கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.10

Page 1
|×
*.
— ==
디터니
)
|-
EINSSEE,
sos
------
 

---- 剧

Page 2
* தூய அலுமினியம் * பிளாஸ்டிக்
* எவர் சில்வர் * எணுமல்
* கண்ணுடி * தாச்சி வகைகள் அ. ஒக்கிட் (Crchid) auiTsîlassir
போன்ற பொருட்கள் மங்கள வைபவங்களுக்கு உகந்த அன்பளிப்புப் பொருட்கள் யாவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு எமது உற்பத்திப் பொருட்களும், மற்றும் பொருட்களும் விசேட கழிவுடன் வழங்கப்படும்.
ஹோம் பிஞன்ஸ் சொகுசு பஸ் ஆசனங்கள்
எம்மிடம் பதிவு செய்து கொள்ளலாம்.
大
நியூ லங்கா
அலுமினியம் தொழிற்சாலை
: (விற்பனைப் பிரிவு)
6, 30, ஆஸ்பத்திரி வீதி, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
T'phone : 23596

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 92 ஒக்டோபர் - 1985
21- Gong Hilir
சுவைஞர்களுக்கு ஒரு சொல்
இப்போது உங்கள் கைகளில் இருக்கும் இதழ் 21 வது ஆண்டு மலருக்கு அடுத்த இதழாகும். ஒவ்வொரு ஆண்டும் நாம் மலர் தயாரிக்க முனைந்து செயல்படும் வேளைகளில் நம்மை மீறிய ஏதோ ஒரு சங்கடம் அல்லது நெருக்கடி மலர் வேலைகளைப் பாதிப்பது வழக்கம். அதற்காக நாம் சோர்ந்து, ஓய்ந்து போய் ஒதுங்கி இருந்து விடுவதில்லை. நமது ஆற்றல், சக்தி, வீரியம், சமயோசி தம், நெஞ்சுரம் அனைத்தையும் பயன்படுத்தி அந்த நெருக்கடிகளே வெட்கித் தலை குனியும் அளவிற்கு மலரை வெளியிட்டு விடுவோம்
இம் முறையும் அதுவேதான் நடந்தது. நமக்குக் கிடைத்த சகல தகவல்களையும் உள்ளடக்கிப் பார்த் தால், இம் முறை மலர்ந்த மலர் கனங் காத்திரமானதும் அவசி யம் பாதுகாத்து வைக்கக் கூடியதும் எனக் கருதப்பட வைக் கின்றது.
சில ஆண்டுகளாக ஒரு சிக்கல் நமக்கு ஏற்படுவதுண்டு. மலர்கள் விற்பனை முடிந்ததின் பின்னரே மலர் கேட்டு தென்னி லங்கைப் பகுதிகளிலுள்ள அன்பர்கள் எழுதுவார்கள். அவர்களை யும் நாம் குறை சொல்ல முடியாது. தகவல் போக்கு வரத்து நெருக்கடி காரணமாக அவர்களுக்கும் செய்தி போய்ச் சேரச் சுணங்கி விடுகின்றது. இங்கே மலர் தீர்ந்து போகின்றது. ஆகவே யாராக இருந்தாலும் சந்தாதாரர்களுக்கே முன்னுரை அளிப்பது என்பது நமது புதிய கொள்கையாகி விடுகின்றது.
நீங்கள் சந்தாதாரர்கள் ஆகுவதுதான் நம்முடன் நிரந்தரத் தொடர்பு கொள்வதற்கு ஒரே வழியாகும்.
மலரின் அட்டையை அலங்கரிக்கும் "உழைப்பின் உருவ"த்தை யும் இவ்விதழின் அட்டையில் வெளிவரும் எழுத்தாளர் தொகுப் பையும் உருவாக்கித் தந்த "பேபி போட்டோ அதிபருக்கு எமது நன்றி.
- ஆசிரியர்

Page 3
மல்லிகை ஆண்டு மலரில் வெளிவந்த திரு. முருகையனின் "கடுங் கோபத்துடன் ஒரு கட்டுரை" யை மிக ஆழ்ந்து படித்தேன். நம் நாட்டின் மூத்த கவிஞராகிய திரு. முருகையன், சோலைக் கிளியின் புதுக்கவிதையை வெகு யதார்த்தமாய் விமர்சனம் செய் துள்ளார். இந்த விமர்சனம், சொல்லவேண்டிய நேரத் தி ல், சொல்ல வேண்டிய ஒருவரால் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் முருகையன் கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழத்து இலக்கிய உலகுடன் இறுகப் பிணைந்துள்ள ஒருவராவர்.
சாதாரண வாசகணுெருவன் விளங்க முடியாவிடின், அப் படைப்பால் வாசகனுக்கு எவ்வித பயனுமில்லை. ஒரு பத்திரிகை யின் வளர்ச்சி, அதன் வாசகர்களின் ஆதரவில்தான் தங்கியுள்ளது. வாசகன் பத்திரிகையை தூக்கி எறிந்து விட்டால். பத்திரிகையும் படுத்துவிடும். எழுதியதை வீட்டில் பூட்டி வைக்க வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே, உண்ம்ையான இலக்கிய வளர்ச்சிக்கு திரு. முருகையன் போன்றேரின் விமர்சனம் மிக மிக அவசிய மானது.
வேலணை. நா. இரகுநாதன்
ஆண்டு மலரின் அட்டை வர்ணமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் கனவிலும் கூட நினைக்கவில்லை மல்லிகை இருபத்து ஓராவது ஆண்டு மலர் இந்தளவு சிறப்பாக வரும் என்று
உங்களின் உழைப்பு, மல்லிகையின் ரத்தத்தோடு கூடிய உஷ் ணமாகிப் போனத்தில் நாம் நிறைவாக ஒரு இலக்கிய இதழைப் படிக்க - எதிர்பார்க்க முடிகிறது. இவை வெறும் இதழ் விரிந்த
மயக்க வார்த்தைகள் அல்ல மனசின் விசுவாச உயிர் வார்த் தைகள். Cas LO. இப்னு அஸ9மத்
அட்டைப் படம்
"மவ்லிகைப் பந்த" லின் ஆதரவின் கீழ் 20 - 9-85 அன்று மல்லிகையின் 21 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. முதல் இதழை ஆசிரியரிடமிருந்து டாக்டர் எம். கே. முருகானந்தன் பெற்றுக் கொண்டார். கலாநிதி சபா. ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினர். மற்றும் கலாநிதி மெளனகுரு, செங்கை ஆழியான், சிதம்பர திருச்செந்திநாதன், குறமகள், செல்வி சந்திரா தியாகராசா, சட்டநாதன், சாந்தன், தெணியான். மா. பாலசிங்கம், ஈழத்துச் சிவானந்தன் ஆகியோர் உரை நிகழ்த்தும் காட்சி.
2
 

ஆபத்தான பிரமை
பெண்களுக்கு எதிராக- பொதுவாகத் தாய்க் குலத்தைப் ஒக்கும் வகையில் 'நச்சுக் கருத்துக்களையும் நாசகார எண்ணங் சுகாயம் திட்டமிட்டுச் சிலர் சமீப காலமாக இந்த மண்ணில் பரப்பி வருகின்றனர். பிரசாரப் படுத்துகின்றனர்.
இந்த நச்சு, நாசக் கருத்துக்கள் ஆரோக்கியமற்றவை; படு பிற்போக்குத் தனமானவை; தீர்க்கமாக எதிர்த்துச் சாடி முறிய டிக்க வேண்டியவை.
இந்தக் கருத்துக்களுக்குப் பின்னல் செயல்படும் மனங்களையும் அவர்களின் அடிப்பட்ை மனுேபாவத்தையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஏன் இப்படியான கருத்துக்களைப் பரப்ப முன்வருகின் றனர் என்பதையும் நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
பழையபடி பெண்ணடிமைத் தனத்தை இந்த மண்ணில் வேர் பாய்ச்சி வளர்த்து விட வேண்டும் என்ற ஆண் ஆதிக்க சமூகக் கருத்தே இந்தப் பிரசாரங்களுக்குப் பின்னல் இழையோடியிருப்ப தையும் நன்கு கவனித்துப் பார்ப்பவர்கள் உ ண ர்ந்து கொள் ளக் கூடும்.
SLcLTLCLLLl tLtttLTTLLLL 0LTLLtTLTLSS S LLTLTL0ttLL TTTLLHL LTLLTLLLLSSS என்ற பழைய கருத்துக்களும் "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு?" என்ற பழ மொழி வாதங்களும் செல்வாக்கிழந்து பொய்த்துப் போகக் கூடிய கால் கட்டத்தில் இன்று மறுபடியும் பெண்களைப் பழையபடியும் அடுப்பூத வைப்பதற்காகவே இந்தக் கருத்துக்களும் எண்ணங்களும் பரப்பப்பட்டு வருகின்றன என்றே நாம் உறுதியாகக் கருதுகின்ருேம்.
விஞ்ஞான யுகமிது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் சகல துறைகளிலும் முகிழ்ந்து பிரகாசிக்கக் கூடிய காலகட்டமிது. உல கத்தின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இது. சகல துறைகளிலும் இன்று பெண்கள் தமது ஆற்றலை வெளிப் படுத்தி மக்கள் மத்தியில் நியாயமான ஓர் நல்லபிப்பிராயத்தை உருவாக்கி வரும் இத்தருணத்தில் சாக்குருவி வேதாந்தம் பேசும் ஒரு கூட்டம் மீண்டும் பெண்கள் அடுப்பூதுவதற்குத்தான் தகுதி எனப் பிரகடனஞ் செய்து, பிரசாரஞ் செய்வதானல் அது இன் றைய விஞ்ஞான உலகத்தையே அவமதிக்கும் செயல் என்றே நிளேக்கத் தோன்றுகின்றது.
பெண் அடிமைத் தனத்தை மீண்டும் வலியுறுத்திப் பிரசாரம் செய்பவர்களுக்கு ஒர் உண்மையைச் சொல்வி வைக்கின்ருேம்: சரித்திரம் பின்னுேக்கிச் சுழல்வதில்லை O

Page 4
மல்லிகையின் இருபத்தோரா வது ஆண்டு மலரில் நண் பர் சி. மெளனகுரு ஒரு பெரிய கட் டுரை எழுதி இருக்கிருர். கட்டு ரையின் தலைப்புப் பெரிய தலைப்பு. "பெரும் பத்திரிகைககளும் இன் றைய புனைகதை இலக்கியகாரர் களும்“
மெளனகுரு இ லக் கி யத் துறையில் மிகுந்த ஆர்வமுள்ள வர். பொறுப்புள்ளவர். நல்ல பண்புள்ள மனிதர். இவர் எழு திய கட்டுரையை படித்துப் பார்க்க வேண்டுமென்று விரும் பினேன், படித்தேன்.
முதல் பக்கத்திலேயே எனக்கு ஒரு தடைமுகாம். "ஜெயகாந்த ஞல் ஆனந்தவிகடன் வளர்ந்தது" என்று மெளனகுரு குறிப்பிட்டிரு க்கும் இடத்தில் நின்றுவிட்டேன். ஒரு குறுகிய வட்டத்துக்குள் பஞ்சகல்யாணி மீது சவாரி செய்து கொண்டிருந்த ஜெய காந்தனின் திறமையை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் வெளிச் சம் போட்டுக் காட்டி வைத்தது ஆனந்த விகடன்தான்!
ஆனந்த விகடனின் உயிருக் குயிராக விளங்கிய கல்கி, அதி விருந்து விலகிய போது "இனி ஆனந்த விகடன் விழுந்து விடும் என்று உண்மையில் பலர் நம்பி ஞர்கள். ஆ ஞ ல் அப்போதும் கூட ஆனந்தவிகடன் அசைந்து
ஆழமான இலக்கியம்
- வரதர்
கொடுக்கவில்லை. ஏனென்ருல் ஆனந்த விகடனுக்கு ஒரு இறந்த நிர்வாகம் இருந்தது - இருக்கி s09il•
அந்த ஆனந்த விகட ன ஜெயகாந்தன் வளர்த்தார் என்று சொல்வது சிரிப்புக்கிடமானது. "இராமர் அணை கட்டும்போது அணிற்பிள்ளையும் உதவி செய் தது: அ த ஞ ல் அணைக்கட்டு வளர்ந்தது" என்பது போல ஜெயகாந்தனல் ஆனந்தவிகடன் வளர்ந்தது என்று சொல்லலாம் தப்பில்லை.
இனி அடுத்த இரண்டு பக் கங்களில் ஏற்படுகிற சில்லறைத் தடைகளைத் தாண்டிப் போனல் பெரியதோர் ஈரப்பெரியகுளம்" வருகிறது.
எழுதுகிருர்
மக்களுக்குத் தேவை என்ற அடிப்படை நோக்கில், வியா பார நோக்கில் கதைகளையும், நாவல்களையும் உற்பத்தி பண் னிய படியால் அவை, கலைத் திறன் குறைந்தனவாயின. இதற் குச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியாவர். அவர் பரவலான வாசகர்களை உருவாக்கினுரே யொழிய ஆழமான இலக்கியத் தைச் சிருஷ்டித்தார் அல்லர்.
மெளனகுரு
玺
 

கொஞ்சம் நில் லுங்க ள். நிதானியுங்கள்.
தானபு
இலக்கியம் என்ருல் என்ன?
அதற்குள் "ஆழமான இலக் கியம்’ என்ருல் என்ன?
ஆழமான இலக் கி யமே சிறந்த இலக்கியம் என்ற கருத்து மெளனகுருவின் வார்த்தைகளில் தொனிக்கிறது.
ஒரு கருத்தை சொல்லும் வழியை, உபயோகிக்கும் சொற்களையும் கூட ஆழமாகப் பு  ைத த் து (லேசில் விளங்காமல் அல்லது மயக்கமாக) எழுதுவதுதான் ஆழமான இலக்கியமா? - அது தான் சிறந்த இலக்கியமா?
அ  ைத ச் அதற்காக
ஒரு கதை நினைவுக்கு வரு கிறது.
ஒவிய வகைகளில் "நவீன ஒவியம்" (மொடேன் ஆர்ட்) எ ன்று ஒரு வகை உண்டு.
அதிலே ஊறியவர்கள் "அதுதான் சிறந்த ஒவியம். மற்றதெல்லாம் உயர்ந்த ஓவியம் இல்லை" என் Lirrrissoir.
நவீன ஒவியத்தின் தலைமகன் என்று பேசப்படும் "பிகாசோ? என்பவரின் ஓவியக் காட்சி ஒரு முறை நடந்தது. ஒவியர் பிகா சோவின் பெயர் மிகவும் புகழ் வாய்ந்தது. அவருடைய ஓவியம் ஒன்றை வைத்திருப்பது, அதன் சிறப்பைப் பற்றி நண்பர்
களுடன் உரையாடுவதே மிகுந்த
கெளரவமென்று பெரிய கன வான்கள் கருதினர்கள். பிகா சோவின் ஒவியக் காட்சிக்குப்
போவது தமக்கு ஒரு கெளர, வம் என்று கருதிப் பல கன வான்கள் அங்கே போனர்கள். அங்கேயிருந்த ஓவியங்களை ப் பார்த்து "ஆகா ஒகோ" பாராட்டினர்கள். குறிப்பிட்ட
ஏன்
என்று
ஒரு ஓவியத்தின் முன்பு கூடி
நின்ற கனவான்கள் அந்த யத்தின் நயத்தை பாராட்டிப்
பேசிக் கொண்டிருந்த போது,
வெளியிலிருந்து வந்த ஒரு மனி தர் கூட்டத்தை விலக் கி க் கொண்டு அந்த ஒவியத்தின் அருகே போனர். "யார் இந்த ஒவியத்தை தலைகீழாக வைத் தது? என்று சொல்லிக்கொண்டே அதை த் திருப்பி வைத்தார்
96) .
கூடிநின்று கலைநயம் தெரி வித்த கனவான்களின் முகங்க ளில் அசடு என்று சொல்வார் களே, அது தாராளமாக வழித் தது. தலைகீழாக இருந்த ஒவி யத்தைத் திருப்பி வைத்தவர் அந்த ஒவியத்தைப் படைத்த பிகாசோதான்.
இந்த மாதிரியான ரசிகர் கள், கனவான்கள் உலகெங்குமே யிருக்கிருர்கள். நீங்கள் கூட இப்படியான சிலரை அறிந்திருக் கக்கூடும். (பேராசிரியர் சிவத் தம்பியின் விமர்சனக் கட்டுரை களின் ரசிகர்களிலும் இப்படிச் சிலரையாவது பார்க்கலாம்.)
ஒவியர் பிகாசோவும் பேரா சிரியர் சிவத்தம்பியும் சிறந்த கலைஞர்கள் தான். நவீன ஓவி யக் கலைஞர்களும் "ஆழமான" இலக்கிய கர்த்தாக்களும் அள வுக்கு மிஞ்சி வளர்ந்து, சற்றே உயரத்துக்குப் போய் விட்டார் கள் சாதாரண ரசிகன் எட்டிப் பார்க்கிருன். இன்னும் கொஞ் சம் தொங்கிப் பார்க்கிருன். அவர்களை எட்டிப் பிடிக்க முடி யாமல் போகவே "ஆகா அவர் கள் உயர்ந்த கலைஞர்கள்தான்!" என்று அவர்களை விட்டு விட் டார்கள். அவர்களைப் போன்ற 'தர முள்ள சில கலைஞர்களும் ரசிகர்களும்தான் அவர் களின் பக்கத்தில் நிற்க முடிகிறது,

Page 5
பொது மக்கள் அவர்களை கெளர விப்பதோடு சரி.
சரி, "ஆழமான இலக்கி யம் சிறந்த இலக்கியமாகவே இருந்து விட்டுப் போகட்டும். இன்றைய பெரும்பான்மையான சரரசரி வாசகளுல் சு வைக்க முடியாமல் அவனுக்கு உபயோ கமில்லாமல் போகுமானுல் அந்த ஆழமான இலக்கியத்தால் என்ன
ишөт?
"இலக்கியம் இலக்கியத்துக் காகவே" என்ற பழைய கதை யைத் தொடங்கப் போகின்றீர் as6Tmr?
பரந்து பட்ட மக்களுக்காக எழுதி- அவர்களுக்காக அரு () ) ) TT 7 இலக்கியங்களைப் படைத்த அற்புத மனிதர் கல் கியை "ஆழமற்ற இலக்கிய வாதி" என்று காரணம் காட்டி சற்றே தாழ்வு படுத்தும் போது அதைப் படிக்கும் போது, ஐயா, இந்த மனம் சற்றே நோகிறது.
இந்த விஷயம் மிக விரிவாக, நிறைய எமுதப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகத் தோன்றுகிறது.
umrprmtaus Gypsäv aw (ur. 6 tř ,aser rr?
நண்பர் மெளனகுருவைப் பற்றி என்னுடைய மனத்தில் ஒரு நல்ல படம் இருக்கின்றது. அதனுல்தான் அவருடைய கட்டு ரையை விழுந்து கட்டி வாசிக்க வும் அதிலே கருத்து வேறுபாடு தோன்றிய போதே அதை எழு தவும் மனம் வந்தது.
Gurmf5furř சிவத்தம்பி என்ற மேதையின் வசனநடை பற்றி பல நாட்களாக என் மனத்துக்குள் ஒரு "அபிப்பிரா யம்" இருந்தது. பல நாட்களுக்
குப் பின் எழுதுகிற ஒரு சந்தர்ப் பம் கிடைத்ததும் அந்த அபிப் பிராயம் பொத்துக் கொண்டு வெளிவந்து விட்டது. o
கலாநிதியானுர்
யாழ். பல்கலைக் கழக விரிவு ரையாளர் திரு. நா. சுப்பிரமணிய ஐயர், "தமிழ் யாப்பு வளர்ச்சி" தொடர்பாக ஆய்வு செய்து கலாநிதிப் பட்ட ம் பெற்றுள் 6TFTIt
எழுத்தாளரும், விமரிசக ரும், நூலாசிரியருமான திரு. சுப்பிரமணிய ஐயர் டாக்டர் பட்டம் பெற்றதையிட்டு மல் லிகை தனது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
குரும்பசிட்டியில் மல்லிகை
குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் பொன் விழா நிகழ்ச்சி மூன்று நாட்கள் வெகு கோலா கலமாக நடைபெற்றது. இரண் டாம் நாள் 9-10 - 85 அன்று மாலை நிக்ழ்ச்சியில் மல்லிகை ஆண்டு மலர் கெளரவிக்கப்பட் டது. கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் கலாநிதி சபா. ஜெயராசாவும், எழுத்தா ளர் சிதம்பர திருச்செந்திநாத னும் மல்லிகையின் பபங்களிப்பை விரிவாக ஆராய்ந்து உரையாற்றி 6Trf.
மல்லிகை ஆசிரியர் சிறப் புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு பல இலக்கியக் கருத் துக்களை முன் வைத்து உரை யாற்றினர்.

சிங்களத்தில் ஒரு தங்கக் குரல் - டபிள்யூ டீ அமரதேவ
இப்னு அஸ9மத்
இன்றைய சிங்கள "கசற் பீஸ்" உலகத்தைப் பொறுத்த மட் டில்- எட்வர்ட் ஜயக்கொடி, மாலனி புளத்சிங்கள, சுணில் எதி ரிசிங்க, நந்தா மாலனி போன்றவர்களின் கசற் பீஸ்களே அதிக விற்பனையைப் பெறுவதாக ஒரு சிங்களப் பத்திரிகை கூறுகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் பொழுது, "பைலா" பாடகர் நிஹால் நெல்சனின் கசற்பிஸ்களே இதுவரையில் அதிகமாக விற் பனையாகியுள்ளன. என்ருலும் டபிள்யூ. டீ. அமரதேவவின் கசற் பீஸ்கள் ஒரு புத்திஜீவ வட்டத்திற்குள் மட்டுமே உலவுகிறது. இதற்கொரு காரணம் அமரதேவவின் பாடல்கள் "பாஸ்ட் நம்பர்" என இல்லாமல் இருப்பது எனவும் கூறலாம்.
என் நண்பர் ஒருவரோ கதைத்துக் கொண்டு இருக்கும்போது அவர் சொன்னர், "அமரதேவ போன்ற ஒரு பாடகரை நம் நாட்டில் நான் இதுவரை கண்டதே இல்லை. அவரின் குரலே ஒரு மதுரம். ஒரு குறை - மஹாகம சேகரவின் இறுதிக் கிரிகையின் போது, அமரதேவ ஒரு பாடலை நன்ருக இழுத்துப் பாடினர். நான் அழுதே விட்டேன். இப்போ இருப்போர் எல்லாம் என்ன பாடகர்கள்"
இந்தத் தேசியப் பாடகருக்கு "விஸாரத்" பட்டமும் உண்டு. இவரின் திறமை நம்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. பாடல்களைப் பாடும் பொழுது இவரின் அங்க அசைவுகளே ஆயிரம் கதைகள் சொல்லும்.
புதுக்கவிதைகளுக்கு ஒரு நவ பரிமாணம் கொடுத்து எழுதி வந்த மஹாகம சேகரவை பலர் மறந்திருக்க மாட்டார்கள். அமர தேவ ஒரு காலத்தில் அதிகப் பிரபலமாவதற்கு இந்த மஹாகம சேகரதான் காரணம். இந்தக் கூற்று உண்மைதான் என ஏற்றுக் கொள்ளவும் நியாயமுண்டு. விஸ்ாரத நந்தா மாலனி இப்போது பிரபலமாகி வருவதற்கு பாடலாசிரியராகவும் விளங்கும் பேராசிரி யர் சுணில் ஆரியரத்ன எவ்வளவு காரணமோ, அது போலவே அமரதேவவிற்கு மஹாகம சேகரவும் காரணமாக இருந்துள்ளார், இருவரும் ஒன்ருக இருந்து ‘மதுவண்டு" என்ற அமு த மா ன நிகழ்ச்சியினைத் தந்துள்ளனர். மஹாகம சேகரவின் கவிதைகளை மிக அழகாகப் பாடும் அமரதேவ மஹாகம சேகரவின் மறைவுக் குப் பின்னர் மடவளை ரத்ணுயக்கவுடன் இணைந்தார். நஸ்மியுரு, காயன போன்ற நிகழ்ச்சிகளை இவர்கள் இருவரும் சேர்ந்து தந் துள்ளனர். அமரதேவவினது பிரபல உச்சக் கட்டம் இந்தக் காலத் தான் எனவும் ஒரு கதையுண்டு.
* - 12 - 1927 ல் பிறந்த அமரதேவவின் சொற்தப் பெயர் வன்னகுவவத்த வடுகே தொன் எல்பர்ட் பெரேரா என்பதுவாகும். மொரட்டுவ கோரள வென்னவே இவரின் சொந்த ஊர்.
y

Page 6
அமரதேவவின் தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி. இவர் இந்த ஊர் பகுதிக்கே பிரசித்தி பெற்ற "பாஸா கவும் விளங்கியுள்ளார். இவரின் தச்சுக் கடைக்கு அடிக்கடி வயலின் ரிப்பயருக்காக வரும் போகும், அமரதேவவிற்கு அப்போதெல்லாம் வயது பத்து. அப் போது காணும்போதெல்லாம் தெரியும் வயலின்களை எடுத் து வாசித்துப் பார்த்துப் பின் பழகிக் கொண்டவரே இன்று பிரபல இசையமைப்பாளராக. பாடகராக விளங்குகின்றர். ஒரு தச்சத் தொழிலாளியின் மகன் ஒரு இசையமைப்பாளராக மாறி இன்று பல ஆயிரக் கணக்கான உள்ளங்களில் வாழ்கிருர், t
பதின்மூன்று வருட கால பள்ளி ஜீவியத்தில் நான்கு பாட சாலைகளில் படித்த அமரதேவவின் போக்கு சங்கீதத்தை நாடியே சென்றுள்ளது. இந்தப் பள்ளி மாணவனை தத்தமது பாடசாலை களுக்கு எடுத்துக் கொள்வதற்காகப் பலர் போட்டி போட்டுள்ள னர் என்றும் தெரியவருகிறது. இதன் பின்னர் கவுஸ் மாஸ்டரின் "சாந்தி கலா சங்கீத வித்தியாலயத்திற் சேர்ந்து கொண்ட அமர தேவ, மொஹமட் கவுஸ் மாஸ்டரின் "கொலம்பியா தெடிசமா கம" பாடல்களுச்கு பின்னணி இ  ைச வழங்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். இப்படியே கவுஸ் மாஸ்டரின் இசைக் குழுவோடு அமரதேவ இருக்கையில் ஆனந்த ஸமரக்கோன், சுணில் சாந்த போன்ற முன்னணிப் பாடகர்களின் பாடல்களுக்கு வானுெ லியில் வயலின் வாசிக்கவும் சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சிங்களப் படமான "அசோக மாலா" வின் தயாரிப்பாளர் சாந்தி குமார் இத் திரைப் படதித்ற்கு இசையமைக்கும் பொறுப்பினை கவுஸ் மாஸ்டருக்குக் கொடுத்துள்ளார். இத் திரைப்படத்திற்கு துணை இசையமைப்பா ளராகவும். வயலினிஸ்டாகவும் கடமையாற்றியது மட்டுமல்லாமல் "எய் தெலே யமக்கு ஆலே" - "ஹவே கீத ஹெரதா" போன்ற இரு பாடல்களையும் பாடியுள்ளார்.
ஒருமுறை கொழும்பு டவர் மண்டபத்தில் "தாராவோ இஹி லத்த" என்ற நாடகத்தினைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது என் ஆசனத்திற்கு முன்பாக இருந்த ஆசனங்களில் இருவர் இருந் தவாறு இப்படிப் பேசுவது எனக்குக் கேட்டது.
ஒருவர்: "இப்போதைய நாடகங்களில் எல்லாம் நாம் எதை யும் எதிர்பார்க் முடியாது மற்றவர் "நாடகங்களில் மட்டுமல்ல, தரமாக எந்தக் கலைஞர்களிடமிருந்து கூட நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது பாருங்கள். அமரதேவ, அவர் மீது எவ்வளவு விஸ்வாசம் வைத்திருத்தோம். அப்போது இருந்த அந்த விஸ்வா சத்தினை அவரே கெடுத்து வருகிருர் இப்போது
இந்தக் கூற்றுக்கு முக்கிய காரணம் அமரதேவ தற்கால கட் டத்தில் அரசியல் சார்பாக பாடல்களைப் பாடி வருவத்ாகும். இதில் இருந்து அமரதேவ ஒதுங்கிக் கொண்டு இன்னும் தம் பணி யைச் சிறப்புற மேற்கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து நாம் இன்னும் பல அருமையான சிருஷ்டிகளை எதிர்பார்க்கிருேம் என் பதை அவர் உணர்தல் அவசியமாகிறது.
8

ம்ருதூர் கொத்தனின் சிறு
கதைத் தொகுப்பு நூலொன்று இப்போதாவது வெளிவந்திருப் பது நெஞ்சுக்கு நிறைவு தருகி றது. பத்திரிகைகள், சஞ்சிகை களில் உதிரியாக அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப் பாளி ஒருவன் மிகச் சரியான இலக்கியக் கணிப்புக்கு உள்ளாக வேண்டுமாளுல் நிச்சயம் அவை யொரு தொகுதியாக வெளிவரு தல் மிக அவசியம். ஆனல் ஆற் றல் மிகுந்த ஒரு படைப்பாளி தனது சிருஷ்டிகள் சிலவற்றை யேனும் உள்ளடக்கிய தொகுதி ஒன்றை வெளிக்கொணர முடி யாதபோது. தனித்துவமான அவனது இலக்கிய் Jej60LDë சிறப்பினுல் தவிர்க்க இயலாத இலக்கியக் கணிப்புக்கு ஆளாகு தல் கூடும். மருதூர் கொத்தன் அத்தகைய கணிப்பினை ஏலவே பெற்றுக் கொண்டவர் காரணத்தினுலும், வேறு சில நியாயங்களிஞலூம் ஒரு தசாப்த காலத்துக்கு மூ ன் பே, 1974 ஜனவரியில் மல்லிகை அவர் உரு வத்தை அட்டையிற் பதித்து அவரைக் கெளரவித்துப் பெரு மைப்படுத்தி இருக்கிறது. மல்வி கையில் அவரை
இப்படித்தாள் தமது கட்டுரையை முடிக்கிருர்
என்ற
அறிமு கம். செய்து வைத்திருக்கும் க. நவம்
ஆக்க இலக்கியத்தை வளப்படுத்தும்
மருதூரின் கதைகள்
கந்தையா நடேசன்
"ஈழத்து இலக்கியப் பரப்
புக்கு வந்திருக்க வேண்டிய தர
மான சிறுகதைத் தொகுதிகளில்
ஒன்று இன்னும் வரவில்லை என்
ருல் அத்தொகுதி நிச்சயமாக
கொத்த்னுடையது ஆகத்தான்
இருக்க முடியும். இதனை அவர்
எப்போதோ செய்து முடித்தி
ருக்க வேண்டும் என்று அவரது
நண்பர்கள் பலரும் அவர்மீது குறைபட்டுக் கொள்கிருர்கள்.
அவரிடத்தில் இன்னும் நிறைய
எதிர்பார்ப்பதோடு, அவரது சாதனைகளைக் கூட்டுமொத்தமா கப் பார்க்கக் கூடிய வகையில் ஒரு சிறுகதைத் தொகுதியை விரைவில் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்"
மாணவப்பருவத்தில் 1953 ல் எழுத்துத்துறையில் அடி எடுத்து வைத்த கொத்தன் 96 dä 'இருள்" என்ற சிறுகதையுடன், சிறுகதை எழுத்தாளராக முகிழ் கின்ருர். இற்றைக்கு ஏறத்தாழ கால் நூற்ருண்டுக் காலத்து இலக்கிய வரலாறுடைய கொத் தனின் "மருதூர் கொத்தள் கதைகள்" என்றும் இத்தொகுதி குறிப்பிட்ட இக்காலகட்டத்தை உள்ளடக்கிய அன்னரின் இலக் கிய அறுவடையாகவே இன்று. வெளிவந்துள்ளது. 1967 முதல் 1978 வரை பல்வேறு பத்திரிகை

Page 7
கள் சஞ்சிகைகளில் வெளிவந்தி ருக்கும் பதிஞெரு சிறுகதைக ளைத் தொகுத்து "இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்" தனது முதல் வெளியீடாகக் கொத்தனின் நூலை வெளி க் கொணர்ந்ததன் மூலம் தனக் கென்று தனியான பெருமையைத் தட்டிக் கொண்டுள்ளது. வெளி யீட்டுரை அணிந்துரை என்ப வற்றைத் தொடர்ந்து நூலாசிரி யர் முன்னுரையை "அவனது SGM35” Kunres iš Sjög Girarnrri. Joyau வினது கதையைப் படித்து முடித் தபின்பு நூலே மூடிவைத்துவிட்டு சில கணங்கள் கண்களே மூடிக் கொண்டு அமைதியாக சுகாநுப வத்தில் திளைத்திருக்கவே நெஞ் சம் விழைகின்றது. முன்னுரை அப்படியொரு நிறைவை நெஞ் சில் பிரவாகிக்கச் செய்கின்றது. "அவனது கதை" கொத்தனின் பிறப்பையும், பள்ளிப் படிப்பை யும், சிறுபருவத்து வாழ்வையும் கோடி காட்டிவிட்டு, அ வ ர து இலக்கியம் சார்ந்த வாழ்வினை ஒரு சிறுகதைபோல படிமுறை யான ஒவியமாகத் தீட்டுகிறது. குறிப்பிட்ட சில கதைகளை எப் போது எழுதினேன், எ ன் ன நோக்குடன் எழுதினேன் என Jay a tř gájsou uDrtas 6709š5é சொல் வது அப்படைப்பினைப் படிக்க வேண்டுமென்னும் ஆர்வத் தையும் துடிப்பையும் மேலும் ஊட்டுகிறது.
"அவன், இலக்கியம் மக்க ளுக்காக, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதப்பட வேண் டும் என்று விரும்புகிறவன்" என் னும் பரந்த நோக்குடன் இலக் கியம் படைக்கும் கொத்தனின் எந்தவொரு படைப்பும் அவரது இலக்கிலிருந்து சரிந்து நெளித்து ஒழிந்து போகாது விருப்புடன் நிமிர்ந்து நிற்பதே அவரது வெற் றியும் பயனும் என்று கூறலாம்.
இல்லாமிய சமூகத்தையும் அச்சமூகத்தின் மதக் கோட்பாடு களையும் வர்க்கம் சார்ந்த தமது பார்வைக்குட்படுத்தி o 5 di கோட்பாடுகளுக்குக் குந்தகமில் லாமலும் அதே சமயம் தமது வர்க்கப் பார்வை நெகிழ்ந்து போகாமலும் சிருஷ்டி இலக்கி யம் படைக்கும் சாதுரியமாள ஆற்றல் சொத்தனுக்குக் கைவ ரப்பெற்றதெனலாம். இந் த த் தொகுதியில் இடம் பெறும் முதல் கதை ‘வெட்டு முகம்" மேற் குறிப்பிட்ட கருத்துக்குச் சான் முகப் பின்வருமாறு பேசுகிறது:
ʻu S?ğ*63p yFalkasrr pruʼi ח - -'" ו ו ו" ளத்தை உருவாக்க ஏழைவரி விதிக்கப்படவில்லை. ஏழைவரி
வாங்குபவர் ளும் காலக் கிரமத் தில் எழைவரி வழங்குவோராக மாறவேண்டும். அல்லாஹ்வுக் குப் பயந்து சரியாகக் கணக் கிட்டு உரியவர்களுக்கு முறை யாக வழங்கி அதை அவர்கள் மூலதனமாக இட்டு வாழ்க்கைாை ஆரம்பிக்க வழிசெய்தல் வேண் டும். ஊருக்கொரு பைந்துல்மால் நிதியை ஏற்படுத்துவோம். விக் காத் திட்டத்தை சரியாக அமுல் Gostui Gaumrbo
இஸ்லாமிய சமூகப் பின்ன ணியில் இக்கருத்துக் கூறப்பட் டுள்ள போதிலும் மனித சமு தாயம் முழுவதற்கும் ஏற்புடை யதான பொதுமைக் கருத்தல் லவா இது?
Lortriäsä sL6oupsän sap வேற்றி மறு உலக சுகத்தை அநுபவிப்பதிலும் பார்க்க பக்கத் திருப்பவன் பசியைப் பார்த்தி ருக்க இயலாது அப்பசியைப் போக்குவதே இறைவனுக்குச் செய்யும் மேலான மார்க்கக் கட மையெனக் கருதும் "அழகிய இதயங்கள்", திடீர்க் கெளரவத் தின லும் பெருமையிஞலும்
Ꮧ0

"சங்கிலித் தொடர்" போன்ற குடும்ப் உறவுகளையும் பாசம் மிகுந்த உணர்வுகளையும் வக்கிர மாக அறுத்தெறியும் மேற்றட்டு மனிதர்கள் சொத்துடைமை உள்ளவஞன முதலாளி, அவன் கீழ் உழைத்து அவஞற் சுரண் டப்படும் தொழிலாளி என்னும் உசாதிகள் இரண்டே" ஆக மாத் திரம் உலகெங்குமுள்ள வர்க்க சமுதாயம்: நிலவுடைமையாளன் சாதாரண ஏழை விவசாயிக்குச் சொந்தமான சிறு நிலத் துண் டையும் தந்திரமாக ஏமாற்றி கபளிகரம் செப்ய முற்படுவதும், அதனை உணர்ந்த ஏழை விவ சாயி அதைத் தடுப்பதற்குரிய
Guy Lorridiasierras y on 607 g. SGBastiliassir கூராகின்றன" ஏழைகளான நெசவுத் தொழி லான்கள் சுயமாகத் தொழில் புரிந்து வாழ்வதற்கு இடமளிக் காது, கையாட்கள் மூலம் அந்த ஏ  ைழ த் தொழில் உடைமைகளை இர விலே திருடி அவர்கள் வாழ்வை அழித்து தான் சம்பாதிப்போரின் இராவணக்கம்" மனைவியின் தாயானவளின் சொத்துக்களை அடைய வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தை ம ன தி ல் கொண்டு அவளே மக்காவுச்கு அனுப்பி வைக்கும் ?: நியாயமாக உழைத்து அந்த உழைப்புக்குரிய ஊதியத்தைப் பெறுவதற்கு எண் ணும் போது அதனைக் கொடுக்க மறுக்கும் முதலாளித்துவ சமூகத் திடம், தனது உழைப்பிள் உரி மையை நிலைநாட்டி தனது ஊதி
யத்தைப் பறித்தெடுத்து வாழ் வதற்கு வழிகாட்டும் "ஆற்றுப் u ao ti ” வசதிபடைத்தவன்
அவனுக்கே உரிய மனச் சபலங் களால் இல்லாதவர்களைத் தனது இச்சைக்கிசைய ஒரு சமயம் அனேக்கவும் இன்னெரு சமயம் தூரவைக்கவும் முற்படும்போது த ன் மா னத் துட ன் கிளர்ந் தெழுந்து அவனுக்குச் சவாலாக
தொழிலாளர்களின்
அமையும் ஒன்று "மூக்குத்தி" அர்த்தமில்லாத சடங்குகளை வேலிகளாகப் போட்டு வைத்துக் கொண்டு சமுதாயத்கைக் கேலி பண்ணும் மரபுகளைப் பிய்த்தெறி பும் 'வேலி" பொறுப்பில்லாத கணவனுல் குழந்தைப் பேருென் றையே வாழ்வெனக் கொள்ளும் அபலைப் பெண்ணில் கவி யும் இருள்" என்னும் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பெற்
றுள்ளன,
கொத்தனின் மொழிநடை அவருக்கே இயல்பான தனித்து வமும் சிறப்பும் மிக்கது. உரை நடையில் கவிதையின் செழுமை யைக் கொண்டு வருபவர் அவர். கிராமியச் சொற்களை லாவகமா கக் கையாண்டு இலக்கிய அந்தஸ் துக்குரியதாக்குபவர் அவர். ஒரு பிரதேசத்துக்குரிய மண்வளச் சொற்கள் அவற்றுக்குரிய வீச்சு டன் பாத்திரங்களின் இயல்புக் குப் பொருத்தமுறக் கையாளப் பட வேண்டும் எ ன் ப த ன உணர்ந்து எழுதுபவர். கிராமி யத்துடன் இணைத்துப் புதிய புதிய சொல்லாட்சியைத் தமது இலக்கியங்களுக்குட் கொண்டு வரும் ஆற்றல் கொததனிடத் தில் காணப்படும் மிகச் சிறந்த அம்சம். இந்த அம்சத் தி ல் கொத்தன் சிறந்து விளங்கிய போதும் சில புதிய சொல்லாக் கம் பொருத் தமற்றவையாய் நெருடலைக் கொடுக்கின்றன எள் பதும் கவனத்துக்குரியதே.
இத்தொகுதியில் இடம் பெறும் பதினுெரு கதைகளுள் பத்துக் கதைகளும் கொத்தள் வாழும் மருதமுனை என்ற கிரா மத்தைக் களமாகக் கொண்டு அந்த மண் வில் விளைந்தவை களே. அந்த மண்ணின் கடற் பிரதேசம், வயற் பிரதேசம் என் பன படைப்புக்களில் செம்மை யான ஒவியங்களாகத் தீட்டப்
படுகின்றன. மீன்பிடி, விவசா
l

Page 8
பம், நெசவு ஆகிய தொழில் முறைகள் மக்கள் வாழ்வுடன் இழைந்து வருகின்றன. மனித அவலங்களும் வர்க்க அடிப்படை
யிலான முரண்பாடுகளும் வீச்சு
டன் வெளிப்படுகின்றன. ஒடுக் கப்பட்ட உழைக்கும் வர்க்கத்
தின் கரங்கள் ஒங்கும்போதே
அவர்களது அவலங்கள் ஒழிற் தொழியும் என்ற தத்துவார்த்த உண்மைக்கு மக்கள் ஆற்றுப் படுத்தப்படுகிருர்கன். வர் க்க முரண்பாடுகள் பற்றிய தத்து வார்த்த உண்மைகளை படைப் புக்களுக்கூடே வெளிக் கொண்டு வரும் பாது வரட்டுக் கோசஷங் கள் எழுப்பாது கலைநயத்துடன் முன்வைக்கப்படுகிறது.
கொத்தன் கால் நூற்ருண்டு கால இலக்கிய வரலாற்றுக்குரிய வராக இருந்த போதும் அவரது படைப்புகள் தொகையில் மிகக் குறைவானவை. ஒரு படைப்பா ளியின் இலக்கியத் தகுதி அவன்
ஆக்கிய படைப்புகளின் தொகை களைக் கொண்டு கணிக்கப்படுவ தில்லை என்பதற்கு கொத்தள் நல்லதொரு சான்முக விளங்கு பவர். தொகையிற் குறைந்த இலக்கியங்களைப் படைத் து தரத்தில் உயர்ந்த படைப்பாளி யாகத் தன்னை நிறுவிக் கொண் டவர். எனவே தொகை அளவி லாவது இவரை ஒரு மெனணி என்று சொல்லலாமா என ஒப் பீட்டு நோக்குநர்கள் அவசரப் படக்கூடும். கொத்தன் மெனணி யாக முடி யா தெ ன் ற முணு முனுப்பும் இன்னெரு மூலையில் எழத்தான் செய்யும். கொத்தன் மெளணியாக முடியாதுதான். அதேசமயம் மெளனி கொத்தணு as Sayuh (plg. Lurrg7. GA) as rT iš As Giv கொத்தனே! என்ற உண்மையை ஒருசேர உணர வேண்டுமாளுல் "மருதூர் கொத்தன் கதைகள்" படித்துத்தாள் அறிய வேண்டும்.
O
LLLMMLLALEELMMMEELLLESL0LtLtLEESLLSMMtMMMMMiMMMMMALESLMMM MMiMMMLLLEELMMMLALMMMLMMEMMMYSLLESiMM
f
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ட நூல்கள்
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40. சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு 2:
LMMMSMALLLMMMLELSAAMMMMAELMMMMMTSLMSMAAA SLAA MMTAASAASMATSAAMAATSAAMMLELLMAMLLALMMMAASSMMMMAAS
夏易

21-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா
$ 65GSG); GE65,
நெல்லை க. பேரன்
கடந்த 20 - 9-8 பிற்பகல் 3 ம்ணிக்கு மல்லிகை அலுவல அத்திற்கு அருகில் உள்ள மினி சினிமாக் கட்டிடம் விழாக்கோலம் பூண்டது. பருத்தித்துறையில் இருந்து வைத்திய கலாநிதியும், லயன்ஸ் கழகத் தலைவருமான எம். கே முருகானந்தன் த மது கப்பல் போன்ற காரில் மனைவியுடன் வந்திறங்கினர். எழுத்தாளர் கூட்டத்திற்கும் காரில் வருகிருரர்கள் என்று நினைக்கவே பெருமை பாக இருந்தது. டொமினிக் ஜீவா அவரையும் பாரியாரையும் வர வேற்று மல்லிகை அலுவலகத்தின் புதிய அமைப்பையும் நடை பெற்று வரும் திருத்த வேலைகளையும் காண்பித்தார்.
சரியாகப் பி. ப. 3 - 30 மணிக்கு கலாநிதி சபா. ஜெயராசா தலைமையுரையை ஆரம்பிக்கு விட்டார். இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளில் குறிப்பிட்ட வரலாற்றுத் தேவையை நிறைவு செய்ாக்கூடிய வகையில் சிறு சஞ்சிகைகள் வெளிவருகின்றன. சிறு சஞ்சிகைகளில் சிறப்புத்துறைகளைச் சார்ந்த வளர்ச்சியைக் காண முடிகிறது. வாசகரின் தரமும் பெருக்கமும் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இரண்டு தினசரிகள் சினிமாவைப் பற்றிய செய் திகக்னப் பிரசுரிக்காமலே விற்பனையை அதிகரித்துள்ளன. கட்டுரை கவில் கனமான விஷயங்க்ளை எளிமைப்படுத் கிச் சொல்லவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இன்றைய அரசியல் பொருளாதார, சமூக நெருக்கடிகளுடன் வளர்ச்சி பெற்ற வாசகர்களின் திறன் பற்றி நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். பேராசிரியர் கைலா சபதி எளிமையாக எழுதினுலும் இடர்ப்பாடுகளையும் எதிர்நோக்கி ஞர். உலகம் பூராவும் வரக்கூடிய சிறு சஞ்சிகைகள் ஆராய்வுக் குரிய ஆவணங்களாககுே இருக்கின்றன" என்ருர்.
மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா 21 வது ஆண்டு மலரின் முதற் பிரதியை டாக்டர் எம்.கே. முருகானந்தனிடம் கையளித்தார். திரு. முருகானந்தன் பேசுகையில், இலக்கியத்தில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் நல்ல இலக்கியத்தையும் நச்சு இலக்கியத்தையும் வேறுபடுத்திக் காட்டியது மல்லிகைதாள். ஜீவாவின் விடாமுயற்சியும் தனிமனித உழைப்பும் பாராட்டப்பட வேண்டியவை" என்ருர்,
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) பேசுகையில், இன்று 21 வயது வாலிபஞகிவிட்ட மல்லிகையை வளர்த்தெடுத் தது அசகாச சூரத்தனந்தான். இன்றைய ஜீவாவைப் போல நீண்ட LLCLETTTTT TLTLLLLLLL LTTTLTLLLLLT LTTTTTLTtLTT LLTLLLLLLL
19

Page 9
"தமிழ் மகள்" என்ற பத்திரிகையை நடத்திஞர். வீடு வீடாகச் சென்று விற்முர். இன்றைய மாணவர்கள் பல புதிய கலைச் சொற் கண் அறிந்து வைத்திருக்கிருரர்கள்" என்ருர்.
திரு. எம். பாலசிங்கம் பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக் காகக் குரல் கொடுக்கும் மல் லி கை எல்லோர் கரங்களுக்கும் கிடைக்க வேண்டும்" என்ருர், திரு. சிதம்பர திருச்செந்திநாதன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் பல தரமான எழுத்தா னர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது மல்லிகை" என்ருர்,
கலாநிதி சி. மெளனகுரு பேசுகையில், "ஈழத்தில் மல்லினக், அலே, தாயகம் போன்ற சில காத்திரமான சஞ்சிகைகள் தமிழில் வருகின்றன. இவை எல்லாமே இலக்கியத்திற்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மல்லிகையின் போக்கில் ஆக்க இலக்கியத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. சென்ற ஆண்டில் பேராசிரியர் கா. சிவத்தம்பி மல்லிகை புதிய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறது" என்ற விஞவை எழுப்பிஞர். இக் கேள்விக்கு மல்லிகை அழுத்தமாக முகம் கொடுத்ததா என்பது கேள்விக்குரியது. தேசிய இனப் பிரச்சனை பற்றி (சாந்தன்) மல்லிகையில் எழுதியுள்ளார்" s7Giroy.
தொடர்ந்து திரு. தெணியான் பேசுகையில், பேராசிரியர் சிவத்தம்பியின் கேள்வி நியாயமானதுதான். ஆனல் எழுத்தாளர் களாகிய நாம் இன்றைய பிரச்சனைகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதை எங்காவது அவர் தெளிவுபடுத்திஞரா? இன்று மல்லிகைக் காரியாலயம் சிறப்பாக இருப்பது போலவே மல்லிகை யின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்? Ovdirgiř.
திரு க. சட்டநாதன் உரை நிகழ்த்துகையில், "கட்டுரைகளி லும் படைப்பிலக்கியத் தன்ம்ை உண்டு. எழுதுபவர்கள் நல்லதை எழுதிக் கொடுத்தால் மல்லிகையில் நல்லது வரும். "பூரணி" சஞ்சி சையை 8 வருடங்கள் நடத்திக் கஷ்டப்பட்டவர்கள் நாம். விஷய தானப் பிரச்சனையை நன்முக உணர்வோம்’ என்ருரர்.
திரு. செங்கை ஆழியான் பேசுகையில், "எளிமைப்படுத்துவ தைவிட ஆக்கங்களில் தெளிவுதான் முக்கியம். சிவத்தம்பி விமர்ச கர். ஆக்க இலக்கியகாரர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று இல்லை. ஜீவா ஆக்க இலக்கியகாரர்களின் எழுத்தை மதிப்பவர். வனரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களேயாவது திருத்தி வெளி யிட்டால் என்ன?" என்று கேட்டார்.
திரு. ஐ. சாந்தன் பேசுகையில், "மாமூலாக நாள் எதையும் பேச விரும்பவில்லை. ஆக்க இலக்கியகாரர் இன்று மக்களை மறந்து போவதாகப் படுகிறது" என்று சொல்வி அமர்ந்துவிட்டார்.
செல்வி சந்திரா தியாகராசா பேசுகையில், "நான் படித்த முதல் மல்விகையே என்னைக் கவர்ந்தது" என்ருர். -
திரு. ஈழத்துச் சிவானந்தன் பேசுகையில், "யாருக்காக எழுது கிருேம் எள்பதைச் சிந்தித்து எழுதினுல் எளிமை, தெளிவு எள்ப
I {

தற்கு அர்த்தம் புரியும். எழுத்தாளர் மத்தியில் எத்தனையோ பேதம் கள் இருப்பினும் அடிப்படையில் ஒன்றுபட்டு மானுடம்" வெல் வ தற்காய்ப் பாடுபடுவோம்" என்ருர் இவர் தமது பேச்சின் இடை யில் ஜீவாவுக்குக் கோபம் வரும் சந்தர்ப்பங்கள் பற்றியும் சில மணி தர்களுடன் தெருவில் அவர் ஒரு மாதிரி" யாகப் டோவது பற்றி யும் காரள காரியங்களுடன் நகைச்சுவையாக விளக்கிஞர்.
இறுதியாக மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா பதி லுரை நிகழ்த்திஞர். "எனது கோபம் யாரையம் புண்படுத்தாது. 100 வருடங்களின் பின் சரித்திரம் என் கோபத்தைச் சிொல்லாது. நான் செய்த வேலையைத்தான் சொல்லும், யாழ்ப்பாண மண் புதிய இலக்கியப் பசளையுடன் வளர்கிறது. ஈழநாடு, சழமுரசு இரண்டுடனும் "உதயம்" என்ற பத்திரிகையும் தினசரியாக வர இருக்கிறது. இந்த மண்ணில் இன்று மனிதன் படும் ஒவ்வொரு துன்பத்தையும் நானும் அனுபவிக்கிறேன். மற்றவர்கள் சொல்வது போல் நான் கருத்தை மாற்ற முடியாது. என்னுடைய மரணத் தின் பின்னர்தான் என்னைப் பற்றிய சரியான விமர்சனங்கள் உங் களுக்குக் கிடைக்கும். மல்லிகையின் 21 வருட வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். தாமரை, சரஸ்வதி, கணையாழி எல்லாம் பார்க்கிறீர்கள். எல்லா மாதங்களிலும் எல்லா விஷயங்களிலும் தரமானதை எதிர்பார்க்க முடியாது. படைப்பாளியின் கருத்தை அப்படியே பிரசுரிப்பவன் நான். அவன் படைப்பில் கைவைத்தால் பத்திரிகை வியாபாரிக்கும் எனக்கும் வித்தியாசமிருக்காது" நான் இல்லாவிட்டாலும் மல்லிகை 00வது ஆண்டு மலர் நிச்சயம் வரும்" என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினர்.
பிரச்சண்யான சூழ்நிலையிலும் மிகவும் பிரயோசனமான இந்த மாலே வேளை கழிந்தது. நீண்ட நாட்களின் பின்னர் மனதுக்கு நிறைவான கூட்டம். O
வரதர் வெளியீடு
சிறிய நூல்கள் சிலவற்றை வெளியிடத் தீர்மானித்து அதற் கான ஆயத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.
புல்ஸ்காப்பில் இருபது பக்கம் தொடக்கம் எண்பது பக்கம் உள்ளடக்கக் கூடிய படைப்பு, அறிவு, விஞ்ஞானம் சமகால வரலாற்றுச் சம்பவங்கள் போன்ற நூல்களை வெளிக் கொணர பிரபல எழுத்தாளர் வரதர் முனைந்து செயற்பட்டு வருகிருர்,
வெளியிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்படும் ஆக்கங்களுக்கு ஏற்ற சள்மானம் வழங்கப்படும்.
படைப்பாளிகள் அபிமானிகள் வரதருடன் தொடர்பு கொள் வது நல்லது.

Page 10
தகமையுள்ள
பெரிய
கிட்டப்போக குப்பென்று சென்ட் வாசம் அடித்தது என்ன ரகமோ கத்தசாமிக்குத் தெரி யாது. ஆளுல் அந்த வாசனையின் வேர்ச்சியிஞல் விண்மூகத்தின்மீது
என்னவோ ஒரு பிடிப்பு ஏற் பட்டு விட்டது.
அரசாங்க அலுவலகத்தில்
காலை தொடக்கம் அவருக்கயக் காத்திருந்து, காத்திருந்து அவர் வந்தபோது கூடவே அந்த வாச மும் வந்தது. ஒரு காலமும் அணு பவிக்காத தன்மை கொண்ட evinrarbar.
மூச்சை நன்முகி உள்ளுக்கு இழுத்து வாசனையை அனுபவித்த போது இதமாக இருந்தது. அவ svg ரசமான அனுபவத்தை உணர்ந்தோ என்னவோ.. "என்ன கந்தசாமி" என்று கேட்டுக் கொண்டு கொடுப்புக் குள் கிரித்தார் சண்முகம்.
"அந்த அலுவலாய்த்தான் aisegair" wcirczycir sśzamló9. சரி வா. வா." என்று சொல்லி, அவர் முன்னே நடத் அவனும் பின்னல் நடந்தான்.
அவர் தனக்குரிய மேசையின்
முன்குல் இருந்த கதிரையில் அமர்ந்து லேஞ்சியை எடுத்து முக்த்தைத் W SP L - iš s mr tři.
மனி தன்
சிதம்பர திருச்செந்திநாதன்
பியோனைக் கூப்பிட்டு பானைப் போடச் சொன்ஞரி. பக்கத்து மேசைகள் அனேகமாக வெறு மையாக இருந்தன.
பான் காற்றில் அந்த மேசை களில் இருந்த சில காகிதங்கள். கடிதங்களாகக் கூட இருக்கலாம் பறக்கத் தொடங்கின. ஒன்றி ரண்டு பியோனின் கால்களுக்கு இடையில் அகப்பட்டன.
அவன் அதனைக் கவனிக்க வில்லை. அப்படி இருக்க முடி யாது, கவனித்து விட்டு தனக் கென்ன என்று போயும் இருக்க Sunrib. கந்தசாமிக்கு ம ன ம் பொறுக்கவில்லை. தாளுவ அவற் றினை எடுத்து வைக்க முனேற் தான்.
சண்முகம் அவளை அப்படிச் G so ün Gasi-mid 67 civ o AsGés 6 L-rrif.
"அவனவன் வேலையை அவ atau sir urrtuliurair. alari Gascir தேவையில்லாத வேலை" என்று சொல்லிக் கொண்டு சிகரெ. Lispasát s Jeprbšsnrrř.
Gastrui ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சண்முகத்தின் பக் கத்து மேசைகளுக்கு ஆட்கள் வரவில்லை. அந்த சாமி ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு ւյoքաւյւգ சண்முகத்தையே LunTrifŠSnvasiv.
6

அவர் நிதானமாக ரசித்து ரசித்து புகைத்துக் கொண்டிருக்க அவரது சென்ட் வாசனையை மிஞ்சி சிகரெட் வாசனை பிறந்
lo
சண்முகம் அழகாக இருப் பார். சிவத்த முகமும், தங்கப் பிரேம் போட்ட கண்ணுடியுமாக இருக்கும் அவர், தன் நரையை மறைப்பதற்காக மீசையிலும்
தலேயிலும் பூசிய கறுப்பு டை
நிறம் மாறி தங்க நிற மாக மாறியிருந்தது.
பளிர் என்ற வெள்ளை ஆடைக்கும் இடுப்பில்ே கறுத்த பெல்ட் சகிதம் அவரைப் பார்த் தால் கவர்ச்சிகரமாக இருக்கும். கடவே மதிப்பும் ஏற்படும்.
சண்முகத்தை அ டி க்க டி. கந்த சாமி கண்டிருக்கிருள். காணும் நேரங்களில் எல்லாம் அவரி இப்போது போலவே எப் போதும் காணப்படுவார். அதே சென்ட் வாசனை அழகான ஆடைகள்.
யாரோ அப்போது அவரைத் தேடி வந்தார். அவரது வயது தான் இருக்கும், ஆல்ை அவரது aalitasaayub garGoo ayub gaya).
"ஹலோ சண்" என் ருர் வந்தவர்.
it aparr printh' என்று
சொல்வி பக்கத்தில் இருந்த கதி ரையை இழுத்து ப் போட்டு "கம் கம் சிட்" என்ருர், நீர், "என்னப்பா சண் உன்னைக் கண்டு பிடிக்கிறதே பெரிய கஷ் luonta ggä85'
நாள் பிசியான ஆள்தானே எப்ப வந்தனி மச்சான்.
போன சள்டே உங்கடை வீ ட் டி ல கன சனம் என்ன விசேஷம்"
"ஒ . . அதுவே என்ரை கசின் பிறதர் ஒருவரின்ரை மக
ளுக்கும் மாப்பிளைக்கும் லஞ்ச்" கொடுத்தளுங்கள். SQ LI MY ù அடிச்சு பெரிய முஸ்பாத்தி. எனக்குத்தானே கை க சா து
யோசிக்காமல் செலவழிப்பள்.
蝶
கனபோர் வந்தவையோ"
"ஒமோம். என்ரை சன் இன் லாவும் சவூதியால வந்து நிற்கி ழுர், என்ரை ஆட்கள். மிஸ்சி வின் ஆட்கள் எல்லாரும் வர் தவை.
2பெரிய அமளிதான்"
"எனக்கு உத புதிசில்லத் தானே. எங்கடை வீட்டில ஒவ் வொரு கிழமையும் விஷேசம் தானே. யாராவது விவிட்டர்ஸ் லஞ்சுக்கோ, டி ன் னருக்கோ வாறவை"
நீங்கள் எல்லாரும் பெரிய ஆட்கள்"
பகிடி இல்லை உண்மைதான் மச்சான், எங்க்டை பமிலி பெரிய பமிலி. ஊரில எங்கடை சந்ததி ஆட்களுக்குப் பெரிய மரியாதை, அந்தக் காலத்தில எங்க  ைட கிரான்ட் பாதர் தெருவில் போஞல் எ ல் லா ரும் விலகி நின்று மரியாதை செய்வார்கள். தோளில சால்வை இருந்தால் எடுத்து கையில வைச்சிருப்பின மாம், ஊரில இருந்த முக்கால் வாசிக் காணி எங்கடைதான்.
எங்கடை அப்பரும் பழைய விதானையார்தானே. விதான uurTrř sir Üv pro ardhuh Greivydiv
இப்ப இருக்கிற வயது போன ஆட்கள் எல்லாம் கதை கதை யாய்ச் சொல்லுவினம்.
அதுதானே நான் சொன் னன் மச்சான் பெரிய ஆட்கள் என்றும்
"என்ரை மூத்த அரக்காவிள் கலியாணம் நடந்து, வெள்ளைக்
குதிாை பூட்டின வண்டியிலதான்
மாப்பிளை பொம்பிள்ளை போன
7

Page 11
வரிகள். அந்த நாளையில அது பெரிய விசியம் மச்சான்"
இப்ப உன்னைப் பார்த் தாலே தெரியுதுதானே. நான் சொல்லுறன் என்று குறை
நினைக்காத இப்ப பார்த்தாலும் இத்தனே வயது வந்த பிறகும் எ ன் ன என்ரை வயதுதானே இருக்கும். இளம் ஆள் மாதிரி, இளம் மாதிரி இருக்கிருய்"
*அதுதான் டாப்பா இஞ்சை எல்லாரும் எரிச்சல். எங்கடை சந்ததி ஆட்கள் எல்லாம் அப்பி டித்தான். என்ரை அப்பருக்கு எண்பது வயதுக்குப் பிற (சு ம் ஒரு பல்லுக்கூட அசையேல்லை. ற்ல்ல கெய்தியாகத்தான் இருத் தவர். சில எளியதுகள் இளம் வயதிலேயே கிழண்டிப் போயிடு வினம். அப்படியான ஆட்களுக்கு என்னைக் கண்டால் பொருமை as reir '''
"உண்மைதான் Dj FryesiT. அதுசரி நாள் போன சண்டே வரேக்க நீ எங்கை போனனி. உங்கடை வீ ட் டி ல கொஞ்ச நேரம் இருந்து ரீவியில ஒரு *படம் பார்த்திட்டுப் போட்டன்
ஓமோம், அங்கை வீட்டில இரண்டு ரீவி இருக்கு. இப்ப சன் இன் லா சவூதியால வரேக் கையும் ஒரு கலர் ரீவி கொண்டு வந்தவர். எங்கடை பக்கத்தில நாங்கள்தான் முதல் ரீவி வேண் டின ஆக்கள். டெச்கும் இருக்கு. அனேகமாக எல்லாப் படங்களும் புதிக புதிசாக வீட்டில பாத்திடு விளம். கடைசி சன்னுக்கு உது தான் வேலை. அவனிட்டை கன விடியோ கசட் இருக்கு. பொழுது போறது தெரியாது. உனக்குத் தெரியா து மச்சான், உந்த யாழ்ப்பாணத்துப் பிரச்சனைகள் பு டே கேவியு எல்லாத்துக்கும் ாங்களுக்கு வீடியோவும் டெக் கும்தான் துனே"
18
ஆள் என்ன  ைம ன ர்
"அதுசரி மச்சான் நீ ஏன் போன சண்டே வீட்டில இல்லை என்று சொல்லேல்லை.
சவாறன் சொல்ல வாறன். எங்கடை பீயோன் ஒரு தன் சம்திங் வேண்டேக்க பிடிபட்டுப் போட்டான். பாவம் எனக்கு வலு உதவி. வீட்டில வக்தும் ஏதாவது உதவிகள் உதவி எல்லா வேலைகளும் செய்வான் மார்க்கட் கடை அது இது என்று போய் வருவான். அவனின்டை கஷ்ட காலம் சம்திங் வாங்கி பிடிபட்டு பிரச்சனையாய்ப் போச்க. பெரிய லெவலில அவனிட்டை பேப்பர் கள் போட்டுது அது தான் அவன் வீட்டில் வந்து காலில விழுந்து அழுதான். ஒருமாதிரிப் பிரச் சனே தீர்த்து தன்ரை வேலையை திரும்பக் கிடைக்க வழி பண்ணுங்கோ என்று"
th
எங்கடை பெரியவர் என் ஞேடை வலு ஒட்டுத்தானே. கொழும்பில நான் வேலை செய் யேக்கை அவரைத் தெரியும். இருந்த வீட்டுக்குப் பக்கத் து
வீடுதான். இரண்டு பேரும் பிறன்ட்ஸ் மாதிரி. எங்கடை பமிலியையும் தெரியும். அதால
அவரைத்தான்போய்க்கண்டேன். கண்டு கதைச்சஞன். தெரியா மல் செய்து போட்டான். இது முதல் தரம்தானே என்று ஒரு மாதிரிக் கதைச்சுச் சரிப்பண்ணி u untjes”
"நீ பெரிய கெட்டிக்காரன் தான்"
இவ்வளவு காலமும் இருக் கிருய் என்னைப் பற்றித் தெரி யாதே. நான் எப்பிடியான ஆள் என்று. அதுசரி நீ வந்த விசி
ub 6 resir 6 ar pýrrreiro
"இரண்டு கிழமை விவில் வந்தஞ9. போன சன்டே வந் தும் உன் னை ச் சந்திக்கேல்லை.

அதுதான் இஞ்சிையும் அலுவல் இருந்தது. வரேக்க சந்திச்சிட்டுப் 7ே4லாம் என்று நினைச்சன் வேறை என்ன நியூஸ்? நாள் வரட்டே'
உவேறை என்ன த்தைச்
சொல்லுறது. உன்ரை டோட் டருக்கு எப்ப கலியாணம்"
தெரியாதே, காசுப் பிரச்ச &rsteir. srQsávaruh Goodšl தான். சொல்லி வைச்ச இடத் திவ காசுகள் சரிவரேல்லே"
*கன காசே. .*
எழுபத்தையாயிரம்"
"அட அவ்வளவுதானே. . நான் என்ரை கடைசி டோட்ட ருக்கு இரண்டு லட்சம் காசாய் கொடுத்தஞன்"
உனக்குத் தெரியும்தானே. நீ ஏதோ ஒடிட் வந்து நிற்கி முங்கள் என்று சொல்லி கலியா னத்துக்குவரேல்லே. அவள் இப்ப கனடாவில் இருக்கிருள்"
Palaivar as Ll L r unr. உன்ரை தகுதியும் என்ரை தகு தியும் ஒன்றே" என்று சொல்லிச் சிரித்த ராம், "நான் போட்டு வாறன்" என விடை பெற்றர்.
இவ்வளவு நேரமும் மெளன மாக இருந்து உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கந்தசாமி வியப் புடன்
un PŠSñTsiv
அவன் மனத்தில் சண்முகத் திள் மீது இருந்த மதிப்பு பன் மடங்காகியது. எவ்வளவு பெரிய ஆள். என்ன மாதிரி செல்வாக்கு aasramranurř. symurffair Gopr Luprubu Goppr எள்ள பெறுமதி என்ன, வசதி கள், என்ன வலு திற மா ன ஆள்தாள்.
"என்ன கந்தசாமி யோசிக் கிருய் சண்முகந்தான் கேட் Arrif.
19
சண்முகத்தைப்
"ஒன்றுமில்ல'
வந்தவர் என்ரை பிரண்ட். முந்தி ஒருமிக்கப் படிச்சனங்கள். படிக்கேக்க சரியான மொக்கு. என்னைப் போலக் கெட்டிக்கார னும் இல்லை. இங்கிலீஸ் சரியாய்ப் பேச மாட்டான். கன பிழை விட்டுத்தான் கதைப்பாள்"
"gyü9ug Gun l”
ஒமோம், Jaw sa s rt G5 aur சொன்னன் என்னைப் போ ல இல்லே என்று. சரியான கஷ்டம். என்னட்டை வந்தால் உப்பிடித் தான் தன்ரை கஷ்டத்தைப் பற் றித்தான் சொல்லிப் புலம்பு வான். முந்திப் படிக்கேக்க நான் அடிக்கடி உதவி செய்யிறதுதான்க ஆனல் நன்றியில்லை. øyS fra நான் இப்ப கவனிக்கிறேல்லை. கண்டால் சிரிச்சுக் கதைக்கிறது. அவ்வளவுதான். அது அவருக்கு மனசில கொஞ்சம் பிடிப்பில்லை. எனக்கு அவரின்றை போக்கு விளங்கும். உள்ளூர எரிச்சல் தான். அதை வெளியில காட் டாமல்தான் கதைப்பர். நாள் கள் நல்லாய் வடிவாய் இருக்கி றதும் நல்லாப் வசதியாய் சீவிக் கிறதும் பிடிக்காது. ஒருமாதிரி நக்கல் அடிப்பார். சரியான அற் பத்தனம் உடைய அற்பன்"
கந்தசாமிக்கு என்ன சொல் வது என்று தெரியவில்லை. சங்க டத்துடன் சிரித்தான்.
இப்பிடித்தான் ஊரில உல கத்தில எல்லாரும் போட்டி பொழுமையோடைதான் எனக் கென்ன, யார் எக்கேடு எள்ளு லும் கெட்டுப் போகட்டும் சரி, கந்தசாமி உனக்கு என்ன அலுவல்
"அதுதான் ஐயா.." என்று சொல்லத் தொடங்க
*சிச்கி என க்கு ஞாபகம்
வந்திட்டுது. இனி ச் சொல்ல வேண்டாம். உனக்கு இப்ப அவசரமோ?

Page 12
இல்லை" என்ருர் கந்தசாமி.
சண்முகம் சிகரெட் பக் செட்  ைட எடுத்து சிகரெட் எடுக்க முனைய பெட்டி வெறு மையாகத் தெரிந்தது.
*கந்தசாமி ஒடிப்போப் ஒரு பக் கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு வா..." என்ருர்
Nano.
புறப்படத் தயாரான கந்த சாமி சிகரெட்டுச்கு அவர் தரும் காசை எதிர்பார்த்து திற்க . .
"ரன்டாப்பா நிற் கி ரு ய் எனக்கு மூண் வேலை செய்யாது ஒடிப் போய் வேண்டிக் கொண்டு வா? என்று அவனை அவசரப்படுத்தி ஞர். ゾ
கந்தசாமிக்குப் பகீர் என் நது. சிகரெட்டுக்குக் காசு கேட்க பயமாகவும் இருந்தது. சில விஞ டிகள் சங்கடப்பட, மண்முகம் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து "கெதியா வா" என்று பழைய படி சொன்ஞர்,
கந்தசாமியிடம் அப்போது சிகரெட் வாங்குவதற்கு உரிய காசு இல்லை. கொஞ்சம் சில்ல றைதான் இருந்தது. அதில் ஒன்ருே இரண்டோதான் வாங்க отић . .
கொஞ்சத் தூரம் போக . . *கந்தசாமி" என சண்முசம் கூப் பிட்டார். காசுதான் தரப்போகி ருர் என ஆறு த ல் அடைந்த கந்தசாமியிடம்
சிகரெட் பக்கெட்டுடன் ஒரு
நெருப்புப் பெட்டியும் வேண்டிக் கொண்டு வா கெதியாக" என் * Cyf.
தளர்ந்த நடை யு டன் வெளியே வந்து, என்ன செப்
சிகரெட் இல்லாமல்
வது என்று மனம் குழம்பிய போது, எதிரே சண்முகத்துடன் கதைத்த "ராம் வந்தார்.
'நீ அதில சண்முகத்தோடை நின்ற ஆள் தானே?"
spGuombo
என்ன விசியம்
"ஒரு அலுவலாய் வந்தளுள் • “இப்ப முடிஞ்சிட்டுதோ? "இல்லை, சிகரெட் வnங்கிக் கொண்டுவரச் சொன்ஞர். uygil தான் போறன்?
காசுதந்தவரே" என்று கேட்டுச் சிரித்தார் ராம்.
*NYr *NYr “Mr MMAVraMMs.--MrMae Maria VIII.
புதிய சந்தா விவரம்
1985 sylprai மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தர் 35.00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமா டா
மல்லிகை
234B, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
MYT MYNWre-M*Ne-YNorwp MurNAMI- MANN» MYNAIA MIAM
30
 

நமது நினைவானது ஆண்டு சுள் செல்லச் செல்லப் பின் ளுேக்கி விரியத் தொடங்கும் ஒரு காகிதச் சுருள் போன்றது என்று சொல்வார்கள். முதுமையை ஒரு வர் நெருங்க நெருங்க, இளமைக் காலத்தையும் அதன் பின் பிள் ளைப் பருவத்தையும், பற்றிய நினைவுகள் அவருக்கு மிகத் தெளி வாகத் தோன்றும். உதாரண மாக, அன்ருெரு நாள் நான் குரோபோத்கின் வீதி வழியே த ட ந் து சென்றபோது, தான் என்றுமே மறந்தறியாததுபோல் தோன்றியது. எனினும் பிள்ளைப் பருவத் தீட்சண்யத்தின் அபார மான தெளிவோடு கூடிய ஒரு நினைவு என்முன் எழுந்தது.
அந்தக் காலத்தில் ஒர் இளம் கலைஞராக இருந்த என் தந்தை, யும், நானும் தற்கால மேலை நாட்டு ஓவியக் காட்சிக்கூடம் என நான் இப்போது தெரிந்து கொண்டுள்ள கட் டி ட த் தின் இருண்ட அறைகள், நடை கூடங் கள் ஆகியவற்றின் வழியாக நடந்து செல்வதைக் கண்டேன். அப்போது எனக்கு ஆறு வயது; என் தந்தை என் கை  ைய ப் பிடித்து என்னை வழி நடத்திச் சென்ருர் . நானும் அவரும் (அந் தக் காலத்தில் எனக்கு விசித்தி ரமாகத் தோன்றிய) படிமங்க ளைக் கொண்ட சில சிறு படங் களைப் பார்த்துக் கொண்டே சென்ருேம். அந்தப் படங்கள்
2.
நினைவுச் சுருளிலிருந்து
எஸ். செவெர்த்சேவ்
பலவற்றில் எனது விசித்திரமான கனவுகள் பலவற்தை தான் இனம் தண்டு கொண்டதாக எனக்குத் தோன்றியது. என் பீதியுணர்வு அதிகரித்தது; அந்தப் புதிரான விசித்திரமான படங்களைத் தீட்டி யிருந்த அந்த மனிதரை. 1930 செப்டம்பரில் மக்கள் யாசைப் பற்றி மிகவும் அதிகமாகப் பேசி வந்தனரோ, அந்த வணக்கத்துக் குரிய ஞானியைக் காணப் போவ தாக என்னிடம் கூறப்பட்டிருந் தது இந்தச் சந்திப்பை நான் விசித்திரமான பயத்தோடும் பொறுமையின்மையோடும் எதிர் நோக்கியிருந்தேன்.
அவர் கறுப்புநிறத் தோல் வைத்துத் தைத்த ஒரு பெரிய சோபாவில் அதன் கைப்பிடிகளில் இரு ச்ைகளையும் வைத்தவாறு நிமிர்ந்த தோற் றத் தோடு அ ம ர் ந் து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சாந்தமும் க பீரமும் மிக் து தோற்றம் என்னை உடனே ஆக வாசப்படுத்தியது. அந்தக் காலத் தில் வெளிவந்த அவரது புகைப் படங்கள் ஆவரது வெளித் தோற் றத்தை மட்டுமெ காட்டுகின் றன. அவற்றில் அசாதாரணமான முகபாவம் நிறைந்த முகம் நரைத்த தலைமுடி மற்றும் தாடி, மெல்லிய கலாபூர்வமான விரல் கள், பண்டைக்கால முனிவர் ஒரு வ ரது உடைகளையொத்த அவரது உடையின் மென்மை

Page 13
யான மடிப்புக்கள் ஆகியவை மட்டுாம புலப்பட்டன.
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவரான கலை வரலாற்ருசிரி பன் அலெக்சி சிதரோவ் ஒரு புறத்தில் என் கையைப் பிடித் திருக்க, மறு கையை என் தந்தை பிடித்திருக்க, அவர்கள் என்னை அவரிடம் எவ்வாறு இட் டுச் சென்றனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் ஏதோ நோயாளி போலவும், ஞானி யான அந்த முதியவர் என்னைக் குணப்படுத்தப் போகின்றவர் போலவும் கருதினுற்போல், அந் தக் கறுப்புத் சோபாவில் இருந்த அந்த மனிதரிடம் என்னை அத் தனை கவனமாடி கூட்டிச் சென் றனர். பின்னர் நான் என் கண் முன்ஞல் அந்த வணக்கத்துக்கு ரிய ஞானியின் முகத்தைக் கண் டேன். அவரது முகம். அவரது அந்தக் கண்கள்
இங்கு நான் வேருெரு விஷ யத்தைக் கூற வேண்டியது அவ சியமாகிறது. அந்தக் காலத்தில் தூசி படிந்த புத் த கங்கள் நிறைந்த பெரிய புத்தக அலமா ரிகள் ஒவ்வோர் அறையிலும் இடத்தை அடைத்துக் கொண்டி ருந்ததால் சிறிதாகத் தோன்றிய UTrias87757 பரிய வீ ட் டி ல், மாஸ்கோ நகரின் அறிவாளிகள் பலரும் மாலை நேரங்களில் ஒன்று கடுவது வழக்கம். அங்கு இலக் கியம், வரலாறு, தத்துவம் முத விய நாஞவிகமான விஷயங்க னைப் பற்றியும் இரவு அகால நேரம்வரையிலும் விவாதங்களும்
வாதப் பிரதிவாதங்களும் நடை
பெற்றன. அப்போது எனக்கு ஆறு வயது. நான் (என்னைப் படுக்கைக்குக் கொண்டு சென்று விடாத வாறு) தூரத்தில் மூலை யில் கிடந்த ஒரு சோபாவில் சுருண் டு படுத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை ஆர்வத்
கேட்டு சுவையான விஷயங்கள் பலவற்றையும் தெரிந்து கொள் வேன். உதாரணமாக, (இந்து சமயம் பற்றிய பேச்சுக்களிவி ருந்த) தூர தொலைவிலுள்ள இந்தியாவிலுள்ள மக்கள் தாம் இறந்தால், மீண்டும் மீண்டும் பிறப்பது நிச்சயம் என்று நம்பி வந்தனர் என்று தெரிந்து கொண்டேன். என்ருலும், இர் தியர்கள்மீது எ ன க் குப் பொருமை ஏற்படவில்லே. அத் தக் காலத்தில் எனக்கு ஒரே ஒரு வாழ்க் கையே போதுமானது எனத் தோன்றியது. தாகூரின் பார்வையை எனது பிள்ளைத்தள மான பார்வை சந்தித்த அந்தக் குறுகிய, அதேசமயம் முடிவற்ற காலத்தில், நான் இதனையெல் லாம் உடனே நினைவு கூர்ந்தேன்,
வணக்கத்துக்குரிய மு தி ய வயது வரை வாழ்ந்துவிட்ட எனினும் இளைஞர்களைப் போன்று தெளிவும் குதூகலமும் மிக்க பார்வையைக் கொண்ட பெரிய மனிதர்களைப்பற்றி நான் கேள் விப் பட்டிருந்தேன். கண்களில் முது மை தட்டும்போததான் முகமும் முதுமையடைகின்றது என்று கூறப்படுவதை நாள் வெறுமனே ஒர் இலக்கிய வாச கம் என்றே எப்போதும் கருதி இருந்தேன். ஆளுல் தாகூர் விஷ யத்தில் அது அ ப் படி யிருக்க வில்லை. எனது நினைவில் மிகவும் துடிப்பாகப் பதிந்துபோன விவு யமே. அவரது கண்கள் ஆயிரம் ஆண்டுக் காலம் முதிர்ந்ததாகத் தோன்றிய அதே சமயத்தில் அவரது முகம் மட்டும் இளமை யோடு இருந்ததுதான். பொன் நிறச் சர்மம் படைத்த அவரது முகம் முது  ைம தட்டவில்லை, மாருக ஒரு தர்ம யுத்தத்தை எதிர்நோக்கி நிற்கும் போர் வீர னின் வதனத்தைப்போல் அது
மனே உறுதியைப் பிரதிபலித்
器2

தது. மேலும் இறுதி eெற்றியில் கொண்டிருந்த வெளியிட்ட அவரது அமைதி யான, கண்ணியம் மிகுந்த முகத் தில் இருந்தவை சுருக்கங்கள் அல்ல; மாருக, அவை துடிப்பா கச் செதுக்கப்பட கோடுகளா கவே விளங்கின. இமய பர்வதத் தின் வெண்பனி போவ வெள்ளே யாகவிருந்த அவரது தலைமயிர், எனக்கு ஒரு வெண்மையான மந்திர ஜோதியைப்போல் தோற் றியதே ஒழிய, அது முதுமைப் பருவத்தின் அறிகுறி போன்று சற் றேனும் தோன்றவில்லை. ஆனல் அவரது கண்கள். . அந் த க் களைப்புற்ற கண்கள் கணக்கற்ற கா லங் களி ல் இந்த உலகில் காணுது விடுத்த துன்ப துயரங் களோ, பரிதாபங்களோ எதுவும் இல்லை என்றே தோன்றியது. என்ருலும் அவற்றின் கடுமை பான களைப்புக்குப் பின்னல், பணி மூட்டத்தில் கதிர் பரப் பும் ஒளி விளக்கைப்போல் பிர காசிக்கும் ஓர் ஒடுக்க முடியாத மஞே உறுதி, அவசியம் ஏற்பட் டால் மீண்டும் மீண்டும் துன்
நம்பிக்கையை
புறவும், போராடவும் உறு தி
பூண்ட மனேதிடம் குடிகொண் டிருந்தது, ஏனெனில் சத்தி யத்தை அறிய வந்த மனிதர் ஒருவர் அதனை என்றுமே கைவிட
onfluentit.
நான் அந்தக் கண்களை யுண் யுகாந்திரங்கன் போல் தோற்றிய எனினும் எதார்த்தத்தில் ஒரு சில விநாடிகளே நீடித்த அந்தப் பொழுதில் இன்னும் கூர் ந் து பார்த்தவாறே நின்றேன். பின் னர் அவர் தமது நெ டி ப, மெலிந்த, சூரிய ஒளியால் பதப் பட்ட கரத்தைத் தமது தொள. தொளத்த சட்டைக்கை மடிப் புக்களிலிருந்து வெளியே எடுத்து எனது இடது தோளை இரு விரல்களால் தொட்டார். இதனை அவர் ஒரு புன்னகைகூட இல்
8 Ꮽ
artibá) is air as ei di Bajau பாவத்தை மாற்றிக் கொள்ளா
ல் அத் தனை மெளனமாகச் செய்தார். நான் அவரைச் சரிவ ரப் புரிந்து கொண்டேன் என் பதை அவரும் ஒத்துக் கொள் ளத் தீர்மானித்தவரைப் போல், அவர் இதனை எந்த அழுத்தலும் இல்லாமல், அமைதியாகச் செய் தார். அதன்பின் என்னை வேறு பக்கம் கூட்டிச் சென்று விட்ட னர்; பிறகு நடந்தவை எனக்கு நினைவில்லை. இதன்பின் நான் பயத்தினுலோ அல்லது அந்தப் பெரியவரிடம் நான் எதையோ கேட்ட விரும்பி அவ்வாறு கேட்க முடியாது போன காரணத்தி ஞலோ நான் அழத் தொடங்கி னேன்,
இன்று வரையிலும் ரன் ஒரு வேளை நான் இறக்கும் நாள் வரையிலும், நான் தா கூ ர து கண்களின் பார்வையை நினைவில் வைத்திகுக்கவே செப் வேன். அதன்பின் தான் முதுமையின் களைப்பும் துயரமும், அதேசம யம் தணிக்க முடியாத அச்சமில் லாத உறிதிப் பா டு ம் ஒரே ஜோடிக் கண்களில் அத் தளை தூரம் ஒன்று கலந்து தோற்றி யதை என்றுமே கண்டதில்லை. எனது வாழ்வில் மிகமிக இருண்ட கணங்களில், துயராந்த போரி ஆண்டுகளில் என் பெற்ரேரை யும் நண்பர்களையும் இழந்த காலத்தில், நான் எத்தனை எத் தனையோ முறை அந்தப் பார் வையை நினைவு கூர்ந்திருக்கி றேன். அது என்னை ஊக்குவித்து வந்துள்ளது; என் இதயத்தில் புதிய பலத்தையும் வாழ்க்கை யில் நம்பிக்கையையும் நிறைத்து வத்துள்ளது; அந்த முடிவற்ற தவிர்க்க முடியாத உன்னதமான உண்மையான போராட்டம்தான் உலகில் வாழும் வாழ்க்கையை வாழத் தகுதி மிக்கதாகும் ஒரே விஷயமாக ஆக்குகிறது.

Page 14
மொழியும் சமூக மாறுதல்களும்
சில குறிப்புகள்
கந்தையா சண்முகலிங்கம்
இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்துக்கள் ரெஜி சிறிவர்த்தன ஆங்கிலத்தில் எழுதிய கட்டுறை ஒன்றில் இருந்து பெறப்பட்டவை.
அன்று தை மாதம் முதலாம் திகதி.
"ஐயா வணக்கம்" என்று கூறியபடி வேட்டியும் அரைக்கை நா ஷ ன லும் அணிந்து, தம் முன்னே கைகூப்பி நின்ற அந்த நடுத்தர வயது மனிதரை பைலில் பதிந்திருந்த தமது கண்களை அகற்றி நிமிர்ந்து பார்த்தார் அந்த உயரதிகாரி.
*வணக்கம் வாருங்கோ?
பதிலுக்கு இருந்தபடியே கும்பிட்டு வந்தனம் சொன்னர். ஆளே அடையாளம் தெரிய வில்லை. முன்பு எங்கேனும் பார்த் திருக்கலாம். ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக அல்லது வார்ப் பெரியவராக இருக்கலாம் என்ற அனுமானம்.
இருங்கோ" என்று கதிரை யைக் காட்டினர். வந்த வர் இருக்கவில்லை. தயங்கி நின்ருர்,
*முதலில் இருங்கோ. என்ன விசயம்" என்று கதிரையைக் கா ட் டி ய படி ப E வான அழைப்பை விடுத்தார் அதிகாரி.
ஐயா, நான் எங்கடை டிப் பாட்மென்ற் மட்டக்களப்புக் கற்தோரில் பியோஞக இருந்து இங்கே இடமாற்றத்தில் வந்தி ருக்கிறேன்"
அதிகாரி இதை எதிர்பார்க்க வில்லை. சொல்லி முடித்ததும் வந்தவர் தாம் பிழை செய்து விட்டோமே என்று உள்ளூரப் பயந்தார். இதை முதலில் சொல் வியிருக்கலாமே. "வாருங்கோ", "இருங்கோ' என்ற வரவேற்டை அவரிடம் பெற்று, அவரைச் சம் கடப்படுத்தியது எவ்விதத்திலும் நியாயமில்லைத்தாள்.
"நீர் சீவ் கிளாக்கு டன் போய் கதையும் பிறகு நாள் கூப்பிடுகிறேன்" என்று தன்னைச் சமாளித்தவாறே பைலில் தலையை மீண்டும் புதைத்துக் கொண்டார். வந்தவர் வெளியே போஞர். அதிகாரியின் மனம் பைவில் ஒட வில்லை. நடந்த சம்பவத்தை நினைக்கச் சிரிப்பாக இருக்கிறது. எரிச்சலாகவும் வருகிறது.
இது போன்ற அனுபவங்கள் எ மக்கு அன்ருடம் வீதியில், பஸ்ஸில், கா யாலயத்தில், ஏன், வீட்டில் கூட ஏற்படுகின்றது. தமிழில் இந்த முன்னில் ஒருமை விளிச்சொல் இருக்கிறதே இது ஒரு பெரிய தர்மசங்கடம், நம் முன்னே எதிர்ப்படும் முள் அறி முகம் இல்லா அந்நியரை விளிப் பதற்கு "நீ, நீர், நீங்கள்" என்ற மூன்றில் பொருத்தமானதை உடனே தேர்ந்தெடுப்பது ஒன் றும் சுலபமானதல்ல, நீ யில்
84

தொடங்கித் தவறுக்கு மனம் வருந்தி "நீங்கள்" என்று இடை யில் மாற்றுதல், அல்லது "நீங் கள்' என்று தவருண அனுமா னத்தில் தொடங்கி நீர்" என்ருே 'நீ என்ருே படிப்படியாக மரி
பாதையைத் தகுதிக்கேற்ப அள
விட்டு வழங்குவதும் பெரிய சிக் கல்கள் தாம் ஆணுல் ஆங்கிலம் எவ்வளவு வாய்ப்பான மொழி. இந்த மரியாதைப் பன்  ைம என்ற மொழிச் சிக்கல் அங்கு கிடையாது. "யூ" என்ற சொல் உயர்வு, தாழ்வு பேகம் காட் டாத பொதுச் சொல். ஆங்கில சமூகத்தின் சனநாயக மரபும் சமத்துவ தத்துவமும் இச்சொல் வின் தன்மை வேறுபாட்டிலேயே வெளிப்படுகிறது என்று கூற 6 nr Dry?
சிங்கனம், ஆங்கிலம், ஸ்பா விஷ், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய மொழிகளை ஒப்பிட்டு முன்னிலை இடப் பெயர் பற்றிய சமூக வியல் இலக்கிய நோக்கிலான அருமையான சில குறிப்புகளை ரெஜி சிறிவர்த்தன சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார். அக்கட்டுரையை நேரடி யாக மொழிபெயர்ப்பதைவிட தமிழ் இலக்கண இயல்புகளோடு ஒப் பீடு செய்து, அவர் கருத்துக்களை உள்வாங்கிச் சுயமாக எழுது வதே பொருத்தம் எனக் கருதி ளேன். நேரடி மொழிபெயர்ப்பு களைவிட அவரவர் மொழிச் சூழல்களுக்கேற்ற தழுவலாக்கங் கள் சில சந்தர்ப்பங்களில் மிக் வும் பயன் தருபவை. மொழி ஒரு சமூக நிகழ்வு. சமூகத்தின் அமைப்பு. வர்க்க, மத இன, பால், அந்தஸ்து வேறுபாடுகள் சார்ந்த உயர்வு தாழ்வுப் படித் தரங்கள் கூட மொழியில் வெளிப் படுகின்றன. மொழியியலில் இது போன்ற இயல்புகளை ஆராயும் சோசியோ லிங்குஸ்டிக்ஸ்" என்
னும் தவித்துறையே வளர்ச்சி பெற்று உள்ளது. ரெஜி சிறி வர்த்தணுவை மொழியியல் துறை ஆய்வாளர் என்பதைவிட சமூக வியல், இலக்கிய பண்பாட்டு விமர்சகர் என்பதே பொருத்தம்.
ஆங்கிலம் "யூ" என்னும் முன்னிலே இடப் பெயரில் ஜள நாயகப் பண்பை வெளியிடுவது என்ன வோ உண்மைதான். ஆளுல் ஆங்கிலத்தில் கூட 17ம் நூற்முண்டிற்கு முன்னர் சமூகப் படிததரங்களுககு ஏ ற ற முன னில் இடப் பெயர்கள் இருந் தன. "யூ" என்னும் உயர் வு தாழ்வு சுட்டாப் பொதுச் சொல் பிற்கால வளர்ச்சிதான், ரெஜி பின்வருமாறு எழுதுகிருர்,
"இது உண்மையில் சர்வசன வாக்குரிமை, சட்டத்தின் முள் யாவரும் சமனனவர், தொழி லாளிக்கும் மு த லா விக்கும் இடையே சுதந்திரமான ஒப்பந்த உரிமை, என்பன போன்ற வெளித்தோற்ற அளவிலான பொய்மைகள் எப்படிப் பூஷ்வா சமூக அமைப்பின் யதார்த் தியே மைகளை மூடி மறைக்கின்றனவோ அது போன்ற ஒன்றுதான் மூத லா வித்து வ வளர்ச்சியிலும், பூஷ்வா சனநாயக நெறியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்த பிரிட் டன் முன்னிலை இடப் பெயரின் மாற்றத்திலும் மிக விரைவாகச் சென்றுவிட்டதும், a au it ay தாழ்வுப் பேதம் காட்டும் சொல் வடிவங்களை ஒழித்து விட்டதும் ஆச்சரியத்திற்குரிய நிகழ்வு அல்ல. அத்தோடு இம்மாற்றம் 17 ம் நூற்றண்டின் ஆங்கிலப் புரட்சியுடன்தான் ஆரம்பித்தி குக்க வேண்டியது ஏன்? ஆளுல் வெளித்தோற்ற அ ள வா ன பொய்மை கைவிடப்படும் போது வேறு விதச் சொற்களைத் தேர்ர் தெடுக்கும் அவசியம் உருவானது. அமெரிக்காவின் தென்மானிலம்

Page 15
களில் இனச் சமத்துவம் அற்ற சூழலில் கறுப்பு அமெரிக்கர்களில் வளர்ந்தவர்களை வெள்ளை பர் "Gunů" or cir gp b stipsyé சொல்லால் அழைக்கின்றனர். ஆங்கில மொழியின் சனநாயகப் பண்பு அதன் சமூகப் புரட்சியின் விளைவு என்ருல், முதலாளித்துவ வளர்ச்சியூடே நிலமானிய அமைப் பின் எச்சங்கள் தொடர்வதன் பண்பாட்டுச் சிக்கல் முன்னில் இடப் பெயர் தோற்று க்கும் வில்லங்கங்களில் நம்மிடையே வெளிப்படுகிறது.
பதினேழாம் நூற்ருண்டில் கண்டியில் வாழ்ந்த ருெபேர்ட் நொக்ஸ் கண் டிய சிங்களவர் பற்றிப் பின்வருமாறு எழுதினர்" நீ என்னும் சொல்லிற்குச் சமா னமான ஏழு அல்லது எட்டுச் GoFnrib siðbwr syavirtassir G0 sunty கிருரர்கள். இவை ஒவ்வொன்றும் அவரவர் அந்தஸ்து அல்லது ஒரு வருககுக் கொடுக்கும் மதிப்பைப் பொறுத்து. 9ேறுபடும். தோ, தொபி, உம்ப, உம்பலா, தொம னய், தொம்தி, தொம்சலா, தொமணக்சி, எ ன் னும் இச் சொற்கள் முறையே ஒன்றை விட மற்முெனறு உயர்வானவை" (இலங்கையில் வர லா ற் றுத் தொடர்பு என்னும் நூல்) நொக்ஸ் சில சொற்களை ஆங் கில எழுத்துக்களில் எழுது ம் பொழுது தவறிழைத்துள்ள போதும் சாதி வரிக்கப் படித்த ரங்களைக் கொண்ட கண்டிய நில Lorraflu Jaysoubül lair Cup di & u அம்சமொன்றைச் சுட்டிக் காட்டு áð Gy f. முதலாளித்துவத்தின் avarra asmpr600ruomas saserä சமூகம் அடைந்து வரும் மாற் றங்களால் இம் முன்னிலை இடப் பெயர்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
'alubu” 6Tairp seluaut alautisasaprirayb u an ay L air
"தமுளுன்சே" என்று குழைபவன் தாழ்ந்தவளுபும் இருப்பான். எனினும் நெருங்கிய தொடர்பு டைய சமதையான இருவர் ஒரு வரை ஒருவர் "உம்ப" என்றே அழைப்பர். கடந்த சில பத் தாண்டுகளில் "தோ", "தொபி" முதலிய சொற்கள் வழக்கிழந்து வருகின்றன. இவை இ ன் று வசையாகத் திட்டுவதற்கு மட் டும் பயன்படுகின்றன. பின்தள் கிய நிலமானியச் சூழல்களிலும் இச்சொற்கள் வழக்கில் உள்ளன. 'உம்ப" என்னும் சொல் கூட உயர்ந்தோர், தாழ்ந்தோரை விளிக்க உபயோகிக்கும் வழக்கு அருகி வருகிறது. பலர் இன்று இச் சொல்லே உபயோகிப்பதைப் பண்பான செயலாகக் கருதுவ தில்லை. எனவே காலப் போக்கில் நட்புரிமையோடு பேசும் சூழலில் மட்டும் பேசப்படும் சொல்லாக இது நிலத்து விடலாம். சிங்கள மொழியில் ஏற்படும் இம் மாற் றம்தான் பிரஞ்சு, ஸ்பானிஷ். ரஷ்யன் போன்ற மொழிகளில் முதலாளித்துவ வளர்ச்சிக் கட் டத்தில் ஏற்பட்ட மாற்றங்க ளுக்கு ஒப்பானவையே. இம் மொழிகளில் பொதுவாக உயாவு தாழ்வைக் குறிக்கும் இருவேறு சொற்கள் இருந்தன.
பிரஞ்சு – tU. VOUS
countaile - tu, usted
ரஷ்யன் - ty, wy
தமிழில் உள் ளது போன்றே ரஷ்யனிலும், ஸ்பானிஷிலும் மரியாதைப் பன்மைகள் வழக் கில் இருந்தன. தாழ்ற்தோரை ryb, w Lotorowałagru/th Gósfidis உபயோகிக்கப்பட்ட சொற்கள் சனநாயகப் பண்பிள் வளர்ச்சி யுடன் தாழ்ந்தோரைக் குறிக்கும் தன்மையை இழந்து நெருக்க மான உறவு முறை யி ன  ைர விவிக்க மட்டும் உபயோகிக்கும் சொற்களாக மாறியதை இம்
ያ6

மொழிகளில் அவதானிக்கலாம். இது சிங்களத்தில் "உம்ப" என் னும் சொல் பெற்றுவரும் மாற் றத்திற்கு ஒப்பானது.
புரட்சிக்கு முந்திய ரஷ்யா வில் முதலாளித்துவ வளர்ச்சி தடைப்பட்டதாகவே இருந்தது. ஏற்றத் தாழ்வுகள் இறுக்கமாகக் as ano - Lu u Ly. iš as Ü LuLU-6MT. 196 க்கு முந்திய கால rாணுவ ஒழுங்குப் பிரமாணங்கள் எந்த எந்த நிலை உத்தியோகத்தர்கள் unrř urany oty" srdivyb umíř யாரை "Wy" என்றும் அழைக் கலாம் என்று விதித்தன. இந்த வேறுபாடுகள் மறை வ தற்கு "மஹா சக்தியின் கடைக்கண் பார்வை" ரஷ்யாவின் மீது விழு வதும், சார் ஆட்சி ஒழிக்கப் படுவதும் அவசியமாயிற்று. எனி னும் ஒக்டோபர் புரட்சியின் பின்னரும் கூட அரசின் இடை விடா அறிவுறுத்தல்கள் காரண மாகவே இவை ஒழிக்கப்பட்டன. தொழிலாள உழைக்கும் மக்க ளுடன் உரையாடும் பொழுது அவர்களைக் கீழோராகப் பேதம் காட்டும் முறையிலான விளிச் G v m si a br உபயோகிக்கக் கூடாது என ராணுவத் தளபதி களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தி வந்தது. சிபுரட்சியின் தொடக்க காலம் முதல் ரஷ்ய மொழி என்னும் சமூக மொழியியல் ஆய்வு நூலில் கொம்ரி", "ஸ்ரோன்" ஆகிய இரு எழுத்தாளர்கள், 1960 ம் ஆண்டுவரை கூட அரசு இவ்வி தம் அறிவுறுத்தி வந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
சிங்களத்தில் இன்று ஆங்கி லத்தில் உள்ள "யூ" Lumrsiv p பொதுச் சொல் எதுவும் இல்லை. "ஒப" என்ற சொல் ஓரளவு சம் பிரதாய பூர்வமானது. "தமுசே" என்ற சொல் நொக்ஸ் காலத் தில் இருந்த கெளரவத் தன்
மையை இழுந்து விட்டது. எளி னும் இன்று நெருங்சிய உறவு டையவர்கள் ஒருவரை ஒருவரி விளிக்க தமுசே" பயன்படுகின் றது. அறிமுகமற்ற புதியவரை அழைப்பதற்கு இது பொருத்தம் அற்றது" "ஒயா" என்ற சொல் நகர்ப்புறங்களில் இன்று உபயோ கிக்கப்படுகிறது. பஸ் கண்டக் டர்கள் பிரயாணிகளைப் பார்த்து "ஒயா" என்று அழைக்கிருர்கள். எனினும் இதை ஒரு மரியாதை யான சொல்லாக எல்லாச் சூழல் களிலும் கொள்ள முடியாது.
gaitesupray 6 à s á as dir யாவற்றில் இருந்தும் விடுபட ஒரு வழியாக "நீ என்ற முன் னில் இடப் பெயரையே தவிர்க் கும் தந்திரத்தை சிங்களவரின் பேச்ச மொழியில் காணலாம்.
*மிஸ்டர் ற ட் ணு யக்க கெட்ட எனவாத?"
"சந்திராட ஸ்கொல நிவா டுத?”
"மகத்மயாகே நம மொக்கத"
முன்னிலை இடப் பெயர் இவ்வுதாரணங்களில் முற்முகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்விதம் எழுதிய பின் தமிழிலும் இது போன்ற போக்குகள் உள்னனவா என்பதை அறிதல் சுவையாக இருக்கு ம் என்கிருர் ரெஜி. தமிழ் மொழியில் மேற்குறித்த முறையான தந்திரம் கையாள முடியாது. ஏனெனில் முன்னிலை இடப் பெயர் மட்டுமல்ல பெய ரோடு சேர்ந்து வரும் வினையும் முக்கியம். al-Z5nTyravur Dras off வாறியா" என்பதில் நீ" என்ற சொல் மட்டுமல்ல சவாறியர்" என்பதும் மரியாதை குறைந்த உபயோகம், எனவே இட்ப் பெயரைத் தவிர்ப்பதால் மட்டும் பயனில்லை. உயர்வு, தாழ்வுப் பேதம் தமிழில் முன்னில் இட்ப் பெயர்களில் மட்டுமன்றிப் பல்
7

Page 16
வேறு இலக்கண வடிவங்களில் அமைந்துள்ளதை அறியும்போது ரெஜி ஆச்சரியப்படக் கூடும்.
கலாநிதி எஸ். சுசீந்தரராஜா எ ன் னு ம் மொழியியலாளர் (இவர் யாழ், பல்கலைக் கழக மொழியியல் துறைத் தலைவர்) "யாழ்ப்பாணத் தமிழில் காணப் படும் சமூக வேறுபாடுகளின் பிரதிபலிப்பு" என்னும் கட்டு ரையை 1971 ம் ஆண்டு டிசம் பர் மாத "ஆராய்சசி" இதழில் வெளியிட்டுள்ளார். அக்கட்டுரை யில் அவர் உயர்வு தாழ்வு குறிக் கும் பலவகை மொழிவடிவங் கனை வகைப்படுத்தி விரிவாக விளக்கியுள்ளார். Çıp söz Sofi 2bu இடப் பெயர் தொடர்பாக அவர்
எழுதியிருப்பவை ரெஜி யின் கருத்துக்களுடன் ஒப்புநோக்குதல் பொருத்தமானது.
"சில சமுதாயச் சூழ்நிலைக ளில் நீ, நீர், நீங்கள் என்னும் மு ன் னிலை இடப் பெயர்களி டையே உள்ள வேறுபாடுகள் (ஆங்கிலக் கல்வி கற்றவர் பேசும் தமிழில்) மறைந்து கொண்டிருக் கின்றன என்று தோன்றுகிறது. படித்தவர்கள் தங்கள் மனைவி களை ஏன் தங்கள் குழந்தைகளைக் கூட நீ என்று சொல்வதற்குப் பதில் நீர் அல்லது நீங்கள் என்று சொல்லுகின்ற வழக்கம் இன்று வந்துள்ளது. . நீ என்பது இவரி கள் வழக்கில் சிதைந்த இழிவு வழக்காகவே கருதப்படுகிறது. இதற்குப் படித்த வர்சகத்தினர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து சமுதாய அந்தஸ்து வேறுபாடு களை உணர்ந்து கொள்ளுகின்ற வரை நீ என்ற சொல்லைப் பயன் படுத்தக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று விரும்புகிருர்கள் என்று சொல்லலாம். தங்கள் விருந்தாளியையோ, As Gia Lu ரையோ தங்கள் குழந்தை நீ எள்து தெரியாமல் சொல்லிவிட்
டால் கூட இந்தப் பெற்ருேர்கள் சங்கடப்படுகிறர்கள்.
இனி கலாநிதி சுசீந்தரராஜா வகைப்படுத்தித் தரும் இலக்கண வடிவங்களைச் சுருக்கமாக நோக் குவோம்.
I. 6gau656 fabar: *enaurr": "Gurr"
என்னும் சொற்கள் மரியா தைக்குறைவானவை. "வாங்கோ' போங்கோ" என்பன மரியாதை யான பேச்சு வடிவங்கள். அந்த ணர், குருக்கள், சந்தியாசி ஆகி யோரை "வர", "இருக்க" என்று அழைப்பர்" ஏவல் வினையுடன் "அ" என்னும் விகுதி இச் சொற் களில் சேர்ந்து உள்ளது உயர் சாதியினரை தாழ்ந்த சாதியின ரும் இவ்விதம் அழைக்கும் வழக் ASib P67.
2. வினேமுற்று, இடம் பெயர் விகுதிகள்: *சொன்ஞப்" என்பது மரியாதையற்ற பேச்சு, இது சொன்னீர்", "சொன்னி யள் , "சொன்னிங்கள்" என்று விகுதிகள் பெற்று மாற் ற ம் காணும். "சொன்குள்" என்பது பிள்ளை சொல்லிச்சு" என மரி யாதை வழக்காக வரும். "அவ சொன்ன" , "அது சொல்லிச்சு", "நீர் செய்யுமன்", "நீங்கள் செய் யுங்கோ" என்னும் வடிவங்களும் கவனிக்கத் தக்கவை.
3. இடப் பெயர்கள் நீ" என்
னும் முன்னிலை இடப் பெயர் "நீர், நீங்கள்" எனவும், "நாம்" என்னும் உளப்பாட்டுத் தன்மை வடிவிலும் மரியாதையான பேச்
சாக அமையும். நீங்கள்" என் பதற்குப் பதில் "நயிஞர்" என் றும், "நயிர்ை சொல்லிச்சுது?
என்றும் பேச்சு வழக்குகள் உன்
6.
4. e5'9"L- o fu r7 sos
Garmräv aug Gub: “Luwdivast ரன்" என்று சொல்வது மரியா
98

ao Så samfrpnj. போல்காரர்? என்று சொல்லலாம். இந்த மரி யாதையைக் காட்ட விரும்பயத விடத்து "பால்கார ஆள்" என் முன் சரி. அதேபோல் பால்கார மணிசன், பால்கார மணிசி என் றும் கூறலாம்.
5. சாதிப் பெயர்கள்: சாதிப் பெயர்களை, வெளிப்படை பாக ச் சொல்வது மரியாதை யற்ற செயல். "ஆசாரியார்? "பத்தர்", "கட்டாடியார்" என் பன போன்ற பல தனித்தனி யான சிறப்புப் பெயர்கள் உள. மரியாதை சற்றுக் குறைந்த் முறையில் "அர்" விகுதி நீக்கப் பட்டு "ஆசாரி' என வழங்கும். "காபென்டர்" போன்ற ஆங்கி லச் சொற்களும் மிக வாய்ப்பா னவை. சில சரதிப் பெயர்களைப் பொது இடங்களில் சொல்வதே பண்பற்ற இழிவான செயல் என இன்று கருதப்படுகிறது. இச் சொற்களை வசைபாகத் திட்டுவ தற்கும் உபயோகிப்பர்.
6. இயற் பெயர்கள், உறவு
முறைச் சொற்கள்: சுப்பு, செல்லப்பா என்பன முறையே os turiř” . செல்லப்பர்? என மரியாதையாகக் குறிக்கப்படும் உறவு முறைச் சொற்கள்.
கொப்பன் எங்கே? - மரியா தைக் குறைவு.
கொப்பு எங்கே? - நடுத்தர மரியாதை,
G. Snrui or in G as? - Dif
TCDS.
பிறமொழிச் சொற்களும்,
உறவு முறை போன்று கிளாக்
கன், கிளாக்கு, கிளாக்கர் என வழங்கும்.
தமிழில் முன்னிலை இடம் மட்டுமன்றி ஏனைய இலக்கண் வடிவங்களும் உயர்வு தாழ்வைச் கட்டி நிற்பதை மேலே காட்டி
岑9
னுேம். ஏனைய மொழிகளில் இது போன்ற மொழி வடிவங்கள் உள்ளனவா என்பது மொழி
வல்லுதர்களால் விளக்கப்பட வேண்டியது.
ஆங்கிலத்திற்கும், 6b) Lח ע"
னிஷ், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய வற்றிற்கும் முன்னிலை இடப் பெயர்களில் உள்ள வேறுபாடு களை விளக்கிய பின் இவ்வேறு பாடுகள் காரணமாக இம்மொழி களில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்வதில் உள்ள இடர்பாடுசளை ரெஜி அடுத்து விளக்குகிருர், மொழி பெயர்ப்புச் சிக்கல் இரு சூழ் நிலைகளில் உண்டாகும்.
1. சமூக ஏற்றத் தாழ்வுகளே
வெளிப்படுத்தும் முன்னிலை இடப் ப்ெயர்களை உடைய உரையாடல்களை மொழி பெயர்த்தல்.
2. காதல், நட்பு போன்ற நெருக்கமான உறவு நில களில் முன் னி லே இடப் பெயர்களே கொண்டமை யும் உரையாடல்கள் ரஷ்ய மொழியின் முன்னிலை இடப் பெயர்களை ஆங்கிலத்தின் "யூ" என்ற பொதுச் சொல் லிற்கு மாற்றும் பொழுது அர்த் தம் மாறுவதோடு அவறுடன் உணர்வுநில் விகற்பங்களும் உண்டாகும். டொஸ் ரோ வெஸ்யிென் "குற்றமும் தண்டனையும்" Grrrd GvGBT rrufesör "அன்னு கரின" செக்கோவின் லேடி வித் ஏ லிட்டில் டோக்" ஆகிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் விரைந் துள்ள அனர்த்தங்களைப் பல உதாரணங்களால் ரெஜி விளக்குகின்றர். "குற்றமும் தண்டனையும் நா வலில் ரஸ்கோல் நிக்கோவ் ஒரு

Page 17
ucross Lorraveranusir. Joyauair வாடகைக்குக் குடியிருக்கின் முன். "நஸ்ட்ஸ்யா' வேலைக் காரி. அவனை விட வயதில் கூடியவள். அந்த ஏ  ைழ மாணவனுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுகி ருள் அந்த வேலைக்காரி. அவள் அவனை "நீ" என்றே அழைக்கிருள், பென்குவின் Glaualul-mer “Gualu" ubasi சைக்" கின் மொழிபெயர்ப் பின் "நஸ்ட்ஸ்யா' அவனைக் "கணவானே" (சேர்) என்று அழைப்பதாகமொழிபெயர்த் திருப்பது நாவலின் உணர் வோட்டத்தை முற் ரு க ச் சிதைத்து விடுகிறது.
அன்னு கரிஞவின் அன்கு வும், அவள் காதலனும் ஒரு வரை ஒருவர் நீ" என்றே அழைக்கின்றனர். காதலரிடையே உள்ள நெருக்கத்தை இது காட் டுகிறது. நாவலின் பிற்பகுதியில் அவர்களிடையே மன வேற்றுமை ரற்படுகிறது. அவ்வேளை அவர் கள் ஒருவரை ஒருவர் "நீங்கள்" என அழைக்கத் தொடங்குகின் றனர். இவற்றை ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாகத் தருவது முடியாத செயல். ஆனல் தமி ழிற்கோ, சிங்களத்திற்கோ ரஷ் JGafflä () iš G ps pr ug Lu nr a மொழிபெயர்க்கும் ஒரு வர் உணர்வு சிதைவுபடாமல் மொழி பெயர்க்க முடியும் அல்லவா? உலக இலக்கியத்தை அறியும் வாயிலாக எமக்கு ஆங்கிலமே உள்ளது. உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் நேர டி யாக அன்றி ஆங்கிலத் தி ல் இருந்தே தமிழிற்கு மொழி பெயர்க்கப் படுகின்றன. இவ் விதம் மூன்ரும் மொழிக்கு மாற் றப்படும் பொழுது பல விகற்பங் கள் நிகழும். QoBprmréÄ) asñuGgrmrui`i, ரோல்ஸ்ரோவெஸ்கி ஆகிய ரஷ்ய இலக்கிய மேதைகளின் மொழி
0
பெயரிப்புகள் "சார்நற்” என்பா ரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருத்தே தமிழில் மொழிபெயர்க் கப்பட்டன. இவற்றைவிட தேர டி யான மொழிபெயர்ப்புகள் Gypsivafðav glů G U au fff as air தொடர்பான இடர்ப்பாடுகளை நீக்க உதவும், O
கடிதம்
21வது ஆண்டு மலரில் தங் கள் அயராத உழைப்புத் தெரிற் 55. (p(560-as Lu6orfaiz as G9 rii சோபத்துடன் ஒரு கட்டுரை சிற் தனையைக் கிளாகியது. எள்முலும் புதுக்கவிதைத் துறையையே இப் படி மட்டத்தட்டியிருக்க வேண் டியதில்லை. அரச ஊழியர்களுக்கு அவரது நெஞ்சுகளுக்கு உறைக்கும் படி கவாவின் கட்டுரை அமைந் திருந்தது. மண்கமந்த மேனியர் விமர்சனம் த ரமா ள ஒன்று. நாகூர் கணியிள் "மனிதர்கன்" முதலிடம் பெறும் சிறுகதை, “வேவி யதார்த்தமான சித்த ரிப்பு. "உயர்ந்த குலத்து உத்த uðrłas div” säves) Vrr-div strGoogpyuh படித்துப் பழக்கப்பட்ட பாளி யில் அமைந்த கதை. திசாநாயக்ா வும் கந்தசாமியும் ச  ைத யில் த னி ப் பட்ட கந்தசாமியைக் குறை கூறுகிருர் எனினும் தமி ழர்களையே குறைப்பது போல உள்ளது. முன் னர் வாசித்த ஜெயபாலனின் “வே விகளும் போலிகளும் என்பனவும் இதே பாணியில் தமிழ் சமூகத்தைக் கு  ைற கூறுவதாக உள்ளது. குறிப்பாக இந்தக் கதையில் கந்தசாமியின் பாத்திரம் கொஞ் சம் மிகைப்படுத்தப் பட்டுள்ளது என்றே கறவேண்டும்.
ச. முருகானந்தன், கிளிநொச்சி.

Slæer ud å æ af So L– Gn காணப்படும் கிராமியக் கலைகளுள்
ஒன்ருக சொக்கறி" என்னும் A த்து விளங்குகிறது. இது பெரும்பாலும் saurug-60 turyth அதிகின அடுத்த மலைப்பகுதிகளி ம், வன்னிப் பகுதிகளிலுமே ங்ெகள மக்களால் ஆடப்பட்டு வருகின்றது. கரையோரப்பகுதி களில் இந்நாடகம் ஆடப்படுவ நில்ல. Tஎம். டி. ராகவன் er 6ör னும் ஆராய்ச்சியாளர் இக் கூத்து வடிவம் "கின்னைரய என்ற ழைக்கப்படும் ஒரு சாதியினரா ல்ேயே பெரும்பாலும் ஆடப்படு கிறதென்று கூறுவர். இச்சாதி மக்கள் பாய் இழைத்தல் முக்கிய JayúbJPubrrasáš கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
திரு. சி மெளனகுரு தமது கட்டுரை ஒன்றில் இந்தாடகதுக் கும் மட்டக்களப்பில் காணப் படும் மகுடிக் கூத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டுள் னார். பொருள். மேடை அமைப்பு, நாட்கத்தை அரங் குக்கு அளிக்கும் பாணி, இரசிகர் களுக்கும் தடிகர்களுக்குமிடையே காணப்படும் ஊடாட்டம் என்ப னவற்றிடையே காணப்படும்
சொக்கறி ஒரு
சிங்களக் கூத்து
காரை செ. சுந்தரம்பிள்ளை
ஒற்றுமையை இவர் காட்ட முனைந்துள்ளார். இதேபோல சொக்கறியில் காணப்படும் ஆடல் அமைப்பிற் சிலவும் g) 6D z அமைப்பிற் சிலவும் வடபகுதி பில் காணப்படும் காத்தவராயன் கூத்துடன் ஒத்திருக்கக் கான லாம். ஏனைய சிங்களக் கூத்து வடிவங்களுடன் ஒப்பிட் டு ப் பார்க்கும் பொழுது சொக்கறி தமிழ்க் கலைகளுக்கே பெரும்பா லும் கடன்பட்டிருக்கிறது என் பது தெளிவாகிறது.
1978 ஆம் ஆண்டு கொழும் புப் பல்கலைக் கழா மாணவர்களு டன் "சொக்கறி" என்னும் கூத்தை முதன் முதலில் 'தம் புள்ள என்னும் கிராமத்திற் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற் பட்டது. பின்னர்_கேகாலையில் அண்மையில் தெகியோவிட்டயி லும் இக் கூத்தைப் umrfägih. சந்தர்ப்பம் கிட்டியது. மூன்று இடங்களிலும் ஆடப்பட்ட கத் துக்களிடையே பெரும்பாலும் ஒற்றுமை காணப்பட்ட போதும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் இருந்தமை ஆராய்ச்சிக்குரிய தாகும்.

Page 18
காசியைச் சோர்ந்த குரு ஹாமி என்ற  ைழ க் கப்படும் ஆண்டி குரு அழகில்லாதவன். இவனை மணக்க எந்தப் பெண் ணும் முன்வரவில்லை. இதஞல் கவலை கொண்ட குருஹாமி பத் திணித் தெய்வத்தை உள்னம் உருக வேண்டுகின்றன். மகிழ்ச்சி யடைந்த பத்தினித் தெய்வம் இவனது த?லயில் ஒர் முடியை அணிய குருஹாமி பேரழகளுகின் ருள். இவனுடைய அழகுக்கு ஏற் றவனாக சொக்கறி அம்மா என் னும் பெண் இவனை ம ன ம் முடிக்கிருள். இவர்களுக்கு "பச்சி மீரா" அல்லது "பறையா" என்று அழைக்கப்படும் ஒர் அ டி  ைம பணிபுரிந்து வருகிருன்.
நிரந்தரமான தொழில் இல் லாத காரணத்தினுல், மூவரும் இலங்கைக்கு வரத் தீர்மானிக் கின்றனர். இலங்கைக்கு வந்த தும் சிவ ஞெளிபாதமலைக்குச் சென்று வணங்கிய பின் னர் தம்பாவிட்ட என்னும் கிராமத் தில் குடியம்ர்கின்றனர். இங்கே இவர்கள் வசித்து வரும்பொழுது குருஹாமியை நாய் ஒன்று கடித்து விடுகிறது. அவ்வூரில் பிரபலம் வாய்ந்த நாட்டு வைத்தியர் ஒரு வர் இவனுக்கு வைத்தியம் செய்ய அழைக்கப்படுகிருர், வைத்திய ருக்கும் சொக்கறிக்கும் இரகசிய நட்பு உண்டாகிறது. ஒருநாள் இருவருமே யாருக்கும் தெரியா மல் ஊரைவிட்டு ஓடிவிடுகின்ற னர். கவலையடைந்த குருஹாமி ஊருராக அலைந்து இறுதியில் கதிர்காமம் முருகனே வேண்டுகி ருள். முருகன் சொக்கறி இருக் கும் இடத்தைக் கூற, குருஹாமி அல்கே சென்றபோது சொக்கரி ஒரு குழந்தையுடன் இருக்கக் காணப்படுகிருள். குருஹாமி யைக் கண்ட சொக்கரி, தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர அவன் அவளையும் குழந் தையையும் அழைத்து வருகின்
3.
முன். இதுவே "சொக்கறி" யின் முக்கியமான கதையம்சமாகும். இருந்த போதும் இடத்துக்கிடம் கதையமைப்பில் சிறு சிறு மாற் றங்கள் காணப்படுகின்றன.
குருஹாமிக்கு நாய் கடிப்ப தற்குப் பதிலாகப் பாம்பு தீண்டு வதாக சில கூத்துக்களில் காட் டப்படுவதாக ஒரு சிலர் கூறிஞர். குழந்தை வரம் வேண்டியே இரு வரும் சிவ ஞெளிபாதமலைக்குச் செல்வதாகச் சில இடங்களில் காட்டப்படுகிறது. குருஹாமி வயது சென்ற ஒருவஞகவும், சொக்கறி இளமையும் வனப்பும் மிக்கவளாகவும் இருந்த க்ாரணத் திருல், பச்சிமீரா என்னும் அடி மையுடனும் இரகசிய நட்புக் கொண்டிருந்தாள் என்றும் சில கூத்துக்களில் காட்டப்படுகிறது. வைத்தியருக்கும் சொக்கறிக்கும் இடையில் நட்பு உருவாகுவதைக் asaw L. Lu&#Rufyrir Garmréias filosopuu அடிப்பதையும், வைத்தியரை மிரட்டுவதையும், ஆபாசமான வார்த்தைகளால் ஏகவதையும் கேகாலையில் ஆடிய கூத்தில் காணக்கூடியதாக இருந்த து ஓர் அடிமை எஜமாணியை அடிக் கிருனென்ருல், அதற்கு இந்த இரகசிய ரட்பே காரண மாகும்.
தாய்ம்ையுற்றிருந்த சொக்க றிக்கு வைத்தியம் செய்ய வந்த போதே சொக்கறி வைத்தியரு டன் கூடிச் சொன்றதாகச் சில இடங்களில் காட்டப்படுகிறது. பெரும்பாலும் வைத் தி ய ரின் தொடர்பிஞலேயே குழந்தை பிறப்பதாகக் காட்டப்படுகிறது.
சொக்கறியில் வரும் முக்கிய மான பாத்திரங்களாவன; குரு ஹ்ாமி, சொக்கறி அம் ம்ா, "பறையா? எனப்படும் பச்சி மீரா, வைத்தியர், பறையாவின் மனைவி காளியம்மா, வைத்திய

ரின் மருமகன் சொத்தான்". பாம்பாட்டி செட்டி (வியாபாரி) கபுருளே (மதகுரு), ஆசாரி (தச் சன்), சில இடங்களில் வைத்தி யருக்கு இராமன் எனப்படும் மகனும் இருப்பதாகக் காட்டப் படுகிறது. வைத்தியர். பறையா சொத்தான ஆகிய பாத்திரங்கள் பொய் முகங்களுடனேயே (முக மூடி) தோன்றுவது வழக்கம். சொக்கறி அம்மாவும் சில சம பங்களில் பொய் முகத்துடன் தோன்றுவதண்டு. பறை யா அணியும் பொய்முகம் மரத்தினு
லும், ஏனையோர் அணி வ து srl Guru". மட்டையிலுைம் செய்யப்படும்.  ைவத் தி யர்
வேட்டி அல்லது சாரமும் கோட் டும் அணிவர். தாடி, மீசை யுள்ள பொய்முகமே அணிவர். தலையணை ஒன்  ைற முதுகிற் கட்டி ஒரு கூணலன் போலக் காட்டு வர். சொத்தானவின் வயிற்றில் தலையணை ஒன்றைக்
கட்டி பெரிய வயிறு (வண்டி) உடையவளுகக் காட் டு வர். சொக்கறியும், காளியம்மாவும்
கண்டிய பாணியில் சாறி அணி வர். பெரும்பாலான பாத்திரங் களைக் கோமாளித்தனமுடையன வாகக் காட்டுதலே லழக்கம்.
இக் கூத்தில் வைத்தியரும், பறையாவும் இடைக்கிடை தமி ழிலேயே உரையாடுவதை அவ தானிக்கலாம். மேலும் சொக் கறி அம்மா, காளியம்மா, இரா மன் ஆகிய பாத்திரங்கள் தமிழ்த் தொடர்புடையன எ ன் பதும்
குறிப்பிடத்தக்கது. GeFrraias ? என்னும் பதம் மராட்டியிலும் ஹிந்துஸ்தானியிலும் “GoLuar”
என்னும் பொருளையுடையது என் Luri. 67шћ. ug. Drmakeucir Ludoglufrrr என்னும் "பறையா’ பறையர்
சாதியைச் சார்ந்தவன் என்பர்.
டாக்டர் ச. ஆர். சரத் சந்திரா இவற்றை வைத்து நோக்கும் பொழுது "சொக்கறி" யின் மூலம்
எதுவென ஆராய சிங்களக் கிரா மியக் கலைகளை ஆராய வேண் டிய அவசியமில்லை என்பது புல ஞகிறது. டாக்டர் சரத்சந்திரா அவர்களும் சொக்கறி" தமிழ்க் கூத்துக்களை ஒத்திருக்கின்றது என்று கூறுவதும் குறிப்பிடத் தக்கது.
சிங் கன வருடப்பிறப்பினை யொட்டியே சொக்கறி ஆடம் படுகிறது. தொடர்ந்து ஏழு தடவைகள் ஆடிய பின்னர் இச் கூத்து நிறுத்தப்படுகிறது. பின் னர் அடுத்த வருடப்பிறப்பின் பின்னரே இதனை ஆடுவது வழக் கம். சொக் கறி ஆடப்படும் அரங்கம் மிகவும் எளிமையானது. சூடடிக்கும் களமே சொக்கறி ஆடப்படும் களமாக அமைகிறது. வட்டக்களரி அமைப்பில் நடுமே கூத்து நடைபெறப், பார்வையா? ளர்கள் நான்கு புறமும் இருந்து பார்த்து இரசிப்பர். மேடையோ அல்லது திரைகளோ கிடையாது அரங்கின் ஓரத்தில் தென்னர் குருத்தில் செய்யப்பட்டு கூடு ஒன்று பத்தினி வணக்கத்துக்கும், கதிர்காம முருகன் வணக்கத்துக் கும் பயன்படுத்தப் படுகிறது. முன்னர் பந்தம், பெற்ருேமக்ஸ், லாம்பு என்பவற்றைப் ப யன் படுத்திய இவர்கள் இப்பொழுது மின்விளக்கையும் பயன்படுத்து கிருர்கன். ஒலிபெருக்கியை நான றிந்தவரையில் இவர்கள் இது வரை பயன்படுத்தவில்லை கண் டிப் பகுதியில் "கடபேரி" எனப் படும் மத்தள மும், தாளமுமே முக்கிய வாத்தியங்களாகப் பயன் படுத்தப் படுகின்றன. வன்னிப் பகுதியில் உடுக்கு மத்தளத்தக் குப் பதிலாகப் பயன்படுத்தப் படுகிறது, முழு இரவும் நடை பெறும் இக் கூத்தைப் பார்வை யிடும் இரசிகர் 4ளுக்கு அவ்வூர் மக்கள் தேநீர் சிறனுண்டி முதவி யனவற்றை வழங்கி மகிழ்விப் து அவர்களுடைய விருந்தோம்பும்

Page 19
பண்பைப் புலப்படுத்துகிறது. சில aarasild, orртица 9murtaselji குச் சாராயமும் வழங்கப்படுவ தாக அறிகின்றேள்.
முக்கிய பாத்திரம் ஏற்கும் குருறாமி பத்தினித் தெய்வத் தையும், கதிர்காம முருகனையும் avow is asyl-dir, ass D blu மாகும் பெரும்பாலும் சொக் கறி" பத்தினி (கண்ணகி) வழி பாட்டுடனேயே தொடர்புடை புத்தமத வழிபாடு இக் கத்தில் அருகியே காணப்படுகி கிறது. குருஹாமி சிவனுெளி பாதமலைக்குச் சென்று புத்த தேவனின் புனித பாதத்தை வளங்குவதாக அண்மைக் காலத் தி லேயே புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகி நது. எனினும் சிற்சில இடங்க orfodio a ač s GMT iš asiðavasarnr 60au *கோணம்", "தொவில் முதலியன வற்றில் காணப்படும் கரண அம் aral sa ayuis G ay m at as a us ay இடைக்கிடையே புகுத்திவிட் டார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்க் கூத்துக்களில் காணப் படும் ஏட்டண்ணுவியார், மத் saw Jawsiw Syrîulurritř 67Gaunr ரைக் சொக்கறியிலும் சந்திக்க வாம். ரடிகர் அரங்கில் தோன்று வதற்கு முன்னர் அவர்கள் ஏட் டண்ணுவியாரால் (பொத்த குரு) அறிமுகம் செய்யப்படுவர். உதா prouvuo Tas Lula» spurtaudu lair GAVGU மாறு அறிமுகம் செய்வர்.
இதோ உங்கள் முன் நடன மிடப் போகும் பறையாவை அறிமுகம் செய்கிறேன். அவன் தள்ளே முழுவதும் பார்க்கிருன். எங்கும் சுற்றி நோட்டம் விடுகி முன், தேவையின்றிப் பிதற்றுகி முன். சொக்கறி மீதும் அடிக்கடி கண்ணைச் செலுத்துகிருன். இவ் வாறு அறிமுகம் செய்து ஏட் டண்ஞவியார் (பொத்தகுரு) untu ošsaw Jay Sir Goopasaunrif
4
வாசிக்க பாடற்குழு (கோரஸ்) தாளம் போட்டு இசைக்க அதற் கேற்ப பாத்திரங்கள் அரங்கில் ஆடுவது வழக்கம். இதன் பின் னர் பாத்திரங்கள் தங்களுக்குள் உ  ைர பாடத் தொடங்கும். தனிப் பாத்திரமாக இருத்தாம் மத்தன அண்ணுவியாருடன் அல் லது ஏ ட் டண் ணு வியாருடன் உரையாடுதல் வழக்கம்.
கொக்கறியில் போலச் செய் தல்" அல்லது ஊமம் முக்கிய இடம் பெறுகிறது. குருஹாமி யும், சொக்கறியும், பறையாவும் மரத்தைத் தறித்தல், ஆசாரியு டன் சேர்ந்து தோவி செய்தல், பின்னர் கடலைக் கடத்தல், வீடு கட்டுதல். வீட்டை மெழுகுதல், பாய் இழைத்தல் என்பன யாவும் போலச் செய்தல் மூலமே நடித் துக் காட்டப்படுகிறது போலச் செய்தலேப் புதிதளித்தல் என்று கூறுவாருமுளர்.
தோணியில் ஏறிக் கடல்த் தாண்டும் போது பாடும் பாடல் இசை காத்தவராயன் கூததில் இடம் பெறும் இசையை ஒத்தி ருக்கின்றது. சவளைப் பிடித்துத் தோணியை ஒட்டுவதாகக் குரு ஹாமியும் பறையாவும் "போலச் செய்தல்" மூலம் காட்டுவது தத் ரூபமாக அமைந்துள்ளது. சில கூத்துக் களி ல் சொக்சறியும் இணைந்து தோணியை ஒட்டுவ துண்டு. தமிழ்க் கூத்துக்களில் குதிரைச் சவாரி செய்தல், கப் கல் ஒட்டுதல் என்பன எவ்வாறு மத்தளத்துக்கோற்ப ஆடிக் காட் டப் படுகின்றனவோ அவ்வாறே இக்காட்சியும் நடித்துக் காட்டப்
சொக்கறி குழந்தையைத் தாலாட்டுவதும் தமிழ் இசை  ையயே நினைவுபடுத்துகிறது. சொக்கறி அம்மா ச  ைப யில் உள்ள குழந்தை ஒள்றை எடுத்

துத் தாலாட்டுவதும், குருஹா மியின் வைத்தியச் செலவுக்கெ னச் சபையோரிடம் சென்று பறையாவும், சொக்கறி அம்மா வும் பணம் சேர்ப்பதும் இக்கூத் தின் சிறப்பம்சம்களாகும்.
இக் கூத்தில் பாப் இழைத் தல் முக்கிய இடம் பெறுகிறது. இது ஒரு குறியீட்டை அடிப்ப டையாகவுடையது. குருஹாமி சொர்துறியை வைத்தியரிடமி ருந்து பிரித்து அழைத்து வருகி ருள். நன்முகக் களைத்துவிட்ட குருஹாமி உறங்குவதற்குப் பாய் கொண்டு வாம்படி கேட்கிருள். அவள் பாய் நைந்து விட்டதா கக் கூற இருவரும் போய் புற் களே வெட்டி வந்து பாயிழைத்த பின்னர் துயில்கின்றனர். இதில் கறவற்த கருத்து மிகவும் முக்கி யமானது. ஏற்கனவே நைந்து போன உறவைப் புதுப்பிப்பதே இதன் உட் பொருளாகும். பாய் இழைக்கும் போது புற்கள் ஒன் றுடன் ஒன்று நெருக்கம்ாகப் பின்னப் படும். அது போ ல குடும்ப வாழ்விலும் கணவன், மனேவி உறவு மிகவும் நெருக்க மாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
இக் கூத்து முழுவதும் கிண் டலும் கேலியும் நிறை ந் து காணப்படும். சில இடங்களில் அளவுக்கு மிஞ்சிய விரசம் காணப் படும். பறையா என்னும் பாத் Suruh air raj6osaseTrdi Lou (9 மன்றி செய்கைகளாலும் ஆபாச மாக நடந்து கொள்வதை அவ தானிக்க்லாம். ஆயினும் பார்வை யாளர்கள் ஆவ ற்றை ஏற்று கிரகிப்பதையே எல்லா இடங் களிலும் அவதானிக்கக் கூடிய தாக இருந்தது. சமுதாயத்தில் aSnramurʻuuuGQub குறைபாடுகளைச் சு ட் டி க் காட்டுவதையும் இக் கூத்து அடிப்படையாகக் கொண் . AR-STDTGOOIT Lorrás an Lu 21
சென்ற ஒருவனே ம்ாப்பநிஞல் வரும் ஒழுக்கப் பிசகு சுட்டிக் காட்டப்படுகிறது. வைத்தியர் அழகில்லாதவன். ஆளுல் பணச் காரன். சொக்கறி மிகுந்க அழகி.
இருந்தபோதும் வைச்தியருடன்
ஓடிவிடுவது ஆராய்ச்சிச்குரியது Gudsyth sig souourrou Leopourr சொக்கறியுடன் நடந்து கொள் ளும் விதமும் உளவியல் ரீதியாக நோக்குதற்குரியது.
ஒரு கி ரா மி ப யதாரித்த வாழ்வைப் படம் பிடித்துக் காட் டுவகாக இக் கூத்து அமைகிறது. குருஹாமி அரிசி வாங்கச் செல் வது. மொழி தெரியாமல் தடு மாறுவது, தண்ணீர் மொண்டு வர பறையா போவது, இடை и?еi, a sucir O a i aj iћ ауrija சேஷ்டைகள், வைத்தியர் குட்டி போட்ட நாய் போலச் சொக் கறியைச் சுற்றி வருவது, இதைக்
கண்ணுற்ற பறையா மிரட்டு வது, வைத்தியரின் மருமகள் சொத்தான், bassir G. DymruDdir
ஆகியோர் ந க் கல் செய்வது, இவற்றையும் பொருட்படுத்தாது வைத்தியர் சொக்கறியின் மைய வில் மூழ்குவது என்பன யாவும் இன்றைய சமுதாயத்தில் காணப் uG)th 9th via Gont. (did, Lorrad கூறுவதாளுல் சொக்கறி சிங்களச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்ட முயற்சிக்கும் ஒரி கல் வடிவமேயான போதும், இது drr dä» 6a) ntr é சமுதாயத்துக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
'தம்புள்ள" வில் ஆடப்பட்ட சொக்கறியில் கண்டிய நடனம் கலந்துவிட்டதாகவும், சொக்கறி யில் காணப்படும் கூத்து மரபை அது மானப்படுத்தி விட்டதாக வும், எனது ஆசிரியரும் மிகச் சிறந்த சிங்களக் கல்லஞருமாகிய தம்மயா கொட என்பவர் குறிப் பிட்டார். கேகாலையில் ஆடப்

Page 20
பட்ட சொக்கறியில் இக்கால இசை சில இடம் பெற்று விட் டது என எனது சிங்கன நண் பசி ஒருவர் வருத்தம் தெரிவித் Arrit.
கசத்தவராயர் கூத்தில் ஆடப்படும் இலகுவான ஆட்ட மரபே சொக்கறியில் சில பாத் திரங்களால் கையாளப்படுகிறது. சொக்கறி மீண்டும் குருஹாமி யிடம் வந்ததும் தனது குற் நத்தை ஒப்புக் கொண்டு பாடும் Garrras ou uiuerraur Lurraldivas 67 6a) காத்தவராயர் கூத்து மெட்டில் அமைந்தனவாகும்.
All-Stargyar Lurras
தாலிபறி போகு தடி பார்வதியே பெண்ணே -- உத்தன் தலைவன் இங்கே Lorreg Ouraliwig Untrtean 5963atu Guaviar Gaur. என்ற பாடலுக்குரிய மெட்டில் Jasoal Lunru-l’LuClub * ayuh Guo டுப் பின்வருமாறு:-
தரன என தான ன்னே தான சைவ குனே- தன்ன தான னன தான தன்னே தானான தானே.
*சொக்கறி" என்னும் கூத் தில் காணப்படும் பின் வரும் அம்சங்கள் இக் கூத்த க்கும் தமிழ்க் கல்களுக்குமிடையில்
உள்ள தொடர்பை வலியுறுத் துவன.
2. ஆண்டி குரு, சொக்கறி அம்மா. காளியம்மா, இரா LDGi7. Luaumouurr av Gör gp vih பெயரிகள்,
2. வைத்தியர், பறையா ஆகிய பாத்திரங்கள் தமிழில் உரை யாடுதல்.
3. பத்தினித் தெய்வ வழிபாடு, முருக வழிபாடு என்பனவே முக்கியத்துவம் பெறுதல்.
4. தமிழ் இசை மரபும், ஆடல் மரபும் சிறப்பிடம் பெறு தல்.
5. குருஹாமியின் உடை இப் பொழுது கண்டிய மரபில் அமைத்தாலும் அவன் மார் பில் பூணுரல். விளங்குவது.
6. வைத்தியர் கூறும் மூலிகை கள் அனைத்தும் தமிழ் ப்
பரியாரிமார் பயன்படுத்து
60áůl
7. முழுக்க முழுக்கச் சமயத்
தொடர்புடையன சிங்களக் கிராமியக் கலைகள். ஆனல் சொக்கறியில் அது மிகவும் முறைவாகவே காணப்படுகி நறது. (இப்பொழுதுதான் சில இடைச் செருச்கல்களா கப் புகுந்து விட்டன எனச் சொல்லப்படுகிறது.
சொக்கறி என்னும் கூத்தை (y(tp6ðuðum's Strfrdsög) Luntfá கும் பொழுது ஒர் உண்மை புலப்படும். சிங்களக் கலைகளின் ஊற்றுக் கால்களாக விளங்கு பவை பெரும்பாலும் தமிழ் க் கலகளே. காலப்போக்கில் அவை தமிழ்க் கலைகளிலிருந்து விடுபட் டுக் கால தேச வர்த்தமானங்க ளுக்கேற்ப மாறுபடினும் அவற் நின் அடி நா த மாக நின்று விளங்கும் ஒரு சில அம்சங்கள் தமிழ்க் கலை அம்சங்களே என் பது தெளிவாகும். -

வண்டில்காரன்
சி. சதாசிவம்
வாடைக் காற்று விசையிலே
வடக்கன் மாட்டு வண்டில் பூட்டி
கோடை நிலவெறிக்கக்
கோவிலுக்குச் செல்பவரே.
மோகத் தோடு நானுழுங்கள் கூட வரக் காத்திருக்க
வேகத்தைக் குறைத்துக் கொண்டு
வேலியாலே எள்ன பார்வை?
நாவற் குழிச் சந்தியிலே
நாகரீக உடை யுடுத்து
காவற் தொழில் செய்பவரே என்மேல்
காதல் கொண்டு வாடுகிருரர்.
ஆசனப் பல கையிலே
அரசன் போல நீயிருக்க போசன மும் மறக்குதத்தான்
போதை பிறக்கு தெடா
காரை யெல்லாம் கட்டிக் கொண்டு காத வழி போறவரே ஆசை காட்டி மோசம் செய்யாத
அன்பரே நீர் மறந்திடுவீர்
தனங்கினப்புச் சந்தியிலே
பனங்கிழங்கு விற்பவனே
பனங் காட்டு நரியிதடி
சல சலப்புக் கஞ்சிடுமோ?
தட்டி யிலே கம்பிருக்கு
தட்டி விடு காளைகளை
மட்டு மட்டாய் நேரமத்தான்
சிட்டாய்ப் பறக்கணுமே
செங்காரியை உசுப்பிவிடு
சுட்டியனைச் சுண்டியிழு
37

Page 21
வைக்கோல் வண்டி செல்லுதத்தான் வலப் புறமாய்த் தட்டி விடு.
நாணயக் கயிற்றுடனே
நெடும் பயணம் செல்பவரே
ராளுெருத்தி காத்திருப்பேன்
நல்ல படி வந்து சேரும்.
உன்ளுேடு நாள் களித்த
உல்லாசப் போதை யென்ன
கள்ளம் சிவக்கு தெடி
கரு விழிகள் பேசுதெடி.
சாவச்சேரிச் சந்தையிலே
சரிகைப் பட்டு வாங்கிவாறேன் கோவம் கொள்ள வேண்டாமெடி
கோ கிலமே காத்திருப்பாய். de
நாங்கள் ஏழைகள்
அன்று தொடங்கி இன்றுவரை பணச் குருவழி -- எங்கள் மீதே வீசிக் கொண்டிருப்பதால் வீதியில் விழுந்துவிட்ட வேரற்ற மரங்கள் - நாங்கள் மழை காலத்தில் - மழைநீரும் வெயிற் காலத்தில் - ஒளிக்கதிரும் கூரையின் பொத்தல்களூடாக உள்ளே இறங்கி - எங்கள் வெற்றுப் பாத்திரங்களுக்கு தூசி கழுவிச் செல்லும். எங்கள் சேமிப்புக்களில் சில்லறைகள் கூட விழுவதில் இரைப்பையில் கூட - காற்றுத்தான் கனக்கின்றது, ஆவணங்கள் எதுவுமற்ற எங்கள் சுதந்திரத்தில் கோவணங்களே இன்று தேசிய உடையாக பிரகடனமாகிறது தனிமனிதனுக்கு உணவில்லை எனில் - இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் அந்தப் பாரதிக்காக - நாங்கள் சமுதாயமாகவே மாறிவருகிருேம் எங்கள் சிரிப்பிளில் இறைவனேக் காணலாம் எத்தனை உண்மையின் தத்துவச் சொல் இது.
- நயினை குலம்

வதிரி தமிழ் மன்றத்தில் *மல்லிகை" 21 வது ஆண்டு மலர்
அறிமுக விழா
நெல்லை க. பேரன்
கடந்த 27 - 9 - 85 அன்று வதிரி தமிழ் மன்றத்தில் மல்லிகை 21 வது ஆண்டு மலரின் அறிமுக விழா வெகு விமரிசையாக நடை பெற்றது. இரவு ஏழு மணிக்கு திரு. பாரிவள்ளல் தலைமையில் விழா ஆரம்பமானது. பாரிவள்ளல் தமது உரையின் போது "சிறு வயதில் திரு. டொமினிக் ஜீவா இதே மேடையில் பேசியதை ஆர் வத்தோடு கேட்டு ரசித்துள்ளேன். இன்று அவரது மல்லிகைக்கும் அவருக்கும் நடைபெறும் பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கு வதையிட்டு மிகவும் பூரிப்படைகிறேன் என்றர். செல்வி சந்திரா தியாகராசா பேசும்போது, "மல்லிகை 21 வது ஆண்டு மலரில் வெளியான விடயங்களைப் பற்றித் தமது கருத்துக்களைக் கூறினர். விளம்பரங்கள் குறைக்கப் பட்டிருக்கலாம்" என்று அபிப்பிராயப் Lull-strf.
திரு. குப்பிழான் ஐ. சண்முகன் பேசுகையில், "மல்லிகையில் வெளியான சிங்களப் புதுக்கவிதைகள் பற்றிய கட்டுரையும், முருகையனின் "கடுங் கோபத்துடன் ஒரு கட்டுரை" என்ற விடய மும் என்னை மிகவும் கவர்ந்தன. ஜீவாவின் தலையங்கங்களில் எள் னைப் பொறுத்தவரை அதிக தாக்கம் இல்லையென்ருலும் "ஜீவா என்ற தனி மனிதனின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் அவரது இலக்கியத் தொண்டையும் பாராட்டியே இங்கு பல விளம்பரங் கள் தரப்பட்டுள்ளன. விளம்பரதாரர் தம்மைப் பிரபல்யப் படுத் துவதைவிட, ஜீவாவின் சேவைகளைத்தான் பிரபல்யப் படுத்துகின் றனர். இது இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமா கும்" என்ருர்,
வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தன் பேசுகையில் *யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மல்லிகை 2 வது ஆண்டு மலர் அறிமுக விழாவில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மல்லி கையில் வெளியாகும் இதர படைப்புக்களைவிட கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ருர்கள். கட்டுரை யும் ஒரு “கிறியேட்டிவ் இலக்கியந்தான் என்று திரு. சட்டநாதன் அன்று தெளிவு படுத்தினர். மல்லிகை மலரில் தொகையளவில் சிறுகதைகள் அதிகம் இருப்பினும் பக்கங்களின் அளவில் கட்டுரை கள் அதிகம் உண்டு. ஆஞல் அத்தனையும் மணியான கட்டுரைகள். முக்கியமாக கா. சிவத்தம்பியின் "மண்சுமந்த மேனியர் விமர்ச னம் என்னை மிகவும் கவர்ந்தது. சென்ற ஆண்டில் திரு. சிவத்தம்பி கிளப்பிய பிரச்சனையான "மல்லிகை இன்றைய பிரச்சனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறது?" என்ற கேள்விக்கு இன்று
39

Page 22
வரை பதில் வரவில்லை என்றும் அல்லது எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று சிவத்தம்பி இதுவரையில் தெளிவாக ஏதாவது சொன்னுரா என்றும் தெணியான் பல மேடைகளில் கேட்டு வரு கின்ருர். ஆனல் இந்த "மண்சுமந்த மேனியர்' நாடக விமர்சனத் தின் மூலம் தாம் தெரிவிக்கும் கருத்துக்களில் திரு. சிவத்தம்பி எவ்வாறு படைப்பாளிகள் நுணுக்கமாகத் தமது படைப்புக்களை இன்றைய பிரச்சனைகளையொட்டித் தெரிவிக்கலாம் என்று சூசகமா கச் சொல்லியுள்ளதாகவும் தெணியான் இதையே ஒரு பதிலாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் நான் கருதுகிறேன். சிறுகதையை விடக் கவிதை மூலம் சமகால எரியும் பிரச்சனைகளை நுணுக்கமாகத் தெரிவிக்க முடியும். ஆண்டு மலரில் வெளியான தெணியானின் "இவளின் கதை" மிகவும் யதார்த்தமாக உள்ளது. டாக்டராகிய நானே கண்டுபிடிக்க முடியாத நுணுக்கமான (கர்ப்பிணிப் பெண் களுக்கான) சுகவீனங்களைப் பற்றித் தெணியான் பேச்சு வழக்கில் மிக அழகாகக் கையாண்டுள்ளார். சில கதைகள் தரம் குறைவாக இருக்கத்தான் செய்கின்றன - மல்லிகையில் வரக்கூடிய எல்லாம் முதல் தரமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்" என்ருர், டாக்டர் முருகானந்தன் மிகவும் இயல்பாகவும் புள்ளி விபரங்களு டனும் ஒரு இலக்கிய ஆய்வாளனுக்குரிய பாங்கில் உரை நிசழ்த்தி யமை இங்கு குறிப்பிடத்தக்கது.
படைப்பாளி இல்லாத ஒரு வைத்திய கலாநிதி இவ்வளவு தூரம் இலக்கிய நேசிப்பும் ஆர்வமும் கொண்டுள்ளமை எமது இலக்கிய உலகிற்கே பெரும் வரப்பிரசாதம் எனலாம். சென்ற ஆண்டிலும் இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி யாக மல்லிகைக்கு புலோலி ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் பருத்தித்துறை லயன்ஸ் கழக ஆதரவில் விழா நடைபெற்றமையும் அதற்கு லயன்ஸ் கழகத் தலைவர் டா க்டர் முருகானந்தன் தலைமை வகித்தமையையும் இங்கு நினைவு கூர் வது சாலவும் பொருந்தும்.
திரு. தெணியான் பேசுகையில். "இப்படித்தான் எழுதுங்கள் என்று விமர்சகர்கள் சொல்வதைக் கேட்டா எழுத்தாளர்கள் எழுத வேண்டும்? என்று செங்கை ஆழியான் யாழ்ப்பாணக் கூட் டத்தில் (மல்லிகை ஆண்டு மலர் விழா) கேட்டார். செங்கை ஆழியானப் போன்ற எப்படியும் எழுதலாம் என்ற கொள்கை யுள்ள எழுத்தாளர்களுக்கு இந்தக் கேள்வி பொருந்தும். ஆனல் எம்போன்ற கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்களுக்கு பேராசி ரியர் சிவத்தம்பியைப் பார்த்து இப்படிக் கேட்க வேண்டியது அவ் சியமாகிறது. ஜீவா என்ற மனிதனையும் அவரது இலக்கிய நேர் மையையும் யாரும் சந்தேகிக்க முடியாது. நேர்மையற்ற எழுத்தா ளன் யாராகிலும் நான் அவனை வெறுக்கிறேன்’ என்ருர்,
இறுதியாக மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா பதி லுரை வழங்கினர், தமக்கே உரித்தான ஆக்ரோஷமான குரலில் இவரது உரை பின்வருமாறு ஓங்கி ஒலித்தது.
அடிப்படைத் தொழிலாளியான அப்பனுக்குப் பிறந்தவன் மாத்திரமல்ல, தனது வழமையான வாழ்க்கையைத் தொழிலாளி யாகவே யாழ்ப்பாண நகரத்து கஸ்தூரியார் வீதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் ஆரம்பித்தவன். எழுத்துத்துறையில் உள்ள
40

வேட்கையால் எழுதத் தொடங்கி 1961ம் ஆண்டு படைப்பு இலக் கியத்திற்கு முதன் முதலில் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற் றுக் கொண்டான்.
தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நிலையத்தில் வைத்து மல்லிகை மாசிகையை ஆரம்பித்து நடத்தினன். இந்தத் தேசத்திலும் தமிழகத்திலும் இலக்கியக் கனதி வாய்ந்த எழுத்தா ளர்கள் தொடர்ந்து எழுதி அவனையும் அவனது இலக்கிய சாத னையையும் மதித்துக் கெளரவித்து வருகின்றனர்.
மணிக்கொடி, சாந்தி, சரஸ்வதி, கணையாழி, தாமரை உட் பட சிற்றிலக்கிய ஏடுகள் வெளிவந்த - வெளிவரும் - காலத்தில் கூட. அதற்காக உழைத்த அடிப்படைத் தொழிலாளிகளை - அச் சுக் கோப்பாளர்களை - கெளரவித்தது கிடையாது. ம ல் லி  ைக தனது சக உழைப்பாளியான திரு. கா. சந்திரசேகரத்தின் உரு வத்தை ஒருதடவைக்கு இரு தடவைகள் அட்டையில் பதித்து அன்னரது உழைப்பைக் கெளரவித்துள்ளது.
உழைப்பிற்கு, உழைப்பவர்களுக்காகக் குரல் கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை இலக்கிய இலட்சினையாக்கி, கணிசமான ஆண்டு மலர்களின் அட்டைகளில் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் நிஜ உருவங்களைப் பொறித்து உழைப்பை வணங்கிப் போற்றி மதித்துள்ளது. V n
மல்லிகை வளர்ச்சியடைந்த பின்னும் இந்த இருபத்தொரு வரு டப் பிரபல்யத்தின் பின்னரும் அதன் ஆசிரியர் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம் தெருக்களில் மல்லிகையைக் காவித் திரிந்து விற் பனை செய்து வருவதைக் காணலாம். இந்தச் சமுதாயத்தின் போலி மதிப்பீடுகளைத் துச்சமென மதித்து உழைப்பையும் உண்மை உணர்வையும் மூலதனமாகக் கொண்டு, வீதிகளிலேயே சந்தாக் களை வசூலித்து நண்பர்களைப் பெருக்கி வரும் இந்த உழைப்புச் சாதனை பலராலும் இன்று மதிக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றது"
மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து சாதனைகளும் உலக வரலாற் லேயே வேறெந்த நாட்டிலும் முன்னுதாரணம் காட்டப்பட முடி யாத சாதனைகளாகும். இது யாழ்ப்பாணத்தில் நடந்தது. அமெ ரிக்காவைப் பார், இங்கிலாந்தைப் பார், ஜப்பானைப் பார், பிரான்ஸைப் பார், ஏன் தமிழகத்தைப் பார் எனச் சொல்லி, இந்த மண்ணின் மாண்பையே மதிப்பீடு செய்ய மறுதலிக்கும் நெஞ்சங்களுக்கு ஒரு சவால்: "இப்படியான சரித்திர சாதனைகள் உங்களுடைய அறிவுக்கெட்டியவரை வேறெந்த நாட்டிலும் இது வரை நடந்துள்ளனவா? அப்படி நடந்திருந்தால் ஒரே ஒரு உதார ணத்தை மாத்திரம் உங்களால் தந்துதவ முடியுமா?.
யாழ்ப்பாண மண்ணில் இன்றைய எதார்த்த உழைப்பைத் தின சரி கடமையைச் செய்து கொண்டு வருகின்றது மல்லிகை. இதுவே நாளைய சரித்திரமாக எழுதப்படப் போவது என்னமோ உண்மை.
சூரன் போன்ற பெரியார்கள் வாழ்ந்து சைவமும் தமிழும்
வளர்த்த வதிரி தேவரயாளிச் சமூகத்தின் மத்தியில் மல்லிகைக்கு விழா நடப்பது மிகவும் பொருத்தமானது. உண்மையான உழைப்
41

Page 23
பாளியை உழைக்கும் வர்க்கத்தினர் பாராட்டுகிருரர்கள். இந்த நன்றியை மறவேன் என்ருர்,
உண்மையான தமிழ் ஆர்வமும், கலை, இலக்கிய நேசிப்பும் விளையாட்டுத்துறை ஆர்வமும் கொண்ட வதிரி தமிழ் இலக்கிய மன்றத்தின் சூழலில் மிகவும் கல கலப்பாக நடைபெற்ற இவ் விழா இரவு - 30 மணியளவில் இனிதாக முடிவடைந்தது. பல எழுத்தாளர்களும், இலக்கிய ஆய்வாளர்களும், பார்வையாளர் களாக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சீவ மரணப் போராட்டங் களின் மத்தியிலும் இந்த "மல்லிகை விழா' மனதில் இன்னும் மணக்கிறது. O
சுரண்டல்
- சாந்தன்
சந்தைக் கட்டிடத்து விருந்தையோடு மினி பஸ்கள் அணிவகுத் திருக்கின்றன. ஒரு விதத்தில் வசதிதான்- என்ருலும் நன்ரு யில்லை.
நகர அபிவிருத்தி பற்றியெல்லாம் இப்போ கவலைப்பட முயல் வது, ஆடம்பரம், பேராசை, முட்டாள்தனம்.
சனத்துக்கு வழிவிட்டு தூணுேடு ஒது ங்கி ஒரு பக்கமாகத் திரும்பி நின்று கொண்டால், நீளத்தில் எல்லாமே பார்வைக்குள் வருகின்றன - இடப்புறம் கடைவரிசை, வலப் பக்கம் பஸ்வரிசை. பட்டணம் வடிவாய்த்தானிருக்கிறது- இந்தக் கோணத்தில்.
தன்னுடைய பஸ், இனி எந்த நேரமும் வரலாம். "அதுதான் நல்லாருக்கு. . . * - கீச்சுக் குரல், குழந்தைக் குரல். வலு கிட்டக் கேட்டது. திரும்பினன்.
கடையின் கண்ணுடிச் சுவருக்கு இந்தப் பக்கத்தில் இவர்கள் நின்று கொண்டிருக்கிருர்கள். நாலுக்குமே பத்து வயதுக்குள் தானிருக்கும். பரட்டைத்தலையும் பேணியுமாய், 'ஐயா. ஐயா." என்று பஸ் பஸ்ஸாய் ஏறி இறங்குவார்கள். காய்ந்து போய் அழுக்காயிருப்பார்கள்- கண்டிருப்பீர்கள்.
"நான் வாங்கின அதுதான் வாங்குவேன். * காட்சியறைக் குள்ளிருந்த இன்னுெரு து னி  ையக் காட்டி மற்றப் பிள்ளை சொன்னது.
"கடவுளே. . “ என்று மனதுக்குள் முனகிஞன். வேறென்ன செய்யலாம் இப்போதைக்கு?
- அருமையான கதையாய் வாய்க்கும். ஆணுல்- சே! அந் தாள் எப்பவோ எழுதிவிட்டார். அவர் எழுதிய கதைகளில் முத லில் நினைவுக்கு வருகிறதே இதுதான். இப்படியான கரு அப்போதே அவருக்குக் கொழும்பு நடைபாதையில் சந்தித்திருக்கிறது . சே! 'அண்ணை, வாங்கோ, வாங்கோ ..." என்று கொண்டக்டர்
பெடியன் கத்தினன், O 2

மக்களை விஷமிட்டுக் கொல்பவர்கள்
டி. வெவிகி
போபாவில் யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனுக்குச் சொந்த மான தொழிற்சாலையிலிருந்த "மெதில் இசோ சைனேட்" என்ற விஷ வாயு வெளிப்பட்டு நகரில் பரவியதால் 250 பேருக்கு மேல் மாண்டனர்; சுமார் 2 லட்சம் பேர் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டனர்.
"அணுகுண்டு வீசப்பட்டதை ஹிரோஷிமா, நாகசாக்கி வாசிக ளால் எப்படி மறக்க முடியாதோ அதேபோல. இந்த மாபெரும் பயங்கர நிகழ்ச்சியை எங்களாலும் மறக் க முடியாது’ என்று போபால் மேயர் பிசார்யா கூறிஞர்.
மனித வரலாற்றிலேயே பிரம்மாண்டமானதான இந்த த் தொழிற்சாலை விபத்தை இந்திய மக்கள் இப்படித்தான் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். இது தற்செயலான உவமையன்று. போபால் இந் தியாவின் ஹிரோஷிமா, போபாவிலும் ஹிரோஷிமாவிலும் ஒரு கண நேரத்தில் ஏராளமான மக்கள் மடிந்தனர். அவர்கள் அமெ ரிக்க நாட்டின் கையால் கொல்லப்பட்டனர். இந்தக் கோர நிகழ்ச் களின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களது துன்பத்தின் கால அளவு பயங்கரமானது ஆகும். மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி கூட, போபால் மக்களில் 2000 பேர் தங்கள் வாழ்நாள் (Մ)Gքoմ தும் நிரந்தர முடவர்களாகி விடுவார்கள்; 10, 000 பேர் இறக்கும் வரை பலவிதமான உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ۔۔۔۔۔۔۔۔۔
யூனியன் கார்பைட் கம்பெனி அமெரிக்காவின் ஒரு முக்கிய பன்னட்டு ஏகபோகக் கார்ப்பரேஷன் ஆகும். அதில் 1,00,000 பேர் பணி புரிகின்றனர், அதன் வருடாந்தர வரவு செலவு சுமார் 1000 கோடி டாலர் அகும். ரசாயனப் பொருள்கள், உருக்குத் தொழிலில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரோடுகள், அணுசக்திப் பொருள்கள் முதலியவற்றை யூனியன் கார்பைட் உற்பத்தி செய் கிறது. இது தவிர, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன், பெண் டகனின் ஒரு பெரிய கண்ட்ராக்டரும் ஆகும்.
இந்தப் பிரமாண்ட ரசாயனக் கார்ப்பரேஷன், ஏராளமான லாபம் சம்பாதிக்கிறது. மக்கள் பாதுகாப்பைப் பற்றி யூனியன் கார்பைட் முதலாளிகளுக்குக் கவலையில்லை. ஒரே மாதத்தில் அமெ ரிக்காவைச் ாேர்ந்த சார்ல்ஸ்டனில் இருமுறை நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டது. நைத்ரோ நகரில் சில நாட்களுக்கு முன், நச்சு வாயுக் கசிவிஞல் மற்றும் 8 பேர் பாதிக்கப்பட்டனர்,
யூனியன் கார்ப்பைட் கார்ப்பரேஷனுக்கு பலியாகிறவர்களின் சோகப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தக் கார்ப்ப ரேஷனின் நச்சுக் கரங்கள் நீட்டப்பட்டுள்ள எந்த நாட்டிலும், எந்த நிமிடத்திலும் பயங்கர விபத்து வெடிக்கக் கூடும்.
: 3

Page 24
இத்தாலிய உளவாளியை அமெரிக்கச் சிறையில் வைத்திருப்பது ஏன்?
நியூபார்க் மத்திய சிறையில் ஒர் அசாதாரணமான கைதி அடைக்கப்பட்டிருக்கிருன். அவன் பெயர் பிரான்செஸ்கோ பசீன்ஸா சென்ற n மாதங்களாக அவன் சிறையில் இருந்து வரு கிருன், அவன் ஓர் இத்தாலியன் - அமெரிக்கப் பிரஜையல்ல. அமெரிக்காவில் அவன் ஒரு குற்றமும் செய்யவில்லை. எனினும் வாஷிங்டனின் பிரத்தியேக உத்தரவின் பேரில் அவன் சிறையில் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கிருன். இவன் விவகா ரத்தைக் கவனித்துக் கொள்ளும் நியூயார் வக்கீலான எட்வர்டு மாரிஸன், "வித்ரதுர்னயா காஜதா" பத்திரிகையின் நிருபருக்குப் பேட்டியளிப்பதையும். தம்முடன் டெலிபோனில் பேசுவதையும் சென்ற வாரம் முழுதும் தட்டிக் கழித்து வந்தார். இந்த மூடு மந்திரத்திற்குக் காரணம் என்ன?
ஒரே காரணம்தான். அதாவது, போப்பாண்டவர், இரண் டாவது ஜான்பாலைக் கொலை செய்ய நடந்த முயற்சி சம்பந்த மான வழக்கு விசாரணை இத்தாலியில் மீண்டும் ஆரம்பமாகியிருப் பதே அந்தக் காரணம். இந்த வழக்கில் முக்கிய எ தி ரியா ன ஆக்கா என்பவன் சென்ற 19 ம் தேதியன்று நடந்த விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தில், அஸ்கோலி பிசெனே என்ற இத்தாலிய நகரச் சிறையில், பிரான்செஸ்கோ பசீன்ஸா தன்னைச் சந்தித்து தன்னுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டதா கச் சொன்னன். V
போப்பாண்டவருக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு சோஷ லிஸ்ட் பல்கேரியாவும் சோவியத் யூனியனும் தூண்டியதாக அந்த நாடுகள் மீது பழி சுமத்நி அவற்றை அவதூறு செய்ய, ஆக்காவி டம் பசீஸ்ஸா ஒப்புக் கொண்டான். இந்தக் கேவலமான திட்டம் சென்ற ஆண்டில் அம்பலமாகிவிட்டது. அதே சமயத்தில் பிராங்கோ டின்டோர் என்ற ரோம் நகரப் பத்திரிகையாளர், பசீஸ்ஸா விவ காரம் பற்றிய விவரங்களை விளக்கமாக வெளியிட்டார்: "இத்தா லிய உளவு நிறுவனமான சிஸ்மியின் உளவாளியான பிரான்சென்கோ பசீன்ஸா, 1981, இலையுதிர் காலத்தில், கைதி அக்காவைச் சந் தித்து ரோம் நிகரில் பணி புரியும் பல்கேரியப் பிரஜைகள் மூவரின் படங்கனைக்காட்டினர். அவர்களில் ஒருவர் செர்கி ஆண்டொனேவ்.
பசீன்ஸா அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். ஆனல் போப்பாண்டவர் கொலை வழக்கு விசாரணை ஆரம்பமாகவிருந்த சமயத்தில் அரசு அவனைக் கைது செய்து தனிக் கொட்டடியில் அடைத்தது. இதன் உண்மை வெளிப்படையானது; அதாவது தங்கள் உளவாளி, ரகசியங்களை அளவுக்கு மீறி வெளியிட்டு விடு வானே என்று அமெரிக்கா அஞ்சுகிறது. O
44

கடும் நிதானத்துடன் ஒரு கடிதம்
க. சின்னராஜன்
21-வது ஆண்டு மலரிலே முருகையன் எழுதிய "கடுங் கோபத் துடன் ஒரு கட்டுரை" என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனம் அதிர்ச்சியைத் தந்த போதிலும் சில கருத்துக்கள் வரவேற்கக் கூடியனவாக இருந்தன இன்று புதுக்கவிதை எழுதுகின்ற சிலர் இலக்கிய சுவைஞர்களுக்கு விளங்காமலும், அர்த்தமில்லாமலும் கலை இலக்கியப் பண்பினைக் கொச்சைப் படுத்தும் விதத்திலும் கவிதை எழுதுவது அதிகரித்து விட்டது. இவை மாற்றியமைப்ப தன் மூலமே காத்திரமான இலக்கியங்கள் தோன்ற வழி ஏற்படும். புதுக்கவிதைகளில் வருகின்ற அசிங்கமான கற்பனைகளும், அருவருப் பான படிமங்களும், வக்கரித்த அழகியல் நோக்கும் உண்மையில் ஒரு சமுதாயத்தின் கலை கலாச்சாரங்களையே சீரழித்து விடுவன. எனவே புதுக்கவிதைகள் வளர்ச்சியடைந்து வருகின்ற இன்றைய காலகட்டத்திலே முருகையன் அவர்களின் விமர்சனம் எம்போன்ற வாசகர்களால் சிந்திக்கப்பட வேண்டிய ஒர் அம்சமாக இருக்கிறது.
"சமன் செய்து சீர்தூக்குங் கோல்போலமைந் தொருபாற் கோடாமை சான்றேர்க்கணி"
என்ருன் வள்ளுவன். ஆனல் இன்றைய விமர்சகர்கள் சிலரைப் பொறுத்தமட்டில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இவர் கள் தங்கள் சமகாலப் பட்ைப்பாளிகளின் மீது குற்றம் காண்பதி லும், தங்கள் வக்கிரங்களை அவர்கள் மீது உரசிப் பார்ப்பதிலுமே கவனம் செலுத்துகின்றனர். உண்மையில் இவர்கள் படைப்பாளி களைப் பாராட்டி வரவேற்கின்ருர்களா? சிலரைப் புகழ் வ தும் உண்டு. ஆனல் அந்தப் புகழ்ச்சியும் தமக்குச் சார்பானவரா? தேவையானவரா? நண்பரா? என்ற அளவுகோலை வைத் தே நடைபெறுவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே இந்த அறிவு ஜீவிகள் விமர்சன ஈட்டி கொண்டு படைப் பாளிகளை வரிக்கு வரி கிழிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் இது இலக்கிய உலகிலே பல விபரீ தங்களையே ஏற்படுத்தி விடும். சமகாலக் கவிஞர்களையோ அல்லது எழுத்தாளர்களையோ ஆராய்ந்து பார்த்து அவர்களை விமர்சிக்கும் உரிமை எவர்கும் உண்டு. ஆனல் அப்படிப் பார்க்கின்ற சரியான விமர்சனம் தமிழில் ஆரோக்கியமாக இன்னும் வளர்ச்சியடைய வில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

Page 25
சிறந்த ஒரு விமர்சகராக, ஈழத்து இலக்கிய உலகிலே கணிக் கப்படுகின்ற முருகையன் "கடுங் கோபத்துடன்" (நெற்றிக் கண் ணைத் திறந்ததுபோல்) உணர்ச்சி வசப்பட்ட ஒரு நிலையில் சோலைக் கிளியின் 'மழைப் பழம்" என்னும் புதுக்கவிதை பற்றி விமர்சனம் எழுத முற்பட்டமை தவருன நிலை என்றே மனங்கொள்ள வேண் டியுள்ளது. பொ த வாக ஒரு விமர்சகனுக்குரிய நிதானம், பொறுமை, எதிர்விளைவுகள் என்பன பற்றி அசட்டை செய்து அவ்விமர்சனத்தை எழுதியுள்ளமை எமக்குக் கவலையளிக்கின்றது.
மல்லிகை ஆசிரியரின் பணிகளைப் புகழ வந்த முருகையன் அதே இடத்தில் "பேய்த்தனம்" என்று குறிப்பிட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
சோலைக்கிளியின் 'மழைப் பழம்" கவிதைகள் "புளூபிலிம்" என் றும், "கொக்கோ நாடகம்" என்றும் முருகையன் கூறியது ஒரு நியாயமற்ற விமர்சனமாகவே தெரிகின்றது. மழைப் பழத்தைப் போன்ற அல்லது அதைவிட விரசமான கவிதைகளை முருகையன் இதுவரை சந்திக்கவில்லையா?
அவர் இதைவிட படுமோசமான கவிதைகளையு சந்தித்திருப்பா ரென்றே நினைக்கத் தோன்றுகின்றது. முருகையன் தமது "ஆதி பகவன்" என்னும் கவிதை நூலிலே படுவிரசமாக தலைவனும் தலை வியும் சந்திக்கும் இடத்தைக் காட்டும் அழகை இதோ பாருங்கள்.
"கட்டிஞர், கட்டித் தழுவிஞர் தமது காமத்தின் வேகத்தில் களித்தார் முட்டிஞர், முட்டி மோதினர் - மோதி மோகத்துள் மூழ்கிடலாஞர் லிட்டுவிட்டு அணைத்தார் விரல்களால் குழைத்தார் விரியிதழ் அடிக்கடி பொருத்தி ஒட்டினர் உறிஞ்சி ஒத்தடங் கொடுத்தார் உறுப்புக்கள் உறுத்திட நெரித்தார் பல்கடந்தூரும் நாவினல் உசாவிப் பகவனும் ஆதியுட் புகுந்தான்" எனவே விமர்சகர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு த மது கருத்துக்களில் இரண்டுபட்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கந்தபுராணத்தையும், கம்பராமாயணத்தையும் “காம ரசம் என்று கூறி எரிக்க வேண்டுமெனப் பிரசாரம் செய்த விமர் சகர்களைக் கண்கூடாகக் கண்டது இந்நாடு என்பதை நாம் மறந்து விடலாகாது. இதற்காக மழைப்பழத்தை “ஞானரசம் என்று கூற நான் வரவில்லை,
மழைப் பழத்தை ஏன் மல்லிகையில் போட்டீர்கள்? என்று முருகையன் கேட்கிருர், ஆளுல் இதே மல்லிகையின் ஆண்டு மல ரிலே சோலைக்கிளியின் "எட்டாவது நரகம்" என்னும் கவிதை வெளிவந்துள்ளது. உண்மையில் இது எதைக் காட்டுகின்றதென் ருல் சோலைக்கிளியின் கவியாற்றலையும், ஜீவா அவர்களின் புத்தி சாலித்தனமான (பேய்த்தனமல்ல) அணுகு முறையுமே என்ருல் மிகையாகாது.
40

சோலைக்கிளி போன்றேர் யாரை ஏமாற்ற முயல்கின்ருர்கள்? என்று முருகையன் கேட்கிருர், உண்மையில் சோலைக்கிளிக்கு எவ ரையும் ஏமாற்றும் எண்ணம் கிடையாது. அப்படி இருந்திருந் தால் அவர் எப்பவோ மல்லிகையிலிருந்து தூக்கி வீசப்பட்டிருப் பார். அவருடைய கவிதைகளை தொடர்ச்சியாகப் படித்து வந்த வர்களுக்கு அதன் தரம் நன்கு விளங்கியிருக்குமென்றே நம்புகின் றேன். சோலைக்கிளி ஒரு தரமான கவிஞர். இலக்கிய உலகிலே அவரது புதுக்கவிதைகள் ஒரு மகத்தான சாதனையை எதிர்காலத் தில் எட்டுமென்று எதிர்பார்க்கலாம்.
புதுக்கவிதைகளில் எனக்கு வலுவான நம்பிக்கை இன்னும் தோன்றவில்லை என்தும், தமிழ்ப் புதுக்கவிதையினைப் பற்றிய எனது மதிப்பீட்டில் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்றும் முருகையன் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இது எதைக் காட் டுகிறது? புத்திலக்கியங்களின் தோற்றத்தினையும், புதுக்கவிதையின் எதிர்கால வளர்ச்சியினையும் தீர்க்க தரிசனக் கண்ணுேட்டத்தில் ஆராய முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள விரும்பாத அவரது அவசர முடிவினையே காட்டுகின்றது.
புதுக்கவிதைகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நம் பிக்கை ஊட்டவில்லை என்பது முருகையனின் இன்னெரு அங்க லாய்ப்பு ஆகும். இதற்காக அமரர் கைலாசபதி அவர் களை இங்கே அழைப்போம். "கடந்த சில தசாப்தங்களாக தத்துத வீச் கம். தமிழ்த் திறனும், தனித்துவமும், பொருட் தெளிவும், கருத்து அழுத்தமும், கலை நயமும் வாய்க்கப் பெற்ற புதுக்கவிதை கள் எழுதப்பட்டுள்ளன. சிறப்பாக வானம்பாடி இதழை மைய மாகக் கொண்டு வளர்ந்த கவிஞர்கள் மொத்தத்தில் செழுமை யான கவிதைகளைப் படைததளித்தனர் என்பதை எவரும் மறுக்க முடியாது" என்று கைலாசபதி அவர்களின் அமர வாக்கியங்களை முருகையன் மறுப்பாரா?
"நம்மவர்கள் யாப்பிலக்கணப் பயிற்சிதரும் ஓசை உணர்வு நுட்பத்தை இன்னும் நன்கு கிரகித்துக் கொள்ளவில்லை" என்று முருகையன் குறிப்பிடுகின்(?ர். இன்று. எத்தனையோ பெ ரு ங் சுவிஞர்கள் புதுக்கவிதையினைச் சிறப்பாக எழுதுவதை நாம் அவ தானிக்கக் கூடியதாக இருக்கின்றது, ஆனல் ஓசைத் தேவைக் காகப் பொருளை வளைத்து உணர்ச்சியைச் சிதைப்பதையும், யாப் பமைதிக்காகவும், அணிச்சிறப்புக்காகவும், உள்ளீடு எதுவுமற்ற ஓசை உணர்வுக்காகவும் வலிந்து பாடப்பட்ட போலிக் கவிதை களைக் கண்ட புதுக்கவிஞன் அவற்றை நிராகரித்ததில் நியாயம் உண்டு. தமிழில் யாப்பு என்பது தீர்மானிக்கப்பட்ட ஒரு சப்தக் கூடுதான் தொல்காப்பியச் செய்யுளிலும், யாப்பருங்கலங்காரி கையும் கூட கவிதையின் எலும்புக் கூடுகள் பற்றிய எடுத்துக் காட்டுகளே தவிர கவிதையின் ஆத்மா பற்றியன அல்ல என்பதை அனைவரும் கிரகித்துக் கொள்ள வேண்டும். இங்கே கவிஞர் வைரமுத்து அவர்களின் புதுக்கவிதை ஒன்றினைப் பார்ப்போம்.
"யாப்பு எனும் குதிருக்குள் இலக்கணம் போட்ட உத்தரவுக்குப் பயந்து உறங்கும்
7

Page 26
சோம்பேறிச் சொற்களுக்கா நீங்கள் க்விதை என்று கட்டியம் கூறுவீர்கள்" எனவே கவிதை எப்போதும் படிமங்களைப் பற்றி வருத்தப்பட்ட தில்லை. தனக்குச் செளகரியமாய் இருக்கும் எல்லா இடங்களிலும் அது ஆனந்தம்பாடி அமரும். புதுக்கவிதை என்னும் பெயர் தற் காலிகமானதே. கவிதையின் பெயர் கவிதைதான் என்பதை விமர்சகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
'கலை நயம் குலைத்தார் அவர் கையை எரித்திடுவோம்" என்று முருகையன் கூறுவது ஒரு விமர்சகனுக்குரிய அழகன்று. ஒரு படைப்பாளியை உயிருடன் இருக்கும்போது எரிக்க முயற்சிப்பதும் அவன் எரியுண்ட பின்பு சாம்பல் பூத்த அவனது மேட்டிலே நின்று ‘கவிதை மலர்த் தோட்டம் நீ" என்று புகழ் பாடுவதும் சில அறிஞர்களின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் ஏன்பதை விமர் சகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக கவிஞர் முருகையன் 'மழைப் பழம்" பற்றிய விமர் சனம் புதுக்கவிதையாளர்க்கு ஒரு எச்சரிக்கையாகவும், ஆற்றுப் படுத்தலாகவும் அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறேன். *
www.
MWAYMMV,
பேச்சிலும் செயலிலும் ஒன்றுபட்டவர்
எஸ். விஜயானந்தன்
அமரர் வி. தகுமஸிங்கம் சகல வசதிகளையும் கொண்ட செல் வக் குடும்பத்தில் பிறந்தார். ஒரு சாதாரண மனிதஞகவே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். அவருடைய வாழ்வு மற்றய அரசியல் பிரமுகர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தது. எவருடனும் அன்புடனும் ஆதரவுடனும் பழகுவார். இவருக்கு விரோதிகளென்று இருந்ததாகவே நான் அறியவில்லை. எனது கிரா மத்தைச் சேர்ந்தவர் என்ற முறையிலும் நானும் அவரும் பல ஸ்தாபனங்களிலும் இணைந்து செயல்பட்டதாலும் அவருட ன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சமயம் உள்ளூ ராட்சி மன்றத் தேர்தல் கர்லத்தில் இருவரும் இரு கட்சிகளின் சார்பிலும் நேரடியாகப் போட்டியிட்டோம். அப்படியிருந்தும் கூட எமது நட்பு தொடர்ந்தது. பல இயக்கங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பலதரப்பட்ட இளைஞர்கள் இவருடன் கலந்து உரையாடு வதையும், வாதிடுவதையும் சர்வ சாதாரணமாகக் காணக் கூடிய தாகவிருந்தது. முற்போக்குச் சிந்தனையும் தேசிய, சர்வதேசியத் தொடர்புகளும் இளம் வயதிலேயே இவரை ஆட்கெரண்டுவிட்டன.
இளைஞனுக யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இவருடைய தேசிய உணர்வு போராட்டமாக வெளிப் பட்டது. அக்காலத்தில் விதேசிய உடைகள் அணிவது நாகரிகமா கவும் அதே நேரததில் பிரபல கல்லூரிகளில் கட்டாயமான நடை முறையாகவும் இருந்து வந்தது. அமரர் தருமலிங்கம் தேசிய
4母

உடை அணிந்து கல்லூரிக்குச் சென்றதன்மூலம் அன்றைய கட்டுப்பாடு களை உடைத் தெறிந்தார். அன்று தொடக்கம் கொலை செய்யப் படும் வரை தேசிய உடைகளையே அணிந்து வந்தார். காந்தீயக் கொள்கைகள் மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வந்த காலமது. இக் கொள்கைகளால் ஒரளவிற்கு உந்தப்பட்டாலும்கட வேறு சிலரைப் போல கண்மூடித்தனமாகக் கதர் இயக்கங்களில் சிக்குண்டு கிடவாது எமது நாட்டிற்கேற்றவாறு தேசிய உடை தேசிய கலாசாரம் முதலியவற்றை வளர்ப்பதில் அக்கயை காட் டிஞர். அகிம்சைப் போராட்டங்களில் நம்பிக்கை வைத் துச் செயல்பட்ட இவர் தனது மகனுக்கு புத்தங்களை, கொல்களே வெறுத்து அகிம்சையைப் போதித்த புத்த பகவானின் நாம ம் "சித்தார்த்தன்" என்ற பெயரைச் சூட்டித் தனது சர்வதேசியப் போக்கினை வெளிப்படுத்திஞர்.
இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட இடது சாரிக் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி இதன் தீவிர ஆதரவாளஞக செயல்பட்டார். இரண் டா வ த உலக மகாயுத்த காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லர் படையெடுத்த பொழுது புத்தத்தின் தன்மையே மாற்றமடைந்தது. உலகம் தழுவிய மக்கள் யுத்தமாக உருவெடுத்தது. லங்கா சமசமாசக் கட்சி சோவியத் யூனியனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யக் கூடாதென வாதிட் டது. அக்கால கட்டத்தில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி யுத்தத் தின் தன்மையை இலங்கை மக்களுக்குத் தெளிவுபடுத்தி சோவியத் யூனியனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. இதனை அமரர் தரும விங்கம் முற்று முழுதாக ஆதரித்துச் செயல்பட்டார். ஆரம்பம் முதல் இறக்கும் வரை சோவியத் யூனியனின் உற்ற நண்பனுகவும் சோசலிச முகாமின் அசைக்க முடியாத தோழனுகவும் செயல் Lul-L-ITIT.
இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கம், உலக சமாதானச் சபையின் இலங்கைக் கிளை, ஆசிய ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக் கழகம் ஆகியவற்றில் முக்கிய பதவியினை வகித்து செயல்பட்டது டன் அந்த ஸ்தாபனங்களைத் தான் வாழ்ந்த பிரதேசத்திலும் உருவாக்கி செயல்பட வைத்தார். இந்த ஸ்தாபனங்களின் பிரதி நிதியாகப் பல சர்வதேச மகாநாடுகளில் பங்குகொண்டார்.
சோசலிஸ் சமுக அமைப்பின் மூலம்தான் மனிதனை மனிதன் சுரண்டாத இனத்தை இனம் நசுக்காத நிலையை ஏற்படுத்தலாம் என்று நம்பி செயல்பட்டவர். சோசலிஸ் தமிழ் ஈழம் அமைப்ப தாக மாபெரும் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறிக் கொள் எப்படுகிறது. அதே நேரத்தில் அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த தியாக சீலர் அமரர் தர்மலிங்கம். அநாகரிகமான முறையில் கேடுகெட்ட காட்டுமிராண்டித்தனமாக தான் நேசித்த மக்கள் மத்தியில், தான் பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளு மன்ற மண்ணில் கொலை செய்யப்பட்டிருப்பது சோசலிசம் பேசுப வர்கள் உண்மையில் சோசலிஸ்டுகள் அல்ல என்று எண்ண இட மளிக்கின்றது.
அவருடைய சர்வதேசத் தொடர்புகள் சோசலிஸத்தின் மீது அவர் கொண்ட அசையாத நம்பிக்கை நிச்சயமாக இந்தத் தேசத் தில் ஒர் சோசலிஸ் அமைப்பு நிச்சயம் ஒருநாள் உருவாக்கப்படும். அவரின் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. *
41

Page 27
அவலை நினைத்துக் கொண்டு
தம்பிஐயா கலாமணி
நெல்லியடி மஹாத்மா தியேட்டரில் நாடகமொன்றின்போது ஏற்பட்ட மனக் கசப்பினுல் எஸ். த. வைப் பிரிந்து காங்கேசன் துறையில் வசந்தகான சபாவை வைரமுத்து தோற்றுவித்த பின் னரும் கூட, பல நாடகங்களில் வைரமுத்துவும், எஸ். த. வும் இணைந்து நடித்து வந்திருக்கிருர்கள். வைரமுத்து வீட்டு முற்றத் தில் மேடை அமைத்து உயர் சாதியினரான சீ. ரி. செல்வராஜன் குழுவினரோடு போட்டியாக வாரந்தோறும் பல மாதங்களாக மேடையேற்றிய நாடகங்களில் வைரமுத்து, இரத்தினம் என்போ ருடன் அண்ணுசாமி ஆசிரியரும், எஸ். த. வும் இணைந்தே நடித்து வந்தார்கள். நடிகமணி வைரமுத்து ஈழத்தின் தலைசிறந்த ஒரு கலைஞன் என்பதையோ, அவரிடம் உள்ள அதீத ஆற்றலையோ எஸ். த. ஒருபோதும் மறுத்ததில்லை. வானெலியும் தொலைக்காட் சியும் இன்றைய விமர்சகர்களும் வைரமுத்துவின் திறமையை உண ரத் தலைப்பட்ட காலத்திற்கு முன்னரேயே அவரின் நடிப்பாற்றலை மதிப்பிட்டிருந்ததாக எஸ். த. இன்றும் கூறுவார்.
ஆராய்ச்சி என்பது மிகவும் பொறுமையோடு நிதானமாக நடாத்தப்பட வேண்டியது. 'திருமதி மல்லிகா முதன் முறையாக வைரமுத்துவுடன் நடிக்க முன் வந்ததாக காரை சுந்தரம்பிள்ளை யால் குறிக்கப்படும் காலத்திற்கு முன்பாகவே சுண்டுக்குளி அண் ஞவி கந்தையாவின் மகளான திரேசம்மா ஞானசெளந்தரி என்ற எமது நாடகத்திலே முன் ஞானசெளந்தரியாக நடித்தார். திரு மதி மல்லிகாவின் நாடகப் பிரவேசத்திற்கு முன்பாக அண்ணுசாமி ஆசிரியரும், அக்காலத்தில் இலங்கைக்கு வந்திருந்த இந்தியக் கலை ஞர்களான கிருஷ்ணவேணி குழுவினருடன் நடித்து வந்திருக்கிருர்" என்று அக்காலப் பெண் கலைஞர்களின் பங்களிப்புப் பற்றிக் குறிப் பிட வந்தமையை தமது கருத்துக்கான மறுப்பாகக் கொண்டு திரேசம்மாவும் ஓர் உரிமை மறுக்கப்பட்ட பெண்தான் என்று செ. சு. கூறியிருப்பது, ஆராய்ச்சியாளருக்கு வேண்டிய நிதானத்தை இழந்துவிட்ட அவசர புத்தியினுல்தான். சுண்டுக்குளி அண்ணுவி கந்தையா யாரன்பெதை அறியாமலா, "தி ரே சம் மா" என்று மொட்டையாகக்கூடக் குறிப்பிடாமல் சுண்டுக்குளி அண் ணு வி கந்தையாவின் மகளென்ற விபரமும் கூறி தமது கருத்தை எஸ். த. மறுக்க முன்வந்திருப்பார் என்று சிந்தித்துப் பார்த்து செ. சு.
50

சற்று நிதானித்திருக்கலர்ம். எஸ். த. நடித்து வந்த நாடகங்களில் இந்திரா, சந்திரா, மல்லிகா, திரேசம்மா போன்ற பெண் கலை ஞர்களும் இணைந்து நடித்து வந்தபோதிலும் பிரதம ஸ்திரி பார்ட் டாக வேஷமேற்று வந்தவர் எஸ். த. தான்.
எஸ். த. பிரதம பாத்திரமேற்று நடித்து வந்த நாடகங்களின் பட்டியல் மிக நீண்டது . இவற்றுள் அரிச்சந்திரா, சத்தியவான்சாவித்திரி, கோவலன் - கண்ணகி, ஞானசெளந்தரி, பவளக் கொடி. அல்லி - அருச்சுணு, நல்லதங்காள். பூரீவள்ளி, சதி அது சூயா, பக்த நந்தனர், காலவரிஷி, பக்த துருவன், காளிதாசன், பக்த மார்க்கண்டேயர், சாரங்கதாரா, ஒளவையார், சீமந்தினி. சத்தியசீலன், அசோக்குமார். பராசக்தி, நாம் இருவர். பதவி மோகம், நச்சுக்கோப்பை, சக்குபாய், ருக்குமாங்கதா, மதிவதஞசத்தியசீலன் என்பவை முக்கியமானவை.
எஸ். த. வின் இசை நாடகத்துறை ஈடுபாடு குறித்த இன்னு மொன்றைக் குறிப்பிடலாம். அல்வாய் சாமணந்தறை ஆ ல டி ப் பிள்ளையார் கோவிலிலே வருடந்தோறும் மேடையேறும் சிவராத் திரி நாடகங்களை நீண்ட காலமாக எஸ். த. பொறுப்பேற்றிருந் தார். தாமும் கலந்து கொண்ட நாடகங்களை மட்டுமன்றி தமது ஊரைச் சேர்ந்த பல சிறுவர்களையும் இளைஞர்களையும் பயிற்றி இன்றுவரை நாடகங்களை மேடையேற்றி லருகின்ருர்,
வடமராட்சியில் இசை நாடக வரலாறு குறித்த ஒரு தொடர் கட்டுரையை எழுத வேண்டுமென்ற எண்ணம் முன்பே எனக்கி ருந்த போதிலும், மே மாத இதழில் செ. சு. வின் கட்டுரையைப் படித்த பின்பு அக்கட்டுரையிலுள்ள தகவல்களின் உ ன்  ைம நிலையை ஆராய்வதனுாடாக பல தகவல்களைக் கூற முடியுமென்ப தணுலேயே இச் சந்தர்ப்பத்தில் இக்கட்டுரையை நான் எழுத நேர்ந்தது. கலை இலக்கியத்துறையில் என்னை ஆர்வம் கொள்ளச் செய்து பல துறைகளில் எனக்குக் குருவாகவும் இருந்து வந்தவர் என் தந்தையே என்பதனல், எனது தந்தை குறித்து முன் வைக் கப்பட்ட பிழையான தகவல்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடப்பாடும் எனக்கு உண்டு. செ. சு. வின் மே மாதக் கட்டுரை முழுவதும் எஸ். த. வின் இசை நாடகத்துறை ஈடுபாட்டை மறக் கடிக்கச் செய்யும் முயற்சியாக அமைந்தமையாலேயே எஸ். த. வோடு தொடர்புடைய பல தகவல்களை இக்கட்டுரையில் நான் எழுதவேண்டி இருந்தது, எஸ். த. வை அசட்டை செய்யும் நோக் கிலாயினும், வடமராட்சியிலுள்ள கலைஞர் சிலரை செ. சு. தமது மே மாதக் கட்டுரையில் ஒரளவு ஆராய்ந்திருந்தார் என்பதால் அக்கலைஞர்கள் பற்றி இக்கட்டுரையில் மேலதிகத் தகவல்களைக் கூறவில்லை. எனினும் குண்டுமணி, வதிரி கிருஷ்ணபிள்ளை மாஸ்ரர் ஆகியோர் பற்றிய பல தகவல்களை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்றிருக்கிறேன். எஸ். த. பற்றிய தகவல்களை அவ ரின் மகனுகிய நானே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதற்காக எனது தந்தையை முதல்மைப்படுத்தும் முயற்சி இது என்று செ. சு. போன்றவர்கள் விசனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் செ. சுவின் கட்டுரையின் உண்மைநிலையை ஆராயப் புகுந்த இடத்து எனது தந்தை குறிப்பிடத் தயங்கிய சில தகவல்களைக் கூட குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னை உள்ளாக்கியவரே செ. சு.
5.

Page 28
தான். அண்ணுசாமி ஆசிரியரும் எனது தந்தையும் நடித்த அரிச் சந்திர மயான காண்டத்தில் எனது ச கோ த ரி பர்வதாமணி லோகிதாசனுக அனேக மேடைகளில் நடித்து வந்தபோது, அச லாத்தும் பிள்ளையாக நானும் நடித்து வந்திருக்கிறேன் என்பதா லும், சிறுவனுக இருந்த காலந்தொட்டு எனது தந்தை நாடக மாடும் இடங்களுக்கெல்லாம் அவருடன் கூடச் செல்லும் பழக்கத் தைக் கொண்டிருந்தவன் என்பதாலும் இக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான கலைஞர்களையும், சம்பவங்களை யும் நானே அறிவேன்.
தமது மே மாதக் கட்டுரையில், திரு. தம்பிஐயா அவர்களும் இக்கால கட்டத்தில் சில கலைஞர்களைச் சேர்த்து நாடகங்கள் ஆடி வந்தார் என்று குறிப்பிடும் செ. சு. விடம். எஸ். த. வுடன் நாட கமாடிய அந்தச் சில கலைஞர்கள் யார் யார் என்று பணிவாகக் கேட்க விரும்புகிறேன். தமிழ் நாடகக் கலையின் தேக்க நிலைக்கே முன் ஆயத்தமின்றி நடிக்க முயன்ற எஸ். த. போன்றவர்கள் தான் காரணம் என்று கூறும் அவர், "சூழல் இயைபாக்கம்" என்ற விஞ்ஞானக் கருத்துப் பற்றியும் அறிந்திருப்பாரென்றே நம்புகிறேன்; சூழலின் தன்மைக்கேற்ப இசைந்து ஒழுகுவதுதான் அது. அத்தோடு, இக்காலகட்ட தொழில் நுட்பங்களையும், உத்தி முறைகளையும் கொண்டு இன்னெரு காலகட்ட இசை நாடகங்களை ஆராய்வதென்பது விஞ்ஞான முறைக்கு முரணுனது. இனிய சுபா வமுடைய காரை செ. சு. தமது பண்பை இழந்து "நாமும் ஒரு நடிகன் என்று வெட்கமில்லாமல் சொல்ல வந்துவிட்டார்" என் பது போல சிதம்பர ரகுநாதனையும் துணைக்கிழுத்து எஸ். த. வை நையாண்டி செய்ய முயன்றமைக்கு என்ன காரணமோ நான் அறி யேன். ஆனல் பிரபல்யமானவர்களைப் பற்றியே எழுதிக் கொள்வ தனலும் அவர்தம் புகழ் பாடுவதனுலும், பிரச்சினைக்குள்ளாகாமல் இருக்கலாம் என்று ஒரு சில விமர்சகர்கள் நினைக்கிருர்கள். அண் மையில் மல்லிகையில் கலையரசு சொர்ணலிங்கம் குறித்து திரு. மெளனகுரு தெரிவித்திருந்த கருத்துகளுக்கு உடன்பாடான கருத் துகளையே எஸ். த. வும் கொண்டிருந்தார். இதே கருத்துக்களை எஸ். த. எழுத முன்வந்திருப்பாரேயானல் இன்னமும் எத்தனை பேர் அவரை நையாண்டி செய்ய முன்வந்திருப்பார்கள். இதுவே எமது இன்றைய நிலை. இந்த நிலையையே "கலைஞன் ஒருவன் அவனிடத்தேயுள்ள ஆற்றலால் மட்டும் பிரபல்யத்தைப் பெற்று விடுவதில்லை. அவன் சார் சமூகம் அவனை மேலே தூக்கிப் பிடிக் கும் போதுதான் அவன் புகழ் ஓங்குகிறது. இந்தக் குறுக்கு வழி யைக் கையாண்டு வெற்றிப் புகழுக்குழைக்கும் போலிக் கலைஞர் கள் "சத்திர சிகிச்சை மூலம் சிரசுதயம்" செய்யும் வேளை யில் கெளரவத்துக்கும் வணக்கத்துக்குமுரிய சில முது பெ ரு ங் கலை ஆசான்கள் தூசடைந்து கிடக்கின்றனர். இத் தவறுக்கு எமது மயக்கமும் உதாசீனமுந்தான் காரணங்கள்" என நாடகக் கவிம கிருஷ்ணுழிவார் பற்றி எழுத வந்த இடத்தில் தெணியான் குறிப் பிட்டார். இந்நிலையை மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் ஈழத்து விமர்சகர் கையிலேயே தங்கியுள்ளது என்பதையும் இவ் விடத்து வலியுறுத்த விரும்புகிறேன். w
(முற்றும்) st

O மல்லிகை ஒரு சிறந்த தர மான மா சி  ைக. மறுப் பில்லை. ஆனல், சில சமயங்க ளில் குப்பைகளும் வெளிவந்து விடுகின்றனவே, ஏன்'
மட்டுவில். சி. சதாசிவம்
எல்லா மாதங்களிலும் எல்லா இதழ்களிலும் தரமானது வருவதென்பது எனது கைகளில் இல்லை. ஒவ்வொரு இதழிலும்
எல்லாம் தரமானதை எதிர் Lurrriřáis (plg. Lunrg. u Go) p uLu - இலக்கியச் சிற்றேடுகளை அடிக்
கடி படித்துப் பார்ப்பது என் வழக்கம். அவைகளிலும் கூட, பல இதழ்களில் ஒன்று இரண் டில்தான் தரமான கதையோ, கட்டுரையோ, க வி ைத யோ வெளிவந்திருக்கும். மற்றும் ஒரு எழுத்தாளன் எழுதும் எல்லாமே தரமாக இருந்து விடுவதுமில்லை. இந்தப் பின்னணியில்தான் நீங் கள் பார்க்க வேண்டும்.
53
மல்லிகைக்கும் மலையகத்திற் கும் தூரம் கூடிக் கொண்டு
போகின்றதே, ஏன்?
Geo. Dust
அக்கரைப்பத்தனை.
மலையகம்தான் மல்லிகையை
நெருங்கி வரப் பயப்படுகின்றது.
தெளிவத்தை, ரா  ைம யா, கார்த்திகேசு, கோமஸ் போன் ருேர்களைச் சந்திக்கும் போதெல் லாம் எழுதும்படி வற்புறுத்திக் கூறுவது வழக்கம். அவர்கள் தான் மல்லிகையிலிருந்து தூரம் போகின்றனர். ம ல் லி கை ஆரோக்கியமான இலக்கிய நெஞ் சங்களை அரவணைத்துச் செயல் பட முனைந்துள்ளதே தவிர, யாரையும் விட்டுத் தூரம் போவ தற்கு நினைத்துக் கூடப் பார்ப் பதில்லை.
O சமீபத்திய காலங்களில் உங்
dis(560-tu அனுபவங்கள் எப்படி? கரவெட்டி க. ஜெயந்தன்

Page 29
எழுத்தில் எனது அனுபவங் கள் அத்தனையையும் சிறை ப் பிடித்து விட வேண்டுமென ஆசைப்படுகின்றேன். இந்தக் காலத்தை - அதன் வீச்சை - எழுத்தில் வடித்து வைப்பதால் வருங்காலத் தலைமுறை பல அனுபவப் பயன்களைப் பெற வேண்டுமென்பது என் அவா.
O மினி சினிமாப் பெருக்கத்
தைப் பற்றி என்ன கருது கின்றீர்கள்?
அச்செழு ந. அருணகிரி
எந்த விஞ்ஞான சாதனங் களும் மக்களுக்குப் பயன்படுவ தைப் பொதுவாகவே வரவேற் கின்றேன். அதே)சமயம் அவை கள் பொது மனிதனின் அறிவை விசாலப்படுத்தி அவ னு க் கு வாழ்க்கைக்கு வழி கிட்ட வேண் டும். இன்றைய மினி சினிமா வில் காட்டப்படும் படங்கள் மன எரிச்சலைத்தான் ஏற்படுத் துகின்றன.
e 21 வது ஆண்டு மலருக்கான அறிமுகக் கூட்டமொன்றை இம்முறை கொழும்பில் ஏன் நடத்தவில்லை? என்ன காரணம்?
கொழும்பு - 12. எஸ். அஷ்ரப்
உங்களுக்கும் சகலருக்கும் தெளிவாகத் தெரிந்த காரணம் தான் பதில், போக்குவரத்துப் பிரச் சினை யா ல் என்ஞல் கொழும்பு வர முடியவில்லை” அங்குள்ள சகல இலக்கிய நண் பர்களையும் மலரின் சாட்டில் ஒருங்கு சேரச் சந்திக்கலாம் என ஆவலோடு இருந்தேன். சூழ்நிலை அப்படியாகி விட்டது.
o நமது பழம் பெரும் எழுத் தாளர்களில் அநேகர் எழுதுவ தையே விட்டு விட்டனர். அவர்
இலக்கிய சர்ச்சை வெகு
களை எழுதத் தூ ன் டி ஞ ல் என்ன?
வேலணை. க. கந்தசாமி
எனக்கும் இது வேத னை தருகின்றது. நான் மதிக்கும் பல எழுத்தாளர்களை நேரில் சந்திக் கும்போது அவர்களை மீண்டும் எழுதச் சொல்லி வற்புறுத்துவ துண்டு. அவர்கள் எழுதாமல் ஒதுங்குவது அவர்களுக்கு மாத் திரமல்ல, வளர்ந்து வரும் ஈழத் துத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் நஷ்டமாகும் என்பதை ஏற்கனவே நான் உணர்ந்தவன் தான். குதிரையைத் தண்ணிர்த் தொட்டியருகே கூட்டிச் செல் லலாம்; ஆனல் குதிரைதானே தண்ணிர் குடிக்க வேண்டும்.
O சமீபத்தில் நடந்த மல்லிகை
ஆண்டு மலர் விழாவில் கார சாரமாக நடந்ததாகப் பத்திரி கையில் படித்தேன். இப்படி யான இலக்கிய சர்ச்சை நடை
பெற வேண்டுமென்ரு விழாவில்
விரும்பினிர்கள்.
குப்பிளான். a1. a505105 609
சென்ற மாதம் மலர் வெளி யீட்டு நாட்களில் யாழ். நகரச் சூழ்நிலை அமைதியாக இருக்க வில்லை. எனவே மிக அடக்கமா கவும் கச்சிதமாகவும் வெளி யீட்டை நடத்த வேண்டுமெனத் தீர்மானித்தேன். விழாவிற்கு வந்து போகின்றவர்களுக்கு எந்த வித இடர்பாடுகளும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தேன். கூ ட் டம் பகல் 3-30 க்குத் தொடங்கி 6 மணிக்கு முடிவ டைந்து விட்டது. நீண்ட நாட் களாகச் சந்தித்திருக்காத இலக் கிய நண்பர்கள் சந்தித் துக் கொண்டது ஒரு மகிழ்ச்சியான

அனுபவம். மல்லிகைக் கூட்ட மென்ருல் இலக்கிய சர்ச்சைகள் இடம் பெறுவது இயல்பே. அந்த இயல்பான சர்ச்சையே விழாவில் இடம் பெற்றது.
O எழுத்து உலகில் இத்தனை வருடங்களாக அனுபவப் பட்டுள்ளீர்களே, இலக்கியவாதி களின் குண நலன்களைப் பற்றித் தெரிந்துள்ளீர்களா?
பதுளை. STab. fr. S5 uDg6
பல்வேறு மனத்தினரை, பல் வேறு வகையினரை இந்த முப் பத்தைந்து வருட அனுபவத்தில் சந்தித்துள்ளேன். நெஞ்சுக்கு நெருக்கமானவர்களையும் இந்த இ லக் கி ய உலகிலிருந்துதான் அறிந்து கொண்டேன். இந்த எழுத்து உலகத்தில் எல்லாமே போலிகள், எல்லாரு மேமோசடிக் காரர்கள். நயவஞ்சகர்கள் என ஒருவர் மீது ம் உண்மையான பற்றே, பாசமோ, நேசமோ அற்றவர்களையும் சந்தித்து ஒதுங் கியுள்ளேன். புறங்கூறுவோரை யும், முடிஞ்சு விடுவோரையும் ஆளுக்குத் தகுந்ததாகக் கதைக் கும் அரை வேக்காட்டு மனிதர் களை யும் கண்டிருக்கின்றேன். அதே சமயம் நட்பிற்காகவும் நேசிப்புக்காகவும் உதவுவதற் காகவும் உயிரை விடும் அன் புள்ளங்களையும் கண்டு வியந்தி ருக்கின்றேன்.
O “என் மரணத்திற்குப் பின்
னர்தான் என்னைப் பற்றிய சரியான மதிப்பீட்டு விமரிசனம் தெளிவாக வெளிவரும்" என ஒரு
கூட்டத்தில் கூறியதாக ஒரு த ண் பன் சொன்னன். அது
உடுவில். எஸ். தவராசா
நான் தெளிவாக உணர்ந்து தான் சொன்னேன். எழு தி
குச் சமீபமாக உள்ள
வையுங்கள். நான் இப்பொழுது சொல்வதல்ல: எ னது நீண்ட் காலக் கணிப்பு, இது.
O இம் முறை மலரில் வெளி
வந்த 'உழைப்பின் உருவம்" அட்டைப் படம் ரொம்பப் பிர மாதம். இந் த ஐடியாவைத்
தந்தது. எடுத்தது யார்?
அளவெட்டி. D. GoTsyrts யாழ். பல்கலைக் கழகத்திற் ԱՔ ¥ಣ್ಣ போட்டோ" அதிபர்தான் எனக் குப் பல வழிகளில் உதவிபுரிந்து வருபவர். இவரது கை வண்ணத் தில் உருவான புகைப்படங்கள் மல்லிகையின் பல மலர்களின் அட்டையை அலங்கரித்துள்ளன. நான் ரொம்பவும் மதிக்கும் நுட்ப மயன புகைப்படக் கலைஞர் இவர்.
9 தமிழகத்திற்கு இந்த ஆண்டு போவதாகச் சொன் னிர்களே, அங்கு போகும் உத் தேசம் உண்டா? நீர்வேலி. g5. evgesaigorua TallT கொழும்பிற்குப் போ வ தற்கே போக்குவரத்து வசதி யற்று திண்டாடியதுண்டு. இந்த நிலையில் தமிழகம் போவதைப் பற்றி எ ப் படி யோசிப்பது? சென்ற ஜூன் மாதமே போகத் திட்டமிட்டிருந்தேன்; முடி ய வில்லை. பல வேலைகளுண்டு. எப்படியும் கூடிய சீக்கிரம் போய் வரத் தெண்டிக்கின்றேன்.
O கலைஞனுல் சமுதாயத்தை
மாற்றிவிட முடியுமா?
பளை. த. மளுேன்மணி அரசியல் இயக்கங்களிஞ
லும் அதன் போராட்ட வீச்சுக ளினலும்தான் ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் என ஒப்புக்

Page 30
கொள்ளும் அதே வேளையில் கலைஞர்கள் இல்லாமல். அவர்க ளது கூரிய சந்தனை, ஆக்கங்கள் இல்லாமல் அச் சமுதாயத்தைச் செம்மைப்படுத்திவிட முடியாது என்பதையும் ஒப்புக் கொள்ளு கின்றேன்.
சமீபத்திய கூற
O 2lnias(gay solu
அனுபவம் ஒன்றைக் «pւգպւ0ո?
6hub&ນ எஸ். தனேஸ்வரன்
←9ሃò] 8ቋ GÜ வேதனையான அனுபவம். சமீபத்தில் ஒரு நாள் யாழ். பல்கலைக் கழகத்
திற்குச் சென்றேன். - இப்படி அடிக்கடி அங்கு போய் நண்பர் களைப் பார்த்து வருவது என் வழக்கம் - அங்கு நண்பர்கள் சிவத்தம்பி, மெளனகுரு, சபா. ஜெயராசா ஆகியோரைச் சந் தித்து விட்டு, வரும்போது நண் பர் கிருஷ்ணராசா இடையே சந்தித்தார். "பிளேன்டீ குடிக்
கலாம்" என அழைத்தார். எனது
உழைப்புக்குரிய வாகனத்தை "கன்டீனுக்கு முன்னுல் வைத்து விட்டு - அதைப் பூட்டவில்லை. அப்படிப் பூட்டுவதும் என் வழக் கமில்லை. பல்கலைக் கழக வள வில் களவே போகாது என்பது எனது அபார நம்பிக்கைஉள்ளே போய் தேநீர் அருந்தி விட்டு வெளியே வந்து பார்த் தால் சைக்கிளைக் காணவில்லை. என்னுல் இதை நம்பக்கூட முடிய வில்லை!
தவறிப் போன இந்த ச் சையிக்கிளுக்கும் ஒரு வரலாறு உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நான் சிரமத்துடன் கால் நடையாக நடந்து திரிவ தைப் பார்த்து விட்ட டாக்டர் வாமதேவன் - அவர் இ ன் று அவுஸ்திரேலியாவில் வாழ்கின் ருர் - தனது மூத்த மகளான திருமதி ஜெயந்தி விநோதனுக்
குப் பணமனுப்பி, அவர் தனது கைப்பட வரங்கித் தந்ததுதான் இந்தச் சைக்கிள்.
சைக்கிள் தவறிப் போனது எனக்கு வருத்தமில்லை. நான் மனதார விசுவசிக்கும் யாழ். பல்கலைக் கழகத்தின் வளவிற் குள் இருந்து அது காணுமல் போனதுதான் எனக்குப் பெரும்
அதிர்ச்சி
O மல்லிகை மலரில் உங்களு டைய படைப்பை எதிர் பார்த்தேன். இடம் பெறவில்லை. என்ன காரணம்?
LonTash Lurruiu.
ச. சாந்தி
ஆரம்பத்தில் சில பக்கங்களை எனக்கென ஒதுக்கி வைத்துக் கொண்டே மலர் தயாரித்தேன். ஒவ்வொரு படைப்பாளிகளும் எனது பக்கத்தைப் பங்கு போட் டுக் கொண்டனர். ஒரு படைப் பாளி சஞ்சிகையாளனக இருப் பதன் சிரமம் உங்களுக்குப் புரி கின்றதா?
O g) iš 55 நெருக்கடியான வேளையில் உங்கள் வாழ்வு
அர்த்தமுள்ளதாகப் Lu G 3 air
றதா?
புங்குடுதீவு. ef. v ngay
வேறெந்தக் காலத்தையும்
விட, இன்று வாழும் வாழ்வு
தான் எனக்கு அர்த்தமுள்ளதா கப் படுகின்றது. பிறந்த மண்ணை விட்டு, உயிருக்காகவும் வசதிக் காகவும் வேறு நாடுகளில் வாழ் வதை என்னுல் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. எ ரி யும் நெருப்புக்கு மத்தியில் வாழும் போதுதான் வாழ்வின் உண்மை அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது. வாழ்வின் சுவையை வடணர்ந்து கொள்ளுகின்ருேம்,
56

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VAR ET ES OF CONSUNER GOODS OMAN GOOOS
TN FOODS
GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
N E E D S
WHOLES A LE 8 REI A IL
Dial: 26587
To
ESITTAMPALAM8 SONS
223, FIFTH CROSS STREET, COLOMBOG - 11.

Page 31
Mallikai
് ". REGISTERED AS A "لبيكة صراخ"
ANAF K. " Հ|
Phone : 2 4 6 2 9
With Best Compliments of:
Do ®.W.S.B:WUG
140, ARMOU CCLUM i
இச் சஞ்சிகை 234B காங்சேன் துறை : வரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான ெ
SD S uu S L TLL T TLSL ekLLS S ATS S LLL LLL LLLSLL L LL ueS eueCTLL S LTT
ா. க -
 

= - ܒܒܲܚ ܒܩܨܡ ܐ
OCTOBER 85
KLLLLLLLS LLLLL S LLLLL LLLLLSS SS LLLLS LLL LLLS LKS LL W. B | NEWS 85).
Dealers in:
WALL PANELLING CHIPBCAR D & TEMB. R.
AANEER DETTTT INA ER
7R STI IR LET ,
3O. 12.
வீதி, ரா ர் ப்டானம், முகரியில் ங் சிப்ப
`...ಕ್ಲಿನಿ 7 ೫೧ #ern UP'ಕಣಿ' |