கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.08

Page 1
  

Page 2
யாழ்ப்பாணத்து நீர்வளம் குளங்கவில் தங்கியுள்ளது காலந்தோறும் தளங்களை ஆழமாக்குவோம் குளங்களில் அதிக அளவு நீரைத் தேக்குவோம் குளத்து நீர்ப்பெருக்கால் கிணற்றுநீர் பெருக்குவோம் யாழ்ப்பாணத்து மூலவளம் பனைவளம் என்போம் பனையை அதிகமாக வளர்த்து பயன் நிறையப் பெறுவோம் வீதியோரங்களில் நிழல் மரம் நடுவோம் வீட்டுத் தேவைக்கு எலுமிச்சை, தோடை தடுவோம் விறகுத் தேவைக்கு சவுக்கு மரம் உண்டாக்குவோம் வயல்களிடையில் திணறுகள் அமைப்போம் ஆறுவடைக்குப்பின் சிறுதானியங்கள் விதைப்போம் வீட்டுக்கொரு பசுவை விரம்பி வளர்ப்போம் வெற்றிடம்களில் பப்பாமரம் நடுவோம் நேசவு வேலைக்கு புத்துயிர் அளிப்போம் தென்னந்தும்பு பனந்தும்பு பயன்தர வழி செய்வோம்
குளம் தோண்டல் மரம் நடுதல் பனே அபிவிருத்தி ஆகிய ஆக்க நோக்கிற்கு மில்க்வைற் தொழிலகம் என்றும் உதவும்
தொலைபேசி: 23233 த. பெ. இல-77. யாழ்ப்பாணம்
 

செளகரியமான பிரயசன சுகத்திற்கு
யாழ்ப்பாணம் - கொழும்பு. -
K. S. B. TOURS
கொழும்பு- யாழ்ப்பாணம்
எந்தலிதமான சிரமமுன் றிச் சொகுசாகப் பயணம் செய்வதற்குஇதில் பயணம் செய்தவர்கள் இதன் பிரயாண சுகத்தை மெச்சுகின்றனர்.
டிக்கட் கிட்ைக்குமிடங்கள்
செல்வராஜா அன் கம்பெனி 204, காஸ் வேக்ஸ் ஸ்ரீட், கொழும்பு- 11
தொலைபேசி; 32107
செல்வராஜா அன் பிரதர்ஸ் 37. கஸ்நூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
தொலைபேசி: 23617

Page 3
உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன்ட் பினுன்ஸ் லிமிட்டெட்
129, கோவில் வீதி, யர்ழ்ப்பாணம்.
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்"
(DSSSS825
Malikai' Progressive Monthly Magazine
72 ஆகஸ்ட் - 1983
பத்தொன்பதாவது ஆண்டு மலர்
23-வது ஆண்டு மலர் இப்பொழுது உங்களது கரங்களில் தவழ்கின்றது. w
ரசிகமணி குறுநாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற குறு நாவல் இந்த மலரில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இந்த மலரை மிகச் சிறப்பாக வெளியிட வேண்டுமென்பதற் காக நாம் முயற்சித்து வந்தது உங்கள் அனைவருக்குமே தெரிந்த துதான். ஆனல் உங்களுக்குத் தெரிந்திருந்த காரணங்களால் ஏதோ இயன்றவரைக்கும் மலரை ஒப்பேற்றி வெளியிட்டுள்ளோம். ரொம்பவும் மனம் புண்பட்டு, நொந்து. நலிந்து, விரக்தியுற் றுப் போயிருக்கும் சகல மக்களுக்கும், குறிப்பாகக் கலைஞர்கள்எழுத்தாளர்களுக்கு. நமது துக்கத்தை ஆறுதல் வார்த்தைகளாகச் சமர்ப்பிக்சின்ருேம். மல்லிகை ஒவ்வொருவர் துயரத்திலும் துன் பத்திலும் இழப்பினிலும் மானசீகமாகப் பங்கு கொள்ளுகின்றது.
மலையாள முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் பிதாமகரும் முன்னேடியுமான திரு. கேசவதேவ் அவர்கள் சென்ற ஜூலையில் கேரளத்தில் காலமானர். தனது வாழ்நாள் பூராவுமே இலக்கியத் திற்காக இயங்கி வந்த இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், இவரது எழுத்தில் கேரள மக்களின் ஆத்மக் குரல் எதிரொலித்த தாக விமரிசகர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சாஹித்திய அகாட மியின் தலைவராகவும் இவர் பல காலம் கடமையாற்றியுள்ளார். இந்த மாபெரும் கலைஞனின் இழப்புக்காக இந்நாட்டு எழுத் தாளர்கள் சார்பில் மல்லிகை உளப் பூர்வமான அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொள்ளுகின்றது.
ஜூலை - இதழ் வெளிவரவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும்.
- ஆசிரியர்
உருவாக்க உதலியவர்: கா. சந்திரசேகரம்
மல்லிகை 234 B,க கே. கே5எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்விசையில் வரும் கதைகள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Page 4

இலக்கியத்தில் கள இயல்
ஆயவு
இலக்கிய ஆய்வு முறைகளில் பல்வேறு நிலைப்பாடுகள் எடுத் தாளப் படுகின்றன. இவை அந்த இலக்கியத்தை இனங் காண்பது மட்டுமன்றி, அவற் றின் தா ர தம்பியத்தையும், தனித்துவத்தையும் எடுத்துக் காட்டுவனவாகும்.
இவ்வாறு இலக்கிய அணுகு முறை, இக்கால இலக்கியத்தில் பல புதிய நோக்குகளை ஏற்படுத் தி யு ள் ளன. இப்பார்வைகள் "ஆய்வு’, ‘விமர்சனம்" என்ற இரு பகுப்புக்குள் அடங்கியன வாதலால் இவை இரண்டுமே அடிப்படைக் காரணிகளில் வேறு
பட்டு தனித்துவமான போக்
கினை சுட்டி நிற்பனவாகும்.
ஒரு படைப்பாளர் எந்த வர் க் கச் சார்புடையவனகச் செயல்படுகின்ருன் என்பதை அவன் படைப்பே இனங்காட்டி விடுகின்றது. இதனைச் சுலபமா கவே நாம் அறிந்து விடலாம்.
ஆணுல்
இந்த வர்க்க சார்புக்கு உட்
பட்ட எழுத்தாளன் எவ்வாறு தன் வர் க் க நிலைப்பாட்டைப் புலப்படுத்துகின்ருன்? அவ ன் படைப்பின் பகைப்புலன் என்ன? அவை எவ்வாறு ஆக்க இலக்கி
盔
மேம்பாடு
-ஜீவகன்
யத்திற்கு உறுதுணை புரிகின்றன? என்பன போன்ற தெளிவுகளை ஆய்வு முறை விமர்சனக் கோட் பாடு புரியவைத்து விடுகின்றது.
இந்த விமர்சனப் பார்வை களை பழந் தமிழ் இலக் கி ய உரையாசிரியர்கள் அப்படைப்
புகளின் திறனய்வுக்கு சிறிய பங்களிப்பைச் செய்துளளனர் என்பர். ஆனல்- அவர்களின்
நோக்கில் கருத்துரை, பதவுரை போன்றவற்றில் அப்படைப்பின் ஒன்றே பிரதானமா கத் தொக்கி’ நிற்கின்றதே ஒழிய, வேறு எந்த விமர்சன விரிவுரைகளும் இடம்பெறவில்லை என்பதும் நாம் மனங்கொள்ளத் தக்கதாகும்,
இவ்வாறன உரையாசிரியர் களின் பின் எழுந்தவர்களில் பழந்தமிழ் இலக்கியத்தில் நய முரைப்பவர்கள் முன்னிற்கின்ற னர். இவர்கள் "படிப்பித்தல்' மு  ைற க் கு ஏதுவாக ஒரு படைப்பை (பெரும்பாலும் கவி
தைகளே) எடுத்துக் கொண்டு அதன் ‘நயத்தை மாணுக்க ருக்கு விதந்துரைத்தவர்கள் ஆவர்.
வர்களின் 'நயம் எ 凸” இ ந (էքՑl 'நயம் கூறுக" பட் டி ய லில்

Page 5
பெரும்பாலும் கம்பன், புக் ழேந்தி போன்ற புலவர்சளின் படைப்புக்களே இடம் பெற்றன. இவர்களில் ஒரு சிலர் ஒரு கவி தையை எடுத்துக் கொண்டு, அந்த இன்னும் ஒரு கவிதை யுடன் ஒப்பு நோக்கும் செயலை யும் புரிந்தனர். இச் செயலில் கம்பனின் பாடல் ஒன்  ைற எடுத்துச் ஷெல்லியின் பாடலு
டன் ஒப்பிட்டு ஆகா கம்பன்
ஷெ ல் லி யை விட எப்படி உயர்ந்து நிற்கின்ருன் பாருங் கள் என்று விதந்துரைத்தனர்.
இவர்களின் ஒப்பியல் முறை யானது ஏதோ ஒருவகை அபி மான முறையில் உயர்ந்து நின் றதே தவிர, முறையான ஒப்பி யல் ஆய்வுக்கு உட்பட்டதாக அமையவில்லை-- இ வ் வா று வளர்ந்து வந்த தமிழ் இலக்கிய
நோக்குகளில் பல புதிய பார்
வைகள் புகுந்த போதுதான் இலக்கிய விமர்சன, ஆய்வு மு  ைற க ளின் தாரதம்மியம் பேசப்படலாயிற்று.
இம்மாதிரியான வளர்ச்சிப் படி நிலையில். பல புதிய கோட் பாடுகள் தமிழ் இலக்கிய நோக் கில் பதியப்பட்ட போது அவை நவீன சிந்தனைகளைத் தோற்று வித்து அப்படைப்பின் ‘தன்னி னப் போக்குகளையும், சமுதாய வீச்சுகளையும் இனங் காட்டின.
இதனுல் ஒரு சிருஷ்டி கர்த்தா
ன் சமூகப் பிரக்ஞை முன்னி றுத்தப் பட்டன.
சமூகப் பிரக்ஞை உள்ள படைப்புக்களை இனங் கண்டு கொள்வதில் பல பார்வைகள் படிந்துள்ளவற்றில் *அமைப் பியல் ஆய்வு", "கள இயல்
ஆய்வு" என்பன கடந்த சில
காலங்களில் தொட்டுச் செல்லப்
பட்டிருக்கின்றன.
இவ ற் றில் "கள இயல்
ஆய்வு ஒரு புதிய தோற்றுவா யாக நாட்டார் பாடல் பகுப் பாய்வில் எடுத்தாளப் பட்டுள் ளது. கள ஆய்வுகளில் நாட் டார் பாடல் ஆய்வு செய்யப் பட்ட போதிலும், இது தவிர்ந்த கலை - இலக்கியப் படைப்புகளில் இப்பார்வை படியவில்லை என்றே கூறலாம்,
கள இயல் ஆய்வு முறை பல விமர்சன நோக்கு, ஆய்வு களில் இருந்து விடுபட்டு ஒரு படைப்பு எழுந்த களத்தை முன் னிறுத்தி ஆய்வு செய்யும் முறை யாகும். இவ் ஆய்வின் மூலம் ஒரு படைப்பு அது எழு ந் த களத்தில் இருந்து எவ்வாறு வேறு பட்டு, அல்லது ஒன்று பட் டு நிற்கின்றது என்பதை மட்டுமன்றி, அப்படைப்பின் படைப்பாளன் எவ்வளவு துரரம் களத்தில் இருந்து அன்நியப் பட்டு நிற்கின்றன் என்பதையும் எடுத்துக் காட்டும் முறையா கும்.
இந்நோக்கு ஒரு படிைப்பின் போலித் தன்மையையும் இனங் காட்ட உறுதுணையாகின்றது. அப்படைப்பின் சமூக ப் பிரச் சினை அணுகுதலையும், அவை கூறும் காலத்தையும் கள இயல் ஆய்வு தெளிவடைய வைக்கும். இவ் ஆய்வு முறை நம் தமிழ் இலக்கியத் துறை யி ல் விரிவ டைந்து வளர்ச்சியுற்ருல் எதிர் காலத்தில் நாம் பல போலிப் படைப்புகளையும் மன அவசக் காரர்களின் மயக்கங்களையும் இனங் காண உதவும் என்பது
திண்ணம்.
喙、

19-வது ஆண்டு மலர் வெளிவரப் போகும் இந்த வேளையில் தாங்கள் கடந்து வந்த நீண்ட நெடுங் காலத்தையும் பாதையை யும் சிந்தித்து, தாங்கள் அடித்த எதிர் நீச்சல்களை எல்லாம் எண் ணிப் பெருமிதமும் கூடவே வியப்பும் அடைகிறேன். இப்படி ஒரு தரமான இலக்கிய சஞ்சிகையை ஒரு அவசியமானTகாலத்தில் ஆரம்பித்து, அயரா முயற்சியுடன் தொடர்ந்து நடத்தி, அவசிய மான ஆயுதமாக சாதுரியமாக காலமாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்கள் பேணுவைய் பாவித்து, இலக்கிய நேர்மையுடன் செயற் பட்டு புதுமை படைக்கும் தங்களை வெறும் முகஸ்துதிக்காக மட் டும் பாராட்டவில்லை. இது மனதில் எழுந்த நியாயுமான பாராட் டுதலாகும். •
இரண்டு தசாப்தங்களாக பூத்துக் குலுங்கி நறுமணம் சொரி யும் மல்லிகை, காலத்துக்குக் காலம் பல புதியவர்களை அறிமுகப் படுத் தி ஆக்க உந்து சக்தி கொடுப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக புதியவர்களும் கருத்தில் சிறிது வேறுபட்டவர்களும் இடம் பெறுவது வரவேற்கத் தக்க அம்சமாகும். எழுத்தாளன் எங்கிருந்தாலும் எழுத்து எப் படியிருக்கிறது, இலக்கிய நேர்மை எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு தரம் கண்டு தட்டிக் கொடுக்கும் தாங்கள் தொடர்ந்தும் பல புதியவர்களைத் தைரியமாக அறிமுகப் படுத் துங்கள். ஒய்ந்து போயிருக்கும் பல பழையவர்களையும் தூண்டி எழுத வையுங்கள்,
எழுத்தாளன் தான் வாழும் காலத்தைப் பிரதிபலிக்க வேண் டும் என்ற கொள்கையுடையவன் நான். கடந்த இதழில் வவனி யாவைச் சேர்ந்த ஜெயபாலனின் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதில் பற்றி எனது அபிப்பிராயத்தை தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன், அபிப்பிராய பேதங்கள் விவாதித்துத் தீர்க்கப்பட வேண்டியவை என்பதை நீங்கள் வரவேற்பீர்கள்
முதலாவது அந்தக் கேள்வி நீங்கள் குறிப்பிட்டது போலவே திரித்துக் கூறப்பட்ட ஒன்று என்பதை நான் அறிவேன், பாரதி விழா கருத்தரங்கொன்றில் தெணியான் அவர்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டையும் அது தொடர்பாக நான் அளித்த பதி லும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.
முதலாவதாக எழுத்தாளன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்ற பார்வையே அவசியமற்றது. பஞ்சமரையோ அல்லது அதி உயர் மட்டத்தில் உள்ளவர்கள் என்று கூறப்படுபவர்களையோ சாராத இனத் தட்டில் - ஒடுக்கப்பட்டுக் குடிமைகளாகக் கணிச்

Page 6
கப்பட்டிருந்த ஒரு சாதியில் தோன்றியவன் என்ற முறை யில் நான் சில கருத்றுக்களை முன்வைக்க விரும்புகிறேன். டானியல் அவர்களின் பஞ்சமரை வாசிக்கும் வரை, இளைய தலைமுறையில் ஒருவனன நான், எமது சமூகம் இவ்வளவு தூரம் தாழ்ந்த நிலை யிலிருந்து போராடி முன்னுக்கு வரவேண்டியிருந்ததென்பதை உணர்ந்திருக்கவில்லை. அடக்கி ஆளப்பட்ட சாதியினர் என்பதை உணர்ந்திருந்தாலும் அதன் முழு வடிவத்தை டானியலின் பேணு வின் மூலம் நான் அறிய முடிந்தது. இன்றைய இளைய தலை முறை எழுத்தாளர்களில் பலர் எமது சாதியை  ைம ய மாக க் கொண்டு கதைகள் அதிகம் புனையாததற்குக் காரணம் காலமாற் றம்தான். இன்று அப்படியான அடிமை - குடிமைகளாக எமது சாதி இல்லை. அப்படியான கதைகள் அதிகம் உருவாகவில்லை என லாம், இப்போதுள்ள இடைத்தட்டுச் சாதியினரின் பிரச்சினைகளின் வடிவம் சற்று மாறுபட்டது, அப்படியான பிரச்சினைகள் கருவாகி கதையாகத் தவறவுமில்லை. நடுத்தட்டில் இருக்கிறவர்கள் மாத்தி ரமன்று மற்றவர்கள் எவரும் கூட அதிகம் எழுதாதற்கும் கார ணம் இதுவே, இன்று இது ஒரு எரியும் பிரச்சினை இல்லை. இன் னும் ஒரிரு தசாப்தங்கள் போனல் பஞ்சமரிகளைப் பற்றியும் அதிக கதைசுள் வராமல் போகலாம் - காரணம் அடக்கு மு  ைற க ள் அருகி வருகின்றன. சாதி ஒடுக்கலுச்கெதிரான உணர்வு கள் மேலோங்குகின்றன.
ச. முருகானந்தன்
FAMILY SHOP
உங்கள் குடும்பத்தின் அன்ருடத் தேவைகளைப் ப்ொங்கும் மகிழ்வுடன் நிறைவு செய்வது
பெமிலி சொப்
(ஸ்ரான்லி கல்லூரிக்கு அருகாமையில்)
425, நாவலர் விதி, யாழ்ப்பாணம்.

இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியில் முதற்
பரிசு பெற்ற குறுநாவல்.
ரேனுகா விழித்துக் கொண் டாள். கதவில் தட தடவென்று தட்டுவது கேட்டது. இந்தச் கத்தம்தான் அவளை எழுப்பியி ருக்க வேண்டும். இன்றைக்கு வெள்ளிக்கிழமை. .
கதவைத் தட்டுவது அம்மா. நேரத்துடனேயே இன்றைக்குச் சிவபூசைகள் ஆரம்பமாகி விட் L-GðI •
நேரம் ஐத்து மணி. வழக்க மாக இந்த நேரத்துக்கு விழித்து, கதவைத திறக்கிற பொழுது வாசலில் அம்மா துடைப்பத் துடன் நிற்பாள். ரேனுகாவிற்கு ஒவ்வொரு நாலும் முழுவியழம் துடைப்பம்தான்.
ஏழுமணிக்கு அம்மாவைத் துடைப்பத்துடன்தான் பார்க்க 6) ITD
மாவும் பலாவும் நிற்கிற வீட்டு முற்றத்தையும், பின்னல் தென்னையும் கமுகும் வாழையும் நிற்கிற கிணற்றடியையும், அதற் குப் பின்னல் பதினறு பரப்பில் விரிந்து கிடக்கிற தென்னங் காணியையும் ஒரு அம்மாவாக
வெற்றுப் பக்கங்கள்
ஆர். ராஜமகேந்திரன்
தினமும் கூட்டி முடிக்கவென்
ருல் கட்டாயம் மூன்று மணிக்கே எழும்பத்தான் வேண்டும். ஒரு நாளைக்கு லிளக்குமாறு எடுக்கா விட்டாள் அம்மாவுக்கு சாப்பிடு வது சமிக்காமல் போகக்கூடும், அல்லது பைத்தியம் பிடிக்கக் கூடும்.
மீண்டும் கதவைத் தட்டி ஞள்.
"ரேனுகா" என்று குரல். அவள் முரண்டு பி டி க் கிற குழந்தை மாதிரிப் பிடிவாதமாய் படுத்திருந்தாள். கதவில் ஒசைப் படத் தட்டுகிற ஒலி உருக்கு மாதிரிக் கேட்டது. இதயம் பட படக்க உடல் முறுக்கேறி முகம் இறுகி கண்களில் சிவப்பேறியது.
விளக்குமாற்றுடன் விடியற் காலையில் திரிந்து திரிந்து கூட்டு கிறவர்கள் மூதேவி வாலாயமுள் ளவர்கள் என்று கேள்விப்பட்டி ருக்கிருள். அம்மாவும் அப்படித் தான் என்று கொஞ்சநாளாய் நினைப் பு. கூட்டிக் குளித்து, பொட்டும் பூவும் வைத்து, வியூ தியும் உருத்திராச்சமும் போட்டு சிவபூசை செய்து சாப்பிட்டு

Page 7
என்ன? ம்னம் சுத்தமாய் இருக்க வேணும். "அம்மா அது உனக்கு இல்லாமல் போய்விட்டது, என் வாழ்க்கையுடன் மிகக் கேவல மாக விளையாடி விட்டாய்"
கதவு தட்டுவது நின்றுவிட் டது. வீட்டைக் கூட்டாமல் வெளியே கூட்டுவது முதுகு தேய்க்காமல் குளித்த மாதிரி என்று அம்மாவிற்கு எண்ணம். முதுகு தேய்க்காமல் குளிக்கிற பாக்கியத்தை இடையிடையே ரேனுகா கொடுப்பாள். இது போன்ற நாட்களில் மூதேவி அ ல் ல து பத்திரகாளி தன்னை வசப்படுத்தி ஆட்டுமோ? என்று அவவுக்குச் சந்தேகம் இருக்கிறது. அம்மாவினுடைய பலம், பல வீனம் அறிவு, அறியாமை எல் லாம் அனுசரித்துப் போகவேண் டியவை என்ற எண்ணம் மறந்து போகும். அம்மாவின் மனதை ரணப்படுத்துகிறமாதிரி காரியம் செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். அதுபோன்ற நாட் களில் இன்றும் ஒன்று. இன் றைக்கு அம்மாவிற்கு மிக உபத் திரவமான நாளாக இருக்கப் போகிறது என்று நினைத்தாள்.
ஆறு ம்ணிக்கு ரேனு கா அறையைத் திறந்து கொண்டு
வெளியே வர காத்திருந்தமாதிரி
உள்ளே து  ைட ப் பத் து - ன் நுழைந்தாள் அம்மா. மு கம் கழுவி வந்த பொழுது மேசை யில் தேநீர் இருந்தது. தோளில் டவலைப் போட்டுக் கொண்டு கையில் சோப்பைக் கொண்டு கிணற்றடி அடைப்புக்குள் போன பொழுது, அம்மா விளக்குமாற் றுடன் உள்ளே நின்ருள். அவ ளைக் கண்டுவிட்டு பரக்கப் பரக் கக் கூட்டினள்.
ரேனுகா மனதுக்குள் சிரித் தாள். த லை யைக் குனிந்து கொண்டாள்.
10
அம்மா இன்றை க்கு ச் சமைக்கவில்லையோ?" என்ருள்.
அம்மா நிமிர்ந்து பார்த்த பொழுது ரேனுகா நைட்கவுனை உதறி சாலின் கீழ்ப் போட்டு விட்டு தலையில் தண்ணியை ஊற்றினுள். 录
* சனியனே என்ன P வெட்கம் ನಿಷಾಗೆ"? ஆக்ரோஷமாய்.
"உனக்கு வெட்கம் இருந்தி ருந்தால் என்னைப் பெற்றிருக்க முடியுடா? அம்மாவான உனககே இல்லாத பொழுது எனக்கு எப் படி இருக்கும்?"
நேரம் ஏழுமனி, இன்னும் அரைமணியில் பஸ்பிடித்தால் தான் நேரத்திற்குப் பாடசாலைக் குப் போய், சிகப்புக் கோடு இழுப்பதற்குள் கிைன்பண்ணமுடி யும். பிளவுஸின் ஊக்குகளைப் போ ட் டு க கொண்டிருந்த பொழுது அம்மா சாப் பாடு கொண்டுவந்தாள்.
"அம்மா இந்தச் சட்டை எப்படி?" என்ருள். இதுபோல் ஒரு லோ - கட் ப்ள வு  ைஸ அம்மா ஒருதடவை எரித்திருக் கிருள்.
கழற்றித் தந்தால் ந்ெருப் பில் போடுவியா?? 。臀 கழற்றிக் கொண்டு போக முற் பட்டாள்.
*இது யாருக்குச் சாப்பாடு" "உனக்குத் தான் வேறு Lurrq5ág,5?"
இன்றைக்கு வெள்ளி க் கிழமை நான் விரதம். எனக்குச்
சாப்பாடு வேண்டாம். கொண்
டுபோ "
*கொண்டு போய் நான்
என்ன செய்கிறது? நானும்
இன்றைக்கு விரதம்தான்'

"நாய்க்குப் போடு"
"இங்க ஏதெடி நாய் எல் g) IT b? “
"வாசலில் போய்ப்பார், நீ வளர்த்த நாய் நிற்கும், போடு JFIT. Gib' v
ரேனு கா ஸ்லிப்பர்களைக் கொழுவிக் கொண்டு வாசலில் இறகிகிய பொழுது விறைத்துப் போன முகத்துடன் சின்னத் தம்பியைக் கண்டாள். காணு மாதிரி இறங்கி வெளியேறி நடந் தாள். பின்னல் அம்மா ? நில், நில்" என்று சொல்லியபடி வந்து சின்னத்தம்பியைக் கண்டுவிட்டு நின்ருள். 、
"நான்தான் அம்மா நீங்கள் வளர்க்கிற நாய் வந்திருக்கிறன் சோறு போடு அம்மா" என்றன். "கேட்டியா சின்னத்தம்பி இவள் சொல்கிறதை எல்லாம் கேட்டியா??
"கேட்ட்ேன், பிறகும் இந்த
இடத்தில் நிற்கிற நான் ஒரு மடையன்*
"அந்தப் பீடை எதையா
வது சொல்லட்டும், நீ போகாதே சின்னத்தம்பி என்ருள்.
சின்னத்தம்பி கேட்காமல் படலையைத் திறந்து கொண்டு Gunruiu 6 * TT Går.
கார்ந்தாள்.
பஸ்ஸில் இருந்த பொழுது ரேனுகாவின் நினைவு சின்னத் தம்பியை அணுகியது. இன் றைக்கு ஒற்றைக் கல்லில் இரண்டு மாங்காய். சின்னத்தம்பி வாச லில் நின்றதைக் கண்டுவிட்டுத் தான் 'நாய்" என்று சொன்னள். சின்னத்தம்பிக்கு அ வ ளு டைய அப்பாவின் வயது. அவ ருக்கு மிக நெருக்கமான இரு
கடவு ளே ன்ன்று தலையில் கைவைத்து உட்
ஆண்துணை என்ருல் அவன்தான். ரேனுகாவுக்கு அப்பாவைத் தெரி யாது. அவள் பிறந்து இரண்டு மாதத்தில் சிங்கப்பூருக்கு ஓடிப் போய்விட்டானம். ஒடிப்போய் விட்டார் என்ற சொல்லுக்கும், போய்விட்டாரென்ற சொல்லுக் கும் இடையில் ப்ெரிய கருத்து வித்தியாசம் இருக்கிறது. அவளு டைய அப்பா ஒடிப்போனவர்.
சின்னத்தம்பிக்கு ஊர் பேர் கிடையாது. அனதை அவளு டைய தாத்தா பத்து வபதில் ங் கே கூட்டிவந்து அப்பா வோடு விளையாடச் சேர்த்தார்.
மனம் உரு க ச் பேசுவயன். அவள் மேல் மிகுந்த பாசம் கெர்ண்டிருந்தவன்.
"உன்னுடைய அப்பாவிற்கு நான் உயிர் நண்பன். சேவகன். அவர் ஓடின பிறகும் இங்கே இருக்கிறது உனக்காக்த்தான்" என்று மனம் உருகச் சொல்லு வான்g
கடைசியில் அவளுக்கு ஒரு கல்யாணம் பேசி முடித்தான். நாய் என்று பேசியது தகும் தான். ரேனுகாவின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது.
ரேனுகா அரைமணி முன்ன தாக வந்துவிட்டாள். அங்கொன் றும் இங்கொன்றுமாக தலைகள் தெரியத் தொடங்கின. மைதான ஒரம்ாக பெரிய மலைவேம்பின் அடியில் நின்ருள். இலைகள் ஆர வாரமின்றிச் சல ச லத் தன. மைதானத்தில் ஒரே ஒரு பையன் நின்றன். பந்தை எறிவதும் பிறகு அவனே போய் எடுத்த வருவதுமாக, ஒற்றை இழையாக ஒரு வேகம் நெஞ்சில் படர்ந்தது.
*வணக்கம்" கேட்டுத் திரும் பினள். வெகு அருகில் அரவிந் தன் நின் ரு ன். ஒரு கணம் அவனை ஏறிட்டுப் பார்த்து பிறகு பெருமூச்சு விட்டாள்.
22

Page 8
நோத்தோடு வ 165/oîl'ici கள் இல்லையா " என்றன்.
*ւն...... வீட்டில் நின்றுதான் என்னத்தைக் கண்டோம்" என் ருள்.
இலேசாக அவள் கண்கள் பனித்துப் போவதை அரவிந்தன் கண்டான்,
அரவிந்தனும் ஒரு டீச்சர் ரேனுகாபோல் கிராஜூவேட் அல்ல, ஒரு ரெயின்ட் ரீச்சர். அவனிடம் ஒரு வித்யாசமான ஆளுமை இருந்தது. நிறைய இலக்கியப் பரிச்சயம் உள்ளவன். இங்கிலீஸ் படி ப் பிக் கி ரு? ன். அசெம்ப்ளியில் அவன் பேசினல் கேட்க நன்ருயிருக்கும். ஸ்கூலில் அவனுக்கு நிறைய விசிறிகள் இருந்தார்கள்.
அரவிந்தனுக்கு கல்யாணம் ஆகவில்லை. வியது முப்பது. ஏன் இன்னும் ஆகவில்லை என்ருல் "இப்பொழுது என்னத்திற்கு, பிறகுபார்த்துக் கொள்ளலாம்" என்பான். அல்லது "சரியான ஒரு ஆள் ග්yර්ඛ) ன் ம் ಔ&_Âಕ್ಲಿ; ಇಜ್ಡ தோடு கல்யாணம் என்ற ஒரு ரிஸ்க், எத்தனை பேர் கல்யா ணத்திற்குப் பிறகு மிகவும் கஷ் டப்பட்டு மனம் வருந்துகிருர்கள் தெரியுமா என்பான் ரேனுகா வின் முகம் இறுகிச் சிவக்கும்.
ரேனுகாவின் முகத்தில் இந்த இறுக்கமும் கண்களின் சிவப்பும் அரவிந்தனை அடிக்கடி பாதித்தி ருக்கின்றன. அவளுடைய வாழ்க் கையின் அடித்தளத்தில் விபரிக்க முடியாத ஒரு சிக்கல் இருப்பது உண்மை என்று நம்பின்ை, இன் றைக்கும் அது மாதிரியே அவள் முகமும் ப தி லும் இருந்தன. விழியோரம் நீர் கட்டியிருந்தது.
"ஐ ஆம் சொறி . . ஏதா வது தப்பாய் கேட்டிருந்தால் மீன்னித்து விடுங்கள்"
'நீங்கள் என்ன கேட்டீர் கள்? நேரத்திற்கு வந்ததைப் பற்றித்தானே, வேறு என்ன?"
இல்லை ரேணுகா, மறைக்க வேண்டாம். நான் இதைப் பல தடவை சந்தித்து விட்டேன். நான் பேசுவது உங்களை மனங் கலங்க வைப்பதாக இருந்தால் இனிமேல் நான் உங்களுடன் பேசப்போவதில்லை"
*அரவிந்த்' என்ருள்.
'இல்லையென்முல், ரேனுகா! உங்கள் மனதில் உள்ள கஷ்டங் க்ளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லை என்ருல் அ ரித் துக் கொன்றுவிடும், க  ைற யா ன் மாதிரி. சொல்ல வேண்டும். ஒரு நல்ல நண்பனுக்குச் சொல் கிறமாதிரி"
அரவிந்த், சொல்லலாம். இவ்வளவு அக்கறைப்படுகிறீர் களே? என்ன காரணம்? என்
னுடைய இடத்தில் ஒரு அழகும் இல்லாத, ஒரு பெண் இருந்தி ருந்தால் அவளிடமும் இதையே கேட்டிருப்பீர்களா? சும்மாதான் கேட்கிறேன்" என்ருள், சிரித் தாள்.
அர வி ந் த், "அவலட்சண மான பெண் ஒருபோதும் துன் பப்பட மரட்டாள். மற்றவர் களைத் துன்புறுத்தி இன்பமே காண்பாள். அது வேறு பிரச் சினை. உனக்கு அழகுக் கர்வம் தலைக்கேறியிருக்கிற க. அதுவும் வேறு. ரேனுகா, சிலரிடம் மனம் காரணமில்லாமலேயே ஈடுபடுகி றது. அந்தமாதிரி நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. யெல் அடிக்கி றது, வருகிறேள் ரேனுகா"
Gussia. It வகுப்பறையை நோக்கிப் போக் பின்னல் ஒரு குரல். "மிஸஸ் தேவநாயகம்"
என்று கூப்பிட்டது. சவுக்கடி
属爵

பட்டமாதிரி திரும்பிப் பார்க்க,
கூப்பிட்டது மதுரம் ரீச்சர்.
*நாளைக்கு ப்ரோக்கிரும்
என்னமாதிரி?" என்ருள்.
புரோக்கிராம் மீது இ டி விழ. டூர் போகிருர்களாம்" நல்லது. நானும் வருகின்றேன் என்று சொல்லித்தான் இருந் தாள். ஆனல், மதுரம் ரீச்சரின் அ  ைழ ப் பு கோபமூட்டியது. இவள் ஒருத்திதான் இங்கே அவ ளுடைய புரு ஷ ன் பெயரை ஞாபகப்படுத்துகிருள்.
‘என்ன பேசாமல் இருக்கி நீர்கள்? மனது சரியில்லையோ?
உடம்பு சுகமில்லை" என் ருள். உஐ வில் ட்ரை கம் டுமோரோ " என்ருள் அன்றைக் குப் பாடத்தில் கவனம் செனுத் திப் படிப்பிக்க முடியவில்லை. அடிக்கடி அரவிந்தன் குறுக்கிட் டான். சாமர்த்தியமான பேச். சால் அவளைக் கிளறி அடிம னத்தை அறிய முயன்ற அவன் எண்ணம் புரிந்தது.
அ ர விந் த், ரேனுகாவை தானகவே சினேகிதம் செய்து கொண்டான். ஆ ர ம் பத் தில் அவன் தன் அழகில் கவரப்பட்டு வந்ததாகவே நினைத்தாள். நாட் செல்ல உண்மையில் தன் மன மும் ஒரு ஆண்மையைத் தேடு வதை உணர்ந்தாள். இந்த ஈடு பாடு அவளை பாதாளத்தில்
தள்ளப்போகிறது என்று நினைத்
துக் கவலைப்பட்டாள்.
மனம் ஆறவேணும் என்ருல் து ன் பங்களை நண்பர்களிடம் சொல்ல வேண்டும். அவனுக்கும் சொல்ல ஆசைதான். விளைவு எப்படி இருக்கும்.
"அரவிந்த், இரவில் தூக்கம் supraśaiv&su ” sin 6ör Lutt sit.
ஒரு
"மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். ஏதாவது வாசிக்க வே ண் டு ம். அல்லது உடல் களைக்க வியர்த்தாலும் நல்ல தூக்கம் வரும். ஏதாவது உடல் பயிற்சி அல்லது யோகாசனம் செய்யலாம்? “ என்பான்.
யோகா சனந்தான் நல்லது.
மன ஒருமையும் வரும் என்
BAFT687
எனக்கு யோகாசனம் தெரி யாதே அரவிந்த்”
"எனக்கு சில ஆசனங்கள் தெரியும். சொல்லித்தர முடியும்" என்பான். பிறகு சந்திப்பு அதிக மாகும், நெருக்கம் அதிகரிக்கு ம் அவன் அழகு, ஆண்மை, குணம் என்பவற்ருல் வேகமாக அவன் பால் ஈர்க்கப்படுவாள்.
அரவிந்த் மணம்ாகாதவன். புதுமலர் எங்காவது ஒரு மூலையில் அவனுக்காய் பூத்திருக் கும். உதிர்ந்த மலர்களைச் சூடச் சொல்லி அவனிடம் யார் கேட் பது? இம் பொழுதே அவனிடம் அதிக ஈடுபாடு கொண்டுவிட்ட தாய் ரேனுகா பயந்தாள்.
ரேனுகா உன் எண்ணங்
கள் போற போக்கு தப்பு" என்று
மனம் நூறுதடவை அடித்தா லும், மூலையில் ஒரே ஒரு துடிப்பு, அரவிந்த், அரவிந்த் என்று.
மாற்றம் வாங்கிக் கொண்டு அரவிந்தனை விட்டு வெகுதூரம் போய்விடலாயா? போகலாம், அரவிந்தனை மறக்கலாம். பிறகு போகிற இடத்தில் ஒரு ஆராவ முதன் வந்து நிற்பான். அவ னுக்கு எதிரி அரவிந்த் அல்ல, அாாவமுதனும் அல்ல, ஆண் கள். வெட்கம் கெட்டுச் சொன் ஞல் நல்ல திண்ணிய ஆண்கள், ! ஆண்கள் இல்லாத இடத்திற்கு
ஓடவேண்டும் என்று நினைத்துக்
கொண்டாள்

Page 9
மனம் தவித்தது. வியர்த்தது. மூடுபனிபோல் எத் தனையே எண்ணங்கள். அரவிந் தன், அம்மா சின்னத்தம்பி என்று குழப்பமான முகங்க்ள். கடைசியில் மதுரம் ரீச்சர்.
தேவநாயகம், அவளை அரை குறையாய் எச்சில் படுத்திய, மெய்க்காவலன். தணலை ஊதி நெருப்பாக்கி, பற்றிக் கொண்ட பிறகு நீரூற்றி அணைக்கத் தவறி
6.
பள்ளிக் கூடத்தில் இருக்கப் பிடிக்காமல் அரை நாள் வு போட்டுவிட்டு பஸ்ஸில் ஏறி ஞள். புறப்படுவதற்கு முன் * வீட்டிற்குப் போய் என்ன செய் வது என்று யோசித்தாள், கிள்ம் பிய புயல் அடங்கியிருக்காது. எங்கே போவது "மிஸஸ் தேவ நாயகம்!"
"தேவநாயகத்திடம் போனல்
என்ன? புயலின் உக்கிரத்தில் ஒருதடவை ஆடட்டுமேன்?" இறங்கினுள்,
பஸ் மாறினுள்
வீட்டு வாசலில் பிரவேசித்த பொழுது நாய் குரைத்தது. அதே நாய்க்கு அவளைத் தெரிந் திருக்க நியாயமில்லை. இரண்டு நாள் தங்கியிருந்த பொழுதும், நாய் கவனித்திருக்காது. எச்சில் இலை பொறுக்கப் போயிருக்கும். அவளுடைய அவருக்குக் கூட அவளை மறந்து போயிருக்கலாம். ஒரு கெட்ட கனவை மறந்து எழுவது போல, ஞாபகப்படுத்தி ரணப்படுத்தி, குதறிவிட்டுப் போகத் தான் வந்திருக்கிருள்.
சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. கண் கொத்திப் பாம்பாய் அக்கா அவனிைச் சுத்றிக் கொண்டிருந் தாள். அவள் நே. ய்க்கு மருந்து கொடுக்கிருளோ, அல்லது அற்ப சொற்ப உழைப்பைப் பிடுங்குகி
உடல்
கெ டு வெ ன் று
முளோ தெரியாது. தம்பியைப் பற்றி பெரிதாய்ப் பேசுகிறதில் மட்டும் அக்காவான அவளுக்கு
நிகரில்லை. இன்றைக்கு அவளைக்
காணுேம். ஒரு த் த ரை யும் காணுேம். சத்தம் கேட்டு யாரது என்று? அது மட் டு ம் குரல் கொடுத்தது.
"நான்தான் ரேனு கா மிஸஸ் தேவநாயகம்" என்ருள். இள்றைக்கு அ வ னு க்கு ஒரு
"டோஸ் கொடுக்க வேண்டும்
என்று நினைத்தான்.
அவளைக் கண்டதும், ஈஸி செரில் இருந்து பரபரத்தான். முகத்தில் வியர்வை பூத்தது. புஷ்டியால் வளர்ந்த , இந்த அழகு அவ னுக்கு என்று சொந்தமாயிருந் தது? இப்பொழுதுமட்டுமென்ன? ஆளத்தான் முடியவில்லை. ஆனல் ஆ  ைச விடாததால் அயர்ந் தான்.
*எப்படி இருக்கிறீர்கள்? அக்கா பிள்ளைகள் எங்கே? ஒரே புழுக்கமாயிருக்கில்லையா? வியர்த் திருக்கே, துடைத்துவிடவா?" என்று முந்தானையைச் சரிக்க, மார்புகளில் பதித்த பார்வை யைத் தவிர்க்க முடி யா ம ல் த வித் து. பெருமூச்சுக்களாய் விட்டான்.
"நான் ஒரு நல்ல மனைவி யாய் நடந்துகொள்ள வில்லையோ என்று நினைத்து எனக்குத் துரக் கமே வருவதில்லை. உங்களைத் தொடத்தான் முடியாது, என்னை முழுசாய்க் காட்டவாவது வேண் டாமா? என்று தவிப்பு. ஆனல் என்று நிறுத்தி, அவனைப் பார்க்க அவன் பலவீன மனம் எதிர் பார்ப்பிலும் , பய த் தி லும் தவிக்க, மனதுள் பெரி தாய் அகலமாய்ச் சிரித்து, ஒவ்வொன் ருய் கழற்றி இது சாரி, இது ப்ள வுல், இது ப்ரா, இது uravirgol- éTeirgy... ... , i.
A

பெரிது பெரிதாய் மூச்சு வாங்கி விழி பிதுங்கினன்
"பிசாசே போய்விடு" என்று கத்தினன். அடிவயிற்றிலிருந்து இழுப்புப் பிடித்து இருமி இருமி குரல் வெளியில் வராமல் தடு மாறி, "போ சளிய ன போய் விடு" என்று பரிதவித்துக் கத்த,
இல்லையா, என் வாழ்க்கையைக கெடுத்தாயே! போதுமில்லையா? நான் பிசாசு தான், ஏ ழ  ைர ச் சனிதான். போய்விடுகிறேன், இனிமேல் இந்தப்பக்கம் வராமலே போய் விடுகிறேன், விடுதலை தருவாயா? விடுதலைப் பத்திரத்தில் கையெ ழுத்து வைக்கிருயா?*
"போதும்
கொச்சையாய் \ கேட்டாள், "சம்மதித்து விட் டான்' என்று சொன்னபோது "நீயும் ரு பெண்ணு" என்று அம்மா ட்டினுள்.
*பெண்ணுகி வந்த மாயப் பிசாசு" என்ருள் ரேணுகா.
இரவு வெகுநேரம் தூங்கா மல் புரண்டாள். பிறகு அரை குறைத் தூக்கத்தில் கனவு கண் டாள். கனவிலும் ரேனுகா வந் தாள். அவள் ச  ைட நிலம் தொட்டுப் பின்னும் நீண்டது, ஆக்ரோஷமாய் முகத்தில் இரத் தம் கொப்பளிக்க, சூலத்தில் புதிதாய் இரத்தம்
சொட்டச் சொட்டக் குத்தப் பட்டுக் கிடக்கிற தலைஈளைப் பார்த்தாள். அம்மா, சின்னத் தம்யி, தேவநாயகம். அவள்
அருவருப்புடன் சூ லத்  ைத த் தாக்கி எறிய, மனம் உடன் சாந் திப்பட்டு கீழே மோனத்தவத் தி ஆழ்தியானத்தில் ஒருபக் தன். அரவிந்தன், அரவிந்த்!
"ஒ நீயா, இனக்கு என்ன வரம்தர என்று கேட்க
கையில் திரி
தேலீ நீயே எனக்கு வேண் டும்" என்று யாசித்தான்.
பூமி, பச்சை வெளியில் சுழன்று கொண்டு, உள்ளே எரி மலே குமுறிக் குமுறி, ஒரத்தில் பலவீனமான இடத்தில் வெடித் துக் குபு குபுவென்று சிகப்பாய் நெருப்பாய் ஒட, ஒரு வாலி த ன் னியா ல் முழுவதையும் அணைத்து, அணைத்து,
விழித்துக் கொண்டாள்.
அறை முழுவதும் மையாய் இருள் மண்டிக் கிடந்தது. எது தலைமாடு. எது கால்மாடு என்று புரியவில்லை. தலைக்குள் கிர்ரிட் டது. உடல் தெப்பமாய் வியர்த் துப்போய் நச நசவென்று நைட் கவுன் ஒட்டியது. இரவு பன்னி ரண்டு அல்லது ஒன்று. சாமக் கோழி கூவியது. கனவு ஏன் அப்படி வந்தது. இவர்களின் மேல் ஈவிரக்கமற்ற T வெறுப்பு இருப்பதினலா? அ ர விந் த ன் தான் உள்ளத்தில் வள்ளிசான" ஒரு முக்கியம் என்ற நினைப்பி ஞலா? எண்ணங்கள்தானே இர வில் கனவாய் துன்பம் தரும்?
மன தி ல் இன்னும் பயம் இருந்தது. மேசை விளக்கைப் போட்டாள். கட்டிலிலிருந்து இறங்கிய பொழுது தலை சுற்றி யது. சுரத்தில் படுத்தவர் மாதிரி உணர்ந்தாள். இரண்டு கிளாஸ்
தண்ணிர் குடித்தாள். உடம்பு அணலாய்ச் சுட்டது.
இந்தச் சங்கதிகளுக்கெல்
லாம் முடிவு எது? என்னுடைய வாழ்க்சுை எப்படிப் போகப் டோகிறது? இந்த மாதிரி ப் போனல் நரம்புத்தளர்ச்சி வரும், பைத்தியம் கூடப் பிடிக்கலாம். உடல் வற்றிப் போய் கண்கள்

Page 10
குழிவிழுந்து, இந்த மதாளிப்புப் ப்ோய் சோகை குடிகொண்டு விடும். அரவிந்த் நான் உன்னி Lம் சொல்லிவிடப் போகிறேன் எனக்கு நீதான் கதி என்று மனதுள் புலம்பினள்.
பிறகு தூக்கம் வரவில்லை. உ த் தரத் தைப் பார்த்துக்
கொண்டு படுத்திருந்தாள். உத்
தரத்தில் அரவிந்தின் முகம் போல் தெரிந்தது. இலூஷன் அப்படி இருந்தால்தான் என்ன?
அரவிந்த் நான்
போகிறேன். கேட்டுவிட்டு , tổ எ ன் ன சொல்வாய்' என்று அரற்றினள்.
ரேனுகாவுக்கும் தனிமைக் கும் நிறையத் தொடர்பு இருந் தது. அந்தப் பெரிய வீட்டில் அ வளு ம் சின்னத்தம்பியும் அம்மாவும் தவிர வேறு யாரும் காணப்படுவதில்லை. அவளுடைய அப்பா இருந்த காலத்தில வீடு வருவோர் போவோர். நிறைந் திருக்குமாம், அவர் ஒடிப்போன பிறகு ஒருவரும் இல்லை. இவ் வளவு பெரிய வீட்டை யும் சொத்தையும் விட்டுவிட்டு ஏன் ஒடிப்போனர் என்று நினைக்கக் கஷ்டமாயிருக்கிறது. அம்மாவின் ஆசாட பூதித்தனம்தான் காரண மாய் இருக்க முடியும். படிக்கி றது தேவாரம். இடிக்கிறது எதுவோ என்கிற மாதிரி இந் தக் சிவ பூ  ைச ருத்திராட்ச அம்மா என்னை இந்தப் பாடு படுத்திறமாதிரிக்கு ஆப்பாவை என்ன பாடு படுத்தியிருப்பாள் என்று ரேனுகாவுக்கு எண்ணம். அம்மாவுக்குப் பயந்துதான் ஒரு வரும் இங்கே வருவதில்லை என்று நினைத்தாள்.
அம்மா அப்படி என்னதான் வெட்டிப் புடுங்கிவிடுவாளோ தெரியாது. அவங்களுக்குப்பாம். அல்லது வெறுப்பு. எதுவென்ரு லும் அவள் தனித்துப்போய்விட
சொல்லிவிடப்
ஆலோசனை கேட்க ஆளில்லாமல் போய்விட அம்மாவின் இது மாதிரி ஏதோ ஒரு தனம்தான் காரணம். அவள் வரையில் கூட உண்மையாய் இருக்கிற பொழுது,
அனுபவத்தால் பட்டு விட் பிறகு அது மிகையாகவே உறுத் துகிறது.
எத்தனை வயது என்று ஞாப கமில்லை, சின்ன வயது. ஏதோ சில நாட்கள் அபூர்வமாய் ஞாப கத்திற்கு வந்தன. சின்னத்தம் பியை அப்பொழுதும் அவளால் உருவகப்படுத்திக் கொள்ள முடிந்ததுE அவளுக்கு தோட்டத் தில் தென்னந்தோப்பில் வேலை யில்லாவிட்டால் அ வளை த் தொட்டு விளையாட்டுக் ஒாட்டு வான்"
* சரிதான் இப்படிச் செல்லங் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடுவாள்' என்று அம்மா திட்டு வாள். தனிமை. கொடூரமான g5 Gof GOLD . விளையாடுவதற்குத் துணை யில்லாமல் பலாவோடும் மாவோடும் பேசிக் கொண்டு பின்னல் தென்னந்தோப்பினுள் சுலபமாய் காணுமல் டோவா ஸ். குரும்பட்டி பொறுக்கி ஈர்க்கால் குத்தித் தேர் செய்து கைகள் கறைப்பட்டுப் போகும்.
கையெல்லாம் என்னடி?” என்று அம்மா கேட்டாள் உத றல் எடுக்கத் தொடங்கும்.
பள்ளிக்கூடம், சின்னத்தம்பி தான்-கொண்டுபோய் விடுவான். கூட்டி வருவான் சின்னத்தம்பி ஒரு நல்ல குதிரை. சுகமாய்ச் ச வாரி செய்யலாம். ஆணுல் இறங்கி ஓட முடியாது. மற்றப் பிள்ளைகள் மாதிரி ஒவென்று அடிக்கிற காற்றில் கிளம்பிப் பறக்கிற "புழு தி  ைய நெஞ்சு முட்ட இழுத்து, "ஒன்றும் ஒன் றும் இரண்டு, இலந்தைப் பழத் தைத் தின்னு" என்று பாடமுடி
6

Ամո Ցil. தோளில் சிறை வைக்கப்பட்டி ருப்பாள்,
*அரவிந்த் அம்மா தான் எப் படித் தனிமையில் இருந்தாளோ அது போல் என்னையும் தனிமை யாக்கினுள்"
ஒரு வேலி, முள்ளுக்கம்பி யால் அடைத்து, இந்தப்பக்கம் ரேனுகாவின் தென்னமரங்கள், அந்தப்பக்கம் அவள் சினேகிதி யின் மிளகாய்ச் செடிகள்,
*ரேனுகா, வீ ட் டு க் கு வா வேன் விளையாடலாம்"
,வேண்டாம், பிறகு அம்மா
அடிக்கும்"
"டக்கென்று வந்திடலாம், மெல்ல மா ய் இதுக்குள்ளால் வrவன்?
வேண்டாம், அம்மா அடிக் கும் பயத்தில் ரேனுகா சிவந்து, விளையாடப் போகவும் ஆசைபாய் இருந்தது. LDITfL)g)! வழிக்கு மனம் தவித்தது.
"நீ இந்தப்பக்கம் வந்து விடேன்? உன்னுடைய அம்மா அடிக்கமாட்டாதானே?
வந்துவிட்டாள். வும். அவளும் ஆறுவயதுக்குரிய அசட்டைத்தனமான விளையாட் டுக்களில் மனம் மகிழ்ந்துபோய், ரேனுகா என்று அம்மா கத்தி யதையும் கவனிக்காமல் அம்மா கண்டுவிட்டாள்.
*இந்தச் சனியனை எல்லாம்
ஏன் சேர்க்கிருய்" என்று லொட்
டென்று குட்டினள். அவள்
வலியில் துடித்துப்போய் வீரிட
அம்மா நேரே அந்தக் குழந்தை யைப் பிடித்து மிரட்டி காதில் பிடித்து முறுக்கி, "இந்தப்பக் 8ம் வராதே" என்று விரட்டினள்.
சின் ன த் தம் பி யின்
"ரேனுகா
தண்டணையை மெளனமாய் அது தாங்கியது. அழு தா ல் அதன் அம்மாவுக்குக் கேட்கும். பிற கு ஏன் போனப் என்று அடிக்கும், அப்பா வந்ததும் சொல்லி இன்னும் அடிவிழும் என்று இலாப நட்டக் கணக் குப் புரிந்த குழந்தை ஆறு வயது. ரேனுகாவுக்கு நெஞ்சில் ரத்தம் சொட்ட எதுவோ ஒன்று உடைந்து போயிற்று. வலியைத் த ரா நீ கி ச் கொண்டு விசும்பி விசும்பி மெதுவாய் முள்வேலி யைக் கடந்த அதைப் பார்க்க நெஞ்சு வேகிப்போய்"
"அரவிந்த், மீண்டும் அப்படி ஒரு நிலைமை ஒருவருக்கும் ஏற் பட நான் விடவில்லை. பள்ளி யில்கூட எனக்கு உற்ற சினேகி திகள் என்று இல்லை. நான் தனி. என் உலகந் தணி. தனிமை யாக்கப்பட்ட தனி. தனிமையை விரும்பாத தனி ஆள்"
பிறகு இரண்டாவது முரண் பாடு அவள் பூத்த காலத்தில் வந்தது. தலையில் த ன் னிர் வார்க்க தாய்மாமனில்லை, உடுத் திவிட உற்றவர்கள் இல்லை, முப்பத்தொரு நாள் வீட்டுச குள் இருந்து தீட்டுக்காத்து தலைக்கு முழுகியதோடு சரி. நான் மட் டும் தனி இல்லை. அம்மாவும் இந்தச் சின்னத்தப பியும் கூடத் தனிதான் என்று பரிதாப ம் தோன்றியது.
ஆணுல் எல்லாப் பரிதாபங் களும் அம்மாவின் செய்கைக ளால் உதிர்ந்து போய்விடும்.
பாவம் ரேணுகா. உற்றம் சுற்றம் வந்து கூடிக் கொண்டா டிப் பெரியவளாகக் கொடுத்து வைக்கவில்லை. ஆக்கள் இல்லை யென்ருலும் பரவாயில்லை. ஒரு காலத்தில் எத்தனை ஆளடக்கு? எல்லாம் இந்த மனுசியால் வந் தது. யாரும் ஒரு பிள்ளை போய்

Page 11
அந்த வீட்டிலே தண்ணீர் குடிக் கக் கூடிய மாதிரியே இருக்கிருள்.
அன்று அவள் மேல் பரிதா பப்பட்டு, அதே சமயம் அம் மாவை கரித்துக் கொட்டி இரட் டைச் சந்தே கக் குரல்கள்
காதில் விழும்பொழுது இவர்கள்
சொல்வதில் உண்மை இல்லா மல் இல்லை என்று மனம் அங்க லாய்க்கும்,
அம்மா ஏன் இப்படி? என்று தலையை உடைத்துக் கொள்வ தில் வ ய தும் கழிந்ததுதான் கண்ட மிச்சிம்3
அம்மா என்றதுமே மயிர்க் கால்கள் எல்லாம் நிமிர் ந் து எச்சரிக்கைச் சுரப்பிகள் இயங்கி, இதயம் படபடவென்று அடித்து மூச்சுப் பெரிதாய் விட்டு நடுக் கம் பரவும்.
அவள் அம்மாப்பிள்லை ஆகி
விட்டாள். இப் படி த் தா ன் உடுக்க வேண்டும், இப்படித் தலைபின்னு, இந்தப் புத்தகங்
களைக் குப்பையில் போடு, இவற்
டில் நில்.
றைப் ப்டி, இந்த நேரம் வீட்
அம்மா ஸ்போர்ட்ஸ் மீட்,
பிராக்டீஸ். நாலரை மணிக்குத்
தான் கேட் திறக்கிறது வர வேண்டும்.
"அது யார் கேற் பூட்டிமறிப்
பது? ரேனுகா ஸ்கூல் பஸ்ஸில் வீட்டிற்கு வந்து சேரவேண்டும். பிந்தினுல் உனச்குப் படிப்புக் கிடையாது.
பிந்தக்கூடாது, பிறகு ப்டிப் பில்லை. கொஞ்ச நேரமாவது வெளிக் காற்றுப் படும் சந்தர்ப் பம். அதை இழப்பது நல்லதல்ல. மூன்றரைக்குப் பள்ளிக்கூடம் விட்ட்தும் மெயின் கேட்டிற்கு வந்தால் துரைமாஸ்டரும் அட்
8
வான்ஸ் லெவல் படிக்கிற பெடி யன்களும் பெரிய அரண்போல் நிற்பதைக் கண்டு பிரமித்துப் போய் தயங்கித் தயங்கி நின்று"நான் போகவேனும் "எவ்வளவு பிள்ளைகளும் நிற் கினம்தானே? உனக்கு மட்டும் என்ன?"
"நான் போகவேணும்"
"வீட்டுக்குப் போய் என்ன செய்ய ப் போகிருய்? டியூஷ னுக்கா?"
'இல்லை வீட்டிற்குத்தான்"
ஸ்கூல்பஸ் வந்து நிற்கிறது. வெளியில் சனம் ஒருவருமில்லை.
புறப்படப் போகிறது. அவள் விழியோரங்கள் நீர் கட்டி ப் பெருகி, "கடவுளே' என்று
மனம் ஆயிரம் தடவை வேண்டி "சேர் நான் போகப் போகின் றேன்" என்று அழத்தொடங்க
அரவிந்த்! என்ன வெட்கக் கேடு? 'சரி இவளை விடு" என்று மாஸ்டர் சொல்லியது. கேட் திறந்தது. புறப்படப் ப்ோன பஸ்ஸை ஒருத்தன் கைதட்டி மறித்தது. ஒடின பொழுது உதிர்ந்த புத்தகங்களை ஒருத்தன் ஒடி ஒடிப் பொறுக்கிக் கொண்டு வந்து தந்து பஸ் ஏற்றி விட்டது: ற கு பஸ் கொண்டக்டரின் "என்னவோ ஏதோ" என்ற புரி தாபப் பார்வை. நான் அந்த இடத்தில் பெரியதுயர நாடகம் ஒன்றை நடத்திவிட்டேன். பிறகு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டதும் வாசலுக்கு வருவேன் கதவுகள் திறந்து கொள்ளும். அந்த இட ம் தாண்டுமட்டும் அழுகையும் தன்னிரக்கமும் என் னைத் தவிக்க், வைக்கும்.
வீட்டில் இருந்து நினைத்து நினைத் து மறுகி அழத்தான்

முடிந்தது. சமுதாய ஒட்டத்தில் இருக்கிற நான் கொஞ்சமாவது ஒத்துழைத்தால்தான் சேர்ந்து ஒடலாம் என்று அம்மாவிடம் சொல்லலாமா? சொன் ஞ ல் பிய்த்து உதறிவிடமாட்டாளா? பேச்சுவார்த்தை  ைவத் து க் கொள்ளப் பயம். என்ருலும்
ஒரு இடத்தில் முரண்டிப் பார்த்
தாள.
"அம்மா சனிக்கிழமை ஒரு * எக்ஸ்சுேர்வுள்' போகிருர்கள்"
என்னது?" "டூர் மாதிரி. படிப்போடு சம்பந்தப்பட்டது. கட்டாயம் போகவேனும்
*கண்ட கண்ட இடத்திற்
கெல்லாம் போகவேண்டாம்"
"இது கண்ட கண்ட இடம் இல்லையம்மா"
*பொத்து வாய்! எனக்குச் சொல்ல வெளிக்கிட்டுவிட்டாய்! போகக் கூடாது எ ன் ரு ல் கூடாது"
விடமாட்டாள் என்று தெரிந் தும் முரண்டினுள். மூன்று நாள் பட்டினி. தாய்மையின் பாலும் ஏதோ ஒரு மூலையில் க சி யும் என்று காத்திருந்தாள். அப்படி ஆகவில்லை. கடைசியில் "எதற் காகச் சண்டை தொடங்கினேம்" என்றதையே மறந்தாள். அந்த நேரப் பிரச்சினை தலைகீழாய் ம்ாறிலிட்டது. m
சின்னத்தம்பி ஒரு நா ள் முழுதும் சமாதானம் செய்தான்.
அம்மா சாப்பிட்டால்தான் சாப்பிட வருவன்"
"கொழுப்பு அடங்கின பிறகு வ ர ட் டும் சாப்பாடு போடுகி றேன். இப்ப விட்டால் பிறகு துகளைத் திருத்த முடியாமல் பாய்விடும்?
'வும்
ரேனுகாவின் கொழுப்பெல் லாம் அடங்கி நிபத்தனை எதுவு மின்றி சரணுக்தி அடைந்தாள். பிறகு பள்ளிக்கூடம் போவதற் கென்று அம்மா நிபந்தனைகள் போட்டாள். எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டி தலை யசைக்க வேண்டி வந்தது. அத் தோடு அவள் அம்மாப்பிள்ளை ஆணுள்.
அரவிந்த்! என்னுடைய ஒரே எதிரி, என்னுடைய அம்ம்ா தான். ஒரே ஆதரவு என்னு
டய அம்மாதான். அவளை
வறுத்தேன். ஆனல் அம்மா விற்கு மிகவும் பயந்தேன். அம்மா இல்லாத இடத்தில் கூட அம்மா வுக்குப் பிடிக்காததைச் செய்யப் பயந்தேன். சுயவேறுப்பு மண்டி பல சமயங்களில் இனம் தெரி யாத மன விரை யங் களை க் கொண்டுவரும். இதையெல்லாம் விட்டுவிட்டு தேசாந்தம் போய் விட வேணும் போல இருக்கும். விட்டுவிட்டுப் போய் எ ன் ன செய்வது? தமிழ் க் கன்னிப் பெண்ணுன நான் அம்மாவை
விட்டு தெருவில் நிற்கமுடியுமா?
யா ரா வது ஒரு துணையைத் தேடிக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம். ஒரு வருஷம் அல் லது இரண்டு வருஷம் போன லும், பிறகாவது நிம்மதியாயி ருக்கலாம். இதைத் தவிர வேறு என்ன வழி?"
ரேனுகாவுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, அவளு .ை ய ராஜகுமாரன், பஸ்ஸில் அவளைத் தொடர்ந்தவன். நிறை
யக் கனவு கண்டு, நிறை ய க்
கற்பனை செய்திருப்பானே என் னவோ. பின்னல் திரிவதில் மிக தீவிரமாக இருந்தான். "என்னையும் ஒருவனுக்குப் பிடித் திருக்கிறதே" என்று ரேனுகா வுக்குப் பெருமை. எனக்கு என்ன குறை? உடைகள்தான் கொஞ்
9

Page 12
சம் கர்நாடகம்" என்று நினைப் Lirr Gir.
கதைப் புத்தகங்கள் தருகிற அளவிற்கு வந்தது. நல்ல ஆபா சமில்லாத காதல் கதைப்புத்த கங்கள். பின்னல் அந்தப் புத்த கங்கள் அவனுடைய கடிதங்களை யும் சுமந்து வந்திருக்கக் கூடும். அவள் எழுதுகிற ப தி லு ட ன் திரும்பிப் போயிருக்கக் கூடும். ஆனல் க்தை இடையில் முறிந்து விட்டது.
அம்மா புத்தகத்தத எடுத்து
*ஆருடையதடி இது?"
ரேனுகா, பொய் சொல்லு வது எவ்வளவு கஷ்டம் என் பதை அன்றைக்கு உணர்ந்தாள். சுலபம்ாக மாட்டுப்பட்டு புத்த கம் தீக்கிரையாகிப் போயிற்று.
பிரச்சினை, ராஜகுமாரனுக்கு என்ன சொல்வது. தொலைந்து போம் விட்டநு. அல்லது கறை யான் அரித்து விட்டது. அல்லது ஏதாவது, ஏதாவது ஒரு சாட்டு தல். தேடினுள், அலுத்தாள். ராஜகுமார், அம்மா இப்படிக் செய்துவிட்டாள். இனிமேல் புத் தகம் வேண்டாம் என்று சொல் லியிருந்தால், அவன் தொடர் பைத் தொடர வேறு வழி க்ையாண்டிருப்பாள். விடுதலை கிடைத்திருக்கும். ஆனல் அம்மா அடித்தாள்.
அவன் அவளுடன் பேச மிக வும் முயன்ருன். அவன் எங்கே கேட்டுவிடுவனே என்று பார்ப் பதையே தவிர்த்தாள். அப்படி ஒருவனைத் தெரியும் என்பதையே அறியாதவள் போல் மிக இயல் பாக நடித்தாள்.
கொஞ்ச ' நாள் பின் ஞ ல் அலைந்து திரிந்துவிட்டு காணுமலே போனன்! ரேனுகாவை அதிகம் தாக்காத விஷயம் என்ருலும்
0.
புத்தகத்தை எரித்ததில் உள்ள குரூாத்தன்மையை வெறுத்தாள். அவளுடைய உடைகளை எரித்த பொழுதுகூட இவ்வளவு கவலைப் படவில்லை.
வீடு நரகமாகி விட்டது. யார் செய்வது பிழை, யார்
செய்வது சரி என்பதே தெரியா
மல் போய்விட்டது. ரேனுகா வுக்கு விடுதலை தேவைப்பட்டது, அம்மாவின் ராட்ஸஸத்தனத்திலி ருந்து, சின்னத்தம்பியின் ஆமாம் சாமித்தனத்திலிருந்து, வீடு என் கிற நரகத்திலிருந்து கொஞ்ச நாட்களுக்கென்ருலும் விடுதலை
வேண்டும் என்று நினைக்க ஆரம்
பித்தாள்.
"ரே னு கா, நாளைக்கு நீ பல்கலைக்கழகத்திற்குப் போகி ருய். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு, வெளிக்காற்றில் இருக்கப்போகிருய். ஒள்நு மட் டும் ஞாபகம் இருக்க வேண்டும்.
இவ்வளவு காலமும் இருந்ததிலி
ருந்து இம்மியும் பிசகாமல் நட, அது நல்லது" என்று அ வ ள் யூனிவெஸிடிக்குள் நுழைவதற்கு முதல் நாள் சொன்னுள். மூன்று வருடம் அந் த வார்த்தைகள் அவள் பின்னலேயே வந்தன. துணை நின்றன என்பதைவிட அச்சுறுத்தி வந்திருந்தன என்று சொல்வதுகூட அர்த்தமானது.
அம்மாவை விட்டு தற்காலி கப் பிரிவு, அம்மாவைப் பற்றிய சில நல்ல விஷயங்களை சிந்திக் கத் தூண்டின. ஒரு சராசரி அம்மாவுக்கும் அ வ ளு க் கும் இடையில் என்ன வேறுபாடுகள் இருக்க முடியும் என்று சிந்தித் தாள்.
எ ல் லா அம்மாக்களையும் போல்தான் இருக்கிருள். கட்டுப்
பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
ஒழுங்காக உடுத்த வேண்டும். நல்லவற்றை வாசிக்க வேண்டும்,

கெட்ட சினேகிதங்களைத் தலிர்க்க வேண்டும் என்பது போல் உப தேசிக்சாத, அம்மாக்கள் இன் றைக்கு யார் இருக்கிருர்கள்? இவள் என்னுடைய அம்மா, சில விஷயங்களில் கொஞ்சம் கூடுதலாகவே கண் டி ப்  ைபக் காட்டுகிருள். பாவம், தகப்பன் இல்லையே என்ற கவலையை அறி யாமல் இருக்கவும், தறிகெட்டு அலையவிடக் கூடாதே என்ற அக்கறையும் அளவுக்கு மீறிக் கண்டிக்க, விட்டுக் கொடுக்கா மல் இருக்கக் காரணமாயிருக்க லாம் என்று நினைத்தாள். வீட் டுக்குள் பூட்டிவைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால். மேல்படிப்புக்கு அனுமதித்திருக்க மாட்டாள் என்று அம்மா பற்றி பலவாறு சாதகமாகக் கற்பனை செய்து, அபிப்பிராயங்களை உரு வாக்கி, அம்மாவோடு மிகவும் அன்பாக நடக் க வேண்டும். இது வ  ைர பட்ட கவலைகளை துடைக்க வேண்டும் என்றெல் லாம் நினைத்துக் கொண்டு வீட் டுக்கு வந்தால், ஒரு தனி மன தின் இரகசியங்களைப் புரிந்து கொள்வது எவ்வளவு அசாத்தி யம் என்பதை ரேனுகா கண் டாள்.
அரவிந்த் அம்மா எனக்கு ஒரு தவிர்க்க முடியாத தலைவலி; உடன் இருந்து கொல் கிற வியாதி. நஞ்சைப் பாலென்று சங்கில் தருகிற நச்சுத் தாய். மனத்தின் இருட்டு மூலைக்குள் பதுங்கி இருந்து தலையை விரித்து சுண்ணைப் புரட்டி கோ, கோ வென்று என்னை ஆட்டுவிக்கிற பிசாசு.
கனவோ, நினைவோ என் றில்லாமல் இருந்தாற் போல் உத்தரத்தில் அரவிந்தன் மறைந் கான். அறையின் இரு ண் ட மூஃலயில் ஒரே ஒரு ஒற்றை வேப்பெண்ணை விளக்கின் ஒளி qu'il av grubudsrufu (6), 69) is us? 6io
ஆசிரியை.
கழுத் தி ல் உருத்திராச்சமும்,
கையில் உடுக்கும் எ டு த் து க்
கொண்டு அம்மா, தம், தம், தமுக்கு, தம், தம், த முக்கு என்று உடுக்கின் ஒலி சடுதியில் அதிர்ந்து அதிகமாகி ச கி க்க முடியாமல் விழித்துக் கொண் டாள்.
கதவில் தடதடப்பு, விடிந்து விட்டது. அம்மா!
கட்டிலை விட்டு எழும்பிய பொழுது உடம்பு சு ரத் தி ல் கிடந்தமாதிரித் தள்ளாடியது. இன்றைக்கு டூர் போக அவளை அழைத்திருந்தார்கள் என்பதை மறந்தாள். வாழ்க்சையில் எந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்பது பற்றி சிந்தித்து சிந்தித் துக் குழம்பினள்.
ரேனுகா, ஒரு பட்டதாரி கிறுக்குப் பிடித்த, அழகான நன்கு அமைந்த உயர மான பெண், கல்யாணமாகி புருசன ஒரு மாதத்தில் கலைத் தவள். வாழாவெட்டி! இவைகள் கடந்தகாலம் பற்றியவை. இத் தனை முத்திரைகளோடு அவளின் முன் எதிர்காலம் நின்றது. மன தில் அரவிந்தன் நின்றன்.
இன்றைக்கு அவள் போகா விட்டால் கட்டாயம் அரவிந்தன் இங்கே தேடி வரவேண்டும், வருவான.
எதிர்பார்த்தாள். குளிர்ந்த நீரில் முழுகினள். நல்ல சுத்த மான உடைக்குள் பகுந்தாள். நெற்றிக்கு விபூதி இட்டு, ஒரு பக்தைபோல் காந்திருந்தாள். நேரமாக ஆக மனம் தடதடக் கத் தொடங்கியது. அரவிந்தன் வராவிட்டால் எல்லா எண்ணங் களும் பாழ். தட தடவென்று மனதின் ஒசைக்கு லயம் போட்டு மோட்டார் சைக்கிலில் அரவிந் தன் வந்து சேர்ந்தான்.

Page 13
*ஹே! விட் ஹப்பின்ட் ரூ
'ஒன்றும் ஆகவில்ல்ை அர விந்த், உனக்கா சுத்தான் காத் திருக்கிறேன்"
"நான் வருவேன் என்று எதிர்பார்த்தாயா?"
"நிச்சயமாக" என் எ ன் ன ம் வீண்போக வில்லை. அம்மா யதேச்சையாகப் போய் எதிர் ப் பட, "இவர் அரவிந்த் டீச்சர், முப்பது வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை" என்று அறிமுகப் படுத்திச் சிரித்தாள். "இரண்டு பேருக்குமாக கோப்பி போடு Siguur?“ -
அம்மா அந்தப்பக்கம் போன பிறகு, "அது என்ன புதுமை யான அறிமுகம்" என்று கேட் டான்.
"அம்மாவுக்குத் தேவையா னதைத்தான் சொன்னேன். ஒரு ஆண்பிள்ளை, கல்யாணமான கன்னிப் பொண்ணை மாலை வேளை யில் பார்க்க வருவதென்ருல்? இதுமாதிரி விபரங்களை அறிந்து  ைவத் திரு க் கிற து நல்லது தானே??
"கல்யாணமான பெண்" கொன்றடிக்சன்,
"அதுதான் சொல்லிவிடுவதாக உத்தேசித்து விட்டேன். கொஞ்சம் கொஞ்ச மாய் சொல்கிறேன். பிறகு, கேட்டபிறகு, எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும், செய்வாயா"
கன்னிப்
"நிச்சயமாக" என்ருன்.
கோப்பி குடித்தார்கள்.
"இன்றைய மாலை புழுக்க மாக இல்லை? நாங்கள் என்னு டைய சாம்ராச்யத்தில் உலாப் போகலரம் அப்பொழுது சொல் கிறேன்"
எ ன் ரு ள்.
உன் னி டம்
அம்மா அரவிந்தனை உற்று, உ ற் று, கணக்கெடுக்கிறவள் மாதிரிப் பார்த்துக் கொண்டு திண்ணையில் இருந் காள். மிக மெதுவாக அலர்கள் பே சிப் பேசிக் கொண்டு பின்வளவுக்குள் பிரவேசிப்பதைக் கண் டா ள். இவன் யார் புதுப்பிரச்சினை என்று மனம் கேட்க, நெஞ்சில் இரத்த ஊற்று எடுத்தது.
'இது கிணற்றடி, மழைக் காலத்தில் கயிறு இல்லாமல் வாளியால் குனிந்து தண்ணிர் அள்ளலாம். ஆழம் குறைந்த கிணறு, கிணற்றடியைச் சுற்றி இந்த உயரத்திற்கு மதில் கட் டின மாதிரி வேலி ஆடைக்கி றது சின்னத்தம்பியின் வேலை. உடம்பில் பொட்டுத்துணி இல் லாம்ம்ல் நின்ருல் கூட, ஆடை உடுத்தினமாதிரி ஒரு பாதுகாப்பு உணர்ச்சி எனக்கு வரும். ஒரு, நாள் இங்கேயும் வைத்து அம்மா எனக்கு அடித்தாள். - அம்மா எனக்கு அதிகமாக அடித்தது அன்றைக்குத்தான். அன்றைக்கு அம்மாவின் முகத்தில் விழிக்க முடியாத காபம் , வெறுப்பு, பயம், பச்சாதாபம் என்று பலப் பல உணர்ச்சிகள் நிரம்பியிருந் தன*
என்னத்திற்காக அடித் தாள்?" என்ருன் அரவிந்தன்.
"மு த ல் சொன்னேனே! அதற்குத்தான், துணி இல்லா மல் நின்றதுக்கு. அம்மா அப் பொழுதுதான் சி  ைக க் காய் வைத்து, தலை கழு வ உதவி விட்டு, அடுக்களைக்குள் போயி ருந்தாள். காற்றும் தடையின்றி எ ன் னை த் தாட வேண்டும் என்று ஒரு ஆசை. தடாலென்று ஏதே ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தால்! அம்மா, பிற கு என்ன? நன்ருய் வாங்கினேன். அர விந் த் எதற்காக அம்மா அன்றைக்கு உதைத்தாள் என்று

இன்னமும் தீர்மானிக்க முடிய வில்லை. தப்பா?* "அ ப் படி ச் கில்லை" என்ற ன் அரவிந்த் ; “எனக்கு அது யதார்த்தமாகவும் விருப்பத்திற்குரியதாகவும் இருந் ருக்கலாம். ஆனல் அம்மா விற்கு இது அடக்கமில்லாத ஒரு அவமானத்திற்குரிய செய்கையாக
இருந்திருக்கலாம். அம்மா ஒரு "ஹான்சவேத்றிவ்" ஆக இருக்கி றது காரணமாக இருக்கலாம்.
“எனக்கு அப்படி அப்பொ ழுது தோன்றவில்லை. அம்மாவின் வக்கிரபுத்தி என்று நினைத்தேன்?
*வக்கிரம் என்று எதைச் சொல்கிருய்??
"என்ன்ை, என்னுடைய
பேச்சு, நடை அழகு இது
போல் இவற்றுள் ஏதாவது ஒன் றைப் பிடிக்காது அல்லது சகித் துக்கொள்ள இயலாத கொம்பி ளெக்ஸ்' "நீ வார்த்தைகளால் பிரச்சினையைக் சிக்கலாக்குகிருய். மேலே சொல்லு"
அவர்கள் பதினறு பரப்பில்
அடர்ந்து நின்ற தென்னந்தோப்
பில் பிரவேசித்தார்கள். ஒற்றி எடுத்தமாதிரிச் சுத்தமாயிருந் தது. ஒலைகள் காற்றில் சலசலத் தன. ஒன்றிரண்டு கத்தின.
“இங்கேதான் என் சிம்மா சனம்" என்று ஒரு செவ்விளநீர் மரத்தடியில் அமர்ந்தாள். இதன் அடியில் தேங்காய் விழும் என்ற பயம் எதுவும் இல்லாமல் இருக் கலாம். ஏனென்ருல் படிக்க ஒரு வரும் விடுவதில்லை"
* பிறகு?"
* பிறகு என்ன. இரண்டு லருஷம் முந்தி, T என்னுடைய
இருபத்தாருவது வயதில் அம்மா எனக்கு ஒரு கல்யாணம் செய்து
சொல்வதற்.
கிளி கள்
வைத்தாள் என்னுடைய எண் ணங்கள் எதிர்பார்ப்புக்கள், எல்லாவற்றையும் ஒரேயடியாய்
நாசமாக்கினள்?
"பல இடத்தில் பேச்சுக்கால் கள் வந்தன. உடைந்து போயின. பின்னணியில் ஏதோ ஒரு -Չեք மான காரணம் இருந்திருக்க வேண்டும். ஆனல்” வெளியில் தெரிந்த காரணம், அம்மாவின் நிலைதான்.
"சிகரெட், கு ல்லாத ஒரு దేవస్థ nu* வேண்டுமாம். நான் என்னு டைய விருப்பத்தை ஒரு பொழு தும் வாய்திறந்து சொல்லவில்லை. சொல்லி என்ன பயன்? அம்மா, பெண்ணின் வாழ்க்கையில் மண் போட மாட்டாள் என்று நம்பி இருந்தேன். 'மண் போட்டு மூடி மேலே தண்ணியும் ஊற்றி"
அரவிந் ஒரு சிகரெட் பற்ற வைத்தான்.
"உங்களுக்கு என்ன வயது? 'முப்பது யூ லுக் யங்க்" என் னுடைய மாப்பிள்ளைக்கும் வயது முப்பது என்ருர்கள். மணவறை யில் பார்த்த பொழுது மனம் நாற்பத்தைந்துக்கு கணக்குச் சொன்னது, அருவருத்தது. எல் லாவற்றையும் விட பயமுறுத்தி யது ஒரு ஒலி. மெலிதான ஒலி அவனுடைய நெஞ்சுக் கூட்டுக் குள் இருந்து தடங்கித் தடங்கிப் புறப்பட்டு, நாசி க்கு பூழியில் தடைப்பட்டு சிக்கித் திணறி வெளிப்படும் மூச் சின் ஒலி. தாலிகட்ட கைகளைத் தூக்கிய பொழுது இலேசாக அழுதாள். எல்லாரும் பலிக்குப் போசிற ஆட்டைப் பார்க்கிற மாதிரிப் பார்த்தார்கள்.
எல்லாரும் போன பிறகு புதிய இடத்தில் மிரள விழித்
器品

Page 14
துக் கொண்டிருந்த பொழுது, அக்காக்காறி வந்தாள். "இந்தப் பாரம் எல்லாம் இனி எதற்கு? காலையில் பூட்டிக் கொள்ளலாம் வந்து கழற்றி வை என்ருள். பெட்டியொன்றைத் திறந்து வைத்துக் கொண்டு நிற்க எல் லாவற்றையும் கழற்றி உள்ளே வைத்தாள். எ ன் னு  ை ய அறைக்குள் நுழைந்த பொழுது அங்கு ஏற்கனவே 'அவர் இருந் ή τιτ.
அரவிந்த், ஒரு நல்ல வித்
வான் 6 If மீட்டத் தொடங்கினல் உறையைக் கழற் றுவதிலிருந்து, சுருதி கூட்டி,
கிண்ணென்று நாதம் எழுப்பும் வரை ஒரு லயம் இரு க் கும். இந்த ”வித்வான் உறையைக்
கழற்றும் பொழுதே சுருதியை
யும் விட்டு லயத்தையும் உதறி என்னைப் புழுதியில் எறிந்து விட் டான். நாலு வீட்டுக்குக் கேட் குமாறு இழுப்பு வந்து, விழி
பிதுங்கிப் புரண்டவனை உதறி.
உடுப்பையும் வாரிச் சுற்றிக் கொண்டு வாசலுக்கு வந்து கதவைத் திறந்தால் அந்த அக் காக்காரி விழித்து நின்று கையில் மருந்துக் குளிசைகளுடன் ஒரு போத்தலை நீட்டினுள்.
அந்தப் போத்தலை வாங்கி நிலத்தில் ஓங்கி அறை ந் த பொழுது என் முகம் முதன் முதலில் சிகப்பேறி இறுக்கம் கண்டது.
ஒருமாதக் குடித்தனம். சிக் கனமான பேச்சு விலகி ன வாழ்க்கை. எல்லாருக்கும் எல் லாம் தெரிந்து போய்விட்டது, அம்மாதான் இன்னமும் அறிந்து கொள்ளாதமாதிரி ஒரு அசமந் தப் போக்கில், கைகளுவி விட் டாயிற்று என்றது போல் இருந் தது. என்னைப் பைத்தியமாக அடித்தது. ஐம்பதினயிரம் ரூபா நகையையும் காசையும் காளு
அரவிந்தன்.
Y தூங்கப்போக
மல் போயிற்று. கடைசியில் ஒரு மாதத்திற்குள் இந்தத் தென்னை மரங்களையும், அரவிந்த் பாரதி யின் பா ட் டு என்ன அது? தென்னைமரப் பாட்டு? என்று இடைமறித்த அரவிந்த் உடனே "பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்" என்ருன்
"பத்து பன்னிரண்டு இல்லை. திரும்பிப் பார்த்தால் எவ்வளவு? எண்ணிப்பார் தூறு வருமா? இவ்வளவையும் காணியோடு சேர்த்து விற்க வேண்டுமாம் கையெழுத்துப் போடச் சொல்
விக் கேட்டார்"
* என்னத்துக்கு அவ்வளவு 占厂r古?”
யாருக்கு, ர், தெரியும்? அந்ற அக்காக்காரிக்குத்தான் வளிச் சம். இனியும் பொறுக் முடியாது என்று தீர்மானித்து, முறித் தேன். வீட்டை விட்டு ஓட ஓட விரட்டினேன்"
"என்ன செய்தாய்? அடித் தாயா? ஏவி.)யா? எ ன் ரு ன் விரித்துக் கொண்டு, குறும்பாய் அவளைப் பார்த்துக் கொண்டு.
,ே அகா காலடியைப் பார்த் துக் கொண்டு, "ஸிம்பிள்' என் றள். "உடம்பு ஒத்துழைக்காது என்ருலும் என் அழகில் சபலம் அதிகம். மாலை வேளையில் அம்மா go oni (5 600 - Lu அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிவிடுவது. பிறகு, அவரு டைய கவனத்தை என்பக்கம் திருப்பிவிட்டு உடைகளை உரிப் பது" w
'நீ மிகவும் கெட்ட"பெண் என்ருன் அரவிந்தன்.
வாட்
நோனக இருந்திருக்க வேண்

டும் என்ன செய்திருப்பேன்
தெரியுமா?
* என்ன ர்ெய்திருப்பீர்கள்?? *செய்து காட்டட்டுமா?" "பார்க்கலாம்" என்ருள். அரவிந்த், அவள் கைகளைப்
பற்றினன். அவள் திமிறி விடு
பட முயல, அவன் இழுக்க, நிலத்தில் புரண்டு புற்கள் மாய்ந்தன.
"நான் வரட்டுமா?! என்றன் அரவிந்தன். நாளை வருவேன்"
“sLL -- mr Lu LDTs?”
"கட்டாயமாக" என்று கை களை உறுதியாகப் பிடித்தான். எல்லாத் திரைகளும் விலகின மாதிரி. ஒரு கேள்வி இல்லை. ஒரு சிணுங்கல் இல்லை. எல்லாம் புரிந்து போய் "அரவிந்த் அர விந்த்! அரவிந்த்!"
இரவு தூக்கம் வரவில்லை எல்லா இருளும் போய் ஒரு ஒளிவந்திருக்கிறது-அரவிந்தன். அவன் நினைவில் திளைத் துப் போயிருக்க, இலேசான முனகல் கேட்டது. அம்மா
இவ்வளவு நேரமும் அவளைக் கவனிக்காமலே, அப்படி ஒருத்தி இருப்பதை மறந்தது போலவே, அல்லது மறந்து போயே இருந்து
விட்டாள். இந்த இரு வில் இலேசான முனகல், எல்லாம் பார்த்திருப்பாள். இரு ம ல்
இரண்டு நாட்கள் அம்மாவுக்கு அடுத்தடுத்து பத் லத. அடி
ரேனுகா" என்று முனகல குரல: அரவிந்த் கூட அம்மாவிற்குப் பரிந்து பேசினனே, என்னுடைய தனிப்பில்தான் தவருே. நான் அம்மாவை மனம் நோ கப் பண்ணிவிட்டேனே?
ரேணுகா என்று மீண்டும்
குரல்
ரேனுகா, கதவைத் திறத்து கொண் டு வெளியில் வந்து லைட்டைப் போட்டாள்.
* என்னம்மா உனக்கு என்ன"
“ஒன்றுமில்லை உட்கார், அந்தப் பையன் எங்கே? போய் விட்டாணு?"
"அப்பொழுதே போய்விட் டாரே" என் ரு ள். பயந்து போனுள். அரவிந்தன் போனது தெரியாத அளவுக்கு தூக்கமாய் இருக்க முடியாது. மயங்கியிருப்
பாளோ?
*ரேனுகா நீ செய்கிறதெல் லாம் நல்லாயிருக்கிறதா?
* எது அம்மா?"
"முந்தாநாள். நேற்றைக்கு இன்றைக்கு, இப்ப கொஞ்சப் முந்தி நடந்தது எல்லாம், ஒரு வேற்று மனிதனேடு தனியாக, இங்கே.. * மூச்சு வாங்கினுள்
"அரவிந்த் நல்லவரம்மா.
ஓம். அரவிந்தன் மட்டும் தான் இப்பொழுது நல்லவன் நான், சின்னத்தம்பி எல்லாம் கூடாது. வெறுத்து ஒதுக் கி விட்டாய்டு
அம்மா" என்று அவள் குளிர்ந்த கைகளைப் பிடித்துப் பற்றிக் கொண்டு அழுதாள்.
"எனக்கு உன்மேல் வெறுப்பு என்று யார் சொன்னது அம்மா? சொன்னது ஆர்? உனக்கு என்ன செய்கிறது அம்மா? ஒரு டொக்ட ரிட்ட்ை போவோமா?"
வேண்டாம் பிள்ளை; இப்ப்டி உட்கார். பிளாஸ்க்கில் கொஞ் சம் கோ ப் பி வார்த்துத்தா! உன்னேடு பேச வேண்டும்"
ரேனுகா கொஞ்சம் புகட்டி
குறள.
25

Page 15
"அரவிந்தைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிருயா?" என்ருள்.
ரேனு கா சலனப்பட்டுத் திரும்பி, "ஓம்" என்று தலை யாட்ட "தீர்மானித்து விட்டீர்
களா' என்ருள்.
ரேனுகாவின் கண்ணில் நீர்
முட்டித் ததும்ப என்று
தலையாட்டினள்.
நல்லது ரேணுகா. உனக்கு நம்பிக்கை இருந் தால் சரி.
"ஓம்"
உன்னை நான் நம் பு கிறேன்.
என்னை மட்டு ம் மறந்து போகாதே! கொடுமைக்காரி, என் வாழ்க்கையைக் கெடுத்த
வள் என்றெல்லாம் திட்டாதே
‘என்ன பேச்சு அம் மா gos diarrub?'
'இதெல்லாம் இவ்வளவு
காலமும் நீ நினைத்து வைத்திருந் ததுதான. வாயால் சொல்கிறேன்" என்ருள்
"நான் பட்டமாதிரி வாழ்க் கையில் நீ படக்கூடாது என்ற தற்காகத்தான் நான் வளர்ந்த மாதிரிக்கு எதிர்மாருய் உன்னை வளர்த்தேன். நான் எதையெல் லாம் செய்து இப்படி ஆனேனே அதையெல்லாம் நீ செய்ய முயன்ற பொழுது எதிர்த்தேன். எல்லாம் நல்லாய்த்தான் வந்தது. நீ மிக நல்ல பெண்ணுய்த்தான் இருந்தாய். ஆனல் ரேனுகா! உனக்குக் கல்யாணம் பேசப்போய் நான் பட்ட பாடு. எல்லாம் என்னுல் வந்தது. என் வாய்க் கொழுப்பு, உன் அப்பா செய்து விட்டுப் போன வேலை எல்லாம் கடைசியில் உன் வாழ்க்கையில் விடிந்து விட்டது.
.சின்னத்தம்பி מו 6u "ח ו_t" அநியாயப் பழிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு உனக்காக.
ம்ாதிரியடி,
இப் பொழுது என்
றக்கினுள்.
உனக்காக அவன் வாழ்ந்து வந் தான். உனக்கு அவன் தகப்பன் உனக்குக் கட்டி வைத்தவன் அப்படி என்று அறிந் ததிலிருந்து அவன் பட்ட் Ցյամ
ரம்? சு டை சி யி ல் நீ என்ன சொல்லிவிட்டாய்? நினைத்துப் utti'
"பிழையம்மா அது தெரி யாமல் செய்தது?
நாளைக் காலை அவ ஆன க் கூப்பிடுவாயா?"
Pas T lubo
ஆரை விட்டுக் கூப்பிடு 6እ{Irህስ?”
“காலையிலை அரவிந்தன் வரு வார்; அவரை விடுகிறேன்"
"நல்லது ரேணுகா. உனக்கு நான் கணக்கச் சொல்லத் தேவை யில்லை. சின்னத்தம்பியும் உன்
அப்பாவும் மிகவும் நல்ல நண்
பர்கள்தான், சின் ன் த் உன்னை மிகவும் அன்பாகவே நேசித்தான். அதனுல்தான் உன் அப்பா ஒடிப்போன பிறகும் இங்கே இருக்கிருன். ஆணுல் உன் அப்பா எல்லாமே அவரால் தான் வந்தது. ஒடிஞலும் ஓடி னர். எல்லnர் வா அலும் அவ வாய்ப் போனேன். நீ படித்தி ருக்கிருய் ஒன்றையும் ஒன்றை பும் கூட்டி இரண்டு என்று சொல்லித்தரத் தேவையில்லை. ஒன்றே ஒன்று மட்டும் உனக்குக் காட்டுகிறேன். பார்த்துவிட்டுப் போய்ப் படு. எனக்கு ஒன்று மில்லை. விடிந்ததும் எல்லாம் சரி யாகிவிடும்.(சின்னத்தம்பின வரச்சொல்லிவிடு; சரி?
அம்மா மெதுவாக் அடிவயிற் றின் சேலையை அவிழ்த்துக் கீழி பாரேனுகா, நான் செத்துக் குளிப் ப7 டுகிற பொழுது இது எப்படி வந்தது
26

என்று யாராவது கேட்டால்
பதில் சொல்லச் சமாதானம்
தேடிவை"
ரேனுகா உற்றுப் பார்த்
தாள். தீர்க்கம்ாக, ம்ெதுவாக, உறுதியாக, வீல்" என்று நெஞ்சு உரக்கக் கத்தினுள்.
அடி வயிற்றில் குறுக்காக ஆறு அங்குல நீளத்திற்கு கரி நிறத்தில் அந்தத் தழும்பு இருந் தது. பழுக்கக் காய்ச்சிய கம்பி யால் சுட்ட வடு, எவ்வளவு கோரமான மனிதர்கள்? முகம் தெரியாத அப்பாவின்மேல் ஆத் திரம் வந்தது. ஒருவேளை அம்மா விலும் ஏதும் பிழை இருக்குமோ? சின்னத்தம்பி அப்பா மாதிரி என்ருளே! அம்மா, அப்பா,
சின்னத்தம்பி, முக்கோணத்தின்
நடுவில் அவள்.
மெல்ல மெல்ல ஒவ்வொரு
சிக்கலாய் அவிழ்த்துக் கொண்டி
ருக்க இருபத்தெட்டு வருட
காலத்துச் சங்தேகங்கள் எல்லாம் சடுதியில் தீர்ந்து, மனம் காற் றுப். போன பலூன் மாதிரி ஆகி, இவ்வளவு காலமும் அவள் மன தில் எழுதி எழுதி வைத்திருத்த தெல்லாம் சடுதியில் அழிந்து போய், இருபத்தெட்டு வருட காலத்திய சம்பவங்களிலிருந்த இடமெல்லாம் வெறுமையாய், சூன்யமாய்ப் போய். "
சிங்கப்பூருக்குப் போ ன அப்பா, ஓடிப்போன அப்பா. 'ஒடி' என்று இரண்டு எழுத்துத் தான் எல்லாவற்றின் மூலம். அம்மா என்ன செய்வாள் பாவம்!
நான் மிகத் தவருக நடந்து கொண்டு விட்டேனே. எதுசரி? எது பிழை? அம்மாவோடு பேச விருங்பி வெளியில் மீண்டும் வந்த பொழுது விறைத்து நின்ருள்.
காலையில் அரவிந்தன் வந் தான். உடனே சின்னத்தம்பி யைக் கூட்டிவரப் போஞன். O
ZSEELLLgELTLMMLELLtMEELLttLELaSഞ്ഞ "ዞዞ"ካugዞmዛካmዞዞ"ካካ"ሠmካካuሠ"ካካnuሡ"ካካä፧
சிறந்த சோவியத் அறிவியல்,
விலங்கியல் 17 - 50 வேதியலைப்பற்றிய
07 கதைகள் 18 - 50 புவியகத்தின்
புரியாப் புதிர்கள் - 50
இதயத்தை வலுவாக்கு 8 - 75
மூலதனம் பற்றி
மார்க்சிய தத்துவ நூல்கள்
இதயம் தருவோம் m குழந்தைகளுக்கு 17 - so
3 - 7
லெனின் தேர்வு நூல்கள் 12 - 50
டூரிங்குக்கு மறுப்பு 19 - 50 அரசும் புரட்சியும் 75 கூலி விலை இலாபம் - 90
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40, சிவன் கோயில் வடக்கு வீதி, W யாழ்ப்பாணம்.
12, குமரன் ரத்தினம் ருேட் கொழும்பு-25 പ്രത്യെ'

Page 16
நிணக் கைகள்
- ராண்டியூரன்
வருக நம்வட்டை விதானையே என்ன வடிவங்கள். பேசனலிட்டி நெருப்பன் நீ, வீரைத் தணலினை நீரில் நீற்றிய நிறத்தினை வெல்வீர்! உருப்படி யின்றிச் செய்தநின் சேவை உசத்தியை மெச்சினர் மாமன்! செருப்பினை மட்டும் தள்ளினிர்; பூமிச் சீதவி திட்டுவா ளென்றே.1
ம்ாரியில்,
விம்மும் குளங்களின் கட்டு வால்முறிந் தோடிடும் வேளை ஆரிதைக் கண்டார். P ஆறுநா வின் பின் ஆத்திரம் கொண்டெழுந்தீர், போம்! காரியம் அன்று முனையிலே கெட்ட காரணம் பாரமாய் ஏறப் பாரிய தொல்லைப் படுகிறீர்! இற்றைப் பகிரத னகினீர் பாடால்
தாமரை, அல்லி, ஆம்பல் - காய் முள்ளி தாவுகொண்டை வரால் சள்ளல் சாமரையொத்த பூனைவாற் சல்லு சன்னபின்னற்பட, வற்ருக் காமரு சோலை, கழனிகள் சூழ்ந்த கவின் பெறு நம் குளம் காய பாமரனுகி நின்றளை ஆட்சி பண்ணுவோர் கண்ணிலும் படலம்!
as
 

பாலகப் போடிப் பாட்டளுர் பட்ட பாடுகள் கொஞ்சம்ா அன்று? . . . நாலுசா மத்தின் ராளிருள் பரார் நாயலைச் சல்அவர் காலில் வால் தலைக் கட்டும், துரிசி வான் மதகு வடிச்சலுந் தகைச்சலும் பார்ப்பார்! காலமோ இன்று கெட்டது, உங்கள் கையிலே அப்பணி கண்டோம்
மழையினை நம்ப வழியில்லை; வாய்க்கால் வழிவரும் கிட்டங்கி வாவி உழைப்பவர் தாரீர் ஊதியம்; இஃது ஒருநொடி வேலையென் றிட்டீர்! வளைக்கரப் பெண்டிற் கருவினை நம்பி மாடுமேய் பிள்ளையைக் கொன்ற விழற்றனம் பூண்டீர் மெச்சினர் முளை விதைப்பினிற் புரிகழர் மேதை!
சேற்றினை வென்று, சோற்றினைச் செய்யும் செம்மல்க ளாமுழவர்க்கு ஊற்றையும், கச்சை யொருமுளத் துண்டும் உடைமையாம்! நீயணி ஆடை நீற்றைம் வெல்லும் வேட்டி சால் வையின் நேர்த்தி மையே யசல் போடி! தோற்றது . இந்ரன் தோற்றமே; ஆனல். தொள்ளைக ளில்லையுன் தோளில்!
பட்டியைச் சுற்றிப் பறந்திடுங் காக்கைப் பாங்கினில், நின்படலைக்குள் மொட்டைகள் வட்ட மிடுவதேன்...? வட்டி முதலைக ளாவதற் காமோ...! அட்டுவச் செல்வம் மாற்றினை, சொண்டில் அள்ளிய அரிசியா யிற்று அட்டியே யில்லை, அடியறுப் பதிலே ஆள் அறக் கொட்டிதான் டோங்கள்! அதிகாரி, வட்டை விதானையும் நீரே யாகினிரால் வர்வேற்புப் புதிதிலை வாரீர்; போடு கூழ் முட்டைப் பூச்சாம்! தோள் பொலி வாகும். கொதியெழ ஏத்துப் பிடித்தனம், கொய்து கோக்கொணுக் கைநிணம் பாரீர் நிதியெலாந் தீர்ந்து நெற்பயிர் தீய்ந்த நிலையிது நிச்சயம் ஏற்பீர்!

Page 17
கேரள மகாகவி குமரன் ஆசான் நினைவுப் பரிசு பெற்ற சிங்களப் பேரறிஞர்
பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர
சமூக சமத்துவத்தை வலி யுறுத்தும் சிருஷ்டிகளைப் படைக் கின்ற உன்னத உலக இலக்கிய கர்த்தாக்களுக்கு வழங்கப்படும் "ஆசான் சர்வதேசப் பரிசிலை? இம்முறை பெறும் மூன்ருமவர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந் திர ஆவார். w
இதற்கு முன் 1981 இல் முத லாமவராக லியோபோல் செங் கோர் இப்பரிசைப் பெற்ருர், பிரஞ்சு மொழிக் கவிஞரான இவர் செனேகல் நாட்டின் முன் ஞள் ஜனதிபதியாவார். உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளில் நெருங்கிய தொடர்பு பூண்டுள்ள தமிழயிம்ானி இவர்.
ஸ்பானிய மொழியிற் கவி பாடிய கியூபா நாட்டுக் கவிஞ ரான நிக்கலஸ் கியொன் 1982 ல் இரண்டாமவராக ஆசான் நினை வுப் பரிசைப் பெற்ருர்,
கும்ரன் ஆசான் கேரளத் தில் திருவனந்தபுரம் நகரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்திலுள்ள கைக்காரக் கிராமத்தில் பிறந்த வர். இப்பரிசளிப்பு வைபவம் நடைபெறுவது அங்கேதான். ஆசான் பிறந்த தினமான ஏப்
ரல் 27 ந் திகதியே இது இடம் பெறுசிறது.
அரசாங்கமே அவ் வைப
缘
றது. ஆசான் ஞாபகார்த்த மன் ற ம் பரிசுக்குரியவரைத் தேர்ந்து அறிவித்த பின் கேரள அரசு அதற்கான நிதி  ையப் பொறுப்பேற்றுச் செலவுகளை வழிநடாத்தும். இச் சர்வதேச ரீதியான பரிசைத் தவிரவும் பிற தேச ரீதியாகத் தெரிவு செய்யப்
பட்ட கவிஞர்களுக்கும் பரிசுகள்
உள்ள ன பரிசு பெறுவோர் அரச விருந்தினர்களாக உபச ரிக்கப் பெறுவர். பிரதேச ரீதி யாக இம்முறை மேற்கு வங்கா ளத்திலிருந்து சங்கர் கோஷலிம், கர்நாடகத்திலிருந்து சந் தி ர சேகர கம்பாரும் அஸ்ஸாமிலி ருந்து மகேந்திர போராவும் கெளரவிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் சர்ர்பில் வெளிநாட்டு உதவி அமைச்சர் கெளரவ ஏ. ஏ. ரஹீம் அவர்க ம், கேரள அரச தரப் பில் கரளச் சபாநாயகரும். முதல மைச்சரும் கலந்து கொண்டனர். பேராசிரியர் சரத்சந்திர தமது துணைவியாருடன் சென்றிருந் தார். ஆசான் நினைவுப் பரிசாக ஒரு பொற் தாமரையும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங் கப் பெற்றன. இவ் வைபவத் துக்கு முல்க்ராஜ் ஆனந்த், ராஜா ராவ், அலி சர்தார் ஜக்ரி, உமா
சங்கர் ஜோஷி, யூ. ஆர்.ఎశీజీడి
வத்தை முன்னின்று நடத்துகி மூர்த்தி உட்பட்."
0, .

இலக்கியவாதிகன் சமுகமளித்தி ருந்தனர்
பேராகிரியர் சரத்சத்திர தமது கேரள் விஜயத்தின்போது, திருச்சூரில் அமைந்த க்ள்ளிக் கோட்டைப் பல்கலைக் பழகத் துக்குச் சென்றர். அங்கு நாட கத் துறை மாணவர்கள் அவுஸ் திரேலிபாவின் சோலஸ்பேக் பல்கலைக் சழகத்தினரால் ஆங்கி லத் துக்கு மொழிபெயர்க்கப் பட்ட "பேமத்தோ ஜாயத்தி சோக்கோ" நாடகப் பிரதியைக்
கொண்டு , மலையாளத் தி ற்
பெயர்த்து தடித்தனர்.
மலையாள இலக்கியத்தில் நல்ல பரிச்சயமுடையவரும், தகழியின் செம்மீன் போன்ற வைகளை மொழிபெயர்த்தவரு மானசுந்தர ராமசாமி, ஜே. ஜே. சில குறிப்புக்களில் தமிழ் இ9க்கியவுலகு பற்றிய தமது பார்வையை - குறிப்பாக அதன் அவலங்களை எடுத்துக் காட்டுவ தற்காக - மலையாள இலக்கியத் தின் ஒப்பீடு மூலம் வெளிப்ப டுத்த, ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனையான ஒரும லை யாள எழுத்தாளனை உருவாக்கியுள்
ளார். இந் நாவல் முழுவதிலும்
பெரும்பாலும் கற்பனைப் பாத்தி ரங்களே உலவிய போதிலும் அரிதாகச் சில நிஜப் பாத்திரங் களும் உள்ளன. இந்த வகையில் திருச்சூர் கோபாலன் நாயர் என்ற கற்பனைப் பாத்திரத்தார் தான் சின்ன வயதில் குமரன் ஆசானைப் பார்க்க இருபது நாள் நடத்து போனதை நினைவுபடுத் துகிருர். அங்கதமாகவே பாத்தி ரங்களைப் படைத்த சுந்தரராம சாமியின் கெளரவத்துக்குரியவர் களுள் ஒருவராகக் கும் ரன் ஆசஈன் நாம் அறிகிருேம்.
குமரன் ஆசான் 1878இல் 'பிறந்தார்3 தமது 51வது வய
*8፤
இடமின்றிப் போனது.
தில் 1924 இல் மிகவும் சோக மயமான ஒரு சூழலில் நீரில் முழகு அ கால மரணமடைந் தார். அவர் தமது 34 வது வய
திலேயே கவிதை புனையத் தொடங்கி ஒர். பதினேழு ஆண்டு) குறுகிய காலத்துள் அவர் இயற்றிய கவிதைகள்
கேரளத்தில் ம்ட்டுமன்றி 'சர் தேசத்திலும் புகழ் பெற்றன.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தமது கவிதை களிற் குரல் எழுப் பிஞர் ஆசான். எனவே தான் சமூக சமத்துவத்தைக் கருதி அவரது நினைவுப் பரிசு வழ்ங்கப்படுகின் றது. இளமைப் தருவத்திலே வங்கத்தில் அவரது வாசம், 6}{9ی{{ ரது வாழ்வில் தாகூர், விவோ னந்தர் போன்றேரது தலைமை யில் வங்கத்திற் தோன்றிய பாரத மறுமலர்ச்கி அலைகளின் தாக்கத்தை ஏற்படுத்தி இருந் தது5 ஆசான் 1924 ல் LDPT6oor மடைந்தார். அதனையடுத்து ந டைபெற்ற சுதந்திரப் போரா. பததுககு அனுகூலமான கவிதை களைப் படைக்கும் வாய்ப்புக்கு அவர் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்திருந் தால் தாகூர், கவிக்குயில் ச்ரே ஜினி போன்றவர்களைப் போன்று தேசவிடுதலைக் கீதத்தையும் இசைத்திருப்பார். " ணு ம் தேச விடுதலைக்கு அடித்தள சமூக விடுதலை அவர்து கவிதை களிற் தோய்ந்துள்ளது. எனே தான் அவரது கவிதைகள் கேர ளத்தில் மக்களால் போ நீ தி மதிக்கப்படுகின் றன.
*ச்ான் சர்வதேத 龍峪尋 பெற்ற பேராசிரியர் மல்லிகை வாசகர்களுக்கு தன்கு அறிமுகமானவரே. அவரது பல தி, ஆற்றல்களை அவி* அறிந்துன்ன்னர், அவரது கிறு கதைத் தொகுதியில் கத்

Page 18
søvnen ങ്ങumurint"u"
്വ് சென்னை griLD5r வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரினம வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை
யுடன் தொடர்பு கொள்ளலாம்:
դարտ Կամսակայմանամ"կամ""
களை மல்லிகையில் வாசித்துள னர் மனமே போன்றவை நாட கத்துறையில் ஏற்படுத்திய தாக் கத்தையும், நவீன சிங்கள இலக் இயத்தில் அவரது விமரிசனங்க ளின் பங்களிப்பையும் யெல்லாம் அறிந்துள்ளனர்.
அவரது கேரள விஜயம் சம்பந்தமான சில அவதானங் ஆள் பொதுவாக இந் நாட் டு இலக்கிய நிலையைச் நிற்கின்றன. கேரளத்தில் அச்சுக் கடதாசிக்கு அரசு auf e5ütதில்லை. நூல்கள் வெளியிட எழுத்தாளர்களுக்குக் விஜயில் கடதாசி வழங்கப்படு கிறது. திருச்சூரிலுள்ள சாகித் திய அக்கடமி மலையாள நூல் இா திகிலத்திலும், ஆங்கிலம்
பெரிய வாசகர் கூட்டம்
அடைகளையும் பற்றி <器 Ավ
கின்றனர்.
சார்ந்து
குறைந்த
முதலான பிற் மொழி நூல்களை
ம்லையாளத்திலும் மொழிபெயர்க் கிறது. தர்ம் வாய்ந்த நூல்க ளைத் தே டி வாசிக்கும் ஒரு இருப்ப தால் ஒரு குறுகிய காலத்துக் குள் ஒரு நாவலில் 5000 பிரதி களை மிக எளிதாக விற்பனை செய்யம்படுகிறது. இவை இந் நாட்டுக்குச் சிறந்த முன்மாதிரி களாகும்
பேராசிரியர் சரத்சந்திர சமீப காலமாக நாட்டின் கலா சார நிலைமைய்ைப் பற்றி மிக வும் துணிச்சலான சருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிருர். பேட் டி களி லும் பொதுக் கூட்டங்களிலும் அவ ரது கருத்துக்கள் இவ்வாறு ஒலித்துவருகின்றன. இத்தகைய ஒரு கருத்தை இங்கு காணுதல் ப்ொருத்தமாகும். "இன்று எமது மக் க்ளின் புருஷார்த்தங்கள் மாறியுள்ளன, அவர்கள் நூல் & விலை கொடுத்து வாங்கு வதைத் தவிர்த்து வியாபாரச் சந்தையில் பல்கிக் காணப்படும் கெசட் ரூபவாகினிக் கருவிகளை யும், மற்றும் ஆடம்பர ப் பொருள்களையும், கவர்ச்சியான கொள்வனவு செய்வதில், ஆர்வ செலுத்து ரூபவாகினி விளம்ப
ரங்கள் பலவேறு ஆடம்பரப்
பொருள்களே அறிமுகப் படுத்து
கின்றன. இவைகளைக் கொண்டு வீட்டை அலங்கரித்தல் மத்திய தர வாழ்க்கை முறைக்குப் 19tr
வேசிக்கும் கனவை நனவாக்கும் முதற் கட்டமாக அமைகிறது.
இன்று வெளியாகும் பலவேறு ஒலிப்பதிவு நாடாக்கள் மக்க ளது ரசனையை மலினப்படுத்து
கின்றன’
O

ஈரானில் ஆப்கன் அகதிகள்'
ஆர். என்.
ஆப்கன் எதிர்ப் புரட்சிக் கூட்டத்தினர் புரியும் அட்டூழியங் கள் பற்றிய செய்திகளை அநேகமாக ஒவ்வொரு நாளும் ஈரானி யப் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன.
மூன்று ஆப்கன் பயணிகள் ஒரு பஸ்ஸின் தோல் இருக்கை களை (ஸிட்டுகளை)க் கத்திபினுல் கீறிக் கிழித்தனர் என்பதற்காக அவர்களைக் கண்டித்த டிர்ைவரை அந்த ஆப்கன் பயணிகள் கொன்றுவிட்டதாக ‘எட்டெலா - அட்" என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆப்கன் "அகதிகள்" என்று கூறப்படுவோர் நடத்தும் கொள் ளைகளும், கொலைகளும், வன்முறைச் செயல்களும் சர்வ சகஜமாகி விட்டன. நாட்டில் கட்டுப்பாடான முறையில் நடக்கும் குற்றங் களுக்கு ஆப்கானியர்தான் காரணமென்று ஈரான் போலீசார் கூறுகின்றனர். ܐ ܢ
ஆனல் ஈரானில் உள்ள ஆப் கன் "முஜாஹத்தின்" க்ளின் பெரும்பாலானவர்கள், போதைப் பொருள் கள்ள வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆப்கானியரின் இந்தக் கள்ள வியாபாரம் பற்றி ஈரான் பத்திரிகைகளில் ஏராளமான செய்திகள் வெளிவரு கின்றன. மெஷெத் என்ற இடத்தில், போதைப் பொருள்களைக் கள்ளத்தனமாகக் கடத்திய ஓர் ஆப்கானியர் கூட்டம் கைது செய்யப்பட்டது. 51 கிலோகிராம் ஹிராயின்" என்ற போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றினர். இந்தப் பொருளைக் கள்ளத் தனமாக விற்றதாக கோல் ஹ"செய்ன், தாவூத் என்ற இரு ஆப் கானியர் டெஹ்ரானில் கைது செய்யப்பட்டனர். 48 கிலோ கிராம் ஹிராயினைப் போலீசார் கைப்பற்றினர். ஆப்கானியர் கூட்டம் ஒன்றைப் போலீசார் கைது செய்த பொழுது ஏராள மான ஹிராயின் போதைப் பொருளையும், 50 லட்சம் ரியாலுக்கு அதிகமான பணத்தையும் கைப்பற்றினர்.
*காய்ஹான்" என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் ஈரானியர் பலரைப் பேட்டி கண்டு கேட்ட பொழுது, போதைப் பொருள் பழக்கத்தைத் தடுக்க வேண்டுமானுல் அதற்கு முதல் நடவடிக்கை யாக அப்பொருள்களை ஈரானுக்குள் கொண்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
ஆப்கானிஸ்தான் எதிர்ப் புரட்சிக் கூட்டங்களுக்கு ஈரான் எல்லை திறந்து விடப்பட்டுள்ளது என்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் ஆப்கானில் நடத்தும் தாக்குதல்களுக்கு இடையில் போதைப் பொருள்களைக் கள்ளத்தனமாகக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தக் கள்ளக் கடத்தலால் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதி கொள்ளைக் கூட்டங்களின் தலைவர்களுக்குப் போய்ச் சேருகின்றன. இஸ்லாத்துக்காகப் - புனிதப்
33

Page 19
போர்" என்ற மோசடி நடத்தும் இவர்கள்கு ஈரானில் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கமுள்ள ஆயிரக் கனக்கான வர்களின் துன்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பா தித்துக் கொழுக்கின்றன. "
அதே சமயத்தில் டெஹ்ரான் நகரின் ஹஃப்தே திர் சதுக்கத் தில், ஒட்டிய முகங்களுடனும், சூம்பிய கைகால்களுடனும், கற் தல் உடைகளை அணிந்து வேலைக்காக மணிக் கணக்கில் காத்திருக் கும் பரம ஏழைகளின் காட்சியையும் காண்கிருேம்.
ஆப்கன் அகதிகளில் பலர் தங்கள் தவறை உணர்ந்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்புகின்றனர் என்பதில் ரகசியம் ஏதும் இல்லை. ஆனல் இதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. எதிர்ப் புரட்சித் தலைவர்களின் ன்கயாட்கள் ஈரானில் உள்ள ஆப்கன் சமூகத்தினரை இடையருது அச்சுறுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்குத் தப்பியோட முயல்பவர்கள் பிடிபட்டால், அவர்கள கடுமையாக்த் தண்டிக்கப் படுகின்றனர். O
அமெரிக்கப் பெண்கள் படும் துன்பம் விளநிமிர் ஸிசன்
அமெரிக்கப் பெண்கள் படும் துன்பங்களைப் பற்றிய செய்தி கள் பத்திரிகைகளில் வெளிவரும் பொழுது, இந்தப் பெண்களுக்கு அவர்களின் மாஜி கணவர்களிடம் இருந்து கணிசமான பொருழு தவி கிடைப்பதாகவும், அத்தகைய குடும்பங்களுக்கு சமுதாய இன்ஷ்யூரென்ஸ் மூலம் உதவி கிடைப்பதாகவும், வாஷிங்டன் அதிகார வட்டாரங்கள் வழக்கமாகக் கூறுகின்றன.
விவாகரத்துச் செய்து கொள்ளும் பெண்களில் 15 சதவிகிதம் பேர்தான் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கத் தங்கள் முன்னுள் கணவன்மாரிடமிருந்து சீராக உதவி பெறுகின்றனர். இன்ஷ்யூரன்ஸை பொறுத்த வரையில், அது அவர்களுக்குச் சாதகமாக இல்லை. பெண்களுக்கு மகப்பேறு கால சட்டங்கள் அங்கு இல்லை. எல்லாப் பெண்களுக்கும் மகப்பேறு கால விடு( , ) () கிடைப்பதில்லை. குழந் தைகளோடு விவாகரத்துச் செய்து ,ெ பண்ட பெண்களுக்கு அரசு கொடுக்கும் அலவன்ஸ் மிகவும் சொற்பம் நிர்வாகம் இந்த வசதி களையும் கூடக் குறைக்கிறது. குழந்தைகளோடு விவாகரத்துச் செய்து கொண்ட பெண்கள் நடத்தும் குடும்பங்களில் 80 சத விகிதத்தை இந்த வெட்டுப் பாதிக்கிறது.
ஆணுல் முக்கிய தீமை இதில் இல்லை. இறுதியாக ஆராய்ந்து பார்த்தால், அமெரிக்காவில் வருமானங்கள் வசதியாக வாழ்வதற் குப் போதுமானதாகும். ஆஞல் பெரும்பாலான அமெரிக் கப் பெண்களுக்கு உயர்ந்த வருமானம் என்பது எய்த முடியாத கன வ: கவே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பிலும் டி.பளத்திலும் பெண்களுக்கு திேராகப் பாரபட்சம் காட்டும் விதி களும் மற்றும் ஆயிரக்கணக்கான ஸ்தல விதிகளும் உள்ளன. O
34

புதிதாக விடுதலை அடிைந்த நாடுகளில் தேசியப் பிரச்சினை
ஆர். உல்யனவ்ஸ்கி
சுதந்திரம் பெறுவதற்கு முன் பாக, ஆசிய, ஆப்பிரிக்க நாடு களில், தேசியப் பிரச்சினையா னது பிரதான்மாகக் கால னி ஆதி க்க த் து க் கு எதிரான போராட்டமாகத் அது முக்கியமாக ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்த நா டு களை அரசியல் ரீதியாகவும் பொருளா தார ரீதியாகவும் சுரண்டி வந் ததை ஒழித்துக் கட்டுவதைக குறி யா க க் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் தேச சுதந்திரத்திற்காகப் போரிட்ட வீர மறவர்கள் முன்வைத் த. *சு த ந் தி ர அரசாங்கங்களை அமைக்க நாடுகட்கு உரிமை” என்ற கோஷத்தை, ஜனநாய கத்தையும், முன்னேற்றத்தை யும் ஆதரித்த அனைத்து மக்க ளும் எந்தவித நிபந்தனையுமின்றி
ஆதரித்தனர்.
சுதந்திரத்திற்குப் பின்னும், புதிதாக விடுதலை அடைந்த பல நாடுகளில் தேசியப் பிரச்சினை தீர்வு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. மிகவும் அவச ரப் பிரச்சினையாக இருந்த இது பல புதிய வடிவங்களைப் பெற் நறது. பல்வேறு இனக் குழுக்க ளுக்கிடைப்பட்ட முரண்பாடு கள், காலணி ஆட்சியிலே பின் னுக்குத் தள்ளப்பட்டிருந்தன. காலனி ஆதிக்கவாதிகளின் இரா ணுவ, அரசியல் அடக்குமுறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, தேசிய அரசாங்கங்கள் அமைக் கப்பட்டவுடன் இந்த முரண்பா டுகள் தலையை நீட்டின. இந்த நாடுகளின் வளர்ச்சியை இவை
திகழ்ந்தது.
தற்போது சிக்கல் மிக்கதாக்கி விட்டன.
ரு ஷ் யாவில் அக்டோபர் சோஷலிஸப் புரட்சிக்குப் பின் பும், குறிப்பாக 194 ல் நாஜி முைம், ஜப்பானிய இராணுவா திக்கமும் தோல்வியைத் தழுவிய பின்பும். உலக சோ ஷ லிச அமைப்பு ஒரு வலுமிக்க சர்வ தேச சக்தியாகப் பரிணமித்த பின்பும், தேசங்கள் அமைக்கப் படு வ ைத க் காட்டிலும் அதி விரைவாக புதிய சுதந்திர அர சாங்கங்கள் உருவாகும் அளவுக்கு தேச விடுதலை இயக்கம் வேக மான வள ர் ச் சி கண்டது. 1991 ம் ஆண்டுகளிலும், 1960ம் ஆண்டுகளிலும் நிகழ்ந்த ஜன நாயகப் பேரெழுச்சியின் பின் னணியில் தேசம் கருவுருவிலேயே இருந்த போதும், அல்லது தோன்ருமலேயே இருந்தபோதும் ஏ கா தி பத் தி ய எதிர்ப்புப் போராட்டம், தேசிய சக்திகள் அரசியல் ரீதியாக உருக்கொள் ளும் பணிக்கு விரை வேகமளித் தது. ஏற்கனவே அமைக்கப் பட்டு விட்ட நாடுகளாலும் அல்லது உருப்பெற்றுக் கொண் டிருக்கும் போக்கிலுள்ள நாடு களாலும் மட்டுமின்றி, முதலா
ளித்துவத்திற்கு முந்தைய வளர்ச்
சிக் கட்டத்தில் இருந்த அல்லது முதலாளித்துவ வளர்ச்சி அப் போதுதான் துவங்கியுள்ள நிலை யில் இருந்த தேசிய இனங்கள், பழங்குடிகள் மற்றும் மனித இனங்களின் கதம்பக் கூட்டுக்க ளாலும் கூட, அரசியல் சுதந் திரம் பிரகடனம் செய்யப்பம்

Page 20
டது. காலணி ஆதிக்க நிர்வாகம் ஒன்றுதான் அவைகளைப் பிணேத் திருந்ததால், அவற்றின் பொரு ளாதார, வர்த்தகத் தொடர் புகள் மிக வும் பலவீனமாக
இருந்தன. ஆனல் திட்டவட்ட மா க க் காலனியாதிக்கத்தில் இருந்த பிரதேசங்களில்தான்
தேசிய விடுதலைப் போர் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. சுய நிர்ணய உரிமை பிரயோகிக்கப்பட்டது. காலனியாதிக்க ஆட்சியில், பல நாடுகளின் எல்ஃலகள், பிரதான மாக ஆப்பிரிக்காவிலே, தன்னிச் சையாக நிர்ணயிக்கப் பட்டது என்ற உண்மையும், அந்த எல் லைகள் நிர்ணயமானது. அங்கே
குடியேறி வாழ்ந்த பல்வேறு மக்கள் குழுக்கள், இனங்கள் பற்றிய உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதும்
அந்த நாடுகளுக்குள்ளேயே பல் வேறு பிராந்தி பங்களில் சமச் சீரான பொருளாதார, சமூக், கலாசார வளர்ச்சி இல்லை என் பதும், இந்தத் தேசங்களில் பல மொழிகள் பேசப்பட்டதும், பல வகைப்பட்ட மதங்கள் இருந்த மையும், காலணி ஆதிக்கத் தளை களை அறுத்தெறிந்த நாடுகள் எதிர்நோக்கிய தேசிய உறவுகள் பிரச்சினையை இன்னமும் சிக்க லாக்கின.
இன்றைக்கு இந்தப் பிரச்சி யை ஒரு மாறுபட்ட கோணத் திலிருந்து பார்க்க வேண்டும், அப்படியே பார்க்கவும் படுகி றது. இனிமேலும் , அது ஒரு காலனி ஆதிக்கப் பிரச் சினை அன்று. நாடுகள் வி டு த லை அடைந்த பின்னல் எந்த வகை யான உள்துறைக் கொள்கையை மேற்கொள்கின்றன என்பதைப் பற்றிய பிரச்சினை உண்மையா கவே தேசியத் தன்மை கொண்ட சக்திகள் ஆட்சிப் பொறுப்பை வகிக்கும் போது, இந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தைப் பேணிக்
காக்க இயலும். (அவ்வாறே பாதுகாத்தும் வருகின்றன) ஏகா திபத்தியத்திற்கு எ தி ரா ன போராட்டத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தச் சூழ்நிலைகளில் தேசிய சுய நிர்ணயம் என்ற கோஷம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. இதனுல் அரசாங் கம் பலவகை இன மக்களைப் பிரிந்து செ ல் ல அனுமதிக்க வேண்டும் என்பதில்லை. அந்தக் கோரிக்கையை காலனி ஆதிக் கத்தில் இருந்த மக்கள், ஏகாதி பத்திய சக்திகளுக்கு எதிராக வைத்தபோது நியாயமானதாக இருந்தது. ஏனென்ருல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தடை யற்ற முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்முல், அவர் க ள்
மீது வலுச் கட்டாயமாக இந்த வல்லரசுகளிஞ)ல் பிணிக்கப்பட் டிருந்த பிணைப்புக. அறுத்தெ றிய வேண்டியது அவசியமாக
இருந்தது. ஆளுல்ை ஒரு தேசிய சர்க்காரின் கீழ், தேசிய நலன் களைப் பேணுவோருக்கு இன்னும் பரந்த வாய்ப்புகளும், இன்னும் பரந்த அக்கறைகளும் உள்ளன. நாடு பிரிந்து போவது அத்துட னேயே முடிந்து விடுகின்ற ஒரு விஷயமல்ல. முன்பு கால னி நுகத்தடியில் உழன்ற மக்கள் தற்போது நவீன காலனி ஆதிக் கத்திற்கு எதிராகவும், மெய் யான விடுதலைக்கும், பொருளா தார, சமூக, கலாசார முன் னேற்றத்திற்கும் தொடர்ந்து நடத்தும் போராட்டத்திற்கு ஏற்புடைய, சுய - நிர்ண ய கோஷத்தின் வடிவங்களை முற் போக்கு சக்திகள் தேர்ந்தெடுத் துக் கொள்கின்றன.
ஆசியாவிலும். ஆப்பிரிக்கா விலும் தேசியப் பிரச்சினையில் நிலவும் இரண்டு போக்குகனை ரு வர் காணலாம். ஒன்று தசங்கள் அமைக்கப்படுவது,

அவை சுய நிர்ணயம் பெறுவது. இரண்டு அவை இணைந்து வாழ் வது. ஒருபுறம் தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய பிரச்சினைகள், நடைமுறைக்கு வராத சுய நிர் ணய உரிமை, முட மா கி ப் போன ஜனநாயகம், தேசிய சிறுபான்மையினர்பால் பாரபட் சமான போக்கு, அவர்களது நலன்கள் புறக்கணிப்பு முதலி யன ஒருசேர தேசிய உணர்வு களுக்கும், இயக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன. மறு புற ம் பொருளாதார, அரசியல் சட் டங்களானவை தேசங்கள், மக்
கள், பழங்குடிகள் ஆகியோர் இணைந்து வாழவும், அவர்கட் கிடையே ஒற்றுமை ஓங்கவும்
அவை சிதைவுறுதலையும், பரஸ் பரம் தனிமைப் படுத்தலையும் வென்று கொண்டு செல்ல முயற் சிகளை ஒருமைப்படுத்தவும் குரல் கொடுக்கின்றன.
தேசங்களுக்கு சுய - நிர்ண யம் என்ற கோட்பாடு தேசங் கள் ஒருசேர வாழ்வது என்ப தோடு இணைந்து செல்லுதல் வேண்டும் என்பதே வளர்முச நாடுகளில் தேசிய இனப் பிரச் சினைக்கு நடைமுறையில் பயன் மிக்க தீர்வாகும். பல தேசங் களைக் கொண்ட ஆசிய, ஆப்பி ரிக்க நாடுகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்ட நாடுகளு டன் கூட, இப்போதுதான் உரு வாகிக் கொண்டிருக்கும் நாடு களிலும் கூட, ஏகாதிபத்திய - எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பல இன மக்களிடையே உள்ள பிணைப்புகள் உறுதிப்படுகின்றன, பலவகைப்பட்ட மக்களிடையே வளர்ந்து வரும் பொருளாதார, அரசியல், கலாசார பிணைப்பு கள் இந்த நிகழ்வுப் போக்குக்கு உதவுகின்றன. அனைத்து மக்க ளின் நலன்களுக்கான அதன் சமூக வளர்ச்சியானது வாரிமுக
۔۔۔۔۔۔
நாடுகளின் சமூக அடிப்படையை யும், அந்த நாடுகள் எந்த அள விற்ரு ஜனநாயகமானவை என் பதையும் சார்ந்தே அமைகிறது.
எந்த தேசிய கோரிக்கையும் பல்வேறு கோணங்களிலிருந்து மதிப்பிடப்பட வே ண் டு ம்? தேசங்சளுக்குள்ள கயநிர்ணய உரிமையை என்றும் மனதில் கொள்ள வேண்டும். ஆளுல் ஒவ்வொரு சமயத்திலும் அதன் ஸ்துலமான அரசியல் அர்த்தம், இந்த கோஷத்தை முன்வைக் கும் குறிப்பிட்ட சூழ்நிலையையும், குறிப்பிட்ட சமூக சக்திகளையும் பொறுத்தே அமைகிறது. தேசிய இனப் பிரச்சினை உள்ள நாட்டி லும் , பொதுவாக உலகிலும் நிலவும் சமூக, அரசியல் சூழ் நிலைகளின் பின்னணியில், சிறிய தேசங்கள் மற்றும் பல இளம் தேசங்களின் நலன்களைக் கணக் கில் கொண்டுதான் தே சி ய பிரச்சினையானது ஒரு நியா ய மான முறையிலும், என்றைக் குமாகவும் தீர்க்கப்படவியலும்,
காலனி ஆதிக்ச அமைப்பு
வீழ்ச்சியுற்ற பின்னரும் கூட ஏகாதிபத்தியம் தன்னுடைய *பிரித்தாளும்" சூழ் ச் சி  ைய
கைவிட்டு விடவில்லை என்பது சிதம்பர ரகசியம். ஒரு காலத் தில் பழங்குடிகளுக்கும் பல மக் கள் இனங்களுக்கும் இடையிலும் நிலப்பிரபுத்துவ அரை - நிலப் பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலும், மோதல்களைக் கிளறி விட்டே ஏகாதிபத்திய வல்லரசுகள் ஆசியாவிலும், ஆப் பிரிக்காவிலும் தங்கள் மேலதி காரத்தை நிலைநாட்டின. பின்பு முட்டி மோதிக் கொண்ட பல குழுக்களுக்கிடையே சமாதானத் 'தைத் தோற்றுவிக்கும் ருத்ராட் சப் பூனையின் திருப்பணியைத் தமக்குத் தாமே வரித் துக் கொண்டு, பல்வேறு மக்கள்
இனங்கள். பழங்குடிகள் பிராந்

Page 21
தியங்கள், மதங்கள் என்றிருந்த பாகுபாடுகளுக்கு ஏகாதிபத்தி யங்கள் உரமிட்டு வளர்த்தன, இப்படிச் செய்து நாட் டி ன் தேசபக்த சக்திகள் உருவாவதை யும் தடை செய்தன. காலணி ஆதிக்கவாதிகளின் திட்டம் ஏகா திபத்திய எதிர்ப்பு இயக்கத்தை இன, மத அடிப்படைகளில் பிளவுபடுத்துவதில் குறிவைத் தன. தங்களுடைய முன்னுள் காலனி உடைம்ைகளைப் பறி கொடுத்த பின்னல், இளம் அர சுகள் வலுவிழப்பதற்கும், அவற் றைத் தொடர்ந்து தங்கள் செல் வாக்சிலேயே வைத்துக் கொள் வதற்கும் ஏதுவானது எ ன் று கணக்கிட்டு, ஏகாதிபத்திய வாதி கள் தொடர்ந்து அதே துருப்பு சீட்டை ஆடுகிருர்கள். தேசிய அல்லது போலி தேசிய மோதல் களை செயற்கையாக உருவாக்கி தூண்டி விட்டு, வளர்த்து ஒரு தேசத்தின் பொருளாதார, அர
சியல் மிடிமையைத் தொடரும்
திட்டத்தின் தனித் தன்மையான உதாரணத்தை ஏகாதிபத்தியம் இந்தியாவில் கையாளும் கொள் கையில் காணலாம். துணைக் கண் ட த் தை மத அடிப்படையில் பிரித்தது தேசத்தில் கணக்கு வழக்கில்லாத சங்கடங்களையும், முடிவே இல்லாத துன்பங்களை யும் உருவாக்கியது. புதிதாக உருவாகிய நாடுகளுக்கிடையே பதட்ட நிலை நீடித்து நிலைக்க வும் வழிவகுத்தது. ஏகாதிபத்தி யமும், அதன் கைக்கூலிகளும், இந்தியா, இந்தோனேஷியா, பர்மா, ஆப்கனிஸ்தான், ஈராக், நைஜீரியா, எத்தியோப்பியா, அங்கொலா மற்றும் இதர தேசங்களின் மக்களினங்களுக் கிடையே மு ர ண் பா டு களை உசுப்பிவிட்டு, தேசிய சிந்தனை நீரே (ா ட் டத்  ைத பிரிவினை வாதத்தை நோக்கி திருப்பிவிட்டு இதன் மூலம் இளம் அரசுகளை శీవీ முயற்சிக்கின்றன.
வருவதுமல்ல.
இந்தக் கால கட்டத்தில் தேசங்களின் சுய - நிர்ணயம் எ ன் ப த நீ கு அரசிடமிருந்து பிரிந்து போவது என்பது பொரு ளல்ல. சுய நிர்ணயமும் பிரிவினை யோடு கைகோர்த்துக் கொண்டு (இருந்தாலும் கோட்பாடு ரீதியில் இது நடக் காது என்று செல்ல முடியாது) கிழக்குப் பாகிஸ்தான் ஒரு புதிய நாடாக - வங்காள தேசக் குடி யரசாக - உருவானதை ஏதோ தற்செயல் நிகழ்ச்சியென்றே, வரலாற்று ரீதியாக நியாயமற் றது என்ருே கருத முடியாது. ஏனெனில் பா கி ஸ் த ர னின் கிழக்கு பிராந்தியங்கள் மேற்கு பாகிஸ்தானேடு நெரு ங் கி ய உறவுகள் கொண்டிருக்கவில்லை. மேற்குப் பாகிஸ்தானின் பூர்ஷல வாக்கள், நிலப்பிரபுக்கள் நலன் களுக்காக கிழக்குப் பிராந்தியம் ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட் டது. பாலஸ்தீனிய அராபியர் களின் சுய நிர்ணயப் பிரச்சி னைக்கு ஒரு சுதந்திரமான அரசை அமைப்பது என்பதைத் தவிர,
ஒருவர் வேறு எந்தத் தீர்வை
யும் கண்டுபிடிக்க முடியாது. ஆனல் மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்கெல்லாம் தேசிய ஒருமைப்பாடு, தேசிய சிறுபான்மையினரை நசுக்கிய தன் மூலம் வெல்லப்படவில் இலயோ, எங்கெல்லாம் தேசிய ஒருமைப்பாடு எ ன் பது ஒரு செயற்னகயான கூட்டம்ைப்பில் &jGBuurt, அங்கெல்லாம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை, ஒரு பெரிய பல தேசக் கூட்டமைப் பின் அனுகூலங்களைப் பாதுகாப் பதன் மூலமும், அதே சமயம்
அங்கு வாழும் அனைத்து மக்க
ளுக்கு சுதந்திரத்தை நிச்சயப் படுத்துவதன் மூலமும் பெறலாம்.

பழைய பொன்னம்மாக்களும்
சிகப்புக் குஞ்சுகளும்
--முல்லையூரான்
செத்தாயோ
கோழிக்குஞ்சே! செத்தாயோ, தின்னக் குறுணல், சிரட்டையில் தண்ணி சூட்டுக்குள் அம்மா இறகு விளையாட ஏறி அவள் முதுகு, இத்தனையு மிருக்க நீ செத்ததுமேன்? பேசாமல் இழுத்துத் தாக்க யாருமற்ற அனதையோ நீ, முட்டை விலங்குடைத்து கூர்ச் சொண்டோடுவந்த வீரத் தோழியன்றே, சும்மாவோ இழுத்துத்தாழ்ப்போம். பருந்தும் வட்டமிடும் வல்லூறும் புத்துக் கீரியும். புள்ளி நாகமும் . குரல்வளை திருக கோழிகள் வரிசையில் சேர்த்திடு வாரென பிரம்புக்கூட்டில் அடைத்து வளர்த்தனே, பழம் பொன்னம்மா போலவே போனயே செத்ததுமேன் குஞ்சே நீ
செத்ததுமேன், a * மரணவிசாரணை மானிடனே கேள்! தின்னக் குறுணலும், சிரட்டைத் தண்ணியும் சூட்டுக்கம்மா இநகும் விளையாட ஏறி அவள் முதுகும் தந்தாய்தானுலும் ஒடி விளையாட துள்ளிக் குதித்தோட நீண்டு நோக்க - நிம்மதியாய் நிமிர ஏது இடம் தந்தாயோ?" என்பதுபோல் ஓர் சிகப்புக்குஞ்சு என்னையே நோக்கவும் கட்டினைத் திறந்து "பறந்தே போக! பருந்தினை வெல்லும் ஆற்றலைப் பெறுக! நிமிர்ந்து நீண்டு தொலைவு நோக்குக! உலகின் அழகுப் புழுதிகள் எத்தனை அத்தனை அழகுப் பெண்டிரும் உனைப்போல் பூட்டியே மாண்டனர்
போய்வா செல்வி யென்றே புலம்பிடுவேன் அழுது அழுகுரல் மேவி அணிநடை ஒலிகள் ܝܚ கீச் கீச செணறு மெல்ல் நகர்வேன், 'h

Page 22
கீழே
வெறும் அலங்காரங்களையே அபிவிருத்தியாக எண்ண முடிவதால் எத்தனை வாய்ப்புகள் இந்தத் தீவில்
சவீடியோ’ப் படங்களில் ஆபாச ஒழிப்பை . அமுலுக்குக் கொண்டுவரலாம.
வெற்று வயிறுகளை மறைப்பதற்கு வெளிநாட்டுத் துணிகள் தரப்படலாம் ,
முத்திரை வெளியீடுகள் போலாகி விட்ட லொத்தர்ச் சீட்டிலொன்றை வாங்கி விட்டால் ஏழைகளும் கூடஇலட்சாதிபதிகளாகும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கலாம்:
சுரண்டிப் பார்க்கும்வரை சுப்பையனும் கூடப் பணக்காரன்தானே?
எதையும் ஈடுவிைக்கத் துணிந்துவிட்டால் ஏஜென்சிக் காரனும் நிஜனங்ாப் பிரகாரமரப் ஏஜென்சிக் காரணுகவே இருந்துவிட்டால் y
வறுமைக் கோட்டுக்குக்
பி. எஸ். சிவகுமார்
சரி. நீங்களுமே ஏற்றுமதியாகி
சிலர் வியர்வையைத் தேயிலையாக்கி வெளிநாட்டுக் காசு பண்ணினுேம் இப்போஎங்களையும் விற்று உருப்பட வழி பார்க்கிருேம்.
விடலாம்.
"கடன்பட்டார் நெஞ்சம் பற்றி கம்பனும் எதையோ சொன்னன்.
அதிலுள்ள வசதி பற்றி
அவனுக்கென்ன தெரியும்? கஷ்டப்படுவதை விடக் கடன்படுவதே சுலப வழியாயிருக்கையில் இங்கு கஷ்டப்படுபவர்கள் பற்றி நரங்கள் கவலைப்படுவ தெப்படி?
விண்ணளாவும் கட்டடங்கள்! " வீட்டுக்கு வீடு 'அன்ரெணு"க்கள்! வீதியை மொய்க்கும் வெளிநாட்டூர்திகள்! புள்ளி விபரம்தான் புத் யில்லாமல் சொல்கிறது: இங்குவறுமைக் கோட்டுக்குக் கீழே அறுபதினுயிரமாம்! உங்களுக்குமா
stries6ir *புதிய விருத்திகள் புர்யாமல் போகவேண்டும்?
40
 

தேனிலும் இனிய தேன்மொழி'
கோப்பாய் எஸ். சிவம்
ஈழ்த்துத் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் வரலாற்றிலே ான்றும் மறவாத இனிமைபயக்கும் அத்தியாயங்கள் பல உள. தனியே கவிதைகளை மட்டும் பிரசாரம் செய்யும் சில சஞ்சிகைகள் அவ்வப்போது தோன்றி மறைந்துள்ளன. இன்று புதுக்கவிதை என்னும் வசன கோலங்களை வெளியிடும் பத்திரிகைகள அடிக்கடி தோன்றி மறைகின்ற பொழுது அதனேடு சம்பந்தப்பட டவர்கள் தாம்தான் அப்படி ஒரு புதுமையைச் செய்வதாகப் பேசி யும் எழுதியும் வருகின்றனர்,
ஆனல் இன்றைக்குக் கால் நூற்ருண்டுகளுக்கும் மு ன் ன ர் ஈழத்திலே ஒரு தமிழ்க் கவிதைப்பத்திரிகை மலர்ந்தது என்பது பலருக்குத் தெரியாது. பின்னர் வெளிவந்த "நோக்கு’, ‘கவிஞன்” ஆகிய சஞ்சிகைகளுக்கெல்லாம் முன்னேடியாக 1955 ம் ஆண்டிலே
மொழி” என்ற இந்த இதழை வெளியிட்டவர் வரதர்.
மறுமலர்ச்சிப் பத்திரிகையாளர் வரதரும், மறைந்த கவிஞர் மஹாகவியும் இணைந்து முது தமிழ்ப் புலவர் நவாலியூர் சோமி சுந்தரஞர் அவர்களின் நினைவுச் சின்னமாக "திங்கள் வெளியீடு என்ற அறிவிப்புடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட கவி தைப் பத்திரிகைதான் ‘தேன்மொழி"
ஆறு இதழ்கள் மட்டும் சுமார் ஒரு வருட காலத்தில் சிறு இறு இடைவெளிகளுடன் வெளிவந்த பின் துரதிர்ஷ்டவசமாக தேன்மொழி நின்றுவிட்டது, முதலாவது இதழின் எந்த ஒரு பாகத்திலும் ஆண்டு, மாதம், தேதி எதுவும் குறிப்பிடப்பட வில்லை என்பதைக் குறிப்பிடும் அதே நேரம். ஆறு இதழ்களும் ஒரே அளவாக, பதினறு பக்கங்கள் கொண்ட சிறிய கைக்கு அடக்கமானதாக அமைந்த சிறப்பையும் குறிப் பிடத் தான் வேண்டும்.
எல்லா இதழ்களின் முகப்பும் ஒரே விதமான அலங்கார புளக்" கை வெவ்வேறு வண்ணங்களில் கொண்டதாகவும், சோம சுந்தரப் புலவரின் முத்தான பாடல்களைக் கொண்டதாயும் அமைந் தன. கடைசிப் பக்கமான பின்புற அட்டையில் ஆசிரியர் கருத்துக் க்ளும் அந்தந்த இதழுக்குரிய சிறப்புக் கவிஞர் ஒவ்வொருவர் பற். றிய அறிமுகமும் "புற இதழ்’ என்ற தலைப்பில் காணப்பட்டன. ஒவ்வோர் இதழிலும் சுமார் பத்துக் கவிதைகள் இடம்பெற்றன. இவற்றில் ஒன்று 'பத்து ஆண்டுகளின் முன் பாடிய செல்வங்கள்
41

Page 23
என்ற தலைப்பில் அந்தந்தக் கவிஞரின் பத்துத் தமிழ்ப் படையவி லொன்ருக அமைந்தது.
இரண்டாவது இதழிலிருந்து வெண்பா ஈற்றடி ஒன்றை வெளி யிட்டு அதனைக் கொண்டு நேயர்கள் யாத்தனுப்பும் த ரமா ன வெண்பாக்களை அடுத்த இதழ்களில் வெளியிட்டு வந்தனர். ஏராள மானேர் அதில் ஆர்வமுடன் கல்ந்து கொண்டதைக் கவனிக்க முடிகிறது. உதாரணத்திற்கு சுவையான ஒரு ஈற்றடியில் அமைந்த சில வெண்பாக்களைப் பார்ப்போம்.
"வேசிக்கும் உண்டோ விருப்பு" என்ற ஈற்றடி இரண்டாம் இதழில் அறிவிக்கப்பட்டு, மூன்ரும் இதழில் பத்து வெண்பாக்கள் பிரசுரமாகியிருந்தன.
*காசுக்கு மானம் கடைத்தெருவில் விற்கம் ஒரு வேசிக்கும் உண்டோ விருப்பு என்றும், "பூசிமினுக்கிப் புறப்பட் டுலவிடுவாள் வேசிக்கும் உண்டே விருப்பு"
என்றும் இப்படி எல்லாரும் நேரடிக் கருத்தை முன்வைத்தனர். மிருசுவில் அரி அரன் என்ற கவிஞர் மட்டும் இந்த ஈற்றடியைப் பிரித்து சொற்சிலப்டம் ஆடிப் புதுமையான கருத் தி ல் ஒரு
வெண்பா செய்திருந்தார். v
'வேழச் சுளு அந்தப்பாழும் வெகுபசியால் ஆழக் கடவில் ஒரு இரைதான் - வீழச் சந் தோசிக்கும், தீனியெனத் தூண்டிலினக் கொத்தவர வே, சிக்கும் உண்டோ விருப்பு"
இங்கே மூன்றும் அடியின் இறுதியில் 'தீனி எனத் தூண்டிலி னைக் கொத்தவர" என்பதுடன் கடைசி வரியிலுள்ள வேசிக்கும் *வே யை இணைத்து "கொத்தவரவே சிக்கும், உண்டோ விருப்பு?" என்று எடுத்திருக்கும் தன்மை மிக அருமை,
இதே கவிஞர் "தேன் மொழி இதழ்களில் வேறும் இரு கவிதை களை வெண்பா வடிவிலேயே எழுதியிருக்கிருர், வெண்பா அமைதி நன்ருக இருப்பினும் சொல், பொருள், சிறப்பு எதுவும் இல்லை.
பொதுவாக கவிஞர்களுக்கே இயல்பான காதலையும் பெண்ணை யும் பாடும் தன்மை அதிகமான தேன்மொழிக் கவிஞர்களில் காணப்பட்டது.
சோமசுந்தரப் புலலர் நினைவுச் சின்னமான இந்த மாத சஞ் சிகையில் அவரது மூன்று கவிப்புதல்வர்களது கைவண்ணங்களும், அவ்வப்போது இடம் பெற்றிருந்தன. நவாலியூர் சோ. நடராஜ னின் பிரிவு” கவிதை மிகப் பழைய பாணியில் அமைந்திருக்க, ஆரும் இதழில் வெளியான "நவீன சூர்ப்பனகை வருகை" என்ற கவிதை புதுமைப் பெண்களின் போலி நாகரீகத்தை நகைச்சுவை யோடு கிண்டல் செய்யும் நல்லதொரு பாடல்.
“காதிடை விளங்குவன கைவளைகள் போலும், கையிடை விளங்குவன காலணிகள் போலும்" என்ற அடிகளும்,
42

"சந்தையில் மருண்டதொரு நந்தியென வந்தாள்’ என்ற உவ மானமும் ரசித்துச் சிரிக்க உகந்தன. கம்பரது சூர்ப்பனகை வர் ணனைப் பாடலின் சத்தத்தில் இப்பாடல் அமைகிறது:
புலவரின் மற்றெரு மகளுகிய இளமுருகனுர் "இலங்கை மாதேவி தசாங்கம்" என்று பழைய பாணியிலேயே தமது படைப் பை உருவாக்கியுள்ளார். மூன்ருவது மைந்தரான சண்முக பாரதியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன, பத்து / ஆண்டுகளின் முன் பாடிய செல்வமாகப் பிரசுரித்துள்ள "காகித வள்ளம்" சொல்ல ழகும் தத்துவார்த்த மும் கொண்டது. "நீரிற் கொழுத்திய தீபம்" சாதாரணமான கவிதை. நான்காம் இதழில் இடம் பெற்ற 'நிழலருமை” என்ற இவரது கவிதை நகைச்சுவையுடன் அங்கதம் சேர்ந்து பொலிகிறது. f
"கரும்பாய்க் கவிதந்த காப்பியனர் தம்தொழிலைத் துரும்பு மனிதர்நீர் செய்யத் துணிந்த தென்ன?"
என்று ரசிகர் கேட்டதற்குக் கவிஞர் விடை சொல்கிருர்:
வெய்யிலை இலையேல் நிழலை விரும்புவரோ? பொய்யிலை யேல்மெய்யின் புனிதம் வெளிப்படுமோ? கம்பன் விருத்தக் கவியின் சுவை கான என்றன் கவியில் இரண்டைஎடுத் தோதுங்கள்" என்று
கவிஞர் முருகையன் அனைத்து இதழ்களிலும் எழுதியிருக்கிருர், ஒவ்வொன்றும் ஒவ்வோர் ரகம். எல்லாமே சுவை கொட்டும் கவிதைகள்தான். இன்று வெண்பாவைக் கூட புதுக்கவிதைப் பாணியில் சொல்பிரித்து அடுக்கி எழுதுவதும், பொருள் விளங் காத புதுமைகள் எழுதுவதும் முருகையனது பாணியாக இருப்பி னும், அன்றைய கவிதைகளில் கவிச்சிறப்பு, சொல்லழகு, கிண் டல் யாவும் இருந்தன. ஒரு கவிதை.
"பேப்பர்க் காரன் உயிருடன் உள்ளான் பெரும்ை கொண்ட எழுத்தினை அச்சிற் கோப்புச் செய்து வெளியிட இன்னும் குறைநமக் குளதோ?" என்று கேட்டு, 'அறிவோர் இம்மியும் வேண்டிய தில்லை ஆக வேண்டிய தென்னவோ? கேளும் குறைகள் ஆயிரம் கூறுதலோடு குணங்கள் தம்மை விழுங்கிவிட வேண்டும்" என்று சொல்லி விமர்சகர்களைக் கிண்டல் செய்கிறது. இன்னென்றுவி "நாங்களே நமைப் பகைத்து நாசம் ஆதல் அல்லவோ ஓங்கும் எங்கள் நல்லினத்தின் உத்தமதனிக் குணம்’ என்று நமதினத்தின் உட்பகையைச் கண்டிக்கிறது, வெறுமே கல்வி டைய சிறப்புககளை வைத்தே "கல்மகாத்மியம்" என்று சிறப் க்கிறது ஒரு கவிதை
"கற்பூர வாசனையைக் கழுதை அறிந்திட வசமோ? பொற்பாரும் பொயிலை மணம் புல்லார் அறியார்"
忽盘,

Page 24
என்று புகை ஒலிரச் சாடுகிறது இன்னென்று. தமிழிசையை வர வேற்றுப் பாடுகிறது ஒரு கவிதை. சிறு குழந்தை அணைத்திருக்கும் யாசப் பிணைப்பை இப்படி அழகோடு சொல்கிறது முருகையனின் ‘எங்கள் நினைவிலே" என்ற கவிதை.
"விறைக்குதே அம்மா என்ற
மெல்லிய முனகல் கேட்டேன்
பொறுக்குமோ குளிரை எங்கள்
பொன்குஞ்சு துயில் கலைந்து
விறைக்கிற தென்கிருனே
விரைந்திட்டேன் அவனை நோக்கி
போர்வையை இறுக்கிப் போர்த்தாற்
போதும்ா அம்மா? என்ருன்
ஓர் கணம் வியந்தேன் பின்னும்
ஓர் நொடி விளங்கிற் றுண்மை
பார்வையை அன்பாய் ஆக்கிப்
பக்கத்தில் படுத்து விட்டேன்
பேரிடி மழைகள் எல்லாம்
பின்னர் எம் நினைவில் இல்லை".
யாழ்ப்பாணனின் குழந்தைக் கவிதைகள் பெருமை பெற்றவை
ஆனல் தேன்மொழியில் இடம் பெற்ற அவரது ஒரேயொரு கவி தையும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தென்னிந்தியக் கவிஞர் கள் சிலரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. முக்கியம்ாக கவி நயத்திற்குப் பேர்போன சு.து. சு. யோகியார் கவிதை ஒன்றும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்தது. தான் தோன்றிக் கவிராயர் வசைபாடுவதில் பேர் பெற்றவ்ர். அவரிடம் அங்கதப் பாடல் கேட்டிருக்கிருர் ஆசிரியர். அதையே கவியாக்கி,
"அங்கதமே வேண்டும்" என ஆணையிட்டீர் ஐயாவே இங்கதனை இன்றைக்கு ஏற்பதற்கு யாருளரோ? "குத்து வெட்டு கொல்" என்று கொக்கரிப்பார் பாவம் அவர் வெத்து வேட்டெல்லாம் விளங்காதோ எங்களுக்கு எல்லாம் அறிவோம் நாம், என்ருலும் உங்களுக்கேன் பொல்லாப்பு?- உம்மிதழில் போட்ாதீர் என்பாட்டை?
என்று விளாசியிருக்கிருர் அவர்,
வி. கி. இராசதுரையின் நான்கு கவிதைகளும் ஓரளவு நல்ல கவிதைகளாக உள்ளன. கவிஞர் சாரதா,
"பழந்தமிழர் அதுசெய்தார் இதுவும் செய்தார் பண்ணுதவர் கணக்கில் இல்லை" என்று
குழந்தைமொழி வழங்க்லிலோர் கொள்கை இல்லை?
என்று துயிலெழுச்சி பாடியுள்ளது வரவேற்கத்தக்கது, அதே துயி லெழுச்சியை இருபத்தைந்தாண்டுகளின் பின் இப்போதும் நம்க் காகப் பாடவேண்டியுள்ளது. s சோதியின் மூன்று கவிதைகளும் சாதாரணமானவைதான். வேந்தனரிள பிரபலமான "அம்மா பாடல் தேன்மொழியில் வெளியாகியுள்ளது. 'காலைத்தூக்கி கண்களில் ஒற்றி? என்ற இப் பாடல் இலங்கை வாைெவியிலும் ஒலிப்பதுண்டு.
á 4

நாவற்குழியூர் நடராசாவின் மூன்று கவிதைகளில் ஒன்று பாரதிதாசனின் கவிதை ையஅடியொற்றியது, பாரதியார், பாரதி தாசன் இவர்களின் தாக்கம் நாவற்குழியூராரின் கவிதைகளில் அதிகம் காண்பதுண்டு. வானெலி ம்ெல்லிசையில் ஒலிக்கும்.
"கேட்குது மணிஓசை போலக் கிண் கிணிர் என"
என்ற இவரது சிலம்பொலிப் பாடல் இரண்டாம் இதழில் பிரசுர மாகியுள்ளது. "ப்டுத்துகிற பார்வை” என்ற தலைப்பில் காதலியின் பார்வை பற்றிய வெண்பாக்கள் அற்புதமான வர்ண ஜாலங்கள். உதாரணத்துக்கு இதோ!
"நான்பார்க்கத் தான்பாராள் நான்பாரா விட்டதன் பின் தான் பார்த்து வான்பார்க்கும்; நான்பார்க்கில் தான் பார்த்த வான் பார்த்து மீன்பார்த்து வையத்துள் வெல்லாம்
தான் பார்க்க ம்ென்னைத் தவிர்த்து" எழுத்தாளர் அ. நா. கந்தசாமி ஆரம்பத்தில் கவிஞராகவே எழுத்துலகில் புகுந்தார். அவருடைய கவிதைகள் சிலவும் காண முடிகிறது "நான் செய்த நித்திலம்" என்ற அவரது கவிதை ஒரு நல்ல கவிதை.
தேன்மொழியில் ஆதன் இணையாசிரியராகிய மஹாகவி'யின் நான்கு கவிதைகள் வெளிவந்தன. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளையும் உணர்வு பூர்வமாகப் பார்க்கும் தன்மையும், குழந்தைத்தனமான அவரது கவியுள்ளமும் அவருடைய "பல்லி" என்ற கவிதையில் துல்லியமாகிறது. "புள்ளியளவில் ஒரு பூச்சி" என்ற அவரது பிர பலமான கவிதை போலவே இதுவும் ஒரு சம்பவத்துளி.
இவரது கவிதை தொடர் நாடகமான அடிக்கரும்பு நாலாம் இதழில் ஆரம்பமாகியது. ஆனல் தொடரவில்லை. பிறகு வேறெங் காவது இக் கவிதை நாடகம் வெளியாகியதா என்பது தெரிய ଈର୍ଷୀଥିନି),
ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை மாத இதழாகிய வரத ரின் தேன்மொழி ஆறு இதழ்களுடன் நின்று விட்டது அண்வருக் கும் வேதனை தரும் செய்தி. அக்காலத்தில் "தேன்மொழி' ஒரு பிரதியின் விலை இருபத்தைந்து சதம் மட்டுமே. இன்று தேன் மொழியின் பிரதிகள் அதன் ஆசிரியர்களிடம் கூடக் கைவசம இல்லை என்று கேள்வி. ஆனல் வரலாற்றில் தேன்மொழியின் இடம் நிரந்தரமானது ஆகும். O
* ஆப்பிரிக்காவில் ஒடும் கஜீரா என்ற நதி தலைகீழாகப் போகி
றது. கடலில் உற்பத்திாகி வரியில் சங்கமமாகிறது.
* விக்டோரியா மகாராணிக்கு முடி சூட்டும்போது அவருக்கு
வயது 13 தான்
* இந்தியாவைப் பற்றிய முதல் தேசப் படம் 1752 ஆம் ஆண் டில் டா ஆன் வில் என்னும் பிரெஞ்சுக்காரரால் வெளியிடப் ,"L--gjJمنtdL

Page 25
சகலவிதமான இரும்புச் சாமான்கள்
கட்டடத் தேவைக்கேற்ற பொருட்கள்
அனைத்தையும் பெற்றுக் கொள்ளச் சிறந்த இடம்
பாசி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் 30, கே. கே. எஸ். விதி, சுன்னுகம்,
 

கடிதங்கள்
இம் முறை ஆண்டு மலர் வெகு சிறப்பாக அமைய வேண்டும் என விரும்புகின்றேன்.
சமீப காலமாக மல்லிகைக் கட்டுரைகளில் ஓர் ஆழம் தெரிகி றது. அது ஒருவேளை புத்திஜீவிகளுக்குத்தான் மல்லிகை என்ற நிலைக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குறுநாவல் போட்டி முடிவின்படி பரிசு பெறும் குறுநாவல் ஒரே இதழில் வெளியிட முனைந்துள்ளது நல்ல செய்தி. ஆண்டுக்கு ஒரு தடவையாவது போட்டிகள் வைத்து மூலை முடுக்குகளில் தேங் கிப்போயிருக்கும் தரமான படைப்பாளிகளை நாட்டுக்கு அறிமுகப் படுத்தி வையுங்கள்.
தூண்டில் பகுதியில் வரும் பதில்கள் பல தகவல்களே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. இப்படியான இலக்கிய அநுபவங்களை நாங்கள் படித்துப் பெறுவதற்க: கவே நீங்கள் அடிக் கடி தமிழகம் போய் வரவேண்டும் போல இருக்கிறது.
இலங்கையில் இப்படியான ஒரு தரமான இலக்கிய இதழை மாதா மாதம் வெளிக் கொண்டு வருவதற்கு நீங்கள் படும் சிர மத்தை மானசீகமாக என் மனதிற்குள் நினைத்து உங்கள் மீதும் உங்களது தளரா உழைப்பின் மீதும் பெரு மதிப்புக் கொண்டுள் ளவன் நான். எனவே மனச் சோர்வு அடையும் போது முகம் தெரியாத நம்மைப் போன்றவர்களின் நெஞ்சத்து ஆர்வங்களே ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். என்னைப் போல, ஆயிரக் கணக்கான இலக்கிய ஆத்மாக்கள் மல்லிகையின் தார்மீக பயத் தின் மீது நம்பிக்கை கொண்டு, ஆதரவாக நிற்கின்ருேம் என்ப தையும் நினைத்துப் பாருங்கள்.
பல புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த வேன் டு ம் மல்விகையில்,
அட்டைப் படத்தில் சிறிது கவனஞ் செலுத்துங்கள். சென்ற 18 வது ஆண்டு மலர் அட்டைப் படம் உழைக்கும் இளநீர்க் குரும்பைக்காரனின் உருவத்தைப் போட்ட போதிலும், துலக்கமில் லாததால் மனசைத் தொடவில்லை. இந்தத் தடவை அட்டையைக் கவனித்துச் செய்யவும். அத்துடன் உள்ளடக்கமும் சிறப்பாக அமைதல் வேண்டும். சென்ற இதழில் சகல எழுத்தாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளீர்கள். அந்த அழைப்பைக் கெனரவித்துப் படைப்பாளிகள் உங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.
ஆண்டு மலர் சிறப்பாக அமைய மீண்டும் எனது வாழ்த் துக்கிள்.
சுன்னகம் ஆர். தேவதாசன்
4挚

Page 26
நான் பேராசிரியர் அவர்களை, இலங்கை முற்பேயக்கு எழுத்
தாளர் சங்கத்தினர், பெண் இலக்கிய கர்த்தாக்களோடு சேர்ந்து 27 - 3-82 ல் பம்பலப்பிட்டியில் நடாத்திப பாரதி நூற்ருண்டு விழாவில் கடைசியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அன் றைய பின்னேர நிகழ்ச்சிக்கு, நிக்ழ்ச்சி நிரலில் போடப்பட்டிருந்த பேச்சாளர் வராத காரணத்தால், பேராசிரியர் அவர்களுக்கு அந்த வெற்றிடத்தை நிரப்பி, நிகழ்ச்சியைத் தொடர வேண்டிய பணி இடப்பட்டது. பிற் பகல் 5 - 30 மணிக்கு பேராசிரியர் தமது பேச்சை ஆரம்பித்தார். அரை மணி நேரத்தில் பாரதியாரைப் பல கோணங்களில் அணுகி, அவர் தமிழுக்கும் சமூகத்துக்கும் செய்த தொண்டினைக் கேட்போர் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்தார். பேச்சை முடிக்கும் தறுவாயில், கேட்போர் பின்னேர நிகழ்ச்சிகளைக் கேட்டு சலித்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க ஆலலோடு இருப்பதாகவும், தான் அவர்களின் பொன்னன நேரத்தை அபக ரிக்க விரும்பவில்லையெனவும் குறிப்பிட்டார்.
பேராசிரியரின் இலக்கியப் பணி, பல்கலைக் கழகத்தோடு மாத் திரம் நின்றுவிடாமல், நம் நாட்டிலுள்ள பட்டி தொட்டிகளிலும் பரலி சாதாரண மக்களுக்கும் இலக்கிய அறிவை ஊட்டியதோட்ல் லாமல், எமது நாட்டின் இலக்கியத் தரத்தை வெளி நாட்டவர் கூட போற்றும் வாய்ப்பை அவரது அரிய நூல்கள் ஆக்கித் தந்துள்ளன.
பதுளை, நா. இரகுநாதன்
8
83 ஜூன் ம்ாத மல்லிகை இதழில் வெளியான, யோகா பாலச்சந்திரன் எழுதிய "எது நிஜம்' என்ற சிறுகதையின் ஓரிடத் தில், "சட்டி சுட்டதடா கை விட்டதட ' என்று சாக்குப் போக் குச் சொல்வதும்தான் தமிழர்களின் தனித்துவமான பண்பாடு என்று நினைத்துக் கொண்டீர்களா என்றும் - மற்முேரிடத்தில், "சரியான நேரத்தில் நீங்கள் ஒரு சராசரி யாழ்ப்பாணத்தான் என்பதை ஞாபகப்படுத்திபதுக்கு நன்றி" என்றும் குறிப்பிட்டுள் ளார். அவரது கதையில் இவ்விரு கட்டங்களும் வலிந்து புகுத் தப்பட்டவையாகவே எனக்குப் படுகிறது. "ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம்" என்பது வேறு. ஒரு மனிதனைக் கொண்டு ஓர் இனத்தையோ ஒரு பிரதேச கலாசாரத்தைமோ அளவிடுவது என்பது வேறு, என்பதை கதைஞர் உணர்தல் நன்று.
பன்டாரவளை. மனுேரஞ்சிதம்
A8

பத்தோடு
பசியும்
சிதம்பர திருச்செந்திநாதன்
6 AA
SD ud ud m, குளி க்க ப் போகட்டே?” என்று சிவராசா கேட்டான்:
"என்னடா சுவரோடு சாய்ந் திருந்து பால் குடித்துக் கொண் டிருந்த தனபாக்கியம், விழிகளை உருட்டி கோபப் பார்வை பார்த் துக் கொண்டு கேட்டாள்,
"குளிக்கட்டோ அம்மா?"
தனபாக்கியத்தின் வெம்மை யான பார்வைகளைத் தாங்க
முடியாமல் தரையைப் பார்த் துக் கொண்டான்.
"போடா சனியன்! இப்ப பாக் கிற வேலையைப் பாr. குரிக்கப் போறியோ? காட்
டுக்கை சீவித்த உனக்கு, குளிச் சுப் பழக்கமிருக்கே?"
சிவராசாவுக்கு சுள்ளென்று யாரோ முதுகில் அடித்ததுபோல இருந்தது. கூடவே கோபமும் வந்தது.
*ஒவ்வொரு நாளும் தாம ர்ைக் குளத்தில் உங்களைய்போல ஐஞ்சு, பத்து நிமிசம் குளிக்கா
மேல குளிக்கிறனன்"
அவரின்
மல், ஒரு மணித்தியாலத்திற்கு எ ன று சொல்ல நினைத்தாலும், சொல்ல வில்லை. அவன் கண்கள் கலங் கின.
எங்கடை குடும்பம் காட் டிலா சீவிக்கிறது? எவ்வளவு அழகான கிராமம். அளவரவின
சின்ன வீடுகள். ஒலைக் கூரையின் குளுமை
எ ப் படி ப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள். பசும் பச்சையாய் சா, என்ன வடிவு. அப்பிடிப்பட்ட இடத்தைக் காடு, காடு என்று சொல்லும் தனபாக்கியத்தின் மனநிலை புரியவில்லை;
தனபாக்கியம் மாத் தி ர மல்ல, அவர் வீட்டில் உள்ள அத்தனை பேரும் அப்படித்தான். ஏதோ இரண்டு கா லுள்ள வினுேத பிராணியாகத் தன்னை நினைத்து, "என்னடா? ஏன்டா முழிக்கிருய்? இதைக் கண்டிருப் பியே" என்ற கேள்விக் கணைக ளுடன், கழுதை, பன்றி, நாய் முட்டாள் என்று வந்த சில மணித்தியாலத்திற்கு இடையில் கேட்டுக் கேட்டு, சிவ ரா சா சலித்துப் போய் விட்டான்.
சிவராசா, கிராமப் பள்ளிக் கூடத்தில் வாத்தியாருக்கு உதவி செய்து கொண்டு, அவர் தங்கி யிருந்த விடுதியில் ச  ைம ய ல் வேலைக்கும், ஏனைய கழுவல், கூட்டல் வேலைகளுக்கும் துணை யாக நின்று, அது காரணமாக அன்பைப் பெற்றது தான் மிச்சம்,
படிப்புச் சரிவரவில்லை. அவ னுக்கும் அக்கறை வரவில்லை. யாரும் அக்கறைப்படவும் இல்லை. அது காரணமாக ஏழாம் வகுப் போடு படிப்பு, வெய்யில் காய்ந்து
雄9

Page 27
வயல் நிலமாக வரண்டு (Biri விட்டது.
அவனுக்கு ஐயாவும் இல்லே அம்மாவும் இல்லை. மாமாவோடு தான் இருந்தான். நாலுபக்க மும் வயல் சூழ்ந்திருந்த அந்த அழகான கிராமத்தில் அவன் மாமா ஒரு சின் னக் கடை வைத்திருந்தார்.
கடையின் முழுச் சாமான் களை ஒரு சாக்குக்குள் போட்டுக் கட்டிவிடலாம். அவர் சுகமில் லாத ஆள். அதனல் வயலை யாரிடமோ குத் த கை க் குக் கொடுத்து விட்டு, கடையில் பொழுதைப் போக்கிக் கொண் டிருந்தார்,
சிவராசா எப்போதாவது அவருக்கு உதவியாகக் கடையில் இருப்பான். மற்றப்படி ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் ஜ. ஸ் ள ஆலமரத்தடியிலும், தாமரைக் கு ளத் தோடு ம் பொழுது போகும்.
வயல் வரம்புகளில் ஏனைய வர் க ளே டு ரயில் விட்டுக் கொண்டும் தாமரைக குளத்தில் நீந்திக் கொண்டும், ", a miri தடியில் விளையாடிக், ('. படும் வெகு சந்தோஷமாகப் பொழு தைக் கழித்து. . .
இந்தச் சந்தோஷங்கள் 6ால் லாம் சட்டென்று ஒரு நாள் நின்றுவிட்டன. சிவராசாவின் மாமா ஒருநாள் கடையில் இருக் கும் போது மயங்கியவர்தான் பிறகு எழும்பவில்லை;
மாமாவுக்குச் சின்னச் சின் னணுக மூன்று பிள்ளைகள். மாமி எதற்கும் வள் என்று பாய்வாள்.
வசதியில்லாத வாழ்க்கை
வருத்தக்காரி, கணவரால் பட்ட
கஸ்டங் சுன் எல்லாம் சேர்ந்து அவளே ஒரு மாதிரியாக மாற்றி
இருந்தது. புருஷன் செத்த பின் னர் எதிர்காலத்தைக் கொண்டு நடத்த வழிதெரியாத தன்மை யினுல் வாழ்க்கையை வெகுவாக
வெறுத்திருந்த அவள், சிவராசா
வில் அக்கறை காட்டவில்லை.
அந்த அக்கறையின்ம்ை காரணமாகத் தொடர்ந்த சில நாட்களில் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் களைத்துத் திரிந்து மாலை வேளைகளில் பிள்ளையார் கோயிலடி ஐயர் தரும் புக்கையை எதிர்பார்த்து, அதுவும் இல்லா மல், முதல் தடவையாக சிவ ராசாவுக்குத் தாய், தகப்பன் மாமன் இல்லாததன் பயனை அனுபவ ரீதியாக உணரத் தொடங்கினன்.
மாமனைத் தவிர வேறு பல சொந்தக்காரர்கள் இருந்தாலும் இடையிடையே அணு தைப் பிள்ளை என்ற மாதிரி நினைத்து,
அவர்கள் சாப்பாடு கொடுத் தார்சள். அதுவும் எ த் தனை தாளைக்கு,
தனித்திருக்கும் வேளைகளில்
சிவராசா இது பற்றி யோசித்து எதுவுமே
புரியாமல் கண் கள் கலங்க வேதனைப்படுவான்.
, த்தனையோ பேருக்கு வாழ் வளி, ,ம் அந்த வளமான வயல் கள் நிறைந்த கிராமத்தில், சிவ ராசாவுக்கு வழி தெரியவில்லைகு
"நீ, எங்களோடையே இரு வயல் வேலைகளுக்கு உதவிசெய்" என்று யாரும் சொல்லவில்லை.
சிவராசாவுக்குப் படிப்பித்த ." க வாத்தியார் ஒரு நாள் பாளையார் கோயிலடியில் ஐயர் கொடுத்த புக்கையைச் சாப்பிட்
டுக் கொண்டிருந்த அவனைக் 3 Φώτι -πή . V
"என்னடா இது? இப் ப
என்ன செய்யிழுப்?" என்று கேட் t-Trri •
50

சிவராசா நடந்த  ைத ச் சொன்னன்; ' '
"ஐயோ பாவம் என்று பரி தாபப்பட்ட வாத்தியார்
னேடை வாறியா சிவராசா, என்ரை ஊருக்கு க் கூட்டிக் கொண்டு போறன், நல்லாய்ச்
gefT't L-GVfribs கத்தோஷமாக இருக்கலாம், அடிக்கடி ரவுணுக் குப் போகலாம், படம் urrifsh J,
லாம்" என்று கேட்டார்.
சிவராசாவுக்கு அ வ ர து வேண்டுகோளை உடனடியாக சீரணிக்க முடியவில்லை. நாளைக் குப் பின்நேரம் வாறன் யோசித்து வைத்திரு என்று வாத்தியார் சொல்லிவிட்டுப் போய்விட்டார்
பொழுது நன்முகச் சாய்ந்து இரவு வெகு நேரம். gaugurrrefIr அதுப்ற்றி யோசித்தான்,
வாத்தியாரோடு போவதை மனம் வரவேற்ருலும், கிராமத் தைவிட்டுப் போவதை நினைக்க துயரமாகவும் இருந்தது'
மிகச் சிறிய வயதில் இருந்து ஒன்ருகக் கலந்துவிட்ட கிரா நித்து மண்ணின் உயிரினை சிவ ரசா விட்டுப் பிரிய முடியாமல் தடுமாறினலும்,
மறுநாள் வாத்தியார் அவ ைேடு பேசிப் பேசி எப்படியோ
சம்மதிக்க வைத்துவிட்டார். பிறகு மாமியாரிடம் சிவரா சாவை வள ரு க்கு க் கூட்டிக்
கொண்டு போவதாகவும் மாதா மாதம் ஏதாவது அனுப்புவத கவும் சொன்னர்,
மாமி எந்தவிதரான மறுப் ւյւն சொல்லவில்லை, சிவராசா வாத்தியாருடன் புறப்பட்டான். தட்டிவானில் ஏறியபோது நெஞ்
சத்தில் பாரம் ஏறியது போல த விப்பு உண்டானது. வயல் வெளிகளையும் குளத்தையும்
கோயிலையும் விட்டு விலகி வெகு தூரம் வந்த பின்னர் கண்களில் கண்ணீர் சேர்ந்தது, வழிந்தது.
சிவராசாவின் மனம் சூனிய
மானது. தட்டிவானில் வந்த பிறகு, பஸ்சில் வரும்போதுதான் வாத்தியார் சொன்னர். w
"சிவராசா. நான் என்ரை வீட்டை இப்ப கூட்டிக் கொண்டு போரே லாது. கொஞ்ச நாளைக்கு எனக்குத் தெரிஞ்ச வீட்டில நில்லு, நல்ல சாப்பாடு கிடைக் கும். நீயும் கொஞ்சம் உதவி யாய் இரு சின்னச்சின்ன வேலை க்ள் செய்து கொண்டு ”字f} தானே" என்று சொன்னர்.
கிராமத்தை விட்டு வெளிக் கிட்டாச்சு, இனி என்ன. எல் லாம் ஒன்றுதான் என்று நினைத் தவகை சிவராசா தலையாட் டினன்
வாத்தியார் இன்றைக்குக் காலைமை சிவராசாவை தனபாக் கியம் வீட்டில் கொண்டுவந்து விட்டுப் போட்டுப் போய்விட்
—тії.
தனபாக்கியம் வீட்டை gal ராசா வந்த கதை இது கான். காலமை அவன் வந்த போக, தனபாக்கியம் வீட்டில் பெரிய அமளி.
f
ஏராளமான ஆட்கள். முத லில் என்ன விசயம் என்று அவ னுக்குத் தெரியவில்லை. பிறக தான் புரிந்து கொள்ள முடிந் தது.
நாலைந்து நாட்களுக்கு முன் னர், தனபாக்கியத்தின் மகளுக்கு கலி யாணம் நடந்திருந்த க'. இன்றைக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரருக்கு விருந்து. அதீதமான சுவைகள் நிறைந்த விருந்து.

Page 28
ଶ୍ରେt of tଗtubrrät ஆட் கள். சொந்தக்காரர். நண்பர்கள் என்று வீடு நிறையச் சனம். அதனுல் கலகலப்பு அமளி.
சிவராசாவுக்குப் புதுமை யாக இருந்தது. வந்த முதல் நாளே இப்படி ஆர வார ம் என்ருல்
“பெடியா வா... என்ன பெயர்" என்று தனபாக்கியம் கேட்டாள். கேட்ட தன்மையில் இருந்து அவள்தான் அந்த வீட் டின் சர்வமும் என்பதை அவ ஞல் முதலில் ஊகிக்க முடிய තෛෂීඨාධිඛිසු
2சொன்ன படி கேட்க வேணும். குழப்படி செய்யக் கூடாது. எனக்குக் கெட் ட
கோபம் வரும்" என்று சொன் ஞள் அவள். தலையாட்டுவதைத் தவிர சிவராசாவுக்கு வழியில்லை.
தனபாக்கியம் வீட்டில் நிற்
பவர்களை வேலைகளைச் செய்யு மாறு ஏவிக் கொண்டு, 6) யிலே சுவரோடு சாய்ந்திருந்து பால் குடித்துக் கொண்டு இருந் தாள். "புதுக்சு வந்த வேஃலக் காரப் பெடியனே கவனம். இந்த நாளையில உதுகளைக் கண்டபடி விடக்கூடாது. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு போயிடுங் கள். கவனம்" என்று விருந்துக்கு வந்த சொந்தக்காரர்கள் அறிவு ரையைத் தனபாக்கியத்திற்கு வழங்குவதையும்
"எனக்குத் தெரியாத வேலைக் காரப் பெடியன்களே! எத்தினை பேரை மேய்ச்ச அனுபவம் எனக்கு ஒழுங்காக இருக்க மாட்டாது.
ஆளுல் கழுதையள்.
籌
சும்மா இருந்து சாப்பிடத் திமிர் பிடிச்சு ஒடியிடுங்கள்" என்று தனபாக்கியம் சொன்னதையும் கேட்ட பின்னர்தான், வலையில் விழுந்துவிட்டதையும், அது எப் படியான வலை என்பதையும்
சிவராசாவால் உணர முடிந்தது.
வந்தவுடனேயே கிாப்பிட் டாயா, தேத்தண்ணி குடிச் சாயா என்ற கேள்வி இல்லாமல் அவன்விடப் பெரிதான வாளி யில் தண்ணீர் எடுக்க ஏவப்பட் டதைத் தொடர்ந்து, மத்தியா னம் இரண்டு மணியாகிவிட்ட இந்த நேரம்வரை அவன் சாவி கொடுக்கப்பட்ட இயந் தி ரம் போலச் செயற்பட்டு அதனல் உண்டான களைப்பு. பசி எல்
லாம் சேர்ந்து சித்திரவதைப்
படுத்த, மனிதாபிமானம், மணி தத் தன்மை என்மது எல்லாம் என்ன என்று தெரியாமல் தடு மாறிக் கொண்டிருந்தான்.
தனபாக்கிபம், அவள் பிள் ளேகள், பேரப்பிள்ளைகள் எல் லாரும் புதிய வேலைக்காரப்
பெடியனைப் பரீட்கித்துப்பார்த்து கிண்டபடி பேசிப் பார்த்துத் தான்காரியம் செய்தார்கள்.
பசிக் களை யினல் தான் குளிக்கவா என்று 7கேட்டு க் குளித்தால் சாப்பிட வரச்சொல் விக் கட்பார்கள் என அவன்
நினைத்தான்.
வீட்டின் ஹாலில் விருந்து உச்சக்கட்டத்தை அடைந்து, முடியும் தறுவாயை அடைந்தி ருந்தது,
மெல்லிதாக மருந்து குடித்து விட்டு ஆண்கள் தங்களுக்குள் சிரித்தக் கொண்டு, பின்னர் சாப்பிட்ட களைப்பால் கதிரை

களில் சரிந்து கொண்டிருந்தார்
கள்.
முகத்தின் அழகு கெடாமல் லேஞ்சியால் முாததை ஒற்றிக்
கொண்டு, காஞ்சிபுரங்களின் கரைகள் அழுக்குப் படாமல் இருக்க த ரை யிலே மிதந்து
கொண்டு பளபளக்கும் அதன்
தலைப்புகளை மடித்து வைத்தி ருந்த கைகளில் தவழவிட்டுக் கொண்டு, மிக இரகசியமாக்
ஊர்ப் புதினங்களை அசை போட் டுக் கொண் டு இருந்தார்கள் பெண்கள்.
நேரம் மூன்று மணியாகி விட்டது. சிவராசா பசிக்குது என்று கேட்கப் பயப்பட்டான். விருந்தின் வாசனை ஏற்கனவே பசியை அதிகமாக்கி இருந்தது
என்ன செய்வது?
ஏற்கனவே ஒரு த ட  ைவ கேட்டு, "பொறடா, ஏன் அவ சரப்படுருய்? உங்கடை ஊரிலை நேரத்துக்குச் சாப்பிட்டுப் பழக் கம் இருக்கே. பேசாமல் இரு எல்லாம் முடிஞ்ச பிறகு சாப்பி டலாம்" என்று தனபாக்கியம் தடை போட்டு இருந்தாள்.
வந்த முதல் நாளே இப்படி
பசி வேதனையால் துடிக்க வேண் டியுள்ளதே என்று நினைத் த போது, "நல்லாய் சாப்பிடலாம்? என்று வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்தது. எதைச் சாப் பிடுவது என்று கேட்க மறந்து போய் விட்டதும் கூடவே நினை வுக்கு வந்தது.
பால் குடித்து முடிக்த தன பாக்கியம் எழுந்து கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் நடமாடி ஞள். வீட்டின் மு ன் பக்க மீ போய் வந்தாள். வந்தவர்கள்
சொல்ல நினைத்தும்,
எல்லோரும் உண்ட மயக்கத்தி லும், ஊர்க்கதைச் சுவையிலும் மூழ்கியிருக்கவே அவள் பிற்ப? கம் வந்தாள்.
வாழைப்பாத்தி ஒன்றி ல் நாகரீகமாக சாப்பிட்டவர்களின் மிச்சங்களைக் கொண்டு வந்து இலைகளோடு போட்டு இருந் தார்கள். எந்த வித மான பொட்டும் இல்லாத உயரமான ம'ல்ெகளை உடைய தனபாக்கி யத்தின் வீட்டு வளவுக்குள் எப் ப டி. யோ புகுந்துவிட்ட குறி யிட்ட, மெலிந்த, மூன்றுகால் நாய் ஒன்று ஏராளமான சோற்றைக் கண்ட ஆனந்தத் தில் ஆ  ைச தீ லபக், லபக் என்று சாப்பிட்டுக் கொண்டி ருந்தது.
நாயைக் கண்டதும் தன
பாக்கியம் மரண துடக்கு உள்ள
ஆள், வீட்டுக்குள் வந்து விட் டது போல பதறினள். "சீஒேடு நாயே!" என்று கத்தினன். செவி இல்லாத நாயோ என்னவோ அசையவில்லை.
தனபாக்கியம் ஆத் திர ம் கொண்டவளாக பின்பக்க மாட் டுக் கொட்டிலுக்குப் போய் எதையோ மறைத்துக் கொண்டு
வந்து மிக ப் பலம் கொண்டு நாய்க்கு ஓங்கியடித்தாள்.
எந்த விதமான சத்தமும் இல்லாமல் நாய் வாழைப் பாத் தியினுள் அமிழ்ந்து போனது.
பார்த்துக் கொண்டு நின்ற சிவராசா அதிர்ந்து போனன். கண்களில் கண்ணிர் கொப்பளித் தது. "அம்மா பசிக்குது" என்று சொல்ல முடியாமல் ஒடுங்கிப் போனன்.
58

Page 29
e இம் முறை தமிழகம் சென்'
றிருந்த பொழுது ஜெய காந்தனைச் சந்தித்தீர்களா?
கந்தரோடை s. Giggsalir
ஒரு சாயங்கால வேளையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது காரியாலயத்தில் சத் நித்து உரையாடினேன். அடுத்த நாள் அவரது பிறந்த தினம். எனவே முன் கூட்டியே அவருக் குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூடச் சொன்னேன். எழுத்தாள நண்பர் க்ள் சா. கந்தசாமி, அறந்தை நாராயணன் போன்ற வர்களையும் அங்கு சந்தித்து உரையாடினேன்,
கு ஈழத்து எழுத்தாளர்களின் šias iš såsMT uf as al u fi u அழகிய பதிப்பாக வெளியிடும் தர்மதா அதிபரைப் பற்றி கொஞ் சம் சொல்லுங்களேன். Fitsmählt. த. திரவியம்
அவரது பெயர் ராம்லிங்கம். நான் முதன் முதலில் அவரைச் சந்தித்தது நீல பத்மநாபனுடன்.
54
தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குச்
சென்ற நான், சி. எல். எஸ். கருத்தரங்கத்திலும் கலந் து கொண்டேன். அக் சருத்தரங் கிற்கு திரு. நீல பத்மநாபனும் அழைக்கப்பட்டிருந்தார். இருவ
ம் சி, எல். எஸ். மாடியில் தங்கியிருந்த சமயம் தமக்கு
தர்மதா பதிப்பத்தில் சிறிது வேலையிருப்பதாகவும் அங்கு போகப் போவதாகவும், விரும்
பிளுல் தன்னுடன் வரும்படியும் அவர் அழைத்தார்.
இருவரும் பஸ் ஏறிப்புறப் பட்டு தியாகராய நகரில் இறங்கி வீதி வீதியாகத் தேடிைேம். பின்னர் ஒரு வழியாக நர்மதா வைக் கண்டு பிடித்தோம்.
முதல் பழக்கத்திலேயே அ வரை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. நான் எழுதி, என். ஸி. பி ஏச் வெளியிட்டுப் பின்னர் குமுதத்தில் வந்ததால் பரபரப்பு விளம்பரம் பெற்றி ருந்த "அனுபவ முத்திரைகள்" நூலை எடுத்து எனக்குக் காட்டி உங்களை முன்னரே நான் இனங்
 

கண்டு வைத்திருக்கிறேன் ஸார்: அதற்கு இது சாட்சி" எனச் சொல்லி வரவேற்ருர், அப்படி யான ஒரு நூலை நர்மதாவுக்கும் அவசியம் எழுதித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அநேகமாகத் தமிழக எழுத் தாளர் அனைவரினதும் அன்பை
யும் நன்மதிப்பையும் நம்பிக்கை
யும் பெற்றுக் கொண்டவர். இலங்கை எழுத்தாளர்கள் மீது தனி அபிமானமும் பற்றுதலும் உள்ளவர். கசப்பான சில தக வல்கள் இங்கிருந்து தனக்குக் கிடைத்திருந்த போ தி லும் இலங்கை எழுத்தாளர்களினது ஆக்கங்களை வெளியிடுவதில் கசப் புக்களையெல்லாம்" ஒரு பக்கமாக ஒதுக்கி வுைத்துவிட்டு, செய லாற்றி வருபவர்.
சொல்லப்போஞல் அவர் ஒரு பதிப் பக் உரிமையாளர் மாத்திரமல்ல நெஞ்சத்துக்கு மிக மிக நெருக்கமான நல்ல நண்பர்- தொடர்ந்து அவருடன் பழகிப் பார்த்தால்தான் அந்த நட்பின் சுவை தெரியும்.
O ம ல் லி கைக் குக் கதை
கவிதை தருவதென்ருல் நேரில் தரலாமா? அல்லது யாரா வது சிபார்சுடன் அனுப்பலாமா?
சண்டிலிப்பாய். க. ராஜயோகன்
இந்தச் சிண் பிடிக்கின்ற வேலையெல்லாம் தேவையில்லை. நேரில் வரவேண்டும் என்பதும் அவசியமில்லை தபாலில் அனுப் புங்கள். தகுதியிருந்தால் ச்ச ய்ம் மல்லிகையில் இடம் பெறும். இ இதுவரையும் மல்லிகை
சாதித்த சாதனை என்ன?
ஆர்.ரவீந்திரன்
சும்மா இருக்க முயலாமல் முப்பத்தைந்து சதத்து அஞ்சலக்ட்
புதுண்,
டையை எடுத்து மினக்கெட்டு இப்படியொரு கேள்வி யைக் கேட்க வேண்டுமென்ற மணக் குறுகுறுப்பை உங்களுக்கு ஏற் படுத்தி இருக்கின்றதே, இதுவும் மல்லிகையின் சாதனைதான்.
0 நமது நாட்டில் நாடகங்கள் நலிவுற்றுப் போயுள்ளனவேடு
காரணம் gTଓfffକot?
கைதடி,
இன்றையச்செலவுநிலைதான்.
வ: தருமசிலன்
O டானியலின் கோவிந்தன்"
நாவல் பற்றி சர்ச்சை நடை பெறுகின்றதே. அது பற்றி உங் களுடைய கருத்துக்கள் என்ன? அவர் உங்களுடைய ஆள் என்ற படியால் பேசாமல் இருப்பது தான் உங்களது நோக்கமா? வசாவிளான். ம. கதிரவேலு
இலக்கிய சம்பந்தமான என் னுடைய கருத்தை வெளியிட எப்பொழுதுமே நான் பின் வாங் கியவனல்ல. கோவிந்தன் நாவல் சம்பந்தமாக எனக்கும் சில மனக்
கருத்துக்கள் உண்டு. அடுத்து வரும்
இதழ்களில் அது சம்பந்து மாக எனது தெளிவான கருத் துக்களைக் கட்டுரை வடிவில் வெளியிடுகின்றேன்.
9 தமிழகத்திலுள்ள எழுததா
ளர்களுடன் கடிதப் போக்கு வரத்துச்க்ள் உண்டா? அவர்க ளுடன் கடிதங்களில் இலக்கிய சம்பந்தமாக விவாதிப்பதுண்டா? செட்டிகுளம். க. நவநீதராஜா
பல பழைய நட்பு எழுத்தா ளர்கள் அடிக்கடி எழுதுவார்கள். புதிய எழுத்தாளர்களில் அநே கர் எழுதுவதுண்டு. சிலர் இலக் கிக் கருத்துக்களையும் நீரழுது வர், இதில் ஒரு சங்கடம் உண்டு.

Page 30
அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு
மல்லிகையின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை. எனவே இலக்கியக் கருத்துக்க
ளின் பரிமாற்றமும் தொடர்ந்து
நடப்பதில்லை. மல்லிகை மூலம்
ஏற்படுத்திக் கொள்வதைத்தான்
செயல்படுத்துகின்றேன்.
ம்ே 'அக்கா" சிறுகதைத் தொகு
தியை எழுதி வெளியிட்ட அ. முத்துலிங்கம் இப்பொழுது என்ன செய்கிழுர்? எங்கே இருக் கிருர். இப்பொழுது அவர் எழு துவதில்லையா?
கொக்குவில்: ஆ. சபாநாதன்
மனதிற்குப் நல்ல எழுத்தாளன் முத்துலிங்
கம். அலரது அந்தச் சிறுகதைத்
தொகுதியில் வந்துள்ள கதைகள்
ன்னும் என் மனசில் நின்று நிலைத்திருக்கின்றன. அவ  ைர நான்கு ஐந்து வருடங்களுக்கு
முன் கொழும்பில் கடைசியாகச் சந்தித்தேன். இப்பொழுது அவர் வெளிநாட்டில் வசிப்பதாகத் தகவல், நானும் அவரைப் பற் றித்தான் விசாரித்து வருகின் றேள்.
O பேராசிரியர் கைலாசபதியின் சிறப்பிதழ் இம்முறை பல ருக்குக் கிடைக்கவில்லை எனச் 9à 6). rỉ குறைப்படுகின்றனரே, அவர்கள் குறையைத் தீர்ப்பீர் seriff V,
காரைநகர். ச. பரமநாதன் நாம்முன்னரே வெளிவந்த இதழ்களின் மூலம் எச்சரித்திருந் தோம். பேரா சிரியர் ஞாப கார்த்த இதழை ஒவ்வொரு
சுவைஞரும் சுணங்காமல் அந்த'
மா த மே பெற்றுக் கொள்ள
வேண்டும் என ஞாபகப்படுத்தி,
முன்னரே
யிருந்தோம் நாம் கூறியதை அலட்சியப்படுத்தி
பிடித்தமான
விட்டுப் பின்ன்ர் இதழ் கிடைக்க வில்லையே எனச் சொல்வது சும்மா சாட்டே தவிர, அதில் உண்மை ஆர்வம் தொனிப்ப தாக நமக்குத் தெரியவில்லை. கண்டிப்பாக இதழ் தேவை என விரும்புபவர்கள் நம் முட ன் தொடர்பு கொள்ளலாம்.
0 மலையகத்திற்கு சென்ற ஏப்ரல் மாதமே வருவதாக முன்னமொரு இதழில் கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள், ஏன் வரவில்லை? மலையகத்தைப் புறக்கணிக்கும் எண்ணமா? ஹட்டன். க. நா. சிவம் வரவேண்டும் என்ற பேரவா என்னுள் முகிழ்ந்து இருப்பது உண்மை. அடிக்கடி கொழும்பு போவதைக் குறைத்துக் கொண்டு ஒரு த ட  ைவ மலையகத்திற்கு வந்து உங்களையெல்லாம் சந்திக்க வேண்டும். சந்தித்து மனந் திறந்து கதைக்க வேண்டும் என் பது என் மன ஆசை. கூடிய சீக்கிரம் உங்களையெல்லாம் சந் திக்க முனைகின்றேன்.
O உங்களது @@ಿಶ್ಮೆಲ್ಲ அனுபவங்களை ஒரு புத்தக மாக எழுதி வெளியிட்டால்
STirsor ? ந்த உங்களது அனு பவம் வளர்ந்து வரும் எழுத்தா ளர்சளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம் என்பது என துஎண் கணம். உங்கள் பேணு முனையில் இருந்து இப்படியான ஒரு நூலை நாங்கள் எதிர்பார்க்கலாமா?
நீர்கொழும்பு. ஆர். மகேந்திரன்
சொல்லச் சொல்ல முடிவு பெருத எத்தனையோ அனுபவங் கள் எனது இலக்கிப் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. பல நூல்களே ள்முத வேண்டும் என்பது எனது மனத் தீட்டம், அத ர் கான ஆரம்ப வேலைகளே கூடச் செய்து விட்டேன், O

நியூ செஞ்சரிபுக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் புதிய வெளியீடுகள்
வரப் பெற்றேம்
ஜீவா என்றெரு மானுடன்
- பொன்னீலன்
விலை 18 - 00
•桑·
பாரதி படைத்த புதுமை v
= கே. ராமநாதன்
விலை 5 சு 00
••
சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும்
- எம். வி. சுந்தரம்
விலை: 5 - 00 e
ஒரு தெருப் பாடகனின் பாடல்கள்
- மாங்குயில் பழனி சுந்தரேசன் ଭୋଥି) : '6 = 0 0
•藝,
பாரதி கண்ட தாய்க் குலம்
- பி. இ. பாலகிருஷ்ணன்
விலை 3  ை50 喙、
களத்தில், பிறந்த கவிதைகள்
---- en Lurrur: , W. விலை 4. 30
※·
வாழ்வினர் தரிசனங்கள்
- டொமினிக் ஜீவா
G岛%p: 6-f}0

Page 31
மனிதர்கள் எங்கும் இருக்கிறர்கள் டொமினிக் ஜீவா
நான் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் சந்தானம் லாட் ஜில்தான் தங்குவது வழக்கம். டவுண் ஹால் வீதியிலுள்ள அந்தத்
தங்கு விடுதியின் அதிபர் மிக மிக இனிமையானவர். என்மீது தனி அபிமானம் கொண்டு பழகுபவர்,
பல ஆண்டுக்கு முன்னர் நான் ராமனுஜம் கப்பல் மூலம் தமிழகம் சென்றேன். ராமேஸ்வரத்தில் சுங்கச் சோதனை யி ல் மல்லிகைக் கட்டுகளைப் பார்த்துவிட்ட அதிகாரி 108 ரூபா சுங்கத் தீர்வை போட்டுவிட்டார். நான் வாதாடியதற்கு உங்க சஞ்சிகை யிலே விலை போட்டிருக்கிறதே ஸார்’ எனச் சொன்னர். நண்பர் களுக்குக் கொடுப்பதற்கு என நான் சொன்னதையும் நிராகரித்து விட்டார்.
கப்பலில் வேலை செய்யும் நண்பர் ராஜாராமிடம் கைச் செல வுக்கு நூறு ரூபா வாங்கி வைத்திருந்தேன். மிகுதி எட்டு ரூபா வுக்கு என்ன செய்வது? என நான் தயங்கி நின்றபோது, ‘என்ன ஈஸார் யே! ' த்தபடி நிக்கிறீங்க?" என இளம் சுங்க உத்தியோகஸ் தர் வினவிருர், "நீங்கள் திகைக்காதீங்க ஸார். நீங்கள் எழுத்தா ாத்தானே? டொமினிக் ஜீவா உங்க பெயர்? தீபாவளிக் குமுதத் திலே படித்தேன் ஸார். என்ன உதவி தேவையென்ருலும் தயங் காமல் கேளுங்க. ' என்ருர்,
நான் எனது சங்கடத்தைச் 2சொன்னேன்; s ጳ
* நீங்க கவுண்டரிலே போய் நூறு ரூபாயைக் கட்டுங்க. ரங் கன் என்று பேர் சொல்லுங்ச் மிகுதியை நான் செலுத்துகிறேன்"
"அப்பாடா! ஒரு சிக்கல் தீர்ந்தது:
நான் நன்றி சொன்னேன்.
மதுரை மட்டும் ரெயில் டிக்கட் இருந்தபடியால் பிரச்சினை இருக்கவில்லை. ஒரேயொரு ஒற்றை ரூபா மாத்திரமே கையில் இருந்தது.
டீ குடிக்கக் கூட மனமில்லாமல் இரவு எட்டரை மணியள வில் மதுரை வந்து சேர்ந்தேன். சுமை கூலிகள் என்னை மொய்த் துக் கொண்டனர். அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு சுமையைச் சுமந்தபடி சந்தானம் லாட்ஜை அடைந்தேன்.
மனதில் ஒரே தயக்கம் தெரிந்தவர்கள் அந்த, நேரம், யாரு நில்லை. மதுரை நான்: R. பி. ஏச்சும் கடை அடைத்திருப்ப்ார்கள். ஒரே Lo Gior & F GOLD.
58

அதிபரை முன்னரே எனக்கு ஓரளவு தெரியும். அவர் ஓர் அறையில் விளக்கு வெளிச்சத்தில் கணக்குப் புத்தகங்களுக்கு மத் தியில் மல்லாடிக் கொண்டிருந்தார். நேரே அவரிடம் சென்றேன். “ஸார் நான் சிலோனில் இருந்து வருகிறேன். ரூம் வேணும். சாப்பிடக் கூடக் கையில் காசு இல்லை. உதவ வேணும் என்று
கேட்டேன்.
“என்ன ஸார் அப்படிக் கேட்டிட்டீங்க, தாராளமாகத் தங் குங்க, எவ்வளவு ரூபா வேணுமானலும் கேளுங்க தாரேன். உங்களைப்பற்றி நிறையத் தெரியும் ஸ்ார். நம்ம என். ஸி. பி, ஏச். பாண்டியன் முன் கூட்டியே உங்களைப் பற்றி எனக்குச் சொல்லி யிருக்கிருர்" என்ருர், w
இந்த எக்கச்சக்கமான சங்கடத்திலிருந்து மீட்சி பெற்ற உணர்வுதான் எனக்கு அவர் மீது அபிமானத்தைச் சுரக்க வைத் தது. சந்தானம் லாட்ஜ் மீது மனப் பாசத்தை ஏற்படுத்தியது:
அந்த சந்தானம் லாட்ஜில் ஒர் அறையில் ஒரு சாயங்கால வேளையில் படுத்திருந்தேன் நான். பக்கத்துக் கட்டிலில் மேமன் கவி. அவரும் இம்முறை தமிழகம் வந்திருந்தார்.
"குழந்தைக்கு காற்சங்கிலி ஒன்று வாங்க வேணும், கடைத் தெருப்பக்கம் போவோமா?" என்று மேமன் கவி கேட்டார், எனது சகோதரியின் பெண்கள் இருவர் நான் தமிழகம் புற ப் பட்ட வேளையில் தங்களுக்கும் காற்சங்கிலி வாங்கி வரும்படி கேட்டது எனது ஞாபகத்தில் உறைத்தது,
இருவரும் புறப்பட்டோம்.
மீனுட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுர வாசல் பக்கமாக அமைந்திருக்கும் சிறு சிறு அங்காடிக் கடைக்ள் ஒவ்வொன்ருக ஏறி இறங்கினுேம்,
கடையல்லாத நிலத்தில் வாசலோரம் ஒரு சிறு பெண் பாத சரங்களைப் பரப்பி வைத்திருந்தாள்,
குஞ்சு முகம்; அரும்பும் வயசு, மஞ்சள் பூசிக் குளித்ததினல் துடைத்து விட்ட கண்ணுடி போலப் பளிச்சென்று துலங்கும் வத னம், மென்மையான சிறு முறுவல், இன்னும் வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டு விடாத ஒரு கவர்ச்சி.
‘அண்ண’ என்று அழைத்தாள் அவள். “பாருங்கோண்ணு: பிடித்தால் வாங்கிக் கொள்ளுங்கோ. என்ருள்.
விலை கேட்டோம். விலை சொன்னள்,
அடுத்து நகர்ந்தோம். எங்களையே ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தாள் அச்சிறு பெண்,
என்னமோ தெரியவில்லை, அந்தக் குஞ்சு முகம், அந் த ப் பார்வை நெஞ்சின் அடியில் தொட்டு விட்டது. அவளிடமே வாங்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டது.
நான் திரும்பினேன், அந்தப் பெண்ணிடமே வாங்குவோம். மனசு அப்படிச் சொல்கிறது என்றேன் நான் மேமன் கவியிடம்:
Sg

Page 32
"எனக்கும் அப்படித்தான் தோணுது’ என்ருர் அவர்.
நடந்து சென்று கடைகளாகக் காட்சி தந்த சில வியாபார நிலையங்களில் விசாரித்தோம்.
மனம் கேட்கவில்லை.
"பரவாயில்லை. அந்தப் பெண் *அண்ணு' என்று அழைத்த உரிமை என் மனதை என்னமோ செய்தது. அந்தப் பெண்ணிடமே வாங்குவோம், வாருங்கள். * மேமன் கவி.
அவர் உணர்வுக்கு எனது உணர்வும் ஒத்துப் போனபடியால் நானும் தலையாட்டினேன்.
திரும்பி அந்தப் பெண்ணிடமே பேரம் பேசாமல் பாத சரங் களை வாங்கிக் கொண்டு, ‘அம்மா கொஞ்சம் முக த் துக் கு ப் போடுற மஞ்சள் வாங்க வேணுரம், எங்கே வாங்கலாம்?" நானே கேட்டேன். "சகோதரியின் மக்கள் நல்ல மஞ்சளாக வாங்கிக் கொண்டு வரச் சொன்னுங்க..ه
‘அண்ணு உங்களை வெளியூர்க்காரங்க எனப் பாத்து ஏமாத்தி' பிடுவாங்க. கொஞ்சம் இருங்க. நான் வாங்கித் தருகிறேன்’
பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது வீதிக் கடையை எங் களைப் பார்த்திருக்கச் சொல்லிவிட்டு துள்ளியோடிச் சென் ரு ஸ்ட பத்து நிமிசங்களுக்குப் பின் திரும்பினள். மஞ்சள் பார்சலைக் தந்தாள். re
* உங்களைப் பார்த்தால் நல்லவங்களாத் தெரியுது. அண்ணு. எந்த ஊரு நீங்க."
சிலோன்"
‘ஓ! கொழும்பா அங்கு கூட எங்க சித்தப்பா இருககரு1. நான் ஒரே மகள். அப்பா இல்லை. அம்மாதான். படிக்கிறேன். பள்ளிக்கூடம் முடிந்து வந்தா இப்படி அம்மாவுக்கு ஒத்தாசை செய்கிறேன். எங்கம்மா வெளியிலை போயிட்டாங்க. அதன. தான் நான் வியாபாரத்தைப் பார்க்கிறேன் சொல்லச் சொல் : அந்த உதட்டு வளைவும், கண்களின் குழந்தைத் தன வீச்சு ம் கள்ளங் கபடமற்ற முகபாவமும் மனத்தைத் தொட்டன. விடை பெற்ருேம்,
இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அந்தக் குஞ்சு முகம் இப்பொழுதும் என் நினைவில் நிழலாடுகின்றது.
* சரீண்ணு சேமமா போயிட்டு வாங்கோ’ அந்த மென் குரல் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. “சரீண்கு: சேமமாய்ப் போயிட்டு வாங்கோ. p
8.

அந்நியமற்ற
உறவுகள்
AMLLLLAqLMLL LL LML SSqLA LqLA LAL
-முருகபூபதி
மெட்டில்டா ( v 8 O
நினைவுக்குக் கொண்டுவர எடுத்த சிரமம். . . Gt Jurf மறந்து உருவம் ம்ட்டும் மன தில் நிலைத்துவிடுவதால் ஏற் பட்டுவிடும் தவிப்பு.
“yüLuft L-ft...... இப்பொழு தாவது ஞாபகத்திற்கு வந்ததே. ல்லையென்றல் அ வளி ட மே பாய் நின்று ஞாபகம் இருக் கிறதா என்று கேட்டு, பெயரை மறந்துவிட்டேன் என்று சொல்லி அவமானப்பட்டு அசடு வழி ய நிற்கவேண்டி வந்திருக்கும்.
கால ஓட்டம் சில சமயம் பெயரை மறக்க வைக்கிற அல்லது வருவத்தை . . .
"மெட்டில்டா. . .
સ્વાક,
ருள்? மெயின் ரோட்டில் புதி தாக கல்பதித்து, தார்போடும் வேலை நடப்பதால் அந்தக் குறுக் குப் பாதையால் வர நேர்ந்தது.
●赏
சிருக்கு,
இவள் எங்கே? இங்கிருக்கி
அதனுல்தானே அவளைக் காண முடிந்த து. நெடுஞ்சாலைகள் திணைக்களத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். சைக்கிளை நிறுத்திக் கதைத்திருக்கலாம்.
அவனுக்கு அதிர்ச்சி; அவள்
காணவில்லை; காரியத்தில் மூழ்கி இருந்தாள்.
எட்டு மணிய்ானதும் முனி சிப்பல் தன் நீர் விநியோகத்தை துத்திக் கொள்ளும். மீண்டும் பகல் பன்னிரண்டு மணிக்குத் தான். துணிக் குவியலுக்குள் தண்ணிரும் சோப்புமாக...
கந்தோர் பியோன் கொண்டு
வந்து வைத்த டீயும் ஆறிப் போய்விட்டது.
ஆசனத்தில் வந்தமர்ந்து
வேலையை ஆரம்பிக்க முன்னர் பழக்க தோசத்தில் எடுத்துப் பார்க்கும் அன்றைய தினசரியில் சூடான செய்திகள் எத்தனை இருந்துமென்ன, மெ ட் டி ல், டாவே சிந்தனையை செய்திக்குள் ஊடுருவ விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.
"டீ ஆறிப்போய்க் கிடக்கு. குடிக்க இல் லி யா" என்று பியோன் மீண்டும் வந்து கேட்ட போதுதான் டீ ஏற்கனவே வந்து விட்டதைக் கண்டான் அவன். "மல்லித் தண்ணிர் குடிச் சிட்டு வந்தன், தடிமன் பிடிச் அதை ஊ த் தி ட் டு கழுவி வை" பொய்யொன்று சொல்லிவிட்டதில் அவனுக்குத் திருப்தி.
பியோன் தன் அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டான்.
நாளைக்கும் அந்தக் குறுக்குப் பாதையாலதான் வரவேண்டும். கொஞ்சம் முந்தியே வீட்டை விட்டு வெளிக்கிட வேண்டும். அ ப் ப த ர ன் அவளைக் கண்டு கதைக்கலாம். அவள் நிற்பாளா?

Page 33
நிற்காவிட்டால் என்ன? அல்லது மறுநாள். . . மில்லையென்முல் அடுத்த நாள்.
நாளை
அன்று அவளோடு கதைக்க எத்தனை நாள் காத்திருந்திருப் பேன். காத்திருத்தல் அதன் கொடும்ை ஒ. .
அவள் வீடு நிச்சயம் அந்தத் தெருவோர் "பைப் புக்குக் கிட் டத்தான் இருக்க வேண்டும்
நாளையும்.
இன்றைய பொழுது கரை வதற்கு ஏன் இத்தளை தாமதம்? கைக்கடிகாரமும், சுவர் க் கடிகாரமும் கண்களின் தரிசனத் திற்கு பலமுறை கிட்டியிருக்கும் அன்றைய கடமை நேரத்தில்
மெட்டில்டாவை சந்திப்ப தால் என்ன நன்மை. உறவ்ைப் புதுப்பித்துக் கொள்ளவா? அது
தகுமா? அவள் உருவத்தைப் பார்த்தால் (, )ந்தது இரண்டு பிள்ளைகளுக்: தாயா கி இருப்பாள். புருஷன் என்ன தொழில் செய்வான்? என்னைப் போல் லோங்ஸும், சேட்டும், சப்பாத்தும் போட்டு ப்படி
ஒரு அலுவலகத்தில் பை, கஃாப் புரட்டிக் கொண்டிருக்க மாட் டான் என்பது மட்டும் நிச்சயம்.
அப்போ .
* கடலின் அக்கர போஞேரே" மெட்டில்டாவிடம் முதல் அடி களை மட்டும் ராகத்தோடு பாடி அடுத்த வரி தெரியாமல் கட் டாயம் பாருங்க டியூஷனுக்கு போறதெண்டு சொல் லிட் டு கூட்டாளிமாரோடு மெ ட்னி ஷோ பார்த்திட்டு வந்தன்.
பாஷைகள் வேரு யினும்வாழ்க்கை வேறல்ல அவர்களுக்கு என்ற எ ண் னை த் தி ல் அன்று சொல்லும் அளவுக்கு சிந்தனை
அதுவு.
வளராவிட்டாலும் இப்போது அந்த "எண்ணம்" சரிதான்
சந்திப்பு அறுந்து எத்தனை வருடம் இருக்கும். படம் வந்த வருடமே நினைவில் இல்லையே.
மேல்படிப்பு பிறந்த ஊரில் இல் லா து போன்தால் ஊர் விட்டு ஊர் சென்று - வீடுகள் பல மாறி - காலந்தான் வேக
மாக ஒடியிருக்கிறது. நினைவுகள்
நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்து நீடித்து.
ஸ்கூல் விட்டு வரும்போது டொபிக்ளைக் கையில் திணித்து விடைபெறுகையில், "உறையைச் சாப்பிட வேண்டாம். உள்ள இருக்கிறதைச் சாப்பிடுங்க”
மறுநாள் அவளின் பதிலடி. கைநிறைய செறி" பழங்களைத் தந்து "நெட்டிகளைச் சாப்பிட வேணும் பழத்தை மட்டும் சாப் பிடுங்கோ. 象 °
"என்னப்பா, இன்றைக்கும் இந்த ரோட்டால போறிங்க?
மெயின் ரோட்டில சைக் கிள்ள போக ஏலாமல் கிடக்கு. கார் போடுருங்கள். எலக்ஷன் வரப் போகுதாக்கும். ரோட்ல புளக், இதால போளு கெதியாப் போகலாம் மனைவிக்கு சாமர்த் தியமாகத் தெரிவித்த பதில்,
மூத்தவள்- அப்பா... L-frill-IT........'
"டாட்டா குஞ்சு. தம்பிப் பாபாவை அடிக்காமல் பாத்துக் கொள்ள வேணும். பிள்ளைக்கு வரும் போது சொக்கலேட்
கொண்டு வாறன்"
பெடலை வேகமாக உந்தி, குறுக்குப் பாதையால் திரும்பி
G念

வரும் போது, "அதிர்ஷ்ட தேவதை என்பக்கம்தான்.
குறுக்கே ஓடிய பன்றி க் குட்டியும் ஒரு சாட்டாகி விட் டது “பிரேக்" போடுவதற்கு,
*மெஸ்டில்டா. .."
ஒரு துள்ளல். சைக்&ெn ஒரமாக கி பாரில் சாய்து "என்ன தெரியுதா...??
"நீங்க. ஒ , 'கயா. இப்ப என்ற (3, 11 ம6 , வே அடையாளமே தெரி 2 ..."
அவன் தலையாட்டிஞன்.
அவள் அதிர்ச்சி நெளியச் சிரித்தாள்.
sy60 Lunrelrth G5thun LD6) மாறிட்டீங்க"
நிச்சயம் உருவத்தைத்தான் சொல்கிருள். மனத்தை அல்ல. இரட்டை அர்த்தத்தில் பேசத்
தெரியாத அப்பா வி அவள். நான்தான் பாவி,
* வீடு கிட்டவா இருக்கு" இது அவன்.
*இந்த முடுக்கால் போன. தொங்கல்ல வார குச்சில் உங் கட வீடு? அவள் கேட்டாள்
"பெரேரா பிளேஸ் மையப் பிட்டணிக்கு பின்பக்க ரோட் டால போய்த் திரும்ப வேணும்" முன்னைய நினைவுத் தடங்கள் நெஞ்சில் குறுக்கு நெடுக்காக ஒட சலனம் எதையும் காட் டாமலே அவன் கேட்கிருன்,
* எப்படிக் கண்டீங்க" அவள்.
"நேற்றைக்கும் இந்த ரோட் டாலதான் போனன். உங்களைக் கண்டு திடுக்கிட்டுப் போனன். முதல்ல ஒரு சந்தேகம், நீங்க மெட்டில். தாஞ என்று. உங்
கட மேல் உதட்டு மச்சம் நீங்க தான் என்று காட்டிக் கொடுத் திட்டுது?
*என்ர சோமலே. கையி விருந்த சோப்பை நழுவவிட்டு கைதட்டிச் சிரித்தாள்.
"ஒவ்வொரு நாளும் காலை யில முதல் வேல்ை இதுதானக்கும்"
"என்ர கடைக்குட்டி மூண்டு வயசாகியும் ராவில பேய்ஞ்சிடு ('ன். கட்டு மணிக்குப் பிறவு
', என னரி வர! . அதுதான் காலேயிலயே லவச்சிப்போடு றன். இப்ப 1ங்க வேலைக்குப் போரு. போங்கோ நேரம் போகுது எல்லா..."
விடைபெற மனமில்லாமல் விடைபெற்ருன் கந்தோருக்கு
வந்தும் நினைவுகளைவிட்டு விடை பெற முடியாம்ல்.
சகலதையும் மறந்துவிட் டாளோ, காஞமலேயே இருந் திருக்கலாம். அப்படிக் கண்ட்தன் பின்பும் கதைக்காமலேயே இருந் /திருக்கலாம் சிாதாரணமாக இருக்க முடியவில்லையே, لاا6 إليه ளால் முடியுமா? அவள் பேசும் தோரணை அவளால் முடியும் போல்...
புருஷனைப்பற்றி விசாரிக்கா மல் வந்தது இப்போது தவரு கப்பட்டது அவனுக்கு.
'கடைக்குட்டி" என்ருள், அப்போ எத்தன்ை பிள்ளைகள் இருக்கும். இனிக் கண்டால். இல்லை இன்றே வீடு போனவு டன் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும். பைப்புக்குக் கிட்ட, முடுக்கால போன, தொங்கல்ல' வாற குச்சில் ஒடு போட்ட கல் வீட்டில் குடியிருக்க அவளுக்கு இன்னும் காலம் வரவில்லையோ'
உள்ளத் தக் கொள்ளை கொள்ளும் ஆளின் மேலுதட்டு
69

Page 34
மச் சம் இன்னும் அப்படியே, என்றும் எப்பொழுதும் உட லோடு அழிந்து போகும் அங்க
fres. . . . . . . . . . .
" . . . . .. இந்த மச்சம்தான். உங் களுக்கு அழகாக இருக்குது'
அப்ப வேற ஒண்டும் இல் லியா" துடுக்குத் தனமாக அவள் தேட்டதற்கு பதில் சொல்லத்
தெரியாமல் திணறிய நாட்கள்.
காலையில் எழுந்து படித்தால்
மனதில் நிற்கும் என்று சொன்ன அம்மாவின் வாயில் சீனி போட வேண்டும். காலையில் எழுந்து கண்டதால் - சிரித்ததால்- மன தில் அவளும் பதிந்தாளோ? அடிமனதில் எங்கோ உறங்கிக் கிடந்தவள் ஏன் இப் போது விழித்தாள்?
விருந்தை மேசையில் இருந்து படிக்கும் போது தெருவோர.
பாக கடற்சரையில் இருக்கும் மலகூடத்திற்கு தோழிகளோடு கம்பாயத்தை போர்த்தியபடி
அக்காலை வேலையில் போய் வந்த வள் காலப்போக்கில். . .
கம்பனின் கவித்திறன் அணு பவத்தால்தான் வந்ததோ.
முதல் நாள் கண்டு, அடுத்த நாள் கண்டு, தொடர்ந்து கண்டு, காண்பதற்காகவே விருந்தையில் பேருக்குப் புத்த கமும் கையும்ாச இருந்துஊரைவிட்டுப் போகாதிருந்
திருந்தால். அனைத்தும் அம்பல் மாகி, ஊர் இரண்டு பட்டிருக் கும்
மீண்டும் திரும் பி. இந்த
கண்டது?
அப்பா, சொக்கலேட். ஒது: ஏறியதும் டிகன் தோ கத்தோடு கேட்டாள் அவரே.
数
பிள்ளைக்கு ஒன்று'
“ւDծԱ95/ யாருக்காம் அக்
கறைய்ேர்டு கேட்ட்ாள் மனைவி
பேக்கில் இருந்த மற்றதைப்
பார்த்து
என்ர பிரண்ட் ஒருத்தனைப் பாரிக்க்ப் போகவேணும் அவன்ர பிள்ளைக் கும் சேர்த்துத்தான் வாங்கி வந்தன். இப்ப போக வேணும்"
"அதென்ன வந்ததும் வரா ததுமா போறதெண்டால் இவ ளையும் கூட்டிக் கொண்டு போங்கோ. சின்னவனைப் பார்க் கிறதா, இடியப்பம் அவிக்கி றதா இவளைப் பார்க்கிறதா’- La2ta.
காலையில இருந்து பார்த் துக் கொண்டுதானே இருக்கிற,
இப்ப மட்டும் என்ன வந்துதாம்
இது அவன்.
மக்ளையும அழைத் துக்
கொண்டு மெட்டில்டாவின் வீட்
டைத் தேடிச் சென்ருன் அவன்.
வீட்டைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சிரமமாக இருக்க வில்லை. மகள் பாரில் அமர்ந்து
ஹெண்டிலை இறுகப் பற்றிக் கொண்டாள், !
தெருவிவிருந்த மின்கம்பம்
:வ. மிழ் ந் த வெளிச்சம் அந்த
ஒழுங்கையினூயே. சிறிது ஒளி பரப்பியிருந்தது. ஒ
ஒரு கிழவி வந்தான் அவன் விசாகித்தான்.
பலாக்கா அரிஞ்சு விக்கிறர்
மெட்டில்டாவா?* ஊருக்கே வருவேன் என்று gurf '.
கிழவன் விஞ வே தும் மெட்டில்டாக்கள் அப்பகுதியில் இருப்ப்து பேரில் பட்டது அவ லுக்கு
மெட்டிதான் அன்று உதடும், "பலாக்கச அரிஞ் ச்
伊《

விற்கிருளா" என்று உள்ளமும் பேசிக் கொண்டன.
யாரது. . வந்திரிச்சியது" என்று கேட்டுக் கொண்டு வந்த குரலை இனங்கண்டான் அவன்,
"நான்தான் வாங்கோ. .
*சைக்கிளை மரத்தில சாத்
திட்டு வாங்க. இது யாரு மகளn??
மெட்டில்டாவின் குடிசைக்
குள் குனிந்து நுழைந்த போதி லும் கதவு நிலை இலே ச | க் இடித்தது.
உள்ளே விளக்கைக்
இருந்த குப்பி கொண்டுவந்தாள்
எங்க உங்கட பிள்ளைகள் அவன் கேட்டான்:
"எல்லாம் ஆச்சம்மையோட டெலிவிஷன் பார்க்கப் போயி ரிச்சுதுகள்"
"எல்லாம் என்டா எக்தன் இள்ளைகள்?"
வலது கைைேய பெருவிரலை மட்டும் காட்டினுள்.
நாலு பிள்ளைகளா?*
உயர்த்தி மடித்துக்
மூன்று சிறுக்கன், ஒரு இறுக்கி, உங்களுக்கு எத்தனை?
இரண்டு. இவள் மூத்தவள்: மற்றதுக்கு ஆறு மாதம், ஆம் பிளப்பிள்ளை. அவர் எங்க... . தொழிலுக்குப் போயா?"
பதிலை எதிர்பார்த்துக் கேட் டான். பதில் உடன் வரவில்லை. உக்காருங்கோ" நீளமான வாங்கைக் காட்டினள். மகளை மடியில் இருத்தி அமர்த்தான். உங்களுக்கு அவரத் தெரி யாதில்லியா? இருங்க காட்டு றன் உள்ளே சென்று வேலிச் ஐவரில் செருகியிருந்த பிரேம்
போட்ட படத்தை தூசிதட்டி எடுத்து வந்து காட்டினுள்
அவள் லாம்பை உயர்த்திப் பிடிக்க, அவ ன் படத்தைக் கூர்ந்து பார்த்தான், பல நினை வுகள் சு  ைம ய ர க மனதில் அழுத்த. . .
"படத்திலயும் உங்கட மேலு தட்டு மச்சம் நல்ல தெளிவாத் தான் இருக்குது"
எதுவிக சலனமும் இன்றி அவள், "இப்ப எல்லாம் கலியா னப் படங்கள் கலரில எடுக்கி யாங்க. நல்ல வடிவா இரிச்கது. நாங்கலெல்லாம் கட்டக்குள்ள கலர்ப்படம் இல்ல" என்முள்
"ஒமோம், எப்படி தொழில் நிலைவரம், அவரும் இருப்பார் என்றுதான் பார்க்க வந்தன்"
என்ர சோமலே சொல்ல மறந்திட்டன் எலா, ? நீ க ரூ க்கு தெரிஞ்சிரிச்கம் எண்டு, அவர் செத்துப் போய் ரெண்டு வருஷம் இரிச்சும்’
நான்
象
ge . . . . . . மை கோட் அவன் கத்தினன். பிள்ளை பயந்து விட்
astráře
"együLJn . . . . . ." ‘என்ன நடந்தது?
*கோயில் முனைக்கு தொழி லுக்குப் போனம் எலா, அங்க அவருக்கு நாய் ஒண்டு கடிச்சிது, ஆஹசி எல்லாம் போட்டு சுகமாத் தான் ஈந்தார். பிறகு ஒரு வீட் டில பண்டி இறைச்சியோட அரக்கும் குடிச்சார், புத்தளம் ஆஸ்பத்திரியில ரெண்டு நாள் வைச்சிருந்து செத்துப்போனர்"
கதை சொல்லி முடித்தது போல் இருந்தது அவனுக்கு. இலேசாகப் பணித்த கண்களை தூசி விழுந்து கசக்குவதுபோல் கசக்கிவிட்டான்,
65

Page 35
“பயஸ்கோப்பிலவாரமாதிரி எல்லாம் முடி ஞ் சு போச்சு பெருமூச்சுடன் சொன் ஞ ள் மெட்டில்டா
*ம ர ன ம் சொல் லி க் கொண்டா வரும். அவர்ட கவ னயீனத்தாலதான் அப்படி நடந் திருக்கு. நீங்களாவது நாய் கடி பட்ட அவரை பத்திரமாகப் பார்த்திருக்க வேணும்"
"எல்லாம் முடிஞ்சு போன கதை. இனி அதைச் சொல்லி என்ன செய்ய"
அவள்
பதில் அவனுக்குச் 6Fmr ..GOL—Lunt?
கைவிரல்கள் மெட் படத்தி
அவன் டில்டாவின் திருமணப்
லேயே ஊர்ந்து கொண்டிருந்
தன.
“பயஸ்கோப்பில மாதிரி
நூலா" மீண்டும் சாதாரணமா
கவே சொன்னுள்,
"என் மேல கோபமா மெட் டில்டா" கேட்க வேண்டும் என்று
தொண்டைக்குள் த வித் துக் கொண்டு நின்றதைக் கக்கிவிட் டான்.
"ஏன் கோவிக்க வேணம்?
காலையில கண்ட புறகு பழியெல் லாம் ஞாபகம் வந்திச்சி. அது ஒரு காலம்"
"திருமணம் சொர்க்கத்தில் தா ன் நிச்சயிக்கப்படுகின்றன என்று உங்கட சம ய த் தி ல சொல்லியிருக்கிறது அர்த்தமுள் ளதாகத்ான் எனக்குப் படுது" * யாரோ செ ர ன் ன  ைத வைச்சி துக்கப்பட வேணும், கண்டோம், கதைச்சோம், சிரிச் சோம், விரும்பினுேம், பிரிஞ் சோம். இப்ப பிள்ளைகுட்டிக ளோட ஒருத்தரை ஒருத்தர் பார்க்கியோம்' வே க ம ரக ச் சொல்லி முடித்தாள் அவள். '
66
கண்களில் முட்டிக் கொண்ட நீரை லேஞ்சியால் துடைத்துக்
கொண்டான் அவன்.
தகப்பனின் கையிலிருக்கும் படத்தை ஒன்றும் புரியாமல் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்தாள் ம்கள்
கஎதுவும் புரியாத வரையில் கவலைகளே இல்லை" என்று பட் டது அவனுக்கு.
மெளனத்தில் கரைந் சில நிமிடங்கள். 西占
*ரெண்டாவது பிள்ளைச்கு எத்தனை வயசு மெட்டில்டா கேட்டாள்.
"ஆறுமாசம் என்று சொன் னன்?
"இனிப் போதும். இங்க பாருங்கோவேன். எனக்கு நாலை தந்திட்டுப் போயிட்டார். நான் படுற கஷ்டம்" இப்படிச் சொல் லும்போது,
* வரும்போது அந்த ஆச்சி கேட்டா, யாரு பலாக்காய் அரிஞ்சு விற்கிற மெட்டில்டாவா எண்டு. அது நீங்களா??
"ஒமோம். அது முேசலீன் அக்கா. வயசுதான் ஆச்சம்மை மாதிரி. எல்லாரும் ருேசவீன் அக்கா எண்டுதான் கூப்பிடுறது: புறத்தால இரிச்சிய வூட்டுக்கு அரக்கு குடிச்சியத்துக்கு வாரது. லூர்த்துமாதா கோயிலடியில பலாக்கா விச்சியன். சீவியத் துக்கு வேணுமே. ஒரு நாளைக்கு பதினஞ்சு இருவது ரூபா மட் டில கிடைக்கும்"
"எங்கட காதல் நிறைவேறி யிருந்தா இன்றைக்கு உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது இல்லியா?" தயக்கமின்றி உதிர்ந் தன வார்த்தைகள்.

"விரும் பி ன தெ ல் லாம் கிடைச்சியதில்லை எலா. அதுக் காக கிடைச்ச இல்லியே எண்டு துக்கப்படியதால கிடைக்காதது கிடைச்சிடுமா, பாத்தது நெசம். விரும்பியது நெசம். கிடைக்கா தது நெசம். இப்ப பிள்ளை குட்டி களோட பார்க்கிறது நெகிம்" உணர்ச்சியோடு ஆனல் அர்த்தத் தோடு அவள் பேசுவதாகப் பட்டது அவனுக்கு.
அவளே தொடர்ந்தாள்.
"பழசையெல்லாம் இப் ப நிெனைக்க வேணும். இத்தனை வருஷத்துக்குப் புறகு ஒருத்தரை ஒரு த் த ர் பார்க்கிறதுக்குக் கிடைச்சுதே. அதுக்காக ஆண்ட வருக்கு தோத்திரம் சொல்ல வேணும். எங்கட காலம் எல் லாம் போச்சுது. இனி நாங்கள் எங்கட பிள்ளைகளுக்காக சிவிக்க வேணும். எங்க ? வியம் இனி எங்கட பிள்ளைகளு"குத்தான் எங்களுக்கில்ல்?
அர்த்தங்கள் அற்று பேசத் தெரியாத அவளின் பேச்சுக்கள் அர்த்தமுள்ளனவாக அவனுக்குப் புலப்பட்டன இப்பொழுது.
மடியில் இருந்த மகள் விடும் "கொட்டாவி" களைப் பார்த்து
விட்டு மகளுக்குத் தூ க் க்ம் வருது, அப்ப டோ பி ட் டு வாங்கோ" என்ருள் மெட்டில்டா. அவன் பிள்ளையைத் துரக் கிக் கொண்டு எழுந்தான்.
"கொஞ்சம் பொறுங்கோ? உள்ளே சென்று ஒரு பார்சலு டன் திரும்பினுள்.
* என்ன? அவ ன் கேட் டான். f
"உங்கட பொஞ்சாதிக்குக் கொடுங்கோ, பலாக்காப் பாதி. பிள்ளைக்குப் பால் குடுக்கிற அம்மையெல்லாம் பல ராக் கா ஆக்கிச் சாப் பிட வேணும். கண்ட கண்ட பால் மா வாங்கி கொடுக் க வேணும். பலாக் காய்க்கு நல்லா பால் ஊறும்"
கொண்டுவந்த சொக்க லேட்டை பிள் ளை களுக்கு க் கொடுக்கும்படி கூறி வி ட் டு விடைபெற்ருன் அவன்.
மெட்டில்டா தந்த பலாக் காய்ப் பார்சல் ஒரு கையிலும், மகள் மறுகிையிலும் கண்ப்பது போன்ற உணர்வு.
தென்னை மரத்தோடு சாத்தி யிருந்த  ைசக் கிளை நோக்கி அவன் நடந்தான்.
ஆழ்ந்த துயரமடைகின்றேம்
முற்போக்கு இயக்கக் கவிஞர்களில் ஒருவரும், முன்னேடியு மான மகாகவி பூரீ பூரீ சென்ற மாதம் கால மாகி விட்டார்.
பழைய மரபுத்தனங்களையும்,
உள்ளடக்க உருவக்
கட்டுக்களையும்
மீறிப் புதுக் கவிதைக்கு ஜீவித உருவம் கொடுத்தவர் இந்த ஆந்
திர மகாகவி பூரீ பூரீ அவர்கள்.
மக்களைப் பற்றி மக்களிடையே
நின்று உரக்கக் கவிக்குரல் கொடுத்தவர் இவர்
அன்னரது இழப்பு உலக இலக்கியத்துக்கொரு இழ ப் 1. மல்லிகை ஆழ்ந்த துயரத்தைச் சமர்ப்பிக்கின்றது.
- ஆசிரியர்
`ፅ? .

Page 36
SLLLA LLLA AqL LAL LMLM ALALMLAM LLA MLLALAMSLMLLSLLALALALALALLT LqLLLL LLLLLLLAL rLLSLALALA LAALALLAMLMAz
SS MLSMq AMMMLBA LLAAS AL ALAA ALA LAAAAALLAA LALA LALAL MALA LALLAL LALAL LqA ALA LA LALY
தவறிய தத்தங்கள்
சொத்தி நடுவில் நின்று கொண்டிருந்தாள். அவளை ச் சுற்றி அவளின் வயதையொத்த நான்கைந்து சின்னஞ் சிறிசுகள்.
ராசாத்தி கைகளைத் தட்டிக் கொண்டே,
"டக். டக். டக். என்று
கீச்சிட்ட குரலிற் சொல்ல சுற்றி யிருந்த சின்னஞ்சிறிசுகள்,
"யார் வந்தது?" என்று உச்
சஸ்தாயிற் கத்த மீண் டும் ராசாத்தி,
*நான்தான் வந்தே ன்? என்று பதில் கூற, சின்னஞ் சிறிசுகள்,
என்ன நிறம்?" என்று கோரஸ் பாட,
"சாம்பல் நிறம்" என்று
ராசாத்தி சொல்ல,
'ஒடிப் பிடி" என்று கத்திக் கொண்டே எல்லோரும் சாம் பல் நிறத்தைத் தேடி ஒடிச் சித ஹினர்கள். ஏதாவதொரு சாம் பல் நிறப் பொருளைத் தொட் டால் வெ ற் றி. குழந்தைகள் சாம்பல் நிறப் பொருளைத் தேடி அலைந்து கொண்டிருந்தன.
சபேசன் வாசிகசாலையில் பேப்பர் படித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.
i
- ராஜ. யூனிகாந்தன்
"ராசாத்தி, 6מו זח וה Lח מ"
வீட்டை போவம்"
"நான் இப்ப வ ரே ல் லை அப்பா" என்று அவரைப் பார்க் காமலே சாம்பல் நிறத்தைத் தேடியவள் திடீரென நின்று திரும்பி அவரைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள்.
"ஓ! சாம்பல் நிறம்" ராசாத் தியைத் தொடர்ந்து மற்றக் குழந்தைகளும் ச தீ த மிட் டு க் கொண்டே ஓடிவந்தன. சபேச னின் வேட்டியில் அகலக் கரை சாம்பல் நிறம். எல்லாக் குழந் தைகளும் சபேசனின் வேட்டிக் கரையைப் பிடித்துக் கொண் டன. அவர் சிரித்துக் கொண்டே வேட்டி அவிழ்ந்துவிடாமல் இறு கப் பிடித்துக் கொண்டார்.
"சரி, சரி எல்லாரும் வீடு களுக்குப் போங்கோ" என்றவர் ராசாத்தியைத் துரக்கிக்கொண்டு நடந்தார். பால் வெள்ளைக் கதர் வேட்டியில் சின்னச் சின்ன விரல்களின் அழுக்கடையாளங்கள் அப்படியே பதிந்திருந்தன,
எ ல் லா வீடுகளிலும் ஏ( மணியாகிவிட்டது. ஆ ld 常 சாய்மனைக் கதிரையில்' படுத்தி ருந்தார். பெளர்ணமிக்கு இன் னும் சில நாட்களே இருந்தன.

முற்றம் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது,
"அப்பா பள்ளிக்கூடத்தை எடுத்துத் தாங்கோ' , 'டா)வாறு ராசயத்தி வந்து நின் மு. பள் ளிக்கூடம் சுவரில் அடிக்கப்பட்ட ஒர் ஆணியில் தொங்கிக் கொண்
டிருந்தது.
ள் 'i, , ..., , , '', தமிழ்ப் ! | ,'},ቃኝሓ ዞ፡፡ திலும், ஆங்கிலப் புத்தகங்கள இன்னெரு பக்கத்தி .wh ,ாறு மாருக அடுக் கி வைத், ள். படிப்பு ஆரம்பமாகியது.
"gy Lunar சொல்லுங்கோ, அம்மா, ஆடு, இலை, ஈட்டி ." ராசாத்தி சொல்லிக் கொடுக்க சபேசன் திருப்பிச் சொன்னுர்,
"இனி அப்பா ரீச்சராம் சரி சொல்லித் தாங்கோ'
விலங்குகளின் படங்களின் கீழ் வெற்றுக் கோடுகள் காணப் பட்டன. படங்களைப் பென்சி லால் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு சபேசன் கேட்டார்.
அப்பா யானை, அம்மா கங் காரு மாமா ஒனன், தாத்தா ஒட்டகம், யானைக்கு முகத்தில்ை இன்னெண்டு கால் ஏன் வைச் சிருக்கு?
*அது காவில்லை,
தும்பிக் ଜୂ} is
தனது வலது முழங்கையை மூக்கி ல் வைத்து அசைத்துக் காட்டினுள்.
"அப்பா, ஆமையும் முயலும் கதை தெரியுமா??
"ஓம் தெரியும்"
அந்தக் கதையிலை முயலுக்கு நித்திரை வந்ததுமாதிரி எனக் கும் நித்திரை வருகுத"
鬱9
புத்தகங்கள் யாவும் பள்ளிக் கூடத்திற்குள் திணிக்கப்பட்டன சபேசன் ),ஃன எடுத்து சுவரி, லிருந்த ஆ. 'யில் தொங்கவிட் டார். ராசாத்தியைத் தூக்கித் சோளிற் போட்டுக் கொண்டு (1):திற்குப் டோனர்.
"அப்பா நிலாப் பாட்டுப் ur(Sisarr'
சபேசன் அரிவரி ராகத்து .ண் பாடத் தொடங்கினர்.
"அhr ' 1ளியே வா அம்மா
பாரம்மா (ان 3)۱؛ pillph, IT If சும்மா ஜ க சந்திரனை துண்டா வெட்டிய தாரம்மா? வட்டத்தோசை கட்டதுபோல் வானில் இருந்த சந்திரனை மட்டிப் பயலவன் யாருடைத்தான். .
ராசாத்தி நித்திரையாகிவிட் டாள். செந்தூரன் தமிழ் மன் றத்திலிருந்து வந்தான
அப்பா அந்தப் பாட்டை ஒருக்கால் திரும்பப் பாடுங்கோ,
ஏன்?
"இண்டைக்கு மன்றத்திலை பேசிய விரிவுரையாளர குழந தைப் பாடல் வரிசையில் இதே படைப் பாடிக் காட்டினர். இதை ஆர் பாடினது?"
எங்கடை செல்லையா வாத் தியார். ராசாத்தீன்ரை தொட் _ம்மாவின்ரை தேப்பன்
அவ ற்ைற பாட்டுக்களையும் அவரைப் பற்றிய குறிப்புகளை யும் எங்கை எடுக்கலாம்?"
இதுகளை முழுதாக ஒடுக் d5 6. 為 மண் டு நான் நினைக் கேல்லை. அவரோடை கூடியிருந் தவை மூலமாகச் சிலதையறிய லாம். ரசிகமணி கனக செந்தி
நாதனுக்கு அவற்றை பாட்டுக்

Page 37
கிளில்ை வலு விருப்பம். எங்கடை ஊர் ஆக்களிலை செல்லத்துரை வாத்தியார், இவை யி ர ண் டு பேரும் செத்துப்போச்சினம்.
இப்ப இருக்கிற ஆக்க்ளிலை?" *சைவப் புலவரும், முருகேசு வாத்தியாரும் உயிரே (ா  ைட இருக்கினம். முருகேசு வாத்தி யார் தோட்டந் துரவெண்டு இன்னும் உழைச்சுக் கொண்டி ருக்கிருர்"
அப்ப சைவப் புலவர்தான் சரியான ஆள்"
"ஓம் அவர் வேறை சோலி யள் எதுவுமில்லாத ஆள். வ்சதி யாகவும் இருக்கிருர், அவர்கூட அரும்ையான பா ட் டு க் களை எழுதியிருக்கிருர், இர ண் டு, மூண்டு தொகுதிகளாகப் போட லாம். ஆணு ல் இதெல்லாம் விசர் வேலையள், இதுகளாலை ஆருக்கென்ன லாபம்??
"அப்பிடிச் சொல்லாதை யுங்கோ, எழுத்திலை இல்லாத தாலை கன விசயங்களை அறிய முடியாமலிருக்கு" -
"நீ சொல்லிறதும் ஒருவ கைக்குச் சரிதான். அது சரி உனக்கெப்ப றிசல்ற் வருகுது?"
*போன கிழமை வர்தெண்டு பேப்பரிலை போட்டிருந்தினம், எப்பிடியும் வாற கிழமை எதிர் பார்க்கலாம். ஐஞ்சு 'சீ' எடுத் தால் சைக்கிள் வாங்கித் தாற னெண்டு சொல்லியிருக்கிறியள்?
சபேசன் களைப்புடன் வந் தார். அன்று கக்சேரி பஸ் வர வில்லை. சீசன் ரிக்கற்றை வீணுக் க்க் கூடாதெண்டு பல மினிபஸ் களைப் போக விட்டு கால்கடுக்கக் காத்திருந்து ஆறுதலாக வந்த இ. போ. ச. வில் வந்திருந்தார். வாசிகசாலையில் ஏதோ கூட்டம்
நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"ராசாத்தி, அண்ணு கூட் டத்திற்குப் போயிட்டான?"
*இல்லையப்பா. அ  ைட க் கோழி இன்னும் அறையைவிட்டு வெளியே வரவில்லை"
அறைக்குள்ளிருந்த செந்தூர னின் தலைக்குள் ஏதோ கொதித் தது.
சபேசன் எதுவுமே பேசா மல் உடுப்புக்களை மாற்றினர். றிசல்ற் வந்ததிலிருந்து செந்தூ ரன் அறையைவிட்டு வெளியே வருவது குறைவு. தகப்பனும் மகனும் ஒருவரையொருவர் சந் திப்பதை தவிர்த்துக் கொள்ள முயன்றனர்.
ஐஞ்சு "சி" எடுத்தால் சைக் கிள் வாங் கித் தாறனெண்டு சொன்னரே. நான் ஆறு "டீ" யும். இரண்டு "சீ யும் எடுத்தி ருக்கிறேனே. VA
*றிசல்ற் வந்தண்டைக்குக் காசில்லாமலிருக்கலாம், அதுக் குப் பிறகு சம்பளமெடுத்து ஆறு நாளாகிறதே"
அம்மா இருந்திருந்தால் இப்பிடி நடந்திராது. அவருக்கு ராசாத்திதான் உசத்தி, தோளில் போட்டுக் கொண்டு நிலாப்பாட் டுப் பாடுகிருரர். என்னை அடைக் கோழி எண்டாளே, அவளை.
syGlast . . . ... அவளை.
தலைக்குள் மீண்டும் ஏதோ
குறுகுறுத்தது.
"சைக்கிள் வாங்கித் தரச் சொல்லி நான் கேக்கவில்லையே, தானகத்தானே வாங்கித் தாற னெண்டார். தன்னுலை ஏலா ததை ஏன் சொல்லவேணும்: ஒரு இறவல் ஒடிசலெண்டாலும் வாங்கித் தரலாமே"
எல்லாப் பொடியளும் ஒவ்
வொரு பாடத்துக்கு ஒவ்வொரு ரியூசன் மாஸ் ர ரெட்  ைடப்
போகேக்கை நான் இந்த அறைக் የጨ

அறைக் கதவை بحیرہ سرخ سریہ ۔سیرہ ۔سمہ حصہ منھم..~ہ حمل
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி
வருமாறு,
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 35 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
LLLAqL LALLAAAALL LLLLLLLAML ML SLAMALMLMLALLAA LMTAL LALALLS
குள்ளை இருந்து தனியாகப் படிச் சுப் பாஸ்பண்ணினனே?
*அருள் தன்ரை புதுச்சிைக் கிளிலே தாய், தகப்பனுக்குத் தெரியாமல் என்னை டபிள் ஏத் திக் கொண் டு றிசல்ற் வந்தாப்பிறகு எனக்கும் சைக்கிள் வந்திடுமெண்டு எவ்வ ளவு நம்பிக்கையோடை சொன் னன். இப்ப எந்த முகத்தோடை போவன்? நான் அடைக்கோழி, அடைக்கோழி?
*கிணிங். கிணிங். கிணிங். வாசலில் தபாற்காரன் மணிய டித்தான்"
சைக்கிள்_மணியோசை பத் தாகி. நூருகி, பல்லாயிரமாகி செந்தூரனின் தலைக்குள் நிறைந்து காது மூக்கு வாய் என்பனவற்
றினூடாக வெளியெறியது.
ஓ, எனக்குச் சைக் கிள் வந்திட்டுது' சாத் தி யிருந்த
፻፤
போனவன்,
படாரெனத் திறந்து கொண்டு பாய்ந்தோடி ஞன.
தபாற்காரன் த ரை யில் ଗଅଁ ழ்த் து கிடக்க செந்தூரன் சைக்கிளிற் பறந்தான். விநியோர கிக்கப்பட்ாதிருந்த கடிதங்களும், சஞ்சிகைகளும் வ ழி நெடுக ச் சிதறின.
டேய் எல்லாரும் விலகிப் போங்கோ, என்ரை சைக்கிளிலை அடிபட்டு நொருங்கிப் போகா தையுங்கோ, அடேப் ćћтižanrgo மடையா ஒதுங்கி நில். என்ரை சைக்கிளில் பட்டு உன்ரை கார் நசுங்கப்போகிறது?
எதிரே மெதுவாக வ ந்த
கார்க்காரன் gRTLD's 666 சென்முன்.
'est ü.... A nr ti és mr r iiir பயந்து போஞன், நல்லாப் பயந்து போனன். மினிபஸ்
பிசாசே ஒதுங்கிப் பேT என்ரை சைக்கிளில் பட்டுத் தூளாகப் போயிடுவாய்.
"ம். விலத் த ரமலா
வாருய், இந்தா பார் உன்னைத்
தூளாக்குகிறேன்"
மந்திகை சத்திர சிகிச்சை ஆறையிலிருந்து வார்ட்டிற்கு கொண்டுவந்து விட்டார்கள். சத்திர சிகிச்சை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார். செந் தூர் கண்களைத் திறந்தான், எதிரே சபேசன்,
அப்பா, எனக்குச் சைக்இன் வேண்டாம்ப்பா, நீங்கள் கவ லைப்பட வேண்டாம் நான் அம்ம்ாட்டைப்.
திறந்த கண்கள் நிரந்தர
மாக மூடிக்கொண்டன.
சுேம்மா இருந்த சந்திரனை
துண்டாய் வெட்டிய.

Page 38
மணிப்புரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சேலைகள்
சேட்டிங் - சூட்டிங் வகைகள்
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ் 18, நவீன சந்தை
மின்சாரநிலைய வீதி யாழ்ப்பாணம்,
శ్లోని 7684
 
 

எழுத்தாக்கங்களும் அறிதிறன் தூரமும்
அறிதிறன் தூர வேறுபாடு கள், இலக்கிய ஆக்கங்களையும், நோக்கங்களையும் பாதி த் தும் செல்வாக்குச் செலுத்தியும் வந் துள்ளமை, சூழல் வாழ்நிலை, தொடர்பான கருத்துக்கள் மீது மீண்டும் சிந்தனைகனைத் தூண்டி வருகின்றன
*கருவிலே திருவுடையார்" என்ற கருத்து, நில மா னி ய சமூகவமைப்பிலே ஒருவர் பிறக் கும் பொழு தே மகத்துவ முடைமை வாய்க்கப் பெறுகிருர் என்பதை நிலைநிறுத்த எழுந்த கருதுகோளாகின்றது. ஒருவரின் வாழ்நிலை, அவரின் அறிவை, நுண்மதியாற்றல்களை, உருவாக் கும் என்பதன் அடிநிலைகளைபறி யது, மகா விவேகம், ஜீனியஸ் என்பன பற்றிப் பேசுவது ம் பொருத்தமற்றதாகி விடுகின்
றது.
அறிதிறன் தூரம் என்பது தகவல்களை அறியக்கூடிய வாய்ப் புக்களின் இடைவெளி வீச்சைக் குறிப்பிடுகின்றது. எளிமையான காட்சிநிலைப் பொருள்களை அறி தற்குரிய வாய்ப்புத் தொடக் கம். சிக்கலான கருத்தியல் வடி வான தகவல்களை அறிதல் வரை அனைவர்க்கும் இன்றெமது சூழ லில், ஒத்த வாய்ப்புக்கள் கிடைப் பதில்லை. ஒத்த வாய்ப்புக்கள் யாதாயினும் ஒரு நிலையத்திலே கிடைக்கப் பெற்ருலும், அவர வர் வாழ்நிலைகள் வழங் கி ய உளத்திறன் வேறுபாடுகளை அறி திறன் வேறுபாடுகளிலே தாக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும்,
73
eflon. Gogu Jirgir
அறிதல் என்பது உலக விவ காரங்களை மனிதனது மூளையிலே பிரதிபலிக்கும் ஒர் எளிய செயல் முறையாக மாட்டாது. பொரு ளின் வளர்ச்சியிலே முரண்பாடு கள் இருத்தல் போன்று அறித லிலும் முரண்பாடு உண்டென்று கொள்ளுதலே பொருத்தமா னது. அகிலம் முடிவற்றதாக இருக்கும் நிலையிலே அறிதலும் முடிவற்றது என்று கொள் ள முடியும்.
அறிதிறனின் எந்தத் துறை யையும் அதன் தன்மையையும் வளர்ச்சியின் திசையையும் நிர் ணயிக்கக் கூடிய விரிவான புறத் தொடர்புகளின் வேறுபாடுகள் அறிதிற ன் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கின்றன.
இந் நாட் டு முற்போக்கு எழுததாளாகள பலா தமது வாழ்நிலை அனுபவங்களை இலக் கியமாக்கிய வேளை அவர் வரன் முறையாகத் தமிழ் கற்றனரா என்றும் அவர்கள் பயன்படுத் திய நடை இழிசனர் வழக்கு என்றும் எழுப்பப்பட்ட கண்ட னங்கள், பழங்கதையாக இருப்பி னும், அக்கண்டனங்களிலே அறி திறன் தூரம் பற்றிய குட்டி பூர்சுவாத்தனம் பொதிந்திருந்த மையை மறுக்க முடியாது.
நடைமுறை, அறித லின் தொடக்கப் புள்ளியாகும் என் பதும், அறிதலும் நடைமுறையி லீருந்து தனித்து இருக்க முடி யாது என்ற கொள்கையை வாழ்நிலை வாயிலாகவும், தாம் பூண்ட கொள்கை வாயிலாக

Page 39
வும் அந்த எழுத்தாளர்கள் அறிந்து கொண்டமையின் வெளிப்பாடாக அவர்களுடைய ஆக்கத்திறன் செயற்பாடுகள் அமைந்தன. s
"சாரங்கன் நாவலுக்காக
உயிர் பெற்றவனல்ல; வாழ்க் கையில் நான் சந்தித்த மறக்க முடியாத மனிதன்தான் அவன்? என்று ஜெயகாந்தன் ஒரு சம யம் தனது கதா பா த் திர ம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட் டமை, நடைமுறை அறி த ல் தொடர்பான இலக்கியச் சித்தி ரிப்புக்கு ஓர் உதாரணம், இவ் வாருன எடுத்துக்காட்டுக்கள் டொமினிக் ஜீவா, டானியல் போருேரால் Tபல சந்தர்ப்பங் களிலே விளக்கம் பெற்றுள்ள மையும் அறியப் பெற்றதொன் ருகும்.
1950 ஆம் பதின்பங்களில் இலங்கையிற் சாமானியர்கள் எழுத்துலகப் பிரவேசஞ் செய்த வேளை, சாமாந்தர நிகழ்ச்சியாக
அற்றை நான் விமர்சகர் சனக
செந்திநாதன் அவர்கள், தமிழ் எழுத்தாளர்களாக வர வரும் பு வோர் அவசியம் படி க் திருக்க வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றினை வெளியிட்டார். எழுத் தாளர்கள் மாத்திரயன்றி, மக் கள் எல்லாரும்ே கல்விச் செல் வம் பெற வேண்டுமென்ற வேட் கையும், பொருள் உற் பத் தி மு  ைற வஞ்சகத்தனங்களால் அணைத்து மக்களும் கல்வியைப் பெற முடியாத அவலங்களின் புனைவு. பள்ளி வாழ்க்கையைப் பகைப்புலமாக்கிய முற்போக்கு எழுத்தாளர்களினற் சு ட் டி க் காட்டப் பெற்றன.
கனக செந் தி நா த ன து கருத்தை வல்லிக்கண்ணன் அறிந் திருந்தாரோ தெ ரிய வில் லை. ஆயின் முறையான கல் (வி ப் பயிற்சி *அகடமியன் களின்
ரசனைத் திறனைக் கெடுத்து விட் டது என்ற அக்கருத்துக்கு முரண் வாதமொன்றை முன்வைத்தார். இந்த வாதமும் மிக நிதானமாக அணுகப்பட வேண்டியதொன்ற கும். அறிதிறன் தூரம் மேலோட் டமாகவன்றி அடிநிலைகளைத் தழு விச் செல்ல வேண்டுமென்பதும், வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத கல்வி முறையையும் ஆளுமையை அறிய முடியாத பரீட்சைகளை யும் உருவாக்கி வரும் சமூகக் கட்டமைப்பே விமர்சிக்கப்பட வேண்டும் என்ற அறிதிறன், சமதர்ம நெறியாளரால் விளக் கப் பெற்றன.
ம்ே ற் கூறியவற்றிலிருந்து அறிதிறன் தூரம் சமதர்மநெறி யாளர்க்கும் பிறர்க்கும் வேறு பட்டு நின்றமை புலன கும். நிலமானிய முறையின் சீரழிவு களை விளக்கும் சாதிக் கொடு மைசளே அணு கி ய காலம் தொடக்கம் இன்றை நவீன பிரச்சினைகளை அணுகுதல் வரை இந்த வேறுபாடுகள் ஒளித்துண் டுகளாக விழுந்தவண்ணமேயிருக் கின்றது .
மணியனின் "மோகம் முப் பது வருஷம்" பற்றி டி. எஸ். ா விந்திரதர்ஸ் கூ றியவை இந்த வேறுபாடுகளின் மிக நீன் L வீச்சை எடுத்துக் காட்டுகின் றன. "டீலக்ஸ் ஹோட்டல்களை யும், ஏர் கண்டிசன் அறைகளை யும் இம்பாலா கார்களையும் மட் டுமே கொண்டு மேல்தட்டு ரச
னைகளுக்கு வெண்சாமரம் வீசும்
இலக்கிய வியாபாரிகளின் பேணு முனைகள்_பாமா போன்ற ஏழை இளம் பெண்களின் மென்மை யான இதயத்தைக் கிழித்துக் குரூர இன்பம் காணு வது இயல்பே இந் நிலை யி ல் மணியனின் அறிதிறன் தூரம்
அவ ர் தம் வாழ்நிலையிலிருந்து
74

முனைப்புக் கொள்வதை மறுக்க (1Քւգաn 5].
உழைப்பவர்களின் உணர்ச் சிகளைத் திருடுவதும் ஒரு கேவல gif சுரண்டலாயிருப்பினும் அவற்றைப் பாரா மு க ம 1ா க இருப்பினும் அல்லது அவற் றைப் பார்க்காது, இலக்குகளை வேறுபக்கம் திசை வதும், அபகூத்துக்கு ஆதரவான நடவடிக்கைதான். உதாரண ம்ாக, பெண் அடிமைத் தனத் துக்கு எதிரான இலக்கியப் புனை வுகளில், ஆண் ஆதிக்கத்துக்குக் காரணமான சமூக அமைப்புக்கு ஆப்புவைக்காமல், வெறுமனே ஆண் எதிர்ப்பு வக்கிரங்களை' முன்வைத்தல் அபகூத்துக்கு ஆத.
ரவான அறிதிறன் புனைவாகின்
றது.
எழுத்தாளர்களது வாழ்க்கை நீட்சியில், அவர்தம் அறிதிறன் தூரங்களில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு. அந்த மாற்றங் கள் நேர் மாற்றங்களாகவோ, எதிர் மாற்றங்களாகவோ அமை வதுண்டு. எடுத்துக்காட்டுக்களா கக் குறிப்பிடுவதாயின் ராஜம் கிருஷ்ணனது எழுத்தாக்கங்க ளில் நேர் மாற்றமும், சுந்கர ராமசாமியின் ஆக்க ங் களி ல் எதிர் மாற்றங்களும் நிகழ்ந்துள் ளமையைக் குறிப்பிட முடியும்.
பிரச்சினைகளைப் எழுத்தாளக
«gF LDésrr 6n) Lʼi . பொறுத் தவரை,
ளின் அறிதிறன் தூரங்களிலே
க ணப்படும் வேறுபாடுகள், Du} + F ו (5. מונה6
கு 'பாய்  ெய் - ப்ப கின்றன.
ஒன்று egy iq l , ri) l- üJ rr 65T அமைப்பு ம ஈ ற் ற ப் படு த ல் தொடர்பான கருத்தக்கள், மற்  ைற ய து, அடிப்படை
அமைப்பை அணுக்ாத அறிதி றன் தூரம் இவற்றுள் அடிப் படை அம்ைப்பைச் சாடுதல்
அழகியற்
திருப்பிவிடு
· ኅነ! -፳፣ uኮ .
தொடர்பான கலையாக்கங்கள் பரிமாணம் குறைந் கவை என்ற கருத்து இரண்டா வது பிரிவினராற் பரப்பப்படு வது இயல்பானதே.
பாரம்பரியமான அழகியல் அறிதிறன்களிலிருந்து விடுபட (pடியாத நிலையில் அத்தகைய சருத்துக்கள் ஒழிப்பின் ஒழிப்பை அறுை காதவையாயும், முடிவற்ற புதுப்பிகலை நிதானித்துத் தழு விக் கொள்ளாதவையாயும் உள் ளது. அடிப்படையான சமூக் மாற்றங்கள் நிகழ்ந்த நாடுக்வி லும் சில புத்திசீவிகள் பழைமை யான அழகியற் பிடிப்புடையோ ராய் இருந்தமையும், அவற்றில் அவர்களின் கருத்துக்கள் மேற்
கோள் காட்டப்படுவதும் முடி வற்ற மலிந்த முரண்பாடுகளாகின்றன,
புதுப் பித் த விடையே
அறிதிறன் துர வேறுபாடு கள் அழகியல் தூர வேறுபாடு களையும் உருவாக்குகின்தன. புற வுலகு தழுவாத அக யதார்த் தமே இலக்கியம் என்று வாதா டுவதும், சமூக நோக்கம் தழு விய, இலக்கியங்களின் ஆளுமை
யைக் கி ன் டல் செய்வதும்,
சமூக நோக்கு எழுத்தாக்கம் தருவோரை வஞ்சித்து விமர்ச னங்களைத் தருவதும் சமூக அறி திறன் தாாத்தின் சேய்மை நிலை
வெளிப்பாடுதான்,
தம்மைச் சூழயுள்ள அநீதி களை இனங்காண்பதும், அவற் றின் சு:ல வேர்களை விஞ்ஞான பூர்வமாக அணுகி வேறுபடுத்து அவற்றைக் கலை இலக்கி யங்களிலே புடமிட்டுத் தருவ தும், அறிதிறன் தூர வேறுபாடு
களுக்கேற்ப வீச்சுக் கொள்வதை
உணராதவிடத்து அடிப்படை. ஒற்றுமையை ஏற்படுத்துதல் கடினம்ாகிவிடும். O
?ፀ

Page 40
அமரர் திரு. கே. வி , கனகரத்தினம் ஜே பி அவர் களினது 20- வது ஆண்டு ஞாபகார்த்தமாக
S LAL LALAML LSSLALAL LAMLMLMLLALLML LLLLLLLALALLALLSLLLALLL LLLLAALLLLLAALLLLLLL LLrLALLLAALLLLLALLLL LLLLLL
u?', தந்தி. ” 4 48 (8 இநுத்தினம்ஸ்
|50கன்ஜகிட்டியழப்பாணம்
ఒకడి Sas
 
 
 
 

மெலிதாக விலகியிருந்த கதவின் நீக்கலில் அவள் இருப் பது இவனுக்குத் தெரிந்தது,
அவளது கைகளில் ஏதோ புத்தகம்.
"இவளுக்கு இந்தப் பித்து இன்னும் தீர்ந்த பாடில்லையோ?" என நினைத்தவன் - கதவை நெருங்கி, மெதுவாகத் தட்டி ஞன்.
மிகவும் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததால், அந்த ஒசை அவளிடம் எதுவித பாதிப்பை யும் ஏற்படுத்தவில்லை.
கதவு மிக அருகாமையிலி ருந்தும் தன்பால் அவள் கவனம் கொள்ளாதது இவனுக்கு ஆச்ச ரியமாயிருந்தது.
'இவள் முன்னைக்கு இப் பொழுது பருத்திருக்கிருள். பூசி யது போலிருந்த தசைகளில் ஒரு இறுக்கம் சேர்ந்தாற்போல ஒரு தளர்ச்சியும் கண்டிருக்கின் றது என நினைத்தவன், நெற் றிக்கு மேலாக அவளது கூந்தலில் சற்று நரையோடியிருப்பதையும் அவதானித்தான்.
எதையுமே ஒரு தீர்மானத் துடன் ஒதுக்கிவிடும் அவளது இயல்பு அவனுக்கு நினைவுவர, சற்றுப் பதட்டமடைந்தவனுக
க. சட்டநாதன்
கதவை மீண்டும் சற்றுப் பல மாகத் தட்டினுன்.
அவள் விழி உயர்த்தி, சிறி தாகத் திரும்பி, இவனைப் பார்த் தாள். பார்த்தவள், எழுந்து வந்து கதவைத் திறந்து இவன் உள்ளே வர வழிகந்து நின்ருள்.
உள்ளே வந்தவனை அவள் நன்ருகவே பார்த்தாள்.
"ஒரு ஆணுக்குரிய மனப் பக்குவங்களை இவன் கொண்டி ருக்கவில்லை, எனினும், கம்பீர மாக இருந்தவன் ஏன். . ஏன் இப்படி உடலும் மனசும் கவலை தட்ட, அழுக்குப் படிந்த உடை களுடனும் பல நாட்கள் முகச் சவரம் செய்யாமலே முரட்டுத் தனம்ாய் வளர்ந்து அடர்த்தி கொண்ட தாடியுடனும், ஒ. அந்தக் கண்கள், ! வைரமணிக ளாய் ஒளிரும் அந்தக் கண்கள்! தீட்சன்யம் குன்றி ஒளியிழந்து."
அவள் இவனைப் பார்த்த படியும், இவன் அவளைப் பார்த்த படியும் ஒரு சில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தன.
உட்காரும்படி கூடச் சொல்
லாம்ல், இதென்ன பார்வை.
இதென்ன நிதானம்.
அவனது மனசு அலுத்துக் கொள்கிறது.
_ የ? .

Page 41
'இல்லை, ஏழு வருஷங்களுக் குப் பிறகு, என்ன இப்பிடித் திடீரென இந்தப் பக்கம்?"
"உன்னை. . . . இல்லை. இல்லை. . . மலரைப் பாக்க வேணும் போலை ஆசை யா இருந்தது'
"உண்மையா..? என்னையும்
மவரையும் பார்க்கவா வந்தது?"
"இவளது குரலில் இழைவது Gst Luorr, ஏளனமா? இவள் மாறவில்லை? இத்தனை ஆண்டு கள் இடைவெளியின் பின்கூட இவளில் எதுவித மாற்றமுமில்லை"
இருங்களன்."
அவளது அந்த வார்த்தை களையே எதிர்பார்த்திருந்தவன் போல, உடனடியாக உட்கார்ந்து கொண்டவன், அவள் படித்துக் கொண்டிருந்த புத் தக த்தை எட்டி எடுத்துப் புரட்டினன். சிரமத்துடன் அதன் தலைப்பை மனப்பாடம் செய்வது போலச் சற்று உரக்கவே படித்தான்.
டப்பிளினேர்ஸ்"
"என்ன ஜேம்ஸ் ஜொய் ஸ்ஸா? பிரஞ்சா. ரஸ்ஸியன? என்ன நாவல்?" ۔
அவள் முகத்தைச் சற்றுக் கைகளால் மறைத்தபடி, மெலி தாக நகைத்தான். அவ ன து அறியாமை, அவள் அறிந்த ஒன்றுதான். "எழுத்து, இலக்கி யம் பற்றி எதுவித அறிவோ ரசனைபோ இல்லாது, யந்திரம் போல வாழ்ந்தவன்தானே இவன் என நினைவு கொண்டவள், அவனுடன் ஒர் இரண்டாண்டு காலம் வாழ்ந்த அந்த அவலம் மிகுந்த வாழ்வையும் நினைவு கொண்டாள்.
O
இவள் அவனைத் திருமணம்
செய்த பொழுது இவளுக்குப்
፵8
பதினறு அல்லது பதினேழு வயதுதான் இருக்கும். அந்த இளம் வயதிலேயே இவள் விட லைப்பருவப் பெண் களுக்கே உரிய கனவுகளிலிருந்து விடுபட் டவளாகவும், அதற்கு மாருக வாழ்க்கை பற்றிய தரிசனம் மிக் கவளாயுமிருந்தாள்.
இதற்கெல்லாம் காரணமாய் இருந்தவரே இவளது தந்தை தான, அவா கறறுத தநதவை போகி, அவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த புத்தகச் சொல்வங் கள் இவளை மிகுதியும் ஞான முடையவளாக்கியது.
அவள் அப்பாவின் புத்தக ஸெல்ஃபிலிருந்துதான் பாரதி யையும், புதுமைப் பித்தனையும், மெளனியையும், ஜானகிராமனை யும் பரீச்சயம் செய்து க்ொண் டாள். படிப்பது, அதையொட் டிய ரசனையில் திழைப்பது. அவ ளது வாழ்க்கையின் இன்னுெரு பகுதியாக ஆகியிருந்தது.
திருமண நாளன்று இரவு, கட்டிலுக்கு இவள் பாலும் பழ மும் ஏந்தி - அவன் சினிமாவில் பார்த்த ரசித்த மாதிரிக் கனவு களோடு - வராமல் சாதாரண "நைட்டி" யுடன் எதோ புத்தக மொன்றைக் கையில் ஏந்தி வந் தது இவனுக்கு மிகுந்த எரிச்சலை யூட்டியது.
என்ன இது கையிலை. ?" "வேள்வித் தீ, நல்ல புத்த கம்" படிக்கிறியளா?"
இவன். அவள் எதிர்பார்க் காதவகையில் இங்கி கமில்லாமல், சற்று முரட்டுத் சனமாக, அந் தப் புத்தகத்தைப் பிடுங்கி தூர வீசிவிட்டு இவளை அணைத்துக் கொண்டான்.
"டாம் இட்." என்று மெதுவாக முனகியவள், அடுத்த கணம் தன் தவற்றை உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

அன்று அவள் வேள்வித் தி
படிக்கவில்லை. மலரிலும் மெல் லிய விஷ யங்கள் அங்கு தீ படர்ந்து கருகியதான உணர்வி னைத்தான் அவளால் பெற முடிந்தது.
அந்த முதல் சந்திப்பு அவ ளுக்கு இன்னெரு விஷயத்தை யும் உணர்த்தியது. அவனுக்குப் புத்தகமென்ருலே மிகுதியான அலர்ஜி என்பதுதான் அது.
அதன் பின், இவள் அவ
னில்லாத சந்தர்ப்பங்களில்தான் மிகுந்த ரகசியமாகவும் ஒருவ கைப் பதட்டத்துடனும் புத்த கங்களைப் புரட்டுவாள்.
அவன் ஒருவகை அதிகாரத் துடனேயே, இவள் படிப்பதை நாகரிகமில்லாமல் தடுத்து வந் தான். அத்துடன், புத் த கம் படிப்பதே பழுதான ரசனே என் றும், அதற்குச் செலவிடும் நேரத் தையும், பணத்தையும் ஏதா வது பயனுள்ள வேலையில் ஈடு பட்டுச் செலவிடலாமே என்றும் அவன் அபத்தமாக வாதிட்டான்
அவன் பயனுள்ள வேலை என்று கூறுவதெல்லாம்- இவள் அவ னு க்கு விதம் விதமாய்ச் ச  ைமத்து ப் போடுவதையும், அவனது ஆடைகளைக் கழிவிப் போடுவதையும், அவன் அழைத் துச் செல்லும் மூன்ருந்தர சின் மாக்களையும், நாடகங்களையும் பார்த்துவிட்டு, "நன்று நன்று" என்று அவனது மலினமான ரச னைக்கு ஒத்தடம் கொடுப்பதை யும், அதற்கு மேலாக அவன் சொல்லுகிற மாதிரியெல்லாம் இவள் அரை குறை ஆடைக ளோடோ அல்லது ஆடையில் லாமலோ இர வு பூராவுமேசில சமயங்களில் பகலிலும்கூட இருப்பதையும்தான் என்பதை இவள் பூரணமாக உணர்ந்திருந் தாள்,
O
79
‘என்ன ஏதென் குடிக்கிறி யளா? கோப்பி தரட்டுமா?" என்று கேட்டவள். உள்ளே சென்று, அதிக கோப்பித்தூள் போடாமல்; ஆடை நீக்கிய பால் கொஞ்சம் சேர்த்து, சிறிது சீனியும் சேர்த்து, இவன் விரும் பிய வண்ணம் - இவனுடன் மனைவியாக ஓர் இரண்ட்ாண்டு காலம் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூர்வதுபோல கோப்பி போட்டுத் தந்தாள். அ  ைத வாங்கிக் கொண்டவன், கிளா சையும் கோப்பியையும் மாறி மாறிப் பார்த்தான்.
‘என்ரை கிளாஸ். ஏழாண்
டுக்குப் பிற கும் உடைய்ாமல்
2-60)!-LIfTLD6)... ...
"உங்களைப் போல என்னலை எதையுமே போட்டு உடைக்கத் தெரியாது"
அவள் கண்களில் திரட்சி கொண்ட நீரை மெதுவாக் முகம் சாய்த்து மறைத்துக் கொண் டாள்.
*கோப்பி கூட இண்டைக் குத்தான் சாப்பிட்டது போலை இருக்கு" என்றவன், திடீரென ஏதோ நினைத்துக் க்ெகண்டவ னய், x -
"இப்ப இல்லையா?*
அவன் ஏற்கனவே கேள்விப் பட்ட விஜயம்தான். ஆனலும், 2னே அதனை உறுதிTசெய்து கொள்ள வேண்டும் போலிருந் தது அவனுக்கு.
நகுலேஸ் இஞ்சை
'இல்லை." அந்த வாழ்க்கை, தா ன் விரும்பாமலே சம்பவித்ததற்கு
அவள் துயருற்றவள் போல மனக்கலக்கத்துடன் இவனைப் பார்த்து நின்ருள்.

Page 42
திருமணமான புதிதில் ஒரு சமயம் இவள் அவ னு டன் கொழும்புக்குப் போன பொழுது சர்வதே ச திரைப்கட விழா ஒன்று ரீகல் திரை அரங்கில் நடப்பதை அறிந்து இவனை வரும்படி அழைத்தாள். அதில் ஓரிரு படங்களையாவது பார்த்து விட வேண்டுமென்ற ஆவ ல் மிகக் கொண்டிருந்தாள். நல்ல திரைப்படங்கள் பற்றி அவள் படித்திருந்தளவுக்குப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் பெற்றிருக்க வில்லை:
அவள் பார்த்த கலைத்தரம் வாய்ந்த முதற் திரைப்படம் ரேயின் "அபுசன்சார்" தான்.
அந்தப் படம் ஏற்படுத்திய உ ன ர் வின் திருப்திகளோடு வெளியே வந்தவளை இவன் மிக வும் மோசமான மொழி புரியாத படத்திற்குத் தன்னை அழைத்து வந்தது பற்றியும், அவளது f F &5 any LD LDL-L-LDIT607 g/ என்ற தொனிப்படவும் சொல் லியதோடு அமையாது ஓர் அமெரிக்கப் படத்தின் பெயரைச் சற்றுத் தவறுதலாக உச்சரித்த படி "அதைப் பார்த்திருக்ஈலாம்" என்று சொன்னன்.
இவள் உண்மையில் அவன் பால் மிகுந்த பரிவு கொண்டு "நல்லது எது என்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள் என் ருள்.
இது அவனுக்கு எரிச்சலை ஊட்டியிருக்க வேண்டும். அவன் கோபமடைந்தவஞய்,
*பெரிய இவ. அவவின்ரை ரசனையும் மண்ணுங்கட்டியும். இப்பிடி அட்டை ஊர்ர மாதி ரிப் படமெடுக்க எ வ னு க் குத் தெரியாது. சரியான டல்லா. ஒரு பாட்டு, ஒரு ட்ான்சு எது வுமே இல்லாமல்
8.
பெற்றுக்
அவர்களது - ad-60Juri-di தடைப்படும் வண்ணம்;
"ஹலோ குரு. . என்ன இந்தப் பக்கம். சிவாஜி படம் எதுவுமே புதிதாக ஒடேல்லையா' "இல்லை மச்சான். இவள் ஏ தோ சொல்லிருளெண்டு வந்தா. . ஒரே அறுவைப் பட
onru G3Lurrësi”
அவன் மனைவிமீது குற்றம் சுமத்தினன்.
* உன்ரை மிஸ்ஸிஸா. வ ண க் கம்? என்ற வ ன், தொடர்ந்து கேட்டான்;
"உங்களுக்குக் கலைப்படங்க ளெண்டா பிடிக்குமா?"
இவள் மெலிதாகப் புன்ன
கைத்தவாறு பிடிக்குமென்ருள்.
"நேற்றைய படம் பார்த் Sri 56TIT?”
"ஜப்பானியப் படம். அக்கி ராகுருேசோவா உடையது, அது தானே?"
*டைரக்ட்டர் பேரெல்லாம் தெரியுதே!*
"இல்லை. அவரைப் பற் றிப் படித்திருக்கிறன். இதுதான் நான் பார்த்த முதல் படம்!"
அவள் ம்  ைற க் கா ம ல் உண்மை பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது. ܫ
"நாளை ஐசன்ஸ்ரைனுடை யது. தவருமல் வந்து பாருங்க.
த ஸ்ரைக்" என்ற படம்"
கூறியவன் திடீரென வி!ை கொண்டு வெளி:ே போனன்.
அவளுக்கு இவனை விட்டு விட்டு, அவனுேடு போய் நாளை அவனுடன் வந்து "த ஸ்ரைக்" படம் பார்க்க வேண்டும் பேலி ருந்தது . −

மறுநாள், அவள் விருப்பங் கொண்டிருந்த பொழுதும், "த ஸ்ரைக்" பார்க்க முடியாமலே போய்விட்டது. இந்த நிலைமை மிகவும் கொடுமையானதாகவே அவளுக்குப் பட்டது. த ன து சுதந்திரமின்மையையும், தான்
விரும்பும் எதையுமே செய்ய போ வ ைத யும்
முடியாமல் நினைத்து மிகவும் கவலையும் கலக்கமும் கொண்டாள்.
அந்த நிகழ்ச்சியின் பின், ஏறக்குறைய இரண்டு கிழமைக்
குள் "குரு இருக்கிருஞ" என்று கேட் ட படி நகுலேஸ்வரன் வந்தான்.
வந்தது மே ‘த ஸ்ரைக் பார்த்தீர்களா? என்றுதான் கேட்டான்.
இவளுக்குப் பெருமைக்காக வேனும் பொய் சொல்ல வராது.
இல்லை" என்ருள்.
"○g
கிரேட் *குரு எங்கே" கேட்டபோழுதுதான், தன்னுணர்வடைந்தாள்.
தன்னை மறந்து, லயித்துப் போக இவனில் அப்படி என்ன இருக்கிறது. அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.
உயரமாக, சிவ ப் பாக பொசு பொசு எனத் தாடி வளர்த்துக் கொண்டு இடை இடையே தன்னிச்சையாகச் சிரித்தபடி தலை கொள்ளாது சடைத்து வளர்ந்த தலைமுடியை, நெற்றியில் வந்து விழும் பொழு தெல்லாம் புறங்கையால் ஒதுக் கியபடி, இவளது உயரத்திற்கே குனிந்து வந்து, அவன் இலக்கி யம் பேசியது இவளுக்குப் பிடித் துப்போய் விட்டது.
ஃபில்ம்' என்ற வன் என்று மீண்டும் இ வள்
அவ ன், கணவனுடைய நண்பன் என்ற ஸ்தானத்திலி ருந்து, இவளது நெருங்கிய
ஹாவ் மிஸ்ட் ஏ
சொல்ல வேணும்"
சிநேகத்துக்கு உரியவன் ஆனது, வ ள் உண்ராமலே ந  ைட பெற்றது.
நவீனமான எந்த விஷயத் தையுமே அவன் தெரிந்து வைத் திருந்தான். கலை, இலக்கியம் பற்றி ஆழ்ந்த அக்கறையுடன் அவனுல் பேச முடிந்தது.
இதுவரை ஏதோ கரடு முர டான பாதையில் நடந்து வந் தது போலவும், இவனது வரு கையும் தோழமையும், வெல் வெட் விரிப்பில் ந - ப்.ப து போன்ற சிலிர்ப்பையே அவளுக் குத் தந்தது.
ஞான சூன்யமான, எதற் குமே சிடுசிடுக்கும், இங்கிதமில் லாத கணவனது உறவுகளிலும் பார்க்க இந்த வாழ்வு, இந்தத் தொடர்பு எல்லாம் அவளுக்குப் பிடித்தமானதாகவே இருந்தது. ஆனல். அந்த வாழ்வையே கொச்சைப்படுத்துவது போல, அவளது கண வனே இவளை இடித்துரைத்த பொழுது இவள் மிகுந்த கூச்சமடைந்தாள்
"இவளுக்கும் நகுலேசுக்கும் தொடுப்பாம்" S.
"என் கண்முன்னலையே இப் படிக் கூத்தடிக்க உனக்கு வெட் கமாயில்லை?" ஏதேதோ அவன் பிதற்றினுன்
அவள் அப்பொழுது இரண்டு மாதக் கர்ப்பமாயிருந்தாள்,
* ஏன் அவசரப்படுவான், நிச்சயமானதும் சொல்லலாமே என இருந்தவளுக்கு, இந் த ப் பேச்சுக்குப் ன் இவனிடம் போய் இ  ைத யெ ல் லா மா என்ற ஒரு வகை வீம்பு மேலிட, பேசாமலே இருந்தாள்.
ஆனல் அவளில் ஏற்பட்ட மாற்றங்களை இவனுகவே அறிந்த பொழுது, மிகுந்த சந்தே கம்
8.

Page 43
கொண்டு "லபோ லபோ" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான். நகுலேசின் கரு வைத்தான், சோரம் போய்
இவள் சுமந்து திரிகிருள் என்று
சத்தம் வைத்தான்.
அதனுேடு அமையாது, நகு லேஸ் ஒருசமயம் வந்தபொழுது அவனை வாச ற் படியிலேயே நிறுத்தி வைத்து, "நண்பனது மனைவியை பெண்டாள மனசு வருமோ? எ ன் று கூச்சலிட் டான்.
எல்லாமே மிகவும் கோமா
ளித்தனமாகவும், நா ட கத் த ன் மை மிக்கதாகவும், ஒரு மூன்ருந்தரச் சினிமாவில் வரும் அருவருப்பு மிக்க காட்சி போல வுமே அவளுக்குத் தோன்றியது.
இந்தச் சினிமாத்தன மெல் லாம் இவனில் ஊறிப் போன தற்கு காரணமுண்டு என்பது இவளுக்குத் தெரியும். வாழ்வின் மதிப்புகளையே சினி மாவைக் கொண்டே அளவிடுப வன்தானே என நினைவு கொண் டாள். இந்த அசட்டுப் பிறவி
யுடன் வாழ்வதிலும் பார்க்க, தனித்தே இருந்துவிடட் ஆசை கொண்டாள்.
ஒரு சந்தர்ப்பத்தில் இவள் அவனிடம், "உங்களது சந்தே கங்களுக்கு எதுவித ஆதார (mம் இல்லை. உங்களுக்கு என்னிலை
விருப்பமில்லையென்ருல் தாராள மாகப் பிரிந்து போகலாம்" என்ருள்.
"போகத்தான் போறன். . உன்னுேடை, உ ந் த ஊத்தை வேசையோடை எனக்கு என்ன வேலை" என்றவன், மலர் பிறக் கும் வரை அங்கேயே தங்கிவிட் டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
குழந்தை இவனது சாயலைக் கொண்டு பிறந்தது, இவளது
திருக்க வேண்டும்.
இவன்
"தாளமுடியவில்லை.
எதிர்பார்ப்புகளை மோசம் செய் குழந்தை பிறப்பதற்கே காத்திருந்தவன் போல தனது சாயலைக் கொண் டிருந்தும், சிறு சிறு சந்தேகம் இவனை க் குடைய - இவன் மிகுந்த குரோதம் கொண்டு, பெற்றவள் பச்சை உடம்புக்காரி என்று கூடப் பாராமல், அவளை மிகக் கொடூரமான முறையில் உதைத்தான்.
"குழந்தையின் கண் க ள் நகுலேசின்ரை மாதிரியே இருக்கு. இடது உதட்டோரத்தில் இருக் கிற அந்த மச்சம், அது கூட அசலா அவன்ரை மாதி சியே’ என்று கூறி, அவளையும் சூழந் தையையும் விட்டுப் பிரி ந் , காலம் தாழ்த்தி இப்பொழுது வந்திருப்பது?
"மலரைப் பார்க்கவr. 7 இல்லை . மனமே மரத்துப் போய் ஒதுக்கிவிட்ட விஷயங் களைத் தொட்டுக் காட்டி சுகந் தேட வந்திருப்பானே?"
அதை நினைத்ததும் அவளால்
9fl:Luri
வந்தது. அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
* என்ன என்ன . . ஏன் இப்பிடிச் சிரிக்கிறிை?
'இல்லை. மலர் உங்கடை
பெண்ணென்பதை நிச்சயப்படுத் தியாச்சாப்போலை . அதுக்கு உங் களுக்கு ஏழு வருஷம் பிடிச்சி ருக்கு
ஏன் அப்படிச்
"ஏன். சொல்கிறை?"
*அந்தச் சந்தேகம்தானே
நம்மைப் பிரிச்சுவைச்சது. அது கூட ஒரு வகையில நல்லதாப் போச்சு. கனவுகள் கலைய இப் படி ஒரு சந்தர்ப்பம் கிடைப் பது நல்லதுதான்?
8&

"நான் கனவிலை நினைக்காத ஒரு வாழ்வை நீங்கள் கற்பிதம் செய்து, என்னை விட்டுப் பிரிந்த பின்பு, கற்பிதமானதே நிதர்ச னமாகி விடுவது எவ் வள வு துயரம் தருகிற விஷயம்"
"என்ன, துயரமா? நீ நகு லேசுடன் சந்தோஷமா இருக் கேல்லையா?? -
"எதற்குமே ஆணில் சார்ந்
திருக்கும் பெண்ணுக்கு மகிழ்ச்சி, சந்தோஷமென்பதெல்லாம் கை
கூடுமா? உங்களை ப் பிரிந்த பின்பு, எனக்கு வயிறு இருந் ததே, மலர், அந்தப் பிஞ்சு.
துடித்திருக்க என்னுலை பொறுத் திருக்க ஆகுமோ? ச ரி யோ,
தப்போ நீங்கள்தான் என து முதல் காசு மரம் பாதுகாப்பு வாழ்க்கை, கன்னி கழித் த உத்தமர், தெய்வம்"
குரலில் ஏளனம் இழைய அவள் தொடர்ந்தாள்.
*ஏதோ மிடுக்கில், தவருன
புரிதலுடன் சென்றுவிட்ட உங் களை என்னுல் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதோ. . இப்
பொழுது காலம் கடந்து எனக்
குக் கிடைத்திருக்கும இந்த வாத் தி உத்தியோகம், அப் பொழுது இருந்திருந்தாலும் நகுலேசு என்ற பொ ய்  ைம எனது வாழ்வில் குறுக்கிடாமலே இருந்திருக்கும்
'Gurruit Go) LotLIIT? Gigit GOT... l. என்னுலை நம்பமுடியேல்லை"
“எனக்குப் பசித்தது, மல ருக்கும் பசித்தது, இலக்கியம் அது இதெல்லாம் இரண்டாம் பட்சமாகப் போன பொழுது தான். நகுலேஸ் திரும் பவும் எனது வாழ்வில்ை குறுக்கிட்டான். அப்பொழுது அவன் தனியார் கொம்பனி ஒன்றிலை விளம்பரப் பகுதி முகாமையாளராக வேறு இருந்தான், கைநிறையச் சம்ப்
ளம் வாங்கினன், தனித்திருந்த வளுக்கு அவனது துணை வேண் டியிருந்து. ஆரம் பத் தில் பொருளாதார காரணங்கள் தான். வயிறு குளிர்ந்தது. மீண் டும் இலக்கியப் பேச்சு. கலைத் திரைப்படங்கள், மதுரை சோமு வின் கச்சேரி, பலேந்திராவின் நாடகங்கள், டி, வியில் லெஸ்ட் டரின் படங்கள், இந்தச் சுகங் களுக்கொல்லாம் துணை யாய் இருந்தவன். தனது சுகத்தையும் நினைத்து என்னைத் தொட்ட பொழுது வருத்தத்துடன் உங்க ளைத்தான் நினைத்துக் கொண் டேன். அன்று கையையும் காலை யும் ஒரு வித அபிநயத்துடன் ஆட்டிக் கொண்டு, "நண்பன் மனைவியைப் பெண்டாளலாமே என்று குதித்தவர், இ  ைத ப் பார்ப்பதற்கு இல்லையே என்று முதன் மு த லில் அவனுடன் இருந்த போது நினைத் து க் கொண்டேன்?
மிகுந் த சிரத்தையுடன் அவள் சொல்லிவர, அவனே எதுவித சலனமும் அற்றவணுய், உபகதை கேட்கும் தோறன யுடன் இருந்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்னைத் தொட்ட நாளிலை இருந்து நகுலேசுக்குப் புத் தி மாறிப் போச் சு. உங்களைப் போலத்தான் அவனும் தனது மீசை முளைத்த தனத்தை பறை கொட்டத் துவங்கினன். நளினம் நாகரிகம் எல்லாமே முகமூடி தான். திரை கிழிய, அவனது சொரூபம் தெரிந்தது, இந்த வாத்தி உத்தியோகம் "போன வருஷம்தான் எனக்குக் கிடைத் தது. இது கிடைக்கிற வரைக் அவன் ஆண், நான் பெண். அவன் உழைத்துப் போடுறவன். நான் எதிர்பார்த்திருப்பவள். நான் அவன் சொற்படி நடக்க வேண்
es

Page 44
டாமே? எந்த ஆணுக்குமே இந்தப் புத்தியிருக்கிறவரைக்கும் பெண் உருப்படேலுமோ?"
மனதில் கனன்று கொண்டி ருந்த அனைத்தையுமே கொட்டிக் காட்டிவிட்ட திருப்தியுடன், அவள் அவனைப் பார்த்தாள்.
அவனே. அசிரத்தையாக எதிலோ கவனங் கொண்டதான
பாவனையுடன் இவளைக் கேட் L-IT6ir
"Lo6Vf GT skyGet?" "சிளிமாவுக்குப் போயிருக் கிருள்." ヘ
"சினிமாவுக்கோ? குழந்தை யைத் தனியாகவா விட்டனி?"
"அடேயப்பா மகளிலை அக் கறை பரவாயில்லையே?
அவனது மெளனம் இவளைக் காயப்படுக்தி இருக்க வேண்டும். அவள் அமைதியாகச் சொன் ஞள்
"பக்கத்து வீட்டுப் புஸ்பத் தோடை போனவள். இப்ப வந் திடுவாள். அதுசரி, வந்ததுதான் வந்தையள். சாப்பிட்டுவிட்டு அவளையும் பாத்திட்டுப் போக Gribo
அவன் எதிர்பார்க்காத உப Fifi L.
"இந்தாருங்க இந்த "அல்பத் தைப் பாருங்க” என்று தனதுஅவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்
குப் பின்னன - ஓர் ஏழு ஆண்டு கால வாழ்க்கையைச் சொல்லக்
கூடிய "அல்பத்தை" இவன் கையில் தந்து குசினிப்பக்கம் போனள்,
இவனுக்கு முருங்கைக்காய்க்
கறியென்றல் அதிக விருப்ப மென்று நினைத்தாள். அந்த இரவு நேரத்தையே பொருட்
படுத்தாமல் இர ண் டு \ காய்
ஆய்ந்து. நல்ல சொட்டுப்பாலில் கூட்டுக் கறிவைத்தாள். முட்டை அவித்தாள். பால் சொதியும் வைத்துவிட்டு. இவனைக் கூடத் தில் என்ன செய்கிருன் என எட்டிப் பார்த்தாள்.
அவன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். பிரய்ா ண அசதியாக இருக்கலாம் என நினைத்தவள். ' உள்ளே வந்து இடியப்பம் அவித்தாள்கு
இவள் இடியப்பம் அவித்த பொழுது. அம்மா" என்றபடி மலரும் ஓடி வந்தாள்.
"புஸ்பம் அன்ரி எங்கை’ புஸ் பம் கேற்றடியில் நின்றே விடை பெற்றுக் கொண் டாள். இவன் வந்திருப்பதைப் பற்றி ஏ ஞே புஷ்பத்திற்குச் சொல்ல வேண்டுமென்று இவ ளுக்குத் தோன்றவில்லை.
கூடத்துக்குள் காலடி எடுத்து வைத்த மலர். அந்நிய புருஷன் ஒருவன் இருப்பதைக் கண்டுஒரு சமயம் தடுமாறி. தாயாரின் கால்களை ஒடி வந்து அணைத்தபடி நின்ருள். அவளது பார்வை தடுமாறுவதைக் கண்டு இவள்:
"உன்ரை அப்பா' என்ருள். அப்பாவா?" மலரால் அதை
நம்ப முடியவில்லை. அவனது விழிகள் அதைத்தான் உணர்த்
6.
மலரையே வைத்த கண் வாங் கா து வாஞ்சையுடன் பார்த்தபடி இருந்தவன. "சாப் பிடலாமா? என அழைத்தாள்"
4

சாப்பாடு டைனிங் டேபி
லில் ரெடியாக இருந்தது.
அவனுக்குப் பரிமாறியபடியே அவனைப் பார்த்தவளுக்கு ஏனே அப்பொழுது நகுலேசின் நினைவு வந்தது.
"ஒரு அதிதி மாதிரி வந்த இவனுக்கு அன்புடன் சமைத்துப் போட்டாலும். எதிலுமே பட் டுக் கொள்ளாமல் தூர நின்று எப்படி ஒரு அந்நியனுடன் பேசு வது போலப் பேச முடிந்தது. எதற்கெடுத்தாலும் தான்தான் முதன்மையானவன் என்ற முனைப் புடன், இங்கிதமே இல்லாமல் இயங்கியவன். சகலதையுமே இழந்தது போன்று என்ன்ை நாடி வந்திருப்பது.
இந்த நிலையில் தனது மன தில் பட்டதைத் தயக்கமின்றி
பேசிவிட்டதில் அவளுக்கு த் திருப்தியாக இருந்தது.
இவன் நளினமில்லாத,
புடம் போடாத ஒரு பிறவியாக இருந்த பொழுதிலும், இவளைப் பவ்வியமாக ஏதோ ஒருவகை T 69 தீவிரத்தன்மையுடன் அ ன் பு பாராட்டியவன். அது அவளுக்கு நன்ருகவே தெரியும். நகுலேஸ் இதற் கெல் லா ம் முரனக ஒரு திட்டத்துடன் இவளை ஆக்கிரமித்ததுப். இவள் பால் ஒருவகை அசூசை கொண் டதும் ஒரு அறிவு சார்ந்த துணை வியாகக் கொள்வது போலப் பாவனை பண்ணிக் மிக வும் பகைமை பாராட்டி இவளிடம் நடந்து கொண்ட தெல்லாம் இவளது நினைவுக்கு வர தனது கோப்பையில் இருந் தனித உண்பதற்கே மனமொப் பாதவளாய் இவனையே பெரிதும் உபசரித்தாள்
கொண்டு.
சாப்பிட்ட பின். இவனுக்கு வெற்றிலை தந்தாள். அவளும் வெற்றிலை போட்டுக் கொண் டாள்,
"உங்களுக்கு அவசரமில்லை என்ருல் இன்று தங்கி நாளை போகலாம். இந்த இருட்டில
வேண்டாம்" என்று கூறியவள்.
இவனுக்கு முன் அறையில் படுப் பதற்கு சகல வசதிகளும் செய்து தந்தபின் - மலரையும் அழைத் துக் கொண்டு தனது அறைக் குப் போனள்.
தனிமையில் விடப்பட்ட இவன், அவள் இன்று எப்படி யும் தன்னிடம் வருவாள் என்ற எதிர்பார்ப்புகளுடன் காத்திருந் தான்.
இவனை மட்டுமல்ல. நகுலே சையும் ஏன் எந்த ஒரு ஆணி னது தொடர்புகளையுமே அவள் வேண்டாமென வெறுத்து ஒதுக்கி விட்டதை இவன் அறிந்திருக்க நியாயமில்லைத்தான் O
இலக்கியத்தை நேசிக்கும் நண் பர்கள் unit prrr வது உங்களுக்கு இரு க் கின்றர் 56Tr? அவர்க ளது முகவரியை எம்க்குத் தந்து தவுங்கள. நாம மாதிரிக்கு அவர் களுக்கு மல்லி கை ஓர் இதழை அனுப்பி வைத துத் தொடர்பு கொள்ள விரும் புகின்ருேம்.
ஒருவர் எத்தனை முகவரிகளை யும் அனுப்பலாம்.
- ஆசிரியர்
ᏰᏰ

Page 45
பீடி உலகில் தலைசிறந்து
V விளங்கும் புகழ் பரப்பிக் கொண்டிருப்பது
S31Vn Mr. Arr ArrSKYNr. AvrArS8
Muravan Mua Mr Mua Mun Murs
பீடிகளையே உபயோகியுங்கள்
ஆர். வி. ஜி. நிர்வாகம் 275, பீச் ருேட், யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 22130 தந்தி: ஆர்.வி. ஜி.

1951ம் ஆண்டுமுதல் ஒலி பரப்புத் துறையிலே ஈடுபாடு கொண்டு, 1958 ல் முழுநேர ஒலிபரப்பாளராகப் பதவியேற்று அன்று முதல் இந்தக் கலையி லேயே "ஊறிப்போன அனுபவ ஸ்தர்" என்று பலராலும் பாராட் டப்பட்டு, பெயர் மங்கிவிடும் முன்னரே, ஓய்வு பெற்று ஒதுங் கியிருந்த போதுதான் ஏதோ ஆறுமாத காலத்திற்கு (அது பின்னர் எட்டு மாத காலமாக நீடித்து) உங்களது சேவை தற் காலிகமாகத் தேவைப்படுகிறது என்று பி. பி. சியிலிருந்து அந்த அழைப்பு வந்தது. ஏற்கனவே இரண்டு தடவைகள் லண்டன் சென்றிருந்த போது பி. பி. சி. நிகழ்ச்சிகளிற் பெரிதும் பங்கு பற்றியிருந்ததால், இது என்ன பிரமாதம், ஜமாய்த்துவிடலாம் என்ற ஒரு தலைக்கிறுக்கும் இல் லாமலில்லை. தற்காலிச ஒப்பந்
தத்தை ஏற்று லண்டன் போய்ச்
சேர்ந்து, பி. பி. சி. நிலையத் திற்கு - புஷ்ஹவுஸ்க்கு- சென்ற முதல் நாளே, நாம் வாழ்க்கை முழுவதும் பெற்ற அந்த அனு பவம் ஒரு கடுகளவுதான் என் பது புலனுயிற்று. எமது அனுப வமெல்லாம் கட்டெறும்பாகத் தான் தோன்றும். -நம் நாட்டு ஒலிபரப்பாளர்களைச் சிறுமைப்
ாடுத்துவதாக எவரும் தப்புக்
கணக்குப் போட்டு விட க் கூடாது - அதுவல்ல விஷயம்
8.
பி, பி. சி. யில்
சில மாதங்கள்
வி. சுந்தரலிங்கம்
ஒலிபரப்புக் கலைக்குத் தேவை யான எத்தனை எத்தனையோ துணைச் சாதனங்களும், உபகர ணங்களும், வசதிகளும் அங்கு உண்டு. அவற்றைத் தக்கபடி பயன்படுத்தப் பழகுவதே ஒரு பெரும் சோதனை, சாதனை. "வல்லவனுக்குப் புல்லும் ஆயு தம்’ என்பது உண்மைதான். இங்கு குறிப்பிடப்பட்ட வசதி கள் - எதுவுமில்லாமலே அபிவி ருத்தியடையும் நாடுகளிலுள்ள ஒலிபரப்பாளர்கள் எத்தனையைச் சாதித்து விடுகிருர்கள். அது பெருமைக்குரியதுதான். ஆனல் ஒரு தனி மனிதனின் ஆற்றலை விட ஒரு நிலையத்தின், ஒரு தாபனத்தின் அமைப்பு, ஒழுங்கு ஆகியவை மேலோங்கி நிற்ப தாற்ருன் கூட்டுமொத்தமாக அந்த நிலையத்தின் பெருமை கொடிகட்டிப் பறக்கிறது.
தனித்தனியாகப் பார்க்கு மிடத்து, பகீரதப் பிரயத்தனங்
களையே சாதித்துவிடும் நம்மவர்
களுக்கு பி. பி. சியிலுள்ளது போன்று வசதிகளும் நவீன உப கரணங்களும் கிடைக்குமானல். என்று அங்கலாய்த்தேன். என்ன இருந்தாலும் ஒலிபரப்புத் துறை யின் அன்னையின் உறைவிடமல் லவா? ஒவ்வொரு ஒலிபரப்பாள ரும் ஒரு தடவையாவது அங்கு

Page 46
சென்று பயிற்சி பெற்று வந் தாலே அவர்களின் ஆற்றலும், திறனும் உயரும் என்பதில் ஐய மில்லை. ஆனல் அதற்கு மேலாக அங்குள்ள சில வசதிகளை, நமது நிலையங்களும் * விரலுக்கேற்ற வீக்கம்" என்ற நிலையிலாவது செய்து கொண்டால் எமது ஒலி பரப்பாளர்களின் முழுத் திறனை யும் நமது நேயர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏதோ பயிற்சி எ ன் று சொல்லிக் கொண்டு வெளிநாட்டுப் L? J" u nr 600 h செய்துவிட்டு, நமது நாட்டில் கிடைக்காத சில பொருள்களை யும், ஒரு காரையும் வாங்கி வந்துவிட்டு, இங்குள்ளவர்களை விடத் தாம் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில் திரிபவர்களால் ஒலிபரப்புக் கலை வளர்ந்துவிட இடமில்லை. வெளிநாட்டு jడి யங்கள் பலவற்றைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இவை எல்லாவற் றையும் விட பி. பி. சி தனித் தன்மையுடையது. சந்தேகமே இல்லை.
அங்கு வேலை க் கென்று சேர்ந்தவுடன் - என்னைப் போல மிகக் குறுகிய காலத்திற்கென்று மட்டும் போனலுங்கூட - முத லில் நியூ கொமர்ஸ் கோர்ஸ் இரண்டு வார காலத்திற்கு ஒரு பயிற்சியளிப்பார்கள். கொம்பி யூற்றர் வழியாகச் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள் ளுதல் முதல், நவீன ஒலிப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறை வரையான தொழில் நுட் பப் பயிற்சியும் செவ்வி காண்ப தெப்படி, நேர்முக வர்ணனைகள் செய்வதெப்படி, செய்தி படிப்ப தெப்படி, மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பன போன்ற பலவித நுட்பங்களையும் கற்றுக் கொடுக்கிழுர்கள். இவையெல்
88
லாம் ஆண்டாண்டு கால ம் நாமறிந்ததுதானே என்று பலர் சொல்லலாம். அதுதான் தவறு. அங்கு எல்லாத் துறையிலும் ஆராய்ச்சிகள் செய்து கொண் டேயிருக்கிறர்கள். இந்த ஆராய்ச் சியின் பயனக பலவித முன் னேற்றங்களைச் செய்து கொண் டேயிருக்கிருர்கள். இத்துறை. யில் நாம் சிகரத்தையடைந்து விட்டோம், இனி அறிய, படிக்க எதுவுமேயில்லை எ ன் ப த ந் கு மாருக எல்லையில்லாத ஆராய்ச்சி போதனை. "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற ஈ டு பா டு, "கற்றது கைம்மண்ணளவு கல் லாதது உலகளவு" என்ற அறிவு வேட்கை இவைதான் அங்கு பிரதானமாக உள்ள சிறப்புக் கள். இதனுற்ருன் ஆங்கிலம் உள்ளிட்ட 37 மொழிகளில் 24 மணிநேரமுமே ஒலிபரப்புத் திறம் பட நடக்கிறது.
உ ல க மே விழித்திருந்து கேட்கிறது, பயனடைகின்றது,
பதவி பெற்று நெடுங்காலம் கடமைபுரிகிறவர்களுக்கும் அவ் வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உயர் பத விகளிலுள்ள அதிகாரிகளுக்குக் கூட இதற்கு விதிவிலக்களிக்கப் படுவதுமில்லை. அவர்களும் இது இனி நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்குவதுமில்லை. இந்த அடிப்படைப் பண்பிலேதான் பி. பி. சி. யின் பெருமை வளரு கிறது. இந்தப் பெருமையிலே ஒரு சிறு துளியைத்தன்னும் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததே என்று எண்ணி எண்ணி மகிழ்ச்சியும், பெருமை யும் கொள்வதில் தவறில்லையே.
இது ஒரு கொம்பியூற்றர்
யுகம். பி. பி. சி, உலகச் செய்தி
களுக்கும் செய்தி விமர்சனங்க

ளுக்கும் பிரசித்தி பெற்ற நிலை யம். நடுநிலைமையான, உண் மையான செய்திகளை உடனுக் குடன் த ரு வ து இதற்கு கோடானு கோடா
பெளண்ட் பணம் செலவாகின் றது. உலகளாவிய நிருபர்கள் உலகின் மூலை முடுக்குகளிலிருந் தும் உடனுக்குடன் செய்தியை நிலையத்திற்குக் கி  ைட க் க ச செய்து அதனை உடனேயே உலக மெங்கும் பரவச் செய்வதற்கு எத்தகைய ஏற்பாடுகளைச் செய் திருக்கிருர்கள் (ஃபோக்லண்ட்ஸ் யுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பம் வேருக இருந்த போதிலும் உண்மையை உள்ளபடி சொல்லி அந்த அர சாங்கத்தின் விசனத்தையும் உலக மக் களின் பாராட்டையும் பெற்ற ஸ்தாபனம் பி. பி. சி. என்பது யாவருமறிந்தது) இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் விப ரித்தல் இலகுவானதல்ல. ஆனல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் சற்றுப் பார்க் கலTம்.
செய்திகள் தலைமையகத்தில் 24 மணிநேரமும் வந்து கொண் டேயிருக்கும். தந்திகள், பதிவுகள், தொலை பே சித் தொடர்புகள் என்று பல விதத் தாலும் இவை வருகின்றன. இவற்றைப் பார்த்து வழிப்ப டுத்தி. உடனு க்கு டனேயே செய்தி நுட்பமாக்கிகொம்பியூற்ற ரிலே போட்டு விடுவார்கள். இதே போல ஒவ்வொரு செய்தி பற்றி யும் விமர்சனங்களைப் பெற்று அவற்றையும் செய்தித் தாள்களிலே வரும் கருத்துக்களை யும் வெளிநாட்டு நிருபர்கள் விடுக் கும் கண்ணுேட்டங்கள் வெவ்வேறு நாட்டுத் தலைவர்கள் முதலானுேர் விடுக்கும் கருத்துக்
ஒலிப்
* களுக்கும்,
கள் ஆகியவற்றையும் இப்படியே கொம்பியூற்றரில் போட்டுவிடு வார்கள். தத்தமது தேவைக் கேற்ப ஒவ்வொரு மொழியிலும் ஒலிபரப்புபவர்கள் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்திக் கொன் ளலாம். இதற்கு வசதியாக ஒவ் வொரு அறையிலும் ஒரு கொம் பியூற்றர் இருக்கிறது. அதிலே தட்டெழுத்துக் கருவியிலே தட் டுவது போல தட்டி ஒரு பொத் தானை அழுத்தினுல் அங்கே திரையிலே நாம் குறிப்பிடுகின்ற நேரத்தின் பின்னர் கிடைத்த செய்திகளின் தலைப்புகள் வரும். இந்தப் பட்டியலில் இருந்து எந் தெந்தச் செய்திகள் வேண்டுமோ அதனைத் தெரிவு செய்து டெலி பிரிண்டரில் வரச் செய்யலாம். இப்படியாகச் செய்திகளைப் பெற் றுக் கொள்வதற்கு மொத்தம் 60 விநாடி முதல் 90 விநாடி தான் பிடிக்கும். அத்தனை கன வேகத்தில் யாவும் இயங்குகின் றன. செய்தி மட்டுமல்ல, விமர் சனங்கள் கண்ணுேட்டங்கள் மட்டுமல்ல, கட்டுரைகள், சித் திரங்கள், சிறுகதைகன் முத லான சகல அம்சங்களும் கொம் பியூற்றர் மூலம் எல்லாப் பிரிவு களுக்கும் கிடைக்கின்றன. ஒவ் வொரு மொழி ஒலிபரப்பிலும் அந்தந்தப் பிராந்தியங்களுக்கேற் றபடியான செய்திகளைச் சேர்த் துக் கொள்கிறர்கள். முதலிலே கூறப்பட்ட நல்ல உபகரணங் வசதிகளுக்கும் ஒரு உதாரணமாக இந்தக் கொம்பி யூற்றர் விடயத்தைக் கூறினேன்.
அந்தந்த மொழிக் குப் பொறுப்பாக உள்ளவர்களிடம் முழுப் பொறுப்பையும்கொடுத்து
89

Page 47
அவர்களிலே முழு நம்பிக்தை
வைத்து ஒலிபரப்பைச் செய்ய வைக்கிருர்கள். இதுவும் பி. பி. சி. யின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். கண்டதற்கொல்லாம் கண்காணிப்பு வைத்துக் கேள்வி கள் கேட்டுக் கொண்டிருக்காமல் பரந்த ஒரு அடிப்படைக் கோட் பாட்டை வகுத்துக் கொடுத்து, இந் த க் கட்டுக் கோப்புக்குள் ஒலிபரப்பை நடத்துங்கள் என்று விட்டுவிட்டால் பொறுப்புள்ள வர்கள் பொறுப்பாகவே நடந்து கொள்வார்கள். அதனை எக்கார ணம் கொண்டும் துர்ப்பிரயோ கம் செய்யமாட்டார்கள். சந்தே கமேற்பட்டால் முன்கூட்டியே அதனைத் தெளிவு படுத் தி க் கொள்வார்கள். விசுவாசமாகக் கடமை புரிவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இது என்றும் வீண்போனதகக வர லாறு இல்லை.
பி. பி. சி. தமிழோசையிலே நான் கடமை புரிந்த சிறிது கா லத் தி ல் ஒஹோ என்று சொல்லக் கூடியதாக எதையும் சா தி த்தே ன் என்று நான் சொல்ல முடியாது. நேயர்கள் தான் அதற்குத் தீர்ப்புக் கூற வேண்டும். ஆணுல் குறிப்பிடத் தக்கதாக ஒரிரு நிகழ்ச்சிகளை இங்கு சொல்லலாம். பேராசிரி யர் ஜோன்மார் லண்டன் சர்வ கலாசாலையிலே கீழை த் தே ச மொழிப்பிரிவுக்குத் தலைவராக இரு க் கி ரு ர். இந்தியாவிலே அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தி லும், மதுரையிலும் தமிழ் மொழியை ந ன் கு கற்றவர். குரு சிஷ்ய பரம்பரையிலிருந்து கர்ணுட சங்கீதம் பயின்றவர். லண்டனிலே இந்திய சாஸ்திரிய சங்கீத ம் சம்பந்தமானதொரு கருத்தரங்கு நடைபெற்றது.
90
லண்டனிலும்
இதனை இங்கிலாந்து சர்வகலா சாலையின் சங்கீதப் பிரிவினர் ஏ ற் பா டு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சில பகுதி களை ஒலிப்பதிவு செய்து, ஒரு 10 நிமிட நிகழ்ச்சியாகத் திரட்டி வழங்கலாமென்று அங்கு சென்ற போது பேராசிரியர் ஜோன்மார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதே வேளையில் புதியதொரு எண்ணமும் உதித் திதி V
அவரைக் கொண்டே இந்த நிகழ்ச்சியை அளிக்கலாம் என்று நினைத்து அவரைக் கேட்டேன். அவரும் இணங்கினுர், நிகழ்ச் சியோ மிகப் பிரமாதம் என்று நேயர்களின் பாராட்டைப் பெற் றது. ஆம், வெள்ளையர் ஒருவர் அத்தனை அழகாகத் தமிழ் பேசு கிருர். சங்கீதம் சம்பந்தமான நுட் பங்களை ஆளுயசமாகச் சொல்லுகிருர், சாஸ்திரீய சங் கீத நுணுக்கங்களை லாவகமாக அளிக்கிறர் என்ருல் அதற்கு ஒரு
தனி மதிப்புத்தான்.
லண்டன் மாநகரத்திற்கு வருகின்ற தமிழ் பேசுகின்ற கல்விமான்கள், கவிஞர்கள், அரசியற் தலைவர்கள் முதலிய வர்களை செவ்வி காண்பது தமி ழோசையின் வழக்கம், இந்த வரிசையிலே பலரைச் சந்தித்து உர்ையாடி தமிழோசை நேயர் களுக்கு அறிமுகஞ் செய்து வைத் தேன், பாரதி நூற்ருண்டு விழா கொண்டாடப் பட்டது. அங்கேயுள்ள இந்தியத் தூதரகம் இதனை நல்ல முறை யில் ஏற்பாடு செய்திருந்தது. தூதரகத்தில் கடமையாற்றும் திரு. வரதராஜன் இதற்கு ப் பொறுப்பாக இருந்து நடத்தி வைத்தார். போலந்திலே சர்வ

கலாசாலையிலே பணிபுரியும் பிர பல எழுத்தாளர் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி, "தாய்" பத்திரிகை ஆசிர்யர் வலம்புரி ஜான் முதலானேரும் இங்கிலாந் திலே உள்ள பல கல்விமான்
களும் விழா சம்பந்தமாக ஏற்
பாடு செய்யப்பட்ட கருத்தரங் கில் கலந்து கொண்டார்கள். இலங்கையைச் சேர்ந்த பிரபல ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து, பாரதியாரின் படைப்புக்கள் சில வற்றை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து வழங்கினர். இது சம்பந்தம்ாகவும் நல்லதொரு தொகுப்பு நிகழ்ச்சியைத் தமி ழோசை வழங்கியது. பாரதி விழா சம்பந்தமாக லண்டனுக்கு அழைக்கப்பட்ட இசைக் கலைஞர் கே. ஜே. ஜேசுதாஸ், நாட்டியக் கலை ஞர் டாக்டர், பத் மா சுப்பிரமணியம் ஆகியோரையும் தமிழோசை நேயர்களுக்கு அறி முகஞ் செய்தோம்.
இந்தியக் கலை கலாசாரத்தை மே ற் கு நாட்டவர்களுக்கும், மேற்கு நாடுகளில் வதி யும் கீழை த் தேசத்தவர்களுக்கும் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் லண்டனில் இயங்குவது "பாரதிய வித்ய பவன் அங்கு தியாக ராஜ உற்சவத்துடன், மும்மூர்த் திகளுக்கும் விழா எடுத்தார்கள்.
தேம்ஸ் நதிதீரம் காவேரி நதி யாக, திருவையாருக மாறிய இந்த நல்ல நிகழ்ச்சியையும்
வழங்கி அங்கு பொறுப்பதிகாரி யாக வுள் ள திரு. மாதுரர் கிருஷ்ணமூர்த்தியை செ வ் வி. மூலம் அறிமுகஞ் செய்த து தமிழோசை.
எமது நிகழ்ச்சிகளை லண்ட னிலே வசிப்பவர்கள் கேட்க முடியாது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா பர்மா,
மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய வற்றி ல் வசிப்பவர்கள்தான் எமது நிகழ்ச்சிகளைக் கேட்கிருர் கள். ஆகவே இவர்களுக்கு நமது நாடுகளிலுள்ள பாரம்பரியம்" வாழ்க்கை ஆகியவற்  ைற ச் சொல்லுவதைவிட ஐரோப்பா விலே பிரதானமாக லண்டனி லேயுள்ள வாழ்க்கை முறைகளைப் பற்றியும், லண்டனைப்பற்றியும் சொன்னல் அவர்களுக்கு விருப் பமாயிருக்கும் என்று நினைத்து * லண்டன் நகர்வலம்” என்ற ஒரு தொடர் நிகழ்ச்சியை அளித் தேன். அங்குள்ள நாடக மேடை கள், பாதாள ஜெயில், நம்ம வர் அங்கு நடத்தும் வாழ்க்கை முறை போன்று பல கோணங் களில் லண்டனைப் பார்த் து இந்தத் தொடரில் வழங்கியம்ை எதிர் பாராத அளவு எமது நேயர்களின் அபிமானத்தைப் பெற்றதில் பெருமை கொள்ள லாம்.
ஆயிரக்கணக்கிலே வார வாரம் வரும் நேயர்களின் கடி தங்கள்தான் எம்க்கெல்லாம் முதுகைத் தட்டி உற்சாகமளிப் பவை. சில கண்டனங்களும் கிடைப்பதுண்டு. கண்டனத் திற்கு மூலகாரணம் என்ன என் பதை ஆராய்ந்து அறிந்து அதற் குப் பதிலுங் கொடுத்து முடிந்த வரை பரிகாரமும் செய்து கொள்ளுதலே பெருமைக்குரி யது. பிழையைப் பிழையென்று ஏற்றுக் கொள்ளவும், அதே வேளையில் சரியானதையே செய் தோம் என்று சொல்லிக் கொள், ளவும் சுதந்திரம் உள்ள ஒரு நிலையமாதலால் பி. பி. சி. யின் போக்கே தனியானது. அங்கு கடமையாற்றுவதே ஒரு தனி அனுபவந்தான்,
()
ፅ፳

Page 48
ஜன்னல் தேவதைகள் இவர்கள் தண்ணீரில் மூழ்கி தவமிருக்கும் தாமரைகள்,
ஆயிரம் கனவுகளை கண்களில் பூட்டிவைத்தவர்கள் கனக்கும் நினைவேடுகளில் கையெழுத்துப் போட்டவர்கள்
சோக நாடகத்தின் கதாநாயகிகள் வசதியுடன் இசையாததால் புரியாத மொழிகள்
O இங்கு சில தேவதைகள் அழுதுபார்க்கின்றன- சில தேவதைகள்
தொழுது சாய்கின்றன,
ஜன்னலே இவர்களின் வாசம்-அதன் கம்பிகளோடு கரைவதே இவர்களின் நேசம்.
ஒாலைமுதல் மாலைவரை கண்களும் வலிக்கும்- என்ருலும் நேரம் கூடிவராததால் இல்லை அதில் உறக்கம்.
பார்வையைத் தூதுவிடும் ஆடவர். தினம்தினம்- நெருங்கி நின்ருலோ அவர்களின்
நெஞ்சமெல்லாம் பணம்பணம்.
ஜன்னல் தேவதைகள்
-மேத்தாதாசன்
பள்ளிகளில் எல்லாம் முதல்வகுப்பிலேயே முன்வந்தவர்கள்- திருமணப் பள்ளியறைக்குள் மட்டும் பாடம் படிக்க மறுதலிக்கப்படுகின்றனர்.
சப்த ஸ்வரங்களில் சங்கமமாகி இருந்தவர்கள்
மெளன ராகங்களுக்குள்
மூச்சடைத்துப் போயினர்
O
எந்த வரன் வருகின்றதோ இல்லையோ
வயதுமட்டும்
வருடந்தவருமல் வந்துகொண்டே இருக்கிறது.
அதுவும்கூடதேகத்தில் துளிர்விடும் இளமைகளை எடுத்துப் போவதற்கே...
தோழிகளின் வீடுகளில் தாளி தொங்கும்போது இவர்களின்
வாசலில் வாழைமரம்கூட வராது வெறிச்சோடி இருக்கிறது.
புதிதுபுதிதாக பத்திரிகைகள்
பிறக்கும்போது- இவர்களின்
 

திருமணப்பத்திரிகை மட்டும் அச்சிடாமலேயே கிடக்கிறது.
பக்கத்து வீட்டு பருவ ஐஊர்வலங்கள் இரவுகளில் கிசுகிசுப்புகளாக கிளம்பும்போது
இவரிகளின் தேகமெங்கும் அனல் வியாபிக்கிறது.
தங்களுக்கும்
அதுபோன்ற ஆண்துணை இல்லையா என்ற எண்ணம் எழும்போது கண்ணிரும் ஆவியாகிறது.
பெற்றேர்க்கு இமையாகயிருந்த காலங்கள் கழிந்துபோய் சுமையான நேரம்வந்தது
சிறகுகள் இருந்தும் அவர்கிளால் வானில் பறப்பதற்குரிய வாய்ப்பு வரவில்லை.
வசந்த ஞாபகங்களும் தேய்ந்துபோய் இலையுதிர் கனவுகளே நிலைத்து நின்றன.
O இந்த நெருப்புக்கவிதைகள் என்று அச்சேறப்போவ்து? V
ஜன்னலைவிட்டு இவர்களை விசாலமான் வீதிக்குள் கைகளைப் பிடித்து அழைத்து வரப்போவது யார்?
வரதட்சணை வில்லை ஒடித்து
岛 சீதைகளோடு சேரப்போகின்ற ராமர்கள் எங்கிருக்கின்றனர்?
மேடைக்ளில் பிரயோகிக்கப்படும் பிரசங்கத்தை முதலில் நிறுத்துங்கள்.
கவிதைகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதைவிட
இந்த 姆 நிஜக்கிவிதைகளுக்கு நிழலாய் மாறுவதுமேல்
தயவுசெய்துஇந்த
ஜீவக்குரலைத் தள்ளிவைத்துவிடாதீர்கள். ம்ெய்யை மையாக்கும் பேணுவின் புலம்பலைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஏனெனில்
இந்த கண்ணீர்த் தேவதைகளில் உங்களின் சகோதரிகளும் , சங்கமித்திருக்கலாம். O
துயருறுகின்றேம்.
எம்மோடு இணைந்து செய லாற்றிய சக இலக்கிய நண்பன் கலா பரமேஸ்வரன் அவர்களின் இழப்பின் துயரத்தை எல்லோ ருடனும் சேர்ந்து மல்லிகையும் பங்குகொண்டு துயருறுகின்றது.
-ஆசிரியர்
98

Page 49
வைகறைப் பொழுதும் வைரவர் கோவில் முடக்கும்
- புதுவை இரத்தினதுரை
இன்றும். ஒரு காலை எழுந்து வருவதற்காய் சென்ற இரவின் திரையைக் கிழிக்கின்ற வேலை நடக்கிறது. விடிபொழுது என்றழைக்கும் வேளைக்கு வரவேற்பு விருந்து கிடைக்கிறது. மண்ணின் முகம் தெளிவாய் மலராத பொழுது.
GuoGav.
விண்ணின் கிழக்கே
விடிகின்ற அறிகுறிகள். "நவீன சந்தை நரசிங்க வைரவர்'க்குப் பூசை நடக்கிறது.
புதிய எழிலோடு தூரப் பயணங்கள் தொடங்கும் மினி பஸ்கள் வீரத் திமிரோடு வெளிக்கிட்டு நிற்கின்றன. கோப்பிக் கடையான "றிக்கோ'வுக்குள் சீர்காழியின்
குரலெழுந்து வருகிறது. O தேயிலைக்கு ரத்தத்தைத் தெளித்து விட்டு அயலைத் துறந்து வந்து அலைக்கழியும் மலே நாட்டுப் பத்துக் குடும்பங்கள் படுக்கும்நடைபாதை . . துயிலைத் துறக்காது சுருண்டு கிடக்கிறது. சாரத்தால் போர்த்தபடி சரியான கிழடொன்று குந்தியிருந்த வண்ணம் கொட்டாவி விடுகின்றது: இரவெல்லாம்
இளமையெனும் இலையான்கள் ம்ொய்த்திருக்க
பரபரப்பாய்
94
 
 

சந்தைப்படிகளிலே.
சதை விற்ற
இரவுக் குருவிகளும் எழுந்து திசைக்கொன்ருய் விரைந்து பறக்கிறது.
வீரகேசரி மூலைக் கடையில் மும்மரமாய் விற்கிறது. காலைக்கு
என்றும் கட்டியங்கள் கூறுகின்ற முனியப்பர் கோவில் மணியோசை கேட்கிறது.
பளைக்கப்பால். . . தினமும் பஸ்சினிலே போய்வந்து களைப்பால்... அரசாங்கக்
கந்தோரில் தூங்குகின்ற
அரச ஊழியர்கள்
அரையுறக்கக் கண்ணுேடு விரைந்து வருகின்ற வேடிக்கை தொடங்குகிறது. கொழும்பு பஸ்களையே குறிவைத்துக் காத்திருக்கும் ஏற்றி இறக்கும் எடுபிடிகள் ராக்சி ட்ரைவர்கள் எல்லோரும் சேர்ந்து ஏதோ கதைத்தபடி பீடி அடித்து
ப்ெரிதாய் சிரிக்கின்ருர்,
மெல்லப் பொழுது
வெளிறி
காலையெனச் சொல்லும் படியாகச் சூடேறத் தொடங்கிறது. என்ன அழகான இளம் காலை தெருக்களிலே . . .
பென்னம் பெரிதான பெருஞ்சுமைகள் ஏதும்ற்ற
வேளை
இனும் கொஞ்சம்
விடிந்து விட்டால் ஆளை இடிக்கும் அவசரங்கள்
ஓவென்று
ஒலமிடுகின்ற இரைச்சல்கள்
பட்டணத்தைத்
தின்னத் தொடங்கும்;
செல்வோம் .
வசதியெனில் இந்நேரம். நாளைக்கும் எழுந்து வருவோம்.
95

Page 50
19 வது ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நியூ லங்கா
e O O அலுமினியம் இண்டஸ்றீஸ் அலுமினியப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள்
தலைமை அலுவலகம்:
50, வைமன் றேட், யாழ்ப்பாணம்
தொழிலகம்:
20, அராலி றேட், யாழ்ப்பாணம்.
8200
 
 

கைலாசபதியின்
மாணவனும் நான்காண்டுகளும்
(Luprm 6flusf காலமாகிய சில நாட்களின் பின்னர் தின ச ரி ப் பத்திரிகையொன்றிலே அவர் பற்றி வெளிவந்த கட்டு ரையொன்றில், ஏனைய பல்கலைக் கழக விரிவுரையாளருக்கில்லாத சிறப்பொன்று கைலாசபதி அவர் களுக்குண்டு; எப்போதும் மாண வர் குழாமொன்று அவர் பின் ஞ்றல் காணப்படும் என்ற குறிப் பொன்று காணப்பட்டது. இது புகழ்ச்சியுரையல்ல என் ப ைத அவரிடம் நான் கா ண் டு க ள் (1968ー 1972) தொடர்ந்து படித்த நாம் மட்டுமன்றி, பல்க லைக் கழகத்திலே மாணவராயி ருந்த அனைவருமே அறிவர்.
ஆயினும் இங்கு அழுத்திக் கூற வி ைழ வ து தனித்துவமுடைய மா ன வ ர் பரம்பரையொன்று அவரால் உரு வாக்கப்பட்டது என்பதை மட் டுமன்று. பேராசிரியர் பற்றிய பன்முகப்பட்ட ஆய்வு களை இனங்காண்டது அவசியமென்ப தும், அவ்வாறு இனங்காணப் படும்போதுதான் பேராசிரியர் பற்றிய ஆய்வு முழுமையடையு மென்பதுமாகும். எனவே, அவ ரது மாணவனுயிருந்த நான் காண்டுகளில் (என்ணுேடு தமி ழைச் சிறப்புப் பாடமாகக் கற்ற சக நண்பர் எண்ம்ரோடு) குறிப் பாக நான், பேராசிரியரிடமி ருந்து பெற்றுக் கொண்ட அணு பவங்களினதும், அறிவினதும்
நான்
- செ. யோகராசா
சில ப யன் பாடுகளை யாவது நினைவு கூர்ந்து பார்ப்பது இவ்
விதத்தில் பொருத்தமானதாகப்
படுகிறது. இது என் கருத்துக் கள் மட்டுமன்றி, முன்னரும் பின்னரும் அவரிடம் படித்த பல மாணவர்களினது எண்ணங் களினதும் வளர்ச்சியினதும் ஓர்
எடுத்துக்காட்டாக அமைவதும்
சாத்தியமே.
தொடர்ந்து செல்வதற்கு
முன், அ வ சி யங் கருதி இன்
னென்று கூறவேண்டும். அறு பத்தெட்டுகளுக்கு மு ற் 11 ட் ட பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்குமிடையே வித் தி யா ச மொன்றிருந்தது. முதலாண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பயின்று, இரண்டாவதாண்டு தொடக்கம் பேராதனைப் பல்க லைக்கழகம் சென்று படிப்பது முற்பட்ட நிலையாகும். ஆனல், எமது காலந்தொடக்கம் இந் நிலை மாறியது. தொடர்ந்தும் கொழும்புப் பல்கலைக்கழகத்தி லேயே முழுமை ஆண்டுகளும் கல்விபயிலும் வாய்ப்பு ஏற்பட் டது. இதனல் அசெளகரிய்ங்கள் சிற்சில ஏற்பட்டது உண்மையே. ஆயினும், எம்து பாடநெறி யைப் பொறுத்தவரையில் நிலை அவ்வாறன்று, தமிழ்ப் பாடத் திட்டம் வேறுபட்ட நோக்கில் தனித்துவமுடையதாக அமைந் திருந்தது. இதனுல் விரிவுரை யாளரும் தத்தம் திறமைகளை
97.

Page 51
விசேட
வெளிப்படுத்துவதில்
இதனை
அக்கறை செலுத்தினர். இங்கு குறிப்பிடக் காரணம், வித் தி யாச மா ன சூழலில் Garr Lidru III si நான்காண்டு கள் பேராசிரியரிடம் ப யிலும் பேறு ஏற்பட்டது என்பதையும், முதன் முதலாக இப்பேற்றுக்குரி யவராக அமைந்தவர் நாமே என்பதையும் சுட்டிக் காட்டுவ தற்கேயாம். ஏனெனில், முற் பட்ட மாணவர் குழாத்தைவிடப் பேராசிரியருடன் நாம் நெருங் கிப் பழகுவதற்கு இத்தகைய நிலையே வழிசமைத்தது.
தவிர, கருத்தரங்குகளும், புத்தக வெளியீட்டு விழாக்களும் மலிந்த அன்றைய கொழும்புச் சூழலில் பேராசிரியரின் சொற் பொழிவுகளை பல்கலைக் கழகத் திற்கு வெளியேயும் அடிக்கடி கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. என்னைப் பொறுத்தவரையில் தங்குமிடம் அண்மையிலிருந்த மையால் பேராசிரியரின் இல்லத் திற்கு அவ்வப்போது சென்று இலக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவும், சகஜமாகப்
பழகவுமான மேலதிக வாவ்ப்பும்
எனக்குக் கிடைத்தது. சுருங்கக் கூறின்" "நவக்கிரகங்களாகிய எமக்கு, எங்களது சொந்த அனு பவத்தில், அறிவு நிலை சுளுக் கேற்ப, பேராசிரியரின் ஆழ்ந்த பரந்த அறிவு த் திறனையும், தனித்துவமான, பன்முகப்பட்ட ஆளுமையையும், பல்வேறு திற மைகளையும், குணவியல்புகளையும் "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து" உயர்வுறும் நற்பேறு, இத் த கைய பின்னணியில், பரந்தள விலே கைகூடிற்றெனலாம்.
போரசிரியரது ஆ ழ் ந் த பரந்த அறிவுக்கும் ஆளுமைக் கும் அடிப்படையாக அமைந்தது இடையருது பல்வேறு நூல்களை
யும் வாசிக்கும் அவரது இயல்
98
ւյւն முக்கியமானதாகும். அவ ரது வாசிக்குமியல்பு அசுரத்தன மானது; பரந்துபட்டது; கூர்ம்ை கொண்டது. நிதானம் மிக்கது:
ஒப்பிடடுப் பார்ப்பது; தேக்கி
வைப்பது; தேவைப்படும்போது
எடுத்தாளப்படுவது மே லும் சிந்திக்கச் செய்வது; விரிந்து செல்வது. ஏன்? பிற ரு க் கும்
தொற்றுந் தன்மையது. உண்மை தான்! த மது மாணவரிடம் பேராசிரியர் ஏற்படுத்திய பாதிப் புக்களுள் தலையானவற்றுளொன் றும் , மாணவர் பேராசிரியரிட மிருந்து பெற்ற பாதிப்புக்களுள் முக்கியமானவொன்றும் இதுவா கும். பேராசிரியரிடமிருந்து இவ் வாருன வாசிப்பு நோய் எமக் குப் பரவுவது எங்ங்ணம்? ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதன் விளக்குவோம்.
கறிப்பிட்ட பாட நூல்க ளுள் ஒன்ருகப் பாரதி கவிதை களில் சில பகுதிகளும் எமக்கிருந் தன. இவற்றுள் ‘சுயசரிதை" ப் பகுதியுமொன்ருகும். “abou u ág=tf? தை" யை விளக்கிச் சொல்வ தோடு மட்டும் பேராசிரியர் நின்றுவிடுவதில்லை. அக் கவிதை கவையும், பாரதியையும் (Մ)(ԱՔ மையாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகப் பாரதி யின் ஏ னை ய கவிதைகளையும் பொருத்தம் நோக்கித் தொடர் புபடுத்துவார். பாரதியின் கட்டு ரைகள், கதைகள் முதலியவற்றி லிருந்தும் ஆதாரங்கள் எடுத் துரைப்பார். பாரதியின் வாழ்க் கை வரலாற்றை அறிவதில் ஆர் வத்தை ஏற்படுத்துவார். பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகளிலி ருந்து பொருத்தமான கருத்துக் களை எடுத்தாள்வார். பாரதி யின் "சுயசரிதை" யைப் பிற சுய சரிதை நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுவார். ஆகவே பாரதி பின் பிற கவிதைகள், பாரதியின் கட்டுரைகள் (பாரதி

கிட்டுரைகள் - சக்தி வெளியிடு, பாரதி புதையல், "இந்தியா? முதலியன) பாரதியின் கதைகள், பாரதியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் (வ ரா. பி பூரீ, செல் லம்மாள் முதலியோர் யவை), பாரதி பற்றிய ஆய்வு நூல்கள் (பாரதி வழி பாரதி யும் ஷெல்லியும், புது நெறி காட்டிய பாரதி. இரு மகாகவி கள், கங்கையும், காவேரியும், கண்ணன் என் க்வி முதலியன) (கவிதைச்) சுயசரிதை நூல்கள் (உதாரணமாக, வ. உ. சி. எழு தியது) முதலியனவற்றுள் ஓரி ரண்டை வாசித்துப் பார்க்கத் தொடங்கும் நாம், பரந்துபட யாவற்றையும் வாசிப் ப தி ல் எம்மையறியாமலேயே இறங்கிவிடுகின்ருேம். இ ைட விடாது தூண்டப்படுவதாலும், பாராட்டப்படுவதாலும் எமது ஆர்வம் தணியாத தாகமாக மாறி விடுகிற து என்பதே
உண்மை. வாசிப்பு நோயாகத் தொற்றிக் கொள்வதன் இரகசி யமும் இதுவே
மேலே கூறியவாறு, பாரதி யோடு பல்வேறு விதங்களில் தொடர்புறும் பல்வேறு நூல் களையும் வாசித்தறிவதன் மூலம் மட்டும் பாரதியைச் சரியான முறையில் அறிந்த கொள்ள முடியுமோ? முடியுமென வைத் துக் கொண்டாலும் அது முழு மையற்ற நிலை அல்ல வோ? ஆகவே சம்கால இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு மு த லிட ம் கொடுத்தும், தமிழ் இலக்கிய வரலாற்றுச் செல்நெறிகளை அவ தானித்தும் பாரதியை இனங் காணும் பொருத்தப்பாட்டினை உணர்ந்து தெளிந்து ம்னம்பதித் துக் கொண்டோம்:
இது மட்டுமன்று. இவற் றின் மூலம் ஒரு படைப்பாளியை
எழுதி
விரைவில்
அல்லது ஒரு பாட நூல்ை அணு கும் முறையை - குறிப்பிட்ட நூலைக் கூர்ந்து ஆழ்ந்து கற்றல், குறிப் பிட்ட நூலாசிரியரின் ஏனைய நூல்களையும் கற்ற ல், அவன் பற்றிய ஆய்வுக் கட்டு ரைகளை வாசித்தல், அவனது வாழ்க்கை வரலாற்றை அறிதல். ஒத்த பிற படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல், சமகா லத் துப் பிற படைப்புக்களை அவதானித்தல். சமகால வர லாற்றுப் பின்னணியை உணர்ந்து கொள்ளல், முற்பட்ட இலக்கிய வரலாற்றுப் போக்கினைத் தெரிந் திருத்தல் முதலான வழிகளில் அணுகும் முறையை பயின்று கொள்கின்ருேம். மேலும் இவ் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நூல் பற்றிய பரந்த நிலையில் விரிந்த அறிவினைப் பெற்றுக் கொள்வத ஞல் அந்நூல் எழுந்த காலத்தி லெழும் ஏனைய நூல்கள் பற்றி யும் காலப்போக்கில் பெற்று விடுகின்ருேம். இப் பயிற்சியே எனக்கு ஆசிரியர் பயிற்சிக் கல் லூரியொன்றிற்கு (கெளரவ) விரிவுரையாளராகச் சென்று காளிதாசனின் ‘சகுந்தலை யை யும் "நா. பா. வின் "குறிஞ்சி மல" ரையும், பாரதியின் "பாஞ்
சாலி சபதத்தையும் பற்றி--
அவை பற்றி முன் ஆயத்தமெது வுமின்றி - சிறந்த முறையிலே விரிவுரையாற்றப் பின்னரொரு சமயம் கைகொடுக்கிறது.
சாதாரண ர ச னை யை உயர் த ர ரசனையாக மாற்றிக் கொள்ளும் நிலையினையும் தரங் கண்டு நூல் களை வாசிக்கும் இயல்பினையுங் கூட, பேராசிரிய ரின் தொடர்பு ஏற்படுத்திய தெனலாம், பல்கலைக் கழகத்தி னுள் நுழைகின்ற போது எனது நாவல் ருசி சாதாரண மட்டத் திலேயே காணப்பட்டது. துப்ப றியும் "சாம்பு" வினைக் காணுத் தோறும் துள்ளியும், 'யவன
99

Page 52
ராணி"யைக் காதலித் தும், "கடல் புருவோடு பறந்தும், பொன்னியின் செல்வனைப் பூஜித் தும், சிவகாமியின் சபதங் கேட்டு சிலிர்ப்புற்றும், குறிஞ்சி மலரின் உதிர்வுக்காகக் குமுறியழுதும், பாவைவிளக்கைப் பக்தியுடன் லணங்கியும், நெஞ் சி ல் ஓர் முள்ளை நித்தமும் பேணியும் வந்த நீண்ட பாதையே எனது ரசனைப் பாதை, ஆயின் பல்க லைக் கழகத்தை விட்டு வெளி யேறும் வேளையில், (வானெலி கலைக்கோலத்தில்) "சித் தி ரப் பாவை" யை உடைப்பவஞகவும்
தேநீர்" ருசியைப் பகிர் ந் து கொள்வதாகவும் மாறியதும் நானே. இது நாவல் வாசிப்
பைப் பொறுத்தவரையிலெனில்,
இலக்கிய நூல்களைப் பொறுத்த/ வரையில், கி. வா. ஜகந்நாத னின் தமிழ் நாவலின் தோற்ற மும் வளர்ச்சியும், க. கைலாச பதியின் தமிழ் நாவல் இலக்கி யம் ஆகிய இரண்டிற்குமிடை யிலும், சாலை இளந்திரையனின் தமிழ் சிறு க  ைத வளர்ச்சி, கா. சிவத்தம்பியின் தமிழ்ச் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சி யும் ஆகிய இரண்டுக்குமிடை யிலும், பாலசுப்பிரமணியத்தின் தமிழ் இலக்கிய வ ர ல |ாறு, செல்வநாயகத்தின் தமிழ் இலக் கிய வரலாறு ஆகிய இரண்டிற் குமிடையிலும் ஆன வெறுபாடு களை இனங்கண்டறியும் வளர்ச்சி நிலை பெற்றவஞயினன்;
இவ்வாறே, சிரமங்களைப் பாராது பல விடயங்களைத் திரட்டி ஆய்வுக் கட்டுரைகளை யும், விமர்சனக் கட்டுரைகளை யும் ஒரு பொதுவான ஒழுங்கு முறையில் - கிடைத்த விடயங் களை ஒழுங்குபடுத்தல், காலப் பின்னணியை விவரித்தல், குறிப் பிட்ட போக்குகளை இனங்கா ணல், வகைப்படுத்தல், விளக் குதல் அவசியமான மேற்கோள்
புரையை
களைப் பயன்படுத்தல், ஒப்பிடு தல், ஒட்டுமொத்தம்ாக அவதா னித்தல், சான்ருதாரங்களைத் தருதல் என்ற ரீதியில் . எழுது வதும், பேராசிரியரிடமிருந்துஅவரது விரிவுரைகள் மூலமாக மட்டுமன்றி, கட்டுரை வகுப்புக் கள். தனிப்பட்ட கலந்துரையா ட ல் க ள் மூலமும் - பெற்ற பயிற்சி காரணமாக எங்களுக்கு இலகுவானதாக அ  ைம ந் து விட்டது,
தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய தெளிவான கண்ணுேட் டத்தைப் பெறுவதும் பேராசிரி யரின் மாணுக்கர்களுக்கு நன்கு சாத்தியமாகிறது. புறநாநூற்றி லுள்ள குறிப்பிட்ட சில செய் யுள்கள் எமது பாடத்திட்டத்தி லிருந்தன. அவற்றின் பொழிப் ம ட் டு ம ல் ல நாம் அறிந்து கொண்டது; அவை எழுந்த காலப் பின்னணியை பற்றி மட்டுமல்ல நாம் தெரிந்து கொண்டது; சங்ககாலம் பொற் காலமென்ற கனவுகளிலிருந்து விழித்துக் கொண்டோம்; சங்கம் மருவிய கால இலக்கியப் பண்பு கள் சங்க காலத்தின் பிற்பகுதி ஆரம்பித்துவிட்ட נu $) ט6 $) ('ש தென்பதை உணர்ந்து கொண் டோம். இலக்கிய வரலாறு என்பது தனித்தனியான காலக் கூறுகள் அல்ல, அது பொது வான வரலாற்றேடு தொடர்ந்து வருவது என்பதையும், வரலாறு எ ன் பது வெறுமனே மன்னர் களுக்கிடையிலான போ ரால் அல்ல, காரண காரியத் தொடர் புடன் பிணைந்துள்ள சமுதாய இயக்கங்களின் கூட்டுமொத்த மாக விளங்குகின்ற காலங்களின் தொடர்ச்சி என்பதையும் புரிந்து கொண்டோம். நூல்களின் கால வரையறை பற்றியும், கா ல்
.

வ  ைரயறை பற்றிய இராச மாணிக்கனர், தேவநேயப் பாவாணர், வையாபுரிப்பிள்ளை
முதலியோரது முரண் பட்ட
கருத்துக்களையும், அவர்களது மனப்பாங்குகளையும் பற்றியும் தெரிந்து கொண்டோம். ஆயி னும். பேராசிரியர் கற்பிக் க வேண்டியது தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அல்ல, புற நானூற்றின் சில பாடல்கள் மட்டுமே எ ன் ப ைத மனங் கொண்டு பார்க்கும்போது பேரா சிரியரின் தனித்துவம் புலனுகின் றதல்லவா?
இவ்வாறுதான் இலங்கையர் கோனின் "வெள்ளிப் பாதசரம்? பாட நூலாக இருந்ததன் கார ணமாக - அதனைப் பேராசிரியர் கற்பித்த மை காரணமாக
இலங்கையர்கோனைப் பற்றி மட்டுமல்ல, ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பற்றியும் அறிந்து
கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் தவிர்க்க இயலாத வளர்ச்சி காரணமாக நவீன ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி அறிவதிலும் நாட்டங் கொண்ட வர்களாக மாறினுேம்.
முன் ஒரிடத்திலே குறிப்பிட் டவாறு பல பாடநூல்களுள் ஒரு நூலை - சுயசரிதையை - பேராசிரியரிடமிருந்து கற்றதன் மூலமே பெற்றது அதிகமெனில், தனிவினுத்தாள் கொண் ட பாடத்திட்டப் போதனை மூலம் மேலும் பெரும் பயன் பெற்றி ருப்போம் அல்லவா? உண்மையும்
அதுவே. தமிழ் / நாவல் சிறு கதையும்" வினத்தாளுக்கான விரிவுரைகள் மூலம் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்று
அவற்றின் அடிப்படைகள் பற்றி இருபதாம் நூற்ருண்டு இலக்கிய வளர்ச்சி பற்றியே முழுமையா கத் தெரிந்து கொள்கிருேம்: பொதுவாக, இருபதாம் நூற்
to a
அறிந்து கொண்டதை
ருண்டுத் தமிழ் இ லக் கிய வளர்ச்சி பற்றி அன்றுவரையி லான தமிழ் இலக்கிய வரவாறு நூல்கள் விதந்துரைத்ததில்லை. ஏனைய கால ப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது இதுபற்றிச் சுருக் கமாகவே கூறுகின்றன. அல்லது நவீன தமிழ் இலக்கிய வகைகள் சிலவற்றின் வளர்ச்சி பற்றி முன்னைய நூல்கள் கூறிய கருத் துக்களையே திரும்பவும் கூறுவ தோடு முற்றுப் பெற்று விடுகின் றன. பல்கலைக்கழக மட்டத்தி லுள்ள சில விரிவுரையாளர் கூட இத்தகு நிலையிலிருந்து விலகிய வரல்லர், இத்தகைய பின்னணி யில் இவ்வாறன அவப்பேற் றுக்கு நா மும் உள்ளாகாமல் இருபதாம் நூற்றண்டு இலக் கிய வரலாறு பற்றிப் பூரணமாக நினைத் துப் பெருமைப்படுவதில் தவ றில்லை. ஏனெனில், நாவல், சிறுகதை முதலான நவீன இலக் கிய வகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இதுவரை எழுதப்படாத டயங்களைப் பற்றி எழுதவும், புதிய கண் ணுேட்டங்களில் அவற்றை அணு கவுமான ஆற்றலைப் பேராசிரிய ரிடமிருந்து கற்றமை காரண ணமாக எம்மில் சிலர் பெற்றுக் கொண்டோம். மு  ைற யே, நாவல்கள் பற்றிய எனது வங் காள நாவல்கள். தமிழ் நாவல் களில் ஏற்படுத்திய தாக்கம், தமிழ் வாசகர் ரசனையும், தமிழ் நாவல்களின் போக் கு க ஞ ம் முதலான கட்டுரைகளும், தமிழ் நாவல் வரலாற்றில் இருண்ட காலம் - ஒரு மறுமதிப்பீடு முத லான கட்டுரையும் இத்தகையன வேயாகும்.
எமது தமிழ்ப் பாடத்திட் டம் பிற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்திலிருந்து வேறு பட்டிருந்தமை பற்றி ஆரம்பத் தில் கூறியிருந்தேன் அல்லவா?

Page 53
இதனல் புதுப் பாட நெறிகள் பலவற்றைக் கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. *மூலபாட திற ய்ைவு" "எ ன் பதும் இவற்று ளொன்று. இதன் போதனைகளை பேராசிரியரிடமிருந்து பெற்ற மையால், வழமைபோல் பாடத் திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபடாத பல விடயங் களையும் அறிந்து கொள்கிருேம். தமிழ்ப் பதிப்புத் துறை வளர்ச்சி பற்றி அறியும் அவசியமிருந்தா லும், இன்னுெருபடி மேலே சென்று தமிழ் இலக்கண உரை யாசிரியர்கள் பற்றியும், இ ன் னுெருபடி மேலே சென்று தமி ழிலே முன்னர் விமர்சனத்துறை வளராததற்கான காரணம் பற்றியும் தெரிந்து கொள்கின் ருே ம். "தமிழர் பண்பாடும் நா க ரீ க மும்" பற்றிக் கற்க நேர்ந்தபோது, ஆரம்ப கால உலக நாகரீகத் தொடக்கம் பற்றி அறிந்தது மட்டுமன்றி இனக்குழுக்கள் பற்றியும் அறிந் தோம். இவ்வழி, "நாட்டுப் பண் பாட்டியல்' பற்றி அறியும் ஆர்வத்தையும் பெற்றுக் கோண் டோம், "இலக்கியக் கொள்கை" பற்றி கற்க நேர்ந்தபோது, அத னைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி யுடன் ஒப்பிட்டுப் பார்த்தமை யால், இன்னெரு கோணத்தி லும் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய பார்வையை லிசாலித் துக் கொண்டோம். பேராசிரிய ரிடமிருந்து கற்றுக் கொண்ட ஏனைய பாட நெறிகளும் இவ் வாறுதான் அமைந்திருந்தன என்பதில் ஐயமில்லை.
எழுதுந் தாகமுடைய மாண வர்களை எளிதா இனங்காண்ப தும் அவர்களை ஊக்குவிப்பதம் பாராட்டுவதுமான வழி க ளில் படைப்பாளிகளாக்கி ஈழ த் து இலக்கிய உலகிலே உலவச் செய் ததும் பேராசிரியர் அவர்களது
f
அருஞ் செயல்களுள் குறிப்பிடத் தக்க ஒன்ருகும். எ ன் னை ப் பொறுத்தவரையிலே L TipTT L - டுக் கிடைத்தன எ ன ல r ம். அ. ந. கந்தசாமியின் கவிதைகள் பற்றிய எனது கட்டுரை மல்லி
கையிலே வெளிவந்த போது அதனைப் பாராட்டிக் கடிதம் எழுதியதோடு, கட்டுரையிலே
இன்ைெரு முக்கிய அம்சத்தை, அ. ந. க. வின் சர்வதேச நோக் குப் பற்றி சேர்ப்பது நல்லதென் றும் எழுதியிருந்தார். சுட்டிய விடயம், எனது கட்டுரையின் அடிப்படைக் குறைபாட்டைக் காட்டியதோடு மட்டு ம ன் றி, அவரது பார்வையின் விரிவையும் அடிப்படையையும் பளிச்செனப் புலப்படுத்தவும் செய்தது. பட் டம் பெரத மாணவனுகவிருந்த காலத்திலேயே நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றினை ("ஈழத்து நவீன தமிழ்க் கவிதை யின் தோற்றமும் மறுமலர்ச்சிக் குழுவும்") பாவலர் துரையப்பா பிள்ளை நூற்ருண்டு விழா மல ரிலே இடம்பெறச் செய்தார். யாழ். பல்கலைக்கழக ஆய்வு ச் சஞ்சிகையான சிந்தனை? யின் நாவல் நூற்ருண்டு நினைவு வெளியீட்டிலும் பேராசிரியரின் முயற்சியினலேயே எனது கட் டுரை (வங்காள நா வல்க ள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம்) வெளிவந்தது. இது மட்டுமன்று. தமிழக எழுத்தா ளருடனும் எனக்குத் தொடர்பு ஏற்படக் காரணமானுர், வல்லிக் கண்ணன். தமிழ்ப் புதுக்கவிதை யின் வளர்ச்சிபற்றித் தீபத்திலே எழுதிய கட்டுரைத் தொடருக்கு ஈழத்துப் புதுக்கவிதை பற்றிய குறிப்புக்சளை நான் அனுப்பிய தும் அவரக துரண்டுதலிலேயே வல்லிக்கண்ணன் அதனைச் சரி யான விதத்திலே பயன்படுத் தாதது வேறு விடயம். இவ்
வாறே, தாமரையில் தமிழ்
oa

வாசகர் ரசனையும் தமிழ் நாவல் களின் போக்குகளும் எ ன் ற எனது கட்டுரை பிரசுரமானதும் அ வ ர து முயற்சியினுலாகும். இந்நிலையில் நின்று நோக்கும் போது இத்தகைய பேராசிரிய ரின் கீழ்ப்படிக்கும் வாய்ப்பினைப் பெ ரு த வர் அவப்பேற்றினர் என்று கூறவே தோன்றும்.
எமது இலக்கிய ஆளுமை வளர்வதற்கு வேறு வகையான வாய்ப்புக்களை அளித்தும் வந்த வர் பேராசிரியர். குறிப்பாக, வானெலி இலக்கிய நிகழ்ச்சிக ளில் எ ம்  ைம ப் பங்குபெறச் செய்தமையும் இலற்றுளொன்று. "கலைக்கோலம்" என்ற வானெலி
நிகழ்ச்சியை அவரே சிலகாலம் நடத்தி வந்தமையும் இதற்கு வாய்ப்பளித்தது எ ன ல |ா ம். இதற்குதாரணமாக, "விழிப்பும் வீச்சும்", "தேநீர்", "பைந்தமிழ் வளர்த்த பதின்மர்", "யுக சங்க
மம்", சித்திரப்பாவை', 'சாகித் திய மண்டலப் பரிசு பெற்ற நூல்கள் முதலானவை பற்றிய எனது விமர்சனங்களையும். தமிழ் வாசகர் ரசனை வளர்த்த வர லா று சி. வை, தாமோதரம் பிள்ளை - பதிப்பு முயற்சிகள்ஒரு மறுமதிப்பீடு முதலானவை பற்றிய எனது இலக்கியப் பேச் சுக்களையும் கூற லா ம். இவ் வாறே, அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மகாநாட்டினையொட்டி கொழும்பில் நிகழ்ந்த ‘ஈழத்துத் தமிழ் நூற் கண்காட்சி" யின் போதும் அவரது முயற்சியினல் கண்காட்சி தொடர்பான பணி களில் பங்கு பற்றி அனுபவங் கள் பலவற்றைப் பெற்று க் கொண்டமையும் இங்கு நினை வுக்கு வருகிறது.
பேராசிரிய ர து தமிழ் மொழிப் பற்று பற்றிச் சந்தே
08
கப் படுவாருளர்; அத்தகையோ ரது சந்தேகம் அர்த்தமற்ற தென்பதனை யாமறிவோம். இன் ஞெரு விதமாகக் கூறின் பேரா சிரியரிடம் மொழிப்பற்று இருந் ததே தவிர மொழி வெறியாக அ து வெளிப்படவில்லையென லாம். எம்மிடமும் அத்தகைய இயல்பு சுவறியது. எனவேதான்
மொழி வெறியானது வேண்டப்
படாத ஒன்றென்பதோடு, முறை யான தமிழாய்வுக்கு அது தடை யாகுமென்பதையும் தமிழகத் தமிழாய்வு முயற்சிகள் பலவற் றிலிருந்து உணர்ந்து கொண் டோம். மேலைத் தேயத்தவர் தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் நிகழ்த்துவதையிட்டு நாம் அள வுக்கதிகமாகப் பெருமைப்படவு மில்லை. ஏனெனில் மேலைத்தேயத் தில் நவீன மொழியியலின் வளர்ச்சி நிலையில், கீழைத் தேய மொழிகள் பற்றிய ஆய்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத தென்பதைப் பேராசிரியர் எமக்கு உணர்த்தியிருந்தார். . இவ்வாரு கத்தான், மொழி பற்றியோ, இலக்கியம் பற்றியோ எந்த வொரு கொள் கை  ைய யு ம் கோட்பாட்டையும் குறு கி ய நிலையிலன்றிப் பரந்த நிலையில் நின்று நிதா ன மாக எடை போடும் பக்குவத்தையும் ஆசான் எமக்கு அளித்திருந்தார்.
முக்கியமாகக் குறிப்பிடத் தக்க இன்னுமொன்றுள்ளது. பேராசிரியர் அவர்கள் மாக்சிச விமர்சகர் என்று கூறப்படுவதில் கருத்து வேறுபாடில்லை. இவ் விதத்தில் அவர் தமது விரிவுரை களினுரடு மாக்சிச விமர்சனக் கருத்துக்களைத் தீ விர மா கப் போதித்திருப்பார் என்று எதிர் பார்ப்பதிலும் தவறிருக்க முடி யாது. ஆயினும் வலிந்து கருத் துக்களைத் திண்க்காத அவரது

Page 54
இயல்பு காரணமாகவோ அல் லது "விளைநிலம் தகுந்த முறை யிலே பண்படாத நிலை காரண மாகவோ இவை விதந்துரைக்கு மளவு எமது குழ்ாத்திடம் வந்து சேரவில்லை. ஆயினும், "ஏற்க னவே பண்பட்டிருந்த நிலங்கள்’ பேராசிரியருடனுன தனிப்பட்ட தொடர்பு காரணமாக தம்ம்ை இவ்விதத்தில் நன்கு வளப்படுத் திக் கொண்டன என்பதைக் குறிப்பிடுவது அவசியமானது.
இதுவ  ைர யும் கூறியது போல், இன்னும் நிறையவே விடயங்களும் அனுபவங்களும் சொல்வதற்குளவேனும், விரிவஞ் சிக் கூறவியல்ாத நிர்ப் பந்த முண்டு. ஆயினும், பொதுவாக ஒன்று ம்ட்டும் கூறலாம். பேரா சிரி ய ர து மாணவருக்கென்று
பலரும்
தனி முத்திரையுண்டென்பதும், அவர்களது ஆக்கங்கள் மூலம் அது அவ்வப்போது முன்னர் வெளிப்பட்டது போல், 9( ניו போதும் வெளிப்படுவதுபோல், எதிர்காலத்திலும் வெளிப்படும் என்பதுமே அது. தவிர என் னைப் பொறுத்த வரையில் யான் பெற்றவை நிறையவே உண்டு. பேராசிரியரது மாணவர் இவ்வாறே எண்ணுவ ரென்பதிலும் சந்தேகமில்லை. எனினும், இச்சந்தர்ப்பத்தில் பெற்றுள்ளவற்றையும், அவற் றின் பெறுபேறுகளையும் எண் ணிப் பெருமிதமுறுவதா அல்லது
மேன்மேலும் பெறும் வாய்ப்புக்
கள் இழக்கப்பட்டு விட்டதே யென்றெண்ணிப் பெ ரு மூ ச் சு விடுவதா என்றுதான் எனக்குப் புரியவில்லை. O
22,
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்மை ஒரு தடவை அணுகுங்கள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ்
அப்துல் ஜப்பார் மாவத்தை
கொழும்பு - 12
፲04
 

* ه ۶ عیت
ESTATE SUPPLIEkS
· A MAMISSION
AGENTS
s
VARIETIES OF CoNSUMER GOODS
OLMAN GOODS
TIN FOODs
GRAINS
gbial 2६s s?
lo
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.
,
i

Page 55
| VIII am II Milli
專. -- * * *
'th Anniversary Spik
Phi é:
SY Z t S S K S S S L L L L LS K KSSS u SSSSSSS SSSCL ।
॥
-—
 
 

AUGUST 193 un au , , .
bcial Number
Östers ini
MWA LIL PANELY. NING
CHWMPAROAR) :
140, ATRIMOD UAIR STREETIK".
COROMBO-2,
III, III Hi'' வரிபவரு .7שלושש= F יהי - --- It 11 ܘܬ ̄ ܢܐ .