கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.05

Page 1
ALA PROGRESSIVE
分fegフ
 

MONTHLY MAGAZINE

Page 2
ņuűngio)-a
............... '|]]']]'s
quosriuoap mbungsreo-mugi@@@@romsgsofi) @yıęsłe. A ‘L 1įoorsionsson-s ·ıssorsooqsh soumginieaoguo T un o 149ousseguoũgı@ş olį9ootsøns s-a
olgotņisession-s útssasmųıs@ 1gogsusqī£‘ıyoo-Jo)un(o) s-ı-ı ıse ıssumretosos, ĶoņÁNooņos
‘IỆ0ū1çosofissie 1çs-ıhıęsłe,uga道~효'Q'@'s
ZZ$77Z : ĐUOU|d ƏOļļļO peƏH|\/H|d WQHQ ou Oļļɔun so seuỊduunusn : LỊoueug
*V/N-J-J.\/[^翻身|- CILT “Oɔ SILNV LT mSNO O “peáųļy opeo, leuea esequuy에3nouonusnoɔWNHHV[ :90ļļļO peəH
uuous souðullduoɔ ŋsƏg əų, upųM
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
Malikat' Progressive Monthly Magazine 2OS Go - 1987
வெள்ளி விழாவை நோக்கி. 22-ஆவது ஆண்டு
?லமையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருகின்றது. பாதுகாப்பு வலயத்திற்குள் காரியாலயமும் வசிப்பிடமும் அமையப் பெற்றதால் மன நிலை நிம் மதியற்று இருக்கின்றது. ஷெல் அடி, பொம்பர் விமானத் தாக்கு தல் இத்தனைக்கும் ஈடு கொடுத்து தினசரி மல்லிகை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று.
அத்துடன் மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீட்டு வேலைப் பளுவும் இன்று நமது தோள்களில் தொற்றிக் கொண்டுள்ளது, இருந்தும் நாம் மனங் கலங்கவில்லை. எந்தக் கஷ்டங்கள், நெருக் கடிகள், சுமைகள் எம்மீது திணிக்கப்பட்டாலும் "கிறுங்க" மாட் டோம். இதை மல்லிகைச் சுவைஞர்கள் கடந்த கால ங் கனில் உணர்ந்திருப்பார்கள்.
இந்த நெருக்கடிகளால் சற்றும் பாதிக்கப்படாமல் - வெறும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டவர்க ளான சிலர் கடிதம் எழுதுப் போது சில சமயங்களில் சிரிப்பாகவும், வேறு சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கின்றது. இத்தனை யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் நமது இலக்கியக் கடமையைத் தினசரி செய்து வருகின்ருேம் என்பதைச் சரிவரப் புரிந்து கொள் ளாதவர்கள் பற்றி என்னத்தைச் சொல்வது?
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் - தபால் தலை கிடைக்க முடியாத சூழ்நிலையிலும் - நாம் நமது வாசகர்களின் ஆர்வத்தை மனசில் தக்கவைத்துக் கொண்டு அவர்களது ஆவலைப் பூர்த்தி செய்ய முனைந்து செயல்படும் வேளையிலும் அவர்கள் சும்மா ஒப் புக்கு "இத்தனே கஷ்ட நிலையிலும் நீங்கள் தொடர்ந்து இயங்கு வது வியப்புக்குரியது!’ என எழுதி விட் டு பிரச்சினையின் ஆழ அகலத்தை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்

Page 3
え * 25扉リ芝5ö旨羅
& 海
தரமான "இலக்கியச் சுவை ஞரான ஜனப் எம். ஏ. gGmortrit அவர்கள்தான் முதன் முதலில் நண்பர் எம். ரெங்கநாதனை எனக் குக் கொழும்பில் அறிமுகம் செய்து வைத்ாார்.
நண்பர் ரெங்கநாதன் மாண வப் பருவத்திலிருந்தே அரசிய ளில் அதிக அக்கறை கொண்டி ருந்தவராவார். திருச்சியில் படித் துப் பட்டம் பெற்றவரான இவர் பின்னர் வியாபாரத் துறையில் நிலை கொண்டு விட்டார். இவரது அரசியல் ஆர்வத்திற்கு_இவரது 麗 தகப்பனரும் ஒரு காரணமாக ா, எம். ரெங்கநாதன் அமைந்திருக்காலம். திரு ரங்கநாத
ராஜாஜி மந்திரிசபை காலத்தில் இவரது தந்தையார் திருச்சி லால்குடித்தொகுதிக்கு எம்.எல். ஏ. யாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.
மல்லிகையின் கடைசிப் பக்க விளம்பரம் பலரது Lyrtris)668) in யும் கவர்ந்த ஒன்ருகும். குமுதம் ஆரம்ப கால ரெமி விளம்பரத் தைப் போல, மல்லிகைக் கடைசிப் பக்க நிரந்தர விளம்பரத்தைப் பற்றிப் பலர் என்னை நேரிடையாகவே விசாரித்ததுமுண்டு.
*கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல்; கண்ணதாசனுக்கு ஒரு சின்னப்ப தேவர்; எனக்கு ஒரு ரெங்கநாதன்" என நான் தூண் டில் கேள்விக்குப் பதிலளித்ததாக ஒரு ஞாபகம். s
அந்தளவிற்கு என் வாழ்வில் ஏற்படும் இலக்கியப் பொருளா தார நெருக்கடிகளுக்குக் கை தந்து உதவார். இவர் செய்யும் உதவி யைக் கூட், ம்ற்றவர்களுக்குத் தெரியாமல் செய்வார். இவரது இரண்டாவது மகன் மகேந்திரனுக்குச் சென்னையில் திருமணம் நடைபெற்ற சமயம் சகல தமிழக எழுத்தாளர்களுக்கும் அழைப்ப னுப்பி வந்த எழுத்தாளர்களை உபசரிக்கும் பணியை எனக்களித்தவர் •
தமிழகத்திலிருந்து வந்த பல வர்த்தகர்கள் தமது துறையைத் தவிர வேறு துறைகளை - குறிப்பாக இலக்கியத் துறைபற்றி பிரக் ஞையேயில்லாமல் மறைந்து வாழும் நிலையில் இவர் ஈழத்து எழுத் தாளர் மேல் வைத்திருக்கும் அபிமானம் பிரமிக்கத்தக்க ஒன்ரு கும்.
இவரது நாமம் மல்லிகை வரலாற்றுடன் இணைத்துப் பேசப் படத்தக்க ஒன்ருகவே மிளிரும்,
- டொமினிக் ஜீவா
 
 
 
 

பேச்சல்ல முக்கியம்
நீர்வுதான் அவசியம்!
இந்த மண்ணில் இன்று பல எழுச்சிகளும், ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் தினசரி நடைபெற்று வருகின்றன.
"மனித உரிமையை மீருதே!" என ஊர்வலம். "பாதுகாப்பு வலயத்தை அகற்று" எ ன் ருெ ரு கண்டனக் கூட்டம்.
*எரிபொருள் தடையை அகற்று!" என மக்கள் எழுச்சி மகா நாடுகள்.
"யாழ். போதன ஆஸ்பத்திரியை அகற்றதே!" என்ருெரு பிர மாண்டமான மக்கள் எழுச்சி,
-இப்படியே கட்டம் கட்டமாக ஊர்வலங்களும் கட்டனக் கூட்டங்களும் எதிர்ப்பு மகாநாடுகளும் இன்று தின ச ரி இந்த மண்ணில் நடைபெற்றுத்தான் வருகின்றன.
இவைகளுக்கெல்லாம் மூல காரணம் இந்த மண்ணிலே காலாதி காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மைத் தேசிய இனத்தின் நியா யமான அபிலாஷைகள் நிறைவேற முடியாததும், அதனது இயல் பான அடிப்படை மனித உரிமைகள் அலட்சியம் செய்யப்பட்டு வருவதுமேயாகும்,
இனப் பிரச்சினை சம்பந்தமாகப் பல மகாநாடுகள் இதுவரை நடைபெற்று விட்டன.
தொகை தொகையான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று இடை நடுவில் முறிந்து விட்டன.
தமிழ் மக்கள் நடுவில் கிடந்து அல்லோல கல்லோலப் படு கின்றனர். s
மொத்தமாகச் சொல்லப் போனல், வாழ்வா - சாவா என்ற நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
இவை சகலதும் தீர்வதற்கு சரியான திசைவழி அரசியல் தீர்வு தான் என்பதை ஆளும் கூட்டம் உணரும்போதுதான் இந்த மண் ணில் நிம்மதி பிறக்கும்,
-தவறினல் நாடு சர்வதேசச் சந்தைக் கடையாகிவிடும்

Page 4
தோழர் பொன். குமாரசாமி மக்களை நேசித்தவர். இந்த நாட்டில் வாழும் தமிழ் - சிங்கள - மலையக மக்களுக்காக உழைத்தவர். இவர்கள் ஒரே வர்க்கத் தைச் சேர்ந்தவர்களானுலும், கருத்துக்களாலும் கலா சாரத்தாலும் நம்பிக்கைகளாலும் வேறு வேறுபட்ட பாரம்பரியங்களைக் கொண்டவர்கள். இவர்களினது பொதுச் சுபீட்ச எதிர்காலம் கருதி முழுநேர ஊழிய ஞகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் “கும்" அந்த
இலட்சிய வேள்வியிலேயே கடைசியில் தன்னை அர்ப்
பணித்துக் கொண்டார்.
ஆசிரியர்
மக்களை நேசிக்கத் தெரிந்தவர்; மக்களால் நேசிக்கப்பட்டவர்.
தோழர் பொன். குமார சாமியை நான் நேரில் சந்தித்தது 19 6 தேர்தல் சமயத்தில்தான்.
பருத்தித்துறைத் தொகுதி யில் தோழர் பொன், கந்தையா பா ரா ஞ மன்றத்திற்கு ஒர் அபேட்சகராகப் பாட்டியிட் டார். அந்தச் சமயத்தில் நான் அந்தத் தொகுதிக்குப் பிரசாரத் திற்காகப் போய் வந்தேன், அப் பொழுது ஒரு பொதுக் கூட்டத் தில் அவர் பேசிக் கொண்டிருக் கும் போதுதான் முதன் முதலில் அவரைக் கண்டேன்.
சும்மா அறிமுகமே தவிர, அது அப்படியொன்றும் பெரிய தொடர்ந்த தொடர்பல்ல.
அதற்குப் பின்னர் சில சந் தர்ப்பங்களில் கொழும்பில் சந் திப்பதுண்டு. அச் சந்திப்புகள்
- டொமினிக் ஜீவா
கூட ஏதோ திடுகூருக அமைந்து விடும். வீதியில் அல்லது பொதுச் கூட்டங்களில் சந்தித்துத் தலை யசைக்கும் சந்திப்பாகவே அவை கள் பெரும்பாலும் அமைந்து விடுவது வழக்கம்.
1972 ம் ஆண்டு மாத்தளை யில் ஐக்கிய தோட்டத் தொழி லாளர் சங்க கலாசார மகாநாடு நடைபெற்றது. அக் கலாசார மகாநாட்டில் என்னைக் கலந்து கொள்ளும்படி காரியதரிசி என் கின்ற முறையில் தோழர் கும் எனக்கு ஓர் அழைப்பு விடுத்தி ருந்தார். மலையகத்திற்குப் போவ தென்ருலே எனக்கொரு குஷி அந்த அழைப்பை மெத்த மகுழ்ச் சியுடன் ஏற்றுக் கொண்டேன். மாத்தளையில் ஒரு கல்லூரி யில் விழா நடைபெற்றது. எக் கச்சக்கமான சனக் கூட்டம் ,
 

அக் கூட்டத்தில் நானும் பேசி னேன். அந்த விழாவில்தான் நான் பிரபல மலையக எழுத்தா ளர் திரு, சி. வி. வேலுப்பிள்ளை யைச் சந்தித்தேன்.
விழாவின் உச்சக் கட்டம்.
கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் முதலிடம்.
மலையகப் படைப்பாளர் திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்களுக் குப் பொன்னுடை போர்த்திக் கெளரவிக்கும் நிகழ்ச்சி ஆரம்பிக் கப் போகின்றது.
தோழர் கும் மேடையில் இருந்த என்ன நெருங்கி வந் தார். "சி. வி. அவர்களுக்கு நீர் தான் எமது சார்பில் பொன் ஞடை போர்த்திக் கெளரவிக்க வேண்டும்" எனக் கேட்டு க் கொண்டார்.
நான் அவரது வேண்டுகோளை மறுதலித்தேன். "வேறு உங்க ளது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" எனக் கேட்டேன்.
*அதல்ல முக்கியம். மலைய கப் புதல்வனுக்கு, யாழ்ப்பா ணத்து உழைக்கும் வர்க்கத்துக் கலைஞனைக் கொண்டு கெளரவிக் கச் செய்வதுதான் எமது திட் படம்" என்ருர் கும்.
உண்மையிலேயே சொல்லு கின்றேன். என் உடம்பு ஒரு கணம் புல்லரித்தது.
என் வாழ்க்கையிலேயே எனக் குக் கிடைத்த மகா கெளரவம் இது என நான் இப்போதும் இதையே கருதி வருகின்றேன்.
அதன் பின்னர் எனக்கும் தோழர் கும்மிற்கும் தோழமை நெருக்கம் வெகு கெச்சிதமாக வளர்ந்தது. "நான் எங்கிருந்தா லும் எனக்கு மாசா மாசம் மல்லிகை ஒழுங்காகக் கிடைக்க
ஆவன செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
“எட அப்பா; நான் முழு நேர ஊழியன். என்னட்டை மொத்தமாகச் சந்தாக் காசைக் கேட்காதை அப்ப அப்ப இருக் கேக்கை தாறன்" என ஒவ்வொரு மல்லிகையையும் பெற்றுக் கொள் ளும் போது சொல்லுவார்.
என் வளர்ச்சியிலும், மல்லி கையின் வளர்ச்சியிலும் மிகக் கண்ணும் கருத்துமாக அவதான மாக இருந்தார். எழுத்தசுளர் களில் பரம விசுவாசம் "இந்தப் புத்தி ஜீவிகள் இப்படித்தான். ஆணுலும் அவர்களது அறிவும் செயல்பாடும் நான் நம்புகின்ற வர் க் கத் தி ன் மேன்மைக்குக் கிடைக்க வேணும்" என்பார்.
ஒவ்வொரு எழுத்தாளர் பற் றியும் தனித் தனியாகக் கேட்டு வைப்பார். மல்லிகை உள்ளடக் கம் பற்றி நேரம் கிடைக்கும் போது விமரிசிப்பார்.
ஒரு நல்ல இலக்கிய நெஞ்
சத்திற்குத் தேவையான அத்தனை நெகிழ்ச்சிக் குணங்களும் - மணி
தாபிமானப் பார்வைகளும்
அ வரிடம் நிறைய நிறைய
உண்டு.
கடைசியாகக் கொழும்பிற்
குப் போவதற்கு முன் முதல் நாள் என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் நெஞ்சத்தை நிறைத்துக் கொண் டிருந்த ஒரேயொரு விஷயம் இன்று தமிழ் மக்கள் படும் சொல்லொணு வேதனைகள், கஷ்டங்கள், சிரமங்கள் பற்றிய தாகும்.
இந்த மாபெரிய நாசத்தி லிருந்து நமது மக்களை விடுவிக்க நம்மாலியன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்" எனச் சொல் லிப் பெருமூச்சு விட்டார்.

Page 5
அப்பொழுது சரத் தி னு டைய ஒவியத்தைப் பூர் த் தி செய்து ஒரு வர் கொண்டுவந் தார். ஒரு நிமிஷம் மெளனமா கத் தோழர் சரத்தின் ஒவியத் தையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார். "சாவு எப்பொழுதும் வரலாம். ஆனல் வாழ்வதானல் இந்த மனுசன் போலத்தான் ஒருவன் வாழ வேணும்" என உணர்ச்சி ததும்பச் சொன்னுர்.
13 வது தேசிய மகாநாட் டுக்கு முனனேற்பாட்டு வேலைக ளுக்குக் கொழும்பு சென்ற அவர் அந்த வேலைகளுககும் மத்தியில் கட்சிக் காரியாலயத்திலேயே உயிர் விட்டார்.
அவரோடு பழகுவது தனிச் சுவையானது. எத்தனை பாரிய பிரச்சினையாயிருந்தாலும் அதைத் தனது அனுப வச் சாணையில் உரசிப் பார்த்து அப் பிரச்சி னைக்கு அவர் தரும் விளக்கம்
PL u ITUTLDT60Tg .
தப் படுத்துகிறேன் கும்.
இனப் பிரச்சினை சம்பந்த மாகப் பல்வேறு கட்டங்களில் நான் அவருடன் உரையாடியிருக் கின்றேன். தமிழ் மக்கள் இன்று படும் கொடிய துயரங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் உணர்ச்சி வேகத்தில் கத்தியிருக்கின்றேன்.
எனது உணர்வுகளைச் சரிவ ரப் புரிந்து கொண்டு இ ன ப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கு அவர் காட்டிய வழி தெளிவாக எனக்குப் புரிந்தது.
ஆரம்பத்தில் சோஷலிஸ் பேசலாம், பின்னர் நடந்து வந்த பாதையை விட்டுத் திசை திரும்பலாம். சாய்வு நாற்காலித் த த் துவ ங் க ள் கதைக்கலாம்; பின்னர் சந்தர்ப்பவாதிகளாக மாறலாம். ஒன்றை உத்தரவா என் றுமே நான் தொடர்ந்து நடந்து வந்த பாதையிலிருந்து த டம் புரளமாட்டேன்!
O
அட்டைப் பட ஓவியங்கள் ஆகுதி
Daissaasuussau
(சோமகாந்தன் எ(புதிய சிறுகதைத் தொருதி)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதை: வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் படைப்பு)
விவரங்களுக்கு:
நான்கு வெளியீடுகள்
20 - 00
25 - 00
9 - 00
15 - 00
"மல்லிகைப் பந்தல்" 234. B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
 
 

எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருப்பவர்
- எஸ். விஜயானந்தன்
எமது கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட செயலாளரும், சகல பகுதி மக்களினதும் அன்புக்குப் பாத்திரமான தோழர் பொன் குமாரசாமி திடீரெனக் காலமான செய்தி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. எமது கட்சியின் யதின் மூன்ருவது தேசீய காங்கிரஸ் நடைபெறுவதற்கு முன்பு அவர் மறைந்தமை மேலும் பல கஷ்டங்களை ஏற்படுத்திவிட்டது. தோழர் பொன் குமாரசாமியாருடைய சேவைக்காகத் தமது சக்தியையும் திறமையையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்தாரோ, அந்த மக் கள் அனைவரும் தமது சொந்த இழப்பாகவே கருதி வருந்துவதைக் காணும் பொழுது அவர் திடீரென மறைந்தாலும் கூட அவர் பூரண வாழ்வு வாழ்ந்து மறைந்தளராகக் கருத இடமுண்டு.
எமது நாட்டுத் தொழிலாளி லர்க்கத்தினதும், உழைப்பாளி மக்கள் அனைவரினதும் நலன்களுக்காகவும், சோசலிசக் கருத்துக் களின் வெற்றிக்காகவும் அவர் ஆற்றிய சேவை மகத்தானது. அவர் கல்லூரி மாணவராக இருந்த பொழுதே அடக்குமுறைகளை யும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். இவருடைய அரசியல் வாழ்வு அரசாங்க லிகிதர் சேவையில் சேர்ந்த வுடனேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அரசாங்க விகிதர் சேவை சங்கத்தில் சேர்ந்ததுடன் அந்தச் சிங்கத்தைப் பலப்படுத்துவதற் காகத் தமது முழு நேரத்தையும் செலவிட்டார். 1947 ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் வேலை நிறுத்தத்தில் தோழர் கும் அவர் களின் பங்களிப்பு யாவராலும் மெச்சத்தக்கதாக அமைந்தமை பாராட்டுதற்குரியது. அந்த ப் போராட்டமே எதிர்காலத்தில் அவரை ஒரு முழு நேர அரசியல் வாதியாக்கியது. அரசாங்க விகி தர் சேவையில் இருந்து கொண்டே கட்சிப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். 1962 ம் ஆண்டு கட்சியின் வேண்டு கோளை ஏற்று கட்சியின் முழுநேர ஊழியராகத் தம்மை ஆக்கிக் கொண்டதுடன் கட்சியின் மத்திய கமிட்டிக்கும் தெரிவு செய்யப் Lill-fits.
நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டிக் கொடுக் கும் மலையகத் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங் களைப் போக்கும் பணியில் இவருடைய பணிகள் வியாபிதமடைந் துள. சமுதாயத்தின் தேவைகளை உழைப்பின் மூலம் உற்பத்தி செய்கின்ற தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புச் சக்தியை யும், உயிர் வாழ்வையும் பாதுகாக்கும் உரிமை கூடக் கிடையாத நிலையில் அவர்களின் வாழ்வு இருந்தது. தொழிலாளிவர்க்கத்திற்கு அரசியல், பொருளாதாரப், சமுதாய ரீதியில் கொள்கைகள் பற்றி தெளிவான அறிவு ஏற்பட்டால்தான் வர்க்க உணர்வும் ஒற்றுமை யும் போராட்ட உறுதியும் வளர முடியும் அடக்குமுறையும் அச் சுறுத்தலும் தொழிலாளி வர்க்கத்தை அடிபணிய வைக்க முடியாது.
7

Page 6
இதற்கு மாருகப் போராட்ட உணர்வுதான் வளரும். அவர்களுக் குச் சரியான போதத்தைக் கொடுத்து நெறிப்படுத்திச் செல்ல வேண்டியது தொழிற்சங்கங்களின் கடமையாகும், இதற்காகத் தொழிற் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்தக் கடமையைத் த்ோழர் கும் அவர்கள் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் நிரூபித்துள்ளார்.
யாழ் மாவட்ட அமைப்பாளராகவும், பின் பு மாவட்டச் செயலாளராகவும் பணிபுரிந்த காலத்தில் தனது சேவை மூலம் இப்பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார், இன்றைய குளப்பமான அரசியல் சூழ்நிலையில் இப் பிரதேசத்தில் மாக்ஸிச, லெனினிச சித்தாந்தத்தை அடிப்படையா கக் கொண்ட கட்சி எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வேலை செய் கின்றது என்பதை அனுபவசாலிகள் மாத் திர ம் உணரலாம். தொழிவாளர்களைக் கட்சிக்குள் அதிக மாக அணிதிரட்டுவதற்கு வேகமாக வேலை செய்ய வேண்டும். தொழிற்சாலைகளிலும் இதர தொழில் நிறுவனங்களிலும் கட்சிக் கிளைகளை உருவாக்கி பலப் படுத்த வேண்டும். இளைஞர்களுக்கிடையில் விரிவாக, வேகமாக வேலை செய்ய வேண்டும், உழைக்கும் மக்கள் பிளவுபடாத வகை யில் தேசிய இனப் பிரச்சினைக்கு பிரதேச சுயாட்சி அமைப்பு அடிப்படையில் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என அவர் அயராது பாடுபட்டார். நமது கட்சியின் ஒற்றுமையைக் காப்பற்கும் பலப்படுத்துலதற்கும் தனது மதி நுட்பத்தின் மூலம் அருந் தொண்டாற்றினர். சர்வதேச ரீதியாகவும் எமது கட்சியை யும் தொழிற் சங்க அமைப்புக்களையும் பிரபல்யப்படுத்தினர்.
உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட செயல்ப்பாடு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியம் என உணர்ந்த தோழர் கும், வட பிரதேச தொழிற்சங்கக் கூட்டுக் குழு போன்ற ஸ்தாபனங்களை உருவாக்கவும் செயல் படுத்தவும் முன்னணியில் செயல்பட்டார். தபிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் பேரின வாத அரசினல் வகை தொகையின்றிக் கொல்லப்படுவதற்கும் ஒரு முற்றுப்புள்லி வைக்க வேண்டும் என்ற நோக்குடன் மக்கள் போராட்டங்கள் பரந்தளவில் நடாத்த உதவினர். ஒரு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கியே அவருடைய செயல்பாடுகள் யாவும் அமைந்தன. அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவர் மூலம் நாம் பெற்ற பாரிய அனுபவங்கள் எங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திச் செல்லும். அவ்வளியில் நாம் வீறு நடைபோட்டு முன்னேறுவோம்.
நீண்டகால உழைப்பும் தியாகமும் அவரின் உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தும் கூட் அவர் ஆர்வத்துடனும் தெளிவுடனும் செயல்பட்டார். தாம் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றும் பணியில் அல்லும் பகலும் பாடுபட்ட தோழர் 15 - 3-87 ல் எமது கட்சியின் கொழும்புத் தலைமைக் ககாயாலயத்தில் இயற்  ைக யெய்தினர். தேசியத் தலைவன் என்ற அந்தஸ்துடன் அவருடைய தியாக வாழ்விற்குக் கொழும்பில் கட்சி, சாதி சமய பேதமின்றி மரியாதை செலுத்தப்பட்ட்து. அவரின் சொந்த ஊரில் நடந்த இறுதி யாத்திரை அவர் மண்ணின் மைந்தன் என்பதும் நிரூபண மாகியது. O

சரஸ்வதியின் வேண்டுகோள்
திருவாளர் பரஞ்சோதி அக திகள் முகாமுக்குப் போய்விட் LITUTub.
*ஒரு சமூக சேவைச் சங்கத் தினருடன் காலே ஏழு மணிக்கே ஐயா போய்விட்டார்" இவ்வாறு பரஞ்சோதி அம்மா கூறியபோது என் காதுகளை என்னுல் நம்ப முடியவில்லை.
நாவலப்பிட்டியில் சில வரு டங்களுக்கு முன், பரஞ்சோதி ஐயா ஸ்டேச ன் மாஸ்ரராக இருந்தபோது, நான் அவரின் கீழ் ஒரு சிறு வேலையில் இருந் தேன். நேர மும் நோக்கமும் அறிந்து, லிவரை இழுத் துத் தண்டவாளத்தை மாற்றி, றயி 6ன் பாதையைத் திருப்புவது
எனது கடமையாகும். அந்தத் தொழிலின் 'பொயின்ற்ஸ்மன்" என்ற ஆங்கில அடையாளம்
எங்கள் தோட்டத்தில் எனக்கு எத்தகைய பெருமையை அள்ளித் தந்தது அதன் நிரந்தரம், மாதாந்தச் சம்பளம் ஒரு புற மிருக்க, அது எனது பிரஜா உரிமை அந்தஸ்தையும் ஊருக்கு அறிவித்தது.
ஸ்டேசன் வட்டாரத்தில் எனக்கு 'லொக்கு மகத்மயாவின் உள் வீட்டுப் பிள்ளை' என்ற பட் டமும் உண்டு. அதன் காரணம் நான் பெரிய ஐயாவின் வேண்டு
கோளின்படி, அவர் பங்களாவில்
போது
*நந்தி"
G9, ITL Lrr () Gauht) soft GFt. தேன்; உணவு நேரமானதால் சாப்பிட்டேன்; சில நாட்கள்தொடர்ச்சியாகவும்- இரவில் படுத்துறங்கினேன்.
இந்தத் தொடர்பு எனது குடும்பத்தின் ரையும் த ன து கொடுக்குகளிஞல் ஒவ்வொருவ ராகக் கெளவிப்பிடித்துக் கொண் டது. எனது அப்பா, என்னைப் பார்க்க ஒருநாள் வந்தவர் ஐயா விடம் அகப்பட்டுக் கொண்டார். பின்பு, தோட்டத்திலே சீக்கு லீவு போட்டுவிட்டு, ஐயாவின் வவுனியா வயலிலே விதைப்புக் குப் போகும் அளவிற்கு அப்பா இங்கே ஐக்கியமாகிவிட்டார். அவருக்கும் ஆதாயம் இல்லாமல் இல்லை: அது பழசாகிப்போன கறுப்பு கோட்டு, சப்பாத்து முதல் பல ரக பனம் பண்டம் வரை யருப் பட்டியல் கொண்டதாகும். பண் டி கை கள், விசேடங்கள் அம்பாவின் சுகவீன நாட்கள் ஆகியன என்ருல் என்னைப் பெற் றவளும், இங்கே குசினியை அண்டி உள்வீட்டுப் பிள்ளையாகி விடுகிருள். தொடர்ந்து, எனது தங்கை ருக்மணி, பத்து வயது நிரம்பாதவள், கதிரேசன் கல்லூரி யில் படித் துக் கொண்டிருந்த வள், வேலைக்காரியாக அமர்த்தப் பட்டாள். ஒரு நாள் அந்தியில் நான் பங்களாவிற்குப் போன ருக்மணி பள்ளிக்குப்

Page 7
போட்ட வெள்ளைச் சட்டையு டன் நிற்பதைக் கண் டே ன்.
அதற்கு நான் உடந்தையாக இருக்கவில்லை; ஆஞல் நான் விரும்பாத அந்த உடன்படிக்
கையை எதிர்க்கும் வாயும் வல்ல மையும் எனக்கு அப்போது வர வில்லை. அதை நினைத்து நான் இப் போது வருந்திக்கொண்டிருக் கிறேன். ருக்மணி என் வாழ்வின் நம்பிக்கையாக இருந்தாள் . இன்று என் குருதியைக் கண்ணி ராக்கி விடுகிருள்.
பரஞ்சோதி ஐயாவைப்பற்றி அறிவ த ற் கு எனக்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஐயா ஸ்டேச னில் மேலதிகமாக வேலை செய் வார். அந்த ‘ஒவர் ரைம்" அவ ருக்குப் பொழுதுபோக்கு. மிகதி நேரங்களில் பங்களாவின் முற்றத் திலும் பின் வளவிலும் தோட் டம் செய்வார். அந்த வேலையில் எனது பங்கு கணிசமானது. ஒரு
சில வீடுகளுக்கு மட்டும் "விசிற் றிங் போய் வருவார். அவை நகர சபை சேர்மன், பொலிஸ்
நிலைய அதிகாரி, அநுகுதா கல் லூரி அதிபர், ஹினி அப்புஹாமி என்ற பிரபல வர்த்தகரின் வீடுக ளாகும். கடைசியாகக் கூறப்பட் டவர் நகரறிந்த ச ன் டி யன், இனக் கலவரங்களின்போது நாவ லப்பிட்டியில் ஏ ற் பட்ட நாச வேலைகளின் குத்திரதாரி. இது ஐயாவுக்குத் தெரியும், ஒருநாள் கதைப் போக்கில் ஒரு ஆசிரிய ருக்குச் சொன்னர்; "மாஸ்ரர், இவன்களைக் கைக்குள் வைத்தி ருக்க வேண்டும். ஏதாவது வில் லங்க நேரங்களில் உயிரைக் காப் பாற்ற உதவுவான்கள் . அவ ருக்குக் கடந்த வில்லங்க வருடங் களான, 1956, 1958, 1961 1974 - இப்போதும் சொப்பனத் தில் உம்மாண்டி காட்டித் திடுக் கிட வைத்தனவாம்.
ஐயா கோ வில் களுக்கு ப் போவதில்லை. வீட்டின்
அறையிலே, தேவார, திருவாச கம் பாடி சாம்பிராணி காட்டு வார். இது சம்பந்தமாக ஒரு அரட்டை அடித்தலின்போது, புக்கிங் கிளாக் நவநீதராசா ஐயா சொன்னதாகக் கேட்டு அந்த நாட்களில் நான் சிரித்த து உண்டு ஆல்ை இப்போது அதை மீண்டும் சிந்திக்கிறேன். அவரி சொன்னர்: "காளிமுத்து, பெரிய ஐயா கோவிலுக்குப் போகாத தற்குக் காரணம், நாவலப்பிட்டி நகரில் பெரிய மனிதர் இடாப்பில் அவரின் பெயர் இருப்பதுதான். இங்கே கோவில்களில் ஏதாவது விழா, வைபவம் என்றும் சமூக, சமயத் தொண்டு என்றும் பணம் திரட்டும் "லிஸ்ரை" பெரிய மனித ரரன அவரிடம் நீட்டுவார்கள். நவநீதராசர் கடைவாயிலிருந்து
வெற்றிலைத் துப் பல் வடியச்
சிரிப்பார். "காளி ஐயாவுக்குத் தொண்டு என்ருலே துடக்கு; கை பட்டாலும் அவர் முழுக வேண்டும்.
எனக்கும் இந்த லிஸ்ற் சம் பந்தமாக அனுபவம் உண்டு. மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் கோவிலின் மாசி மக இரதோற் சவ விழாவிற்காக நன்கொடை வேண்டி, லிஸ்ட் ஒன்று ஸ்டே சன் மாஸ்ரர் பெயருக்கு வரும்; வந்ததும் அது இந்த காளிமுத்து வுக்குத் தரப்படும். நான் இன சமய பேதம், உத்தியோக ஏற்
றத்தாழ்வு பார்க்காமல் எல்லோ
ரிடமும் அதை நீட்டி, இரண்டோ ஐந்தோ பத்தோ ஒவ்வொருவரி டமும் சேகரித்து ஐயாவிடம் கொடுப்பேன். *சரி அனுப்பி விடு" என்பார். "நீங்களும் ஏதா வது போடுங்கோ" என்று அவரி டம் இனி எப்படிக் கேட்பது? கோவில் திருப்பணி இப்படி என் ருல், சமூக சேவை பற்றி.
எனது மனம் மிகவும் வேத னேப் பட்டு, அவரின் சமூக அக்
பூ ைசக ைத இன் ைம குறித்து வெறுப்
O

படைந்தது ஒரு நிகழ்வின்போது எனக்கு ஒரு உள்ளம் உண்டு என்று கூட அவர் கருதவில்லை. எங்கள் தோட்டத்தில் ஒரு இராச் சத மழையில் ஏற்பட்ட மண் சரிவினல், மலைச்சாரலில் வசித்த ஆறு குடும்பங்கள் உயிரோடு புதைந்து போயின. மேலும் பல வீடுகள் சேதம் பலர் காயம். தான் ஒரு வார லீவு போட்டு திவாரண வேலைகளுக்காக தோட் டத்தில் தின்றேன். முதல் நாள் நாவலப்பிட்டியிலிருந்து அம்பு லன்ஸ் வந்த து. எனது சக தொழிலாளர் எல்லோரும் பிற இனத்தவர், ஒரு லொறியில் வந்து சேர்ந்தார்கள். பொருள் தந்து சதிர உதவியும் செய்தார் கள். நவநீதராசா ஐயா ஆத்ம ஜோதி சமய நிலையத்தினருடன் ஒரு காரில் வந்து உதவினர். ஆனல், பரஞ்சோதி ஐயா வரா தது மட்டுமல்ல, அன்று என்று தனது குடும்பத்துடன் "சிவகங் கைச் சீமை" என்ற படம் பார்க் கப் போயிருக்கிருர். அதன் பின் னர் கூட என்னைக் கண்டபோது ஒரு அநுதாப வார்த்தை ஒரு கரிசனையான கேள்வி இல்லை. அப்படியான மனே நிலையில் உள் ளவர் இப்போது சமூகசேவையில் ஈடுபட்டிருக்கிருராம். இனி
ருக்மணி ஐயா குடும்பத்து டன் மூன்றுமுறை யாழ்ப்பாணம் போய் வந்தாள் கடைசி முறை பூவரசம் பழுத்த இலைபோல் வந்து படுத்துக் கொண்டாள். *நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவமா" என்று ஐயா விடம் கேட்டேன். "செங்கமாரி யடா, கவனமாக இருந்தால் தானகவே சரியாகிவிடும், தோட் டத்துக்குக் கூட்டிப்போய்விடு. இ ள நீர் வாங்கிக் கொடுக்கச் சொல்" என்று ருக்மணியை என் னுடன் அனுப்பினர். மூன்று நாட்களின் பின் நோய் கடுமை பாகி விட்டது, அறிவிழந்தாள்
ஆஸ்பத்திரிக்கு வாடகைக் க்ாரில் வரும் வழியில் இறந்துபோனள்.
அதன் பின்பு நான் அவர் கள் பங்களாவில் உண்பதில்லை; உறங்குவதில்லை; அவ்வப்போது போய் வருவேன் அவ்வளவுதான்.
"அவள் ஒரு நோ ஞ் ச ல் பிள்ளை" என்று அம்மா எனக்கு ஆறுதல் கூறின. "எப்படியும் ஒரு நாள் சாகிறவள்தானே" ள ன் ற அர்த் கப்பட. நான் சொல்ல எண்ணியதைச் சொல் லலாமா? ருக்மணி அவர்கள் பங் க ளா விற்கு வருவதற்கு இரு வாரங்களுக்கு முன் தான், ஜய திலகா மைதானத்தில் பாடசாலை களுக்கான விளையாட்டுப் போட் டியில் ஒட்டத்திற்கும் பாய்தலுக் கும் பரிசுகள் பெற்ருள். அவள் அன்று பரிசா க வீட்டிற்குக் கொண்டு வந்த குங்குமச் சிமிழ் போன்ற ஒரு வெள்ளிக் கிண் ணத்தில் வீயூதி வைத்துப் பூசுகி றேன். அவளின் ஞாபகம் வராத சூரியோதயமும் அஸ்தமனமும்
பத்து வருடங்கள் இறந்து விட்டன. பரஞ்சோதி ஐயா ஓய்வு பெற்று யாழ்ப்பாணம் வந்துவிட்டார். மூன்று நாட்க ளுக்கு முன் தொழிற் சங்க அலுவ லாக, யாழ்ப்பாணம் வந்தேன். பரஞ்சோதி ஐயா குடும்பத்தைப் பார்க்க வேணடும் என்று மனம் உருட்டியது. அது ஒரு விசால மான வளவு: தென்னை மா, பலா, கமுகு என விருட்ச செல்வம் அங்கே நிறைந்தி கந்தது, வீடு தெருவிலிருந்து சிறிது தூரத்தில் புதுப்பிக்கப்பட்ட பெருமையுடன் உண்மை வயதை ஒரு வயோதிப மல்லிகைப் பந்தல் மட்டும் எடுத் துக் காட்ட, கிணற்ருேரமாக வாசல் தெற்கைப் பார்க்க இருந் தது. அதற்கு முன்னல் தெரு வோடு ஒட்டி ஒரு புதிய மாடி வீடு அரை குறை நிலையிலும்
Il

Page 8
மார்பை நிமிர்த்திக்கொண்டு நின் றது; அதற்கு வெளிநாட்டுப் பணச் செருக்குப்போலும், அதற்
குத் தீனி போடத் தறிக்கப்பட்ட
ஒரு பாரிய வேம்பு, 75 DIT GÖT மருத்துவ வாசனை மூலம் தனது பரம்பரையின் கதையைக் கூறு வதுபோல் அடக்கமாகக் கிடந் g5 gil
நான் வாசல் மணி யின் விசையை அமத்த, பியானேவின் ஒரு சுருதி ஒலித்தது. பரஞ்சோதி அம்மா கதவைத் திறந்தா! அவ முக த்தில் ஒரு அநாமதேயப் புன்னகை.
'காளிமுத்து, அம்மா காளி என்று ஞாபகப்படுத்தினேன்.
*enaurro 6urro" ஆரவாரித்தா: தொடர்ந்து "ஐயா அகதிகள் முகாமுக்கு சமூக சேவையாளர் சங்கத்தினருடன் Curruel டார்." நான் ஐயாவைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று தீர்மா னித்து விட்டா. "இல்லை அம்மா. நான் அவரைப் பார்க்க வர வில்லை. ஏன் வந்தேன் என்று எனக்கே இப்போது தெரியவில்லை. உங்களைப் பார்ப்பதுகூட துன்ப நினைவைத்தான் பிறப்பிக்கிறது. நானுக வந்து ஒரு விதியில் சிக்கிய தாக எனக்குத் தோன்றுகிறது" இப்படிக் கூறவேண்டும் போல் இருந்தது. அப்படிக் கூறவில்லை.
அந்த ஹோலில் அலங்கார மான ஒரு செற்றியும், மெத்தை வைத்த நாற்காலிகளும், நான்கு சாதாரண நாற்காலகளும் இருந் தன. தரையிலே ஒரு மெலி லிய கம்பளத்தின்மேல், ஒ சிறு பையன், பரஞ்சோ தி ஐயாவின் மூத்த மகனின் மூக்கும் முளியும் கொண்டு அபரிமிதமான போஷ னையின் புகலிடமாகியவன் நூத னமான கார்கள், றயில் என்ஜன், ஆகாய விமானம் ஆகியவற்றை இயக்கியும், "பில்டிங் புளொக்ஸ்"
துண்டுகளைப் பொருத்தியும் விளை பாடிக்கொண்டிருந்தான். பக்கத் திலே ஒரு துப்பாக்கி.
*ம்-ம்-ம் ர்-ரி-ர் டுஷ் டுஷ்" திடீரென, தனது சப்பாத்துக் காலால் உதைத்து விளையாட்டுப் பொருட்களைச் சிதற வைத்தான்.
"ராசா" என்று செல்லமாக அழைத்தவாறு, ஹோலையும் வீட்டின் மற்றப் பாகங்களையும் பிரித்த தொங்கு திரையை விலக் கிக் கொண்டு ஒரு பெண் வர்
தாள் அரங்கிற்கு வரும் கதா ராணி போல, நாட்டின் வறு மைக்கும், வரட்சிக்கும், வழக்
குக்கும் ஒ வ் வா த ஒயிலுடன் தோன்றினுள்.
சுவரில் தொங்கிய ஒரு விநோத
கடிகாரக்கூட்டிலிருந்து ஒரு சிறு
குருவி தலை நீட்டி, நீட்டி குக்கூ குச் கூ என நேரம் அறிவித்தது: பதினெரு தரம் அது கூவியிருக்க வேண்டும விளையாடிக் கொண் டிருந்த இனவல் தனது துப்பாக் கியை எடுத்து குருவியை நோக் கிச் சுட்டான். "கார்க்" குண்டு குறிதவறி சுவரில் பட்டுக் கீழே விழுந்தது. அதை மிகவும் நிதான மாகத் துவக்கில் \சொருகி என் பக்கம் திருப்பிஞன் இம்முறை குறி பலிதம்; எனது சொண்டும் முரசும் சுண்டி வலித்தன. ஆக்கு ரோசமான மகிழ்ச்சியில் பையன் ஒரு தரம் சுழன்று ஆடித் தொம் மெனக் கீழே விழுந்தான். "கம் யூ நோற்றி போய்' என்று தாய் 60) L} u 8%W இழுத்துக்கொண்டு திரைச் சீலைக்குப் பி0 ஞல் மறைந் தாள். வாடா கெட்ட பையன்" என்ற அந்த உத்தரவில்கூட, எனது மோவாய் வலிப்பைச் சமா ளிக்கத்தக்க கண் டிப்பு இருக்க வில்லை: மாருக ஒருவரின் எரிச் சலைத் தூண்டும் அசடடுக் கொஞ் சலும், ஆங்கிலம் பேசக் கற்பிக் கும் உச்சரிப்பும் மட்டுமே இருந் தன. “வாறன்" என்று கூறிவிடடு

பெரியம்மாவும் உள்ளே போன. நான் தனிமையில். சுட்டு விர லால முரசைத் தொட்டுப் பார்த் தபோது, எதிர்பார்த்த இரத்தம் அதில் இருந்தது. “சரியான உரிய நேரத்தில் வாய்விட்டுப் பேசாத தற்கு எல்லாம் இது இப்போது 56-37Gur?” இப்படியான ஒரு சிந்தனை ஏக்கமாகவும் துக்க மாகவும் நகைப்பாகவும் நெஞ்சில் குழம்புகிறது.
பரஞ்சோதி ஐயா, உத்தியோ கத்தில் இருந்தபோது வாழ்ந்த Jy TFT tivas பங்களாவிலும் பார்க்க இந்த வீடும் இந்தத் தளபாடங்க ளும் பல மடங்கு நேர்த்தியா ைைவ. தனது காலத்திற்குப் பின்பு தனது பிள்ளைகளின்
மயும் அந்தஸ்தும் தாழ்ந்து போ க க் கூடு ம் என்ற மனப் பிராந்தி 2u76/des (psäasi இருந்தது. காரணம் அவரது இரு மகன் மாரும் படிப்பில் சக்கட்டை களாகவே இருந்தனர்; ஹார்ஸ்லி, கதிரேசன், ரினிற்றி கல்லூரிகள் அவர்களுக்கு எந்த முறையிலும் கை கொடுக்க முடிய்வில்லை. ஆனல் பரஞ்சோதி ஐயா 83-ம் ஆண்டு இனக் கலவரத்தைத் தன் மக்களுககுச் சாதகமாகப் பயன் படுத்திஞர். அவர்களை "அகதிக ளாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டார்; sot_l L.J Lg đ: Cổ4, sor 6ứì: அப்படித் தோன்றுகிறது. அல்ல விடில் ஐசுவரியத்திற்கு விளக்கம் காண்ப்து எவ்வாறு?. அந்த உயிரில் ல7 த அடிமை, தன த சிவப்பு நெஞ்சைக் csfT -g- தலையை நீட்டி, ஒரு தரம் குக் கூ" என்றது. வெளிநாட்டு ரொபின் அது. நான் வந்து அரை மணி நேரம் கரைந்து விட்டது. எவ்வள வல்லாம யோசித்து விட்டேன். இவர்களுக்குக் கிளரிக்கல் சேவை தந்த "போஸ்றல் பொருளாதா ரம்", இன்றைய செயற்கையான *செலவாணிச் செல்வம்", “அகதி"
என்ற வார்த்தையின் பல்வேறு விர்த்தங்கள்.
அம்மா வந்தா. "எ பங் க் வேலைக்காரர் ஒருதரும் இல்லை, அதுதான் அம்மா
விளக்கம் தருவதற்கு முன், கார் சிறு வந்து நின்றது. ஐயா வந்துவிட்டார்.
"என்ன விாளிமுத்து, எப்படி?"
“ஓம், ஐயா.
அகதிக்கு இலக் கனமாக முகச் சோகையுடனும் மலினமான - }}J.-gguLh o__ *லக்கெளவும் சித் t_lfrðlfreðtசட்டை அணிந்தவளாப், ஒத்த டம் போடக் கொண்டுவந்தது போல் ஒரு சிறு சீலைப் பெர்ட்ட் னத்துட ன் வந்தாள், காரின் சித்த த் தைக் கேட்டு, இவளை எதிர்பார்த்ததுபோல் மருமகளும் துவக்குக்குச் சொந்தக்காரனும் ஹோலுக்கு ஆவல் அவசரத்து -ன் வந்தார்கள் அந்தச் சிறுமி வாசஃப் அண்டிய சுவரோடு நின் gள் சந்தையிலே கால் விட்டுடன் கோழி கிடப்பது போல் அவள் அசையாமல் நின்முள்.
“வேறை பெட்டை 660–ákaz
síldiða-Gun? • இது அம்மா. ஐயாவின் களைப்பு கோபமாக முகத்தில் மாறியது. பக்கத்தில் பொயின்றீஸ்மன் இருந்ததால்
ஐயா ஒன்றும் பேச வில் லைப் போலும்,
"இந்தியஞ?? தொடர்ந்து,
*எந்த ஊர்?"
"திருக்களுமல்?
இது மருமகள்:
3.

Page 9
GuGrašireg?”
சரசுவதி"
sai? - Gua Guri?”
சரசுவதி"
அம்மா ஆர அமர யோசித்து விட்டு முன் மொழிந்தா?
சநோஞ்சல் பெட்டை
ஒல்லி கேர்ல்" இது மருமக ளின் சமகால மொழிபெயர்ப்பும் ஆமோதிப்பும், ஐயா எழுத்து உள்ளே போளுர் இப்போது
சரஸ்வதிதான் அவர்சளுக்கு முக் Sபம், 'ஐயா என்னைப்பொருட்
படுத்துவதாகத் தெரியவில்லை. நோ முகப் பரீட்  ைச நடந்து கொண்டிருந்தது. அவர்களின்
கேள்விகளுக்குச் சரஸ்வதி பதில ளித்த அமைதி வியக்கத்தக்கதாக
இருநதது. கேள்விகள் கூர்மை யானவை; ஆனல் நேர்மையா னவை அல்ல. "அகதி நிகி யை
அடைந்தது அவள் குற்றம்: அதற்கு என்ன தண்டனை பொருத் தம்?" என்று அலட்டுவதாக கேள்விகள் அமைந்தன. இந்த ஓரங்க நாடகத்தை கோர்ட் சீன்" ஆக்காமல், அதற்கு இராணுவ முகாமினுடைய தோற்ற ம் கொடுப்பது போல், அந்தப் பையன் மூன்று அடி தூரத்திலே கால்களை அகல வைத்தவாறு துவக்கை அகதியின் நெஞ்சு நோக் கிப் பிடித்துக்கொண்டு நின்றன்.
"குக்கூ. குக்கூ. குக்கூ. பன்னிரண்டு குக்கூ
திருக்கோணமலையில், சொந் தப் பலசரக்குக் கடை ஒன்றை நம்பி, ஒரளவு வசதியாகவும் எதிர்காலத்தில் நம்பிக்கை வைத் தும் வாழ்ந்த வேலுப்பிள்ளையின் குடும்பம், கொமாண்டோக்களின் கொடூரத்தால் முற்ருகச் சீர் குல்க்கப்பட்டது. விடும். கடை
14
யும் உடைக்கப்பட்டது: பொரு ளும் நகைகளும் திருடப்பட்டன: சரஸ்வதியின் பாடசாலைப் புத்த க ங் கள் கொழுத்தப்பட்டன. வேலுப்பிள்ளை, பாக்கியப, சரஸ் வதி, அவளின் இரு அக்காமார் உயிர் தப்பி காடுபோய் பட்டினி கிடந்து அலைந்து உலைந்து நடை நடந்து, பஸ்கள், லொறி கள் ஏறி, முகாம் மாறி, இப் போது நல்லூரில் ஒரு அக தி முகாமில் இருக்கிருர்கள்.
அம்மா கேள்விகள் கேட்ட போது, "அப்பாவும் இருக்கிருர், அம்மாவும் இருக்கிருள்" என்று சரஸ்வதி தந்த தகவல் பரஞ் சோதி அம்மாவுக்கு ஓர் ஐமிச் சத்தை உண்டுபண்ணியது. இப் போது மட்டும், எ ன் னே ப் பார்த்து, இரகசிய குரலில் அம்மா சொன்னு.
"இப்படியானதுகள் கனநாள். நில்லாதுகள் தகப்பன் அல்லது தாய் அல்லது இருவரும் அவ லத்தில் கொல்லப்பட்டார்கள். அதாவது அவள் அகதி மட்டு மல்ல அநாதை கூட என்ற பதில் அம்மாவுக்குக் கூடிய திருப்தி அளித்திருக்கும் என்ற எண்ணம் என் மனத்தில் அப்போது உருக் கொண்டது. அத் த அனுமா னிப்பு என் உணர்ச்சிகளைச் சீண் டியது. நான் தொடர்ந்து அங்கே இருக்க விரும்பவில்லை.
ஐயா மறுபடியும் ஹோலுக்கு வந்தார். மேல் சட்டையைக் கழற்றிவிட்டு, அவரின் விசால மான நெஞ்சின் உரோமப் பரப் பில் ஒரு தங்கச் சங்கிலி சிக்குப் பட்டுக் கிடந்தது. "கூட்டிக் கொண்டு உள்ளுக்குப் போங்கோ' அவர் ஆணையிட எல்லோரும் எழுந்தாாகள். பையன் கையில் துவக்கை எடுக்க மறக்கவில்லை.

Jy6)/ffé6ir al6ir(Barr G3urr(5th போது, என்னவோ அந்த ச் சிறுமி, சரஸ்வதி திரைச்சேவைக்கு அப்பால் மறைவதற்கு முன் ஒரு தரம் திரும்பி என்னைப் பார்த் தாள், வெறும் பார்வையா அது? அது ஒரு வேண்டுகோள்
என் கண்முன்னே என் ருக் மணி தோன்றினுள். ஸ்டேசன் பங்களாக்களிலும், தோட்டத் துரைமார், வியாபாரிகள் ஆகி யோரின் மனைகளிலும் நா ன் பார்த் த வள்ளி, கண்மணி, மேரி, மெளிக்கா, சுமஞ எல் லோரும் சேர்ந்து கொள்கிருர்
S.
எனது விடுதிக்கு நான் வந்த போது வயிற்றில் பசி இருந்தது. ஆஞல் ஒரு புதிய கடமை உணர் வுக்கு அது பணிந்துவிட்டது.
என் மேசை மீது எழுதுவ தற்கு வெள்ளை த் தாள் களை எடுத்துவைத்தேன். தண்டவா ளங்களை மாற்றி றயிலின் திசையை மாற்றிய இந்தக் கையிலே பேணு பிடித்தேன். . .
எனக்குத் தெரியும், மனித ADST Řser தண்டவாளங்களில் ஓடுவதில்லை. அவற்றைத் திருப்பு வதும் திருத்துவதும் இலகுவான காரியம் அல்ல. ஆனலும் சரஸ் வதியின் அந்த வேண்டுகோளை
நான் விடைபெற்றேன்; நிறைவேற்றுவதற்கு எனக்கு விபரங்கள் தேவை இல்லை. வேறு வழி தெரியவில்லை. நான்
ஒரு கதை எழுதினேன். O O
(ểu II ữ
போரின் முகமே எனதுமுகம் போரின் முகமே உனதுமுகம்
Guntiair
முகந்தான் என்ன நிறம்
கறுப்பா வெளுப்பா பொதுநிறமா?
oGs)
விளக்க மரணமெனும்
விளக்கு மாருென்(று) ஏந்துகிறேன் பலகால் கூட்டித் துடைக்கின்றேன் டச்சைக் குருதி ஒற்றுகிறேன்!
ஒழியாப் போரே
இவ்வுலகில்
உன்னுல் தொடக்கப் பட்டதஞல் பழியை உன்மேல் போடுகிறேன் பகைவா உன்னத் தேடுகிறேன்
ஆங்கில மூலம்:
5
லாங்ஸ்டன் ஹ்யூஸ்
தமிழில் சோ, ப.

Page 10
அணு ஆயுதமற்ற உலகம்
டல்லிப் பிரகடணம் காடடும் பாதை
டாக்டர் வி. கோத்வியசரோவ்
வன்முறைகளும், அணு ஆயுதங்களும் அற்ற உலகம் என்ற புதிய அரசியல் "கண்ணுேட்டம் உலக மக்களின் உள்ளங் களைக் கவர்ந்து வருகிறது.
"அணு ஆயுதங்களும், வன்முறைசளும் அற்ற உலகை உருவாக் குவதற்கு கண்ணுேட்டத்தில் புரட்சிகரமான மாறுதலும், சமா தானம், பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை நாடுசஞக்கும் மக்களுக்கும் பயிற்றுவிப்பதும் அவசியமாகும்" என ராஜிவ் காந்தியும், மி கா யி ல் கோர்பசேவும் கையெழுத்திட்ட டெல்லிப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
ஒரு சோவியத் எழுத்தாளர் ஒருமுறை பின்வருமாறு கூறினர்' "உனது எதிரிகளைக் கண்டு நீ அஞ்சாதே மிதமிஞ்சிப் போனல் அவர்களால் உன்னைக் கொல்லத் தான் முடியும். உனது நண்பர் களைக் கண்டும் நீ அஞ்சாதே - ஏனெனில், அதிகமாகப் போனல் அவர்களால் உனக்குத் துரோகம் இழைக்கத்தான் முடியும். ஆல்ை உன்னிடத்தில் அலட்சியமாக இருப்பவர்கள் குறித்து நீ எச்சரிக் கிையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கன் பகிரங்கமாக உன்னைக் கொலே செய்வதற்கோ, உனக்குத் துரோகமிழைப்பதற்கோ துணிய மாட்டார்கள். அதே சமயம் உன்னைக் கொ%ல செய்வதற் கும் உனக்குத் துரோகம் இழைப்பதற்கும் ரகசியமாகச் சம்மதம் JAVaduʼüLurrff as6ir ''
இத்தகைய அலட்சியம், குறுகிய தேசிய வெறி, சுய நலப் போக்கு ஆகியவற்றையே டெல்லி பிரகடனம் எதிர்க்கிறது. தாங் கள் புவிக்கோள் என்னும் பொது இல்லத்தின் குழந்தைகள் என் பதை உலக மக்கள் புரிந்து கொள்ளுமாறும். அந்த எழிலார்ந்த இல்லத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் டெல்லிப் பிரகடனம் அழைக்கிறது.
பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு பெரிய வீடு தீப்பிடித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு குடும்ப மும் தனது பாதுகாப்பையே கருதுமானுல் குழப்பத்தில் எல்லோ ருமே தீயில் அழிய நேரிடும். மாருக அனைவரும ஒன்றுபட்டு தீயை அணைக்க முற்ப்ட்டால் அவர்களது உடைமைகளும், வீடும் காப் பாற்றப்படும்; அனைவரும் காப்பாற்றப்படுவார்கள்.
இந்தப் புதிய அரசியல் கண்ணுேட்டத்தை ஏற்காத நாடுகளும், ஆட்சியாளர்களும் இருக்கிருர்கள். இந்த ஆண்டில் இதுவரையில் அமெரிக்கா இரண்டு அணு ஆயுதச் சோதனைகளை நடாத்தியிருக் கிமது என்பதே இகனை எடுத்துக் காட்டும். பத் தாண்டுகளாக ராணுவ மேலாதிக்கம் பெற முடியும் என பகற் னவு கண்டு கொண் டிருக்கும் சக்திகள் அவ்வளவு எளிதில் மாறிவிடும் என எதிர்பார்க்க முடியாது. நாம் அவர்களை மாற்றியாக வேண்டும்- ஆயுத பலத் தினுல் அல்ல ம்ாருக சீரிய உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூல மாக, இதற்கான பாதையை டெல்விப் பிரகடனம் சுட்டிக் காட்டி இருக்கிறது. O
፲6

65 is 6.
த. கலாமணி
*6ùTaïw L. Lorrcivy" flair இரைச்சலுடன் கூடிய கிரி கிரி" என்ற சத்தத்தில் இவன் விழிப் புக் கொண்டான்.
கட்டிலிலிருந்து GTQupth LurT மலே உடம்பைப் பின்புறமாக நகர்த்தி, முதுகை நிமிர்த்திச்
சுவரில் சாய்த்து, சற்று எஃகிய
வாறே தலைக்கு நேர் மேலே இருந்த சுவர்ப்பகுதியைத் தடவிப் பார்த்து சுவீச் சை அழுத்திய தும் அறையுள் ஒளிவெள்ளம் பாய்த்தது.
அந்த அறையையும் அத ைேடு ஒட்டியிருந்த கூடத்தையும் இணைக்கும் கதவு வழமைபோல் திறந்தே இருந்தது. அந் த த் திறந்த கதவு வெளியினூடு பாய்ந்த செல்லும் ஒளிக்கற்றை யையும் விரட்டிச் சென்ற இவன் பார்வை, கூடத்தின் மறுமுனே யோடு ஒட்டியிருந்த அறைக் சுத வின் மீது வீழ்ந்து லயித்தது.
கதவைத் திறந்து கொண்டு
யாராவது வருகிருரர்களா என்று இவன் காத்திருந்தான். நித்தி ரையிலிருந்து அவர்கள் அருண்ட மைக்கான அசுமாத்தம் எதுவு
மில்லை.
7.
பால்காரனின் இந்தக் காட் டுக் கத்தலில் கூட நித்திரை கொள்கின்ற அவர்களை நினைத்து இவன் ஆச்சரியம் கொண்டான். அன்றிரவு நெடு நேரஞ் சென்ற யின்பே அவர்கள் நித்திரைக்குப் போஞர்கள் என்ற நினைப் பு வந்த போதுதான் அவர்கள் மீது பச்சாதாபமாக வந்தது. இவ னும் இரவு நேடுநேரம் , தூங்க வில்லைத்தான். பல நினைவுகளா லும் அலைக்கழிக்கப்பட்டு படுக் கையில் உழன்று கொண்டிருந்த வனுக்கு வெகுநேரம் அவர்களும் உறங்காமல் கதைத்துக் கொண் டிருந்தமையும் கேட்டுக் கொண்டு
தான் இருந்தது.
3f...... ଈf • • கிரி.
கட்டிலிலிருந்து எழும்பவிடா தபடி உடல் சோர்வாக இருந் தது. ஆயினும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் "கடகட ஒலியையும் பால்காரனின் கிரி கிரி' என்ற
கத்தலையும் இனியும் சகிக்க முடி
யாதென்ற நிலை யில் a t-fi சோர்வு எங்கோ பறந்து செள்
ģ
இவன் தன்னைச் சுதாகரித் துக் கொண்ட வகை, கட்டிலிவி ருந்து இறங்கி நெட்டி முறித்துக் கொண்டே கூடத்தையும் அறை யையும் இணைத்திருக்கும் கதவு வெளியினுTடு சென்று, கூடத் தின் ஒரு மூலையில் மேசைமீதி ருந்த அலுமினியச் சட்டியையும் எடுத்துக் கொண்டு கேற்றடிக்கு விரைந்தான்.
"ஆ. மாத்தயா, எப்படி. லொக்கு மாத்தயா தவம நிதித?
வீட்டுக்காரப் பெரியவர் நிக்திரையா என்ற பால்காரனின் கேள்வியிலையே, அவரின் நித்தி ரையில் அவன் கொண்ட திருப் தியும் தொணித்தது.

Page 11
உண்மைதான். இந்நேரம் அவரென்ருல், பாலில் தண்ணிர்ப் பிடிப்பாக இருக்கிறதே என்று சண்டை பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்.
பாலை வாங்கிவந்து буурц வைத்துவிட்டு, மீண்டும் கட்டி வில் வந்து அமர்ந்தான். அன் றைய விரிவுரையைத் Agb u u mT rif செய்ய எண்ணி அருகிலிருந்த மேசைமீது விரித்து வைத்திருத்த புத்தகத்தை எடுத்தான். தலை யணையைச் சுவரோடு சரித் து வைத்து அதன் மீது முதுகைச் சாய்த்து அன்றைய விரிவுரைக் குரிய பாடத்தை ஒரு மு  ைற
நினைத்துப் பார்த்துக் கொண் டான்.
அப்போதுதாள் தங்களது
அறைக்கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்கார அன்ரி" வெளியே வந்தாள் கூடத்து மேசைமீதி ருந்த அலுமினியச் சட்டியைத் திறந்து பார்த்தபின் இவனின் அறைப்பக்கம் திரும் பி ஒரு "தாங்ஸ்" உதிர்த்துவிட்டு மீண் டும் தங்கள் அறைக்குச் சென்று மறைந்தாள். உள்ளே அங்கிள்" அன்ரியைக் கடிந்து கொள்வதம் அன்ரி சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி அவரைக் கலகலப் பாக்க முயல்வதும் இவனுக்குக் கேட்கிறது. இவன் தனக்குள் லேயே சிரித்துக் கொண்டான்.
இவனுக்கு என்றைக்குமே அவர்களே நினைத்து வியப்புத் தான். இந்த வயதில் கூட ஒரு வர்மீது ஒருவர் காதல் கொண் டவராய், இளந் தம்பதியினரின் குதூகலத்துடன் ந் s கொண்டிருக்கு அவர் களை ப் பார்த்து அதிசயிப்பான். பிள்ளை கள் இல்லையே என்ற குறையும் மறந்து இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு எங்கே தனது "கண்ணுரறு' பட்டு விடுமோ என்றுகூட சில வேளை
19
களில் இவன் ஆதங்கம் கொள் வான்.
வந்த புதிதில், விரிவுரை தவிர்ந்த நேரங்களில் இந்த 3 றையினுள்ளேயே இவன் அடைந்து கிடந்தான். இந்த அறையின் யன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு பேராதனைப் பூங்காவையும் இந்த வீட்டையும் பிரிக்கின்ற கம்பிவேலிக்குமூடாக அந்த வேலி ஒரமாக அமைந்த பாதையில் பேராதனைப் பூங்கா வைச் சுற்றிப் பார்க்க வருகின்ற வெளிநாட்டவரையும், பா ட சாலச் சிறுவர் சிறுமியரையும் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே பெரும் பொழுது கழியும்.
பல்கலைக்கழக விடுதிகளுள் ஒன்றில் இடம் கிடைத்திருந்தும் அமைதியான சூழலையும் சுதந்தி ரத்தையும் விரும்பி வந்த இவ னின் சுதந்திரத்தை அவாகளும மதித்தனர். இவனின் அறைக்கு அவ்வீட்டின் கூடத்தினூடு செல் வது ரேடியாகவே செல்லக்கூடிய முன் கதவு இருந்தது. வெளிக் கேற்றின் சாவியிலும் ஒன்றை பின்னர் அவர்கள் இவனுக்குக் கொடுத்து வைத்திருந்தமையால இந்தTமுன்கதவினூடு இவன் எந்நேரமும் தனது அறைககு வந்து செல்லக் கூடியதாகவும @@画岛g·
கையிலிருந்த புத்தகம் நழுவி விழுந்தபோது அவர்களைப் பற் றிய நினைப்புகளிலிருந்து மீண்டு, அப்புத்தகத்தின் அட்டையையே இவன் உற்று நோக்கிஞன்.
பரந்த விசாலமான தலையுட னும் அதற்குச் சற்றும் பொருத் தமில்லாத உடலுடனும் கூடிய அந்த உருவம். --
அல்பேர்ட் 臀 ~ - �k X V அணுயுகத்தின் அபிமான பிதா. さ繋リ。 கொள்கையின்
சூத்திரதாரி. --

உலகம் ஐன்ஸ்ரீனைக்.இஜித் இவன் கண்கள் நிலக்குத்த
க் கொண்டிருக்கும் கணிப்புக்கு ਨੂੰ சித்திர த்தைவிட வேறென்ன அத்தாட்சி வேண் டும் என இவன் தன்னையே கேட் டுக் கொண்டான்.
ச் சித்திரம்
தொடர்பு நிலக் கொள்கை பற்றிய இன் றைய விரிவுரையைத் தொடங் கவும் இவஜல் முடியூம ஆஐ ரை&ள இச்சித்திரம் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பித்தமை நிஜனவுக்குவந்து வேறு எம்முறை யில் இவ்வருடத்து விரிவுரைக ளைத் தொடங்கலாம் e இவன்
சிந்தித்தான்.
பற்றிய
இவனுக்கு இது ஒரு கைவந்த
கலேயும் கூட. விஞ்ஞானம் மகத ளின் வாழ்வுடன் இணைந்த தன் மையினூடாகவே தனது விரிவு ரைகளைத் தொடங்கி நகர்த்திச் செல்லும்போது மாணவர்களின் கவனத்தையும் நன்கு ஈர்த்துக் கொள்ள முடியுமென நம்பிய தோடு அதில் வெற்றியும் கண் டான். சென்ற வருடப் பரீட்சை யில் இவன் விரிவுரை எடுத்த பாடங்களிலுள்ள வினக்களுக்கு மாணவர்கள் ஒன்ருகவே விடை யளித்து விசேட் சித்தியும் பெற் றிருந்தனர்.
மதிப்பீடுகள் யாவுமே சார் புடையவை தான் என்று ஆரம் பித்து, இலக்கிய விமர்சனத்தி லும் கூட "நடுநிலை" என்று ஒன் றில்லை என்ற தனது கருத்துக் களையும் முன்வைத்து தொடர்பு நிலைக் கொள்கை பற்றிய இன் றைய பாடத்தைக் கற்றுக் கவன மாக எடுக்க வேண்டும் என்ற நினைப்புடன், கையிலிருந்த புத்த கத்தின் ஒற்றைகளைத் தட்டிச் செல்கின்றபோது, கண் ணி ல் பட்ட ஒரு லிமெரிக்" மீது
சாதாரண "விமெரிக்கா அது. மனேவையே இவனிடத்து ஈர்க்கச் செய்த வல்லமை பொருந் தியதல்லவா அது,
மஹாகவியின் குறும்பாத் தொகுதியொன்றை முன்னர் படித்துச்சு வைத் த ைம யும் "லிமெரிக்" என்ற பாவகையை ஒத்த அக் குறும்பாக்களினூடாக நகைச்சுவையோடு யாழ்ப்பாணச் சமூகத்தின் நலிவுகளை மஹாகவி சாடியமையும் நினைவுக்கு வர இவன் ஒருமுறை தன்னுடலைச் சிலிர்த்துக் கொண்ட்ான்
ஐன்ஸ்ரீனின் தொடர்பு நிலைக் கொள்கை பற்றி அதீத மான விளக்கத்தைக் கொடுக் கின்ற அந்த லிமெரிக்" பாவில் தனது கற்பனையையும் சேர்த்து வழங்கிய தமிழ் வடிவம்தான் மஞேவையே இவன் அறிந்து கொள்ளக் காரணமானது.
சென்ற வருடம் தொடர்பு நிலைக் கொள்கை பற்றிய விரிவு ரைகளே எடுத்துச் செல்லும் போதும் மாணவர்களைத் தள் வசம் ஈர்த்துக் கொள்வதற்காக இடையே இவன் சொல்லி வைத்த அக்கவிதை வரிகள்.
ஒளியைவிட விரைவு கொண் டால் காலரதம் கூடப் பின்ஞேக் கிச் சுழலும் என்பதை விளக்கு கின்ற வரிகள்.
நளினியென தாமம் கொண்டாள் பாவை *ஏழிற்செவ்வாய்"த் தோஷம் அவள் "தீர்வை? பழி அகற்றச் செவ்வாய்க்கே
ன்று போய் நேற்றுவந்தாள் ஒளியைவிட விரைவுகொள்ளும் பூவை
Is

Page 12
இக்கவிதை வரிசுளைக் கேட்டு
மாணவர்கள் வியந்ததும், அதே கவிதை வரிகளைத் தமது விடுதித் தோழியர்க்கும், தோழர்க்கும் கூறி அக்கவிதை வரிகளின் பிர பல்யத்தால் வேறு கல்வித் துறை மாணவ மாணவிகளும் இவனை அறிய நேர்ந்ததும், கலைப்பீட மாணவியான மனே இவனை நேரிலேயே சந்தித்து மஹாகவி யின் குறும்பாக்களின் அதே தொனி இவனது குறும்பாவிலும் வெளிப்பட்டிருப்பதைக் கூறி இவ னைப் பாராட்டியமையும், அதன் பின் மனுேவைப் பற்றி இவனும், இவனைப்பற்றி மனுேவும் அறிந்து கொள்ளக் கிம9டத்த சந்தர்ப்பங் களும் என எல்லாமே இவனுக்கு நினைவுக்கு வர...
உரியவள்தானு?*
அதிலென்ன சந்தேகம் என்று நினைத்துக் கொள்கின்றபோதும், இவனைத் தயக்கம் கொள்ளச் செய்யும் உள்ளுணர்வு விழித்துக் கொண் டு இவனை ஆடடம் காணச் செய்ய, இவன் மனே வைப் பற்றிய நினைவுகனை மீண் டும் வரிசைப்படுத்திப் பார்த்துக் கொண்டான்.
இயல்பாகவே ரசனை உணர்வு நிரம்பப் பெற்ற மனுே, பேரா தனை கலை இலக்கிய வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சி ஒழுங்கு சளில் சிரத்தை எடுத்தக் கொன் கின்ற மனே, இவனின் இலக்கிய ஈடுபாட்டை அறிநத கொண்டு "விரு ஞானத்தில் தமிழ்" எனும் தலைப்பில் இவனைக் கட் டு  ைர படிக்கச் செய்த மனே. . .
தமிழில் உள்ள விஞ்ஞானக் கருத்துக்களைப் பற்றிக் கட்டுரை யொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு நெடு நாட் களாகவே இருந்தது தான் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற
20
சில அறிவியற் கருத்துக்கள் அனு பவ முடிவுகள் என்பதை மறந்து விஞ்ஞான முறையைப் பற்றிய
தெளிவு சற்றுமின்றி, அந்த அனு
பவ முடிவுகளையே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாகக் காணும் சில தமிழ் அறிஞர்களின் அறி யாமைக்காகவேனும் அக்கட்டு ரையை எழுத இவன் விரும்பி ஞன்.
இவன் படித்த கட்டுரை சர்ச்சைக்குள்ளாகியமை. இவ னின் கருத்துக்களுக்குச் சார்பாக அச் சர்ச்சையில் மனேவும் கலத்து கொண் டமை, அதனைத் தொடர்ந்து வா சக ர் வட்ட நிகழ்ச்சிகள் பலவற்றிலும் மனே வுடன் சேர்ந்து புரிந்தணர்வோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்
600 . . . . . .
"மனேவையே எனது வாழ்க்
கைத் துணையாகவும் கொண்
-6 . . . . . .
என்ருே இவனுள் கரு க்
கொண்டு அமுங்கிப்போன எண் ணங்கள். இன்னும் மாரு திருக் கின்ற இந்தச் சமூக அமைப்பில் அமுக்கப்பட வேண்டிய எண் 6007 zijdsev.
மனேவும் இவனும் ஒருவர் மீது ஒருவர் சாதல் கொண்டு, கருகலாகவே உள்ள தமது காதலை வெளிப்படுத்த முயன்று தோற் றுப் போய்விட்ட சந்தர்ப்பங் களை நினைத் துப் பார்க்கின்ற போ து தா ன் இந்தச் சமூக அமைப்பு ஒன்றும் இன்னமும் மாறிவிடவில்லை என்று நினைத் துக் கொண்டான்.
விஞ்ஞான வளர்ச்சியையே தோற்கடிக்கச் செய்கின்ற சமூக அமைப்பு, இவன் பல்கலைக் சுழ கத்தில் பெற்ற பிரபல்யத்திற் குப் போட்டி யாக "இவன் யார்" என்பதை வெளிச்சம் போட்டுக்

காட்டிவிட முனைப்புக் கொள் ளும் சமூக அமைப்பு, மனேவுக் கும் இவ னு க்கு மி  ைட யில் தொடர்பேதும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் வரம்பு கட்டி விட நினைக்கும் சமூக அமைப்பு இந்தச் சமூக அமைப்பிடம் தோலவியுறத் தயங்கி, மனுே விடம் கேட்கத் துடித்த துடிப்பு களைக்கூட அ முக்கி வைத்து. அமுக்கிவைத்து, அமுக்கிவைத்த எண்ணங்கள் யாவுமே கிளா ந் தெழும் அளவுக்கு மளுேவின் அப்பாவைப் பற்றி அறித் து கொள்ள நேர்ந்தவை.
"ஒ. அவரா. ? அவரின் மகளா, மஞே அப்படியாயின் அப்படியாயின்"
மெல்ல மெல்ல கெஞ்சில் முகிழ்க்கும் நம்பிக்கைகளோடு, சிறிது காலம் எதிர்கொள்ளத் தயங்கிய மஞேவிடம் இன்று எப் படியும் தனது எண்ணத்தைத் தெரிவித்துவிடத் தீர்மானித்து, இர வு முழுவதும் நித்திரையு மின்றி உழன்று . .
oav Lester laikr”
பூங்காவில் அடிக்கும் மணிச் சத்த ம கேட்டு, இவன் தன் நினைவுகளிலிருந்து மீண்டான். காலையில் பூங்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கான முன்னறி விப்பு மணி அது.
இந்த மணிச்சத்தத்துடன் இந்த வீடும் உயிர்ப்புக் கொண் டது. "அங் கிள்" பரபரக்கத் தொடங்கினர். அரை மணித்தி பாலத்திற்குள்ளாகவே அவர் தனது காலைக் கடன்களே முடித் துக் கடமைக்குச் செல்ல வேண் டும். ஆறரை மணிக்கு வேலைக்கு வருகின்றவர்களுக்கு வேலைகளைப் பணித் து. வே லே க்கு வராதவர்களின் இடங்களுக்கு வேறு ஆட்களை அமர்த்தி முடித்து
2.
வே லை ஆரம்பமாகிவிட்டதா என்பதையும் ஒரு சுற்றுச் சுற் றிப் பார்த்துவிட்டு வந்துதான் அவரின் காலைச் சாப்பாடு கூட. இந்தக் கடமை உணர்வுதான் *சுப்பிரிண்டன்' பதவி உயர்வை யும் சேவை நீடிப்பையும் கூடப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இப்போது தொடங்கி வெளிக்கிட்டால்தான் தானும் குறித்த தேரத்துக்குச் செல்ல முடியுமென நினைத்து இவனும் குளிக்க விரைந்தான்.
ஒ
விரிவுரைக்கு வேண்டி ய குறிப் புக் களை யும் எடுத்துக் கொண்டு, முன்புறத்துக் கதவை அடித்துச் சாத் தி இழுத்துப் பார்த்துக் கொண்டபின், திறப் புக் கோர்வையையும் எடுத்துக் கொண்டு கூடத்து இணைப்புக் கதவு வெளியினுாடு தனது அறை யிலிருந்து இவன் வெளியே வந்த போது.
குதூகலித்துக் கொண்டே காலை உணவை உட்கொள்ளும் அவர்களைக் காண இவனுக்கும் சந்தோஷமாக இருந்தது.
"யூ தோ, வட் ஹப்பின்ட் லாஸ்ற் றைற் இவர் நித்தி ரையாப் போயிட்டார், "ட ப்" என்று சுட்டில்லை ஏதோ விழுந்து கேட் டது. நான் ர ங் கி ப் போனேன். பார்த்தால், இவருக் குப் பக்கத்திலே பல்பும் ஷேட்டும் விழுந்து சிதறிப்போப்க் கிடக்கு, நல்லவேளை கொஞ்சம் இவர் திரும்பியிருந்தாலும் இவருக்கு மேலேதான் விழுந்திருக்கும்"
இரவு நடந்ததை "அன்ரி" விபரிக்கும்போது "அங் கிள்" இடைமறித்தார்.
நான் இ வ. வுக் கு மேலை விழுந்துபோச்சாக்கும் எ ன் று தான் பயந்துபோனள்

Page 13
எனக்கு மேலே விழுந்தால் விழுந்திட்டுப் போகட்டும நான இவருக்கு மேலைதான்.
"உனக்கு மேலை விழுந்தால் விழட்டுமோ”
A SOUT வர் அன்புடன் கடிநீ? 烷器, செல்லமா கோவித்தல், ஒருவருக்காக மற றவர் ஏங்குதல். ஒ. வாழ்க்கை என்றலே இப்படித்தானே.
சிறித்துக் கொண்ட அவர்க ளிடே தன்னை வீடுவித்துக் கொண்டு வெளியேறி, கலஹா வீதியில் நடந்து செல்லும் போது சிந்தனை இவனை அறுத் துக் கொண்டிருந்தது.
"எப்படித் தொடங்குவது?"
நெஞ்சில் ஏதோ தயக்கம். இவனை மீண்டும் அமுக்கி விடு கின்ற தயக்கம்.
எதிரே ஒற்றைப்பக ஒன்று ಇ-ಪಿಳಿಸಿ: வந்தது: இவன் தி டீரென ஒதுங்கிக் கொண்டான்.
நல்ல சகுனம்தானே" கிருகப் பிரவேசத்தின்போது வீட்டு முகப்பில் பசுககன்றைக் கட்டி வைத்திருப்பது ஞாபகத் துக்கு வந்தது கூடவே, “ஒற் றைப் பிராமணன் எதிர்பா
ச்சகுணம் என்று யாரோ 纜鶯 கேட்டது நினைவுக்கு வர, அதுபோல இதுவும் நாமப ஞக அமைந்து தீச்சகுணமாயிருக் குமோ என்ற தவிப்புடன் இவன்
திரும்பிப் பார்த்துக் கொண் test sir.
o la pró9ás resivo
காலையில் எ த னை க் கண் டோம் என்று நினைத்துப் பார்க் கின்றபோதுதான், பால்கார "கிரி கிரி" என்ற சத் தத்துக்கு விழிப்புக் கொண்டது ஞாபகத்
துக்கு வந்து அதுவும் நல்ல உற்இன்றபோது.
இவளுடன்
பாதம்தான் Trivigny udarà s தல் கொண்டது. ஆகு லும் புறப்பட்டு வரும்போது எதிர்ப் - 9šs மலட்டுத் தம்பதி
5AD. LD6asr LD சோர்வடைந்தது.
தும் முறுவ$க்கும் அ வளை க் கண்டபின்தான் மனம் மீண்டும் உற்சாகமடைந்தது. சாத்திரங் களிலும், சம்பிரதாயங்க்ளிலும் தான் கொண்ட புதிய நம்பிக்கை குறித்து வெட்கமடைந்தது.
பதிலுக்கு இவனும் ՓԱ6ն வித்தான்.
விஜயவர்த்தளு விடுதி முன் பஸ்ஸுக்காகக் காத்திருப்பு வள் போல இவனுக்காக் அவள் காத்திருந்தான, இவளுடன் தீர்க்
கும்வரை, கலஹா வி தி யில் எதிர்ப்படக்கூடிய f56Yurtsakr ஒன்ருகவே சேர்த்து எதிர்கொள்கை கூடாதென நிச்ச யித்தவனுக, பிஜயவர்த்தஞ விடு திக்குப் பக்கமாக ஸ்ரேசனுக்குச் செல்லும் குறுக்குப் பாதையைக்
முன்னேறினன். ஆனல் அவளோ தனதுநடையைத் துரிதப்படுத்தி இவனின் விருகாகவே நடத்தாள்.
"ஒ இவள் எனக்கே கொந்
தமானவள்" என்று இவன் நெஞ்சு இசையெழுப்ப.
s
அவ்வளவு நேரமும் நூல் நிலைய மேல்மாடியில் விரித் து வைத்த புத்தகத்தின் முன்னே படமாக ஓடிய திருப்புக் காட்சி களின் தாக்கத்தால் சுமையேறிப் Guntai, கலஹா வீதியில் நடந்து வருவதைத் தவிர்த்து, என்றுமே இல்லாதவாறு பஸ்ஸில் திரும்பு பஸ்ளின் விரை
&&

இ-ன் போட்டி டு . i கொண்டு தண் டு శ్రీ: తి சிதறிப்போகின்ற நினைவு
நான் உங்களை விரும்பினரூன் தீன், ஆனல் அது நிறைவேருது என்று தெரிஞ்ச TஉLஜ நான் உங்களிலயிருந்து இப்ப விலகத் தொடங்கிவிட்ட்ன். உங்களைப் பற்றிக் சிற்பனைகளே வளர்த்து ஆம் குழம்பி, உங்களையும் குழப்பவிரும்பவில்லை. அதுதான் நான் இப்ப உங்களைக் கண்ட்ல் கூட நின்று கதைக்கிறே&ல"
சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அளின் திடீரென இறுக்கமாகித் த ன து எண் ணத்தை வெளிப்படுத்திய போதி அலும், அவளுள்ளேயே நிகழ்கின்ற தி டு மாற்ற த்  ைத ப் புரிந்து கொண்டு இவன் இடைமறித்து .
"மனே உம்முடைய அப்பா
வைப் பற்றி கிட்டடியிலேதான் கேள்விப்பட்டனன். ஏன் அவர்
இதுக்குத் திடையேதும் சொல்ல
மாட்டார்தானே?"
"தனக்குத் தனக்கு வந்தால் தான் தலையிடி தெரியுமென்னு வினம். அப்பிடித்தான் சீர்திருத் தம் பேசிறவையும். எங்கட gely as அமைப்பு இப்படி இருக்கேக்கை சீர்திருத்தம் பேசி ஒண்டுஞ் செப் யேலாதுதான். நான் எங்க டை விருப்பத் தைக் குறிப்பால் உணர்த்தி அப்பாட்டைக் கேட் டுப் பாத்திட்டன். அவருடைய பதில் எ ன் ன வ |ாக இருக்கு மெண்டு எனக்கு நல்லாத்தெரிஞ் சுபோச்சு நான் அப்பாவை நல்லா நேசிச்சு வந்திருக்கிறன். இந்த விடயத்தாலே அவரோடை முரண்பட்டு என்னு ைஅவரை வெறுக்க முடியாது. அதனுலை தான் அவரை வெறுக்கக்கூடிய அளவுக்கு உங்களை விரும்பாத
வாறு என்னை நான் மாற்றிக் கொண்டிட்டன் என்னை மன்னிச் கக் கொள்ளுங்கோ. . . "
வீட்டின் முன்னல் பஸ்ஸி லிருந்து இறங் கி முேட்டைக் கடக்கின்றபோது உள்ளம் மட்டு மன்றி உடலும் 56 frtle, அன்று முழு துெ ம் உ ண வு உட்கொள்ளாததன் தாக்கமும் தெரிகிறது.
அறையின் முன் கதவைத் திறந்து ‘சுவிட்சைப்" போட்ட போது "பல்ப்" ஒளிர மறுத்து, சூழ நோக்குகின்ற போதுதான் எங்கு மே இருள் மங்கலாகப் பரவியிருப்பது தெரியவர, திறந் திருந்த கதவு வெளி யி னுா டு கூடத்தை மெதுவாக இவன் நோக்கினுள்.
"பீ கெயர்புல். கவனம், கவனம். றெடி என்று சொல் அங்கோ மெயின் சுவிட்சைப் போடுறன்?
பல்ப் ஒன்றைப் பொருத்து வதையே பெரியதொரு வேலை யாக எடுத்துக் கொண்டு அந்த மலட்டுத் தம்பதியினர் பேசு கின்ற கொஞ்சல் மொழி இவன் காதுகளில் நாராசமாய் ஒலிக்க,
"வெயிட், வெயிட், றைற் சுவிட்ச் ஒன்"
"பிள்ளை இல்லா வீட்டில்
கிழவன் துள்ளி விளையாடினனம்" என்ற நினைப்புவர, ன ரிச்ச ல் கொண்டு காதைப் பொத்திய வாறே "படார்" என்று காலால் உதைந்து கூடத்து இணைப்புக் கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் சரிகின்றபோது உடலில் கனமாக ஏதோ உறுத்த இவன் திரும்பிப் பார்க்கின்றபோது திடீரெனப் பரவிய ஒளிவெள்ளத்தில் .
"அல்பேர்ட் ஜன்ஸ்ரீன்"
(),
23

Page 14
உலகில் பரவிய டெங்கு ஜாரம் அமெரிக்க சிஐஏ ஸ்தாபனம் காரணமா?
- கே. கெவோர் கியான்
சில ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் பெருமளவில் டெங்கு ஜ"ரத்தால் பாதிக்கப்பட்டனர், அதைப்பற்றிப் பேசாத மக்களோ, எழுதாத பத்திரிகைகளோ இல்லை என்னும் அளவுக்கு அந்தக் காய்ச் சல் எங்கும் பரவியிருந்தது. 4 லட்சம் மக்கள் அதனுல் பாதிக்கப் பட்டனர். இந்திய எல்லக்கருகில், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில், ஒரு புதியவகை கொசுக்கள் பற்றி நடத்தப்படும் பரிசோத னைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என பத்திரிகைகள் சந்தேகம் தெரிவித்தன. லாகூர் மருத்துவ மையத்தில், அமெரிக்க உயிரியல் ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் டேவிட் நெல்லினும், அவரது உதவியாளரான டாக்டர் டெய்லரும் இந்தப் பரிசோதனை களில அப்போது ஈடுபட்டிருந்தனர். இதில் டாச்டர் டெய்லர் என்பவர், இந்தியாவுக்குப் பலமுறை வந்து போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டெங்கு ஜுரம் பரவியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என இந்தியாவில் பலர் கேள்வி எழுப்பினர்.
ஏனெனில், லாகூர் மாதத்துவ மையத்தில் ஆராய்ச்சிகள் மிக வும் ரகசியமானவையாக இருந்தன. அங்கு நடந்த சம்பவங்களும் சந்தேகத்துக்கிடமானவையாக இருந்தன. 1979 ல் அங்கு பணி புரிந்து வந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஒருவரும், இரண்டு நர்சுகளும் திடீரென மரணமடைந்தனர். அமெரிக்காவிலிருந்து, அந்த அமொரிக்க விஞ்ஞானிகள் கொண்டு வந்த வைரஸ் கிருமியே அவர்களது மரணத்துக்குக் காரணம் என தெரிய வந்தது. இந்த வைரஸ் கிருமி, இதற்கு முன்பு பாகிஸ்தானில் இல்லாத ஒரு புது வகைக் கிருமியாகும்
லாகூர் மருத்துவ மையத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து பாகிஸ்தான் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விசாரணை ஒன்றை நடத்தியது. ஆளுல் அதன் முடிவுகள் இதுவரையில் வெளியிடப் படவில்லை. இருந்தபோதிலும், ஆசியப் பத்திரிகைகள் இதன் உண் மையை அம்பலப்படுத்தின. மலேரியா கட்டுப்பாடு என்கிற பெய ரில், சிஐஏ உளவு ஸ்தாபனத்துடன் சம்பந்தப்பட்ட அமெரிக்க டாக்டர்கள் இத்தகைய கிருமியியல் ஆயுதங்களை, பாகிஸ்தான் மருத்துவ மையத்தில் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர் என்ற உண்மை வெட்ட வெளிச்சமானது.
இத்தகைய கிருமியியல் ஆயுதங்களை உருவாக்கும் கொடிய ஆராய்ச்சியில் அமெரிக்கா நெடுங்காலமாகவே ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இத்தகைய ஆராய்ச்சிக்காக 4 கோடியே 0 லட்சம் டாலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. இன்று உலகை பயமுறுத்தி வரும் கொடிய "எயிட்ஸ்" நோயும் கூட, அமெரிக்க்ா வின் கிருமியியல் ஆயுதமே என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி as Tefft, لو
34

62-ல் கொழும்பில் நடந்த
முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரை
b-عrسسسسسسسسسسسسسسسسسحه
- சி. வைத்தியலிங்கம்
இன்று இந்த மாபெரும் கொண் ட தொழிலாளிகளில் சபையைப் பார்க்கும் போது நான் பழையவர்களில் ஒருவன் நான் சிறுவயதில் இராமேஸ்வர என்ற காரணமாயிருக்கலாமோ
தேவாலயத்தின் பிரகாரங்களைச் சுற்றி வந்த பொழுது ஏற்பட்ட ஓர் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கோயிலின் பிர காரத் தைச் சுற்றி வந்த பொழுது, அதன் நீளமும், உய ரமும், காம்பீரியமும், பிரமாண் டமான அமைப்பும் என் மன லே "நான் ஒர் தூசிக்குச் சமான மானவன், எவ்வளவு சிறியவன்" என்ற உணர்ச்சியைக் கொண்டு வந்தது. இன்று இந்த மகாசபை யின் முன் நிற்கும் போதும், உண்மையில் நான் எத்துனை சிறி யவன் எ ன் ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படுகிறது. இங்கே இச்சபையிலே பேராசிரிபர்களும், வித்துவான்களும், L5 וJr L6 נ( Lמ டைந்த எழுத்தாளர்களும், இன் னும் பல துறைகளிலும் முன் இடம் வகிக்கும் பெரியார் பல ரும் இருக்கிரு?ர்கள். இ ன் று தலைமை தாங்குவதற்கு ஒரு சாதா ரன தொழிலாளியாகிய என்னைத் தலைமை வகிக்கும்படி ஏன் கேட் டிருக்கிருரர்களென்று என் மனம் சிந்திக்கிறது. நான் எழுதியதோ மிகவும் சொற்பம். அ தி லும் வெற்றியடைந்தது மிக மிகக் குறைவு. ஒருவேளை எழுத்துத் துறையில், அதாவது சிருஷ்டி இலக்கியத் துறையில் தொடர்பு
என்று எண்ணுகிறேன். அப்படி யானுல் எனக்குக் கொடுத்த இந் தப் பெ ரு ங் கெளரவத்தைப் பொதுமக்களுக்குக் கொ டு த் த மதிப்பாகவே நான் கருதுகிறேன்,
இலங்கைத் தமிழ் மக்களின் சரித்திரத்திலே இன்றைய தினம் ஒரு முக்கியமான நாள். இதற்கு முன்னரெல்லாம் இப்படியான மகாநாடு, எழுத்தைப் பற்றி ஆராய்வதற்கும் எழுத்தாளரை சிறப்பிப்பதற்கும் கூடவில்லை. இச் சபையிலே இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து எழுத்தாளர் களும், ரசிகர்களும், இலக்கியத் ஈடுபாடுடையவர்களும் 6 ش (55 இன்று கூடியிருக்கிருேம். இலக் கியம் எதற்காக? எழுத்தாளன் ஏன் எழுதுகிா?ன் கவிஞன் ஏன் பாடுகிருன்? சிருஷ்டி இலக்கியத் தில் உருவமா அல்லது கருத்தா முக்கியம்? இப்படியான பல பிரச் சனைகளைப் பற்றியும் நாம் கருத் தரங்கத்திலே கவனிக்கப் போகி ருேம். இவைகளெல்லாம் ஓர் எழுத்தாளனுக்கு நிரந்தர பிரச்ச னைகளாயிருக்கின்றன. இவைக ளைப் பற்றி நீண்ட காலமாக உலகத்தின் பல பாகங்களிலும் ஆராய்ந்து கொண்டே வந்திருச் கிருர்கள். இவைகளுக்கு இது
25

Page 15
தான் சரியான விடை என்று
எவராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது.
எங்களில் பலர் யுகம் யுகாந் தரமாய் வந்து கொண்டேயிருக் கும். சம் பிரதாயங்களிலும், பழக்க வழச்கங்களிலும் ஊறிப் GBurt'ü, Lugrubu Gour Lutrubu sporumas வந்து கொண்டிருக்கும் சில இலட் சியங்களுக்கு மதிப்புக் கொடுப்ப வர்களாயிருக்கிருேம். வேறு சிலர் புதுமையான ஒரு சமுதாயத்தை யும், சிருஷ்டியையும் படைப்ப தற்கு ஆவேச வெறி யு டன் உழைத்து வருகின்ருர்கள். இன் ஞெரு சாரார் எழுத்தெல்லாம் ஒரு பிரயோசனத்தைக் கொடுக்க வேண்டும்; அதற்கு ஒரு நோக் கம் இருக்க வேண்டும். மனித னைப் பண்படுத்தி உயர்ச்சிபெற உதவ வேண்டுமென்று கருதுகிருர் கன். வேறு சிலர் போதனையில் இறங்குவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல, எழுத வேண்டும் என்ற ஒரு வேகத்தினுல் எழுதிக் கொண்டே போகிருன் என்று கருதுகிருர்கள். இதமான எழுத் திலேதான் கலே பூ ர ன மா ய் விசாலிக்கிறதென்று வாதாடுகி ருர்கள். இந்த நிலையை எங்கள் மத்தியில் மட்டுமன்றி உலலத் தின் எப்பாகத்திலும் காண்கி ருேம்:
இலங்கையில் இப்பொழுது சிருஷ் டி இலக்கியத்துறையில் முன்னெரு பொழுதும் கண்டிராத உத்வேகமும், ஊக்கமும் காணப் படுகிறது. இளைஞர்கள் பல ர் எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிருர்கள். முக்கி யமாய் சிறுகதைத் துறையில் ஓரளவு வளர்ந்திருக்கிருேமென்று மதிப்பிட்டுச் சொல் ல லா ம். ஆளுல் சிறுகதை மாத்திரம் இலக் கியமாகி விடுமா? இலக்கியத்தின் ஏனைய அங்கங்களாகிய நாவலும், நாடகமும், கவிதையும், சரித்திர
விஞ்ஞான சம்பந்தமான நூல் களும், தரிசன நூல்களும் இப் படி எ ல் லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தும் போது தானே இலக்கியம் பூரணமான வளர்ச்சி பெற்று வருவதாக நாம் கூற முடியும். இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும்போதுதான் அது சமுதாயத்தில் ஆணிவேராகி வலுவையும், ஜீவசக்தியையும் கொடுத்து அதை வளம் பெறச் செய்கிறது. ஆகவே எழுத்தாளர் கள் முக்கியமாய் இனம் எழுத் தாளர்கள் இந்த அம்சத்தைத் தங்கள் கவனத்தில் இருத்தி, இந்தக் குறையை நிவர்த்தி செப் வார்களென்று நான் எதிர்பார்க் கிறேன்.
ஒர் எழுத்தாளன் பாஷை யைச் சரளமாய் எழுதப்பழகு வதற்கும், கதைகளையோ ஏனைய சிருஷ்டிகளைச் செய்வதற்கோ பத்திரிகைகள் ஒரு நடை வண்டி போல் உதவி செய்கின்றன. இந் நாட்களில், இந்தியாவில் மாத் திரமல்ல இலங்கையிலும் சஞ்சி கைகளும், பத்திரிகைகளும் புற் றிசல் போல் வெளிவந்து கொண் டி ரு ப் ப ைத ப் பார்க்கிருேம்" அவை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் போது ஏதோ வஞ்சம் தீர்ப்பதற்காக வருகிறது போல் சொல்லத் தோன்றுகிறது. அற்ப விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுத்தாளர் பிரிந்து புதுப் பத்திரிகைகளைத் தொடங் குகிருர்கள். இதனல் ஒருவருக் கும் பயன் ஏற்படுவதில்லை. இலக் கியத்தின் தன்மையில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அது இருக்கவும்தான் வேண்டும். அப் போதுதான் வளர்ச்சி ஏற்படும் , ஆ ஞ ல், துவேஷத்தினலோ, பொருமையிஞலோ பிரிந்து போவதால் ஒரு பத்திரிகையும் உருப்படாமல் போய்விடுகிறது.
26

இப்படியான ஒரு போக்கு சமீப காலத்தில். எழுத்தாளரிடமும் அ வ ர் க ள் எழுத்துக்களிலும் காணப்படுவதால்தான் இ  ைத நான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி வந்தது.
இலக்கிய விமர்சனமும் இச் சூழ் நிலையின் அடிப்படையிலே இயங்கிவருவதை நாம் பார்க்கி ருேம். நிதானமிழந்து, வரம்பு மீறிப் பரஸ்பரம் சொற்பிரயோ கத்தில் இறங்கிவிடுவது இலக்கிய தர்மமாகாது. ஒரு கவிஞன் மேகத்திலே சஞ்சாரம் செய்கி முன் என்று சொல்வார்கள். மேகத்திலேதான் இடியும் மின் னலும் உண்டாகின்றன. ஓர் சொல்லுக்கு மின்னலின் வேக மும் இடியின் சக்தியும் இருக்கின் றன என்பது தா ன் இதன் பொருள். நம் முன்னுேர்களும் சொல்லின் பவிந்திரத்தன்யையை உணர்ந்துதான் மந்திரம்" என்று அதைப் போற்றிஞர்கள். ஆகவே அதைப் பாவிக்கும்போது அளந்து நிதானத்துடன் பாவிக்கப் பழ கிக் கொள்ள வேண்டும். அதன் புனிதத் தன்மையை உணர்ந்து விமர்சனம் இயங்க வேண்டும். நாங்கள் செய்யும் சர்ச்சைகளெல் லாம் இலக்கிய ஆக்கத்துக்கு வழி செய்துவிட வேண்டுமேயொழிய அரும்பி வரும் முனையை முளை யிலே கருக்கிவிடக் கூடாது. இப் படியான மார்க்கத்தில் விமர் சனம் இயங்கி வரும்போதுதான் உண்மையில் இலக்கிய வளர்ச்சி பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உரு வாகிக் கொண்டு வரும்.
சுமார் ஐம்பது வருஷங்க் ளுக்கு முன் இருந்த எழுத்தாள னுக்கும் மேலாக இ ன்  ைற ய எழுத்தாளருக்குப் பல வசதிகளும் செளகரியங்களும் ஆதரவும் இருக் கின்றன. அவன் சமூகத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளும் கூடிக் கொண்டே வருகின்றன.
27
அவன் பொதுமக்களை நல்வழிப் படுத்துவதற்காக எழுதினலென்ன தூண்டி ஆவேசம் மூட்ட எழுதி ஞலென்ன அல்லது தனது ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதின லென்ன அவன் தன்னைப் பரி பூரணமாகச் சமூகத்துக்கு அர்ப் பணம் செய்து, தன்னை அவர்க ளுடன் ஐக்கியப்படுத்திக் கொன் ளுதல் வேண்டும். அவ னு ைே ஆக்கக் கூடும், விஸ்தரிக்கக்கூடும், வளர்ச்சிபெறச் செய்யவும் கூடும். அன்றேல் ஒன்றைப் பாழ்படுத் தவோ அல்லது அழிக்கவோ கூடும். அதல்ைதான் அவன் பொறுப்பு அதிகமாகிறது.
இப்பொழுதெல்லாம் நம் நாட்டுச் சரித்திரத்தின் திருப்பு முனையில் நாம் இருக்கிருேம். பெரிய பெரிய மாற்றங்கள் நம் மத்தியிலே நிகழ்ந்தவண்ணமிருக் கின்றன. சமூக வாழ்வில் எத்த னையோ புரட்சிகள் ஏற்படலாம். நாம் போற்றிவரும் இலட்சியங் களின் மதிப்புக் குறைந்து போக் லாம். ஆனல் யுகம் யுகாந்தர மாய் சில நிரந்தரமான இலட்சி யங்கள் மனிதனை, மனுஷத்தன் மையிலிருந்து தவறிவிடாமல், மனிதனுக வாழ வழி செய் து கொண் டு வந்திருக்கின்றன. மாசில்லாத பெருவாழ்வுக்கும், பண்புடைய சீரிய மனுேநிலைக் கும், சில உன்னதமான கொள் கைகள் அவசியமென்பதை மணி தன் பல காலமாக உணர்ந்து வந்திருக்கிருன் சத்தியமும் அழ கும் என்றும் நிலைத்திருக்க வேண் டுமென்ற தாகம் அவனுக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த உன்னதமான இலட்சியங்களையும் எண்ணங்களையும் திரும் பத் திரும்ப மனிதனுக்கு எடுத்து ஒதுவதில் உங்கள் பேணு தூங் காமல் விழிப்புடன் இருக்க வேண் டுமென்று கேட்டுக் கொள்கின்
றேன்.
O

Page 16
மல்லிகைப்பந்தல் நிறுவனத்தின் நாலாவது வெளியீடான
மல்லிகைக் கவிதைகள் வெளியீட்டு விழா
- தி, உதயசூரியன்
சென்ற 25 - 4 - 87 மாலை நல்லூர் இந்து விடுதியில் நடை பெற்றது. கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா வரவேற் புரை நிகழ்த்துகையில் "மல்லிகைக் கவிதைகள் தொகுதியில் உள்ள கவிதைகளைத் தொகுத்தவர் கவிஞர் முருகையன். அவர் இவற் றைத் தொகுக்கும் வேளையில் அவருக்கு எந்த விதமான இடை யூருே, உள் நுழைவோ நான் செய்யவில்லை. அவர் சுதந்திரமாகவே இப்பணியைச் செய்தார். நண்பர்களே நாம் மேற்கொண்ட இலக் கியப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்துச் செல்வது நமது கடமையாகும். இந்த நூல் உருவாவதற்கு என்னுடைய பதினைந்து நாள் உழைப்பைத்தான செலவிட்டேன். இன்று என்னைச் சந்தித்த அத்தனை பேரும் இன்று விழா நடக்குமா என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்டனர். இன்றைய விழாவினை ஒரு பணச் சடங்காக நீங்கள் கருதிவிடக் கூடாது. பணச்சடங்காகவோ அல்லது என் வீட்டுத் திருமணமாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக ஒத்திவைத் திருப்பேன். ஆனல் இது என்னுடைய கடமை. அதை ஒருபோதும் ஒத்திவைக்க மாட்டேன். இன்னும் சொல்வதானல் தேற்று நடந்த குண்டு வீச்சில் எனது வீடும் சேதமடைந்தது. எனினும் நான் மனம் தளரவில்லை. நான் பொறுப்பெடுத்த வேலையைச் சரிவரச் செய்து முடிப்பதே என் இலட்சியம். வெகு விரைவில் மல்லிகைப் பந்தல் ஐந்தாவது வெளியீட்டையும் உங்கள் கைகளில் சமர்ப்பிப் பேன் என்று கூறிக் கொண்டு, இந்தக் குண்டுவீச்சுச் சூழ்நிலையி லும் சிரமம் பாராமல் இவ்விழாவில் கலந்து கொள்ள வந்த உங் கள் அனைவரையும் என் மனதார வரவேற்கிறேன்"
எனக்குத் தெரிந்தவரையில் ஈழத்தில் ஒரு சஞ்சிகையோ, பத் திரிகையோ தான் பிரசுரித்த கவிதைகளைத் தொகுத்து நூலுருவில் வெளியிட்ட சரித்திரம் இந்த மல்லிகைக் கவிதைகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்த முன் முயற்சிகளைச் செய்து வருகின்றேன். படைப்பாளிகள் மல்லி கையில் எழுதுவது மாத்திரம் முக்கியமல்ல, அவர்களது மல்லிகைச் சிருஷ்டிகள் நாளடைவில் நூலுருப் பெறும் என்பதும் கவனிக்கத் தக்க தொன்ருகும். இதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொண்டி ருப்பது நல்லது. வெறும் ஆர்வமே லீடு மாத்திரமல்ல. தக்க அடித்தளமும் மல்லிகைப் பந்தலுக்கு உண்டு என்பதையும் ஞாபகப் படுத்த விரும்புகின்றேன்.
தொடர்ந்து கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையுரையாற்று கையில், "கவிதை கலைகளின் அரசி. ஆய கலைகள் அறுபத்து நான்கு
28

என்ருல், அவற்றின் அரசியாகக் கவிதை கருதப்படுகிறது. உதார ணத்துக்கு சித்திரத்தை எடுத்துக் கொண்டால் அது நீளம் அகலம் என்ற வரையறைக்குள் அடங்கிவிடுகிறது. இவ்வாறே சங்கீதமும் ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆளுல் கவிதையே எந்த வொரு வரையறைக்கும் உட்படாது ஒரு எல்லையில்லாத் தன்மையை காட்டுகிறது. க வி  ைத காஞததைக் காட்டும், உணராததை உணர்த்தும். எமது கவிஞர்கள் புதிய புதிய முயற்சிகளை மேற் கொள்ளும் அதே வேளை, பாரம் பரியத்தையும் பேண வேண்டும்"
மல்லிகைக் கவிதைகள் நூலை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய கம்பன் கழக அமைப்பாளர் திரு. இ. ஜெயராஜ் தனது உரையில், "கவிதை எழுதுபவனுக்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். அவையாவன, கவிதை எழுது பவன் முதலில் கவிஞனுக இருக்க வேண்டும் அவன் சான்ருேர் நிலையில் இருக்க வேண்டும். அடுத்ததாக அவனது கவிகையில் ஆழ மான வேரோட்டம் இருக்க வேண்டும். இதற்குக் கண்டெடுத்த சொற்கள் தேவை. அதற்குச் சொற்பயிற்சி இன்றியமையாதது. இதற்காக அவன் நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. அ தி லும் நல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசிப்பதால் ஒருபோதும் சொற்பஞ்சம் ஏற்படாது ஆகவே ஒரு கவிதைக்குத் தேவையான இடத்தில் தேவையான சொற்களே உப யோகிக்க முடியும். ஆனல் சொற்சேர்கை சொல்ல வந்த கருத்தை குழப்பிவிடக் கூடாது. எழுத்தாளன் ஒருவன் ஒரு கதை எழுத நூறு மணித்தியாளங்களைச் செலவிடுகிருன், எனில் அதை வாசகன் ஒரு வன் பத்து மணித்தியாலத்தில் வாசித்துவிட முடியும். வாசித்த ததை ஒரு மணித்தியாலத்தில் பேசிவிட முடியும். ஒரு மணித்தி யாலத்தில் பேயதே கவிதையாக இருக்க வேண்டும். அதாவது பெரிய தோடம்பழத்திவிருந்து பிழிந்தொடுத்த சிறிதளவு சாறு போல் இருக்க வேண்டும். சமீப கால விமர்சன அரங்குகளை உற்று நோக்கும் போது விமர்சகர்களுக்காகவே இலக்கியம் படைக்க வேண்டும் என்ற பயங்கரச் சூழ்நிகில உருவாகி வருவதை அவதா னிக்க முடிகிறது. இந்த நிலையை விடுத்து கவிஞன் தனித்துவமாக வும், சுதந்திரமாகவும் தனது கவிதைகஃ ப் படைக்க வேண்டும். கம்பன், பாரதி, கண்ணதாசன் எனத் தொடரும் உலகத் தமிழ் கவிஞர் வரிசையில் ஈழத்துக் கவிஞன் ஒருவனும் தனது பெயரைப் பொறித்து அந்த வரிசையைச் சற்று நீட்டிவிட வேண்டும் என் பதே எனது பெரு விருப்பமாகும்"
இவரைத் தொடர்ந்து உரையாற்ற இருந்த புலவர் ஈழத்துச் சிவானந்தன் தவிர்க்கமுடியாத காரணத்தால் சமூகமளிக்க முடியா மல் போகவே விழாத் தலைவர் விழாவை நிறைவு செய்து வைத்துப் பேசுகையில், "மூச்சு விடுவதற்குள் முந்நூறு நாநூறு என்ற காள மேகத்தின் பாடல் வரியை நினைவு படுத்தி நாளை பிற்பகலுக்குள் முந்நூறு புத்தகங்கள் விற்பனையாகிவிடும் என்று டொமினிக் ஜீவா கூறியது முற்றிலும் சரியானதே. வாசகர்களுடைய ஆதரவு என் றும் மல்லிகைக்குண்டு இந்த நெருக்கடியான நிலையிலும் ஒரு நல்ல கண்ணியமான இலக்கியப் படைப்பை எங்களுக்குத் தந்த டொமி ணிக் ஜீவாவிற்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த இலக் கிய நண்பர்சளுக்கும் மல்லிகைப் பந்தலின் சார்பில் தனது தன்றி யைத் தெரிவிததுக் கொண்டதும் விழா இனிது நிறைவு பெற்றது. கு
29

Page 17
ஆப்கானிஸ்தான் பயணம் குறித்து முன்னுள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் பேட்டி
தேசிய ஒற்றுமைக் கொள்கையானது, இன்றைய ஆப்கானிஸ் தானுக்குத் தேவையான மிகவும் விவேகமான நடவடிக்கையாகும். யுத்தம் என்ருல் யுத்தம்தான் அது பிரகடணப்படுத்தப்பட்ட யுத் தமாக இருத்தாலும் சரி, அல்லது பிரகடனப்படுத்தப்படாத யுத்த மாக இருந்தாலும் சரி. யுத்தத்தால் துன்ப துயரங்களை அனுபவித்த மக்கள் அமைதியை விரும்புகிருர்கள்: ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களின் விருப்பமும் ச மாத r ன மே எ ன அண்மையில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று வந்த இந்திய சுப்ரீம் கோர்ட் முன்ஞள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் கூறிஞர். ஆப்கா னிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அழைப்பின் போரில் இவர் ஆப்கன் சென்று வநதார்.
வி. ஆர். கிருஷ்ணய்யர் "தவோஸ்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு: ஆப்கானிஸ்தானில் சாதாரண மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கை நடத்துகிருர்கள். அரசாங்கத்தின் நிலை பாட்டை அவர்கள் முழுமனதுடன் ஆதரிக்கிருர்கள். அங்குள்ள பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், மசூதிகள், இந்து, சீக்கிய கோயில்கள் ஆகியவற்றுக்கு நானும் எனது நண்பர் சேத்தி யும் விஜயம் செய்த போதும், சாதாரண மக்களுடன் உரையா டிய போதும் இந்த எண்ணமே எங்களுக்கு ஏற்பட்டது.
நாங்கள், ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியிள் பொது ச் செயலாளர் நஜிபுல்லாவையும், பொலிட்பீரோ உறுப்பினர்களையும், தேசிய ஒற்றுமைக் கமிஷன் தலைவரையும், ஆப்கன் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும் சந்தித்துப் பேசினுேம்,
மக்களுக்கு உணவு, குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப் பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளை மக்கள் ஆதரிக்கிருர்கள். இப்படிச் சொல்வதால் அங்கு மக்கள் அனைவரும் வளவாழ்வு நடத் துகிருர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் மூன்ரும் உலக நாடுகள் பலவற்றில் தீர்க்கப்படாத பல பிரச்சனை கள் ஆப்காளிஸ்தானில் தீர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் மக்கள் சகஜவாழ்க்கை நடத்துகிருர்கள் என்பதை என்னல் சொல்ல முடியும். அதே சமயத்தில் எதிர்ப் புரட்சி கலகக்காரர்களின் தாக்குதல்கள் முற்ருக ஓய்ந்துவிட்டது எனச் சொல்ல முடியாது.
காபூல் நகரில் மக்கள் அஞ்சி நடுங்குவதை நான் எங்கும் காண வில்லே. காபூல் முழுவதும் ராணுவ மயமாக்கப்பட்ட நகரமாகக் காட்சி தருகிறது என மேலைய பத்திரிகைகள் கூறுவது உண்மை பல்ல. நகரங்களில் எங்குமே நான் சோவியத் படை வீரர்களைப் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்புக்களைத் தடுப்பதற்கு ஆப்கன் ராணு வத்துக்கு உதவியாக சோவியத் படைப் பிரிவுகள் எல்லேப்புறத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காபூவில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக நான், அண்மையில் ஆயுதங் களைக் கீழே போட்டு, தாயகம் திரும்பியுள்ள முஜாஹிதீன் கொரில் லாக் குழு ஒன்றைச் சந்தித்துப் பேபினேன்.
30

கடிதங்
சமீபத்தில் செய்திப் பத்திரிகைகளில் படித்த ஒரு செய்தி மன திற்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்திருந்தது. அதாவது மல்லிகை ஜீவாவின் மணி விழாவை வெகு சிறப்பாக இவ் ஆண்டு ஜூன் மாதக் கடைசியில் நடாத்த கனவான்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைத் தான் இங்கு குறிப்பிடுகின்றேன்,
மணிவிழாக் குழுவினரின் நாமங்களைப் படித்துப் பார்த்த பொழுது எனக்கு மனநிறைவு ஏற்பட்டது. பரபரப்புக்கு இடம் கொடுக்காமல், அதே சமயம் அமைதியாக ஆய்ந்துணர்ந்து செயல்படக் கூடிய அக் கனவான்களின் பெயர் ப் பட்டியலைப் பார்க்கும் பொழுது மணிவிழா ஆக்கபூர்வமான திட்டத்திற்கமை யவே நடைபெறும் என என்னை எண்ண வைத்தது.
சும்ம்ா லிளம்பர விழாவாக இது அமைந்துவிடக் கூடாது.
எத்தனையோ கலைஞர்களை, கல்விமான்களை, மேதைகளை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்த முனைந்து செயல்பட்டவரின் மணி விழா அத்தகைய சிறப்புக்குரியதாக அமைய வேண்டியது முக்கியம். ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்து இந்த விழா நடைபெற வேண்டும்.
மல்லிகை ஜீவாவுக்கு இனியொரு புகழைத் தேடித்தர வேண் டுமென்பது நோக்கமாக அமையத் தேவையில்லை. அவருக்கு இது வரை உள்ள பெரும் புகழே போதும். எனவே அவரது புகழை விதந்துரைக்கும் விழாவாக இவ்விழா அமையக் கூடாது.
அதற்கு மாருக ஈழத்து இலக்கியச் சரித்திரத்தில் இடம் பெறத் தக்கதாக புது முறையில் இந்த மணிவிழா இடம் பெற ஆவன செய்ய வேண்டும். என்னைப் போன்றவர்கள் எழுத்தில் சும்மா சொல்லிவிடலாம். நிகழ்ச்சிைைய ஒழுங்கு செய்பவர்களுக்குத்தான் இதன் சிரமங்கள் ஆத்தனையும் தெரியும்.
ஏதோ பாலமமைக்க ராமனுக்கு அணி ல் செய்த சின்னத் தொண்டை நினைவு கூர்ந்து என்னலும் ஏதாவது செய்ய முடியுமா என அவதிப்படுகிறேன். எனக்கென்னமோ என்னுலியன்ற சின்ன உதவி ஒன்றைச் செய்ய வேண்டுமென மனம் துடிதுடிக்கிறது.
மணிவிழாக் குழுவினருடன் தொடர்பு கொள்ள விரும்புகின் றேன். தயவு செய்து அவர்களது சரியான முகவரியைத் தாருங்கள்,
I

Page 18
என் அறிவுக்குத் தெரிந்தவரை ஒரு படைப்பாளிக்கு இத்தகைய பெரு விழாக் கெளரவம் ந்டப்பது இதுதான் முதல் தடவை என எண்ணுகிறேன். இது உண்மையாகவே ஒரு சரித்திர நிகழ்வுதான். பலரைக் கெளரவித்து, மதித்து, அன்னரை மச்களுக்கு அறிமுகப் படுத்திய ம லிகை ஜீவாவுக்கு இத்தகைய சிறப்பான மணிவிழா அமைவது நம்மை நாமே பாராட்டிக் கொள்வதாகவே ஆகும்.
அடுத்து மல்லிசைப் பந்தல் வெளியீடுகள் பத்து மாதங்களுக் குள் நாலு நூல்களை வெளியிட்டுள்ளீர்கள், பெரிய சாதனை இது. இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு வேலைகளையும் எப்படிச் செய்கிறீர் கள்? அத்தனை புத்தகங்களையும் எப்படி விற்றுத் தீர்க்கிறீர்கள்? எனக்கென்னமோ நம்ப முடியாமல் மலைப்பாகத்தான் இருக்கிறது.
உங்களது அன்பான நட்பை வேண்டி நிற்கிறேன். உங்களைப் போன்றவர்களுடன் ஒரு கணம் கதைத்தாலே போதும். அது என் வரைக்கும் பாக்கியமே. ஏனெனில் ஏகலைவனைப் போலத் தூர இருந்தே உங்க ள து செயல்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனவே உங்களை நெருங்க மனப்பயம் தடுக்கின் றது. உங்களைப் போன்றவர்கள் இந்த மண்ணில் பத்துப் பேர்கள் இருந்தாலே போதும். நாம் இலக்கியத் துறையில் நிமிர் ந் து நடக்கலாம்.
உடுவில். வ. சபேசன்
(நண்பர்களுக்கு ஒரு வார்த்தை. மணிவிழாக் குழுவுக்கும் எனக் கும் சம்பந்தமில்லை. குழுவினர் எனது ஆத்மார்த்திகமான நண்பர் கள்; என்னுல் மதிக்கப்படத் தக்கவர்கள். குழுவினர் அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டது தவிர, நான் எந்த வகையிலும் அவர்களது திட்டத்திலோ, செயலிலோ தலையிடுவதில்லை. அது இலக்கிய நாகரிகமுமல்ல, மணிவிழாக் குழுவினருடன் தொடர்பு கொள்பவர்கள் தயவு செய்து மணிவிழாக் குழு, பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியம், ! 5/2, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியுடள் தொடர்பு கொள்வது சகலருக்கும் உத்தமம்)
மல்லிகை ஏப்ரல் இதழில் "மல்லிகைக் கவிதைகள்" வெளிவர இருப்பதாக அறிந்து மகிழ்கின்றேன். அதற்கு முன்னுரை எழுதும் பொறுப்பை திரு. முருகையனுக்குக் கொடுத்துள்ளதும் வரவேற்கக் கூடிய விடயமே. கவிதைபற்றி ஆழமாகச் சொல்லக் கூடியவர் முருகையனே என்பதை எவரும் மறுக்க முடியாது. நன்றி.
தங்களுக்கும் மல்லிகைக்கும், ஈழத்திலக்கிய வளர்ச் சிபில் அசைக்க முடியாத இடம் இருக்கவே செய்யும். எவர் எப்படிச் சொன்னலும், உங்கள் முயற்சி மிகவும் போற் ற க் கூடிய தே. நூருண்டு வாழ்ந்து நம் இலக்கியத்துக்கு நுட்பமான சேவைகள் செய்ய வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
கல்முனை, மு" சடாட்சரம்
32

ஆபிரிக்கக் கவிதை:
எங்கள் விளக்குகள் எல்லாம் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன!
மூலம்: கானியக்கவி ஜோ த கிராப்ட் தமிழில்: சோ. பத்மநாதன்
அன்று மாலை மம்பி வந்தாள் என்கால் அருகே இருந்தெனைப் பார்த்தாள் கண்களில் அச்சம், கலக்கம்
"அன்பே நீங்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறீர்களாம்! அவர்கள் ஆத்திரம் கொள்கின் ரூர்கள்!" *கொடுங்கோல் ஆட்சி நிலைக்காது!" என்றேன், "அவர்கள் இதெல்லாம் அறிவர்;
ஆனல் -
அனைத்து மக்கள் மீதும் ஆட்சி செலுத்த முனைவர் எவனே ஒருவன் எதிர்த்துப் பேசத் துணிந்தால் ? - தொலைந்தான்! மெளனம் இந்நாளில், மதிப்பு மிக்கது!"
பாதி இரவில் அவர்கள் வந்தபோ(து) ஏதும் கதவு தட்டுதல் இல்லை! எங்கள் பணியாள் ஏற்பா(டு) இதுவாம்! என் தலையணையைச் சுற்றி ஏழெட்டு முகங்கள்! அக்குரலோ முனைவனுடையது; "புறப்படு எம்முடனே புறப்படு! சீக்கிரம் !"
மம்பி அந்நேரம் மனந்தளர்ந் தாளிலை ! என்முது கோடுதான் எத்தனை துவக்குகள்! லான்ட் ருேவருக்குள் அடிவைத்(து) ஏறி, நீண்ட இருள் அடர் பாதையிற் போகுமுன் - கூண்டுக்குள்ளே கூனி இருந்தநான் மீண்டும் ஒருக்கால் வீட்டைப் பார்த்தேன்
முன்னறைக் கதவு திறந்தே கிடந்தது!
மம்பி படிகளில் நின்றுகொண் டிருந்தாள் எங்கள் விளக்குகள் எரிந்துகொண் டிருந்தன.
33

Page 19
ஊருக்கு வந்திருக்கேன்
தாய்மண்ணை நான்மீண்டும் தரிசிக்க வந்தேன் வாய்வயிறு எரிகிறது ஐயோ! வனப்பெல்லாம் பாழாச்சே
குமரிப் பெண்போல குலுங்கிய என்பூமி விதவை போலாகி வெறுமை நிறமாச்சே!
அதிகாலைப் பொழுதின் அமைதி காத்த உன் கற்பில் யார்தாயே கைவைத்துச் சிதைத்தார்கள்?
திரிகின்ற இடமெல்லாம்
தெருவெங்கும் பிணங்கள் மீன்பாடும் தேன்நாட்டின் மேனியெலாம் ரணங்கள்
எங்கே என் பழைய தெரு? எங்கே என் பழைய குழு? எங்கே என் பழைய குடி? எங்கே என் பழைய சுகம்?
எல்லாமும் எல்லாமும் எங்கேயோ போயின்று கனவிலே மட்டும்தான் கைகூடும் காலமிதோ!
உண்பதுவும் உறங்குவதும் உடுப்பதுவும் மட்டுந்தான் மற்றெல்லாம் மண்ணென்ருல் மனமென்ன கல்லாசொல்?
- வாசுதேவன்
இரவினிலே மேடைகட்டி இனிக்கின்ற கலையருந்தி இருந்த பொழுதெல்லாம் இப்போது கதையாச்சு
கூத்துப் பார்த்ததுவும் கூடிக் களித்ததுவும் காத்து வாங்கியதும் கதையாகி வந்தாச்சு
நேற்றைய கதைசொன்னல் நெஞ்சம் தாங்காது நிகழும் பொழுதுகளோ நெருப்பைச் சுடுமென்பேன்
கையோடு இமையும் காணுமல் போய்விட்டால் வீசும் தூசிக்கு விழிகள் என்செய்யும்?
தங்கம் விளைகின்ற தாயே! உன்மடியில் அங்கம் இழந்த அணுதைப் பிணமா GFITipp
சொல்லிநான் முடியாது சுமக்கின்ற சோகம்! கண்டேன் உனை அதுஎன் கண்செய்த பெரும்பாவம்
தாய்மண்ணை நான்மீண்டும் தரிசிக்க வந்தேன் வாய்வயிறு எரிகிறது. ஐயோ! வனப்பெல்லாம் பாழாச்சே
4

எமது முதுபெரும் எழுத்தாளர் "வரதர்" வாழும் கதைஞர், பண்பாளர். சகல எழுத்தாளர்களையும் நெஞ்சார நேசிக்கும் இதயத்தினர். அவர்களுக்கு 01 - 07 - 87-ல் அறுபத்திமூன்று வயது நிரம்பு கின்றது. அவரது பிறந்த நாளைக் கொண்டாடு முகமாக, மல்லிகை சிறுகதைப் போட்டியொன்றை நடாத்த முன்வந்துள்ளது. போட்டி என்பதல்ல முக்கியம். ஒரு பழம் பெரும் எழுத்தாளரைக் கெளரவிக்க வேண்டுமென்பதே எமது பெரு விருப்பமாகும். நல்ல கதைஞர்கள் உருவாக இது உதவும் என்பதும் எமது நம்பிக்கையாகும்.
- ஆசிரியர்.
சிறுகதைப் போட்டி
பரிசு ரூபா 1000
விதிகள்:
l.
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் இதுவரை அச்சில் வெளிவராததாயும், தழுவலோ மொழிபெயர்ப்போ இல்லாமல் சுயமாக எழுதப்பட்டவையாகவும் இருத்தல் வேண்டும்.
கதையின் கருத்துக்கோ அளவுக்கோ எவ்வித கட்டுப்பாடு மில்லை.
சிறுகதைகள் யாவும் 5 - 6 - 87-க்கு முன்னர் கிடைக்கக்கூடிய தாக, "சிறுகதைப் போட்டி" மல்லிகை, 234B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
தகுதிவாய்ந்த நடுவர்கள் பரிசுக்கான சிறுகதையைத் தெரிவு செய்வார்கள்,
சிறந்த சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப்படும் மூன்று சிறுகதைகளுக்கு முறையே முதலாம், இரண்டாம், மூன்ரும் பரிசுகள் வழங்கப்படும். முதற் சிறுகதைக்கு 501-ம், இரண் டாவதற்கு 300-ம், மூன்ருவதுக்கு 200-ம் வழங்கப்படும். தரமான கதைகள் பிரசுரத்திற்கு ஏற்கப்படும்.
பரிசு பெருத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. எனவே எழுத்தாளர்கள் தமக்கென ஒரு பிரதியை வைத்துக் கொள்வது நல்லது.
மல்லிகைப் பந்தல் ஆதரவில் நடைபெறும் பரிசளிப்பு விழா வில் பரிசு வழங்கப்பெற்று, பரிசு பெற்ற எழுத்தாளர்க்ள் கெளரவிக்கப்படுவார்கள்.
பரிசுக் கதைகள் மல்லிகையில் வெளியிடப்படும்.
35

Page 20
இலங்கை வரலாற்றின் கறை படித்த அத்தியாயங்களில் ஒன்ருகிய எண்பத்திமூன்று ஜூலையின் பின்னர் நெஞ்சுக்கு நெருக்கமான சில நண்பர்களைப் பிரிந்துவிட நேர்ந்தது. பழைய நினைவுகளில் மூழ்கித் திளைப்பது ஒரு சுகமான அனுபவந்தான். அவற்றை இரை மீட்பது, அவற்றிலிருத்து கற்றுக்கொள்வது, கற்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது இவையெல்லாம் உண்மையில் பயன் மிக்கவை தான்.
காலமும் தூரமும் பலவற்றை மறக்கச் செய்துவிடுகின்றன. சிலவற்றை 'வசதியாக மறந்து விடுவதுமுண்டு முக்கிய மான இலக்கியக்காரர்களுடன் உரையாடி அந்த உரையா டலை ஒலிபரப்புச் செய்து பாதுகாப்பது நல்லதென்றவோர் எண்ணம் என்னுள் உதயமானது. "ஒலிப் பதிவுச்சேகரம்" ஒன்றை உருவாக்கும் பாதையில் தடம்பதித்து மெதுவாக நடக்கத் தொடங்குகையில் 1985 நவம்பர் 30-ந் திகதி எங்கள் சிறிய கிராமமான வதிரிக்கு டானியல் வந்திருந் தார். வதிரி தமிழ் மன்றம் "அடி  ைமகள்" நாவலை அறி முகஞ்செய்யும் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் முடிந்ததும் சி. க. இராஜேந்திரன் வீட்டில் டானி யல் தங்கினர். ஒரு சில மணித்துளிகள் அவரோடு உரை யாடி, அந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்தேன், கூடவே சின்னத்தம்பியும் இருந்தார். இறுதியில் தெணியானும் வந்தார். ஆனல் அவர்கள் இருவரும் செவிமடுக்கும் பார் வையாளர்களாக மட்டுமே இருந்தனர். மூன்றே மாதங் களில் இந்த ஒலிப்பதிவு நாடா ஒரு 'நினைவுச் சுவடியாகி" விடுமெனறு நான் நினைத்திருக்கவேயில்லை. உரையாடலில் எனது கூற்றினைத் தவிர்த்து டானியலில் பேச்சொலியின் ஒரு பகுதியை அப்படியே எழுத்தாக்கித் தருகிறேன்.
டானியல் என்னுடன் பேசுகிறர்
- ராஜ யூனிகாந்தன்
ஏறக்குறைய பதினெட்டு - இரு
பொதுவாகச் சொல்லப்
போனல் ஆரம்ப காலத்தி லிருந்தே சமூக இயக்கங்க ளோடை ஏற்பட்ட தொடர்புகள் அந்தத் தொடர்புகளினலை வந்த ஒரு உந்துதலினலை எழுத்தையும் அதுக்குப் பயன்படுத் த லா மெண்ட ஒரு எண்ணத்தினலை
பது வயதிருக்கும்போது எழுது வதற்கு நான் நினைத்தேன். ஆனலும் அனுபவக் குறைச்சலி ஞலை மக்களோடை வைச்சிருந்த தொடர்புகள் விரிவில்லாத கார ணத்தினுல் ஆரம்ப காலத்தில் எனக்கு அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை.
96

ஆரம்ப காலத்திலையிருந்தே கற்பனைப் படைப்புகளைச் செய் யிறநிலை பெருமளவு நா ட் ட மிருக்கேல்லை. இளம் வயசிலை என்னுடைய சொந்தக் காதல் விவகாரங்கள்-இப்பிடிப்பட்ட சிலதை நான் எழுதினதுண்டு. காலம் போகப்போக கொஞ்சங் கொஞ்சமாக அதை நான் கை விட்டேன். அதையடுத்து மக்களு டைய பிரச்சினையளை எழுதத் தொடங்கி அந்தப் பிரச்சினைய ளுக்குக் கற்பஞரீதியான உருவங் கொடுக்காமல் இயல்பான, நடை முறையோடு ஒட்டிய உருவங்க ளைக் கொடுத்து என்னுடைய இலக்கியப் பணியை ஆரம்பித்த காலத்திலை முதன்முதல் எனக்கு எதிர்ப்புகள் இருந்ததுண்டு.
வெளிநாட்டு இ லக் கி யத் தொடர்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழி வல்லமை இல் லாமை, தமிழிலும் பெரிய அள வுக்கு இலக்கிய நூல்களையோ அல்லது இலக்கண நூல்களையோ படிககாத குறைபாடு எனக்கு இயல்பாக இருந்ததுண்டு. ஆனல் காலம் போகப்போக என்னு டைய சொந்த முயற்சியினலை வெளிநாட்டு மொழிகளுடைய தொடர்பு இல்லாமலே வெளி நாட்டு இலக்கியங்களைத் தமிழிலை நான் படித்துக்கொண்டு இலக்கி யப் பணியைச் செய்ய முற்பட் lair.
பொதுவாக யாழ்ப்பாண மக்களிட்டை ஒரு அபிப்பிராயம் நெடுக இருக்கு இலக்கியக்காரன் ஏதாவதொன்றிால, ஒரு வெளி நாட்டு மொழியிலை பாண்டித்தி யம் பெற்றவனுக இருக்கவே ணும். இந்த அபிப்பிராயங்கள் சாதாரணமாக எல்லாரையும் கவர்வதுண்டு, ஆரம்ப காலத்திலை நானும் அப்பிடி நினைச்சதுண்டு. ஆங்கிலத்துச்சுடாக பெரிய விஷ யங்களை அறிய முடியுமெண்ணி றது உண்மைதான். வெளிநாட்டு
ዳገ
இலக்கியங்களைத் தமிழிலை படித் தும் அந்தப் பெரிய விஷயங்களை
அறியலாம். உதாரணத்துக்கு, மார்க்ஸிம் கோர்க்கியினுடைய தாய்' என்ற நாவலை மொழி
பெயர்த்து, அது தமிழில் வந்த போது, அதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட ஒருவிதமான உணர்வுதான் என்னை ஒரு நாவ லைப் படைப்பதற்கு, பெரிய புத் தகங்களை எழுதுவதற்கு உற் சாகத்தைக் கொடுத்ததெண்டு சொல்லலாம். எனவே ஆங்கில மொழியல்ல. பிரதானம் அந்த மொழியிலையிருக்கிற படைப்புகள் தமிழாக்கப்பட்டுக் கிடைத்தாற் கூட அது போதுமானது. இந் தளவுக்கு அதிகமான வசதிகள் அப்போதே இருந்திருந்தால் நான் ஆரம்ப காலத்திலேயே இன்னும் கூடியளவுக்குச் செய்திருக்கலா மென்பது என்னுடைய இப்போ தைய அபிப்பிராயம்.
ஆரம்ப காலத்திலை வெளி நாட்டு எழுத்தாளரெண்ட அடிப் படையிலை மார்க்ஸிம் கோர்க்கி யினுடைய படைப்புகளை நான் விரும்பிப் படிச்சன் தமிழ் எழுத் தாளர்களைப் பொறுத்தவரையிலை சிதம் பரம் ரகுநாதனுடைய நாவல்களைப் படித்ததுண்டு. அதற்கடுத்து என்னுடைய காலத் லேயே எழுதத் தொடங்கிய ஜெயகாந்தனுடைய இலக்கியங் களை விரும்பிப் படித்ததுண்டு. இலங்கையிலை எனக்குப் பிடித்த எழுத்தாளராக இருந்தது எஸ். பொன்னுத்துரை, அடுத்தது என். கே. ரகுநாதன். ஆனல் பிற்காலத்தில் அவர்களுடைய தொடர்புகள் விடுபட்டு, கொள் கைகள் வேறுபட்டுப் போன போது வெவ்வேறு இடங்களுக்கு நாங்கள் பிரிந்து போகவேண்டிய நிலைமை இகுந்ததினுலை அவைய ளைப்பற்றி நாட்டம் இப்ப எனக்
கில்லை.

Page 21
இலக்கியமாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையாக இருந் தாலும் என்னுடைய ஒரு அபிப் பிராயம் எந்தப் பிரதேசத்திலை
நாங்கள் வாழ்றமோ அந்தப் பிரதேசத்து மக்களுடைய வாழ்க் கையைச் சரியாகப் படித்துக்
கொள்வது . இது முதலாவது வேலை.
இரண்டாவது, அந்த வாழ்க் கையைப் படித்ததோடு மட்டு மல்லாமல் அந்தந்தப் பிரதே சத்து மக்கள் பேசிற மொழியினு டைய அடிப்படைகளைத் தெளி வாகக் கற்றுக் கொள்வது.
மூன்ருவது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்தப் பகுதி மக்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய உடை, நடை பாவனை, அவர் களு  ைடய வாழ்க்கைமுறை, அவர்களுடைய சி ந் த னை கள், அதனுடைய வளர்ச்சி. விஞ்ஞானரீதியாக வரக்கூடிய மாற்றத்தை ஏற்றுக் கொள்வதோ, ஏற்றுக்கொள்ளா மல் விடுவதோ போன்ற அபிப் பிராயங்களை எழுத் தா ள னே சாதாரணமான ஆக்களோ பிடித் துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்த அடிப்படையிலை என் னுடைய நாவல்களைப் படித்துப் பார்த்தால் ஒரு ஐம்பது ஆண்டு காலத்துக்கு மு ற் பட்ட ஒரு வாழ்க்கையை நானெரு இலக்கிய மாகப் படைக்கும்போது அந்த ஐம்பது ஆண்டு காலத்துக்கு முற் பட்ட மனிதனுடைய வாழ்க்கை முறையைப் படித்து கேள்வி மூலமாகவோ அல்லது என்னு டைய அனுபவத்துக்கு உட்பட்ட காலத்தில் நடந்தவைகனையோ அறிந்து அதைச் சரியாகக் கணக் கிட்டு அந்த வாழ்க்கை முறையு டைய நிலைமைகள் சற்றும் பிச காமல் அதை எழுதுவதிலேயே சிறப்பிருக்கிறது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்
இதே நேரத்தில் அந்த வாழ்க் கைக்கும் இன்றைய வாழ்க்கைக் கும் இடையிலிருக்கிற வேறுபாடு களை, முரண்பாடுகளைத் தெளி வாக. மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தெளிந்த மொழி யில், விளங்கக்கூடிய விதத்தில் மக்களுடைய பா ஷை யில் கொண்டு வர வேண்டுமென்பதி லும் எனக்கு ஆர்வமுண்டு ஆகை யினுலைதான் அப்பிடியான இலக் கியங்களை என்னுலை படைக்க முடிந்தது. உதாரணத்துக்கு
"பஞ்சமர்”, “கோவிந்தன் இப் போதைய 'அடிமைகள்", இப்ப நான் எழுதிமுடிச்சு அச்சிலை
இருந்துகொண்டிருக்கிற 'கானல்" எழுதி அச்சுக்குத் தயாராகக் காத்துக்கொண்டிருக்கிற "பஞ்ச கோணங்கள்", இப்போது எழு திக்கொண்டிருக்கிற "தண்ணீர்" போன்ற நாவல்கள் ஏறக்குறைய இந்த அடிப்படையிலேதான் உள்ளன. w
இன்னுெரு விஷயத்தையும் குறிப்பாகச் சொல்லவேணும். யாழ்ப்பாணத்திலை வாழக்கூடிய பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்க ளுடைய பிரச்சினைகளை இந்த ஆறு நாவல்களிலும் தொடர்ச்சி யாக வரிசைப்படுத்தி வந்திருக்கி றன். இதனுடைய கடைசிப் பகுதியாகத்தான் இப் போது "தண்ணிரை” எழுதிக்கொண்டி ருக்கிறன்.
பொதுவாக என்னிலை ஒரு குறைபாட்டை பலபேர் சொல்வ துண்டு, நிகழ்கால நிகழ்வுகளை எழுதாமல் பழைய, கடந்தகாலச் சம்ப வங் களை நான் எழுதிக் கொண்டிருக்கிறனெண்டும், இன் றைய அரசியல், இன்றைய வாழ்க்கை இதுகளைப்பற்றி நான் எழுதவில்லையெண்டும்.
ஒரு களத்திலை நடக்கிற சம் பவங்களை அடி ப் படை யாகக் கொண்டு அந்தக் களத்திலையுள்ள
岛&

மக்களைப் பின்னிப் பிணைத்து ஒரு நாவலை நான் எழுதுறன். அந்தச் சமபவம நடந்த காலத்தையும், அந்தக் களத்தினுடைய பின்ன ணியையும் அந்த மக்களுடைய வாழககை முறையையும், அந்த மக்களுடைய மனப்போக்கையும் கொண்டு அவர்களுடைய மனப் போக்கிற்கு ஏற்றளவு வழி யையே, பாதையையே என்னு டைய படைப்புக்கள்மூலம் காட் டுகிறன். அவர்களை அந்தளவு தூரத்துக்குத்தான் நான் கொண் டுபோக முடியும். அதுக்குமேலை அவர்களைக் கொண்டுபோனல் அது இயற்கைக்கு முரணுன, அதுவுமொரு கற்பனவாதமாகத் தான் இருக்கும். ஆகையினலை அந்தந்தக் காலத்திலை அந்தந்த மக்கள் எந்தளவு தூரத்துக்கு எழுச்சிகொள்ள முடியுமோ அந் தளவு தூரத்துக்குத்தான் நான் அவர்களைக்கொண்டுபோய் ஒரு திசையைக் காட்ட முடியும்.
ஒரு இலக்கியக்காரனுக்கு ஒரு சின்னக் குறிப்பைக் காட்ட முடியுமே தவிர ஒரு Cup(p60LD யான, பூரணமான இலக்கைக் காட்ட முடியாது. காலத்துக்குக் காலம் நான் அப்பிடிப்பட்ட இலக்கைத்தான் காட்டி வாறன்.
இப்ப நான் "பஞ்சகோணங் கள்" எண்டொரு நாவலைச் செய் யிறன். இந்த நாவலை இன்றைய தமிழர் இயக்கங்கள் வரையிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந் தத் தமிழர் இயக்கங்களுக்கும் இடையிலை இருக்கிற உறவு, உடன்பாடு, வேற்றுமை எல்லா வற்றையும் சொல்லி இன்றைய வரையிலை நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறன், இதிலை எவ்வளவு தூரத்துக்கு இந்த மக்கள் இயக் கங்களோடை ணைந்துபோக முடியும் எவ்வளவுக்கு முடியா தென்பதைத் தெட்டத் தெளி வாக நான் சொல்லியிருக்கிறன்.
39
நாங்கள் விரும்பியோ விரும் பாமலோ தமிழர் இரண்டு தமி ழர்களாக வாழ்ந்து வந்திருக்கி னம். ஒரு பகுதித் தமிழர் சகல சுகபோகங்களும் பெற்று சகல வாழ்க்கை வசதிகளும் பெற்ற தமிழர்கள். இன்னெரு பகுதித் தமிழர்கள் ஒருவிதமான வசதியு மில்லாமல் வாழும் தமிழர்கள். இந்த இருபகுதித் தமிழர்களுக் கும் இடையிலுள்ள பிரச்சினை யளை நான் பிரதான முரண்பா டாகக் கருதவில்லை. மார்க்ஸியப் பார்வையிலை பார்க்கப்போனல் வர்க்க முரண்பாடு என்பதுதான் பிரதான முரண்பாடு. நான் படிச்ச மார்க்ஸியமும் அதுதான். ஆஞல் இந்த வர்க்க முரண்பாட் டுக்குப் போறதுக்கு, வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப்படுத் துவதற்கு இடைஞ்சலாக இருக் கக்கூடிய சில முக்கியமான விஷ யங்களிலை சா தி வித்தியாசம் பிரதானமானது.
சாதி என்கிற சாமான் தமி ழர்களை ஒரு மலைப்பாம்பைப் போலை பிடிச்சிருக்கு, சாதிக்கு எ தி ரா ன போராட்டத்தைச் செய்யக்கூடிய மக்கள் யாழ்ப்பா ணத்தைப் பொறுத்தவரையிலை கூட அடிப்படையில் தொழி லாளி வர்க்கமெண்டு சொல்லக் கூடியவர்கள். அதாவது சுரண் டப்படுகிறவர்கள், நிலமில்லாத வர்கள், வசதிகள் இல்லாதவர் கள். இந்தப் போராட்டத்தை நடத்திறதுமூலம் அவர்களுக்குத் தேவையான பயிற் சி யளை க் கொ டு ப் பது, அவர்களைப் போராட்டமயமாக மாற்றுவது, அந்தப் போராட்ட அனுபவங்க ளைக்கொண்டு ஒரு பெரிய வர்க்க முரண்பாட்டுக்கான போராட் டத்துக்கு அவர்களைத் தயார்ப் படுத்துவதற்கான வேலையளைத் தான் நான் என்னுடைய இலக் கியப் படைப்புகள் மூலமாகச் செய்யிறன். பிரதான முரண்பாடு

Page 22
வர்க்க முரண்பாடாக இருந்தா லும் அந்த வர்க்க முரண் பாட்டை வழிநடத்திச் செல்வ தற்கும் பயிற்சியைக் கொடுப்ப தற்கும் இதையொரு ஆயுதமாக நான் பாவிக்கிறன்.
யாழ்ப்பாணத்திலை சாதியள் கனக்க இருக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்ட ஆக்களும் இருக் கினம் உயந்தாக்களும் இருக்கி னம். உயந்தாக்களிலேயும் பண மில்லாத ஆக் களி ரு க் கினம். தாழ்த்தப்பட்டதுகளிலையும் பண மில்லாத ஆக் சுளி ருக்கினம். ஆனல் பணமில்லாத உயந்தவன் நிலப்பிரபுத்துவ முறையினுலை ஏற்பட்ட பழக்கவழக்கங்களிலை யிருந்து இன்னும் விடுபடேல்லை. அவன் இன்னும் சாதி பார்த்துக் கொண்டுதான் இருக்கி ரு ன். ஆகையினலை அவன் சாதிபார்க் கிறவரையிலை இவன் வர்க்க ஒற் றுமையைப்பற்றிப் பேசிப் பிர யோசனமில்லை. அப்ப, காசில் லாதவன், பொருணில்லாதவன், வாழறதுக்கு வழியில்லாதவன் தங்களுடைய சொந்தக்காறற்றை கணிக்கையே இரவல் குடியிருக் கிறவன் எந்த விதமான தொழில் துறையும் இல்லாதவனுங்கூட. பழக்கவழக்கத்தாலை வந்த அடிப் படையிலை சாதி பார்த்துக்கொண் டிருக்கிறபோது இவன் வர்க்க ஒற்றுமையைப்பற்றிப் பேசிப் பிர யோசனமில்லை, இவன் வரான். இவனும் அவனுக்கெதிராகப் போராடிற வல்லமையைப்பெற்ற
காலத்திலைதான் அவனையும் இவ
னேடை சேர்த்துக்கொள்ள முடி யுமேதவிர அவன் லேசாக வரப் போறதில்லை.
இந்தச் சமூகக் கொடுமைக ளும், இந்தத் தாழ்த் தப்பட்ட மக்களின் வாழ்க்கையளும் இலக் கியங்களாக்கப்பட வேண்டுமென நான் கருதினன். முதல்லை இந்த மக்களின் ரை பி ர ச் சினை ய ஸ் தீர்க்கப்பட வேணுமெண்ணிறது
அடிப்படையில்ை என க் குள் ள, என்ரை அரசியல்ோடை சேர்ந்த அபிப்பிராயம். இந்தப் பிரச்சினை யள் எப்படித் தீருமென்பதற்கும் எனக்கும் ஒரு அரசியல் அபிப் பிராயமுண்டு மக் சு ஞ டை ய போராட்டத்தின்மூலந்தான் இந் தப் பிரச்சினையளுக்கு நிரந்தரத் தீர்வு காணலாம் ஆளுல் இந்த மக்சளுடைய பிரச்சினையளை எல் லாருக்கும் விளங்க வைக்கிறது ஒரு பிரதானமான அம்சமாகும், இதுக்கான ஒரு கருவியாகத்தான்
நான் இலக்கியத்தைப் பாவிக் கிறன்.
மொழிக்காகத் தொண்டு
செய்யவேணுமெண்ட எண்ணம் எனக்கில்லை. ர னெ ண் டா ல் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யத் தேவையில்லை. அதுக்கு கசமுமில்லை, சலரோகமுமில்லை, ஒரு விதவருத்தமுமில்லை. அது தன்ரைபாட்டிலை இருக்கு ம். எனக்குத் தேவை என்ரை கருத் துக்களைச் சொல்லிறத்துக்கான ஒரு ஊடகமாக ஒரு கருவியாக த மி  ைழ ப் பாவிக்கிறது மட் டுந்தான். எழுதிக்கொண்டு போகேக்கை சில கிராமியச் சொல் வழக்குகள் வந்துசேரும். நான் கிராமங்களுக்குப் போய் கிராம மக்களோடை பேசிப் பழ கிறதிலை இயல்பாகவே அந்தப் பேச்சு வழக்கு, சொல்வளமெல் லாம் வருகிது. அப்ப அதுகளை நான் வலிந்து தேடிக் கொள்ளி றதுமில்லை.
அப்ப உண்மையிலை நான் இந்த மொழியை என்னுடைய கருத்தைச் சொல்லிறதுக்கு, இந்த வில்லங்கங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்கிறதுக்கு ஒரு கருவி யாகப் பாவிக்கிறனேதவிர நான் மொழிக்காக ஒருநாளும் இலக்கி
யஞ்செய்யவில்லை.
O
40

அந்த வெல்வெட்டுப் பறவை
- சோலைக்கிளி
சா. நெடிய முடத்தென்னை அடியினிலே நானும் நீயும் உட்கார்ந்து விரல்நசித்துக் கதைத்துச் சிரிக்கையிலே வருமே. சொல்லிவைத்தாற்போல் கள்ளச் சந்திப்பு அனைத்திலுமே பங்கெடுத்து நாம் பின்புறத்தைத் தட்டிவிட்டு எழும்வரைக்கும் く அந்தக்கால் மாறி இந்தக்கர்ல், இந்தக்கால் மாறி அந்தக்கால் என்று ஒற்றைக் காலில் நின்று நமக்கா
ஆட்பார்த்து அறிகுறிகள் சொல்லிடுமே, வெல்வெட்டுப் பறவை வால் மினுங்கும் வெல்வெட்டுப் பறவை *அமுக்குத்தொங்கலில் எச்சம் அடித்தாலும் அந்நேரம் மணம்தான் அது ஒரு கால, காதல் கிறுக்கு தலையில் இருந்த நாம் பெருவிரலில் நடந்த நேரம்.
அப்போது வானம் எட்டிப் பிடித்தால் கைக்குப் படுகின்ற சிரு முழ இரு முழத் தூரத்தில் இருந்தது. ஏன் உனக்குத் தெரியுமே அண்ணுர்ந்து நீ சிரித்தால்
க்குக் கேட்கும். வானுக்கும் உச்சியெல்லாம் பூப் பூக்கும். நமக்காக அந்தத் தனியிடம் அமைந்தது ஒரு வரப்பிரசாதம் இல்லையா? அந்த யாருமறியாத இடுவலுக்குள்ளும் நமது கள்ளச் சந்திப்பு நிகழ்வதை` அறிந்துபார் செங்கண் வெல்வெட்டுப் பறவை. தாபகம் இருக்குமே; நீ மண்கிள்ளி எறிந்து *சூய்" என இடைக்கிடை அரட்டுகின்ற வெல்வெட்டுப் பறவை.
ஆதற்கும்.அப்போது வால்முளைத்த பருவம். சிறகின் ரெண்டு பொருத்துகளுக்குள்ளும் சதை பிடிக்கும் வயசு. விஆக்குள் இருந்த தூறல் மயிர்கள் உதிர்ந்ததோ? இப்ப்ோது உருமாறிப் போனதோ? *கீச்சென வரும் என்ன. ஆனல் நாம் எழும்பும்வரைக்கும் வாய் அசைக்காது.
சே. தின்ற விதையைக் கக்கித் தரும் வஞ்சமே இல்லாத பட்சி. தம் காதலுக்கு அதுஒரு ஜீவன் போல,
யோசித்துப் பார்த்தால் நெருப்பு நெருப்பாக வருகிறது ஒரு செங்கண் குருவிகூட அங்கீகரித்த நமது காதலை இவர்களேன் பழமாகவும் கொட்ட்ையாகவும் பிரித்துச் சிதைத்தனர் வைத்திருப்பேன், உனது கடிதங்கள் அனைத்தையுமே வைத்திருப்பேன். தைத்துப் பொருத்தி அவற்றை ஆடையாய் உடுத்துக்கொண்டு திரிய. O
4.

Page 23
டானியல்
எண்ணத்தையும் ள்முத்தை யும் கண்ணுக்கி, அனுபவத்தா லும், பார்வையாலும் பதமாகி தமிழ்ப் பண்பியலின் ஒரு பாகத் திற்கு தனது ஆளுமை மிக்க ஆக்கங்களால் உரம் சேர்த்தவர் நண்பர் டானியல். பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல் என் னும் கோட்பாட்டின்படி பின் னைப் புதுமைக்கு முன்னைப் பழம் பொருள் தேவை என்ற நிலைப் பாட்டிற்கு இசைவாக இயங் கிய ஓர் இயக் கவியலாளன். எழுத்தறிவு முன்பே இதய உணர்வு மேலெ ழுந்து செழுமைப்பட்டு வெளிக் கிளம்பி காலத்தின் கோலத்தா லும், கைப்பசையின் மைய்ாலும் *பிஞ்சில் பழுத்தும் முற்றிய பழங் களுக்குச் சற்றும் குறைவுபடாத சுவைக்கனியாய் இனித்த எழுத் துலகப் போராளி இவர்.
நவீன இலக்கியத் துறைக ளான சிறுகதையின் உருவத்தை யும், நாவலின் வடிவத்தையும் விளங்கித் தெளிந்து இவ்விரு ஊடகங்கள் மூலமாக இவர் கருத்துக்கள் கருவாகி கதையாகி கலையாகி வெற்றி பெற்றமை அபிப்பிராய பேதமுடையோரா லும் தலையசைத்தும் கையசைத் தும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன் முகும். செய்யுள் இனங்களில் வெண்பாவைப்புலி என்பார்கள்.
வளமாவதற்கு
ஒரு பண்பாட்டுப் பாட்டனுர்
- ஈழத்துச் சிவானந்தன்
புலியைப் பிடிப்பது எவ்வளவு கடின மோ அதுபோலவே வெண்பா வடிவம் பிடிபடுவதும் கடினமானதே. இதுபோலவே வசன இனங்களில் சிறுகதையை புலி என்று சொல்லலாம். சிறு கதைப் புலிகளை ஐம்பதுக்குமேல் பிடித்த பெருமை இவருடையது. இச்சிறுகதைச் சிறுத்தைகளின் உறுமல் சரஸ்வதி, தாமரை மூலம் தென் தமிழ் நாட்டிலும் ஒலித் தது. இதுபோன்றே நாவலை யானைக்கு ஒப்பிடலாம். டானிய லுடைய கைப் பே னை யானை பிழைத்த பேனையன்று - யானை பிடித்த பேனையாகும். இந்த யானைகளின் பிளிறல்களும் தென் தமிழ் நாடு வரை கேட்டது.
பஞ்சமர், போராளிகள் காத் திருக்கின்றனர், கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச
கோணங்கள், தண்ணீர் முதலிய நாவல், யானைகள் தமிழ்ப் பண்
பாட்டுப் பட்டத்து யானைகளா
கும். யானை வரும்பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல இவருடைய நாவல்களுக்கு இவர் தந்துள்ள முன்னுரைகள் நாவல்களின் அமைப்பையும் அங் கங்களையும உள்ளோட்டங்களை யும் விளக்குவனாகத் திகழ்கின் றன.
கிராமிய மண்ணின் மண மும்-மக்களின் மொழியும் மன
42

உணர்வுகளும் அவலங்களும் இவ ருடைய அனுபவ முதிர்வால் ஆக்க ஆற்றலால் மொழியியல் துறை வல்லுனர்களின் கவனத் திற்கும் கணிப்புக்கும் உள்ளாகி யமை தமிழ் இலக்கிய வரலாற் றில் குறித் து வைக்கக்கூடிய அம்சமாகும். வழக்கொழிந்து போன சொற்களைத் தன் புனை க  ைத க ளில் பிரயோகித்து அவற்றையெல்லாம் எதிர்கால மொழித்துறைக்கு ஆவணமாக்கி யுள்ள் திறன் பாராட்டுக்குரியது
இலக்கியப் பதிவாளர்கள் பிறப்பு இறப்புப் பதிவாளரைப் போன்று நாட்கடத்திப் படைப் புக்களைப் பதிந்தாலும், பதிவேட் டில் ஆணு பெண்ணு என்று அனுமானிப்பதிலும் காலப்பகுதி யைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொ ழுதுதான் ஒரு படைப்பின் பெறு மானமும், கன கா த் திர மும்
தேவையும் இலக்கிய மாணவர் களுக்கும். சுவைஞர்களுக்கும் புரியவரும்.
தமிழ்ப் பண்பியலின் மூல வேர் தமிழ்ப் பெண்ணிலிருந்து தான் அரும்புகிறது என்று கூற வேண்டும். பல பண்பியலாளர் களை உருவாக்கியது பெண்மை என்றே சொல்லவேண்டியுள்ளது. தமிழ் மரபில் இது இழையோடி யிருக்கும் இயல்பு கருத்திற்குரி யது. இந்தப் பாரம்பரியப் பாய்ச் சல் நண்பர் டானியலையும் விட்டு வைக்கவில்லை. தனது முதலாவது கதையை எழுதிய அனுபவத்தை கீழ் கண்டவாறு சொல்லுகின் ருர்.
"ஒழிவு மறைவின்றிக் கூறுவ தானுல் எனது காதலியானவ ளுக்கு மனதைத் திறந்து காட்டு வதற்காகவே எழுதத் தொடங்கி னேனென்று சில வார்த்தைகளில் கூறிவிடலாம். இதில் வெட்கம் என்ன இருக்கிறது?. நான் ஒருத் தியைக் காதலித்தேன். அவள்
43
இவருடைய
என்னை ஏமாற்றி விட்டாள். அ த ன லே யே சோதனையின் கொடுமை அல்லது பழிக்குப்பழி என்ற முதலாவது சிறுகதை பிறந்தது. (தாரகை ஜுலைசெப்ரெம்பர் 1954) வாழ்க்கைச் சோதனைகளின் கொடுமைகளுக்கு முகங்கொடுத்துப் பழிக்குப்பழி வாங்கும் ஆவேசத்தின் ஆத்மத் துடிப்புத் தொடங்கிய கட்டம் இதுவே. மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி யடங்குவது மண்ணுக்குள்ளே என்ற கவிதை அடியுடன் யாழ்ப் பாணப் பெண்ணிலிருந்து தஞ்சா வூர் மண் வரை - டானியலின் பண்பியல் பாத்திரத்தின் பரந்த யாத்திரையை எண்ணிப்பார்ப் பது அவசியமானது.
நண்பர் டானியல் ப. ஜீவா னந்தம் அவர்களால் கவரப்பட்டு வளர்ந்தவர். பொதுவுடமைப் போக்கும் நோக்கும் உடையவர். இவருடைய ஆக்கங்கள் இவர் வரித்துக்கொண்ட கொள்கைக்கு வேருகக் கால் தாவியது கிடை யாது. தடம்பார்த்து வழி நடந்த நெடும் பயணம் இவருடையது. அழு ங் குப் பிடி - குரங்குப்பிடி போன்ற ஒரு வைராக்கியப் பிடிப் பாளன். கருந்து ஈன்று புறம் தந்த கற்புக்கனல் என்றும் இவ ரைச் சுட்டலாம். கற்பெனப்படு வது சொற்திறம்பாமை என்னும் வாக்கியத்தையும், "தற்காத்து தற்கொண்டார்பே தகை சான்ற சொற்காத்து சோர் விலாள் பொண்" என்ற குறளை யும் இவருடைய இயல்புக்கு அணி யாக்கலாம். இருப்பினும் இவர் கரு த் து வேறுபாடுடையவர்க ளோடு பழகிய பண்பும் நம் நெஞ் சுக்குரியது. நட்பையும் நேசததை யும் இவர் கருத்துக்கனல் காயப் படுத் தவில்லை. தோழமையைப் பேணியதுபோலவே நட்பையும் பேணி வளர்த்தார். இதனலேயே "கூட்டா வித்

Page 24
தொகை பெருக்கம் கண்டு நின் ADğil,
டானியலில் இலக்கிய வாழ் வுக்கு குருவான ப. ஜீவானந்தம் அவர்களும், தவத்திரு குன்றக் குடி அடிகளாரும் கலந்து ஆற்றிய பணியினை (காவியும் சிகப்பும் இனமானவை இணக்கமானவை, சிவபெருமானும் ஒரு கொம்யூ னிஸ்ட் தானே) நாங்கள் இருவ ரும் சந் த க் கும் வேளைகளில் கதைத்துக் கதைத்துக் கனிந்து கனிந்து இ ன் புற்ற நாட்கள் எத்த numr. Lu. g. SoyGuri Sðar அளைத்து திருவாசகம் பற்றி உருக் கமாகப் பேசவைத்த அடிகளார் அன்பையும்; அவர் வாழ்க்கையில் பொருள் நிலைத் துன்பத்துக்குள் ளாகியபோது அடிகளார் நிலம் வழங்கி வாழ்வளித்த கருணையை யும் டானியல் ஒரு மார்க்ஸிச மன எழுச்சியுடன் வியப்பதுண்டு. இத் தொடர்பு கே. பாலதண் டாயுதம் வரை நீடித்த வரலாறும் உண்டு.
புங்குடுதீவில் நடந்த இலக் கிய விழாவில் இளங்கோவனல் ஒழுங்கு செய்யப்பெற்று என் தலைமையிலே டானியல் பேசிய நாள் தொடக்கம் எங்கள் நட்பு பயில்தொறும்நூல்நயம் போன்று நெஞ்சத்து அகநக நட்பாய் நீண்டது. கிராமியப் பண்புகளை யும் விழுமியங்களையும் எடுத்துச் சொல்லும்போது நி ைற ந் த பொறுமையோடு கேட்டுத் தனக் குத் தேவையானவற்றை எடுத் துக்கொண்டு பிறவற்றை ஒரு சிரிப்புடன் நகர்த்திவிடும் இவரு டைய நயத் தக்க நாகரிகம்
பொதுவாழ்க்கை வாழ்பவர்க ளுக்கு ஒரு பாடமாகும்.
கோவிந்தன் வெளியீட்டு
விழாவுக்காய் தஞ்சைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந் திருந்த விரிவுரையாளர் மூர்த்தியோடு நானிருந்த கலட்டி வீட்டிற்கு வந்து நீண்டநேரம் உரையாடிய போது என்னுடைய சமயம்
44
சார்ந்த கருத்துக்களைக் கேட்டு வைப் பில் வைத்துக்கொண்டு தனது போக்குகளையும் நோக்கு களையும் சிரித்திரன் சுந்தர் குறிப் பிட்டதுபோல் மென்மையான நா வால் மெத்தனமாய் கூறிய பண்பியல் அலைகள் இப்பொழு தும் என் நெஞ்சின் அலைகளாய் மெல்ல மேலெழுகின்றன. புத்தி ஜீவிக்கு ஒய்வென்பதே கிடை யாது சொல்லப்போனுல் அமைதி திருப்தி என்பதும் இல்லை. அவன் ஒரு ஆகுதிக்குரிய நெய் யே. உத்தியோகனுக்கு ஓய்வுண்டு, அமைதியுண்டு. நரம் போக வில்லையே என்ற நிலையுமுண்டு. புத்தியோகனுக்கு நேரம் போத வில்லையே என்ற ஆதங்க மே உண்டு. அவன் முதிர்ந்து பழுத்
காவோலையாகி 臀 蠶 லிருந்து விடுபட ஆயத்தமாக லாம். இவனுடைய முதிர்ச்சி குருத்தோலையாய் கருத்தாழமும்
கலை மேதையும் காட்டி நிற்கும்.
கால தேவனின் கரங்கள் பட்டு இவன் உடல் உபாதைக்குள்ளாகி உலகை விட்டு நீங்கும். இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க இல்லாமல் போவதே புத்திஜீவியின்நிலை இந்த நிலையே டானியலுக்கும் உண்டானது.
தனது கருத்தை பலரோடும் பகிர்ந்து ஆலோசிப்பது போலவே தன்னுடைய எழுத்தையும் எழு தியதற்குப் பின்பு பலருக்கும் காட்டி அபிப்பிராயம் அறியும் ஒரு பொறுப்புடைய எழுத்தாள ஞயும் டானியல் விளங்கினர். இது குறித்து என் கதை என்ற தன் கதையில் கீழ் வருமாறு எழுதுகிருர்.
ஒரு நாவலில் காட்டப்படுவ தான காலம், அந்தக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு முறை பேச்சு முறை பழக்கவழக் கங்கள், நாவலின் காலநகர்ச்சி யின் புலப்பாடுகள் இலல்பான நடைமுறைகளோடு அந்த நாவலை

நிலையியலிருந்து இயங்கியல் வரை இட்டுவருதல், அந்தக்கால நடை முறைகளுக்கேற்ப உலக வியாபக மான பரிஞம வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குளும் சங்களை வெளிக்கொண்டு வரு தல் ஆகியவைகளில் நான் தவறி யிருக்கிறேஞ என்பதனை நாவல் அச்சுக்குப் போகுமுன் பலரிட மும் அதைப் படிக்கக் கொடுத்து படிப்பவர்களின் அபிப்பிராயங்க ளையும் உள் வாங்கிக் கொள்வ தில் நான் த வறுவ தி ல் லை. அச்சேறுவதற்கு முன் அவைக ளைப் படிப்பதற்கு எழுபத்தைந்து வயதுக்குக்கு மேற்பட்ட ஒருவர்
ரு குடும்பப் பெண், ஒரு உயர் பள்ளி மாணவன், ஒரு உடல் உழைப்பாளி, வர் க் க ச மூக அமைப்பினைத் தெளிவுறப் படித்த ஒருவர் உட்படக் குறைந்தது எட்டுப் பேர்கள் வரையிலாவது இருப்பர். (என்கதை பக், 3-14) இலக்கியப் பொறுப்பும் அதனை வெளிப்படுத்துவதற்கு மு ன் பு காட்டும் அக்கறையும் கரிசனையும் டானியலில் பண்பியல் பாத்தி ரத்தின் முக்கிய மையக்குறிகளா கும். அண்மையில் தென்னகத் தில் வெளியான 'கானல்" என் னும் தனது நாவலில் டானியல் தன்னுடைய நாவல் இலக்கியக் கொள்கையைக் கோ டி ட் டு க் காட்டியுள்ளார். இந்த நாவலில் ஒரு தலைவன் தலைவியையோ குறிப்பிட்ட ஒரு உருவத்தையோ நீங்கள் பார்க்கமாட்டீர்கள். இந்த நாவலில் நான் உலாவ விட்ட சமூக அமைப்புப் பிரதி நிதிகளே என்னுல் கற்பிக்கப்பட்ட கருப்பொருளை முதன்மைப்படுத் தும் விதத்தில் தாங்களாகவே ஒரு உ ரு வத் தி னை அமைக்கச் சுதந்திரமாகவே விட்டுவிட்டேன். இதே கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு மக்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியாத பல நாவல்களைப் பல நாவலாசிரியர் கள் பிறப்பித்துள்ளனர்.
இந்தச் சித்து விளையாட் டினை நான் செய்யவில்லை. எந்த மயக்க நிலைக்கும் வாசகனைக் கொண்டுபோவது எனது நோக்க மல்ல. கானல் என்ற இந்தநாவல் எனது இலக்கிய நோக்குக்கு அமை யச் சாதாரண வாச கன லும் கருப்பொருளையும் ஏனையவற்றை யும் மகிழ்வோடு புரிந்து அனுப வித்துக் கொள்ளக்கூடிய விதத் திலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை நான் இங்கு துணிந்து கூறுவேன்.
டானியலை இலக்கிய உலகில் * அ ப் பு" என்று அழைப்பர். தோழமையும் பழமையும் பொருந் திய பாங்கினை இது காட்டுகின்ற வேளையில் பண்பியல் பார்வை ஒன்றின் பக்குவப்பட்ட பாட்ட ஞர் பரம்பரையின் பங்காளி என்பதனையும் வெளிப்படுத்தி நிற்கிறது. பாட்டி வைத்தியம், பாட்டி கதை என்பவை போலவே பண்பாட்டுப் பாட்டனர்களின் தொடர்களையும் தொண்டுகளை யும் எண்ணத் தூண்டும் அம்சமே இது.
டானியல் மக்கள் என்னும் பல்கலைக் கழகத்தில் பயின்று அப் பல்கலைக் கழகத்திற்கே விரிவுரை யாளரானவர். இது போலவே நண்பர் டொமினிக் ஜீவாவையும் மக்கள் பல்கலைக் கழகப் படிப்பா ளியாகவும் படைப்பாளியாகவும் நான் கருதுகிறேன்.
(நான் படித்த பல்கலைக் கழ கங்கள் என்று - மக்கள் மன்றங் களை மக்கள் குழுக்களை மக்கள் வாழ்க்கையை ருஷ்ய எழுத்தாள ரான மாக்ஸிம் கார்க்கி குறிப் பிட்டு எழுதியது இங்கே நினை விற்குரியது.) இவர்கள் இருவரும் தமிழ்ப் பண்பியல் துறைக்கு ஆற் றிய சேவைகள் இனி வருங்காலத் தலைமுறையினரின் ஆய்வாளர்க ளால் வெளிக்கொண்டு வரப் படும். O
45

Page 25
தோழர் குமாரசுவாமி
கட்சி ஊழியத்துக்கு அர்ப்பணமான தோழன்
தோழர் பொன். குமாரசுவாமி அவரது அறுபத்திரண்டாவது வயதில் எதிர்பாராத விதத்தில் காலமானதுடன் இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியின் ஆற்றல் மிக்க சிரேஷ்ட தலைவர் ஒருவர் தமது மத்தியிலிருந்து மறைந்து போயுள் ளார். அவர் காலமான தருணத் தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் யாழ். மாவட்டக் கமிட்டி யின் செயலாளராக இருந்தவர். ஆற்றல் பொதிந்த ஆளு  ைம உளளவராகவும், எவரையும ஆதர்ஷிக்கும் இயல்பு கொண்ட வராயும் இருந்த அவர் யாழ்ப் பாணத்திலுஞ்சரி, கொழும்பி லுஞ்சரி தன்னுடன் தொடர்பு கொண்ட அத்தனை பேரினது உள் ளங்களையும் கொள்ளை கொண்ட C)
தமது ஆரம்பக் கல்வியை மலாயாவில் துவங்கிய தோழர் குமாரசுவாமி யாழ்ப்பாணத்தில் தனது உயர்நிலைக் கல்வி யைப் பூர்த்தி செய்தார். அவர் இளம் வயதிலேயே, பிரிட் டி ஷா ரின் ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய ஆட்சியதிகாரத்தின் பாலனப் பிரயோக நிர்வாக அமைப்பாக விருந்த பொது எழுதுவினைஞர் சேவையில் இணைந்து கொண் டார், தமது சொந்த நாட்டி லிருந்து பல செலவினங்களுக் குள்ளாகும் வகையில் ஊழியர் களை இறக்குமதி செய்வதற்குப்
8. ஆர். அரியரத்தினம்
பதிலாக மேற்படி சேவையில் உள்நாட்டவர்களையே சேர்த்துக் கொள்வது பிரிட்டிஷாருக்குச் சிக்கனமான காரியமாகப் பட் டது. இவ்வாறு சே  ைவ யில் அமர்த்தப்பட்டவர்களுக்கு மிகச் சொற்ப ஊதியமே வழங்கப்பட்ட பொழுதிலும் த ந் போது ஸ் ள வாறு அவர்களுக்கு அரசியல் மற் றும் தொழிற்சங்க உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. 1950-க் களின் ஆரம்பத்திலும், நடுப்பகு தியிலும் எழுதுவினைஞர் சேவை யில் பெருமளவு ஆளணிசுள் இருந் தன. அவர்கள் தங்களை, அரசாங் கம் அங்கீகரிக்க மறுத்தபட்சத்தி லும், அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் என்ற பேரில் ஸ்தாபன மயப்படுத்திக் கொண்டனர். அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்காக கடும் போராட் டங்களை நடாத்தினர். இளம் வயதினரான குமாரசுவாமி வெகு விரைவிலேயே இந்த ஸ்தாபனத் தின் தீவிர ஊழியராக மாறிய துடன், ரி. பி. இலங்கரத்ன, கே. சி. நித்தியானந்த போன்ற புகழ்பூத்த தொழிற்சங்கத் தலை வர்களின் வரிசையிலும் இடம் பிடித்துக்கொண்டார். அரசியல் பிரக்ஞையுடையவர்கள் மத்தியில் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் செல்வாக்குப் பெறத் தலைப்பட்
* ليـس
46,

1946-லும் - 1947-லும் (தியாகி கந்தசாமி இவ்வியக்கத் துக்காக இன்னுயிரை இழந்த காலமது) அதிற்குப் பின்னரும் சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவுப்படி, அரசாங்க ஊழிய ருக்கான அரசியல் உரிமைகள் முதலானவற்றுக்காக இந்த ஸ்தா பனம் நடாத்திய போராட்டங் களில் தோழர் குமாரசுவாமி ஒரு தாயகமாக விளங்கியதுடன், இப்போட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வகித்த முக் கிய பாத்திரத்தை உணர்ந்து, அக்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தார். கட்சியில் சேர்ந்த சில காலத்தினுள்ளேயே அவர் அதன் தீ விர ப் பணியாற்றும் தலைவரானர். அரசாங்க சேவைத் தொழிற் சங்க சம் மே ள ன் ம் போன்ற வெகுஜன ஸ்தாபனங் கள் மத்தியில் கட்சியின் கருத்து நிலையை அவர் பரப்பினர். அர சாங்க எழுதுவினைஞர் சங்கம், அரசாங்க சேவைத் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றின் செய லவைகளின் உறுப்பினராகவும் பணியாற்றினர். தொழிற்சங்கப் பணிகளுடன் கட்சிப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
1964-ல் அவர் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் மூச்சு விடும்வரை இதே பதவியை வகித்தார். அவர் மத்திய கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்
பட்ட வேளையில் அர சாங் க
சேவையிலிருந்து கட்சி விடுத்த வேண்டுகேளுக்கிணங்க சேவையி லிருந்து விலகிக் கட்சியின் முழு நேர ஊழியராக மாறினர். மலை யகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் பணியாற்றும் பொறுப் பினை அவர் மகிழ்ச்சியுடன் ஏற் றுக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலானதும், இலங்கைத் தொழிற்சங்க சம்மே ளனத்துடன் இணைந்திருந்தது
சங்கம் சண்முகதாசன் தலைமையி லான பிளவுவாத கோஷ்டியின ரின் நடவடிக்கைகளில் பெரிதும் பா தி ப் புற் றது. இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர் சங்கத்தை மீண்டும் அதிகார பூர்வமாகத் தலைநிமிர வைக்கும் பொறுப்பு தோழர் குமாரசுவாமி யையே சார்ந்திருந்தது. 9a) ருக்கு இது ஒர் இலகுவான பணி யாக இருக்கவில்லை ஏனெனில் தோட்டத் தொழிலாளருடனன பரிச்சயம் இதற்கு முன்னர் அவ ருக்கு இருந்ததில்லை. ஆனலும் அவர் தமது பணியை அற்புத மான முறையில் ஆற்றவே செய் தார். இதனுல்தான் அவர் உலக தொழிற்சங்க சம்மேளனத்தில் இனைந்துள்ள சர்வதேச விவசாய ஊழியர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். இந்தப் பதவி வகித்த ரீதியில் தோழர் குமாரசுவாமி சோஷலிஸ’ நாடுகளுக்கு மட்டு மன்றி பாலஸ்தீன விடுதலை ஸ்தா பனம் நிலைகொண்டுள்ள பிராந்தி யங்கள் உட்படப் பல அர பு நாடுகளுக்குப் பல தடவை விஜ யங்களை மேற்கொண்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர் சங்கத்தைப் புனர் நிர்மானஞ் செய்கின்ற பணியைப் பூர்த்தி
செய்த பின்னர் யாழ்ப்பாணஞ்
சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ். மாவட்டக் கமிட்டியின் பணிகளைக் கவனிக்குமாறு அவர் கட்சியினுல் கோரப்பட்டார். சில காலம் மாவட்ட அமைப் பாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் கடந்த ஈராண்டுகளாக கட்சியின் யாழ். மாவட்டக்
கமிட்டியின் செயலாளராகப்
பணியாற்றினர். -gjoh (560-11 பணி மிகச் சிரமசாத்தியமான தாக இருந்தபொழுதிலும் கூட, அவர் தமது பணியைத் திறம்
மானதோட்டத் தொழிலாளர்படச் செய்யவே செய் தார்.
-47

Page 26
தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கு வதற்கு கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் இது ஒரு கஷ்ட காலமாக இருந்தது. ஆட்சிக்கு ஒன்றன்பின் ஒன்ருக வந்த அர சாங்கங்கள் தமிழர் களு க்கு விரோ த மா ன சட்டங்களை இயற்றி வந்த காலகட்டத்தில் இராணுவத்தைக்கொண்டு யூ. என் பி. அரசு தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் தலைப்பட்ட வேளையில் இவற்றுக்கு ஆயுதப் போராட்டTரீதியில் முகம்கொ டுக்கத் தலைப்பட்ட தறுவாயில் தோழர் குமாரசுவாமி தன்ன லான வகையில் தமது பணியைத் திறம்படச் செய்தார். இவரது செயலாற்றலைக் கருத்திற் கொண்ட கட்சி அவரைத் தனது அரசியல் மண்டல உறுப்பினராக தெரிவு செய்தது. கட்சியின் அரசி
யல் மண்டல உறுப்பினர் என்ற ஹோதாவில் தோழர் குமார சுவாமி பல சர்வதேச மகாநாடு களில் சட்சியின் சார்பில் கலந்து கொண்டார். அவர் காலமாவ தற்குச் சில வாரங்களின் முன்னர் ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு சீனவுக்குச்சென்று திரும்பினர்.
தோழர் குமாரசுவாமியின் ஆயுள்காலம் அற்பசொற்பளுய் முடிந்து போனது வாஸ்தவமே. அவர் மேலுஞ்சிலகாலம் வாழ்ந் திருந்தால் அவரது சாதனைகள் மேலும் பெருகியிருக்கும். ஆனல் விதி அவ்வாறு அமையவில்லை. கட்சிக்காக தோழர்குமாரசுவாமி ஆற்றிய அரும் rெரும் பணிகளை அவரது தோழர்கள் என்றென் றும் நினைவுகூருவர். O
f( LSAiMLEELLLLLEELMMMLL LLEASMMMLL LALEEMMLMM MELSSLASeMLA AAAAASASLMSLAA ELSMMLLTMAESMMLSAAAALATSMMYAEASMAL
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள்.
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
511,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பு- 2:
aMMAAAAMAMAM MAMA AASMSATAAqSqSTAAA AASAASTMAAqSMA LLAMMSLMESASiMASATATLSLqSTAASLLLLAAAASLMTekS سبسيوه
48

*பொன்’னுன எமது ‘கும்’!
பொதுமை மகளவளைப்
பூப்படைந்த காலமுதல் வதுவை செய்தவன் வரலாற்றுப் பாதையதில் புதுமை செயவிழைந்த "புதுசு" களில் "பொன்னவன் எதுகை ஓங்கினும்படி இறங்காது கிறங்காது உரிமைக் குரல்கொடுத்த உதாரனவன் குமாரன்
"பொன்'னென்றும் கும்மென்றும் போற்றுநல் லாசான்தன் கண்ணென்றே கட்சியதைக் காதலித்த தோழன் துயர் என்னென்ன வந்தபோதும் எடுத்தநல் லிலட்சியத்தை தன்நெஞ்சில் பூஜித்தே தாபரித்த வேந்தன்! இன்னென்று வேண்டான் இருக்குமட்டும் கட்சிக்காய் முன்னின்று உழைத்தவன் மூத்தவன் புகழ்பூத்தவன்"
சங்கஞ் செய்துதொழி லாளர் நலனுக்காய்ப் பங்கமின்றிப் பலகாலம் பணிசெய்த முதல்வன் இயக்க விதியொழுங்கு இம்மியேனும் பிசகாது மயக்க தயக்கமின்றி மாசில் பணிபுரிந்துநன் முயக்கம் கண்டுமகிழ் முதல்வன் புதுமைப் புதல்வன்
களங்கள் பலகண்ட கர்மவீரன், தன்தோழர் நலங்கள் காத்றுநின்ற நல்லவன், நண்ணியோர்
- பெரி. சண்முகநாதன்
உளங்கள் தனில்நிறைந்த உத்தமன், ஊழியத்தில் திறங்கள் தமக்கோர் சீருதார புருஷனுய் தடங்கள் பலபதித்த தலைவன் தனக்கென்று நலங்கள் கருதாது நற்பணி செய்த*கும்’ உறங்கினனே இன்று?
தாரணியில் சீர்பெறு சமதர்மக் கொலுவமைக்கப் போரணியில் பலப்பலரும் புகுந்துகொண்ட வேளையதில் சீரணியில் மக்களையெம் சிங்கத் திருநாட்டில் ஓரணியாய்த் திரண்டிடவே உறுவேலை புரிவதற்குக் காரணியாய் நின்றவரில் கணிக்கத் தகுந்தவனுய் வாரணனய்க் காரணஞய் வழுத்தத் தகுந்தநல்லோர் பூரணனுய்ப் பரிமளித்த ' *பொன்னே கும் "மே "சாமியே ஏனழுதோம் இன்று?
உன்மறைவில் நாமோ இழந்தவையோ பலகோடி என்ருலும் நீபதித்த தடங்கள் தாமதுவைத் தவருது சுவடுபற்றிப் புடங்கள் பலபோட்டுநீ பூஜித்து வந்தகட்சிப் பணியதுவைத் தொடருவதே பாரில் உன் நினைவாக இனிமேலும் நாமாற்றும் இனிய பணி
பணிவுக்கே இலக்கணமாய் படையதற்கே தளபதியாய் துணிவுடனே செயல்புரிந்த தோழன் - பிணிபிடித்த கரவனத்தும் களையவெரி சரந்தொடுத்த திடந்தோளன் குரவளையே “கும்"மென்று கும்பிடு VV
49

Page 27
கொடிய அரக்கி போ வெளியே!
— Up &Lmég rú
கட்டுக் குலையா திருந்தென் உளத்தில் கலந்தவளே வெட்ட வெளியிலும் விட்டு விடாது விரும்பியுனை, பட்டதுயரினைப் பாட்டில் எழுதிப் பரப்பிடுவேன் நட்டம் அடைந்து நலிந்தேன் அடிநீ நடவெளியே
பள்ளயம், மண்டூர், திருவிழா, நல்ல படங்களிலும், கள்ளம்ாய் உன்னைக் கரம்பிடித் தின்புறக் காதலுற்று, கொள்ளைத் துயரில் குலைந்து மெலிந்தேன் கொடியவளே! வெள்ள மெனத்திரு வீற்றிருந் தாளதை வீழ்த்திவிட்டாய்
தந்தைதாய் மாமனத் தானின், விழியில் படாதபடி, முந்தும் உணர்வில் முனைந்துன் இதழ்வைத் துறிஞ்சுதற்கு எத்தனை நாளாய்த் தவமிருந் தேனடி ஏங்கவைத்தே, நின்முய் தொலைவில் நினைவில் நெருப்பை வளரவிட்டாய்
மாலைக் கருக்கல் மனது சிலிர்த்து மயக்குகையில்,
ಹಿಳ್ಗೆ
நடுவே உனதெழில் ாட்டியத்தால், Gerða) E. fift-gig55 சொக்கிய வண்டாய்ச் சுயமிழந்தேன்! காலைப் பொழுது புலரும் வரையும் கலந்துவிட்டேன்!
நெஞ்சம் துணிந்து நிமிர்ந்து பெரிய நினைப்புடனே, விஞ்சிய வெள்ளைப் பாவாடை பிறவுன் கவுணுடனும்,
O
 

கொண்டு திரிந்தேன் அடிஎன் குமுறல் மகிழ்ச்சியிலே, உன்னிதழ் வைத்திங் உறிஞ்சி உறிஞ்சி உவப்படைந்தேன்!
ஒன்றிரண் டாகி உயர்ந்தாய் ஒருசில ஆண்டுகளில் எண்ண முடியா அளவில் வளர்ந்தாய் என இழந்தேன்! எண்ணம் இளமை இயல்பு முயறசிகள் யாவினையும், கொன்று குவித்தாய், கொடிய அரக்கி உனைஉணர்ந்தேன்!
உன்றன் தலையில் ஒளியெனத் தீவைத் துறிஞ்சுகையில் என்னை நினைத்துச் சிரிக்கும் சிரிப்பு கோடிபெறும் இந்தநா டுன்னையும் எள்ளி நகைக்கும் இதுநிசமே என்னை நெருப்பில் குளித்திடச் செய்தவுன் நலமெரிப்பேன்!
என்னைக் குடிக்கும் இதயம் நெடுநாள் இருப்பதில்லை மண்ணில் விரைவாய் மடியும் மகத்துவம் நான்புரிவேன்! என்றுநீ கூறிய வஞ்சின வார்த்தைகள்- என்செவியில் இன்னும் ஒலிக்கையில் ஏனடி நின்று முறுவலித்தாய்?
நிம்மதி யாக நிமிர்ந்துநான் வாழ நெருப்பனைப்பேன் செம்மை இதுவெனச் செப்பிய தாலுளம், செல் அடிப்பேன்! உம்மொடு நாணினி ஒட்டுற வில்லை ஒருபொழுதும் நம்பி இராது நடநட ஆயிரம் மைல்தொலைவில்!
உன்னெடு வாழ்ந்திங் குழன்றது போதும் ஒருகணமும் pføörpu Gonu Gyrrub! நெருங்கவும் மாட்டேன்! நெழிவதிலே என்ன சுகத்தை அடைவாய்? இனிநீ எழுந்துதொலை! சின்ன மதியுள *சிக்கிறட்" ஒடி ' உயிர்பிழையே
l

Page 28
1987 -
"இது "ஷெல்" விழுந்து சர்வதேச வடக்கே வீடமைப்பு வீடுபல நாசம் ஆண்டு!" கிழக்கேயும்
Test - LS) தொலைக் காட்சி வீடிழந்து ஒளிர்கிறது தவிப்பு வானெலி அலறுகிறது இப்போதும் வீதியெங்கும் வானெலி மின்குமிழ்கள் இரைகிறது . எரிகின்றன. இது
சர்வதேச பத்திரிகைகளில் வீடமைப்பு பச்சையாகத் ஆண்டாம்1.
தலையங்கச் செய்திகள்,
- ஆ. இரத்தினவேலோன்
ஒரு கருத்து
இன்று கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஓர் உத்வேகம் தோன்றி வருவதை உணர முடிகிறது. இந்தப் புத் தெழுச்சி வரும் காலத்தில் எத்தகைய அறுவடையைத் தமிழ் மொழிக்குத் தந்துதவும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்ருகி யுள்ளது.
வெறும் உணர்ச்சிக் குமுறல்கள் இலக்கியங்களாகி விடப் போவதில்லை. தத்தமது ஆவேச உள்ளுணர்வுகளை எழுத்தில் வடித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது இளந் தமிழர் அணி. அதற்குப் புதுக்கவிதை என்ற ஊடகத்தைச் சுலபமாகப் பயன்படுத்த முனைகின்றது. உண்மையாகச் சொல்லப்போனல் இன்று வரும் புதுக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும் வேளைகளில் தமிழுக்கு இது பெரும் தீங்கை விளைவித்து விடுமோ என அச்சம் ஏற்படுகின்றது. நான் புதுக்கவிதை எதிரியல்ல. ஆனல் முதிர்ச்சி யடைந்த வெளிப்பாட்டுத் துறையான புதுக்கவிதை ஊடகத்தைத் தமது மன வக்கரிப்பின் வெளிப்பாட்டு படிகளாக இளந் தலை முறை பயன்படுத்த முனைகிறதோ எனப் பயப்படுகிறேன்.
தெளிவு, ஆழமான சிந்தனை, புதிய நோக்கு, போக்கு உள்ள வையாகப் படைப்புக்கள் வெளிவரும்போதுதான் அப்படைப்புப் பேசப்படும். மொழியும் சிறப்படையும். அது விடுத்துத் தமது மன அவசங்களைக் கொட்டித் தீர்ப்பதாக இருந்தால் தி. மு. க. வளர்ச் சிதான் இந்நாட்டிலும் தோன்றலாம்.
வத்தளை, அ. செந்திவேல்

0 டானியல் அவர்கள் மறைந்து
ஓராண்டு ஆகிவிட்டதே. அவனைப் பற்றிய மதிப்பீடுகள் இதுவரையும் ஒன்றையும் காண வில்லையே.
மானிப்பாய், க. சிவசோதி
எழுத்தாளன் மறைந்தவுடன் அவரைப்பற்றி உடன் மதிப்பீடு வந்து விடும் என எதிர் பார்க்கக் கூடாது. காலம் போகப்போக சரியான மதிப்பீடுகளும் விமரிச னங்களும் வரும். 0 உங்களுடைய பலம் என்ன?
பலவீனம் என்ன?
கைதடி, ச. தருமதுரை
உழைப்பு, சகோதர எழுத் தாளர்களை மனசார நேசிப்பது எந்த நேரமும் ஆக்கபூர்வமாக இயங்கிக் கொண்டிருப்பது-இது எனது பலம். பலவீனம் மனசில் படும் கருத்துக்களையும், அபிப்
இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கு. புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள் இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற் றுக் கொள்ள இயலும்.
பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர்
பிராயங்களையும் பகிரங்கமாகச் சொல்லி விடுவது.
எனது உழைப்பை ஏணிப்படி யாக உபயோகிக்க முனைவோரை ஆரம்பத்தில் நம்பிவிடுவது. C உங்களுடைய ம ணி விழா இவ்வாண்டு ஜுன் கடைசி வாரத்தில் நடைபெற இருப்பதா கப் பத்திரிகைகளில் படித்தேன். மேற்ஒொண்டு தகவல்களைத் தர இயலுமா? கோண்டாவில், ஆர், நகுலன் மல்லிகைக்கும் மணி விழாக் குழுவிற்கும் சம்பந்த மில்லை. என்னை மதிக்கும், நேசிக்கும் நண்பர்களின் கூட்டுக்குழு அது. முடி யு மா ஞ ல் யாழ்ப்பாணம் 122, மின்சார நிலைய வீதியில், பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியக் கட்டடத்தில் இயங்கும் மணி விழாக் குழுவுடன் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்.
53

Page 29
இ உங்களுக்கு எந்த எழுத்தா ளர் மீதாவது பொருமை ஏற்பட்டதுண்டா?
உடுவில், எஸ். திரவியம்
சின்ன வயதிலிருந்தே எனது மனசைப் பக் குவப் படுத் வாழ்ந்து பழக்கப்பட்டவன் நான். எனது தேவைகள் குறைவு திட்ட மிட்ட வாழ்க்கை. எந்த நேரமும் எதையாவது சாதிக்க வேண்டு மென்ற அவசரவெறி. முன்னேற வேண்டும், முன்னேறவேண்டு மென்ற அபார ஆவல், இந்த மனப்பான்மையில் வாழ்ந்து பழக் கப்பட்டுப்போன என் மனசில் பொருமை உணர்வே துளிர்விட்ட தில்லை. மற்றவர்கள் என்னைப் புகழுகுவதைவிட, எனது சகோ தர எழுத்தாளர்களைப் பாராட் டும்போது உண்மையிலேயே உள் ளம் பூரித்துப் போவேன்.
O உங்களுக்கு மகன்மார் இருப்
பார்களாயின் அவர்களுக்கு வரும் மனைவி அதாவது உங்களது மருமகள் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டுமென விரும்புகி நீர்கள்?
அச்செழு, தி, சுதர்சன் எனக்கு ஒரே மகன் பெயர் திலீபன். அவனுக்கு 18 வயது
முடிந்த நாளில் ஒருநாள் நான் அவனுக்குச் சொன்னேன்: ‘இன்று தொடக்கம் நானும் நீயும் அத்தி யந்த நண்பர்கள், தோழர்கள். எந்தப் பிரச்சினையானலும் அப் பன்-மகன் என்ற தோரணையை மறந்து உயிருக்குயிரான இரண்டு நண்பர்கள் என்ற ஹோதாவில் நாம் விமரிசிக்க, நோக்க, கண் ணுேட்டமிடப் பழகிக் கொள்ள வேண்டும். நீ காதலிப்பதானலும் அல்லது செக்ஸ் பிரச்சினை என்ரு லும், அத்துடன் அரசியல் பேசுவ தானுலும் என்னுடன் வெட்கப் படாமல் மனந்திறந்து கதைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்
டேன். அப்படியே இன்றுவரை இருவரும் நண்பர்களாக, தோழர் களாகப் பழகிக்கொண்டு வரு கின்ருேம். தலைமுறை இடை வெளியை நாம் தெளிவாக ப் புரிந்து கொண்டால் இளந் தலை முறையினருடன் நாம் நல்ல நட் புடன் பழகலாம்; பங்களிப்புச் செய்யலாம். எனது மகனுக்கு வரும் மனைவி சுதந்திரமானவ ளாசி, சுய சிந்தனை உள்ளவளாக, வெறும் போலி நடிப்பு நடிக்காத வளாக, சுருக்கமாகச் சொன்னல் ஒரு நவயுகப் பெண்ணுக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். எனது மகனை நான் நேசிப்பது போல, அவனை நேசிக்கத்தக்க ஒரு ஆத்ம சிநேகிதியாக, தோழி யாக அவள் இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.
O என்னதான் பொதுவுடமை வாதிகளெனக் கூறிக்கொண் டாலும் தமிழ்-சிங்கள இடது சாரிகளிடையே இ ன வு ண ர்வு மறைமுகமாகவேனும் சில சமயங் களில் வெளிப்படுகிறதே.
மு. பொன்னம்பலம் வல்வெட்டித்துறை,
பேரினவாத - சிற்றினவாத சிறுமை நோயால் நாடே பீடிக்கப் பட்டுள்ளபோது இனச் சிந்தனை யின் தாக்கம் இங்கு வாழும் இரு இன மக்களைப் பாதிப்பது இயல் பானதே. இடதுசாரிகள் என்ருல் அவர்கள் அத்தனை பேர்களும் தேவதைகளல்ல. அவர் க ஞ ம் இந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரே. பண்பட்ட, செழு மைப்படுத்தப்பட்ட இடதுசாரி எந்தக் காலமுமே இன உணர்வு களுக்கு அப்பாற்பட்டு வர்க்க ரீதி யாகவே சிந்திப்பவன். தோழர் சரத் முத்தெட்டுவகம பற்றி நீங் கள் சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள். மனுக்குலத்தின் முழு விடி வைப் பற்றியும் சிந்தித்த
匈4

கூ~ கூ~~ ~~~~~ > கூ~கூச ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகா
1987-ம் ஆண்டுச் சந்தா
1987-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 3 - 50 ஆண்டு சந்தா ரூபா 50 - 09
(தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை
அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி, பாழ்ப்பாணம்.
്-, -, --~പ്പ് 'പ്രണ പ്രീം .. കപ്രഭ, കമ്മ്യു ...-
ஒரு பொதுவுடமை வாதிதானே சரத் சரத்தைச் சிங்களவன் எனச் சொல்லிவிட முடியுமா?
* சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றை ஞாபகம் இருந்தால் விவரிக்க முடியுமா?
பசறை, எஸ். கருணுகரன்'
இரண்டாம் வகுப்பில் நான். நாலாவது வகுப்புப் படிப்பித்துக் கொண்டிருந்த வாத் தி யார் எனது இலட்சிய புருஷன் ஆள் நல்ல சிவலை, இளைஞன். கவர்ச்சி கரமாகப் பே சக் கூ டி ய வ ர். பிரம்பே தூக்கி அறியாதவர். இது எனக்கு அவர் மீது ஒர் அபிமா னத்தை ஏற்படுத்திய பின்னணி கள். சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிந்து ரெயிலில் சுன்னகம் திரும்புவார். எனது வீடு யாழ்.
மையில். பள்ளி முடிந்து நானும் பிராக்குப் பார்க்க ஸ் ரே சன் விருந்தையில் நிற்பேன். ஸ்ரே சன் கிருதிக்குள்ளால் அந்த ஆசிரி யர் நிற்பது தெரியும். அவர் மீது எனக்கிருக்கும் அபிமானத்தைக் காட்டும் முகமாக "மாஸ்டர் ! மாஸ்டர்" எனக் கையசைத்துக் கூப்பிடுவேன். இது எனக்குக் கொண்டாட்டம்.
ஒரு கிழமை போயிருக்கும்.
எனது உறவுக்காரப் பையன் வகுப்பறைக்கு வந்து "மாஸ்டர் ஒருக்கா வந்திட்டுப் போகட்
டாம்" என அழைத்தான்.
எனக்கு மனசில் குஷி தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கத்தான் கூப்பிடுவதாக நினைத் துப் போனேன்.
ஸ்ரேசனடியில் உனக்கொரு குரங்குச் சேட்டை இனிமேல் சேட்டை விடுவியா? எனக்கேட்டு விட்டுப் பிரம்புகொண்டு அடித்து விட்டார்.
எனக்கு அடிவேண்டியது கவ லையில்லை. எந்த ஒரு மாணவனுக் குமே பிரம்புகொண்டு அடிக்காத சிவலை ஆசிரியர் அடித்துப்போட் டாரே என்ற துக்கம் நெடுநாட் களாக மனசை நெருடியது.
சமீபத்தில் அந்த ஆசிரியரை யாழ். பஸ் நிலையத்தில் சந்தித் தேன். அந்தச் சம்பவத்தை நினைவு படுத்தினேன். "அப்படி யாடாப்பா என் மீதுள்ள அபி மானத்தை நான்தான் தவருகப் பு ரிஞ்சு போ ட் ட ன் போலை கிடக்கு. இப்ப நீ பிரபலமான வன். என்ரை அடியும் அதுக் கொரு காரணமாக இருக்கலாம்" என என்னைச் சமாதானப் படுத்தி ஞர்.
நீண்டநாள் வேதனை அவ ரைச் சந்தித்ததின் பின்னர் தீர்ந் தது
5.

Page 30
O முற்போக்கு என்ற போர் வைக்குள் புகுந்துகொண்டு மார்க்ஸின் கருத்துக்களைப் பிரதி பண்ணுவது எமது கொள்கை யல்ல. எமக்கென ஒரு சித்தாந் தத்தை உருவாக்குவதே நமது நோக்கமாகும். என ஒர் எழுத்ா ளர் பேசியுள்ளாரே, இதுவரை இவர்கள் ஏதாவது சித்தாந் தத்தை உருவாக்கியுள்ளனரா? சுருவில். இ. தேவகிமைந்தன்
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வது ந ல் ல து. மார்க் ஸிஸம் ஒரு சித்தாந்தம் மாத்திர மல்ல, அது ஒரு விஞ்ஞான தத் துவமுமாகும். இந்த நூற்ருண் டின் மாபெரும் விஞ்ஞான முடி வாகும். உலகத்தின் சகல துறை களுமே இன்று மார்க்ஸிஸத்தினு டைய வெளிச்சத்திலும் வழி காட்டுதலிலுமே ஆராயப்பட்டு வருகின்றன. புதிய சித்தாந் தத்தை உருவாக்க முனைவோம் எனச் சொல்பவர்கள் முடிவில் மார்க்ஸிஸத்தை விரோதிக்கும் முடிவில்தான் சென்றடைவார் கள். இப்படி வெளிக்கிட்ட பல கலைஞர்கள் சரித்திரத்தின் குப் பைத் தொட்டிக்குள் சென்று மறைந்ததை வரலாறு மெய்ப்பிக் கின்றது,
 ைஅமைச்சர் தொண்டமானைப் பற்றி உங்களுடைய அபிப் பிராயம் என்ன?
செ. லெகஷ்மணராஜ் கரணவாய்,
தனது ப த வி யைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்த பிழைக்கத் தெரிந்தவர்.
யுத்த காலத்தில் நாஜி ஜெர் மனி யூதர்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி நீதி நடவ டிக்கை எடுக்க முனையும் இஸ்ரே லியர்கள் தாம் இ லங்கை யில் சிறுபான்மையினருக்குச் செய்யும்
கொடுமைகள்
யர்களுக்கும்
பற்றி என்ன சொல்லப்போகின்றனர். கொக்குவில், க. தனராசா
நிச்சயம் ஒரு காலம் வரும். இந்த மண்ணில் சிறுபான்மை இன மக்களுக்குச் செய்யும் நீசத் தனத்திற்காக அது சம்பந்தப் பட்டவர்கள் நீதி தேவன் முன் நிறுத்தப்படத்தான் போகின்ற னர். அர்ஜன்டைனுவில் நடப் பது இங்கு நடைபெறும். தங்க ளுக்கு அநீதி இழைக்கப்பட்டது என உலகின்முன் புலம்பிய இஸ் ரேலியர்கள் இன்று பாலஸ்தீனி தமிழர்களுக்கும் செய்துவரும் கொடுமைகளுக்கு ஒரு நாள் விலை கொடுக்கத்தான் வேண்டிவரும்.
இந்த நெருக்கடியான சூழ் நிலையில் எப்படி அடுத்தடுத்து நாலுநூல்களை வெளியிட்டீர்கள்.
ஆவரங்கால், ம. ரேவணன்
நெருக்கடி அழுத்த அழுத்தத் தான் என்னுள் இருக்கும் உத் வேக உணர்வு விழித்துக் கொள் ளுகின்றது. எனது ஆற்றலும் இந்தச் சூழ்நிலைக்கு எதிர்ச் சவால் விடப் பழகி விடுகின்றது, எனவே தான் நான் சூழ்நிலைக் கைதியாக மாறுவதில்லை. ஒ ஆனந்தவிகடன் ஆசிரியர்
கைது செய்த தை ப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? மாணிப்பாய், ம. ரகுவரன்
பத்திரிகைச் சுதந்திரம் தமிழ் நாட்டில் படும்பாட்டை எண் நான் ம ன சில் ஆத்திரப்பட்ட துண்டு. அதே சமயம் வெகுசன எழுச்சி என்பது எத்துணை வலிமை வாய்ந்தது என்பதை அவரது விடுதலையில் இருந்து தெரிந்து கொண்டேன். விழிப்பாக உள்ள சமூகத்தில் ஆளும் கட்சிகளின் சாகசம் ஒருபோதும் எடுபடாது என்பதற்கு விகடன் ஆசிரியர் விடுதலை சான்று பகர்கின்றது.
56

ESTATTE SUEPPE EERS
C€OMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS O1LMAN GOODS TIN FOODS
GRANS
THE EARL EST, SUPPLERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia : 26587
TO E. SITTAMPALAM & SONS
- 223, FIFTH CRoss sTREET,
COLOMBO - 1 7.

Page 31
या ताता = |
Mafika
Registers
MAY. Ag37
Phë: 242.?
With Best Cerap ments of:
PEN, SVV.SEEAMU
14, ARM t
இச் சஞ்சிகை 2848ஆதங்கேசன்துறை ஆகும் ஆசிரியரும் வெளியிடுபவருமான சாதனங்களுடன் யாழ்ப்பானம்ஜி காந்த தத்திலும் அச்சிடப்பேற்றது.
 
 

(K. W.J. 684 News 187)
di as a News Paper at G. P. O. Sri Lanka
files in
WAWAL FANELLA BC}\f) 3: TIMBE
GALARANCIETA TATIASAR
DUR sTREET, "
விதி, யாழ்ப்பாணம், முதுயீன் ஆசிப்ப டொமினிக் ஜீவா அகரிகசிதன் பிங்விகை ச அச்சகத்திலும்,அரவிேட விஜயா அழுத்