கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1971.02

Page 1

_暱 上 منتجات - ::س
monar 1971
默
* *,

Page 2
பாடசாலைப் புத்தகங்கள் மாணவர் உபகரணங்கள் இலக்கிய நூல்கள்
குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள -
ரகுநாதன் பதிப்பகம்
தொலைபேசி: 26946
சுவையான உணவு வகைகளுக்கும் சுத்தமான பலகாரங்களுக்கும் ஏற்ற எழில்மிகு இடம் வாணி விலாஸ்
'சுத்தமான உணவு வகை சரியாகத் தருவதிலும்
முத்தான மொழியோடு முன்னின்று மொழிவதிலும் புத்தாண்டுப் பொங்கலென புதுமையாய்ப் பல காரம் சொத்தாகத் தருவதிலே சொல் - ஒன்று அது வாணி!"
வாணி விலாஸ்
100 ஆமர் வீதி, கொழும்பு 12
தொலைபேசி: 33656
கூட்டுறவு அச்சகம் யாழ்ப்பாணம். 176-71

།به حساسی *ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி
யாதியினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
கொடி 5 பிப்ரவரி - 1971 மலர் 33
ผู้
இந்த மலரில்.
அலுவலகம் இலங்கையின் 60, கஸ்தூரியார் வீதி, பிரபல படைப்பாளிகள் யாழ்ப்பாrைம். (இலங்கை) எழுதுகின்றனர்
LLLLLL
umummmmmmmmmmmmmumunumu அட்டைப்படம்
மல்லிகையில் வெளிவரும் கலாநிதி தாவீது அடிகள்
கதைகளிலுள்ள பெயர்களும்" சம்பவங்களும் கற்பனையே. கட் டுரைகளில் வெளிவரும் கருத் துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர் களேTபொறுப்பாளிகளாவர்;

Page 3
பாதுகாத்தவர் வளர்க்கட்டும்
பாதந்தாங்கிகளே ஒதுங்குங்கள்
நமது மேடைகளிலும் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் இப் பொழுது ஒரு புதுமை நடந்து வருவதைப் பலர் அவதானித்தி ருக்கலாம். அதாவது தமிழின் பேரால் நடக்கும் அந்தப் பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒருசில தமிழ்த் துரைமார்கள் துணிந்து ஆங்கிலத்தில் விரிவுரையாற்ற முன்வந்து விடுகின்றனர்.
தமிழன் அல்லாத வேற்று மொழிக்காரர்களிடம் இப்படி யான சின்னத்தனங்கள் என்றுமே நடைபெறுவதில்லை எனத் துணிந்து கூறலாம். ஒரு வங்காளியும் ஒரு வங்காளியும் சந்தித் தால் தமது தாய் மொழியிலேயே சம்பாஷிப்பார்கள்; மலையாளி யும் இன்னெரு மலையாளியும் பேசும்போது தமது தாய்ப் பாஷை யிலேயே பேசிக்கொள்வார்கள் ஒரு சிங்களவனும் மற்முெரு சிங்களவனும் சந்திக்க நேர்ந்தால் கண்டிப்பாக அவர்கள் தமது சிங்கள மொழியிலேதான் கதைப்பார்கள். ஆனல் ஒரு தமிழனும் இன்னெரு தமிழனும் சந்தித்தால் நிச்சயம் அவர்கள் வெள்ளைக் காரன் பாஷையில்தான் பேசுவார்கள்.
சர்வதேச அடிமைப் புத்தி இந்தத் திருக் கூட்டத்தை விட்டு அகலவே அகலாது- காரணம் அடிமைத் தனமாகச் சிந்திப்பதி லேயே அசகாய சூரர்கள் இவர்கள்!
எல்லா மட்டத்திலுமே இப்படியான பச்சோந்திகள் இன்று தமிழ் மொழியில் பெருகி வருகின்றனர். இருந்தும் இந்தத் திருக் கூட்டத்தினர் தான் தமிழைக் காப்பாற்றப் போகின்றனராம்: தமிழ் ஆராய்ச்சிக்கு மிண்டுகொடுக்க முனைந்து நிற்கின்றனராம்! சில அப்புக்காத்துமார் இப்பொழுது நீதி மன்றங்களில் தமிழ் மொழிக்காக உருகி உருகிக் கண்ணீர் சிந்துகின்றனரே, துணி விருந்தால் நமது தேசிய உடையுடன் தமது தாய்ப்பாஷையுடன் கட்சிக்காரர்களின் வழக்குகளை நடத்திக் காட்டட்டுமே!
- என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் பாஷை வெள்ளைக் --காரன் பாஷைதான். தமிழ் எங்களுக்கு உச்சரிக்க சரியாகவராது!? எனச் சமாதானம் சொல்லிப் பாமர மக்களை அணுப்பப் பார்க் கிறர்கள்.
இதன் அடிப்படை நோக்கமென்ன? தமது அடிமை மோகத் திலேயே பெருமிதம் கொள்ளும் இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம்தான் பாமர மக்க
 

ளின் தனிப்பெரும் பிரதிநிதிகள் என மாய்மாலம் கொட்டுவதில் பின் நிற்பதில்லை. மக்கள் பேசும் மொழி அநாகரீகம்; ஆனல் அதே மக்கள் பெற்றுத் தந்த வெற்றி மாத்திரம் இவர்களுக்கு இனிக்கின்றதாம்!
ரஷ்ய நாட்டிலும் இப்படித்தான் சில பிரபுக்கள் வாழ்ந்தார் கள். பிரெஞ்ச் மொழிதான் பிரபுக்கள் பாஷை ரஷ்ய மொழி கக்கூஸ்காரன், செருப்புத் தைப்பவன், குதிரைக்காரன், வேலைக் காரன் பேசும் மொழி என அரை நூற்ருண்டுகளுக்கு முன்னர் சொன்னர்கள். சரித்திரம் என்ன சொல்லுகிறது? பிரெஞ்ச் மொழி பேசியவர்கள் ஹிட்லரிடம் சரணுகதியடைய ரஷ்ய மொழி பேசியவர்கள் அந்த ஹிட்லரையே சரணுகதியடைய வைத்து 6. Lartil
ஆங்கிலத்தைத் தலைக்குமேல் வைத்துக் கூத்தாடும் இக் கூட் டம் உண்மையிலேயே அம் மொழிமீது அன்போ பாசமோ கொண் டதுமல்ல. இன்றைய மினி கவுண் காரி தனது மினிச் சட்டையில் வைத்துள்ள பாசத்தை விட இது மிகவும் மட்டமானது. இப்படி நடிப்பது பேசுவது எல்லாம் ஒரு பாஷனுக்கே தவிர அந்த மொழியின் மீதுள்ள பிரியத்தினுலல்ல.
அப்படியாஞல் இந்தத் திருக்கூட்டத்தினர் ஆங்கில மெர்ழிக்கு இதுவரை ஆக்கபூர்வமாக என்னத்தைச் செய்து கிழித்துவிட்ட னர் இவர்களிலே ஆங்கிலக் கவிஞன் உண்டா? இங்கிலீஸ் நாவ லாசிரியன் உண்டா? அல்லது அம் மொழியை செழுமைப்படுத்த உழைக்கும் ஓர் உழைப்பாளிதான் உண்டா?
நாம் ஆங்கில மொழிக்கோ அல்லது வேறெந்த மொழிக் குமோ பகைவர்களல்ல. ஆனல் இப்படியான இரண்டுங் கெட்டா ஞன ஒரு கூட்டத்தினரின் ஏமாற்று வித்தைகளுக்குத்தான் நாம் பரம சத்துராதிகள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம். நமது நாட்டின் மீதோ அல்லது நமது மக்கள் பேசும் மொழியின் மீதோ அக்கறை இல்லாதவர்கள், அபிமானம் கொள்ளாதவர்கள் தயவுசெய்து தமது ஆங்கில பூமிக்கே குடிபெயர்ந்து போய்விட் டால்கூட தமிழுக்கு நல்லது. இங்குள்ள மரமேறிகள், துணி துவைப்பவர்கள், இரும்பு அடிப்பவர்கள், சுருட்டுச் சுற்றுபவர் கள், கமக்காரர்கள், அச்சுக் கோப்பாளர்கள், சிகை அலங்கரிப் பவர்கள், செருப்புத் தைப்பவர்கள், தோட்டிகள் போன்ருேரின் பரம்பரை இங்கே தமது தாய்மொழியை - தமிழ்மொழியை - நிச்சயம் வளப்படுத்திப் பெருமைப் படுவார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழைப் பாதுகாத்தார்கள் என்பதை உணர்ந்து கொள்வது இவர்களுக்கு நல்லது.
இப்பொழுது ஒரு சம்பவத்தை "முன்கூட்டியே ஞாபகத்தில் வைத்திருக்க, சுட்டிக் காட்ட விரும்புகிருேம்.
நாலாவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மகாநாடு அடுத்தமுறை இலங்கையில்தான் நடைபெற இருக்கின்றது. தமிழின் பேரால் நடக்கும் இந்தச் சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டில் வேறெல் லாமிருக்கும்; தமிழ்தான் இருக்காது. சகல ஆங்கில அடிவருடிக ளும் தங்களது நன்றி விசுவாசத்தை தங்களது அபிமான மொழி யிடந்தான் காட்டி மேளமடிப்பார்கள்.

Page 4
தாங்கள் அனுப்பி வைத்த "மல்லிகை" இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. பத்திரிகை மொத்தத்தில் திருப்திக ரமாக இருக்கிறது.
பத்திரிகைக்கு என் ஆசி. தங்களுக்கும் என் அன்பு வாழ்த் துக்கள்.
நீல. பத்மநாபன்.
t
அன்போடு தாங்கள் அனுப்புகிற "மல்லிகை" மலர்கள் கிடைத் துக்கொண்டிருக்கின்றன. அன்புக்கு நன்றிகள்.
தங்களது துணிச்சலான எழுத்துப் பணியில் பின்னலிடும் புது மையில், முற்போக்கில் மனத்தை பறிகொடுத்திருக்கும் தமிழர் களில் நானும் ஒருவன். எப்படிப் பாராட்டுவது?
நவம்பர் இதழ் அட்டையில் திரு. ஆ. குருசுவாமி அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரைப்பற்றிய கட்டுரையும் வெளியிட்டுள்ளீர்கள். அந்த அருமை நண்பர் ஒரு எழுத்தாள ரென்பதைத் தங்களது இதழின் கட்டுரை மூலமாகவே அறிந் தேன்.
தங்களது நூல்களை எல்லாம் பெற ஆவல். எப்படிப் பெறுவ தென்ற வழிமுறையை முடிந்தால் எழுதுங்கள். அவை இங்கு எங்கு கிடைக்கும்?
திருச்செந்தூர். பேராசிரியர் மா. பா. குருசாமி, எம். ஏ.
தற்போது தமிழகத்திலிருந்து கசடதபற "கார்க்கி போன்ற புதிய ஏடுகள் வெளிவருகின்றன. அவை தங்களுக்குக் கிடைக்கும் என நினைக்கிறேன்.
இன்னெரு முக்கியமான விஷயம், இந்த மாத ஜனவரி *கார்க்கி இதழில், (நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை நான் *கார்க்கி" ஆசிரியருக்கு அனுப்பி, பிரசுரிக்கவும், தீவிர நடவடிக் கைகள் ஏதும் எடுக்கவும் என வேண்டிக் கேட்டிருந்தேன்) தங்கள் கடிதம், இலங்கையின் இலக்கிய இதழ்களுக்கு இந்திய அரசின் அநியாயத் தடையை நீக்கக் கோரும் கடிதம்-பிரசுரிக்கப் பட் டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜபாளை ամ, இரா. கதைப்பித்தன்
M
 

நல்ல நிலையில் பிறந்த குழந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதுபோன்று மல்லிகை வளர்ந்து வருவது கண்டு மனம் மகிழ் கிறது. மல்லிகை மலர் அட்டை மிகவும் நன்ருக உள்ளது. ஜீவா வின் கதையின் முதல் வசனமே சிறப்பாக அமைந்துள்ளது. நவீன கவிதைகளில் படிமம் என்று சொல்கிருர்களே அந்த படிமம் வச னத்தில் படிந்திருக்கிறது. கணேஷ் அவர்களின் கவிதை அருவி யோட்டத்தின் சலசலப்போடு மிளிர்கிறது. கதையை கவிதைக் கதையாக்கியது (கூத்துக்காரி) ஒரு நல்ல முயற்சி. கவிஞர் யுவன் பாராட்டப்பட வேண்டியவர். யாதவன் தனது கதையில் திரும ணமாகாத இரண்டு கன்னிப் பெண்களின் வாழ்வுக்கு இரங்கும் ஒரு பெண்ணின் இதயத்தை எமக்குக் காட்டுகிருர். சிறை என்ற கதைக்கு கதவும் இல்லை. கம்பிகளும் இல்லை. கனகராசனின் கதை பல இடங்களில் குளப்பங்களை உண்டாக்குகிறது. தேயிலைத் தோட் டம் என்றும் மலைக் குறவர்கள் என்றும் பின்பு மலைத் தமிழர் கள் என்றும் அங்கும் இங்குமாக எழுதுகிருர், கதையின் மூன்ரும் பந்தியில் களனி ஆற்றை புகைவண்டி கடக்கமுன் மலைகள் தெரி கிறது என்றும் எழுதுகிருர். கற்பனை அளவாக இல்லை. இவைக ளில் சிறிது கவனம் செலுத்தி இருப்பின் சிறப்பான ஒரு சிறு கதையாக இருந்திருக்கும். எனினும் பழமைகளை, விஞ்ஞான பூர் வமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வொன்றையும் எதிர்க்க வேண்டிய புதுமை ஒரு மல்லிகை, அப்படி இருக்கவேண்டிய மல்லிகையே இப்படியான கதைகளை பிரசுரித்து பழமையை கட் டிக் காப்பது சிறப்பான செயல் அல்ல. செந்தாரகையின் கதை யில் கோல்பேசில் மண்கும்பி என்றும் எழுதுகிருர், அதற்கு அவர் கோல்பேசு என்ருல் நீர் நினைப்பது போல் கோல்பேஸ் கொட் டலிலிருந்து நாடாளுமன்றம் வரையுள்ள வெளிமட்டும் தான் என்று நினைக்கவேண்டாம். அது வடக்குப்பக்கமாக இன்னும் நீண்டு பரந்து கிடக்கிறது என்று வாதம் புரியலாம். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க செந்தாரகை மண்கும்பி கரைவதனைக்கண்டு எழுத வேண்டிய நிலைக்கு வந்திருக்க வேண்டியது பாராட்டுவதற்கு உரியதல்ல. அழகு சுப்பிரமணியம் பற்றி மணியம் அவர்களின் கட்டுரை நன்ருக உள்ளது. தொகுத்துக் கூறவேண்டுமானல் ஐந்து வயது மல்லிகையின் பொங்கல் மலர் சிறப்பான ஆரோக்கியமான ஆதர்ஸமான ஒரு நம்பிக்கையைத் தருகிறது.
கொழும்பு. و بر பா. ரத்நஸபாபதி அய்யர்*
ஈழத்து முற்போக்கு முகாமில் மலர்ந்து மனதிற்கினிய சுகத் தினைத் தந்த மல்லிகையைப் படித்து சொல்லற்கரியதோர் மன நிறைவெய்தினேன்.
*எனது பக்கங்கள்’ நிரம்பவும் உணர்ச்சி மயமாய் இருந்தது. ஈழத்து சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிற்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டதை தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முகாம் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறது.
தூத்துக்குடி. பாரதி ராமமூர்த்தி.
5

Page 5
நமது தாய்த் திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர்களில் தனிப் பெருமைபெற்றவர் தவத்திரு தாவீது அடிகள்.
பன்மொழிப் புலவரான இவர் காட் சிக்கு எளியவர்; தனிப் பண்பு கொண் டவர்; மனிதாபிமானம் மிக்கவர்.
கத்தோலிக்க குருவானவராக விளங் கும் இவர் தமிழ் மொழிமீது காட்டும் அன்பும் ஆர்வமும் மற்றவர்கள் பின் பற்றத் தக்கதொன்ருகும். தமிழ் ஆராய்ச்சிப் புலமையில் சுவாமி ஞானப்பிரகாசருக்கு அடுத்தபடியாக வைத்து எண்ணத்தக்க அன்னரது உருவத்தை அட்டையில் பொறிப்ப பதில் மல்லிகை பேருவகை கொள்ளு கின்றது.
- essastuift
盟i圆姆苓珊流
வண. பிதா நீ. ம. சவரிமுத்து
"கூட்டன் மோர்கன், ஏர் பாட்டர், வீ கெற்ஸ்?" காலை வணக்கம் கூறும் குரலொலி இப் படிக் என் காதுகலில் விழும். பதில் சொல்லி முடிக்குமுன் மறைந்துவிடுவார் மறைத்திரு தாவீது அடிகள்! ஜேர்மன் மொழியிலே தனிப்பற்று வைத் திருந்த எனக்கு, காலை வணக் கத்தை அந்த மொழியிலேயே சொல்வார். தாவீது அடிகள் என்னைக் காணும் ஒவ்வொரு பொழுதும், அம் மொழியிலே உரையாடலைத் தொடங்குவ தைக் கண்ணுற்றதும், அவரிலே
ஒரு தனிமதிப்பு வைக்கத் தொ டங்கினேன். அவர் பன்மொ ழிப் புலவர் என்று பலர் சொல் லக் கேள்விப்பட்டிருக்கிறேன் சம்பத்திரிசியார் கல்லூரியில் நான் ஒரு சில மாதங்கள் பாடப் சொல்லிக் கொண்டிருந்தபோ தும்- வான் இயலை அவரிடய ருந்து கற்றுக் கொண்டிருந்த போதும்- அடிக்கடி ஏற்பட்ட தொடர்பின் மூலம், அக்கூற்று முற் ம் உண்மை என்பதை பல மொழியும் பல்கலையும் தெரிந்தது மட்டும் அல்ல, பிற மொழிகளில் ஒரு

சில மூலச் சொற்கள் பிறந்த கதையும் வளர்ந்த முறையும் எப்படி என்று எவருமே எதிர் பார்க்க முடியாத அளவிற்கு விரிவான விளக்கங்கள் தந்து வியக்கச் செய்வார்!
1908-ம் ஆண்டு, தும்பளை யில் பிறந்த இவரது தந்தை பெயர் தாவீது. எலிசபேத்து தாயின் பெயர். ஆரம்பக் கல் வியை சம்பத்திரிசியார் கல்லூ ரியில் பயின்று-பின் யாழ்ப்பா ணக் குருமடத்தில் சேர்ந்தார். தத்துவ இயலையும் மறை இய லெயும் கொழும்பில் கற்றுத் தேர்ந்து, 1932-ம் ஆண்டு மார் கழித் திங்கள் 22-ம் நாள் குரு நிலையில் நெறிப்படுத்தப்பட் டார். ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்திலேயே கல்வி கற்றுக் கொடுத்தார்.
அதன்பின் ஏறத்தாள ஐந்து
ண்டுகள்மட்டில், இங்கிலாந்து ஜேர்மனி, இந்தியா முதலிய பல நாடுகளுக்கும் சென்று பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ருர் . தாயகம் திரும்பி பத்திரிசியார் கல்லூரியில் நடுத் தர வகுப்புக்களை நிர்வகிக்கும் பொறுப்பேற்று, பாடம் சொல் லிக் கொடுக்கவும் தொடங்கி ஞர். ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் குறிப்புக்கள் எழுதி வைத்து - ஏழைப் பிள்ளைகள் யார் யார் என அறிந்து அவர் களுக்கு பண உதவியும் பொருள் உதவியும் அளித்து கல்வி பயில ஊக்குவித்தார்! அன்று, அவரி டம் முழு உதவி பெற்று இன்று வெவ்வேறு துறைகளில் மேம் பட்டு, மருத்துவர்களாகவும்எழுத்தாளர்களாகவும்- சட்ட வல்லுனராகவும் விளங்குபவர் ஒருவர் இருவரல்ல! அவருடைய தாராள குணம், ஏழைகள் என்று தங்களைக் கூறிக்கொள் ளுபவர்களுக்கு அல்ல- தாமாக ஆராய்ந்து பார்த்து உதவிசெய்
யப்பட வேண்டியவர்களுக்கு மட்டும் கை கொடுத்ததாக அமைந்தது. ஒருநாள் சம்பத்தி ரிசியார் கல்லூரிக்கு அருகாமை யிலுள்ள ஒரு வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோழுது, ஏழைத் தாய் ஒருத்தி தன் பைய னைப் படிப்பிக்க வசதி இல்லையே என்று அழுது புலம்பியது இவ ருடைய காதுகளுக்கு எட்டியது, தானே அந்தப் பொறுப்பேற்கி றேன் என்று சொல்லி தன் செலவிலேயே அந்தச் சிறுவனப் படிப்பித்து வாழ்க்கையில் முன் னேற்றி வைத்தார்.
சிறுவனக இருந்தபொழுது, தம் தந்தையின் குடையின் கீழ் வெயில் படாதபடி நடத்திச் செல்லப்பட்டார். நடந்து செல் வதை தமது தேகப்பியாசங்க ளில் ஒன்ருகக் கருதிஞர். கல்லூ ரியில் படித்த காலத்தில், உடற் பயிற்சிக்கான எந்த ஒரு இயக் கத்திலும் சேர்ந்திருக்கவில்லை என்பது உண்மை என்ருலும் தமது தந்தையின் வழிகாட்ட லின் கீழ் பயின்று ஒரு சிறந்த டெனிஸ் விளையாட்டுவீரஞனர். தாம் விளையாடுவதற்கு கிளப் புக்குச் செல்கையில், இரு சிறு வர்களையும் கூட்டிச் சென்றுபோகும் வழி யிலே பாடம் சொல்லிக் கொடுப்பார். தித் திக்கும் தீன்பண்டங்களும் கொ டுப்பார். நவீன காலத்து மேதை அரிஸ்ரொட்டில் இந்த அடிக 6MTf|Tfir
இவரது தந்தை இவருக்கு பணித்த கட்டளைகள் பல. ஒவ் வொரு நாளும் காலையில் 200 அல்லது முன்னுாறு தடவைகள் ஒட வேண்டும். (பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில்- அதி காலையில் சுற்றிச் சுற்றி ஒடும் உருவம்- தாவீது அடிகள்தான் என்பதை நான் என் கண்களா லேயே பார்த் திருக்கிறேன்)
7

Page 6
குளிக்கும்போது முதலாக 200 வாளி எண்ணி எண்ணி அள்ளி ஊற்றவேண்டும். இப்படியான கட்டுக்கோப்புள்ள கட்டுப்பாடு களுக்குள் வளர்ந்தும், வாழ்ந் தும் வருகின்ற படியிஞலேயே, உடல் வளம் குன்ருது உள்ளத் திண்மை குன்றது- இண்ஞனைப் போலவே இன்று காட்சி அளிக் கிருர் . கையில் கடிகாரம் இல் லாதவர்களே-ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நாளில் இவரைக் கண்டால், நேரம் இதுதான் என்று ஊ கி த் து அறிந்து கொள்ளும் அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் அமைந்தி ருத்தது இவரது வாழ்க்கை.
எவ்வளவுதான் படித்திருந் தாலும் பட்டங்கள் பெற்றிருந் தாலும் இவைகளைப் பெரிதா கக் கருதுபவர் அல்ல இவர்.
ஒரு முறை சம்பத்திரிசியார் கல்லூரியில் பரிசளிப்பு விழா ஒன்று நடந்தபோது பட்டதா ரிகள் எல்லோரும் தங்கள் பட் உ  ைட களை
டங்களுக்கான அணிந்து வந்தனர். எல்லோரி லும் உயர்ந்த பட்டங்களைப்
பெற்றிருந்த கலாநிதி தாவீது அடிகளோ என்ருல்-சாதாரண மாகத் தாம்அணியும் குரு உடை. யுடனேயே வந்திருந்தார்.
சம்பத்திரிசியார் கல்லூரி யில் இவர் ஆசிரியராகக் கட மையாற்றிய பொழுது, இவரது மாணவர்கள் என்னிடம் வந்து சொல்லுவார்கள் இன்றைக்குப் பத்துப் பிழைகள் மட்டும் திருத் திஞர் என்று. பாட நூல்களி லுள்ள தவறுகளையே தக்க ஆதாரத்துடன் சுட்டிக்காட்டும் தகுதி, திறமை இவருக்கு இருந்
தது. இப்பொழுது, ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று, தாம் பிறந்த இடத்திலிருந்தே ஈழத்துப் பெருமகன்- தமிழ்த் தாயின் தவ மகன்- மறைந்த மாமேதை ஞானப்பிரகாசம் சுவாமி தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை- "லீலா காதை" என்ற அழகு ஆராய்ச்சித் தலைப் புடன் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிருர், இந் நூலை வெளியிடுவதற்கு இலங் ைக அல்லது இந்தியாப் பல்கலைக் கழகங்களில் உள்ள துணைவேந் தர்கள் அல்லது பேராசிரியர்க ளிடம் இருந்து அணிந்துரை பெற்றுத் தரும்படி தனிநாயகம் அடிகளாரை இவர் வேண்டிய போது, அவர் எழுதிய பதில்"எவரிடமிருந்தும் எந்த அணிந் துரையும் உங்களுக்கு வேண்டிய தில்லை. நீங்கள் குறிப்பிடும் எவருக்காவது உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் பத்தில் ஒரு பகுதி முதலாகத் தெரியுமா
என்பது சந்தேகம். ஆகவே, தன்னிலே தானே பெறுமதி உடைய உங்கள் படையலுக்கு
அவர்கள் அணிந்துரை எழுதத் தகுதி ஏதும் இல்லை என்பது என் கருத்து அகில உலகிலும் தமிழ் முழக்கம் செய்துகொண் டிருக்கும் தமிழ்ப் பேர் அறிஞர் ஒருவர்களின் சிறப்பை எக்கா லத்தும் நிலைநாட்ட கத்தோ லிக்கக் குருவாகவும்- தமிழ்ப் பேர் அறிஞராகவும், ஏழை மக் களின் நண்பனுகவும் விளங்கும் தாவீது அடிகளின் சேவைக்கு தமிழ் மக்களாகிய நாம் ஆதரவு அளித்து- தமிழ்த் தாயின் பொன்னடியிலும் சிறந்து குவிய வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம், ! ★

மறப்பீரோ?
GourT ன்மாரி
எழுதி எழுதிக் குவிக்கின்ற
எழுத்து வீரத் தீரர்களே அழுகிப் போன காதலையே
அடுக்கிச் சொல்லால் வடிக்கின்றீர், பழகிய செக்கு மாடாகப்
பயின்ற பாதை போகின்றீர், அழுகி நாறும் சமுதாயம்
அதனை முகர மறந்தீரோ?
உங்கள் கதையில் வருபவர்கள்
உருண்டு புரண்டு பூங்காவில் தங்கள் உள்ளக் காதலினைத்
தளிர்க்கச் செய்தல் காண்கின்றேன், எங்கள் உலகில் இருப்பவர்கள்
இரவும் பகலும் உடல்தேய தங்கள் உழைப்பைக் கூழுக்காய்
தருதல் ஏணுே மறக்கின்றீர்!
எண்ணத் தெரிந்த சிலரிங்கே
என்றும் தங்கள் இனம்வாழ பண்ணி வைத்த கருத்துக்கள்
பேணி வளர்த்த தத்துவங்கள், எண்ணிப் பார்க்கும் வேளையிலே
எல்லாம் புரிதல் காண்கின்ருேம், கண்கள் இருந்தும் குருடரென
கால மெல்லாம் இருப்போமோ!
மயக்கும் கவிதை கதைகளிலும்
வளரும் திரையின் படங்களிலும்
தயக்கம் இன்றிப் போதையினை
தந்து மயக்கல் எதற்காக?

Page 7
இயக்கும் எண்ண சக்தியினை
ஏய்க்க **விதி'யைப் படைத்திட்டீர்,
இயக்கம் இன்றி எம்மவர்கள்
என்றும் இருப்பார் எனநினைப்போ?
*மனிதன்' என்ற சொல்போல
மந்திரச் சொல்லும் எதுஉண்டு? மனிதன் புழுவாய் நெளியாமல்
மயங்கிப் பயந்து சாகாமல் குனிந்து சரிந்த தோளுயர்த்தி
கொடுமை மடிய நிமிர்ந்திட்டால் மனிதன் வெல்வான் உணர்ந்ததனை
மலரும் புதுமை படைத்திடுவீர்!
ဒွို
3 கவிதைகள்
விதைப்பு! மு. கனகராசன்
என்ன இது "சின்னக் கவி' சொல்வ தின்று சில்லெடுப்பு செந்தீ! ஆன்று போய் வந்த அரிவாள் இன்று புதுக தந்த நெல் கவிதை எனத மணிகள் குவிய தவிக்க, நாமோ தணியும் வயிற்று புதுக்க விதைக்க ஏக்கங்கள் அதுவும் வளர்கிறதே! திக் கெங்கும்
எரிகிறது வைக்கோல் தெரிகிறதே செந்தீ
வேட்டு!
அடைத்து வைத்த ஆலயக் கதவு காத்து வைத்த கோத்திரப் பிரிவு பதுக்கி வைத்த பழைய நோட்டு!
10

e
A YA ** : VUY r V7 AN A A SM a Ea, O KARAGE
Y W. W. v.v.
al
குறுநாவல்
பிஞ்சுப் பழம்
*(926oofu//răr”
அருமபு
இரு பிரதான வீதிகள் ஒன்றை ஒன்று ஊடறுக்குமிடத் தில் சங்கமித்துப் பிறந்த சந்தி. அதன் நான்கு கிளையின் இரு மருங்கிலும் நெருக்கமாகப் பல வித வியாபார ஸ்தலங்கள். அவற்றின் பெருக்கத்தால் சந் தியை மையமாகக் கொண்ட பட்டினம். அந்தப் பட்டினத் துக்கூடாக எல்லா வீதிகளிலும் இன்று பஸ் வண்டிகள் ஒடுகின் றன. ஆணுல் பொதுவான "பஸ் ஸ்ரான்ட்" ஒன்று அந்தப் பட் டினத்துக்கில்லை. தனித்தனி யாக ஒவ்வொரு வீதிகளிலும் பஸ்தரிப்பு நிலையங்கள். சந்தியை அடுத்து நான்கு திக்கிலும் பஸ் வண்டிகள் நிறுத்தப்படுவதால், ஒரு வண்டியிலிருந்து இன்னெரு வீதியில் ஒடும் வண்டியைப் பிடிப் பதற்கு எப்போதும் பிரயாணி கள் ஒட்டப்பந்தயம் நிகழும் அவலமான பட்டினம் அது.
ஆனல் இதுபோன்ற சிறிய பட்டினங்களில் பெரும்பாலும்
பெறமுடியாத வசதிகள் சில இங்குண்டு. சினிமாப் பிரியர்க ளுக்கு மூன்று தியேட்டர்கள். அறளைபேர்ந்த சுருதியில் உள்ள கிழங்களுக்குச் சந்தியை ஒட்டி ஞற்போல ஒரு பழைய மடம். மதுப் பிரியர்களுக்கு மூலைக்கு மூலை தேனிர்க்கடைகள் என்ற பெயரில் சாராயக் குதங்கள். அடிக்கடி புகையும் சாதிச் சண்
டையை நூர்க்கப் பொலிஸ் ஸ்ரேஷன், பெரிய ஒரு தபாற் கந்தோர், இவற்றுக்கெல்லாம்
மேலாகக் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மூடை சுமக்கக் கூலி ஆட்கள்.
இந்தச் சிறிய பட்டினத்தில் வ்வளவு தொகையான கூலி யாட்களைக் காண்பது ஆச்சரியத் தான். இவர்களில் பெரியவர்க ளாக உள்ளவர்கள் கடைகளில் மூடைகளைத் தூக்கியும், சைக் கிள்களில் ஏற்றிச் சென்று பறித் தும் தொழில் செய்கின்றர்கள். இவர்கள் தூக்கும் மூடைகளை அசைக்கத்தானும் இயலாத பையன்களின் கூட்டம் பெரிய

Page 8
வர்களைவிட அதிகம். பையன் கள் அதிகாலையில் பெரியவர்க ளுக்கு முன்னதாகவே பட்டினத் துக்கு வந்து கூடிவிடுவார்கள். வான்கள், பஸ்வண்டிகளில் வந் திறங்கும் வாழைக்குலை, பூசி னிக்காய், சிறிய மூடைகள் என்பவற்றை இறக்கிக் கொடுப் பதும், தூக்கிச் செல்லுவதுந் தான் இவர்கள் தொழில். இவர் கள் எல்லோரும் பத்து வயதுக் கும் பதிஞன்கு வயதுக் கும் இடைப்பட்ட ஒரு மட்டங்கள். இவர்களின் தோற்றமே இவர் களைப்பற்றிப் ப ல வ ற் றை ச் சொல்லும். அழுக்கடைந்த சாரங்கள் அரையில், பரட்டைத் தலை, பலநாள் குளிக்காது பொ ருக்கடித்த உடல், சிலருடைய கழுத்தில் ஒரு லேஞ்சி, இத் தியாதிக் கோலத்தின் மொத்த உருவந்தான் இவர்கள். இவர் களிலிருந்துதான் வளர்ந்து பதவி உயர்வு பெற்றுக் கடைகளுக்கு மூடை சுமக்கச் செல்கிருர்கள். இதேவேளையில் கீழ்மட்டத்திலி ருந்து பையன்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருக் கும்.
இவர்களுக்குக் கொடிகா மத்திலிருந்தும் யாழ்ப்பாணத் திலிருந்தும் வரும் "வான்' களில் தான் என்றைக்கும் கண். சந் தை நாட்களில் கொடிகாமத் திலிருந்து காய்கறிகள் வந்து இறங்கும். யாழ்ப்பாண வான் கள் நீர்வேலியில் வாழைகுலை களே ஏற்றிக்கொண்டு வரும். இதே வான் ஒன்று வாழைக் குலைகளோடு வந்து நிற்கிறது. பையன்கள் எல்லோரும் விழுந் தடித்துக் கொண்டு வானை நோக்கி ஓடுகிருர்கள்.
கொண்டக்ரர் வானவிட் டுக் கீழே இறங்குகிருன் பையன் கள் ஒவ்வொரு நிக்காக வானில்
ia
தாவி வாழைக்குலையைப் பற்றி இறக்க ஏறுகுகிறர்கள்.
டேய் போங்கடாநாய்க ளே. ஆக்கள் இறங்க ல்லை. அதுக்கிடையிலை °: இறக்க வந்திட்டியள். வானச் சுற்றிவந்து பையன்களை அடித் துத் துரத்துகிருன் கொண்டக் ரர். பையன்கள் அவன் அதட் டலில் அசந்துவிடவில்லை. அவர்களுக்குப் பழகிப்போன சம்பவம்.
இறங்கிய பிரயாணிகளிடம் ஒவ்வொருவராகக் காசை வாங் குகிறன் கொண்டக்ரர். இதற் கிடையில் பையன்களிடையே போட்டி தோன்றுகிறது.
-- "தெய்வானை நாச்சியாற் ரையை நான்தான் இறக்கிற ஞன்."
"ஏன் தெய்வான நாச்கி யார் உன்னைமட்டுந்தான் இறக் கச் சொன்னவவோ.. Gunt
-T. . . . . .
*இல்லையடா மடையா. இது வள்ளியம்மை நாச்சியாற் Tை... , , , y
'இல்லை. இல்லை. இது தெ ய் வா னை நாச்சியாற்ரை தான். ,
"சரிபாப்பம். பந்தயம்."
"என்ன பந்தயம். "நான் சொன்னது பொய் பெண்டால் நான் இறக்கிற குலைக்காசும் உனக்கு."
* பிறகுஏமாத்தக்குடாது." "நான் ஏமாத்தமாட்டேன். அப்ப நீ என்ன பந்தயம்."
"நான் பொய்யெண்டால். நான் இறக்கிற காசு உனக்கு."
“ Fifi untu LuGB.D., . ”

"நீ ஏமாத்திணியெண்டால் குடல் எடுத்துப்போடுவன்.
"நான் ஏன்ரா ஏமாத்தி றன்..."
கொண்டக்ரர் வானுக்கு மேல் ஏறி, கட்டி இருந்த கயிற்ரை அவிழ்த்து வாழைக் குல்களை ஒவ்வொன்ருக இறக்கு கிருன். பையன்கள் இழுபறிப் பட்டு வாழைக்குலையைப் பறித் துக்கொண்டு "மாக் கட்" டை நோக்கி ஓடுகிருர்கள். திரும்பி வருகிருர்கள், மறுபடியும் தூக் கிக்கொண்டு ஓடுகிருர்கள், குல இறக்கி முடிந்து வான் புறப்ப டுகிறது.
எல்லோரும் போய் தெய் வான தாச்சியைச் சுற்றி வளைத் துக் கொள்ளுகிறர்கள்.
டேய். டேய். தள்ளி நில்லுங்கெடா. ஆளிலை விழு கிருங்கள்."
நாச்சி குறுக்காகக் கட்டி இருக்கும் சேலைக்குள் மார்புக் கிடையே செருகி இரு க் கும் கொட்டைப் பெட்டியை உருவி எடுத்துச் சில்லறைகளேப் பொ றுக்குகிருள்.
"நாச்சி. நாச்சி. நான் அஞ்சு குலை.
*நாச்சி. எனக்கு நாலு." நான். ஆறு தூக்கினனன் நாச்சி.",
ஒரு குலேக்கு ஐந்துசதவீதம் காசு கொடுத்து முடிகிறது. நாச்சியைச் சுற்றிநிற்கும் பை யன்களிலிருந்து விலகி இவற்றை ஆவல் ததும்பப் பார்த்தவண் னம் சிவாசி. தோற்றத்திலும் மற்றப் பையன்களைவிட வித்தி யாசம், அமுக்கில்லாத அரைக் காற்சட்டையும் சேட்டும் அணிந் திருக்கிறன். தலே ஒழுங்காக வாரி விடப்பட்டிருக்கிறது:
அவன் ஒரு பள்ளிக்கூட மாண வன் போலத் தோன்றுகிருள்.
பையன்களின் கணக்கைத் தீர்த்துக்கொண்டபின் தெய்வா ளைநாச்சியின் கண்களில் சிவாகி பட்டுவிடுகிருன்.
"ஆரது. சு ப் பற் ரை மோனே. நீயும் வாழைக்குலை தூக்க வற்திட்டியேடா. சொப் பன் உன்னை லண்டன் வரைக் கும் படிப்பிக்கப் போறனென் டான்."
சொல்லும்போதே நாச்சி யின் மனம் குதூகலித்துக் கொண்டது.
"ஒம் நாச்சி. துரை படிப்பு முடிச்சுப்போட்டார். டே ய் இவர் சி. ஏன்ரா அங்கினை நிக் கிருய் உப்பிடி நிண்டால் ஒத் துக்கொள்ளாது. நீ தூக்கின குலேக்கு நாச்சியிட்டை வற்து காசை வாங்கு.
சிவாசியைத் தொழிலுக்கு அழைத்து வந்த பக்கத்து வீட்டு நண்பன் அழகன், அவனப்பார்த் துச் சொல்லுகிருன்.
நாச்சி விழிகண் விரித்து அழகன ஒருதடவை வெறித் துப் பார்க்கிருள். அவள் பார் வை அவன் சொல்வது பொய் என்பதைத் தெளிவு படுத்துகி றது. இருந்தாலும் "அப்பன்ரை மோனை ஒருக்கால் சோதிக்க வேண்டும் எ ன் பது அவள் விருப்பம்.
நீ எத்தினை குல தூக்கி ன நீ."
திவாசி மெளனமாக கிருள்.
"டேய் சொல்லன்ரா. நாலு குலயெல்லே தூக்கினனி" அழகன் முந்திக்கொள்ளுகிருன்
நிற்

Page 9
*டேய் கள்ளப்பயலே. உன்னை ஆரடா கேட்டது. வாயைப் பொத்திக் கொண்டு போடா..? நாச்சி அழகனைப் பார்த்துச் சீறுகிருள். m
"ஆ. நீ சொல்லு. நீ துரக் கினதெத்தன.
சிவாசி வாய்திறக்கவில்லை.
* அப்ப. நீ ஒண்டும் தூக்க யில்லையே..."
தலை ஆட்டுகிருன் இல்லை யென்று.
"நீ வாழைக்குலை தூக்க வரேல்லெயே. பின்னை இஞ்சை ஏன் வந்தனியடா
"ஆ. அவர் பின்னை இஞ் சையேன் வந்தவர். தூக்கத் தான்’ என்ருன் அழகன்.
"நீங்கள் அவனையும் தூக்க விட்டாயெல்லோ .. நாயன் மாதிரி இழுபறிப்படுகிறது. ஊ.ம் இந்தா உனக்கும் பத்திச் சேம், இரண்டு குலேக்காசு.
"நான் ஒண்டும் தூக்கெ யில்லை. சிவாசி கூசிச் கூசிச் சொல்லுகிருன்.
"அதெனக்குத் தெரியும். எண்டாலும் கொண்டுபோ."
“ ourršвL-T. 6 тšвL-т... நாச்சி உனக்குச் சும்மாய்தாரு. எங்களுக்கொண்டால் ஒரு சதம் கூடத்தரமாட்டா. போடா. போ..?
ஏககாலத்தில் பையன்களின்
குரல் ஒன்ருகச் சேர்ந்து ஒலித்
தது.
* 6δ. Π.,, ... (6) 1 Π....... பிடிகா
சை. நாச்சிவலிந்து அழைத் தாள்.
44
XO 够 $? "எனக்கு வேண்டாம்.
Jair print......... ஆச்சரியந் தாங்க இயலாது அதிர்ந்து போனுள் நாச்சி.
*நான் குலைதூக்கெயில்லை.
எனக்குக் காசு சும்மா வேண்
டாம். சொல்லிக்கொண்டே திரும்பினுன்.
"டேய் மடையா காசையும் வேண்டாமெண்டு ஆரும் சொல் லுவினமோ. அவனைக் கடிந்து கொண்டு திரும் பி ஞர் க ள் பையன்கள்.
இதற்குள் பந்தயம் பிடித்த பையன்கள் இருவருக்குமிடை மில் தகராறு முளைக்கிறது.
டேய் நான் சொன்னது போல தெய்வானை நாச்சியின்
ரைதானேயெடா. எடுன்ரை
EST Gð) F , , . . . . ,梦 W
*போடா. நான் சும்மா
சொன்னஞன். சொன்னப்போ லெ சொன்னபடி காசு தரவே ணுமோ.. p
*அப்ப ஏன்ரா பந்தயம் பிடிச்சனி.??
*பிடிச்சாப்போலே என்ண் வந்தது. ...!"
*6TL-L-rT 3FT60F......
Α. மடியில் பிடிக்கிருன். மற் றவன் கையைத்தட்டிவிடுகிருன். *டேய். எம். ஜி. ஆர் 3
குத்துக் குத்துவன்ரா.!"
' *Gl L-fr... GLIm... கிழட்டு எம். ஜி. ஆர். நான் ஜெயசங் கர் இடி இடிப்பன் தெரியுமோ!"
"வாடா கராட்டி அடி அடிச்
சுப்பாப்பம்."
*சரி 'வாடா பாப்பம்."

இருவர் சச்சரவும் முற்றிக் கொண்டு வருவதைக் கண்டு சிவாசி இடையில் நுழைகிருன். அவன் தலையீட்டால் சண்டை தவிர்க்கப்படுகிறது. அவன் படித் தவன் அவர்கள் பாராட்டுகிறர்கள்.
எல்லோருமாக மாக்கட்டுக் குள் போகிருர்கள். தோசை
விற்றுக்கொண்டிருக்கும் கிழவி
யிடம் கூலியாகக் கிடைத்த காசைக் கொடுத்துத் தோசை வாங்கிக் கொள்ளுகிருர்கள். "மார்க்கட்டுக்குள் காலியாகக் கிடக்கும் ஒரு புறமாகச் குந்தி இருந்தவண்ணம் கையில் ஏந்தி வைத்துத் தோசையைத் தின்கி ருர்கள், எ ல் லா வற் றை யும் சிவாசி பார்த்துக்கொண்டு நிற் கிருன். அழகன் தான் வாங்கிய தோசைகளில் இரண்டை சிவா சியிடம் நீட்டுகிமுன். சிவாசி வாங்கிக்கொள்ள மறுத்தே விடு கிருன். எல்லோரும் தி ன் று முடித்துக்கொண்டு பழையபடி வீதியில் வந்து கூடுகிருர்கள். சிவாகியும் அவர்களோடு இழு படுகிருன்.
அன்று மாலை பையன்கள் எல்லோரும் வீட்டுக்ாகுத் திரும் பும்போது சிவாசியும் வெறும்  ைக்யோடு போகவில்லை. அவன் கையிலும் ஐம்பது சதம் இருக் கத்தான் செய்தது.
மலர்
− Dறுநாட் காலை பொழுது இன்னும் புலராத வேளை. சிவாசி தூக்கம் கெட்டுக் கண் விழித்து விட்டான். ஆனல் பாயைவிட்டு எழும்பவில்லை. மனம் ஒரு நிலை யில் இல்லாமல் குழம்புகிறது.
நேற்றுப் போலவே வாழைக்
குலை தூக்கப் போவதா? அல்
என்ற கெளரவத்தை
வந்தாள்.
இவ்வளவு
லது பள்ளிக்கூடத்துக்கே போய் விடுவதா? பள்ளிக்கூடத்தை நினைக்கும்போது அவன் படித் துக் கொண்டிருக்கும் ஆருவது தரத்திலுள்ள மாணவர்களை மனக் கண்ணில் நிறுத்துகிருன். அவர்களோடு சேர்ந்து குதிக் கும் இன்பமான விளையாட்டை எண்ணுகிருன். ஆசிரியர்களின் அன்பையும் ஆ த ர  ைவ யு ம் உணர்ந்து பூரிக்கிருன். குறும்பு செய்யும்போது அவர்கள் கைக் கொள்ளும் மிரட் டலை அனுப வித்துச் சிரிக்கிருன்.
நேற்றைய அனுபவம்.
"நாச்சி. நாச்சி. எண்டு பின் ஞலை ஒடுறது. சீச்சீ. சலித் துக்கொண்டான். ஆனல் ஐம்
பது சதத்தைக் கையுள் பொத் திக்கொண்டு வீட்டுக்கு வந்த என்றைக்கும் எதற்கும் "வள்” என்று விழும் தாய் காட்டிய அன்பை இப்போது எண்ணும் போது உள்ளம் குளிருகிறது. அந்த ஐம்பது சதத்தில் பத்துச் சதத்தை எடுத்துச் சென்று ப்க் கத்திலுள்ள வயிரவருக்குக் கற் பூரம் வாங்கிக் கொளுத்திவிட்டு வயிரவரின் திருநீற் றை அள்ளி வந்து அவன் நெற் றிநிறையப்பூசி அசீர்வதித்தாள்.
வறுமை கவிந்து கிடக்கும் அவன் குடும்பத்தில் என்றுமில்லாத கல
கலப்பு இனிமேல் தன் கஷ்டங் கள் ஒழிந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அவள் நடத்தையில் தொனித்தது. சோ ற்றை க் குளைத்து அவனுக்கும் அவனுக்கு இளையவர்களுக்கும் பங்கிடும் போதும் அவனுக்கு ஒரு விசேஷ சலுகை. இப்படிச் சலுகையை காலமாக அ வ:ள் அவன் தகப்பனுக்குச் செய்வ தைத் தான் அவன் அவதானித் திருக்கிருன், படுக்கைக்குச் செல் லும்போது அவன் தானுவே பாயை எடுத்துப் போட்டுக்
5

Page 10
கொண்டு சுருண்டு விடுவதுதான்
வழக்கம். அதற்கு மாருக அவள் பாயை எடுத்துத் தட்டி விரித்து பழைய சா க்  ைக மடித்துப் பாய்க்குக் கீழ்த் தலையணையாக வைத்துப் படுக்க விட்டாள். அவன் படுக்கையில் கிடந்து இன்பத்தில் மிதக்கும்போது தான். அவன் தந்தை மதுபோ தையில் நிகிலதடுமாறியவண்ணம் அந்தக் கிராமமே அதிர "கள்ள armr sesir 6mrGOT I nr ført Gör... ... 酸 என்று பாடிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் வந்ததும் "எடியேய்." என்று அவன் தாயை அழைக்கும் குரல் கேட்டது. அவன் எதுவுமே அறி யாதவன்போல் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்ட வன், அப்படியே உறங்கிவிட் Lrresör.
அவன் ஐம்பதுசதம் உழைத் துவந்ததைத் தாய் அவன் தந் தைக்குச் சொ ைஞளோ என் னவோ சொல்லி இருந்தாலும் அவன் இருந்த மதுபோதையில் அவனுக்கு விளங்கி இருக்க இய லாது. பள்ளிக்கூடம் போகா ததை அறிந்து தகப்பன் ஒரு வேளை அடிப்பாரோ என்று நினைக்க அவனுக்குப் பயமாக இருக்கிறது. ஆனல் அவன் தாயின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் மகிழ்ச்சியும் வர வேற்பும் அவனை உற்சாகப்படுத் துகிறது. இன்றைக்கும் வாழைக் குல தூக்கப் போகத்தான்வேண் டும் என்று தீர்மானிக்கிருன். ஆஞல் நேற்றுப்போலத் தயங் கித் தயங்கிப் பின்னிற்பதில்லை என்று முடிவு செய்துகொண்
t
அப்போது அவன் தோழன் அழகன் கூப்பிடும் குரல் கேட் -سا
16
"சிவாசி. சிவாசி. இன் னும் எழும்பயில்லெயடா.. p நேரம் போகுது வெளிக்கிடு போவம்."
"வாறன். வாறன் கொஞ் Fth Gurray ... ” Tsirapy GoIF nr 6iv Góš கொண்டு எழுந்து அவசரம் அவ சரமாகப் புறப்பட்டுப் போகி முன் சிவாசி.
இன்று மற்றப் பையன்க ளோடு சேர்ந்து உற்சாகமாக அவன் வேெைசய்தான். வீட் டுக்குத் திரும்பும்போது அவளி டம் இரண்டு ரூபாய்க்குக் குறை யாமல் காசு இருந்தது. தாயி டம் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். நேற்றையைவிட இன்று வருமானம் கூடி இருப் பதைக் கண்டு அவளுக்கு அள விறந்த மகிழ்ச்சியும் பெருமித மும். 'அம்மா நான் இன்டைக் குப் படத்துக்குப் போறன் ." என்று அவன் கேட்டபோது அவள் தடைசொல்லாது சம்ம தித்தாள். அவள் இடக்குப்பண் ணுமல் சம்மதித்ததில் அவனுக் கும் அளவுகடந்த சந்தோஷமும் ஆச்சரியமுந்தான்.
முன்பென்ருல் ஒரு படம் பார்ப்பதற்கு அவன் படும்பாடு! அவளிடம் வாங்கும் அடி, வசவு, நச்சரிப்பு! அவள் தயவை அவன் வேண்டி நிற்பான். அழகனும் மற்றப் பையன்களும் அடிக்கடி படம்பார்க்கப் போ வ ைத க் கண்டு ஏங்குவான். விரும்பிய தை விருப்பம்போல அவர்கள் வாங்கி உண்ணும்போது, அவன் வாயில் ஊறும் நீரைத்தான் விழுங்கினன். அவர்களில் சிலர் சினிமாப்பாட்டுப் புத்தகங்களை வாங்கிவைத்துக் கொண்டு தமக் (5' tful onresor untudio 5&ru பாடுவார்கள். அவற்றை இரவ லாகப் பெற்றுக்கொள்ள அவன் பட்ட பாடுகள்.

இன்று நிலைமை முற்ருகவே மாறிவிட்டது. அவனும் எண் ணம்போல அனுபவிக்கலாம். யார் தயவும் அவனுக்கு வேண் டியதில்லை. அவன் தயவைத் தான் அவன் தாய் இன்று நாடு கிருள்.
*த ம் பி சாப்பிட்டுட்டுப் படத்துக்குப்போ. * தாய் சொல்கிருள்.
"எனக்கு இப்ப வேண்டாம். நான் கடையிலே சாப்பிட்டிட் டன். பிறகு வாறன்."
சொல்லிக் கொண்டிருக்க அழகன் வருகிருன். இருவரும் சேர்ந்தே படம்பார்க்கும் திட் டத்தைத் தீட்டியவர்கள், "சரி வா போவம். . . * சொல்லிக் கொண்டு அழகனின் தோள்மேற் கையைப் போட்டவண்ணம் இரு வரும் வெளியே போகிழுர்கள்
அவனும் அழகனும் போய்க் கொண்டிருக்கும் கோலத்தைப் பார்த்து, “புரியனுக்குப் புரிய ஞக என்ரை புள்ளை தலைநீட் டிப்போட்டான். " என்று நெஞ்சு நிறைய எண்ணி இறு மாந்தாள் அவன் தாய்.
பிஞ்சு
ஒரு மாதம் வளர்ந்தது கழிந்தது. சிவாசி முற்ருகவே பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டான். அவன் மட்டு மல்ல அவன் சகாக்களில் சிலர் பள்ளிக்கூடப் பக்கமே போன தில்லை. எல்லோரும் பதின் ஞன்கு வயதுக்குட்பட்டவர்கள் தான். இந்த நாட்டில் கட்டா யக் கல்வி என்பது பெயரளவில் தான். இவர்களைக் கல்விக்காகக் கட்டாயப்படுத்துவார் எவரு
மில்லை. இவர்களுக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை. இவர்கள் கணிப்புப்படி சிவாசி படித்த வன், விஷயம் அறிந்தவன். இதனுல் மிக வேகமாக இவர் கள் மத்தியில் அவனுக்குச் செல் வாக்கு ஓங்கியது. இவர்களெல் லோரும் ஒரே கிராமத்தவர்க ளென்பதும் இன்னுெருகாரணம். அவன் மிக வேகமாக வளர்ந்து கூலிப்பையன்களின் தலைவனகி விட்டான்.
அவன் அரையில் இன்றும் அரைக் காற்சட்டைதான் இருக் கிறது. அது அழுக்கடைந்து பின்புறத்தில் சிறிது கிழிந்தும் போய்விட்டது. 2- - th 60 L மறைக்கச் சேட் இல்லை. தலே யில் ஒரு லேஞ்சியை இறுக்கிக் கட்டி இருக்கிருன்.
வாய் வெற்றிலை யைக் குதப்ப ஆரம்பித்து விட்டது. அடிக்கடி உதட்டில் பீடி புகை யும் இரண்டொரு தினங்கள் இனித்த கள்ளையும் சுவைத்துப் பார்த்தான். இப்போதெல்லாம் அவன் சினிமாப் பார்க்காத நாட்கிடையாது. சில தினங்க ளில் இரண்டு காட்சிகளையும் பார்ப்பான். எப்போதும் சினி மாப் பாடலை வாய் முணுமு ணுக்கும்.
வேலை இல்லாத வேளைக ளில் சந்தியை அடுத்துள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்கு ’ எதிரே யுள்ள கடையின் முன் விருந் தைதான் அவர்கள் குழுமும் இடம். அந்தக் கடை எப்போ தும் பலகை போட்டுக் கிடக் கும். அது அவர்களுக்குத்தான் வசதி. அவன் நடுவே வீற்றி ருக்க மற்றப் பையன்கள் அவ னைச் சுற்றி இருப்பார்கள். முதன் நாள் இரவு பார்த்த படத்தைப் பற்றி அவர்களுக்கு அவன் சுவை படச் சொல்லுவான். படத்தில்
17

Page 11
வந்த கதாபாத்திரங்கள் விட்ட குத்துகள், வெட்டுகளை அருகில் இருக்கும் நண்பர்கள் மேல் போட்டுக் காட்டுவான். எதிரே யுள்ள சுவர்களில் ஒட்டி இருக் கும் சினிமாச் சிங்காரிகளின் கவர்ச்சித் தோற்றங்களை புட் டுக் காட்டி ரசிப்பான். சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்து விட்டால் அவளுல்ை சும்மா இருக்க இயலாது. சிவா ஜியைப் போலவே எழுந்து நின்று நடித்துக் காட்டுவான். அவன் தகப்பனும் ஒரு சிவாஜிப் பிரியன்தான். அந்தப் பிரீதியில் தான் அவனுக்கும் சிவாசி என்ற பெயரைச் சூட்டினன். அந்த உணர்வில் அவனுக்கும் தான் ஒரு சிவாஜி என்ற எண்ணம் இயல்பாகவே வளர்ந்திருந்தது.
அவன் சிவாஜியைப் போற் றுகிறபோது எம். ஜி. ஆர். கட் சிப் பையன்களுக்கும் அவனுக் கும் மோதல் ஏற்படும். அது சிலசமயங்களில் கைகலப்பாகக் கூட மாறுவதுண்டு. எப்படியும் அவன் விட்டுக் கொடுக்கமாட் டான். சிவாஜியைக் குறைகூறு வது தன்னைப் பழிப்பதுபோ லவே அவனுக்கு இருக்கும். அடித்து இடித்தாவது அப்படி கூறினவர்களே மட்டம்தட்டத் தயங்குவதில்லை. சிலநாட்களில் இவர்கள் தொல்லையைப் பொ றுக்க இயலாது, அருகிலுள்ள மடத்தில்உள்ள கிழங்கன் யாரா வது எழுந்துவந்து எல்லோரை யும் அடித்து விரட்டுவதுண்டு. அவர்களுக்கு இதுவும் ஒருவிளை
யாட்டாகத்தான் இருக்கும். எழுந்து வீதிக்கு ஓடுவதும்,
திரும்பவந்து கூடுவதுமாக இருப் பார்கள். அவர்கள் கிராமத் தைச் சேர்ந்த வளர்ந்தவர்களும்
தூக்குவதற்கு மூடை இல்லாது
போனல் அங்குவந்து தங்குவார் கள். பையன்கள் எல்லோரும்
18
ஆசை. எல்லாவற்றிலும்
அவர்களோடு சேர்ந்துகொண்டு எந்தவித வம்பு பேசுவதற்கும் கூச்சப்படுவதில்லை.
பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் ஸ்"க்குக் காத்துநிற்கும் பெண் களை ரசிக்கவும் விமர்சிக்கவும் பையன்களுக்குக் கொள் ளை (முன் னுக்கு நிற்கும் சிவாசி இதிலும் முதல் ஆள்தான்.
"டேய். டேய். பார். . பார் அந்தச் சரக்கை.,
"arg5 lit... GT5-rr... Lig சையோ . சிவப்போ!
"அந்தச் சிவப்புத்தான். !
நல்லசரக்கு." ‘என்ரை ஜெயலலிதா மாதி if?u?añi)8äyG3 unurT l umrtrf !
"என்ன உன்ரை தாவோ."
"ஒமோம்.
ஜெயலலி
பின்னை ஆற்றையெடா..?
*ஜெயலலிதா எனக்கு."
*6Taörsor Lfr LD 60)LuLumr ,.. ʼ
ஓங்கி ஒரு குத்து விட்டான் GG fr6).
"ஐயோ. அம்மா." வயிற் றைப் பிடித்துக்கொண்டு நிலத்
தில் இருந்தான் மற்றவன். அவ்வளவோடு அவனை விட்டுவி
சொன்ன ய்
டவில்லை. கா தி ல் பிடித்துத்
திருகினன்.
“ஆற்ரை. ஆற்றை. சொல்
லடா. சொல்லு ...”*
"ஐயோ. காதைவிடடா. காதைவிடு.
"முதல்லெ சொல்லு ஆற் ரை...'
*உன்ரைதான். கTதை
விடு.

"அப்படிச் சொல்லு. இனி மேல் எவணுவது ஜெயலலிதா தன்ரை எண்டு சொன்னுனே குடல் எடுத்துப் போடுவன். ஆமாம்.
சொல்லிக்கொண்டு பக்கத் திலுள்ள தேனீர்க்கடைக்குச் சென்று, ஒரு பிளேன்ரீ பருகி ஞன். பீடி ஒன்றை வாங்கிப் புகைத்தவண்ணம் கம்பீரமாகத் திரும்பி வந்தான்.
அவன் எழுந்துபோன சம யம் பையன்கள் மத்தியில் ஒரு பிரச்சினை கிளம்பியது. இப் போது அந்தப் பட்டினத்தில் வெவ்வேறு தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் சிவாஜி நடித்த படமா, எம். ஜி. ஆர். நடித்த படமா, சிறந்ததென் பதுதான் பிரச்சினை. அவர்களில் பலர் எம். ஜி. ஆர். கட்சிதான். அவர்கள் எல்லோரையும் அவன் ஒருவன் அடக்கி வைத்திருந் தான். அவன் இல்லாத சமயம் பார்த்து எம். ஜி. ஆர். கட்சி கையோங்கி இருந்தது.
அவன் வந்து சேர்ந்தபின் னரும் அந்தச் சலசலப்பு அடங் கவில்லை. ஆனல் எதிர்க்கட்சிக் காரர்கள் அவனுக்கு அஞ்சிச் சற்றுப் பின்வாங்கிஞர்கள்.
ஆனல் அழகனுக்கும் அவ னுக்கும் இந்த விஷயமாக நீண் டகாலமாகவே கருத்து முரண் பாடு, அவனுக்கு மதிப்புக்கொ டுக்க கூடாதென்ற எண்ணமும் அழகன் மனதில் இருந்து வரு
கிறது. அவனைத் தொழிலுக்கு'
அழைத்து வந்தவன் தான் என் பதால் அவன் தனக்கு மரியா தைகாட்ட வேண்டும் என்று அழகன் கருதினன்.
அழகன் த ன் னை மதிப்ப தில்லை என்றும் ஒருநாளைக்கு அழகனை மட்டந்தட்ட வேண்
டும் என்றும் அவன் சந்தர்ப் பத்தை எதிர்பார்த்திருந்தான்
மற்றப் பையன்கள் பின் வாங்கியதுபோல அ ழ க ன் சோர்ந்துவிடவில்லை.
இருவருக்குமிடையில் வாக் குவாதம் வளர்ந்தது. ஆத்திரம் பொறுக்க இயலாத கட்டத்தில் சிவாசி அழகன் நெஞ்சில் பிடித் துத் தள்ளினன். அழகனும் அவன் நெஞ்சில் கையால் தள் ளினன்.
தன் மேலில் அவன் கை
போட்டுவிட்டான் என்றதும் அவனுக்குக் கோபம் சீறி க் கொண்டு வந்தது. கையால்
தொடையில் தட்டிக்கொண்டு
பொங்கி எழுந்தான் அவன். அழகனின் சாரத்தில் எட்டிப் பிடித்தான். அழகன் அவன் பிடியிலிருந்துஇழுத்துக்கொண்டு வீதிக்கோடினன். அவன் எழுந்து பின்னல் பாய்ந்து துரத்தினன். அழகன் தட்டுப்பட்டு சைக்கி ளுக்குக் குறு க் கே வீதியில் "மடார்" என்று விழுந்தான். அவனும் த ன் முயற்சியைக் கைவிட்டுத் திகைத்து நின்ருன்.
சைக்கிளில் வந்தவர் சைக் கிளை நிறுத்திக்கொண்டு பல்லை நெருடி கனல் கக்கப் பார்த்தார் அவனும் அப்போதுதான் அவ
ரைப் பார்த்ததும் திகைப்பு
அதிகமானது. அவர் அவனு
டைய வகுப்பாசிரியர்.
* டேய் சிவா. வாஇஞ்
சை.” ஆசிரியர் அழைத்தார்.
அவன் த லை யி ல் கட்டி இருந்த லேஞ்சியை அவிழ்த்துக் கொண்டு மிக அடக்க ஒடுக்க மாக அவர் முன்னே போய்த் தலை குனிந்து நின்றன். இதற் கிடையில் அழகன் எழுந்து கை யிலும் காலிலும் உண்டான சிராய்வுகளுக்கு எ ச்சியைப் பூசத் தொடங்கினன்
19

Page 12
*நீ ஏன் பள்ளிக்குடம் வாற தில்லை. . −
அவன் வாய் திறக்கவில்லை : ‘என்ன உனக்குக் காது கேக்கயில்லையா..."
"ஐயா மறிச்சவர் சார்." "ஐயா ஏன் மறிச்சவர்."
"ஏன் பேசிருயில்லை, உனக் புத்தகமில்லையெண்டாய் வாங்கித் தந்தன்.
குப் புத்தகம்
பிறகேன் வராமல் நிக்கிருய்
"எடே தம்பி. நீ படிக்கக் கூடியவன்ரா. படிக்கவேண்டிய வயதிலெ படிக்கவேணுமடா. நீ எல்லாம் படிச்சு ஏன்ரா நல்லா, பெரியவன வரக்கூ டாது. ! நான் உன்ரை ஐயா வுக்கெல்லாம் சொல்லி இருக் கிறன் உன்னைப்பற்றி. நீ இப்பி டித் தெரிவிலெ நிண்டால் எப் பிடியெடா நாங்கள் முன்னே DIADS) . . . . .
"என்ன ஒண்டும் பேசிரு யில்லை. தான் கொய்யாவுக்குச் சொல்லுறன் நீ போயாவுக்கு அடுத்த நாளைக்குப் பள்ளிக் குடம்வா. சரிதானே."
"ஒம் சேர்.
"சரிபோ அடிபடாதை."
சொல்லிக்கொண்டு அவர் போய்விட்டார்.
அவ னு க்கு ஆசிரியரைச் சந்தித்தது பெரிய வெட்கமா கவும் மனச் சோர்வாகவுமிருந்
தது. "இந்த அழகியாலைதான் அவர் என்னைக் கண்டார்.
20
என்று நினைத்து அழகன் மேல் பழியைப்போட்டு மனம் நொந் தான்.
ஆனல் அன்று மாலையும் அழகனும் அவனும் வீட்டுக்குச் செல்லும்போது கைகோத்துக் கொண்டுதான் சென்ருர்கள்.
பழம்
“பள்ளிக்கூடத்தில் இருக் கவேண்டிய சிறுவர்கள் தெரு விலே நிற்கிருர்கள். இவர்களில்
எத்தனைபேர் மேதைகளாக வரத் தகுந்தவர்களோ! இவர் களை எல்லாம் இழப்பதனல்
இந்த நாட்டுக்கு எவ்வளவு நட் டம்? இவர்கள் பிறந்த சமூகத் துக்கு எவ்வளவு இழப்பு? நன் மைதான் வேண்டாம். கள்ளங் கபடமற்ற பிஞ்சு மனங்கள் குதையும் வாதையும் கற்று, நெறிகெட்ட வாழ்வைப்பயின்று எதிர்காலத்தில் சமூக விரோதி களாகவளர்ந்து விடுகிருர்களே! அப்போது அவர்களைச் சமூக விரோதிகளாக முறை த் துப் பார்ப்பதைவிட, இப்போதே இவர்களை நெறிப்படுத்த மேலி டத்துக்குத் தெரியாததேளுே!" இந்த மண்ணில் எந்த ஒரு தனிமனிதனுவது உணவின்றி வாடும் கொடுமை சகிக்க இய லாததோ - அதற்குச் சற்றும் குறைவில்லாதது கல்வி இல்லாக் கொடுமை."
- இப்படி எல்லாம் சிந் தித்து உள்ளம் கொதித்தார் அவன் வகுப்பாசிரியர். அன்றே அவன் தகப்பனைத் தேடிக் கண்டு பிடித்தார்.
*எ ன் ன தேடிவாறன் ."
"என்ன வாத்தியார் என்
உங்களைத்தான்

னையோ. என்ன விசயம்."
இல்லை நீங்கள் செய்யிறது grif Gun... !*
"என்ன. அப்பிடி நான் என்ன செய்து போட்டன். குடிக்கிறதைச் சொல்லுறிய ளோ. குடிச்சாலும் நா ன் பிழைவிடமாட்டான்."
தடுமாறிக்கொண்டு சொல் அலுகிருன், கள்ளுமணம் “குப்" பென்று வீசுகிறது.
இல்லை நான் அ  ைதச் சொல்லயில்லை."
"பின்னை என்ன வாத்தி umTiit . . . !”
"உங்கடை மேன் சிவாசியை பள்ளிக்குடத்துக்கு Gillrtundi) மறிச்சுப்போட்டியளாம்."
'ஆர் சொன்னது நான் மறிச்சதெண்டு.”
"அவன்தான் சொன்னன்’
"அவனே சொன்னவன். மடையன். அவன் வராமல் விட்டானெண்டு எனக்கு இப்ப தான் நீங்கள் சொல்லத் தெரி யும். நாைெ ங்கெ. ருேட்டு வேலைக்குப்போறது. இரவு ஏழு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவன். அவன் பள்ளிக்கு வந் ததை வராததை எனக்கெப்ப டித் தெரியும்."
- தெரிந்து கொண்டு மன மறியப் பொய் சொன்னன். அவன் தெரிந்துகொண்டு தனக்கு மறைக்கிருன் என்பதை ஆசிரி யர் உணராமல் இல்லை. இருந் தாலும் காட்டிக்கொள்ளாமல்:
*எப்பிடி எண்டாலும் பிள் ளையளின்ரை படிப்பிலை கொஞ் சம் கவனமாக இருக்கவேணும்" எனருா
“ஓம் வாத்தியார். உதெ னக்குத் தெரியும். நானும் குறைஞ்ச படிப்புப் படிச்சன னல்ல. உங்கள் அளவு படிக்கா விட்டாலும் நான் உலகம் படிச் சிருககிறன் கனக்க."
எந்த ஒரு மனிதனும் தன் அறிவு மற்றவனை விடக் குறை வர்கக் கருதுவதில்லை. இதுவே மனிதனுட்ைய பெரிய அறிவீன மும், பலவீனமும், அதற்கு அவன் விதிவிலக்கல்ல என்பதை நெஞ்சில் நினைத்துக்கொண்டு மேலும் அவனை உற்சாகப்படுத்த எண்ணினர் ஆசிரியர்.
உங்களைப் பற்றி அறியாத வனல்ல நான். அது தா ன் சொல்லுறன் அவன் கவனமா கப் படிச்சால் டாக்குத்தராக அல்லது இஞ்சினியராக வரக் கூடியவன்.”
அவனுக்குப் பெருமை பிடி படவில்லை. இப்படி வரக்கூடிய மூளை சாலியைப் பெற்றவன் தான் என்று எண்ணும்போது கால்கள் நிலத்தில் பாவாது ஆகாயத்தில் மிதப்பதுபோலத் தோன்றுகிறது.
*அது ஏதோ வாத்தியார். நான் அவனை அனுப்பிவிடுறன். சரிதானே.”
* சரி. சரி. அப்பவாறன் ."
"அப்ப வாருங்கோ.
தள்ளாடிய வண்ணம் கை யைத் தலைக்குமேல் தூக்கி ஆசி ரியருக்கு விடை கொடுத்தான் சிவாசியின் தகப்பன் சுப்பன்.
போயாவின் மறுநாள் சிவா சியின் வருகையை எதிர்பார்த் தார் ஆசிரியர். பாடசாலை தொடங்கிச் சிறிது தாமதித்துத் தான் அவன் வந்து சேர்ந்தான். தாமதத்துக்குக் காரணம் எது
2

Page 13
வும் கேட்காது அவனே வகுப் புக்குள் அனுமதித்தார்.
மாணவர்கள் எல்லோரும் ஒரு புதியவனைப் பார்ப்பது போல அவனை அதிசயமாக நோக்கினர்கள். அவன் தோற்
றமே மாறிவிட்டது, வாழைக் குருத்துப்போல இருந்தவன் வாழை நாராக வாடி இருந்
தான். கண்கள் உள்ளேதாழ்ந்து கருவட்டம் போட்டிருக்கிறது. சுருள் சுருளாகப் படிந்திருந்த த ல் மயிர் சீப்புக்கடங்காது சிலுப்பிக் கொண்டு நின்றது.
அவன் ஏனைய மாணவர்க
ளில் இருந்து ஒதுக்கப்பட்டவன் போல எவரும் அவனேடு ஒட்
டிக்கொள்ளவில்லை. மாணவர் கள் கூடிக்கூடி அவனைப்பார்த்து முணுமுணுத்தனர்.
ஆசிரியர் ஒருதடவை அவர் களைப் பார்த்து முறைத்தார். சக மாணவர்களின் சலசலப்பு அடங்கியது. ஆளுல் அவர்க ளோடு ஒத்துப்போக இயலாத தடை ஒன்று அவனைப் பிரிப்பது போல் அவன் உணர்ந்தான்.
வகுப்பில் பாடங்கள் தொ டர்ந்து நடந்தன. நேரம் ஏற ஏற அவன் மனம் வகுப்பில் நிலைக்க மறுத்து வெளியே சஞ் சரிக்கத் தொடங்கியது.
"ச்ச. இப்போ. அங்கே நிண்டால் எவ்வளவுகாசு உழைச் சுப்போடுவன். இண்டைக்கு அவங்களெல்லாம் எ ன்  ைர உழைப்பையும் சேர்த்து ஒரு அடி அடிப்பாங்கள். V
- அவன் உள்ளம் இப்படி அவளுேடு பேசியது.
சிறிது நேரம் செல்ல ஒரு வடையைக் கடித்து ஒருபிளேன்ரீ குடிக்கவேண்டும்போலத் தோன்
2
றுகிறது: "இங்கே எங்கே. நினைத்துப் பெருமூச்சுவிட்டான்.
வாய் புளித்துக் கொண்டு
வந்தது.
“இப்ப ஒரு வெ த் தி லை
போட்டு வீடி அடிச்சால்.
நினைத்துக் கொண்டான்.
"அதுசரி இண்டைக்குப் பின் னேரம் அ ழ கி படத்துக்குப் போவன், நான் காசுக்கென்ன செய்யிறது. அம்மா தருவா. கேட்டா உதைதான் தருவா."
அவள் இண்டைக் கொரு வேளை வந்தாளோ என்னவோ. வந்திருந்தால் கட்டாயம் என் னைத் தேடி இருப்பாள். என் னைப்பார்த்துச் சிரிச்ச சிரிப்பு. அவளுக்கென்னிலெ. P.,
-இப்படி நினைத்துத் தன்னை யறியாமல் வாய்விட்டுச் சிரித் துக் கொண்டான்.
சில நாட்களுக்குமுன் மினி ஸ்கேட் மங்கை ஒருத்தி பஸ் ஸ"க்காகக் காத்து நின்ருள். அவன் தினமும் மேயவிடுவது போல பஸ் தரிப்பு நிலையத்தில் நிற்கும் பெண்களை விழிகளால் துளாவும் போது பார்வை அவள்மேல் பதிந்தது. முழந்தா ளுக்கு வெகு தூரம்போல் உயர்ந் துநின்ற கவுனுக்குக் கீழ்ப்பட்ட பகுதியில் நிலைத்த பார்வையை எடுக்க இயலாது தன்னமறந்து நின்றன். அவனது போதை மிகுந்த பார்வையை அந்த நவ நாகரிக மங்கையும் க ன் டு கொண்டாள். "களுக்" கென்று வாய்விட்டுச் சிரித்தும்விட்டாள் அவள் சிரிப்பில் அவன் கிறங் கினன். அவள் தன்னை நேசிப் பதாக அர்த் த ம் பண்ணிக் கொண்டு தினமும் அவளைத் தேடுகிருன். அவள் எண்ணம் , ஏற்பட்டதும் இதயம் ஏங்கத்

தொடங்கியது. வகுப்பைவிட் GL எழுந்து ஓடிவிடலாம்போ லத் தோன்றுகிறது.
வகுப்பிலுள்ள மற்ற மாண வர்களும் சிறிது சிறிதாக அவ ணைச் சீண்ட ஆரம்பித்தனர்.
கூலி.
*எடேய் .
“எடேய். ஐஞ்சேத்துக்கு வாழைக்குலை தூக்கி Wo - a XV a. -- s
"என்ரா. தூக்க  ைrழைக் குலை இல்லையா. இஞ்சைவந்தி ருக்கிருய்.
"எடேய் சிவாசி. எனக்கும் ஒரு வீடிதாவன்ரா."
கிண்டலும் கேலியும் அதி கப்படுகிறது. பொறுமையை இழந்து ஆசிரியரிடம் புகார் செய்கிருன்.
அவர் உருத்திர மூர்த்தி
துத் தண்டிக்கிருர், அந்தத் தண்டனையால் அவன் உள்ளத்து வேதனை தணிந்துபோகவில்லை.
கழிந்து பாடசாலை விடுகிறது. அவன் ஒரு திடமான முடிவோ டுதான் பாடசாலையை விட்டுப் புறப்பட்டான்.
மறுநாட்கால் அந்தச் சிறிய பட்டினத்தில் வான் ஒன்று வந்து நிற்கிறது.
"எடேய் தெய்வான நாச்சி யின்ரை வாழைக்குலை வத்திட் டுது.
--சொல்லிய வண்ணம் முன்
னுக்கு ஓடிக்கொண்டிருக்கிருன் சிவாசி.
அரும்பு மலர்ந்து பிஞ்சாகி முற்ருமலே பழுத்துவிடுவதனல் ஏற்படும் நட்டம் இந்தச் சமூ கத்துக்குத்தானென்பதைச் சமூ
யாகி, ஒவ்வொருவராக அழைத் கம் உணருமா ★
w O புத்தாண்டில் 66 @55 சந்தாதாரர் r रू ४ पात्र” A ஆகுங்கள்
புதிய இலக்கிய சிரியர 6LTD65gal. V d பரம்பரையைச் * 参 சிருஷ்டிப்போம். టియటీట్ugశ్రీ á5229 ஆண்டுச்சந்தா ரூபா 6-00
60கஸ்தூரிார்தியழிப்பானர்

Page 14
சிங்களக் கிராமியக் கதை
ஒரு ஊரில் ஒரு சந்நியாசி வாழ்ந்து வந்தார். அவர் சாத் திரம் சொல்வதில் மிகவும் கெட் டிக்காரர் என்று பெயர் வாங் கியிருந்தார். ஒருநாள் ஒரு தாய்
சந்நியாசியிடம் அழைத்துவந்து, "குருவே! இவ ளுக்குத் திருமணம் . அதனல் இவளதுபலனைத் தெரிந்துகொள் ளலாமென்று இவளையும் அழைத் துவந்துள்ளேன்’ என்ருள்.
தன் மக
"உனது மகள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிருள். இவளது கண்கள் பிரகாசிக்கின் றன. உடல் வாளிப்பாக இருக் கின்றது. எல்லாம் இருந்தும் பயன் என்ன? இவளுக்கு வரப் போகிற மாப்பிளைக்கு இவளால் கெட்டகாலம். கல் யாணம் செய்து வைத்தால் மாப்பிளை ஒரு கிழமைக்குள் இறந்து விடு வான். உன்னுடன் இவள் வாழ்ந் தாலும் ஒரு மாதத்துக்கிடை யில் உனக்கும் உன் கணவனுக் கும் மரணம் சம்பவிக்கும் பெண் ணின் அழகிய மொழிபேசும்
24
முடியும்.
சந்நியாசியும் கரடியும்
ஈ. ஆர். திருச்செல்வம்
கருவிழிகளிலும், கொவ்வைப் பழ இதழ்களிலும் மயங்கிய சந் நியாசி பெண்ணைத் தன் நாயகி யாக்கிக் கொள்ள எண்ணி இப் படிக் கூறினன்.
சந்நியாசியின் சொற்களை நம்பிய தாய் மிகவும் துக்கத் துக்குள்ளாகி, "இக் கஷ்டங்க ளுக்கு என்ன பரிகாரம்?" என்று சந்நியாசியைக் கேட்டாள்.
"பெண்ணை வீட்டில் வைத் திருப்பது பொருத்தமல்ல. அது பெற்ருேர் உயிருக்கு ஆபத்தாக அதற்காக அவளைக் கொல்ல வேண்டியதல்ல. ஒரு பேழையில் வைத்து அவளை நாளை மாலை ஆற்றில் மிதக்க விடுங்கள். அதன்பிறகு அவ ளுக்கு நல்ல காலம் பிறக்கும்"
தாய் அழுதாள். ச ந் நியா சி தொடர்ந்து கூறினர்:
*அழவேண்டாம். நாளை மாலை பேழையில் வைத்து ஆற்
 

றில் மிதக்க விடு. அல்லது உன்னை மரணம் அழைத்துக் கொள்ளும்."
சந்நியாசியின் ஆலோசனைப் படி செய்வதாக சங்கற்பம் செய்துகொண்டு அ வ ள் வீடு திரும்பினுள்.
அன்றே சந்நியாசி ஒரு புதிய அறையை விகாரையில் அமைத் துக் கொண்டார். அறையை நன்ருக அலங்கரித்தார். மறு நாள் மாலையில் பிரசங்கம் வேறு வகையில் அமையும் என்று சந்
நியாசி பக்தர்களுக்குக் கூறினுர்.
"நாளை மாலை புதிய பணப் புத்தகம் ஆற்றில் மிதந்துவரும் அப்புத்தகத்திலுள்ளபடி புதிய முறையில் பண ஒதப்படும். ஒவ் வொருவரும் "சாதுசாது' என்று உரக்கக் கூறவேண்டும்."
மறுநாள் மாலை தனது ஏவ லாளர் இருவரை அழைத்து ஆற்றில் மிதந்து வரும் பணப் பெட்டியை எடுத்து வரும்படி சந்நியாசி பணிந்தார்.
பெட்டியை ஏவலாள ர் எடுத்து வந்தவுடன் அறையில் எடுத்துச்சென்று கதவைப் பூட் டிக் கொண்டார். அழகிய கன் னியை எதிர்பார்த்து அவசர அவசரமாகப் பெட்டியைத் திறந்தார். எதிர்பாராத வகை யில் பெட்டியிவிருந்து கரடி பாய்ந்தது.
விகாரையில் சந்நியாசி கூறி யவைகளையெல்லாம் பெண் தன் கணவனிடம் கூறியிருந்தாள். அவன் சந்நியாசியின் கபட நாடகத்தை விளங்கிக்கொண்டு சந்நியாசியின் கொடுமைகளுக் கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து இத் தந்திரோபாயத்தைக் கையாண் L-IT Gör.
கரடி பாய்ந்து சந்நியாசி யைத் தாக்கியது.
*ஐயோ! என்னைக் கரடி
தாக்குகிறது" என்று சந்நியாசி கத்தினர்.
வெளியில் நின்ற பக்தர்கள் "சாது சாது’ என்று குரலெழுப் பினுர்கள்.
மறுபடியும் சந்நியாசி கத் தினர்.
*எனது கண்களைப் பிடுங்கு கிறது!"
* சாது! சாது! சாது! இது புதிய பணப் புத்தகத்திலிருக் கும் பரசங்கமாகும்" என்கிருர் கள்
*எனது சதையை எல்லாம் உண்ணுகிறது!"
மக்களின் "சாது சாது!" என்ற கோஷம் வானைப் பிளந் தது, புதிய பண என்ற உணர் வால் பக்தர்கள் பக்திப் பரவ சத்தில் 'சாது சாது' என்று கோஷித்தபடி இருந்தார்கள்.
பிறகு எல்லாம் நிசப்தம் , பக்தர்கள் வழமைபோல் வீடு திரும்பினர்கள். மறுநாள் காலை சந்நியாசி வெளியில் வரவில்லை. பக்தர்கள் கதவுகளைப் பலவந் தமாக உடைத்தார்கள். கரடி அவர்களைப் பார்த்துக் கனைத் தது. கரடியைத் தந்திரமாகப் பிடித்துக் கட்டிவிட்டு சந்நியா சியைத் தேடலானர்கள். தசை போக எலும்புக் கூடு மாத்திரம் எஞ்கியிருந்தது.
删仓"顺
25

Page 15
ரகுநாதன்
படைப்புச் சுதந்திரமும்
சோவியத்
வெகுஜனங்களிடமிருந்து வெகுதூரம் விலகி, தந்தக் கோபுரத்தில் கலைஞன் வசிக்க வேண்டும் என்ற கருத்து இன்ன மும் நடமாடி வருகிறது. சமூ கத்திற்குத் தொடர்பற்ற கலை யின் உயர்தரக் குருவாக அவன் வசிக்க வேண்டுவது பற்றியும் பலர் கூறி வருகின்றனர். ஆனல் இந்தக் கருத்து பிறரை ஏமாற் றுவதாகும் அல்லது தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும். அல் லது இரண்டுமேயாகும். லெனின் கூறியது போன்று எந்தத் தனி மனிதனும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, அதனின்றும் தனித்து நிற்க முடியாது. ஆகவே சூழ் நிலையிலிருந்து முற்றிலும் விலகி நிற்கும் ஒரு கலே ஞன் என்றுமே இருக்க முடியாது. அவன் சமூ கத்தில் அதிகமான அளவுக்கோ குறைவான அளவுக்கோ பந்தங் கள் கொண்டவனுக இருக்க முடியுமேயன்றி, சமூகத்திலி ருந்து முழுமையாகத் தனிப்
69
எழுத்தாளனும்
பட்டு நிற்கமுடியாது. ஒரு கலை
ஞனின் நோக்கம் எதுவாக இருப்பினும், வாழ்வு, சமூகப் போக்கு, அதன் கருத்துக்கள்
ஆகியவைகுறித்து அவன் தனது நோக்கைக் கூறித்தானுகவேண் டும். அந்த அளவில் பார்க்குங் கால், கலை என்பது சிறந்த வருங் காலப் பாதையினைச் சுட்டிக் காட்டும்போது, அது உன்னத மான இலட்சியங்கள், கருத்துக் களின் வாகனமாகத் திகழ்கி றது. இது எல்லாக் கலைகளுக் கும் பொருந்தும்.
கலைஞன், கலை இவற்றின் நோக்கம் குறித்து சோவியத் எழுத்தாளர்களின் கருத்து இது வேயாகும். தான் யாரை ஆத ரிக்கிருன், தனது பேணு யாருக்கு எந்த நோக்கத்துடன் சேவை செய்கிறது என்பதை அறிவு பூர்வமாக உணராத ஒரு உண் மை எழுத்தாளன் இருக்க முடி யாது என்று அவர்கள் கருது
 

கின்றனர். ஒரு எழுத்தாளன் தனது மக்களுக்குச் சேவை செய் யத் தீர்மானித்தால், எல்லா மக்களின் சுதந்திரத்துக்கும். சமத்துவத்திற்கும் G3L ITT rTGB) வோரின் அணியில் சேர்ந்து கொள்ளத் துணிந்தால், அப் பொழுது, அவனது கோட்பா டுகளையும், குறிக்கோள்களையும். அவனது நாட்டு மக்களின் தார் மீகக் கோட்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாது. இதுதான் இலக்கியம் குறித்த சோவியத் எழுத்தாளர்கள், வாசகர்களின் * கட்சிக் கண்ணேட்டமா கும். மேலைய உலகின் விமர்சகர் கள், இத்தகைய கட்சிக் கண் ணுேட்டம் படைப்புச் சுதந்தி ரத்திற்கும், கலைச் சுதந்திரத் திற்கும் வரம்பிடுகிறது என்றும், அது ஆதாய நோக்கைக் கொண் டதே என்றும், எல்லாப் படைப் பாற்றல் கலைஞர்களையும் ஒரே மட்ட்த்திற்குக் குறைத்து விடு கிறது என்று கூறுகின்றனர்.
ஆனல் ‘கட்சி ஸ்தாபனமும் கட்சி இலக்கியமும்’ என்ற தனது கட்டுரையில் லெனின் கூறியது இதுதான்: *சொந்த முயற்சி, தனிமனித உத்திகள், சிந்தனை கற்பனை, உருவ, உள் ளடக்கத்தில் பல்வேறு வகை கள் ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்’ இந்தக் கூற்றுக்கு இலக்கணமாக சோவியத் கலை, தனித்தன்மை வளம் மிக்கதாக உள்ளது. அந்தக் கலைக்குள்ள ஒரே பொது வான அம்சம், அதன் நோக் கம், சித்தாந்தம், அதன் சமூகக் கண்ணுேட்டம்தான்.
சோஷலிசக் கலையை எதிர்ப் பவர்கள் சோவியத் சமூகத்தில் ஒரு கலைஞன் எதையும் ஏற்றுக் கொள்ளவோ, ஒப்புக்கொள்ள வோதான் முடியுமே தவிர, விமர்சிக்க முடியாது என்று கூறு
கின்றனர். இதற்கு ஆதரவாக அவர்கள் சல்ஷெனிட்ஸின்னைக் குறிப்பிடுகிறர்கள். அண்மையில் நோபல் பரிசு பெற்றதன மூலம் அவர் "பிரபலமர்' கியுள்ளார்; சோவியத் யூனியனில் அவரது படைப்புக்கள் வெளியிடப்படுவ தில்லை என்பதற்கு அவர்கள் அதை உதாரணம் காட்டுகின் றனர்,
ஆனல் சோவியத் இலக்கி யத்தில் ஈடுபாடுள்ள எவரும் சோவியத் இலக்கிய வளர்ச்சிக் காலம் முழுமையிலும் பிரசுரிக் கப்பட்டுள்ள டஜன் கணக்கான “விவாதத்திற்குரிய நூல்களை மேற்கோள் காட்டமுடியும். அந் நூல்களை எழுதிய ஆசிரியர்க வில்லெர் லியோனித் லியனேவ், விளாதீமிர் துதின்ட்சேவ், பே வல் நிலின், வாசில் பைக்கோவ், சிங்கிஸ் அய்த்மதோவ் ஆகிய இன்னும் பலர்.
ஆனல் சல்ஷெனிட்சினின் கதை முற்றிலும் வேறுபது ஒரு எழுத்தாளனக சல் னிட்சின் திகழ “ဦးဦး မှီ பதில் அவரது சோவியத் சகாக் கள் பெரும் அக்கறை கொண் டிருந்தபோதும், அவரது நடத்
தையும் எண்ணங்களும், எழுத் தாளர் சங்கத்தின் உன்னத 0f TGST இலக்கியங்களுக்கும்,
கோட்பாடுகளுக்கும் முரண்பட் டவையாகவே இருந்தன. சோ ஷலிச அமைப்பையும், சோஷ லிச நாட்டையும் முன்னேற்றும் பொதுவான இலட்சியத்தின் வழி நிற்பது எழுத்தாளர் சங் கம். அவரது சகாக்கள் மீண்டும் மீண்டும் அவரது போக்கையும் நடத்தையையும் மா ற் றி க் கொள்ளுமாறு கோரியும் கூட அவர் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள மறுத்தபோது தான், எழுத்தாளர் சங்கம் அவரை உறுப்பினர் பதவியிலி
E

Page 16
ருந்து வெளியேற்ற நேர்ந்தது. இப்பொழுதும்கூட, ஒரு பிரஜை என்ற முறையிலும், எழுத்தா ளன் என்ற முறையிலும், அவர் எல்லா உரிமைகளையும், சலுகை களையும் அனுபவித்து வருகிருர் . வேறு எந்த நாட்டிலும் ஒரு எழுத்தாளருக்கு அத்துணை சலு கைகள் இருக்க முடியாது என்று கூடக் கூறலாம். ஏனெனில் சோவியத் எழுத்தாளன் பணம் படைத்தோரைச் சார்ந்திருக்க வில்லை பெருவாரியான மக்க ளின் நலன்களையே சார்ந்திருக் கிருன் , அவனது நூல்கள் பெரு வாரியான அளவு விற்பனையா வதிலிருந்து கிடைக்கும் வருவா யைக் கொண்டே அவன் நேர் மையாகவும், கவலையின்றியும் வாழமுடியும். எனினும் சல்ஷெ னிட்ஸின் எழுத்துக்கள் சட்ட விரோதமாக நாட்டிலிருந்து கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் பிரசுரிக்கப்பட்டு, நீண்ட கால மாக சோவியத் எதிர்ப்பு நோக் கங்களுக்காக மே லை ய பிற் போக்கு வட்டாரத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த ன என்பதை அனைவரும் அறிவர், அதனுல்தான், கலாசார மதிப் புக்கள், இலக்கியப் பாரம்பரி யம் ஆகியவற்றை மேம்படுத் தும் உன்னத நோக்குடன் அல் லாது, சுயலாபம் தேடும் அரசி யல் உள்நோக்கங்களினல் தூண் டப்பட்டு நோபல்பரிசுக் கமிட்டி செயல்பட்டுள்ளது என்று சோ வியத் எழுத்தாளர் சங்கம் வருத் தம்தெரிவித்து உள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர், சல்ஷெனிட்சினின் பெயரும், அவரது எழுத்துக்களும், சில உலகப் பத்திரிகைகளில் திடீ ரெனப் பிரபலமாகி வருவதில் இருந்து இது தெளிவாகியுள் ளது. சோவியத் இலக்கியத்தில் 'நிபுணர்கள்" என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் மேலைய நாட்டு விற்பன்னர்கள்.
28
உலகு புகழ் பெற்ற டால்ஸ் டாய், ஷோலக்கோவ் ஆகியோ ரின் நூல்களுடன்கூட சல்ஷெ னிட்சினின் எழுத்துக்களை ஒப் பிடத் துணிந்துள்ளனர். ஆன லும் அவர்களது ஒப்பு நோக் கல்களை அவர்களே உண்மையில் நம்புகிறர்களா என்பது சந்தே கத்திற்குரியது. ஏனெனில் அவர் களது நோக்கத்திற்கு சல்ஷெ னிட்சின் கிடைக்காதிருந்தால், அவர்கள் வேறு யாரையேனும் பிடித்திருப்பார்கள். எது எப்ப டியிருந்தபோதும், சல்ஷெனிட் சினது எழுததுக்களின் இலக் கிய, அரசியல் சூன்யத்தை, பெருவாரியான வாசகப் பெரு மக்கள் தெளிவாக அறிந்து கொள்வதற்குப் பல நாட்கள் ஆகப்போவதில்லை.
ஒரு நாட்டு மக்கள் அனை வரது அனுபவத்தையும், எந்த ஒரு தனிப்பட்ட கலைஞனும் பெற்றுவிட முடியாது என்று சோவியத் எழுத்தாளர்கள் கரு துகின்றனர். சோஷலிச சமூகத் தின் ஆன்மீக வாழ்வில் இலக் கியம் ஒரு முக்கியமான அம்சம் எனவும், கருத்துக்கள் எண்ணங் களுக்கிடையிலான போராட் டத்தில் அது ஒரு கூர்மையான, இன்றியமையாத ஆயுதம் என வும் அவர்கள் கருதுகின்றனர். தங்கள் மக்களின் சித்தாந்த, தார்மீக, கவின் கலைக் கல்வியில் இலக்கியத்துக்குக் குறிப்பிட்ட பங்கு உண்டு. ஆனல் சமூகத் தில் அதனது நிலையும், தரமும் அது தனிப்பட்ட தன் மை உ  ைடத் தாயிருப்பதிலிருந்து பிறக்கவில்லை; புதியதொரு வளம் கொழிக்கும் சமூகத்தை நிர்மாணிக்கும் இலட்சியத்தில், அது மக்களுக்குச் சேவை செய் வதையும், தனது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் இருப்ப தையும்பொறுத்துத்தான் அதன் நிலை நிர்ணயிக்கப்படுகிறது. *

சு. வில்வரெத்தினம்
*
‘என்னில் தான் உந்தன் இயக்கம் இருக்கிறது இந்த உலகில் எனது இராசாங்கக் கட்டளையே உன்னைச் சுழற்றுது நானே உன் நாயகன் என் கையில் பம்பரம் நீ"
எள்ளி நகைத்தபடி என் மனம் கொக்கரிக்கும்.
*கோடை எரிவும் குளிர் மாரிப் பொழிவும் உன்னுள் நிகழ்த்தும் ஒப்பற்றவன் நான் வாடைப் புயலும் வருடுகிற தென்றலும் உன்னுள் வழங்குபவன் நானே'
தொடர்ந்து மனம்
ணவச் செட்டை விரித்தடிக்க
*பொறப்பா மனுேகரா பொய்ஊஞ்சல் கட்டாதே இறப்போ இருப்போ இன்பமோ துன்பமோ கறப்புனது கையிலென்று துள்ளாதே, இருளடைந்த வீட்டுக்குள் என்னை அடைத்துவிட்டு திறப்பைக் காட்டி ஏய்க்காதே எனக்குனது பூட்டை
உடைக்கும் வழிதெரியும்.
உருவி வெளிவந்து ஒளியூற்றில் முழுகும் வழிதெரியும்’
ஞானச் செருக்கிலே நான் சொன்னேன்.

Page 17
O
சொன்னதுமே மனம்தனது இருட்டு முகில் கவித்து இடி இடிக்கும். மின்னல் முகங்காட்டி ஒளிநானே என்றுதன் பின்னல் வழிவிழுத் தப் பார்க்கும்.
நானுே,
இருட்டு முகில் கவித்து இரவியை மறைக்காதே; என்னுள்ளே உதயம் எப்போதோ ஆயிற்று; ஆயினும் நீ தான் நெடுநாள் மறைக்கிருய், இனியேனும் இரவியின் கதிர்கள் என்னுள் எங்குந் துளைக்க விடு. அரிய பேர் விஞ்ஞானச் சிகிச்சை நடக்கட்டும் அதற்கு வழி விட்டு அகலுவாய் நந்தியே’
என்று மனத் திற்கு இறுமாப்புடன் சொல்லி குன்றுபோல் குத்திட்டிருக்க,
குன்றைப் பேர்க்கும் ராவணனுய் தோள் கொடுத்து என்னைப் பேர்த்து எகிறமனம் எத்தனிக்க ஒளியின் பெருவிரலால் ஊன்றி அழுத்தி விட்டேன். அமிழ்ந்து நசியும்
அழு குரல் கேட்கிறது; அதன் கடைசி மூச்சும் கரைந்து சிதைகிறது.
இப்போது இரவியின் கதிர்கள் என்னுள் எங்குந் துளைக்கிறது. பரவும் ஒளி ஒவ்வோர் அணுவிலும் தெறிக்கிறது,
இனிமேல் பிறக்கும் எண்ணங்களிலும் ஒளி சுடரும், இயலும் மனமும் ஒளியைக்காலும் இரவிக் கனியாகும்.

கதையின்கதை
மாத்ரு பூமி - என்னும் மலையாள ஏடு இந்தியாவின் ஒவ்வொரு மானிலத்தினின்றும் வெளியான சிறந்த சிறுகதைகளை மலையாள மொழியில் பெயர்த்து வெளியிட்டுவருகின்றது. அதன்படி இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட கன்னடச் சிறுகதை இது. கெ. எம். சீதாராமையா கன்னட இலக்கியவு லகில் முன்னணியில் நிற்பவர்.
ஓர் அறிமுகம்: ரவீந்திரன்
கெ எம். சீதாராமய்யா
தமிழில்: ரவீந்திரன்
மூலம்:
"பணம்’
கன்னடம்
Σζ
ராவ், உடனே பெங்க ளூர் போயாக வேண்டும். ஆனல் பஸ்ஸோ, இரயிலோ கிடைக்கு மென்ற நம்பிக்கையில்லை. கடை சிபஸ் நாலரை மணிக்குப் புறப் படுகிறது. இர யி ல் இரண்டு மணிக்கே கிளம்பிப் போயிருக் கும்.
அவருக்குத் தகவல் கிடைத் தபொழுது மணி ஆருகிவிட்டது. தேர்வுக் கட்டணம் செலுத்தி யாக வேண்டும். அடுத்த நாள் தான் கடைசித் தேதி. உடனே டி. எம். ஒ. செய்து நூறு ரூபாய் அனுப்பியாக வேண்டும். மகன் தந்திஅடித்துவிட்டான். "கிளப்" பில் சீட்டாடிக் கொண்டிருந்த பொழுதுதான் அது அவருக்குக் கிடைத்தது.
வினவினர்.
"வீட்டில் இப்பொழுதுதான் கிடைத்தது. உடனே நான் இங்கு கொண்டுவந்தேன்' ரா வின் இளைய மகன், தந்தியை அவருடைய கையில் கொடுத்து விட்டு, அவருக்குப் பின்புறமாக நின்றபடியே சீட்டாட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தான்.
ராவ் தந்தியை ஒருமுறை
பார்த்தார். "சரிதான்! அப்படி
யொன்னும் முக்கியமில்லை." அவர் முணுமுணுத்தார்.
"அம்மா இதெப் படிக்கலை யா தம்பி, அவர் மகனைப் பார்த்துக் கேட்டார்.
*படிச்சாங்க"
"மிஸ்டர் ராவ்! என்ன விஷயம்?" ராவினுடைய நண்பர்
"அப்படியொன்றும் முக்கிய மில்லை. எல்லாம் பணவிஷயம் தான்"
"பையன் தந்தி அடிச்சிருக்
காணுக்கும்?"
"ஆமாம்! பின்னெ இதெல் லாம் யாரு செய்வாங்க"
*அனுப்பிச்சு வையுங்கோ! எத்தனை நூரு? இருநூரு?"
31

Page 18
*எவ்வளவு கேட்டாலென்ன கவலைப்பட என்ன இருக்கு? எல்லாம் இங்கேயே இன்னிக்கு சம்பாதிச்சிட்டாரே, அடுத்த வர் யோசனை கூறினர்.
ராவ் மகனைப் பார்த்து 'தம்பி நீ போ, என்ருர்,
'மாட்டேன்" என்று தலையை ஆட்டியபடியே பிடிவாதமாக அங்கேயே நின்று கொண்டிருந் தான்.
"போகச்சொன்ன உடனே போகனும், சின்னப் பசங்களுக்கு
இங்கென்ன வேலை?" ராவ் சற்
றுக் கோபத்துடன் கூறினர். ஆனல் அவன் சற்றும் அசைய வில்லை. தந்தையின் முன்பு கிடந்த நோட்டுக்களையும் சில்ல ரைகளையும் பார்த்த படியே நின்றன். Y
so unrad ! அப்பனைப்போல வே மகனும், பணத்தை எடுத் துக்கொண்டு போகனும், இன் னிக்கு உங்க அப்பா எங்க பணத் தையெல்லாம் ஜெயிச்சிட்டார்" நண்பரின் பாராட்டைக் கேட்டதும் ராவுக்குத் தன்னைப் பற்றிய) நல்ல அபிப்பிராயம் தோன்றியது.\ மற்றவர்களு டைய முகத்தைப் பார்த்து இலேசாகச் சிரித்தார்.
"egyllum.........!" GoLuar தனது சங்கீதத்தைத் துவங்கி கின். அவன் நோட்டுக்களை வெறித்து ஒரு முறை பார்த் தான்.
*சரி சரி இந்தா வெச்சுக் கோ போ!' என்றபடி இரண்டு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்தார்.
பையன் வீட்டை தோக்கி
ஒடிஞன.
ராவ் சிறிது நேரம் தந்தி யைப்பற்றி யோசித்தபடி இருந் தார்,
莎名
"இவனெப்பத்தி என் னி சொல்றது? ஒன்னும் புரியலெ. முந்தாநாள்தானே பரீட்சைக்கு நூறு ரூபாவும், ஹாஸ்டல் பீஸ்"க்கும் ஆக இருநூறு ரூபா யும் அனுப்பினேன். திருடன் எல்லாத்தையும் தீர்த்துக்கட்டிட் டானுக்கும். போன வருஷமும் இப்படியே. பீஸ் கட்ட வேண் டிய பணத்தை சினிமாவுக்கும், ஒட்டலுக்கும் செலவழிக்கருன். பிறகு பன்னிரண்டு மணிக்கு தந்தி அடிச்சு உயிரெ வாங்கி முன். இத்தனெ வயசாகியும் அவனுக்குப் புத்திவரலே அந் தக் கடவுளுக்குத்தான் தெரியும் இப்ப அவன் யாருக்கு எவ்வளவு கட ன் கொடுக்கணுமென்று. பரீட்சைக்குப் பணங்கட்டவேண் டிய கடைசித் தேதி நாளைக்கு. இதுதான் கடைசிப்பரீட்சைன்று சொல்றன். என்னவானுலும் சரி ஒருமுறை நேரிலேயே போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும். தடியன் என்ன திருட்டுத்தனம் பண்ருன்னு பார்க்கனும்.
மகனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கிப்போனபடியால் எதிர் பாராமல் ராவ் தோற்றுவிட் டார். மற்றவர்கள் சிரித்தனர் - சிங்கத்தை கொன்றுவிட்ட தைப்போல
ராவ் மூட் டை கட்டி க் கொண்டு புறப்படத் தொடங் கினர். 'போதும் இன்னிக்கு ரொம்ப நேரமாயிட்டுது. இந் தாங்க என்னெ எதுவும் சொல் லாதீங்க. இதுவரை சம்பாதிச் சதில் ஒருமுறை நஷ்டப்பட்டு விட்டேன், அவர் சிரித்தபடியே கூறிஞர். பிறகு வீட்டுக்குக் கிளம்பினுர், -
வீட்டுக்குச் சென்று மனைவி யுடன் தந்தியைப்பற்றி ஆலோ சித்தார், எப்படியும் நான் பெங்களூர் போயாக வேணும்,

கடைசிக்கு ஏதாவது "லாரி"யா வது கிடைக்கும்."
"ராத்திரியிலெ, லாரியிலெ ஏன் போவணும். ரயில் ராத் திரி ரெண்டு மணிக்குத்தான் புறப்படுது. ரயில்றெ போறது தானே."
"நேரமாயிட்டா தகரா ருப் போயிடும்."
மனைவிக்கு அவருடைய சுபாவம் நன்ருகத் தெரியும். அதனுல் எதுவும் பேசவில்லை.
‘மாலதி, சீக்கிரமாய் பெட் டியை எடுத்துவை." ர r ஷ் மகளை விரட்டினர். பிறகு சாப் பிட்டுவிட்டு முறு வலித் தார். பிறகு மணியைப் பார்த்தார்.
* நேரமாச்சு. நான் நாளெ சாயந்திரத்துக்குள்ளெ திரும்பி விடுவேன். வீட்டெ நல்லாப் பாத்துக்குங்க" மனைவியையும், குழந்தைகளையும் பார்த்துக் கூறி விட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
நகரத் தாலூக்கா ஆபீ ஸைத் தாண்டினல், அரசினர் செகண்டரி ஸ்கூல் வந்துவிடும். பெங்களூருக்குப் போ கின்ற லாரிகள் அங்கே கிடைக்கும், பஸ்களைத் தவறவிட்டவர்கள்
லாரிகளைப்பிடிப்பதற்காக அங்கு
காத்திருப்பார்கள். ராவ் அங் கிருந்த விளக்குக் கம்பத்தின்கீழ் நின்றுகொண்டார். பெட்டியைக்
கீழேவைத்துவிட்டு, பாக்கெட்டி
லிருந்து சிகரெட் ஒன்றை எடுத் துப்பற்றவைத்தார். ஓரிருமுறை புகையை உள்ளே இழுத்து
வெளியே ஊதினர். அத்தகைய
சூழ்நிலையில் வெளியூர் கிளம்பு வது சுகமான அனுபவம் என் பதை உணர்ந்த அவருடைய மனதில் மகிழ்ச்சி அலையாடியது.
திடீரென ராவின் மனம் அன்றைய சீட்டாட்டத்திற்குத் தாவியது.
‘இன்னிக்கு எனக்கு ரொம்ப நல்லநாள். ஜெயிக்கனும்னு இப் படித்தான் ஜெயிக்கனும் மத்த வங்க தலைகுத்திப் போளுங்க. சரி இன்னிக்கு எத்தனை ரூபா கெடச்சுது?
சீட்டாட்டத்தில் ஜெயித்த பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்து எண்ணிப்பார்க்க வேண் டியதாயிற்று. உடனே பாதி எரிந்துபோன சிகரெட்டை ஊதி முடித்தார். பிறகு பாக்கெட்டி லிருந்து பணத்தை எடுத்து எண் ணத் தொடங்கினர்.
எண்பத்திமூணு, நா அலு, அஞ்சு, ஆறு - எண்பத்தியாறு ரூபாய்வரை சம்பாதித்திருந் தார். ஒருமணி நேரத்தில் இப் படிச் சம்பாதித்ததுபோல் வே றெப்பொழுதும் சம்பாதித்த தில்லை. கடைசி ஆட்டத்தில் மட்டும் தோற்றுப்போய் விட் டதால் பத்துரூபாயை இழக்க வேண்டியதாயிற்று. இல்லாவிட் டால் அதுவும் கையிலிருந்திருக் கும். எப்படியும் தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் எழுப தெண்பது ரூபாய்வரை சம்பா தித்திருக்கலாம். ப்ையனுக்கு வேறெ இரண்டு ரூபாய் கொடுக்
கவேண்டியதாப் போச்சு எப்படி
யானுலும் இன்னிக்கு நல்ல இலாபம்தான்.
"சார்! சா.ா ஏதாவது இருந்தா கொடுங்க, யாரோ பிச்சைக்காரப் பையன் ஒரு பாத்திரத்தை ஏந்தியபடி 'அவ ருக்கு முன்பு நின்றுகொண்டிருந் தான. ६४
டேய் போடா! இங்கென் ன? அவனைப் பார்க்காமலே கத்தினர்.
93

Page 19
*எஜமானே! சாப்பிட்டு மூணு நாளாச்சு. ஏதாவது கொ டுத்தா உங்களுக்குப்புண்ணியம்’ அவன் ராவை நெருங்கினன்.
"இங்கிருந்து போகமாட் டே? ஒருதரம் சொன்ன கேட் கமாட்டியா? சனியன்கள் எங் கெபோனலும் விடமாட்டேங் குதுக"
சார். அவன் தணிந்த குரலில் அடுத்த ஆளை அணுகி ஞன.
"அந்த த் தவறு பெரிய மானக்கேடு. எங்களோடெ "செட் டிலெ தோற்காமல் விள்ை யாடுபவன் நான்தான்" ராவ் மீண்டும் சிந்தனையில் மூழ்கினர். மோகன் தந்தியைக் கொண்டு வந்ததினுல்தான் அந்தத் தவறு ஏறபடடது. அது அவருககுப் புரிந்தது.
"எஜமானே எனக்கு ஏதா வது கொடுங்க , “ பாத்திரத்
தைக் குலுக்கியபடி அவ ன்
கெஞ்சினன்
"போடா! இங்கிருந்து. தரு
தலே. எங்கெயாவது போய்த்
தொலெ இப்பொழுது ராவின் கோபம் அதிகரித்தது.
"எஜமானே! அவன் போவ தாகத் தெரியவில்லை.
ராவ் அவனை உற்றுப்பார்த் தார். கிழிந்துபோன கால்ச ராயை நீக்கிவிட்டால் அவனு டைய மேனி முழு நிர்வாணமா கிவிடும். தலைமுடி அளவுக்குமீறி வளர்ந்து காதுகளையும், நெற்றி
யையும் மறைத்துக் கொண்டி
ருந்தது.
"நான் எல்லாரிடமும் சொல்
வதுண்டு, ஜோக் கரைப்பற்றிய
கவனம் வேண்டுமென்று. தவ றிப் போவதெல்லாம் சரியல்ல என்று சொல்ற நானே ஏமாந்து போனேன் இன்னிக்கு."
34
"எஜமானே! அஞ்சு பைசா இதிலே போடுங்க! எஜ
DrG6oTo
"இந்தச்சனியன் எங்கிருந்து வந்து தொலைச்சுது? 6fsów - fr போமாட்டாயா இங்கிருந்து? எங்கிட்டக் காசில்லை. போடா அப்பாலெ ராவ் பல்லைக் கடித் தபடி அலறிஞர்.
"ஒரு பைசா போடுங்க எஜ மானே! உங்க காலப் பிடிக் கறேன்."
‘போயி பஸ் ஸ்டாண்டுலெ நின்று கத்து. இப்ப இந்தக் கெட்டதனத்தை வேறெ புது சாத் தொடங்கிட்டியா?*
ராவின் மனம் மீண்டும் சீட் டாட்டத்திற்குத் தாவியது.
"நான் அவசரப் பட்டுட் டேன். பத்துரூபா தண்டம் கட்ட வேண்டியதாப் போச்சு. பத்துரூபாயானலும் பாதுகாக் கப்பட வேண்டியதுதானே! அப் போ, 86-உம், 10-உம் . 96. மோகனுக்குக் கொடுத்த ரண்டு ரூபாயும் சேர்ந்தால் மொத்தம் 98 ரூபாயிருக்கும். அப்படீன்ன பரீட்சைக்குக் கட்டவேண்டிய பணம் சரியாகியிருக்கும்,
"எஜமானே!" ‘ஏண்டா சனியனே இன் னுமா நீ போகலே. ஒடுடா! இல்லேன்ன இ தோ" என்று சொல்லியபடியே கல்லோ, தடி யோ கிடைக்குமா என்று ராவ் சுற்றுமுற்றும் பார்த்தார். அவ ருடைய கண்கள் கோபத்தால் சிவந்தன.
*வெறும் அஞ்சுபைசர்?
பரீட்சைக்கு அனுப்பிய பணமெல்லாம் அவன் கரைத்து விட்டாணுக்கும். அவனுடைய சுபாவத்தைப் பார்த்தால் இப் பொழுதே அவன் கெட்ட பழக்

கங்களில் இறங்கி விட்டான். சிகெரெட்டு வேறே குடிக்கிருன். ஒரு சிகரெட்டுப் பிடித்தால் சுக மாக இருக்குமென்று தோன்றி யது. பாக்கெட்டிலிருந்து சிக ரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார்.
நீண்ட நேரமாகியும் லாரி ஒன்றுகூட வரவில்லை. எரிச்சலு டன் ராவ் கடிகாரத்தைப்பார்த் தார். சாப்பிட்டுவிட்டு சுகமா கத் தூங்கி, இரண்டுமணி ரயி வில் போயிருக்கலாம். இது ஒரு சனிபிடிச்ச இடம். சிலசமயம் ஒன்று பின்னலே ஒன்ருய் லாரி
கள் வரும். சில சமயங்களில் இப்படியும்.
*எஜமானே!"
‘ஏண்டா என்ரெ உயிரை வாங்கறெ? எங்கிட்ட சில்லரை இல்லெ ராவ் கத்தினர்.
நின்று நின்று அவருடைய கால்கள் சலித்துவிட்டன. ஸ்கூ லின் வளைவுக்குள் சென்று சற்று
ஓய்வெடுக்கலாமென எண்ணி பெட்டியை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.
* entrf... ... " அவர் போவ
தைக் கண்ட பிச்சைக்காரன் ஈனக் குரலில் கூவினன்.
ராவ் திரும்பிப் பார்க்க வில்லை. சிகரெட்டின் சுகத்தை அனுபவித்தபடியே நடத் து சென்று ஸ்கூலின் வளைவில் ஒரு புறமாக அமர்ந்தார். நிராசை யுடன் பிச்சைக்காரன் மனமு டைந்து நின்றன். ராவ் முன்பு நின்றுகொண்டிருந்த இடத்தில் காகிதத் துண்டொன்று சிடப் பது அவனுடைய பார்வையில் பட்டது. அவனுடைய கண்கள் மலர்ந்தன. முகம் மகிழ்ந்தது. பாய்ந்து சென்று அதை எடுத் தான்.
*பத்துரூபா நோட்டு’
தெருவிளக்கின் வெளிச்சத் தில் அவன் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். இல் சந்தேகப்பட வேண்டியதில்லை பத்துரூபாய் நோட்டுத்தான்!
உடனே ராவை நோக்கி ஓடினன்.
* arti. JFri ... , அவன் ஆர்வத்தோடு அழைத்தான் அவனுடைய குரலில் தீனம் இல்லை.
‘ஏண்டா? திரும்பவும் வந் திருக்கே, சாத்தானுக்குப் பொ றந்தவனே!" ராவ் சீறினர். ("சார் இதெப்பாருங்கோ எஜமானுேடெ தோட்டு தயங் கித் தயங்கி அவன் சொல்லிக் கொண்டே நீட்டினன்.
"நோட்டா? சிகரெட்டை அணைத்து வீசிவிட்டு, நோட்டை வேகமாகப் பற்றினர்.
"ஆமா சார்! நோட்டுத் தான். எஜமான் அப்பவெ நோட்டு எண்ணிக்கிட்டிருந்
தப்ப, எஜமாளுேடெ கையிலி ருந்து விழுந்துட்டுது"
விரிந்த கண்களுடன் அவன் ராவையே பார்த்துக்கொண்டி ருந்தான். ராவ் நோட்டை நன்ருக நோட்டமிட்டார். அது பத்துரூபாய் நோட்டுத்தான். "உனக்கு இது எங்கேகெடச் சுது?" r
"எஜமான் நின்றுட்டிருந்த விளக்குக் கம்பத்துக்குக் கீழே"
"சரி ஆகட்டும்" அது பழைய பத்துரூபாய் நோட்டு. புதிய நோட்டுக்கள் மட்டுமே அன்று வந்து விழுந்த தைப்பற்றி சரியான நினைவு உண்டு கிளப்பில் ஜெயிச்சதெல் லாம் புதியதோட்டுக்கள்.
幽

Page 20
ராவ் வியப்புடன் அந்த நோட்டைப் பார்த்தார்.
"எஜமானே...!" பையனு டைய ஈனக்குரல் மீண்டும் கேட் L-gil அவனுடைய குரலில் வேதனை நிரம்பியிருந்தது. சற்று முன்பு, தாம் பத் து ரூபா ய் நோட்டொன்றை அவரிடம் கொடுத்தது பற்றிய நினைவில்லை - இந்த நோட்டு உண்மையி லேயே என்னுடையதல்ல. எவ னே ஒரு அப்பாவி நழுவ விட் டுவிட்ட ஒன்று. பரவாயில்லை. கிளப்பில் தோற்றுப்போனதால் பத்து ரூபாய்ை இழந்துவிட் டேன். அதுவும் இப்பொழுது கிடைத்திருந்தால் மொத்தம் எவ்வளவிருக்கும். எண்பத்தியா றும் இந்தப்பத்தும் தொண் னுாற்றி ஆறு. அந்த ஒரு தவ றும் நேர்ந்திருக்கா ட்டால் நல்ல லாபமாயிருக்கும் ஆக, நூற்றியாறு ரூபா ஆகியிருக்கும். மோகனுக்குக் கொடுத்த இரண் டும் சேர்ந்தால் 108 ரூபாய். இத்தனை பணமும் இன்று வர
விருந்தது.
"எஜமானே! ஒரு அஞ்சு
பைசாக் கொடுங்க" அவன்
கெஞ்சினன். ராவ் பாக்கட்
டை ஒருமுறை தவறிப்போய் u Tieġ g6mri '
*சில்லறை இல்லப்பா f போயிடு எந்தப் பாக்கட்டைப் பாத்தாலும் நோட்டாவருது."
அவருடைய இந்தப் பதிலைக் கோட்டபின்பும் மேலும் அங்கு நிற்பது சரியல்ல என்று அவன் கருதினன். மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருளில் மறைந்தான்.
ராவ் மீண்டுமொருமுறை அந்த நோட்டைக் கூர்ந்துபார்த் தார். விளக்கின் அருகில்சென்று மூன்ருவதாக ஒருமுறை பார்த் தார். கீழே தரையை ஒருமுறை அலசினர். வேறெ நோட்டு ஒண்
ணுமில்லையா? இல்லை! அங்கு எதுவும் இல்லை!
* சரியில்லெ நோட்டு எது
வானலும் நல்லது தானே! பார்க்க எவ்வளவு நல்லாயிருக்கு இந்த நோட்டு அந்தப் பைய னுக்குக் கிடைக்கவேண்டியது தானே! ராவ் மகிழ்ச்சியுடன் சுற்றும் ஒருமுறை பார்த்தார். அந்தப் பையனை அங்கு காண
@ນີ້ຫຶງທີ່ກ).
போகட்டும் பரவாயில்லெ" பணமல்லவா? எங்கேயா
வது பயனில்லாமல் போகுமா? பிறகு அவர் அந்த நோட்டைப் பாக்கெட்டுக்குள் செருகினர். *
கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே அதுபோல் இன்று
கவலையைத் தீர்ப்பதற்கு
எங்கும் ہووینیڈین یخ بغیۃ لجنہ نتیجہ خ;2 یتبعوھہ چاہٴ ;% :" + پر ہو
· .ssusřY:vá: “. یہ ہ**سوس"0"^
கிடைக்கும்.
படியுங்கள் "சிரித்திரன்'
مداره ۹۹. مج«مه وجود* بنا به بیر
”** **<"~~- c عام نب........ہو ۔ ۔ ۔ ۔ ... x***........ ۔
 

மலையக இலக்கியக் கடிதம் நாவல்நகர் பி. மகாலிங்கம்
"மல்லிகை" பொங்கல் இதழ்பற்றிய பேச்சு பல இடங்களி லும் பேசப்பட்டதைக் கேட்க காது குளிர்ந்தது. நமது எழுத் தாளர்களிலும், விமர்சகர்களிலும் பலர் "மல்லிகை" யை சரியா கப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் ஜனவரி மாதம் அமைந்து விட்டது மகிழ்ச்சிக்குரியதாகும். ஏனெனில் தமிழக சஞ்சிகைகள் இந்தமாதம் சரியாக வராதபடியால் ஈழத்து மல்லிகையின் தரத் தைப் பலரும் உணரும் வாய்ப்புப் பெற்றர்கள்.
திரு. மு. கனகராசனின் ‘கற்பின் காவு" சிறுகதையில் மலைய கம் பற்றி குறிப்பிட்ட கருத்துக்கள் பலரது எண்ணங்கனையும் கிளறி சிந்தனையைத் தூண்டியுள்ளது. இந்தப் புதிய சிந்தனையின் விளைவு பிராந்திய முத்திரை குத்திக்கொண்டு இலக்கியம் படைக் கும் ஒருசில எழுத்தாளர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.
மல்லிகையின் மணத்தைப்பரப்ப பல இடங்களில் நான் முற் பட்டபோது சில கோணல் புத்திக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. இலக்கியப் பணிக்கு இறங்கிய பிறகு ஒளிவுமறைவு இல்லாது கருத்து வேறுபாடுகளை மனந்திறந்து விவாதிப்பது நல்லதுதானே.?
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினர் 14-1-71 பொங்கல் அன்று ஹட்டனில் தமது ஏழாவது ஆண்டு விழாவை எடுத்தனர். இந்த விழாவில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைப் போட்டி யில் பரிசு பெற்ற திரு. பன்னீர்செல்வம் கெளரவிக்கப்பட்டார். அவருக்கு தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது, அவர் பேசுகையில்: * கலை புனிதமானது என்பதற்கு நான் எதிரி, யதார்த்தம் இல் லாத கதைகள் கதைகள் அல்லது நான் எனது வர்க்கத்திற்காக எழுதுபவன். வர்க்கத்தின் பிரதிபலிப்பே எனது இலட்சியம். பரிசு பெற்ற கதை என்ருலும் கூட எனது விமர்சனப் பார்வையில் எனது பரிசு பெற்ற கதைகூட விடுபட்டுப் போகுமோ என்ற தொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது. உழைக்கும் சமுதாயமான நமது சமுதாய எழுச்சிக்கான போராட்டக் கருத்துக்கள் நமது கதைகளில் மிளிர வேண்டும்."
மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. காமினி ஆரியதிலகா பேசுகையில்: "நமது கலை கலாச்சாரம் உலக மெங்கும் பரவவேண்டும். நமது எழுத்துக்களில் நமது மண் வாச னை பிரதிபலிக்கப்பட வேண்டும், எண்ணம் வேறு எழுத்து வேறல்ல, எண்ணத்தின் பிரதிபலிப்பே எழுத்தாகும் ஈழத்தின் புதிய் சந்
37

Page 21
ததியினரிடையே புதிய விழிப்பு ஏற்பட்டுள்ளது, அதை செயல்ப டுத்த இந்த அரசு எல்லாவகையிலும் உதவி செய்யக் காத்திருக் கின்றது.
வாழ்க்கைப் பிரச்னைகள் கதைக்குச் சத்தாக அமையவேண்டும். பிரச்னைகளின் பிறப்பிடம் மலையகம் என்பதையுணர்ந்து உங்கள் கதைகளில் பிரச்னைகளை அலசி எழுதுங்கள். இலக்கியப் பரிவர்த் தனை ஏற்படும்போது உங்கள் பிரச்னை அனைவரும் உணரும் பிரச் னையாகவும் முடிவுகாணும் விடயமாகவும் மாறலாம். உங்கள் இலக்கியங்கள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்படும்போது இந்த உறவு மேலும் பலப்பட வாய்ப்புண்டு. திரு. மு. இராமச் சந்திரன் கருத்துரை வழங்குகையில்: "சிறுகதை வளர்வதுபோல கட்டுரையும் வளரவேண்டும். கதை எழுதுபவன் மட்டும்தான் எழுத்தாளன் என்ற நிலை மாறவேண்டும். சிறுகதை மனிதனின் உள்ள எழுச்சியாகும். கட்டுரை அப்படியல்ல. அது முக்கிய சிந் தனையை வெளிப்படுத்தும் சாதனமாகும். உலக நிலயில் ஒப்பிடும் போது நீக்ரோ நாட்டவர் நிலையும் மலையகத்தவர் நிலையும் ஒன்ரு கவே படுகின்றது. அவர்கள் நிலையையும் நமது நிலையையும் ஒன்று படுத்தி இலக்கியம் படைக்க வேண்டும். இது நமது இலக்கியம் தரம் பிரிக்கப்பட்டிருப்பதற்கு சான்று பகர்வதாக அமையலாம்.
பெரி கந்தசாமி பேசுகையில்: "ராமச்சந்திரனின் கட்டுரை விசயம் ஏற்படுத்திய சிந்தனைக்கு வலுவூட்டுவது போலவே ஒவி யமும். இலக்கிய கர்த்தாவே சிறுகதைக்கு ஒவியம் வரையும் போது படம் மேலும் ஒராயிரம் சிந்தனைகளைத் தூண்டிவிடவல்லது. கதை எழுதுபவர்கள் மட்டுமின்றி இலக்கியத்திற்கு வித்திடும் அனைவருமே இலக்கியச் சிந்தனைக்கு வித்திடுபவர்க்ள்" என்ருர்,
கூட்டத்தின் இடையில் வர்க்கப் போராட்டம் என்ற இலக் கிய சிந்தனையின் பயணுக சிறு சலசலப்பு ஏற்பட்டு அந்தச் சல சலப்பே கருத்துப் பரிமாற்றம் ஏற்பட களம் அமைத்துக் கொ டுத்துவிட்டது. இது நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டதொரு சம்பவ மாகும். ஆனல் இலக்கிய உலகைப் புரிந்து கொள்ளாத புரிந்து கொள்ள முடியாதவர்கள் சலசலப்பை ஏற்படுத்தும்போது இலக் கிய வளர்ச்சிக்காகவே பாடுபடும் ஒருசிலரின் மனம் புண்பட்டதி லும் வியப்பில்லைத்தான்.
இதுபற்றி பின்னர் திரு. இரா. சிவலிங்கம் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிக்கையில் வர்க்கம் என்ற சொல்லப் பெரிதுபடுத்தி தம் தம் கட்சிக்குப் புனிதம் ஏற்படுத்த முயலுவ தைவிட தேசியக் கண்ணுேடு பார்த்தால் பிரச்னைகளுக்கே இட மில்லை என்ருர்,
சுயவிளம்பரத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சலசலப் புக்கு முடிவுகாணுமலே விழாவைத் தொடர்ந்து கலைவிழாவும் நடைபெற்றது. இது விழா அமைப்பாளர்களுக்கு வெற்றியாகும். கதைக்கனிகள்" என்னும் சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளி யிடப்பட்டது. ★

rg  ைச க் கி ஸ்.په هيخ په ل6 தேவை- அவசியம் சைக்கிள் ஒன்று எனக்குத் தேவை. இப் படியாக அவசரத் தேவையாக எனக்கு வாகனம்ஒன்று தேவைப் பட்ட போதிலும் அந்த அத்தி யாவசிய தேவை பூர்த்தி செய் யப்படாமலே நீண்ட நாட்க ளாக இருந்து வந்தது. சரியான சந்தர்ப்பம் கிடைக்காததினுல் நண்பர்களது வாகனங்களையோ அல்லது வாடகைக்குரிய சைக் கிள்களையோதான் இடைக்கிடை
பாவித்து வந்தேன். எ ன து கனவு கனவாகவே இருந்து வந்தது.
மல்லிகைக்கான ரெடிபண் ணியபாரங்களை அடிக்கடி மெஷி னுக்குக் கொண்டுபோக வேண் டிய நிலை ஏற்பட்டது. டாக்ஸி யைப் பாவிக்கலாம்தான்.ஆனல் டாக்ஸியில் போவதாஞலும் அச் சகப் பகுதிக்குப் போகமுடி யாது. காரணம் அந்த அச்சகப் பகுதி ஓர் ஒழுங்கைக்குள் இருந் தது. அப் பாதையால் டாக்ளி போகவும் முடியாது, வரவும்
டொமினிக் ஜீவா
என்னி டமும் 52(5 − சைக்கிள் இருந்தது
முடியாது. அப்படிக் குறுகலா னது. ஆகவே எனக்காக இல் லாது போஞலும் மல்லிகை மாதா மாதம் ஒழுங்காக வர வேண்டுமாக இருந்தால் சைக் கிள் ஒன்று கட்டாயம் கிடைத் தேயாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
நானுெரு சைக்கிளுக்குச் சொந்தக்காரணுகி விட்டேன்!
மானிப்பாயிலுள்ள எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவன் தனது சைக்கிளை எனக்கு விற் பதற்கு முன்வந்தான். சைக்கிள் விலைபேசப் பட்டது. 77 ரூபா வாக அச் சைக்கிளின் விலையை நிர்ணயித்தோம். பின்னர் டிஸ் கவுண்ட் என்பதின் பேரால் இரண்டு ரூபாக்கள் குறைக்கப் பட்டன. 75 ரூபாவுக்கு ரிசீற் எழுதி, அச் சைக்கிளை எனது சொந்த உடமையாக்கிக் கொண் டேன். அன்று நானடைந்த பூரிப்பு!- அப்பப்பா! அதை வார்த்தை கனில் வடித்தெடுக்க முடியாது. ஏனெனில் அதுதான் நான் முதன் முதலில் சொந்த மாக வாங்கிய வாகனம்,
so

Page 22
பக்கத்துத் தெருவுக்குப் போனல்கூட அந்தச் சைக்கிளே என்னைச் சுமந்து செல்லும். அதில் போவதென்ருலே எனக் கொரு தனிக் குஷி
அதற்கு நானெரு புனைப்  ெப ய  ைர வைத்திருந்தேன். *ஹொட்டன் ஹோல்" என்பதே அத் திருநாமம். இலங்கைப் பந்தயக் குதிரைகளின் வரலாற் றைத் தெரிந்து அறிந்து வைத் துள்ளவர்களுக்கு இப் பெயர் புதினமானதல்ல. ரேஸில் ஒடிய குதிரைகளில் தனிப் பிரபல்யம் பெற்றுள்ளது ஹொ ட் டன் ஹோல் என்ற இச் சவாரிக் குதிரை. வெற்றிக் கம்பந்தை நாடியவுடன் மிகத் துரிதகதியில் பாய்ந்து முகத்தை முன்னுல் எட்டி நீட்டி வெற்றியைச் சுல பமாகத் தட்டிக்கொண்டு போய் விடும். அதன் ஞாபகார்த்த மாகவே நானும் எனது சைக்கி ளுக்கு அதன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன். பல நெருங்கிய நண்பர்களுக்கு அதனது பெரு மையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைவேன்.
ஒரு நாள் உரும்பராய்க்குப் போகவேண்டிய ஏற்பட் டது. மல்லிகை அச்சுக்கோப் பாளரின் வீடு அங்கு தா ன் உண்டு. மன்னனே இரண்டு நாட் களாகக் காணவில்லை. வேலைகள் அத்தனையும் முடங்கிப் போய் விட்டன. குறிப்பிட்ட தேதி யில் சஞ்சிகை வெளிவரத் தாம தமாகலாம் என்ற பதகளிப்பு என்னுள். ஆகவே பிரசித்தி பெற்ற சவாரி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரைப் பார்த்துவரப் புறப்பட்டேன்.
திருநெல்வேலிச் சந்தியைத் தாண்டிவிட்டேன். பாம் ஸ்கூ லைக் கடந்துவிட்டேன். அடுத் தது கோண்டாவில் சந்தி. அதை
40
யும் கடந்து பஸ் டிப்போவை நெருங்கிவிட்டால் அவரது வீடு அப்புறம் கூப்பிடு துரரந்தான்.
கோண்டாவில் சந்தியைக் கடக் கும்போது ஏர் சிலோன் பஸ் ஸொன்று என்னைத் தாண்டிச் சென்றது. குழை வண்டில் ஒன்று குறுக்கே வந்தது. அதற்கு வழி விட்டு ஒதுங்கிய நான், எனது வாகனத்தின் வேகத்தை அதிகப் படுத்த எண்ணி பராக்குப் பார்த் தபடி பெடலை அழுத்தி உழக் கினேன்.
* Llun o fi! . . . ...”
என்ன நடந்தது என்பதைச் சிந்திக்கவே மு டிய வில் லை. அதிர்ச்சி- என்னை நிலைகுலைய வைத்துவிட்ட அதிர்ச்சி! சிந்திக் கும் பக்குவம் ஏற்பட்டபோது நான் வீதி ஒரம் வீழ்ந்து கிடப் பதைக் கண்டேன். சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டே சுற்று முற் றும் பார்த்தேன். வேருெரு சைக்கிள் எனது சைக்கிளை அர வணைத்துக்கொண்டு கிடந்தது. ஒருசில பாதசாரிகள் திரும்பிப் பார்த்தனர். வெட்கம் நோவை மறக்கடித்தது. ஒருவழியாகச் சுதாரித்துக்கொண்டு எழுந்து விட்டேன். வலது காலின் முழங் கால் மூட்டு விண். விண். னென்று வலித்தது. தொட்டுப் பார்த்தேன். தோல் உராய்ந்து இரத்தம் கசிந்தது. எச் சிலைத் தொட்டுத் தடவியபடி நிமிர்ந் தேன்.
எனது ஹொட்டன் ஹோ லின் தாக்குதலால் சரணுகதி யடைந்திருந்த எதிரே வந்த சைக்கிளோட்டியை அப்பொழு துதான் நான் அவதானித்தேன். தரையிலிருந்து எழும்ப முயன்று கொண்டிருந்தார் அவர்.உடனே உதவி செய்யும் நோக்கமாக அவரது கையைப் பிடித்துத் தூக்க முயன்றேன். ஆனல்

அவரோ எனது உதவிக் கரத் தைத் தட்டி ஒதுக்கி விட்டு "மடத்தனமாச் சைக்கிளோடு றது இப்பிடித்தான?" என்ருர்,
"புத்திசாலித்தனமாச் சைக்
கிள் ஓடின இப்படி நடக்குமா?"
என நான் கேட்க நினைத்தபோ போதிலும், நான் புத்திசாலித் தனமாக அப்படிக் கேட்க
எழுந்து தனது சைக்கிளை எடுத்து நிமிர்த்தினர் எனது எதிரி!
- மிகச் சுலபமாக எதிரி களைச் சம்பாதிப்பதில் ஈழத்தில் முன்னணியில் திகழ்பவர்கள் எழுத்தாளர்கள்தான்!- அந்த மரபுக்கேற்ப உடனேயே அவ ரை நான் எனது எதிரியாக மனசிற்குள் கற்பித்துக் கொண் டேன்!
நிமிர்த்தப்பட்ட மாற்ருன் சைக்கிளை நானும் பார்த்தேன். எனது ஹொட்டன் ஹோலை விட நூறு மடங்கு மதிப்பு வாய்ந்தது அது. புது மெருகு கூடக் கலையவில்லை. ரவி சைக் கிள். முன் ரிம் 'எஸ்' மாதிரி வளைந்து போயிருந்தது. எனது சைக்கிளோவென்முல், ஒட்டி யிருந்த மழைச்சேறு, கறள் எல்லாம் உதிர்ந்து செட்டை உரித்த பாம்புபோல எனது கண் களுக்குக் காட்சி தந்தது.
எனது எழுத்துக்களுக்குத் தான் ஓர் அசாதாரண வலிமை யும் திண்மையும் வீரியமும்இருப் பதாக நான் தார்மீக பலத்து டன் நம்புவதுண்டு. ஆனல் பிரேக், பெல் இல்லாத எனது பழைய சைக்கிளுக்குக்கூட ஒரு தனிப் பலம் இருக்கிறதே என்று எண்ணிப் பெருமிதம் அடைந் தேன்.
- என்ன இருந்தாலும் எழுத்தாளன் சைக்கிளல்லவா!
சண்டைக்குத் தயாராகும் வெள்ளடிச் சேவல்களைப்போல,
ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டோம்.
"இப்ப இதுக்கென்ன செய் யிறது? குற்றம் உன்னிலைதான். ம். சைக்கிள் கடையிலை இதைத் திருத்தித் தரவேணும் நீ! இது அவன.
"ஹ"! சைக்கிளை எனக்கு மேலை மோதிப்போட்டு ஞாயம் பேசுறிரா? சரி, பொலீஸ் வரட் டும் பேசிப் பார்ப்போம்! இது நான.
தவறு என் பக்கம்தான் என்ற குற்ற உணர்வு எனது மனச் சாட்சியைக் குத்திக் காட் டினுலும் எழுத்தாளன் கிறுக்கு வளைந்து கொடுக்கப் பின் வாங் கியது. அக் கிறுக்குத் ಶಣೈ குப் பின்னல் மனச் சாட் பெலவீனத்துடன் முணுமுணுத் தது
நான்தான் தவறு செய்தது என அவனும், இல்லை குற்றம் அவன் பக்கமேதான் என நானும் நடுச்சந்தியில் நின்று வாதிட்டுக் கொண்டிருந்தோம் ,
நடுவில் மத்தியஸ்தம் பேச முன்வந்த பாதசாரிகளும் நமது மூர்க்கத்தனமான விடாப்பி டிக் குணத்தைக் கண்டு ஒதுங் கிப்போய் விட்டனர். ஒருவர் சைக்கிள் ஹான்டிலை ஒருவர் பற்றிப் பிடித்தவண்ணம் தெரு வோரம் நின்று கெகண்டிருந்த எங்களைவிலத்திக்கொண்டு இரட் டைத்தட்டு பஸ் ஸெ ர ன் று கடந்து பலாலியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அது
கிளப்பிய புழுதித் துசி கண்களை
4

Page 23
மறைத்தது "ஜீவா!" என்ருெரு குரல் பஸ்ஸிற்குள் இருந்து பல மாகக்கேட்டது. ‘என்ன? என்ன சங்கதி?" ஜன்னல் ஊடாக ஒரு கரம் தெரிந்தது அதற்கூடாக வே முகமும் தெரிந்தது.
போராட்டக் களத் தி ல் நின்று கொண்டிருந்த நான் பஸ் ளிற்குள் உற்றுப் பார்த்தேன். சன நெருக்கடி, வயாவிளானைச் சேர்ந்த, தொழில் நுட்பக் கல் லூரியில் படிப்பிக்கும் எனது நண்பன்தான் அவன். நான் ஒன்றுமே பேசவில்லை. ஒரு கரத் தை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தேன். பஸ் ஓடிமறைந் A55.
சைக்கிள் ஹான்டிலை உறுதி யாகப் பற்றிக் கொண்டிருந்த எனது மாபெரும் எதிரியின் பிடி சற்றுத் தளர்ந்தது. நீ- நீஎன ஒருமையில் பேசிக்கொண் டிருந்த குரலில் சற்றே மரியா தைத் தொணி கலந்தது.
“ø.häì 45(6560) LuLu Go) Lu unu rio என்ன?”
"இந்த மடையணுக்கு எதற் காக என்னுடைய பெயரைச் சொல்லவேண்டும்?" என்ற ஆண வம் எனது வாயை ஒரு கணம் கட்டிப்போட்டாலும் குரலில் தொனித்த மரியாதைக் கலப்பு எனது கர்வத்தை மீறவைத்தது. "Saum!“
*கேள்விப் பட்டிருக்கிறேன் உங்கடை பேரை. இந்தக் கதை கள் எழுதிற டொமினிக்ஜீவா."
- டேய்! நா ன் கூடப் பெரிய மனிசன்தான்! என்ற மதிப்பெண்ணத்துடன் "ஒமோம் நான்தான்." என்றேன்.
"உங்கடை கதைகளில் சில தை நான்கூடப்படிச்சிருக்கிறன்"
(2
-"அப்படி வா வழிக்கு!" எழுத்தாளன் திமிர் தலைநிமிர முனைந்தது. இருந்தும் ஒரு பரம ரஸிகனின் மனசை வீணுக நோ கடித்து விட்டேனே என்ற பச் சாத்தாப உணர்வும்என் நெஞ் சில் கிளைபரப்பியது.
"இந்தச் சின்ன விஷயத்துக்
காக ஏன் எங்களுக்குள்ள இந்த
வாக்குவாதம்? இது சின்னப் பிளைதான். என்னிலைதான்.தவறு. பக்கத்துக் கடையிலை நான் நெளிவெடுக்கிறன். சரி. சரி. நீங்க போங்க..!
அந்த அன்புத் தாக்குத லுக்கு முன்னுல் எனது கர்வம் ஒடுங்கிப்போய் விட்டது. "பர வாயில்லை. குற்றம் என்னுடை யதுதான். என்னுடைய சிலவிலே யே நான் அதைச் சரிக்கட்டித் தாறன். வாருங்க போவம்!"
அவர் அதை மறுத்து விட் டார். பிடிவாதமாகத் தவறு தன்னுடைய பக்கம்தான் என வாதிட்டார். பின்னர் வற்பு றுத்தி எனக்குத் தேநீரும் வெற் றிலையும் வாங்கித் தந்து வழிய னுப்பி வைத்தார்.
ஆனல் ஒன்று. அந்த மதிப் புக்குரிய ஹொட்டன் ஹோல் இன்று என்னிடம் இல்லை. அது எனக்குச் சம்பாதித்துத் தந்த அந்த நண்பன் இன்றும் எனது அன்பிற்குரியவனுகவே திகழ்ந்து வருகிருன். 女
 

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
ゞ・ダ・
பின்னேரம் ஐந்து மணிக்கு மேல் இரு க் கும். களைத்து விழுந்து வந்து இருந்தேன். ராணியக்காவின் பிள்ளைகளின் சத்தம் ருேட்டில் வரும்பொழு தே காதைப் பிளந்ததுகொண் டிருந்தது. எனக்கிருக்கிற களைப் பில் அந்தச் சத்தம் எரிச்சலைத் தான் உண்டாக்குகிறது. அறை யைத் திறந்து சரமான்களை வைத்துவிட்டுக் கொஞ்சநேரம் அப்படியே உடுப்பு மாற்ருமல் க ட் டி லி ல் படுத்திருந்தேன். ரொம்ப சுகமாக இருந்தது. நகரத்துச் சந்தடியெல்லாம் குறைந்து தனிமையில் இருப்பது போன்ற உணர்ச்சி. ஐந்து நிமிட மும் நீடித்திருக்கும். மீண்டும் ராணியக்காவின் வீட்டுப்பக்க மிருந்து பலத்த சத்தம் கேட் டது. "உதென்னபெட்டையளோ இல்லாட்டாச் சனியன்களோ" எனத் திட்டிக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் அவர்களுடன் சேர்ந்து சத்தம்போடும் போதும் வீட்டுக் காரர் இப்படித்தான் நினைப்பி னம் என்பதையும் நினைத்துக் கொள்கிறேன்.
ராணி அக்கா
மிஸிஸ் ராயப்பர் அனுப்பிய தேனீரைக் குடித்துவிட்டுப் படுத் துக் கொண்டிருந்தேன். இந்தப் படிப்பு இன்னும் மூன்று மாதத் திற்குத்தானே! இதை நினைத்த தும் சந்தோசமாக இருந்தது. பின்னர் இந்தவிட்டுத் தொடர்பு இருக்குமோ என்னவோ? யார்
கண்டது?
ராணியக்கா குடும் பம், ராயப்பர் குடும்பம் மதலேணு குடும்பம், மணிக்கூட்டுக்காரச் சிவலிங்கம், டைப்பிஸ்ட் செல் வம் எல்லோருமாகக் கிட்டத் திட்ட இருபத்தைந்து மனித உயிஃகளால் நிரம்பி வழியும் இந்தப் பெரிய வீட்டுத் தொடர் பே ஒரு அலாதியான அனுபவம். முதல் நாள் எனக்கு நன்ருக ஞாபகமிருக்கிறது. அப்பாவுக் குத் தெரிந்தவர் என்ற முறை யில் ராயப்பரின் வீட்டில் நான் வந்தபோது, முன்னர் எதிர்ப் பட்ட உருவம் ராணியக்கா தான். அரையும், குறையுமான வயிறு உப்பிய அந்தத் தோற் றத்தை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஒரு ஆறுமாதக்

Page 24
střů960 ofilu mů இருக்கலாம். அந்த அழகு, தாய்மை கொழிக் கும் அந்தப் பொன்னிற அழகு, சுடர்விட்ட கண்கள், துடித்த இமைகள், எத்தனை லாவண்யம். நானும் பெண்தான். சொக்கியே போனேன். மிஸிஸ் ராயப்பர் சொன்னுள்.
"உவையும் உங்க இருக்கிற வைதான். எல்லாமாக மூன்று பெரிய குடும்பம். பேந்து ஒரு டைப்பிஸ்ட் தங்கச்சியும், மணிக் கூட்டுக்கடையில் வேலைசெய்யிற ஒரு தம்பியும்தான் இங்கு தனிக் கட்டைகள். இப்ப நீயும் மூன்ற வது தனிக்கட்டையாக வந்தி
ருக்கிருய்,
நான் சுற்றும்முற்றும் பார்க் கிறேன். மூலைக்கு மூலை எட்டிப் பார்க்கிற சிறிய உருவங்களை உற்றுப் பார்க்கிறேன். ராணியக் காவின் குறு, குறுத்த கண்களும் இன்னும் வேருெரு அமைப்பும் சேர்ந்த உருவங்கள். ஒன்றை ஒன்று பார்த்தபடியே ஐந்தும் பெண் குழந்தைகள். நான் திடுக் கிட்டுப்போய்விட்டேன். ராணி யக்கா ஆருவது குழந்தைக்குத் தாயா? அன்றைக்கு எவ்வளவு ஆச்சரியப்பட்டேன். பின்னெ ருக்கால் அதைப்பற்றிச் சொன் னபோது முகம் சிவக்க தலை குனிந்த சிரித்த அழகு, நான் ஒரு ஆணுகப் பிறக்கவில்லை என்ற தாபம்தான் எனக்கு.
வித, விதமான மனங்களு டன் நான் ஒன்பது மாதங்கள் கழித்துவிட்டேன். மணிக்கூடு திருத்தும் சிவலிங்கம்தான், ஒரு பெரிய வாலிபன். பாவம் கோழி முட்டை மாதிரிக் கண்ணை முழித் துப் பார்க்கும் அப்பாவித்தனத் தை நினைத்தால் சிரிப்பு வருகி றது. எந்த நேரமும் கண்ணுடி யைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொள்ளும் மிஸ் செல்
fé
வம், அந்த ஒதுக்குப் புறத்தில் - விருந்தை என்று சொல்ல முடியாத-அறை என்றும்சொல் லமுடியாத அந்தப் பக்கத்தில் நாலு பிள்ளைகளோடு மாரடிக் கும் மதலேன, பணத்திமிர் பிடித்த மி ஸி ஸ் ராயப்பர். மாலினி எல்லோரையும் திருப் திப் படுத்த சிரித்துச் சிரித்துப் பழகி எந்நேரமும் பல்லைக்காட் டிக் கொண்டிருக்கும் ராயப்பர் அதாவது இந்த வீட்டின் சொந் தக் காரன் எல்லோரையும் நினைத் தபடியே படுத்துக் கொண்டிருக் கிறேன்.
"ஓ! ராணியக்காவின் கண வர் வந்துவிட்டாரா? அதுதான உந்த ஐந்து பெட்டைகளும் குதிச்சுக் கொட்டுதுகள்"
ராணியக்காவின் புருஷனின் ஆரவாரமான சிரிப்புக்கேட்டது. நேரெதிர்க் குணமுடைய இரு வரும் எப்படித் தம்பதிகளாயி னர் என்பது சில வேளைகளில் எனக்குப் புதிராக இருந்தது. பொங்கும் அ லை கடல் அவர் என்ருல், ஆழமான அமைதி யான கிணறு என்றுதான் ராணி யக்காவைச் சொல்லவேண்டும். இருவரும் காதலித்து வேறு கல் யாணம் செய்துவிட்டார்களாம். ராணியக்கா காதலிச்சாவோ என்னவோ தெரியாது. மிஸ்டர் பரஞ்சோதி என்னவென்று இந்த அழகு பிம்பத்தைக் காதலிக்கா மல் இருக்க முடியும் ?
சிலவேளை கொஞ்சம் கூடக், குறையக் கள்ளுப் போட்டால் பழைய கதையெல்லாம் பரஞ் சோதியாருக்கு வரும். இப்பவே ராணியக்காவுக்கு வயது 30. ராணியக்கா பதினைந்து வயதில் பள்ளிக்கூடம் போகும் பொழுது எவ்வளவு கள்ளம், கபடமில் லாமல் சிரித்திருப்பார் என்று யோசிக்கிறேன். இந்தக் கிழவன்

கிறங்கிப் போனதில் என்ன ஆச்சரியம் இருக்கும். எஸ். எஸ். சி. சோதனை எடுத்து அடுத்த படாத பாடுபடுத்திக்
வருஷம் கல்யாணம் செய்துகொண்டா utrib. கல்யாணம் என்ருல்
யாரோபேசிக் கல்யாணம் செய் யவில்லை. கூட்டிக்கொண்டு ஓடி வந்துவிட்டாராம். பரஞ்சோதி யாரின் தாய், தகப்பனர் இந் தப் பெண் ணி ன் அழகைப் பார்த்து வாய் திறக்கவில்லை யாம். கொஞ்சம் கூடிக் குறைத் துப் பரஞ்சோதியார் புழுகும் போது வெட் கத்துடன் கோபித் துக் கொள்ளும் முப்பது வயது நிரம்பிய இருபது வயது சொல் லக்கூடிய ஐந்து பெண்களின் தாயை அந்த- அழகான பெண் மணியைப் பார்த்துக்கொண்டி ருக்கலாம் போலிருக்கும்.
'உந்த ம னு ஷ ன் இனி வீவால போறவரைக்கும் இப்பி டிக் கத்திக் கொண்டிருக்கும்" என்னவென்று படிக்கிறதென்று யோசிக்கிறேன்.
இரவு பதினெரு மணிக்கு மேல் இருக்கும். கொட்டாவி விட்டு விட்டுப் படித்துக்கொண் டிருக்கிறேன். ராணியக்காவின் அறையையொட்டிய அ  ைற எனக்கு. அவர்கள் என்ன சண் டை பிடித்தாலும் எனக்குத் தலையிடி. இந்த மனுசன் வந்தா இப்படித்தான். பகல் எல்லாம் அட்டகாசமாகச் சி ரித் துக் கொண்டிருக்கும் இரவில இந்த மனுசனுக்கு என்ன வாறதோ தெரியாது? அந்த ராணியக்கா தனக்கே கேட்காமல் என்ன சொல்கிருர் அந்த மனுசனுக்கு? ஏன் இந்து மனுசன் இப்படிச் சத்தம்போடுது. எனக்கும் கோ பம் வருகுது.
அவர் லீவால் வந்தால் இப் படித்தான். கடைசியாகச் சண் டை இரவில் நடக்கும். கால் யில் பிள்ளைகள் எழும்ப முதல் யாழ்தேவியில் போய்விடுவார், மலைநாட்டில் ஏதோ எஸ்டேட் டில் சிளாக்காக இருக்கிருர், ‘அம்மா அப்பா போய்விட்டா ரா?' என்று குழந்தைகள் எழும் பிக் கேட்கும். அதே நேரம் வீங் கிய முகத்துடன் ராணியக்கா என்ன பதில் செrள் வாளோ தெரியாது. அவர்கள் பள்ளிக் கூடம் போய்விடுவார்கள். பள் ளிக்கூடம் போகாதவர்களுடன் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பொ ழுதைப் போக்குவாள் ராணி அக்கா. என்ன சண்டை என்று கேட்க விருப்பம்தான். அது சரியில்லை என நினைத் துக் கொண்டு இருந்து விடுவேன். அப்படி அவர் சண்டை பிடித் துப்போடும் காலையில் மதலேன வும் மிஸ் ராயப்பரும் ஏதோ குசு, குசுவெனக் கதைப்பார் கள். மிஸ் செல்வம் திட்டிக் கொள்வாள். "இந்த இடத்தை விட்டுக் கெதியில்போகவேணும்"
சிவலிங்கம் தன் பெரிய முழியைவெட்டிஅப்பாவிச் சிரிப்பு டன் ராணியக்காவைப் பார்ப் பான். மிஸ் ராயப்பர் காலையில் "வட் நியுசன்ஸ்" என முகத்தைச் சுழித்துக் கொள்வாள். ராயப் பர் எப்போதும்போல் இழித்த வாயுடன் ராணி அக்காவைப் பார்ப்பார். மிஸ்டர் பரஞ்சோ தியரின் வெறும் வரட்டுக் கெள ரவம் இல்லாதபோதும் இருப்ப வனைப்போல் நடக்கவேணும் என்ற இறுமாப்பு அதற்காகக் கடன்வாங்கி ஊதாரிச் செலவு செய்து அவரின் குடும்பத்தைச் சிதைப் பது மற்றவர்களுக்கு வேடிக்கையாகவும், ராணி அக் காவிற்கு வேத னை யாகவும் இருந்தது.
《5

Page 25
ராணி அக்கா பாவம். வீங் கிய முகத்துடன் வெளியில் வர வெட்கப்பட்டு உள்ளுக்குள்ளே இருப்பாள். தையல் மெசின் சத்தம் மட்டும் கட, கடவெனக் கேட்டுக்கொண்டிருக்கும். அவரு டையசம்பளம்போதாது. ராணி யக்கா தையல் மூலம் சம்பாதிப் பதே சில வேளை வீட்டுத் செல வுக்காகிறது. அ வர் போய் எண்ணி மூன்ரும் நாள் கடிதம் வரும். தபாற்காரனின் மணிச் சத்தம் கேட்டதும் ராணி அக் காதானே போய்க் கடிதம் வாங் கிக்கொண்டு வருவாள். ஆவல் முகத்தில் தெறிக்கும் கடிதம் படித்தவுடன். சிலவேளை அழு வாள். சிலவேளை சிரிப்பாள். சிலவேளை பிரமை பிடித்தாற் போல் இருப்பாள். பார்க்கப் பாவமாயிருக்கும். கேட்கவும் ஒரு மாதிரியாய் இருக்கும்.
ராணியக்கா என்ன சொல் கிருள் என்பது தெரியவில்லை. மிஸ்டர் பரஞ்சோதியின் குரல் தடிப்பேறிக் கொண்டிருக்கிறது. பேசாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இருந்தேன். ராணி அக்கா அழுவது கேட்கிறது. மெல்லமாக வெளியில் வருகி றேன். ராயப்பர் பகுதியில் லைட் எரிகிறது. மிஸ் செல்வம் எனக்கு அடுத்த அறையில் ஏதோ முணு முணுப்பது கேட்கிறது.
எல்லோரும் விழிப்பு.
திடீரென்று ராணியக்கா ஐயோ, ஐயோ என்று சத்தம் போடுவது கேட்கிறது. இப்படி ராணியக்கா ஒருநாளும் சத்தம் போடுவது கிடையாது பிள்ளை கள் எல்லோரும் கத்துகிருர்கள். ராயப்பர் திட்டிக் கொண்டே உள்ளுக்குப் போனவர் போன வேகத்தில் வந்து என்னைக் கூப் பிடுகிகிருர், நான் போகிறேன்.
46
ராணியக்காவுக்குச் சுயநினை வில்லை. குழந்தைகள் எல்லோ ரும் ஓவென்று அழுகின்றனர். ராணியக்காவின் வாயிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருக் கிறது. திரும்பிப் பார்க்கிறேன். பரஞ்சோதியைக் காணவில்லை. வெளியில் ஏதோ " இங்கிலீசில்" கத்திக்கொண்டிருக்கிருர், நான் ராணியக்காவின் த லே  ைய த் தூக்கி மடியில் வைத்துக்கொண் டிருக்கிறேன். பாவமாயிருக்கி றது. சிவலிங்கம் "டக்ஸி கொண் டுவந்து விட்டான். ராயப்ப பர் திட்டிக்கொண்டிருக்கிருர். எல்லோரும் ராணியக்காவைத் தூக்கி டக்ஸியில் போடுகிருேம், பரஞ்சோதியரும் வருகி ருர். "பிளிஸ் நீங்கள் வரவேண்டாம். பிள்ளைகள் அழுவார்கள்" பரஞ் சோதியர் நிற்கிருர், ராயப்பர் சொல்கிருர். “ஓம் செய்யுறதை யும் செய்துபோட்டுத் தானும் ஒரு ஆளெண்டு வாருர். டக்ஸி கிளம்பிக் கொண்டிருக்கிறது.
ராணியக்காவுக்கு நினைவு வந்துவிட்டது. -
"ஆஸ்பத்திரிக்குப் போவம் வாயெல்லாம் இரத்தம் ராணி யக்கா திரும்பித்திரும்பிப்பார்க் கிருள். டக்ஸி கிளம்பிய வேகத்
தில் பரஞ்சோதியர் வருவது தெரிகிறது.
"ஐயோ அவர் போய்க்
குடிக்கப்போருரே" ராணியக்கா அழுகிருள். ராயப்பர் சொல்கி முர். ஓம் அவர் சின்னப்பிள்ளை தான். அவர் குடிச்சுப்போட்டு எங்கேயும் போகட்டும். வீட்ட வராட்டா சரி எங்களுக்குப் பெரிய தொல்லை." ராணியக்கா Glufosidia).

பிறைவேட் நேர்ஸிங் ஹோ மில் நான் ராணியக்காவுடன் இருக்கிறேன். அவர் அழுது கொண்டே இருக்கிருர். விக்கி யழுகிருர், "இருக்கிறதோ ஐஞ் சும் பெட்டை. இன்னும் பெத் துப்போட்டிருந்தா, பே ந் து நான் சீதனத்திற்குப் பிச்சை தான் எடுக்கவேணும். அவருக் கென்ன பிள்ளைதாறதும், மாதம் நூற்றைம்பது ரூபா காசு தாற தும்தான் பெரிசு. மிச்சக் கஷ் டம் எனக்கு ராணியக்கா "ஓ" வென அழுகிருள், நான் திடுக் கிட்டுக் கல்லாய் இருக்கிறேன். இந்தச் சீவியத்தைவிட "டை வோஸ் எடுத்துப் போட்டிருக் கிறது நல்லது. இந்த நள்ளிரவுச் சண்டையைத்தான் மி ஸி ஸ் ராயப்பர் குத்திக் காட்டுகிருர், நாங்கள் வீட்டிற்கு வருகிருேம். நான் என் அறைக்குப் போகி றேன். குத் தானே பேசிக்கொள்வது கேட்கிறது. மைடியர் ராணி
●、、多、人零 ............AAAAAAAAAA LYSSLS SeLeLSeLSYAeS LLLSeeeSeTS eYSYYSSLLLLLS eeLY ****●●ぐるぐをぐふふふふふふふふふみをやる々るるる*******る********
பரஞ்சோதியார் தனக்
நீ என்ன இப்பிடி நடத்தின நான் எங்க போறது? நாளைய உலகம் இப்பிடிச் சீதனத்தில் தங்கியிருக்காது. காலம் மாறும் டார்லிங் இன்னும் பத்து வரு டக் கவலைக்காக இப்ப நாங்க ஏன் எங்களின்ர அருமையான குடும்பத்தைப் பிரிக்கவேணும். "ஐ காண்ட் லிங் வித் அவுட் யூ டார்லிங் நல்ல வெறிபோல் இருக்கிறது. வெளியில் வருகி றேன், வெளியில் ராணியக்கா வின் மகள் விருந்தையில் இரு ளில் சூனியத்தைப் பார்த்தபடி இருக்கிருள். அவளுக்கு இப் போது வயது பன்னிரண்டு. தகப்பனின் சண்டை விளங்கி யிருக்குமோ என்னவோ?
எனக்குத் தூக்கம் வருகி ADğil . . . . . . ஆவ். ராணியக்கா குடும்பத்தின் "நள்ளிரவுச் சண் டையை" நினைத்துக் கொண்டே தூங்கிப்போகிறேன். ★
dava ● 49. . .
**る****
s
“தாமரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும் பிரபல
எழுத்தாளர்,
விமரிசகரான
தி. க.
சிவசங்கரன்
(தி. க. சி ) அவர்களினது மூத்தமகள் செல்வி ஜெயலட்சுமிக்கும்
டாக்டர் சி. எ. கே. சண்முகம் அவர்களினது மூத்த மகன் செல்வன் சிவசைலநாதன் பி. எஸ்வி க்கும் 28-1-71-ல் திருநெல்வேலியில்
திருமணம் இனிதே நடைபெற்றது ஈழத்து இலக்கிய நண்பர்கள் சார்பில் மணமக்களை மல்லிகை மனமார வாழ்த்துகின்றது.
- ஆசிரியர்
AAA Ax - &xA eeLS eAeLS SeeSeS LesS eeeS eeeS eSeSYSe eee eeeS eeS eeeLeLe AeSeSe ee eeS eeeLeSeLe eeeeeLee eqeeqeeq ee eqeLeSL ee $念令令令令令令令令 令令必心必必必必必必心必妙4必必必必令必必必必必必必必必必必必必必必必必°必°
47

Page 26
பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய மன்றம்.
பேராதனை இலங்கைப் பல் கலைக் கழகத்தில் கடந்த மாதம் பல்கஜலக்கழக்த் தமிழ் இலக்கிய
மன்றம் என்ற பெய்ரில் புதிய
தொரு மன்றம் இலக்கிய ஆர் வம் மிக்க பல்கலைக்கழக இளை ஞர்களாற் தொடக்கப்பட்டுள்
ளது. இம் மன்றத்தின் பெருந்
தலைவராகப் G u gr T 6 f uu si சு. வித்தியானந்தன் அவர்க ளும், பெரும் பொருளாளராகத் சி. தில்லைநாதன் எம்.ஏ., எம். லிற். அவர்களும் கடமையாற் றுகின்றனர். தலைவராகத் திரு. துரைமனேகரனும், உபதலைவ ராகத் திரு. (பொ. இரத்தின பால (கலையமிர்தன்)னும், செய லாளராகத் திரு. எஸ். செவ் வந்திநாதனும் உட செயலாள ராகத் திரு. பூரீதரனும், பொரு ளாளராக ஜனப் ஏ. எல. ஏ. ரஹீமும், இதழாசிரியராகத் திரு. சி. எஸ். பாலசுந்தரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஈழத்தில் இலக்கிய விழிப்புணர்ச் சியை ஏற்படுத்துவதோடு, ஈழத் தில் வெளியாகும் இலக்கியச் சஞ்சிகைகளைத் தரமறிந்து வாச கர்களுக்கு அறிமுகப்படுத்தும் இம்மன்றத்தினரின் மு க் கிய குறிக்க்ோள். மாதத்திற்கு இரு முறை அறிஞர்களைக் கொண்டு ஈழத்து ஆக்க முயற்சிகள்பற்றி மதிப்பிடுவதும் இம் மன்றத்தின் நோக்கங்களில் ஒன்று.
48
சொற்பெருக்கு
பல்கலைக்கழகத் தமிழ் இலக் கிய மன்றத்தின் முதல் முயற் யாக - கன்னி முயற்சியாகஏற்பாடு செய்யப்பட்ட இலக் கிய அரங்கில், பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த திரு. நா. சுப்பிரமணிய ஐயர் பீ. ஏ. (ஆனர்ஸ்) அவர்கள் "தமிழ்ப் பத்திரிகை இலக்கியம் என்ற பொருளிற் பல - அரிய விஷயங்களை அடக்கி ஆழமாகப் பேசினர். அவர் பேசுகையில், ‘இன்று எப்படி நாவலிலக்கிய மென்றும் , சிறுகதையிலக்கிய மென்றும், கவிதை இலக்கிய மென்றும் நாடக இலக்கியமென் றும் தமிழில் பல இலக்கிய வகை களுக்கும் ‘இலக்கியம்" என்ற அடை சேர்த்து வழங்கப்படுகி றதோ, அதேபோல பத்திரிகை இலக்கியமென்றும் புதிதாக நாம் ஒரு புதிய துறையை அறிமுகப் படுத்துவதில் தவறில்லை" என் ருர் .
அவர் மேலும் பத்திரிகை இலக்கியம் சம்பந்தமாகப்பேசும் போது, இந்தியாவிலும், இலங் கையிலும் பத்திரிகைகள் தோன் றுவதற்கான ஆரம்பச் சூழ்நிலை யை எடுத்து விளக்கியதோடு, பத்திரிகைகள் ஆரம்பத்தில் அரசியற் செய்திகளுக்கே முக்கி யத்துவம் கொடுத்துப் பிரசுரித் தனவென்றும், பின்னர் மணிக் கொடி, கலைமகள் போன்ற பத் திரிகைகள் சஞ்சிகைகள்தான் வளரும் இலக்கியத்தின் அவசி

யம் உணர்ந்து இலக்கிய சிருஷ் டிகளைப் பிரசுரிக்கத் தொடங் கினவென்று குறிப்பிட்டார். ஈழத்துப் பத்திரிகைகள் சம்பந் தப்பட்ட மட்டில், முன்னர் சிறப் புடன் பணியாற்றிய ஈழகேச ரிக்கு முக்கியத்துவம் கொடுத் துப் பேசினர்.
இன்றைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறித்து அவர் கரு த் துத் தெரிவிக்கையில், இன்று தென்னகத்தில் தீபம், தாமரை, கலைமகள் போன்ற னவே இலக்கிய நோக்கங்கருதி நடைபெறுகின்றனவென்றும், அநேகமான தென்னகச் சஞ்சி கைகள் வர்த்தக நோக்கங் கருதி, தரமற்ற உற்பத்திகளை உற்பத்தியாக்கித் த ள் விரி க் கொண்டிருக்கின்றன வென்றும், இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இலங் கைப் பத்திரிகைகளிலும் சினி மாச் செய்திகளுக்கே முக்கியத் துவம் கொடுக்கப்படுகின்றன வென்றும், தென்னகத்தில் ஆக்க இலக்கியங்களுக்கு அளிக்கப்ப டும் சன்மானத்திலும் பார்க்க இலங்கைப் பத்திரிகைகள் மிகக் குறைவான தொகையையே இங்குள்ள எழுத்தாளர்களுக்கு அளிக்கின்றன என்றும் கூறினர். இறுதியாக, இலங்கையில் வெளி யாகும் மல்லிகை, மலர், தமிழ முது, நாவேந்தன், கற்பகம் போன்ற சஞ்சிகைகளுக்கு ஏற் படும் பொருளாதாரக் கஷ்டம் பற்றியும், அவற்றின் உள்ளடக் கம் சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாது, கவர்ச்சியான முறையிலும் அவற்றை வெளி யிடவேண்டியதன் அவசியம்பற் யும் பிரஸ்தாபித்தார்.
திரு. சுப்பிரமணிய ஐயரின் சொற்பெருக்குப் பற்றிக் கருத் துத் தெரிவித்துப் பேசிய பல்க லைக்கழகத் தமிழ்த்துறை விரிவு ரையாளர் திரு. தில்லைநாதன்,
"நான் இதே விஷயம் பற்றி 2-வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில், தென்னகத்து அறிஞரொருவரால் சமர்ப்பிக் கப்பட்ட கட்டுரையை அங்கு படி க் க க் கேட்டிருக்கிறேன். ஆனல், திரு. சுப்பிரமணிய ஐயரின் பேச்சு அதைவிட மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது" என்று பாராட்டினர். அடுத்து, தமிழமுது ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. சிவகடாட்சம் தங்கள் சஞ்சிகை வெளியிடுவ திலுள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசி ஞர். கடைசியில், பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குத் திரு. நா. சுப் பிரமணிய ஐயர் பதிலளித்தார்;
பாராட்டுவிழா
இலங்கைப் பல்கலைக்கழகத் தின் புதிய தமிழ்ப் பேராசிரிய ராக நியமனம் பெற்ற கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களைப் பாராட்டுமுகமாக, கடந்த மாதம் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் அன்னருக்குப் பல்கலைக்கழகப் ப்ெரிய சிற்றுண் டிச் சாலையில் ஒரு விருந்துப சாரத்தை நடாத்தியது. மன் றத் தலைவர் திரு. துரைமனே கரனின் தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்தில், பல் கலைக்கழகத் தமிழ் விரிவுரையா ளர்,மாணவ மாணவிகள் பேரா சிரியரைப் பாராட்டியும், அவ ரது சேவைகளைப் போற்றியும் சிறந்தமுறையில் சொல்விருந்து நல்கினர். மன்றத் தலைவரினல் வாழ்த்துப்பா ஒன்றும் கையளிக் கப்பட்டது. தமக்கு அளிக்கப் பட்ட பாராட்டுக்களுக்கு இறு தியில் நன்றி தெரிவித்துப் பேசிய பேராசிரியர், தமக்கு வழிகாட் டிகளாகஇருந்த முன்னைய பேரா சிரியர்களை அத்தருணம் நினைவு கூர்வதாகவும் தெரிவித்தார்.
49

Page 27
Oriëat
மு. தளேயசிங்கத்தின்
போர்ப் பறை
கே. எஸ். சிவகுமாரன்
நண்பர் மு. தளையசிங்கம் ஒரு சிந்தனையாளர். ஆய்வறிவுத் துறையில் ஈடுபடுபவர். அவர் ஓர் எழுத்தாளரும் கூட. கம் பிறக்கிறது’ என்ற சிறுக தைத் தொகுப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிருர், "போர்ப் பறை" அவருடைய இரண்டா வது வெளியீடு, அதில் புனைகதை
50
படுத்தப்படுமாயின்,
՛ւյ5/սկ
கள், கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அவர் கட்டுரைகள் பற்றிய மேலோட்டமான அறிமுகமாக எனது இந்த எழுத்து அமையும்.
மழை வரவிருக்கும் அறிகு றியாக இடி முழங்குவதுபோல் தளையசிங்கத்தின் கருத்துக்கள்
வரவிருக்கும் என்று அவர் நம்
பும் பிரபஞ்ச யதார்த்தம் நிரம் பிய சர்வோதய பொதுவுடமை யை அறிவிக்கும் போர்பறை யாக ஒலிக்கின்றன. அவருடைய கருத்தின்படி, மனித இனம் முறையான வழிகளில் நெறிப் . அதன் சாதனைகள் எவ்விதம் அமைய லாமென்பதை கோடிகாட்டுவ தாக இந்நூலில் அடங்கிய எழுத்துக்கள் வடிவம் பெற்றுள்
ளது.
உலகின் வெவ்வேறு பகுதி களிலும் ஏற்பட்டுவரும் அமைதி யின்மைக்கான காரணங்களை விளக்கி அவர் ஓர் நீண்ட முன் னுரையை ‘போர்ப்பறை” யில் எழுதியிருக்கிருர், புதிய வாழ்க் கைமுறை - உண்மையில் யுக மொன்றின் பிறப்புக்காக ஏற் படும் பிரசவ வேதனைபோன்று இந்த அமைதியின்மையை அவர் இனங்காணுகிருர் .
இந்த நூலின் ஒவ்வொரு பககமும வரலாறு, கூாமையான பார்வை, புராதன நவீன எழுத் துக்களில் ஆழ்ந்த பரிச்சயம் ஆகியவற்றை எடுத்துக் காட்டு வதாக அமைகிறது. கிழக்கு மேற்கு ஆகியவற்றின் மிகப் பழமையான எழுத்துக்களையும் மிக அண்மைக்கால எழுத்துக் களையும் தளையசிங்கம் நன்கு பரிச்சயம் செய்து கொண்டுள் ளார் என்பதைக் காட்டும்விதத் தில், அவருடைய எழுத்துகள் அமைகின்றன. புராண, கற்பி
 

தங்களுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் மிக உன்னதமாக அமைகின்றன. சாதாரண மனி தனின் அனுபவத்திற்கு அப் பாற்பட்டதான தூயசிந்தனைக்கு அல்லது தூய சித்தப் பிரக் ளுைக்கு அவர் வாசகரை அழைத் துச் செல்கிருர்,
நாம் இன்று காண்பதுபோல் கொமியூனிச சித்தாந்தத்தின் வரலாற்றை தளையசிங்கம் துரித கதியில் எடுத்துரைக்கிருர், ஹே கலின் கருத்து முதல் வாத தத் துவத்தினுல் SrTri 6i) ; il ponir fiti6) எவ்விதம் கவரப்பட்டாரென்ப தையும் அதனையே தலைகீழாக மாற்றி மார்க்ஸிய வாதத்தை பொருள் முதல்வாத அடிப்ப டையில் மாற்றினரென்பதையும் ஆசிரியர் விளக்குகிருர், சகல சமூக தீமைகளுக்கும் காரண மாக விளங்குவது வழக்கொ ழிந்த சமய நம்பிக்கைகள், முத லாளித்துவம், வர் க் க நல நோக்கு ஆகியவையே என்றும் இவற்றை அடிவாருக பெயர்த் தழித்தால் ஒழிய சமூக நீதியும் உண்மைச் சுதந்திரமும் ஏற்ப டப் போவதில்லை எ ன் று ம் மார்க்ஸ் கூறியதை தளையசிங்கம் நேர்த்தியாக விளக்குகிருர் .
மார்க்சின்உலகியல் பொருள் முதல்வாத அடிப்படையில் மா பெரும் முற்னேற்றங்கள் ஏற் பட்டு வருவதை மறுக்காத தளை யசிங்கம்,அதேவேளையில் உயர்ந் தமட்டங்களில் அனேகமாக கீழைத்தேய உபநிஷதம், வேதங் கள், காவியங்கள், தத்துவங்க ளிலிருந்து பிறக்கும் ஆத்மார்த்த
கருத்துக்களுடன் ஒட்டிய முன்
னேற்றத்தை விரும்புகிறர்.
குறித்த முனையொன்றிலி ருந்து, குறித்த வாழ்க்கை தத் துவம் ஒன்றிலிருந்து யாவும் பரி ணமிக்கின்றன. முழு மனித இன மும் அங்கு சங்கமிக்க வேண்டும் என்பது தளை யசிங் கத்தின் கருத்து. இது பொருள்முதல் வாத அடிப்படையிலான பொ துவுடமைத் தத்துவமாக மாத் திரம் இயங்க முடியாது. மார்க் சிய தத்துவ கோட்பாட்டை இழக்காத அதே வேளையில், மேலும் விரிவான ஓர் தத்து வத்தை மார்க்கிசயத்திற்கு அப் பாலுள்ள தத்துவம் என்று சொல்லக்கூடிய தத்துவத்தை உருவாக்க அவர் விரும்புகிருர் விஞ்ஞான அடிப்படையிலமைந்த ஆன்மீக இயக்கமாக அது விளங் கவேண்டுமென்று அவர் விரும் புகிருர். இதனை சர்வோதய கோட்பாடுகளும் மார் க் சி ய அடிப்படை கோட்பாடுகளும் இயைவதன் மூலம் ஏற்படுத்த லாம் என்று அவர் நம்புகிருர்,
இன்னெரு விதத்தில் கூறி னல் ஆன்மீக அடிப்படையில் சமூ க மாற்றங்களை புனருத்தாரணம் செய்ய தளையசிங்கம் விரும்பு கிருர். ஆயினும் இந்தத் துறை யில் பலர் எடுத்துள்ள முயற்சி
மல்லிகை ஆசிரியரைக் கொழும்பில் சந்திக்கும் முகவரி:
i37, மெலிபன் ஸ்ரீல்
கொழும்பு - 11 தொலைபேசி: 20712
பிப்ரவரி 14 - 17 திகதிகள்
む】

Page 28
கள் வெற்றியீட்டவில்லை என்றே பலர் நம்புகின்றனர், ஒருவிதத் தில் “எக்ஸிஸ்டோன்ஷலிஸ் வா திகள் எனப்படும் இருப்பு வாதி கள் தமது தத்துவக் கோட்பா டுகளே மார்க்சியவாதத்துடன் இணைக்க எடுக்கப்பட்ட முயற் சியையும், இந்தியாவில் பொருள் முதல்வாத ஆன் மீக உலக நோக்கு- அதாவது இணைந்த யோகம்- தொடர்பாக பூரீ அரவிந்தர் எடுத்த முயற்சியை யும் தளேயசிங்கத்தின் இந்த முயற்சி நினைவிற்குக் கொண்டு வருகிறது. ஆனல் உண்மையில் என்ன நடக்கிறது எ ன் ரு ல் காலப்போக்கில் சீர்திருத்தவா தியின் பிடிப்பிலிருந்து மனித இனம் மெல்ல நழுவி மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாத்திரம் திருப்தியடைந்து விடுகிறது. இது எனது கருத்து. இது முழுக்க உண்மையானதுதானு என்பதை அழுத்தமாக கூற நான் முன் வரவில்லே. இருந்தபோதிலும்
நூற்ருண்டு நூற்ருண்டாக உன்
னதமான சமயக் கோட்பாடு கள் உலகெங்கிலும் வியாபித்து வந்திருக்கின்றன.
மேலும் முன்னேற்றங்களை யும் பரிணும வளர்ச்சி காட்டி வருகிறது. ஆனல் அவ்வித முன் னேற்றங்கள் ஏற்படும்பொழுது அவை சக்கரம்போல் சுழன்று திரும்பவும் பழைய இடத்துக் குத்தான் போகின்றனவா என் பதும் சுவையான ஆய்வுக்குரி யது. அது தனியான பெரிய ஒரு ஆய் வுத் துறையாகும். நிலத்தில் திடமாகக் காலூன் றிக்கொண்டே மிகவும் நுட்ப மான குண புலன்கடந்த எண் ணங்களை தளையசிங்கம் போன்ற எழுத்தாளர்கள் தொகுத்துத் தர முயல்வது எமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். என்ன தான் கூறியபோதிலும் தனது தனிப்பாங்கான நம்பிக்கைகளை தனக்கே உரிய முறையில் தனித் துவமாக தளையசிங்கம் போர்ப் பறையில் வடித் தி ரு ப் பது பாராட்டத்தக்கது.
மல்லிகை சிறுகதைப் போட்டிக்கு ஏராளமான சிறுகதைகள் வந்துள்ளன. பரிசீலனைக்காக அச்சிறுகதைகள் நடுவர்களின் பார்வைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
கூடிய சீக்கிரம் பரிசுக்குரிய கதைகளின் பட்டியலை மல்லிகை மூலம் தெரிவிக்கின்ருேம்.
53
- ஆசிரிய ர்
 

M
ம்.இரென்ஜ்பி
@@68ಿ (ORANGE බීබී 圆国国@町 | PMOAMEDNAYRADACOWA
இன்பகரமான கற்பனைக்கு, சுகமான சிந்தனைக்கு ரம்மியமான பொழுதுபோக்கிற்கு புகையுங்கள் ஒரேன்ஜ் பீடிகளை
.
நியூ லங்கா பாம்
ܝܨ�
காங்கேசன்துறை வீதி,
இணுவில்
சகல இன ஒட்டு மாங்கன்றுகள், தோடை, எலுமிச்சை மற்றும் பழவர்க்க இனங்களைச் சேர்ந்த ஒட்டுக் கன்றுகள், பூஞ்செடிகள், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ருே சாச்செடிகள் ஆதியன
இங்கே கிடைக்கும் - -
மலிவாகவும் தரமானதாகவும் பெற்றுக் கொள்ளலாம்
ஒடர்கள் விசேஷமாகக் கவனிக்கப்படும்.
NEW LANKA FARM K. K. S. Road, NUWIL.

Page 29
MALLIKA I
R. Elgi-t i I r ii: : : Li illi * KK ATeAeTe uiMeiiuuiiu eieeTeTTAeTiAAieiSAASAiiie TK uiiSTAAe KeS
யாழ் பிராண்ட்
அலுமினிபம், செம்பு
உற்பத்தி
தகைமையும் வேனத்தி
Lu II j GIDjbJ);
ஒருமுறை வி:
砷
தங்கம், வெள்ளி, து முலாம் பூசுவதுபோ உத்தரவாதம்
D. Ligg Lrff GT (
250, 254, K. K. S. : Teirgia: "ARL METAL
Biogrl Ch;
63. BANKSF
COLC
臀 呜
=F . .
if, 3ள்:ஆசியார் வீதி, பாப்ட் வேளியிடுபவ்ருபா டொரிேக் ူမှီင်္းမ္ယားန္! IT பூழ்ப்பானம் பூ'ங்க் ஆச்சகத்தில்

FEE FIL, AIF: ' = | tl | / | : ::: A : li:l p to r if : tt | ln 11 Ae eAAA AAAASAe eASZASAA AASLLLLLSYALSLLL S SLMSKSeS SSS MM LS u ku S L z S L S
鼩 பித்தள ப் பாத்திரங்கள்
செய்பவர்கள்
நனும் உறுதிப்படுத்தப்பட்டவை
i இன்டஸ்ரீஸ்
ஐயம் செய்யுங்கள்
குேறியம் முதலியவற்ருல் ன்ற சகல வேலேகளுக்கும்
செய்யப்பட்டது.
வேலேப்பாடமைந்தது
L INDUSTRIES
Road, JAFFNA.
Telephone: WO49
ALL STREET, WᏴᏟ - 11.
"If Elefshöfe: 25150)
*轟轟零*零壘壘壘疊疊壘壘壘臺壘壘疊曹壘壘 பாரம் முன்வகியில் வசிப்பவரும், ஆசிரியது
ஆiர்களுக்காக மல்லிகை சாதனங்களுடன் அச்சியற்றுப்பேற்றது.