கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1991.08

Page 1
miniiiiiiiiii =
•**ዕ‛*"
o"
 

விலை O ரூபா

Page 2
メ**くく*y}しく* &*}}く* グ*y}く*{}く、く〜 |lle » z reuodd0 1 3 & z & euodd
“VX NVT IMS – VN-Hyp*\/)\N\/T I MIS – VN-J-Ivo ‘qvod uvNwAVIwgWw ‘LG‘OVOM AQNwyl ‘99 :ƏɔļļļO qɔueig:əołįįo peəH
Å AELGWNT,ųwyl "W os JW N\/dOOd\/\/\/MON VW "Y! 'S "MIW : Suəuļued 6u16eue.W
Akqe AAMM MALMLALS LSAALLSSTeMSLSeMALTSLLLMAASAALSL LMSieMMSL MSASA
w “NIRIM
SHOLOVILNOO – SHAGNIÐNA
TENILLEA o NWHWHONVW ("sool |- sues quemqdmog res offi's{
**}} }}、くt{ート〜fくく〜〜〜〜〜〜〜〜くしくくく〜〜〜~
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
s OSjSSE
N ஈனநிலை கண்டு துள்ளுவார்" 'Mallikai' Progressive Monthly Magazine 231 ஆகஸ்ட் - 1991
26-வது ஆன்மு
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ሎ
சந்தோஷமான சங்கதியொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் துடிக்கின்றது. அந்த மகிழ்ச்சியான செய்தி- மல்லிகைக் கெனச் சொந்தமாக ஓர் அச்சு இயந்திரம் பொருத்தப்பட்டு விட்டது என்பதேயாகும்.
மல்லிகையை ஆரம்பித்த காலத்திலிருந்தே கன வு கண்டு கொண்டு வந்த இந்த இல்ட்சியம் கடந்த தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் நிறைவேறி விட்டது,
இப்படித் திடீரென ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் எதிர் பார்த்திருக்கவில்லை. பல கட்டங்களில், பல சந்தர்ப்பங்களில் மல்லி கைக்கான அச்சு இயந்திரத்திற்காகக் கொழும்பு, வவுனியா, மன்னார். என்று பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து ஈற்றில் ஒன்றுமே வசதிப் படாத நிலையில் வெறுங்கையுடன் திரும்பி வந்த சந்தர்ப் பங்கள் பலவுண்டு.
மணிவிழாக் காலத்தில் என்மீதும் ஈழத்து இலக்கியத்தின் மீதும் தனிப் பேரபிமானம் கொண்ட இலக்கிய நெஞ்சங்கள் ஒரு தொகை பணத்தைச் சேர்த்துத் தந்திருந்தனர். அதைப் பத்திரமாகப் பொத் திப் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்தேன். பணம் தந்த நண்பர். களின் நோக்கம் அந்தப் பணத்தை மல்லிகையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்- ஒரு மெஷின் வாங்கிப் பொருத்த வேண் டும் என்ற பெரு நோக்கமேயாகும்.
அச்சு இயந்திரம் வாங்குவதற்குப் போதுமான பணமல்ல அது. ஆனால் ஒர் இலட்சியத்திற்காகத் திரட்டப்பட்ட செல்வம், அலைந்து திரிந்து, நண்பர்களிடம் சொல்லி, பலரிடம் விசாரித்து முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன், • ۰نی
தமிழ்ப் புத்தாண்டுக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பூர் இளைஞர். என் மீதும் எனது எழுத்தின் மீதும் அத்தியந்த

Page 3
அன்பும் விசுவாசமும் வைத்துள்ள அவர் - 'எக் காரணத்தைக் கொண்டும் தனது பெயர் எழுத்தில் இடம் பெறக் கூடாது" என ஏற்கனவே என்னிடம் வாக்குறுதி பெற்றுவிட்டவர் - மெஷின் சம் பந்தமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு என்னிடம் வந்து விவிரத்தைச் சொன்னார். "இப்பொழுது கைவசம் எவ்வளவு பணம் உள்ளது?’ எனத் திடீரெனக் கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். அவர் விலை தீர்த்து வைத் திருந்த பணத்தில் அறுபது சதவிகிதப் பணம்தான் என் கைவச மிருந்த பணம்.
*சரி. சரி. எல்லாம் வெல்லுவம்’ எனச் சொல்லிவிட்டுச் சென்ற அவர், புத்தாண்டு தினத்தில் தானே முன்னின்று நேரடி யாக அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்து மல்லிகையில் சேர்த்து விட்டு என்னைப் பார்த்து நிமிர்ந்து புன்னகைத்தார்.
உண்மையில் நான் பிரமீத்து விட்டேன்!
இப்படி ஏராளமானவர்கள் மல்லிகையின் அபிமானிகளாக முன் வந்து நான் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எல்லாம். உதவ முன் வந்து விடுகின்றனர்.
மல்லிகையுடன் தொடர்ந்து தரமான எழுத்தாளர்களின் சிருஷ் டிகளை நூலுருவில் வெளிக் கொணர உழைப்பதே எனது திட்ட மாகும். மல்லிகைப் பந்தல்" வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் பல் துறை சார்ந்த புத்தகங்களை வெளியிடவே முயன்று உழைத்து வரு கின்றேன். இன்று வாசிப்புப் பழக்கம் மேலோங்கி இருக்ரிறது. கடந்த காலங்களில் ரசனைக்காகவும், சுவைக்காகவும், பொழுதுபோக்குக்காக வும் தமிழகத்து நூல்களைப் படித்துவந்த நமது சுவைஞர்கள் இன்று வாழ்க்கையின் தினசரித் தேவைகளுக்காகப் புத்தகங்களைப் படிக்க விரும்புகின்றனர். வாசிப்பு தினசரி வாழ்வின் ஓர் அம்சமாகக் கலந்து விட்டது. வாழ்க்கைக் கல்வி தேவைப்படுகின்றது.
இத்தகைய தேவைகளைக் கணக்கிலெடுத்து, தரமான படைப் புக்களை நூலுருவில் வெளியிட்டால் வியாபார ரீதியாகக் கூட எம் மால் தாக்குப்பிடிக்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை எனக்கு se-6 for 6.
இந்தத் துறையை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். ஏனெனில் இது மக்களின் அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த துறை. இத் துறையில் நாம் வேலை செய்யும்போது அர்ப்பணிப்பு உணர்வு டன் காரியமாற்ற வேண்டும் உடன் பயன் கிடைக்காதிருக்கலாம். முயன்று உழைத்தால் காலப் போக்கில் நிரந்தரப் பெருமையை-- பொருளாதார பின்வலுவை - நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த காலங்களில் படைப்பாளிகளே தமது சொந்தக் கைப் பணத்தை முதலீடு செய்து தமது பட்ைப்புக்களை வெளியிட்டு வந்த னர்; வெளியிடுவதுடன் பாரிய சிரமப்பட்டு விநியோகத்தையும் தம் கைப்படவே தனி மனித முயற்சியாகச் செய்து வந்தனர்.
இப்படியான தனி மனித முயற்சிக்குப் பதிலாக வெளியீட்டு நிறு வன அமைப்புகள் நம் மண்ணில் தோன்ற வேண்டும். அந்த அமைப் புக்கள் நூல்களின் விற்பனவுக்காக சந்தைகளை விஸ்தரிக்க வேண்டும்
-டொமினிக் ஜீவா

ஆ, மின்சாரம் - கடதாசி
மல்லிகை போன்ற சிற்றிலக்கிய ஏடுகளுக்கு முன்னுள்ள பாரிய பிரச்சினையே இதுதான்.
போதிய வசதி வாய்ப்பற்ற - இலட்சியம் ஒன்றையே மூலதன மோகக் கொண்ட - நம்மைப் போன்ற இலக்கிய ஏடுகளுக்குத் திடீர்த் திடீரென நெருக்கடிகள் இடையிடையே தோன்றி மறைவதுண்டு.
என்னதான் நெருக்கடிகள் - கஷ்ட, நஷ்டங்கள் கடந்த காலங் களில் ஏற்பட்ட வேளைகளிலும் கூட, அயராத தன்னம்பிக்கை மூலம் சிரமங்களை வென்று தொடர்ந்து மல்லிகையை வெளி யி ட் (? வந்துள்ளோம்.
ஆனால், இப்போது வந்துள்ள சிரமம் அத்தகையதல்ல. சஞ்சிகை வெளியிட அத்தியாவசிய மூலப் பொருளான கடதாசி சிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தாலும் விலை கட்டுப்படியாகாது. மாசிகை யின் விலையை உச்சத்திற்கு ஏற்ற வேண்டும். வாழ்க்கைப் பிரச்சி னைகளுக்குள் பொதுவாகப் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இலக்கியச் சுவைஞர்களை நாம் மேலும் சிரமத்துக்குட்படுத்த விரும்பவில்லை. எனவேதான் நாம் நஷ்டப்பட் டாலும் கடந்த இதழ்களை விலை ஏற்றாமல் மக்களுக்குக் கையளிக் கக் கூடியதாக அமைந்தது. இன்று சற்று விலை ஏற்றியுள்ளோம்.
அடுத்தது மின்சாரம். இந்த விஞ்ஞான யுகத்தில் மின்சாரத்தின் தேவையை நாம் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டு மென்பதில்லை. இந்த மூலாதாரங்களான இரண்டின் தேவையும் இன்று நமக்குக் கிடைப்பதற்கு வழியில்லை.
இதற்காக நாம் மனஞ் சோர்ந்துபோய் விடவில்லை. மக்களை, மொழியை, இந்த மண்ணை நேசிக்கத் தெரிந்தவர்கள் நாம். இந்த மக்கள்தான் கடந்த காலங்களில் மல்லிகைச் செடிக்கு நீரூற்றி இன்று மல்லிகைப் பந்தலாக வளர்ச்சியடைய வைத்தவர்கள்.
நமது ஆத்மக் கருத்துக்களை வெகு துல்லியமாகப் புரிந்து கொண்டவர்கள் சுவைஞர்கள்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுக் கால கட்டத்தில் உங்களுடன் நெருங்கிய இலக்கியத் தொடர்புகளைப் பேணிப் பாதுகாத்து வந் துள்ளோம். நமது முழு முதல் நேர்க்கமுமே இந்த மண்ணைப் பசளையிட்டுச் செழுமைப் படுத்த வேண்டுமென்பதே. பின்னர் இலக் கிப்ப் பயிர் தானாக பயன் தர ஆரம்பிக்கும். W
இந்த நோக்கத்திற்கு இன்று இடையூறாக இருப்பவையே இவை இரண்டும். இவைகளை வெற்றி கொண்டு மீண்டும் சுவைஞர்கள் மத்தியில் தொடர்ந்து முன்செல்வோம். O

Page 4
சாதனையாளர் சாரல்நாடன்
- அந்தனி ஜீவா
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் தனித்து வமுள்ளதாகத் திகழ்ந்து வருகின்றது. மலையக ஆக்க இலக்கியத் திற்கு அறுபது வருட கால வரலாறே உண்டு. ‘மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப் போகிற ஆய்வாளர்கள். விமர்சகர் கள் காலக் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி. வி. வேலுப் பிள்ளை யுகம் என்றும், 1980 களின் பின்னர் சாரல்நாடன் யுகம் என்றும் இலக்கியக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் போத்திரெட்டி இலக் கிய உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார்.
அவரது கூற்று உண்மை என்பதை கண்டியில் நடைபெற்ற இலக்கிய விழாவின் போது ‘மலையக இலக்கிய வரலாறு" பற்றி சாரல்நாடன் நிகழ்த்திய உரைக்குப் பின் உணரக் கூடியதாக இருந் தது. பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல விரிவுரை யாள்ர்கள் சாரல்நாடனின் இலக்கிய ஆளுமையையும், ஆற்றலை யும் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
எண்பதுகளில் மலையகத்தை, மலையகத்திற்கு அப்பால் வாழும் தமிழர்களுக்கு சாரல்நாடன் எழுத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
அட்டன் ஹைலன்ஸ் கல்லுரரி உருவாக்கிய மாணவன். மாண வப் பருவத்திலே இவரிடம் காணப்பட்ட திறமையைக் கண்டு ஊக்கு வித்தவர்கள், ஆசிரியர்களிான இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் ஆகியோர்களாகும்.
1960களில் புதியதோர் ஆத்திரப் பரம்பரை தலை தூக்கியது. எழுத்திலும், பேச்சிலும், கவிதையிலும் சீற்றம் மிகுந்த இளந் தலை முறையினரின் துடிப்பும், விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது. பழந்தலைவர்கள் அருவருப்போடும் அலட்சியத்தோடும் இப் பு தி ய போக்கினை நோக்கினர். சி. வி. இப்போக்கினை ஆதரித்தார். இதன் வளர்ச்சியை விரும்பினார், இக்கால இலக்கியக் கூட்டங்களில் பங் கெடுத்துக் கொண்டார், இளந் ததைமுறையினரை உ ற் சா சு ப் uggjSarträ.
 

அறுபதுகளில் தோன்றிய ஆத்திரப் பரம்பரையின் முன்னணி வரிசையில் இடம் பெற்றவர்களில் சாரல்நாடனும் ஒருவர். மலை யகத்தின் மணிக்கொடி" என்றழைக்கபபட்ட மலைமுரசு' இதழில் இந்தப் புதியவர்களின் எழுத்துக்கள் இடம் பெற்றள. பின்னர் 'தின கரன்' ஆசிரியராக பேராசிரியர் கைலாசபதி பொறுப்பேற்றவுடன் தேசிய உணர்வுடன் மண்வாசனை மிக்க படைப்புகளுக்கு களம் அமைத்தார். வடக்கு - கிழக்கு மழையகம் என்று தரமான படைப்பு களை அரங்கேற்றம் செய்தார், மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையை எழுதத் தூண்டினார். அவரின் நடைச் சித்திரங் கள் இடம் பெற்றன, அதனைத் தொடர்ந்து என். எஸ். எம். இரா மையா, சாரல்நாடன் ஆகிய இருவரும் தமது ஆக்க இலக்கியப் படைப்புகளான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
சாரல்தாடன் எழுதிய 'எவளோ ஒருத்தி" என்ற சிறுகதையைப் பிரசுரித்த பேராசிரியர் கைலாசபதி, அவரது ஆற்றலை இனங் கண்டு தொடர்ந்து எழுதும்படி தம் கைப்பட கடிதம் எழுதினார். "என். எஸ். எம். இராமையாவும். சாரல்நாடனும் மலையக இலக்கி யத்தின் நம்பிக்கைகள்" என்று சி. வியிடம் கூறியுள்ளார். மலையக எழுத்தரளர்களை ஊக்குவித்த டாக்டர் நந்தி. ரசிகமணி கனக் செந்திநாதன் ஆகியோர் எவளோ ஒருத்தி" யைப் பாராட்டி சாரல் நாடனுக்குக் கடிதம் எழுதி உற்சாகமூட்டினார்கள்.
அட்டன் ஹ்ைலன்ஸ் கல்லூரியின் கெட்டிக்கார மாணவனான சாரல்நாடன், பல்கலைக்கழகத்திற்கு அந்தக் கல்லூரியிலிருந்து செல்லும் முதல் மாணவராக வாய்ப்புக் கிட்டியும் அதனைத் தொடர முடியாது போகவே கண்டி அசோகா வித்தியாலயத்தில் ஆசிரிய ராகப் பணியாற்றிக் கொண்டு, எழுதுவதிலும் ஆர்வம் கொண்டார். கதை, கவிதை என்பதுடன் நில்லாது மட்டுமல்ல, விமர்சனம், நாட் டார் இயல் என்று எழுதத் தொடங்கினார்.
அகில இலங்கையிலுமே தேயிலை ஆராய்ச்சி நிலையமும் பெருந்துறை நிர்வாகம் பற்றி தேசிய நிர்வாகமும் நடத்திய தேர் வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெற்று தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேயிலைத் தோட்ட மக்களைப்பற்றி எழுதினாரோ அந்த மக்களின் உழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் தேயிலையைப் பதமாக உரு 6u dajestë u 60. Uuq Grfurt Gorari.
அறுபதுகளில் தன்னிடமிருந்து பீறிட்டுக் கிளம்பிய ஆர்வத்தை அணைபோட முடியாமல் சி. வி. வேலுப்பிள்ளை போன்றோர் பாரபட் டும் அளவிற்குப் படைப்புகளைத் தந்த சாரல்நாடன் எழுபதுகளிலே "வனவாசம்’ பூண்டுவிட்டார். ஒரு தசாப்த காலம் எதையும் எழுதா மல் ஒதுங்கியிருந்த சாரல்நாடனின் எழுத்தாற்றலை உணர்ந்து அவர் இப்படி ஒதுங்கியிருப்பது எத்தகைய இழப்பு என்பதை மகித்து மீண்டும் அவரை இலக்கிய உலகிற்கு இழுத்து எழுத வைத்தது மலை யக் கலை இலக்கியப் பேரவையாகும்.
மீண்டும் எழுத்துலகில் காலடி தடம்பதித்த சாரல்நாடன் மலை
யக எழுத்தாளரை ஒன்று திரட்டபேரவையின் தலைவராக செயல் படத் தொடங்கினார். எண்பதுகளில் பழைய வேகத்துடன் எழுதத
器

Page 5
ஒதாடங்கினார். மலையக மக்களின் நேசிப்புக்கும் விருப்புக்கும் உரியவரான மனித நேயமிக்க மலையக மக்கள் கவிமணி சி. விசின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம்
சி. வி. சில சிந்தனைகள்" என்ற படைப்பைத் தந்தார்.
இந்த நூலின் முன்னுரையில் "நான் எழுதியதை விட எழுதாம் லிருந்த காலப்பகுதியே அதிகம், எழுத்து என்பது நெருப்பைப்போல, அது எந்நேரழும் ஜூவாலை விட்டு எரியாவிட்டாலும் அனலாய், கனலாய், தழலாய் தொடர்ந்து நீறு பூத்து நிற்கும் தன்மையுடையது.
இயந்திரங்களுக்கு மத்தியில் இயந்திரங்களைப் போன்று மனி தர்களுடன் தொழில் புரியும் நான் என்னையும் இயந்திரமயமாக்கி விடாமலிருக்க இலக்கியத்திடம் தஞ்சம் புகுவதை நாளாந்தம் பழக்க மாக்கிக் கொண்டிருக்கிறேன்" என சாரல்நாடன் குறிப்பிடுகிறார்.
மலையக எழுத்தாளர்கள் யாரும் ஆர்வம் காட்டாத ஆய்வுத் துறைகளில் அக்கறைகாட்டினார். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர் கள் அடுத்தவர்களின் கட்டுரைகளில் பல குறிப்புகளைச் சேர்த்து ஒர் ஆய்வுக்கட்டுரை தயாரிப்பதை அறவே வெறுத்தார். தகவல்கள் சரியானவையா, ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை நேரில் தேடிப்பிடித்து விளக்கம் பெற விரும்பினார்.
தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தைச் சேர்ப்பது போல, நூல் நிலையங்களைத் தேடிப் போனார். கொழும்பு கேசிய சுவடிக் கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தியோதய நூல கம், நுவரெலியா நூலகம் போன்றவற்றில் இருந்த அரிய நூல் களைத் தேடிப் படித்தார். தேசிய சுவடிக் கூடத்தில் பழம் பத்திரி கைகளையும், ஹன்சார்ட் போன்றவற்றையும் நுணுகி ஆராய்ந்தார். மாதக் கணக்கில் லீவு எடுத்து ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளில் குறிப்பெடுத்தார். காலை சுவடிக் கூடம் சென்றால் மாமை கூடம் பூட்டும் வரை செயல்படுவார். இதனால் தொழிலையும் இழக் க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தேடலின் அறுவடைதான் ,தேசபக்தன் கோ. நடேசய்யர்” என்ற மலையகத்தின் மாமனிதரைப் பற்றிய நூல்.
ஒரு காலத்தில் மலையகம் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையிடம் தேடிச் சென்று கேட்பது வழக்கம். இன்று நம்மிடையே சி. வி. இல்லாத காலகட்டக்தில் அத்தகைய குறையை நிறைவு செய்பவர் சாரல்நாடன். மலையகம் பற்றிய திறையத் தக வல்களையும், ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆயிரக்கணக்கான நூல் களையும் சேகரித்து வைத்துள்ளார். தமிழில் மாத்திரமல்லாமல் அவ் வப் போது ஆங்கிலத்திலும் இவர் எழுதி வருவது குறிப்பிடத்தக் கது. அவ்வப்போது சில மொழிபெயர்ப்பு நூல்களையும் செய்துள் ளார். சாரல்நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி புயலாகச் மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பன. மலையக இலக்கிய வரலாற்றில் சா ர ல் நா ட னு க் கு தனி அத்தியாயம் எழுதப்படி வேண்டும். ... O
6

‘ஈழகேசரி? பொன்னையா நாற்பதாவது நினைவு தினம்
ஒரு பார்வை
பொன். பாலகுமார்
ஈழகேசரிப் பொன்னையா 1951இல் மறைந்தார். ஈழகேசரிப் பத்திரிகை 1957 இல் நின்றுவிட்டது, 1977 இல் அவரது திருமகள் அழுத்தகமும் கைமாறி விட்டது. அவர் பாடுபட்டு ஆக்கிய வைத் தியசாலை பறிபோய்விட்டது. தமது நிலத்திலே அவர் கட்டிய மத்திய கல்லூரிக்கு அவர் பெயர்கூட இடப்படவில்லை. அவரிடம் பொருள் வாங்கிய ஸ்தாபனங்கள் - பாடசாலைகள் அவர் பெய ரையே மறந்து விட்டன. ஆனால் ஈழத்து எழுத்தாளர் சமூகம் ஈழகேசரியின் தொண்டையும், திரு. நா. பொன்ளையா அவர்க ளின் பெயரையும் மறந்துவிடவில்லை. (ஒரு சிலர் அந்தப் பொற் காலத்தைக் கூட மறக்கடிக்க முயல்கிறார்கள்) யார் மறக்கடித் தாலும், மறவாது விட்டாலும் அவர் பெயர் சொல்ல குரும்ப சிட்டி சன்மார்க்க சபை இருக்கிறது. அவர் நினைவு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இவ்வாறு இரசிகமணி கனக செந்தி நாதன் தனது "என் கதை" என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 31 - 3 - 91 அன்று காலை நல்லூர் கம்பன் கோட்டம் எழுத்தாளர்களாலும், தமிழபிமானிகளாலும், குரும்பசிட்டி மக்க ளாலும் நிரம்பியிருக்கிறது. "ஈழகேசரி" பொன்னையா அவர்களின் நாற்பதாவது நினைவு தினம், குரும்பசிட்டி சன்மார்க்க சபையின ரால் கொண்டாடப்படுகின்றது. நிகழ்வு காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகத் திட்டமிடப்பட்ட போதும், காலவர்த்தமானங்களால் ஒரு மணி நேரம் பிந்தியே தேவாரத்துடன் ஆரம்பமாகிறது.
வரவேற்புரை வழங்கிய சபையின் இணைச் செ ய ல ள ளர் சி. கெளரிபாலன் தனதுரையில் தமது சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து, உடல் உள ரீதியர்கப் பாதிக்கப்பட்ட குரும்ப சிட்டி மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளை ஒரு புறத்தே புரிந்து கொண்டு, மறுபுறத்தில் ஈழத் தமிழ் மக்களின் தனித்துவ மான கலை, இலக்கிய, கலாசார, பண்பாடுகளைக் கட்டிக் காப் பதிலும், பேணி வளர்ப்பதிலும் சபை முன்னின்று உழைப்பதாயும், குரும்பசிட்டி என்ற சிறிய கிராமத்தைத் தமிழுலகிற்கு தனது சேவைகளினாலும், அர்ப்பணங்களினாலும் அறிமுகம் செய்த ஈழ கேசரியின் நினைவு நாள் வருடந் தவறாது கொண்டாடப்படுவ தனையும் குறிப்பிட்டார்.
விழாவுக்குத் தலைமை வகித்த கலாகேசரி ஆ. தம்பித்துரை தனது தலைமையுரையில், சன்மார்க்க சபையின் தாபக உறுப்பி
ገ .

Page 6
பேரனுக்கு இறுதி அஞ்சலி
மல்லிகையின் நீண்ட நாளைய நண்பரும், இலக்கியவாதிகளின் அன்புக்குப் பாத்திரமானவருமான நெல்லை க. பேரன் ஷெல் தாக்குதலினால் அகாலமடைந்து விட்டார். அன்னாருடன் அவருடைய மனைவி. இரு குழந்தைகளும் இறந்து விட்டனர். இந்தத் துயரச் சம்பவத்திற்காக மல்லிகை தனது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிக்கின்றது.
4 - 8 - 91- அன்று கம்பன் கோட்டத்தில், பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் அன்னாருக்கு ஓர் இரங்கல் கூட் டம் நடைபெற்றது. பல எழுத்தாளர்கள், அபிமானிகள் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டனர்.
- ஆசிரியர்
னர்களில் முதன்மையானவராக ஈழகேசரிப் பொன்னையா திகழ்ந் தமையைச் சுட்டி சன்மார்க்க சபையின் நோக்கங்களையும் சுருக்க மாக விளக்கினார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்து நுண்கலைப் பீடத் தலைவரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத் தம்பி அவர்கள் "யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும், 1930 ஆம் தசாப்தத்து ஈழகேசரிப் பத்திரிகையைத் தள மா க க் கொண்ட ஒரு தொடர்பியல் நோக்கு" என்ற பொருளில் நினை வுப் பேருரை திகழ்த்தினார். அவர் தனதுரையில்,
சேர். பொன்னம்பலம் இராமநாதனையே தனது பிரதான முன்மாதிரியாகக் கொள்வதாகக் கூறிக்கொண்ட ஈழகேசரி, அவ ரது சமூக நிலைப்பாடுகளை எதிர்த்து நின்ற வாலிபர் காங்கிரசை ஆதரித்தது மிக முக்கியமானதொரு விடயமாகக் குறிப் பி ட் டு சமாசனம், சமபோசன விடயத்திலும், தீண்டாமை ஒழிப்பு விடயத்திலும் ஈழகேசரிப் பொன்னையா காந்தீய நிலைப்பாட் டையே எடுத்துக் கூறினார் எனக் குறிப்பிட்டார். அத்து டன் ஆரம்பத்தில் ஈழத்துத் தமிழிலக்கிய பாரம்பரியம் பற்றிய கட்டுரை களும் பின் படிப்படியாக நவீன தமிழிலக்கியங்களும் பிரசுரமாகி யதைத் தொட்டு ஈழகேசரியில் வெளிவந்த சமிழிலக்கியம், பண் பாடு பற்றிய கட்டுரைகள் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தை யும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் மனப்பாங்கைக் காட்டுகின் றன எனவும் வலியுறுத்தினார். இறுதியில் ஈழகேசரியின் வரலாற் றினுள் நமது சமூகத்தின் வரலாறும் அதன் அசைவியக்கப் பண்பு இரகசியங்களும் நிறைய உள்ளன என்றதோடு அவற்றை அவ்வத் துறைக்குரிய ஆய்வு முறைகளுக்கு ஏற்ப வெளிக் கொண் வருவது
அவசியம் என்றார்
திரு. ஏ. ரி. பொன்னுத்துரையினது நன்றியுரை நிகழ்த்தப்பட் டது. தேநீர் விருந்துடன் விழா நிறைவு பெற்றது. விழா முடிவில் பேராசிரியரின் நினைவுப் பேருரை அவையினருக்கு நூல்வடிவில் வழங்கப்பட்டது. '' t)
8

முரளிதரனின் புதுக்கவிதைப் படைப்புகள்
ஒரு மதிப்பீடு
செ. போத்திசெட்டி
மரபு மாதாவின் மடியில் சாய்ந்து ஏதுகை மோனைச் சோலைக் குள் சந்தக் கவிகளால் சிறகடிப்பது தனக்கு ஜீவனுள்ள சந்தோ சமே. ஆனாலும், சமூகத்தின் விரிசலைக் காட்டவும், உறங்கிய மக்களைப் பாட்டால் தாலாட்டாமல் ஆட்டாமல் எழுப்பிடவும் புதுக் கவிதையைத் தாம் ஒரு வரப்பிரசாதமாகக் கருதுவதால் அப்புதுக்கவிதைப் புத்திரனைத் தேரேற்றி இப்போது அழைத்து வருவதாகக் கூறும் கவிஞர் சு. முரளிதரன் மலையகத்தின் எதிர் பார்ப்புக்குரிய இளங் கவிஞர்கள் அணியில் முன்னிற்பவர்.
இவர் கவிதைப் படைப்புகள் இரண்டினைக் கருத்தூன்றிப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அண்மையில் கிட்டியது. அவை பின் வருமாறு 1. தீயாக யந்திரங்கள் 2. தீவகத்து ஊமைகள்.
தியாக யந்திரங்கள் 1986 ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்ற போதிலும் அதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் 8 க்கும், 83 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பெற் றவை. தீவகத்து ஊமைகள்" 1990 மே "கொழுந்து இலக்கிய சஞ்சிகையில் வெளியான போராட்ட வரலாறு கூறும் உயிர்த் துடிப்புள்ள ஓவியம்.
முதல் தொகுப்பில் சாம்பல் மேட்டுச் சமாதானங்களிலிருந்து ஏழைபக்கம் வரை கவிஞனின் பார்வை பரந்துபட்டு நிற்கிறது. இரண்டாவது கவிதையில் கவிஞனின் சமூகப் பொறுப்புணர்ச்சி தலைதூக்கி நிற்கிறது. எம்மளவில் இரண்டுமே அக்கரைப் பச்சைக் குச் சான்றாக அமைகின்றன.
நூற்றாண்டு விழா எடுத்து பாரதியைப் போற்றும் தாடும் ஏடும் அவரது கருத்தைச் செயலாக்கும் முயற்சியில் தகுந்த கவ னம் செலுத்தாது இருப்பதைக் கண்டு வெகுண்ட உள்ளம், கூட் டங்கள் தோறும் அவல் 1ா க மெல்லப்பட்டுக் கொண்டிருக்கும் "பாரதீ இன்று மட்டும் (நீ) இருந்திருந்தால் வார்த்தை நியூட் ரோனும் வந்தேயிருக்கும் என்று கூறுவது ஏற்புடையதுதானே! "உழைப்பின் பெருமை கூறும் உன்னதச் சித்திரங்கள் இலங்கையின மொத்த தேசிய வருமானத்தில் 67 சதமான தோட்டத் தொழிலாளரின் கரவற்ற கர உழைப்பால் வருகிறது. இருப்பினும் அத்தொழிலாளர்கள் ஒண்ட ஒட்டைக் காம்பராக்க ளும், உடுத்த ஒட்டுப்போட்ட துணிகளும் த விர வேறில்லை. அவர்களின் அன்றாட வாழ்வுக்கான குறைந்த பட்சத் தேவைகள் கூட நிறைவு செய்யப்படவில்லை. இந்நிலையில் அம்மக்களின் உழைப்பின் பெருமையை உரத்துப் பேச வந்த கவிஞர்,
9.

Page 7
எங்கள் செவ்விரத்தம் வியர்வைப் பெருக்காகவும் எங்கள் செவ்விரத்தம் இனம் பச்சைக் கொழுந்தாகவும் ாங்கள் செவ்விரத்தம்
தளிராகவும்
எங்கள் செவ்விரத்தம் மண்ணிறத்தில் வாட்டப்பட்ட கருவண்ணத்தில் தூளாகவும் மாற்றமுறும் தேயிலை "இறுதியில்" என்றும் எங்கள் இரத்தம் இருப்பதனால் கசிவதும் செஞ்சாயமாய் முடிகிறது.
எனச் சொல்திறார்.
கொந்தளிக்கும் இவ்வுணர்ச்சியின் மற்றுமொரு வெளிப்ப்ாடாக நகம் கொண்ட தல்லாள்" என்ற கவிதையில் வரும் உள் உழைப் பின் மகத்துவம் - புனிதம் இவைகளை இந்த நாடு உணர்ந்தால் தேநீரைக் கூடத் தீர்த்தமாய் அருந்த வேண்டும்" என்ற வரிகள் அமையவில்லையா? இவ்விரண்டு கவிதைகளும் உழைப்பின் உன்ன தத்தை உணரத்தவறிய உப்பரிகை உலுத்தர்களின் மரமண்டை யில் பலங்கொண்டமட்டும் அடித்த ஆணி போல அல்லவா இருக் கின்றது.
கசந்தது கல்வி
கல்வி பற்றிய கவிதைகள் இரண்டு. 1. கற்றதனாலாய2. இந்தப் பழம் புனிக்கும். இவ்விரண்டுமே இருந்து கெடுக்கும் கல்வி குறித்து எழுந்தவைதான். வேலை தொலைவிலே எனத் தெரிந்தபின், கற்றதனால் ஆய பயன் விதியளப்ாகவும் வெறும் அங்கலாய்ப்புகளாகவும், முடிகிறது. இந்நிலையில் நம் வருங்காலச் சந்ததிகளுக்கு சூனியத்தில் ஒளித்திருக்கும் விடிவுகளைத்தானே கடன் தர இயலும் என்னும்போது இளைய தலைமுறையின் கனவு கள் கக்கு நூறாகச் சிதைந்து போவது சித்தரிக்கப்படுகிறது.
பாடங்கள், பாடவிதானங்கள் எனும் ஆடைகளைப் பலமுறை மாற்றிக் கொண்ட கல்வி நிர்வாணம்" கற்பிக்கும் முறையிலும், கல்விக் கூடத்திலும் காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதால் கல்லிப் பழம், தோட்டத்து இளைஞர் களுக்குப் புளித்துப் போனதாகக் கூறுகிறார். இன்ப ஊற்று இங்கே!
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தம் அன்றாட வாழ்  ைவ மென்மேலும் நரகமாக்கி வரும் தொழிலாளத் தோழனை நோக்கி போதை" மதுவில்விட மழலையில் அதிகம், "இன்பம்” பாட்டி LLLTTTS LLLTTTLTLLL S STTTTT LLLTTTL TLTTS SLLLLLLLT LLLLTTTTTTLLLLL சற்றோடு கலக்கவிடு" எனக் கைதியின் கைதியிடம் பேசுவது நம் நெஞ்சைப் பிடித்து உலக்குகின்றது. இன்னுமொரு மெளனதவம்
கூடையை மட்டுமின்றி, தேசத்தின் கொற்றக் குடையையும் சுமக்கும் சகோதரர்களும், சகோதரிகளும் லயக் காம்புரா இருளில்
O

இன்னமும் குருஷேத்திரத்தை மனதளவிலும் நினைத்துப் பார்க் காத தர்ம புத்தரர்களாகவும் - புத்திரிகளாகவும் வாழ்ந்து வரு வதை வேறென்னவென்று சொல்வது.
வியர்வையையும், ஒட்டைகளும் உணர்வில் பட்டுத் தெறித்த கூரிய சொல்லம்புகள்.
"புல்லுருவிகளே புகழ்மாலை யாருக்கு?" வர்க்கப் போரில் பங்கு பெறாது விலகிச் சென்ற தியாக பத் திரங்களான 'பழனியப்பர்களுக்கு" புகழ்மாலை சூட்டிப் பாராட்டும் 4ல்லுருவிகளை அடையாளங் காட்டவந்த கவிஞர் உன் போன்ற தியாகிகளுக்கெல்லாம் சிலை வைத்தால் தேயிலைகளை எங்கே தடுவது? எனக் கேட்டுத் திடுக்கிட வைக்கிறார். யாருக்காகச் சொன்னார்?
"பட்ட துன்பம் போதும் இனித் துன்பப்பட இயலாது" எனப் பாரதம் வந்த அகதிகள் கூறினரா இல்லையா விழுது விட்ட மரங்களன்றி, விழுது விடும் மனிதருக்கும் வீழ்ச்சியில்லை என்ப தைத் தம் வாமனரூபச் சேவையால் உணர்ந்து ‘இனிப்பட மாட் டேன்" என எழுதினாரா? யாருக்குத் தெரியும் அவர் உள்ளநிலை
உன்சேவைகள் விழுது பதித்து விட்டதை உணர்ந்தபின் தானோ பட்டுப் போகமாட்டேன் என்பதை ‘இனிப்பட மாட்டேன்" என் எழுதினாயோ? இடைவெளிகள் குறைந்ததா? நீண்டதா?
தமிழ் பேசும் சிற்றினத்தவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் களுககிடையே உள்ள கால இடைவெளிகள் குறைந்து சிங்களதமிழ் இன மக்களுக்கிடையே இடைவெளிகள் நீண்டு வளர்வதை
58, 77, 81, 85 பார்த்தாயா சினேகிதனே! இடைவெளிகள் குறைந்து குறைந்து எம்மிடையே இடைவெளிகள் நீண்டு நீண்டு. எனக் கூறி நரம் இதயத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறார்.
இக்கவிதைத் தொகுப்பில் சொல்லங்காரத்தில் பொருள் சோடையாகி நிற்கும் இடங்களும் உண்டு. "போபாலின் புதைகுழி சள்’ கவிதையிலும், பல்லாண்டு வாழ்க" கவிதையிலும் இவை துலக்கமாசுத் தெரிகின்றன.
"இன்னவைதாம் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்' எனக் கூறிய ஈழத்து மஹாகவி,
"இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத்தியங்கும் நோக்குகள் இன்றைய காலத்திழுப்புகள் எதிர்ப்புகள் , இன்றைய காலத் திக்கெட்டுகள்’’ நுகிய கவிதைகளில் இடம்பெற வேண்டும் என்றார். பாடு பொருள் புதிது புதிதாக அமைதல் வேண்டும். “காம வடிகால்களுக்கு" இனி இங்கு இடம் அளித்தல் கூடாது.

Page 8
தீவகத்து ஊமைகள்
நாற்பதுகளில் தொடங்கிய போராட்ட அலை, மலையகத்தில் இன்றும் ஓயவில்லை. கி. பி. இரண்டாயிரத்திலும் அதற்குப் பின் னும் அது ஒயப் போவதில்லை. ஆகவே அப்போராட்ட உணர்வு களின் கூர்மை மழுங்கடிக்கப்படாமல் போற் றி வளர்க்கப்பட் வேண்டும் அதனால்தான்,
"அன்று இந்தப் பாரதிகளுக்கு எதிராகத் தாக்கப்பட்ட துப் பாக்கிகள் இன்னும் கீழே வைக்கப்படவில்லை" என்கிறார் கவிஞர்,
தியாக வேள்வியில் தங்களை ஆகுதியாக்கிய ஜீவ வைரங்கள் வரலாற்றை மூன்று நிலைகளாகப் பகுக்கலாம்.
1. தொழிற் சங்கப் பாதை அமைக்கப் போராடியவர்கள்.
2. எதிர்ப் புரட்சியாளரின் முகத்திரையை கிழித்தெறியப்
போராடியவர்கள்.
3. மொழி உரிமை காக்கும் போரில் உயிர்ப்பவியானோர்கள் சாமிமலைச் சாரலில் தொடங்கிய வேப்பந் தூறல்கள் சிலனொளிபாத மலையில் முளைவிட்டு டயக்மவில் தழைந்தெழுத்து நல்ல தண்ணியில் அரும்புவிட்டு அக்னியில் பூ ப் பூத் து மணம் பரப்புகிறது.
கருவாட்டில் நெளியும் பூச்சிகளுக்கு இந்நறுமணத்தைத் தாங்க முடியுமா? முடியவே முடியாது! ஆகவே கெடுப்பார் கொண்டு தொடுத்தார் யுத்தம். "தலையாட்டும் பொம்மைச் சங்க மும் எடுப்பார்கைப் பிள்ளைச் சங்கமும் தோற்றுவித்து போர்முகத்தில் அடலேறுகளைக் கொன்று குவித்தார் குவிக்கின்றார் நயவஞ்சகப் பாம்புகளை. பசுந்தோல் போர்த்திய புலிகளை, கோமாளிக் குள் நரிகளை, அடையாளங் கண்டு கொண்ட தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இடையிலே சில பசப்பு வார்த் தைகள், அதிலே சொக்கிய சில பேர்களுக்கு மயக்கம். இருந்த போதிலும் தொழிலாளி வர்க்கம் மீண்டும் தன்னுணர்வு பெற்று தடைபோடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இக்கவிதை
லெட்சுமணனைத் தேர்தல் திருவிழாவின் போது துண்டு துண்டாக்கி தோளில் கமந்து கூவிக் கூவி தோட்டத் தோட்டமாய் விற்ற போது, அதை வாங்கித் தின்று வாக்களித்த பாவத்திற் கான தண்டனை இன்னமும் முடியவில்லை என்ற வரிகளும், தியா கத்திற்கே அட்சரங்களாக விளங்கி, நீங்கள் வாழ்வதற்காக, செத் துப்போன இவர்களைக் கொண்டு - இனி மாவட்ட சபைப் போர் வையில் மண்கட்டிகளைப் பொன்கட்டிகளாக்கும் இரசவாதம் புரியப்போகிறார்கள்
எச்சரிக்கை நண்பர்களே எச்சரிக்கை என்ற வரிகளும் என் நெஞ்சில் படிந்தவையாம்.
வளரும் கவிஞரான முரளிதரனிடம் ஆழமான பார்வையும் அறிவார்ந்த கலைத்திறனும் உள்ளன. சொற்பஞ்சம் காரணமாக சொற்தேர்வுக்கு வழியில்லாது போய்விடுகிறது. இனிவரும் காலத் தில் அவர் நிறையப் படித்து திறைய எழுதவேண்டும்: O
12

யாழ்ப்பாண ஒவியக்கலை வரலாற்றில்.
சோ. கிருஷ்ணராஜா
1. யாழ்ப்பாணம் ஒவியக்கலையின் முன்னோடி
எஸ். ஆர். கனகசபை (1901 - 1964)
யாழ்ப்பாண ஓவியக்கலை பெரும்பாலும் கல்வியோடும், பாட சாலைகளோடும் தொடர்புடைய கலைஞர்களாலேயே இன்றுவரை வளர்க்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மூத்த ஓவியர் கள் அனைவருமே கல்லூரி ஆசிரியர்களாக, ஆசிரிய கலாசாலை விரிவுரையானர்களாக இருந்தவர்களேயாவார்கள். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்துப் பாடசாலையமைப்பில் ஆங்கிலேயர்களே வித்தியாதிகாரிகளாக இருந்தனர். ஆசிரிய பயிற்சிக் கலாசாலை களிலும், பாடசாலைகளிலும் ஒவியப்பயிற்சி இக்காலத்தில் குறிப் பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. சித்திர வித்தியா திகாரிகளில் சீ. என். வின்சர், டபிள்யூ. ஜே. ஜி பீலிங் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் தூண்டுதலாலேயே வருவாயை இலக்காகக் கொண்டே ஓவிய ஆசிரியர்களும் ஒவியர்களாக, கலை ஞர்களாக மாறினர்.
வின்சரின் தூண்டுதலால் ஒவியத்தை தன் ஜீவனோபாயத் தொழிலாக வரித்துக் கொண்ட எஸ். ஆர். கனகசபை, 1938 ல் வின்சர் சித்திரக்கழகம் என்ற ஓவியப் பயிற்சியகத்தை ஸ்தாபித்து 1955 ம் ஆண்டு வரை இயக்கினார். யாழ்ப்பாண ஒவிய வரலாற் றில் வின்சர் ஆட் கிளப் இயங்கிய காலம் ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. சைவத் தமிழ் பாரம்பரியத்தில் கலைகள் என்றும் ஆலயங்களைச் சார்ந்தே வளர்ந்து வந்துள்ளன ஒவியமும் இதற்கு விலக்கல்ல. ஆலயச் சூழலில் சமயம் முதலிடம் பெற்றது. கலைகள் இரண்டாமிடத்தைப் பெற்றன. இதனால் கலை கலையாகப் பரிணமிக்காத நிலைமை காணப்பட்டதெனலாம். ஓவியக்கலை இன்று வளர்ச்சிக்கு வேண்டிய கிட்டுப்பாடற்ற தன் மையைப் பெறமுடியாதிருந்தது. அக்காலத்து யாழ்ப் பாண ச் சைவச் சூழலும், சமயக் கட்டுப்பாடுகளும் நாவலர் மரபுச் செல் வாக்குக்குட்பட்டிருந்தது. எஸ். ஆர். கே.யின் வின்சர் ஆட் கிளப் ஒவியத்தை அதன் ஆலயம் சார்ந்த சூழலிலிருந்து பிரித்து வெளிச் கொண்டு வந்தமையினாலேயே அக்காலத்து ஓவியக்கலையின் மறு மலர்ச்சிக் காலமாயிற்று எனலாம்.
*யாழ்ப்பாணத்தில் சித்திர நுண்கலையை தன்னுயர் வொப்பற்ற கலையாக மிளிரச் செய்த பெருமை இவர்களுக்
13

Page 9
கேயுண்டு (எஸ். ஆர். கே.). பலபல இடர்களிலும் சித்திர நுண்கலைச் சங்கங்களையாக்கி அக்கலையில் பெரிதும் ஆர்வ முடையோரை ஊக்கி, கலைக் காட்சிகளைப் பலவிடங்களி லும் ஏற்படுத்தி சாதாரணமான தமிழ்ப் பள்ளிக்கூடங்களி லும் சித்திரத்திற்குப் புத்துயிர் கொடுத்த பெருவள்ளல் இவரேதான்"
1938 மார்ச்சில் கோப்பாயில் தொடக்கப்பட்ட வின்சர் ஆட் சிளப் ஆரம்பத்தில் ஏறக்குறைய முப்பது மாணவர்களைக் கொண் டிருந்ததாய் அ. இராசையா குறிப்பிடுகிறார். எஸ். ஆர். கே. யின் வழிகாட்டலில் ஓவியப்பயிற்சியில் ஈடுபட்டவர்களில் அ. இராசையா, எம். எஸ். கந்தையா. கே. கனகசபாபதி. ஐ. நடராசா, க. Qgne ரத்தினம் ஆகியோர் பின்னாவில் புகழ்பெற்ற ஒவியர்களாக பரிண மித்தனர். நகைச்சுவை நடிகரும். தாடகத் தயாரிப்பாளருமான "சானா' வும் வின்சர் ஆட் கிளப்புடன் தொடர்புடையவராயிருந் தார். வின்சர் ஆட் கிளப்பின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் டபிள்யூ. ஜே. ஜீ. பீலிங். முதன்முத வில் யாழ்ப்பாணத்தில் தைல வர்ணங்களைப் பயன்படுத்தி ஒவி யம் வரைவதை அறிமுகப்படுத்தியவர் எஸ் ஆர். கனகசபை.
கோப்பாயைச் சேர்ந்தவரான எஸ். ஆர். கனகசபை (1917 - 1919 ஆண்டுக் காலப்பகுதியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒவிய ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் சென்னை ஒவி யக் கல்லூரியில் ஒவியப்பயிற்சி பெற்றபின் 19 1 ல் இராமநாத னால் பரமேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக நியமனம் பெற்றார். 1927 ல் வடக்குக், கிழக்கு மாகாண ஒவியக்கல்விப் பரிசோதகராக பதவியோற்று 1957 ல் ஒய்வு பெற்றார். வின்சரின் வழிகாட்டலினால் ஓவியக் கலைஞனாய்ப் பரிணமித்த எஸ். ஆர். கே. இலங்கை ஒவிய வரலாற்றில் புகழ்பெற்ற 43 குழுவின் அங்கத்தினராக இருத்தவராவார். எஸ். ஆர். கேயின் பெரும்பா லான ஒவியங்கள் தக்க கவனிப்பின்றி அழிந்துபோய் விட்டன. இன்று பார்வைக்குக் கிடைக்கக்கூடியதாயிருப்பது ஒரு நிகழ்ச்சிச் சித்திரிப்பு ஓவியமும், ஒரு நிலக்காட்சி ஒவியமும், நான்கு பிரதிமை ஒவியங்களுமாகும்.
எஸ். ஆர். கே.யின் நிகழ்ச்சிச் சித்திரிப்பு ஓவியமான இருட் டடிப்பு” (தைலவர்ணம், வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை. 1940 இற்கும் 1950 க்கும் இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட தாயிருக்கலாம்). இரண்டாம் உலக யுத்தக்கால வீதியோரக் காட் ைெயச் சித்திரிக்கிறது. இருட்டடிப்புக் காட்சியில் தெருவிளக்கின் மங்கல் வெளிச்சம் தெருவில் வட்டவடிவமாக விழுந்திருப்பதும், இருளும் அமைதியும் ஆக்கிரமித்திருப்பதும் சிறப்பாக வெளிக் காட்டப்பட்டிருக்கிறது.
நிலக்காட்சிச் சித்திரிப்பான கடற்கரைக் காட்சி (தைல வர் ாைம். வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை), இன்று ஒ வி ய ர்

அ. இராசையாவிடம் உண்டு. மங்கல் வர்ணப் பிரயோகத்தைக் கொண்டுள்ள இவ்வோவியம் மனப்பதிவு வெளிப்பாடாக காணப் படுகிறது. ஒவியன் தன் முயற்சியால் தன்னைச் சூழ்ந்து ள் ள உலகை அகக் கண்ணாலும், புறக்கண்ணாலும் கண்டுணர்ந்து ஓவியம் வரைதல் வேண்டும்" என எஸ். ஆர். கே. ஓரிடத்திற் குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.
பிரதிமை ஒவியங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற எஸ். ஆர். கேயின் பிரதிமை ஓவியங்களில் ஒன்று நாவலர்? Spri 56oloure5b. இது இன்று நீராவியடிப் பிள்னையார் கோவிலுக்கு மேற்காக உள்ள நாவலர் மண்டபத்தில் காணப்படுகிறது. இவை தவிர அருட்தந்தை லோங் அடிகளாரின் பிரதிமை ஒவியமும், எஸ். ஆர். சேயின் மகனின் இளமைக்கால பிரதிமை ஒவியமும் குறிப்பிடத் தக்கன. திருமுக கிருபானந்த வாரியாரின் பிரதிமை ஒவியம் ஒள் றையும் எஸ். ஆர். கே. வரைந்தாராம். இல்வோவியம் LuAbpfif சவையானதொரு குறிப்பு உண்டு.
"திருமுக கிருபானந்த வாரியார் இலங்கை வந்திருந்த பொழுது யாழ்ப்பாணத்தில் எஸ். ஆர். கேயின் வீட்டிலும் விருந்தினராய்த் தங்கியிருந்தாராம். அப்பொழுது எஸ். ஆர். கே. வாரியாரின் பிரதிமை ஓவியம் ஒன்று தீட்டி வாரியாரி டம் காட்டிய பொழுது, வாரியாரின் வாயிலிருந்து எந்த Rapas au Lunrpnru"09ub 6àu "leń?dib6imas. இதனால் எஸ். ஆர். கே. மனம் வெதும்பியிருந்தார். பின் ஒருநாள் ஓவியர் இராசரத் தினம். எஸ். ஆர். கேயின் வீட்டித்குச் சென்ற பொழுது வாரியாரின் பிரதிமை ஒவியத்தை சிலாகித்துப் பாராட்டி னார். அதற்குப் பதிலாக எஸ். ஆர். கே. வாரியார் வாரிக் சுொள்ள வந்தவர்: வாரி எடுக்தவுமில்லை. வாரிக் கொடுக்க வுமில்லை" என கவித்துவமாகத் தள் கவலையை வெளி யிட்டுச் சிரித்தார்."
எஸ். ஆர். கே. நவாலியூர் சோமசுந்தரப் புலவரது பிரதிமை ஒவியத்தையும் வரைந்தார். இன்று இவ்வோவியம் இடைக்காத பொழுதும், இதனைப் பார்த்து நயந்த ஓவியர் (p. 86u7asérou, சோமசுந்தரப் புலவரின் ஆழுமையை, எஸ். ஆர். கே. முழுமையாக வெளிக் கொண்டுவருகிறார் எனக் குறிப்பிடுகிறார். ஒவியத்தைப் பார்த்து மகிழ்ந்த புலவர் பின்வரும் பாடலைப் பாடினார்.
பார்த்தவுடன் உள்ளே படமாக்கும் தூரிகைக்கோல் சேர்த்தவுடன் கிழியில் சித்திரமாம் - கூர்த்த

Page 10
கலையோர் வியக்கும் கனகசபை போல இலைபோ லியப் புலவர் இன்று. ஒன்றுபோ லொன்றை உருற்ற உலகருளும் மன்றல் மலரோனும் மாட்டானால் - நன்று கனகசபை யென்னும் கலைவல்லோன் செய்தான் எனதுருப் போல் மற்றொன்றை இன்று. பொன்னின் சபைக்குருவும் அச்சபையின் அதிபதியும் இன்னுமுன இராசையனும் இசைந்துள்ள மற்றோவியரும் மன்னுசீர் வின்சர் ஒவிய மன்றும் வழமுற்று வான்புகழ் மன்னு பலகாலம் பார்புகழ வாழிய வாழியவே - 4
இன்று அழிந்துபோயுள்ள சோமசுந்தரப் புலவரின் ஒவியம் 1910 ம் ஆண்டு வரையப்பட்டது. எஸ். ஆர். கே. தன் இளவயு தில் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னையா மாஸ்டரிடம் ஒவியம் பயின்றார். சின்னையா மாஸ்டர் உலர்பச்சை வர்ணத்தைப் பயன் படுத்தி சிறப்பாக ஓவியம் வரைவாராம், சென்னையில் எஸ்.ஆர். கே. பிரதிமை ஒ வி யப் பயிற்சிபெறத் தூண்டுதலாயிருந்தவர் லோட்டன் என்ற புகைப்படக் கலைஞராவார். இன்று எஸ் ஆர். கோயின் ஒவியங்கள் பல இல்லாவிட்டாலும், 'மனக்கருத்தை வெளிப் படுத்தும் சித்திரங்களுக்கு முக்கிய இடம் கொடுத்தவர் என்றும் த்ெதிரக் கலைக்சுே பெரும் விசித்திரத்தைக் கொடுத்தவர் இவர் என்றும் பாராட்டப்படுகின்றார்.
பிரசுரம் பெறாத 'ஓவியக்கலைஞர் போட்டி" என்ற குறிப்பி லிருந்து எஸ். ஆர். கே. பற்றிய சில தகவல்களைப் பெறக்கூடிய தாயிருக்கிறது. இவருக்குப் பிடித்த இலங்கை ஒவியர்கள் டபிள்யூ. ஜே. ஜி. பீலிங், ஜே. டீ ஏ, பெரேரா, ஹரிப்பீரிஸ், பீ. டெரெனி யகல என்க் குறிப்பிடுவதிலிருந்து பெரும்பாலும் மேற்கூறிய ஓவி யர்களது பாணியையே எஸ். ஆர். கேயும் பின்பற்றியிருந்தார் என ஊகிக்கலாம். இலக்கியம், சங்கீதம், பரதம் என்பவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவரான எஸ். ஆர். கே. கலை பொழுது போக்குடை யதாயிருத்தல் வேண்டும் என்றும், அது கட்சி, அரசியலுக்கு அப் பாற்பட்டதாயிருத்தல் வேண்டும் எனவும் நம்பினவராவார். தனது வாழ்நாள் முழுவதும் ஓவியக்கலையின் வளர்ச்சிக்கு அற்பணித்த எஸ். ஆர். கே. யை, இருபதாம் நூற்றாண்டின் யாழ்ப் பா ன ஓவியக்கலை முன்னோடி என அழைப்பதில் தவறொன்றுமில்லை.
2. நிலைப்பொருள் ஒவியர் ஐயாத்துரை நடராசா
(1906 - 1988)
1930 - 40 க்களில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒவிய ஆசிரியராகப் பணியாற்றிய நடராசா, நிலைபொருள் ஒவியங்கள் மூலம் தன் கலையாளுமையை வெளிப்படுத்தியவர். எண்ணிக்கை யளவில் ஏழு நிலைப்பொருள் ஒவியங்கள் மட்டுமே பார்வைக்குக் கிடைத்தன. ஒவியங்களில் படைக்கப்பட்ட ஆண்டுகள் பற்றிக் தகவல்கள் தரப்படாத பொழுதும், இவையனைத்தும் ஆகக் குறைந்தது 1947ம் ஆண்டிற்கு முன்னரே படைக்கப்பட்டிருத்தல்
16

வேண்டுமென ஒவியர் இராசரத்தினம் குறிப்பிடுகின்றார். ஒவியக் கலையின் தனது குரு என நடராசாவைக் குறிப்பிடும் இராச ரத்தினம் வர்ணப் பயன் பாட்டில் நடராசாவின் செல்வாக்குக்குட் ULL-aid.
இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில் வள ர் ச் சி பெற்ற யாழ்ப்பாண ஒவிய மரவில் நடராசாலின் நிலைப்பொருள் ஒவியங் கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுவன இவரது ஓவியங் களில் பின்னணியமைக்கப்பட்ட முறைமை அதன் வர்ணத் தெரிவு மிகவும் முக்கியமானது. ஒவியப் பொருளும் அதன் பின்னணியும் தகுந்த முறையில் வர்ணத் தெரிவைக் கொண்டு விளங்குகின்றது. பூக்கொத்து என்ற நிலைப்பொருளில் பால்நுகர்வோர் கவனத்தை ஈர்ப்பதும், கவனச் சிதைப்பை ஏற்படுத்தாத பின்னணியும் இவ ரது வர்ணத்தெரிவின் அடிப்படையாக அமைந்துள்ளது. தடராசா வின் ஏழு ஒவியங்களிலும் ஐந்தில் நிலைப்பொருள் ரேகையால் கட்டுப்படுத்தப்பட்ட வர்ணப் பிரயோகத்தையும், இரண்டு ஓவி யங்களில் (இதை நடேசனின் பிந்திய ஓவியங்களாகலிருக்கலாம்) திட்டுத் திட்டான வர்ணப் பிரயோகத்தையும் கா ன ல 7 ம். அனைத்து ஒவியங்களிலும் பிரகாசமான வர்ணப் பயன்பாடு இடம் பெற்றுள்ளது. தற்பொழுது கிடைக்கக் கூடியதாயிருக்கும் ஏழு நிலைப்பொருள் ஒவியங்களை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டு நடேசு என்ற ஒவியனின் கலையாழுமையைப் பூரணமாக மதிப்பிட முடியாது போயினும், அவர் விரல்விட்டெண்ணக் கூடிய யாழ்ப்பா ணத்துச் சிறந்த ஓவியர்களில் ஒருவரென்பதில் ஐயமில்லை.
பிற்குறிப்பு:-
ஒவிய ஆசிரியராகக் கடமையாற்றிய நடராசா தன் இளமைக் காலத்தில நாடகங்கள் நடிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந் தார். 1920 ம் ஆண்டுகளில் நவாலி சோமசுந்தரப் புலவருடன் இணைந்து "பேரின்பவல்லி" என்ற நாடகத்தில் பெண்வேட மேற்று நடித்துள்ளார்.
(தொடரும்)
எல்லாம் பெண்கள் மயம்
1 - 4. 91 சுமார் ஒன்பது மணியளவில் கைதடிச் சந்தியிலி ருந்து கோப்பாய் வீதி வழியாக வந்து கொண்டிருநதேன். கோப்பாய்ச் சந்திக்கு அருகாமையில், ஒரு தோட்டத்தில் பதினெட்டு வயது மதிக்கக்கூடிய இளம் பெண் ஒருத்தி துலா மிதித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண் தண்ணிர் இறைத்துக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி தண்ணிர் கட்டிக் கொண்டிருந்தாள். பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வேலைகளிலும் பங்குபற்றி முன்னேறுகிறார்கள் என் பதற்கு இக் காட்கி சான்று பகருவதாக இருந்தது.
எஸ். வி. தம்பையா
'3
应?

Page 11
பதினான்கு நிமிடம்
ஸ்டாண்டை பஸ் அடை யும்போது நான் வா யி  ைல நெருங்கி நின்று கொண்டேன். பஸ் தரிப்பதற்கும் நான் அப்பா டாவென்று இறங்குவதற்கும் சரி யாக இருந்தது. இல்லாவிட் டால் முண்டியடித்து இறங்கும் தொல்லையிலேயே இரண்டொரு நிமிடங்கள் பறந்துவிடும். அவ் வளவுக்கு நேர நெருக்கடியான கட்டம்.
"டக்" கென்று இடக்கையை உயர்த்தி நேரத்தைப் பார்த் தேன். ஆறும் ஆறு. நோன்பு துறப்பதற்கு இன்னும் பதினாலே நிமிடங்கள் ஆறு இருபதுக்குள் வீட்டை அடைந்தாக வேண்டும். Rerrif Lu6) நிற்கிறதாவென்று கண் களை ச் சுழலவிட்டேன். தேவையான வேளைக்கு அது எப்போதுதான் நின்றது
அவசர அவசரமாக பிறை வெற் ஹோல்டை அடைந்தேன். மகிழ்ச்சித் துளிர்ப்பு மனதுக் குள் இருக்க வேண்டிய இடத் தில் ஊர்வேன் இருந்தது. நிரம்பி வழித்தபடி அது நிற்க வேண் டு மென்ற ஆவலோடு அணமித்த போது தூக்கிவாரிப் போட்ட்து எனக்கு அதற்குள் ஒரு பொம் புளையும் இன்னொரு வயதாளி யும் மாத்திரந்தான்.
பஸ்களும், வேன்களும் வரு கின்றன. போ கின்றன. தொழில்களில் அலைந்த ம்க்கள் வீடு நோக்கி ஒடும் மாலைப் பொழுதல்லவா? அங்குமிங்கும் ஆவலோடு பார்க்கிறேன். என் னைப் போன்ற நெருக்கடிக் குடுக்கைகள் வருகின்றார்களா வென்று. ஏமாற்றத்தான்.
திக்குவல்லை கமால்
"சீ இனுமொரு பத்து நிமி ஷம் முந்தி வந்திருந்தா இந்த மட்டுக்கு ஊட்டில என்மனம் அலுத்துக் கொண்டது. பஸ் மாறி பஸ் மாறி நான்காவது வாகனம் இது. எங்களுக்குத் தானே அவசரம். வாகனக் காரர்களுக்கு P
கை மேலே உயர்கின்றது. நேரம் பார்க்கத்தான். t எட்டு
வீட்டுக்குப் போய்த்தான் நோன்பு துறக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒரு லொசிஞ்சரை வாயில் போட் டாலே சரி. நான் இப்பூடி அவ சரப் படுவதெல்லாம் கையில் இருக்கிறதே கட்லிஸ், பெற்றிஸ் unTri 6M)... அதற்காகத்தான். நோன்பு துறக்கும் நேரத்தில் அதைச் சுவைப்பதென்றால் ஓர் அலாதியான இன்பம். அந்த நேரம் கடந்து விட் டாலும் அதைச் சாப்பிடலாந்தான் . . ஆனால் சுவாரஸ்யமில்லையே
கை இறுக்கத்தில் இருக்கும்
அந்த கட்லிஸ். பெற்றில் பொதி
பைப் பார்க்கிறேன். எண்ணெய் ஊறிய வட்டவட்டமான பொட் டுக்கள். அது என்னுடைய மனை யின் முகம்போல.
ஆமாம். இது பெருநா ளைக்கு உடுப்பு வாங்குவதற்கா கப் புறப்பட்ட பயணம்.
*நீங்க ஊட்டுக்கு வாரத் துக்கு எத்தின மணியாகுமன்? காலையில் மனைவியின் கேள்வி.
‘எப்பிடீம் ஆறுமணியாகிய நோன்பு வைத்துக்கொண்டு அலையப் போகிறேலேயென்று அனுதாபப் படுவாள் என்று
18

எண்ணிக் கொண் டு தான் நேரத்தை நீட்டி இப்படிச் சொன் னேன்.
*அப்ப கட்லிஸ், பெற்றிஸ் எடுத்துக்கொனு வரேலும் . . அவளின் வே ண் டு கோ ள் வேறொரு கோணத்தில்!
*செல்லேல. வசதிப்பட் டாக் கொணுவாரேன்” பூரண எதிர்பார்ப்புக்கு இடம் வைக்கா மல் இப்படிச் சொன்னேன். ஆனால் மனதுக்குள்ளோ எப்பி டிச் சரி கொணுவர வேனும் என்ற முடிவு.
பிரதான வீதியில் செல்லும் பஸ்ஸொன்று உறுமிக் சொண்டு தயாராகியது. அதில் சென்றால் சந்தியில் இறங்கி ஒரு அரை மைல் நடக்க வேண்டும். அப் படி நடந்து போய் வீடு சேர்வ தற்கிடையில் பாங்கு சொல்லி விடும். இடையில் காண்பவர்கள் விடுவார்களா என்ன!
நோன்பு தொறந்திட்டுப் போங்கோ,.. நோன்பு தொறந் திட்டுப் போங்கோ "
அப்புறம் தட்டிவிட்டுச் செல் வது முறையா என்ன? பாங்கு சொன்னதும் எவ்வளவு சீக்கிர மாக நோன்பு துறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நோன்பு துறப்பதுதானே ஏற்றம்.
அந்த பஸ் என்னைக் கடந்து செல்கிறது.
வேனுக்குள் இன்னும் இரு வர்தான். அவர்களும் என்ன தான் செய்வதென்று தவிப்பது எனக்குப் புரிகிறது.
அப்பொழுதுதான் வேனின் நம்பரைப் பார்த்தேன். பண்டை யாவுடைய வேன்தான். இருவர் ஸிட்டில் நால்வராக அமர்த்தி, உள்ளே முடிந்தளவு அடுக்கி வெளியாலும் பத்துப்பேர் தொங் கிக் கொண்டபின்புதான் வேனை ஸ்டாட் பண்ணும் பிர கிருதி
அவர் சுழற்சிமுறையில் காதர் நானாவின் வேன் இருந்திருந் தால் இந்நேரம்.
இரவு ஒன்பதரை பத்து மணிக்குக்கூட சில நேரம் இப் படி வே ன் க  ைள எடுத்துக் கொண்டு செல்லும் அனுபவம் உண்டு. எட்டுப் பத்துப் பேர் இருந்தாலே போதும். டபிள் சார்ஜ் தருவதெண் றால் மாடு படுத்துவிடும். அப்படிப் பேசிப் பார்க்கக்கூட முடி யா த படி மூன்று பேர்.
எப்படியோ ஆறு பத்தாகி விட்டது.
இன்னும் நான் பாதையோர மாகத்தான் நிற்கிறேன். ஊர் செல்லும் தனியார் கார்கள் வந் தால் அதில்கூடத் தொத்திக் கொள்ள முடியுமல்லவா? அப் படியான பழக்கம் எனக்கு இல் லவே இல்லை. மரியாதையாக சம்பந்தப்பட்டவர்கள் அழைத் தால் செல்வதுண்டு. இன்று அப் படியெல்லாம் பார்க்க முடியுமா என்ன? 'ககுமம்" என்று செல் வார்களே, மருந்துக்குக்கூட ஒரு காரைக் காணவில்லை.
இந்நேரத்தில் வீ ட் டி லே மனைவியும் மகனும் என்னை எப்படியெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்? ரேடியோவை முடுக்கிக் கொண்டு, உள்வாச லில் பாய்விரித்து, சுப் புரா போட்டு, அதிலே ஈச்சம் சுளை கள், கஞ்சிக் கோப்பைகளையெல் லாம் பரத்திவைத்துப் பார்த்தி ருப்பார்கள். நானும் போய்ச் சேர்ந்தால்தானே, அத்தோடு இன்னொரு தட்டிலே கட்லிஸ், பெற்றிஸ"ம் சேர்ந்து கொள் ளும்
நோம்பு தொறக்கிய நேர மாச்சே, வாங்க வாங்க போம்"
இந்நேரத்தில் இப்படியொரு அழைப்பு ஆ. பண்டையா..?
19

Page 12
கையிலே திறப்போடு தயாரா
கிறார்.
'மூனுபேர்தானே இருக்கிய"
அவரது நாடியைப் பிடித்துப்
uniãG356ör.
"அதுக்கெனத்த ஏறுங்கோ, ஏறுங்கோ'
நான் நேரத்தைப் பார்த்த
படி ஏறுகிறேன். ஆறு பத்து மூன்று பேரையும் சுமந்தபடி வேன் விரைந்தது. இந்த ரோட்
டில் இப்படிக் குறைந்த தொகை
யோடு வேனொன்று செல்கிற தென்றால் அது இன்றாகத்தான் இருக்க முடியும்
ஆக இரண்டேகால் மைல் தான் மொத் த த் தூரம். நானென்றால் ஒன்றரை மைல் அளவில் இறங்கி விடுவேன். அந்த நேரத்தில் வேறு ஏறுவ தற்கும் இறங்குவதற்கும் இடை யில் எவருமே இல்லை. வேன் போகின்ற போக்கைப் பார்த் தால் ஆறு அல்லது ஏழே நிமி டத்தில் போய்ச் சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு.
uGð76MdL unr Gau 6ör GT ug Guurt வைத் திருப்புகிறார், அவரும் செய்தி - அறிவித்தல்களைக் கேட்கத் தவறுவதில்லை என்று நினைத்துக் கொண்டேன் நான்.
"இஃப்தார் நிகழ்ச்சியில் முத
லில் கிறா அத்"
அட தமிழ் மீற்றரைத்தான் பிடித்திருக்கிறார். இ ன் னு ம்
இரண்டு ஹோல்ட் தாண்டினால் நான் இறங்கிவிடுவேன். அதற்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுக்காது.
*டைம் சரி போல. கிறா அத்  ைத ப் புரிந்து கொண்டு அவர் எ ன் னிடம் சொல்கிறார்.
ஒ. முன்னுத்து ஹோல் டில எறங்கியன்’
வேன் நின்றது. நான் இறங் கினேன். எப்பொழுதும் ஒரு காலை வைத்துத் தொங்கியபடி சில்லறைகளை எ டு ப் பதும், கொடுப்பதுமாக சுறுசுறுப்பாக இயங்கும் கிளினர் விட் டி ல் ஹாய்யாக அமர்ந்தபடி கையை
நீட்டினார். நான் ஒரு ரூபா ந | ண யங் கள் இரண்டைக் கொடுத்துவிட்டு நேரத்தைப்
பார்த்தேன். ஆறு பதினேழு.
அவசர அவசரமாக வீட் டுக்கு நடந்தேன். அதிகாலை நான்கு மணியிலிருந்து இதுவரை பசி, தாகத்தைக் கவனியாதிருந் தால், இந்நேரத்தில் ‘கையும் வான காலும் வாண" என்று தான் நடக்க வேண்டும். ஆனால்
இந்த நேரத்தில் எங்கிருந்து இந்த வலிமை?
"வாப்பா வார., உ.ம்மா..
வாப்பா வார ...... 鬱
வீட்டினுள் நுழைகிறேன்!
அல்லாஹ” அக்பர். அல்லாஹா...
"தொப்பியப் போ ட் டு க் கொண்டு அப்பிடியே வாங்கோ" மனைவியின் கு ர ல் உள்ளேயி ருந்து எழுந்தது.
நான் அப்படியே போய்ப் பாயிலமர்தேன். என் எண்ணம் மயிரிழையில் நிறைவேறியிருந் தது. அங்கே கட்லிஸ், பெற்றி ஸ"ம் ஒரு தட்டிலே கண்களை மின்னின.
பெரிய நோன்பாளிபோல ஆரவாரமாக ஈச்சம் பழங்களைச் சுவைத்து நோன்பு துறந்தான்
56.
நானும் ஈச்சம் பழத்தைச் சுவைக்கிறேன். ஏனோ என்றை யும்விட அன்றை நோன்பு மிக மிக உணர்ச்சி மிக்கதாக எனக் குப் பட்டது. கூடவே டிரைவர் பண்  ைட யா வின் முகமும் தெரிந்தது.
20

சர்வதேச அவதானத்தைப் பெற்ற இலங்கை ஒவியர் ராஜசேகர்
சமீப காலமாக இலங்கை தமிழ் சமூகச் சூழலில் ஒவியத் துறையைப்பற்றி - குறிப்பாக நவீன ஓவியத்துறை பற்றி பர வலாகப் பேசப்படுகின்றது. இது வொரு வரவேற்கக் கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வு களுக்கு ஊக்கிகளாக அண்மைக் காலங்களில் நமது வெகுசனத்  ெ; r டர் புச் சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளிலும் சஞ் சிகைகளிலும், இளைய தலை முறை ஓவியர்களின் கருத்துக் களும், மேலை நாட்டுச் சகோ தர சிங்கள ஓவியர்களைப் பற்றி இடம் பெற்ற அறிமுகங்களும் அமைகின்றன. அத்தோடு மலை நாட்டு - சகோதர சிங்கள ஒவி யர்களைப் பற்றி நூல்கள் தமிழி
லும் வெளிவரத் தொடங்கி யுள்ளன.
இத்தகைய நிகழ்வுகளில்,
கே. எஸ். சிவகுமாரன், அந்தணி ஜீவா, அருந்ததி சபாநாதன், கே. எஸ். பாலச்சந்திரன், உமா வரதராஜன் போன்றோர் ஒவி யத்துறை சம்பந்தமான தமது கருத்துக்களைக் கூறி வருகிறார் கள். இவ்வாறான ஒரு சூழலில் இலங்கை த் தமிழ் சமூகம் தோன்றி. இன்று சர்வதேசிய "அவதானத்தைப் பெற்று வரும் ஒரு ஒவியரை அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையா கின்றது.
அவர்தான் ராஜசேகர்
- மேமன் கவி
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ராஜசேகர், இன்று இலங்கை ஒவியத் துறைக்கு நன்கு பரிச்சயமானவர். ஆங் கில - சிங்களப் பத்திரிகைகளில்
அவரைப் பற்றிய குறிப்புக்கள் அ டி க்க டி. வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தான் உத்தியோகம் நிமித் தம் தேர்ந்தெடுத்த ஒரு சூழல் தான் தன்னை ஒவியத்துறையில் ஈடுபட வைத்தது என்கிறார்.
சிங்கள ஓவிய நண்பர்களின் ஒவிய இரசனையாலும், மேல் நாட்டு ஒவியர்களின் பரிச்சயத் தாலும் பக்குவப்பட்டவராக ராஜசேகர் திகழ்கிறார்.
இலங்கையின் தமிச் சமூகச் சூழலுக்கு ஒவியத்தைப் புரிந்து கொள்ளும் அறிவைப் புகட்டு வதற்கு முன்னதாக, அச்சமூகத் திற்கு ஒவியத்தை இரசிக்கும் இரசனையைப் பு கட்டு வ தே தனது பணியாகக் கருதுகிறார்.
சேனக்க சேன நா யக் க அளித்த ஊக்கமும், ஏ. சி. ஜே. சிக்ஸ் என்ற ஒவிய வல்லுனர் தந்த உற்சாகமுந்தான் வெளி நாட்டவர்க்ள் தனது ஓவியங் களை வாங்கும் அளவுக்கு உயர்த் தியதாக நன்றியுடன் குறிப்பிடு Scirprio.
புகைப்படக் கலையிலும் ஆர்வம் மிக்க ராஜசேகர் புகைப் படக் கலையின் ஒர் உத்தியான
2.

Page 13
"மல்டி ஏப்பேகட்" 25360) தனது ஒவியங்களில் பரிசோத னைகளாக்கி வர்ணம் தீட்டியுள் ளார். தான் கையாண்ட உத்தி களை நேரிய முறையில் வெளிப் படுத்திய பிலிப்பைன்ஸ் நாட்டு ஓவியர் மனன் சலா தனக்கு பிடித்தமான ஒவியர் என்பார்.
ரமணியின் விளக்கப்பட ஓவி யங்களை அறிந்து வைத்திருக் கும் இவர், ரமணி போன்றோர் பெரிய ஓவியங்களை வ  ைர ய வேண்டும் என்றும், அப்பொழுது தான் ரமணி போன்றோரின் திறமை சர்வதேசிய ஓவிய உல குக்குத் தெரிய வரும் எனவும் ஆசைப்படுகிறார்.
பூரீ த ர் பிச்சையப்பாவின் ஒவியங்களை பத்திரிகைகள் மூலம் அறிமுகமாக்கிக் கொண்ட ராஜ சேகர், அவரை தேரில் சந்திக் கும் பொழுதெல்லாம் அவரது திறனைப் பாராட்டுவார்.
இவ்வாறாக ஒவியத்துறை சம்பந்தமான கருத்து உலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ராஜசேகரின் ஒவியங்கள் இன்று நம் நாட்டு உல்லாச ஹோட் டல்களில் அறைகளை அலங்கரிக் ál6ármp6r. 65 óúlurg5. “prup-r ரேளைன்ஸ்" என்ற நமது உல் லாச ஹோட்டலின் 40 அறை களை இவரது ஓவியங்கள் அலங் கரிக்கின்றன.
ராஜசேகர் பல தனிதபர் கண்காட்சிகளை நடத்தியுள் ளார். இவரது முதலாவது தனி நபர் கண்காட்சி 1984 செப்டம் பர் 28 ந் திகதி கொழும் பு பிரெஞ்சு கலாசார நிலையத்தில் நடந்தது. இதற்குப் பின் பிரிட் டிஷ் கவுஸ்சிலும், ஒபேரோப் ஹோட்டலும், லையனல் வெண் டிலும் என்று பல்வேறு இடங் களாக கொழும்பில் 5 தனிநபர் கண்காட்சிகளும், கண் டி யில்
22
இரண்டு தடவையும், "பம்பாய் சட்டானா காலரி யில் ஒரு கண் காட்சியும், சிட்னி நகரில் ஒரு கண்காட்சியும் நடத்தியுள்ளார். இப்பொழுது இவருக்கு என்றே நிரந்தரக் கண்காட்சிக் கூடத்தை "ஹோட்டல் ரம்டா ரேளைன்ஸ்' ஒதுக் கி க் கொடுத்துள்ளது. கனடாவில், இவர் போகாமலே இவரது ஒவியங்களைக் கொண்ட ஒரு கண்காட்சி நடைபெற்றுள் எாது.
அத்தோடு இவரால் வரை யப்பட்ட வாழ்த்து அட்டைகளை (வியூ காட்ஸ்) உல்லாச ஹோட் டல்களுக்கு வரும் வெளிநாட்ட வர்கள் விரும்பி வாங்கிச் செல் கிறார்கள்.
ஆரம்ப ககலங்களில் இவரது ஒவியங்கள் பொதுவான விஷ யங்களைக் கருவாகக் கொண்டி ருக்க- சமீபகால ஒவியங்களில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பல்வேறு நிலைகளைக் காணக் கூடியதாகி இருக்கிறது. இப்பரிச் சயத்தின் வழியாகக் கண் டி மலையக வெளியீட்டகம் வெளி யிட்ட த முரளிதரனின் கூடைக் குள் தேசம்" கவிதைத் தொகுதி யின் அட்டைப்படமாக இவரது ஒவியம் இடம் பெற்றுள்ளது
சர்வ தேசிய ஓவிய உலகின் அவதானத்தைப் பெற்று வரும்
ராஜசேகரின் ஒவியங்கள் நமது
தமிழ்க் கலை, இலக்கிய உலகின் அவதானத்திற்கு இன்னும் பரவ லாக வரவில்லை என்பது ஒரு குறையாகும். ராஜசேகரின் ஒவி யங்களைப் பற்றிய பரவலான ஓர் அறிமுகமும், விமர்சனங் களும் நாம் கிடைக்கப் பெற் றால்தான் இவரை நாம் ஆழ மாக உணரக் கூடியதாக இருக் கும். ராஜசேகரின் இப்பணியும், வளர்ச்சியும், இலங்கைத் தமிழ்ச் சமூகம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். ()

இலங்கை இலக்கியப் பேரவையின்
பரிசளிப்பு விழா
12 - 5 - 91 ஞாயிறு பி. ப. 3 மணிக்கு நல்லூர் கம்பன் கோட்டத்தில் இலங்கை இலக் கியப் பேரவையின் 1987 - 88 ஆண்டுகளின் சிறந்த நூல்களுக் கான பரிசளிப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
செங்கை ஆழியான் தலை மையுரையின் போது **தனது இலக்கிய முயற்சிகளை நாடளா விய ரீதியில் பன்முகப்படுத்தவும் பரவலாக ஈழத்துத் தமிழ் எழுத் தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து இக்கியப் பேரணி பாக ஒன்றுதிரட்ட உருவாக்கிய அமைப்பே இலங்கை இலக்கியப் பேரவை. எவ்விதப் பாகுபாடு மின்றி எல்லா எழுத்தாளர்களும் இதில் இணையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்" என்றார்.
பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி) பரிசளிப்புரை யின்போது, "இங்கு பரிசு பெறப் போகும் நூல்கள் அனைத்தை யும் நான் படிக்கவில்லையென் றாலும், பரிசு பெறப்போகிறவர் கள் பரிசுக்குத் தகுதி உள்ளவர் கள் என்பதை அறிவேன். 1901 - 1961 வரை நோபல் பரிசு பெற்ற புத்தகங்களின் பரி சளிப் விழா உரைகளை சுவீடன் அக்கடமி நூலாக வெளியிட்டுள் STS. 9ös jTá un å s 6.f dr
நெல்லை க. பேரன்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நூ ல் களு க் கே பரிசு வழங்க வேண்டும் என்கிறது. மனித விழுமியங்களின் மேன்மைக்காக எழுதவேண்டும். தாகூருக்குக் கொடுத்த நோபல் பரிசுக்கு அவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர் என்பதும் ஒரு காரணம். பாரதியாரின் கவிதை கள் பிரெஞ்சு, ஆங்கில மொழி களில் இருந்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும். நாம் எழுது வதைப் பற்றிய நல்ல விமர்ச னங்கள் கிடைப்பதில்லை. இது வரை காலமும் தமிழில் உலகம் போற்றத் தக்கதாக நா வல் வெளிவரவில்லை. நாவல் வளர்ந் தளவுகூடத் தமிழில் விமர்சனம் வளர வில்லை. கைலாசபதி, சிவத்தம்பி இருவரும் எந்த ஒரு எழுத்தாளனையோ அல்லது நூலையோ சரியாக விமர்சிக்க வில்லை. விமர்சகனுக்கு ஒரு நல்ல நாவல் அகப்படவில்லை. டானியலின் பஞ்சமர் மகாகாவி யம் என்று கைலாசபதி கூறி னார். கானல் சிறந்தது என் றார் சிவத்தம்பி. அப்படியா னால் ஏன் இவற்றைப் பல்க லைக்கழகத்தில் பாடநூலாக  ைவ க் கத் தயங்குகிறார்கள். தமிழ் மொழி எ மக்கு ச் சில சிந்தனைகளுக்குக் கைகொடுப்ப தில்லை, தமிழ் க் கவிஞளின்
2.

Page 14
சொல்லாட்சி தமிழ் நாவலாசி ரியனிடம் இல்லை. நான் தண் பர்களுக்கு ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதுகிறேன். இந்த மொழியில் நான் நினைப்ப வற்றை அழகாகச் சொல்ல வரு கிறது. 1957 ல் (பேராசிரியர் செல்வநாயகம் எழுதிய உரை ந  ைட வரலாற்றுக்குப் பின் யாரும் உரைநடை பற்றி எழு தச் சிந்திக்கவில்லை. வ. வே. சு. Є5. LJ. Л. т., புதுமைப்பித்தன் ஆகியோரை வைத்துக் கொண்டு பேராசிரியர் ஆய்வு செய்தார். தமிழ் உரைநடை வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சி. புன்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருந் தது. இன்று தமிழ் மூலம் படித்த பேராசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாத ஆ ப த் து உண்டு. ஆங்கிலத்தில் ந ல் ல் விமர்சக னாக இருப்பவனுக்கு பிரெஞ்சு தெரிந்திருக்கும். தமிழ் விமர் சகனுக்கு இன்னொரு மொழி (மலையாளம், தெலுங்கு) தெரிய வேண்டும். டானியல், டொமி னிக் ஜீவா போன்ற சிலர் அபூர் வமாக ஆங்கிலம் தெரியாமல் தமிழை வளர்க்கிறார்கள். தமி ழால் தாம் வாழ்வதற்கு மட்டு மன்றித் தமிழ் வாழவும், பல்க லைக் கழகப் பேராசிரியர்கள் வழிசெய்ய வேண்டும்" என்றார்.
சிந்தனைக்குரிய பல கருத் துக்களை முன்வைத்த பேராசி ரியூர் நந்தியின் பேச்  ைச த் தொடர்ந்து பேரவையின் அறிக் கையை செம்பியன் செல்வன் வாசித்தார். "செயலாளர் சசி பாரதி வெளிநாட்டில் இருப்ப தால் தாம் அறிக்கையைப் படிப் பதாக இவர் கூறினார். இவர் பேசுகையில், தமிழ் மொழி எமது வளர்ச்சிக்கு ஏற்புடைய தாக இல்லை" ஏன் வலுவூன்றியது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்
என்ற கருத்து
றார். பரிசு கிடைப்பனவெல் லாம் நோபல் பரிசுக்குத் தகுதி யானவை அல்ல. இயன்றவரை எமது எழுத்தாளர்களை ஊக்கு விப்பதே நம் பணி" என்றார்.
பணப் பரிசில் ரூபா ஆயிர மும், சான்றிதழும் பின்வரும் துறைகளுக்கு வழங்கப்பட்டன.
இலக்கிய ஆய்வு - "தமிழ் தந்த தாதாக்கள் " எ மு தி ய க. சி. குலரத்தினம் அவர்களுக்கு அமரர் வி. மு. கந்தையா நினை வுப் பரிசிலை அவரது மைந்தர் மில்க் வைற் உ ரி  ைம ய |ா ள ர் க. கனகராசா ஜே. பி. வழங் 6Iswnrnf.
நாவல் - "தண்ணீர்" எழு திய கே. டானியலுக்கு அமரர் திருமதி சரஸ்வதி இராஜரத்னம் நினைவுப் பரிசிலை அ வ ர து மைந்தர் இ. கதிர்காமநாதன் வழங்கினார். டானியலின் மகள் துக்மதியா இப்பரிசைப் பெற் றார்.
சிறுகதைத் தொகு தி - "இரவின் ராகங்கள்? நூலுக் காக ப. ஆப்டீன் அவர்களுக்கு அமரர் நாகம்மா ச ண் முகம் நினைவாக அவரது மைந்தர் பூரீலங்கா அச்சக உரிமையாளர் திரு. ச. சிவராமன் வழங்கி னார். (ஆப்டீன் வரவில்லை)
கவிதைத் தொகுதி - "எ ட் டா வது நரகம்" என்ற நூலுக்காக சோலைக்கிளிக்கு திருவாட்டி கண்ணம்மா தம்பி யப்பா நினைவாக அவரது மைந் தர் நோர்த்சிலோன் இண்டஸ் றிஸ் உரிமையாளர் திரு. த சண்முகலிங்கம் ஜே. பி. வழங்கி னார். (சோலைக்கிளிவரவில்லை)
காவியம்- "சாகுந்தல காவி யம் எழுதிய சம்பந்தன் அவர் களுக்கு அமரர் திருமதி அப்ப லோனியா பிலிப்ஸ் நினைவுப் பரிசை அவரது மைந்தர் வைத்
*器4

திய கலாநிதி ஜே. பி. சி. பிலிப்ஸ் வழங்கினார். சம்பந்த னுக்காக இப்பரிசை திரு. சு. இராஜநாயகன் பெற்றுக்கொண் L-rri.
நா ட க ம் - "தப்பி வந்த ஆடு" நூலுக்காக மெளனகுரு வுக்கு அமரர் ஆர். பூபாலசிங்கம் நினைவுப் பரிசிலை பூபாலசிங்கம் குடும்பத்தினர் சார்பாக பூ, பூ" தர சிங் வழங்கினார். (மெளன குரு வரவில்லை.)
சிறுவர் இலக்கியம்- "காட் டில் ஒரு வாரம்" நூலுக்காக அநு. வை. நாகராஜனுக்கு அம ரர் கா. வைத்தியலிங்கம் தினை வுப் பரிசிலை அவரது மைந்தர் திரு. வை. ரவீந்திரன் வழங்கி Stfrr:}.
சமய இலக்கியம் - "கந்தனே கலியுகத்தில் கண் கண்ட தெய் வம்" என்ற நூலை எழுதிய ஆத்மஜோதி நா. முத்தையா வுக்கு அமரர் பொ. சிவனடியார் நினைவுப் பரிசிலை அவரது
மைந்தர் திரு. வன்னியகுலம் வழங்கினார் . (வன்னியகுலம் வரவில்லை)
பின் வரும் நூல்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ளன. இலக்கிய ஆய்வு, 'வாலி எழுதிய அகளங்கனுக்கும் நாவல்துறை யில் "தீம்தரிகிடத்தோம் எழு திய செங்கை ஆழியானுக்கம், "தெய்வதரிசனம்" எழு திய செ. குணரத்தினம் அவர்களுக் கும், சிறுகதைக்கோவை "வலை" எழுதிய டானியல் அன்ரனிக்கும், சிறு வர் இலக்கியத்தில் பூந் தோட்டம்" "எழுதிய கோப்பாய் சிவத்திற்கும், நாடகத்துறையில் மெளனகுருவின் நாடகங்கள்" எழுதி ய மெளனகுருவுக்கும், கெட்டிக்காரர்கள்" எழு தி ய அராலியூர் ந. சுந்தரம்பிள்ளைக் கும். சமய இலக்கியத்தில் "சைவ விரதங்களும் விழாக்களும் எழு
திய ப. சிவானந்தசர்மா (கோப் பாய் சிவம்) வுக்கும் வழங்கப் பட்டன. (செ. குணரத்தினம். டானியல் அன்ரனி, மெளனகுரு ஆகியோர் சமூகமளிக்கவில்லை)
சிறப்பு நிகழ்ச்சியாக மூதறி ஞர் க. சி. குலரத்தினம், சிரித் திரன் சுந்தர் ஆகியோர் கெளர விக்கப்பட்டனர். திரு. க. சி. குலரத்தினம் அவர்களின் சிறப் புக்களைப்பற்றி திரு. சொக்கன் உரையாற்றினார். பண்டிதமணி யின் வரலாற்றை திரு. குலரத்தி னம் தொகுத்துத்தர வேண்டும் என்று இவர் கேட்டுக் கொண் டார். திரு. க. சி குலரத்தினம் பேசுகையில். "இன்றைய விலை வாசியில் ஆயிரம் ரூபாய் பெரி தல்ல. ஒரு கெளரவத்திற்காக நீங்கள் பனை ஒலையில் செய் யப்பட்ட அழகான விசிறியைக் கொடுத்தாலே போதும். கெளர, விப்புத்தான் முக்கியம்" என்றார்.
சிரித் தி ரன் ஆசிரியரைப் பற்றி கவிஞர் கல்வயல் வேல் குமாரசாமி பேசு கை யி ல், நோபல் பரிசு பெறத்தகுந்த மேதை இவர் என்றார், காலத் தி ற் கே ந் ற சிந்தனைகளைத் தமது நகைச்சுவை ஒவியங்கள் மூலம் தீட்டிய மகா கலைஞர் என்று விதந்துரைத்தார். சுந்தர் நோய் காரணமாக வரவில்லை. ஆயினும் அவருக்கான கெளர வங்களை அவரது பாரியார் திருமதி சிவஞானசுந்தரம் ஏற் றுக் கொண்டார்.
பிரச்சனைகள் மலிந்த இத் தக் காலகட்டத்திலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காக உழைக் கும் இலங்கை இலக்கியப் பேர வையின் முயற்சிகள் பாராட்டிற் குரியன. எழுத்தாளரை ஊக்கு விக்கும் பணிகள் தொட ர, வேண்டும் ஏன்பதே எனது அவா வாகும், O
25

Page 15
இலக்கிய அரங்குகளில் கடவுள் வணக்கம்
பெ து வைபவங்களைக் கடவுள்வணக்கத்துடன் தொடங் குவதும் நிறைவு செய்வதும் சமூ கத்தில் நிலவுகின்ற ஒரு பொது வான நடைமுறை. இந்த நடை முறை இலக்கிய அரங்குகளிலும் கைக்கொள்ளப்படுகிறது. பெரும் பாலான இலக்கிய அரங்குகள் as L-alair வழி பா ட் டு ட ன் தொடங்கி அவ்வாறே முடிவு பெறுகின்றன.
கடவுள் வணக்கம் என்னும் இந்த அங்கம் நமது இலக்கிய அரங்குகளுக்குத் தே  ைவ ய |ா என்று நமது மனதில் இயல்பா கவே ஒரு வினா எழுகின்றது. ஆனால், அதனை நாம் ஆராய வேண்டியதில்லை. ஆரா ந் து "அது வேண்டும்" அல்லது "வேண் டாம்” என பொதுவான ஒரு வரையறை செய்து கொள்ள வேண்டியதும் இல்லை. ஏனென் றால், கடவுள் வணக்கம் மனித னுடைய இறை நம்பிக்கையினது 35 வெளிப்பாடு, அ வ ன து உணர்வுகளுடன் ஒன்றிய விட யம். மேலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையும் கூட. ஆகவே வேண்டுமா இல் லையா என்பததை ஒதுக்கிவிட்டு இலக்கிய அரங்குகளில் இடம் பெறும் கடவுள் வணக்கம் எவ் வாறு அமைகின்றது, எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதில்
26
. இராசையா
நமது கவனத்தைச் øvfrub.
செலுத்த
குறிப்பிட்ட ஓர் இலக்கிய அரங்கு கடவுள் வழிபாட்டுடன் ஆரம்பிக்குமா, இல்லையா என் பதை அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து எப்பொழுதும் நிச்சயம் செய்து கொள்ள முடி வதில்லை சில கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் இந்த அங்கம் குறிக் கப்பட்டிருக்கும். வேறு சிலவற் றில் இருக்காது நிகழ்ச்சி நிர வில் இல்லை என்பதால் கடவுள் வணக்கம் அக் கூட்டத்தில் இடம் பெறாது என்று கொள்ளவும் epig turts
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப் படாத சந்தர்ப்பங்களிலும், "இப் பொழுது கடவுள் வணக்கத்து டன் கூட்டம் ஆரம்பமாகும்" என்று தலைமை தாங்குபவர் அறிவிப்பது உண்டு. இது ஒரு முன்னேற்பாட்டுடன் கூடிய அ விப்பாகவிருந்தால், அத்த நிகழ்வு நடைபெறுவதில் அங்கே தடு மாற்றம் இருக்காது. கடவு ள் வழிபாடு ஒழுங் கா க நடை பெறும். அது தலைவரது திடீர் அறிலிப்பாக அமைந்து விடும் போதுதான் அவலம் வெளிப் படுகிறது. துதிப்பாடல் பாடுப வர் யார் என்பது நிச்சயமற்றி
ருக்கும். பாடுவதற்கு ஒருவர் முன்வந்து விட்டாலும், எப்படி யான துதிப்பாடல் என்பதில்

தெளிவு இருக்காது. வந்தவர் இந்தக் குழப்ப நிலையில் ஏதோ ஒரு துதியைப் பாடிக் காரியத்தை நிறைவேற்றி விடுவார். இப்படி அ வ ச ர க் கோலமாக நிகழும் வணக்கமும், பாடப்படும் வணக் கப் பாடலும் அந்தச் சபைக் கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்றன வாக அமைவது அரிது.
இலக்கிய அரங்குகளின் நிர் வாகிகளால் ஏற்கனவே திட்ட மி ட் டு ச் செய்யப்படும் இறை வணக்கங்களிலேயும் பொருந்தா மைகள் சில வ்ந்து புகுந்துவிடு வதைக் காணக்கூடியதாயிருக்கி றது. நமது இலக்கியக் கூட்டங் களில் நடைபெறும் கடவு ள் வணக்கம் என்னும் நிகழ்வு. பொதுவாக ஓர் இலக்கிய அமைப் புக்கு இருக்க வேண்டிய சிந்த னைத் தரத்துக்கு ஏற்றதாக அமைவது இல்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இந் நிகழ்வு, மதம் எ ன் னும் வட்டத்தினுள் தமிழை அடக்கி வைக்க முயல்கிறோமோ என் னும் ஐ ய த்  ைத நம்மனதில் எழுப்புகின்றது.
தமிழ tர் சமுதாயம், ஒரு கால கட்டத்தில் தனது சமயத் தையும், மொழியையும் ஒன்று டன் ஒன்று இணைத்துப் பேசி யும் பேணியும் வந்தது. அது அன்றைய வரலாற்றுத் தேவை. அந்தத் தேவை இன்று தேவை அற்றதாகி விட்டது. அந்தப் பழைய முறைமையை இறுகப் பற்றி நின்று, தமிழைப் பேண வேண்டிய வகையில் இன்றைய தமிழர் சமுதாயம் இல்லை, இன்று நாம் காண்பது பல மதக் கூறுகளைத் தன் ன கத்தே கொண்ட, ஒரு புதிய - மாற்ற மடைந்த தமிழர் சமுதாயம். இந்தப் புதிய சமுதாயக் கட்ட மைப்பின் தளத்தில் வைத்துத் தான், இலக்கிய அரங்குகளில்
இடம் பெறும் கடவுள் வணக் கத்தின் தன்மை எப்படியிருத் தல் வேண்டும் என்பதை நாங் கள் நிர்ணயிக்க வேண்டும்.
இலக்கியத் துறை சார்ந் தோர் அனைவரும் ஒரே மதத் தினர் அல்லர். அவர்கள் வேறு பட்ட மத நம்பிக்கை உடைய வர்கள். மத நம்பிக்கை அற்ற வர்களும் இவர்களிடையே இருத் தல் கூடும். இலக்கியம் என்னும் தளத்தில் வைத்து நோக்கும் போது, இவர்கள் யா வரும் ஒரே குழுவினர். மதம் என்னும் தளத்தில் வைத்துப் பார்க்கும் போது, வெவ்வேறு பிரிவினர். இவ்வாறு மதத்தால் வேறுபட் டும், இலக்கியம் என்னும் துறை யினால் ஒன்றுபட்டும் நிற்கின்ற இலக்கியக்காரர்களது ஒன்று கூடலே இலக்கிய அரங்கு. இந்த யதார்த்த நிலையைப் பற்றிய தெளிவுடன் இலக்கிய அரங்குக ளுக்குரிய இறை வணக்கத்தை அமைத்துக் கொண்டால், அது இலக்கியத் துறைக்குப் பொருத் தமானதாயிருக்கும்.
இலக்கியக் கூட்டங்களிலே ஒதப்படும் தோத்திரங்களோ, படிக்கப்படும் வேண்டுதல்களோ எந்த ஒரு மதத்தினதும் தனித் துவமான கோட்பாடுகளைச் சுட்டுவதாக இருத்தல் ஆகாது. இது மாத்திர மன்றி, மற்றொரு மதத்தின் தத்துவங்கள்- கோட் பா டு கள் முதலியவற்றுடன் முரண்படுவதாகவும் அமைதல் கூடாது. அவை மதப்பொதுமை உடையனவாய், இறைவன் என் னும் தனிப்பெரும் பொருளைச் சுட்டி நிற்பது முக்கியம்.
ஒர் இலக்கிய அரங்கிற்கு வருகை தந்தோருள் பெ ரும் பான்மையோர் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தோர் என்னும்: கணிப்பில் அந்த மதத்தினர்க்கே
27.

Page 16
உரிய வழிபாட்டினை நடந்து தல் நல்லதா? அது அவ்விலக்கிய அரங்கினது மாண்பினை மாசு படுத்திவிடாதா? "இந்த இலக் கிய அரங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தினர்க்கு மாத்திரம் உரிய நிகழ்வோ?" என்னும் மயக்கம் 4F6aoLuwSaß) aunTCü5éñe5 ub gJAibluL-dik dhisTI .
சபையோருள் ஒருவராயி னும் தாம் அங்கு நிகழும் கட வுள் வணக்கத்திலே ஐக்கியப்ப டுத்தப் பட்டதாகவும், அங்கே ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத் தினது மேலாதிக்கம் இருப்பதா கவும் உணரும் நிலை ஏற்பட் ட்ால், அது நமது இலக்கிய உல கினைப் பலவீனப்படுத்தி விடும். மத உணர்வு மிகவும் கூர்மை dunta7gi.
அண்மைக் காலத்திலே யாழ் நகரிலே நடைபெற்ற நூல் வெளி பீட்டு வைபவம் ஒன்று கடவுள் வணக்கத்துடன் தொடங்கியது. அங்கு கடவுள் வணக்கமாகத் தேவாரம் பாடப்பட்டது. முத லில் பாடப்பட்ட தே வாரம் இறைவன் என்னும் பரம்பொரு ளைச் சுட்டுவதாய் மதப்பொது மையுடையதாய் இரு ந் த து. -sarnróid, gyösulü ulunrlü tu.-- புராணம் அவ்வாறிருக்கவில்லை. கடைசியில் 'ரமபார்வதீபதயமே” என்பதுடன் அந்த வணக்கம் நிறைவுற்றது. அந்தக் கூட்டத் திற்கு வந்திருந்த இந்துக்கள் அல்லாதவர்களது மத உணர்வு களும் அங்கே பேணப்பட்டிருந் தால், அது சபைக்கு மன நிறை வைத் தந்திருக்கும் அல்லவா!
இலக்கியக் கூட்டங்களிற் பாடப்படும் பாக்கள் அல்லது படிக்கப்படும் வாசகங்கள் எந்த மதத்திலிருந்து பெறப்பட்டா லும் சரியே. அவற்றில் மதப்
பொதுமையும் ஒருவனே தேவன் என்னும் கருத்தும் மிளிர்தல் வேணடும். இதுவே முக்கியம். இலக்கிய அரங்கிற்கு வருகை தந்தோர் ‘நான் இன்ன மதத் தவன்" என்னும் உணர்வுநிலை யைக் கடந்து நின்று, அக் கூட்
டத்துக் கடவுள் வழிபாட்டில் இழைந்துவிட முடியுமானால், அந்தப் பிரார்த்தனை நெடுங்
காலமாக இலக்கிய உலகி ல் இருந்து வரும் ஒரு குறையை, கறையை அகற்றுவதாக அமை யும் என்பது உறுதி.
தனிநாயகம் அ டி கள சி "மாசில் வீணையும்" என்னும் தேவாரத்தை auGBg5ë Goar unras அடிக்கடி தமக்குள் சொல்லிக் கொள்ளுவார் எ ன் று அறிகி றோம். இந்தந் தே வார ப் பாடல் அவரைக் கவர்ந்தமைக்கு இதிற் காணப்படும் மதப் பொது மைதான் முக்கிய காரணி என் பது வெளிப்படை. இப்படியான துதிப்பாடல்களே இலச்கிய அரங் குகளில் பல்வேறு மதத்தினரும் கலந்து கொள்ளுகின்ற பொது வைபவங்களிற் பாடுவதற்கு ஏற்றவை.
இதனை இன்னொருபடி முன்சென்று நோக்கினால், மொழிவழி நடைபெறும் இறை வணக்கத்திலும்பார்க்க, உணர்வு சார்ந்த - சிந்தனை வழிப்பட்ட வணக்கம் இ லக் கி ய அரங்கு களுக்கு மிகவும் பொருத்தமா னவை என்பது புலனாகும். கூட்ட ஆரம்பத்திலும் முடிவி லும் ஒரு சில நிமிடம் மவுணப் பிரார்த்தனை செய்யலாம். இது இலக்கிய அரங்கு களுக்கு ப் பொருத்தமானதாக மாத்திர மன்றி, சிறப்புத் தருவதாகவும் Քյ60ւՕպմեջ
26

மாபெரும்
முத்தமிழ் விழா
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தொடர்ந்து ஜுன் ந் திகதி யிலிருந்து 16 ந் திகதிவரை இவ் விழா பல பிரதேசங்களில் நடை பெற்றது. முதல் நாள் விழா மானிப்பாயில் மங்கள வாத்திய நிறைவுடன் ஆரம்பிக்கப்பட் டது. பேராசிரியர் கா. சிவத் தம்பி "எழுத்து இலக்கியமாகி றது" என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினார். கவியரங்கும். நாடக அரங்கும் விழா  ைவ நிறைவு செய்தன.
இரண்டாம் நாள் நிகழ்வு கள் மாவீரர் கலையரங்கில் மங் கள வாத்திய இசையுடன் ஆரம் பமாகியது கலாநிதி இ. பால சுந்தரம் சிறப்புரையாற்றினார். "தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்வ தற்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது மரபு பேணலா?- புதினம் போற்றலா?" என்ற தலைப்பிம் வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக ஈழத் துச் சிவானந்தன் பங்கேற்றார். முடிவில் இரத்தின கீரீடம்" நாடகமும் முல்லைத்தீவு கலை பண்பாட்டு அவையினரின் "கோ வலன் கதை" மரபு வழிக் கூத் தும் இடம் பெற்றன.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியும் அதே மாணிப்பாயில் நடைபெற் றது. ஆரம்பத்தில் நாதஸ்வர இன்னிசை முழங்கியது. "சொக் கன்" அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது. "நாட்டை இக் கட்டான நிலையில் விட்டு ஒடு
நெல்லை க. பேரன்
வோர் குற்றவாளிகளே!" என்ற வழக்காடு மன்றமும் இடம் பெற் றன. முடிவில் கூட்டு வீணை இசை, இன்னிசை, போர்க்காலப் பாடல்களும் இடம் பெற்றன. நான்காம் நாள் நிகழ்ச்சி சாவகச்சேரியில் இடம் பெற்றது. நாதஸ்வர இன்னிசை முழங்கி யது. "போகும் ளN வெகு தூரம் இல்லை" என்ற தலைப்பில் கவி பரங்கம் இடம் பெற்றது. பேரா சிரியர் சிற்றம்பலம் சிறப்புச் சொற் பொழிவு நிகழ்த்தி Griffił.
ஐந்தாம் நாள் நிகழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் இடம்பெற் றது. நாஸ்வர மங்கள இன் னிசை முழங்க விழா ஆரம்பித் தது. திரு. க. சிவராமலிங்கம் சிறப்புரையாற்றினார். இசைக் கச்சேரியும், எதிர் நீச்சல்" நாட் டிய நாடகமும், ‘வெற்றிக் களத் தில் வீர வேங்கை" நாடகமும் இடம் பெற்றன.
இங்கு தான் த  ைலவர் வே. பிரபாகரன் மேடையில் தோன்றி தமிழீழத் தேசிய விருது பெறும் மாமனிதர் எண்மருக்கு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
ஆறாம் நாள் நிகழ்ச்சிகள் நெல்லியடியில் இடம் பெற்றன. வழக்கம் போலவே நாதஸ்வர இசை முழங்க விழா இனிது ஆரம்பித்தது. யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அ.துரை ராஜாவின் சிறப்புரை இடம் பெற்றது. தொடர்ந்து கேள்வி
29

Page 17
பதில் என்ற தலைப்பில் கவி பரங்கம் இடம்பெற்றது. இராம நாதன் நுன்கலைப் பிரிவினரின் குழுப் பாடல், சோலை கலை Lu Guy Lu mr * C & sypes iš SGOTifsir ‘விடிவை நோக்கி" 15 it glu நாடகங்கள் இடம் பெற்றன. இறுதியாகப் போர்க் காலப் பாடல்கள் மெல்லிசை நிகழ்வு தடந்தது.
ஏழாம் நாள் நிகழ்ச்சியும் நெல்லியடியில் இடம் பெற்றது. நாதஸ்வர இன்னிசை முழங்க விழாத்தொட்ங்கியது. கலாநிதி சோ. கிருஷ்ணராசாவின் இறப் புரையைத் தொடர்ந்து பாரதி யின் கனவை நனவாக்கத் தவ றிய காரணத்தால் குற்றவாளிக் கூட்டில் சழத் தமிழர்கள்" என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. நீதிபதிகளாக வித்துவான் சி. குமாரசாமியும், திருவாளர்கள் இ. ஜெயராஜும் ஈழத்துச் சிவானந்தனும் தீர்ப்ப ளித்தனர். முடிவில் "மீண்டும் எழுவோம்". நாளை af9ւգպլb' நாடகமும் இடம் பெற்றன.
கடைசி மூன்று தினங்களும் விழா யாழ். முற்றவெளியில் நடைபெற்றது. எட்டாம் நாள் நிகழ்ச்சிகள் நாதஸ்வர இசை முழக்கத்துடன் களைகட்ட ஆரம் பித்தன. ஈழத்துச் சிவானந்தன் சிறப்புரையை ஆற்றினார். முத் தமிழ் விழா மலர் இந்த மேடை யில் வெளியிட்டு வைக் கப் பட்டது பேபி சுப்பிரமணியம் வெளியீட்டுரை நிகழ்த்தினார். "நெஞ் சினில் நெருப்பேந்தி வாருங்கள்" என்ற தலைப்பல் பிாபல கவிஞர்கள் சிறப்பித்தனர், இடையில் பெருமழை பொழிற் ததால் நிகழ்ச்சிகள் அடுத் த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகியது.
நாதஸ்வர இ ன் னி சை ரசிகர் களை மகிழ் வித்தது. சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப் பாக்குட்டியின் சிறப்புரையுடன் ஆரம்பித்தது. மேன் முறையீட்டு வழக்காடு மன்றமும் இடம்பெற் றது, நீதிபதிகளாக விததுவான் . குமாரசாமி, சொக்கன், சிவ ராமலிங்கம் ஆகியோரும், வழக் குத் தொடுப்போராக, ஜெய ராஜ், சிவலிங்கராஜா ஆகியோ ரும், எதிர்வாதிகளாக கலாநிதி சுப்பிரமணியன், பொன். கணே சமூர்த்தி ஆகியோரும் பங்குபற் றினர். கு. எஸ். பத்மலிங்கத் தின் இசைக் க ச் சேரி யைத் தொடர்ந்து ‘சகுனியர் மூவர்? நாடகமும் இடம் பெற்றன.
பத்தாம் பதினோராம் நாள் நிகழ்ச்சிகள் அதே முற்றவெளி மைதானத்தில் பிரபல நாதஸ் வர வித்துவான்களின் இன்னிசை யுடன் ஆரம்பித்து முடியும் கட் டத்தை அடைந்தது. "கொடிய ரின் கொடுமை" நாட்டிய நாட கமும் பொன். சுந்தரலிங்கத்தின் இசைக் கச்சேரியும், நாடக அரங் கக் கல்லூரியினரின் ‘உயிர்த்து வந்த மனிதர் கூத்து" நாடகமும் மெல்லிசை நிகழ்வும் இடம் பெற்றன.
பத்து நாட்களும் விழா நடைபெற்ற ஊர்கள் விழாக் கோலத்துடன் காட்சி தந்தன. எங்கும் ஒரே சோடனை மயம், அரங்க அமைப்பு, ஒழுங்கமைப்பு, திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடை பெற்ற முறை மிகவும் மெச்சத் தக்க முறையில் கடைப்பிடிக்கப் பட்டன. வெகு சனங்கள் ஒருங்கு திரண்டு விழாக்களைக் கண்டு களித்தனர்.
இது விழாவின் வெற்றி, உழைப்பின் வெற்றி. குறிப்பாக விழாக் குழுவினரும், கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்க ளும் பாராட்டுக்குரியவர்கள்
30

ஒரு கிராமத்தின் கோடைத் தழும்பு
கல்வயல் வே. குமாரசாமி
கிஞ்ஞா அலம்பலிலே பூப்பூத்த வாசம் வரும்: "மைஞ்ஞா? அதைக் கடிக்கும்.
மறி துரத்தும் ஓர் கிடாய்: துள்ளி எழும்பி முணுமுணுத்துக் கூர்க் கொம்பாய் உள்ளதைக் காட்டுதல்போல் பக்கம் தலை சரிக்கும் கிட்டப்போய்த் தள்ளினால்
uair aurrnišG முன்னங்கால் இரண்டையும் தூக்கி, எழும்பி இடிக்க வரும். கரும்பைக்காய், பூ பழமாய் முள் மேற் கொலுவிருக்கும்.
இருப்புக் கொள்ளாமல் எதுச்கோ மனம் துடிக்கும்.
நிழலில் அசைபோடும் விடுகாலி மாடுகள்.
சோடி அணில்கள் துரத்தி விளையாட மாவிலங்கை பூமி மகள் மேனியெலாம் பொன்சொரியும்:
காடைகளோ குஞ்சுகள் முன்போகப் பின்போகும், கோடை நிலையில் காற்றும் மெளனிக்கும் ஆடை நனைக்கும் வியர்வை
பிசு பிசுப்பு, வெய்யில் குளிக்கும் கரும்பனைகள் உச்சிமுதல் சாணி பொறுக்கித் தலைசுமந்து நிற்பவளில் காணிக்கை யாகும் புதிய அழகொன்று நலம்புதுக்கா நாம்பன்
வெறிப்பார்வை:
நெஞ்சைக் கலங்க வைக்கும். கட்டில்லா விடுகாலி முன்னாலே அணில் அறுத்த தொங்கு பாளைவிட்டுக் கீழை விழும். துணிவில்லா நெஞ்சில் ஓர் சோகம் படம் வரையும். ()

Page 18
கடிதம்
உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதும்போது இந்தக் கடிதம் நேரகாலத்தில் உங்களுக்குக் கிடைக்குமா? என்ற சந்தேகத்துட னேயே எழுதுகிறேன். மல்லிகையும் நீங்களும் எப்படி இருக்கிறீர் கள்? நானோர் அரசாங்க ஊழியன். எங்கள் பக்கத்தில் இந்த மாதாந்த வருமானத்தை வைத்தே முழு மாசமும் வாழ்க்கைச் செலவையும் கட்டுப்படுத்த முடியாத நிலை. எனவே வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய கடையையும் நடத்தி வருகிறேன்.
என்னுடைய சொந்த அனுபவத்தை வைத்துப் பார்த்தே யோசிக்கிறேன். எப்படிக் கடத்த ஒரு வருடமாகச் சமாளிக்கிறீர் கள்? மல்லிகையைத் தவிர வேறு எந்த வருமானமும் எனக்கு இல்லை என்று முன்னர் தூண்டில் பகுதியிலே நீங்கள் சொன்ன தைப் படித்த ஞாபகம். இலக்கிய ஆர்வத்தில் மனம் நோத்துபோய் விட்டீர்களா? உங்களுடைய தனி மனித ஆளுமை பற்றி நான் நண்பர்களுடன் விவாதிக்கும் சமயங்களில் கேட்டறிந்துள்ளேன். இருந்தாலும் பொருளாதார நெருக்கடி மனிதனை அல்லோல சுல்லோலப் படுத்தி விடுமல்லவா?
உண்மையைச் சொல்லுகின்றேன், உங்களைப் போன்ற அர்ப் பணிப்பு மனப்பாண்மை கொண்ட இலக்கிய நெஞ்சங்கள் பிரச்சி னைகளின் தாக்கத்தால் விரக்தியடைந்து விடக்கூடாது. ஏராள மான நண்பர்கள் மல்லிகைக்கும் உங்களுக்கும் உண்டு என்பது எனக்குத் தெரியும், அவர்கள் கைதந்து உதவுவார்கள் என்பது திண்ணம். ஆனால் இந்தச் சூழ்நிலையில் அவர்களும் அல்லவா பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்னர்
எந்த நெருக்கடி வந்த போதிலும் நீங்கள் அதற்கு ஈடுகொடுத்து நிமிர்வீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் மல்லிகை இதழை நிறுத்திவிட வேண்டாம் V,
ஏதோ ஒரு வகையில் இந்த மண்ணின் அடி ஆதார வாச னையை மல்லிகையைப் படித்தே என்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ளுகின்றனர். அந்த வாய்ப்புத் தடைப்பட்டுப் போய்விடக் கூடாது என்பதே எனது கவலை.
இந்த மண்ணில் கலைஞர்களுடைய சிறப்பை எப்போவோ உணர்ந்து அன்னாரது உருவத்தை அட்டையில் பதித்து வெளி யிட்ட காலத்திலேயே மல்லிகையின் பெறுமதியை நான் உணரத் தொடங்கி விட்டேன். மனச் சலிப்பு ஏற்படும் நேரங்களில் எம் மைப் போன்றவர்களை நினைத்து பாருங்கள். நாம் எக் காலங் களிலும் உங்கள் பக்கத்தே நிற்போம்.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தரமான இலக்கிய வளர்ச்சிக்கு மல்லிகை செய்துள்ள பங்களிப்பு பெருமைக்குரியதா கும். உயர் கல்வி மாணவர்கள் பலர் இன்று மல்லிகையைத் தேடிப் பிடித்துப் படிக்கின்றனர். எதிர்காலத் தலைமுறை மல்லிகையில் நிறைய நிறைய எதிர்பார்க்கிறது:
llar 60PAD க. பத்மநாதன்
32

حاص- حصامی حماسه سیاحم حیمحی سحمای حصیحه حصایحه حصاحیه حصبه ث
தீவாத்
தியார்
S LASMLLLAM MMMLMA MLMLSLMAS LMLMTAMLMLSMLAALSqMA ALMLALALSLMLMMMLMLTALSLE
- வரதர்
னெக்கு "ஆனா" ச் சொல் லித் தந்த தீவாத்தியார், எனது கிராமத்திலிருந்த அமெரிக்கன் மிஷன் பாடசாலையின் தலைமை யாசிரியராகவும் இருந்தார். தீ வாத்தியாரைப் பற்றி நினைத்த வுடன், எனது இளமைக் கால மும், அந்தக்காலத்தில் அலைந்து திரிந்த எனது ஊரும் நினைவில் எழுகின்றன.
யாழ்ப்பாணப் பட்டணத் துக்கு பத்து மைல் தூரம்சைக்கிளில் போகிற வ ய து
எனக்கு வந்துவிட்ட காலம்.
சொந்தமாகச் சைக் கி ஸ் கிடையாது. என்னுடைய நண் பர்களிடமும் இல்லை. சைக்கிள் வாங்கும் அளவுக்கு நாங்கள் பணக்காரர்கள் அல்லர்.
பக்கத்து ஊரான மூளாயில்
சைக்கிள் கடை இரு ந் தது. *சைக்கிள் கடை" என்றால்,
சைக்கிள் விற்கும் கடையல்ல.
சைக்கிள் வாடகைக்கு விடுமி, உம் முதல் ஒரு மணித்தியாலத்துக்கு 25 சதமும், அடுத்த ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 15 சத மும் வாடகை என்று நிளைவு. ஒரு இரவு முழுவதுக்கும் எடுத் தால் ஒரு ரூபா ம ட் டுமே
வாடகை. அப்படியான ஒரு இர வுக் கட்டணத்தில் சைக்கிளை வா ட  ைக க் கு எடுத்துத்தான் நான் சைக்கிள் ஒடப் பழகினேன், என்னோடு இன்னொரு நண்ப ரும் சேர்ந்துTபழகினால் சைக் கிள் வாடகை ஆளுக்கு ஐம்பது சதம்.
ஒரு பூரனை இரவில் பொன் னாலைக் கோயிலுக்குப் பின்னா லுள்ள பரந்த வெளியில் சைக் கிள் ஒடிப் பழகத்தொடங்கியது: எங்களோடு முஸ்பாத்தியாகப் பொழுது போக்க வந்த பெரிய பையன் ஒருவர் என்ளைச் சைக் கிளில் இரு த் தி த் தள்ளிக் கொண்டு போய், பிறகு கையை விட்டது; நான் சைக்கிளோடு விழுந்தது: பழக்கிய ஆசானிடம் ஏச்சு வாங்கியது; குட்டுப்பப் டது: பிறகு கொஞ்ச நேரத்தில் பெடல் பண்ணப் பிடிபட்டதும் (ஆஹர் என்ன உற்சாகம்) அந் தப் பரபரப்பில் பிறேக்பிடிக்கக் கை ஏவாமல் சிறிய மேட்டில் சைக்கிளை ஏற்றி லிழுந்தது; அதனால் முழங்காளில் கல் அடித்து சிறு காயம் ஏற்பட்டது: என்னுடைய ஆசான் அந்தக் காயத்துக்கு புழுதியை அள்ளித் தூவித் துடைத்து விட்டது

Page 19
ஒ: எல்லாம் எவ்வளவு உற்சாக மான நினைவுகள்!
சைக்கிள் ஒடப் பழகியபின் வாரக் கடைசி நா ட் சு ஸ்ரி வ் ஏழெட்டுப் பேராகச் சேர்ந்து கீரி ம  ைலக் குச் சைக்கிளில் போவோம். கீரிமலையில் குளிப் பதைவிட, போகவரச் சைக்கிள் ஒடுவதே முக்கியமான காரியம்.
இரண்டுபேர் சேர்ந்து வாட கைச் சைக்கிள் எடுப்போம். யார் ஒடுவது என்பதில் போட்டி.
* குறிப்பிட்ட சந்திவரை நீ ஒடு; நான் பின்னுக்கு இருக்கி றேன். சந்தி வந்ததும் என்னிடம் ஒடத் தந்துவிட்டு நீ பின்னுக்கு இருக்க வேண்டும்" என்ற ஒரு ஒப்பந்தம். ஒ டிக் கொண டு போகிறவர் குறிப்பிட்ட சந்தி வ ந் த ரா லும் நிற்கமாட்டார். அதிக தூரம் சைக்கிள் ஒடும் ஆசை. பின்னுக்கிருப்பவர் விடு வாரா? சந்தியில் சைக்கிள் நிற்க வில்லையென்று க:ை டதும், பின் சீற்றிலிருந்து குதித்து இறங்கி சைக்கிளை இழுத்தப் பிடித்து நிறுத்தித் தான் ஒடுவார்
அப்படிச் சைக்கில் ஒடுவதற் குப் போட்டி போட்ட வயது SAEs
இப்போது?
*சைக்கிள் ஒடவா? நானா?
அப்படிச் சைக்கிலில்தான் போகவேண்டுமென்று நிர்ப்பந் தம் ஏற்பட்டாலும், "நான் பின் னுக்கு இருக்கிறேன்,
நீர்களா...
காலம் மாறிவிட்டது. தும் போய்விட்டது!
அந்தக் காலத்தில் அடிக்கடி சைக்கிளில் யாழ்ப் பாண ம் டோவோம். முக்கியமாக "படக்
நீங்கள்: உழக்கிக் கொண்டுபோய் விடுகி.
காட்சி" (சினிமா) பார்ப்பதுதான் நோக்கம்.
அதுவும் இப்படி இரண்டு பேர் பங்குபோட்டு வாடகைக்கு எடுத்த சைக்கிள்தான்.
ஒட்டுமடம் சந்திவரையும் டபிளில் வருவோம். சந்தி வந் ததும் பி ன னா ல் இருப்பவர் இறங்கி நடக்க வேண்டும். ஏன் என்றால், ஒட்டுமடம் சந்திக்குப்
பிறகு ரவுண் வந்துவிடும். மின்
சார விளக்குகள் எரியும் ரவு னுக்குள் சைக்கிளில் "டபிள் போகக் கூடாது என்று சட்ட
மாம். பொலிஸ்காரர் கண்டால் பிடித்து வழக்கு எழுதிவிடுவார்
களாம்.
சட்டத்துக்கு அந்த நாளில் எவ்வளவு மரியாதை பயம்!
ஒட்டுமடம் சந்தியிலிருந்து படமாளிகை வரை சுமார் ஒரு மைல் தூரம் நடக்க வேண் டும். ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. "சிம்பிள்"
படக் காட் சி க்கு நேரம் நெருங்கி விட்டதென்றால் நடப் பதாவது; சைக்கிளில் போகிற வருக்குப் பின்னால் ஒ டி யே போய்ச் சேர்ந்து விடுவோம்!
ஒ1. சொல்ல வந்த "புன்னாலை"யைப பொ ன் னாலை ஆக்கிய விஷயம்.
நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது, ஒவ்வொரு சந்தி யிலும் நிற்கும் கைகாட்டி மரங் களில் "புன்னாலை - இத்தனை மைல்" என்று எழுதியிருப்பதைப் u Tritu "Glumrør. Punnallai GT6ărapy ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே எமுதியிருக்கும். அந்தக் காலத் தில் அரசாங்கத்தோடு சம்பந் லப்பட்ட வீஷயங்களெல்லாம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அவற்றை விளங்கிக் கொள்ள
34.

வண்டியது மக்களுடைய கடமை என்று அரசாங்கம் கரு திற்று.
இந்தப் "Punmalai" என்ற எழுத்துக்களைக் கண்டதும் என் மூளைக்குள் ஒரு அற்புதமான யோசளை தோன்றிற்று. அதில் இரண்டாவதாக உள்ள A என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டுவிட்டால் sygs 'O' g6696)b. Punnalai (புன்னாலை) Ponmalai (பொன் னாலை) ஆகிவிடும்!
என்ன அரு  ைம ய ர ன யோசனை! அதை எப்படியும் செய்து முடித்துவிட வேண்டு மென்று ம ன ம் துருதுருத்துக் கொண்டேயிருந்தது எதையும் சா தி க்சு முடியுமென்று நம் பிக்கை. உடனே செய்துவிட வேண்டுமென்ற துடிப்பு. y
என்னுடைய யோசனையை சிலநண்பர்களிடம் சொன்னேன். அவர்களும் மிக உற்சாகமாக ஆமோதித்தார்கள்.
ஒரு நாள் ஏழெட்டுப் பேராக யாழ்ப்பாணப் பட்டணத்துக்குப் படக்காட்சிபார்க்கப்போனோம் .
பாட்லிங்மணி, எஸ். எஸ். கொக்கோ நடித்த “மெட்ராஸ் மெயிலா
ஆர். பி. லட் சுமி தே வி நடித்த "டூபான் குயி னா
எஸ். ஆர். செல்லம் நடித்த "வனராஜ கார்சன்" என்ற டார் Finrossy Lu Lorr
டி. ஆர். மகாலிங்கம் நடித்த
落 நந்தகுமா? prnir
எம், கே. தியாகரரஜபாகவ தர் ன சந்தானலட்சுமி நடித்த 'அம்பிகாபதி? யா- &
-எந்தப் பட்மென்று நினை வில்லை.
(ஹே, காலையில் படித்த நூலின் பெயர் கூட மாலையில் நினைவில்லை. ஐம்பது ஆண்டு களுக்கு முன் பார்த்த படங்க ளும் அதில் நடித்த நடிகர்களின் பெயர்களும் நினைவிருக்கிறதா ஒகோ, என்றானாம்!)
மினைக்கெட்டுப் பத் து மைல் தூரத்திலிருந்து யாழ்ப் பாணப் பட்டணத்துக்குப் படக் காட்சி பார்க்கப் போனால், றோயல் டாக்கீஸ் என்ற தகரக் கொட்டகையில் முதலாம் காட் சியும், றிகல் தியேட்டரில் இரண் டாவது காட்சியுமாக இரண்டு படங்களைப் பார்த்துவிட்டுத் தான் திரும்புவோம்.
டிக்கட் கலரி சதம் 25.
அப்பொழுதெல்லாம் கியூ வரிசைக் கிரமத்தைப்பற்றி யாரும் கேள்விப்பட்டதுமில்லை!
கலரி டிக்கட் கொடுக்கும் இடத்துக்கு மு ன் னால் ஒரு பெரிய கும்பல் நிற்கும். அதற் குள் நுழைந்து சென்று டிக்கட் வாங்கி வருவது ஒரு பெரிய கலை ஒருவர் எத்தனை டிக்கட் டுகளும் வாங்கலாம்.
எங்களில் உசாரான ஒருவர் தன்னுடைய சேட்டைக் கழற்றி எங்களிடம் தந்துவிட்டு, வேட் டியைச் சுருக்கிக் கொடுக்கு" கட்டுவார். (கொடுக்கா, அது என்ன என்று கேட்பவர்களும் இப்போது இருக்கக் கூடும்.) ஆளுக்கு 25 சதம் வீதம் எங்கள் எல்லாரிடமும் வாங்கி அந்தப் பணத்தை ஒரு கையில் இறுகப் பொத்திக் கொண்டு, கும்பலின் ஊடே அவர் சரிந்து. நெழிந்து உட்புகுவார். வேறு இரண்டு பேர் அவருக்கு உதவியாக (மற்ற வர்கள் இடித்துப் பின் தள்ளாத படி) பக்கத்தில் செல்வோம்.

Page 20
இடி. நெரி. தள்ளு.
அவர் ஒருமாதிரி டிக்கட் கை யில் பொத்திக் கொண்டு வந்து, ஒவ்வொருவரிடமும் ஒவ் வாரு டிக்கட்டை கொடுப்பார். என்ன ஆச்சரியம் ஒருநாளாவது டிக்கட்டுகள் கூ டி க் குறைந்த தில்லை!
இப்படி ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அது முடிந் ததும் அடுத்த தியேட்டருக்கு ஓடி, அங்கேயும் படம் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது இரவு சாமம் தாண்டியிருக்கும்!
அன்று முன்னேற்பாடாக நான் ஒரு சிறிய டி ன் னி ல் கொஞ்சக் கறுப்புப் பெயின்ரும், ஒரு சிறிய பிறஷ"ம் கொண்டு போயிருந்தேன்.
படம் முடிந்து திரும்பி வரும் போது - நடுச்சாமத்தில் - ஒவ் வொரு சந்தியிலும் நிற்போம். கைகாட்டி மரத்துக்குப் பக்கத் தில் அதைப் பிடித்துக் கொண்டு ஒருவர் நிற்பார். நான் அவர் மீது ஏறி நின்று Punmalai என் பதன் A வின் மேலே ஒரு வளைவை கறுப்பு மையினால் அழகாகப் போடுவேன். அந்த A என்ற எழுத்து "O" ஆக மாறி விடும். Punnalai, Ponnalai ஆகிவிடும்! - இப்படியே யாழ்ப் பாணம் சுடுகாட்டாலடிச் சந்தி யிலிருந்து ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, சுழி புரம் - எல்லாச் சந்திகளிலு முள்ள கைகாட்டி மரங்களில்
புன்னாலை, பொன்னாலை ஆகி
விட்டது.
சட்டத்துக்கு செயல்தானே?
மா ற ர ன
ஒரு சட்டமறுப்புச்
\சய்த உற்சாகம் எங்களுக்கு:
பெரிய சாதனை செய்து
விட்ட திருப்தி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால். நா ங் கள்
பெயர்ப்பலகை திருத்திய கொஞ் சிக் காலத்துக்குப் பிறகு, அர சாங்கத்தின் வழக்கமான நடை முறையின்படி அந்தக் கைகாட்டி மரங்களுக்குப் புதிதாக பெயின்ற் அடித்து ஊர்ப் பெயர்களையும் புதுப்பித்தார்கள்.
அப்போது
பொன்னாலை என்று இருந் ததை புன்னாலை என்று மாற்றி எழுதவில்லை. பொன்னாலை என்றே எழுதினார்கள்.
பிற்காலத்தில் தமிழ்மொழிக் கும் சற்றே இடமளிக்க முன் வந்த அரசாங்கம், கைகாட்டி மரங்களில் ஆங்கிலத்தோடு தம் ழிலும் ஊர்ப் பெயர்களை எழுத ஏற்பாடு செய்தது. அப்போதும் குறித்த கைகாட்டி மரங்களில் தமிழிலும் "பொன்னாலை’ என்றே எழுதி வைத்தார்கள்.
அதன் பிறகு எங்கு ம் 'பொன்னாலை" என்றே ஆஷ் விட்டது. ーマ
தீவாத்தியா ரைப் பற்றி இன்னும் நான் எழுதவில்லையே எள்று நினைக்கிறீர்கள்.
தீவாத்சியாரைப் பற்றிச் சொல்ல முன் என்னைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
என்னைப் பற்றிச் சொல்ல முன் என்னுடைய தகப்பனா ரைப்ாற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் அவர் ஒரு கடை வைத்திருந்தார். அந் தக் கடை ஊரில் முக்கியமான ஒரு ஸ்தலம்.
அப்பாவையும் அவருடைய கடையையும் பற்றிச் சால்ல

முன் என்னுடைய ஊர் மக்க ளைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.
பொன்னாலை என்பது ஒரு சிறிய கிராமம், ஏழைக் கிராம மாக இருந்தது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இந்த க் கிராமத்தில் சுமார் 250 - 300 குடும்பங்கள் அப்போது இருந் தன.
அந்தக் காலத்தில் மக்களைப் பற்றி ச் சொல்வதென்றால், அவர்கள் என்ன சாதி என்பது முக்கியம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ருறிப்பிட்ட சாதியார் வசிப் Litrilirgeir.
"நீ எந்தப் பக்கம்? (எந்தப் பகுதி) என்று கேட்டால், அவர் கிழக்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்நூம், தெற்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்றும்இப்படியே ஒவ்வொரு பக்கத் துக்கு இன்ன இன்ன சாதி என்று அவருடைய கிராமத்தைப் பற்றி தெரிந்தவர்கள் அறிந்து கொள்
வார்கள்.
இந்தியாவில் எநத தாழ்த் தப்பட்ட சாதியினரும் தாங்கள் இன்ன சாதி என்று பகிரங்கமா கச் சொல்லிக் கொள்வார்கள். யாழ்ப்பாணத்தில், கு  ைற ந் த சாதிக்காரர் எனப்படுவோர் தங் கள் சாதியைப் பகிரங்கப்படுத்த விரும்புவதில்லை. அதனால்தான் இங்கே 'நீ என்ன சாதி" என்று விசாரியாமல் 'நீ எந்தப்பக்கம்" என்று கேட்டு அறிந்து கொள் வார்கள்,
பொன்னாலையில் முக்கிய மாக மூன்று சாதிகள் இருந்தன.
ஒன்று வேளாளர் இவர்த ளிலும் ஜந்தாறு குடும்பத்தினர் தாங்கள் உயர் சாதியென்றும் மற்றவர்கள் குறைவு என்றும் சொல்விக் கொள்வார்கள்.
இரண்டாவது கோபியர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவர்கள் வேளாளர்களைப் போல பொதுலாக எ ல் லா ச் சமூக உரிமைகளையும் பெற்றி ருந்தார்கள்.
மூன்றாவது நளவர்.
இந்த நளவர் என்ற சாதி யைப் பற்றி ஒரு பல்கலைக்கழக மாணவன் ஆராய்ச்சி செய்ய லாமென்று நினைக்கிறேன்.
இவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள், தீண்டத்தகாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், முன்னேற முடியாதபடி அடக்கி வைக்கப் பட்டவர்கள்.
பின்தங்கிய எங்கள் கிராம மக்களிடையே இவர்கள் மேலும் அதல பாதாளத்தில் பின் தங்கி யிருந்தார்கள்.
இவர்களுக்குச் சொந்தமான நில ம் புல ம் இருந்ததில்லை. அயலூர்களிலிருந்த G L if tu வேளாளர்களுக்குக்குச் சொந்த மா ன வரண்ட நிலங்களிலே தான் இவர்கள் குடியிருந்தார் கள். அதற்கு ஈடாக நிலச் செந் தக்காரர்களுக்கு ஏ த வ து அடிமை குடிமை வேலைகள் செய்வார்களென்று நினைக்கின் றேன்.
அவர்கள் வாழ்ந்த பகுதி களில் கிணறுகளே கிடையாது. ஏதோ ஒரு கிணறு இருந்தது. அதுவும் உப்புத் தண்ணிர்.
நல்ல தண்ணிர் பெறுவதற் காக அவர்கள் வயல் பக்கய் போவார்கள். ஆனால் அங்கே உள்ள கிணறுகளில் இவர்கள் தண்ணிர் அள்ளக் கூடாது. யாரவது உயர்ந்த சாதிக்காரர் வந்து தண்ணிர் அள்ளி இவர் களுடைய மண் பானைகளில் ஊற்றி விடும்வரை காத்திருக்க வேண்டும்.
3.

Page 21
இவர்களுடைய தொழில் மரமேறுதல், கள். கருப்பரீர் சேர்த்தல், சிறிய அளவில் மீன் பி டி த் த ல், வேளாளருடைய வயல்களிலும், வீடு. வளவுகளி லும் கூலி வேலை செய்தல் ஆகியனதான்.
அந்தக் காலத்தில் பொன் னாலையில், கல்வீடுகள் என் யெயருக்கு இரண்டு மூன்று வீடு கள் மட்டுமே இருந்தன. மற்ற வையெல்லாம் மண் வீடுகளும், தென்னோலைத் த ட் டி வீடு களுமே. W
நள வ சாதியினரிடையே மண் வீடுகள் கூட இல்லை எல்வாம் சிறு சிறு ஒலைக் (5g. சைகளே.
அவர்கள் உயர் சாதியினரின் வீடுகளுக்குள்ளோ, கே களுக்குள்ளோ நுழையக்கூடாது. றோட்டுகள், ஒழுங்கைகளில் தடந்து போகலாம். அ து வும் மேல்சாதிக்காரரைத் தூரத்தே கண்டுவிட்டால், தலையிலோ, தோளிலோ இருக்கும் சிால்வைத் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு வேலி ஒர மாக ஒதுங்கி வழிவிடுவார்கள்.
இந்த நிலையிலும் அவர்களு 69 L பிள்ளைகள் lift-giros) களுக்குப் போக அனுமதியிருந் தது.
ஆனால், பாடசாலையில் மற்றப்பிள்ளைகளேல்லாம் தகளில் இருந்து படிக்கும்போது இவர்களுட்ை பிள்ளைகள் கீழே மண் நிலத்தில் தான் இருப்பார் கள். ஆசிரியருடைய”.ே யைச் சுற்றி நின்று மாணவர் பாடம் கேட்கும்போது, இந்தப் பிள்ளைகள் ஒரு பக்கம் ஒதுங் கியே நிற்பார்கள்.
பள்ளிக் கூடம் என்றதும் நினைவு வருகிறது. என்னுடைய அறிவுக்குச் சற்று முற்பட்ட கா9த்தில், பொதுவாக எல்லாச் சாதியினரிலும் பல பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது கிடை "து. அதிலும் ஒதுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளைப் ւմն றிச் சொல்லவே வேண்டாம்.
எனக்குத் தெரிந்த காலம் முதல் எல்லாப் பிள்ளைகளும் 4 வயதுவரை கட்டாயமாகப் பள்ளிகூடம் போக வேண்டும் என்று சட்டம் இருந்தது. அப் படிப் போகாத பிள்ளைகளின் பெற்றோர் மீது வழக்குத் தொடரப்படும். அதற்கென்றே ஒரு உத்தியோகத்தரும் இருந் தார்.
இந்த வழக்குக்குப் பயந்தே பலர் பிள்ளைகளைப் பாட சாலைக்கு அனுப்பினார்கள்.
வீட்டிலோ வயலிலோ ஏதும் வேலையிருந்தால் அன்று அந்த மா ன லுன் பாடச்ர்லைக்குப் போகமாட்டான். ܨܘܼܪܣܛܝ
ஆசிரியர் கேட்டால் "வீட் டில் இன்ன வேலை" என் Ա பதில் சொல்வான். அவன் பொய் சொல்லாமலிருந்தால், قیهWتy நியாயமான பதிலாக ஆசிரிய ரால் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதிகமானவர்கள் பத்து வய திலேயே "அவனுக்கு வயதாகி விட்டது" என்றோ, அவன் "வேலைந்குப் போகிறான்? என்றோ படிப்பை நிறுத்தி விடு வார்கள்.
38

ஒழுங்காகப் படித்தால் 10 வயதில் ஐந்தாம் வகுப்புக்கு வந்திருப்பான். அதற்கு மேல் படிக்க அநேகமான கி ராம ப் பாடசாலைகளில் வகுப்புகளும் இருக்கமாட்டா. பொன்னாலை அ. மி. பாடசாலையிலும் 5 ம்
வகுப்புவரைதான் இருந்தது,
3ம். 4 ம் வகுப்புப் படித்து விட்டாலே, "எழுதப் படிக்கப் பழகிவிட்டான், இனி என்ன உத்தியோகமா பார்க்கப் போகி றான்" என்று படிப்பை நிறுத்தி எங்கேயாவது க  ைட களி ல் வேலைக்கோ அல்லது வீட்டில் உதவியாகவோ வைத்து விடு வார்கள்.
பெண் பிள்ளைகள் என்றால் சொல் ல வேண்டியதில்லை. "இனிப் பெரிய பிள்ளையாகி விடுவார்கள்" என்றும், “பெட் டைக்குப் படிப்பு எதற்கு?’ என்
றும் படிப்பை நிறுத்தி விடுவார் கள்,
அந்தக் காலத்தில் 4 ம், 5 ம் வகுப்புகளுக்கு மேல் பெண்பிள் ளைகள் படிப்பது மிக அபூர்வம்.
பள்ளிக்கூடம், படிப்புப் பற்றி, பிறகு - நான் படித்த விஷயம் வரும்போது சொல்கி றேன்.
இந்த ந ள வ சாதியைப் பற்றி யா ரா வது நிறைய ஆராய்ந்து எழுத வேண்டும். இவர்களிடையே கூட, பொன்
னாலையில் இரண்டு பிரிவுகள்
இருந்தனவாம். ஒரு பிரிவுக்கு 'வாடை" என்று பெயர். மற் றம் பிரிவுக்கு “சோளகம்" என்று பெயர்.
இயற்கையான காற்றுகளின் பெயர்களையே இவர்கள் தங்
கள் பிரிவுகளுக்குப் பெயர் வைத் திருப்யது வியக்கத்தக் கதாக இருக்கிறது.
ஏதோ பெயருக்கு இரண்டு பிரிவுகள் இருந்தனவே தவிர, இவர்களிடையே எந்த வித்தியா சமும் - ஏற்றத்தாழ்வும் இருந் ததாகத் தெரியவில்லை.
இவர்களிடையே வழங்கிய பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்களாக இருந்தமை கவனத் துக்குரியது.
வேலன், கந்தன். முருகன்,
வெள்ளையன், நாசுன், பெரி யான், சின்னான், மற்றும் வள்ளி, தெய்வி, பொன்னி,
சம்பரத்தி முதலிய பெயர்க ளெல்லாம், மற்ற மேல் சாதிக் காரரிடையே அருகிப்போய், அந்த நேரத்திலும் நளவ சாதி யினரிடையே வழக்கிலிருந்தன.
நாகரிசும் என்று கரு தி க் கொண்டு மேல் சாதிக்காரர், வேலுப்பிள்ளை, முருகமூர்த்தி, வரதராசா, கந்தையா (ஐயா) என்று வால் சேர்த்து வைத்த பெயர்களை: தாழ்வு சாதியினர்
வைக்க அனுமதி இருந்திருக்கா தென்று நிளணக்கிறேன்.
இவர்களில் யா ரா வ து சற்றே தலைதூக்கினால்-கல்வி கற்றால், பணம்சம்பாதித்தால், நாகரிகமாக வாழ்ந்தால், பெரிய சாதிக்காரர்களுக்குப் பெறுக் காது.
ஒரு கீழ் சாதிப் பயல் தன் னுடைய நிலை தவறி இப்படி உயருவது தங்களை அவமதிப் பதாகுமென்று சாதிமான்கள் நினைத்தார்கள்.
ஒரு சம்பவம் நினைவு வரு
கிறது.
(அடுத்த இதழில்)
39

Page 22
துயர் மனிதரும் துணை நடத்தலும்
எஸ். கருணாகரன்
ஏதொரு மாற்றமுமின்றி மந்தமாய் இயக்கமுறும் உனது கிராமத்தில் ஊமை வெயில் சிந்தித் கொண்டிருந்த ஓர் மதியத்தின் பின் பசித்த வயிற்றுடன் பனையிலிருந்து வீழ்ந்தாய் வீழ்ந்ததும் இறந்து போனாய். ரோபோ மனிதன் இயக்கமுறும் காலத்திலும் வெறும் மனிதக் கூலியாய், பசி தீராதிருத்தலின் போதும் உழைக்கும் நிர்ப்பந்தமாய் ஆனது வாழ்க்கை,
அன்றும் பசித்த வயிற்றுடன் பனையிலிருந்து வீழ்ந்தாய் வீழ்ந்ததும் இறந்து போனாய். விசாரணை அதிகாரிகளும்
மத குருவும் W− கிராமத்துப் பிரமுகர்களும் வந்திருந்தனர். உனது மரணத்தின் காரணம் பற்றி அவர்களின் விசாரணையில், அதன் பின் எழுதிய தீர்ப்பில் 'உணவருந்தாது
சீவலுக்குச் சென்றதனால் உடல் தளர்வுற்றதன் காரணம்" என் அறிக்கை எழுதப்பட்டது.
விசாரணையும் பின்னர், சடங்கும் நிசுழ்ந்தன பரிந்து பேசினர் பிரமுகர்கள். மரணம் நிகழ்கையில் . உன் முகம் நினைவிற் கொள்ளா உனது சிறு குழந்தை விஞ்ஞானம் பற்றியும், மனித வளர்ச்சி பற்றியும் அறிகையில் உன் மரணம் பற்றி வியக்கும் மனமழிந்து துன்புறும்.
கூலி மனிதரிடம்
பசியின் குவிதல் பற்றியும் அது தீருதல் பற்ஃ அறிய முனைகையில் அதன் வழிநடத்தலுக்கு என் துணையை வழங்குதலில் மகிழ்வுறுவேன்.
40

நாவல் நகர்
பி. மகாலிங்கம்
சில நினைவுகள்
சாந்தமான பார்வையும், நகைச்சுவை மிக்க உரையாட லும் கொண்ட எமது நாவலப் பிட்டி இலக்கிய நண்பர் பி. மகா லிங்கம் காலமாகி விட்டார் என்ற அதிர்ச்சியிலிருந்து இன் னும் மீள முடியவில்லை.
என் சிந்தனை கால் நூற் றாண்டுகளுக்கு அப்பால் சிறக டித்துப் பறக்கின்றது.
சென்ற் மேரிஸ் கல்லூரியில் நண்பர் பி. மகாலிங்கம், எஸ். எஸ். சி. வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொற்காலம் அது. ஒருவரையொருவர் சந்திப் போம், வெறுமனே புன்முறுவல் பரிமாற்றம், அவ்வளவுதான்.
ஆனால் அன்று
நாவலப்பிட்டி கதிரேசன்
கல்லூரியில் நடைபெற்ற ஒரு
பெரும் விழாவில் நண்பர் மாலி
யுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்
35).
நான் முதல் முதலாக ஓர் இலக்கியக் கூட்டத்திற்குச் சென் றதும், அதுதான் பெருந் திர ளான அந்தப் பரிசளிப்பு விழா வில் அமர்வதற்காக இருக்கை தேடிக் கொண்டிருந்த சமயம் அவர்தான் பக்கத்தில் ஆசனம் வழங்கினார். அந்த முதல் சந் திப்பு இன்றும் பசுமையான நினைவுகளாக இழையோடுகின் றன.
பி. ஆப்டீன்
அதற்குப் பின் எமது சந்திப் புகள் தொடர்ந்தன. நவீன இலக்கியம் பற்றிய உரையாடல் கள் எம்மை நெருங்கிய சிநேகி தர்களாக இணைத்தன.
கால ஓட்டத்தில் எத்த னையோ இலக்கிய நிகழ்வுகள். எதனைச் சொல்வது, எதனைத் தவிர்ப்பது? எல்லாமே முக்கியம் தான்.
எமது எழுத்துத் துறையின் ஆரம்ப காலம் அது. எனது ஆக்கங்களை அவரிடத்தில் எடுத் துச் சென்று படித்துக் காட்டிய தும், அவரது ஆக்கங்களை எடுத் துக் கொன, டு அவர் என்னைச் சந்தித்ததும், நண்பர்கள் இர, சந்திரசேகரன், வழுத்தூர் ஒளி யேந்தி, காலஞ்சென்ற பிரேம சம்பு, ச. சந்தனப்பிச்சை போன் றோருடன் நாம் அ  ைடந்த இலக்கிய இன்பங்கள், நண்பன் மாலியின் அன்பளிப்புகள் என்றே கருதுகிறேன்
1960 - களில் மகாலிங்கம் வளரும் இளம் மலையகக் கவி ஞர். வசன கவிதைகள், சிறுவர் களுக்கான கவிதைகள், கட்டு ரைசுள், சிறுகதைகள் என்று அ டி க்க டி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்து கொண்டிருந்தன. மிக வேகமாக எழுதுபவர் மாலி.
41,

Page 23
மலையகம் தோறும் ஆங் காங்கு நடைபெறும் கவியரங்கு களிலும் இவரது வீச்சு இடம் பெறாமல் இல்லை. விமர்சனம், ஆய்வு மொழி பெயர்ப்பு. கட் டுரை என்று பல துறைகளிலும் ர் வம் கொண்டவர். மும் மொழிகளிலும் எழுத்தாற்றல் மிக்க நாவல் நகர் பி. மகாலிங் கம், "இளம் வாணன்', மாலி" 'நாவல் நகர் கவிராயர்". "ரூபி மகாலிங்கம்" இப் படிப் பல புனைபெயர்களில் தமது ஆற் றலை வெளிப்படுத்திக் கொண் டிருந்த ஓர் இலக்கியவாதியை காலன் பிரித்துவிட்டான். தின கரன், வீரகேசரி, செய்தி, மல் லிகை என்று பல பத்திரிகைக ளும், சஞ்சிகைகளும் இவரது எழுத்துக்களுக்கு களம் அமைத் துக் கொடுத்துள்ளன. மல்லிகை பில் பல மாதங்களாக வெளி யான மலையகத் தபால்" கடி தக் கட்டுரைத் தொடர் குறிப் பிடத்தக்கது.
1959 ல் இவர் எஸ். எஸ். சி. இறுதி வகுப்பில் கற்றுக் கொண் டிருந்த போது, “கலீர் கலீர் என்ற பெயரில், அழகிய முன் னட்டை ஒவியங்களுடன் கையெ ழுத்து மாத சஞ்சிகை ஒன்றினை ஆரம்பித்து சில காலம் நடாத் தினார்.
ஆழமான சமூகப் பார்வை யுள்ள, சுருக்கமான ஆக்கங்களை வெளியிடவே இவர் விரும்பு வார். இவருக்குப் பிடித்தமான ஆக்கங்களை பிரபல பத்திரிகை களுக்கு இவரே அனுப்பி விடு ᎧᏚᏂᎥᎢᎥᎢ .
1960 ஜனவரியில் த ம து
இல்லத்திற்கு ‘தமிழகம்" என்று
பெயர் சூட்டியகோடு, தனது இல்லத்தில் இலக்கிய நண்பர் களை அழைத்து "இளம் எழுத்
தாளர் சங்கத்தை அங்குரார்ப் பணம் செய்து வைத்தார். அதே
42
கால கட்டத்தில் பிரபல எழுத் தாளர் டாக்டர் நந்தியின் வழி காட்டலும், இலக்கிய நண்பர் கள் சந்திப்புகளும் நாவல் நகர நண்பர்களின் இலக்கிய முயற்சி களில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.
டாக்டர் நந்தி, திருவாளர் கள் டொமினிக் ஜீவா, ஈழத் துச் சோமு ஆகியோரின் வரு  ைக யா ல் நாவலப்பிட்டியில் இ. மு. எ. ச வின் கிளை ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது, மகாலிங்கம் செயலாள ராகத் தெரிவு செய்யப்பட்டார். இக் கிளையும், நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இலக்கியம் சம்பந்தப் பட்ட பல கலை, இ லக் கி ய நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. மகாலிங்கம் அவர் களின் கணிசமான பங்களிப்பு காரண மாக, கவியரங்குகள், புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு விழாக்கள் என்று ஒரு குறிப் பிட்ட கால கட்டத்தில் சாதித் தவை சாதித்தவைதான்.
தி ன க ர ன் பத்திரிகைக்கு கினிகத்தேனை விசேஷ குறுநூப் நிருபராகவும், லேக்கஹஸ் பத்தி ரிகைகளுக்கு விளையாட்டுத் துறை நிருபராகவும் கடமை யாற்றிய நண்பர் 1980 களில் தொழில் நிமித்தமாக ஈரான் சவூதி, குவைத், சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு, பாகிஸ் தான் போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இக் கால கட்டத்தில் ஒரு சிறந்த புகைப்பட, வீடியோ புகைப் படக் க  ைல ஞ ர |ா கப் பசிற்சி பெற்றுள்ளார்.
த ன க் கென ஒரு சமூக நோக்கைக் கொண்டிருந்த நண் பர் மாலி, தன் எழுத்துக்கள் மூலம் அவற்றை வெளிக் காட்டி யிருக்கும் பாங்கே அலாதியா

னது. அம்மணியான கருத்துக் கள் இன்னும் நினைவு கூரத் தக்கது.
* வாழ்க்கையில் எந்த முயற்:
சியிலும் ஓர் இலட்சியம் இருக்க வேண்டும். மரத்திற்கு ஆணி வேர் முக்கியமாதல் போல். எழுத்திற்கும் இலட்சியம்.'
‘ஏணியின் முதற் படியை மிதித்தவுடன் மாடியை அடைந்து
விட முடியாது. ** என்றும் , ‘‘ஈழத்து இலக்கியத்தின் முட்டுக்கட்டைகள்'" எ ன் ற
தலைப்பில் கருத்தரங்கம் நடாத்
திய போது,
* 'இலக்கிய கர்த்தாக்களை அவர்களது தொழி  ைல க்
கொண்டு, ளோடு சம்பந்தப்படுத்தி
4y'nawYear, \ew WMM”
வ ச தி வாய்ப்புக
மதிப்
அட்டைப் பட ஓவியங்கள்
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
பிடுவது கண்டிக்கத்தக்கது. இப் ப டி யாக எடைபோடுவதால் நல்ல சிருஷ்டிகள் ம  ைற ந் து போகின்றன." w
' ' . . . . . . பிநாட்டுச் சஞ்சிகை களை விற்பவர்கள் கட்டாயம் ஒரு கணிசமான அளவு நம் நாட்டுச் சஞ்சிகைகளையும் விற்க வேண்டும் என்று ஒரு கட்டாய திட்டம் இருக்க வேண்டும்." நாவலப்பிட்டி இளம் எழுத் தாளர் சங்கம் ஒரு நல்ல சிந்த னையாளனையும், செயற் திறம் படைத்தவரையும் இழந்துவிட் டது. குடும்பத்திற்கு மெழுகு வர்த்தியாக இருந்து தியாகம் புரிந்த தனையனைப் பிரிந்து பெற்றோரும் சகோதரரும் தவிக் கின்றனர். O
ാജിപ്തും
x-T r * ~
20 - 0A
25 - 00
(சிறுகதைத் தொகுதி - சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
15- 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
(சிறுகதைத் தொகுதி --
தூண்டில் கேள்வி-பதில்
20 - 00 ப. ஆப்டீன்)
20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
வியாபாரிகளுக்குத் மேலதிக விபரங்களுக்கு:
30 - 00
தகுந்த கழிவுண்டு.
*மல்விகைப் பந்தல்" 224 ,ே காங்கேசன்துறை வீதி
urbaturaorub.
MMMrwwnignoransMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMA
43

Page 24
| நானும் எனது நாவல்களும்
ான் யாருக்காக எழுது கிறேனோ அவர்களைச் சென்ற டைவதில் என் நாவல்கள், எங் கும் எப்போதும், யாராலும் தடைப்பட்டதில்லை. வாடைக் காற்றிலிருந்து, காட்டாறு உட் படக், கிடுகுவேலி வரை என் தாவல்கள் விரும்பிப் படிக்கும் சுவைஞர்களின் பரப்புவிரிவை நான் உணர்ந்திருக்கின்றேன். என் நாவல்கள் வாசகர்களின் பொறுமையைச் சோதி க்கும் வறட்டு வேதாந்த வெளிப்பாடு களல்ல. வாசகர்களின் உணர்ச் சிகளை மலினப்படுத்தும் ஜன ரஞ்சக நாவல்களுமல்ல. எனது கருத்துக்களை வாசகர்களுக்குச்
சொல்ல நான் எடுத்துள்ள கருவி
யாகவே நாவல்களைக் கருதுகின் றேன். என் கருத்தினைச் சுமக் கும் பாத்திரங்கள் நம்முடன் வாழும் மக்களிடமிருந்து வேறு படுபவர்களல்லர். க  ைத  ைய நகர்த்தும் சம்பவங்கள் கற்பனா வாத நிகழ்வுகளுமல்ல. எனவே, என் நாவல் நான் யாருக்காக எழுதுகின்றேனோ அவர்களை இலகு வில் சென்றடைவதில் வெற்றி கண்டுவிடுகின்றன.
யாழ்ப்பாணத்தில் கி டு கு வேலிக் கலாசாரம் இன்று வெளி நாட்டுப் பண வரவால் மாறி வருன்ன்றது. வெளியமைப்பில் மட் டு ம ன் றி உள்ளகத்திலும்
வெளிநாட்டுப் பணவரவு பெரும்
O
செங்கை ஆழியான்
சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. கூடப்பிறந்த குற் றத்திற்காக வெளிநாட்டில் சீத னம் உழைக்கும் சகோதரர்கள், ஏழ்மையை விரட்ட உழைக்கும் பிள்ளைகள், கணவன்மார் . இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளனர். அவர்கள் படுத் துய ரங்கள், மகிழ்ச்சிகள் ஒவ்வொரு
வர் இல்லத்திலும் உள்ளவை.
கடந்த தசாப்தத்தில் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூடையாகச் சிதறி, யா தும் ஊரே யாவரும் கேளிர் என உலகின் மூலை முடக்கெல்லாம் ஒதுங்கி, உழைத்துவரும் இந்த நாட்டின் இளைஞர்கள் கூட்டம் புதியதொரு வாழ்க்கைச் சுவை யையும் அவலத்தையும் இந்த மண்ணில் ஏற்படுத்தி வருகின்
ற-து
கூடப்பிறந்த சகோதரிகளுக் காகச் சீதனம் உழைக்க வெளி நாட்டிற்குச் சென்று, த மது வாழ்வின் இனிமைகளைக் களவு களாக்கிக் கொண்ட இளைஞர் களை எனக்குத் தெரியும். திரு மணமாகி வாழ்வின் இன்பங் களை அனுபவித்துத் திருப்தி காண்பதற்கு முன்னரே விமான மேறிய ஆடவரையும் எனக்குத் தெரியும். அவர்களின் ஏக்கங்கள் பெருமூச்சுக்கள் காற்றில் கலப் பதும், உடல் தேவைகள் தவறு
纂學

நிகழாத ஒருவ fr
களை ஏற்படுத்துவதும் ரவல்ல, பிள்ளைகளை
பின் ஒருவராக வெளிநாடுகளுக்
குப் பல்வேறு காரணங்களுக்காக தீனுப்பிவிட்டு, இங்கு உறவுக் துயரினால் ஏக்கங்களும், அயல் வனின் கொள்ளியால் வெந்து போகின்ற அந்தப் பித்து நெஞ் சங்களின் இறுதி யாத்திரையும் இங்கு நிரந்தரமான shuai i856if 5 Tib. வெளிநாடுகளில் தம் வம் சத்தை விருத்தி செய்யும் இந்தி மண்ணின் புதல்வர்களும், புதல் விகளும் அங்கு பிறக்கும் 6ir ளைகளும் தொலைந்து போன தலைமுறைகள் என்பதும் எல் லாருக்கும் புரியும். இவற்றினை எல்லாம் என் நாவல்கள் மூலம் சொல்ல ஆசைப்பட்டதன் ଘୋ ଶo ଗrt வாகவே கிடுகு வேலி, மழைக் காலம், யாககுண்டம் எ ன் ற என் நாவல்கள் பிறந்தன.
இடுகு வேலி' என் எழுத் தாக்கத்திற்கு வெற்றியையும்: என் வர்சகர் பரப்பை அகலமாக் கவும் உதவிய நாவல். ஒரு நாவ லின் வெற்றியை எதைக் கொண்டு கணிப்பது? அதனை விரும்பிப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையைக் கொண்டா? அல்லது அந்த நாவல் சமூகத் தில் ஏற்படுத்தும் தாக்க விளை வுகளைக் கொண்டா? முன்னதி லும் பின்னதே சிறந்த நாவலின் வெற்றி விளைவுகள். அவ்வகை யில் கிடுகு வேலி என் னை ப் பொறுத் தள வில் வெற்றி நாவலே. நான் எதனை என் நாவலின் சமூகச் செய்திகளாக முன் வைத்து நாவலைப் பின்னி னேனோ அச்சமூகச் செய்திகள் சென்றடைய வேண்டியவர்க ளைச் சென்றடைந்து தாக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக் கின்றது என்பதற்கு இந்நாவல் "ஈழநாட்டில்" தொடராக வெளி வந்து நிறைவுற்றபோது வந்து
குவிந்த நூற்றுக் கனக்கான
கடிதங்கள் சான்று.
'ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த யாழ்ப்பாணக் கலாச ரம் புறக்காரணங்களால் எல் வாறு மாறுபடுகின்றது என்றும் , மனித உறவுகளில் பணவசதி எப்ப்டி மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றும் கணவன் மனைவி உறவுகள் எவ்வாறு பூசிமெழுகலின்றி நேரடியாகவே வார்த்தைகளில் பரிமளிக்கின்ற தென்பதையும் தனக்கே உரித் தான நடையில் செங்கை ஆழி யான் இந்த நாவலில் காட்டு கிறார்" (கே. எஸ். சிவகுமாரன் 1881). "மக்களின் அதிக கவ னத்தை அண்மைக் காலத்தில் இழுத்த நாவல் இதுவாகும். யாழ் மண்ணின் நிகழ்காலப் படைப்பு. திருமண ஒப்பந்த வியாபாரங்களும், சீதன வரு மானமும், அந்த வருமானத் தைப் பெருக்க, அதனை முதலீ டாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம், அதனால் கட்டியவள் கொள்ளும் ஏக்க மும் சிற்றமும் இந்த நாவலில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. நாவலின் உச்சகட்டம் சமகாலக் கொடூர நிகழ்ச்சி ஒன்றுடன் கலாபூர்வமாக இணைக்கப்பட்டு சமகால இலக்கியம் என்ற Gouluu * பெற்று விடுகிறது' (செம்பியன் செல்வன் - 1984) இடுகு வேலியைப் படிக்கும் யாழ்ப்பாணத்து இன்  ைற ய இளைஞர் பலர் ஒருகணம் ஏதோ ஒரு வகையில் தம்மை நினைக் மல் இருக்க முடியாது. இந்த இடத்தில் தான் பேராசிரியர் லாசபதி கூறிய கூற்றை நினைவு கூரவேண்டும். அவர் கூற்றுப் பின்வருமாறு: பொது வாகக் கூறினால் ஒரு நாவலைப் படிக்கும் வாசகர்சள் தனக்கு டும் அந்த நாவல் எழுதப் பட்டதாகக் கருதத் தலைப்டுப

Page 25
கிறான். நாவலாசிரியன் தலை யிட்டுக் கூறும் சில குறிப்புரை கள், விளக்கங்கள். எச்சரிக்கை கள் ஆகியன தன்னை நோக்கியே கூறப்பட்டுள்ளன என எண்ணு கிறான்" (எஸ். சிவலிங்கராசா - 1989.)
எனது முன்னைய நாவல்களில் நான் கையாளாத உத்தியைக் கிடுகுவேலியில் கையாண்டேன். வாடைக்காற்று, பிரளயம் ஆகிய எனது நாவல்களில், தொடக் கம் - வளர்ச்சி - உச்சம் என்ற நாடக நகர்த்தும் பண்பு இருந் தது. காட்டாறு, யானை, ஒரு மையவட்டங்கள் என்ற எனது நாவல்களில் உச்சம் நோக்கிய வளர்ச்சி என்ற அறிவக நகர்த் தும் பண்பு இருந்தது. கிடுகு வேலி இவ்வகையினத உறு. ஒரு பிரதான பாத்திரத்தின் நோக்
கில், அப்பாத்திரம் சந்திக்கும் சில கதாமாந்தர் தம் இயல்பு களின் விளைவான சம்பவங்க
ளின் இணைப்பில், இக்கதையை நகர்த்தினேன். எந்தச் சந்தர்ப் பத்திலும் சண்முகத்தின் பார்  ைவ யி லி ரு ந்து கதை விலக வில்லை. நான் கூறவந்த சமூ கச் செய்திகளை நாடகம் நகர்த் தும் பன்பிலோ, அறிவக நகர்த லும் பண்பிலோ கூற முன்வர வில்லை. எனவே கிடுகு வேலி உச்சம் நோக்கிய வளர்ச்சியாக அமையாது, சிக்கலை அவிழ்க் கும் வளர்ச்சி எ ன் ற மனோ வியல் நகர்த்தும் பண்பினைக் கொண்டதாக அமைந்தது.
இந்த நவீனத்திற்குக் கிடுகு வேலி என்ற தலைப்பு வைத்த தற்கான காரணங்கள் தெளிவா னவை. யாழ்ப்பாணக் கலாசா ரத்தின் ஒரு குறியீடு கிடுகுவேலி தான். நமது பண்பாடு அதனுள் தான் அமைகிறது. புதுமைகள் புறவாழ்விலும் அகவாழ்விலும் புகுவதை இக்கிடுகுவேலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடி
யாது என்பதுதான் சுதையின் செய்தி. எனவே அதுவே கதைத் தலைப்பாயிற்று. * 1982 - 1985 ஆம் ஆண்டு களில் இலங்கையில் வெளியாகிய குறுநாவல்களுள் சிறந்ததாகக் கிடுகுவேலியைத் தேர்ந்தெடுத்து தமிழ்க் கதைஞர் வட்டம் (தக வம்) பரிசும் சான்றிதழும் வழங் கியது குறிப்பிடத்தக்கது.
எனது மழைக்காலம் நாவல் வெளிநாட்டுப் பயணத் தி ன் நோக்கத்திற்குப் புதிய விளக்கம் தருவதாக அமைந்தது. யாழ்ப் பாணத்துச் சீதனக் கொடுமை யால் வாழ்வின ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட ஒரு த் தி தன் சகோதரிகளுக்காக வி மா ன ம் ஏறுகிறாள். அவளைக் காதலித் துவிட்டு, திருமணம் செய்வதற் குச் சீதனம் கேட்கும் இன்றைய இளைஞனில் ஏற்பட்ட விரக்தி துணிச்சலான ஒரு முடிவினை எடுக்க அவளைத் நூண்டுகிறது. ஒப்பந்த மனைவியாக வாழ்வ தற்குத் தயாராக அவள் ஜேர் மணி செல்கிறாள்.
மழைக்காலம் நா வ  ைல நான் நினைவோடை உத்தியில் நகர்த்தினேன்.
மழைக்காலம் கதாநாயகி யைக் காதலித்தவன் கேட்கி றான்: ‘'தேவி, உனக்கு இங்கு மா ப் பிள்  ைள கிடைக்கவில் லையா?"
"இப்படி நீங்கள் மட்டும் கேட்கப் போவதில்லை. எல்லா கும் கேட்கத்தான் போகினம். அவர்களுக்காக நான் கவலைப் படவில்லை. இந்த மண்ணில் சீதனத்தைக் கொண்டுதான் ஒரு பெண் கலியாணப்பந்தலில் ஈடு பட முடியுமென்றால் இந் த ச் சமூகம் இருக்கக் கூடாது. இந்த மண்ணை வெறுத்துத்தான் நான் ஜேர்மனிக்குப் போறன். உன் னைப் போன்ற இளைஞர்களை
46

கேவலமாக எங்கோ கண்காணாத தேசத் தில் சீதனம் இல்லாமல் கலியா ணம் செய்து கொள்ளவிருக்கும் ஒரு இளைஞனின் பெருந்தன் மையை நினைத்துப் போறன்"
ஜேர்மன் தமிழ் இளைஞர் களுக்கு யாழ்ப்பாணத்துப் பெண் கள் மணமக்களாகத் தே  ைவ என்ற ஒரு விளம்பரம் வந்தது. வீரகேசரியில் தான் அந்த விளம் பரம் வந்தது. பலர் விண்ணப் பித்தனர். நேர்முகப் பரீட்சை யின் போது அவர்களுக்குத் திடுக் கிடும் ஒரு தகவல் தரப்பட்டது. *ஐந்தால டுகள் ஒப்பந்த மனை வியாக வாழவேண்டும்" என்பது தான். எனக்குத் தெரிந்த ஒரு பெண் சென்றாள். அவள் ஒப் பந்த மனைவியாகச் சென்று, அந்த இளைஞனைத் தன் அ ன பாலும், பணிவிடையினாலும், பண்பாலும் கவர்ந்து இ ன் று
சந்தோசமாக வாழ்ந்து வருகின்
றாள். அவளுடைய கதையை மழைக்காலமாக்கினேன். யாழ்ப் பாணத்து இளைஞர்களின் மனப் பாங்கினையும் மேலைத்தேயக் கலாசாரத்தில் ஊறவிட்ட தமிழ் இளைஞர்களின் மனப்பாங்கினை யும் ஒப்பிட்டு நோக்க மழைக் காலம் எனக்கு உதவியது.
வெளிநாடுகளுக்குத் தம் பிள் ளைகளை அனுப்பிவிட்டு, ஏங் கும் தாய் தந்தையரின் மன நிலையைச் சித்திரிக்கும் நவீன மாக யாககுண்டம் உருவாகி யது. பேரப்பிள்ளைகளை மடி யில் இட்டுக் கொஞ்ச முடியாத இரக்கத்துக்குரிய ஒரு தாயை, இந்த மண்ணின் ஒராயிரம் அத் தகைய தாய்மார்களின் பிரதி நிதியாக இந்த நாவலில் நான் சித்திரித்துள்ளேன். வெளிநாடு களில் பிறந்து வாழும் நம் பேரப் பிள்ளைகளின் படங்களை வைத் துப் பார்த்துத் தவிக்கும் வயோ தியப் பெற்றோர்களின் உறவுத்
ஒது க் கி வி ட் டு,
துயர்களை யாககுண்டம் விபரிக் கிறது.
கிடுகுவேலி, மழைக்காலம்,
யாககுண்டம் ஆகிய இந்த மூன்று
எனது நாவல்களிலும் யாழ்ப் பாணக் கலாசாரத்தின் தனித் துவமான விழுமியங்கள் நிறை யக்  ைக யா ள ப் பட்டுள்ளன. *செங்கை ஆழியானுடைய ஆக் கங்கள் நடைமுறைச் சமுதாய ந டப் பி ய ல் புச் சித்திரங்களே யாம். இவற்றின் மூலம் செங்கை ஆழியான் அவர்கள் தனது சமூ கப் பார்வையைத் தெளிவாகப்
புலப்படுத்தியுள்ளார். குறிப்பா கச் சமூக ப் பொருளாதாரக் குறைபாடுகள், த  ைல மு ை ,D
இடைவெளிகள், நகரமயப்பட்ட வாழ்க்கை முறையில் சிதைவுறும் கிராமியம், அழிந்து வரும் பாரம்பரியக் க  ைல மரபுகள், மண்ணோடியைந்த வாழ்க்கை முறை முதலிய பல்வேறு விட யங்கள் இவரது புனைகதைகளுக் குப் பொருளாக அமைந்தன. இவற்றின் மூலம் ஈழத்துத் தமி ழர் சமுதாயத்தின் பதிவேடுகள் எனத்தக்க பல படைப்புகளை இவர் தந்துள்ளார். செங்கை ஆழியானுடைய கதை கூறும் முறைமையில் இரு வகைச் சிறப் புகளை அவதானிக்கலாம். ஒ , று அவரது நுணுக்க விபரண முறை இன்னொனறு சமூக த்  ைத ப் படம் பிடித்து முன்னிறுத்தும் அவரது மொழிநடை" (பேராசி ரியர் சு. வித்தியானந்தன் 1984)
யாழ்ப்பாணத்து மண்ணோ டியைந்த வாழ்க்கை முறைபற்றி யாககுண்டத்தில் நிறைய விபரித் துள்ளேன். எனது நுணுக்கமான விபரண முறைக்கு நான் எழுதிய ‘ஓ. அந்த அழகிய பழைய உலகம்" என்ற நாவல் த க் க உதாரணமாக அமையும் என நினைக்கிறேன். ‘ஒ. அந்த அழ கிய பழைய உலகம் சென்னை யிலிருந்து வெளி வரும் முற்
47

Page 26
போக்கு இதழான தாமரையில் தொ டராக வெளிவந்தது. ரஜ்னி வெளியீடாக நூலுருப் பெற்றது. இந்த நாவல் எனது ஏனைய நாவல்களிலிருந்தும் பல விதங்களில் வேறுபட்டதொரு ஆக்கம் என்பது என் கருத்து. எடுத்துக் கொண்ட கருவிலும் அதனைக் கூற நான் வரித்துக் கொண்ட மொழி நடையிலும் இந்த நாவல் வேறுபட்டதெனக் கருதுகின்றேன். மேலோட்ட மாக இந்த நாவலைப் படிக்கும் போது தெரிவது, எனது நாவல் களில் தொனிக்கும் கதை அம் சம் தான். கதையில்லாமல் கருத் துக்களைக் கூற நான் எப்பொ ழுதும் விழைந்ததில்லை. கருத் துக்கள் மட்டும் தெரிவிக்கப்பட வேண்டுமாயின் அதற்கு நாவல் என்ற இலக்கிய வடிவம் தேவை யில்லை.
**நகரப்புறத்தின் நவீன நாகரிக வாழ்  ைவ வாழ்ந்து வெறுத்த கணகவடிவேலர் என்ற எஞ்சினியர், நவீன தொழில் நுட்ப அறிவியல் விருத்தி, அமை தியையும் அழகையும் குறைத்து விட்டதெனக் கருதுகிறார். இயற்கையோடிணைந்த வாழ் வைக் கொண்டிருந்த பழைய உலகமே மனித சாந்திக்கும், நிம்மதிக்கும் ஏற்றதென எண் ணுகிறார். அந்தப் பழைய அழ கிய உலகத்தைத் தேடிக் கிரா மம் ஒன்றிற்கு வருகிறார். அந் தக் கிராமத்தின் அமைதிச்சூழல் அவருக்குப் பிடித்துக் கொள்கி றது. ஆனால் படிப்படியாக அந் தக் கிராமத்தை நகர்ப்புற நாக ரிகக் கரு விகள் ஆக்கிரமிக்க பழைய உலகம் அழிகிறது. இந் தக் கருப்பொருளைச் செங்கை ஆழியான் இந்த நாவலில் சித்தி ரித்துள்ளார்' (என். சுப்பிரமணி யம் 1985). 'பழைமை மாறு வது தவிர்க்க முடியாத நியதி.
நவீன தொழில் நுட்ப அறிவி,
யலின் சிறைக் கூடத்துக்குள் மனிதர் கைதிகளாக வாழ்கின் றனர். யந்திரங்களின் வருகை மனிதரின் நிம்மதியையும் அ.ை" தியையும் படி ப்ப டி யாக க் குலைத்து விடுகின்றன. அறிவுக் கரு விகள் மனிதகுலத்திற்
பெரும் அச்சுறுத்தலாகி வருகின் றன. இயற்கையோ டியைந்த வாழ்வைவிட்டு, இயற்கையை மாற்றிவிடும் சிற்பிகளாக மனி தர் மாறி வருவது, ப  ைழ ய இ னிய உலகினை நினைத்து ஏங்க வைத்துவிடுகின்ற மெய்
மையை இந்த நாவல் நன்கு சித்திரிக்கிறது" (கான். சுப்பிர மணியம் - 1985). "செங்கை
ஆழியானின் நாவல்களில் காணக் கூடிய தனித்துவ முத்திரைகளை இந்த நாவலிலும் காணமுடியும். கதை அம்சம் பகைப்புல விப ரனை. புதிய செய்திகள், வகை மாதிரிப் பாத்திரப் படைப்பு" எளி  ைம யும் இ னி  ைம யும் நிறைந்த நடை, சிந்திக்கத்தூ டும் உரையாடல் என்பனவற் றோடு செங்கை ஆழியானின் இந்த நாவலில் சமகால அரசி யல் சமூக தத்துவ விசாரங்களும் இடம்பெற்றுள்ளன" (தி. வேலா யுதபிள்ளை 1985).
*" கிராமங்கள் நகரங்களா வதும் கிராமிய மக்கள் நாகரி கத்தின் பிடியில் தள்ளப்படுவதும்
தவிர்க்க முடியாதவை. நவீன சாதனங்களின் இனிமையையும் உதவிகளையும் அழிவுகளையும்
தெரிந்து அனுபவிக்கும் உரிமை ஒரு பகுதி மக்களுக்குக் கிடைக் காது போனது இன்றைய உல கில் நியதியாகக் கூடாது ..." என்று எனது "ஒ அந்த స్టో பழைய உலகம்" - nar டொமினிக் ஜீவா పే தெரிவித்த கூற்று தள்ளிவிடக் கூடியதன்று.
(தொடரும்)
4&

சொல்லம்பலம்
ஈழத்துச் சிவானந்தன்
சொல்லம்பலம் என்பது தில்லையம்பலம் போன்ற சொற் சபையே. சிற்சபைக்குரிய புனிதமும், சிரத்தை நிரம்பிய, சிந்தனை யும் சொல்லம்பலமான சொற்சபைக்கும் வேண்டும். ஆடல்வல்லா னின் அரங்குகள் பலவாயினும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற் புடன் நடம் செய்கின்ற பூங்கழல்களையே மிகுதியும் வியப்பர். சொல்வல்லார் களங்கள் பலதிறத்தனவாயினும், சொல்லம்பலத் துச் சொற்பெருக்கே கணிப்புக்கும் கருத்துக்கும் உள்ளாகின்றன.
கதைப்பில், உரையாடலில் காட்டாத கவனத்தை சொல்லம் பலச் சொற்பெருக்கில் காட்டியேயாக வேண்டும். கவனக் குறைவு கருத்துச் சிதைவை - மாறுபாட்டை உருவாக்கிவிடும். யாகாவா ராயினும் நாகாக்க என்னும் அவதானப் பிரதானம் ஒரு பிரமா goorGlo.
படித்தலும் சிந்தித்தலும் சொல்லம்புலப் பீடாதிப்தியாய் லிளங்க முடியாமைக்குரிய காரணங்கள் என்ன? அவ்வம்பலத்தை அலட்சியமாய் நினைப்பது ஒன்று. சொல்லம்பலத்தைச் சூழ்ந்துள்ள மக்களை மனங்கொள்ள மறுப்பது மற்றையது. அரங்கின்றியாடிய பழக்கத்தை அரங்கிலும் வழக்கமாக்க எண்ணுவது பிறிதொன்று. நிரம்பிய நூலறிவால் அம்பலத்தை சுமை தாங்கி ஆக்கின ல் போே மானது என நினைப்பது மற்றொன்று. வார்த்தை பதினாயிரத்தொரு வரான அம்பலவாணரை மதிப்பிட மறுப்பது அல்லது அவரை ஏதாவது சொல்லி கொச்சைப்படுத்துவது, இன்னோரன்னவை களால் சிலர் சொல்லம்பலத்தில் சோடை போகிறார்கள்.
ஆடத் தெரியாதவள் அரங்கு சரியில்லை என்பதுபோல, சொல் லம்பலத் தேர்ச்சியற்றோர் வேறு வேறு குறைகளைக் கூறிச் சபை யைத் திசை திருப்புவதனையும் காண்கிறோம். சொற்பொழிதல் வித்தை தெரியாமையால் அல்லது சொற்பெருக்க எ டு த் து க் கொண்ட பொருள் குறித்து போதிய ஆயத்தம் இல்லாமையால் பிறர் மீது - அரங்கில் இருப்பவர் மீது அல்லது சபையில் இருப் பவர் மீது சொட்டை சொல்லும் பலவீனம் சொல்லம்பல வியாதி களில் குறிப்பிடத்தக்கது. இவ்வியாதியஸ்தர்கள் வாயில் ஆரோக் கியமான சொற்பொழிவுக் கலை அகப்பட்டு பா ம் பின் வாய் தேரை போல் பலப்பல துன்பங்களை அடைவதுண்டு.
அறையில் ஆடியபின்பே அம்பலத்திற்குப் போக வேண்டுமென் னும் "விதி" ஆடல் பாடல் கலைகள்ோடு சொற்பொழிவுக்கும்
49

Page 27
பொருந்தும். அறையின் பயிற்சியே இன்று பட்டறை எனப்படு கிறது. ஜ்ண்கலை பயில்கூடங்கள் அறை, களம், மேடை என்றே அழைக்கப்படல் வேண்டும். இரும்பாலைகளிலும், மரக்காலைகளி லும் ஏற்கெனவே செயல் நிலைச் சொல்லாய் உருவாகி மக்கள் வழக்கிலுள்ள பட்டறை நுண்கலைப் புலத் தி ல் பயிலப்படுவது பிழையானதோர் உணர்வுத் தாக்கத்தை உருவாக்கிவிடும்.
சொல்லம்பலத்து அரசாட்சிக்கு வாசிப்பும் ஒருதலையாய கடமையே. சித்திரமும் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்னும் வாழையடி வாழையான வழக்கம் இன்று குன்றிவிட்டது. சில கல்வியாளர்கள் யோசிக்கும் அளவிற்கு ஒப்பதில்லை. வேறு சிலர் வாசிக்குமளவிற்கு யோசிப்பதில்லை. இதனை அவர்கள் அம்பலத்தில் நின்று சொல்லம்பு தேடி இடர்ப் பட்டு கையை உதறுவதும், கால் பந்து ஆடுவதும் காட்டிவிடு கிறது. இராமனுக்கு வருணன் அம்பு கொடுத்துதவியது போல் பக்கத்தில் இருப்பவர்கள் சொல்லெடுத்துக் கொடுப்பது அல்லது கைத்துண்டில் காவிவந்த சொற்துண்டைத் தேடி எடுத்துப் பேசு வது போன்ற நிலை உண்டாவதைப் பார்க்கிறோம். வாசிப் பு மனிதனைப் பூரணமாக்கும் என்ற வாக்கியத்தில் மனிதனின் மணி தத்தை உள்ளடக்கியதோடு சொல் வல்லமையையும் முழுமையாக் கும் என்னும் அர்த்தமும் அடங்கியிருத்தல் மனங்கொள்ளத்தக்கது.
சொற்பெருக்கில் நாக்கும் பல்லும் அண்ணமும் உதவு கருவி களாகும். சொற் சுத்தம் என்பதற்கு நாக்கு பல் அண்ணம் சுத் தங்களும் அவசியமே. நாக்கு அண்ணம் இரண்டினோடும் சேர்ந்த பல்லு சுத்தத்தோடு சுகாதாரமாய் உறுதியாய் இருக்க வேண்டும். சொல்லுறுதிக்கு பல்லுறுதி முக்கியம். பல்லுப் போனால் சொல் லுப் போகும் என்பது பழமொழி. பல்லுப் போனால் புதிய பல் வரிசையோடு சொல்லம்பலத்திற்கு வருபவர்களும் உண்டு. இப் படி வருபவர்கள் உறுதியான கட்டுப் பல்லோடு வராது போனால் ஏலவே குறிப்பிட்ட சொல்லும் போதலைச் செய்துவிடும். தளர் பல்லால் சொல்ல முடியாத பல சொற்களை விட்டு விட்டும் பேசுவாரும் உளர். "காலைவந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிளம்போ' என்னும் பாரதிதாசனின் நிலவு குறித்த அழகுக் கவிதை வரியை விலக்கிய அறிஞர்களை யும், மாணவர்களே! மாணவிகளே! என்பதை மாணவர்களே! மானவிகளே! என்று உச்சரித்த நாவரசர்களையும், சொல்லம்பலம் கண்டிருக்கிறது. உணர்ச்சிப் போக்கில் தேர்தல் காலத்து அம்பலத் தில் பேசிய ஒரு பேச்சாளர் "இந்தத் தம்பியையாவின் சேவை நமக்குத் தேவை” என்றவுடன் பல்லுக்கட்டு தன் இடத்தைவிட்டு பாய்ந்து குறிப்பிட்ட தம்பியையாவின் தலையில் விழுந்த வேடிக் கையும் உண்டு. கட்டுப் பற்களை முரசு இறுக்க, இறக்கங்களைக் கவனித்துக் கெட்டியாய்க் கட்டிக் கொண்டால் புழுக்கொடியலை யும் உடைக்கலாம்; அழகுதமிழும் பேசலாம்.
50

அம்பலத்தில் அரசாய் விளங்குபவரே அவையால் கணிக்கப் பட்டுப் பேணப்படுகின்றார். சொல்லேருளவனாய் அம்பலத்தில் ஏறுபவர் தனது உழவு பண்படுத்தல், மறை, விதைப்பு முதலிய வற்றால் நல்ல அறுவடையைக் காட்டி பிறருக்கு விருந்து படைக் கின்றார். இவ் விருந்தின் போது தேவைப்படும் மருந்தும் அவரால் வழங்கப்படுகிறது. விருந்தில் குறுக்கிட்ட மருந்தும் தே  ைவயே என்ற ஒப்புதலைக் கேட்போரும் கரவொலி செய்து வரவேற்பர். வாழ்க்கைக்கு விருந்தும், மருந்தும் வேண்டப்படுபவையே. அம் பலத்தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே என்று அம்பலக் கூத்தனை ஏத்தியமை எண்ணத்தக்கது.
சொல்லம்பலத்தில் ஏற்புக்குரிய பெருக்கு ஊற்றெடுத்து ஒழுங் காய் ஒடி நிரம்ப வேண்டும். அம்பலத்திற்குத் தேவையானவை களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். ஒலி, ஒளி, தெளிவுகளால் அம்பலத்தில் உகந்து கலந்து சொல்மாதிரி பொழிதல் வேண்டும். புலவரெல்லாம் புகழ் கண்ணியனாக இதுவே வழியாகும். சொல் லம்பலத்திலே மதிமுகத் திறனாய், அரிமா நோக்கினராய், ஏறு போய் பீடுநடை காட்டி எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற் றாற்போல் மயிலாய், இளங் குயிலாய், மலைமானாய், இளம் பிடியாய் கோலங்காட்ட வேண்டும். பெரியோர் திருச்சபையில் நிற்கும் நல்லவெல்லாம் சொல்லும் வல்லவனாய் பி ர கா சிக் க வேண்டும். சபையோரை ஆனந்தத் தென்னமுது உண்ண வைக் கும் உபாயங்களைக் கையாள வேண்டும். சொற்பொழிவுக் கலை யின் வெற்றிக்குச் சொல்லம்பலத்து அறிவு முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. ()
மலருக்குப் பின் வந்த இரண்டு இதழ்களிலும் சென்னையில் மலர் அறிமுக விழா, கொழும்பில் மல மலர் ரைப் பற்றிய கருத்தரங்கு போன்ற கருத்துக்களைத் தான் படிக்க முடிந்தது. ஆனால் தூரப் பிரதேசங்க 剑 ளிலுள்ள எம்மால் மலரைப் பெற்றுக்கொள்ள இயல வில்லை. எனவே மலர் எம்போன்றவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்யவும் எனப் ப்லர் கேட்டு க் எழுதியுள்ளனர்.
வெள்ளி விழா மலர் தேவையானோர் ரூபா 75/-க் கான காசுக் கட்டளை, அல்லது கர்சோலையை நமது ship முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
- ஆசிரியர்.
5.

Page 28
விமர்சனக் கருத்தரங்கு
நீங்கள் முன்பொரு தடவை தூண்டில் பகுதியில் குறிப்பிட்டது போல, சிறுகதை, நாவல், கவிதை சம்பந்தமாகப் பட்ட  ைற ஒன்றை ஆரம்பித்து அந்த இலக்கியப் பட்டறையில் இளந் தலை முறையினரைப் பெரும்பாலும் ஒருங்கு சேர்த்து அதை ஒழுங்காக நடத்தி வந்தால், புதியவர்கள் இலக்கிய உலகில் வந்து சேருவ தற்கு இது முழு வாய்ப்பாக அமையும் என்பது எனது எண்ணமாரும். ஐம்பது, அறுபதுக்களில் உங்களைப் போன்றவர்கள் ஈழத்து இலக்கியத் துறைக்குள் உள் நுழைவதற்கு முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் வழிகாட்டி வந்தது. பின்னர் எழுபதுக்களில் பல்கலைக் கழகங்கள் புதிய படைப்பாளிகளை உருவாக்குவதற்கு கால் கோளாக இருந்தன. அந்தக் காலங்களில் இலக்கிய மேடைகளிலும், தினசரிப் பத்திரிகைகளின் வார இதழ்களிலும் மற்றும் சிறிய சஞ் சிகைகளிலும் வெளிவந்த கார சாரமான இலக்கிய விவாதங்களை இன்று நினைத்தாலும் கூட உடம்பு புல்லரிக்கிறது.
ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்று முகிழ்ந்து வரக் கார ணமே அந்தக் காலகட்டங்களில் நடந்த இத்தகைய இலக்கிய விவாதங்களும் கருத்து மோதல்களும் தத்துவார்த்தப் பிரச்சினை களின் வெளிப்பாடுகளும்தான் என என்னைப் போன்றவர்கள் இப்பொழுதும் நம்புகின்றோம்.
இப்படியான தூண்டு கோல்கள் இன்றைய இளஞ் சந்ததியின ருக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு வசதிகள் இல்லை. கலந்து கொள்ளக் கூடிய கூட்டங்கள் கூட. நூல் வெளியீட்டு விழாக்கள். அல்லது பாராட்டு விழாக்கள் என்றே அழைக்கின்றன. இவ்விழாக் களில் வாய்ப்பந்தல் வார்த்தைகளே கடைசியில் மிஞ்சுப் போய் நிற்கின்றன. இவைகளால் எந்தவொரு பிரயோசனமும் இளம் படைப்பாளிகளுக்கு இன்று கிடைக்க வாய்ப்பில்லை.
மல்லிகை கூட. மலர் வெளியீட்டு விழாக்களை, அல்லது மல்லிகைப் பந்தல் நூல் வெளியீட்டுக் கூட்டங்களை நடத்தி முடிக் கின்றதே தவிர, மல்லிகையின் கனதியான வாசகர்களைக் கூட்டி விமர்சனக் கூட்டங்களை நடத்துவதற்கு முன் வருவதில்லை. கடந்த கால் நூற்றாண்டுகளாக மல்லிகை வெளிவருகிறது என் பது பெருமையல்ல, இந்த இருபத்தைந்து ஆண்டுகளுள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு என்னத்தைச் சாதித்தது என்பதை விமர்சன ரீதியாக தரமான சுவைஞர்களைக் கொண்டு நிறுவ வேண்டியதும் உங்களைப் போன்றவர்களின் தலையாய பணியாகும். இனிமேல் விழாக்களைத் தவிர்த்து. விமர்சனக் கூட்டங்களை ஒழுங்கு செய்தால், கடந்த காலங்களில் மல்லிகையை ஆதரித்த வர்களும், சுவைத்தவர்களும் இந்த மண்ணில் தரமான இலக்கியம் துளிர்விட வேண்டுமென விரும்புபவர்களும் கலந்து கொண்டு தத் தமது கருத்துகளை முன் வைத்து மல்லிகையின் எதிர்கால வளர்ச்சி யைச் செழுமைப்படுத்துவார்கள் என்பதே எனது மொத்தக் கருத் தாகும்.
க. யோகேஸ்வரன்
52

தூண்டில் என்ற இக் கேள்லிபதில் பகுதி பல.ாலும் விரும்பிப் படிக்கப்படும் பகுதியாகும். ஏதோ பக்கம் நிரப்புவதற்காகத் தோன் றிய பகுதியல்ல, இது. சுவைஞர் களிடம் மனந்திறந்து கதைப்பதில் ஓர் ஆர்ம திருப்தி. இளந் தலை முறையினரை உணர்ந்து, அறிந்து கொள்வதற்கும், அவர்களை நாம் சமீபிப்பதற்குமான ஒரு களமே இத் தூண்டில், நம்மைச் சுற்றித் தினசரி ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. நம் தின சரி வாழ்க்கையைப் பாதிக்கின்றன. இதைச் சரிவரப் புரிந்து கொள் வதற்கு நாம் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இளத் தலைமுறையினர் இந்தந் தளத் தைப் பயன்படுத்ற வேண்டும்.
து கன் டில்
* இந்த ஆண்டு வெளிவர வேண்டிய 26 - வது ஆண்டு
E ρου ή வெளிவரவில்லையே,
என்ன காரணம்?
பசறை, க. த. இளங்கோவன்
ஆண்டு தவறாமல் மலர் களை வெளியிட்டு வந்துள்ளேன். இந்த ஒராண்டுக் காலம் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுவிட்டது. மின் சாரத் துண்டிப்பு, கடதாசித் தட்டுப்பாடு காரணங்களால் இம் முறை மலர் வெளியிட இயல வில்லை. நம்பிக்கையுடன் இருங் கள், 27 - வது மலரை உங்களது கரங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
0 முந்தி அடிக் க டி வந்து ாோகும் எழுத்தாளர்கள் இப்பொழுது தொடர்ந்து மல்லி
சுைக்கு வந்து போகின்றனரா?
உடுவில், கே. நவகீதன்
பிரயாணக் கஷ்டம், சூழ் நிலைப் பதட்டம், தவிர்க்க முடி யாத வேலைகளை உடனுக் குடன் செய்து விட்டு வீட்டிற் குள் முடங்கிக் கொள்ளும் தின சரிச் செயல் திட்டம் காரண மாக எல்லாரும் வருவதில்லை. ஆனால் கணிசமான இலக்கிய நண்பர்கள் அ டி க் க டி வந்து கலந்து பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் போகின்றனர். பஸ் போக்கு வரத்து இல்லாத காரணமாக வெளியூர் நண்பர் களை அபூர்வமாகத்தான் பார்த் துக் கதைக்கக் கூடிய சர்ந்தப் பம் ஏற்படுகின்றது.
53

Page 29
O நீங்கள் எப்படி உருவானிர்
கள்? மல்லிகையை எப்படி உருவாக்கினீர்கள்? மாணிப்பாய், ச, தவநேசன்
அது ஒரு பெரிய கதை. சாதாரண படிப்புப் படித்த ஒரு வன், மிகச் சாதாரணக் குடும் பத்தில் பிறந்த ஒருவன், இலக் கிய உலகில் வேர் பா ய் ச் சி வளர எத்தனை எத்தனை சிர மங்களைப் பட முடியுமோ அத் தனை கஷ்ட நிஷ்டூரங்கள் பட் டுத்தான் நான் உருவாகி வளர்ந் தேன்.
சிறுவயசில் இருந்தே என் நெஞ்சுக்குள் நெருப்பொன்று எரிந்து கொண்டிருந்தது. எப் படியாவது இந்த மண்ணுக்குஎனது தாய் மொழிக்கு ஆக்க பூர்வமான சாதனை ஒன்றைச் செய்து காட்ட வேண்டுமென்ற ஒர் ஆவேசம் என்னுள் முகிழ்ந்து சுடர்விட்டு திசை காட்டி வந் துள்ளது. சுருக்கமாகச் சொன் னால் மல்லிகையின் உயர்ச்சியும் வளர்ச்சியுமே உழைப்பு ஒன்று தான்!
D மனதில் நிற்கத் தக்க புத்த கமொன்றை இந்தக் கால கட்
டத்தில் படித்துச் சுவைத்தீர் களா?
இளவாலை, எம். ரமணன்
எனது ஒய்வு நேரப் பொழுது போக்கே இடையறாது வாசிப் பது ஒன்றுதான். உண்மையைச் சொல்லப் போனால் நல்ல புத் தகங்கள் கிடைப்பது அரிது, சமீ பத்தில் கொழும்பு போயிருந்த போது "ஒரு கடலோரக் கிராமத் தின் கதை" என்ற புத்தகத்தைப் படித்தேன். அவசியம் படிக்க வேண்டிய நூல் அது.
O 60 - ம் ஆண்டுக் காலகட்
டத்தைப் போல, இன்று
54
இளம் எழுத்தாளர்கள் வீச்சுடன் சகல கட்டுப்பா டு க ைளயும் உடைத்துக் கொண்டு எழும்பி
வர முயலவில்லையே, என்ன காரணம்? சுன்னாகம், அ. ஜெகதீசன்
அ ந் த த் தஸ்ாப்தங்களில் அப்படியான ஓர் இ லக் கி யத் தேவை இருந்தது. பல்வேறு பகு திககளில் இருந்து இளைஞர்கள் கெம்பி எழும்பி வந்தனர். அவர் களுக்கு வழிகாட்டத் தக்கதாக இலக்கியக் குறிக்கோள்களும் இருந்தன. இன்றைய இளந் தலைமுறையினரின் இலட்சிய தாகம் வேறு அதற்காகக் கடு மையாக உழைத்தும் வருகின்ற னர். நாளை மலரும் போது ஒரு புதிய இலக்கியத்தை இந்த மண் ணில் மலர வைக்கப் போகின் றனர், இவர்கள்.
0 இலக்கிய உலகில் கருத்து முரண்பாடுகள் அவகியம்
தானா? எல்லாருமே ஒத் து
மேவிப் போகக் கூடாதா?
ஆர். குமார்
விஞ்ஞா ன ம், அறிவு வளர்ச்சி, கல்வி, கலை, இலக் கியத் துறைகளில் கருத்து முரண் பாடுகள் முக்கியம். கருத் து முரண்பட முரண்படத்தான் புதுப் புது ஆய்வுக் கண்டு பிடிப் புக்கள், புதுப் புதுச் சிந்தனைகள் பிறக்கும். கருத்து முரண்பாடு களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துவிடக் கூடாது. பகை யுணர்வு அறிவை மந்தப் படுத்தி விடும்.
கொழும்பு - 11,
 ைநமது பிாதேசத்தில் வெனி
வந்து கொண்டிருந்த பல சிற்றேடுகள் கட்டம் கட்டமாக நின்று விட்டனவே. இவைக ளைத் திரும்பக் கொண்டு வரு வது இந்த மண்ணின் இலக்கிய

வளர்ச்சிக்கு ணக்கம் சேர்க்கு மல்லவா?
உரும்பிராய்,
இ ன்  ைற ய சூழ்நிலையில் சிற் றேடு ஒன்றை வெளிக் கொணர முயற்சிப்பதே அசுர சாதனையாகும். மின் சா ர த் துண்டிப்பு, பேப்பர் கற்பனை பண்ண முடியாத விலையேற்றம் போன் ற வை களுக்கு ஈடு கொடுத்து இத்தகைய ஏடுகளை நடத்துவதே ஒரு பாரிய முயற்சி. ஓர் அரசாங்கத்தையே நடத்தி விடலாம். அத்தகைய சிரமமும் கஷ்டமும் உள்ள தொழில், இந் தச் சிற்றேடு வெளியிடும் துறை அர்ப்பணிப்பு LD50Tunøör Golfo உடையவர்கள் தொடர் ந் து முயன்று கொண்டுதான் இருக் கின்றனர்.
கே. செல்வராஜ்
 ைமுன்ன பல பிரதேசங்களைக்
கெளரவித்துச் கிறப்பிக்க சிறப்பு மலர்களை வெளியிட்டு வந்தீர்கள். இனிமேலும் சிறப்பு
ம ல ர் போட உத் தே சம் solatiot LIT?
சிலாபம், எஸ். எட்வர்ட்
ஆரோக்கியமான பல திட் டங்கள் உண்டு எம்மிடம்" சூழ் நிலை ஒத்துவரவில்லை. கொஞ் சம் பொறுமையைக் க ைடப் பிடியுங்கள். எதிர் காலத்தில் பல்வேறு சிறப்பு மலர்களை உங் களுக்கு அர்ப்பணிப்போம். O நீண்ட நாட்களாக கம்பன்
விழா நடைபெறவில்லையே எப்பொழுது அது தொடர்ந்து நடக்கும். கம்பன் கழகத்தின ருடன் தொடர்பு உள் ள வர்
என்கின்ற முறையில் இந்தக் கேள்வி.
தும்பளை, க. இராசதுரை
சூழ்நிலை காரணமாகச் சென்ற தடவை நடைபெற
இருந்த கம்பன் விழா நடை பெற முடியாமல் தவிர்க்கப் பட்டு விட்டது. இவ்வாண்டு
கம்பன் கோட்டத்தில் ஜாம் ஜாமென்று விழா நடத்த ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருவதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் சொல் லக் கூடியதாகவுள்ளது.
* இந்த ஒராண்டுக் காலகட் டத்தில் தமிழகத்திபிருந்து
வெளி வரும் சிற்றேடுகளைப்
படித்துள்ளீர்களா?
சுன்னாகம், கே. கனகலிங்கம்
கணையாழி இதழ்களில் இரண்டொன்று மாத்திரம் படிக் கக் கிடைத்தது. மற்றப்படி புத் தகங்கள், சஞ்சிகைகள் கிடைப் பது சிரமமாக இருக்கின்றது. முன்னர் நண்பர்கள் மூலம் அல் லது தபால் வரத்து மூலம் சஞ் சிகை, புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன. இப்பொழுது அதற் குரிய வசதி அருகிப் போயுள்ளது.
அ மல்லிகை ஆரம்பித்த காலங்
களில் இருந்த சிரமங்களுக் கும், அதன் வெள்ளி விழா நடைபெற்ற பின் உள்ள காலங் களுக்குமிடையே உள்ள வித்தி
யாசம் என்ன?
கோப்பாய், ச. தியாகராசா
மல்லிகையை ஆரம்பித்த காலங்களில் இருந்த சிரமங்கள் ஒருவகைப்பட்டவை. மல்லிகை வளர்ந்து பிரபலமானதின் பின் னர் இன்று நம் முன் தோன்றும் சிரமங்க வேறுவகைப் பட்டவை. எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பெருக்கிச் சொன்னாலும் சிற் றிலக்கிய ஏட்டை வெற்றிகர மாக நடத்தி முடிக்கும் தனி மனித முயற்சி பாரிய சிரமத்துக் குட்பட்டவையே.
O முன் ன ரைப் போல இப் பொழுது இளம் எழுத்தா
55

Page 30
ளர்களை மல்லிகை உருவாக்க வில்லையே! இளந் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக க மல்லிகை தொடர்ந்து முயன் றால் என்ன?
சுதுமலை ஆர். பூபதி
கலைஞனை உருவாக்குதல் என்பது சரியான வார்த்தை பல்ல; தரமான கலைஞன எங் கிருந்தோ தோன்றுபவன். பள் ளிக்கூடம் நடத்தி எழுத்தாளர் களை உருவாக்கிவிட முடியாது. அவர்களது நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கும் படைப் பு ப் பொறியை இனங் கண்டு பற்றி யெரிய வைக்கலாம். மல்லிகை இதைக் காலா காலத்தில் தனது கடமையாகச் செய்து கொண்டே வருகின்றது.
O மலேஷியாவில் வளர்ந்து
வரும் தமிழ் இலக்கிய முயற் சிகள் பற்றி ஒன்றுமே தகவலுக் குக் கூடத் தெரிவதில்லையே, மல்லிகை முயன்று அங்குள்ள இலக்கிய நிலைவரம் பற்றி நமக் குத் தகவல் தந்தால் என்ன? நல்லூர். எஸ், மூர்த்தி
நானும் தேடல் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தகவல்கள் கிடைக்கின்றதே தவிர, ஆழமாக அம் மண்ணில் முகிழ்ந்து வரும் இலக்கிய முயற்சிகள் பற்றித்
நெல்லியடி,
தெளிவாகக் கிடைப்பதில்லை, டாக்டர் நந்தி ம லே ஷியா போய் வந்த பின்னர் சில இலக் கிய நண்பர்களின் முகவரிகளைத் தந்துதவினார். அவர்களுடன் தொடர்பு கொண்டும் தகுந்த பயன் கிடைக்கவில்லை.
இ கடந்த பத்து ஆண்டுகளு
டன் ஒப்பிடும் பொழுது, எமது தமிழ் மண்ணில் கலை இலக்கிய வளர்ச்சி வளர்ந்துள் ளதா?
சண்டிலிப்பாய், த. மரியதாஸ்
கணிசமான மக்கள் மத்தி யில் நமது கலை இலக்கியங்கள் சென்றடைந்துள்ளன. பல சுவை ஞர்கள் இந்தக் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். அ டு த் த பத்து ஆண்டுகளில் மாபெர்ய கலை இ லக் கி ய த் திருப்பம் இந்த மண்ணில் நடை பெறும் என உறுதியாக நம்பு கின்றேன்.
0 உங்களுடைய இடைலிடாத உழைப்பிற்கும் நம்பிக்கைக் கும் எதிர்காலத்தில் உரிய மதிப்பு இருக்குமா?
ஆர். செந்தில் நம்பிக்கையாக எதிர்சுர்லத் தலைமுறை என்னைப் புரிந்து
கொள்ளும். தக்கவாறு மதித்துக் கெளரவிக்கும். () )
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
56

esaseeraezeasaassas حضصحصہ la ܥܦܝܥܫܝܥܦܚܚܦܫܝܚܫܚ
ESTATE SUPPLIERs COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS Ol_MAN GOODS
TN FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia: 26587
E, SITTAMPALAM&SONS.
223, FIFTH cross sTREET, COLOMBO-1 1.
vrrr' wrverrrrry qSiSS SiSSSiSSSiSSSiSSSSSS

Page 31
L LGLLLLLLLSLSSLLSLSL SLLLLLLDLLLLLLLSLLLSLGGGLS SLSLSL
 
 

SLLGLLLLL LLLL LL LBGL LLLLCL LLLLLL TSSSLS cS L LLLLLLLLS
Q. D, 88 NEWS/91
Gandara lai Tribe Plywood sh Kennpå
.