கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1988 (2)

Page 1
இதோ!
ஓர் நற்செய்தி!
நம்பிக்கைக்கும் நாணயத்துக்குமான தங்க நகை தேவைக்கு நாட வேண்டிய ஒரே இடம்
இந்திரா ஜூவெல் ஹவுஸ் இலக்கம் 74 கொட்டுகொடெல்ல வீதி, கண்டி
چ۹لم 6
*.&මද්.
குறிப்பு: குறித்த காலத்தில் உரிய முறையில் சகல ஒடர் களும் திருப்திகரமான முறையில் நிறைவு செய்
யப்படும்.
இன்றே நாடுங்கள்!
îi ai'88 O
ഴ്ച. 30 டி எஸ். சேஞநாயக்க வீதியில் வசிக்கும் நிதா னிதாசன் ஆகிய என்னுல் கண்டி பிராவி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

து ஒரு மக்கள் கலை, இலக்கியப்
பேரவையின் வெளியீடு
விஜே
நீ-ஒரு
மகத்தான மனித கவிதையடா!
தேசத்தை நேசிப்பவர்கள் தெருக்களில் தான் பரணிக்க வேண்டுமென்ப
- தனை இந்த மண் இனிமறுபரீசீலனைக்கு கொண்டுவரவேண்டும்!
அந்த ஆயிரம் அழுகைக்குள் ஆர்த்தெழுந்து வரும் மனுஷ எழுச்சிகளை எதிர்த்து எந்த ஏகாதிபத்தியம் தாக்குதலுக்கு தயாராகும்?
இதழ் 2
மனிதர்கள் இரத்தங்களு
-6 தீக்குளிக்கும் போது உனது குரல் எனது கவிதைபோல் அதர்மத்தை கைது செய்
துள்ளது! விஜேமண்ணையும், மனிதர்களை
պւb நேசித்தமைக்காக நாளைய நாளைகளில் நானும் மரணத்துள் வாழ்ந்து விட Gh)/Tib!
ஆனலும், ஆனலும் எங்கள் கொள்கைகளை எந்த அரசாலும் கைது செய்ய முடியாது. காலத்தை வென்றதடா!
- கவிஞர் நிதானிதாசன் -
1988
அன்பளிப்பு ரூபா 3/.

Page 2
ஆசிரியர் பீடம்
மனசுக்குக் கஷ்டமான ஒரு காலப் பகுதியில் நமது நிகழ்காலம் நகர்ந்து செல்கிறது என்பதனை சகலரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எமது உறுதியான கருத்து. எங்கு செல்கிருேம், இந்த மரன பயணத்தின் இறுதி தரிப்பிடம் எங்கு என்பதை எல்லாம் எவ ராலும் நிரூபிக்க முடியாத நிலைமை நமக்குள் உட்கார்ந்திருப்பது ஆனந்தமற்று விடயமே!
இத்தகைய ஒரு அழுக்கின் அழுத்த நிலைமையில் மக்கள் கலை இலக்கியங்கள் புறநிலை சூழலின் யதார்த்தங்களை உள் வாங்கி இச் சமூக அமைப்பிற்கு எதிராக போர்க் குரல் தொடுக்க வேண்டும் என்பது எமது மக்கள், கலை இலக்கியப் பேரவையின் மகஜரா கின் றது. இந்த மகஜர் சில மனசுகளுக்கு காயத்தை விளைவிக்கலாம். அவர்களுக்காக நாம் மனசுபூர்வமாக அநுதாபப் படுகிருேம்.
தற்போதைய ஜனநாயக அரசு மாகாண சபைத் தேர்தலை நடாத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சந்தோஷமான சந். தர்ப்பத்தை வாக்காளர்கள் தங்களின் விடிவிற்காய் பயன்படுத்துவார் கள் என்ற ஒரு சின்ன நம்பிக்கை எமக்குள் உண்டு. இந்த மண்ணை மாசடையச் செய்து கண்ணிர்ப் பூச் சொரிந்து விளையாடும் சக்தி களுக்கு மீண்டும் வாய்ப்பை வருவித்துக் கொடுத்தால், எமது எதிர் காலம் இரத்த மற்றும் யுத்த சேதிகளையே போர்த்திக் கொள்ளும் என்று அடித்துச் சொல்ல ஆசைப்படுகின்ருேம்.
தேசத்தின் மீது விசுவாசம் கொண்டுள்ள நெஞ்சுக்கு நெருக்கமான வாக்காளர்களே! இந்த மண் பிச்சைக்கார பாத்திரத்தை ஏந்த வேண்டுமென நீங்கள் முடிவெடுத்தால், பழைய பாதையிலேயே பய ணத்தை தொடருங்கள். அல்லது கொள்கைகளுடன் கைக் குலுக்கி யுள்ள முற்போக்கு சக்திகளுக்கு உங்கள் உற்சாக ஆதரவுகளை அள்ளி வழங்கி, நாளைய இளைய இதயங்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க முன் வாருங்கள்
மீண்டும் அடுத்த இதழில் இதயங்களை இணைப்போம்.
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்தி வரட்டும்.
sú,1}5)|| 'SŠ O

புதிய கவிதைகள்
புது உலகத்துக்காக
நம் கரங்களின் அயராத உழைப்பிஞல் உருவானது இந்த உயர்ந்த மலையகம்! ஆணுல் அன்றுதொடங்கி இன்று வரை என்ன முன்னேற்றம்? ஏமாற்றம் ஒன்றைத்தவிர! வாருங்கள் தோழிகளே எமது பயணப் பாதையிற் படிந்த முட்களேயகற்றி முன்னேறுவோம்!
- ராகலை ராகினி --
எப்போது விடிவு?
இதர தலைவர்கள் போராடி பெற்ற சுதந்திரம் இரக்கமற்ற முறையால் இருட்டுக்களில் இருந்து விடுகிறது.
s o நேசக்கரம் நீட்டவந்தவர்கள் வறுமையையே எங்களுக்கு எடுத்துதந்தனர்.
O இந்த சோக சூழலிலிருந்து
எப்போது எங்களுக்கு விடிவு?
- செல்வி ரிஸாணு ஹாசீம் - அக்குறணை
afaqa ’88 O
நாமும் நடப்போம் மனிதர்களேவானில் வரும் விடிவெள்ளி இந்தப் பூமியில் சமாதானமாய் பரிணுமமாகுவதில்லையே!
o
ஆள்பவர்கள் இன்பங்களில் இருக்க ஆளப்படுபவர்கள் துன்பங்களில் துவள்வதா ஜனநாயகம்?
தொழிலாளர்கள்
விழித்துவிட்டனர்
இனி-அவர்களுடன்
நாமும் நடப்போம்.
ஒரு
புதுயுகத்திற்காய்!
- டி. எல். நிரஞ்சுனி -
இனி
இந்த அழுக்கான
சமூகம்
வனிதையர்களுடன்
வறுமையை
தொடர விடுவதனல்
Sabri
விபச்சார வீதிகளில்
ஊர்வலம் செல்கின்றனர்.
கடவுளுக்கு
கோயில் அமைப்பதை
விட
இக்கன்னியர்களுக்கு
வாழ்வு வழங்க
முன்வாருங்கள்!
- புரட்சி மலர் வனிேயர் -
வத்தளை

Page 3
நாணல்
Luntugub காட்டுவெள்ளமாக இல்லாவிடினும்
gfi யும் நாணலைப்போல அசைந்து, வளைந்து நாளும் போராடுவோம். உழைப்போர் ஆட்சி மலர்ந்திடவே நம் நாடு செழித்திடவே!
முகாரி
காற்றேடு கலந்து ஒலிக்கிறது
ஓர் நாதம் ஒ . முகாரி எங்கிருந்து ஒலிக்கிறது? யார் அதனை மீட்டுவது? ஒலைக்குடில்களுள்ளே ஏழைத் தொழிலாளியவன் வீட்டு அடுப்பினிலே வேகின்ற வெற்றுப் பானையிலே முகாரியாய் ஒலிக்கிறது.
- முத்துசம்பந்தர் -
எப்போது? அடிமைத்தனம் ஆட்சிசெய்வதால் விடுதலை இங்கு விடிவு பெருதுள்ளது! சுதந்திரம் ரயில் "கேட்டாய் அடிக்கடி மூடிவிடுகிறது
இந்த சோகத்திலிருந்து சுகம் காண்பது எப்போது?
- நவஹோ ஆமிர் -
திக்குவல்லை
நேச தேசம்
எங்கள் நேச தேசம் உலக வரைபடத்தில்
கடுகு" போல் இருப்பதாலோ அதன் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு அத்தனை (அதி) காரம்
எங்கள் 0 o நேச தேசம் திறந்த பொருளாதாரத்தை திறந்து விட்டது போராளிகள் அனுமதியின்றி அடுத்த வூர்சென்று பயிற்சி பெறவா? எங்கள் " " " நேச தேசத்திற்கு உல்லாச பயணத்துறை உருக்குலைந்து விடவில்லையே! ஏனென்ருல் இந்திய ஜவான்கள் இலங்கைக்கு இறக்குமதியாகிவிட்டார்கள்!
- கலாநெஞ்சன் - «Р»
ரயில் பயணங்களில் தண்டவாளம் பிரண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட
மனுத்தாக்கல் அனுமதியின்றி தூக்கில் தொங்கவிடப்படுகின்றது. நீதிக்கெங்கும் கண்ணும்பூச்சி விளையாட்டுத்தான்!
- இக்பால்அலி - 6íìLạ6ìị *88 O
s ()

மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கிளைச் செய்திகள்
* மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளை கடந்த 20.03.88 அனுஷா கல்வி நிலையத்தில் திறந்த வெளி (விஜே) அஞ்சலிக் கவியரங்கம் ஒன்றையும், கருத்தரங்கு ஒன்றையும் நடாத்தியது. பெருவாரியானேர் கலந்து கொண்ட இந் நிகழ்ச் சிக்கு எம். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
* மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கண்டிக் கிளை 9.04.88 அன்று கண்டி கலைமகள் வித்தியாலயத்தில் "சமூக மாற்றத்திற்கு கலை, இலக்கியங்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் கருத்தரங் கினை நடாத்தியுள்ளது. பல முற்போக்கு பேச்சாளர்கள் சிறப் புரைகள் நிகழ்த்தினர்.
* மக்கள் கலை, இலக்கியப் பேரவை விரைவில் புகைப்பட மற்றும் புத்தக கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. தேசிய ரீதியில் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் பார்வைக்கு விடப்பட இருப்பதாக பொதுக் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு 75 சத முத்திரை உரையுடன் கீழ்வரும் முகவரி யுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது. நிதானிதாசன் (அமைப்புச் செயலாளர்) 130, டி. எஸ். சேனநாயக்க வீதி,
கண்டி
* மக்கள் கலை, இலக்கியப் பேரரைவையின் கல்வி இலாகா ஏப்ரல் மாதம் தொடக்கம் 11ம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம் விஞ்ஞான பாடங்களுக்கான இலவச கற்கை நெறியை ஒழுங்கு படுத்தி உள்ளது. இந்த பூர்வாங்க திட்டம் எதிர் காலத்தில் உயர்தர வகுப்பு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கண்டி, கொழும்பு, மகிய்யாவ கிளையினர் கூட்டாக இணைந்து கலை, இலக்கியவாதி கள் மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். விபரங்களுக்கு பொதுச் செயலக முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
aßuqsa ʼ88 O

Page 4
சிறு எட்வான்ஸ்ட் லெவல்
கதை
- ரூசோ -
* «(8լն: மோகேன்! ஏன்டாய்யா? இன்னிக்கி இம்புட்டு நேரஞ்
சென்டு ஊட்டுக்கு வாரே! ஒனக்கு மாத்திரம் வெளக்கு
வச்சி படிச்சுக் குடுக்குருங்களோ? மாஸ்டர்மாருங்க!" அன்புத் தந் தையின் அழகொழுகும் பேச்சு.
ஒரு மெல்லிய புன்னகையுடன் மோகன் பதில் சொல்கிருன். "இனிமேலே இந்த ஸ்கூலுக்கு போக முடியாதப்பா!"
"அது சரிடாப்பா பேண்டா செக்குல பேலுவேன், இல்லாட்டி பரதேசம் போவேங்குறே! ஏன்டா இப்புடி சொனங்கி வாரேன்னு கேட்டதுக்கு ரோசம் புட்டுக்கிட்டு வருதோ? ஏன் தலையெழுத்துடா
இது!" என தந்தையின் அலுப்பு. தாய் மகனுக்கு ஆதரவாக உதிர்க்கும் வார்த்தைகளோ, கல்வி உளவியல் மேதைகளையும் தங்கள் மூக்கிலே விரலை வைக்கப் பண்ணுகிறது. "கேக்குற மாதிரிக் கேட்
டாத்தானே, சொல்ற மாதிரிச் சொல்லுவான். மூஞ்சே ஒன்னரை மொழத்துக்குத் தொங்கப் போட்டுக்குட்டு, எரிஞ்சு விழுகிற மாதிரிப் பேசின எவந்தான் ஒழுங்கா பதில் சொல்லுவான்?" “அதுசரி குத்தம் ஏம்புட்டுத்தான் டி! அத்தோட உட்டுப்புடு"ன்னு சொல்லி முடித்து மோகனின் அண்ணன் ராமுவின் பெருமைகளை நினைவு கூரு கிருன் தந்தை: "மூத்தவனுலே முழு நம்பிக்கே வச்சிருந்தேன்! சும்மா Tெசல்லப்புடாது பாவம்! ராவு பகலா விழுந்து, விழுந்து படிச்சான் என்னச்சு? நாலு "சீன்னன், மூனு 'எஸ்'ன்னன், ஒரு "எப்"புதான்னன் - எதுடா? அதுன்னேன் "மெத்சுன்ஞ! ஏழு பாடம் "பாஸ்" தானே அது போதுன்னேன்! அது சரிப்புடாதாமே! அந்த நாசமாப்போன "மெத்சு நம்ப புள்ளெகளே நாசமாக்குதோ? இல்லாட்டி அந்த 'மெத்சே' வச்சே நாசமாக்குராய்ங்களோ? தெரிய மாட்டேங்குதே. அதோட அவன் படிப்புலே மண்ணள்ளிப் போட் டுப்புட்டு இப்ப தோட்டத்துலே புல்லு வெட்டுருன்! இந்தப் பய லும் அதுக்குத்தான் ஒதவுவான்!
அப்பா! நான் அது செய்ய மாட்டேன் தெரியுமா? எட்டுப் பாடமும் "பாஸ்" பண்ணிட்டேன். அந்த "மெத்ஸ்" என்ற சனிய னையுஞ் சேர்த்தே! என்ருன் மோகன். தந்தை தன் இரண்டு கண் களையும் அகல விரித்துக் கொண்டு “ஏன் இனிப் பாடசாலைக்குப் போக மாட்டேனென்று முன்பு கூறினய்?" என வினவினன்! தான் படித்த பாடசாலையில் க. பொ.த. (உம்) பயில வகுப்பு இல்லை யெனக் கூறுவதன் முன்னே, தந்தை திட்டிக் கொட்டியதாகக் கூறி
மோகன் வேதனைச் சிரிப்பு சிரித்தான்!
696 '88 O

ஏன்டாலே? நம்ப மந்திரிமாரு, தலவருமாரு அந்த "ஸ்கூல" தொறந்தாரு வல்லுனர் போட்டிலே, விளையாட்டுப் போட்டிலே பரிசு வழங்கினரு பாரதி விழாவிலே பிரதம அதிதியா வந்தாரு வள்ளுவர் வுழாவிலே அகதியா வந்தாரு கலை விழாவுலே தலமை தாங்கினருன்னு, மாலையோடே படத்தையும் பேப்பர்லே போட்டு பக்கம் பக்கமா எழுதுராங்களே? எல்லாம் பொய்யாடா?
ஆமா! சொன்னப்புலே, நம்ம் தலைவருமாருங்க சொந்த சல்லி யெப் போட்டு "ஸ்கூல்" கட்ற மாதிரில்லே கதை வேற கதைக்கி ருங்க!” என தாய் கேட்க, "ஆமாடி, அது அவுங்க அப்பன்வூட்டு சல்லி இல்லே, நம்ம அரசாங்கப் பணம், தெரிஞ்சுக்கோ" என முடித்தான் தந்தை! அத்தோடு *எக்கேடு கெட்டாலும் எம் புள் ளையே படிக்க வைக்காம வுட மாட்டோமென’’ இருவரும் ஒத்துப் பாடியதும், மோகன் வேதனை கலந்த ஆனந்தக் கண்ணிர் வடித்து நின்ருன்! (முற்றும் )
எச்சரிக்கை
தினகரன் ஞாயிறு இதழின் ‘இலக்கியப் பூமி’ எனும் பகுதி மூலம் தமது உறவினர்களுக்கும், இலக்கியமே என்ன வென்று புரியாத தெரியாதவர்களுக்கும் களம் அமைத்து வக்காலத்து வாங்கும் சித்தீக் கரியப்பனுக்கு வளர்ந்து வரும் மக்கள் கலைஞர் சார்பாக எச்சரிக்கை விடுக்கின்ருேம்.
கரியப்பனுக்கு நவயுக இலக்கியம் படைக்கத் தெரியாது. நவ யுக படைப்பாளிகளுக்கும் மக்கள் கலைஞர்களுக்கும் கரி பூசுவ தாக நினைத்து தினகரன் வார மலரை அசிங்கப்படுத்துவதை நிறுத்தவும்.
மக்கள் கலை இலககியப் பேரவையின் மத்திய நிருவாக சபை
இரகசியம் உன் குழந்தையின்
கைகளை யாரோ V கட்டிவிட்டதாக இரகசியம் நீ-நினைப்பது
ஒரு யாரும்ல்ல-அது காலைப்பொழுது இந்த மனித சாதிதான் கருத்திருந்தபோது! - மருதூர் ஏ. ஹசன் -
affia Lq:6n '88 O

Page 5
தொடைகள் P
- எம்மார் -
மரபுக் கவிதை எழுதுபவர்களில் பெரும்பான்மையோர் மோனைக் தொடை! எதுகைத் தொடையென்ற இரண்டையுமே கூடுதலாகப் பின் பற்றி எழுதுகின்ருர்கள் அவைகளை இலகு மொழியில் இங்கு தருவதில் மகிழ்ச்சியே!
மோனைத் தொடை:-
இரண்டு கவிதை அடிகளின் முதல் எழுத்துக்கள், இன எழுத்துக் கள் எனத் தரம் பிரிக்கப்பட்ட கூட்டத்துக்குள்ளானவைகளை மாத்தி ரமே ஒரே எழுத்தாகவோ, அன்றி அவற்றுக்குள் உள்ளவைகளுக்குள் எதையும் மாற்றியோ உபயோகித்து அவ்விரண்டு அடிகளையும் இணைத்தலே மோனைத் தொடையாகும்.
இனி மோனைத் தொடைக்குரிய இன எழுத்துக் கூட்டங்களைப்
பார்ப்போம்.
உயிரெழுத்து:-
முதலாம் கூட்டம் அ, ஆ, ஐ, ஒள. ('யா'வையும் இவற்றில் சேர்த்துள்ளார்கள்)
இரண்டாம் கூட்டம் இ, ஈ, எ, ஏ, ('யா'வையும் இவற்றில் சேர்த்துள்ளார்கள்)
மூன்றவது கூட்டம் உ, ஊ, ஒ, ஓ, ('யா'வை இவற்றில் சேர்க்கவில்லை)
உயிர்மெய்யெழுத்து
உயிரெழுத்துக்களை மூன்ருகப் பிரித்த இன எழுத்துக்குழுக்களின் ஒழுங்கைப் பின்பற்றியே மூன்று வெவ்வேறு கூட்டங்களாக உயிர் மெய் எழுத்துக்கள் அமைத்துள்ளனர்
( அடுத்த ‘விடிவு’ல் இதைத் தொடருவோம் )
6L6a '88 O

குறும்பா
-அல் அசூமத்
பாய்ந்துழைத்தான்; நெற்றிமுதல் சாறு: பதித்து விரல் வழித்தெறிந்தான் ஏறு. பக்கத்தே ஒசை:
பார்த்தானும் வீசை பாய்ந்ததுவோ மாவலியாம் ஆறு!
வேடுவர்கள் குகைவசித்த கோலம் வீதியிலே வந்ததிந்தக் காலம்! வெள்ளையரே வேடர்; வேற்றெம் மோர் சீடர்; விதியுகுளைச் சுழற்சியிலேஞாலம்!
புரட்சிக்கவியெழுது -மருதமுனை நியாஸ் ஏ ஸடித்
பேணுவைத் தூக்கிப் புரட்சிக் கவியெழுது பேணுவே எங்களது போர்க்கருவி-பேணுவின் வாய் தன்னை மூட வலுவில்லை இங்கெவர்க்கும் வாய் கட்டி நில்லாதே வா
எங்கள் சமூகத்தின் ஏற்றங்கள் கண்டிடவும் எங்கும் மறுமலர்ச்சி பெற்றிடவும்-கங்கணங்கள் கட்டியவனுகக் கருக்கொண்ட உன் கவியை கொட்டிவிடு தோழா இனி
உழைப்பைச் சுரண்டி உறுஞ்சும் கொடியோர் பிழைப்பினை இன்றே தடுத்து - உழைப்புக்கு உன்னத மான உயர்வினைக் காணவே உன் கவி சொல்வாய் உரத்து.
சமூகத்தில் தொற்றியுள சீரற்ற போக்கை சமூகம் உணரச் செயவும் - சமூகத் துரோகிகளை விட்டுத் துரத்திடவும் மண்ணில் தராயோ புதுமைக் கவி
இந்த மண்ணின் கனவுகளை நிராகரித்து வெளிவரும் அத்தனை சஞ்சிகைகளும் தரமற்றவையே அவை ருேனியோ வானுலும் சரி, அச்சு இதழானலும் சரி! கண்டிப்பாக அவை அடிப்படையில் நிறுத்தப்பட வேண்டியதே!
of q6'88 O -அபீதா

Page 6
மனிதனே . . .
அன்பான மனிதனேதிருப்பிப் பார்! இயற்கை அன்னையின் நிர்வாண கோலத்தில் நடை பயிலும் விசித்திர மனிதனே திருப்பிப்பார்!
s
நேற்றைய
உலகில்-நீ நடந்து வந்த பாதையின் விசித்திரமான தடயங்கள் பதிக்கப்பட்டு விட்டன. அவை உன் கண்களுக்கு பிரகாசமற்றவையாகவே தெரிகிறது. இன்று நாளைய வாழ்வை தொடர உன்னிடம் இருப்பது என்ன? மெளனத்தைக் கலைத்து இமை உயர்த்து!
o
நாளை உழைப்பில் விளைந்த உறுதிக் கரத்தை உயர்த்திவிடு மேலேஉலகை வெல்ல! புறப்படு!
திரும்பு!
தாயே கலங்காதே
என் தாயே என் சின்னக்கைகள் துப்பாக்கியைத் தூக்குவதற்காக கண்ணீர் சிந்துகின்ருயே!
நம் சின்னத் தேசத்தை சிதறவிடாமல் பாதுகாக்க எத்தனை ஜீவன்கள் உயிர்களை தியாகம் செய்ததை நீ-அறிவாயா தாயே? அவர்களுக்காக-உன் கண்ணிர்ப் பூக்களைக் காணிக்கையாக்கு! எத்தனை பேர் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க முடியாமல் அடிமைப் பட்டும் சோம்பேறிகளாக சுறுசுறுப்பின்றி முடங்கி உள்ளார்கள் தாயே!
அவர்களின் மடமையை எண்ணிக்
கவலைபடு நீயே!
O
ஆகவ்ேஎனது பயணத்தை
எழுந்து நின்று ஆசீர்வதியம்மா!
- மு. முனிஸ் ( புனியாண்டி) - - செல்வி ரிஸ்வியா ஹாசீம் -
கண்டி அக்குறணை அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தாத இச் சமூக அமைப்பு தண்ணிருக்கு வரி வசூலிப்பது மனசுக்குள் நிறைய வேதனையைத் தருகிறது.
- புரட்சிக் கவி -
sńL96| "88 O
O

I3O, ID. S. Senanayake Veediya,
KANDY
பிரதம ஆசிரியர்
நிதானிதாசன்
责
ஆசிரியர் குழு கண்டி எம். ராமச்சந்திரன்
ரிஸான ஹாசீம்
எஸ். பி. செல்வராஜ்
女 YA
முகவரி
130, டி. எஸ். சேனநாயக்க வீதி, கண்டி இலங்கை
தொலைபேசி
08-23196
56ĵLasal '88 o
11
•-ജബി.
வாசகர் பூமி
சஞ்சிகையைப் பார்த் ரொம்ப மகிழ்ச்சியாக அமைப்பு அழகாய் அதிலும் அட்டைப் மிகவும் பிடித் தது. புதுக் கவிதைப் பற்றி நிதானிதாசன் எழுதிய கருத் து க் கள் யதார்த்தமானவை. அப்துல் ரகுமானின் வசனக் கோவை போல் நிதானிதாச னின் எழுத்துக்களும் அழகாக வும், ஆழமாகவும், அர்த்த புஷ்டியுடனும் இருந்தன.
வெலிமடை - ஈழக்கவி -
"விடிவு' தேன். இருந்தது. உள்ளது. படக் கவிதை
தேசிய எண்ணம் கொண்டு மலை யகத்தில் பிறந்துள்ள பேரவை யும், "விடிவு' இதழும் முற்போக் காகவும். தேசிய ஐக்கியத்திற் கும் செயல்படும் என்பது எனது எண்ணம். வளர்ச்சிக்கு வாழ்த் துக்கள்.
கம்பளை - மலைச்செல்வி -
பணி மென்மேலும் எம் மன்றத்தின் நல் லாசிகள். இதுவரை தாங்கள் ஆற்றிய பங்கு சிறப்பானதே. பணி தொடர என்றும் உதவு வோம். யாழ்ப்பாணம் -பி. அன்கரன்
தாங்கள் தொடர
" வி டி வு " மக்களுக்கு விடிவு தரட்டும். கொழும்பு - எம் சாதிக்அலி -