கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.08.01

Page 1
KUMARAN - 68 (01-08-1989).:"
* குமரன் குரல் 3
滨 茨、芯※况
ஒவ்வொரு இதழிலும், சிறப்பாக ஒவ்வொரு விஷயத் திற்கும் குமரன் முக்கியத்துவம் அளிப்பதைக் காணலாம். எடுத்துக் கொண்ட அவ் விஷயத்தைத் தெளிவாக்குவதே எமது நோக்கம்.
இதழ் 65 ல் வறுமை, சனசக்தித் திட்டம் பற்றி எழுதி னேம். 66, 67 ல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர், சீனவின் புதிய கிளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தோம்.
இந்த இதழில் பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டை ஒட்டி அப்புரட்சி பற்றிய பல்வேறு விளக்கங் களையும் சுருக்கமாகக் கூறியுள்ளோம்.
சிறப்புக் கட்டுரையோடு குமரன் நின்று விடவில்லை. கலை, இலக்கியத்தின் நோக்கங்களும் பணியும் கட்டுரை தொடர்கிறது. இவ் இதழ் கட்டுரையில் நனவோடை உத்தி பற்றி ஆராயப்பட்டுள்ளது.
மார்க்சிய விஞ்ஞானக் கல்வி சிறுகட்டுரைகளாக மட்டுமல்லாது இதழ். பூராவும் ஊடுருவியிருப்பதையும் கவனிக்கலாம்.
சென்ற மாதத்தில் அரசின் "செய்தித் தணிக்கை” ஒன்றும் வந்து சென்றது. பத்திரிகைகள், பிற மக்கள் தொடர்பு சாதனங்கள் யாவும் ஒரே குரலிலேயே ஒலிக் கின்றன. குமரன் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் விமர்சிக்கும் போக்கைக் காணலாம்.
- ஆசிரியர்.
“அச்சு குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12.
ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

68
oAVL 1 ஆகஸ்ட் 1999
* அரசியலில் தீவிரவாதப் போக்கு
- மதி
* தரகராட்சி
- செ. கணேசலிங்கன்
★ விஞ்ஞான வளர்ச்சியும் பெண் விடுதலையும்
- மான்விழி
*பிரெஞ்சுப்புரட்சியின் 2வது நூற்றண்டு பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவப் * புரட்சி - * அல்ல
தியாகு * மாதவன் * பொலர்ன்சிாஸ்
* கலை, இலக்கியத்தின் நோக்கங்களும்
பணியும் - 4
-- மாதவன்
k M - C - M'
* கேள்வி ? பதில் 1

Page 2
எங்கும் விற்பனையாகிறது!
‘தமிழவேள் எழுதிய தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00 A. L. வகுப்பு பாடநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel: 421 388

அரசியலில் தீவிரவாதப் போக்கு
- “மதி" -
wy w بر* AYwakaX
சோஷலிசப் புரட்சியின் பின்னரும் அரசியலில் தீவிரவாதப் போக்குகள் ஏற்படுவதுண்டு; வலதுசாரித் தீவிரவாதம் இடதுசாரித் தீவிரவாதம் என இவற்றை வகுத்து நாம் விவாதிப்பதுண்டு.
முதலாளித்துவப் போக்கான அரசியலிலும் இந்நிலைகள் அடிக் கடி ஏற்படுகின்றன. இங்கு நாம் தீவிரவாதம் எனக் கொள்வது, நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை நடைமுறைப்படுத்துவேன் என அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்வதையே மக்களை திருப் இப் படுத்துவதற்காக, ஏமாற்றுவதற்காக முக்கிய பிரச்சனைகளி லிருந்து திசைதிருப்புவதற்காக இத்தகைய தீவிரவாதப்போக்கு களை அரசியலார் கையாள்கின்றனர்.
பூர்ஷ்வா ஜனநாயகம் கூடக் கிட்டாத காலகட்டத்தில் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தாரிடமும் அரசி யலாரிடமும் அடங்கிவிடுகிறது.
மக்கள் ஞாபக சக்தி குறைந்தவர்கள், அடுத்த தேர்தல்வரை வலுவிழந்தவர்கள் என்பதை பூர்ஷ்வா அரசியலில் அனுபமுள்ள அரசியல் தலைவர்கள் நன்கு அறிவர். r
மக்கள் களிமண் போன்றவர்கள், நாம் விரும்பியபடி பொம்மை களாகப் பிசைந்துவிடலாம் என நம்புவர், அதையே செயலிலும் காட்டுவதைக் காணலாம்.
தாம் செய்யும் தவறுகளுக்கு காரணங்கள், விளக்கங்களை அவர் களே கூறிக்கொள்வர், கேட்கவேண்டியவர்கள் நீங்களே.
தேர்தல் வேளையில் வாக்குகளைப் பெறுவதற்காக பொய் பேசுவர். நடைமுறைக்குச் சாத்தியமற்ற உறுதி மொழிகளைக் கூறுவர். தேர் தல் வாக்குறுதிகள்’ என விவேகமுள்ளவர் உணர்வர். மற்றவர் அவற்றை நம்பி பின் ஏமாறுவர். அரசியலில் “பொய்கள்’ கூறுவது இயல்பாகிவிடுகிறது; நீதியாகிறது.
அத்து மீறிய பொய்கள், தீவிரவாதப் போக்குகள் சிலவேளை எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

Page 3
இந்திய அமைதிப்படை வெளியேற நடைமுறைக்கு சாத்திய மற்ற கால எல்லை விதிக்கப்பட்டது. யூலை 29 ல் 500 பேர் வாபஸ் பெறும் வேளை ஏற்பட்ட நெருக்கடி, கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் அனைத்திற்கும் தீவிரவாத அரசியல் போக்கே காரணமாகும். இத ஞல் தூக்கிய கல்லை தம் காலின் மேலேயே போடும் நிலை ஆட்சியா ளருக்கு ஏற்பட்டது.
*சன சக்தி" பற்றிய தேர்தல் உறுதி மொழியும் ஒரு தீவிரவாதப் போக்கே. உணவு முத்திரை பெறும் ஒவ்வொரு குடுத்தவருக்கும் மாதம் ரூபா 2500 கிட்டும் என நம்பினர். 15 லட்சம் குடும்பத்த வரில் 3 லட்சம் குடும்பத்தவருக்கே ஏப்பிரல் மாதம் ஆரம்பித்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது.
இம் மாதம்வரை பணம் வழங்கப்படவில்லை. உரிமைப் பத்திரங் கள் மட்டும் தரப்படுகின்றன. இதுவரை சனசக்தி உரிமைப் பத்திரம் எத்தனை குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது என்ற விபரமும் தெரியவில்லை.
இதேவேளை முன்னேறிய வர்க்கமான தொழிலாளி வர்க்கமும் அரசியலார் எதிர்பாராத விதமாக புதிய குரல் எழுப்புகிறது. "நாம் உழைக்கிருேம். எமக்கும் மாதம் 2500 ரூபா ஆகக் குறைந்த கூலி வேண்டும்” என்கின்றனர். இக் கோரிக்கையை முன்வைத்து போராட் டம் நடாத்தவும் முயலுகின்றனர்.
தீவிரவாத உறுதிமொழிகளாலும் உ ற் பத் தி வீழ்ச்சியாலும் வாழ்க்கைச் செலவு ரொக்கெட்டாக உயர்வதையும் தொழிலாளி வர்க்கத்தால் உணரமுடிகிறது. கூலி உழைப்பில், மாதச் சம்பளத் தில் வாழ்க்கை நடத்துபவர்களையே பண வீக்கம் பெரிதும் பாதிக் கிறது.
இவ்வாறு கூலிச் சம்பளத்தில் வாழும் குடும்பங்கள் பிற மூன் ருவது உலக நாடுகளிலும் பார்க்க இலங்கையில் அதிகம்; குடித் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர் மாதச் சம்பளத்தில் வாழ்கின் றனர். இவர்களே இன்று பொருட்களின் விலையேற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
குடித்தொகையில் 10 சதவீத மாணவர்களே இங்கு எல்லா வாய்ப்பும் வசதியும் பெற்று வாழ்கின்றனர்; மற்கைய 90 சதவீத மானுேர் மேலும் வறுமையை போக்கி முன்னேறுகின்றனர் என பொருளாதார நிபுணர்களே கணிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க தொழிலாளர்களின் ஜன நாயக உரிமைகளை நீக்கி, உற்பத்தி உறவுகளை வலுப்படுத்தும் அர இயல் நடவடிக்கைகளை அரசியலார் மேற்கொள்கினறனர். இந்நிலை யில் வன்முறைப் பலத்துடன் தொழிலாளரின் போராட்டங்களை மூன்றுவது நபர் பின் நின்று நடத்தி வெற்றிபெற்றுத்தரும் நட வடிக்கைகளும் நடைபெறுகின்றன.
جسيم بن سپيچ

தீவிரவாத அரசியல் போக்கில் இத்தகைய விசித்திரப் போக்கு களையும் காண முடிகிறது. பஸ் தொழிலாளரின் வேலை நிறுத்தத் தின் பின்னே நின்ற மூன்ருவது இயக்கத்தால் கொல்லப்பட்ட தொழி லாளர், எரிக்கப்பட்ட பஸ் தொகைகளையும் அரசு கணக்கிட்டுக் கூறியது.
அமைதியாக ஆட்சிபுரிய, தீவிரவாத அரசியல் வாய்ப்பளிக்க லாம் என ஆட்சியாளர் எண்ணுகின்றனர்.
முதலாளித்துவப் போக்கான அரசியலாரிடம் பொருளாதார அரசியல் பிரச்சினைகளை அடிப்படையாகத் தீர்க்கும் நீண்டகாலத்திட் டமோ கோட்பாடோ கிடையாது. தற்சாலிகமாகவே பிரச்சினை களைத் தீர்க்க முயல்வர். இப்போக்கால் அமைதியற்ற அரசியலும் நெருக்கடிசளும் என்று தீரும் என கணித்துவிட முடியாது. அதற்கு பாட்டாளி வர்க்கமே விடைகாண வேண்டும்.
எல்லா அரசியல் நடவடிக்கைகள், உறுதி மொழிகளின் பின்ஞக வும் வர்க்க நலன் இருப்பதைக் கண்டுணரும் வரை மக்கள் ஏமாற் றப்பட்டு, பலியிடப்பட்டே வந்திருக்கிருர்கள் என லெனின் ஒரு தடவை கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனிதர்கள் * சாருமதி
வெறுமைக்கு வேசம் போட்டு படுக்கைக்கு முன் உரிமைகளைப் பற்றிச் சும்மா தற்செயலாக
உரத்துப் பேசி வயிற்றை நிரப்பும் சலுகைகளைத் தேடி வாழ்வுத் தரித்திரங்கள் FrTar L-ITTšisuh Lu GaoTarafi வயல்களில் இவர்கள் வடிப்பது கடமைகளை தொலைத்து வெறும் கனவுகளைச் சுமந்து. வியர்வைகள் மட்டுமல்ல இவர்களே என்னைச் சுற்றி சோகித்த உள்ளங்களின் மிக நிறைய தாகத்தை இவர்கள், மிக மிக நிறைய. சோதித்துப் பார்க்க உப்புச் சிரட்டைகனே சேற்றில் உழைப்பவர்கள் இவர்களுக்கு 'மரியான" இவர்களும் பிறரின் இல்லாது இருந்தால் சப்பாத்துத் தோல்களே நான் இவர்களுக்கு “எவரெஸ்ட்” மனிதர்களை முதுகெலும்பே இல்லாத எம்கே தேடியிருப்பேன். முண்டங்கள். இவர்களே என்னைச் சுற்றி * மரியான - பசுபிக் சமுத்தி மிக நிறைய ரத்தில் உள்ள உலகின் மிக மிக மிக நிறைய · 84pLDTar 2l-úb. பசியைத் துரத்தும் * எவரெஸ்ட் - இந்தியாவில் வெறும் குடல்கள் வடக்கே உள்ள உலகின் மிக
இரவுப் உயரமான மலைச் சிகரம்.
- 8 -

Page 4
கேள்வி பதில் வேல்
اقتستست.
கே முதலாளித்துவத்தில் அரசியற் பிரச்சனைகள் அடிக்கடி ஏன் ஏற்படுகின்றன? க. சின்னராசா, பதுளை.
ப. முதலாளித்துவம் பிரச்சனைகளின் அடித்தளத்தை ஆராய்ந்து தீர்க்க முயல்வதில்லை. எழும் பிரச்சனைகளை தற்காலிகமாக தீர் க் கிறது ஆளும் வர்க்கத்தவரிடையேயே தொடர்ந்து போட்டா போட்டி நிலவுவதாலும் அரசியல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே யிருப்பது வியப்பல்ல.
கே. லும்டன் என்று கூறும் வர்க்கம் எது?
ப. இராமராஜன் கொழும்பு.
ப. லும்பன் (Lumpen) பாட்டாளிகள் என்பதை நாம் உதிரிப் பாட்டாளிகள் என்போம். சமூகத்தில் நியாயமான தொழில் செய்து பிழைக்க முடியாத நிலை ஏற்படும் போது சட்டவரம்புகளை மீறிய தொழில்களில் ஒரு பகுகியினர் ஈடுபடுகின்றனர். இவர்கள் சமூகத் தாலும், சட்டத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். இவர்கள். நினைவு பூர்வமாகவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இத ணுல் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் பெரும் பகுதியினரும் இவர்களே. நகரங்களை ஒட்டி வாழ்ந்து திருடிப் பிழைப்பவர், கள்ளச் சாராயம் காய்ச்சிப் பிழைப்போர், விபசாரிகள், கள்ளக் கடத் கல் காரர், பொய் பேசி ஏமாற்றிப் பிழைப்போர், கப்பம் வா ங் கி ப் பிழைப்போர், லஞ்சம் வாங்கித் தரும் தரகர்கள், சண்டியன்கள், பணத் திற்காக கொலை, வெட்டுக் கொத்தில் ஈடுபடுவோர். இப்படியான வர்களையே லும்பன்கள் என் கிருேம்.
இவர்கள் அரசையும் சட்டங்களையும் எதிர்ப்பவராக இருப்பத
னல் மாவோ சீனப்புரட்சியின் போது இவர்களையும் அணி திரட் டிக் கொண்டார். போதிய அரசியலறிவு வளரா நிலையில் சுயநலத் திற்காக புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடிய வர்களாகவும் இருப்பர் இவ்வர்க்கத்தவர் சிலவேளைகளில் அரசியலிலும் ஈடுபட்டு வலதுசாரித் தீவிரவாதிகளாகவும் மாறி விடக் கூடியவர்கள்.
கே, பிரெஞ்சுப் புரட்சி பற்றி என்ன கூறுவீர்?
மு. பாலன். திருமலை,
ப. ஐரோப்பிய முடியாட்சிகளை முதன் முதலில் அதிர வைத்த சிறப்பு பிரெஞ்சுப் புரட்சிக்கே உரியது. குடியாட்சிக்குரிய சட்டசபை களையும், தேர்தல் முறைகளையும் இப் புரட்சி புகுத்தியது. ஆயினும் இப்புரட்சி சிறு உடைமையாளர்கள், நடுத்தர விவசாயிகள் மூலம சிறு பண்ட உற்பத்தியாளரின் ஆதிக்கத்துக்கும் வழிவகுத்தது. இவ் வர்க்கத்தவரின் ஆதரவுடனேயே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் நெப்போலியன் போன்ற தளபதி ஒருவன சர்வதிகாரியாக பிரெஞ் சில் தோன்ற வாய்ப்பளித்தது. (மற்றைய கட்டுரைகளைப் பார்க்க. இங்கும், சிறு பண்ட உற்பத்தி ஆதிக்கம் செலுத்துவதிலுள்ள பிரச் சனைகள் பற்றி குமரன் இதழ்கள் 65, 66ல் இப்பகுதியில் கூறப்பட்ட வற்றையும் பார்க்க)
= 4 -

உலகெங்கும் பிரெஞ்சுப் புரட்சியின்
| | | | | | | | | | | | | | | | | |
2ஆவது நூற்றண்டு
| | | | | | | | | | | *தியாகு"
"மன்னர் மாளிகைக்கு முன்னே இது என்ன கூட்டம் . கூச்சல் 16ம் லூயியின் பட்டத்து ராணி மேரி அன்ரனெட் மன்னனைப் பார்த்துக் கேட்கிருள்.
'சாப்பாட்டிற்கு ரொட்டியில்லையென்று கத்துகிருர்கள். மன் னன் பதிலளிக்கிருன்.
“ரொட்டியில்லா விட்டால் கேக்கைச் சாப்பிடும் படி சொல்லு வதுதானே' நாடாளும் மன்னனின் ராணி கூறுகிருள்.
1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது இப்படி யான வேடிக்கையும் வேதனையும் மிக்க பல கதைகள், பேச்சுகள் பிரெஞ்சில் பேசப்பட்டன; எழுதப்பட்டன. அவற்றில் சிறப்பானது இதுவே.
மன்னராட்சியில் மக்களின் துன்பத்தை அறியாது அரசர்கள் ஆண்டனர் என்பதைப் பிரதி பலிப்பதே இக் கூற்ருகும்.
15வது லூயி மன்னன் யுத்தத்திலும் தன் சுகபோகத்திலும் ஈடுபட்டு பிரெஞ்சு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித் தான். 1774ல் 18வது லூயி மன்னனும் அதன் வழி தொடர்ந்தான்.
ஏழை மக்கள் மீது வரிகள் சுமத்தப்பட்டன. அதிகாரிகள் ஊழ லில் மிதந்தனர். நிலப்பிரபுக்கள் மேலும் நிலமும் செல்வமும் சேர்த்தனர். M
வரிகொடுக்க முடியாதவர், அரசனை எதிர்த்தவர் கொடுமையில் உலகப் புகழ் பெற்றதாகக் கூறப்பட்ட பாஸ்டைலில் (Bastille) சிறையில் தள்ளப்பட்டனர்.
பிரெஞ்சு நாட்டின் முன்னேடி எழுத்தாளர்களான வால்டேரும் ருஸ்ஸோவும் நாட்டில் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்து எழு தினர். பேசினர்.
இருவரது முயற்சிகளும் புத்திஜீவிகளையும் அறிஞர்களையும் தட்டி எழுப்பியது. அனைவரும் மன்னராட்சியை எதிர்த்து குரலெழுப்பினர். கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த முதலாளிகள் தமது தொழிலாளர்களையும் அணிதிரட்டி நிலப்பிரபுத்துவ ஆட்சி  ைய, மன்னனின் அதிகாரத்தை எதிர்த்தனர்.
1789 யூலை 14ம் நாள் மக்கள் அணிதிரண்டு கொடும் சி  ைற யான பாஸ்டையிலைத் தாக்கினர். சிறையில் துன்புற்ற மக்களை விடு வித்தனர்.
s

Page 5
நாடெங்கும் மக்கள் புரட்சி பரவியது. மக்கள் கொதித்தெழுந்து மன்னராட்சியை எதிர்த்தனர். தேசிய மக்கள் சபை புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த, கூடி եւմՑil.
நிலப்பிரபுக்களும் அரசனைச் சார்ந்த செல்வந்தர்களும் நாட்டை விட்டு இங்கிலாந்திற்கும் பிற அண்டைநாடுகளுக்கும் ஓடினர்.
1791 யூன் மாதத்தில் 16வது லூயி மன்னன் தன்ராணியுடன் நாட்டை விட்டு ஒடமுயன்றன். மக்கள் தப்பி ஓடாது தடுத்து விட்டனர்.
இப் புரட்சி அண்டைநாட்டு அரசராட்சிகளுக்கெல்லாம் அச்ச மூட்டியது.
மேரி அன்ரனெட்டின் சகோதரன் ஒஸ்ரியாவின் பேரரசனுக இருந்தான், தன் தங்கையின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்
ତ0T • Co மக்கள் அமைத்த குடியரசுக் கட்சி தேசிய இன உணர்வுடன் ஒஸ்ரியாவை எதிர்த்து வெற்றி கண்டது.
1793 ஜனவரியில் பிரெஞ்சுக் குடியரசு நிறுவப்பட்டது. லூயி மன்னன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட் டான். 1793 ஜனவரி 21ம் திகதி சிரச்சேதம் செய்யப்பட்டான்" அதைத் தொடர்ந்து அவனைச் சார்ந்து நிலப் பிரபுக்களும் செல் வர்களுமாக நூற்றுக்கணக்கானேர் கொல்லப்பட்டனர்.
1793 அக்டோபர் 16ம் நாள் மேரி அன்ரெனெட்டும் சிரச் சேதம் செய்யப்பட்டாள்; 1795 வரை அமைதியற்ற அரசியல் சூழ லில் பலர் உயிரிழந்தனர். அவ்வாண்டு அக்டோபரின் பி ன் ன ர் அமைதி ஏற்பட்டது. 1789 யூலையில் ஆரம்பித்த பிரெஞ்சுப் புரட்சி 1795 அக்டோபரில் முடியுற்றது என வரலாற்ருசிரியர் கூறுவர். இப்புரட்சி நிலப்பிரபுக்களை ஒழித்து சிறு உடைமையாளரான நடுத்தர விவசாயிகளை பிரெஞ்சு நாட்டில் பரவலாக்கியது. இத் தகைய விசித்திர மாற்றம் இங்கிலாந்திலோ பிற ஐரோப்பிய நாடு களிலோ முதலாளித்துவப் புரட்சியின் போது ஏற்பட்டதில்லை.
இச் சிறு நிலவுடைமையாளரின் ஆதரவுடனேயே பின் ன ர் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் ஆட்சியை யுத் தத்தின் மூலம் விரிவாக்க முயன்ருன்.
பிரெஞ்சுப் புரட்சி ஒரு வன்முறைப் புரட்சியாகும் இதற்கு விழாவா, பிரதமர் பங்குபற்றுவதா என இங்கிலாந்தில் அரசாட் சியை இன்றும் ஆதரிப்பவர் குரல் எழுப்புகின்றனர்.
பிரெஞ்சுப் புரட்சியின் போதே ' சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம்' என்ற குரல்கள் எழுப்பப்பட்டன. ஆதே நாடு பின்னர் ஏகாதிபத்திய நாடாக, உலகெங்கும் காலனி நாடுகளை ஆக்கிர மித்து அடக்கி ஆண்டது வேடிக்கையே

கலை, இலக்கியத்தின் நோக்கங்களும் அவற்றின் பணிகளும் - 4
-- மாதவன் -
15. கலைவடிவங்களும் உத்திகளும் - நனவோடை
ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரான கலைஞர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் தம் வட்டத்துள்ளே கலை, இலக்கியத்தைத் தேக்கி வைக்க முயல்வதை எல்லா நாடுகளிலும் காணலாம். தமிழ் நாடு அதற்கு விதிவிலக்கல்ல.
கலை, இலக்கியத்தில் சில வடிவங்களால், உத்திகளால் கவரப் பட்டு அவையே சிறந்தவை என சிலர் புகழ் பரப்ப ஆரம்பித்துவிடு கின்றனர். "மொடேன் ஆர்ட்", நவீன சினிமா, பரீட்சார்த்த நாட கங்கள், டப்பா இசைகள். இவ்வாறு பலவற்றைக் காணலாம். இவற்றைப் பற்றியெல்லாம் தனித்தனியாக ஆராய்வது இக்கட்டுரை யின் நோக்கமல்ல.
நாவல் சிறுகதையில் நனவோடை உத்தியைப் பற்றி மட்டுமே சில அடிப்படைக் கருத்துக்களைக் கூற உள்ளேன். இதன் மூலம் நினைவிலி மனத்தினது குறைபாடுகளையும் விழிப்பு நிலையின் சமுதாய உணர்வினையும் நாம் அறிந்து தெரிந்து கொள்ள முடியும்.
நினைவிலி மனதில் பதிந்திருப்பவை கருத்தியல் (Ideology)களே. இவை கருத்துக்களானவை; விஞ்ஞான பூர்வமற்றவை என்பதை முன் கட்டுரையிலும் கூறினேன். V
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
*சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை" எனக் கூறின் உடனே தவருன கருத்தைக் கூறுகிறேன் என்றே பெரும்பாலோர் சீற்றமடைவர். ஏனெனில் சிறுவயதிலிருந்தே சூரியன் காலையில் உதிப்பதென்றும் அது கிழக்குத் திசை என்றும், மாலையில் மேற்குத் திசையில் மறைகிறது என்றும் பெற்ருராலும் ஆசிரியராலும் அனுபவத்தாலும் கற்பிக்கப் பட்டோம். அவை நினைவிலி மனதில் பதிந்துள்ளது. “சூரியன் கிழக் கில் உதிப்பதில்லை" என்றதும் நினைவிலி மனதில் உள்ளதே முதலில் தோன்றும்.
பின்னரே எமது விஞ்ஞான அறிவை பிரயோகிக்கிருேம்.
- 7 -

Page 6
பூமி சூரியனைச் சுற்றி வருவதே உண்மை, அது தன்னைத் தானே 4 மணி நேரத்திற்குள் ஒரு தடவை சுற்றுகிறது. கிழக்கு, மேற்கு திசைகள் என்பவை எளிதாக்குவதற்காக நாம் வகுததுக் கொண் டவை என்பவை தெளிவாகும். இத் தெளிவு, விழிப்பு நிலையின் சிந்தனை முடிவாகும்.
இதே போலவே "பூனை குறுக்கே ஒடுவது, சாதி, விதவையில்
விழித்தல்" போன்ற பல மூடக் கருத்துகளும் நினைவிலி மனதில் பதிந் தவையே. முதலில் இவையே மனதில் தோன்றும். பின்னரே பகுத் தறிவைப் பிரயோகிக்கிருேம். ஆயினும் இன்னும் மூடக்கொள்கை களில் அழுந்தி இருப்பவரே பெரும்பான்மையினர்.
கலை. இலக்கியப் படைப்பாளர், துகர்வோர், விமர்சகர்கள் விதி விலக்கானவரல்ல. கற்பனவாதிகளே பெரும்பாலானுேர்,
இயக்க வியல் பொருள் முதல் வாதிகளால் மட்டுமே மார்க்சிய கோட்பாடுகளை முன்வைத்து விஞ்ஞான ரீதியாக உண்மையைக் காண முடியும். விழிப்பு நிலையில் கலை, இலக்கியங்களை ஆக்கக்கூடியவர் சளும் அவர்களே.
கற்பஞவாதிகள் நினைவிலி மனதில் பதிந்துள்ள மூடக்கருத்து களில் அமிழ்ந்திவிடுதல் வியப்பல்ல. இக் குறிப்புகளுடன் இலக்கியத் தில் தனவோடை உத்தியின் தோற்றத்தை ஆராய்வோம்.
நனவோடை உத்தியின் வரலாறு
p5 GO7 Gaur GML- (Stream of Consciousness) GT Gör gp 6@(b dj 6); 6u5F GOT நடை வடிவம் சார்ந்தது. (1880 வரையில் வில்லியம்ஸ் ஜேம்ஸ் என்ற உளவியல் வல்லுனர் "மனம் ஒடைபோன்று ஒடுவது என்ற ஒரு கருத்தை முன்வைத்தார். இக் கருத்து பின்னர் பல உளவியல் வல்லுனரால் மறுக்கப்பட்டது.)
நனவோடை இலக்கியத்தில் எழுத்தாளன் தன்னுள் அல்லது தனிமையில் பேசிக்கொள்வது போன்றதாகும். பிரெஞ்சு மொழி யிலேயே நனவோடை முதலில் ஆரம்பமாகி ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜோய்ஸ் தனது நாவல்களில் கையாண்டார். அமெரிக்காவில் வில்லி யம் போக்னர் (ஒலியும் சீற்றமும்) வெர்ஜினியாவூல்வ் (வெளிச்ச வீடு) தம் நாவல்களில் கையாண்டனர்,
பிரக்ஞை நிலைக்கு அல்லது மனதின் விழிப்பு நிலை எல்லைக்குக் கீழே நின்றே சம்பவங்கள் விரிக்கப்படுகின்றன. நிறுத்தல் குறியீடுகள் இன்றி வசனங்கள் தொடர்ந்து இந் நாவல்களில் கையாளப்பட்டன. ஆரம்பத்தில் பரீட்சார்த்த வடிவம் என்று கருதப்பட்டது. பின்னர் ஆங்கிலத்தில் பலரால் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. 20ஆம்
- 8 -

நூற்றண்டில் பல மேல்நாட்டு எழுத்தாளர் இவ் உ த் தி யை க் கையாண்டனர். இன்று எழுதுவோர் குறைவு.
ஜேம்ஸ் ஜோய்சின் ("யுலிசெஸ்", "பினகன்ஸ் வேக்") நாவல்களின் அறிமுகமே தமிழில் இந்த உ த் தி கையாளப்படுவதற்கு துணை நின்றது என்று கூறலாம். சம்பவங்களுக்கு விளக்கம் எதுவுமின்றி மனதில் தோற்றுபவை அனைத்தும் வழிந்தோடுவது போல விரிக்கப் பட்டன. இதனல் கூறும் கருத்துகள் சம்பவங்கள் தெளிவற்றவையா கின்றன.
எழுத்தாளன் தன் நினைவிலி மனதை வெளிக்கொணர்வதால், அவனுக்கே கூறப்பட்டவை புரியாதும் போய்விடலாம். கனவு நிலை யில் காண்பவை போன்றது; தொடர்பற்று, விளக்கமின்றி, தர்க்க ரீதியில்லாத முறையில் சம்பவங்கள், மனேநிலைகள் விரிக்கப்படு கின்றன. இத்தகைய உத்தியைக் கையாள்வது சிலருக்கு புதுமை யாகத் தோன்றலாம். ஆயினும் கடல் நுரை போன்று பயனற்றது: மயக்கம் தருவது. வேடிக்கை என்னவெனில் சமுதாய உணர்வு, பொறுப்பு உணர்வற்றவர்கள் இத்தகைய எழுத்தைப் படித்துப் புரியாத போது அதனுள் ஏதோ மர்மம் இருப்பதாகப் போற்றவும் செய்கின்றனர். ‘உள்ளே காளி ஆடுது பாரீர்" என இருட்டு வீட்டில் கறுப்புப் பூனையைக் காட்டுபவர்போல மற்றவர்களையும் ஏமாற்ற முயல்கின்றனர்.
தமிழில் நனவோடை
தமிழில் லா. ச. ராமாமிர்தம் ந ன வோ  ைட உத்தியின் பிதா எனப் பாராட்டப்படுகிருர், அவரே தலைசிறந்த படைப்பாளி என ஒரு கூட்டமே அவர் பின் நிற்பதைக் காணலாம்.
அன்னரின் த்வனி" என்ற சிறுகதைத் தொகுப்பில் இதே தலைப்புள்ள முதல் கதையில் ஒரு பகுதியைப் படிக்க:
சிற்சில சமயம் எனக்குச் செவி நரம்பு குறுகுறுக்கும். செவி யென்று நான் சொல்கையில் என் மனதில் என் எண்ணம் வெளிச் செவிக்கும் உட் செவி தாண்டிய கட் செவிக்கும் உட் செவி, அங்கு சிலந்தி நூலினும் இழையெடுத்த ஸன்னத்தில், எஃகுச் சுருள் ஒன்று திடீர் திடீர் என, எனக்குக் காரணம் தெரி யாத சமயங்களில் சுழல்கையில், அந் நரம்பொலியில் சிரிப்பு கேட் கிறது. எனக்கு மாத்திரம் கேட்டு என்னில் குடிகொண்ட ரகஸ்ஸயச் சிரிப்பு, இதென்ன சிரிப்பு? என்னையறியாமல் இது என்னுள் எப்படி
- 9 -

Page 7
வந்தது. இல்லை, எனக்கு முன்னலேயிருந்து என் தோலும் ச ைதயும்
தான் அதன் மேல் புற்று மண்ணுய்ப் பூத்துக் கொண்டிருக்கிறதே?
இச் சிரிப்புக்குச் செலவு உண்டோ இல்லையோ, வற்றல் இல்லை.
("த்வனி பக்: 10)
இவ் வார்த்தைகளில் ஆசிரியர் என்ன கூறுகிறர் என்பது பற்றி அவரிடமே நாம் விளக்கம் கேட்க வேண்டும். அவருக்கு இவை புரியா திருக்கும். ஏனெனில் அவரது நினைவிலி மனதிலிருந்து கனவாக, ஓடையாக இவை வழிந்தவையே? விழிப்பு நிலையில் எழுதப்பட்டவை யல்ல.
கருத்தை, கதையைத் தெளிவாசக் கூறுவதற்கே மொழி. அது சிறுபான்மையினருக்கல்ல, பரவலான மக்களுக்குப் பயன்பட வேண்டும்.
பண்டிதர்கள் வந்து இலக்கணத் தமிழை வலிந்து புகுத்தி தம் குழாத்தினரிடையே மொழியையும் இலக்கியத்தையும் தேக்கி வைத்தனர்.
லா. ச. ரா. போன்ற நவீன பண்டிதர்களும் அதே பணியையே "புதிய உத்தி" என்ற பெயரில் தாமிடம் பாண்டித்தியம் இருப்பதாகக் கூறி இலக்கிய ஆர்வலர்களை ஏமாற்ற முனைகின்றனர். சாதாரண தமிழ் சொற்களையே சிக்கலாக்குகின்றனர், இப் புதிய பண்டிதர்கள். மற்றும் அக் கதையின் இரு பகுதிகளைக் கீழே காண்க:
கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி, உதயத்தின் முற் பொருள் நீ. உனக்கு அழிவில்லை.
உன்னை நான் அறிய முன்னர் என் உள்பிரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய்.
(த்வனி)
சா வில் இவ்வுல்கத்தை அழித்து, என் சடலத்தையும் சுழற்றி
விட்டு, பிரக்ஞையில் புகுந்து போக நித்திரையில் ஆழ்ந்துவிடுவேன்:
(த்வனி)
சிறுபான் மைக் குழு ஒன்ருல் பாராட்டுப் பெற்ற மற்ருெரு
எழுத்தாளர் மெளனியாகும். லா. ச. ரா.விலும் பார்க்க இவரது எழுத்துக்கள் சிறிது முன்னேற்றமாகத் தோன்றலாம். நினைவிலி

மனமே எழுத்தில் வெளிப்படுத்துவதை அவரே ஒப்புக்கொள்வதால் போலும் 'மெளனி" என தானே புனை பெயர் சூட்டிக் கொண்டார். அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்க
மான நேரத்துக்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். தன் முன்
வாழ்வெலாம் எவ்வெவ் விடயத்தில் எவ்வெவ் வகை கொண்டதா
கிறது என்று, கனவின் நிழலென, உணர்விற்கப்பால் தோன்றி மறையக் கண்டான் போலும்.
(தவறு)
அந்த இரவு இருள் வெளியில், கண்ட இருளானது மிகப் பிரகாச மாகத் தெரிந்து ஏனைய தோற்றங்கள் கொள்ளவும் ஏதுவாகிறது. அடிக்கடி இவ்வித ஒலியும் இருளாகியது. உடல் தனித்த ஆவி, வாசனை கொண்டு அரூபத்தில் அலற, பயங்கரம் தொனிக்க கேட்கிறது.
(தவறு)
மக்களிடமிருந்து ஒதுங்கி அவர்களை ஏமாற்ற முயலுபவர்களைப் பாராட்டவும் ஒரு சிறு கூட்டம் உள்ளது. இவர்கள் சமுதாய உணர் வற்றவர்; "கலை கலைக்காக" என்றும் கோஷமிடும் சிறுபான்மையின ரான கற்பனுவாதிகளே.
குமரன்
தனிப்பிரதி el5 3|-
6 இதழ்கள் els 17.1-
12 இதழ்கள் e5 331
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 21388
- ! -

Page 8
பிரெஞ்சுப் புரட்சி
ஒரு முதலாளித்துவப் புரட்சி
* மாதவன்
பிரெஞ்சு நாட்டின் கொடுஞ் சிறைச்சாலை பாஸ்டீல். இருநூறு ஆண்டுகளின் முன் ம க் க ள |ா ல் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடெங்கும் புரட்சி பரவியது. மன்னன் லூயியும் நூற் றுக் கணக்கான நிலப்பிரபுக்களும் கொல்லப்பட்டனர்; சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
ஆறு ஆண்டுகளின் அமைதியற்ற வன்புரட்சியின் பின் ன ர் பிரெஞ்சுக் குடியரசு நிறுவப்பட்டது.
இவ்வா(mண்டு கால கட்டத்தையே 'பிரெஞ்சுப் புரட்சி" என்று வரலாறு கூறும். -
இப்புரட்சி ஐரோப்பிய நாடுகளின் மன்னராட்சிகளை அதிர்ச்சிக் குள்ளாக கியது. கதிகலங் ச் செய்தது புரட்சியை முறியடித்து மீண் டும் முடியாட்சியை ஏற்படுத்த பேரரசர்கள் முயன்றனர்; தோல்வி யுற்றனர்
இவ்வரலாற்றுப் போக்குப் பற்றி பல அறிஞர்கள் ஆராய முற் பட்டனர். அவை கற்பனை ஆய்வுகளாகவே முடிந்தன.
மார் 4 சும் ஏங்கெல்சும் 1848ல் வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டனர்.
அதன் பின்னரே விஞ்ஞ ன பூர்வமான புதிய கண்ணுேட்டத் துடன் வரலாற்று நிகழ்வுகளைக் காணக் கணிக்க முடிந்தது.
‘மனித சமுதாயத்தில் இதுவரை நடந்த வரலாறு யாவும்" வர்க்கப் போரட்டம் என்ருர் மார்க்ஸ் போர்கள், கிளர்ச் சிகள், மக்கள் எழுச்சிகள் அனைத்தும் வர்க்கப் போராட்டம் என்ற பின்னணியில் ஆராயப்பட்டன.
அடிமைகள், எசமானுர் சளுக் கெதிராக கிளர்ச் சி செய்தனர். அவர்களது கைவிலங்குகள் மட்டும் உடைக் கப்பட்டன.
மன்னர்களும் நிலப்பிரபுக்களும் மக்களை நிலத்துக்கு அடிமை யாக்கினர் உழைப்பதற்கு கை விலங்குகள் மட்டும் உடைக்கப்பட்
...GO.
سس ۔ 12 مس

ஐரோப்பாவில் மன்னர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் உற்பத்திக் கருவிகளையும் போரா யுதங்களையும் கம்மாளர் தயாரித்து வந்தனர்; பட்டறை வைத்திருந்த இக்கம்மாளர் பின்னர் வணிகர்களுக்காகவும் கருவிகளை உற்பத்தி செய்யத் தலைப்பட்டனர்.
கப்பல் கட்டிய, கடல் கடந்த வாணிபம் விரிவடைந்தது. வாணிப மூலதனம் பட்டறை மூலதனத்துடன் இணைந்து வேக வளர்ச்சி பெற்றது. கிராமப்புற விவசாயிகள் பட்டறைகளில் கூலி வேலைக்கு ஓடிவந்தனர். இதனுல் நிலப்பிரபுக்கள் பாதிக்கப்பட்டனர்.
பட்டறைத் தொழிலில் ஈடுபட்ட வர்க்கத்தவர் நிலப் பிரபுக்க ளாலும் மன்னர்களாலும் விரட்டப்பட்டனர். ஆயினும் அவர்கள் மன்னரின் எதிர்ப்புடன் ஆங்காங்கே நிலை பெற்றனர். துரித வளர்ச்சி யில் மூலதனத்தைப் பெருக்கி ஆதிக்கம் மிக்க வர்க்கமாக கம்மாளர் வளர்ந்தனர்.
இப்புதிய வர்க்கத்தவரையே பிரெஞ்சு நாட்டில் பூர்ஷ்வாக்கள் (முதலாளி வர்க்கத்தவர்) என அழைத்தனர். கம்மாளர்களாக, நசுக்கப்பட்ட சாதியினராகக் கருதப்பட்டவர் புதிய பல ம் மிக் க வர்க்கமாகத் தலை எடுத்தனர். இவர்களது பட்டறைகளில் யந்திரங் களில் கூலிக்கு வேலைசெய்ய வந்து, குடிசைகளில் வாழ்ந்து, தூங்கும் நேரம் தவிர முழு நேரமும் உழைத்து வாழ்ந்த புதிய வர்க்கமே பாட்டாளிகள் என அழைக்கப்பட்டனர்.
புதிய வர்க்கமான பூர்ஷ்வாக்கள் (முதலாளிகள்) தமது வளர்ச் சிக்கு எதிரிகளாக மன்னர்களும் அவர்களைச் சார்ந்த நிலப்பிரபுக் களும் இருப்பதைக் கண்டனர். இவர்களிடை பகைமை உறவுகள் வலுத்து வந்தன. முதலாளிகள் தமது பக்க பலமான பாட்டாளி களையும் அணிதிரட்டி மன்னராட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த னர்; (இவர்களுடன் வணிகர்களும் இணைந்தனர்) வெற்றி பெற்ற னர். முடியரசை வீழ்த்தி, குடியரசு என்ற அழகான பெயரில் புதிய அரசு அமைக்கப்பட்டது.
முதலாளிகளும் பாட்டாளிகளும் இணைந்து மன்னராட்சியை, நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தை வீழ்த்தும் புரட்சியையே முதலாளித்துவப் புரட்சி என மார்க்சும் ஏங்கெல்சும் கூறினர்.
பிரெஞ்சுப் புரட்சி இத்தகைய ஒரு புரட்சி என மார்க்சிஸ்கு கள் கணித்தனர். கிராம்சியும் முதலாளித்துவப் புரட்சி எனக் கூறி ஞர். நிலப்பிரபுத்துவம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து முத லாளித்துவத்துக்கு வழிவிட்டது; வாணிபர்களும் யந்திர உற்பத்தி
-شسم H3. سسس----سم

Page 9
முதலாளிகளும் தலைமைத்துவத்தை நிறுவினர் என்பதே கிராம்சி போன் ருேரது முடிவாகும், புரட்சி பின் வரும் முடிவுகளைக் கொண்
-தி,
1. முதலா ரிகள், யாவரும் அறிய அரசியல் ஆதிக்கம் பெற்ற னர்.
2. புரட்சியின் பின் மு த லா விரித் து வ ‘மாதிரி” யான அரசு அமைக்கப்பட்டது; முதலாளிகளுக்கு வாய்ப்பாக அரசின் அமைப்பு முற்முக மாற்றப்பட்டது. •
3. பிரெஞ்சு அமைப்பு முதலாளித்துவ அரசியல் கருத்தியல் ஆதிக்க மாதிரி" யாக 'ஜாக்கோபினி சம் எனக் கூறப்படும் முத லாளித்துவ கடும் போக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாளித்துவ புரட்சியின் கடும் போக்கு
பிரெஞ்சுப் புரட்சியின் போது ஜாக் கோபின்ஸ் என்ற குழுக்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. இவை அரசியலமைப்பில் மாற் றங்கள் கோரின. நகரங்களில் இக்குழுக்கள் இணைக்கப்பட்டன. இக் குழுக்கள் பின்னர் கடும் போக்கைக் கடைப்பிடித்தன. ருெபேஸ் பியரி என்ற புரட்சித் தலைவன் மன்னனின் சிரச்சேதத்திற்கும் குடி யாட்சி அமைப்பதற்கும் குரல் எழுப்பினன்.
* மன்னன மேல் நீதி விசாரணை எமக்கு வேண்டியதில்லை. அவன் கொல்லப்பட வேண்டும்," என்று தேசிய சபையில் இவன் கூறினன். பின்னர் இவனும் கொல்லப்பட்டான். முதலாளித்துவத்தின் கடும் போக்கை ஜாக் கோபின்ஸ் பிரதிபலித்தது என வரலாறு கூறும்.
“மெலோ டிராமா' வகையான பரபரப்பூட்டும் இன்றைய இலக்கியங்கள்
மக்களுக்கு இலக்கிய பொய்மையைத் தரின் அது விழிப்பு நிலையின் ஆரம்ப அறிவு நிலையை ஏற்படுத்துவதோடு "மக்கள்’ என்ற நிலையின் உணர்வுநிலையாயும் ஆகிவிடுகிறது.அதுவே ஒழுக்க, மத ஆதிக்க நிலையாகி அடிமைப்பட்ட, சிந்தனை ஆற்றலற்ற, அபினி நிலைக்கு மக்களை முடக்கிவிடுகிறது. பூர்ஷ்வா வர்க்கமே மெலோ டிராமா (Melo Drama) என்ற புகழ்பெற்ற பொய் மையை மக்களுக்காகக் கண்டுபிடித்தது. பரவலான அச்சு, மட்டமான நாவல்களையும், சினிமாக்களையும் முதலாளித்துவமே வழங்குகிறது.
இதேவேளை பூர்ஷ்வா விமர்சகர்களில் பெரும்பாலோர் “மெலோ டிராமாவை மட்டமானது என கூறுவர். இவர்களது பூர்ஷ்வா வர்க்கத்தின் கண்டுபிடிப்பே இது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். - அல்துசர்
- 4 -

பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவப் புரட்சி அல்ல
பிரெஞ்சுப் புரட்சியை முதலாளித்துவப் புரட்சி என முடிவு கட்ட முடியாது என்று இன்று நவ - மார்க்சிஸ்டுகள் பலர் கூறுகின் றனர் அவர்சளில் விஞ்ஞான அரசியலில் தலையாய வரில் ஒருவரான நிக்கோ பொலான்சாஸ் கூறும் காரணங்கள் சிலவற்றைக் கீழே 5T 675
1. முதலாளித் துவ உற்பத்தி முறை பிற உற்பத்தி முறைகளின் மேலாக (புரட்சியின் பின்) ஆதிக்கம் செலுத்தியதா? உண்மையில் பிரிட்டன். ஜெர்மனிய உற்பத்தி ஆதிக்கம் செலுத்தியதிலும் பார்க்க பிரான்சில் ஆதிக்கம் செலுத்தியதாக தீர்க்கமாகக் கூறுவதற் கில்லை. சிறு பண்ட உற்பத்தியை பிரெஞ்சுப் புரட்சி ஒழிக் துவிட வில்லை; விவசாயமும் சிறு பண்ட உற்பத்தியும் புரட்சியின் பின் மேலும் வலுப் பெற்றது.
2. விவசாயம் - முதலாளித்துவ உற் பத்தி முறை நிலவரி செலுத் தும் பணக்கார விவசாயிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. பணக்கார விவசாயிகள் கூலி விவசாயிகளை இணைத்து நிலப்பிரபுக்களுக்கெதி ராக புரட்சி செய்யவில்லை. வாணிப, கைத்த்ொழில் முதலாளிகளால் நிலப் பிரபுக் களின் உரிமைகள் பறிக்கப்பட்டது. இதற்கு விவசாயி கள் துணை நின்றனர். இறுதியில் சிறு உடைமை விவசாயிகள் பெரு கினர். இதனல் இவர்களது பலம் அரசியலில், புரட்சியின் பின்ன ரும் நீண்டகாலமாக நில பெற்றிருந்தது நெப்போலியனின் சர்வாதி காரததிற்கும் வழி வகுத்தது.
3. குட்டி பூர்ஷ் வாக்கள், சிறு பண்ட உற்பத்தியாளரும் ஆதிக் கம் பெற்றனர். பெரு முதலாளிகள், வாணிபரிடையேயே இச் சிறு கைத்தொழில் உற்பத்தியாளரும் நிலைத்து நிற்க முடிந்தது. பெருந் தொகையான பிரெஞ்சுக் குட்டி முதலாளிகள் ஆரம்பத்திலிருந்தே (ஜெர்மனியில் இருந்தது போல) ஒரளவு மூலதனத்துடன் தொழில் புரிந்தனர். இதனுல் 1848ல் பூர்ஷ்வாக்களோடு இனைந்தவர் பாரிஸ் கம்யூனின் போது 1871ல் பாட்டாளிகளுடன் சேர்ந்திருந்தனர். இவர்கள் பிரெஞ்சு நாட்டில் முக்கிய ஆதிக்கமுள்ள சமூக வர்க்க மாக விளங்கினர்.
4. பிரெஞசுப் புரட்சியைத் தொடர்ந்து 1792ல் வயதுவந்த வருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதைக் கொண்டும் முதலாளித்து வப் புரட்சி என்று கூறிவிட முடியாது. முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்துகிறதா என்பதைக் கொண்டே கணிக்க வேண்டும்.
5. முதலாளித்துவப் புரட்சி ஆதிக்கம் செலுத்தியிருப்பின் நெப் போலியனின் சர்வாதிகார பேரரசுக்கு இடமளித்திருக்காது.
6. விவசாயிகளும் குட்டி பூர்ஷ்வாக்களும் ஆதிக்கம் செலுத்திய தாலேயே முதலாளிகளுடன் முரண்பாடு ஏற்பட்டு பிரான்சு அர சியலில் தொடர்ந்து குழப்ப நிலை ஏற்பட்டு வந்தது.
അ 1് -

Page 10
விஞ்ஞான வளர்ச்சியும் th பெண் விடுதலையும்
- மான்விழி -
அடி மைத்தனம் என்பது உழைப்பை அபகரிப்பதிலிருந்தே கணிக் கப்படுகிறது.
உழைப்புக்கேற்றபடி பண்டங்கள் பரிமாறப்படும் வேளை அடிமைத் தனம் இருக்க மாட்டாது. பண்டங்கள் சமனற்ற உழைப்பாகப் பரிமாறப்படும் வேளையே சுரண்டல் ஏற்படுகிறது. பலர் உழைக்க சிலர் உழைக் காமலே வாழும் நிலை பின்னர் ஏற்பட்டது.
இன்றைய சமூகத்தின் ஆணுதிக்கத்தையும் சமனற்ற உழைப் பிலிருந்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
ஐ. நா. சபையின் மதிப்பீட்டின்படி உலகில் பெண்கள் சராசரி யாக நாள்தோறும் 15 மணிநேரம் உழைக்கின்றனர். ஆண் கள் உழைக்கும் நேரம் சராசரியாக 7 மணியே.
ஏகாதிபத்திய நாடாகிய அமெரிக்காவிலேயே பெண்கள் சரா சரியாக நாள்தோறும் 16 மணிநேரம் உழைக்கின்றனர். ஆண்கள்
7 மணி.
வேலைத் தளங்களில் உழைத்து விட்டு வரும் பெண்களே வீட் டில் சமையல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாக வைத்திருத்தல், பிள்ளைகளைப் பேணல், துணி துவைத்தல், தண்ணிர் சேகரித்தல், முதியோரைக் கவனித்தல் ஆகிய கூலியில்லா உழைப்பிலும் ஈடுபடு கின்றனர். கூலியில்லா உழைப்பில் ஈடுபடுத்தப்படுபவர் அடிமை களே. (மற்றும் எருமை, மாடு, குதிரை ஆகியவற்றையும் கூறலாம்) பயிர்த் தொழில் கூட பெண்கள் உழைப்பிலேயே நடைபெறுகிறது. வயற் புறம் சென்று வேலைசெய்யும் ஆண்களையும் பெண்களையும் கணக்கிடின் எளிதில் உண்மையைக் கண்டு கொள்ளலாம்.
பெண்கள் அடிமை நிலையிலிருந்து விடுபட, உழைப்பு நேரத்தை குறைக்கத் தக்க வழிமுறைகளே, விடுதலை விரும்பிகள் ஆராய்ந்து துரிதப்படுத்த வேண்டும்.
குடும்பத்திட்ட பிரச்சாரமும் கருத்தடைச் சாதனங்களும் அண் மையில் வந்தவை; கருவளக் காலம் பூராவும் கர்ப்பச் சுமையும்

குழந்தைத் தொல்லையுமாக வாழும் வாழ்க்கையை ஓரளவு எளி தாக்கியது.
சமையல் சாப்பாட்டை எளிதாக்க யந்திரங்களும் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் முதலாளித்துவம் கொண்டு வந்தது.
காஸ், எலெக்டிக் குக்கர், குளிர்சாதனப் பெட்டி, வக்கும் கிளீனர், சலவை யந்திரம் ஆகியன பெண்களின் உழைப்பு நேரத் தைக் குறைக்கக் கூடியவையே துவைப்பதற்கு சர்வ், ரின்சோ போன்ற பவுடர்களையே வாங்கமுடியாத நிலையில் பெரும்பாலானவர் வாழும் நாட்டில் இவற்றை வாங்கிப் பயன்படுத்துவர் சிறுபான்மை யினரே, பணக்காரரே.
நடுத்தர குடும்பத்தில் கூட கா ஸ்குக் கரிலும் பார்க்க தமக்கு வாய்ப்புள்ள மோட்டார் சயிக்கிளுக்கே ஆண்கள் முதலிடம் தரு கின்றனர்.
எவ்வாருயினும் பெண்கள் தமது சமையலை எளிதாக்கும் வழி களை முதலில் போராடிப் பெற்றுக்கொள்ளவேண்டும். விறகு அடுப் பிலும் பார்க்க மண்ணெண்ணை அடுப்பு வாய்ப்பானதே. அதனிலும் காஸ் மேலும் எளிதானது . ஆயினும் கிராமத்தில் வாழ்வோர் இதைப் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கவே செய்கிறது. செலவு, சிலிண்டர் களை நகரத்திலிருந்து ஏற்றி இறக்கல் பிரச்சனைகள் உள்ளன.
கிராமங்களில் மின்சாரம் உள்ளபோதும் எலெக்டிக் குக்கர் அதன் மின்சாரச் செலவு அதிகமானது.
ஆகவே இச்சமையல் பிரச்சனையை தீர்க்கத்தக்க வேறு விஞ் ஞான வழி உள்ளதா?
ஆம். நவீன விஞ்ஞானம் ஒரு கருவியைக் கண்டுள்ளது. ஆயினும் இதில் வேதனை என்னவெனில் மீண்டும் பணக்கார வர்க்கத்திற்கே அவ்வாய்ப்புப் பயன்படுவதாகும். ஏனெனில் முதலீட்டுச் செலவு மிக அதிகம். பயன்படுத்தும் செலவு மட்டும் மிகக் குறைவு.
அந்த முதலீட்டுச் செலவைக் குறைக்கத் தக்க ஆய்வில் இந்த ஆணுதிக்க உலகம் முயலுமா என்பதே வின?
உலகில் மக்களைக் கொன்று ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆணு திக்க உலகம் ஆண்டுதோறும் செலவு செய்யும் தொகையில் ஒரு சிறுபகுதியை இந்த ஆய்விற்குச் செலவிடின் உலகில் நலிவுறும் பெண் களுக்கு சமையல் வேலையை பாவது எளிதாக்கி ஒரளவு விடுதCல ? ர முடியும்.
. 17 ...

Page 11
இந்த நவீன சமையல் கருவியின் பெயர் மைக்கிரோ ஒவன்-நுண் அலை அடுப்பு. இதன் இன்றைய விலை ரூ. 10,000. ஆராய்ச்சியின் மூலம் 1000/- 500/- ஆகக் குறைத்து வீட்டுக்கு ஒன்ருகத் தர முடியாதா?
இந்த அடுப்பின் தொழில் நுட்பம்:
நுண்கதிர்களை ஈரம்பட்ட சமைக்கும் பொருட்களிடை பாய்ச்சும் போது அணுத்திரண்மம் (Molecule) செக்கண்டுக்கு பல லட்சம் தடவை அதிர்கிறது. இதனல் அவற்றுள் குடுவேகமாக ஏறுகிறது. இவ்வெப்பம் சமையலுக்கும் பயன்படும்.
வாய்ப்புகள்: சாதாரண மின்விளக்கு மின்சாரமே (40, 50 V) நுண்அலை அடுப்புக்குப் போதுமானது. நிமிடக் கணக்கில் சமையலை முடித்துவிடலாம். தானியங்கியாக பணிபுரியும். உணவு தயாரானதும் அடுப்பே அறிவிக்கும். பிற அடுப்புகளிலிருந்து சூடு வெளியேறி உடலைத்தாக்கி சமைக்கும் பெண்களை களைக்கச் செய்து விடுகிறது.
இதனலேயே சமையல் முடிந்ததும் பெண்கள் சோர்வடைந்து விடுகின்றனர். இவ் அடுப்பில் சூடுவெளியே வராது.
வாய்ப்பற்றவை பெரிய குடும்பத்திற்குச் சமைக்கத்தக்க அளவில் அடுப்புகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. நுண்அலைகள் பாயும் தூரம் 5 - 6 அங்குலமாகவே உள்ளது. மேலும் அடுப்பின் வாய்ப்பு கள் முன்னேற்றப்படுவதற்கும் விலையைக் குறைப்பதற்கும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இன்று இந்த அடுப்பு ஆரம்ப நிலையிலேயே உள்ளது. காலப் போக்கில் பரவலாக ஏழைகள் வீடுகளுக்கும் மின்சாரம் போல, மின்சாரத்தோடு நுழைக்கத்தக்க காலம் வரவேண்டும். பெண்கள் அடுப்பூதும் காலம் எங்கள் நாட்டிலும் மறையவேண்டும்.
சமையலில் செலவிடும் நேரம் குறையின் அவர்க்ளது அடிமை நிலையின் அளவும் குறையவே செய்யும். அதில் சந்தேகமில்லை.
வரலாறு வரலாறு என்பது நிலப்பிரபுக்கள், மன்னர்கள், மத குருக் களின் வாழ்க்கையும் தீவிரச் செயல்களுமல்ல; பல்வேறு உற் பத்தி முறைகளின் மூலம் மனித இனம் இயற்கையின் மேல் ஆதிக்கம் செலுத்தியதை விரிப்பதே வரலாறு. — LDII frissiu) (உற்பத்தி முறைகள் 5: புராதன சமூகம், அடிமை, நில வுடைமை, முதலாளித்துவம், சோஷலிசம் :)
1 - 18 -

தரகராட்சி * செ. கணேசலிங்கன்
pre:
என்ன நாச்சியார் தேத்தண்ணியும் பாணும் கொண்டுவர இத் தனை நேரம். பசியோடை வேலை செய்ய முடியுமா?"
குனிந்தபடி வெங்காயம் கிண்டிக் கொண்டிருந்த அன்னம் இடை யிடை தலையை நிமிர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். மற்றக் கூலிப் பெண்களுடன் தன் பசிபற்றி புறுபுறுத்துக் கொண்டும் இருந் தாள்.
தூரத்தில் சோர்ந்த முகத்தோடு பொன்னம்மா ஒரு கையில் அலுமினியக் கேத்திலுடனும் மறுகையில் ஒரு கூடையுடனும் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அன்னம் நாரி வலியை தற்காலிக மாக நீக்கவுமாக எழுந்து நின்ருள். மற்றைய கூலிப் பெண்களது குமுறலையும் தெரிவிப்பது போல பொன்னம்மா சொன்னள்.
** என்னுடைய பிரச்சினைகள் பற்றி உனக்கெங்கை தெரிய ப் போகுது. வெள்ளிக்கிழமை நீங்க கிண் டி ன வெங்காயத்துக்குக் கிடைத்த கணக்கைக் கொழும்பு லொறிக்காரன் இப்ப தான் கொண்டு வந்து தந்தான். என்ரை தலை சுத்துது!’’
* குண்டு போலை வெங்காயம். நல்ல நிறையும் விலையும் போயி ருக்குமே’’
அன்னம் சொல்லியபடியே வரப்பு வழியே பொன்னம்மாவைத் தொடர்ந்து நடந்தாள். மற்றக் கூலிப் பெண்களும் வெ ய் யி லில் வடிந்து கொண்டிருந்த வியர்வையை முந்தானைச் சேலையால் துடைத்த படி கிணற்றங்கரை, தென்னை நிழலை நோக்கி நடந்தனர்.
'உனக்கேன் நான் பொய் சொல்லவேணும். லொறிக் கூலியை கழித்துக் கணக்குப் பார் த் தா ல் கிலோவுக்கு ஏழு ரூபா தான் தேறுது.
"இங்கே சந்திக் கடையிலேயே பதினெரு ரூபா விற்கிருங்கள்.' மற்ருெரு கூலிப் பெண் இடைமறித்து வியப்போடு சொன்னள். ** அதெல்லடி வேடிக்கை. மகள் கொழும்பிலையிருந்து எழுதினன் . தாங்கள் கிலோ பதினறு ரூபாவுக்கு வாங்கிருங்களாம்’ பொன் னம்மா பொருமலோடு சொன்னுள்.
* 'இதென்ன கொடுமை. லொறிக் கூலிதான் கூடிப்போச்சு என்ரு லும் இப்பிடி விலை ஏற முடியாதே. ஆர் இப்படியெல்லாம் இடை யிலை கொள்ளையடிக்கிருர்கள்.”*
سی۔ 19 حس۔

Page 12
அன்னம் தன் பசியையே ஒரு கணம் மறந்து சொன்னுள். 'கடைசியிலை பார்த்தால் தரகர்களுக்கும் வியாபாரிகளுக்குந் தான் லாபம். எங்களுக்கு ஒன்றுமில்லை.*
‘எங்களுக்கும் கருர் கூலிதானே தாறிங்க' ** அந்தக் கூலியாவது உங்களுக்குக் கிடைக்குதே' கூலியைப் பற்றி அன்னம் கூறியதை மழுப்புவதாக பொன் னம்மா சொல்லிவிட்டு பாணை எடுத்துப் பங்கிட்டாள். அவர்கள் நீட் டிய சிரட்டைகளில் தேநீரை ஊற்றினுள். ●
'ஒன்றும் கிடைக்காமலா எல்லாரும் வெங்காயம் தாக்கிருர் கள் ?
** கடைசியிலை பார்த்தால் தரகர்களுக்கும் வியாபாரிகளுக்குமாகத் தான் நாங்க விவசாயம் செய்கிருேம் போல் தெரியுது”*
பொன்னம்மா விவசாயிகளின் துன்பத்துக்கு விடை கண்டவள் போலக் கூறிவிட்டு, நிமிர்ந்து நின்று தன் முகத்தில் வடிந்த வியர் வையை முந்தானைச் சேலையை இழுத்துத் துடைத்துக் கொண்டாள். ‘நட்டமெண்டால் விட்டிட்டு வீட்டிலை இருக்கிறது தானே வெளி நாட்டிலையிருந்து மகன் பணம் அனுப்புவான் தானே’’
ஒருத்திசொன்னுள். “அவனை வெளிநாட்டுக்கு அனுப்பபபட்ட கடனு க் கு வட்டி யையே என்னல் கொடுக்க முடியாமல் இருக்கிறது. இங்கேயிருந்து இந்தத் தோட்டத்தைப் பார்த்திருந்தாலே எனக்கு ஆறுதலாயிருந் திருக்கும். அவரும் எலும்பிலை சன்னம் பட்ட கா லே ரா டு கிடக் கேக்கை”*
* எப்பிடி அவர் நடந்து திரிகிருர் தானே.”* **கக்கூசுக்கும் கிணத்தடிக்கும் கொஞ்சம் தாண்டி நடக்கிருர்’’ பொன்னம்மா சோர்வோடு சொல்லிவிட்டு கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து அக் கூலிப் பெண்கள் பாணை சம்பலிலும், தேநீரிலும் தொட்டுச் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
**உங்க வீட்டு நிலைமை போலத்தான் ஊரெல்லாம்' ஊர் நிலைமைகளைப் பொதுமைப்படுத்தி பொன்னம்மாவிற்கு ஆறு தலளிக்கும் வார்த்தையாகக் கூறினள் ஒருத்தி.
அவள் வார்த்தையில் உண்மையிருப்பதை பொன்னம்மாவால் உணர முடிந்தது.
இளைஞர்களெல்லாம் வெளிநாட்டுக்கும் இயக்கங்களுக்கும் செல்ல, விவசாயத்தைக் கூட பெண்களே பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதை
سے 20 -

யும் அவளால் உணர முடிந்தது. கடைசி மகன் திடீரென பயணம் செல்லும் வேளை, "நீயும் டோனல் நான்தான் தோட்டத்தையும் பார்க்க வேண்டும்" என்று சொன்னதற்கு அவன் கூறிய பதிலும் அவ் வேளை அவள் நினைவில் வந்தது. ‘ஆதிகாலத்திலிருந்தே உணவைச் சேகரிப்பது தொடங்கி பயிரிடுவதையும் பெண்கள் தான் செய்து வந்தார்கள், இன்றும் அப்படித்தான். நம்பாவிட்டால் வயலில் போய்ப் பாரம்மா"
தன் வாழ்க்கைக் காலத்தில் இப்படியான ஒரு இக்கட்டான நிலை யும் துன்பமும் ஏற்படும், என அவள் கனவிலும் எண்ணியதில்லை. ஒரு மகனைப் பறிகொடுத்தாள், மற்ருெரு மகன் இயக்கத்தில்.
அதிகாலையிலிருந்து இரவில் தூங்கும் வரை அவள் கண்டது வேலை, வேலை தான்.
வீட்டுச் சமையலையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற நினைவு வந் ჭნჭნl•
'சரி ஆறினது போதும் எழும்புங்கோ' அப்பெண்களை மீண்டும் வேலையை ஆரம்பிக்கச் செய்துவிட்டு வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தலையில் முந்தானைச் சேலையைப் போட்டபடி வீட்டை நோக்கி நடந்தாள்.
வெங்காயம் விற்றதில் வந்த பணத்தில் கூலிக்கு வைத்துக் கொண்டு மற்றதை வட்டிக்குக் கொடுக்க வேண்டும் என மனதில் கணக்கிட்டுக் கொண்டாள். V−
ஒரு காலத்தில் தன் நகையை வைத்து ஆயிரம் இரண்டாயிரம் கடன் எடுக்க வேண்டிய காலத்திலேயே அவள் கவலைப்பட்டாள்.
தற்போது நகைகளை விற்றபின்னரும் மகனுக்காக எண்பதி ஞயிரம் ரூபாவை வீட்டு உறுதியைக் கொடுத்துப் பெற நேரிட்டது.
"இப்படிக் கடன் பெறும் நிலை வந்ததே உனக்காக." மகனைப் பார்த்து ஆற்ரு நிலையில் அவள் ஒரு தடவை கூறினுள். **நாடே கடனில் நீந்துதம்மா. நாட்டு வருமானத்தில் கால் பங்கு கடன் தவணைப் பணத்திற்கும் வட்டிக்குப் போகுதம்மா. நீ ஏன் கவலைப்பட வேண்டும் .'
'வட்டியும், முதலும் கொடுக்கா விட்டால் கடன் தந்தவன் சும்மா விடுவான’’
* "அவனல் என்ன செய்ய முடியும்? வீட்டிலையிருந்து உங்களை எழுப்ப முடியுமா? நீங்க பயப்பட வேண்டாம்”*
மகன் கூறிய பதிலை அவளால் சீரணிக்கவே முடியவில்லை. இவர் கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிருர்கள், எங்கே இப்படிப் பேசு வதற்குப் படித்தார்கள் என மீண்டும் அசைபோட்டுப் பார்த்தாள்"
"கடனடைக்க நீ பணமே அனுப்பமாட்டாய் போலிருக்கு"
- 21 -

Page 13
'தரகரை நம்பி ஜெர்மனிக்கு அகதியாய் போகத்தானே புறப் படுகிறேன், உழைத்து மிச்சம் பிடிக்க முடிந்தால் நிட்சயம் அனுப்பு வேன் தானே."
கொழும்பில் ஏஜென்சிக்குப் பின்னல் ஆறுமாதம் அலைந்து, ஜெர் மணிக்குப் போய் சேர்ந்து ஏழுமாதமாகியும் ஒரு பணமும் அனுப்ப வில்லை.
‘எங்கள் கஷ்டமறியாத பிள்ளை, அப்பரின் நிலையை நினைத்தா வது ஏதாவது அனுப்பப்படாதா'
மனநோவுடன் படலையைத் திறந்து வீட்டையடைந்தாள். ‘'நீ போனதும் இந்தப் பிள்ளை வந்து காத்து நிற்குது' சாய்மானக் கதிரையில் கிடந்த படி கணவர் கந்தசாமி சொன் ஞர்.
வட்டிக் காசு வாங்க வந்த பெண் தன் பொறுமையைக் காட்டிய படி மெளனமாக எழுந்து நின்ருள்.
அவளின் மெளனப் பேச்சை பொன்னம்மா புரியாமலில்லை. பொன்னம்மா கதவைத் திறந்து வீட்டுள் நுழைந்தாள். வெங்காயம் விற்றுவந்த பணத்தில் தன் மனக் கணக்கின்படி எடுத்து வந்து அப் பெண்ணிடம் கொடுத்து விட்டு மிகுதிக்கு தவணை சொன்னுள்.
'இப்பவும் வெங்காயம் கிண்டிவிட்டுத் தான் வந்தேன். வித்த தும் மிகுதியை நாலுநாளில் தந்து விடுவேன்'
அந்தப் பெண் சென்றதும் பொன்னம்மா தன் மனத் தாங்கலை கொட்டினுள்.
* "நான் கஷ்டப்படுவதெல்லாம் கடைசியில் வட்டிக்குத் தான் சரி. இவனே அனுப்ப இத்தனை பணம் வருமெண்டு நான் எதிர்பார்க் கேல்லே. இதை எப்படித்தான் கட்டித் தீர்க்கப்போறமோ தெரி Gudນທີ່ດ ?
‘'நீ கொடுத்த பணமெல்லாம் டிக்கெட்டுக்கா, ஏஜென்ஸி, தரகர் தான் எல்லாவற்றையும் கொள்ளையடிக்கிழுங்கள்' கந்தசாமி சொன் ஞர்.
"தரகர்மார் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாதா?’ ** லஞ்சம் கொடுக்கிறதையும் தரகர்மூலந்தான் செய்ய முடி யும். நேரே செய்தால் மாட்டுப்பட நேரலாம். மூலதனமில்லாத தொழில் தரகுத் தொழில் ஒன்றுதான். கமிஷன் பெறுவதற்காக அவர்கள் எதுவும் செய்து விடுவார்கள். கமிஷன் பணத்தில் பலம் பெற்று அரசைக் கூட தங்க கையில் போட்டுவிடுவார்கள்'
- 22 -

* தம்பியும் இந்தத் தரகர்கள் தான் ஆட்சி நடத்துகிருர்கள் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் எனக்கு ஒன்றும் விளங் கேயில்லை?"
இங்கே உள்ள முதலாளிகளெல்லாம் வெளிநாட்டுப் பண்டங் களை கமிஷனுக்கோ, லாபத்துக்கோ விற்பவர்களே அன்றி உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குபவரல்ல என்றே சொல்லிக் கொண்டிருந் தான்.'
** என்னவோ எனக்கு இது ஒன்றும் நல்லாய் இன்னும் விளங் கேல்லை”*
** எங்க வெங்காயத்தை கொழும்பிலை கமிஷனுக்கு விற்பவன் போலத்தான் இந்நாட்டிலுள்ள எல்லா முதலாளிகளும். அவனுக்கு கமிஷன் கிடைத்து விடுகிறது. அதேபோலத் தான் இங்கே உள்ள பெரிய முதலாளிகளெல்லாம் வெளிநாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்து விற்கும் தரகு முதலாளிகள், அவர்களது ஆட்சியே நடக்கிறது என்று தான் அவன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எங்கே இதையெல்லாம் படித்தானே தெரியேல்லை’
பொன்னம்மா அடுக்களேயுள் நுழைந்து உலையை வைத்து அடுப்பை மூட்டினள். அவளது நெஞ்சில் அன்றைய வேலைகள் மட்டுமல்ல பல் வேறு மனநோவுகளும் நெஞ்சில் குமுறின.
கந்தசாமிக்கு கோப்பையில் மோரை ஊற்றிக் கொண்டு வந் தாள்.
**கொள்ளையடிக்கும் ஏஜென்சிகளையும் தரகர்களையும் ஒழித்துக் கட்ட முடியாதா? அவங்களுக்குக் கொடுத்த பணத்திற்கு நாங்க வட்டி கொடுக்கவும் கஸ்டப்பட வேண்டியிருக்கு’’
* தரகர்களின் கொடுமை அதிகரித்து விட்டது: அவர்கள் ஆட்சி இனி நீடிக்கப்போவதில்லை, ஒழிப்போம் என்று தான் தம்பி சொல் லிக் கொண்டிருந்தான்.""
சுற்றடல்
1306ம் ஆண்டு இலண்டன் மாநகரில் நிலக்கரியை எரித்துச் சூழலை மாசுபடுத்துவது தூக்கிலிடத்தக்கதொரு குற்றமாகக் கருதப்பட்டது. மூன்று நூற்ருண்டுகளுக்குப் பின் நிலக்கரி எரிக்கும் சத்தியே மனித முன்னேற்றத்திற்கு அவசியமானதாக முதலாளித்துவம் யந்திர உற் பத்திக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. சுற்ருடலிலும் பார்க்க இலாபமே முதன்மையாக அன்று தொட்டு இன்று வரை முதலா ளித்துவம் செயற்படுத்துகிறது.
سپس 23 سيسيج

Page 14
LDTfrigsår M-C-M" என்ற வாய்பாட்டின் விளக்கம்
- * 'ഥഴ്ച கணக்குழுக்களாக அலைந்து திரிந்த ஆதிமக்கள் தம் அடிப்படைத் தேவைக்கு வேண்டியவற்றைத் தாமே தேடிக் கொண் டனர். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைய, அலைந்து திரியாது நிலை பெற்று ஆங்காங்கே பண்டங்களை உற்பத்தி செய்தனர். அவற் றைப் பிறருடன் பண்டமாற்றுச் செய்து கொண்டனர்.
உதாரணமாகத் துணி நெய்தவன் தன் துணியை விவசாயியிடம் கொடுத்து தானியத்தைப் பெற்றுக் கொண்டான். அங்கு சுரண்ட லின்றி உழைப்பிற்கு ஏற்றபடி பண்டங்களின் மதிப்பு பரிமாறப் பட்டது. பண்ட உற்பத்தி வளர்ச்சியடைய பணம் பரிமாற்றத்துக் கிடையே நுழைந்தது. அரிதான தங்கம், வெள்ளி பித்தளை போன்ற உலோகங்கள் பயன்பட்டன. (C) பண்டம் (M) பணம் (C) பண்டம் என்றநிலை ஏற்பட்டது. இங்கும் சுரண்டல் அத்தனை மோசமாவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.
அடுத்த கட்டத்தில், சிறப்பாக முதலாளித்துவம் தோன்றி ஆதிக் கம் செலுத்தியதும் பண்டத்தின் மீது பணம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. லாபத்திற்கும் உபரிமதிப்பை அபகரிப்பதற்குமாக பணம் பயன்படுத்தப்படத் தொடங்கியது. அதுவே இவ் வாய்பாடு. (M) பணம் - (C) பண்டம் - (M) பணம் என்பதில் M என்பது M1 ல் இருந்து வேறுபடுவதைக் காணலாம். பண்டங்கள் வாங்கப்பட்டு லாபத்துடன் விற் சப்படுகின்றன. முதலிட்ட (M) பணம் லாபத்துடன் சேர்ந்து (M) ஆகிறது. இது முதலாளித்துவத்தின் நியதி ஆகி விட் டது. முதலாளித்துவத்தில் உழைப்புச் சக்தியும் பண்டமாகிறது என்பதை நாம் மறந்து விடப்படாது.
முதலாளிகள் மூலப்பொருட்களை வாங்கி, மனித உழைப்புச்சக்தி யையும் (கூலி கொடுத்து) வாங்கிப் பண்டமாக்கி சந்தையில் பணத் திற்கு விற்கின்றனர் என்பதையும் நாம் மறந்து விடப்படாது. இன்று கொடுத்த கூலி, பண்டத்துடன் இணைகின்றது. அக்கூலி சேர்ந்த பண்டம் மாதங்கள், வருடங்களின் பின் விற்பனையாகலாம். ஆகவே கூலி, உழைப்பு பண்டமாகிறது.
மூலதனம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கவேண்டும். அத் தகைய நிலையில் தான் முதலாளித்துவம் நிலைக்க முடியும். பணம் TM) + லாபம், வட்டி, IMT) ஆக வளர்ச்சியடைந்து விடுகிறது.
முதலாளித்துவத்தில் பண்டமாகி விடும் உழைப்புச்சக்தி சோஷ லிசத்திலேயே விடுதலை பெறுகிறது. முதலாளித்துவ உலகின் பொரு ளாதார நாயகனக விளங்கிய கெயின்ஸ் மார்க்சின் இவ்வாய்பாட் டை கற்றிருந்தார் என இன்று கூறப்படுகிறது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களிலும் மூலதனம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நியதியே புரட்சிகர அரசியலைக் கைவிடவேண்டிய நிலைக்கு ஈர்த்துள் ளது என சில மார்க்சிய பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.
- 24

அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும் !
SSMMSMMYeeLSJLeLeLSeYS ALLLAAS SJS S AAASALLLS ASTe SqAqS C
1. போர்க்கோலம் செ. கணேசலிங்கன் 14.25
2. மண்ணும் மக்களும் ps 10.50
3. அயலவர்கள் 45.00 4. பொய்மையின் நிழலில் 37.50 5. அந்நிய மனிதர்கள் - 13.50 8. வதையின் கதை 15.75 7. கலையும் சமுதாயமும் 11.25 8. குந்தவிக்குக் கடிதங்கள் 18.00 9. மான்விழிக்குக் கடிதங்கள் a 16. 50 10. சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் 24,00 11. அபலையின் கடிதம் 娜 激 375 12. சொந்தக்காரன் - பெனடிக்ற் பாலன் 13.50 13. மரணத்திற்குப் பின் - பொ. சங்கரப்பிள்ளே 45.00 14. சைவசித்தாந்தம் 30. oo 15. மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 2.00
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 421388