கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.06.01

Page 1
KUMARAN - 66 (01-06-1989) OG JRON,"
ಫ್ಲೆ$$$$$$$$$ಜ್ಜಿ குமரன் குரல் 3
滨 *:::::::::::::::::::::::::::::::::
குமரன் மீண்டும் வெளிவந்ததைக் கண்டு குதூகலித்துப் u Gorf எழுதியுள்ளனர். புதியவர்களின் பிரச்சினையையும் நாம் அறிவோம். சில "புரியவில்லை என்ற குரலும் எமக்கும் கேட்காமலில்லை.
தொடர்ந்து படிக்கும் வேளை சிறிதுசிறிதாக மார்க்சிய அறிவு வளரவே செய்யும். மார்க்சிய விஞ்ஞானத்தை ஒரு நாளில் ஒரு குமரன் மூலம் கற்றுவிட முடியாது. பல கால மாணவரிடையேயே மயக்கமேற்படுவதைக் காண்கிருேம்.
குமரன் வாணிப இதழல்ல. தற்போது குறிப்பிட்ட பிரதிகள் மட்டும் அச்சிடுகிருேம். ஆர்வமுள்ளவர்கள் ஆங்காங்கே விற்பனை யாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். அல்லது எமக்கு எழுத வேண்டும்.
குமரனில் வெளிவருபவை யாவும் விவாதத்திற்கு அப்பாற்பட் டவையல்ல. எவரும் விவாதிக்கலாம், விமர்சிக்கலாம். தகுதியான வற்றை நாம் வெளியிடுவோம்.
சென்ற இதழ் பற்றிய பாராட்டுக் கடிதங்கள் பல வந்துள்ளன. இட நெருக்கடி கருதி நாம் அவற்றில் சிலவற்றைத் தானும் வெளி யிட முடியவில்லை. .
சில விஞக்கள் மூலம் மார்க்சிய விஞ்ஞானத்தில் சிலர் காட்டும் ஆர்வத்தை அறிகிருேம். மார்க்சியத்தை எளிமைப்படுத்தும்போதும் பல பிரச்சினைகள் எழவே செய்கின்றன. மேலும் விளுக்கள், விமர் சனங்கள், பிற எழுத்துக்கள் எதிர்பார்க்கிருேம்.
- ஆசிரியர்.
அச்சு குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12. ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

66
1 யூன் 1989
O சீனுவின் புதிய கிளர்ச்சி
* மதி
O தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே!
விழிப்பாயிருங்கள் !
* தியாகு
O கலை, இலக்கியத்தின் நோக்கங்களும்
பணியும் - 2
* மாதவன்
о
அடிமைச்சமுதாயம் என்றல் என்ன ?
O நவீன அடிமைக் கூலிகள்
* செ. கணேசலிங்கன்
O கேள்வி? பதில்!
விகல: ரூ 31

Page 2
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும் !
போர்க்கோலம் செ. கணேசலிங்கன் மண்ணும் மக்களும்
அயலவர்கள்
பொய்மையின் நிழலில் அந்நிய மனிதர்கள்
வதையின் கதை கலையும் சமுதாயமும் குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள் சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் அபலையின் கடிதம் சொந்தக்காரன் - பெனடிக்ற் பாலன் மரணத்திற்குப் பின் - பொ. சங்கரப்பிள்ளை
சைவசித்தாந்தம் 3 )
மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம்
4.25
I 0.50
45.00
37.50
13.50
15.75
25
H 8.00
6.50
24。00
3.75
13.50
45.00
30.00
21.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு வி. பி. பி. ஏற்கப்படும்.
முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 21388

சீனுவின் புதிய கிளர்ச்சி
"மதி”
சீனவில் 1949 ல் புதிய ஜனநாயகப் புரட்சி மாவோ தலைமை யில் வெற்றி பெற்றது. புரட்சி நடந்த காலத்தில் கோட்பாட்டு ரீதியாக மாறுபட்ட கருத்து ஸ்டாலினுக்கு இருந்தபோதும் புரட்சியை சோவியத் யூனியன் வரவேற்று அங்கீகரித்தது.
1956ல் ஸ்டாலினை குருசேவ் தாக்கியபோது மாவோ மெளன மாயிருந்தார்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும் என மாவோ கூறினர். (பின்னர் இது வாபஸ் பெறப்பட்டது?)
1958 ல் கங்கேரிக்குள் சோவியத் டாங்கிகள் நுழைந்த போது சோஷலிச நாடுகளிண்ட எப்படி வன்முறையான பகைமை முரண் பாடு எழ முடியும் என்ற விஞ சீனவில் எழுப்பப்பட்டது. 1959 ல் குருசேவ் சீன விற்கு விஷயம் செய்த போதும் 60 ல் பிளவு ஏற்படத் தொடங்கி 62 ல் உலகெங்கும் கம்யூனிஸ்டு கட்சிகளிடை சோவியத் அணி, சீன அணி என்ற பிரிவு ஏற்பட்டது.
இன்று, 30 ஆண்டுகளின் பின்னர் சோவியத் தலைவர் கொபச் சேவ் சீனவிற்கு விஜயம் செய்துள்ளார். இருநாடுகளிடையும் நட் புறவு மீண்டும் ஏற்படுகிறது.
1966 ல் சீன கலாசாரப் புரட்சி பீக்கிங் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமானது.
எதிர்கிளர்ச்சி figurrars' (Rebel is Justified) as agoud யகத்தை தாக்குங்கள்’ என மாவோ ஆதரித்தார். சீன முழுவதும் கிளர்ந்தெழுந்த கலாசாரப் புரட்சி செளளன்லாய் போன்ற நடுப் போக்காளரால் தடுக்கப்பட்டது.
1976 ல் மாவோ வின் மரணத்தோடு கலாசாரப் புரட்சியின் போது ஒதுக்கப்பட்டு ஒதுங்கியிருந்தவர் தலை தூக்கினர்.
"பூனை கறுப்போ வெள்ளையோ எலி பிடித்தால் போதும்" என்ற குரலுடன் பொருளாதாரத்திற்கு முதலிடம் அளித்து, புரட்சிகர அரசியல் கோட்பாடு ஒதுக்கப்பட்டு தெங்கியோ பிங்கின் தலைமை யில் புதிய அதிகாரம் நிறுவப்பட்டது.
"நால்வர். குழு’ (gang of four) வினர் இடதுசாரித் தீவிரவாதி கள் என ஒதுக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
( 1 )

Page 3
ஆங்காங்கே நட்டமடைவதாகக் கூறப்பட்ட கம்யூன்கள் மூடப் பட்டன. "ஒவ்வொருவருக்கும் வேலைக்கேற்ற ஊதியம்" என்ற கொள்கையுடன் பொருளாதாரம் துரிதப்படுத்தப்பட்டது. வேலைத் திறமைக்கேற்ற ஊதியம் என்ற கொள்கை முன் வைக்கப்பட்டது.
"தனிநபருக்கே வேலைப்படி ஊதியமானதால் முதலாளித்துவத் திற்கு வழிவகுக்க மாட்டாது. கொள்கையில் தனிநபர் முதலாளி யாக இடமளிக்காது பார்க்க வேண்டும். சில கோடீஸ்வரர் தோன்ற லாம். ஆனல் முதலாளித்துவ முறை மீள வர முடியாது’ என சீன மார்க்சிய லெனினிசக் கோட்பாட்டாளர் எனக் கருதப்படும்
கு கயோச்சி 1986 ல் நீதிப்படுத்திஞர்.
இந்நிலை ஊழலையும் அதிகாரிகளின் துர்ப்பிரயோகத்தையும் வளர்த்துள்ளது. மாணவர்கள் இன்று ஊழலுக்கு எதிராகக் குரல் தருகின்றனர்.
இன்று பீக்கிங் பல்கலைக்கழகத்திலிருந்து மீண்டும் கிளர்ச்சி ஏற் பட்டுள்ளது. "ஜனநாயகம் வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும்" என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
பல லட்சக் கணக்கான மாணவர், தொழிலாளர், மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றுகின்றனர்.
கலாசாரப் புரட்சிக் காலம் போல மீண்டும் இராணுவம் அழைக் கப்பட்டுள்ளது.
தெங்சியோ பிங்கின் கொள்கைகள் தோல்வியடைகிறது. மீண் டும் கோட்பாடுகள் சறுக்கு மரத்தில் ஏறியவன் சறுக்குவது போல கீழே இறங்குகின்றன.
சீனுவின் நிலையைப் பற்றி 1986 செப்டம்பரில் போல் சுவீசி பின்வருமாறு குறிப்பிட்டார்:
"உற்பத்திச் சாதனங்கள் பொதுமையாகவும் வேலைக்கேற்ற பங்கீடும் இருப்பின் மட்டும் சோஷலிசமாகிவிடும் என கு சுயோச்சி போன்றேர் நம்புகின்றனர். இவ்விரண்டுமிருப்பின் முதலாளித் துவம் மீள வரும் ஆபத்திருக்காது என எண்ணுகின்றனர். அவ் விதம் பல்வேறு வித தனிச் சொத்துடனிருந்த பழைய ஆளும் வர்க் கம் ஒழிந்து விட்டது; புதிய வடிவ வர்க்க சமூகமாயினும் ஆகட்டும் எனக் கருதுகிருர் போலும்." ܗܝ
( 2)

*புதிய அரசு / கட்சி பூர்ஷ்வா புரட்சிக்குப் பிந்திய சமூகத்தில் தோன்றலாம். சோசலிசப் பாதைக்கு தொடர்ந்த போராட்ட மிருக்க வேண்டும் என்பது மாவோவின் உள்ளுணர்வாகும். "சோவு லிசத்திலும் வர்க்கப் போராட்டம் தொடர வேண்டும், பாட்டாளி யின் சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்ந்த புரட்சி நிலவவேண்டும்" என்பதே மாவோவின் கோட்பாடாகும்."
'இன்று சிறப்பாக, சீனுவில் அரசின் கொள்கை, ஒவ்வொருவ ரையும் பணக்காரராக்குவதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. கடின உழைப்பு அந்நிலைக்கு ஒரு வழி. ஆளுல் சீனப் பத்திரிகைகளைப் படிப் பதை நம்ப நேரின் சட்ட பூர்வமானதும் சட்ட விரோதமானதுமான பல வழிகள் பணம் தேட இருப்பதாக தெரிகிறது, இவை அனைத். தும் முதலாளித்துவ சமுதாயங்களுக்கு பழக்கமானவை; எதுவும் சோஷலிசத்தோடு தொடர்பானவையல்ல."
அதேவேளை சுவீசி மற்றேர் பேட்டியில் அதிகாரத்துவம் ஒரு வர்க்கமல்ல. மத்தியஸ்துவப்பட்ட அதிகாரத்துவம் இன்றைய கொள் கைகளை நிறுத்தி விடலாம் என்றும் கூறுகிறர். (பக்: 13) இக்கருத்து ஒன்றே ஓரளவு தெம்பூட்டுவதாக உள்ளது.
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12; தொலைபேசி: 2138&.
( 3 )

Page 4
அரசியலும் ஏகபோகமும்
முதலாளிகளை அல்லது பூர்ஷ்வா வர்க்கத்தவரை வியாபாரிகள், தொழிலதிபர்கள், நீதி வழங்குவோர் எனப் பிரிக்கிருேம். இம் மூவ ரில் ஆதிக்கம் மிக்க வர்க்கத்தவர் எவர் என்பது பற்றி பல கோட் பாடுகள் பேசப்படுகின்றன; குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன.
உண்மையில் பெரு முதலாளிகள் இம் மூன்று துறைகளிலும் ஈடு பட்டுள்ளனர். வணிகம், உற்பத்தி, நிதி, எல்லாத் துறைகளிலும் தமது கரங்களை இடுவதன் மூலமே ஏகபோக உற்பத்தி, விநியோக வாய்ப்பை இவர்களால் பெற முடிகிறது. வாணிபம் அல்லது யந்திர உற்பத்தியில் மட்டும் ஈடுபடுபவர் இரண்டாவது ரகத்தினராவர்.
எல்லா ஏகபோகமும் அரசியல் அடிப்படை கொண்டது. அரசி யல் ஆதரவின்றி சந்தையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி பொரு ளாதாரத்தில் ஆதிக்கம் பெற முடியாது. அரசு என்பது முதலாளித் துவ சமூகத்தின் நடைமுறை அமைப்பாகும். அரசின் தலையீட்டால் உடனடி வாய்ப்புப் பெறுபவர் யார்? இதற்கு விடை காண்பதன் மூலம் அரசியல் விவாதங்களின் பொய்மைகள் பலவற்றை அகற்ற் முடியும். * . ر- -ms
ஒவ்வொரு தொழில் நுட்ப முன்னேற்றமும் ஏகபோகத்திற்கே வழிவகுக்கிறது:- புரூடல்
நாம் வேண்டும் புரட்சி
முதலாளித்துவத்தின் கீழ் மனிதர்கள் உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவுமே மதிக்கப்படுகிருர்கள்: இந்நிலையில் நாம் அமைக் கப் போகும் புதிய சமுதாயத்தில் எமது பொருளாதாரம் பற்றிய கூட்டு முடிவுகளைப் பொறுப்புணர்வுடன் எடுக்க வேண்டும். உதாரண மாக உயர்ந்த தொழில் நுட்பத்தை நுழைப்பது, தவிர்ப்பது எங் கள் குடும்பங்கள், எங்கள் சமூகம், எங்கள் நாடுமட்டுமல்ல உலகப் பொறுப்புணர்வையும் கொள்ளவேண்டும்; முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் அபிவிருத்தியடையாத கீழ் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அனைத்தையும் சந்தையின் மாந்திரீகமே தீர் மானிக்க அனுமதிக்க முடியாது - Gņúdio Gumšsiv (M.R)
( 4 )

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே ! விழிப்பாயிருங்கள் !!
ஆபத்து நெருங்குகிறது !!!
* தியாகு
மேல்நாட்டில் யந்திர உற்பத்தியோடு எழுந்த முதலாளித் துவம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை உடைத்தது. மனிதனைத் தனிமைப்படுத்தியது.
மனிதனின் தனிமையைப் போக்க புதிய பண்டங்களையும் முத லாளித்துவம் உற்பத்தி செய்தது. தேயிலை, கோப்பி, கரும்பு, புகை யிலை ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இவற்றின் பரவலான உற்பத்திக்கு அடிமை உழைப்பு தேவைப் பட்டது. ஆபிரிக்காவிலிருந்து கறுப்பின அடிமைகள் விலங்கிடப்பட்டு கப்பல்களில் அமெரிக்காவிற்கும் கருபியன் கடல் பிரதேசத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.
இதே அடிமை உழைப்புடன் போட்டியிட தென்னிந்தியாவில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் இங்கு வெள்ளையர்களால் இறக்குமதி செய்யப்பட்டனர்.
கோப்பியின் அறுவடை காலத்தில் பெருந்தொகையாக இறக்கு மதி செய்யப்பட்டவர்கள், 1870 வரையில் நோயினல் கோப்பி அழிந்துபோக, தேயிலை தலையெடுத்ததும் நிரந்தரமாக கூலிகள் இங்கு குடியேற நேரிட்டது. தேயிலைக்கு ஆண்டு பூராவும் உழைப்பு தேவைப்பட்டது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் கூலியைப் பொறுத்தள வில் வேடிக்கையும் வேதனையும் மிக்க செய்தி யாதெனில் அவர்களது கூலி உண்மை நிலைகளில் (Real terms) என்றும் கூடியதில்லை. (அதா வது ரூபா தொகையில் கூடியதேயல்லாது பொருட்களை வாங்கும் சக்தியில் உயரவில்லை) இது கற்பனையல்ல. 1937ல் இருந்து தோட் டங்களில் வழங்கப்பட்ட கூலிகளை தரவுகளாக சேகரித்து டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்தவரின் முடிவு இதுவாகும்.
(5)

Page 5
சென்ற 16 ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி யாவரும் அறிவர். அரசு அதிகாரிகளின் ஆதிக் கத்தில் - அதிகாரத்துவ முதலாளித்துவத்தின் கீழ் - தோட்டக் தொழி லாளரின் உறவு கொண்டுவரப்பட்டது.
அதிகாரத்துவ மூலதனம் பெருந்தோட்டத் தொழிலில் நுழைந்த தினுல் நன்மைகளும் தீமைகளும் ஏற்படவே செய்தது. தேசீயமாக் கப்பட்ட பிற தொழில்கள்போல பெருந்தோட்டத் தொழிலும் ஆகி யது என்று கூறுவதில் தவறில்லை.
முக்கியமாக வங்கிக் கடன் மூலதனமும் அங்கு நுழைந்தது. இத ஞல் தொழிலாளரும் முன்னரிலும் பார்க்க சில நலன்கள், சலுகை கள் பெற்றனர் என்றும் கூறலாம். அதே வேளை மறைமுகமாக இலங்கைக்கு கடன் தந்த உலக வங்கியின் ஆதிக்கத்தில் பெருந் தோட்ட தேயிலை உற்பத்தியும் கொண்டுவரப்பட்டது என்பதைப் பலர் அறியமாட்டார்.
இன்று இந்த உண்மை வெளியாகிவிட்டது. அமைச்சர் தொடக் கம் தூங்கிக் கிடந்த பத்திரிகைகளும் குரல்கொடுக்கத் தொடங்கி விட்டன. நட்டமேற்பட்ட 180 கோடி ரூபா கடனைக் கொடுக்க வழியில்லை. தேயிலையின் சராசரி உற்பத்திச் செலவு கிலோவுக்கு ரூபா 51/- சராசரி விற்பனை விலை ரூபா 42/-. கிலோவுக்கு ரூபா 9/- நட்டமாகிறதாம். இந்த நட்டத்தை ஈடுகட்ட தோட்டத் தொழிலாளரின் இரத்தத்தை மேலும் பிழிந்து சாயமாக்கும்படி உலக வங்கி ஆலோசனை கூறியுள்ளது. தேயிலை உற்பத்தியை நட்டமின்றிச் சீராக்கினலேயே இலங்கைக்கு கடனுதவி வழங்கமுடியும் என உலக வங்கி கூறிவிட்டது. ஏனெனில் இலங்கையின் மிகப் பெரிய உற்பத்தி தேயிலையே. அது நட்டமாயின் நாட்டின் நாணபமே போய் விடுகிறது என்பதே அவர் கருத்து. மிக விரைவில் உற்பத்தித் திறமை என்ற பெயருடன் ஆள் குறைப்பு, நீண்ட வேலைநேரம், சுறுசுறுப்பான உழைப்பு என்ற பெயர்களில் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக் கப்பட உள்ளது. வாரத்தில் 6 நாள் வேலையை 5 நாட்களாகக் குறைக்கவேண்டும் என ஒரு நாளிதழ் குரல் தருகிறது.
உற்பத்திச் செலவிற்குக் குறைவாக ஏன் எமது தேயில்லயை நாம் விற்கவேண்டும்? இவ் வினவிற்கு எவரும் விடை தேடுவதில்லை
கொழும்பு ஏலத்தில் இந்த விலைதான் போகிறது என்பர். லிப்டன்ஸ், புரூக்பொண்ட்ஸ் போன்ற சர்வதேசக் கம்பணிகள் சிலவே கூட்டாகச் சேர்ந்து ஏலத்தில் தேயிலையின் விலையைக் கட்டுப்படுத்து கின்றன:
(6)

இக் கம்பனிகளுக்கு அடிமைப்பட்டே எமது உற்பத்தி நடை பெறுகிறது. மலையக மக்களின் நிலம் யாவும் ஏகாதிபத்தியச் சந் தைக்கான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. கண்டிச் சிங்களவர்கள், பிற மலையக மக்கள் வாழுவதற்கு நிலமில்லை என பிற மாவட்டங் களில் குடியேற்றப்படுகின்றனர். இதனுல் நாட்டின் அமைதியே இன்று குலைந்து கிடக்கிறது. -
தேயிலை உற்பத்தியில் அரசு வரியாக ஒரு பங்கு பெறுகிறது. மற்றும் ஆளும் வர்க்கத்தவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. அதன் மூலம், தமக்கு வேண்டிய கார் கள், எண்ணெய் தொடக்கம் ஆடம்பர உடை, உணவு பிற அழகு சாதனப் பொருட்கள் யாவையும் இறக்குமதி செய்கின்றனர். இவ் வாய்ப்புக்களை இழக்க ஆளும் வர்க்கம் தயாரில்லை. தொழிலாளரை மீண்டும் நசுக்க முயல்கிறது.
தேயிலை மூலம் சர்வதேசக் கம்பனிகள் கொள்ளை லாபமடிக்கின் றனர். அவர்கள் என்றும் நட்டமடைவதில்லை. இங்கு ரூபா 41க்கு வாங்கும் தேயிலையை இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கிலோ ரூபா 200 - 250க்கு மேலாக விற்கின்றனர். எமது ஆளும் வர்க்கத்தால் இவ் விற்பனைத் தொழிலைச் செய்ய முடியவில்லை. அரசிடமும் அதற் கேற்ற மூலதனமில்லை. அதஞலேயே எமது ஆளும் வர்க்க முதலாளி கள் வெளிநாட்டாரின் தரகு முதலாளிகளாகவே இயங்குகின்றனர். அதிகாரத்துவ தரகு முதலாளிகளாக அரசும் இயங்குகிறது.
நட்டமடையும் பெருந்தோட்டங்களை, அங்குள்ள உற்பத்திச் சாதனங்களுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கே கொடுத்துவிட லாமே. அவர்கள் வெளிநாட்டுச் சந்தைக்கு அடிமையாகாமல், தேயிலை நட்டந்தருமாயின் தமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை யாவது உற்பத்தி செய்து சுதந்திர மனிதராக, வறுமையின்றி வாழ் வர். தொழிலாளர்கள் பெயரில் மத்திய வங்கியிலுள்ள சேமிப்புப் பணத்தையும் அவர்களிடமே தந்துவிடலாம்.
முதலாளித்துவ உற்பத்தி
நுகர்வின் நோக்குமட்டுமல்ல, நுகர்வின் முறைகளையும் உற் பத்தியே உற்பத்தி செய்கிறது; அதாவது நுகர்வு உற்பத்தியின் குறிக்கோளுடன் படைக்கப்படுவது மட்டுமல்ல அகநிலை சார்ந்தது மாகும். உற்பத்தியே நுகர்வோனைச் சிருட்டிக்கிறது.
. ------- ., ubir rifai ədib
(7 )

Page 6
கலை, இலக்கியத்தின் நோக்கங்களும் பணியும் - 2
- மாதவன் -
இக்கட்டுரைத் தொடரில் உதாரணங்கள் கூறி விளக்கும்படி சிலர் வேண்டியுள்ளனர். இட நெருக்கடி வேறு ஆயினும் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் உதாரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
7. கலை, இலக்கியம் வெறும் கற்பனை
யதார்த்த வாழ்க்கையையே நாம் காண்கிருேம்; அநுபவிக் கிருேம்; அவை கலை இலக்கியத்திற்கு அவசியமில்லை. கற்பனையையே மக்கள் கலை, இலக்கியத்தில் காண விரும்புகின்றனர்.
மக்கள் துன்ப வாழ்க்கையை மறந்து 3 மணி நேரம் கனவுலகத் தில் வாழ்வதற்கே சினிமா என்றவாறு இந்திய சினிமாவில் ஒருகால கட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிய எஸ். எஸ். வாசன் கூறுவார்.
சினிமாவையே 'கனவுத் தொழிற்சாலை’ என இன்றும் பலர் கூறு கின்றனர்.
கற்பனை என்பது மனித இனத்தின் தனிச் சொத்து. பெரும்ைப் பட வேண்டியதே.
சிலந்தி உள்ளுணர்வாகவே ஒருரக வலையைப் பின்னுகிறது. தன் கற்பனையுடன் படம் கீறிவிட்டு அதைக் கட்டிடமாக எழுப்பும் திறன் மனிதனுக்கே உண்டு என மார்க்ஸ் கூறுவார்.
ஆணுல் கலை, இலக்கியம் முழுக் கற்பனையல்ல. எத்தகைய கற் பனையும் உலகைப் பற்றியோ பிரபஞ்சத்ப்ை பற்றியோதான் மணி தனது கற்பனை, சிந்தனை சுழல்வதைக் காணலாம் வெறும் கற்பனை என்று எதுவும் இல்லை. மனிதன் கற்பனையில் கடவுளைப் படைக்கும் போதும் மனித உருவிலேயே படைத்தான்.
ஆளுல் நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் அதீதக் கற்பனைகளை கலை, இலக்கியங்களில் காணலாம். இயற்கையைப் போற்றுதல், இயற்கையின் வர்ணனை, புராண இதிகாசக் கதைகளைப் பாராட்டி அவற்றுடன் ஒன்றுதல் யாவும் நிலப் பிரபுத்துவ குளும்சங்களே
( 8 )

யாகும். இன்றும் இந்திய டி. வி.யில் மகாபாரதமும் இராமாயண மும் நாடகமாகக் காட்டப்படுவதும் அவை மக்களால் கவரப்பட் டிருப்பதும் அங்குள்ள நிலப்பிரபுத்துவ சிந்தனையின் இறுக்கத்தையே காட்டுகின்றன. இக் கதைகள் புகட்டும் கருத்தியல்கன் பரம்பரை யாக மக்கள் சிந்தனையை சவ்வியுள்ளன.
முதலாளித்துவத்தில் கலை, இலக்கியம் அதீத கற்பனையிலிருந்து விடுபட்டு இயற் பண்புவாத நிலையை அடைகிறது. சோஷலிசக் கோட்பாடும் சிந்தனையுமே யதார்த்த நிலையை கலை, இலக்கியத்தில் கொணர்கிறது. இதுபற்றி கலாநிதி கைலாசபதி தன் "தமிழ் நாவல் இலக்கிய நூலில் நன்கு தெளிவாக்கியுள்ளார்; அத்தோடு இயற் பண்புவாதத்திற்குமுள்ள வேறுபாட்டையும் நன்கு விளக்கியுள்ளார்.
கற்பனை, யதார்த்த நிலையோடு பரந்த சமுதாய உண்மைகளை விளக்கி நிற்கவேண்டும்.
8. கலை, இலக்கியம் மதத்திற்காக.
இக்குரல் எமக்குப் புதிதல்ல. 6-ம், 7-ம் நூற்ருண்டு அறநெறிக் கால சமண, புத்தமதத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக, பக்தி நெறிக் கால சட்டத்திலிருந்து சைவமும்தமிழும் இரண்டறக்கலந்தவை, ஒன்றிணைந்தவை என்ற குரல் தமிழர்களால் முன்வைக்கப்பட்டே வந் துள்ளது. பக்தி இலக்கியத்திலிருந்து பாரதிவரை மட்டுமல்ல இன் றும் பண்டைய சலை, இலக்கியங்களைப் பேணுபவர் தாமே என சைவ மதவாதிகள் கூறிக்கொண்டே இருக்கின்றனர்.
கலை, இலக்கியங்கள் மனிதரின் உணர்வுகளைக் கவரவல்லன. அன்ருட துன்பங்களை மறந்து புத்துணர்வூட்டவல்லன. இத் தனிச் சிறப்புகளால் கலை, இலக்கியங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்ற கருத்தை மதவாதிகள் மக்களிடை திணித்தனர். இவை யாவும் தெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும் எனவும் இவர் கள் கூறி கலை, இலக்கியங்களை மதப் பிரசாரத்திற்காகப் பயன்படுத் தும்படி அரசுடன் இணைந்து தூண்டினர்; வெற்றியும் கண்டனர்.
இசை, கவிதை, ஓவியம், சிற்பம், நடனம் அனைத்தும் இன்றும் மதம் சார்ந்து நிற்பதைக் காணலாம். பாரதி கவிதைகளில் பாதிக்கு மேல் பக்தி பரவசப் பாடல்களாக இருப்பதை அறிவோம். இன்று கட்டப்படும் கோவில்களும் மண்டபங்களும் இப் பிடியிலிருந்து விலகி விடவில்லை. பரத நாட்டியம் முழுக்க தெய்வீகப் பாடல்களின் அபி நயமாகவே உள்ளது. ரேடியோ, சினிமா, டீவி, கசெட் போன்ற நவீன தொழில் நுட்பக் கருவிகளும் மதம் சார்ந்து நிற்பதை நாள்
(9)

Page 7
தோறும் காண்கிருேம். நிலப் பிரபுத்துவ உற்பத்திமுறை ஆதிக்கம் செலுத்தும்வரை மதப்பிடியிலிருந்து கலை, இலக்கியங்களும் விடுதலை பெறுதல் எளிதல்ல.
9 கலை, இலக்கியங்கள் முரண்பாடுகளை வெளிப்படுத்தவேண்டும்.
முரண்பாடுகள் என்றதும் ஏழை பணக்காரன், உடையவன் இல்லாதவன், நகரத்தவன் கிராமத்தவன், ஆணினம் பெண்ணினம் என்பவரிடையே உள்ள வேறுபாடுகளை மட்டும் கூறுவதே எனப் பலர் எண்ணிக்கொள்கின்றனர்.
அவற்றிற்கு மேலாக முரண்பாடுகள் விஞ்ஞானபூர்வமாக அணு கப்படவேண்டும். 'முரண்பாடு" என்பது மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தில் முதன்மை பெறும் அம்சமாகும். முரண் பாடுகள், அவற்றின் மோதலே சமுதாயத்தை முன்னேக்கித் தள்ளு கிறது; முரண்பாடுகள் இருவகை. பகைமை முரண்பாடு. பகைமை யற்ற முரண்பாடு. மனித உழைப்புச் சுரண்டப்படும்போது எழுவது பகைமை முரண்பாடு. இது வன்முறையாலேயே தீர்க்கப்படுவது. பகைமையற்ற முரண்பாடு வன்முறையின்றி பேச்சுவார்த்தைகள், விவாதம், பிற நடைமுறைகளால் தீர்க்கக்கூடியவை. பகைமையற்ற முரண்பாடுகளை பகைமையாகத் தீர்க்க முயல்வதும் பகைமை முரண் பாடுகளை பகைமையற்ற முறையில் தீர்க்க முயல்வதும் தீவிரவாதப் போக்குகளாகும். நடைமுறையில் மட்டுமல்ல; கலை, இலக்கியத்திலும் இவற்றைக் காணலாம்.
முரண்பாடுகளிடை எழும் வர்க்க நலன்கள், பிரிவு சளையும் நாம் அவதானிக்கவேண்டும்.
இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக ‘நிலக்கரியும் சிறுவனும்" என்ற பிரபல கதையைக் கூறலாம்:
கிடுங்குளிர். தணிந்துகொண்டிருந்த அடுப்பங்கரையில் தந்தை யும் மகனும் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்.
** அப்பா, குளிர் தாங்கமுடியவில்லை. அடுப்பிலே கொஞ்சம் நிலக்கரி போட்டுவிடேன்" எனக் கேட்ட மகனுக்கு தந்தை மன நோவுடன் பதில் சொன் ஞர்.
ாகரி இல்லையே. எனக்குக் கூட நடுங்குகிறது.” "ஏனப்பா கரி இல்லை?”
"கரிவாங்கக் காசில்லை."
( 10 )

'ஏன் கா சில்லை?”
"நிலக்கரிச் சுரங்க வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்." 'ஏனப்பா நீக்கினர்கள்?"
*நாங்கள் ஏராளமாக நிலக்கரியைக் கிண்டிக் குவித்து விட்டோ மாம். அது விற்பனையாகவில்லையாம். வேலையிலிருந்து நீக்கி விட்டனர். '"
இச் சிறுகதை சமூக முரண்பாடுகள் பலவற்றைக் காட்டுகிறது. வர்க்க முரண்பாடு, உற்பத்தி ஒரு பக்கம் குவிந்து கிடக்க, உற்பத்தி செய்தவருக்கே அப்பண்டம் கிட்டாத கோரத்தையும் காண்கிருேம். இதையே இன்றைய சமூகத்தில் உழைப்பவனுக்கே உழைத்த பண் டம் அந்நியமாகிறது என்று கூறுகிருேம். தானியங்களை விளைவித்துக் குவிக்கும் கூலி விவசாயியே பெரும்பாலும் பட்டினியாகக் கிடப்பதை யும் உலகெங்கும் காண்கிருேம்.
10. கலை, இலக்கியம் ஒரு ஏமாற்றுவித்தை
படைப்பாளிகள் பலரிடை இக் கருத்து நிலவுகிறது. படிப்பவர் களை, பார்த்து ரசிப்பவர்களை சில உத்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றி விடுவதே கலை, இலக்கியம் என இவர்கள் நம்புகின்றனர். காதல், செக்ஸ், மரணம், பயங்கர சம்பவங்களை புகுத்தி அதீத உணர்வுகளைக் கிணறுவதில் இவர்கள் வெற்றியும் காண்கின்றனர். இவற்றை விற் பனை செய்து பணமும் சேர்த்துவிடுகின்றனர். மக்கள் இவற்றையே விரும்புகின்றனர், கேட்கின்றனர் நாம் தருகிருேம் எனவும் வாதாடு கின்றனர். சினிமாத் துறையில் இப்போக்குகளைப் பரவலாகக் காண லாம். கொமிக்ஸ், பயங்கர கதை, நாவல், சினிமாக்கள், செக்ஸ் படம் போட்ட பொக்கெட் நாவல்களின் விற்பனைகளிலிருந்தும் இப் பரிதாப நிலையை அறியலாம்.
ஆளுல் கலை, இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கை கவனிப்பவர், ஆராய்ச்சியாளர், அறிஞர்கள் இவற்றை ஒதுக்கிவிடுகின்றனர். சிறு பான்மையினரின் கலை, இலக்கியப் படைப்புக்களையே முதன்மை யாகக் கொள்கின்றனர்.
விற்பனையை மையமாகக்கொண்ட முதலாளித்துவம் மனிதர்களின் பலவீனங்களை நன்கு பயன்படுத்தியும் விடுகிறது.
முதலாளித்துவ சினிமாத் தொழில், வன்முறை, செக்ஸ் இரண்
டையும் கொண்டே வளர்க்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் கதாநாயகனின் தொப்பியே ஏன் விழவில்லை, அவனுக்கு ஏன் காய
11 )

Page 8
மேற்படவில்லை என்ற பகுத்தறிவு வினக்களை எழுப்பாமலே பாமர மக்கள் பார்த்து மகிழ்வதைக் காணலாம். காட்சிகள் அத்தனை வேக மாக ஓடிவிடுகின்றன. சினிமாவில் காட்டப்படும் செட்டுசளை நிஜ மான வீடுகள் என நம்புகின்றனர். கதாநாயகன், கதாநாயகி அத் தனை அழகி என முகப்பூச்சையும் காமரா கலை நுட்பங்களையும் மறந்து வியக்கின்றனர். அழகிய முகங்களையே மக்கள் திரையில் காண விரும்புகின்றனர், அவலட்சணங்களையல்ல என டைரக்டரும் தயா ரிப்பாளரும் வாதிக்கின்றனர்.
அண்மையில் அமெரிக்காவில் பிரபலமாக ஓடிய டிவி தொடர்
a. o samu
கதைகள் இங்கும் காட்டப்படுகின்றன. அவை யாவும் சில வாய்
பாடான உத்திகள், சம்பவங்கள், எடிட்டிங் முறைகளையே கையாண்டு
விற்பனையில் வெற்றிபெறுவதை விவேகத்துடன் அவதானிப்பவர்
எளிதில் அறிவர். அவர்கள் கூட கலையை ஓர் ஏமாற்றுவித்தை யாகவே கொள்கின்றனர்.
11. கலை, இலக்கியம் வர்க்க நிலைப்பாடுகளை வெளிக்கொணர வேண்டும்
நிச்சயமாக, இது முற்போக்கு கலை, இலக்கியத்தின் முக்கிய போக்காகும். வர்க்க முரண்பாடுகள் உற்பத்தியின் வளர்ச்சிப் போக் கில் தீர்க்கப்படுவதே மார்க்சிய கோட்பாடாகும், கலை, இலக்கியம் இதற்குத் துணைபோகவேண்டும்; சமுதாய வளர்ச்சிக்கு உந்துசக்தி யாக அமையவேண்டும்.
கலை இலக்கியம் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் அவர்களது போராட்டம், எழுச்சிகளை நீதிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். மக்களின் துன்பம், துயர், ஆற்றுமைக்குரிய வர்க்க நிலைகளைத் தெளிவுபடுத்தவேண்டும்.
*தாபரனின் கதை" என்ருேர் கன்னடச் சிறுகதை திரைப்பட மாக்கப்பட்டு 1986-ன் சிறந்த சினிமாவாக இந்தியாவில் பரிசுபெற் றது. (சாருகாசன் இப்படத்தில் நடித்து விருதுபெற்ருர், இந்திய அரசு விருது பெற்ற எல்லாம் சிறந்தவை என்பதில்லை). இக்கதை யில் அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சாதாரண 'கிளாக் தன் பென்சனைப் பெற அலைகிருர், பென்சனை விரைவில் பெற்று நோயுற்ற தன் மனைவியின் துன்பத்தைத் தீர்க்க முயல்கிருர், பழகிய உத்தி யோகத்தர், அரசியல் எதிர்க்கட்சியாளர் அனைவரையும் அணுகு கிருர், எல்லோரும் இரக்கங்காட்டி உதவ முன்வருகின்றனர். ஆனல் உரியவேளை பென்சன் கிடைக்கவில்லை. மனைவி இறந்த பின்னரே பென்சனுக்கு அழைப்பு வருகிறது. இப்படம் அதிகாரத்துவ முத
(12)

லாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற நடைமுறையைக் காட்டிச் சாடுங் தாக அமைந்துள்ளது.
அண்மையில் "மல்லிகை மலரில் செங்கை ஆழியான் எழுதிய ‘நிம்மதியாகச் சாகவாவது விடுங்கள்" என்ற கதை இதற்கு முற்றும்
எதிரிடையாக உள்ளது.
கிராம சேவகன் ஒருவன் காலையிலிருந்து பொதுமக்களால் படும் கஷ்டங்களைக் கூறுகிறது. சிறுகதை அமைப்பில் சிறப்பாக இருந்த போதும் அது கூறும் உட்பொருள் அதிகாரிகள் துன்பப்படுவதாகச் சொல்கிறது. மக்கள் பொய்யர்களாகவும் அரசை ஏமாற்றிச் சலுகை கள் பெற முயல்வதாகவும் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என வும் கூறி நிற்கிறது. தனிப்பட்ட கிராமசேவகனின் வேலைப்பளு, அரசின் அதிகாரத்தால் வழங்கப்படுவது என்ற கருத்துக்கூட தெளி வாகவில்லை.
இங்கேதான் எழுத்தாளன், விமர்சகனது வர்க்கச் சார்பை நாம் காண முடிகிறது. கதையை அதிகாரிகளின் சார்பாக நின்று விமர்சிக்கும்போது சிறப்பானதாகவே தோன்றும். துன்பப்படும் மக்கள் பக்கம் நின்று பார்க்கும்போது பிற்போக்கான கதை என் பதில் சந்தேகமில்லை.
ஆகவே வர்க்கப் பார்வை. வர்க்க முரண்பாடு என்பன வர்க்க சமுதாயத்தில் தவிர்க்க முடியாததாகும். இவற்றை வெளிக்கொணர் வதில் கலை, இலக்கிய கர்த்தா தவறியபோதும் சுட்டிக்காட்டவேண் டியது விமர்சகனது கடமையாகும். (தொடரும்)
சோவியத் யூனியனும், சீனுவும் முதலாளித்துவ விதிகளுள் இயங்கவில்லை
ஏமாற்றமான போக்கும் பின் நோக்கும் குஞம்சங்களும் சோவியத் யூனியனிலும், சீனவிலும் ஏற்பட்ட போதிலும் அந் நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து ஒப்பு நோக்கத்தக்களவு சுதந்திரமாக இயங் கும் நிலையில் உள்ளன. முழுச் சுதந்திரம் என்று கூறுவதற்கில்லை. உலக முதலாளித்துவ அமைப்புள் வந்துள்ளதாக சிலர் கூறுவது எவ்விதத்திலும் பயனற்றது. யதார்த்தப் போக்கை இது மறைக்கிறது.
சோவியத்யூனியன் முதலாளித்துவ விதிகளுள் செயற்படவில்லை; மத்தியஸ்துவப்பட்ட அதிகாரம் இன்றைய கொள்கைகளை நிறுத்தி விடமுடியும். சீன நிலையையும் யதார்த்தமாகப் பார்க்கத் தவறு கின்றனர். அங்கும் மத்தியஸ்தப்பட்ட அதிகாரம் இன்றைய கொள் கைகளை தடுத்துவிட முடியும். சந்தை வாய்ப்புகள், முதலாளித்துவ ஊக்க முறைகளைக் கடைப்பிடிப்பது பயனுள்ளது என இந்நாடுகள் கடைப்பிடிக்கலாம். அதனல் முழு அமைப்பும் முதலாளித்துவமாகி விட்டது என்று கூறிவிட முடியாது. இன்றைய நிலையைப் பார்த்து இடது தீவிரவாதிகள் தவருக கணிக்கின்றனர் என்றே நான் கருது கிறேன். - போல் சுவீசி -
( 13)

Page 9
நவீன அடிமைக் கூலிகள்
- செ. கணேசலிக்கன் -
66
இன்னும் இந்த மாரியம்மாவைக் காணவில்லையே."
விமலா தன்னுள் முணுமுணுத்தபடி துபாயில் வாங்கிய தங்க முலாம் பூசிய தன் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டாள்.
வாயிற் படலையில் அரவம் கேட்டது. ஆர்வத்தோடு பார்த்த போது அது தோழி பாத்திமா .
அவளை வரவேற்று பயண ஏற்பாடுகளைப் பற்றி விசாரித்துவிட்டு, தன் வீட்டு ஏற்பாடுகளைப் பற்றி மனநோவோடு சொன்னன்:
"அப்பா அம்மாவை இந்த வயதான நிலையில், நோயுற்ற வேளை யில் விட்டுட்டு மீண்டும் டுபாய்க்கு வருவது சுஷ்டமாகவே இருக் குது. இரவு முழுவதும் அதுவே நினைவு. தூக்கமே வரவில்லை.”
பாத்திமாவும் தன் வீட்டுப் பிரச்சினை பற்றியும் தன் இயலா மையையும் தெரிவித்தாள். இருவரது பிரச்சினையும் சிறிதளவு வேறுபடவே செய்தது.
"டுபாயில் அந்தப் பெரியவரின் முகம் என் கண் முன்னே நிற் கிறது. அந்த வயதான உம்மாவும் அழாத குறையாக கட்டாயம் வரும்படி கூறியது மட்டுமல்ல, கையில் தொட்டுச் சத்தியமும் கேட்டதோடு தன் பணத்தில் கணவர் அறியாது இருநூறு றியால் களை என் மார்புச் சட்டையுள் திணித்துவிட்டா. என் நெஞ்சில் தொட்டமாதிரி ஆகிவிட்டது."
விமலா உணர்ச்சிவசப்பட்டுக் கூறினுள் அவள் நெஞ்சு அடைத்து கண்கள் கலங்கின.
*வாக்குக் கொடுத்துவிட்டால் என்ன கஷ்டமானலும் வார்த் தையைக் காப்பாற்றத்தானே வேணும்."
(14)
 

பாத்திமா சமாதானப்படுத்த நாணயம் பேசினுள்.
"நீயும் தூரத்திலுள்ள என்பிள்ளைதானே. உனக்கு என்ன வேணு மானுலும் தந்தி அடி அல்லது போனில் சொல்லு. உடனே பணம் அனுப்புவேன். என் பெண் எங்களைக் கவனியாது அமெரிக்காவில் குடி யேறி விட்டது என்று சொன்னது மட்டுமல்ல அவரும் வேருக ஐநூறு தந்தார். இவற்றையெல்லாம் வாங்கியிருக்கப்படாது என்று தற் போது தோன்றுகிறது."
விமலாவால் அதன்மேல் பேச முடியவில்லை.
"ஏன் வாங்கப்படாது. பணத்திற்காகத்தானே நாங்க வாப்பா, உம்மா உறவினர்களையெல்லாம் விட்டு அங்கே போனுேம். எப்படி யானுலும் உன் வீட்டு எஜமான் போல என் வீட்டாரில்லை. தூங்கும் நேரம் தவிர என் உயிரை வாங்கி விடுவார்'
பாத்திமாவின் குரலில் துன்பம் ஒலித்தது. விமலா தன் தம்பி யின் எதிர்ப்புப் பற்றியும் கூறினுள். V−
'தம்பி ஏதோ பொருளாதாரம், பாசிசம், அரசியல் என்றெல் லாம் பேசுகிருன் , தடுக்கிருன்' என்ருள். பின்னர் இருவரும் தத் தமது எஜமான், எஜமானி பற்றிய குறை நிறைகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்த வேளை வாசலில் அரவம் கேட்டது.
எதிர்பார்த்திருந்த மாரியம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என விமலா ஊகித்தாள். அவளது கையிலே ஒரு சிறு முடிச்சு மட் டும் இருந்தது. உழைட்பில் மெருகேறி வறுமையில் வாடிய உடலும் உடையும். மேல்சட்டையின் கைப்புறமும் மார்புப் பக்கமும் தொய்ந்து போயிருந்தது.
விமலாவின் வயதைத் தாண்டிய தோற்றம்.
“A மாரியம்மாதானே. உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக் கிறேன் . و ه
*வானே கிடைக்கேல்லையம்மா. ஒண்டிலை ஏறினல் ஒரே கூட்டம் கிளாக்கரப்யா சொன்னபடி கஷ்டமில்லாமல் உங்க வீட்டைத் தேடிப் பிடிச்சிட்டனம்மா?"
மாரியம்மா சுரிதாரோடு உட்கார்ந்திருந்த பாத்திமாவைப் பார்த்தபடியே சொன்னுள்.
(15)

Page 10
'இவள் என் தோழி பாத்திமா என்னேடு நாளைக்கு டுபாய்க்கு வருகிருள். இந்த வீட்டையே நீதான் இனிப் பார்த்துக் கொள்ளப் போகிருய். என் அப்பா அம்மாவை உன் பெற்ருர் மாதிரிப் பார்த் துக் கொள். உனக்கு ஒரு குறைவுமில்லாமல் நான் கவனித்துக் கொள்வேன்.'
வீட்டுச் சாவியையே மாரியம்மாவிடம் ஒப்படைத்தது போல விமலா பேசினுள்.
"கிளாக்கர் எல்லாம் சொல்லியிருந்தாரம் மா. நீங்க ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் எல்லாம் பார்த்துக் கொள்வேன். எனக்குக்கூட அப்பா அம்மா இல்லை. அந்தக் குறையைப் போக்கத் தான் இங்கே வந்திருக்கிறேன் போலே தெரிகிறது.”
மாரியம்மா பேச்சில் நேர்மையும் உண்மையும் இருப்பதாக விமலா உணர்ந்தாள். w
'உன் புருஷன் எங்கே?" பிள்ளைகளில்லயா?
பாத்திமா கேட்டாள்.
"அதை ஏன் கேட்றீங்க. என் கதையே பெரிய கதை. 81 லை தோட்டங்களை அடிச்சாங்களே. இரத்தினபுரியிலிருந்து அகதியாய் கொழும்புக்குப்போய் பின் பரந்தனிலை புருசன் பிள்ளையோடு குடி யேறினம். இப்ப வந்த குழப்பத்திலை பிறகும் அகதிமுகாம்தான். என் புருஷன் தோட்டத்திற்கே போய்விட்டார். பிள்ளை பரந்தனிலை ஒரு டீக் கடையில் மேசை துடைக்கிருன்."
தன் சோகக் கதையை நீட்ட விரும்பாதவளாக சுருக்கிக் கூறினுள்.
விமலா அவளை உள்ளே அழைத்துச் சென்று வயதான பெற் ருேரைக் காட்டி அறிமுகப்படுத்தினுள். பின்னர் வீட்டின் அறைகளை பும் அடுப்பங் கரையையும் கிணற்றையும் காட்டி முக்கிய வேலைகள் பற்றி விபரித்தாள்.
எலெக்ரிக் கேட்டலில் நீர் நிரப்பிச் சுவிச்சைப் போட்டாள். பெற்றரை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் எவ்வித ஆர்வமும் காட்டாதது மாரியம்மாவிற்கு வியப்பாயிருந்தது.
"நீங்க போறது உங்க அம்மா அப்பாவிற்கு விருப்பமில்லப் போலை கிடக்குதம்மா."
( 16)

அடுப்பங்கரையில் மாரியம்மா தணிந்த குரலில் சொன்னுள்.
'எந்தப் பெர்ருருக்குத் தான் விருப்பமாயிருக்கும்."
" அப்ப ஏனம்மா நீங்க போறிங்க."
“அது வேறை கதை. எப்பிடியும் இரண்டு வருஷத்திலை வந்திடு வேன். நீ அதுவரை நல்லாய் பார்த்துக்கொள். நான் உனக்கு வேண்டியதெல்லாம் நிச்சயம் செய்வேன்.""
"அதைப் பற்றி நீங்க கொஞ்சமும் பயப்பட வேண்டாமுங்க."
* கிளாச்கர் சந் கசாமி எனக்கு அண்ணன்முறைதான். அவர் உன்னைப் பற்றி எல்லாம் நல்லாய் சொன்னர். உனக்கு மாதம் இருநூறு ரூபா கொடுக்கச் சொன்னர். ஆனல் நான் முன்னூறு ரூபா தருவன். பிறகும் பார்த்துத் தருவேன். மூன்று சீலை கூட உனக்காக எடுத்து வைத்திருக்கிறேன்."
தாராள மனதுடன் கொடுப்பது போலப் பேசிய போதும் தான் இனிமேல் உடுக்க முடியாது கழித்த சேலை என அவள் மனம் குறு குறுக்கவே செய்தது.
'நல்லதம்மா’’
பாத்திரங்களைக் கழுவச் செய்து விமலா யாவருக்குமாக டீ தயா ரித்தாள். டீ யில் சீனி போடும்போது, "அப்பா விற்கு மட்டும் என்ன குடிக்கக் கொடுத்தாலும் சீனி மட்டும் போட்டு விட வேண்டாம்" என விமலா எச்சரித்தாள் .
*சர்க்கரை வியாதிதானே. நான் முன்னர் வேலை செய்த வீட் டில் அம்மாவிற்கு இருந்தது. 'நான் அவரின் சாப்பாட்டைக் கவ னித்துக் கொள்வேன். கவலைப்பட வேண்டாமம்மா ,'
'அம்மாவிற்கு வலக் காலிலை வாதம். கேட்கும்போது தைலம் தடவிவிடு."
**g flutbudn''
பாத்திமாவிற்காக தயாரித்த LC 68) (Lİ எடுக்கும் போது மாரியம்மா தன்மனதில் குடைந்திருந்த விஷயத்தை வெளியே எடுத்தாள்.
"நான் கேட்கிறதிற்காக கோவிக்க வேண்டாமம்மா, டூபாயிலை வீட்டு வேலைக்கே நாலாயிரம் ஐயாயிரம் ரூபா என்று கூலி தருகிருங்களாமே”
( 17 )

Page 11
““ዐb......” ”
விமலா அதற்கு மேல் நாவை அசைக்க விரும்பவில்லை.
"இரண்டு வருஷத்திலை நீங்க வேலையை விட்டு வரேக்கை அந்த வேலையை எனக்கு எடுத்துத தாங்கம்மா."
நப்பாசையுடன் மாரியம்மா நயமாகக் கேட்டாள்.
" "Lurriš56rb.’’
தரகர் பணம், விசாப் பிரச்சினை பற்றிய மாரியம்மாவின் அறி யாமையையும் அவளின் நப்பாசையையும் எண்ணி விமலா உள்ளூரச் சிரித்துக்கொண்டாள்.
டீயை எடுத்துக்கொண்டு மாரியம்மா பின்தொடர பாத்திமா உட்கார்ந்திருந்த வராந்தாப் பக்கமாக விமலா வந்தாள்.
to 60) usi கொடுக்கும்போது வாசல் பக்கமாக தம்பி தியாகன் வி ருவதைக் கண்டாள். வெளியே போனவன் பாத்திமா இருக்கும் போது வந்துவிட்டானே என மனதுள் குமைந்து கொண்டாள்.
"ஓ பாத்திமாவும் வந்தாச்சா. அக்காவோடு பாலைவனத்தில் கூலி உழைப்புக்குப் போக ஆயத்தமா?'
தியாகுவின் நக்கல் பேச்சு இருவரையும் சுட்டது.
"இங்கே வேலை வாங்கித் தாங்க நாங்க ஏன் அங்கே போகப் போகிருேம்?'
பாத்திமா அழுத்திச் சொன்னுள். ... 1
'அக்காவுக்கு இங்கே வேலையும் பொறுப்பும் இல்லையா? இந்தக் கிழடுகளை விட்டு அந்நியக் கிழடுகளுக்கா சேவை செய்யப் போக
வேணும்.
குரலை அழுத்திக் கூறினன்
"இவள்தான் மாரியம்மா. அப்பா, அம்மாவைப் பார்க்க ஏற் பாடு செய்திருக்கிறேன். நீ கூலி எதுவும் கொடுக்கவேண்டியதில்லை."
அவனது பேச்சைத் திசை திருப்புவதற்காக விமலா இடை மறித்தாள். மாரியம்மா அவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னுள்:
*இவர்தான் தம்பியா?*
( 18 )

"ஒ தேயிலத் தோட்டத்திலிருந்து வந்தவங்களா. ஒரு காலத் திலை இங்கே கூலியாக வந்தவர்கள் என்று கேலிபேசி விரட்டினுங்க. இன்று மெனிக்காவோடு வனந்தரத்திற்குக் கூலிவேலை செய்யப் போருங்க- என்ன் முரண்பாடு, வேடிக்கை."
'பொம்பிளையுங்க மட்டுமல்ல தம்பி ஆம்பிளையுங்களும் போருங்க தானே."
மாரியம்மா அவனது பேச்சைப் புரியாதபோதும் தனக்குத் தெரிந்த உண்மையை அப்பாவித்தனமாக சொன்னுள்.
"இந்த நாட்டில நீர் வளமில்லை. நிலவளமில்லை. அபிவிருத்தி செய்ய ஒன்றுமில்லை. அந்நிய நாட்டு வனுந்தரத்தை வளமாக்கப் GLum ლფ näué. ’’
'ஏன் போருங்க என்று நீங்க சொல்றீங்க?”
விடையை வைத்துக்கொண்டு வின எழுப்புவள்போல பாத்திமா வின் குரல் ஒலித்தது.
*இங்குள்ள ஆளும் வர்க்கத்திற்குதேசப்பற்று இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டமோ நோக்கமோ இல்லை. நாட்டில் பாதி மக்கள் வறுமையில் வாடுகிறர்கள் என்று அவர்களே சொல் கிருர்கள். புதிய புதிய கார் ஒட்டுவதற்கும் ஆடம்பரத்திற்கும் அந் நியச் செலாவணி வேறு தேவைப்படுகிறது. பண்டங்களை இங்கே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து தேடும் எண்ணமோ திட்டமோ இல்லை. கூலிகளை அனுப்பி அந்நியச் செலாவணி தேடுகிறர்கள்."
'அண்ணு நீங்க ஏதோ சொல்லுறீங்க. எனக்கு முழுவதும் புரியவில்லை. ஆணு ஒன்று சொல்லு வன். எங்களுக்கு அங்கே தாற கூலியளவை இங்கே எவராவது தருவாங்களா?"
"ஏன் தரமுடியாது. உங்க உழைப்பிலை சராசரியாகப் பார்த் தால் ஒரு பங்கை வேலைதரும் தரகர்களும் விமானக் கம்பணிகளும் பறித்துக்கொள்கிறர்கள். மற்ருெரு பங்கை ஜப்பானும் அமெரிக்கா வும் ஆங்கிலேயரும் போட்டாபோட்டி போட்டு நுகர் பண்டங்களை விற்றும் அபகரித்துக்கொள்ளுகிருர்கள்."
*அக்கா உழைத்து வீட்டிலை ஒன்றும் மிஞ்சேல்லை என்று சொல்றீங்களா?
பாத்திமா பொறுமை இழந்த நிலையில் கேட்டாள்.
( 19 )

Page 12
'அடிமைத்தனந்தான் மிஞ்சியிருக்கு. இங்கே ஒரு கூலி அடிமையை விட்டு விட்டு அந்நிய நாட்டுக்கு அடிமைக் கூலியாகச் செல்கிருள். அவ்வளவுந்தான்.'
'உங்க பேச்சிலையும் ஆணுதிக்கமே தொனிக்கிறது. பெண்கள் வெளியே உழைக்கப் போகப்படாதா?"
'பாத் கிமா வே பெண்ணுரிமை பற்றிப் பேச முன் வந்ததே பெரிய முன்னேற்றந்தான். அந்நிய நாட்டுக்கு பெண்கள் அடிமை வேலை செய்யப்போவதில் பயனில்லை என்றுதான் சொல்கிறேன்."
தியாகு அழுத்தமாகச் சொன்னன்.
"இவனேடு பேசி நீ வெல்லமாட்டாய். இவன் இப்படியே கத் திக் கொண்டிருப்பான். நாங்களும் போய்க்கொண்டேயிருப்போம். சிங்களப் டெட்டைகள் தான் ஏராளம். வெளிநாடு செல்பவர்கள் தொகை கூடிக்கொண்டே இருக்கிறதே அல்லாது குறைந்ததில்லை.”
விமலா இடையிட்டு அவனது பேச்சை முடிக்க முயன்ருள். 'எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முடிவு வரத்தான் போகிறது."
“எங்கே வரப்போகிறது. அரசாங்கமே மத்திய கிழக்கு நாடு களில் வேலை பெற்றுத் தர உதவுகிறது. நீ என்ன பேசுகிருய்?
"அதுதான் இவர்களிடம், இந்த ஆளும் வர்க்கத்தவரிடம் நாட்டை வளமாக்க வேண்டும் என்ற தேசியப் பற்ருே திட்டமோ இல்லை. இவர்கள் அந்நிய நாடுகளின் தரகர்கள் என்று கூறுகிறேன்."
அழுத்தக் குரலில் பலத்துச் சத்தமிட்டான்.
விமலா அடிக் குரலில் கூறினள்.
*"அது சரி. இப்படியெல்லாம் பலமாகக் கத்தாதே. உனக்குத் தான் ஆபத்து வரும்.'
நேரடியான கல்விப்பணியாக பள்ளிக்கூடங்கள் உள்ளன. அதன் எதிர்மறையாகவும் ஒடுக்கும் படிப்பினைப்பணியாகவும் நீதிமன்றங்கள் இருப்பது அரசின் ஆட்சியின் மிகவும் முக்கியமானதாகும். இவை ஆளும் வர்க்கத்தின் அரசியல் கலாச்சார யந்திரத்தின் மேலாதிக்க கெடுபிடியாக அமைந்துள்ளன - கிராம்சி
( 20 )

கேள்வி 2. பதில் * “வேல்"
கே: சிறு பண்ட உற்பத்தியாளர் என்ன வர்க்கம் சார்ந்தவர்?
சி. கந்தையா யாழ்.
குட்டி பூர்ஷா (அல்லது குட்டி முதலாளி) வர்க்கம் என்போம்: இவர்களிடம் புரட்சித் தன்மை குன்றி இருக்கும். இவர்களது உபரி உழைப்பு சந்தையால் அபகரிக்கப்படுவது. பணம் படைத்த வியாபாரிகள் உற்பத்தியை அறுவடை காலத்தில் மலிவாக வாங்கி பின்னர் கூடிய விலைக்கு விற்பர். குட்டி பூர்ஷ் வாக்களால் எதிரியை இனம் காண முடிவதில்லை. சந்தையையே குறை கூறு வர். எதிரியை இனங்காணும் பாட்டாளி வர்க்கமே புரட்சி உணர்வு மிக்க வர்க்கமாகும்2
கே: பெற்ருர், ஆசிரியர், மதகுருக்களின் பாதங்களில் விழுந்து ஆசி
பெற்று மாணவர் கற்பதைப் பற்றி என்ன கூறுவீர்?
சி. கமலாதேவி கொழும்பு
ப; நிலப்பிரபுத்துவ பண்பாடுகளை மீண்டும் கொண்டுவர முயலும் முயற்சியே இதுவாகும். மதகுரு, பெற்ருர், ஆசிரியர் (குரு) பாதத்தில் விழுந்து ஆசி பெறும் பழக்கம் தமிழரினிடை அருகிவிட் டது சிங்கள வாலிபர் இத்தகைய கட்டுப்பாடுகளை விட்டதன லேயே ஆயுதமெடுத்துப் போராட முற்பட்டுவிட்டனர் என கல்வி அமைச்சர் எண்ணினர் போலும். நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை உடையும் வேளை, பரவலாகக் கல்வி கற்று உயர் கல்விக்கும் வேலைக் கும் வாய்ப்பற்ற நிலையில், அரசியலாதிக்கம் வேண்டி இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது. இதனை இத்தகைய பண்டைய பழக்க முறைகளால் மாற்றிவிட முயல்வது புண்ணுக்கு புனுகு பூசும் முயற்சியே.
கே: உபரி என்ருல் என்ன?
க. இன்பம், திருமலை.
ப; உபரிமதிப்பு என்ற மார்க்சின் வார்த்தையையே நாம் உபரி என்றே பயன்படுத்தப் பழகி விட்டோம். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் கணக்குழுக்களாக வாழ்ந்த தொல் குடிமக்கள் இடம் பெயரும் வேளை பிற குடிகளுடன் மோதல் ஏற்பட நேரும். அவ்வேளை வெற்றிபெறும் குழு ம்ற்றையதை முற் முக ஒழித்துவிடும். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைய அவர் களைக் கொன்றுவிடாது அடிமைகளாக்கி உழைக்கச் செய்தனர். (அடிமைச் சமுதாயம் என்ற கட்டுரையைப் பார்க்க) ஏனெனில் ஒரு வரது உழைப்பினுல் அவரது உயிர் வாழும் தேவைக்கு மேலாக உற்பத்திசெய்ய முடித்தது. . "
( 21 )

Page 13
இன்று உற்பத்திக் கருவிகள் வேகமாக வளர்ச்சியடைந்துவிட் டன. முதலாளிகள் எட்டுமணி நேரம் உழைக்கச் செய்து 4 மணி தேரத்திற்குரிய கூலியைக் கொடுத்துவிட்டு 4 மணி நேர உழைப்பை அபகரித்துக் கொள்ளலாம். மேலதிக நேர 4மணி உழைப்பை உபரி என்கிருேம். இதுவே மேலும் மூலதன மாகி, துரித யந்திரமாகி தொழிலாளர்களை மேலும் மேலும் அடிமையாக்க முயல்கிறது.
கே: உபரிகள் என்பவை யாவை? ப; பண்ட உற்பத்தியில் உழைப்பு அபகரிக்கப்படுவது (உபரி) புரட்சி கர உணர்வை ஏற்படுத்துவதில் முதன்மையானது. இல ப வட்டி, வாடகை, குத்தகை ஆகியன பிற உபரிகளாகும். இவை பொருளா தார முறையால் (Economic System) அபகரிக்கபபடுபவை. முத லாளி தெர்ழிலாளி, வியாபாரி நுகர்வோர், வட்டிக்குப் பணம் சொடுப்பவர் வாங்குபவர், குடியிருப்பவர் வீட்டுக்காரர், நில வுடைமையாளன் குத்தகை விவசாயி ஆகியவரிடையே என்றும் ஒற்றுமையின்றி பகை உணர்வு தலையெடுப்பதைக் காணலாம்.
கே: 'பாட்டாளி தொழிலாளி என்பதற்கிடையிலுள்ள வேறுபாடு என்ன? க. சி. திலகன், கண்டி ப: 1) பாட்டாளி என்பவன் ஒரு சொத்துமற்றவன். 2) உற்பத்தி யில் ஈடுபட்டு உபரி அபகரிக்கப்படுபவன். (பிச்சைக்காரன் பாட் டாளியல்ல 3) எதிரியை இனங்காணக்கூடியவன். சொத்தற்ற தனல் தனிச் சொத்தற்ற சோஷலிச சமூகத்தை வென்றெடுக்கக் கூடியவனும் அவனே ஆவான்.
உழைப்பை நேரக்கணக்கில் விற்று வாழ்பவரைப் பொதுவாகத் "தொழில்ாளி' என்கிருேம், எல்லாப் பாட்ட்ாளிகளும் தொழிலாளி: யாவர். ஆனல் எல்லாத் தொழிலாளரும் பாட்டாளியாகார். உ+ம். டாக்டர், எஞ்சினியர், அதிகாரிகள். உழைப்பை நேரத்திற்கு விற்றபோதும் பாட்டாளி ஆகார்.
கே. மேலாதிக்கம் செலுத்தும் முரண்பாடு என்ருல் என்ன? .ப. சிவராமன், கொழும்பு ۰-سسسسب
ப; சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள்_உள்ளன. ஒரு காலகட்டத் தில் இவற்றில் ஒரு முரண்பாடு தலைதூக்கி நிற்கலாம். அடக்கி ஒடுக் கப்படுபவர் அடக்குப்வரிடையே முரண்பாடுகள் எழுகின்றன. உதா ரணமாக இன்றைய சமுதாயத்தில் இங்கு ஒடுக்கப்படும் வர்க்கமாக தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், சாதியில் குறைந்தவராகச் கருதப்படுவர், பெண்கள், சிறுபான்மை இனத்தவர், சிறுபான்மை மதத்தவர் முதலாகக் கூறும்போதும், பேரினவாதத்திற்கும் சிறு பான்மையினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே மேலாதிக்கம் செலுத்துவதைக் காணலாம். மற்றைய முரண்பாடுகளைப் Lu6ayrir மறந்தும் மறைந்தும் விடுகின்றனர். எத்தகைய மேல்மட்ட முரண் பர்டுகள் மேல்ாதிக்கம் செலுத்தியபோதும் இறுதியில் தீர்மானிப்பது அடிப்படை அமைப்பான பொருளாதாரம் என்பதே அல்துரசரின் கோட்பாடாகும்.
( 22 )

அடிமைச் சமுதாயம் என்றல் 6T6öT6OT p * செ. க.
உணவு தேடுவதற்கும் பாதுகாப்பிற்குமாக ஆதிமனிதன் எடுத்துக் கொண்ட சருவி களை உற்பத்திக் கருவிகள் என்போம்.
தடி, கல், கூர" ன கல், கவண், அம்பு வில்லு, செம்பு உலோ கம், பின்னர் இரும்பால் ஆக்கப்பட்ட கருவிகள் என உற்பத்திக் கருவிகள் வளர்ந்து வந்துள்ளன.
(கருவிகள் வளர மக்கள் வாழக்கையும் வளர்ந்து வந்துள்ளது; சிந்தனையும் வளர்ச்சி பெற்றது. வாழ்நிலையே சிந்தனையைத் தீர் மானிக்கிறது என்பதே மார்க்சியம்; பொருள் முதல்வாதம்.)
ஆதிமனிதன் இயற்கையிற் கிடைக்கும் பழம், கொட்டை, கிழங்கு களையே தேடி உண்டு வந்தான். தன் தேவைக்கு மேலாக எதை யும் சேகரிக்கவோ உற்பத்தி செய்யவோ முடியவில்லை. காரணம் அவனது உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையவில்லை.
ஆதி மனிதர் கணக்குழுக்களாக, குடிகளாக வாழ்ந்தனர் வரட்சி வெள்ளம் ஏற்படும் வேளை உணவு தேடி இடம் பெயர்ந்தனர்" அவ்வேளை பிற கணக் குழுக்களுடன் மோத நேரிட்டது. முன்னே றிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டவர் வெற்றி பெற்றனர். தோல்வியடைந்த குழுவினரை முற்ருக கொன்று அழித் கனர், ஏனெனில் அவர்களால் எவ்வித பயனுமில்லை, உபரியாக உற்பத்தி செய்ய முடியாதவர் எனக் கண்டனர்.
ஆனல் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்து தமது தேவைக்கு மேலால் உற்பத்தி செய்யும் காலம் வந்தது. இதையே உபரி உற் பத்தி செய்வதற்கேற்ற நிலைக்கு உற்பத்திக் கருவிகள் வளர்ந்து விட்டன என்போம் இக்கால கட்டத்தில் அலைந்து திரிந்த மக்கள் ஆற்றங் கரைகளில் நிலைபெயரத் தொடங்கி விட்டனர். மரத்தால், செம்பால் பின் இரும்புக் கலப்பையால் நிலத்தைக் கீறித் தானியம் விளைக்கத் தொடங்கினர்.
இக்காலகட்டத்தில் குழுக்களின் மோதலின்போது தோல்வி யடைந்தவர்களே அடிமைகளாக்கி உழைக்கச் செய்தனர்.
அடிமை நிலை என்பது உணவு மட்டும் தந்து உழைப்பு முழுவதை யும் அபகரிக்கும் நிலை; அடிமை எசமான் சொத்து. ஆடு மாடுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிருேமோ அப்படிச் செயல்படுத்துவது.
ஆடு மாடுகள் 4 கால் சொத்து. அடிமைகள் 2 கால் சொத்து. அடிமைகளை வாங்கி விற்றனர். அடிமைகளின் பிள்ளைகளும் பரம்
( 23 )

Page 14
பரையாக எசமானின் சொத்தே. அடிமைகளை தண்டிப்பதற்கும் கொல்வதற்கும் கூட எசமானுக்கு உரிமையிருந்தது. அரசுகளும் அதற்கு அனுமதி வழங்கின.
உரோமாபுரியில் அடிமைகளை விலங்கிட்டு வைத்தனர். உழைக் கும் வேளை மட்டும் விலங்குகளை எடுத்து விடுவர். அடிமைகளுக்கு பயிற்சி கொடுத்து ஓர் அடிமை மற்ருேர் அடிமையை ‘அரீன" என்ற அரங்கில் போரிட்டு கொல்லும் வதை பொழுது போக்காக்கி கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். அடிமைகள் சிங்கம், புலி போறை மிருகங்களுடன் போரிட்டு மடிவதையும் விளையாட்டாக்கினர்.
ஸ்பாட்டகஸ் என்ற அடிமை, அடிமைகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போரிட்டுத் தோல்வியடைந்தது அடிமை எழுச்சியைக் குறிக்கும் வரலாற்று நிகழ்ச்சியாகும். அடிமைகளால் ஆண்ட வர்க் கத்தைத் தூக்கி எறிய முடியவில்லை.
ஆபிரிக்காவிலிருந்து நீகிரோக்களை சிறைப்பிடித்து கப்பலில் ஏற்றிச் சென்று அமெரிக்காவில் ஏலங் கூறி விற்கும் வாணிபம் பெருந்தொழிலாக நடைபெற்ற காலம் கழிந்து 150 வருடங்கள் கூட ஆகவில்லை. :ே மார்கின்ஸ் என்ற ஆங்கிலேயன் இவ்வாணிபத் தில் பெரும் வணிகனக விளங்கி எலிசபெத் (1558 - 1603) இராணி யால் சேர்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டான். 1800 வரை 1.5 கோடி அடிமைகள் அமெரிக்காவில் விற்கப்டட்டனர்; இவ்வடி மைச் சொத்துகளை இனங்காள மாடுகளை இங்கு செய்வதுபோல் குறியிட்டனர். :
இந்தியாவிலும் இலங்கையிலும் அடிமைகள் விலங்கிடப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில்லை. ஆயினும் 3000 - 4000 ஆண்டுகளாக அடிமையுடைமைச் சமுதாயம் நிலவவே செய்தது. தமிழ் நாட்டிலும் கி. பி. 6 - 7 ம் நூற்ருண்டு வரையில், நிலப்பிரபுத்துவம் தலைதூக் கும் வரை அடிமை உற்பத்தி முறையே ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறையாக இருந்தது.
இன்றைய சாதிப் பிரிவினை அடிமைச் சமூக அமைப்பு முறையின் புதிய வடிவமே ஆகும். ஒருவர் உழைப்பை மற்றவர் வாய்ப்பாக அபகரிப்பதற்கு மனித வரலாற்றின் இடைக் காலத்தில் ஏற்பட்ட பிரிவினையே இதுவாகும். W
இக் காலகட்டத்தைப் பொற் காலம்" என இன்றும் பாராட்டு பவரும் உள்ளனர்
அடிமைச் சமூகத்துடனேயே மனித வரலாற்றின் குரூரமர்ன வர்க்க சமுதாயம் முதன் முதலாக ஏற்பட்டது. இன்றும் தொடர் கிறது.இதை உடைப்பதுவே மனித சமுதாயத்தின் இன்றைய பிரச்சினை யாகவும் உள்ளது.
( 24 )

எங்கும் விற்பனையாகிறது!
"தமிழவேள் எழுதிய
தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00 A. L. வகுப்பு பாடிநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel: 21388