாங்க முடியேல்லே சுபத்திரா. எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்குது' என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
இதைக் கேட்டு சுபத்திராவும் கல்லாய்ச் சமைந்து போயிருந்தவள் 'உனக்கும் மனேஜருக்குமிடையே நடந்த விஷயங்களை வசந்தி தவறாகப் புரிந்து கொண்டாலும் இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியவந்தது' என்று கேட்டாள்.
'மனேஜர் வீட்டில் அன்றைக்கு ராத்திரி தங்கியது அவளுக்குத் தெரியும். என் டிரஸ்ஸைக் கண்டதும் அவர்தான் அதை வாங்கித் தந்தார் என்றும் ஊகித்துக் கொண்டா, டின்னருக்குப் போகமுந்தி வீட்டில் சொல்லிவிட்டுப் போகிறதுக்காக அவருடைய காரில் போவதை யாரும் பார்த்து விட்டு அவளுக்குச் சொல்லியிருக்கக் கூடும். ஆனா சவோயில் படம் பார்த்தது இவவுக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் எனக்கு விளங்கேல்லே. ஒருவேளை அன்றைக்கு வசந்தியும் அவஃபிரண்டும் கூட படத்துக்கு வந்திருந்து, எங்களை அவ பார்த்து விட்டாவோ என்னவோ...' என்று விக்கலும் தேம்பலுமாகக் கூறினாள் ஆனந்தி.
'இருக்கலாம். என்றாலும் நீ கேட்டிருக்கலாமே?" "அவ தன்னையும் என்னையும் பற்றிச் சொன்னதே உள்ளத்தில் சுரீர் என்று தைச்சிட்டுது. அதைக் கேட்கும் உணர்வே இல்லே. என்னைப் பிழையாக கருதிக் கொண்டு இப்படி சொல்லிவிட்டாளே என்று கூட இப்ப நான் வேதனைப் படேல்லே. ஆனா நீ சொன்னியே வாழ்க்கையை நல்லாய் அனுபவிக்கிறதுக்காக சிலர் விபத்துக்களைத் தேடி ஓடுகிறார்கள் என்று. வசந்தியும் இப்படியான ஒரு விபத்தைத் தேடி ஓடிப்போய் அதில் சிக்கிக் கொண்டாளே என்று எண்ணித்தான் மனம் பதறுது. இப்ப அவள் எந்த நிலைமையிலே இருக்கிறாள் என்று கூடச் சொல்லத் தெரியேல்லே. தொடர்ந்து நாசமாய்ப் போகாம எப்படித் தடுக்கிறது என்றும் புரியேல்லே. ஆனா தடுத்தே ஆகவேணும். அவ என்னோட பேசிய விதத்தைப் பார்க்கிற போது அவளுக்கு என்னிடம் மதிப்போ, பயமோ சுத்தமாய் இல்லை என்று விளங்கிது. நான் என்ன சொன்னாலும் அவள் கேட்கவே மாட்டாள். அதனாலே நீதான் அவளுக்குப் புத்திமதி கூறித் தடுக்க வேணும். அதை இப்பவே, இந்த நிமிஷமே
215 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 113
செய்ய வேணும். இல்லாட்டி இன்றைக்கும் அந்த ஃபிரண்டைத் தேடிப் போனாலும் போய் விடுவாள்.'
சுபத்திரா யோசித்துக் கொண்டிருந்தாள். வசந்தியைப் பற்றி ஆனந்தியை விட சுபத்திரா சற்றுக் கூடுதலாகப் புரிந்து வைத்திருந்தாலும், அவளும் கூட, வசந்தி இப்படிப் போய்விடுவாள் என்று எண்ணியிருக்கவில்லை. சிந்திக்கிற போது ஆச்சரியமாகவும் படவில்லை. ஆனால் சுபத்திராவுக்கு வேதனை யாயிருந்தது. வசந்தியை இனி என்ன செய்கிறது? தன்னைப் பொறுத்தவரை எதைச் சுகமென்றும் இன்பமென்றும் கருதுகிறாளோ, அதைச் சுவைக்கத் தொடங்கியவளை அதிலிருந்து இழுத்து நிறுத்துவது சாத்தியமா?
'ஒன்னும் பேசாம மெளனமாய் இருக்கிறியே?'
'ம். ' என்று திரும்பி ஆனந்தியைப் பார்த்த சுபத்திரா 'சரி கிளம்பு' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.
"எங்க வீட்டுக்குத்தானே?"
A 'ஓம்
'என்னையும் வைத்துக் கொண்டு அவளுடன் பேசுகிறது உசிதமாய்த்தெரி யேல்லே. நான் உங்க வீட்டுக்குப் போறேன். நீ வசந்தியைப் பார்த்திட்டு வா.
'நானும் அதைத்தான் நினைத்தேன்'
* 斧 * 壹 斧
சுபத்திரா ஆனந்தியின் வீட்டுக்கு வரும்போது வசந்தி சமையலை முடித்து விட்டு சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
'நானும் சாப்பிடலாம் போலிருக்குது' என்றாள் சுபத்திரா.
'நல்ல நேரத்திலே வந்தீங்க, இருங்க. ரெண்டு பேரும் சாப்பிடுவோம்'
'எனக்கும் பசிதான். சரி வை.' என்று கூறிவிட்டு அவளை ஊடுருவிப் பார்த்தாள். ஆனந்தி சொன்னது போல் வசந்தி முன்னெப்பொழுதையும் விட ஒரு பொலிவோடும், புது வசீகரத்தோடும் விளங்கினாள். அவளிடம் ஒரு உற்சாகம் இழையோடி இருப்பதும் தெரிந்தது. -
'நீ ரொம்ப கலகலப்பாய் இருக்கிறியே, என்ன விஷயம் ?' என்று கேட்டாள் சுபத்திரா.
வசந்தி தன்னையும் அறியாமல் மலர்ந்து சிரித்தாள். 'அப்படி ஒரு விசேஷமுமில்லே' என்று சொல்லியவாறு உணவை மேசையில் வைத்துவிட்டு 'இருங்க' என்றாள்.
'விசேஷம் இல்லாமே நீஇப்படி இருக்கமாட்டாய்?"
சுபைர் இளங்கீரன் 216

வசந்தி திரும்பவும் லேசாய்ச் சிரித்தாள். 'ஏன் இப்படி ஊகிக்கிறீங்க?" 'ஊகிக்கேல்லே, எனக்குத் தெரியும்' 'என்ன தெரியும்?" 'உனக்கு இப்ப ஒரு ஃபிரண்ட் கிடைத்திருக்கிறான். நீயும் அவனும். என்று லேசாய்ச் சிரித்த சுபத்திரா 'அதுதான் இப்படி கலகலப்பாய் இருக் கிறாய்' என்று கூறிவிட்டு கதிரையில் இருந்தாள்.
வசந்தி திடுக்கிடவில்லை. "உங்களுக்கு அக்கா சொன்னாவா?' என்று சர்வசாதாரணமாய் கேட்டாள்.
'ஓம்' என்று தலையை அசைத்தாள் சுபத்திரா. "உங்களுக்குக் கட்டாயம் சொல்லுவா என்று எனக்குத் தெரியும். ஆனா ஒஃபிசுக்குப் போகாமே, இவ்வளவு அவசரமாய் காலையிலே வந்து உங்க ளுக்குச் சொல்லுவா என்று நான் நினைக்கேல்லே'
'சொன்னது தப்பா?" 'தப்பென்று சொல்லேல்லே' என்று ஒருகணம் நிறுத்தியவள் "என்னைப் பற்றிச் சொன்னவ தன்னைப் பற்றியும் சொல்லியிருக்க வேணும். சொன் னாவா?' என்று கேட்டாள்.
'சொன்னா. வேலையிலிருந்து விலகிவிட்டதையும் சொன்னா."
சாப்பிட உட்கார்ந்த வசந்தி ஆச்சரியத் தோடு சுபத்திராவைப் பார்த்து 'எதுக்காக விலகிட்டா?. விலகவேண்டிய அவசியம் இருந்திருக்காதே...? மனேஜருக்கும் அவவுக்கும் நல்ல கொண்டாட்டம் இருக்கும் போது ஏன் விலக வேணும்?' என்றாள்.
சுபத்திராவுக்கு சுருக்கென்றது. என்றாலும் அதை அடக்கிக் கொண்டே 'உன் அக்காவைப் பற்றி நீதப்பாக நினைக்கிறாய். எனக்குக் கூட வருத்த மாயிருக்குது' என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொண்டே ஆனந்திக்கு நடந்ததையெல்லாம் கூறத் தொடங்கினாள். வசந்தியின் முகபாவத்தையும் கவனிக்கத் தவறவில்லை.
அவள் அமைதியாகக் கேட்டவாறு மெல்லமெல்லச் சாப்பிட்டுக் கொண் டிருந்தாள். சுபத்திரா முழுவதையும் சொல்லி முடிக்கும்வரை -சொல்லி முடித்த பிறகு கூட வசந்தி திகைக்கவோ பதறவோ இல்லை. ஏதோ ஒரு கதை கேட்கும் பாவனையோடு தான் இருந்தாள். ஆனால் முகத்தில் லேசான ஒரு கவலை படர்ந்திருந்தது மட்டும் தெரிந்தது.
மெளனமாகச் சில நிமிஷங்கள் கழிந்தன.
'அக்கா செய்தது சரியா, பிழையா?' என்று மெளனத்தைக் கலைத்தாள்
சுபத்திரா.
217 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 114
'எவ்வளவோ அலைச்சலுக்குப் பிறகு, அதுவும் உங்களாலே கிடைத்த வேலை போய்ட்டுதே என்று நினைக்க வருத்தமாய்த்தான் இருக்குது' என்று பிளேட்டில் கையைக் கழுவினாள் வசந்தி.
சுபத்திரா சற்று வியப்புடன் அவளைப் பார்த்தாள். அதற்குள் அவள் எழுந்து விட்டாள்.
இவ மனசுக்குள் என்ன இருக்குது? என்று எண்ணியவளாய் சுபத்திராவும் கையைக் கழுவி விட்டு கதிரையை மறுபக்கம் போட்டுக் கொண்டு இருந்தவள் 'அக்காவைப் பொறுத்தவரை வேலையையும் விட தன்னையும் உங்களையும் பாதுகாத்துக் கொள்கிறதுதான் பெரிய விஷயமாய்த் தெரிந்தது. தன்சுகத் தையும் சந்தோஷத்தையும் முக்கியமாகக் கருதேல்லே' என்று ஒரு நிமிஷம் நிறுத்தியவள் 'பலர் எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறாங்க. சிலர் இப் படித்தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாங்க. அந்தச் சிலரில் உன் அக்கா வும் ஒருத்தி. அதனால்தான் வேலையையும் மனேஜர் காட்டிய சலுகை களையும் உதறி எறிந்து விட்டு வந்து விட்டா. இப்படிப்பட்ட ஒரு அக்கா உங் களுக்கு இருக்கிறதை நினைத்து நீங்க பெருமைப்படவேணும். தன் சகோ தரங்கள் மேலே அவவுக்கு இருக்கிற பந்தமும் பாசமும் சொல்லிலே அடங் காது. அதுக்காகத் தன்னையே மெழுகுவர்த்தி மாதிரி ஆக்கிக் கொண்டி ருக்கிறா. '
சுபத்திரா சொன்னதையெல்லாம் வசந்தி காதில் வாங்கினாளோ என்னவோ ஒன்றும் சொல்லாமல் பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு மேசையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சுபத்திரா மேலும் தொடர்ந்தாள்: ‘'இப்படிப்பட்ட ஒரு பிறவியை நீ எவ்வளவு தவறாகக் கருதிக் கொண்டு துரும்பு மாதிரிப் பேசிப் போட்டாய். நீ இப்படிப் பேசியதையோ, தனக்கு வந்த ஆபத்தையோ, வேலையை விட வேண்டிய நிலைமையையோ எண்ணிக்கூட இப்ப அவ கவலைப்படேல்லே. உன்னைப் பற்றித்தான் கவலைப்படுகிறா. 'நீ இப்ப போகிற போக்கைப் பார்த்து எனக்குக் கூடக் கவலையாக இருக்குது.'
அதுவரை மெளனமாக இருந்த வசந்தி வாய் திறந்தாள் 'நீங்களோ அக்காவோ கவலைப்படுகிற அளவுக்கு நான் ஒன்னும் தப்பா நடக்கேல்லே'
'ஒரு ஃபிரண்டைப் பிடித்துக் கொண்டு திரிகிறது தப்பாத் தெரியேல் 65uir?
'எனக்கு அந்த ஃபிரண்டைப் பிடிச்சிருக்குது. அவருக்கு என்னைப் பிடிச்சிருக்குது. ஒருவருக்கொருவர் அன்பாகப் பழகிறோம். இதிலே என்ன பிழை?"
'அன்பு உண்மையாக இருந்தா பிழையில்லே. அது பொய்யாய்ப் போனா பிழைதானே?"
சுபைர் இளங்கீரன் 28

'பொய்யாய்ப் போகிற அன்பு இல்லே. நான் ஒளிக்காமச் சொல்கிறேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்யப் போகிறோம்."
இதற்குமேல் என்ன சொல்கிறது என்று தடுமாறி விட்டாள் சுபத்திரா. இவளைப்பற்றி நானும் ஆனந்தியும் தவறாகத்தான் நினைத்து விட்டோமோ. உன்னதமாய் இருவரும் நேசித்து கல்யாணம் செய்து கொள்கிறதாயிருந்தா நாம குறுக்கே நிற்கிறது நியாயமில்லே. தர்மமும் இல்லே.
கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் "அப்படியானா சந்தோஷந் தான். இருந்தும் கால நேரம் பார்க்காம உன் ஃபிரண்டோட சுற்றித் திரிகிறது. சரியில்லே. கல்யாணத்துக்குப் பிறகு அவர் உனக்கு டிரஸ் வாங்கித் தராது, காசு தாரது, உங்க இஷ்ட்டப்படி எங்கேயாவது போய்ட்டு வாரது, நேரஞ் சென்று வாரது கூட பிழையில்லே. ஆனா கல்யாணத்துக்கு முந்தி இப்படியெல்லாம் நடக்கிறது ஒழுங்கில்லே. அது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. இதிலே ஒரு வரம்போட நடந்து கொள்ள வேணும். போனது போகட்டும் இனியாவது கவனமாய் இருக்கிறது நல்லது"
இத்தனையையும் சொல்லிவிட்டு சிறிது நேரம் மெளனமாயிருந்த சுபத்திரா "அது சரி, அந்தப் பிரண்ட் யாரு?" என்று கேட்டாள்.
'அவர் பேங்கிலே வேலை செய்கிறவர்'
t Ꮫ
ஓ. எந்த பேங்கிலே?" "சென்ரல் பேங்கிலே என்று சொன்னதாக ஞாபகம்’ 'நான் உன்னை இப்படி கேள்வியாய்க் கேட்கிறது உனக்குப் பிடிக்குதோ இல்லையோ, ஆனா உன் மேலேயும் உன் எதிர்கால வாழ்விலும் எனக்கு அக்கறை இருக்கிறதாலேதான் கேட்கிறேன். உனக்கு ஒரு ஏமாற்றமும் ஏற்படாமே இருக்க வேணும் என்கிறதாலே கேட்கிறேன்.'
வசந்தி லேசாய்ச் சிரித்துக் கொண்டே 'குறுக்கு விசாரணை எதுக்கு என்று காலையிலே அக்காவிடம் கேட்டதை மனதில் வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்றீங்க. ஆனா நீங்க கேட்கிறதைப் பற்றி நான் வித்தியாசமாய் நினைக் கேல்லே. உங்க மேலே எனக்கு இருக்கிற மதிப்பு உங்களுக்குத் தெரியும். நானும் மனசிலே எதையும் வைச்சிருக்கப் போகிறதில்லே, நீங்க கேளுங்க?" அவள் இப்படிச் சொன்னது சுபத்திராவுக்கு சற்று ஆறுதலாயிருந்தது. 'உன்னை எனக்குத் தெரியாதா..?' என்று அவளும் லேசாய்ச் சிரித்து விட்டு, 'அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?' என்று கேள்வியைத் தொடர்ந்தாள்.
"அதை நான் கேட்கேல்லே' 'கேட்டிருக்க வேணும். அவர் எங்கே இருக்கிறார் என்றாவது தெரியுமா?"
'வெள்ளவத்தையில்'
219 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 115
'அங்கே நீ போயிருக்கிறியா?" 'இல்லே, அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கேல்லே' "அவருடைய வீட்டையும் நீ தெரிந்து வைத்திருக்க வேணும். அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரா?'
'திட்டமாய்த் தெரியேல்லே. இதையெல்லாம் விசாரிக்க வேணும் என்று தோன்றேல் லே. மனசிலே ஏதாவது கேட்க வேணும் என்று பட்டாலும் கூச்சமாய் இருக்கும். அவரும் என்ன நினைப்பாரோ என்று கேட்கிறதில்லே' 'சாரி, சட்டையெல்லாம் நீ கேட்டியா, அவராக வாங்கித் தந்தாரா?' "அவர் தான் வாங்கித் தந்தார்' 'அதை நான் பார்க்கலாமா?"
வசந்தி தலையை ஆட்டிவிட்டு அலுமாரியைத் திறந்து சாரியையும் சட்டையையும் எடுத்துக் காட்டினாள். வசந்தியின் நிறத்துக்குப் பொருத்தமான சாரியும் சட்டையும் தான். அவற்றைப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்து விட்டு 'அவருக்கும் உனக்கும் பழக்கம் ஏற்பட்டு எத்தனை நாள்?' என்று கேட்டாள் சுபத்திரா.
'ரெண்டு மாசம்'
'ஒ. ரெண்டு மாசமாகவா அக்காவுக்குத் தெரியாம இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறாய்?' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
வசந்தியும் சிரித்தாள்.
சுபத்திரா இருக்கையை விட்டெழுந்தாள். 'உன் நம்பிக்கை பலிக்க வேணும். உன் ஃபிரண்டுடைய அன்பு பொய்யாகக் கூடாது. உன் நாளைய வாழ்வு சந்தோஷமாய் இருக்கவேணும். நான் சொன்னதை மனசில் வைத்து நடந்துகொள். கழுத்திலே தாலி ஏறும் வரைக்கும் வரம்போட பழகு. நான் வரட் டுமா..?' என்று கூறிவிட்டு முன்தட்டுக்கு வந்தவள், 'முக்கியமானதைக் கேட்கேல்லியே, உன் ஃபிரண்டின் பெயர் என்ன?' என்றாள்.
'அமுதலிங்கம்'
好 寄 好 好 好
அக்காவைப் போல் தனது ஆசாபாசங்களை மனக்கிடங்கில் போட்டுப் புதைத்து வைக்க வசந்தி விரும்பவில்லை. அவளுக்கு அது முடியாத காரிய மாகவும் இருந்தது. றகீமாவுடன் கோல் பேஸ0க்குப் போனால் அங்கே உல்லாசமாக வரும் இளம் ஜோடிகளைப் பார்த்துக் கிளர்ச்சியுறுவாள். தானும் அவர்களைப் போல் ஜோடியாகப் போக வேண்டும் என்று மனம் சொல்லும். பெண்கள் அணிந்து வரும் விதம் விதமான உடைகளைக் கண்டுதானும் அதே
சுபைர் இளங்கீரன் 220

மாதிரி உடுக்க வேண்டும் என்று விரும்புவாள். கார்களில் போவோரைப் பார்க்கும் போது தானும் காரில் செல்ல வேண்டும் என்று எண்ணுவாள். கோல் பேஸ் ஹோட்டலைப்பார்த்து அங்கே போய்ச் சாப்பிட வேண்டும், சந்தோஷமாய்ப் பொழுதைப் போக்க வேண்டும் என்ற ஆவல் துடிக்கும். சினிமாவுக்குச் சென்றாலும், வீதியில் நின்றாலும் வருவோர் போவோரையும் அவர்களின் ஆடை அலங்காரங்களையும், காணும் காட்சிகளையும் விழுங்கு வாள். அவர்கள் எல்லோரும் வாழ்க்கையை அனுபவிப்பது போலவும், தான் மட்டும் வஞ்சிக்கப்பட்டது போலவும் கருதுவாள். சுருங்கச் சொன்னால் தனது ஆசைகளை -அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதை அனுபவிப்பது தான் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொண்டு அதற்காகத் துடித்தாள். அவளுடைய நிலைமை அதற்கு இடம் கொடுக்காததால் அவளுக்குள் ஒரு ஏக்கம் நிலை கொண்டு வளர்ந்தது. இந்த ஏக்கத்தைப் போக்கும் ஒருவனாக வந்து சேர்ந்தான் அமுதலிங்கம்.
ஒருநாள் வசந்தி றகீமாவுடன் படம் பார்க்கப் போயிருந்த போது, றகீமாவுக்குத் தெரிந்த ஒருவனுடன் அமுதலிங்கமும் வந்திருந்தான். அப்போது ஏற்பட்ட அறிமுகம் நெருக்கமான பழக்கமாக வளர்ந்து இருவரையும் ஜோடியாக்கி விட்டது. அமுதலிங்கம் அவள் விரும்புவதை நிறைவேற்றக் கூடியவனாகவே இருந்தான். வாழ்க்கை முழுவதும் அவனுடன் பிணைத்துக் கொள்ள வசந்தி தீர்மானித்து விட்டாள். அக்காவுக்கு இது தெரியவந்தால், ஒருவேளை அவள் குறுக்கே நிற்கக் கூடும் என்று எண்ணி இதைச் சொல்லவு மில்லை. என்றாலும் அக்காவைப் பற்றிய ஒருபயம் மனசின் ஒருமூலையில் பதுங்கி இருக்கத்தான் செய்தது.
ஆனந்தியை மனேஜர் சவோய்க்கு படம் பார்க்க அழைத்துச் சென்ற அன்று, அமுதலிங்கத்துடன் அங்கு வந்திருந்த வசந்தி அவர்களைப் பார்த்ததும், வீட்டுக்கு வந்த போது அக்காவைப் பற்றி காந்தி கூறிய செய்தியும், மனேஜரின் பங்களாவில் இரவு தங்கியிருந்ததை மனேஜரே சொல்லியனுப்பியதும் அக்கா மனேஜரின் ஆளாகிவிட்டாள் என்று முடிவுக்கு வசந்தியை வரச்செய்து விட்டன. ஆனால் அதை கடுமையாக நினைக்கவில்லை. அப்போதைய மனநிலையில் அதை தனக்கு ஒரு சாதகமாகவே எண்ணினாள். மூலையில் பதுங்கியிருந்த அச்சம் இல்லாமல் போய்விட்டது மட்டுமல்ல, துணிச்சலும் உண்டாகிவிட்டது. அந்தத் துணிச்சலை அவள் அன்று உடனே காட்டியும் விட்டாள்.
சுபத்திரா வந்து வசந்திக்கு நடந்ததைக் கூறியதும் அது அவளுக்கு ஒரு தாக்கத்தைக் கொடுக்கத்தான் செய்தது. இருந்தும் அதை ஒரு பாரதூரமான விஷயமாக எண்ணவோ, அக்காவைத்தான் தவறாக கருதிவிட்டதைக் குறித்து வருந்தவோ இல்லை. தான் கண்டதும் கேட்டதும் அப்படிக் கருத காரண மாயிருந்தது என்று தனக்குள் சமாதானம் கூறிக் கொண்டாள். அக்கா செய்தது சரியா பிழையா என்று சிந்தித்துப் பார்க்கவுமில்லை. வேலையிலிருந்து
221 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 116
விலகியது மட்டும் தான் சிறிது கவலையாக இருந்தது. தன்னைப் பற்றிக் கேட்டதும் அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள். கடைசியாக சுபத்திரா அவளை ஆசீர்வதித்துச் சென்றதும் அவளுக்கு உற்சாகம் தாங்க முடிய வில்லை. மகிழ்ச்சியில் திளைத்தாள்.
* * * * *
சுபத்திரா எப்போது வருவாள் என்று ஆவல் துடிக்கக் காத்துக் கொண் டிருந்த ஆனந்தி அவள் வந்ததும் 'என்னவாம்?நீ சொன்னதை அவ கேட்டுக் கொண்டாளா? அல்லது தான் இப்ப போகிற போக்கிலேயே போய்க் கொண்டிருக்கப் போகிறாளாமா..?' என்று படபடப்புடன் கேட்டாள்.
'அவசரப்படாதே. நீ சாப்பிட்டியா?"
'ஓ... '
'அம்மா இருக்கிறாவா..?"
'இல்லே. நடந்ததைச் சொல்லேன்?"
'என்னத்தைச் சொல்ல, அவள் வென்று விட்டாள். நான் அவளை ஆசீர்வதித்துவிட்டு வந்தேன்."
'புதிர் போடாமச் சொல்லேண்டி' -சிணுங்கினாள் ஆனந்தி.
'நாமதான் அவளுக்கு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொடுக்க முடியேல்லே. ஆனா அவதானாகவே அதைத் தேடிக் கொண்டா. இனி அவ விஷயத்திலே நாம குறுக்குகிடுறது உசிதமாய்த் தெரியேல்லே.'
'நீ நேராய்ச் சொல்லப் போறியா இல்லையா?' என்று பொறுமை இழந்து கேட்டாள் ஆனந்தி.
சுபத்திராதனக்கும் வசந்திக்கும் நடந்த பேச்சுவார்த்தையை விறுவிறு என்று கூறிவிட்டு, "அவ விபத்தைத்தேடி ஓடிவிட்டா. அதில் சிக்கிக் கொண்டாளே என்று பயந்தோம். ஆனால் இது காதல் விவகாரம் போலத் தெரியுது. கல்யாண்மே செய்ய இருப்பதாக தீர்மானமாய்ச் சொல்கிறா. இந்தளவுக்கு திடமாய் இருந்தால் நாமும் துணையாக நின்று நடத்தி வைக்க வேண்டியது தான். '
ஆனந்திக்கு குழப்பமாகிவிட்டது. 'அப்ப இவளைப் பற்றி கவலைப்பட வேணாம் என்று சொல்றியா?"
"கவலைப்படுகிறதிலே என்ன அர்த்தம் இருக்குது. டேவிட்டோட நீ வாழ முடியேல்லே. அமுதலிங்கத்தோட அவ வாழட்டுமே? சிலருடைய காதல் காசும், சீதனமும் கேட்காது. வசந்தி தீர்மானமாகக் கூறியதைப் பார்த்தா அவ ஃபிரண்டுடைய காதலும் கேட்காது போலிருக்குது. இப்படி நடந்தா உனக்கு
சுபைர் இளங்கீரன் 222

இப்ப முன்னாலே இருக்கிற ஒரு முக்கியமான ஒரு பொறுப்பு நீங்கி விடுமே..?'
"அந்த ஃபிரண்டைப் பற்றிநமக்கு ஒன்னுமே தெரியாம, அவ சொல்கிறதை மட்டும் வைத்துக் கொண்டு நாம எப்படியடி முடிவுக்கு வாரது? அவன் ஒருவேளை இவளுக்குத் துரோகம் செய்துபோட்டால் என்ன செய்கிறது? வசந்தி ஒரு வெகுளி என்று உனக்குத் தெரியுமே, இவளை லேசாக ஏமாற்றிப் போடலாமே. அப்படி ஏதும் நடந்து விட்டால்..?"
'அப்படி நடக்க வேணும் என்று ஏன் நினைக்க வேணும்? கெட்டதை நினைக்கிறதை விட நல்லதையே நினைச்சுப் பார்ப்போமே..?'
'உலகம் அப்படியில்லையேடி' "அது இரண்டு விதமாயும் இருக்குது. ஒரு பக்கத்தை மட்டும் ஏன் சொல்ல வேனும்?"
'எனக்கு என்னவோ திருப்தியாய்ப்படேல்லே. மனசு அடித்துக் கொள்ளுது.'
'இந்தா பாரு ஆனந்தி. இந்தக் காதலும் வேணாம், கல்யாணமும் வேணாம் என்று நாம சொன்னாலும் கூட அவ கேட்கப் போகிறதில்லே. அவ ஓரளவு தூரம் போய்ட்டா. திரும்பிவா என்று கேட்டுக் கொண்டாலும் அவ வரமாட்டா. இருந்தும் நயமாக எடுத்துச் சொல்லி, எச்சரிக்கையாக இருக்கும்படி கூறி வைப்ப்ோம். அவ ஃபிரண்டையும் சந்திச்சு விசாரித்துப் பார்ப்போம். சுருக்குப் பண்ணி கல்யாணத்தையும் செய்து வைக்க முயற்சிப்போம். இதைவிட வேறொரு வழியும் எனக்குப் படேல்லே. நீயும் அவவோட கட்டியேறாம, கண்டபடி வாயைக் கொடுக்காம ஆதரவாய் நடந்து கொள்ளு' என்று ஆலோசனை கூறினாள் சுபத்திரா.
அவளுடைய ஆலோசனைகளும் ஓரளவு சரியாகத்தான் தோன்றியது ஆனந்திக்கு. ஆழ்ந்த பெருமூச்சுடன் வீட்டுக்குப் புறப்படத் தயாரானாள்.
,* * * * *
ஆனந்தி வீட்டுக்கு வரும்போது மாலை நேரமாகிவிட்டது. அவள் எண்ணி
வந்தபடி வசந்தி இல்லை. காந்திதான் இருந்தாள். ஆனால், "அக்கா எங்கே?' என்று ஆனந்தி அவளிடம் கேட்கவில்லை. காந்திதான் சொன்னாள்.
'வசந்தியக்கா ஒரு ஃபிரண்ட் வீட்டுக்குப் போகிறாவாம். அலுமாரியில் காசு இருக்குதாம். செலவுக்கு வேணுமானதை எடுத்துக் கொள்ளட்டாம்.'
உடுப்பைக் களைந்து மாற்றிக் கொண்டிருந்த ஆனந்தி தனக்குள் வெறுப் போடு சிரித்துக் கொண்டாள்.
செலவுக்கு என்னிடம் கேட்டு வாங்கிற நிலைமை மாறி, இப்ப அவதார
223 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 117
அளவுக்கு வந்துவிட்டா. அதுவும் தைரியமாய்ச் சொல்லிப் போட்டு போய்ட்டா. யாரோ ஒரு ஃபிரண்ட் தானம் கொடுத்ததை தன்னுடைய காசுமாதிரி எவ்வளவு உரிமையோடு சொல்லியிருக்கிறார்.
"வசந்தியக்கா பளபளன்னு நைலக்ஸ் சாரியும், பட்டுச்சட்டையும், காலுக்கு அழகான புதுச் செருப்பும் போட்டுக் கொண்டு ஜம்மென்று போனா. கிட்ட நின்றா ஓடிக்கலன் வாசந்தான். குளுகுளுன்னு. தூக்கிக் கொண்டு போகிற மாதிரி ஒரு வாசனை. இதெல்லாம் நீதான் வாங்கிக் கொடுத்தியா?" என்று வியப்பு மேலிட அப்பாவித்தனமாய்க் கேட்டாள், காந்தி.
இதுக்கு என்ன பதில் சொல்கிறது என்ற கேள்வியோடு ஒருகணம் காந்தியைப் பார்த்தாள். ஏதோ யோசித்தவள் போல் 'அதிருக்கட்டும், அந்த ஃபிரண்டு யாரு என்று உனக்குத் தெரியுமா?’ என்றாள்.
'தெரியாது' என்று தலையை ஆட்டிவிட்டு, 'நீ ஒஃபிசிலிருந்து நேரே வீட்டுக்கு வராம இருந்தா, உடனே இவவும் தன்னை அலங்காரம் பண்ணிக் கொண்டு வெளிக்கிட்டு விடுவா. கேட்டால் ஃபிரண்டு வீட்டுக்கு என்று சொல்லுவா. ஒருநாள் அந்த ஃபிரண்டு யாரு என்று கேட்டேன். 'அமுதா." என்று சொன்னா. அவவுக்கு இந்தப் புதுச் சிநேகிதி கிடைத்த பிறகு ஆளே மாறிப்போனா. என்னோட கூட முந்தியைப் போல அதிகமாய்க் கதைக் கிறதில்லே. தானாக ஏதோ யோசித்துக் கொண்டிருப்பா. ஆனா அவமுகம் மலர்ந்து போயிருக்கும். இடையிடையே தானாகச் சிரிப்பா. சிலநேரம் கண்ணாடிக்கு முன்னாலே மணித்தியாலக் கண்க்காய் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பா. வீட்டிலே இருக்கிற போது கூட தன்னை அடிக்கடி அலங்காரம் பண்ணிப் பார்த்துக் கொள்ளுவா...' என்று வியந்து வியந்து கூறினாள், காந்தி
'அப்படியா...' என்று தானும் வியந்தவள் போல் காட்டிவிட்டு அலுமாரியைத் திறந்தாள் ஆனந்தி. காந்தி கூறியபடி காசு இருந்தது. அதைப் பார்த்ததும் அருவருப்பால் முகம் சுளித்தது. சடக்கென்று அலுமாரியை மூடி விட்டு திரும்பினாள். சுவரில் அம்மாவின் படம் கண்ணில்பட்டது.
நீ இருக்கிறபோது எவ்வளவோ கஷ்டமான நிலையிலும் நடத்தையிலே ஒரு நூல் கூடப் பிசகாம கண்ணியமாய் எங்களை வளர்த்தாய். நீ வளர்த்த மாதிரியே உன் மக்களும் வாழ்வார்கள் என்று நினைச்சிருப்பாய். நீ போகிற போது அந்த வாழ்வுக்கு நான் பொறுப்பாய் இருப்பேன் என்ற நம்பிக்கையோடு போயிருப்பாய். அந்த நம்பிக்கையை என்னாலே காப்பாத்த முடியும் என்று நானும் எண்ணினேன். ஆனா அதை காப்பாத்த முடியாது போலிருக்குதே அம்மா. நம்ம வசந்தியைப் பாரு. அவ சரியான இடத்துக்குப் போகிறாளா அல்லது திசைதவறித்தான் தன் ஃபிரண்டிடம் போகிறாளா என்று எனக்கே தெரியேல்லே அம்மா. வசந்தி சுபத்திராவிடம் சொன்னாளே அன்பு என்று அந்த அன்பு பொய்க்காம நிறைவேறுமா?.
சுபைர் இளங்கீரன் 224

அதற்குமேல் அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளுடைய இமைகள் நனைந்திருந்தன.
ஆனந்தி அப்படியே முன்தட்டுக்கு வந்தாள். முருகன் படத்துக்கு முன்னால் நின்றுகையைக் குவித்து கண்ணையும் மூடியவாறு 'வசந்தியை சீரழிந்து போகாமல் நீதான் காப்பாத்த வேணும். உன்மேல் பாரத்தைப் போட்டுட்டேன். s
அன்றிரவு என்னவோ ஒன்பது மணிக்கு முன்னதாகவே வசந்தி திரும்பி விட்டாள். அவளைக் கண்டதும் ஆனந்திக்கு மனதில் இருந்த பாரம் இறங்கியது போலிருந்தது. சுபத்திரா கூறிய புத்திமதியை மனசில் வாங்கிக் கொண் டாளே. அதனால்தான் நேரம் காலம் தெரியாம ஃபிரண்டோட பொழுதைக் கழிக்காம வேளா வேளைக்கு வந்து விட்டாளோ.. என்று எண்ணினாள். அனால் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. வசந்தியும் அக்காவிடம் ஒன்றும் பேசவில்லை.
静 * 蔷 * /*
225 メ அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 118
பதின்மூன்றாவது அத்தியாயம்
ன்று போயா.ஐந்தாறு நாள் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த ஆனந்தி, அன்று காலை சுபத்திராவைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு பஸ்ஸுக்கு வரும்போது வழியில் டேவிட் எதிர்ப்பட்டான்.
'உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். அதுக்குள்ளாக
நீங்கள். ?"
'தெஹிவலைக்குப் போறேன்"
'கொஞ்ச நாளாய் உங்களை கம்பெனியிலே காணேல்லே. விஷயம் விளங்கேல்லே. உங்களைப் பார்க்கவும் விருப்பமாய் இருந்தது. நீங்க அவசரமாய்ப் போகவேண்டியிருந்தால் போங்க. இன்னொரு நாள் வந்து சந்திக்கிறேன்.
தன்னைப் பார்க்க இவ்வளவு ஆவலோடு, வந்தவனை திருப்பி அனுப்ப ஆனந்தி விரும்பவில்லை. போயாவாக இருந்ததால் வீட்டில் அருமைநாயகம், ராசு எல்லோரும் இருந்தார்கள். அக்கம் பக்கம், சந்து எங்கும் ஒரே இரைச்சலும் கூச்சலுமாயிருக்கும். வீட்டில் அமைதியாக இருந்து நாலு வார்த்தைகள் பேசமுடியாது.
ஆனந்தி யோசித்தாள். "என்ன நிக்கிறீங்க?"
"எங்கேயிருந்து பேசலாம் என்று யோசிக்கிறேன்"
சுபைர் இளங்கீரன் 226
 

'அது ஒரு யோசனையா? வாங்க" என்று அவளையும் அழைத்துக் கொண்டு திரும்பவும் பஸ் தரிப்புக்கு வந்தான்.
இருவரும் தெஹிவலை மிருகக்காட்சி சாலையில் வந்து இறங்கினார்கள். 'என்ன எனக்கு ஸவைக் காட்ட வந்தீங்களா? என்று சிரித்தாள் ஆனந்தி.
"நாம ரெண்டு பேரும் அமைதியாய் இருந்து பேசுகிறதுக்கு இது ஏற்ற இடம். அதுதான் இங்கே கூட்டி வந்தேன்' என்று சொல்லிவிட்டு டிக்கட் எடுக்கச் சென்றான். V
இருவரும் உள்ளே சற்றுத்தூரம் நடந்தார்கள். அங்கு நிலவும் பேரமைதியை அவள் அனுபவித்ததில்லை; அனுபவிக்க வேண்டும் என்று தோன்றவுமில்லை. இன்று விழிகளுக்கு விருந்தளிக்கும் அங்குள்ள காட்சிகளை விட, அந்தப் பேரமைதிதான் அவளைக் கவர்ந்தது. மனசுக்கு இதமாகவுமிருந்தது.
அந்த லயிப்பில் மெளனமாக நடந்து கொண்டிருந்த ஆனந்தி, 'இந்த அமைதி வாழ்க்கையிலும் இருந்தால் எப்படி இருக்கும்?' என்று கேட்டாள்.
'சாரமில்லாமல் இருக்கும்" ஆனந்தி அவனை வியப் போடு பார்த்தாள். 'நீங்களும் இங்கே ஒரு கூட்டுக்குள் இருக்க வேண்டியவர்தான்' என்று சிரித்தாள்.
டேவிட் சிரித்துக் கொண்டே 'என்னை ஒரு விநோதமான பிராணி என்று நினைக்கிறீங்க போலிருக்குது. அப்படிப் பார்த்தா மனுஷனும் ஒரு சமூகப் பிராணி தானே' என்றான்.
"அப்படியிருந்தாலும் நீங்க ஒரு விசித்திரமான பிறவிதான்." ''66it?'"
"வேறென்ன, வாழ்க்கையில் அமைதியில் லேயே என்று எல்லோரும் துடியாய்த் துடிக்கிறாங்க. மனுஷராய்ப் பிறந்த நமக்கு அது இல்லாம படுகிறபாடு. நீங்க அதிலே சாரமில்லே என்கிறீங்களே’
'நீங்க அமைதி என்று சொல்றீங்களே, அது ஒரு பொருளாதார ரீதியான சங்கதி. வறுமையும் கஷ்டமும் இருக்கிறதனாலேதான் வாழ்க்கையில் அமைதியில்லாமல் துடிக்க வேண்டியிருக்குது. அதுசரி, ஆனா இங்கே இருக்கிற ஒரு மெளனமான அமைதி. வாழ்க்கையில் இருந்தா அதில் சாரமே இருக்காது. வேண்டுமானால் இங்கே ஒரு கிழமைக்கு இருந்து பாருங்க. அப்ப தெரியும். உங்களுக்கு அலுப்புத்தட்டிவிடும். திரும்பவும் வெளியே ஓடி வந்து விடுவீங்க'
ஆனந்தி மேலும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
227 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 119
டேவிட் தொடர்ந்து சொன்னான்: 'ஏதோ ஒரு சில நேரத்திலே, தனிமையை நாடி இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வாரது, பரபரப்புக்குள்ளும் சந்தடி இரைச்சலுக்குள்ளும் இருந்துவிட்டு அமைதியைத் தேடி வாரது. இப்படியான சந்தர்ப்பங்களிலேதான் இந்தப் பேரமைதி மனசுக்கு ஆறுதலாயிருக்கும். பிறகு அதே சந்தடிக்குள், அதே பரபரப்புக்குள், அதே மனுஷக்கூட்டத்துக்குள் நம்மையும் ஐக்கியப்படுத்தி வாழ்கிறதுக்கு ஓடி வந்து விடுவோம். மனுஷன் ஒரு சமூகப் பிராணிதானே, அவனுக்கு தனிமையிலே வாழ்கிறதுக்கு முடியாது. மனுஷனும் அவனைச் சுற்றி நடக்கிற வாழ்க்கையும் அவனுக்குத் தேவையாய் இருக்குது. ஏனென்றால் அதில் தான் சாரமிருக்குது."
இருவரும் உரையாடிக் கொண்டே ஸOவின் ஒரு தொங்கலுக்கு வந்து விட்டார்கள். இரண்டொரு பார்வையாளர்கள் இடைஇடையே வந்து போய்க் கொண்டிருந்ததைத் தவிர, வேறு சன நடமாட்டமே இல்லை. ஒரே நிசப்த மாயிருந்தது.
'இங்கே இருப்போமே ' என்று புல்தரையில் இருந்தான் டேவிட். ஆனந்தியும் சற்றுத்தள்ளி அவனுக்கு முன்னால் ஒரு பக்கமாய் அமர்ந்தாள்.
'அமைதியைப் பற்றி விவாதம் இருக்கட்டும். ஒரு கிழமையாக உங்களை கம்பெனியிலே காணேல்லியே, என்ன சங்கதி, சுகமில்லாம இருந்தீங்களா?” என்று கேட்டான் டேவிட்.
ஒருநாள் டேவிட் வருவான், இப்படிக் கேட்பான் என்று ஆனந்தி எதிர் பார்த்துத்தான் இருந்தாள். ஆனால் என்ன பதில் சொல்வது என்று தீர் மானித்திருக்கவில்லை. இப்போது யோசித்தாள்.
'ஏன் மெளனமாய் இருக்கிறீங்க?" "மனேஜருக்கு கீழே வேலை பார்க்க எனக்குப் பிடிக்கேல்லே' W 'ஏன், ஏதும் வித்தியாசமாய்..?" டேவிட்டின் குரலில் திடீரென ஒரு கடுமை ஏறியது.
ஆனந்தி துணுக்குற்றாள். அவன் குரலில் தொனித்த கடுமையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள். மனேஜரும் டைரக்டரும் தனக்குச் செய்த அக்கிரமத்தைச் சொல்ல வாய் துடித்தது. சொல்லி பழிவாங்க வைக்கவும் மனம் துடித்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு மற்றொரு உண்மையைச் சொன்னாள் 'அப்படி ஒன்னுமில்லே. ஐந்நூறு ரூபாய் சம்பளத்திலே என்னை தனக்கு பெர்சனல் செக்ரட்டரியாய் நியமிக்கப் போகிறதாய்ச் சொன்னார். எனக்கு அது பிடிக்கேல்லே.'
டேவிட் சில விநாடிகள் அவளை உற்றுப் பார்த்துவிட்டு மெளனமாய் இருந்தான்.
சில நிமிஷங்கள் கரைந்தன.
சுபைர் இளங்கீரன் 228

'காரணமில்லாமல் அவர் சொல்லியிருக்க மாட்டார். நீங்க என்ன நினைக்கிறீங்க?' என்று மெளனத்தைக் கலைத்தான் டேவிட்.
உங்களோடு எல்லாம் பழகிய பிறகு நீங்க எல்லாரும் என்மனசிலே எத்தனையோ மாற்றங்களை உண்டாக்கி விட்டீங்க. எத்தனையோ விஷ யங்களிலே சரியானதை பிழையென்றும் பிழையைச் சரியானதென்றும் கருதிக் கொண்டிருந்த நான், எதுசரி, எது பிழை என்று ஓரளவு புரிஞ்சு கொள்ள இப்ப முடியுது என்றால் அதுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம். என் சுயநலத்தைக் கருதி மனேஜருக்கு மட்டும் விசுவாசமாய் இருக்கிறது பிழையென்று தெரிஞ் சுது. உங்கள் எல்லாருக்கும் விசுவாசமாய் உங்களோடு ஐக்கியமாய் இருக் கிறதுதான் சரியானது என்றும் தெரிஞ்சுது. அதனாலே காரியதரிசியாக இருக்க, நான் மறுத்துவிட்டேன். மனேஜருக்கு இது பிடிக்கேல்லே. என்னோட கொஞ் சம் காரமாக நடந்து கொண்டார். அதைப் பொறுத்துக் கொண்டிருக்க என் னாலே முடியேல்லே. உங்க வேலை வேணாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். '
இத்தனையையும் ஒரே மூச்சில் கூறிவிட்டு, தான் சொன்ன இவ்வளவும் சரிதானா என்று தனக்குள்ளேயே ஒருதரம் பரிசீலனை செய்து பார்த்துக் கொண்டாள்.
ஆனந்தி கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த டேவிட், மனேஜர் எதற்காக ஆனந்தியை காரியதரிசியாக்க நினைத்தார் என்று ஊகித்துக் கொண்டான். ஆனால் ஆனந்தி இதை உணர்ந்து கொள்ளாமலே தங்களுக்காக ஐந்நாறு ரூபாய் சம்பளமுள்ள காரியதரிசி வேலையை மட்டுமல்ல, டைப்பிஸ்ட் வேலையையும் கூட உதறி விட்டு வந்தது டேவிட்டின் மனசைத் தொட்டு விட்டது.
சற்றுநேரம் இதையே யோசித்துக் கொண்டிருந்தவன் 'மனேஜருக்கும் டைரக்டர்களில் ஒருவருக்கும் பெண்கள் சம்பந்தமாய் தொடர்பு இருக்குது. இது கம்பெனிக்குள்ளும், வெளியேயும் வெளிச்சமான சங்கதிதான். அதுக்கு உங்களையும் பாவிக்கத்தான் காரியதரிசியாக்க நினைத்திருக்கிறார்' என்றார். இவரும் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டாரே என்று வியந்த ஆனந்தி, 'நீங்க இதைப்பற்றி ஏற்கனவே எனக்குச் சொல்லேல்லியே?' என்றாள்.
'சொன்னால் ஒருவேளை, நீங்க வேலையை விட்டு மிரண்டு ஓடி விடுவீங்க என்று நினைத்தேன். அத்தோடு இதுக்கெல்லாம் மசியமாட்டீங்க என்றும் தெரியும், அதனால்தான் சொல்லேல் லே' என்று கூறிவிட்டு சிகரட்டை எடுத்துப் பற்றினான். தன்மேல் டேவிட்டுக்கு இருக்கும் நம்பிக்கையை எண்ணியதும் அவளுக்குப் புளகாங்கிதமாயிருந்தது. அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக தான் நடந்து கொண்டதை நினைத்துப் பெருமிதமும் ஏற்பட்டது. மெளனமாக புல்லை அளைந்து கொண்டிருந்தாள்.
229 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 120
டேவிட் சிகரட்டை இரண்டு மூன்று தடவை இழுத்து விட்டு எங்க மேலே வைத்திருக்கிற உயர்தர அபிப்பிராயத்தையும் நல்லெண்ணத்தையும் எப்படிப் பாராட்டுகிறதென்றே தெரியேல்லே. எங்களை நினைச்சு வேலையை உதறி விட்டு வந்தீங்களே, உங்க நிலைமையிலே, அதுவும் வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பாய் இருக்கிற இந்தக் காலத்திலே இதைச் செய்தீங்களே, இது எங்க எல்லாரையும் உருக்குகிற விஷயம். உங்க மனசு எல்லாருக்கும் வராது. எங்களைப் பொறுத்தவரை இப்ப நீங்க சொன்னதும், செய்ததும் நல்ல முன்னுதாரணம்' என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினான்.
இதைக் கேட்டதும் ஆனந்தியின் உள்ளம் மேலும் பெருமிதத்தால் பொங்கியது. மனசில் ஒரு நிறைவு உண்டாயிற்று. இந்த உணர்ச்சியில் வேலையில்லாத கஷ்டத்தையெல்லாம் மறந்து சிறிது நேரம் மெளனமாய் இருந்தாள் "றோஸி, குஸுமா, சிறிசேன மற்றும் நம்ம ஆட்கள் எல்லாம் எப்படி இருக்கிறாங்க? அவங்களோட நெருக்கமாய்ப் பழகிவிட்டு இப்ப வெளியே இருக்கிறது மனசுக்கு என்னவோ போலிருக்குது. கம்பெனிய விட்டு வந்தாலும் நான் அவங்களை மறக்கேல்லே. மறக்கவும் மாட்டேன். கம்பெனி யில் அவங்களைப் பார்க்க முடியாவிட்டாலும் அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போவேன்' என்றாள்.
'உங்களைக் காணாதது அவங்களுக்குக் கூட ஒரு கேள்வியாகத்தான் இருந்தது. றோஸி உங்க வீட்டுக்குக் கூட வர இருந்தாள்.நீங்க வேலையை விட்டு விலகிய செய்தியைக் கேட்டால், அவங்க ரொம்பவும் துக்கப்படு வாங்க" என்று கூறிவிட்டு சிகரட் பைக்கட்டை எடுத்தான். அது காலியாக இருந்தது. அதை வீசி எறிந்து விட்டு கன்டீனில் டீ குடித்து விட்டு வரலாம். சிகரட்டும் வாங்க வேண்டியிருக்குது' என்று எழுந்தான். ஆனந்தியும் புறப்பட்டாள்.
* * * * *
கன்டீனில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது 'இனி என்ன செய்யப் போரீங்க?' என்று கேட்டான் டேவிட்.
'அதுதான் பிரச்சினையாக இருக்குது. என்ன செய்கிறது என்றே தெரி யேல்லே. வேலையிலிருந்த போதே கஷ்டம். இப்ப அதை வருணிக்கத் தேவையில்லே. திணறிக் கொண்டிருக்கிறேன். கல்யாணத்தைப் பற்றிச் சொன்னீங்களே, இப்ப அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா சொல்லுங்க" என்றாள் ஆனந்தி.
டேவிட் மெல்லச் சிரித்தான். 'கல்யாணத்தைப் பற்றி உங்களுக்கு என்ன சொன்னேனோ அதைத்தான் இப்பவும் சொல்லுவேன். என் அபிப்பிராயத் திலே எந்த மாற்றமும் இல்லே. அது இருக்கட்டும். இப்ப வேலையைப் பற்றி யோசிக்கத்தானே வேணும்? ஏதாவது முயற்சி செய்கிறீங்களா?..."
சுபைர் இளங்கீரன் 230

"யாரையும் போய்ப் பார்த்து வேலைக்கு முயற்சி செய்ய எனக்கு என்ன செல்வாக்கு இருக்குது? லஞ்சம் கொடுக்கிறதுக்குக் கூட ஒரு வசதியும் இல்லாதவ, நான் என்ன செய்ய முடியும்?' - அவள் குரலில் துக்கம் தோய்ந்திருந்தது.
ஆனந்தியின் நிலைமையை எண்ணி டேவிட் வருந்தினான். 'இந்த சமுதாயத்திலே வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை பார்த்தீங்களா? இதை நினைக்கிறபோது.'
'நாம எழும்புவோமா. 2 டேவிட் எழுந்தான். இருவரும் வெளியே வரும் போது ஆனந்தி சொன்னாள்: "நீங்களும் எனக்காக முயற்சி செய்தால் நல்லது'
'நீங்க இதை எனக்குச் சொல்ல வேணுமா?" என்று கூறிவிட்டு இரண்டு யார் நடந்தவன் 'தெஹிவலைக்குப் போகவேணும் என்று சொன்னீங்களே, வாங்க போகலாம்' என்று கூறிக்கொண்டே நடையைத் தொடர்ந்தான், டேவிட்.
'சோடியைப் பார்த்து கண்ணெல்லாம் குளிருது' என்று திடீரென பின்னால் சுபத்திராவின் குரல் கேட்டதும் இருவரும் விருட்டெனத் திரும்பினார்கள்.
சுபத்திரா சிரித்துக் கொண்டு நின்றாள். ஆனந்திக்கு கன்னம் சிவந்து விட்டது. டேவிட் கேள்விக்குறியோடு ஆனந்தியைப் பார்த்தான்.
'இவ என் ஃபிரண்ட் சுபத்திரா' என்று டேவிட்டுக்கு அறிமுகப்படுத்தி விட்டு 'இவர். ' என்று டேவிட்டை அறிமுகப்படுத்துவதற்குள் சுபத்திரா குறுக்கிட்டாள்.
'நீ சொல்ல வேணாம். நான் தெரிந்து கொண்டேன். இப்ப என் கையிலே கெமரா இல்லையே என்று வருத்தமாயிருக்குது' என்று சிரித்தாள் சுபத்திரா.
'போதுமே உன் பகிடி' என்று திரும்பவும் கன்னம் சிவக்கக் கூறிய ஆனந்தி, டேவிட் ஏதாவது வித்தியாசமாய் நினைத்து விடுவானோ என்று அவனைப் பார்த்தாள்.
அவன் தனக்கே உரித்தான புன்னகையுடன் சுபத்திரா கூறியதை ரசித்தவன் போல் நின்றான்.
அவனுடைய பளபளக்கும் விழிகளையும், அந்த மாயப் புன்னகையையும் ஒரு நிமிஷம் பார்த்து நின்ற சுபத்திரா, ஆனந்தி இவரைப்பற்றிச் சொன்னது உண்மைதான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு 'உங்களைப் பற்றி ஆனந்தி நிறையச் சொல்லியிருக்கிறாள். உங்களைப் பார்க்க வேணும் என்று எனக்கு ரொம்பவும் ஆவலாயிருந்தது. இப்ப பார்த்தது.' என்று இழுத்தவள்
231 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 121
ஆனந்தியின் பக்கம் திரும்பி "மனசுக்கு திருப்தி' என்று கண்ணால் சாடை காட்டியபடி முடித்தாள். -
நீ சரியான குறும்புக்காரியடி என்று ஆனந்தி தனக்குள் சொல்லிக் கொண் டாள். அவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. அதேசமயம் உள்ளம் பூரித்தது. டேவிட் இதையெல்லாம் கவனிக்காமல் ஆனந்தியிடம் 'என்னைப் பற்றி இவங்களுக்கு நிறையச் சொன்னிங்க. இவங்களைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடச் சொல்லேல்லியே?’ என்றான்.
"மெய்யடி, என்னைப்பற்றி இவருக்குச் சொல்லி இருப்பாய் என்றல்லோ இத்தனை நாளும் நினைச்சுக் கொண்டிருந்தேன். நீ சரியான ஆள்தான்' என்றாள் சுபத்திரா.
'இப்ப சொல் றேனே" என்று டேவிட்டின் பக்கம் திரும்பியவள் 'இவ என்னைக் குத்திக் கிண்டி, கிளறி அழ வைக்கிறதிலும், சிரிக்க வைக்கிறதிலும் கை தேர்ந்தவ. ஆனா...'
"ஏன் நிறுத்திட்டீங்க சொல்லுங்களேன்?' என்றான் டேவிட். "இவ உள்ளத்திலே நானும், என் உள்ளத்திலே இவவும் நிறைஞ்சிருக் கிறோம். எங்க ரெண்டு பேருக்குமிடையிலும் காத்துக் கூட நுழைய முடியாது' என்று முடித்தாள் ஆனந்தி.
'நீங்க சுருக்கமாய்ச் சொல்லிவிட்டீங்க. நான் விரிவாய் விளங்கிக் கொண்டேன்' என்றான் டேவிட்.
"ஏண்டி பொய் சொல்லுகிறாய்?" என்று அதட்டினாள் சுபத்திரா. ஆனந்தி திகைத்தவள் போல் கேட்டாள். 'பொய்யா. 2・ "பொய்தான். உன் உள்ளத்திலே நான் நிறைஞ்சு போயிருந்தா இவருக்கு எங்கே இடம்?' என்று டேவிட்டை சுட்டிக் காட்டிக் கொண்டே கேட்டாள் சுபத்திரா.
டேவிட் கலகல எனச் சிரித்தான். ஆனந்தியின் முகத்தில் சிவப்பு ஏறியது. பொய்க் கோபத்துடன் சுபத்திரா வைப் பார்த்து 'நீ ஏன் இப்ப இங்கே வந்தாய்?' என்று சிடுசிடுத்தாள்.
சுபத்திரா ஆனந்தியின் கையைப் பிடித்துக் கொண்டே 'உங்க இரண்டு பேரையும் ஆசீர்வதிக்கத்தான்' என்று சொல்லிச் சிரித்தாள்.
இவர்களின் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த டேவிட் 'தெஹி வலைக்குப் போகவேணும் என்று சொன்னீங்களே' என்று ஆனந்திக்கு ஞாபகப்படுத்தினான். w
"அங்கே இனி எதுக்குப் போக வேணும். பார்க்க வேண்டியவதான் இப்ப நமக்கு முன்னாலே நின்று என்னை சீண்டி அழவைத்துக் கொண்டிருக்கிறாளே”
சுபைர் இளங்கீரன் 232

என்று கூறிய ஆனந்தி "நீ இப்படி எங்கே திடுதிடுப்பென்று முளைத்தாய்?" என்று கேட்டாள்.
'நீ பின்னேரம்தான் வருவாய் என்று நினைச்சேன். பொழுது டல்லா யிருந்தது. கிளம்பி வந்துவிட்டேன். சரி வாங்க நடக்கலாம்'
மூவரும் ஸுவைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிக் கொண்டே ஒரு ரவுண்ட் வந்து விட்டு வெளியே வந்தார்கள்.
மத்தியானமாகி விட்டது. 'நீங்களும் எங்க வீட்டுக்கு வாருங்களேன், சாப்பிட்டு விட்டுப் போக லாம்?' என்று சுபத்திரா டேவிட்டை அழைத்தாள்.
'மன்னிக்க வேணும். நான் ஒரு ஃபிரண்ட் வீட்டுக்குப் போக வேணும். உங்களை இன்று சந்தித்தது பெரும் சந்தோஷம். ஆனந்திக்கு நீங்க ஃபிரண் டாய் இருக்கிறதைப் பார்க்கிறபோது சந்தோஷம் இன்னும் அதிகமாகுது' என்றான் டேவிட்.
'சரி இன்றைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாளைக்கு எங்க வீட்டுக்கு நிச்சயமாய் வரவேணும்' என்று கூறிய சுபத்திரா, ஆனந்தியிடம் 'இவரைக் கட்டாயம் கூட்டிக் கொண்டு வா. இருவருக்கும் அட்வான்ஸா லஞ்சோ, டின்னரோ போடுகிறேன்' என்றாள்.
ஆனந்தி டேவிட்டைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு 'இவ சொல் கிறதைக் கேட்டீங்களா?' என்றாள்.
டேவிட் சிரித்தான். 'ஒரு நாளைக்கென்ன, நினைக்கிற போதெல்லாம் வருவேன். உங்களைப் போல உள்ளவங்களைக் கண்டால் எனக்கு மிகவும் உற்சாகமாயிருக்கும்'
பேசிக் கொண்டே மூவரும் பஸ் ஏறினார்கள்.
* 好 * * *
அம்மா சுபத்திராவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். மூவரும் சாப்பிட்டு முடிந்ததும், "எனக்கு அசதியாய் இருக்குது. கொஞ்ச நேரம் படுத்து எழும்பப் போறேன்" என்று அம்மா தன் அறைக்குள் படுத்துவிட்டாள்.
ஆனந்தியைக் கூட்டிக் கொண்டு தன் அறைக்குள் புகுந்த சுபத்திரா, 'ஸ0வுக்குள் சுற்றியது அலுப்பாயிருக்குது' என்று கட்டிலில் சாய்ந்தாள்.
'எனக்கும் தான்" என்று ஆனந்தியும் ஒரு பாயைப் போட்டுக் கொண்டு படுத்தாள்.
"என்னடி நம்ம ரெண்டு பேருக்குமிடையில் காத்துக் கூட நுழைய முடியாது
233 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 122
என்று உன் டேவிட்டுக்குச் சொல்லிவிட்டு, நான் கட்டிலில் கிடக்க நீ கீழே படுத்திட்டியே. இடைவெளி எவ்வளவு இருக்குது தெரியுமா?' என்றாள் சுபத்திரா. V.
'உன் பகிடி இருக்கட்டும். வசந்தியின் ஃபிரண்டைச் சந்திக்க வேணும் என்று சொன்னியே சந்திச்சியா?" என்று கேட்டாள் ஆனந்தி.
"ஒரு தடவை போனேன். ஆளைக் காணேல்லே.
"ஒருவேளை வேற பேங்காய் இருக்குமோ?" 'சென்ரல் பேங்கு என்றுதான் வசந்தி சொன்னா. அது கடல் மாதிரி. எந்த பிராஞ்ச் என்ன செக்ஷன் என்று தெரியாம ஆளைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். 'சென்ரல் பேங்கு என்று இவவுக்குப் பொய்யைச் சொல்லியிருப்பானோ' என்று தன் சந்தேகத்தை வெளியிட்டாள் ஆனந்தி.
'பொய்யோ, மெய்யோ, தெரியாமலா விடப் போகுது. நான் ஆளைக் கண்டு பிடிக்காம விடப்போறதில்லே. சென்ரல் பேங் என்ன, கொழும்பிலே இருக்கிற பேங்குகளையெல்லாம் அரித்து எடுத்து விடமாட்டேன்?"
'இனி எப்ப அங்கே போவாய்? நானும் உன்னோட வரட்டா?" 'வேணாம். என்னோட இழுபட உன்னாலே ஏலாது. இடையிலே வேறு சிணுங்கிக் கொண்டிருப்பாய். முதல்லே ஆசாமியைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். பிறகுநாம ரெண்டு பேரும் போய்க் கதைக்கலாம்' என்று கூறிய சுபத்திரா ஏதோ நினைத்துக் கொண்டவளாய் 'வசந்தியைப் பற்றி டேவிட் டுக்குச் சொன்னியோ?" என்று கேட்டாள்.
'இல்லே'
"அவருக்குத் தெரிஞ்சால் வித்தியாசமாய் நினைப்பார் என்று எண்ணு கிறியோ?"
'அப்படி நினைக்கவேமாட்டார். அவரை நான் நல்லாய்ப் புரிஞ்சு வைச்சிருக்கிறேன். ஆனா இப்ப அதை ஏன் சொல்லவேணும்?"
சுபத்திரா டேவிட்டைப் பற்றிச் சிந்தித்தாள். ஆனந்தி இதற்கு முன் அவ னைப்பற்றி கதை கதையாய்ச் சொன்னதையெல்லாம் எண்ணிப் பார்த்தாள். அவள் விபரித்த டேவிட்டுக்கும் தான் இப்போது பார்த்த டேவிட்டுக்கும் அதிகம் வித்தியாசமில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. அவன் சரளமாகவும் கலகலப்பாகவும் பழகியது சுபத்திராவுக்கு ரொம்பவும் பிடித்துக் கொண்டது. அவனிடமிருந்து தானும் எத்தனையோ விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும் என்றும் கண்டு கொண்டாள். அவனோடு பேச வேண்டும் பழக வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தது.
"ஏன் வாயை மூடிக் கொண்டு கிடக்கிறாய்?"
சுபைர் இளங்கீரன் 234

'உன் டேவிட்டைப் பற்றி யோசிக்கிறேன்?"
"அவருக்கு என்ன இப்ப?"
"உன்னைப் பற்றிய கவலை"
'இல்லேன்னு யாரு சொன்னா?”
"அதைத்தான் எண்ணிப் பார்த்தேன். உன்னோடு தான் எப்ப வாழ்கிறது, எப்ப.
'நீ ஏண்டி என் மனசைத் தூண்டுகிறாய், வாயை வைத்துக் கொண்டு சும்மா இரேன்' என்று கூறிய ஆனந்தி ஏதோ ஒரு கற்பனையில் சிறிது நேரம் லயித்தாள்.
'ஆனந்தி.
ε 4 - 3 ፪ ፪ D. . . . . . . . . . . . .
'நீ சொன்ன மாதிரி அவருடைய அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும் யாரையும் மயக்கித்தாண்டி போடும்."
'நீயும் மயங்கிட்டாயடி' 'நீ ஒருத்தி எனக்கு இல்லாட்டி நான் மயங்கித்தான் போயிருப்பேன். மயங்கி மயங்கி களிப்பதற்காக அவரை மயக்கியும் இருப்பேன்' என்று சிரித்தாள்.
'உன்னோடு கதைத்து நான் எப்பதான் வென்றிருக்கிறேன்' 'அது கிடக்கட்டும். கம்பெனியிலிருந்து விலகியதைப்பற்றிக் கேட்டிருப்
பாரே, என்ன காரணம் சொன்னாய்?
'ஒரு காரணத்தை மட்டும்தான் சொன்னேன்' என்று டேவிட்டுக்கு கூறியதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்டுக் கொண்டே கண்ணயர்ந்து விட்டாள் சுபத்திரா
* * * 壹 娜 ·
திடீரென்று ஒருநாள் பின்னேரம் டேவிட்டும் கம்பெனி சகாக்களும் ஆனந்தியின் வீட்டுக்குப் படையெடுத்து வந்துவிட்டார்கள்.
எல்லோரும் இப்படிக் கும்பலாய் வருவார்கள் என்று ஆனந்தி எதிர் பார்க்கவில்லை என்றாலும் அவர்களை ஒரே நேரத்தில் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. "வாங்க, வாங்க" என்று அகமும் முகமும் மலர
அவர்களை வரவேற்றாள். நடுத்தட்டுக்குள் கிடந்த இரண்டு கதிரைகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு 'இருங்க' என்றாள்.
அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெரிய பார்சலை ஆனந்தியிடம்
235 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 123
கொடுத்துவிட்டு இடத்தைப் பார்த்தார்கள்.
அருமைநாயகத்தின் கட்டிலும் இரண்டு மூன்று கதிரைகளும்தான். எல்லோ ரும் இருக்க முன்தட்டில் இடமில்லை. நெருக்கியடித்துக் கொண்டு கட்டிலிலும் கதிரைகளிலும் இருந்தார்கள். டேவிட்டும் இராசம்மாவும் சுவரோடு சாய்ந்த படிநின்றார்கள். நடுத்தட்டு வாசலில் வசந்தி, காந்தி, செல்வம் மூவரும் நின்ற வண்ணம் அவர்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனந்தி அவர்கள் மூவரையும் வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு பார்சலை வசந்தியிடம் கொடுத்தாள். தொடர்ந்து, 'உங்களையெல்லாம் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆவலாயிருந்தது. உங்களையெல்லாம் வீட்டில் வந்து பார்க்க எண்ணியிருந்தேன். அதுக்குள் நீங்களே வந்துவிட்டீங்க” என்று வாய் மலரச் சொன்னாள்.
"எங்களுக்கு விஷயம் தெரியாது, நீ ஏன் கம்பெனிக்கு வரேல்லே என்று. நாங்க ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம். டேவிட் வந்து சொன்ன பிறகு தான் விஷயம் தெரிஞ்சுது' என்றாள் இராசம்மா.
"எங்களுக்குக் கூடச் சொல்லாமநீஇப்படி திடீரெனநின்று விடுவாய் என்று நாங்க கனவிலேயும் நினைக்கேல்ல. எங்களுக்கெல்லாம் பெரிய மனவருத்தம் என்று கவலையோடு கூறினான் ஜமீல்.
'புறாவைப் பிடிக்கிற மாதிரி, ஆனந்தியையும் கண்ணி வைச்சுப் பிடிக்கப் பார்த்தான் மனேஜர் இவ அதிலே சிக்கிக் கொள்ளாம பறந்து வந்துவிட்டா. வேலை போய்ட்டுதே என்று ஆனந்தி கவலைப்படுகிறதை விட, அதை நினைச்சு நாம கவலைப்படுகிறதை விட பட்சி அகப்படாமல் பறந்து போய்ட்டுதே என்று மனேஜருக்குத்தான் கூட கவலையாய் இருக்கும்."
செல்லையா இவ்வாறு கூறியதும் எல்லோரும் கலகல எனச் சிரித்தார்கள். ஆனந்தி வசந்தியிடம் டீ போடச் சொல்லி உள்ளே அனுப்பி விட்டு 'இப்படி உங்களோடு கலகலப்பாய் பேசி எத்தனை நாளாய்ப் போச்சுது' என்றாள்.
"எங்களுக்கும் அப்படித்தான். நீ கம்பெனியிலே இல்லாதது எங்களுக்கும் கலகலப்பு குறைந்த மாதிரித்தான். கன்டீனில் நாங்க சந்திக்கிற போதெல்லாம் உன் நினைவு வராமல் போகாது. உன்னைப்பற்றி கதைக்காமலும் இருக்கமாட்டோம்' என்றாள் குஸoமா.
ஆனந்தி றோஸியைப் பார்த்தாள். அவளுடைய விழிகள் ஆனந்தியிடம் மொய்த்திருந்தது. முகம் துக்கத்தால் இருண்டு கிடந்தது. ஆனந்தியைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவளுடைய விழிகளும் முகமும் நன்கு எடுத்துக் காட்டின.
'நீ பேசாமலிருக்கிறியே?’ என்றாள் ஆனந்தி. றோஸியின் கண்கள் ஏனோ கலங்கிவிட்டன. சட்டென்று துடைத்துக்
சுபைர் இளங்கீரன் 236
*

கொண்டாள். ஆனந்தியின் உள்ளம் உருகியது. அவளுக்கும் அழுகை வரப் பார்த்தது. பெரும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
"எங்களை விட றோஸிக்குத்தான் உன்னைப் பற்றிய கலக்கம் அதிகம்" என்றாள் குஸoமா.
றோஸி இருக்கையை விட்டெழுந்து மெல்ல ஆனந்தியிடம் போய் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு 'உன்னைப் பற்றி டேவிட் எல்லாம் சொன்னார். நாங்க வருஷக் கணக்காய் கம்பெனியில் இருக்கிறோம். நீ வந்து சில மாசங்கள்தான். ஆனால் எங்களை எண்ணி நீ செய்த காரியம் எங்கள் எல்லோருடைய மனசிலும் ஆணிபோலப் பதிந்து போய்விட்டது. வேலையை விட்டு விலகியதால் உன்நிலைமை எப்படி இருக்கும் என்று எங்களால் ஊகிக்க முடிகிறது. ஆனால் உன்னுடைய உணர்வு சுயநலத்தை அறுத்த உணர்வு. உன்னை எங்களால்..'
றோஸியால் அதற்குமேல் பேசமுடியவில்லை. ஆனந்தியின் கையை விட்டு விட்டு திரும்பவும் வந்து அமர்ந்து விட்டாள். ஆனந்தியும் உணர்ச்சிப் பெருக்கால் சில விநாடிகள் தடுமாறினாள்.
'உங்களுடைய விஷயம் யூனியனுக்குக் கொண்டு வரமுடியாத விஷய மாய் போய்விட்டது. அல்லது இந்த மனேஜரை ஒரு கை பார்த்திருப்போம்" என்று வைரம் பாய்ந்த குரலில் கூறினான் சிறிசேனா.
'நான் ஏதோ பெரிய காரியத்தைச் செய்துவிட்டதாக நீங்க எல்லோரும் நினைக்கிறீங்க. ஆனா எனக்கு அப்படிப்படேல்ல. உங்க அன்பையும் உணர்வையும் நான் இழக்க விரும்பாததால்தான் மனேஜர் பக்கம் இழுபட்டுப் போகேல்லே வந்திட்டேன். இதுக்காக நீங்க எல்லோரும் என்னைத் தூக்கி வைத்துப் பேசுகிறதைப் பார்க்கிற போது எனக்கே வெட்கமாய் இருக்குது. இதெல்லாம் நம்ம டேவிட் செய்த வேலை' என்று சிரித்தாள், ஆனந்தி.
டேவிட் அங்கு நடக்கும் உரையாடலைக் கவனித்தபடி சிகரட்டை ஊதித் தள்ளிக் கொண்டு நின்றான். ஆனந்திக்குக் கூட பதில் சொல்லாமல் புன்ன கையை மட்டும் காட்டினான்.
இதற்குள் வசந்தி அனைவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தாள். தேனீரைப் பருகிக் கொண்டே எல்லோரும் வழமை போல் சிங்களமும் தமிழுமாய் தொடர்ந்து உரையாடினார்கள். சிரிப்பும் வேடிக்கையுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.
கடைசியாக ஆனந்தியின் வேலை விஷயமாக தாங்களும் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்படத்
தயாரானார்கள்.
றோஸி சொன்னாள்: நீ கம்பெனியை விட்டுப் போனாலும் நாங்கள்
237 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 124
ஒருவரையொருவர் விட்டுப் போகக்கூடாது. நாமெல்லாம் ஒரே ஆட்கள். நீ சொன்னது போல் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரவேணும். நாங்களும் வந்து போவோம்.'
எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள். அவர்க ளுடைய தலைமறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள் ஆனந்தி.
'அக்கா. வந்து பாரேன். ' என்று காந்தி குரல் கொடுத்தாள். வாசலில் நின்ற ஆனந்தி உள்ளே திரும்பினாள்.
அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பார்சல் பிரிக்கப்பட்டிருந்தது. சீனி, தேயிலை, பால்டின், மீன்டின், சோப்பு எல்லாம் இருந்தன. கவர் ஒன்று கிடந்தது. பிரித்துப் பார்த்தாள். இருநூறு ரூபாய் இருந்தது.
சிறிது நேரம் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. அந்தப் பொருட்களும், அந்தக் காசும் அவர்களின் உள்ளத்தையும் உணர்வையும் பளிச்சென எடுத்துக் காட்டின. ஆனந்திக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
* * # 好 好
வேலையை உதறிவிட்டு வந்தது ஆனந்திக்கு அந்த நேரத்தில் லேசான ஒரு காரியமாக இருந்த போதிலும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கியதும் ஆனந்திக்குப் பெரும் பிரச்சினையாகி விட்டது. இதுவரை கிடைத்து வந்த சம்பளம் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினை களைத் தீர்க்காவிட்டாலும் காலத்தை ஒட்டுவதற்கு ஒரு உதவியாக இருந்தது. இப்போது எல்லா வழிகளுமே அடைபட்டுப் போனமாதிரி அவள் திணிறி னாள். அன்றாடச் சீவியம் அவளுக்கு முன்னால் நின்று பயமுறுத்தியது.
இந்த நிலையில் டேவிட்டும் சகாக்களும் கொண்டுவந்து கொடுத்த சாமான்களும் காசும் அவளுக்குப் பேருதவியாக இருந்தன. சுற்றிலும் உள்ள சில்லறைக் கடன்களை அடைத்து விட்டு பத்துப் பதினைந்து நாட்களுக்கு சீவியத்தை ஒரளவு ஓட்டமுடியும் என்ற எண்ணம் அவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது. முன்பு சுபத்திரா மாத்திரமே அவளுக்காக வேலைக்கு முயற்சி செய்தாள். இப்போது அவள் மட்டுமல்ல, டேவிட்டும் மற்றவர்களும் கூட முயற்சி செய்வார்கள் என்ற எண்ணமும் அவளுக்குத் தென்பை அளித்தது.
மறுநாள் கொடுக்க வேண்டிய கடன்களைக் கணக்குப் பார்த்துக் கொண் டிருக்கும் போது சுபத்திரா வந்தாள்.
"நீ இன்றைக்கு ஸ்கூலுக்குப் போகேல்லியா?' என்றாள் ஆனந்தி. 'இல்லே, இன்றைக்கு ஒரு காரியமாக லீவு போட்டுவிட்டேன் என்று கூறிவிட்டு மேசையோடு சாய்ந்து நின்றிருந்த வசந்தியைப் பார்த்தாள். "உன் ஃபிரண்டைப் பற்றிச் சில விபரங்கள் கேட்க வேணும் என்று சொன்னேனே
சுபைர் இளங்கீரன் 238

கேட்டியா?" என்றாள்.
வசந்தி "இல்லை' என்று தலையை ஆட்டிவிட்டு ஒரு புன்சிரிப்புடன் பின்பக்கம் நகர்ந்தாள்.
சுபத்திரா ஆனந்தியின் அருகே வந்து மெதுவாக 'நீ உடுத்திக் கொண்டு கிளம்பு" என்றாள்.
''6tri Gis?'
"வசந்தியின் ஃபிரண்டைப் பார்க்க. அவ வந்து விடுவா. போகும் போது சொல்கிறேன். கிளம்பு' என்று துரிதப்படுத்தினாள்.
ஆனந்தி பதினைந்து நிமிஷத்துக்குள் சுபத்திராவுடன் வெளிக்கிட்டு விட்டாள். இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள்.
'ஆளைக் கண்டு பிடித்து விட்டியா?" "ஓம். ஆனா சென்ரல் பேங்கிலே இல்லே. அவன் பேங் ஒஃப் சிலோன்லே
இருக்கிறான். நேற்றுத்தான் கண்டேன். ஆனா கதைக்கக்கூடிய சூழ்நிலை இல்லே'
'அவன்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?"
"பெயர்தான் தெரியுமே அமுதலிங்கம் என்று. சென்ரல் பேங்கிலே ஒரு அமுதலிங்கம் தான் இருக்கிறார். அவருக்குப் பென்ஷனாகிற வயசு. இப்ப நான் சொல்கிற அமுதலிங்கத்தைப் பற்றி சந்தேகமில்லே. அவன் வசந்தியின் ஆள்தான். '
'அப்ப, சென்ரல் பேங் என்று ஏன் பொய் சொன்னான்?"
'கால நேரம் தெரியாம வசந்தி அடிக்கடி தன்னைத் தேடிவந்து விடக் கூடும்' என்று பேங்கின் பெயரை மாற்றிச் சொல்லியிருக்கலாம்.
"ஆள் எப்படியிருக்கிறான்?"
'நீ தான் பார்க்கப் போறியே'
'அவனுடன் எப்படி கதைக்கிறது?"
'அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஒண்ணும் உளறிக் கொட்டி விடாதே. பக்குவமாய் பேசவேணும்."
இருவரும் பேங் ஒஃப் சிலோனுக்கு வந்ததும் ஆனந்தியைக் கீழே நிறுத்தி விட்டு விறுவிறு என்று மேலே போன சுபத்திரா, சற்று நேரத்துக்குள் ஒரு வாலிபனுடன் திரும்பி வந்தாள்.
அவன் தான் அமுதலிங்கம் என்று ஊகித்துக் கொண்ட ஆனந்தி ஆச்சரியப் பட்டாள். அவனைக் கண்டு அல்ல. சுபத்திராவின் சாதனையைக் கண்டு.
239 . அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 125
-ஆளைத் தேடிப் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறாளே!. இவ ளுடைய துணிச்சலும் விவேகமும்.
எண்ணம் முறிந்து அந்த வாலிபனிடம் பாய்ந்தது.
ஆள் கம்பீரமாய் நல்லாய்த்தான் இருக்கிறான். வசந்தியின் நிறந்தான். இரு பத்தாறு இருபத்தேழு வயசு இருக்குமா. கண்ணாடி போட்டிருக்கிறானே. தலை மயிரை என்ன இப்படி வளர்த்து ஒரு சைஸாய் முன்னுக்குக் கும்பலாய் விட்டு. கன்னத்திலே கத்தையாய், நீட்டாய் தொங்க விட்டிருக்கிறானே. நல்ல டிரஸ், டை எல்லாம் கட்டி. ஆனா கழுத்துக்கு மேலே உள்ள கோலந்தான் பார்க்க என்னவோ போலிருக்குது.
இருவரும் ஆனந்தியிடம் வந்ததும், 'இவர்தான் மிஸ்டர் அமுதலிங்கம். இது வசந்தியின் அக்கா ஆனந்தி' என்று சுபத்திரா இருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தாள்.
அமுதலிங்கத்தின் உதட்டில் ஒரு புன்னகை ஒடி மறைந்தது. மறுவிநாடி 'வாருங்கள்' என்று ஆங்கிலத்தில் கூறிக் கொண்டே நடந்தான்.
மூவரும் பக்கத்தில் உள்ள உணவு விடுதிக்குள் சென்றார்கள். சுபத்திராவும் ஆனந்தியும் ஒதுக்கமான ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார்கள். அமுத லிங்கம் டீயும், கட்லிஸும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு தானும் இருந்து "எடுங்க" என்றான் ஆங்கிலத்தில்.
சுபத்திரா டீயை மாத்திரம் எடுத்துக் கொண்டு, 'உங்களைப் பற்றி வசந்தி சொன்னா. எனக்கும் இவவுக்கும் உங்களைப் பார்க்க ஆவலாயிருந்தது. சென்ரல் பேங் என்று வசந்தி சொன்னா. அங்கே நீங்க இல்லே. கடைசியாக இங்கே வந்து பார்த்துவிட்டோம்' என்று கூறிவிட்டு பதிலுக்காக அவனைப் பார்த்தாள். •
ஒரு கப் டீயை எடுத்து ஆனந்தியின் முன்னால் வைத்து விட்டு சிகரட்டை எடுத்துப் பற்றினான். சுபத்திராவும் ஆனந்தியும் எதிர்பார்த்த பதில் அவனிட மிருந்து வரவில்லை.
'வசந்தி உங்களைப் பற்றி நல்லாய்ச் சொன்னா' என்று பேச்சைத் தொடர்ந்தாள் சுபத்திரா. F
அவன் பல் தெரியச் சிரித்துவிட்டு டீயை எடுத்து, ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டு வைத்தான்.
அவன் பதில் சொல்லாமல் -கதைக்காமல் இருப்பதைப் பார்த்து ஆனந்தி யின் மனம் படபட என்று அடித்துக் கொண்டது.
'நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறதாகக் கூடச் சொன்னா...'
சுபைர் இளங்கீரன் 240

திரும்பவும் பல் தெரியச் சிரித்து விட்டு உதட்டை மூடிக் கொண்டான், வசந்தியின் ஃபிரண்ட்.
* * * * *
சுபத்திரா அவனை ஒருகணம் ஊடுருவிப் பார்த்தாள். பிறகு ஏதோ யோசித்துக் கொண்டே டீயை குடித்து விட்டுச் சொன்னாள்: 'கல்யாணம் என்றதும் சிஸ்டர் என்ற முறையிலே இவவுக்கு ஷொக்காய் இருந்தது. கல்யாணம் என்கிறது லேசான விஷயமல்ல. பெரியவங்க சம்மதத்தோட செய்ய வேண்டிய காரியம். என்றாலும் உங்க காதலுக்கு குறுக்கே நிற்கக் கூடாது என்று இவவும் சம்மதிச்சிட்டா. தன் சிஸ்டருக்கு மாப்பிள்ளையாக வருகிறவரைப் பற்றித் தெரிஞ்சு வைச்சிருக்கிறது நல்லதில்லையா? அதுக்குத் தான் இவ என்னையும் கூட்டிக் கொண்டு வந்தா?"
கட்லிஸ் இருந்த தட்டை ஆனந்தியின் முன்னால் நகர்த்தி 'எடுங்க?" என்றான் அமுதலிங்கம். அவள் டீயைக் குடிக்கவில்லை. அது ஆறிவிட்டது. இவன் ஏன் ஒரு பதிலும் சொல்லாமல் தட்டிக் கழிக்கிறவன் மாதிரி இருக்கிறான் என்ற கேள்விக்குறியோடு அமுதலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'கல்யாணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?' சுபத்திரா திரும்பவும் ஒரு கேள்வியைப் போட்டாள்.
அமுதலிங்கம் மீண்டும் டீயை எடுத்து லேசாய் ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டு வைத்தான். கையில் புகைந்து கொண்டிருந்த சிகரட்டை வாயில் வைத்து இழுத்தான். பிறகு 'கல்யாணம் தானே, அதில் என்ன பிரச்சினை? செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் செய்ய வேண்டியதுதானே?" என்று அலட்சியமான பாவனையில் ஆங்கிலத்தில் கூறினான்.
சுபத்திரா அவனை அர்த்தத்தோடு நோக்கினாள். 'உங்கள் பெற்றோரின் சம்மதமும் அதற்கு வேண்டுமே?' என்று அவளும் ஆங்கிலத்தில் திருப்பிக் கேட்டாள்.
"சம்மதிக்க வேண்டும். சம்மதிக்காவிட்டால் நமது முடிவுப்படி நாம் நடந்து கொள்ள வேண்டியதுதான். மேல் நாட்டில் பாருங்கள், அங்கே கல்யாண விஷயத்திலே எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது' என்று தொடர்ந்து ஆங்கி லத்தில் கூறினான் அவன்.
ஆனந்தியின் முகம் மலர்ந்தது. அமுதலிங்கத்தைப் புன்னகையுடன் பார்த்தாள். அதே புன்னகையுடன் சுபத்திராவையும் பார்த்தாள். பிறகு கட்லிஸையும் எடுத்துக் கடித்துவிட்டு ஆறிப்போயிருந்த டீயையும் குடித்தாள். சுபத்திராவும் லேசாய்ச் சிரித்தாள்: "என்றாலும் நாம் சிலோன்காரர்கள் தானே. நமது பழக்கவழக்கங்களும் வித்தியாசமானவை. பெற்றோர் அல்லது வீட்டில் இருக்கிற பெரியவர்கள்தான் பெண்ணையும் மாப்பிள்ளையையும்
241 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 126
பார்த்து கல்யாணத்தைச் செய்து வைப்பார்கள். நாமாக ஒரு பெண்ணையோ, ஆணையோ காதலித்தாலும் அவர்களின் சம்மதத்தோடுதான் கல்யாணத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் வசந்தியை கல்யாணம் செய்யப் போரீங்க. உங்கள் பெற்றோரின் சம்மதமில்லாமல் செய்ய முடியுமா?" அமுதலிங்கம் சிலவிநாடிகள் மெளனமாக இருந்தான். அவனுடைய முகபாவத்தைச் சுபத்திரா கவனித்தாள். அதில் ஒரு சலனத்தையும் காண வில்லை. ஆனந்தி அவனிடமிருந்து வரும் பதிலை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அப்படியான ஒரு நிலைமை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" அமுதலிங்கம் இவ்வாறு சொன்னதும் ஆனந்திக்கு உள்ளுக்குள்ளிருந்த அமுக்கம் பெரு மூச்சாகி வெளியே வந்தது. மனசை அழுத்திக் கொண்டிருந்த பாரமும் உடனே இறங்கிவிட்டது.
இவன் என்ன அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறான் என்று சுபத்திரா யோசித்தாள். பிறகு 'உங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கும் இருக்கிறது. அது நிறைவேறும் என்றும் நம்புகிறோம்' என்றாள்.
அமுதலிங்கம் வாட்சைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்தான். அவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேச்சுக் கொடுத்து விஷயத்தைப் பிடுங்க வேண்டும் என்று கருதினாலும், அவனைத் திரும்பவும், இருக்க வைத்துப் பேசுவது நாகரிகமாகத் தெரியவில்லை. அவனுக்கும் சுணங்க முடியாமல் இருக்கலாம் என்று ஆனந்தியோடு சுபத்திராவும் எழுந்து விட்டாள்.
வெளியே வந்ததும் அமுதலிங்கம் மெளனமாக தலையை ஆட்டிவிட்டு வங்கிக்குத் திரும்பினான். அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள் ஆனந்தி.
'பார்த்தது போதும். கண் வலிக்கும்" என்றாள் சுபத்திரா. ஆனந்தி திரும்பினாள். 'பகிடி இருக்கட்டும். நீ என்ன நினைக்கிறாய்?" 'எதைப் பற்றி?" 'இந்தக் கட்டிடத்தைப் பற்றி இந்தப் பேமெண்டில் சாமான்களைப் பரப்பி வைத்துக் கொண்டு ருபி எலாய் ருபிஎலாய்' என்று கத்துகிறாங்களே இதைப் பற்றி எத்தனை விதமான நாகரிகத்தையும் எந்தளவுக்கு காட்ட முடியுமோ அத்தனை விதமான நாகரிகத்தையும் அந்தளவுக்குக் காட்டுகிற மாதிரி விதம் விதமாய் உடுத்திக் கொண்டு ஆண்களும் பெண்களுமாய் நெரிசல் நெரிசலாய் நடந்து கொண்டும், நின்று சாமான்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறாங் களே அதைப்பற்றி -றோட்டைக் கடந்து போக முடியாம ஒரே கார்களாய் எறும் புத் தொடர் மாதிரி போய்க் கொண்டிருக்குதே, அதைப்பற்றி. மூஞ்சியைப் பாரு, எதைப்பற்றியாம்." என்று கோபத்தோடு சிடுசிடுத்தாள் ஆனந்தி.
சுபைர் இளங்கீரன் 242

சுபத்திராசிரித்தாள். 'எவ்வளவு ரசிக்கத்தக்கமாதிரிஇதையெல்லாம் வர்ணிக் கிறாய் கேட்கக் கேட்கத்திகட்டமாட்டேங்குது. இன்னும் வர்ணியேன். ?"
ஆனந்திக்கு ஏறிக்கொண்டு வந்தது. "நீயும் உன் ரசனையும்" என்று கூறி விட்டு விர்ரென்று இரண்டடி எடுத்து வைத்தாள்.
சுபத்திரா சடக்கென்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி னாள். "உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது. சரி, அவனைப் பற்றித்தானே கேட்கிறாய்? அவன் ஒரு வெஸ்டேன் டைப்போலிருக்குது'
'அவன் எந்த ட்ைப்பாகவும் இருக்கட்டும். தான் சொன்ன மாதிரி அவன் செய்வானா, அதைச் சொல்லு?"
'இப்ப என்னென்று தீர்மானிக்கிறது. ஆனாநாம ஆளை விடக் கூடாது. எப்படியாவது சரிப்படுத்தி காரியத்தை முடிக்க வேணும். இங்கே நின்று விவாதிக்காம வா. நான் வை.எம்.பி.ஏ. மட்டும் போகவேணும்' என்று நடந்தாள். w
இருவரும் பேமெண்டால் நடந்து றோட்டைக் கடப்பதற்காக மஞ்சள் கோட்டுக்கு வந்தார்கள். கார்கள் கார்களாய். கடக்க விட்டால்தானே.
இருவரும் நின்றார்கள். ஆனந்தி சடக் கென்று சுபத்திராவின் கையைப் பிடித்துக் கிள்ளினாள். "அங்கே பாரு. δ δ
சுபத்திரா சரேலென திரும்பினாள். கொழும்பு நாகரிகத்தின் உச்சமான மேக்கப், மினி டிரஸ், கூலிங் கிளாஸ் -சந்திராவா இவள். ' •
சந்திராதான் வந்து கொண்டிருந்தாள். 'இந்தக் கோலத்திலே அக்காவைப் பார்க்க வேணும் என்று துடிச்சியே, நல்லாய்ப் பாரு. பார்த்து ரசி' என்று அவளுடைய காதில் கிசுகிசுத்தாள், ஆனந்தி.
சிலையாக நின்ற சுபத்திராவின் கண்கள் இமைக்கவே இல்லை. சந்திரா இவர்களைக் கவனித்தாளோ, இல்லையோ அவள் லக்ஸலா வுக்குள் புகுந்தாள்.
"விறைச்சு நின்றது போதும்" என்றாள் ஆனந்தி சுபத்திரா ஏதோ யோசித்தவள் "வா...' என்று கூறிக்கொண்டே நடந்து லக்ஸலாவுக்குள் ஏறினாள்.
இருவரும் கீழ் தளத்தில் சுற்றிப் பார்த்தார்கள். சந்திராவைக் காணவில்லை. முதல் மாடியில் ஏறிச் சுற்றி வரும்போது சந்திரா ஏதோ ஒரு கைப்பணிப்
243 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 127
பொருளில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. சுபத்திரா சட்டென்று நின்று தன் சகோதரியையும் அவள் கோலத்தையும் நன்கு அவதானித்துப் பார்த்தவள் வேகமாக சந்திராவின் முன்னால் வந்து நின்று "என்ன மிஸிஸ் நவரட்ணம் சுகமா?" என்றாள்.
சந்திரா துணுக்குற்று நிமிர்ந்தாள் "ஒ. சிஸ்டர்..!" "என்னை உனக்கு இன்னும் ஞாபகமிருக்குதா?” சுபத்திராவின் இந்த ஈட்டி சந்திராவுக்குத் தைத்து விட்டதோ என்னவோ, அவளுடைய முகம் ஒரு கணம் இருண்டது. "நீ பேசுகிறது சரியாக இல்லை" என்றாள் ஆங்கிலத்தில்,
சுபத்திராவுக்கும் ஆனந்திக்கும் ஆச்சரியமாக இருந்தது. சந்திராவும் ஆங்கிலம் படித்தவள் தான். ஆனால் சுபத்திராவைப் போல் அதில் அவள் பரிட்சயப்படவில்லை. மிஸிஸ் நவரட்ணம் ஆகும் வரை அவள் பேசியது மில்லை; பேசவும் அவ்வளவு வராது. இப்போது தோற்றத்தில், உடையில் மட்டுமல்ல, மொழியில் கூட எவ்வளவு மாற்றம்!
இந்த ஆச்சரியம் மறையமுன்பே 'நாங்களும் நாங்க பேசுகிறதும் உங்களுக்குப் பிழையாகத்தான் தெரியும். எங்களுக்கும் அப்படித்தான், நீங்களும் உங்க பேச்சும், உடுப்பும் தெரியும். ஏனென்றால் நீங்க இருக்கிற இடம் வேறு நாங்க இருக்கிற இடம் வேறு' என்றாள் தமிழில் சுபத்திரா,
"நொன்சன்ஸ்' என்றாள் சந்திரா ஆத்திரத்தில். "நான் அர்த்தத்தோடுதான் பேசுகிறேன். சரி, இவயாரு தெரியுமா?' என்று ஆனந்தியைக் காட்டினாள்.
சந்திரா விழிகளை ஏவி ஆனந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இரண்டு பேரும் என்னைக் கேலி செய்கிறீங்களா?' என்றாள் அதே ஆத்திரத்தில்.
'உண்மை உங்களுக்கெல்லாம் கேலியாகத்தான் தெரியும்" என்று கூறிய சுபத்திரா, மினியை திரும்பவும் ஒரு தடவை மேலும் கீழும் பார்த்து விட்டு "அற்புதமாய்த்தான் இருக்குது. இன்னும் இரண்டு இஞ்சி கட்டையாக இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்' என்றாள்.
சந்திராவின் முகம் கோபத்தால் குப் பென்று சிவந்தது. தனி இடமாக இருந்தால் அவள் என்ன செய்திருப்பாளோ. ஆத்திரம், வெறுப்பு, கர்வம் எல்லாம் ஒன்று சேர விழிகளில் நெருப்பெரிய ஒரு பார்வையை வீசியவள் அந்த இடத்தை விட்டு விர்ரென்று பறந்தாள்.
சுபத்திரா சிரித்தாள். 'இங்கே நின்று சிரிக்காதேடி, போகும் போது சிரிக்கலாம் வா' என்று சுபத்திராவையும் இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் ஆனந்தி.
சுபைர் இளங்சீான் 244

இருவரும் வெளியே வந்து றோட்டைக் கடந்து ஹேமாஸ் பில்டிங் வழியாக நடந்தார்கள்.
"என்னதான் இருந்தாலும் அவளை நீ குத்திக் காட்டி இருக்கக் கூடாது' என்றாள் ஆனந்தி.
'அவளைக் கண்டதும் என்னையறியாமலே ஒரு வேகம் வந்திட்டுது. இன்னும் என்னவெல்லாமோ கேட்கவும் பேசவும் மனசு துடிச்சுது. அதுக் குள்ளே அவள் ஓடிவிட்டாள்.'
'ஓடாமல் என்ன செய்வாள். நீ வாயாலேயா பேசினாய், சுத்தியலாலே யல்லவா அடிச்சுப் போட்டாய்! இதோடு அவள் தப்பினாளே அதைச் சொல்லு.' -
சுபத்திரா பேசாமல் நடந்து கொண்டிருந்தாள். ஆனந்தியும் சிறிது தூரம் மெளனமாக நடந்தாள் திடீரென்று சிரித்தாள்.
"என்னடி சிரிக்கிறாய்?" 'வசந்தியின் ஃபிரண்ட் ஒரு தினுசாய்த் தெரிகிறானே. அவனுடைய போக்கைப் பார்த்தால், வசந்தியையும் மினியாக்கி விட்டா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது.'
'சொல்ல ஏலாது. வசந்தியும் அப்படியானா ஆச்சரியப்படுகிறதுக்கில்லே. கொழும்பு நாகரிகம் அந்தளவுக்கு எல்லாருடைய மனசையும் சீரழித்துக் கொண்டிருக்குது.' -
"எங்க கம்பனியிலே ஒருத்தி. அவள் ஒரு நாள் மினியோடு வந்தாள். எல்லாரும் அவளைச் சுற்றி வளைத்துப் பகிடி பண்ணிச் சிரித்தோம். அவள் என்ன சொன்னாள் தெரியுமா? இதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்குது. சாரி வாங்க காசு நிறைய வேணும். இது சிக்கனம் தானே' என்று பொருளாதாரம் பேசினாள். ஒரு வகையில் இதுவும் சரிதானோ என்று யோசிக்க வேண்டி வந்துவிட்டது.'
'மினிக்காரிகள் எனக்கும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனா இது சிக்கனம் அல்ல, செக்ஸ்.'
ஆனந்தியின் உள்ளம் ஏனோ கூசியது. அதற்குமேல் மினியைத் தொடர அவள் விரும்பவில்லை.
வை.எம்.பி.ஏக்கு வந்ததும் சுபத்திரா ஆனந்தியையும் கூட்டிக் கொண்டு இரண்டாவது மாடிக்குச் சென்றாள். ஆனந்தியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு அறைக்குள் புகுந்தவள் கால் மணித்தியாலத்துக்குப் பிறகு திரும்பி வந்து "உன் வேலை விஷயமாகத்தான் ஒரு ஆளைப் பார்க்கப் போனேன்' என்று கூறிக் கொண்டே இறங்கினாள்
245 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 128
வெளியே வந்து திரும்பி வை.எம்.சீ.ஏக்குப் போனார்கள். 'இங்கேயும் என் காரியமாகத்தானா..?' என்று கேட்டாள் ஆனந்தி.
'ஓம். ஒரு எம்.பியின் ஆளைப் பார்க்க வேணும்' என்று கூறிவிட்டு இன்குயரிக்குச் சென்று விசாரித்தாள். திரும்பிவந்து 'வா போகலாம்" என்று படியிறங்கினாள்.
'என்னவாம்?"
"ஆள் இன்னும் வரவில்லை" சி.டி.ஓ. லேக் ஹவுஸ், திறைசேரி என்று ஆனந்தியை இழுத்துக் கொண்டு திரிந்தாள். ஒரு மணியாகிவிட்டது.
'உன் வேகத்துக்கு என்னாலே தாக்குப் பிடிக்க முடியாது. நீயும் ஒரு மனுஷிதாண்டி' என்று அலுத்துக் கொண்டே கூறினாள், ஆனந்தி.
சுபத்திரா சிரித்தாள். 'நீ எத்தனை பேரையெல்லாம் பழக்கம் பிடிச்சு வைச்சிருக்கிறாய்?"
'அதுதான் உனக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்'
'எனக்காக இப்படியெல்லாம் அலைகிறியே!'
"வேறு யாருக்காக அலையச் சொல்கிறாய்?"
- a - - எனக்குப் பசி காதை அடைக்குது'
'உனக்கு என்ன வேலை. வீட்டுக்கு வா. அம்மா ஸ்பெஷலாய் ஏதும் செய்து வைத்திருப்பா. ஒரு பிடி பிடிக்கலாம்"
* * 等 * *
ஒரு பிரிப் போயா. பின்னேரம் வசந்திதன்னை கவர்ச்சிகரமாய் அலங்கரித் துக் கொண்டு வெளிக்கிட்டாள். அவளை ஏதும் கேட்கவோ, சொல்லவோ முடியாதவளாய் தவித்தாள் ஆனந்தி. 'நேரத்தோடு வந்து விடு' என்று கூடச் சொல்ல அவளுக்கு நா வரவில்லை.
வழக்கம் போல் அவளுக்கு ஒன்றுமே கூறாமல் புறப்பட்ட வசந்தி எட்டுமணிக்கு முன்னதாகவே திரும்பி வந்து விட்டாள். அவளுடைய முகம் வெடு வெடு என்றிருந்தது. படபடப்புடன் உடுப்புகளையெல்லாம் களைந்து வேகமாக போட்டு விட்டு அதே வேகத்தோடு திரும்பி "நீயும் சுபத்திராவும் அவரைப் பார்க்க ஏன் போனீங்க?' என்று கேட்டாள்.
அவள் வந்த வரத்தையும் முகத்திலிருந்த வெடுவெடுப்பையும், உடை களைக் களைந்து போட்ட விதத்தையும் வியப்போடும் கேள்விக்குறியோடும் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தி 'ஏன், பார்த்தால் என்ன வந்துவிட்டது?" என்றாள் குழம்பியபடி.
சுபைர் இளங்கீரன் 246

'என்னைப் பார்த்தா தெரியேல்லியா என்ன வந்துவிட்டது என்று?" 'விளக்கமாய்ச் சொல்லேன். ஏன் பதறுகிறாய்?" 'பதறாமல் என்ன செய்கிறது, நீங்கள் செய்த வேலைக்கு" "நாங்க அப்படி என்ன வித்தியாசமாய்ச் செய்து விட்டோம்?" 'நீங்க அவரைப் பார்க்கப் போயிருக்கப்படாது. அது அவருக்குப் பிடிக்கேல்லே'
'ஏன் பிடிக்கேல்லே?" "பிடிக்கேல்லே என்றால் பிடிக்கேல்லேதான்' 'ஏன் பிடிக்கேல்லே என்றுதான் கேட்கிறேன்?" 'முன்னப் பின்னே அறிமுகமில்லாதவரை ஒஃபிசிலிருந்து கூட்டிக் கொண்டு போய் கல்யாணம் என்றும் காட்சி என்றும் கதைக்கிறதுநாகரிகமாய்த் தெரியுதா? இது யாருக்குத்தான் பிடிக்கும்? அவர் இதைச் சொல்லும் போதே எனக்கே எவ்வளவு ஆத்திரமாய் இருந்தது தெரியுமா? படிச்சநீங்க ரெண்டு பேரும் செய்த இந்தக் காரியம் உங்களைப் போல் படிக்காத எனக்கே பிடிக்கேல்லே, அவருக்கு எப்படி இருக்கும்?' என்று குமுறினாள் வசந்தி.
இதைக் கேட்டதும் தாங்கள் செய்தது பிழைதான் என்றுபட்டது ஆனந்திக்கு. அவள் குன்றிப் போனாள். வசந்தியை எப்படிச் சமாதானப்படுத்துகிறது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் கவலையோடு இருந்தவள் 'உங்க விஷயத்தை நீ சுபத்திராவுக்குச் சொன்னதும் அவளுக்கும் எனக்கும் உன் ஃபிரண்டைப் பார்க்க வேணும் என்று ஆவலாயிருந்தது. நீ அவரைப் பற்றி எந்தளவுக்கு தெரிஞ்சு வைச்சிருக்கிறியோ தெரியாது. ஆனா உனக்கு மாப்பிள்ளையாக வருகிறவரைப் பற்றி நாங்க விபரமாய்த் தெரிஞ்சு வைச் சிருக்க வேணும், நீ ஏமாந்து போகாதபடி கெதியாய்க் கல்யாணத்தைச் செய்து வைக்க வேணும் என்று துடிப்பிலேதான் அவரைப் பார்க்க போனோம்; பேசினோம். நாகரிகத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் அதிகமாய்த் தெரியாது. ஆனா எது சரி, எது பிழை என்று தெரியும். சரியானதையெல்லாம் நாகரிகம் என்று நினைக்கிறவ நான். அதனால்தான் அவரைப் போய்ப் பார்த்துப் பேசுகிறதை பிழையாகக் கருதேல்லே' என்று அமைதியாகவும் வருத்தத் தோடும் கூறினாள்.
வசந்தி பின்தட்டுக்குப் போய் தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பி வந்தாள். அவளுடைய முகத்திலிருந்த வெடுவெடுப்பு இப்போது மறைந்து விட்டது. மனக் குமுறல் அடங்கியவள் போல் சற்று நேரம் மெளனமாக இருந்து விட்டுச் சொன்னாள்:
'நீங்க ரெண்டு பேரும் நினைச்ச மாதிரி அவரைப் பார்த்திட்டீங்க. பேசிட்டீங்க. இனி அவரைப் போய்ப் பார்க்கக் கூடாது. அவரைப் பற்றியோ,
247 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 129
என்னைப் பற்றியோ நீங்க கவலைப்படவும் வேணாம். நான் ஏமாந்து போயிட மாட்டேன். என்னையும் மீறி ஏதாவது நடந்தாலும் அந்தப் பாதிப்பு என்னோடு தான் இருக்கும். நான் அதை தாங்கிக் கொள்ளுவேன். இத்தனை நாளும் இதுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து உனக்கும் ஒரு பாரமாயிருந்தேன். நீயும் வேலையை விட்டிட்டு இருக்கிற நிலைமையிலே நான் மேலும் சுமையாயிருக்க விரும்பேல்லே. எனக்குத் தேவையானதுக்கெல்லாம் உன் கையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கவும் விரும்பேல்லே. உன்னாலே அது முடியவும் முடியாது. கஷ்டம் கஷ்டம் என்று என்னையே நான் அடக்கிக் கொண்டிருக்க இனியும் ஏலாது. என்னைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கென்று ஒருவர் வந்துவிட்டார். சுபத்திரா அக்கா என்னை ஆசீர்வதிச்ச மாதிரி நீயும் ஆசீர்வதிச்சா போதும். எனக்காக நீ வேறே எதுவும் செய்ய வேணாம்'
t
-இத்தனையும் இவளா சொன்னாள். இவ்வளவு தெளிவாய், உறுதியாய் சொல்லிவிட்டாளே!. இவளை ஒரு வெகுளி என்று இவ்வளவு நாளும் நினைச்சது பிழையா?. இவளுக்கு இதையெல்லாம் யார் கற்றுக்கொடுத்தது?. ஃபிரண்டா. அவனைப் பார்த்தால் இவளுக்கு இந்தளவுக்கு கற்றுக் கொடுக்கக் கூடியவனாய்த் தெரியேல்லியே.
ஆனந்தி அசந்து விட்டாள்.
* * * * *
அடுத்த நாள் சுபத்திராவைப் பார்ப்பதற்காகப் புறப்பட்ட ஆனந்தி பஸ்ஸை விட்டு இறங்கி நடக்கும் போது அவள் வழியில் வந்துகொண்டிருந்தாள்.
'எங்கே?' என்றாள் ஆனந்தி. 'வீட்டுக்கு வந்து உன்னையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்று வெளிக்கிட்டேன். வா...' என்றாள் நடையை நிறுத்தாமல்.
"எங்கே?' என்று திரும்பவும் கேட்டாள் ஆனந்தி. "கேள்வியைப் போடாமல் வா சொல்கிறேன்' ஆனந்தி நடந்து கொண்டே முதல் நாளிரவு வசந்தி கூறியதையெல்லாம் சொன்னாள். கடைசியாக 'நாம் அவரைப் பார்க்கப் போனதும் பிழைதான்' என்றாள்.
சுபத்திராவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. "அப்படியா சொன் னாள்?' என்று ஒருகணம் மெளனமானவள் 'நாம செய்தது பிழை என்று எனக்குப் படேல்லே. நமக்கு ஒரு பொறுப்பு இருந்தது. அதை நிறைவேற்ற வேணும் என்ற முனைப்பிலே அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போனோம். நம்மைப் பொறுத்தவரை அதுசரி. அவர்களுக்கு அது பிழை யாகப்பட்டால் அதுக்காக நாம அலட்டிக் கொள்ளத் தேவையில்லே."
சுபைர் இளங்கீரன் 248

'அதைவிடு. இப்ப நாம என்ன செய்கிறது? தன் விஷயத்திலே தலை யிடாதபடி நம்மை வெட்டி விட்டாளே."
'நீ சொல் கிறதைப் பார்த்தால் இவ்வளவு தெளிவாய் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறவளை, நமக்கு அவளைப் பற்றிய ஒரு பொறுப்பும் அவசிய மில்லை என்று கருதுகிறவள் விஷயத்திலே என்ன செய்ய வேணும் என்று நினைக்கிறாய்?
'அவளுக்கு அந்த யங்கி நல்லாய் ஊதியிருப்பான். கல்யாணத்தில் சுதந்திரம் வேணும் என்று நினைக்கிறவன்நம்ம தலையீட்டையும் விரும்பாமல் இருக்கலாம்தானே? அவனுடைய கருத்தை இவளும் முழுசாய் விழுங்கி யிருப்பாள். அவளுக்கும் ஒரு தன்னம்பிக்கை வந்திருக்குதாக்கும்.'
'என்னதான் இருந்தாலும் நாம எட்டநின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாதே. மனசு கேட்குமா?"
"நான் மறுக்கேல்லே. அதுக்காக மனசை குழப்பிக் கொள்கிறதிலே என்ன லாபம். நாம் விரும்புகிறபடியா எல்லாம் நடக்குது?"
பேசிக் கொண்டே பஸ் தரிப்புக்கு வந்து விட்டார்கள். பஸ்ஸும் ரெடியாக நின்றது. ஏறி உட்கரிர்ந்ததும் சுபத்திரா சொன்னாள்: 'எட்ட நின்று பார்க்க முடியாதுதான். கிட்டநின்று கவனத்தோடு பார்ப்போம்"
இருவரும் தெஹிவலையிலிருந்து பார்பர் வீதிக்கு வந்து இறங்கியதும் ஒரு தோட்டத்துக்குள் சென்றார்கள்.
அடுக்காக மூன்று தட்டு வீடுகள். பின்னேரமாயிருந்ததால் குட்டிகள், குழந்தைகள், பிள்ளைகள், இளசுகள், பெரியவர்கள் என்று தோட்டத்துக்குள் ஒரே ஆட்களாய்தான் இருந்தார்கள். கூச்சலும், சந்தடியும், வாக்குவாதங் களும், சில வீடுகளிலிருந்து வரும் ரெடிஃபியூஷனின் சினிமாப் பாடல்களும் காதைத் துளைத்தன.
ஆனந்தி தங்கள் தோட்டத்தை நினைத்தாள். அதற்கும் இதற்கும்அங்குள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தொழிலாளர்களுக்கும் தங்களைப் போன்ற ஏழை எளியவர்களுக்கும் இந்த நெரிசல்தான், இந்த இரைச்சல் தான், இந்தச் சூழலும் வாழ்க்கையும் தான் என்று எண்ணும் போது அவள் மனம் நெகிழ்ந்தது. அங்குள்ளவர்களைப் பார்த்து "நாமெல்லாம் ஒரே ஆட்கள்தான். நமக்கெல்லாம் சேர்த்து ஒரு விடுதலை வேணும்' என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.
சுபத்திராவும் ஆனந்தியும் ஆட்களுடன் முட்டிமோதாத குறையாக நடந்து தோட்டத்தின் பின்கோடிக்குப் போனார்கள்.
249 . அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 130
தகரக் கூரைபோட்டு பலகையால் இரண்டு அறைகள் எடுத்து அமைக்கப் பட்ட நாலைந்து வசிப்பிடங்கள் வீடு என்ற நாமத்தோடு முளைத்திருந்தன. அங்கேயும் நெரு நெரு என்று பிள்ளைகளும் குட்டிகளும் ஆட்களும்தான். வாசலில் நிற்கும் குமர்ப்பெட்டைகளும் பேன் பார்க்கும் பெண்களும்.
வெளியே உள்ள பைப் பில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த ஒரு குமர்ப்பெட்டை சுபத்திராவைக் கண்டதும் "வாங்க டீச்சர்' என்றாள்.
"வாப்பா இருக்கிறாங்களா பவுவழி?" "இப்பதான் வெளியே போனாங்க. கொஞ்ச நேரத்திலே வந்து விடுவாங்க. உள்ளே வாங்க' என்று கூறிக் கொண்டே தண்ணீர் நிறைந்த வாளியையும் எடுத்துக் கொண்டு ஒரு அடைப்புக்குள் புகுந்தாள், பவுவழி.
சுபத்திராவும் ஆனந்தியும் அந்த அடைப்பின் முன் தட்டில் வந்து இருந் தார்கள். இன்னும் இரண்டு குமர்ப்பெட்டைகள் சீமெந்துப் பைகளைப் பிரித்து வெட்டி ஒட்டி சாமான் வாங்கும் பைகளாகச் செய்து கொண்டிருந்தவர்கள் சுபத்திராவையும் ஆனந்தியையும் பார்த்துப் புன்னகையால் வரவேற்று விட்டு தொடர்ந்து வேலையில் முனைந்தார்கள். ஆனந்தி அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'உம்மா எங்கே?' என்றாள் சுபத்திரா. 'மாமி வீட்டுக்குப் போனாங்க, இப்ப வந்து விடுவாங்க. நீங்க போயி டாதீங்க" என்று சொல்லி விட்டு முன்தட்டோடு சேர்த்துப் போடப்பட்டிருந்த அடுப்பைப் பற்ற வைத்தாள் பவுவி.
"டீ, கீ ஒன்னும் வேணாம் பவுவழி' 'நீங்க சொன்னாப்பல நாங்க விடுவமா?" என்று சிரித்துக் கொண்டே அடுப்பில் கெட்டிலை வைத்தாள் அவள்.
சீமெந்துப் பையில் கவனத்தைச் செலுத்தியிருந்த ஆனந்தி சுபத்திராவின் பக்கம் திரும்பி, "ஒரு வேலையும் இல்லாம வீட்டில் சும்மா இருக்கிற நாங்களும் இதைச் செய்யலாம் போலிருக்குதே. கூலியாவது கிடைக்கும்' என்றாள்.
“இதுவும் ஒரு ஐடியாதான். ஆனாநியும் காந்தியும் செல்வமும்தான் செய்ய வேணும். வசந்தி இப்ப இருக்கிற மனநிலையில் இதில் ஆர்வப்படமாட்டாள்.' சுபத்திரா இதைச்சொல்லி முடிப்பதற்குள் "கடன் வாங்கப் போயும் 6დატ பிரயோசனமில்லே. வீண் அலைச்சல்தான் மிச்சம்' என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்த பவுவியின் உம்மா, சுபத்திராவைப் பார்த்ததும் 'ஒ. வாங்க. வந்த வெகுநேரமா?' என்றாள்.
'இப்பதான். பவுவியின் வாப்பாவைப் பார்க்க வந்தோம்.'
'இன்னைக்கு காலத்தாலே கூட உங்களைப் பற்றிச் சொன்னார். முதலாளி
சுபைர் இளங் 250

A p
யுடன் கதைச்சாராம். அவர் யோசிச்சுச் சொல்றேன் என்றாராம்' என்று கூறியவள், ஆனந்தியைப் பார்த்து விட்டு "நீங்க சொன்ன ஆளு இவதானா?" என்று கேட்டாள்.
'இவதான், அப்ப பவுவழியின் வாப்பாவை எதிர்பார்த்திருக்கத் தேவை யில்லே' என்றாள் சுபத்திரா.
"ஏன் அவசரப்படுகிறீங்க?' என்று கேட்டுவிட்டு சீமெந்துப் பை ஒட்டிக் கொண்டிருந்த தன் மூத்த மகளைப் பார்த்து "மிஸ்ஸிறியா, சின்னவ எங்கே போனா’ என்று கேட்டாள்.
'இங்கதான் நிற்பா’ மிஸ்ஸிறியா சொன்னாள். சுபத்திரா கேட்டாள். "மிஸ்ஸிறியாவின் விஷயம் எந்தமட்டில் இருக்குது?' "ஒருமட்டத்திலும் இல்லே. பொடியனுக்குச் சம்மதந்தான். அவன் வாப்பா வும் உம்மாவும் கொம்பிலே ஏறி நிற்கிறாங்க, அவங்க கேட்கிற சீதனத்துக்கு நாங்க எங்கே போக? திங்கிறதுக்கே வழியில்லாம இருக்கிற எங்களைப் பிடிச்சு ஆயிரக் கணக்கிலே சீதனம் கேட்டா நாங்க என்ன செய்கிறது"
ஏன் உங்க சொந்தக் காரங்கதானே, உங்கநிலைமையைப் பார்த்து, விட்டுக் கொடுக்கலாமே?'
"இப்ப சொந்த பந்தம் என்கிறதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். காசு பணம் உள்ளவங்களைத்தான் சொந்தம் பந்தம் என்று கொண்டாடப் பார்க்கிறாங்க. எங்களிட்ட என்ன இருக்குது? இந்தக் குமர்களையும் வைச்சுக் கொண்டு பிள்ளையும் குட்டியுமா இருக்க, படுக்க இடமில்லாம இடிச்சு மோதிக் கொண்டு காலந்தள்ளுகிற இந்தப் பலகை வீடுதான் இருக்குது. அதுவும் இந்தப் பலகையும் தகரமும்தான் எங்களுக்குச் சொந்தம். நிலம் கூட எங்கட இல்லே'
பவுவழி டீ கொண்டு வந்து கொடுத்தாள். சுபத்திரா அதை வாங்கிக் கொண்டே 'அப்ப கல்யாணத்தைப் பற்றி என்னதான் முடிவு பண்ணியிருக்கிறீங்க?" என்றாள்.
'முடிவென்ன முடிவு. இப்ப எப்படி இருக்கிறோமோ அதுதான் முடிவு. சீதனத்துக்கு வழியில்லாம எத்தனையோ குமர்கள் வயசு முத்திக் கிடக்கிற போது எங்க மூணு குமர்களும் கிடக்க வேண்டியதுதான். இடையிலே என்ன நடக்கப் போகுதோ, நடந்து விட்டுப் போகட்டும்'துயரமும் விரக்தியும் தோய்ந்த குரலில் கூறினாள் பவுவழியின் உம்மா. சுபத்திராவும் ஆனந்தியும் ஏக காலத்தில் மிஸ்ஸிறியாவையும் மற்றவர்களையும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். நிலவை மேகம் மறைத்திருப்பது போல் சோகம் அவர்களின் வதனத்தை திரையிட்டிருந்தாலும் புன்னகையோடு தான் இருந்தார்கள்.
டீயைக் குடித்ததும் இருவரும் எழுந்தார்கள். "எங்களுக்கு நேரமாகுது, பவுவழியாவின் வாப்பாவிடம் சொல்லுங்க" என்று கூறிவிட்டு விடை பெற்றுக்
251 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 131
கொண்டு வெளியே வந்தார்கள்.
'இவங்களுக்கு என்னைப் பற்றி என்ன சொல்லி வைச்சாய்?" என்று கேட்டாள் ஆனந்தி.
'உன் வேலையைப் பற்றித்தான். பவுவழியின் வாப்பா ஒரு இரும்புக் கடையில் வேலை பார்க்கிறார். கடைக்குக் கடை டைப் செய்து கொடுக்கிற ஒருவர் தான் இவங்க கடைக்கும் வந்து டைப் அடிச்சுக் கொடுக்கிறாராம். பவுவழியின் வாப்பாவிடம் இந்த விஷயத்தை தெரிஞ்சு கொண்டு உன்னைப் பற்றிச் சொன்னேன். முழுநேர டைப்பிஸ்டை ஒருவேளை எடுக்கக் கூடும். முதலாளியிடம் விசாரித்துப் பார்க்கும்படி சொன்னேன். அதைக் கேட்கத்தான் உன்னையும் கூட்டிக் கொண்டு வந்தேன்."
'இவர்களை எங்கே தேடிப்பிடிச்சாய்?"
"அது ஒரு கதை. இவங்க பிள்ளைகள் எங்க ஸ்கூல்லேதான் படிக்கிறாங்க, பெண்களுக்கென்று தியேட்டர்காரங்கள் காலை பத்துமணி ஷோ போடுகிறாங் கள் அல்லவா. இதைப் பார்க்கப் போகிற போது சிலர் துணைக்கு ஸ்கூல்லே இருக்கிற தங்கள் பிள்ளைகளையும் பொய்ச் சாட்டுக்களைக் கூறிக் கூட்டிக் கொண்டு போகிறது வழக்கம். ஒருநாள் பவுவழியின் உம்மாவும் வந்து தன் இளைய மகளைக் கூட்டிக் கொண்டு போக வந்தவ. என்னிட்டே கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டா. நான் அவவைக் குறை சொல்லிக் கண்டிச்சேன். பிள்ளைகளை ஏன் பாழாக்கிறீங்க? இப்படிச் செய்கிற நீங்க ஏன் ஸ்கூலுக்கு அனுப்புகிறீங்க என்று கேட்டேன். அவ சொன்ன பதில் என்னையே திடுக்கிட வைச்சிட்டுது. பிள்ளைகளைப் படிக்க வைச்சு ஆளாக்கிறதுக்கு எங்களுக்கு என்ன வசதியிருக்குது. அதிலே நம்பிக்கை வைக்கிறதுக்கு எங்க நிலைமை இடம் கொடுக்குமா? வீட்டிலே இருக்க இடமில்லே. பள்ளியிலாவது இருந்துட்டு வரட்டும் என்றுதான் அனுப்புகின்றோம் என்று சொன்னா. எனக்கு என்ன சொல்கிற தென்றே தெரியேல்லே. என்றாலும், பலவாறு எடுத்துச் சொல்லி இனிமே இந்தமாதிரிச் செய்ய வேணாம் என்று உருக்கமாய்ச் சொன்னேன். அவ அழுதிட்டா. அன்றையிலிருந்து படம் பார்க்கிறதை விட்டிட்டா, அப்ப தொட்ட பழக்கம், பவுஷஇருக்கிறாளே, என்னைக் கண்டால் போதும். ஒரே குதூகலந்தான்."
"அப்ப, பவுவழியின் உம்மாவுடைய சந்தோஷத்தை நீ பறிச்சுப் போட்டாய் என்று சொல்லு"
சுபத்திரா சிரித்தாள்.
* * * * 壹
சுபைர் இளங்கீரன் 252

பதினான்காவது அத்தியாயம்
லையில்லாத கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளும் மன உரம் ஆனந்திக்கு இப்போது இருந்தாலும் வீட்டில் சும்மா இருப் பது பெரும் சிரமமாயிருந்தது. பொழுது நகர மறுத்தது. இதற்காகவாவது ஒரு வேலை வேண்டும் போலிருந்தது. வேலை தேடுவதை நினைத்தாலோ மலைப்பாயிருந்தது. பவுவழியின் வீட்டில் பார்த்த சீமெந்துப் பையைப் பற்றி அடிக்கடி சிந்திக்கவும் செய்தாள். ஆனால் அது தோதுப்படவில்லை.
விடிந்து நேரமாகியும் எழுந்திருக்க மனமில்லாமல் வேலையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்குப் போக ஆயத்தமாக நின்றார்கள்.
'ஏன் நிற்கிறீங்க, போக வேண்டியதுதானே?' என்று பாயில் கிடந்தவாறே கூறினாள் ஆனந்தி.
'எனக்கு கொப்பி முடிஞ்சு போச்சுது' என்றாள் காந்தி. 'எனக்கும் வேணும். பென்சில் இல்லே' என்று முகாரி பாடினான் செல்வம்.
'சில்லறை இருக்குதா வசந்தி?" என்று கேட்டாள் ஆனந்தி. "சில்லறையுமில்லே, நோட்டுமில்லே" என்றாள் அவள். குளிப்பதற்காக வாளிக் கிணற்றுக்குப் போக ஆயத்தமான ராசுவைப் பார்த்தாள் ஆனந்தி. 'உன்னிடம் சில்லறை இருந்தால் கொடேன்?"
'இல்லே...'
253 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 132
'அப்பாவிடம் கேட்டுப் பாருங்க. ஏதாவது சில்லறை வைச்சிருப்பார்’ நம்பிக்கை இல்லாமல் தான் சொன்னாள்.
அருமைநாயகம் அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தார். காந்தியும் செல்வமும் அவரிடம் போனார்கள். அவரும் கையை விரித்தார்.
'கொப்பி இல்லாம நான் போகமாட்டேன். டீச்சர் அடிப்பா' என்று சிணுங்கினாள் காந்தி. செல்வமும் ஒத்து ஊதினான்.
சுபத்திராவுக்கு பவுவழியின் உம்மா சொன்னது ஆனந்தியின் ஞாபகத்துக்கு திடீரென்று வந்தது. அதை ஒருகணம் எண்ணிப் பார்த்தாள் ஆனந்தி. விறுக்கென்று எழுந்து இருந்தாள். 'நீங்க ஸ்கூலுக்குப் போக வேணாம். கையிலே இருக்கிற புத்தகங்களையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு சும்மா கிடவுங்க' என்று இயலாமையின் ஆத்திரத்தைக் காட்டினாள்.
ராசு காந்தியையும் செல்வத்தையும் ஒரு பார்வை பார்த்தான். 'நீங்க போகாம இருக்க வேணாம். இன்றைக்கு எப்படியாவது சமாளியுங்க. நான் பின்னேரம் வாங்கித் தாரேன். இப்ப ஸ்கூலுக்குப் போங்க'
ராசுவின் சொல்லைக் கேட்காமல் அவனிடமிருந்து பெறும் தண்டனையை விட ஸ்கூலில் டீச்சரின் அடியைத் தாங்கிக் கொள்ளுகிறது லேசு என்று நினைத்த அக்காவும், தம்பியும் மறு பேச்சில்லாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.
'நீ என்ன படிச்சு உருப்பட்டியா..? அவர்களைப் போகச் சொல்றியே?" என்றாள் எரிச்சலுடன் ஆனந்தி.
'உருப்பட்டாலுமோ, உருப்படாமல் விட்டாலுமோ, ஸ்கூலுக்குப் போக வேணும் ' என்று நறுக்காகக் கூறிவிட்டு பற்பொடியை எடுத்து அதில் பிரஷ்ஷை அழுத்தி எடுத்து வாயில் வைத்தான்.
எப்போதாவது சில சமயங்களில்,கொப்பி, பென்சிலுக்கென்று காந்திக்கும் செல்வத்துக்கும் இராசநாயகம் காசு கொடுக்கிறதுழுண்டு, இருவரும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு ஸ்கூலுக்குப் போகாமல் பிணங்கிக் கொண்டு நின்றால் ராசு அவர்களை அனுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதைத் தெரிந்து கொண்டும் ஆனந்தி சொன்னாள்: "ஸ்கூலுக்கு ஒழுங்காய்ப் போகிறதுக்கும் ஒரு நிலைமை வேணாமா? புத்தகம், கொப்பி, பென்சில், உடுப்பு, சப்பாத்து, செருப்பு இடையிடையே ஸ்கூல்லே கொண்டு வரச் சொல்கிற காசு -இதையெல்லாம் இவர்கள் கேட்கிறபோது கொடுக்க வழி இருக்குதா? இவ்வளவு அக்கறை காட்டுகிற நீ, இந்தப் பொறுப்பையாவது ஒழுங்காய்ப் பார்க்கலாமே? ஆனா நீ இந்தச் சிந்தனை கூட இல்லாம உன்பாட்டுக்கு அலட்சியமாய்த் திரிகிறாய். வீட்டில் நடக்கிற எந்தச் சங்கதி யாவது உனக்குத் தெரியுமா? இருந்த வேலையையும் விட்டிட்டு அக்கா என்னபாடுபடுகிறா என்று எண்ணிப் பார்த்தியா? இதையெல்லாம் நீ ஏன்
சுபைர் இளங்கீரன் 254

யோசிக்கப் போகிறாய்?"
'உன்னை யார் வேலையை விடச் சொன்னது?"
ஆனந்தி வாய் அடைத்துப் போனாள். வேலையை விட்ட காரணத்தை அவள் ராசுவுக்குச் சொல்லவில்லை. சொல்ல வேண்டாம் என்று வசந்திக்கும் கட்டளையிட்டிருந்தாள். அந்த விஷயம் சுபத்திராவைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பது அவளுடைய எண்ணம். இருந்தும் வசந்திக்குத் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிவிட்டதால் சுபத்திரா சொல்லிவிட்டாள், அந்த விஷயம் வசந்தியோடு நின்று கொள்ளட்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் ஆனந்தி. அக்கா வேலையிலிருந்து விலகி வீட்டில் சும்மா இருப்பதைப் பற்றி ராசுவும் இதுவரை கேட்கவில்லை. இன்று கேட்டு விட்டான்.
ஒருநிமிஷம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி 'எனக்கு ஒத்துப் போகேல்லே, அதுதான் விலகிட்டேன். இப்ப திரும்பவும் வேலைக்கு அலைஞ்சு கொண்டிருக்கிறேன். நீ ஒரு பொறுப்போடு இருந்து, கூட்டாளி மாரோடு ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காம, நாலு காசு சம்பாதிச்சுத் தந்தால் நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்காதே! பெண்ணாய்ப் பிறந்த என் தலையிலே எல்லாச் சுமைகளையும் போட்டுவிட்டு ஆணாய்ப் பிறந்த நீ ஒரு முயற்சியுமில்லாம இப்படித் திரிகிறது உனக்கே நல்லாய்த் தெரியுதா? நாளைக்கு உனக்கென்று ஒரு வாழ்க்கை வேணாமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போகிறாய்? இனியும் இப்படி இருக்கிறன்த என்னாலே பொறுத்துக் கொண்டிருக்க ஏலாது. நீ ஒரு ஒழுங்கான வழியைப் பார்க்க வேணும்'
இத்தனையையும் கொஞ்சம் கடுமையான குரலில் கூறி விட்டு எழுந்து பைப்புக்குச் சென்றாள் ஆனந்தி.
ராசுவிடம் அவள் இதுவரை இப்படிப் பேசியதே இல்லை. இன்றைக்கு அவளுக்கு வந்த வேகத்தில் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். ராசுவுக்கு அக்காமீது ஒரு தனிமதிப்பும், மரியாதையும் இருந்தன. அவள் எதைச் சொன்னாலும் ஒரு வார்த்தை கதைக்க மாட்டான். இப்போது அக்கா கூறியதை அவன் கவனத்தில் எடுத்துக் கொண்டானோ என்னவோ பிரஷ்ஷை வாய்க்குள் போட்டுத் தேய்த்தபடி நடுத்தட்டுக்குள் மெளனமாக உலாத்திக் கொண்டிருந்தவன் ஆனந்தி எழுந்து சென்றதும் அவனும் வாளிக்கிணற்றுக்குப் புறப்பட்டு விட்டான். l o
குளித்துவிட்டு வந்தவன் உடுப்புகளை மாட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டான். கோட்டைக்கு வந்து சிலிங்கோவுக்கு முன்னால் வந்து யாரையோ எதிர்பார்த்த வண்ணம் கால்மணித்தியாலம் நின்றான். பிறகு ஏதோ நினைத்த வன் போல் ஒஸ்கொட் மாவத்தைக்கு வந்து யாரையோ தேடினான். காண
255 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 133
வில்லை போலும், திரும்பவும் பேமெண்டால் நடந்து வந்தான்.
கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டன. பேமெண்ட் வியாபாரிகள் தமது தெருக்கடைகளைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். கொழும்புச் சனமும், வெளியூர்ப் பிரயாணிகளும் கும்பல் கும்பலாய் பேமெண்டில் வழிய ஆரம் பித்தார்கள். வீதியில் ஒற்றை இரட்டைத் தட்டு பஸ்கள், கார்கள், வேன்கள், லொறிகள் இவற்றின் நடமாட்டமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புறக் கோட்டை தனது ஜீவத்துடிப்பான பரபரப்புக்குள் வழக்கம் போல் மூழ்கிக் கொண்டிருந்தது.
எதிரே வரும் ஆட்கள் மேல் விழிகளை மேயவிட்டபடி பேமெண்டால் நிதானமாக நடந்து வந்த ராசு புகாரிக்குள் நுழைந்து ஒரு டீயைக் குடித்துவிட்டு சிகரட்டுடன் வெளியே வந்து ஸ்டேசனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
சிறிது நேரம் கழிந்திருக்கும். ஒருவன் வேகமாக வந்து பக்கத்தில் நின்று "நீ வந்து வெகு நேரமா?" என்று ராசுவைக் கேட்டான்.
ராசு "ம்.' என்று முனகிவிட்டு 'உன்னைத் தேடி பேமெண்டில் இரண்டு மூன்றுதடவைகள் நடந்தாச்சுது' என்று விழிகளைத்திருப்பாமலே சொன்னான். 'வாஹிதைப் பார்க்கப் போனேன். ஆளைக் காணேல்லே. இங்கேதான் வந்திருப்பானோ, அல்லது வேறு எங்கேயாவது போய்ட்டானோ தெரியாது' என்று கூறிவிட்டு "சிகரட் இருக்குதா?' என்றான், வந்து நின்றவன்.
ராசு ஒன்றும் சொல்லாமல் பொக்கட்டிலிருந்து சிகரட்டை எடுத்துக் கொடுத்தான். அதைப் பற்றியவன் 'நீ ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய், உற்சாகத்தையே காணேல்லியே' என்றான்.
ராசு ஸ்டேசனைப் பார்த்துக் கொண்டு நின்றான். 'இரண்டு மூன்று நாளாய் ஒன்றும் சிக்கல்லே. உனக்கு அதுதான் டல்லா யிருக்குதாக்கும். எனக்கும் போரிங்காய்த்தான் இருக்குது. இன்று பத்து இருபது கையிலே எடுக்காம வீடு திரும்புகிறதில்லே என்ற முடிவோடுதான் வந்தேன். நேற்று விஜேக்குக் கூட ஒன்னும் கிடைக்கேல்லியாம்'
ராசு பேசவுமில்லை; விழிகளைத் திருப்பவுமில்லை. 'நான் கண்ணாஸ்பத்திரி பக்கம் போகப் போறேன். நீயும் வாறியா?" 'இல்லே. நான் இங்கே யாழ்தேவியைப் பார்த்திட்டுதான் மற்ற யோசனை' -ராசு திரும்பாமலே சொன்னான்.
ரயில்களிலிருந்து இறங்கி கும்பல் கும்பலாய் ஸ்டேசனுக்குள்ளேயிருந்து வந்த ஆட்களில் பலர் மஞ்சள் கோட்டுக்குள் இறங்கி எதிர்பக்கம் பேமெண்டில் ஏறினார்கள். ராசுவின் சகா யாரையோ கவனித்தவன் போல் அவனிடம் 'ரெடி' என்று கூறிவிட்டு விர்ரென்று எதிர்த்திசையில் பறந்தான்.
சுபைர் இளங்கீரன் 2S6

ஒரு நிமிஷந்தான். 'பிடி. பிடி. பிக் பொக்கட். ஒடுகிறான். ஆளை விடாதே." என்று பெரும் சப்தம் எழுந்தது. நாலைந்து பேர் மேற்கே ஓடினார்கள். பேமெண்டில் உள்ளவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்ப் பதற்காகக் கூடிவிட்டார்கள். ஸ்டேசனில் நின்றிருந்த ஒரு பொலிஸ் வேகமாய் நடந்து பேமெண்டில் ஏறி கும்பலைக் கலைக்கத் தொடங்கினான்.
இத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த ராசு விறுவிறுஎன்று கோட் டைக்கு நடந்து கபூர் பில்டிங்கில் வந்து நின்றான். பத்து நிமிஷம் சென்றி ருக்கும். 'ரெடி' என்று சொல்லிப் பறந்தவன். தெருக்களையெல்லாம் சுழன்றடித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தான்.
'எவ்வளவு? -ராசு கேட்டான். "பதினாறு, சில்லறை" என்று கூறியவாறே பொக்கட்டிலிருந்த நோட்டுக் களையும், சில்லறையையும் எடுத்து திரும்பவும் எண்ணிப் பார்த்து விட்டு எட்டு ரூபாயை ராசுவிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய ராசு "நீ இப்ப கண்ணாஸ் பத்திரிப் பக்கம் போகப் போறியா?" என்றான்.
'ஓம்' என்று சொல்லிய அவன் ஒரு நிமிஷத்தால் ராசுவைப் பிரிந்தான். ராகவும் மறுபக்கம் நேரே மெயின் வீதிக்கு வந்து பேமெண்டால் நடந்தான். சன நடமாட்டம் நெருக்கமாக இருந்தது. விழிகளைப் பரத்தியபடி வெகு நிதான்மாக நடந்து கொண்டிருந்தவன் எதிர்த்திசையில் வந்த ஒரு வேட்டிக் காரனோடு திடீரென்று மோதினான். மறுவிநாடி 'சொறி" என்று கூறிவிட்டு அந்த ஆள் முறைத்துப் பார்ப்பதற்குள் மின்னல் என மூன்றாம் குறுக்குத் தெருவுக்குள் புகுந்தவன் திரும்பிப் பார்த்தான். வேட்டிக்காரன் பின் தொடர்வதாகக் காணோம். இருந்தும் விரைவாக நாலாம் குறுக்குத் தெருவுக் குள் நுழைந்து லொறிகளுக்குள்ளும் கரத்தைகளுக்குள்ளும் இடையில் புகுந்து புகுந்து நடந்தான்.
'ராசு" என்று பின்னால் சப்தம் கேட்டது. விருட்டென்று திரும்பினான்.
அப்பா!
'வீட்டேயிருந்து வரும் போது குடிச்ச டீ வயித்திலே ஒன்னுமில்லே. கிண்டுது. ஏதாவது சில்லறை இருக்குதா?' என்று சோர்ந்து போன குரலில் கேட்டார் அருமைநாயகம்.
ராசு பொத்தியிருந்த கையை விரித்தான். இரண்டு ரூபாய்த் தாள் அவ னுடைய முகத்தில் ஒரு ஏமாற்றம் வெடித்தது. சிலவிநாடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் உடனே அதை அவரிடம் கொடுத்து விட்டு நடந்தான்.
* * * * *
257 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 134
பின்னேரம் கண்ணாஸ்பத்திரிச் சந்தியில் நின்று கொண்டிருந்தான் ராசு. வேலை முடிந்து வீடு திரும்புவோரும், ஆஸ்பத்திரிக்குப் போவோருமாய் நொய் நொய் என்று ஒரே சனம். பெரியாஸ்பத்திரி, டவுண்ஹோல், கண்ணாஸ் பத்திரி, லிப்டன் ஆகியவற்றுக்கு முன்னால் உள்ள பஸ்தரிப்பை நோக்கி சாரி சாரியாக போகும் சனம். அங்கெல்லாம் நீண்டு நிற்கும் கியூ.
எத்தனை வகையான மனிதர். எத்தனை விதமான உடைகள். எத்தனை ரகமான அலங்காரங்கள். எத்தனை விதமான தோற்றங்கள். றவுண்ட் எபவுட்டைச் சுற்றி வலம் வந்து நாலா திசைகளுக்கும் பிரிந்து செல்லும் வீதிகளில் வந்து போய்க் கொண்டிருக்கும் வாகன நெரிசல். பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து கொண்டிருந்தன.
டவுண்ஹோல் திருப்பத்தில் நின்றிருந்த ஒருவன் ராசுவுக்கு சைகை காட்டினான். அவன் இருபக்கமும் பார்த்துவிட்டு வேகமாக வந்தான், சைகை காட்டியவனுடன் கூட நின்ற மற்றும் இருவரும் ராசுவும் பஸ்தரிப்பை நோக்கி விரைந்தார்கள்.
ஆட்களை அள்ளித் திணித்துக் கொண்டு வந்த ஒரு ப்ஸ் தரிப்பில் நிற்காமல் சற்றுத் தள்ளி நின்றது. கியூவில் நின்றவர்களில் பலர் பஸ்ஸுக்காக ஓடினார்கள். ராசுவும் அவனுடைய சகாக்களும் கூட ஒடிப்போய் சனத்தோடு சனமாய் பஸ்ஸை மொய்த்தார்கள். முட்டி மோதிக் கொண்டு மிதிபலகையில் ஏறினார்கள்.
அன்றிரவு ராசு, தான் சொன்னபடி காந்திக்கும் செல்வத்துக்கும் கொப்பியும் பென்சிலும் வாங்க ஆளுக்கு ஒரு ரூபா கொடுத்தான்.
* 壹 * * *
அடுத்த நாள் விடிந்ததும் காலைக் காரியங்கள் வழமை போல் நடந்து கொண்டிருந்தன. கொப்பியும் பென்சிலும் கிடைத்தது மட்டுமல்ல, அவை வாங்கியது போக மீதிச் சில்லறைகளும் கையில் இருந்ததால் காந்தியும் செல்வமும் உற்சாகத்துடன் ஸ்கூலுக்குப் புறப்பட்டார்கள்.
பிரஷ் வாயில் இருக்க வாசலில் நின்ற ராசு அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
படுக்கையை விட்டெழுந்து கட்டிலில் இருந்த அருமைநாயகம் "நேத்துப் பின்னேரம் பஸார் முடிஞ்சு நாக்கை நனைக்கப் போனேன். நாசமாய்ப் போன யாரோ ஒரு பிக்பொக்கட் காரன் இருந்ததை உருவிக் கொண்டு போய்ட்டான். நேத்துத் தவறணையிலே சரியான சனம். இந்த நெரிசலுக்குள் தான் அந்தப் பிசிநாறிப் பயமவன் பொக்கட்டிலே கையை வச்சிருப்பான். அங்கேயுமில்லே இவங்க வந்து தங்க கைவரிசையைக் காட்டுறாங்க' என்று தனக்குத்தானே ஆனால் மற்றவர்களுக்கும் கேட்கத்தக்கவாறு சோகத்துடன் கூறினார்.
258

வாசலில் நின்ற ராசு முகத்தை உள்ளே திருப்பி, அப்பாவைப் புன் சிரிப்புடன் பார்த்து "நீங்க கவனமாய் இருக்க வேணாமா?" என்று கேட்டான். 'எப்போதும் எல்லாத்திலும் கவனமாயிருக்க முடியுமா மனுஷனுக்கு' என்றார் அவர்
'பிக்பொக்கட் காரங்களுக்கு அது நல்லாய்த் தெரியும்' 'அது தெரிஞ்சுதான் எடுத்திருக்கிறான்.'
'எவ்வளவு?' 'ரெண்டு, ரெண்டு ரூபாய் நோட்டு வச்சிருந்தன். போய்ட்டுது. நீ நேத்து தந்த ரெண்டு ரூபாயிலே ஐம்பது சதத்துக்கு வயித்திலே போட்டுட்டு, மிச்சம் ஒன்னரையையும் வேட்டித் தலைப்பிலே முடிஞ்சு வைச்சிருந்தன். அதுதான் கள்ளுக்கு உதவிச்சுது' என்று மகனின் கேள்விக்கு விடைபகர்ந்தார் அருமை நாயகம்.
ராசு அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. பின்னால் போய் வாயைக் கழுவிக் கொப்பளித்துவிட்டு நடுத்தட்டுக்கு வந்து மேசையிலிருந்த தேனீரைக் குடித்தான்.
தந்தை கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்திக்கு பிக்பொக்கட்காரர் களிடம் காசையும் பொருளையும் பறிகொடுத்தவர்களின் கதைகள் பல ஞாப கத்துக்கு வந்தன. அவற்றை எண்ணியவாறே பின்தட்டுக்குச் சென்று தேனீர் எடுத்துக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்துவிட்டு அவரை அனு தாபத்துடன் பார்த்தாள்.
கிறிஸ்மஸ் அன்று டேவிட் வீட்டுக்கு அவள் போனதிலிருந்து குடியைப் பற்றி அவன் கூறியதைக் கேட்டதிலிருந்து அப்பாவிடம் ஆனந்திக்கு இருந்த கசப்பு ஓரளவு குறைந்து விட்டது. அவர் குடிப்பதை இப்போதும் கூட அவள் வெறுக்கத்தான் செய்தாள். ஆனால் அவரை வெறுக்கவில்லை. அன்புடன் நடந்து கொண்டாள். அவர் காசு கேட்டால் முகத்தைச் சுளிக்காமல், மனம் குமுறாமல் இருந்தால் கொடுத்து விடுவாள். இப்போது பிக் பொக்கட் காரனிடம் காசு பறிகொடுத்ததை அவர் துயரத்துடன் கூறியதும் அவளுக்குப் பரிதாபமாயிருந்தது.
'நீங்கள் ஏன் காசை பொக்கட்டில் வைச்சிருந்தீங்க, வேட்டியில் முடிஞ்சு, வைச்சிருக்கலாந்தானே?' என்றாள் ஆனந்தி.
'இந்த நினைப்பு வரேல்லே. சனியனை விடு' என்று கூறிவிட்டு தேனீரைக் குடித்தார்.
"இந்த பிக்பொக்கட் காரங்களின் அநியாயம் கூடிப் போச்சுது. இவங்களை இன்னும் அடக்க முடியேல்லே. இவங்க ஆட்டத்துக்கு ஒரு முடிவு வராதா?" என்றாள் ஆத்திரத்துடன்.
259 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 135
தேனீரைக் குடித்துவிட்டு வாளிக்கிணற்றுக்குப் புறப்பட்ட ராசு அக்காவை அவளுக்குத் தெரியாமலே ஒரு முறைப்பு முறைத்துக் கொண்டு வெளியே இறங்கினான்.
குளித்து விட்டு திரும்பிய அவன் உடுப்பைப் போட்டுக் கொண்டு வெளிக்கிட ஆயத்தமானான். சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவன் பொக்கட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்து அக்காவிடம் கொடுத்தான்.
ராசுவிடம் காசு புழங்கும் போது இடையிடையே அக்காவுக்கும் கொடுப் பது வழக்கம். ஆனந்தி கேட்டும் வாங்கியிருக்கிறாள். சில சமயங்களில் 'உனக்குக் காசு ஏது?' என்றும் கேட்டிருக்கிறாள். அந்த ஃபிரண்ட் தந்தான்; இந்த ஃபிரண்டிடம் வாங்கினேன் என்று சொல்லி விடுவான். ஆனந்தியும் அதை நம்பி விடுவாள்.
இப்போது அவன் கொடுத்த காசை வாங்கிக் கொண்டே 'இதுவும் ஒரு ஃபிரண்டிடம் வாங்கியதாக்கும்?' என்று ஒரு கேள்வியைப் போட்டாள்.
ராசு ஒன்றும் பேசவில்லை. 'உனக்கு காசு தாரதுக்கு நிறைய சிநேகிதமார் இருக்கிறாங்க. அதனால் தான் ஒரு முயற்சி, ஒரு வேலை என்றில்லாமல், இதில் சுகத்தைக் கண்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாய்" என்று அப்பாவித்தனமாய்ச் சொன்னாள்.
ராசு அதற்குப் பதில் சொல்லாமல் வெளிக்கிட்டு விட்டான்.
鲁 * * 好 好
ஒருநாள் ராசு அக்காவிடம் 'உன் வேலை விஷயமாய் ஒரு இடத்துக்குப்
போக வேணும். நீயும் வா...' என்றான்.
ஆனந்தி திகைத்தே போனாள். இதுவரை இல்லாத அக்கறை ஒரு கவனம் தன் தம்பிக்கும் வந்து விட்டதைக் கண்டு திகைப்பு மட்டுமல்ல, ஆச்சரியமும் ஏற்பட்டது. தான் அன்றைக்குச் சொன்னது அவனுடைய மனசில் அழுத்தமாய் விழுந்திருக்கவேணும். அதுதான் பிள்ளை தன்னைப் பற்றியும் சிரத்தை எடுத்திருக்கிறான் என்று எண்ணி மகிழ்ந்து போனாள், 'எந்த இடத்துக்கு யாரைப் பார்க்கப் போகவேணும்' என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
'ஒரு ஃபிரண்டு வரச் சொல்லியிருக்கிறான். போனால் தெரியுந்தானே?" ஆனந்தி உற்சாகத்துடன் தன் சகோதரனுடன் புறப்பட்டு விட்டாள். இருவரும் புதுச் செட்டித் தெருவுக்கு வந்து ஒரு வீட்டுக்குச் சென்றார்கள். வாசலில் நின்ற ஒரு வாலிபன் 'அரை மணித்தியாலமாய் உன்னைக் காத்துக் கொண்டு நிற்கிறேன்' என்று கூறிவிட்டு இவங்கதான் உன் அக்காவா? என்று
கேட்டான்.
சுபைர் இளங்கீரன் 260

ராசு தலையை ஆட்டிவிட்டு அக்காவிடம் இவன் என் ஃபிரண்ட் விசு. அதாவது விசுவநாதன்' என்றான்.
விசு ஆனந்தியைப் பார்த்துப் புன்னகை செய்தான். 'முதலாளி உள்ளே தான் இருக்கிறார். நான் சொல்லி வைச்சிருக்கிறேன். வாங்க' என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.
முதலாளிக்களையுடன் வாட்ட சாட்டமாக இருந்த ஒருவர் அவர்களை 'இருங்க" என்றார்.
அவரைப் பார்த்ததும் ஆனந்தி சற்றுத் துணுக்குற்றாள். அவரை எங்கேயோ கண்டது போலிருந்தது. அதை நினைவு கூர்வதற்குள் விசு இருவரையும் அறிமுகப்படுத்த ஆரம்பித்தான். M
"இவன்தான் என் ஃபிரண்ட் ராசு, இவன்ர அக்காதான் இவங்க. நான் இவங்களைப் பற்றித்தான் உங்களுக்குச் சொன்னேன்' என்று கூறிவிட்டு எழுந்தவன் 'நீ வா. அவங்க கதைக்கட்டும்' என்று ராசுவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அந்த மனிதர் ஆனந்தியை மேலும் கீழும் பார்த்து விட்டு பேசத் தொடங்கி னார். 'இங்கே டைப்பிஸ்ட் வேலை தாரதுக்கு உன்னைக் கூப்பிடேல்லே. வேறொரு வேலை இருக்குது. நம்பிக்கையோடு செய்ய வேணும் முடியுமா?"
'எது என்று சொன்னால் நல்லது.' 'கஷ்டமான வேலையல்ல. ஓரளவுக்கு ஜொலியான வேலையும் கூட' என்று மெல்லச் சிரித்தவாறு கூறினார் அவர்.
ஒரு நொடிக்குள் ஆனந்திக்கு ஆயிரம் எண்ணங்களும் சந்தேகங்களும் எழுந்து விட்டன. மனேஜர், டைரக்டர் ஆகியோரின் ஞாபகம் கூட வந்து மறைந்தன. கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தாள்.
'அதாவது முதல்லே நீ அடிக்கடி இந்தியாவுக்குப் போய் வரவேணும். அங்க நம்ம ஆட்கள் இருக்கிறாங்க. அவங்க தாரதைக் கொண்டு வரவேணும். அநேகமாய்ச் சாரிகளாய்த்தான் இருக்கும். நீ போய் வாரதுக்கு, அங்கே தங்கிறதுக்கு நாங்க சகல ஏற்பாடுகளும் செய்து தருவோம். முதல் லே f போகும் போது உன்னோடு ஒரு ஆள்வந்து எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். நீ அங்கே அதிகமாய் ஒன்னும் செய்ய வேண்டியிருக்காது. வாரபோது கஸ்டம்ஸ் மட்டும்தான் பிரச்சினை. அதைத்தான் கெட்டித் தனமாய்ச் சமாளிக்க வேணும். அதை என்ன மாதிரிச் சமாளிக்க வேணும் என்கிறதையும் சொல்லித்தருவோம். இதை நீவெற்றிகரமாய்ச் செய்தால் பிறகு சிங்கப்பூர், ஹொங்கொங் எல்லாம் பிளேன்லே போய் வரலாம். நான் தவறாய்ச் சொல்கிறதாக எண்ணப்படாது; கூச்சப்படவும் வேணாம். நீ அழகாயிருக்கிறாய். இங்கிலீஷ0ம் உனக்கு நல்லாய்த் தெரியும் என்று
261 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 136
அறிந்தேன். இந்த ரெண்டும் இந்த பிஸ்னஸ்ஸிலே உனக்கு நல்ல உதவியாய் இருக்கும். நீ பயப்படத் தேவையில்லே. உனக்கு ஒரு ஆபத்தும் வராம நாங்க பார்த்துக் கொள்ளுவோம். செலவுகள் எல்லாம் எங்களைப் பொறுத்தது. ஆனா உனக்குச் சம்பளம் என்று தரமாட்டோம். கொமிஷன் தான். கொமிஷன் என்றால் நூற்றுக் கணக்கிலும் இருக்கும். ஆயிரக் கணக்கிலும் இருக்கும். அது உன் கெட்டித்தனத்தையும், உன் லக்கையும் பொறுத்தது.
'இந்த பிஸ்னஸ்ஸிலே நீ எங்களுக்கு மிகவும் நம்பிக்கையாக நடந்து கொள்ள வேணும். நம்பிக்கையான ஆள் என்று விசு சொன்னதனால் தான் உன்னோடு இந்த பிஸினஸ்ஸைப்பற்றிப் பேசுகிறேன். உன் அபிப்பிராயம் என்ன?"
அவர் சொல்லச் சொல்ல ஆனந்தி கேட்டு விறைத்துக் கொண்டிருந்தாள். மனசுக்குள் என்னவோ செய்தது. பயத்தால் மேனி நடுங்கியது. என்ன பதில் சொல்வது என்று யோசிக்கக் கூட அவளால் முடியவில்லை. உடனே அந்த இடத்தை விட்டு வெளியே ஓடவேண்டும் போலிருந்தது. ஆனால் ஓடவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவித்தாள்.
'என்ன யோசனை?"
A
- - - நான் நாளைக்கு வந்து முடிவு சொல்கிறேனே..?" "சரி. இந்த விஷயம் யாருக்கும் தெரியப்படாது. தெரிஞ்சால் எங்களுக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடாது. ஆனா உனக்குத்தான் கஷ்டம்' என்று எச்சரிக்கப் படுவது போல் கூறினார் அந்த மனிதர்.
ஆனந்தி வேகமாக வெளியே வந்தாள். அந்த மனிதரும் பின்னால் தொடர்ந்தார். வாசலில் ராசுவும் அவனுடைய நண்பனும் நின்றிருந்தார்கள். 'ன்ேன சரியா?" என்று விசு சிரித்தபடி ஆனந்தியிடம் கேட்டான். அவள் ஒப்புக்கு ஏதோ தலையை ஆட்டி விட்டு தெருவில் இறங்கினாள்.
விசு அவரைப் பார்த்து 'சரி, நான் வாறேன் முதலாளி' என்று விடை பெற்றுக் கொண்டு இருவரோடும் பேசியவாறு நடக்கத் தொடங்கினான்.
'இவங்க பிஸ்னஸ் எப்படித் தெரியுமா..! லட்சம் லட்சமாய் அடிக் கிறாங்க. நீங்களும் இவங்களிட்டே இருந்தா ஒரு சான்ஸ்தான். நான் முதலாளிக்கிட்டே உங்களைப் பற்றி நல்லாய்ச் சொல்லி வைச்சிருக்கிறேன். ராசுட அக்கா என்றால் என்ர அக்கா மாதிரித்தான். உங்களுக்கு ஒரு வேலை பார்க்கவேணும் என்று ராசு சொன்னதும் உடனே இந்த முதலாளியை வந்து சந்திச்சேன். நான் ஒரு ஆளைப்பத்தி இவரிட்டே சொன்னா மறு கேள்வி போடமாட்டார். நான் சொன்னா கரெக்டா இருக்கும் என்று அவருக்குத் தெரியும். என்னிலே அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. உங்களுக்கு இப்ப ஒரு ஸ்டார் வந்திருக்குது. புடிச்சிக் கொண்டீங்களென்றால் உங்களுக்கு நல்லது.
சுபைர் இளங்கீரன் 262

இப்படி ஒரு சான்ஸ் அது லேசிலே வராது, எல்லோருக்கும் வராது. வந்தா, வந்ததுதான். ஒரு தூக்குத் தூக்கி ஆகாசத்திலே வைச்சிடும். இந்த பிஸ்னஸ்ஸ்ே அப்படித்தான். புளங்கிறதெல்லாம் பட்டும் வைரமும்தான். கையிலே புளங்கிறதும் அப்படித்தான், லட்சம் லட்சமாய் புரளும்.'
விசு உற்சாகமாய் கூறிக் கொண்டே வந்தான். ராசு, ருசியாய்க் கேட்டுக் கொண்டே வந்தான். ஆனந்தி ஆத்திரத்தால் குமுறிக் கொண்டே வந்தாள். பஸ்தரிப்புக்கு வந்ததும் 'அப்ப ராசு நான் ஒருக்கா பொரளைக்குப் போக வேணும். நாளைக்குச் சந்திப்போம்" என்று கூறிவிட்டு ஆனந்தியைப் பார்த்து 'நீங்க இதை விட்டிடாதீங்க. சான்ஸ் வந்தா புடிச்சுக் கொள்ள வேணும். நான் வரட்டா' என்று விடை பெற்றுக் கொண்டு நடந்தான்.
好 好 好 好 好
எவ்வளவு உற்சாகத்தோடு ஆனந்தி புறப்பட்டாளோ, அதையும் விடச் சோர்வோடும், ஏமாற்றத்தோடும், ஆத்திரத்தோடும் திரும்பினாள். வழியில் ராசுவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
வீட்டுக்கு வந்ததும் ராசுதான் கேட்டான். 'போன விஷயம் என்ன?”
"நம்மைக் கூட்டிப் போனானே, உன் சிநேகிதன், அவன் என்னமாதிரி ஆள். அவனுக்கு என்ன வேலை? முதல்லே அதைச் சொல்லு?' என்று கடுகடுத்தாள்.
"ஏன் என்ன சங்கதி?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் ராசு.
'கேட்கிறதுக்குச் சொல்லேன்?"
'அவன் அந்த முதலாளியுடைய ஏஜென்ட் மாதிரித்தான். அதை இதை வாங்கி விற்பான். எனக்காக உசிரையும் கொடுப்பான்.'
'ஒ. . . . . நல்ல சிநேகிதன் தான். நல்ல ஏஜெண்டுதான். அவன்தான் உனக்கும் இடைக்கிடை காசு தாரானாக்கும்' என்றாள் வெறுப்புடன்.
'அது இருக்கட்டும். அவர் என்ன சொன்னார்?"
"நீயும் உன் ஃபிரண்டும். போயும் போயும் நல்ல அருமையான வேலைக் குத்தான் கூட்டிக் கொண்டு போனிங்க!'
ராசு அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
"வேலையா அது. தூ.' என்று முகத்தைச் சுளித்துத் துப்பினாள்
ஆனந்தி.
'உனக்கு ஏன் இப்படி வருகுது?' என்று மேலும் ஆச்சரியத் தோடு கேட்டான் ராசு.
263 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 137
"வேறென்ன, இப்படி வராம வேறு எப்படி வரும்? கள்ளக் கடத்தல் வேலைக்கு ஒரு பெண் தேவையென்றால் அதுக்கு நான்தானா ஆள்? பிஸ்னஸாம். இந்தியாவாம். ஹொங்கொங்காம். சீ. அந்தக் கள்ளக் கடத்தல்காரனை விட உன் ஃபிரண்டு அதுக்கு மேலே. அவன் என்ன மாதிரி அளந்தான். தனக்கும் நான் அக்கா மாதிரித்தானாம். அதோடு விட்டானா. சான்ஸ், ஸ்டார், பட்டு, வைரம், லட்சம் என்றெல்லாம் கொட்டி விட்டான் கொட்டி.'
ஆனந்தியின் குரலில் வெறுப்பும் ஏளனமும் வெடித்தன.
அக்கா இப்படிச் சொன்னது ராசுவுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அக்காவை எதற்கும் எதிர்த்துப் பேசாதவன் ஆத்திரத்தோடு கூறினான். 'நீ அவனை இப்படிப் பேசுகிறது சரியில்லே. அவன் சொன்னதிலே என்ன பிழை? இந்தப் பிஸ்னஸ்ஸிலே நீயும் சேர்ந்தா என்ன கெட்டுப் போயிடும் ? எத்தனை பொம்பிளைகள் இந்த பிஸ்னஸ்ஸிலே சேர்ந்து சம்பாதிக்கிறாங்க. இப்ப நாம போன இடம் சாதாரண இடமல்ல. பெரிய கம்பெனியாய் பிஸ்னஸ் நடத்துகிற ஆட்கள். இவங்க கிட்டே கூட பல பொம்பிளைகள் வேலை செய்கிறாங்க. நல்லாச் சம்பாதிக்கிறாங்க. இன்றைக்குப் பெருமளவு நடக்கிற பிஸ்னஸ் இதுதான். பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் இந்த பிஸ்னஸ்தான். லட்சக்கணக்காய் சம்பாதிக்கிறாங்க. நீயும் இதிலே சேர்ந்தா நம்ம கஷ்டமெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போகும். இந்தச் சந்துக்குள்ளேயும் இந்த மூணு தட்டுக்குள்ளேயும் கிடந்து புழுங்கத் தேவையில்லே. ஒரு வருஷத்திலே கொள்பிட்டியிலே, பம்பலப்பிட்டியிலே ஒரு பஸ்ட் கிளாஸ் வீடு, அமெரிக்கன் பெட்டன்லே."
ஆனந்திக்குப் பத்திக் கொண்டு வந்தது. 'டேய். டேய். போதும் நிறுத்து. உனக்கு இந்த ஆசையெல்லாம் இருக்குதென்று இன்றைக்குத்தான் தெரியுது. குறுக்கு வழியிலே பணம் சம்பாதிச்சு, இப்படியெல்லாம் வாழலாம் என்கிற ஆசையை இப்ப கூட்டிப் போனானே உன் சிநேகிதன், அவன் தான் விதைச்சு விட்டானாக்கும்?"
"யாரும் ஏன் விதைக்க வேணும்? நம்ம கண்ணால் பார்த்தாலே தெரியுதே. குறுக்கு வழியிலே சம்பாதிச்சுத்தான் எல்லாரும் பெரிய புள்ளியாக கண் ணுக்குப் படுகிற ஆளாய் சந்தோஷமாய் வாழ்கிறாங்க"
"ஓ. அப்ப நீயும் அந்தத்திசையிலே போவாய் போலிருக்குது?" 'சான்ஸ் கிடைச்சா நிச்சயமாய்ப் போவேன்' -உறுதி தொனிக்கக் கூறினான் ராசு.
ஆனந்தி திகைப்போடும் திகிலோடும் அவனைப் பார்த்தாள். "ராசு நமக்கு இந்த வழியும் இந்த ஆசையும் வேணாண்டா, நேர்மையாய் உழைச்சு கண்ணி யமாய் வாழ்கிற ஆசைதான் இருக்க வேணும்" என்று உருக்கமாய்க் கூறினாள்.
சுபைர் இளங்கீரன் 264

ராசு ஏளனமாகச் சிரித்தான். "வேறென்ன வழி இருக்குது? இருந்தா, நீ ஏன் இப்படித் திண்டாட வேணும்; நர்ம ஏன் இந்த நிலைமையிலே இருக்க வேணும்?'
'அதுக்காக நாம தவறான வழியிலா போக வேணும்?"
'நல்ல மாதிரி வாழ்கிறதுக்கு அந்த வழி ஒண்ணு தான் இருக்குது' -இவ்வாறு கூறிவிட்டு பின்தட்டுக்குப் போனான் ராசு.
இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளை காதில் வாங்கியவாறு சமைய லில் ஈடுபட்டிருந்த வசந்தி, ராசு வந்ததைப் பார்த்ததும் 'என்ன ரெண்டு பேருக்கும் பெரிய தர்க்கம்?' என்று கேட்டாள்.
'அவவுக்கு விசர். பசிக்குது சாப்பாடு முடிஞ்சுதா?” "அவ அப்படித்தான். தனக்குச் சரியென்று படுகிறதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பா, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பும் கூட' என்று அடங்கிய குரலில் கூறியவள் 'பத்து நிமிஷம் பொறு. அடுப்பிலே சொதி இருக்குது. அது இல்லாமல்தான் உனக்கு இறங்காதே." என்றாள். o
ராசு முன்தட்டுக்குத் திரும்பி வந்து அப்பாவின் கட்டிலில் படுத்துக் கொண்டு காலுக்கு மேல் கால் போட்டவாறு முகட்டைப் பார்த்த வண்ணம் ஏதோ யோசனையில் மூழ்கினான்.
* * 好 # *
ஆனந்திக்கு இப்போது ராசுவைப் பற்றிய கவலை தொடங்கி விட்டது. அவனுடைய நினைப்பும் பேச்சும் அவனுடைய பாதையை அவளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன. தன்னைக் கூடக் கள்ளக் கடத்தல் காரியாக்க ராசு கூச்சப்படாதது மட்டுமல்ல, அதை நியாயப்படுத்தவும், அதை அடித்துச் சொல்லவும் கூடத் துணிந்து விட்டதை எண்ணியதும் மனம் கவலையால் கலங்கியது.
நான் எண்ணியதுக்கு மாறாக வசந்திதான் ஒரு பாதையில் போய்ட்டாள் என்றால் தானும் ஒரு பாதையில் போகிறேன் என்கிறானே, இவர்களுக்காக நான் உருகி உருகிச் சாகிறேன். இவர்களுக்காகவே வாழவேணும் என்று நினைக்கிறேன். இவர்கள் என்னைப் பொருட்படுத்தாம இப்படிப் போகிறார் களே!. இவர்களுக்கு எது சரி, எது பிழை என்று தெரியேல்லியா? இந்த ஆசைகளும் உணர்ச்சிகளும் ஏன் இவர்களுக்கு வருகுது. எனக்கு ஏன் வரேல்லே.
இவங்களை விட்டு நான் பிரியக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனா தங்களை நான் கட்டி வைச்சிருக்கிற மாதிரியும், அந்தக் கட்டிலிருந்து தப்பி ஓட
265 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 138
வேணும் என்கிற மாதிரியும் எண்ணிக்கொண்டு பிரிஞ்சு ஓடப் பார்க் கிறாங்களே. இது என்ன கூத்து. 矩
நாளைக்கு காந்தியும் செல்வமும் கூட இப்படித்தான் பிரிஞ்சு ஒடு வார்களோ?. இவர்களுடைய நன்மை, இவர்களுடைய வாழ்க்கை, இவர்களுடைய எதிர்காலம் எல்லாம் என்தலையிலே விழுந்து கிடக்குது என்று நான் தான் வீண் கற்பனை செய்கிறேனோ. அப்ப குடும்ப பாசம் என்கிறது அர்த்தமில்லாத ஒன்றா?. இப்படியெல்லாம் ஏன் நடக்குது? பிழையான போக்கிலே இவர்கள் ஏன் போக வேணும்?.
ஆனந்திக்கு தலை சுற்றியது. மனம் தைத்தது. ஒன்றுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. சாப்பிடக் கூட மனசு வரவில்லை. படுத்துவிட்டாள். நித்திரையும் வந்துவிட்டது.
பின்னேரம் சுபத்திரா வந்து எழுப்பிய பிறகுதான் அவள் கண் விழித்தாள். "என்னடி அசந்த தூக்கம். நீஇந்தமாதிரி நித்திரை கொள்கிறதுக்காகத்தான் வேலையை விட்டாயாக்கும்?"
ஆனந்தி கண்ணைக் கசக்கிவிட்டு சுபத்திராவைப் பார்த்தாள். "வேலையை விட்டால் போல என்ன? விடப்போய்த்தான் இப்ப எனக்கு ஸ்டார் ஒன்று வந்திருக்குது. இனி நான் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங் என்று பிளேன்லே பறந்து திரியப் போகிறேன். பட்டும், வைரமும், லட்சக் கணக்கிலே பணமும், கொள்பிட்டியில் அமெரிக்கன் பெட்டன்லே பங்களாவும். அதைச் சொல்ல ஏலாது போ...'
சுபத்திரா கலகல எனச் சிரித்தாள். 'நல்ல அருமையான கனவடி, உன் கனவை நான் ஒருத்தி வந்து குழப்பிப் போட்டேனே. இந்த மாதிரியான கனவு உனக்கு வரும் என்று தெரிஞ்சிருந்தா நான் இப்ப வந்திருக்கவே மாட்டன்.'
வசந்தி இடையில் குறுக்கிட்டாள் 'நீங்க நினைக்கிற மாதிரி அக்கா கனவு காணேல்லே, நனவுதான்' என்று சொல்லிச் சிரித்தாள்.
'என்ன அக்காவும் தங்கையும் ஒன்றாய்க் கனவு கன்டீங்களா? சரி, சரி நல்லாய்க் காணுங்க.." என்று சொல்லிவிட்டு ஆனந்தியின் பக்கம் திரும்பி 'மிச்சக் கனவை இரவைக்குக் காணலாம். இப்ப கிளம்பு' என்றாள்.
'எங்கே?'
'கேள்வியை வீசாம வா, சொல்கிறேன்'
ஆனந்தி எழுந்து பைப்புக்குச் சென்று திரும்பி வந்தாள். இப்போது வயிறு பசித்தது. அதிலும் சிறிது நேரம் கழித்துவிட்டு உடுத்திக் கொண்டு சுபத்திராவுடன் வெளியே புறப்பட்டவள் "இப்ப நாம எங்கே போகிறோம்?' என்று கேட்டாள்.
di oo
ஃபிளவர் றோட் வரை போக வேணும்"
சுபைர் இளங்கீரன் 266 |

'அப்ப பஸ் வேணாம். பேசிக் கொண்டே நடக்கலாம். அவ்வளவு தூரமில்லைத்தானே?"
'சரி. உன் விஷயமாய் நடக்கிறதிலே எனக்கென்ன வருத்தம். '
'என் விஷயமா?"
'ஓம். ஒரு இடத்திலே உனக்கு டியூஷன் பிடிச்சிருக்கிறேன். இரண்டு பிள்ளைகள். மாசம் எழுபத்தைஞ்சு கிடைக்கும். சும்மா இருக்கிறதை விட ஒரு வேலை கிடைக்கும் வரை இது ஒரு ஆறுதலாயிருக்கும்.'
'அந்த இரும்புக் கடை விஷயம் என்னாச்சுது?"
'இரும்பாய்த்தான் இருக்குது. இன்னும் இளகேல்லே. அது இளகிற நேரம் இளகட்டும். இப்ப நீ டியூசனைப் பாரு'
'இன்றைக்கு நடந்ததை நினைச்சா இந்த டியூஷனெல்லாம் ஒரு பொடி விஷயம்'
'என்ன புதிர் போடுகிறாய்?" 'நான் கூறியதை கனவு என்று சொன்னியே, அது கனவல்லடி. விஷ யத்தைக் கேட்டா நீ அசந்து போவாய்."
சுபத்திரா ஆச்சரியமும் ஆவலுமாய் 'சுற்றி வளைக்காம சுருக்கமாய்ச் சொல்லு' என்றாள்.
ஆனந்தி அன்று நடந்ததையெல்லாம் கூறிவிட்டு 'இந்த பிஸ்னஸ்ஸிலே இறங்கினா எனக்கென்ன பஞ்சம்' என்றாள்.
இதைச் சொன்னதும் சுபத்திரா சட்டென்று நின்றாள்.
'ஏன் நடையை நிறுத்தீட்டாய்?" 'இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங் என்று பறந்து திரிய வேண்டிய உனக்கு டியூசன் எதுக்கு?. திரும்பு'
'பகிடி போதும் வா. 'பார்க்கப் போனா எல்லாத்தையும் விட இது நல்ல உத்தியோகம். அந்த கள்ளக் கடத்தல்காரன் சொன்னது போல ஜொலியாகத்திரியலாம். ராசுவின் ஃபிரண்ட் ஸ்டார் என்றானே. அது இப்ப உன்தலையிலே விழுந்திருக்குது. லட்சம் லட்சமாய் வரப் போகுது. கொள்பிட்டியிலே அமெரிக்கன் பெட்டன்ல பங்களா..நான் என்ன, உன் டேவிட் கூட கிட்ட நெருங்க ஏலாது.
'நீ இப்ப நடக்கப் போறியா இல்லையா?” சுபத்திரா நடக்கத் தொடங்கினாள். ஆனந்தி தொடர்ந்து சொன்னாள்: "அந்த முதலாளி சொன்னது இருக்கட் டும். ராசு கூறியதைச் சொன்னேனே, அதை நினைக்கிற போதுதாண்டி எனக்கு
267 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 139
என்னவோ செய்யுது.'
"அவனிலே பிழையில் லே ஆனந்தி. அவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அதுதான் இப்பநடக்குது. ஸ்மக்ளிங், பிளக் மார்க்கட், லஞ்சம் இந்த முப்பெரும் கோட்பாடுதான் இன்றைக்குப் பெரும் பெரும் ஆட்களை யெல்லாம் வழிநடத்துது. கூட்டங்களில் இந்த மூன்றையும் எதிர்த்துக் கண்டிச்சு பேசுகிற பெரிய அரசியல்வாதிகள், கனவான்கள், சமூக ஒழுக்கத்தின் காவலர்கள் தாங்கள் தான் என்று மார்தட்டுகிறவர்கள் இப்படி அவர்கள் எல்லாம் இந்தக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறபோது, ராசுவும் அதைத்தான் செய்யப் போகிறேன் என்று சொல்கிறதிலே என்ன தப்பு?"
சுபத்திரா ஆத்திரத்தோடு கூறினாலும் அதில் நிறைந்திருந்த நக்கலைக் கண்டதும் ஆனந்தி சிரித்துவிட்டாள். தொடர்ந்து 'ஒ. கூட்டம் என்றதும் இப்பதான் எனக்கு ஞாபகம் வருகுது. அந்த ஆளை எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது என்று சொன்னேனே, அது சரஸ்வதி ஹோலிலே நடந்த ஒரு நாட்டிய அரங்கேற்றத்தின் போது தான். நீ என்னையும் அதுக்குக் கூட்டிப் போனியே, நினைவிருக்குதா. அப்ப எல்லாரையும் வரவேற்றுப் பேசியவர் இந்தக் கள் ளக்கடத்தல் முதலாளிதான். அவர் பேசியது இப்பவும் என்காதில் நிற்குது. கலை, கலாச்சாரம், பண்பாடு, தேசப்பற்று என்றெல்லாம் விளாசித் தள்ளினாரே'
'அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தங்களுடைய தேசப் பற்றை இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங் என்று வெளிநாடுகளுக்கெல்லாம் காட்டுகிற இவர்களுக்குச் சிலைதான் வைக்கவேணும்'
'உன் நக்கல் போதுமடி. இப்ப ராசுவைப் பற்றி கொஞ்சம் சீரியஸா யோசியேன். '
"யோசிச்சு என்ன செய்கிறது? தப்பான வழியிலே நடக்க வேணாம் என்று உபதேசம் பண்ணுகிறதிலே பயனில்லே. உபதேசம், புத்திமதி, நன்நெறிப் பிரசங்கம் ஒன்றும் இந்தக்காலத்திலே எடுபடாது. இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துப்போகாதென்று கேட்கிறவர்களுக்குத் தெரியும், வாழ்க்கைப் போக்கு அப்படியிருக்குது. திட்டவட்டமான ஒரு மாற்றத்தை வாழ்க்கையிலே கொண்டு வராதவரை ஆர்வத்தோடு பற்றிப்பிடிக்கிற அளவுக்கு ஒரு மாற்றத்தைக் காட்டாத வரை அப்படித்தான் இருக்கும். இது இல்லாம உன் தம்பிக்கு உபதேசம் பண்ணினாலும் அது காத்தோடு கலந்து போகுமே தவிர மனசிலே தரிக்காது.'
'நீ சொல்கிறது விளங்குது , என்றாலும் அவனை இப்படியே விட்டு விடுகிறதா. ?"
'விடக் கூடாதுதான்.
好 菁 * * *
சுபைர் இளங்கீரன் 268

பதினைந்தாவது அத்தியாயம்
பத்திரா பிடித்துக் கொடுத்த டியூசன் ஆனந்திக்கு ஒரு சிறு ஆறுதலைக் கொடுத்தாலும் வேலை தேடும் படலம் தொடர் ந்து நடந்தது. டேவிட் உட்பட றோஸியும் மற்றவர்களும் * ஆனந்தியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனர்கள். வேலையைப் பற்றித்தான் அனைவரும் சுற்றிச் சுற்றிக் கதைத்தார்கள், யோசித்தார்கள். என்ன கதைத்தும் என்ன யோசித்தும் வேலை மட்டும் கிடைப்பதாயில்லை. ஆனந்தியின் வீட்டு நிலைமையோ நாளுக்கு நாள் படுமோசமாகிக் கொண்டு வந்தது. ஆனால் வசந்தியின் உற்சாகம் மட்டும் குறையவில்லை. அவள் மிகவும் கலகலப்பாகவே இருந்தாள். அவளிடம் இடையிடையே காசு புழங்கியது. அதைத் தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கும் செலவு செய்தாள். அது அவளுடைய ஃபிரண்ட் கொடுத்த காசுதான் என்று ஆனந்திக்குத் தெரியும். ஆரம்பத்தில் அந்தக் காசைக் கண்டு அருவருத்தவள் இப்போது அருவருக்கவுமில்லை; அதைப்பற்றி எதுவும் நினைக்கவுமில்லை. அவளைப் பற்றிச் சிந்தனை மட்டும் இருந்தது.
பிரிப்போயா, போயா என்றால் வசந்தியின் முகத்தில் ஒரு தனிக்களை வீசும். நிலத்தில் கால் நிற்காது. பரபரத்துக் கொண்டிருப்பாள். பின்னேர மானதும் அவளை வீட்டில் காண முடியாது. தன்னைக் கவர்ந்தவனிடம் அவனைக்கவர போய் விடுவாள்.
இப்போதும் கூட அவள் இரவு பத்துமணிக்கும் பதினொரு மணிக்கும் தான் வருவாள். அவளுக்கு அக்காவைப் பற்றிய அச்சமோ, தன்னைப் பற்றிய
269 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 140
அக்கறையோ துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனந்திக்கோ மனசு அடித்துக் கொண்டே இருந்தது.
அன்று போயா. வசந்தி குளுகுளுத்துக் கொண்டிருந்தாள். ஆனந்தியின் மனமோ குறுகுறுத்துக் கொண்டிருந்தது. தங்கையையே அடிக்கடி கவனித்தபடி இருந்தவள், காந்தியைக் கூப்பிட்டு, 'றகீமா வீட்டுக்குப் போய் ஒரு கொத்து அரிசி வாங்கிட்டு வா. கூப்பன் எடுத்த பிறகு திருப்பிக் கொடுக்கலாம்' என்று அவளை அனுப்பி விட்டு முன்தட்டுக்கு வந்தாள். அருமைநாயகம் இல்லை. ராசு தெருவுக்குப் போயிருந்தான். செல்வம் தன் கூட்டாளிமாரோடு சந்துக்குப் பின்னால் உள்ள சிறு முற்றத்தில் மாபிள் விளையாடிக் கொண்டிருந்தான்.
இப்போது வீட்டில் ஒருவருமில்லை என்று கண்டதும் வசந்தியிடம் வந்து, 'இன்றைக்குப் பின்னேரம் நீ வீட்டில் இருக்கமாட்டியே' என்று கவலையுடன் கேட்டாள்.
'உனக்குத் தெரியுந்தானே?" என்று மலர்ச்சியோடு கூறினாள் வசந்தி.
'தெரியும். ஆனா உனக்கும் அவனுக்கும் எப்போ கல்யாணமாகும் என்றுதான் தெரியேல்லே. நீ இப்படிப் போய்ட்டுப் போய்ட்டு வாறியே, அவனிடம் நீ கேட்கப்படாதா கழுத்திலே எப்போ தாலி ஏறுமென்று?"
'நான்தான் அன்னைக்குச் சொல்லி விட்டேனே, என்னைப் பற்றிக் கவலைப்பட வேணாமென்று. திரும்பவும் ஏன் கேட்கிறாய்?" என்றாள் வசந்தி அலட்சியமாக.
'எனக்கு மனசு கேட்கமாட்டேங்குதேடி. கூடப் பிறந்த தோஷத்துக்காக வாவது நான் சொல் கிறதை மனசில் போட்டுக் கொள்ளக் கூடாதா? பூ முள்ளிலே பட்டாலும் சேதம், முள்ளு பூவிலே பட்டாலும் சேதம். இதை நினைச்சுப் பார்க்காம நீ நடந்தா. மூணு முடிச்சு கழுத்திலே விழுந்திட்டா, பிறகு நான் கவலைப்படவே மாட்டேன். நீ என்னதான் சொன்னாலும் அதுவரைக்கும் என் மனசு அடித்துக் கொண்டுதான் இருக்கும். அங்கே சுவரிலே இருக்கிற அம்மாவைப் பாரு. அவ போகிற போது உங்களுக் கெல்லாம் ஒரு சேதமும் வராதபடி நான் பார்த்துக் கொள்ளுவன் என்ற நம்பிக்கையோடுதான் போயிருப்பா. அந்த நம்பிக்கையை நான் காப்பாத்த வேணாமா?. நம்ம சகோதரங்கள் நம்ம சகோதரங்கள் என்று உங்களுக் காகத்தான் நான் கூட ஒருத்தருக்கும் வாழ்க்கைப் படக்கூடாது என்று இத்தனை நாளும் வைராக்கியமாய் இருக்கிறேன். நானும் உன்னைப் போல ஒரு பெண்தானே. என் மனசுக்குள்ளே கூட எத்தனையோ இருக்குது. ஆனா உங்களுக்காக அதையெல்லாம் அடக்கிக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு உனக்கு ஒரு சேதம் வந்தா நான் தாங்கிக் கொள்ளமுடியுமா..? நம்ம காந்தியையாவது நினைச்சுப் பாரு, உனக்கு ஒரு கேவலம் வந்திட்டா நம்ம குடும்பத்துக்கே அவமானந்தானே. அதுக்குப் பிறகு காந்தியை யாராவது
சுபைர் இளங்கீரன் 270

ஏத்துக் கொள்ளுவானா? நீ சற்று ஆர அமர யோசிச்சுப் பாரு. இப்ப நான் உன்னைக் குற்றஞ் சொல்லேல்லே. சுருக்குப் பண்ணி கல்யாணத்தை நடத்த வேணும் என்றுதான் சொல்கிறேன். என்னையும் சுபத்திராவையும் தலையிட வேணாம் என்று சொல்லிவிட்டாய். அதனர்லே நாங்களும் இதிலே முனைப் பாய் நின்று இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியாம இருக்குது. நீ தனியாய் இதை எப்படிச் சாதிக்கப் போகிறாய் என்றும் தெரியேல்லே. எண்ணிப் பார்த்தா மலைப்பாயிருக்குது. ஆனா நீ இதிலே கவனமாயிருந்து சீக்கிரமாய் முடிக்கத்தான் வேணும். உன்மேல் எனக்கு இருக்கிற பாசத்தாலே, அக்கறை யாலே நான் சொல்கிறதை நீதட்டிப் போடாதே கண்ணு.
ஆனந்தி தன் மனத்துடிப்பையெல்லாம் வார்த்தைகளாக்கி, உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து எழுந்த உணர்ச்சிகளையெல்லாம் கண்ணிராக்கி அதை விழிகளில் பொங்க விட்டபடி இத்தனையையும் குரல் தழதழக்கக் கூறி விட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
ஆனந்தி கூறியது வசந்தியையும் உருக்கி விட்டது. அவளுடைய தாமரை விழிகளிலிருந்தும் 'பொல பொல' என கண்ணிர் கொட்டியது. தமக்கை கூறியதையெல்லாம் கேட்டவாறு பதுமை போலிருந்தவள் 'அக்கா. ' என்றாள், தழதழத்த குரலில்.
ஆனந்தி அவளை ஏக்கத்தோடு பார்த்தாள். 'நீ எனக்காகத் துடிக்கிற துடிப்பும், படுகிற கவலையும் எனக்குத் தெரியுது அக்கா. ஆனா எப்படியோ எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுப் போச்சுது. அவர் என்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையோடு தான் இப்ப பழகிறேன். கல்யாணத்திலே எனக்கும் கருத்து இருக்குது. அவர் ஒரு சாதி ஆள். நம்ம விஷயத்திலே யாரும் தலையிடப்படாது என்று கண்டிப்பாய்ச் சொல்லிப் போட்டார். அதனால்தான் உன்னையும் சுபத்திரா அக்காவையும் இதிலே தலையிட வேணாம் என்று சொன்னேன். நான் இப்ப அவரிடம் தஞ்சமாய்ட்டேன். இனிமே நான் என்ன செய்யிறது! ஆனா நான் எதை நினைச்சும் கவலைப்படேல்லே. கவலை வரமாட்டேங்குது' என்றாள்.
வசந்தி கடைசி வசனத்தைச் சொன்னதும் ஆனந்திக்கு துயரத்துக்கிடை யேயும் சிரிப்பு வந்துவிட்டது. லேசாய்ச் சிரித்தாள். அதேசமயம், இத்தனை நாளுமில்லாமல் இந்த விஷயத்தை அவள் தன்னிடம் மனம் விட்டுப் பேசியது. ஆனந்திக்கு சற்று ஆறுதலாயிருந்தது அவளைக் கனிவோடு பார்த்து விட்டு, அருகே நின்று பரிவோடு அவளுடைய கண்ணைத் துடைத்துக் கொண்டே 'நீ ஒரு நூதனமான பெண்ணடி.' என்று சொல்லி முடிப்பதற்குள்
காந்தி வந்துவிட்டாள். அவளைக் கண்டதும் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டு பின்னால் சென்றாள் ஆனந்தி.
* * * * *
271 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 141
வசந்தியும் காந்தியும் சமையல் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந் தார்கள். வீட்டில் சும்மா அடைந்து கிடப்பது ஆனந்திக்கு அலுப்பாயிருந்தது. . காலையில் தனக்கு ஒரு அலுவல் இருப்பதாகவும் பின்னேரம் வீட்டுக்கு வருவதாகவும் சுபத்திரா சொல்லியிருந்தாள். தெஹிவலைக்குப் போனாலும் அவளைக் காணமுடியாது.
டேவிட்டின் நினைவு வந்தது. அவனைக் கண்டும் இரண்டு கிழமையாகி விட்டன. அவனைப் பார்த்து வரலாம் என்று வெளிக்கிட்டு விட்டாள். இடையில் ஒரு யோசனை.
இன்றைக்குப் போயா. அவர் வீட்டில் இருப்பாரோ, அல்லது எங்கே யாவது போயிருப்பாரோ.
டேவிட் வீட்டில் தான் இருந்தான். அம்மாவுடன் ஏதோ விஷயமாக சற்று சூடாக விவாதித்துக் கொண்டிருந்தவன், ஆனந்தியைக் கண்டதும் "வாங்க." என்று கூறிக் கொண்டே எழுந்தான்.
'ஏதோ முக்கிய விஷயம் போலிருக்குது. பேசிக் கொண்டிருந்ததை நான் வந்து குழப்பிப் போட்டேன்' என்று கூறியவாறே கதிரையில் அமர்ந்தாள் ஆனந்தி
'வித்தியாசமாய் ஒன்னுமில்லே. உங்களுக்கும் தெரிஞ்ச சங்கதிதான்' என்று கூறிவிட்டு அவனும் இருந்தான்.
'ஒ. ' என்றபடி அம்மாவைப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் துயர மும் லேசான கடுகடுப்பும் தென்பட்டன. டேவிட்டும் உற்சாகமில்லாதவனாக காணப்பட்டான். பளபளக்கும் விழிகள் அப்படியே இருந்தாலும் வசீகரிக்கும் அந்தப் புன்னகையைக் காணவில்லை. முகமும் சற்று வாடி இருந்தது. தான் இந்த நேரத்தில் வந்திருக்கப்படாதுஎன்று எண்ணினாள் ஆனந்தி. ஆனால் இனி என்ன செய்கிறது. சட்டென்று எழுந்து போவதா.
அவளுக்கு இருக்க முடியவில்லை. "நான் கொஞ்சம் ரீட்டாவின் கோழி களைப் பார்த்துவிட்டு வாறேன்' என்று விருட்டென்று எழுந்தாள். "அதைப் பிறகு பார்க்கலாம். நீங்க இருங்க' என்றான் டேவிட். அம்மாவும், "என்ன அவசரம். இரு பிள்ளே' என்று கூறியவள் இவளுக் கும் நீ சொல்லியிருக்கிறியா..?' என்று மகனிடம் கேட்டாள்.
டேவிட் தலையை ஆட் டிவிட்டு ஆனந்தியைப் பார்த்து ரீட்டாவின் கல்யாணத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லியிருந்தேனே, ஞாபகமிருக் குதா?' என்றான்.
'ஓ. நல்லாய் நினைவிருக்குது. அதுக்காக நீர்கொழும்புக்குப் போனது கூட ஞாபகமிருக்குது'
சுபைர் இளங்கீரன் 272

"அதைப்பற்றித்தான் இப்ப விவாதித்துக் கொண்டிருக்கிறோம்'
"அது இன்னும் முடிவாகேல்லியா?" அம்மா இடையில் குறுக்கிட்டாள். "முடிவு இவனிலேதான் தங்கியிருக்குது. அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
'அதிலே என்ன பிரச்சினை?' என்று டேவிட்டைப் பார்த்துக் கேட்டாள் ஆனந்தி.
அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அம்மா சொன்னாள். பிரச்சி னையை இவன்தான் எழுப்புகிறான். அவங்க ரீட்டாவுக்கு மாப்பிள்ளை தாரதென்றால், டேவிட்டும் தங்க வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரவேணும் என்று கேட்கிறாங்க. எங்களுக்கும் மறுப்புச் சொல்ல முடியாம இருக்குது. அந்தப் பெண்ணும் அழகானவ. படிச்சும் இருக்குது. குணமும் நல்லது. ரீட்டாவுக்கு நாங்க கொடுக்கிறதையும் விடக் கொஞ்சம் கூடத்தாரதாயும் சொல்றாங்க. இவனுக்கும் வயசாகிக் கொண்டு போகுது. இதையெல்லாம் பார்த்து எங்களுக்கும் விருப்பமாய் இருக்குது. இவன்தான் மறுக்கிறான். நீயே சொல்லு. இவன் மறுக்கிறது சரியா..?'
ஆனந்தி அதிர்ந்து விட்டாள். தான் டேவிட்டுடன் வாழமுடியாது, என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாலும், அவன் இன்னொருத்திக்கு கணவனாக வேண்டும் என்று நினைத்ததேயில்லை. இப்போது அதை நினைக்க ஏனோ உள்ளம் நடுங்கியது. பதில் சொல்லமுடியாமல் விழித்தாள்.
டேவிட், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அந்த வசீகரமான புன்னகை மலர்ந்திருந்தது.
தனக்குள் திணறிக் கொண்டிருந்த ஆனந்தி அவனையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தாள். 'இவர் ஏன் மறுக்கிறார், மறுக்கிறதுக்கு என்ன காரணம் சொல்கிறார்?' என்று சற்றுப் படபடப்புடன் கேட்டாள்.
'தனக்கு இப்ப கல்யாணம் வேணாமாம். நீர்கொழும்பு மாப்பிள்ளை இல்லாட்டாலும் இன்னொருவனைப் பார்த்துச் செய்து வைக்கிறேன், என்னை விடு' என்று பிடிவாதமாய்ச் சொல்கிறான். இன்னொருவனை ரீட்டாவுக்குத் தேடுவது எவ்வளவு கஷ்டம். அதோட இவனை இப்படியே விட்டுக் கொண் டிருந்தா கிழவனாகி விடுவான்' என்றாள் அம்மா.
சிறிதுநேரம் மெளனமாயிருந்த ஆனந்தி ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் 'அம்மா சொல்கிறது சரிதான். நீங்க மறுப்புச் சொல்லாம சம்மதம் கொடுங்க” என்றாள்.
டேவிட் மெல்லச் சிரித்தான். 'பார்த்தியா இந்தப் பிள்ளே கூடச் சொல்லுது' என்று அம்மா சிறிது உற்சாகத்தோடு கூறினாள்.
273 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 142
'அம்மா டீ போடுங்களேன்' என்று பேச்சைத் திசைமாற்றினான் டேவிட். 'ரீட்டா..!" என்று குரல் கொடுத்தாள் அம்மா. அவள் பின்புறமிருந்து வந்தாள். கிட்டத்தட்ட டேவிட்டைப் போன்ற உருவ அமைப்போடும் நல்ல நிறத்தோடும் உள்ள அவளைப் பார்த்தாள் ஆனந்தி.
'இவதான் ரீட்டா. நீங்க கிறிஸ்மஸ்ஸுக்கு வந்தபோது இவஇல்லே' என்று சொல்லிவிட்டு எழுந்தான் டேவிட்.
ஆனந்தி ரீட்டாவைப் பார்த்து புன்னகை செய்தாள். அவளும் அவளைச் சில விநாடிகள் அளந்து பார்த்துவிட்டுப் புன்னகை செய்தவள் அம்மாவின் பக்கம் திரும்பினாள். -
`le....... போடேன்."
'போடத் தேவையில் லே. ஃபிளாஸ் கில் இருக்குது' என்று உடனே திரும்பினாள்.
டேவிட் அறைக்குள் சென்று சாறனைக் களைந்துவிட்டு லோங்ஸையும் சேட்டையும் அணிந்து கொண்டு வருவதற்குள் ரீட்டா டீயைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள்.
'ஒரு முடிவும் சொல்லாமல் போறியே..?' என்று அம்மா கேட்டாள்.
டேவிட் டீயைக் குடித்துவிட்டு கிளாஸை மேசையில் வைத்துக் கொண்டே 'இவங்களோட அவசரமாய் ஒரு இடத்துக்குப் போக வேணும், வந்து யோசிப்போம்' என்று கூறியவன் ஆனந்தியைக் கிளம்பும் படி கண்ணால் சைகை காட்டினான்.
அவளும் டீயைக் குடித்துவிட்டு அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு
எழுந்தாள்.
* * * * *
பஸ்ஸுக்கு வந்து நிற்கும் போது டேவிட் கேட்டான்: "நீங்க ஏன் அம்மா விடம் இப்படிச் சொன்னீங்க?"
ஆனந்தி மெளனமாக நின்றாள். டேவிட் திரும்பி அவளுடைய முகத்தைப் பார்த்தான். அது வாடிக் கறுத்திருந்தது. விழிகள் கூட சோர்ந்திருந்தன.
'நீங்க ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறீங்க?"
ஆனந்தி பதில் சொல்வதற்குள் பஸ் வந்துவிட்டது. இருவரும் ஏறினார்கள்.
'நாம எங்கே போகிறோம்?"
'சிறிசேனாவின் வீட்டுப் பக்கம் போவோம். இங்கே ரீட்டா அம்மா எல்லோரும் இருக்கிறாங்க, இன்றைக்குப் போயா. ஆட்களும் வந்து
சுபைர் இளங்கீரன் 274

கொண்டிருப்பாங்க. நாம கதைக்க ஏலாது."
பஸ் களனிப் பாலத்தடிக்கு வந்ததும் இருவரும் பள்ளத்தில் இறங்கி
நடந்தார்கள். வழியில் சிறிசேனாவே வந்து கொண்டிருந்தான். கிட்ட
நெருங்கியதும் 'ஓ. எங்கள் வீட்டுக்குத்தானே..?' என்று சிங்களத்தில்
கேட்டான்.
டேவிட் தலையை ஆட்டினான். சிறிசேனா புன்னகை மலர ஆனந்தியைப் பார்த்து 'உங்கள் விஷயமாகத்தான் ஒரு ஆளைப் பார்க்க கிராண்ட் பாஸுக்குப் போகிறேன். நீங்க வீட்டுக்குப் போங்கள். நான் வரும் வரைக்கும் நீங்க இருக்க வேண்டும். மத்தியானம் எங்களோடு நீங்க சாப்பிட வேண்டும்' என்று கூறிவிட்டு தாமதிக்காமல் மேட்டுக்கு ஏறினான்.
ஆனந்திக்கு மனம் நெகிழ்ந்தது. தன்மீது இந்த ஏழைத் தொழிலாளர் களுக்குள்ள ஆழ்ந்த அன்பையும் அக்கறையையும் கண்டு மேனி புல்லரித்தது. அவன் விறுக் என்று ஏறிப் போவதையே ஒருநிமிடம் பார்த்துக் கொண்டி ருந்தாள். இமைகள் பனித்தன. டேவிட்டுக்குத் தெரியாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.
சிறிசேனாவின் குடிசைக்கு முன்னால் உள்ள கொடியில் துணிகளை உலர்த்திப் போட்டுக் கொண்டிருந்த அவனுடைய மனைவி சீலவதி இருவரை யும் கண்டதும் முகம் மலர்ந்து, 'வாருங்கள், வாருங்கள்' என்று சிங்களத்தில் வரவேற்றபடி குடிசைக்குள் ஒடி நுழைந்து இரண்டு கதிரைகளைப் பரபரப்புடன் துடைத்தாள்.
டேவிட்டும் ஆனந்தியும் உள்ளே நுழைந்ததும் 'இப்போதுதான் வெளியே போனார். வந்துவிடுவார். வரும் போது மீனும் எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். மத்தியானம் நீங்கள் எங்களோடு சாப்பிட வேண்டும். அதற்கு முந்தி ஐந்து நிமிஷத்திலே டீ போட்டுக் கொண்டு வருகிறேன்' என்று சிரித்துச் சிரித்துக் கூறிவிட்டு அடுப்புக்கு விரைந்தாள்.
'டீ வேண்டாம். இப்போது தான் குடித்தோம் ' என்றாள் ஆனந்தி. சிறிசேனாவின் மனைவி அதைக் கேட்காமல் தேனிருக்குத் தண்ணீர் வைத்தாள். அவளுடைய கடைசிக் குழந்தை தரையில் கிழிந்த ரப்பர் பொம்மைகள், நசுங்கிய தகரப் பேணிகள், பிளாஸ்டிக் சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ஆனந்தி அந்தக் குழந்தையை ஒருவித ஆர்வத்தோடு தூக்கிக் கொஞ்சிவிட்டு கையில் வைத்துக் கொண்டாள். டேவிட் அவளையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்துவிட்டு கையால் ஏதோ விளையாட்டுக் காட்டினான். குழந்தையும் பொக்கை வாயால் சிரித்தது.
'உங்களுடைய குழந்தையை நான் எப்ப இப்படிக் கொஞ்சி மகிழப் போகிறேனோ..?' என்றாள் ஆனந்தி.
275 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 143
"அது உங்களைப் பொறுத்தது' என்று சிரித்தான் டேவிட். ஆனந்தியின் முகம் அந்திவானத்தைப் போல் சிவந்து விட்டது. சில விநாடிகள் மெளனமாய் இருந்தவள், 'நீர் கொழும்புப் பெண்ணுக்குச் சம்மதம் கொடுக்கும்படி நான்தான் சொல்லிவிட்டேனே?' என்றாள்.
'ஏன் அப்படிச் சொன்னீங்க?" ஆனந்தி பதில் சொல்லவில்லை. குழந்தையைத் திரும்பவும் கொஞ்சினாள். அதற்கு அலுத்துவிட்டதோ என்னவோ சிணுங்கத் தொடங்கிவிட்டது. ஆனந்தி அதை இறக்கிவிட்டு திரும்பவும் கதிரையில் வந்து இருந்தாள்.
'இந்த விஷயத்தில் நீங்க ஒரு முடிவுக்கு வரமுடியுமென்றால் நானும் ஒரு முடிவுக்கு வர எனக்கும் சுதந்திரம் உண்டுதானே?' அதன்படி நானும் அந்தப் பெண்ணைக் கட்டிக்கப் போறதில்லே' என்றான் டேவிட்.
"நான் என்ன முடிவுக்கு வந்ததாய் நினைக்கிறீங்க?" 'இது என்ன கேள்வி? நீங்க என்னைச் சம்மதிக்கும்படி சொன்னதிலேயே அந்த முடிவு இருக்குதே. விளக்கமாய்ச் சொன்னால் நாம இரண்டு பேரும் ஒன்றாய் வாழமுடியாது என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க. ஆனா நான் அப்படி ஒரு முடிவுக்கும் வரேல்லே'
'என்னுடைய நிலைமையிலே இந்த முடிவுக்குத்தான் வரவேண்டியிருக் குது. எனக்காக நீங்க கல்யாணம் செய்யாம இருக்காதீங்க. அதுவும், ரீட்டாவின் விஷயமும் இதிலே தங்கியிருக்குது. அம்மா சொன்னதைப் பார்த்தா அந்தப் பெண்ணும் எல்லாவகையிலும் உங்களுக்குப் பொருத்தம் என்றும் தெரியுது. இதெல்லாம் எவ்வளவு சாதகம். இதைக் கவனிக்காம என்னையே நினைச்சுக் கொண்டிருக்கிறதிலே என்ன லாபம்?"
'நீங்க முழுமனசோடுதான் இதைச் சொல்றீங்களா?'
'நீங்க அப்படிச் சொல்லேல்லே என்கிறது எனக்குத் தெரியும்' "என்மனசு எப்படி இருந்தாலும், உங்க அம்மாவின் அபிப்பிராயத்தை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். அதுதான் சரி என்று எனக்குப் படுகுது' 'நான் அப்படி நினைக்கேல்லே. உங்களோடு வாழ்கிறது தான் சரி என்று நினைக்கிறேன்.'
'ஏன் அந்தப் பெண்ணோடு நீங்க வாழ முடியாதா?" "ஏன் முடியாது. நிச்சயமாய் வாழமுடியும்." ஆனந்தி இந்தப் பதிலை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவள் ஆச்சரியப்பட்டாள். தன்மீது அவனுக்கு ஆழ்ந்த காதல் இருப்பதால் இன்னொ
சுபைர் இளங்கீரன் 276

ருத்தியோடு வாழ்வது முடியாத காரியம். அதனால் தான் அவன் மறுக்கிறான் என்று கருதிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வாழ முடியும் என்று உறுதியாய்ச் சொல்கிறானே..! இதன் அர்த்தம் என்ன?.
சிறிசேனாவின் மனைவி தேனீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சமையலுக்கு ஆயத்தமானாள்.
கிையிலிருந்த தேனீர்க் கிளாஸையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி 'காதலைப் பற்றி நீங்க என்ன கருதுகிறீங்க?' என்று திடீரெனக் கேட்டாள்.
"ஏன் இதைக் கேட்கிறீங்க?" 'தெரிந்து கொள்ளத்தான். சொல்லுங்களேன்" டேவிட் தேனீரைக் குடித்துவிட்டு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சொன்னான்: ‘ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஆழமாக விரும்புகிறதுதான் காதல் என்று கருதுகிறேன். ஆனா இது நிறைவேறாமல் போனா அதோடு வாழ்க்கையே முடிந்து போய்ட்டுது என்று மனம் உடையத் தேவையில்லே. தங்கள் காதல் நிறைவேறாமல் இன்னொருவரைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஒருவரைக் காதலிச்சிட்டு இன்னொருவரை கல்யாணம் செய்து வாழத் தொடங்கும் போது ஆரம்பத்தில் மனசு கஷ்டமாய்த்தான் இருக்கும். ஆனா போகப் போக அந்த ஆழமான விருப்பமும் திசைமாறி, மனசும் புதிய உறவிலே கட்டுண்டு இசைந்து விடும். பக்குவப்பட்டு விடும். பலருடைய அனுபவம் இது. அதனால் தான் நீர்கொழும்புப் பெண்ணோடும் நிச்சயமாய் வாழமுடியும் என்று சொன்னேன். '
இவ்வாறு கூறிவிட்டு சிகரட்டை இழுத்து ஊதினான். ஆனந்தி சற்று வியப் போடு கேட்டுக் கொண்டிருந்தவள். ஒன்றும் பேசாமல் மெளனமாய் இருந்தாள். டேவிட் மேலும் தொடர்ந்தான்.
'வாழ்க்கையின் தேவை காதல் மட்டுமில்லே. அதற்கப்பாலும் எவ்வ ளவோ இருக்குது. மனுஷனுக்கு அதெல்லாம் வேணும். காதல் இல்லாம வாழலாம். ஆனா மற்றத் தேவைகள் இல்லாமல் வாழமுடியாது' என்று கூறிவிட்டு திரும்பவும் சிகரட்டை ஊதியவன், 'ஏன் வாழ வேணும் என்று கேட்டிடாதீங்க' என்று சொல்லிச் சிரித்தான். சில விநாடிகள் கழித்து "வாழ்வது மனித இயல்பு' என்று சொல்லி நிறுத்தினான்.
ஏதோ யோசித்துக் கொண்டிருந்த ஆனந்தி 'அப்ப, நீங்களும் காதல் இல்லாம வாழலாந்தானே?' என்று கேட்டாள்.
'அந்த நிலைமை இருந்தா அப்படி வாழத்தான் செய்வேன். நான் மட்டுமல்ல எல்லாருந்தான். ஆனா எனக்கு அந்த நிலைமை இல்லே. நாம
277 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 144
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக விரும்புகிறோம். நம்ம விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு தவிர்க்க முடியாத தடை ஏதும் இருக்கிறதாய் எனக்குத் தெரியேல்லே. நீங்க உங்க குடும்பப் பிரச்சினையை மனசில் வைத்துக் கொண்டுதான் இப்படியெல்லாம் சொல்றீங்க. ஆனா, நாம சேர்ந்து வாழ்கிறதுக்கு அதைத் தடையாக நான் கருதேல்லே. ஆனா என்னுடைய கருத்து மட்டும் போதாது. இந்த முடிவுக்கு நீங்களும் சுயமாக வரவேணும். இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாள் போக நீங்க இந்த முடிவுக்கு வருவீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்குது. அதனால்தான் அம்மாவின் அபிப் பிராயத்துக்கு நான் இணங்கேல்லே. ரீட்டாவின் விஷயம் ஒரு தனிப்பட்ட பிரச்சினை. அதை என்னோடு சம்பந்தப்படுத்தவும் விரும் பேல்லே. நீர் கொழும்பு இல்லாவிட்டாலும் இன்னொரு இடத்தில் மாப்பிள்ளை கிடைக் காமலா போய்விடும்?"
இவ்வாறு டேவிட் கூறி முடித்த போது குடிசைக்கு வெளியே சிறிசேனாவின் குரல் கேட்டது. அடுப்பில் காரியமாக நின்ற அவன் மனைவியும் எழுந்து வந்தாள். மீன், காய் பிஞ்சு சாமான்களோடு சிறிசேனா உள்ளே நுழைந்தான். 'சாமான்களைப் பார்த்தால் எங்களுக்குப் பெரிய விருந்துதான் வைக்கப் போகிறீர்கள் போல் தெரிகிறது' என்று சிங்களத்தில் கூறினாள் ஆனந்தி.
அவன் சிரித்தான். 'விசேஷமாய் இல்லை. நாங்கள் போயாவுக்குப் போயா தான் மீன் வாங்குவோம். ஒவ்வொரு நாளும் வாங்க கட்டாது. போயாவில் மட்டும்தான் மத்தியானம் வீட்டில் சாப்பாடு. மற்ற நாள் எல்லாம் கம்பெனியில்தானே, அதுவும் அரையும் குறையுமாய். இன்றைக்கு நாம் எல்லாருமாகச் சேர்ந்து சந்தோஷமாய்ச் சாப்பிடுவோம்."
ஆனந்தியும் எழுந்தாள். டேவிட் 'இவங்க விஷயம் என்ன?’ என்று சிறிசேனாவைக் கேட்டான்.
'என் மச்சான் கிறீஸியிலே வேலை செய்கிறான். அங்கே டைப்பிஸ்ட் வேலை கிடைக்காவிட்டாலும் வேறு ஏதாவது கிளார்க் வேலையாவது பார்த்துத் தரும்படி கூறியிருந்தேன். அவனைப் பார்க்கத்தான் போனேன். தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னான். கிடைக்குமோ கிடைக்காதோ சொல்ல முடியாது' என்று யதார்த்தமாகக் கூறினான் அவன்.
சிறிசேனா கடைசியாகச் சொன்ன அபிப்பிராயத்தைக் கேட்டு ஆனந்தி கவலைப்படவில்லை. அவளுக்கு அது மரத்துப் போய்விட்டது. எவ்வித சலனமும் இல்லாமல் சீலவதிக்கு துணையாக அவளும் சமையல் வேலைக ளைச் கவனித்தாள். வேலையோடு வேலையாக சீலவதியின் வாழ்க்கையையும் விசாரித்தாள்.
சிறிசேனாவின் மனைவிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. ஆனந்தி யுடன் சிரித்துச் சிரித்துக் கதைத்தாள். கதைத்துக் கதைத்துக் காரியம் செய்தாள்.
சுபைர் இளங்கீரன் 278

தன்னுடைய பாடசாலை வாழ்க்கை, கல்யாணம் செய்து கொண்டது, முதல் குழந்தை பிறந்த போது அடைந்த மகிழ்ச்சி, குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், இடையிடையே கணவனுக்கும் தனக்கும் நடக்கும் சச்சரவுகள், சண்டைகள் பிறகு சமாதானமாகக் கூடிக் களிப்பது, கஷ்டங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள், இத்தனைக்கும மத்தியிலும் அனுபவித்த இன்பங்கள், அடைந்த மகிழ்ச்சி-என்று எல்லாவற்றையும் கள்ளங்கபடமில்லாமல் வெட்கத்தோடும் குதூகலத்தோடும் சிரித்துச் சிரித்துச் சொன்னாள்.
வாழ்வதற்கு வசதியில்லாத குடிசை, குட்டி குழந்தைகள், குறைந்த வருமானம், வறுமையின் தாக்கம் இத்தனைக்கு மத்தியில் சீலவதியால் சிரிக்க முடிகிறது; குடும்பமாக வாழவும் முடிகிறது என்று எண்ணும் போது ஆனந் திக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம சேர்ந்து வாழ்கிறதுக்கு குடும் பக் கஷ்டங்கள் ஒரு தவிர்க்க முடியாத தடையல்ல என்று டேவிட் கூறியதையும் நினைத்துக் கொண்டாள். இதை அவன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியதையும் ஞாபகப் படுத்திச் சிந்தித்தாள். அதேசமயம் சீலவதி கூறியதை எண்ணிப் பார்க்கும் போது, வாழ்க்கையின் தேவைக்ாதல் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் எவ்வளவோ இருக்குது. வாழ்வது மனித இயல்பு என்று டேவிட் கூறியதன் முழுப் பொருளும் அவளுக்கு விளங்கியது,
மனித இயல்பின் தத்துவங்களையும் வாழ்க்கையின் சாராம்சத்தையும் தத்துவ ஞானிகளிடமிருந்தும், படித்துத் தேறிய பேராசிரியர்களிடமிருந்தும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை; குடிசைகளில் வாழும் சீலவதிகளிடமிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.
சமையல் முடிந்து சாப்பிடுவதற்கு எல்லோரும் சுற்றி அமர்ந்தார்கள். ஒட்டுறவு, பிணைக்கப்பட்ட உணர்வுகள், பகிடிகள், மனம் திறந்த உரை யாடல்கள், ருசியான உணவு -இத்தனையோடும் அந்த பகல் போசனம் நடந்தது.
ஆனந்திதன் கவலைகளையெல்லாம் அந்தப் பொழுதில் மறந்தே விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
* * * * *
பின்னேரம் சிறிசேனாவின் குடிசையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும் போது அந்தச் சோக நிகழ்ச்சி நடந்திருக்கும் என்று ஆனந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை.
வீட்டுச் சந்தில் திரும்பும் போது வாசலில் சனங்கள் கூடியிருந்தார்கள். பதைபதைப்புடன் வாசலுக்கு வந்த போது வசந்தியின் ஒப்பாரியும் மற்ற வர்களின் அழுகை ஒலங்களும் கேட்டன. உள்ளே சென்றதும் மலைத்து நின்றுவிட்டாள்.
279 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 145
கட்டிலில் அருமைநாயகம் மூச்சை விட்டு கட்டையாகக் கிடந்தார். வசந்தியின் ஒப்பாரிக்குச் சமாதானம் கூறிக் கொண்டிருந்தாள் சுபத்திரா. செல்வமும் காந்தியும் தேம்பித் தேம்பி அழுதவாறு கட்டிலின் அருகே நின்றிருந்தார்கள். அயல் வீட்டுக்காரர்களும் கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்தார்கள்.
பிணமாகக் கிடக்கும் தன் தந்தையைப் பார்த்துக் கொண்டே பதுமையாகி நின்ற ஆனந்தியின் விழிகளிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. சிறிது நேரம் அப்படியே நின்றவள் வழிந்தோடும் கண்ணிரோடு சுபத்திராவைப் பார்த்தாள். 'நான் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே வந்து விட்டேன். வசந்தி வெளியே போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். இவளுடன் பத்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தேன். உன் அப்பா தலைசுற்றுது, நெஞ்சுக்குள்ளே என்னவோ செய்யுது என்று சொல்லிக் கொண்டு வந்தவர் கட்டிலில் சாய்ந்தார். வசந்தியும் நானும் பதறித்துடிச்சுக் கொண்டு கட்டிலுக்கு ஓடி வந்தோம். அதற்குள். அவர் வாழ்வு முடிந்து விட்டது' என்று கூறிவிட்டு எழுந்தவள். ஆனந்தியின் கையைப் பிடித்து நடுத்தட்டுக்குள் அழைத்துச் சென்றாள். "கண்ணைத் துடை, தைரியமாய் இரு. பார்க்க வேண்டியதைப் பாரு. நான் ஒரு தடவை வீட்டுக்குப் போய் அரை மணித்தியாலத்துக்குள் வருவேன்' என்று கூறிவிட்டு வெளியே விரைந்தாள்.
சுபத்திரா சொன்னது போல் ஆனந்தி கண்ணைத் துடைத்துக் கொண்டாள். மனசைத் திடப்படுத்திக் கொண்டு காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். வந்து நின்ற றகீமாவும் மற்றவர்களும் நடுத்தட்டை ஒழுங்குபடுத்தி விட்டு சடலத்தை தூக்கி வந்து கிடத்தினார்கள். அயல்வீட்டுக் கதிரைகள் எல்லாம் முன்தட்டுக்குள் வந்தன. இதற்குள் வெளியே போயிருந்த ராசுவை எப்படியோ தேடிப்பிடித்துக் கொண்டு வந்துவிட்டான் சந்துக்கார விமல்.
ஆரம்பக்காரியங்கள் எல்லாம் முடிந்ததும் ஆனந்திக்கு 'திக்' என்றது. கையில் ஒருசதக் காசு கூட இல்லாத நேரத்தில் இவர் போய்ட்டாரே. மரணச் சடங்குக்கு என்ன செய்கிறது என்று விழித்தாள். கையைப் பிசைந்தாள். உடனே ராசுவைக் கூப்பிட்டு 'உன்னிடம் ஏதாவது காசு இருக்குதா?' என்று கேட்டாள்.
அவன் நீர்மல்கும் கண்களுடன் பொக்கட்டிலிருந்து ஐந்து ரூபாயைக் எடுத்துக் காட்டிவிட்டு, "வேறே இல்லையே அக்கா' என்று அழுகைக் குரலுடன் அந்தக் காசை அவளுடைய கையில் வைத்தான்.
'அப்ப நாம என்னடா செய்கிறது. ? யாரிடம் வாங்கிறது?. யாரிடம் இந்
தச் சமயத்திலே நூறு இருநூறு இருக்கப் போகுது. இந்தச் சமயம் பார்த்து சுபத்தி ராவும் போய்ட்டாளே. அவளிடம் கூட இருக்குதோ என்னவோ. என்ன செய் கிறது என்று எனக்குத் தெரியேல்லியே. உன் ஃபிரண்ட் யாரிடமாவது. ?"
சுபைர் இளங்கீரன் 280

மனம் திகைச்சு திகைச்சு பதறிப் பதறிக் கேட்டாள். ராசு விழி நீரை விரல்களால் வழித்துச் சுண்டி விட்டு, விறுக்கென்று அந்த இடத்தை விட்டு சந்துக்குள் வேகமாக இறங்கினான்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. இருட்டியது. விமல் இரண்டு பெட் ரோல் மக்ஸ் லைட்டைக் கொண்டு வந்து தூக்கினான். சந்தில் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
-ராசு போனானே. இன்னும் காணேல் லியே. காசோடு. வரு வானோ, வெறுங்கையோடு வருவானோ. டேவிட்டைப் போய்க் கேட்டா என்ன. அவர் வீட்டில் இருப்பாரோ இல்லையோ. இந்தத் தருணத்திலே அவர் நிச்சயம் தருவார்; தன்னிடமில்லா விட்டாலும் யாரிடம் வாங்கியாவது தருவார். நான் இப்பவே போனால் என்ன. இந்த நேரத்திலே நான் இப்படி எல்லாரையும் விட்டிட்டு எப்படிப் போகிறது. போனாலும் அவர் இருப் பாரோ. அல்லது."
ஆனந்திக்கு நிலைகொள்ள முடியவில்லை. தவித்தாள். தவித்துத் தவித்து நேரத்தைக் கழித்தாள். கலங்கிக் கலங்கி ராசுவை எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள்.
முன்தட்டில் சுபத்திராவின் பேச்சுக்குரல் கேட்டது. நடுத்தட்டுக்குள்ளிருந்து விசுக்கென்று வந்தாள் ஆனந்தி. சுபத்திராவுக்குப் பின்னால் வந்த அம்மா விரைந்து உள்ளே சென்று அருமைநாயகத்தின் சடலத்தைப் பார்த்தாள். ஆனால் சுபத்திராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பரபரவென்று பின்னால் போய் 'என்னடி என்னை இப்படித் தவிக்க வைச்சிட்டுப் போய்ட் டியே. இப்ப, இந்த நேரத்திலே கையிலே ஒரு சதமும் இல்லே. நான் என்ன செய்வேன். என்று கண்ணிராய் வழிந்தாள். .
'நீ ஏண்டி கலங்கிறாய். நான் ஒருத்தி இருக்கேண்டி. நீ சொல்லியா உன் நிலைமை எனக்குத் தெரிய வேணும். நான் இங்கிருந்து வெளிக்கிட்டுப் போனதே காசுக்குத்தான். இந்தா பாரு...' என்று சொல்லி, பச்சை நோட்டுக்களாக எடுத்துக் காட்டினாள்.
அதைக் கண்டதும் ஆனந்தியின் ஏக்கமும் தவிப்பும் அந்தக் கணத்திலேயே மறைந்து விட்டன. எனினும் அவள் உணர்ச்சிமயமாகிவிட்டாள். அவளுக்குப் பேச நா எழவில்லை. அவளை அப்படியே வாரிக் கட்டிக் கொண்டு "உனக்கு முந்திநான் போய் சேர்ந்து விடவேணுமடி. உனக்குப் பிறகு நான் உசிரோடு இருக்கிறதிலே ஒரு அர்த்தமும் இருக்காது கண்ணு.' என்று சுபத்திராவின் முகம், கழுத்து, தோள் எல்லாவற்றையும் கண்ணிரால் தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள்.
'ஆனந்தி." என்று அம்மாவின் குரல் கேட்டது. "பிசத்தினது போதும் விடு. கண்ணைத் துடைத்துக் கொண்டு ஒன்றையும் பற்றி யோசியாமல்
281 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 146
தைரியமாயிரு. நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவேன். அவன் ராசு எங்கே..?' என்று கேட்டவாறு ஆனந்தியை விலக்கி அவளைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.
அம்மா ஆனந்தியைக் கண்டதும் அவளை அணைத்துக் கொண்டு அவ ராலே ஒரு பிரயோசனமும் இல்லை என்றாலும் தகப்பன் என்று கிடந்தார். இப்ப அவரும் போய்ட்டார். மனுஷ வாழ்க்கையே இப்படித்தான்; நானும் நீயும் போகிற வழியும் இதுதான்." என்று தன்னுடைய வேதாந்தத்தையும் கண்ணிரையும் சேர்த்து வெளியிட்டாள்.
நேரம் கழிந்தது. ராசு காசோடுதான் வந்தான். 'இந்தா அக்கா' என்று நூறு ரூபாய் நோட்டை ஆனந்தியிடம் நீட்டினான். ஆனந்தி அந்தக் காசைப் பற்றி விபரம் கேட்கவில்லை. அதைச் சுபத்திராவிடம் கொடுத்தாள்.
'இது ஏது?"
'ராசு தந்தான்' சுபத்திராவும் விபரம் கேட்கவில்லை. "நீயே வைத்துக் கொள்' என்றாள். 'நீ காசு கொண்டு வந்தியே. உன்னிடம் இருந்ததா?'
'இருந்தது, இல்லே. இந்தக் கேள்வியும் கவலையும் உனக்கெதுக்கு?" மறுநாள் காலை, ஆனந்தி செய்தியை டேவிட்டுக்கு அறிவிக்கும் படி கம்பெனியின் டெலிபோன் நம்பரை சுபத்திராவிடம் கொடுத்தாள். அவள் ராசுவையும் கூட்டிக் கொண்டு மரணச்சடங்குக்குத் தேவையான சாமான் களையும், ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் கவனித்துக் கொண்டு திரும்பினாள்.
இதற்குள் டேவிட்டும் றோஸியும் வந்து விட்டார்கள். டேவிட் ஆனந்தியை தனியாக அழைத்து நூறு ரூபாய் கொடுத்தான்.
‘'வேணாம். என்னிடம் காசு இருக்குது' என்றாள் ஆனந்தி. 'பரவாயில்லே. வைத்துக் கொள்ளுங்க.." காசைக் கையில் திணித்தான். பின்னேரம் கம்பெனி ஆட்கள் வந்தார்கள். மரணச் சடங்குகள் துரிதமாக நடந்தன. அருமைநாயகம் கொட்டாஞ்சேனையை மறந்து கனத்தை மயா னத்துக்குப் பயணமானார்.
ஆனந்தி அப்பாவை நினைத்தாள். மரணச் சடங்குக்காக தான் தவித்த தவிப்பு நினைவுக்கு வந்தது. அப்பா வுக்கு எத்தனையோ தடவை அவள் காசு கொடுத்திருக்கிறாள். ஆனால் அவருடைய கடைசிச் சடங்குக்குக் கூட தன்னிடம் காசு இல்லாமல் போனதை நினைக்கும் போது மனம் வேதனையால் துடித்தது. தான் உழைத்துத் தன் கைச் செலவிலேயே இந்த இறுதிச் சடங்கைச் செய்ய முடியாது போய் விட்டதை
சுபைர் இளங்கீரன் 282

எண்ணியதும் மனம் நொந்து நொந்து சலித்தது. அதே சமயம் அந்தக் கடமையையும் ஒருகுறையுமில்லாமல் சுபத்திரா செய்து முடித்ததை நினைக் குந்தோறும் நினைக்குந்தோறும்.
அவளையும் அறியாமல் தெஹிவலை இருக்கும் திக்கை நோக்கி அவ ளுடைய கரங்கள் குவிந்தன.
* * * * *
இரண்டு நாட்கள் கழிந்தன. ነ
மாமன் மகன் முத்து வருவான் என்று ஆனந்தியோ மற்றவர்களோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அருமைநாயகம் இறந்த செய்தியை அவர்கள் வீட்டா ருக்கு அறிவிக்கவுமில்லை. அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்கள்.
"என்னதான் கோபதாபமாயிருந்தாலும் ஒரு சொல்லுச் சொல்லி அனுப்பி இருக்கலாமே. நாங்க நேத்துத்தான் கேள்விப்பட்டோம். அம்மாவுக்கும் மனசு கேட்கேல்லே. வரத்துடிச்சா. ஆனா நீங்க யாரும் முகம் கொடுக்காம இருந்தா தனக்கு மனசு தாங்காது என்று வரேல்லே. நானும் அப்படித்தான் நினைச்சேன். நீங்க புறக்கணிப்பா நடந்தாலும் சரி, போய்த் துக்கம் விசாரிச் சுட்டு வரத்தான் வேணும் என்று வந்துவிட்டேன்' என்று கூறிவிட்டு தயக் கத்தோடு நின்றான் முத்து. A.
ஆனந்தி, உடனே கதிரையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு 'இரு முத்து' என்று ஆதரவாய்ச் சொன்னாள். அவன் இருந்ததும் 'நாங்க உன்னையும் அம்மாவையும் பிழையாகத்தான் நினைச்சிருந்தோம். வெறுக்கவும் செய்தோம். போன கிறிஸ்மஸ்ஸின் போது நீ இங்கே வந்ததாக வசந்தி ஒரு பகிடிக்குச் சொன்னா. அப்ப கூட இவன் ஏன் இங்கே வந்தான் என்று ஆத்திரத்தோடு கேட்டேன். பிறகுதான் இப்படிப் புறக்கணிச்சு நடக்கிறது பிழை என்று தெரிஞ்சுது. அம்மா இருக்கிற போது உன் அம்மா ஏதோ மான ஈனமாய் நடந்து விட்டா என்று உறவை முறிச்சுக் கொண்டா. பார்க்கப் போனா உன் அம்மா தப்பா எதுவும் செய்து போடேல்லே. உன் அப்பா இறந்து போனதும் காப்பாற் றுகிறதுக்கு ஒரு ஆள் வேணுமே என்று ஒருவரைச் சேர்த்துக் கொண்டா. இதிலே என்ன தப்பு? இதனாலே மானம் போச்சுது என்று எங்க அம்மா உறவை முறிச்சுக் கொண்டதிலே ஒரு அர்த்தமும் இல்லே. இதைக் காலங்கடந்து தான் உணர முடிஞ்சுது. என்றாலும் முறிஞ்சு போன உறவு முறிஞ்சதுதான், இனி ஒட்டாது என்று எண்ணியிருந்தோம். அதனால்தான் அப்பா இறந்த செய்தியை உங் களுக்கு அறிவிக்க வேணும் என்ற நினைவுவரேல்லே. ஆனாரீஇதையெல்லாம் பொருட்படுத்தாம வந்து விட்டாய். இது உன் பெரும் மனசைக் காட்டுது.'
'நாமெல்லாரும் கஷ்டப்பட்டவங்க, வறுமைப்பட்டவங்க. நாமெல்லாரும் ஒரே ஆட்கள். என்ன இருந்தாலும் நமக்குள்ளே பகையும் வெறுப்பும்
283 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 147
இருக்கப்படாது. நமக்குள்ளே உறவும் நட்பும் இறுக்கமாய் இருக்க வேணும், நீ இப்ப இங்கே வந்தது எங்களுக்கெல்லாம் பெரும் ஆறுதலாயிருக்கும்' என்று அன்பாகவும் உணர்ச்சியோடும் கூறி நிறுத்தினாள்.
முத்துவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. முகம் பிரகாசித்தது. "உங்க வீட்டிலே யாரும் இப்படிப் பேசுவீங்க என்று எதிர்பார்த்து வரேல்லே. நீ இப்ப சொன்ன அவ்வளவையும் அம்மாவுக்குச் சொன்னா, அடுத்த நிமிஷம் அவ இங்குதான் நிற்பா. எனக்கு மனசு குளுகுளுன்னு இருக்குது' என்று கூறி விட்டு இப்போதுதான் தன்னையே கவனித்துக் கொண்டிருந்த வசந்தியைப் பார்த்தான்.
"வசந்தி இப்ப நல்லா வளர்ந்திட்டா. கண்ணைக் கொண்டு போகிற மாதிரி எவ்வளவு அழகாயிருக்கா...'
'நிற் கிறியே வசந்தி, அத்தானுக்கு டீ கொண்டு வந்து கொடேன்?' என்றாள் ஆனந்தி. W
'வசந்தியை நான் முந்திப் பார்த்ததுக்கும் இப்ப பார்க்கிறதுக்கும் எவ்வளவோ வித்தியாசம்' என்றான் முத்து சிரித்தபடி,
வசந்தி உள்ளே போனதும் ஆனந்தி சொன்னாள்: 'உன்னைப் பார்த்தாலும் அப்படித்தான். நிறைய வித்தியாசம். ஒடிஞ்சு விழுகிற மாதிரி இருந்த நீ இப்ப கொஞ்சம் சதை போட்டு கொஞ்சம் மினுக்கமாய், உயரமாய். சுருக்கமாய்ச் சொன்னா, உனக்கு என்னுடைய வயசுதான் என்றாலும் முழு ஆண்பிள்ளை மாதிரி இருக்கிறாய். இப்படியே நல்லாய் சிரஞ்சீவியாய் இரு'
'நீ என்னை மனம் நிறைஞ்சு வாழ்த்திறியே. எனக்கு எவ்வளவு சந்தோசமாயிருக்குது' என்று புளகாங்கிதத்தோடு கூறிய முத்து, ராசு, காந்தி, செல்வம் எல்லாரும் எங்கே?' என்று கேட்டான்.
'காந்தியும் செல்வமும் ஸ்கூலுக்கு. ராசு எங்கேயாவது சுற்றப் போயிருப் - "" .68Tחנ_ן
'ராசுவை எத்தனையோ தடவை சந்திச்சிருக்கிறேன். பேச ஆவலா யிருந்தாலும் பேசேல்லே' என்று கூறிவிட்டு அருமைநாயகத்தின் சாவைப் பற்றியும் அவர்களுடைய நிலைமையைப் பற்றியும் விசாரித்தான்.
ஆனந்தி எல்லாவற்றையும் சுருக்கமாய்க் கூறிவிட்டு 'நீ இப்ப என்ன செய்கிறாய்?' என்று கேட்டாள்.
“ნგბტ சைவ ஹோட்டலில் கெஷியராயிருக்கிறேன்' "உனக்கு இது எத்தனையாவது ஹோட்டல்?" என்று சிரித்த படி கேட்டாள் ஆனந்தி.
அவனும் சிரித்துக் கொண்டே 'எனக்கெங்கே நினைவிருக்குது' என்றாள்.
சுபைர் இளங்கீரன் 284

'உன்னை ஞாபகம் வைச்சுக் கொண்டு பார்த்தா கொழும்பிலே வேலை பார்க்காத சைவ ஹோட்டலே இல்லையென்று சொல்லலாம் போலிருக்குதே. நீ ஏன் ஒவ்வொரு ஹோட்டலாய் ஏறி இறங்க வேணும். நிலையாய் ஒன்றிலே நின்றா என்னவாம்?"
"உனக்கு அதிலே உள்ள கஷ்டம் தெரியாது. காலையிலே ஐஞ்சு மணிக்கு எழும்பினா இரவு பதினொரு மணி வரைக்கும் ஒரே வேலைதான். இடையிலே இரண்டு மணித்தியாலம் ஓய்வு. அவ்வளவுதான். சப்ளையராய் இருந்தா இரவு படுக்கும் வரை முன்னும் பின்னும் குறுக்கும் நெடுக்குமாய் ஒரே நடைதான். மணித்தியாலத்தை வைச்சுநடையைக் கூட்டிப் பாரு எத்தனை மைல்கள் என்று கணக்குத் தெரியும். கால்கள் மாய்ஞ்சு போகும், இடுப்பு ஒய்ஞ்சு போகும். தினசரி முழுப்பொழுதும் ஹோட்டலுக்குள்ளேயே திரும்பத் திரும்ப நடக் கிறதாலே, அதே மேசைகளையும் கதிரைகளையும் பலகார சோக்கேஸையும் திரும்பத் திரும்ப பார்க்கிறதாலே ஒரே அலுப்பு வேறே; சாப்பிட வார ஆட்களோடு மாரடிப்பு வேறே. எத்தனை தினுசான ஆட்கள் வருவாங்க தெரியுமா? அதுவும் எத்தனை கோணத்திலே வருவாங்க. சப்ளை பண்ணக் கொஞ்சம் சுணங்கினா அவ்வளவுதான். சிடுசிடுப்பாங்க, முறைப்பாங்க, அதிகாரமாய் அதட்டுவாங்க, ஏசுவாங்க. இத்தனையையும் சகித்துக் கொண்டு மணித்தியாலத்தையும் கவனிக்காம உழைச்சாலும் எங்களுக்குக் கிடைக்கிற சம்பளம் இருக்குதே. அதைக் கேட்கவே வேணாம். சொல்லப் போனா பலசரக்குக் கடையிலே நிற்கிறவனுக்கும் ஹோட்டலிலே நிற்கிறவனுக்கும் தான் உழைப்புக் கூட சம்பளம் குறைவு. உருப்படவே முடியாது. இதெல்லாம் சேர்ந்து ஒரு அலுப்பையும் வெறுப்பையும் தந்துவிடும். சில மாசங்களோடு சரி. வெளியே வந்து சுற்றுகிறது; திரும்பவும் இன்னொரு ஹோட்டல்லே சேர்கிறது. அங்கேயும் இதை கதைதான் சில மாசங்கள்தான். அங்கேயிருந்தும் பாய்ச்சல், சுற்று. அதுக்குப் பிறகு இன்னொரு ஹோட்டல். இப்படித்தான் என் சக்கரம் உருளுது. நான்தான் இப்படி என்று நினைக்காதே. சைவ ஹோட்டல் லே இருக்கிற அநேகமாக எல்லாருந்தான். இப்பதான் ஒரு ஹோட்டல்லே கெஷியர் வேலை கிடைச்சிருக்குது. சப்ளையராக இருக்கிறதை விட இதிலே சிரமம் கொஞ்சம் குறைவு. ஆனா சம்பளத்திலே அதிகம் வித்தியாசமில்லே.
இத்தனையையும் ஒரு சித்திரமாய் ஒரே வேகத்தில் சொல்லி முடித்தான் முத்து.
இதை மிகவும் உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி, 'ஏன் உங்களுக்கெல்லாம் எட்டு மணி நேர வேலை இல்லையா?' என்று சற்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.
'சைவ ஹோட்டலைப் பொறுத்தவரை அந்தச் சட்டமெல்லாம் கிட்டவும் நெருங்க ஏலாது."
இதைச்சொல்லி முடிப்பதற்குள் வசந்திடீயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
285 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 148
'எத்தனையோ நாளுக்குப் பிறகு இந்த வீட்டிலே இன்னைக்குத்தான் டீ குடிக்கிறேன். சாப்பாடும் அப்படித்தான். அத்தை இருக்கிற போது சாப்பிட்டது தான். வருஷக் கணக்காய்ப் போச்சுது' என்று கூறிவிட்டு டீயைக் குடித்தான்.
"மெய்தான். இன்றைக்கு சாப்பிட்டு விட்டுப் போ...'
'இன்னைக்கு ஏலாது. இன்னும் அரைமணித்தியாலத்திலே கெஷியர் பட்டறையிலே இருக்க வேணும். இன்னொரு நாளைக்குச் சாவகாசமாய் வாறேன்' என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.
'அது சரி, உன்னுடைய சினிமாப் பைத்தியம் எந்தளவுக்கு இருக்குது. ஒருபடம் தவற மாட்டியே."
முத்து சிரித்தான். "லீவு கிடைச்சா அநேகமாய்த் தியேட்டரில்தான்.'
ஆனந்தியும் சிரித்தாள். 'நீ வந்ததில் சந்தோஷம். அடிக்கடிஅம்மாவையும் வரச்சொல்லு. நாமெல்லோரும் ஒரே ஆட்கள் என்கிறதை மறந்து விடாதே."
* * 斧 *。青
முத்து வந்துபோன இரண்டொரு தினங்களுக்குள் அவனுடைய அம்மாவும் வந்தாள். ஆனந்தியும் வசந்தியும் அவளை அன்போடு வரவேற்று உபசரித் தார்கள். அவள் அடிக்கடி வந்து போனாள். காந்தியையும் செல்வத்தையும் கூட தன் வீட்டுக்கு அழைத்துச் செல் வாள்; சில்லறைகள் கொடுப்பாள், தின் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பாள். இந்த புது உறவு காந்திக்கும் செல்வத்துக்கும் உற்சாகத்தையும் பெரு மகிழ்ச்சியையும் அளித்தன. ஸ்கூல் இல்லாத நாட்களில் அவர்கள் இருவரும் அங்குதான் பொழுதைக் களிப்பார்கள். லீவு உள்ள நேரங்களில் முத்து ஆனந்தியின் வீட்டில் பொழுதைக் களிப்பான். இதற்காக அவன் சினிமாவையும் அரைவாசி தியாகம் செய்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். ஆனந்தியும் வசந்தியும் கூட பாமன்கடையிலுள்ள அவனின் தகரக் கொட்டிலுக்குப் போய் வந்தார்கள். அந்தக் கொட்டில் வெக்கையாக இருந்தாலும் முத்துவின் அம்மாவுடைய மனம் குளுமையாக இருந்ததால் அவள் தன் மருமக்களை அன்புடன் உபசரித்து அனுப்புவாள்.
இந்த உறவும் கொண்டாட்டமும் ஆனந்திக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. இதைப் பற்றி ஒருநாள் சுபத்திராவிடம் கூறிய போது 'இந்த உறவைத் திரும்பவும் உண்டாக்கத்தான் உன் அப்பா செத்தாராக்கும். அவர் பெரிய தியாகியடி' என்று கேலி செய்தாள். என்றாலும் அவளுக்கும் சந்தோஷ மாயிருந்தது.
ஒருநாள் ஆனந்தி, வசந்தி, முத்து மூவரும் உரையாடிக் கொண்டிருந் தார்கள். முத்து ஆனந்தியிடம் கேட்டான். 'நீ இப்படியே இருக்கப் போறியா? உன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கேல்லியா?"
'என்னைக் கட்டிக்கொள்ள உனக்கு ஆசையா?"
சுபைர் இளங்கீரன் 286

'உன் மேலே அந்த ஆசை எனக்கு ஒரு போதும் வந்தில்லே. ஆனா வசந்தியைப் பற்றி அந்த எண்ணம் வந்திருக்குது' என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.
வசந்தியின் முகம் திடீரென்று கறுத்தது. அவனை முறைத்துப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஆனந்தியின் மனமோ ஒரு ஆட்டம் ஆடி நின்றது. முத்துவை வசந்தி முறைத்துப் பார்த்ததால் அல்ல. இந்த உறவுமுறிஞ்சு போகாம இருந்திருந்தால், இப்போது படுகிற சந்தேகமும் கலக்கமும் இல்லாம வசந்தியை முத்துவுக்கே கட்டிக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணம் உடனே எழுந்து ஆடிய ஆட்டம் அது. ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று யார் கண்டார்கள் என்று தனக்குள் சமாதானம் கூறிக் கொண்டவள் ஒரு பெரு மூச்சுடன் 'இவளுடைய வாழ்க்கை எந்த மாதிரி அமையப் போகுதோ?' என்று பட்டும் படாமலும் கூறினாள்.
வசந்தியின் வாழ்க்கை இப்போது வங்கிக் கிளார்க்கோடு சுற்றிக் கொண்டி ருப்பதை அறியாத முத்து வெள்ளை மனசோடு 'படைச்சவன் என் தலை யிலேயும் அவதலையிலேயும் என்ன எழுதி வைச்சிருக்கிறானோ...' என்று கூறிச் சிரித்தான்.
'அதுதான் தெரியுதே.' என்று வெடுக்கென்று கூறினாள் வசந்தி. 'உனக்குத் தெரிஞ்சு போச்சுதா. அது என்ன, சொல்லேன்?" "அது தான் சைவஹோட்டல் என்று' ஆனந்தியும் முத்துவும் சேர்ந்து சிரித்தார்கள். சிரித்துவிட்டு முத்து சொன்னான்: 'இந்த எழுத்து இப்படியே இருக்காது. இன்னும் கொஞ்ச நாளிலே மாற்றி எழுதப் போறான்'
"எப்படி?' - வசந்தி கேட்கவில்லை; ஆனந்தி கேட்டாள். "சைவ ஹோட்டல் ஒன்று லீசுக்கு வருகுது. அதை நானும் இன்னொருவரும் சேர்ந்து எடுக்கலாம் என்றிருக்கிறோம்.'
"அதுவும் சைவ ஹோட்டல்தானே. மாற்றி எழுதப் போறான் என்று எப்படிச் சொல்கிறது" -திரும்பவும் வசந்தி மடக்கினாள்.
முத்து அவளைச் சற்று ஆச்சரியத்தோடு பார்த்தான். 'நீ முந்தியை விட இப்போ நல்லாப் பேசுகிறாய். ருசியாவும் இருக்குது, என்னுடைய எண்ணத்திலே தப்பில்லே'
வசந்தி சிடுசிடுப்போடு விறுக்கென்று எழுந்து போய் விட்டாள். முத்து அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை.
好 好 好 好 好
287 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 149
பதினாறாவது அத்தியாயம்
ருநாள் காலை வசந்தி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். ஆனந்தி அதைப் பார்த்து விட்டாள். அவளுக்குத் 'திக் கென்றது. என்றாலும் என்னடி இது." ஏதாவது கண்ட தைக் கிண்டதை வாயில் போட்டியா..? உனக்குத்தான் நாக்குச் சும்மா இருக்காதே. என்று பதைபதைப்புடன்
கேட்டாள்.
வசந்தி பதில் சொல்லவில்லை. வாந்திதான் எடுத்தாள்.
ஆனந்தி விஷயத்தைக் கிரகித்துக் கொண்டாள். எதை நினைத்து இத்தனை நாளும் மனசுக்குள் ஒரு கவலையையும், பயத்தையும் புகுத்தி வைத்துக் கொண்டு மறுகினாளோ, அது இப்போது நடந்து விட்டதைப் பார்த்ததும் மனம் பதறியது; தேகமெல்லாம் படபடத்தது.
குமட்டலும் வாந்தியும் சற்று நின்றதும் வசந்தி எழுந்து பைப்புக்குச் சென்று திரும்பியவள் கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்று முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவிதமான கவலையோ, பீதியோ இல்லாமல் அவள் நிற்பதைப் பார்த்ததும் ஆனந்திக்கு ஏறிக் கொண்டு வந்தது. 'என்னடி நான் கேட்கிறேன். நீ அலட்சியமாய் இருக்கிறாய்?" என்று சீறினாள்.
வசந்தி அதை காதில் வாங்காதவள் போல் அப்படியே நின்று கொண் டிருந்தாள்.
சுபைர் இளங்கீரன் 288
 

"உனக்கு இப்ப என்ன நடந்திருக்குது என்று எனக்கு விளங்கிப் போச்சுது. இப்படி ஏதாவது இடி விழும் என்று பயந்துதான் தலையாலே அடிச்சுக் கொண்டேன். நீ போகிற பாதை இந்தக் குழியிலே கொண்டு போய் விழுத்திப் போடும் என்று எச்சரித்தேன். பின்னிப் பின்னிச் சொன்னேன். அதட்டிச் சொன்னேன், ஆதரவாய்ச் சொன்னேன், அன்பாய்ச் சொன்னேன். நீ கேட்டியா?" என்று அங்கலாய்க்கத் தொடங்கினாள்.
வசந்தி சட்டென்று திரும்பி "உஷ்.' என்று விரலை உதட்டில் வைத்துக் காட்டிவிட்டு "மெல்லப் பேசு' என்றாள்.
"மெல்லத்தாண்டி பேசுகிறேன். இதை மற்றவங்க காதிலும் விழுகிற மாதிரி யாரும் பேசுவாங்களா..? இருந்தாலும் நாம வாயாலே மறைக்கலாமடி, வயித்தாலே மறைக்க முடியுமா. இப்ப என்னடி செய்கிறது. ?' என்று அடங்கிய குரலில் ஆனால் அதே பதைபதைப்போடு கூறினாள் ஆனந்தி.
'ஏன் இப்படிப்பதறுகிறாய்.. ?'இப்ப என்ன நடந்து போச்சுது?" ஆனந்திக்கு அழுவதா சிரிப்பதா, ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை. இந்தக் கேள்வியைக் கண்டு சில விநாடிகள் விக்கித்துப் போய்விட்டாள்.
"யாருக்குமே நடக்காதது எனக்கு நடந்து போயிடேல்லே. இதுக்காக மனசை அடிச்சுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லே. நீபதைபதைக்காம சும்மா இரு' என்று அலட்சியமாய்க் கூறிவிட்டு அலுமாரியைத் திறந்து தட்டில் உள்ள தன் உடுப்புகளுக்குக் கீழே வைத்திருந்த ஒரு படத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.
அது அவளுடைய ஃபிரண்டுடைய படம் தான் என்று ஆனந்திக்குத் தெரிந்தது. ஆனால் தங்கையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஏங்கி விட்டாள். விறைத்துப் போய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள் "உனக்கென்ன பைத்தியமாடி பிடிச்சிருக்குது. மானத்தைப் பறிகொடுத்தது மட்டுமல்லாம, வித்தியாசமாய் ஒன்னும் நடக்கேல்லே என்றும் சொல்றி யேடி.!" என்று திகைப்பும் வியப்புமாய் கேட்டாள்.
'அப்படி எனக்கு என்ன மானம் போய்ட்டுது..?"
இப்படிக் கேட்கிறவளுக்கு என்ன பதில் சொல்கிறது?. வசந்தி தொடர்ந்தாள்: "அவர் யாரு? என்னைக் கட்டிக்கப் போகிறவர், நான் யாரு? அவருக்கு வாழ்க்கைப் படப் போகிறவ. இப்படி நடந்து கொண்டதிலே மானம் எப்படிப் போகும்?"
ஆனந்திக்கு 'கிர்ர். ' என்று சுற்றியது. தலையிலே கையை வைத்துக் கொண்டு தரையோடு தரையாய் அப்படியே அசந்து உட்கார்ந்து விட்டாள். அவளுக்கு நெஞ்சு அடைத்தது. பேசவரவில்லை.
289 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 150
மெளனத்துக்குள் நேரம் கரைந்து கொண்டிருந்தது.
நெஞ்சடைத்து வாயடைத்துப் போயிருந்த ஆனந்தி "கழுத்திலே தாலி ஏறமுந்தி." என்று அதற்குமேல் பேச நா வராமல் நிறுத்தினாள். அவளு டைய குரல் கம்மிக் கரகரத்தது.
வசந்தி அக்காவைப் பார்த்து அலட்சியமாய்ச் சிரித்தாள். 'தாலி கட்டித் தான் புருஷன் பெண்சாதியாய் வாழ வேணுமா? கட்டாமலும் வாழலாம். மேல் நாட்டிலே எல்லாம் தாலி கட்டிக் கொண்டா வாழ்கிறாங்க..? தாலி ஒரு சடங்குதானே. அது இல்லாட்டி குடி முழுகிப் போயிடுமா. கொழும்பிலே எத்தனையோ பேருடைய கழுத்திலே தாலியைக் காணோம், ஆனா புருஷ னோடும் புள்ளைகளோடும் கைகோர்த்துக் கொண்டு ஜொலியாய் வாராங்க, போராங்க'
வசந்தி பேசவில்லை; அவளுடைய குரலில் அவன்- அந்த யங்கிக் காதலன் பேசுகிறான் என்று ஆனந்திக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இப்போது வசந்தி வசந்தியாக இல்லை; ஃபிரண்டாகி விட்டாள். இவளுக்கென்று சுயமாக ஒன்றுமே இல்லை என்றும் நன்கு விளங்கிவிட்டது. அவளுக்கு எது சொன்னா லும் இப்போது ஏறாது என்பதையும் புரிந்து கொண்டாள். என்றாலும் மனம் கேட்காமல் 'தாலி இல்லாட்டாலும் எழுத்து கிறுக்கு என்று ஒன்று இருக்கிறது தெரியுமா உனக்கு?’ என்று ஆத்திரத்தோடு கேட்டாள்.
"எழுத்துக் கிறுக்கா..?"
'ரிஜிஸ்தர் பண்றதைத்தான் சொல்கிறேன். ஊரை அழைச்சு, இனம் சனத்துக்கு முன்னாலே நாங்க புருஷன் பெண்சாதியாய், குடும்பமாய் வாழப் போகிறோம், எங்களை ஆசீர்வதியுங்க என்று தாலியோடும் சடங்கோடும் செய்து கொள்ளாவிட்டாலும். அல்லது தாய் தகப்பனோடும் இன்னும் நாலுபேரோடும் கோயில்லே, தெய்வத்தின் சந்நிதியிலே செய்து கொள்ளா விட்டாலும் இரண்டு சாட்சியோட ரிஜிஸ்தர் கந்தோருக்குப் போய் நாங்க புருஷன் பெண்சாதி என்று எழுதிக் கொண்டுதான் நீ சொல்கிற மாதிரி புருஷனோடும் புள்ளைகளோடும் கைகோர்த்துக் கொண்டு வருவாங்க, போவாங்க. இதுதான் ஒழுங்கு. இதுதான் முறை. சனங்கள் இதைத்தான் ஏற்றுக் கொள்ளுவாங்க. தாலி இல்லாவிட்டாலும் நாலு பேருடைய அங்கீகாரத்தோட, அல்லது சட்ட சம்மதத்தோட செய்கிறதுக்குத்தான் கல்யாணம் என்று பேரு. உன் ஃபிரண்டும் நீயும் கருதுகிற மாதிரி நடந்து கொள்கிறதுக்குப் பேரு கல்யாணமுமில்லே, புருஷன் பெண்சாதியுமில்லே. அதுக்குப் பேரு வேறே. உன் ஃபிரண்டு உன் மண்டையிலே ஏற்றிவைச்சிருக்கிறதை என்னிட்டே வந்து உளறிக் கொட்டாதே...! இந்த விஷயம் வெளிக்குத் தெரிய முந்தி எந்த முறையிலாவது ஒரு கல்யாணத்தைச் செய்து போடு. இல்லாட்டி நான் சும்மா இருக்கமாட்டேன்' என்று காரசாரமாய்ச் சொன்னாள் ஆனந்தி.
சுபைர் இளங்கீரன் 290

அக்கா கடைசியாகச் சொன்ன வசனத்தையும் அவளுடைய குரலில் தொனித்த தொனியையும் முகம் இருந்த இருப்பையும் பார்த்து வசந்தி சற்றுப் பயந்துதான் போனாள். அதற்குமேல் ஒன்றும் பேசாமல் கையிலிருந்த ஃபோட்டோவை திரும்பவும் அலுமாரியில் வைத்துவிட்டு மேசையோடு சாய்ந்து நின்றபடி கலைந்து கிடந்த சடையை முன்னால் எடுத்துப் போட்டுக் கொண்டு பின்னத் தொடங்கினாள்.
'நான் சொல்கிறது காதில் விழுகுதா?”
"கல்யாணத்திலே கருத்து இருக்கு என்று நீ கூடச் சொன்னாய். ஞாபக மிருக்குதா?"
'நான் மறக்கேல்லே'
'அப்ப அதைச் செய்கிறதுக்கு என்ன தடை? அவன் என்ன சொல் கிறான்?"
'கல்யாணந்தான் என்று அவரும் சொல்கிறார்'
'இப்படியே சொல்லிக் கொண்டிருந்தா. முடிவென்ன?"
'எனக்கு நம்பிக்கை இருக்குது. அதுதான் நான் கவலைப்படேல்லே'
'நம்பிக்கை இருந்தால் போதுமா? அது நிறைவேற வேணாமா? அது நிறைவேறுகிற வரைக்கும் கவலைதானே?"
வசந்திக்குத் திரும்பவும் குமட்டிக் கொண்டு வந்தது. விறுவிறு என்று பின்தட்டுக்குப் போய் வாந்தி வாந்தியாய் எடுத்தாள். குழைந்து குழைந்து ஓங்காழித்தாள். அவளுக்கு அது ஒரு புது அவஸ்தை. தன்னையுமறியாமல் 'அக்கா...' என்றாள், ஒருவித அவலக்குரலில்.
ஆனந்தி தனக்கு வந்த ஆத்திரம், பயம், மான உணர்ச்சி எல்லாவற்றையும் மறந்தாள். சட்டென்று ஓடிப்போய் 'என்னடி கண்ணுர...' என்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டு தலையைத் தாங்கினாள்.
'என்னை மன்னிச்சுடு அக்கா..!" பிதுங்கியிருந்த வசந்தியின் விழிகள் கலங்கின.
சில நிமிஷங்களுக்கு முன்பு இவள் என்னெல்லாம் சொன்னாள்!. இப்ப இதைத் தாங்க முடியாம மன்னிச்சுடு என்கிறாளே.
ஆனந்தியின் உள்ளம் உருகிக் கரைந்தது. 'நான் மன்னிக்கிறதை விட நீயே உன்னை மன்னிச்சுக் கொள்ளு" என்று கூறியவள் ஒரு நிமிஷம் கழித்து 'நீ செய்த பிழைக்கு இப்ப அனுபவிக்கிறாய். நீ படுகிற அவஸ்தையைப் பார்த்து எனக்கே தாங்க முடியேல்லே...' என்று துயரத்தால் தொண்டை அடைக்கக் கூறினாள்.
291 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 151
வாந்தி மெல்ல மெல்லக் குறைந்து நின்றது. வசந்தியை அப்படியே அனைத்தவாறு நடுத்தட்டுக்குக் கூட்டி வந்து உட்கார வைத்து விட்டு "நான் இப்ப என்ன செய்கிறது. எனக்கு ஒன்றுமே விளங்கேல் லியே' என்று வெம்பினாள்.
'நீ ஒன்னுக்கும் யோசிக்காதே அக்கா. எனக்கு ஒன்னுமே வராது. நீ போய் அடுப்புச் சுவரிலுள்ள தட்டிலே ஊறுகாய் இருக்குது. அதிலே ஒன்னு எடுத்துக் கொண்டு வா. தேசிக்காய் ஊறுகாயல்ல, மாங்காய் ஊறுகாய்.
இது கூட வாங்கி வைத்திருக்கிறாளே.
ஆனந்தி விரைந்து சென்று அவள் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். வசந்தி அதை வாங்கி வாயில் வைத்து நாக்கைச் சொட்டிக் கரைத்துவிட்டு "என்னாலே இன்னைக்குச் சமைக்க முடியாது. நீதான் அதைப் பாரு' என்றாள்.
'உன்னை இந்த நிலைமையிலே பார்த்துக் கொண்டு எனக்குச் சமைக்க வருமா.. எனக்குச் சாப்பிடத்தான் மனசு வருமா?"
'எனக்கும் கூடத் தேவையில்லே. ஆனா காந்தியும், செல்வமும், ஒரு வேளை ராகவும் வருவாங்க"
'அவங்க பாணை வாங்கித்தின்னட்டும்"
* * 斧 睿 斧
வசந்தி யோசிக்க வேணாம் என்று சொன்னாலும் ஆனந்தியால் யோசிக்
காமல் இருக்க முடியவில்லை. யோசிக்க யோசிக்க மனம் குழம்பியது.
தலைவேறு 'விண் விண்' என்று இடித்தது. படுத்திருந்த வசந்தியை அடிக்கடி பார்த்தவாறே வளைய வளைய வந்து கொண்டிருந்தாள், பின்னேரமானதும்
உடுத்திக் கொண்டு தெஹிவலைக்கு ஓடினாள்.
'சுபத்திரா தலையிலே சும்மா இடியல்ல பேரிடி விழுந்திட்டுது' என்று ஏக்கத்தோடு கூறிவிட்டு வசந்தியைப் பற்றிச் சொன்னவள் 'இனி என்னடி செய்கிறது. எனக்குத் தலை சுற்றுது சுபத்திரா" என்று கட்டிலில் அப்படியே இருந்து விட்டாள்.
சுபத்திராவுக்கும் இடி விழுந்த மாதிரித்தான் இருந்தது. சற்று நேரம் மலைத்திருந்தவள் 'என்ன செய்கிறதா..? அவன் தலையிலே இவளைக் கட்டி வைக்கிறது' என்றாள்.
'அவன் என்ன சொல்லுவானோ..?"
'அவன் எதையும் சொல்லட்டும்"
"அவன் ஏதாவது சாட்டுச் சொல்லி மறுத்தால்?"
சுபைர் இளங்கீரன் 292

"அதையும் பார்ப்போம்"
'பார்ப்போம் என்று மொட்டையாய்ச் சொல்றியே, பெண்ணாய் பிறந்த நாம இரண்டு பேரும் அவனை என்னடி செய்ய முடியும்?"
'நான் என்ன செய்கிறேன் என்று இருந்துபாரேன்' சுபத்திரா இதைக் கூறும்போது அவளுடைய குரலில் ஒரு அசாதாரண உறுதி தொனித்தது.
'எனக்குப் பயமாய் இருக்குதேடி?"
"எப்ப பயந்தோமோ அப்ப தோல்வி. எப்ப துணிஞ்சோமோ அப்ப வெற்றி” என்று கூறிவிட்டு உடுத்தத் தொடங்கினாள்.
'இப்ப எங்கே போக?"
'உங்க வீட்டுக்குத்தான்"
"அங்கே போய்..?"
'வசந்தியை நான் பார்க்கவேணும்'
'பார்த்து. ?"
"கேள்வியை நிறுத்திக் கொண்டு என்னோடு வா." என்று கூறியவாறு பவுடரைக் கொஞ்சம் எடுத்து முகத்தைத் தோய்த்தாள் சுபத்திரா.
'வீட்டில் அம்மா இல்லையே..?"
"அவ அந்த கிளாக்கர் வீட்டிலே இருக்கிறா. திறப்பைக் கொடுத்து விட்டுப் போகலாம்'
வீட்டைப் பூட்டிக் கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள். சுபத்திரா திறப்பை அம்மாவிடம் கொடுத்துவிட்டு திரும்பி ஆனந்தியையும் கூட்டிக் கொண்டு நடந்தாள்.
'நீ என்ன செய்யப் போகிறாய் என்று சொல்லேன்?"
'இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன்'
* * * 斧 *
ஆனந்தியும் சுபத்திராவும் திரும்பி வரும்போது வசந்தி குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு ஒன்றுமில்லாமல் வழக்கம் போல் முகத்தைச் சற்று மினுக்கிக் கொண்டு கவலையற்றவளாகவே இருந்தவள், என்றாலும் சுபத்திராவைக் கண்டதும் அவளுடைய முகம் நாணத்தால் சிவந்தது. அவளுடன் கதைப் பதற்கு வெட்கப்பட்டவளாய் நடுத்தட்டுக்குள்ளிருந்து நழுவி பின்தட்டுக்குச் சென்று மறுகிக் கொண்டு நின்றாள்.
அவளைப் பின்தொடர்ந்து நடுத்தட்டுக்கும் பின் தட்டுக்குமிடையில் உள்ள வாசலில் நின்றுகொண்டே "காந்தியும் செல்வமும் எங்கே?' என்று கேட்டாள் ஆனந்தி.
293 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 152
'முத்துவின் அம்மா வந்து கூட்டிக் கொண்டு போய்ட்டா' என்றாள் வசந்தி.
இதற்குள் சுபத்திராவும் பின்தட்டுக்கு வந்து வசந்திக்கு முன்னால் வந்து நின்றபடி அவளை மேலும் கீழும் பார்த்தாள். சிறிது களைத்து வாடியிருப்பது போல் அவள் காணப்பட்டாலும் வழக்கத்துக்கு மாறான ஒரு சோபை அவளிடம் துளிர்த்திருப்பதைக் கவனித்தாள். பிறகு "வெட்கப்படாதேவா." என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடுத்தட்டுக்கு வந்தவள் வசந்தியைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னாள்.
'அக்கா எல்லா விபரமும் சொன்னா. அவவிடம் பெரிய தர்க்க நியாயம் எல்லாம் பேசிய நீ இப்ப என்னைக் கண்டதும் வெட்கப்பட்டுக் கொண்டு பின்னாலே போய் ஏன் நிற்க வேணும்?நீ செய்தது பிழை என்று உன்மனசிலே உறுத்துகிறதால் தானே இப்படி நிற்கிறாய்? இப்ப கூட தலையைக் குனிந்து கொண்டுதானே நிற்கிறாய்? சரியாய் இருக்கிறவங்க யாரும் தலையை இப்படிக் குனிந்து கொண்டு நிற்பாங்களா?'
வசந்தி சுபத்திராவை நிமிர்ந்து பார்க்கவில்லை. முகத்தைத் தொங்கப் போட்டபடி காலால் நிலத்தில் கண்ணுக்குத் தெரியாத கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
'சரி, போகட்டும். இது சரியா, பிழையா என்று விவாதித்துக் கொண்டி ருக்கவோ யோசிக்கவோ முடியாது. உனக்கும் அவனுக்கும் எப்படியாவது கல்யாணம் நடக்க வேணும். இது அவசியமான அவசரமான காரியம். நீஎன்ன சொல்கிறாய்?"
'நாங்க உன் விஷயத்திலே தலையிடக்கூடாது என்று சொன்னாய். இப்பவும் அதைத்தான் சொல்லப் போறியா?"
'அவன் ஒரு சாதி ஆள் என்று சொன்னியாம். இதிலே மற்றவங்க தலையிடக் கூடாது என்று அவர் கண்டிப்பாய்க் கூறி விட்டார் என்றும் சொன்னியாம். அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் சரி. இப்ப நாங்கள் தலையிட வேண்டிய கட்டம் வந்துவிட்டது. உனக்கு அவன் ஒரு தீங்கைச் செய்து விட்டுப் போக நாங்க அனுமதிக்க ஏலாது. அந்தத் தீங்குக்கு நீயும் உடந்தையாக இருந்தாலும், அதன் விளைவுகளை நாங்க சும்மா பார்த்துக் கொண்டிருக்க ஏலாது. ஏனென்றால் அது எங்களையும் பாதிக்கிற விஷயம். அதனாலே நாங்க தலையிட்டே ஆக வேணும்.
"வாழ்க்கை என்கிறது ஒரு நாடகமல்ல. அது வாழ்ந்து முடிக்கிற ஒரு விஷயம். அதுக்கு ஒரு அர்த்தம் இருக்குது. அதுக்கு ஒரு தேவை இருக்குது.
சுபைர் இளங்கீரன் 294

அதுக்கு ஒரு நியாயம் இருக்குது. அதுக்கு ஒரு தர்மம் இருக்குது. இதை உணராம, மதிக்காம நடக்கிறது என்றால் சரி-பிழை என்கிறது இருக்கத் தேவையில்லே.
"நம்ம சொந்த விஷயத்திலே நாம நினைக்கிறபடி சுதந்திரமாய் நடக்கலாம், மற்றவங்க ஏன் கேட்க வேணும்; தலையிட வேணும் என்று நீயும் உன் ஃபிரண்டும் நினைக்கலாம். ஆனா நாம அப்படி நினைச்சாலும் நாம சனத்தோட சனமாய் வாழ்கிறோம். சமூகத்தோடு சமூகமாய் உறவாடுகிறோம். நம்ம சுதந்திரமும், தனிப்பட்ட ஆசாபாசங்களும், மற்றவர்களை -சமூகத்தைப் பாதிப்பதாய் இருக்கப்படாது. சுருக்கமாய்ச் சொன்னால் நாம ஹிப்பிகள் அல்ல. நீயும் உன் ஃபிரண்டும் ஹிப்பிகளாக வாழக்கூடாது என்கிறதிலே எங்களுக்கு நிறைய அக்கறை இருக்குது. அதனால்தான் நாங்க இதிலே தலையிட வேண்டியிருக்குது.'
இத்தனையையும் ஒரே மூச்சில் கூறிய சுபத்திரா, கடைசியாக, "இதுக்காக எங்களோட நீ முரண்டு பண்ணவோ, சச்சரவுப் பட்டுக் கொள்ளவோ வேணாம்' என்று சொல்லி நிறுத்தினாள்.
வசந்தி வாய் திறக்கவில்லை.
* * * * *
மறுநாள் பின்னேரம் இலங்கை வங்கிக்கு முன்னால் சுபத்திராவும் ஆனந்தி யும் நின்று கொண்டிருந்தார்கள். வேலை முடிந்து வங்கியிலிருந்து கும்பல் கும்பலாய் வந்து கொண்டிருந்தவர்கள் மீதே இருவரின் விழிகளும் மொய்த் திருந்தன.
அமுதலிங்கம் படியிலிருந்து இறங்கினான். ஆனால் அவன் அவர்களைக் கவனிக்கவில்லை. நடந்தான்.
'ஹலோ..."
அருகே குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினான். சுபத்திரா சிரித்தாள். அந்தச் சிரிப்புக்கு எதிரொலி காட்டாமலிருக்க அவனால் முடியவில்லை. அவனும் புன்னகை செய்தான். மறுவிநாடி அந்தப் புன்னகை மறைந்தது. கண்ணாடிக்குள் துருதுருத்துக் கொண்டிருக்கும் விழிகளால் அவர்களிரு வரையும் கேள்விக்குறியோடு பார்த்தான்.
சுபத்திரா நிற்கவில்லை. 'உங்களோடு கொஞ்சம் பேச வேணும்' என்று சொல்லி நடந்தாள். அவனும் பதில் சொல்லாமல் நடந்தான்.
பெய்லி வீதிச் சந்திக்கு வந்ததும் அமுதலிங்கம் சரேலென்று ஒரு டாக்ஸியை மறித்தான். ஆனந்திக்கு திக்கென்றது.
ஓடப் போகிறானோ?.
295 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 153
டாக்ஸி நின்றதும் கதவைத் திறந்து ஏறும்படி இருவருக்கும் சைகை காட்டினான் அமுதலிங்கம். ஆனந்தியும் சுபத்திராவும் ஆச்சரியத்தோடு ஏறினார்கள்.
எங்களை டாக்ஸியில் ஏற்றி அனுப்பப் போகிறானோ.
ஆனந்தி மின்னலாய் யோசித்து முடிப்பதற்குள் அமுதலிங்கம் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்து, டிரைவரிடம் "பார்லிமெண்ட்' என்றான்.
ஆனந்தி குழப்பத்தோடு சுபத்திராவைப் பார்த்தாள். அவள் ஏதோ யோசித்தபடி இருந்தாள்.
டாக்ஸி பாராளுமன்றத்துக்கு வந்ததும் அமுதலிங்கம் அவர்கள் பக்கம் திரும்பி "இங்கே பேசலாமே?' என்றான் ஆங்கிலத்தில்.
சுபத்திரா சிரித்துக் கொண்டே ‘இங்கே அமைச்சர்களும் எம்.பிமாரும்
தான் பேசுவார்கள்' என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு டிரைவரிடம் "லைட் ஹவுஸ்" என்றாள்.
டாக்ஸி திரும்பி மறுபக்கம் ஓடியது.
லைட் ஹவுஸDக்கு வந்ததும் மூவரும் இறங்கி மேலே ஏறியதும் 'என்ன பேச வேண்டும்' என்று ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பித்தான் அமுதலிங்கம்.
'உங்கள் கல்யாணத்தைப் பற்றி' என்று சுபத்திராவும் ஆங்கிலத்தில் தொடர்ந்தாள்.
'என் அபிப்பிராயத்தை வசந்தி சொல்லியிருப்பாளே?"
'சொன்னாள்'
'இந்த விஷயத்திலே நீங்க தலையிடலாம் என்றா?'
'நீங்க அவளுக்கு அப்படியா சொல்லியிருந்தீங்க?"
அமுதலிங்கத்தின் வாய் மூடியது. சுபத்திராவை அவன் விநோதமாய்ப் பார்த்துவிட்டு சில நிமிஷங்கள் மெளனமாய் இருந்தவன் 'இது என் தனிப் பட்ட விஷயம். இதில் மற்றவர்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை' என்றான்.
'வசந்தி தனிப்பட்ட ஆள் அல்ல. அவளுக்கு சகோதரர்களும் சகோதரி களும் இருக்கிறார்கள். 'மூத்தவள் இவள்தான்' என்று ஆனந்தியைக் காட்டினாள் சுபத்திரா.
‘தெரியும்'
'அதனால்தான் நாங்க இதிலே தலையிட வேண்டியிருக்கிறது. அதிலும் இப்போது அவசர அவசியமாய் தலையிட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது!"
சுபைர் இளங்கீரன் 296

'இது நாகரிகமல்ல' சுபத்திராவின் முகம் சிவந்தது. மேனி லேசாய்ப் படபடத்தது. "மிஸ்டர் அமுதலிங்கம், நாகரிகத்தைப் பற்றி நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சொல்லித்தர வேண்டாம். எங்களுடைய நாகரிகத்தை நாங்கள் நாகரிகமாய்த் தெரிந்து வைத்திருக்கிறோம். உங்களுடைய நாகரிகத்தைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை'
சுபத்திராகாரமாய் இதைச் சொன்னதும் அமுதலிங்கத்தின் முகம் வெளுத்து விட்டது. அவன் அவளைப் பார்க்க முடியாமல் சமுத்திரத்தின் பக்கம் விழிகளைத் திருப்பி மெளனமாய் நின்றான். ஆனந்தி கூட இவ ஏன் இப்படிக் காரமாய் பேசிகிறாள்' என்று பயந்தாள். மேனி லேசாய் நடுங்கியது.
சுபத்திரா தொடர்ந்தாள், 'கல்யாணத்தைப் பற்றியும் நாகரிகத்தைப் பற்றியும் உங்களிடம் கருத்துக் கேட்க நாங்கள் வரவில்லை. வசந்திக்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம் என்பதை திட்டவட்டமாய்த் தெரிந்து கொண்டு போகத்தான் வந்தோம்'
"அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. நான் சொல்லப் போவதுமில்லை'
அமுதலிங்கம் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கடுமையான தொனி யில் இதைக் கூறினான். சுபத்திரா சீற்றத்தோடு அவனைப் பார்த்தாள். 'நீங்க சொல்லாமலிருக்க நாங்க விடப் போவதுமில்லை; தெரிந்து கொள்ளாமல் நாங்கள் போகப் போவதுமில்லை.
அமுதலிங்கம் சரேலென்று திரும்பி ஆத்திரத்தோடு இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன் 'வசந்தியின் அக்காவே பேசாமல் மெளனமாக இருக்கும் போது என்னை வற்புறுத்த நீங்கள் யார்?' என்றான் வெடுவெடுத்த குரலில்.
'அவதான் நான். அதுதான் வற்புறுத்துகிறேன்' அமுதலிங்கம் ஆச்சரியத்தோடு 'ஓ." என்று குரலசைத்து விட்டு ஏதோ யோசித்துக் கொண்டு நின்றவன் 'உங்களுக்கு ஏன் இந்த அவசரம்?' என்று கேட்டான்.
'வசந்திக்கு இன்னும் ஆறுமாசத்தில் உங்களுடைய குழந்தை பிறக்கப் போகிறது. அதுதான் அவசரப்பட வேண்டியிருக்கிறது" என்று சடேரென்று சொன்னாள் சுபத்திரா.
அமுதலிங்கத்தின் முகம் திரும்பவும் வெளுத்து விட்டது. வாயும் அடைத்து விட்டது.
சுபத்திரா தொடர்ந்தாள், 'கல்யாணமாகுமுன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி விடுவதை நாங்க புரிந்து வைத்திருக்கிற நாகரிகம் விரும்பாது; ஏற்றுக் கொள்ளவும் தெரியாது. நீங்கள் சொல்கிறீங்களே மேல் நாடு என்று.
297 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 154
அங்கேயும் அப்படித்தான். இப்படியான ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்கு வந்து விட்டால் அதை அவர்கள் சகித்துக் கொள்கிறார்களே தவிர, விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. அங்கே தாலிகட்டாவிட்டாலும் சட்ட பூர்வமாக கல்யாணம் செய்து கொண்டு தம்பதிகளான பிறகு குழந்தைகள் பெறுவதைத் தான் சமூக வழக்கமாகவும், நாகரிகமாகவும் கருதுகிறார்கள். உங்கள் காரியம் எப்படியோ நடந்து விட்டது. இனி இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. சுருக்கமாகச் சொல்கிறோம். நீங்கள் தாலி சடங்கு என்று விரும்பாவிட்டாலும் குன்றந்த பட்சம் வசந்தியை பதிவுத் திருமணமாவது செய்து கொள்ள வேணும். இதற்கு மறுத்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயற்சித்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். கோட்டுக்கு உங்களை இழுத்து நிறுத்தி வைத்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம். அதுமட்டுமல்ல, உங்கள் வங்கியிலே ஜெனரல் மனேஜரிலிருந்து கீழே உள்ள கடைசி பியோன் வரை உங்கள் துரோகத்தைத் தெரியப்படுத்தி வேண்டிய நடவடிக்கைகள் எடுப்போம். அதுமட்டுமல்ல உங்கள் உத்தியோகத்துக்கும் சீட்டுக்கிழிய வைப்போம்"
சுபத்திரா உறுதியோடும் தீர்க்கமாகவும் இதைச் சொன்னாள். சுபத்திரா இப்படிச் சொல்லுவாள் என்று ஆனந்தி கூட எதிர்பார்க்கவில்லை. அவள் மலைத்து விட்டாள்.
அமுதலிங்கத்தின் முகம் மேலும் வெளுத்து விட்டது.
- * * * * *
கால் மணித்தியாலத்திற்கு மேல் கற்சிலையாகி நின்ற அமுதலிங்கம் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல்'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று நடுங்கிய குரலில் விழிகள் பிதுங்கக் கேட்டான்.
அவனுடைய முகபாவங்களை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த சுபத்திரா 'அதைத்தான் சொல்லிவிட்டேனே. வேண்டுமானால் இன்னொரு தடவை சொல்கிறேன். வசந்தியை நீங்கள் உடனடியாகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்' என்றாள்.
அமுதலிங்கம் சற்று நேரம் மெளனமாய் நின்று விட்டு 'சரி செய்வோம்" என்றான்.
சுபத்திரா விடவில்லை. 'எப்போது?" என்று கேள்வியைப் போட்டாள்.'
'நீங்கள் விரும்புகிற தேதியில்"
'நாளைக்கு?"
'“grifi”'
சுபத்திரா சிரித்தாள்: "வேண்டாம். நாளைக்கு மறுநாள் வைத்துக் கொள்வோம்"
சுபைர் இளங்கீரன் 298
२

'முரி"
"பதிவுத்திருமணம் தானே?" அமுதலிங்கம் தலையை ஆட்டினான். 'உங்களை எங்கே சந்திக்கிறது?" “காலை ஒன்பது மணிக்கு அந்தக் கந்தோருக்கே வசந்தியோடு வாருங்கள். நான் அங்கே தயாராக நிற்பேன்."
'நீங்கள் சொன்னபடியே வருகிறோம்" 'இனிப் போகலாம் தானே?" 'சரி' என்று ஒருசில விநாடிகள் மெளனமாக நின்றவள் தொடர்ந்து சொன்னாள். நீங்கள் கெளரவமான மனிதன் என்று நினைக்கிறோம்; உங்கள் வார்த்தையை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்'
அமுதலிங்கம் ஒன்றும் சொல்லவில்லை. அடியெடுத்து வைத்தான். மூவரும் கீழே வந்ததும் "நான் பேசியது உங்கள் மனதைப் புண்படுத்தி யிருந்தால் அதற்காக வருந்துகிறேன்' என்றாள் சுபத்திரா,
அமுதலிங்கம் வாய் அசைக்கவில்லை. மூவரும் நடந்தார்கள். இடையில் அமுதலிங்கம் டாக்ஸி ஒன்றை மறித் தான். 'நீங்களும் வருகிறீர்களா?"
"பரவாயில்லை. நாங்கள் கொஞ்சம் நடக்கப் போகிறோம்" டாக்ஸியின் பின்கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்த அமுதலிங்கம் சுபத்திரா வைப் பார்த்துச் சடேரென்று சொன்னான்: 'உங்களைப் போன்ற ஒரு பெண்ணை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததே இல்லை'
சுபத்திராவும் சடேரென்று "நீங்கள் இன்னும் கிழவனாகிவிடவில்லை” என்று சிரித்தாள்.
அமுதலிங்கம் கதவை பட்டென்று சாத்தினான். அது பறந்தது. அதுவரையில் சுபத்திராவுக்கும் அமுதலிங்கத்துக்கும் நடந்த உரையாடலை திகைப்போடும், திகிலோடும் அதேசமயம், உன்னிப்பாகவும் அவதானித்த வண்ணம் வாயைப் பூட்டிக் கொண்டிருந்த ஆனந்தி அப்போது தான் வாயைத் திறந்தாள்:
"அவர் கடைசியாகச் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை’ "அப்ப மற்றதெல்லாம் பொய்யா?" 'இப்ப நீ கேட்டியே, அதை வைத்துக் கொண்டு கூட நானும் சொல்கிறேன். 'உன்னைப் போல ஒருத்தியைப் பார்க்க முடியாது'
299 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 155
சுபத்திரா சிரித்தாள். ஆனந்தி தொடர்ந்தாள். 'அதுசரி, அவரை மிரட்டி மடக்கி ஒரு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தியே, உன்னுடைய சாமர்த்தியம் யாருக்கும் வராதடி.!
உன் வாயிலேயிருந்து வந்ததைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். கதையை விட அவர் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டது எனக்கு வியப்புக்கு மேல் வியப்பாயிருந்தது. நான் இதை எதிர்பார்க்கல்லே.'
'ஒ. ஒத்துக் கொண்டதும் அவன் அவராகிவிட்டாரா? அதுவும் சரிதான். வீட்டு மாப்பிள்ளையை மரியாதையாகத்தான் பேசவேணும்."
ஆனந்திக்கு நாணமாயிருந்தது. புன்னகை நெளிய நடந்தவள். 'இன்னும் மாப்பிள்ளைய்ாகேல்லியே. ஆளை ரிஜிஸ்தர் கந்தோரில் பார்த்த பிறகுதான் என்மனசு நிம்மதியாகும். அதுவரைக்கும் சந்தேகந்தான்'
"நிச்சயம் வருவான். இருந்து பாரு' 'என்ன இவ்வளவு நம்பிக்கையோடு சொல்கிறாய்?" 'அவனை அவதானித்ததிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கை. அவனுடைய தோற்றமும் பேச்சும் எப்படியிருந்தாலும் ஆள் ஒரு கோழை என்கிறது நல்லாய்த் தெரியுது. அதனால் தான் நான் போட்ட போட்டிலே ஆசாமி கலங்கிப் போனான். நான் சொன்னபடி நடந்து விட்டால் தன்நிலை என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்திருப்பான். மனசு நடுங்கியிருக்கும். அதுதான் ஒத்துக் கொண்டான். இப்படியான ஆட்களை இந்த அதிரடியில்தான் வழிக்குக் கொண்டு வரவேண்டும்.
'என்றாலும் அவருடைய அம்மா அப்பா இதையறிந்தால் பிரச்சினையாகி விடுமே! அவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இவரைப் பற்றிய விபரமும் நமக்கு அதிகமாய்த் தெரியேல்லே. வசந்தியைக் காப்பாத்து கிறதுக்காக நாமும் திடுப் திடுப்பென்று இதை முடிக்க முனைந்து விட்டோம். நீ சொல்கிறபடி இப்ப காரியம் முடிந்தாலும் பின்னுக்கு தொல்லைகள் வராமல் இருக்குமா? அவர் வசந்தியை நாளைக்குத் தன் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனால் அவருடைய அப்பா அம்மாவுக்கு எப்படி இருக்கும். இவவைப் பிடிச்சு வெளியே துரத்திவிட்டால் என்ன செய்கிறது?"
'அதெல்லாம் இரண்டாவது பிரச்சினை. அப்படி ஏதும் நடந்தால் அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்ப முதலாவது பிரச்சினை கல்யாணந்தான். அவனுடைய தாய் தகப்பனைப் பற்றியும் ஊரைப்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனா அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல."
சிறிது நேரம் மெளனமாக நடந்த ஆனந்தி, "நீ சொல்கிறதும் சரிதான்' என்று கூறிவிட்டு திரும்பவும் ஏதோ யோசித்தவாறு நடந்தாள். பாராளுமன்றம் வரை வந்ததும் தன் மெளனத்தைக் கலைத்துவிட்டு திடீரென்று சொன்னாள்.
சுபைர் இளங்கீரன் 300

"நாம இப்ப டேவிட்டின் வீட்டுக்குப் போகவேணும்"
சுபத்திரா சரேலென்று திரும்பி ஆனந்தியைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். "என்னதான் இருந்தாலும் நாம இரண்டு பேரும் பொம்பிளைகள் தானே. ஏதாவது இசக்குப் பிசகு நடந்தாலும் சமாளிக்கிறதுக்கு ஒரு ஆண்துணை வேண்டும். டேவிட்டையும் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு போகிறது நல்லது. நமக்கும் சாட்சிக்கும் ஆள் வேண்டுந்தானே."
"இதிலே அவரையும் இழுத்துப் போட்டு அவருக்கும் சிரமம் கொடுக்கிறது gFifu umr ?ʼʼ
'நான் அப்படி நினைக்கேல்லே. வசந்தியின் விஷயத்தை அவருக்குத் தெரியப்படுத்தினா அவர் வருத்தப்படுவாரோ என்னவோ என்று நினைத்து தான் இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். இப்ப அவருக்கும் தெரிய வாறது நல்லதென்று நினைக்கிறேன். அப்பா உள்ளவரை ஒரு ஆண்துணை இருக்குதெண்டு ஒரு ஆறுதல் இருந்தது. அவர் போன பிறகு எனக்கு அடிக்கடி டேவிட்டின் நினைவுதான் வருகுது. ராசுவை நம்பிப் பிரயோசனமில்லே. டேவிட் நம்ம ஆள். எங்க குடும்ப நிலைமை அவருக்கும் தெரியும். இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினா இப்ப வருத்தப்படமாட்டார். வித்தியாசமா நினைக்கப் போறதுமில்லே. இதை நிறைவேற்றுகிறதிலே அவரும் நிச்சயம் முன்னுக்கு நிற்பார். நமக்கு இன்னும் தைரியமாயிருக்கும்"
சுபத்திராவும் சில நிமிஷங்கள் சிந்தித்துவிட்டு 'அதுவும் சரிதான்' என்றாள்.
** * * *
டேவிட்டுக்கு இருவரும் வசந்தியின் விஷயத்தைச் சொன்னபோது அவன் ஆச்சரியப்படவுமில்லை. இதை ஆனந்தி இத்தனை நாளும் தனக்குத் தெரி விக்காமல் இருந்ததைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்கவுமில்லை. மாறாக, ஆனந்தி எதிர்பார்த்தது போல் உற்சாகமாக, "உடனே நடத்திவிட வேண்டியது தான். தாமதிக்கக்கூடாது' என்று கூறிவிட்டு சுபத்திராவின் இந்தச் சாதனைக் காக அவளைப் பாராட்டவும் செய்தான். தொடர்ந்து 'நீங்க ஒன்றுக்கும் யோசிக்காம மீதி ஏற்பாட்டைப் பாருங்க. அவன் இனிமே டூப் விட ஏலாது. அதை நான் கவனித்துக் கொள்வேன். இவங்க தங்கச்சிக்கு அவர்தான் மாப்பிள்ளை. நான் சிறிசேனாவையும் கூட்டிக் கொண்டு வருவேன்.'
இருவரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு வரும் போது ஆனந்தி கேட்டாள். 'நாம எல்லா முடிவும் செய்துவிட்டோம். கலியாணத்துக்கு என்ன செய்கிறது? ரெஜிஸ்ரேஷன் முடிந்ததும் மாப்பிள்ளையையும் பெண்ணையும் எங்கே அழைச்சு வாரது? அவங்க வீட்டுக்குப் போக முடியுமா? நம்ம வீட்டுக்கு எப்படி கூட்டி வாரது..? ஒரு ஆயத்தமும் இல்லையே. நாளைக்கு
301 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 156
ஒருநாள்தான் மிச்சமிருக்குது. இதுக்குள்ளே எல்லாம் செய்துவிட முடியுமா? எங்க மூணு தட்டு வீட்டுக்குள்ளே அவங்க இரண்டு பேருக்கும் எங்கே இடம் ஒதுக்கிக் கொடுக்கிறது? அவர் அங்கே இருக்கச் சம்மதிப்பாரா? வசந்திக்கு அவர் வாங்கிக் கொடுத்த இரண்டொரு சாறியும் சட்டையும் தான் இருக்குது. அவவுக்கு நாம் ஒன்றும் வாங்கிக் கொடுக்க வேணாமா? கையிலே காசு மில்லே. கல்யாணம் என்றால் லேசா..?"
ஆனந்தி குழப்பத்தோடும், ஏக்கத்தோடும் கேள்விகளாகவே அடுக்கிக் கொண்டு போனாள். சுபத்திரா அமைதியாகச் சொன்னாள்:
'நீ இதையெல்லாம் யோசிப்பாய். மனம் குழம்புவாய் என்று எனக்கும் தெரியும். நானும் ஒரு பிளானோடுதான் போகிறேன். நாளைக்கு வசந்திக்கு டிரஸ் எடுக்கிறது. மறுநாள் காலை காரிலே ரிஜிஸ்தர் கந்தோருக்குப் போகிறது. அது முடிஞ்சதும் மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துக் கொண்டு எங்க வீட்டுக்குப் போகிறது. கல்யாணச் சாப்பாடு அங்கேதான். பிறகு, என்னுடைய ரூமை அவங்க இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டு அம்மாவின் அறைக்குள்ளே நான் இருக்கிறது. இருந்து கொண்டு பிறகு நடக்க வேண்டி யதைப்பற்றி யோசிக்கிறது.' w
சுபத்திரா கூறியது ஆனந்திக்குப் புதினமாயிருந்தது. நீ இப்படித்தாண்டி நான் யோசிச்சு யோசிச்சு மூளையைப் போட்டுக் குழப்புவேன். நீ எல்லாத் தையும் திட்டம் போட்டு முடிச்சுப் போடுவாய். நான் மலைச்சுப் போவேன். நீ ஒரு ஜென்மந்தான்' என்று கிளுகிளுப்போடு சொன்னாள்.
'நான் ஒரு பெண் ஜென்மந்தான். உனக்கு இத்தனை நாளும் தெரி யேல்லியா?"
'பகிடி இருக்கட்டும். கல்யாணச் செலவுக்கு என்ன செய்கிறது?" 'வசந்தியின் டிரஸ் செலவு உட்பட எல்லாச் செலவும் ஐந்நூறு ரூபாய்க் குள்ளே முடிக்கிறது. மற்றதெல்லாம் பிறகு."
'அந்த ஐந்நூறுக்கும் எங்கே போகிறது. ?” 'அந்தக் கவலை உனக்கு வேணாம்?" .ܶܢ 'என்னடி இது! செத்தவீட்டுக்கும் உன்னுடைய செலவுதான். இதுக்கும் நீதான் என்றால். உனக்கு எங்கேயிருந்தடி காசு வருகுது. ?"
'அந்தக் கேள்வியெல்லாம் உனக்கெதுக்கு.?” 'இந்தக் கேள்வியைப் போட்டுத்தான் என்வாயை அடைக்கிறது உன் வழக்கம். ஏன், எனக்குச் சொன்னால் என்னவாம்? இதைக்கேட்க எனக்கு உரிமை இல்லையா..? நீ சொல்லாட்டி உன்னோடு நான் கதைக்கமாட்டன்' என்று செல்லக் கோபத்தோடும் வருத்தத் தோடும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஆனந்தி.
சுபைர் இளங்கீரன் 302

'உன் கோபம் எனக்கு வேண்டாம். சொல்லிவிடுகிறேன். எல்லாம் றோலிங்தான். அவசரமா தேவையென்றால் நமக்குத் தெரிந்தவர்களிடம் போய் கழுத்தைப் பிடித்து வாங்கிறதுதான்."
'எனக்காக இப்பிடியெல்லாம் கடன்படுகிறியே." கண்கலங்கக் கூறினாள் ஆனந்தி.
'நீ இப்படிக் கண்ணைக் கசக்குவாய். மனசைப் போட்டுப் பிசைவாய் என்றுதான் இதையெல்லாம் உனக்குச் சொல்கிறதில் லே. சரி சரி. கண்ணைத்துடை."
விழிகளைத் துடைத்துவிட்டுச் சற்றுநேரம் மெளனமாயிருந்த ஆனந்தி கடைசியாகக் கேட்டாள்: 'நம்ம ஏற்பாட்டை அவளுக்குத் தெரிவிக்கத்தானே வேணும்? இல்லாட்டி அவள் ஏதும் பிளான் போட்டிருந்தா பிரச்சினையாகி விடுமே.
"நாளைக்குச் சொல்லத்தான் இருக்கிறேன்."
கல்யாணம் என்றதும் வசந்தி திடுக்கிட்டுப் போனாள். சுபத்திராவும் அக்காவும் இந்த அளவுக்குப் போய் கல்யாணத்தை முடிவு செய்து கொண்டு வந்து விடுவார்கள் என்று அவள் நினைக்கவே இல்லை. இந்த விஷயத்தில் தானும் ஆனந்தியும் தலையிடப் போவதாகச் சுபத்திரா சொன்னபோது அவளுக்குச் சற்றுக் குழப்பமாகத்தான் இருந்தது. இதில் அவர்கள் தலையிட்டு தனக்கும் அமுதலிங்கத்துக்கும் உள்ள தொடர்பைக் குலைத்துவிடுவார்களோ என்று அவள் பயந்து கொண்டிருந்தாள். ஆனால் தலையிட வேண்டாம் என்று சொல்ல அவளுக்குத் துணிவு வரவில்லை. 'நீஆரம்பித்து வைத்தாய். நாங்கள் முடித்து வைக்கப் போகிறோம் என்று சுபத்திரா பேச்சைத் தொடங்கி கல்யாண விஷயத்தைக் கூறிய போது அதை உடனே அவளால் நம்பமுடியவில்லை. 'நீங்கள் உண்மையாகத்தான் சொல்றீங்களா?' என்று நாலைந்து தடவை கேட்டுவிட்டாள். சுபத்திரா அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்த பிறகுதான் வசந்தியின் குழப்பமும் பயமும் அடங்கியது. 'அவர் என்னைக் கைவிட மாட்டார் என்று சொன்னேனே பார்த்தீங்களா? எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்வது போல் மகிழ்ச்சியுடன் கூறினாள்.
ஒரு நாள் கழிந்து மறுநாள் விடிந்தது.
காந்தியையும் செல்வத்தையும் தெஹிவலைக்கு அனுப்பி விட்டு ஆனந்தி, சுபத்திரா, வசந்தி, ராசு நால்வரும் ஆரவாரம் எதுவுமில்லாமல் காரில் ஏறினார்கள். சந்தில் நின்றவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வசந்தியின் மணக்கோலத்தைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடும், கேள்விக் குறியோடும் பார்த்தார்கள். சிலர் விசாரிக்கவும் செய்தார்கள். 'வசந்திக்கு ரெஜிஸ்ரேசன். திடீர் ஏற்பாடு. விபரம் வந்து சொல்றேன்" என்று சுருக்கமாகக்
303 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 157
கூறிவிட்டு நடந்தாள் ஆனந்தி.
ரிஜிஸ்தர் கந்தோருக்கு வரும்போது டேவிட்டும் சிறிசேனாவும் ஏற்கனவே வந்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அமுதலிங்கத்தைக் காணவில்லை.
இப்போது மணி ஒன்பதரையாகியும் அவன் வரக்காணோம். நெஞ்சு படபடக்க ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். எல்லோருடைய முகத்திலும் கவலையும் பரபரப்பும் ஏறியிருந்தன. ஆனந்திக்கு ஓராயிரம் எண்ணங்கள் எழுந்தன. வசந்திக்கு மனம் பதறத் தொடங்கிவிட்டது. சுபத்திரா கூட யோசிக்கத் தொடங்கி விட்டாள். டேவிட்டுக்கும் சிறிசேனாவுக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு நிமிஷம் போவது ஒரு யுகம் போவது போல் இருந்தது. ஆனால் அமுதலிங்கம் அவர்களை ஏமாற்றாமல் பத்துமணிக்கு வந்துவிட்டான். அவனைப் பார்த்ததும் ஆனந்தியின் விழிகளும், வசந்தியின் விழிகளும் பனித்தன. பதைபதைப்பு, கவலை, ஏக்கம், தவிப்பு எல்லாம் அந்தக் கணத்திலேயே மறந்தன. சுபத்திரா ஒரு வெற்றிப் புன்னகையுடன் சகோதரிகள் இருவரையும் பார்த்தாள்.
டேவிட் உடனே ராசுவுடன் காருக்குச் சென்று அமுதலிங்கத்தையும் அவனுடன் வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தான். பரஸ்பரம் அறிமுகம் நடந்தது. தன்னுடன் வந்தவர்கள் நண்பர்கள் என்றான் அமுதலிங்கம். அவர்களும் அவனைப் போலவே யங்கி ஸ்டைலுடன்தான் இருந்தார்கள்.
பதிவுத் திருமணம் நடந்து முடிந்தது. வசந்தியும் அமுதலிங்கமும் தம்பதி யாகிவிட்டனர்.
* * * *。好
வசந்திக்கு கல்யாணம் என்றதும் சுபத்திராவின் அம்மாவுக்கு திகைப்பாக வும் ஆச்சரியமாகவும் இருந்தது. மாப்பிள்ளை யார், ஊரென்ன, பேரென்ன, சாதிசனம் என்ன, யார் இதை ஒழுங்கு செய்தது, மூத்தவ இருக்க இளையவ ளுக்கு எப்படிக் கல்யாணம் நடத்துவது என்றெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள் அவள்.
எல்லாவற்றையும் சொல்ல சுபத்திராவுக்கு விருப்பமில்லை. வசந்தியைப் பற்றி அம்மாவின் மனசில் தாழ்வான அபிப்பிராயம் எதுவும் விழுந்து விடக்கூடாது என்று கருதினாள். ஆகவே 'கல்யாணத்தை நான்தான் ஒழுங்கு செய்தேன். மாப்பிள்ளைக்கு பேங்கில் வேலை. மற்ற விபரமெல்லாம் ஆறுதலாய்ச் சொல்கிறேன். சகோதரிகளைக் கரைசேர்க்கிறவரை தான் கல்யாணம் செய்யிறதில்லை என்று ஆனந்தி வைராக்கியமாய் இருக்கிறது உனக்கும் தெரியுந்தானே. அதனால் அவளுடைய கல்யாணத்தைப்பற்றி இப்ப யோசனையில்லை. ரிஜிஸ்ரேசன் முடிந்ததும் நம்ம வீட்டுக்குத்தான் கூட்டி
சுபைர் இளங்கீரன் 304

வருவேன். அவர்களுக்கு இங்கேதான் கல்யாணச் சாப்பாடு. எனக்கு மட்டுமல்ல. ஆனந்திக்கும் வசந்திக்கும் கூட நீதான் அம்மா. தாய்க்குத் தாயாக இருந்து செய்ய வேண்டியதை மனம் குளிரச் செய்யவேணும். என்னிடம் கேள்விகளைப் போட்ட மாதிரி மாப்பிள்ளையிடமும் மற்றவர்களிடமும் கேள்வியைப் போட்டு அவர்களுக்கும் சங்கடத்தை உண்டாக்கிப் போடாதே" என்று கூறியிருந்தாள்.
முழுவிபரத்தையும் தெரிந்து கொள்ளாதது அம்மாவின் மனசை அரித்துக் கொண்டிருந்தாலும் மகள் தவறான காரியத்தைச் செய்யமாட்டாள் என்ற நம்பிக்கையில் சுபத்திரா சொன்னதை ஏற்றுக் கொண்டாள். மகிழ்ச்சி யடைந்தாள்.
திருமணப்பதிவு முடிந்து எல்லோரும் தெஹிவலைக்கு வந்ததும் அம்மா புதுமணத்தம்பதிக்கு ஆராத்தி எடுத்து, திருஷ்டி கழித்து ஆசி கூறி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.
சுபத்திரா இருக்கும் அனெக்ஸோடு ஒட்டி ஒரு சிறு முற்றம். வேப்ப மரத்தையும் வைத்துக் கொண்டிருந்தது. அங்கே கதிரைகளைப் போட்டு, அமுதலிங்கத்தின் நண்பர்களையும், டேவிட், சிறிசேனா, ராசு ஆகியோரையும் இருக்க வைத்துவிட்டு தம்பதியை தன் அறைக்குள் விட்டாள் சுபத்திரா. ஆனால் அமுதலிங்கம் அங்கே இருக்காமல் முற்றத்துக்கு வந்து மற்றவர் களுடன் அமர்ந்து கொண்டான்.
ஒரு கல்யாண வீட்டுக்குரிய சூழல் இல்லாவிட்டாலும் சுபத்திராவின் வீடு வழக்கத்தை விட சற்று கலகலப்பாக இருந்தது.
ஒரு மணி ஆயிற்று. சமையல் எல்லாம் முடிந்து எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு முற்றத்திலிருந்தவர்களைச் சாப்பிட அழைத்தாள் சுபத்திரா. தம்பதி உட்பட அமுதலிங்கத்தின் நண்பர்களும் டேவிட்டும் சிறிசேனாவும் உட்கார்ந்தார்கள். பகிடியும் பேச்சுமாக விருந்து நடந்தது.
சாப்பாடு முடிந்து சற்று நேரத்துக்குள் அமுதலிங்கத்தின் நண்பர்கள் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். டேவிட்டும் சிறிசேனாவும் கூட புறப்படத் தயாரானார்கள்.
"என்ன அவசரம் என்று கேட்டாள் ஆனந்தி.
"வந்த காரியம் முடிஞ்சுது. இனி எவ்வளவு நேரம் இருக்கிறது? இன்றைய லீவோடை இருக்கிற வேலைகளையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாமே?"
இதற்குள் அங்கு வந்த சுபத்திரா இந்தக் கல்யாணம் நிறைவேறிப் போய்ட்டுது. உங்க கல்யாணம் எப்போ..? என்று சிரித்தவாறு கேட்டாள்.
'உங்க சிநேகிதியிடம் கேளுங்க' என்று சொல்லிவிட்டு ஆனந்தியைப் புன்னகையோடு பார்த்தான் டேவிட்.
305 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 158
அவள் முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள். 'இவவைக் கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லுவாள். ஆனால் மனசுக் குள்ளே ஆயிரம் ஆசையும் இருக்குது'
'இந்தா, நீ சும்மா இருக்க மாட்டாய்?' என்று தோழியின் கையைக் கிள்ளினாள் ஆனந்தி.
டேவிட் சிரித்துவிட்டு விடை பெற்றுக் கொண்டான். அவனையும் சிறிசேனாவையும் அனுப்பிவிட்டு ஆனந்தியும் சுபத்திராவும் முற்றத்தில் கதைத்துக் கொண்டிருந்த போது அமுதலிங்கமும் வசந்தியும் ஏதோ தர்க்கித்தபடி அங்கு வந்தார்கள்.
'புருஷனும் பெண்சாதியும் தர்க்கம் பண்ணுகிறதுக்கும் சண்டை போடுகிற துக்கும் இன்னும் நாளிருக்குதே. நீங்க இன்றைக்கே தொடக்க விழா நடத்துகிறீங்களா?' என்று சிரித்தவாறு கேட்டாள் சுபத்திரா.
"இவருக்கு இங்கே இருக்க விருப்பமில்லையாம். அதுதான் தர்க்கம்' என்றாள் வசந்தி.
'ஏனாம். ?' சுபத்திரா கேட்டாள். 'இங்கே இடமில்லையாம். இந்த ஒரு அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்க ஏலாதாம். உங்களுக்குச் சிரமம் கொடுக்க இஷ்டமில்லையாம்'
'ஓ..!' என்று அமுதலிங்கத்தைப் பார்த்தாள் சுபத்திரா. 'நீங்க சொல்கிறது உண்மைதான். ஆனா நாங்க சிரமப்படுகிறதாக நீங்க நினைக்கா தீங்க. உங்களுக்கு இங்கே இருக்கிறது கஷ்டமாக இருந்தா வசந்தியை உங்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறதிலே எங்களுக்கு ஆட்சேபணை இல்லே' என்றாள்.
அமுதலிங்கம் ஒன்றும் பேசவில்லை. 'அதைத்தான் நானும் சொல்கிறேன்' என்றாள் வசந்தி. 'அதுக்கென்ன சொல்கிறார்?' என்று ஆவல் தொனிக்கக் கேட்டாள் ஆனந்தி.
'தனக்கு வீடு இல்லையாம். தானும் ஒரு அறையில்தான் இருக்கிறாராம்' 'அப்ப இவருடைய அம்மா அப்பா கொழும்பில் இல்லையா? அவங்க எங்கே இருக்கிறாங்க?' என்று கேள்வியைத் தொடர்ந்தாள் ஆனந்தி.
'அப்பா இல்லையாம். அம்மா மட்டுந்தான். திருக்கோணமலையில் மகளுடன் இருக்கிறாவாம். ஒரே மகள்தானாம். மகளுடைய புருஷனும் திருக்கோணமலைதானாம். அத்தானுக்கும் இவருக்கும் ஒத்துப் போகாதாம். பேசிக் கொள்கிறது கூட இல்லையாம். எப்போதாவது ஒருதடவை அம்மா வைப் பார்த்துவிட்டு வருவாராம். இப்படிச் சொல்கிறார் இவர்.
சுபைர் இளங்கீரன் - 306

சுபத்திரா சற்று ஆச்சரியத்தோடு அமுதலிங்கத்தைப் பார்த்தாள். 'உங்க ளோடு ஆரம்பத்தில் கதைத்தபோது அம்மாவும் இருக்கிறது போல பேசி னிங்களே..?' என்று கேட்டாள்.
'சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். வசந்திக்குச் சொன்னதுதான் உண்மை' என்றான் அமுதலிங்கம்.
'ஓ..! உங்க சரித்திரம் இதுதானா..!" என்று கூறிய சுபத்திரா "பரவா யில்லே. ஒரு வீடு எடுக்கும்வரை இங்கே இருங்க, அதுவும் பிடிக்கேல்லே என்றால் வசந்தியின் வீட்டில் இருங்க" என்றாள்.
'அங்கே எப்படி இருக்கிறது. ? அது இவருக்கும் விரும்பமில்லே; எனக்கும் விருப்பமில்லே'
'அப்ப நீங்க என்ன சொல்கிறீங்க?' என்று அமுதலிங்கத்தைக் கேட்டாள் சுபத்திரா.
அவன் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தான். ஆனால் வசந்தி சொன்னாள்: 'என்னை எங்க வீட்டிலே இருக்கட்டாம். இவர் தன்னுடைய அறையிலேயே இருக்கிறாராம்"
'இதுவும் நல்ல கூத்துத்தான்' என்று சிரித்தாள் ஆனந்தி. சுபத்திராவும் சேர்ந்து சிரித்தாள்.
அமுதலிங்கத்தின் முகம் லேசாகக் கறுத்தது. வசந்தியும் விளங்கிக் கொள்ளட்டும் என்று நினைத்தானோ என்னவோ தமிழில் சொன்னான்:
'நீங்கள் ஏன் சிரிக்க வேணும்? கல்யாணம் தான் முடிந்துவிட்டுதே. இனி என்ன பயம் ? தனித்தனியாக இருக்கிறதிலே என்ன நஷ்டம் ? அப்படி இருக்கிறதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய இடத்திலே நான் சுதந்திரமாய் இருக்கலாம். வசந்தியும் தன் வீட்டிலே சுதந்திரமாய் இருக்கலாம். தேவையான போதெல்லாம் சந்திக்கிறது; ஒன்றாய்ச் சாப்பிடு கிறது; ஒன்றாய் உலாத்துகிறது; பொழுது போக்கிக் கொள்கிறது. இது எவ்வ ளவு சந்தோஷமாயிருக்கும். கல்யாணத்துக்கு முந்தியும் இப்படித்தானே இருந் தோம். எவ்வளவு ஜொலியாய்த் திரிந்தோம். ஒருவர்க்கொருவர் கரைச்சல் இல்லே. ஒன்றாய் இருந்தால் கரைச்சல் கூட. ஒருத்தருடைய விஷயத்திலே ஒருத்தர் அடிக்கடி தலையிட்டுக் கொண்டே இருப்போம். அதனால் அவ்வளவு சந்தோஷம் இருக்காது.'
ஆனந்தியும் வசந்தியும் அவனை விநோதமாய்ப் பார்த்தனர். சுபத்தி ராவோ அவனைப் புரிந்து கொண்டு சிரித்தாள். ஆனந்திக்கு மனம் குறுகுறுத் தது. வாயை மூடிக் கொண்டிருக்கவும் முடியவில்லை. அவள் சொன்னாள்:
'நீங்க அப்படி நினைக்கிறீங்க. ஆனா கல்யாணமான பிறகும் நீங்க ஒரு இடத்திலேயும், இவ ஒரு இடத்திலேயும் இருக்கிறது அழகில்லே. அது ஒரு
307 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 159
குடும்ப வாழ்க்கையாகவும் இருக்காது. சேர்ந்து வாழ்கிறதுக்குத்தான் கல்யாணம். பிரிஞ்சு தனித்தனியாய் இருக்கிறதுக்கு இல்லே. சேர்ந்து வாழ்ந்து இன்பமோ துன்பமோ சந்தோஷமோ துக்கமோ கூட்டாக அனுபவிக்கிறதில் தான் வாழ்க்கையின் முழு அர்த்தமும் இருக்குது. தனியாக இருந்தா சுதந்திர மாய் இருக்கலாம் என்கிறீங்க. மனசு இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருக்க ஒருதடை இருக்கப்படாது என்கிறதைத்தான் நீங்க சுதந்திரம் என்று நினைக்கிறீங்களோ என்னவோ. அது சுதந்திரமல்ல அடிமைத்தனம். மனசுக்கு அடிமைப்படுகிறோம். சுதந்திரம் இருக்குது என்று கூடாத காரியத் தைக் கூடச் செய்ய மனசு தூண்டும். அற்பத்தனமான கேவலமான சந்தோ ஷத்தையெல்லாம், இன்பத்தையெல்லாம் அனுபவிக்கச் சொல்லும். இதுக் கெல்லாம் நாம அடிமையாகிவிடுவோம்.
'கரைச்சல் தலையீடு என்று சொன்னிங்க, குடும்பம் என்று இருந்தா அது இருக்கத்தான் செய்யும், புருஷன் பெண்சாதிக்குள்ளே இறுக்கமான ஒற்றுமை இருந்தால் அது ஒண்ணும் செய்யாது. கரைச்சல் கொஞ்சம் இருக்க வேணும். அது இல்லாட்டி உப்பில்லாத பண்டம் போல. வாழ்க்கையிலே ருசி இருக்காது. புருஷன் பெண் சாதிக்குள்ளே தலையீடு என்று சொல்கிறதிலே அர்த்தமே இல்லே. குடும்ப வாழ்க்கையிலே ஒற்றுமையும் ஒருவர் உணர்ச்சியை மற்றவர் மதிக்க வேணும், இரண்டு பேருடைய உணர்ச்சியும் போக்கும் குடும்ப சுகத்துக்காக இருக்க வேணும் என்ற கருத்தில்தான் தலையிடுகிறதும் இருக்குது. இதையெல்லாம் ஒருகூடாத விஷயமாக கருதி நீங்க சொன்னமாதிரி தனித் தனியாக இருந்தா அலுப்பும் விரக்தியும் தான் மிஞ்சும் வாழ்க்கையே நச்சேறிப்போகும்.'
ஆனந்தியா இப்படிப் பேசுகிறாள். எவ்வளவு தெளிவாகவும் தைரிய மாகவும் வாழ்க்கைக்கே ஒரு விளக்கம் கூறிவிட்டாள்.
சுபத்திரா திகைத்து விட்டாள். அமுதலிங்கத்தையும் விட இப்போது ஆனந்தி தான் அவளுக்கு வினோதமாகத் தெரிந்தாள். அவளைப் பரவசத் தோடு பார்த்துவிட்டு அமுதலிங்கத்தின் பக்கம் திரும்பி 'பார்த்தீங்களா எங்க ஆனந்தி பேசுகிறதை. இதுவரைக்கும் உங்களோடு கதைக்கக் கூச்சப்பட்டு வாயைப் பூட்டிக் கொண்டு ஒதுங்கி ஒதுங்கி இருந்தவ இப்ப கொட்டு கொட்டென்று கொட்டி விட்டா. இதுக்குப் பிறகும் நீங்க இவவோட விவாதம் பண்ண முடியாது. நீங்க தோற்றுத்தான் போவீங்க' என்று பெருமையோடு சிரித்தபடி சொன்னாள்.
வசந்தி கூட ஆச்சரியப்பட்டாள். சுபத்திராவுக்கு ஏற்பட்டது போல் அவளுக்கும் பெருமையாக இருந்தது. "இதுக்கு நீங்க என்ன சொல்கிறீங்க?" என்ற பாவனையில் கணவனைப் பார்த்தாள்.
அமுதலிங்கத்தின் முகத்தில் எந்தவித சலனத்தையும் காணவில்லை. அவன் ஆனந்தி கூறியதையெல்லாம் சர்வசாதாரணமாகவே கேட்டிருந்துவிட்டு
க்பைர் இளங்கீரன் 308

சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டான்.
"கொழும்பிலே உத்தியோகமாய் இருக்கிறவங்க கல்யாணம் நடந்த பிறகு இங்கே தனியாகவும் மனைவி ஊரிலே தனியாகவும் பிரிந்து வாழ்கிறார்களே, இதுக்கு என்ன சொல்லப் போகிறீங்க?"
சிக்கலான ஒரு கேள்வியைக் கிளப்பி விட்டானே. இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று எண்ணியபடி ஆனந்தியைப் பார்த்தாள் சுபத்திரா. ஒருவிதமான சுணக்கமுமின்றி ஆனந்தியிடமிருந்து உடனே பதில் வந்தது. நீங்க சொன்ன கருத்திலே அவங்க தனியாகப் பிரிஞ்சு இருக்கேல் லே. கொழும்பிலே வீடு எடுக்கிறது கஸ்டம். அதோட வேறு சிரமங்களும் இருக்கும். அதனால்தான் கொழும்பிலேயும் ஊரிலேயுமாய் இருக்கிறாங்க. ஆனால் சேர்ந்துவாழ முடியேல்லியே என்ற கவலை அவங்களுக்கு நிறைய இருக்கும்.
சுபத்திரா தன்னையுமறியாமல் "சபாஷ்' என்றாள். 'என்ன சபாஷ் ?' எங்களுக்கு வீடு இருக்கிறதாக்கும்?' என்றான் அமுதலிங்கம்.
'இல்லைதான். அதுக்காக கொழும்பிலேயே இருக்கிற புருஷனும் பெண் சாதியும் பிரிஞ்சு வாழ முடியுமா?"
சுபத்திரா இடையில் குறுக்கிட்டாள். 'விவாதம் போதும். உங்களுக்கு இங்கே இருக்கிறது கஷ்டமாயிருந்தாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டு இருங்க. எப்படியோ கெதியிலே ஒருவீட்டைப் பார்த்து எடுத்துக் கொண்டு போகலாம்'
அமுதலிங்கம் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. 'என்ன, நான் சொல்கிறது சரிதானே..?' என்றாள் சுபத்திரா. "நாங்க இரண்டுபேரும் இன்றைக்கு இரவே ஹொனிமூன் போகிறோம். வந்து யோசிப்போம்" என்றான் அவன்.
"ஹொனிமூனா. இத்தனை நாளும் உங்க இரண்டு பேருக்கும் ஹொனி மூனாய்த்தானே இருந்திருக்குது' என்று கேட்க நினைத்தாள் சுபத்திரா. ஆனால் கேட்காமல் ஆனந்தியைப் பார்த்தாள். அவள் மெளனமாக இருந்தாள்.
வசந்தியோ உற்சாகத்துடன் 'நானும் அதைத்தான் நினைச்சேன். நாளை ஞ்சு நாளைக்கு ஜொலியாய் எங்கேயாவது இருந்துவிட்டு வாரதுதான் எனக்கும் இஷ்டமாயிருக்குது' என்றாள்.
'உங்க விருப்பம் போலச் செய்யுங்க. நாங்க இதிலே குறுக்கிடேல்லே' என்றாள் ஆனந்தி.
好 好 * * *
309 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 160
ஹொனிமூனுக்குப் போன வசந்தி நான்கு நாள் கழித்து தன்னுடைய வீட்டுக்கே வந்துவிட்டாள்.
அவளைக் கண்டு திகைத்த ஆனந்தி 'என்னடி இது. நீ இங்க வந்துவிட் டாய். சுபத்திரா வீட்டிற்குப் போகேல்லியா?" என்று பரபரப்புடன் கேட்டாள். 'அவர் அங்கே வரமாட்டாராம். வீடு எடுக்கும் வரை நாம் பிரிஞ்சுதான் இருக்க வேணும் என்று பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டார். அதை என்னாலே மறுக்க முடியேல்லே' என்று அழாக்குறையாக கூறினாள் வசந்தி.
இதற்கு மேல் என்ன செய்கிறது என்று தெரியாமல் சிறிது நேரம் மலைத்து நின்ற ஆனந்தி 'என்றாலும் இங்கேயாவது இரண்டு மூன்று நாளைக்கு இருந்துவிட்டுப் போகலாமே. நீ கூப்பிட்டியா என்று கவலையோடு கேட்டாள்.
"இங்கே இருக்கிறது எனக்கும் விருப்பமில்லே. என்றாலும் மனசு கேட்காம நீ இப்ப சொன்னமாதிரி அவருக்கும் சொல் லத்தான் செய்தேன். பிறகு பார்ப்போம் என்று தட்டிக்கழித்துவிட்டது எனக்குக் கூட வருத்தமாயிருக்குது' என்றாள் அவள்.
அன்று பின்னேரம் சுபத்திரா வீட்டுக்குச் சென்றிருந்த ஆனந்தி அவளிடம் வசந்தி வந்ததையும், அவள் கூறிய செய்தியையும் தெரிவித்து விட்டு "இதுக்கு என்னடி செய்கிறது?" என்று கேட்டாள்.
அவனுக்கு இங்கே இருக்கப் பிடிக்கேல்லே. ஹொனிமூன் என்று வசந்தி யோடு உடனே போனது கூட இதுக்குத்தான் என்று நினைக்கிறேன். அவனு டைய அபிப்பிராயப்படி கொஞ்சநாளைக்கு விட்டுப் பார்ப்போம். அதற்கிடை யிலே எப்படியாவது ஒருவீட்டைத் தேடிப் பிடிப்போம். வீட்டு வேட்டையில் அவனையும் இறங்கும்படி தூண்டவேணும் என்று வசந்தியிடம் சொல்லு. கல்யாணம், மனைவி, குடும்பம், வாழ்க்கை என்கிறதுக்கெல்லாம் ஒரு அலாதியான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிற அவன் வீட்டு விஷயத்திலும் அலட்சியமாக இருந்தாலும் இருந்து விடுவான்' என்றாள் சுபத்திரா.
鲁 * * * *
வழக்கம் போல் அவர்களைப் பார்க்க வந்த முத்துவின் அம்மாவுக்கு வசந்தியின் கல்யாணத்தைப் பற்றி கூறிய ஆனந்தி 'உங்களுக்கு அறிவிக்காம கல்யாணத்தை நடத்திப் போட்டோம் என்று தப்பாக நினைக்காதீங்க. திடுதிப்பென்று காரியம் நடந்து போய்ட்டுது. நாங்க யாரையும் கூப்பிடேல்லே. உங்களையும் முத்துவையும் கட்டாயம் கூப்பிட்டிருக்கவேணும். அதுக்குக் கூட அவகாசமில்லாமல் போய்ட்டுது. இதை நினைச்சு எனக்குச் சரியான வருத் தம்' என்றாள்.
சுபைர் இளங்கீரன் 310

இதைக்கேட்டுக் கொண்டிருந்த முத்துவின் அம்மாவுடைய விழிகளிலிருந்து கண்ணிர் பொல பொல என்று கொட்டியது.
'ஏன் இப்படி அழுகிறீங்க?' என்று திகைப்புடன் கேட்டாள் ஆனந்தி. 'நான் தப்பா நினைக்கேல்லே ஆனந்தி. தாயையும் தகப்பனையும் இழந்து ஒண்ணுக்கும் வழியில்லாம நிர்க்கதியாய் நிற்கிற ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைச்சிருக்கே, அதைநினைச்சு சந்தோஷத்தாலே அழுகிறேன். நாங்க வராட்டாலும்தட்டுத் தடங்கல் இல்லாம இந்தக் கல்யாணம் நடந்து முடிஞ்சுதே பெரிய காரியம். தெய்வம் கண்விழிச்சுப் பார்த்திருக்குது' என்று கூறிவிட்டு 'வசந்தி எங்கே?' என்று கேட்டுக் கொண்டே பின்தட்டுக்குப் போனாள்.
அடுப்பில் ஏதோ காரியமாக இருந்த வசந்தி "வாங்க அத்தை..' என்றாள். 'அக்கா எனக்கு எல்லாம் சொன்னா. பிள்ளையும் குட்டியுமாய் சுகமாய், மகாராசியாய் நீ வாழவேணும்' என்று கூறியவாறு வசந்தியின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்திப்பிடித்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டாள். இதைப் பார்த்துக் கொண்டு நின்ற ஆனந்திக்கு உடம்ப்ெல்லாம் புல்ல ரித்தது. கண்கள் கலங்கின.
'இது என்ன இதயம். இது என்ன மனம்.1 குச்சிபோல இருக்கின்ற உந்த உடம்புக்குள்ளே இத்தனை பெரிய மனசா.
உணர்ச்சிப் பெருக்கைத் தாங்க முடியாமல் கண்ணைத்துடைத்துக் கொண்டு முன்தட்டுக்கு வந்துவிட்டாள் ஆனந்தி.
சற்று நேரத்துக்குள் 'ஆனந்தி..!" என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தாள் முத்துவின் அம்மா.
அவள் திரும்பினாள். மாப்பிள்ளையையும் பொண்ணையும் ஒருநாளைக்கு எங்க வீட்டுக்கு அழைச்சு வாயேன். கல்யாணத்துக்கு நான் வரட்டாலும் இரண்டு பேரையும் ஒண்ணாய் கண்குளிரப் பார்க்கவேணும். விருந்து வைச்சு உபசாரம் பண்ணி அனுப்பவேணும் என் உடன்பிறந்தவன் மகளுக்குச் செய்யாம வேறே யாருக்குச் செய்கிறது. அழைச்சுட்டு வாறியா..?' என்று பாசம் பொங்கக் கேட்டாள்.
இதுக்கு என்ன பதில் சொல்கிறது?. எங்க வீட்டுக்கே அவர் இன்னும் வரேல்லியே. இவங்க வீட்டுக்கு எப்படிக் கூட்டிக் கொண்டு போறது.
'சரி ஆகட்டும் அத்தை...' என்று சொல்லிவிட்டாள் ஆனந்தி. அப்போது அந்த அன்புக்கு முன்னால் அந்தப் பெரிய மனசுக்கு முன்னால், அந்தப் பதிலைத் தவிர வேறு எந்தப்பதிலையும் அவளால் சொல்ல முடியவில்லை.
* 斧 舒 * 等
311 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 161
இரண்டு நாட்கள் கழித்து முத்து வந்தான். "வசந்தியின் கல்யாணத்தைப் பற்றி அம்மா சொல்லியிருப்பாவே' என்று கேட்டாள் ஆனந்தி.
அவன் தலையை ஆட்டிவிட்டு மெளனமாக இருந்தான். அவனிடம் கலகலப்பைக் காணவில்லை. எதையோ பறிகொடுத்தவன் போல் முக மெங்கும் சோகம் மூடியிருந்தது.
"ஏன் முத்து ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? உனக்குக் கல்யாணத்துக்குச் சொல்லேல்லே என்று வருத்தமா?' என்று பரிவுடன் கேட்டாள்.
'அந்த வருத்தமில்லே' வேறு என்ன வருத்தம்?" "அதை எப்படிச் சொல்கிறது?" 'ஏன், என்ன விஷயம், விளக்கமாய்ச் சொல்லேன்?' முத்து ஆனந்தியைப் பார்த்தான். பார்த்ததுமே அவனுடைய விழிகள் பொங்கிவிட்டன.
ஆனந்தி திடுக்கிட்டு விட்டாள். 'என்ன முத்து இது...! வாயாலே சொல்லாம கண்ணிராலே சொல்கிறியே..!" என்றாள் பதற்றத்துடன். 'எனக்குச் சொல்ல முடியேல்லே' என்று விக்கினான் அவன். ஆனந்தி விழித்தாள். சில நிமிஷங்கள் பொங்கும் விழிகளுடன் இருந்தவன் நான் இப்படி நினைக்கேல்லே' என்று தொண்டை அடைக்கக் கூறினான். '
'நீ எதைச் சொல்கிறாய் முத்து. ?" 'வசந்தியின் கல்யாணத்தைப் பற்றிச் சொல்கிறேன். ஒருநாள் வசந்தியைப் பற்றிய எண்ணம் வந்திருக்குது என்று உனக்குச் சொன்னது ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். நான் அதை விளையாட்டுக்குச் சொல்லேல் லே. மனசிலே பூரணமாய் வைச்சுக் கொண்டுதான் சொன்னேன். வசந்தி எனக்குத் தான் எனக்குத்தான் என்று மனசு அடிச்சு அடிச்சுச் சொல்லும். நான் அதைத் திறந்து சொல்லேல்லே. சொல்லு, சொல்லு என்று அது துடிச்சாலும் வாய் வரேல்லே. வசந்தியைக் கட்டிக்கத்தான் முறிஞ்சு போன உறவை ஒட்டிக் கொண்டு வந்துவிட்டான் என்று நீநினைச்சா என்ன செய்கிறது என்ற பயம். என் மனசுக்குள்ளே இருக்கிறதை அம்மாவுக்குச் கூடச் சொல்லேல் லே. இப்படித் திடீரென்று ஒருவன் வந்து வசந்தியைக் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று தெரிஞ்சிருந்தா உடனே சொல்லியிருப்பேன். ஆனா, நான் நம்பிக்கையோடு இருந்தேன். கையிலே நாலு காசு சேர்த்து வைச்சுக் கொண்டு அம்மா மூலம் இதைக் கேட்கலாம் என்று இருந்தேன். அதுக்குள்ளே இப்படி நடந்து போச்சுது. ஆனா இதைச் செய்கிறதுக்கு முந்தி என்னை ஒருவார்த்தை
சுபைர் இளங்கீரன் 312

கேட்டிருக்கலாம். வசந்திக்குக் கிடைச்சிருக்கிற மாப்பிள்ளையைப் போல நான் பேங்கிலேயோ, அரசாங்கத்திலேயோ உத்தியோகம் பார்க்கிறவனல்லத்தான். ஹோட்டல் பேர்வழிதான். என்றாலும் எனக்கும் ஒரு மனசு இருக்குது. உழைச்சுக் காப்பாற்ற திராணி இருக்குது. என்ன வந்தாலும் தாங்கிக்கிறதுக்கு சக்தியும் இருக்குது. இதை நீங்க நினைச்சுப் பார்க்கேல்லியே என்ற வருத்தம் தான். எனக்கு வேறென்ன வருத்தம் இருக்கப் போகுது?"
நா தழுதழுக்க, குரல் கம்மிக்கம்பி அடைக்க தன் இழப்பையும் உணர்ச்சி யையும் வார்த்தைகளாக்கியும் கண்ணிராக்கியும் காட்டினான் முத்து.
ஆனந்தி உருகிவிட்டாள். நெஞ்சு துடிக்க வாயடைத்துப் போனாள். விழிகள் நீர்சொரிந்தன.
சற்றுநேரம் அப்படியே இருந்தவள் அடைத்துத் திறந்த குரலில் " முத்து என்னை மன்னிச்சுடு?" என்றாள். தொடர்ந்து 'உன் மனசை நான் தெரிஞ்சு கொள்ளேல்லே. அப்படித் தெரிஞ்சிருந்தாலும் வசந்தியை உனக்குத் தந்திருக் கவும் முடியாது. நீ இங்கே வாரதுக்கு முந்தியே அவவுக்கும் இந்த மாப்பிள் ளைக்கும் தொடர்பு உண்டாய்ட்டுது. அவரைத்தான் நான் கட்டிக் கொள்ளு வேன் என்று பிடிவாதமாய் நின்றா. இதை உனக்கோ, அம்மாவுக்கோ சொல்லேல்லே. நீங்க என்ன நினைப்பீங்களோ என்ற பயம். இந்த நிலைமை இல்லாம இருந்தா, நீ கேட்டிருக்காவிட்டாலும் வசந்தியைக் கட்டிக் கொள் ளும்படி நானே சொல்லியிருப்பேன். வசந்திமேல அந்த எண்ணம் வந்திருக் குது என்று நீ சொன்னது எனக்கு நல்ல ஞாபகமிருக்குது. அப்ப கூட வசந்திக்கு இந்த தொடர்பு இல்லாம இருந்தா அவவை உனக்கே தந்திருக்கலாமே என்று கூட நினைச்சேன். . இப்ப விஷயம் வேறே திக்கிலே நடந்து முடிஞ்சு போய்ட்டுது. உனக்காக நான் ரொம்பவும் துக்கப்படுகிறேன் முத்து.' என்று கூறிவிட்டுக் கண்ணைத் துடைத்தாள்.
இந்த சமயம், வசந்தி குளித்துவிட்டு நடுத்தட்டுக்கு வந்ததைப் பார்த்து முத்து சரேலென்று எழுந்து உள்ளே போனான். s
A
அவனைக் கண்டதும் "வாங்க முத்து' என்றாள் வசந்தி.
அவளை ஒருதடவை உற்றுப் பார்த்தான் அவன். பிறகு 'நீ கண்கலங்காமல் வாழவேணும்' என்று முகம் மலரக் கூறிவிட்டு முன்தட்டுக்கு வந்து ஆனந்தி யிடம் 'எனக்கு அவசரமாய்ப் போக வேண்டியிருக்குது. நான் சொன்னதை மனசிலே போட்டுக் கொண்டு வேதனைப்படாதே. அதை விட்டிடு' என்று கூறிவிடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
* 鲁 静 * 好
313 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 162
பதினாறாவது அத்தியாயம்
ட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
வசந்தியும் அமுதலிங்கமும் தனித்தனியாகத்தான் இருந்தார்கள். இடையில் ஆனந்தியின் வற்புறுத்தலுக்காக இரண்டு மூன்று தடவை அங்கு வந்து தங்கிவிட்டுப் போனானே தவிர சேர்ந்து வாழ எவ்வித முயற்சியும் அவன் எடுக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தி இருவரும் சந்தித்துக் கொண்டது போல, கூடித்திரிந்தது போலவே இப்போதும் நடந்து கொண்டார்கள். சில இரவுகளில் வசந்தி அமுதலிங்கத்தின் அறையில் தங்கியிருந்து விட்டு காலையில் வருவாள்.
ஆனந்திக்கு இது முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வீடு தேடுவதில் மும்முரமாக இருந்தாள். ராசுவைக் கூட இந்த வேட்டையில் இறக்கிவிட்டிருந்தாள். சுபத்திராவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவள் ஆனந்திக்கு வேலை தேடுவதையும் மறந்து வசந்திக்கு வீடு தேடுவதில் முனைந்திருந்தாள்.
வழக்கம் போல் ஒருநாள் கணவனைப் பார்க்க அவனுடைய அறைக்குப் போனாள் வசந்தி, கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே அமுத லிங்கத்தின் குரலும் ஒரு பெண்ணின் சிரிப்பொலியும் லேசாகக் கேட்டன. வசந்திக்குச் சந்தேகம் வந்துவிட்டது. மறுபக்கம் சென்று ஜன்னலை லேசாக இழுத்தாள். அது திறந்து கொண்டது. திரைச்சீலையை நீக்கிக் கொண்டு உள்ளே பார்த்தாள். அங்கே தன் கணவன் இன்னொருத்தியுடன் சல்லாபித்துக்
சுபைர் இளங்கீரன் 314
 

கொண்டிருந்ததைக் கண்டதும் திடுக்கிட்டு விட்டாள். மறுகணம் ஆத்திரமும் ஆவேசமும் பிறீட்டெழ விர்ரென திரும்பி வந்து தன்பலம் கொண்ட மட்டும் கதவை இடி இடி என்று இடித்தாள்.
'யார். ?' என்று உறுமியவாறு சடேரென்று கதவைத் திறந்தான் அமுத லிங்கம். மறுவிநாடி 'உன்னை யார், இப்போது இங்கே வரச்சொன்னது?" என்று வெகுண்டபடி கேட்டான்.
வசந்தி அவனைக் கனல் தெறிக்கப் பார்த்துவிட்டு பதில் ஒன்றும் கூறாமல் அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவள் "உனக்கு இங்கே என்னடி வேலை?" என்று அங்கிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்தாள் -வெளியே தள்ளும் நோக்கத்துடன்,
முக்கால் நிர்வாணத்தை எடுத்துக் காட்டும் மினியோடும் அதற்கேற்ற அலங்காரத்தோடும் இருந்த அவள் சீறிக் கொண்டு வசந்தியின் கன்னத்தில் அறைந்தாள்.
அவள் பொறி கலங்கிப் போனாள்.
அறைந்தவள் அமுதலிங்கத்தைப் பார்த்து 'இந்தக் காட்டுமிராண்டியை உடனே துரத்து' என்று ஆங்கிலத்தில் கத்தினாள்.
அமுதலிங்கம் தாமதிக்கவில்லை. வசந்தியின் கையைச் சடுதியாகப் பற்றிப்பிடித்து வேகமாக வெளியே கொண்டு வந்து வீசி எறிவதுபோல் நிறுத்திவிட்டு 'என் சுதந்திரத்திலும் என் தனிப்பட்ட விஷயத்திலும் இப்படித் தலையிட்டு அவமானப்படுத்துகிற உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. இனி இங்கே அடியெடுத்தும் வைக்கப்படாது. உனக்குத் தெரிந்ததைப் பார்த்துக் கொள்' என்று ஆத்திரத்தோடு கூறிவிட்டு கதவைப் படீரென்று சாத்தினான்.
வசந்தி விக்கித்து விறைத்துப் போய் மூடிய கதவையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண்கள் பொங்கி வழிந்தன. சிறிது நேரம் அப்படியே நின்றவள் திடீரென்று எல்லாவற்றையுமே பறிகொடுத்தவள் போல் சோர்ந்து, தளர்ந்து திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
* * * * *
அழுத கண்ணும் சிந்திய மூக்கும், வீங்கிய முகமுமாக வந்த சகோதரியைப் பார்த்ததும் 'ஏன் வசந்திஇந்தக் கோலத்தோடு வாராய்?' என்று திகைப்போடு கேட்டாள் ஆனந்தி.
'என் வாழ்க்கை முடிஞ்சு போய்ட்டுது அக்கா..!" என்று அவளுடைய மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறினாள் வசந்தி.
"என்னடி நடந்தது. இப்படிக் கத்துகிறியே விஷயத்தைச் சொல்லேன்' என்று ஆனந்தியும் பதறினாள்.
315 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 163
அவள் நடந்ததைச் சொல்ல முடியாமல் சொல்லிவிட்டு 'இனி எனக்கு ஒண்ணுமே இல்லே' என்று தேம்பினாள்.
ஆனந்திக்கு தலை சுற்றியது. இதயமே நின்று விடும் போலிருந்தது. சற்றுநேரம் சிலையாகி நின்றவள் 'என்ன நடந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று சொன்ன நீ, இப்ப கதறிக்கொண்டு நிற்கிறியே. அவராலே ஏற்படுகிற பாதிப்பை நான் தாங்கிக் கொள்ளுவேன் என்று தைரியமாய்ச் சொன்ன நீ, இப்ப பதறித் துடிக்கிறியேடி.
அவன்மேலே உள்ள மயக்கத்திலே என்னவெல்லாமோ சொல்லிவிட்டு இப்ப கலங்கிறியே..!"
ஆனந்திக்கு நெஞ்சு அடைத்தது. தொண்டை விக்கியது. அதற்கு மேல் வார்த்தைகள் வரமறுத்தன. ஏக்கத்தோடு அசந்து போய் சுவரோடு சாய்ந்து இருந்து விட்டாள்.
அழுது மாய்ந்து கொண்டிருந்த வசந்திதிடீரென்று கண்ணைத் துடைத்தாள். உடைகளைக் களைந்து மாற்றினாள். பைப்புக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள், கலைந்து கிடந்த தலைமயிரைக் கோதி ஒழுங்குபடுத்திக் கொண்டு முகத்தில் வைராக்கியம் மின்ன 'எனக்கும் அவனுக்கும் இனி ஒரு சம்பந்தமுமில்லே' என்றாள்.
அவளுடைய இந்த திடீர் மாற்றத்தைக் கண்ட ஆனந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. சகோதரியைப் பார்த்து விழித்தாள்.
பிறகு, 'நீ இப்படிச் சொல் கிறியே, உன் வயிற்றிலே வளர்கிறதுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்குதே, அதை எப்படி அறுக்கிறது?' என்று கேட்டாள்.
வசந்தி பதில் சொல்லவில்லை.
* * 好 好 好
மறுநாள் வீட்டுக்கு வந்த சுபத்திராவுக்கு விஷயத்தைக் கூறிவிட்டு, 'பார்த்தியா, அவன் செய்த வேலையை? இவனை என்ன செய்கிறது?'என்று ஆத்திரத்தோடு கேட்டாள் ஆனந்தி.
'செருப்பாலே நாலு சாத்து சாத்தவேணும்' என்று குமுறினாள் சுபத்திரா. 'அதனாலே விவகாரம் முடிஞ்சு போகாதே...?" "மெய்தான்' என்றாள் சுபத்திரா ஆழ்ந்த யோசனையுடன். "என்றாலும் அவனை இப்படியே விட்டுக் கொண்டிருக்கவும் ஏலாது. ஒரு முடிவு எடுக்கவேணும்.'
அதுவரை பேசாமலிருந்த வசந்தியைத் திரும்பிப் பார்த்தாள் சுபத்திரா.
சுபைர் இளங்கீரன் 316

'உன்னுடைய அபிப்பிராயம் என்ன?”
"அதை நான் அக்காவுக்கு உடனேயே சொல்லிப் போட்டேன். அவவும் அதை உங்களுக்குச் சொன்னாதானே?"
சுபத்திரா ஆனந்தியின் பக்கம் திரும்பி அவளைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள்.
'அவவுக்கென்ன, சொல்லிப்போட்டு இருப்பா. பிரச்சினையும் சுமையும் நமக்கல்லவா இருக்கும்.'
வசந்தி திடீரென்று கூறினாள்: 'என்னுடைய சுமையை நீங்க யாரும் சுமக்கவேணாம். எனக்காக நீங்க யாரும் கவலைப்படவும் வேணாம்'
'நீ என்ன உத்தேசத்தோடு இதைச் சொல்கிறாய்?' என்று கேட்டாள் ஆனந்தி.
'அவனைக் கோட்டுக்கு இழுத்து எனக்கு ஜீவனாம்சம் கோரப் போகிறேன்" சுபத்திராவும் ஆனந்தியும் திடுக்கிட்டவாறு அவளைப் பார்த்தனர். வசந்தி தொடர்ந்தாள்; 'சேர்ந்து வாழவேணும். குடும்பமாய் இருக்க வேணும் என்ற கருத்து அவனுக்கு இல்லை. அவன் தன்னுடைய அபிப் பிராயப்படி தான் நடப்பான். என்னிலே அவனுக்கு அலுத்துப் போய்ட்டுது. புதுசா ஒருத்தியைப் பிடித்திருக்கிறான். இவள் அலுத்துப் போனதும் இன்னொ ருத்தியைப் பிடிப்பான். தனியாய் இருக்கவேணும், சுதந்திரமாய் இருக்க வேணும் ஒருத்தர் விஷயத்தில் ஒருத்தர் தலையிடப்படாது என்றெல்லாம் அவன் சொன்னதுக்குக் காரணம் இதுதான். கல்யாணம் அவனுக்கு ஒரு பிரச்சினையல்ல. தாலி சடங்கு என்றால் ரிஜிஸ்தர் பண்ணுகிறதும் ஒரு அரசாங்கச் சடங்குதான்.
மனுஷனின் சுதந்திரத்தைத் தடுக்கக் கூடாது? ரிஜிஸ்தர் பண்ணியதாலே எனக்கு ஒன்றும் வந்து விடேல்லே என்று ஹொனிமூனுக்குப் போனபோது சொன்னான். நான் அதை அப்ப பெரிசா எடுத்துக்கேல்லே. இப்படிப்பட்டவ னோடு நான் எப்படி வாழ்கிறது. என்றாலும் சட்டப்படி நான் அவனுடைய மனைவி. என் வயிற்றிலே இருக்கிற பிள்ளைக்கும் அவன்தான் தகப்பன். இன்னொருத்தனின் மனைவிக்கு நீங்க சோறு சீலை கொடுக்க வேணும் என்று அவசியமில்லே. பிள்ளையைக் காப்பாற்ற வேணும் என்கிறதுமில்லே. இந்த இரண்டையும் அவன்தான் செய்யவேணும். அதுக்காகத்தான் கோட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்னேன். நான் விரும்பியதையெல்லாம் அவனோடு சேர்ந்து ஓரளவு அனுபவிச்சுப் போட்டேன். இனி அவனில்லாம என்பிள்ளையோட மட்டும் இருக்கிறதைப் பற்றி நான் கவலைப்படப் போகிறதில்லே'
"உன்னுடைய முடிவு முற்றிலும் சரி' என்று உடனே சொன்னாள் சுபத்திரா.
317 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 164
ஆனந்திக்கு இது சரியான முடிவுதானா என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் கல்யாணம் என்று ஒன்று நடந்து, புருஷன் என்று ஒருவன் வந்த பிறகும் தனியாக, பட்டுப் போன மரம் மாதிரி இருக்கப் போகிறாளே, இனி ஒரு சுகத்தையும் காணமாட்டாளே என்ற கவலையும் அங்கலாய்ப்பும் ஏற்பட்டன. எனவே சற்றுச் சிடுசிடுப்போடு அவவுக்கு நீயும் ஒத்துப் போகிறி யேடி' என்று சுபத்திராவைக் கேட்டாள்.
'ஒத்துப் போகாம என்ன செய்கிறது. அவதான் அந்த யங்கியை நல்லாய்ப் புரிந்து கொண்டு விபரமாய்ச் சொல்லிப்போட்டாளே. இதுக்கு மேலே என்ன அபிப்பிராயம் தெரிவிக்கிறது? ஒன்று புருஷனோடு சேர்ந்து குடும்பமாய், லட்சணமாய் வாழ வேணும். இல்லையென்றால் வசந்தியின் முடிவு சரிதான். இதுக்காக நீ மனசை அலட்டிக் கொள்கிறதிலே ஒரு பிரயோசனமுமில்லே. என்றாலும் அவனைக் கண்டு நாலுவார்த்தை கேட்டுவிட்டுத்தான் வரவேணும்.'
ஆனந்தி வெறுத்த முகத்துடன் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
* * * * *
இரண்டு நாட்களாக அமுதலிங்கத்தைப் பார்க்க சுபத்திராவும் ஆனந்தியும் வங்கிக்கும் அவனுடைய அறைக்கும் போனார்கள். ஆளைக் காணவில்லை.
மூன்றாம் நாள் பின்னேரமும் வங்கிக்கு முன்னால் இருவரும் நின்று
கொண்டிருந்தார்கள். வேலைநேரம் முடிந்து அவனும் வந்தான். சுபத்திரா அவனிடம் விரைந்து "மிஸ்டர். ' என்றாள்.
அமுதலிங்கம் திரும்பினான்; ஒருகணம் திகைத்தான். மறுகணம் பேமெண் டிலிருந்து வீதியில் பாய்ந்தான். ஒரு டாக்ஸியை மறித்தான். பறந்துவிட்டான்.
டாக்ஸியைக் காணவில்லை. ஆனால் அது சென்ற திசையையே பார்த்த வண்ணம் இருவரும் பதுமையாகி நின்றனர்.
* # * * *
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அமுதலிங்கத்தைக் கண்டு நாலு வார்த்தை கேட்கவேண்டும் என்ற எண்ணத்தையே சுபத்திரா விட்டுவிட்டாள். "இவன் கோழையிலும் கோழை. இழிந்த பிறவி. இப்படிப்பட்டவன் வசந்திக்கு கணவனாக இருக்கிறதை விட இல்லாமல் இருக்கிறது எவ்வளவோ நல்லது' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள் அவள்.
ஆனந்திக்கும் சொல்லொணா வெறுப்பு மூண்டுவிட்டது. வசந்தியின் முடிவுக்கே அவளும் வந்துவிட்டாள். வசந்தி ஒரு வசனம்தான் சொன்னாள்:
"நீங்கள் அவனிடம் போயிருக்கவே கூடாது."
好 好 好 好 好
சுபைர் இளங்கீரன் 318

ஒருநாள் முத்து வந்தான். வசந்தியின் வாழ்க்கை கருகிவிட்டது என்று அறிந்ததும் அவன் மனம் தாங்காமல் குமுறினான். "உன்னைக் கண்கலங்க வைத்த அந்தப் பாவியை எனக்குக் காட்டு' என்றான் கோபாவேசத்தோடு.
'நீங்க அவனை என்ன செய்யப் போகிறீங்க?' என்று கேட்டாள் வசந்தி. 'என்ன செய்யப் போகிறேனா..? ஒரே குத்து. அவ்வளவுதான்' 'அவனைக் குத்திச் சாகடிக்கிறதிலே எனக்கு என்ன பிரயோசனம்?" முத்து இதற்குப் பதில் சொல்ல முடியாமல் அவளைப் பரிதாபத்துடன் Lufrigësit6ër.
ஆனந்தி சொன்னாள்: "அவ கேட்கிறது சரிதானே முத்து. நாம அவன் மேலே ஆத்திரப்பட்டு அவனுக்கு ஏதாவது தீங்கு செய்யலாம்தான். அதனாலே வசந்திக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போகிறதில்லே. அவதானாகத் தேடிக் கொண்டதை அனுபவிக்கிறா. அனுபவிக்கட்டும். அவளுடைய வாழ்க்கை ஒருகதையாகி முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்.'
'நீ அப்படிச் சொல்லாதே. வசந்தியின் வாழ்க்கை முடியேல்லே. அது தொடரப் போகுது. அவவை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன்.'
சகோதரிகள் இருவரும் திகைப்பும் வியப்பும் மேவ அவனைப் பார்த்தனர். முத்து தொடர்ந்து சொன்னான்: "அவனிடமிருந்து ஜீவனாம்சம் வாங் கிறதுக்காக கோட்டுக்குப் போகாதே. உனக்குத் துரோகம் பண்ணிய அந்தப் பாவியின் காசிலே நீசீவிக்க வேணாம். உன் வயிற்றிலே இருக்கிற பிள்ளைக் கும் அவனுடைய சல்லிக்காசும் தேவையில்லே, அந்தப் பிள்ளைக்கு அவன் தகப்பன் என்றாலும் உன் வயிற்றிலேதான் அது வளருது. பிறந்த பிறகும் அந்தத் துரோகியின் பிள்ளையாக வளராம நம்ம பிள்ளையாக வளரட்டும். நான் சைவ ஹோட்டல் காரன்தான். ஒருதொழிலாளிதான். ஆனா உன்னையும் பிள்ளையையும் காப்பாற்றுகிறதுக்கு எனக்கு சக்தியிருக்குது. உன்னைக் கண்கலங்காம வைத்திருக்க திராணி இருக்குது. திரும்பவும் சொல்கிறேன். ஜீவனாம்சத்துக்காக கோட்டுக்குப் போகாதே. அவனை டைவோஸ் பண்ணு கிறதுக்காகப் போ! போய் அவனுக்கு ஒருமுழுக்குப் போட்டுட்டுவா.
உணர்ச்சி கொப்பளிக்க, குரலில் உறுதி தொனிக்க தீர்க்கமாகச் சொன்னான் முத்து.
சகோதரிக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று எண்ணி வருந்தி வருந்தி மாய்ந்து கொண்டிருந்த ஆனந்திக்கு தனக்கு வேலையில்லாதது, வீட்டு வறுமை, கஷ்டங்கள், கடன் தொல்லைகள் எல்லாவற்றையும் மறந்து வசந்தியின் நிலைமையை நினைத்து நினைத்து வேதனையால் துடித்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு முத்துவின் வார்த்தைகள் அமுதத்தை வருவித்தது போலிருந்தது. ஆடாது அசையாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
319 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 165
-முத்து நீ யாரு?. என் உள்ளத்திலே. சர்க்கரை சர்க்கரையாகக் கொட் டிட்டியே. குடம் குடமாய் பாலை வார்த்திட்டியே. முத்து நீ யாரு?.
ஒருநாள் உன் அம்மாவைப் பார்த்து இது என்ன இதயம், இது என்ன மனம், குச்சிபோல இருக்கிற இந்த உடம்புக்குள்ளே இத்தனை பெரிய உள்ளமா என்றெல்லாம் எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். அந்தப் பெரிய மனசின் மகன்தானே நீ. உன்னை யாரு என்று கேட்கிறேனே.
ஆனந்திக்கு வாயால் பேசமுடியவில்லை. உள்ளத்தால் தான் பேசமுடிந்தது.
மலைத்துப் போய் தலையைக் குனிந்து கொண்டிருந்த வசந்தியின் விழிகளிலிருந்து கண்ணிர் முத்துக்கள் சிதறிக் கொண்டிருந்தன. முத்துவின் வார்த்தைகளைக் கேட்டு தன்னையே உருக்கிக் கொண்டிருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
'என்னை மன்னிச்சிடுங்க அத்தான்' முத்து சிரித்தான். 'உங்களை சைவஹோட்டல்காரன் என்று மட்டமாய் நினைச்சது உண்மை தான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க!'
'மன்னிக்கிறதாயிருந்தா நான் சொன்னதை ஒத்துக் கொள்கிறியா?" 'அதுக்காகவும் என்னை மன்னிச்சுடுங்க அத்தான். எனக்கு நீங்க வாழ்வு அளிக்கிறேன் என்கிறீங்க. அதுக்காக நான் கோடிகோடித் தடவை கடமைப் பட்டுவிட்டேன். ஆனா உங்களுக்கு நான் வேணாம், அத்தான், நான் ஒருவ னுக்கு வாழ்க்கைப்பட்டுப் போனவ. ஒருபிள்ளைக்குத் தாயாகப் போகிறவ. கல்யாணம் என்ற பேருதான். பார்க்கப் போனாநான் கெட்டுப் போனவ. நான் உங்களுக்கு வேணாம், அத்தான், வேணாம்.'
வசந்தி சொல்கிறதும் நியாயமாகப் படுகுதே. ஆனந்தி இப்படி எண்ணினாள். ஆனால் முத்து "கெட்டுப் போனவ என்று நீதான் அர்த்தமில்லாம நினைக்கிறாய். இன்னொரு தடவை இப்படிச் சொல்லாதே. எனக்கு கெட்ட கோபம் வரும்,' என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு ஆனந்தியிடம் 'இனி நீங்க யோசிக்கவோ கவலைப்படவோ வேணாம். டைவோஸ் டைவோஸ்தான். நானே அதுக்கு எல்லா ஏற்பாடு களையும் செய்கிறேன்.'
முத்து அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. போய்விட்டான். அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
* * * * 好
சுபைர் இளங்கீரன் 320

முத்துவின் முடிவு ஆனந்திக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்தாலும் வசந்தியின் அபிப்பிராயத்தைத் திரும்பத் திரும்ப யோசிக்கும் போது மனதின் ஒரு மூலையில் ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. வசந்திக்கும் மனம் முழுமையாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தை சுபத்திரா வுக்குத் தெரிவித்த போது அவள் முத்துவின் முடிவை ஒருதயக்கமுமின்றி பூரணமாக ஆதரித்தாள்.
'ஒரு பெண் ஒருவனோடு சேர்ந்து வாழத்தான் வேணும். அது ஒரு தேவையும் கூட. அதில் தான் நிறைவு இருக்குது. ஒருவனுக்கு மனைவியாகி அந்த ஸ்தானம் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்து போய்விட்டால் அதோடு அவளுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறது மடத்தனம். திரும்பவும் அவள் வாழமுடியும். வாழவும் வேணும். முத்து இதைத்தான் அழுத்தந்திருத்தமாய் சொல்லியிருக்கிறான். அவனுடைய பெருந்தன்மை யையும் பெரு மனசையும் பற்றிச் சொன்னாய். அதை நாம் கெளரவிக்க வேணும். அவனுக்கு வசந்தியிடம் கள்ளங்கபடமில்லாத ஒரு நேசம, ஒருவிருப்பம் ஆழமாய் விழுந்திருக்குது. அதை வசந்தி மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ள வேணும்' என்றும் கூறினாள்.
ஆனந்திக்கு உறுத்தல் நின்றுவிட்டது. வசந்தியின் மனசிலிருந்த பிசு பிசுப்பும் அகன்றுவிட்டது.
முத்து வந்தபோது ஆனந்தி சொன்னாள் 'மூன்று விஷயம் நடக்க வேணும். முத்து. முதலாவது டைவோஸ், இரண்டாவது குழந்தை பிறக்க வேணும். மூன்றாவது உனக்கும் வசந்திக்கும்."
முத்து சிரித்தான். 'கல்யாணம், குழந்தை, டைவோஸ் என்று தான் நடக்கிறது வழக்கம். நம்ம விஷயம் மறுபக்கத்திலிருந்து ஆரம்பிக்குது'
'இதுவும் ஒரு விநோதம்தான்' என்று ஆனந்தியும் சிரித்தாள். வசந்தி அப்போது அங்கு இல்லை.
* * * 等 斧
வசந்தியின் பிரச்சினையால் ஆனந்தி ஒழுங்காக டியூசனுக்குப் போக வில்லை. அன்று அவள் டியூசனுக்கென்று போனபோது, வேறு ஆளைப் பிடி த்துவிட்டதாகக் கூறி அவளுடைய கணக்கைத் தீர்த்து அனுப்பிவிட்டார்கள்.
ஆனந்திஇதை எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதற்காக அவள் அதிகம் கவலைப்படவில்லை. இருந்த டியூஷனும் போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். ஃபிளவர் றோட் சந்தியைக் கடக்கும் போது சற்றுத்தூரத்தில் சுபத்திரா புத்தகமும் கையுமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆனந்தி நடையை நிறுத்தினாள்.
321 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 166
சுபத்திரா கிட்ட நெருங்கியதும் "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று கேட்டாள் ஆனந்தி. ስ'
"லைப்ரரியிலிருந்து. நீ என்ன சீக்கிரம் வந்துவிட்டாய்? டியூஷன் முடிந்து விட்டதா?'
வசந்தியின் பிரச்சினையாலே ஒழுங்காய் டியூஷனுக்குப் போக முடியாம போய்ட்டுது. அவங்க வேறு ஆளை ஏற்பாடு செய்து விட்டார்களாம்' என்று நடக்கத் தொடங்கினாள்.
சுபத்திராவுக்கு வேதனையாக இருந்தது. என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் 'சரி, அதைவிடு. இன்னும் இரண்டொரு டியூஷன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை கிடைக்கலாம்"
'இந்த டியூஷன் எல்லாம் உறுதியான விஷயமா? இன்றைக்கு வரும்: நாளைக்குப் போகும். நிரந்தரமா ஒருவேலை கிடைக்க மாட்டேங்குதே'
சுபத்திரா இதற்கு ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தவள் "நேற்று சிலிங்கோ கிட்ட டேவிட்டைச் சந்திச்சேன். அவரும் உன் வேலை விஷயமாக தீவிரமாய் முயற்சித்துக் கொண்டிருப்பதாய்ச் சொன்னார். அதோட வசந்தியைப் பற்றியும் கவலைப்பட்டார். எல்லா விபரத்தையும் நீ சொன்னியாம். ஆனால் நாம கடைசியாக வந்த முடிவு அவருக்குத் தெரியாது போலிருக்குது. நான்தான் சொன்னேன். அதைக் கேட்டதும் அவர் எவ்வளவு சந்தோஷப் பட்டார் தெரியுமா?"
வசந்திக்கும் அமுதலிங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட முறிவையும் ஜீவனாம்சத்துக்காக வழக்குத் தொடரப் போவதையும் தெரிவிப்பதற்காக ஆனந்தி ஒருநாள் டேவிட்டைப் பார்க்கப் போனாள். அதற்குப் பிறகு அவனைச் சந்திக்கவே இல்லை. என்றாலும் அவனை அடிக்கடி நினைத்தாள். சுபத்திரா டேவிட்டைப் பற்றி இப்போது சொன்னதும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் எழுந்தது.
"என்ன பேசாம வருகிறாய், டேவிட்டின் நினைவா?' ஆனந்தி பதில் சொல்லாமல், மெளனமாக நடந்தாள். "அவரும் உன் நினைவாகத்தான் இருக்கிறார். இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க இரண்டு பேரும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறீங்கள். நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன் ஆனந்தி. வசந்தியின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டாச்சு. அடுத்தது காந்தி. இப்ப உடனடியாக அவளுடைய பிரச் சினையைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லே. கஷ்டம், பொறுப்பு என்று இனியும் சொல்லிக் கொண்டிருக்காம நீ ஒரு முடிவுக்கு வரவேணும். நீ இப்படியே இருந்தால் டேவிட்டும் இப்படித்தான் காலத்தை ஒட்டுவார். ஆனா உங்க இரண்டு பேருடைய மனசும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இது
சுபைர் இளங்கீரன் 322

அநாவசியம். நீ நல்லாய் யோசித்துப்பார். நேற்று நான் அவரைப் பார்த்த போது உறங்கிப் போயிருந்தார். வசந்தியின் பிரச்சினைதீர்ந்தது. ஆனந்தியின் பிரச்சினை எப்ப தீரப்போகுதோ என்று பகிடியாகக் கேட்டேன். 'என்னுடைய பிரச்சினையும் கூட. ஆனா அதை தீர்க்க ஆனந்தி இஷ்டப்படேல்லே. அவ என்னை வேணாம் என்று சொல்கிறா. மனசால் அல்ல. ' என்று அவரும் பகிடியாகத்தான் சொன்னார். சிரித்துக் கொண்டுதான் சொன்னார். ஆனால் அவர் வருத்தப்படுகிறார் என்று அவர் முகமும் குரலும் சொல்லியது. அதைப் பார்க்கும் போது எனக்கே.
கேட்டுக் கொண்டு வந்த ஆனந்தி, திடீரென்று இடைமறித்து 'டேவிட் வீட்டுக்குப் போக வேணும், வாறியா?" என்று கேட்டாள்.
சுபத்திரா அவளைத் திரும்பிப் பார்த்தாள். ஆனந்தியின் முகத்திலும், விழிகளிலும் தெறித்த உணர்ச்சிகளின் அர்த்தத்தை உடனே புரிந்து கொண் டாள். 'நானும் வரவேணுமா?' என்றாள் சிரித்தபடி,
ஆனந்தி பதில் சொல்லவில்லை. சுபத்திராவின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.
* 壹 好 好 好
இருவரும் ஹெந்தலைக்கு வரும்போது, மாலை மங்கிக் கொண்டிருந்தது. இருவரும் பஸ்ஸை விட்டிறங்கி திரும்பி இரண்டடி வைக்கும் போது, ஆற்றங்கரைப் பக்கமாக டேவிட் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆனந்தி சுபத்திராவையும் முந்திக் கொண்டு வேகமாக அவன் முன்னால் வந்து நின்று ஒரு கணம் அவன் முகத்தைப் பார்த்தாள். மறுகணம் விழிகள் நனைய அவனுடைய கையைப் பற்றிக் கொண்டு 'நீங்கள் எனக்கு வேணும் டேவிட்' என்றாள்.
அவன் தனக்கே உரித்தான புன்னகையுடன் தன் பளபளக்கும் விழிகளால் அவளை உணர்ச்சியோடு பார்த்தான். பிறகு அவளுடைய கரத்தோடு தன் கரத்தையும் சேர்த்துக் கொண்டு நடந்தான்.
சற்றுத்தூரத்தில் நின்றபடியே தன்னை நோக்கி வரும் இருவரையும் மனம் குளிர, கண்குளிர பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் சுபத்திரா.
இருவரும் அருகே வந்ததும் 'ஆனந்தி என்ன சொல்கிறாள்' என்றாள் சுபத்திரா சிரித்தபடி.
'தனக்கு நான் வேணுமாம்" என்று டேவிட்டும் சிரித்தான். 'நீங்க மட்டுமல்ல, அவவுக்கு ஒருவேலையும் வேணும்' என்றாள் சுபத்திரா.
Срђошћ
323 அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

Page 167
அவளுக்கு ஒரு வேலை வேண் உணர்வினதும் சமூகச்செயற்பாட்டினதும் காலத்திற்கு உரியது. மிகவும் ஆபாசமாக பெண் உறவைச் சித்தரித்துவிட்டு இறுதியில் சமுதாய விழுமியங்களை வலியுறுத்துகின்ற போது இளங்கிரனின் பார்வை வேறுபட்டு நி மீது சமுதாய ஏற்றத் தாழ்வுகள் செலுத்து புறக்கணித்து நாம் ஒழுக்கங்கள் பற்றியும் 3 காதல், கற்பு போன்ற விடயங்களில் நம் மீது சுமைகளையும் மறுபுறம் வணிகக் கை மயக்கங்களையும் நாம் கவனமாகவும் உறு: இளங்கீரனின் நாவல்களில் இவ்வாறான கவ இந்நாவலிலும் உ ள்ளது. கொழும்பு நகர வி உள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தெ பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்தி
இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்
சமூக நெருக்கடி அன்றையதிலும் மேலாக
 

ண்டும் இளங்கீரனின் அரசியல் சமூக உச்ச நிலையை அடையாளங்காட்டும் ஒரு வும் பாலியற் கிளுகிளுப்புக்காகவும் ஆண் இறுகிப் போன ஆணாதிக்க மரபு வழிச் ாழுத்துலகப் பிரபலங்கள் பலருடன் ஒப்பிடும் ற்பதை நாம் உணரலாம். மனித உறவுகள் |ம் தாக்கத்தையும் சமுதாயச் சூழலையும் 1றம் பற்றியும் விதிகளை வகுக்க இயலாது. ஒருபுறம் மரபின் வழியில் ஏற்றப்பட்டுள்ள ல இலக்கியங்கள் ஏற்படுத்தி வருகிற நியாகவும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. னிப்புப் பொதுவாகவே உள்ளது போன்று
ாழ்வில் உழைத்து உண்ணும் தேவையில்
ாடர்பான இக்கதையில் வரும் நிகழ்வுகள் ப, இன்றைய நவகொலனியச் சூழலிலும்
களாகவே உள்ளன. ஆயினும் இன்றைய "
உக்கிரமானது.