கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1997.09

Page 1
鳞06S6S
45êos2uj: 694.sso
■,
| AY": ʼ, , திருமதி 3-Gjigj GjE
விலை ரூபா : 15.00
 

in.. ""
ஷ்மி
ராசதுரை
GJ IL II f - 1997
في .

Page 2
RAN GRINDING MLS
219, Main Street, Matale, Sri Lankca.
Phone : 066-2425
ት LSLS SLSLS LLLSS LLS LSLS S SS SLSS SLSS LSL LSL LSLSLSL SLLLSS SLS SSLSLSL LSLSLS LSLSS SLLLLLLSLLLLL LSLLLLLLLL SLSLSL LSLSLL LLSLLLL LLSLLLL LLSLSL LSL
VIJAKA GENERAL STORIES
(AGROSERVICE CENTRE)
DEALERS: AGROCHEMICAL SPRAYERS, FERTILIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha,
. (Wolfendhal Street), Colombo 13.
Phone :- 327011
 
 
 
 
 
 
 
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்.”
256 செப்டம்பர் - 1997
தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே.
யாழ்ப்பாணத்தைப் போன்றதல்ல இங்கு வாழ்க்கை முறை. 'அந்த அமைப்பு இங்கில்லை. இங்கு தினசரி வாழ்க்கை முறையே வேறுபட்டது. பொருளாதார நிலையே மாறுபட்டது.
அங்கு மல்லிகைக்கென்றே சொந்தக் கட்டிடம், சொந்த அச்சகம், தங்குவதற்குச் சாப்பிடுவதற்குச் சொந்தமான வீடுண்டு.
ஆனால் இங்கு நேர்மாறு. எல்லாவற்றுக்குமே பணம் பிரதானம். இருக்க, நடக்க, சாப்பிட, தூங்க அனைத்துக்குமே பணம் இங்கு முக்கியம் இத்தனை சங்கடங்களையும் முன்னரே உணர்ந்தவன் நான். இந்தச் சவாலைக் கொழும்பில் மல்லிகைச் செடியை ஊன்றத் தொடங்கிய அந்தக் கணமே ஏற்றுக்கொண்டுவிட்டேன். அந்தச் சவால்களுக்கு இன்று முகம் கொடுக்கிறேன்.
இத்துடன் மூன்று இதழ்களைச் சுவைஞர்களுக்கு தபாலில் அனுப்பியுள்ளேன். முன்னர் அனுப்பிவைத்த சஞ்சிகைகளுக்குச் சிலர் சந்தா செலுத்த முன் வந்தார்களே தவிர, ஏனையவர்கள் தொடர்பு கொள்ளவே முயற்சிக்கவில்லை. - -
மல்லிகைச் சஞ்சிகையை நான் ச்சியற்றலாம். ஆனால் அதை அனுப்ப உதவும் அஞ்சல் தலைகளை ம் அச்சிட இயலாது. இதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் போதும்.
தன்னை நெஞ்சார நேசிப்பவர்களைத் தேடித்தான் மல்லிகை சென்றடைகின்றது. அவர்களினது பேராதரவுதான் அதன் ஜீவபலம். சுவைஞர்கள் இதைப்புரிந்துகொண்டால் சரி.
- டொமினிக் ஜீவா.
LD GOLOGOG

Page 3
With Best Compliments:
Q NAQSS SUDDIFS CENTO
IMPORTERS 8. DISTRIBUTORS OF AUTOMA
EVERWEAR
MYPOL
LON HEAD
TYRES & TUBES
109, Wolfendhal Street, Colombo-13
Telephone. 432761/432885 Fax: 434348
2

0. afire. IGetafef Gafniash
இரண்டு மிகப் பெரிய இழப்புகள் உலகையே சில நாட்களுக்குள் குலுக்கி, உலுக்கி எடுத்து விட்டன.
உதிர்ந்து விட்டவைகளில் ஒன்று காவோலை, மற்றொன்று குருத்தோலை.
இரண்டு இழப்புகளுமே திடீரென்று ஏற்பட்டு விட்ட அதிர்ச்சி சம்பவங்களாகும்.
சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என ஒரு காலத்தில் உலகு தழுவிய புகழைப் பெற்றிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அரச குடும்பத்தினருக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்யப் புறப்பட்டவர்தான் இளவரசி டயானா, மன்னராட்சியின் மகிமையைத் தனது தனி மனிதப் போராட்டத்தின் ஊட்ாக சிதறடித்து விட்டவர் இளவரசி. அதனால் உலக மக்களின் பேராதரவை பெற்றுக்கொண்டவர். இறுதி ஊர்வலத்தில் அதன் செல்வாக்குத் துலாம்பரமாகத் தெரிந்தது.
இந்த நூற்றாண்டில் நடந்த பெரிய நிகழ்ச்சி இது.
அடுத்தவர் அன்னை தெரேசா. எங்கோ பிறந்தவர்; எங்கோ' வளர்ந்தவர்; மண், மதம், மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களால் அன்னியமான ஒரு பெண் துறவி. தொoண்டு ஒன்றையே வாலாயமாகக் கொண்டு இந்தியாவில் கல்கத்தா நகரில் சேரி மக்கள் மத்தியில் தொண்டு செய்ததின் மூலம், ஈசனைக் கண்டவர். அதனால் புளகிங்கித்தவர்.
தொட்டால் தீட்டு; மேனிபட்டால் "டக்கு என்ற இந்திய சநாதன தள்மத்துக்கே தனது தொண்டின் மூலம் சt ல் விட்டவர். மத வழிபாட்டிற்கே புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்தவர்.
மனுக் குலத்தின் மனச் சாட்சி இருக்கும் வரை டயானாவின் நாமம் வாழும்.
மானுட நேசிப்பு இருக்கும் வரை அன்னையின் பெயர் நிலைக்கும்.
- ஆசிரியர்
DS)5 3

Page 4
பரவுகின்றது
சொப்பினின் இசை
இருளின் இதயம் சல்லடை யெனக் கூராயுதங்களாய்க் கீழிறங்கும் மழை, இருளில் மூழ்கும் வீடுகள், சுவர்களில் உருண்டு வழிந்திடும் விழிநீர், மழையில் குளிக்கும் செடிகள் மெளனத்தி லாழும் ஒழுங்கைகள்
சோகக் கன்னிகை முகம் மஞ்சல் நிலவொளி மறைத்திட மேனியில் வீழ் பனி இரத்தச் சுவடுகாட்ட ஒவ்வோர் இரத்தக் கறையும் ஒளிர்ந்திட
மரணம் திரணமாய்க் களம்புகும் வீரர் ஆங்கே பகைக்கும்பல் மடிந்தோர் சிலர் - உயிர் தப்பியோர் சிலராய் நகரெங்கும்
அவர் நாமம் வாய்மொழியாக
 
 

பரவுகின்றது
சொப்பினின் இசை
நீலவானில் திசைதப்பிய அன்னப்புள் செட்டைகளுள் ஒடுங்கித் தனிமை முனகல் அதன் மேல் தாவும் வல்லுாறு
* பரவுகின்றது
சொப்பினின் இசை
கல்லாய் உறைந்த வேதனையில் தந்தையின் முகம் மடிந்த புதல்வனின் நெற்றியில் முத்தமிடுகின்றனள் அழும் அன்னை
பரவுகின்றது
சொப்பினின் இசை
காதலர் கழுத்துக்களைச் சுற்றி வளைத்தன நேசக்கரங்கள் மீண்டும் - இசைக்கு நடன மிடும்
காதல
முகிலு மில்லை மழையுமில்லை இப்போ பரவுகின்றது சொப்பினின் இசை
Šo
う DS)

Page 5
With best wishes from:
NW CANSAN DRINRS
OFFSET & LETTER PRESS PRINTING
22, Abdul Jabbar Mawatha,
Colombo - 12. Phone : 435422
 

மேசையில் இருந்து எழுதத் தொடங்கிய உடனேயே அவனுக்குப் பக்கத்தில் தேநீர்க் கோப்பையை வைத்து, “ அப்பா எழுதுகிறார் குழப்பாதே” என்று பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி, கடைக்குப்போவது முதல் சமையலைக் கச்சிதமாக முடிப்பது வரை குடும்பப் பொறுப்பு களைத் தானே சுமக்கும் மனைவியர் வீட்டில் இருக்கும்போது, ஒரு ஆண் எழுத்தில் எதையும் சாதிப்பது கடின மில்லை. ஆனால் இந்நாட்டில் அல்லது எந்த நாட்டிலுமே இரட்டைச் சுமையுடன் ஒரு பெண் சிலவற்றைச் சாதிக்கும் போது, சமூகத்தின் வரம்புகளை உடைத்து வெளிவந்து அவள் தன் திறமையை நிரூபிக்கும் போது அதுதான் உண்மையிலேயே மனப்பூர்வமாக, பாராட்டப்படவேண்டிய விடயம், என்று அடிக்கடி உணர்வு பூர்வமாகக் கூறும் அன்னலட்சுமி அக்காவை நான் பல வருடங்களாக அறிந்திருந்தாலும் அவரை நெருங்கிப் பார்க்கமுடிந்தது 1995ல் பீஜிங்கில்தான்.
அரசு சார்ந்த நிறுவனங் களின் நாலாவது அனைத்துலகப் பெண்கள் மகாநாட்டில், பத்து நாள்கள் நாங்கள் பக்கத்து அறைகளில் தங்கி, ஒன்றாக உண்டு அருகருகே உறங்கி, ஒருமித்துப் பயணம் செய்து, பேசி, விவாதித்து உதவி செய்து, வாழ்ந்த போது அவரின் முழுப்பரிமாணத் தையும் என்னால் தரிசிக்க முடிந்தது.
பெயருக்கேற்ற லட்சுமீ கரமான உள்ளம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
அட்டைப்படம்
பிரபல தமிழ் பெண் எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியையும்
கோகிலா மகேந்திரன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் தனது ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்றவர். அந்தக் காலத்தில் நல்ல குடும்பத்துப் பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையெனப் பெயர் பெற்றிருந்த இராமநாதன் கல்லூரி வழங்கிய ஒழுக்கமும் பண்பாடும் அடக்கமும் இன்றும் அவருக்கு அணி செய்வதை நிதர்சனமாகக் காண முடிகிறது. VK.
தன்னை அதிகம் முதன்மைப் படுத்திக்கொள்ள விரும்பாத தன்மை யும், யாருடனும் இலகுவில் இயைந்து நடக்கக் கூடிய இயல்பும் அக்காவின் ஆளுமைக் கூறுகளில் விசேட கவனத் திற்குரிய பண்புகள்.
7 ইিঙ্গ ঢদেখতে א

Page 6
சிறுமியாக இருந்த காலத்தில் வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் சில்லறைகளைப் பொறுக் கிக்கொண்டு கடைக்கும் போவாராம் இவர்! கடலை வாங்க என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பெண் பிள்ளை என்பதால் ரப்பள் வளையல் வாங்கவாக இருக்கும் என்று நீங்கள் முணுமுணுத்தால் அதுவும் தவறுதான்! “வெறும் வெள்ளைக் கடதாசி வாங்கியா காசை முடிக்கிறாய்? ” என்று இவரது தாயார் ஆச்சரியமாகக் கேட் பாராம். வெள்ளைக் கடதாசியில் கன்னா பின்னாவென்று எழுதும் ஆசை அப்போதே முளைகொண்டுவிட்டது. வாழும் பிள்ளையை மண்விளையாட்டில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்?
1950களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரத் தொடங்கிய கலைச் செல்வி சஞ்சிகை பல எழுத் தாளர்களை உறுவாக்கிய சங்கதி பலரும் அறிந்ததே. கலைச் செல்வி வளர்த்துவிட்ட முக்கியமான முதன்மை யான பெண்எழுத்தாளர் அன்னலட்சுமி. இன்றும் சிற்பி ஐயாவை அவர் நன்றியுடன் நினைவு கூருவது அவரது காலத்தால் செய்த நன்றியை மறவாத பண்பினைச் சுட்டி நிற்கிறது.
விழிச்சுடர் என்ற குறுநாவல், வீரகேசரிப் பிரசுரமாக வந்த உள்ளத் தின் கதவுகள் என்ற நாவல், நெருப்பு வெளிச்சம் என்ற சிறுகதைத் தொகுதி, இரு பக்கங்கள் என்ற கவிதைத் தொகுதி ஆகியவை இதுவரை நூலுருப் பெற்ற அவரது பிரசவங்க ளாகும். உலக வாழ்வு என்ற நாடக மேடையில் அன்னலட்சுமி அவர்கள் எடுத்துக்கொண்ட இரண்டு பிரதான பாத்திரங்களில் ஒன்று, எழுத்தாளர் மற்றது பத்திரிகையாளர். முந்திவந்த செவியை பிந்திவந்த கொம்பு கொஞ்சம் மறைத்துவிட்டதும் உண்மைதான்.
1993இல் இந்து கலாசார அமைச்சு இவருக்கு தமிழ் மணி என்ற பட்டம் வழங்கிய போதும், 1994இல் எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது தரப்பட்டபோதும் பத்திரிகையாளர் என்ற சுட்டியே இவருடன் அதிகம் ஒட்டிவிட்டதை நாம் தரிசித்தோம். பத்திரிகை இவரிடத்தில் அவசரமான எழுத்துக்களை நிர்ப்பந்தித்ததால், இவரது உண்மையான ஆற்றல் இலக்கியமாக வெளிப்படும் நிலை பின்தள்ளப்பட்டது. ஆயினும் தொழில் ரீதியான தனது பொறுப்பையும், கடமையையும் மிகுந்த விழிப்புணர்வுடன் இவர் செய்து வருவது பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்கள் தமிழ்ப் பத்திரிகை உலகில் தொடர்ந்து நின்று நிலைப்பதற்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான ஆளுமை வேண்டும். அது இவரிடத்தில் இருப்பது வெள்ளிடை மலை. இந்த நிலையை சரியாக உணர்ந்த தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு சில வருடங்களுக்கு முன் இவரைப் பாராட்டிக் கெளரவித்துப் பொன்னாடையும் போர்த்தி நிறைந்தது.
இவரது முதலாவது சிறு கதை, தினகரனில் அதுவும் டாக்டர் கைலாசபதி அவர்கள் ஆசிரிய பீடத்தில் இருந்த போது வெளிவந்தது என்பதே இவருக்கு பெருமை தரும் விடயமாகும். பிற்காலத்தில் 1970 களிலும் 80 களிலும் இவர் மித்திரன் வாரமலர் ஆசிரிய பீடத்திலும் இருந்த போது கைதுக்கி விட்ட பெண் எழுத் தாளர்கள் பலர். அவர்களில் நானும் ஒருத்தி என்பது எனக்குப் பெருமை தருவது.
8

சிரித்திரன் சஞ்சிகையில் அன்னலட்சுமி எழுதிவந்த தீவாந்தரம் என்ற சிறுவர் தொடர்கதையையும், வீரகேசரியில் அவர் எழுதிவந்த சந்திரனில் சுந்தர் தொடர் கதையையும், மாணவர்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். சிறுவர் இலக்கியங்கள் மிகக் குறைவாகச் செய்யப்படும் எமது நாட்டில் இவை குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
ஆங்கிலக் கதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துள்ள திருமதி இராசதுரை அவர்கள் ஆரம்ப காலத்தில் வானொலி நாடகங் களையும் எழுதிவந்தார். பல்வேறு துறைகளிலும் சகோதரி அவர்கள் கால்வைத்துள்ள போதிலும் பெண்கள் பிரச்சினைபற்றிப் பேசும் பத்திரிகை யாளர் என்பதே முனைப்பாகி நிற்கும் அறுவடையாகும்.
1995 ஆகஸ்டில் தமிழ்ப் பெண் பத்திரிகையாளர் என்ற வகையில் எம்முடன் சீனாவில் நடைபெற்ற பெண்கள் மகாநாட்டிற்கு வந்த இவர், அதுபற்றித் தொடர்ந்து இருபது வாரங்கள் வீரகேசரியில் எழுதினார். முக்கியமான அந்த மாநாட்டைப் பற்றித் தமிழில் ஊடகப்படுத்திய முக்கிய பெண்ணிய வாதியாக அதன் மூலம் இவர் அவதானிக்கப்பட்டார். விட்டுக் கொடுக்கும் பண்பு, எளிமை, பொறுமை, சொல்ல வேண்டிய இடத்தில் தனது கருத்தைத் துணிந்து சொல்லிவிடும் இயல்பு, மற்றவர்களின் திறமைகளை மதித்துப் பாராட்டும் பண்பு ஆகியவற்றால் அந்த வேற்று நாட்டில் இவர் என்னை ஈர்த்துக் கொண்டார். விளைவாக, அவரது கமெரா தட்டிய படங்களில் எல்லாம் காணப்படும் அளவுக்கு அன்ன லட்சுமியும், புஷ்பா கணேசலிங்கமும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
தனது கணவரும் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனது சமூகப் பணிகளைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுகிறார்கள் என்று கூறும் சகோதரி தனது குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பதை அவருடன் நெருங்கிப் பழகும் யாரும் இலகுவில் இனங்கண்டுகொள்ள முடியும்.
1982இல் மணிலாவில் நடைபெற்ற ஆசியப் பத்திரிகையாளர் மகா நாட்டில் கலந்துகொண்ட இவர், இங்கு திரும்பிய பின் எழுதிய மணிலாவில் மணியான நாட்கள்' என்ற பயணக் கட்டுரை பல வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. வானொலி நேயர்களுக்காக அறுபதுகளில் இவர் செய்த பூஞ்சோலை என்ற நிகழ்ச்சியும், எழுபதுகளில் செய்த மகளிர் அரங்கு என்ற கிராமியப் பெண்கள் நிகழ்ச்சியும் பல விமர்சகர்களின் பாராட் டையும், பல ஆயிரம் நேயர்களின் விருப்பையும் பெற்றமையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகின்றன.
ஒருவரது ஆற்றல்கள் முழுவதும் பூரணமாக வெளிப்படுத்தப்படும் நிலைபற்றி (Self Octualisation)ச் சிந்திக்கக்கூடிய் இவர் தனது மணி விழாக் காலம் வருவதற்கு முன்பத்திரிகைத் தொழில் தன்னை எவ்வளவு மாற்றியுள்ளது என்பதைச் சரியாக அளந்தறிந்து, தகவம் பரிசு பெற்ற புதிய அடிமைகள் போன்ற படைப்புக்கள் பலவற்றை ஆக்கித்தர வேண்டும் என்று இலக்கிய உலகின் சார்பில் இவரைக் கேட்டுக்கொள்வது பொருத்தமானது. அதற்காக அவரை ஊக்குவிப்பது எமது பணி.
R DGGSO)85 9

Page 7
. எல்லாருக்கும்
பூபன்
நெருக்கமானவர்.
கஷ்டமான காலங்களில் எல்லாம் மல்லிகைக்குக் கை
தந்து வந்தவர்
மனோகரபூபன். வாரத்தில் எப்படியும்
இரண்டொரு நாட்கள் அவர் வீடு செல்வேன். உபசரிப்பு அன்பு மயமானது. மனைவி மக்கள் பரந்த சமூக உணர்வு கொண்டவர்கள். மகள்கள் இருவர். வீணா, கிட்டு. படிப்பில்
அசாதாரண திறமை கொண்டவர்கள்.
தகப்பனின்
நம்பிக்கைகளை இருவரும் வென்றெடுப்பர் என்பது திண்ணம்.
சில காலங்களுக்கு முன்னர் மல்லிகைச் சஞ்சிகையில் "மல்லிகை யின் கொடிக்கால்கள்” என்ற பகுதியில் நண்பர் மனோகர பூபனைப் பற்றி எழுதியிருக்கின் றேன்.
பூபன் எனது பால்யகால நண்பனும் பிரபல எழுத்தாளருமான செ. கணேசலிங்கனின் மருமகன் என்பதுடன் அவரது பெயரில் கூட ஒரு வசீகரக்கவர்ச்சி மிளிர்வதையும் கணி டு தான் நான் அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன், என அக்குறிப்பில் கூறியிருந்தேன்.
யாழ்ப்பாணத்தில் 1987 முற் பகுதியில் எழுத்தாளர் மகாநா டொன்று நாவலர் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த
விழாவில் கலந்துகொள்ளும்,
அத்தனை பேருக்கும் தானே மதிய போஜனம் தந்துதவ வேண்டுமென விரும்பி அந்த பாரிய பொறுப்பை ஏற்று நடத்தி எழுத்தாளர்களினது பேரன்பைப் பெற்றுக்கொண்டார்.
10 Šolato
- டொமினிக் ஜீவா,
யாழ்ப்பாணத்தில் எந்த இலக்கிய, கலை விழாக்கள் நடந்த போதும் முன் நின்று உழைப்பதில்
பெரு மகிழ்ச்சி கண்டவர்.
இனிமையாக ، 59ل6 إ ணைத்துப் பழகத் தெரிந்தவர். ஈழத்து எழுத்தாளர் களது நூல்களை ரசித்துப்படிப்பதுடன் அன்னாரது
நூல்களை வாங்கிச் சேமித்து
வைத்திருந்தார். -
இவருடன் பழகுவதென்பதே ஓர் இனிமையான அநுபவம். ஆழமான இலக்கிய வாசிப்பும் விமர்சன ரீதியாகப் பல எழுத் தாளர்களினது ஆக்கங்களை ஆய்வு செய்யக் கூடிய நுண்ணிய பார்வையும் கொண்ட மனோகர பூபனது இழப்பு வடபுலத்துப் படைப் பாளிகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகவே நான் கருதுகின்றேன்.
பூபனிடத்தில் நான் கண்ட
சிறப்பம்சம் என்னவென்றால் கோபம்
வராத குணம். சிரித்து வைப்பார்.

மாற்றுக் கருத்து உள்ளவர்களிடம் கூட இனிமையான முறையிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யுடனும் பழகுவார்.
பல சந்தர்ப்பங்களிலே, பல
கட்டங்களிலே,பல சூழ்நிலை களிலே, நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். பதட்டப் படமாட்டார். சுமுகமாகவே உரையாடுவார்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னைத் தேடி வருபவர்களுக்குத் தன்னாலியன்ற உதவி செய்வதில் பின் நிற்பதில்லை இவர். யுத்தக் கொடுரத் தாக்கத்தின் காரணமாக இவரது வியாபார நிலையம் உரும் பராயில் ஒரு இரவுக்குள் முற்றாக எரிந்து சாம்பலாகப்போயிருந்தது. இந்தப் பாரிய இழப்பு இவரது பொருளாதார நிலையைப் பெரிதும்
హ
"
||
E.
கக்
诽 s
ή.
* :'ಜ್ಞ' ބބ
البيئية
飄
பாதித்தது. இருந்தும்கூட, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அதை அவர் இயல்பாக ஏற்றுக்
கொண்ட பாங்கு என் மனசில்
பூபனைப் பற்றிய பெருமதிப்பை ஏற்படுத்து விட்டது.
இவ்வளவு சீக்கிரம் மனோகர பூபன் மறைந்துவிடுவார் என நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை. பெரிய சோகம் இது.
எழுத்தாளர்களது சார்பாக மனோகர பூபனது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த துயரத் தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மல்லிகையும் தனது துயரத்தை
அன்னாரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கின்றது.
删M
À
讚
鞘》

Page 8
1948 ஆண்டு முதல் பேரா தனைத் தமிழ்ச் சங்கத்தினால் வெளி யிடப்பட்டு வரும் "இளங் கதிர்” இதழ் இவ்வாண்டு தனது முப்பதாவது இதழை வெளியிட்டுள்ள்து.
*21ம் நூற்றாண்டை அண்மித்த நாம் இன்னும் பழைய கறைபடிந்த
நூற்றாண்டிலேயே தேங்கிநிற்க,
எம்மோடு ஒன்றாய் நின்ற அயல் நாடுகள் எல்லாம் உயர்ந்து செல் கின்றன. பக்கத்து அறை நண்பர் களின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் "இளங்கதிர்” வெளிக் கொணர்வதற்கே சிரமப்படும் நாம் என்றுதான் அறிவிய லிலும் தொழில் நுட்பத்திலும் ஏனைய
தமிழினுாடாக எம்மவர்க்கு புரிய வைக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மெல்லப் பழங்கதைகள் பேசி விணே கழித்திடும் உலகில் தமது படிப்பு களின் சுமைகளுடனே, தம் சமூகம் பற்றிய அக்கறையினால் சமூகத் திற்குத் தேவையான விஞ்ஞானக் கட்டுரைகளைப் பெரிதும் தாங்கி வந்துள்ளது, இளைய தலைமுறைச் சிறப்பிதழ் ஆன இளங்கதிர்.
கணனிக்கும் தமிழுக்கும் பாலம் அமைப்போம், இன்ரநெற்றும் தமிழும்,
உயிரியல் தொழில் நுட்பம் ஓர்
அறிமுகம், இனிவரும் தசாப்தம் என்ன கொண்டுவரும் என்கிற கட்டுரைகள்
t * ---- MP - - -3 శ్రీ ... " رنا نؤ البلدة أنه من نفذ ت ك للإشارت
நாடுகளைப் போல் வளரப்போகின் றோமோ தெரியவில்ல்ை.
என ஏங்கும் இதழ் ஆசிரியர் இரா. இரவிசங்கர் உண்மையில் தமது பணியைச் செவ்வனே நிறை வேற்றி யுள்ளார். என்பது இதழின் உள்ளே புகுவோர்க்கு புரியும்.
தமிழ் மொழியின் வளம் பற்றிய
பழம் பெருமை பேசிக்கொண்டு திரியும் எம்மவர்கள் உலகக் கலைகளை எம்
12 šé Desol
த்தையா ,ே கணேசன்
சமகால அறிவியல் வளர்ச்சிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தும் பணியைச் செய்யும் நோக்கில் எழுதப் பட்டவை. புதிய விஞ்ஞானப் போக்கு கள் பற்றிய அறிவு மாணவர் மத்தி யிலும், பொதுமக்கள் மத்தியிலும் அருகிக் காணப்படுகிறது. இது பற்றி எழுதுவோரும் மிகக் குறைவு. இந்த வகையில் வசீகரன், மனோராஜ், மணிமாறன், சுரேந்திரன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலகு வான நடை அவர்களது திறமை
 
 
 

யையும் தெளிவையும் பறைசாற்று கின்றது.
அடுத்து இளங்கதிரின் சிறப்பை இயம்பி நிற்பவை இளைய தலை முறைகள் பற்றிய கட்டுரைகள் ஆகும். போராசிரியர் சிவத்தம்பி, தில்லைநாதன் ஆகியோரது இளைஞர் பண்பாடு, தலைமுறை முரண்பாடு எனும் கட்டுரைகளின் அறிமுகங்களுடன் கலாநிதி க. அருணாசலம் எழுதிய இளைய தலைமுறையினரும் கலை இலக்கிய ஈடுபாடும் எனும் கட்டுரையும் சிறப்பிடம் பெறுகின்றன.
இவற்றைவிட தற்கொலையின் ஆரம்பங்கள், அமைதியின்மைக்கான காரணங்கள், போதையின் பிடிக்குள் நமது நாடு, பல்கலைக் கழக மாணவர் களின் அமைதியைக் குலைக்கும் புல்லுருவிகள், உளவியல் நோக்கில் இளையோர் பிரச்சனைகள், மாணவர்க ளிடையே பால் வேறுபாடு காரண மாகத் தொங்கி நிற்கும் தொடர்பாடல் இடை வெளி எனப் பல்வேறு தலைப் புக்களில் இளைஞர் பிரச்சனைகள்
அலசப்படுகின்றன. கட்டுரைகளாக
மட்டுமல்லாது அறிஞர்களுடனான கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் என்பன வாசகனது வாசிப்பு ஆர்வத் தைத் தூண்டும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெண்ணியம் பற்றிய கலந்துரையாடலும் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களுடனான நேர் காணலும் குறிப்பிடத்தக்கன.
இவற்றுடன், சங்க நிகழ்வுக ளுடன் ஓர் சங்கமம், எனும் தலைப் பில் தமிழ்ச் சங்கம் கடந்த ஓராண்டாக நிகழ்த்திய நிகழ்ச்சிகளின் பதிவுகளும் மலரின் இறுதிப் பகுதியை அலங்கரிக் கின்றன. அவற்றுள் தமிழ்ச்சங்க நாடக விழா -சில குறிப்புகள் கலாநிதி
எம்.ஏ. நுஃமானால் எழுதப்பட்டுள்ளது. சுருக்கமான பல்கலைக் கழக நாடகப் பங்களிப்பு பற்றிய வரலாற்றை விளக்க, விமர்சனக் குறிப்புகள் கச்சிதமாக வரையப்பட்டுள்ளன. இக்குறிப்பி னுாடான தரமான நாடகப் பிரதிக்கான பரிசை, அலை நடுவில் எனும் நாடகம் பெற்றதாகக் கூறப்பட்டு உள்ளது. உண்மையில் இது ஜே. எம். சிங்கின், றைடேர்ஸ் ரு த சீ என்பதன் தமிழ் வடிவமே. ஏற்கனவே திரு. கந்தையா, இந்திரபாலா ஆகியோர் மொழி பெயர்த் துள்ளனர். ஒரு தற்புதுமை நாடகப் பிரதியை எழுதுவதைவிட இலகுவான காரியமே, மொழி பெயர்ப்பும் தழுவலும் மீளத் தமிழில் எழுதுதலும். எனவே பிரதி ஆக்கத்திற்கான பரிசை தற்
புதுமை நாடகங்களுக்கே வழங்குவது
புதிய பிரதி நாடக எழுத்துக்களை வரவேற்பதாக அமையும். நாடகப்
பட்டறையும் அதன் எதிரொலிகளும்
எனும் கட்டுரை பட்டறையின் பயனாக மாணவரிடையே நாடக முயற்சியை மேலும் முன்னேற்றகரமானதாக அமைத் தது என்பதும் கூத்துக்களைப் பேணு வதில் உள்ள சிரத்தையும் கலாரசனை பற்றிய தெளிவும் சிறப்பாக வெளிப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு முரளி தரனின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கவிதை பற்றிய கதைப்போம் வாருங்கள் எனும் கட்டுரை இறுக்க மான கவித்துவமாக அந்நிகழ்வைப் டம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல கவிதை பற்றிய நு. மானின் விளக்கமும், உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்ற மு.பொ. வின் கருத்துரையும் பதியப்பட்டு உதாரணக் கவிதைகளும் தரப்பட் டுள்ளன.
ஆக்க இலக்கிய படைப்பு களாக ஐந்து சிறுகதைகளும் ஆறு கவிதை
52 Dictreora, 13

Page 9
களும் பிரசுரமாகின. ஒப்பீட்டளவில்
இதன் எண்ணிக்கை குறைந்துள்ள
போதும் தரத்தினால் ஓரளவு வெற்றி
பெறுகின்றன என்று குறிப்பிடலாம். சிறுகதைகளில் சந்திரிகா எழுதிய
அவள் தாயாகிறாள் என்ற கதை
வீச்சான பார்வையுடன் எழுதப்பட்
டுள்ளது. பெண் ணிலைவாதம் ஆண்களை ஆதரிக்காத போக்கு என்பதற்கு மாறாக, ஆண்பாத்திரத்தின் அவல நிலைகண்டு ஆதரிக்கும் பெண்ணைப் படைத்தளிக்கிறார்
சந்திரிகா, மற்றக் கதைகளில் சமகால
யதார்த்தங்களைச் சித்திரிக்க முயல்கின்றனர் கவிதைகளில் அன்டணி யூட்டின் வண்டித் தடம் ஓசை நயத்துடன், தீட்சண்ய பார்வையுடன் குறியீட்டுப்
பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
முகமூடியின் புதிய வாழ்வுக்கான புதிய குரல் நான் பேசும் மொழியோடும் துப்பாக்கி இல்லாத கையோடும் என்னுாருக்குப் போகும்வரை உழன்று உயிர்காப்பேன், என உரத்து ஒலிக் கிறது.
மொத்தத்தில், ஒரு தரமான சஞ்சி கையாக இருபத்தோராம் நூற்
றாண்டுக்கு மாணவர்களை வழிப்
படுத்தும் பாணியில் இளங்கதிர்
வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு
அட்டையின் கருத்துமிகு ஒவியமும் உள்ளே அலங்கரிக்கும் கருத் தோவியங்களும் மலருக்கு மணத் தையும் அழகையும் கூட்டுகிறது என்றால் மிகையாகாது.
எழுத்தாளர்கள்.
கொழும்பிற்கு இடம்மாறி வந்த தன் பின்னர் மல்லிகைப் பந்தல் மூலம் இருபதிற்கு மேற்பட்ட நூல் களை இதுவரை வெளியிட்டுள்ளேன்
இந்தப் புத்தகங்கள் பல் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பாளி களின் சிந்தனைகளை, கற்பனை களை, வாழ்க்கை அனுபவங்களை
உள்ளடக்கிய நூல்களாகும்.
மல்லிகையை ஒழுங்காகப் பெற்றுக்கொள்ளும் சந்தாதாரர் களுக்கு ஏற்கனவே மல்லிகைப் ப்ந்தல் வெளியீடுகள் அடங்கிய புத்தகப் பட்டியலை தபால் மூலம் அனுப்பிவைத்துள்ளேன். மல்லிகைப் பந்தல் வெளியிடகள் பற்றிய அறிவித் தல் மல்லிகை இதழ்களிலும் பிரசுர மாகியுள்ளன.
மல்லிகை தொடராக வெளி வரக்கூடிய பொருளாதாரப் பின்ன ணிக்கு நீங்களும் தோள் கொடுக்க
விரும்பினால் மல்லிகைப் பந்தல்
வெளியீடுகளை வாங்கி ஆதரி யுங்கள்.உங்களது நண்பர்களை, நூலகங்களை, கல்லூரி நுலகங் களை வாங்கி ஆதரிக்க உற்சாகப் படுத்துங்கள்.
என்தோள் மீது இன்று இரட்டைப் பாரம் ஏற்றப்பட்டுள்ளது. மல்லிகை; மல்லிகைப் பந்தல்.
நீங்களும் உங்களது நண்பர் களும் மல்லிகைப் பந்தல் வெளியீடு களை ஆதரித்தால் இதில. ஒரு நீங்கும்.
- டொமினிக் ஜீவா
 
 

SE 姿
Nikx "ماني X 《ཉིwwང་ $ర్యో
மீண்டும் போய்ப் பார்க்க வேண்டும் போல மனசு தவித்துக் கொண்டிருக் கிறது. மறுகணம் கால்களை ஏதோ வொரு தளை சட்டென்று கட்டிப்
போட்டு விடுகிறது. இரண்டு தடவைகள்
ஏற்கனவே போய்ப் பார்த்தாயிற்று. நான் என்ன சின்னப் பிள்ளையா, திரும்பத் திரும்ப தெருவில் போய் நிற்பதற்கு? மனசுக்குள் தயக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த மனசு கேட்டால்தானே! மீண்டும் மீண்டும் போவதற்கு உந்திக் கொண்டிருக்கிறது. வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருப்பதும் இந்த மனசு தான். சதா நிலையில்லாது தடு மாறித் தளம்பிக்கொண்டிருப்பதும் இதுதான். குழந்தையாக இருந்தால் எவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கும். மனசில் குழப்பமிருக் காது. குத்ாகல
மாக இருந்திருக்கும். மனசு சொன்னது
போல எல்லாம் ஆடிக் கொண்டிருக் கலாம். மனசின் போக்குக்கெல்லாம் இந்த வயதில் இழுபட்டுக்கொண் டிருக்க இயலுமா! வேறு வேலை எதுவும் இன்றி தெருவில் போய் தனித்து நின்று பார்த்துக்கொண் டிருக்க இயலுமா ஏற்கனவே கேட்டு விட்டார்கள்: என்ன நிக்கிறியள்? என்று, சும்மா என்று மட்டும் பதில் சொல்ல முடிந்தது. இந்தச் சும்மா வுக்கு என்ன அர்த்தம்! சும்மா பொருள் இல்லாத ஒரு வார்த்தை
யல்ல. ஆயிரம் அர்த்தங்கள் இதற்
R R S wwwwww《་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ჯპ უჯ
w8w8388 y S ," W S s
R N SoS S
W §WKWWW.A
குண்டு. நான் இப்போது நிற்பதன் நோக்கத்தை வெளியில் சொல்ல மாட்டேன் என இங்கு இது அர்த்தப் படும், அப்படி வெளியே எடுத்துச் சொன்னர்ல்தான் என்ன? வெளியில் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஆனால் சொல்ல முடியவில்லை. சும்மா சொல்லிக் கொண்டு வழியை வழியைப் பார்த்துக்கொண்டு நிற் கின்றேன்.
மகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றாள். இப்போது எனக்குள்ள பிரச்சினை என்ன என்பது இவளுக்குத் தெரியும். இவள் அவதா னித்துக் கொண்டிருப்பதே மனசைப
'போட்டு நெருடுகிறது. பிறர் அறிய
LDTL'L-flsteb6s என்றால் எப்படியும் நடக்கும் தைரியம் மனசுக்கு வந்து விடுகிறது. தவறு செய்யும் மனசுக்குத் தானே அச்சம்; தனக்குள்ளே கலக்கம். எனக்கென்ன தயக்கம்! ஆனால் இன்னொருவர் அவதானித்துக் கொண் டிருக்கின்றார் என்றாலே ஒருவகைக் கூச்சம் உடலெங்கும் ஓடிப்பரவுகிறது.
முதல் தடவை தெருவில் போய் பார்த்துவிட்டு உள்ளே திரும்புகிறேன். நிமிர்ந்த நடை இவள் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கும் தூரப்பார்வை, முகத்தில் இறுக்கம். ஏதோ ஒரு வகையில் இவளை எடுத்தெறிந்து
விட்டதான ஒரு மிதப்புடன் வந்து
விடுகின்றேன். மறுதடவை திரும்பி
šĝCDC-130, 15

Page 10
வரும் போது மனசு தொய்ந்து போகிறது. ஏமாற்றத்தினால் முகம் வாடிப்போகின்றது. முன்னர் தல்ை தூக்கி நின்ற இறுக்கம் மெல்லத் தளர்ந்து போகிறது. தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. இவளை நோக் காததுபோல நோக்கி கண்கள் நோட்ட மிடுகின்றன. இவள் உதடுகள் குவிந்து நீண்டு கிடக்கின்றன. இந்தச் சொண்டு நீட்டுதல் இவளுக்கே உரிய உதா சீனம். இவளது நையாண்டி என் கண் களைத் தேடித்தேடி இவள் விழிகள் அலைபாய்கின்றன. பார்வையினால் குத்திக்காயப் படுத்தத் துடிக்கின்றன. நான் அவள் பார்வையை மெல்லத் தட்டிவிட்டு, முகங்கொடுக்காது இவளைக் கடந்து உள்ளே வந்துவிடுகின்றேன். சாப்பாடு எனக்கா? தெரியாதா என் மகளின் குணம் இவள் என்னை விட்டு விடப் போவதில்லை. விசமக்காரி. ஆரம்பித்துவிடுவாள். இந்தச் சந்தர்ப் பங்களில் இவள் பொறுமையை இழந்து போகின்றாள் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டிக்கொண்டே இருப்பாள். அம்மா என்றுதானும் அழைக்காத ஒரு எதிரித்தனம், சமையல் முடிந்ததும் உடனேயே,“பிள்ளைவா”என்று சாப்பிடு வதற்கு அழைத்தேன். அப்போதுவாறன் என்றவள் எழுந்திருக்க வில்லை. இப்போது வலிந்துகொண்டு கேட் கின்றாள். என் மனப்போக்கை அறிந்து, எதிராகச் செயற்படுவதற்குக் கிளர்ந்து நிற்கின்றாள். எடுத்துச் சாப்பிடு என்று சொல்ல வேண்டும் போல மனசுக்குள் பற்றிக் கொண்டு வருகிறது. ஆக்கி வைத்திருக்கின்றேன். எடுத்து உண்ண வேண்டியதுதானே! நான் ஏன் இவளுக்கு உணவு பரிமாற வேண்டும்! இவள் எனக்கு உணவு பரிமாறு கின்றவளா? இல்லையே! இருவரும் பெண்ணாக இருப்பதில் இவளுக்கு இது பிரச்சினை இல்லை, நான் தாயாக. மனைவியுமாக அல்லவா
16 DS)5
கொள்ளும்
இருக்கின்றேன். தாயை ஏற்றுக் இவளால் , நான் மனைவியாக இருப்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. கணவன் ஒரு ஆணாக இருப்பதே இவள்
கலகத்துக்குக் காரணம், இவளோடு
முரண்பட்டுக் கொண்டால் சாப்பாடு வேண்டாம் என்று இருந்துவிடுவாள்.
அதன்பிறகு என்னால் இவளிடம்
எதுவுமாகாது. அப்படி ஒரு பிடிவாதம். இவளைச் சமாதானம் பண்ண அப்பா தான் வரவேண்டும். பிரச்சினையின் மையமே அப்பா. நான் உணவு உண்ணாமல் இவர் வரவை எதிர்பார்த் திருப்பதை இவள் எதிர்க்கின்றாள்.
ஆனால் அப்பாவுக்கு இவள் பெரிய
செல்லம், அப்பா சொன்னால் அது மந்திரம் போல் மீறிநடக்க மாட்டாள். சிலசமயம் இவரை அதிகாரமும்
பண்ணுவாள். அப்பா ஆனந்தமாக
மகளுக்கு அடங்கிப் போய்விடுவார்.
பள்ளிக்கூடம் மூடினால் எண்ணிப்
பதினைந்து நிமிடம் கடப்பதற்குள்
இவரை வீட்டில் காணலாம். ஆனால் இன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் இவர் வீடு வந்து சேரவில்லை. பாவம், இவர் பசி பொறுக்கமாட்டார்.
நான் யாருக்காகச் சமையல்
செய்கிறேன்! இவர்களுக்காகவும் எனக் காகவுந் தான் . சமையல் அறைக்குள்ளே புகுந்து ஒவ்வொன் றையும் ஆக்கும் பொழுது மனசு சொல்லிக் கொண்டிருக்கும்; இந்தக் கறி அப்பாவுக்குப் பிடிக்கும். இது மகள் விரும்பிச் சாப்பிடுவாள். இது முழுவதும் சட்டியோடு தனக்கென்று
மகன் நிற்பான். இவைகளை எல்லாம்
சுவைத்துச் சுவைத்து உண்ணும் போது மலரும் இவர்கள் முகங்கள் ஆக்கிக் கொண்டிருக்கும் அந்தக் கறிகளுக்குள் அப்போது ஆனந்தமாக முறுவலிக்கும். அம்மாக்களின் மன

வெளியில் தோன்றும் ரம்மியமான இந்தக் காட்சிகளை கவிதை ஓவிய மாகத் தீட்டியிருக்கின்றார் பாரதிதாசன். அற்புதமான கவிதை அது. வாழ்வின் அநுபவப்பிழிவு, கலையாகிறது: இலக்கியமாகிறது. என்னைக் கண்டு தான் கவிஞர் அந்தக் கவிதை செய்தாரோ என மனசு வியக்கும்.
சமையல் அறைக்குள் நுழைந்து விட்டால் அப்பா வரப்போகிறார் .
பிள்ளைகள் வரப்போகிறார்கள் என்று
கொண்டு போகாமல் இடையில் அப்பா
மனசு அடித்துக்கொண்டிருக்கும். இயந்திரமாகக் கை இயங்கிக்கொண் டிருக்கும். இவர்கள் எல்லோரும் வந்து சேருவதற்கு முன்னர் சமையல் எப்படியோ முடிந்துபோகும். எல்லோ ரும் முகம் கோணாமல் சாப்பிட வேணும். அவர் வழமையில் குறை வாகத்தான் சாப்பிடுவார். சொற்ப தீன், ஆனால் சுவையாக எல்லாம் வேணும். நல்ல ரசனை உள்ளவர். சாப்பிடுவது கூட ஒருதனி அழகு. இவரைச் சாப்பிடவைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி 69(5 நயத்தக்க நாகரிகம். இவர் வழமை யாக உண்ணும் உணவின் 961T6 கொண்டு, அன்றைய சமையலின் தரத்தை நான் தீர்மானித்துக்கொண்டு விடுவேன். சமையலைக் குறை கூறமாட்டார். அவர் மனசுக்கு அது பிடிக்காது. தினம் தினம் செய்கின்ற ஒரு வேலை. ஒருநாள் குறை நிறை இருக்காதா? என்று சமாதானம் சொல்லுவார்.
பிள்ளைகள் அப்பா போலில்லை நெற்றிக்கு நேரே மனசு வலிக்க
அடிப்பார்கள். −
“அம்மா, எல்லாம் பச்சைத் தண்ணி ’ என்பாள் இவள்.
“அப்படியே, நீ இதம்பதமாகச் சமைசுக்குடு ” பகிடியாகச் சொல்லு வேன்.
“ஆருக்கு”
இவர்
“வரப்போறவருக்கு” “ஆம்பிளைக்குச் சமைச்சுப்
போடுகிறதே எனக்கு வேலை! அது
நடக்காது.”
குழந்தை பெறுவதையும் சேர்த் துச் சொல்லாது நாகரிகமாக விட்டு விட்டாள் என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு வெளியில் சொல்லுவேன்:
“வாய்க்கு ருசியாக வரப் போறவர் சமைச்சுத்தருவார்.”
இப்படியே கதை வளர்ந்து
தலையிடுவார்.
“ஏன் ஆண்கள் சமைக்கக் கூடாது! நளபாகம், வீமபாகம் என்று சிறந்த சமையலுக்கு அந்தக் காலத்தில் பெயர் சூட்டி இருக்கி றார்கள். நளனும் வீமனும் நல்லாச் சமையல் செய்திருக்கிறார்கள். பாராட்டுப் பெற்ற சமையற்காரர் ஆண்கள்.”
“இப்பளன்ன சொல்லுகிறாய்? “கறிக்கு உப்பில்லை” “உப்பு அப்பாவுக்காகாது.”. “என்ன அப்பாவுக் காகாதெண் டால் நாங்கள் சாப்பிடக் கூடாதோ!” இவள் சீறுவாள்.
“அதிக உப்பு உடலுக்கு ஆருக்கும் ஆகாதம்மா’ அப்பா தலை யிட்டுச் சொல்லுவார்.
இவள் அடங்கிப்போய்விடுவாள். சாப்பிடும்போது ஒரே மேசையில் எல்லோரும் கூடி இருக்கவேண்டும். சாப்பாட்டு வேளை எல்லோரும் ஒன்றாகச் சந்திப்பதற்கான ஒரு கந்தர்ப்பம் என்பார் அப்பா. இவர் பேசிக் கொண்டே சாப்பிடுவார். சாப்பிடும்போது பேசக்கூடாது என்பது அறியாதவரல்ல இவர். ஆனால் எல்லோரும் மனசைத் திறந்து பேசுவதற்கான சமயமாக இதைக் கொள்ளுவர். பல விஷயங்கள் அப்போது சொல்லிக்கொண்டிருப்பார். கேட்பதற்குச் சுவாரசியமாக இருக்கும்.
DGGSO)85 17

Page 11
பிள்ளைகளும் விரும்பிக் கேட்பார்கள். இப்பொழுது அப்பாவின் பேச்சு இவர் களுக்கு அவ்வளவாக இரசிப்ப தில்லை. இவர்களுக்கு வயது வந்து விட்டது. அப்பாவுக்கு இது தெரியும். அப்பா ஒன்று நினைக்க, சில சமயம் வேறொன்று நடந்துபோகும். சாப்பாட்டு மேசையில் சேர்ந்திருக்கும் வேளையில் பிரச்சினை எழும். சின்னச் சின்னக் காரியங்களுக் கெல்லாம் இவளும் தம்பியும் மோதிக் கொள்ளு வார்கள். இவள் கொஞ்சமும் விட்டுக் கொடுத்து இணங்கிப்போக மாட்டாள். “தம்பிக்கு இரண்டு முட்டை எனக்கேன் ஒண்டு? ”
“இரண்டு கேட்டவன். அவன் தானே கைக்கிளையவன்.”
“நான் மூத்தவள். எனக்குப்
பிறகுதான் மற்றவை.”
றாய்? ”
“அவன் ஆம்பிளைப்பிள்ளை அவனுக்கு இரண்டு.”
“அப்பிடியில்லை, அவன் சாப் பிடுவன்.”
“நானும் இரண்டு சாப்பிடுவன்.”
"அம்மா உவவுக்குக் குடுக்கக் கூடாது.”
“ஏன்ரா? “நீ பொம்பிளை. கொழுப்புக் கூடிப்போச்சு.”
sy
“பெம்பிளை எண்டால் என்னடா,
குறைச்சல்!
தராவிட்டால் சாப்பிட LDsi i 6öIT.”
“சரி.சரி. ஆம்பிளை பெம்பிளை'
எண்டு பேசவேண்டாம். பிள்ளைக்கு இன்னொரு முட்டை குடுங்கோ.”
அப்பா தலையிட்டு சச்சரவைத் தடுப்பார்.
“தம்பிக்கு அப்பாவுக்கு
எண்டால் விட்டுக்குடுப்பன். ஆம் பிளைக்கெண்டு சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டன்.”
இEகை
18
"அவனையேன் நீ பார்க்கி
“அப்பாவும் தம்பியும் ஆம் பிளைகளாக இருக்கிறது பிழை. இல்லையா அம்மா?’ அப்பா சிரிப்பார். “பொறுங்கோ.பொறுங்கோ பெம்பிளையளாக மாத்தப்போறாள்.”
இவள் என்னைப் பார்த்து முறைப் பாள்.
“போதும் போதும் சும்மா இருங்கோ.”
அப்பா என்றைக்குமே மகளின் பக்கம். பெண் ஆணுக்கு அடிமை யல்ல. ஒருமனிதன் இன்னொரு மனி தனுக்கு அடிமையல்ல என்பது இவர் கொள்கை.
அரசியல், சமூகம், சமயம், கலாசாரம், தொழில், குடும்பம் எங்குமே ஆணாதிக்கம். இந்த ஆதிக்கம் போக்கப்பட வேண்டும். ஆதிக்க அமைப்புகள் அடித்து நொருக்கப்பட வேண்டும் என்பது நியாயம். ஆனால் இவைகள், சிலவற்றைக் காணும் தெளிவு இவளுக்கில்லை. பல்கலைக் கழகக் கல்வியும். இவளின் உறவு களும் இவளை இப்படி ஆக்கி விட்டிருக்கிறது. இவள் படிக்கும் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அன்று சஞ்சிகை ஒன்றைக் கையில் எடுத் துப் புரட்டிப்பார்த்தேன். பெண் பெண்ணோடு வாழலாம். பெண் யாரோடும் ப்ேபடியும் வாழலாம். இப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார்கள். இறக்குமதிச் சரக்கு என்றால் ஆராய்ந்து பார்க்காது விலைகொடுத்து வாங்கி அப்படியே விழுங்கிக் கொள்ளும் கணி மூடித் தனம் எங்களுக்குப் புதிதல்ல. குடும்பம். Ꭷ -ᏪᏴ6hᎥ , , .. . 96ổi L!.... LIT ở Lô..... புரிந்துணர்வு. எல்லாம் பொய்யாகி அடிபட்டுப் போகின்றது. சுமையை இறக்கப் போய் புதிய சுமைகளை ஏற்றிக் கொள்ளுகிறார்கள். அழுக்
 
 

கைக் கழுவப்போய் சேற்றுக்குள் சறுக்கி குப்ப்ற விழுந்து விடுகின் றார்கள். எனக்கு மனசு பொறுக்க வில்லை. இவர் காதில் ஒரு நாள் மெல்லச் சொன்னேன். இவர் என்னைப் பார்த்து மெல்லச் சிரித்துக்கொண்டு சொன்னார். “இது மாத்திரமல்ல, குடும்ப அமைப்புகள் வேண்டிய தில்லை. அடித்து நொருக்கப்பட வேணும். உறவுகள் அறுத்தெறியப் படவேணும் ” என்றும் சொல்லு வாள். நான் திகைத்து நின்று திருதிரு என்று விழித்தேன்.
இவள் சாட்பிடுவதற்காக மேசைக்கு வந்துவிட்டாள். இவருக்கு லீற்சும், கறிமிளகாயும் பிடிக்கும். மகனுக்கு உருளைக் கிழங்கு. இவள் லீற்ஸ், உருளைக் கிழங்கு இரண்டும் விரும்பி உண்பாள். சாப்பிடுவதற்கு ஆரம்பிக்கும்போது என்னைப் பார்த்துச் சொல்லுகிறாள்; “சாப்பிடன்.” எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இவள் அறிவாள், இவர் சாப்பிடாமல் நான் சாப்பிடப்போவதில்லை. இவள் நோக்கம் எப்படியும் சாப்பிட வைத்துவிட வேண்டும் என்பதுதான். இவரை நான் காத்திருப்பது இவளுக்குப் பழமைக் குணம்; அடிமைத்தனம். பசிக்க யில்லையா? மீண்டும் சீண்டுகிறாள். நான் மெளனமாக இவளை நோக்கு? கின்றேன். இவள் சாப்பிடட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை. அவன்! நின்றிருந்தால் அவனும் சாப்பிட்டு: முடித்திருப்பான். என்னை யாரும் தடுக்கவில்லை. திருமணமான காலம் முதல் இவருந்தான் சொல்லிக்கொண்டு: வருகிறார். சமையல் முடிந்ததும் சாப்பிட்டு விடவேணும். எனக்காகப் பசியோடு காத்திருக்கக் கூடாது என்பார். சில சமயம் இதற்காகக் கோபித்து மிருக்கிறார். ஆனால் என்க்கு முடியவில்லை. சமைத்ததைக் கொடுக்காமல் நான் சாப்பிடுவதில்
எனக்குத் திருப்தி இல்லை. மனசுக்கு நிறைவில்லை. எனக்கு மனசு அப்படி,
என் மன ைச.உணர் வை. இவள்
புரிந்துகொள்ளுவதாக இல்லை. பெண்ணடிமைத்தனம் வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இவள் கருதுகின்றாள்.
தலை குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றாள். இடையில் நிறுத்திவிட்டு எதிரில் இருக்கும் என்னை நிமிர்ந்து கேட்கின்றாள்.
“லிற்ஸ், கறிமிளகாய் அப்பா வுக்கு, உருளைக் கிழங்கு அவ னுக்கு, எனக்கென்ன கறி?”
“லிற்ஸ், உருளைக் கிழங்கு உனக்கும் விருப்பந்தானே.”
“எனக்குப் பருப்பு வேணும்.” நான் மெளனமாக இரண்டு அப்பளத்தை எடுத்து இவள் கோப்பை யில் வைக்கின்றேன்.
அவன் இப்பொழுது இருந்திருந் தால் மோதல் ஆரம்பித்திருக்கும். குடும்பத்தில் பற்றாக்குறை இருக்க வேண்டும் போல் இந்தச் சமயங்களில் மனசுக்குத் தோன்றும். அப்படி இருந் தால் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொள்வார்கள்; விட்டுக் கொடுட்பர்கள் இணங்கிப் போவார்கள். அன்பு . பாசம். என்று பிணைப்புகள் இருக்கும். இவள் வேண்டா வெறுப்புடன் உணவை முடித்துக்கொண்டு எழுந்து போகிறாள்.
இவர் இன்னும் வந்துசேர வில்லை. எனக்குப் பொறுமையாக இருக்க முடியவில்லை. தெருவில் போய்ப் பார்க்கவேண்டும் போல மனசு துடிக்கிறது. போய் பார்த்துத்தான் என்ன! நான் பார்த்துக்கொண்டு நிற்கின் றேன் என்று, அதற்காக இவர் உடனே வந்துவிடவா போகிறார்! பாவம், இவர் பசி பொறுக்கமாட்டார். என்ன தாமதமோ! இவரின் சயிக்கில் சத்தம் எனக்குத் தெரியும். இதோ அந்தச்
ğEDICIO 19

Page 12
சத்தம்! இவர் வருகிறார் . வருகிறார். கேற்ரைத் திறந்துகொண்டு வியர்க்க விறுவிறுக்க விரைவாக உள்ளே வருகிறார்.
இவர் முகத்தில் குறிப்பாக என் பார்வை பதிகிறது.
முகத்தில் சோர்வில்லை, பசிக் களை இல்லை .
“சரி. சரி. சாப்பாட்டை ஆயித்தப்பண்ணுங்கோ’ சயிக்கிலை முற்றத்தில் நிறுத்திக் கொண்டு அவசரப்படுத்துகின்றார்.
அப்பா வந்திருப்பது கண்டு இவளும் முற்றத்திற்கு வந்துவிடு கின்றாள்.
“என்ன தாமதம்? ” W “பள்ளிக்கூடத்திலை விருந் தொன்று.”
“காலையிலை நீங்கள் சொல்ல யில்லை”
“திடீர் ஏற்பாடு. ஒருவர் பரீட்சை பாஸ் பண்ணின விருந்து.”
- "அப்பா விருந்து சாப்பிட்டு விட்டார். அட்டாவுக்கு பசியில்லை” இவள்
சால்லி நகைக்கிறாள். “ஓமம்மா” W “விருந்து முடிஞ்சு அப்பா ஆறுதலாகவாறார்.”
“இல்லையம்மா பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நடக்குது. நானும் இரண்டு வார்த்தை சொல்லிப்போட்டு அவசரவேலை இருக்கிறதாகப் பொய் சொல்லி
இடையிலே எழும்பி வாறன்.”
“அதுசரியில்லை எல்லோ!” “எனக்கு அதுவல்ல முக்கியம். இஞ்சை பசியோடு கொம்மா காத்
திருப்பா.”
நான் பெருமையோடு மெல்லத் திரும்பி இவள் முகத்தைப் பார்க் கின்றேன்.
இவளுக்கு இது புரிந்திருக்க (866G(3D:
Excellent Photographers for -
Weddings Portraits
|&
Child Sittings
300, MODERA STRE ET, COLOMBO - 15. TEL: 526345
20 čDEO
 

நல்லூர் கோயில் வீதி யில்
உள்ள கம்பன் கழகத்தின மேல் மாடி’ மண்டபத்தில் நடராஜ சர்மாவின்
பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அந்த மண்டபம் மக்கள் நெருங்கி தரையில் உட்கார்ந்தால் இருநூறு பேரைக் கொள்ளக் கூடியது. அந்தக் கட்டடமே அரைப் பரப்பு காணித் துண்டில் எழும்பியது தானே. கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழை வளர்க்க முன்வந்த சில யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு மாநகர சபையின் அன்பளிப்பு அந்த அரைப் பரப்புக் காணியும், தரை மட்டம் இடிபட்டு இருந்த ஒரு சிறு கட்டடத்தின் சீர் குலைந்த அத்தி வாரமும், இன்று கம்பன் கழகம் பெரும் புலவன் நூலுக்கு மட்டும் அல்ல, பல கலைகளுக்கும் கை கொடுக்கும்
கலைக் கூடமாகப் பிரசித்தம். அதற்கேற்ற சுவர் அலங்காரம், கதவுகளில் சிற்ப வேலைகள்,' வெண்கலச் சிலைகள், நல்லூர்
மணியத்தின் ஓவியங்கள்.
இரு ஒலிபெருக்கிகள் வெளி '..
யிலே எதிர் திசைகளில் கட்டப்பட்டு நடராஜ சர்மாவின் கம்பீரமான குரலைப்
பரப்பிக் கொண்டிருந்தன. பெரும்
பாலான ரசிகப் பெருமக்கள் வீதி ஓரங் களிலும் சூழலில் உள்ள வீடுகளின் வராந்தாக்களிலும் முற்றங்களிலும் இருந்து கேட்டுக் கொண்டிருந்தனர். நடராஜ சர்மா மனித உள்ளுணர்வு
gas
66 99
நந்தி
களுடன் குலாவும் சங்கீத வித்து
வான்களில் ஒருவர், பிரபல கர்நாடக சங்கீத ஆசிரியர், நூலாசிரியர், அத்துடன் ஒரு நல்ல மனிதன் என்று எல்லோரின் மகிழ் வுக்கும் உரியவர்.
கம்பன் கழகத்தில் நடை பெறும் கச்சேரிகளை மிகவும் ஒழுங்காக வந்து கேட்பவர்களில் ஒருவன் கிரகோரி. அவன் தெரு ஒரத்தில் சித்திராலயா ஸ்டூடியோ வின் வாசல் முன்னால் ரசித்துக் கொண்டிருந்தான், வாயிலே பீடி.
"பேரன் எங்கே, கிரகோரி?” என்று கேட்டார் பக்கத்தில் ஒரு படியில் இருந்த சின்னத்துரை அண்ணை.
"அவனை மேலை மண்ட பத்திலை விட்டுவிட்டு வ்ந்தனான், ஐயா" என்று பதிலளித்தான் கிரகோரி, "என்னாலை அந்தப் புழுக்கத்திலை இருக்க ஏலாது.”
"இங்கேதானை நல்லாய்க் கேட்குது” என்றார் சின்னத்துரை அண்ணை; எந்த நிலமைக்கும் நல்லெண்ணம் கற்பிக்கும் மனம் அவருக்கு.
கிரகோரிக்கு எழுபது வயது சொச்சம். பாட்டு என்றால் தனது தகப்பனின் ஞாபகம் இசைவாக வுரும். தகப்பன் அந்தோனிக்கு
éDo 21

Page 13
கிட்டப்பா பைத்தியம். காலத்தில், தொளாயிரத்து முப்பது களில் யாழ்ப்பாண துரைராஜா தகரக் கொட்டகையில் இந்திய நாடகக் கோஷ்டியின் நாடகங்களை பார்த்து விட்டு அந்தோணி வீடு வரும் போது சாமமாகும். வீதி வழியே நாய்கள். நாய்கள் அந்தோனிக்கு இடைஞ்சல் இல்லை. அவன் தினமும் காலையில் தொழில் முறையில் எத்தனை நாய்களைச் சந்தித்திருக்கிறான், அவன் கையில் ஒரு கம்பு எப்போதும் இருக்கும். கரையூர் சேரியில் தனது குடிசைக்கு வரும் வரை அவன் பாடிக்கொண்டே வருவான்.
*காயாத கானகத்தே. காயாத கானகத்தே. காயாத." கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப்போல் அசைத்து "நின்றுலாவும் காரிகையே" என்று நீளும் போது கால் கட்டை தூரம் கால்கள் கடந்துவிடும். "(3LDu JTg5 LDT6.... (3LDu JTg5 LDT6..... வீட்டுக் கதவைத் திறக்கும் போது “இப்ப என்ன நேரம்” என்று குடைவாள்
மனைவி, பதில் வாங்காமலே போய்ப்
படுத்துவிடுவான். அவன் கூடத்துக் காரிகளைப் பார்த்து ரசிக்கப் போவ தாக அவள் சமுசயம்.
அந்தோனி காலையிலே
நான்கு மணிக்கே எழுந்துவிட
வேண்டும். நாடகங்கள் போடப்படும் நாட்களில் எழும்புவது ஆய்க் கினை, எலும்புகளே ஆயாசத்தில் தூங்கி முடங்கும். அவள் கோப்பித் தண்ணி போட்டுக்கொடுக்க அதை ஊதி உறிஞ்சிவிட்டு, ஒரு கோடாச் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நாலரை மணிக்கு யு. சி. (ஏர்பன் கவுன்சில்) தனது கக்கூஸ் வண்டியை எடுக்க வேண்டும். கிரகோரி 35 வருடங்கள்க
22 šśDetrolo
அந்தக்
காயாத
வளவுக்குப் போய்த்
யாழ்ப்பாண யு.சி எல்லைக் குள் எல்லா வட்டாரங்களிலுமே வேலை செய்திருக்கிறான். அது முழுமையாக எல்லா வீடுகளிலும் வாளிக் கக் கூசுகள் இருந்த காலம் . “கக்கூஸ்காரன் வந்திட்டானா?” என்று கேட்டுத்தான் அதிகாலை நேரத்தை அனுமானித்து ஊரவர் கணி முழிப்பார்கள். வட்டாரத்திற்கு வட்டாரம், வீட்டுக்கு வீடு கக்கூஸ் களின் அமைப்பும், வாளிகளின் ஓட்டை உடைசலும் மாறுபடும். ஆனால் சேர்ந்த அழுக்கு ஒன்று தான். அந்தோனி தொழில் பார்க்கும் போது பாடுவதில்லை. அந்தியில் முழுகிவிட்டு கள்ளுக் கொட்டி லுக்குள் போய் இருக்கும் போது பாடுவான், வீட்டிலும் இரவிலே சாக்குக் கட்டிலில் கால் மேல் கால் போட்டுப் படுத்தவாறு பாடுவான். .
கிரகோரி தகப்பனுடன் கக் கூஸ் வண்டியைத் தள்ளிக் கொண்டு துணையாகப் போவது உண்டு. அந்தோனிக்கு உடம்புக்கு ஏலாத நாட்களில் தனியாகவே வண்டி தள்ளித் தொழில் செய்திருக்கிறான். அந்தோனிக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டதும், கிரகோரி முழுநேர கக்கூஸ் தொழிலாளி ஆனான். மூன்று ஆண்டுகள் தான். அதன் பின்பு கண்காணியாக உயர்ந்துவிட்டான். கண்காணிகள் மலவாளிகள் தூக்குவ தில்லை, மேற்பார்வை மட்டும்தான். இப்போது எல்லாம் அந்த அயலில்
பாட்டுக் கேட்பதில்லை. வாதநோயில் அந்தோனியின் நாக்கும் இழுபட்டு
விட்டது. கிரகோரியோ பாட்டின் பரம ரசிகன், ஆனால் எவ்வளவோ முயன்றும் பாடவருவதில்லை.
அந்தோனி இறந்து போனான். காலம் அவனை மறந்து விட்டது.

கிரகோரியின் காதுகளில் மட்டும் தகப்பனின் குரல் அந்தி வானத்தின் கலகலப்பில் கேட்கும். அவனுக்கு உள்மனத்தில் ஒரு வெற்றிடம். சிந்தனையில் சலனம். அவன் மகன் மரியதாசன் பாடசாலை சென்று படித்தும், சொல்லிக் கொடுத்த பாட்டைக்கூட பாட இயலாதவனாக இருக்கிறான். தேவாலய குருமார்
இல்லத்தில் அவனுக்கு பூந்தோட்டப்
பராமரிப்பு வேலை, மலர்களோடு வாழ்ந்தும் எவ்வித ரசனை மணமும் இல்லாத வனாக இருக்கிறான், முண்டம், பிடி, சிகரெட் கூட அவனுக்கு ருசிக்கத் தெரியாது. அவன் சினிமா போவ தில்லை. ஏதோ நல்லபையன் என்று குருமாரிடம் பெயர் வாங்கு கிறான். அந்த அளவில் கிரகோரிக்கு ஆறுதல், மரியதாசனுக்கு மூன்று பெட்டைப் பிள்ளைகளுக்குப் பின் ஒரு 60)LJU, 68, சவேரி என்று பெயர். சவேரிக்கு மூன்று வயது இருக்கும். கட்ற் சிப்பிகளை வைத்து விளை யாடும் போது முணு முணுத்தான். சேர்ந்து வாயில் மழலைகள். என்ன இனிமை.அது ஒரு ராகம்தான். ஆகா, அவனுடைய பேரன், அந்த அந்தோனியின் பூட்டன் பாடுகிறான்!
அவனுடைய கணிப்பு தப்ப வில்லை. இப்போதெல்லாம் பேரன் சவேரி பாடசாலையிலிருந்து வந்ததும், அந்தியில் சாக்குக் கட்டிலில் கால்மேல் கால் போட்டு ஒரு சிறிய சினிமா பாடல் புத்தகத் தைப் புரட் டிப் பார்த்துப் பாடுகிறான் : முஸ்றாபா.முஸ்றாபா, டோன்ற்வொரி முஸ் றாபா. இதுபோல் பாதிதான் விளங்குகிற சினிமாப் பாடல்கள். ஒரு சில பாடல்கள் கிரகோரியின் மனத்துக்கு பிடிமானம் ஆகவும் இருக்கத்தான் செய்கின்றன: சின்னச் சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை.
கிரகோரிக்கும் ஒரு ஆசை. தனது பேரன் நல்ல முறையில்
சங்கீதம் கற்று ஒரு வித்துவான் ஆக
வேண்டுமென்று. சங்கீதம் என்பது பழக்கம்தான், பயிற்சிதான். அதற்கு வசதி வேண்டும், ஊக்கம் வேண்டும். கிரகோரிக்கும் இப்போது சில பெயர்கள் பழக்கம் - ஹம்சத் வனி, வசந்தா, ரஞ்சனி. எங்கே யாவது கேட்கும்போது இளம் பிள்ளை ஒன்று வந்து கழுத்தை அரவணைப்பது போலிருக்கும். அவை சின்னத்துரை அண்ணை அறி முகப்படுத்திய இராகதேவதைகள்.
சின்னத்துரை அண்ணை
மணிபாகவதருக்கு (பின்னால் சுவாமி
நாததம்பிரான் சுவாமிகள்) கார் ஒட்டினவள். பாகவத சுவாமிகள் பக்திப் பரவசத்தில் கதாப் பிரசங்கம் நடத்தும்போது, மிக அண்மையில் ஒரு சிஷ்யனைப் போல் இருந்து ரசிப்பார்.
அதனால் இராகங்கள் சினேகிதம். இப்போது சின்னத்துரை அண்ணையும்
பாட்டுக் கேட்பதற்கு மண்டபங்களுக் குள் நுழைவ தில்லை. வெளியிலே முகத்திலே காற்றுத் தடவ, ஒலி பெருக்கி தரும் கனத்த பாட்டுக் கச்சேரிகள் உற்சாகமாக இருக் கின்றன. சின்னத்துரை அண்ணையைக் கண்டதும் கிரகோரி அங்கே போய்
அண்மையில், மரியாதைக்கு கொஞ்சம் * எட்ட இருப்பான்.
நடராஜ சர்மாவின் கச்சேரி
யில் ஒரு அலங்கார நேரம். சின்னத்
துரை அண்ணை கிரகோரிக்கு சொன்னார் - ராக மாலிகை. ரஞ்சனி பம் ருது பங் கஜ லோ சனி.
கிரகோரிக்குசொற்கள் விளங்க
வில்லை, ராகமும் அப்படித்தான். ஆனால் மழை நேர வானவில் ஒன்று காதிற்குள் புகுந்தது போல் ஒரு
šo 23

Page 14
மயக்கம். மேல் மண்டபத்தில் தனது பேரனும் இதே ஆனந்த நிலையில் இருப்பான் என்றும் ஒரு நினைப்பு.
கிரகோரி சின்னத்துரை அண்ணையின் காதில் குசுகுசுத் தான். சின்னத்துரைக்கு 55 வயது. ஆனால் தம்பிரான் சுவாமி தொடக்கம் பள்ளிப் பிள்ளைகள் வரை சின்னத்துரை அண்ணை என்று தான் அழைப்பார்கள். அணி  ைண என்பது அவர் கள் அகராதியில், வேண்டிய வேளை யில் உதவிக்கை கொடுப்பவன் என்பது தான் , அணி னை சொன்னார்: "கிரகோரி, கேட்டுப்பார், அந்த மனிசன் சம்மதிக்கும். நல்ல மனிசன்."
"என்னென்று ஐயா வாய் விட்டுக் கேட்கிறது?” சின்னத் துரைக்கு கிரகோரியின் அச்சம் புரிந்தது, ஆனால் புரியாதது போல், "நீ அவர் வீட்டிற்குப் போய்க் கேள்” என்றார்; வீடு கொண்டலடி வைரவர் கோயில் ஒழுங்கையில். கிரகோரி மெளனமாக இருந்தான். காலத்தால் விறைத்த மெளனம் அது. கிரகோரியின் முகத் தைப் பார்த்து அண்ணை சொன்னார்: "சரி, நாளைக்கு வீட்டிற்கு வா. நான் நடராஜ சர்மா ஐயாவிடம் கூட்டிப் போறன் பேரனையும் கூட்டிக் கொண்டு வா."
நிறங்கள் புலராத விடியல் நேரம். கறுப்பு வெள்ளை றி.வியில் போல எங்கும் காட்சிகளின் கோலம். யாழ்ப்பாண நகரில் இப்போ தெல்லாம் கக் கூஸ் வண்டிகளைக் காண முடியாது. யூ.சியும் மாநகர சபையாக
உயர்ந்துவிட்டது. வாளிக் கக்கூசுகள்
நீரடைப்பு மலகூடங்களாக மாறி விட்டன. மனித உதவி தேவைப் படாமல், குடல் அழுக்கு தானாகவே குளாய் மூலம் அப்புறம் புதையும் நாகரிகம் வந்துவிட்டது. “கக்கூஸ்
24 AğDECE:
நடராஜா
காரன்வந்து விட்டானா?” என்று வினவாமல் கோவில் மணி கேட்டதா என்று ஊர் மக்கள் கண் விழிப்பர். அந்தநேரம், நடராஜ சர்மா வீட்டில் பிள்ளைகள் சங்கீதம் பழக வந்து விட்டார்கள். சிலரை சின்னத் துரை அண்ணை இனங் கண்டு கொண்டு விட்டார் . கலி லுTரி அதிபர் , கண்மருத்துவர், மின்சார பொறியிய லாளர் இந்த ரகத்தின் மகன் மகள்மார். உன்னத இடத்துப் பிள்ளைகள்.
கிரகோரியும் பேரன் சவே ரியும் நடராஜ சர்மாவின் வீட்டிற்கு வெளியே கேற்றோடு நின்றார்கள். சின்னத்துரை அண்ணை மட்டும் பிள்ளைகள் பாடிக்கொண்டிருந்த ஹோலுக்குச் சென்றார். அந்தப் பிள்ளைகளிலும் பார்க்க தனது பேரனால் பாடமுடியும் ஏன்று கிரகோரியின் மனம் சொன்னது.
" ஆசிரியர் வரட்டாம்” என்று வந்து அழைத்தார் சின்னத் துரை. தோளில் இருந்த சால்வைத் துண்டை அரையில் சுற்றியவாறு ஹோலுக்குள் சென்ற கிரகோரி நடராஜ சர்மா முன் தரையிலேயே உட்கார்ந்தான். சவேரி பக்கத்தில் நின்றான். அவன் பாடசாலை உடுப்பில் இருந்தான், வெள்ளைச் சேட்டும் நீல நிறக் களிசானும் அணிந்து. பிள்ளை களுக்காக விரிக்கப்பட்ட புற்பாயில் அவனை அமரும்படி பணித்தார் ஆசிரியர். சின்னத்துரை அண்ணையும் ஒரு ஒரமாக உட்கார்ந்தார். கிரகோரி தன்னுடைய விடயத்தை கூறினான். ஏற்கனவே சின்னத்துரை அந்த வேண்டுகோளைத் தெரிவித்து விட்டார். என்றாலும் கிரகோரி முன்னுரையாக தனது தகப்பனாரின் கால ஞாபகங்களை விபரிக்க பரமார்த்த குருவின்

கதையைக் கேட்கும் ரசனை யுடன் இருந்தார்.
நடராஜ சர்மா சவேரியை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். சவேரி இதை எதிர்பார்த்தது போல் அவர் வாய் மூடுவதற்கு முன்பே பாடத் தொடங்கினான்.”
"நல் லாயப் இருக்கிறது” என்றார் ஆசிரியர்,
* u JFT(560)Lulu UITG?”
மகாகவி பாரதியார் என்றான் சவேரி.
es
சந்தர்ப்பத்திற்கேற்ற ஒரு பாட்டை அறிந்தோ அறியாமலோ பையன் பாடியதையிட்டு சின்னத் துரை பூரித்துார்.
"இஞ்சாருங்கோ, இங்கே ஒருக்கா வாங்கோ" என்று ஒரு அவதியான குரல் சமையலறையில் இருந்து வந்தது.
“என்ன?” என்று அவசர மாய்க் கேட்டார் சர்மா. இப்போ அவ ரது மனைவியின் குரலில் அவதி இல்லை; எச்சரிக்கை இருந்தது.
"உங்களிடம் வந்திருப் பவர்கள் ஆர் என்று தெரியுமே?”
"தம்பிரான் சுவாமியுடன் திரிந்த சின்னத்துரையை எனக்குத் தெரியாதே."
இந்தப் பதில் சமாளிப்பும் கேலியும் இருந்ததை உணர்ந்தா அம்மா.
அவவின் குரலில் கண்டிப்பு கண்டிப்பு ஒலிக்க, நிதானமாகச் சொன்னா.
" இஞ்சேருங்கோ, அந்தப் பெடியனை நீங்கள் படிப்பிக் ஏற்றுக் கொண்டால் மற்ற பிள்ளைகள் படிக்க இனி வரமாட்டினம் . ஒரே சொல்ல்ாக, நேரம் இல்லை என்று சொல்லி
அனுப்புங்கோ.”
" அந்தப் பையனுக்கு இயற்கையாகவே பாடும் கொடையை சரஸ்வதி கொடுத்திருக்கிறாள். இப்ப வாற பிள்ளைகளிலே இரண்டு பேரை தவிர மற்றதுகள் வெறும் பவிசுக்காக வந்து போகுதுகள் . அப்பாமாருக்கு லக்குமி கடாட்சம் உண்டு.
64 v. 9
SDL. IL l
"அப்ப என்ன, பையனுக்கு சொல்லிக் குடுப்பம்."
"கூத்தாடாதேயுங் கோ !” என்றா அம்மா. மற்றச் சாதிகள் என்றாலும் ஒரு போக்கு. இதுகள் என்ன துணிவோடு வீட்டுக்குள்ளே நுழைய விட்டனிங்கள். நான் பொறுத் துக் கொள்ளமாட்டன். போய் அனுப்பி விடுங்கோ" நடராஜர் திரும்பிப் போகும் போது அம்மா சொன்னா "சின்னத் துரையை நிற்கச் சொல்லுங்கோ. அவருக்கு நான் இரண்டு வார்த்தை
சொல்ல வேண்டும். சேட்டைக்கும் ஒரு
எல்லை இருக்கு."
நடராஜசர் மா பஞ் சாங் கத்தை எடுத்துப் புரட்டியவாறு கிரகோரியைக் கேட்டார்:
"பேரனுக்கு என்ன பெயர்?"
* சவேரி ஐயா.”
"வாற வெள்ளிக் கிழமை காலை ஏழு மணிக்கு பையனைக் கூட்டிவா."
DGCSEOS 25

Page 15
கிரகோரிக்கு ஏனோ அந்த நேரம் தகப்பனின் ஞாபகம் வந்தது. இவன் எனது பேரன். அந்தோணி யின் வாரிசு. மறுபிறப்பு.அந்தோனி. கிரகோரி.மரியதாசன்.சவேரி, பேரனின் தலையைத் தடவியவாறு கிரகோரி போனான். சின்னத்துரை அண்ணையும் சென்றுவிட்டார்.
அம்மா வந்தா. ஒரு பெட்டி வெங்காயம் உரித்துவிட்டு வந்தது போல் முகம் இருந்தது. முந்தானை யால் மூக்கைத் துடைத்துக் கொண்டா.
"நல்லதைச் சொன்னால் கேட்க மாட்டியள். என்ன வேலை செய்திருக்கிறியள்." என்றார்
“நீ சொன்னது நல்லதல்ல, நல்லதுக்கும் அல்ல” எனறார் நடராஜ GFİTLDMT.
நடராஜ சர் மாவின் மனத்தில் அந்தப் பையன் பாடிய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் தொடர்ந்து மனைவிக்குச் சொன்னார்.
"பார், காலம் மாறிவிட்டது. எண்ணங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. நிஜத்தோடு, போரா டாதே. அது தர்மம் அல்ல. அழாதே."அவர் சில உண்மைகளை நினைவு படுத்தினார்.
"நேற்றுக் கம்பன் கழக
கச்சேரி .
மண்டபத்தில் என்னுடைய கேட்டு எவ்வளவு சந்தோஷமாக இருந்தாய். கம்பன் கழக மண்டபம் இப்போது. ஒரு கலைக் கோயில். ஞாபகம் இருக்கிறதா? பத்து பதினைஞ்சு வருஷங்களுக்கு
26 ğDECOJ
முன்னால் அந்த இடத்தால் போகும்
போது மூக்கைப் பொத்திக்கொண்டு (3 JIT(36 Tib. .
அம்மாவுக்கு ஞாபகம் கிரகணத்தில் இருந்து விடுபடும் சந்திரன் போல் புலர்ந்தது. அந்த இடத்தில் இருந்தது நகர சபைக்குச் சொந்தமான ஒரு கட்டடம். இரு பிரிவுகள் . ஒன்றின் சுவரில் வாயில்
சிகரட்டுடன் ஆணின் தலை வரையப்
பட்டிருந்தது. மற்றப் பிரிவில் தலை யிலே பூ அணிந்த பெண்ணின் தலை. அது ஒரு பகிரங்க மலசல கூடம். வாளிக் கக்கூசுகள். பகிரங்க மாக நாலு திசைகளிலும் நாற்றம் பரப்பிக் கொண்டிருந்தது அந்தக் கூடம். அதனால் அதனை அகற்றி விடும்படி அயலவர் மட்டுமல்ல, கோயில் போவோர். அனைவரும் ஒரே தொனியில் குரல் கொடுத்தனர்.
“பகிரங்க LD63inLtby5 165T இன்றைய கலைக்கூடம்” என்று முடித்தார் சர்மா.
அம்மா கண்கள் அகல விரிய முந்தானையால் வாயை மட்டும் பொத்தினா.
( குறிப்பு: தற்போது யாழ் நகரில் அகில இலங்கை கம்பன் கழக மண்டபம் இருக்கும் அதே இடத்தில் சில வருடங்களுக்கு முன் பகிரங்க மலகூடம் இருந்தது ஒரு சரித்திர உண்மை -ஆசிரியர் )
 

எழுபதுகளின் முற்பகுதி இன்னும் மனக் கண்ணில் நிழலாடுகிறது. நீர்கொழும்பில், இளமை முறுக்கும், இலக்கியத் தகிப்புமாய், அடிக்கடி கூடி, நாங்கள் அன்றைய இலக்கியப் போக்குகள் குறித்து கரிசனையுடனும் ஆழமாகவும் விவாதிப்போம். அந்தக் குழாமில் இவர்களே எப்பவும் நிறைந்து வழிவார்கள். நீர்கொழும்பூர் முத்து லிங்கம், முருகபூபதி, செல்வரட்னம் என்று பட்டியல் நீளும்.
அப்போது, புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், அழகிரிசாமி தொடக்கம், நமது நாட்டு படைப்பிலக்கிய ஜாம்ப் வான்கள் வரை, வெகு சுவாரஸ் யமாய் அலசுவோம். கடற்கரை, வீடு, நெடும்பாதை, ரயில் பாதை என்ற பேத மின்றி இலக்கிய ரசனை வளர்ப்போம். ஒரு நூல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற, நண்பர்களின் அபிலாசையை காலம் தாழ்த்தாமல் நடத்தி முடித்தோம்.
நுால் நிலையத் துவக்க விழாவிற்கு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, வருவதாக ஏற்பாடு. நாங்கள் தீர்மானித்தோம். அவர் ஒரு கம்யூனிஸ்ட், சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். ஒரு சிவப்பு மாலை
யைப் போட்டு வரவேற்போம் என்று. அவர் வந்தார், ஒரு பென்னம்,பெரிய
சிவப்பு மாலை கழுத்தில் விழுந்தது.
உற்சாகமான வரவேற்பு வந்தவர் அடுத்த கணமே மாலையைக் கையில்
எடுத்து மேசையில் வைத்துவிட்டு,
உணர்ச்சிகரமாக இப்படி உரையாற்
றினார். மாலை போட்டு வரவேற்க நான்
என்ன பெரிய கொம்பனா? சர்வ சாதா
ரணமான ஒரு எழுத்தாளன். இந்த
மாலைக்கு கொடுத்த காசில்,
இலங்கை எழுத்தாளன் ஒருவனின்
நூலை விலை கொடுத்து வாங்கி
யிருந்தால், நான் மிகவும் மகிழ்ந் திருப்பேன், என்று, தேசிய இலக்கிய
வள்ச்சியில், அன்றே அவருக்கிருந்த
அக்கறையை எண்ணி வியந்தோம்.
நீர்கொழும்பில் அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வரும் போ
தெல்லாம் நண்பர்களைச் சந்தித்து
மல்லி கைக்கு எழுதும்படி டொமினிக்
ஜீவா அவர்கள் உற்சாகப்படுத்தி
வந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கம்,
காலப்போக்கில் நீகொழும்பு இலக்கிய
வட்டமாக பரிணாமம் பெற்றது. மறைந்த
இலக்கியமேதை கைலாசபதி எச்.எம்பி,
ஜிவா, சில்லையூர், இளங்கீரன், இன்னும்
பலர் நமது இலக்கிய வட்டத்தில்
கலந்து கொண்டு, உரையாற்றி,
உறவாடி பிரிந்து செல்வார்கள்.
27

Page 16
ஒரு நாள வட்டத்தின் கலந் துரையாடல் ஒன்றில் ஒரு பெளத்த பிக்குவும் வந்து கலந்துகொண்டார். அவரை அழைத்து வந்து எமக்கு அறிமுகப் படுத்தியவர் நண்பா ‘எம்.ஏ.எம். நிலாம்.
அவர் பெளத்த பிக்குவாக இருந்த போதிலும் மிகவும் நேசத் தோடும், கனிவோடும், எங்களோடு பழகினார். வட்டத்தின் பல்வேறு சந்திப்புகளிலும் கலந்து கொண்டு தமிழில் உரை யாற்றினார். எங்களை அவர் விஹாராதி பதியாக இருக்கும் பெளத்த கோயிலுக்கு அழைத்து, உபசரித்து, முற்போக்கு எண்ணக் கருத்துக்களை பறைசாற்றினார். இனரீதியிலான்
குறுகிய பார்வை களுக்கப்பால், ஒரு
மனித நேயம் மிக்க தமிழ் அபிமானி யாக அவரை நாங்கள் இனங்கண் டோம்.
TA தமிழ் மொழியில் பத்தாம் வகுப்புப் பரீட்சையில் திறமையாக சித்தி யெய்தினார். களனிப் பல்கலைக் கழகத்தில் , தமிழ்மொழி மூலமாக டிப்ளோமா முடித்து தேறினார். அப்போது தமிழ் விரிவுரையாளராக இருந்த சுரேந்திர ராஜா அவர்களை இப்போதும் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.
தமிழ் எழுத்தாளர்கள் சிங்கள சிருஷ்டி இலக்கியங்களைத் தருகி றார்கள். எனினும் இன்னும் தமிழ் இலக் கிய சிருஷ்டிகளை, சிங்களத்தில் போதியளவு, மொழி பெயர்க்கப்பட வில்லை. இந்தக்குறை நீண்ட கால மாக நிலவி வருகிறது. இந்தக் குறை நீங்கும் காலம் மிக அண்மித்து விட்டது. இன்று ஆர்வ முள்ள சிங்கள் எழுத்தாளர்கள், தமிழ் புனைகதை
களைத் தேடிவருகிறார்கள், அவர்
C ه - : 28
களில் பண்டிதர் ரத்ன வன்ஸ் தேரோ, ஆரியரத்ன போன்றவர்கள் முதன்மை யானவர்கள்.
கம்பஹா சர்வதேச பிக்குகள் பயிற்சி முகாமில் தமிழ்மொழி உட்படப் பிரத்தியேகப் பாடங்கள் பலவற்றை கற்பிக்கும் வெளி யாசிரியராக ரத்ன வன்ஸ் தேரோ கடமை புரிகிறார். தமிழ் மொழி யைக் கற்க விரும்பும் சிங்கள் ஆசிரியர் ஆயுர்வேத வைத்தியர்கள், அரசாங்க சேவையாளர், யாவருக்கு மான மினுவாங்கொடை, நாலந்த மகா வித்தியாலயம், கம்பஹா யசோதா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் சுவாமி ரத்ன வன்ஸ் தேரோ, பொது நலப்பாங்குடன் தமிழ்ப் பாடம் புகட்டி வருகிறார். எலிக்கூடு காட்டாறு போன்ற படைப்பிலக்கிய நூல்கள் சிங்களத்தில் மொழி பெயர்க்க சுவாமி ஆர்வம் காட்டி வருகிறார். (தமிழ் இலக்கிய தேசிய ஒருமைப்பாட்டு இதழ்) (1974).
தேசிய ஒருமைப்பாட்டுக்கான கூட்டம் கம்பஹா மாவட்டத்தைச் சார்ந்த, கொரசவில் நடைபெற்றது. தமிழ்மொழி ஆர்வலர், சுவாமி ரத்ன வன்ஸ தேரோ அவர்களது தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,
ஏராளமான புத்த பிக்குகள், சிங்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள் சுதேச வைத்தியர்கள், தமிழ் எழுத்தாளர் கள் பலரும் கலந்து கொண்டார்கள். சிங்கள நண்பர்கள் தமிழில் உரை யாற்றி னார்கள்.
திரு.பிரேம்ஜி சிங்கள மொழி யில் பேசும்போது இலங்கை சிங்கள நாடல்ல. பெளத்தர்களினதும் இந்துக்க ளினதும், இஸ்லா மியர்களினதும், மற்றும் இனக்குழுக் களினதும் பொது நாடு. இலங்கை ஒரு பல்தேசிய நாடு! என்று ஆணித்தரமாகப் பிரகடனப்

படுத்தினார், இந்த உரையும் கூட்டச் செய்தியும் வீரகேசரி முதல் பக்க செய்தியாக தலைப்புச் செய்தி வெளியிட்டது. இங்கு குறிப்பிடத் தக்கது. (ஈழத்து முற்போக்கு இலக்கியமும், இயக்கமும், சுபைர் இளங்கீரன்)
* மனிதர்களைப் புரிந்துகொள்ள இலக்கியம் தேவைப் படுகிறது. பலதரப்பட்ட மனித மனங்களை, உணர்வுகளை, சிந்தனைகளை, இலக்கியத்தின் மூலம் சித்திரிக்க முடியும். அதையொட்டி ஒருமைப் பாட்டிற்கான, எண்ணங்களைத் தரத் தக்க கருத்துகளை, இலக்கியத் தின் ஊடாக, மக்கள் முன்வைத் தால், முதலில் அது கருத்தாகப் பரவி, பின்னர் சிந்தனையாக மக்கள் மனதில் வேரூன்ற முடியும். அப்போது இன ஐக்கியம் தோன்ற சாதகமான சூழல் ஏற்படும். இனத் துவேஷம், வகுப்பு வாதம், மக்களிடத்தில் தவறான செயல் களை உருவாக்க வழி சமைத்து விடும். நல்லெண்ணம் படைத்த எழுத் தாளர்கள் அனைவரும் தமக்குள் பல தரப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைக் கருத்துப் போராட்டமாக மட்டும் மனதில் கொண்டு நாட்டின் ஒருமைப்பாடிற்காக அயராது உழைக்க வேண்டும். (சுவாமி ரத்ன வன்ஸ் தேரோ 1976 மல்லிகை இதழில்)
கடந்த பதினைந்து ஆண்டுகளிாக சுவாமி ரத்ன வன்ஸ் தேரோ அவர்கள் பற்றிய எந்த செய்தியும் தமிழ் இலக்கிய உலகிற்கு எட்டவில்லை. அவர் விஹாராதிபதியாக கடமை புரிந்துவந்த கொரஸ்ஸ பூரீ-சுதர்மானந்த விகாரை யில் இருந்து அவர்பற்றிய எந்த செய்தியும் அறிய முடியாமலிருந்தும் கூட -தமிழ் இலக்கிய உலகின் துர் அதிர்ஸ்டவசம்தான் என்றாலும் அவர்
நோய்வாய்ப்பட்டிருக்கிறார்
என்ற அண்மைக் காலத் தகவலை அடுத்து கடந்த மாதம் அவரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பத் தினை நான் பெற்றேன்.
விகாரையின் ஒரு அறையில்
− சோர்ந்து தளர்ந்து உடல் நலிவுற்று
கட்டிலில் கிடந்தார். “சாது” என்று அன்புடன் அழைத்து என்னை ஒரு புதியவனாக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம். எனது பெயரைக் கேட்டதும், படுக்கையில் இருந்தவாறு கைகள் இரண்டையும் நீட்டி, மகிழ்வோடு வரவேற்கிறார்.
அந்நாளின் விழிகளின் தீட்சண் யமும் கள்ளமற்ற சிரிப்பும் இன்னும் அப்படியே உயிர்ப்புடன் இருந்தன. தொடர்ந்து இரண்டு , மணித்தியால
"அன்பு உரையாடல். சட்டென என்
மனதில் மறைந்த எழுத்தாளர் இளங்கீரன் சுபைர் அவர்களின்
நினைவு துளிர்த்தது.
நோய் நம்மை என்னசெய்து விடும் என்ற தோரணையில் வீடு தேடி வரும் இலக்கிய நண்பர்களை
உபசரித்து நீண்ட நேரம் உரையாடி
மகிழ்விக்கிற பண்பு இளங்கீரனிடம் இறுதி மூச்சு வரை நிலைத்திருந் ததை என்னால மறக் கவியல வில் லை. அதே பாணியரில் மதிப்புக்குரிய இந்த ரத்ன வன்ஸ் சாதுவும் நோயின் உபாதையை மறந்து மனம் திறந்து உரையாடினார். யுத்தத்தின் பூதாகரத்தையும் அதனால் சிதைந்துபோகிற மானுட தர்மத்தை யும் விசனத்தோடு விவரித்தார். நோயின் கெடுபிடி காரணமாய் தமிழ் இலக்கியத்தோடு இருந்த தொடர்புகள் அறுந்து போனதைப் பற்றி ஆதங்கம் தெரிவித்தார்.
29

Page 17
செங்கையாழியன் குணராசா, தனக்கு கடிதங்கள் எழுதியதாகவும் தன்னைக் காணவருவதாக அறிவித் துள்ளதாகவும் தகவல் சொன்னார். செங்கையாழியானின் காட்டாறு நாவலை சிங்களத்தில் மொழி பெயர்க்கும் ஆவலில் சிரமப்பட்டு அதனை தட்டெழுத்தில் மொழி பெயர்த்து விஹாரையில் இருந்த பிக்கு ஒருவரிடம் ஒப்படைத் துவிட்டு மருத்துவமனை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெளத்த பிக்கு காவியுடைகளைந்து எங்கோ காணாமல் போய்விட்டாராம்.
அவரைத் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள பலர் மூலமாகவும் தான் எடுத்த முயற்சிகள் வீணாகிப் போன நிகழ்வுகளை மனம் வருந்தி விவரித்தார். தற்போது அவரிடம் இருப்பது திருத்தப்படாத தன்னால் மொழி பெயர்க்கப்பட்ட கை யெழுத்துப் பிரதியே. சிங்களமும் தமிழும் அறிந்த ஒரு இலக்கிய வாதி முன் வந்து அந்த மொழி பெயர்ப்பு பிரதிகளைச் சரி பார்த்து அது அச்சுவாகனம் ஏற ஒத்துழைத் தால் தான் பெரிதும் மகிழ்வதாக குறிப்பிட்டார். 1976 மார்ச் மல்லிகை இதழ் இவரது அட்டைப் படத்தைப் பிரசுரித்து கெளரவித்ததோடு அவரது நேர்காணலையும் வெளி யிட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால வைத்திய சிகிச்சைக் குப்பின் நீரழிவு நோயும் பக்கவாதமும் சிறிது கட்டுப்பாட்டிற்கு வந்து ஓரளவு நடக்கவும் வாசிக்கவும் முடிவதாகச் சொன்னார். ஆனால் தமிழ் சஞ்சிகை கள் நூல்கள் தனக்கு கிடைக்காத தினால் தமிழ் தாகித்து வானொலி தொலைக் காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் தான் ஆவுவதம்
30 05:0b
தேடி அந்தப்
அடைவதாக மிகவும் வருந்தியபடி விளக்கினார்.
போரின் உக்கிரம் இனங்களுக்
கிடையிலான புரிந்துணர்வற்ற நிலை
நீடிக்கும் இன்றைய நிலையை பெரும் பான்மை சமூகத்தின் மதகுருவான ரத்ன வன்ஸ் தேரோ அவர்களின் காத்திரமான குரல் சிறுபான்மை யினரின் நியாயங்களுக்காய் உரத்து ஒலித்திருக்கும். என்ன செய்வது, மூப்பும் பிணியும் மனிதனை துரத்தும் ஒநாய்கள்.
தேரருக்கு நெஞ்சில் ஓர் ஆசை உண்டு. அவருடன் சம்பாஷித்ததில் இருந்து என்னால் ஒருவகையில் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்தக் காலகட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள், குறிப்பாக எழுத் தாளர்கள் ஓரணியில் திரண்டு நின்று தேசியப் பிரச்சினை களின் தீர்வுக்கு ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மனதார விரும்புகின்றார்.
எப்படி முன்பு கொரஸ் கிராமத் திற்குத் தமிழ், முஸ்லிம் எழுத் தாளர்களை வரவழைத்து கலந்துரை யாடி, விருந்துண்டு மகிழ்ந்தோமோ அதுபோல, முற்போக்கு தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களைத் திரும் பவும் வரவேற்றுப் பேசி மகிழ்வதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கின்றார் ரத்ன வன்ஸ் தேரர்.
அவரின் அந்தத் தார் மீக
ஆச்ைவெகு சீக்கிரத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்.
重曙

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
இப்பொழுது நினைத் தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் கோமாளி, விதூஷகன் எனப் பாமர மக்களால் கருதப்பட்டு அவரது நகைச் சுவையை மாத்திரம் ரசித்துப் பழக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் பயூன் செல்லையாவின் மனித ஆளு மையை அன்று புரிந்துகொண்டிருந் திருப்பார்களோ என இன்று ஆறுத லாக இருக்கும் வேளைகளில் சிந்தித்துப் பார்க்கிறேன்.
அவள் எத்தனை எத்தனை கதைகள் எனக்குச் சொல்லிச் சென் றுள்ளார். இன்று நினைக்க நினைக்க ஏக்கம் மனசை வாட்டுகின்றது. எனது இளம் வயசு, அறியாமையினால் நான்கூடச் சரிவர அவரைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டேன் போலத் தோன்றுகிறது.
அவர் எனக்குச் சொன்ன விசுவநாததாஸ் கதைகளில் இதுவுமொன் று. ஒரு சமயம் விஸ்வநாததாஸ் நடித்த அரிச்சந்திரா நாடகம் தமிழ் நாட்டில் ஒரு சிற்றுாரில் நடந்தது.
அந்தக் காலத்தில் ஆண், பெண் நடிகர்கள் மேடைகளில் சுயமாகவே வசனம் பேசி நடித்து விடுவது வழக்கம். இதன் மூலம் தங்களது திறமையை வளர்த் தெடுப்பதுடன் பார்வையாளரின் கரகோஷத்தையும் பெற்றுவிடு வார்கள்.
மிக்கவர்.
11
இதில் சிலர் அசகாய சூரர்கள். அன்று
சந்திர மதியாக நாடகத்தில் நடித்த பெண் மணி கொஞ்சம் வாய்த்துடுக்கு வாய்க்கப் பெற்றவர். சற்றுத் திமிர் உள்ளவர். அத்துடன் சாதிக் கொழுப்பு அத்துடன் தன்னுடன் ராஜபார்ட்டாக நடிக்கும் விசுவநாத தாஸ் பிறப்பால் சவரத் தொழி லாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற இகழ்ச்சியும் அந்த நடிகைக்கு உண்டு.
எனவே மேடையில் வைத்தே ரசிகர்கள் மத்தியில் அவரை அவமதிக்க வேணி டும் என்ற மனக்குரோதத்துடன் ஆரம்பத்தி லிருந்தே மேடையில் வார்த்தைச் சவுக் கைச் சுழற்றிச் சுழற்றி விசுவநாததாஸரின் மனசை
நோகடித்துக் கொண்டிருந்தார்.
மாண் டுபோன மகனின் சடலத்தை இரவில் எரிக்க வரும் சந்திரமதியை மயானத்தைக் காவல் காக்க நிற்கும் அரிச்சந்திரன் சந்திக் கிறான். அவள் தனது மனைவி என்றோ, சடலமாகக் கிடக்கும் சடலம் தனது மகன் லோதிதாஸன் என்றோ தெரிந்திருக்காத அரிச்சந்திரன் அவளுடன் தள்க்கம் செய்யும் காட்சி அது.
LDuT60Tig56) சடலத்தை எரிப்பதற்கு உரிய கட்டணத்தைக். கேட்கிறான், அரிச்சந்திரன்.
šĝDetero, 31

Page 18
“என்னிடம் செப்புக்காசு கூடக் கிடையாது! “எனச் சந்திரமதி புலம்பிய வண்ணம் பதிலளிக் கிறாள்.
“அப்படியானால் உன் கழுத்
திலே மின்னும் அந்தத் தங்க மாங்கல் யத்தைக் கழற்றிக் கொடேன்” என்று அரிச்சந்திரன் கேட்கிறான்.
இதைக் காதால் கேட்டதும் சந்திரமதி பதறிப்போய் அரற்றுகிறாள். “ இந்திரனுக்குத் தெரியாத தாலி அந்தச் சந்திரனுக்கும் தெரியாத தாலி, சுந்தர லோகத் தேவர்களுக்குக் கூடத் தெரியாத எனது தாலி இந்தச் சுடுகாட்டைக் காக்கும் புலையனுக்குத் தெரிந்து விட்டதே!’ எனச் சந்திரமதி வசனப் புலம்பலினுடே வேண்டு மென்றே விசுவநாததாஸை மேடையில் வைத்தே இழிவு படுத்தும் கபட நோக்கத்தை உள்வாங்கி, அந்த நாடக நடிகை தனது சொந்த வசனத்தையும் இத்துடன், சேர்த்துக் கூட்டிப் பேசினாள்: “சுடுகாட்டைக் காக்கும் புலையன் இடும் கட்டளை யைக் கேட்டு வந்துநிற்கும் குடிமக னுக்குக் கூடத்தெரிந்து விட்டதே!” எனத்தனது கைச்சரக்கையும் ஊடே சேர்த்து வசனத்தையும் பேசி முடித்தான்
குடிமகன் என்பதற்கு, அந்த வார்த்தைக்கு-தேசத்து மக்களில் ஒருவர் என்ற பொருள் மாத்திர மல்ல, கிராமிய மட்டத்தில் சவரத் தொழில் செய்பவர் என்ற ஒரு அர்த்தமுமுண்டு. அப்படி ஒரு அர்த்தம் வருவதற்காகவே குடிமகன் என்ற வார்த்தையைச் சற்று நிறுத்தி அழுத்தி உச்சரித்து வசனம் பேசினாள், அந்த நடிகை.
அரிச்சந்திரனாக மேடை யில் நின்ற விசுவநாததாஸ் சபையோரைப்
பார்த்துச் சிரித்தார்.
32 DGSG)
சிரித்து விட்டு அவரும் வசனம் பேசினார்: “கொய்த கனியைக் கொய்யாக் கனி எனச் சொல்லுகின்றது உலகம். கொத்தும் விஷப் பாம்பை நல்ல பாம்பென்று கூறுகின்றது அதே உலகம். கூந்தலில்லாத தலை யுள்ளவளைக் கார் குழலாள் என்றும் அதே உலகம்தான் அழைக்கின்றது. அதே போல, கூப்பிட்டவனுக் கெல்லாம் முந்தானை விரித்துப் பழக்கப்பட்ட மடிசாயும் பெண்க ளெல்லாம் குலப் பெண்களைப் போல, வேஷம் கட்டி மேடையேறிவிட்டால் அவர் களெலி லாம் பத் திணிப் பெண்களாக ஆகிவிடுவ தில்லை.” என அந்தப் பெண்ணின் இயல்புத் தன்மையைக் குத் திக் காட் டி வசனத்தைப் பேசி முடித்தார் விசுவ நாததாஸ்.
அதற்கும் கைதட்டி ஆர வாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்ட ரசிகமகா சனங்கள் இந்தக் குத்தல் நையாண்டி களைக் கேட்டதும் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் “ஒன்ஸ் மோர் ’ கூடக்கேட்டனர்.
இந்தக் கதையையும் பபூன் செல்லையாவே எனக்குச் சொல்லிச் சென்றவர்.
விசுவநாததாஸ் கதையை ஊடு பாவாக எனது சரிதக் கட்டுரை யில் இத்தனை விரிவாக நான் சொல்வதற்கு ஓர் அடிப்படையான காரணமுண்டு.
தேசத்தியாகி, காந்தியடி களினால் பாராட்டப்பெற்ற ஒரு மேடைக் கலைஞன், 21 தட வைகள் தேசத் திற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டவர், சாதியின் பேரால்

தமிழகத்திலும் யாழ்ப் பாணத்திலும் மேடையிலேயே அவமதிக்கப்பட்டவள். அவர் மேடைக்கு வந்துபோன நடிகரல்ல. தனது திறமையாலும், உழைப் பாலும், தரமான சாரீரத்தாலும் மக்கள் மனசில் தக்க இடம் பிடித்த காரணத்தால் அந்தக் காலத்தி லேயே பல போட்டியாளர்களுக்கு மத்தியிலும் ராஜபார்ட்டாகவே சகல மேடைகளிலும் வேஷமிட்டு நடித்து வந்தவர் அவர்.
அத்தகைய தேசியப் பெறுமதி வாய்ந்த மதிக்கப்படத் தக்க கலைஞனை, நடிகனை, சும்மா மேடைக்கு வந்துபோகும் குட்டி நடிகனே மேடையில் வைத் து அவமரியாதை செய்ததைக் கேட் டுக் கேட்டே என் இளவயசு மனசு ஆத்திரம் கொண்டது.
அந்த இளவயசு காலத்தி லேயே எனக்கென்று சில திர்க்க மான முடிவுகளை வயசுக்கேற்ற நிலையில் உள் அடி நெஞ் சில பதிய வைத்துக்கொண்டேன்.
நான் தொழில் செய்து வந்த சுற்றாடலில் பல சாதி வெறியர்களைச் சந்தித்திருக்கின் றேன். தொழில் ரீதியாகப் பல கொழுப்புப் பிடித்த சாதிமான் களைக் கண்டிருக்கிறேன். அவர் களை மிக நுணுக்கமாகக்கூட இனங்கண்டு புரிந்து வைத்திருக்
கின்றேன். எந்தக் கட்டத்திலும், எந்தச்
சந்தர்ப்பத்திலும் கூட நான் அவர்களை மதிப்பதில்லை. கனம் பண்ணுவதுகூட இல்லை.
இதில் ஆச்சரியம் என்ன வென்றால் தங்களை நான் மதிப்ப தில்லை என்பது சம்பந்தப்பட்டவர் களுக்கே நன்கு தெரியும். இருந்தும் காட்டிக் கொள்வதில்லை அவர்கள்.
யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வழக்கம் இருக்கிறது. இப்படியானவர்களை “ஐயா!”என்று அழைக்கவேண்டும். அப்படித் தமக்குக் கீழ்ப்பட்டவர்கள் அழைக்கவேண்டும் என அவர்களது பரம்பரையின் எழுதாத சட்டம். அதே சமயம் ஒடுக்கப்பட்ட முதியவர் களைக் கூப்பிடும் அவர்களது பையன் “இந்தா நன்னி! இங்கை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்.” “இஞ்சேர் முத்தன்; வீட்டை வரட்டாம், உன்னை ” இப்படித்தான் தமது இளந் தலை
முறையைக் கடந்த காலத்தவர்கள்
பண்பாட்டுத் தளத்தில் பழக்கம் பண்ணி வைத்திருக்கின்றனர்.
இன்றும் கூட இந்த இழி செயல் சில வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கெதிராக அந்த இளம் வயசிலேயே நடைமுறையில் குரல் கொடுத்து வளர்ந்துவந்தேன். இப்படியான சாதிக் கொம்பன்களை விழிக்க நேரிட்டால் “ஸள்!" என்றுதான் அழைப்பேன். ஐயா என்ற தமிழ்ப் பதமும் ஸார் என்ற ஆங்கிலப் பதமும் ஒன்றைத்தான் குறிக்கும். ஆனால் ஐயா எனச் சொல்லும் போது இருக்கும் தாழ்வு மனப்பான்மை ஸார் எண்று சொல் லும் போது ஏற்படுவதில்லை.
இந்த உயர்சாதிக் கிறுக் கர்களை எதிர்த்த எதார்த்த எதிர்ப் பின் காரணமாக நான் பட்ட மன அவஸ்தைகள் ஏராளம்; பொருளா தாரச் சங்கடங்கள் அநேகம். இருந் தும் எந்தச் சூழ்நிலையிலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடவில்லை; சமரசம் செய்து கொண்டதும் இல்லை.
33

Page 19
இந்த ஞானத்தைக் கற்றுத் தந்தவள் அன்றைய ஒரு நாடக நடிகன், பயூன் செல்லையா. இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதற்குக் கீதை நூலாகத் திகழ்ந்தவர் கூட ஒரு நாடக நடிகர்தான். விசுவநாத தாஸ் அவர்கள்.
ஒருவர் பபூன்; இன்னொருவர் ராஜபார்ட்.
மீசை முளைக்காத அந்த அரும்பு வயசில் இந்த வரலாற்று ஞானோதயம் என் செவிகளில் விழாவண்ணம் வளர்ந்திருப்பேனாக இருந்தால் ஒரு மல்லிகை ஆசிரியர் இந்த யாழ்ப்பாணத்து மண்ணில் வேர் பாய்ச்சி வளர்ந்திருப்பாரோ என்பது யோசிக்கக்கூடிய சங்கதி தான்.
இன்று இதை எழுதிக்
கொண்டிருக்கும் வேளையில் நான் நடந்து வந்த பாதையை நினைத் துப்
பார்க்கும் அதேசமயம் சமகாலத்
தையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
அன்று எனது மானஸிகக் குருவாக வரித்துக்கொண்ட விசுவநாத தாஸ் அவர்கள் தனது வாழ்வு நடத்தையின் மூலம், கலைச் சேவையின் மூலம் எனக் குக் கற்றுத்தந்த பாடநெறி யைச் சிறிதும் பிசகாமல் கடைப்பிடிக்கிறேன். எந்த நசுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே இருந்து தோன்றி னேனோ அந்த மக்களின் விடிவுக்காகவே கடைசிவரை உழைப்பேன்; பாடு படுவேன் எனச் சபதமேற்றதை நடைமுறைப்படுத்தி வருவதில் இன்று ஆத்ம திருப்தி அடைந்து வருகிறேன்.
நாடக மேடையில் மயிலா சனத்தில் மரணமடைந்த ராஜபார்ட் விசுவநாத தாஸ் அவர்களை அதே
34 èDCCO
மயிலாசனத்தில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தினார்கள் ரசிகப் பெருமக்கள். அந்த இறுதி ஊர்வலத் தினால் எட்டுமணி நேரம் நகரப் போக்கு வரத்தெல்லாம் ஸ்தம்பித்துப் போய் விட்டனவாம்.
ஒரு நாடக நடிகனுக்கு அப்படி ஒரு சிறப்போ ஒரு மதிப்போ அதுவரை நடந்ததில்லையாம். வரலாற்றில் பதியப்பட்ட pöd ujTab இன்றுவரை பேசப்பட்டு வரும் தகவலாகும் இது.
இவைகள் அனைத்தையும் விடச் சிறப்பு என் னவென்றால் விசுவநாததாஸ் அவர்களை மேடையிலேயோ அல்லது நேரிலேயோ பார்த்திருக்காத ஒரு யாழ்ப்பாணத்துப் பொடியன், கேள்வி ஞானத்தால் மாத்தி ரமே அவரது பேராண்மையைத் தரிசித்திருந்த ஒரு இரண்டுங்கெட்டான் வயசுப் பையன் அந்த வயசிலேயே தன்னை வெளிப்படுத்த இத்தக வல்களை மனப் பதிவு செய்து கொண்டான் என்பது முக்கியமாகும்.
அசாதாரண திறமைகள் இருந்தும் மேடைக்கேற்ற அழகு, திறமை, குரல்வளம் வாய்க்கப் பெற்ற ஒரு பிறவிக் கலைஞன். காந்தி யடிகளின் அருளாசியை நேரில் பெற்றுக்கொண்டவரும் நாட்டிற்காக, சுதந்திரத்திற்காகச் சிறை சென்றவரும் மக்களால் போற்றிப் புகழப் பெற்ற வருமான ஒரு தரமான நாடகக் கலைஞன். சிகை அலங்கரிக்கும் சமூகத்தவர் குலத்தில் பிறந்துவிட்ட பிறவி காரணத்திற்காக அவர் மீது எறியப் பட்ட அவதூறுச் சேற்றையெல் லாம் துடைத்து அழித்துவிட்டு ஒரு மா மானுடனைப் போல நிமிர்ந்து நின்றாரே, அது இந்த யாழ்ப் பாணத்து

66TTT,
இளைஞனுக்கு ஒரு முன்னுதாரண மாகத் திகழ்ந்தது. அவனது வாழ்வைச் செம்மைப் படுத்தியது.
சமீபத்தில் தமிழகப் பத்திரிகை களில் படித்தேன். தேசிய சுதந்திரத்தின் 50வது ஆண்டு ஞாபகார்த்தமாக மதுரையில் திரு மங்கலத்தில் உள்ள விசுவநாத தாஸ் அவர்கள் பிறந்த இல்லத்தை தமிழ் நாடு அரசாங்கம் வாங்கி அந்த கலைஞன் பிறந்த இடத்தைத் தேசியச் சொத்தாகப் பிரகடனப் படுத்தி யுள்ளதாக அந்த பேப்பர்ச் செய்தி கூறுகின்றது.
இங்கும், கடல் கடந்து இலங்கையிலும் ஒரு மூலையில் தனிமையாக இருந்துகொண்டு தனது இளமைக் கால நினைவு களை தன்னை உருவாக்கியவர்களின் பங்குப்பணிகளை நாமங்களை எழுத்தில் வடித்துக் கொண்டிருக் கிறானே ஓர் எழுத்தாளன். அவனும் தனது அர்ப் பணிப்பை அந்த நாடகக் கலைஞர் களுக்கு இந்த எழுத்தின் மூலம் சமர்ப்பிக்கின்றான்.
காந்தியடிகள் அரிச் சந்திரன் நாடகம் பார்த்ததின் பாதிப்பினால் தனது அஹிம்ஸா தத்துவத்தின் உள்ளடக்கக் கூறுகளை அன்றே உணர்ந்து கொண்டதாக எழுதியு ஒரு தமிழக நாடக நடிகன் யாழ்ப்பாணத் திற்கு வந்து நாடகமாடி யதையும், அந்த நாடக நடிகனுடன் சேர்ந்து நடித்த ஒரு நகைச்சுவை நாடக நடிகன் ஒரு சிறுவனின் நெஞ்சில் தன்னை யறியாமலே
விதைத்த விதை பிற்காலத்தில் ஒரு
தலித் எழுத்தாளனை யாழ்ப்பாண மண் ணில் உருவாக்க ஏதுவாக அமைந்த தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்க்கின்றேன்.
இந்த தகவல்கள் கூட ஒரு வரலாற்று ஆவணப் பதிவுகள்தான்.
இதுவும் கூட, பபூண் செல்லையா 50 - 55 வருடங்களுக்கு முன்னர் எனக்குச் சொல்லிச் சென்ற கதைகளில் ஒன்றுதான்.
கூத்து மடுவத்தில் இப்படி யான ஒரு பிரசித்திபெற்ற நாடகந்தான் நடந்துகொண்டிருந்தது. கலரி நாட்கச் சுவைஞர்கள் அன்று அம்மண்டபத்தில் ஏராளமாகத் திரண்டுபோய் இருந்தனர்.
பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கன்னிகா பரமேஸ்வரி என்ற யாழ்ப்பாணத்து நடிகை, பேரழகி. இளமை குலுங்கும் சிரிப் பழகி. அன்றைய யாழ்ப்பாணத்து இளைஞர்களின் கனவுக் கன்னி. அந்தச் சிரிப் பழகி அன்றைய நாடகத்தரில் பிரதான ஸ்திரிபார்ட்
அந்தக் காலத்தில் கடையடிக் கணேசன் என்பவர் பெரிய சண்டியன். இந்தக் கணேசனைக் கோணாந்தோட்டத்துக் கணேசன்
என்றும் அழைப்பர்.
யாழ்ப்பாணத்துச் சண்டியர்
உலகிலேயே பெயர் பதித்த ஒருவர். அழுக்கடைச் சண்முகம், மணியம், அம்மான், தம்பிராசா, தெய்வேந்திரம் எனப் பின்னர் சண்டியர் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உருவாவதற்கு அத்திவாரமிட்டவர் இந்தக் கடையடிக் கணேசன தான்.
இவர் பகிரங்கமாக ஒரு சவால் விட்டிருந்தார். கன்னிகா பரமேஸ்வரி மேடையில் நடிக்க வரும் போது மேடையில் ஏறி அவளை
35

Page 20
எல்லாருக்கும் முன்னால் ஒரு முறை கட்டிப்பிடித்து விடுகிறேன், என்பது தான் அவள் சொன்னதாகச் சொன்ன சபதத்தின் சாரம்,
கூட்டம் நாடக ரசனைக் காகவும் மாத்திரமல்ல, வதந்தியாக வந்த இந்தச் சண்டியர் சபதத்தின் உண்மை விளைவுகளையும் தரிசிக்கத் தான் இத்தனை கூட்டமாக கூடி நின்று நெரிசல்பட்டது.
நாடகம் களை கட்டும் நேரம்,
வதந்தி வதந்தியாகிப் போய்
விட்டதே என்ற எதிர் பார்ப்பு ஏமாற்றத்தினால் ரசிகப் பெருமக்கள்
சோர்ந்து துவண்டு போய்க் காட்சி
தந்தார்கள்.
திடீரென மேடைப் பக்க மிருந்து பெருத்த ஆரவாரம் கேட்டது.
கடையடிக் கணேசன் மேடை ஏறியதும் அணிந்திருந்த சேட்டைக் கழற்றி பார்வையாளர் பக்கம் விசிறி வீசிவிட்டு சடாரெனப் பாய்ந்து மேடை யில் விக்கித்துப்போய் நின்ற நாடக நடிகை கன்னிகா பரமேஸ் வரியுை அரவணைத்துக் கட்டிட்பிடிக்க முனைந்து, கிட்டத்தட்ட கட்டிப் பிடித்தேவிட்டான்.
சொல்லிவைத்தாற் போல,
வெளிச்சங்கள் அனைத்தும் அணைக் கப்பட்டன.
நாடக அமைப்பாளர்கள் முன்னரே இதற்காகத் தம்மைத் தயார்ப்படுத்திய நிலையிலேயே காத்திருந்தனர்.
கன்னிகா பரமேஸ்வரியைக்
கணேசன் தொட்ட மறுகணமே
விழுந்தது விலாவில் ஓர் ஆழமான கத்திக்குத்து.
36 čŽDCCC
கூத்து மடுவமே அந்தக் கணம் அல்லோல கல்லோலப்பட்டது. பார்வையாளர் நசுக்கப்பட்டனர். நெரிக் கப்பட்டனர். சிலர் மூர்ச்சையுற்ற தினால் மிதிக்கப்பட்டுக் காயப்பட்டனர்.
“இப்படித்தானப்பா இந்த மண்ணில் நாடகம் வேர்விட்டு இந்தளவு தூரம் வளர்ந்துவந்திருக்கு” என முடி வுரையாகச் சொன்னார். பபூன் G8666)u J.T.
கலையிலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் பட்ட கஷ்ட நிஷ்டுரங் களை இளம் தலைமுறையினர் பூரண தெளிவோடு புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆத்ம உணர்வுடனேயே அவர் எனக்கு இந்த வரலாற்றுத் தகவலைச் சொல்லி வைத்தார்.
அதே உணர்வுடன் தான் நானும் அவர் சொல்லிச் சென்ற தகவல்
களை இங்கு பதிந்து வைக்கிறேன்.
பிற்காலத்தில் நான் ஒருநாள்
அந்தக் கடையடிக் கணேசனை நேரில்
பர்க்கேன் ழ்ட்பான பஸ்நி த்தில்
“ஊர் உலகத்தை எல்லாம் கலக்கியடித்த கணேசனா இவர்?’ என நான் ஆச்சரியப்பட்டது என்னவோ 2-6660)LD.
' (வாழ்வு தொடரும்)
്വള്

SAAqLLLLMLMgeASA0eLSLSLSEgAS LLLLLLLLYLGLGGLLLLSSSAAAS 000LLkLkLTLTLkLk LS
ஈழத்தில் தழிழ் நாவலிலக் கியம் நடை பயிலத்தொடங்கி ஏறத் தாழ நூற்றிப்பன்னிரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நீண்ட கால வரலாற்றில் அமரர் கே. டானியலின் இலக்கிய ஆக்கப் பங்களிப்பு முப்பத் தாறு வருடங்களாகும். 1976 ஆம்
ஆண்டுகள் முடிவுவரை ஈழத்தில்
நானுாற்றேழு நாவல்கள் வெளிவந் திருக்கின்றன என்பது பேராசிரியர் நா. சுப்பிரமணியன் கணிப்பாகும். எனது கணிப்பின்படி 1885 இல் வெளிவநீத அறிஞர் சித்திலெப்பையின் அசன்பேயின் கதை தொடக்கம் 1995 இல் வெளிவந்த செங்கை ஆழியானின் காவேர்லை வரை ஐநூற்றியிரண்டு நாவல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதாகும். குறுநாவல்களும் இந்தக் கணிப்பில் அடங்கும். டானியலின் முப்பத்தாறு ஆண்டுகால இலக்கியப் பயணத்தில் பன்னிரண்டு நாவல்களை இலக்கியப் பங்களிப்பு என்ற வகையில் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் தந்துள்ளார்.
டானியல் என்ற ஆக்க இலக் கிய கர்த்தா முற்போக்குச் சிந்தை கொண்டவர். அடக்கி யொடுக் கப் பட்ட மக்களின் விடிவிற்காக புனைகதைத்
துறையைத் தன்புேனகொண்டு வளப் படுத்தியதோடு, தனது இறுதிவரை பயன்படுத்தியவர். ஈழத்தின் புனை கதைத்துறைக்கு புதிய பரிமாணம் சேர்த்தவர். ஒரு காலகட்டத்து யாழ்ப் பாணச் சமூகத்தை அதன் U65 தோடும், பலவீனத்தோடும் இலக்கிய ஆவணமாக்கியவர். யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிகக் கூர்மையாக இவதா னித்து அவற்றைத் தன் படைப்புகளில் சிறைப் படுத்தியதன் மூலம் மானிடவிய லாளராகச் செயற்பட்டவர்.
எல்லா வற்றிற்கும் மேலாக இன்று
தமிழ் நாட்டுத் தலித் மக்களின் சமூக விடுதலைப் போராட்டத்திற்கு தான் படைத்துவிட்ட இலக்கியம் மூலம் சமூகவழி காட்டுபவராகக் கருதப் _JB_J6, jfr. FF pub பெற்ற ஒரு மேதை.
11. படைப்பின் உருவாக்கம்
இலக்கிய கர்த்தா ஒருவ னுடைய ஆக்கவிலக்கியப் படைப்புக் கான உந்துதல் மூன்று நிலைகளில் முகிழ்த்தெழும் எனக்கருதுகின்றேன்.
ஒன்று படைப்பின் தேவை. இரண்டு
தான் அறிந்த/உணர்ந்தவற்றைச் சமூகத்திற்குக் கூறிவிட விழையும்
விருப்பு. மூன்று ஒரு சத்திய ஆவேசம். படைப்புத் தேவை என்பது

Page 21
புகழ்நிலை சார்ந்தது. தன்னைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் முயற்சி. பத்திரி கைத்
தேவைக்காகவும் பணத்திற் காகவும்
எழுதுவது. தான் அறிந்தவற் றையும் உணர்ந்த வற்றையும் சமூகத் திற்குக் கூறிவிட விரும்புகின்ற எழுத்தாளன் முற்கூறிய வகைப் படைப்பாளி யிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டவன். இந்தச் சமூகம் எப்படியிருக்க வேண்டு மென அவாவும் தொலை நோக்குக் கொண்டவன். அவனுடைய படைப்புக் களில் ஓர் இலக்கியத் தேடலும், கலை யழகும் இருக்கும். எழுத்தாளனைத் துண்டுகின்ற சதி திய ஆவேசம் என்பது புறநிலையிலும் அகநிலையிலும் படைப்பாளிக்கு இந்தச் சமூகம் ஏற் படுத்திய மனக் காயங்களால் எழுத்தை வடிகாலாக்குகின்ற நிலை.
டானியல் இவ்வகையினர். இந்த
சமூகம் அவருக்கும் அவர் சார்ந் தோருக்கும் ஏற்படுத்திய பாதிப்பால் ஏற்பட்ட சத்திய ஆவேசத்தின் உச்ச மாகத் தன் மனக்குமுறலைக் கொட்டு வதற்கு எழுத்தை ஒரு ஆயுதமாகக் கொண்ட படைப்பாளியாக கே. டானியல் விளங்குகிறார்.
சமூகத்தில் துன்பப்பட்ட வர்களின் அவலங்களைத் தன்து படைப்புக்களில் அடையாளமாக்கி உயர் மட்டச் சாதிக்காரர்களால் நசுக்கப் பட்டவர்களின் அடக்கு முறைகளுக்கு எதிராக அவர் தனது போர்க் கொடியைத் தூக்கினார். "பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கின்றேன். நிலவுடமை ஆதிக் கத்தின் மேல் கட்டப்பட்ட இந்தச்
38. ÈDCCO
சாதிமுறையை அகற்றி அதைப் பாதுகாத்து நிற்கும் அரச யந்திரத் தை மாற்றி, சகல ஆதிபத்தியச் சிந்தனை களையும் * T iç அழித் தல " அவரது
படைப்புக் களின் உருவாக்கப்
பின்னணியாக அமைந்துள்ளது. அவருடைய நாவல்களில் பஞ்சப்பட்ட
மக்களின் அவலங்களுக்குக்
காரணமான சமூக அமைப்பிலும் அதனைக்கட்டிக் காக்கும் ஒரு சில கயவர்களின் நச்சு நடத்தைகளிலும் தீவிர வெறுப்பு இருந்தது. அதனால் அவரது எழுத்துக் களில் பழிவாங்கும் உணர்வு மேலோங்கி நிற்கின்றது. இதனையே பேராசிரியர் 5.
சிவத்தம்பி "ஆவேச மனிதாயவாதி”
எனக்குறிப்பிடுகிறார். தன்னையும் தனி போன்ற பஞ சமரையும் அடக்கியொடுக்கி "தனிமனித சுதந்
திரத் தை அழித் தொழித் த” உயர்மட்டச் சாதியினரை வஞ்சம்
தர் க்க அவர் பேனா செயற்பட்டுள்ளதென விமர்சகர் சிலர் கருதுவர். பாதிக்கப்பட்ட அவரால் தன் உள்ளக் குமுறல்களைக் கொட்
டாமல் இருந்திருக்க முடியாது. அவரைச்
சமாதானப் படுத்த அவருக்கு அவருடைய வார்த்தைகளே தேவைப் பட்டன.
சாதியத்தின் பெயரால் அந்த
மண்ணில் வேரூன்றியுள்ள நச்சு வேரைக் கிள்ளியெறிய அவர் தனது படைப்புக்களில் அவசரப்பட்டார். "வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு நிமிர்ந்து நின்ற நில ஆதிக்கக்காரர் களால் சுமத்தி வைக்கப்பட்டிருக்கும் நுகத் தடியை உடைத் தெறிய வேண்டும் என்ற வேட்கை" அவரது

படைப்புகளில் ஊடுருவி நின்றது.
12. படைப்பின் பொருள்
அமரர் டானியலின் L160)LCyL4 களில் பொருளாக சாதியம் அமைந் துள்ளது. சாதியப் பிரச்சினைகளை வைத்து ஈழத்தில் நாவல்கள் 1925 இலிருந்து (நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் - எச். நெல்லையா) படைக்கப்பட்டு வந்துள்ளபோதிலும் சாதியத்தின் கொடூரமான உண்மை நிலைகளை உலகம் கண்டுணரும் வகையில் இலக்கியமாக்கியவர் டானியலாவார். பெயரால் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஊறிப்போன ஏற்றத் தாழ்வுகளை, பேராசிரியர் நா. சுப்பிரமணியும் சொல்வது போல" இரத்தமும் சதையுமாக’ புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப் பாளி டானியலாவார். யாழ்ப்பாணச் சமூகத் தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை இயற்பணி புடன் அழுத்தமாகச் சித்திரித் துள்ளார் என்பது நா. சு. வின் கருத்து. பஞ்சமர்களின் அடிமை குடிமை வாழ்க் கைuரிணி அவலங்களையும் அவர்களது உழைப்பு சுரண்டப்படுவதையும் ஆங்காங்கு சிறு தீப்பொறியாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் பொங்கி யெழுந் தமையும் டானியலின் படைப்புப் பொருளாகவுள்ளன்.
13. படைப்பாளியின் பொருள்
டானியலின் படைப்பின்
சமூகப் பார்வை மிகத் தெளிவானது. டானியல் ஒரு முற்போக்குவாதி.
சாதியத்தின்
சமவுடைமைவாதி. அதிலும் மாவோ யிசச் சிந்தனைகளால் கவரப்பட்டு
இயங்கியவர். சாதியத்தாலும் வர்க்கி
யத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் யுகப்புரட்சி யொன்று இந்த மண்ணில் ஏற்படுமென முழுமனதாக நம்பியவர். அவரது சாதிய நாவல்கள் இந்த இலக்கினை நோக்கியே நகர்த்தப் பட்டன. யாழ்ப்பாணச் சமூகத்தின சமூக வரலாற்றினடியாக நோக்கும் போது மூன்று உண்மை நிலைகள் தெளிவானவை:
சாதியத் தாலி பாதிக்கப் பட்ட மக்களும் வர்க்க ரீதியில் வறுமைப்பட்ட மக்களும் தமக்குரிய சமூக உரிமைகளைப் பெற்றுக் கொள்ள 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண டு வரையிலான காலப்பகுதியில் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டனர். அவர்களது
.3.
வாழ்க்கைத் தரம் உயர்ந்த போதிலும்
அவர்கள் எதிர்பார்த்த சமூகவிடுதலை கிட்டி விடவில்லை. இந்த உண்மை கு தெரிந்திருந்தது. அதனையே அவர் தனது கானலின் கருவாக்கி சமூகத்தின் முன் உலவ விட்டார்.
டானியலுக்கு நன்
1.3.2. இலங்கையின் சுதந்திர விடிவோடு இலங்கையில் சமதர்மப் பொதுவுடைமைக் கருதுக் கள் நிலை பெறத் தொடங்கின. கம்யூனிஸ்டுகள் இந்தத் தீவில் ஒரு பெரும் யுகப்புரட்சி யின் மூலம் ஒரு இலட்சியச் சமதர்மப் பொருளாதார நாட்டை
உருவாக்கிவிட முடியுமெனக் கனவு
39

Page 22
கண்டனர். அடக்கி யொடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவு இந்த அரசியற் சிந்தனை மூலமே சாத்தியப்படுமென அறை கூவினர் . அதனால் சாதியத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் வர்க்கத்தால் வறுமைப்பட்ட மக்களும் அதிகமாகத் தம் மைக் கம்யூனிஸ்டுகளாக இனங் காட்டிக் கொண்டனர். அரசியல் வியூகத்தில் இந்த அரசியற் சிந்தனை சார்ந்தோர்
சிறு தொகையினரெனினும் அச்சிறு
தொகையினரில் பெரும் பங்கினர் இவ்விரு வகையினரே. டானியல் இந்த அரசியற் சிந்தனையில் நம்பிக்கை கொண்டு சமூக விடுதலை பாதிக்கப் பட்ட அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஒன்று சேர்ந்த புரட்சியால் வரும் என்றார். பஞ்சமர், போராளிகள்
காத் திருக்கின்றனர் ஆகிய நாவல் களர் இவற்றையே பறைகின்றன.
ஆனால் மார்க்சிச சிந்தனை கள் சாகாதிருக்க, அந்த அரசியற் சிந்தனைகளைக் கையாண்டவர்கள் அதனைத் தவறான திசையில் திருப்பி விட்டதால், ஆட்சி அதிகார மங்கையின் மயக்கில் சிக்கி, பேரினவாதத்திற்குத் துTபம் போட்டதால் பொய்த்துப் போனது. "முற்போக்கிலக்கியம் சில மனிதாயச் சிந்தனைகளைத் தோற்று வித்ததே யொழிய அரசியற் சிந்தனை களின் எடுகோள்களில் தோல் வியே
அடைந்தது"- இது பேராசிரியர் கா.
சிவத்தம்பியின் வாக்கு மூலம்.
சாதியத்தை வேரறுப்பதற்
கான டானியலின் ஏகப் புரட்சி
40 čDETEROU
S) lif
அடிபட்டுப் போனது. நமது நாட்டின் அரசியப் பொருளாதார சமூக நிலைமைகளுக் குரிய சிந்தனைகளை உள்வாங்கிச் சீனாபோல, கியுபாபோல உள்ளக நிலைக்குப் பொருந்தக் கூடிய பொது வுடைமைச் சிந்தனைப் போக்கின் நெகிழ்வின்மையால் இந்த மண்ணில்
இனப் புரட்சியாக [295گ விடிந்துவிட்டது. சாதியத்தையும் வர் க் கதி தையும் அவற்றின் உள் ளார் நீ த பலத் தோடும் பலவீனத் தோடும் சரியாக இனங்காணத் தவறிவிட்டனர். வெகு ஜனப் (81 TJ T டங்கள் -
ஆலயப்பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்பன- இயல் பான சமூகப் போக்கில பெரும் போராட்டங்களின் பின்னர் வெற்றி கண்டன. சாதியத்தின் மறைவிற்குக் கல்வி உயர்வு மூலமும், தொழில் மாற்றம் மூலமும் விடைகாண முடியும் என்பதை டானியல் தெரிந்திருந்தார். அவற்றைத்தன் குடும்பத்தில் நடை முறைப்படுத்திக் காட்டினார். ஆனால் தனது நாவல்களில் அழுத்தம் கொடுக்க அவர் வரித்த கோட்பாடு கொடுக்க வில் லை எனப்படுகின்றது. எனவே தான் அடக்கு முறைகளுக்கு எதிரான புரட்சியை அவர் தனது நாவல்களில் சுட்டி நின்றார்.
13.3. இனவாத அரசியல் இலங்கையில் இன்று வளர்ந்த பூதா காரமான வடிவினைப் பெற்றுவிட்டது. அரசியல் அயோக்கியர்கள் தமது
பாராளுமன்றக் கதிரைகளைக்
காப்பாற் றிக்கொள்வதற்காகவும்

தமது ஆட்சி அதிகாரத்தைச் சுவைப் பதற்காகவும் ஐந்து தசாப் பதங்களாக மக்களைப் பகடைக் காய்களாக்கி நகர்த்தி விளை யாடி வருகின்றனர். இன்று சாதியம், வர்க்கியம், சூழலியம் என்பனவற்றிற்கு மேலாக இனத்துவம் முனைப் புப் இலங்கையில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் தமது இனத்து வத்தின் தனித்துவத்தைப் பேணுவதற் கான போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆயுதக் கலாசாரம் உலகநாடுகளெங் கும் பரவி வீதிகளில் குருதிச் சேற்றைத் தேக்கி மானிடவாழ்வின் பெறுமதிமிக்க சமாதானப் புறாவை குற்றுயிராக்கி விட்டது. முனைப்புப்
பெற்றுவிட்ட இனத்துவப் போராட்டம்
வெற்றிகண்ட பின்னர் யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியம், வர்க்கியம்
என்பன நீங்கி உன்னதமான
யாழ்ப்பாணச் சமூகம் உயர்ந்து நிற்குமென்பதில் டானி யலுக்கு நமிபிக் கையிலி லை. அவரது பஞ்சகோணங்கள் என்ற நாவல் அந்த நம்பிக்கை யீனத்தைத்தான் பேசு கின்றது. படைப் பாளி என்ற
வகையில் டானியலோடு அதில் நான்
ஒற்றுமைப் படுகின்றேன்.
14.படைப்புச் சித்திரிப்புக்காலம்
ஆக்கவிலக்கியம் ஒன்றின் கலாபூர்வ வெளிப்பாட்டிற்குப் பகைப் புலத்திரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக் கியம் கதை நிகழ்கின்ற காலச் சமூக, பிரதேசச் சூழல் சித்திரிப் பாகும். டானியலின் நாவல்களில் இவ் விரு அம்சங்களும்
பெற் றுள்ளது.
மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அவ் வகையில் டானியலின் அவதானிப்பு மிக நுட்பமானது, கூர்மையானது. கதை நிகழ்கின்ற காலச்சூழலையும் சமூகத்தையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டு கின்ற எழுத்து அவருடையது.
அதனால் அவரின் படைப் புக்கள் "சமூக லரலாற்று நவீனங் களாக விளங்குகின்றன எனக்கருது கின்றேன். சரித்திர நாவல்களை எழுது கின்றவர்கள் மன்னர்களையும் மந்திரி களையும் கதாமாந்தராக்குவர். ஆனால் டானியல் மக்களையே தமது படைப்புக் களின் கதா மாந்தராக்கினார். அவர் கூறுவது
போல “மூலக்கருவை வலிந்து
தேடவில்லை. நடமாடும்
பாத்திரங்களும் நான் கற்பனையில்
சிருட்டித்தவர்களல்லர்” என்பதாகும். டானியலின் பெரும்பாலான நாவல்கள்
1956 உக்கு முற்பட்ட யாழ்ப்பாணச்
சமூகத்தைச் சித்திரிக்கின்ற சமூக வரலாற்று நாவல்களாகும். இந்த
நாவல்களில் நூற்றாண்டுகாலச்
சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட் டிருக்கின்ற நேர்த்தி குறிப்பிட்டத் தக்கது. அடக்குவோர் சிலராகவும் அடக்கப்பட்டோர் பலராகவும் இருந்த தந்தையார் காலத்தைச் சித்திரிக்கின் றமை கவனிக்கத்தக்கது.
1.5. படைப்புப் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் -
அமரர் டானியலின் ஏழு நாவல்கள் (பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர், கோவிந்தன்,
|2DEनशer 4

Page 23
அடிமைகள், கானல், தண்ணிர்,
பஞ்சகோணங்கள்), நான்கு குறு
முருங்கை' யிலைக் கஞ்சி, மையக்குறி. இருளின்
நாவல்கள் (பூமரங்கள்,
கதிர்கள்), இரண்டு சிறுகதைத் தொகுதிகள் (டானியல் கதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன) நூலுருப் பெற்று உள்ளன. இந்த ஆக்கங்களைத் தொடர்ந்து படிக்கும் போது டானியலின் பாத்திரங்கள் நிஜவாழ்வில் இருந்தவர் களாகவும், ஒத்த குணாம்சப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் நடமாடு வதைக் காணலாம். பாத்திரங்களில் ஒற்றுமை நிலவுவதைப் போலவே கதா சம்பவங்களிலும் பஞ்சமர் வரிசை நாவல்கள் ஒத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. டானியல் தனது நாவல்களில் இரு முனைப் பான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செல்கின்றார்.
1.5.1. முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் வீறுகொண்ட பாதிக்கப்பட்ட மக்கள்.
1.5.2. சாதி மீறிய பாலிய
ՁMD6N.
இந்த இரு விடயங்களையும் சித்திரிக்கும் போது டானியல் என்ற
படைப்பாளியின் இருதிறற் பரிமாணம்
புலப்படுகின்றது. முன்னதில் அடக்கு முறைக்கு எதிராகத் கொதித்தெழு
கின்ற ஆவேசமும் பின்னதில் வெகு
கலாலயத்தோடு சித்திரிக்கும் இரசனை யும் முனைப் புற்று நிற்பதைக் காண முடிகின்றது.
42 DGSE).5
சாதிய அடக்கு
1.6. பணி பாட்டுக் கூறுகளும் பகைப்புலமும்
டானியலின் நாவல்களில் அவர் விபரிக்கின்ற கதைப் பொரு ளும் கதாமாந்தர்களும் இயங்குகின்ற பகைப் புலமும் அவற்றினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளும் மிக அற்புதமாகக் சித்திரிக்கப்படுகின்றன. நான் ஏற்க னவே குறிப்பிட்டவாறு டானியலின் நுண்ணிய அவதானிப்பு சமகால நாவ லாசிரியர்கள் எவருக்கும் கைவராத கலை. கடதாசி விளையாட்டு, திரு
W விழா, மேளக்கச்சேரி, மரணச்சடங்கு,
ஏராக்கள் தயாரிப்பு, நாட்டு வைத் தியம், மாந்திரிகம், போர்த்தேங்காய், கோழிச் சண்டை எனப்பல பண்பாட் டுக் கூறுகள் டானியலின் கதைகளில் விரவிக் கிடக்கின்றன. அதனால் தான் பேராசிரியர் அ. சண்முகதாஸ், ” இந்த நாட்டின் சமூக அமைப்பை மானிட வியலாளர்களுக்கு இனங்காட்டினார். அந்தவகையில் அவரோர் அரும்படைப் பாளியாகவும் அதே வேளையில் அவரொரு மானிடவியலாளராகவும் விளங்கினார்” எனக் குறிப்பட்டுள்ளார்.
1.7. படைப்புக்களின் சமூகப்பயன்
டானியலின் படைப்புக்கள் ஏற்படுத்திய அல்லது அப்படைப்புகள் சுட்டிக்காட்டிய சமூகப்பயன்கள் எவை யென நோக்கும்போது
1.7.1. உயர்சாதியினரின் அடக்கு முறைகளையும் தாழ்த்தப் பட்ட சாதியினரின் எழுச்சியையும்

சித்திரிக்கும்போது,
(அ) உயர் சாதியினராக அறிமுகமாகும் பலரும் அதிகார வெறியும் கொடுரமன நிலையும்
ஒழுக்கக் குறைப்பாடுகளும் கொண்ட
வராகச் சித்திரிக்கப்படுகின்றனர். புறநடைப் பாத்திரங்களுள்ளன. இப் பாங்கு யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் ஒரு பகுதியினரைப் புண்படுத்துகின் றமை இதுவரைகாலமும் பஞ்சமர் நாவல்கள் குறித்து வெளிவந்து ஆய்வுகளிலிருந்து புலனாகின்றது.
(ஆ) மெல்ல மெல்ல மறைந்து வருகின்ற அடிமை குடிமை நிலையின் கடந்த காலச் சோகங்களை պլք நடைமுறைகளையும் அதன் முழு நிர்வாணக் கோலத்துடன் இரைமீட்பது பிரபஞ்சம் தழுவிய புதுக்கருத்துக் களுடன் மகிழ்வித்து வரும் நவீன சமூக அமைப்பில் நினைவுப் படுத் தக் கூடாத
அவமானங்களாக வுள்ளன. டானியல்
சித்திரிக்கின்ற இரு சமூகங்களுக்கும் இந்த அவமான உணர்வு மீள நினைவு படுத்தப்படு கின்றது. எனினும் படைப்பு என்று வரும்போது டானியல் என்ற எழுத்தாளன் இவற்றைச் சித் திரிப் பதில் இலக்கியத்தேடலும் கலையழகும் கொண்ட ஒரு கலைஞனாகத் தொழிற் பட்டுள்ளான் என்பது தெரிகின்றது. மாறிவரும் ஒரு புதிய சமூக அமைப் பினை டானியல் சற்றேனும் கவனத்திற் கொள்ள வில்லை. சிறு வயதிலேற் பட்ட மனக்காயங்களை அவரால் மறக்க
தலித்
முடியவில 60) 6). அதை ஏற்படுத்தியவர்களை அவரால் மன்னிக் கவும் முடியவில்லை.
1.7.2. யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத் தவரையில் இன்று டானியலின் நாவல்கள் சமூக வரலாற்று ஆவ ணங்கள் என்ற நிலைக்கு LDfTsj16hs Li Lபடைப்புக்களாகும். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அவை இன்று நிலவுகின்ற சமூக அமைப்பைச் சித்திரிப்பனவாக உள்ளன. தமிழ் நாட்டுக் கிராமிய மக் களின் சுதந்திர வேட்கைக்கும் அடிமை குடிமை
நிலையிலிருந்து அக்கட்டுக் களைத்
தகர்த்துக் கொணி டு வெளிப் படுவதற்கும் சமூக விடுதலை வழி களைச் சுட்டிக்காட்டும், படைப்பு களாக டானியலின் நாவல்கள் இன்று ஒரு சாராரால் போற்றப்படுகின்றன. அப்பிரதேச மக்களின் சாதியக் கொடு மைகளைத் தகர்க்க உதவும் சமகால நாவல்களாக டானியலின் படைப்புகள் இருப்பதனால் தான், தலித் இலக் கதி யத் தின் தலைமைகனாக டானியல் இனங்காணப்பட்டிருக்கிறார். அதன் நன்றிக்கடனாகத் தான் தமிழ்நாட்டில்
தலித்துகளால் கட்டப்பட்ட கல்லறை யில் இந்த ஈழத்துக் கோர்க்கி
தூங்குகிறார்.
Rğ(Deutscore0 43

Page 24
அது மல்லிகை பற்றி நான் ༄༽
d5 Q, ÞLD அறிந்திருக்காத நேரம் ஒட்டுசுட்டானில்
பிறந்தாலும் யாழ்ப்பாண உடுப்பிட்டி யிலும் நீர்வேலியிலும் திருநெல் வேலியிலும் இனசனங்களைக் கொண்ட நான் 1986 களில் இருந்து சிந்தாமணியில் எழுதத் தொடங்கியதே என் தாய்த் தேசத்தை விட்டுவிட்டு விலகி வந்து மாத்தளையில் இருந்துதான் என்பதாலும் மல்லிகை பற்றி எனக்கு அறிவிக்க யாருமே பழக்கமில்லை.
கொஞ்சக் காலத்திற்கு முன்தான் கண்டி இரா.அ. இராம னோடு பரிச்சயம் கிடைத்தது. இராமன் தான் கேட்பார் மல்லிகை படித்தர்களா? இராமன் சொல்கிறாரே என்று அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொப்பித்தாளில் கோடுகளோடு வந்த ஓரிரு மல்லிகையை கண்டி பூரிலங்காவில் வாங்கிப் படித்தேன்.
இந்த நிலைமையிலும் உந்த மனிசன் எப்படி மல்லிகை யைக் கொண்டுவருகுது? என்று எனது மனதினில் நினைக்காத நேரமில்லை. பின்னர் டொமினிக் ஜீவா அவர்களைத் தெரியாது. ஆனால் "மல்லிகை வந்திருக்கா மல்லிகை வந்திருக்கா? ’ என்று ரீலங்கா புத்தகக் கடையில் விசாரிப்பேன். “இல்லை வரேல்லை” என்பதுதான் பதில்.
அந்தக் கொப்பித்தாள் மல்லிகைக்குப் பிறகு இந்த கொம்பியூட்டர் மல்லிகையைப் பார்த்த போதுதான் டொமினிக் ஜீவா என்ற தனிமனிதரின், நெஞ்சுறுதி விளங்குகிறது. உண்மையிலேயே 254ஐ விட 255 பொலிவாக இருக்கிறது. 56 பக்கங்களும் ஒரு புது வாசனை வீசுகிறது. மனம் முழுக்க மல்லிகை நிறைந்திருக்கிறது. அந்த உணர்வுகளை, அனுபவத்தை எப்படி என்று எழுத எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. அது உணர்வுகளின் உச்சம். ஆத்மாவின் திருப்தி
வவுனியா சோமதேவன் ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள். இலக்கியம் சோறு போடுகிறதா? உண்மையில் இலக்கியம் இலக்கியம் என்று எழுதிக் குவிப்பவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள், என்பதுதான் உலகத்தின் பார்வை. அதில் ノ
44 Kišić Deteroj
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்மவரும் விதிவிலக்கல்ல. எனது ஒரு நண்பர் நன்றாக கவிதை எழுதுவார். கண்டி ரவுட்.எம்.றியாழ் என்கின்ற கவிஞர். அடிக்கடி என்னைச் சந்திக்கும் போதெல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்பார். வியாபாரம்தான் என்று சொல்வேன். பரவாயில்லை அப்பிடியே செய்யுங்கள் ஏனெனில் இலக்கியம் சோறு போடாது. ஏனோ தெரியாது. அடிக்கடி அப்படித்தான் சொல்வார். நடைமுறையிலும் அப்படித்தானே விளங்குகிறது. என்ரை மனிசியும் உதைத்தான் சொல்லுறாள்.
மல்லிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சோறு போடுவதைச் சொன்னிர்கள். எனிது கண்கள் பனித்து விட்டன. ஆம் இலக்கியத்திற்கு அந்தச் சக்தி இருக்கியது. அதை உணர்ந்து நிரூபித்த முதல் மனிதர் இலங்கையில் நீங்கள் தானோ?
பாம்பை விளையாடப் பழக்குபவனுக்கு அதில் இருந்து கொத்துப் படாமல் தப்பிக்கும் விஷயமும் தெரியும். சும்மா உள்ளவன் போய் பாம்பைப் பிடிக்கப் போனால் கொத்து வேண்ட வேண்டித்தான் வரும், இலக்கியத்தை முறையாக கையாளும் முறை அறிந்தவர் நீங்கள். நீங்கள் கண்ணை மூடமுதல் அதன் நெளிவு சுழிவுகளை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் நாங்கள்தான.
6?Q5. juub. உங்கள் கண்ணுக்குப் பிறது மல்லிகையை யார் வளர்த்தெடுப்பார்கள்? யாழ்ப்பான வாரிசுகளுக்கும் கொழும்பு வாரிசுகளுக்குமிடையில் புடுங்குப்பாடு வருமோ? அதனையும் சீர்செய்து விடுங்கள். ஏனெனில் கோமலுக்கு பிறகு சுபமங்களா நின்று போய்விட்டது. ஆனால் குமுதத்தை சுஜாதா, மாலன் போன்றவர்கள் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களோடு கணக்க கதைக்க வேண்டும் என்று மனம் முழுக்க ஆசை. நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது. வருகிறேன், கதைக்கவேணும்
இளைய அப்துல்லாஹற் அக்குறனை
45

Page 25
மல்லிகை ஜூலை 97 இதழ் தபால்மூலம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி,
நீண்ட இடைவெளிக்குப்பின் கொழும்பு முகவரியோடு புலப்பெயர்வுடன் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ள மல்லிகை ஜூன், ஜூலை இதழ்கள் இரண்டுமே வெகு சிறப்பாக உள்ளன.
ஜூன் இதழில் வந்த ராஜரீகாந்தனின் எளிதழிலில் வாழும் மனிதம் மறக்க முடியாத சிறுகதை.
பந்து, சாரல்நாடன் , லெனின் மதிவானம் கட்டுரைகள் யாவும் சேர்ந்து ஜூலை இதழ் மலையக மலர்போன்றே தோற்றம் தருகிறது.
ஆவாரங்களோ , குறிப்புக்களோ கைவசம் இல்லாமல் வெறும் ஞாபகப் பெட்டகத்தைத் திறந்து வைத்துக் கொண்டே அந்தக் கால யாழ்ப்பாண நாடகமேடை, கலைஞர்கள் அவர்களது கலையுலக வாழ்க்கைபற்றி எல்லாம் பல அரிய தகவல்களை உங்கள் சுயசரிதையில் வழங்கியுள்ளிர்கள். பபூன் செல்லையாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக நீங்கள் தெரிந்து கொண்ட செய்திகள், வரலாறுகள், கதைகள், யாவும் மிகுந்த மனிதாபிமானத்துடன் நகைச்சுவை மிளிரப் பதிவாகியுள்ளன. உங்கள் சுயசரிதை வெகுசீக்கிரம் எம் கரங்களில் கிடைக்க வேண்டும் மற்றவை பின்னர்.
அன்புடன்
சிறுகதைகளும் தொகுதியாக்கமும் என்ற தலைப்பில் சாரல் நாடன் அவர்கள் எழுதிய கட்டுரையில் (மல்லிகை &".והיו 97) தேசிய ஏடுகளான தினகரன், வீரகேசரி இதழ்களில் வெளிவந்து பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைந்த சில கதைகளைக் குறிப்பிட்ட அவர், அவற்றில் இரண்டு கதைகள் வெளியாகியிருந்த A ஏடுகளைக் கொடுக்கவில்லை.
46 š2Deteco
பண்ணாமத்துக் கவிராயர்.
༄༽
முகப்பு அட்டையில் மல்ரன்பன், தெளிவத்தை ஜோசப்பின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ்.ஏ.வடிவேலன் அவர்களின் செங்கரும்பு என்னும் சிறுகதை சுதந்திரன் ஐம்பதுக்களின் முற்பகுதியில் நடத்திய இரண்டாவது சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தது. அப்போட்டியில் முதலாவது பரிசு புதுமைப் பிரியை (பின்னர் திருமதி பத்மா சோமகாந்தன்) அவர்களின் இரத்த LITEFLib என்னும் கதைக்கும் இரண்டாம் பரிசு கே. டானியலின் அமர காவியம் என்னும் கதைக்கும் கிடைத்திருந்தன.
சிறுகதைத் தொகுதிகள் இங்கு வெளியிடப்பட்டுக் கொண்டு வருகின்றன. தனிப்பட்டவர்களின் கதைகளின் தொகுப்புகளாகவும் பலபேர்களின் கதைகளின் தொகுப்புகளாகவும்
வெளியிடப்பட்டுக் கொண்டு வருகின்றன. பல எழுத்தாளர்களின்
கதைகளடங்கிய தொகுப்புகளில் ஏற்கனவே வேறு தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள கதைகளும் திரும்பத் திரும்பச் சேர்க்கப்பட்டுக் கொண்டு வருகின்னறன. ஆனால் ஒரு தொகுதிகளிலும் சேர்க்கப்படாத சில எழுத்தாளர்களின் பல தரமான கதைகள்கூட, எதுவித நூல் வடிவிலேனும் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றன. இது வருந்தத்தக்க ஒன்றாகும்.
சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுபவர்கள், அரைத்த மாவையே அரைப்பதுபோல அல்லாமல், பத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவில் வெளியிடப்படாத கதைகளையும் தேடிப்பிடித்து வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் இந்நாட்டின் சிறுகதையின் படிப்படியான வளர்ச்சியை உண்மையாக அறியக்கூடியதாக இருக்கும் விமர்சனம் செய்பவர்களும் ஆய்வுகள் நடத்தபவர்களும்கூட இப்படியான பணியையே கீழ்மட்டத்திலிருந்து: செய்ய வேண்டும்.
தேவகெளரி அவர்கள் எண்பதுக்களில் மல்லிகை விமரிசனங்கள் என்று செய்திருக்கும் ஆய்வு நூலைப்போல, இலங்கையில் வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளை அவ்வவ் வெளியீடுகளில் வெளிவந்த கதைகளின் ஆய்வுகளாகச் செய்வது நல்ல பலனை அளிக்கும். இதன் மூலம் மறைபட்டுக் கிடக்கும் சில முத்துக்கள் வெளிவரக்கூடும்.

Page 26
ད།།༽
இனி தங்களுடைய “எழுதப்படாத கவிதைக்கு வரையப் படாத சித்திரம்” என்னும் கட்டுரையில் தாங்கள் பபூன் செல்லை யாவைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பொழுது எனது மனம் அந்தக் காலத்துக்கு எடுத்துக் செல்லப்பட்டு மிக்க மகிழ்ச்சி யடைந்தது. இவருக்குப் பின்னர் பத்திரியார் கல்லூரி புளியமரத் * தடியில் சைக்கிள்கடை வைத்திருந்ந கோமாளிச் செல்லையா என்பவரும் பபூனாகக் கொஞ்சம் அறியப்பட்டிருந்தார். ரெம்பிள் றோட் ஆஸ்பத்திரிச் சந்தியடியில் ரெம்பிள் றோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்த கோணங்கிச் சவரிமுத்தர் என்பவரும் இந்தியா விலும் மேடையேறி விகடம் செய்து மகிழ் வித்தவர் என்று அவரே . கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிற்காலத்தில் கொய்யாத் தோட்டம் கண் வைத்தியர் செல்லையா அவர்கள் மகன் நாடக மேடைகளில் பழன் வேடத்தில் பிரபல்யம் அடைந்திருந்தார் என்றும் அறிந்தேன்.
இவர்களைவிட, முலவை முத்தன் என்பவரும் அவருடைய தம்பியாரும் இரட்டையர்களாக நல்லூர்க் கோயில் திருவிழாக் காலங்களில் தெருவோரங்களில் இருந்து கொண்டு இரவிரவாக, சரீரம் சற்றும் கூடக் கெடாமல் பாடிக்கொண்டிருந் தார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் நாடகங்களிலும் நடித்தனர். அவர்களைப் போல இரட்டையர்களாக குருட்டு அருணி என்பவரும் அவருடைய சகோதரரும் கையில் ஒரு வீணைப்பெட்டியுடன் முற்காலத்து இரட்டைப் புலவர்களை ஞாபகப் படுத்தும் வகையில் பாட்டுக்கள் இனிமையாகப் பாடிக்கொண்டு இரண்டொரு துட்டுக்காக இலவச இசை வழங்கிக் கொண்டு தெருத்தெருவாக சென்று கொண்டிருந்தனர். இவர்களையும் நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
குருட்டுக் குருசர் என்று அழைக்கப்பட்ட ஒரு வறியவர் நாட்டுக்கூத்து நாடகங்களும், கோவில் பெருநாட்க்ளுக்கு, வழிபாட்டுக்கு பாடல்களும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்திருக் கிறார். எடுத்தவுடனேயே விருத்தங்கள், கவிப்பா என்று எதையும் பாடிக்கொடுக்கக் கூடியவராக இருந்தார். அடைக்கல மாதா கோவி லுக்கும் அவருடைய சேவை கிடைத்திருந்தது என்றும் சொல்லப் படுகின்றது. இப்படி எத்தனையோ பேர் யாழ்ப்பாணத்தில் கலைக்கு கீழ்மட்டத்திலிருந்து தொண்டு செய்திருந்தனர்.
அருள்.
محرم
48 čÉDICO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ யாழ்ப்பாண மண்ணிலே வேரூன்றி மணம் பரப்பிய மல்லிகையை கொழும்பு மண்ணில் இப்பொழுது நாட்டியுள்ளிகள் இந்த மல்லிகைக் கொடி புதிய மண்ணிலே வளருமா, மணம் வீசுமா என்ற சந்தேகம் உங்களுக்கு சற்று இருக்கின்றது என்பதை ஜூலை 97 ஆசிரியத் தலையங்கம் மூலம் உணர்ந்தேன். உங்கள் சொந்த மண்ணில் அடைந்த வளர்ச்சியைவிட புதிய மண்ணிலே உங்கள் மல்லிகை வெற்றி பெறும் என்பது நிச்சயம்.
எம் இதயத்தைக் கவர்ந்த இம்மல்லிகை அல்லாஹற்வின் அருளால் பூத்துச் சடைத்துப் பயன் தரவேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.
எம்.ஏ.எஸ்.எஸ்.ஹமீட,
மாத்தளை.
மல்லிகை இதழ் 255 பெற்றேன். புதுப்பொலிவும், விடயக்கனதியும் ஈழத்தமிழிலக்கியத்தில் அக்கறை கொண்டவன் என்ற வகையில் பூரிப்படைய வைக்கின்றன. புதிய அச்சுக்கலைத் தொழில் நுட்பத்தின் சுவடுகள் மல்லிகையைக் கனதியாக்கிவிட்டன. வாழ்த்துக்கள். h
தெளிவத்தை யோசேப்பின் பந்து சிறுகதையின் சிறப்பை வியந்து பாராட்டாவிடில் இலக்கியத் தவறொன்றைச் செய்தனாவேன். அண்மைக் காலத்தில் வெளிவந்த சிறு கதைகளில் பந்து தலையாயது எனக்கருதுகின்றேன். சமூகத் திற்குச் சொல்ல வேண்டிய சங்கதியை இவ்வளவு நாசுக்காகவும், கதையிழையோடும் அனுபவமும் திறனும் வாய்ந்த ஒரு கலைஞனாலேயே சொல்ல முடியும். அதனைத் தெளிவத்தை யோசேப் செய்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் நல்லதொரு படைப்பைச் சுவைத்த அனுபவம். வாழ்த்துக்கள்.
செங்கை ஆழியான்.
šśDeteroj 49

Page 27
50
சிறுகதைகளும் தொகுதியாக்கங்களும்
மேற்படி, விடயம் பற்றிய விரிவான கட்டுரையொன்று, யூலை 97 இதழில், எழுத்தாளர் சாரல் நாடன் எழுதியிருந்தது பாராட்டுக்குரியதாகும்.
அக்கட்டுரையில், மலைநாட்டு எழுத்தாளர் பற்றியும், அவர்களது ஆக்கங்கள் பற்றியும், ஆராயப்பட்டதோடு, அவர்கள் படைத்த மலைநாட்டை களமாகக்கொண்ட கதைகள் பற்றியும், அவற்றின் தொகுப்புக்கள் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.
இது, பிற எழுத்தாளர்களுக்கு, ஆவணமாகவும் விபரக்கொத்தாகவும், அமையுமென்பதில் ஐயமில்லை!
இருப்பினும்கூட மலைநாட்டைச் சாராத எழுத்தாளர் பலர், மலைநாட்டைக் களமாகவும், அவர்கள் பற்றி பிரச்சனைகளையும் கருவாகக் கொண்டு, பல சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.
இத்தகைய ஆக்கங்கள் பல இலங்கையில் தேசிய இதழ்களில்
காலத்துக்கக் காலம் வெளிவந்துள்ளமை, மறுக்க முடியாதது ஒன்றாகும்.
ஏன் மல்லிகையில் கூட பல கதைகள் மலைநாட்டை களமாகக் கொண்ட கதைகள் பல, மலைநாட்டு எழுத்தாளரல்லாத ஈழத்து எழுத்தாளர்களினால் எழுதப்படட்டு வந்துள்ளமை கண்கூடாகும்.
இத்தனைய ஆக்கங்கள், அட்டவணைப் படுத்தப் படுவதோடு, மலைநாட்டைச் சார்ந்த சிறுகதைகளிலும், சேர்த்துக் கொள்ளப்பட்டால் அன்றி மலை நாட்டு மக்கள் பற்றிய விபரங்கள் பூரணமாகமாட்டா என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
வண்ணை சே.சிவராஜா.
t GSG)is
N
ン
 

10. 11.
12.
13.
14.
15.
16.
மீன்குஞ்சுகள் - - ச. முருகானந்தன்
பித்தன் கதைகள் - கே.எம்.எம்.ஷா அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் தலைப்பூக்கள் - டொமினிக் ஜீவா (65 மல்லிகைத் தலையங்கங்கள்) தூண்டில் - டொமினிக் ஜீவா (இரண்டாம் பதிப்பு) அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி - டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல், இரண்டாம் பதிப்பு)
மீறல்கள் - மு.பவரீர் விடை பிழைத்த கணக்கு - திக்குவல்லை கமால்
மாத்து வேட்டி - தெணியான் எண்பதுகளில் மல்லிகை
விமர்சனங்கள் - தேவகெளரி
டொமினிக் ஜீவா - சிறுகதைகள் (ஆசிரியராலேயே தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின்-தொகுப்பு)
மல்லிகை முகங்கள்
(55 தகைமையாளரின் அட்டைப்படத் தகவல்கள்)
தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் ஒரு தேவதைக் கனவு - கெக்கராவ ஸஹானா அந்தக் காலக் கதைகள் - தில்லைச் சிவன்
201, 1/1, ஹரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13
மான சுவைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள்வும்
ğDE 51

Page 28
ཕྱི་ ། ། டொமினிக் ஜீவா
புலம் பெயர்ந்த நீங்கள் மல்லிகையின் அச்சுச் சாதனங்
تصحيح 户
களை யெல்லாம் மறக்காமல்
கூடவே கொண்டுவந்து விட்டீர்களே, இடையில் சோதனைகளை எப்படிக் கடந்து வந்தீர்கள்?
எம்.ஆர்.எம்.இன்ஸாப் கல்முனை - 6
இரவுக் கிரவே அப்படி அப்படியே போட்டுவிட்ட பொருட் களில் மல்லின்கச் சாதனங்கள் மாத்திரமல்ல நான் காலங்காலமாக பேணிப் பாதுகாத்து வைத்திருந்த பழைய பிரதிகள், மற்றும் சேமித்து வைத்திருந்த புத்தகங்கள் அத்தனை யையும் விட்டுவிட்டு வந்தவன். மல்லிகை என்ற நாமத்தை மாத்திரம் தான் என் இதயத்தில் சுமந்து
கொண்டு வந்தேன். இன்று
கொழும்பில் மல்லிகைக் கன்றை நட்டு வைத்து உழைப்பு வியர் வையை ஊற்றி வருகின்றேன்.
52 R
தமிழில் பூரண நாவல் முயற்சி இல்லை எனத் தமிழக எழுத் தாளர் ஜெயமோகன்
கூறியுள்ளார், தனது நூலொன்றில்,
இதுபற்றி உங்கள் கருத்தென்ன? பெ.திலகம் ஹட்டன்
X Da
இப்படித் தடபுடல் கருத்துக் களைச் சொல்லி இலக்கிய உலகில் தம்மை நிலைநாட்டப் பார்க்கின்றனர் சிலர். அதில் ஒருவர் இந்த ஜெயமோகன். இப்படியான வர்களைத் தூக்கிப்பிடித்து கொடி நாட்டவென்று வேறு சிலர் இன்னும் தமிழிலக்கிய உலகில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். நீங்கள் இவர்களைப் பார்த்து மனசை அலட்டிக்கொள்ள தீர்கள். இன்று தமிழில் புதிய புதிய துறைகளில் நாவல் இலக்கியம் வேர் பரப்பிப் படர்ந்து வளர்ந்து வருகின்றது. இந்த ஜெயமோகன் கூட ரப்பர் என்றொரு நாவல் எழுதியவர்தான். சில சமயங்களில் இப்படி அதிரடிக் கருத்துக்களை கூறித் தனது இருப்பைக் காட்ட முனைவதுண்டு. பாவம் இவர்களைப் பார்த்து கணக்க யோசித்து மண்டை யைப் போட்டுக் குழப்பிக்கொள் ளாதீர்கள்.
X-3
போக்குப் பற்றி என்ன நினைக்
கிறீர்கள்?
திருமலை சுந்தா
 

கணனி யுகத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்த வேண்டிய பல கோணங்களில் கிள்ை பரப்பிப் படர்ந்து வருகின்றது. முன்னர் தமிழ் என்றால் தமிழகம், இலங்கை, மலேசியா என நாம் நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்று கனடா, அவுஸ்தி ரேலியா, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் எனத் தமிழ்ச் சிந்தனை பற்றிப் படர்ந்து வரு கின்றது. அது எழுத்திலும் வடிக்கப் படுகின்றது. அ. முத்துலிங்கம் என்ற ஈழத்துச் சிறுகதை எழுத்தாளரைக் கேள்விப் பட்டுள்ளிர்களா? கொக் குவில் கிராமத்தில் பிறந்த இந்தச் இலக்கியச் சகோதரன் தனது சர்வ தேச அனுபவங்களைத் திரட்டிக் குழைத்து தமிழ்த் தேனில் தோய்த் தெடுத்து இலக்கியம் படைத்து வருவதை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
இருபத்தோராம் நூற் றாண்டை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். நவீன இலக்கிய உலகில் தமிழ் கொடிகட்டிப் பறக்கும் என்பது திண்ணம்,
ΣΧ ΣΧ ΣΚ ΣΧ.
m அடிக் கடி உங்களது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறீர் களே, ஏன்? எதற்கு?
திருமலை சுந்தா
நான் சாதியை அல்ல,
தொழிலைத்தான் குறிப்பிடுவதுண்டு. அது சாதியைக் குறிப்பதாக
உங்களைக் கருதச் செய்கின்றது. இந்த மண்ணின் ஒரு துரதிருஷ்டம் என்னவென்றால் சாதியும் தொழிலும் இரண்டறக் கலந்துபோயுள்ளது தான். தமிழரிடத்திலுள்ள மிகக் கேவலமான பழக்கங்களில் ஒன்று, ஒருவனை இழிவுபடுத்த வேண்டு
மென்றால் அவனது சாதியைச்
சொல்லித் திட்டுவது. அப்படி இழிந்த குணம் கொணி ட தமிழனுக்கு அந்தச் சிரமத்தை
வைக்க நான் விரும்புவ தில்லை.
அதைத்தவிர, தனது சாதி தாழ்ந்த சாதி என நினைக்க வைப்பது தான் சோகங்களில் மிகப்பெரிய சோகம். இந்த மண்ணில் நான் எந்த ஒருவ னுக்கும் - எந்தக் கொம்பனுக் குமே - தாழ்ந்தவனல்ல என்ற மன ஒர்மம் எனக்கு என்றுமே உண்டு. இதை நிலை நிறுத்தவே எனது மூதா தையர் தொழில்சார் சமூக
நிலையை வெளிப்படுத்துகின்றேன்.
என்னைப் போன்று உழைக்கும் சமூகத்தில் பிறந்த பல தகைமை வாய்ந்த இளைஞர்கள் இந்தத் தாழ்வுச் சிக்கலில் சிக்குண்டு இரட்டை வாழ்வு வாழ்ந்து தம்மைத் தாமே ஏமாற்றி வாழப் பழகிக் கொண்டு விட்டனர். அவர்களுக்குச் செயல் மூலம் வழி காட்டுவதே என் மன நோக்கம். சாதி ஒரு பிரச்சினையேயல்ல. உள் மனத் திண்மைதான் முக்கியமானது. அதைக் கடைப்பிடித்து, வாழப் பழகிக்கொள் எனச் சொற்களின் மூலம் மனத்தத்துவ போதனைதான். எனது வெளிப்பாட்டின் நோக்க
மாகும்.
53

Page 29
அத்துடன் என் பரம்பரை
மூதாதையினருக்கு உணவு கொடுத்து, உறைவிடம் நல்கி, அவர் களை மனிதர்களாக வாழவைத்த தொழிலை - பெயரை - மறைத்து வாழுவது என்பது எத்தகைய கேவலம் எனச் சிறு வயசிலிருந்தே புரிந்து கொண்டு செயல்பட்டு வருபவன் நான்.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கு வியப்பாக இருக் கலாம். நாளை ஒரு நாள் இந்தக்
கருத்துக்களுக்காகவே நான்
மதிக்கப்படக் கூடும்.
X X
இலக்கியத்தை இலக்கிய
வாதியை முற்போக்கு பிற்போக்கு என்று பிரிப்பதே ஒரு பிற்போக் கில்லையா?
றியாஸ் முகம்மத் அட்டுலுகம
உலகமே இன்று விரும் பியோ விரும்பாமலோ இரண்டு கோஷடிகளாக பிரிந்து போய்க்
கிடக்கிறது. ஒரு பக்கம் மனுக்
குலத்தின் எதிர் காலச் சுபீட்சத் திற்காக உழைக்கும் வர்க்கம் ஒருபக்கம் உலகம் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? எங்களது சுய சுபீட் சந்தான் முக்கியம். யார் அழிந்தாலும் நமக்குக் கவலையில்லை. நாங்கள்
நன்றாக வாழவேண்டும் என்ற
நோக்கில் உலகெங்கும் அடாவடித்
54 ğDESCO
தனங்களை ஊக்குவிக்கின்ற, திட்டமிட்டுச் சதி செய்து வரும் கூட்டத்தை நீங்கள் எந்தவகையில் கணிப்பீடு செய்கின்றீர்கள்? இதன் அடிப்படையிலேயே இலக்கியத் தைப் பற்றியும் நாம் வரையறை செய்கின்றோம். மனுக் குலத்தை நச்சுப்படுத்தும் எழுத்தை எழுதுபவர் கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பிற்போக்குத் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே! மனித சமுதாயத்தின் எதிர்கால சுபீட்சத
'திற்காக எவர் எவர் பேனா பிடிக்
கிறார்களோ அவர்களே முற்போக்கு எழுத் தாளர்கள்.
ΣΧ Σκ Σκ ΣΧ.
சமீபத்தில் நீங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல இயலுமா?
ம.திருச்செல்வம் கண்டி
சமீபத்தில் நான் வவுனியா வுக்குச் சென்றிருந்தேன். யாழ்ப் பாண பல்கலைக்கழக வவுனியா
வளாகத்தில் ஓரிலக்கிய கலந்
துரையாடலில் கலந்து கொண் டேன். சூடும் சுவையாகவும் இருந் தது, அங்கு நடந்த உரையாடல். அடுத்த நாள் தங்கியிருந்து வட கிழக்கு மாகாணம் நடத்திய இலக்கிய விழாவில் கலந்து
கொண்டேன். நகர மண்டபத்தில்
நடந்தது அந்த விழா. இலக்கிய நெஞ்சங்களுக்கு மிகவும் பரிச்சய மான சுந்தரம் டிவகலால அவர்கள்

இவ் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
அந்த விழாவின் முடிவில் மருத நிலா என்ற இலக்கிய மல ரொன்று வெளியிட்டு வைக்கப் பட்டது. அந்த மலரைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அத்தனை அழகாக, சிறப்பாக அந்த மலர் மலர்ந்திருந்தது. கொழும்பில் அம்மலரைப் பலரிடம் பெருமை யுடன் காட்டினேன். பல இலக்கிய நண்பர்கள் அதைப்பார்த்து வியந் தார்கள், மெச்சினர்கள். இப்படி ஒரு மலரை உருவாக்கத் தங்களை மறந்து உழைத்த அத்தனை இலக்கிய நெஞ்சங்களையும் மனசாரப் பாராட்டுகின்றேன். முடிந் தால் அந்த மலரொன்றைப் பெற முயன்று பாருங்கள்.
X. X X X
சித்தர்கள் 18 பேர் எனப்
பலர் சொல்லிக்கொள்கிரார்களே தவிர, முழுச் சித்தர்களின் பெயர் ஒருங்குசேரத் தெரியாது எனக்கு. பழைய கல்விமானகளிடம் கேட் டாலும் முழுச் சித்தர்களின் எல்லாப் பெயர்களையும் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அந்த 18ச் சித்தர்களின் பெயரை ஒன்று விடா மல் சொல்ல இயலுமா, உங்களால்? ச.தயானந்தன்
திருகோணமலை
நான் பெரிய படித்தவ னல்ல. என் அறிவைச் சோதிக்க நீங்கள் நினைத்து இந்தக்
கேள்வியைக் கேட்டால் என்னால்
பதில்சொல்ல இயலாது. உண்மை யில் அறியவிரும்பினால் சொல்லு கிறேன். எண்ணிக்கொள்ளுங்கள். சிவன், அகத்தியர், திருமூலர், சிவவாக்கியர், தேரையர், புண்ணக் கீசர், மச்சமுனி, புலிப்பானி, சாந்த முனி, போகள், ரோமரிஷி, ராமதேவர், இடைக்காடர், கொங்கணவர், பாம் பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், காகபசுண்டர். இவைகள் தான் சித்தர்களின் நாமங்கள்.
✉ ✉ ' চর চর
உங்களுடைய தினசரிப் பொழுதுபோக்கு என்ன?
ம. அருமைத்துரை கண்டி
இது இத்தனை காலமும் தெரியாதா, உங்களுக்கு? மல்லி கைக்காக என்னை மறந்து உழைப் பதே எனது பொழுது போக்கு.
x x x x.
உங்களுடன் அடிக்கடி
தொடர்புகொள்ள நினைக்கிறேன்.
தூரம் இடம்தரவில்லை. என்ன செய்ய 6v)ATLíb?
ந. ராமதேவன்.
பதுளை
என்னைச் சந்தித்து உரை யாடுவதற்கு ஒரேயொரு வழிதா னுண்டு. மல்லிகையைத் தொடர்ந்து
படித்துவாருங்கள்.
Šo GGS) 55

Page 30
கொழும்பில் உங்கள் இலக்கிய அனுபவங்கள் என்ன?
க. சாமிநாதன்
நீர்கொழும்பு.
கொஞ்சம் பொறுங்கள். இப்பொழுதுதானே வேர் விடத் தொடங்கியுள்ளேன். புத்தக வெளி
யீடுகள், இலக்கியக் கூட்டங்களில்
கலந்து கொள்ளுகிறேன். சில கூட்டங்களில் கருத்துரைகளும் செய்கின்றேன். பல புதிய முகங்கள் எனக்கு நட்பாகக் கிடைத்திருக் கின்றன. பல புதிய அனுபவங் களையும் பெற்றுள்றேன். இன்னமும் அபிப்பிராயம் சொல்ல முனைய வில் லை. வருகிறேன்.
XXI XI IXJ IX)
தான். பிரதேசங்களில் இருந்தெல்லாம்
கற்றுக் கொணி டு ,
மல்லிகைப் பந்தல் வெளி யீடுகள் நீங்கள் கொழும்பு வந்ததன் பின்னர் வெகு துரிதமாக வெளிவரு
கின்றனவ்ே, விற்பனையாகின்
றனவா?
அ. அருள்நேசன் வெள்ளவத்தை
கடந்த காலங்களில் என் உழைப்பின் மூலம் நான் பெற்றுக் கொண்ட மாபெரும் செல்வமே தரமான ரசிகச் சுவைஞர்கள் தேசத்தின் பல்வேறு
புத்தகங்கள் கேட்டு எழுதுகின்றனர்.
தினசரி இயங்குவதே எத்தனை மகிழ்ச்சியானது.
Σκ ΣΧ ΣΧ Σκ
/
ഥേ5 சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோல்
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
ஆண்டுச் சந்தா 180/-
15 ரூபாவுக்கான தபால் தலைகள் அனுப்பியும் தனிப் பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.
" ԼՈ6Ծ656Օ&s .13 - 2Oஇi/i, - பூரீகதிரேசன் வீதி, கொழும்பு ܢܠ
N
தனிப் பிரதி 15/=
الصر
201-1/1, கதிரேசன் வீதி கொழும்பு - 13 முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கலர்டொட்ஸ் நிறுவன்த்தில் கணனி அச்சுக்கோர்வை செய்யப்பட்டு, பிறஸ்மார்க் 115, புளுமெணடல் வீதி, கொழும்பு -13. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.
56 COCCO

RIZANA BOO CENTRE
7-20/ 14.மெண்ட்ஸ் ரோட், மருதானை, கொழும்பு 10.
தமிழ் : நாவல், சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளிலுள்ள நூல்களும்
இஸ்லாமிய நூல்களும் குர்ஆன், தப்கிர் உட்பட
தமிழ் நாட்டு வெளியீட்டாளர்களான நர்மதா, கினேகா, அலைகள், வானகி. கவிதா. தாவூத், பர்ஷாத் ஆகிய ஸ்தாபனங்களின் வெளியீடுகளும்
இலங்கைக் கல்விப் பொதுத் தராதர - சாதாரணதர உயர்தரவகுப்புக்களுக்குத் தேவையான
ஆசிரிய கைநூல்களும்
சர்வதேச பாடசாலைகளுக்குத் தேவையான பாடநூல்களும்
எம்மிடம் கிடைக்கும்.
சலுகைகள் : நேரடியாக வந்து வாங்குபவர்களுக்கு - 10% கழிவு ரூ. 1000 க்கு மேல் வாங்குபவர்களுக்கு - 15% கழிவு நூல்நிலையங்களுக்கும் கல்விநிறுவனங்களுக்கும் -15 % கழிவு ரூ.5000 க்கு மேல் வாங்குபவர்களுக்கு ரூ.500 பெறுமதியுள்ள நூல்கள் இனாம்.

Page 31
یہ نتیجہ
݂ ݂
== ந் ''
Exporte SNon Trad
Sri Lankar
30 Sea AV COOmD Te:-57
 
 
 
 
 
 
 
 
 
 

itional
1 Foods