கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.07.01

Page 1
KUMARAN - 67 (01-07-1989) C.E."
ಜ್ಞ೫೫$$$$$$$$ಣ್ಣ * குமரன் குரல் &:33:33
ஆறு ஆண்டுகளின் முன் குமரன் இதழ் களை க் கற்றவர் பலர்; அவர்களிற் பலர் சென்ற மாதமே இதழ் மீண்டும் தொடர்ந்து வருவதை அறிந்து தொடர்பு கொண்டனர். மேலும் பலர் அறியாதும் இருக்கலாம். எம்மிடம் பரவலான மக்கள் தொடர்பு சாதனம் கிடை யாது. ஆயினும் ஆங்காங்கே ஆர்வம்மிக்க நண்பர்கள் தமது பத்திரிகைகளிலும் குமரன் வெளிவரும் செய்தியை வெளியிட்டனர். அவர்கட்கு நன்றி. . . . . .
சமகால அரசியலை நாம் விமர்சனம் செய்யவில்லை என்று சிலர் எனணுகின்றனர். அது தவறு.
மார்க்சிய அணுகுமுறைக்கே நாம் வழிசாட்டுகிருேம்: து விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, சரியான அரசி யல் ஆய்விற்கு இதுவே அடித்தளம். v
அரசியல் கட்சிகளைப் பற்றி மேலெழுந்த வாரியாக விமர்சிப்பதை விட்டு அவற்றின் ஆளும் வர்க்க நலன்களை
སྤྱི་
நாம் காண வேண்டும்.
நாட்டின் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்திகள் எவை? பொருளியல் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம் பாது? ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க நிலைப்பாடு என்ன? அவற் றிக்குச் சார்பான வர்க்கங்கள் எவை?
வர்க்கமுரண்பாடுகள், அவை தீர்க்கப்படும் முறைகளை ஆராய்வதன் மூலமே சரியான அர்சியல் போக்குகளைத் தரிசிக்கலாம்.
குமரன் ஆங்காங்கே இவ ற்ற்ை அணுகும் முறைகளைச்
சுட்டிக் காட்டி வருகிருன், தொடர்ந்து வழிகாட்டுவான்.
- Sifulf.
அச்சு குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12,

67
1 at 1989
கலை, இலக்கியத்தின் நில்வுடைமைச் நோக்கங்களும் O
பணியும் -3 சமுதாயம.
* மாதவன் * செ. க.
நாட்டின் விடிவு கேள்வி? பதில் !
* செ. கணேசலிங்கன்
ஒடுக்குமுறையின்
* வேல்
m
மேல்மட்ட அமைப்பு
ஆரம்பம் என்றல் என்ன ?
சீனுவின் புதிய கிளர்ச்சி - 2
. . 大 மதி
saile6): e15. 31

Page 2
எங்கும் விற்பனையாகிறது! தமிழவேள்” எழுதிய தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00 தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00 பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன்
மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00 A. L. வகுப்பு பாடிநூல் − விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு . 12.
Tel : 2 1 388

சிணுவின் புதிய கிளர்ச்சி - 2
* மதி'
சீனுவின் மாணவர் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு விட்டதாகக் கூறப் படுகிறது.
அதுவல்ல முக்கியம். அது எவ்வாறு அடக்கப்பட்டது என்பதே முக்கிய விணவாகும்.
வன்முறையால், படையினரால் அடக்கி ஒடுக்கப்பட்டது.
1956 ல் கங்கேரிய எழுச்சி வன்முறையால் அடக்கி, ஒடுக்கப்
பட்டபோது மார்க்சிய சித்தாந்தவாதிகளுக்கும் வியப்பு ஏற்பட்டது. மாவோ கூட ஆச்சரியமடைந்தார்.
புரட்சிக்குப் பின்னர் கட்டப்படும் சோஷலிச சமுதாயத்தில் ஏற்படும் முரண்பாடுகள் எவ்வாறு கையாளப்படவேண்டும்? அங்கு ஏற்படும் முரண்பாடுகள் பகைமையற்ற முரண்பாடுகள்; அவை பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
ஆனல் நடைமுறையில் என்ன கண்டோம். காண்கிருேம்.
சோவியத்தில், கங்கேரியில் நடைபெற்றதுபோலவே இன்று சீன வில் கட்சிக்கும் மாணவர்களுக்கும் இடையில் எற்பட்ட முரண்பாடு வன்முறையால் தீர்க்கப்படுகிறது.
சீனவில் மார்க்சிய கோட்பாடுகள் கைவிடப்பட்ட நிலையை கலாச் சாரப் புரட்சியின் தோல்வியிலிருந்து காண்கிருேம்.
புரட்சிகர அரசியல் கைவிடப்பட்டு பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் போக்கைக் கண்டோம்.
"கறுப்புப் பூனை செத்துவிட்டது" என சிலர் பிரச்சாரம் செய் திருக்கலாம். ஆனல் அது இன்னும் சாகவில்லை.
சீன அரசியலுக்கு என்றும் பீக்கிங் பல்கலைக்கழகமே முன்னுேடி யாக இருந்தது.
சீன கம்யூனிஸ்டு கட்சி கூட அங்கேற்பட்ட எழுச்சியின் மூலமே நிறுவப்பட்டது.
கலாசாரப் புரட்சியும் அங்கிருந்தே ஆரம்பமானது.
帶幣帶 e

Page 3
அண்மையில் ஏற்பட்ட கிளர்ச்கியில் தெளிவான கோட்பாடுகள் வைக்கப்படவில்லை.
ஜனநாயகம் வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற குரல் களே முதன்மை பெற்றன. "ን
இவை ஒழிய மாற்று வழிகள் எதுவும் முன் வைக்கப்படவில்லை.
உண்ணுவிரதப் போராட்டம் இந்தியாவிலேயே பரவலாகப் பின் பற்றப்படுவது. *
சீனுவில் இவ் அகிம்சைப் போராட்ட வடிவம் முதல் தடவையாகப் பெருமளவில் கையாளப்பட்டது போலும்.
அமெரிக்காவுடன் சமரசம் செய்யப்பட்ட பின்னர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் புரட்சிகர அரசியல் ஒதுக்கப்பட்டு முதலாளித்துவ முறைகள் கையாளப்பட்டன.
கலாநிதி கைலாசபதி அவர்கள் சீனு சென்று திரும்பிய பின்னர் எழுதிய குறிப்பில் ஒரு பெரிய உண்மையைக் கூறியுள்ளார்.
சீனப் பல்கலைக்கழகங்களில் அமெரிக்க பாட முறைகளே பின்பற் றப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இன்று அமெரிக்கா, பிரிட்டன் சார்ந்த முதலாளித்துவ நாடுகள் சீன ஜனநாயகத்திற்காகக் குரல் எழுப்பி, சீனப் பொருளாதார உறவு களைக் குறைப்பதாகவும் எச்சரித்துள்ளன. சமரசப் போக்காளருக்கு இது நல்லதோர் பாடம்.
பத்திரிகைச் செய்திகளின்படி முதலாளித்துவ முறையால் உற் பத்தியைப் பெருக்கும் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முதலாளித்துவ உற்பத்தி முறைகள் ‘நவீன மயப்படுத்தல்" என்ற போர்வையில் புகுத்தப்பட்டன.
நடுத்தர வர்க்க பூர்ஷ்வாக்கள் பெருகியுள்ளனர். கட்டிடத் தொழில் பாதிப்படைந்தது. நகர்ப்புறங்களில் ‘நவீன மயப்படுத்தல்" வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
"மீண்டும் கிராமத்துக்கு" என்ற நிலை பரவத் தொடங்கியது. கம்யூன்கள் கலைக்கப்பட்டன. கூலி விவசாய முறை புகுத்தப்
Lull-gil.
so ty

லஞ்சம் ஊழல் மலிந்து வருவதாக மாணவர்கள் குரல் எழுப்பிய தில் உண்மையில்லாமலில்லை.
சோஷலிசத்தை மேம்படுத்துவதில் மூன்று படிகள் இருப்பதாக சீன மா-லெ-மாவோ சிந்தனை ஆய்வுக் கழகத் தலைவரான கு-சயோச்சி 1986 ல் கூறினர். (இவரின் சில கருத்துக்களை அடுத்த பக்கத்தில் பார்க்க) அவை: இடைநிலைக் காலம், சோஷலிச கட்டம், கம்யூனிச கட்டம் என்பன எனக் கூறி இன்று சீன சோஷலிச கட் டத்தில் நுழைந்திருப்பதாகவும் அதன் ஆரம்ப நிலையில் உள்ளதாக வும் தெரிவித்தார். சோவியத் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சில மட்டும் நடுப்பகுதியை அடைந்திருப்பதாகவும் கூறினர்.
சோஷலிசத்தின் மேம்பட்ட நிலையில் தற்போது தாம் நுழைவ தாக கொர் பச்சேவ் தெரிவித்தார். (சோவியத்தின் 22 வது கட்சி காங் கிரசில் 1980 ல் கம்யூனிசத்தில் தாம் நுழையப் போவதாக குருசேவ் கூறிய கூற்று பொய்மையானது என்பதை இன்று அங்கு அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.)
சோஷலிசத்தைக் கட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகளைக் காணும் கடும் போக்கு மார்க்சிய சித்தாந்த வாதிகள் சோஷலிச நாடுகள் என்று சொல்வதற்கு இன்று ஒன்றும் இல்லை எனவும் "புரட்சிக்குப் பிந்திய சமு தாயம் என்று ரஷ்யா, சீன போன்ற நாடுகளின் இன்றைய சமூக அமைப்பைக் கூறுவதே சரி என்றும் கூறுகின்றனர்.
குமரன்
தனிப்பிரதி d5 3|- 6 இதழ்கள் ரூ 17112 இதழ்கள் ரூ 33/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 21388
. . . . . .

Page 4
சீனுவின் சோஷலிசம்
பொருளாதாரம் பற்றி அடிப்படையாகச் சொல்வதாயின் இரு முக்கிய விஷயங்கள் உள. முதற் பிரதானமானது பொதுச் சொத்து. தனிப்பட்டவர் சொத்துமுண்டு. அது சிறிய பகுதியே.
இரண்டாவதாக பங்கீட்டு முறை. "ஒவ்வொருவருக்கும் வேலைக் கேற்ற ஊதியம்" - அதாவது சுரண்டல் கொண்டது. அடிப்படை யாகக் கூறுவதாயின் ஓரளவு சுரண்டல் மட்டத்தை நாம் தவிர்கக முடியாது. உதாரணமாக சிலரைக் கூலிக்கு அமர்த்தப்படுதல்,
மூன்முவதாக உழைக்கும் மக்களது அரசு உள்ளது. சிறப்பாக *உயர்மட்ட ஜனநாயகம்" என நாம் சீனவில் கூறுகிருேம்.
நாலாவதாக “பண்டப் பொருளாதாரத்தோடு இணைந்த திட்ட மிட்ட பொருளாதாரம். அதாவது நாம் சீரழிவான கடும் போட் டிப் பொருளாதார நிலையிலில்லை.
இறுதியாக, நாம் பொருள் முதல்வாத பண்பாட்டை வலி யுறுத்திய போதிலும் ஆத்மீக பண்பாட்டையும் வலியுறுத்த வேண் டும். அதாவது நாம் சில இத்துவரும் பிற்போக்கான கருத்துக்களுக் கும் அதிகாரத்துவ, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வாழும் முறை களுக்கும் எதிர்ப்பாயிருக்க வேண்டும். இத்தகைய போக்குகள் இங்கு மட்டுமல்ல எல்லா சோஷலிச நாடுகளுக்கும் பொருந்தக் கூடியன.
வரலாற்று அனுபவப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இடை நிலைக்காலகட்டத்திலேயே தேவையாகும். தனிச் சொத்துடை மையை சமூக உடைமை ஆக்கிய வெற்றியின் பின், அதாவது சோஷ லிச சமூகத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதில் வேறு பட்ட கருத்துக்கள் உள்ளன.
தற்போது சீனுவில் நாம் அழுத்திக் கூறுவது மக்கள் ஜனநாயக சர்வாதிகாரமாகும். தனிச் சொத்துடைமை சமூக உடைமை ஆக்கிய பின் சுரண்டும் வர்ககம் (முன்னைய வர்க்க நிலைப்பாட்டிலிருந்து) ஒழிந்துவிட்டது. ஆயினும் சில வர்க்கக் கருத்துகள் நிலவவே செய் கின்றன. அதனல் நாம் வர்க்கப் போராட்டம் நிலவுவதாகவே கூறுகி ருேம். இவ் வாக்கப் போராட்டம் இடை நிலக்கால கட்டத்திலிருந்து வேறுபட்டது. சில வர்க்கப் போராட்டம் வர்க்கச் சாயல் கொண் டதே; ஆனல் வர்க்கமாக இல்லை; ஏனெனில் சுரண்டும் வர்க்கம் தற்போது கிடையாது.
கு-சயோச்சி, பீக்கிங், மா, லெ. மாவோ சிந்தனைக் கழகம்.
ه . . ه . .

நோக்கங்களும் பணியும் - 3
- மாதவன் -
12. கலை இலக்கியம் அறிவுக்காக
நிச்சயமாக. ஒவ்வொருவரிடமும் அறிவு உள்ளது. அதன் தரா தரமே வேறுபடுகிறது.
உதாரணமாக அனுபவம் மூலம் பெறும் அறிவு குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் வேறுபடும். அதேபோல அவரவரின் கல்வி, கேள்விகளின் தராதரத்தைப் பொறுத்தும் மாறுபடும்.
இந்நிலைகளால் கலை, இலக்கியங்களில் ஈடுபடுபவர் பல்வேறு தரா தரத்தவராக இருப்பதைக் காணலாம். அவர்களது நுகரும் தன் மையும் வேறுபடுகிறது; படைப்பவரின் தன்மையும் அவ்வாறே. இதனல் ஒரு கலை, இலக்கியத்தைப் பார்த்துவிட்டு அல்லது படித்து விட்டு பல்வேறு கருத்துகள் கூறப்படுவதைக் காணலாம். அதே போல வெவ்வேருண விமர்சனங்களையும் பார்க்கலாம்.
இத்தகு நிலையை சினிமாத்துறையை வைத்தே எளிதில் புரிந்து கொள்ளலாம். சிறந்த சினிமா எனப் பாராட்டப்பட்டு பரிசு பெறும் படங்கள் பண வசூலில் குறைவாகவும், மட்டமான படம் என விமர்சிக்கப்பட்டு ஒதுக்கப்படுபவை நீண்ட நாள் ஒடிப் பணம் குவிப் பதையும் காணலாம். பார்வையாளரின் தராதரமே இதற்கு முக்கிய காரணமாகும். இதே நிலையை பிற கலைத்துறைகளிலும் பார்க்க லாம். அடுத்தது அறிவு என்பது பற்றி நாம் கருதுவது கற்பணு ரீதி யான அறிவல்ல. விஞ்ஞான ரீதியான அறிவு. பொருளாதார, அர சியல், சமூகவியலில் சமுதாயத்தை மேம்படுத்தக் கூடிய அறிவாகும். அது வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயக்கவியல் பொருள் முதல் வாத அடிப்படையில் எழும் அறிவாகும்.
வளர்ச்சிப் போக்கில் சமுதாயத்தைப் பார்ப்பது ம், சமு தாயத்தை, உலகத்தை மாற்றி அமைக்கும் நோக்குக் கொண்டதாக வும் அறிவு அமையவேண்டும்; சமூக முரண்பாடுகளை வளர்ச்சிப் போக்கில் கையாள்வதாகவும் சிந்தனை இருத்தல் வேண்டும்.
... . .

Page 5
மூளையில் அறிவு கிரகிக்கப்படுகிறது. புதிய கருத்துகள் அவற்றுடன் மோதுவதன் மூலமே மூளையின் சிந்தனை ஆற்றல் தொடர்கிறது. பின் அறிவு வளர்ச்சி பெற்றுக் கிரகிக்கப்படுகிறது. அவற்றை மீண்டும் ஞாப கத்தில் இருத்துவது மூளையின் மற்ருேர் சிறப்பு.
கலை, இலக்கியம் விற்பனைப் பண்டமாக்கப்பட்ட இன்றைய சமூக அமைப்பில் விஞ்ஞான அறிவு தரும் படைப்புக்களைக் காண்பது அரிதே. ஆயினும் முன்கூறிய மார்க்சிய இரு ஆயுதங்களையும் கொண்டு கலை, இலக்கியங்களை கூர்ந்து பார்க்கலாம்; அல்லது விமர்சிக்கலாம். இம் முறைகளாலும் மேலதிக அறிவைப் பெறலாம்; வளர்த்துக் கொள்ளலாம்.
டால்ஸ்டாயின் எழுத்துக்கள் அத்தனையும் முற்போக்கானவை அல்ல. ஆயினும் லெனின் அவற்றைப் படித்து விட்டு விமர்சனக் கண் ணுேட்டதுடன் கூறிஞர் 'டால்ஸ்டாயின் எழுத்துகள் மூலமே நிலப் பிரபுத்துவத்தின் கொடுமைகளை என்னல் காணமுடிந்தது.”
அதேபோல இன்றைய கலை, இலக்கியங்களை தக்கமுறையாக நாம் விமர்ச்சித்தும் தக்க அறிவை, ஆய்வு முறையைப் பரப்பலாம். நிலப் பிரபுத்துவத்தின், முதலாளித்துவத்தின் பிற்போக்கான இத்துவிடும் போக்கையும் வர்க்க நலனையும் அம்பலப்படுத்தலாம்; முற்போக்கான வழிகளையும் காட்டலாம்.
13. மொழிவள வளர்ச்சியே இலக்கியம்
பல்கலைக்கழகப் பேராசிரியர் பலர் கூட இவ்வாருன கருத்துக் கொண்டுள்ளனர். இது இலக்கிய உருவம், வடிவம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்.
மொழியை ஆக்கபூர்வமாகக் கையாள்வதன் மூலமே சாகா இலக் கியத்தை, காவியத்தைப் படைக்க முடியும் எனவும் இவ் உருவ வழி பாட்டாளர் கூறுவர். இது சமுதாய உணர்வு குன்றிய ஒரு கூற்ருகும்.
இது இலக்கியத்தை பல்கலைக்கழகங்களுக்குள்ளேயும் படித்த சிறு பான்மையினரிடையேயும் ஒடுக்கும் போக்காகும். மொழியை ஆக்க பூர்வமாக க் கையாளும் விஷயங்களில் கவிதை சிறப்பானது. கவிதை களை இன்று கற்பவர் குறைவு. இசையோடு பாடப்படும் கவிதைகள் மட்டுமே பரவலாக கேட்டு, ரசிக்கப்படுகின்றன. சினிமாப் பாடல்கள் இப்போக்கிற்கு நல்லதோர் எடுத்துக் காட்டு. இங்கும் இசையே முதன்மை பெறுகிறது. மட்டமான, சமுதாய உணர்வு குன்றிய கருத் துக்களே இசைப் பாடல் மூலம் பரப்பப்படுகின்றன.
y v 0 6 8

இசை ஒலி குன்றிய வசன கவிதைகள் இன்று பரவலாக வெளி வருகின்றன. எளிதாகப் படிக்கக் கூடியதாக இவை அமைக்கப்படுகின் றன. சொற்களை ஒழுங்குபடுத்தி அவை அச்சிடப்படுகின்றன. இது எளிமைப்படுத்தும் யற்சி; மரபுக் கவிதைகளின் சிக்கலான, சந்தி பிரியாத புணர்ச்சி கொண்ட இலக்கண விதிகளின் இறுக்கத்தை தளர்த்தும் போக்கு.
தொல்காப்பிய இலக்கண விதிகளெல்லாம் இன்று உடைக்கப்படு கின்றன. வடமொழி இலக்கண விதிகளை தமிழ் மொழியில் வலிந்து புகுத்தி மொழியைச் சிக்கலாக்கிய போக்குகள் இன்று மீறப்படு கின்றன.
தொல்காப்பியம் வடநாட்டு சமண அறிஞர்கள் தமிழ் மொழியின் அமைப்புகளை அறிவதற்காக எழுதப்பட்ட நூல்; தமிழர்களுக்காக தமிழ் இலக்கணத்தை வகுக்கும் நூலல்ல; இக் கருத்துக்கள் மொழி ஆராய்ச்சியாளர்களிடையே இன்று வலுப்பெற்று வருகிறது. மொழி வளர்ச்சிக்கு இலக்கணம் ஒருபோதும் தடையாக இருக்கப்படாது. இலக்கண வரம்புகள் மீறப்படுவதால் மொழி அழிந்துவிடமாட்டாது. எச்சில் பட்டுப் பிறப்பதுவே மொழி; மக்கள் பேசும் வரை மொழி அழி யாது. பேசாத மொழிகளும் எழுத்தில் வாழ்கின்றன. மனிதர்க்கே மொழி: மொழிக்காக மனிதரில்லை.
புதுக் கவிதைகள் கவி இலக்கண விதிகளையும் மீறி மொழி யைப் பரவலாக்குவதாகும். அத்தோடு பிற்போக்கான கருத்துகளை ஓசையின் சிறப்பால் இங்கு மூடி மறைத்துவிட முடியாது. ஆயினும் புதுக் கவிதை எழுதுவோர் துக்கடாக்களாக, துணுக்குகளாக எழுத முயல்வது மொழியாலோ, கருத்தாலோ வளம் தரப் போவதில்லை.
14. கலை, இலக்கியமும் கலை உணர்வுத் தூரமும்
கலை, இலக்கியம் பற்றிய உறுதியான கோட்பாட்டை முன் வைத்தவருள் பிரெட்ஸ் (Brecht 1898 - 1956) என்ற ஜெர்மானிய நாடகாசிரியர் முதன்மையானவர்.
இவர் ஒரு மார்க்சிஸ்ட் என முதலாளித்துவ நாடுகள் ஒதுக்கினர். இன்று அவர்களே அன்னரின் நாடகங்களை மேடையேற்றி, அவரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதோடு அவரை ஒரு பகுத்தறிவாளனு கச் சமரசம் செய்ய முயல்கின்றனர்.
கலை, இலக்கியப் பார்வையாளன், படிப்பவன் கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) நின்று பார்க்க வேண்டும்; வாழ்க் கையை கலை வடிவத்தினூடாகப் பார்க்கிருேம் என்ற நினைவு பார்வை
9) v ve 7 s'

Page 6
யாளனுக்கு ஏற்படவேண்டும்; மற்ருெரு விதமாகக் கூறின் கலை, இலக் கியத்திலிருந்து அந்நியப்பட்ட நிலையிலிருந்து அவற்றைத் தரிசிக்க வேண்டும்.
\ கலை, இலக்கியத்தில் யதார்த்த வாழ்க்கையையும் மனிதர்களையும் காண்கிருேம் என்று எண்ணுபவர்கள் நிட்சயமாக ஏமாந்து விடுகிருர் கள். உண்மையில் வாழ்க்கையின் சில அம்சங்களை கலைஞன் தனக்குரிய கலைவடிவத்தின் மூலம் தருகிருன் என்பதே உண்மை நிலையாகும்.
கலை வடிவங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. மனித உணர்வுகளை கவர்ந்து தற்காலிகமாக மயக்கமேற்படுத்த வல்லன. இத்தகைய ஏமாற்றத்திற்கு பார்வையாளனை, படிப்பவனை ஈர்த்துச் செல்வது தவறு என்பதே பிரெட்சின் கருத்தாகும்.
சினிமாவில் இவ் ஏமாற்று வித்தை பரவலாகப் பயன்படுத்தப்படு வதைக் காணலாம். தியேட்டருக்குள் காணும் கூச்சல், ஆரவாரத் திடையே இப் போக்கைப் பார்க்கலாம். வேலையற்ற வாலிபனை மாடி வீட்டுப் பெண் காதலிக்க முடியுமா என்ற வினு எழுப்பிப் பகுத்தறி வைக் கொணராது அவ்வாலிபணுக நடிக்கும் கமலஹாசன் பணக் காரப் பெண்ணைக் காதலிக்க உரிமை உள்ளவன் என பார்வையாளர் ஆமோதித்து ஏமாறுவதைக் காணலாம்.
சிறுகதையோ, தா வ லோ, நா ட க மோ, சினிமாவோ, காவியமோ. அனைத்துக் கலை வடிவங்களிலும் வரும் கதாமாந்தர்கள் யாவரும் அக் கலை வடிவத்தைப் படைப்பவரால் சிருட்டிக்கப்பட் டவர் என்பதை படிப்பவர், பார்ப்பவர் எவரும் மறந்துவிடப்
lilflgile
கம்பராமாயணத்துக் கதாமாந்தர் யாவரும் கம்பணுலோ, வால் மீகியாலோ சிருட்டிக்கப்பட்டவர்கள். இதை மறந்து வாலியைக் கொன்றது நீதியா? இராமன் தெய்வ நீதி எங்கே? என்றெல்லாம் வாதம் புரிவது வெறும் பொய்மையைப் பார்த்து மயங்கி எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியாகும்.
கலை, இலக்கியங்களில் அதீத உணர்வுகளை ஏற்படுத்துவது எளி தானதே. அவை பார்க்கும் வேளை, படிக்கும் போது மட்டும் ஏற்படுத் தும் போலி உணர்வேயல்லாது சிந்தனையைத் தூண்டிவதாக அமைவ தில்லை. இதனலேயே தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை நிலவும் மூன்ரும் உலக நாடுகளிலும் இன் றும் ஆதிக்கம் செலுத்தும் 'மெலோ டிராமா' (Melo Drama) என்று கூறப்படும் உணர்ச்சிக் கிளறல் மிக்க இன்பியல் நாடகங்கள், சினிமாக் கள் பிரபல்யமாக உள்ளன. இவை கலைகளின் நோக்கிலும் பணியிலும் தரம் குறைந்தவையே.
8 o 9

G5:
கேள்வி ? பதில்
வேல் ?
அதிகாரப் பரவலாக்கம் பற்றி என்ன கூறுவீர்? ,
தி. சுந்தரம், கொழும்பு.
இன்று தாம் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கிலேயே நிற்கி ருேம். முதலாளித்துவ அமைப்பு என்பது அதிகாரத்துவம் மேலும் மேலும் ஒருமுனைப்படுத்தப்படுவதாகும். நிலப்பிரபுத்துவ காலகட்டங்களில் கிராமப் புறத்திலிருந்த ஆட்சி அதிகாரத் தைக்கூட மத்திய அரசு பறித்துக் கொள்கிறது; சட்டம், ஒழுங்கு, உபரி அபகரிப்பு யாவையும் மையப்படுத்தி விடுகிறது. இன்று இந்திய தேர்தல் வெற்றிக்காகக்கொண்டு வரப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புக் கூட ஒரு கண்துடைப்பே. இவை நடைமுறையில் செயற்படா. முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கை எவராலும் தடுத்துவிட முடியாது. புரட்சி ஏற்பட்டபின் கட் டப்படும் சோஷலிச அமைப்பிலேயே அதிகாரப் பரவலாக்கம் நடைமுறைப்படுத்த முடியும். அங்கு அரசியலாதிக்கம் கீழ்மட் டத்திலிருந்து, கிராமிய நிலையிலிருந்து மேலே செல்வதாகும். மேலேயிருந்து கீழே வருவதல்ல,
சென்ற இதழில் (1. 6. 89) பேரினவாதத்திற்கும் சிறுபான்மை
யினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மேலாதிக்கம் செலுத்துவதாகக் கூறிவிட்டு, இறுதியில் தீர்மானிப்பது அடிப் படையமைப்பான பொருளாதாரம் எனவும் கூறியுள்ளீர். அது எவ்வாறு?
எம். சிவராமன், கொழும்பு.
படித்தவரிடையே வேலையில்லாத்திண்டாட்டம்உலகிலேஇங்கேயே உயர்ந்துள்ளது (20.22%) எனக் கூறலாம். இதனுல் தேசிய வளங் களைப் பகிர்வது, வேலை வாய்ப்புசளேப் பங்கிடுவதில் இன ரீதி யான போட்டா போட்டி ஏற்பட்டதே இனப் பகையைத் தூண்டியது. அனைவரும் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பின் பொருளாதாரம் வளர்ச்சியடைவ தோடு பேரினவாத ஒடுக்கு முறையும் ஏற்பட்டிருக்காது. மற் ருென்று: இலவசக் கல்வியாலும் யந்திர உற்பத்தியின் வளர்ச் சிக்கு வாய்ப்பின்மையாலும் உயர்கல்விக்குப் போட்டோ போட்டி
........ 9 سسته

Page 7
Gs:
ஏற்பட்டது. குன்றிய பொருளாதாரம் அதற்கும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போட்டியில் 3-4% மாணவர்களுக்கே உயர்கல்வி வசதி அளிக்க முடிந்தது; இந்நிலையில் இன ரீதியாக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த அரசு முயன்றது. அதுவும் முரண் பாட்டை மோசமாக்கியது. வேலையில்லாத் திண்டாட்டம், உயர் கல்வி வாய்ப்பின்மை, குன்றிய பொருளாதார வளர்ச்சியே இம் முரண்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகிறது. இவை தீர்க் கும் வரை இம்முரண்பாடு நீடிக்கவே செய்யும். ஆகவே தான் பொருளாதாரமே யாவுக்கும் அடிப்படையாகிறது என்கிருேம்.
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
க. சின்னையா, திருமலை.
அதிகாரிகளின் ஆதிக்கம் அல்லது அதிகாரத்துவம் அரசு யந்தி ரத்தின் ஒரு பிரிவு அரசு யந்திரத்தின் உள்ளே பணியாற்று வது. அரசு யந்திரத்தைச் சார்ந்ததேயல்லாது அரசியலாதிக்கம் கொண்டதல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் அரசியல் ஆதிக்கத்திற் ளும் அரசு யந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் போது அதிகாரத்துவம் தானுக இயங்கத்தக்க ஒரு வர்க்கபோ பிரிவோ அல்ல என்பதால் சொந்த அரசியல் ஆதிக் கம்கொண்டி, தல ல என்றனர். அதிகாரத்துவ ஆதிக்கம் அரசின் பணிரை நடைமுறைப்படுத்துவதாகும்.
யுத்தம் பெரும்பாலான உயிர் வாழும் இனங்களை அழித்து
இனி யுத்தம் ஏற்படி முடியாது ! "அணு யுத்தத்தில் வெற்றி கிட்டாது, போரிடப்படாது" என்ற கருத்து பரவலாக இன்று தெரிகிறது. ஏனெனில் அவ்
விடும். பரவலான மரபு யுத்தம்கூட தொழில் வள நாடு களில் இனிமேல் நடைபெறமுடியாது; ஏனெனில் அவ் யுத்தம் அணுசக்தி நிலையங்களையும் அழிக்கும்; ஐரோப்பா, வட அமெ ரிக்காவில் பெரும்பாலான மக்கள் தொகையை அழிப்பதோடு உலகின் பிற பகுதிகளுக்கும் அணுக்கதிர், விடிவாயு பரப்பி விடலாம் என மிக்கெயில் கொபச்சேவ் சுட்டிக்காட்டினர். தொழில் வள முதாளித்துவ நாடுகள் பொருளாதார தேக்கம், வீழ்ச்சி, போட்டா போட்டியின் போதும் யுத்தத்தில் இறங்க முடியாது. அவர்கள் பொருளாதார அரசியல் சிக்கல்களிலிருந்து விடுபட வேறு வழிமுறைகளைக் தேடவேண்டும்.
*கத்லீன் கவ்'
... 10 ...

நிலவுடைமைச் சமுதாயம் - செ. க. -
மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாத எந்தச் சமூக அபைப்பும் நிலைக்க மாட்டாது.
அடிமை உற்பத்தி முறையில் அடிமைகளுக்கு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய ஆர்வமோ, தேவையோ இருக்கவில்லை; அவர்களது உழைப்பின் பலன் யாவும் எசமானர்களுக்கே சொந்தமானது.
எசமானர்கள் உழைப்பதையே அவமானமாகக் கருதினர். உழைக்கும் அடிமைகளை மேற்பார்வை செய்வதற்கும் கூட அடிமை களையே நியமித்தனர்.
எசமானர்கள் அடிமைகளுக்கு உணவில்லாத போதும் தானியத் திலிருந்தும் மதுவை வடித்துக் குடித்தனர்; உழைக்காது ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் காட்டினர். அத்தியாவசியப் பண்ட உற்பத்தி அடிமைகளின் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை. அடிமைகள் ஆங்காங்கே கிளர்ச்சி செய்தனர். w
ஆயினும் அடிமைகள் அந்த அடிமைச் சமூக அமைப்பை வன் முறையால் உடைத்து புதியதொரு சமூக அமைப்பை ஏற்படுத்திய தாக வரலாறு இல்லை. ரோமாபுரியில் விலங்கடிமைக்கு எதிராகப் போராட்டம் நடாத்திய ஸ்பாட்டகஸ் தோல்வியடைந்தான். ஆயி னும் அதன் தாக்கம் பின்னரே பயன் தந்தது.
உற்பத்தித் தேக்கமும் அடிமைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் அடிமை உடைமை அமைப்பை மாற்றி நிலவுடைமைச் சமுதாய அமைப்பு ஏற்பட வழிவகுத்தது. போதிய நிலமுடையவர்களை நிலப் பிரபுக்கள் என மேல்நாட்டில் கூறினர். இந்தியாவில் ஆண்டையர், பண்ணையார், நிலக்கிழார், மிராசுதார், ஜமீன்தார் என்று கூறினர்.
நிலவுடைமை அல்லது பண்ணையடிமை அமைப்பும் ஒரு வகை அடிமை அமைப்பேயாகும். முன்னர் விலங்கு பூட்டப்பட்ட அடிமை இங்கு விலங்கு பூட்டப்படாத நில அடிமை ஆகிருன். அவ்வளவே.
பண்ணை அடிமை முறை உலகம் முழுவதிலும் சிற்சில வேறுபாடு களுடன் இயங்கி வந்தது. பண்ணை அடிமை, பண்ணையார் அல்லது ஜமீன்தார் நிலத்தில் குடும்பமாக வாழ அனுமதிக்கப் பட்டான். அவனது நிலத்தில் குடும்பமாக உழைத்தனர். அவனது குடும்பத் தேவைகளைப் பண்ணையார் கவனித்துக்கொள்வார். திருமணம், மரணம் ஆகியவற்றையும் கவனிப்பார். தனது அடிமையாட்களை வைத்து ஒழுங்குகளைக் கவனித்தார். தானகவோ, பஞ்சாயத்து கூட்டியோ பெரும்பாலும் நீதி வழங்கினர். பெரிய குற்றங்களை மட்டுமே அரசிடம் விட்டார். பண்ணை அடிமைகளை கொல்லுவதற் கோ, சிறைப்படுத்தவோ அவருக்கு உரிமை கிடையாது. அவற்றை
. 11 .

Page 8
அரசு கவனித்து வந்தது. விலங்கு அடிமைகளை விற்று, வாங்கப் பட்டது போல இவர்கள் சந்தைப் பண்டங்களாகக் கருதப்பட வில்லை. சில பகுதிகளில் பண்ணை அடிமைக்குத் தனியாக நிலம் வழங்கப்பட்டது. அதற்காகப் பண்ணை அடிமை பண்ணையாரின் நிலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக உழைக்க வேண்டும்.
மற்ருெரு வழமை. பண்ணையார் நிலத்தில் அடிமை விவசாயி உழுது பயிரிடுவான்; விளைவிக்கும் தானியத்தில் ஒரு பங்கைக் குத்தகை என்ற முறையில் பண்ணையார் அறுவடை அன்று பறித் தெடுத்துக் கொள்வார். இவை பண்ணை அடிமைக்கு உற்பத்தியில் ஆர்வமூட்டி உழைப்பின் உபரி யாவையும் பறித்தெடுப்பதற்கேற்ற புதிய முறைகளேயல்லாது அவனுக்கு விடுதலை தரும் முறைகள் அல்ல. உயிர் வாழ்வதற்கேற்ற ஆகக் குறைந்த தேவைகளையே அவன் உழைப்பு நிவர்த்தி செய்தது.
இத்தகைய நிலவுடைமைச் சமுதாய அமைப்பு மூன்று அம்சங் களைக் கொண்டதாகும். (1) நிலத்தோடு ஒட்டிய உற்பத்தி (2) மனித அத்தியாவசிய தேவைகளையே பெரிதும் நிவர்த்தி செய்யும் அடக்க உற்பத்தி (3) பண்ணை அடிமையை நிலத்தோடு கட்டி வைக்கும் உற்பத்தி.
அடிமை முழுக்க முழுக்க எசமானின் சொத்து. பிற உற்பத்திச் சாதனங்கள் போன்று பயன்படுத்தப்பட்டான். உயிர் வாழும் அடிப் படைத் தேவைகளை எசமான் தருவான். அடிமைகளைப் பெருக்குவதற் கேற்றபடி, ஆடு, மாட்டுப் பட்டியைப் பெருக்குவது போல, பாலுற
ற்கும் அனுமதிக்கப்பட்டான்.
பண்ணை அடிமை, அடிமை போல தன்னை விற்கவில்லை. தன் உழைப்பின் ஒரு பகுதியை உயிர் வாழ்வதற்கு வைத்துக் கொண்டு மறுப்குதியை நிலப் பிரபுக்குக் கொடுக்கிருன். அறுவடையின் போது தானியத்தில் ஒரு பங்கை விவசாயின் உபரி உழைப்பை நிலப் பிரபு அபகரிக்கிருன். பண்ணை அடிமை நிலத்தை விட்டு வெளியேற முடி யாது. வெளியூர் செல்ல பண்ணையாரின் அனுமதி பெறவேண்டும்.
நந்தன் ஒரு பண்ணை அடிமை. சிதம்பரம் செல்ல அனுமதி பெற நேரிட்டது. சில பணிகளை முடித்தே செல்லும்படி எசமான் ஆணையிடு கிருன்.
இத்தகைய நில அடிமை அமைப்பும் அரசினலேயே காத்துப்பேணப் பட்டது. அடிமைப்பட்ட விவசாயிகள் பல்வேறு விதமாக அடக்கி ஒடுக்கப்பட்டனர். சாதிப் பிரிவு, மதங்கள் மக்களை விடுதலை பெற முடியாது மேலும் அடக்கி ஒடுக்கின.
இத்தகைய அரசாட்சிக் காலங்களை புகழ்ந்து பாராட்டி மீண்டும்
நிறுவவேண்டும் என குரல் கொடுப்போர் இன்னும் உள்ளனர். இதுவே வேடிக்கையானது.
Y 丑2

நாட்டின் விடிவு
செ. கணேசலிங்கன்
"யார் நீங்க. துரையின் அனுமதியில்லாமல் தோட்டத்துள் நுழைய முடியாது’’
துப்பாக்கி ஏந்திய ஊர்க்காவல் படைக்காரர் இருவர் முருகே சனையும், நடேசனையும் தோட்டவாயில் தடைக்கம்பத்தில் தடுத்த 607 r.
இருவருக்கும் வியப்பும் விசனமும் மட்டுமல்ல கோபமும் ஏற் பட்டது.
அந்தத்தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், வேலை செய் தவர்கள் என எத்தனை கூறியும் அவன் விடுவதாயில்லை. தோட்டம் சார்ந்த காவல்காரன் ஓடிவந்தான்.
அவளுல் அவர்களை இனங்காண முடிந்தது.
*தம்பி இப்பதான் வாரீங்களா? எப்ப விடுதலையானீங்க"
ஆர்வத்தோடு கேட்டதை ஊர்க்காவல் படைக்காரனும் ஒரளவு புரிந்து கொண்டான். பின்னர் தான் ஆர்வத்தோடு கூறியதன் தவறை அவன் உணர்ந்து கொண்டான்.
'பரம்பரையாக இங்கே வாழ்ந்தவங்க" என்று கூறி சிறையிலி ருந்து விடுதலை பெற்று வந்த செய்தியையும் தெரிவித்து காவலாளி சிபார்சு செய்தான். படையினர் கேட்பதாக இல்லை.
*" துரையின் அனுமதியில்லாமல் விடமுடியாது. இவர்க குழப்பக் காரங்க. அதுதானே சிறை சென்ருங்க. நீயே ஒப்புக் கொள்ளு கிருயே?"
காவலாளி தோட்டத்திற்குச் செய்தி அனுப்புவதாக இருவரிட
மும் சமாதானம் கூறினன். தூரத்தில் கண்ட ஒரு பையனுக்குக் குரல் கொடுத்து வரவழைத்தான். அவனிடம் மேலே தோட்டத்
திற்குச் செய்தி அனுப்பினன்.
காலைப் பணிப்படலம் முற்ருக அகலவில்லை. முருகேசனும் நடே சனும் மலையையும் சுற்று வட்டத்தையும் நோட்டம் போட்டனர்.
. 15 ...

Page 9
பசுமையும் குளிர்காற்றும் சுதந்திர உணர்வும் அந்நிலையிலும் அமைதி தந்தது. காவலாளி சிறிது நேரம் உரையாடினன்.
தோட்டத்தில் இருவரும் இல்லாத 18 மாத காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி உசாவி அங்குள்ள நிலையை ஓரளவு அறிந்து கொண்டனர்.
தோட்டத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் தொழிற்சங்கப் பிர முகர்கள், இயக்கம் சார்ந்தவர் பற்றியும் கேட்டு அறிந்தனர்.
அரைமணி நேரம்) சூரியனின் கதிர்கள் பனிப்படலத்தை விரட் டத் தொடங்கி விட்டது.
திடீரென ஒரு கூட்டமே மேலே மலையிலிருந்து இறங்கி வருவது தெரிந்தது. ஒரே கூக்குரல். ஆரவாரம்.
சிலர் இருவரையும் கட்டி அணைத்தனர். சிலரது கண்களில் நீர் நிறைந்திருந்தது.
ஊர்க்காவல் படைக்காரர் சிறிதாகி விட்டனர்.
துரையின் கடிதத்தை ஒருவன் ஓட்டத்தோடு கொண்டு வந்தான். ஓடிவந்த இளைப்பால் அவனுல் பேசவே முடியவில்லை.
ஊர்வலமாக இரு இளைஞர்களும் அழைத்துச் செல்லப்பட்ட னர். -نیسم، ۰٫۰۰۰ ما می
மலைகளில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களும் கூ டத்தைக் கண்டதும் வேலையை விட்டு வந்து தம் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
மலைக்குச் சென்றவர் தவிர லயத்தில் இருந்தவரெல்லோரும் கூடிவிட்டனர். செய்தி கேட்ட பெற்ருர் சகோதரர் மலையிலிருந்து வந்து அனைத்துக்கொண்டனர்.
ஆபத்தான அரசியலில் ஈடுபட்டதாக பொலிசாரால் கைது செய் யப்பட்டுச் சென்ற போதும் பின்னரும் தோட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் நிலவின.
விடுதலை பெற்று வந்த வேளை எதிர்ப்புக் கூறுபவர் குரல் தணிந் திருந்ததைப் uangurnraiv காணமுடிந்தது. மாலையில் வ ந் து மகிழ்ச்சி தெரிவித்துத் திரும்பியவர் பற்றி அவர்களது நண்பர்கள் விமரிசனம் செய்தனர். சிரித்துப் பேசிச் செல்லும் எதிரிகளையும் இனங்
۰۰۰۰۰۰ H

காட்டினர். தோட்டத்தின் புதிய அதிகாரிகள் பற்றியும் இருவருக்கும் மதிப்புரைகள் வழங்கப்பட்டன.
இரவு நெருங்கிய வேளை ஒரு சில தொழிலாளர்கள் - இளைஞர்கள் மட்டும் வந்து இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி ஆர்வத்தோடு கேட்டனர்.
சிறைத் தண்டனையும் பிற கொடுமைகளும் அவர்களது முன்னைய அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கச் செய்துவிடலாம் எனவே நண்பர் பலர் எண்ணியிருந்தனர்.
ஆனூல் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறக இருவரது பேச்சும் இருந்தது.
‘ “ Ա60ո" சிறையில் நாங்க சும்மா இருக்கவில்.ை அங்கும் ஆர்ப் ாட்டங்கள், உண்ணுவிரதப் போராட்டங்கள் எல்லா நடத்தி
ம்ை.'
நடேசன் தங்கள் போராட்டங்களை விரித்தான்.
"பலரது அனுபவங்கள், அரசியல்களையும் அங்கு கற்கவும் முடிந் தது. மேலும் அரசியல் தெளிவு பெற்றே வந்துள்ளோம். நாங்க ஒயப் போவதில்லை. சிறை வாழ்க்கை மேலும் வலுவே தந்துள்ளது."
முருகேசனின் குரலில் மனதின் உறுதி தெரிந்தது.
*தேசிய இனப் பிரச்சனையில் தற்போது என்ன நிலைப்பாட்டு கொண்டுள்ளீர்கள்?"
“யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்?" - நடேசன் கேட்டான். "மலையகத் தொழிலாளர்கள் பற்றித்தான்." மற்ருேர் இளைஞன் பதில் கூறினன்.
**தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டையா கேட்கிறீர்கள்?"
முருகேசன் அவர்கள் கருத்தை மேலும் அறியும் நோக்கோடு வின எழுப்பினன்.
**ஆமாம். மலையக மக்கள் தனித் தேசிய இனமா அல்லது சிறு பான்மைத் தேசிய இனமா?" முதலில் வின எழுப்பிய வாலிபன் நேரடியாகக் கேட்டான். *
. 15 ...

Page 10
"ஓ அந்த அளவு ஆராய்ச்சிக்கு வந்துவிட்டீர்களா? பாராட்ட வேண்டியதுதான்."
உள்ளுறச் சிரித்தபடி முருகேசன் நடேசனது காலிலும் கிள்ளிய படி சொன்னுன்.
"சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல முஸ் லிம்களிடையேயும் பெரிய தேசிய எழுச்சி இன்று ஏற்பட்டுவிட்டது. புதிய தலைமையும் உருவாகிவிட்டது. மலையகத் தமிழர்களும் பின் தங்கிவிடப் போவதில்லை. அவர்களிடையேயும் தேசிய எழுச்சியும் புதிய தலைமையும் ஏற்படப் போவது தவிர்க்க முடியாதது."
அழுத்தமான உணர்ச்சி மிக்க ஒருவனது குரல் ஒலித்தது. முருகன்கோவிலின் மங்கிய ஒளி, குளிர் காற்றின்அசைவுடன் இடை யிடை சுடர்விட்டு பிரகாசித்தது. தோட்டப் புறத்தின் அமைதி யிடை காட்டுப்பூச்சிகளின் தொடர்ந்த ஓசை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
*ஸ்டாலினின் தேசீய இனப்பிரச்சினையை நன்கு படித்துவிவாதித் துள்ளீர்கள் போலத் தெரிகிறது. அதில் உண்மையில்லாமலில்லை. ஆனல் மார்க்சியம் - லெனினிசம் வர்க்கநிலைப்பாடுகளையே முதன்மை யாகக் கொள்வதாகும். அப்படிப்பார்க்கும் போது மலையகத் தமிழ் மக்களின் வர்க்க நிலைப்பாடு என்ன?”
அங்குள்ள இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கைப் பாராட்டுவ தோடு தன் வர்க்க ஆய்வு முறையை முருகேசன் முன் வைத்தான்.
சிறிது நேரம் ஒரே மெளனம்,
*தொழிலாளிகள்."
'பாட்டாளி வர்க்கம்.”
இளைஞர்களிடை இரு குரல்கள் ஒலித்தன.
* "சரியே. தேசிய இனப்பிரச்சினை எத்தகைய வர்க்க நிலைப்பாட் டுடன் எழுகிறது?"
முருகேசன் மீண்டும் விஞ எழுப்பினன். ஒரே அமைதியைக் கண்டு நடேசன் அவ் வினுவை மேலும் விரித்துக் கூறினன்.
"எத்தகைய வரிக்கங்கள் உள்ள சமூகத்தில் எந்த வர்க்கத் தலைமையில் தேசிய இனப்பிரச்சினை எழுகிறது என்பதையே கேட் கிருேம்."
. 16 ...

“பல்வேறுபட்ட வர்க்கங்கள் இனங்கள் வாழும் சமூகத்தில் எல்லா வர்க்கங்களும் ஒன்று திரண்டு தேசிய இனப் பிரச்சினையை எழுப்பு கின்றன."
ஒரு குரல் தெளிவாக ஒலித்தது.
* "எல்லா வர்க்கங்களும் என்பது."
மேலும் விரிவாக அவன்கூறியகருத்தை அனைவரும் புரியச் சொல் லும்படி நடேசன் விரும்பிஞன்.
'முதலாளிசள், தொழிலாளர்கள், குட்டிபூர்ஷ்வாக்கள், மாண onuri"...”
"யாவரும் முதலாளிகளின் தலைமையில் அவர்களது பண்ட விற் பனைச் சந்தையின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காக தேசிய இனப் பிரச்சினையைக் கிளப்புகிருர்கள். போராட்டத்தில் எல்லா வர்க்கங் களையும் அணி திரட்டுகிறர்கள்."
ஒருவன் கூறிய கூற்றைத் தொடர்ந்து நடேசன் சொன்னன்.
*ஆனல் ஒன்று. ஐரோப்பிய நாடுகளில் இந்நூற்றண்டின் ஆரம்பகாலகட்டங்களில் விளக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினையையே இன்றும் நாம் மூன்ரும் உலக நாடுகளில், ஏகாதிபத்திய தாக்கத் திடையே நின்று முன்வைக்கப் பார்க்கிருேம் என்பதையும் நாம் மறந்துவிடப்படாது."
முருகேசன் கூறிய புதுவிளக்கம் அவர்களிடை மீண்டும் அமை
தியை ஏற்படுத்தியது. புதிய சிந்தனையைத் தூண்டியிருப்பதுபோல அந்த மெளனம் பேசியது.
"இலங்கையின் பிற இட சமூக அமைப்புகளிலும் பார்க்க நாம் முன்னேறிய நிலையில் உள்ளோம் என்பதை நாம் மறந்துவிடப் படாது. நீங்கள் கூறியதுபோல நாங்கள் தொழிலாளர்கள் . பாட் டாளிகள். முன்னேறிய முதன்மையான வர்க்கம், நாட்டின் பிற தேசிய இனங்களின் பல்வேறு வர்க்கங்களிடை ஏற்பட்ட மோதல் களால் நாடு இன்று சின்னபின்னப்பட்டு சிதைந்துபோயிருக்கிறது."
*இதற்கு விடிவுதான் என்ன?’ பொறுமையிழந்த நிலையில் இளை ஞரிடை இருந்து ஒரு வின எழுந்தது.
*நாட்டின் மிகப் பெரிய பாட்டாளி வர்க்கம் மலையகத் தமிழர்கள் தான், எமது வர்க்கத்திற்கு தேசிய இனப்பிரச்சினையோ பண்டம்
17 0

Page 11
விற்கும் எல்லைகளோ கிடையாது. தேவையுமில்லை. அடுத்த கட்ட மாகிய சோஷலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வர்கள் நாங்களே."
முருகேசன் முடிக்குமுன் நடேசன் சொன்னன். * தலைமை தாங்க வேண்டியவர்கள் நாங்களே’
புத்துணர்ச்சி பெற்ற நிலையில் வாலிபத் தொழிலாளர்களின் தேகங்கள் புல்லரித்தன.
"ஆளும் வர்க்கம் பலம் குன்றி விட்டது. மேலும் ஆட்சி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தொழிலாளி வர்க்கமும் ஆட்சியைக் கைப்பற்றத் தயாரில்லாத பரிதாப நிலை. நாம் விழிப் பாக இருக்க வேண்டும்."
முருகேசன் யதார்த்த நிலையையும் விளக்கினன். 'நீங்க தக்க வேளையில் விடுதலை பெற்று வந்தீர்கள்."
மற்றைய இளைஞர்களின் முடிவையும் அறிவிப்பது போல ஒரு குரல் ஒலித்தது.
“ஒன்றை மட்டும் என்னல் மீண்டும் உறுதியாகக் கூறமுடியும். ாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மட்டும்தான் இனப்பிரச்சினையால் சிதறுண்டுள்ள இந்த நாடு விடிவு பெற முடியும்."
முருகேசன் அழுத்திக் கூறியதை நடேசன் சுருக்கி முடித்தான்.
"அந்தத் தலைமை மலையகப் பாட்டாளி வர்க்கந்தான்."
தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற
தயாராக இல்லாத போது.
பூர்ஷ்வா வர்க்கம் அரசியலாதிக்கத்தை இழந்துவிட்டால் அவ்வாதிக்கம் தொழிலாளி வர்க்கத்தின் பலத்துடன் சேர்ந்து விட்டது என்று கூறிவிடமுடியாது. மார்க்ஸ் "பிரெஞ்சு உள் நாட்டு யுத்தம்" என்ற நூலில் கூறினர்:
"பூர்ஷ்வா வர்க்கத்தால் தேசத்தை ஆளும் திறமை இல் லாதபோதும் தொழிலாளி வர்க்கம் அத் திறமையைப் பெற் றுக் கொள்ளாத போதும் உள்ள காலத்தில்தான் நெப்போலிய னின் அரசு வர முடிந்தது.'
- நிக்கோ பொலான்சாஸ்
18 ...

வெறும் மேனியர்களும் எனது வெட்கமும்
- சாருமதி -
வீழ்ந்த நிலையில் நிசங்கள் விரைந்த நிலையில் நீசங்கள் சூழவும் நிகழும் யதார்த்த சுட்டிகள்
கூசும் கண்கள் குனிந்த தலைகள் வானக் கூரையில் வகை வகைப் பொய்கள்
தேசம் அழிவதைத் தெரிந்தவர் எத்தனை?
சோற்றில் கல்லு
சொதியில் மயிர்
சாப்பாட்டு மேசையில்
சவங்களின் ஊனம் என்
வீட்டு வாசலிலும்
தேர்தல் கொடி
வெட்கித்து நானே ஒழிக்கின்றேன் வெறும் மேனியர்கள் எம்
வீதி எல்லாம்.
மனிதரின் ஆளுமை
தனிச் சொத்துடைமை மனிதர்களுடைய ஆளுமையை, தனித்துவத்தை மட்டும் அந்நியப்படுத்தவில்லை. பொருட்களை யும் அந்நியப்படுத்துகிறது; நிலமும் பூமியும் குத்தகை கேட்க
வில்லை; யந்திரங்களுக்கும் லாபத்திற்கும் தொடர்பில்லை
- மார்க்ஸ்
... 19 ..

Page 12
பாட்டாளி வர்க்கத்தின் “மூலதனம்”
முதலாளித்துவத்தை உடைத்தெறியும் குண்டாக சென்ற நூற்ருண்டில் வெளிவந்ததே மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" என்ற ஆராய்ச்சி நூலாகும்.
*மூலதனம்" வெளிவர பதிப்பாளருக்கான செலவையும், மத் சின் குடும்பச் செலவையும் ஏங்கெல்ஸ் பொறுப்பெடுத்துக் கொண் டார். அத்துடன் திருத்த ஆலோசனைகளையும் ரங்கெல்ஸ் செய்தார். மூலதனம் வெளிவர ஏங்கெல்ஸின் பங்கு அளப்பரியத்தக்க தியாக மாகும். மூலதனத்தின் முதல் தொகுதி 1867 செப்டம்பரில் வெளி வந்தது. மற்ற இரு தொகுதிகளும் வெளிவரும் போது மார்க்ஸ் இவ் வையகத்தில் இல்லை. இரண்டாம் தொகுதி 1885இலும் மூன்றும் தொகுதி 1894இலும் வெளிவந்தன.
முதல் தொகுதியில் மூலதனத்தை உற்பத்தி செய்கின்ற நிகழ்வுப் போக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. உபரி மதிப்பு மார்க்சின் புதிய கண்டுபிடிப்பாகும். மார்க்சின் காலம் வரை உழைப்பிற்கு ஏற்ற கூலியே வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
பட்டாளியின் உழைப்பிலிருந்து உபரி எவ்வாறு நேரக் கணக்கல் அபகரிக்கப்பட்டு மூலதனமாகத் திரண்டு, மூலதனத்திற்கும் தொழி லாளிக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது என்பதையும் மார்க்ஸ் விஞ்ஞான ரீதியில் நிரூபித்துக் காட்டினர். உழைப்பு எவ் வாறு பண்டமாக மாறுகிறது என்பதையும் விரித்தார்.
இரண்டாம் தொகுதி மூலதனச் செலாவணியை வரையறுத்து விளக்குகின்றது. இவ் இரண்டு தொகுதிகளும் நிகழ்வுப் போக்கின் ஒருமையையும் உற்பத்தியின் தீர் க் க ம |ா ன பாத்திரத்தையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது.
மூலதனம் மூன்ரும் தொகுதி முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப்
போக்கை மொத்தமாக எடுத்தாராய்கின்றது. மார்க்சின் வரலாற்றுக்
கடமையில் "மூலதனம்" பாராட்டத்தக்க சாதனையாகும். டாட்டாளி
வர்க்க எழுச்சிக்குக் கிடைத்த உத்வேகமூட்டும் துரண்டுகோலாகவும்,
ஆழமான ஆணித்தரமாக நுணுக்கமாக மார்க்சின் போதனைகளை
வெளிப்படுத்தும் நூலாகவும் மூலதனம் (Das Kapital) விளங்கு கிறது.
He fists)
. 20 ...

பள்ளிகள் - ஒடுக்கு முறையின் ஆரம்பம்
பள்ளிக்குச் செல்வது வெறும் புத்தகப் பாடங்களைப் படிப்ப தற்கு மட்டுமல்ல; அறிவு பெறுவதற்காக மட்டுமல்ல. வேறு எதற்
str s?
இன்றைய சமூக விதிகள், ஒழுங்குமுறைகளையும் அங்குக் கற்றுத் தருகிருர்கள். பின்னர் உற்பத்தியில் ஈடுபட்டு, சட்ட ஒழுங்குகளுக்கு கீழ்பட்டு உழைப்பதற்கு வேண்டிய நியதிகளை, கட்டுப்பாடுகளை, ஒழுக்க விதிகளைப் பள்ளிகளிலேயே பயிற்றுவிக்கிருர்கள்.
பள்ளிக்கு நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்று நீ துடிப்பாயே. ஆரம்பப் பள்ளியில் படிககும்போது நீ அத்தனை அவசரப்பட மாட் டாய். தற்போது சாப்பாடு பிந்தின் சாப்பிடாமலேயே ஓடிவிடுகி முய். சீருடை, சப்பாத்து யாவும் சிறப்பாக இருக்கவேண்டும் என அம்மாவோடு சீறுகிருய்.
வகுப்பிலே ஒழுங்கு முறைகளைச் சிறிது மீறிச் சத்தம் போட் டாலோ, குழப்படி செய்தாலோ தண்டிக்கிருர்கள். பிரம்பால் அடிக் கிருர்கள். மேசை மேல் வகுப்பு முடியும் வரை நிற்கச் செய்கிருர் கள். பள்ளி முடிந்த பின்னரும் தங்கச் செய்து வேலை தருகிருர்கள். சில வகுப்புகளில் குற்றத்திற்குப் பணமாகவும் அறவிடுகிருர்கள். பள்ளி அதிபரிடம் தெரிவித்து மாணவர் முன்னிலையில் தண்டனைய ளிக்கின்றனர். பள்ளியிவிருந்து சில வேளை வெளியேற்றியும் விடுகின் றனர். பள்ளிகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்கப்படுகிறது.
பலதடவை நீயே இத் தண்டனைகளைப் பெற்றதை நான் அறி வேன். அவற்றை எதிர்த்து நீ போராடவில்லை. ஒரு தடவை வகுப் பில் சத்தமிட்டதற்காக வகுப்பு மாணவர் அண்வரையும் மாலையில் நிற்கும்படி தண்டனை வழங்கப்பட்டது என்ருய். எவரும் எதிர்க்காது கீழ்ப்படிந்தனர் என்றும் சொன்னுய்.
பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன் றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண் டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத் தில் வழங்கப்படும். பொலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும். t
மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும்! இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள் ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங் காக நடைபெறுவதற்கு வேண்டிய விதி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன என்று கூறினேன். м
இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
21 .

Page 13
பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழி லாளர், சிற்றுாழியர்.
மற்ருெரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர் கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளி யேறுகின்றனர்.
பள்ளியில் அதிபர், ஆசிரியர், மொனிட்டர் என்றெல்லாம் மாண வரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிருர்க ளல்லவா? இவர்களும் அரசுயந்திரத்தின் பொம்மைகளே.
இன்றைய சமுக அமைப்பு இருக்கும் வரை இனம் வயதில் மாணவர்களே அடக்கி ஒடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டேயி ருக்கும்.
இவற்றை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எளி மையாகக் கூற முயல்கிறேன். கசப்பான பாடங்களைப் பரீட்சைக் காக நீ மனனம் பண்ணுவதைப் பார்த்து நான் வருந்துவதுண்டு. நான் கூறியவை புரியாவிட்டால் மீண்டும் ஒரு தடவை இக்கடிதத் தைப் படி; சமுகத்தின் நடைமுறைகளை ஊன்றிக் கவனி; புரிந்து கொள்வாய்,
"குமரனுக்கு கடிதங்கள்" நூலிலிருந்து
மேல்மட்ட அமைப்பு என்றல் என்ன ?
ஒரு மாடிக் கட்டிடம் எவ்வாறு நிற்கிறது. புயல், காற்று, மழைக் காலம் மட்டுமல்ல, பூமி அதிரும் போதும் பெரும்பாலும் விழுந்து விடாது நிலைக்கிறது. காரணம் அதன் அத்திவாரம், அடித தளம் அல்லது அடிப்படை அமைப்பு என்றும் கூறலாம்,
இந்த அடித்தளத்தின் உறுதியிலேயே மேற்கட்டுமான அல்லது மேல் மட்ட அமைப்பான வீடு நிலையாக நிற்கிறது.
ந்த உவமானத்தை வைத்து மார்க்ஸ் சமூக அமைப்புப் பற் றிய ஒரு பெரிய உண்மையை விளக்கியுள்ளார்.
சமூக அமைப்பை இறுதியாகத் தீர்மானிப்பது அதன் அடித்தள மாகிய பொருளாதாரம்; அதாவது சமுதாயத்தின் உற்பத்திச் சக்தி களும் (யந்திரம் எண்ணெய், மின், நிலம், நீர், பிறகருவிகள் (Լք Ց லியன) உற்பத்தி உறவுகளுமாகும் (மனித உழைப்பு). இவையே சமூகத்தின் அடித்தளமாகும்.
இந்த அடித்தளம் மேல்மட்ட அமைப்பாக அரசியல் சட்டம் சார்ந்தவைகளையும், கருத்தியல்களையும் தீர்க்கமாக ஏற்படுத்திக் கொள்
கிறது.
、Z2 ....

இம் மேல்மட்ட அமைப்பை இரு மட்டங்களாகப் பிரித்துப் LurT riftéi5d56Unr ub:
(1) அரசியல் - சட்டம் சார்ந்தவை:- அரசும் சட்ட விதிகளும். வன்மையானவை.
(2) கருத்தியல்கள்:- கல்வி, மதம், ஒழுக்கங்கள், கலை இலக் கியம் முதலியன. இவை வன்முறையற்றவை.
இந்த அரசியல் - சட்டங்கள், கருத்தியல்கள் அடித்தளமாகிய பொருளாதாரத்தின் மேல் தாக்கம் ஏற்படுத்துவதில்லை என்று கூறி விட முடியாது. மார்க்சியக் கோட்பாட்டின்படி அடித்தளத்திற்கும் மேல்மட்ட அமைப்புக்குமிடையில் தன்னியக்க உறவு உண்டு (Relative Autonomy) அல்லது அடித்தளத்தின்மேல் மேல்மட்ட அமைப்பு மீள் தாக்கம் (Reciprocal action) ஏற்படுத்துகிறது என்று விரித்து விளக்கப்படுகிறது.
இவ்வாறு பார்க்கும்போது மேலே கூறிய மாடிக்கட்டட உதா ரணம் அத்தனே சிறந்ததாகக் கூறுவதற்கில்லை. அரச மரம் அத னிலும் பார்க்க நல்ல உதாரணமாகலாம். அடித்தளமான வேர் களும் அவற்றின் செயல்களுமே மரத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக் ன்ெறன. அதே வேளை மேற்புற மரத்தின் செயற்பாடுகளும் அடித் தளத்தைப் பாதிக்கின்றன. தாவரவியல் பாடத்தின்போது நீ இவற் றைக் கற்றிருப்பாய். மரங்களின் இலைகளின் செயற்பாடுகளுக்கு மரத்
தின் வேர்களைப் பலமாக வளர்ப்பதில் பெரிய பங்கு உண்டு.
அடித்தளத்திற்கும் மேல்மட்ட அமைப்புக்கும் உள்ள உறவை மற்றேர் உதாரணம் மூலமும் விளக்க விரும்புகிறேன்.
கல்வி என்ற கருத்தியலை எடுத்துக் கொள்வோம். இன்றைய அரசே பாடசாலைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நடாத்துகிறது. உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்ட முதலாளிகளின், அவரது அரசின் தேவைகளை ஒட்டியே, பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி, கல்வி இன்று வழங்கப்படுகிறது. அரசு என் பது உற்பத்தி சாதனங்களை உடைய முதலாளிகளின் அரசு.
இதே கல்வி பின்னர் முதலாளிகளின் யந்திரங்களை ஒட்ட, கணக் கெழுத, நிர்வாகங்களை நடாத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தான அடித்தளம் மேல்மட்ட அமைப்பான கல்வியைத் தீர்மானித்த போதும் பின்னர் கல்வியும் அடித்தனமான பொருளாதாரத்தின் மேல் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதற்குச் சேவை செய்கிறது. இரண்டிற்கும் இடையில் தன்னியக்க உறவு உண்டு.
இதுபோலவே மற்றைய கருத்தியல்களையும் பொருத்திப் பார்க்
கலாம். இன்றைய சமூக அமைப்புள் மறைந்திருக்கும் பல புதிர்கள் அவ்வேளை வெளிப்படும்.
'குமரனுக்கு கடிதங்கள்" நூலிலிருந்து
23 ...

Page 14
வறுமை ஒழிப்பும் பாதுகாப்பும்
- தாரா ள ம ய ப் படுத்திய பொருளாதாரத்தின் கீழ் செல் வங்களை குவித்துக்கொள்வதற்கு வாய்ப்புப் பெற்றிருந்தவர்களிட மிருந்து வரவு செலவுத் திட்டத் துக்கு புதிய மூலவளங்களை பெறு வது எவ்வாறு? அதாவது முதல் தர வருமானம் பெறும் 10 சத வீதத்தினர் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருப்போர்(கறுப்பு பொருளாதாரம்) போ ன் ருே ரிடமிருந்து (தனியார் முதலீட் டுக்கு குந்தகம் ஏற்படா விதத் தில்) மூலவளங்களைப் பெறுவது எப்படி?
. பணவீக்க மூலங்களிலிருந்து பற்ருக்குறையை நிதிப்படுத்து வதை ஆகக் குறைந்த மட்டத் தில் வைத்துக் கொள்வது எப் படி? வரவு செலவுத் திட்ட கணக்கீடுகளை குழப்பி, வெளி நாட்டு சமனின்மைகளுக்கு இட் டுச் செல்லும் கேள்வி அமுக்கங் களை கட்டுப்படுத்தி வைத்திருப் பது எங்ங்ணம்?
- கறுப்பு பொருளாதாரத் தின் வளர்ச்சி. இதன் பரி மாணம் சுமார் 2000 கோடி ரூபா விலிருந்து 4000 கோடி ரூபா வரையில் இருக்கும் என்று மேலோட்டமாக மதிப்பிடப்பட் டிருக்கிறது. வேலையில்லாத் திண் டாட்டத்தின், பெருக்கம் சுமார் 10 இலட்சம் பேர் அல்லது ஊழி
யர் படையில் 20 சதவீதத்தினர் வேலையற்றிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
- 1983-க்குப் பின்னர் பாது காப்புச் செலவில் ஏற்பட்ட செங் குத்தான அதிகரிப்பு. இந்தச் செலவினம் சமீப வருடங்களில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபா வரையில் இருந்தது.
இது தவிர, இனக் குழப்பங் களின் விளைவாக 1987 ஆகஸ்ட் வரையில் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நட்டம் 5000 - 5500 கோடி ரூபா வரையில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலே விவரித்த பொருளா தார சமூக பின்னணியொன்றி லிருந்து புதிய யுகமொன்றுக்குள் நுழைவதென்பது உ ண்  ைம யிலேயே பிரமாண்டமான ஒரு சவாலாகவே இருக்கும். ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல்வேறு நோக்குகளை இணங்கிச் செல்ல வைப்பதென்பது சிக்கலான ஒரு பணியாகும்.
- நாட்டின் பா து கா ப் பு நிலைமை தொடர்ந்தும் கணிச மான அளவிலான வா > செலவு ஒதுக்கீடுகளை கோரி நிற்கும் ஒரு சூழலில், வறுமை ஒழிப்புக்கு போதியளவிலான நிதி களை ஒதுக்குவது எப்படி?
நன்றி : பொருளியல் நோக்கு
... 24 ...

i.
10.
ll.
12. 13.
14.
5.
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும் !
போர்க்கோலம் செ. கணேசலிங்கன் 14.25 மண்ணும் மக்களும் p 10.50
அயலவர்கள் 45.00 பொய்மையின் நிழலில் ' ?7.50 அந்நிய மனிதர்கள் a 13.50 வதையின் கதை I5.75 கலையும் சமுதாயமும் 1.25 ء
குந்தவிக்குக் கடிதங்கள் 8.00 மான்விழிக்குக் கடிதங்கள் 16.50 சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் 24.00
அபலையின் கடிதம் 3.75 சொந்தக்காரன் o பெனடிக்ற் பாலன் 13.50 மரணத்திற்குப் பின் - பொ. சங்கரப்பிள்ளை 会5.00 சைவசித்தாந்தம் 30.00
மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 2.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 21388