கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1988 (3)

Page 1
தரமான நமது நாட்டுப்
புகையிலையால் தயாரிக்கப்பட்ட
பல ரக சுருட்டு வகைகளுக்கும்
பாவனைப் புகையிலைக்கும்
நம்பிக்கையான இடம்
விஜி இன்டஸ்டிரீஸ் இல. 3/12 பேராதனை வீதி
ας συστις
ails '88 ●
இல, 130 டி. எஸ். சேனநாயக்க வீதியில் வசிக்கும் நிதானிதாசன் ஆகிய என்ல்ை கண்டி பிராவி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

g l ஒரு மக் கள் க పి), இலக்கி u t பேரவையின் வெளியீடு
o “Gof” ” தினமே! நீயுந்தான் வருடாவருடமாகக் குளித்துமுழுகி சிவப்புச் சட்டை உடுத்துக் குதூகலித்தே ‘மைக்'குகளால் அலங்கரித்த மேடை ஏறி மார்தட்டிக்கூவுகிருய் அன்று -
சிக்காகோ நகர் வீதியில் சூடுபட்டுச் செத்த தொழிலாளர் தோழர்
களை விவசாயி தொழிலாளி நினைவு கூர்ந்து! தலை நிமிரவே அத்துடனே வேண்டுவதுஅதை முடித்த சிவப்பு விடியலேதான் அடுத்த நாளே- என்றுமே அத்தனையுமே கலைந்து உரைப்பாகச் பிறந்த நாள் சொல்லிவிடு
உடையே தான் இத்தினத்தில்!
- கண்டி. எம். ராமச்சந்ரன் - இதழ் 3 1988
அணிந்தே காட்சி! நடிகர்களை நம்பி நம்பி நடைப்பிணமாய் ஆனதெல்லாம் இனிப் போதுமே! புதுப் பயணம் போக வேன்றே
புறப்படத்தான்
வேண்டுமென மறக்காமற் கூறிவிடு! கொடுமை எல்லாம் அநுபவித்துக்
கூனிக்
குறுகியுள்ள
அன்பளிப்பு ரூபா 3/-

Page 2
ஆசிரியர் பீடம்
மண்ணையும், மக்களை யும் மதக்கடவுள்களிடமிருந்து விடுதலை செய்த மாபெரும் பெருமை மார்க்கஸ், ஏங்கெல் ஸ், லெனின் ஆகியோருக்கு உண்டு என்பதில் நாம் தெளிவான கருத்துள்ளவர்களாக உள்ளோம். இந்த பிதாமகர்களின் வைர வார்த்தைகளின்படி ஒரு சமூக மாற்றத்திற்கு கலை, இலக்கியங்களின் பணி மகத்தானது; மறுக்கமுடியாதது.
இன்றைய ஒரு மரண காலத்தில் மக்கள் கலை, இலக்கியங்களின் அற்புதமான வளர்ச்சியை அடிப்படையில் தடுத்து நிறுத்த சில கலை, இலக்கிய அமைப்புக்கள் எடுக்கும் மோசமான நடவடிக்கைகள் நமக் குள் கவலைகளை அணிவகுத்து விட்டாலும் மறுபுறம் இத்தகைய கலை, இலக்கிய வியாபாரிகளின் அசிங்கங்களை அம்பலபடுத்துவதன் அவசியம் எம் நெஞ்சுக்குள் வீரத்தை நிமிரவைக்கிறது. இதுவே ஒரு நிகழ்கால கலை, இலக்கியத்தினை அசுத்தப்படுத்த முனைவோருக்கு எதிராக எடுக்கப்படும் சிறந்த நடவடிக்கை என்பது எமது கருத்தாகின்றது. அதேவேளை இத்தகைய போலி கலை, இலக்கியவாதிகளை கஷ்டப்படும் மக்கள் சரியாக இனம் காண வேண்டுமென்றும் இன்றைய தொழி லாளர் தினத்தில் ஆலோசனை விடுக்கின் ருேம்.
இதே வேளை தமிழ் பேசும் கலைஞர்கள் தேசிய கலை, இலக்கிய மேடையில் புறக்கணிக்கப்படுவதன் மோ சமா ன யதார்த்தத்தை சுட்டிக்காட்டி மக்கள் கலை, இலக்கியப் பேரவை அரச தலைமைப் பீடத்துக்கு அண்மையில் மகஜரொன்றை அனுப்பி வைத்தது. அவற் றின் சில வாசகங்கள் வருமாறு:- * தேசத்திலுள்ள சகல நூல் நிலையங்களிலும் எமது நாட்டு படைப்
பாளர்களின் நூல்களை கொள்வனவு செய்து வைத்தல், * படைப்பாளர்களுக்கு தமது படைப்புக்களை நூலுருவில் வெளியிட
வங்கிக் கடன் வசதிகளை வழங்குதல் * சிங்கள மொழி படைப்பாளிகளுடன் தமிழ் மொழி படைப்பாளி களையும் இணைத்து தேசிய ரீதியில் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுத்தலும், அவர்களை கெளரவித்தலும், இத்தகு ஆரோக்கியமான அம்சங்களை நம் ஜனநாயக அரசு எடுக்குமிடத்து எதிர்பார்க்கும் இன ஐக்கியத்திற்கு இதுவொரு மகத் தான பாலமாக அமையும் என்று கருதுகிருேம். இதில் சம்பந்தப் பட்டவர்களின் சரியான நடவடிக்கையே வெற்றியை நிர்ணயிக்க வுள்ளது.
மீண்டும் அடுத்த இதழில் இதயங்களை இணைப்போம்!
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்தி வரட்டும்
*\--^-v'
SúLa 3 ’88 O
4.

புதிய கவிதைகள்
நாளை நமதே!
முதலாளித்துவத்தின் முகம் கழுவ ஏழைத் தொழிலாளிகளின் கண்ணிரல்லவாகளவாடப்படுகின்றன! உழைத்துக் கொடுத்தவன் உடைமையிழந்திருப்பதனை எந்த மனித நாகரீகம் ஏற்றுக் கொள்ளும்? தொழிலாளிகளேஒன்றுபடுவோம்! நாளைய வெற்றி நம்முடையதே! வாருங்கள் வரலாறு படைப்போம்! - எம். ஆர். எம். அமானுல்லாஹ் - கம்பளை
வெளிச்சம்
சிவப்பு
எழுத்தாளரென்று
சிலேடை விளம்பரங்கள்
பெரிதாய்த் தந்து
எங்கள்
இளவல் எழுத்தாளர்களை
இழிவுபடுத்துவோரே!
நீங்கள்
கலை, இலக்கியக்
கடை திறந்து
சிவப்பு
வெளிச்ச வீடு
நடத்துவதா ப்
வெளிச்சமெங்கும்
நீல நிறப்
படங்களுக்கும்
நீங்களே.
பொறுப்பாளிகள்!
- 53s T a மாத்தளை
விழித்தெழு
வடக்கிலும், கிழக்கிலும் மக்கள் மரணத்துள் ! கடவுள்கள் எங்கே காணுமல்போய் விட்டார்களா? கடவுளைக் காப்பாற்ற கடவுளால் முடியாத காலத்தில்
எங்கள் விடுதலையை எடுத்துச் செல்ல
நாங்களேவிழித்தெழுவோம்!
- புரட்சி மலர் வலீனியாரஸாக் - வத்தளை
ஒரு விதி
எட்டடி வீட்டுக்குள்ளே எட்டு பேர் வாழ்கிருேம் எங்களுக்கோ விடிவு மில்லை இத்தார் மீக தாயகத்துக்குள்ளே? எழுத்தாணி தொட்டதில்லை ஏட்டையும் புரட்டவில்லை நாட்டுக்கு உழைத்ததல்லால் நாமெதுவும் செய்யவில்லை! உறுதிபெற்று முன் வருவோம் இனி ஒரு விடிவுக்காக!
- உமாதேவன். - அணிவத்தை
அடையாளம் கிழக்குப் பக்கம் தலைவைத்து உறங்கினேன் இரத்தச் சேதியே என் கனவை நனைத்தது!
- பரீதா ரகுமான் -
வெலிப்பன்னை
O salon 5 '88

Page 3
அசுர அழுக்கு
நிம்மதியில்லா கைதிகள் இலங்கை மக்கள்! சாந்தி சமாதானம் எதிர்பார்க்கும் வெள்ளைப் புருக்கள்? தேயிலை றப்பர் ஏற்றுமதிக்குப் பதிலாக இரத்தம் ஏற்றுமதி நம்தேச
நிலத்தில் நல்ல உற்பத்தி இருளுக்கு இங்கு பிரஜாவுரிமை. இந்த உலகில் ஒரு நரகம் வாருங்கள் இங்கே! நகரங்கள் பயங்கரம் பாருங்கள் இங்கே! காரணம்நம் அரசுகளின் அசுர அழுக்குதான்!
- நிந்ததாசன் -
நிந்தவூர்
இருபக்கம் மனிதன் வாழ்வதற்கு போராட்டம் ஆனலும் பல நீரோட்டம் ஓடைகள்-ஒடி பிரளயம் வருகையில் கங்கைகள் புனிதம் கரைய ஆஹா! அலைகடலாய்
விரிகையில் அலையில் சிக்கிய சருகுகள் எங்கோ! சிக்கிய மீனை தாங்கிய மனிதன் அங்கே சிரித்து வாழப்புறப்படு
கிருன்
- அக்குறணை ஸகரிய்யா -
sálga 3 '88 O
ஒன்றுபடுவோம் பணக்காரர்களுக்கு சாமரம் வீசுவதற்கு இனி முற்றுப்புள்ளியிடுங்கள்! ஏழைகளின் ஏக்கங்கள் பணக்கார வாசல்களில் பரிதவிக்கின்றன! இந்த இருளிலிருந்து ஒரு சுதந்திரநாளே ஒன்றுபட்டு சந்திக்க ஒன்றுபடுவோம்!
- ரதீமா ஆமீர் - திக்குவல்லை
தலைப்பு இதற்கு இல்லை சந்தோஷம் தோண்டிய குழிகளை சனங்கள் தங்களது முகங்களில் முகங்களாக ஒட்டுகின்றனர். தேகங்கள் ஈக்களைக் காதலித்து மனக் காயங்களுக்கும் மருந்து போடும் இருந்தும்; நிவாரண அறிக்கைகள் நிர்வாணங்களாக நாளை போகும் என்ற நாளைய தினங்களையும் மானசீகம்ாக மாத்திரையாக்குவதனல் உயிரற்ற உடல்களை உசுப்புகிருர்கள் சனங்கள். நிலவைத் திருடி முகங்களில் மறைக்கும் சில மனசுகளைக் கூட
இவர்களது இப்போதைய வீதி வரைபடங்கள் விளம்பரப்படுத்தும்.
- ஹவனுே - சாய்ந்தமருது-06

' , . NM
கட்டுரை
* "A + "N/* uw W /^\r\Mae
சூழல் + யதார்த்தம் என கவிதை
- ஈழக்கவி --
வெலிமடை
சூழலின் யதார்த்தத்தை உள்வாங்சி கவிதையாக தத்தெடுக்கிருன் கவிஞன். அதாவது சூழலும் யதார்த்தமும் இணையும் பிரக்ஞையில் கவிதை பிறக்கின்றது.
இஸ்ரவேலிய ஆக்கிரமிப்பு நெருப்பில் வேகும் பலஸ்தீன் கவிஞர் மஹ்மூட்தர்வீஷ் சூழலின் யதார்த்தத்தை இப்படி எடுத்துச் சொல்கிருர் "அவனது வாயில் அவர்கள் சங்கிலிகளைப் பிணைத்தனர்/ மரணப் பாறையுடன் இருக்கக்கட்டினர்! பின்னர் கூறினர்! நீ ஒரு கொல்க் காரன் என்று" எனவே, சூழலும் யதார்த்தமும் சூல் கொண்டு கவி யாக ஐனிப்பது தெளிவு.
ஈழத்து நவீன கவிதையின் பிதாமகர் மஹாகவிமுதல் நீலா வணன், இ. முருகையன் தொட்டு எம். ஏ. நுஃமான் மு. பொ. சசி, தா. இராமலிங்கம் தொடர்ந்து, அ. யேசுராசா, ஜெயபாலன், சு.வி வரை வந்து - இன்றைய இளைய தலைமுறை முதன்மைக் கவிஞர் சேரன் வரை எல்லோருமே சூழலையும் யதார்த்தத்தையுமே கவிதை யாக நிறுவியுள்ளார்கள் நிறுவுகின்ருர்கள்.
*தென்னபிரிக்க நாட்டின் சிறையும்/ நமது நாட்டின்/ சிறைசளைப் போல்வன அம்மா! வைத்தியக் கல்லூரி ஆய்வு மேசையில்/ கிடத்தப் பட்ட பிணங்களைப் போல்வர் கொடுங்கோலரது சிறைகளில் மாணி t’’
இப்படி ஜெயபாலன் நமது சூழலின் யதார்த் த த் தை புற சூழலின் யதார்த்தத்துடன் ஒப்பிட்டுக் காட்டுகிறர். இத்தகைய ஆளுமையை இன்றைய ஈழத்து (பல) இளம் கவிஞர்களிடம் காண முடிவதில்லை. '
ந. பிச்சமூர்த்தி, புதும்ைப் பித்தன் போன்றவர்களிடம் காணப் பட்ட யதார்த்தக் குறியீட்டை வானம் பாடிக் கவிஞர்களிடம் காண்பது கஷ்டம். அவர்களின் கவிதைகள் அதீத தனி மனிதச் சார்பானது. மேலும் சொன்னுல் அவர்களிடம் வெறும் புனைவியல் பாங்கே அரசோச்சுகின்றது. இதனை - இன்றைய ஈழத்து இளம் கவிஞர்கள் உணர்ந்து கொள்வது நல்லதே!
மு. மேத்தா முதல் வைரமுத்து வரையுள்ள தமிழக அலங்காரக் கவிஞர்கள் வார்த்தைகளைப் பொருக்கி அர்த்தமற்ற முறையில் புதுக் கவிதை என்ற பெயரில் எதையோ, எ வ் வித பிரக்ஞையுமின்றி "சும்மா" எழுதுகின்றர்கள். síla 3 '88 O

Page 4
மீரா தொடக்கிவைத்த காதலிகளுக்கு காணிக்கையாகும் புதுக் கவிதை மரபு - நா. காமராசன், பாப்பிரியா அமுத பாரதி, அறிவுமதி ழி கவியவர்களால் கையாளப்பட்டு அலுத்துப் போய் விட்டது.
ஈழத்து இளம் கவிஞர்கள் இன்னும் இந்த மரபுக்குள் ம:ங்கிக் கிடந்தால் எப்படி? காதல் கவிதைகள் எழுதத்தான் வேண்டும், :தற்காக 'சர்க்கரையை மண்ணுங்கட்டியாக்கும் நிலை லேண் : தில்லை. நுஃமான், யேசுராசா, சேரன்" போன்ற ஈழத்து புதுக்கலி ஞகளின் காதல் கவிதைகள் யதார்த்தமாக, சூழலின் படப்பிடிப்ப"க சமூகப் பிரக்ஞையுடன் வெளி வருகின்றன. இவற்றை ஏன் இளம் கவிஞர்கள் கண்டுக்கொள்வதில்லை?
'சுற்றிலுமுள்ள வாழ்க்கைத் தளத்தோடு ஒன்றித்து நிற்கும் ஈழத் துச் சிறந்த புதுக்கவிதைகள் தமிழகத்தாருக்கு வழிகாட்டும் சிறப்பு. :: என்பது வானம் பாடியின் எண்ணம் . " (வானம்படி வ" இtசிழில் புதுக்கவிதையை வளர்த்து விட்ட்தாக கூறப்படும் வாசிக் : டியே இப்படி கூறும்பொழுது ஈழத்து இளம் கவிஞர்களில் பலர் ஏல் - யதார்த்தம் மறந்த நிலையில் கவிதாயாகம்?
ஆகவே இன்றைய இளம் கவிஞர்கள் சூழலின் யதார்த்தங்களே உள் வங்கி கவிதாயாகம் வர முயற்சிப்பதே ஆரோக்கியமானது? கும்,
கவனத்துக்கு. இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரசியல்யாப்பு
3;& Saruit Huub 3: alu 49lfio, 14:
தனது மனதுக்குப் பட்டதைப் பேசவும் எழுதவும் அச்சிட்டு வெளியிடவும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை யுண்டு.
((۔۔۔۔۔۔۔۔صہ سمجمع حصيحصبیح سمہ سہمدحمسیحیحد>حیمیسس سے عر!
நல்ல இலக்கியம், எதுவெனக் கேட்டால் நல்ல வராக வாழ்வது தான்
- மெக்ஸிம் கோர்க்கி -
6. ( 6.
இங்கே சனநாயக அரசு மனிதர்கள் சுமக்கும் தொலைத்துவிட்டது! தேனேகள் ஆயிரமாயிரம். வாருங்கள். பூனிதர் 8ளின் மாமிசம் மறைந்துள்ள
கலித்துகிடப்பதனுல் சமாதானத்தை அஹிம் சைகள் இங்கு வெளியில் விடுவிப்போம்! அடக்கப்பட்டுள்ளன! - செல்வி பாயிசா ஜுனேட் ை சமாதானத்தை பேருவளை
sigs 3 '88 O.

சிறு
கதை
அறைக்குள் புழுக்கம் தாள முடியவில்லை; அதையும் மீறி மனப்புழுக்கம் வேறு தொற்றிக் கொள்கிறது. மீண்டும் அந்தத் தினசரியின் முன்பக்க செய்தியை மேய்கிறேன்.
*சாய்ந்த மருதில் பல வீடு கள் தீக்கிரை! ஆயிரக்கணக்கா னேர் அகதிகளாக வெளியேற்
"... ه ه .DLib
மனதுள் இனந்தெரியாத ஒரு வகைத்துயரம் பந்தாய் அடித் துக்கொள்கிறது. தின ச ரி யை மடித்து விட்டு நிமிர்கிறேன். சோர்ந்து, சோகஞ்சுமந்த தாடி வளர்த்த முகம், கண்களிலே கவலைகளை ஏந்தி என் முன்னே நிற்கிறது ஒரு அசிங்கத்தின் மொத்த உருவம்,
"யார் நீங்க... எ ன் ன வேனும் ... ?” குரலில் அதிகா ரத்தை அழைத்துக் கொண்டு பேசுகிறேன்.
"தொரே. நீங்கதானே விதா னையார். உங்கள சந்திக்கத் தான் வந்தன் நாங்க மூன்று குடும்பம் அகதிகளாக வந்திறக் கிறம் தொரே. மலை நாட்டுப் பக்கம் ஒரு "கேம்ப்ல" இருந்தம். எங்க ளை எல்லாம் ஒரு முத லாளி அன்போடு ஆதரிச்சாரு. பார்க்கபோன அவரு எதிர்கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகராம். இ தெ ல் லா ம் ஆளும் கட்சி ஆட்களுக்குப் பி டி க் கல்ல. எங்களை எல்லாம் இருபத்திநாலு மணித்தியாளத்தில அங்கிருந்து
high 3 '88 O
உம்மத்துக்களே?
- திக்குவல்லே ஸ்ப்வான் -
போகச் சொல் லி, அவர்க ளோட குண்டர்கள் வந்து பய மு று த் தி ஞ ங் க. பாருங்க தொரே அதனுல இரவோட இரவா ஓடி வந்திட்டம். நீங்க தான் ஏதும் பார்த்து வசதி செய்யனும்."
தழு தழுத்த குரவில் சொல்லி
முடிக்கிருர் கண்களிலிருந்து நீர்
பொங்கி வழிசிறது, அழுக்குத் துண்டால் துடைத்துக்கொள்கி முர். எனக்கு என்னவோபோல் இருக்கிறது.
*ச்சே. என்ன மனிதர்கள்.
அதற் க் குள் ளு ம் sypráaudu லாபமா..?" இதயம் வெறுப்பு டன் குமுறுகிறது. அன்போடு
அவரை நோக்குகிறேன் "இந் தாங்க. நீங்க ஒன்று க்கும்
கவலைப்படாதீங்க உங்களுக்கு தேவையான வசதிகளை நாங்க செய்றம்." தி குப் தியோ டு திரும்புகிருர், ஓரிரண்டு இளை
ஞர்களின் துணையோடு அவர்
களை தற்காலிகமாக ஓரிடத்தில்
தங்க வைக்கிறேன்
சாப்பாட்டுப் பிரச்சினை எழுகி றது. ஒரு "விஸ்ட்டாக" தயா ரித்துக்கொண்டு மூஸின் முதலா ளியின் வீட்டுக்குப் போகிறேன், உள்ளே முதலாளி "டெக்?? பார்த்துக் கொண்டிருக்கிறர் என்னைக் கண்டதும் முகத்தில் bevrië6hannu வரவழைக்கிருர், *" என்ன ஏதாவது சிரமதானங் களா இல்லாட்டா வரமாட் டீங்களே. இது களு க்கு க்

Page 5
கொடுத்து கொடுத்தே முடிவில்
லாமப் போச்சு...!"
"அதெல்லாம் ஒன்றுமில்ல முதலாளி கிழக்கு மாகாணத்தி லயிருந்து அகதிகளாக மூன்று குடும்பம் வந்திருக்கு. தற்காலி கமாக ஒரு இடத்தில் நிற்கி ருங்க இப்போது சாப்பாட் டுக்கு ஏதாவது செய்யனும் உங் களால முடி யு மா ன உதவி செய்திங்கன் ஞ. " நான் முடிக்க வில்லை! அவர் என்னை உறுத்துப் Limitiáš50př,
"இஞ்ச பாருங்க இதுக்கெல் லாம் எனக்கிட்ட காசில்ல. அகதிகள், மிஸ்கீன்கள் என்றும் வந்தா அதுக்கு நான் தா ன பொறுப்பு? என்னுல ஒன்றும் செய்ய முடியாது. போயிட்டு வாங்கோ " தொடர்ந்து அவரின் பேச்சைக் கேட்க என்னிடம் பொறும்ை இல்லை. பொங்கி வந்த ஆத்தி ரத்தை அ ம த் தி க் கொண் டு வெளியே வருகிறேன்.
"லிஸ்ட்டும்? முதலாளிகளிடம் ஓடு கிறேன். {ւpւգծ தத்துவங்களையே விழுந்த சில அன்ருடக் கூலிகளின் சில்லறை கள் அகதிகளின் அன்றை ய பசியை ஒருவாறு தீர்க்கிறது.
விடிகிறது. கிராமத்தின் ஒதுக் குப்புறமாய் காடுபற்றிக் கிடக் கும் ஒரு பகுதி என் கவனத்தை கவருகிறது. யாருமே உரிமை சொல்லாத.
கையுமாக பல
எல்லா முதலாளித்துவ
சுமாறிகளும் பேசுகின்றனர்.
L9 pr Guitraf sur lib
உம்மோட வேலைதான?
சொந்தச்
தராத காணி - ஊர் ஏழைகளின்
உதவியுடன் துப்பரவாக்க முனை கிறேன். .ܪܗܝ
சர் ர் ரா ஸ். என்று வந்து நிற் கி றது ஒரு "லான்சர்: வாஹிது முதலாளி கம்பீரமாய்
அதிலிருந்து இறங்குகிறர். பின்
ணுல் கூலிப்படை, நான் அவசர மாய் அவர் முன்னுல் போப் நிற்கிறேன்.
**விதானையார். இதுவெல்லாம் umG கிட்ட கேட்டு எ ன் ஞே, ட கா னி ல அந்த பிச்சைக்கார நாய்களைக் குடியமர்த்த போய்
நீங்க. மரியாதையா சொல் றன். இதோட இத நிறுத்தி டுங்க.."
என்னுல் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
"முதலாளி எல்லாம் இழந்து உ யி ரை க் கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறவங்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தை விட்டுக் கொடுக்க மறு க் கிறீங்க . சமூகம் பிறந்த மண்ணில் அகதிகளாகி இருக்க இடமின்றி ஓடிவந்தபோது பிர யோசனமற்ற இந்த இடத்தக் கூட விட்டுக்கொடுக்க மறுக்கி நீங்களே..த்துர. நீங்களெல் லாம் மனுஷன? . இதுவா இஸ் லாமிய சகோதரத்துவம்.?
முதலாளி விக்கித்து நிற்கிருர், “யார் யாருடனுே" எனக்குத் தொடர்பென்று கதை பரப்பி மட்டாந்தட்ட அவரது கண்கள் சுழற்சியோடு மூலையும் வேலை செய்கிறது. -
- (!pgbpyub -
of 1953 '88 O

குறு நாடகம்
வெளிவரும் வெளிச்சங்கள்
அமைப்பு:-
- நிதானிதாசன் - (பேராதனை பல்கலைக்கழகம்)
பேராதனை பல்கலைக்கழகம் நூலகத்துக்கு அருகில்
பாத்திரம்:- சதிஷ் - நளீம்
சதீஷ்:- நளிம்:- சதீஸ்:- நளீம்:- சதீஷ்:-
நளிம்:-
நளீம்:-
““G Drr Gofinišu” Dj FrTesör
p p p
டேய் விஸ் பன்றேன்! ஒம்பாட்ல பல் இளிக்கிற? மச்சான் நான் கவிஞணுகி விட்டேன்டா! அடிதேஞ்ச செறுப்பாலே கலை, இலக்கியமுங்குற பேரச் சொல்லிக்கிட்டு சில கழுதைகள் பல காலம்ா 'பிஸ்னஸ்" பன்னுதுக நீயும் அதுகளோடே சேரப் போறியோ? ஆமா என்னடா எழுதியிருக்க? ஒரு "டொப்"பான காதல் கவிதை மச்சான்? காதில வடியிற கவிதை? ஓங்க உம்மா நோயாளி. வாப்பா மவுத்து. தாத்தா "டு பாய் லே ஹவுஸ் மேட்ன்னு கவலைபட்டியேடா கழுதே இந்த மண்ணுல கஸ்டப்படுகிற வாப்பாமாரு, உம்மாமாரு, தாத்தாமாரு, தங்கச் சிமாரு, நாணுமாரு, தம்பிமாரு, அவுங்களைப் பத்தி எழுதுறதை உட்டுப்புட்டு காதலைப் பத்தி எழுதுருராம்! இவரு சமூகத்தைப் பத்தி நீ யேன்டா கவலைப்படுரே நாயே! அல்லாஹ"த்தாலா இருக்கான்டா அதப் பார்க்க: த் துா. ! பட்டதாரி மாணவரு மாளிகைக் காட்டுல, சாய்ந்த மருதுல எல்லாம் பள்ளிக்குள்ளேயே பல முஸ்லிம் கள் படுகொலை செய்தத பத்தி பேப்பர் ல வருதே? அந்த நேரமெல்லாம் ஓங்க அல் லா ஹ" தா லா "ரொட்டி’ சுட்டாருே? புத்தபெருமானரின் பேராலதானேடா இங்கே பேரின வாதமே வளக்கப்படுது. 83 கலவரத்திலே எங்க வீட்டுக்கு ராவோட ராவா நெருப்பு குடுத்தானுங்க. அந்த நேரம் எங்க பரம சிவன் தேங்காய் திருவ, எங்க பார்வதி பால் புழிந்தாளோ? அப்பனில்லாம் பொறந்த யேசு மகன் அடுப்பு ஊதிஞரோ? அல்லது இந்த பயல்களெல்லாம் சேர்ந்து "குடு" அடித்து தூங்கி விட்டாங்களோ? அடேய்! நாஸ்திக நாயே! அல்லாஹ் ஒன்ன சும்மா உடமாட்டான்டா? காபீர்!
sí La 3 °88 O

Page 6
சதீஷ்:-
நளீம்:-
சதீஷ்:-
நளீம்:- சதீஷ்:-
நளிம்:-
சதீஷ்;-
கோயிலைக் கொளுத்தியவன், பள்ளிய இடிச்சவன், ஏழைய சுரண்டுறவன், வட்டி எடுத்து ஹஜ்ஜுக்கு செல்றவன் அத்தனை பயலும் ஆண்டவன் இருக்கிருன்னு சொல்ற பயல்கள்தான்! அவன்களை ஒன்னும் புடுங்க முடியாத அல்லாஹ்தான்? என்னை வந்து. நீ ஹராத்துல பொறந்தவன் மச்சான்! ஒனக்கு ஒன்னும் வெளங்காது எனக்கு வேண்டியதெல்லாம் பேப்பர்ல பேரு வரணும். காதல் கவிதை வாசிக்சேன் னு தேசிய பத்திரி. கைல பேர்வரனும்- அவ்வளவுதான்! அட எருமைமாடு! அது “சிம்பல் மெட்டர்' டா! பத்தி ரிகை வாசல்ல 'இழிச்சவாய்' போல நில்லுடா. சாரா யக்கலை, இலக்கியம் வளர்த்து ஊரை ஏ மாத்து கிற கூட்டம் நம்ம கண்டியிலேயும் இருக்கு மச்சான் அதுலை நீயுஞ்சேறு! நிச்சயம் உனது பெயர் பேப்பர் ல அடிக்கடி வரும். அட அசிங்கமே! நீயும் வெக்கம், மானம், ரோஷம் ஒன்னுமில்லாமே பட்டதாரி மாணவர்களில் ஒருத்தன இருக்கிறியே? ஒங்கமாதிரி உருப்படாத பசங்களாலே தாண்டா இந்த தேசமே நாசமாய் பேர்ய்க்கிட்டு இருக்கு ! அப்ப என்ன மச்சான் என்ன செய்ய சொல்ற? கவிதை எழுது கிற து நல்லம் தான்டா. ஆனல் அது மக்கள்ட பிரச்சினய சொல்லனும், அதுவும் மக்களுக்கு விளங்குற பாஷைல இருக்கனும். அதோட மக்களுக்கு பிரயோசனம் பட்னும். இது கிராம்புறத்துக்கும் தோட் த்துக்கும் சென்றடையனும், வெறுமண நாளைஞ்சி முதலா ளிமாற அழைச்சு மாலப் போட்டு கைதட்டி, குத்துவிளக் கேத்தி, வீடியோ படமெடுத்துக்கிறதால பிரயோசனமில் லடா! நிச்சயமாக நீ கேட்டுப்பாரு மச்சான் கலை, இலக் கியம்னு பெரிசா பேசுக்கிட்டு திரிப்ருன்களே அவனுகள் கிட்டபோய் கேளுடா கலை இலக்கியம்னு என்னுன்னு? நிச்ச யமாக கூட்டம் கூடுறதும், பிரசங்கம் பன்னுறதும் பேப் பர்ல அதப்பத்தி எழுதுகிறதும் அப்படினுதான் இவன்கள் நினைச்சிட்டிருக்கிருன்கள். அத தா ன் டா செய்கிருன்கள். அவங்கபோல நீயும் சிந்திக்க ஆரம்பிச் சிட்ட. இது உன்ட குற்றமில்லடா! நம்ம கலை, இலக்கிய வியாபாரிகள் இளம் எழுத்தாளர வழி நடாத்துற லட்சனம்! உண்மையிலேயே இன்னக்கிதான்டா எனக்கு தெளிவு வந்துச்சு. இனி நானும் மக்களுக்காகவே சிந்திச்சு, எழுது வேன், செயல்படுவேன். எவன் எத சொன்ஞலும் எனக்கு கவலையில்லடா! சரிமச்சான் நேரமாச்சு லெச்சருக்கு வா போவோம்.
"- mu திரை -
விடிவு 388 O
0.

W
I3O, D. S. Senanayake Veediya, KANDY
மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கிளைச்
செய்திகள் பிரதம ஆசிரியர்
நிதானிதாசன் மலையகக்கலை இ லக் கி யம் என்ற போர்வையில், சில ★ ★ சமுதாயப் புல்லுருவிகள்
இ ன வா த துர ப மி ட் டு த் திரிவது, மக்கள் கலை இலக்கி யப் பேரவையின் மத்திய
ஆசிரியர் குழு செயற்குழு கவனத் தை கண்டி எம். ராமச்சந்திரன் ஈர்த்துள்ளது.
* ம. க. இ. பேரவை யின் ரிஸாணு ஹாசீம் கொழும்புக்கிளை கடந்த 17. 04. 88 அனுஷா கல்வி எஸ். பி. செல்வராஜ் நிலை யத் தி ல், கவிமாலைப் பொழுது நிகழ் ச் சி யை ★ 女 நடாத்தியது. நிகழ்ச் சித் தலைமையினை கலா நெஞ்சன் ஏற்றர். முகவரி
130 * ம. க. இ. பேரவை புகைப் பட மற்றும் புத்தக கண் ۔۔۔۔۔۔۔۔ مہ ... டி. எஸ். சேனநாயகக வீதி, காட்சி யை ஏற்பாடு செய் கண்டி துள்ளது. புகைப்படங்கள்: @aజీతా இன்றைய தேச, சர்வதேசிய நிலைமையை பிரதிபலித்துக்
காணப்பட வேண்டுபென தொலைபேசி பொதுச் செயலாளர் எஸ். 08-23196 ஜீவரா ஜ் தெரிவித்துள் 6ΤΠ Γί ο தொ டர் புக ள் பொதுச் செயலாளர் (எஸ். ஜீவராஜ்) 130. டி. எஸ் சேனநாயக்கா வீதி கண்டி, as L6 '88 O
11