கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.07.15

Page 1
Registered as a Newspaper in Sri Lanka.
KUMARAN - 64 (15-07-1983), 32;RA "***"
அ ரிய நூ ல் கள்
மீண்டும் கிடைக்கும்
இளமையின் கீதம் செ. கணேசலிங்கன் ரூ. 18.00 குந்தவிக்குக் கடிதங்கள் 12.00 சடங்கு 2.00 செவ்வானம் 15.00 தரையும் தாரகையும் 16.50 போர்க்கோலம் 14.25 மண்ணும் மக்களும் I0 50 அந்நிய மனிதர்கள் 13.50 வதையின் கதை I5.75 கலையும் சமுதாயமும் 1.25 சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 13.50 வெற்றியின் இரகசியங்கள் அ. ந. கந்தசாமி 15.00 உயர்தர இரசாயனம் கணேசர் சிவபாலன் 9000
(A. L. at G5 till Lurt L-D/76)
இலக்கியச் சிந்தகைள் - க. கைலாசபத,
ரூ. 15/-
யுகழலர் - யோகா பாலச்சந்திரன் 2.00
விற்பனையாளர்களுக்கு கழிவு உண்டு. முற்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இனம். வி. பி. பி. ஏற்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி : : ைெள் பத்தை
கொழும்பு 6.
தொலைபேசி: 588930
அச்சு குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழுப்பு 12. ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

64
15 யூலை 1983
ჭe ჭaska ჭიჭი ჭe sk sk ჭა აჭastor * sჭo do de ჭი ჭa de desჭešk trლ · ·k ck >ჭა ჭაჭა ჭa xk do de ჭ. ჯro - ჭაჭa &b + de Šksჭ; ჭაჭa d: #dი.
* படைப்பிலக்கியத்தில் அழகியலும் வர்க்கமும்
* வியத்நாம் யுத்தம் பற்றிய அமெரிக்க திரைப்படங்கள்
- மாதவன்
* யேசுநாதர்கள்
- யோ. பெ.
* நான் ஏன் எழுதுகிறேன்
- இன்குலாப்
* ஜே. ஜே. சில குறிப்புகள்
- தியாகு
* அனல்காற்று
- செல்வன்
* படைப்பிலக்கியத்தில் மார்க்கியத்தின் தாக்கம்
* சிவப்பு நாட்கள்
- செ. யோகநர்தன்
மாவோவின் பாடல்கள்
女
- கோவிந்தன்
* எல் சல்வடோர் - மற்றெரு வியத்நாம்
- செ. கணேசலிங்கன்
ಫ್ಲ್ಯಾ' ನ್ತಟ್ಠನ್ತಿ ಘ್ನ
女 యఓు : ლpb. 2/ =

Page 2
குமரன் குரல்
குமரன் 63-ஆவது இதழைப் பாராட்டிப் பல கடிதங்கள் வந்தன. அவற்றையெல்லாம் வெளியிட்டு மற்ற இதழ்கள்போல் தம்பட்ட மடித்துக் கொள்வதை குமரன் விரும்புவதில்லை. மேலும் தெளிவுவேண்டி எழுதப்படும் விஷயங்களை நாம் தொடர்ந்த இதழ்களில் மேலும் எளிதாக விளக்க முயல்கிருேம்.
சென்ற இதழில் மாதவன் எழுதிய மக்களின் பகைமை எப்பக்கம்? என்ற கட்டுரை பலரது கவனத்தை ஈர்த்ததை அறிவோம். பாலனின் காகங்கள் என்ருல் என்பதும் பாராட்டுப் பெற்றது. எல் சல்வடோர் -மற்றெரு வியத்நாம் என்ற கட்டுரைத் தொடர் இங்கும் தமிழ்நாட் டிலும் பலரின் உணர்வை ஈர்த்துள்ளது. மத்திய அமெரிக்காவில் ஆரம் பித்திருக்கும் புரட்சி பல தோல்விகளின் பின் எழுந்த புதிய அனுபவத் தின் எழுச்சியாகும். தமிழில் எல் சல்வடோரை-மற்ருெரு வியத் நாமை விரிவாக, தெளிவாக அறிமுகப்படுத்தியபெருமை குமரனுக்கே உரியதாகும்.
மாவோவின் பாடல்கள் தமிழிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்ததை யாவரும் அறிவர். ஆயினும் குமரனில் கோவிந் தஞல் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும் பாடல்கள் பல தனிச் சிறப் புகள் வாய்ந்தவை.
கவிதைகள் ஓசை நயத்துடன் தமிழ்க் கவிதை மரபை ஒட்டி மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆய்வுக் குறிப்புகள், விளக்கங்கள் யாவும் மாவோ-சீனுவின் புரட்சி வரலாற்றை ஒட்டி எழுதப்படுகின்றன. அத் தோடு கவிதைகளை ஒட்டிய கருத்துடைய தமிழ் மரபும் தரப்பட்டுள் ளது. இவை கோவிந்தனல் சில நாட்களில் மொழிபெயர்த்து எழுதப் பட்டதல்ல. பல ஆண்டுகளாக இதே சிந்தனையுடன் அவர் உழைத்து பல நண்பர்களுடன் கலந்து பேசி, சீனவின் புரட்சி வரலாற்றை அவர் இதற்காகக் கற்றே எழுதியுள்ளார். முதற் கவிதையே பலரின் பாராட் 'ைப் பெற்றுள்ளது. இரண்டாவது கவிதையையும் விளக்கத்தையும் இவ்விதழில் காண்க. ஒரு புரட்சி அரசியல் வாதியின் உணர்வுகள் காலத்தோடு ஒட்டி எவ்வாறு கலை உருவம் பெற்று வெளிப்படுகிறது என்பதைக் காண்பீர்கள்.
கலை இலக்கியத்தில் அழகியல் பற்றி முதலாளித்துவ விமர்சகர்கள் குழப்பியடிப்பது இயல்பே. காரணம் முதலாளித்துவத்திடம், லாபம் தேடும் உற்பத்தி தவிர, விஞ்ஞான பூர்வமான கோட்பாடு எதுவும் கிடையாது. டாட்டாளிகளிடம் மார்க்சிய விஞ்ஞானம் உள்ளது.
கலை இலக்கியத்தையும் விஞ்ஞான பூர்வமாக, தெளிவாகக் காண அவர்களால் மட்டுமே முடியும். இன்று இங்கும் தமிழ் நாட்டிலும் கலை இலக்கியம் பற்றி குழப்பியடிக்கும் பலருக்கு இவ்விதழிலுள்ள சில கட்டுரைகள் தக்க பதிலளித்து தெளிவேற்படுத்தும் என நம்புகிறேம்.
2 குமரன்

நவீன படைப்பிலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம்.3 செ. யோகநாதன்
நவீன படைப்பிலக்கியத்தில் கவிதை இன்றும் பிரதான பாத்திரத் தினை வகுத்து வருகின்றது. ஏனைய துறைகளைவிட வெகுஜன தொடர்பு சாதனங்களின் மூலம் பரவரலாகவே மக்களிடம் சென்றடையக் கூடிய வாய்ப்பினைக் கவிதை பெற்றது. அதன் காரணமாகவே கவிதைத்துறை யைப் பொறுத்தவரையில் மார்க்சியத்தின் தாக்கமானது மார்க்சியநெறி சார்ந்தோரையும், சாராதோரையும் கூட தன்னுள்ளே உட்படுத்தும் .LD ஏற்பட்டது (60עhébן,
கவிதை என்றதும் நமக்கு முதலில் தோன்றுபவன் பாரதியே. தமிழ் கவிதா மரபிற்கே புது உருவமும், உள்ளடக்க வலிமையும் கொடுத்த வன் பாரதி. அவன் காலத்திலே மார்க்சிய இயக்கத்தினை முழுமையாக அறியும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவேயில்லை. எனினும் தன்னளவிலே சமுதாய நீரோட்டத்தின் சரியான செல்நெறியினை அவதானித்து அத னைப் போற்றிய பெருமைக்குரியவன் அவன். அவனது அடியொற்றி வந்த பாரதிதாசன் திராவிட இயக்கங்களிலே தன்னைக் கூடுதலாக ஈடு படுத்திக் கொண்டவன். மார்க்சிய இயக்கங்கள் மிகுந்த சோதனையான காலத்திலிருந்தபோதும், வெகுஜனங்களின் எழுச்சிக் காலங்களின் பே7 தும் அவற்றையெல்லாம் காணுதவன் போலவும், அறியாதவன் போல வும் பாவனை செய்து கொண்டு வாய்ப்பான தருணங்களிலே பொது வுடமை பூக்க வேண்டுமெனப் பாடியவன். திராவிட இயக்கங்கள் தா மும் மார்க்சியக் கண்ணுேட்டமே கொண்டிருக்கிருேம் எனக் கூறிவந்த பொய்மைப் பிரகடனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். பாரதிதாச னினதும், அவரது பாசறையினரினதும் வர்க்க நிலைப்பாடுமே இத்தகைய போக்கினை நிர்ணயித்தனவாகும்.
இவ்வேளையிலே தமிழிலக்கியப் பரப்பிலே நிலவுகின்ற ஒரு போக் கினை இங்கே அவதானிப்பது நலம். கவிஞன் உண்மை உணர்ச்சிமய மானவன் எனவும் அவனேரு சுதந்திர சிந்தனையாளன் எனவும் ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டது. தத்துவம் வேறு கவிதை வேறு என் பதனை இவ்வரட்டு வாதம் வலியுறுத்தியது. இந்த நெறிப்பாட்டுக்குள் நின்றும், மறுத்தும் எதிர்த்தும் கவிபுனைந்தோரை ஆராய்வோமாயின்
குமரன் 3.

Page 3
இவர்களது வர்க்க, அாசியல் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முடி யும், கவிஞன் ஒருவனின் தத்துவ சார்பினைப் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி கூறுகின்ற பின்வரும் கருத்து ஆழ்ந்து நோக்கத்தக்கது.
*அரசியலையும் தத்துவத்தையும் இலச்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்று கூறுபவர்கள்- கூக்குரல் எழுப்புபவர்கள் -உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்களையே தடுத்து நிறு த்த விரும்புகின்றனர். தமது வாதத்துக்கு வழித்துணையாகக் கலை யழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன் கொண்டு செல்கின்ற னர். உற்று நோக்கும் பொழுது இவர்களது கூற்று வெறும் பாசாங்கும் போலி நடிப்புமே என்பது தெளிவாகும். கலையின் பெயரால் கலைக்கே உலை வைப்பவர்கள் அவர்கள். ஆகவே கவிதைக் குத் தத்துவம் பகை என்ற பசப்புமொழி நம்மைத் தடுத்து நிறுத் தக் கூடாது. தத்துவத்தைத் தொடாப் பொருளாக்கி உணர்ச்சி நலன் என்ற மாயையை கவிதைத் தவிசில் ஏற்றி வைப்போர் இறு தியில் அர்த்தமற்ற சொப்பனவஸ்தைப் புலப்பல்களையும், தமது சொந்த மனக்குரோதங்களையும் சொற்சிலம்பம் ஆடுவதிலேயே சுகம் காணுகின்றனர். கண்மூடித்தனமான கலைவாதம் யதார்த் தத்தில் கலையின் மறுதலிப்பு ஆகும்.
வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் சமுதாயங்கள் அனைத் திலுமே எல்லாக் காலங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ ஒரு கவிஞன் தான் சார்ந்த வர்க்கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகிறன்."
(இலக்கியச் சிந்தனைகள் பக். 101-102)
இவ்விதமே கவிதை என்பது தத்துவங்கலவாத புனிதமானது, உணர்ச்சிகளின் கட்டற்ற வாய்க்கால் என்று மாய்மாலம் செய்தோ ரெல்லாம் அடிப்படையிலே தாம் சார்ந்த சித்தாந்தத்தை அழுத்தியவர் வர்களே என்பதனை இவர்கள் எழுதிய கவிதைகளே நமக்குத் தெளிவா கப் புலப்படுத்தும், வெகுஜன சாதனமான சினிமாவின் மூலமாகத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் அறியப்பட்டவர் கண்ணதாசன். சோவியத் ருஷ்யா சென்று திரும்பிய அவர் துருக்மேனியப் பெண்களின் உடலழகையே வியந்துபாட முடிந்தது, அங்கே போவதற்காக அவ. 'இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று பாடியவர்தான். ஆயினும் தமிழ்க் கவிதையிலே சாக்குருவி வேதாந்தத்தை அழுத்திப்பாடி, காலத் திற்குக் காலம் ஆளும் வர்க்கங்களின் அடிவருடி, துதிபாடி அவற்றிற் கெல்லாம் ஆஸ்தான கவிஞனக லிளங்கி. வெகுஜனப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்பன எழுந்த போதெல்லாம் அவற்றிற்கு
4 குமரன்

வெளிப்படையான எதிரியாகவே செயற்பட்டுத் தனது வர்க்க விசுவா சத்தைக் காட்டிக் கொண்ட பிற்போக்குவாதி இவர். இந்தத் தத்துவ நெறிநின்று செயற்படுவோருக்கெல்லாம் கண்ணதாசனே ஞானகுரு வும், வகை மாதிரிக்கு உதாரணமும் ஆவார். இவரடி ஒற்றிய கவிஞர் குழாம், தமிழ் நாட்டிலே மாத்திரமன்றி தமிழ் கூறும் நல்லுலகமெங் கணும் சிதறியிருப்பதை அவதானிக்க முடியும்.
மார்க்சிய நெறியினை உள்வாங்கி அதனை இசைவடிவிலமைத்த பாடல்களாயும், கவிதைகளாயும் படைத்தவர்களில் முன்னுேடிகள் எனக் கருதத்தக்கவர்கள் ப. ஜீவானந்தம், சிதம்பர ரகுநாதன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் என்போர். நேரடியான அரசியல் இயக் கங்களிற்கும், போராட்டங்களிற்குமென எளிய மெட்டுகளிலே ப. ஜீவா னந்தம் எழுதிய பாடல்கள் பல்லாயிரக் கணக்கான மக்களால் விரும்பி இன்றும் பாடப்பட்டு வருபவை. ஒரு முழுநேர அரசியல் வாதியாயிருந் தமையினுல், அவர் கவிதைத்துறையிலே தம்மைப் பூரணமாக ஈடுபடு த்த முடியவில்லை. "கோடிக்கால் பூதமடா" என்ற அவரது கவிதை என் றைக்கும் வாழக் கூடியது. கற்ருேருக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும் உவப்பான கவியரங்குகளிலேயே சிதம்பர ரகுநாதனுக்கு அதிக நாட்ட மிருந்தமையினல் அத்தன்மைக் கேற்பவே கவிதைகளைப் பாடினும் ஆனல் வெகுஜன சாதகமான சினிமாவிலே தொடர்பு கொண்டிருந்த போதிலும், மார்க்சிய நெறியின் பால் நின்று நிலை தழும்பாது பல கவி தைகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கின்ருர், தனது இருபத்தொன்பது ஆண்டு வாழ்விலே 17 விதமான தொழில் களைச் செய்தவர் கவிஞர். விவசாயி, பாட்டாளி ஆகியோ ரி டையே தானும் அவர்களாய் வாழ்ந்து, செழுமைப்பட்ட சித்தாந்த நெறியின் ஈர்ப்பால் கவி புனைந்த வட்டுக்கோட்டையின் கவிதைகள் நாடோடி கிராமிய வழிமரபு, நவ ன சிந்தனை வெளிப்பாடு என்பனவற்றை உள் ளடக்கமாகக் கொண்டிருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. சிந்து, காவடிச் சிந்து, கும்மி, குறவஞ்சி பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, *ண்ணிகள் முதலிய மக்களிடையே பிரபல்யம் பெற்ற வடிவங்களைத் தனது கவிதையின் ஊடகமாகக் கொண்டதே கவிஞரின் நிலைப்பாட் டிஜன விளக்குவதற்குப் போதுமானதொன்றகும். இவரது வழியினை அடியொற்றி கம்யூனிஸ் இயக்கங்களிலிருந்து அனேக கவிஞர்கள் உரு வானுர்கள். மார்க்சிய லெனினிச சித்தாந்தத் தெளிவும், அவர்களின் நேரடியான இயக்க ஈடுபாடுகளும் அவர்கள் சிறந்த கவிதைகளை உரு வாக்குவதற்கு வழிவகுத்தன.
குமரன்
é

Page 4
மக்களிடமிருந்து கற்று மக்களுக்கே திருப்பித் தருவது என்ற கலைக் கோட்பாட்டின் அடிப்படையிலே மக்கள் மொழியில் தருவது, மக்க ளுக்குப் பயன்படுத்தும் விதத்தில் தருவது என்ற வடிவக் கருத்துக் களும் உள்ளடங்கும். இத்தகைய எளிமையான தெம்மாங்கு, தெருக் கூத்து வடிவங்களை ஏற்று இக்கருத்தை வரித்த கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். இத்தகைய கவிஞர்களுக்கு தாமரை, செம்மலர், சிக ரம், குமரன், வசந்தம், தாயகம், மனிதன், மனஓசை, புதியஜீவா, விடியல், புதிய தலைமுறை, தேசாபிமானி, தொழிலாளி, செம்பதாகை ஆகிய ஏடுகள் தகுந்த களம் அமைத்துக் கொடுத்தமையால் இக்கவிஞர் கள் வேகத்தோடும், ஆழமான பார்வையோடும் கவிபுனைய முடிந்தது. இவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் தணிக்கைச் செல்வன், அக்கினி புத்திரன், எ. தெ. சுப்பையன், செவ்வியன், ஜீவபாரதி, கே. சி. எஸ். அருணுசலம், அ. ந. கந்தசாமி, பசுபதி, சுபத்திரன், சாருமதி, இன்கு லாப், சூரியதீபன், இளவேனில், நுஃமான், இரணியன் ஆகியோர்.
தணிக்கைச் செல்வனின், "தணிக்கைச் செல்வன் கவிதைகள்,
•சமூக சேவகி சேரிக்கு வந்தாள், எ. தெ. சுப்பையனின் முறைப்பாடு, அறைகூவல்' ஜீவபாரதியின் "ஒரு முடிவுக்கு வாருங்கள், கவிஞர் பசு பதியின் "புதிய உலகம், இன்குலாப்பின் ‘சூரியனைச் சுமப்பவர்கள்," சுபத்திரனின் 'இரத்தக் கடன், ஆகிய தொகுதிகள் மார்க்சிய சிந்தனை யைத் தெள்ளத் தெளிவாக வெளிப்பாடு செய்பவை. P
ஏனைய துறைகளைப்போலவே கவிதைத் துறையிலும் முற்போக் கான அம்சங்களினை ஏற்று அவற்றுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கின்ற பல கலைஞர்கள் காணப்படுகின்றனர். மார்க்சிய சித்தாந்தத்தை தமது இலட்சியமாக வரிக்காதவர்களும், முற்போக்கான அம்சங்களை ஆதரிப் பதனல் மார்க்சிய சித்தாந்தத்தையே தமது அடிப்படைத் தத்துவமாக ஏற்றேரோடு இணைந்து நிற்கிருர்கள். இந்த அம்சம் தமிழகத்தைவிட இலங்கையிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றது. இ. முருகையன், தான் தோன்றிக் கவிராயர், இ. சிவானந்தன், கல்வயல் வே. குமார சுவாமி, வளவை வளவன், புதுமை இரத்தினதுரை, வ. ஐ. ச. gil 1 பாலன் ஆகியோர் சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வேண்டு மென்ற எண்ணத்தைத் தமது கலிதைகளிலே பிரதிபலிப்பவர்கள். முற்போக்கு இயக்கப் போக்கோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள். அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தத் தெளிவின்மை ஆகிய அடிப்படைக் குறைபாடுகள் காரணமாக மேலே குறிப்பிட்டோரில் சிலர் அங்குமிங்கு மாய் அலைந்து கொண்டிருப்பது கவிதையுலகின் துரதிருஷ்டமே.
6 குமரன்

வியத்நாம் யுத்தம் பற்றிய மூன்றுஅமெரிக்க திரைப்படங்கள்
‘மாதவன்?
சமூகத்தின் முன்னுேடி
கலை, இலக்கியங்கள் சமூக வளர்ச்சியின் முன்னேடியாகப் பெரும் பாலும் படைக்கப்படுகின்றன. இதனல் சமூக நடைமுறைக்கும் கலை, இலக்கியத்திற்கும் இடையில் இடைவெளி இருப்பதை நாம் காண் கிருேம்.
கலை, இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச் சார்ந்தது. அது அடிப் படை அமைப்பை உடைக்கும் உட்பொருளைக் கொண்டிருப்பதையும் காண்கிருேம். M
கலை, இலக்கிய முற்போக்கை கற்பனரீதியாகக் காண்பவர் ஒரு புறம். மார்க்சிய கோட்பாட்டை வைத்து விஞ்ஞான சோசலிச முறை யாகக் காண்பவர் மறுபுறம்.
கற்பஞரீதியாகக் காண்பவர்கள் சமூகத்திலுள்ள முரண்பாடுகளை யும், எதிர்மறைகளின் ஒற்றுமையையும் விஞ்ஞான ரீதியாகக் காண முடியாதவர்கள் இயக்கவியல் பொருள் முதல்வாத ஆய்வு முறையை அறியாதவர்கள்.
கலை இலக்கியத்தின் முன்னேடி லட்சியப் போக்கிற்கு இன்று உதா ரணம் கூறுவதாயின் வறுமை, யுத்தம், சுரண்டல், சாதி அமைப்பு, பெண் அடிமை, கட்டாய திருமணம் ஆகியவற்றைக் கூறலாம். கலை, இலக்கியத்தில் இவற்றை ஆதரித்து வரும் படைப்புகள் அரிதே. இவற் றை எதிர்த்தே நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூகங்களிடை கலை இலக்கியங்கள் படைக்கப்படுவதைக் காண்கிருேம். போராட்டமும் கலை இலக்கியமும்
முதலாளித்துவ எழுத்தாளர் கற்பணு ரீதியாக சோஷலிசத்தை வேண்டுகின்றனர், மார்க்சிய எழுத்தாளர் விஞ்ஞான சோஷலிசத்தை முன் வைத்து கலை, இலக்கியம் படைக்கின்றனர். முதலாளித்துவ அர
சியல் வாதிகளே கற்பனு ரீதியாக சோஷலிசத்தை பாஷனுகப் பேசும்
காலம் வந்துவிட்டது. இது ஒன்றே சோஷலிசத்தை நோக்கி நாம் முன் னேறுகிருேம் என்பதைத் தெளிவாக்குகிறது.
வியத்நாம் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபட்டுத் தோல்விடைந்தது யாவரும் அறிந்ததே. அங்கு செலவு செய்யப்பட்ட பல்லாயிரங்கோடி டாலர்கள், கொல்லப்பட்ட உயிர்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை.
குமரன் *ワ

Page 5
ஒரு போராட்டம் நடைபெறும்போது அதையொட்டி, கல் இலக் கியம் படைக்கப்படுவதும் இயல்பே. வியத்நாம் யுத்தம் பற்றிய மூன்று அமெரிக்கப் படங்கள் இங்கு திரையிடப்பட்டன, இம்மூன்று படங்களுமே வியத்நாம் யுத்தத்தைக் கண்டிப்பதாகவே தயாரிக்கப்பட் டுள்ளன. இதைக் கொண்டே கலை, இலக்கியங்கள் சமூகத்தின் முன் னேடியாக, சமூக நீதியை வேண்டிக் குரல் எழுப்புவதாகப் படைக்கப் படுகின்றன என ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். இங்கே ஆளும் வர்க் கத்தவரின் அரசியலுக்கும் கலே, இலக்கியம் படைப்பவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
மனித உயிர்கள் சூதாடப்பட்டன
1. மான் வேட்டைக்காரன் (DEER HUNTER) என்ற படம் 1980 இல் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்ததாகத் தெரியப்பட்டு அக்கடமி விருது பெற்ற படமாகும். அமெரிக்க இரும்பாலையில் வேலை செய்யும் சில தொழிலாளர்கள் வியத்நாம் யுத்தத்திற்கு அனுப்பப்படுகின்றனர். முன்னர் மகிழ்ச்சியாக இருந்த குடும்பங்கள் எவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன என்பதையும் யுத்தத்திலிருந்து சோர்வுடன் திரும்புவோரை தியாகிகள் என்றவிதமான போலிக்கெளரவத்துடன் வரவேற்க முனைவதையும் இப்படம் காட்டுகிறது.
இவற்றிற்கு மேலாக இத்திரிைப்படம் இவ்யுத்தம் பற்றிய ஆழ்ந்த கருத்து ஒன்றைக் கூறி நிற்கிறது. போர் வெறியிலும் யுத்தத்தால் கிடைக்கும் பணவெறியிலும் இராணுவத்தினரின் உயிர்கள் எவ்வாறு வியத்நாம் யுத்தத்தில் சூதாட்டப்பட்டன என்பதை ஆழமாகவும் உறு தியாகவும் கூறி நிற்கிறது. இக்கருத்தினுல் இப்படம் நவீன காவியத் தன்மை பெற்று விளங்குகிறது. 135 நிமிடங்கள் ஒடும் இப்படத்தில் யுத்தக் காட்சிகள் 15-20 நிமிடங்கள் மட்டுமே வருகின்றன.
மனித உயிர்களைப் பணயம் வைத்துச் சூதாடும் காட்சிகள் பயங்கர மாக உள்ளன. ஒருதடவை பார்ப்போர் வாழ்நாள் முழுவதுமே யுத் தத்தின் கோரத்தை மறந்துவிட முடியாதபடி இப்படம் தயாரிக்கப்பட் டுள்ளது. பல்லாயிரம் கோடி டாலர் செலவழித்து நடாத்தப்பட்ட ஒரு யுத்தத்தை ஒருகோடி டாலர் செலவுடன் தயாரிக்கப்பட்ட படத்தால் முறியடிக்க முடியும் என்பதற்கு இப்படம், சிறந்த எடுத்துக் காட்டா கும்.
ஏகாதிபத்திய நாட்டில் அவ்வமைப்பை எதிர்க்கும் சிறப்பான கலை, இலக்கிய வல்லுனர்கள் உள்ளார்கள் என்பதற்கும் இப்படம் சிறந்த தோர் எடுத்துக்காட்டே.
8 - VM w M - •••• - . ww , M குமரன்

2. வீட்டுக்கு வருகை (COMING HOME) என்ற படமும் வசனம், நடிப்பில் அமெரிக்காவில் விருதுபெற்றவையாகும். யுத்தத்தினுல் அவ யவங்களை இழந்தவர். முடமானவர்களைப் பராமரிக்கும் இராணுவ ஆசு பத்திரியிலேயே கதை நிகழ்கிறது. வியத்நாம் யுத்தத்திற்குச் சென்ற கப்டனின் மனைவி இவ்ஆசுபத்திரியில் கெளரவ உதவியாளராகப் பணி செய்யும் வேளை, கால் ஊனமுற்ற யுத்தத் தியாகி ஒருவனுடன் பாலு றவு கொள்கிருள்.
இத்தியாகி யுத்தத்திற்கு எதிர்ப் பிரசாரம் செய்வதால் இவனைக் கண்காணித்த இரகசியப் பொலிசார் யாவையும் அறிந்து கணவன் யுத் தத்திலிருந்து வந்ததும் கள்ளக் காதல் பற்றித் தெரிவித்து விசாரணை நடாத்துகின்றனர்.
மூவருக்குமிடையில் முரண்பாடு முற்றுகிறது. தியாகியும் மனைவி யும் தம்மிடை நடைபெற்ற உறவை ஒப்புக் கொள்கின்றனர். தியாகி 'மனைவியல்ல உன் எதிரி, (பக்கிங்வார்) யுத்தமே என கீழ்த்தர பாஷை யில் கூறி யுத்தத்தைக் கண்டிக்கிருன். 'பக்கிங்" என்ற இராணுவ கீழ்த் தர பதம் இப்படத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனல் இப்படம் திரையிடுவது சென்சாரால் தடைசெய்யப்பட்டது? பின்னர் இவ்வார்த்தையை தணிக்கை செய்யின் படத்தின் ஆழம் மறைந்துவிடும் என்ற எதிர்ப்பின் பேரில் தடைநீக்கப்பட்டது.
இப்படத்தில் வியத்நாம் யுத்தக் காட்சி எதுவுமேயில்லை. பாதிப்பு மட்டுமே காட்டப்படுகிறது. - -
வியத்நாமில் கெரில்லாக்களுக்குப் பயந்து குளியல் அறையிலேயே துப்பாக்கி வைத்திருந்தான் கப்டன். தற்செயலாக அது வெடித்து காவில் காயம். யுத்தத்தில் காயம்பட்டதாக மற்ருெரு தியாகிபோல கப்டன் வரவேற்க்ப்படுவது நளின நகைச்சுவையாக இருந்தது.
3. இன்றைய ஊழிக்காலம் (APOCALYPSENOW) என்ற வியத் நாம் யுத்தம் பற்றிய் திரைப்படமும் சில கீழ்த் தர சொற்பிரயோகங் களின் காரணமாகத் தணிக்கைச் சபையின் மறுபரிசீலனைக்குட்படுத்தப் பட்டது. இப்படத்தில் வரும் வியத்நாம் யுத்தக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் கொடுமை, கிராம மக்களின் துன்பங் கள், அமெரிக்கப்படையினரின் அங்கலாய்ப்பு யாவும் படத்தின் மூலம் வெளிப்படுகிறது. நடனமாடி மகிழ்விக்க வந்த பெண்கள்மேல் இராணு வத்தினர் பாய்வது அவர்களின் அங்கலாய்ப்பையும் தன்னெழுச்சியை யும் காட்டுகிறது; யுத்தம் ஏற்படுத்தும் தனிமை உணர்வையும் அதன் கோரத்தையும் வெளிப்படுத்துகிறது.
குமரன் 9

Page 6
ஊழிக்காலம் வந்து விட்டதாக அமெரிக்க தளபதி ஒருவன் (மாலன் பிராண்டோ) யுத்தத்தை வெறுத்து இன்பத்தை வேண்டும் புதிய சமூ கம் ஒன்றை வியத்நாமிலேயே உருவாக்குகிருன். அவனை ஒழிப்பதற் காக அமெரிக்க உளவுப் பகுதியைச் சேர்ந்த கப்டன் ஒருவன் சிலருடன் படகில் புறப்படுகிருன்.
வழியில் வியத்நாம் கிராமமக்கள் வந்த படகை அமெரிக்க இரா ணுவத்தினர் பயத்தினல் அநியாயமாகத் தாக்கி எல்லோரையும் கொன்றுவிடுகின்றனர். பின்னர் உயிர் தப்பியிருந்த ஒரு நாய்க்குட்டிக் காக அமெரிக்க இராணுவத்தினர் தம்முள் சண்டையிடுகின்றனர். மனிதாபிமானத்தின் சிறுமையையும் யுத்தத்தின் கோர நிலையையும் இச்சம்பவமும் காட்டி நிற்கிறது.
யுத்தத்தின் கோரம், உலக அழிவு-ஊழிக்காலம் வந்துவிட்டதான உணர்வை அமெரிக்கப்படையினரிடம் ஏற்படுத்தியது என்றஅடிப்படைக் கருத்தை இத்திரைப்படத்தின் மூலம் காணமுடிந்தது.
எமது உணவைப் பறித்தெடுப்பவர்கள் ஒறுத்து வாழ். எனக் கற்பிக் கின்றனர்.
வரி கொடுக்க வேண்டிய முதலாளிகள் தியாகம் செய்யுங்கள் எனக் கோருகின்றனர். -
வயிறு நிறைய உண்டு கொழுப்பவர்கள் நல்ல காலம் வர உள்ளது என பசியால் பதைப்போருக்கு பாடம் புகட்டுகின்றனர்.
நாட்டைக் குழப்பத்தில் வைத்து ஆள்பவர்கள் சாதாரண மக்கள் ஆட்சி செய்யத் தகுதியற்றவர் எனக் கூறுகின்றனர்.
பாட்டாளியின் குரல்."
ダ
பழைய சமூகத்திலிருந்து சோசலிசம் உழைக்கும் மக்களையும் உற் பத்திச் சாதனங்களையும் மட்டும் விடுவித்ததல்ல; பழைய சமூக அமைப் பால் பயன்படுத்த முடியாதிருந்த பரந்த இயற்கையையும் விடுவித்துள்
ளது.
மாவோ
ஆயுத பலத்தை ஆயுதபலத்தாலேயே தூக்கியெறிய வேண்டும்; கோட்பாடுகளை மக்கள் கிரகித்துக் கொண்டபின் அதுவும் ஆயுதபல பலமாக மாறுகிறது. -மார்க்ஸ்
10 குமரன்

மார்க்சின் கூலி, விலை, லாபம்
"தியாகு"
இச்சிறு நூல் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைக் கருத்து களைக் கூறுவது; மதிப்பு, உபரி மதிப்புப் பற்றி விளக்குவது.
பண்டங்களின் விலை மதிப்பு, மதிப்புக்கும் சந்தை விலைக்குமுள்ள உறவு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, உபரி மதிப்பின் தோற்றமும் இயல்பும், உபரி மதிப்பின் விகிதம், லாபத்தின் விகிதம். உபரி மதிப்பு எவ்வாறு வாடகை, வட்டி, லாபமாகப் பிரிக்கப்படுகிறது என்பனபற்றி மார்கஸ் இச்சிறு நூலில் விளக்கியுள்ளார்.
மூலதனம் நூலில் கூறப்பட்ட கோட்பாடுகள் யாவையும் எளிதாக வும் பரவலாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் மார்ச்ஸ் 1865 இல் ஆற்றிய இரு சொற்பொழிவுகளை ஒட்டியே இச்சிறு நூல் எழுதப்பட்டது. முத லாவது சர்வதேசியம், அவ்வேளை நடைபெற்ற வேலை நிறுத்தங்களை ஒட் டியும் கூலி உயர்வுக் கோரிக்கைகளை முன்வைத்தும் ஆராய்ந்தது; அவ் வேளை ஜோன் வெஸ்டன் என்ற ஆங்கிலேயப் பிரதிநிதி உயர்ந்த கூலி தொழிலாளரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது, ஏனெனில் கூலி உயர விலைகளும் உயரும் என்ற கருத்தை முன்வைத்தார்.
லாபத்தைக் குறைப்பதன் மூலமும் கூலியை உயர்த்த முடியும் என்று மார்க்ஸ் பதிலளித்தார். பணப் புளக்கம், கேள்வியும் நிரம்பலும், விலைக் கட்டுப்பாடு ஆகிய ஜோன் வெஸ்டனின் குழம்பிய கருத்துகளை மார்க்ஸ் விளக்கி பொதுக்கூலி உயர்வின் மூலம் விலைகள் உயர்வதல்ல லாபத்தையும் குறைக்க முடியும் எனவும் விரிவாகக் கூறினர்.
விஞ்ஞானம், அரசியற் பொருளாதாாம் மூலம் தொழிலாளர்களை முன்னேற்றப் பாதையில் அழைக் துச் செல்ல முடியும் என்பதையும் மார்க்ஸ் கூறினர். 118 ஆண்டுகளின் பின்னரும் இன்றும் இதே கருத் துகள் தொழிலாளர் இயக்கங்களிடை நிலவுவதைக் காணலாம்.
கூலி, லாபம் ஆகியவற்றின் மட்டங்களை நிர்ணயிக்கும் “பொருளா தார விதிகள் எதுவும் கிடையாதென்று மார்க்ஸ் இறுதி உரையில் கூறி ஞர். கூலியாக எவ்வளவு கொடுக்க வேண்டும் , லாபமாக எவ்வளவு போகும் என்பவை வர்க்கங்களின் பலத்தையும் வர்க்கப் போராட்டத் தையும், ஒட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்ருர்,
'நியாயமான ஒருநாள் வேலைக்கு நீதியான கூலி என்ற பிற்போக் க்ான குரலைவிட்டு. கூலிமுறை ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற புரட்சி கரக் குரலைத் தொழிலாள வர்க்கம் முன்வைக்க வேண்டும்என்று மார்க்ஸ் வலியுறுத்தினர்.
குனரன் rt a ras

Page 7
நான ஏன எழுதுகிறேன்?
இே ـ யாருககாக எழுது றன:
-இன்குலாப்
‘மூட நம்பிக்கைகளை புனிதமான வேதங்கள் மூடி மறைப்பதுபோல” சமூகக் கொடுமைகள் சட்டங்களால் மூடிமறைக்கப்படுகின்றன, மானு டத்தின் காயங்களை மறந்து என்னுல் மலர்களை ரசிக்க முடியாது. கந் தல் துணியால் உடலை மூடுபவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு என் ஞல் நட்சத்திரப் பூவேலை செய்த வானத்தைப் போர்த்திக் கொள்ள இயலாது. பூமியின் துயரங்களிலிருந்து ஒடி நான் தொடுவானத்தில் அடைக்கலம் புக விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட எல்லா உதடுகளுக் கும் ஒரு புன்னகையை உத்தரவாதம் செய்யாமல், எனது உதடுகளுக்கு மட்டும் ஒரு சிரிப்பைத் தேடவும் நான் தயாராக இல்லை.
சுயநலவாதிகளால் நிலை நிறுத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்தே நான் ஒரு கலைப்போராட்டத்தை நடத்துகிறேன். இந்தக் கொடுமை களே எதிர்ப்பவர்களை எல்லாம் என் கலையால் கவுரவிக்க விரும்பு கிறேன். அவர்களால் நான் உணர்வு பெறுவதுபோலவே அவர்களுக்கும் நான் உணர்வூட்ட விரும்புகிறேன். இதில் நான்மட்டும் தனித்து நிற்க வில்லை; இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களும் இருக்கிற நிலை மைகளோடு மோதுகிருர்கள் என்பதே எனக்குத் தென்பூட்டுகிறது.
சுரண்டலும் சுயநலமும் அடக்குமுறையும் அன்ருட நியதியாகி விட்ட இந்தச் சமூகத்தில் போராடுவதும் போராடத் தூண்டுவதுமே என் தலையாய கடமை. சுரண்டப்படுபவர்களும், ஒடுக்கப்படுபவர் களும் இந்தச் கமூகத்தில் அமைதியாக இருக்க முடியாது என்பதளுல் நானும் எனது பேணுவாலும் கையாலும் கலகம் செய்வதையே சரி என்று கருதுகிறேன்- இது நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விளக்கம்,
கிஞ்சித்தும் மனித நியாயமற்ற இந்தச் சமூக அமைப்பை நியாயப் படுத்தி இதனல் லாபம் பெறுபவர்கள் எல்லாம் என் எதிரிகள். நான் நண்பர்களுக்காகவும் எழுதுகிறேன்; எதிரிகளுக்காகவும் எழுதுகிறேன். தோழர்கள் முகத்தில் பன்னீர் தெளிக்கிறேன். எதிரிகள் மூஞ்சியில்
12 குமரன்

காரித்துப்புகிறேன். எல்லாரையும் என்னுடைய எழுத்துக்களால் திருப்திப்படுத்த முடியாது. என்னுடைய தோழர்களின் செவியில் எனது குரல் விழாமல் போனலும் எனக்குக் கவலையில்லை. ஆனல் எதிரிகளுக்கு ஒரு கைதட்டுக்கூட என்னிடமிருந்து கிளம்பாது. இது நான் யாருக் காக எழுதுகிறேன் என்பதற்கான பதில்.
இப்படி ஓர் போர்க்குணத்தையே நான் கவலையாக்க முயலுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தையும் போராட்டத்தையும் பாடுபொரு ளாகக் கொண்டு இசைப்பதனுல்மட்டுமே நான் படைப்பது கவிதை யாகிவிடும் என்று கருதவில்லை. கவிதைக்குக் கலை நியாயத்தை வழங்க விரும்புகிறேன். -
படிப்பறையில் தனிமையாக உட்கார்ந்து சுவைப்பதற்காக எழுதப படுவதுமட்டுமே கலை நயமிக்க கவிதை என்ருல் என்னல் அப்படிப்பட்ட கவிதையை இயற்ற முடியாது. அதுதான் உண்மையான கலைவடிவம் என்பதை ஏற்கவும் இயலாது.
ஒன்றுபட்டுப்பாட ஒசைநயம் வேண்டும்; உணர்வில் கிளர்ச்சி செய்ய காட்சிகள் வேண்டும். எனவே எனது பாடல்களில் இசையையும் ஓவியத்தையும் இணைக்க விரும்புகிறேன். என்னல் இயன்றமட்டுக்கும் நான் செய்யும் கலை முயற்சி என்பது இதுதான் ی۔“
இது கலையே அல்ல என்று சேற்றை வாரி வீசிய விமர்சகர்களும் உண்டு அல்லது இந்தப் படைப்பைப் பற்றி மூச்சுவிடக்கூடாது என்று மெளனம் சாதித்த மேதாவிகளும் உண்டு.
சமூக மாற்றத்திற்கான போராட்டக் கருவிகளில் ஒன்ருன கவி தையை, அது சமூக மாற்றத்திற்கு உதவிபுரிகிறது என்ற காரணத்தின லேயே புறக்கணிக்கின்ற கலை விமர்சகர்களுக்கு நானும், என்னைப் போன்ற படைப்பாளிகளும் மாயகாவஸ்கி சொன்னதைத்தான் பதி
லாகச் சொல்வோம்.
“எனக்கு மகிழ்ச்சி; நான் கலைஞன் அல்ல; நான் கலையற்றவகையி லேயே படைக்க விரும்புகிறேன்." .
சமூக மாற்றத்திற்காக எழுதும் விமர்சகர்கள் எனது கவிதைகளில் உள்ள குறைகளைக் காட்டித் திருத்தி இருக்கிருர்கள். கார்க்கியில் ‘விடி யல் கீதங்கள் பாடுகிருேம்" என்ற கவிதை வெளிவந்தபோது ஒரு தொழி லாளத் தோழர் திருத்தினர். அவற்றை நான் நன்றியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். (முன்னுரை: சூரியனைச் சுமப்பவர்கள்)
குமரன் 13

Page 8
அனல்காற்று. ஓர் எதிர்ப் புரட்சிப்ப்டம்
'தண்ணீர் தண்ணீர் நாடகத்தை எழுதிய கோமல் சாமிநாதனின் இரண்டாவது படம் அனல் காற்று.
கோமலின் அரசியற்கோற்பாடுகள் இத்திரைப்படம் மூலம் அம்பல மாகிறது. புரட்சிக் கருத்துகள் என்றவிதமாகச் சாதாரண மக்களுக்குக் கூறும் இக்கதை எதிர்ப்புரட்சிக் கோட்பாட்டையே முன் வைக்கிறது.
இந்திய விவசாயப் புரட்சியாளரிடை ஒரளவு தீவிரவாதம் இருக்க லாம். அதை எவ்வாறு களைந்து விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறமுயல் வதே சிறந்த கலைஞனின் கோட்பாடாயிருக்க வேண்டும்.
கோமல் இதைவிட்டு, தான் ஒரு பிற்போக்கு அணியைச் சார்ந்த வன் என்பதை, தன் வர்க்கச் சார்பை இப்படம் மூலம் தெளிவாக்கிவிட் டார். இந்திய விவசாயப் புரட்சிை கொச்சைப்படுத்தும் விதமாக சினிமா செய்துள்ளார். -
மாணவரது போராட்டம் தோல்வியடைகிறது, படித்தவர்களே விவசாயப் புரட்சியில் ஈடுபடுகின்றனர், அவர்கள் மக்களிடமிருந்து ஒது ங்கி காடு, மலைகளிலிருந்தே புரட்சி செய்கின்றனர், புரட்சி முயற்சிகள் தோல்வியடைகின்றன என்பன போன்ற தவருண கருத்துகளை இப்படம் மூலம் கோமல் நிரூபிக்க முயல்கிரு?ர்.
விவசாயப் புரட்சியாளரை மிகவும் கேவலமாக கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு பஸ் விபத்து இக்கதையுள் திணிக்கப்படுகிறது. (புரட்சி வேளையில் சிறு விபத்துகள் ஏற்படலாம். அது புரட்சியாளர் தம்முள் விவாதித்து திருத்தப்பட வேண்டியது.)
பாடசாலைப் பிள்ளைகள் சுற்றுலா முடிந்து வரும் பஸ்ஸை, தவறுத லாக, புரட்சியாளர் தாக்குகிருர்கள் என்ற தவழுன நச்சுக் கருத்தைப் புகுத்தி கோமல்புரட்சியாளர்களை கொச்சைப்படுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அமெரிக்காவில் சி. ஐ. ஏ.யின் ஆதரவுடன் தான் இத்தகைய எதிர்ப் புரட்சித் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதைக் கண்டோம். தற்போது இந்தியாவிலேயே இத்தகைய படங்கள் தயாரிக்கப்படுவது எமக்கெல் லாம் அச்சம் தருகிறது.
பாடசாலைப் பிள்?'கள்தாக்கப்படும்சம்பவம் ஒரு,மாதிரிச்(TYPICAL) சம்பவமல்ல. புரட்சியாளரைக் கொச்சைப்படுத்துவதற்காக வலிந்து கொண்டு வரப்பட்ட கோடியில் ஒரு தடவையே நடைபெறக் கூடிய விசித்திர சம்பவமே. இத்தகைய சம்பவங்களை வைத்து கலை, இலக்கி யம் படைக்கும் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம்; தொழிலாள விவசா யத்தைச் சார்ந்த வர்க்கமல்ல.
"தண்ணீர் மூலம் நாட்டின் முக்கிய பிரச்சனையை காட்டிய கோமல் அனல்காற்று மூலம் தன் தத்துவ வறுமையையும் எதிர்ப் புரட்சி வர்க் கத்தைச் சார்ந்தவர் என்பதையுமே காட்டியுள்ளார். -செல்வன்
14 குமரன்

மாவோவின் பாடல்கள்
2. சாங்க்சா
1925, உறைபனிக் காலம் உறைபனிக் காலக் கடுக்குளிரில்-செம்
மஞ்சள் தீவின் ஒரத்திலே வற்ற துணைகள் ஏதுமின்றி-நான்
தன்னந் தனியாய் நிற்கிறேனே. பெருநதி சீயாங்க் பெருக்கெடுத்து-அது வடதிசைப் பக்கம் பாய்கிறதே குன்றுகள் ஆயிரம் செந்நிறமாய்-அடர்
காடுகள் ஊடே தெரிகிறதே. நீல வானில் ஊடுருவி-கொடுங்
கழுகுகள் இங்கே பறக்கிறதே, நீலப் பளிங்கு நீரடியில்-அட
மீன்கள் பதுங்கி நீந்திடுதே.
பளிங்கை ஒத்த நீர்ப்பரப்பில்-போர்ப்
படகு நூறு போட்டியிட, விடுதலைக் காகக் கோடியுயிர்-கடுங்
குளிரிலும் தமக்காய்ப் போராடும். எல்லை யற்ற இவ்வுலகின்-மா
மனித குலத்தின் தலைவிதியை நிர்ணயித்(து) ஆட்சி செய்பவரார்?-எனுங் கேள்வியை நானுங் கேட்கிறேனே.
எந்தன் தோழர் புடைசூழ-இங்கும்
பண்டொரு சமயம் வாழ்ந்ததுண்டே, நெருக்கடி மிக்கவர் நாள்களெலாம்-அம்ம
ஒளிமய மாயினுந் தெரிகிறதே, மலரும் வாழ்க்கைப் பருவமதில்- இள
மாணவ உணர்வுகள் பொங்கிடவே, நெஞ்சில் துணிவுகள் விஞ்சிடவே-யாம் எம்மலை ஆற்றைக் காட்டியுமே வார்த்தைக் கனலால் தீமூட்டி-அடத்
தூசெனப் பகையை ஊதினேமே நடுநதித் தீரத்தில் துணிச்சலுடன்-நாம்
எப்படி நீரை வலித்தெறிந்தோம், விரைந்து சென்ற படகுகளை-நதி
அலைகள் தாமும் மறித்ததுண்டா!
குமரன்
15

Page 9
2.1 கூணன் மாநிலத் தலைநகரான "சாங்க்சா'வைத் தலைப்பாகக் கொண்ட இப்பாடல். புரட்சிகர வழியில் வழி நடத்தப்படும் மாணவ, இளைஞர்களின் சக்திகள் மகத்தான காரியங்களைச் சாதிக்க வல்லது என் பதை வரலாறு பூர்வமாக நிரூபித்துள்ள மிகச் சிறந்த பாடல் ஆகும்.
22. சாங்க்சா” பாடல் மாவோவால் எப்பொழுது எழுதப்பட்டது என்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லை. (1) மக்சள் சீனத்தின் அயல் மொழிப் பதிப்பகம் 1976 ஆம் ஆண்டு வெளியிட்ட தமது “மாவோ பாடல்கள்" என்ற ஆங்கில நூலில், இப்பாடல் 1925 ஆம் ஆண்டு உறை பணிக்காலம் என்றும் குறிப்பிட்டுள்ளது. (2) செரோம் சென்னும் மைக் கேல் புல்லக்கும் 1967 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள “மாவோவும் சீனப் புரட்சியும்’ என்ற ஆங்கில நூலில், இப்பாடல் 1926 ஆம் ஆண்டு உறை பனிக் காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள னர். இதற்கு அவர்கள் கூறிய காரணம், 1925 ஆம் ஆண்டு உறை பனிக் காலத்தில் மாவோ "சாங்க்சா நகரில் இருந்ததற்குச் சான்று இல்லை என்பதுதான்.
தாம் வாழ்ந்த காலத்திலேயே, இப்பாடல் எழுதப்பட்ட காலம் பற்றி எழுந்த கருத்து வேறுபாடு குறித்து, மாவோ ஏதேனும் கருத்துக் கூறினரா என்பது தெரியவில்லை. பாடலை ஒட்டு மொத்தமாகப் பார்க் கின்றபொழுது. சாங்க்சா நகரில் மாணவராய் - இளைஞராய் - இரு ந்த மாவோவின் இளமைக்கால இயக்க நடவடிக்கைகளைப் பின்னெரு காலத்தில் அவரே நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது. சாங்க்சா நகரில் நிகழ்ந்த இளமைக்கால இயக்க நினைவுகளை அவர் சாங்க்சா நகரில் இருந்து கொண்டுதான் எழுதியிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அந்நகரில் இல்லாமல் வேருெரு இடத்திலிருந்தும் எழுதி இருக்கலாம். மேலும் இதுபற்றி அறிஞர்கள் ஆய்வார்களாக, . «V
2.3 இருபதாம் நூற்ருண்டின் முதல் கால்பகுதி சீன வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது இப்பாடல். இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் சீனவை மஞ்சு வம்சத்தினர் ஆண்டு வத்தனர். "கூன னியர் உயிரோடுள்ளவரை சீனர்களை யாரும் வெல்ல முடியாது' என்ற பழமொழி ஒன்று உண்டு. சுன்யாத் சென்னும் கூவாங்க் சிங்கும் மஞ்சு வம்ச முடியாட்சியைத் தூக்கி எறிய ரகசிய சங்கங்களையும் "புதிய படையையும் அமைத்தனர். 1911 ஆம் ஆண்டு நடந்த புரட்சியையும் சாங்க்சா நகரில் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் நாள் சாங்க்சா நகரில் நடந்த பல்வேறு எழுச்சியையும் சிறுவராய் இருந்த மாவோ தன் கண் முன்னே நடக்கக் கண்டார். ஜப்பானில் படித்துத் திரும்பிய சியாங்க் காங்கூ 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீன சோசலிச கட்சியை ஸ்தாபித்தார். இதன்பால் ஈர்க்கப்பட்ட மாவோ
16 குமரன்

சோசலிசம், சீர்திருத்தம் முதலானவை குறித்துத் தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள ஆரம்பித்தார்.
1913 ஆம் ஆண்டு வசந்த காலம் முதல் 1918 ஆம் ஆண்டு வசந்த காலம்வரை சாங்க்கர் நகரில் மாவோ கல்வி கற்று வந்தார். இவ்வேளை யில் அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனித்தும் வந்தார். மாணவரான மாவோ, சிறந்த சனநாயகச் சிந்தனையாளரும் அரசியல் அறிஞரும் வெளிநாட்டுக் கல்வி பெற்றுத் திரும்பியவருமான யாங்க் சாங்க்சீ என்ற யாங்க் கூய் சுங்கை, சீனவை அதிகம் நேசிப்பவர், தமது ஆசிரிய ராகவும் அரசியல் நெறிகாட்டியாகவும் கொண்டிருந்தார். இந்தக் கால கட்டத்தில் சீன நிலப்பிரபுத்துவ முறையாட்சியின் தொங்கு சதை களான போர்க்கிழார்கள் ஒருவரோடொருவர் தமக்குள் சண்டை இட் டுக் கொண்டிருந்தனர். 1915 ஆம் ஆண்டு யுவான் சீகாய் தன்னைச் சீனப் பேரரசனுகப் பிரகடனப்படுத்திக் கொண்ட பொழுது, கூனன் மா நிலத்தை ஆண்ட போர்க்கிழான் அவனுக்கு ஆதரவு தந்தான்; அத்து டன் யுவான் சீகாயிக்கு எதிரான போராட்டங்கள் எல்லாவற்றையும் கடுமையாக ஒடுக்கினன். இவ்வேளையில், முடியாட்சி மீண்டும் வரு வதை எதிர்த்து மாவோ சிறு நூலொன்று வெளியிட்டார். -
1917 ஆம் ஆண்டு மாவோ ‘புதிய மக்கள் கல்வி சமுதாயம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இது 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள் முதல் செயற்பட்டது. மாவோவால் முன் மொழியப் பட்ட ‘நாட்டுப் பற்றும் சீரிய நோக்கமும் உடையவர்களாக உறுப் பினர்கள் இருக்க வேண்டும்' என்ற கொள்கையை இவ்வமைப்புக் கொண்டிருந்தது.
1919 ஆம் ஆண்டு கூனன் மாநில போர்க்கிழான் சாங்க் சிங்க்யா வோவிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிக்கு மாவோ தலைமை ஏற்ருர், ஆசிரியர் யாங்க் கூய் சுங்க் நெறிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட கூனன் மாணவர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை மாவோ ஏற்றுத் திறம்பட நடத்தி வந்தார். 1918-19 ஆம் ஆண்டுகளில் பீகிங்கில் வசித்த பின் 1920 ஆம் ஆண்டுவாக்கில் சாங்க்சா நகருக்குத் திரும்பிய மாவோ மார்க்கிசம் லெனிலிசம் பரவக் கலாச்சாரப் புத்தகக் கடை ஒன்றைத் தோற்றுவித்தார். 1920 ஆம் ஆண்டு உறைபனிக் காலத்தில் முதன் முதலாக "கூனன் பொதுவுடைமைக் குழுவையும், பின்னர் சோசலிச இளைஞர் அமைப்பையும் தோற்றுவித்தார். இதே ஆண்டு மாவோ யாங்க் காய்கூயை மணந்தார். 1923 ஆம் ஆண்டு கட்சிப் பணிக்காகச் சாங்கை நகருக்குச் சென்றர். 1925 ஆம் ஆண்டு தன் சொந்தக் கிராமமான சாவோசனுக்கு மனைவியோடு திரும்பிய மாவோ அங்கு உழவர் இயக்கத்தை ஆய்ந்து வரல்ானுர்,
குமரன் 17

Page 10
2.4. 'மனிதகுல விடுதலைக்காக கோடி உயிர்கள் கடுங் குளிரை யும் பொருட்படுத்தாது போராடும் வேளையில் செம்மஞ்சள் தீவில் தனியாக நிற்கிறேன். ஆதிக்க வெறிகொண்ட கழுகுகள் வானில் வட்டமிட, ஒடுக்கப்பட்ட மீன்கள் நழுவி நீந்து கி ன் றன. பெருக் கெடுத்தோடும் சீயாங்க் ஆறு குன்றுகள் அனைந்தையும் சிவப்பாக்சிச் செல்கிறது. (இது மக்கள் சிந்திய ரத்தமோ?) ஆறெங்கும் போர்ப் படகுகள்; மனித குலத் தலைவிதியை நிர்ணயிக்க ஆதிக்க யுத்தம் செய் கின்றனர். மக்கள் தம் விதியைத் தாம்தான் வரலாற்றில் நிர்ணயித் துக் கொள்கின்றனர்.
சாங்க்சா நகரில் முன்பு வாழ்ந்த காலத்தில், அரசியல் நெருக்கடி கள் மிகுந்திருந்தன. மாணவர்களாய எங்கள் தோழர்களுடன் மக்கள் விடுதலைக்கான தடைகள் அனைத்தையும் துணிச்சலோடு தகர்த்தெறிந் தோம். எங்கள் ஆறு மலைகளை எல்லாம் மக்களிடம் எடுத்துக்காட்டி சுதேசப் பற்றை வளர்த்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்குரிய துணிச்சலை மக்களிடம் வளர்த்தோம். விரைந்து செல்லும் படகுகளை நதி அலைகள் தடுத்து நிறுத்த முடியாததுபோல எங்கள் இயக்கப் பணி களையும் ஆள்வோரால் தடுத்து நிறுத்த முடியவில்லை."
25. அடிகள் 5-6இல் வரும் கழுகு மீன் ஆள்வோருக்கும் ஆளப்படு வோருச்கும் / ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்குமான புறப் பொருள் உள்ளுரை.
அடி 15, "எம்மலை ஆற்றைக் காட்டியுமே" சுதேசப் பற்றை வளர் ப்பதற்காக இதனைப் பாரதியின் கீழ்வரும் அடிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க,
‘மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?"
(எங்கள் நாடு அடி 1-2)
மாவோ மஞ்சு வம்சத்தின் முடியாதிக்கத்தையும் பின்னர் ஜப்பான் போன்ற பல்வேறு ஆதிபத்தியங்களையும் எதிர்த்தார். பாரதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார். மாவோ காண விரும்பிய புதிய நாடு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கொண்ட செஞ்சீனம். ஆனல் பாரதி காண விரும்பியது ஆசியநாடு. VN -
26. உறைபனிக் காலம்; என்பதைப் பொதுவாக இலை உதிர்காலம் என்று மொழி பெயர்ப்பதே வழக்கம். இப்பாடலை 1977 ஆம் ஆண்டு
8 குமரன்

காவல்
-கல்வயல் வே. குமாரசாமி
கிடப்பமென்றல் முடியவில்லை, விடாமல் வீட்டுநாய்
நெடுகக் குலைக்கச் சாமஞ்சாமமாய்ப் பயங்கரக் கற்பனை
சாமியை வேண்டிக் கேரும் இதயம்
காவலுக்காக வளர்த்த வீட்டுநாய் தேவை யிலாமல் ஏன் குலைக்கிறது. பார்க்க ஏவும் மனம் பயத்தாலே
வேர்த்துக் கொட்டி வடியும், குளிரிலும் காவல் நாயே கடித்துக் குதறும் கேவலம் ஊரில்
நடப்பதை நினைக்க புதிய வர்மம் துயரில்
பூக்கும்.
முதன் முதலாக மொழி பெயர்த்தபொழுது இலையுதிர்காலம்’ என்ற சொல்லையே பயன்படுத்தினேன். பின்னர் இப்பாடலை 1979 ஆம்ஆண்டு மறு மொழிபெயர்ப்புச் செய்யும்போது "மார்கழி காலம்’ என்று தமி ழாக் சஞ் செய்தேன். பின்னர் 1982 ஆம் ஆண்டு மீண்டும் செம்மைப் படுத்தியபொழுது உறைபனிக் காலம் என்ற சொற்களைப் பயன்படுத்தி னேன். (இது பற்றி, பின்னர், தனிக்கட்டுரை ஒன்றில்- மாவோ பாடல்களை மொழியாக்கஞ் செய்தபோது நேர்ந்த சில பிரச்சினைகள் என்ற தலைப்பில் பார்ப்போம்.) --கோவிந்தன்.
குமரன் 19

Page 11
படைப்பிலக்கியத்தில் அழகியலும் வர்க்கமும்
மாதவன்
பாட்டாளி படைப்பாளி
‘இலக்கியச் சிந்தனை" என்ற இலக்கிய ஆர்வலர் வட்டத்தில் என். ஆர். தாசன் என்பவர் படித்த “படைப்பிலக்கியத்தில் அழகியல் கூறு கள்’ என்ற கட்டுரையை "செம்மலர் தமது ஜூன் மாத இதழில் வெளி யிட்டது.
இக்கட்டுரை தெளிவற்ற, பல மயக்கமூட்டும் கருத்துகளைக் கொண்டது; பூர் ஷ்வா, குட்டி பூர்ஷ்வா கலை, இலக்கியம் பற்றிக் கொண்டிருக்கும் பல கருத்துகளைக் கூறுகிறது; பாட்டாளி வர்க்கம் சார்ந்த ஆய்வு அல்ல இக்கட்டுரை.
‘இலக்கியம் மட்டுமல்ல, எந்த ஒரு படைப்புக்குமே உந்து சக்தியாக இருப்பது ரசனைதான்’ என்று இக்கட்டுரை ஆரம்பமாகிறது. இது கலை கலைக்காக என்று கூறுவதன் மற்றெரு குரல்.
பாட்டாளி வர்க்க நிலை எடுக்காது ஆய்வு நடத்தும்போது பல்வேறு குழப்பநிலை ஏற்படுவது இயல்பே. ஏனெனில் பாட்டாளி விஞ்ஞான பூர்வ வரலாற்றுப் பார்வை கொண்டவன். அதுவே வரலாற்றுப் பொ ருள் முதல்வாதம். உலகத்திற்கு விளக்கம் கூறும் சித்தாந்தமல்ல, உலகை மாற்றி அமைக்கும் கோட்பாடு கொண்டவன். அதுவே இலக்க வியல் பொருள் முதல்வாதமாகும்.
ஆகவே பாட்டாளி படைப்பவை அல்லது அவனது நலனுக்காகப் படைக்கப்படுபவை. விஞ்ஞான பூர்வமானவையாகவும் சமூகத்தை மாற்றும் கருத்துகளே. கோட்பாடுகளைக் கொண்டதாகவுமே இருக்கும்.
பாட்டாளி ஒர் உற்பத்தியாளன்; படைப்பாளி. அவன் தன்புறத் தேவைக்குப் பயன்படும் பண்டங்களையும் அக உணர்வுத் தேவைக்கு ஊக்கமளிக்கும் கலை, இலக்கியங்களையும் படைத்துக் கொள்வான். அவன் தன் அனுபவ அறிவின் தொகுப்பான விஞ்ஞானத்தையும் அனு பவ உணர்வின் தொகுப்பான கலை, இலக்கியத்தையும் தன் மேம்பாட் டிற்காக என்றும் படைத்துப் பயன்படுத்திக் கொள்வான்.
20 குமரன்

நெற்கதிரே அழகு, பதரல்ல
கலை, இலக்கியம் சமூக வாழ்வின் அறுவடை என்பர் கைலாசபதி சிவத்தம்பி போன்ற மார்க்சிய விமர்சகர்கள். அறுவடையில் விவசாயி கள் வேண்டுவது நெல்லு: பதர்ல்ல. பதர்கூட அறுவடையின் போது நெற்கதிர் போல அழகாக இருக்கலாம். அது மக்களுக்குத் தேவையான அறுவடையல்ல. V
தொழிலாளர்களும் தம் தேவைக்குப் பயன்படும் பண்டங்களையே படைப்பர். அவற்றை அவலட்சணமாகப் படைக்க அவர்கள் விரும் புவதில்லை. (தோசை சுடும் பெண்ணும் வட்டமாக அழகாகவே சுடு வாள்.)
அழகு என்பது வெறும் புறத்தோற்ற அழகல்ல. நெல்லுள்ள கதி ரின் அழகாயிருக்க வேண்டும்.
உட்பொருளே உருவத்தைத் தீர்மானிக்கிறது என்பதே மார்க்சிய விஞ்ஞானக் கோட்பாடு. கலை, இலக்கியத்தில் சொல்லப்போகும் கருத் துக்க்ாகவே கலைவடிவம் ஒன்றைப் படைப்பாளி எடுத்துக் கொள்கிருன். இலக்கியம் எழுத்தால், சொற்களால் ஆனது. சொற்களால் வசனம் அமைக்கப்பட்டதுமே அது ஒரு கருத்தைத் தெரிவிப்பதாக இருக்கும். கருத்துத் தெளிவற்ற வசனம் அமைப்பவர் பிணத்திற்கு மலர் தூவ முனைபவர்.
இலக்கிய வடிவத்தில் கதை, சிறுகதையை எடுத்துக் கொள்வோம். பல்வேறு உறுப்புகளால் இக்கலை வடிவங்கள் கட்டுப்படுகின்றன. கதைத் தொடர் உரை, உரையாடல், வர்ணனை, கருத்துரை, நனவோட்டம் ஆகிய சிறிய உறுப்புகளைக் கொண்டே சிறுகதை நாவல் எழுதப்படு கிறது. எந்தச் சிறு கதையையோ, நாவலையோ எடுத்துப் பிரித்துப் பார்ப்பினும் இவற்றைக் காணலாம். (நனவோடை உத்தியைமட்டும் பெரும்பாலாகக் காணமுடியாது போகலாம்.) "எல்லா இலக்கிய இனங் களுக்கும் உருவம் முக்கியமானது" என்று தாசன் கூறுவதில் அர்த்த மில்லை; கருத்துகள் கொண்டுள்ள உறுப்புகளைக் கொண்டே கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தை இனங்கண்டு கொள்கிருேம்.
படைப்பாசிரியரின் சுண்டுவிரலின் நகம்கூட வெளித்தெரியக் கூடாது என்று ஃபளேபாரின் கருத்தை நூற்றுக்கு நூறு பின்பற்ற வேண்டுமென தாசன் கூறுவதும் வேடிக்கையே. இதனுல் அழகுணர்ச்சி கெட்டுவிடும் என்றும் கூறுகிருர், அழகுணர்ச்சியை முதன்மைப்படுத் தியே எழுத வேண்டும் என தாசன் மீண்டும் வற்புறுத்துகிருர். இக் கருத்து முடிவில் கலை கலைக்காக என்ற கோட்பாட்டிற்கு இழுத்துச் செல் 321 tfb.
குமரன் 21

Page 12
கலேயும் சமூகவாழ்வும்
எந்த நாவல், சிறுகதையை எடுத்துக் கொண்டாலும் படைப்பாசிரி யரின் ஏதோ ஒரு வகையில் தன் எழுத்தின் ஊடாக வெளிவருகிறன். அவன் அழுத்திக் கூறவிரும்பும் கருத்துக்களைச் சிலவேளைகளில் கருத் துரையாகவும் கூறிவிடலாம். அதனல் இலக்கியத் தூய்மை கெட்டுவிட் டது என்று கூக்குரலிடுபவர்கள் கலை கலைக்காக, இலக்கியம் இலக்கியத் திற்காக என்று வாதிடுபவர்களாவர். படைப்பிலக்கியத்தில் சிறிதும் அனுபவமில்லாதவரின் கூக்குரலே இது. கூட்டு மொத்தமாகச் சமூக வளர்ச்சியில் கலை, இலக்கியம் தரும் உந்து சக்தியே சிறப்பானது; முதன் மையானது.
கலை வடிவங்கள் மயக்கமூட்டுபவையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதும் தவறே. அ ப் படி யா யின் மயக்க மூட்டும் மது போன்ற வஸ்துகளுக்கும் கலை, இலக்கியத்திற்குமே வேறுபாடு இல்லாத தாகப் போய்விடும். சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுவதாகவும் ஆகிவிடும்.
கலைவடிவங்கள் மூலம் நாம் சமூக வாழ்வைத் தரிசிக்கிருேம் என்ற நினைவு படிப்பவர்களுக்கு, பார்வையாளருக்கு ஏற்பட வேண்டும் என் பதே பிரெட்ஸ் போன்றவரின் கோட்பாடு. இன்றைய திரைப்படங் கள் சாதாரண மக்களைத் திரையோடு ஒன்றச் செய்து பொய்மையைக் காட்டி நம்பும்படி செய்துவிடுகிறது. இது நிஜவாழ்க்கையைத் தரிசிக்க விடாத ஒரு முதலாளித்துவ ஏமாற்றே.
கலைவடிவ உறுப்புகளை நினைவுபூர்வமாகப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய மயக்கங்களையும் போக்கலாம் என்பதே பிரெட்சின் கோட்பாடாகும். ஆகவே படைப்பாசிரியரின் எங்காவது கருத்துரை வழங்குவது கலை, இலக்கியத்தின் "தேவை"யை எவ்விதத்திலும் பாதி த்துவிடப் போவதில்லை.
குட்டி பூர்ஷ்வா குரலும் பாட்டாளி குரலும்
சமூகத்தை அப்படியே படம் பிடிப்பதே இலக்கியத்தின் தேவை என்ற இயற்பண்புவாத கண்ணுேட்டம் கொண்ட புதுமைப்பித்தன் ‘என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே. இதுதானையா பொன் னகரம்’ என்று கதையின் முடிவில் கருத்துரை வழங்குவதில் எவ்வித குறையும் கூறுவதற்கில்லை. இக்கருத்துரையைக் கூறுவதற்காகவே அவன் அச்சிறுகதையை எழுதியிருக்கலாம். இது அவனது குட்டி பூர் ஷ்வா குமுறலே
22 குமரன்

"காணி நிலம் வேண்டும்" என்ற பாரதி பாடல் வானமாமலைக்குப் பிடித்ததை வைத்து தாசனும் சிறப்புக் காண்கிருர்காணி, நிலம், வீடு, தென்னை, குயிலோசை, பத்தினிப் பெண் . என்று தன் குட்டி பூர்ஷ்வா ஆசைக் கனவுகளையே பாரதி வேண்டுகிறன். ஒரு பொதுமைச் சமூகத் தையல்ல. N
தனியொருவனுக் குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடு வோம்’ என்ற பாரதியின் கூற்றும் குட்டி பூர் ஷ்வாக் கொதிப்பே பாட் டாளியின் குரலாயின் ‘ஜெகத்தினை மாற்றிடுவோம்’ என்றே ஒலிக்கும். ஏனெனில் உலகத்தை மாற்றி அமைக்கும் விஞ்ஞான கோட்பாட்டை அவன் அறிவான். இவ்விரண்டு கூற்றையும் ஒப்பிடும்போது எந்த வரி களில் அழகுணர்வு தொக்கி நிற்கின்றது? 'ஜெகத்தினை மாற்றிடுவோம்" என்பது உறுதியும், நம்பிக்கையும் தரவில்லையா?
தாசனுடைய கட்டுரையில் எந்த வர்க்கத்தை நினைவில் வைத்து அழகியலைக் கூறமுனைந்தார் என்பதில் தெளிவில்லை. அதனுலேயே பல் வேறு குழப்பமான கருத்துகளை அவர் கூற நேர்ந்தது. இயற்கை கலையாகாது
- இன்குலாப் பாட்டாளிகளுக்காக எழுதிய எத்தனையோ கவிதை கள் இருக்க தாசன் தன்வர்க்க நிலைக்கேற்ப மனிதநேயம், மனிதாபி மானம் எனக் கூறி, வாத்துகள் அடைகாக்கும் முட்டைகள் மோதி விடாதிருக்கப் பாடிய கருத்தைமட்டும் முன் வைக்கிருர், மனிதாபி மானத்திலும் வர்க்க மனிதாபிமானத்தையே பாட்டாளிகள் வேண்டு வர்.
தாஜ்மகால் யமுனையின் கனவு’ என்று நேரு கூறுவது தாஜ்மகால் இயற்கையின் நிகழ்வு போலாகி விடுகிறது. மனிதனல் படைக்கப்பட்ட அழகுருவம் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. கலையின் முதற் குத் திரம் அது மனிதனுல் படைக்கப்படுவது என்பதே. இயற்கை கலையா காது. இதை கலை, இலக்கிய ஆர்வலர் மு த லி ல் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கிறது
உடம்பிற்கு அழகாகவே சட்டை தைத்துக் கொள்கிருேம். 'சட் டைக்காக உடம்பு" என்று பேசுவது விதண்டாவாதம். உடம் பு வளர்ச்சியடைய சட்டையின் அளவையும் மாற்றுகிருேம்.
குமரன் 23

Page 13
இலக்கணவியல் பொருள் முதல் வாதக் கோட்டின்படி சமூகத்தில் முரண்பாடுகள் என்றும் இருக்கவேசெய்யும். கலையின்பணி, அமைப்புஅல் லது உள்ளடக்கம், உருவம் ஆகியவற்றிடை இயைவின்மை இருப்பது தவிர்க்க முடியாதது. சமுதாயம் இயங்கிக் கொண்டே இருப்பது. அதையொட்டி சமுதாயத் தேவைகளும் மாறிக்கொண்டேயிருக்கும். கலையின் உள்ளடக்கம் மாறுவதையொட்டி அதன் வடிவமும் மாறவே செய்யும்.
முதலாளித்துவம் தோன்றி வளர்ச்சியடையும்போது நிலப்பிரபுத் துவ குடும்ப உறவு உடைந்து மனிதன் பாட்டாளியாகி, தனிமைப்படு கிருன். அவனது கலை, இலக்கியத் தேவைகள் மாறுகின்றது. அவற்றை வெளிப்படுத்தும் வேளை தோன்றிய புதிய வடிவங்களே சிறுகதை, நாவல் ஆகும். Xa
‘இலக்கியம் எந்த ஒரு தத்துவத்திற்கும் உரையாக இருக்கக் கூடாது. நடைமுறை வாழ்வில் இல்லாத ஏதோ ஒன்றை, பிரமையை, மயக்கத்தை கலை இலக்கியம் உருவாக்குகிறது, இத்தகைய தாசனின் கூற்றுகள் அர்த்தமற்றவை. இவை முற்று முழுதாக பூர்ஷ்வா வர்க்கக் கருத்துகளே.
தாசனல் பாட்டாளி வர்க்கப் பார்வையை நன்கு கிரகிக்க முடிய வில்லை. இடையிடை பாட்டாளிவர்க்கச் சார்பாக எழுதப்பட்ட “பாதும் பெரும்பாலும் அவர் உணர்வு குட்டி பூர்ஷ்வா நிலையிலேயே உள்ளது என்பதை கவிதைகள், பிறர் எழுத்துக்களிலிருந்து அன்னர் எடுத்துக் காட்டிய உதாரணங்களிலிருந்து தெளிவாகக் காணலாம்.
குமரன் சந்தா 6 இதழ்கள் ரூபா 11 12 ' ரூபா 20 இலங்கையிலும் தமிழ் நாட்டிலிருந்தும் குமரன் இதழ்களை விற்க விரும்புவோர் எழுதுக.
ஆசிரியர், குமரன் 201, டாம்வீதி, கொழும்பு-12.
24 குமரன்

சொற்பாதம் . .
யேசுநாதர்கள்
யோ. பெ.
நாம் ஏன் பிறந்தோம் சிலுவை சுமந்தார் வாழ்வதற்கா? நாமோ வாழ்வின் சுடுகாடு வரை
சுகமேதுங் காணுது கண்ணிர் விட்டே மாழ்வதற்கா? சதை வற்றிப் போகும்வரை உடல் வருந்தி நாமுழைப்பது என்னத்துக்காக எம்முழைப்பின் பயனை நாமே சுகிப்பதற்கா நம் முழைப்பைச் சிலர் சுரண்ட நாமெல்லாம் வறுமையுற்றுப் போவதற்கா யேசுநாதர் சிலுவை சுமந்து பாடுகள் அனுபவித்தார் மனித குலத்தைப் பாவங்களிலிருந்து மீட்டு இரட்சிப்பதற்காக நாமேன் வாழ்க்கையே சிலுவுையாய்ச் சுமந்து நசிகிருேம் நம்முழைப்பைச் சுரண்டுவோர் சொர்க்க போகத்தில் நித்தியமாய் வாழ்வதற்கா? கல்வாரி மலைவரையே
குமரன்
சுமந்து செல்கிருேம் நாம் சுமக்கும் சுமைகள் நம்முடையவை அல்ல சுமைகளை ஏற்றியோரும் நம் வர்க்கத்தவருமல்ல உழைப்பேன் நாமானதால்
நிச்சயம்
சுபீட்சமும் எங்களுடையதே
ஆளுல் சுமை சுமக்க வேண்டியோர் சுகங் காணுகின்ருர் சுகங் காண வேண்டியோர் சுமை சுமக்கின்ருர் உண்மை இப்படி இருக்கையில் நாமோ
இது வெங்கள் தலைவிதி யென்று அப்பன்
பின்னுல் மகனும் நின்று கடவுளை நொந்து கை கூப்பி இரக்கின்ருேம் , இரந்து கொண்டே இருக்கும் வரை எங்கள் சுமைகளில் ஓரணுவும் அசையாது.
25

Page 14
ஜே. ஜே. சில குறிப்புகள் ஒர் உருவ வழி பாட்டாளரின் புலம்பல்கள்
தியாகு
ஆரம்ப காலத்தில் இலட்சிய வேட்கையுடன் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் பலர் காலப்போக்கில் பிற்போக்கு வாதிகளாக மாறுவதைக் காண்கிருேம். இவர்களில் ஜெயகாந்தன். சுந்தர ராமசாமி குறிப் பிடத்தச்கவர்கள். ܐ
இவர்களின் ஆரம்ப எழுத்துகள் இலட்சிய வேட்கை கொண்ட சிற்றேடுகளிலேயே வெளிவந்தன. சரஸ்வதி, சாந்தி இதழ்களையே குறிப்பிடுகிறேன்.
ஜெயகாந்தன் எழுத்தைப் பிழைப்பாகக் கொண்டு வாணிப ஏடு களில் எழுதி வசதியாக வாழப் பழகிக் கொண்டார்.
சுந்தர ராமசா மிக்கு இத்தேவை ஏற்படாதபோதும் அவரும் கீழே இறங்கிவிட்டார். காரணம் அரசியல் கோட்பாட்டில் ஏற்பட்ட வழுவு நிலையே ஆகும், N
தற்போது சுந்தர ராமசாமி உருவ வழிபாட்டாளராகி விட்டார். ஒரு புளியமரத்தை வைத்தே என்னுல் ஒரு நாவல் படைக்க முடியும் என்பதை "புளியமரத்தின் கதை" மூலம் நிரூபித்தார்.
தற்போது உலகில் பிறந்து வாழாத ஒரு மனிதனை பிறந்து, வாழ் ந்து, இறந்ததாக சாதாரண வாசகர் நடபும்படியாக "ஜே. ஜே. சில குறிப்புகள்’ என்றேர் நாவல் எழுதியுள்ளார். (யார் இந்த மலையாள எழுத்தாளர் என விசாரணை நடாத்தியதாகப் பலர் என்னிடமே கூறி னர். ஜே. ஜே.பை தமிழ் எழுத்தாளராகக் கூறியிருக்கலாம்.) கலை, இலக்கியத்தில் இவ்வாறு ஏமாற்ற முயல்வது உயர்ந்த கோட்பாடு அல்ல என்பதைப் பிரெட்சின் அழகியல் கோட்பாட்டை அறிந்தவர் எளிதில் உணர்வர்.
ஜே. ஜே என்ற மலையாள எழுத்தாளர் மூலம் சுந்தர ராமசாமி தன் தத்துவப் புலம்பல்களை அள்ளி வீசியுள்ளார். இவை எதுவும் விஞ் ஞான பூர்வமான கருத்துகளல்ல; தன்னெழுச்சிப் புலம்பல்களே. இந் திய எழுத்தாளரது வறுமை நிலையைமட்டும் ஓரளவு நாவல் மூலம் வெளிப்படுத்த முடிந்தது.
இலங்கை வாசகர் ஒருவர் இந்நாவலின் சிறப்பாகக் கருதப்படும் இல பகுதிகளைப் பத்திரிகையில் எழுதியபடி கீழே தந்துள்ளேன்;
26 குமரன்

அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல பரவ சம் ஊட்டக் கூடியது.
உலகத்துப் புழுதியை மன்றத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள். அந்த வீணை ஒலி மீதேறி நான் போகமுடியுமா? தூரங்களை ஒலி மூலம் கடக்க முடியுமா?
கற்பனையின் சீதனம் மீண்டும் மூளையில் பரவும்போது ஆசுவாச மாக இருக்கும்.
அந்தப் புன்னகை நற்செயல் சர்வாதிகாரத்தின் குறியீடு. ' தோற்றத்திற்கு அப்பால் என்பதுதானே தத்துவத்தின் முதல் Luft L -tb .
என்னதான் வெண்ணெய் போட்டுச் சொன்னலும், அந்தரங்கம் வெளிப்பட்டு உறுத்திவிடும்.
அறியவந்த உருவங்களை நிரப்பி வைத்தால்தான் படைப்பா? உண் மைக்குப் புதிய பரிமாணத்தை ஏற்றும் சிந்தனையின் பீரிடும் தெறிப்புக் கள் படைப்பின்றி வேறென்ன?
மெய்யான அனுபவம் சார்ந்து மேலெழுந்து விரியும் கவிதைகளுக் கும், போலி செய்து பிடித்து வைத்ததும் மண் குத்திச் சரிகிறவைகளுக் கும் ஆயாசமின்றி வித்தியாசம் பார்க்கத் தெரிந்தவன் அவன்.
புதுமையின் வேகாத வெளிப்பாடுகளுக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்பதைச் சுட்டிக் காட்டினன்.
உண்மையின் கீற்றுக்கள் இல்லை எனில், ஒருபோதும் பரவசம் என் பதும் இல்லை.
ஒவ்வொன்றையுமே நன்முகப் பார்க்க அது அதற்கான இடை வெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி சில சமயம் தூரத்தின் இடைவெளி.
தோற்றங்களுக்குப் பின்னல் இருக்கும் உண்மையே இலக்கியத் திற்கு ஆதாரமாகும். இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை. தோற்றம் தான் இலக்கியம் என்ருல், தோற்றங்களில் வெளிப்படும் வேற்றுமை கள்தான் இலக்கியம் என்ருல், இலக்கியம் வேண்டியதில்லை. உலகமே மாறி மாறித் தோன்றிக் கொண்டுதானே இருக்கிறது.
படிமத்திற்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. செம்பை உண்மையில் கலக்காமல் படிமம் ஏற்படுமா?
குமரன் 27

Page 15
மனிதனின் மூளை ஒரு கைக் கடிகாரம். பாஷை மண்வெட்டி, விமர்சனத்திற்கு ஆளாகும்போது எதிராளியின் முகத்திரையைக் கிழிப்பது அல்ல, என் மனத்திரையைத் தூக்கிப் பார்த்துக் கொள்வது தான் என் முதல் வேலை என்று நினைக்கிறேன்.
அர்த்தம் ஊடுருவும்போது அளவு குறைந்து விடுகிறது போலும். இவ்வாறு செல்கிறது. இவை யாருக்காக எழுதப்பட்டது? எழுத் தாளரே இவற்றைப் புரிந்தே எழுதினரா? அல்லது வாசகர்களுக்குச் சூனியத்தைக் காட்ட முயன்முரா? இவற்றிற்கு அடுத்து வியாக்கியா னம் எழுதுவது யார்?
உரை நடை தோன்றியதே கருத்தைத் தெளிவாகப், பரவலான மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே. லா. ச. ரா, போன்ற குணியவாதி களைப் போன்று மக்களுக்குப் புரியாத முறையில் எழுதி இருட்டறை யில் பிணத்தைத் தழுவும் பேதமை (க. கை)யைக் காட்டிக் கொள்ளு கின்றனர்.
இத்தகைய லா. ச. ரா. போன்ற போலி இலக்கியவாதிகள் பற்றி கைலாசபதி கூறியிருப்பது சுந்தர ராமசாமி போன்றேருக்கும் குறிப் பிட்டுக் கூறத்தக்கது.
“பண்டிதர்களிடமிருந்து உரைநடையை மீட்டால் மட்டும் போ தாது. பரிசோதனை என்ற பெயரில் பம்மாத்துப் பண்ணுகிறவர்களிட மிருந்தும் அதனைக் காப்பாற்ற வேண்டும். "எழுத்தும் சொல்லும் பொ ருளை அறிவதற்கன்ருே" என்றுரைத்த சான்ருேரைப்போல், நாமும் சிந்திக்கவும் உணரவும் பழகிக் கொள்ள வேண்டும். சொல்லலங்காரத் தீயில் வீழ்ந்து எம்மைப் பொசுக்கிக் கொள்ளாமல், சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்குமுள்ள உண்மையான உறவின் இயல்பை அறிந்து அதனெளியில் நாவலிலக்கியம் படைக்கப் பெருமுயற்சி எடுத்தல் அவசி Այւb.”
(தமிழ் நாவல் இலக்கியம் பக். 111)
மனித வரலாறு கைவிலங்குடன் தோன்றியதல்ல; கைவிலங் குடன் முடியப் போவதுமல்ல.
மல்கம் எக்ஸ்

மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை
தியாகு
இச்சிறு நூல் மார்ச்சிய அடிப்படைக் கோட்பாடுகளைச் சுருக்கிக் கூறுகிறது; கம்யூனிசத்தின் போராட்ட முறைகளையும் போர்த் தந்தி ரங்களையும் சொல்கிறது.
இந்நூல் 1847 நவம்பரில் நடைபெற்ற கம்யூனிச லீக்கின் இரண்டா வது காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டு, பெப்பிரவரி 1848இல் முதல் தட வையாக வெளியிடப்பட்டது.
இக்காலகட்டம் புரட்சிகரமானது; பெப்புரவரி 1848இல் பிரெஞ் சுப் புரட்சி நடைபெற்றது. பிரிட்டனில் முதல் தடவையாகத் தொழி லாள வர்க்கம் சுதந்திர இயக்கமாகப் பரிணமித்தது.
கம்யூனிஸ்டு அறிக்கை புதுயுகத்திற்கான பிரகடனமாகும். இக் காலம்வரை சமதர்ம வாதிகள் கற்பனவாத திட்டங்களையும் இரகசிய சதித்திட்டங்களையுமே முன்வைத்தனர். அவர்கட்கு ஒரு புரட்சிகர கோட்பாட்டின் தேவ்ை இருந்தது. கம்யூனிஸ்டு அறிக்கை தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட இயக்கத்துடன் விஞ்ஞான சோஷலிசத்தின் ஐக்கியத்தையும் பிரதிபலித்தது.
கம்யூனிஸ்டு அறிக்கையின் அடிப்படைக் கருத்துகளை ஐந்து முக்கிய தலைப்புகளில் சுருக்கிக் கூறலாம்,
(1) வர்க்கப் போராட்டக் கோட்பாடு. புராதன கம்யூன் சமூகத்தின் பின் எல்லா சமூகத்தின் வரலாறும் வர்க்கஃபோராட்ட வரலாழுகும்.
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் சுரண்டப்பட்ட வர்க்கங்கள் வெற்றி பெறும்; சுரண்டல்முறை கொண்ட ஆளும் முத லாளித்துவ வர்க்கத்தைப் பாட்டாளிகள் தூக்கி வீசுவர்; சுரண்டல், அடக்குமுறை, வர்க்க வேறுபாடு3 வர்க்கப் போராட்டமற்ற புதிய சமூ கம் அமைக்கப்படும்.
(2) முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சி. முதலாளித்துவம் நிலப் பிரபுத்துவத்திலிருந்து தோன்றி வளர்ந்த சமூகமாகும். முதலாளித்துவமே நீண்டகால வளர்ச்சியின் பெறுபேரு
குமரன் --- .: 29

Page 16
கத் தோன்றியதே. உற்பத்தி முறையிலும் பண்டப் பரிமாற்றத்திலும் தொடர்ச்சியான பல புரட்சிகளினல் பிறந்ததுவே முதலாளிந்துவம்.
தற்கால பாராளுமன்ற முறையாக முதலாளித்துவ வர்க்கம் அரசி யல் ஆதிக்கத்கை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அதன் அபிவிரு த்தி மூலம் புரட்சிகரப் பணியை ஆற்றியுள்ளது. நவீன யந்திர உற்பத் தியில் புதிய உற்பத்திச் சக்திகளை நிலைநாட்டியுள்ளது. அதேவேளை நவீன யந்திர உற்பத்திமூலம் தன்னைப் புதைகுழியில் புதைப்பவரான பாட்டாளி வர்க்கத்தையும் உருவாக்கியுள்ளது.
(3) பாட்டாளி வர்க்க வளர்ச்சி.
பொருளாதார அரசியல் வளர்ச்சி மூலம் பாட்டாளி வர்க்கமும் தன் அமைப்பு வளர்ச்சியை ஆக்கிக் கொள்கிறது.
ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்க ஒற்றுமையின்றிப் பரந்து கிடக் கிருன். முதலாளி வர்க்கமே நிலப் பிரபுத்துவத்தையும் அதன் மிச்ச சொச்சங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்பத்தில் பாட்டா ளியை இணைத்துக் கொள்கிறது. பாட்டாளி ஒரு தனிவர்க்கமாக அமைப்பை ஏற்படுத்துவதையும் அரசியல் மயப்படுத்துவதையும் கம்யூ னிஸ்டு அறிக்கை படிப்படியாகக் கூறுகிறது.
ஜனநாயகத்தை விரிவாக்கப் பாட்டாளி நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களுக்கு எதிராகப் போராடுவது முதலாளித்துவத்திற்கெதிராக சோஷலிசத்தைக் கட்டுவதற்கும் பாட்டாளிக்குவழிகாட்டுகிறது. தானே ஆளும் வர்க்கமாகப் பாட்டாளி தொடர்ந்து போராட்டம் மூலம் வந்து விடுகிருன்.
(4) சோஷலிசத்திலிருந்து வர்க்கமற்ற சமூகத்திற்கு.
பாட்டாளிவர்க்கம் கையில் கிட்டிய அரசியற்பலத்துடன் முதலாளி வர்க்கத்தின் தனிச் சொத்து உறவுகளை உடைக்கிறது.
புதிய மக்கள் சமூகத்தைக் கொண்ட புதிய வர்க்கமற்ற சமூகத்தைப் பாட்டாளி வர்க்கம் காட்டுகிறது. தனி மனித சுதந்திர அபிவிருத்தி யுடன் எல்லா மக்களது சுதந்திர அபிவிருத்தியும் இணைந்த அமைப்பைப் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கி ஏற்படுத்துகிறது.
(5) கம்யூனிஸ்டுகட்சியின் குறிக்கோள்கள்:
கம்யூனிஸ்டு அறிக்கை கம்யூனிசத்தின் குறிக்கோள்களை நியாயப் படுத்துகிறது. பலவித 'சோஷலிசம்" என்று கூறப்படுபவற்றின் போ லித்தன்மையை அம்பலப்படுத்துகிறது. இத்துவரும் அதிகாரத்துவம், குட்டி முதலாளித்துவம் ஆகியவற்றின் எதிர்ப்புரட்சித் தன்மைகளைத் தொழிலாள வர்க்கம் சார்ந்து நின்று உடைக்கிறது. கம்யூனிசம் வர்க்
30 குமரன்

சிறுகதை சிவப்பு நாட்கள் செ. யோகநாதன்
பஸ்ஸிலிருந்து இறங்கி, மர நிழல்களின் வழியே நடந்து வருகை யிலே எதிர்ப்பட்டவர்களைக் கூட கவனிக்க முடியவில்லை தங்கம்மா வால், மனமெல்லாம் யோசனை செறிந்திருந்தது. அறுபது வயது முது மையை தனது, சுறுசுறுப்பாலே என்றுமே உணர்ந்திடாத தங்கம்மா வுக்கு ஐந்தாறு நாட்களாக நித்திரையே இல்லை. யாரைக் கண்டா லும் நெஞ்சு அலுத்துக் கொள்ளுகின்றது. வெளித் திண்ணையில் உட் கார்ந்திருத்தான் மங்கையின் மூத்த மகன் ரவி, "ஆச்சி ஆச்சி" என்று கட்டிக் கொண்டு கொஞ்சுவான். அவளுக்கு மெல்ல மெல்லக் கவலை கள் கரைந்துவிடும். அவனுக்கும் இப்போது நல்ல காய்ச்சல், நகரி லுள்ள அரசியல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிருன். தகப்ப னைக் கூப்பிட்டு அனுங்கியபடியே பூங்கொத்தாய் வாடிப் போய்க்கிடப் பதைப் பார்த்துவிட்டுத்தான்' வீடு திரும்பிக் கொண்டிருக்கிருள் தங் கம்மா. செவ்வாய்க்கிழமை அதிகாலையின்போது திடீரென்று ஒழுங்கை யிலே நாய்கள் மூர்க்கமான எதிர்ப்போடு குரைத்தபோது திடுமென்று உறக்கங் கலைந்தாள் தங்கம்மா. நேற்று இரவு நாரிப்பிடிப்புக்கு தைலம் தேய்த்துவிட்ட ரவியும் பரபரப்போடு விழித்தபடி நின்றன். மற்ற இரு குழந்தைகளும் விழித்துக் கொண்டு அழுதன. பனைவடலிக்குள் ளாக ஒழுங்கையினுள்ளே இரண்டு ஜீப்கள். மெல்லியதாகச் சரசரத் துப் பெருகுகின்ற ஆள் நடமாட்ட ஒலிகள். வெளியே, தகரக் கேட் டை யாரோ முரட்டுத்தனமாக அப்படியே தள்ளிப் புரட்டுகின்ற ஒசை யைத் தொடர்ந்து மேலும் அதிகரிக்கின்ற நாய்களின் குரைப்பு, யார் அது" என்று கேட்பதற்குள்ளாகவே, டார்ச்லேட் வெளிச்சத்தினை முகத் திலே பாய்ச்சியபடி உரத்து அதட்டிக் கொண்டு நிற்கின்ற பொலிஸ் காரர். அவர்களிலே ஒரு பகுதியினர் வீட்டைச் சுற்றி வளைத்து சாண
கப் போராட்டத்தின் மூலம் பிறக்கிறதேயன்றி சீர்திருத்த வாதிகளால் கண்டு பிடிக்கப்படுவதொன்றல்ல, v
முழுத் தொழிலாள வர்க்க நலனன்றி கம்யூனிசத்திற்கு வேறு நலன் கிடையாது. இன்றைய சமூக அமைப்பை எதிர்த்து நிற்கும் எல்லா இயக்கங்களுடனும் சேர்ந்து தம் உடனடித் தேவைக்காகவும் தொழி லாளி வர்க்கம் போராடுவதே அவர்கள் கோட்பாடாகும். முதலாளித் துவ ஆதிக்கத்தை வீழ்த்தித் தொழிலாள வர்க்க ஆதிக்கத்தை நிலைநாட் டும் எதிர்கால நலனை முன்வைத்தே இயக்கங்களைக் கட்டிஎழுப்ப வேண்
டும்.
குமரன் 31

Page 17
கக் கும்பங்கள், மட்டைக் குவியல்கள், கிணறு, கோழிக்கூடு, மாமரங் கள் யாவிலுமே சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்திக் கொண்டிருக் கிருர்கள். மங்கை எதையுமே பேச முடியாமல் திக்கித்துப் போய் நிற் கின்ருள். இப்படி ஒரு சம்பவம் சில வேளயிலே நிகழக் கூடுமென்று அவளது கணவன் கண்ணன் பத்து நாட்களின் முன்னரே அவளுக்குச் சொல்லியிருந்த போதிலும், இப்படித்திடுமென இத்தேடுதல் நடை பெறுமென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பொலிசார் துருவித் துருவி ஆராய்ந்தார்கள். அலுமாரியிலிருந்த புத்தகங்களையெல்லாம் தாறு மாருக இழுத்து வீசினர்கள். சிவப்பு அட்டைப் புத்தகங்களை வெறுப்பு மிழ தூக்கி எறிந்தான் பொலிஸ் இன்ஸ்பெக்டர். ரவிக்கு கண்களிலே கண்ணிர் துளிர்த்து பசுங்கன்னங்களிலே வழிந்தோடிற்று. கோபங் கல ந்த விம்மல் மெல்லவே கிளம்பிற்று. ‘அப்பா இந்தப் புத்தகங்களை எவ் வளவு கவனமாக வைத்து வாசிப்பார். இதெல்லாம் உனக்குத்தான் என்று வாஞ்சை ததும்பக் கூறுவார். நான் உனக்குத் தரத்தக்கதான செல்வம் இவைகளைவிட வேருென்றுமில்லை என்று அடிக்கடி சொல்லு வார். ஏன் இப்படி இந்தப் புத்தகங்களைப் போட்டு சேதப்படுத்துகிருர் கள்? கட்டில், அலுமாரி, பரண் யாவையுமே தலைகீழாக்கி வைத்த பின், முறுக்கிய மீசையுடனுன பொலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கு முன்னே வந்தான். அவளை ஏற இறங்கப் பார்த்தான். பின்னர் அசா தாரண குரலிலே உறுமிஞன்.
“ uuri?"
‘நான்.நான் மங்கை. ஒரு ரீச்சர். "
*கண்ணன் உனக்கு என்ன முறை."
*அவர் எனது கணவர் ."
"ஒ." அட்டகாசமாகச் சிரித்தான் இன்ஸ்பெக்டர்.
*நீ கவர்ண்மென்ற் ரீச்சரோ?
சம்மதத்திற்கு தலையசைத்தாள் மங்கை.
ஆ. அப்படியோ? அவனது குரலிலே ஏளனம், பின்னர் குரலினை மிகவும் கடுமையாக மாற்றிக் கொண்டான்.
"உன்னுடைய கணவன் எங்கே?
"அவர் யாழ்ப்பாணம் போய்விட்டார்." போய் எத்தனை நாள்?
"ஐந்தாறு நாளிருக்கும்."
32 குமரன்

‘எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவான்? "நிச்சயமாகச் சொல்ல முடியாது." ‘எங்கே தங்கியிருப்பான்?
மங்கை சிறிது நேரம் யோசித்தான். பின்னர் உறுதியான குரலில் கூறினுள்; "யாராவது கட்சித் தோழர் வீட்டிலே நிற்பார். அதுதான் வழமை. ஆனல் எனக்கு விலாசம் தெரியாது. வேணுமென்ருல் அவ ரைக் கட்சி அலுவலகத்தில் போய்ப் பார்க்கலாம்."
இன்ஸ்பெக்டரின் முகம் கோபத்திலே சிவந்து பொருமிற்று. பற் களை நரும்பியபடி முஷ்டிகளைப் பிசைந்தாள்.
"நீ சொல்லுகிறதெல்லாம் சுத்தப் பொய். நீ சரியான கள்ளி. நீ ஒரு பெண்ணுயிருக்கிருய் . அல்லது உன்னுடைய பதிலினைச் சரியான முறையிலை நான் எடுத்திருப்பேன் . உன்னை முட்டி முட்டியாய் தட்டி யிருப்பேன். உணக்குத் தேவையானதைத் தந்து எனக்குத் தேவை யான எல்லா விஷயத்தையும் பெற்றிருப்பன். ஆனல் உனக்கு ஒன்று தெரிந்திருக்க வேண்டும். மே முதலாம் திகதிக்கு முதல் உன்னுடைய புருஷனை நான் பிடித்தே தீருவேன். பிறகு என்னைப்பற்றி உன்னுடைய புருஷனிடம் கேட்டு அறிந்து கொள் " -
மூச்சுவிடாமல் இப்படிச் சொல்லிவிட்டுப் போய் மூன்று மணித்தி யாலங்களின் பின்னர் மீண்டும் திடீரென பொலிஸ்பாய்ச்சல், முற்றுகை. தேடுதல், அச்சுறுத்தல், இப்படியே இந்த ஐந்து தினங்களாகவும் பன் னிரண்டு முறை கண்ணனைத்தேடி பொலிஸ் வேட்டை. ‘இவர்கள் ஊர் வலம் நடத்துகிறதென்ருல் பொலிசுக்கு என்னவாம்? ஏன் இப்படி அந் தப் பொடியனைத் தேடி நாயாக அலையிருங்கள்- யாரோடுமே கண் ணன் சோலிசுரட்டுக்குப் போறதில்லையே ; ஏழை பாளையஞக்கு உதவி யானவன் கண்ணன். எப்பிடியென்ருலும் தங்கம்மாக்கா அந்தப் பொ டியனை பொலிசிலை பிடிபட விடாதை. ஏதாவது உதவி செய்ய வேணு மென்ருல் ஏன்னட்டைச் சொல்லு ."
தங்கம்மாவைப் பார்த்து நாகமணி கூறியபோது அதற்கு அவள் எந்தப் பதிலையுமே சொல்லவில்லை. நாகமணி சொன்ன விஷயங்களையும் அவளால் மறுதலிக்க முடியாமற் போயிற்று.
2
கதிரேசு வாத்தியாருக்கும் தங்கம்மாவுக்கும் இரண்டு பெண் பிள்ளை கள். மங்கை மூத்தவள். இளையவள் திலகவதி. பேராதனைப் பல்கலைக் கழகத்திலே இருவரும் பயின்று ஆசிரியைகளாக உயர்வு பெற்றதற்கு கதிரேசு வாத்தியாரின் ஓயாத முயற்சியே காரணம். ஆனல் அவர்கள் இருவருக்கும் திருமணமாக முதலே அவர் இறந்து போய்விட்டார்.
குமரன் - 33

Page 18
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே மனேகரனத் திலகவதி விரும்பிகுறள். பின்னர் அவர்களிருவரும் நகரத்திலே ஆசிரிய நியமனம் பெற்று இருவருடங்களிலே திருமணம் புரிந்து கொண்டனர்.
மங்கையின் திருமணத்தை யாருமே வரவேற்கவில்லை. தங்கம்மா மட்டும் அரைகுறை மனதுடன் மங்கைக்குப் பின்னே நின்ருள். கண் ணன் தொழில் ஏதுமற்றவன் என்பது மட்டுமல்ல காரணம். அவன் கம் யூனிஸ்ட்கட்சியின் முழுநேர ஊழியன் என்பதாலும் பலர் முகஞ் சுழித் துக் கொண்டார்கள். ஆனல் கண்ணனின் நற்குணங்களை யாருமே குறிப்பிடாமலில்லை.
தங்கம்மா, மங்கையோடும் திலகவதியோடும் மாறிமாறித் தங்கி யிருக்கின்ற போதிலே இருவரைப் பற்றிய சிந்தனைகளும் அவளே அல்லத் துக் குழப்புவதற்கு தவறுவதேயில்லை.
திலகவதியின் வீட்டிலே மின்சாரம், வாஞெலி, குளிர்சாதனப் பெட்டி, நிறையவே கதிரை மேசைகள், மனேகரனது என்றும் பளபளத் துக் கொண்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள், மங்கையின் வீடு மிகவும் சிறியது. பிள்ளைகள் படிக்கவென ஒரு மேசையும் மூன்று கதிரைகளும். திடீரென்று கண்ணன் யாரையாவது வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந் தால் தேநீர் கொடுக்கவே முடியாத நிரந்தர பற்ருக்குறை. ஆனல் ஒரு நாளேனும் மங்கை, தனது கணவனேடு சினந்து பேசியதைக் கண்ட தில்லை தங்கம்மா.
ஒரு நாள், தங்கம்மாவே திலகவதிக்கு இதனைச் சொன்னள்:
காசு பணம் நிறையச் சேர்க்க வேணுமென்று சீட்டும், வங்கியுமாய்
நீதான் அல்லாடித் திரிகிருய், சம்பளத்திலை ஐந்துரூபாய் தன்னையும் புருஷனை எடுக்கவிடமாட்டேன் என்கிருய். ஆனல் மங்கையைப் பார். அவள் ஒருநாளும் இந்தக் காசைப்பற்றி கதைச்சதை நான் கண்டதே யில்லை. அப்பிடிக் கேட்டால் மனுஷரைமிஞ்சியதில்லை காசென்பாள். என்னுடைய பிள்ளைகள் பெரியாட்களாய் வளர்ந்த காலத்திலே அர சாங்கமே அவர்களைப் பார்த்து பராமரிக்கும் என்று சீரித்துக் கொண்டு சொல்லுவாள். என்ன நம்பிக்கையிலை இருக்கிருளோ தெரியவில்லை."
திலகவதிக்கு முகம் சிவந்துவிடும்.
*காசுள்ளவைக்குத்தான் காசினுடைய அருமை விளங்கும். பர தேசிகளுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன விளங்கும்? நாலு காசிருந் தால்தான் ஊருலகம் மரியாதை செய்யும். வேட்டித் தலைப்பிலை ஊர்ப் புளுதியெல்லாம் புரள அலைந்து திரிகிற புருஷனை வைத்திருக்கிறவவுக்கு காசுள்ளவைக்குள்ள கெளரவம் எப்பிடி விளங்கும்?"
24 குமரன்

தங்கம்மாவுக்கு மனம் குறுகுறுக்கும். சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டே சலிப்பில்லாமற் சொல்லுவாள்,
'திலகம். சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைக்காதை, எப் பிடித்தானிருந்தாலும் மங்கை உன்னுடைய சகோதரம். அவர் உனக்கு அத்தான். நீ அவையளை மரியாதைபண்ணுமலிருக்கலாம். ஆனல் இகழ்ந்து கதைக்கப்படாது."
திலகவதி ஒயமாட்டாள். முணு முணுப்பாள். ‘இனி அவவுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்குது? அதெல்லாம் முடிஞ்ச கதை. உலகத்திலே சுட்ட மண்ணும் பச்சை மண் ணும் ஒட்ட முடியுமோ?"
தொடர்ந்து பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து போய்விடுவாள் திலகவதி. தங்கம்மா பெருமூச்சோடு வெளியே தெரிகிற பனங்கூட்டத் தைப் பார்த்துவிட்டு பின்பக்கமாக நடப்பாள்.
தங்கம்மாவுக்கு கண்ணனை நேருக்கு நேராகக் கண்டால் கதைக் கவே வராது. எந்நேரமும் இளைஞர்களோடும் ஊரவரோடுமே காணப் படுகின்ற மருமகன் இப்படி நிறையவே என்ன கதைக்கின்றன், என் னென்ன விஷயங்களினை கூட்டத்திலே பேசுகிருன் என்று அறிவதற்கு மனதினுள்ளே நிறைய ஆவலிருந்தது. அவளைக் காணுகின்ற பலர், கண்ணனைப் பற்றிச் சொல்லுகின்றபோது அவர்களின் குரலிலே மிகவும். மரியாதையும் வாஞ்சையும் தொனிக்கும். இவையெல்லாம் அவளின் மனதினுள்ளே பெருமையைத் தருவதாயினும் மங்கையையும், திலக வதியையும் ஒப்பிடுகின்ற போதிலே சிறிய கீறலொன்று நெஞ்சினை மூர்க்கமாகத் தாக்கிச் செல்லத் தவறுவதேயில்லே. அந்தப் புளுதியிலே புரள்கிற வேட்டித் தலைப்பும், மோட்டார் சைக்கிளும் மாறி மாறித் தோன்றி அவளின் சிந்தனையைக் குழப்புவதுண்டு.
3
ரவியைப் பார்க்கப் போவதற்காய் தங்கம்மா, பஸ்தரிப்பு நிலையத் திலே நீண்ட நேரமாக பஸ்ஸிற்காய் காத்து நின்ருள்.
பஸ்தரிப்பிலே நின்ற இரண்டு இளைஞர்கள் வரப்போகிற மேதின ஊர்வலங்களை அரசாங்கம் தடை செய்திருப்பது பற்றிக் கதைத்துக்
கொண்டு நின்ருர்கள். தன்னையறியாத பரபரப்போடு அவர்களது பேச்
சை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள் தங்கம்மா.
‘எப்பிடித்தான் தடைவந்தாலும் யாழ்ப்பாணத்திலை மேதின ஊர் வலம் நடக்குமென்றே நான் நம்புகிறேன். பொலிசும் தங்களின்ரை
குமரன் 35

Page 19
கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து போய்விடுமோ என்று பயப்பிட்டு, ஊர் வலக்காரரை எப்பிடியும் மேதினத்துக்கு முதல் அரெஸ்ட்பண்ணி மறி யலுக்குள்ளை போடுறதுக்கு ஒடித்திரியின."
மற்ற இளைஞன் அலட்சியம் பொங்கச் சிரித்தான்.
"இவையளாவது. பிடிக்கவாவது. அந்தக் கதையை விட்டுத் தள்ளு . மக்களுடைய ஆதரவுள்ள, மக்களால போற்றப்படுகிற போ ராளிகளை இப்படியான மனித வேட்டையில் அகப்படுத்துகிறது முடி யக்கூடிய காரியமில்லை." "கண்ணனைத் தேடித்தான் இந்த ஊரெல் லாம் பொலிஸ் அலையுதாம். ஆனல் தும்பைக் கூடப் பிடிக்க முடி யேல்லை. அந்தாளை ஒருத்தனுமே காட்டிக் கொடுக்கப் போறதில்லை. அவ்வளவு லட்சியப் பற்றுள்ள நேர்மையான மனுஷன் " தங்கம்மா வின் கண்களிலே கண்ணீர் துளிம்பிற்று.
“எனக்கு அந்தாளைத் தெரியாது ஆனல் நிறையவே கேள்விப்பட் டிருக்கிறேன். இப்பிடியான தன்னலமற்றவர்கள் முன்னுக்கு வந்து போராடினுல்தான் எங்களுக்கு விடிவு பிறக்கும். இந்த மேதினக் கூட் டத்திற்குப் போய் நான் எப்படியும் காணுவன்."
அந்த இளைஞனது குரலிலே பொங்கிய மரியாதையின் ஆழத்தினை தங்கம்மா தெளிவாகவே உணர்ந்து கொண்டாள். நெஞ்சுக்குள்ளே இனம்தெரியாத பரவசம் ததும்பித் தத்தளித்துக் கொண்டிருந்தது.
பஸ்ஸின் முகம் தெரியவே, தரிப்பில் நின்றவர்கள் அவதிப்பட் டார்கள். ஒருவழியாக இடித்து நெருக்கி பஸ்ஸினுள்ளே ஏறிக்கொண் டாள் தங்கம்மா. பஸ்ஸினுள்ளேயும் பொலிஸ்காரர் நிற்பதைக் கண்டபோது அவளின் மனதினுள்ளே வெறுப்புணர்வு பெருகியது.
ஆஸ்பத்திரி வார்ட்டிலே ரவிக்குத் துணையாக மங்கைதான் நின் ருள். கட்டிலைச் சுற்றி இன்று நிறையப்பேர் நிற்கின்றனர், பெரும் பான்மையானேர் இளைஞர்கள்: தங்களுக்கு ரவியின் சுகயினம் பற் றிக் காலதாமதமாகவே தெரிந்தது என்று மெல்லிய குரலிலே கவலை யோடு சொன்னர்கள். அந்த முகங்களிலே பலவற்றை ஏற்கனவேதான் அறிமுகங் கொண்டுள்ளதை தங்கம்மாவால் அவர்களைக்கிட்ட நெருங் கியபோது உணரமுடிந்தது. அவர்களெல்லோரும் மங்கையைத் தங் கள் சொந்தச் சகோதரியைவிட மேலாக மதித்து அன்போடும், வாத் சல்யத்தோடும் பழகுவதை சில நிமிஷங்களிலேயே நன்கு கண்டு கொ ண்ட தங்கம்மாவிற்கு இதயத்தினுள்ளே அவளையறியாத ஏக்கம் குமிழி யிட்டது. ‘. ஆனல் சொந்தச் சகோதரியோ கொஞ்சம்கூட ஈவிரக்க மற்றவளாய் இந்தப் பக்கங்கூட வராமல் எங்கெங்கெல்லாமோ போய் வருகிருளே. 1”
36 குமரன்

4. மீசையை வருடியவாறு இன்ஸ்பேக்டர் உறுமினன்.
‘உன்னுடைய மருமகன் எந்தஇடத்தில் தலைமறைவாக இருக்கிருன்? எங்களின்ரை கண்ணிலை மண்ணைத் தூவிப்போட்டு இருக்கிறதுக்கு நாங் கள் இவனுக்கு பாடம் படிப்பிக்காமல் விடமாட்டம். இன்றைக்கு ஊர்வலம் நடத்த இவன் வந்தால் இவனைத் துண்டு துண்டாக முறித் துப்போடுவம். எந்தக் கையாலை இவன் கொடி பிடிப்பாஞே அந்தக் கையை உடைத்து விடுவம்."
தங்கம்மாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அடிவானம் மெல்லச் சிவக்கின்ற இந்த விடிகாலப் பொழுதிலே வந்து, படை பட்டாளங் களோடு தீவிர சோதனை என்ற பெயரிலே பிள்ளைகளையும். அச்சங் கொ ள்ள வைத்து வீட்டுப் பொருட்களை மீண்டும் தாறுமாருக்கிய பிறகு இவன் ஏன் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிருன்?
‘ஐயா, அதுதானே சொல்லுறம். ஆள் இங்கை இல்லை. அவரை நீங்கள் தேடிக் கண்டு பிடிச்சதுக்குப் பிறகு, நீங்கள் விரும்பிய எதையும் செய்து கொள்ளுங்க.."
இந்த அசட்டையான வார்த்தைகள் இன்ஸ்பெக்டருக்கு முகத்தில் அறைந்தாற்போலச் சினத்தை மூட்டியது. பற்களை நரும்பியவாறு மீசையை ஒதுக்கினன்.  ைக யி ல் வைத் திருந்த குண்டாந்தடி யால் சுவரிலே ஓங்கி அடித்துவிட்டு, எதிரே இருந்த கதிரையை எற்றித் தூக்கி தூணுேடு மோதினன். கதிரையின் இரண்டு கால்களும் தனியா கக் கழன்று, எதிரே தொங்கிய சிம்னி விளக்கில்பட, விளக்கு தாறு மாருய் உடைந்து சிதறிற்று. ஆத்திரந்தொனிக்க கிழவியை தூஷண வார்த்தைகளால் கிழித்தான்.
-"கிழவி, நீங்களெல்லாம் ஒத்துத்தான் அவனை மறைச்சு வைச்சிருக் கிறியள். உண்மை சொல்லாவிட்டால் நாரியெல்லாம் பெயர்த்துப் போடுவன். இப்ப இந்த இடத்திலை உன்னை என்னவும் செய்ய எனக்கு அதிகாரமிருக்குது."
தங்கம்மாவின் உள்ளம் கொதித்தது. இவனுக்கு உறைக்கத்தக்க தாக பதில் சொல்ல வேண்டுமென்ற ஆக்ரோஷம் சீறியெழுந்தது
“ஓம். நீ சொல்லுறது உண்மைதான். அந்தப் பொடியனை ஒருத் தர் இரண்டுபேர் மட்டும் பாதுகாக்கேல்லை. நாங்களெல்லோரும் சேர்
ந்துதான் பாதுகாத்து வைச்சிருக்கிறம். நீ எவ்வளவு பயமுறுத்தின லும் யாருமே பயப்பிடப் போறதில்லை. இன்றைக்கு அவன் நிச்சயமாக
குமரன் 37

Page 20
ஊர்வலத்திலை வருவான் அவன்மட்டுமில்லை. அவனுக்குப் பின்னுலை இன்னும் அனேகம் பேர் வருவார்கள். அவனுடைய கையை நீ முறிக் கேலுமென்ருல் முறிச்சுப் பார். அவனைச் சுற்றி எத்தனை ஆயிரம் கை இருக்குது, அதையெல்லாம் உன்னலை முறிக்கேலுமோ? சும்மா இந்த உடுப்பைப் போட்டாப்போலை நீ எதையும் கதைக்கலாம், செய்யலாம் என்று நினைக்காதை. போயிட்டு வா. "
இன்ஸ்பெக்டர் ஸ்தம்பித்துப் போய் விட்டான். தன்னுடைய பொ லிஸ் உடுப்பை அவள் கிழித்தெறிகிற உணர்வு அவனுக்குள் குத்திட் டது. தன்னெதிரே சிதறிக் கிடக்கிற சிம்னி விளக்கின் கண்ணுடித். துண்டுகளை அழுத்தி மிதித்தவாறு வெளியே நடந்தான்.
தங்கம்மா திண்ணைப்புறமாகப் போய் காறித்துப்பிவிட்டு கிழக்குப் பக்கமாக நிமிர்ந்து பார்த்தாள். சிவந்தவானப் பின்னணியிலே அணி வகுத்து நின்ற பனை மரங்கள் அவளது மனதிற்கு புதுத்தெம்பினை அளித் தன. விடிந்தால் நடைபெற இருக்கும் மேதின ஊர்வலம், அரசாங்கத் தின் தடைகளையெல்லாம் மீறிச் சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அவள் மனம் வேண்டிக் கொண்டிருந்தது.
5
மேதின ஊர்வலம் கொடிகளுடனும் சுலோக அட்டைகளுடனும் கோசங்களுடனும் வந்து கொண்டிருந்தது. நடுவே கண்ணன், கையில் கொடியுடன். இன்ஸ்பெக்டர் ஆத்திரத்துடன் பார்த்தான். எதுவும் செய்ய முடியவில்லை. தொழிலாளரின் கூட்டுப்பலம் அவனைப் பய முறுத்தியது. S.
கலை என்பது மனித செயற்பாட்டின் விபத்தாகத் தோன்றியதல்ல. அது உயர்ந்த உழைப்பின் வடிவம்; மனிதன் தன் உயர்ந்த சக்தியை உணர்ந்து உறுதியான உணர்வான உழைப்பால் கலையைப் படைக்கிருன். மனிதன் மானிடனே அவன் மனிதாபிமான உலகைப் படைக்கிருன்; இம்மனிதாபிமான வளர்ச்சியில் கலை அவனது உயர்ந்த வெளிப்பாடு களில் ஒன்ருகும். -
கலை உழைப்பின் உயர்ந்த வடிவம் என்பதை நாம்அறிவோம். ஏனெ னில் சாதாரண உழைப்பிலிருந்து வியக்கத்தக்க உயர்ந்த மட்டத்திற்கு உணர்வு வெளிப்பாடுகளையும் கோட்பாடுகளையும் வெளிப்படுத்தும் திற
மை மனிதனிடம் உள்ளது.
-வாக்குவெஸ்
38 குமரன்

எல் சல்வடோர் - மற்றெரு
வியத்நாம்-3
எல் சல்வடோர், கொண்டுராஸ் ஆகிய இருஅமெரிக்கச் சார்பு நாடு களிலும் மனித அடிப்படை உரிமை மிக மோசமாக மீறப்படுகின்றன என உலக மனித உரிமைக் கழகம், சர்வதேச மன்னிப்பு மன்றம் ஆகி யன அடிக்கடி கூறிவருகின்றன. அங்கெல்லாம் மனித உரிமை பற்றிக் கற்பிப்பவர்கள் உலகத்திற்கே நாகரிகம் கற்பிக்கத் தோன்றியவர்களா கக் கருதப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளே.
அண்மையில் 55 அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த காங் கிரஸ் பிரதிநிதிகள் எல் சல்வடோர் அரசிற்கு எவ்வித உதவியும் அளிக் கப்படாது என நீகனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘சல்வடோர் இராணுவத்தினர் பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கின்றனர். மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகின்றனர்" எனக் குற்றமும் சாட்டியுள்ளனர்.
“பொம்மை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்த நாம் தயாரில்லை. வேண்டுமானல் பொம்மையை ஆட்டிப் படைப்பவர்களுடன் பேசத் தயார்" என கெரில்லாத் தலைவர்கள் அண்மையில் தெரிவித்துள் ளனர்.
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த நிக்கருவாவில் ஏற்கெனவே இடதுசாரி ஆட்சி ஏற்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.
மத்திய அமெரிக்காவில் கம்யூனிசம் பரவி வருவதைக் கண்டு நீகன் தற்eோது அச்சமடைந்து வருகிருர்.
அங்கு கம்யூனிசம் பரவா திருக்க வழி வகைகளை ஆராய்ந்து ஆலோ சனைகள் சமர்ப்பிக்க ரீகன் ஒரு குழுவை அமைத்துள்ளார். அதற்குத் தலைமை தாங்க முன்னுள் காட்டரின் ராஜாங்க செயலாளராக இருந்த கிசிங்கரை நீகன் நியமித்துள்ளார்.
கெரில்லாக்களால் நடாத்தப்படும் விடுதலைப் போராட்டத்தைச் சென்ற மாதமும் அமெரிக்கச் சார்பான சல் சல்வடோர் அரசு முயன்று தோல்வியடைந்தது. அரசின் 6000 படையினர் தாக்கி தோல்வியடைந் தனர். கெரில்லாக்களுக்கு கியூபா, ரஷ்யா ஆயுதம் வழங்குவதாக ரீகன் குற்றம் சாட்டுகிறன்.
குமரன் - 39

Page 21
எல் சல்வடோர் வரலாறு
ஸ்பானியர் கி. பி. 1525 இல் இருந்து 1838 வரை ஆண்டனர். அதன் பின்னர் அங்குள்ள இராணுவ சர்வாதிகாரம் சுதந்திரம் பெற்றது. இதன் கொடுமையைத் தாங்க முடியாத 300.000 மக்கள் அயல் நாடான கொண்டு ராசுக்கு 1950 1960 களில் ஓடினர். 1969இல் எல் சவே டோர் இராணுவம் கொண்டுராசைத் தாக்கியது. 1000 பேர் கொல் லப்பட்டனர், 1976 ஆம் ஆண்டிலும் எல்லைகளில் போர் நடந்தது இத ஞல் இரு நாடுகளுக்கிடையிலும் பகைமை தொடர்ந்தது.
1977இல் ரோமிரோ என்ற இராணுவத் தளபதி ஜஞதிபதி யானன். இதை கத்தோலிக்க அதிமேற்றிராணியார் எதித்தார். விவ சாயிகளையும் சேர்ச்சையும் தளபதி மதிக்காததே காரணம்.
1979இல் ரோமிரோ மற்ருேர் இராணுவப் புரட்சியில் வீழ்த்தப் பட்டான். புதிய சர்வதிகார ஆட்சியை இடது சாரிகள் எதிர்த்தனர். அமெரிக்கா அரசை ஆதரித்து பண உதவி செய்து நிலச் சீர்திருத்தம் செய்யும்படி பணித்தது. குத்தகை முறைகளை ஒழித்து நிலங்களை விவ சாயிகளிடம் பங்கிடும்படி வேண்டியது. இது நடைமுறையில் பயனளி க்கவில்லை. ஒரு சில குடும்பங்களின் ஆதிக்கத்திலேயே பெரும் பாங்கான நிலங்கள் உள்ளன.
1980இல் அதிமேற்றிராணியார் ரோமிரோ, 'இராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பது அடக்குமுறையை மேலும் வலுப்படுத் தும்" என ஜனதிபதி காட்டருக்கு முறையிட்டார். சில வாரங்களில் அரசைச் சார்ந்தவரால் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருக்கும்போது ரோமிரோ கொல்லப்பட்டார். அன்ஞரின் மரணச் சடங்கின்போது வன்செயல் தலையெடுத்து 30 பேர் கொலையுண்டனர். அதைத் தொ டர்ந்து கெரில்லா யுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது.
பின்தங்கிய ஆயுதங்களைத் தாங்கிய 6000 கெரில்லாக்கள் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை இன்று தமது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர், எத் தகைய இராணுவத் தாக்கத்தாலும் கெரிலாக்களை இன்றுவரை வெற்றி கொள்ள முடியவில்லை. ரீகன் இக்கெரில்லா யுத்தத்தைக் கண்டு அஞ்சி. இதை ஒடுக்குவதற்கு வழி வகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறன்.
லாபகரமாக இருக்கும்போது மட்டுமே முதலாளித்துவம், மக்கள் தேவையை நிரப்ப முயல்கிறது. ‘வாங்கும் சக்தி விதிகளே முதலாளித் துவ சந்தையின் சட்ட நியதிகளாகும். -ஸ்டீபன் குரோல்
40 குமரன்

காலத்தின் தேவையும் படைப்பிலக்கியமும் உலகமெங்கும் விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் தம்மை அர்ப்பணி த்த போராளிகளுக்கு" என்ற யோ. பெனடிக்ற் பாலனின் சமர்ப் பணத்துடன் அவரின் நாலாவது நூலான "பலஸ்தீனம் என்னை அழைக்
கிறது" என்ற குறுநாவல் நீலகி பிரசுரமாக (9 மருதடிவீதி, நல்லூர், யாழ்.) அண்மையில் வெளிவந்துள்ளது.
உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களெல் லாம் எமது கலை, இலக்கியப் படைப்பாளிகளையும் பாதித்துள்ளது.
வியத்நாம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல சிறுகதைகள், கவி தைகளெல்லாம் இங்கும் படைக்கப்பட்டன. அதேபோல பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகள் பற்றியும் படைப்பிலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறே கலைஞர்களது தேசியம்சர்வதேசியவடி வம் பெறுகிறது. மார்க்சிய எழுத்தாளரான பாலன் இதற்கு விதிவிலக் கானவரல்ல. 1973இல் அரபு இஸ்ரேல் போர் நடைபெற்றுக் கொண்டி ருந்தவேளை அவர் இக்குறுநாவலை எழுதினர். 10 ஆண்டுகளின் பின்னர் இன்று நூல்வடிவம் பெற்றுள்ளது. அதற்கும் ஒரு தேவை ஏற்பட்டுள் ளது. நாவலைப் படிப்பவர் காரணத்தை எளிதில் உணர்ந்து கொள்வர்.
1973இல் லைலா காலித் என்ற பாலஸ்தீனப் பெண்ணின் பெயர் உல கெங்கும் அடிபட்டது. அவள் எகிப்திய பல்கலைக்கழகத்தில் படித் திருந்வேளை, விடுதலை இயக்கத்தில் சேர்ந்து, வேறு சில வீரருடன் விமீ) ம் ஒன்றைத் திசை திருப்பினுள். சினிமா அல்லது அழகு ராணி போட்டியில் பங்கு பற்றுவதாலேயே புகழ் அடைய முடியும் என்ற முத லாளித்துவப் பெண்ணுலகை அவ்வீராங்கனையின் தீரச் செயல் உலுப்பி விட்டது.
இப்பெண்ணைக் கதாநாயகியாக வைத்தே பாலன் இக்குறு நாவலை எழுதியுள்ளார்.
பெரும்பாலும் பாதிப்பு ஏற்படும்போதே மக்கள் விழித்தெழுந்து நீதிக்காகப் போராடப் புறப்படுகின்றனர். பலர் தூங்கி அடங்கிய போதும் ஒரு சிலர் போராட முன் வருகின்றனர். அவர்களே உலகை முன் நடத்தும் வீரமனிதர் ஆவர்.
குமரன் 41

Page 22
குடும்பம் இஸ்ரேலியரால் சிதறுண்ட உணர்வு ஆயிஷாவை தியாக உணர்வுக்குத் தூண்டுகிறது. தன் வாழ்வை வாய்ப்பாக்கத்தக்க சூழல் எகிப்தில் ஏற்பட்டபோதும் அவள் அவற்றைத் துறக்கத் துணிகிருள் பல்கலைக்கழகத்தில் அவளைக் காதலிப்பதாகக் கூறும் மற்றேர் விரிவுரை யாளனுக்கு ஆயிஷா பதில் கூறுகிருள்:
"என் இனிய தாய்நாடு கொடிய இஸ்ரேலரின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடும்போது, எம்நாட்டு மக்கள் அந்த ஆக்கிரமிப்புக்காரர்களின் அட்டூழியங்களால் சீர்குலைந்து நிர்க்கதியாக, அழுகைக்கும், இரத்தஞ் சிந்தலுக்கும், சாவோலங்களுக்கும் மத்தியில் நிம்மதியிழந்து தவிக்கும் வாழ்வு வாழும்போது எனக்கொரு சந்தோஷமான வாழ்வு வேண் டுமா? எனக்கு மனச்சாட்சி உண்டு. என் தாய் நாட்டை மீட்டு நான் இரத்தஞ் சிந்தும்வரை எனக்கு நிம்மதியில்லை.
காலம் நேரம் அறிந்து வெளியிடப்பட்ட குறுநாவல்.
காலத்தின் தேவையை ஒட்டி சமுதாயத்தின் உந்து சக்தியாக கலை இலக்கியம் படைக்கப்படும்போதே கலை அதன் பூரணத்துவத்தை அ-ை கிறது என்று கூறவேண்டும்.
1978இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற நஞ்சைபாலஸ் 8 தீனத்தில் உருவாக்கிய வேளை ஆயிஷா மூன்றுமாதக் குழந்தையாகத் த74-னும் தமையனுடனும் உயிரைக் காப்பாற்ற வீடுவாசலைவிட்டு *திகளாக ஒடநேர்ந்தது. அவள் எகிப்தில் கல்வி கற்று விரிவுரை 17ளராகும் காலத்திலே 1973இல் இஸ்ரேலிய அரபு யுத்தம் மீண்டும் தொடங்குகிறது. தாயின் கடிதம் மூலம் தந்தை, பெரிய தந்தை ஆகி யோர் இஸ்ரேலியரால் கொல்லப்பட்டதை அறிந்து கலங்கினள்.
அக்கடிதமே அவளேயும் கெரில்லாஇயக்கத்தில் சேரத் தூண்டுகிறது"
தாய் எழுதியதாகக் கூறும் கடிதத்தை பாலன் சோகம், துன்பம் மட்டுமல்ல வீர உணர்வு ஏற்படக்கூடியதாகவும் எழுதியுள்ளார். பாலஸ் தீனப் பெண்களின் துன்பவாழ்வை மட்டுமல்ல அதனுல் ஏற்படக் கூடிய வைராக்கியத்தையும் இக்கடிதம் காட்டுகிறது.
மாதவன்
பிறப்பினலல்ல, கற்பிக்கப்படுகிருள், பெண்ணுக. -ஓர் அறிஞர்.
42 குமரன்

குட்டிக் கதை நவீன அடிமைகள் - யோ. பெ.
காலனி நாட்டுச் சிறைச்சாலை. தளபதி கம்பீரமாக நடந்து வந் தான். அங்கே சிறை பிடிக்கப்பட்ட அடிமைகள் கம்பங்களில் கட்டப் பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே?இராணுவச் சிப்பாய்கள் ஒவ் வொரு கைதிக்கு நேராகவும் துவக்குகளைக் குறிவைத்து நீட்டியவாறு நின்றனர்.
தளபதி கலகஞ் செய்து பிடிபட்ட அந்த அடிமைகளை ஒவ்வொருவ ராக நோக்கினன்.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" அவன் குரலில் பயமுறுத்தும் அதிகாரத் திமிர். ‘சுதந்திரம்!" எல்லாக் கைதிகளும் ஒரே குரலில் கோஷித்தனர். * சுட்டுத் தள்ளுங்கள்" வெடிச் சத்தங்கள் கேட்டன. கைதிகள் கம்பங்களில் இறந்து தொங்கினர்.
பல ஆண்டுகள் இப்படி நடந்தது. ஒருநாள் இராணுவத் தளபதி ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் அந் தச் சிறைச்சாலைக்கு வந்தான். முகத்தில் என்றுமில்லாத ஒரு புன்னகை கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கைதிகளைநோக்கினன். அதே புன்ன.ை
"உங்களுக்கு நாம் செய்யும் கொடுமை என்ன? அதைக் கேட்டுக் கைதிகள் ஆத்திரமுற்றனர். 'நீங்கள் உங்கள் கைகளில் துவக்குகளை வைத்துக் கொண்டு எங்க% சுட்டுக் கொல்லுகிறீர்கள். எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்."
அவர்கள் ஒரே குரலில் கத்தினர். தளபதி இராணுவ சிப்பாய்களை நோக்கிஞன். அவர்களின் கட்டுகளே அவிழ்த்து விடுங்கள்." அவர்கள் அவன் கட்டளையை நிறைவேற்றினர்.
உங்கள் துவக்குகளே அவர்கள் கையில் கொடுங்கள்." அவர்கள் ஆச்சரியமடைந்து அவ்வாறே செய்தனர். அடிமைகளின் முகத்தில் மலர்ச்சி. தளபதி அவர்களைப் பார்த்தான்.
"இப்பொழுது நீங்களே உங்களைச் சுட்டுக் கொல்லலாம்!" அவன் கூறிவிட்டு சிறைச்சாலையைவிட்டு வெளியே நடந்தான் அடிமைகள் ஆரவாரத்தில் பெருங் குரலெடுத்துக் கூறுவது அவன் காது களில் விழுந்து கொண்டிருந்தது,
‘நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம்."
குமரன் 43