கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.05.01

Page 1
KUMARAN 65 (01-05-1 989) :TREET.
對*率率*****率率率率摔摔*
குமரன குரல்
*H *
ஆறு ஆண்டுகள் ஆகப்போகின்றன. பலரின் வேண்டுகோள், பல சிரமங்களிடையே மீண்டும் குமரன் இதழை வெளியிட முடிவு செய்தோம். . . . .
பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி நாளான மே தினத்தில் 65ஆவது இழை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம். காலப்போக்கில் இக ைவிரிவுபடுத்துவோம் V−
மார்க்சிய அணுகுமுறையை குமரன் முன்னர் வளர்த்து வந்தது. குமரன் வெளிவராத இடைக்காலத்தில் தோன்றிய புதிய தலைமுறை யினருக்கும் பொருளாதார, அரசியல், சமூக விஷயங்களை விஞ்ஞான ரீதியாக அணுகும் முறையை அறிமுகப்படுத்தும் பணி ஒன்றும் உள் ளது. பல நண்பர்கள் இதை நினைவூட்டினர். -
அதனல் மார்க்சிய ஆரம்ப அறிவை சிறிது சிறிதாக புதிய தலை முறையினருக்குக் கற்பிக்கும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதன் மூலமே இன்றைய சிக்கலான பொருளாதார, அரசியல், சமூக நிலைகளையும் அறிய முடியும்; ஆராய முடியும்.
இத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களின் எழுத்துக்கள், வினக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. முன்னர் போல குமரன் இதழ்களை வரவழைத்து ஆங்காங்கே விநியோகிக்க விரும்புவோரும்
தொடர்பு கொள்க.
O
- ஆசிரியர்.
அச்சு குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12. ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

女
மூன்றவது உலகமும் ககன் பளுவும்
மார்க்சியம் பற்றிய குறிப்புகள்
* தியாகு
வறுமையை ஒழித்தலும் வறுமையை பகிர்தலும்
. . 大 செ. க.
கலை, இலக்கியத்தின் நோக்கங்களும் பணியும்
* மாதவன்
2.6ф . . மெதுவாகப் பேசுங்கள்
செ. கணேசலிங்கன்
பெண்களின் விடுதலைப் போராட்டம்
தேசிய இனம்
* பி. ஏ. காதர்
கேள்வி ? பதில் 1

Page 2
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும் !
1. போர்க்கோலம் செ. கணேசலிங்கன் 14.25 2. மண்ணும் மக்களும் ** - 1:0 .50 3. அயலவர்கள் ”” 45.00 4. பொய்மையின் நிழலில் - 9 p. 37.50 5. அந்நிய மனிதர்கள் '' - 13.50 6. வதையின் கதை 15.75
7. கலையும் சமுதாயமும் Ap J9 1.25 8. குந்த விக்குக் கடிதங்கள் A ) 18.00 9. மான்விழிக்குக் கடிதங்கள் 6.50 10. சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் '' 24.00
11. அபலையின் கடிதம் P. p. 3.75 12. சொந்தக்காரன் - பெனடிக்ற் பாலன் 13.50 13. மரணத்திற்குப் பின் - பொ. சங்கரப்பிள்ளே " 45.00 14. சைவசித்தாந்தம் ''. 30.00 15. மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 名及.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இனும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 21388

E------------------------ மூன்றவது உலகமும் கடன் பளுவும்
ஏமாற்று விளையாட்டிற்கு இரு பக்கமுண்டு. ஏமாற்றுவோர்: ஏமாற்றப்படுவோர்; ஏமாற்றப்படுவோர் பெரும்பாலும் அப்பாவி கள், கபடமற்றவர், எளிதாக ஏமாற்றப்படக் கூடிய சாதுரியமற்ற வர்கள்: வேடிக்கை என்னவெனில் இவர்களும் அனுமதி தந்து இக் கபடநாடகத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதாகும். மூன் ருவது உலக உயர்வகுப்பினரின் உண்மை நிலையும் இதுவே: இந்நாடுசளின் ஆளும் வர்க்கத்தவர் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்திருப்பதனல் நேரடியாகவும் மறை முகமாகவும் நன்மையடைகின்றனர். ر
இந்நாட்டுச் சமுதாயங்களின் உயர்மட்டத்தில் வாழ்பவர் திறந்த சந்தை, வெளிநாட்டுப் பணம் நுழையும் கட்டுப்பாடற்ற பொருளா தாரக் கொள்கை ஆகியவற்றை வரவேற்பவர் இவர்களே இதுவே குறிப்பிடத்தக்க வேடிக்கையாகும் இவர்கள் அந்நியப் பணத்தை சுதந்திரமாக வரவேற்பது வெளிநாட்டிலிருந்து பணம் உள்நாட்டிற்கு வருவதற்கு மட்டுமல்ல; தமது லாபங்களை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குமாகும்.
மூன்ருமுலக செல்வந்தர்கள் பல வருடங்களாக ஏராளமான பனங்களை அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வங்கி வைப்புப்பணமாகவும், சொத்துகளிலும் தொழில் முயற்சிகளிலும் பாதுகாப்பான முதலீடுகளிலும் போட்டு வைத்துள்ளனர்.
மூன்ருமுலக நாடுகளின் கடன் பிரச்சனைகள் மோசமடையும் வேளைகளிலும் இக்கோர விளையாட்டு நடைபெறுகிறது − - ஹரி மக்டொவ்,
எங்கள் கண்முன்னே, பூர்ஷ்வா நாகரிகத்தின் ஏமாற்று வித்தையையும் அநாகரிகத்தையும் காணக் கூடியதாக உள்ளது. தன் நாட்டிலே, மதிப்பாக வாழும் வேளை காலனி நாடுகளுக்கு அது நிர்வாணமாகச் செல்கிறது.
- Diffidish)
( 1)

Page 3
00LLLLLLLLLLL0LLLLLLLLLLLLL0L00L00LLLLLLL0L0LL00L00S மார்க்சியம் பற்றிய குறிப்புகள்
* தயாகு
மார்க்சிசம் ஒன்றிணைந்த இரு அமைப்புக்களைக் கொண்டது. ஆயினும் அவையிரண்டும் தனித்துவமானவை; குறிக்கோளில் வேறு Lut. L-66u.
வரலாற்றுப் பொருள் முதல்வாதம். 1 இயக்கவியல் (இயங்கியல்) பொருள் முதல்வாதம்.
(இவ்வார்த்தைகளைக் கண்டு அஞ்சவேண்டாம்.)
1 வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்பது வரலாற்றை விஞ்ஞான முறையில் ஆய்வதாகும். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என்ற தன் நண்பருடன் சேர்ந்து இப்பணியை முதன்முதலில் ஆற்றினர்.
இது வரலாற்றை பல்வேறு உற்பத்தி முறைகளுடனும் சமூக அமைப்புகளுடனும் காண்பதாகும். அத்துடன் ஒரு சமூக அமைப் பிலிருந்து மற்றைய சமூக அமைப்புக்கு மாற்றமடையும் முறைகளை யும் அவற்றின் பணிகளையும் கற்பதாகும்.
மார்க்கம் ஏங்கல்சும் இணைந்து 1848 ல் “கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை" என்ற சிறு நூலை வெளியிட்டனர்.
'மனித சமுதாயத்தில் இதுவரை நடந்த வரலாறு யாவும் வர்க்கப் போராட்டத்தின் வரலாருகும்." என இவ்வறிக்கை ஆரம்ப மாகிறது. "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என இவ் வறிக்கை முடிவுறுகிறது.
வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியாக உற்பத்தி முறை
களிலும் (பொருள் உற்பத்தியில் மனிதன் ஈடுபடுவது) சமூக அமைப்பு களிலும் ஏற்பட்ட மாற்றங்களை பின்வருமாறு வகுத்தனர்.
(1) தொன்மைப் பொது உடைமை - மனிதன் குழுக்களாக -
குலங்களாக வாழ்ந்தகாலை, கருவிகளும் உணவு, உடை, இருப்பிட மாகத் தேடியவை யாவும் அனைவருக்கும் பொதுமையாக இருந்தன.
( 2)

(2) அடிமை உடைமை - நிலத்தை எஜமானர்கள் சொந்தமாக் கிப் பெரும்பாலான மக்களை ஆடு மாடுகள் போல விலங்கு பூட்டி வைத்து உழைப்பின் பயன் யாவையும் தாம் உழைப்பில் ஈடுபடாது அபகரித்துக் கொண்டனர்.
(3) நிலவுடைமை - நிலப்பிரபுக்கள் நிலத்தையும் நீரையும் கருவி களையும் சொந்தமாக்கி மக்களை நிலத்திற்கு அடிமையாக்கி உழைக் கச் செய்தனர்.
(4) முதலாளித்துவம் - இயந்திர சாதனங்களை முதலாளிகள் தம் உடைமையாக்கித் தொழிலாளர்களைக் கூலிக்கு அடிமையாக்கி வைக்கும் முறை.
(5) சோசலிசம் - உற்பத்திச் சாதனங்களைத் தொன்மைப் பொது வுடைமை போல மீண்டும் மக்களுடைமையாக்கி அனைவரும் சமு தாயம் முழுவதுக்கும் பயன்பட உழைப்பதாகும். கை விலங்கிற்கும் நிலத்திற்கும் கூலிக்கும் அடிமைப்பட்ட மனிதன் இச் சமூக அமைப் பில் விடுதலை பெறுகிருன்
1 இயக்கவியல் பொருள் முதல்வாதம் மார்க்சின் சித்தாந்த மாகும். அறிவின் உற்பத்தியை விளக்குவது; சிந்தனைமுறையின் அமைப்பையும் பணியையும்கூறிநிற்பது, மார்க்ஸ் தன் சித்தாந்தத் தைச் சுருக்கிப் பின்வருமாறுகூறிஞர்: “இதுவரை வாழ்ந்த சித் தாந்திகள் யாவரும் உலகத்திற்கு விளக்கம் கூறியவர்களே. அதை மாற்றி அமைப்பதே எமது பணி." இதன்படி மார்க்சின் சித்தாந் தம் கோட்பாட்டுடன் கூடிய அரசியல் நடைமுறையாகும்.
ax-ax-XaX ax ബ
குமரன் தனிப்பிரதி Ծ 3|- :
6 இதழ்கள் ob 17|- 12 இதழ்கள் ரூ 33
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12, தொலைபேசி: 21388
gyversprav www.
( 3 )

Page 4
++++++
கேள்வி ? பதில் ! VA 4AV 粥來率率率率率率率 o" *率率率率3*
A9 A9 töA y y ya A. V4 4A2
கே : சிங்கள நாடகங்கள் வளர்ச்சியடைந்துள்ளனவா ?
நிச்சயமாக உருவத்தில். மேடை நாடகங்கள் பிற நாட்டுத் தழுவல்களாக உள்ளன. உள்நாட்டு அரசியல், தணிக்கையே காரணமாக இருக்கலாம். இது பிரச்சினைகளிலிருந்து தப்பி ஒடும்" (Escapism) போக்கே, டி. வி. நாடகங்கள் காதல் ஏமாற்று, கிராமிய நிலைகளை இயற்பண்புடன் காட்டும் நிலையே உள்ளது. டி. வி. தணிக்கை முறை அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல; இங்கு மேலும் இறுக்கமானது. இதுவும் ஒருவித எஸ்கேப்பிசமே.
கே: வட - கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறை என்ன? ப: சந்தேகமில்லாது சிறுபண்ட உற்பத்தியே. தேசீய முதலாளித்
துவம், யந்திர உற்பத்தி வளர்ச்சியடையவேயில்லை. அதுவே பிரச்சனைகள் தீர்க்கப்படா நிலைக்கும் முக்கிய காரணமாகும்.
கே: அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல்கள் பற்றி என்ன
கூறுவீர்கள்?
அத்தேர்தல்களில் எவ்வாறு வாக்களிக்கப்பட்டது என்பதை : נL அனைவரும் அறிவர். அரசியலார் கூறும் ஜனநாயகத்தில் இவ் விளையாட்டுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக் கும். பொதுவாக தேர்தல் பற்றி கோர் வைடல் என்ற எழுத் தாளர் கூறிய கூற்று ஒன்று தொழிலாளர்கள் அடிக்கடி நினைவுகூரவேண்டியதாகும் . "எங்கள் இன்றைய சமூக அமைப்பின் மேதாவித்தனம் யாதெனில் சாதாரண மக்கள் தமது நலனுக்கு எதிராகச் சென்று வாக்களிப்பதாகும். எங்கள் ஆளும் வர்க்கம் கண்காணுதபடி மறைந்திருப்பது அரசியல் வரலாற்றில் காணும் சாகசச் செயல்களில் ஒன்ரு கும்”
(4)

0L00L000L000000000000L00000L0L00LLLL00LL0LLLLLL0LLL0LLL வறுமையை ஒழித்தலும் வறுமையைப் பகிர்தலும்
0 செ. க.
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" - வள்ளுவர் அன்று கூறினர்.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனின் ஜெகத்தினை அழித்திடு வோம்' - பாரதி பகன்ருன்.
மதங்கள் தோன்றி 25 - 30 நூற்ருண்டுகளாக பணக்காரனுக் கும் ஏழைக்கும் ஒரே "ஆத்மா”வே உள்ளது என சமன்படு ‘தியது. ஏழைக்குத்தான் சொர்க்கம் பணக்காரனுக்கல்ல; பணக்காரன் ஏழைக்கு உணவளித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என வும் போதித்தது.
வறுமை இன்றுவரை ஒழிந்துவிடவில்லை.
விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டோம், சந்திரமண்டலத்தில். காலடியெடுத்து வைத்துவிட்டோம் என்று வல்லரசுகள் வீரம் பேசு கின்றன. பூமியில் கோடிக்கணக்கான மக்கள் அரைப்பட்டினியில் இன்றும் வாழ்கின்றனர்.
ஐ. நா. சபை அமைத்து விட்டோம்; அதைச் சார்ந்த உணவு விவசாய ஸ்தாபனத்தை (F.A.O) ஏற்படுத்தியுள்ளோம்; உலக வங்கி இவற்றிற்காக கடனுதவிகள் வழங்குகின்றன என்று செல்வந்த நாடுகள் கூறுகின்றன. பட்டினிச் சாவுகள் மூன்ரும் உலக நாடு களிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பசுமைப் புரட்சி ஏற்படுத்தி விட்டோம், இனிப் பஞ்சமில்லை
என உரம், கிருமிநாசினி, டிராக்டர்கள் உற்பத்தி செய்து உல கெங்கும் விற்பனை செய்யும் முதலாளித்துவ நாடுகள் பிரச்சாரம்
( 5).

Page 5
செய்கின்றன. பட்டினியாலும் போஷாக்கின்மையாறும் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான குழந்தைகள் அரும்பு வயதில் கருகி விடுகின்றன.
ஜஞதிபதி அவர்கள் ஜனசவிய திட்டம் பற்றி பதவியேற்ற பின் அதிகாரிகளிடையே பேசும்போது தேயிலைக்கு ஆராய்ச்சி நிலை
aMakaA Zh-ahah
வறுமை என்றல் என்ன?
மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடி யாத நிலையே "வறுமைநிலை" என நாம் கொள்ளுகிருேம். அடிப் படைத் தேவைகள் என்பன உணவு உடை, இருப்பிடம், நீர் ஆகி
அரசு பெரும்பாலும் போதிய உணவற்ற நிலையை மட்டுமே வறுமைநிலை எனக் கருதுகிறது. சத்துணவு என்பது இரண்டாவது நிலை. இந்நிலையில் வறுமையை அளக்கும் முறைகளைப் பார்ப் Curb.
நாம் உண்ணும் உணவு உஷ்ணமாக மாறுகிறது என்பதை யாவரும் அறிவர். அவ்வுணவு ஆகக் குறைந்தது நாளுக்கு 2200 கலோரி உஷ்ணத்தைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இந் நிலைக்குக் கீழ்ப்பட்டவர்களை வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர் எனக் கணிப்பர். இலங்கையில் இந்நிலையில் உள்ளவர் 30% குடித் தொகை ஆவர். (இந்தியாவில் 40% க்கு மேல்) இத்தொகையில் 82% மக்கள் கிராமப்புறங்களிலும், 18% நகர்ப்புறங்களிலும் வாழ் கின்றனர்.
வளர்முக நாடுகளில் (சீனு நீங்கலாக) 75 கோடிக்கு - மேல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.
இங்கு இன்று குடும்பத்திற்கு (சராசரி 5 நபர்)மாதந்தோறும் ரூபா 700 வருமான மற்றவர்கள் வறியவர்களாகக் கருதப்பட்டு அவர் கட்கு உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. (தமிழ் நாட்டில் மாதவருமானம் ரூ. 300 எனக் கொள்ளப்படுகிறது) இவ்வாறு இங்கு உணவு முத்திரை பெறுவோர் 15 இலட்சம் குடும்பங்கள் ஆகும். அதாவது 75 இலட்சம் மக்கள் உணவு முத்திரையால் பாதுகாக்கப்படுகின்றனர் என அரசு அறிக்கை கூறுகிறது.
ട്രൂ
( 6 ),

யம் இருக்கிறது. றப்பருக்கு உள்ளது, வறுமைக்கு "இல்லை" என்ற விதமாகப் பேசியுள்ளார். ஆனல் உலகில் வறுமை பற்றிய ஆராய்ச்சி கள் ஐ. நா. தொடக்கம் அனைத்து நாடுகளிலும் பல்வேறு துறை களுடாக நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பல்கலைக்கழகங்களில் சமூகவியல், பொருளாதாரப் பகுதியினர், சமூக சேவைத் திணைக் களத்தினர், மத்திய வங்கிப் பொருளாதார நிபுணர்கள் யாவரும் ஆராய்ச்சிகளும் அறிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்ற னர். கருத்தரங்குகள் வேறு நடைபெறுகிறது. ஆனல் வறுமைதான் ஒழிந்தபாடாக இல்லை. இங்கு மட்டுமல்ல - உலகெங்கும் - குறிப்பாக மூன்ருவது உலக நாடுகளில்.
இன்றைய ஜனதிபதி பிரதமராக இருந்தவேளை பிரேமதாசா அவர்கள் 1987 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் 10 ஆண்டு யு.என்.பி. ஆட்சியின் பின்னரும் இலங்கையின் கோர வறுமை நிலை பற்றி காரசாரமாகப் பேசிஞர். வறுமை, போஷாக்கின்மை, வேலையின்மை பற்றியும் நாட்டின் பாதி மக்கள் அடுத்த உணவு பற்றிக் கவலைப்படு வதாகவும் கூறினர். பின்னர் 9, 10, 88 ல் யு. என். பி. மாநாட்டில் ஜஞதிபதி அபேட்சகராக தெரியப்பட்ட போது சொன்னர், "இன்று வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து வறுமையில் வாடும் பரந்து
aala
Vstuprv
வறுமையும் ப்ண வருவாயும்
பண வருவாயைக் கொண்டு அரசியலாரும் பல முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் வறுமையை அளவிட முயலுகின்றனர். இது மற்றேர் தவருண போக்காகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர் இத்தகைய அளவீட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஜனசவிய திட்டத்தின் கீழ் இவர்கள் தடுக் கப்பட்டும் விடலாம்.
தோட்டத் தொழிலாளர் குடும்பமாக உழைக்கின்றனர், மாதம்
ரூ. 1000, ரூ. 2000க்கு மேலாகவும் வருமானம் பெறுகின்றனர், இருப்பிடம், மருத்துவ வசதியும் கிடைக்கின்றன என்பர்.
ஆனல் இப் பெரும் பாட்டாளி வர்க்கத்திற்கு விரும்பியபடி வீடு கட்டி வாழவோ, பிள்ளைகளைத் தக்க பாடசாலைகள், கல்லூரிகளில் கற்பிக்கவோ வாய்ப்பில்லாதவர்களாக உள்ளனர்.
பணவருவாயைக் கொண்டு வறுமையை அளக்கும்வரை அவர் களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. LLq
(7)

Page 6
பட்ட ஏழைமக்கள் ஏதும் செயலாற்ற முடியாது சபிக்கின்றனர் சமூகத்தைத் தமது எதிரியாகக் கருதுகின்றனர். நாட்டை அழிக்கும் அழைப்பு இதுவாகும்."
பின்னர் வறுமையை ஒழிப்பதையே தன் தேர்தல் பிரச்சாரத் தில் முதன்மையாக முன் வைத்தார்;
11 ஆண்டு யு. என். பி. ஆட்சியின் பின்னரும் மக்கள் ரொட்டி யும், ஈரப்பலாக்காயும் சாப்பிடுவதாகவும் பள்ளிப் பிள்ளைகள்
AMAMAMAMAMA”
ஜனசவிய பொருளாதாரம்
முதலாளித்துவ பொருளாதாரம் மிக விசித்திரமானது. அது யுத்தத்தையே வரவேற்கும். யுத்தத்தில் அழிவு ஏற்படும். மறுபுறத் தில் அழிவை நிவர்த்தி செய்ய உற்பத்தி துரிதப்படுத்தப்படும். பொருளாதாரம் வலுப்பெறும்.
இப்பொருளாதார முறையில் தமக்கு வாய்ப்பாக எவரும் விளக் கம் கூறிவிடலாம். இதன்படி வறுமைத் துயர் துடைப்புக்கே சிறந்த விளக்கம் கூறிவிடலாம்; கூறவும் படுகிறது.
1000 கோடி ரூபாவை ஏழைகளுக்குக் கொடுத்ததும் அவர்கள் இப்பணத்தைக் கொண்டு பண்டங்கள் வாங்க முயல்வர் உடனே அப்பண்டங்களுக்கு தேவை ஏற்படும். அவற்றின் உற்பத்தி பெருகும். அதற்காக பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். பொருளாதாரச் செயற்பாடு வேகமடையும்.
பணத்தைக் கவரக்கூடியளவு பண்டங்கள் இல்லாதபோது பண்டங்களின் விலைகள்ஏற்றமடையும். இதைப் பணவீக்கம் என்பர்
உள்நாட்டுப் பண்டங்கள் கிட்டாதபோது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யநேரும்.
ஜனசவிய" பணத்தில் குறிப்பிட்ட பண்டங்களே வாங்க முடி யும். அவை உள்ளூர்ப் பண்டங்களாகவே இருக்கும் என கூறு கின்றனர். பன முத்திரைகளை கடைகளில் கொடுத்துக் குறைந்த பணம் பெற்று வெளியே பண்டங்களை வாங்க முயல்வோரும் இருப்பர். முன்னர் அரிசிக் கூப்பன்கள் அடைவு வைக்கப்பட்ட காலத்தைப் பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டர்ர்கள்.
(8)

போதிய உணவு, போஷாக்கின்மையால் மயங்கி விழுவதாகவும் செய்த பிரச்சாரம் யு. என். பி. யினரிடையே அதிருப்தி ஏற்படுத்தி யது. ஆயினும் வறுமைத் துயர் துடைக்க குடும்பத்திற்கு மாதந் தோறும் ரூ. 1458 ஐ பண்டச் செலவாகவும் ரூ. 1042 ஐ சேமிப்பாக வும் 24 மாதங்களுக்கு வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித் தார்.
இவ் வாக்குறுதி தேர்தலில் பெரும் வெற்றியீட்டுவதற்குப் பயன் பட்டதாகக் கூறுவதற்கில்லை. ஜனதிபதித் தேர்தலில் வாக்களித்த வரில் 50.43% மக்களே இன்றைய ஜஞதிபதியைத் தேர்ந்தனர்.
ஆயினும் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே குரல் முன்வைக்கப்பட்டது. இதனுலும் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
ஆயினும் ஜனதிபதி அவர்கள் வறுமைத் துயர் துடைப்புத் திட்டத்தை வழமையான தேர்தல் வாக்குறுதி போல விட்டு விட வில்லை. உணவு முத்திரை பெறும் 15 லட்சம் குடும்பங்களில் 3 லட் சம் குடும்பங்களின் துயர் துடைப்பிற்காக வரவு செலவுத்திட்டத் தில் 1000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளி மான வர்க்கு இலவச உணவும் வழங்கப்போவதாக உறுதி செய்யப்பட் டுள்ளது.
புதிய ஜனதிபதியின் ஆட்சியை பொப்பிலிசம் (Populism) என்ற ஆங்கில வார்த்தையுள் அரசியல் அவதானிகள் அடக்குகின்றனர். (இதற்குரிய சரியான வார்த்தை தமிழில் இல்லை என கலாநிதி சிவத் தம்பி கூறுவார்) அரசு பல்விேறு விளக்கங்கள் கூறியபோதும் கிடைப்பதைப் பரவலாகப் பங்கிட்டு பாராட்டுப் பெறும் முயற்சியே இதுவாகும்.
இவ் வறுமைத் துயர் துடைப்பு பிரச்சாரத்தையோ, திட்டத் தையோ எவரும் எதிரிக்கவில்லை. முதலாளிகள் கேலியாகப் பார்த்த போதும் எதுவும் பேசவில்லை. பொருளாதார நிபுணர்களும் மெளனமே சாதிக்கின்றனர். ஒரு சிலர் பணவீக்கம் ஏற்படும் என அச்சுறுத்து கின்றனர். அப்படி ஏற்படினும் வழமையாக ஆண்டுதோறும் ஏற் படும் 20%-30% உள்ளாகவே இருக்கும், கவலைப்பட வேண்டியதில்லை என சமாதானம் கூறுகின்றனர்.
மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையிலும் பார்க்க அதிகமாக வறுமை ஒழிப்பிற்குச் செல
(9)

Page 7
விடப்படுவது பாராட்டிற்குரியது என யு.என்.பி. சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
உற்பத்திச் சாதனங்களைக் கொண்ட ஒரு சிறு பகுதியினர் வாய்ப் பாக வாழுகின்றனர். இவர்களது யந்திரங்களை இயக்கவும் சேவை கள் வழங்கவும் மற்ருெரு பகுதியினர் கூலி அடிமைகளாக உழைக்க நேரிடுகிறது. இன்னெரு பகுதியினர் உழைக்கவே வாய்ப்பில்லாது வறுமையில் வாடவும் நேரிடுகிறது; இவ் வறுமையையும் பட்டினியை பும் காட்டியே முதலாளிகள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாது காப்பு அளிக்கவே அரசும் அதன் பலாத்கார பாதுகாவலரான முப்படைகளும் வன்முறையற்ற கருத்தியல் அரசு யத்திரங்களும் வகுக்கப்படுகின்றன.
இன்றைய நிலை சோஷலிசப் போக்கில் வறுமையை ஒழிப்பதல்ல. சோஷலிசம் என்பது வறுமையைப் பகிர்வதல்ல. உற்பத்திச் சாத னங்களை மக்களுடைமை ஆக்குவது உற்பத்தியைப் பெருக்குவது. அரசின் பலாத்காரத்தை மேலும் பலப்படுத்துவதல்ல; உற்பத்திச் சாதனங்கள் மக்களுடைமையாக, அரசு யந்திரம் பலமிழந்து வரும்.
ம் நாடு மூன்ரும் உலக நாடு. உலகக் கடனில் வாழும் நாடாகி விட்டது. ஆண்டுதோறும் கடன்பட்டே வாழும் நிலை. வறிய நிலை ஆயினும் மேலும் கடன்படுவதோடு எமது வறுமையையும் பகிர்ந்து கொள்ளுவோம்.
தானே பழம் விழாது
ஒவ்வொரு சமூக அமைப்பும், வரலாறு சீராக்கும் வரை, நிரந்தரமாக நிலைக்கும் என எண்ணிக் கொள் கிறது. வரலாற்றுக் காலம் பூராவும் ஒவ்வொரு சமூக அமைப்பும் தாக்கத்திற்கு உட்படும்போது தற்காத்துக் கொள்கிறது; வன்முறையால் பேணிக் கொள்கிறது. தான கவே எந்தச் சமூக அமைப்பும் சுதந்திர உணர்வோடு மாறியதில்லை. புரட்சியாளர்க்கு சாதகமாக எந்தச் சமூக அமைப்பும் விட்டுக் கொடுத்ததில்லை.
-கஸ்ரோ
(10)

கலை, இலக்கியத்தின் * நோக்கங் ம் பணியம் நோககங்களும பணயும
轉漸漸漸漸漸漸漸漸漸漸漸 om5am 捧捧漸漸漸漸
கலே, இலக்கியத்தின் நோக்கங்கள், பணிகள் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன; கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அவற் றைத் தனித்தனியே எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக் கம். அத்தோடு இவற்றை எவ்வாறு விஞ்ஞான மயப்படுத்தி பரந்த உலகப் பணிக்காக ஆக்கக் கூடும் என்பதையும் இத்தொடர் கட் டுரை கூற முனையும்.
கலை கலைக்காகவே:
இக்கருத்தும் கோட்பாடும் இன்றும் முற்ருக மறைந்துவிட வில்லை; இந்நூற்ருண்டின் ஆரம்ப காலத்திலும் ஐரோப்பிய நாடு களில் ஆதிக்கம் செலுத்தியது. அதஞறலேயே பிளெக்கனுேங் போன்ற அறிஞர்கள் இக்கோட்பாட்டைத் தகர்ப்பதில் அதிக கவனம் செலுத் தினர்; அதிகம் எழுதினர் என்று கூறவேண்டும்.
"கலை கலைக்காகவே" என்பது ஒரு பூர்ஷ்வாக் கண்ளுேட்டமே. இன்று இக்கோட்பாடு அருகிவந்தபோதும் பூர்ஷ்வா கலை, இலக்கி யங்கள் இந்நோக்கோடு படைக்கப்படுவதைக் காணலாம்.
எவ்விதக் குறிக்கோளுமின்றி கலை இலக்கியம் படைப்பவர்கள் தமது படைப்பு எங்காவது வெளிவரவேண்டும் என விரும்புபவர்க ளும் இக்கோட்பாட்டையே பிரதிபலிப்பதையும் காணலாம். இவர் களில் பெரும்பாலோர் கலை வடிவங்களை, உருவங்களை வழிப்பட்டுப் பாராட்டுபவர்களாகவும் இருப்பர்.
கலை, இலக்கியங்களே வெறும் ரசனையாக, பொழுதுபோக்காகக் கொள்பவர்களும் இவர்களே.
"கலை கலைக்காகவே என்பது, கல் பணத்துக்காக என்பதாய்
மாறி விடுவதைக் காண்கிமுேம்" என்ற பிளெக்கனேவின் கூற்றும் நினைவு கூரக்கூடியது
( 11)

Page 8
கலை மக்களுக்காக
கலை கலைக்காக என்பதன் எதிரான கோஷம் இதுவாகும். இக் குரல் முற்போக்கானதே. ஆனல் "மக்கள்" என்பதை ஒவ்வொரு வரும் தமக்கேற்றவாறு வியாக்கியானம் செய்துகொள்கின்றனர். அவ் வார்த்தையைச் சரியாகக் கணிப்பவர், அவர் நலன் நோக்கிப் படைப்பவர்களே முற்போக்கு அணியினராவர்.
பெரும்பாலான கலை, இலக்கியவாதிகள் குட்டி முதலாளித்துவ வரம்புக்குள்ளேயே நின்று அவ் வர்க்கத்தவர்களுக்காகவே கலை, இலக் கியம் படைக்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையே. உதாரணமாக சிறுகதை, நாவல், கவிதை, புதுக் கவிதை போன்ற இலக்கிய வடிவங்களைப் படைப்போரும் படிப்போரும் குட்டி முத லானி வர்க்கத்தவரிடையேயே பெரும்பாலும் உள்ளனர். சஞ்சிகை கதை நூல்களை வாங்கிப் படிக்கும் வசதி படைத்தவர்களும் இவர் களே. இவர்கள் தமக்கொரு வட்டத்தை அமைத்துக் கொண்டு தாம் படைப்பது, படிப்பது யாவும் மக்கள் கலை, இலக்கியம் என மார்தட்டிப் பேசிக் கொள்கின்றனர். இவர்கள் தாம், சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினரே என்பதையும் மறந்துவிடுகின்றனர். சஞ்சிகை, கதை, பாடல் நூல்களின் வெளியீடு, விற்பனையிலிருந்தே இவ்வர்க் கத்தவரை இனங்கண்டு, எடைபோட்டுக் கணித்து விடவும் முடியும்"
LDT g? இம்மயக்கத்திலிருந்து விடுபடப்போலும் ‘மக்கள்" (People) என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் குறைத்து "பரந்துபட்ட மக்கள்’ (Masses) என்ற பதத்தைப் பயன்படுத்தினர்.
பரந்துபட்ட மக்கள், என அவர் "தொழிலாளர்கள், விவசாயி களையே" கருதினர்; குறிப்பிட்டார். நாட்டின் பெரும்பாலான மக்கள், உழைக்கும் மக்கள், உழைத்தும் வாழ முடியாது துன்பப் படும் மக்கள் இவர்களே. இவர்களுக்கு வேண்டிக் கலை, இலக்கியம் படைத்து இப்பாட்டாளி மக்களை விழிப்புறச் செய்வதன் ep600LD புதியதோர் சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டார். அத்தோடு இம்மாற்றத்திற்காக ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் வேண்டிய கலை, இலக்கியம் படைக்கப்படவேண் டும் எனவும் வேண்டினர்.
கலை, இலக்கியம் ஒரு தொடர்பு சாதனம் :
நிச்சயமாக, ஒவ்வொருவரும் தமது கருத்துகள், எண்ணங்களைப் பிற மக்களிடையே பரப்ப பல்வேறு வழிகளில் முயல்கின்றனர்.
( 12 )

அதற்குக் கலை, இலக்கியம் வாய்ப்பான சாதனமே. ஆயினும் எல் லோருக்கும் இவ்வாய்ப்புக் கிடைத்து விடுவதில்லை3
இன்றைய மிகப்பெரிய தொடர்பு சாதனமாக விளங்குபவை டெலிவிஷன், ரேடியோ, நாளிதழ்கள், சஞ்சிகைகள், சினிமா ஆகியவை யாகும். இவையாவும் அரசு யந்திரத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன. மேலும் பூர்ஷ்வா ஜனநாயக மற்ற பாசிச ஆட்சிக் காலங்களில் இச்சாதனங்கள் அரசு யந்திரத்தின் இரும்புக்கரங்களுள் மேலும் வலு வடைந்து விடுகின்றன.
முதலாளித்துவம் சமூக உற்பத்தியில் முன்னின்றபோதும் பண்ட விற்பனையும் லாபநோக்கமுமே அதன் முதன்மையான நோக்க மாகும். கலை, இலக்கியங்களை மக்கள் தொடர்பு சாதனமாகப் பயன் படுத்தும் போதும் லாபநோக்கமே அதன் குறிக்கோளாக இருப் பதைக் காணலாம். இதனுல் கலை, இலக்கியங்களை தம் வர்க்க நலனுக்குப் பயன்படுத்துவதுமட்டுமல்லாது அவற்றை மலினப் படுத் தியும் விடுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக இந்திய சஞ்சிகை களையும் சினிமாவையும் காணலாம்.
கலை, இலக்கிய வடிவங்கள் மனித உணர்வுகளைத் தொடவல்ல தால் மக்களைக் கவரவல்லன; அதன் மூலம் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தவும் கூடியது. ஆனல், ஆளும் வர்க்கம் சிந்தனையை மழுங் கடித்து தன் வர்க்கக் கருத்தியல்களுக்குள் அடக்கி விடுகிறது.
மனித சிந்தனையைத் தூண்டவல்ல கலை, இலக்கியங்களை ஆளும் வர்க்கமும் அவர் சார்ந்த விமர்சகர்களும் கலைத்தன்மையற்றது, பிரச்சார இலக்கியம் என்று மகுடமிட்டு ஒதுக்கிவிட முயல்கின்றனர். பெரும்பாலான குட்டி முதலாளி வர்க்கத்தவர்கூட இத்தவருன பிரச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர். முற்போக்கான புரட்சிகர கலை இலக்கியங்களை வெறும் பிரச்சாரம் என இவர்களும் கூறிவிடத் துணிகின்றனர்.
கலை, இலக்கியம் பொழுதுபோக்கிற்குரியது
சமுதாய உணர்வு குன்றிய பெரும்பாலான பூர்ஷ்வா வர்க்கத் தவர் இவ்வாறே கருதிக்கொள்கின்றனர். கலை, இலக்கியங்கள் மகிழ் வூட்டுவையாகவும் இனிமையாகப் பொழுதைக் கழிக்க உதவவேண் டும் எனவும் கூறுவர். சமுதாயப் பிரச்சினைகளை சிரத்தையோடு அணுகுவது, அவற்றிற்கு தீர்வுகாண முயல்வது, ஆழமான தத்து வார்த்தக் கருத்துக்களைக் கூற முயல்வது ஆகியவற்றை இச்சிறு பான்மை வர்க்கத்தவர் எதிர்ப்பர்.
13 ).

Page 9
கலை, இலக்கியங்களில் சோகமான காட்சிகள், கொடுமைகள், கோரக்காட்சிகளைக் கொணர்வதையும் இவ்வர்க்கத்தவர் விரும் பு வதில்லை.
சினிமா, நாடகத்திற்கு நாம் செல்வது சிந்தனையை எளிமை யாக்கிச் சிரித்துப்பொழுதுபோக்கி மகிழ்வதற்கே அல்லது அழுவதற் கல்ல என இவர்கள் கூறுவர். பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளைக் கூட இவர்கள் நன்கு ரசிப்பர். அதேவேளை வீட்டிற்கு வந்து தாம் இருண்ட சூழலில் ரசித்த காட்சிகளை ஆபாசம் எனக்கூறி தமது மனைவி பிள்ளைகளை அவற்றைப் "பார்க்க வேண்டாம்; படிக்க வேண்
டாம்" எனவும் தடுப்பர்.
நகைச்சுவையான நாடகம், சினிமா, கதைகளையே இவர்கள் பெரும்பாலும் விரும்புவர்
கலை, இலக்கிய வடிவங்கள் தரும் மயக்க நிலையை இவர்கள் வரவேற்று தம்மை அறியாது மயங்கி மகிழ்வர்.
ஒமர் கய்யாமின் மது, மள்கை, கவிதை மூன்றையும் ம்யக்க மூட்டி இன்பம் தரும் பொருட்களாக ஒப்புநோக்கும் நிலையே இது வாகும்.
கலை, இலக்கியத்தில் பிரச்சாரம் செய்தி இருக்கப்படாது
இக் கருத்துப் பற்றி "முன்னரும் குறிப்பிட்டேன். ஆனல் பிரச் சாரம் இல்லாத கலை, இலக்கியம் இல்லை என்றே கூறவேண்டும்: ஏதோ ஒரு செய்தியைக் கூறும் தொடர்பு சாதனம், அரசு யந்திரத் தின் கருத்தியலைத் தாங்கி நிற்கும்; "செய்தி சிலவற்றில் நேரடியாக வும் பிறவற்றில் தொக்கியும் நிற்கலாம்.
கலை, இலக்கியங்கள் தரும் "செய்தி"யை மூன்று கட்டத்துள் அடக்கலாம். (1) இன்றைய சமூக அமைப்பைக் கட்டிக்காப்பது: பேணுவது (2) இன்றைய சமுதாயத்தை ஏற்றுக்கொண்டு அவற்றில் சீர்திருத்தம் வேண்டுவது, (3) இன்றைய வர்க்க சமுதாயத்தை முற்ருக அழித்து தனிச் சொத்துடைமையற்ற புதிய சமுதாயம் வேண்டுவது.
வெறும் காதல் கதையில்கூட இச் செய்திகளில் ஒன்றைக் கான லாம். சாதி, மத, பிற ஏற்றத் தாழ்வுகளால் காதல் கைகூடவில்லை என ஒருவர் கதையோ, பாடலோ எழுதுவாராயின் அவர் "சீர்திருத் தம் மட்டும் வேண்டுபவராக இருப்பார் என்றே கொள்ள வேண்டும்.
( 14 )

கலை, இலக்கியம் அனுபவத்தின் தொகுப்பு
பெரும்பாலான கற்பணுவாத எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் கள் கலை, இலக்கியத்தை மனித அனுபவத்தின் தொகுப்பாகவே கொள்கின்றனர். சமுதாய உணர்வு குன்றிய பூர்ஷ்வா கலைஞர் களிடையே இக்கருத்து வேரூன்றியுள்ளதைக் கவனிக்கலாம்.
முதலாவதாக, ஒருவரின் அனுபவங்கள் பூராவும் சமுதாயத்திற்கு வேண்டியதல்ல. சமுதாயப் பொறுப்புணர்வோடு சிலஅனுபவங்கள் அவற்றிடையே மறைந்துள்ள விஞ்ஞான உண்மைகள் வெளிப்படும் விதமாகக் கூறலாம். கவிஞர் கண்ணதாசன் தன் மட்டமான نگlsp[[ பவங்கள் யாவும் சமுதாயத்திற்குத் தேவை என்ற விதமாக பலவற் றைப் பாடி, எழுதிக் குவித்துள்ளார். அது மட்டுமல்ல, அவை சரி யானவை என நீதிப்படுத்தவும் முயன்றிருப்பதைக் காணலாம். இரண்டாவதாக அனுபவங்கள், கருத்தியலாகி விடுகின்றன. அவை நினைவிலி மனதில் பதிந்துவிடுகின்றன.
கருத்தியல்கள் வெறும் கருத்துக்களாலானவை. அறிவியலுக்கோ அறிவியல் கோட்பாட்டிற்கோ உட்பட்டவையல்ல. கலை, இலக்கியம் படைக்க முற்படும்போதும் நினைவிலி மனதில் பதிந்துள்ளவையே முன்னிற்கும். இவை சொந்த அனுபவங்களும் பரம்பரைக் கருத் துகள் சார்ந்தவையாகவுமே இருக்கும். நனவோடை உத்தியில், எழுதுவதாக "பாராட்டப் பெறுபவர்கள் இத்துறையில் முதன்மை யானவர்கள்.
கருத்தியல்களால் கவ்வப்பட்ட அனுபவங்களையே நேரடியாகக் கான முடிகிறது. அவற்றுள் மறைந்துள்ள விஞ்ஞான உண்மைகள் சிறந்த கலை, இலக்கியத்தின் மூலம் வெளிப்பட வேண்டும்.
மாங்காய் மரத்திலிருந்து விழுவதை ஒவியமாகத் தீட்டலாம்: இது வெறும் அனுபவ உண்மையே. அதே ஒவியத்தில் ஒரு தாடிக் காரர் அக் காட்சியைக் காண்பதாக வரையும் போது, பூமியின் ஆகர்ண சக்தியாலேயே மாங்காய் கீழ் நோக்கி விழுகிறது என்ற விஞ்ஞான உண்மை வெளிப்படுவதைக் காணலாம்.
வெறும் அனுபவம் இயற்பண்பு வாதத்திற்கே இட்டுச் சென்று விடும்; அது சிறந்த கலை இலக்கியமாகாது. காதலாயினும் அதனிடை மறைந்துள்ள வர்க்கபேதம் வெளிப்பட வேண்டும், யதார்த்த உண்மை, விஞ்ஞான நோக்கு முதன்மைபெற வேண்டும்.
(தொடரும்)
( 15)

Page 10
உஷ் . . . மெதுவாகப் பேசுங்கள்!
擦捧激潮豪谦谦谦谦豪捧 * செ. கணேசலிங்கன்
தயவு கூர்ந்து கொழும்புவரை எங்களை ஏற்றிச் செல்வீர்களா?”
அந்த வெள்ளை நிறப்பெண் மற்ருேர் இலங்கைப் பெண்ணுேடு வந்து என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டாள். மெல்லிய மெதுவான குரல். அவளது ஆங்கில உச்சரிப்பு விசித்திரமாகவே இருந்தது. பான்ரும் சேட்டும் அணிந்திருந்தாள். முடி தோள்வரை சுருண்டு கிடந்தது. இளம் பெண். வயது முப்பதுக்கு மேல் இருக்காது.
மெல்லிய சிரிப்பை வரவழைத்தபடி என்முகத்தைப் பதிலுக் காகப் பார்த்தபடி நின்ற மற்றப் பெண் ஸ்கேட்டும் மேற்சட்டை யும் போட்டிருந்தாள். நீண்ட முடியைப் பின்னி விட்டிருந்தான். காதுக் குச்சியையும் பொட்டற்ற முகத்தையும் பார்த்து சிங்களப் பெண் எனக் கணித்துக் கொண்டேன்.
"ஒ - யெஸ்"
"தாங்யூ"
கூறியபடி இருவரும் ஏற நான் நகர்ந்து எனது சீட்டிலேயே இடம் கொடுத்தேன். ஆனல் வண்டி இன்னும் தகர முடியவில்லை.
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இந்திய டி. வி. சார்ந்த நண்பர் ஒருவரை அழைப்பதற்காக வாடகை வான் ஒன்றில் சென்றிருந்தேன். அவர் ஆறடிவரை உயர்ந்தவர். காலை நீட்டி வசதி யாக உட்காருவதற்காக முன் சீட்டில் ஏறிக் கொண்டார்.
வழமைபோல சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் இளம் பெண்கள் சாலையின் இருமருங்கும் சரமாரியாக நடந்து கொண்டிருந்தனர். வேலை முடிந்த களப்பு முகத்தில். ஆயினும் வேக மான நடை. சிறுசிறு குழுக்களாக அரட்டையடித்தபடியும் சென்றனர். மழைத் துமி வேறு விரட்டிக்கொண்டிருந்தது.
தெருவில் வழமைபோல் வாகனங்களில்லை. பஸ்களோ, பிரயாணி களை ஏற்றும் மின்ரி வான்களோ கிடையாது.
அனுராதபுரத்திற்கு அண்மையில் எப்பவெலவில் பதினேழு சிங் களவர்களை அரசுப்படை சார்ந்தவர் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டி ஜெ. வி. பி. கட்சியினர் ஹரித்தால் என அறிவித்திருந்ததாக
( 16)

எங்கும் கடையடைப்பு. வாகனங்களே ஒடவில்லை. நடமாட்டமே குறைவு. ஆயினும் சுதந்திர வர்த்தக வலயம் அவ்வறிவித்தலினல் பாதிக்கப்படாதது போலத் தெரிந்தது. அது இலங்கையிலேயே பிற நாட்டவருக்காக ஈடுகொடுக்கப்பட்ட தனி நாடுபோல் தோன்றியது.
வழமையாகவே “சிப்டு" முடிந்ததும் அவ்விளம் பெண்கள் எறும்புக் கூட்டம் போல நீர்கொழும்பு - கொழும்பு ரோட்டைநோக்கி நடப் பதைப் பல தடவை பார்த்திருக்கிறேன்.
அத்தனை ஆயிரக்கணக்கான பெண்களை ஒரே வேளையில் ஏற்றி இறக்க அரசிடம் வாய்ப்பில்லையா அல்லது அந்த இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க காலையும் மாலையும் இரண்டு மூன்று ரூபா செலவிடத்தக்கபடியான கூலி அவர்களுக்குக் கிடைப்பதில்லையா என பலதடவை நான் என்னுள்ளேயே விஞ எழுப்பியதுண்டு.
வாகனப் போக்குவரத்துக் குறைந்த அத் தெருவில் வேகமாக ஓடிவந்த எமது வான் ரெயில்வே கடவையில் மாட்டிக் கொண்டது. விமான நிலையம் நோக்கிச் செல்லவேண்டிய ரெயிலுக்காக வான் வரும்வேளை கடவை மூடப்பட்டது.
எத்தனையோ இளம் பெண்கள் எங்களைக் கடந்து சென்றபோதும் அந்த வெள்ளை நிறப் பெண்ணே துணிச்சலோடு "லிப்ட் கேட்டாள். அவளது நிலையையும் என்ஞல் உணர முடிந்தது. பணம் இருந்த போதும் ஒரு டாக்சியோ/வாடகைக் காரோ பிடிக்க முடியாத நிலை: பிரதான வீதியில் மட்டும் ஆங்காங்கே ஓரிரு அரசு பஸ் ஒடிக்கொண் டிருந்தது. தெருச் சந்திகளில் பஸ்ஸிற்காக காத்து நின்ற கூட்டத்தை வரும்போது கண்டோம்.
*நான் ஆன் மேரி. அமெரிக்காவிலிருந்து வந்துள்ளேன். இவள் இங்கே உடைகள் தைக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் கீதா.
மேல் நாடுகளில் அறிமுகப்படுத்தும் முறையிலேயே கூறி கையை நீட்டினள். நானும், என்னையும் முன் சீட்டிலிருந்த நண்பரையும் அறிமுகம் செய்தேன்.
வறுமை வறுமையை முற்ருக ஒழிக்காது செல்வத்தை குவிக்கும் சமூக அமைப்பின் நடுப்புறத்திலே ஏதோ இத்துப் போன அழுகல் இருக்க வேண்டும்; அதனலேயே இச்சமூகம் குற்றச் செயல்களையும் வேகமா கப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. - Lorrissiño
( 17 )

Page 11
கொழும்பு நகரில் "சீவியூ" ஒட்டலில் தங்கியிருக்கும் செய்தியைக் கூறியதும் அவளது பொருளாதார தராதரத்தை என்னல் உடனே கணிக்கவும் முடிந்தது. அது 5 நட்சத்திர ஓட்டலில்லை.
"இலங்கைக்கு இவ்வேளையில் உல்லாசப் பயணமா?"
என்னையறியாது நளினமாகவே என் குரல் ஒலித்தது. அவள் சிரித்தபடியே தன் பயணக் கதையைச் சுருக்கமாகக் கூறினள். அவ ளது கூற்று புதுமையாகவும் வியப்பாகவும் இருந்தது.
"நியூயோக் நகரில் உடை தைக்கும் தொழிற்சாலையில் நான் வேலை செய்கிறேன். அதே கம்பனிக்கு தென் கொரியாவிலும் இங் கேயும் கிளைத் தொழிற்சாலைகள் உள்ளன. எங்கள் தொழிற் சங்கச் செயற் குழுவில் நானும் உள்ளேன். நான் விடுமுறையில் ஆசிய நாடொன்றிற்குச் செல்லப் போவதாக சங்கத்திற்கு தெரியப்படுத்தி னேன். தென் கொரியாவிற்கும் கொழும்பிற்கும் தொழிற் சங்கக் கணக்கில் விமான டிக்கெட் தருவதாகவும் அங்குள்ள யூனியன்களோடு தொடர்பு ஏற்படுத்தி வரும்படியும் வேண்டினர்.
"தென்கொரியா போய்விட்டா இங்கே வந்தீர்கள்?"
** e.g., Llofrub’ ”
"நல்ல விடுமுறைதானே. வந்த வேலையெல்லாம் முடிந்து விட்டதா? எப்போது பயணம்?"
குட்ஸ் வண்டியின் இரைச்சலிடையே கேட்டேன். வண்டி சென் றதும் எமது வான் மீண்டும் வேகமாக பயனத்தைத் தொடர்ந்தது. சாரலோடு சேர்ந்த குளிர்காற்று இதமாக இருந்தது.
“மூன்று நாளில் போகவேண்டியதுதான். ஆனல் வந்த மற்றைய அலுவலெல்லாம் ஏமாற்றமாகி விட்டது?" w
அவன் சோர்வோடு சொன்னன்.
"ஏனப்படிச் சொல்லுகிருய்?"
*தென்கொரிய யூனியன் அங்குள்ள அரசுக்கு அஞ்சுகிறது. எங் களோடு தொடர்பு கொள்ளவே முடியாது என்று கூறிவிட்டது. இங்கே வந்தால் யூனியனே கிடையாதாம். அந்தக் கட்டுப்பாட்டுட னேயே யாவரையும் வேலையில் சேர்த்தார்களாம். இந்தப் பெண் ணையே கேட்டுப் பாருங்கள்."
( 18).

கீதாவைக் காட்டி கண்டிப்பான குரலில் கூறிஞள். அவளை ஒரளவு புரிந்து கொண்ட கீதா சமாளிப்பது போல சிரித்தாள்.
'இது சிரிப்பதற்குரிய விஷயமல்ல."
அவளின் வார்த்தைகள் உறைப்பாயிருந்தன.
இங்கே யூனியன் அமைப்பதால் உங்களுக்கு என்ன லாபம்?"
தோவின் விஞவை நான் கேட்டேன்.
"முதல் தேவை இவர்களுக்குத்தான். இந்தக் கொடுமையைக் கேளுங்கள். இவர்களுக்கு நாளுக்கு என்ன கூலி கொடுக்கிருர்கள் தெரியுமா? ஒரு டாலர் கூடக் கிடையாது. அங்கே இதே வேலைக்கு
மணிக்கு 7 டாலர் வாங்குகிருேம். நாளுக்கு 56 டாலர். அதை உயர்த்தும்படி போராடிக் கொண்டிருக்கிருேம்.
*வேலை நிறுத்தம் செய்தீர்களா?"
அவளது உள்ளக் கிடக்கையைப் பிடுங்குவதற்காகக் கேட்டேன்.
"அப்படித்தான் தீர்மானிக்க உள்ளோம். அவ்வேளை இங்குள்ள யூனியன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்தேன். ஒரே ஏமாற்றம். இந்நிலையில் நாம் வேலை நிறுத்தம் செய்தால் எமது கம்பனி எம்மை ஒதுக்கிவிட்டு இங்கே உற்பத்தியைக் கூட்டி விட லாம்.இங்கு கூலி அத்தனைகுறைவாகவும் கொடுமையாகவும் உள்ளது.”*
*அமெரிக்க இறக்குமதிக் கோட்டா” உங்களைக் காப்பாற்றும் என நினைக்கிறேன்.”
மேலும் அறிவிலியாக என்னுல் நடிக்க முடியவில்லை.
**இந்த முதலாளிகள் எங்களுக்குப் பாதுகாப்புத்தரும் கோட்டா' முறையைக் கூட இலாபம் தேட திருகுதாளம் பண்ணி விடுவார்கள்"
'நீங்கள் இங்கே விடுமுறை கழிக்க வரமுடிகிறது. கீதா அமெ ரிக்காவிற்கு வருவதாயின் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்க்க வேண்டுமல்லவா?
“அது உண்மைதான். அதற்காகத்தான் கூலியை உயர்த்த யூனி யன் அமைத்துப் போராட வேண்டும் என்றேன்.” உறுதியாக அவள் குரல் ஒலித்தது.
(19)

Page 12
“இங்கே கிடைக்கும் மலிவான உழைப்பை தைத்த ஆடைகள் மூலம் அங்கு இறக்குமதி செய்வதால் அங்குள்ள தொழிலாளர்களும் நன்மையடைகிருர்கள்தானே. உங்களுக்கு அங்கே இந்தப் பான்ட், சேட் கூட ஒரளவு மலிவாகக் கிடைக்கவில்லையா? ' அவளது உடையைச் சுட்டிச் சொன்னேன். "அது ஒரளவு உண்மைதான். ஆணுல்.’’ "இவர்கள் யூனியன் அமைத்துப் போராடும் போது, வேலை நிறுத்தம் செய்யும் போது அமெரிக்காவிலுள்ள உங்கள் யூனியன் ஆதரவளிக்குமா?" ** நிச்சயமாக" *கோட்பாட்டு ரீதியில் நீங்கள் ஒப்புக் கொள்ளலாம். நடை முறையில் நடக்கப்போவதில்லை. ’
சிறிது நேரம் அவள் மெனனமான நிலையில் சிந்திப்பது தெரிந் தது. பின்னர் சொன்னுள்; “நீங்ககூறுவதில் ஓரளவு உண்மை இருக் கத்தான் செய்கிறது."
'மூன்ரும் உலகநாட்டு கடன்பளு, சுரண்டல், சர்வாதிகார ஆட்சி போன்ற பிரச்சினைகள் பற்றி நீங்க படித்திருக்கலாம். ஆனல் இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறீர்கள் போலிருக்கிறது."
"அதில் ஒரளவு உண்மை இருக்கிறது." அடக்கமான வார்த்தை யில் சொன்னஸ்.
‘எங்க நாடுகளின் கொள்ளைச் சுரண்டலில் ஒரு பங்கை முத லாளிகள் உங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்கிருர்கள். கீதாவிற்கு நாளுக்கு ஒரு டாலர் கொடுத்து அதே உழைப்பிற்கு உங்களுக்கு 56 டாலர் தருகிருர்கள். நீங்கள் விடுமுறையில் இங்கேயே வந்து செல்ல முடிகிறது. இந்த நிலை நீடிக்கும் வரை மூன்ரும் உலக நாட்டுத் தொழிலாளரின் போராட்டத்திற்கு உங்க நாட்டுத் தொழி லாளர் உதவப் போவதில்லை."
இத்தகைய குண்டு ஒன்றை நான் தூக்கிப் போடுவேன் என அவள் எதிர்பார்க்கவில்லைப் போலும், சிறிது நேரம் வெளியே பார் வையைச் செலுத்துவது போல சிந்தனையில் ஈடுபட்டிருப்பது தெரிந் தது. களனிப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தோம். ஆற்று நீரின் ஓட்டத்தையும் எல்லையையும் அவள் நோக்குவது போலிருந்தது.
திடீரென எமது வான் நிறுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்தியபடி இரண்டு பொலிஸார் வந்தனர். உள்ளே நோட்டம் போட்டுவிட்டு பின்புறத்தைத் திறந்து காட்டும்படி டிரைவரிடம் அதிகாரத்தொணி
c 20)

யில் கூறினர். டிரைவரின் லைசென்சு, இன்சுரன்ஸ் யாவையும் கேட் டுப் பரிசீலித்தனர்.
புறப்பட அனுமதி வழங்கும்வரை மரண அமைதி. எல்லோர் முகத்திலும் அச்சம் குடிகொண்டிருந்தது.
சிறிது தூரம் கழிந்ததும் பழைய பேச்சை மறந்த நிலையில் மேரி ஆன் சொன்னள்: '
‘எப்படியானலும் அமெரிக்காவில் ஜனநாயகம் நிலவுகிறது. இங்கு வந்த சில நாளில் தெருக்களில் மெஷின் கன் ஏந்திய இரா ணுவத்தினரையும் பொலிசாரையும் ஒரே குரலில் ஒலிக்கும் பத்திரி கைகள், டி. வி. யையும் பார்த்தேன். தொழிற்சங்கமே இல்லாத நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளைப் பார்க்கிறேன். சுதந்திர வர்த்தக வலையத்தில் மட்டும் 25,000 பெண்கள் தொழிற்சங்க உரிமையின்றி உழைக்கிருர்கள். மற்றைய தொழிற்சங்கங்கள் கூட 1980ன் பின் தடுக்கப்பட்டதாக அறிந்தேன். இவற்றையெல்லாம் நாம் பார்த்த பின் ஒரு முடிவுக்குத்தான் என்னல் வர முடிந்தது." கீதாவை பஸ் நிலையத்தில் இறக்கவேண்டியிருந்தது. மேரியின் ஒட்டலை நோக்கிச் சென்ருேம். அதன் அண்மையிலேயே நண்பர் தங்கவேண்டிய/ஒட்டலும் இருந்தது. அடக்கி வைத்திருந்த என் விஞவை எழுப்பினேன். V G "எங்கள் நாடு பற்றிய உங்கள் முடிவை அறிய ஆவலாயிருக்
து." "த்ெதபடியே கேட்டேன்.
"இங்கு பாசிச ஆட்சி நிலவுகிறது போலத் தெரிகிறது." இத்தகைய பயங்கர முடிவை அவளது வார்த்தைகளில் நான் எதிர்பார்க்கவில்லை.
"உஷ். மெதுவாகப் பேசுங்கள். நாங்கள் மூன்றும் உலக நாட்டைச் சார்ந்தவர்கள்."
அரசும் சந்தையும்
சந்தைக்கும் அரசுக்கும் உள்ள உறவு இரு வழிப் பாதையாகும.
சந்தைகளுக்கு அரசுகள் வேண்டும். சந்தைகளுக்கு ஒழுங்கு முறை, சட்டமும் ஒழுங்கும், சொத்துரிமை, ஒப் பந்தங்களை நடைமுறைப்படுத்தல், நம்பிக்கையான எடை, அளவுகள், முறையான நிதி, போக்குவரத்து வசதிகளும் பிற வாய்ப்புகளும் வேண்டும். இவற்றை அரசே வழங்க நேரிடும். சந்தையால் இயலாது.
( 21 )

Page 13
தேசிய இனம் . . .
சிறுபான்மை தேசிய இனம் . . .
தேசிய சிறுபான்மை . . .
G5u goto (Nationality)
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நிலையான அரசுகள் உருவாக வில்லை. சிறு சிறு இராச்சியங்களில் மக்கள் பிளவுண்டிருந்தன. எனவே நிலையான தேசங்கள் உருவாகவில்லை;
அப்போது நிலவிய கிராமிய சயதேவை பொருளாதாரம் மக் களை இணையவிடாமல் தடுத்தது. இதை விடவும், போக்குவரத்து, செய்தி தொடர்பு, வர்த்தகத்துறை ஆகியன வளர்ச்சியடையாததால் மக்கள் சமூகங்கள் நெருக்கமாக தமக்குள் ஒன்றிணைந்து "நாம்" என்ற உணர்வைப் பெறவில்லை.
முதலாளித்துவ புரட்சிதான் நிலையான அரசுகளை உருவாக்கி, சந்தைப் பொருளாதாரத்தால் கிராமிய பொருளாதார தனிமையி லிருந்து மக்கள் சமூகங்களை விடுவித்து, ஒரே மொ ழி பேசுகின்ற ஒரே கலாசாரத்தைக் கொண்ட, ஒரே பிரதேசத்தில் வாழ்கின்ற
கடிவுள்
ஆதியில் வாழ்ந்த மனிதர்கள் கடவுள் என்னும் கருப் பொருளினை உணராதவர்கள், ஏனெனில் இயற்கையிலிருந்து தம்மை வேறுபடுத்தி நோக்கும் திறனற்றிருந்தனர். கூட்டு வாழ்க்கை தமக்களித்த சக்தியினையே அவர்கள் நிதர்சனமாகக் கண்டனர் . நீக்ரோ மக்களின் கடவுள் நீக்ரோ உருவை யொத்தவராகவும் இந்தியக் கடவுள் இந்தியரை ஒத்தவராக வும் இருக்கின்ருர்களே அதே போல் எந்த மக்களின் தத்து வங்களும் கூட்டாக அவர்களுடைய அனுபவங்களினதும் அபிலா
ஷைகளினதும் பிரதிபலிப்புகளாகவே கடவுள் இருப்பார்.
(பெண்ணின் குரல்
22 )
 

மக்களை நெருக்கமாக இணைத்து நிலையான மக்கள் சமூகங்களை உரு வாக்கியது.
அதாவது நிலையான தேசங்களை உருவாக்கி, தேசங்களை அடிப் படையாகக் கொண்ட சமூகங்களை, தேசிய இனங்களை முதலாளித் துவ சமுதாயமே உருவாக்கியது. எனவே தேசிய இனம் என்பது:-
"ஒரு பொது மொழி, ஒரு பொது பிரதேசம், ஒரு பொது பொரு ளாதாரம், ஒரு பொது கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையா கக் கொண்டு வரலாற்று ரீதியில் உருவான நிலையான மக்கள் கூட் டமே தேசிய இனம்' (ஸ்டாலின்- மார்க்சிசமும் தேசிய இனப் பிரச் சினையும்).
சிறுபான்மை தேசிய இனம் (Minority Nationality)
பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசிய இனம் பெரும்பான்மை தேசிய இனம் ஆகும். எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் தேசிய இனம் சிறுபான்மை தேசிய இனம் என்றழைக்கப்படுகிறது.
G5su sgust 65T sold (National Minority)
ஒரு நாட்டில் வாழும் வளர்ச்சியுற்ற நாகரிக மக்கள் சமூக மொன்று சிறுபான்மையாகவும் எந்த பிரதேசத்திலும் அடர்த்தியாக இல்லாமலும் வாழ்ந்தால் அது தேசிய சிறுபான்மை எனப்படும். உ+ம் இலங்கையில் வாழும் பறங்கியர், மலேயர் போன்ருேரர்.
சுருக்கமாகக் கூறினல் பிரதேச அடிப்படையில் எந்த தீர்வையும்
வழங்க முடியாத நிலையிலுள்ள, எண்ணிக்கையில் குறைவாக வாழும் வளர்ச்சியடைந்த மக்கள் சமூகமே தேசிய சிறுபான்மை ஆகும்.
அறிஞரின் பணி
திரித்துக்கூறல், தவருன கருத்துகளைத் திணித்தல், கருத் தியல், தன் வர்க்க நலன் ஆகியவற்றினூடாக முதலாளித் துவம் சமகால வரலாற்றுச் செய்திகளை கூறிவரும் பொய்மையை உடைத்துக் காட்டுவது அறிஞரின் கடமையாகும். மக்களது பொறுப்புணர்விலும் பார்க்க அறிஞரது பொறுப்புணர்வு ஆழ மானது. உண்மையைக் கூறுவதும் பொய்மையை அம்பலப் படுத்துவதும் இவர்களது பணியாகும்.
- நோம் சொம்ஸ்கி
(23)

Page 14
S2S232%52
பெண்களின்
விடுதலைப் போராட்டம்
தொழிலாளர்கள் வேலையற்றவரின் கொடிய அமைப்பின் கீழ் நசுங்கும் பிராணிகள்: அதேபோன்று ஆணினத்தின் கொடுமையான அமைப்பின் கீழ் நசியும் உயிரினப் பிராணியே பெண்ணினம். இன் றைய சமூகச் சூழலில் உழைக்கும் தொழிலாளர்களின் துன்பங்களுக் கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு இல்லாதது போலவே பெண்களின் நிலையும் உள்ளதாகும்.
இதுவரை சாதித்தது பற்றி எத்தனை பறைசாற்றிய போதும் துன்பத்தைக் தணிக்க முயன்றதேயல்லாது தீர்வு காணவில்லை. பெண் களும் உழைப்பாளருமான ஒடுக்கப்பட்ட இரு வர்க்கத்தவரும் தமது விடுதலையை அவர்களது போராட்டத்தின் மூ ல மே பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். தொழிலாளர்களது நேச சக்தி யாக சித்தாந்திகள், கலைஞர்கள், கவிஞர்கள் இருப்பது போல பெண் களும் மேம்பட்ட ஒரு பகுதி ஆண்களை நேச சக்தியாக காண்பர். பெண்கள் முழுமனிதர்களிடமும் தமது விடிவுப் போராட்டத்திற்கு நம்பிக்கை வைக்க முடியாது. அதே போல தொழிலாளர்களும் முழுமையாக நடுத்தர வகுப்பாரிடம் நம்பிக்கை வைக்க முடியாது.
(எலிஞேர் மார்க்ஸ், எட்வேட் அவேலிங்.)
MMAXM.
சந்தைகள் முதலாளித்துவத்தின் தனித்துவ அமைப்பாகும். இக்
களத்தில்தான் வெவ்ருேண முதலாளிகள் மோதுகின்றனர்; இம்மோதும்
செயற்பாடே முதலாளித்துவத்தின் "சட்டங்களை" ஆக்குகிறது.
பொது வார்த்தையில் போட்டி" என்பது மூலதனம் ஒன்ருே டொன்று மோதும் செயற்பாடாகும். போட்டியை ஏகபோகத்தோடு ஒப்பிடுவதெவ்வாறு? மூலதனங்கள் குறிப்பிட்ட சந்தைகளில் மோதுவது போட்டி; ஏகபோகம் என்பது பெரு மூலதனம் பிற சந் தைகளில் ஆதிக்கம் செலுத்துவதாகும். -சுவீசி
WMAMAWAMAMAMAMAMAMWAMA
(24)
 
 
 
 
 

எங்கும் விற்பனையாகிறது! தமிழவேள் எழுதிய
ரூபா 14,00
தமிழ் 4 ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00
A. L. வகுப்பு பாடிநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு - 12.
Te: 2 1 388